ஆண்டவர் எதுவரை தீர்ப்பிடுவார்
திருவிவிலியம்
1 சாமுவேல்
அதிகாரம் – 2
அன்னாவின் வேண்டுதல்
1அப்பொழுது அன்னா மன்றாடிக் கூறியது: “ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப்
பழிக்கின்றது!
ஏனெனில், நான் நீர் அளிக்கும்
மீட்பில் களிப்படைகிறேன்.
2ஆண்டவரைப் போன்ற தூயவர்
வேறு எவரும் இலர்!
உம்மையன்றி வேறு எவரும் இலர்!
நம் கடவுளைப் போன்ற
வேறு பாறை இல்லை,
3இறுமாப்புடன் இனிப்பேச வேண்டாம்!
உங்கள் வாயில் வீம்பு வெளிப்பட
வேண்டாம்!
ஏனெனில், ஆண்டவர் அறிவின்
இறைவன்!
செயல்களின் அளவை
எடை போடுபவர் அவரே!
4வலியோரின் வில்கள்
உடைபடுகின்றன! தடுமாறினோர்
வலிமை பெறுகின்றனர்!
5நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு
உணவு பெறுகின்றனர்.
பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார்
ஆகியுள்ளனர்!
மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள்,
பல புதல்வரைப் பெற்றவளோ
தனியள் ஆகின்றாள்!
6ஆண்டவர் கொல்கிறார்;
உயிரும் தருகின்றார்;
பாதாளத்தில் தள்ளுகிறார்;
உயர்த்துகின்றார்;
7ஆண்டவர் ஏழையாக்குகிறார்;
செல்வராக்குகின்றார்;
தாழ்த்துகின்றார்;
மேன்மைப்படுத்துகின்றார்;
8புழுதியினின்று அவர்
ஏழைகளை உயர்த்துகின்றார்;
குப்பையினின்று வறியவரைத்
தூக்கிவிடுகின்றார்;
உயர்குடியினரோடு அவர்களை
அமர்த்துகின்றார்!
மாண்புறு அரியணையை அவர்
களுக்கு உரிமையாக்குகின்றார்!
உலகின் அடித்தளங்கள்
ஆண்டவருக்கு உரியவை!
அவற்றின் மேல் அவர்
உலகை நிறுவினார்!
9தம்மில் பற்றுக்கொண்டோர்
காலடிகளை அவர் காப்பார்!
தீயோர், இருளுக்கு இரையாவார்!
ஏனெனில், ஆற்றலால் எவரும்
வலியவர் ஆவதில்லை!
10ஆண்டவரை எதிர்ப்போர்
நொறுக்கப்படுவர்!
அவர் அவர்களுக்கு எதிராக
வானில் இடிமுழங்கச் செய்வார்!
ஆண்டவர் உலகின் எல்லை வரை
தீர்ப்பிடுவார்!
தம் அரசருக்கு வலிமை தருவார்!
தாம் திருப்பொழிவு
செய்தவரின் ஆற்றலை உயர்த்துவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக