வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி
விளக்கம் :
முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். ஆனால் அகத்திக் கீரையை அதிகம் வேகாமல் பயன்படுத்தினால் முழுமையாக அதன் சத்து கிடைக்காது என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம் ஆகும்.
முருங்கையைப் பற்றிய பழமொழிகள்:
1. வெந்து கெட்டது முருங்கை வேகாமல் கெட்டது அகத்தி.
2. பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும்
3. மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.
விளக்கம் :
`வெந்து கெட்டது முருங்கை, வேகாம கெட்டது அகத்தி...' இந்தப் பழமொழியின் பொருள் எத்தனைபேருக்குத் தெரிந்திருக்கும்? முருங்கைக்கீரையை வதக்கும்போது அது வதங்கிக்கொண்டே இருக்கும். அதனால், அது வேகவில்லை என்று நினைத்து வதக்கிக்கொண்டே இருப்போம். முருங்கைக்கீரையை நீண்டநேரம் வதக்கிச் சாப்பிட்டால் கசப்பாக இருக்கும். அத்துடன் அதன் ருசி கெட்டு கசப்புத்தன்மை ஏற்படுவதுடன் வயிற்றில் இரைச்சலை உண்டாக்கி பேதியை ஏற்படுத்தும். சிலருக்கு வேறு சில உபாதைகளையும் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆகவே முக்கால்வாசி வேக்காட்டின்போதே முருங்கைக்கீரையை அடுப்பிலிருந்து கீழே இறக்கிவிட வேண்டும். அதேநேரத்தில் அகத்திக்கீரையை நன்றாக வேக வைக்காமல் சாப்பிட்டால் கசக்கும்; பேதியையும் ஏற்படுத்தும். மேலும் அதிகம் வேகாத அகத்திக்கீரை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதே இந்தப் பழமொழியின் பொருள்.
பொதுவாகவே, கீரைகள் என்றில்லை, பச்சைக் காய்கறிகளை அதிகம் வேக வைக்கக்கூடாது. அதேபோல், நீண்ட நேரம் உப்பு போட்டு வேக வைத்தால் அவற்றில் உள்ள தாதுச் சத்துகள் அழிந்துவிடும். முருங்கைக்கீரையில் நிறைய வைட்டமின் சத்துகள் இருக்கின்றன. எனவே, முருங்கைக்கீரையைச் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் எலும்புகள், பற்களுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். கண் தொடர்பான எல்லாவிதமான கோளாறுகளையும் குணப்படுத்தும். பித்தம் தொடர்பான நோய்களையும் சிரசு (தலை) சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்த உதவும்.
குழந்தை பெற்ற தாய்மாரில் சிலர் குழந்தைக்கு போதிய அளவு பால் கிடைக்காமல் அவதிப்படுவார்கள். இதனால் மனம் வருத்தப்படுவதுடன் தாய்ப்பால் வேண்டுமென்பதற்காக ஏதேதோ மருந்துகளையெல்லாம் சாப்பிடுவார்கள். அவர்கள் முருங்கைக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டாலே தாராளமாக பால் சுரக்க ஆரம்பிக்கும். அத்துடன் குழந்தை பெற்றதால் பலவீனமான தாயின் உடலும் பலம்பெறும்.
அடுத்தது, பால் குடிக்கும் குழந்தை முதல் வளர்ந்த குழந்தைகள் வரை பலருக்கும் பொதுவாக இருக்கும் பிரச்சினை வயிறு உப்புசம். எளிதில் செரிமானமாகாத மற்றும் வாயுவை உண்டாக்கும் உணவுகளை தாய்மார் சாப்பிடுவதால் அது குழந்தையின் வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்திவிடும். ஓரளவு வளர்ந்த குழந்தைகள் உருளைக்கிழங்கு, வாழைக்காய் மற்றும் வாயுவை உண்டாக்கும் சில உணவுகளை உண்பதால் அவர்களுக்கு வயிற்றில் உப்புசம் ஏற்பட்டு அவதிப்படுவர்.
வயிறு உப்புசம் அதிகரிப்பதால் வயிற்றில் வலியை உண்டாக்கி காரணம் தெரியாமல் குழந்தைகள் அழுவார்கள். இதுபோன்ற நேரங்களில் குழந்தைக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து முருங்கைக்கீரைச் சாறு கொடுப்பதன்மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம். அதாவது, முருங்கைக்கீரையை உள்ளங்கை அளவு எடுத்து கசக்கி சாறு பிழிந்து வடிகட்டி அரை டீஸ்பூன் அளவு எடுத்து, பட்டாணி அளவு கல் உப்பு சேர்த்துக் கரைத்து சிறிது வெந்நீரில் கலந்து குடிக்கக் கொடுக்க வேண்டும். அடுத்த அரை மணி நேரத்தில், முருங்கைக்கீரையை எடுத்து சாறு பிழிந்து சுண்டைக்காய் அளவு வசம்புத்தூள் சேர்த்துக் குழைத்து தொப்புள் மற்றும் வயிறு முழுவதும் பற்று போட வேண்டும். இப்படிச் செய்வதால், வயிற்று உப்புசம் சரியாகி வாய்வு வெளியேறும்; சில குழந்தைகளுக்கு நீரும் மலமும் சேர்ந்து வெளியேறும்.
இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமலிருக்க அவ்வப்போது முருங்கைக்கீரைச் சாறுடன் கல் உப்பு சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்கலாம். வளர்ந்த குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை சூப் கொடுக்கலாம். குழந்தைகள் என்றில்லை, பெரியவர்களும் அவ்வப்போது முருங்கைக்கீரை சூப், பொரியல் செய்து சாப்பிட்டால் வாய்வுக்கோளாறு, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றைச் சரிசெய்ய உதவும்.
நீர்க்கட்டு ஏற்பட்டு சிறுநீர் வெளியேறாமல் அவதிப்படும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முருங்கைக்கீரையுடன் வெள்ளரி விதைகளைச் சேர்த்து அரைத்து வயிற்றில் கனமாகப் பற்று போடலாம். இப்படி செய்வதால் அடுத்த சில நிமிடங்களில் சிறுநீர்க் கட்டு உடைந்து வெளியேறும். இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை உடையது முருங்கைக்கீரை. தோல் சுருக்கம், பல் கோளாறு, எலும்பு தொடர்பான பிரச்சினைகள், உடல் அசதி போன்றவற்றுக்கு எளிமையான மருந்து முருங்கைக்கீரை.
வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை, வெந்து கெட்டது முருங்கை
How to Get More Surveys on Google Opinion Rewards App? Ultimate Guide
How to Start a Blog to Make Money Online Ultimate Guide
1001 Ways to Make Money Online Home Free Fast No Scams
How to Earn Money Online Writing to Revenue Sharing Websites Ultimate Guide
How to Earn Money Online by PPC Pay Per Click Marketing Ultimate Guide
How to Earn Money Online Fiverr Services Support Ultimate Guide
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக