திருவிவிலியம் தமிழ் பொது மொழிபெயர்ப்பு

பழைய ஏற்பாடு

தொடக்கநூல் ஆதிஆகமம்      விடுதலைப்பயணம்      லேவியர் லேவியராகமம்      எண்ணிக்கை      இணைச்சட்டம்      யோசுவா      நீதித்தலைவர்கள்      ரூத்து      1 சாமுவேல்      2 சாமுவேல்      1 அரசர்கள்      2 அரசர்கள்      1 குறிப்பேடு      2 குறிப்பேடு      எஸ்ரா      நெகேமியா      எஸ்தர்      யோபு      திருப்பாடல்கள் சங்கீதங்கள்      நீதிமொழிகள் பழமொழி ஆகமம்      சபை உரையாளர் சங்கத் திருவுரை ஆகமம்      இனிமைமிகு பாடல்      எசாயா      புலம்பல்      எசேக்கியேல்      தானியேல்      ஓசேயா      யோவேல்      ஆமோஸ்      ஒபதியா      யோனா      மீக்கா      நாகூம்      அபக்கூக்கு      செப்பனியா      ஆகாய்      செக்கரியா      மலாக்கி

இணைத்திருமுறை நூல்கள்

தோபித்து தொபியாசு ஆகமம்      யூதித்து      எஸ்தர் கிரேக்கம்      சாலமோனின் ஞானம்      சீராக்கின் ஞானம்      பாரூக்கு      தானியேல் இணைப்பு      1 மக்கபேயர்      2 மக்கபேயர்

புதிய ஏற்பாடு

மத்தேயு நற்செய்தி      மாற்கு நற்செய்தி      லூக்கா நற்செய்தி      யோவான் நற்செய்தி      திருத்தூதர் பணிகள்      பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம்      கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்      கொரிந்தியருக்கு எழுதிய 2 திருமுகம்      கலாத்தியர் எழுதிய திருமுகம்      எபேசியருக்கு எழுதிய திருமுகம்      பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்      கொலோசையருக்கு எழுதிய திருமுகம்      தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்      தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்      திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்      திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்      தீத்துக்கு எழுதிய திருமுகம்      பிலமோனுக்கு எழுதிய திருமுகம்      எபிரேயருக்கு எழுதிய திருமுகம்      யாக்கோபு எழுதிய திருமுகம்      பேதுரு எழுதிய முதல் திருமுகம்      பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்      யோவான் எழுதிய முதல் திருமுகம்      யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்      யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்      யூதா எழுதிய திருமுகம்      யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு

The Holy Bible in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
The Holy Bible in Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பழைய ஏற்பாடு தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு


 திருவிவிலியம் - பழைய ஏற்பாடு

உள்ளடக்கம்


புத்தகம் 1 - தொடக்கநூல்

அதிகாரம் 1.

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,

மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.

அப்பொழுது கடவுள், ஒளி தோன்றுக! என்றார்: ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.

கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.

கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும் என்றார்.

கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று.

கடவுள் வானத்திற்கு விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக! என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

அப்பொழுது கடவுள், புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.

மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக!

அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.

கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்:

பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக! என்றார்.

இவ்வாறு, கடலின பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும் என்றுரைத்தார்.

மாலையும் காலையும் நிறைவுற்று, ஜந்தாம் நாள் முடிந்தது.

அப்பொழுது கடவுள், கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக என்றார்.

கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

அப்பொழுது கடவுள், மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும் என்றார்.

கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்: கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்: ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.

கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்: அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்: கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள் என்றார்.

அப்பொழுது கடவுள், மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்: இவை உங்களுக்கு உணவாகட்டும்.

எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.

அதிகாரம் 2.

விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின.

மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.

கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் நாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்.

இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம். ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகையும், விண்ணுலகையும் உருவாக்கிய பொழுது,

மண்ணுலகில் நிலவெளியின் எவ்விதப் புதரும் தோன்றியிருக்கவில்லை: வயல்வெளியின் எவ்விதச் செடியும் முளைத்திருக்கவில்லை: ஏனெனில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின்மேல் இன்னும் மழை பெய்விக்கவில்லை: மண்ணைப் பண்படுத்த மானிடர் எவரும் இருக்கவில்லை.

ஆனால் நிலத்திலிருந்து மூடுபனி எழும்பி நிலம் முழுவதையும் நனைத்தது.

அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.

ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்.

ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.

தோட்டத்திற்குள் நீர் பாய்வதற்காக ஏதேனிலிருந்து ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அது அங்கிருந்து பிரிந்து நான்கு சிறப்புமிகு ஆறுகள் ஆயிற்று.

முதலாவதன் பெயர் பீசோன். இது கவீலா நாடு முழுவதும் வளைந்து ஓடுகின்றது. அங்கே பொன் விளையும்.

அந்நாட்டுப் பொன் பசும்பொன். அங்கே நறுமணப் பொருள்களும் வண்ண மணிக்கற்களும் உண்டு.

இரண்டாவது ஆற்றின் பெயர் கீகோன். இது எத்தியோப்பியா நாடு முழவதும் வளைந்து ஓடுகின்றது.

மூன்றாவது ஆற்றின் பெயர் திக்¡£சு. இது அசீரியாவிற்குக் கிழக்கே, ஓடுகின்றது. நான்காவது ஆறு யூப்பிரத்தீசு.

ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.

ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம்.

ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே: ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டுச் சொன்னார்.

பின்பு ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று: அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார்.

ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று.

கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்: தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.

ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.

ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார்.

அப்பொழுது மனிதன், இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்: ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள் என்றான்.

இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்: இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.

அதிகாரம் 3.

ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?“ என்று கேட்டது.

பெண் பாம்பிடம், "தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம்.

ஆனால் "தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது: அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள் என்று கடவுள் சொன்னார்," என்றாள்.

பாம்பு பெண்ணிடம், "நீங்கள் சாகவே மாட்டீர்கள்:

ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும் " என்றது.

அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.

அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன: அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.

மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்டார்.

"ஙுஉம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்" என்றான் மனிதன்.

"ஙுநீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?" என்று கேட்டார்.

அப்பொழுது அவன், "என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்: நானும் உண்டேன்" என்றான்.

ஆண்டவராகிய கடவுள், "நீ ஏன் இவ்வாறு செய்தாய்?" என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், "பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்" என்றாள்.

ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், "நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டுவிலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய்.

உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்" என்றார்.

அவர் பெண்ணிடம் "உன் மகப்போற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்: வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய். ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்: அவனோ உன்னை ஆள்வான்" என்றார்.

அவர் மனிதனிடம், "உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது: உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய்.

முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும். வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய்.

நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்: மண்ணுக்கே திரும்புவாய்" என்றார்.

மனிதன் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டாள்: ஏனெனில் உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.

ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார்.

பின்பு ஆண்டவராகிய கடவுள், "மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது" என்றார்.

எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.

இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.

அதிகாரம் 4.

ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள் "ஙுஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்" என்றாள்.

பின்பு அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான்.

சில நாள்கள் சென்றன. காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான்.

ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.

ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான். அவன் முகம் வாடியது.

ஆகவே, ஆண்டவர் காயினிடம், "நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்?

நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடங்கி ஆளவேண்டும்" என்றார்.

காயின் தன் சகோதரன் ஆபேலிடம், "நாம் வயல்வெளிக்குப் போவோம்" என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான்.

ஆண்டவர் காயினிடம், "உன் சகோதரன் ஆபேல் எங்கே?" என்று கேட்டார். அதற்கு அவன், "எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?" என்றான்.

அதற்கு ஆண்டவர், "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.

இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்.

நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்" என்றார்.

காயின் ஆண்டவரிடம், "எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது.

இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்: உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!" என்றான்.


பின்னர் காயின் ஆண்டவர் திருமுன்னை விட்டுச் சென்று ஏதேனுக்குக் கிழக்கே இருந்த நோது நாட்டில் குடியேறினான்.


காயின் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் கருவுற்று ஏனோக்கைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது காயின் ஒரு நகரத்தை நிறுவி, அதற்குத் தன் மகன் ஏனோக்கின் பெயரை வைத்தான்.

ஏனோக்கிற்கு ஈராது பிறந்தான். ஈராதுக்கு மெகுயாவேல் பிறந்தான். மெகுயாவேலுக்கு மெத்து சாவேல் பிறந்தான். மெத்துசாவேலுக்கு இலாமேக்கு பிறந்தான்.

இலாமேக்கு இரு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தியின் பெயர் ஆதா: மற்றொருத்தியின் பெயர் சில்லா.

ஆதா யாபாலைப் பெற்றெடுத்தாள். இவன்தான் ஆடுமாடு மேய்த்துக் கூடாரத்தில் வாழும் மக்களின் தந்தை.

அவன் சகோதரன் பெயர் யூபால். இவன்தான் யாழ் மீட்டுவோர், குழல் ஊதுவோர் ஆகியோர் அனைவரின் தந்தை.

சில்லா தூபால்காயினைப் பெற்றெடுத்தாள். இவன் வெண்கலத்தாலும், இரும்பாலும் எல்லாவிதமான கருவிகள் செய்யும் கொல்லன் ஆனான். தூபால் காயினுக்கு நாகமா என்ற சகோதரி இருந்தாள்.

இலாமேக்கு தன் மனைவியரிடம், "ஆதா, சில்லா, நான் சொல்வதைக் கவனியுங்கள். இலாமேக்கின் மனைவியரே, என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்: என்னைக் காயப்படுத்தியதற்காக ஒருவனை நான் கொன்று விட்டேன்: என்னை அடித்ததற்காக அந்த இளைஞனை நான் கொன்றேன்.

காயினுக்காக ஏழுமுறை பழிவாங்கப்பட்டால் இலாமேக்கிற்காக எழுபது - ஏழுமுறை பழிவாங்கப்படும்" என்றான்.

ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் மகன் ஒருவனைப் பெற்று அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டாள். காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார் என்றாள்.

சேத்துக்கும் மகன் ஒருவன் பிறந்தான்: அவனுக்கு அவன் ஏனோசு என்று பெயரிட்டான். அப்பொழுதே ¥ ஆண்டவர் என்னும் திருப்பெயரால் அவரை வழிபடலாயினர்.

அதிகாரம் 5.

ஆதாமின் வழிமரபின் அட்டவணை பின்வருமாறு: கடவுள் மனிதரைப் படைத்தபொழுது அவர்களைத் தம் சாயலில் உருவாக்கினார்.

ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, மனிதர் என்று பெயரிட்டார்.

ஆதாமுக்கு நூற்று முப்பது வயதானபோது, அவனுக்கு அவன் சாயலிலும் உருவிலும் மகன் ஒருவன் பிறந்தான்: அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டான்.

சேத்து பிறந்தபின் ஆதாம் எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். ஆதாமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் ஆதாம் இறந்தான்.

சேத்துக்கு நூற்றைந்து வயதானபோது அவனுக்கு ஏனோசு பிறந்தான்.

ஏனோசு பிறந்தபின் சேத்து எண்ணூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான். சேத்துக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

மொத்தம் தொள்ளாயிரத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தபின் சேத்து இறந்தான்.

ஏனோசுக்குத் தொண்ணூறு வயதானபோது அவனுக்குக் கேனான் பிறந்தான்.

கேனான் பிறந்தபின் ஏனோசு எண்ணூற்றுப் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

மொத்தம் தொள்ளாயிரத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தபின் ஏனோசு இறந்தான்.

கேனானுக்கு எழுபது வயதான போது, அவனுக்கு மகலலேல் பிறந்தான்.

மகலலேல் பிறந்த பின் கேனான் எண்ணூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

மொத்தம் தொள்ளாயிரத்துப் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின் கேனான் இறந்தான்.

மகலலேலுக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு எரேது பிறந்தான்.

எரேது பிறந்தபின் மகலலேல் எண்ணூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். மகலலேலுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

மொத்தம் எண்ணூற்றுத் தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் மகலலேல் இறந்தான்.

எரேதுக்கு நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, அவனுக்கு ஏனோக்கு பிறந்தான்.

ஏனோக்கு பிறந்தபின் எரேது எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். எரேதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் எரேது இறந்தான்.

ஏனோக்குக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு மெத்துசேலா பிறந்தான்.

மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான். ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான்.

ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்.

மெத்துசேலாவுக்கு நூற்று எண்பத்தேழு வயதானபோது அவனுக்கு இலாமேக்கு பிறந்தான்.

இலாமேக்கு பிறந்தபின், மெத்துசேலா எழுநூற்று எண்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான். மெத்துசேலாவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

மெத்துசேலா மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.

இலாமேக்கிற்கு நூற்று எண்பத்திரண்டு வயதானபோது, அவனுக்கு மகன் ஒருவன் பிறந்தான்.

அவன் "ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறதல் அளிப்பான்" என்று சொல்லி அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.

நோவா பிறந்தபின் இலாமேக்கு ஜந்நூற்றுத்தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். இலாமேக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

இலாமேக்கு மொத்தம் எழுநூற்று எழுபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.

நோவாவிற்கு ஜந்நூறு வயதானபோது, அவருக்குச் சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர்.

அதிகாரம் 6.

மண்ணில் மனிதர் பெருகத் தொடங்கி, அவர்களுக்குப் புதல்வியர் பிறந்தபொழுது,

மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களையெல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர்.

அப்பொழுது ஆண்டவர், "என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை. அவன் வெறும் சதைதானே! இனி அவன் நூற்றிருபது ஆண்டுகளே வாழ்வான்" என்றார்.

தெய்வப் புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க, அக்காலத்திலும் அதற்குப் பின்னரும் மண்ணுலகில் அரக்கர் இருந்தனர். அவர்களே பெயர் பெற்ற பழங்காலப் பெருவீரர்கள் ஆவர்.

மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார்.

மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது.

அப்பொழுது ஆண்டவர், "நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன். மனிதர்முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள்வரை அனைத்தையும் அழிப்பேன். ஏனெனில் இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்" என்றார்.

ஆனால் நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது.

நோவானின் வழி மரபினர் இவர்களே: தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்.

நோவாவிற்கு சேம், காம், எப்பேத்து என்னும் மூன்று புதல்வர் பிறந்தனர்.

அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது.

கடவுள் மண்ணுலகை உற்று நோக்கினார். இதோ! அது சீர்கெட்டுப் போயிருந்தது. மண்ணுலகில் ஒவ்வொரு வரும் தீய வழியில் நடந்துவந்தனர்.

அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்: "எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன். ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன்.

உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய்: அதில் அறைகள் அமைத்து அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு.

பேழையை நீ செய்யவேண்டிய முறையாவது: நீளம் முந்நூறு முழம்: அகலம் ஜம்பது முழம்: உயரம் முப்பது முழம்.

பேழைக்குமேல் கூரை அமைத்து அந்தக் கூரை பேழைக்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி கட்டி முடி: பேழையின் கதவை ஒரு பக்கத்தில் அமை. பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்கள் அமை.

நானோ, வானுலகின்கீழ் உயிருள்ள எல்லாவற்றையும் அழிப்பதற்காக மண்ணுலகின் மேல் வெள்ளப்பெருக்கு வரச் செய்வேன். மண்ணுலகில் உள்ளவையெல்லாம் மடிந்துபோம்.

உன்னுடனோ, என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன். உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் நீ பேழைக்குள் செல்.

உன்னுடன் உயிர் பிழைத்துக்கொள்ளுமாறு, சதையுள்ள எல்லா உயிரினங்களிலிருந்தும் வகைக்கு இரண்டைப் பேழைக்குள் கொண்டு வா. அவை ஆணும் பெண்ணுமாக இருக்கட்டும்.

வகை வகையான பறவைகள், கால்நடைகள், நிலத்தில் ஊர்வன ஆகியவற்றிலிருந்து வகைக்கு இரண்டு உயிர் பிழைத்துக்கொள்ள உன்னிடம் வரட்டும்.

உண்பதற்கான எல்லா வகை உணவுப் பொருள்களையும் நீ எடுத்துச் சென்று சேர்த்து வைத்துக்கொள். அவை உனக்கும் அவற்றிற்கும் உணவாகட்டும்."

கடவுள் தமக்குக் கட் டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்.

அதிகாரம் 7.

அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: "நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.

தக்க விலங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத விலங்குகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு சோடியையும்.

வானத்துப் பறவைகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும் மண்ணுலகெங்கும் அவற்றின் இனங்கள் உயிர் பிழைத்துக் கொள்வதற்காக உன்னுடன் சேர்த்துக் கொள்.

ஏனெனில் இன்னும் ஏழு நாள்களில் மண்ணுலகின்மேல் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் மழை பெய்விக்கப்போகிறேன். நான் உருவாக்கிய உயிரினங்களை எல்லாம் இந்த நிலத்திலிருந்து அழித்தொழிப்பேன்."

ஆண்டவர் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தார்.

மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது அறுநூறு.

வெள்ளப்பெருக்கிலிருந்து தப்புவதற்காக நோவா தம் புதல்வர், மனைவி, புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் பேழைக்குள் சென்றார்.

தக்க விலங்குகள், தகாத விலங்குகள், பறவைகள், நிலத்தில் ஊர்வன அனைத்தும்

சோடி சோடியாக, ஆணும் பெண்ணுமாக, நோவாவுடன் கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி பேழைக்குள் சென்றன.

ஏழு நாள்களுக்குப்பின் மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நோவாவின் வாழ்க்கையின் அறுநூறாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று பேராழத்தின் ஊற்றுகள் எல்லாம் பீறிட்டெழுந்தன. வானங்களின் மதகுகள் திறக்கப்பட்டன.

நாற்பது பகலும் நாற்பது இரவும் மண்ணுலகில் பெரு மழை பெய்தது.

நோவா தம் புதல்வர் சேம், காம், எப்பேத்து, தம் மனைவி, தம் புதல்வர் மூவரின் மனைவியர் ஆகியோருடன் அன்றே பேழைக்குள் நுழைந்தார்.

அவர்களும் அவர்களுடன் எல்லாவகைக் காட்டு விலங்குகளும், கால்நடைகளும், நிலத்தில் ஊர்வனவும், பறவைகளும், இறக்கைகளையுடைய யாவும்,

உயிருள்ள அனைத்தும் சோடி சோடியாக நோவாவிடம் பேழைக்குள் சென்றன.

கடவுள் அவருக்குக் கட்டளையிட்டபடி உள்ளே சென்றவை எல்லாம் ஒவ்வோர் உயிரினத்திலும் ஆணும் பெண்ணுமாக உள்ளே சென்றன. அதன் பின் ஆண்டவர் அவரை உள்ளே விட்டுக் கதவை மூடினார்.

நாற்பது நாள்களாகப் பெரு வெள்ளம் மண்ணுலகில் வந்து கொண்டிருந்தது. வெள்ளம் பெருக்கெடுத்துப் பேழையைத் தூக்க, அது நிலத்திலிருந்து உயர்ந்து எழுந்தது.

மண்ணுலகின் மேல் வெள்ளம் பாய்ந்து மிகுதியாகப் பெருக்கெடுக்க, பேழை நீரின்மேல் மிதந்தது.

மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகப்பெருக வானத்தின்கீழ் எங்கும் இருந்த உயர்ந்த மலைகள் எல்லாம் நீரில் மூழ்கின.

மூழ்கிய மலைகளுக்குமேல் நீர் மட்டம் பதினைந்து முழம் உயர்ந்திருந்தது.

நிலத்தில் ஊர்வன, பறவைகள், கால்நடைகள், காட்டு விலங்குகள், நிலத்தில் தவழ்வன, மனிதர் அனைவர் - ஆகிய சதையுள்ள உயிரினங்கள் அனைத்தும் மாண்டன.

தரையில் வாழ்ந்தவற்றில் நாசியால் மூச்சுவிடும் அனைத்தும் செத்துப் போயின.

மனிதர் முதல் விலங்குகள், ஊர்வன, வானத்துப் பறவைகள் ஈறாக மண்ணில் உயிர் வாழ்ந்த அனைத்தும் அழிந்தன. அவை மண்ணுலகில் இராதபடி ஒழிக்கப்பட்டன. நோவாவும் அவருடன் பேழையில் இருந்தவர்களுமே எஞ்சியிருந்தனர்.

நூற்றைம்பது நாள்களாக மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகிற்று.

அதிகாரம் 8.

கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த எல்லாக் காட்டு விலங்குகள், கால் நடைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகவே மண்ணுலகின் மீது காற்று வீசச் செய்தார்: வெள்ளம் தணியத் தொடங்கியது.

பேராழத்தின் ஊற்றுகளும், வானங்களின் மதகுகளும் மூடப்பட்டன: வானத்திலிருந்து மழை பெய்வது நின்றது.

மண்ணுலகில் வெள்ளம் வற்றிக் குறைந்துகொண்டே வந்து, நூற்றைம்பதாம் நாள் முடிவில் வெள்ளம் வடிந்தது.

ஏழாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று அரராத்து மலைத்தொடர்மேல் பேழை தங்கியது.

பத்தாம் மாதம் வரை வெள்ளம் குறைந்து கொண்டே வந்தது. பத்தாம் மாதத்தின் முதல் நாளில் மலை உச்சிகள் தெரிந்தன.

நாற்பது நாள்கள் முடிந்தபின் பேழையில் தாம் அமைத்திருந்த சாளரத்தை நோவா திறந்து,

காகம் ஒன்றை வெளியே அனுப்பினார். அது மண்ணுலகில் வெள்ளம் வற்றும் வரை போவதும் வருவதுமாக இருந்தது.

பின்னர். நிலப்பரப்பிலிருந்து வெள்ளம் வடிந்துவிட்டதா என்று பார்க்கப் புறா ஒன்றைத் தம்மிடமிருந்து வெளியே அனுப்பினார்.

ஆனால் அதற்கு கால் வைத்து தங்குவதற்கு இடம் தென்படாததால், அது அவரிடமே பேழைக்குத் திரும்பி வந்தது. ஏனெனில் நிலப்பரப்பு முழுவதிலும் இன்னும் வெள்ளம் நின்றது. ஆகவே, அவர் தம் கையை நீட்டி அதைப் பிடித்துத் தம்மிடம் பேழைக்குள் சேர்த்துக் கொண்டார்.

அவர் இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்து மீண்டும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே அனுப்பினார்.

மாலையில் அது அவரிடம் திரும்பி வந்தபொழுது, அதன் அலகில் அது கொத்திக்கொண்டு வந்த ஒலிவ இலை இருந்தது. அப்பொழுது நோவா மண்ணுலகில் வெள்ளம் வற்றிவிட்டது என்று தெரிந்துகொண்டார்.

இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்தபின், புறாவை வெளியே அனுப்பினார். அது அவரிடம் மறுபடி திரும்பி வரவில்லை.

அவருக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில் மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா பேழையின் மேற்கூரையைத் திறந்து பார்த்தார். இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருந்தது.

இரண்டாம் மாதத்தின் இருபத்தேழாம் நாளில் மண்ணுலகில் நீர் வற்றியிருந்தது.

அப்பொழுது கடவுள் நோவாவிடம் கூறியது:

"ஙுநீயும் உன்னுடன் உன் மனைவியும் உன் புதல்வரும் உன் புதல்வரின் மனைவியரும் பேழையிலிருந்து வெளியே வாருங்கள்.

உன்னுடன் உயிரோடு இருக்கும் பறவைகள், விலங்குகள், நிலத்தில் ஊர்வன ஆகிய உயிரினங்கள் எல்லாவற்றையும் உன்னுடன் வெளியே கொண்டு வா. மண்ணுலகில் அவை பன்மடங்காகட்டும். பூவுலகில் அவை பலுகிப் பெருகிப் பலன் தரட்டும்."

ஆகவே நோவாவும் அவர் புதல்வரும் அவர் மனைவியும் அவர் புதல்வரின் மனைவியரும் அவருடன் வெளியே வந்தனர்.

விலங்குகள், ஊர்வன, பறவைகள், மண்ணுலகில் நடமாடும் அனைத்தும் வகை வகையாகப் பேழைகளிலிருந்து வெளியே வந்தன.

அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எல்லா வகைத் தக்க விலங்குகள், தக்க பறவைகளிலிருந்து எடுக்கப்பட்டவற்றை எரி பலியாகச் செலுத்தினார்.

ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது: "மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்.

மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை."

அதிகாரம் 9.

கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்.

மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும் உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நடமாடி உயிர்வாழும் அனைத்தும் உங்களுக்கு உணவாகட்டும். உங்களுக்குப் பசமையான செடிகளை உணவாகத் தந்தது போல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.

இறைச்சியை அதன் உயிராகிய இரத்தத்தோடு உண்ணாதீர்கள்.

உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் ஈடு கேட்பேன். உயிரினம் ஒவ்வொன்றிடமும் மனிதர் ஒவ்வொருவரிடமும் நான் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவரவர் சகோதரரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்.

ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள் மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார்.

நீங்கள் பலுகிப் பெருகிப் பன்மடங்காகி மண்ணுலகை நிரப்புங்கள்."

கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது:

"ஙுஇதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும்

பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள்,கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்.

உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்: சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது."

அப்பொழுது கடவுள், "எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக,

என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்.

மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது,

எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது.

வில் மேகத்தின்மேல் தோன்றும்பொழுது அதை நான் கண்டு, கடவுளாகிய எனக்கும் மண்ணுலகில் இருக்கும் சதையுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இடையே என்றென்றுமுள்ள உடன்படிக்கையை நினைவுகூர்வேன்" என்றார்.

கடவுள் நோவாவிடம், "எனக்கும் மண்ணுலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே" என்றார்.

சேம், காம், எப்பேத்து, ஆகியோர் பேழையிலிருந்து வெளிவந்த நோவாவின் புதல்வர். காம் கானானின் தந்தை.

இவர்கள் மூவரும் நோவாவின் புதல்வர். இவர்களிலிருந்துதான் மண்ணுலகு முழுவதும் மனித இனம் பரவியது.

நோவா நிலத்தில் பயிரிடுபவராகித் திராட்சைத் தோட்டம் அமைத்தார்.

அவர் திராட்சை இரசத்தைக் குடித்துப் போதைக்குள்ளாகித் தம் கூடாரத்தில் ஆடை விலகிக் கிடந்தார்.

கானானின் தந்தையாகிய காம் தன் தந்தைதிறந்த மேனியாராய்க் கிடப்பதைக் கண்டு, வெளியே இருந்த தன் இரு சகோதரரிடம் அதைத் தெரிவித்தான்.

அப்பொழுது சேமும், எப்பேத்தும் ஒரு துணியை எடுத்துத் தங்கள் இருவரின் தோள்மேல் போட்டுக்கொண்டு பின்னோக்கி நடந்து தங்கள் தந்தையின் திறந்த மேனியை மூடினர். அவர்கள் முகம் எதிர்ப்பக்கம் நோக்கி இருந்ததால் தங்கள் தந்தையின் திறந்த மேனியை அவர்கள் பார்க்கவில்லை.

நோவாவிற்குப் போதை தெளிந்ததும், தம் இளைய மகன் தமக்குச் செய்ததை அறிந்தார்.

அப்பொழுது அவர், "கானான் சபிக்கப்பட்டவன்: தன் சகோதரருக்கு அவன் அடிமையிலும் அடிமையாக இருப்பான்.

சேமின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! அவனுக்குக் கானான் அடிமையாக இருப்பான்.

கடவுள் எப்பேத்து குடும்பத்தைப் பெருகச் செய்யட்டும். அவன் சேமின் கூடாரத்தில் வாழட்டும். அவனுக்கும் கானான் அடிமையாக இருக்கட்டும்" என்றார்.

வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் நோவா முந்நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.

இவ்வாறு, நோவா தொள்ளாயிரத்து ஜம்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார்.

அதிகாரம் 10.

நோவாவின் புதல்வர் சேம், காம், எப்பேத்து ஆகியோரின் வழிமரபினர் இவர்களே. வெள்ளப் பெருக்குக்குப்பின் அவர்களுக்குப் புதல்வர் பிறந்தனர்.

எப்பேத்தின் புதல்வர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மெசேக்கு, தீராசு.

கோமேரின் புதல்வர்: அஸ்கனாசு, இரிபாத்து, தோகர்மா.

யாவானின் புதல்வர்: எலிசா, தர்சீசு, கித்திம், தோதானிம்.

இவர்கள் வழிவந்த கடற்கரை நாட்டினர் மொழி, குடும்ப, இனவாரியாகப் பிரிந்து தம் நாடுகளில் பரவினர்.

காமின் புதல்வர்: கூசு, எகிப்து, பூற்று, கானான்.

கூசின் புதல்வர்: செபா, அவிலா, சப்தா, இராமா, சப்தக்கா. இராமாவின் புதல்வர்: சேபா, தெதான்.

மேலும் கூசுக்கு நிம்ரோது பிறந்தான். இவன்தான் முதன்முதலாக உலகத்தில் பேராற்றல் கொண்டவனாக விளங்கியவன்.

ஆண்டவர் திருமுன் இவன் ஆற்றல்மிக்க வேடனாக இருந்தான். இதனால் "ஆண்டவர் திருமுன் நிம்ரோதைப் போன்ற ஆற்றல்மிக்க வேடன்" என்ற வழக்கு ஏற்படலாயிற்று.

முதன்முதலில் சினயார் நாட்டிலிருந்த பாபேல், எரேக்கு, அக்காது, கல்னே ஆகியவை அவன் ஆட்சிக்குள் வந்தன.

அந்நாட்டிலிருந்து அசீரியா நாட்டுக்குச் சென்று, அங்கே நினிவே, இரகபோத்து, ஈர், காலாகு ஆகிய நகரங்களை அமைத்தான்.

நினிவேக்கும் காலாகிற்கும் இடையே மிகப்பெரிய நகரமாகிய இரசேனை அவன் நிறுவினான்.

எகிப்தின் புதல்வர்: லூதிம், அனாமிம், இலகாபிம், நப்துகிம்,

பத்ருசிம், பெலிஸ்தியரின் மூதாதையரான கஸ்லுகிம், கப்தோரிம்.

கானானின் தலைமகன் சீதோன், ஏனைய புதல்வர்: ஏத்து,

எபுசி, எமோரி, கிர்காசி,

இவ்வி, அற்கி, சீனி,

அர்வாது, செமாரி, அமாத்தி. இந்தக் கானானின் குடும்பங்கள் பின்னர் பிரிந்து பரவலாயின.

கானானியர் நாட்டு எல்லை சீதோனிலிருந்து தெற்கே கெரார் செல்லும் திசையில் காஸாவரையும் கிழக்கில் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் செல்லும் திசையில் இலாசா வரையும் பரவியிருந்தது.

இவை காம் புதல்வரின் குடும்ப, மொழி, நாடு, இனவாரியான பிரிவுகள்.

எப்பேத்தின் மூத்த சகோதரன் சேமுக்குப் புதல்வர் பிறந்தனர். சேம் ஏபேரியரின் முதுபெருந்தந்தை.

சேமின் ஏனைய புதல்வர்: ஏலாம், அசீரியா, அர்பகசாது, லூது, ஆராம்.

ஆராமின் புதல்வர்: ஊசு, ஊல், கெத்தெர், மாசு."

அர்பகசாதுக்குச் செலாகு பிறந்தான். செலாகிற்கு ஏபேர் பிறந்தான்.

ஏபேருக்கு புதல்வர் இருவர் பிறந்தனர்: ஒருவனின் பெயர் பெலேக்கு. ஏனெனில், அவன் காலத்தில்தான் உலக மக்கள் பிரிந்தனர். அவன் சகோதரனின் பெயர் யோக்தான்.

யோக்தானின் புதல்வர்: அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,

அதோராம், ஊசால், திக்லா,

ஓபால், அபிமாவேல், சேபா,

ஓபீர், அவிலா, யோபாபு.

அவர்கள் வாழ்ந்த நாடு மேசாவிலிருந்து கிழக்கே செப்பார் செல்லும் திசையில் இருந்த மலைநாடுவரை பரவியிருந்தது.

இவை சேம் புதல்வரின் குடும்ப, மொழி, நாட்டு, இனவாரியான பிரிவுகள்.

இவை நோவா புதல்வரின் வழிவந்த குடும்பங்களின் இனவாரியான தலைமுறைகள்.இவர்கள் வழிவந்த மக்களினங்களே வெள்ளப் பெருக்கிற்குப் பின் உலகின் எல்லா நாடுகளிலும் பரவின.

அதிகாரம் 11.

அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன.

மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர்.

அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, "வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்" என்றனர். அவர்கள் செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர்.

பின், அவர்கள் "வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்" என்றனர்.

மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.

அப்பொழுது ஆண்டவர், "இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது.

வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்" என்றார்.

ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர்.

ஆகவே அது "பாபேல்" என்று வழங்கப்பட்டது. ஏனெனில் அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார்.

சேமின் தலைமுறைகள் இவையே: வெள்ளப் பெருக்கிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பின் சேம் நூறு வயதாக இருந்தபொழுது அவனுக்கு அர்பகசாது பிறந்தான்.

அர்பகசாது பிறந்தபின் சேம் ஜந்நூறு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது சேமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

அர்பகசாது முப்பத்தைந்து வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செலாகு பிறந்தான்.

செலாகு பிறந்த பின் அர்பகசாது நானூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது அர்பகசாதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

செலாகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஏபேர் பிறந்தான்.

ஏபேர் பிறந்தபின் செலாகு நானூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது செலாகிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

ஏபேர் முப்பத்து நான்கு வயதாக இருந்தபொழுது அவனுக்குப் பெலேகு பிறந்தான்.

பெலேகு பிறந்தபின் ஏபேர் நானூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது ஏபேருக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

பெலேகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு இரயு பிறந்தான்.

இரயு பிறந்தபின் பெலேகு இருநூற்று ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது பெலேகிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

இரயு முப்பத்திரண்டு வயதாக இருந்தபொழுது அவனுக்குச் செரூகு பிறந்தான்.

செரூகு பிறந்தபின் இரயு இருநூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது இரயுவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

செரூகு முப்பது வயதாக இருந்தபொழுது அவனுக்கு நாகோர் பிறந்தான்.

நாகோர் பிறந்தபின் செரூகு இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது செரூகுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

நாகோர் இருபத்தொன்பது வயதாக இருந்தபொழுது அவனுக்குத் தெராகு பிறந்தான்.

தெராகு பிறந்தபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது நாகோருக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

தெராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவனுக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர்.

தெராகின் தலைமுறைகள் இவையே: தெராகிற்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர். ஆரானுக்கு லோத்து பிறந்தான்.

ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான்.

ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான்.

சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார்.

தெராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர்.

தெராகு இருநூற்று ஜந்து வயதாக இருந்தபொழுது காரானில் இறந்தார்.

அதிகாரம் 12.

ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்.

உன்னை நான் பெரிய இனமாக்குவேன்: உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்: நீயே ஆசியாக விளங்குவாய்.

உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்: உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்: உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" என்றார்.

ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து.

ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.

ஆபிரகாம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி, "உன் வழிமரபினர்ககு இந்நாட்டைக் கொடுப்பேன்" என்றார். ஆகவே தமக்குத் தோன்றிய ஆண்டவருக்கு அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பினார்.

ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.

இவ்வாறு ஆபிராம் படிப்படியாக நெகேபு நோக்கிப் பயணம் செய்தார்.

அப்பொழுது அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் தாம் தங்கி வாழ்வதற்கு எகிப்து நாட்டிற்குச் சென்றார்.

அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், "நீ கண்ணுக்கு அழகானவள் என்பது எனக்குத் தெரியும்.

எகிப்தியர் உன்னைக் காணும்பொழுது இவள் அவனுடைய மனைவி எனச்சொல்லி என்னைக் கொன்று விடுவர்: உன்னையோ உயிரோடு விட்டுவிடுவர்.

உன் பொருட்டு எனக்கு நல்லது நடக்கவும் உன்னால் என் உயிர் காப்பாற்றப்படவும் நீ என் சகோதரி எனச் சொல்லி விடு" என்றார்.

ஆபிராம் எகிப்தைச் சென்றடைந்தபொழுது, சாராய் மிகவும் அழகானவராக இருப்பதை எகிப்தியர் கண்டனர்.

பார்வோனின் மேலதிகாரிகள் அவரைக் கண்டு அவரைப்பற்றிப் புகழ்ந்தனர். ஆகவே, அவர் பார்வோனின் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் பொருட்டு ஆபிராமுக்குப் பார்வோன் நன்மை செய்தான்: ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் அவருக்குக் கொடுத்தான்.

ஆனால் ஆண்டவர் ஆபிராமின் மனைவி சாராய்க்கு நேரிட்டதை முன்னிட்டுப் பார்வோனையும் அவன் குடும்பத்தாரையும் கொடிய கொள்ளை நோய்களால் துன்பப்படுத்தினார்.

பார்வோன் ஆபிராமை அழைத்து அவரிடம், "நீ எனக்கு இப்படிச் செய்து விட்டாயே! அவள் உன் மனைவி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை?

அவள் உன் சகோதரி என்று நீ ஏன் சொன்னாய்? அதனால்தான் நான் அவளை என் மனைவியாக எடுத்துக் கொண்டேன்! இப்பொழுதே, உன் மனைவியைக் கூட்டிக்கொண்டு புறப்படு" என்றான்.

பின் பார்வோன் தன் ஆள்களுக்குக் கட்டளையிட அவர்கள் அவரை அவர் மனைவியுடனும் அவருக்குரிய எல்லாவற்றுடனும் அனுப்பிவிட்டனர்.

அதிகாரம் 13.

ஆகவே, ஆபிராம் தம் மனைவியுடனும் தமக்குரிய எல்லாவற்றுடனும் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார்.

அப்பொழுது ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார்.

நெகேபிலிருந்து பெத்தேல் வரை படிப்படியாகப் பயணம் செய்து பெத்தெலுக்கும் ஆயிக்கும் இடையே முதலில் தம் கூடாரம் இருந்த அதே இடத்தை அடைந்தார்.

தாம் முதலில் பலிபீடம் அமைத்திருந்த இடத்தை அடைந்து அங்கே அவர் ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.

ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன.

அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை.

ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது கானானியரும் பெரிசியரும் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

ஆபிராம் லோத்தை நோக்கி, "எனக்கும உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்படவேண்டாம். ஏனெனில் நாம் உறவினர்.

நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா? என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன்: நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்" என்றார்.

லோத்து கண்களை உயர்த்தி எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார். சோகார் வரை அப்பகுதி ஆண்டவரது தோட்டம் போலும் எகிப்து நாட்டைப் போலும் இருந்தது. சோதோம், கொமோராவை ஆண்டவர் அழிப்பதற்கு முன் அது அவ்வாறிருந்தது.

லோத்து யோர்தான் சுற்றுப்பகுதி முழுவதையும் தேர்ந்துகொண்டு கிழக்குப் பக்கமாகப் பயணமானார். இவ்வாறு ஒருவர் ஒருவரிடம் பிரிந்தனர்.

ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்து நகரங்களில் வாழ்ந்துவந்தார். இறுதியில் சோதோமுக்கு அருகில் கூடாரம் அமைத்துக்கொண்டார்.

ஆனால் சோதோமின் மக்கள் ஆண்டவருக்கு எதிரான மிகக்கொடிய பாவிகளாக இருந்தனர்.

லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின், ஆண்டவர் ஆபிராமை நோக்கி, "நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார்.

ஏனெனில் நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும் கொடுக்கப்போகிறேன்.

உன் வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழிமரபினரையும் எண்ணலாம்.

நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில் இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன் என்றார்.

ஆகவே ஆபிராம் தம் கூடாரத்தைப் பிரித்துக் கொண்டு எபிரோனிலிருந்த மம்ரே என்ற கருவாலி மரத்தோப்பருகில் வந்து வாழ்ந்தார். அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.

அதிகாரம் 14.

அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும் கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும் இருந்தபொழுது,

அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு எதிராகப் போர் தொடுத்தனர்.

அவர்கள் அனைவரும் இப்பொழுது உப்புக்கடலாக இருக்கும் சித்திம் பள்ளத்தாக்கில் ஒன்று திரண்டனர்.

பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் கெதர்லகோமருக்குப் பணிந்திருந்தனர். ஆனால் பதின்மூன்றாம் ஆண்டில் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.

ஆனால் பதினான்காம் ஆண்டில் கெதர்லகோமரும் அவனுடன் இருந்த அரசர்களும் வந்து அஸ்தரோத்து கர்னயிமிலிருந்த இரபாயியரையும், காமிலிருந்த சூசியரையும், சாவே கிரியாத்தயிமிலிருந்த ஏமியரையும்

சேயிர் மலைப்பகுதியில் இருந்த ஓரியரையும் பாலை நிலத்தின் எல்லையில் இருந்த ஏல்பாரான்வரை துரத்திச் சென்று முறியடித்தனர்.

அவர்கள் திரும்பும் வழியில் காதேசு என்ற ஏன் மிட்சுபாற்றுக்கு வந்து அமலேக்கியரின் நாடு முழுவதையும் அச்சோன் தாமாரில் வாழ்ந்த எமோரியரையும் அழித்தனர்.

அப்பொழுது சோதோம் அரசனும் கொமோரா அரசனும் அதிமா அரசனும் செபோயிம் அரசனும் பேலா அரசன் சோவாரும் சென்று,

ஏலாம் அரசன் கெதர்லகோமருடனும் கோயிம் அரசன் திதாலுடனும் சினயார் அரசன் அம்ராபலுடனும் எல்லாசர் அரசன் அரியோக்குடனும்-ஆக, நான்கு அரசர்கள் ஜந்து அரசர்களுக்கு எதிராக சித்திம் பள்ளத்தாக்கில் போர்தொடுத்தனர்.

இந்தச் சித்திம் பள்ளத்தாக்கில் கீல் குழிகள் மிகப்பல இருந்தன. சோதோம் அரசனும் கொமோரா அரசனும் தப்பி ஓடியபொழுது அவற்றினுள் விழுந்தனர். மற்றவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு மலையை நோக்கி ஓடினர்.

வெற்றி பெற்றவர்கள் சோதோம், கொமோராவில் இருந்த செல்வங்கள், உணவுப் பண்டங்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.

அவர்கள் சோதோமில் வாழ்ந்த ஆபிராமில் சகோதரன் மகனான லோத்தையும் அவர் செல்வங்களையும் கவர்ந்து கொண்டு சென்றனர்.

தப்பிவந்த ஒருவன் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது ஆபிராம் எசுக்கோல், ஆனேர் ஆகியோரின் சகோதரனான மம்ரே என்ற எமோரியனின் கருவாலி மரத்தோப்பில் வாழ்ந்து வந்தார். அவர்கள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள்.

தம் உறவினர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றதும், ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்.

அவரும் அவர் ஆள்களும் அணிஅணியாகப் பிரிந்து இரவில் அவர்களைத் தாக்கித் தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத் துரத்திச் சென்றனர்.

அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக் கொண்டு வந்தார்.

ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்த அரசர்களையும் முறியடித்துத் திரும்பியபொழுது அரசர் பள்ளத்தாக்கு என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்கச் சோதோம் அரசன் வந்தான்.

அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் உன்னத கடவுளின் அர்ச்சகராக இருந்தார்.

அவர் ஆபிராமை வாழ்த்தி, "விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக!

உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!" என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.

சோதோம் அரசன் ஆபிராமிடம், "ஆள்களை என்னிடம் ஒப்படைத்துவிடும். ஆனால் செல்வங்களை நீரே வைத்துக் கொள்ளும்" என்றான்.

அதற்கு ஆபிராம் சோதோம் அரசனிடம், "விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுளாகிய ஆண்டவருக்கு ஆணையிட்டுக் கூறுகிறேன்:

நான்தான் ஆபிராமைச் செல்வன் ஆக்கினேன் என்று நீர் சொல்லாதபடி, உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக் கொள்ளமாட்டேன்.

இளைஞர்கள் உண்டதைத் தவிர எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால் என்னுடன் வந்த ஆனேர், சுக்கோல், மம்ரே ஆகியோர் அவர்கள் பங்கை எடுத்துக் கொள்ளட்டும்" என்றார்.

அதிகாரம் 15.

இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: "ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்."

அப்பொழுது ஆபிராம், "என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்!

நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்" என்றார்.

அதற்கு மறுமொழியாக, "இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால் உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன் ஆவான்" என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.

அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" என்றார்.

ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.

ஆண்டவர் ஆபிராமிடம், "இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே" என்றார்.

அதற்கு ஆபிராம், "என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?" என்றார்.

ஆண்டவர் ஆபிராமிடம், "மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா" என்றார்.

ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டுவந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை.

துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.

கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது.

ஆண்டவர் ஆபிராமிடம், "நீ உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது: உன் வழிமரபினர் வேறொரு நாட்டிற்குப் பிழைக்கச் செல்வர். அங்கே அவர்கள் நானூறு ஆண்டுகள் அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவர்.

அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டிற்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். அதற்குப்பின் மிகுந்த செல்வங்களுடன் அந்நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறுவர்.

நீ மிகவும் முதிர்ந்த வயதில் அமைதியாக உன் மூதாதையரிடம் சென்றபின், நல்லடக்கம் செய்யப்படுவாய்.

நான்காம் தலைமுறையில் அவர்கள் இங்கே திரும்பி வருவர். ஏனெனில் எமோரியர் இழைக்கும் தீமை இன்னும் முழுமை அடையவில்லை" என்றார்.

கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.

அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "கிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள

கேனியர், கெனிசியர், கத்மோனியர்,

இத்தியர், பெரிசியர், இரபாவியர்

எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்" என்றார்.

அதிகாரம் 16.

ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்.

சாராய் ஆபிராமிடம், "ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்" என்றார். ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார்.

ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின், அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார்.

அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள்.

அப்பொழுது சாராய் ஆபிராமிடம், "எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும். நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்" என்றார்.

ஆபிராம் சாராயிடம், "உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்" என்றார். இதற்குப்பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள்.

ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது.

அவர் அவளை நோக்கி, "சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?" என்று கேட்டார். அதற்கு அவள், "என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்" என்றாள்.

ஆண்டவரின் தூதர் அவளிடம், "நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட" என்றார்.

பின்பு ஆண்டவரின் தூதர் அவளிடம், "உன் வழி மரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்" என்றார்.

மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், "இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு இஸ்மயேல் எனப் பெயரிடுவாய். ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார்.

ஆனால் அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லோரையும் அவன் எதிர்ப்பான் எல்லோரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்" என்றார்.

அப்பொழுது, என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா? என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, காண்கின்ற இறைவன் நீர் என்று பெயரிட்டழைத்தாள்.

ஆகவே, அந்தக் கிணற்றிற்கு பெயேர் லகாய்ரோயி என்ற பெயர் வழங்கலாயிற்று. அது காதேசுக்கும் பெரேதுக்கும் இடையே இருக்கின்றது.

ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் இஸ்மயேல் என்று பெயரிட்டார்.

ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு.

அதிகாரம் 17.

ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு.

உனக்கும் எனக்குமிடையே ஓர் உடன்படிக்கையை நான் ஏற்படுத்திக்கொள்வேன்: உன்னை மிகமிகப் பெருகச் செய்வேன்" என்றார்.

அப்பொழுது ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது:

உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.

இனி உன்பெயர் ஆபிராம் அன்று: ஆபிரகாம் என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன்.

மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்: உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர்.

தலைமுறை தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால் உனக்கும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன்.

நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழி மரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்" என்றார்.

மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், நீயும் தலைமுறைதோறும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே உங்களுக்கும் எனக்குமிடையே உள்ள உடன்படிக்கையின் அடையாளம்.

தலைமுறை தலைமுறையாக எட்டு நாள் ஆன உங்கள் ஆண்குழந்தை ஒவ்வொன்றுக்கும் நீங்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டும். அக்குழந்தை வீட்டில் பிறந்திருந்தாலும், உன் வழிமரபைச் சாராமல் வேற்றினத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டிருந்தாலும், அப்படியே செய்ய வேண்டும்.

உன்வீட்டில் பிறந்த குழந்தைக்கும் விலைக்கு வாங்கியதற்கும் கண்டிப்பாக விருத்தசேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு என் உடன்படிக்கை உன் உடலில் என்றுமுள்ள உடன்படிக்கையாக இருக்கும்.

தன் உடலில் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆண்மகனும், என் உடன்படிக்கையை மீறியதால், தன் இனத்தாரிடமிருந்து விலக்கப்படுவான்" என்றார்.

பின்பு கடவுள் ஆபிரகாமிடம், "உன் மனைவியைச் சாராய் என அழைக்காதே. இனிச் சாரா என்பதே அவள் பெயர்.

அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்" என்றார்.

ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, "நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாய்?" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

ஆபிரகாம் கடவுளிடம், "உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்" என்றார்.

கடவுள் அவரிடம் , "அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ ஈசாக்கு எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப்பின் வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.

இஸ் மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர்களுக்கு அவன் தந்தையாவான்: அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும்.

ஆனால், சாரா உனக்கு அடுத்து ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்" என்றார்.

அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.

பின் ஆபிரகாம் தம் மகன் இஸ்மயேலுக்கும் தம் வீட்டில் பிறந்த எல்லாருக்கும், தாம் விலைக்கு வாங்கிய எல்லாருக்கும், அதாவது, தம் வீட்டில் இருந்த ஒவ்வொரு ஆணுக்கும், கடவுள் தமக்குக் கூறியபடியே அதே நாளில் அவர்கள் உடலில் விருத்தசேதனம் செய்தார்.

ஆபிரகாமுக்கு அவர் உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது அவருக்கு வயது தொண்ணூற்றொன்பது.

அவர் மகன் இஸ்மயேலுக்கு அவன் உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது, அவனுக்கு வயது பதின்மூன்று.

ஆபிரகாமுக்கும் அவர் மகன் இஸ்மயேலுக்கும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டது.

அவருக்குச் செய்யப்பட்டதுபோல அவர் வீட்டில் பிறந்தவர்கள், வேற்றினத்தாரிடமிருந்து அவர் விலைக்கு வாங்கியவர்கள் ஆகிய எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது.

அதிகாரம் 18.

பின்பு ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில்,

கண்களை உயர்த்திப் பார்த்தார்: மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி,

"என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்தாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!

இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள்.

கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்" என்றார். "நீ சொன்னபடியே செய்" என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.

அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, "விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு" என்றார்.

ஆபிரகாம் மாட்டு தந்தைக்கு ஓடிச்சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான்.

பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும்பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார்.

பின்பு அவர்கள் அவரை நோக்கி, "உன் மனைவி சாரா எங்கே?" என்று கேட்க, அவர், "அதோ கூடாரத்தில் இருக்கிறாள்" என்று பதில் கூறினார்.

அப்பொழுது ஆண்டவ+: "நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன. அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்" என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது.

எனவே, சாரா தமக்குள் சிரித்து, "நானோ கிழவி: என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?" என்றாள்.

அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, "நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா" என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ!

இளவேனிற்காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்" என்று சொன்னார்.

சாராவோ, "நான் சிரிக்கவில்லை" என்று சொல்லி மறுத்தார். ஏனெனில் அச்சம் அவரை ஆட்கொண்டது. அதற்கு ஆண்டவர், "இல்லை, நீ சிரித்தாய்" என்றார்.

அந்த மனிதர்கள் எழுந்து, அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமும் உடன்சென்று அவர்களை வழியனுப்பினார்.

அப்பொழுது ஆண்டவர், "நான் செய்யவிருப்பதை ஆபிரகாமிடமிருந்து மறைப்பேனா?

ஆபிரகாமிடமிருந்தே வலிமைமிக்க மாபெரும் இனம் தோன்றும். அவன் மூலம் மண்ணுலகின் எல்லா இனத்தாரும் ஆசி பெற்றுக் கொள்வர்.

ஏனெனில், நீதி, நேர்மை வழி நின்று எனக்குக் கீழ்ப்படியும்படி தன் புதல்வருக்கும், தனக்குப்பின் தன் வழிமரபினருக்கும் கற்றுத்தருமாறு ஆண்டவராகிய நான் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை அவன் நிறைவேற்றுவான்" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

ஆதலால் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, "சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது.

என்னை வந்தடைந்த கண்டனக்குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்" என்றார்.

அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார்.

ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: "தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?

ஒருவேளை நகரில் ஜம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஜம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ?

தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று: நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?" என்றார்.

அதற்கு ஆண்டவர், "நான் சோதோம் நகரில் ஜம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்" என்றார்.

அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, "தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்துவிட்டேன்:

ஒருவேளை அந்த ஜம்பது நீதிமான்களில் ஜந்து பேர் துறைவாயிருக்கலாம். ஜந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?" என்றார். அதற்கு அவர், "நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்" என்றார்.

மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, "ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?" என்று கேட்க, ஆண்டவர், "நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்" என்றார்,

அப்பொழுது ஆபிரகாம்: என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்: சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்? என, அவரும் "முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்" என்று பதிலளித்தார்.

அவர், "என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத்துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?" என, அதற்கு அவர், "இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்" என்றார்.

அதற்கு அவர், "என் தலைவரே, சினமடைய வேண்டாம்: இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?" என, அவர், "அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்" என்றார்.

ஆபிரகாமோடு பேசி முடித்தபின் ஆண்டவர் அவரை விட்டுச்சென்றார். ஆபிரகாமும் தம் இடத்திற்குத் திரும்பிச் சென்றார்.

அதிகாரம் 19.

மாலை வேளையில் ஆண்டவரின் தூதர் இருவர் சோதோமுக்கு வந்தனர். அப்பொழுது நகரின் நுழை வாயிலில் லோத்து உட்கார்ந்திருந்தார். அவர் அவர்களைக் கண்டவுடன் எழுந்து சந்திக்கச் சென்று தரைமட்டும் தாழ்ந்து அவர்களை வணங்கினார்.

பிறகு, "என் தலைவர்களே, அருள்கூர்ந்து உங்கள் அடியானின் இல்லத்திற்கு வாருங்கள். உங்கள் கால்களைக் கழுவி, இரவு தங்குங்கள். காலையில் எழுந்து உங்கள் வழிப்பயணத்தைத் தொடருங்கள்" என்று சொன்னார். அவர்களோ, "வேண்டாம், பொதுவிடத்தில் நாங்கள் இரவு தங்குவோம்" என்று மறுமொழி சொன்னார்கள்.

அவர் அவர்களை மிகவும் வற்புறுத்தவே, அவர்களும் உடன் சென்று அவரது இல்லத்தினுள் நுழைந்தார்கள். அவர் புளிப்பற்ற அப்பம் சுட்டு அவர்களுக்கு விருந்தளிக்க, அவர்களும் உண்டார்கள்.

பின் அவர்கள் உறங்கச் செல்லுமுன், சோதோம் நகரின் மக்களுள் இளைஞர் முதல் கிழவர் ஈறாக எல்லா ஆண்களும் அவ்வீட்டைச் சூழ்ந்து கொண்டனர்.

பிறகு லோத்தைக் கூப்பிட்டு, "இன்று இரவு உன்னிடம் வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு உறவு கொள்ளுமாறு அவர்களை எங்களிடம் கொண்டு வா" என்றனர்.

லோத்து வீட்டிற்கு வெளியே வந்து, தனக்குப் பின் கதவை மூடிக்கொண்டு,

"என் சகோதரரே, தீச்செயல் செய்யாதிருங்கள்.

ஆண் தொடர்பு அறியாத புதல்வியர் இருவர் எனக்கு உள்ளனர். உங்களிடம் நான் அவர்களை அழைத்து வருகிறேன். உங்கள் விருப்பப்படி அவர்களுடன் நடந்து கொள்ளலாம். ஆனால் எனது இல்லத்தின் பாதுகாப்பைப் பெற்றிருக்கும் இந்த ஆடவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம்" என்றார்.

அதற்கு அவர்களோ, "அப்பாலே போ" என்றனர். மேலும் அவர்கள் "அயல்நாட்டிலிருந்து வந்த இவனா நமக்கு நியாயம் கூறுவது?" என்று சொல்லிக்கொண்டு, "அவர்களுக்குச் செய்யவிருப்பதைவிட இப்பொழுது உனக்கு அதிகத் தீங்கு செய்வோம்" என்றனர். பிறகு லோத்தைக் கடுமையாய்த் தாக்கிக் கதவை உடைக்க நெருங்கிச் சென்றனர்.

அவ்வேளையில் அந்த ஆடவர் தம் கைகளை நீட்டி லோத்தைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்துக் கதவைப் பூட்டிக் கொண்டனர்.

கதவருகே நின்று கொண்டிருந்த சிறியோர், பெரியோர்களாகிய அம்மனிதர்களை அவர்கள் குருடராக்கினர். அவர்களால் கதவைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை

மேலும், அந்த மனிதர்கள் லோத்தை நோக்கி: "இங்கே உன்னைச் சார்ந்த வேறு யாரேனும் உளரோ? மருமகனோ, புதல்வரோ, புதல்வியரோ உன்னைச் சார்ந்த வேறு யாரேனும் இந்நகரில் இருந்தால், அவர்களை இவ்விடத்திலிருந்து உன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விடு.

இந்த இடத்தின் மக்களுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் ஆண்டவர் திருமுன் எழுந்துள்ளதால், நாங்கள் இந்த இடத்தை அழிக்கும்படி எங்களை அவர் அனுப்பியுள்ளார்" என்றனர்.

உடனே லோத்து வெளியே போய்த் தம் புதல்வியருக்கு மண ஒப்பந்தமாகியிருந்த மருமக்களோடு பேசி, "நீங்கள் எழுந்து இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள். ஏனெனில் ஆண்டவர் இந்நகரை அழிக்கப் போகிறார்" என்றார். அவருடைய மருமக்களுக்கு இது நகைப்புக்குரியதாய்த் தோன்றியது.

பொழுது விடியும் வேளையில் தூதர்கள் லோத்தை நோக்கி, "நீ எழுந்திரு! உன் மனைவியையும், உன் இரு புதல்வியரையும் கூட்டிக்கொண்டு போ! இல்லையேல், இந்நகரின் தண்டனைத் தீர்ப்பில் நீயும் அகப்பட்டு அழிவாய்" என்று வற்புறுத்திக் கூறினார்கள்.

அவர் காலந்தாழ்த்தினார். ஆண்டவர் அவர் மீது இரக்கம் வைத்திருந்ததால், அந்த மனிதர்கள் அவரது கையையும், அவர் மனைவியின் கையையும், அவர் இரு புதல்வியர் கையையும் பிடித்துக் கொண்டுபோய் நகருக்கு வெளியே விட்டார்கள்.

அவர்களை வெளியே அழைத்து வந்தவுடன் அந்த மனிதர்கள் அவரை நோக்கி, "நீ உயிர்தப்புமாறு ஓடிப்போ: திரும்பிப் பார்க்காதே: சமவெளி எங்கேயும் தங்காதே: மலையை நோக்கித் தப்பி ஓடு: இல்லையேல் அழிந்து போவாய்" என்றார்கள்.

லோத்து அவர்களை நோக்கி: "என் தலைவர்களே, வேண்டாம்.

உங்கள் அடியானுக்கு உங்கள் பார்வையில் இரக்கம் கிடைத்துள்ளது. என் உயிரைக் காக்கும் பொருட்டு நீர் காட்டிய பேரன்பு உயர்ந்தது. ஆயினும் மலையை நோக்கித் தப்பியோட என்னால் இயலாது. ஓடினால் தீங்கு ஏற்பட்டு, நான் செத்துப்போவேன்.

எனவே, நான் தப்பியோடிச் சேர்வதற்கு வசதியாக, இதோ ஒரு நகர் அருகிலுள்ளது. அது சிறியதாய் இருக்கிறது. அதற்குள் ஓடிப்போக விடுங்கள். அது சிறிய நகர் தானே? நானும் உயிர் பிழைப்பேன்" என்றார்.

அதற்கு தூதர் ஒருவர், "நல்லது, அப்படியே ஆகட்டும். இக்காரியத்திலும் உனக்குக் கருணை காட்டியுள்ளேன். நீ கேட்டபடி அந்நகரை நான் அழிக்க மாட்டேன்.

நீ அங்கு விரைந்தோடித் தப்பித்துக் கொள். நீ அங்குச் சென்று சேருமட்டும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது" என்றார். இதனால் அந்த நகருக்குச் "சோவார்" என்னும் பெயர் வழங்கிற்று.

லோத்து சோவாரை அடைந்த போது கதிரவன் மண்ணுலகின் மேல் உதித்திருந்தான்.

அப்பொழுது ஆண்டவர் வானத்திலிருந்து சோதோம், கொமோரா நகர்களின்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்.

அந்நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சமவெளி முழுவதையும் அழித்தார். நகர்களில் வாழ்ந்த அனைவரையும், நிலத்தில் தளிர்த்தனவற்றையும் அழித்தார்.

அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புத்தூணாக மாறினாள்.

ஆபிரகாம் காலையில் எழுந்திருந்து, தாம் ஏற்கெனவே ஆண்டவர் திருமுன் நின்ற இடத்திற்குப் போனார்.

அவர் சோதோமையும் கொமோராவையும் சூழ்ந்திருந்த நிலப்பகுதியையும் நோக்கிப் பார்த்தபோது சூளையின் புகைபோல நிலப்பரப்பிலிருந்து புகை கிளம்பக் கண்டார்.

கடவுள் சமவெளி நகர்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவு கூர்ந்தார். எனவே லோத்து குடியிருந்த நகர்களை அழித்தபோது கடவுள் அவரைக் காப்பாற்றினார்.

லோத்து சோவாரைவிட்டு வெளியேறி மலைக்குச் சென்று குடியேறினார். சோவாரில் குடியிருக்க அஞ்சியதால் தம் இரு புதல்வியருடன் ஒரு குகையில் வாழ்ந்து வந்தார்.

அப்பொழுது மூத்தவள் இளையவளை நோக்கி, "நம் தந்தை வயது முதிர்ந்தவர். உலகெங்கும் உள்ள வழக்கிற்கேற்ப நம்மை மணந்து நம்முடன் உறவு கொள்ளுமாறு இப்பகுதியில் வேறு ஆடவர் எவரும் இல்லை.

வா: நம் தந்தையைத் திராட்சை மது குடிக்க வைத்து, அவருடன் உறவுகொள்வோம். இவ்வாறு நம் தந்தையின் மூலம் வழிமரபைக் காத்துக் கொள்வோம்" என்றாள்.

அவ்வாறே அன்றிரவு தங்கள் தந்தையைத் திராட்சை மது குடிக்கவைத்தார்கள். பிறகு மூத்தவள் உள்ளே நுழைந்து தன் தந்தையுடன் படுத்துக் கொண்டதோ, அவள் எழுந்து சென்றதோ அவருக்குத் தெரியாது.

மறுநாள் மூத்தவள் இளையவளை நோக்கி, "நேற்றிரவு என் தந்தையோடு நான் படுத்துக்கொண்டேன். இன்றிரவும் அவ்வாறே அவரைத் திராட்சை மது குடிக்கவைப்போம். நீ சென்று அவருடன் படுத்துக்கொள். இவ்வண்ணமாக நம் தந்தையின் மூலம் வழிமரபைக் காத்துக்கொள்வோம்" என்றாள்.

அவ்வாறே அன்றிரவும் தங்கள் தந்தையைத் திராட்சை மது குடிக்க வைத்தார்கள். இம்முறையும் அவள் படுத்துக்கொண்டதோ அவள் எழுந்து சென்றதோ அவருக்குத் தெரியாது.

இவ்வாறு லோத்தின் புதல்வியர் இருவரும் தம் தந்தையின் மூலம் கருத்தரித்தனர்.

பின் மூத்தவள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு மோவாபு என்று பெயரிட்டாள். அவன் இன்றுவரை இருக்கிற மோவாபியருக்குத் தந்தை.

இளையவள் ஒரு மகனைப் பெற்று, அவனுக்குப் பென் அம்மி என்னும் பெயரைச் சூட்டினாள். அவன் இன்றுவரை இருக்கிற அம்மோனியரின் தந்தை.

அதிகாரம் 20.

ஆபிரகாம் அங்கிருந்து புறப்பட்டு நெகேபுக்குச் சென்று காதேசுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து, பின்னர் கெராரில் தங்கினார்.

அப்போது ஆபிரகாம் தம் மனைவி சாராவைத் தம் சகோதரி என்று சொல்லிக் கொண்டமையால், கெரார் மன்னனாகிய அபிமெலக்கு ஆளனுப்பி அவரை அழைத்துவரச் செய்தான்.

இரவில் ஆண்டவர் அபிமெலக்குக்குக் கனவில் தோன்றி, "இதோ, நீ அழைத்துவரச் செய்த பெண்ணின் பொருட்டு நீ சாகப் போகிறாய். ஏனெனில் அவள் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டவள்" என்று அவனிடம் கூறினார்.

அதுவரை அவரைத் தொடாதிருந்த அபிமெலக்கு அது கேட்டு மறுமொழியாக, "என் தலைவரே, உண்மையாகவே நேர்மைமிக்க இனத்தவரை நீர் அழிப்பீரோ?

அவன் அவளைத் தன் சகோதரி என்றும் அவள் அவனைத் தன் சகோதரன் என்றும் அறிமுகப்படுத்தவில்லையா? நான் நேரிய இதயத்தோடும் தூய கைகளோடும் இதைச் செய்தேன் " என்றான்.

கடவுள், கனவில் தோன்றி, அவனை நோக்கி, "நீ நேரிய இதயத்தோடு அப்படிச் செய்தாயென்று அறிவேன். அதனால்தான் எனக்கு எதிராகப் பாவம் செய்யாத உன்னைக் காப்பாற்றி, அவளைத் தொடவிடவில்லை.

உடனே அந்தப் பெண்ணை அவளின் கணவனிடம் அனுப்பிவிடு. ஏனெனில் அவன் ஓர் இறைவாக்கினன். அவன் உனக்காக மன்றாடினால் நீ பிழைப்பாய். அவளை நீ அனுப்பாவிடில் நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் செத்து மடிவீர்கள் என்பது உறுதி" என்றார்.

அபிமெலக்கு அதிகாலையில் எழுந்து தன் வேலைக்காரர் அனைவரையும் அழைத்து, அந்த வார்த்தைகளை எல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான். அதைக் கேட்டு அவர்கள் மிகவும் அச்சமுற்றனர்.

பின் அபிமெலக்கு ஆபிரகாமை வரவழைத்து, "நீர் எங்களுக்கு என்ன காரியம் செய்து விட்டீர்? எனக்கும் என் நாட்டுக்கும் இப்பெரும் பழி நேரும்படி நான் உமக்கு என்ன தீங்கு செய்தேன்? செய்திருக்கக் கூடாதவற்றை நீர் எனக்குச் செய்துவிட்டீரே!

நீர் எக்காரணத்தைக் கொண்டு இக்காரியம் செய்தீர்?" என்ற அவரிடம் வினவினான்.

ஆபிரகாம் மறுமொழியாக, "இவ்விடத்தில் கடவுளுக்கு அஞ்சுவார் எவரும் இல்லையென்றும் என் மனைவியை அடையும்பொருட்டு என்னைக் கொன்று விடுவார்கள் என்றும் நினைத்தேன்.

மேலும், உண்மையில் இவள் என் சகோதரியே: இவள் என் தந்தைக்குப் பிறந்த மகள். ஆனால் என் தாயின் மகள் அல்ல: அவளை நான் மணந்து கொண்டேன்.

மேலும், நான் என் தந்தையின் வீட்டைவிட்டுக் கடவுள் என்னை அலைந்து திரியச் செய்தபோது, நீ எனக்குப் பேருதவி செய்ய வேண்டும்: நாம் செல்லுமிடமெல்லாம், நான் உன் சகோதரன் என்று சொல் என்று அவளிடம் நான் கூறியிருந்தேன்" என்றார்.

அப்பொழுது அபிமெலக்கு ஆடு மாடுகளையும், வேலைக்காரர், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்ததுமன்றி, அவர் மனைவி சாராவையும் அவரிடம் ஒப்படைத்தான்.

மேலும் அபிமெலக்கு, "இதோ உமக்கு முன்பாக எனது நாடு இருக்கிறது. உமக்கு எங்கு விருப்பமோ அங்கு நீர் வாழலாம்" என்றான்.

மேலும் சாராவை நோக்கி, "இதோ உன் சகோதரருக்கு ஆயிரம் வெள்ளிக்காக கொடுத்துள்ளேன். உன்னோடு இருப்பவர்களின் பார்வையிலிருந்து அது மறைக்கும் திரையாக அமையட்டும். அனைவர் பார்வையிலும் உன் பழி நீங்கிவிட்டது" என்றான்.

ஆபிரகாம் கடவுளிடம் மன்றாடவே, கடவுளும் அபிமெலக்கையும் அவன் மனைவியையும் அடிமைப் பெண்களையும் குணமாக்கி அவர்களுக்குப் பிள்ளைப்பேறு அளித்தார்.

ஏனென்றால், ஆபிரகாமின் மனைவி சாராவை முன்னிட்டு ஆண்டவர் அபிமெலக்கு வீட்டிலிருந்த பெண்களை மலடிகளாக்கியிருந்தார்.

அதிகாரம் 21.

ஆண்டவர் தாம் கூறியிருந்தபடி சாராவைக் கண்ணோக்கினார். ஆண்டவர் தம் வாக்குறுதிக்கேற்ப சாராவுக்குச் செய்தருளினார்.

கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.

ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டார்.

கடவுள் கட்டளையிட்டபடி, ஆபிரகாம் தம் மகன் ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளன்று அவனுக்கு விருத்தசேதனம் செய்தார்.

அவருடைய மகன் ஈசாக்கு அவருக்குப் பிறந்த பொழுது அவருடைய வயதோ நூறு.

அப்பொழுது சாரா, "கடவுள் என்னைச் சிரிக்க வைத்தார் என்றும் இதைக் கேட்கும் அனைவரும் என்னோடு சேர்ந்து சிரிப்பர்" என்றும் சொன்னார்.

மீண்டும் அவர், "சாரா தம் புதல்வர்களுக்குப் பாலூட்டுவார்" என்று ஆபிரகாமிடம் யாராவது சொல்லியிருப்பார்களா? ஆயினும் இதோ அவருக்கு அவரது முதிர்ந்த வயதில் நான் ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளேன்" என்றார்.

அந்தக் குழந்தை வளர்ந்து பால் குடியும் மறந்தது. அப்படிப் பால் குடிப்பதை நிறுத்திய நாளன்று ஆபிரகாம் பெரியதொரு விருந்து அளித்தார்.

பின்னர் எகிப்தியளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்றெடுத்த மகன் சிரித்து விளையாடுவதைச் சாரா கண்டு,

ஆபிரகாமை நோக்கி, "இந்தப் பணிப்பெண்ணையும் அவள் மகனையும் துரத்திவிடும். ஏனென்றால், பணிப்பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் பங்காளியாய் இருக்கக்கூடாது" என்றார்.

தம் மகனுக்கு எதிரான இவ்வார்த்தை ஆபிரகாமுக்கு மிகுந்த வேதனை அளித்தது.

அப்போது கடவுள் ஆபிரகாமை நோக்கி, "பையனையும் பணிப்பெண்ணையும் குறித்து வேதனைப்படாதே. சாரா உனக்குச் சொல்வதையெல்லாம் அப்படியே செய். ஏனெனில் ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும்.

பணிப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருப்பதால், அவனிடமிருந்தும் இனமொன்று தோன்றச் செய்வேன்" என்றார்.

எனவே ஆபிரகாம் காலையில் எழுந்து, அப்பத்தையும், தோற்பை நிறையத் தண்ணீரையும் எடுத்து ஆகாரிடம் கொடுத்தார்: அவற்றை அவள் தோள்மேல் வைத்து குழந்தையையும் அவளுடன் அனுப்பி வைத்தார். அவளும் புறப்பட்டுப் போய் பெயேர்செபா என்னும் பாலைநிலத்தில் அலைந்து திரிந்தாள்.

தோற்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின் அவள் புதர் ஒன்றின் அடியில் குழந்தையைக் கிடத்தினாள்.

பின்பு அவள் முன்புறம் சென்று அம்புஎறி தூரத்தளவில் உட்கார்ந்து கொண்டாள். குழந்தை சாவதைப் பார்க்கச் சகியேன் என்று கூறி, முன்புறமிருந்து கொண்டே கூக்குரலிட்டு அழுதாள்.

அப்போது கடவுள் பையனின் அழுகுரலைக் கேட்டார். ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆகாரைக் கூப்பிட்டு, "ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன? அஞ்சாதே. ஏனெனில், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையனின் அழுகுரலை கடவுள் கேட்டருளினார்.

நீ எழுந்து பையனைத் தூக்கி விடு. அவனை உன் கையில் பிடித்துக் கொள். ஏனெனில், அவனிடமிருந்து பெரிய இனமொன்று தோன்றச் செய்வேன்" என்றார்.

அப்பொழுது கடவுள் அவள் கண்களைத் திறந்துவிட, அவள் நீருள்ள கிணற்றைக் கண்டாள். அவள் அங்குச் சென்று தோற்பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

கடவுளும் பையனோடு இருந்தார். அவன் வளர்ந்து பாலை நிலத்தில் குடியிருந்தான். அம்பு எய்வதில் வல்லவனானான்.

அவன் பாரான் என்னும் பாலைநிலத்தில் வாழ்ந்து வருகையில், அவன் தாய் எகிப்து நாட்டைச் சார்ந்த ஒரு பெண்ணை அவனுக்கு மணமுடித்து வைத்தாள்.

அக்காலத்தில் அபிமெலக்கு தன் படைத்தலைவன் பிக்கோலோடு வந்து ஆபிரகாமை நோக்கி, "நீர் செய்கிற யாவற்றிலும் கடவுள் உம்முடனே இருக்கிறார்.

ஆகையால், எனக்கும் என் புதல்வருக்கும் என் இனத்தாருக்கும் நீர் வஞ்சனை செய்யாமல், உமக்கு நான் இரக்கம் காட்டியதுபோல எனக்கும், நீர் பிழைப்புக்காக வந்த இந்த நாட்டிற்கும், நீர் இரக்கம் காட்டுவதாகக் கடவுள் பெயரால் ஆணையிட்டு எனக்கு வாக்களியும்" என்றான்.

அதற்கு ஆபிரகாம், "அவ்விதமே ஆணையிட்டு வாக்களிக்கிறேன்" என்று கூறினார்.

பிறகு அபிமெலக்கின் ஊழியர்கள் கைப்பற்றியிருந்த நீருள்ள கிணறு ஒன்றைப் பற்றி அவனிடம் ஆபிரகாம் முறையிட்டார்.

அபிமெலக்கு அதற்கு மறுமொழியாக, "இந்தக் காரியத்தைச் செய்தவன் யாரென்று எனக்குத் தெரியாது. நீரும் அதை எனக்குத் தெரிவிக்கவில்லை. இன்றுதான் இதைப்பற்றிக் கேள்விப்படுகிறேன்" என்றான்.

பின் ஆபிரகாம் ஆடு மாடுகளை அபிமெலக்கிடம் கொண்டுவந்து கொடுக்க, அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்து கொண்டனர்.

அப்பொழுது ஆபிரகாம் மந்தையினின்று ஏழு பெண் ஆட்டுக்குட்டியைப் பிரித்தெடுத்துத் தனியாக நிறுத்தினார்.

அபிமெலக்கு ஆபிரகாமை நோக்கி, "நீர் இவ்வேழு பெண் ஆட்டுக்குட்டிகளைத் தனியாக நிறுத்தி வைத்திருப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டான்.

அவர், "இந்தக் கிணற்றைத் தோண்டியது நான்தான் என்பதற்குச் சான்றாக, நீர் இந்தப் பெண் ஆட்டுக்குட்டிகள் ஏழையும் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும்" என்றார்.

அதன் காரணமாக அந்த இடம் பெயேர்செபா என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால், அங்குத்தான் இருவரும் ஆணையிட்டு வாக்களித்துக் கொண்டனர்.

இவ்வாறு பெயேர்செபாவில் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இதன் பின் அபிமெலக்கும் அவன் படைத்தலைவன் பிக்கோலும் பெலிஸ்தியர் நாட்டிற்குத் திரும்பிச் சென்றனர்.

ஆபிரகாமோ பெயேர்செபாவில் ஏசல் மரத்தை நட்டு, அங்கு என்றும் வாழும் இறைவனாகிய ஆண்டவரின் திருப்பெயரைத் தொழுதார்.

அவர் பெலிஸ்தியர் நாட்டில் நெடுங்காலம் குடியிருந்தார்.

அதிகாரம் 22.

இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் இதோ! அடியேன் என்றார்.

அவர், "உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்" என்றார்.

அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு, எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டிய பின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார்.

உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, "நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவனிடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்" என்றார்.

பின் ஆபிரகாம் எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின் மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக் கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர்.

அப்பொழுது, ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமை நோக்கி, அப்பா! என, அவர், என்ன? மகனே! என்று கேட்டார். அதற்கு அவன், "இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" என்று வினவினான்.

அதற்கு ஆபிரகாம், "எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்த மட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே" என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர்.

ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார்.

ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார்.

அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆபிரகாம்! ஆபிரகாம் என்று கூப்பிட, அவர் இதோ! அடியேன் என்றார்.

அவர், "பையன்மேல் கை வைக்காதே: அவனுக்கு எதுவும் செய்யாதே: உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்" என்றார்.

அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார்.

எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு யாவேயிரே என்று பெயரிட்டார். ஆதலால்தான் மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்று இன்றுவரை வழங்கி வருகிறது.

ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து,

"ஙுஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய்.

ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர்.

மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்.

பின் ஆபிரகாம் தம் வேலைக்காரரிடம் திரும்பி வந்தார். அவர்கள் ஒன்று சேர்ந்து பெயேர்செபாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கேயே ஆபிரகாம் வாழ்ந்து வந்தார்.

இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், "உன் சகோதரன் நாகோருக்கு மில்க்கா புதல்வரைப் பெற்றெடுத்திருக்கிறாள்" என்று ஆபிரகாமுக்குச் சொல்லப்பட்டது.

மூத்த மகன் ஊசு, அவன் தம்பி பூசு, ஆராமின் தந்தையான கெமுவேல்,

கெசேது, அசோ, பில்தாசு, இதிலாபு, பெத்துவேல்.

பெத்துவேல் ரெபேக்காவின் தந்தை. இந்த எட்டுப் புதல்வர்களையும் மில்க்கா ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்குப் பெற்றெடுத்தாள்.

மேலும், அவனுக்கு மறுமனைவியாகிய இரயுமா, தெபாகு, ககாம், தகாசு, மாக்கா என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.

அதிகாரம் 23.

சாரா நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தார். சாராவின் வயது இதுவே.

கானான் நாட்டிலுள்ள எபிரோன் என்ற கிரியத்து அர்பா நகரில் சாரா இறந்தார். அவருக்காகப் புலம்பி அழுவதற்காக ஆபிரகாம் சென்றார்.

பிறகு சடலம் இருந்த இடத்தைவிட்டு அவர் எழுந்து இத்தியரிடம் சென்று சொன்னது:

"ஙுநான் உங்களிடையே அன்னியனும் அகதியுமாய் இருக்கிறேன். என் வீட்டில் இறந்தாரை நான் அடக்கம் செய்வதற்கான கல்லறை நிலத்தை உங்களுக்குரிய சொத்திலிருந்து எனக்கு விற்று விடுங்கள்" என்று கேட்டார்.

இத்தியர் ஆபிரகாமுக்கு மறுமொழியாக:

எம் தலைவரே! கேளும். நீர் எங்களிடையே ஒரு வலிமைமிக்க தலைவராய் இருக்கிறீர். எங்கள் கல்லறைகளில் சிறந்த ஒன்றில் உமது வீட்டில் இறந்தாரை அடக்கம் செய்யலாம். உம் வீட்டில் இறந்தாரைத் தன் கல்லறையில் நீர் அடக்கம் செய்ய எங்களுள் எவனும் மறுக்க மாட்டான் என்றனர்.

அப்போது ஆபிரகாம் எழுந்து, அந்நாட்டு மக்களாகிய இத்தியர் முன் தாழ்ந்து வணங்கி,

அவர்களை நோக்கி, "என் வீட்டில் இறந்தாரை நல்லடக்கம் செய்வதை நீங்கள் விரும்பினால், நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் சோகாரின் மகனான எப்ரோனிடம் எனக்காகப் பரிந்து பேசி,

அவருக்குச் சொந்தமானதும் அவரது வயலின் மூலையில் இருப்பதுமான மக்பேலா குகையை எனக்குத் தரும்படி செய்யுங்கள். உங்களிடையே எனக்கு உடைமையான கல்லறை நிலம் இருக்குமாறு முழு விலைக்கு எனக்கு அதை விற்றுவிடும்படி கேளுங்கள்" என்றார்.

இத்தியனான எப்ரோன் மற்ற இத்தியரோடு அமர்ந்திருந்தான். அவன் நகரவாயிலுக்கு வரும் இத்தியர் அனைவரும் கேட்கும்படி, ஆபிரகாமை நோக்கி,

"வேண்டாம், என் தலைவரே! நான் சொல்வதைக் கேளும். நிலத்தையும் அதிலுள்ள குகையையும் உமக்கு நான் கொடுத்து விடுகிறேன். என் இனத்தார் முன்னிலையிலேயே அதை நான் உமக்குக் கொடுத்து விடுகிறேன். உம் வீட்டில் இறந்தாரை அங்கு அடக்கம் செய்வீராக" என்றான்.

அப்போது ஆபிரகாம் அந்நாட்டு மக்கள்முன் தாழ்ந்து வணங்கி,

அவர்கள் கேட்கும்படியாக எப்ரோனை நோக்கி, "நான் சொல்வதைத் தயவு செய்து கேளும். நிலத்திற்கான பணத்தைத் தருகிறேன். பெற்றுக் கொள்ளும். அப்பொழுதுதான் என் வீட்டில் இறந்தோரை அங்கு நான் அடக்கம் செய்வேன்" என்றார்.

அதற்கு எப்ரோன் ஆபிரகாமை நோக்கி,

"என் தலைவரே! என் வார்த்தையைக் கேளும். நீர் கேட்கிற நிலம் நானூறு வெள்ளிக் காசுகள்தான் பெறும். நமக்குள்ளே இது என்ன? உம் வீட்டில் இறந்தாரை அடக்கம் செய்துகொள்ளும்" என்றான்.

எப்ரோன் சொன்னதற்கு இசைந்த ஆபிரகாம் இத்தியர் முன்னிலையில் பேசியபடி நானூறு வெள்ளிக்காசுகளை அன்றைய வணிக வழக்கிற்கேற்ப நிறுத்துக் கொடுத்தார்.

இவ்வாறு மக்பேலாவில், மம்ரே அருகில் எப்ரோனுக்குச் சொந்தமான நிலமும், அதிலிருந்த குகையும், நிலத்திலும் அதன் எல்லையைச் சுற்றிலும் இருந்த எல்லா மரங்களும்

நகர வாயிலுக்கு வரும் அனைத்து இத்தியர் முன்னிலையிலும் ஆபிரகாமுக்கு உடைமையாயின.

இவ்வாறு மம்ரே அருகில் மக்பேலா நிலத்தின் கல்லறையில் ஆபிரகாம் தம் மனைவி சாராவை அடக்கம் செய்தார். இதுவே கானான் நாட்டில் இருக்கும் எபிரோன்.

இவ்வாறு அந்நிலமும் அதிலிருந்த குகையும் இத்தியரிடமிருந்து ஆபிரகாமுக்கு உடைமையான கல்லறை நிலமாக உறுதி செய்யப்பட்டது.

அதிகாரம் 24.

ஆபிரகாம் வயது மிகுந்தவராய் முதுமை அடைந்தார். ஆண்டவர் அவருக்கு அனைத்திலும் ஆசி வழங்கியிருந்தார்.

ஒருநாள் அவர் தம் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை நோக்கி, "உன் கையை என் தொடையின் கீழ் வைத்து,

விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்: நான் வாழ்ந்துவரும் இக் கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண்கொள்ளமாட்டாய் என்றும்

சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்கிற்குப் பெண்கொள்வாய் என்றும் சொல்" என்றார்.

அதற்கு அவர், "ஒரு வேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மறுத்து விட்டால் தாங்கள் விட்டுவந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா?" என்று கேட்டார்.

அதற்கு ஆபிரகாம், "அங்கே என் மகனை ஒருக்காலும் கூட்டிக்கொண்டு போகாதே. கவனமாயிரு.

தந்தை வீட்டினின்றும் நான் பிறந்த நாட்டினின்றும் என்னை அழைத்து வந்து என்னோடு பேசி, இந்த நாட்டை உன் வழிமரபினருக்குத் தருவேன் என்று ஆணையிட்டுக் கூறிய அந்த விண்ணுலகின் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் தம் தூதரை அனுப்பி வைப்பார். நீ போய், அங்கே என் மகனுக்குப் பெண்கொள்.

உன்னோடு வர அப்பெண் விரும்பாவிடில் எனக்கு நீ அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். என் மகனை மட்டும் அங்கே கூட்டிக் கொண்டு போகாதே" என்றார்.

அவ்வாறே அவ்வேலைக்காரரும் தம் தலைவர் ஆபிரகாமின் தொடையின் கீழ் கையை வைத்து அக்காரியத்தைக் குறித்து வாக்குறுதியளித்தார்.

பின் தம் தலைவரின் ஒட்டகங்களிலிருந்து பத்து ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, அவருக்குரிய எல்லாவற்றிலும் சிறந்தவற்றைத் தம் கையோடு எடுத்துக்கொண்டு மெசபொத்தாமியாவிலிருந்த நாகோர் நகர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

பெண்கள் தண்ணீர் எடுக்கவரும் மாலை நேரத்தில், நகர்ப்புறமிருந்த கிணற்றின் அருகில் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் காட்டுமாறு அவர் அவற்றை மண்டியிடச் செய்தார்.

அப்போது அவர் சொன்னது, "என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வெற்றி அளித்தருளும். என் தலைவர் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டும்.

இதோ நான் நீரூற்றின் அருகில் நிற்கிறேன். நகர் மக்களின் புதல்வியர் தண்ணீர் எடுக்க இங்கே வருவார்கள்.

அப்பொழுது நான் தண்ணீர் பருகும்படி உன் குடத்தைச் சாய்த்துக் கொடு என்று கேட்க, குடியுங்கள்: மேலும் உங்கள் ஒட்டகங்களுக்கும் குடிக்கத் தண்ணீர் இறைத்து ஊற்றுவேன் என்று எந்த இளம்பெண் மறுமொழி சொல்வாளோ, அவளே உம் ஊழியனாகிய ஈசாக்கிற்கு உம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவள் ஆவாளாக! நீர் என் தலைவருக்குப் பேரன்பு காட்டினீர் என்று இதனால் நானும் அறிந்து கொள்வேன்" என்றார்.

அவர் இவ்வார்த்தைகளைத் தமக்குள் சொல்லி முடிக்குமுன்பே, இதோ ரெபேக்கா தம் தோள்மீது குடத்தை வைத்துக்கொண்டு வந்தார். அவர் ஆபிரகாமின் சகோதரர் நாகோருக்கும் அவர் மனைவி மில்க்காவுக்கும் பிறந்த பெத்துவேலின் மகள்.

அவர் எழிமிக்க தோற்றமுடையவர்: ஆண் தொடர்பு அறியாத கன்னிப்பெண். அவர் நீரூற்றுக்குள் இறங்கிக் குடத்தை நிரப்பிக் கொண்டு மேலேறி வந்தார்.

ஆபிரகாமின் வேலைக்காரர் அவரைச் சந்திக்க ஓடிச்சென்று, "உன் குடத்தினின்று எனக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கத் தருவாயா?" என்று கேட்டார்.

உடனே அவரும் குடியுங்கள் ஜயா என்று விரைந்து தம் குடத்தை தோளினின்று இறக்கி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.

அவர் குடித்து முடித்ததும், மீண்டும் அவரை நோக்கி, "உங்கள் ஒட்டகங்களும் குடித்து முடியுமட்டும் நான் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்" என்றார்.

குடத்து நீரைத் தொட்டியில் விரைவாய் ஊற்றிவிட்டு, மேலும் தண்ணீர் இறைக்க நீரூற்றுக்குள் ஓடிச் சென்று ஒட்டகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் இறைத்து ஊற்றினார்.

அந்த வேலைக்காரர் இதைக்கண்டு வாயடைத்துப்போய் தமது பயணத்திற்கு ஆண்டவர் வெற்றியளித்தாரா இல்லையா என்று அறியும்படி அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒட்டகங்கள் நீர் குடித்து முடிந்தபின் அவர் அவருக்கு ஆறு கிராம் நிறையுள்ள பொன் மூக்கணியும், நூற்று இருபது கிராம் நிறையுள்ள இரண்டு காப்புகளும் கொடுத்தார்.

பின்னர் அவரை நோக்கி, நீ யாருடைய மகள்? சொல்! உன் தந்தையின் வீட்டில் நாங்கள் இரவு தங்குவதற்கு இடம் இருக்குமா?" என்று வினவினார்.

அவரோ மறுமொழியாக, "நாகோருக்கு மில்க்கா பெற்ற மகனான பெத்துவேலின் மகள் நான்" என்றார்.

மேலும், "எங்கள் வீட்டில் வைக்கோலும் தீவனமும் மிகுதியாக இருப்பதுமன்றி, தங்குவதற்கு இடமும் உண்டு" என்றார்.

அந்த மனிதர் ஆண்டவரை வணங்கித் தொழுது,

"என் தலைவர் ஆபிரகாமின் ஆண்டவர் போற்றி! போற்றி! என் தலைவருக்கு அவர் காட்டியிருந்த பேரன்பையும் உண்மையையும் விட்டு விலகவில்லை. என் தலைவரின் சகோதரன் வீட்டிற்கு வரும் வழியில் அவர் என்முன்னே சென்றார்" என்றார்.

அந்த இளம்பெண் ஓடிச் சென்று தன் தாயின்வீட்டில் உள்ளோருக்கு இந்நிகழ்ச்சிகளைப்பற்றிக் கூறினார்.

ரெபேக்காவுக்கு லாபான் என்னும் சகோதரன் இருந்தான். அவன் வெளியே வந்து அந்த மனிதரைப் பார்க்க நீரூற்றை நோக்கி ஓடினான்.

ஏனெனில் தன் சகோதரி அணிந்திருந்த மூக்கணியையும் கைக்காப்புகளையும் அவன் கண்டிருந்தான். "அந்த மனிதர் என்னிடம் இவ்வாறு சொன்னார்" என்று தன் சகோதரி ரெபேக்கா கூறிய வார்த்தைகளையும் கேட்டிருந்தான். அவன் அந்த ஆளிடம் ஓடிச்சென்று நீரூற்றருகில் ஒட்டகங்களோடு அவர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டான்.

அவன் அவரை நோக்கி, "ஆண்டவரின் ஆசி பெற்றவரே வருக! இங்குத் தாங்கள் வெளியே நிற்பது ஏன்? உமக்காக வீட்டையும், ஒட்டகங்களுக்காக இடத்தையும் துப்புரவு செய்து வைத்திருக்கிறேன்" என்று சொன்னான்.

அவன் அவரை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து, ஒட்டகங்களின் சுமையை இறக்கி, வைக்கோலும் தீவனமும் இட்டு, அவருக்கும் அவரோடு வந்த ஆள்களுக்கும் கை கால் கழுவத் தண்ணீர் கொடுத்தான்.

பின் அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. அவரோ, "நான் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லுமுன் சாப்பிட மாட்டேன்" என, லாபான் சொல்லும் என்றான்.

அப்பொழுது அவர், "நான் ஆபிரகாமின் வேலைக்காரன்.

தலைவருக்கு ஆண்டவர் மிகுதியான ஆசி வழங்கி, அவரைச் செல்வராக்கி, ஆடு மாடுகளையும், பொன் வெள்ளியையும், வேலைக்காரர் வேலைக்காரிகளையும், ஒட்டகங்கள் கழுதைகளையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.

மேலும், என் தலைவரின் மனைவியாகிய சாரா தம் வயது முதிர்ந்த காலத்தில் என் தலைவருக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அவரும் அவனுக்குத் தமக்குரிய அனைத்தையும் கொடுத்திருக்கிறார்.

என் தலைவர் என்னை ஆணையிடச் செய்து. நான் வாழ்ந்து வரும் இந்தக் கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்கு நீ பெண் கொள்ளமாட்டாய் என்றும்

தந்தையின் வீட்டாரிடமும், என் இனத்தாரிடமும் சென்று என் மகனுக்கு நீ பெண்கொள்வாய் என்றும் சொல் என்றார்.

அப்போது நான் என் தலைவரை நோக்கி, ஒரு வேளை பெண் என்னோடு வரவில்லையென்றால்? என்று வினவினேன்.

அதற்கு அவர் மறுமொழியாக, ஆண்டவர் திருமுன் நான் வாழ்ந்து வருபவன். அவர் உன்னோடு தம் தூதரை அனுப்பி உனது பயணத்தை வெற்றிபெறச் செய்வார். என் இனத்தாரிடையே, என் தந்தையின் குடும்பத்திலிருந்து என் மகனுக்குப் பெண்கொள்வாய்.

அப்பொழுது நீ எனக்கு அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். அப்படியே நீ என் இனத்தாரிடம் போய்க் கேட்டும். அவர்கள் தராவிட்டால், நீ எனக்கு அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய் என்றார்.

இன்று நான் அந்த நீரூற்றின் அருகில் வந்தவுடன், என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, நான் மேற்கொண்ட பயணத்திற்குக் கருணைகூர்ந்து வெற்றி தாரும்.

இதோ நான் நீரூற்றின் அருகில் நிற்கிறேன். தண்ணீர் எடுக்க வரும் இளம் பெண்ணிடம் நான் பருகும்படி உன் குடத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா என்றுகேட்க,

அவள், குடியுங்கள்: மேலும் உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்து ஊற்றுவேன் , என்று சொல்வாளாயின், அவளே என் தலைவரின் மகனுக்கு ஆண்டவரால் தெரிந்தெடுக்கப்பட்டவள் ஆவாள் என்று

என் மனத்திற்குள் சொல்லி முடிக்கும் முன்பே, இதோ ரெபேக்கா தன் தோள்மீது குடத்தை வைத்துக்கொண்டு வந்தாள். நீர் இறைக்குமாறு அவள் நீரூற்றுக்குள் இறங்கினாள். அப்பொழுது நான் அவளிடம் எனக்குக் குடிக்கத் தா என்றேன்.

அவள் உடனே தோளிலிருந்து குடத்தை இறக்கி, குடியுங்கள்: உங்கள் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் காட்டுவேன் , என்று கூற, நானும் குடித்தேன்: ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் காட்டினாள்.

பின்பு, நான் அவளை நோக்கி, நீ யாருடைய மகள்? என, நான் நாகோருக்கு மில்க்கா பெற்ற மகனான பெத்துவேலின் மகள் என்றாள். உடனே நானும் அவள் மூக்கில் மூக்கணியும் அவள் கையில் காப்புகளையும் அணிவித்தேன்.

மேலும் நான் ஆண்டவரை வணங்கித் தொழுதேன். ஏனெனில் என் தலைவரின் சகோதரியின் மகளையே, அவருடைய மகனுக்காகப் பெண் பேச வருமாறு நேர் வழியில் என்னை நடத்தி வந்த என் தலைவர் ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றினேன்.

இப்பொழுது நீர் என் தலைவருக்கு அன்பும் நம்பிக்கையும் காட்டுவீரா இல்லையா என்று எனக்குத் தெரிவியும்: அதற்கேற்ப வலமோ இடமோ எங்காகிலும் திரும்பிச் செல்வேன்" என்றார்.

அதற்கு லாபானும் பெத்துவேலும் மறுமொழியாக, "இச்செயல் ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது. நாங்கள் உம்மிடம் இதற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ ஒன்றும் சொல்லக் கூடாது.

இதோ, ரெபேக்கா உம்முன் இருக்கிறாள். ஆண்டவர் சொன்னபடியே அவள் உம் தலைவருடைய மகனுக்கு மனைவி ஆகும்படி அவளை அழைத்துக் கொண்டு போங்கள்" என்றார்.

ஆபிரகாமின் வேலைக்காரர் அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டதும் ஆண்டவரைத் தொழுதார்.

பிறகு அவர் பொன், வெள்ளி நகைகளையும் ஆடைகளையும் எடுத்து ரெபேக்காவுக்குக் கொடுத்தார். அவர் சகோதரருக்கும் தாய்க்கும் விலையுயர்ந்த அன்பளிப்புகளையும் கொடுத்தார்.

பின் அவரும் அவரோடு இருந்தவர்களும் உண்டு, குடித்து அங்கு இரவைக் கழித்தார்கள். அவர்கள் மறுநாள் காலை எழுந்ததும் அவர், "என் தலைவரிடம் போக விடை தாருங்கள்" என்றார்.

ரெபேக்காவின் சகோதரனும் தாயும் அவரை நோக்கி, "பெண் பத்து நாள்களேனும் எங்களோடு இருக்கட்டும்: அதன் பின் புறப்பட்டுப் போகலாம்" என்று மறுமொழி கூறினர்.

ஆனால் அவர் அவர்களிடம், "என்னை நீங்கள் தாமதப்படுத்தாதீர்கள். ஆண்டவர் என் பயணத்திற்கு வெற்றியைத் தந்திருக்கிறார். என் தலைவரிடம் நான் செல்லும்படி விடை கொடுங்கள்" என்றார்.

அதற்கு அவர்கள், "பெண்ணை அழைத்து அவள் விருப்பத்தைக் கேட்போம்" என்றனர்.

அப்படியே ரெபேக்காவை அழைத்து, இவரோடு போகிறாயா? என்று அவரைக் கேட்டனர். அவரும் போகிறேன் என்றார்.

எனவே, அவர்கள் தங்கள் சகோதரி ரெபேக்காவையும் அவர் தாதியையும், ஆபிரகாமின் வேலைக்காரரையும் அவரைச் சேர்ந்தவர்களையும், அனுப்பி வைத்தனர்.

அப்பொழுது அவர்கள் ரெபேக்காவுக்கு ஆசி வழங்கி அவரை நோக்கி, "எம் சகோதரியே! ஆயிரம் ஆயிரமாக நீ பெருகுவாய். உன் வழி மரபினர் தங்கள் பகைவரின் நகர்களை உரிமையாக்கிக் கொள்வார்களாக!" என்றனர்.

பின்பு, ரெபேக்காவும் அவருடைய தோழியரும் ஒட்டகங்களின் மீதேறி, அந்த மனிதரைத் தொடர்ந்தனர். அந்த வேலைக்காரர் அவரை அழைத்துக் கொண்டு போனார்.

இதற்கிடையில், பெயேர்லகாய்ரோயி என்ற இடத்திலிருந்து ஈசாக்கு புறப்பட்டு நெகேபு பகுதியில் வாழ்ந்து வந்தார்.

மாலையில் வெளியே வயல்புறம் சென்றபோது அவர் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டார்.

ரெபேக்காவும் கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார். உடனே அவர் ஒட்டகத்தைவிட்டு இறங்கினார்.

அவர் அந்த வேலைக்காரரிடம், "“வயலில் நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?" என்று கேட்டார். அவ்வேலைக்காரரும், "அவர்தாம் என் தலைவர்" என்றார். உடனே ரெபேக்கா தம் முக்காட்டை எடுத்து தம்மை மூடிக்கொண்டார்.

அப்பொழுது அவ்வேலைக்காரர் ஈசாக்கிடம் தாம் செய்தது அனைத்தையும்பற்றிக் கூறினார்.

ஈசாக்கு தம் தாயார் சாராவின் கூடாரத்துக்குள் ரெபேக்காவை அழைத்துச்சென்று மணந்துகொண்டார். அவரும் ஈசாக்குக்கு மனைவியானார். அவர் ரெபேக்காமீது அன்பு வைத்திருந்தார். இவ்வாறு தம் தாயின் மறைவுக்குப் பிறகு ஈசாக்கு ஆறுதல் அடைந்தார்.

அதிகாரம் 25.

ஆபிரகாம் கெற்றூரா என்ற பெயருடைய வேறொரு பெண்ணை மணந்து கொண்டார்.

அவர் அவருக்குச் சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இசுபாக்கு, சூவாகு என்பவர்களைப் பெற்றெடுத்தார்.

யோக்சான், சோபாவையும் தெதானையும் பெற்றான். தெதானின் புதல்வர் ஆசூரிம், லெத்தூசிம், இலயுமிம் ஆவர்.

மிதியானின் புதல்வர் ஏப்பா, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா ஆவர். இவர்கள் அனைவரும் கெற்றூராவின் புதல்வர்.

ஆபிரகாம் தம்மகன் ஈசாக்கிற்குத் தமக்குரிய செல்வங்கள் அனைத்தையும் கொடுத்தார்.

ஆனால் அவருடைய மறுமனைவியின் பிள்ளைகளுக்கு அன்பளிப்புக்களைக் கொடுத்துத் தாம் உயிரோடிருக்கும்போதே தம் மகன் ஈசாக்கிடமிருந்து பிரித்துக் கீழ்த்திசை நாட்டிற்கு அனுப்பிவிட்டார்.

ஆபிரகாம் நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தார்.

அவர் முதியவராகி நிறைந்த வாழ்நாள்களைக் கடந்து, நல்ல நரைவயதில் இறந்து, தம் மூதாதையரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

அவர் புதல்வர்களாகிய ஈசாக்கும் இஸ்மயேலும் மம்ரே நகருக்குக் கிழக்கே இத்தியனான சோவாரின் மகன் எப்ரோனுடைய நிலத்தில் இருந்த மக்பேலா குகையில் அவரை அடக்கம் செய்தனர்.

அவர் அந்த நிலத்தைத் தான் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார். அதில் அவர் தம் மனைவி சாராவோடு அடக்கம் செய்யப்பட்டார்.

ஆபிரகாம் இறந்தபின் அவர் மகன் ஈசாக்கிற்குக் கடவுள் ஆசி வழங்கினார். பெயேர்லகாய்ரோயி என்ற இடத்தில் ஈசாக்கு வாழ்ந்து வந்தார்.

சாராவின் பணிப்பெண்ணும் எகிப்தியளுமான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகனான இஸ்மயேலின் வழிமரபினர் பின்வருபவர் ஆவர்:

பிறந்த வரிசையின்படி இஸ்மயேலின் புதல்வரின் பெயர்கள்: இஸ்மயேலின் மூத்த மகன் நெபயோத்து, கேதார், அத்பியேல், மிப்சாம்,

மிசுமா, தூமா, மாசா,

அதாது, தேமா, எற்றூர், நாப்பிசு, கேதமா.

இவர்களே இஸ்மயேலின் புதல்வர்கள் பன்னிரு குலங்களின் தலைவர்களான இவர்கள் தம் குடியிருப்புகளுக்கும் பாளையங்களுக்கும் தம் பெயர்களையே இட்டனர்.

இஸ்மயேல் மொத்தம் நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார்: அவர் இறந்து தம் இனத்தாரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

அவர்கள் அவிலாவுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்தனர். இது எகிப்திற்குக் கிழக்கே அசீரியா வரை உள்ளது. இவர்கள் தங்கள் சகோதரர்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து வாழ்ந்தனர்.

ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் வழிமரபினர் பின்வருபவர் ஆவர். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார்.

ஈசாக்கிற்கு நாற்பது வயதானபோது பதான் அராமைச் சார்ந்த அரமேயன் பெத்துவேலின் மகளும் அரமேயன் லாபானின் சகோதரியுமான ரெபேக்காவை மணந்துகொண்டார்.

ஈசாக்கு மலடியாயிருந்த தம் மனைவிக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவர் மன்றாட்டைக் கேட்டருளினார். அவர் மனைவி ரெபேக்கா கருத்தரித்தார்.

ஆனால், அவருடைய கருப்பையில் இருந்த புதல்வர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர். அதை உணர்ந்த அவர் எனக்கு இப்படி நடப்பது ஏன்? என்று ஆண்டவரிடம் கேட்கச் சென்றார்.

ஆண்டவர் அவரை நோக்கி, "உன் கருப்பையில் இரு இனங்கள் உள்ளன: உன் வயிற்றிலிருந்தே ஈரினத்தார் பிரிந்திருப்பர். ஓர் இனம் மற்றதைவிட வலிமை மிக்கதாய் இருக்கும். மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்" என்றார்.

அவருக்குப் பேறுகாலம் நிறைவுற்றபோது, இரட்டைப் பிள்ளைகள் கருப்பையில் இருந்தன.

முதலாவது வெளிவந்த பிள்ளை செந்நிறமாகவும் அவன் உடல் முழுவதும் முடிமயமாகவும் இருந்தது. எனவே அவனுக்கு ஏசா என்று பெயர் இட்டனர்.

இரண்டாவது பிள்ளை தன் சகோதரன் ஏசாவின் குதிங்காலைக் கையால் பற்றிக் கொண்டு வெளிவந்தான். எனவே அவனுக்கு யாக்கோபு என்று பெயரிடப்பட்டது. அவர்கள் பிறந்தபோது ஈசாக்கிற்கு வயது அறுபது.

இருவரும் வளர்ந்து இளைஞரானபோது, அவர்களுள் ஏசா வேட்டையில் வல்லவனாய், திறந்தவெளி மனிதனாய் வாழ்ந்துவந்தான். ஆனால் யாக்கோபு பண்புடையவனாய், கூடாரத்தில் உறைபவனாய் வாழ்ந்து வந்தான்.

ஏசா வேட்டையாடித் தந்த உணவின் பொருட்டு ஈசாக்கு அவன்மேல் அன்பு கொண்டிருந்தார். ரெபேக்காவோ யாக்கோபின்மீது அன்பு கொண்டிருந்தார்.

ஒரு நாள் யாக்கோபு சுவையான கூழ் சமைத்துக்கொண்டிருந்தபொழுது, ஏசா களைத்துப்போய் திறந்தவெளியிலிருந்து வந்தான்.

அவன் யாக்கோபிடம், "நான் களைப்பாய் இருக்கிறேன். இந்த செந்நிறச் சுவையான கூழில் எனக்குக் கொஞ்சம் கொடு," என்றான். அவனுக்கு ஏதோம் என்னும் பெயர் வழங்கியதற்கு இதுவே காரணம்.

யாக்கோபு அவனை நோக்கி, "உனது தலைமகனுரிமையை இப்போதே எனக்கு விற்றுவிடு" என்றான்.

அவன், "நானோ சாகப்போகிறேன். தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?" என்றான்.

யாக்கோபு, "இப்போதே எனக்கு ஆணையிட்டுக் கொடு" என்றான். எனவே ஏசா ஆணையிட்டுத் தலைமகனுரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான்.

யாக்கோபு, ஏசாவுக்குக் கொஞ்சம் அப்பமும், சுவையான பயிற்றங்கூழும் கொடுக்க, அவனும் தன் வழியே சென்றான்.

அதிகாரம் 26.

முன்பு ஆபிரகாமின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைத் தவிர, மேலும் ஒரு பஞ்சம் நாட்டில் உண்டாயிற்று. ஈசாக்கு பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கைக் காணக் கெராருக்குச் சென்றார்.

அப்போது ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "எகிப்து நாட்டிற்கு நீ போகாமல், நான் உனக்குக் காட்டும் நாட்டிலே தங்கியிரு.

அந்நாட்டில் நீ அன்னியனாய் வாழ்வாய். நான் உன்னோடு இருந்து உனக்கு ஆசி வழங்குவேன். இந்த நிலங்கள் அனைத்தையும் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் தருவேன். உன் தந்தை ஆபிரகாமுக்கு நான் ஆணையிட்டுக் கூறிய வாக்கை உறுதிப்படுத்துவேன்.

உன் வழிமரபை விண்மீன்களைப்போல் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர்க்கு இந்த நிலங்கள் அனைத்தையும் தருவேன். உலகின் அனைத்து இனத்தாரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்.

ஏனெனில், ஆபிரகாம் என் குரலுக்குச் செவிசாய்த்து என் நியமங்களையும் கட்டளைகளையும் விதிமுறைகளையும் சட்டங்களையும் கடைப்பிடித்தான்" என்றார்.

எனவே ஈசாக்கு கெராரிலேயே தங்கிவிட்டார்.

அங்குள்ளவர்கள் அவர் மனைவியைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது, அவள் என் சகோதரி என்றார். ஏனெனில் ரெபேக்கா பார்வைக்கு அழகுள்ளவராய் இருந்ததால், அவ்விடத்து மனிதர் தம்மைக் கொல்வார்களென்று நினைத்து, அவள் என் மனைவி என்று சொல்ல அஞ்சினார்.

பல நாள்கள் அவர் அங்கு வாழ்ந்த பின் ஒருநாள் பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கு சாளரம் வழியாகப் பார்க்க நேர்ந்தபோது, ஈசாக்கு தம் மனைவி ரெபேக்காவைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

உடனே அபிமெலக்கு ஈசாக்கை அழைத்து, "அவள் உன் மனைவியென்று தெளிவாய்த் தெரிகிறதே! பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் சொன்னாய்?" என்று கேட்டான். அதற்கு அவர், "ஒரு வேளை அவளை முன்னிட்டு நான் சாக நேரிடலாம் என்று நினைத்ததே காரணம்" என்று அவனுக்குப் பதில் அளித்தார்.

அபிமெலக்கு, "நீ ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? குடி மக்களுள் எவனாகிலும் உன் மனைவியோடு படுத்திருந்தால், பழி எங்கள் மீது அல்லவா விழச்செய்திருப்பாய்?" என்றான்.

மேலும், "இந்த மனிதனையோ அவன் மனைவியையோ தொடுபவன் கொல்லப்படுவது உறுதி" என்று அபிமெலக்கு தன் மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தான்.

ஈசாக்கு அந்த நாட்டில் பயிரிட்டு அதே ஆண்டில் நூறுமடங்கு அறுவடை செய்தார். ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்கினார்.

அவர் செல்வமுடையவர் ஆனார். செல்வத்திற்குமேல் செல்வம் பெற்று மாபெரும் செல்வரானார்.

மேலும் அவருக்கு ஆட்டு மந்தையும் மாட்டு மந்தையும் இருந்தன. வேலைக்காரர் பலர் இருந்தனர். எனவே பெலிஸ்தியர் அவர்மீது பொறாமை கொண்டனர்.

அவர் தந்தை ஆபிரகாமின் காலத்தில் அவருடைய வேலையாள்கள் தோண்டிய கிணறுகளையெல்லாம் பெலிஸ்தியர் மண்ணால் நிரப்பித் தூர்த்து விட்டனர்.

மேலும் அபிமெலக்கு ஈசாக்கை நோக்கி, "நீ எங்களைவிட வலிமையுள்ளவனாய் இருப்பதால், எங்களை விட்டு அகன்று போ" என்றான்.

எனவே, ஈசாக்கு அங்கிருந்து வெளியேறிக் கெரார் பள்ளத்தாக்கில் குடியேறி வாழலானார்.

அங்கே, தம் தந்தை ஆபிரகாமின் காலத்தில் தோண்டப்பட்டு, அவர் இறந்த பின் பெலிஸ்தியரால் மூடப்பட்ட கிணறுகளை அவர் தோண்டித் தூரெடுத்தார்: தம் தந்தை இட்டிருந்த அதே பெயர்களால் அவற்றை அழைத்தார்.

பின் அவருடைய வேலைக்காரர் நீர்ப்படுகையில் தோண்ட, அங்கே பொங்கியெழும் நீரூற்றைக் கண்டனர்.

ஆனால், கெராரில் இருந்த மேய்ப்பர்கள் ஈசாக்கின் மேய்ப்பர்களோடு, "இந்தத் தண்ணீர் எங்களதே" என்று வாதாடினர். இவ்வாறு அவர்கள் அவரோடு தகராறு செய்ததால் அந்தக் கிணற்றுக்கு அவர் ஏசேக்கு என்று பெயரிட்டார்.

மீண்டும் அவர்கள் வேறொரு கிணறு தோண்டினர். முன்புபோல் அதைப் பற்றியும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அதற்குச் சித்னா என்று அவர் பெயரிட்டார்.

அவர் அவ்விடத்தை விட்டகன்று, வேறொரு கிணற்றைத் தோண்டினார். இம்முறை வாக்குவாதம் ஒன்றும் ஏற்படவில்லை. அதன் பொருட்டு, "ஆண்டவர் நம் எல்லையை விரிவுபடுத்தியுள்ளார். நாட்டில் நாம் வளர்ச்சியுறுவோம்" என்று சொல்லி, அதற்கு இரகபோத்து என்று பெயரிட்டார்.

பின் அவர் அவ்விடத்திலிருந்து பெயேர்செபாவுக்குப் போனார்.

அன்றிரவு ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "உன் தந்தை ஆபிரகாமின் கடவுள் நானே, அஞ்சாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். உனக்கு ஆசி வழங்கி, என் ஊழியன் ஆபிரகாமின் பொருட்டு உனது வழிமரபைப் பெருகச் செய்வேன்" என்றார்.

எனவே ஈசாக்கு அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி, ஆண்டவரது திருப்பெயரைப் போற்றினார்: அங்கே கூடாரம் அடித்துத் தங்கினார். ஈசாக்கின் வேலைக்காரர் அங்கே ஒரு கிணறு வெட்டினர்.

அப்பொழுது கெராரிலிருந்து அபிமெலக்கு தன் உற்ற நண்பன் அகுசாத்துடனும் படைத்தலைவன் பிக்கோலுடனும் அவரிடம் வந்தான்.

அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி, "நீங்கள் என்னை வெறுத்து உங்களிடமிருந்து விரட்டிவிட்டு, இப்பொழுது என்னிடம் வருவது ஏன்?" என்றார்.

அவர்கள் மறுமொழியாக, "ஆண்டவர் உம்மோடு இருக்கிறாரென்று தெளிவாகக் கண்டோம். ஆதலால் நமக்குள், எங்களுக்கும் உமக்குமிடையே, ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம். நாங்கள் உம்மோடு உடன்படிக்கை செய்து கொள்வோம்.

நாங்கள் உமக்கு எவ்வித இடையூறும் செய்யவில்லை. உம்மை நல்ல முறையில் நடத்தி, சமாதானமாய் அனுப்பி வைத்தோம். அதுபோல ஆண்டவரின் ஆசி பெற்ற நீரும் எங்களுக்கு எவ்விதத் தீமையும் செய்யாதிருப்பீர்" என்றனர்.

ஈசாக்கு அவர்களுக்கு விருந்து அளித்தார். அவர்களும் உண்டு குடித்தனர்.

அதிகாலையில் அவர்கள் எழுந்து, ஒருவருக்கொருவர் வாக்குறுதி அளித்தனர். பின் ஈசாக்கு அவர்களை அனுப்பி வைத்தார். அவர்களும் அவரிடமிருந்து சமாதானமாய்ப் பிரிந்து சென்றனர்.

அதே நாளில் ஈசாக்கின் வேலைக்காரர், தாங்கள் தோண்டிய கிணற்றைக் குறித்துச் செய்தி கொண்டு வந்து தண்ணீர் கண்டோம் என்றனர்.

ஆதலால் அவர் அதற்குச் சிபா என்று பெயரிட்டார். எனவே அந்நகருக்கு பெயேர்செபா என்னும் பெயர் இன்றுவரை வழங்கி வருகிறது.

ஏசா நாற்பது வயதானபோது, இத்தியன் பெயேரியின் மகள் யூதித்தையும் இத்தியன் ஏலோனின் மகள் பாசமத்தையும் மணந்துகொண்டான்.

இவர்களால் ஈசாக்கும் ரெபேக்காவும் மனக்கசப்பு அடைந்தனர்.

அதிகாரம் 27.

ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப்போயிற்று. அவர் தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து, என் மகனே என்றார்: ஏசா, இதோ வந்துவிட்டேன் என்றான்.

அவர் அவனை நோக்கி, "இதோ பார்: எனக்கு வயதாகிவிட்டது. சாவு எந்நாள் வருமோ என்றறியேன்.

இப்பொழுது உன் கருவிகளான வில்லையும் அம்புக்கூட்டையும் எடுத்துக்கொள். காட்டுக்குப் போ. வேட்டையாடி, எனக்கு வேட்டைக்கறி கொண்டு வா.

நான் விரும்பும் முறையில் சுவையான உணவு வகைகளைச் சமைத்து என்னிடம் கொண்டு வா. நான் அவற்றை உண்பேன். நான் சாகுமுன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்" என்றார்.

ஈசாக்கு தம் மகன் ஏசாவிடம் பேசியதை ரெபேக்கா கேட்டுக் கொண்டிருந்தார். வேட்டையாடி வேட்டைக்கறி கொண்டு வருமாறு ஏசா காட்டிற்குப் புறப்பட்டவுடன்,

அவர் தம் மகன் யாக்கோபை நோக்கி, "உன் தந்தை உன் சகோதரன் ஏசாவுக்குச் சொன்னது என் காதில் விழுந்தது. அவர் சொன்னது:

நீ போய் வேட்டையாடி, வேட்டைக்கறியை சமைத்துக் கொண்டு வா. நான் உண்பேன். நான் சாவதற்கு முன் ஆண்டவர் திருமுன் உனக்கு ஆசி வழங்குவேன்.

இப்பொழுது என் மகனே, நான் கட்டளையிடுவதைக் கருத்தாய்க் கேள்.

உடனே மந்தைக்குப் போ, அங்கிருந்து இரு நல்ல வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டு வா. நான் அவற்றை உன் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சுவையான உணவு வகைகளாகச் சமைத்துத் தருவேன்.

நீ அவற்றை உன் தந்தைக்கு உண்ணக் கொடுத்து அவர் சாவதற்கு முன் அவர் ஆசியைப் பெற்றுக்கொள்" என்றார்.

யாக்கோபு தன் தாய் ரெபேக்காவிடம், "என் சகோதரன் ஏசா உடலில் அடர்ந்த உரோமம் உடையவன்: நானோ மிருதுவான உடல் கொண்டவன்.

என் தந்தை என்னைத் தடவிப் பார்த்தால் என்ன ஆவது? அவரை நான் ஏமாற்றுவதாகத் தெரிந்துவிட்டால், என்மேல் ஆசிக்குப் பதிலாக சாபத்தையல்லவா விழச் செய்துகொள்வேன்" என்றான்.

ஆனால் அவன் தாய் அவனிடம், "மகனே! உனக்குரிய சாபம் என்மேல் விழட்டும்: நான் சொல்வதை மட்டும் செய்: போ: அவற்றை என்னிடம் கொண்டு வா" என்றார்.

அவனும் அவ்வாறே போய் அவற்றைப் பிடித்துத் தன் தாயிடம் கொண்டு வந்து கொடுக்க, அவர் அவன் தந்தைக்கு விருப்பமான சுவையுள்ள உணவு வகைகளைத் தயாரித்தார்.

மேலும் ரெபேக்கா தம்முடன் வீட்டில் வைத்திருந்த தம் மூத்த மகன் ஏசாவின் உடைகளில் சிறந்தவற்றைத் தம் இளைய மகன் யாக்கோபுக்கு உடுத்துவித்தார்.

அவன் கைகளையும் மிருதுவான கழுத்தையும் வெள்ளாட்டுக் குட்டிகளின் தோலால் மூடினார்.

அவர் சுவையான உணவு வகைகளையும், தாம் சுட்ட அப்பங்களையும் தம் மகன் யாக்கோபின் கையில் கொடுத்தார்.

அவனும் அவற்றைத் தன் தந்தையிடம் எடுத்துச்சென்று, அப்பா என்று அழைத்தான். அவரும் மறுமொழியாக, ஆம் மகனே, நீ எந்த மகன்? என்று கேட்க,

யாக்கோபு தன் தந்தையிடம், "நான்தான் உங்கள் தலைப்பேறான ஏசா. நீங்கள் சொன்னவாறு செய்திருக்கிறேன். எழுந்து உட்கார்ந்து என் வேட்டைப் பதார்த்தங்களை உண்டு மனமாற எனக்கு ஆசி வழங்குங்கள்" என்றான்.

ஈசாக்கு தம் மகனை நோக்கி, "மகனே! இது உனக்கு இவ்வளவு விரைவில் எப்படி அகப்பட்டது?" என்று கேட்க, அவன், "உம் கடவுளாகிய ஆண்டவரால்தான் எனக்கு இது நிகழ்ந்தது," என்றான்.

ஈசாக்கு யாக்கோபிடம், "மகனே, அருகில் வா, நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா என்று நான் உன்னைத் தடவிப்பார்த்துத் தெரிந்துகொள்வேன்" என்றார்.

யாக்கோபு தன் தந்தை அருகில் வந்தான். ஈசாக்கு அவனைத் தடவிப் பார்த்து, குரல் யாக்கோபின் குரல்: ஆனால் கைகளோ ஏசாவின் கைகள் என்றார்.

அவன் கைகள் அவன் சகோதரன் ஏசாவின் கைகளைப்போல் உரோமம் அடர்ந்தவையாய் இருந்ததால், அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. எனவே அவனுக்கு ஆசி வழங்கினார்.

மீண்டும் அவர் நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா? என்று வினவ, அவனும் ஆம் என்றான்.

அப்பொழுது அவர், மகனே உண்பதற்கு வேட்டைப்பதார்த்தங்களைக் கொண்டு வா. மனமார நான் உனக்கு ஆசி வழங்குவேன் என்றார். அவ்வாறே யாக்கோபு கொண்டுவர, அவர் அதை உண்டார். பின், அவன் திராட்சை ரசம் கொண்டுவர, அவர் அதைக் குடித்தார்.

அப்பொழுது அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி மகனே, அருகில் வந்து என்னை முத்தமிடு என்றார்.

அவனும் அருகில் போய் அவரை முத்தமிட, ஈசாக்கு அவன் அணிந்திருந்த ஆடைகளின் நறுமணத்தை முகர்ந்து ஆசி வழங்கி உரைத்தது இதுவே: "இதோ, என் மகனிடமிருந்து எழும்பும் நறுமணம்! ஆண்டவரின் ஆசி பெற்ற விளைநிலத்தின் வாசனையாம்!

வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திராட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக!

நாடுகள் உனக்குப் பணி புரிந்திடுக! மக்கள் உனக்குப் பணிந்திடுக! உன்றன் சோதரர்க்குத் தலைவன் நீ ஆகிவிடுவாய்! உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவார் வளமுற வாழ்க!"

இவ்வாறு ஈசாக்கு யாக்கோபிற்கு ஆசி வழங்கி முடிந்ததும், யாக்கோபு தந்தையின் முன்னிலையிலிருந்து விரைந்து வெளியேற, அவன் சகோதரன் ஏசா வேட்டைக்கறியுடன் வந்தான்.

அவனும் சுவையான உணவுவகைகளைச் சமைத்துத் தன் தந்தையிடம் கொண்டுவந்து அவரை நோக்கி, "என் தந்தை எழுந்து தம் மகன் கொண்டு வந்திருக்கும் வேட்டைக்கறியை உண்டு, மனமார எனக்கு ஆசி வழங்குவாராக" என்றான்.

அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி: நீ யார் என, அவன்: நான் தான் உங்கள தலைப்பேறான மகன் ஏசா என்றான்.

ஈசாக்கு மிகவும் நடுநடுங்கி, "அப்படியானால் வேட்டையாடி எனக்குக் கொண்டு வந்தவன் எவன்? நீ வருமுன் அந்த உணவை நான் உண்டு அவனுக்கு ஆசி வழங்கி விட்டேன். அவனே ஆசி பெற்றவனாய் இருப்பான்" என்றார்.

ஏசா தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு, மிகவும் மனக்கசப்படைந்து பெருங்குரலெழுப்பிக் கதறி அழுதான். அவன் தன் தந்தையை நோக்கி, "அப்பா! எனக்கும் ஆசி வழங்குவீர்" என்றான்.

அதற்கு அவர்: "உன் தம்பி கபடமாய் வந்து உனக்குரிய ஆசியைப் பெற்றுச் சென்றுவிட்டான்" என்றார்.

அதைக் கேட்ட ஏசா, "யாக்கோபு என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே. ஏனெனில், அவன் இருமறை என்னை ஏமாற்றிவிட்டான். ஏற்கெனவே எனக்குரிய தலைமகனுரிமையைப் பறித்துக் கொண்டான். இப்பொழுது எனக்குரிய ஆசியையும் பிடுங்கிக்கொண்டான்" என்று சொல்லி, திரும்பவும் தந்தையை நோக்கி: நீர் எனக்கென வேறு எந்த ஆசியும் ஒதுக்கி வைக்கவில்லையா? என்று கேட்டான்.

ஈசாக்கு ஏசாவிடம், "நான் அவனை உனக்குத் தலைவனாக ஏற்படுத்தியுள்ளேன். அவன் உறவினர் யாவரையும் அவனுக்கு அடிமைப்படுத்தியுள்ளேன். அவனுக்குத் தானியத்தையும் திராட்சை இரசத்தையும் நிறைவாக வழங்கிவிட்டேன். இப்படி இருக்க என் மகனே! நான் உனக்கு வேறென்ன செய்ய முடியும்?" என்று சொல்ல,

ஏசா அவரை நோக்கி, "அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா" என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுதான்.

அவன் தந்தை ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக, "உன் குடியிருப்புக்கு நிலத்தின் செழுமையோ மேல்வானின் பனித்துளியோ கிட்டாது.

நீ உன் வாளினால் வாழ்க்கை நடத்தி உன் தம்பிக்கு அடிமையாய் இருப்பாய்: நீ கிளர்ந்து எழும்போது உன் கழுத்தில் அவன் சுமத்திய நுகத்தடியை முறித்து விடுவாய்" என்றார்.

தந்தையிடமிருந்து யாக்கோபு பெற்றிருந்த ஆசியை முன்னிட்டு ஏசா அவன் மீது வர்மம் கொண்டு, என் தந்தைக்காகத் துக்கம் கொண்டாடும் நாள்கள் நெருங்கிவிட்டன. அதன்பின், என் தம்பி யாக்கோபைக் கொன்று போடுவேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

தம்மூத்த மகன் ஏசாவின் திட்டம் பற்றி ரெபேக்கா கேள்விப்பட்டதும் அவர் ஆளனுப்பித் தம் இளைய மகன் யாக்கோபை அழைத்து, "இதோ! உன் சகோதரன் ஏசா உன்னைக் கொலை செய்து, தன்னைத் தேற்றிக்கொள்ள விரும்புகிறான்.

ஆகையால், மகனே நான் சொல்வதைக் கேள். உடனே கிளம்பி காரானில் உள்ள என் சகோதரன் லாபானிடம் ஓடிப்போய்,

உன் சகோதரன் சீற்றம் தணியும்வரை சிலநாள் அவரிடம் தங்கி இரு.

தனக்கு விரோதமாய் நீ செய்ததை அவன் மறந்து கோபம் தீர்ந்த பின் நான் உனக்குச் சொல்லியனுப்பி, உன்னை அங்கிருந்து இவ்விடத்திற்கு அழைத்துக் கொள்வேன். ஒரே நாளில் என் இரு புதல்வர்களையும் நான் ஏன் இழந்து போக வேண்டும்?" என்றார்.

பின் ரெபேக்கா ஈசாக்கை நோக்கி: "இத்தியப் பெண்களை முன்னிட்டு என் வாழ்க்கை எனக்குச் சலித்துப் போயிற்று. யாக்கோபும் இவர்களைப் போன்ற இந்நாட்டுப் பெண்களினின்றும் ஒருத்தியை மணந்து கொண்டால் என் வாழ்க்கை என்ன ஆவது?" என்றார்.

அதிகாரம் 28.

ஈசாக்கை யாக்கோபை அழைத்து அவனுக்கு ஆசி வழங்கிக் கட்டளையிட்டுக் கூறியது: "நீ கானானியப் புதல்வியருள் எவளையும் மணந்து கொள்ளாதே.

புறப்பட்டு, பதான் அராமுக்குப்போய், உன் தாயின் தந்தையாகிய பெத்துவேல் வீட்டிற்குச் செல். அங்கு உன் தாய்மாமன் லாபான் புதல்வியருள் ஒருத்தியை மணந்துகொள்.

எல்லாம் வல்ல இறைவன் உனக்கு ஆசி வழங்கி, நீ பல இனங்களுக்குத் தந்தையாகும்படி உன்னைப் பலுகிப் பெருகச் செய்வாராக!

ஆபிரகாம் பெற்ற ஆசியை அவர் உனக்கும் உன் வழிமரபினருக்கும் வழங்குவாராக! அதனால் நீ அன்னியனாய் வாழும் நாட்டை, அதாவது கடவுள் ஆபிரகாமுக்குத் தந்த நாட்டை, உரிமையாக்கிக் கொள்வாய்."

இவ்வாறு ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவைக்க, அவனும் பதான் அராமுக்குச் சென்று, அரமேயனான பெத்துவேலின் மகனும் யாக்கோபு, ஏசாவின் தாய் ரெபேக்காவின் சகோதரனுமான லாபானிடம் வந்து சேர்ந்தான்.

ஈசாக்கு யாக்கோபுக்கு ஆசி வழங்கி, அவனைப் பதான் அராமில், மணமுடித்துக் கொள்ளுமாறு அங்கு அனுப்பி வைத்ததும், ஆசி வழங்குகையில் கானானியப் பெண்களிடம் பெண் எடுக்கக் கூடாது என்று கட்டளையிட்டதும்,

யாக்கோபு தன் தாய் தந்தைக்குக் கீழ்ப்படிந்து பதான் அராமுக்குச் சென்றதும் ஏசாவுக்குத் தெரிய வந்தன.

ஈசாக்கிற்குக் கானானியப் பெண்களைப் பிடிக்கவில்லை என்பதை ஏசா கண்டு,

இஸ்மயேலிடம் சென்று ஏற்கெனவே தனக்கிருந்த மனைவியரைத் தவிர, ஆபிரகாமின் மகன் இஸ்மயேலின் மகளும், நெபயோத்தின் சகோதரியுமான மகலாத்தை மணந்து கொண்டான்.

யாக்கோபு பெயேர்செபாவிலிருந்து புறப்பட்டு, கரானை நோக்கிச் சென்றான்.

அவன் ஓரிடத்திற்கு வந்தபோது கதிரவன் மறைந்துவிட்டான். எனவே அங்கே இரவைக் கழிப்பதற்காக அவ்விடத்தில் கிடந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டு, அங்கேயே படுத்துறங்கினான்.

அப்போது அவன் கண்ட கனவு இதுவே: நிலத்தில் ஊன்றியிருந்த ஓர் ஏணியின் நுனி மேலே வானத்தைத் தொட்டுக் கொண்டு இருந்தது. அதில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர்.

ஆண்டவர் அதற்கு மேல் நின்றுகொண்டு, "உன் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர் நானே. நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்கும் உன் வழிமரபிற்கும் தந்தருள்வேன்.

உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு ஒப்பாகும். நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் பரவிச் செல்வாய். உன்னிலும் உன் வழிமரபிலும் மண்ணுலகின் எல்லா இனங்களும் ஆசி பெறுவன.

நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டான்" என்றார்.

யாக்கோபு தூக்கம் தெளிந்து, "உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்: நானோ இதை அறியாதிருந்தேன்" என்று

அச்சமடைந்து, "இந்த இடம் எவ்வளவு அச்சத்திற்குரியது! இதுவே இறைவனின் இல்லம், விண்ணுலகின் வாயில்" என்றார்.

பிறகு யாக்கோபு அதிகாலையில் எழுந்து, தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து, நினைவுத் தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெய் வார்த்து,

லூசு என்று வழங்கிய அந்த நகருக்குப் பெத்தேல் என்று பெயரிட்டார்.

மேலும் அவர் நேர்ந்து கொண்டது: கடவுள் என்னோடிருந்து நான் போகிற இந்த வழியில் எனக்குப் பாதுகாப்பளித்து உண்ண உணவும், உடுக்க உடையும் தந்து,

என் தந்தையின் வீட்டிற்கு நான் நலமுடன் திரும்பச் செய்வாராயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார்.

மேலும், நான் நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கடவுளின் இல்லம் ஆகும். மேலும், நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன்.

அதிகாரம் 29.

யாக்கோபு கீழ்த்திசை மக்களின் நாட்டை நோக்கிக் காலெடுத்து வைத்துப் பயணமானார்.

இதோ! வயல்வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே கிடை போட்டிருந்த ஆட்டுமந்தைகள் மூன்றையும் கண்டார். அந்தக் கிணற்றிலிருந்துதான் மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டப்படும். அதன் வாய் ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது.

மந்தைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தபின் இடையர்கள் கல்லைப் புரட்டி, அவை குடித்து முடிந்ததும், மறுபடியும் கல்லைக் கிணற்று வாயின்மேல் தூக்கிவைப்பது வழக்கம்.

யாக்கோபு இடையர்களை நோக்கி, சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என, அவர்கள்: நாங்கள் காரானிலிருந்து வருகிறோம் என்றார்கள்.

மீண்டும் அவர்: நாகோரின் பேரன் லாபானை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்க, அவர்கள், அவரை எங்களுக்குத் தெரியும் என்றார்கள்.

அவர் நலம்தானா? என்று யாக்கோபு கேட்க, அவர்கள் ஆம், அவர் நலமே. இதோ! அவர் மகள் ராகேல் தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறாள் என்றார்கள்.

அப்பொழுது யாக்கோபு, பொழுது சாய இன்னும் வெகுநேரம் இருக்கிறது! மந்தைகளை ஒன்றுசேர்ப்பதற்கு நேரம் ஆகவில்லை. ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லுங்கள் என்றார்.

அதற்கு அவர்கள், "நாங்கள் அப்படிச் செய்யக்கூடாது. ஏனெனில், எல்லா மந்தைகளையும் ஒன்றுசேர்த்த பின்னரே கிணற்று வாயினின்று கல் புரட்டப்படும். அப்பொழுதுதான் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்" என்று சொன்னார்கள்.

இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஆடு மேய்ப்பவளான ராகேல் தன் தந்தையின் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.

ராகேல் தன் தாய்மாமன் லாபானின் மகள் என்றும் ஆடுகள் அவனுடையவை என்றும் யாக்கோபு கண்டார்: எனவே கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டித் தன் தாய்மாமன் லாபானின் மந்தைக்குத் தண்ணீர் காட்டினார்:

பின் ராகேலை முத்தமிட்டுக் கதறி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

பின்பு தாம் அவள் தந்தைக்கு உறவினர் என்றும் ரெபேக்காவின் மகன் என்றும் அவளுக்குத் தெரிவிக்க, உடனே அவள் ஓடிப்போய்த் தன் தந்தையிடம் சொன்னாள்.

தன் சகோதரியின் மகன் யாக்கோபு வந்த செய்தி கேட்டவுடன் லாபான் அவருக்கு எதிர்கொண்டோடி, அவரை அரவணைத்து முத்தமிட்டுத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கு யாக்கோபு தமக்கு நேர்ந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்தார்.

லாபான் அவரிடம், நீ என் எலும்பும் சதையுமல்லவா? என்றான். அவனுடன் அவர் ஒரு மாத காலம் தங்கியிருந்தார்.

அதன்பின் லாபான் யாக்கோபை நோக்கி, "நீ என் உறவினன் என்பதற்காக ஒன்றும் வாங்காமல் எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்? சொல்" என்றான்.

லாபானுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர். மூத்தவள் பெயர் லேயா: இளையவள் பெயர் ராகேல்.

ஆனால் லேயா மங்கிய பார்வை உடையவள். ராகேலோ வடிவழகும் எழில் தோற்றமும் உள்ளவள்.

யாக்கோபு ராகேலை விரும்பினார். எனவே அவர், "உம் இளைய மகள் ராகேலுக்காக ஏழு ஆண்டுகள் உம்மிடம் வேலை செய்கிறேன்" என்றார்.

அதற்கு லாபான், அவளை அன்னியன் ஒருவனுக்குக் கொடுப்பதைவிட, உனக்குக் கொடுப்பதே மேல். என்னோடு தங்கியிரு என்றான்.

அப்படியே யாக்கோபு ஏழாண்டுகள் ராகேலை முன்னிட்டு வேலை செய்தார். ஆனால் அவர் அவள்மீது வைத்திருந்த அன்பின் மிகுதியால் அது அவருக்குச் சில நாட்களாகவே தோன்றியது.

பின் யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் மனைவியோடு சேரும்பொருட்டு, அவளை எனக்குத் தாரும். என் ஒப்பந்த நாள்கள் நிறைவெய்திவிட்டன என்றார்.

ஆகவே லாபான் அவ்வூர் மக்கள் அனைவரையும் அழைத்துத் திருமண விருந்தளித்தான்.

ஆனால், மாலையானதும் அவன் தன் மகள் லேயாவை அழைத்துக் கொண்டுபோய் யாக்கோபிடம் விட, அவர் அவளுடன் உறவு கொண்டார்.

லாபான் தன் மகள் லேயாவுக்குப் பணிபுரியத் தன் பணிப்பெண் சில்பாவைக் கொடுத்தான்.

அதிகாலையில் அந்தப் பெண் லேயா என்று கண்டு, யாக்கோபு லாபானை நோக்கி: நீர் எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா நான் உம்மிடம் வேலைசெய்தேன்? என்னை ஏமாற்றியது ஏன்? என்றார்.

அதற்கு லாபான்: "மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது எங்கள் ஊர் வழக்கமில்லை.

ஆகையால் நீ இவளோடு ஏழு நாள்களைக் கழி. இன்னும் ஏழாண்டுகள் என்னிடம் வேலை செய்தால் அவளையும் உனக்குக் கொடுப்பேன்" என்றான்.

அவ்வாறே யாக்கோபு லேயாவுடன் ஏழு நாள்களைக் கழித்தார். அதன் பின் லாபான் தன் மகள் ராகேலை அவருக்கு மனைவியாகக் கொடுத்தான்.

லாபான் தன் மகள் ராகேலுக்குப் பணிபுரியத் தன் பணிப்பெண் பில்காவைக் கொடுத்தான்.

யாக்கோபு ராகேலுடன் கூடிவாழ்ந்தார். அவளை லேயாவைவிட அதிகம் நேசித்தார். லாபானிடம் மேலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்தார்.

இப்படியிருக்க லேயா வெறுப்புக்குள்ளானதை ஆண்டவர் கண்டு அவருக்குத் தாய்மைப்பேறு அருளினார். ராகேலோ மலடியாகவே இருந்தார்.

லேயா கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இப்பொழுது என் கணவர் என்மீது அன்புகூர்வார் என்பது உறுதி என்று கூறி, அவனுக்கு ரூபன் (1) என்று பெயரிட்டார்.

மீண்டும் அவர் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். நான் வெறுப்புக்குள்ளானேன் என்பதை ஆண்டவர் கேட்டு, இவனையும் எனக்குத் தந்தருளினார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் (2) என்று பெயரிட்டார்.

அவர் மீண்டும் கருவுற்று இன்னொரு மகனைப் பெற்றெடுத்தார். இப்பொழுது என்கணவர் என்னோடு இணைந்திருப்பார் என்பது உறுதி. ஏனெனில் நான் அவருக்கு மூன்று புதல்வரைப் பெற்றெடுத்துள்ளேன் என்று கூறி அவனுக்கு லேவி (3) என்று பெயரிட்டார்.

அவர் மீண்டும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். இப்போது ஆண்டவரை நான் மாட்சி படுத்துவேன் , என்று சொல்லி அவனுக்கு யூதா (4) என்று பெயரிட்டார். அதன்பின் அவருக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.

அதிகாரம் 30.

தாம் யாக்கோபுக்குப் பிள்ளை பெறவில்லையே என்று ராகேல் தம் சகோதரியின் மேல் பொறாமை கொண்டார். அவர் தம் கணவனை நோக்கி, நீர் எனக்குப் பிள்ளைகளைத் தாரும். இல்லையேல் செத்துப் போவேன் என்றார்.

யாக்கோபு அவர் மீது சினம் கொண்டு, நான் என்ன கடவுளா? அவரல்லவா உனக்குத் தாய்மைப் பேறு தராதிருக்கிறார் என்றார்.

அப்பொழுது ராகேல் இதோ என் பணிப்பெண் பில்கா. நீர் அவளோடு கூடி வாழ்வீர். அவள் எனக்காக பிள்ளை பெற்று என் மடியில் வைக்க, நானும் அவள் மூலம் பிள்ளைப் பேறு பெறுவேன் என்றார்.

பின்பு அவர் அவருக்குத் தம் பணிப்பெண் பில்காவை மனைவியாகக் கொடுக்க, அவரும் அவளுடன் கூடி வாழ்ந்தார்.

பில்கா கருவுற்று யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.

ராகேல், ஆண்டவர் எனக்கு நீதி வழங்கி, என் மன்றாட்டைக் கேட்டருளி, எனக்கு ஒரு மகனைத் தந்தார் என்று சொல்லி அவனுக்குத் தாண் (5) என்னும் பெயரிட்டார்.

பில்கா மீண்டும் கருவுற்று மற்றொரு மகனைப் பெற்றாள்.

ராகேல் நான் என் சகோதரியோடு கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வெற்றி கொண்டேன் என்று கூறி, அவனுக்கு நப்தலி (6) என்று பெயரிட்டார்.

லேயா தமக்குப் பிள்ளைப்பேறு நின்றுவிட்டதென்று கண்டு, தம் பணிப்பெண் சில்பாவை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தார்.

லேயாவின் பணிப்பெண் சில்பா யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.

லேயா, நான் நற்பேறு பெற்றுள்ளேன் என்று சொல்லி அவனுக்குக் காத்து (7) என்று பெயரிட்டார்.

லேயாவின் பணிப்பெண் சில்பா மீண்டும் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.

லேயா எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி! பெண்டிர் என்னை மகிழ்ச்சி பெற்றவள் என்பர் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் (8) என்று பெயரிட்டார்.

கோதுமை அறுவடைக் காலத்தில் ரூபன் வயல்வெளியில் தூதாயிம் கனிகளைக் கண்டு, அவற்றைத் தன்தாய் லேயாவிடம் கொண்டுவந்து கொடுத்தான். ராகேல் அவரிடம், உன் மகன் கொண்டுவந்த தூதாயிம் கனிகளில் எனக்கும் கொஞ்சம் கொடு என்று கேட்டார்.

அதற்கு அவர், என் கணவனை நீ பறித்துக் கொண்டது போதாதா? என் மகன் கொண்டு வந்த கனிகளையும் பறித்துக் கொள்வாயோ? என்றார். அப்பொழுது ராகேல், "ஙுசரி, உன் மகன் கொண்டு வந்த தூதாயிம் கனிகளுக்குப் பதிலாக அவர் இன்றிரவு உன்னோடு கூடியிருக்கட்டும்" என்றார்.

மாலை வேளையில் யாக்கோபு வயல் வெளியினின்று திரும்பி வரும்போதே, லேயா அவருக்கு எதிர்கொண்டுபோய், நீர் என்னோடு கூடியிருக்க வேண்டும். ஏனெனில், என் மகன் கொண்டுவந்த தூதாயிம் கனிகளை ஈடாகக் கொடுத்து உம்மை நான் வாங்கிக்கொண்டேன் என்றார். அவர் அன்றிரவு அவரோடு கூடியிருந்தார்.

கடவுள் லேயாவுக்குச் செவிசாய்த்தார். அவர் கருத்தாங்கி யாக்கோபுக்கு ஜந்தாம் மகனைப் பெற்றெடுத்தார்.

நான் என் பணிப்பெண்ணை என் கணவருக்குக் கொடுத்ததற்காகக் கடவுள் எனக்கு ஈடு செய்துள்ளார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் (9) என்று பெயரிட்டார்.

மீண்டும் லேயா கருத்தாங்கி ஆறாம் மகனைப் பெற்றெடுத்தார்.

லேயா கடவுள் எனக்கு ஒரு சிறந்த கொடை கொடுத்துள்ளார். இனிமேல் என் கணவர் என்னைப் பெருமையாக நடத்துவார். ஏனெனில், நான் அவருக்கு ஆறு புதல்வரைப் பெற்றிருக்கிறேன் என்று கூறி அவனுக்குச் செபுலோன் (10) என்று பெயரிட்டார்.

பிறகு அவர் ஒரு பெண்மகவைப் பெற்று, அவளுக்குத் தீனா என்று பெயரிட்டார்.

பின்பு கடவுள் ராகேலை நினைவுகூர்ந்தார். அவர் அவருக்குச் செவிசாய்த்துத் தாய்மைப்பேறு அருளினார்.

அவரும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்து கடவுள் என் இழிவைப் போக்கினார் என்றார்.

மேலும் அவர் ஆண்டவர் இன்னொரு மகனையும் எனக்குச் சேர்த்துத் தருவாராக என்று கூறி, அவனுக்கு யோசேப்பு (11) என்று பெயரிட்டார்.

ராகேல் யோசேப்பைப் பெற்றெடுத்த பின் யாக்கோபு லாபானை நோக்கி, "என் சொந்த இடத்திற்கும் நாட்டிற்கும் திரும்பிப்போக என்னை அனுப்பி வைப்பீராக!

என் மனைவியரையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தந்து என்னைப் போகவிடும். அவர்களுக்காக நான் உம்மிடம் வேலை செய்துள்ளேன். நான் உமக்குச் செய்துள்ள வேலை இன்னதென்று உமக்குத் தெரியும்" என்றார்.

லாபான் அவரை நோக்கி, "உமக்குத் தடையேதும் இல்லையெனில் தயவுகூர்ந்து இங்கேயே தங்கிவிடும். உம் பொருட்டு ஆண்டவர் எனக்கு ஆசி வழங்கியிருக்கிறார் என்பதைக் குறிபார்த்து அறிந்து கொண்டேன்.

உமக்குரிய கூலியைக் குறிப்பிடும். நான் அதைக் கொடுத்து விடுகிறேன்" என்றான்.

அதற்கு அவர், "நான் உம்மிடம் எவ்வளவு வேலை செய்துள்ளேன் என்பதையும் உம் மந்தை என்னிடம் எப்படி இருந்தது என்பதையும் நீர் அறிவீர்.

நான் உம்மிடம் வருமுன் உமக்கிருந்தது கொஞ்சமே: இப்பொழுதோ மிகுதியாகப் பெருகிவிட்டது. நான் கால்வைக்கும் இடமெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்கியிருக்கிறார். என் குடும்பத்திற்காக நான் உழைப்பது எப்போது?" என்றார்.

அதற்கு லாபான், "நான் உமக்கு என்ன தரவேண்டும்?" என, யாக்கோபு "எனக்கு நீர் ஒன்றும் தர வேண்டியதில்லை. இந்த ஒன்றை மட்டும் நீர் எனக்குச் செய்தால், நான் தொடர்ந்து உம் மந்தையை மேய்த்துப் பாதுகாப்பேன்.

உம் மந்தைகளூடே இன்று நான் செல்வேன். அவற்றினின்று கலப்பு நிறமோ புள்ளியோ உடைய செம்மறியாடுகளையும் கறுப்பு நிறம் கொண்ட ஆட்டுக் குட்டிகள் அனைத்தையும் புள்ளியோ கலப்பு நிறமோ உடைய வெள்ளாடுகளையும் தனியாகப் பிரித்துக் கொள்வேன். இவை எனக்குரிய கூலியாக இருக்கட்டும்.

எனக்குரிய பங்கைச் சரிபார்க்க நீர் வரும்போது என் நேர்மை எனக்குச் சான்று பகர்வதாக! கலப்பு நிறமோ புள்ளியோ இல்லாத வெள்ளாட்டையோ, கறுப்பு நிறமற்ற ஆட்டுக் குட்டியையோ நீர் கண்டால், அது திருடப்பட்டதாக எண்ணப்படும்" என்றார்.

அதற்கு லாபான், "நீர் சொன்னபடியே ஆகட்டும்" என்றான்.

ஆனால் அன்றே அவன் வரியோ புள்ளியோ உடைய வெள்ளாட்டுக் கிடாய்களையும், கலப்பு நிறமோ புள்ளியோ உடைய வெள்ளாடுகள் அனைத்தையும் வெள்ளைப் புள்ளி கொண்ட எல்லாவற்றையும், கறுப்பாய் இருந்த எல்லா ஆட்டுக்குட்டிகளையும் பிரித்துத் தம் புதல்வரிடம் ஒப்படைத்து,

தனக்கும் தன் மந்தைகளை மேய்த்துவந்த யாக்கோபுக்கும் இடையில் மூன்று நாள் வழித்தூரம் இருக்கும்படியும் செய்துவிட்டான்.

அது கண்ட யாக்கோபு புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் பசிய கொப்புகளை வெட்டி, அவற்றில் இடையிடையே உள்தண்டின் வெள்ளைப்பகுதி தெரியுமாறு உரித்தார்.

மேலும் தம் மந்தைகள் தண்ணீர் குடிக்க வரும்போது, ஆடுகள் அந்த வரியுள்ள கொப்புகளை எதிரில் கண்டு பொலிந்து சினைப்படும் பொருட்டு, நீர்த்தொட்டிகளில் அவற்றை அவர் போட்டு வைத்தார்.

பொலியும் நேரத்தில் அக்கொப்புகளைக் கண்டு பொலிந்த ஆடுகள் வரியோ, கலப்பு நிறமோ, புள்ளியோ உடைய குட்டிகளை ஈன்றன.

மேலும் யாக்கோபு ஆட்டுக்குட்டிகளைப் பிரித்தெடுத்தார். லாபானின் மந்தைகளில் வரியோ கறுப்பு நிறமோ உடைய ஆடுகளை நோக்கி மந்தையை நிற்கச் செய்தார். தமக்குரிய மந்தைகளை லாபானின் மந்தையோடு சேராமல் பிரித்து வைத்தார்.

மந்தையின் வலிமையுள்ள ஆடுகள் பொலியும்போது, மந்தைக்கு எதிரேயிருந்த நீர்த்தொட்டியில் அக்கொப்புகளைப் போட்டார்: அக்கொப்புகளிடையே அவை பொலிந்தன.

வலிமையற்ற ஆடுகளுக்குமுன் கொப்புகளைப் போடவில்லை. எனவே லாபானின் ஆடுகள் வலுவற்றவையாகவும் யாக்கோபின் ஆடுகள் வலுவுள்ளவையாகவும் ஆயின.

இவ்வாறு யாக்கோபு பெரும் செல்வரானார். மந்தைகள், வேலைக்காரர், வேலைக்காரிகள், ஒட்டகங்கள், கழுதைகள் ஆகியவற்றை அவர் பெருமளவில் கொண்டிருந்தார்.

அதிகாரம் 31.

லாபானின் புதல்வர், நம் தந்தைக்குரிய யாவற்றையும் யாக்கோபு கைப்பற்றி அவருடைய சொத்தைக்கொண்டே, இந்தச் செல்வத்தை எல்லாம் சேர்த்துக்கொண்டான் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டதை யாக்கோபு கேட்டார்.

லாபானின் மனமும் முன்புபோல் இல்லை என்று யாக்கோபு கண்டார்.

ஆண்டவர் யாக்கோபை நோக்கி, "உன் மூதாதையரின் நாட்டிற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ: நான் உன்னோடு இருப்பேன்" என்றார்.

எனவே யாக்கோபு ராகேலையும் லேயாவையும் தம் மந்தை இருந்த புல்வெளிக்கு வரும்படி ஆளனுப்பினார்.

பிறகு அவர் அவர்களை நோக்கி, "உங்கள் தந்தையின் மனம் என்பால் முன்பு போல் இல்லை என்று காண்கிறேன். என் தந்தையின் கடவுளோ என்னோடு இருந்து வருகிறார்.

உங்கள் தந்தைக்காக முழு வலிமையுடன் உழைத்தேன் என்று உங்களுக்குத் தெரியும்.

உங்கள் தந்தையோ என்னை ஏமாற்றி, என் கூலியைப் பத்து முறை மாற்றினார். அவர் வழியாக எனக்கு எவ்விதத்தீங்கும் நேரிடக் கடவுள் விடவில்லை

ஏனெனில், கலப்பு நிறமானவை உனக்குரிய ஊதியம் என்றபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளையே ஈன்று வந்தன. வரியுள்ளவை உனக்குரிய ஊதியம் என்றபோதோ ஆடுகளெல்லாம் வரியுடைய குட்டிகளையே ஈன்றன.

இவ்விதமாய்க் கடவுளே உங்கள் தந்தையின் மந்தைகளை எடுத்து எனக்குத் தந்தருளினார்.

ஆடுகள் சினையுறும் காலத்தில் நான் ஒரு கனவு கண்டேன். அதில் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஆடுகளோடு பொலியும் கிடாய்கள் வரியும், கலப்பு நிறமும், புள்ளியும் உடையனவாய் இருந்தன.

அக்கனவில் கடவுளுடைய தூதர், யாக்கோபு! என்று என்னை அழைக்க, நான், இதோ! அடியேன் என்றேன்.

அவர், உன் கண்களை உயர்த்திக் கிடாய்கள் யாவும் வரியும் கலப்புநிறமும் புள்ளியும் உடைய ஆடுகளுடன் பொலிவதைப் பார். ஏனெனில், லாபான் உனக்குச் செய்தது அனைத்தையும் நான் கண்டேன்.

நீ கல்லைத் திருப்பொழிவு செய்து, எனக்கு நேர்ச்சை செய்து கொண்ட இடமாகிய பெத்தேலின் இறைவன் நானே. நீ உடனே எழுந்து இந்த நாட்டை விட்டுப் புறப்பட்டு உன் பிறந்த நாட்டுக்குத் திரும்பிச் செல் என்று கூறினார்" என்றார்.

அதற்கு ராகேலும், லேயாவும், "எங்கள் தந்தையின் குடும்பத்தில் எங்களுக்குப் பங்கும் உரிமைச் சொத்தும் இன்னும் உண்டோ?

அவர் எங்களை அன்னியப் பெண்களைப் போல் விலைக்கு விற்று, எங்களுக்காக வாங்கியதையும் முழுமையாக விழுங்கிவிடவில்லையா?

ஆனால், செல்வத்தையெல்லாம் எங்கள் தந்தையிடமிருந்து கடவுள் பிடுங்கி, நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் உரிமையாக்கினார். ஆகையால் கடவுள் உங்களுக்குச் சொன்னதையெல்லாம் செய்யுங்கள்" என்றனர்.

அப்போது யாக்கோபு, தம் மக்களையும், மனைவியரையும் ஒட்டகங்களின் மேல் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

பதான் அராமில் ஈட்டிய செல்வம் அனைத்தையும் திரட்டிக்கொண்டு, மந்தைகள் எல்லாவற்றையும் ஓட்டிக்கொண்டு, கானான் நாட்டிலிருந்த தம் தந்தை ஈசாக்கை நோக்கிப் பயணமானார்.

லாபான் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கப் போயிருந்தபொழுது, ராகேல் தம் தந்தையின் குலதெய்வச் சிலைகளைத் திருடிக் கொண்டுவிட்டார்.

மேலும் யாக்கோபு, தாம் ஓடிப்போகிற செய்தியை அரமேயனான லாபானுக்குத் தெரிவிக்காமல் ஏமாற்றிவிட்டார்.

அவர் தமக்குச் சொந்தமான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நதியைக் கடந்து கிலயாது மலைநாட்டை நோக்கித் தப்பியோடினார்.

யாக்கோபு தப்பியோடிய செய்தி லாபானுக்கு மூன்றாம் நாள் தெரிவிக்கப்பட்டது.

உடனே அவன் தன் உறவினர்களைக் கூட்டிக்கொண்டு, ஏழு நாள்களாக அவரைப் பின்தொடர்ந்து சென்று, அவர் இருந்த கிலயாது மலைப்பகுதியை நெருங்கினான்.

அன்றிரவு கனவில் அரமேயனான லாபானுக்குக் கடவுள் தோன்றி அவனை நோக்கி, நீ யாக்கோபிடம் நல்லதோ கெட்டதோ யாதொன்றும் பேச வேண்டாம் என எச்சரித்தார்.

லாபான் யாக்கோபை நெருங்கியபொழுது, யாக்கோபு கிலயாது மலைப்பகுதியில் கூடாரம் அடித்திருந்தார். அம்மலைப் பகுதியில் லாபானும் அவன் உறவினரும் கூடாரமடித்துத் தங்கினர்.

அவன் யாக்கோபை நோக்கி: "நீர் இப்படிச் செய்யலாமா? என்னை ஏமாற்றி என் புதல்வியரை வாள் முனையில் பிடித்த கைதிகளைப் போல் இட்டுச் செல்லலாமா?

எனக்கு ஒன்றும் தெரிவிக்காமல் என்னை ஏமாற்றிவிட்டு, ஏன் இரகசியமாய் ஓடி வந்தீர்? நான் மேளதாள வாத்தியங்களுடன் மகிழ்ச்சியாய் உங்களை வழியனுப்பி வைத்திருப்பேனே!

என் பேரப்பிள்ளைகளையும் புதல்வியரையும் நான் முத்தமிட விடாமல் செய்துவிட்டது ஏன்? நீர் முட்டாள்தனமாக நடந்து கொண்டீர்.

இப்போதோ, உமக்குத் தீங்கிழைக்க என்னால் முடியும். ஆனால் நேற்றிரவு உம் தந்தையின் கடவுள் என்னை நோக்கி, நீ யாக்கோபிடம் நல்லதோ கெட்டதோ யாதொன்றும் பேச வேண்டாம் என்று எச்சரித்தார்.

உம் தந்தையின் வீட்டுக்குத் திரும்பும் ஆவலினால் நீர் இவ்வாறு வந்துவிட்டீர். ஆனால் என் குலதெய்வச் சிலைகளைத் திருடிக்கொண்டது ஏன்?" என்றான்.

யாக்கோபு அவனுக்கு மறுமொழியாக, "நீர் உம் புதல்வியரை வன்முறையில் என்னிடமிருந்து பிரித்து வைத்துக்கொள்வீர் என்று அஞ்சினேன்.

ஆனால், உம் குலதெய்வச் சிலைகளை யாரேனும் திருடியிருந்தால், அவன் உயிரோடு இருக்க வேண்டாம். உம்முடைய பொருள் ஏதாவது இங்கே என்னிடம் இருக்கின்றதா என்று நம் உறவினர் முன்னிலையில் பரிசோதித்துப் பார்த்து எடுத்துக் கொள்ளும்" என்றார். அவற்றை ராகேல் திருடியிருந்தது யாக்கோபுக்குத் தெரியாது.

அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாவின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் நுழைந்து தேடிப்பார்த்தும் ஒன்றையும் கண்டு பிடிக்கவில்லை. பின் அவன் லேயாவின் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து, ராகேலின் கூடாரத்திற்குள் நுழைந்தான்.

இதற்கிடையே ராகேல் குலதெய்வச் சிலைகளை எடுத்துத் தம் ஒட்டகச் சேணத்தினுள் ஒளித்துவைத்து, அதன் மேல் உட்கார்ந்துகொண்டார். லாபான் கூடாரமெங்கும் சோதித்துப் பார்த்தும் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை.

அவர் தன் தந்தையை நோக்கி, "என் தலைவராகிய உம் முன்னிலையில் என்னால் நிற்க முடியவில்லை என்று சினம்கொள்ள வேண்டாம். ஏனெனில், நான் மாதவிலக்காய் இருக்கிறேன்" என்றார். எனவே அவன் எவ்வளவு தேடிப்பார்த்தும் குலதெய்வச் சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்பொழுது யாக்கோபு சினமுற்று லாபானுடன் வாதிட்டு மறுமொழியாகக் கூறியது: "நான் செய்த குற்றம் என்ன? நான் செய்த பாவம் என்ன? ஏன் இப்படி என்னைத் துரத்திக்கொண்டு வருகிறீர்?

என் உடைமைகளெல்லாம் சோதித்துப் பார்த்தீரே: உம் வீட்டுப் பொருளில் ஏதேனும் கண்டுபிடித்தீரா? அப்படியானால், அதை என் உறவினர், உம் உறவினர் முன்னிலையில் இங்கே வையும். இவர்களே உமக்கும் எனக்கும் இடையே தீர்ப்பு வழங்கட்டும்

இதற்கானத்தானா நான் உம்மோடு இருபது ஆண்டுகளாக இருந்தேன்? உம்முடைய செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் சினை அழியவில்லையே! உம்முடைய மந்தைக்கிடாய்களில் ஒன்றையும் நான் தின்னவில்லையே!

கொடிய விலங்குகளால் அடிபட்டவைகளை நான் உம்மிடம் கொண்டுவரவில்லையே! மாறாக அவற்றிற்கும் ஈடு செய்தேன். ஆனால் இரவிலோ பகலிலோ களவுபோனவற்றிற்காக நீர் என் கையிலிருந்து ஈடு வாங்கிக்கொண்டீரே!

பகலில் கொடும் வெயிலும் இரவில் கடும் குளிரும் என்னை வாட்டின. அதனால் என் கண்களுக்கு உறக்கமே இல்லை.

இவ்விதமாய் நான் உமது வீட்டில் உம் புதல்வியருக்காகப் பதினான்கு ஆண்டுகளும் உம் மந்தைகளுக்காக ஆறு ஆண்டுகளுமாக இந்த இருபதாண்டுகள் உம்மிடம் வேலை செய்தேன். நீரோ என் ஊதியத்தைப் பத்துமுறை மாற்றினீர்.

ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் அச்சமுமான என் தந்தையின் கடவுள் என்னோடு இருந்திராவிடில், உண்மையாகவே நீர் என்னை வெறுங்கையனாய் அனுப்பியிருப்பீர். ஆனால், கடவுள் என் துன்பத்தையும் கடின உழைப்பையும் கண்டு நேற்றிரவு உம்மை எச்சரித்திருக்கிறார்" என்றார்.

அதற்கு மறுமொழியாக லாபான் யாக்கோபை நோக்கி, "இப்புதல்வியர் என் புதல்வியர்: இப்பிள்ளைகள் என் பிள்ளைகள். இம் மந்தை என் மந்தை. நீர் காண்பவை யாவும் என்னுடையவையே. இப்படியிருக்க, என் புதல்வியர்க்கோ அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கோ நான் இன்று என்ன செய்துவிடப்போகிறேன்?

வாரும்: நானும் நீரும் இப்பொழுது உடன்படிக்கை செய்துகொள்வோம். அது உமக்கும் எனக்குமிடையே சான்றாக இருக்கட்டும்" என்றான்.

எனவே யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, நினைவுத்தூணாக நிறுத்தினார்.

யாக்கோபு தம் உறவினரை நோக்கி, "கற்கள் சேகரித்துக்கொண்டு வாருங்கள்" என்றார். அவர்களும் கற்களைக் கொண்டு வந்து ஒரு குவியல் எழுப்பினர்.

அதற்கு லாபான் எகர்சகதுத்தா என்றும் யாக்கோபு கலயேது என்றும் பெயரிட்டனர்.

பின்னர் லாபான், இக்குவியல் இன்று உமக்கும் எனக்கும் சான்றாகுக என்றான். ஆகவே, அதற்கு அவன் கலயேது என்று பெயரிட்டான்.

மீண்டும் அவன், நாம் ஒருவர் ஒருவரை விட்டுப் பிரிந்து சென்ற பின்னும் ஆண்டவரே நம்மைக் கண் காணிப்பாராக!" என்று சொல்லி அதற்கு மிஸ்பா என்றும் பெயரிட்டான்.

மேலும் அவன், "நீர் என் புதல்வியரைத் துன்புறுத்தினாலோ, அவர்களைத் தவிர வேறு பெண்களை மணந்து கொண்டாலோ, நம்மிடையே வேறு எவரும் இல்லையெனினும், உமக்கும் எனக்குமிடையே கடவுளே சாட்சி என்பதை நினைவில்கொள்ளும்" என்றான்.

மீண்டும் லாபான் யாக்கோபை நோக்கி, "இதோ இந்தக் குவியலையும் நினைவுத் தூணையும் பாரும். இவற்றை எனக்கும் உமக்கும் இடையே நிறுத்தி வைத்துள்ளேன்.

நான் இந்தக் குவியலைக் கடந்து வந்து உமக்குத் தீங்கிழைக்கமாட்டேன் என்பதற்கும் நீர் இந்தக் குவியலையும் நினைவுத் தூணையும் கடந்து வந்து எனக்குத் தீங்கிழைக்க மாட்டீர் என்பதற்கும் இந்தக் குவியல் சான்று: இந்த நினைவுத் தூண் சான்று.

ஆபிரகாமின் கடவுள், நாகோரின் கடவுள், அவர்களின் தந்தையின் கடவுள், நம்மிடையே நீதி வழங்குவாராக" என்றான். பின்னர் யாக்கோபு ஈசாக்கின் அச்சம் என்ற தம் தந்தையின் கடவுள் பெயரால் ஆணையிட்டு வாக்களித்தார்.

பின்பு அவர் மலையின் மேல் பலி செலுத்தி உணவு அருந்தும்படி தம் உறவினரை அழைத்தார். அவர்கள் உணவருந்திய பின் அன்றிரவு மலையிலேயே தங்கினார்கள்.

அதிகாலையில் லாபான் எழுந்து, தன் பேரப்பிள்ளைகளையும் புதல்வியரையும் முத்தமிட்டு அவர்களுக்கு ஆசி வழங்கினான். பின்னர் அவன் அவர்களை விட்டுப்பிரிந்து தன் இடத்திற்குத் திரும்பிப் போனான்.

அதிகாரம் 32.

பின்னர், யாக்கோபு தம் பயணத்தைத் தொடர்ந்தார். கடவுளின் தூதர்கள் வழியில் அவரைச் சந்தித்தார்கள்.

யாக்கோபு அவர்களைக் கண்டபோது, இதுதான் கடவுளின் படை என்று கூறி, அந்த இடத்திற்கு மகனயிம் என்று பெயரிட்டார்.

பின்பு, யாக்கோபு ஏதோம் நாட்டிலுள்ள சேயிர் பகுதியில் வாழ்ந்து வந்த தம் சகோதரன் ஏசாவிடம் தூதரை அனுப்பினார்.

அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது: "நீங்கள் என் தலைவன் ஏசாவிடம் போய், உம் ஊழியனாகிய யாக்கோபு கூறுவது: நான் இதுவரை லாபானிடம் அன்னியனாய் தங்கியிருந்தேன்.

மாடுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் எனக்கு உள்ளனர். உம் பார்வையில் எனக்குத் தயை கிடைக்கும்படி என் தலைவரான உமக்கு ஆளனுப்பி அறிவிக்கிறேன் என்று சொல்லுங்கள்."

அத்தூதர் யாக்கோபிடம் திரும்பி வந்து, "நாங்கள் உம் சகோதரர் ஏசாவிடம் போனோம். அவர் இதோ நானூறு பேருடன் உம்மைச் சந்திக்க வருகிறார்" என்றனர்.

யாக்கோபு மிகவும் அஞ்சிக் கலங்கித் தம்முடன் இருந்த ஆள்களையும், ஆடுமாடு ஒட்டகங்களாகிய மந்தைகளையும் இரு பகுதிகளாகப் பிரித்தார்.

ஏனெனில், ஏசா வந்து ஒரு பகுதியைத் தாக்கினாலும் எஞ்சிய பகுதியாவது தப்புமே என்று நினைத்துக் கொண்டார்.

மேலும் யாக்கோபு, "என் மூதாதை ஆபிரகாமின் கடவுளும் என் தந்தை ஈசாக்கின் கடவுளுமான ஆண்டவரே! நீர் என்னை நோக்கி, உன் சொந்த நாட்டிற்கும் உன் உறவினரிடமும் திரும்பிப் போ: நான் உனக்கு நன்மையே புரிவேன் என்று உரைத்தீர்.

அடியேனுக்கு நீர் காட்டிய பேரன்பு முழுவதற்கும் நம்பிக்கைக்குரிய தன்மை முழுவதற்கும் நான் தகுதியற்றவன். நான் இந்த யோர்தானைக் கடந்து சென்றபோது என்னிடமிருந்தது ஒரு கோல் மட்டுமே. இப்போதோ, இரண்டு பரிவாரங்கள் உடையவன் ஆனேன்.

என் சகோதரர் ஏசாவுக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன். அவர் கையினின்று என்னை விடுவித்தருளும். இல்லையேல் அவர் வந்து என்னையும் பிள்ளைகளையும், தாய்களையும் தாக்குவார்.

நீர் நான் உனக்கு உறுதியாக நன்மை புரிவேன்: உன் வழிமரபை எண்ண முடியாத கடல் மணலைப் போலப் பெருகச் செய்வேன் என்று வாக்களித்துள்ளீர் என்றார்.

அன்றிரவு அவர் அங்கேயே தங்கி, தமக்குச் சொந்தமானவற்றிலிருந்து

சகோதரர் ஏசாவுக்கு அன்பளிப்பாக இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கிடாய்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது செம்மறிக் கிடாய்களையும்,

முப்பது பெண் ஒட்டகங்களையும் அவற்றின் குட்டிகளையும், நாற்பது பசுக்களையும், பத்துக் காளைகளையும், இருபது பெண் கழுதைகளையும், பத்து ஆண் கழுதைகளையும் தேர்ந்தெடுத்தார்.

அவற்றுள் ஒவ்வொரு மந்தையையும் வேலைக்காரர் கையில் தனித்தனியாய் ஒப்புவித்து, நீங்கள் மந்தைகளுக்கு இடையே இடம்விட்டு, எனக்குமுன் ஓட்டிக்கொண்டு போங்கள் என்று சொன்னார்.

பின்பு அவர் முதலில் போகிறவனை நோக்கிக் கட்டளையிட்டுக் கூறியது: "என் சகோதரர் ஏசா உனக்கு எதிர்ப்பட்டு, நீ யாருடைய ஆள்? நீ எங்கே போகிறாய்? உனக்கு முன் செல்லும் இவை யாருடையன? என்று உன்னிடம் கேட்டால்,

இவை உம் ஊழியன் யாக்கோபினுடையவை. அவர் தம் தலைவராகிய ஏசாவுக்கு இவற்றை அன்பளிப்பாக அனுப்பியிருக்கிறார். அவரும் எங்கள் பின்னர் வருகிறார் என்று நீ சொல்வாய்" என்றார்.

அதேவிதமாய் அம்மந்தைகளை ஓட்டிச் செல்லும் இரண்டாம், மூன்றாம் ஆள்களுக்கும் மற்ற அனைவருக்கும் கட்டளையிட்டுக் கூறியது: "ஏசாவை நீங்கள் சந்திக்கும்பொழுதும்,

இதோ உம் ஊழியன் யாக்கோபு எங்கள் பின்னால் வருகிறார் என்று சொல்லுங்கள்". ஏனெனில், யாக்கோபு நான் அவர் முன்னே இவ்வன்பளிப்புகளை அனுப்பி அவரை அமைதிப்படுத்துவேன். பின்பு நான் அவரை நேரில் காணும்பொழுது, அவர் ஒருவேளை என்னை ஏற்றுக் கொள்வார் என்று நினைத்தார்.

அவ்விதமே யாக்கோபின் அன்பளிப்புகள் அவருக்கு முன் சென்றன. அவரோ அன்றிரவு கூடாரத்தில் தங்கினார்.

அந்த இரவிலேயே அவர் எழுந்து, தம் இரு மனைவியரையும் இரு வேலைக்காரிகளையும் புதல்வர் பதினொருவரையும் அழைத்துக் கொண்டு யாபோக்கு ஆற்றின் துறையைக் கடந்தார்.

அப்படி அவர்களை ஆற்றைக் கடக்கச் செய்தபோது, தமக்கிருந்த அனைத்தையும் அனுப்பி வைத்தார்

யாக்கோபு மட்டும் இவ்வாறு தனித்திருக்க, ஓர் ஆடவர் பொழுது விடியுமட்டும் அவரோடு மற்போரிட்டார்.

யாக்கோபை வெற்றி கொள்ள முடியாதென்று கண்ட அந்த ஆடவர் அவரது தொடைச்சந்தைத் தொட்டார். யாக்கோபு அவரோடு மற்போரிடுகையில் தொடைச் சந்து இடம் விலகியது.

அப்பொழுது ஆடவர் என்னைப் போகவிடு: பொழுது புலரப்போகிறது என, யாக்கோபு, "நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்" என்று மறுமொழி சொன்னார்.

ஆடவர், "உன் பெயர் என்ன?" என,

அவர்: "நான் யாக்கோபு" என்றார். அப்பொழுது அவர், "உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, இஸ்ரயேல் எனப்படும். ஏனெனில், நீ கடளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்" என்றார்.

யாக்கோபு அவரை நோக்கி "உம் பெயரைச் சொல்லும்" என்றார். அவர் "என் பெயரை நீ கேட்பதேன்?" என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார்.

அப்பொழுது யாக்கோபு, "நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்" என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பெனியேல் என்று பெயரிட்டார்.

அவர் பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான். தொடை விலகியதால் அவரும் நொண்டி நொண்டி நடந்தார்.

அதன் பொருட்டு, இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச் சந்துச் சதைநாரை உண்பதில்லை. ஏனென்றால், அந்த ஆடவர் யாக்கோபின் தொடைச் சந்துச் சதைநாரைத் தொட்டார்.

அதிகாரம் 33.

யாக்கோபு தம் கண்களை உயர்த்திப் பார்க்க, ஏசா நானூறு ஆள்களோடு வருவதைக் கண்டார். உடனே அவர் லேயாவிடமும் ராகேலிடமும் இரு வேலைக்காரிகளிடமும் பிள்ளைகளைப் பிரித்து ஒப்படைத்தார்.

முதல் வரிசையில் வேலைக்காரிகளையும் அவர்கருடைய பிள்ளைகளையும், இரண்டாம் வரிசையில் லேயாவையும், அவருடைய பிள்ளைகளையும், இறுதியில் ராகேலையும் யோசேப்பையும் நிறுத்தினார்.

அவர் அவர்களுக்கு முன் சென்று தம் சகோதரரை நெருங்கிச் செல்கையில் ஏழு முறை தரையில் வீழ்ந்து அவரை வணங்கினார்.

ஏசாவோ அவருக்கு எதிர் கொண்டு ஓடி அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார். இருவரும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர்.

பின் கண்களை உயர்த்தி, பெண்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்டு, "உன்னோடு இருக்கும் இவர்கள் யார்?" என்று கேட்டார். அவரும் "உம் அடியானாகிய எனக்குக் கடவுள் கருணையுடன் அருளிய பிள்ளைகளே இவர்கள்" என்று பதில் சொன்னார்.

அப்பொழுது வேலைக்காரிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் அணுகி அவரை வணங்கினர்.

அவ்வாறே லேயாவும் அவருடைய பிள்ளைகளும் வணங்கினர். இறுதியாக யோசேப்பும் ராகேலும் நெருங்கி வந்து வணங்கினர்.

அப்போது ஏசா யாக்கோபை நோக்கி, "எனக்கு எதிர்கொண்டு வந்த பரிவாரம் எதற்காக?" என்று கேட்டார். யாக்கோபு, "என் தலைவராகிய உம் பார்வையில் எனக்குத் தயை கிடைப்பதற்காக" என்று பதில் சொன்னார்.

ஏசா, "என் சகோதரனே, ஏற்கெனவே என்னிடம் மிகுதியாக உள்ளது. உன்னுடையதை நீயே வைத்துக்கொள்" என்றார்.

யாக்கோபு, "இல்லை. உமது பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருப்பது உண்மையானால் நான் தரும் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும். உமது முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தைக் காண்பதுபோல் இருக்கிறது. ஏனெனில், நீர் எனக்குக் கனிவு காட்டியுள்ளீர்.

எனவே, உமக்கு அடியேன் கொண்டு வந்துள்ள அன்பளிப்பைத் தயவு செய்து ஏற்றுக் கொள்ளும். ஏனெனில், கடவுளின் கருணையினால் எனக்கு வேண்டிய மட்டும் உள்ளது" என்று சொல்லி வற்புறுத்த, அவரும் அவற்றைப் பெற்றுக்கொண்டார்.

பிறகு அவர் "நாம் சேர்ந்து பயணம் செய்வோம். உனக்குமுன் நான் செல்வேன்" என்றார்.

அதற்கு யாக்கோபு, "பச்சிளங்குழந்தைகளும் பால் கொடுக்கும் ஆடு, மாடுகளும் என்னிடம் உள்ளன என்று என் தலைவராகிய உமக்குத் தெரியும். அவற்றை ஒரே நாளில் வருத்தி ஓட்டிக் கொண்டு வந்தால், என் மந்தையெல்லாம் செத்துப் போகும்.

தலைவராகிய நீர் எனக்குமுன்னே செல்வீராக! நானோ மந்தைகள், பிள்ளைகளின் நடைக்கு ஏற்ப மெதுவாக வந்து சேயிரில் உம்மைச் சந்திப்பேன்" என்றார்.

அதற்கு ஏசா, "அப்படியானால் என்னுடைய ஆள்களில் சிலரை உன்னிடம் விட்டுச் செல்கிறேன்" என்று சொல்ல, அவர் "வேண்டாம்: என் தலைவராகிய உமது பார்வையில் எனக்குத் தயை கிடைத்ததே போதும்" என்றார்.

ஆகையால், ஏசா அன்றே புறப்பட்டு, தாம் வந்த வழியே சேயிருக்குத் திரும்பினார்.

யாக்கோபு சுக்கோத்தை வந்தடைந்தவுடன், அங்கே தமக்கென்று ஒரு வீடு கட்டினார். தம் மந்தைகளுக்குக் குடில்களை அமைத்தார். இதனால் அந்த இடத்திற்குச் சுக்கோத்து என்று பெயரிட்டார்.

இவ்வாறு யாக்கோபு பதான் அராமிலிருந்து திரும்பி வந்தபின் கானான் நாட்டைச் சார்ந்த செக்கேம் நகருக்கு நலமுடன் வந்து சேர்ந்தார். அந்நகருக்கு எதிரே பாளையம் இறங்கினார்.

கூடாரமடித்துத் தங்கிய அந்நிலப்பகுதியை செக்கேமின் தந்தை ஆமோரின் புதல்வரிடமிருந்து நூறு வெள்ளிக்காசுக்கு அவர் விலைக்கு வாங்கினார்.

பின்பு, அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி அதற்கு ஏல்-எலோகே-இஸ்ரயேல் என்று பெயரிட்டார்.

அதிகாரம் 34.

யாக்கோபுக்கு லேயா பெற்றெடுத்த மகளான தீனா அந்நாட்டு மகளிரைப் பார்க்க வெளியே புறப்பட்டுப் போனாள்.

இவ்வியனான ஆமோரின் மகனும் அந்நாட்டின் தலைவனுமான செக்கேம் அவளைக் கண்டு தூக்கிச்சென்று அவளுடன் உறவு கொண்டு சிறுமைப்படுத்தினான்.

யாக்கோபின் மகள் தீனாவிடம் அவன் மனம் மேலும் ஈர்க்கப்பெற, அவன் அப்பெண்ணின்மேல் காதல் கொண்டு அவளது மனத்தைக் கவரும் முறையில் பேசினான்.

எனவே செக்கேம் தன் தந்தை ஆமோரிடம், "இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்துவையுங்கள்" என்று கூறினார்.

தம் மகள் தீனா த¨ட்டுப்படுத்தப்பட்டாள் என்று யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவருடைய புதல்வர் புல்வெளியில் மந்தைகளோடு இருந்தனர். எனவே அவர்கள் திரும்பி வரும்வரை யாக்கோபு அமைதியாய் இருந்தார்.

செக்கேமின் தந்தை ஆமோர் யாக்கோபோடு பேச வந்தார்.

யாக்கோபின் புதல்வர் இதைப்பற்றிக் கேள்விப்பட்டுப் புல்வெளியிலிருந்து வந்தனர். அவர்கள் துயரமும் கடுஞ் சீற்றமும் கொண்டனர். ஏனெனில் யாக்கோபின் மகளுடன் உறவு கொண்டதால் செய்யத் தகாததைச் செய்து செக்கேம் இஸ்ரயேலை அவமானப்படுத்தினான் என்று நினைத்தனர்.

அப்பொழுது ஆமோர் அவர்களை நோக்கி, "என் மகன் செக்கேமின் மனம் உங்கள் மகள்மீது ஈர்க்கப்பட்டுள்ளது. அவளை அவனுக்கு மணமுடித்துத் தாருங்கள்.

நீங்கள் எங்களோடு கலப்பு மணம் செய்துகொள்ளுங்கள். உங்கள் பெண்களை எங்களுக்குக் கொடுத்து எங்கள் பெண்களை உங்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எங்களோடு இந்நாட்டில் எங்கும் தங்கலாம். அதில் குடியிருந்து, வணிகம் செய்து, செல்வம் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.

அப்பொழுது செக்கேம் தீனாவின் தந்தையையும், சகோதரர்களையும் நோக்கி, உங்கள் பார்வையில் எனக்குத் தயை கிடைக்கட்டும். நீங்கள் கேட்பதைத் தருவேன்.

பெண்ணுக்குரிய பணமும் பரிசமும் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள். நீங்கள் கேட்பதைத் தருவேன். பெண்ணை மட்டும் எனக்கு மணமுடித்துத் தாருங்கள் என்றான்.

யாக்கோபின் புதல்வர் தங்கள் சகோதரியைச் செக்கேம் தீட்டுப்படுத்தியதால், அவனையும் அவன் தந்தை ஆமோரையும் நோக்கிக் கபடமாய்க் கூறிய மறுமொழியாவது:

நீங்கள் கேட்டபடி செய்ய எங்களால் முடியாது. ஏனெனில் விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஆடவனுக்கு எங்கள் சகோதரியைக் கொடுப்பது அவமானமாகும்.

ஆனால் நீங்களும் உங்களுள் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் செய்து கொண்டால் மட்டும்

எங்கள் பெண்களை உங்களுக்குக் கொடுத்து உங்கள் பெண்களை எங்களுக்கு எடுத்துக்கொள்வோம். உங்களிடையே வாழ்ந்து ஓரினமாக ஆவோம்.

எங்கள் சொற்படி நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள இசையாவிட்டால் நாங்கள் எங்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விடுவோம்" என்றனர்.

அவர்கள் சொன்னது ஆமோருக்கும் அவன் மகன் செக்கேமுக்கும் நலமாகத் தோன்றியது.

அந்த இளைஞன் யாக்கோபின் மகள்மீது கொண்ட காதலினால் அவர்கள் சொன்னதை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தவில்லை. மேலும் அவன் தன் தந்தை வீட்டார் அனைவரிடையிலும் பெருமதிப்புக்குரியவனாய் இருந்தான்.

எனவே, ஆமோரும் அவன் மகன் செக்கேமும் தம் நகரவாயிலுக்கு வந்து மக்களை நோக்கி,

"இந்த மனிதர்கள் நம்முடன் நட்புறவு கொள்பவர்கள். ஆகவே நம் நாட்டில் குடியிருந்து வணிகம் செய்யட்டும். அவர்கள் வாழ்வதற்கு நம் நாட்டில் நிறைய நிலம் இருக்கிறது. அவர்களிடம் பெண் எடுத்து, அவர்களுக்குப் பெண் கொடுப்போம்.

ஆனால் இவர்கள், தாங்கள் செய்து கொண்டது போல, நம் ஆண்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டால் மட்டும் நம்முடன் ஒரே இனமாகச் சேர்ந்து வாழ இசைவு தருகிறார்கள்.

அப்படிச் செய்தால் அவர்களுடைய மந்தைகள், சொத்துக்கள், அனைத்துக் கால்நடைகள் ஆகியன நமக்குரியன ஆகுமன்றோ! எனவே நாம் அவர்களுக்கு ஒப்புதல் கொடுப்போம். அவர்களும் நம்முடன் குடியிருக்கட்டும்" என்றார்கள்.

ஆகவே நகரவாயிலுக்கு வெளியே வந்த அனைவரும் ஆமோரும் அவன் மகன் செக்கேமும் கூறியதை ஏற்றுக் கொண்டனர். நகரிலிருந்த அனைத்து ஆண்களும் செய்து கொண்டனர்.

மூன்றாம் நாளன்று அவர்கள் அனைவரும் வலியால் வருந்தியபோது, யாக்கோபின் புதல்வர்களும் தீனாவின் சகோதரர்களுமான சிமியோன், லேவி என்னும் இருவரும் அவரவர் வாளை எடுத்துக் கொண்டு, சந்தேகம் எழாதபடி நகருக்குள் புகுந்து அனைத்து ஆண்களையும் வெட்டி வீழ்த்தினர்.

அவர்கள் ஆமோரையும், அவன் மகன் செக்கேமையும் வாளினால் வெட்டி வீழ்த்தியபின் தீனாவை செக்கேம் வீட்டினின்று அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

அதன்பின் யாக்கோபின் புதல்வர்கள் வந்து, வெட்டுண்டவர்களின் சடலத்தின் மீது மிதித்துச் சென்று தங்கள் சகோதரியைத் தீட்டுப்படுத்திய அந்நகரைக் கொள்ளையிட்டனர்.

நகரிலும் வெளிப்புறத்திலும் இருந்த அவர்களுடைய ஆடு, மாடு, கழுதைகளைக் கைப்பற்றினர்.

அவர்களுடைய எல்லாச் செல்வங்களையும் எடுத்துக் கொண்டு, எல்லாக் குழந்தைகள் பெண்டிரையும் கைதிகளாக்கி, வீடுகளிலிருந்த அனைத்தையும் கொள்ளையடித்தனர்.

யாக்கோபு சிமியோனையும் லேவியையும் நோக்கி, "நீங்கள் என்னைத் தொல்லைக்கு உட்படுத்திவிட்டீர்கள். இந்நாட்டில் வாழ்வோரிடத்திலும் கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என்னை இழிவுப்படுத்திவிட்டீர்கள். என்னிடமோ சில ஆள்களே உள்ளனர். அவர்கள் ஒன்று சேர்ந்து என்னைத் தாக்கினால் நானும் என் குடும்பத்தாரும் அழிந்து போவோம்" என்றார்.

அதற்கு, "அவன் மட்டும் எங்கள் சகோதரியை ஒரு விலைமாதைப் போல நடத்தலாமோ?" என்று அவர்கள் மறுமொழி கூறினர்.

அதிகாரம் 35.

அப்பொழுது கடவுள் யாக்கோபை நோக்கி, "நீ எழுந்து பெத்தேலுக்குப் போய் அங்கே குடியிரு. உன் சகோதரன் ஏசாவிடமிருந்து தப்பியோடியபோது உனக்குத் தோன்றின இறைவனுக்கு அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தை எழுப்பு" என்றார்.

யாக்கோபு தம் வீட்டாரையும் அவரோடிருந்த அனைவரையும் நோக்கி, "உங்களிடம் உள்ள வேற்றுத் தெய்வங்களின் சிலைகளை அகற்றிவிட்டு உங்களைத் தூய்மைப்படுத்தி, உங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.

எழுந்து வாருங்கள்: பெத்தேலுக்குச் செல்வோம். அங்கே, என் துன்ப நாளில் என் மன்றாட்டைக் கேட்டருளி நான் சென்றவிடமெல்லாம் எனக்கு வழித் துணையாய் இருந்த இறைவனுக்கு ஒரு பலிபீடத்தை எழுப்புவேன்" என்றார்.

அப்படியே அவர்கள் தங்களிடமிருந்த எல்லா வேற்றுத் தெய்வங்களின் சிலைகளையும் தங்கள் காதணிகளையும் யாக்கோபின் கையில் கொடுக்க, அவர் அவற்றைச் செக்கேம் அருகிலிருந்த ஒரு கருவாலி மரத்தின் அருகே புதைத்தார்.

அவர்கள் புறப்பட்டுச் சென்றபொழுது, அவர்களைச் சூழ்ந்திருந்த எல்லா நகரத்தினருக்கும் கடவுள் திகிலூட்டினார். எனவே, அவர்கள் யாக்கோபின் புதல்வரைத் துரத்திச் செல்லவில்லை.

இவ்வாறு யாக்கோபும் அவரோடிருந்த எல்லா மக்களும் கானான் நாட்டிலுள்ள லூசு என்ற பெத்தேலுக்கு வந்து சேர்ந்தனர்.

யாக்கோபு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பித் தம் சகோதரனிடமிருந்து தப்பி ஓடினபொழுது, கடவுள் தம்மை அங்கே அவருக்கு வெளிப்படுத்தியதால், அந்த இடத்திற்கு ஏல்-பெத்தேல் என்று பெயரிட்டார்.

அப்பொழுது ரெபேக்காவின் பணிப்பெண்ணாகிய தெபோரா இறந்தாள். பெத்தேலின் அடிவாரத்திலிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவள் அடக்கம் செய்யப்பட்டாள். எனவே. அவ்விடத்திற்கு அல்லோன்-பாகூத்து என்னும் பெயர் வழங்கலாயிற்று.

யாக்கோபு பதான்-அராமிலிருந்து திரும்பி வந்தபின் கடவுள் மீண்டும் அவருக்குத் தோன்றி, ஆசி வழங்கினார்.

கடவுள் அவரை நோக்கி, "உன் பெயர் யாக்கோபு. இனிமேல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படமாட்டாய்: உன் பெயர் இஸ்ரயேல் எனப்படும்" என்றுரைத்து இஸ்ரயேல் என்று அவருக்குப் பெயரிட்டார்.

மேலும், கடவுள் அவரை நோக்கி, "நானே எல்லாம் வல்ல இறைவன். நீ பலுகிப் பெருகக்கடவாய். ஓரினமும் மக்களினங்களின் கூட்டமும் உன்னிடமிருந்து தோன்றும். அரசர்களும் உன் வழிமரபில் உதிப்பார்கள்.

ஆபிரகாம், ஈசாக்குக்கு நான் அளித்த நாட்டை உனக்கும் உனக்குப்பின் உன் வழிமரபினருக்கும் கொடுப்பேன்" என்றார்.

பின்னர் கடவுள் அவரோடு பேசிய இடத்தினின்று மேலெழும்பிச் சென்றார்.

யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்தில் ஒரு கல்தூணை நினைவுத் தூணாக நாட்டி, அதன் மேல் நீர்மப் பலியையும் எண்ணெயையும் வார்த்தார்.

யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்திற்குப் பெத்தேல் என்று பெயரிட்டார்.

பின்பு அவர்கள் பெத்தேலைவிட்டுப் புறப்பட்டனர். எப்ராத்திற்குச் சற்றுத் தொலைவில் அவர்கள் இருந்தபொழுது, அங்கே ராகேலுக்குப் பேறுகாலம் வந்தது. அப்பொழுது அவர் மிகவும் வேதனைப்பட்டார்.

பேறுகால வேதனையால் அவர் துடித்துக் கொண்டிருக்கையில், மருத்துவப் பெண் அவரை நோக்கி, அஞ்சாதே! உனக்கு இன்னொரு மகன் பிறந்துள்ளான்! என்றாள்.

அவர் சாகக்கிடந்து உயிர்பிரியும் வேளையில் அவனுக்குப் பென்-ஓனி என்று பெயரிட்டார். அவன் தந்தையோ அவனைப் பென்யமின் (12) என்று அழைத்தார்.

இவ்வாறு ராகேல் இறந்துபோக, பெத்லகேம் என்ற எப்ராத்திற்குச் செல்லும் வழியில் அடக்கம் செய்யப்பட்டார்.

யாக்கோபு அவருடைய கல்லறையின் மேல் ஒரு நினைவுத்தூணை நாட்டிவைத்தார். இன்றுவரை அது ராகேலின் கல்லறைக்கு நினைவுத்தூணாக இருக்கின்றது.

மீண்டும், இஸ்ரயேல் அங்கிருந்து புறப்பட்டு மிக்தால் ஏதேருக்கு அப்பால் கூடாரம் அடித்தார்.

இஸ்ரயேல் அந்நிலப்பகுதியில் குடியிருந்தபொழுது, ரூபன் தன் தந்தையின் மறுமனைவியாகிய பிலகாவுடன் உடலுறவு கொண்டான். இஸ்ரயேல் அதைக் கேள்விப்பட்டார். யாக்கோபின் புதல்வர்கள் பன்னிருவரின் பெயர்களாவன:

லேயாவின் புதல்வர்கள்: யாக்கோபின் தலைமகன் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்.

ராகேலின் புதல்வர்கள்: யோசேப்பு, பென்யமின்.

ராகேலின் பணிப்பெண் பிலகாவின் புதல்வர்கள்: தாண், நப்தலி.

லேயாவின் பணிப்பெண் சில்பாவின் புதல்வர்கள்: காத்து, ஆசேர். இவர்கள் யாக்கோபுக்கு பதான் அராமில் பிறந்தவர்கள்.

ஆபிரகாமும், ஈசாக்கும் வாழ்ந்த இடம் கிரியத்து அர்பா என்ற எபிரோன் ஆகும். யாக்கோபு தம் தந்தை ஈசாக்கிடம் மம்ரே என்னும் கிரியத்து அர்பாவுக்கு வந்தார். அதுவே ஆபிரகாமும் ஈசாக்கும் குடியிருந்த எபிரோன் ஆகும்.

ஈசாக்கு நூற்றெண்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.

அவர் வயது முதிர்ந்தவராய் இறந்து, தம் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் புதல்வர்கள் ஏசாவும் யாக்கோபும் அவரை அடக்கம் செய்தனர்.

அதிகாரம் 36.

ஏதோம் என்ற ஏசாவின் தலைமுறை அட்டவணை இதுவே.

ஏசா கானான் நாட்டுப் பெண்களில் இத்தியன் ஏலோனின் மகள் ஆதாவையும் இவ்வியன் சிபெயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமாவையும்,

இஸ்மயேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பாசமத்தையும் மணந்து கொண்டார்.

ஏசாவுக்கு ஆதா எலிப்பாசைப் பெற்றெடுத்தாள். பாசமத்து இரகுவேலைப் பெற்றெடுத்தாள்.

ஒகோலி பாமா எயூசு, யாலாம், கோராகு ஆகியோரைப் பெற்றெடுத்தாள். இவர்கள் ஏசாவுக்குக் கானான் நாட்டில் பிறந்த புதல்வர்கள்.

பின் ஏசா தம் மனைவியர், புதல்வர், புதல்வியர், தம் வீட்டைச் சேர்ந்தவர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு, தம் மந்தைகள், கால்நடைகள், கானான் நாட்டில் சேர்த்திருந்த உடைமைகள் யாவற்றோடும் தம் சகோதரன் யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குப் போனார்.

ஏனெனில், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாத அளவு அவர்களுடைய உடைமைகள் பெருகிவிட்டன. அவர்கள் தங்கியிருந்த நிலம் அவர்களுடைய மந்தைகளுக்குப் போதாதிருந்தது.

ஆகையால் ஏசா என்ற ஏதோம் சேயிர் என்ற மலைநாட்டிற்குச் சென்று குடியேறினார்.

சேயிர் மலைநாட்டில் வாழும் ஏதோமியரின் மூதாதையாகிய ஏசாவின் தலைமுறை அட்டவணை இதுவே.

ஏசாவின் புதல்வர்கள் பெயர்களாவன: ஏசாவின் மனைவி ஆதாவின் மகன் எலிப்பாசு, அவருடைய இரண்டாம் மனைவியான பாசமத்தின் மகன் இரகுவேல்.

எலிப்பாசின் புதல்வர்கள்: தேமான், ஓமார், செப்போ, காத்தாம், கெனாசு.

ஏசாவின் மகன் எலிப்பாசின் மறுமனைவி திம்னா எலிப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள். இவர்களே ஏசாவின் மனைவி ஆதாவின் பேரப் பிள்ளைகள்.

இரகுவேலின் புதல்வர்கள்: நகத்து, செராகு, சம்மா, மிசா. இவர்களே ஏசாவின் மனைவி பாசமத்தின் பேரப்பிள்ளைகள்.

சிபயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமா ஏசாவுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள்: எயுசு, யாலாம், கோராகு.

ஏசாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்: ஏசாவின் தலைமகன் எலிப்பாசின் புதல்வர்களான தேமான், ஒமார், செப்போ, கெனாசு.

கோராகு, காத்தாம், அமலேக்கு ஆகிய இவர்கள் அனைவரும் எலிப்பாசுக்குப் பிறந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள். இவர்களே ஆதாவின் பேரப்பிள்ளைகள்.

ஏசாவின் மகன் இரகுவேலின் புதல்வர்களுள் தலைவர்களாயிருந்தவர்கள்: நகத்து, செராகு, சம்மா, மிசா. இவர்களே இரகுவேலின் புதல்வர்கள், ஏசாவின் மனைவி பாசுமத்தின் பேரப்பிள்ளைகள். இவர்கள் இரகுவேலின் வழிவந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள்.

ஏசாவின் மனைவி ஒகோலிபாமாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்: எயுசு, யாலாம், கோராகு. இவர்கள் அனாவின் மகளும் ஏசாவின் மனைவியுமான ஒகோலிபாமா வழிவந்த தலைவர்கள்.

இவர்களே ஏதோம் எனப்பட்ட ஏசாவின் புதல்வர்களும், அந்த இனத்தின் தலைவர்களும் ஆவர்.

அந்த நாட்டில் குடியிருந்த ஓரியனான சேயிரின் புதல்வர்கள்: லோத்தான், சோபால், சிபயோன், அனா,

தீசோன், ஏட்சேர், தீசான். இவர்களே ஏதோம் நாட்டிலிருந்த சேயிரின் மக்களாகிய ஓரியரின் தலைவர்கள்.

லோத்தானின் புதல்வர்கள் இவர்களே: ஓரி, ஏமாம். லோத்தானின் சகோதரி திம்னா.

சோபாலின் புதல்வர்கள் இவர்களே: அல்வான், மானகத்து, ஏபால், செப்போ, ஓனாம்.

சிபயோனின் புதல்வர்கள் இவர்களே: அய்யா, அனா. இந்த அனா தன் தந்தை சிபயோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பாலை நிலத்தில் வெப்ப நீரூற்றுகளைக் கண்டுபிடித்தான்.

அனாவின் மகன் தீசோன்: அனாவின் மகள் ஒகோலிபாமா.

தீசானின் புதல்வர்கள் இவர்களே: எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.

ஏட்சேரின் புதல்வர்கள் இவர்களே: பில்கான், சகவான், ஆக்கான்.

தீசோனின் புதல்வர்கள் இவர்களே: ஊசு, ஆரான்.

ஓரியனின் தலைவர்கள் இவர்களே: லோத்தான், சோபால், சிபயோன், அனா,

தீசோன், ஏட்சேர், தீசான். இவர்கள் சேயிர் நாட்டின் குலப்பிரிவுகளுக்கு ஏற்ப ஓரியரின் தலைவர்களாய் இருந்தவர்கள்.

இஸ்ரயேலரிடையே முடியாட்சி தொடங்குமுன்னரே ஏதோமில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் இவர்களே.

பெகோரின் மகன் பேலா ஏதோமில் ஆட்சி புரிந்தான். அவனது நகரின் பெயர் தின்காபா.

பேலா இறந்தபின் போஸ்ராவைச் சார்ந்த செராகின் மகன் யோபாபு ஆட்சிக்கு வந்தான்.

யோபாபு இறந்தபின் தேமானியரின் நாட்டைச் சேர்ந்த ஊசாம் ஆட்சிக்கு வந்தான்.

ஊசாம் இறந்தபின் பெதாதின் மகன் அதாது ஆட்சிக்கு வந்தான். இவன் மோவாபு நாட்டில் மிதியானியரைத் தோற்கடித்தவன். அவனது நகரின் பெயர் அவீத்து.

அதாது இறந்தபின், மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா ஆட்சிக்கு வந்தான்.

சம்லா இறந்தபின் யூப்பிரத்தீசு நதிக்கருகில் இருந்த இரகபோத்தைச் சார்ந்த சாவூல் ஆட்சிக்கு வந்தான்.

சாவூல் இறந்தபின், அக்போரின் மகன் பாகால் அனான் ஆட்சிக்கு வந்தான்.

பாகால் அனான் இறந்தபின், அதார் ஆட்சிக்கு வந்தான். அவனது நகரின் பெயர் பாகூ. அவன் மனைவியின் பெயர் மெகேற்றபேல். அவள் மேசகாபின் மகளான மத்ரேத்தின் மகள்.

தங்கள் குலப்பிரிவின்படியும், நிலப்பகுதிகளின்படியும் ஏசாவின் வழிவந்த தலைவர்களின் பெயர்கள் இவைகளே: திம்னா, ஆல்வா, எத்தேத்து.

ஒகோலிபாமா, ஏலா, பினோன்,

கெனாசு, தேமா, மிபுசார்,

மக்தியேல், ஈராம். ஏதோமியர் உரிமையாகக் கொண்டு குடியேறி வாழ்ந்த நிலப்பகுதிகளின்படி தலைவர்களாய் இருந்தவர்கள் இவர்களே. இந்த ஏதோமியரின் மூதாதைதான் ஏசா.

அதிகாரம் 37.

கானான் நாட்டில் தம் தந்தை தங்கியிருந்த நிலப்பகுதிகளில் யாக்கோபும் வாழ்ந்து வந்தார்.

யாக்கோபின் குடும்ப வரலாறு இதுவே: யோசேப்பு பதினேழு வயது இளைஞனாய் இருந்தபோது, தம் தந்தையின் மறு மனைவியரான பிலகா, சில்பா என்பவர்களுடைய புதல்வர்களான தம் சகோதரரோடு மந்தை மேய்த்துக் கொண்டிருந்தார். அவர் தம் சகோதரர் செய்து வந்த தீச்செயலைப் பற்றித் தம் தந்தைக்குத் தகவல் கொடுத்தார்.

இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும் விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார்.

அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை.

யோசேப்பு தாம் கண்ட ஒரு கனவைத் தம் சகோதரருக்குத் தெரிவித்தார். இதனால் அவர்கள் அவரை மேலும் அதிகமாய் வெறுத்தனர்.

அவர் அவர்களை நோக்கி, "நான் கண்ட இந்தக் கனவைக் கேளுங்கள்.

நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டும் பொழுது திடீரென எனது அரிக்கட்டு எழுந்து நிற்க, உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கின" என்றார்.

அப்பொழுது அவர் சகோதரர் அவரை நோக்கி, "நீ எங்கள் மீது உண்மையிலேயே ஆட்சி செலுத்தப்போகிறாயோ? நீ எங்கள் மீது உண்மையிலேயே அதிகாரம் செலுத்தப் போகிறாயோ?" என்று கேட்டனர். இவ்விதக் கனவுகளின் காரணமாகவும் அவருடைய தகவல்களின் காரணமாகவும் அவரை அவர்கள் இன்னும் அதிகமாய் வெறுத்தனர்.

மேலும் அவர் தாம் கண்ட வேறொரு கனவையும் தம் சகோதரர்களுக்கு விவரித்தார். "நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன்: அதில் கதிரவனும் நிலவும் பதினொரு விண்மீன்களும் என்னை வணங்கக் கண்டேன்" என்றார்.

இதை அவர் தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் விவரித்தபோது, அவர் தந்தை அவரைக் கண்டித்து, "நீ கண்ட இந்தக் கனவின் பொருள் என்ன? நானும் உன் தாயும், உன் சகோதரர்களும் தரைமட்டும் தாழ்ந்து உன்னை வணங்க வேண்டுமா?" என்று கேட்டார்.

அதன் பொருட்டும் அவர் சகோதரர் அவர் மீது பொறாமை கொண்டனர். அவர் தந்தையோ இக்காரியத்தைத் தம் மனத்தில் கொண்டார்.

அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில் தம் தந்தையின் மந்தைகளை மேய்க்கச் சென்றனர்.

இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி: "உன் சகோதரர்கள் செக்கேமில் ஆடு மேய்க்கிறர்கள் அல்லவா? அவர்களிடம் உன்னை அனுப்பப் போகிறேன்," என்று கூற, அவர், "இதோ நான் தயார்" என்றார்.

அவர் அவரிடம், "நீ போய் உன் சகோதரர், மந்தைகள் நலமா என்று விசாரித்து வந்து எனக்குத் தெரிவி" என்று சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலிருந்து அவரை அனுப்பினார். அவரும் செக்கேமிற்கு வந்தார்.

அவர் புல்வெளியில் வழி தவறி அலைவதை ஒரு மனிதன் கண்டு, "என்ன தேடுகிறாய்?" என்று அவரைக் கேட்டான்.

யோசேப்பு, "என் சகோதரர்களைக் தேடுகிறேன3 அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள் என்று தெரியுமா? சொல்லும்" என்றார்.

அதற்கு அம்மனிதன், "அவர்கள் இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டார்கள். தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டதை நான் கேட்டேன்" என்று பதிலளித்தான். யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக் கண்டுபிடித்தார்.

தொலையில் அவர் வருதைக் கண்ட அவர்கள் தங்களுக்கு அருகில் அவர் வருமுன் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.

அவர் சகோதரர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, "இதோ, வருகிறான் கனவின் மன்னன்!

நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டதென்று சொல்வோம். அப்பொழுது அவனடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்" என்றனர்.

ரூபன் இவற்றைக் கேட்டு, அவரை அவர்கள் கையிலிருந்து தப்புவிக்கும் எண்ணத்தில் அவர்களை நோக்கி, "நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்" என்றார்.

ரூபன் அவர்கள் நோக்கி, "அவன் இரத்தத்தை சிந்தாதீர்கள். அவனைக் பாலை நிலத்திலுள்ள இந்த ஆழ்குழிக்குள் தள்ளவிடுங்கள். அவன் மீது கை வைக்காதீர்கள்" என்று சொன்னார். ஏனெனில் அவர் அவர்கள் கையிலிருந்து அவரைத் தப்புவித்துத் தம் தந்தையிடம் சேர்ப்பிக்கும் நோக்கம் கொண்டிருந்தார்.

யோசேப்பு தம் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடன் அவர் அணிந்திருந்த அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியை உரிந்துவிட்டு,

அவரை ஆழ்குழியில் தூக்கிப் போட்டனர். அது தண்ணீரில்லாத வெறும் குழி.

பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் வெள்ளைப் போளத்தையும், அவர்கள் ஒட்டகங்களின் மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்ற கொண்டிருந்தனர்.

அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி, "நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்?

வாருங்கள்:" இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம். அவன் மேல் நாம் கைவைக்க வேண்டாம். ஏனெனில் அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாய் இருக்கிறான்" என்று சொல்ல, அவர்கள் சம்மதித்தனர்.

ஆகையால் மிதியான் நாட்டு வணிகர் அவர்களைக் கடந்து செல்கையில், குழியிலிருந்து யோசேப்பை வெளியே தூக்கி அந்த இஸ்மயேலரிடம் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றனர். அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென்றனர்.

பின்னர் ரூபன் ஆழ்குழி அருகில் திரும்ப வந்தார். இதோ! யோசேப்பு அங்கே இல்லை. உடனே அவர், தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு,

தம் சகோதரரிடம் திரும்பி வந்து, "பையனைக் காணோமே! நான் எங்குச்“ சென்று தேடுவேன்" என்றார்.

அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்துக் கொண்டனர். ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அடித்து அதன் இரத்தத்தில் அந்த அங்கியைத் தோய்த்தனர்.

அழகு வேலைப்பாடு நிறைந்த அந்த அங்கியைத் தம் தந்தையிடம் எடுத்துச் சென்று, "இதை வழியில் கண்டோம். இது உங்கள் மகனது அங்கியா என்று பாருங்கள்" என்றனர்.

தந்தை அதை அடையாளம் கண்டு, "இது என் மகனது அங்கியே! ஏதோ ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டது! ஜயோ, யோசேப்பு ஒரு கொடிய விலங்கால் பீறிக்கிழிக்கப்பட்டுப் போனானே!" என்று நினைத்து,

தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, இடுப்பில் சாக்கு உடையைக் கட்டிக் கொண்டு பல நாளகளாய்த் தம் மகனுக்காகத் துக்கம் கொண்டாடினர்.

அவர் புதல்வர், புதல்வியர் அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்ல வந்தனர். அவரோ எந்த ஆறதலான வார்த்தைக்கும் செவிகொடாமல், "நான் துயருற்றுப் பாதாளத்தில் இறங்கி என் மகனிடம் செல்வேன்" என்று அவருக்காக அழுது புலம்பினார்.

இதற்கிடையில் மிதியானியர் எகிப்தை அடைந்து பார்வோனின் அதிகாரிகளுள் ஒருவனும் மெய்க்காப்பாளர் தலைவனுமான போத்திபாரிடம் யோசேப்பை விற்றனர்.

அதிகாரம் 38.

அக்காலத்தில் யூதா தம் சகோதரர்களை விட்டுப் பிரிந்து ஈரா என்ற பெயருடைய அதுல்லாமியனிடம் சென்றார்.

அங்கே சூவா என்ற கானானியன் ஒருவனின் மகளைக் கண்டு, அவளை மணமுடித்து, அவளோடு கூடி வாழ்ந்தார்.

அவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஏர் என்று பெயரிட்டாள்.

அவள் மீண்டும் கருவுற்று, ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டான்.

கருவளம் மிகுதியாயிருந்ததால் அவள் மேலும் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சேலா என்று பெயரிட்டாள். அவனைப் பெற்றெடுத்தபோது அவள் கெசீபில் இருந்தாள்.

யூதா தம் தலை மகன் ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் ஒரு பெண்ணை மணமுடித்தார்.

யூதாவின் தலைமகன் ஏர் ஆண்டவர் முன்னிலையில் கொடியவனாய் இருந்ததால், ஆண்டவர் அவனை சாகடித்தார்.

அப்போது யூதா தம் மகன் ஓனானை நோக்கி, "நீ உன் சகோதரன் மனைவியோடு கூடி வாழ். சுகோதரனுக்குரிய கடமையைச் செய்து, உன் கசோதரனுக்கு வழிமரபு தோன்றச் செய்" என்றார்.

அந்த வழிமரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து, ஓனான் அவளோடு உடலுறவு கொள்கையில், தன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றாதவாறு தன் விந்தைத் தரையில் சிந்திவந்தான்.

அவன் செய்தது தம் பார்வையில் தீயதாய் இருந்ததால், ஆண்டவர் அவனையும் சாகடித்தார்.

ஆதலால் யூதா தம் மருமகள் தாமாரை நோக்கி, "என் மகன் சேலா பெரியவனாகும் வரை உன் தந்தை வீட்டில் விதவையாய்த் தங்கியிரு" என்றார். ஏனெனில் அவனும் தன் சகோதரரைப் போல் சாவானோ என்று அஞ்சினர். தாமாரும் அவ்விதமே தம் தந்தை வீட்டிற்குச் சென்று அங்குத் தங்கியிருந்தார்.

பல நாள்களுக்குப்பின், சூவாவின் மகளான யூதாவின் மனைவி இறந்தாள். யூதா அவளுக்காகத் துக்கம் கழித்தபின், தம் மந்தைக்கு உரோமம் கத்தரிப்பவர்கள் இருந்த திம்னாவுக்குத் தம் அதுல்லாமிய நண்பன் ஈராவுடன் சென்றார்.

அப்போது "உன் மாமனார் தம் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார்" என்று தாமாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது.

சேலா பெரியவனாகியும் தம்மை அவனுக்கு மனைவியாகக் கொடுக்கவில்லை என்று அவர் கண்டு தமது கைம்மைக் கோலத்தைக் களைந்துவிட்டு, முக்காடிட்டுத் தம்மை மறைத்துக்கொண்டு திம்னாவுக்குச் செல்லும் பாதையில் இருந்த ஏனயிம் நகர்வாயிலில் அமர்ந்துகொண்டார்.

யூதா அவரைக் கண்டபோது, அவர் முகம் மூடியிருந்ததால் அவர் ஒரு விலைமாது என்று நினைத்தார்.

அவர் திரும்பிப் பாதையோரம் அவரிடம் சென்று, அவர் தம் மருமகளென்று அறியாமல் தம்முடன் உடலுறவு கொள்ளுமாறு அழைத்தார். அதற்கு அவர், "என்னோடு உடலுறவு கொள்வதற்கு என்ன தருவீர்?" என்று கேட்டார்.

அவர், "என் மந்தையிலிருந்து உனக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாய் அனுப்புகிறேன்" என்றார். அதற்கு அவர், "நீர் அதை அனுப்புமட்டும் எனக்கு ஓர் அடைமானம் தருவீரா?"ஙு என்று கேட்டார்.

"அடைமானமாக உனக்கு நான் என்ன தர வேண்டும்?" என்று அவர் கேட்க, அவர் உம்முடைய முத்திரை மோதிரத்தையும் இடைவாரையும் கைக்கோலையும் தரவேண்டும் என்றார். அவருக்கு அவற்றைக் கொடுத்த பின் அவருடன் உடலுறவு கொண்டார். அவரும் கருவுற்றார்.

பின்பு, அவர் எழுந்துபோய், தம் முக்காட்டை எடுத்துவிட்டு விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டார்.

அவரிடம் தாம் கொடுத்திருந்த அடைமானத்தைத் திரும்பப் பெறுமாறு, யூதா தம் அதுல்லாமிய நண்பன் மூலம் ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அனுப்பினார். அவனோ அவரைக் காணவில்லை.

அங்கிருந்த ஆள்களை நோக்கி, ஏனயிம் அருகே வழியில் இருந்த விலைமாது எங்கே? என்று கேட்க, அவர்கள், இங்கே விலைமாது எவளுமில்லை என்றனர்.

அவன் யூதாவிடம் திரும்பி வந்து, "நான் அவளைக் காணவில்லை. மேலும் அங்கிருந்த ஆள்கள், இங்கு விலைமாது எவளுமில்லை என்றனர்" என்று சொன்னான்.

யூதா, அவளே வைத்துக்கொள்ளட்டும்: இல்லையேல் நம்மைப் பார்த்துப் பிறர் சிரிப்பர். நானும் இந்த ஆட்டுக்கிடாயை அவளுக்கு அனுப்பி வைத்தேன். உன்னாலும், அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.

மூன்று மாதம் சென்றபின்னர், "உம் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள். வேசித்தனத்தினால் கருவுற்றிருக்கிறாள்" என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அவர், அவளை இழுத்துக் கொண்டு வாருங்கள்: அவள் எரிக்கப்பட வேண்டும் என்றார்.

அவ்வாறே அவரை இழுத்துக்கொண்டு வருகையில், அவர் தம் மானமாருக்கு, "இந்தப் பொருள்கள் எவனுடையவையோ அவனாலேயே நான் கருவுற்றிருக்கிறேன். இந்த முத்திரை மோதிரமும் இடைவாரும் கைக்கோலும் யாருடையவை என்று பாரும்" என்று சொல்லியனுப்பினர்.

யூதா அவற்றைப் பார்த்தறிந்து, "அவள் என்னைக் காட்டிலும் நேர்மையானவள். அவளை நான் என் மகன் சேலாவுக்கு மணமுடிக்காமல் போனேனே!" என்றார். ஆயினும், அதற்குப்பின் அவர் அவரோடு உடலுறவு கொள்ளவில்லை.

தாமாருக்குப் பேறுகாலம் வந்தபோது, அவர் வயிற்றில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன.

அவர் பிள்ளை பெறுகிற வேளையில் ஒரு பிள்ளை கையை வெளியே நீட்டியது. மருத்துவப்பெண் அதன் மணிக்கட்டில் கருஞ்சிவப்பு நூலைக் கட்டி இதுவே முதலில் வந்தது என்றாள்.

ஆனால், அது தன் கையைத் திரும்ப உள்ளே இழுத்துக்கொண்டபின், மற்ற பிள்ளை வெளிப்பட்டது. அப்பொழுது அவள் நீ கருப்பையைக் கிழித்துக் கொண்டு வந்தவன் அல்லவா! என்று சொன்னாள். எனவே அவனுக்குப் பெரேட்சு என்று பெயரிடப்பட்டது.

பின் கருஞ்சிவப்பு நூல் கையில் கட்டப்பெற்ற அவன் சகோதரன் வெளிப்பட அவனுக்கு செராகு என்று பெயரிடப்பட்டது.

அதிகாரம் 39.

யோசேப்பு எகிப்து நாட்டிற்கு கொண்டு போகப்பட்டபோது, பார்வோனின் மெய்க்காப்பாளர் தலைவனும் படைத்தலைவனுமான போத்திபார் என்ற எகிப்தியன் அவரை, அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மயேலரிடமிருந்து விலைக்கு வாங்கினான்.

ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். எனவே, அவர் சிறப்புற்றவராகத் தம் எகிப்தியத் தலைவனின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.

ஆண்டவர் அவரோடு இருந்ததையும் அவர் தொட்ட காரியமனைத்தையும் ஆண்டவர் துலங்கச் செய்ததையும் அவர் தலைவன் கண்டான்.

எனவே அவனுடைய தயை யோசேப்புக்குக் கிடைத்தது. அவன் அவரைத் தன் சிறப்புப் பணியாளராகவும் வீட்டின் மேலாளராகவும் நியமித்து, தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில் ஒப்படைத்தான்.

இவ்வாறு தன் வீட்டையும் தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில் விட்டதிலிருந்து, எகிப்தியனின் வீட்டுக்கு யோசேப்பின் பொருட்டு ஆண்டவர் ஆசி வழங்கினார். வீட்டிலும் வயல்வெளியிலும் அவனுக்கிருந்த அனைத்தின்மீதும் ஆண்டவர் ஆசி பொழிந்தார்.

இவ்வாறு யோசேப்பின் பொறுப்பில் தனக்கிருந்த அனைத்தையும் ஒப்படைத்த பின், தான் உண்ணும் உணவைத் தவிர வேறெதைப் பற்றியும் அவன் விசாரிக்கவில்லை. யோசேப்பு நல்ல உடற்கட்டும் அழகிய தோற்றமும் கொண்டிருந்தார்.

சில நாள்கள் சென்றபின், யோசேப்பின் மீது கண்வைத்திருந்த அந்தத் தலைவனின் மனைவி அவரிடம், என்னோடு படு என்றாள்.

அவர் அதற்கு இணங்க மறுத்து, தம் தலைவரின் மனைவியை நோக்கி, "என் தலைவர் எல்லாவற்றையும் என் பொறுப்பில் ஒப்படைத்து விட்டார். வீட்டிலுள்ள எதைப்பற்றியும் அவர் விசாரிப்பதுகூட இல்லை.

இந்த வீட்டில் என்னைவிட அதிகாரம் பெற்றவர் ஒருவருமில்லை. நீங்கள் அவருடைய மனைவியாயிருப்பதால், உங்களைத் தவிர வேறெதையும் அவர் என்னிடம் ஒப்படைக்காமல் இருக்கவில்லை. இந்த மாபெரும் தீச்செயலைச் செய்து, கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யலாமா?" என்றார்.

அவள் நாள்தோறும் வற்புறுத்தியபோதிலும், யோசேப்பு அவளோடு படுக்கவோ இருக்கவோ இணங்கவில்லை.

இவ்வாறிருக்க, ஒருநாள் யோசேப்பு தம் வேலையை முன்னிட்டு வீட்டுக்குள் சென்றார். உள்ளே வீட்டைச் சார்ந்தவர் வேறு எவரும் இல்லை.

அவள் அவரது மேலாடையைப் பற்றி இழுத்து, என்னோடு படு என்றாள். உடனே அவர் அவள் கையில் தம் மேலாடையை விட்டுவிட்டு வெளியே தப்பியோடினார்.

அவர் தம் மேலாடையை அவள் கையில் விட்டுவிட்டு வெளியே ஓடியதைக் கண்டு,

அவள் தன் வீட்டு ஆள்களைக் கூப்பிட்டு: "என் கணவர் நம்மை அவமானப்படுத்துவதற்காகவா இந்த எபிரேயனை வீட்டிற்குக் கொண்டுவந்தார்? இதோ இவன் என்னோடு படுப்பதற்காக என்னிடம் வந்தான். உடனே நான் பெரும் கூச்சலிட்டுக் கத்தினேன்.

ஆனால் நான் கூச்சலிட்டதைக் கண்டு அவன் தன் மேலாடையை என்னருகே போட்டுவிட்டு வெளியே ஓடிப்போய் விட்டான்" என்றாள்.

மேலும் அவள், அவருடைய மேலாடையைத் தன் கணவன் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை வைத்திருந்துஅவனிடம்,

"நீர் நம்மிடம் அழைத்து வந்துள்ள எபிரேய அடிமை என்னோடு சரசம் பண்ணும்படி என்னிடம் வந்தான்.

அப்போது நான் கூச்சலிட்டுக் கத்தியதும், அவன் தன் மேலாடையை என்னருகே போட்டுவிட்டு வெளியே ஓடிப்போய்விட்டான்" என்று கதை கட்டினாள்.

உம் அடிமை எனக்கு இப்படிச் செய்துவிட்டான் என்று தன் மனைவி சொல்லக் கேட்ட அவர் தலைவன், கடுஞ்சினம் கொண்டான்.

யோசேப்பின் தலைவன், அரசக் கைதிகள் காவலில் வைக்கப்பட்டிருந்த அதே சிறைச்சாலைக்கு அவரை இழுத்துச் சென்று அடைத்து வைத்தான்.

ஆண்டவர் யோசேப்புடன் இருந்து, அவர்மீது பேரன்பு காட்டி, சிறை மேலாளன் பார்வையில் அவருக்குத் தயை கிடைக்கும்படி செய்தார்.

எனவே சிறைமேலாளன் சிறையிலிருந்த கைதிகள் அனைவரையும், அங்குச் செய்யப்பட்ட வேலைகள் அனைத்தையும், யோசேப்பின் பொறுப்பில் ஒப்படைத்தான்.

அவர் பொறுப்பில் விடப்பட்ட எதைப்பற்றியும் சிறைமேலாளன் விசாரிக்கவில்லை. ஏனெனில், ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். அவர் செய்த யாவற்றிலும் வெற்றி அளித்தார்.

அதிகாரம் 40.

இவை நிகழ்ந்தபின், எகிப்து மன்னனுக்கு மது பரிமாறுவோனும், அப்பம் தயாரிப்போனும் தங்கள் தலைவனாகிய எகிப்திய மன்னனுக்கு எதிராகக் குற்றம் செய்தனர்.

பார்வோன் தன் மது பரிமாறுவோரின் தலைவனும் அப்பம் தயாரிப்போரின் தலைவனும் ஆகிய இரு அதிகாரிகள் மீதும் கடும் கோபம் கொண்டு,

காவலர் தலைவன் வீட்டிலிருந்த சிறைச்சாலைகளில் அவர்களை அடைத்து வைத்தான். யோசேப்பு அடைபட்டிருந்த இடமும் அதுவே.

காவலர் தலைவனோ, அவர்களை யோசேப்புடன் சிறையிருக்குமாறு குறித்தான். யோசேப்பும் அவர்களைக் கண்காணித்து வந்தார். அவர்கள் பல நாள்கள் சிறையில் இருந்தனர்.

எகிப்திய மன்னனால் சிறைப்பட்டிருந்த மது பரிமாறுவோன், அப்பம் தயாரிப்போன் இருவரும் ஒரே இரவில் கனவு கண்டனர். ஒவ்வொரு கனவும் வெவ்வேறு பொருள் கொண்டிருந்தது.

காலையில் யோசேப்பு அவர்களிடம் வந்தபோது அவர்கள் கவலையாய் இருக்கக் கண்டார்.

தம்முடன் தம் தலைவன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பார்வோனின் அதிகாரிகளை நோக்கி, அவர், இன்று உங்கள் முகம் இவ்வளவு வாடியிருப்பதேன்? என்று வினவினார்.

அவர்கள், "நாங்கள் இருவரும் கனவு கண்டோம்: அதை எங்களுக்கு விளக்கிச் சொல்வார் யாருமில்லை" என்று பதில் கூறினர். யோசேப்பு அவர்களை நோக்கி, கனவுக்குப் பொருள் சொல்வது கடவுளுக்கு உரியதல்லவா? என்னிடம் விவரமாகச் சொல்லுங்கள் என்றார்.

அப்போது மதுபரிமாறுவோர் தலைவன் தன் கனவைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்: என் கனவில் ஒரு திராட்சைக் கொடி எனக்கு முன் தோன்றியது.

அந்தத் திராட்சைக் கொடியில் மூன்று கிளைகள் இருந்தன. அவை அரும்பிப் பூத்து, கொத்துக் கொத்தாய்ப் பழுக்கக் கண்டேன்.

கையில் பார்வோனின் கிண்ணம் இருந்தது. நான் பழங்களைப் பறித்து, பார்வோனின் கிண்ணத்தில் பிழிந்து, அந்தக் கிண்ணத்தைப் பார்வோனின் கையில் கொடுத்தேன் என்றான்.

யோசேப்பு அவனை நோக்கி, கனவின் பொருள் இதுவே: மூன்று கிளைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்.

இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உன்னைத் தலைநிமிரச் செய்து உன்னை மீண்டும் முன்னைய பதவியில் அமர்த்துவான். முன்பு நீ பார்வோனின் மதுபரிமாறுவோனாய் இருந்த காலத்தில் செய்ததுபோல அவன் கிண்ணத்தை அவன் கையில் கொடுப்பாய்.

உனக்கு வாழ்வு நலமாய் அமைந்தபின், என்னை மறவாமல் எனக்குத் தயைகாட்ட வேண்டுகிறேன். பார்வோனிடம் சொல்லி என்னை இச்சிறையிலிருந்து விடுவி.

ஏனெனில், நான் எபிரேயரின் நாட்டிலிருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டேன். என்னைக் காவற்கிடங்கில் தள்ளிவிடுமளவிற்கு நான் யாதொன்றும் செய்யவில்லை என்றார்.

யோசேப்பு இவ்வாறு தகுந்த விளக்கம் அளித்ததைக் கண்டு, அப்பம் தயாரிப்போரின் தலைவன் அவரிடம் நானும் ஒரு கனவு கண்டேன். இதோ மூன்று அப்பக் கூடைகள் என் தலையில் இருந்தன.

மேற்கூடையில் பார்வோனுக்காகச் சுட்ட பலவகை அப்பங்கள் இருந்தன. பறவைகள் வந்து என் தலை மேலிருந்த கூடையிலிருந்து அவற்றைத் தின்றுவிட்டன என்றான்.

அதற்கு யோசேப்பு, கனவின் பொருள் இதுவே: மூன்று கூடைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்.

இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உனது தலையை வெட்டி உன்னைக் கழுமரத்தில் ஏற்றுவான். பறவைகள் வந்து உன் சதையைத் தின்னும் என்றார்.

மூன்றாம் நாள், பார்வோனின் பிறந்த நாள் விழா. அன்று தன் அலுவலர் அனைவருக்கும் அவன் விருந்து அளித்தான். அந்த அலுவலர் முன்னிலையில் மது பரிமாறுவோரின் தலைவன், அப்பம் தயாரிப்போரின் தலைவன் ஆகிய இருவரின் தலைகளையும் நிமிர்த்தினான்.

மது பரிமாறுவோரின் தலைவனை முன்னைய பதவிக்கு உய+த்த, முன்புபோல் அவன் பார்வோனின் கையில் கிண்ணத்தைக் கொடுக்கலானான்.

ஆனால், அப்பம் தயாரிப்போரின் தலைவனைப் பார்வோன் கழுமரத்தில் ஏற்றினான். யோசேப்பு அவர்களுக்கு விளக்கிச் சொன்னபடியே இவ்வாறு நடந்தது.

ஆனால் மதுபரிமாறுவோரின் தலைவன் யோசேப்பைப் பற்றிய நினைவேயில்லாமல் அவரை மறந்து விட்டான்.

அதிகாரம் 41.

இரண்டு முழு ஆண்டுகள் கழிந்தபின், பார்வோன் ஒரு கனவு கண்டான். அக்கனவில் அவன் நைல் நதிக் கரையில் நின்று கொண்டிருந்தான்.

அப்பொழுது அழகிய கொழுத்த ஏழு பசுக்கள் நதியிலிருந்து கரைக்கு வந்து கோரைப்புற்களிடையே மேய்ந்து கொண்டிருந்தன.

அவற்றைத் தொடர்ந்து, நலிந்து மெலிந்த வேறு ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளி வந்து கரையில் இருந்த மற்ற பசுக்களோடு நின்று கொண்டன.

நலிந்து மெலிந்த பசுக்கள் அழகிய, கொழுத்த ஏழு பசுக்களை விழுங்கிவிட்டன. அதன்பின் பார்வோன் துயில் கலைந்தான்.

மீண்டும் அவன் கண்ணயர்ந்தபோது இரண்டாவது கனவு கண்டான். அக்கனவில் செழுமையான பொன் நிறமான ஏழு கதிர்கள் ஒரே தாளில் காய்த்திருந்தன.

அதன் பின் கீழைக் காற்றினால் தீய்ந்துபோன கதிர்கள் தோன்றின.

அந்தப் பதரான கதிர்கள் ஏழும் செழுமையான, முற்றிய கதிர்களை விழுங்கிவிட்டன. பார்வோன் கண்விழித்து, தான் கண்டது கனவு என்று உணர்ந்தான்.

காலையில் அவன் மனம் கலக்கமுற, எகிப்து நாட்டிலுள்ள எல்லா மந்திரவாதிகளையும் ஞானிகளையும் வரவழைத்துத் தன் கனவுகளை எடுத்துரைத்தான். ஆனால் அவற்றை அவனுக்கு விளக்கிக் கூறுவார் எவருமில்லை.

அப்போது மதுபரிமாறுவோரின் தலைவன் பார்வோனை நோக்கி, "என் பிழை இன்றுதான் என் நினைவிற்கு வருகிறது.

பார்வோனாகிய தாங்கள் முன்னொரு சமயம் உம் ஊழியர்மீது கடுஞ்சினமுற்று அடியேனையும் அப்பம் தயாரிப்போரின் தலைவனையும் காவலர் தலைவனின் வீட்டில் சிறைவைத்தீர்.

அச்சமயம் ஒரே இரவில் வெவ்வேறு பொருள் கொண்ட கனவுகளை நானும் அவனும் கண்டோம்.

அங்கே காவலர் தலைவரின் ஊழியனாகிய எபிரேய இளைஞன் ஒருவன் எங்களோடு இருந்தான். நாங்கள் அவனிடம் எங்கள் கனவுகளை விவரித்துச் சொன்னோம். அவன் எங்கள் கனவுகளுக்கு, அவனவன் கனவுக்கேற்ப விளக்கம் கூறினான்.

அவன் எங்களுக்கு விளக்கிக் கூறியபடியே யாவும் நடந்தன. முன்னைய பதவி எனக்கு மீண்டும் அளிக்கப்பட்டது: அவனோ கழுமரத்தில் ஏற்றப்பட்டான்" என்றான்.

பார்வோன் ஆளனுப்பி யோசேப்பை அழைத்துவரச் செய்தான். அவர்களும் அவரைக் காவற்கிடங்கிலிருந்து விரைவாக வெளிக் கொணர்ந்தனர். அவர் முடி திருத்திக் கொண்டு, புத்தாடை அணிந்து பார்வோன் முன்னிலைக்கு வந்தார்.

பார்வோன் யோசேப்பை நோக்கி, நான் கனவு கண்டேன். ஆனால் அதற்கு விளக்கம் சொல்வார் யாருமில்லை. கனவைக் கேட்டால் நீ தகுந்த விளக்கம் கூறுவாய் என்று உன்னைப்பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டேன் என்றான்.

யோசேப்பு பார்வோனுக்கு மறுமொழியாக, நானல்ல, கடவுளே பார்வோனுக்கு நலமிகு மறுமொழி வழங்குவார் என்றார்.

அப்பொழுது பார்வோன் யோசேப்பிடம் சொன்னதாவது: என் கனவில் நைல் நதிக்கரையில் நான் நின்று கொண்டிருந்தேன்.

அப்பொழுது கொழுத்த, ஏழு அழகிய பசுக்கள் நதியிலிருந்து வெளியேறி வந்து, கோரைப் புற்களிடையே மேய்ந்துகொண்டிருந்தன.

அவற்றிற்குப்பின், வற்றிய, மிகவும் நலிந்து மெலிந்த வேறு ஏழு பசுக்கள் கரையேறி வந்தன. அத்தகைய அருவருப்பான பசுக்களை எகிப்து நாட்டில் நான் எங்கும் எப்போதும் கண்டதில்லை.

நலிந்து மெலிந்த இந்தப் பசுக்கள் முதலில் வந்த கொழுத்த ஏழு பசுக்களை விழுங்கிவிட்டன.

ஆனால் இவை அவற்றை விழுங்கிய பின்னும் விழுங்கியனவாகவே தெரியவில்லை: முன்புபோலவே மெலிந்து தோன்றின. அதன்பின் நான் துயில் கலைந்தேன்.

மீண்டும் ஒரு கனவு கண்டேன். அதில் செழுமையான, முற்றிய ஏழு கதிர்கள் ஒரே தாளில் தோன்றக் கண்டேன்.

அவற்றிற்குப்பின் தீய்ந்த, பதராகிக் கீழைக் காற்றினால் கருகிப்போன வேறு ஏழு கதிர்கள் வெளிவந்தன.

இந்தப் பதரான ஏழு கதிர்கள் அழகிய ஏழு கதிர்களை விழுங்கிவிட்டன. இதைப்பற்றிய மந்திரவாதிகளிடம் சொன்னேன். ஆனால், எவராலும் எனக்குப் பொருள்கூற முடியவில்லை."

அதற்கு யோசேப்பு பார்வோனை நோக்கி, "பார்வோனாகிய தாங்கள் கண்ட கனவுகள் குறிப்பன ஒன்றே. கடவுள் தாம் செய்யவிருப்பதைப் பார்வோனுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

ஏழு நல்ல பசுக்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். ஏழு நல்ல கதிர்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். ஆக, கனவுகள் குறிப்பன ஒன்றே.

அவற்றிற்குப்பின் வந்த மெலிந்த, அருவருப்பான ஏழு பசுக்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். பதராகி வெப்பக் காற்றினால் தீய்ந்துபோன ஏழு கதிர்கள் பஞ்சம் நிறைந்த ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்.

நான் பார்வோனாகிய தங்களுக்குச் சொன்னது போலவே, கடவுள் தாம் செய்ய இருப்பதைப் பார்வோனாகிய தங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

எகிப்து நாடெங்கும் மிக வளமான ஏடு ஆண்டுகள் வரவிருக்கின்றன.

அதன்பின் ஏழாண்டுகள் பஞ்சம் நிலவும். அப்பொழுது எகிப்து நாட்டின் அனைத்து வளமும் மறந்து போகுமளவிற்கு அந்நாட்டைப் பஞ்சம் பாழாக்கும்.

நாட்டின் வளமை நினைவுக்கே வராது: வரவிருக்கும் பஞ்சம் அந்த அளவிற்குக் கடுமையாய் இருக்கும்.

இது கடவுளால் உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதற்கும் அவரால் விரைவில் நிறைவேற்றப்படும் என்பதற்கும் அறிகுறியாகவே பார்வோனுக்குக் கனவு இருமுறை வந்தது.

எனவே, பார்வோன் உடனடியாக மதிநுட்பமும் ஞானமும் செறிந்த ஒருவனைக் கண்டுபிடித்து எகிப்து நாட்டின் அதிகாரியாக அமர்த்தவேண்டும்.

மேலும், ஏழு வளமான ஆண்டுகளில் எகிப்து நாட்டின் விளைச்சலில் ஜந்திலொரு பகுதியைக் கொள்முதல் செய்யுமாறு மேற்பார்வையாளர்களையும் பார்வோன் தொடர்ந்து நியமிக்கட்டும்.

வரவிருக்கும் வளமான இந்த ஆண்டுகளிலேயே, தானியம் முழுவதையும் பார்வோனின் அதிகாரத்தில் அவர்கள் கொள்முதல் செய்து, பின்னர் உண்ணக் கொடுப்பதற்கென நகர்களில் சேமித்து வைக்கட்டும்.

எகிப்து நாட்டில் பஞ்சம் வரவிருக்கும் ஏழாண்டுகளில் பயன்படுத்துமாறு தானியம் இவ்வாறு சேமித்து வைக்கப்படட்டும். நாடும் பஞ்சத்தினால் அழியாதிருக்கும்" என்றார்.

அவர் சொன்னது பார்வோனுக்கும் அவன் அலுவலர் அனைவருக்கும் நலமெனத் தோன்றியது.

பார்வோன்தன் அலுவலர்களை நோக்கி, இறையாவி பெற்றுள்ள இவரைப் போல் வேறெவரையும் நாம் காணமுடியுமோ? என்றான்.

பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார். உம்மைவிட மதி நுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமிலர்.

எனவே, நீரே என் அரண்மனையின் பொறுப்பை ஏற்பீர். உம் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடிபணியட்டும். அரியணையில் மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன் என்றான்.

பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, இதோ! எகிப்து நாடு முழுவதற்கும் உம்மை அதிகாரியாக நியமிக்கிறேன் என்று சொன்னான்.

உடனே பார்வோன் தன்கையில் அணிந்திருந்த அரச கணையாழியைக் கழற்றி அதை யோசேப்பு கையில் அணிவித்து, அவருக்குப் பட்டாடை உடுத்தி, பொன் கழுத்தணியை அவருக்கு அணிவித்தான்.

மேலும் அவரைத் தன் இரண்டாம் தேரில் வலம்வரச் செய்து இவருக்கு முழந்தாளிடுங்கள் என்று ஏவலர் கட்டியம் கூறச் செய்தான்: இவ்வாறு எகிப்து நாடு முழுவதற்கும் அவரை அதிகாரியாக்கினான்.

மேலும் அவன் யோசேப்பை நோக்கி, பார்வோனாகிய நான் கூறுகிறேன். உமது ஒப்புதலின்றி எகிப்து நாடெங்கும் எவனும் கையையோ காலையோ உயர்த்தக்கூடாது என்றான்.

பின் பார்வோன் யோசேப்பிற்கு சாபனாத்துபனேகா என்று புதிய பெயர் சூட்டி, ஓன் நகர் அர்ச்சகர் போற்றிபெராவின் மகளான ஆசினத்தை அவருக்கு மணமுடித்து வைத்தான். எகிப்து நாடு முழுவதற்கும் யோசேப்பு ஆளுநர் ஆனார்.

எகிப்தின் மன்னனாகிய பார்வோனிடம் பணியேற்றபொழுது, யோசேப்பிற்கு வயது முப்பது. அவர் பார்வோனிடம் விடைபெற்று எகிப்து நாடுமுழுவதும் சுற்றுப் பயணம் செய்தார்.

வளமிக்க ஏழாண்டுகளில் நிலம் மிகுதியான விளைச்சல் தந்தது.

அந்த ஏழாண்டுகளில் எகிப்து நாட்டில் விளைந்த எல்லா உணவுப் பொருள்களையும் நகர்களில் அவர் சேகரித்து வைத்தார். ஒவ்வொரு நகரிலும் அதைச் சுற்றியுள்ள வயல்களில் விளைந்த உணவுப் பொருள்களைச் சேமித்து வைத்தார்.

கடற்கரை மணல் அளவுக்கு மிகுதியான தானியத்தை யோசேப்பு கொணர்ந்து குவித்தார். கணிக்க இயலாத அளவிற்கு உணவுப் பொருள்கள் சேர்ந்தமையால், கணிப்பதை நிறுத்தினார்.

பஞ்சத்தின் ஆண்டு வருமுன்னே யோசேப்பிற்கு, ஓன் நகர் அர்ச்சகர் போற்றிபெராவின் மகள் ஆசினத்து, மைந்தர் இருவரைப் பெற்றெடுத்தாள்.

யோசேப்பு எல்லாத் துன்பங்களையும் என் தந்தையின் வீட்டையும் கடவுள் மறக்கச் செய்தார் என்று சொல்லித் தலைமகனுக்கு மனாசே என்று பெயரிட்டார்.

பின் நான் துன்புற்ற இந்த நாட்டில் கடவுள் என்னைப் பலுகச் செய்தார் என்று சொல்லி, அடுத்தவனுக்கு எப்ராயிம் என்று பெயரிட்டார்.

எகிப்து நாட்டின் வளமான ஏழாண்டுகள் முடிவுற்றன.

யோசேப்பு முன்னறிவித்தபடி, ஏழாண்டுப் பஞ்சம் தொடங்கியது. எல்லா நாடுகளிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆனால் எகிப்து நாடு முழுவதற்கும் உணவு கிடைத்தது.

எகிப்து நாடு முழுவதும் பஞ்சம் வந்தபோது, மக்கள் பார்வோனிடம் வந்து உணவுக்காக ஓலமிட்டனர். பார்வோன் எகிப்தியர் அனைவரையும் நோக்கி, "யோசேப்பிடம் செல்லுங்கள்: அவர் சொல்வதைச் செய்யுங்கள்" என்று கூறினான்.

நாடுமுழுவதும் பஞ்சம் பரவிய பொழுது, யோசேப்பு களஞ்சியங்களைத் திறந்து, எகிப்தியர்களுக்குத் தானியங்களை விற்குமாறு செய்தார். ஏனெனில் எகிப்து நாட்டில் பஞ்சம் கடுமையாய் இருந்தது.

உலகமெங்கும் கொடும் பஞ்சம் நிலவியது. அனைத்து நாட்டு மக்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள்.

அதிகாரம் 42.

எகிப்தில் தானியம் கிடைப்பதைப் பற்றி யாக்கோபு கேள்விப்பட்டு, தம் புதல்வர்களை நோக்கி, "நீங்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொண்டு இருப்பது ஏன்?

இதோ எகிப்தில் தானியம் கிடைக்கிறது என்று கேள்விப்படுகிறேன். நாம் பஞ்சத்தால் சாகாமல் உயிரோடிருக்குமாறு, நீங்கள் அங்குச் சென்று நமக்கெனத் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்" என்றார்.

எனவே யோசேப்பின் சகோதரர் பதின்மரும் தானியம் வாங்கும் பொருட்டு எகிப்திற்குப் புறப்பட்டுப் போனார்கள்.

ஆனால் யோசேப்பின் சகோதரனான பென்யமினை அவனுடைய சகோதரர்களோடு யாக்கோபு அனுப்பவில்லை. ஏனெனில், அவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிடக்கூடும் என்று எண்ணினார்.

கானான் நாட்டிலும் பஞ்சம் நிலவியதால், அங்கிருந்து தானியம் வாங்கச்சென்ற மற்றவர்களோடு இஸ்ரயேலின் புதல்வர்களும் சேர்ந்து சென்றனர்.

அப்பொழுது, யோசேப்பு நாட்டுக்கு ஆளுநராய் இருந்து மக்கள் அனைவருக்கும் தானியம் விற்கும் அதிகாரம் பெற்றிருந்தார். எனவே அவருடைய சகோதரர்கள் வந்து, தரைமட்டும் தாழ்ந்து யோசேப்பை வணங்கினார்கள்.

யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டார். ஆயினும் அவர்களை அறியாதவர்போல் கடுமையாக அவர்களிடம் பேசி, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று வினவினார். அவர்களோ, நாங்கள் கானான் நாட்டிலிருந்து உணவுப் பொருள்கள் வாங்க வந்திருக்கிறோம் என்று பதில் கூறினார்கள்.

யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்ட போதிலும், அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

அப்பொழுது தாம் அவர்களைப் பற்றிக் கண்ட கனவுகளை நினைவில் கொண்டு, அவர்களை நோக்கி, "நீங்கள் ஒற்றர்கள்: பாதுகாப்பாற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்திருக்கிறீ¡கள்" என்றார்.

அதற்கு அவர்கள், "எம் தலைவரே! அப்படி அல்ல. உம் ஊழியர்களாகிய நாங்கள் உணவுப் பொருள்கள் வாங்கவே வந்துள்ளோம்.

நாங்களெல்லாரும் ஒரே தந்தையின் புதல்வர்கள். நாங்கள் நேர்மையானவர்கள்: ஒற்றர்கள் அல்ல" என்றனர்.

அவர்களிடம் அவர், "இல்லை, இல்லை. பாதுகாப்பற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்தவர்களே நீங்கள்" என்று சொன்னார்.

அவர்கள் மறுமொழியாக "உம் அடியார்களாகிய நாங்கள் கானான் நாட்டில் வாழும் ஒரே தந்தையின் பன்னிரு புதல்வர்கள். இப்பொழுது எங்களுள் இளையவன் எங்கள் தந்தையோடு இருக்கின்றான். இன்னொருவன் இறந்துவிட்டான்" என்றனர்.

யோசேப்பு மீண்டும் அவர்களிடம், "நான் சொன்னது போலவே நீங்கள் ஒற்றர்கள்தாம்.

இதோ நான் உங்களை சோதித்தறியப் போகிறேன். பார்வோனின் உயிர்மேல் ஆணை! உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய, நீங்கள் இங்கிருந்து புறப்படப்போவதில்லை.

எனவே, உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். உங்கள் சொற்களைச் சோதித்து உண்மை உங்களிடம் உள்ளதா என்று அறிய விரும்புகிறேன். இல்லையெனில் பார்வோனின் உயிர்மேல் ஆணை! நீங்கள் ஒற்றர்கள்தாம்" என்றார்.

பின்னர் அவர் அவர்களை மூன்று நாள் காவலில் வைத்தார்.

மூன்றாம் நாள் யோசேப்பு அவர்களை நோக்கி, "நான் சொல்கிறபடி செய்யுங்கள்: செய்தால், பிழைக்கலாம். ஏனெனில் நான் கடவுளுக்கு அஞ்சுபவன்.

நீங்கள் குற்றமற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் அடைப்பட்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம்.

உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அப்பொழுது நீங்கள் கூறியது உண்மையென்று விளங்கும். நீங்களும் சாவுக்குள்ளாகமாட்டீர்கள்" என்றார். அவர்களும் அப்படியே செய்தனர்.

அப்போது, அவர்கள் ஒருவர் மற்றவரிடம், "உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம். தன் உயிருக்காக எவ்வளவு துயரத்துடன் நம்மிடம் கெஞ்சி மன்றாடினான்! நாமோ அவனுக்குச் செவி சாய்க்கவில்லை! நமக்கு இத்துன்பம் ஏற்பட்டதற்கு அதுவே காரணம்" என்று சொல்லிக் கொண்டனர்.

அப்பொழுது ரூபன் மற்றவர்களிடம், "பையனுக்கு எத்தீங்கும் இழைக்காதீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா? நீங்களோ செவிகொடுக்கவில்லை. இதோ, அவனது இரத்தம் நம்மிடம் ஈடு கேட்கிறது!" என்றார்.

யோசேப்பு மொழிபெயர்ப்பாளன் மூலம் அவர்களிடம் பேசியதால், தாங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியவில்லை.

அப்போது அவர் அவர்களிடமிருந்து ஒதுங்கிச்சென்று அழுதார். பின்பு, திரும்பி வந்து அவர்களோடு பேசுகையில் சிமியோனைப் பிடித்து அவர்கள் கண்முன்பாக அவனுக்கு விலங்கிட்டார்.

பின்பு, அவர்களுடைய கோணிப்பைகளைத் தானியத்தால் நிரப்பி, அவனவன் பணத்தைத் திரும்ப அவனவன் பையிலிட்டுக் கட்டவும், வழிக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கொடுக்கவும் உத்தரவிட்டார். அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.

அவர்கள் தங்கள் கழுதைகளின் மேல் தானியத்தை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.

பின்பு, அவர்களில் ஒருவன் சாவடியில் தன் கழுதைக்குத் தீனி போடுவதற்காகத் தன் கோணியைத் திறக்கவே, அதன் வாயில் தன் பணம் இருக்கக் கண்டான்.

அவன் தன் சகோதரரை நோக்கி, "என் பணம் திருப்பித் தரப்பட்டுள்ளது: இதோ என் கோணியில் இருக்கிறது" என்றான். அவர்களோ மனக்கலக்கமுற்று, நடுநடுங்கி, ஒருவரோடொருவர், "கடவுள் நமக்கு இப்படிச் செய்தது ஏன்?" என்றனர்.

பின்பு, அவர்கள் கானான் நாட்டில் தங்கள் தந்தை யாக்கோபிடம் வந்து சேர்ந்து, தங்களுக்கு நேர்ந்தவற்றையெல்லாம் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியது: "அந்நாட்டின் தலைவர் எங்களிடம் கடுமையாகப் பேசினார். நாட்டை வேவு பார்க்கவந்தவர்கள் போல் எங்களை நடத்தினார்."

நாங்களோ அவரைப் பார்த்து, "நாங்கள் நேர்மையானவர்கள்: ஒற்றர்கள் அல்ல.

நாங்கள் ஒரே தந்தைக்குப் பிறந்த பன்னிரு சகோதரர். ஒருவன் இறந்துவிட்டான். இளையவன் கானான் நாட்டில் இப்பொழுது எங்கள் தந்தையோடு இருக்கிறான்" என்று சொன்னோம்.

அப்பொழுது, நாட்டின் தலைவரான அந்த ஆள், "நீங்கள் நேர்மையானவர்கள்தாம் என்பதை நான் அறிந்துகொள்ள உங்கள் சகோதரர்களுள் ஒருவனை என்னிடம் விட்டுச்செல்லுங்கள். பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு போங்கள்.

ஆனால், உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அதன் மூலம் நீங்கள் ஒற்றர்கள் அல்ல, நேர்மையானவர்கள்தாம் என்று நானும் அறிந்துகொள்வேன். அதன்பின் உங்கள் சகோதரனை உங்களிடம் ஒப்படைப்பேன்: பின்னர் நீங்கள் நாடெங்கும் வணிகம் செய்யலாம் என்றார்."

பின்பு, அவர்கள் கோணிப் பைகளைத் திறந்து கொட்டியபொழுது, ஒவ்வொருவன் கோணிப்பையிலும் அவனவன் பணமுடிப்பு காணப்பட்டது. பணமுடிப்புகளைக் கண்டு அவர்களும் அவர்கள் தந்தையும் திகிலுற்றனர்.

தந்தை யாக்கோபு அவர்களை நோக்கி, "என்னைப் பிள்ளையற்றவன் ஆக்கிவிட்டீர்கள். யோசேப்பு இல்லை, சிமியோனும் இல்லை: இப்பொழுது பென்யமினையும் கூட்டிக்கொண்டு போகவிருக்கிறீர்களே! எல்லாமே எனக்கு எதிராக உள்ளன!" என்றார்.

அதற்கு ரூபன் தம் தந்தையிடம், "நான் அவனை உம்மிடம் திரும்பவும் கொண்டுவராவிடில், என் இரு மைந்தரையும் கொன்றுவிடுங்கள். அவனை என் கையில் ஒப்புவியுங்கள். நான் அவனை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்" என்றார்.

ஆனால் யாக்கோபு, "என் மகனை உங்களோடு போகவிடமாட்டேன். இவன் சகோதரன் இறந்து போனான். இவன் ஒருவனே எஞ்சி இருக்கிறான். நீங்கள் போகும் வழியில், இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாக்கிப் பாதாளத்திற்குள் இறங்கச் செய்வீர்கள்" என்றார்.

அதிகாரம் 43.

நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருந்தது.

எகிப்திலிருந்து வாங்கி வந்திருந்த உணவுப் பொருள்கள் தீர்ந்துவிட்டன. அவர்கள் தந்தை அவர்களை நோக்கி, "நீங்கள் திரும்பிப் போய் நமக்குக் கொஞ்சம் உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்" என்றார்.

அதற்கு யூதா, "அந்த ஆள் உங்கள் இளைய சகோதரனை உங்களுடன் அழைத்து வராவிடில் நீங்கள் என் முகத்தில் விழிக்க வேண்டாம் என்று எங்களைக் கடுமையாய் எச்சரித்துள்ளார்.

ஆதலால் நீங்கள் எம் சகோதரனை எங்களோடு அனுப்பினால் மட்டுமே நாங்கள் அங்குச் சென்று உணவுப் பொருள்களை உங்களுக்கு வாங்கிக்கொண்டு வருவோம்.

நீங்கள் அவனை அனுப்பாவிடில், நாங்கள் போகமாட்டோம். ஏனெனில் அந்த ஆள், உங்கள் சகோதரன் உங்களுடன் வராவிடில், நீங்கள் என் முகத்தில் விழிக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார்" என்று சொன்னார்.

இஸ்ரயேல் அவர்களை நோக்கி, "உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கிறான் என்று அம்மனிதருக்குத் தெரிவித்து, நீங்கள் ஏன் எனக்குத் துன்பம் வருவித்தீர்கள்" என்று முறையிட்டார்.

அவர்கள், "அந்த ஆள் நம்மைப்பற்றியும் நம் உறவினரைப்பற்றியும் துருவித் துருவிக் கேட்டார். உங்கள் தந்தை இன்னும் உயிரோடு இருக்கிறாரா? உங்களுக்கு வேறு சகோதரன் உண்டா? என்று வினவினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்தோம். உங்கள் சகோதரனை இங்கே கொண்டு வாருங்கள் என்று அவர் சொல்வார் என்று நாங்கள் அறிந்திருக்கக் கூடுமோ?" என்று மறுமொழி கூறினர்.

மேலும் யூதா தம் தந்தை இஸ்ரயேலை நோக்கி, "எங்கள் குழந்தைகளும், நீங்களும் நாங்களும் சாகாமல் உயிரோடிருக்க வேண்டுமானால், இளைஞனை என்னோடு அனுப்பி வையுங்கள். நாங்களும் புறப்பட்டுச் செல்வோம்.

அவனுக்கு நானே பொறுப்பாளி. அவனைப்பற்றிய பொறுப்பை என்கையில் விட்டுவிடுங்கள். நான் அவனை உங்களிடம் கொண்டுவந்து ஒப்புவிக்காவிடில், உங்களுக்கு முன்பாக, அப்பழியை எந்நாளும் நான் சுமப்பேன்.

இவ்வளவு காலந்தாழ்த்தியிராவிட்டால், இதற்குள் இரண்டுமுறை போய்த் திரும்பி வந்திருக்கலாம்" என்றார்.

அதைக் கேட்டு, அவர்களின் தந்தை இஸ்ரயேல், அவர்களை நோக்கி, "அவ்வளவு அவசியமானால், நீங்கள் அப்படியே செய்யுங்கள். ஆனால், இந்த நாட்டின் விளைச்சலில் மிகச் சிறந்த சிலவற்றை உங்கள் பைகளிலே எடுத்துச் செல்லுங்கள். கொஞ்சம் தைல வகைகள், தேன், நறுமணப் பொருள்கள், வெள்ளைப் போளம், தேவதாருக் கொட்டைகள், வாதுமைப் பருப்பு ஆகியவற்றை அம்மனிதருக்குக் காணிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.

மேலும் இருமடங்கு பணத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் கோணிப்பை வாயில் வைக்கப்பட்டிருந்த பணத்தை நீங்கள் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். ஒரு வேளை அது தவறுதலாய் நேர்ந்திருக்கக்கூடும்.

உங்கள் சகோதரனை அழைத்துக்கொண்டு மீண்டும் அந்த மனிதரிடம் செல்லுங்கள்.

அந்த மனிதர் ஏற்கெனவே அங்குள்ள உங்கள் சகோதரனையும் இந்தப் பென்யமினையும் உங்களோடு அனுப்பிவைக்கும்படி எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குக் கருணை காட்டுவாராக! நானோ பிள்ளைகளை இழக்கவேண்டியிருந்தால், பிள்ளைகளை இழந்தவனாகவே இருப்பேன்" என்றார்.

அவர்களும் மேற்குறிப்பிட்ட காணிக்கைகளையும் இருமடங்கு பணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு பென்யமினுடன் எகிப்திற்குச் சென்று யோசேப்பின் முன்னிலையில் வந்து நின்றனர்.

யோசேப்பு அவர்களையும் அவர்களுடன் பென்யமினையும் கண்டவுடன் தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, "நீ இம்மனிதர்களை என் வீட்டிற்கு அழைத்துச் செல். இவர்கள் பகலுணவை இன்று என்னோடு உண்பார்கள். கால்நடை ஒன்றை அடித்து உணவு தயார் செய்" என்றார்.

அவனும் யோசேப்பு சொன்னபடியே அம்மனிதர்களை அவர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனான்.

யோசேப்பின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதால் அவர்கள் அச்சமுற்றனர். ஏனெனில், முன்பு நம் கோணிப்பைகளில் வைக்கப்பட்ட பணத்தை முன்னிட்டே இங்குக் கொண்டுவரப்பட்டுள்ளோம். நம்மைத் தாக்கி மடக்கி அடிமைகளாக்கி நம் கழுதைகளைக் கைப்பற்றிக் கொள்ளுமாறு இவ்வாறு கொண்டுவந்திருக்கிறார்களோ? என்று நினைத்துக்கொண்டனர்.

எனவே, அவர்கள் யோசேப்பின் வீட்டு வாயிற்படியிலே மேற்பார்வையாளனை அணுகிக் கூறியது:

"ஜயா, முன்பு ஒருமுறை நாங்கள் தானியம் வாங்குவதற்கும் இங்கு வந்திருந்தது உண்மையே.

திரும்பவும் வழியில் சாவடியில் எங்கள் கோணிப்பைகளைத் திறந்தபோது, பைகளின் வாயிலே நாங்கள் கொடுத்த பணம் அப்படியே இருக்கக் கண்டோம். அதே அளவு திரும்பவும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம்.

மேலும், எங்களுக்கு வேண்டியவற்றை வாங்குவதற்கு வேறு பணமும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் கோணிப்பைகளில் வைத்தது யாரென்று அறியோம்" என்றனர்.

அதற்கு அவன், "உங்களுக்கு அமைதி உண்டாகுக! அஞ்சவேண்டாம்! உங்கள் கடவுளும் உங்கள் தந்தையின் கடவுளுமானவர் உங்கள் கோணிப்பைகளில் அந்தப் பணத்தை உங்களுக்குப் புதையலாகத் தந்திருப்பார்! உங்கள் பணம் தான் என்னிடம் வந்ததே!" என்று சொல்லியபின், சிமியோனை அவர்களிடம் அழைத்து வந்தான்.

மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டிற்குள் அழைத்துச் சென்று, அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தான். அவர்கள் தங்கள் பாதங்களைக் கழுவிக் கொண்டனர். பின்பு, அவர்களுடைய கழுதைகளுக்கு அவன் தீனி போட்டான்.

நண்பகலில் யோசேப்பு வரும் நேரத்தில், அவருக்குத் தருவதற்காக அவர்கள் தங்கள் காணிக்கைகளைத் தயார் செய்தனர். ஏனென்றால், தாங்கள் அங்கேயே உணவு அருந்தப்போவதாகக் கேள்விப்பட்டிருந்தனர்.

யோசேப்பு தம் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் அவர்கள் கையில் கொண்டுவந்திருந்த காணிக்கைகளை அவர்முன் வைத்து, தரை மட்டும் தாழ்ந்து வணங்கினர்.

அவரோ அவர்களிடம் நலம் விசாரித்தபின் "நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த முதிர்வயதான உங் கள் தந்தை நலமாய் இருக்கிறாரா? இன்னும் உயிரோடிருக்கிறாரா?" என்று விசாரித்தார்.

அவர்கள், "உங்கள் ஊழியராகிய எங்கள் தந்தை நலமுடன் இருக்கிறார். இன்னும் உயிரோடிருக்கிறார்" என்று பதில் கூறித் தரைமட்டும் தாழ்ந்து வணங்கினர்.

யோசேப்பு கண்களை உயர்த்தி, தம் சகோதரனும், தம் தாயின் மகனுமான பென்யமினைப் பார்த்து, "நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த உங்கள் இளைய சகோதரன் இவன்தானோ?" என்று கேட்டபின், "மகனே, கடவுள் உனக்கு அருள்புரிவாராக!" என்றார்.

யோசேப்பு தம் சகோதரனைக் கண்டதும் மனம் நெகிழ்ந்து அழுவதற்கு ஓரிடம் தேடினார். உடனே தம் உள்ளறைக்குள் விரைந்துசென்று கண்ணீர்விட்டார்.

பின்பு, முகத்தைக் கழுவியபின் வெளியே வந்தார். தம்மை அடக்கிக்கொண்டு, உணவு பரிமாறுங்கள் என்றார்.

யோசேப்பிற்குத் தனியாகவும் சகோதரர்களுக்குத் தனியாகவும் அவருடன் உண்ணவிருந்த எகிப்தியருக்குத் தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. ஏனென்றால், எகிப்தியர் எகிரேயரோடு உண்பதில்லை. அப்படி உண்பதை எகிப்தியர் அருவருப்பாகக் கருதினர்.

மேலும் அவருக்கு முன் அவர்களில் மூத்தவன் தலைமகன் உரிமைப்படி முதலாவதாகவும், இளையவர்கள் அவரவர் வயதின்படியும் அமர்த்தப்பட்டதால் ஒருவர் மற்றவரை வியப்புடன் நோக்கினர்.

யோசேப்பின் முன் வைக்கப்பட்ட தட்டுகளினின்று அவர்களுக்குப் பரிமாறப்பட்டது. மற்றவர்களது பங்கைப்போல் ஜந்து மடங்கு மிகுதியாகப் பென்யமினுக்குப் பரிமாறப்பட்டது. அவருடன் அவர்கள் மதுவருந்தி விருந்துண்டனர்.

அதிகாரம் 44.

பின்னர் யோசேப்பு, தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, "அவர்களுடைய கோணிப்பைகளில் அவர்கள் தூக்கிச் செல்லுமளவு தானியம் நிரப்பி, அவனவன் பணத்தைப் பையின் வாயில் வைத்துக் கட்டிவிடு.

இளையவனது கோணிப்பை வாயில் எனது வெள்ளிக்கோப்பையையும், தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் வைத்துக் கட்டிவிடு" என்று கட்டளையிட்டார். யோசேப்பு சொன்னவாறே அவனும் செய்தான்.

காலையில் கதிரவன் உதித்ததும் அவர்கள் தங்கள் கழுதைகளோடு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்கள் நகரை விட்டுச் சிறிது தூரம் போயிருப்பர். அப்பொழுது யோசேப்பு தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, "நீ எழுந்து அம்மனிதர்களைத் துரத்திப் பிடித்து, நன்மைக்குக் கைமாறாக நீங்கள் தீமை செய்வது ஏன்?

இது என் தலைவர் பருகப் பயன்படுத்துவது அல்லவா? இது அவர் குறிபார்க்கப் பயன்படுத்துவது அல்லவா? நீங்கள் செய்தது மிகப்பெரும் மோசடி! என்று சொல்வாய்" என்றார்.

அவனும் அவர்களை விரட்டிப் பிடித்து, இந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான்.

அதற்கு அவர்கள் அவனிடம், "ஜயா, தாங்கள் இப்படிப் பேசுவதேன்? உம் அடியார்களாகிய நாங்கள் இத்தகைய முறையற்ற செயலைச் செய்திருப்போமா?

நாங்கள் கோணிப்பைகளின் வாயில் கண்ட பணத்தைக் கூடக் கானான் நாட்டினின்று உம்மிடம் திரும்பக் கொண்டு வந்தோம் அல்லவா! அப்படியிருக்க, நாங்கள் உம் தலைவர் வீட்டில் தங்கமாவது வெள்ளியாவது திருடிக்கொண்டு போவோமா?

உம் அடியார்களாகிய எம்முள் எவனிடமாவது அது காணப்பட்டால் அவன் செத்தொழியட்டும்! நாங்களும் எங்கள் தலைவருக்கு அடிமைகள் ஆவோம்" என்று பதில் சொன்னார்கள்.

அதுகேட்டு அவன், "நன்று நன்று: உங்கள் சொற்களின்படி ஆகட்டும். அது எவனிடம் அகப்படுமோ அவன் எனக்கு அடிமையாக இருப்பான்: மற்றவர்கள் குற்றமற்றவர்களாய் இருப்பீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னான்.

அப்பொழுது அவர்கள் விரைந்து கோணிப்பைகளைத் தரையில் இறக்கிவைத்தார்கள். ஒவ்வொருவனும் தன் கோணிப்பையைத் திறந்தான்.

மூத்தவன் முதல் இளையவன்வரை அவன் சோதித்தபோது, அந்தக் கோப்பை பென்யமின் பையில் காணப்பட்டது.

அப்பொழுது அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, கழுதைகளின் மேல் சுமையை ஏற்றி நகருக்குத் திரும்பி வந்தனர்.

அதுவரை யோசேப்பு அங்கேதான் இருந்தார். யூதா தம் சகோதரருடன் வந்து சேர்ந்தார். அவர்கள் அவருக்குமுன் தரையில் வீழ்ந்து வணங்கினர்.

யோசேப்பு அவர்களை நோக்கி, "நீங்கள் என்ன, இப்படிச் செய்துவிட்டீர்கள்? குறிபார்ப்பதில் என்னைப் போன்றவர் எவருமிலர் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று வினவினார்.

அதற்கு யூதா, "என் தலைவராகிய தங்களிடம் நாங்கள் என்ன சொல்வோம்? என்னதான் பேசுவோம்? எங்கள் மாசின்மையை எப்படி நாங்கள் எண்பிக்க முடியும்? கடவுளே உம் அடியார்களின் தீச்செயலைக் கண்டுபிடித்தார். இதோ நாங்களும், எவனிடம் கோப்பை கண்டுபிடிக்கப்பட்டதோ அவனும், தங்களுக்கு அடிமைகளாவோம்" என்று சொன்னார்.

அது கேட்டு யோசேப்பு, "அத்தகைய முறையற்ற செயலை நான் செய்ய மாட்டேன். கோப்பை எவனிடம் அகப்பட்டதோ அவன் மட்டும் எனக்கு அடிமையாக இருப்பான். மற்றவர்கள் உங்கள் தந்தையிடம் நலமாகச் செல்லுங்கள்" என்றார்.

யூதா அவர் அருகில் வந்து, "என் தலைவரே! அடியேன் ஒரு வார்த்தை கூற அனுமதி தாரும். என் தலைவரே! செவிசாய்த்தருளும். உம் அடியான் மீது சினம் கொள்ள வேண்டாம். நீர் பார்வோனுக்கு இணையானவர்.

என் தலைவராகிய தாங்கள் உம் பணியாளர்களாகிய எங்களிடம், உங்களுக்குத் தந்தையோ சகோதரனோ உண்டா? என்று கேட்டீர்கள்.

அதற்கு நாங்கள், எங்களுக்கு வயது முதிர்ந்த தந்தையும், முதிர்ந்த வயதில் அவருக்குப் பிறந்த ஓர் இளைய சகோதரனும் உள்ளனர். அவனுடைய சகோதரன் இறந்துவிட்டான். அவன் தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே இருப்பதால், தந்தை அவன் மேல் அதிக அன்பு கொண்டிருக்கிறார் என்று தலைவராகிய தங்களுக்குச் சொன்னோம்.

அப்பொழுது தாங்கள், அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் அவனை நேரில் பார்க்க வேண்டும் என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.

நாங்கள் அந்த இளைஞன் தன் தந்தையை விட்டுப் பிரிய இயலாது: பிரிந்தால் அவர் இறந்து போவார் என்று தலைவராகிய தங்களிடம் சொன்னோம்.

அதற்குத் தாங்கள் உங்கள் இளைய சகோதரன் உங்களோடு வராவிட்டால் என் முகத்தில் விழிக்க வேண்டாம் என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.

உம் பணியாளராகிய எங்கள் தந்தையிடம் திரும்பியவுடன் என் தலைவராகிய தாங்கள் சொல்லியவற்றை அவரிடம் எடுத்துரைத்தோம்.

பிறகு எங்கள் தந்தை, நீங்கள் திரும்பிப்போய் நமக்குக் கொஞ்சம் உணவுப்பொருள் வாங்கி வாருங்கள் என்றார்.

நாங்கள் எங்களால், போக இயலாது, எங்கள் இளைய சகோதரன் எங்களோடு சேர்ந்து வந்தால் மட்டுமே புறப்படுவோம். வராவிட்டால், இவன் இல்லாமல் நாங்கள் அவர் முகத்தில் விழிக்க மாட்டோம் என்றோம்.

உம் பணியாளராகிய எங்கள் தந்தை எங்களிடம் என் மனைவி, எனக்கு இரு பிள்ளைகளையே பெற்றெடுத்தாளென்று உங்களுக்குத் தெரியும்.

ஒருவன் என்னைப் பிரிந்து வெளியே சென்றான். அவன் ஒரு கொடிய விலங்கால் பீறிக்கிழிக்கப்பட்டான் என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில், இதுவரை அவனைக் காணவில்லை.

இப்பொழுது நீங்கள் இவனையும் என்னிடமிருந்து பிரிக்கிறீர்கள். இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாகிப் பாதாளத்திற்குள் இறங்கச்செய்வீர்கள் என்றார்.

ஆகையால் உம் பணியாளராகிய என் தந்தையிடம் நான் செல்லும்போது அவர் உயிருக்கு உயிராக இருக்கும் இந்த இளைஞன் எங்களோடு இல்லையெனில்,

இளைஞன் இல்லையென்று கண்டு அவர் உடனே இறந்து போவார். உம் பணியாளர்களாகிய நாங்கள் நரைத்த முடியுள்ள உம் ஊழியரான எங்கள் தந்தையைத் துயருக்குள்ளாக்கிப் பாதாளத்திற்குள் இறங்கச் செய்தவர்கள் ஆவோம்.

எம் தந்தையிடம் இளைஞனின் பாதுகாப்புக்கு உம் அடியான் பொறுப்பேற்றிருக்கிறேன். ஏனெனில், என் தந்தையே, அவனை நான் திரும்பக் கூட்டி வராவிட்டால், உம் முன்னிலையில் அப்பழி எந்நாளும் என்னையே சாரும் என்றேன்.

ஆகையால் இப்பொழுது இளைஞனுக்குப் பதிலாய் அடியேனை உமக்கு அடிமையாக்கியருளும். இளைஞனையோ அவன் சகோதரர்களோடு சேர்ந்து போகவிடும்.

இளைஞன் என்னோடு இல்லாவிடில், எப்படி என் தந்தையிடம் நான் திரும்புவேன்? என் தந்தைக்கு நேரிடவிருக்கும் துன்பத்தை எப்படி நான் பார்த்துக் கொண்டிருப்பேன்?" என்றார்.

அதிகாரம் 45.

அப்பொழுது யோசேப்பு தம் பணியாளர் அனைவர் முன்னிலையிலும் இதற்குமேல் தம்மை அடக்கிக் கொள்ள முடியாமல், எல்லோரும் என்னைவிட்டு வெளியே போங்கள் என்று உரத்த குரலில் சொன்னார். யோசேப்பு தம் சகோதரருக்குத் தம்மைத் தெரியப்படுத்தும் பொழுது வேற்று மனிதர் எவரும் அவரோடு இல்லை.

உடனே அவர் கூக்குரலிட்டு அழுதார். எகிப்தியர் அதைக் கேட்டனர். பார்வோன் வீட்டாரும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டனர்.

பின்பு, அவர் தம் சகோதரர்களை நோக்கி, "நான் தான் யோசேப்பு! என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா?" என்று கேட்டார். ஆனால் அவரைப் பார்த்து அவர் சகோதரர்கள் திகிலடைந்ததால், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

ஆனால் யோசேப்பு தம் சகோதரர்களை நோக்கி, "என் அருகில் வாருங்கள்" என்றார். அவர்கள் அருகில் வந்தவுடன் அவர், "நீங்கள் எகிப்திற்குச் செல்லுமாறு விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்!

நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ள வேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்.

நாட்டில் பஞ்சம் தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ளன. இன்னும் ஜந்தாண்டுகள் உழவோ அறுவடையோ இராது.

ஆதலால் உலகில் உங்களுள் எஞ்சி இருப்போரைப் பாதுகாக்கவும், பெரும் மீட்புச் செயலால் உங்கள் உயிர்களைக் காக்கவும், கடவுள் உங்களுக்குமுன் என்னை அனுப்பி வைத்தார்.

என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல, கடவுள்தாம். அவரே என்னைப் பார்வோனுக்குத் தந்தையாகவும், அவர் வீடு முழுவதற்கும் தலைவராகவும், எகிப்து முழுவதற்கும் ஆளுநராகவும் ஏற்படுத்தியுள்ளார்.

நீங்கள் என் தந்தையிடம் விரைந்து சென்று அவருக்குச் சொல்லுங்கள். "உங்கள் மகன் யோசேப்பு தெரிவிப்பது இதுவே: கடவுள் என்னை எகிப்து முழுவதற்கும் ஆளுநராக நியமித்துள்ளார். எனவே காலந்தாழ்த்தாமல் என்னிடம் வாருங்கள்.

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் உங்கள் ஆடு மாடுகளோடும் உங்களுக்குச் சொந்தமான யாவற்றோடும் கோசேன் பகுதியில் எனக்கு அருகில் குடியேறி வாழலாம்.

அங்குள்ள உங்களை நான் பேணிக் காப்பேன். ஏனெனில் இன்னும் ஜந்தாண்டுகள் பஞ்சம் இருக்கும். இங்கு வராவிடில், நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்களுக்குள்ள அனைத்தும் வறியோராய் வாடுவீர்கள்.

இதோ உங்களோடு பேசுவது என் வாய்தான் என்பதை நீங்களும் என் சகோதரன் பென்யமினும் கண்ணாரக் காண்கிறீர்கள்.

நான் எகிப்தில் அடைந்துள்ள சிறப்பு அனைத்தையும் நீங்கள் இங்குக் கண்ட யாவற்றையும் என் தந்தைக்குத் தெரிவியுங்கள். விரைந்துபோய், என் தந்தையை இங்கே அழைத்து வாருங்கள்" என்று கூறினார்.

பிறகு, தம் சகோதரன் பென்யமினை அரவணைத்து அவன் தோளில் தலைசாய்த்துக்கொண்டு அழுதார். பென்யமினும் அப்படியே அவர் தோளில் தலைசாய்த்துக்கொண்டு அழுதான்.

பின் யோசேப்பு தம் சகோதரர் யாவரையும் முத்தமிட்டு அழுதார். இதன்பின் அவர்கள் அவரோடு உரையாடினர்.

யோசேப்பின் சகோதரர்கள் வந்துள்ளனர் என்ற செய்தி பார்வோனின் அரண்மனையை எட்டவே, பார்வோனும் அவன் அலுவலர்களும் அகமகிழ்ந்தனர்.

அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கிக் கூறியது: "நீர் உம் சகோதரர்களுக்கு இவ்வாறு சொல்வீர்: நீங்கள் செய்ய வேண்டியது யாதெனில், உங்கள் கால்நடைகளின் மேல் பொதியேற்றிக் கானான் நாட்டிற்குத் திரும்பிச் சென்று,

அங்கிருந்து உங்கள் தந்தையையும் குடும்பங்களையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்: நான் உங்களுக்கு எகிப்து நாட்டின் சிறந்த பகுதியைத் தருவேன். நீங்களும் நிலத்தின் வளமையை அனுபவிக்கலாம்.

உம் சகோதரர்களுக்கு நீர் மீண்டும் சொல்ல வேண்டியது: நீங்கள் இவ்வாறு செய்யுங்கள். உங்கள் குழந்தைகளையும் மனைவியரையும் அழைத்து வருமாறு, எகிப்து நாட்டினின்று வண்டிகளைக் கொண்டு போங்கள். உங்கள் தந்தையையும் அழைத்துக்கொண்டு வந்து சேருங்கள்.

உங்கள் தட்டுமுட்டுகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்: ஏனெனில், எகிப்து நாட்டில் சிறந்தவையெல்லாம் உங்களுக்கே உரியவையாகும்."

இஸ்ரயேலின் புதல்வர்கள் அவ்வாறே செய்தனர். பார்வோன் கட் டளையின்படி யோசேப்பு அவர்களுக்கு வண்டிகளையும் வழிக்கு உணவுப் பண்டங்களையும் கொடுத்தார்.

மேலும், அவர்களில் ஒவ்வொருவனுக்கும் வேறு புத்தாடைகளும் கொடுத்தார். பென்யமினுக்கோ முந்நூறு வெள்ளிக் காசுகளும் ஜந்து ஆடைகளும் கொடுத்தார்.

அப்படியே தம் தந்தைக்குப் பத்து ஆண் கழுதைகளின் மேல் எகிப்தின் சிறந்த பொருள்களையும், அவரது பயணத்திற்குப் பத்துப் பெண் கழுதைகளின் மேல் தானியத்தையும், அப்பம் முதலிய உணவு வகைகளையும் ஏற்றி அவர்களோடு அனுப்பி வைத்தார்.

பின்பு, அவர் தம் சகோதரர்களை வழியனுப்பி வைத்தார். அவர்களை விட்டுப் பிரியும்போது, "நீங்கள் வழியில் சச்சரவு செய்யாதீர்கள்" என்று சொல்லி அனுப்பினார்.

அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டிலிருந்த தங்கள் தந்தை யாக்கோபிடம் வந்து சேர்ந்தனர்.

அவர்கள் அவரிடம், "யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறார்: அவரே எகிப்து நாடு முழுவதற்கும் ஆளுநர்" என்று அறிவித்தனர். அதைக் கேட்டு யாக்கோபு மன அதிர்ச்சியுற்று அவர்கள் சொன்னதை நம்பவில்லை.

ஆனால் யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன யாவற்றையும் அவருக்கு அவர்கள் சொன்னதைக் கேட்டும், யோசேப்பு அவரை அழைத்து வர அனுப்பியிருந்த வண்டிகளைக் கண்டும் அவர்கள் தந்தை யாக்கோபு புத்துயிர் பெற்றவர் ஆனார்.

இறுதியில் இஸ்ரயேல், "என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடிருப்பது ஒன்றே போதும். நான் இறக்குமுன் சென்று அவனைக் காண்பேன்" என்றார்.

அதிகாரம் 46.

பின்பு இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார். அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார்.

அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, யாக்கோபு! யாக்கோபு! என்று அழைத்தார். அவர், இதோ அடியேன் என்றார்.

கடவுள், "உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே, எகிப்திற்குச் செல்ல நீ அஞ்ச வேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன்.

நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன். உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்" என்றார்.

யாக்கோபு பெயேர்செபாவை விட்டுப் புறப்பட்டார். இஸ்ரயேலின் புதல்வர்கள் தம் தந்தையாகிய யாக்கோபையும் தங்கள் பிள்ளைகளையும் மனைவியரையும் அவருக்குப் பார்வோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக் கொண்டனர்.

கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும் சொத்துகளையும் சேகரித்துக் கொண்டனர். இவ்வாறு யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப் போனார்.

தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும் தம் புதல்வியரையும் புதல்வரின் புதல்வியரையும் தம் வழிமரபினர் அனைவரையும் அவர் தம்மோடு எகிப்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்.

எகிப்திற்கு வந்துசேர்ந்த யாக்கோபும் அவர் புதல்வர்களுமாகிய இஸ்ரயேலரின் பெயர்கள் பின்வருமாறு: யாக்கோபின் தலைமகன் ரூபன்.

ரூபனின் புதல்வர்கள்: அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி.

சிமியோனின் புதல்வர்: எமுவேல், யாமின், ஒகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல்.

லேவியின் புதல்வர்: கெர்சோன், கோகாத்து, மெராரி.

யூதாவின் புதல்வர்: ஏர், ஓனான், சேலா, பெரேட்சு, செராகு. இவர்களுள் ஏரும் ஓனானும் கானான் நாட்டில் இறந்து போயினர். எட்சரோன், ஆமூல் என்பவர்கள் பெரேட்சுக்குப் பிறந்த புதல்வர்கள்.

இசக்காரின் புதல்வர்: தோலா, பூவா, யாசூபு, சிம்ரோன்.

செபுலோனின் புதல்வர்: செரேது, ஏலோன், யாகுலவேல்.

இவர்கள் லேயாவின் பிள்ளைகள். இவர் இவர்களையும் தீனா என்ற மகளையும் பதான் அராமில் யாக்கோபுக்குப் பெற்றெடுத்தார். லேயா வழிவந்த அவர் புதல்வர், புதல்வியர் மொத்தம் முப்பத்துமூன்றுபேர்.

காத்தின் புதல்வர். சிபியோன், அக்கி, சூனி, எட்சபோன், ஏ¡£, அரோதி, அரேலி.

ஆசேரின் புதல்வர்: இம்னா, இசுவா, இசுவி, பெரியா. இவர்களுடைய சகோதரி செராகு. பெரியாவின் புதல்வர்: எபேர், மல்கியேல்.

இவர்கள் லாபான் தன் மகள் லேயாவுக்குக் கொடுத்த சில்பாவின் பிள்ளைகள். இவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் இந்தப் பதினாறுபேர்.

யோசேப்பு, பென்யமின் என்பவர் யாக்கோபின் மனைவி ராகேலின் புதல்வர்.

யோசேப்பிற்கு எகிப்து நாட்டில் புதல்வர் பிறந்தனர். ஓன் நகர் அர்ச்சகர் போற்றி பெராவின் மகளான அசினத்து அவர்களை அவருக்குப் பெற்றெடுத்தாள். அவர்கள் மனாசே, எப்ராயீம் ஆவர்.

பென்யமினின் புதல்வர்: பேலா, பெக்கேர், அசுபேல், கேரா, நாகமான், ஏகி, ரோசு, முப்பிம், குப்பிம், அருது.

ராகேல் வழிவந்த யாக்கோபின் புதல்வர் மொத்தம் பதினான்கு பேர்.

தாணின் மகன், ஆசும்.

நப்தலியின் புதல்வர்: யாகுட்சேல், கூனி, ஏட்சேர், சில்லேம்.

இவர்கள் லாபான் தன் மகள் ராகேலுக்குக் கொடுத்த பில்காவின் பிள்ளைகள். இவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் மொத்தம் ஏழுபேர்.

யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவியரைத் தவிர அவரது வழிமரபாக எகிப்தில் குடிபுகுந்தோர் மொத்தம் அறுபத்தாறுபேர்.

எகிப்து நாட்டில் யோசேப்பிற்குப் பிறந்த புதல்வர்களோ இருவர். ஆகவே எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லோரும் எழுபதுபேர் ஆவர்.

கோசேன் பகுதியில் யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு யாக்கோபு யூதாவைத் தமக்குமுன் அனுப்பியிருந்தார். அவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள்.

யோசேப்பு தம் தேரைப் பூட்டிக்கொண்டு தம் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்கச் சென்றார். யோசேப்பு தம் தந்தையைக் கண்டவுடன் அவரை அரவணைத்து அவர் தோளில் சாய்ந்து கொண்டு வெகுநேரம் அழுதார்.

அப்பொழுது, இஸ்ரயேல் யோசேப்பிடம், "இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடு தான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!" என்றார்.

பின்னர் யோசேப்பு தம் சகோதரரையும் தம் தந்தையின் குடும்பத்தாரையும் நோக்கி, "நான் பார்வோனிடம் போய், கானான் நாட்டிலிருந்து என் சகோதரரும், என் தந்தையின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள்.

அவர்கள் மந்தை மேய்ப்பவர்கள். மந்தைகளை வைத்துப் பேணுவது அவர்கள் தொழில். அவர்கள் தங்கள் ஆடு மாடுகளையும் தங்களுக்குச் சொந்தமான யாவற்றையும் தங்களுடன் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரிவிப்பேன்.

பார்வோன் உங்களை வரவழைத்து, உங்கள் தொழில் என்ன? என்று கேட்கும்பொழுது,

நீங்கள் மறுமொழியாக, எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரை உம் பணியாளர்களாகிய நாங்கள் எங்கள் மூதாதையரைப்போல் மேய்ப்பவர்களாய் இருக்கிறோம் என்று சொல்லுங்கள். நீங்கள் கோசேன் பகுதியில் குடியிருக்கும்படி அனுமதிக்கப்படுவீர்கள். ஏனெனில், ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் எகிப்தியருக்கு அருவருப்பானவர்கள்" என்றார்.

அதிகாரம் 47.

பின்பு, யோசேப்பு பார்வோனிடம் போய், "என் தந்தையும் என் சகோதரர்களும், தங்கள் ஆடு மாடுகளோடும் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றோடும் கானான் நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். தற்பொழுது அவர்கள் கோசேன் பகுதியில் தங்கியிருக்கிறார்கள்" என்று அறிவித்தார்.

மேலும் தம் சகோதரரில் ஜந்து பேரைப் பார்வோன் முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தினார்.

பார்வோன் அவர்களை நோக்கி, உங்கள் தொழில் என்ன? என்று கேட்க, அவர்கள் அவனிடம் "உம் பணியாளர்களாகிய நாங்கள் எங்கள் மூதாதையரைப்போல் ஆடு மேய்ப்பவர்கள்.

கானான் நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருப்பதாலும், உம் பணியாளர்களாகிய எங்கள் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாது போனதாலும், சிறிதுகாலம் இந்நாட்டில் தங்கி இருக்க வந்திருக்கிறோம். உம் பணியாளர்களாகிய நாங்கள் கோசேன் பகுதியில் தற்போதைக்குக் குடியிருக்க இசைவு தருமாறு வேண்டுகிறோம்" என்றனர்.

அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி, "உம் தந்தையும் உம் சகோதரர்களும் உம்மிடம் வந்திருக்கிறார்கள் அல்லவா?

எகிப்து நாடு உமக்கு முன்பாக இருக்கிறது. இந்த நாட்டின் சிறந்த பகுதியில் உம் தந்தையும் சகோதரரும் குடியேறும்படி செய்யும். கோசேன் பகுதியில் அவர்கள் வாழட்டும். அவர்களில் திறமையுள்ளவர்கள் உண்டென்று நீர் அறிவீரானால், எனக்குச் சொந்தமான மந்தைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளாக அவர்களை ஏற்படுத்தலாம்" என்றான்.

பின்னர், யோசேப்பு தம் தந்தையை அழைத்துவந்து அரசன் முன் நிறுத்தினார். யாக்கோபு பார்வோனுக்கு வாழ்த்துமொழி கூறினார்.

பார்வோன் யாக்கோபை நோக்கி, உமது வயதென்ன? என்று வினவினான்.

அதற்கு யாக்கோபு பார்வோனை நோக்கி, "என் வாழ்க்கைப் பயண நாள்கள் நூற்றுமுப்பது ஆண்டுகள். அவை எண்ணிக்கையில் குறைந்தவை: துன்பத்தில் மிகுந்தவை. ஆனால் அவை என் மூதாதையரின் நாள்களுக்குக் குறைந்தவையே" என்றார்.

யாக்கோபு பார்வோனுக்கு வாழ்த்து மொழி கூறியபின் அவனிடம் விடைபெற்றுச் சென்றார்.

பார்வோன் கட்டளையிட்டிருந்தபடி, யோசேப்பு தம் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் எகிப்து நாட்டின் மிகவும் வளமான இராம்சேசு நிலப்பகுதியை உரிமையாகக் கொடுத்து, அங்கு அவர்களைக் குடியேற்றினார்.

மேலும், யோசேப்பு தம் தந்தை, தம் சகோதரர், தம் தந்தையின் குடும்பத்தார் அனைவருக்கும் அவரவர் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கேற்ப உணவளித்து அவர்களைப் பேணிக் காத்துவந்தார்.

பஞ்சம் மிகக் கடுமையாய் இருந்தது. உலகெங்கும் உணவு கிடைக்கவில்லை. குறிப்பாக எகிப்துநாடும் கானான்நாடும் பஞ்சத்தால் வாடின.

எகிப்தியருக்கும் கானானியருக்கும் தானியம் விற்றதால் கிடைத்த பணத்தையெல்லாம் ஒன்று சேர்த்து யோசேப்பு பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுவந்தார்.

எகிப்து, கானான் நாடுகளில் பணம் தீர்ந்துபோனபோது, எகிப்தியர் எல்லாரும் யோசேப்பிடம் வந்து, "எங்களுக்கு உணவு தாரும்: பணம் இல்லையென்பதால், உம் முன் நாங்கள் ஏன் சாகவேண்டும்?" என்றனர்.

அதற்கு அவர், "உங்களிடம் பணம் இல்லையெனில், உங்கள் மந்தைகளைக் கொண்டு வாருங்கள்: அவற்றுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் தருவேன்" என்றார்.

எனவே அவர்கள் போய் மந்தைகளைக் கொண்டு வந்தபோது, யோசேப்பு குதிரைகளையும் ஆட்டுமந்தைகளையும், மாட்டுமந்தைகளையும் கழுதைகளையும் வாங்கிக் கொண்டு அவற்றுக்குப் பதிலாக அவர்களுக்கு உணவுப் பொருள்கள் கொடுத்தார். இப்படிக் கால்நடைகளையெல்லாம் ஈடாகப் பெற்று அவர்களை அந்த ஆண்டு காப்பாற்றினார்.

அந்த ஆண்டு முடிந்தபின் அடுத்த ஆண்டில் அவர்கள் மீண்டும் வந்து, அவரை நோக்கி, "எம் தலைவரிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. பணம் தீர்ந்து போயிற்று. கால்நடைகளும் எம் தலைவருக்கு சொந்தமாகிவிட்டன. எம் தலைவருக்கு அளிக்க எங்கள் உடலும் நிலமும் தவிர எங்களிடம் எஞ்சியிருப்பது எதுவுமில்லை.

உம் கண்முன் நாங்களும் எங்கள் நிலமும் ஏன் அழிய வேண்டும்? எங்களையும் எங்கள் நிலத்தையும் உணவுப் பொருளுக்கு ஈடாக எடுத்துக்கொள்ளும். நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாய் இருப்போம். நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும் நிலம் பாழடையாமல் இருக்கவும் எங்களுக்குத் தானியம் தாரும்" என்றனர்.

அவ்வாறே யோசேப்பு எகிப்திய நிலம் முழுவதையும் பார்வோனுக்கென்று வாங்கிக்கொண்டார். ஏனென்றால், பசியின் கொடுமையால் எகிப்தியர் அனைவரும் தங்கள் வயல்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டனர். அந்த நாடே பார்வோனுக்குச் சொந்தமாயிற்று.

எகிப்தின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைவரை இருந்த மக்கள் அனைவரையும் யோசேப்பு அடிமை வேலைக்கு உள்ளாக்கினார்.

அர்ச்சகர்களின் வயல்களை மட்டும் அவர் வாங்கவில்லை. ஏனென்றால், பார்வோன் அவற்றை அவர்களுக்கு மானியமாகக் கொடுத்திருந்தான். பார்வோன் அவர்களுக்குத் தந்திருந்த மானியத்திலிருந்து அவர்கள் உண்டு வந்ததால், அவர்கள் தங்கள் நிலபுலன்களை விற்கவில்லை.

அப்பொழுது யோசேப்பு மக்களை நோக்கி, "இன்று உங்களையும், உங்கள் நிலங்களையும் பார்வோனுக்கு உடைமையாக வாங்கிவிட்டேன். இப்போது, உங்களுக்கு விதைத்தானியம் தருகிறேன். அதை நிலத்தில் விதையுங்கள்.

விளைச்சலில் ஜந்திலொரு பாகம் பார்வோனுக்குச் செலுத்துங்கள். எஞ்சிய நான்கு பாகம் உங்கள் வயல்களுக்கு விதையாகவும், உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் பிள்ளைகளுக்கும் உணவாகவும் இருக்கட்டும்" என்று சொன்னார்.

அதற்கு அவர்கள், "எங்கள் உயிரைக் காப்பாற்றிவிட்டீர். தலைவராகிய உம் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைப்பதாக! நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாகவே இருப்போம்" என்றார்கள்.

யோசேப்பு எகிப்து நாட்டில் நிலச்சட்டம் ஒன்று கொண்டுவந்தார். அது இன்றுவரை வழக்கில் உள்ளது. ஜந்திலொரு பாகம் பாவோனுக்கு உரியது என்றாயிற்று. அர்ச்சகர்களின் நிலபுலன்கள் மட்டும் பார்வோனின் உடைமையாகவில்லை.

இஸ்ரயேலர் எகிப்து நாட்டில் கோசேன் பகுதியில் குடியேறி, அதனை உரிமையாக்கிக்கொண்டு, அங்கே மிகவும் பல்கிப் பெருகினர்.

யாக்கோபு பதினேழு ஆண்டுகள் எகிப்து நாட்டில் இருந்தார். அவரது வாழ்நாள் மொத்தம் நூற்றுநாற்பத்தேழு ஆண்டுகள்.

அவர் தாம் இறக்கும் நாள் நெருங்கி வருவதைக் கண்டு, தம் மகன் யோசேப்பை வரவழைத்து, அவரை நோக்கி, "உன் பார்வையில் எனக்குத் தயை கிடைக்குமானால், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, எனக்குக் கனிவும் பற்றும் காட்டுவதாக வாக்களி. என்னை எகிப்து நாட்டில் அடக்கம் செய்யாதே.

நான் என் மூதாதையரோடு துஞ்சியபின், என்னை எகிப்தினின்று எடுத்துக் கொண்டு சென்று, என் மூதாதையரின் கல்லறையில் என்னையும் அடக்கம் செய்" என்றார். அதற்கு யோசேப்பு, நீர் சொன்னபடியே செய்வேன் என்றார்.

அவரோ, எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றார். யோசேப்பும் ஆணையிட்டுக் கொடுத்தார். அப்பொழுது இஸ்ரயேல் படுக்கையின் தலைப்பக்கம் திரும்பித் தொழுதார்.

அதிகாரம் 48.

இந்நிகழ்ச்சிகளுக்குப்பின், உம் தந்தை உடல் நலமின்றி இருக்கிறார் என்று யோசேப்புக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், தம் இரு மைந்தர்களாகிய மனாசேயையும் எப்ராயிமையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

இதோ உம் மகன் யோசேப்பு உம்மைக் காண வந்திருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டவுடன், யாக்கோபு பெருமுயற்சி செய்து எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தார்.

யாக்கோபு யோசேப்பை நோக்கி, "எல்லாம் வல்ல இறைவன் கானான் நாட்டிலுள்ள லூசு என்ற இடத்தில் எனக்குக் காட்சியளித்து ஆசி வழங்கி,

நான் உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன். உன்னைத் திரளான மக்கள் கூட்டமாக ஆக்குவேன். இந்நாட்டை உனக்கும் உனக்குப் பின் உன் வழிமரபினர்க்கும் என்றுமுள உடைமையாகத் தருவேன் என்று வாக்களித்தார்.

ஆகையால், நான் எகிப்திற்கு வந்து உன்னிடம் சேர்வதற்கு முன்பே உனக்கு இந்நாட்டில் பிறந்த இரு மைந்தரும் என் புதல்வர்களாய் இருப்பார்கள். ரூபன், சிமியோன் போன்று எப்ராயிமும் மனாசேயும் என்னுடையவர்களே.

இவர்களுக்குப்பின் உனக்குப் பிறக்கும் ஏனைய புதல்வர்கள் உன்னுடையவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தங்கள் மூத்த சகோதரர்களின் பெயர் வரிசையில் சேர்க்கப்பட்டு, அவர்களது உரிமையில் பங்கு பெறுவர்.

ஏனெனில், நான் பதானைவிட்டு வரும்பொழுது, வழியில் ராகேல் கானான் நாட்டில் இறந்து என்னைத் துயரத்தில் ஆழ்த்தினாள். அப்பொழுது நான் எப்ராத்துக்கு அருகில் இருந்தேன். எப்ராத்துக்கு அதாவது பெத்லகேமுக்குப் போகும் வழியில் அவளை அடக்கம் செய்தேன்" என்றார்.

பின் அவர் யோசேப்பின் புதல்வர்களைக் கொண்டு, இவர்கள் யார்? என்று கேட்டார்.

யோசேப்பு தம் தந்தையிடம், இந்நாட்டில் கடவுள் எனக்குத் தந்தருளின மைந்தர்கள் இவர்கள்தாம் என்று சொல்ல, அவர், அவர்களை என் அருகில் கொண்டு வா: நான் அவர்களுக்கு ஆசி வழங்குகிறேன் என்றார்.

ஏனெனில், வயது முதிர்ச்சியினால் இஸ்ரயேலின் பார்வை மங்கிப்போக, அவர் எதையும் காண முடியாதவராய் இருந்தார். யோசேப்பு அவர்களை அவர் அருகில் கொண்டுவந்தவுடன் அவர் அவர்களை முத்தமிட்டு அரவணைத்துக் கொண்டார்.

பின்னர், இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி, "உன் முகத்தை நான் காண மாட்டேன் என்றே நினைத்தேன்: ஆனால் உன் வழிமரபையும் கூட நான் காணும்படி கடவுள் அருள்செய்தார்" என்றார்.

பின்னர் யோசேப்பு அவர்மடியிலிருந்த தம் பிள்ளைகளை இறக்கிவிட்டு, தரையில் முகம் குப்புறவிழுந்து வணங்கினார்.

பின்பு யோசேப்பு எப்ராயிமைத் தம் வலக்கையால் இஸ்ரயேலுக்கு இடப்புறமும், மனாசேயைத் தம் இடக்கையால் இஸ்ரயேலுக்கு வலப்புறமும் இருக்கும்படி அழைத்து வந்து இருவரையும் அவர் அருகில் நிறுத்தினார்.

ஆனால் இஸ்ரயேல் தம் கைகளைக் குறக்காக நீட்டி வலக்கையை இளையவன் எப்ராயிமின் தலைமீதும் இடக்கையை தலைமகன் மனாசேயின் தலைமீதும் மாற்றி வைத்தார்.

அவர் யோசேப்புக்கு ஆசி வழங்கிக் கூறியது: "என் தந்தையரான ஆபிரகாமும் ஈசாக்கும் எந்தக் கடவுள் திருமுன் நடந்து வந்தனரோ அந்தக் கடவுளே இன்று வரை என் வாழ்நாள் முழுவதும் எனக்கு ஆயராக விளங்கிவருகிறார்.

அந்தக் கடவுள், என்னை எல்லாத் தீமையினின்றும் மீட்ட தூதர், இச்சிறுவர்களுக்கு ஆசி வழங்குவாராக! மேலும், என் பெயரும், என் தந்தையரான ஆபிரகாம், ஈசாக்கின் பெயர்களும் இவர்கள் மூலம் நிலைநிற்பனவாக! மண்ணுலகில் இவர்கள் பெருந்திரளாகப் பல்குவார்களாக!"

தம் தந்தை வலக்கையை எப்ராயிம் தலைமேல் வைத்திருந்தது யோசேப்புக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர் எப்ராயிம் தலைமேலிருந்த தம் தந்தையின் கையை மனாசேயின் தலைமேல் வைக்கும்படி எடுக்க முயன்றார்.

யோசேப்பு தம் தந்தையை நோக்கி, "தந்தையே! இது சரியன்று: இவன் தான் தலைமகன். இவன் தலையின் மேல் உமது வலக்கையை வையும்" என்றார்.

ஆனால் அவர் தந்தை மறுத்து, "தெரியும் மகனே, எனக்குத் தெரியும். இவனும் ஒரு மக்களினமாகப் பல்கிப் பெருகுவான். ஆனால் இவன் தம்பி இவனிலும் பெரியவன் ஆவான். அவன் வழிமரபினர் மக்களினங்களாகப் பெருகுவர்" என்று கூறினார்.

மேலும், அவர் அன்று அவர்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது: " எப்ராயிம், மனாசேயைப்போல் உன்னையும் கடவுள் வளரச் செய்வாராக என்று உங்கள் பெயரால் இஸ்ரயேல் ஆசி வழங்கும்." இவ்வாறு அவர் எப்ராயிமை மனாசேக்கு முன் வைத்தார்.

பின்பு இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி, "இதோ நான் சாகப் போகிறேன். கடவுள் உங்களோடு இருப்பார். உங்கள் மூதாதையரின் நாட்டிற்கு உங்களை அவர் திரும்பவும் நடத்திச் செல்வார்.

நான் என் வாளாலும் வில்லாலும் எமோரியரிடமிருந்து கைப்பற்றிய செக்கேம் பகுதியை, உன் சகோதரரை விட உயர்ந்தவன் என்ற முறையில், உனக்கே தருகிறேன்" என்றார்.

அதிகாரம் 49.

யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது: என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழவிருப்பதை நான் அறிவிக்கப் போகிறேன்.

கூடிவந்து உற்றுக்கேளுங்கள்: யாக்கோபின் புதல்வர்களே! உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.

ரூபன்! நீயே என் தலைமகன்: என் ஆற்றல் நீயே: என் ஆண்மையின் முதற்கனி நீயே: மாண்பிலும் வலிமையிலும் முதன்மை பெற வேண்டியவனும் நீயே!

ஆனால், நீரைப்போல் நிலையற்றவனாய், முதன்மையைப் பெறமாட்டாய். ஏனெனில் உன் தந்தையின் மஞ்சத்தில் ஏறினாய்: ஆம், என் படுக்கையைத் தீட்டுப்படுத்தினாய்.

சிமியோன், லேவி இருவரும் உண்மையில் உடன் பிறப்புகளே! அவர்களுடைய வாள்கள் வன்முறையின் கருவிகள்!

மனமே, அவர்களது மன்றத்தினுள் நுழையாதிரு! மாண்பே, அவர்களது அவையினுள் அமராதிரு! ஏனெனில் கோப வெறி கொண்டு அவர்கள் மனிதர்களைக் கொன்று குவித்தார்கள். வீம்புக்கென்று அவர்கள் எருதுகளை வெட்டி வதைத்தார்கள்.

அவர்களது கடுமையான சினம் சபிக்கப்படும். அவர்களது கொடுமையான கோபம் சபிக்கப்படும். அவர்களை யாக்கோபினின்று பிரிந்து போகச் செய்வேன். அவர்களை இஸ்ரயேலினின்று சிதறடிப்பேன்.

யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர். உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும். உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர்.

யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென, அவன் கால் மடக்கிப் படுப்பான்: அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்?

அரசுரிமை உடையவர் வரும்வரையில் மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது: அவன் மரபை விட்டுக் கொற்றம் மறையாது.

அவன் திராட்சைக் செடியில் தன் கழுதையையும், செழுமையான திராட்சைக்கொடியில் தன் கழுதைக் குட்டியையும் கட்டுவான். திராட்சை இரசத்தில் தன் உடையையும் திராட்சைச் சாற்றில் தன் மேலாடையையும் தோய்த்திடுவான்.

அவன் கண்கள் திராட்சை இரசத்தினும் ஒளியுள்ளவை: அவன் பற்கள் பாலினும் வெண்மையானவை.

செபுலோன், கடற்கரையில் வாழ்ந்திடுவான்: அவன் கப்பல் துறையில் இருந்திடுவான்: அவனது எல்லை சீதோன் வரை பரவியிருக்கும்.

இசக்கார், இரு பொதியின் நடுவே படுத்திருக்கும் வலிமைமிகு கழுதை போன்றவன்.

அவன் இளைப்பாறும் இடம் நல்லதென்றும் நாடு மிக வசதியானதென்றும் காண்பான்: எனவே சுமை தூக்கத் தோள் சாய்ப்பான். அடிமை வேலைக்கு இணங்கிடுவான்.

தாண், இஸ்ரயேலின் குலங்களில் ஒன்றாக, தன் மக்களுக்கு நீதி வழங்குவான்.

தாண், வழியில் கிடக்கும் பாம்பு ஆவான்: அவன் பாதையில் தென்படும் நாகம் போல, குதிரைமேல் இருப்பவன் மல்லாந்து விழும்படி அதன் குதிங்காலைக் கடித்திடுவான்.

ஆண்டவரே! உமது மீட்பிற்காகக் காத்திருக்கிறேன்.

காத்து, கொள்ளைக் கூட்டத்தின் தாக்குதலுக்கு உள்ளாவான். அவனும் அவர்களைத் துரத்தித் தாக்கிடுவான்.

ஆசேரின் நிலம் ஊட்ட மிக்க உணவளிக்கும். மன்னனும் விரும்பும் உணவை அவன் அளித்திடுவான்.

நப்தலி, அழகிய மான்குட்டிகளை ஈனும் கட்டவிழந்த பெண்மான் ஆவான்.

யோசேப்பு, கனிதரும் கொடி ஆவான்: நீரூற்றருகில் மதில்மேல் படரும் கொடிபோல் கனி தருவான்.

அவனுக்கு வில்லில் வல்லார் தொல்லை கொடுத்தார்: அவன்மீது அம்பெய்தார்: அவனிடம் பகை வளர்த்தார்.

ஆனால், அவனது வில் உறுதியாய் நின்றது: அவனுடைய புயங்கள் துடிப்புடன் இயங்கின: ஏனெனில், யாக்கோபின் வலியவர் கைகொடுத்தார். இஸ்ரயேலின் பாறையே ஆயராய் இருந்தார்.

உன் தந்தையின் இறைவனே உனக்குத் துணையிருப்பார்: எல்லாம் வல்லவரே உனக்கு ஆசி வழங்குவார்: மேலே வானத்தினின்று வரும் ஆசியாலும் கீழே ஆழத்தினின்று வரும் ஆசியாலும் கொங்கைகளுக்கும் கருப்பைகளுக்கும் உரிய ஆசியாலும் அவர் உனக்கு ஆசி வழங்குவார்.

தந்தையின் ஆசிகள், பழம் பெரும் மலைகளின் ஆசியிலும், என்றுமுள குன்றுகளின் வள்ளன்மையிலும், வலியவை: இவை அனைத்தும் யோசேப்பின் மீது இறங்கிடுக! தன் சகோதரரின் இளவரசனாய்த் திகழ்வோனின் நெற்றியில் அவை துலங்கிடுக!

பென்யமின், பீறிக்கிழிக்கும் ஓநாய்க்கு ஒப்பானவன்: காலையில் வேட்டையாடிய இரையை அவன் விழுங்குவான்: மாலையில், கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வான்".

இவர்கள் அனைவரும் இஸ்ரயேலின் பன்னிரு குலத்தார் ஆவர். இவற்றை மொழிந்து இவர்களின் தந்தை இவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய ஆசியை அளித்து வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: "இதோ நான் என் இனத்தவரோடு சேர்க்கப்படவிருக்கிறேன். என்னை என் தந்தையருடன் இத்தியனான எப்ரோனின் நிலத்திலுள்ள குகையில் அடக்கம் செய்யுங்கள்.

அது கானான் நாட்டில் மம்ரே பகுதிக்கு அருகேயுள்ள மக்பேலாவின் நிலத்தில் அமைந்துள்ளது. ஆபிரகாம் இத்தியனான எப்ரோனிடமிருந்து அந்த நிலத்தைக் கல்லறை நிலத்திற்கென விலைக்கு வாங்கினார்.

அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவி சாராவையும் அடக்கம் செய்தனர்: அங்கு ஈசாக்கையும் அவர் மனைவி ரெபேக்காவையும் அடக்கம் செய்தனர்: அங்கே தான் நானும் லேயாவை அடக்கம் செய்துள்ளேன்.

அந்நிலமும் அக்கல்லறையும் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றவை."

யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளைகளை வழங்கி முடித்தபின், தம் கால்களைப் படுக்கையினுள் மடக்கிக்கொண்டு உயிர் நீத்து, தம் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

அதிகாரம் 50.

அப்பொழுது யோசேப்பு, தம் தந்தையின் முகத்தின் மீது விழுந்து அழுது அவரை முத்தமிட்டார்.

பின்பு, தம் தந்தையின் உடலை மருத்துவ முறையில் பாதுகாப்புச் செய்யும்படி தம் பணியாளர்களான மருத்துவர்களுக்கு யோசேப்பு கட்டளையிட்டார். அவர்களும் அப்படியே செய்தனர்.

இதற்கு நாற்பது நாள்கள் தேவைப்பட்டன. ஏனெனில் ஒரு சடலத்திற்கு முறையான பாதுகாப்புச் செய்ய நாற்பது நாள்கள் தேவைப்படும். எகிப்தியர் அவருக்காக எழுபது நாள்கள் துக்கம் கொண்டாடினர்.

துக்க நாள்கள் முடிந்த பின், யோசேப்பு பார்வோன் வீட்டாரிடம், "உங்கள் பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருக்கிறது என்றால், பார்வோனின் செவிகளில் இவ்வாறு சொல்லுங்கள்:

தந்தை, நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆகவே, நான் எனக்காகக் கானான் நாட்டில் வெட்டி வைத்துள்ள கல்லறையில் என்னை நீ அடக்கம் செய் என்று சொல்லி என்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டார். ஆகவே, இப்பொழுது நான் அங்கே போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர எனக்கு விடை கொடுங்கள்" என்றார்.

பார்வோன், "நீர் உறுதிமொழி கொடுத்துள்ளபடியே உம் தந்தையை அடக்கம் செய்யப் போய்வாரும்" என்றான்.

ஆகவே, யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்யச் செல்கையில், பார்வோனின் அலுவலர், குடும்பப் பெரியோர், எகிப்து நாட்டுப் பெரியோர் அனைவரும் அவருடன் சென்றனர்.

யோசேப்பின் வீட்டார், அவர் சகோதரர், அவர் தந்தை வீட்டார் அனைவரும் அவருடன் சென்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளையும் கால்நடைகளையும் மட்டும் கோசேன் பகுதியில் விட்டுச் சென்றனர்.

தேர்களும் குதிரை வீரர்களும் அவருடன் சென்றார்கள். இப்படியாக மிகப்பெரிய பரிவாரம் அவரைப் புடை சூழ்ந்து சென்றது.

அவர்கள் யோர்தான் நதிக்கு அப்பால் இருந்த கோரேன் அத்தத்து என்ற இடத்திற்கு வந்ததும் அங்கே ஓலமிட்டுக் கதறி ஒப்பாரி வைத்துப் பெரிதும் புலம்பினர். யோசேப்பு தம் தந்தைக்காக ஏழுநாள் புலம்பல் சடங்கு நடத்தினார்.

அங்கே, கானான் நாட்டில் வாழ்ந்த மக்கள் கோரேன் அத்தத்தில் நடந்த புலம்பல் சடங்கைக் கண்டு, "இது எகிப்தியரது பெருந்துயர்ப் புலம்பல் சடங்கு" என்றனர். ஆகவேதான் யோர்தானுக்கு அப்பால் இருந்த அந்த இடத்திற்கு ஆபேல் மிஸ்ராயிம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

இப்படியாக அவருடைய புதல்வர் அவர் கட்டளைப்படியே அவருக்குச் செய்ய வேண்டியது எல்லாம் செய்தனர்.

அவருடைய புதல்வர் அவரைக் கானான் நாட்டிற்கு எடுத்துச் சென்று மம்ரேக்கு எதிரில் மக்பேலா என்ற நிலத்தில் இருந்த குகையில் அடக்கம் செய்தனர். இந்த இடத்தை ஆபிரகாம் தமக்கென்று கல்லறை நிலம் இருக்க வேண்டும் என்பதற்காக எப்ரோன் என்ற இத்தியனிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்.

யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்தபின், அவரும் அவர் சகோதரரும் அவருடன் அவர் தந்தையை அடக்கம் செய்யச் சென்றிருந்த அனைவரும் எகிப்திற்குத் திரும்பினர்.

அப்பொழுது, யோசேப்பின் சகோதரர் தங்கள் தந்தை இறந்துவிட்டதைக் கண்டு, "யோசேப்பு நாம் அவருக்குச் செய்த அனைத்துத் தீமைகளையும் கருதி, இப்பொழுது நம்மை வெறுத்து உறுதியாகப் பழி வாங்குவர்" என்று எண்ணினர்.

எனவே அவர்கள் யோசேப்புக்கு இவ்வாறு செய்தி அனுப்பினர்: "உம் தந்தை இறப்பதற்குமுன், உன் சகோதரர் உனக்குத் தீங்கிழைத்ததன் மூலம் உண்டான குற்றப்பழியையும், பாவத்தையும் மன்னித்துவிடு என்று யோசேப்புக்குச் சொல்லுங்கள் என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.

ஆகவே, இப்பொழுது உம்தந்தையின் கடவுளுடைய அடியார்களாகிய எங்களின் குற்றப்பழியை மன்னித்தருளும்." அவர்கள் இதைத் தம்மிடம் அறிவித்தபோது யோசேப்பு அழுதார்.

அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள்பணிந்து, நாங்கள் உம் அடிமைகள் என்றனர்.

யோசேப்பு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்: நான் கடவுளுக்கு இணையானவனா?

நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்.

ஆகவே இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக்காப்பேன்" என்றார். இப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்: அவர்களுடன் இதமாகப் பேசிவந்தார்.

யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.

எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.

யோசேப்பு தம் சகோதரரிடம், "நான் சாகும் வேளை வந்துவிட்டது. ஆனால் கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தாம் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்" என்றார்.

மீண்டும் யோசேப்பு "கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். அப்பொழுது, நீங்கள் என் எலும்புகளை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்" என்று சொல்லி, இஸ்ரயேல் புதல்வரிடமிருந்து உறுதிமொழி பெற்றுக்கொண்டார்.

யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார். அவரது உடலை மருத்துவ முறைப்படி பாதுகாப்புச் செய்து எகிப்தில் ஒரு பெட்டியில் வைத்தனர்.

புத்தகம் 2. விடுதலைப் பயணம்

அதிகாரம் 1.

யாக்கோபோடும் தங்கள் குடும்பங்களோடும் எகிப்திற்குச் சென்ற இஸ்ரயேல் புதல்வர்களின் பெயர்கள் இவை:

ரூபன், சிமியோன், லேவி, யூதா:

இசக்கார், செபுலோன், பென்யமின்:

தாண், நப்தலி, காத்து, ஆசேர்.

யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும் மொத்தம் எழுபது பேர். யோசேப்பு ஏற்கனவே எகிப்தில் இருந்தார்.

பின்னர் யோசேப்பும் அவருடைய எல்லாச் சகோதரரும் அந்தத் தலைமுறையினர் அனைவருமே இறந்துபோயினர்.

இஸ்ரயேல் மக்களோ குழந்தைவளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர்: ஆள்பலத்தில் மேன்மேலும் வளர்ந்தனர்: இதனால் அந்நாடே அவர்களால் நிறைந்துவிட்டது.

இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.

அவன் தன் குடிமக்களை நோக்கி, ””இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.

அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு தந்திரமாய்ச் செயல்படுவோம், வாருங்கள். ஏனெனில் போர் ஏற்படுமாயின், அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்து கொள்வர்: நம்மை எதிர்த்துப் போரிடுவர்: இந்நாட்டிலிருந்தும் வெளியேறி விடுவர்”” என்று கூறினான்.

எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.

ஆயினும் எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்: பெருகிப் பரவினர். இதனால் எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர்.

எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கினர்:

கடினமான சாந்து செங்கல் வேலையாலும், அனைத்து வயல்வெளி வேலையாலும், மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும், அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர்.

எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது:

””எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்: ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்: பெண்மகவு என்றால் வாழட்டும்””.

ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.

எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி, ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்? என்று கேட்டான்.

அதற்கு மருத்துவப் பெண்கள் பார்வோனை நோக்கி, ””எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள்: ஏனெனில், அவர்கள் வலிமை கொண்டவர்கள்: மருத்துவப்பெண் வருமுன்னரே அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது”” என்று காரணம் கூறினர்.

இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார். இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார். அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர்.

இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்.

பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, ””பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழவிடுங்கள்”” என்று அறிவித்தான்.

அதிகாரம் 2.

இவ்வாறிருக்க, லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப்பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டார்.

அவள் கருவுற்று ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்: அது அழகாயிருந்தது என்று கண்டாள்: மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.

இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்: குழந்தையை அதனுள் வைத்து நைல்நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள்.

அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.

அப்போது பார்வோனின் மகள் நைல்நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்: அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்: அது அழுதுகொண்டிருந்தது.

அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். ””இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று”” என்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி,

””உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?”” என்று கேட்டாள்.

பார்வோனின் மகள் அவளை நோக்கி, ””சரி. சென்று வா”” என்றாள். அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.

பார்வோனின் மகள் அவளை நோக்கி, ””இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்”” என்றாள். எனவே குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண்.

குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக்கொண்டாள். நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன் என்று கூறி அவள் அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.

அக்காலத்தில் மோசே வளர்ந்துவிட்டபோது தம் இனத்தவரிடம் சென்றிருந்தார்: அவர்களுடைய பாரச் சுமைகளையும் பார்த்தார்: மேலும், தம் இனத்தவனான எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதையும் கண்டார்:

சுற்றுமுற்றும் பார்த்து, யாருமே இல்லையெனக் கண்டு, அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார்.

அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கிடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார்: குற்றவாளியை நோக்கி ””உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?”” என்று கேட்டார்.

அதற்கு அவன், ””எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்? என்று சொன்னான். இதனால் மோசே அச்சமுற்றார்: ””நடந்தது தெரிந்துவிட்டது உறுதியே”” என்று சொல்லிக் கொண்டார்!

இச்செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது மோசேயைக் கொல்லத் தேடினான். எனவே மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று.

அவர் ஒரு கிணற்றருகில் அமர்ந்திருக்க, மிதியானின் அர்ச்சகருடைய ஏழு புதல்வியரும் வந்து, தம் தந்தையின் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்ட நீர் மொண்டு தொட்டிகளை நிரப்பினர்.

அங்கு வந்த இடையர்கள் அவர்களை விரட்டினர். உடனே மோசே எழுந்து அவர்களுக்குப் பாதுகாப்பளித்தார். அவர்கள் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்டவும் செய்தார்.

அவர்கள் தம் தந்தையான இரகுவேலிடம் சென்றபோது அவர், ””என்ன, இன்று விரைவாக வந்துவிட்டீர்களே?”” என்றார்.

அவர்கள், ””எகிப்தியன் ஒருவன் இடையர்களின் தொல்லையிலிருந்து எங்களை விடுவித்ததோடு, எங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் இறைத்தான்: ஆட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்டினான்”” என்றார்கள்.

அவர் தம் புதல்வியரிடம், ””எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்? சாப்பிட அவனை அழைத்து வாருங்கள்”” என்று கூறினார்.

அவரோடு குடியிருக்க மோசே சம்மதிக்க, அவரும் மோசேக்குத் தம்மகள் சிப்போராவை மணமுடித்துக் கொடுத்தார்.

அவள் ஒரு மகனை ஈன்றெடுத்தாள். நான் வேற்று நாட்டில் அன்னியனாய் உள்ளேன் என்று கூறி மோசே அவனைக் கேர்சோம் என்று பெயரிட்டழைத்தார்.

இந்த நீண்ட காலத்தில் எகிப்திய மன்னன் இறந்துவிட்டான். இஸ்ரயேல் மக்களோ அடிமைத்தனத்தால் அழுது புலம்பினர். அடிமைத்தனத்தால் ஏற்பட்ட அவர்களது முறையீடு கடவுளை நோக்கி எழும்பிற்று.

அவர்களது புலம்பலைக் கடவுள் கேட்டார். ஆபிரகாமுடனும், ஈசாக்குடனும், யாக்கோபுடனும் தாம் செய்திருந்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.

கடவுள் இஸ்ரயேல் மக்களைக் கண்ணோக்கினார். அவர்களது நிலைமைகளையும் கடவுள் அறிந்து கொண்டார்.

அதிகாரம் 3.

மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார்.

அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை.

””ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்”” என்று மோசே கூறிக்கொண்டார்.

அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். மோசே, மோசே என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் ””இதோ நான்”” என்றார்.

அவர், ””இங்கே அணுகி வராதே: உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு: ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்”” என்றார்.

மேலும் அவர், ””உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே”” என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.

அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்: அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்: ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்.

எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு-அதாவது கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு-அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்.

இப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன்.

எனவே இப்போதே போ: இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்.

மோசே கடவுளிடம், ””பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?”” என்றார்.

அப்போது கடவுள், ””நான் உன்னோடு இருப்பேன். மேலும் இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே”” என்றுரைத்தார்.

மோசே கடவுளிடம், ””இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, அவர் பெயர் என்ன? என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?”” என்று கேட்டார்.

கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார். மேலும் அவர், ””நீ இஸ்ரயேல் மக்களிடம், இருக்கின்றவர் நானே என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்”” என்றார்.

கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ””நீ இஸ்ரயேல் மக்களிடம், உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று சொல். இதுவே என்றென்றும் என்பெயர்: தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!

போ. இஸ்ரயேலின் பெரியோர்களை ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-எனக்குக் காட்சியளித்து இவ்வாறு கூறினார்: உங்களையும், எகிப்தில் உங்களுக்கு நேரிட்டதையும் நான் கண்ணாலே கண்டுகொண்டேன்.

எகிப்தின் கொடுமையிலிருந்து கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு-பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு-உங்களை நடத்திச் செல்வேன் என்று அறிவிப்பாய்.

அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர். நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள். அவனை நோக்கி, ””எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் போக இசைவு தாரும். ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும் என்று சொல்லுங்கள்.

கைவன்மையை கண்டாலன்றி, எகிப்திய மன்னன் உங்களைப் போக விடமாட்டான் என்பது எனக்குத் தெரியும்.

எனவே என் கையை ஓங்குவேன். நான் செய்யப்போகும் அனைத்து அருஞ்செயல்களாலும் எகிப்தினைத் தண்டிப்பேன். அதற்குப் பின் அவன் உங்களை அனுப்பிவிடுவான்.

அப்போது இம்மக்களை எகிப்தியர் பார்வையில் விரும்பத்தக்கவர் ஆக்குவேன். நீங்கள் வெறுமையாய்ப் போகப்போவதே இல்லை.

ஏனெனில் ஒவ்வொருத்தியும் தன் அண்டை வீட்டுக்காரியிடமும், தன் வீட்டிலுள்ள அன்னியப் பெண்ணிடமும் வெள்ளி அணிகலன்களையும் தங்க அணிகலன்களையும் மேலாடைகளையும் கேட்டு வாங்கிக் கொள்வாள்.

அவற்றை உங்கள் புதல்வருக்கும், உங்கள் புதல்வியருக்கும் அணிவியுங்கள். இவ்வாறு நீங்கள் எகிப்தைச் சூறையாடிச் செல்வீர்கள்””.

அதிகாரம் 4.

மோசே மறுமொழியாக, ””இதோ, அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்: என் பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள். ஏனெனில் ஆண்டவர் உனக்குக் காட்சியளிக்கவில்லை என்று சொல்வார்கள்”” என்று கூறினார்.

ஆண்டவர் அவரை நோக்கி, ””உன் கையில் இருப்பது என்ன?”” என்று கேட்டார். ஒரு கோல் என்றார் அவர்.

அதைத்தரையில் விட்டெறி என ஆணை விடுத்தார் ஆண்டவர். அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார். அது ஒரு பாம்பாக மாறியது. அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார்.

ஆண்டவர் அவரை நோக்கி, ””நீ உன் கையை நீட்டி வாலைப் பிடித்துத் தூக்கு”” என்றார். -அவரும் தம் கையை நீட்டி அதனைத் தூக்கினார். அது அவருடைய கையில் கோலாக மாறிவிட்டது.-

””இது, தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-உனக்குக் காட்சியளித்தார் என அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்வதற்காகவே””.

மேலும் ஆண்டவர் அவரை நோக்கி, ””உன் கையை உன் மடிக்குள் இடு”” என்றார். அவ்வாறே அவர் தம் கையைத் தம் மடிக்குள் இட்டார். அதை வெளியே எடுத்தபோது, அந்தோ, அவரது கை தொழுநோய் கண்டு உறைபனி நிறமாயிருந்தது.

பின்னர் ஆண்டவர், ””உன் கையை உன் மடிக்குள் மறுபடியும் இடு”” என்றார். அவ்வாறே அவரும் தம் கையை மறுபடியும் மடிக்குள் இட்டார். மடியிலிருந்து அதை அவர் எடுத்தபோது, இதோ தம் உடம்பின் நிறமாகவே அது மாறிவிட்டிருந்தது.

அப்போது ஆண்டவர், ””அவர்கள் உன்னை நம்பாமலும் முன்னைய அருஞ்செயலின் பொருளை உணராமலும் போனால், பின்னைய இவ்வருஞ்செயலின் பொருளை உணர்ந்தாவது நம்பக்கூடும்!

அவர்கள் இவ்விரு அருஞ்செயல்களையும்கூட நம்பாமல் உன் பேச்சையும் கேட்காமல் போனால், நைல்நதி நீரை முகந்து கட்டாந்தரையில் ஊற்றுவாய். நைல் நதியில் முகந்த தண்ணீர் கட்டாந்தரையில் இரத்தமாக மாறிவிடும்”” என்றார்.

மோசே ஆண்டவரிடம்: ””ஜயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கும் முன்போ, பேசிய பின்போ, நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில், எனக்கு வாய் திக்கும்: நாவும் குழறும்”” என்றார்.

ஆண்டவர் அவரிடம், ””மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே!

ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்: நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்”” என்றார்.

அதற்கு அவர், ””வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!”” என்றுரைத்தார்.

இதைக்கேட்டு ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு பின்வருமாறு கூறினார்: ””லேவியனான ஆரோன் உனக்குச் சகோதரன் அல்லவா? அவன் நாவன்மை உடையவன் என்று எனக்குத் தெரியும். இதோ அவன் உன்னைச் சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறான். அவன் உன்னைக் காணும்போது மனமகிழ்வான்.

நீ அவனிடம் பேசி, இவ்வார்த்தைகளை அவன் வாயில் வைப்பாய். நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து கொண்டு நீங்கள் செய்ய வேண்டியவற்றை உங்களுக்கு அறிவுறுத்துவேன்.

உனக்குப் பதிலாக மக்களிடம் அவன் பேசுவதால், அவன் உனக்கு வாயாக இருப்பான். நீயோ அவனுக்குக் கடவுள் போல் இருப்பாய்.

இந்தக் கோலைக் கையில் எடுத்துச் செல்வாய். இதைக் கொண்டு நீ அருஞ்செயல்கள் ஆற்றுவாய்!””

மோசே தம் மாமனார் இத்திரோவிடம் திரும்பிச்சென்று, அவரை நோக்கி, ””எகிப்தில் உள்ள என் இனத்தவரிடம் நான் திரும்பிப் போகவும், அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கவும் வேண்டும்”” என்று கூற, இத்திரோ மோசேயைப் பார்த்து, ””சமாதானமாய்ப் போய்வா”” என்றார்.

மிதியான் நாட்டில் ஆண்டவரும் மோசேயை நோக்கி, ””எகிப்திற்குத் திரும்பிப் போ: ஏனெனில் உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லோரும் இறந்துவிட்டனர்”” என்றுரைத்தார்.

எனவே மோசே தம் மனைவியையும் தம் புதல்வர்களையும் ஒரு கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் சென்றார். கடவுளின் கோலையும் மோசே தம் கையில் எடுத்துக்கொண்டார்.

ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ””பார், நீ எகிப்திற்குத் திரும்பிச் சென்றபின், நான் உன் கையில் ஒப்படைத்துள்ள எல்லா அருஞ் செயல்களையும் பார்வோன் முன்னிலையில் செய்து காட்டு.

நான் அவன் இதயத்தைக் கடினப்படுத்துவேன். அவன் மக்களைப் போகவிடமாட்டான். நீ பார்வோனிடம், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இஸ்ரயேல் என் மகன்: என் தலைப்பிள்ளை.

நான் உனக்குக் கூறிவிட்டேன்: என்னை வழிபடுமாறு என் மகனைப் போகவிடு! அவனை அனுப்ப நீ மறுத்துவிட்டால் நானே உன் மகனை, உன் தலைப்பிள்ளையை வெட்டி வீழ்த்தப்போகிறேன் என்று சொல்வாய்””.

ஆண்டவர் மோசேயை வழியில் ஒரு சத்திரத்தில் எதிர்கொண்டு அவரைக் கொல்லப்பார்த்தார்.

அப்போது சிப்போரா ஒரு கூரிய கல்லை எடுத்துத் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து அதைக்கொண்டு மோசேயின் பாதங்களைத் தொட்டு, ””நீர் எனக்கு இரத்த மணமகன்”” என்றாள்.

பின்பு ஆண்டவர் அவரைவிட்டு விலகினார். அப்போது அவள், விருத்தசேதனத்தின் வழியாய் நீர் எனக்கு இரத்த மணமகன் என்றாள்.

இதற்கிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி, ””மோசேயைச் சந்திக்க பாலைநிலத்திற்குப் பேர்”” என்றார். அவரும் சென்று கடவுளின் மலையில் அவரைச் சந்தித்து முத்தமிட்டார்.

தம்மை அனுப்பியபொழுது, ஆண்டவர் கூறிய எல்லா வார்த்தைகளைப்பற்றியும் ஒப்படைத்த எல்லா அருஞ்செயல்களைப் பற்றியும் மோசே ஆரோனுக்கு அறிவுறுத்தினார்.

மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்களின் பெரியோர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள். 30 ஆண்டவர் மோசேயிடம் கூறியிருந்த எல்லா வார்த்தைகளையும் ஆரோன் எடுத்துக் கூறினார். அருஞ்செயல்களையும் மக்கள் பார்க்கும் வண்ணம் செய்தார். மக்களும் நம்பினர்.

ஆண்டவர் இஸ்ரயேல் மக்களைச் சந்தித்துவிட்டார் என்றும் அவர்களது துயரத்தைக் கண்ணோக்கிவிட்டார் என்றும் மக்கள் கேள்விப்பட்டபோது, குப்புறவிழுந்து தொழுதனர்.

அதிகாரம் 5.

பின்னர் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து அவனை நோக்கி, ””பாலைநிலத்தில் எனக்கொரு விழா எடுக்குமாறு என் மக்களைப் போகவிடு என இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைத்துள்ளார்”” என்று அறிவித்தனர்.

அதற்குப் பார்வோன், ””யார் அந்த ஆண்டவர்? அவரது பேச்சைக் கேட்டு இஸ்ரயேலை நான் ஏன் அனுப்ப வேண்டும்? அந்த ஆண்டவரை நான் அறியேன்: இஸ்ரயேலரை நான் போகவிடவும் மாட்டேன்”” என்று கூறினான்.

அதற்கு அவர்கள், ””எபிரேயரின் கடவுள் எங்களைச் சந்தித்தார். பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் செய்து எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடுமாறு எங்களை நீர் போகவிடும். இல்லையெனில், கொள்ளை நோயாலோ வாளாலோ அவர் எங்களைத் தாக்கிவிடுவார்”” என்று கூறினர்.

எகிப்திய மன்னன் அவர்களை நோக்கி, ””மோசே! ஆரோன்! நீங்கள் இம்மக்களை அவர்களின் வேலையைச் செய்ய விடாமல் ஏன் குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைகளுக்குச் செல்லுங்கள்”” என்று கூறினான்.

மேலும், பார்வோன், ””பாருங்கள், நாட்டில் உங்கள் மக்கள் இப்போது பெருந்திரளாயுள்ளனர். அப்படியிருக்க, அவர்களைத் தம் வேலையிலிருந்து ஓய்ந்திருக்கச் செய்கிறீர்கள்”” என்றான்.

அதே நாளில், பார்வோன் மக்களிடம் அடிமைவேலை வாங்கும் அதிகாரிகளுக்கும் மேற்பார்வையாளருக்கும் ஆணைவிடுத்து,

””செங்கல் செய்வதற்காக இம்மக்களுக்கு இதுவரை வைக்கோல் கொடுத்துவந்ததுபோல் இனிச் செய்யவேண்டாம்! அவர்களே போய் வைக்கோல் சேகரித்துக் கொள்ளட்டும்.

ஆயினும் இதுவரை அவர்கள் அறுத்துக் கொடுத்த அளவு செங்கல் தயாரித்துக் கொடுப்பது அவர்கள் கடமை. அதிலிருந்து எதுவும் குறையக்கூடாது. ஏனெனில், அவர்கள் சோம்பேறிகள். இதனால்தான், நாங்கள் போகவேண்டும்: எங்கள் கடவுளுக்குப் பலியிடவேண்டும் என்று அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஆள்களுக்கு வேலைப்பளுவை இன்னும் மிகுதியாக்குங்கள். வெற்றுப் பேச்சுகளை நம்பாமல் அங்கே அவர்கள் வேலை செய்யட்டும்”” என்றான்.

எனவே வேலைவாங்கும் அதிகாரிகளும் மேற்பார்வையாளர்களும் மக்களிடம் சென்று அவர்களை நோக்கி, ””பார்வோன் கூறுவது இதுவே: நான் உங்களுக்கு வைக்கோல் கொடுக்கமாட்டேன்.

நீங்களே போய், உங்களுக்குத் தேவையான வைக்கோலைக் கிடைக்கும் இடத்திலிருந்து சேகரித்துக்கொள்ளுங்கள்”” என்று அறிவித்தனர்.

எனவே வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடி சேகரிப்பதற்காக மக்கள் எகிப்து நாடெங்கும் அலைந்து திரிந்தனர்.

””வைக்கோல் உள்ளபோது செய்துவந்த அளவில் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வேலையை அன்றே முடித்துவிடுங்கள்”” என்று கூறி, வேலை வாங்கும் அதிகாரிகள் அவசரப்படுத்தினர்.

””முன்பு நீங்கள் செய்து வந்த அளவுக்குச் செங்கல் அறுப்பு வேலையை நேற்றும் இன்றும் ஏன் செய்துமுடிக்கவில்லை?”” என்று கேட்டு, பார்வோனின் வேலைவாங்கும் அதிகாரிகள் தாங்கள் இஸ்ரயேல் மக்களுள் மேற்பார்வையாளராக நியமித்திருந்தவர்கள் அடித்தனர்.

இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் பார்வோனிடம் வந்து, ””ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்?

உம் பணியாளர்களாகிய எங்களுக்கு வைக்கோல் தராமலேயே செங்கல் அறுங்கள் என்று வேலை வாங்கும் அதிகாரிகள் கூறுகிறார்கள். குற்றம் உம் மக்களுடையதாய் இருக்க, உம் பணியாளர்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம்”” என்று கதறினர்.

அதற்கு அவன், ””சாம்பேறிகள்: நீங்கள் சோம்பேறிகள்: அதனால்தான் நாங்கள் போய் ஆண்டவருக்குப் பலியிட வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.

எனவே இப்போதே வேலைக்குச் செல்லுங்கள். வைக்கோல் உங்களுக்குத் தரப்படமாட்டாது. எனினும் வழக்கமான எண்ணிக்கையின்படி செங்கல் அறுத்துக் கொடுக்க வேண்டும்”” என்று கூறினான்.

அந்தந்த நாளுக்குரிய செங்கல் தொகையிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது என்று சொல்லக் கேட்டபோது, தாங்கள் இக்கட்டில் மாட்டிக்கொண்டதாக இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் கண்டனர்.

பார்வோனிடமிருந்து திரும்பி வரும்போது, தங்களைச் சந்திப்பதற்காக நின்று கொண்டிருந்த மோசேயையும் ஆரோனையும் அவர்கள் சந்தித்து அவர்களை நோக்கி,

””ஆண்டவர் உங்களைக் கவனித்துக் கொள்ளட்டும்! உங்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்! ஏனெனில், பார்வோன் முன்னிலையிலும் அவனுடைய அலுவலர் முன்னிலையிலும் நம்மவர் வாடையே பிடிக்காதவாறு நீங்கள் செய்து விட்டீர்கள்! நம்மைக் கொல்வதற்கான வாளை அவர்கள் கையில் வைத்துவிட்டீர்கள்”” என்றனர்.

அப்போது மோசே ஆண்டவரிடம் திரும்பிச் சென்று, ””என் தலைவரே! இம்மக்களுக்கு நீர் ஏன்தொல்லை கொடுக்கிறீர்? எதற்காக இப்படி என்னை அனுப்பிவைத்தீர்?

உமது பெயரால் பேசுவதற்காகப் பார்வோனிடம் வந்ததிலிருந்தே இம்மக்களுக்கு அவனால் இடர்பாடுதான் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீர் உம் மக்களுக்கு விடுதலையளிக்கவும் இல்லை”” என்று கூறினார்.

அதிகாரம் 6.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய்: என் கைவன்மை கண்டு அவன் அவர்களைப் போக விடுவான்: தன் நாட்டிலிருந்து துரத்தியும் விடுவான்”” என்றார்.

கடவுள் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்:

””நானே ஆண்டவர். ஆபிரகாமுக்கும் ஈசாக்கும் யாக்கோபுக்கும் ஆண்டவர் என்ற என்பெயரால் என்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லையெனினும், எல்லாம் வல்ல கடவுளாகக் காட்சியளித்தவர் நானே!

மேலும் அவர்கள் அன்னியராக அலைந்தபோது தங்கியிருந்த கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களுடன் உடன்படிக்கை நிலைநாட்டியதும் நானே!

மேலும், எகிப்தியர் அடிமைப்படுத்தி வைத்துள்ள இஸ்ரயேல் மக்களின் புலம்பலைக் கேட்டு என் உடன்படிக்கையை நினைவுகூர்ந்துள்ளேன்.

நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது: நானே ஆண்டவர். எகிப்தியரின் பாரச் சுமைகளை நான் உங்களிடமிருந்து அகற்றுவேன். அவர்கள் உங்களை அடிமைப்படுத்துவதிலிருந்து விடுவிப்பேன். ஓங்கிய கையாலும் மாபெரும் தண்டனைத் தீர்ப்புகளாலும் நான் உங்களுக்கு மீட்பளிப்பேன்.

உங்களை நான் என் மக்களாகத் தேர்ந்தெடுப்பேன். உங்களுக்குக் கடவுளாக நான் இருப்பேன். எகிப்தியர் சுமத்திய பாரச் சுமைகளை அகற்றி உங்களை விடுவித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

ஆபிரகாமுக்கும் ஈசாக்கும் யாக்கோபுக்கும் நான் கொடுப்பதாக வாக்களித்த அந்த நாட்டிற்கு நான் உங்களைக் கூட்டிக்கொண்டு செல்வேன். அதை உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுப்பேன். நானே ஆண்டவர்!””

இவற்றையெல்லாம் மோசே இஸ்ரயேல் மக்களிடம் எடுத்துச் சொல்லியும், மன ஏக்கத்தையும் வேலையின் கொடுமையையும் முன்னிட்டு அவர்கள் மோசேக்குச் செவிகொடுக்கவில்லை.

ஆண்டவர் மோசேயை நோக்கி,

””எகிப்திய மன்னனாகிய பார்வோன் தன் நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிடும்படி நீ அவனிடம் போய்ச் சொல்”” என்றுரைத்தார்.

மோசே ஆண்டவரிடம் பேசி, ””இஸ்ரயேல் மக்களே எனக்குச் செவிசாய்க்காதிருக்க, பார்வோன் எவ்வாறு எனக்குச் செவிசாய்க்கப் போகிறான்? நானோ பண்பட்ட உதடுகள் இல்லாதவன்”” என்று சொன்னார்.

ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களைக் கொண்டுவருவதற்காக இஸ்ரயேல் மக்களிடமும் எகிப்திய மன்னன் பார்வோனிடமும் செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

அவர்களின் மூதாதையர் வழிவந்த குடும்பத் தலைவர்கள் இவர்களே: இஸ்ரயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்: அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி. இவைகளே ரூபன் வழிவந்த குடும்பங்கள்.

சிமியோனின் புதல்வர்: எமுவேல், யாமின், ஓகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல். இவைகளே சிமியோன் வழிவந்த குடும்பங்கள்.

தம் தலைமுறைகளின் வரிசைப்படி லேவியின் புதல்வரின் பெயர்கள்: கேர்சோன், கோகாத்து, மெராரி. லேவி வாழ்ந்தது நூற்று முப்பத்தேழு ஆண்டுகள்.

கேர்சோனின் புதல்வர்: லிப்னி, சிமெயி. இவர்கள் தம்தம் குடும்பங்களுக்குத் தலைவர்கள்.

கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல். கோகாத்து வாழ்ந்தது நூற்று முப்பத்துமூன்று ஆண்டுகள்.

மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி. இவைகளே தலைமுறை வரிசைப்படி லேவியின் குடும்பங்கள்.

அம்ராம் தன் தந்தையின் சகோதரியாகிய யோக்கபேது என்பவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். அவனுக்கு அவள் ஆரோன், மோசே என்பவர்களைப் பெற்றெடுத்தாள். அம்ராம் வாழ்ந்தது நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள்.

இட்சகாரின் புதல்வர்: கோராகு, நெபேகு, சிக்ரி.

உசியேலின் புதல்வர்: மீசாவேல், எல்சாபான், சித்ரி.

அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமான எலிசபாவை ஆரோன் மனைவியாக்கிக்கொண்டார். அவருக்கு அவள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் என்பவர்களைப் பெற்றெடுத்தாள்.

கோராகின் புதல்வர்: அசீர், எல்கானா, அபியசாபு. இவைகளே கோராகின் குடும்பங்கள்.

ஆரோனின் மகன் எலயாசர், பூற்றியேல் என்பவனின் புதல்வியருள் ஒருத்தியைத் தனக்கு மனைவியாகக் கொண்டான். அவனுக்கு அவள் பினகாசு என்பவனைப் பெற்றெடுத்தாள். தம் குடும்ப வரிசைக்கேற்ப லேவியரின் மூதாதையருள் தலைவர்கள் இவர்களே.

தம்தம் அணிவகுப்பின்படி இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்யுங்கள் என்று ஆண்டவரிடம் கட்டளை பெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.

இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்வதற்காக எகிப்திய மன்னனாகிய பார்வோனுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களும் மோசே, ஆரோன் ஆகிய இவர்களே!

அக்காலத்தில் எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேயுடன் பேசியருளினார்.

ஆண்டவர் மோசேயுடன் பேசி, ””நானே ஆண்டவர். நான் உன்னோடு பேசுவதையெல்லாம் எகிப்திய மன்னன் பார்வோனிடம் நீ எடுத்துக் கூறு”” என்று அறிவித்தபோது, 30 மோசே ஆண்டவரிடம், ””பாரும், நான் பண்பட்ட உதடுகள் இல்லாதவன். பார்வோன் எவ்வாறு எனக்குச் செவி கொடுக்கப்போகிறான்?”” என்றார்.

அதிகாரம் 7.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””பார், நான் உன்னைப் பார்வோனுக்குக் கடவுளாக வைத்துள்ளேன். உன் சகோதரன் ஆரோன் உன் வாக்கினனாக இருப்பான்.

நான் உனக்குக் கட்டளை இடுவதையெல்லாம் நீ எடுத்துச் சொல்வாய். பார்வோன் தன் நாட்டினின்று இஸ்ரயேல் மக்களைப் போகவிடும்படி அவனிடம் உன் சகோதரன் ஆரோன் பேசுவான்.

நான் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்துவதோடு எகிப்து நாட்டில் என்னுடைய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் பெருகச் செய்வேன்.

பார்வோன் உங்களுக்குச் செவிசாய்க்க மாட்டான். எனவே நான் எகிப்திற்கு எதிராகக் கை ஓங்குவேன். பெரும் தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றியபின் என் மக்களாகிய இஸ்ரயேல் என்னும் படைத்திரளை எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்வேன்.

எகிப்திற்கு எதிராகக் கை ஓங்கி அவர்கள் நடுவினின்று இஸ்ரயேல் மக்களை நான் வெளியேறச் செய்யும்போது நானே ஆண்டவர் என எகிப்தியர் அறிந்து கொள்வர்”” என்றார்.

தங்களுக்கு ஆண்டவர் என்ன கட்டளையிட்டாரோ அதையே மோசேயும் ஆரோனும் செய்தனர்.

பார்வோனிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது மோசேக்கு வயது எண்பது: ஆரோனுக்கு வயது எண்பத்து மூன்று.

ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி,

””அருஞ்செயல் ஒன்று காட்டி உங்களை மெய்ப்பியுங்கள்”” என்று பார்வோன் உங்களை நோக்கிக் கூறினால் நீ ஆரோனிடம், உன் கோலை எடுத்து, பார்வோன் முன்னிலையில் விட்டெறி. அது பாம்பாக மாறும் என்று சொல்”” என்றார்.

மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் சென்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கிணங்கச் செயல்பட்டனர். ஆரோன் தமது கோலைப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் விட்டெறிந்ததும், அதுபாம்பாக மாறியது.

பார்வோன் தன் ஞானிகளையும் சூனியக்காரரையும் வரவழைத்தான். எகிப்திய மந்திரவாதிகளாகிய அவர்களும் தங்கள் வித்தைகளால் அவ்வாறே செய்தார்கள்.

அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கோலைக் கீழே இட, அவை பாம்புகளாக மாறின. ஆனால் ஆரோனின் கோல் அவர்கள் கோல்களை விழுங்கிவிட்டது.

பார்வோனின் மனமோ கடினப்பட்டது. ஆண்டவர் முன்னுரைத்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.

ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ””பார்வோனின் மனம் இறுகிப்போய்விட்டது. மக்களைப் போகவிட அவன் மறுக்கிறான்.

எனவே காலையில் நீ பார்வோனிடம் போ. அப்பொழுது அவன் தண்ணீரை நோக்கிச் சென்று கொண்டிருப்பான். அவனைச் சந்திப்பதற்காக நீ நைல் நதிக் கரையில் நின்று கொள்: பாம்பாக மாறிய கோலையும் கையில் எடுத்துக்கொள்.

நீ அவனிடம் கூற வேண்டியது: எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் என்னை உம்மிடம் அனுப்பிவைத்துள்ளார்: அவர் சொல்வது: பாலைநிலத்தில் எனக்கு வழிபாடு செய்யும்படி என் மக்களைப் போகவிடு. நீயோ இதுவரை செவிசாய்க்கவில்லை.

கையிலுள்ள கோலால் நானே நைல்நதி நீரை அடிப்பேன். அது இரத்தமாக மாறும்.

நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுக்கும். எகிப்தியர் நைல்நதி நீரைக் குடிக்க முடியாமல் திணறுவர். இவற்றால் நானே ஆண்டவர் என நீ அறிந்துக்கொள்வாய். என்று ஆண்டவர் கூறுகிறார்”” என்று சொல்.

மேலும் ஆண்டவர் மோசேயிடம், ””நீ ஆரோனை நோக்கி உனது கோலை எடு: எகிப்து நாட்டிலுள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகிய அனைத்து நீர்நிலைகள் மேலும் உன் கையை நீட்டு! அவை இரத்தமாக மாறும். ஆக, எகிப்து நாடெங்கும் மரத்தொட்டிகளிலும் கல்தொட்டிகளிலும் இரத்தம் நிற்கும் என்று சொல்”” என்றார்.

அவ்வாறே, ஆண்டவர் கட்டளைப்படி மோசேயும் ஆரோனும் செய்தனர். ஆரோன் கோலை உயர்த்திப் பார்வோன் மற்றும் அவனுடைய அலுவலர் முன்னிலையில் நைல்நதி நீரில் அடித்தார். நைல்நதி முழுவதும் இரத்தமாக மாறியது.

நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக நைல்நதி நாற்றமெடுத்தது. எகிப்தியர் நைல்நதி நீரைப் பருக இயலாமற் போயிற்று. எகிப்து நாடு முழுவதும் இரத்தமயமாகவே இருந்தது.

இது போலவே எகிப்திய மந்திரவாதிகளும் தம் வித்தைகளால் செய்து காட்டினர். எனவே பார்வோனின் மனம் கடினப்பட்டது. ஆண்டவர் அறிவித்திருந்தபடி அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.

பார்வோன் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான். அவன் மனம் இதையும் பொருட்படுத்தவில்லை.

எகிப்தியர் எல்லோரும் நைல்நதிப் பகுதிகளில் குடிநீருக்காகத் தோண்டினர். ஏனென்றால், நைல்நதி நீரைப் பருக அவர்களால் முடியவில்லை.

ஆண்டவர் நைல்நதியை அடித்து நாள்கள் ஏழு கடந்தன.

அதிகாரம் 8.

ஆண்டவர் மோசேயை நோக்கிக் கூறியது: ””நீ பார்வோனிடம் போய் அவனிடம், ஆண்டவர் கூறுகிறார்: எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு .

அவர்களை அனுப்ப நீ மறுத்தால், இதோ நானே உன் நிலப்பகுதியையெல்லாம் தவளைகளால் தாக்கப்போகிறேன்.

தவளைகள் நைல்நதியை நிரப்பி, பின்னர் உன் வீட்டிற்குள்ளும், உன் படுக்கை அறைக்குள்ளும், உன் படுக்கையிலும், உன் அலுவலர் உன் குடிமக்கள் வீட்டிலும், உன் அடுப்புகளிலும், மாவுபிசையும் தொட்டிகளிலும் ஏறிவந்துவிடும்.

உன் மேலும், உன் குடிமக்கள் மேலும், உன் அலுவலர் அனைவர் மேலும் தவளைகள் ஏறும் என்று சொல்.””

மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, ””நீ ஆரோனிடம், கோலைத் தாங்கியபடி உன் கையை நதிகள் மேலும் கால்வாய்களின் மேலும் குளம் குட்டைகள் மேலும் நீட்டி, எகிப்திய நிலத்தின் மேல் தவளைகள் ஏறிவரச் செய் என்று சொல்”” என்றார்.

ஆரோன் தம் கையை எகிப்தின் நீர் நிலைகள் மேல் நீட்டவே, தவளைகள் ஏறிவந்து எகிப்து நாட்டை நிரப்பின.

மந்திரவாதிகளும் தங்கள் வித்தைகளால் இது போலவே செய்து எகிப்திய நிலத்தின்மேல் தவளைகள் ஏறிவரச் செய்தனர்.

பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து, ””என்னிடமிருந்தும், என் குடிமக்களிடமிருந்தும் தவளைகளை அகற்றிவிடுமாறு ஆண்டவரை மன்றாடுங்கள். ஆண்டவருக்குப் பலியிடுமாறு நான் மக்களை அனுப்பிவிடுவேன்”” என்று கூறினான்.

மோசே பார்வோனை நோக்கி, ””தவளைகள் உம்மிடமிருந்தும் உம் வீட்டிலிருந்தும் அழிக்கப்பட்டு ஆற்றில் மட்டும் இருக்குமாறு நான் உமக்காகவும் உம் அலுவலர்க்காகவும் உம் குடிமக்களுக்காகவும் எப்போது மன்றாட வேண்டுமென என்னிடம் தெரியப்படுத்தும்”” என்று கூறினார்.

அவன், ””நாளைக்கு”” என்றான். அதற்கு மோசே, ””எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யாரும் இல்லை என நீர் அறிந்து கொள்வதற்காக உம் சொற்படியே ஆகும்:

உம்மிடமிருந்தும், உம் வீடுகளிலிருந்தும், உம் அலுவலரிடமிருந்தும், உம் குடி மக்களிடமிருந்தும் தவளைகள் ஒழிந்துபோகும்: ஆற்றில் மட்டும் அவைவிட்டு வைக்கப்படும்”” என்றார்.

மோசேயும், ஆரோனும் பார்வோனை விட்டகன்றனர். பின்பு, பார்வோனின் மேல் ஆண்டவர் வரவிட்டிருந்த தவளைகளைக் குறித்து மோசே ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.

ஆண்டவரும் மோசேயின் மன்றாட்டின்படியே செய்தருளினார். ஆக, வீடுகள், முற்றங்கள், வயல்கள் ஆகியவற்றில் தவளைகள் மடிந்து போயின.

அவற்றைக் குவியல் குவியலாக திரட்டினர்: எனவே அந்நாடு நாற்றமெடுத்தது.

தொல்லை ஓய்ந்தது என்று கண்ட பார்வோன் தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். ஆண்டவர் சொன்னபடி அவன் அவர்களுக்குச் செவி சாய்க்கவில்லை.

மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கி, ””நீ ஆரோனிடம், நீ உன்கோலை நீட்டி, நிலத்திலுள்ள புழுதியை அடி! அது எகிப்து நாடெங்கும் கொசுக்களாக மாறும் என்று சொல்”” என்றார்.

அவ்வாறே அவர்களும் செய்தனர். கோல் ஏந்திய தம் கையை நீட்டி ஆரோன் நிலத்தின் புழுதியை அடிக்க, மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொசுக்கள் தோன்றின. எகிப்து நாடெங்கும், நிலத்திலுள்ள புழுதியெல்லாம் கொசுக்களாக மாறிற்று.

கொசுக்கள் தோன்றுவதற்காக மந்திரவாதிகளும் தங்கள் வித்தையால் அது போலவே செய்ய முயன்றனர்: ஆனால், அது அவர்களால் இயலாமற் போயிற்று. கொசுக்கள் மனிதர் மேலும் விலங்குகள் மேலும் தங்கியிருந்தன.

மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி, ””இது கடவுளின் கைவன்மையே”” என்றனர். ஆயினும் பார்வோனுடைய மனம் கடினப்பட்டது. ஆண்டவர் அறிவித்தபடியே அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.

மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, ””அதிகாலையில் நீ எழுந்து பார்வோனுக்காகக் காத்து நில். அவன் நீராடத் தண்ணீரை நோக்கி வருவான். அப்போது அவனை நோக்கிச் சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: எனக்கு வழிபாடு செலுத்தும் பொருட்டு என் மக்களைப் போகவிடு:

என் மக்களை நீ போகவிடவில்லையென்றால், இதோ உன்மேலும், உன் அலுவலர் மேலும், உன் குடிமக்கள் மேலும், உன் வீட்டின் மேலும், ஈக்கள் வரச் செய்வேன். எகிப்தியருடைய வீடுகளும், அவர்கள் இருக்கும் நிலமும் ஈக்களால் நிரம்பும்.

அந்நாளில், என் மக்கள் தங்கியிருக்கும் கோசேன் நிலப்பகுதியை வேறுபடுத்திக் காட்டுவேன். அங்கு ஈக்கள் எவையுமே இரா. இதனால் இந்நாட்டில் நானே ஆண்டவர் என நீ அறிந்து கொள்வாய்.

மேலும் என் மக்களுக்கும் உன் மக்களுக்கும் இடையே நான் வேறுபாடு காட்டுவேன். நாளையதினம் இந்த அருஞ்செயல் செய்யப்படும் ”” என்றார்.

அவ்வாறே ஆண்டவரும் செய்து முடித்தார். ஈக்கள் பார்வோன் வீட்டிலும், அவனுடைய அலுவலர் வீட்டிலும், எகிப்துநாடெங்கும் திரளாய்ப் பெருகின. ஈக்களால் நாடே பாழாகிவிட்டது.

பார்வோன் மோசேயையும் ஆரோனையும் வரவழைத்து, ””போங்கள், ஆனால் இந்நாட்டிலேயே உங்கள் கடவுளுக்குப் பலியிடுங்கள்”” என்றான்.

அதற்கு மோசே, ””அது முறையல்ல: அவ்வாறு செய்தால் எகிப்தியருக்கு அருவருப்பானதை எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் பலியிடுவதாகும். எகிப்தியருக்கு அருவருப்பானதை அவர்கள் கண்முன் நாங்கள் அப்படிப் பலியிட்டால் அவர்கள் எங்களைக் கல்லால் எறியாமல் விடுவார்களா?

பாலை நிலத்தில் நாங்கள் மூன்று நாள்கள் வழிநடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு, அவர் எங்களுக்குச் சொல்வதுபோல் பலியிடுவோம்”” என்றார்.

அப்பொழுது பார்வோன், ””உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நீங்கள் பாலைநிலத்தில் பலியிட நான் உங்களைப் போகவிடுவேன். ஆனால், வெகுதூரம் சென்று விடாதீர்கள்: மேலும் எனக்காகவும் மன்றாடுங்கள்”” என்றுரைத்தான்.

மோசே மறுமொழியாக, ””நான் உம்மிடமிருந்தும் போய், பார்வோனிடமிருந்தும் அவன் அலுவலரிடமிருந்தும் அவன் குடிமக்களிடமிருந்தும் நாளைய தினமே ஈக்கள் அகன்றுவிட வேண்டும் என ஆண்டவரை நோக்கி மன்றாடுவேன். ஆனால் ஆண்டவருக்குப் பலியிடுமாறு மக்களை அனுப்பாமல் பார்வோன் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம்”” என்று கூறினார். 30 மோசே பார்வோனை விட்டு அகன்றார்: ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.

மோசேயின் மன்றாட்டுக்கிணங்க ஆண்டவரும் செயலாற்றினார். பார்வோனிடமிருந்தும் அவனுடைய அலுவலரிடமிருந்தும் அவனுடைய குடிமக்களிடமிருந்தும் ஈக்கள் அகன்று போயின. ஒன்றுகூட எஞ்சி நிற்கவில்லை.

இம்முறையும் பார்வோன் தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். மக்களை அவன் போகவிடமாட்டேன்.

அதிகாரம் 9.

மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ””நீ பார்வோனிடம் சென்று அவனிடம் சொல்: எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: எனக்கு வழிபாடு செலுத்துவதற்காக என் மக்களைப் போகவிடு!

நீ அவர்களைப் போகவிடாமல் இன்னும் தடைசெய்தால்,

நாட்டிலுள்ள குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், எருதுகள், ஆடுகள் ஆகிய உன் கால்நடைகள் மேல் கடவுளின் கைவன்மை மிகக்கொடிய கொள்ளை நோயாக வரப்போகிறது.

ஆண்டவரும், இஸ்ரயேலரின் கால்நடைகளுக்கும், எகிப்தியரின் கால்நடைகளுக்கும் இடையே வேறுபாடு காட்டுவார். எனவே இஸ்ரயேல் மக்களுக்குரியவை அனைத்திலும் எவையுமே மடிந்துபோகா.

நாளையதினமே ஆண்டவர் இதனை இந்நாட்டில் செயல்படுத்தப்போகிறார் என்று ஆண்டவரே ஒரு நேரத்தையும் குறித்துவிட்டார்.””

அதன்படி எகிப்தியரின் கால்நடைகளெல்லாம் மடிந்தன. இஸ்ரயேல் மக்களின் கால்நடைகளிலோ எதுவும் சாகவில்லை.

பார்வோன் ஆளனுப்பி விசாரித்தான். இஸ்ரயேலரின் கால்நடைகளில் ஒன்றுகூடச் சாகவில்லை. ஆயினும் பார்வோனின் மனம் கடினப்பட்டது. மக்களை அவன் போகவிடவில்லை.

மேலும் ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, ””அடுப்பிலிருந்து சாம்பலை உங்கள் கைகள் நிறைய வாரிக் கொள்ளுங்கள். பார்வோன் முன்னிலையில் மோசே அதனை வானத்தில் தூவட்டும்.

எகிப்து நாடெங்கும் அது மெல்லிய தூசியாகப் பரவி மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொப்புளங்களாகி வெடித்துப் புண்ணாகும்”” என்றார்.

அவர்களும் அடுப்பிலிருந்து சாம்பலை வாரிக்கொண்டு பார்வோன் முன்னிலையில் சென்று நின்றனர். மோசே வானத்தில் அதனைத் தூவினார். மனிதர் மேலும் விலங்குகள்மேலும் அது வெடித்துப் புண்ணாகக்கூடிய கொப்புளங்களாக மாறிற்று.

கொப்புளம் தோன்றியதால் மந்திரவாதிகள் மோசேயின் முன் நிற்க இயலவில்லை. ஏனெனில், மந்திரவாதிகள் மேலும் எல்லா எகிப்தியர்மேலும் கொப்புளம் கண்டிருந்தது.

ஆண்டவர் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்தினார். ஆண்டவர் மோசேக்கு அறிவித்தபடியே அவர்களுக்கு அவன் செவிசாய்க்கவில்லை.

மீண்டும் ஆண்டவர் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்: அதிகாலையில் எழுந்து பார்வோன் முன்னிலையில் வந்துநின்று அவனை நோக்கிச் சொல்: எபிரேயரின் கடவுளான ஆண்டவர் சொல்வது இதுவே. எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு.

இல்லையெனில் இம்முறை கொள்ளைநோய்களை எல்லாம் உன்மேலும் உன் அலுவலர்மேலும் உன் குடிமக்கள்மேலும் நானே ஏவி விடுவேன். இந்நாடெங்கும் எனக்கு நிகர் யாருமே இல்லை என்பதை இதனால் நீ அறிந்து கொள்வாய்.

கையை ஓங்கி, உன்னையும் உன் குடிமக்களையும் கொள்ளை நோய்களால் இதற்குள் தாக்கியிருப்பேன். நீயும் இந்நாட்டிலிருந்து ஒழிந்து போயிருப்பாய்.

எனினும், என் வல்லமையைக் காட்டவும் என் பெயரை நாடெங்கும் அறிக்கையிடவுமே நான் உன்னை நிலைக்கச் செய்தேன்.

நீயோ, என் மக்களைப் போகவிடாத அளவுக்கு இன்னும் தலைதூக்கி நிற்கின்றாய்.

எகிப்து நிறுவப்பட்டது தொடங்கி இன்றுவரை அங்கே இருந்திராத அளவுக்கு மிகக் கொடிய கல்மழையை அதில் நாளையதினம் இந்நேரத்தில் பெய்யச் செய்வேன்.

எனவே, உன் கால்நடைகளையும் வயல் வெளியில் உனக்குரிய எல்லாவற்றையும் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகச்செய்ய இப்போதே ஆளனுப்பிவிடு! வீட்டிற்குக் கொண்டு சேர்க்கப்படாமல் வயல்வெளியில் விடப்பட்ட மனிதர் அனைவர் மேலும் விலங்குகள் அனைத்தின் மேலும் கல்மழை பெய்ய, எல்லோரும் மடிவர்.

பார்வோனின் அலுவலரில் ஆண்டவரின் வார்த்தையை மதித்தவர் தம் அடிமைகளையும், தம் கால்நடைகளையும் வீடுகளுக்குள் ஓட்டிவிட்டனர்.

ஆண்டவர் வார்த்தையை மதிக்காதவர் தங்கள் அடிமைகளையும் கால்நடைகளையும் வயல்வெளியில் விட்டுவிட்டனர்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, எகிப்து நாடெங்கும் எகிப்து நாட்டிலுள்ள மனிதர், விலங்கு, வயல்வெளியிலுள்ள பயிர்பச்சை இவற்றின் மேல் கல்மழை பொழியுமாறு உன்கையை வானோக்கி நீட்டு என்றார்.

மோசே தம்கோலை வானோக்கி நீட்டவே, ஆண்டவர் இடி முழக்கங்களையும், கல்மழையையும் அனுப்பினார். நிலத்தில் நெருப்பு பாய்ந்து வந்தது. எகிப்து நாடெங்கும் கல்மழை பெய்வித்தார் ஆண்டவர்.

கல்மழை பெய்தது. ஒரு நாடாக எகிப்து உருவான காலந்தொடங்கி அந்நாள்வரை அங்கு இருந்திராத அளவு மிகக் கடுமையான கல்மழை பெய்ய அதனிடையே மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது.

எகிப்து நாடு முழுவதிலும் மனிதர் முதல் விலங்கு வரை வயல்வெளியில் இருந்த அனைத்தையும் கல்மழை தாக்கியது: மேலும் வயல்வெளியில் பயிர்பச்சை யாவற்றையும் பாழ்படுத்தியது: வயல்வெளி மரங்கள் அனைத்தையும் முறித்தெறிந்தது.

இஸ்ரயேல் மக்கள் தங்கியிருந்த கோசேன் நிலப்பகுதியில் மட்டும் கல்மழை பெய்யவில்லை.

பார்வோன் ஆளனுப்பி மோசேயையும் ஆரோனையும் கூப்பிட்டான். அவன் அவர்களை நோக்கி, ””நான் இம்முறை பாவம் செய்துவிட்டேன். ஆண்டவரே நீதியுள்ளவர். நானும் என் மக்களுமே தீயவர்.

எனவே ஆண்டவரிடம் மன்றாடுங்கள். இடிமுழக்கங்களையும் கல்மழையையும் கடவுள் அனுப்பியது போதும்: நான் உங்களைப் போக விடுவேன். இனிமேல் நீங்கள் தங்கவே வேண்டாம்”” என்றான்.

மோசே அவனை நோக்கி, ””நாளைக்கு வெளியே போனபின், நான் என் கைகளை ஆண்டவரை நோக்கி எழுப்புவேன். இடிமுழக்கங்கள் ஓய்ந்து போகும். கல்மழையும் நின்றுவிடும். இதனால் இந்நாடு ஆண்டவருடையது என்பதை நீர் அறிந்து கொள்வீர். 30 ஆனால் உம்மையும் உம் அலுவலரையும் பொறுத்தமட்டில், இன்னும் நீங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் அஞ்சிநடப்பதாகவே இல்லை என்பது எனக்குத் தெரியும்”” என்றார்.

அப்போது சணல் பயிரும், வாற்கோதுமைப் பயிரும் அடிபட்டுப் போயின. வாற்கோதுமை கதிர்விட்டிருந்தது. சணல் பூத்து இருந்தது.

ஆனால் கோதுமையும், மாக்கோதுமையும் அடிபட்டுப் போகவில்லை: ஏனெனில் அவை பின்னர் கதிர்விடுவன.

மோசே பார்வோனை விட்டகன்று நகருக்கு வெளியே வந்தார். தம் கைகளை ஆண்டவர்பால் நீட்டினார். உடனே இடிமுழக்கங்களும் கல்மழையும் ஓய்ந்தன. நாட்டில் மழை பெய்வதும் நின்றது.

மழையும் கல்மழையும் இடிமுழக்கங்களும் ஓய்ந்து போனதைக் கண்டான் பார்வோன். ஆயினும் அவன் மேலும் தொடர்ந்து பாவம் செய்தான்: தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். அவனைப் போலவே அவனது அலுவலரும் நடந்து கொண்டனர்.

பார்வோனின் மனம் இறுகிவிட்டதால், மோசே வழியாய் ஆண்டவர் அறிவித்தபடியே அவன் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.

அதிகாரம் 10.

மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, ””நீ பார்வோனிடம் போ. நான் அவன் மனத்தையும் அவன் அலுவலரின் மனத்தையும் கடினப்படுத்தியதன் நோக்கம்,

என் அருஞ்செயல்களை அவன் முன்னிலையில் நிலைநாட்டுவதும், எகிப்துக்கு எதிராக நான் போராடி அவர்களிடையே நான் செய்த அருஞ்செயல்கள் பற்றி நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவரித்துச் சொல்வதும் ஆகும். இதன் மூலம் நானே ஆண்டவர் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்”” என்றார்.

மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் சென்று அவனை நோக்கி, ””எபிரேயரின் கடவுளான ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எவ்வளவு காலம் நீ எனக்குப் பணிய மறுப்பாய்? எனக்கு வழிபாடு செய்யும்படி என் மக்களைப் போகவிடு.

ஏனெனில், நீ என் மக்களை அனுப்பிவிட மறுத்தால்,

நாளைய தினமே உன் எல்லைகளுக்குள் வெட்டுக்கிளிகள் வரச்செய்வேன். யாருமே தரையைப் பார்க்கமுடியாத அளவுக்கு அவை நாட்டை நிரப்பிவிடும். கல்மழைக்குத் தப்பி உங்களுக்கென எஞ்சி நிற்பதை அவை தின்று தீர்க்கும். வயல்வெளியில், தளிர்விடும் உங்கள் மரங்கள் அனைத்தையும் அவை தின்றழிக்கும்.

வீடுகளும், உன் அலுவலர் அனைவரின் வீடுகளும், எகிப்தியர் அனைவரின் வீடுகளும் அவற்றால் நிரம்பும். இது, உன் தந்தையரும் உன் தந்தையரின் தந்தையரும் இந்நாட்டில் வாழத் தொடங்கிய நாள்முதல் இன்று வரை கண்டிராத ஒன்றாகும்”” என்றார். பின்னர் மோசே பார்வோனை விட்டகன்றார்.

பார்வோனின் அலுவலர் அவனை நோக்கி, ””எவ்வளவு காலம் இவன் நமக்குக் கண்ணியாக அமைவானோ? தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யும்படி அந்த மனிதர்களை நீர் அனுப்பிவிடும். எகிப்து அழிந்து கொண்டிருப்பது இன்னும் உமக்குத் தெரியவில்லையா?”” என்றனர்.

மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் அழைத்துக் கொண்டுவரப்பட்டனர். அவன் அவர்களை நோக்கி, ””போங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள். ஆனால், போகவேண்டியவர் யார் யார்?”” என்று கேட்டான்.

அதற்கு மோசே, ””எங்களிடையேயுள்ள இளைஞரோடும் முதியவரோடும் நாங்கள் போவோம். எங்கள் புதல்வரோடும் புதல்வியரோடும், எங்கள் ஆட்டுமந்தையோடும் எங்கள் மாட்டு மந்தையோடும் நாங்கள் போவோம். ஏனெனில் இது எங்களுக்கு ஆண்டவரின் திருவிழா ஆகும்”” என்றார்.

பார்வோன் அவர்களை நோக்கி, ””உங்களை உங்கள் குழந்தைகளோடு நான் அனுப்பி வைத்தால், ஆண்டவர் தாம் உங்களைக் காக்க வேண்டும்! பாருங்கள், உங்கள்முன் உள்ளது தீமையே!

இதெல்லாம் வேண்டாம். உங்களில் ஆண்கள் மட்டும் போய் ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள். நீங்கள் விரும்பியதும் இதுவே!”” என்றான். இதன் பின் பார்வோன் அவர்களைத் தன் முன்னிலையிலிருந்து துரத்திவிட்டான்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””கல் மழைக்குத் தப்பி நாட்டில் நிற்கும் எல்லாப் பயிர் பச்சைகளையும் தின்று தீர்க்க எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வரும்படியாக எகிப்து நாட்டின் மேல் உன்கையை நீட்டு”” என்றார்.

மோசே எகிப்து நாட்டின்மேல் தம் கோலை நீட்டவே, ஆண்டவரும் அன்றைய பகல் இரவு முழுவதும் நாட்டில் கீழ்க்காற்று வீசச்செய்தார். காலையானபோது கீழ்க்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்தது.

மிகப்பெருந்திரளான வெட்டுக்கிளிகள் எகிப்து நாடெங்கும் வந்திறங்கி எகிப்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவின. இதுபோன்று அதற்கு முன்போ பின்போ இருந்ததில்லை.

அவை நாடெங்கும் நிரம்பிவிட்டதால், நாடே இருண்டு போயிற்று. கல்மழைக்குத் தப்பி நாட்டில் நின்றிருந்த பயிர் பச்சை முழுவதையும், மரத்தின் பழங்கள் அனைத்தையும் அவை தின்றுவிட்டன. எகிப்து நாடெங்குமே மரங்களிலும் வயல்வெளி பயிர்களிலும் பச்சையாக எதுவுமே விட்டுவைக்கப்படவில்லை.

பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாக அழைத்து அவர்களை நோக்கி, ””உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகவும் உங்களுக்கு எதிராகவும் தவறு செய்து விட்டேன்.

இந்த ஒருமுறையும் என்பிழையைப் பொறுத்துக்கொண்டு இந்தச் சாவையும் என்னிடமிருந்து அகற்றிவிடும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்”” என்றான்.

மோசேயும் பார்வோனிடமிருந்து அகன்று ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் மிக வலுவான மேல்காற்று வீசச் செய்தார்.

அது வெட்டுக்கிளிகளை வாரிக்கொண்டு அவற்றைச் செங்கடலில் வீசியெறிந்தது. வெட்டுக்கிளிகளில் ஒன்றைக்கூட அது எகிப்தின் எல்லைகளுக்குள் விட்டுவைக்கவில்லை.

ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப்போகச் செய்தார். அவனும் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.

மீண்டும் ஆண்டவர் மோசேயிடம், ””எகிப்து நாட்டின்மேல் இருள் ஏற்படவும் இருளில் அவர்கள் தடுமாறவும் உன் கையை வானோக்கி நீட்டு”” என்றார்.

மோசே வானத்தை நோக்கித் தம் கையை நீட்டினார். மூன்று நாள்களாக எகிப்து நாட்டைக் காரிருள் கவ்வியிருந்தது.

மூன்று நாள்களாக ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. தான் அமர்ந்த இடத்திலிருந்து எவனும் எழும்பவும் இல்லை. மாறாக, இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் உறைவிடங்களில் வெளிச்சம் இருந்தது.

பார்வோன் மோசேயை வரவழைத்து, ””நீங்கள் போய் ஆண்டவருக்கு வழிபாடு செலுத்துங்கள். உங்கள் ஆட்டுமந்தையையும் மாட்டு மந்தையையும் மட்டும் விட்டுச் செல்லுங்கள். உங்களுடன் உங்கள் குழந்தைகளும்கூடப் போகலாம்”” என்று சொன்னான்.

அதற்கு மோசே, ””எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் செலுத்துவதற்கான பலிகளையும் எரிபலிகளையும் எங்கள் கையில் விட்டுவிடும்.

எங்கள் கால்நடைகள் எங்களோடு வரவேண்டும்: ஒன்றுகூட இங்கே தங்கலாகது. எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செலுத்தத் தேவையானதை நாங்கள் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்வோம். ஆண்டவருக்கு எப்படி வழிபாடு செலுத்துவோம் என்று நாங்கள் அங்குச் செல்லும்வரை எங்களுக்கே தெரியாது”” என்றார்.

ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப் போகச் செய்ததால், அவன் அவர்களைப் போகவிட விரும்பவில்லை.

பார்வோன் மோசேயை நோக்கி, ””என்னிடமிருந்து போய்விடு. இனிமேல் நீ என் முகத்தில் விழிக்காதபடி பார்த்துக்கொள். ஏனெனில், என் முகத்தில் விழிக்கும் நாளில் நீ சாவாய்”” என்றான்.

அதற்கு மோசே, ””நீர் கூறியதற்கேற்ப நான் இனிமேல் உம் முகத்தில் விழிக்கப்போவதில்லை”” என்றார்.

அதிகாரம் 11.

மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, ””பார்வோன் மேலும் எகிப்தின்மேலும் இன்னும் ஒரு கொள்ளை நோய் வரச்செய்வேன். அவன் உங்களை முற்றிலும் போகவிடுவதோடு இங்கிருந்து உங்களைத் துரத்தி விரட்டிவிடுவான்.

எனவே மக்கள் கேட்கும்படி அறிவியுங்கள். ஒவ்வொருவனும் தனக்கு அடுத்திருப்பவனிடமிருந்தும் ஒவ்வொருத்தியும் தனக்கு அடுத்திருப்பவளிடமிருந்தும் வெள்ளி அணிகலன்களையும் தங்க அணிகலன்களையும் கேட்டு வாங்கிக் கொள்ளட்டும்”” என்றார்.

எகிப்தியருக்கு இம்மக்கள்மேல் நல்லெண்ணம் உண்டாகச் செய்தார் ஆண்டவர். மேலும் மோசே எகிப்து நாட்டில் பார்வோனின் அலுவலர் முன்பும் குடிமக்களின் முன்பும் மிகப் பெரியவராகத் திகழ்ந்தார்.

மோசே பின்வருமாறு அறிவித்தார்: ””ஆண்டவர் கூறுவது இதுவே: நள்ளிரவு வேளையில் நானே எகிப்தின் நடுவே புறப்பட்டுச் செல்வேன்.

அப்போது எகிப்து நாட்டில், அரியணையில் வீற்றிருக்கும் பார்வோனின் தலைமகன் முதல் மாவரைக்கும் கற்களுக்குப்பின் அமர்ந்திருக்கும் அடிமைப் பெண்ணின் தலைமகன்வரை உள்ள முதற்பேறு அனைத்தும் விலங்குகளின் ஆண்பால் தலையீற்று அனைத்தும் இறந்துவிடுவர்.

இதுவரை இருந்திராததும் இனி இருக்கப்போகாததுமான பெரும் புலம்பல் எகிப்து நாடெங்கும் கேட்கும்.

இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் பொறுத்தமட்டில், அங்குள்ள மனிதர்முதல் விலங்குவரை, எவருக்குமே எதிராக எந்த நாயும் குரைக்காது. இதனால் ஆண்டவர் எகிப்தியரையும் இஸ்ரயேலரையும் வேறுபடுத்திச் செயலாற்றுகிறார் என நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

அப்போது உன் பணியாளர்களாகிய இவர்கள் எல்லோரும் எனக்குப் பணிந்து என்முன் தலைவணங்கி நின்று, உம்மைப் பின்பற்றும் மக்கள் அனைவரோடும் நீர் வெளியேறிவிடும் என்று கூறுவர். அதன்பின் நான் வெளியேறிச் செல்வேன்.”” இதன்பின் பொங்கிய சினத்தோடு மோசே பார்வோனை விட்டகன்றார்.

அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, ””பார்வோன் உனக்குச் செவி சாய்க்கமாட்டான். எகிப்து நாட்டில் என் அருஞ்செயல்கள் பெருகிட இது ஏதுவாகும்”” என்றுரைத்தார்.

மோசேயும் ஆரோனும் இவ்வருஞ்செயல்கள் அனைத்தையும் பார்வோன்முன் செய்தனர். ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்ததால், அவன் இஸ்ரயேல் மக்களைத் தன் நாட்டிலிருந்து போகவிடவில்லை!

அதிகாரம் 12.

எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்:

உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே!

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்: அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.

ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும்.

ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம்.

இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும்.

இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.

இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.

அதைப் பச்சையாகவோ நீரில் வேகவைத்தோ உண்ணாமல், தலைகால்கள், உட்பாகங்கள் முழுவதுமாக நெருப்பில் வாட்டி, அதனை உண்ணுங்கள்.

அதில் எதையுமே விடியற்காலைவரை மீதி வைக்கவேண்டாம். காலைவரை எஞ்சியிருப்பதை நெருப்பால் சுட்டெரியுங்கள்.

நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது ஆண்டவரின் பாஸ்கா .

ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்!

இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது.

இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

ஏழு நாள்களுக்குப் புளிப்பற்ற அப்பங்களையே உண்ணுங்கள்! முதல் நாளிலேயே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து அகற்றி விடுங்கள். ஏனெனில் முதல் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரை புளித்த அப்பத்தை உண்பவன் இஸ்ரயேலிலிருந்து விலக்கி வைக்கப்படுவான்.

முதல் நாளிலும், ஏழாம் நாளிலும் நீங்கள் புனித அவை கூடுவதற்கு அழையுங்கள். இந்நாள்களில் எவ்வேலையும் செய்ய வேண்டாம்: ஒவ்வொருவரும் உண்ணத் தேவையானதை மட்டும் நீங்கள் தயார் செய்யலாம்.

புளிப்பற்ற அப்ப விழாவை நீங்கள் கொண்டாடிவர வேண்டும். ஏனெனில் இந்த நாளில்தான் உங்கள் படைத்திரளை நான் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்தேன். நீங்கள் இந்நாளைத் தலைமுறைதோறும் கொண்டாடி, நிலையான நியமமாகக் கொள்ளுங்கள்.

முதல் மாதத்தின் பதினான்காம் நாள் மாலை தொடங்கி அம்மாதத்தின் இருபத்தொன்றாம் நாள் மாலைவரை புளிப்பற்ற அப்பம் உண்ணுங்கள்.

ஏழு நாள்களாக உங்கள் வீடுகளில் புளித்த மாவு காணப்படவே கூடாது. ஏனெனில் புளித்த அப்பத்தை உண்பவன், அன்னியனானாலும் நாட்டின் குடிமகனானாலும், இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்படுவான்.

நீங்கள் புளித்த அப்பம் உண்ணாமல் உங்கள் உறைவிடங்களில் எல்லாவற்றிலும் புளிப்பற்ற அப்பத்தையே உண்ணுங்கள்.

மோசே இஸ்ரயேலின் பெரியோர்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம் கூறியது: ””நீங்கள் போய் உங்கள் குடும்பங்களுக்குத் தேவையானபடி ஓர் ஆட்டுக்குட்டியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பாஸ்கா ஆட்டினை அடியுங்கள்.

ஈசோப்புக் கொத்தை எடுத்து, கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் அதைத் தோய்த்து, கதவின் மேல்சட்டத்திலும் இரு நிலைக்கால்களிலும் கிண்ணத்திலுள்ள இரத்தத்தைப் பூசுங்கள். காலைவரையிலும் தன் வீட்டின் கதவைத் தாண்டி உங்களில் எவனும் வெளியே போகக் கூடாது.

ஆண்டவர் எகிப்தைத் தாக்குமாறு கடந்து செல்கையில், கதவின் மேல்சட்டத்திலும் இரு நிலைக்கால்களிலும் இரத்தத்தைக்கண்டு அக்கதவைக் கடந்து செல்வார். அழிப்பவன் உங்கள் வீடுகளில் புகுந்து தாக்குமாறு அவர் அனுமதிக்கமாட்டார்.

இவ்வார்த்தையை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நிலையான நியமமாகக் கடைப்பிடியுங்கள்.

ஆண்டவர் வாக்களித்தபடியே அவர் உங்களுக்குத் தரவிருக்கும் நாட்டிற்குள் நீங்கள் வந்து சேர்ந்தபின், இவ்வழிபாட்டை நீங்கள் நிறைவேற்றி வாருங்கள்.

உங்கள் பிள்ளைகள் உங்களைப் பார்த்து, இவ்வழிபாட்டின் கருத்து என்ன? என்று கேட்கும்போது,

நீங்கள், இது ஆண்டவரின் பாஸ்காப் பலி: அவர் எகிப்தியரைச் சாகடித்தபோது எகிப்திலுள்ள இஸ்ரயேல் மக்களின் வீடுகளைக் கடந்து சென்றார்: இவ்வாறு நம் வீடுகளுக்கு அவர் மீட்பளித்தார் என்று கூறுங்கள்.”” மக்களும் தலைவணங்கித் தொழுதனர்.

இஸ்ரயேல் மக்கள் போய், மோசேக்கும் ஆரோனுக்கும் ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தனர்.

நள்ளிரவில் அரசனாக இருந்த பார்வோனின் தலைமகன் தொடங்கி சிறையில் கிடந்த கைதியின் தலைமகன்வரை எகிப்து நாட்டின் எல்லா ஆண்பால் தலைப்பிறப்பையும் மற்றும் விலங்குகளின் அனைத்து ஆண்பால் தலையீற்றுகளையும் ஆண்டவர் சாகடித்தார். 30 பார்வோனும், அவனுடைய அனைத்து பணியாளர்களும், எகிப்தியர் அனைவரும் விழித்தெழுந்தனர். எகிப்தில் பெரும் அழுகுரல் கேட்டது. ஏனெனில் சாவு இல்லாத வீடு எதுவுமே இல்லை!

பார்வோன் மோசேயையும் ஆரோனையும் இரவிலேயே கூப்பிட்டு அவர்களிடம், ””நீங்களும் இஸ்ரயேல் மக்களும் எழுந்து என் மக்களிடமிருந்து வெளியேறிச் செல்லுங்கள். போங்கள், நீங்கள் சொன்னபடியே ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள்.

நீங்கள் கேட்டபடியே உங்கள் ஆட்டுமந்தையையும் உங்கள் மாட்டு மந்தையையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள். போய்விடுங்கள்: எனக்கும் ஆசி கூறுங்கள்”” என்றான்.

நாட்டிலிருந்து விரைவில் போய்விடுமாறு எகிப்தியர் இஸ்ரயேல் மக்களை அவசரப்படுத்தினர்: ””நாங்கள் எல்லோருமே சாகிறோம்”” என்றனர்.

மக்கள், பிசைந்த மாவு புளிக்கும் முன்னரே அதை எடுத்து, மாவு பிசையும் பாத்திரங்களில் வைத்து, தங்கள் போர்வைகளில் கட்டித் தோள்கள் மேல் எடுத்துச் சென்றனர்.

இஸ்ரயேல் மக்கள் மோசேயின் வார்த்தையின்படி செயல்பட்டனர். அவர்கள் எகிப்தியரிடமிருந்து வெள்ளி அணிகலன்களையும் போர்வைகளையும் கேட்டு வாங்கினர்.

ஆண்டவர் எகிப்தியரின் பார்வையில் இம்மக்களுக்குத் தயவு கிடைக்கச் செய்தமையால் அவர்களும் இவர்கள் கேட்டதைக் கொடுத்தனர். இவ்வாறு எகிப்தியரை இவர்கள் கொள்ளையிட்டனர்.

இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர்.

மேலும் அவர்களோடு பல இனப் பெருந்திரளும், ஆட்டுமந்தை மாட்டுமந்தை என்று பெருந்தொகையான கால்நடைகளும் புறப்பட்டுச் சென்றன.

எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவைக்கொண்டு அவர்கள் சுட்டது புளிப்பற்ற அப்பங்கள். ஏனெனில் மாவு இன்னும் புளிக்காமலிருந்தது. அவர்கள் எகிப்திலிருந்து துரத்தப்பட்டதாலும், சற்றும் தாமதம் செய்ய இயலாமற்போனதாலும் தங்களுக்கென வழியுணவு தயாரித்து வைத்திருக்கவில்லை! 40 எகிப்தில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் அங்கு வாழ்ந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள்!

நானூற்று முப்பதாம் ஆண்டு முடிவுபெற்ற அதே நாளில் ஆண்டவரின் படைத்திரள் எல்லாம் எகிப்து நாட்டினின்று வெளியேறியது.

எகிப்து நாட்டினின்று அவர்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே! தலைமுறைதோறும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஆண்டவருக்கென்று திருவிழிப்பு கொண்டாடவேண்டிய இரவும் இதுவே.

ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ””பாஸ்காவின் ஒழுங்குமுறை இதுவே: அன்னிய மக்கள் எவரும் இதை உண்ணலாகாது.

ஆனால் வெள்ளிக் காசுக்கு வாங்கின அடிமை எவனுக்கும் நீங்கள் விருத்தசேதனம் செய்தபின் அவன் இதை உண்ணலாம்.

குடியேறியவரும் கூலியாள்களும் இதை உண்ண வேண்டாம்.

ஒரே வீட்டிற்குள் இது உண்ணப்படவேண்டும். இறைச்சி எதுவும் வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படலாகாது. எந்த எலும்பையும் நீங்கள் முறிக்கக் கூடாது.

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதுமே இதைக் கொண்டாட வேண்டும்!

அன்னியன் ஒருவன் உன்னோடு தங்கியிருக்க, அவன் ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாட விரும்பினால், அவன்வீட்டு ஆண்கள் அனைவருக்கும் விருத்தசேதனம் செய்தல் வேண்டும். அதன்பின் அவன் கொண்டாட முன்வரலாம். அவன் நாட்டுக் குடிமகன்போல் ஆவான். ஆனால், விருத்தசேதனம் செய்து கொள்ளாதவன் எவனும் இதை உண்ணாதிருப்பானாக.

நாட்டுக் குடிமக்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அன்னியருக்கும் சட்டம் ஒன்றே.”” 50 மோசேக்கும் ஆரோனுக்கும் ஆண்டவர் இட்ட ஆணைப்படி இஸ்ரயேல் மக்கள் அனைவரும் செயல்பட்டனர்.

அதே நாளில், ஆண்டவர் இஸ்ரயேல் மக்களை அவரவர் அணிவகுப்புகளின்படி எகிப்து நாட்டினின்று வெளியேறச் செய்தார்.

அதிகாரம் 13.

ஆண்டவர் மோசேயை நோக்கி உரைத்தது:

””தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்: இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை”” என்றார்.

மோசே மக்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து நீங்கள் வெளியேறிச் சென்ற இந்நாளை நினைவு கூருங்கள். இந்நாளில்தான் ஆண்டவர் தம் கைவன்மையால் உங்களை இங்கிருந்து வெளியேறவைத்தார். நீங்கள் புளித்த அப்பம் உண்ணலாகாது.

ஆபிபு மாதத்தின் இந்த நாளில் நீங்கள் வெளியேறிச் செல்கிறீர்கள்.

கானானியர், இத்தியர், எமோரியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டை ஆண்டவர் உனக்குத் தருவதாக உன் மூதாதையருக்கு வாக்களித்திருந்தார். பாலும் தேனும் பொழியும் அந்த நாட்டுக்கு அவர் உன்னை அழைத்துச் சென்றபின், இதே மாதத்தில் நீ இவ்வழிபாட்டைச் செய்வாயாக.

ஏழுநாள்கள் நீ புளிப்பற்ற அப்பம் உண்ணவேண்டும். ஏழாம் நாளை ஆண்டவரின் விழா வாகக் கொண்டாட வேண்டும்.

ஏழு நாள்கள் நீ புளிப்பற்ற அப்பம் உண்ண வேண்டும். புளித்த அப்பம் உன்னிடம் காணப்படக்கூடாது. உன் எல்லைக்குள் எங்குமே புளித்த மாவு காணப்படக்கூடாது.

அந்நாளில் நீ உன் மகனிடம், நான் எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது ஆண்டவர் எனக்குச் செய்ததை முன்னிட்டே இந்த வழிபாடு என்று சொல்.

ஆண்டவரின் சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவர் தம் கைவன்மையால் எகிப்திலிருந்து உன்னை வெளியேறச் செய்தார்.

எனவே ஆண்டுதோறும் இந்த நியமத்தை அதன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும்.

உனக்கும் உன் மூதாதையருக்கும் ஆண்டவர் வாக்களித்தபடியே, அவர் கானானியரின் நாட்டிற்குள் உன்னை அழைத்துச் சென்று அதை உனக்குக் கொடுக்கும்போது,

கருப்பையைத் திறக்கும் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கென ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும். உன் கால் நடைகளில் ஆண் தலையீற்று அனைத்தும் ஆண்டவருக்கே உரியது.

ஓர் ஆட்டைக் கொடுத்துக் கழுதையின் ஆண் தலையீற்றை மீட்பாய்: அதை நீ மீட்கவில்லையெனில் அதன் கழுத்தை முறித்துவிடு. உன் ஆண் பிள்ளைகளுள் எல்லாத் தலைப்பேற்றையும் நீ மீட்க வேண்டும்.

இதன் பொருள் என்ன என்று பிற்காலத்தில் உன் மகன் உன்னிடம் கேட்டால், நீ அவனை நோக்கி, ஆண்டவர் தம் கைவன்மையால் அடிமை வீடாகிய எகிப்திலிருந்து எம்மை வெளியேறச் செய்தார்.

பார்வோன் மனமிறுகி எம்மைப் போகவிட மறுத்தபோது, எகிப்து நாட்டிலுள்ள மனிதருள் தலைப்பேறு தொடங்கி கால்நடைகள் தலையீற்று ஈறாக ஆண்தலைப்பிறப்பு அனைத்தையும் ஆண்டவர் சாகடித்தார். எனவே கருப்பை திறக்கும் ஆண்பிறப்பு அனைத்தையும் நான் ஆண்டவருக்குப் பலியிட்டு என் ஆண் பிள்ளைகளுள் தலைப்பேறு அனைத்தையும் மீட்கிறேன் என்று சொல்.

இது உன் கையில் அடையாளமாகவும் உன் கண்களுக்கிடையில் சீட்டுப்பட்டமாகவும் அமையட்டும். ஏனெனில், தம் கைவன்மையால் ஆண்டவர் எம்மை எகிப்திலிருந்து வெளியேறி வைத்தார்.

மக்களைப் பார்வோன் அனுப்பியபோது, பெலிஸ்தியர் நாட்டு நெடுஞ்சாலைதான் நேர்வழி எனினும், அதன் வழியாகக் கடவுள் அவர்களை நடத்திச் செல்லவில்லை. ஏனெனில், ””போரைக் கண்டு இம்மக்கள் மனம் தளர்ந்து எகிப்திற்கே திரும்பிவிடுவார்கள்”” என்றார் கடவுள்.

கடவுள் மக்களைப் பாலைநிலச் சுற்று வழியாக செங்கடலுக்குப் போகச் செய்தார். இஸ்ரயேல் மக்கள் படை அணிபோல எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றனர்.

மேலும் யோசேப்பின் எலும்புகளை மோசே தம்மோடு எடுத்துச் சென்றார். ஏனெனில், ””கடவுள் உங்களைச் சந்திக்கும்போது இங்கிருந்து என் எலும்புகளை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்”” என்று யோசேப்பு இஸ்ரயேல் மக்களிடம் கூறி, அதுபற்றி அவர்களிடம் உறுதிமொழி பெற்றிருந்தார்.

அவர்கள் சுக்கோத்திலிருந்து பயணமாகிப் பாலைநிலத்தின் எல்லையோரமாயுள்ள ஏத்தாமில் கூடாரம் அடித்தனர்.

ஆண்டவர், பகலில் அவர்களை வழிநடத்த மேகத் தூணிலும், இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார். பகலிலும் இரவிலும் அவர்கள் பயணம் செய்வதற்காக அவர் அவர்கள்முன் சென்று கொண்டிருந்தார்.

பகலில் மேகத் தூணும் இரவில் நெருப்புத் தூணும் மக்களைவிட்டு அகலவேயில்லை.

அதிகாரம் 14.

ஆண்டவர் மோசேயிடம்,

””இஸ்ரயேல் மக்கள் திரும்பிச் சென்று மிக்தோலுக்கும் பாகால் செபோனின் அருகிலுள்ள கடலுக்கும் இடையே அமைந்த பிககிரோத்துக்கு எதிரே கடல் அருகில் பாளையம் இறங்கும்படி அவர்களிடம் சொல்.

பார்வோன் இஸ்ரயேல் மக்களைக் குறித்து, பாலைநிலம் குறுக்கிட்டதால் அவர்கள் இன்னும் நாட்டிற்குள்ளேயே அலைந்து கொண்டிருப்பார்கள் என்று கருதுவான்.

பார்வோனின் மனத்தை நான் இறுகிப்போகச் செய்வேன்: அவனும் அவர்களைத் துரத்திக்கொண்டே வருவான். அப்போது பார்வோனையும் அவன் படைகளையும் வென்று நான் மாட்சியுறுவேன். நானே ஆண்டவர் என எகிப்தியரும் உணர்ந்து கொள்வர்”” என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செயல்பட்டனர்.

மக்கள் ஓடிப்போய்விட்டார்கள் என எகிப்திய மன்னனுக்கு அறிவிக்கப்பட்டபோது, பார்வோனின் மனமும் அவன் அலுவலர் மனமும் இம்மக்களைப் பொறுத்தமட்டில் மாற்றம் கண்டது. ””நாம் இப்படிச் செய்து விட்டோமே! நமக்கு ஊழியம் செய்த இஸ்ரயேலரை ஏன்தான் அனுப்பிவிட்டோம்?”” என்று அவர்கள் பேசிக்கொண்டனர்.

எனவே அவன் தன் தேரைப் பூட்டித் தன் ஆள்களையும் கூட்டிக்கொண்டு கிளம்பினான்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அறுநூறு தேர்களையும், மற்றும் எகிப்திலிருந்த எல்லாத் தேர்களையும், அவற்றின் படைத்தலைவர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டான்.

ஆண்டவர் எகிப்திய மன்னனாகிய பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்தார்: அவனும் இஸ்ரயேல் மக்களைத் துரத்திச் சென்றான். இஸ்ரயேல் மக்களோ வெற்றிக்கை உயர்த்தியவாறு சென்றுகொண்டிருந்தனர்.

பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள், படை ஆகிய இவை அனைத்தோடும் எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்று பாகால் செபோனுக்கு எதிரேயுள்ள பிககிரோத்தின் எதிரே கடலின் அருகில் பாளையம் இறங்கிருந்த அவர்களை நெருங்கினர்.

பார்வோன் நெருங்கி வந்து கொண்டிருக்க, இஸ்ரயேல் மக்களும் தம் கண்களை உயர்த்தி எகிப்தியர் தங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டனர். பெரிதும் அச்சமுற்றவராய் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரல் எழுப்பினர்.

அவர்கள் மோசேயை நோக்கி, ””எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்துவந்தீர்? எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்களுக்குச் செய்துவிட்டீரே!

எங்களை விட்டுவிடும்: நாங்கள் எகிப்தியர்களுக்கு ஊழியம் செய்வோம் என்பதுதானே எகிப்தில் நாங்கள் உம்மிடம் கூறிய வார்த்தை! ஏனெனில் பாலைநிலத்தில் செத்தொழிவதைவிட, எகிப்தியருக்கு ஊழியம் செய்வதே எங்களுக்கு நலம்”” என்றனர்.

மோசே மக்களை நோக்கி, ””அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனிமேல் என்றுமே காணப்போவதில்லை.

ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்: நீங்கள் அமைதியாயிருங்கள்”” என்றார்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்.

கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள்.

நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன்.

பார்வோனையும் அவன் தேர்களையும் குதி¨வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, நானே ஆண்டவர் என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்”” என்றார்.

இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம்பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது.

அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது: இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.

மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது.

வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.

எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர்.

பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார்.

அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், ””இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்”” என்றனர்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு”” என்றார்.

மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்குஎதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார்.

திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை.

ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது. 30 இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர்.

எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர்.

அதிகாரம் 15.

அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்: குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.

ஆண்டவரே என் ஆற்றல்: என் பாடல். அவரே என் விடுதலை: என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்: அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.

போரில் வல்லவர் ஆண்டவர்: ஆண்டவர் என்பது அவர் பெயராம்.

பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்: அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர்.

ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்: ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன.

ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது: ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது.

உம் மாபெரும் மாட்சியால் உம் எதிரிகளைத் தகர்த்தெறிந்தீர்: உமது சீற்றக் கனலைக் கக்கித் தாளடிபோல் அவர்களை எரித்துவிட்டீர்.

உம் நாசியின் மூச்சால் நீர்த்திரள்கள் குவிந்தன: பேரலைகள் சுவரென நின்றன: கடல் நடுவில் ஆழங்கள் உறைந்து போயின.

எதிரி சொன்னான்: துரத்திச் செல்வேன்: முன் சென்று மடக்குவேன்: கொள்ளைப் பொருளைப் பங்கிடுவேன்: என் மனம் இதனால் நிறைவு கொள்ளும்: என் வாளை உருவுவேன்: என் கை அவர்களை அழிக்கும்.

நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்: கடல் அவர்களை மூடிக்கொண்டது: ஆற்றல் மிகு நீர்த்திரளில் அவர்கள் ஈயம்போல் அமிழ்ந்தனர்.

ஆண்டவரே, தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவர்? தூய்மையில் மேலோங்கியவர், அஞ்சத்தக்கவர், புகழ்ச்சிக்குரியவர், அருஞ்செயல் ஆற்றுபவர் ஆகிய உமக்கு நிகர் யார்?

நீர் உமது வலக்கையை நீட்டினீர். நிலம் அவர்களை விழுங்கி விட்டது.

நீர் மீட்டுக்கொண்ட மக்களை உம் பேரருளால் வழிநடத்திச் சென்றீர்: உம் ஆற்றலால் அவர்களை உம் புனித உறைவிடம் நோக்கி வழி நடத்திச் சென்றீர்.

இதைக் கேள்வியுற்ற மக்களினங்களை அனைவரும் கதிகலங்கினர்: பெலிஸ்தியாவில் குடியிருப்போரை நடுக்கம் ஆட்கொண்டது.

ஏதோம் தலைவர்கள் அச்சமுற்றனர்: மோவாபு தலைவர்களும் நடுநடுங்கினர்: கானானில் குடியிருப்போர் நிலை குலைந்தனர்.

அச்சமும் திகிலும் அவர்களை ஆட்கொண்டன: ஆண்டவரே, உம் மக்கள் கடந்து செல்லும் வரை, அதாவது நீர் உடைமையாக்கிக் கொண்ட மக்கள் கடந்து செல்லும்வரை, உம் கைவன்மை கண்டு அவர்கள் கல்போன்று மலைத்து நின்றனர்.

ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர்.

ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார்.

பார்வோனின் குதிரைகள், தேர்கள் குதிரைவீரர் அனைவரும் கடலில் சென்று கொண்டிருக்க, ஆண்டவர் அவர்கள்மேல் கடல் நீர்த்திரளைத் திருப்பிவிட்டார். இஸ்ரயேல் மக்களோ கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.

இறைவாக்கினரும் ஆரோனின் தங்கையுமான மிரியாம் கஞ்சிரா ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டாள். பெண்டிர் அனைவரும் கஞ்சிரா கொட்டிக் கொண்டும் நடனமாடிக்கொண்டும் அவள்பின் சென்றனர்.

அப்போது மிரியாம், ””ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்: ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்: குதிரையையும் குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்”” என்று பல்லவியாகப் பாடினாள்.

பின்பு மோசே இஸ்ரயேலரை செங்கடலிலிருந்து புறப்பட்டுப் போகச் செய்தார். அவர்கள் மூன்று நாள்கள் சூர் பாலைநிலத்தில் பயணம் செய்தனர். அங்குத் தண்ணீர் எதுவுமே தென்படவில்லை.

பின்னர் அவர்கள் மாராவைச் சென்றடைந்தனர். மாராவிலிருந்த தண்ணீரைப் பருக அவர்களால் இயலவில்லை. அது கசப்பாக இருந்தது. இதனால்தான் அவ்விடத்திற்கு மாரா என்ற பெயர் வழங்கியது.

நாங்கள் எதைத்தான் குடிப்போம் என்று கூறி, மக்கள் மோசேக்கு எதிராக முறுமுறுத்தனர்.

அவரும் ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினார். ஆண்டவர் அவருக்கு ஒரு மரத்துண்டைக் காட்டினார். அதை அவர் தண்ணீரில் எறிய, தண்ணீரும் சுவைபெற்றது. அங்கே சட்டங்களையும் ஒழுங்குகளையும் தந்து ஆண்டவர் அவர்களைச் சோதித்தார்.

மேலும் அவர், ””உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவி சாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி, அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்”” என்றார்.

பின்னர் அவர்கள் ஏலிம் சென்றடைந்தனர். அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது போ£ச்ச மரங்களும் இருந்தன. தண்ணீருக்கருகில் அவர்கள் பாளையம் இறங்கினர்.

அதிகாரம் 16.

இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பினர் அனைவரும் ஏலிமிலிருந்து புறப்பட்டு ஏலிம், சீனாய் இவற்றிற்கிடையேயுள்ள சீன் பாலைநிலத்தை வந்தடைந்தனர். இவர்கள் எகிப்து நாட்டினின்று வெளியேறி வந்த இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அது.

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்.

இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, ””இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்”” என்றனர்.

அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, ””இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.

ஆனால் ஆறாம் நாளில், நாள்தோறும் அவர்கள் சேகரித்து வந்ததைவிட இருமடங்கு சேகரித்துத் தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்”” என்றார்.

மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் நோக்கி, ””நீங்கள், எகிப்து நாட்டினின்று உங்களை வெளியேறச் செய்தவர் ஆண்டவர் தாமே என்பதை இன்று மாலையில் உணர்ந்து கொள்ளப்போகிறீர்கள்.

காலையில், நீங்கள் ஆண்டவரின் மாட்சியைக் காண்பீர்கள். ஏனெனில் ஆண்டவருக்கு எதிரான உங்கள் முறையீடுகளை அவர் கேட்டுள்ளார். இவ்வாறிருக்க, எங்களை எதிர்த்து நீங்கள் முறுமுறுக்க நாங்கள் யார் என்றனர்.

பின் மோசே, ””ஆண்டவருக்கு எதிராக நீங்கள் முறுமுறுக்கும் முறையீடுகளை அவர் கேட்டதால்தான் உண்பதற்கு மாலையில் இறைச்சியையும், நிறைவடைவதற்குக் காலையில் அப்பத்தையும் ஆண்டவர் உங்களுக்குத் தருகிறார். அப்படியிருக்க, நாங்கள் யார்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு எதிரானவை அல்ல: ஆண்டவருக்கே எதிரானவை”” என்றார்.

மோசே ஆரோனிடம், ””நீர் இஸ்ரயேல், மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கி, ஆண்டவர் திருமுன் அணுகிச் செல்லுங்கள்: ஏனெனில் அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டுள்ளார் என்று சொல்லும்”” என்றார்.

அவ்வாறே ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கிப் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் பாலை நிலப்பக்கமாய்த் திரும்பினார்கள். அப்போது ஆண்டவரின் மாட்சி மேகத்தில் தோன்றியது.

ஆண்டவர் மோசேயை நோக்கி,

இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று சொல்”” என்றார்.

மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது.

பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது.

இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி மன்னா என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, ””ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே:

மேலும் ஆண்டவர் இட்ட கட்டளையாவது: உங்களில் ஒவ்வொருவனும் தான் உண்ணும் அளவுக்கு இதினின்று சேகரித்துக் கொள்வானாக. அதாவது தலைக்கு இரண்டு படி வீதம் அவரவர் கூடாரத்திலுள்ள ஆள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்”” என்றார்.

இஸ்ரயேல் மக்களும் அவ்வாறே சேகரிக்கையில் மிகுதியாகச் சேகரித்தவரும் உண்டு: குறைவாகச் சேகரித்தவரும் உண்டு.

ஆனால் இரண்டு படி அளவீட்டில் அதனை அளந்து பார்த்தபோது மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை: குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை. ஒவ்வொருவரும் தாம் உண்ணும் அளவுக்கே சேகரித்திருந்தனர்.

மோசே அவர்களைப் பார்த்து, ””இதில் யாருமே எதையும் காலைவரை மீதி வைக்கக்கூடாது”” என்றார்.

ஆயினும், மோசேக்குக் கீழ்ப்படியாமல் ஒருசிலர் காலைவரை அதில் மீதி வைத்தனர். அது புழுவைத்து நாற்றமெடுத்தது. மோசே அவர்கள்மேல் சினம் கொண்டார்.

மக்கள் தாம் உண்ணும் அளவிற்கேற்பக் காலைதோறும் அதனைச் சேகரித்தார்கள். ஏனெனில் வெயில் ஏறஏற அது உருகிவிடும்.

ஆனால் ஆறாம் நாளில் அப்பத்தை இரட்டிப்பாக, அதாவது தலைக்கு நான்கு படி வீதம் சேகரித்துக் கொண்டனர். கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் மோசேயிடம் வந்து இதுபற்றி அறிவித்தனர்.

அப்போது அவர் அவர்களை நோக்கி, ””கடவுள் அறிவித்தபடி, நாளையதினம் ஓய்வு நாள்: ஆண்டவரின் புனிதமான சாபத்து . எனவே நீங்கள் சுட்டு வைத்துக்கொள்ள வேண்டியதைச் சுட்டு வைத்துக்கொள்ளுங்கள். வேகவைக்க வேண்டியதை வேக வைத்துக்கொள்ளுங்கள்: எஞ்சியிருப்பவை அனைத்தையும் நாளைக் காலை மட்டும் உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள்”” என்றார்.

மோசே கட்டளையிட்டபடி அவர்கள் அதனைக் காலை வரை வைத்திருந்தபோது அதில் நாற்றம்வீசவும் இல்லை: புழு வைக்கவும் இல்லை.

மோசே அவர்களிடம், ””இன்று நீங்கள் அதனை உண்ணுங்கள்: இன்று ஆண்டவரின் ஓய்வுநாள். எனவே இன்று அதனை வெளியில் காண முடியாது.

ஆறு நாள்கள் நீங்கள் அதனைச் சேகரிக்கலாம்: ஆனால் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் ஒன்றும் கிடைக்காது”” என்று அறிவித்தார்.

ஆயினும், ஏழாம் நாளில் மக்கள் சிலர் உணவு சேகரிப்பதற்காக வெளியில் சென்றனர். ஆனால் எதையும் காணவில்லை.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””எவ்வளவு காலம் என் கட்டளைகளையும் சட்டங்களையும் கடைப்பிடிக்காதிருப்பீர்கள்?

கவனியுங்கள், ஆண்டவர் ஓய்வுநாளை உங்களுக்கு அளித்துள்ளார். அதனால் ஆறாம் நாளிலேயே இரு நாள்களுக்குரிய உணவையும் உங்களுக்கு அளிக்கிறார். எனவே ஒவ்வொருவரும் தம் தம் உறைவிடத்தில் தங்கிவிட வேண்டும்: ஏழாம் நாளில் தம்தம் இடத்திலிருந்து எவரும் வெளியில் செல்லலாகாது”” என்றார். 30 ஆகவே, மக்கள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தனர்.

இஸ்ரயேல் குடும்பத்தார் அதனை மன்னா என்று பெயரிட்டழைத்தனர். அது கொத்தமல்லி போன்று வெண்ணிறமாயும், தேன் கலந்து ஆக்கிய பணியாரம் போன்று சுவையாயும் இருந்தது.

ஆண்டவர் இட்ட ஆணையை மோசே எடுத்துரைத்தார்: நீங்கள் தலைமுறைதோறும் அழியாமல் காப்பதற்காக அதில் இரண்டு படி அளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறாக, நான் உங்களை எகிப்து நாட்டினின்று வெளியேறச் செய்தபோது, பாலைநிலத்தில் உங்களுக்குத் தந்த உணவை இதன்மூலம் அவர்கள் கண்டுகொள்வர்.

பின்பு மோசே ஆரோனை நோக்கி, ””நீர் ஒரு கலசத்தை எடுத்து அதில் இரண்டுபடி அளவு மன்னாவை எடுத்து வையும். தலைமுறைதோறும் அழியாமல் காக்குமாறு அதனை ஆண்டவர் திருமுன் எடுத்து வையும்”” என்றார்.

ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, ஆரோன் அதனை உடன்படிக்கைப் பேழையில் பாதுகாப்பாக வைத்தார்.

இஸ்ரயேல் மக்கள், நாற்பது ஆண்டளவாக, குடியேறவேண்டிய நாட்டினைச் சென்றடையும்வரை, மன்னா உண்டனர். கானான் நாட்டு எல்லைக்குள் புகும்வரை அவர்கள் மன்னா உண்டுவந்தனர்.

இரண்டு படி என்பது ஏப்பா என்பதில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.

அதிகாரம் 17.

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் ஆண்டவர் குறித்த ஒழுங்கின்படி சீன் பாலை நிலத்திலிருந்து பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் இரபிதிம் வந்தபோது அங்குப் பாளையம் இறங்கினர். மக்கள் குடிக்க அங்குத் தண்ணீர் இல்லை.

இதனால் மக்கள் மோசேயிடம் வாதாடி, குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும் என்று கேட்டனர். மோசே அவர்களை நோக்கி, ””நீங்கள் என்னோடு வாதாடுவது ஏன்? ஆண்டவரை ஏன் சோதிக்கிறீர்கள்?”” என்றார்.

அங்குத் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, ””நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?”” என்று கேட்டனர்.

மோசே ஆண்டவரிடம், ””இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!”” என்று கதறினார்.

ஆண்டவர் மோசேயிடம், ””இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக்கொண்டு மக்கள் முன் செல்: நைல்நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ.

இதோ நான் அங்கே ஓரேபில் உள்ள பாறையில் உனக்குமுன் நிற்பேன். நீ பாறையை அடி: மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்”” என்றார். இஸ்ரயேல் தலைவர்கள் காண மோசே அவ்வாறே செய்தார்.

இஸ்ரயேல் மக்கள் அங்கு வாதாடியதாலும் ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா இல்லையா என்று சோதித்ததாலும், அவ்விடம் மாசா என்றும் மெரிபா என்றும் பெயரிட்டழைக்கப்பட்டது.

பின்னர் அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர்.

மோசே யோசுவாவை நோக்கி, ””நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்”” என்றார்.

அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே, மோசே. ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்சென்றனர்.

மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்: அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர்.

மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன.

யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””இதை நினைவுகூரும்படி ஒரு நூலில் எழுதிவை: நான் அமலேக்கியரின் நினைவை வானத்தின் கீழிலிருந்து ஒழித்திடுவேன் என்பதை யோசுவாவின் காதுகளிலும் போட்டுவை”” என்றார்.

மோசே பலிபீடம் ஒன்று கட்டி அதற்கு யாவே நிசீ என்று பெயரிட்டழைத்தார்.

ஏனெனில், ””ஆண்டவரின் அரியணையை எதிர்த்து ஒரு கை ஓங்கியுள்ளது. இதனால் தலைமுறைதோறும் அமலேக்கியருடன் ஆண்டவர் போரிடுவார்”” என்றுரைத்தார் அவர்.

அதிகாரம் 18.

மிதியானின் அர்ச்சகரும் மோசேயின் மாமனாருமாகிய இத்திரோ என்பவர் கடவுள் மோசேக்கும் அவர் தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் செய்தது அனைத்தையும், ஆண்டவர் இஸ்ரயேலை எகிப்தினின்று வெளியேறச் செய்ததையும் கேள்வியுற்றார்.

மோசே முன்பு அனுப்பிவைத்திருந்த அவர் மனைவி சிப்போராவையும், இரு புதல்வர்களையும் அவர் மாமனாராகிய இத்திரோ அழைத்துக் கொண்டு வந்தார்.

அயல் நாட்டில் அன்னியனாக உள்ளேன் என்ற பொருளில் ஒருவனுக்குக் கேர்சோம் என்று மோசே பெயரிட்டிருந்தார்.

என்னைப் பார்வோனின் வாளினின்று காப்பாற்றிய என் மூதாதையரின் கடவுளே என் துணை என்ற பொருளில் எலியேசர் என்று மற்றவனுக்குப் பெயரிட்டிருந்தார்.

பாலை நிலத்தில் கடவுளின் மலை அருகில் மோசே பாளையம் இறங்கியிருக்க, அவருடைய மாமனாராகிய இத்திரோ மோசேயின் புதல்வரோடும் மனைவியோடும் அவரிடம் வந்தார்.

””உம் மாமன் இத்திரோ என்ற நான் உம் மனைவியோடும் இரு மைந்தரோடும் வந்திருக்கிறேன்”” என மோசேக்குச் சொல்லியனுப்பினார்.

மோசேயும் தம் மாமனாரைச் சந்திக்க எதிர்கொண்டு வந்தார்: அவர்முன் தாழ்ந்து பணிந்தார்: அவரை முத்தமிட்டார். இருவரும், ஒருவர் ஒருவரிடம் நலம் விசாரித்துக்கொண்டு, பாளையத்தில் புகுந்தனர்.

இஸ்ரயேலின் நலனை முன்னிட்டு ஆண்டவர் பார்வோனுக்கும் எகிப்திற்கும் செய்தது அனைத்தைப்பற்றியும், வழியில் தங்களுக்கு நேரிட்ட எல்லாத் தொல்லைகளைப் பற்றியும் ஆண்டவர் தங்களுக்கு விடுதலை அளித்தது பற்றியும் மோசே தம் மாமனாருக்கு விவரித்துச் சொன்னார்.

இஸ்ரயேலை எகிப்தின் பிடியினின்று விடுவிக்கையில், ஆண்டவர் செய்த எல்லா நன்மைகளைக்குறித்தும் இத்திரோ அகமகிழ்ந்தார்.

அப்போது இத்திரோ, ””ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!. எகிப்தியர் பிடியினின்றும் பார்வோன் பிடியினின்றும் உங்களை விடுவித்தவர் அவரே.

அனைத்துத் தெய்வங்களையும் விட ஆண்டவரே உயாந்தவர் என இப்போது உணர்ந்துகொண்டேன். ஏனெனில், ஆணவச் செயல்புரிந்த எகிப்தியர் பிடியினின்று மக்களை விடுவித்தவர் அவரே”” என்றுரைத்தார்.

மோசேயின் மாமனாராகிய இத்திரோ கடவுளுக்கு எரிபலியையும், பலிகளையும் செலுத்தினார். ஆரோனும் இஸ்ரயேலின் எல்லாத் தலைவர்களும் மோசேயின் மாமனாருடன் கடவுள் திருமுன் உணவருந்தச் சென்றனர்.

மறுநாள் மோசே மக்களுக்கு நீதிவழங்க அமர்ந்தார். காலை முதல் மாலைவரை மக்கள் மோசேயைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.

மோசே மக்களுக்குச் செய்து கொண்டிருந்ததையெல்லாம் அவர் மாமனார் கவனித்தார். ””நீர் மக்களுக்குச் செய்துகொண்டிருப்பது என்ன? நீர் மட்டும் அமர்ந்திருப்பதும், மக்களெல்லாம் காலைமுதல் மாலைவரை உம்மைச்சுற்றி நின்றுகொண்டிருப்பதும் எதற்கு?”” என்று அவர் கேட்டார்.

மோசே தம் மாமனாரை நோக்கி, ””கடவுளின் தீர்ப்பை நாடி மக்கள் என்னிடமே வருகின்றனர்.

அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்படும்போது என்னிடம் வர ஒருவனுக்கும் இன்னொருவனுக்கும் நடுநின்று நானும் நீதி வழங்குகிறேன். கடவுளுடைய நியமங்களையும் அவர் சட்டங்களையும் தெளிவுபடுத்துகிறேன்”” என்றார்.

மோசேயின் மாமனார் அவரை நோக்கி, ””நீர் செயல்படும் முறை சரியல்ல.

நீரும் உம்மோடுள்ள இந்த மக்களும் களைத்துப் போவீர்கள். இதை உம்மால் தாங்க முடியாது: தனி ஆளாக இப்பணியை உம்மால் செய்யவியலாது.

இப்போது, நான் சொல்வதைக் கேளும். உமக்கோர் அறிவுரை கூறுகிறேன். கடவுள் உம்மோடு இருப்பாராக! கடவுளின் திருமுன் நீர் மக்களின் பதிலாளாக இருந்து அவர்கள் விவகாரங்களைக் கடவுளிடம் எடுத்துச் செல்வீர்.

நியமங்களையும் சட்டங்களையும் பற்றி நீர் அவர்களுக்கு அறிவுறுத்துவீர். அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியையும், அவர்கள் ஆற்றவேண்டிய பணியையும் நீர் அவர்களுக்கு அறிவிப்பீர்.

மேலும், மக்கள் அனைவரிலும் திறமையும், இறையச்சமும், நாணயமும் கொண்டு கையூட்டை வெறுக்கும் பண்பாளரைக் கண்டுபிடியும். அவர்களை ஆயிரமவர், நூற்றுவர், ஜம்பதின்மர். பதின்மர் ஆகிய குழுக்களின் தலைவர்களாக நியமிப்பீர்.

அவர்கள் எப்பொழுதும் மக்களுக்கு நீதி வழங்கட்டும். முக்கிய விவகாரங்கள் அனைத்தையும் உம்மிடம் கொண்டுவரட்டும். சிறிய காரியங்களில் அவர்களே நீதி வழங்கட்டும். ஆக, உமக்கும் சுமை குறையும். அவர்களும் உம்மோடு பொறுப்பேற்பர்.

கடவுள் கட்டளையிடும் இக்காரியத்தை நீர் செய்தால், உம்மால் பளுவைத் தாங்க இயலும்: இம் மக்கள் அனைவரும் தம்தம் இடத்திற்கு மன அமைதியுடன் செல்வர்”” என்றார்.

மோசே தம் மாமனாரின் சொல்லைக் கேட்டு, அவர் சொன்னபடியெல்லாம் செய்தார்.

மோசே, இஸ்ரயேல் அனைவரிலும் திறமை வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து மக்களில் ஆயிரமவர், நூற்றுவர், ஜம்பதின்மர், பதின்மர் ஆகிய குழுக்களின் தலைவர்களாக அவர்களை நியமித்தார்.

அவர்களும் மக்களுக்கு எப்பொழுதும் நீதி வழங்கி வந்தனர்: கடினமான சிக்கல்களை மோசேயிடம் கொண்டு சென்றனர். சிறிய காரியங்களில் அவர்களே நீதி வழங்கினர்.

மோசே தம் மாமனாரை வழியனுப்பி வைக்க, அவரும் தம் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்.

அதிகாரம் 19.

எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த மூன்றாம் மாதம் முதல் நாளில் இஸ்ரயேல் மக்கள் சீனாய் பாலைநிலத்தைச் சென்றடைந்தனர்.

இரபிதீமிலிருந்து பயணம் மேற்கொண்ட அவர்கள் சீனாய் பாலைநிலத்தை வந்தடைந்து, பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர். அங்கே மலைக்கு முன்பாக இஸ்ரயேலர் பாளையம் இறங்கினர்.

ஆனால் மோசே கடவுளிடம் ஏறிச் சென்றார். அப்போது ஆண்டவர் மலையினின்று அவரை அழைத்து, ””யாக்கோபின் குடும்பத்தார்க்கு நீ சொல்லவேண்டியது-இஸ்ரயேல் மக்களுக்கு நீ அறிவிக்க வேண்டியது-இதுவே

””நான் எகிப்திற்குச் செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததையும், நீங்களே கண்டீர்கள்.

நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைபிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள்.

மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள். இவ்வார்த்தைகளே நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியவை”” என்றார்.

மோசே வந்து, மக்களின் தலைவர்களை வரவழைத்து, ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்ட இக்காரியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

மக்கள் அனைவரும் ஒரே குரலாக, ””ஆண்டவர் கூறியபடியே அனைத்தும் செய்வோம்”” என்று மறுமொழி கூறினர். மக்களின் பதிலை மோசே ஆண்டவரிடம் சமர்ப்பித்தார்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””இதோ! நான் உன்னோடு பேசுவதை மக்கள் கேட்கும்படியும் என்றென்றும் உன்னை நம்பும்படியும் நான் கார் மேகத்தில் உன்னிடம் வருவேன்”” என்றார். மோசேயும் மக்களின் வார்த்தைகளை ஆண்டவருக்கு அறிவித்தார்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””நீ மக்களிடம் போய் அவர்களை இன்றும் நாளையும் தூய்மைப்படுத்து. அவர்கள் தம் துணிகளைத் துவைத்துக் கொள்ளட்டும்.

இவ்வாறு மூன்றாம் நாளுக்காகத் தயாராகட்டும். ஏனெனில், மூன்றாம் நாள் மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கிவருவார்.

மலையைச் சுற்றிலும் மக்களுக்கான எல்லைகளைத் தீர்மானித்துக்கொடு. உங்களில் எவரும் மலைமேல் ஏறாதபடியும், அதன் அடிவாரத்தைக்கூடத் தொடாதபடியும் எச்சரிக்கையாயிருங்கள். மலையைத் தொடுபவர் யாரானாலும் கொல்லப்படுவது உறுதி.

அத்தகையவரை யாரும் கையால் தொடாமல், கல்லால் எறிந்தோ அம்பால் எய்தோ கொல்ல வேண்டும். அப்படிப்பட்ட கால் நடையோ மனிதரோ சாகவேண்டும் என்று அவர்களுக்குச் சொல். எக்காளம் முழங்குகையில் குறிப்பிட்டவர்கள் மலைமேல் ஏறிவரட்டும்”” என்றார்.

மோசே மலையை விட்டிறங்கி மக்களிடம் சென்றார். மக்களைத் தூய்மைப்படுத்தினார். அவர்களும் தம் துணிகளைத் துவைத்துக் கொண்டார்கள்.

அவர் மக்களை நோக்கி, ””மூன்றாம் நாளுக்காகத் தயாராக இருங்கள். மனைவியோடு கூடாதிருங்கள்”” என்றார்.

மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் பேரிடி முழங்கியது. மின்னல் வெட்டியது. மலைமேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது. எக்காளப் பேரொலி எழுந்தது. இதனால் பாளையத்திலிருந்த அனைவரும் நடுநடுங்கினர்.

கடவுளைச் சந்திப்பதற்காக மோசே மக்களைப் பாளையத்திலிருந்து வெளிவரச் செய்தார். அவர்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றார்கள்.

சீனாய் மலை முழுவதும் புகைந்து கொண்டிருந்தது. ஏனெனில் ஆண்டவர் அதன்மீது நெருப்பில் இறங்கி வந்தார். அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தோன்றியது. மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.

எக்காள முழக்கம் எழும்பி வர வர மிகுதியாயிற்று. மோசே பேசியபோது கடவுளும் இடிமுழக்கத்தில் விடையளித்தார்.

ஆண்டவர் சீனாய் மலைமேல் மலையுச்சியில் இறங்கி வந்தார். அப்போது ஆண்டவர் மோசேயை மலையுச்சிக்கு அழைக்க, மோசே மேலே ஏறிச்சென்றார்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””இறங்கிச் செல். மக்கள் ஆண்டவரைப் பார்க்க விரும்பி எல்லை மீறி வராதபடியும், அவ்வாறு வந்து பலர் சாகாதபடியும் அவர்களை எச்சரிக்கை செய்.

அவ்வாறே ஆண்டவரை அணுகிச் செல்லும் குருக்களும் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளட்டும். இல்லையெனில் ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்”” என்று சொன்னார்.

மோசே ஆண்டவரிடம், ””சீனாய் மலைமேல் மக்கள் ஏறிவரமாட்டார்கள். ஏனெனில், மலைக்கு எல்லை அமைத்து அதைப் புனிதப்படுத்து என்று கூறி நீர் எங்களை எச்சரித்துள்ளீர்”” என்றார்.

ஆண்டவர் அவரை நோக்கி, ””நீ கீழே இறங்கிச் சென்று ஆரோனுடன் மேலேறி வா. குருக்களும் மக்களும் ஆண்டவரிடம் வருவதற்காக எல்லை மீற வேண்டாம்: இல்லையெனில் ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்”” என்றார்.

மோசே கீழே இறங்கி, மக்களிடம் இதுபற்றிக் கூறினார்.

அதிகாரம் 20.

கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:

நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.

என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.

மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.

நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்: என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.

மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.

உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.

ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.

ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்.

ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.

ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.

உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.

கொலை செய்யாதே.

விபசாரம் செய்யாதே.

களவு செய்யாதே.

பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.

பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே: பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.

மக்கள் அனைவரும் இடி மின்னல்களையும் எக்காள முழக்கத்தையும் புகையையும் மலையையும் கண்டனர்: கண்டு, மக்கள் நடுநடுங்கித் தூரத்தில் நின்று கொண்டு,

மோசேயை நோக்கி, ””நீர் எங்களோடு பேசும். நாங்கள் கேட்போம். கடவுள் எங்களோடு பேசவே வேண்டாம். ஏனெனில் நாங்கள் செத்துப் போவோம்”” என்றனர்.

மோசே மக்களை நோக்கி, ””அஞ்சாதீர்கள்: கடவுள்மீது உங்களுக்கு ஏற்படும் அச்சத்தால் நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்களா என்று உங்களைச் சோதித்தறியவே அவர் இவ்வாறு தோன்றினார்”” என்றார்.

மக்கள் தொலையில் நின்றுகொண்டிருக்க மோசே கடவுள் இருந்த காரிருளை அணுகினார்.

ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு உரைத்தார்! இவ்வாறு நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ””நான் வானத்திலிருந்து உங்களோடு பேசினேன் என்பதை நீங்கள் கண்டீர்கள்.

எனக்கு இணையாக வைக்க வெள்ளியாலான தெய்வங்களையும், பொன்னாலான தெய்வங்களையும் உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ள வேண்டாம்.

எனக்கென்று மண்ணால் பீடம் அமைத்து, உன் ஆடுகளையும் மாடுகளையும் அதன்மேல் எரி பலிகளாகவும், நல்லுறவுப் பலிகளாகவும் செலுத்து. நான் என்பெயரை நினைவுபடுத்தச் செய்யும் இடங்கள் யாவற்றிலும், நான் உன்னிடம் வந்து உனக்கு ஆசி வழங்குவேன்.

எனக்காகக் கற்பீடம் அமைத்தால், செதுக்கிய கற்கள்கொண்டு கட்டவேண்டாம். ஏனெனில், உனது உளி அதன்மேல் பட்டால், நீ அதனைத் தீட்டுப்படுத்துவாய்.

உன் திறந்தமேனி என் பீடத்தின்மேல் தெரிந்து விடாதபடி, படிகள் வழியாய் அதன்மேல் ஏறிச்செல்ல வேண்டாம்.

அதிகாரம் 21.

அவர்களுக்கு நீ அளிக்க வேண்டிய நீதிச்சட்டங்கள் பின்வருமாறு:

நீ ஒரு எபிரேய அடிமையை வாங்கினால், அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் அடிமை வேலை செய்வான். ஏழாம் ஆண்டு அவன் எதுவும் தராமல் விடு தலைபெற்று வெளியேறுவான்.

தனித்து வந்திருந்தால் தனித்து வெளியேறுவான்: மனைவியோடு வந்திருந்தால் அவனுடைய மனைவியும் அவனோடு புறப்பட்டுச் செல்வாள்.

தலைவன் அவனுக்குப் பெண் கொடுத்திருக்க அவள்வழி அவனுக்குப் புதல்வரோ புதல்வியரோ பிறந்திருந்தால், மனைவியும் பிள்ளைகளும் அவளுடைய தலைவனுக்கே சொந்தமானவர். எனவே அவன் மட்டும் தனித்து வெளியேறுவான்.

அந்த அடிமை, ””நான் என் தலைவனுக்கும் என் மனைவிக்கும் என் பிள்ளைகளுக்கும் அன்பு காட்டுகிறேன்: நான் விடுதலை பெற்றவனாய் வெளியேறிச் செல்ல மாட்டேன்”” எனக் கூறுமிடத்து,

அவனை அவனுடைய தலைவன் கடவுளிடம் கூட்டிக்கொண்டு வருவான். தலைவன் அவனைக் கதவருகில் அல்லது வாயில் நிலைக்கால் மட்டும் கூட்டிவந்து அவனது காதில் தோல் தைக்கும் ஊசியால் துளைபோடுவான். அவன் எக்காலமும் அவனுக்குப் பணிவிடை செய்வான்.

ஒருவன் தன் மகளை அடிமையாக விற்றிருந்தால், ஆண் அடிமைகள் வெளியேறிச் செல்வதுபோல் அவள் செல்லலாகாது.

தலைவன் தனக்காக அவளை வைத்திருக்க, அவள் அவனுக்குப் பிடிக்காதவளாய் நடந்து கொண்டால், அவள் மீட்கப்படுவதை அவன் ஏற்றுக்கொள்ளட்டும்: ஆனால், அன்னியருக்கு அவளை விற்றுவிட அவனுக்கு அதிகாரமில்லை: அது அவளுக்குத் துரோகம் இழைப்பதாகும்.

அவன் தன் மகனுக்காக அவளை நிச்சயித்திருந்தால், ஒரு மகளை நடத்தும் முறைப்படி அவன் அவளுக்குச் செய்யவேண்டும்.

அவனுடைய மகன் தனக்கென வேறொருத்தியை வைத்துக்கொண்டிருந்தால், உணவு, உடை, மணஉறவின்கடமைகள் இவற்றில் அவளுக்குக் குறை வைக்கலாகாது.

இம்மூன்றையும் தலைவன் அவளுக்குச் செய்யவில்லையெனில், அவள் பணம் எதுவும் தராமல் புறப்பட்டுப் போய்விடலாம்.

மனிதரைச் சாகடிப்பவர் எவரும் கொல்லப்பட வேண்டும்.

அவர் சாகடிக்கப் பதுங்கி இராதிருந்தும் அவரது கையாலேயே கொல்லப்படக் கடவுள் விட்டிருந்தால், அத்தகையவர் தப்பியோட ஓர் இடத்தை நான் ஏற்பாடு செய்வேன்.

ஆனால் பிறர்மேல் வெகுண்டெழுந்து, சதித்திட்டத்தால் அவரைச் சாகடிக்கிற எவரும் என் பலிபீடத்தினின்று அப்புறப்படுத்தப்பட்டு கொல்லப்படுவார்.

தம் தந்தையோ தம் தாயையோ அடிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.

ஒருவர் மற்றொருவரைக் கடத்திச் சென்று விற்றுவிட்டாலோ, அவரைத் தம் பிடிக்குள் இன்னும் வைத்திருந்தாலோ, அந்த ஆள் கொல்லப்பட வேண்டும்.

தம் தந்தையையோ தம் தாயையோ சபிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.

இருவர் சண்டையிடுகையில், ஒருவர் மற்றவரைக் கல்லாலோ கை முட்டியாலோ தாக்கியும், தாக்கப்பட்டவர் சாகாமல் படுக்கையில் கிடந்து,

பின்னர் எழுந்து, கோல் ஊன்றி வெளியே நடக்கத் தொடங்கினால், தாக்கியவர் குற்றப்பழி அற்றவர் ஆவார். ஆயினும் அவரது வேலையிழப்பை முன்னிட்டு அவருக்கு இழப்பீடு கொடுக்கவும் அவரை முழுமையாகக் குணமாக்கவும் வேண்டும்.

ஒருவர் தம் அடிமையை அல்லது அடிமைப்பெண்ணைக் கோலால் அடிக்க, அவர் அங்கேயை இறந்துவிட்டால், அந்த உரிமையாளர் பழிவாங்கப்படுவார்.

ஆனால், இரண்டு அல்லது மூன்று நாள்கள் இன்னும் உயிரோடிருந்தால், அவர் பழிவாங்கப்படார். ஏனெனில் அடிமை அவரது சொத்து.

ஆள்கள் சண்டையிடுகையில், கர்ப்பிணியான பெண்ணுக்கு அடிபட, வேறு யாதொரு கேடும் இன்றிப் பேறுகாலத்துக்குமுன் பிரசவமாகிவிட்டால், அப்பெண்ணின் கணவன் கேட்கிறபடி தண்டம் விதிக்கப்பட்டு, நடுநிலையாளர் வழியாக அது கொடுக்கப்பட வேண்டும்.

ஆனால் கேடு ஏதேனும் விளைந்தால், உயிருக்கு உயிர்,

கண்ணுக்குக் கண்: பல்லுக்குப் பல்: கைக்குக் கை: காலுக்குக் கால்:

சூட்டுக்குச் சூடு: காயத்துக்கு காயம்: கீறலுக்குக் கீறல் என நீ ஈடுகொடுப்பாய்.

ஒருவர் தம் அடிமைகளில் ஆணையோ பெண்ணையோ, அடிக்க, அடிபட்டவர்க்குக் கண்கெட்டுப்போனால் கண்ணுக்கு ஈடாக விடுதலை அளித்து அனுப்பி விடவேண்டும்.

ஒருவர் தம் அடிமைப் பெண்ணின் பல்லை உடைத்துவிட்டால், பல்லுக்கு ஈடாக விடுதலை அளித்து அனுப்பிவிடவேண்டும்.

மாடு தன் கொம்பினால் குத்தி, ஒருவனோ ஒருத்தியோ இறந்துவிட்டால், அம்மாடு கொல்லப்பட வேண்டும். அதன் இறைச்சி உண்ணப்படலாகாது. மாட்டின் சொந்தக்காரர் குற்றமற்றவராவார்.

ஆனால் மாட்டுக்குக் குத்தும் பழக்கம் முன்னரே இருந்திருக்க, அதன் சொந்தக்காரரை எச்சரித்திருந்தும், அவர் ஆவன செய்யாதிருந்த நிலையில், அது ஒருவனை அல்லது ஒருத்தியைக் கொன்று போட்டால், அம்மாடு கல்லால் எறிந்து கொல்லப்படும். அதன் உரிமையாளரும் கொல்லப்படுவார். 30 மாறாக, ஈட்டுத்தொகை அவர்மேல் விதிக்கப்பட்டால், தம் உயிரின் மீட்புக்காக விதிக்கப்பட்ட அனைத்தையும் அவர் கொடுப்பார்.

மகனாயினும் மகளாயினும் கொம்பினால் குத்திக் கொல்லப்பட்டால், இந்த நீதிச்சட்டத்திற்கேற்ப ஆகட்டும்.

அடிமையை அல்லது அடிமைப்பெண்ணை மாடொன்று குத்திக்கொன்று போட்டால், அதன் உரிமையாளர் அடிமையின் தலைவருக்கு முப்பது வெள்ளிக்காசு ஈடுகட்டுவார். மாடும் கல்லால் எறிந்து கொல்லப்படும்.

ஒருவர் குழியொன்றைத் திறந்துவிட்டபின்னரோ அல்லது புதிதாகக் குழியொன்றை வெட்டிய பின்னரோ அதனை மூடி வைக்காதிருக்க, மாடோ கழுதையோ அதில் விழுந்துவிட நேரிட்டால்,

அதன் உரிமையாளருக்குக் குழியின் சொந்தக்காரர் பணம் ஈடுகட்டி செத்ததை எடுத்துக்கொள்வார்.

ஒருவரின் மாடு பிறர் மாட்டைக் காயப்படுத்திக் கொன்றுவிட்டால், உயிரோடிருக்கும் மாட்டை விற்றுப் பணத்தை அவர்கள் பங்கிட்டுக் கொள்வார்கள். செத்ததையும் அவர்கள் கூறுபோட்டுக் கொள்வார்கள்.

ஆனால் மாடு குத்தும் பழக்கமுடையது என முன்னரே தெரிந்திருந்தும், அதன் உரிமையாளர் எதுவும் செய்யாதிருந்தால், அவர் மாட்டுக்கு மாடு என ஈடு கொடுக்கத்தான் வேண்டும். செத்தது அவரைச் சேரும்.

அதிகாரம் 22.

ஆட்டையோ மாட்டையோ ஒருவர் திருடி வெட்டி விட்டால் அல்லது விற்றுவிட்டால் ஒரு மாட்டுக்கு ஜந்து மாடு என்றும், ஓர் ஆட்டுக்கு நான்கு ஆடு என்றும் ஈடுகட்டுவார்.

திருடர் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டுத் தாக்குண்டு இறந்து போனால் அவருக்காக இரத்தப்பழி இல்லை.

கதிரவன் உதித்தபின் இது நிகழ்ந்திருந்தால், இரத்தப்பழி உண்டு. அவர் ஈடு கொடுத்தேயாக வேண்டும். திருட்டுக்கு ஈடாக அவரிடம் எதுவுமே இல்லையெனில் அவர் விற்கப்படுவார்.

அவர் திருடின மாடோ கழுதையோ ஆடோ உயிருடன் அவர் கையில் கண்டுபிடிக்கப்பட்டால் இருமடங்காக ஈடு கொடுப்பார்.

ஒருவர் இன்னொருவர் வயலிலோ, திராட்சைத் தோட்டத்திலோ கால்நடைகளை மேயவிட்டால், அல்லது அவிழ்த்து விட்டவை பிறர் வயலில் மேய்ந்துவிட்டால், தம் வயலின் சிறந்த விளைச்சலினின்றும், தம் திராட்சைத் தோட்டத்தின் சிறந்த பலனினின்றும் ஈடுசெய்வார்.

தீப்பிடித்து, முட்புதர்களில் பரவி, தானியக் குவியலோ விளைந்த பயிரோ வயலோ எரிந்துவிட்டால், தீயை மூட்டியவர் ஈடுகொடுத்தே ஆகவேண்டும்.

ஒருவர் பிறரிடம் பணத்தையோ, பொருள்களையோ பாதுகாப்புக்காக ஒப்படைத்திருக்க, அவை அம்மனிதர் வீட்டிலிருந்து களவுபோய், திருடர் கண்டுபிடிக்கப்பட்டால் திருடர் இருமடங்காக ஈடு செய்ய வேண்டும்.

திருடர் கண்டுபிடிக்கப்படாவிடில், பிறர் பொருள்களில் வீட்டுத் தலைவர் கை வைத்தாரா இல்லையா என மெய்ப்பிக்க அவர் கடவுள்முன் நிற்பார்.

நம்பிக்கைத்துரோகம் எதிலும்-அது மாடு, கழுதை, ஆடு, உடை அல்லது வேறு எதுபற்றியதானாலும்- ¥இது என்னுடையது என இருவரும் கூறினால் வழக்கு கடவுளிடம் வர வேண்டும். கடவுள் யாரைக் குற்றவாளியாகத் தீர்ப்பிடுவாரோ அவர் இருமடங்காகப் பிறருக்கு ஈடுசெய்ய வேண்டும்.

ஒருவர் பிறரிடம் கழுதை, மாடு, ஆடு, அல்லது வேறொரு விலங்கைப் பாதுகாப்புக்காக ஒப்படைத்திருக்கையில் அது இறந்துபோனால், அல்லது காயப்பட்டுவிட்டால், அல்லது யாரும் பார்க்காத வேளையில் ஓட்டிச் செல்லப்பட்டால்,

அவர் பிறரது உடைமையில் தாம் கைவைக்கவில்லை என்பதற்கு ஆண்டவர்மேல் இடும் ஆணை அவர்களுடைய வழக்கை முடிவு செய்யும். உரிமையாளர் அதை ஏற்றுக் கொள்வார். மற்றவர் ஈடுகொடுக்க வேண்டியதில்லை.

ஆனால் அவருடன் இருக்கும்போது அது திருடப்பட்டால், அதன் உரிமையாளருக்கு அவர் ஈடு செய்ய வேண்டும்.

அது விலங்கினங்களால் பீறித் துண்டாக்கப்பட்டிருந்தால், பீறப்பட்டத்தைச் சான்றாகக் கொண்டுவருவார். அவர் ஈடுசெய்ய வேண்டியதில்லை.

ஒருவர் பிறரிடமிருந்து இரவலாகப் பெற்றுக்கொண்டது, உரிமையாளர் அதன் அருகில் இல்லாத வேளையில் காயப்பட்டுவிட்டால் அல்லது இறந்துவிட்டால் அவர் அதற்கு ஈடு செய்யத்தான் வேண்டும்.

உரிமையாளர் அதன்கூட இருந்திருந்தால், அவர் ஈடுகொடுக்க வேண்டியதில்லை. அது வாடகைக்கு எடுக்கப்பட்டதென்றால் வாடகை செலுத்தப்பட்டால் போதும்.

திருமண ஒப்பந்தமாகாத கன்னிப்பெண்ணை ஒருவன் வசப்படுத்தி அவளோடு படுத்தால், மனைவிக்குரிய பரியம் கொடுத்து அவளை வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், அவள் தந்தை அவளை அவனுக்குக் கொடுக்க முற்றிலும் மறுத்தால், கன்னிப் பெண்ணுக்குரிய பரியத்துக்குச் சமமான பணம் அவன் கட்டவேண்டும்.

சூனியக்காரி எவளையும் உயிரோடு விட்டுவைக்காதே.

விலங்கோடு புணர்பவன் எவனும் கொல்லப்படவே வேண்டும்.

ஆண்டவருக்கேயன்றி, வேறு தெய்வங்களுக்குப் பலியிடுபவன் அழித்தொழிக்கப்பட வேண்டும்.

அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள்.

விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே.

நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.

மேலும் என்சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர்.

உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே.

பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு.

ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.

கடவுளை நீ பழிக்காதே. உன் மக்களின் தலைவனைச் சபிக்காதே.

உன் பெருகிய விளைச்சலையும், வழிந்தோடும் இரசத்தையும் எனக்குப் படைக்கத் தாமதிக்காதே. உன் புதல்வருள் தலைப்பேறானவனை எனக்கு அர்ப்பணிப்பாய். 30 உன் மாடுகள், ஆடுகள் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் நீ அவ்வாறே செய்வாய். குட்டி ஏழு நாள் தன் தாயோடு இருக்கட்டும். எட்டாம் நாளன்று அதை எனக்கு அளிப்பாய்.

என் முன்னிலையில் நீங்கள் தூயவராய் இருங்கள். வயல் வெளியில் பீறப்பட்டுக் கிடக்கும் இறைச்சியை நீங்கள் உண்ண வேண்டாம். அதை நாய்களுக்குப் போடுங்கள்.

அதிகாரம் 23.

பொய், புரளியை நீ கிளப்ப வேண்டாம். அநியாயமாய்ப் பொய்ச்சாட்சியாகி, நீ தீயவருக்குக் கைகொடுக்க வேண்டாம்.

கெடுமதி கொண்ட கும்பலைப் பின்பற்றாதே. வழக்கின்போது கும்பலைச் சார்ந்து கொண்டு நீதியைத் திரித்துச் சான்று சொல்ல வேண்டாம்!

எளியவரது வழக்கிலும், அவருக்கெதிராக ஒரு தலைச்சார்பாக நிற்காதே.

உன் பகைவரின் வழிதவறித் திரியும் மாடோ கழுதையோ உனக்கு எதிர்ப்பட்டால் நீ அதனை உரியவரிடம் கொண்டு சேர்த்துவிடு.

உன்னை வெறுக்கும் ஒருவரின் கழுதை சுமையினால் படுத்துவிட்டதை நீ கண்டால், அந்நிலையில் அவரை விட்டகலாதே! அதைத் தூக்கிவிட அவருக்கு உதவிசெய்.

உன்னைச் சார்ந்துள்ள எளியவரின் வழக்கில் நீதியைத் திரித்து விடாதே.

தவறான குற்றச்சாட்டுகளிலிருந்து விலகியிரு. குற்றமற்றவரையும், நேர்மையாளரையும் கொலை செய்ய வேண்டாம். ஏனெனில், தீயவரை நல்லவராக நான் தீர்ப்பிடவே மாட்டேன்.

கையூட்டு வாங்காதே. கையூட்டு, பார்வையுடையவரையும் குருடராக்கும். நேர்மையாளரின் வழக்கையும் புரட்டிவிடும்.

அன்னியரை நீ ஒடுக்காதே. அன்னியரது உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராக இருந்தீர்கள்.

ஆறு ஆண்டுகள் உன் நிலத்தில் நீ விதைத்து அதன் விளைச்சலை சேமித்து வைப்பாய்.

ஏழாம் ஆண்டு அதை, ஓய்வு கொள்ளவும் தரிசாகக் கிடக்கவும் விட்டுவிடுவாய். உன் மக்களில் வறியவர்கள் தானாக விளைவதை உண்ணட்டும். அவர்கள் விட்டுவைப்பதை வயல்வெளி உயிரினங்கள் உண்ணும். உன் திராட்சைத் தோட்டத்திற்கும், உன் ஒலிவ தோட்டத்திற்கும் இவ்வாறே செய்வாய்.

ஆறு நாள்கள் நீ உன் வேலையைச் செய்வாய்: ஏழாம் நாளிலோ ஓய்ந்திருப்பாய். இதனால் உன் மாட்டுக்கும் உன் கழுதைக்கும் ஓய்வுகிடைக்கும்: உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அன்னியரும் இளைப்பாறுவர்.

நான் உங்களுக்கு சொன்ன யாவற்றையும் கடைபிடியுங்கள். பிற தெய்வங்களின் பெயரை நீங்கள் உச்சரிக்க வேண்டாம். அது உங்கள் வாயில் ஒலிக்கவும் வேண்டாம்.

ஆண்டில் மூன்று முறை நீ எனக்கு விழா எடுப்பாய்.

புளிப்பற்ற அப்ப விழாவை நீ கொண்டாட வேண்டும். நான் உனக்கு கட்டளையிட்டபடி ஆபிபு மாதத்தில் குறிக்கபட்ட காலத்தில் ஏழு நாள்கள் புளிப்பற்ற அப்பம் உண்பாய். ஏனெனில், அப்போது நீ எகிப்திலிருந்து வெளியேறினாய். எவரும் வெறுங்கையராக என் திருமுன் வரவேண்டாம்.

வயலில் நீ விதைத்து, உன் உழைப்பின் முதற்பலன் கிட்டும்போது, அறுவடைவிழா வும், ஆண்டுத் தொடக்கத்தில் வயலிலிருந்து உனது உழைப்பின் பயனை ஒன்று சேர்க்கையில் சேகரிப்பு விழா வும் எடுக்க வேண்டும்.

ஆண்டில் மூன்றுமுறை உன் ஆண்மகவு ஒவ்வொன்றும் தலைவராகிய ஆண்டவர் திருமுன் வரவேண்டும்.

எனக்குச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்த மாவுடன் படைக்காதே. என் விழாவிலுள்ள கொழுப்பு காலைவரைக்கும் இருக்கக்கூடாது.

உன் நிலத்தின் முதற்கனிகளில் முதன்மையானவற்றை உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்துக்குக் கொண்டு செல்வாய். குட்டியை அதன் தாய்ப்பாலில் சமைக்காதே.

வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.

அவர்முன் எச்சரிக்கையாயிரு: அவர் சொற்கேட்டு நட: அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக்கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது.

நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன்.

ஏனெனில், என் தூதர் உனக்குமுன் சென்று உன்னை எமோரியர், இத்தியர், பெரிசியர், கானானியர், இவ்வியர், எபூசியர் இவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும்போது நான் அவர்களை அழித்தொழிப்பேன்.

நீ அவர்கள் தெய்வங்களைப் பணிந்து கொள்ளவோ, அவைகளுக்கு வழிபாடு செய்யவோ, அவைகளுக்குரிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றவோ வேண்டாம். மாறாக அவற்றை அழித்தொழித்து அவற்றின் சிலைத்தூண்களை உடைத்துத் தள்ளுவாய்.

நீ உன் கடவுளாகிய ஆண்டவரை வழிபடவேண்டும். அவர் உன் உணவு தண்ணீர் இவற்றின் மேல் ஆசி வழங்குவார். அவர் உன் நடுவினின்று நோயை அகற்றிவிடுவார்.

குறைகாலப் பிள்ளைப்பேறும் மலடும் உன் நாட்டில் இரா. உன் வாழ்நாள்களின் எண்ணிக்கையை நான் நிறைவு செய்வேன்.

என் பேரச்சத்தை உனக்கு முன்னர் அனுப்பி, உன்னை எதிர்ப்படும் எல்லா மக்களையும் நான் கதிகலங்கச் செய்வேன். உன் பகைவர் அனைவரும் உனக்குப் புறம்காட்டச் செய்வேன்.

உனக்கு முன் நான் குளவிகளை அனுப்பி வைப்பேன். அவை இவ்வியரையும் கானானியரையும் இத்தியரையும் உனக்கு முன்னின்று துரத்திவிடும்.

ஆயினும், ஒரே ஆண்டில், உனக்கு முன்னின்று நான் அவர்களைத் துரத்திவிட மாட்டேன். துரத்தினால், நிலம் தரிசாகிவிடும். உன்னிலும் மிகுதியாக வயல்வெளி விலங்குகள் பலுகிப் பெருகிவிடும். 30 எனவே நீ பலுகிப்பெருகி நாட்டைக் கைப்பற்றும் வரை சிறிது சிறிதாக அவர்களை உனக்கு முன்னின்று துரத்திவிடுவேன்.

உன் எல்லைகள், செங்கடல்முதல் பெலிஸ்தியர் கடல்வரைக்கும், பாலைநிலம் முதல் யூப்பிரத்தீசு நதிவரைக்கும், விரிந்து கிடக்கச் செய்வேன். ஏனெனில் அந்நாட்டின் குடிமக்களை நான் உன் கையில் ஒப்படைப்பேன். நீயும் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.

நீ அவர்களுடனோ அவர்களுடைய தெய்வங்களுடனோ எந்த உடன்படிக்கையும் செய்யாதே!

அவர்கள் உன் நாட்டில் குடியிருக்க வேண்டாம். இல்லையெனில் நீ எனக்கு எதிராகப் பாவம் செய்ய அவர்கள் காரணமாவர். நீ அவர்கள் தெய்வங்களை வழிபடுவது உனக்குக் கண்ணியாக அமையும்.

அதிகாரம் 24.

ஆண்டவர் மோசேயிடம், ””ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோருடனும், இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களுடனும் ஆண்டவரிடமாய் ஏறிவாருங்கள்: தொலையில் நின்று தொழுதுகொள்ளுங்கள்.

மோசே மட்டும் ஆண்டவர் அருகில் வரலாம்: ஏனையோர் அருகில் வரலாகாது: மக்கள் அவரோடு மலை மேலேறி வரக்கூடாது”” என்று கூறினார்.

எனவே, மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக: ””ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்”” என்று விடையளித்தனர்.

மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார்.

அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர்.

மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார்.

அவர் உடன்படிக்கையின் ஏட்டைஎடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், ””ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்”” என்றனர்.

அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, ””இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ”” என்றார்.

பின்னர் மோசே, ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோரும் இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களும் மேலேறிச் சென்று,

இஸ்ரயேலின் கடவுளைக் கண்டார்கள். அவர் பாதங்களின் கீழுள்ள தளம் நீல மணிக்கல் இழைத்த வேலைப்பாடு போன்றும், தெள்ளிய வான்வெளி போன்றும் இருந்தது.

இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் மேல் அவர் கைவைக்கவில்லை. அவர்கள் கடவுளைக் கண்டனர்: உண்டு குடித்தனர்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””என்னிடம் மலைமேல் ஏறிவந்து இங்கேயே இரு. அவர்களுக்குக் கற்பிக்க நான் எழுதியுள்ள சட்டதிட்டங்கள் அடங்கிய கற்பலகைகளை உன்னிடம் அளிப்பேன்”” என்றார்.

மோசே தம் துணையாளர் யோசுவாவுடன் எழுந்து சென்றார். பின் மோசே கடவுளின் மலையின்மேல் ஏறிச் செல்கையில்,

அவர் பெரியோர்களை நோக்கி, ””நாங்கள் உங்களிடம் திரும்பி வரும்வரை நீங்கள் இவ்விடத்திலேயே எங்களுக்காகக் காத்திருங்கள். இதோ ஆரோனும், கூரும் உங்களோடு இருக்கிறார்கள். வழக்கு ஏதுமிருப்பவன் அவர்களை அணுகட்டும்”” என்றார்.

பின்னர் மோசே மலைமேல் ஏறிச்செல்ல, ஒரு மேகம் மலையை மூடிற்று.

ஆண்டவரின் மாட்சி சீனாய் மலைமேல் தங்கிற்று. மேகம் மலையை ஆறுநாள்களாக மூடியிருந்தது. ஏழாம் நாள் அவர் மேகத்தின் நடுவினின்று மோசேயை அழைத்தார்.

மலை உச்சியில் ஆண்டவரது மாட்சியின் காட்சி, பற்றியெரியும் நெருப்புப்போன்று இஸ்ரயேல் மக்களின் கண்களுக்குத் தெரிந்தது.

மோசே மேகத்தின் இடையே புகுந்து, மலைமேல் ஏறிச் சென்றார். மோசே மலையில் நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தார்.

அதிகாரம் 25.

ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:

இஸ்ரயேல் மக்கள் காணிக்கை கொண்டு வருமாறு நீ அவர்களோடு பேசு. தன்னார்வம் கொண்ட ஒவ்வொருவரிடமிருந்தும் நீங்கள் எனக்காகக் காணிக்கை பெற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய காணிக்கைகளாவன: பொன், வெள்ளி, வெண்கலம்:

நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல்: மெல்லிய நார்ப்பட்டு: வெள்ளாட்டு உரோமம்:

செந்நிறமாகப் பதனிட்ட ஆட்டுக்கிடாய்த் தோல்கள், வெள்ளாட்டுத் தோல்கள்: சித்திம் மரம்:

விளக்குக்கான எண்ணெய்: திருப்பொழிவு எண்ணெய்க்கும் தூபத்துக்கும் தேவையான நறுமண வகைகள்:

ஏப்போதுக்கும் மார்புப் பட்டைக்கும் தேவையான பன்னிற மணிவகைக் கற்கள், பதித்து வைக்கும் கற்கள்.

நான் அவர்கள் நடுவில் தங்குவதற்கென ஒரு தூயகம் அமைக்கப்படட்டும்.

திருஉறைவிட அமைப்பையும் அதன் அனைத்துப் பொருள்களின் அமைப்பையும் நான் உனக்குச் சொல்லிக் காட்டுகிறபடியெல்லாம் செய்யுங்கள்.

சித்திம் மரத்தால் அவர்கள் ஒரு பேழை செய்யட்டும். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம், உயரம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.

அதன் மேலெங்கும் பசும்பொன்னால் மூடுவாய். உள்ளும்புறமும் வேய்ந்திடுவாய். அதைச் சுற்றிலும் ஒரு பொன் தோரணம் பொருத்திடுவாய்.

நான்கு பொன் வளையங்களை வார்த்து, இரு வளையங்களை ஒரு பக்கத்திலும் இரு வளையங்களை மறுபக்கத்திலுமாக அதன் நான்கு கால்களோடும் பொருத்துவாய்,

சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து அவற்றையும் பொன்னால் மூடுவாய்.

பேழையைத் தூக்கிச்செல்லும்படி பேழையின் பக்கங்களிலுள்ள வளையங்களில் தண்டுகளை மாட்டிவைப்பாய்.

தண்டுகள் பேழையிலுள்ள வளையங்களில் மாட்டப்பட்டிருக்கட்டும். அங்கிருந்து அவை கழற்றப்படலாகாது.

நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளைப் பேழையினுள் வைப்பாய்.

மேலும் பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கை ஒன்று அமைப்பாய். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.

இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும்: இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்.

ஒரு புறத்தில், ஒரு கெருபும், மறுபுறத்தில் மற்றொரு கெருபுமாக அமைக்க வேண்டும். இரக்கத்தின் இருக்கையோடு இணைந்ததாக அதன் இரண்டு ஓரங்களிலும் கெருபுகளைச் செய்துவை.

அக்கெருபுகள், தம் இறக்கைகளை மேனோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும், இருக்கட்டும். கெருபுகளின் முகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் விளங்கட்டும்.

பேழைமேல் இரக்கத்தின் இருக்கையைப் பொருத்து, பேழையினுள் நான் உனக்களிக்கும் உடன்படிக்கைக் கற்பலகைகளை வைப்பாய்.

அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். உடன்படிக்கைப் பேழைக்கு மேலே அமைந்த இரக்கத்தின் இருக்கையில் இருகெருபுகள் நடுவிலிருந்து நான் உன்னோடு பேசி, இஸ்ரயேல் மக்களுக்கான கட்டளைகள் அனைத்தையும் உனக்குக் கொடுப்பேன்.

சித்திம் மரத்தால் ஒரு மேசை செய். அதன் நீளம் இரண்டு முழம், அகலம் ஒரு முழம், உயரம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.

அதனைப் பசும்பொன்னால் பொதிந்து சுற்றிலும் ஒரு பொன்தோரணம் செய்து வைப்பாய்.

மேலும் நான்கு விரல்கடை அளவில் அதற்குச் சுற்றுச்சட்டம் அமைத்து, சட்டத்தைச் சுற்றிலும் பொன்தோரணம் செய்து வைப்பாய்.

அதற்கு நான்கு பொன் வளையங்கள் செய்து, நான்கு மூலைகளிலும் நான்கு கால்களில் இணைத்துவிடு.

மேசையைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத் தாங்கும் வளையங்கள் சட்டத்தின் அருகில் கிடக்கட்டும்.

சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து, அவற்றையும் பொன்னால் பொதிவாய். இவைகளைக் கொண்டே மேசை தூக்கிச் செல்லப்பட வேண்டும்.

அதற்குரிய தட்டுகள், கிண்ணங்கள், சாடிகள், நீர்மபலிக்கான குவளைகள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். பசும் பொன்னால் அவற்றைச் செய்க. 30 என்முன் இம்மேசைமேல் எப்பொழுதும் திருமுன்னிலை அப்பம் வைப்பாயாக!

பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்வாய். அடிப்பு வேலையுடன் விளக்குத் தண்டை அமைப்பாய். அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக விளங்கட்டும்.

விளக்குத்தண்டின் ஒரு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளும், விளக்குத்தண்டின் மறு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளுமாக, அதன் பக்கங்களில் ஆறுகிளைகள் செல்லும்.

ஒரு கிளையில் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் சேர்ந்து அமையும். மறுகிளையிலும் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் அமையும். இவ்வாறே விளக்குத்தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் இருக்கட்டும்.

ஆனால், விளக்குத் தண்டுக்கு நேர் மேலே வாதுமை வடிவில் நான்கு கிண்ணங்கள் தம்தம் குமிழ்களுடனும் மலர்களுடனும் அமையும்.

முதல் இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், இடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், கடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ் என்று விளக்குத் தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளுக்கும் அமையும்.

அதன் குமிழ்கள் கிளைகள் யாவும் ஒன்றிணைந்தவையாயும் பசும்பொன் அடிப்பு வேலையுடன் அமைந்தவையாயும் இருக்கும்.

அதற்காக ஏழு அகல்கள் செய்வாய்: முன் பக்கமாக ஒளிவீசும் முறையில் அவற்றை ஏற்றிவைப்பாய்.

அதன் அணைப்பான்களும், நெருப்புத் தட்டுகளும் பசும்பொன்னாலேயே ஆக்கப்படவேண்டும்.

அதனையும் எல்லாத் துணைக்கலன்களையும் ஒரு தாலந்து பசும்சொன்னால் செய்து முடிப்பாய். 40 மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றைச் செய்யுமாறு கவனித்துக் கொள்.

அதிகாரம் 26.

மேலும் திருஉறைவிடத்தைப் பத்து மூடு திரைகளைக் கொண்டு செய்வாய். அவை முறுக்கேறி நெய்த மெல்லிய நார்ப் பட்டாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும் செய்யப்பட வேண்டும். அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.

மூடு திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழம், அகலம் நான்கு முழம். ஒரு மூடு திரையின் அளவே எல்லாத் திரைகளுக்குமாம்.

இவற்றுள் ஜந்து மூடு திரைகளை ஒன்றாகவும் ஏனைய ஜந்து மூடு திரைகளை ஒன்றாகவும் இணைத்து விட வேண்டும்.

பின்னர், முதல் தொகுப்பின் கடை ஓரத்தில் நீல வண்ணத்துணி வளையங்களை அமைப்பாய், அவ்வாறே அடுத்த தொகுப்பின் கடை ஓரத்திலும் வளையங்களை அமைப்பாய்.

முதல் திரைத்தொகுப்பின் ஓரத்தில் அமைக்க வேண்டிய வளையங்கள் ஜம்பது. மற்றத் திரைத்தொகுப்பின் ஓரத்தில் அமைக்க வேண்டிய வளையங்கள் ஜம்பது. வளையங்கள் எதிரெதிரே இருக்க வேண்டும்.

பொன்னால் கொக்கிகள் ஜம்பது செய்து, அக்கொக்கிகளால் திரைத்தொகுப்புகளை ஒன்றாய் இணைத்துவிடு. இவ்வாறு ஒன்றிணைந்து திருஉறைவிடம் அமையும்.

திருஉறைவிடத்தின் மேலே கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு உரோமத்தால் மூடுதிரைகள் செய்வாய். பதினொரு மூடுதிரைகள் செய்யப்பட வேண்டும்.

ஒரு மூடுதிரையின் நீளம் முப்பது முழம். அகலம் நான்கு முழம். பதினொரு மூடுதிரைகளுக்கும் அளவு ஒன்றே.

இவற்றுள் ஜந்து மூடுதிரைகளை ஒன்றாகவும் ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்துவிடு. ஆறு மூடுதிரைகளின் தொகுப்பு கூடாரத்தின் முன்பகுதியில் இரண்டாக மடிக்கப்பட்டுக் கிடக்கட்டும்.

முதல் திரைத்தொகுப்பின் ஓரத்தில் ஜம்பது வளையங்களை அமைப்பாய். அவ்வாறே ஜம்பது வளையங்களை அடுத்த திரைத்தொகுப்பின் ஓரத்திலும் அமைப்பாய்.

வெண்கலத்தால் ஜம்பது கொக்கிகள் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டிவிடு. இவ்வாறு ஒன்றிணைந்து கூடார மூடுதிரை அமையும்.

கூடார மூடுதிரையில் எஞ்சியிருக்கும் பாகம் தொங்கிக்கொண்டிருக்கும். திருஉறைவிடத்தின் பின்புறத்தே பாதித் திரை தொங்கும்.

கூடார மூடுதிரையின் பக்கங்களில் மீந்திருக்கும்பகுதி, திருஉறைவிடத்தின் ஒருபுறம் ஒரு முழமும், மறுபுறம் ஒரு முழமும் தொங்கி மறைக்கும்.

செந்நிறப் பதனிட்ட செம்மறி ஆட்டுக்கிடாய்த் தோல்களாலும், வெள்ளாட்டுத் தோல்களாலும் கூடாரத்திற்கு ஒரு மேல்விரிப்பு செய்வாய்.

திருஉறைவிடத்திற்கான செங்குத்தான சட்டங்களைச் சித்திம்மரத்தால் செய்வாய்.

ஒரு சட்டத்தின் நீளம் பத்து முழம். சட்டம் ஒவ்வொன்றின் அகலம் ஒன்றரை முழம்.

சட்டம் ஒன்றுக்கு இரு கொளுத்துகள் வீதம் சட்டத்தோடு சட்டத்தை இணைத்து விடு. அவ்வாறே திருஉறைவிடத்தின் எல்லாச் சட்டங்களும் இணைக்கப்பட வேண்டும்.

திருஉறைவிடத்திற்காகச் சட்டங்கள் செய்யுங்கள்: தெற்குப்பக்கம் தென்திசை நோக்கி நிற்க வேண்டியவை இருபது சட்டங்கள்.

ஒரு சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளோடு இரு பாதப்பொருத்துகள், அடுத்த சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளோடு இரு பாதப்பொருள்கள் என்று இருபது சட்டங்களுக்குக் கீழே நாற்பது வெள்ளிப் பொருத்துகள் வேண்டும்.

திரு உறைவிடத்தின் இரண்டாவது பக்கமாகிய வடதிசையில் இருபது சட்டங்கள் நிற்கும்.

ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு, மறுசட்டத்துக்குக் கீழே இரண்டு என்று அவற்றில் நாற்பது வெள்ளிபாதப் பொருத்துகள் இடம் பெறும்.

திருஉறைவிடத்தின் பின்புறமாகிய மேற்குப்பக்கத்திற்கான ஆறு சட்டங்கள் செய்வாய்.

அதனுடன் திருஉறைவிடத்தின் மூலைகளுக்காக இரண்டு சட்டங்களும் செய்வாய்.

அவை ஒவ்வொன்றும் கீழிருந்து மேலே முதல் வளையம் வரைக்கும் இரட்டைக் கனமாக அமைக்கப்படும். இவ்வாறே இரண்டு மூலைகளும் அமையும்.

ஒரு சட்டத்தின் அடியில் இரு பாதப்பொருத்துகள், மறுசட்டத்தினடியில் இரு பாதப்பொருத்துகள் என்று எட்டுச் சட்டங்களுக்குப் பதினாறு வெள்ளிப் பாதப்பொருத்துகள் வேண்டும்.

சித்திம் மரத்தால் குறுக்குச் சட்டங்கள் செய்வாய். திருஉறைவிடத்தின் ஒருபுறச் சட்டங்கள் மேலே ஜந்தும்,

திருஉறைவிடத்தின் மறுபுறச் சட்டங்கள் மேலே ஜந்தும், மேற்கே திருஉறைவிடத்தின் பின்புறச் சட்டங்கள் மேலே ஜந்துமாகக் குறுக்குச் சட்டங்கள் பொருத்துவாய்.

நடுவிலுள்ள குறுக்குச் சட்டம், பலகைகளுக்குச் சரிபாதியில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செலுத்தப்படவேண்டும்.

சட்டங்களைப் பொன்னால் பொதிவாய்: அவற்றில் குறுக்குச் சட்டங்களைச் செருகுவதற்காக வளையங்களைப் பொன்னால் செய்: குறுக்குச் சட்டங்களையும் பொன்னால் பொதிவாய். 30 இவ்வாறு மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட திட்டப்படி திருஉறைவிடத்தை நிறுவுவாய்.

மேலும் ஒரு திருத்தூயகத் தொங்குதிரை செய்யப்பட வேண்டும். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட வேண்டும். அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.

அதனை நான்கு சித்திம் மரத்தூண்களில் தொங்கவிடுவாய். இவை பொன் வளைவாணிகள் கொண்டவை: பசும்பொன்னால் மூடப்பட்டு நான்கு வெள்ளி பாதப்பொருள்களில் நிற்பவை.

கொக்கிகளில் அந்தத் திரையைத் தொங்கவிடு: அதற்கு உட்புறமாக உடன்படிக்கைப் பேழையை வைப்பாய். இவ்வாறு தொங்குதிரை தூயகத்தையும் திருத்தூயகத்தையும் பிரிக்கும்.

திருத்தூயகத்தில், உடன்படிக்கைப் பேழையின்மேல் இரக்கத்தின் இருக்கையை அமைப்பாய்.

தொங்குதிரைக்கு முன்புறம் ஒரு மேசையையும், மேசைக்கு எதிரே, திருஉறைவிடத்தின் தென்புறம், விளக்குத்தண்டையும் வைப்பாய்: மேசையையோ வடபுறம் வைப்பாய்.

கூடாரத்தின் நுழைவிடத்திற்காக ஒரு தொங்குதிரை செய்வாய். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும், பின்னல்வேலை கொண்டதாகச் செய்யப்பட வேண்டும்.

இத்திரையைத் தொங்கவிடுவதற்காக, ஜந்து சித்திம் மரத்தூண்களைச் செய்துவை. இவை பசும்பொன்னால் மூடப்பட்டனவாயும், பசும்பொன் வளைவாணிகள் கொண்டனவாயும், ஜந்து வெண்கலப் பாதப்பொருத்துகளில் நிற்பனவாயும் அமையட்டும்.

அதிகாரம் 27.

சித்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய். நீளம் ஜந்து முழம், அகலம் ஜந்து முழமாகப் பலிபீடம் சதுரவடிவமாய் இருக்கட்டும். அதன் உயரமோ மூன்று முழம்.

அதன் நான்கு மூலைகளிலும் கொம்புகள் அமைப்பாய். கொம்புகளும் பலிபீடத்தின் பாகமாகவே விளங்கும். பின் அதை வெண்கலத்தால் மூடு.

பின்னர் அதைச் சார்ந்த சாம்பல் சட்டிகள், அள்ளுகருவிகள், பலிக் கிண்ணங்கள், முள்கரண்டிகள், நெருப்புத் தட்டுகள் ஆகிய எல்லாக் கலன்களையும் வெண்கலத்தில் செய்வாய்.

அதைச்சுற்றி வலைப்பின்னலான வெண்கல வேலைப்பாடு செய்து, அத்தோடு இணைப்பாய். நான்கு மூலைகளிலும் நான்கு வளையங்களைப் பொருத்துவாய்.

பலிபீடத்தின் பாதிப் பகுதியை எட்டும்படி அதன் விளிம்புக்குக் கீழே வலைப் பின்னலைப் பொருத்து.

பலிபீடத்தின் தண்டுகளைச் சித்திம் மரத்தால் செய்து, அவற்றை வெண்கலத்தால் மூடுவாய்.

பலிபீடத்தைத் தூக்கிச் செல்வதற்காக அதன் இரு பக்கங்களிலும் இத்தண்டுகள் வளையங்களில் செலுத்தப்படும்.

பலகைகளைச் சேர்த்து உள்கூடாகப் பலிபீடத்தைச் செய்ய வேண்டும். மலைமேல் உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அது செய்யப்படட்டும்.

திருஉறைவிட முற்றத்தை நீ உருவாக்குவாய். தெற்குப்பக்கம் தென்திசை நோக்கி முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் செய்த தொங்கு திரைகளை நூறுமுழ நீளத்திற்குப் போடவேண்டும்.

அதற்கு இருபது தூண்களும், வெண்கலத்தில் இருபது பாதப் பொருத்துகளும், தூண்களுக்கான வெள்ளிக் கொளுத்துகளும், பூண்களும் தேவை.

அவ்வாறே, வடபக்கத்தில் நூறு முழ நீளமான தொங்குதிரைகளும், அவற்றுடன் இருபது தூண்களும், இருபது வெண்கலப் பாதப் பொருத்துகளும், தூண்களுக்கான வெள்ளிக் கொளுத்துகளும் பூண்களும் தேவை.

மேற்குப் பக்கத்தில் முற்றத்தின் அகலப்பகுதி ஜம்பது முழத் தொங்குதிரைகளாலும், அதற்கான பத்துத் தூண்களாலும் பத்துப் பாதப் பொருத்துகளாலும் அமையும்.

கதிரவன் தோன்றும் கீழ்த்திசை நோக்கிய முற்றத்தின் அகலம் ஜம்பது முழம்.

அதன் ஒரு பகுதி பதினைந்து முழத் தொங்குதிரைகளாலும் மூன்று தூண்களாலும், மூன்று பாதப் பொருத்துகளாலும் அமையும்.

மறுபகுதி பதினைந்து முழத் தொங்குதிரைகளாலும், மூன்று தூண்களாலும், மூன்று பாதப்பொருத்துகளாலும் அமைக்கப்படும்.

நடுப்பகுதியில், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த இருபது முழத்தொங்குதிரை முற்றத்தின் நுழை வாயிலாக விளங்கும். அதற்காக நான்கு தூண்களும், நான்கு பாதப் பொருத்துகளும் அமைக்கப்படட்டும்.

முற்றத்தைச் சுற்றியுள்ள எல்லாத் தூண்களுமே வெள்ளியால் மூடப்பட்டிருக்கும். அவற்றின் கொளுத்துகள் வெள்ளியாலும் பாதப்பொருத்துகள் வெண்கலத்தாலும் செய்யப்படும்.

முற்றத்தின் நீளம் நூறு முழம். அகலம் ஜம்பது முழம். உயரம் ஜந்து முழம். திரைகள் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலானவை. பாதப்பொருத்துகள் வெண்கலத்தாலானவை.

திருஉறைவிடத் திருப்பணிகளுக்கான அனைத்துப் பொருள்களும் அங்குள்ள கொளுத்துகளும், முற்றத்திலுள்ள எல்லாக் கொளுத்துகளும் வெண்கலமாய் இருக்கும்.

விளக்குக்காகப் பிழிந்த தூய்மையான ஒலிவ எண்ணெய் கொண்டு வரப்பட வேண்டுமென்று இஸ்ரயேல் மக்களுக்கு நீ கட்டளையிடுவாய்.

சந்திப்புக் கூடாரத்தில், உடன்படிக்கைப் பேழைக்கு முன்னுள்ள தொங்குதிரைக்கு வெளியே, அணையாவிளக்கு எரிந்துகொண்டிருக்கட்டும். ஆரோனும் அவன் புதல்வரும் இரவிலும் பகலிலும் அதைக் கவனித்துக் கொள்ளட்டும். தலைமுறை தோறும் இஸ்ரயேல் மக்களுக்கிடையில் மாறாமல் நிற்கும் சட்டம் இது.

அதிகாரம் 28.

எனக்குக் குருத்துவப்பணி புரிவதற்காக உன் சகோதரன் ஆரோனையும் அவன் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் ஆகியோரையும் இஸ்ரயேல் மக்கள் நடுவிலிருந்து அழைத்துவா.

உன் சகோதரன் ஆரோனுக்காக மாண்பும், அழகும் பொருந்திய திருவுடைகள் செய்வாய்.

திறமையால் நான் நிரப்பியுள்ள வல்லுநர்கள் எல்லாரிடமும் சொல்: எனக்குக் குருத்துவப்பணி புரியுமாறு ஆரோனைத் திருநிலைப்படுத்துவதற்காக அவர்கள் திருவுடைகள் செய்வார்கள்.

செய்யப்பட வேண்டிய உடைகளாவன: மார்புப்பட்டை, ஏப்போது, அங்கி, கோடிட்ட உள்ளாடை, தலைப்பாகை, இடைக்கச்சை ஆகியவை. இவ்வாறே, எனக்குக் குருத்துவப்பணி புரியும்படி உன் சகோதரன் ஆரோனுக்காகவும் அவன் புதல்வர்களுக்காகவும் திருவுடைகள் செய்யப்படட்டும்.

பொன்னையும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பயன்படுத்தி,

பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் கைதேர்ந்த வேலைப்பாடுடன் ஏப்போதை அமைக்கட்டும்.

அதற்கு இரு தோள்பட்டைகள் செய்து அதன் இரு பக்கத்து ஓரங்களிலும் அதை இணைத்துவிடு.

ஏப்போதை இணைக்கும் தோள்பட்டை, அதன் ஒரு பகுதியாகவும், அதைப் போலவே பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பெறும்.

பன்னிற மணிக்கற்கள் இரண்டு எடுத்து அவற்றின்மேல் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களைப் பொறித்துவைப்பாய்.

அறுவர் பெயர்களை ஒரு கல்லிலும் ஏனைய அறுவர் பெயர்களை இரண்டாம் கல்லிலுமாக அவர்களது பிறப்பு வரிசைப்படியே அவற்றில் பொறித்துவிடு.

கல்வேலைப்பாடாயும், முத்திரைவெட்டுப்போன்றும், இஸ்ரயேல் புதல்வர் பெயர்களை இரண்டு கற்களிலும் பொறித்து, அவற்றைப் பொன்னிழைப் பின்புலத்தில் பதித்து வைப்பாய்.

இவ்விரு கற்களையும் ஏப்போதின் தோள்பட்டையில் பொருத்திவிடு. இவை இஸ்ரயேல் மக்களின் நினைவுக் கற்களாகும். ஆரோன் அவர்கள் பெயர்களைத் தம் இரு தோள்களிலும் ஆண்டவர் திருமுன் நினைவுச் சின்னமாகத் தாங்கி நிற்பான்.

பொன் வேலைப்பாட்டுடன் பதக்கங்கள் செய்.

பின்னர், பசும் பொன்னால் பின்னல் வடிவில் இரு சங்கிலிகள் செய்து, சங்கிலிகளைப் பதக்கங்களில் பொருத்துவாய்.

தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் அமையவேண்டும். அதைப் பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்வாய்.

அது இரண்டாக மடிந்ததாயும், நீளம் ஒரு சாண், அகலம் ஒரு சாண் என்று சதுர வடிவமானதாயும் இருக்க வேண்டும்.

அதை நிரப்புமாறு அதன்மேல் கற்களை நான்கு வரிசையாகப் பதிப்பாய். முதல் வரிசையில் பதுமராகம், புட்பராகம், மரகதம் :

இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரம்:

மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல்:

நான்காம் வரிசையில் படிகப் பச்சை, கோமேதகம், கடல்வண்ணக்கல்-இவை யாயும் பொன்னிழைப் பின் புலத்தில் பதிக்கப்படட்டும்.

இந்தக் கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்பப் பன்னிரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றிலும் ஒரு பெயர் வீதம், பன்னிரண்டு குலங்கங்களுக்காகப் பன்னிரன்டு பெயர்களும் பொறிக்கப்பட்டு முத்திரைபோல் விளங்கும்.

மார்புப் பட்டைமேல் பொருத்த, பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த சங்கிலிகளைப் பசும்பொன்னால் செய்யவேண்டும்.

மார்புப் பட்டைக்காக இரு பொன் வளையங்களை செய்து, அந்த இரு வளையங்களையும் மார்புப்பட்டையின் இரு மூலைகளிலும் பொருத்துவாய்.

இரு பொன் சங்கிலிகளையும் மார்புப் பட்டையின் மூலைகளிலுள்ள இரு வளையங்களில் மாட்டிவிடு.

சங்கிலிகளின் மற்ற இரு முனைகளையும் இரு பதக்கங்களில் மாட்டுவாய். இவற்றை ஏப்போதின் தோள்பட்டையோடு, முன்புறமாய்ப் பொருத்துவாய்.

இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை மார்புப் பட்டையின் இரு விளிம்புகளில் உட்புற ஓரங்களில் ஏப்போதை அடுத்து இணைப்பாய்.

மேலும் இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை ஏப்போதின் இரு தோள் பட்டைகளின் முன்பக்கம் கீழ்ப்பகுதியில் அது இணையுமிடத்தில், ஏப்போதின் பின்னலழகுக் கச்சைக்கு மேலே கோர்த்துவிடு.

பின்னர் மார்புப் பட்டையின் வளையங்களை ஏப்போதின் வளையங்களோடு, நீல நாடாவால் இணைத்துக் கட்டு. இவ்வாறு மார்புப்பட்டை ஏப்போதின் பின்னலழகுக் கச்சையிலிருந்து அகலாமலும் ஏப்போதின் மேல்படிந்தும் நிற்கும்.

ஆரோன் திருத்தலத்திற்குள் செல்கையில், தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டையின் மேலுள்ள இஸ்ரயேல் புதல்வர் பெயர்களைத் தம் நெஞ்சின் மேல் தாங்கி நிற்பான். அவை ஆண்டவர் திருமுன் நீங்காத நினைவுச் சின்னமாகத் திகழும். 30 தீர்ப்புக் கூறும் மார்புப் பட்டையில், ஊரிமையும் தும்மியையும் இட்டு வைப்பாய். ஆரோன் ஆண்டவர் திருமுன் செல்கையில், அவையும் அவன் நெஞ்சின்மேல் கிடக்கும். இவ்வாறு ஆரோன், ஆண்டவர் திருமுன் செல்லும்போதெல்லாம் இஸ்ரயேல் மக்களுக்கான தீர்ப்பைத் தம் நெஞ்சின்மேல் தாங்கி நிற்பான்.

ஏப்போதின் அங்கி முழுவதும் நீலு நிறத்தில் செய்வாய்.

அதில் தலை நுழைய ஒரு திறப்பும், அதனைச் சுற்றி, மேலாடைகளின் திறப்பில் அமைவது போன்று, நெசவு வேலைப்பாடுள்ள ஒரு கரையும், அமைந்திருக்கட்டும். ஆக, அது கிழியாதிருக்கும்.

அதன் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்பட்டாலும் மாதுளைத் தொங்கலும், சுற்றிலும் அதனிடையே பொன்மணிகளும் பொருத்துவாய்.

ஒரு பொன்மணி, ஒரு மாதுளைத் தொங்கல், பின்னும் ஒரு பொன்மணி, ஒரு மாதுளைத் தொங்கல் என்று அங்கியின் விளிம்பெங்கும் அமைத்திடு.

திருப்பணி புரிகையில் ஆரோன் இதனை அணிந்திருக்க வேண்டும். இதனால் அவன் ஆண்டவர் திருமுன் தூயகத்தில் நுழைகையிலும் வெளி வருகையிலும் அதன் ஒலி கேட்கும். இல்லையெனில் அவன் சாவான்.

பசும் பொன்னால் ஒரு பட்டம் செய்து, அதன் மேல் ””ஆண்டவருக்கு அர்ப்பணம்”” என்று முத்திரைபோல் பொறித்து வைத்து,

அதனை ஒரு நீல நாடாவால் தலைப்பாகைமேல் இணைத்துக்கட்டு: தலைப்பாகையின் முன்புறம் அது நிற்கும்.

அது ஆரோனின் நெற்றிமேல் நிற்கட்டும். இஸ்ரயேல் மக்களைப் புனிதமாக்கும் திருப்பொருள்கள், அவர்கள் அளிக்கும் புனிதப் படையல்கள் ஆகியவற்றிலுள்ள குறைபாடுகளை ஆரோன் சுமந்து கொள்ளவும். இதனால் யாவும் ஆண்டவர் திருமுன் ஏற்கப் பெறவும், அது எப்போதும் அவன் நெற்றிமேல் நிற்கட்டும்.

மேலும் மெல்லிய நார்ப்பட்டால் உள்ளங்கி செய்யவேண்டும். தலைப்பாகையையும் மெல்லிய நார்ப்பட்டால் நெய்வாய். பின்னல் வேலைப்பாட்டுடன் ஓர் இடைக்கச்சையையும் செய்வாய். 40 ஆரோனின் புதல்வர்களுக்குத் தேவையான அங்கிகளும், இடைக் கச்சைகளும், தலைப்பாகைகளும் மாண்பும் அழகும் பொருந்தியனவாய் செய்யப்படட்டும்.

இவற்றால் உன் சகோதரன் ஆரோனையும் அவன் புதல்வர்களையும் நீ உடுத்துவாய். அவர்களுக்கு அருள்பொழிவு செய்து, அவர்களைத் திருநிலைப்படுத்தி அர்ப்பணிப்பாய். அவர்கள் எனக்கு குருத்துவப்பணி புரிவார்கள்.

அவர்களின் பிறந்தமேனி மறைவதற்காக இடுப்பு முதல் தொடைகள் வரை நீண்டிருக்கும் அளவில் மெல்லிய நார்ப்பட்டால் கால்சட்டைகள் செய்வர்.

சந்திப்புக்கூடாரத்திற்குப் போகும்போதும், தூயதலத்தில் பணிபுரியுமாறு பலிபீடத்தை அணுகும்போதும், ஆரோனும் அவன் புதல்வர்களும் இவற்றை அணிந்திருப்பார்கள். இல்லாவிடில், அவர்கள் குற்றத்துக்குள்ளாகிச் சாவார்கள். அவனுக்கும், அவனுக்குப்பின் அவன் வழிமரபினர்க்கும், மாறாத கட்டளை இது.

அதிகாரம் 29.

எனக்குக் குருத்துவப் பணி புரிய நீ அவர்களைத் திருநிலைப்படுத்துவதற்காக அவர்களுக்கு இவ்வாறுசெய். ஓர் இளங்காளையையும் குறைபாடற்ற இரு செம்மறிக்கிடாய்களையும் தேர்ந்தெடு.

சிறந்த கோதுமை மாவினால் புளிப்பற்ற அப்பம், எண்ணெயில் பிசைந்த புளிப்பற்ற நெய்யப்பம், எண்ணெய் தோய்ந்த புளிப்பற்ற மெல்லிய அடைகள் ஆகியவற்றைச் செய்து,

ஒரு கூடையில் இட்டு, கூடையோடு அவற்றை எடுத்துவா. மேலும் அந்தக் காளையையும் இரு செம்மறிக்கிடாய்களையும் கொண்டு வா.

சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் ஆரோனையும் அவன் புதல்வரையும் அருகில் வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவு.

உடைகளை எடுத்து வந்து கோடிட்ட உள்ளாடை, ஏப்போதின் அங்கி, ஏப்போது, மார்புப்பட்டை இவற்றை ஆரோனுக்கு அணிவித்து ஏப்போதின் கைவண்ணமிக்க கச்சையால் கட்டுவாய்.

அவன் தலைமேல் தலைப்பாகையை வைத்து அதன் மேல் புனித மணிமுடியையும் வை.

திருப்பொழிவு எண்ணெயை எடுத்துவந்து, அவன் தலைமேல் ஊற்றி அவனுக்கு அருள்பொழிவு செய்.

அவன் புதல்வரையும் கூட்டி வந்து, அவர்களுக்கும் ஆடைகள் அணிவிப்பாய்.

ஆரோனுக்கும், அவன் புதல்வருக்கும் இடைக்கச்சைகள் கட்டி, அவர்களுக்கும் தலைப்பாகைகள் அணிவி. குருத்துவப்பணி என்றுமுள்ள நியமமாக அவர்களோடு இருக்கும். இவ்வாறாக ஆரோனையும் அவன் புதல்வரையும் திருநிலைப்படுத்துவாய்.

பின்னர் சந்திப்புக் கூடாரத்தின் முன் காளையைக் கொண்டு வருவாய். ஆரோனும் அவன் புதல்வரும் தங்கள் கைகளைக் காளையின் தலைமேல் வைத்தபின்,

அக்காளையைச சந்திப்புக் கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் அடிப்பாய்.

காளையின் இரத்தத்தை எடுத்து, பலிபீடத்தின் கொம்புகளில் உன் விரலால் பூசியபின், மீதி இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடு.

குடல்களைச் சுற்றி அமைந்த அனைத்துக் கொழுப்பு, ஈரல் மேல் உள்ள சவ்வு, இரு சிறுநீரகங்கள், அவற்றின் மேலுள்ள கொழுப்பு ஆகியவற்றை எடுத்துப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்துப் போடுவாய்.

காளையின் சதை, அதன் தோல், அதன் சாணம் இவற்றைப் பாளையத்திற்கு வெளியே நெருப்பால் எரித்துவிடு. இது ஒரு பாவம்போக்கும் பலி!

பின்னர், செம்மறிக்கிடாய் ஒன்றினைக் கொண்டுவா. ஆரோனும் அவன் புதல்வரும் அந்தச் செம்மறிக் கிடாயின் தலைமேல் தம் கைகளை வைப்பர்.

அந்தச் செம்மறிக்கிடாயைகக் கொன்று அதன் இரத்தத்தை எடுத்துப் பலிபீடத்தைச் சுற்றிலும் அதன்மீது தெளிப்பாய்.

செம்மறிக்கிடாயைப் பகுதி பகுதியாக வெட்டு. அதன் குடலையும் அதன் கால்களையும் கழுவு. அவற்றை ஆட்டின் பகுதிகளோடும் தலையோடும் வைத்து,

செம்மறியாடு முழுவதையும் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்துவிடு. இது ஆண்டவருக்கு எரிபலி ஆகும். இது ஆண்டவருக்கு எரிபலி ஆகும். இது ஆண்டவருக்கு இனிய நறுமண மிக்க நெருப்புப்பலி ஆகும்.

இரண்டாவது செம்மறிக்கிடாயையும் கொண்டுவா. அச்செம்மறியின் தலைமேல் ஆரோனும் அவன் புதல்வரும் கைகளை வைக்கட்டும்.

அந்தச் செம்மறிக்கிடாயையும் வெட்டு. அதன் இரத்தத்தை எடுத்து ஆரோனின் வலக்காது நுனியிலும், அவன் புதல்வரின் வலக்காது நுனியிலும் அவர்கள் வலக்கை பெருவிரலிலும், அவர்கள் வலக்கால் பெருவிரலிலும் தொட்டு வைத்தபின், எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் அதன்மீது தெளித்துவிடு.

பலிபீடத்தின் மீதுள்ள இரத்தத்திலும் திருப்பொழிவு எண்ணெயிலும் சிறிது எடுத்து, அவற்றை ஆரோன், அவன் உடைகள், அவன் புதல்வர்கள், அவர்களின் உடைகள் மீது தெளிப்பாய். இதனால் அவன் அவனுடைய உடைகளோடும், அவன் புதல்வர்கள் அவர்களுடைய உடைகளோடும் புனிதம் பெறுவர்.

செம்மறிக்கிடாயின் கொழுப்பு, கொழுப்பு வால், குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பு, ஈரல் மேலுள்ள சவ்வு, இரு சிறுநீரகங்கள், அவற்றின் மேலுள்ள கொழுப்பு, வலப்பக்க முன்னந்தொடை ஆகியவற்றை எடுத்துக்கொள். ஏனெனில் இது திருநிலைப்பாட்டிற்கான செம்மறிக்கிடாய்.

மேலும் ஓர் அப்பம், ஒரு நெய்யப்பம், ஒரு மெல்லிய அடை ஆகியவற்றை ஆண்டவர் திருமுன் உள்ள புளிப்பற்ற அப்பக் கூடையிலிருந்து எடுத்து,

இவை யாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவன் புதல்வரின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவற்றை ஆண்டவர் திருமுன் ஆரத்திப் பலியாக உயர்த்துவாய்.

பின் அவற்றை அவர்கள் கையிலிருந்து எடுத்து எரிபலியோடு சேர்த்து ஆண்டவருக்கு இனிய நறுமணமாகப் பலிபீடத்தின் மேல் எரித்துவிடு. இது ஆண்டவருக்கு நெருப்புப் பலி.

ஆரோனின் திருநிலைப்பாட்டிற்கான செம்மறியின் மார்புக்கண்டத்தை எடுத்து, அதனை ஆரத்திப் பலியாய் ஆண்டவர் திருமுன் உயர்த்துவாய். அது உனக்குரிய பங்காக அமையும்.

ஆரோனுடையவும் அவன் புதல்வருடையவும் திருநிலைப்பாட்டிற்கான செம்மறிக்கிடாயிலிருந்து எடுக்கப்பட்டு ஆரத்திப் பலியாக்கப்பட்ட மார்புக் கண்டத்தையும், ஆரத்தியாக உயர்த்தி குருக்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்கான சந்தையும் நீ புனிதப்படுத்து.

இது ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் இஸ்ரயேல் மக்களிடமிருந்து வரும் என்றுமுள்ள உரிமைப்பங்காக விளங்கும். ஏனெனில், இது குருக்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்கு. இது இஸ்ரயேல் மக்களின் நல்லுறவுப் பலிகளிலிருந்து குருக்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்காகும். ஏனெனில், இது அவர்கள் அளிக்கும் ஆண்டவருக்கான பங்கு.

ஆரோனுக்குப்பின் திருவுடைகள் அவன் புதல்வரைச் சேரும். அவர்கள் அருள்பொழிவு பெறும் போதும் திருநிலைப்படுத்தப்படும் போதும் அவற்றை அணிந்திருக்க வேண்டும். 30 அவனுக்குப் பதிலாக புதல்வர்களுள் குருவாகிறவன் சந்திப்புக் கூடாரத்தில் உள்ள தூயகத்தில் பணிபுரிய வருகையில் அவற்றை ஏழு நாள்கள் அணிந்திருப்பான்.

திருநிலைப்பாட்டிற்கான செம்மறிக்கிடாயைக் கொண்டுவந்து, அதன் இறைச்சியை ஒரு புனிதமான இடத்தில் கொதித்து வேகபைப்பாய்.

ஆரோனும் அவன் புதல்வர்களும் செம்மறிக்கிடாயின் கறியையும், கூடையிலுள்ள அப்பத்தையும் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின்கண் உண்பார்கள்.

அவர்களைத் திருநிலைப்படுத்தி அர்ப்பணம் செய்யும்போது பாவக்கழுவாய்க்காகப் பயன்பட்டவற்றை அவர்கள் உண்பார்கள். அன்னியரோ அவற்றை உண்ணலாகாது. ஏனெனில் அவை புனிதமானவை.

திருநிலைப்பாட்டிற்கான கறியோ அப்பமோ காலைவரை எஞ்சியிருந்தால், எஞ்சியுள்ளதை நெருப்பில் சுட்டெரித்துவிடு. அது உண்ணப்படல் ஆகாது. ஏனெனில், அது புனிதமானது.

நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீ ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் செய். ஏழு நாள்கள் நீ அவர்களைத் திருநிலைப்படுத்துவாய்.

பாவக் கழுவாய்க்கென்று ஒவ்வொரு நாளும், நீ ஒரு காளையைப் பாவம்போக்கும் பலியாக ஒப்புக்கொடு, இவ்வாறு பாவக்கழுவாய் செய்து பலிபீடத்தைத் தூய்மைப்படுத்துவாய். அதனை அர்ப்பணிப்பதற்காகத் திருப்பொழிவு செய்வாய்.

ஏழு நாள்கள் பலிபீடத்திற்கென்று பாவக்கழுவாய் செய்து, அதனை அர்ப்பணம் செய். பலிபீடம் தூய்மைமிக்கதாகும். பலிபீடத்தைத் தொடுவதெல்லாம் புனிதம் பெறும்.

ஒரு வயது செம்மறிக்குட்டிகளை நாளுக்கு இரண்டு வீதம், எந்நாளும் நீ பலிபீடத்தில் பலியிடுவாய்.

ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியைக் காலையிலும், இரண்டாவது செம்மறி ஆட்டுக்குட்டியை மாலை மங்கும் வேளையிலும் பலியிடு. 40 இரண்டு படி அளவில் பத்தில் ஒரு அளவு மெல்லிய மாவை ஆட்டிப்பிழிந்த கால்கலயம் அளவு எண்ணெயில் கலந்து அதையும், நீர்மப்படையலாகக் கால்கலயம் அளவு திராட்சைப்படி இரசத்தையும் ஒரு செம்மறிக்குட்டியோடு படைப்பாய்.

மாலைமங்கும் வேளையில் மற்றச் செம்மறிக் குட்டியைப் பலியிடுவாய். காலையில் செய்தது போலவே, உணவுக் காணிக்கைகளோடு நீர்மப்படையலையும் சேர்த்து ஆண்டவருக்கு இனிய நறுமணமாக நெருப்புப் பலியாக்குவாய்.

நான் உங்களைச் சந்தித்து உன்னிடம் பேசுகின்ற சந்திப்புக் கூடார நுழைவாயிலில், அது உங்கள் தலைமுறைதோறும் என்றுமுள்ள எரிபலியாக ஆண்டவர் திருமுன் நடந்தேறட்டும்.

நான் அங்கு இஸ்ரயேல் மக்களைச் சந்திப்பேன். அந்த இடம் என் மாட்சியால்புனிதம் பெறும்.

நான் சந்திப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் புனிதப்படுத்துவேன். எனக்குக் குருத்துவப்பணி புரிய நான் ஆரோனையும் அவன் புதல்வரையும் புனிதப்படுத்துவேன்.

நான் இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன்: அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்.

அவர்களிடையே குடியிருப்பதற்காக எகிப்து நாட்டினின்று அவர்களை நடத்திவந்த அவர்களின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வர். ஆம், நானே அவர்களின் கடவுளாகிய ஆண்டவர்.

அதிகாரம் 30.

நறுமணப்பொருள் எரிக்குமாறு ஒரு பீடம் செய். சித்திம் மரத்தால் அதனைச் செய்வாய்.

நீளம் ஒரு முழம் அகலம் ஒரு முழம் என்று அது சதுரமாக அமையட்டும்: அதன் உயரம் இரு முழம்: கொம்புகளும் அதனுடன் ஒன்றிணைந்தவையாக இருக்கட்டும்.

அதன் மேல்பாகம், அதன் பக்கங்கள், அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்து, சுற்றிலும், தங்கத் தோரணம் பொருத்து.

அந்தத் தோரணத்திற்குக் கீழே இரு மூலைகளிலும் இரு பொன் வளையங்கள் வீதம் இரு பக்கங்களிலும் பொருத்து. அதைத் தூக்கிச் செல்வதற்கான தண்டுகளுக்கு அவைபிடிப்பாக விளங்கும்.

சித்திம் மரத்தால் அத்தண்டுகளைச் செய்து, அவற்றையும் பொன்னால் வேய்ந்திடு.

உடன்படிக்கைப் பேழைக்கு முன்னால், திருத்தூயகத் திரையின் முன்னிலையில் தூபபீடத்தை வைப்பாய். உடன்படிக்கைப் பேழை மேலுள்ள இரக்கத்தின் இருக்கையில் நான் உன்னைச் சந்திப்பேன்.

காலைதோறும் ஆரோன் அதன்மேல் நறுமணப்பொருள் எரிப்பானாக! விளக்குகளை ஆயத்தப்படுத்தும்போதும் அவன் நறுமணப்பொருள் எரிப்பானாக!

மாலை மங்கும் வேளையில் ஆரோன் விளக்குகளை ஏற்றும்போது, உங்கள் தலைமுறைதோறும் ஆண்டவர் திருமுன் இடைவிடாமல் நறுமணப்பொருள் எரிப்பானாக!

வேற்று நறுமணப் பொருளையோ, மற்றும் எரிபலியையோ, உணவுப் படையலையோ அதன்மேல் படைத்தலாகாது. அதன் மேல் நீர்மப் படையலையும் ஊற்றக்கூடாது.

ஆண்டுக்கு ஒருமுறை ஆரோன் அதன் கொம்புகள் மேல் பாவக் கழுவாய் நிறைவேற்றுவான். ஆண்டுக்கு ஒருமுறை பாவம்போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துப் பாவக்கழுவாயை உங்கள் தலைமுறைதோறும் நிறைவேற்றுவான். ஏனெனில், அது ஆண்டவருக்குப் புனிதமிக்கதாகும்.

ஆண்டவர் மோசேயை நோக்கி,

””நீ இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்காகக் குடிக்கணக்கு எடுக்கும் போது, எண்ணிக்கைக்குட்பட்டவர் ஒவ்வொருவரும் தம் உயிருக்கு ஈடாக ஆண்டவருக்கு மீட்புப் பணம் கட்டவேண்டும். இல்லையெனில் அவர்கள் கணக்கிடப்படுகையில் அவர்களிடையே கொள்ளைநோய் வந்துவிடும்.

எண்ணிக்கைக்குட்படும் யாவரும் திருத்தலச் செக்கேலில் அரைச் செக்கேல் வீதம் கட்டவேண்டும். (ஒரு செக்கேல் என்பது இருபது கேரா என்க). அந்த அரைச் செக்கேல் ஆண்டவருக்குரிய காணிக்கையாகும்.

எண்ணிக்கைக்கு உட்படும் அனைவரும்-அதாவது இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்கள் யாவரும்- ஆண்டவருக்குரிய காணிக்கை அளிப்பார்கள்.

உங்கள் உயிர்களுக்குப் பாவக்கழுவாயாக ஆண்டவருக்குரிய காணிக்கை செலுத்தும்போது பணக்காரன் அரைச் செக்கேலுக்கு அதிகமாகவோ, ஏழை அதற்குக் குறைவாகவோ கொடுக்கவேண்டாம்.

இஸ்ரயேல் மக்களிடமிருந்து பாவக்கழுவாய்ப் பணத்தை வசூலித்து அதைச் சந்திப்புக்கூடாரத்திருப்பணிக்கென்று கொடுத்துவிடு. உங்கள் உயிர்களுக்காக பாவக்கழுவாய் செய்ய இஸ்ரயேல் மக்களுக்கு இது ஆண்டவர் திருமுன் நினைவுச் சின்னமாய் இருக்கட்டும்”” என்றார்.

பின்னும் ஆண்டவர் மோசேயிடம்,

””கழுவுவதற்காக ஒரு வெண்கல நீர்த்தொட்டியை அதற்கான வெண்கல ஆதாரத்தோடு செய். சந்திப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் அதனை வைத்து அதில் தண்ணீர் ஊற்றுவாய்.

ஆரோனும் அவன் புதல்வரும் இதிலிருந்து தங்கள் கைகளையும் பாதங்களையும் கழுவ வேண்டும்.

சந்திப்புக் கூடாரத்தில் நுழையும்போது அல்லது பலிபீடத்தை நெருங்கி ஆண்டவருக்கு நெருப்புப் பலிகளைச் சுட்டெரிக்கும் பணிபுரியும்போது அவர்கள் தண்ணீரால் கழுவிக்கொள்வார்கள். இல்லையெனில் அவர்கள் செத்துமடிவார்கள்.

அவர்கள் சாகாமல் இருக்கும்படி கைகளையும் பாதங்களையும் கழுவிக் கொள்வார்கள். இது அவர்களுக்கு அதாவது அவனுக்கும் தலைமுறைதோறும் அவன் வழிமரபினருக்கும் என்றுமுள்ள நியமமாக இருக்கும்”” என்றார்.

மீண்டும் ஆண்டவர் மோசேயிடம்,

””ஜந்நூறு திருத்தல செக்கேல் எடைக்கு உயர்தர வெள்ளைப்போளம், அதன் பாதி நிறையாகிய இருநூறு ஜம்பத்துக்கு மணங்கமழும் கருவாப்பட்டை, இருநூற்று ஜம்பதுக்கு நறுமண வசம்பு.

ஜந்நூறுக்கு இலவங்கப்பட்டை ஆகிய தலைசிறந்த நறுமணப் பொருள்களை எடுத்து, ஒரு கலயம் அளவு ஒலிவ எண்ணெயும் சேர்த்து,

திறமை வாய்ந்த பரிமளத் தயாரிப்பாளன் செய்வதுபோல், கூட்டுத் தைலமாக ஒரு தூய திருப்பொழிவு எண்ணெய் தயாரிப்பாய். இது தூய திருப்பொழிவு எண்ணெயாக இருக்கும்,

இதைக்கொண்டு சந்திப்புக் கூடாரம். உடன்படிக்கைப் பேழை,

மேசை, அதன் அனைத்துத் துணைக் கலன்கள், விளக்குத் தண்டு, அதன் துணைக் கலன்கள், தூபப்பீடம்,

எரிபலிபீடம், அனைத்துத் துணைக்கலன்கள், நீர்த்தொட்டி, அதன் ஆதாரம் ஆகியவற்றைத் திருப்பொழிவு செய்வாய்.

நீ அவற்றை அர்ப்பணம் செய்வதால் அவை புனிதமானவையாகும். மேலும் அவற்றைத் தொடுபவை அனைத்தும் புனிதம் பெறும். 30 ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் நீ அருள்பொழிவு செய்து, அவர்களை எனக்குக் குருத்துவப்பணி புரியுமாறு திருநிலைப்படுத்துவாய்.

மேலும் நீ இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்க வேண்டியது: இது என்னுடைய தூய திருப்பொழிவு எண்ணெயாக உங்கள் தலைமுறைதோறும் இருக்க வேண்டும்.

சாதாரணத் தேவைக்காக மனித உடலில் அது பூசப்படல் ஆகாது. இந்தக் கலவை விகிதப்படி இதைப்போன்ற எண்ணெய் தயாரிக்கப்படலாகாது. இது புனிதமானது. உங்களுக்கும் இது புனிதமானதாக இருக்கட்டும்.

இதைப்போன்று கலவை தயார் செய்பவனும், இதிலிருந்து பிற மக்களுக்குக் கொடுப்பவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்”” என்றார்.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””நறுமணப் பொருள்களான வெள்ளைப்போளம், குங்கிலியம், கெல்பான், பிசின் ஆகியவற்றையும், கலப்பில்லாச் சாம்பிராணியையும் சம அளவில் எடுத்துக் கொண்டு,

உப்பு சேர்க்கப்பட்ட துப்புரவான புனித நறுமணக்கட்டியை திறமைவாய்ந்த பரிமளத் தயாரிப்பாளன் செய்வதுபோல நீ தயாரிக்க வேண்டும்.

அதில் ஒரு பகுதியை நன்கு பொடியாக்கி, நான் உனக்குக் காட்சிதரும் சந்திப்புக்கூடாரத்திலுள்ள உடன்படிக்கைப் பேழைக்கு முன்னால் வைக்க வேண்டும். அது உங்களிடையே தூய்மை மிக்கதாகத் திகழும்.

இந்தக் கலவைக்குரிய விகிதப்படி நறுமணக் கட்டியை நீங்கள் உங்களுக்கென்று செய்து கொள்ள வேண்டாம். ஆண்டவர் பொருட்டு இது உங்களிடையே தூயதாகத் திகழும்.

நறுமணம் முகர்வதற்காக இதைப்போன்று செய்பவன் எவனும், தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்படவேண்டும்”” என்றார்.

அதிகாரம் 31.

ஆண்டவர் மோசேயிடம்,

””யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகனான ஊரியின் மகன் பெட்சலேல் என்பவனை நான் பெயர் சொல்லி அழைத்துள்ளேன்.

ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன்.

இதனால் அவன் பொன், வெள்ளி, வெண்கல வேலை செய்யவும், பதிக்க வேண்டிய கற்களுக்குப் பட்டை தீட்டவும்,

மரத்தைச் செதுக்கவும் மற்றெல்லாவித நுண்ணிய வேலைகள் செய்யவும் வேண்டிய திட்டமிடும் நுட்பத்திறன் பெற்றுள்ளான்.

மேலும், தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபு என்பவனையும் நான் அவனோடு நியமித்துள்ளேன். ஞானமுள்ளோர் அனைவரின் உள்ளத்திலும் நானே ஞானம் அருளியுள்ளதால், அவர்கள் நான் உனக்குக் கட்டளையிட்டபடி அனைத்தையும் செய்வர். அவையாவன:

சந்திப்புக் கூடாரம், உடன்படிக்கைப் பேழையோடு அதன் மேலமைந்த இரக்கத்தின் இருக்கை, கூடாரத்திலுள்ள அனைத்துத் துணைக்கலன்கள்,

அப்ப மேசே, அதன் துணைக்கலன்கள், பழுதற்ற விளக்குத் தண்டு, அதன் அனைத்துத் துணைக்கலன்கள், தூபபீடம்,

எரிபலிபீடம், அதன் அனைத்து துணைக்கலன்கள், தண்ணீர்த் தொட்டி, அதன் ஆதாரம்,

அழகுறப் பின்னப்பட்ட ஆடைகள், குருவாகிய ஆரோனுக்குரிய திருவுடைகள், குருத்துவப் பணிபுரிவதற்காக அவன் புதல்வருக்குரிய ஆடைகள்,

திருப்பொழிவு எண்ணெய், தூயதலத்திற்கான நறுமணத் தூப வகைகள் ஆகியவை. நான் உனக்குக் கட்டளையிட்டபடி இவை அனைத்தையும் அவர்கள் செய்வர்”” என்றார்.

ஆண்டவர் மோசேயிடம்,

””நீ இஸ்ரயேல் மக்களிடம் அறிவிக்க வேண்டியதாவது: நீங்கள் என் ஓய்வு நாள்களைக் கருத்தாய்க் கடைப்பிடியுங்கள். ஆண்டவராகிய நானே உங்களைப் புனிதமாக்குகிறவர் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளும்படி அது எனக்கும் உங்களுக்கும் இடையில் உங்கள் தலைமுறைதோறும் ஓர் அடையாளமாக இருக்கும்.

ஓய்வுநாளைக் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்குப் புனிதமானதாகும். அதன் தூய்மையைக் கெடுப்பவன் கொல்லப்படவே வேண்டும். அந்நாளில் வேலை செய்பவன் எவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.

ஆறு நாள்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ ஓய்வு நாளாகிய சாபாத்து . ஆண்டவருக்குப் புனிதமான நாள். ஓய்வு நாளில் வேலை செய்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.

இஸ்ரயேல் மக்கள் ஓய்வுநாளைக் கடைபிடிக்க வேண்டும். என்றுமுள்ள உடன்படிக்கையாக விளங்கும்படி தலைமுறைதோறும் ஓய்வுநாளைக் கைக்கொள்ள வேண்டும்.

இது எனக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே என்றுமுள்ள ஓர் அடையாளம். ஏனெனில் ஆண்டவராகிய நான் ஆறு நாள்களில் விண்ணுலகையும் மண்ணுலகையும் உருவாக்கி ஏழாம் நாளில் ஓய்வெடுத்து இளைப்பாறினேன்”” என்றார்.

ஆண்டவர் சீனாய்மலைமேல் மோசேயோடு பேசி முடித்தபின், கடவுளின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளான உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் அவரிடம் அளித்தார்.

அதிகாரம் 32.

மோசே மலையினின்று இறங்கிவரத் தாமதித்ததைக் கண்ட மக்கள் ஆரோனைச் சுற்றிக் கூட்டம் கூடி அவரை நோக்கி, ””எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. நீர் முன்வந்து எங்களை வழிநடத்தும் தெய்வங்களை எங்களுக்கு உருவாக்கிக்கொடும்”” என்றனர்.

ஆரோன் அவர்களை நோக்கி, ””உங்கள் மனைவியர், புதல்வர் புதல்வியரின் பொற்காதணிகளைக் கழற்றி, அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்”” என்றார்.

அவ்வாறே மக்கள் எல்லோரும் தங்கள் பொற் காதணிகளைக் கழற்றி, அவற்றை ஆரோனிடம் கொண்டு வர,

அவரும் அவர்கள் கையிலிருந்து அவற்றைப் பெற்றுக் கொண்டு, உருக்கி, வார்ப்பு அச்சில் வடிவம் கொடுத்து, ஒரு வார்ப்புக் கன்றுக்குட்டியைச் செய்தார். அப்போது அவர்கள், ””இஸ்ரயேலே! உன்னை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த உன் தெய்வங்கள் இவையே”” என்றனர்.

இதனைக் கண்ட ஆரோன் அதற்கு எதிரே ஒரு பலிபீடம் கட்டி, ””நாளைய தினம் ஆண்டவரின் விழா”” என்று அறிவித்தார்.

மறுநாள் அதிகாலையில் அவர்கள் எழுந்து எரிபலிகள் செலுத்தினர். நல்லுறவுப் பலிகளையும் கொண்டு வந்தனர். பின்னர் மக்கள் அமர்ந்து உண்டு குடித்தனர்: எழுந்து மகிழ்ந்து ஆடினர்.

அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, ””இங்கிருந்து இறங்கிப்போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர்.

நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள். அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே என்று கூறிக் கொள்கிறார்கள்”” என்றார்.

மேலும் ஆண்டவர் மோசேயிடம், ””இம் மக்களை எனக்குத் தெரியும்: வணங்காக்கழுத்துள்ள மக்கள் அவர்கள்.

இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன் உன்னையோ பேரினமாக்குவேன்”” என்றார்.

அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, ””ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?

மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார் என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்.

உம் அடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன். நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்: அவர்கள் அதை எனறென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே”” என்று வேண்டிக்கொண்டார்.

அவ்வாறே ஆண்டவரும் தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தம் மக்களுக்குச் செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார்.

மோசே திரும்பி மலையிலிருந்து இறங்கி வந்தார். முன்பின் இருபுறமும் எழுதப்பட்ட உடன்படிக்கைப் பலகைகள் இரண்டும் அவர் கையில் இருந்தன.

அப்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை. பலகைகள் மேல் பொறிக்கப்பட்டிருந்த எழுத்தும் கடவுள் எழுதியதே.

அந்நேரத்தில் மக்கள் எழுப்பிய கூச்சலைக் கேட்ட யோசுவா மோசேயை நோக்கி, ””இது பாளையத்திலிருந்து எழும் போர்முழக்கம்”” என்றார்.

அதற்கு மோசே, ””இது வெற்றி முழக்கமோ தோல்விக் குரலோ அன்று. பாட்டொலிதான் எனக்குக் கேட்கிறது”” என்றார்.

பாளையத்தை அவர் நெருங்கிவந்தபோது கன்றுக் குட்டியையும் நடனங்களையும் கண்டார். மோசேக்குசச் சினம் மூண்டது. அவர் தம் கையிலிருந்த பலகைகளை மலையடிவாரத்தில் வீசியெறிந்து உடைத்துப் போட்டார்.

அவர்கள் செய்து வைத்திருந்த கன்றுக்குட்டியை எடுத்து நெருப்பில் சுட்டெரித்து மிருதுவான பொடியாகு மட்டும் அதை இடித்துத் தண்ணீரில் தூவி, இஸ்ரயேல் மக்களைக் குடிக்கச் செய்தார்.

பின்னர் மோசே ஆரோனை நோக்கி, ””இம்மக்கள் உமக்கு என்ன செய்தார்கள்? இவர்கள்மேல் பெரும் பாவம் வந்துசேரச் செய்து விட்டீரே!”” என்று கேட்டார்.

அதற்கு ஆரோன், ””என் தலைவராகிய நீர் சினம் கொள்ள வேண்டாம். இம்மக்கள் பொல்லாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமே!

அவர்கள் என்னை நோக்கி, எங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களைச் செய்துகொடும். எங்களை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை என்றனர்.

நானும் அவர்களிடம் பொன் அணிந்திருப்பவர்கள் கழற்றித் தாருங்கள் என்றேன். அவர்களும் என்னிடம் தந்தனர். நான் அதனை நெருப்பில்போட, இந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது”” என்றார்.

ஆரோன் மக்களைக் கட்டுப்பாடின்றி விட்டுவிட்டதால், தங்கள் எதிரிகள் ஏளனம் செய்யும் அளவுக்கு அவர்கள் மனம்போனபோக்கில் நடப்பதை மோசே கண்டார்.

பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்று கொண்டு, ””ஆண்டவரது பக்கம் உறுதியாய் இருப்போர் என்னிடம் வாருங்கள்”” என்றார். லேவியர் அனைவரும் அவரிடம் வந்துகூடினர்.

அவர் அவர்களை நோக்கி: ””இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: ஒவ்வொருவனும் தன் வாளை இடையில் செருகிக்கொண்டு, பாளையத்திற்குள் சுற்றிவந்து, வாயில்வாயிலாகக் கடந்து சென்று தன் சகோதரனையும், தன் நண்பனையும், தனக்கு அடுத்திருப்பனையும் வெட்டி வீழ்த்த வேண்டும்”” என்றார்.

மோசேயின் வாக்குக் கிணங்க லேவியர் செயல்பட்டதால், அந்நாளில் மக்களுள் ஏறத்தாழ மூவாயிரம் பேர் மடிந்தனர்.

மோசே, ””புதல்வன், சகோதரன் என்று பாராது நீங்கள் செயல்பட்டு, அவருக்காக இன்று உங்களை அர்ப்பணம் செய்து கொண்டீர்கள். இதை முன்னிட்டு ஆண்டவர் உங்கள் மேல் ஆசி பொழிந்துள்ளார்”” என்றார். 30 மறுநாள் மோசே மக்களை நோக்கி, ””நீங்கள் பெரும்பாவம் செய்துவிட்டீர்கள்: இப்போது நான் மலைமேலேறி ஆண்டவரிடம் செல்லப்போகிறேன். அங்கே ஒரு வேளை உங்கள் பாவத்திற்காக நான் கழுவாய் செய்யஇயலும்”” என்றார்.

அவ்வாறே மோசே ஆண்டவரிடம் திரும்பிவந்து, ””ஜயோ, இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்.

இப்போதும், நீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளும். இல்லையேல், நீர் எழுதிய உம் நூலிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்”” என்றார்.

ஆண்டவரோ மோசேயிடம், ””எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ, அவனையே என் நூலிலிருந்து நீக்கிவிடுவேன்.

நீ இப்போதே புறப்பட்டுப் போ. உன்னிடம் நான் கூறியுள்ளபடி மக்களை நடத்திச் செல். இதோ என் தூதர் உன் முன்னே செல்வார். ஆயினும் நான் தண்டனைத்தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன்”” என்றார்.

ஆரோன் செய்த கன்றுக்குட்டி மக்களால் உருவாக்கப்பட்டதால் ஆண்டவர் அவர்கள்மேல் கொள்ளைநோயை அனுப்பினார்.

அதிகாரம் 33.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””எகிப்து நாட்டிலிருந்து நீ நடத்தி வந்த மக்களுடன் இங்கிருந்து புறப்பட்டுச் செல். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோருடன் அவர்கள் வழிமரபினருக்குத் தருவதாக நான் வாக்களித்த அந்த நாட்டிற்குச் செல்.

நான் ஒரு தூதரை உனக்குமுன் அனுப்பிக் கானானியர், எமோரியர், இத்தியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரைத் துரத்தி விடுவேன்.

பாலும் தேனும் பொழியும் நாட்டுக்குப் போங்கள். நான் உங்களோடு வரப்போவதில்லை. ஏனெனில் நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள், ஆதலால் வழியில் நான் உங்களை அழித்தொழிக்க நேரிடும்”” என்றார்.

இத்துயரச் செய்தியைக் கேட்டபோது மக்கள் அழுது புலம்பினர். யாருமே அணிகலன்கள் அணிந்துகொள்ளவில்லை.

ஏனெனில் ஆண்டவர் மோசேயிடம், ””நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள், நொடிப்பொழுதில் நான் உங்களிடையே வந்து, உங்களை அழித்தொழிக்கப்போகிறேன். உடனடியாக உஙகள் அணிகலன்களைக் கழற்றிவிடுங்கள். உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்பது எனக்குத் தெரியும் என இஸ்ரயேல் மக்களுக்கு அறிவி”” என்று கூறியிருந்தார்.

அவ்வாறே இஸ்ரயேல் மக்கள் ஓரேபு மலையை விட்டுப் புறப்பட்டபின் தங்கள் அணிகலன்களை அணியவே இல்லை.

மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்.

மோசே கூடாரத்துக்குச் செல்லும் போதெல்லாம் மக்கள் அனைவரும் அவரவர் கூடார நுழைவாயிலில் எழுந்து நின்றுகொண்டு, அவர் கூடாரத்தில் நுழையும்வரை அவரைப் பார்த்துக் கொண்டேயிருப்பர்.

மோசே கூடாரத்தில் நுழைந்ததும், மேகத்தூண் இறங்கி வந்து கூடார நுழைவாயிலில் நின்று கொள்ளும். அப்போது கடவுள் மோசேயிடம் பேசுவார்.

கூடார நுழை வாயிலில் மேகத்தூண் நின்று கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் காண்பர். அப்போது அவரவர் கூடார நுழை வாயிலில் நின்றுகொண்டே மக்கள் அனைவரும் வணங்கித்தொழுவர்.

ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார். பின்னர் மோசே பாளையத்துக்குத் திரும்புவார். இளைஞனும் நூனின் மகனுமான யோசுவா என்ற அவருடைய உதவியாளர் கூடாரத்தை விட்டகலாமல் இருப்பார்.

மோசே ஆண்டவரிடம், ”” இம்மக்களை நடத்திச்செல் என்று நீரே என்னிடம் கூறியிருந்தும் என்னோடு அனுப்பப்போகும் ஆளைப்பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை. பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும் என்றும் நீ என் பார்வையில் தயை பெற்றுள்ளாய் என்றும் கூறியுள்ளீர்.

இப்போதும் உம் பார்வையில் நான் தயைபெற்றிருந்தால், உம்வழிகளை எனக்குக் காட்டியருளும். உம்மை இதனால் அறிந்துகொள்வேன். உம் பார்வையிலும் தொடர்ந்து தயைபெறுவேன். மேலும் இந்த இனம் உம்மக்கள் என்பதையும் கருத்தில் கொள்ளும்”” என்றார்.

அதற்கு ஆண்டவர், ””எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்”” என்று கூற,

மோசே அவரிடம், ””உமது பிரசன்னம் கூடவரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச்செய்யாதீர்.

நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினங்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ?”” என்றார்.

அதற்கு ஆண்டவர் மோசேயிடம், ””நீ கூறியபடியே நான் செய்வேன். ஏனெனில் நீ என் பார்வையில் தயைபெற்றுள்ளாய். மேலும் பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்”” என்றார்.

அப்போது மோசே, ””உம்மாட்சியை எனக்குக் காட்டும்படி வேண்டுகிறேன்”” என்று கூற,

அவர், ””என் நிறை அழகை உன்முன் கடந்து போகச் செய்து ஆண்டவர் என்ற பெயரை உன்முன் அறிவிப்பேன். யார்யாருக்கு நான் பரிவு காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன். யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்”” என்றார்.

மேலும் அவர், ””என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது”” என்றார்.

பின்பு, ஆண்டவர் ””இதோ, எனக்கருகில் ஓர் இடம். இங்கிருக்கும் பாறையின் மேல் நீ நின்று கொள்.

என் மாட்சி கடந்து செல்கையில், நான் உன்னைப் பாறைப்பிளவில் நிறுத்திவைப்பேன். நான் கடந்து செல்லும்வரை என் கையால் உன்னை மூடிமறைப்பேன்.

பின்பு, நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக் காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்”” என்றார்.

அதிகாரம் 34.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””முன்னவை போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முன்னைய பலகைகளின்மேல் இருந்த வார்த்தைகளையே நான் இப்பலகைகளின் மேல் எழுதுவேன்.

முன்னேற்பாடு செய்து கொண்டு, காலையிலேயே சீனாய் மலைமேல் ஏறிச்செல். அங்கே மலையுச்சியில் என்முன் வந்து நில்.

உன்னோடு வேறெவனுமே ஏறிவர வேண்டாம். மலையெங்கிலும் எவனுமே காணப்படலாகாது. அந்த மலைக்கு எதிரே ஆடு மாடுகள் மேயவும் கூடாது”” என்றார்.

அவ்வாறே, மோசே முன்னவை போன்ற இரண்டு கற்பலகைகளை வெட்டிஎடுத்துக்கொண்டார். ஆண்டவர் தமக்கு கட்டளையிட்டபடி, அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச்சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார்.

ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்றுகொண்டு, ஆண்டவர் என்ற பெயரை அறிவித்தார்.

அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், ””ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்: சினம் கொள்ளத் தயங்குபவர்: பேரன்பு மிக்கவர்: நம்பிக்கைக்குரியவர்.

ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்: கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்: ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்”” என அறிவித்தார்.

உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி,

””என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்”” என்றார்.

அப்பொழுது ஆண்டவர் கூறியது: ””நான் ஓர் உடன்படிக்கை செய்கிறேன். எந்த நாட்டிலும் எந்த மக்களினத்திற்கும் செய்யாத அரும்பெரும் செயல்களை நான் உன் மக்கள் அனைவர் முன்னிலையிலும் செய்வேன். உன்னைச் சூழ்ந்துள்ள மக்களினத்தவர் அனைவரும் ஆண்டவரின் செயல்களைக் காண்பர். ஏனெனில், நான் உன்னோடிருந்து திகிலூட்டும் செயல்களைச் செய்வேன்.

இன்று நான் உனக்குக் கட்டளையிடுவனவற்றைக் கடைப்பிடி. இதோ, நான் உன் முன்னிலையினின்று எமோரியரையும், கானானியரையும், இத்தியரையும் பெரிசியரையும், இவ்வியரையும், எபூசியரையும் துரத்திவிடுவேன்.

நீ சென்று சேரப்போகிற நாட்டில் வாழ்வோருடன் உடன்படிக்கை செய்யாதவாறு எச்சரிக்கையாயிரு. ஏனெனில், அது சிக்கவைக்கும் கண்ணியாக உன்னிடையே இருக்கும்.

அவர்களின் பலிபீடங்களை இடித்துத் தள்ளுங்கள். அவர்களின் சிலைத் தூண்களை உடைத்தெறியுங்கள். அசேராவின் கம்பங்களை வெட்டி வீழ்த்துங்கள்.

நீ வேறொரு தெய்வத்தை வழிபடலாகாது, ஏனெனில் வேற்றுத் தெய்வ வழிபாட்டை சகிக்காதவர் என்பதே ஆண்டவர் பெயர். ஆம், அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன் .

நீ அந்நாட்டில் வாழ்வாரோடு உடன்படிக்கை செய்யாதே. ஏனெனில் அவர்கள் தங்கள் தெய்வங்கள் பின்னே வேசித்தனமாய் நடந்து தங்கள் தெய்வங்களுக்குப் பலியிடுகையில் உன்னை அழைக்க அவர்கள் பலிப்பொருளை நீயும் உண்ண நேரிடலாம்.

மேலும் உன் புதல்வருக்கு அவர்களிடமிருந்து பெண்கொள்ள நேரிடலாம். அவர்கள் புதல்வியர் தங்கள் தெய்வங்கள் பின்னே வேசித்தனமாய் நடப்பர். உன் புதல்வரையும் தங்கள் தெய்வங்கள் பின்னே வேசித்தனமாய் நடக்கச் செய்வர்.

உனக்கெனத் தெய்வங்களை வார்த்துக் கொள்ள வேண்டாம்.

புளிப்பற்ற அப்ப விழாவைக் கொண்டாட வேண்டும். ஆபிபு மாதத்தில் குறிப்பிட்ட காலத்தில், என் கட்டளைக்கிணங்க ஏழு நாள்கள் புளிப்பற்ற அப்பத்தையே உண்ண வேண்டும். ஏனெனில் ஆபிபு மாத்தில் நீ எகிப்திலிருந்து வெளியேறி வந்தாய்.

கருப்பையைத் திறக்கும் தலைப்பேறு அனைத்தும் என்னுடையன. ஆடு, மாடு, கால்நடைகளின் ஆண் தலையீறு அனைத்தும் எனக்குரியனவே.

கழுதையின் தலையீற்றுக்கு ஈடாக ஒரு செம்மறிக் குட்டியைக் கொடுத்து அதை மீட்க வேண்டும். அதுமீட்கப்படவில்லையெனில் அதன் கழுத்தை முறித்துவிடு. உன்பிள்ளைகளில் ஒவ்வொரு தலைமகனையும் மீட்க வேண்டும். எவருமே என்முன் வெறுங்கையோடு காணப்படல் ஆகாது.

ஆறு நாள்கள் நீ வேலை செய். ஏழாம் நாளில் ஓய்வு கொள். உழும் பருவத்திலும் அறுவடைப் பருவத்திலும் கூட ஓய்ந்திரு.

கோதுமை அறுவடை முதற்பலன் போது வாரங்களின் விழாவையும், ஆண்டின் இறுதியில் சேகரிப்பு விழாவையும் கொண்டாட வேண்டும்.

உங்களுள் ஒவ்வொரு ஆண்மகனும் ஆண்டில் மூன்று தடவை தலைவரும் இஸ்ரயேலின் கடவுளுமாகிய ஆண்டவர் திருமுன் வர வேண்டும்.

ஏனெனில், நான் வேற்றினத்தாரை உன்முன்னிருந்து துரத்திவிட்டு உன் எல்லையை விரிவுபடுத்துவேன். நீ ஆண்டில் மும்முறை உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நிற்க வரும்போது, உன் நாட்டை எவனுமே பிடித்துவிடப் போவதில்லை.

எனக்குச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்த மாவுடன் படைக்காதே. பாஸ்காவிழாப் பலியில் எதுவும் காலைவரை எஞ்சியிருக்கக் கூடாது.

உன் நிலத்தின் முதற் பலன்களில் முதன்மையானவற்றை உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்திற்கு கொண்டு செல்வாய், குட்டியை அதன் தாய்ப்பாலில் வேக வைக்காதே””.

ஆண்டவர் மோசேயை நோக்கி, ””நீ இவ்வார்த்தைகளை எழுதிக் கொள். இவ்வார்த்தைகளின்படி நான் உன்னோடும் இஸ்ரயேலோடும் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளேன்”” என்றார்.

அவர் அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார். அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை: தண்ணீர் பருகவும் இல்லை. உடன்படிக்கையின் வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை அவர் பலகையின் மேல் எழுதினார்.

மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிச் செல்கையில், உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் தம் கைகளில் தாங்கிக் கொண்டிருந்தார். மோசே கடவுளோடு பேசியதால் அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது. ஆனால் மோசே அதை அறியவில்லை. 30 ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேயைப் பார்த்தபோது, அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்ததைக் கண்டு அவரை அணுகிச் செல்ல அஞ்சினர்.

ஆனால் மோசே அவர்களைக் கூப்பிட்டார். ஆரோனும் மக்கள்கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவரை நோக்கி வந்தனர். மோசேயும் அவர்களிடம் பேசினார்.

பின்னர் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். அப்போது, ஆண்டவர் சீனாய் மலையில் தமக்கு அறிவித்த அனைத்தையும் அவர் அவர்களுக்குக் கட்டளையாகக் கொடுத்தார்.

மோசே அவர்களோடு பேசி முடித்தபின், தம் முகத்தின் மேல் ஒரு முக்காடு போட்டுக்கொண்டார்.

மோசே ஆண்டவரோடு உரையாடும்படி அவர் திருமுன் செல்வதுமுதல் வெளியே வருவதுவரை முக்காட்டை எடுத்து விடுவார். அங்கிருந்து வெளியே வந்து, அவருக்குக் கட்டளையிடப்பட்டவற்றை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துக் கூறுவார்.

இஸ்ரயேல் மக்கள் மோசேயின் முகத்தைப் பார்க்கும்போது, மோசேயின் முகத்தோற்றம் ஒளிமயமாயிருக்கும். மோசே ஆண்டவரோடு பேச் செல்லும்வரை தம் முகத்தின் மேல் மீண்டும் முக்காடு போட்டுக் கொள்வார்.

அதிகாரம் 35.

மோசே இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, ””நீங்கள் கடைப்பிடிக்கும்படி ஆண்டவர் கட்டளையாகத் தந்துள்ள வார்த்தைகள் இவைகளே:

ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ, ஆண்டவருக்காக நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டிய புனிதமான சாபாத்து : அன்று வேலை செய்பவன் எவனும் கொல்லப்பட வேண்டும்.

ஓய்வு நாளில் உங்கள் உறைவிடங்கள் எதிலும் நெருப்பு மூட்டக் கூடாது”” என்றார்.

மீண்டும் மோசே இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் பின்வருமாறு கூறினார்: ””நீங்கள் கடைப்பிடிக்கும்படி ஆண்டவர் கட்டளையாகத் தந்துள்ள வார்த்தைகள் இவைகளே:

ஆண்டவருக்காக உங்களிடமிருந்து காணிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். தாராளமனமுடையோர் அனைவரும் ஆண்டவருக்காகக் கொண்டு வரவேண்டிய காணிக்கைகளாவன: பொன், வெள்ளி, வெண்கலம்,

நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல், மெல்லிய நார்ப்பட்டு, வெள்ளாட்டு உரோமம்,

செந்நிறப் பதனிட்ட ஆட்டுக்கிடாய்த் தோல்கள், வெள்ளாட்டுத் தோல்கள், சித்திம்மரம்,

விளக்குக்கான எண்ணெய், திருப்பொழிவு எண்ணெய்க்கும் தூபத்துக்கும் தேவையான நறுமணவகைகள்,

ஏப்போதுக்கும், மார்புப் பட்டைக்கும் தேவையான பன்னிற மணிக்கற்கள், பதித்து வைக்கும் கற்கள்.

மேலும் உங்களுள் திறன்படைத்தோர் அனைவரும் ஆண்டவர் கட்டளையிட்ட அனைத்தையும் செய்ய முன்வரட்டும். அவையாவன:

திருஉறைவிடம், அதன் கூடாரம், மேல் விரிப்பு, கொக்கிகள், சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதப்பொருத்துக்கள்,

பேழை, அதன் தண்டுகள், இரக்கத்தின் இருக்கை, அதை மறைக்கும் தொங்குதிரை,

மேசை, அதன் தண்டுகள், அனைத்துத் துணைக்கலன்கள், திருமுன்னிலை அப்பம்,

ஒளிவிளக்குத் தண்டு, அதன் துணைக்கலன்கள், அகல்கள், விளக்குக்கான எண்ணெய்,

தூபப் பீடம், அதன் தண்டுகள், திருப்பொழிவு எண்ணெய், நறுமணத்தூபம், கூடார வாயிலிலுள்ள தொங்குதிரை,

எரிபலிபீடம், அதன் வெண்கல வலைப்பின்னல், தண்டுகள், துணைக் கலன்கள், தண்ணீர்த் தொட்டி, அதன் ஆதாரம்,

முற்றத்தின் திரைகள், அங்குள்ள தூண்கள், பாதப்பொருத்துகள், முற்றத்தின் வாயிலுக்கான தொங்குதிரை,

திரு உறைவிடத்திற்கான முளைகள், முற்றத்திற்கான முளைகள், அவற்றின் கயிறுகள்,

திருத்தலப் பணிவிடைக்காக அழகுறப்பின்னப்பட்ட உடைகள், குரு ஆரோனுக்கான திரு உடைகள், குருத்துவப் பணிக்காக அவன் புதல்வருக்குரிய உடைகள் ஆகியவைகளே.

பின்னர் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் மோசே முன்னிருந்து அகன்றது.

உள்ளார்வம் உடையோர், உள்ளுணர்வால் உந்தப்பெற்றோர் அனைவரும் முன்வந்து சந்திப்புக் கூடார வேலைக்காகவும், அதிலுள்ள அனைத்துத் திருப்பணிகளுக்காகவும் திருவுடைகளுக்காகவும் ஆண்டவருக்குக் காணிக்கை கொடுத்தனர்.

ஆண்களும் பெண்களுமாகத் தாராள மனமுடையோர் அனைவரும் காப்புகள், காதணிகள், மோதிரங்கள், அணிகலன்கள் ஆகிய பொன்கலன்கள் அனைத்தையும் கொண்டு வந்தனர். யாவரும் அப்பொன்னை ஆரத்திப்பலியாக ஆண்டவருக்கு உயர்த்தினர்.

அவர்கள் தம்மிடம் காணப்பட்ட நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல், மெல்லிய நார்ப்பட்டு, வெள்ளாட்டு உரோமம், செந்நிறமாகப் பதனிடப்பட்ட ஆட்டுக் கிடாய்த் தோல்கள், வெள்ளாட்டுத் தோல்கள் ஆகியவற்றையும் கொண்டு வந்தனர்.

வெள்ளியையும் வெண்கலத்தையும் காணிக்கையாகக் கொண்டு வர முடிந்தவர் அனைவரும் அவற்றை ஆண்டவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். ஏதாவது வேலைக்குப் பயன்படக் கூடிய சித்திம்மரம் யாரிடமாவது காணப்பட்டால், அதையும் அவர்கள் கொண்டு வந்தனர்.

திறன் மிக்க பெண்களெல்லாம் தங்கள் கைகளாலேயே நூல் நூற்று, நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல், மெல்லிய நார்ப்பட்டு ஆகியவற்றை நெய்து கொண்டு வந்தனர்.

உள்ளார்வமும் திறனும் உடைய பெண்கள் அனைவரும் வெள்ளாட்டு உரோமத்தால் நெய்தார்கள்.

ஏப்போதுக்கும் மார்புப் பட்டைக்கும் வேண்டிய பன்னிற மணிக்கற்களையும், பதிக்கும் கற்களையும்,

திருப்பொழிவு எண்ணெய்க்கும் நறுமணத் தூபத்துக்கும் தேவையான பரிமள வகைகளையும், விளக்குக்கு எண்ணெயையும் தலைவர்கள் கொண்டு வந்தார்கள்.

ஆண்டவர் மோசே வழியாகச் செயல்படுத்த வேண்டுமென்று கட்டளையிட்டிருந்த அனைத்துப் பணிகளுக்கும் தேவையானவற்றைக் கொண்டுவருமாறு, ஆண் பெண் அனைவரும் உள்ளார்வத்தால் தூண்டப்பட்டனர். இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்குத் தன்னார்வக் காணிக்கை கொண்டு வந்தனர். 30 மோசே இஸ்ரயேல் மக்களை நோக்கி, ””ஆண்டவர் தாமே கூர் என்பவரின் மகனான ஊரியின் புதல்வன் பெட்சலேலைப் பெயர் சொல்லி அழைத்திருப்பதைப் பாருங்கள்.

ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில் திறமை அனைத்தும் உண்டாகுமாறு அவரை இறை ஆவியால் நிரப்பியுள்ளார்.

திட்டமிடும் நுட்பத்தால் பொன் வெள்ளி வெண்கல வேலை செய்யவும்,

பதிக்க வேண்டிய கற்களுக்குப் பட்டை தீட்டவும், மரத்தைச் செதுக்கவும், மற்றெல்லாவித நுண்ணிய வேலைகள் செய்யவும் அருளியுள்ளார்.

கற்பிக்கும் திறமையையும் அவர் உள்ளத்தில் வைத்துள்ளார். அதே திறமையைத் தாண்குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபுக்கும் அருளியுள்ளார்.

உலோக வேலை: கலை வேலை அனைத்தையும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலிலும், மெல்லிய நார்ப்பட்டிலும் செய்யும் பூந்தையல் வேலையையும், பின்னல் வேலையையும், அனைத்துத் தொழிலையும் திட்டமிடும் நுட்ப வேலையையும் செய்வதற்குரிய உயர் திறனால் அவர்களை நிரப்பியுள்ளார்”” என்றார்.

அதிகாரம் 36.

பெட்சலேலும் ஒகொலியாபும் மேலும் தூயக அமைப்பு வேலையனைத்தையும் செய்யத் தெரியுமாறு ஆண்டவரிடமிருந்து அறிவுக் கூர்மையும் தொழில்திறமையும் பெற்றிருந்த கலைஞர் யாவரும், ஆண்டவர் கட்டளையிட்டபடி வேலை செய்யட்டும்.

அவ்வாறே மோசே பெட்சலேலையும், ஒகொலியாபையும், ஆண்டவரிடமிருந்து அறிவுக்கூர்மை பெற்றவரும் உள்ளார்வம் உடையவருமான கலைஞர் அனைவரையும் வேலையில் ஈடுபடுமாறு அழைத்தார்.

தூயக வேலைக்கென்று இஸ்ரயேல் மக்கள் கொண்டு வந்த காணிக்கைகள் யாவற்றையும் இவர்கள் மோசே முன்னிலையிலிருந்து எடுத்துச் சென்றனர். தொடர்ந்து தன்னார்வக் காணிக்கைகள் காலைதோறும் வந்தவண்ணமாயிருந்தன.

தூயக வேலைகளில் ஈடுபட்டிருந்த கலைஞர் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து,

மோசேயை நோக்கி, ””மக்கள் கொண்டு வருவது ஆண்டவர் கட்டளையிட்ட வேலைக்கும் அதிகமாகவே உள்ளது”” என்று அறிவித்தனர்.

அப்போது மோசே, ””ஆணோ பெண்ணோ யாராயினும் இனிமேல் தூயகத்துக்காகக் காணிக்கை கொண்டுவர வேண்டாம்”” என்று ஒரு கட்டளை பிறப்பிக்க, அது பாளையம் எங்கும் அறிவிக்கப்பட்டது. எனவே மக்கள் எதையுமே கொண்டு வருவதை நிறுத்திவிட்டனர்.

ஏற்கனவே சேகரித்தது, செய்ய வேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமானதாயும் தேவைக்கு மிஞ்சியும் இருந்தது.

பணியாளருள் கலைத்திறமைமிக்கோர் அனைவரும் ஒன்று சேர்ந்து திருஉறைவிடத்தைப் பத்துத் திரைகளால் அமைத்தனர். அவை முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும், கலைத் திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் இருந்தன.

திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழமும் அகலம் நான்கு முழமும் ஆகும். ஒரு திரையின் அளவே எல்லாத் திரைகளுக்கும் இருக்கும்.

இவற்றுள் ஜந்து திரைகள் ஒன்றாகவும், ஏனைய ஜந்து திரைகள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டன.

பின்னர் அவர் முதல் தொகுப்பின் விளிம்பில் நீலவண்ணத் துணி வளையங்களை அமைத்தார். அடுத்த தொகுப்பின் இறுதி விளிம்பிலும் அவ்வாறே செய்தார்.

முதல் திரைத்தொகுப்பில் அவர் அமைத்த வளையங்களை ஜம்பது. மற்றத் திரைத்தொகுப்பின் விளிம்பில் அமைத்த வளையங்கள் ஜம்பது. அவ்வளையங்கள் எதிரெதிரே இருந்தன.

பொன்னால் ஜம்பது கொக்கிகள் செய்து, அந்தக் கொக்கிகளால் அவர் திரைகளை ஒன்றோடொன்று இணைத்தார். இவ்வாறு ஒன்றிணைந்து திருஉறைவிடம் அமைந்தது.

திருஉறைவிடத்தில் மேலே கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு மயிரால் மூடுதிரைகள் செய்தார். பதினொரு மூடுதிரைகள் செய்தார்.

ஒரு மூடுதிரையின் நீளம் முப்பது முழமும் அகலம் நான்கு முழமும் ஆகும். பதினொரு மூடுதிரைகளுக்கும் அளவு ஒன்றேயாம்.

இவற்றுள் ஜந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்தார்.

முதல் மூடுதிரைத்தொகுப்பின் ஓரத்தில் ஜம்பது வளையங்களை அமைத்தார். அவ்வாறே ஜம்பது வளையங்களை அடுத்த மூடுதிரைத் தொகுப்பின் ஓரத்திலும் அமைத்தார்.

ஒரே கூடாரமாக ஒன்றிணைத்து அமைக்க ஜம்பது வெண்கல கொக்கிகள் செய்தார்.

மேலும் செந்நிறமாகப் பதனிட்ட செம்மறி ஆட்டுக்கிடாய்த் தோல்களாலும், வெள்ளாட்டுத் தோல்களாலும், கூடாரத்துக்கு ஒரு மேல்விரிப்பு செய்தார்.

திருஉறைவிடத்திற்கான செங்குத்தாய் நிற்கும் சட்டங்களை அவர் சித்திம் மரத்தால் செய்தார்.

ஒரு சட்டத்தின் நீளம் பத்து முழமும் அகலம் ஒன்றரை முழமும் ஆகும்.

சட்டம் ஒவ்வொன்றைப் பொருத்த இரு கொளுத்துகள் வீதம் திருஉறைவிடத்தின் எல்லாச் சட்டங்களுக்கும் செய்தார்.

திருஉறைவிடத்திற்காகச் சட்டங்களை அவர் செய்த முறை: தெற்கே தென்திசை நோக்கி நிற்கச் செய்யப்பட்டவை இருபது சட்டங்கள்.

ஒரு சட்டத்துக்குக் கீழே, இரு கொளுத்துகளுக்கு இருபாதப்பொருத்துகள்: அடுத்த சட்டத்துக்குக் கீழே இரு கொளுத்துகளுக்கு இரு பாதப்பொருத்துகள். இவ்வாறு இருபது சட்டங்களுக்கும்கீழே அவர் நாற்பது வெள்ளிப் பாதப்பொருத்துகளை அமைத்தார்.

திருஉறைவிடத்தின் இரண்டாம் பக்கமாகிய வடதிசைக்கான சட்டங்கள் இருபது செய்தார்.

ஒரு சட்டத்திற்குக் கீழே இரண்டு பாதப்பொருள்கள், மறு சட்டத்திற்குக் கீழே இரண்டு பாதப்பொருத்துகள் என்று நாற்பது வெள்ளி பாதப்பொருத்துகள் செய்யப்பட்டன.

திருஉறைவிடத்தின் பின்புறமாகிய மேற்றிசைக்காக ஆறு சட்டங்கள் செய்தார்.

அத்துடன் திருஉறைவிடத்தின் பின்புற மூலைகளுக்காக இரண்டு சட்டங்களைச் செய்தார்.

அவற்றுள் ஒவ்வொன்றும் கீழிருந்து மேலே முதல் வளையம் வரைக்கும் இரட்டைக் கனமாக அமைக்கப்பட்டன. இவ்வாறே இரண்டு மூலைகளும் அமைக்கப்பட்டன. 30 ஒவ்வொரு சட்டத்தின் அடியிலும் இரண்டு பாதப்பொருத்துகள் வீதம் எட்டுச் சட்டங்களுக்கும் அவற்றிற்காகப் பதினாறு வெள்ளிப் பாதப்பொருத்துகளும் இருந்தன.

சித்திம் மரத்தால் குறுக்குச் சட்டங்களையும் செய்தார்: திருஉறைவிடத்தின் ஒருபுறச் சட்டங்களின் மேலே பொருத்த ஜந்து:

திருஉறைவிடத்தின் மறுபுறச் சட்டங்கள் மேலே பொருத்த குறுக்குச் சட்டங்கள் ஜந்து: மேற்கே திருஉறைவிடத்தின் பின்புறச் சட்டங்கள் மேலே பொருத்த குறுக்குச் சட்டங்கள் ஜந்து.

நடுவிலுள்ள குறுக்குச்சட்டம் சட்டங்களுக்குச் சரிபாதியில் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செலுத்தப்பட்டது.

அவர் சட்டங்களைப் பொன்னால் பொதிந்தார். அதிலுள்ள குறுக்குச் சட்டங்களைச் செருகுவதற்கான வளையங்களையும் பொன்னால் செய்தார். குறுக்குச் சட்டங்களையும் பொன்னால் பொதிந்தார்.

மேலும் அவர் ஒரு தொங்குதிரை செய்தார். நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும் கலைத்திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் அதைச் செய்தார்.

அதற்காகச் சித்திம் மரத்தால் நான்கு தூண்கள் செய்தார். அவற்றைப் பொன்னால் பொதிந்து பொன் கொக்கிகளையும் பொருத்திவிட்டார். அவற்றிற்காக நான்கு வெள்ளிப் பாதப்பொருத்துகளை வார்த்தார்.

கூடாரத்தின் நுழை வாயிலுக்காக அவர் ஒரு தொங்குதிரை செய்தார். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலும் முறுக்கேற்றி நெய்த நார்ப்பட்டும் பின்னல் வேலைப்பாடும் கொண்டதாக விளங்கியது.

ஜந்து தூண்களையும், அவற்றின் வளைவு ஆணிகளையும் செய்தார். அவற்றின் பொதிகைகளையும் பூண்களையும் பொன்னால் பொதிந்தார். ஜந்து பாதப்பொருத்துகளை வெண்கலத்தால் செய்தார்.

அதிகாரம் 37.

பெட்சலேல் சித்திம் மரத்தால் ஒரு பேழை செய்தார். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம், உயரம் ஒன்றரை முழம்.

அவர் அதன் உள்ளும் புறமும் பசும்பொன்னால் வேய்ந்தார்: அதைச்சுற்றிலும் பொன்தோரணம் பொருத்தினார்.

அவர் இரு வளையங்களை ஒரு பக்கத்திற்கும், இரு வளையங்களை மறு பக்கத்திற்குமாக, அதன் நான்கு கால்களுக்காகவும் நான்கு பொன் வளையங்களை வார்த்தார்.

அவர் சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.

அவர் பேழையைத் தூக்கிச் செல்லும்படி, தண்டுகளைப் பேழையின் பக்கங்களிலுள்ள வளையங்களில் செருகிவிட்டார்.

அவர் பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கையைச் செய்தார். அதன் நீளம் இரண்டரை முழமும் அகலம் ஒன்றரை முழமும் ஆகும்.

அவர் இரு பொன் கெருபுகளைச் செய்தார்: இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாகச் செய்தார்.

ஒரு புறத்தில் ஒரு கெருபும், மறுபுறத்தில் இன்னொரு கெருபுமாக இரக்கத்தின் இருக்கையோடு இணைந்தனவாக, அதன் இரண்டு பக்கங்களிலும் கெருபுகள் செய்யப்பட்டன.

கெருபுகள் தம் இறக்கைகளை மேனோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும் இருந்தன. கெருபுகளின் முகங்கள் ஒன்றை ஒன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் இருந்தன.

அவர் சித்திம் மரத்தால் மேசையொன்று செய்தார். அதன் நீளம் இரண்டு முழம்: அகலம் ஒரு முழம்: உயரம் ஒன்றரை முழம்.

அவர் அதனைப் பசும்பொன்னால் பொதிந்து சுற்றிலும் ஒரு பொன் தோரணம் செய்து வைத்தார்.

அவர் கையகல அளவில் அதற்குச் சுற்றுச் சட்டம் அமைத்து அச்சட்டத்தைச் சுற்றிலும் பொன்தோரணம் செய்து வைத்தார்.

அவர் அதற்கு நான்கு பொன்வளையங்கள் செய்து அவ்வளையங்களை நான்கு மூலைகளிலும் நான்கு கால்களில் பொருத்தினார்.

மேசையைத் தூக்கிச்செல்லும் தண்டுகள் தாங்கும் இவ்வளையங்கள் சட்டத்தின் அருகில் இருந்தன.

மேசையைத் தூக்கிச் செல்வதற்கான தண்டுகளைச் சித்திம் மரத்தால் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.

மேசைமேல் இடம்பெறும் துணைக்கலன்களான தட்டுகள், கிண்ணங்கள், சாடிகள், நீர்மப் படையலுக்கான குவளைகள் ஆகியவற்றையும் பசும்பொன்னால் செய்தார்.

பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்தார். அதை அடிப்பு வேலையாகச் செய்தார். அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக இருந்தன.

விளக்குத் தண்டின் ஒரு பக்கத்தில் இருந்து மூன்று கிளைகளும், விளக்குத் தண்டின் மறு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளுமாக அதன் பக்கங்களில் ஆறு கிளைகள் பிரிந்து சென்றன.

ஒரு கிளையில், வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் இருந்தன. மறு கிளையிலும் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் இருந்தன. இவ்வாறே விளக்குத் தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் அமைந்தன.

விளக்குத் தண்டுக்கு நேர் மேலே, வாதுமை வடிவில் நான்கு கிண்ணங்கள் தம்தம் குமிழ்களுடனும் மலர்களுடனும் இருந்தன.

முதல் இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், இடை இருகிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், கடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ் என்று அதிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் அமைந்தன.

அதன் குமிழ்கள் கிளைகள் யாவும் ஒன்றிணைந்தனவாயும், பசும்பொன் அடிப்பு வேலையுடன் செய்யப்பட்டனவாயும் இருந்தன.

அதன் ஏழு அகல்கள், அணைப்பான்கள், நெருப்புத் தட்டுகள் ஆகியவை பசும்பொன்னால் செய்யப்பட்டன.

அவர் அதனையும் அதன் எல்லாத் துணைக்கலன்களையும் ஒரு தாலந்து பசும்பொன்னால் செய்தார்.

அவர் சித்திம் மரத்தால் தூபப்பீடம் செய்தார். அது நீளம் ஒரு முழமும் அகலம் ஒரு முழமுமாக சதுரவடிவமாயிருந்தது. அதன் உயரமோ இரண்டு முழம். அதன் கொம்புகள் அதனுடன் ஒன்றிணைந்திருந்தன.

அவர் அதன்மேல் பாகம், அதன் பக்கங்கள், அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்து சுற்றிலும் தங்கத் தோரணம் பொருத்தினார்.

அதைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத் தாங்க அதன் தோரணத்துக்குக் கீழே இரு மூலைகளிலும் இரு பொன் வளையங்கள் வீதம் இரு பக்கங்களிலும் அவர் பொருத்தினார்.

சித்திம் மரத்தால் அவர் தண்டுகள் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.

அவர் தூய திருப்பொழிவு எண்ணெயையும் திறமை வாய்ந்த பரிமளத்தயாரிப்பாளன் செய்வது போல் செய்யப்பட்டதும் கலப்பற்றதுமான நறுமணத் தூபத்தையும் தயாரித்தார்.

அதிகாரம் 38.

சித்திம் மரத்தால் அவர் ஓர் எரிபலிபீடம் செய்தார். அது நீளம் ஜந்து முழமும் அகலம் ஜந்து முழமுமாகச் சதுரவடிவமாயிருந்தது. அதன் உயரமோ மூன்று முழம்.

அதன் நான்கு மூலைகளிலும் அவர் கொம்புகளை அமைத்தார்: கொம்புகள் அதனோடு ஒன்றிணைந்திருந்தன: அதை வெண்கலத்தால் மூடினார்.

அவர் பலிபீடத்தின் துணைக்கலன்கள் அனைத்தையும் செய்தார்: சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், பலிக்கிண்ணங்கள், முள்கரண்டிகள், நெருப்புத் தட்டுகள் ஆகிய எல்லாக் கலன்களையும் வெண்கலத்தில் செய்தார்.

பலிபீடத்தைச்சுற்றி வலைப்பின்னலான வெண்கல வேலைப்பாடு செய்து அதன் பாதிப்பகுதியை எட்டும்படி அதன் விளிம்புகளுக்குக்கீழே அவர் பொருத்தினார்.

தண்டுகளைத் தாங்குவதற்காக நான்கு வளையங்களை வார்த்து அதன் வெண்கல வலைப்பின்னலின் நான்கு மூலைகளிலும் அவர் பொருத்தினார்.

அவர் சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து வெண்கலத்தால் மூடினார்.

பலிபீடத்தைத் தூக்கிச் செல்வதற்காக அதன் இரு பக்கங்களிலும் தண்டுகளை வளையங்களில் அவர் செலுத்தினார். பலகைகளைச் சேர்த்து உள்கூடாக அமைத்தார்.

சந்திப்புக் கூடார நுழைவாயிலில் பணியாற்றும் பெண்கள் கொண்டு வந்த வெண்கலக் கண்ணாடிகளைக் கொண்டு அவர் வெண்கல நீர்த்தொட்டியையும், அதன் வெண்கல ஆதாரத்தையும் செய்தார்.

அவர் முற்றத்தை உருவாக்கினார்: தெற்குப்பக்கம், தென்திசை நோக்கிய முற்றத்திலுள்ள தொங்குதிரைகள் முறுக்கேற்றி நெய்த நார்ப்பட்டால் ஆனவை: நூறு முழம் நீண்டவை.

அவற்றிற்கான இருபது தூண்களும் இருபது பாதப்பொருத்துகளும் வெண்கலத்தால் ஆனவை. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை.

அவ்வாறே வட பக்கத்திலும் தொஙகுதிரைகள் நூறு முழம் நீண்டவை. அதற்கான இருபது தூண்களும், இருபது பாதப்பொருத்துகளும் வெண்கலத்தால் ஆனவை. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை.

மேற்குப் பக்கத்தில் ஜம்பது முழத் தொங்குதிரைகள் இருந்தன. அவற்றிற்காகப் பத்துத் தூண்கள் பத்துப் பாதப்பொருத்துகள் இருந்தன. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களும் வெள்ளியாலானவை.

கதிரவன் தோன்றும் கீழ்த்திசை நோக்கி ஜம்பது முழத் தொங்குதிரைகள் இருந்தன.

அதன் ஒரு பகுதியில் பதினைந்து முழத் தொங்குதிரைகள், மூன்று தூண்கள், மூன்று பாதப்பொருத்துகள் அமைந்தன.

இதுபோன்றே, முற்றத்தின் நுழைவாயிலுக்கு மறுபகுதியிலும் பதினைந்து முழத் தொங்குதிரைகள், மூன்று தூண்கள், மூன்று பாதப்பொருத்துகள் அமைந்தன.

முற்றத்தைச் சுற்றியுள்ள எல்லாத் தொங்குதிரைகளும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் ஆனவை.

தூண்களின் பாதப் பொருத்துக்கள் வெண்கலத்தால் ஆனவை. தூண்களின் கொக்கிகளும் பூண்களுமோ வெள்ளியாலானவை. அவற்றின் பொதிகைகள் வெள்ளியால் பொதியப்பட்டவை. முற்றத்தின் தூண்கள் அனைத்துமே வெள்ளிப் பூண்கள் கொண்டிருந்தன.

முற்றத்து நுழைவாயிலின் தொங்குதிரை நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நூலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டும், பின்னல் வேலைப்பாடும் கொண்டதாக விளங்கியது. அதன் நீளம் இருபது முழம்: அதன் அகலமும் உயரமும் முற்றத்தின் தொங்கு திரைகளுக்கு இணையாக ஜந்து முழமாம்.

அதற்காக நான்கு தூண்களுக்கும் நான்கு வெண்கல பாதப்பொருத்துகள் இருந்தன. அவற்றின் கொக்கிகளும், பொதிகைகளும், பூண்களும் வெள்ளியால் மூடப்பட்டிருந்தன.

திருஉறைவிடத்திலும் சுற்று முற்றத்திலுள்ள முளைகள் எல்லாம் வெண்கலத்தால் ஆனவை.

திருஉறைவிடத்தின் அதாவது உடன்படிக்கைத் திருஉறைவிடத்தின் இருப்புக் கணக்கில் இருந்தவை இவையே: மோசேயின் கட்டளைப்படி குரு ஆரோனின் மகன் இத்தாமரின் பொறுப்பில், லேவியர் எடுத்த கணக்கு பின்வருமாறு:

யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகன் ஊரியின் புதல்வரான பெட்சலேல் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டது அனைத்தையும் செய்தார்.

அவரோடு இருந்தவர் தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபு. அவர் ஒரு சிற்பியும் கலைஞரும் ஆவார். நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பின்னித் தயாரிப்பதில் வல்லுநராக இருந்தார்.

தூயகத்தின் அனைத்துப் பணிக்கும் பயன்பட்ட தங்கமெல்லாம் ஆரத்திக் காணிக்கைவழி வந்தது. அது தூயகச் செக்கேல் நிறைப்படி ஆயிரத்து நூற்றெழுபது கிலோ கிராம் ஆகும்.

மக்கள் கூட்டமைப்பில் எண்ணப்பட்டவர்களிடமிருந்து வந்த வெள்ளி தூயகச் செக்கேல் நிறைப்படி நாலாயிரத்து இருபது கிலோ கிராம் ஆகும்.

இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்கள் எண்ணப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டியது தலைக்கு ஆறு கிராம் அதாவது தூயகச் செக்கேல் நிறைப்படி அரைச் செக்கேல். இத்தகைய ஆண்கள் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஜந்நூற்று ஜம்பது பேர் இருந்தனர்.

தூயகத்திலுள்ள பாதப் பொருத்துகளையும், திருத்தூயகத்திரைக்கான பாதப்பொருத்துகளையும் வார்க்க, நாலாயிரம் கிலோ கிராம் வெள்ளியாயிற்று. ஒரு பாதப்பொருத்துக்கு நாற்பது கிலோ கிராமாக நூறு பாதப்பொருத்துகளுக்கு நாலாயிரம் கிலோ கிராம் ஆயிற்று.

அதிலிருந்து இருபது கிலோ கிராம் எடுத்து, அவர் தூண்களுக்கான கொக்கிகள் செய்தார்: பொதிகைகளைப் பொதிந்தார்: அவற்றிற்குப் பூண்கள் அமைத்தார்.

ஆரத்திக் காணிக்கையாக வந்த வெண்கலம் இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்து ஜந்து கிலோ கிராம் ஆகும். 30 அதைக்கொண்டு அவர் சந்திப்புக் கூடார நுழைவாயிலின் பாதப்பொருத்துகளையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதன் வெண்கல வலைப்பின்னலையும், பலிபீடத்திற்கான அனைத்துத் துணைக்கலன்களையும் செய்தார்.

மேலும் முற்றத்தைச் சுற்றியுள்ள பாதப்பொருத்துகள், முற்றத்தின் நுழைவாயிலிலுள்ள பாதப்பொருத்துகள், திருஉறைவிடத்தின் முளைகள், முற்றத்தைச் சுற்றியுள்ள முளைகள் ஆகிய அனைத்தையும் செய்தார்.

அதிகாரம் 39.

நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறத் துகிலால் நெய்த மெல்லிய ஆடைகள் தூயதலத் திருப்பணிக்காகச் செய்யப்பட்டன. ஆண்டவர் மோசேக்கு அளித்த கட்டளைப்படி ஆரோனுக்காகத் திருவுடைகள் செய்யப்பட்டன.

பொன்னையும், நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு நிற நூலையும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பயன்படுத்தி ஏப்போதை அவர் செய்தார்.

நீலம், கருஞ்சிவப்பு சிவப்புநிற நூல், கலைத்திறனுடன் அமைந்த மெல்லிய நார்ப்பட்டு ஆகியவற்றை அணிசெய்ய, பொன்தகடுகளை அடித்து இழைகளாக வெட்டினார்.

ஏப்போதுக்கு இரு தோள்பட்டைகள் செய்து, அதன் இரு பக்கத்து ஓரங்களிலும் இணைத்தார்.

ஏப்போதை இணைக்கும் தோள்பட்டை, அதன் ஒரு பகுதியாகவும், அதைப்போன்றே கலை நுணுக்கத்துடன் பொன்னாலும், நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும், ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே தயாரிக்கப்பெற்றது.

பன்னிற மணிக்கற்களுக்கு மெருகேற்றி அவற்றைப் பொன்னிழைப் பின்புலத்தில் பதித்தனர். இஸ்ரயேல் புதல்வரின் பெயர்களை அவற்றின்மேல் முத்திரையாகப் பொறித்துப்பதித்தனர்.

ஏப்போதின் தோள்பட்டைமேல் அவற்றை இஸ்ரயேல் புதல்வரின் நினைவுக் கற்களாக ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பொருத்தினர்.

மார்புப்பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டது. அது பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட்டிருந்தது.

மார்புப்பட்டை ஒரு சாண் நீளம், ஒரு சாண் அகலம் என்று சதுர வடிவமானதாயும் இரண்டாக மடிந்ததாயும் அமைந்தது.

அதன்மேல் கற்களை நான்கு வரிசையாகப் பதித்தனர்: முதல் வரிசையில் பதுமராகம், புட்பராகம், மரகதம்:

இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரம்:

மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல்:

நான்காம் வரிசையில் படிகப் பச்சை, கோமேதகம், கடல்வண்ணக்கல். இவையாவும் பொன்னிழைப் பின்புலத்தில் பதிக்கப்பட்டன.

இந்த கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்பப் பன்னிரண்டு பெயர்களைக் கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றிலும் ஒரு பெயர் வீதம் பன்னிரண்டு பெயர்களும் முத்திரை பொறிப்பதுபோல் வெட்டப்பட்டன.

மார்புப் பட்டைமேல் பொருத்துவதற்காகப் பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த சங்கிலிகளைப் பசும்பொன்னால் செய்தனர்.

மேலும் பொன் பதக்கங்கள் இரண்டும் பொன் வளையங்கள் இரண்டும் செய்தனர். பின்னர் அந்த இரு வளையங்களை மார்புப் பட்டையின் இரு மூலைகளிலும் பொருத்தி,

இரு பொன் சங்கிலிகளையும் மார்புப் பட்டையின் மூலைகளிலுள்ள இரு வளையங்களில் மாட்டினர்.

சங்கிலிகளின் மற்ற இரு முனைகளையும் இரு பதக்கங்களில் மாட்டினர். இவற்றை ஏப்போதின் தோள்பட்டையோடு, அதன் முன்புறமாய் பொருத்தினர்.

இரு பொன் வளையங்கள் செய்து, அவற்றை மார்புப் பட்டையின் இரு விளிம்புகளில், உட்புற ஓரங்களில், ஏப்போதை அடுத்து இணைத்தனர்.

மேலும் இரு பொன் வளையங்கள் செய்து அவற்றை ஏப்போதின் இரு தோள்பட்டைகளில் முன்பக்கம், கீழ்ப்பகுதியில், அது இணையும் இடத்தில் ஏப்போதின் பின்னலழகுடைய இடைக் கச்சைக்கு மேலே கோர்த்துவிட்டனர்.

பின்னர் மார்புப் பட்டையின் வளையங்களை ஏப்போதின் வளையங்களுடன் நீல நாடாவால் இணைத்தனர். இவ்வாறு மார்புப் பட்டை ஏப்போதின் பின்னலழகு இடைக்கச்சையிலிருந்து அகலாமல் ஏப்போதின் மேல் படிந்து நிற்கும். இதுவும் ஆண்டவர் மோசேக்கு கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

அவர் ஏப்போதின் அங்கி முழுவதையும் நீல நிறத்தில் நெசவு வேலைப்பாட்டுடன் செய்தார்.

அந்த அங்கியின் திறப்பைச் சுற்றிலும், மேலாடைகள் திறப்பில் அமைவது போன்று நெசவு வேலைப்பாடுள்ள ஒரு கரை அமைக்கப்பட்டது. இதனால் அங்கி கிழியாதிருக்கும்.

அங்கியின் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் மாதுளைத் தொங்கல் செய்து விடப்பட்டது.

பசும்பொன்னால் மணிகள் செய்து அம் மணிகளை அங்கியின் விளிம்பெங்கும் உள்ள மாதுளைத் தொங்கல்களுக்கு இடையே இட்டனர்.

ஒரு மணி, ஒரு மாதுளைத் தொங்கல்: பின்னும் ஒரு மணி, ஒரு மாதுளைத் தொங்கல் என்று திருப்பணி அங்கியின் விளிம்பெங்கும் அமைந்திருந்தன. இதுவும் ஆண்டவர் மோசேக்கு ஆணையிட்டபடியே செய்யப்பட்டது.

ஆரோனுக்காகவும் அவர் புதல்வருக்காகவும் மெல்லிய நார்ப்பட்டால் உள்ளங்கி தைக்கப்பட்டது.

மெல்லிய நார்ப்பட்டால் தலைப்பாகையும் தொப்பிகளும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் குறுங்கால்சட்டைகளும் செய்யப்பட்டன.

முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும் பின்னல் வேலைப்பாட்டுடன் இடைக்கச்சை செய்யப்பட்டது. இதுவும் ஆண்டவர் மோசேக்கு ஆணையிட்டபடியே செய்யப்பட்டது. 30 புனித மணிமுடிக்கான பட்டத்தைப் பசும் பொன்னால் செய்து, அதன் மேல் ””ஆண்டவருக்கு அர்ப்பணம்”” என்று முத்திரைபோல் பொறித்து வைத்தனர்.

அது ஒரு நீல நாடாவால் தலைப்பாகையின் மேல் இணைக்கப்பட்டது. இதுவும் மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிட வேலையெல்லாம் முடிவடைந்தது. ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவாறே இஸ்ரயேல் மக்கள் செய்து முடித்திருந்தனர்.

மோசேயிடம் கொண்டுவரப்பட்டவை: திருஉறைவிடக் கூடாரம், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், கொக்கிகள், சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதப்பொருத்துக்கள்.

செந்நிறமாகப் பதனிட்ட செம்மறிக்கிடாய்த் தோல்விரிப்புகள், வெள்ளாட்டுத் தோல்விரிப்புகள், திருத்தூயகத் தொங்குதிரை,

உடன்படிக்கைப் பேழை, அதன் தண்டுகள், இரக்கத்தின் இருக்கை,

மேசை, அதன் அனைத்துத் துணைக்கலன்கள், திருமுன்னிலை அப்பம்,

பசும்பொன் விளக்குத்தண்டு, அதில் வரிசையாக அமைந்த அகல்கள், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், விளக்குக்கான எண்ணெய்,

பொன் பீடம், திருப்பொழிவு எண்ணெய், நறுமணத்தூபம், கூடார நுழைவாயிலின் தொங்குதிரை,

வெண்கலப் பலிபீடம், அதன் வெண்கல வலைப்பின்னல், அதன் தண்டுகள், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், நீர்த் தொட்டி, அதன் ஆதாரம், 40 முற்றத்தின் தொங்குதிரைகள், அதன் தூண்கள், பாதப்பொருத்துகள், முற்றத்தின் நுழைவாயிலுக்கான தொங்குதிரை, பூண்கள், முளைகள், சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிடத் திருப்பணிக்குத் தே¨யான அனைத்துத் துணைக்கலன்கள்,

தூயகத்தில் பணிபுரிவதற்கான அழகுறப் பின்னப்பட்ட உடைகள், குருவாகிய ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் குருத்துவப் பணி புரிவதற்கான திருவுடைகள் ஆகியவை.

ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரயேல் மக்கள் எல்லா வேலைகளையும் நுணுக்கமாகச் செய்து முடித்திருந்தனர்.

மோசே எல்லா வேலைகளையும் பார்வையிட்டார். ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடியே அவை யாவும் செய்யப்பட்டிருந்தன. மோசே அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

அதிகாரம் 40.

ஆண்டவர் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்:

””முதல் மாதத்தில், முதல் நாள், சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிடத்தை நீ எழுப்புவாய்.

அங்கே உடன்படிக்கைப்பேழையை வைத்து அதனைத் திருத்தூயகத் திரையாய் மறைத்துவிடு.

பின்னர் மேசையைக் கொண்டுவந்து, உரியவாறு ஒழுங்குபடுத்து. மேலும் விளக்குத் தண்டினைக் கொண்டுவந்து அதன் அகல்களை ஏற்று.

உடன்படிக்கைப் பேழைக்கு முன்பக்கம் பொன்தூப பீடத்தை வை. திருஉறைவிட நுழைவாயிலில் திரையைத் தொங்கவிடு.

சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிட நுழைவாயிலுக்கு முன்புறம் எரிபலி பீடத்தை வை.

சந்திப்புக் கூடாரத்திற்கும் பலி பீடத்திற்கும் இடையில் தண்ணீர்த் தொட்டியை வைத்து, அதில் தண்ணீர் ஊற்றிவை.

சுற்றிலும் முற்றம் அமைத்து, முற்றத்தின் நுழைவாயிலில் திரையைத் தொங்கவிடு.

திருப்பொழிவு எண்ணெயை எடுத்துத் திருஉறைவிடத்திற்கும் அதிலுள்ள அனைத்திற்கும் திருப்பொழிவு செய். அதனை அதன் அனைத்துத் துணைக்கலன்களோடுஅர்ப்பணிப்பாய். இவ்வாறு அது புனிதம் பெறும்.

எரிபலி பீடத்திற்கும் அதன் அனைத்துத் துணைக்கலன்களுக்கும் திருப்பொழிவு செய்து, அப்பீடத்தை அர்ப்பணிப்பாய். இவ்வாறு பலிபீடம் மிகப் புனிதமானதாக விளங்கும்.

தண்ணீர்த் தொட்டிக்கும், அதன் ஆதாரத்திற்கும் திருப்பொழிவு செய்து, அர்ப்பணிப்பாய்.

சந்திப்புக் கூடார நுழைவாயிலின் அருகில் ஆரோனையும் அவன் புதல்வரையும் வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவு.

ஆரோன் எனக்கு குருத்துவப் பணியாற்றும்படி அவனுக்குத் திருவுடைகள் அணிவித்து, அவனுக்கு அருள்பொழிவு செய்து, அவனைத் திருநிலைப்படுத்து.

அவன் புதல்வரையும் அருகில் வரச்செய்து, அவர்களுக்கும் உடைகள் உடுத்துவிப்பாய்.

அவர்களின் தந்தைக்கு அருள்பொழிவு செய்தது போலவே, எனக்குக் குருத்துவப் பணியாற்றும்படி அவர்களுக்கும் அருள்பொழிவு செய். அவர்களின் அருள்பொழிவு தலைமுறைதோறும் நிலைநிற்கும் குருத்துவமாக விளங்கும்.””

மோசே அவ்வாறே செய்தார். ஆண்டவர் கட்டளையிட்டபடியெல்லாம் அவர் செயல்பட்டார்.

இரண்டாம் ஆண்டில், முதல் மாதம், முதல் தேதியன்று திருஉறைவிடம் எழுப்பப்பட்டது.

மோசே திருஉறைவிடத்தை எழுப்பினார்: பாதப்பொருத்துகளை வைத்து அதன்மேல் சட்டங்களைப் பொருத்தினார். குறுக்குச் சட்டங்களையும் பொருத்தினார்: தூண்களையும் நிறுத்தினார்.

திரு உறைவிடத்தின்மேல் அவர் கூடாரத்தை விரித்தார்: அதற்குமேல் கூடார மேல்விரிப்பை அமைத்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

உடன்படிக்கைப் பலகையை அவர் எடுத்து, அதைப் பேழையில் வைத்தார். தண்டுகளைப் பேழையில் செருகினார். இரக்கத்தின் இருக்கையைப் பேழையின்மேல் வைத்தார்.

திருஉறைவிடத்தினுள் பேழை எடுத்துச் செல்லப்பட்டது. திருத்தூயகத்திரை தொங்கவிடப்பட்டு, உடன்படிக்கைப் பேழை மறைக்கப்பட்டது. இதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்.

சந்திப்புக் கூடாரத்தில் திருஉறைவிடத்தின் வடபுறம், திருத்தூயகத் திரைக்கு வெளியே அவர் மேசையை வைத்தார்.

அதன் மேல் ஆண்டவர்முன் திருமுன்னிலை அப்பத்தை அவர் முறைப்படி வைத்தார்: இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

சந்திப்புக் கூடாரத்தில் திருஉறைவிடத்தின் தென்புறம், மேசைக்கு எதிரே, விளக்குத் தண்டை நிறுத்தினார்.

ஆண்டவர் திருமுன் அகல்களை ஏற்றினார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

சந்திப்புக் கூடாரத்தில் திருத்தூயகத் திரைக்கும் முன்னே பொன்பீடத்தை வைத்தார்.

அதில் நறுமணத் தூபம் எரித்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

திருஉறைவிடத்தின் நுழைவாயிலில் திரை தொங்கவிடப்பட்டது.

அவர் சந்திப்புக் கூடாரத்தின் திரு உறைவிட நுழைவாயிலின் முன் எரிபலிபீடத்தை வைத்தார். அதன்மேல் அவர் எரிபலியும் உணவுப் படையலும் செலுத்தினார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டப்படியே செய்யப்பட்டது.

சந்திப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் தண்ணீர்த் தொட்டி அமைக்கப்பட்டது. கழுவுவதற்காகத் தண்ணீர் அதில் ஊற்றி வைக்கப்பட்டது.

இது மோசேயும், ஆரோனும், அவர் புதல்வரும் கைகளையும் கால்களையும் கழுவிக் கொள்வதற்கே.

சந்திப்புக் கூடாரத்தில் நுழையும்போதும், பலிபீடத்தை அணுகும்போதும் அவர்கள் கழுவிக் கொள்வர். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.

திருஉறைவிடம், பலிபீடம் இவற்றைச் சுற்றி எங்கும் அவர் முற்றம் அமைத்தார். முற்றத்தின் நுழைவாயிலில் திரையைத் தொங்கவிட்டார். இவ்வாறு மோசே தம் பணியை முடித்துக்கொண்டார்.

பின்பு, மேகம் சந்திப்புக்கூடாரத்தை மூடிற்று: ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று.

சந்திப்புக்கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று.

இஸ்ரயேல் மக்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், மேகம் திரு உறைவிடத்தைவிட்டு எழும்பும் போதெல்லாம் புறப்பட்டுச் செல்வார்கள்.

மேகம் எழும்பாதிருக்கும் போதோ, அது மேலே எழும்பும் நாள்வரை, அவர்கள் புறப்பட மாட்டார்கள்.

ஏனெனில் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.

புத்தகம் 3. லேவியர்

அதிகாரம் 1.

ஆண்டவர் மோசேயை அழைத்துச் சந்திப்புக் கூடாரத்திலிருந்து அவரோடு பேசினார்.

இஸ்ரயேல் மக்களோடு நீ பேசி அவர்களுக்குச் சொல்ல வேண்டியது: உங்களில் ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சை செலுத்த வந்தால், மாட்டு மந்தையிலிருந்தோ ஆட்டு மந்தையிலிருந்தோ கால்நடையை ஒப்புக்கொடுப்பார்.

அவரது நேர்ச்சை எரிபலி எனில், மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட, பழுதற்ற ஒரு காளையை அவர் படைக்கவேண்டும். ஆண்டவர் திருமுன் ஏற்புடையதாகுமாறு, அதைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் அவர் படைக்கட்டும்.

அவர் எரிபலியின் தலைமேல் தம் கையை வைப்பார். அது அவருடைய பாவத்திற்கு கழுவாயாக ஏற்றுக்கொள்ளப்படும்.

அந்த இளம் காளையை அவர் ஆண்டவர் திருமுன் அடிப்பார். ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைக் கொண்டு வந்து, சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிப்பர்.

பின்பு, அவர் எரிபலியைத் தோலுரித்துப் பகுதி பகுதியாகத் துண்டிப்பார்.

ஆரோனின் புதல்வராகிய குருக்கள் பலிபீடத்தின்மேல் தழல் இட்டு அந்நெருப்பின்மேல் விறகுக் கட்டைகளை அடுக்குவர்.

ஆரோனின் புதல்வராகிய குருக்கள் துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் அடுக்கியிருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பர்.

அதன் குடலையும் கால்களையும் தண்ணீரில் கழுவி அவை எல்லாவற்றையும் குருக்கள் பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவர். நெருப்பாலான இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப்பலி ஆகும்.

எரிபலிக்கான அவரது நேர்ச்சை ஆட்டுமந்தையிலுள்ள செம்மறி அல்லது வெள்ளாடாக இருந்தால், அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக் கிடாயைக் கொண்டு வரவேண்டும்.

ஆண்டவர்திருமுன் பலிபீடத்தின் வடபுறத்தில் அதை அவர் கொல்ல வேண்டும். ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.

அவர் அதைப் பகுதிகளாகத் துண்டித்து, துண்டங்களோடு தலையையும் கொழுப்பையும் சேர்த்து வைப்பார். பின்பு, குரு அவற்றைப் பலிபீடத்திலுள்ள நெருப்பின்மேல் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கி வைப்பார்.

அதன் குடலும் பின்னந்தொடைகளும் தண்ணீரால் கழுவப்படும். அவை அனைத்தையும் பலிபீடத்தின்மேல் குரு எரியூட்டுவார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்பாலான எரிபலி ஆகும்.

அவர் ஆண்டவருக்குச் செலுத்தும் நேர்ச்சை பறவை எரிபலி எனில், காட்டுப் புறாக்களையாவது மாடப்புறாக்களையாவது நேர்ச்சையாகச் செலுத்த வேண்டும்.

அதைக் குரு பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து அதன் தலையைத் திருகி, பலிபீடத்தின் எரித்து விடுவார்: அதன் இரத்தத்தையோ பலிபீடத்தின் பக்கத்தில் சிந்த விடுவார்:

அதன் இரைப்பையையும் இறகுகளையும் அகற்றி, அவற்றைப் பலிபீடத்திற்கருகில் கிழக்குப்புறமாக சாம்பல் இடுகிற இடத்தில் எறிந்து விடுவார்:

அதன் இறக்கைகளைப் பிடித்து இரண்டாக்காமல் அதனைக் கிழிப்பார். அவ்வாறு கிழித்தபின் குரு அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரியூட்டுவார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்பாலான எரிபலி ஆகும்.

அதிகாரம் 2.

ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சையாக உணவுப்படையல் செய்ய வந்தால், அவர் படையல் மெல்லிய மாவாய் இருக்கட்டும். அவர் அதன் மேல் எண்ணெய் வார்த்து சாம்பிராணிப் பொடி தூவி,

அதை ஆரோனின் புதல்வராகிய குருக்களிடம் கொண்டு வருவார். குரு அந்த எண்ணெய், சாம்பிராணி கலந்த அந்த மாவில் கை நிறைய எடுப்பார். நினைவுப் படையலாக அதைக் குரு பலிபீடத்தின் மேல் எரிப்பார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப் பலி ஆகும்.

உணவுப் படையலில் எஞ்சியது ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் உரியது. ஆண்டவருக்கான நெருப்புப்பலிகளில் அது மிகவும் தூயது.

நேர்ச்சையாக அடுப்பிலே சுட்ட உணவுப்படையலைச் செலுத்தினால், அது எண்ணெயில் பிசைந்த மெல்லியமாவில் செய்த புளிப்பற்ற அதிரசங்களும், எண்ணெயில் தோய்த்த அடைகளுமாய் இருக்கட்டும்.

உனது நேர்ச்சை தட்டையான சட்டியில் சுட்ட உணவுப்படையலாக இருந்தால், அது எண்ணெய் வார்த்த புளிப்பற்ற மெல்லிய மாவால் செய்யப்பட வேண்டும்.

அதைத் துண்டுகளாகப் பிட்டு அதன்மேல் எண்ணெய் விட வேண்டும், அது ஓர் உணவுப் படையல்.

உனது நேர்ச்சை, சட்டியில் செய்யப்படுகிற உணவுப்படையல் எனில், அது மெல்லிய மாவால் எண்ணெயில் செய்யப்படவேண்டும்.

இம்முறையில் செய்யப்பட்டவற்றை ஆண்டவருக்கு உணவுப் படையலாகச் செலுத்துவாயாக. அது குருவிடம் வந்து சேரும்போது அவர் அதைப் பலிபீடத்துக்குக் கொண்டு போவார்.

குரு உணவுப் படையலிலிருந்து நினைவுப்படையலைத் தனித்தெடுத்துப் பலிபீடத்தின்மேல் எரிப்பார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்புப்பலி.

உணவுப்படையலில் எஞ்சியது ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் உரியது. ஆண்டவருக்கான நெருப்பும் பலிகளில் இது மிகவும் தூயது.

ஆண்டவருக்குச் செலுத்தும் உணவுப்படையல் எதுவும் புளிப்பேறியதாய்ச் செய்யப்படலாகாது. புளிக்காரம், தேன் எதையுமே ஆண்டவருக்கு நெருப்புப்பலியாக்க வேண்டாம்.

அவற்றை, முதற்பலன் படையலாக ஆண்டவருக்குச் செலுத்தலாம். ஆனால், இவை இனிய நறுமணமாகப் பலிபீடத்தில் எரிக்கப்படலாகாது.

நேர்ச்சையான எந்த உணவுப்படையலும் உப்பிடப்பட வேண்டும். உன் உணவுப் படையலில் கடவுளின் உடன்படிக்கையாகிய உப்பைக் குறையவிடாமல் உன் நேர்ச்சைகள் அனைத்தோடும் உப்பையும் படைப்பாயாக.

முதற்பலன்களின் உணவுப் படையலை ஆண்டவருக்கு செலுத்தினால், அறுவடையான கதிர்களை நெருப்பில் வாட்டி உதிர்த்து, உன் முதற்பலன்களின் உணவுப் படையலாகச் செலுத்த வேண்டும்.

அதன்மேல் எண்ணெய் ஊற்றிச் சாம்பிராணி போடவேண்டும். இதுவும் ஓர் உணவுப் படையலே.

உதிர்க்கப்பட்டவற்றிலும் எண்ணெயிலுமிருந்து நினைவுப் படையலுக்கான பகுதியை குரு எடுத்துச் சாம்பிராணியோடு எரித்து விடுவார். இது ஆண்டவருக்கான நெருப்புப்பலி.

அதிகாரம் 3.

ஒருவரது நேர்ச்சை நல்லுறவுப் பலியாய் இருந்தால், அது அவரது மாட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்தப்படும். காளையாகவோ பசுவாகவோ இருந்தால், அவர் பழுதற்ற ஒன்றை ஆண்டவருக்கு முன்பாகக் கொண்டு வருவார்.

நேர்ச்சையின் தலைமேல் அவர் தம் கையை வைத்துச் சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் அதனைக் கொல்லவேண்டும். அப்போது ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.

நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப்பலியாகக் குடல்களைச் செலுத்த வேண்டியது: அவற்றைச் சுற்றிலுமுள்ள கொழுப்பு முழுவதும்

இரு சிறுநீரகங்களும் அவற்றின்மேல் சிறு குடல்களிடத்தில் இருக்கும் கொழுப்பும் சிறுநீரகங்களோடு கல்லீரலின் மேல் இருக்கிற கல்லும் ஆகும்.

ஆரோனின் புதல்வர் அதைப் பலிபீடத்தில் நெருப்பின் மீது உள்ள கட்டைகளில் ஏற்கெனவே வைத்திருக்கும் எரிபலியோடு எரிப்பர். அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி ஆகும்.

ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சையாக நல்லுறவுப் பலியைத் தம் ஆட்டு மந்தையிலிருந்து செலுத்தினால், அது பழுதற்ற கிடாயாகவோ ஆடாகவோ இருக்கட்டும்.

ஒருவர் நேர்ச்சையாக ஆட்டைச் செலுத்தினால், அதை ஆண்டவர் திருமுன் கொண்டு வந்து,

நேர்ச்சையின் தலைமேல் அவர் தம் கையை வைத்து, சந்திப்புக் கூடாரத்தின் முன்பாக அதனைக் கொல்லவேண்டும். ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிப்பர்.

நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப் பலியாகச் செலுத்துவது, அதன் கொழுப்பும், முதுகெலும்பின் அருகில் வெட்டியெடுத்த கொழுப்பு வாலும் குடல்களை மூடிய கொழுப்பும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதும்,

இரு சிறுநீரகங்களும், அவற்றின்மேல் இடுப்பையொட்டி உள்ள கொழுப்பும், சிறுநீரகங்களை அடுத்து கல்லீரலின்மேல் உள்ள சவ்வும் ஆகும்.

இவற்றைக் குருக்கள் பலிபீடத்தின்மேல் எரிப்பர். இது ஆண்டவருக்கு உகந்த நெருப்புப்பலி உணவாகும்.

நேர்ச்சையாக ஒருவர் வெள்ளாட்டுக் கிடாயைச் செலுத்தினால், அதை அவர் ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து

அதன் தலைமேல் தம் கையை வைத்துச் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்வார். ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிப்பர்.

நல்லுறவுப் பலியிலிருந்து அவர் ஆண்டவருக்கு நெருப்புப் பலியாகச் செலுத்த வேண்டியது: குடல்களை மூடிய கொழுப்பும் அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு முழுவதும்,

இரு சிறுநீரகங்களும் அவற்றின் மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பும் சிறுநீரகங்களோடு கல்லீரல்மேல் இருக்கிற சவ்வும் ஆகும்.

குருக்கள் பலிபீடத்தின்மேல் அவற்றை எரிப்பர். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி உணவாகும்.

கொழுப்பையோ இரத்தத்தையோ நீங்கள் உண்ணலாகாது. இது உங்கள் உறைவிடம் எங்கும் தலைமுறைதோறும் உங்களுக்கு மாறாத நியமமாக விளங்கும்.

அதிகாரம் 4.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீ இஸ்ரயேல் மக்களிடம் அறிவிக்க வேண்டியது: ஒருவர் அறியாமையினால் ஆண்டவரின் கட்டளைகளில் ஒன்றையேனும் மீறிப் பாவம் செய்தால் அவர் செய்யவேண்டியது:

அருள்பொழிவு பெற்ற குரு பாவம் செய்து மக்கள்மீது குற்றப்பழி வந்தால், தான் செய்த பாவத்தை முன்னிட்டுப் பழுதற்ற ஓர் இளங்காளையைப் பாவம் போக்கும் பலியாக ஆண்டவருக்குச் செலுத்துவாராக.

சந்திப்புக் கூடார நுழைவாயிலில், ஆண்டவர் திருமுன் அதைக்கொண்டு வந்து, அதன் தலைமேல் தன் கையை வைத்து ஆண்டவர் திருமுன் அதைக் கொல்வார்.

அருள்பொழிவு பெற்ற குரு அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து அதைச் சந்திப்புக் கூடாரத்திற்குள் கொண்டுவந்து,

அந்த இரத்தத்தில் தன் விரலைத் தோய்த்துத் தூயகத்தின் தொங்குதிரைக்கு எதிரே ஆண்டவர் திருமுன் ஏழுமுறை தெளிப்பாராக.

குரு அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துச் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும் நறுமணத்தூப பீடக்கொம்புகளில் பூசுவார். காளையின் எஞ்சிய இரத்தம் முழுவதையும் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி அடித்தளத்தில் ஊற்றுவார்.

பாவம் போக்கும் பலிக்காளையின் எல்லாக் கொழுப்பையும் குடல்களைச் சுற்றியுள்ள கொழுப்பையும் அவற்றின் மேலுள்ள கொழுப்பு முழுவதையும் எடுப்பார்.

மேலும் இரு சிறுநீரகங்கள், அவற்றின்மேல் இடுப்பையொட்டி உள்ள கொழுப்பு, சிறுநீரகங்களை அடுத்துக் கல்லீரலின்மேல் உள்ள சவ்வு ஆகியவற்றை

நல்லுறவுப் பலிக் காளையிலிருந்து எடுப்பதுபோல எடுத்து, குரு அவற்றை எரிபலிபீடத்தின்மேல் எரிப்பார்.

காளையின் தோலையும் அதன் இறைச்சியையும் தலையையும் கால்களையும் குடல்களையும் சாணத்தையும்

காளை முழுவதையும் பாளையத்திற்கு வெளியே சாம்பல் கொட்டுகிற தூய்மையான இடத்தில் கொண்டுபோய் விறகுக்கட்டைகளிட்டு நெருப்பால் எரிக்க வேண்டும். சாம்பல் கொட்டும் இடத்தில் அனைத்தையும் சுட்டெரிக்க வேண்டும்.

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் அறியாமையினால் தவறிழைத்து, அது அவர்கள் கண்களுக்கு மறைவாய் இருந்தாலும், ஆண்டவரின் கட்டளைகளை மீறி, தகாதன செய்து குற்றத்திற்கு உள்ளானால்,

அவர்கள் செய்தது பாவம் எனத் தெரியவரும்போது, ஓர் இளங்காளையைச் சபையார் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகப் பாவம் போக்கும் பலியாகக் கொண்டு வர வேண்டும்.

மக்கள் கூட்டமைப்பின் பெரியோர் அனைவரும் ஆண்டவர் திருமுன் தம் கைகளைக் காளையின் தலைமேல் வைப்பார்கள். ஆண்டவர் திருமுன் அந்தக் காளை கொல்லப்படும்.

அருள்பொழிவு பெற்ற குரு அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சந்திப்புக் கூடாரத்திற்குள் கொண்டுவருவார்.

குரு அந்த இரத்தத்தில் தம் விரலைத் தோய்த்து ஆண்டவர் திருமுன் தொங்குதிரைக்கு முன்பாகத் தெளிப்பார்.

சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் திருமுன் இருக்கும் பலிபீடக் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, எஞ்சிய இரத்தத்தை எல்லாம் சந்திப்புக்கூடார நுழைவாயிலில் இருக்கும் எரிபலி பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.

காளையின் கொழுப்பு முழுவதையும் எடுத்துப் பலிபீடத்தில் எரிப்பார்.

பாவம் போக்கும் பலிக்காளைக்குச் செய்ததுபோல, இந்தக் காளைக்கும் செய்து, குரு அவர்களுக்குப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார். அப்பொழுது அவர்கள் மன்னிப்புப் பெறுவர்.

முன்னைய காளையை எரித்ததுபோல இதையும் பாளையத்திற்கு வெளியே கொண்டு போய்ச் சுட்டெரிப்பாராக. இது சபையாருக்கான பாவம்போக்கும் பலி.

தலைவன் ஒருவன் தன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளில் எதையாவது அறியாமையால் மீறிப்பாவம் செய்து குற்றத்திற்குள்ளானால்,

தான் செய்தது பாவமென்று அவனுக்குத் தெரியவரும்போது, வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு கிடாயைப் பலியாகக் கொண்டு வருவான்.

அந்த ஆட்டுக்கிடாயின் தலைமேல் அவன் தன் கையை வைத்து, எரிபலிப்பொருள் வெட்டப்படும் இடத்தில், ஆண்டவருக்குமுன் அந்தக்கிடாயைப் பலிகொடுப்பான்: இது பாவம் போக்கும் பலி.

குரு பாவம் போக்கும் பலிஇரத்தத்தில் சிறிது தம்விரலால் எடுத்து எலிபலிபீடக் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தை அப்பீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.

அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப்பலியின் கொழுப்புக்குச் செய்வதுபோல, பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவார். குரு அவனுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார் : அவன் மன்னிப்புப் பெறுவான்.

பொதுமக்களின் ஒருவர் ஆண்டவரின் கட்டளைகளில் எதையாவது அறியாமையால் மீறிப் பாவம் செய்து குற்றத்திற்குள்ளானால்,

தாம் செய்தது பாவம் என்று அவருக்குத் தெரியவரும்போது, அவர் செய்த பாவத்தை முன்னிட்டு, பழுதற்ற ஒரு வெள்ளாட்டுப் பெண் குட்டியைப் பலியாகக் கொண்டு வருவார்.

பாவம் போக்கும் பலியின் தலைமேல் தம் கையை வைத்து, எரிபலியிடும் இடத்தில் அந்தப் பாவம் போக்கும் பலியாட்டை அடிப்பார்.

குரு அதன் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்து, எரிபலிபீடக் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தை அப்பீடத்தின் அடித்தளத்தில் ஊற்விவிடுவார்.

அதன் கொழுப்பு முழவதையும் நல்லுறவு பலியிலுள்ள கொழுப்பைப் போன்று எடுத்துப் பலிபீடத்தின் மேல் ஆண்டவர் விரும்பும் நறுமணமாக குரு எரித்துப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார். அந்த மனிதரும் மன்னிப்புப் பெறுவார்.

பாவக்கழுவாய் பலியாக அவர் ஓர் ஆட்டுக் குட்டியைக் கொண்டு வந்தால் அது பழுதற்ற பெண் ஆட்டுக் குட்டியாக இருக்கவேண்டும்.

அந்தப் பாவம்போக்கும் பலிப்பொருளின் தலைமீது தம் கையை வைத்து எரிபலியை அடிக்க வேண்டும். அதே இடத்தில், இப்பாவம் போக்கும் பலியையும் அடிக்க வேண்டும்.

குரு அந்தப் பாவம்போக்கும் பலியின் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்து எரிபலிபீடக் கொம்புகளின்மேல் பூசி, எஞ்சிய இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடித்தளத்தில் ஊற்றிவிடுவார்.

அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப் பலிக்கிடாயின் கொழுப்பை எடுப்பது போன்று எடுத்து, எரிபலிபீடத்தின்மேல் ஆண்டவருக்கான நெருப்புப்பலி போல எரித்துவிடுவார். இவ்வாறாக அந்த மனிதர் செய்த பாவத்திற்குக் குரு பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்: அவரும் மன்னிப்புப் பெறுவார்.

அதிகாரம் 5.

ஒருவர் ஒரு காரியத்தைக் கண்டோ கேட்டோ அதற்குச் சாட்சியாளராய் இருந்தும், அதுபற்றிச் சான்று கூறப் பணிக்கும் பொதுக்கட்டளையைக் கேட்டும், அதை அறிவிக்காமல் இருந்து பாவத்திற்கு உட்பட்டால், அவரே இத்தீச்செயலுக்குப் பொறுப்பாவார்.

ஒருவர் தீட்டான எதையும்-செத்துத் தீட்டான காட்டு விலங்கையோ, செத்துத் தீட்டான கால்நடையையோ, செத்துத் தீட்டான ஊர்வனவற்றையோ-தெரியாமல் தொட்டுவிட்டாலும் அவர் தீட்டுப்பட்டவரே. அவர் குற்றவாளி ஆவார்.

மேலும் எத்தகைய தூய்மைக்கேட்டினாலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதரை ஒருவர் அறியாமலே தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டாலும் அவரும் குற்றவாளியே.

தீமை செய்வதற்கோ நன்மை செய்வதற்கோ, எக்காரியத்திலும் ஒருவர் சிந்திக்காமல் வாய்விட்டு ஆணையிட்டபின்னர், தாம் அறியாமல் பதற்றத்தில் ஆணையிட்டு விட்டதாக அவர் உணர்ந்தால், இக்காரியத்தினாலும் அவர் குற்றவாளியே.

மேற்குறிப்பிட்டவைகளில் அவர் தவறிழைத்தவராகக் காணப்படும்போது தாம் இழைத்த குற்றத்தை அறிக்கையிட்டு,

பாவம்போக்கும் பலிப்பொருளை ஆண்டவருக்குக் கொண்டுவரவேண்டும். ஆட்டு மந்தையிலிருந்து பிடித்த ஒரு பெண் ஆட்டையோ, செம்மறியாட்டுக் குட்டியையோ, வெள்ளாட்டுக் குட்டியையோ பாவம்போக்கும் பலியாகக் கொண்டுவர வேண்டும். அவருக்காகக் குரு அவரது பாவம் நீங்குவதற்குப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்.

அவர் தம் குற்றப்பழியை அகற்ற, ஆட்டுக்குட்டி கொண்டுவர இயலாதிருந்தால், இரு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து, ஒன்றைப் பாவம்போக்கும் பலியாகவும் மற்றொன்றை எரிபலியாகவும் ஆண்டவருக்குச் செலுத்த,

அவற்றைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். குரு முதலில் பாவம் போக்கும் பலிக்கு உரியதை எடுத்து அதன் கழுத்தைத் திருகித் தலையைத் துண்டிக்காமல் வைக்க வேண்டும்.

பாவம் போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து பலிபீட ஓரங்களைச் சுற்றிலும் தெளித்து எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் வடியவிடவேண்டும். இது பாவம் போக்கும் பலி.

இரண்டாவதை ஒழுங்குமுறைப்படி அவர் எரிபலிக்கெனச் செலுத்தவேண்டும். அவர் செய்த பாவம் நீங்கக் குரு பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்: அவரும் மன்னிப்புப் பெறுவார்.

இரண்டு காட்டுப் புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டு வர இயலாதிருந்தால் குற்றவாளி தாம் செய்த குற்றத்தினிமித்தம் தாம் படைக்கும் காணிக்கைக்கென இருபதுபடி அளவு மிருதுவான மாவில் பத்தில் ஒருபங்கைக் கொண்டுவருவாராக. அதன் மேல் எண்ணெயோ சாம்பிராணியோ இடலாகாது. ஏனெனில் அது பாவம் போக்கும் பலி.

அது குருவிடம் கொண்டு வரப்படவேண்டும். குரு நினைவுப்பங்காக ஒரு கைப்பிடி நிறைய எடுத்து ஆண்டவரின் நெருப்புப்பலிகளோடு பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். இது பாவம் போக்கும் பலி.

இவ்வாறு, குரு இத்தகைய பாவங்களில் ஒன்றைச் செய்தவருக்காகப் பாவக் கழுவாய் நிறைவேற்றுவாராக. அப்போது அவர் மன்னிப்புப்பெறுவார். எஞ்சியது உணவுப் படையலைப்போல குருவைச் சேரும்.

ஆண்டவா மோசேயிடம் கூறியது:

ஒருவர் ஆண்டவருக்கு அர்ப்பணித்தவற்றில் ஒழுங்கை மீறி அறியாமல் தவறிழைத்தால், அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்குத் தம் குற்றப்பழி நீக்கும் பலியாகக் கொண்டு வருவாராக. அது திருத்தலச் செக்கேல் கணக்குக்கேற்ப நீ விதிக்குமளவு மதிப்புடையதாய் இருக்கவேண்டும்.

அர்ப்பணித்தவற்றில் தவறிழைத்தால், ஈட்டுத் தொகையோடு ஜந்தில் ஒரு பங்கு அதிகமாக்கிக் கொடுக்க வேண்டும். அதைக் குருவிடமே கொடுக்க வேண்டும். குரு பாவக்கழுவாய் செய்து குற்றம் போக்கும் பலியான ஆட்டுக்கிடாயை அவருக்காகப் பலியிடவேண்டும். அப்பொழுது அவர் மன்னிப்புப்பெறுவார்.

ஆண்டவரின் கட்டளைகளின்படி, செய்யக்கூடாதென்று விலக்கப்பட்ட ஒன்றை ஒருவர் செய்து பாவத்திற்கு உள்ளானால், அவர் அறியாமல் செய்தாலும்கூட, அவர் குற்றவாளியே. அத்தீச்செயலுக்கு அவரே பொறுப்பாவார்.

அவர் நீ விதிக்கும் மதிப்பிற்கு ஏற்ப, பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆட்டு மந்தையிலிருந்து பிடித்து அதைக் குற்றப்பழி நீக்கும் பலியாகக் குருவிடம் கொண்டு வருவார். அவர் அறியாமல் செய்த பிழைக்காகக் குரு அவருக்கெனக் கறைநீக்கம் செய்வார். அது அவருக்கு மன்னிக்கப்படும்.

அது குற்றப்பழி நீக்கும் பலி. அவர் ஆண்டவருக்கு எதிராகவே குற்றம் செய்துள்ளார்.

அதிகாரம் 6.

ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:

தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த அல்லது பணையமாய் வைக்கப்பட்டிருந்த பொருளை ஒருவர் தம் இனத்தாரிடமிருந்து ஏமாற்றி எடுத்துக் கொண்டோ, அவரிடமிருந்து ஒரு பொருளைத் திருடிக்கொண்டோ, தம் இனத்தாரை ஒடுக்கிப் பறித்துக் கொண்டோ,

காணாமற்போனதைக் கண்டெடுத்தும் அதை மறுத்துப் பொய்யாணையிட்டோ-இவற்றைப் போன்ற பாவத்திற்கு உட்பட்டு, ஆண்டவருக்குத் துரோகம் செய்தால்,

அவர் பாவத்திற்கு உட்பட்டு, குற்றப்பழி உடையவராய் இருப்பார். அவர் தாம் திருடிக்கொண்டதையோ, ஒடுக்கிப் பறித்துக்கொண்டதையோ தம்மிடம் கொடுக்கப்பட்டிருந்த பொருளையோ காணாமற்போய்த் தாம் கண்டெடுத்ததையோ

பொய் ஆணையிட்டுப் பெற்றுக்கொண்டதையோ-இவை அனைத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். அந்த முதலை முழுமையாகக் கொடுப்பதோடு, அதன் ஜந்தில் ஒருபங்கைசச் சேர்த்துக் குற்றப்பழி நீக்கும் பலிநாளில் உரியவருக்குக் கொடுக்க வேண்டும்.

குற்றப்பழி நீக்கும் பலியாக நீ விதிக்கும் மதிப்பிற்குச் சரியாகப் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்குச் செலுத்தும்படி குற்றப்பழி நீக்கும் பலியாக குருவிடம் செலுத்தவேண்டும்.

அப்பொழுது குரு ஆண்டவருக்கு முன்பாகக் கறை நீக்கம் செய்வார்: இவற்றுள் எதையேனும் செய்து குற்றத்திற்கு உள்ளானால், அது மன்னிக்கப்பெறும்.

ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:

ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் நீ கட் டளையிட்டுச் சொல்லவேண்டியது: எரிபலி பற்றிய சட்டம் இதுவே: இரவு முழுவதும் காலைவரையும் பலிபீடத்தின் நெருப்பின் மேல் எரிபலி இருக்க வேண்டும். பலிபீடத்தின்மேல் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.

குரு தன் நார்ப்பட்டு அங்கியை அணிந்து தன் நார்ப்பட்டு உள்ளாடையை இடுப்பில் கட்டிக்கொள்ளவேண்டும்: பலிபீடத்தின்மேல் நெருப்பில் எரித்த எரிபலியின் சாம்பலை எடுத்துப் பலிபீடத்திற்கருகே கொட்டவேண்டும்:

பின்னர் தன் உடைகளை மாற்றி வேறு ஆடைகள் அணிந்துகொண்டு அந்தச் சாம்பலைப் பாளையத்திற்கு வெளியே தூய்மையான இடத்தில் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும்.

பலிபீடத்தின்மேல் இருக்கிற நெருப்போ அணையாமல் எரிந்து கொண்டே இருக்கவேண்டும். காலைதோறும் குரு அதன்மேல் எரியும்படி கட்டைகளை வைத்து, அதன்மேல் எரிபலியை அடுக்கி அவற்றின் மீது நல்லுறவுப் பலிகளின் கொழுப்பை இட்டு எரிக்கவேண்டும்:

பலிபீடத்தின்மேல் நெருப்பு எப்போதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். அது ஒருபோதும் அணைந்துவிடலாகாது.

உணவுப் படையல் பற்றிய சட்டம் இதுவே: ஆண்டவரின் திருமுன் அதைப் பலிபீடத்திற்கெதிரே ஆரோனின் புதல்வர் படைக்க வேண்டும்.

அவர்கள் உணவுப்படையலின் மிருதுவான மாவிலும் அதன் எண்ணெயிலும் உணவுப்படையலின் மீதுள்ள எல்லாச் சாம்பிராணியிலும் ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, அதை நினைவுப்படையலாகப் பலிபீடத்தின்மேல் எரிப்பர். அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நினைவுப்பலியாகும்.

எஞ்சியதை ஆரோனும் அவன் புதல்வரும் உண்பர். அதைப் புளிப்பற்றதாகப் புனிதத் தலத்தில் உண்பர். சந்திப்புக் கூடாரத்தின் முற்றத்தில் அதை உண்பர்.

அதைப் புளிப்பேற்றிச் சுடவேண்டும். எனக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் அதை நான் அவர்கள் பங்காகக் கொடுத்துள்ளேன். அது பாவம் போக்கும் பலிபோலவும் குற்றப்பழி நீக்கும் பலிபோலவும் மிகத் தூயது.

ஆரோனின் பிள்ளைகளில் ஆண்கள் மட்டுமே அதை உண்ணவேண்டும். இது தலைமுறைதோறும் உங்களுக்கு மாறாக நியமமாய் விளங்கும். ஆண்டவருக்குச் செலுத்தும் நெருப்புப் பலிகளில் எதையும் தொடுகிறவன் தூயவனாய் இருப்பான்.

ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:

ஆரோனும் அவன் புதல்வரும் அருள்பொழிவு பெறுகின்ற நாளில் அவனும் அவன் புதல்வரும் ஆண்டவருக்குக் கொண்டுவர வேண்டிய படையல் இதுவே. இருபது படி அளவான மிருதுவான மாவில் பத்தில் ஒரு பங்கை எடுத்துக் காலையில் பாதியும், மாலையில் பாதியுமாக எந்நாளும் உணவுப்படையலாக அளிக்க வேண்டும்.

தட்டையான சட்டியில் எண்ணெய் விட்டு அதைச் சுடவேண்டும். சுட்ட பின்னர் அதை எடுத்துப் பத்துத் துண்டுகளாக்கி ஆண்டவருக்கே உகந்த நறுமணமிக்க உணவுப் படையலாக அளிக்க வேண்டும்.

அவன் புதல்வரில் அவனுக்குப்பின் அருள்பொழிவு பெறும் குரு என்றென்றும் மாறாத நியமமாக இதைப்படைக்க வேண்டும். இது ஆண்டவருக்காக முழுவதும் எரிக்கப்படும்.

குருவின் எந்த உணவுப்படையலும் முழுவதும் எரிக்கப்படவேண்டும். அதை உண்ணலாகாது.

ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:

நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்ல வேண்டியது: பாவம் போக்கும் பலி பற்றிய சட்டம் இதுவே: எரிபலிக்குரியதும் பாவம் போக்கும் பலிக்குரியதும் பலியாக்கப்படுகிற இடத்திலேயே ஆண்டவர் திருமுன் அடிக்கப்படவேண்டும். அது மிகத் தூயது.

பாவம் போக்குவதற்கென அதைப் படைக்கும் குரு அதை உண்பார். சந்திப்புக்கூடாரத்தின் முற்றமாகிய தூய தளத்தில் அது உண்ணப்படவேண்டும்.

அந்த இறைச்சியில்படுகிற எதுவும் தூய்மையானதே. அதன் இரத்தம் ஒரு துணியில் தெறித்தால், இரத்தம் தெறித்த துணியைத் தூய தளத்தில் துவைக்கவேண்டும்.

அதை வேகவைத்த மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும். வெண்கலப் பானையில் வேகவைத்தால் அதைத் தேய்த்துத் தண்ணீரால் நன்கு கழுவவேண்டும்.

குரக்களில் ஆண் மக்கள் யாவரும் அதை உண்ணலாம். அது மிகத் தூயது.

கறைநீக்கம் செய்யும்படி சந்திப்புக் கூடாரத்திற்குள் தூயகத்திற்குக் கொண்டு வரப்பட்ட இரத்தத்திற்குரிய பாவம் போக்கும் பலி உண்ணப்படலாகாது: நெருப்பில் எரிக்கப்படவேண்டும்.

அதிகாரம் 7.

குற்றப்பழி நீக்கும் பலிபற்றிய கட்டளை இதுவே: அது மிகத்தூயது.

எரிபலி அடிக்கப்படும் இடத்திலேயே குற்றப்பழி நீக்கும் பலியும் அடிக்கப்படவேண்டும். அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கவேண்டும்.

அதன் கொழுப்பு முழுவதையும், அதன் கொழுப்பு வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும்,

இரு சிறுநீரகங்களையும் அவற்றின்மேல் குடல்களோடு சேர்ந்திருக்கிற கொழுப்பையும் சிறுநீரகங்களோடு கல்லீரலின் மேல் இருக்கிற சவ்வையும் எடுத்து,

இவற்றைக் குரு பலிபீடத்தின்மேல் ஆண்டவருக்கு நெருப்புப்பலி ஆக்கவேண்டும். அது குற்றப்பழி நீக்கும் பலி.

குருக்களில் ஆண்மக்கள் யாவரும் அதை உண்பர். அதைத் தூய தலத்தில் உண்ண வேண்டும். அது மிகத் தூயது.

பாவம் போக்கும் பலியைப் போன்றதே குற்றப்பழி நீக்கும் பலியும். அவற்றிற்குரிய சட்டம் ஒன்றே. அது கறை நீக்கம் செய்யும் குருவுக்கே உரியது.

ஒருவர் செலுத்தும் எரிபலியின் தோல் அப்பலியைச் செலுத்தும் குருவுக்கே உரியது.

அடுப்பில் சுட்டதும், பொரிக்கும் சட்டியிலும் தட்டையான சட்டியிலும் தயாரித்ததுமான உணவுப் படையல் அனைத்தும் அதைச் செலுத்துகிற குருவுக்கே உரியவை.

எண்ணெயில் பிசைந்ததும் பிசையாததுமான உணவுப்படையல் அனைத்தும் ஆரோனின் புதல்வர் யாவருக்கும் சரிபங்காகச் சேரும்.

ஆண்டவருக்கு ஒருவர் செலுத்தும் நல்லுறவுப் பலிபற்றிய சட்டம் இதுவே:

அவர் அதை நன்றிக் கடனாகச் செலுத்தினால் எண்ணெயில் தோய்த்த நெய்யப்பங்கள், எண்ணெய் பூசிய புளிப்பற்ற அடைகள், மெல்லிய மாவினால் எண்ணெயில் நன்கு பிசைந்து செய்த நெய்யப்பங்கள் ஆகியவற்றை நன்றிப் பலியோடு கொண்டுவர வேண்டும்.

புளித்த மாவினால் செய்த நெய்யப்பங்களை நன்றிக்கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியைத் தமது நேர்ச்சையாக அவர் கொண்டுவருவார்.

ஒவ்வொரு காணிக்கையிலும் ஒன்றை எடுத்து, ஆண்டவருக்குரிய பங்காகப் படைக்க வேண்டும். இப்பொருள்கள் நல்லுறவுப் பலியின் இரத்தத்தைத் தெளிக்கும் குருவுக்கே உரியவை.

நன்றிக் கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியின் இறைச்சி படைக்கப்படும் நாளில் உண்ணப்படவேண்டும். விடியுமட்டும் அதில் எதையும் மீதி வைக்கலாகாது.

அவர் செலுத்தும் நேர்ச்சைப் பலி ஒரு பொருத்தனையாகவோ தன்னார்வப்பலியாகவோ இருந்தால், அதைப் படைக்கும் நாளிலும் எஞ்சியதை மறுநாளிலும் உண்ணலாம்.

பலி இறைச்சியில் எஞ்சியிருப்பதெல்லாம் மூன்றாம் நாளில் நெருப்பால் எரிக்கப்பட வேண்டும்.

நல்லுறவுப்பலி இறைச்சியில் எஞ்சியதை மூன்றாம் நாளில் உண்பது உகந்தன்று. அதைச் செலுத்தினவருக்கும் அது பயன் அளிக்காது. அது அருவருப்பானது. அதை உண்பவர் தம் குற்றபழியைச் சுமப்பார்.

தீட்டான எந்தப் பொருளிலாவது அந்த இறைச்சி பட நேர்ந்தால் அதை உண்ணலாகாது. அதை நெருப்பில் எரிக்க வேண்டும். மற்ற இறைச்சியையோ தூய்மையாய் இருக்கிறவர் எவரும் உண்ணலாம்.

தீட்டுப்பட்ட ஒருவர் ஆண்டவரின் நல்லுறவுப் பலியின் இறைச்சியை உண்பாராகில், அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.

தீட்டான எதையும் தீட்டுப்பட்ட மனிதரையோ கால்நடையையோ, தீட்டான ஊர்வனவற்றையோ ஒருவர் தீண்டியவராக இருந்து ஆண்டவருக்குப் படைக்கும் நல்லுறவுப்பலி இறைச்சியை உண்டால், அவர் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.

ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:

நீ இஸ்ரயேல் மக்களிடம், மாடு, ஆடு, வெள்ளாடு இவற்றின் கொழுப்பை நீங்கள் உண்ணலாகாது.

தானாய்ச் செத்ததின் கொழுப்பையும், பீறுண்டதின் கொழுப்பையும் வேறு செயல்களுக்குப் பயன்படுத்தலாமேயன்றி நீங்கள் அதை ஒருபோதும் உண்ணலாகாது.

ஏனெனில், ஆண்டவருக்கு நெருப்புப்பலியாகப் படைக்கும் கால்நடையின் கொழுப்பை உண்கிற எவரும் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.

உங்கள் குடியிருப்புகள் எங்கும், பறவையின் இரத்தத்தையோ கால்நடைகளின் இரத்தத்தையோ, வேறு எந்த இரத்தத்தையுமோ உண்ணலாகாது.

இரத்தத்தை உண்ணும் எவரும் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார் என்று சொல்.

ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:

நீ இஸ்ரயேல் மக்களிடம், ஆண்டவருக்கு நல்லுறவுப் பலி செலுத்துபவர், தாம் செலுத்தும் நல்லுறவுப் பலியிலிருந்து ஆண்டவருக்குரிய நேர்ச்சையைக் கொண்டுவர வேண்டும்.

ஆண்டவருக்குரிய நெருப்புப் பலியை அவரே கொண்டு வரவேண்டும். நெஞ்சுக் கறியையும் அதனோடு அதன் மேலுள்ள கொழுப்பையும் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாகக் கொண்டவர வேண்டும்.

குரு அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தில் எரிப்பார். நெஞ்சுக் கறியோ ஆரோனுக்கும் அவன் புதல்வர்க்கும் உரியதாகும்.

நல்லுறவுப் பலிகளில் வலது பின்னந்தொடையைக் குருவிடம் பங்காகக் கொடுக்க வேண்டும்.

ஆரோனின் புதல்வருள் நல்லுறவுப் பலியின் இரத்தத்தையும், கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு வலது பின்னந்தொடை பங்காகச் சேரும்.

நல்லுறவுப் பலிகளில் ஆரத்திப் பலியாகிய நெஞ்சுக் கறியையும் பங்காகிய பின்னந்தொடையையும் நான் இஸ்ரயேல் மக்களிடமிருந்து எடுத்து குருவாகிய ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுத்துள்ளேன். இது இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெறும் நிலையான பங்காகும் என்று சொல்.

ஆரோனும் அவன் புதல்வரும் ஆண்டவர்க்குரிய குருக்களாகும்படி அழைத்து வரப்பட்ட நாளிலிருந்து இது ஆண்டவரின் நெருப்புப் பலியிலிருந்து அவர்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட பங்காகும்.

ஆண்டவர் அவர்களுக்கு அருள்பொழிவு செய்த நாளில், அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு மாறாத பங்காகக் கொடுக்கக் கட்டளையிட்டார்.

எரிபலி, உணவுப் படையல், பாவம் போக்கும் பலி, குற்றப்பழி நீக்கும் பலி, திருநிலைப்படுத்தும் பலி, நல்லுறவுப் பலி ஆகிய பலிகளைப்பற்றிய சட்டம் இதுவே.

தமக்குச் செலுத்த வேண்டிய நேர்ச்சைகளைப் பற்றி ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்குச் சீனாய்ப் பாலைநிலத்தில் கட்டளையிட்ட நாளில் மோசேக்கு அவர் சீனாய் மலையில் இட்ட கட்டளைகள் இவையே.

அதிகாரம் 8.

ஆண்டவர் மோசேயிடம்,

””நீ ஆரோனையும் அவனுடன் அவன் புதல்வரையும் வரவழைத்து, உடைகளையும் திருப்பொழிவு எண்ணெயையும், பாவம்போக்கும் பலிக்காக ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் மற்றும் ஒரு கூடையில் புளிப்பற்ற அப்பங்களையும் கொண்டு வரச்செய்.

மக்கள் கூட்டமைப்பு முழுவதையும், சந்திப்புக்கூடார நுழைவாயிலின் முன் கூடிவரச்செய்”” என்றார்.

மோசே தமக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தார். சந்திப்புக் கூடார நுழைவாயில்முன் கூட்டமைப்பு குழுமியபோது,

மோசே கூட்டமைப்பிடம், ””இக்காரியத்தைச் செய்யும்படி ஆண்டவர் கட்டளையிட்டுள்ளார்”” என்று கூறி,

ஆரோனையும், அவர் புதல்வரையும் வரவழைத்துத் தண்ணீரில் குளிக்கச்செய்தார்.

உள்ளங்கியை உடுக்கச் செய்து இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை அணிவித்து, ஏப்போதை அவர்மேல் போட்டு, ஏப்போதின் கைவண்ணப் பட்டையை அவருக்குக் கட்டி,

மார்புப் பட்டையை அவருக்கு அணிவித்து, அதில் ஊரிம், தும்மிம் ஆகியவற்றை வைத்து,

தலையில் பாகை அணிவித்து, பாகையின்மேல் முன்பக்கம், புனித பொன்முடியான பொற்பட்டத்தைக் கட்டினார்.

பின்னர் மோசே, திருப்பொழிவு எண்ணெயை எடுத்துத் திருஉறைவிடத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும் திருப்பொழிவு செய்து புனிதப்படுத்தினார்.

திருப்பொழிவு எண்ணெயில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழு முறை தெளித்து, பலிபீடத்தையும் அதன் அனைத்துக் கருவிகளையும் நீர்த்தொட்டியையும், அதன் தாங்கியையும் புனிதப்படுத்தும்படி திருப்பொழிவு செய்து,

ஆரோனின் தலையின்மேல் திருப்பொழிவு எண்ணெயில் கொஞ்சம் வார்த்து அவரைத் திருநிலைப்படுத்தும்படி அவருக்கு அருள்பொழிவு செய்தார்.

ஆண்டவரது ஆணைப்படி, மோசே ஆரோனின் புதல்வரை வரவழைத்து, அவர்களுக்குக் கோடிட்ட உள்ளாடைகளை உடுத்துவித்து, இடைக்கச்சைகளைக் கட்டித் தலையில் பாகை அணிவித்தார்.

பின்னர், பாவம் போக்கும் பலிக்கான காளையை அவர் கொண்டு வந்தார். அதன் தலையின்மேல் ஆரோனும் அவர் புதல்வரும் தங்கள் கைகளை வைத்தனர்.

அது வெட்டப்பட்டது, மோசே அதன் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்துப் பலிபீடத்தின் கொம்புகளைச் சுற்றிலும் பூசி, பலிபீடத்தற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றி, கறைநீக்கப்பலி செய்வதற்காக அதைப் புனிதப்படுத்தினார்.

ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின் மேலிருந்த சவ்வையும், இரு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் பலிபீடத்தில் மோசே எரித்தார்.

காளையின் தோலையும் இறைச்சியையும் சாணத்தையும் பாளையத்திற்கு வெளியே நெருப்பிட்டுக் கொளுத்தினார்.

பின்னர், அவர் எரிபலிக்கான ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்தார். அதன் தலைமீது ஆரோனும் அவர் புதல்வரும் கைகளை வைத்தனர்.

அது வெட்டப்பட்டது. மோசே அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்தார்.

ஆட்டுக்கிடாய் துண்டிக்கப்பட்டது. மோசே அதன் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் எரித்து,

குடல்களையும், தொடைகளையும் தண்ணீரால் கழுவிய பின்னர், ஆட்டுக்கிடாய் முழுவதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின்மேல் எரிபலியாக எரித்தார். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி.

பின்னர், அவர் திருநிலைப்பாட்டுக்குரிய அடுத்த ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்தார். அதன் தலைமீது ஆரோனும் அவர் புதல்வரும் கைகளை வைத்தனர்.

அது வெட்டப்பட்டது. மோசே அதன் இரத்தத்தில் சிறிது எடுத்து, ஆரோனின் வலக்காதுமடலிலும், வலக்கைப் பெருவிரலிலும், வலக்கால் பெருவிரலிலும் பூசினார்.

பின்னர், அவர் ஆரோனின் புதல்வரையும் அழைத்து, அவர்களுடைய வலக்காது மடலிலும் வலக்கைப் பெருவிரலிலும் வலக்கால் பெருவிரலிலும் சிறிது இரத்தத்தைப் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

கொழுப்பையும், கொழுப்பு வாலையும், குடல்கள் மேலிருந்த கொழுப்பு முழுவதையும் கல்லீரலின் மேலிருந்த சவ்வையும் இரு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் வலது முன்னந்தொடையையும் எடுத்து,

ஆண்டவர் திருமுன் வைத்திருக்கும் புளிப்பற்ற அப்பக்கூடையிலுள்ள புளிப்பற்ற நெய்யப்பம் ஒன்றும், எண்ணெயில் தோய்த்த அப்பம் ஒன்றும் அடை ஒன்றும் எடுத்து, அந்தக் கொழுப்பின் மேலும் வலது முன்னந்தொடையின் மேலும் வைத்து,

அவற்றையெல்லாம் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவர் புதல்வருடைய உள்ளங்கைகளிலும் வைத்து ஆரத்திப் பலியாக ஆண்டவர் திருமுன் அசைத்து,

அவற்றை அவர்கள் உள்ளங் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின் மேல் இருந்த எரிபலியோடு எரித்தார். இது திருநிலைப்பாட்டுப்பலி. இதுவே ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி.

பின்னர், மோசே நெஞ்சுக்கறியை எடுத்து, அதை ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவாறு, திருநிலைப்பாட்டுக்கான ஆட்டுக்கிடாயில் அது மோசேயின் பங்காயிற்று.

மோசே திருப்பொழிவு எண்ணெயிலும் பலிபீடத்தின் மேலிருக்கும் இரத்தத்திலும் சிறிது எடுத்து ஆரோன் மேலும் அவர்தம் உடைகள்மேலும் ஆரோனின் புதல்வர் மேலும் அவர்கள் உடைகள்மேலும் தெளித்தார்: இவ்வாறு ஆரோனையும் அவர் உடைகளையும் அவர் புதல்வரையும் அவர்கள் உடைகளையும் புனிதப்படுத்தினார்.

பின்னர் மோசே ஆரோனையும் அவர் புதல்வரையும் நோக்கி, ””நான் கட்டளையிட்டவாறு அந்த இறைச்சியைச் சந்திப்புக் கூடார நுழைவாயில் முன்பாகச் சமைத்து, அத்துடன் திருநிலைப்பாட்டுக் காணிக்கைக் கூடையிலிருக்கும் அப்பத்தையும் உண்பீர்கள்.

இறைச்சியிலும் அப்பத்திலும் எஞ்சியிருப்பதை நெருப்பிலிட்டுக் கொளுத்திவிடுங்கள்.

திருநிலைப்பாட்டு நாள்கள் முடியும்வரை ஏழு நாள்கள் சந்தப்புக்கூடார நுழைவாயிலைவிட்டு நீங்காதீர்கள் ஏழு நாள்கள் நீங்கள் புனிதப்படுத்தப்படுவீர்கள்.

இன்று செய்யப்பட்டது உங்கள் கறையை நீக்குவதற்காக ஆண்டவர் கட்டளையிட்டதாகும்.

நீங்கள் சாகாதபடி ஏழு நாள்கள் இரவும் பகலும் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் ஆண்டவருக்காகக் காவல் காப்பீர்கள். இதுவே நான் பெற்ற கட்டளை”” என்றார்.

மோசேயின் மூலமாக ஆண்டவர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் ஆரோனும் அவர் புதல்வரும் செய்தனர்.

அதிகாரம் 9.

மோசே எட்டாம் நாளில் ஆரோனையும் அவர் புதல்வரையும் இஸ்ரயேலின் பெரியோர்களையும் வரவழைத்தார்.

அவர் ஆரோனிடம் கூறியது: ””நீ பாவம் போக்கும் பலியாக ஊனமற்ற காளைக்கன்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆண்டவர் திருமுன் கொண்டு வா. நீ சொல்ல வேண்டியது:

இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் திருமுன் பாவக் கழுவாய்ப் பலிக்காக ஒருவயது நிரம்பிய மறுவற்ற காளைக்கன்று ஒன்றையும் செம்மறிக்கிடாய் ஒன்றையும்

நல்லுறவுப் பலிகளுக்காக ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் எண்ணெயோடு கூடிய உணவுப் படையல்களையும் கொண்டு வாருங்கள். ஏனெனில் இன்று ஆண்டவர் உங்களுக்குத் தோன்றுவார்.””

அவர்கள் மோசே கட்டளையிட்டவற்றைச் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கொண்ட வந்தார்கள். சபையார் அனைவரும் வந்து ஆண்டவர் முன்பாக நின்றனர்.

அப்பொழுது மோசே, ””நீங்கள் செய்யுமாறு ஆண்டவர் கட்டளையிட்டது இதுவே: ஆண்டவரது மாட்சி உங்களுக்குத் தோன்றும்”” என்றார்.

மோசே ஆரோனிடம், ””நீ பலிபீடத்தருகில் வந்து உன் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் கறை நீக்கம் செய்வாய். ஆண்டவர் கட்டளைப்படி அதற்காக மக்கள் செலுத்த வேண்டிய பலியையும் செலுத்தி அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்வாய்”” என்றார்.

ஆரோன் பலிபீடத்தருகில் தமக்கென்று பாவக்கழுவாய்ப் பலியாகக் காளைக்கன்று ஒன்றை அடித்தார்.

ஆரோனின் புதல்வர்கள் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர, அவர் தம் விரலை அதில் தோய்த்து பலிபீடத்தில் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்திற்கு அடியில் ஊற்றினார்.

பாவம் போக்கும் பலியின் கொழுப்பையும் சிறுநீரகங்களையும் கல்லீரலிலிருந்து எடுத்த சவ்வையும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின் மேல் சுட்டெரித்து,

இறைச்சியையும் தோலையும் பாளையத்திற்கு வெளியே நெருப்பிலிட்டு அழித்தார்.

பின்பு அவர் எரிபலிக்கிடாயை அடித்தார். ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர, அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார்.

எரி பலியின் துண்டங்களையும் தலையையும் அவரிடம் கொண்டு வந்தனர். அவர் அவைகளைப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து,

குடல்களையும் தொடைகளையும் கழுவி, இவற்றைப் பலிபீடத்தின் மேல் இருக்கும் எரிபலியோடு சுட்டெரித்தார்.

பின்னர், அவர் மக்களுக்கான பலியை, பாவம் போக்கும் பலிக்கிடாயைக் கொண்டுவந்து அதைக்கொன்று, முன்னதைப்போலவே பாவம்போக்கும் பலியாகச் செலுத்தினார்.

பின்னர் அவர் எரிபலியைக் கொண்டு வந்து நியமத்தின்படியே செலுத்தினார்:

உணவுப் படையல்களைக் கொண்டுவந்து தம் கைநிறைய எடுத்து காலையில் செலுத்தும் எரிபலியோடு பலிபீடத்தின்மேல் சுட்டெரித்தார்.

பின்னர், மக்களின் நல்லுறவுப் பலிகளாகிய காளையையும் கிடாயையும் கொன்று, அவற்றின் இரத்தத்தை ஆரோனின் புதல்வர் அவரிடத்தில் கொண்டு வந்தனர். அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார்.

காளையிலும் கிடாயிலுமிருந்து எடுத்த கொழுப்பு வாலையும் குடல்களையும் சிறுநீரகங்களையும் கல்லீரலின் மேலிருந்த சவ்வையும் கொண்டு வந்து,

நெஞ்சுக் கறிகளின்மீது வைத்தார்கள். கொழுப்புப் பகுதிகளைப் பலிபீடத்தின்மேல் ஆரோன் சுட்டெரித்தார்.

நெஞ்சுக் கறியையும் வலதுமுன்னந்தொடையையும் மோசே நியமித்தபடி ஆரோன் ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார்.

பின்னர், ஆரோன் மக்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்: தாம் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின் கீழே இறங்கினார்.

மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்தினுள் நுழைந்தனர்: பின்னர் வெளியே வந்து மக்களுக்கு ஆசி வழங்கினர். அப்போது ஆண்டவருடைய மாட்சி மக்கள் அனைவருக்கும் தோன்றியது.

ஆண்டவர் முன்னிலையிலிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து, பலிபீடத்தின் மேலிருந்த எரிபலியையும் கொழுப்பையும் விழுங்கியது. மக்கள் அதைக் கண்டு ஆரவாரம் செய்து முகங்குப்புற விழுந்தனர்.

அதிகாரம் 10.

ஆரோனின் புதல்வர்களான நாதாபும் அபிகூவும் தம் தூபக் கலசத்தை எடுத்து அதில் நெருப்பையும் தூபத்தையும் இட்டு ஆண்டவர் கட்டளைக்கு எதிராக நெருப்பைக் கொண்டு சென்றனர்.

உடனே, ஆண்டவரிடமிருந்து நெருப்பு விரைந்தெழுந்து அவர்களை விழுங்கியது. அவர்கள் ஆண்டவர் முன்னிலையிலேயே மடிந்தனர்.

அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி, ”” என்னை அணுகிவருவோர்மூலம் என் தூய்மையை வெளிப்படுத்துவேன். எல்லா மக்களுக்கும் முன்பாக நான் மாட்சியுறுவேன் என ஆண்டவர் உரைத்த தன் பொருள் இதுதான்”” என்றார். ஆரோன் மெளனமாயிருந்தார்.

மோசே, ஆரோனின் சிற்றப்பனாகிய உசியேலின் புதல்வராகிய மிசாவேலையும், எல்சாபானையும் அழைத்து, ””நீங்கள் இங்கே வந்து உங்கள் சகோதரரின் சடலங்களைத் தூயகத்தின் முன்னின்று எடுத்துப் பாளையத்திற்கு வெளியே கொண்டு போங்கள்”” என்றார்.

மோசே சொன்னபடியே அவர்கள் சென்று அவர்கள் சடலங்களை அவர்கள் உடைகளோடும் எடுத்துப் பாளையத்திற்கு வெளியே கொண்டு போனார்கள்.

மோசே, ஆரோனையும் எலயாசர், இத்தாமர் என்னும் அவர் புதல்வரையும் நோக்கி, ””நீங்கள் உங்கள் தலைமுடியைக் கலைத்துக் கொள்ளவும், ஆடைகளைக் கிழித்துக் கொள்ளவும் வேண்டாம். அப்படிச் செய்தால் நீங்கள் சாவீர்கள். மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் எதிராக அவரது சினம் மூளும். உங்கள் சகோதரராகிய இஸ்ரயேல் குடும்பத்தார் யாவரும் ஆண்டவர் மூட்டிய இந்த நெருப்பை முன்னிட்டுப் புலம்புவார்கள்.

நீங்கள் அழியாதபடி, சந்திப்புக் கூடார நுழைவாயிலிலிருந்து எங்கும் செல்லாதீர்கள். ஆண்டவரது அருள்பொழிவு உங்கள்மீது இருக்கிறதே!”” என்றார். அவர்கள் மோசேயின் வார்த்தையின்படியே செய்தார்கள்.

ஆண்டவர் ஆரோனிடம் கூறியது:

””நீரும் உம்மோடு உம் புதல்வரும் சாகாதிருக்க வேண்டுமெனில், நீங்கள் சந்திப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போது திராட்சை இரசத்தையோ மதுவையோ குடிக்க வேண்டாம். இது உங்கள் தலைமுறைதோறும் மாறாத நியமமாக விளங்கும்.

தூயதற்கும் தூய்மையற்றதற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டற்றதற்கும் வேறுபாடு தோன்றும்படி,

ஆண்டவர் மோசேயைக் கொண்டு இஸ்ரயேல் மக்களுக்குக் கூறி அறிவித்த அவருடைய எல்லாச் சட்டங்களையும் நீங்கள் மக்களுக்குப் போதிக்கும்படி இது என்றுமுள நியமமாக விளங்கும்””.

மோசே ஆரோன், அவருடைய எஞ்சிய புதல்வர்களாகிய எலயாசர், இத்தாமர் ஆகியோரிடம் கூறியது: நீங்கள் ஆண்டவரின் நெருப்புப் பலிகளில் எஞ்சிய உணவுப் படையலை எடுத்துப் பலிபீடத்தருகில் புளிப்பற்றதாய் உண்ணவேண்டும். அது மிகவும் தூயது.

அதைத் தூய இடத்தில் உண்ண வேண்டும். ஏனெனில் அது ஆண்டவரின் நெருப்புப் பலிகளில் உமக்கும் உம் புதல்வருக்கும் உரிய பங்காகும். இதுவே நான் பெற்ற கட்டளை.

ஆரத்திப் பலியான நெஞ்சுக் கறியையும் உயர்த்திப் படைக்கும் பலியான முன்னந் தொடையையும் நீரும் உம்மோடு உம் புதல்வரும் புதல்வியரும் ஒரு தூய்மையான இடத்தில் வைத்து உண்பீர்கள். இஸ்ரயேல் மக்களின் நல்லுறவுப் பலிகளில் இவை உமக்கும் உம் புதல்வருக்கும் புதல்வியருக்கும் உரிய பங்காகும்.

உயர்த்திப் படைக்கும் பலிப்பொருளான முன்னந்தொடையையும் ஆரத்திப் பலிப்பொருளான நெஞ்சுக்கறியையும் நெருப்புப் பலிப்பொருளான கொழுப்பையும் ஆண்டவர் திருமுன் அவர்கள் கொண்டுவந்து ஆரத்திப் பலியாக அசைவாட்டுவார்கள். அது ஆண்டவரின் கட்டளைப்படியே உமக்கும் உம் புதல்வருக்கும் மாறாத நியமமாக விளங்கும்.””

இதற்கிடையில், மோசே பாவம் போக்கும் பலிப்பொருளான ஆட்டுக்கிடாயைத் தேடிப்பார்த்தார். அது எரித்தழிக்கப்பட்டிருந்தது. எனவே மோசே ஆரோனின் எஞ்சியிருந்த புதல்வராகிய எலயாசர், இத்தாமர் மீது கடும் சினமுற்றுச் சொன்னது:

நீங்கள் பாவம் போக்கும் பலியைத் தூய தலத்தில் ஏன் உண்ணவில்லை? அது மிகவும் தூயதன்றோ? மக்கள் கூட்டமைப்பின் குற்றப்பழியை ஏற்றுக்கொண்டு நீங்கள் ஆண்டவர் திருமுன் அவர்களுக்குக் கறை நீக்கம் செய்ய ஆண்டவர் அதை உங்களுக்குக் கொடுத்தார்.

அதன் இரத்தம் தூயகத்திற்குள் கொண்டுபோகப்படவில்லை. ஆகையால் நீங்கள் அதை நான் கட்டளையிட்டபடி தூயகத்திலேயே உண்டிருக்க வேண்டும்!

உடனே ஆரோன், மோசேயை நோக்கி, ””ஆண்டவர் திருமுன் பாவம் போக்கும் பலியும் எரிபலியும் செலுத்தப்பட்ட இன்றுதானே எனக்கு இப்படி நடந்தது! எனக்கு நேரிட்ட துன்பம் உமக்குத் தெரியாதா? நான் பாவம் போக்கும் பலியை இன்று உண்டிருந்தால் அது ஆண்டவரின் பார்வைக்கு உகந்ததாய் இருக்குமோ?”” என்றார்.

மோசே இதைக்கேட்டு அமைதியடைந்தார்.

அதிகாரம் 11.

ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, அவர்களிடம் கூறியது:

””நீங்கள் இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: உலகில் உள்ள உயிரினங்களில் நீங்கள் உண்ணத்தக்கவை இவைகளே.

கால்நடைகளில், குளம்புகள், இரண்டாகப் பிரிந்திருக்கிற, விரிசல் குளம்புள்ள, அசைபோடுபவற்றை நீங்கள் உண்ணலாம்.

அசைபோடும் கால்நடைக்கு விரிகுளம்பில்லையெனில், அதனை நீங்கள் உண்ணலாகாது. குறிப்பாக ஒட்டகம்: அது அசைபோடும்: ஆனால், அதற்கு விரிகுளம்பு இல்லை: எனவே அது உங்களுக்குத் தீட்டு.

குழிமுயல் அசைபோடும்: ஆனால் அதற்கு விரிகுளம்பு இல்லை: எனவே அது உங்களுக்குத் தீட்டு.

முயல் அசைபோடும்: ஆனால், அதற்கு விரிகுளம்பு இல்லை: எனவே அது உங்களுக்குத் தீட்டு.

பன்றி இரண்டாகப் பிரிந்திருக்கும் விரிகுளம்புடையது: ஆனால், அது அசைபோடாது: எனவே அது உங்களுக்குத் தீட்டு.

இவற்றின் இறைச்சியை உண்ணலாகாது. இவற்றின் சடலங்களைத் தொடவும் கூடாது. இவை உங்களுக்குத் தீட்டானவை.

நீர்நிலைகளில் இருப்பனவற்றில் நீங்கள் உண்ணத்தக்கவை: கடல்களும், ஆறுகளுமாகிய நீர்நிலைகளில் இருப்பனவற்றில் துடுப்பும் செதிலுமுள்ளவை அனைத்தும் நீங்கள் உண்ணத்தக்கவை.

ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய நீர்நிலைகளில் செறிந்திருக்கும் உயிரினங்களும், துடுப்பும் செதிலும் அற்றவை உங்களுக்கு அருவருப்பு.

அவை உங்களுக்கு அருவருப்பு. அவற்றின் இறைச்சியை உண்ணலாகாது. அவற்றின் சடலங்களை அருவருப்பாகக் கருதுங்கள்.

நீர்வாழ்வனவற்றில் துடுப்பும் செதிலும் அற்றவையாவும் உங்களுக்கு அருவருப்பு.

பறவைகளிலும் நீங்கள் உண்ணாமல் அருவருக்க வேண்டியவை: கழுகு, கருடன், கடலூராஞ்சி,

பருந்து, வல்லூறு, அதன் இனம்,

காகம், அதன் இனம்,

தீக்கோழி, கூகை, சம்புகம், சிறுகழுகு, அதன் இனம்,

ஆந்தை, சகோரம், கோட்டான்,

நாரை, கூழக்கடா, குருகு,

கொக்கு, இராசாளி, அதன் இனம், புழுக்கொத்தி, வெளவால்.

பறப்பனவற்றுள் நான்கு கால்களால் நடமாடும் ஊர்வன யாவும் உங்களுக்கு அருவருப்பு.

ஆயினும், நான்கு கால்களால் நடமாடியும் தரையில் தத்திப் பாயும்படி நெடிய பின்னங்கால்கள் உடையனவற்றை உண்ணலாம்.

நீங்கள் உண்ணக்கூடியவை: தத்துக்கிளி, அதன் இனம்: வெட்டுக்கிளி, அதன் இனம்: மொட்டை வெட்டுக்கிளி, அதன் இனம்: சுவர்க்கோழி, அதன் இனம்.

பறப்பனவற்றுள் நான்கு கால்களால் நடமாடும் மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பு.

அவை உங்களுக்குத் தீட்டு, அவற்றின் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.

அவற்றின் சடலத்தை எடுப்போர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும். மாலைவரை அவர் தீட்டுடையவர்.

இரண்டாய்ப் பிரிந்த குளம்புகள் இல்லாமலும் அசைபோடாமலும் இருக்கும் அனைத்து உயிரினங்களைத் தொடுகிற எல்லாரும் தீட்டுடையவர்.

நான்கு கால் உயிர்களில் உள்ளங்கால் ஊன்றி நடக்கும் அனைத்தும் உங்களுக்குத் தீட்டு.

அவற்றின் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர். அவற்றின் சடலத்தை எடுப்போர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும். மாலைவரை அவர் தீட்டுடையவர். அவர் உங்களுக்குத் தீட்டு.

நிலத்தில் செறிந்திருக்கும் ஊர்வனவற்றில் உங்களுக்குத் தீட்டானவை: எலி, சுண்டெலி, ஆமை இனம்:

உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி

ஊர்வனவற்றில் இவை உங்களுக்குத் தீட்டு. அவற்றுள் செத்ததைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.

அவற்றுள் செத்த ஏதேனும், எதன்மேலாவது விழுந்தால் அது தீட்டுப்படும். அது மரப்பாத்திரமானாலும், உடையானாலும், தோலானாலும், கோணிப்பையானாலும், வேலைக்கு உதவும் எந்தக் கருவியானாலும் மாலைவரை அது தண்ணீரில் போடப்பட வேண்டும். மாலைவரை அது தீட்டுப்பட்டது. பின்னால் அது தூய்மையாகும்.

அவற்றுள் ஏதேனும் மண் பாண்டத்துக்குள் விழுந்தால் அதனுள் இருக்கும் அனைத்தும் தீட்டுப்பட்டுவிடும். எனவே அது உடைக்கப்பட வேண்டும்.

உண்ணத்தக்க எந்த உணவிலும் இப்பாண்டத்துத் தண்ணீரில்பட்டால் அது தீட்டு: அந்தப் பாண்டத்திலிருக்கும் எந்தப் பானமும் தீட்டு.

அவற்றின் சடலம் எதன்மீது விழுந்தாலும் அது தீட்டு: அடுப்போ சமையல் பாண்டமோ எனில், அவை உடைக்கப்பட வேண்டும். அவை உங்களுக்குத் தீட்டு, ஏனெனில் அவை தீட்டுப்பட்டிருக்கும்.

நீரூற்றும் மிகுந்த நீருள்ள கிணறும் எனில், அவை தூய்மையாய் இருக்கும்: ஆனால் அவற்றின் சடலம் தொடும்பகுதி தீட்டுப்பட்டது.

விதைக்கிற தானியத்தின் மீது அவற்றின் சடலம் விழுந்தால் அது தீட்டன்று.

தண்ணீர் விடப்பட்ட விதைமேல் விழுந்தால், அது தீட்டாகும்.

உங்கள் உணவுப்பொருளான கால்நடை ஒன்று சாக, அதன் சடலத்தைத் தொடுகிறவர் மாலைவரை தீட்டுடையவர்.

அதன் சடலத்தைத் தின்பவர் தம் உடைகளைத் துவைக்கவேண்டும். அவர் மாலைவரை தீட்டுடையவர். மேலும் அதன் சடலத்தை எடுத்துப் போகிறவரும் தம் உடைகளைத் துவைக்க வேண்டும். அவர் மாலைவரை தீட்டுடையவர்.

தரையில் நகர்ந்து செல்லும் ஊர்வன அனைத்தும் அருவருப்பானவை. அவற்றை உண்ணலாகாது.

நிலத்தில் ஊர்வனவற்றையும், வயிற்றால் நகர்வனவற்றையும், நான்கு காலால் ஊர்வனவற்றையும் பல கால்களுள்ள எதனையும் உண்ணலாகாது. அவை அருவருப்பு.

நகருகிற எந்த ஊர்வனவும் உங்களையும் தீட்டுப்படுத்தலாகாது. அவற்றால் தீட்டுப்படாமல் இருங்கள். ஏனெனில் அவற்றால் நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.

நான் உங்கள் ஆண்டவராகிய கடவுள். எனவே உங்களைத் தூய்மைப்படுத்தி, தூயவராயிருங்கள். ஏனெனில், நான் தூயவர். நிலத்தில் ஊர்வனவற்றால் உங்களைத் தீட்டுப்படுத்தலாகாது.

உங்கள் கடவுளாயிருக்குமாறு உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்த ஆண்டவர் நானே! நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில் நான் தூயவர்!

விலங்கினம், பறவைகள், நீர்வாழும் எல்லா உயிரினங்கள், நிலத்தில் நகரும் உயிரினங்கள் ஆகியவை பற்றிய சட்டம் இதுவே.

இதனின்று, தீட்டுடையதற்கும் தீட்டற்றதற்கும், உண்ணத்தகுந்த உயிரினங்களுக்கும் உண்ணத்தகாத உயிரினங்களுக்கும் வேறுபாடு தெரிந்துகொள்க!

அதிகாரம் 12.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்லவேண்டியது: ஒருபெண், கருத்தரித்து ஆண் குழந்தைபெற்றால் ஏழு நாள் விலக்கு நாள்களில் இருப்பதுபோலவே. தீட்டுப்பட்டிருப்பாள்.

எட்டாம் நாளன்று அதற்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும்.

தொடர்ந்து வரும் முப்பது நாள்கள், அவள் தன் உதிரத்தீட்டு நாள்கள் முடியும்வரை தூயதான எந்தப் பொருளையும் தொடலாகாது: தூய தலத்திற்குள் வரலாகாது.

அவள் பெண் குழந்தை பெற்றால், இரண்டு வாரம் விலக்கு நாள்களில் இருப்பது போலவே, தீட்டாயிருப்பாள். பின்னர், அறுபத்தாறுநாள் தன் உதிரத்தீட்டில் இருப்பாள்.

குழந்தை பெற்றவள் அது ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் தூய்மையடையும் காலக்கெடுவிற்குப் பின்னர், ஓராண்டு நிறைவுற்ற செம்மறி ஒன்றை எரிபலியாகவும், புறாக்குஞ்சு அல்லது காட்டுப்புறா ஒன்றைப் பாவம்போக்கும் பலியாகவும் குருவிடம் சந்திப்புக்கூடார நுழைவாயிலுக்குக் கொண்டுவர வேண்டும்.

அதனை அவர் ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து அவளுக்குக் கறைநீக்கம் செய்வார். அவள் தன் உதிர ஊறல் தீட்டிலிருந்து தூய்மையாவாள். இது ஆண் அல்லது பெண் குழந்தைபெற்றவருக்கு விதிக்கப்படும் சட்டம்.

ஆட்டுக்குட்டி கொண்டுவர வசதி இல்லாதவள், இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டு வந்து, ஒன்றை எரிபலியாகவும், மற்றதைப் பாவம்போக்கும் பலியாகவும் படைத்து, அவற்றால் குரு அவளுக்குக் கறைநீக்கம் செய்வார்: அப்போது அவள் தூய்மையாவாள்.

அதிகாரம் 13.

ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது:

””ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஜயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும்.

அவர் உடலில் நோயிருக்கும் இடத்தைக் குரு பார்த்து, அந்த இடத்தில் உரோமம் வெண்மையாக மாறி, நோயிருக்கும் பகுதி அவர் உடலிலுள்ள மற்றத் தோற் பகுதியை விடக் குழிந்திருந்தால், அது தொழுநோய்: அவரைப் பார்த்த குரு அவரைத் தீட்டுடையவர் என முடிவு செய்வார்.

அவர் உடலின் மேல் வெள்ளைப்படலம் இருந்தும், அந்த இடம் மற்றப் பகுதிகளிலுள்ள தோலைவிடக் குழிவாயிராமலும், அதன் மீதுள்ள உரோமம் வெண்மை ஆகாமலும் இருந்தால், குரு அவரை ஏழு நாள் அடைத்து வைப்பார்.

ஏழாம் நாள் அவரைப் பார்க்கும் போது நோய் பரவாமல் குறைந்திருந்தால், மீண்டும் ஏழு நாள் குரு அவரை அடைத்து வைப்பார்.

ஏழாம் நாளில் மீண்டும் அவரை அழைத்துப் பார்வையிடுவார். நோய் பரவாமல் குறைந்திருந்தால், அவர் தூய்மையானவர் எனக்குரு தீர்ப்புச் சொல்வார், அது சொறிசிரங்கு: அவர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும்: அவர் தீட்டற்றவர்.

தீட்டற்றவர் என அறிவிக்கப்பட்டவர் தம்மைக் குருவுக்குக் காட்டியபின், மறுபடியும் சொறி சிரங்கு அவர் உடலில் ஏற்பட்டால் அவர் தம்மைக் குருவிடம் காட்ட வேண்டும்.

மீண்டும் சொறி சிரங்கு அவர் உடலில் இருப்பதைக் குரு கண்டால் அவர் தீட்டுடையவர் என அறிவிப்பார். அது தொழுநோய்.

ஒரு மனிதர் தொழுநோயாளி எனில், அவர் குருவிடம் கொண்டு வரப்படுவார்.

தோலில் வெண்ணிறத்தடிப்பு இருந்து, அது உரோமத்தை வெண்மையாக மாற்றி, திறந்த புண்ணாயிற்று எனக்குரு கணிப்பார்.

அது அவர் உடலில் நெடுநாளாயிருக்கும் தொழுநோய். குரு அவர் தீட்டுடையவர் என அறிவிப்பார். அவரை அடைத்து வைக்கவேண்டும். அவர் தீட்டுடையவரே.

வெண்குட்டம் உடலில் பரவி, நோயாளியின் கால்தொடங்கித் தலைவரைக் குரு காண்கிற எல்லா இடங்களிலும் தோலில் படர்ந்திருந்தால்,

அவரைச் சோதித்துப் பார்க்கவேண்டும். அவர் உடலில் முழுவதும் நோய் படர்ந்திருந்தால், அவர் தீட்டற்றவர் எனக்குரு அறிவிப்பார். உடல் முழுவதும் வெண்மையாகிவிட்டதால் தீட்டற்றவர்.

ஆனால் திறந்த புண் காணப்படும் நாளில், அவர் தீட்டுள்ளவர்.

எனவே, திறந்த புண்ணைக் கண்டால் அவர் தீட்டுள்ளவர் என அறிவிப்பார். திறந்தபுண் தீட்டுடையது: அது தொழுநோய்.

திறந்த புண் மாறி வெண்ணிறம் அடைந்தால், அவர் குருவிடம் வருவார்.

குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். நோய்த்தழும்பு வெண்மையாகி மாறிற்றெனில், அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்: அவர் தீட்டற்றவர்.

உடலில் கட்டி ஏற்பட்டு, அது குணமாகி,

கட்டி இருந்த இடத்தில் வெள்ளைத்தடிப்பு, அல்லது சிவப்பு கலந்த வெண்மை மறு தோன்றினால், அதனைக் குருவுக்குக் காட்டவேண்டும்.

குரு அதைச் சோதித்துப்பார்ப்பார். அந்த இடம் மற்றத் தோலைவிடத் தாழ்ந்து, அந்த இடத்தில் உரோமம் வெண்மையாக மாறியிருந்தால், அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார். அது கட்டியால் உண்டான தொழுநோய்.

குரு அதைச் சோதித்துப் பார்க்கும் போது, அதில் வெள்ளை உரோமம் இல்லை என்றும், மற்றத் தோலை விடக் குழிந்திராமல் சற்றுக் கருமையாக மட்டும் உள்ளது என்றும் கண்டால், அவர் அவரை ஏழு நாள் அடைத்து வைப்பார்.

தோலில் புள்ளி படரக்கண்டால், அது தொழு நோய். அவர் தீட்டு உடையவர் எனக் குரு அறிவிப்பார்.

வெள்ளை மறு பரவாமல் அது இருந்த இடத்தில் மட்டும் இருந்தால், அது கட்டியின் தழும்பு: எனவே அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்.

ஒருவரது உடலில் நெருப்புப்பட்டதனால் தீக்காயம் ஏற்பட்டு, நெருப்புப்பட்ட இடத்தில் சிவப்பு அல்லது வெண்மையான மறு தோன்றினால், அவரைக் குரு சோதித்துப் பார்க்க வேண்டும்.

அந்த மறுவில் உரோமம் வெண்மையாக மாற அந்த இடம் தோலைப் பார்க்கிலும் குழியாக இருந்தால், அது நெருப்பினால் ஏற்பட்ட தொழுநோய். அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார். அது தோழுநோய்தான்.

அதைச் சோதித்துப் பார்க்கும் குரு, அந்த மறுவில் வெள்ளை உரோமம் இல்லை என்றும் மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் சற்றுக் கருமையாக உள்ளது என்றும் கண்டால், அவரை ஏழு நாள் தனியாக வைப்பார்.

ஏழாம் நாளில் அவரைச் சோதித்துப் பார்த்து, தோலில் அது பரவி இருந்தால், அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார்: அது தொழுநோய்.

மறு தோலில் பரவாமல், அவ்விடத்திலேயே சற்றுக் கருமையாக இருந்தால் அது நெருப்பினால் ஏற்பட்ட தடிப்பு. அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார். அது நெருப்பால் ஏற்பட்ட வடு.

ஆணுக்கோ, பெண்ணுக்கோ தலையிலோ தாடையிலோ, நோய் ஏற்பட்டால்

குரு அந்த நோயைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நோயுள்ள இடம் குழிவாயும், உரோமம் பொன்னிறமாகவும் குறைவாகவும் இருந்தால் தீட்டு எனக் குரு அறிவிப்பார். அது தாடையிலோ தலையிலோ ஏற்படும் சொறி வகையான தொழுநோய் ஆகும்.

குரு அதைச் சோதித்துப் பார்த்து அவ்விடத்தில் மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் கருப்பு உரோமம் இல்லை என்றால், குரு ஏழுநாள் அவரைத் தனியாக வைப்பார்.

ஏழாம் நாளில் அவரைக் குரு சோதித்துப் பார்ப்பார். அந்தச் சொறி படராமலும், அங்கு மஞ்சள் உரோமம் இல்லாமலும், மற்றத் தோலைவிடக் குழிவு இல்லாமலும் இருந்தால்,

அவர் சொறி இருக்கும் இடம் நீங்கலாக, மற்ற இடங்களைச் சிரைத்துக் கொள்வார். மீண்டும் குரு அவரை ஏழுநாள் தனியாக வைப்பார்.

ஏழாம் நாளில் குரு சோதித்துப் பார்க்கும்போது, தோலில் சொறி பரவாமல், மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் இருந்தால் அவர் தீட்டற்றவர் என அறிவிப்பார். தம் ஆடைகளைத் துவைத்தபின், அவர் தூய்மையாவார்.

தூய்மையானவராக அறிவிக்கப்பட்டபின் உடலில் சொறி படர்ந்தால்,

குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். தோலில் சொறி பரவி இருந்தால் உரோமம் மஞ்சள் நிறமா எனக் குரு பார்க்கத் தேவை இல்லை. அவர் தீட்டுள்ளவர்.

சொறி குறைந்து, அந்த இடத்தில் கருப்பு உரோமம் முளைத்ததெனில் சொறி குணமாயிற்று: அவர் தீட்டற்றவராய் இருக்கிறார். அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்.

ஓர் ஆண் அல்லது பெண்ணின் உடலில் வெள்ளைப் புள்ளிகள் காணப்பட்டால்,

குரு சோதித்துப் பார்ப்பார். அவர்கள் மேல் தோலில் மங்கின வெண்ணிறத்தில் இருந்தால் அது தோலில் தோன்றுகிற வெள்ளைத்தேமல்: அவர் தூய்மையானவர்.

தலைமுடி உதிர்ந்து ஒருவர் மொட்டையானால், அவர் தூய்மையானவர்.

முன்புறத் தலைமுடி உதிர்ந்து, அரை மொட்டையானால், அவரும் தூய்மையானவர்.

மொட்டைத் தலையில் செந்நிறம் கலந்த வெண்மையான புண் உண்டானால் அது தொழுநோயின் தொடக்கம்.

குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். அவரது மொட்டைத் தலையிலோ, அரை மொட்டைத் தலையிலோ, உடலின் தோலில் தோன்றும் தொழுநோய் போன்ற செந்நிறம் கலந்த வெண்மையான தடிப்பு இருந்தால்,

அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர், எனக் குரு அறிவிப்பார். ஏனெனில் நோய் அவர் தலையில் உள்ளது.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, தீட்டு, தீட்டு , என குரலெழுப்ப வேண்டும்.

நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

ஆட்டு உரோமம், அல்லது பஞ்சு நூலால் செய்யப்பட்ட உடையில்,

அல்லது பஞ்சு நூலும் ஆட்டு உரோமமும் சேர்த்து நெய்யும் பாவில் அல்லது ஊடுநூலில், அல்லது தோலாடையில், அல்லது தோலால் செய்யப்பட்ட எதிலும், தொழுநோயின் அடையாளம் தோன்றி,

உடையிலோ, தோலாடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோல் அல்லது தோலினால் செய்யப்பட்ட எதிலாவது, நோய் பச்சை அல்லது சிவப்பு நிறமாகக் காணப்பட்டால், அது தொழுநோய். குருவுக்கு அதைக் காட்ட வேண்டும்.

குரு அந்த நோயைச் சோதித்துப்பார்த்து, நோய் தீண்டியவற்றை ஏழுநாள் தனியாக வைத்து,

ஏழாம் நாளில் அதைக் கவனிக்க வேண்டும். உடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோலாடையிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ இருந்தால், அது வளரும் தொழுநோய். அது தீட்டானது.

அந்த நோயுள்ள ஆட்டு உரோமத்தாலோ பஞ்சு நூலாலோ ஆன உடையையும் பாவையும், ஊடுநூலையும், தோலாடையையும், தோலால் செய்யப்பட்ட எதையும் சுட்டெரிக்க வேண்டும். ஏனெனில் அது வளரும் தொழுநோய். அது நெருப்பில் சுட்டெரிக்கப்பட வேண்டும்.

உடையிலோ, பாவிலோ, நூலிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ அந்த நோய் பரவவில்லை எனக் குரு கண்டால்

குரு நோய் தீண்டியதைக் கழுவச் சொல்லி, இரண்டாம் முறையும் ஏழுநாள் தனியாக வைப்பார்.

அது கழுவப்பட்ட பின் அதைச் சோதித்தப்பார்ப்பார். நோய் தீண்டிய பகுதி நோய் பரவாதிருக்கும் நிறம் மாறாதிருந்தால், அது தீட்டானது. அது உட்புறம் இருந்தாலும் வெளிப்புறம் இருந்தாலும் அதை நீ நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.

கழுவப்பட்டபின், நோய் குறைந்துவிட்டது எனக் குரு கண்டால், அந்தப் பகுதியை உடையிலிருந்து, தோலாடையிலிருந்து அல்லது பாவு அல்லது ஊடுநூலிலிருந்து கிழித்தெறிந்து விடவேண்டும்.

ஆடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ நோய் மீண்டும் காணப்படுமாயின் அது பரவும். எனவே நோய் தீண்டியதை நெருப்பில் எரிக்க வேண்டும்.

ஆடையோ, பாவோ, ஊடுநூலோ, தோலால் செய்யப்பட்ட எதுவோ கழுவியபின் அந்த நோய் நீங்கிப்போகும். இரண்டாம் முறை கழுவியபின் அது தூய்மையானது ஆகும்.

ஆட்டு உரோம உடை, பஞ்சு நூல் உடை, பாவு, ஊடுநூல், தோலால் செய்யப்பட்ட பை ஆகியவற்றுள் எதுவும் தீட்டுடையதா தீட்டற்றதா என அறிவதற்குத் தொழுநோய் பற்றிய சட்டம் இதுவே.””

அதிகாரம் 14.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

தொழுநோயாளியின் தீட்டகற்றும் நாளில் அவரைக் குறித்த சட்டம்: அவர் குருவிடம் அழைத்து வரப்பட வேண்டும். குரு பாளையத்திற்கு வெளியே வந்து, அவரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

தொழுநோயாளியின் நோய் குணமாயிற்று எனக் குரு கண்டால்,

தீட்டு அகற்றப்பட இருப்போரை உயிருள்ள, குறையற்ற இரு குருவிகளையும், ஒரு கேதுரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கி வருமாறு பணிப்பார்.

மண்பாண்டத்தில் ஊற்றிய ஊற்று நீரில் குருவி ஒன்றின் கழுத்தை அறுப்பார்:

உயிருள்ள குருவியையும், கேதுரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு நூலையும் ஈசோப்பையும் எடுத்து, இவை அனைத்தையும் உயிருள்ள குருவியையும் ஊற்று நீரில் கழுத்தறுக்கப்பட்ட குருவியின் குருதியில் தோய்ப்பார்:

தொழுநோயால் ஏற்பட்ட தீட்டை அகற்றப்படவிருப்போரின் மீது ஏழுமுறை தெளித்து, அவரது தீட்டை அகற்றுமாறு உயிருள்ள குருவியைத் திறந்த வெளியில் விட்டுவிடுவார்.

தீட்டு அகற்றப்படுவோர் தம் உடைகளைத் துவைத்து, தம் தலையை மழித்து நீராடியதும் தூய்மையாவார்: பின்பு, பாளையத்திற்குச் சென்று, ஏழு நாள் தம் கூடாரத்துக்கு வெளியே தங்கியிருப்பார்:

ஏழாம் நாளில் தம் தலை, தாடி, புருவம், மற்றும் உரோமம் அனைத்தையும் மழுங்கச் சிரைத்துத் தம் உடலை நன்கு கழுவித் தூய்மையாவார்.

எட்டாவது நாள், ஒரு வயது நிரம்பிய பழுதற்ற ஓர் ஆட்டையும் இரு கிடாய்க்குட்டிகளையும், இருபதுபடி அளவில் பத்தில் மூன்று பங்கு மாவை எண்ணெயில் பிசைந்து தயாரித்த உணவுப் படையலையும் ஆழாக்கு எண்ணெயையும் கொண்டு வரவேண்டும்.

தூய்மைப்படுத்தவிருக்கும் குரு தீட்டு அகற்றப்படவிருக்கும் மனிதரையும், பலிப் பொருள்களையும், சந்திப்புக்கூடார வாயிலுக்குக் கொண்டு வருவார்.

பின்னர், குரு ஆழாக்கு எண்ணெயையும் கிடாய்க் குட்டிகளில் ஒன்றையும் குற்றம் நீக்கும் பலியாக ஒப்படைப்பார். ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அவற்றைச் செலுத்துவார்.

பாவம் போக்கும் பலிக்கும் எரிபலிக்கும் உரியவற்றை வெட்டும் தூய இடத்தில் கிடாய்க் குட்டியையும் வெட்டுவார். இந்தக் குற்றப்பழி நீக்கும் பலி பாவம் போக்கும் பலி போன்று குருவுக்கு உரியது. ஏனெனில், அது மிகவும் தூய்மையானது.

குற்றம் நீக்கும் பலியின் குருதியில் குரு சிறிது எடுத்துத் தீட்டு அகற்றப்படவிருப்போரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றின் மீது பூசுவார்.

பின்பு, குரு அந்த ஆழாக்கு எண்ணெயில் சிறிது தன் இடக்கையில் ஊற்றி,

தன் வலக்கை விரலை அதில் தோய்த்து, ஏழு முறை அந்த எண்ணெயை ஆண்டவர் திருமுன் தெளிப்பார்.

தன் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயில் சிறிது எடுத்து, தீட்டு அகற்றப்படவிருப்போரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றின் முன்பு பூசிய குற்றப்பழி நீக்கும் பலிக்குருதியின் மீது அவர் பூசுவார்.

பின்னர், அவர் தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயைத் தீட்டு அகற்றப்படவிருப்போரின் தலையில் தடவி அவருக்காக ஆண்டவர் திருமுன் கறை நீக்கம் செய்வார்.

பாவம் போக்கும் பலியைச் செலுத்தி, தீட்டகற்றப்பட இருப்போருக்குத் தீட்டு நீங்கக் கறை நீக்கம் செய்வார். பின்னர் எரிபலிக்குரியதை வெட்டுவார்.

எரிபலியையும், உணவுப்படையலையும் பலிபீடத்தில் படைப்பார். இவ்வாறு குரு கறைநீக்கம் செய்ய அந்த மனிதர் தூய்மையாவார்.

இவற்றைச் செலுத்த இயலாத ஏழையாயிருந்தால் அவர் குற்றப்பழி நீக்கத்திற்கான ஆரத்திப் பலியாகவும், குறைநீக்கப் பலியாகவும் ஒரு கிடாய்க் குட்டியையும், உணவுப் பலியாக இருபது படி அளவில் மரக்காலில் பத்தில் ஒரு பங்கு மாவை எண்ணெயில் பிசைந்து தயாரித்த உணவுப்படையலையும் ஆழாக்கு எண்ணெயையும்

தம் நிலைமைக்கேற்ப, இரு புறாக்களையோ, புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர வேண்டும். ஒன்று பாவம்போக்கும் பலி: மற்றது எரிபலி.

அவற்றை அவர் எட்டாம் நாளில் சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் தம் தீட்டை அகற்றிக்கொள்வதற்காகக் கொண்டுவர வேண்டும்.

குற்றப்பழி நீக்கும் கிடாய்க்குட்டியையும், ஆழாக்கு எண்ணெயையும் குரு வாங்கி, ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாகக் காட்டுவார்.

குற்றப்பழி நீக்கும் கிடாய்க்குட்டியை அடித்து அதன் இரத்தத்தில் சிறிது பிடித்துத் தீட்டு அகற்றப்படவிருப்போர் வலக்காது மடலிலும் வலக்கைப் பெருவிரலிலும் வலக்கால் பெருவிரலிலும் பூசுவார்.

பின்னர், அவர் தம் இடக்கையில் சிறிது எண்ணெயை ஊற்றி,

தம் வலக்கை விரலை அதில் தோய்த்து, ஏழுமுறை அந்த எண்ணெயை ஆண்டவர் திருமுன் தெளிப்பார்.

தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயில் சிறிது எடுத்து, தீட்டு அகற்றப்பட இருக்கிறவரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றில் முன்னர் பூசிய குற்றப்பழி நீக்கும் பலிக்குருதியின் மீது அவர் பூசுவார்.

பின்னர் அவர் தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயைத் தீட்டு அகற்றப்பட விருப்போரின் தலையில் தடவி அவருக்காக ஆண்டவர் திருமுன் கறைநீக்கம் செய்வார்.

பின்னர்த் தீட்டு அகற்றப்படவிருப்போர் தம் நிலைமைக்குத் தக்கவாறு கொண்டுவந்த புறா எனினும் புறாக் குஞ்செனினும்,

அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் உணவுப் படையலோடு படைப்பார். இவ்வாறு குரு தீட்டு அகற்றப்படுவோருக்கு ஆண்டவர் திருமுன் கறைநீக்கம் செய்வார்.

தம்மைத் தூய்மையாக்கிக் கொள்ளப் போதுமானவற்றைக் கொண்டுவர இயலாத தொழுநோயாளிக்கு உரிய சட்டம் இதுவே.””

ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:

உங்களுக்கு உடைமையாக நான் வழங்கும் கானான் நாட்டிற்கு நீங்கள் வந்த பின்னர், அங்குள்ள ஒரு வீட்டில் தொழுநோயை நான் வரச்செய்தால்,

அந்த வீட்டின் உடைமையாளன், என் வீட்டில் நோய்க்கான அறிகுறி தென்படுகிறது எனக் குருவுக்கு அறிவிக்க வேண்டும்.

குரு நோயைச் சோதித்துப் பார்க்கச் செல்லுமுன் வீட்டிலுள்ள அனைத்தையும் வெளியேற்றுமாறு கட்டளையிடுவார்: இல்லையேல் வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டெனக் கருதப்படும். பின்னர் நோயைச் சோதிப்பதற்காகக் குரு வீட்டினுள் நுழைவார்.

அவர் நோய் பற்றியிருக்கும் இடத்தைப் பார்வையிடுவார். வீட்டுச் சுவர்களில் பச்சையும் சிவப்புமான கறை இருந்து, அப்பகுதி சுவர்ப்பரப்பை விடக் குழிவாயிருந்தால்,

குரு வீட்டைவிட்டு வெளியே வந்து வாயிலை ஏழு நாள் அடைத்து வைப்பார்.

ஏழாம் நாள் மீண்டும் வந்து சோதித்துப் பார்ப்பார். அங்கு நோய்க்குறி சுவர்களில் பரவக்கண்டால்,

அந்த இடத்திலுள்ள கற்களைப் பெயர்த்து நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் போடப் பணிப்பார்.

வீட்டின் உட்சுவரைச் செதுக்கி, செதுக்கப்பட்ட பூச்சுமண்ணை நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்டிவிட்டு,

பெயர்த்த கற்களுக்குப் பதிலாக வேறு கற்களைக் கொண்டுவந்து வேறுமண்ணை எடுத்துப் பூசச் சொல்வார்.

கற்களை மாற்றி, சுவரைக் கொத்திப் பூசிப் புதிதாக்கியபின்னர் அந்நோய் வீட்டில் மீண்டும் தென்பட்டால்,

குரு வந்து பார்ப்பார். நோய் வீட்டில் இடம் பெற்றதெனில் அது வளரும் தொழுநோய். அது தீட்டு.

எனவே, வீட்டை இடித்து, அதன் மரங்களையும் மண்ணையும் நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்ட வேண்டும்.

வீடு அடைக்கப்பட்டிருந்த நாள்களில் அதனுள் செல்பவன் மாலைவரை தீட்டுள்ளவன்.

வீட்டிலே படுத்திருந்தவனும், அவ்வீட்டில் உணவுண்டவனும், தங்கள் உடைகளை வெளுக்க வேண்டும்.

குரு, வீடு பூசப்பட்டபின் மீண்டும் வந்து அங்கு நோய் பரவவில்லை எனக் கண்டால், அந்த வீடு தூயது என அறிவிப்பார். ஏனெனில் நோய் குணமாகிவிட்டது.

வீட்டின் கறையை நீக்க, இரு குருவிகள், கேதுருக்கட்டை, சிவப்பு நூல், ஈசோப்பு ஆகியவற்றைக் குரு எடுப்பார்:

ஒரு குருவியை மண்பாண்டத்திலுள்ள ஊற்று நீரில் கொல்வார்:

கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் கொல்லப்பட்ட அக்குருவியின் குருதியிலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின் மேல் ஏழு தரம் தெளிப்பார்.

குருவியின் குருதி, ஊற்று நீர், உயிருள்ள குருவி, கேதுருக்கட்டை, ஈசோப்பு, சிவப்பு நூல், இவற்றால் கறை நீக்கம் செய்வார்.

உயிருள்ள குருவியைக் குடியிருப்புக்கு வெளியே மைதானத்தில் விட்டு விடவேண்டும். இவ்வாறு வீட்டிற்கான கறை நீக்கம் செய்ததும் அது தூய்மையாகும்.

இது அனைத்துத் தொழுநோய்க்கும், சொறிக்கும்

உடைப் பத்துக்கும், வீட்டு நோய்க்கும்

வீக்கம், சிரங்கு, வெள்யைமறு ஆகியவற்றிற்கான சட்டம்.

எப்போது தீட்டு, எப்போது தூய்மை என முடிவு செய்வதற்குரிய தொழு நோய்க்கான சட்டமும் அதுவே.””

அதிகாரம் 15.

ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:

””இஸ்ரயேல் மக்களுக்கு நீங்கள் கூறவேண்டியது:

ஒருவனுக்கு விந்து ஒழுக்கு இருப்பின்-உடலிலிருந்து அது வெளிப்பட்டாலும், உடலுள் அடக்கிவைக்கப்பட்டாலும்-அது அவனுக்குத் தீட்டு.

விந்து ஒழுக்கு உடையவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டு: அவன் அமரும் இருக்கை அனைத்தும் தீட்டே.

அவன் படுக்கையைத் தொடுபவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.

விந்து ஒழுக்கு உடையவன் அமர்ந்தவற்றின் மீது அமர்பவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.

அவன் உடலைத் தொடுபவனும் தன் உடைகளைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.

அவன் தீட்டற்ற ஒருவன்மீது உமிழ்ந்தால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன்.

அவன் ஏறிப் பயணம் செய்பவை அனைத்தும் தீட்டு.

அவன் அடியிலிருக்கும் எதையும் தொடுபவன் ஒவ்வொருவனும் மாலைமட்டும் தீட்டுடையவன். அதைச் சுமப்பவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன்.

அவன் தன்னைத் தண்ணீரில் கழுவாதிருக்கையில், தன்கையால் எவனைத் தொட்டாலும், அவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.

அவன் தொடும் மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்: மரக்கலம் தண்ணீரில் அலசப்படவேண்டும்.

அவனது ஒழுக்கு நின்று தீட்டு அகன்றால், அவன் தன்னைத் தீட்டகற்ற ஏழுநாள் காத்திருக்கவேண்டும்: பின்பு அவன் தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்று நீரில் கழுவியதும், அவனது தீட்டு அகலும்.

எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களை அல்லது புறாக் குஞ்சுகளை, சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் குருவிடம் கொடுக்க வேண்டும்.

குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் செலுத்தி அவனுக்காக, ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.

விந்து கழிந்தவனும் தன் உடலைக் கழுவுவாள். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.

விந்து பட்டதோலும் உடையும் நீரால் கழுவப்படவேண்டும். மாலைமட்டும் அவை தீட்டாயிருக்கும்.

அவனுடன் அவன் மனைவி படுத்திருந்தால், இருவரும் தண்ணீரில் முழுக வேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாயிருப்பர்.

மாதவிலக்கில் இரத்தப்பெருக்குடைய பெண் ஏழுநாள் விலக்காய் இருப்பாள். அவளைத் தொடுபவர் மாலைமட்டும் தீட்டாயிருப்பர்.

மாத விலக்கின்மீது எதன்மீது படுக்கிறாளோ, எவற்றின்மீது அமர்கிறாளோ அவை அனைத்தும் தீட்டே.

அவள் படுக்கையைத் தொடுபவர் அனைவரும் தம் உடைகளைத் துவைத்து நீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாய் இருப்பர்.

அவள் அமரும் மணையைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான்.

அவள் படுக்கையின்மீதும் அவள் அமர்ந்த மணையின்மீதும் இருந்த எதையாகிலும் தொட்டவனும் மாலைமட்டும் தீட்டாய் இருப்பான்.

ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு, அவள் தீட்டு அவன் மீதுபட்டது என்றால், அவன் ஏழுநாள் தீட்டுடையவன்: அவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டே.

பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாள்கள் கடந்தும் உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப்போல் தீட்டானவையே.

அந்த நாள்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும், விலக்குக் காலப் படுக்கைக்கு ஒத்ததே: அவள் அமரும் அனைத்தும் தீட்டுக் காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும்.

அவற்றைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, நீரில் மூழ்கவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான்.

அவள் தன் இரத்தப்பெருக்கு நின்றபின், ஏழு நாள் கழித்தபின் தீட்டற்றவள் ஆவாள்.

எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களையோ புறாக் குஞ்சுகளையோ சந்திப்புக் கூடார வாயிலில் குருவிடம் கொண்டு வருவாள்.

குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியும் மற்றதை எரி பலியுமாக்கி, அவளுக்காக ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.

இஸ்ரயேல் மக்கள், தங்கள் நடுவே இருக்கும் எனது தங்குமிடத்தைத் தீட்டாக்கி, சாகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் தீட்டுகளிலிருந்து அவர்களை விலக்கி வைக்க வேண்டும்.

விந்து ஒழுக்கினாலும் விந்து அழிவினாலும் தீட்டானவனுக்கும்

தன் விலக்கினாலும் நோயுற்றவளுக்கும்-உடல் தூய்மையற்ற ஆணுக்கும் பெண்ணுக்கும்- தீட்டாயிருப்பவளோடு படுத்தவனுக்கும், உரிய சட்டம் இதுவே””.

அதிகாரம் 16.

ஆரோனின் புதல்வர் இருவர் ஆண்டவரது திருமுன்னிலையை நெருங்கியதால் சாவுக்குள்ளானபின், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

ஆரோனிடம் நீ கூற வேண்டியது: அவன் சாகாது இருக்க வேண்டுமெனில், தூயகத்தில் தொங்குதிரைக்கு உள்ளே இருக்கும் இரக்கத்தின் இருக்கையின் மூடிக்கு முன்பாக, அவன் விரும்பும் போதெல்லாம் வரக்கூடாது: வந்தால் சாவுக்குள்ளாவான். ஏனெனில் இரக்கத்தின் இருக்கையின்மேல் மேகத்தில் நான் தோன்றுவேன்.

ஒரு காளையைப் பாவம் போக்கும் பலியாகவும் ஓர் ஆட்டுக்கிடாயை எரிபலியாகவும் செலுத்தி ஆரோன் தூயகத்திற்குள் நுழையலாம்.

அவன் புனித நார்ப்பட்டு மேற்சட்டை அணியவேண்டும். நார்ப்பட்டாலான உள்ளாடை, கச்சை, தலைப்பாகை அணிய வேண்டும். இந்தப் புனித ஆடைகளை நீராடிய பின்னரே அவன் அணியலாம்.

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் எரி பலிக்காக ஆட்டுக்கிடாய் ஒன்றையும் கொண்டுவர வேண்டும்.

ஆரோன், பாவம் போக்கும் பலிக்குரிய காளையைத் தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் பலியிட்டுப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.

வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் சந்திப்புக் கூடார வாயிலில், ஆண்டவர் திருமுன் நிறுத்த வேண்டும்.

ஆண்டவருக்கென ஒன்றும் போக்கு ஆடாக விடப்படுவதற்கென ஒன்றுமாக அந்தக் கிடாய்கள்மேல் சீட்டு இடப்படும்.

ஆண்டவருக்கெனச் சீட்டு விழுந்த ஆட்டுக்கிடாயைப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டும்.

போக்கு ஆடாக விடப்படுவதற்கெனச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கிடாய், பாவக்கழுவாய்க்கெனப் பாலை நிலத்திற்கு அனுப்பப்படுமாறு, ஆண்டவர் திருமுன் உயிருடன் நிறுத்தி வைக்கப்படும்.

ஆரோன் பாவம்போக்கும் பலிக்குரிய காளையைத் தன் குடும்பத்தாருக்காகவும் பலியிட்டுப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.

ஆரோன் கலசத்தை ஆண்டவர் திருமுன் இருக்கும் பலிபீடத்து நெருப்புத்தணலால் நிரப்பிக்கொண்டு, பொடியாக்கப்பட்ட நறுமணமிக்க சாம்பிராணியும் எடுத்துக் கொண்டு, தொங்குதிரைக்கு உள்ளே வருவான்.

அவன் சாகாதிருக்க, உடன்படிக்கைப் பேழையின்மேல் இருக்கும் இரக்கத்தின் இருக்கையைப் புனிதப்புகை மூடுமளவிற்கு ஆண்டவர் திருமுன் நெருப்பில் சாம்பிராணி போடுவான்.

மேலும் அவன் கீழே நின்று கொண்டு, காளையின் இரத்தத்தில் சிறிது எடுத்து இரக்கத்தின் இருக்கைமீது தன் விரலால் தெளிப்பான். மீண்டும் சிறிது எடுத்து இரக்கத்தின் இருக்கை முன்னர் ஏழுமுறை தெளிப்பான்.

மக்களின் பாவம்போக்கும் பலியான வெள்ளாட்டுக்கிடாயை அவன் அடித்து, அதன் இரத்தத்தைத் தொங்குதிரைக்கு உள்ளே கொண்டு செல்வான், காளையின் இரத்தத்தைக் தெளித்தது போலவே, இதனையும் இரக்கத்தின் இருக்கையின்மேலும், அதன் முன்னிலையிலும் தெளிப்பான்.

இஸ்ரயேல் மக்களின் தீட்டுகளை முன்னிட்டும் அவர்களின் பாவங்களால் விளைந்த குற்றங்களை முன்னிட்டும் தீட்டுப்பட்ட தூயகத்திற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்: அவர்களின் தூய்மையற்ற நிலைக்குள் அமைந்துள்ள சந்திப்புக் கூடாரத்துக்காகவும் அவன் அப்படியே செய்வான்.

அவன், தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் சபை மக்கள் அனைவருக்காகவும் பாவக்கழுவாய் நிறைவேற்றும்படி தூயகத்திற்குள் சென்று, பாவக்கழுவாய் நிறைவேற்றிவிட்டு வெளியே வரும் வரை சந்திப்புக்கூடாரத்தில் எவரும் இருத்தல் கூடாது.

அவன் ஆண்டவர் திருமுன் இருக்கிற பலிபீடத்திற்கு அருகில் வந்து அதற்குப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கிடாயின் இரத்தத்திலும் சிறிது எடுத்துப் பலிபீடக் கொம்புகளில் பூசுவான்.

தன் விரலினால் அந்த இரத்தத்தை எடுத்து, ஏழு முறை அதன் மேல் தெளித்து, இஸ்ரயேல் மக்களின் தீட்டுகள் நீங்க அர்ப்பணிப்பான்.

இவ்வாறு அவன் தூயகத்திற்கும், சந்திப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் கழுவாய் நிறைவேற்றியபின், உயிரோடிருக்கிற ஆட்டுக்கிடாயைக் கொண்டுவருவான்.

ஆரோன் இரு கைகளையும் உயிரோடிருக்கும் அந்தக் கிடாயின் மேல் வைத்து, இஸ்ரயேல் மக்களின் எல்லாக் குற்றங்களையும் தவறுகளையும் பாவங்களையும் அறிக்கையிட்டு அதன் தலைமேல் சுமத்தி, அதைப் பாலை நிலத்துக்குக் கொண்டு செல்ல நியமிக்கப்பட்ட ஆள் மூலம் அங்கு அனுப்பிவிடுவான்.

அந்த வெள்ளாட்டுக் கிடாய் அவர்களின் பாவங்களைச் சுமந்துகொண்டு தனிமையான இடத்திற்குச் செல்லும்: அந்த ஆள் அதைப் பாலைநிலத்தில் விட்டுவிடுவான்.

ஆரோன் சந்திப்புக் கூடாரத்திற்கு வந்து, தூயகத்தில் உடுத்தியிருந்த நா¡ப்பட்டு ஆடைகளை அங்கே களைந்து வைத்துவிடுவான்.

பின்பு, அவன் தூய்மையான இடத்தில் குளித்துத் தன் ஆடைகளை அணிந்துகொண்டு தன் எரி பலியையும் மக்களின் எரிபலிகளையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.

பாவம் போக்கும் பலியின் கொழுப்பை அவன் பலிபீடத்தில் எரித்து விடுவான்.

போகவிட்ட போக்கு ஆடாகிய வெள்ளாட்டுக் கிடாயைக் கொண்டு போய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்த பின்னரே பாளையத்துக்குள் வருவான்.

தூயகத்திற்குள் பாவம் போக்குவதற்கென இரத்தம் எடுக்கப்பட்ட காளையும் கிடாயும், பாளையத்திற்கு வெளியே கொண்டுபோகப்படும்: அவற்றின் தோல், இறைச்சி, சாணம் ஆகியவை நெருப்பில் சுட்டெரிக்கப்படும்.

அவற்றை எரித்தவன் தன்உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்த பின்னரே பாளையத்திற்குள் வருவான்.

ஏழாம் மாதம் பத்தாம் நாள் குடிமக்களும் உங்களோடு வாழும் அன்னியரும் வேலை ஒன்றும் செய்யாமல் நோன்பிருக்க வேண்டும். இது உங்களுக்கு என்றுமுள் நியமம் ஆகும்.

அந்த நாளில் நீங்கள் தூய்மையாக்கப்படும்படி உங்களுக்கெனப் பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும்: ஆண்டவர் திருமுன் உங்கள் பாவங்களுக்காகக் கழுவாய் நிறைவேற்றப்பட, நீங்கள் தூய்மையடைவீர்கள்.

அது உங்களுக்கு நோன்புநாள். அந்த நாள் நீங்கள் முழு ஓய்வெடுக்கும் ஓய்வு நாள் . இது என்றுமுள நியமம் ஆகும்.

அருள்பொழிவு செய்யப்பட்டு, தன் தந்தைக்குப் பின்னர் குருவாக நியமனம் பெற்றவனே பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். அவன் தூய உடைகளான நார்ப்பட்டு ஆடைகளை அணிந்து கொண்டு,

தூயகத்திற்காகவும், சந்திப்புக் கூடாரத்திற்காகவும் பாவக் கழுவாய் நிறைவேற்றுவான். குருக்களுக்காகவும், சபையின் எல்லா மக்களுக்காகவும் பாவக் கழுவாய் செய்வான்.

ஆண்டுக்கு ஒரு முறை இஸ்ரயேல் மக்களுக்காகவும் அவர்களுடைய எல்லாப் பாவங்களுக்காகவும் கழுவாய் நிறைவேற்ற வேண்டும். இது என்றுமுள நியமம் ஆகும் என்று சொல் என்றார். ஆண்டவர் இட்ட ஆணையின்படி மோசே செய்தார்.

அதிகாரம் 17.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

ஆரோன், அவன் புதல்வர், எல்லா இஸ்ரயேல் மக்கள் ஆசியோரிடம் நீ கூறவேண்டிய ஆண்டவரின் வார்த்தை இதுவே:

இஸ்ரயேல் குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் மாடு, ஆடு, அல்லது வெள்ளாடு இவற்றைச் சந்திப்புக்கூடார வாயிலான ஆண்டவர் உறையும் இடத்தில் அவரது திருமுன் ஆண்டவருக்குச் செலுத்தும்படி கொண்டு வராமல்,

குடியிருப்பிலோ, குடியிருப்பு எல்லைக்கு வெளியிலோ கொலை செய்தால், அது அவருக்குப் பழியாகும். குருதி சிந்தச் செய்ததால், அவர் தமது இனத்தினின்று அழிக்கப்படுவார்.

எனவே, இஸ்ரயேல் மக்கள், வயல் வெளியில் பலியிடுகிற தங்கள் பலிகளைச் சந்திப்புக் கூடாரவாயிலுக்கு ஆண்டவர் திருமுன் கொண்டுவந்து, அங்கே அவருக்கு நல்லுறவுப் பலிகளாகச் செலுத்துவார்கள்.

அங்குக் குரு அந்த இரத்தத்தைச் சந்திப்புக் கூடாரவாயிலில் இருக்கும் ஆண்டவரின் பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பை ஆண்டவருக்கு உகந்த நறுமணமாக எரிப்பார்.

அவர்கள் கள்ளத்தனமாய்ப் பின்பற்றிவந்த பேய்களுக்கு இனித் தங்கள் பலிகளைச் செலுத்தக்கூடாது. இது அவர்களுக்கு என்றுமுள நியமம் ஆகும்.

எனவே, நீ அவர்களிடம் கூறவேண்டியது: இஸ்ரயேல் வீட்டாரிலோ, அவர்களோடு தங்கும் அன்னியர்களிலோ யாரேனும் எரிபலி செலுத்தினால்,

அதனைச் சந்திப்புக் கூடார வாயிலில் ஆண்டவருக்குச் செலுத்தும்படி கொண்டு வராவிடில், அவர் அவரது இனத்தவருள் இராமல் அழிக்கப்படுவார்.

இஸ்ரயேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்கும் அன்னியரிலும் ஒருவர் குருதியை அருந்தினால், குருதி அருந்தியவருக்கு எதிராக நான் என்முகத்தைத் திருப்பி, அந்த மக்களிடையே அவர் இராதபடி அழிப்பேன்.

உடலின் உயிர் குருதியில் உள்ளது. அதனை நான் உங்களுக்காகப் பலிபீடத்தின்மேல் உங்கள் உயிருக்கெனப் பாவக்கழுவாய் செய்யும்படி ஆணையிட்டேன். ஏனெனில், அது உயிருக்கான பாவக்கழுவாய் நிறைவேற்றும் குருதி.

எனவேதான் இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னேன்: உங்களில் ஒருவரும் குருதியை அருந்த வேண்டாம். உங்களிடையே தங்கும் அன்னியரும் அருந்த வேண்டாம்.

இஸ்ரயேல் மக்களிலோ, உங்களிடையே தங்கும் அன்னியரிலோ ஒருவர் உண்ணத்தக்க ஒரு விலங்கை அல்லது பறவையை வேட்டையாடிப்பிடித்தால், அவர் அதன் குருதியைத் தரையில் சிந்தவிட்டு மண்ணால் மூடவேண்டும்.

ஏனெனில், அனைத்து உடலுக்கும் அதுவே உயிர், அதன் குருதி உயிர் போன்றது. ஆகையால் இஸ்ரயேல் மக்களுக்கு, எந்த உடலையும் குருதியோடு உண்ணாதீர்கள் என்று சொன்னேன். ஏனெனில், எல்லா உடலின் உயிரும் குருதியே: அதனை உண்பவர் அழிவார்.

குடிமக்களிலும் அன்னியரிலும் செத்த உடலை அல்லது பீறிக் கிழிக்கப்பட்டதை உண்பவர் தம் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகுவார். அவர் மாலைமட்டும் தீட்டாயிருப்பார். பின்னர் தூய்மையாவார்.

அவர் தம் உடைகளைத் துவைக்காமலும் தம் உடலைக் கழுவாமலும் இருந்தால், தம் குற்றத்தைத் தாமே சுமப்பார் .

அதிகாரம் 18.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கூறவேண்டியது: நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.

நீங்கள் குடியிருந்த எகிப்து நாட்டின் வழக்கப்படி செய்ய வேண்டாம்: நான் உங்களை அழைத்துச் செல்லும் கானான் நாட்டின் வழக்கப்படியும் செய்ய வேண்டாம். அவர்கள் முறைமையும் வேண்டாம்.

நியமங்களை ஏற்று, என் ஆணைகளுக்குப் பணிந்து நடங்கள், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

எனவே நன் நியமங்களையும் ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றிற்கேற்பச் செயல்படுவோர் அவற்றால் வாழ்வு பெறுவார். நானே ஆண்டவர்!

உங்களுள் எவரும் தமக்கு இரத்த உறவாயிருக்கும் எந்தப் பெண்ணோடும் உடலுறவு கொள்ள வேண்டாம்: நானே ஆண்டவர்!

தந்தையின் வெற்றுடம்பாகிய உன் தாயின் வெற்றுடம்பைப் பாராதே! ஏனெனில் அவள் உன் தாய்: உன் தாயை வெற்றுடம்பாக்காதே!

தந்தையின் மற்ற மனைவியரை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவர்கள் உன் தந்தையின் உடல் ஆவர்!

தந்தைக்கோ, தாய்க்கோ வீட்டிலோ வெளியிலோ பிறந்த மகளான உன் சகோதரியை வெற்றுடம்பாக்காதே!

ஏனெனில், அவர்கள் உன் வெற்றுடம்பு ஆவர்.

தந்தைக்கு அவனுடைய மனைவியிடம் பிறந்த மகளை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உனக்கு சகோதரி.

தந்தையின் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் தந்தையின் உடல்.

தாயின் சகோதரியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் தாயின் உடல்.

தந்தையின் சகோதரனை வெற்றுடம்பாக்காதே! அவன் மனைவியோடு உடலுறவு கொள்ள வேண்டாம்: ஏனெனில் அவள் உன் சிற்றன்னை.

மருமகளை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில் அவள் உன் மகனின் மனைவி: அவளை வெற்றுடம்பாக்காதே!

சகோதரனின் மனைவியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில் அவள் உன் சகோதரனின் வெற்றுடம்பு.

ஒரு பெண்ணையும் அவள் மகளையும் வெற்றுடம்பாக்காதே! அவள் மகனின் மகளையோ அவள் மகளின் மகளையோ மணம் புரியாதே. இவர்கள் அவளின் நெருங்கிய இரத்த உறவினர். அது முறைகேடு

மனைவி உயிருடனிருக்க, அவளுக்குச் சகக் கிழத்தியாக, அவள் சகோதரியை மணம் புரிந்து உடலுறவு கொள்ளாதே!

மனைவி மாதவிலக்கில் இருக்கும்போது, அவளை வெற்றுடம்பாக்காதே!

உனக்கு அடுத்திருப்பவனின் மனைவியுடன் இன்பக்கலவி கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே.

பிள்ளைகளுள் யாரையேனும் மோலேக்கிற்கு எரிபலியாக்கி, உன் கடவுளின் திருப்பெயரை இழிவு படுத்தாதே. நானே ஆண்டவர்!

பெண்ணுடன் பாலுறவு கொள்வதுபோல் ஆணோடு கொள்ளாதே! அது அருவருப்பு.

எந்த விலங்கோடும் பாலுறவு கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே! எந்தப் பெண்ணும் விலங்கோடு பாலுறவு கொள்ள வேண்டாம். அது முறைகேடான அருவருப்பு.

இவற்றில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏனெனில், நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட வேற்றினத்தவர். இவற்றால் தீட்டானதால் நாடே தீட்டாகிவிட்டது.

இவ்வாறு நாடு தீட்டுப்பட்டதால் நான் அதன் குற்றங்களுக்காகத் தண்டனை வழங்கினேன். நாடும் அவர்களை வெளியே கக்கியது.

நீங்கள் என் கட்டளைகளையும் நியமனங்களையும் கடைப்பிடியுங்கள். குடிமக்களாயினும் உங்களோடு தங்கும் அன்னியராயினும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்ய வேண்டாம்.

ஏனெனில் இந்த அருவருப்பானவற்றை உங்கள் முன் அந்த நாடுகளில் இருந்தவர்கள் செய்ததனால் நாடு தீட்டாயிற்று.

உங்களுக்குமுன் இருந்தோரை நாடு வெளியே கக்கிவிட்டது போல, நீங்கள் தீட்டாக்கினால் கக்கப்படுவீர்கள்.

ஏனெனில் யாராவது இவ்வகை அருவருப்புகளில் எதையேனும் செய்தால் அவன் தன் இனத்தில் இராதபடி அழிந்து போவான்.

எனவே, உங்கள் முன்னோர் இத்தகைய அருவருப்புகளைச் செய்ததுபோல, நீங்களும் செய்து, அவற்றால் தீட்டுப்படாதபடி, என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

அதிகாரம் 19.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!

நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தாய் தந்தைக்கு அஞ்சுங்கள். என் ஓய்வு நாளைக் கடைப்பிடியுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

சிலைகள் பக்கம் திரும்ப வேண்டாம். உங்களுக்கெனத் தெய்வப் படிமங்களை வார்த்துக் கொள்ள வேண்டாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

ஆண்டவருக்கு நல்லுறவுப்பலி செலுத்தினால் அதை மனமுவந்து செய்யுங்கள்.

நீங்கள் பலி செலுத்தும் நாளன்றும், மறுநாளும் உண்டு, மூன்றாம் நாள் எஞ்சியதைச் சுட்டெரியுங்கள்.

மூன்றாம் நாளில் எஞ்சியதை உண்டால், அது திகட்டும், விருப்பமாய் இராது.

அவ்வாறு உண்போர் தம்பழியைத் தாமே சுமப்பர். ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் பார்வையில் தூய்மையானதை இழிவுக்குள்ளாக்கினர். அந்த மனிதர் அவர்கள் இனத்தில் இராதபடி அழிக்கப்படுவர்.

உங்கள் நாட்டில் நீங்கள் பயிரிட்டதை அறுவடை செய்யும்போது, வரப்பு ஓரக் கதிரை அறுக்கவேண்டாம். சிந்திக் கிடக்கும் கதிரையும் பொறுக்க வேண்டாம்:

திராட்சைத் தோட்டத்தில் பின்னறுப்பு வேண்டாம்: சிந்திக் கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டாம். அவற்றை எளியோருக்கும் அன்னியருக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் ஆண்டவராகிய கடவுள்!

களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும்,

பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள். நான் ஆண்டவர்!

அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்: வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது.

காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்!

தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு.

உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நான் ஆண்டவர்!

உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்து கொள்.

பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!

என் கட்டளைகளைக் கடைப்பிடி. உன் கால்நடைகளை வேறுவகை விலங்குகளோடு பொலியவிடாதே. உன் வயலில் இருவகைத் தானியங்களை ஒரே நேரத்தில் விதைக்காதே! இருவகை நூலுள்ள உடை அணியாதே!

ஒருவனுக்கு மண ஒப்பந்தமான, ஆனால் பிணை கொடுத்து விடுவிக்கப்படாத அடிமைப் பெண்ணோடு வேறொருவன் உடலுறவு கொண்டால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்: கொல்லப்பட வேண்டாம்: அவள் தன்னுரிமை பெற்றவளல்ல.

அவன் தன் குற்றப்பழி நீக்கும் பலியாக ஆட்டுக்கிடாய் ஒன்றை ஆண்டவருக்குச் சந்திப்புக் கூடார வாயிலுக்குள் கொண்டுவர வேண்டும்.

அதனால் அவன் செய்த குற்றத்திற்காக, ஆண்டவர் திருமுன் குரு கறைநீக்கம் செய்வார். அப்போது அவள் செய்த பாவம் மன்னிக்கப்படும்.

நீங்கள் இந்நாட்டில் எவ்விதக் கனிமரங்களை நட்டாலும், அவற்றின் கனி துண்டிக்கப்பட வேண்டும்: அதாவது மூன்றாண்டு உண்ணப்படாமல் விலக்கப்பட்டிருக்கும்.

நான்காம் ஆண்டு அவற்றின் கனி முழுவதும் ஆண்டவருக்குப் படைக்கப்பட்டுத் தூய்மையாகும்.

ஜந்தாம் ஆண்டில் அவற்றின் கனியை உண்ணலாம். அதுமுதல் அவை உங்களுக்குப் பலன் அளித்துவரும். நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

எந்த இறைச்சியையும் குருதியோடு உண்ண வேண்டாம்: குறி பார்க்க வேண்டாம்: நாள் பார்க்க வேண்டாம்.

தலைமுடியைத் திருத்திக் கொள்ள வேண்டாம்.

செத்தவனுக்காக உடலைக் கீறிக்கொள்ள வேண்டாம்: பச்சை குத்திக்கொள்ளவும் வேண்டாம்: நானே ஆண்டவர்!

நாட்டில் விபசாரம் வளர்ந்து, ஒழுக்கக்கேடு பெருகாதபடி, உன் மகளை இழிவுபடுத்தி வேசித்தனம் பண்ண அனுமதியாதே!

ஓய்வு நாள்களைக் கடைப்பிடித்து, என் தூயகத்தைக் குறித்து அச்சம் கொள்ளுங்கள்: நானே ஆண்டவர்!

பில்லி சூனியம் பார்க்க வேண்டாம்: குறிகாரரை அணுகவேண்டாம்: அவர்களைத் தேடி அவர்களால் தீட்டாக வேண்டாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

நரை திரண்டவருக்குமுன் எழுந்து நில். முதிர்ந்தவர் முகத்தை மதித்து நட: உன் கடவுளுக்கு அஞ்சி வாழ்: நானே ஆண்டவர்!

உங்கள் நாட்டில் தங்கியிருக்கும் அன்னியருக்குத் தீங்கிழைக்காதே!

உங்களிடம் தங்கும் அன்னியர் உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். உங்கள் மீது நீங்கள் அன்புகூர்வதுபோல் அவர் மீதும் அன்புகூருங்கள். ஏனெனில், எகிப்தில் நீங்களும் அன்னியர்களாய் இருந்தீர்கள்: நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

நீட்டல், நிறுத்தல், கொள்ளல் ஆகிய அளவுகளில் நேர்மையைக் கடைப்பிடியுங்கள்.

தராசும், படிக்கல்லும், மரக்காலும் அளவு சரியான படியும் உங்களிடம் இருக்கட்டும்! உங்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே!

நீங்கள் என் எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் கடைப்பிடித்து ஒழுகுங்கள்: நானே ஆண்டவர்!

அதிகாரம் 20.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல் புதல்வரிலோ இஸ்ரயேலில் தங்கும் அன்னியரிலோ யாரேனும் தன் வழிமரபில் ஒரு பிள்ளையை மோலேக்குக்குக் கொடுத்தால், நாட்டு மக்கள் அவனைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.

அவனை எதிர்த்து நான் என் முகத்தைத் திருப்பிக்கொள்வேன். எனது தூயகத்தைத் தீட்டுப்படுத்தி, திருப்பெயரை மாசுபடுத்தித் தன் வழிமரபில் ஒரு பிள்ளையை மோலேக்கிற்குக் கொடுத்ததால், அவனை அவன் இனத்தில் இராதபடி அழிப்பேன்.

தன்வழிமரபில் ஒரு பிள்ளையை மோலேக்குக்குக் கொடுத்தும், நாட்டு மக்கள் அவனைக் கொலை செய்யாது விட்டுவிட, அவன் தலைமறைவாயிருந்தால்,

நான் அவனையும் அவன் குடும்பத்தையும் எதிர்த்து என் முகத்தைத் திருப்பிக் கொள்வேன். மோலேக்கின் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட அவனையும் அவனைப் பின்பற்றிய யாவரையும் அவர்கள் இனத்தில் இராதபடி அழிப்பேன்.

குறிசொல்வோரையும், மைபோடுவோரையும் பின்பற்றி வழி தவறியோரை எதிர்த்து என் முகத்தைத் திருப்பிக்கொண்டு அவர்களை அவர்கள் இனத்தில் இராதபடி அழிப்பேன்.

எனவே நீங்கள் உங்களைப் புனிதப்படுத்தி, தூயவர் ஆகுங்கள். ஏனெனில், நான் உங்கள் கடவுள்!

கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றின்படி நடங்கள். நானே உங்களைத் தூய்மைப்படுத்தும் ஆண்டவர்!

தம் தந்தையையும் தாயையும் சபிக்கும் எவரும் கொலை செய்யப்பட வேண்டும். தம் தந்தையையும் தாயையும் சபிப்பவரின் குருதிப்பழி அவர்மேலேயே இருக்கும்.

அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்.

தன் தந்தையின் மனைவியோடு உடலுறவு கொள்பவன் தன் தந்தையை வெற்றுடம்பாக்கினான். எனவே இருவரும் கொலை செய்யப்படுவர்.

ஒருவன் தன் மருமகளோடு உடலுறவுகொண்டு முறைகேடாக நடந்துகொண்டால், இருவரும் கொல்லப்படுவர். அவர்களது குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும்.

பெண்ணோடு உடலுறவு கொள்வது போன்று, ஆணோடும் உடலுறவு கொண்டால், அவ்வாறு செய்வது அருவருப்பு. இருவரும் கொல்லப்பட வேண்டும். இருவரின் குருதிப்பழியும் அவர்கள் மேலேயே இருக்கும்.

ஒருவன் ஒரு பெண்ணையும் அவள் தாயையும் மணம் செய்தால் அது பெருந்தவறு. அவனையும் அவர்களையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.

விலங்கோடு ஒருவன் புணர்ந்தால், அவன் கொல்லப்பட வேண்டும். அந்த விலங்கையும் கொல்ல வேண்டும்.

ஒரு பெண் ஏதேனும் ஒரு விலங்கோடு புணர்ந்தால், அந்தப் பெண்ணையும் விலங்கையும் கொல்லவேண்டும். அத்தகைய எந்த உயிரும் சாக வேண்டும். அவற்றின் குருதிப்பழி அவற்றின் மேலேயே இருக்கும்.

யாரேனும் ஒருவன் தன் தந்தைக்கு, அல்லது தாய்க்குப் பிறந்த மகளோடு அதாவது அவன் சகோதரியோடு உடலுறவு கொண்டால், அவளும் அதற்கு இணங்கினால் அது வெட்கக்கேடான செயல். அவர்கள் தங்கள் இனத்தோரின் முன்னிலையில் அழிக்கப்படுவார்கள். தன் சகோதரியை வெற்றுடம்பாக்கிய அவன் தன் தீவினையைச் சுமப்பான்.

மாதவிலக்கில் இருக்கும் ஒருத்தியுடன் ஒருவன் உடலுறவுக் கொண்டால், இருவரும் தங்கள் உதிர ஊற்றைத் திறந்ததால் அவர்கள் தங்கள் இனத்தாரிடையே இல்லாதபடி அழிக்கப்படுவார்கள்.

தாயின் சகோதரியையோ, உன் தந்தையின் சகோதரியையோ வெற்றுடம்பாக்காதே. மீறுபவர் தங்கள் உடலை இழிவுபடுத்தியதால் தங்கள் பழியைத் தாமே சுமப்பர்.

ஒருவன் தன் தந்தையின் சகோதரனின் மனைவியோடு உடலுறவு கொண்டால், அவன் தன் தந்தையின் சகோதரனை வெற்றுடம்பாக்கினான். எனவே, அவர்கள் தங்கள் பாவத்தைத்தாமே சுமப்பர்: பிள்ளையன்றி இறப்பர்.

ஒருவன் தன் சகோதரன் மனைவியோடு உடலுறவு கொண்டால், அவன் தன் சகோதரனை வெற்றுடம்பாக்குகிறான். எனவே, அவர்கள் பிள்ளையன்றி இருப்பர்.

நீங்கள் குடியிருப்பதற்காக உங்களை நான் கொண்டு போகிற நாடு உங்களைக் கக்கிவிடாதபடி, நீங்கள் என் அனைத்து நியமங்களைப் பற்றிக்கொண்டு அவற்றிற்கேற்ப வாழுங்கள்.

உங்களுக்கு முன்பாக நான் விரட்டியிருக்கிற வேற்றினத்தாரின் செயற்படி நடக்க வேண்டாம்: மேற்குறிப்பிட்ட செயல்களையெல்லாம் அவர்கள் செய்தார்கள். எனவே நான் அவர்களை வெறுத்தேன்.

அவர்களின் நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்வீர்கள் என்று கூறினேன். பாலும் தேனும் ஓடும் அந்த நாட்டை உங்களுக்கு உடைமையாக்கினேன். உங்களை மக்களினங்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரே நான்!

எனவே நீங்கள் தீட்டற்ற விலங்குகளுக்கும் தீட்டான விலங்குகளுக்கும், தீட்டான பறவைகளுக்கும் தீட்டற்ற பறவைகளுக்கும், வேறுபாடு கண்டு தீட்டென்று நான் உங்களுக்குச் சொல்லிய விலக்கப்பட்ட விலங்காலும் பறவையாலும் தரையில் ஊர்ந்து செல்லுகின்ற எந்த ஒருபூச்சியாலும் உங்களை இழிவுபடுத்திக் கொள்ளாது இருப்பீர்களாக!

எனக்கெனத் தூயவர்களாக இருப்பீர்களாக! ஏனெனில், ஆண்டவராகிய நான் தூயவராயிருந்து நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படி உங்களை மக்களினங்களினின்று பிரித்தெடுத்தேன்.

குறிசொல்லும் அல்லது மைபோட்டுப் பார்க்கும் எந்த ஆணும் பெண்ணும் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். அவர்களின் குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும் .

அதிகாரம் 21.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: ஆரோனின் புதல்வரான குருக்களுக்குச் சொல்: அவர்களுள் எவனும் தன் இனத்தாரில் இறந்துபோன ஒருவராலே தன்னைத் தீட்டப்படுத்த வேண்டாம்.

தனக்கு இரத்த உறவான தாய், தந்தை, மகன், மகள், சகோதரன்,

மணமாகாமல் தன்னுடன் வாழ்ந்த கன்னியான சகோதரி-ஆகியவர்களைத் தவிர

வேறேவராலும் திருமணத்தால் உறவானவர் உட்பட-தன்னைத் தூய்மைக் கேட்டிற்கு உட்படுத்தித் தீட்டுப்படவேண்டாம்.

அவர்கள் தலையை மொட்டையடித்துக் கொள்ளாமலும், தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், உடலைக் கீறிக் கொள்ளாமலும் இருப்பார்கள்.

அவர்கள் தங்கள் கடவுளின் பெயரைக் கெடுக்காமல் அவருக்கு ஏற்ற தூயோராய் இருப்பார்கள். ஆண்டவரின் பலியான தங்கள் கடவுளின் அப்பத்தைச் செலுத்துவதால் அவர்கள் தூய்மையாய் இருக்க வேண்டும்.

விலைமாதையோ தூய்மைக் கேடு உற்றவளையோ அவர்கள் மணம் புரியலாகாது. கணவனால் மணமுறிவு செய்யப்பட்ட பெண்ணையும் மணம்புரியலாகாது. ஏனெனில், குரு தன் கடவுளுக்கு ஏற்ற தூய்மை உடையவனாய் இருத்தல் வேண்டும்.

அவர்கள் தூயோர்கள் ஏனெனில், அவர்கள் உங்களின் கடவுளுக்கு உணவு படைக்கிறார்கள். உங்களைத் தூய்மையாக்கும் நான் தூயவனாய் இருப்பதால், உங்களுக்குத் தூயோராய் அவர்கள் இருப்பார்கள்.

குருவின் மகள் வேசியானால், அவள் தன் தந்தைக்குத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்துகிறாள். அவளை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.

தலையில் திருப்பொழிவு எண்ணெய் வார்க்கப்பட்டு குருத்துவ உடை அணிந்துள்ள தலைமைக் குருவாகிய உன் சகோதரன், தன் தலையை மூடிக் கொள்ள வேண்டும்: தன் உடைகளைக் கிழித்தலாகாது.

எந்தப் பிணமானாலும் அது தந்தையுடையதாயினும் தாயுடையதாயினும் அதன் அருகில் சென்று அவன் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

தூய கூடத்திலிருந்து வெளிவராமலும் தன் கடவுளின் தூயகத்தை இழிவுபடுத்தாமலும் இருக்க வேண்டும். ஏனெனில் அவனுடைய கடவுளின் திருப்பொழிவு எண்ணெய் தாங்கும் சிறப்பு அவனுக்கு உரியது. நானே ஆண்டவர்!

கன்னிப்பெண்ணையே அவன் மணம் புரிய வேண்டும்.

அவன் கைம்பெண்ணையோ மணமுறிவு பெற்றவளையோ, கற்பொழுக்கம் அற்றவளையோ, விலைமாதையோ மணம் புரியாமல், தன் இனத்திலுள்ள ஒரு கன்னிப் பெண்ணையே மணக்க வேண்டும்.

தன் வழிமரபை இரத்தக் கலப்பற்றதாகப் பாதுகாக்க வேண்டும். ஏனெனில் நானே அவனைத் தூய்மையாக்கும் ஆண்டவர்.

ஆண்டவர் மீண்டும் மோசேயிடம் கூறியது:

நீ ஆரோனிடம் கூறவேண்டியது: உன் வழிமரபினரில் உடல் ஊனமுற்றவன் தன் கடவுளுக்கு உணவுப் படையலைச் செலுத்துதல் ஆகாது.

உடல் ஊனமுற்றவன் எவனும் அருகில் வரவேண்டாம்: பார்வையற்றவன், முடவன், குறைந்த அல்லது நீண்ட உறுப்பு உடையவன்,

கால் கை ஒடிந்தவன்,

, குள்ளன், கண்ணில் பூ விழுந்தவன், சொறி சிரங்கு உடையவன், அண்ணகன் எவனும் வேண்டாம்.

குருவான ஆரோனின் வழி மரபில் உடல் ஊனமுற்ற எவனும் ஆண்டவரின் நெருப்புப் பலியைச் செலுத்த அருகில் வரவேண்டாம். மேலும் உடல் ஊனம் அவனுக்கு இருப்பதால், அவன் தன் கடவுளின் உணவுப் படையலைச் செலுத்தவும் வரக்கூடாது.

தன் கடவுளின் தூய அப்பத்தை அவன் உண்ணலாம்.

ஆனால் தொங்குதிரை அருகில் வர வேண்டாம்: பீடத்தை அணுக வேண்டாம். ஏனெனில், அவன் உடலில் குறைபாடு உள்ளது. என் தூயகத்தை இழிவுபடுத்த வேண்டாம். ஏனெனில் நான் அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர்.

மோசே இவற்றை ஆரோனிடமும் அவர் புதல்வரிடமும், இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கூறினார்.

அதிகாரம் 22.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல் மக்கள் எனக்கு நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்களால் ஆரோனும் அவன் பிள்ளைகளும் என் பெயரை இழிவுபடுத்தாதபடி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறு. நானே ஆண்டவர்.

அவர்களிடம் நீ கூற வேண்டியது: உங்கள் வழிமரபினருள் எவனும் தீட்டுப்பட்டிருந்து, இஸ்ரயேல் மக்கள் நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்கள் அருகில் வந்தால், அவன் என் முன் இராதபடி அழிவான். நானே ஆண்டவர்.

ஆரோன் குடும்பத்தினரில் தொழு நோயாளியோ விந்து ஒழுக்கு உடையவனோ இருந்தால் குணமாகும் மட்டும் அவன் தூய பொருள்களை உண்ண வேண்டாம். பிணத்தால் தீட்டானதைத் தொட்டவனும் விந்தொழுகியவனும்,

தீட்டு என ஒதுக்கிய ஊர்வனவற்றையோ, தீட்டான மனிதரையோ தொட்டவனும்,

மாலைமட்டும் தீட்டுடன் இருப்பான். அவன் தூய பொருள்களை உண்ணாமல் தன் உடலைத் தண்ணீரால் கழுவ வேண்டும்.

கதிரவன் மறைந்தபின் தூய்மை அடைவான், அப்பொழுது அவன் தூய பொருள்களை உண்ணலாம். ஏனெனில் அது அவன் உணவு.

தானாய்ச் செத்ததையும், பீறிக் கிழிக்கப்பட்டதையும் அவன் உண்டு தீட்டாக வேண்டாம். நானே ஆண்டவர்.

எனவே தூய்மையானதைத் தீட்டாக்குவதால் தங்கள் மேல் பாவத்தைச் சுமத்திக்கொண்டு சாகாதவாறு, நான் ஒப்படைத்தவற்றை அவர்கள் காப்பார்களாக! நானே அவர்களைத் தூயோராக்கும் ஆண்டவர்!

வேற்றினத்தார் எவரும் தூய பொருள்களை உண்ண வேண்டாம். குரு வீட்டிலுள்ள விருந்தினரும் கூலிக்காக வேலை செய்பவரும் தூய பொருளை உண்ண வேண்டாம்.

குருவின் பணம் கொடுத்து வாங்கிய அடிமையும், அவன் வீட்டில் பிறந்தவனும் குருவின் உணவை உண்ணலாம்.

குருவின் மணமுடித்த மகள் தூயபொருள்களை உண்ண வேண்டாம்.

குருவின் குழந்தைகளற்ற கைம்பெண் அல்லது மணவிலக்குப் பெற்றவளான மகள் திரும்பிவந்து இளமையிலிருந்து தன் தந்தையோடு வாழ்ந்ததுபோல வாழ்ந்தாளாயின், தந்தையின் உணவில் பங்கு பெறலாம். ஆனால் பொது நிலையர் எவரும் அதை உண்ணலாகாது.

தூய பொருளை அறியாமல் உண்பவர். அப்பொருளின் விலையில் ஜந்தில் ஒரு பங்கைக் கூடுதலாகக் கொடுத்து தூய பொருளுடன் குருவுக்குக் கொடுக்க வேண்டும்.

ஆண்டவருக்கு இஸ்ரயேலர் நேர்ச்சையாக அளிக்கும் புனிதப் பொருள்களைக் குருக்கள் இழிவுக்கு உள்ளாக்கக்கூடாது.

அப்புனிதப் பொருள்களை உண்டு இழிவுக்கு உள்ளாக்குவதால், அவர்கள் தண்டம் செலுத்தும் குற்றப்பழிக்கு ஆளாவர். ஏனெனில், நானே அவர்களைத் தூய்மையாக்கும் ஆண்டவர்!

ஆண்டவர் மீண்டும் மோசேயிடம் கூறியது:

ஆரோன், அவன் புதல்வர் மற்றும் இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கூற வேண்டியது: இஸ்ரயேலரோ இஸ்ரயேலரிடையே தங்கியிருக்கும் அன்னியர்களோ தங்கள் பொருத்தனைக்கேற்ப அல்லது ஆர்வமிகுதியால் எரிபலியாகச் செலுத்தும் காணிக்கை

அவரவர் விருப்பப்படியே மாடு, ஆடு, வெள்ளாடு எவற்றிலேனும் பழுதற்ற ஓர் ஆணாய் இருப்பதாக!

பழுதான எதையும் உங்களுக்காகச் செலுத்தலாகாது. அது ஆண்டவருக்கு உகந்தது அன்று.

சிறப்புப் பொருத்தனையோ, தன்னார்வக் காணிக்கையோ மாடுகளில் அல்லது ஆடுகளில் நல்லுறவுப் பலியாகச் செலுத்தினால், அது ஏற்கத்தக்கதாக அமைய, மாசுமறுவற்றதாய் இருத்தல் வேண்டும்.

குருடு, ஊனம், நெரிவு, கழிச்சல் நோய், சொறி, சிரங்கு முதலிய குறைபாடுள்ளவற்றைச் செலுத்தாமலும் அவற்றை ஆண்டவரின் பலிபீடத்தில் எரிபலியாக்காமலும் இருப்பீர்களாக.

உறுப்பு ஒழுங்கற்ற ஆடோ, மாடோ, மகிழ்வுப்பலி ஆகலாம். ஆனால் அது பொருத்தனைக்கு ஏற்றதன்று.

விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும், காயம்பட்டதையும் விதை அடிக்கப்பட்டதையும் ஆண்டவருக்கு நீங்கள் காணிக்கை ஆக்காமலும் உங்கள் நாட்டில் பலியிடாமலும் இருப்பீர்களாக!

வேற்றின் மக்களிடமிருந்து இத்தகையவற்றை வாங்கி உங்கள் கடவுளுக்கு உணவுப் படையலாகச் செலுத்தாதீர். அவற்றில் கேடும் பழுதும் உள்ளன. அவை உங்கள் சார்பாக எற்றுக்கொள்ளப்பட மாட்டா.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

ஒரு கன்று, செம்மறி, அல்லது வெள்ளாட்டுக்குட்டி பிறந்தால், ஏழு நாளளவும் தன் தாயிடம் அது இருக்கட்டும். எட்டாம் நாளிலிருந்து அது ஆண்டவருக்குரிய எரிபலியாகச் செலத்தப்படும். இது விரும்பத்தக்கது.

பசுவையும் அதன் கன்றையும் அல்லது ஆட்டையும் அதன் குட்டியையும் ஒரே நாளில் பலியிட வேண்டாம்.

நன்றிப்பலியை ஆண்டவருக்குச் செலுத்தினால், அது உங்கள் சார்பாக ஏற்கத் தகுந்ததாக இருக்கட்டும்.

அன்றே அது உண்ணப்படவேண்டும். விடியற்காலை மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வேண்டாம். நானே ஆண்டவர்!

கட்டளைகளைக் கடைப்பிடித்து அவற்றிற்கேற்ப ஒழுகுங்கள். நானே ஆண்டவர்!

இஸ்ரயேல் மக்களிடையே நான் தூயவராகக் கருதப்படுமாறு, என் திருப்பெயரை இழிவுப் படுத்தாதிருங்கள். நானே உங்களைப் புனிதர் ஆக்கும் ஆண்டவர்!

உங்களுக்குக் கடவுளாய் இருக்குமாறு உங்களை எகிப்தினின்று அழைத்து வந்தேன். நானே ஆண்டவர்! என்று சொல்.

அதிகாரம் 23.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல் மக்களிடம் நீ இவ்வாறு கூறு: நீங்கள் சபையாகக் கூடிப் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவருக்குரிய பண்டிகை நாள்களாவன:

ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்: புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் ஒரு வேலையும் செய்யவேண்டாம். நீங்கள் வாழும் இடமெங்கும் அது ஆண்டவருக்கான ஓய்வுநாள்.

நீங்கள் சபையாகக் கூடிக் குறிப்பிட்ட நாள்களில் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவரின் பண்டிகை நாள்களாவன:

முதல் மாதம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா.

அந்த மாதம் பதினைந்தாம் நாள் ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப் பண்டிகை: ஏழநாள் புளிப்பற்ற அப்பங்களை உண்பீர்கள்.

பண்டிகையின் முதல் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது.

ஏழுநாளும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும். ஏழாம் நாள் சபை கூடும் புனித நாள். அன்று வேலை செய்யலாகாது.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்ல வேண்டியது: நான் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் வந்து அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும்.

உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.

அதனை ஆரத்தியாக காட்டுகிற அன்று, ஆண்டவருக்கு எரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள்.

இருபதுபடி அளவுள்ள மரக்காலில் பத்தில் இரண்டு பங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப் பழ இரசத்தை நீர்மப் படையலாகப் படையுங்கள்.

உங்கள் கடவுளின் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ, உண்ணலாகாது. இது நீங்கள் வாழும் இடமெங்கும் உங்களுக்குப்பின் வரும் உங்கள் வழிமரபினரும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.

ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும்.

ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஜம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.

நீங்கள் வாழும் இடங்களிலிருந்து இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மிருதுவான மாவில் பத்தில் இரு பகுதி எடுத்து, புளிப்பேற்றி இரண்டு அப்பங்களைச் சுட்டு, அவற்றை ஆண்டவருக்கு முதற்பலனின் ஆரத்திப் பலியாகக் கொண்டு வாருங்கள்.

இந்த அப்பத்துடன், ஓராண்டான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும். உணவுப் படையலோடும் நீர்மப் படையலோடும் ஆண்டவருக்கு எரிபலியாகச் செலுத்துங்கள். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலியாக இருக்கும்.

வெள்ளாட்டுக் கிடாய்களில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், ஓராண்டான இரண்டு ஆட்டுக் குட்டிகளை நல்லுறவுப் பலியாகவும் செலுத்துங்கள்.

இந்த இரண்டு ஆட்டுக்குட்டிகளை முதற்பலனான அப்பத்துடன் குரு ஆண்டவர் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார். அவை ஆண்டவருக்குத் தூயதான காணிக்கைகள்: குருவுக்குரியவை.

அந்நாளை திருப்பேரவை நாளாக அறிவியுங்கள். எத்தகைய வேலையும் அன்று செய்யலாகாது. இது நீங்கள் வாழும் இடமெங்கும் உங்கள் தலைமுறைதோறும் கடைபிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.

உங்கள் நாட்டில் நீங்கள் அறுவடை செய்யும்போது உங்கள் வயலோரத்தில் இருப்பதை முற்றிலும் அறுத்துவிடாமலும் சிந்திக்கிடக்கும் கதிர்களைப் பொறுக்காமலும் இருங்கள். அவற்றை எளியவருக்கும் அன்னியருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறு: ஏழாம் மாதம் முதல்நாள் உங்களுக்கு ஓய்வு நாள்: அதைத் திருப்பேரவையாகக் கூடி எக்காளம் ஊதிக் கொண்டாடுங்கள்.

எத்தகைய வேலையும் அன்று செய்யாமல் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள்.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

அந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள், பாவக் கழுவாய் நாள்: புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் உங்களையே தாழ்த்திக்கொண்டு, ஆண்டவருக்கு எரிபலி செலுத்த வேண்டும்.

அந்த நாளில் எத்தகைய வேலையும் செய்யலாகாது. ஏனெனில், அது கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் உங்களுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாள்.

அந்த நாளில் தம்மைத் தாழ்த்திக்கொள்ளாத எந்த மனிதரும் தம் இனத்தில் இராதபடி அழிக்கப்படுவார்.

அந்த நாளில் யாராவது ஏதாவது வேலை செய்தால், அவரை அவர் இனத்திலிருந்து அழித்துவிடுவேன்.

நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. இது உங்கள் தலைமுறைதோறும் நீங்கள் வாழுமிடங்கள் எல்லாம் பின்பற்ற வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.

அன்று உங்களுக்கு முழுமையான ஓய்வு நாள்: அன்று உங்களைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். அந்த மாதத்தின் ஒன்பதாம் நாளினை மாலைமுதல் மறுநாள் மாலை வரை, ஓய்வுநாளாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியது: ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளன்று ஆண்டவரின் கூடாரப்பெருவிழா தொடங்குகின்றது. அது ஏழு நாள்கள் தொடரும்.

முதல்நாள் திருப்பேரவை கூடும் நாள்: அன்று எத்தகைய வேலையையும் செய்யவேண்டாம்.

ஏழு நாள்களும் ஆண்டவருக்கு நெருப்புபலி செலுத்துங்கள். எட்டாம் நாளன்று திருப்பேரவை கூடும்: அன்றும் ஆண்டவருக்கு நெருப்புப்பலி செலுத்துங்கள். அது நிறைவுநாள். அன்று எத்தகைய வேலையையும் செய்யலாகாது.

ஓய்வுநாளில் ஆண்டவருக்குச் செலுத்தும் காணிக்கைகள், நேர்ச்சைகள், தன்னார்வப் பலிகள் தவிர,

அந்தந்த நாள்களுக்கு ஏற்ப, எரிபலி, உணவுப்படையல், இரத்தப்பலி, நீர்மப்படையல் முதலிய பலிகளைச் செலுத்தத் தக்கதாகவும் சபையாய்க் கூடி அந்த நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள். இவையே நீங்கள் கொண்டாட வேண்டிய விழாக்கள்.

நிலத்தின் பலனைச் சேகரிக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள்விழா: அது ஏழு நாளளவு கொண்டாடப்பட வேண்டும். முதல் நாளும், எட்டாம் நாளும் ஓய்வு நாள்கள்.

முதல் நாள், கவர்ச்சிகரமான மரங்களின் பழங்களையும், போ£ச்ச ஓலை, மற்றும் கொழுமையான தளிர்களையும், அலரி இலைகளையும் கொண்டு வந்து, ஆண்டவர் திருமுன் மகிழ்ந்திருங்கள்.

ஆண்டுதோறும் ஏழு நாளளவு இப்பெருவிழா கொண்டாடப்படவேண்டும். ஏழாம் மாதத்தில் அது கொண்டாடப்படவேண்டும். இது நீங்கள் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.

ஏழு நாள் கூடாரங்களில் குடியிருங்கள்: இஸ்ரயேலில் பிறந்த யாவரும் அவ்வாறே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும்.

இஸ்ரயேலரை எகிப்திலிருந்து நான் கொண்டுவந்தபோது, அவர்கள் கூடாரங்களில் வாழ்ந்தார்கள் என்பதை இதன்மூலம் உன் வழிமரபினர் அறிந்துகொள்வர். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

இவ்வாறு மோசே ஆண்டவரின் விழாக்களின் வரலாற்றை இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

அதிகாரம் 24.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

எப்போதும் குத்துவிளக்கு எரிந்துகொண்டிருக்க, தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டு வர இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு.

சந்திப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைத் திரைக்கு வெளியே, மாலைமுதல் காலைவரை எப்போதும் அது ஆண்டவருக்கு முன் எரிந்துகொண்டிருக்க வேண்டும். இது உங்கள் வழிமரபினருக்கு என்றுமுள நியமம் ஆகும்.

ஆண்டவர் திருமுன் இருக்கும் பசும்பொன் குத்துவிளக்குத் தண்டின் மேலிருக்கிற கிளைவிளக்குகளை எப்போதும் எரியவிட வேண்டும்.

இருபதுபடி அளவுள்ள மரக்காலில் பத்தில் இரண்டு பங்கு மிருதுவான மாவில் செய்யப்பட்ட பன்னிரண்டு அப்பங்களைச் சுட்டு,

அவற்றை நீ ஆண்டவர் திருமுன் பசும்பொன் மேசையில் அடுக்குக்கு ஆறு வீதம் இரண்டு அடுக்காக வைக்க வேண்டும்.

அவற்றின்மேல் வாசனைப்பொடி தூவ வேண்டும்: அது அப்பத்திற்கு மாற்றான நெருப்புப்பலி.

இது என்றுமுள உடன்படிக்கை: இதை இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெற்று, ஓய்வு நாள்தோறும் ஆண்டவரின் திருமுன் அடுக்கி வைக்க வேண்டும்.

அது ஆரோனுக்கும் அவன் மைந்தர்க்கும் உரியது. அதைத் தூயகத்திலேயே உண்ண வேண்டும். ஏனெனில் அது தூயதின் தூயது. ஆண்டவரின் நெருப்புப்பலிகளில் அது அவர்களுக்குச் சேர வேண்டிய உரிமை ஆகும்.

இஸ்ரயேல் இனத்துப் பெண்ணுக்கும் எகிப்திய ஆணுக்கும் மகனாகப் பிறந்த ஒருவன் இஸ்ரயேல் மக்களோடு வந்திருந்தான். அவனுக்கும் இஸ்ரயேல் ஆண் ஒருவனுக்கும் பாளையத்தில் சண்டை ஏற்பட்டது.

இஸ்ரயேல் பெண்ணின் மகன் ஆண்டவரின் திருப்பெயரை இகழ்ந்தான்: எனவே அவனை மோசேயிடம் கொண்டுவந்தனர். அவன் தாயின் பெயர் செலோமித்து: அவள் தாண்குலத்தைச் சார்ந்த திப்ரியின் மகள்.

ஆண்டவரின் திருவுளம் அவர்களுக்கு வெளிப்படுத்தப்படும்வரை அவனைக் காவலில் வைத்தனர்.

அப்போது ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இகழ்ந்தவனைக் குடியிருப்பு எல்லைக்கு வெளியே கொண்டுசென்று அவனது பழிப்புரையைக் கேட்டவர்களெல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையில் வைக்கட்டும். பின்னர் சபை அனைத்தும் அவனைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும்.

எவராவது கடவுளை இகழ்ந்தால், அவர் தம் பாவத்தைச் சுமப்பார் என்று இஸ்ரயேல் மக்களிடம் சொல்.

ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை செய்யப்படுவார்: சபையார் கல்லாலெறிவர். அன்னியரோ, நாட்டினரோ, யார் எனினும் திருப்பெயரை இகழ்கிறவர் கொல்லப்படுவார்.

மனிதரைக் கொல்பவர் கொலை செய்யப்படுவார்.

விலங்குகளைக் கொல்பவர் விலங்குக்கு விலங்கு திரும்பக் கொடுக்க வேண்டும்.

தமக்கு அடுத்திருப்பவருக்குக் காயம் விளைவித்தால், அவருக்கும் அப்படியே செய்யப்படும்.

முறிப்புக்கு முறிப்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்: இதுபோன்றே காயம் விளைவித்தவருக்கும் செய்யப்படும்.

விலங்கைக் கொன்றால் பதிலாகக் கொடுக்க வேண்டும்: மனிதரைக் கொன்றால் கொலை செய்யப்பட வேண்டும்.

அயலாருக்கும், நாட்டினருக்கும், ஒரேவிதமான நியாயம் வழங்கவேண்டும். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

அப்படியே இறைவனை இகழ்ந்தோனைக் குடியிருப்பு எல்லைக்கு வெளியே கொண்டு போய் அவனைக் கல்லாலெறியுமாறு மோசே கட்டளையிட்டார். ஆண்டவர் மோசேயிடம் கூறியபடி அவர்கள் செய்தார்கள்.

அதிகாரம் 25.

ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது:

நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: நான் உங்களுக்கு வழங்கும் நாட்டில் நீங்கள் வந்து சேரும்போது, நாடு ஆண்டவருக்கென்று ஓய்வு நாளைக் கொண்டாட வேண்டும்.

ஆறு ஆண்டுகள் வயலைப் பயிரிட்டுத் திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்கி அவற்றின் பலனைச் சேர்ப்பாய்.

ஏழாம் ஆண்டு ஆண்டவருக்காக ஓய்ந்திருக்கும் ஆண்டு, நிலத்துக்கும் ஓய்வு வேண்டும். வயலைப் பயிரிடாமலும், திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்காமலும் இருங்கள்.

தானாய் விளைந்த பயிரை அறுக்காமலும், கிளை நறுக்காத திராட்சைச் செடிகளிலிருந்து பழங்களைச் சேர்க்காமலும் இருக்க வேண்டும். அது நிலத்துக்கு ஓய்வு ஆண்டு.

உனக்கும் உன் பணியாளனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலியாளுக்கும், உன்னிடையே தங்கியிருக்கும் அன்னியனுக்கும் ஓய்வு நிலப் பயிர்விளைச்சல் உணவாயிருக்கட்டும்.

வீட்டு விலங்குகளுக்கும் உன் நாட்டிலுள்ள காட்டு விலங்குகளுக்கும் அவையே உணவு.

தொடர்ந்து வரும் ஏழு ஓய்வு ஆண்டுகளை ஏழேழு ஆண்டுகளாக ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும்.

ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்: பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச்செய்யுங்கள்.

ஜம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப்பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.

ஜம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு: அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்: தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம்: கிளைநறுக்காத திராட்சைச் செடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம்.

ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு: அது உங்களுக்குத் தூயது. நிலத்தினின்று அவ்வப்போது கிடைக்கும் பலனை உண்ணுங்கள்.

அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்லவேண்டும்.

உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள்.

யூபிலி ஆண்டிற்குப் பின், ஆண்டுகளைக் கணக்கிட்டு அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கலாம். பயன்படுத்தும் ஆண்டுகளுக்கு ஏற்ப அவன் அதை உனக்கு விற்கவேண்டும்.

பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்: குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான்.

உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது. கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

கட்டளைப்படி நடங்கள்: என் நியமங்களைக் கடைப்பிடிப்பதில் கவனமாயிருங்கள், அப்போது நாட்டில் நலமாய்க் குடியிருப்பீர்கள்.

நிலமும் பலனைத் தருவதனால் வயிறார உண்டு பாதுகாப்புடன் நாட்டில் வாழ்வீர்கள்.

விதைக்காமலும் அறுவடை செய்யாமலும் இருந்தால் ஏழாம் ஆண்டு எதனை உண்போம்? என்று கேட்பீர்களானால்,

ஆறாம் ஆண்டு, நிலம் மூன்றாண்டுக்குரிய விளைச்சலைக் கொடுக்குமாறு என் ஆசியை அனுப்புவேன்.

எட்டாம் ஆண்டு விதை விதைத்து, ஒன்பதாம் ஆண்டு விளைச்சல் கிடைக்கும்வரை பழைய விளைச்சலையே உண்பீர்கள்.

நிலத்தை அறுதியாய் விற்றுவிட வேண்டாம். ஏனெனில் நிலம் என்னுடையது. நீங்களோ என்னைப் பொறுத்தவரையில் அன்னியரும் இரவற்குடிகளுமே.

நீங்கள் காணியாட்சியாய்க் கொண்டுள்ள நாடு எங்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.

சகோதரருள் ஒருவன் ஏழ்மைக்கு உட்பட்டு, அவனுடைய சொத்தில் எதையேனும் விற்றால், அவனுடைய முறைஉறவினனான மீட்பன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கட்டும்.

மீட்க மீட்பன் இல்லாதவனுக்கு பின்னர் மீட்க வாய்ப்பும் வசதியும் ஏற்பட்டால் கீழ்க்கண்டவாறு அவன் மீட்பானாக:

விற்ற ஆண்டிலிருந்து கணக்கிட்டு, அதற்கான தொகையைத் தள்ளி, வாங்கினவனுக்கு மீதித் தொகையைக் கொடுத்து, மீண்டும் தன் நிலத்திற்குத் திரும்பி வருவான்.

திரும்பக் கொடுக்க வாய்ப்பில்லாமற்போனால், யூபிலி ஆண்டு மட்டும், அது வாங்கினவனிடமே இருக்கும். யூபிலி ஆண்டிலோ அவன் தன் நிலபுலங்களுக்குத் திரும்பிவர அவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

அரண்சூழ் நகரில் குடியிருக்கத்தக்க வீட்டைவிற்றால், விற்றபிறகு மீட்பதற்கான கெடு ஓராண்டு: அதற்குள் மீட்டுக் கொள்ள வேண்டும்.

ஓராண்டிற்குள் மீட்கப்படவில்லையெனில், அரண்சூழ் நகரில் உள்ள அந்த வீடு, வாங்கியவனுக்கும் அவன் வழிமரபினருக்கும் என்றென்றும் உரிமை ஆகிவிடும். யூபிலி ஆண்டில் அதைத் திருப்ப முடியாது.

அரணற்ற கிராமத்து வீடுகளோ நாட்டின் வயல் வெளிக்கு ஒப்பானவை. மீட்டெடுக்கலாம்: அல்லது யூபிலி ஆண்டில் விற்றவனுக்கே திரும்பக் கிடைக்கும்.

லேவியரின் உடைமையான நகர வீடுகளை மீட்க என்றைக்கும் அவர்களுக்கு உரிமை உண்டு.

இஸ்ரயேல் மக்கள் நடுவில் இருக்கும் லேவியரின் நகர இல்லங்கள் அவர்களின் உரிமை: அந்த உடைமைகள் மீட்கப்படத்தக்கன. அவர்களுக்குச் சொந்தமான விற்கப்பட்ட எந்த வீடும் யூபிலி ஆண்டில் திருப்பித் தரப்படும்.

நகர்களின் பொதுநிலமான வயல்வெளிகளை விற்கலாகாது. ஏனெனில், அது அவர்களுக்கு நிலையான உடைமையாகும்.

சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப்போனால், அவர்களுக்கு உதவு. அவர்கள் அன்னியர்போலும் விருந்தினர் போலும் உன்னோடு வாழட்டும்.

அவர்களிடமிருந்து வட்டியோ இலாபமோ பெறவேண்டாம். உன் கடவுளுக்கு அஞ்சி நட: உன் சகோதரர்கள் உன்னோடு வாழட்டும்.

அவர்களுக்கு உன் பணத்தை வட்டிக்குக் கொடாதே: உணவை அதிக விலைக்கு விற்காதே.

உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்து, உங்கள் கடவுளாய் இருக்கும்படி கானான் நாட்டைக் கொடுத்த நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

சகோதரர் ஏழ்மைப்பட்டு உனக்கு விலையாகிப் போனால் அவர்களை அடிமைபோல் நடத்த வேண்டாம்.

அவர் கூலியாள்போலும் விருந்தினர்போலும், உன்னோடு தங்கி யூபிலி ஆண்டுவரை உன்னிடத்தில் பணியாற்றட்டும்.

பின்னர் அவரும், அவர்தம் பிள்ளைகளும் விடுதலையாகித் தங்கள் இனத்திற்கும், மூதாதையரின் நிலபுலங்களிடத்திற்கும் திரும்பிச் செல்லட்டும்.

எகிப்திலிருந்து அழைத்துவந்த இஸ்ரயேலராகிய அவர்கள் என் வேலைக்காரர்கள்: அவர்கள் அடிமையாக விற்கப்படலாகாது.

உன் சகோதரரைக் கொடுமையாய் நடத்தாதே: உன் கடவுளுக்கு அஞ்சி நட.

உன் அடிமைகள், ஆணும் பெண்ணும், உன்னைச் சுற்றிலும் உள்ள வேற்றினத்தாரிடமிருந்து நீ அடிமைகளை விலைக்கு வாங்கலாம்.

உங்களிடம் தற்காலிகமாய்த் தங்குகிற அன்னியரின் பிள்ளைகளிலும், உங்கள் நாட்டில் உங்களிடையே பிறந்திருக்கிற அவர்களுடைய இனத்தவரிலும் உங்களுக்கு அடிமைகளை வாங்கி, உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளலாம்.

அவ்வடிமைகளை, உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகளுக்கும் பிறப்புரிமையாக்கி, என்றும் உரிமை கொண்டாடலாம். ஆனால் இஸ்ரயேல் மக்களாகிய உங்கள் சகோதரரைப் பொறுத்தமட்டில் எவரும் மற்றவரைக் கொடுமையாய் நடத்த வேண்டாம்.

அன்னியரோ உன்னிடம் தற்காலிகமாகத் தங்கியிருப்பவரோ, வசதியாக வாழும்போது, அவர்களிடம் உள்ள உன் சகோதரர்கள் ஏழையாகி, அவர்களுக்கோ அவர்களின் இனத்திற்கோ விலையாகிப் போனால்,

விலையாகிப்போன அவர்கள் மீட்கப்பட வேண்டும்: அவர்கள் உறவினருள் ஒருவர் அவர்களை மீட்கட்டும்.

அவர்களுடைய தந்தையின் சகோதரனோ, அவரின் மகனோ, அவர்களின் முறை உறவினனோ அவர்களை மீட்கட்டும்: அல்லது வசதி ஏற்படும்போது அவர்கள் தம்மைத் தாமே மீட்டுக் கொள்ளட்டும்.

அவர்களது பணிக்காலத்தை அவர்களும் அவர்களை வாங்கினவர்களும் அவர்கள் விலைப்பட்டுப்போன ஆண்டிலிருந்து யூபிலி ஆண்டுவரை கணக்கிட வேண்டும். அவர்கள் விடுதலை ஆவதற்கான விலை, கூலிக்காரன் ஒருவனுக்கு அந்த ஆண்டுகளில் கொடுக்கப்படும் கூலியைப் போலக் கணக்கிடப்படவேண்டும்.

ஆண்டுகள் மிகுதியாய் இருந்தால், மிகுதியாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

யூபிலிக்கு சில ஆண்டுகள் இருந்தால், அவற்றைக் கணக்கிட்டு அவற்றிற்கு ஏற்பச் செலுத்த வேண்டும்.

ஆண்டுதோறும் கூலிக்கு அமர்த்தப்பட்டவனைப் போல அவர்களைக் கருத வேண்டும். விலைக்கு வாங்கினவர்கள் அவர்களைக் கொடுமையாய் நடத்த இடம் கொடாதே.

இவ்விதமாய் அவர்கள் மீட்கப்படாமல் போனால், யூபிலி ஆண்டில் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் விடுதலை பெறுவர்.

ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் என் வேலைக்காரர்கள்: எகிப்திலிருந்து நான் அழைத்து வந்த என் வேலைக்¡ரர்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

அதிகாரம் 26.

நீங்கள் உங்களுக்கு எனச் சிலைகளையும் படிமங்களையும் கல்தூண்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டாம். வணங்குவதற்கெனச் கற்சிலைகளை நாட்டில் நாட்ட வேண்டாம். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

ஓய்வுநாள்களைக் கடைப்பிடித்து, என் தூயகத்திற்கு அஞ்சி வாழ்வீர்களாக! நானே ஆண்டவர்!

நீங்கள் என் நியமங்களைக் கவனமாய்க் கைக்கொண்டு, கட்டளைகளை நிறைவேற்றி அவற்றிற்கேற்ப நடந்தால்,

ஏற்ற காலத்தில் மழையை நான் பெய்யச் செய்வேன். வயல் தன் பலன்களைத் தரும்: நிலத்தின் மரங்கள் தங்கள் கனிகளைத் தரும்.

கதிர் அறுப்பு திராட்சைப்படி அறுவடைவரை இருக்கும். பழ அறுவடை பயிர் விதைப்புவரை வரும்: நீங்கள் விரும்புவனவற்றை உண்டு நாட்டில் நலமாய் வாழ்வீர்கள்.

நாட்டிற்கு அமைதி அருள்வேன். அச்சுறுத்துவாரின்றிப் படுத்துக்கொள்வீர்கள். நாட்டில் இராதபடி கொடிய விலங்குகளை ஒழிப்பேன். வாள் உங்கள் நாட்டில் உலவுவதில்லை.

உங்கள் எதிரிகளைத் துரத்தியடிப்பீர்கள்: அவர்கள் உங்கள் வாளால் வெட்டுண்டு வீழ்வர்.

உங்களில் ஜந்து பேர் நூறுபேரையும், நூறுபேர் பதினாயிரம் பேரையும் துரத்துவீர்கள்: உங்கள் எதிரிகள் உங்கள் முன்வாளால் வெட்டுண்டு அழிவர்.

நான் உங்களுக்குக் கருணைக்கண் காட்டி, உங்களைப் பலுகவும் பெருகவும் செய்து, உங்களிடமிருந்தும் என் உடன்படிக்கையை நிலைப்படுத்துவேன்.

சென்ற ஆண்டின் பழைய தானியத்தை உண்பீர்கள்: புதிய தானியத்தின் வருகையால் பழையது விலக்கப்படும்.

உறைவிடத்தை உங்கள் நடுவில் நிறுவுவேன். நான் உங்களை வெறுப்பதில்லை.

உங்கள் நடுவே நான் உலவுவேன். நானே உங்கள் கடவுள்! நீங்கள் என் மக்கள்!

நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாய் இராதபடிக்கு நான் உங்களை அவர்கள் நாட்டிலிருந்து புறப்படச்செய்தேன். உங்கள் நுகத்தடிகளை முறித்து உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே!

நீங்கள் என் சொல்லைக் கேளாமல், கட்டளைக்கு ஏற்ப நடக்காமல்,

நியமங்களைத் தள்ளிவிட்டு, நீங்கள் என் கட்டளைகளை வெறுத்து, சட்டங்களை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை முறித்துவிட்டால்,

திகிலையும் என்புருக்கி நோயையும் காய்ச்சலையும் வரப்பண்ணுவேன். அவை உங்கள் கண்களைப் பூக்கச்செய்து உயிரை உறிஞ்சும். நீங்கள் பயனில்லாமல் விதைவிதைப்பீர்கள்: எதிரிகள் பலனைத் தின்பார்கள்.

உங்கள் எதிரிகள் முன்னிலையில் முறியடிக்கப்படுமாறு எனது முகத்தை உங்களுக்கு எதிராகத் திருப்புவேன். உங்கள் பகைவர் உங்களை ஆள்வர். யாரும் துரத்தாமலே நீங்கள் ஓடுவீர்கள்.

இதன் பின்னரும் நீங்கள் என் சொல்லைக் கேட்கவில்லையெனில், நான் உங்கள் பாவங்களுக்கு ஏற்ப ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன்.

உங்கள் முரட்டுப் பெருமையை அழித்து வானத்தை இரும்பைப் போன்றும் நிலத்தை வெண்கலத்தைப்போன்றும் இறுகச் செய்வேன்.

உங்கள் ஆற்றல் வீணாகச் செலவழியும்: நாடு தன்பலனையும், நிலத்தின் மரங்கள் கனிகளையும் கொடா.

நீங்கள் என் சொல்லைக் கேட்க மனமற்று, எனக்கு எதிராகச் செயல்பட்டால் உங்கள் தவறுகளுக்குத் தக்க, ஏழு மடங்கு துன்பத்தை உங்கள் மீது வரச்செய்வேன்.

உங்களுக்குள் காட்டு விலங்குகளை வரவிடுவேன். அவை உங்கள் பிள்ளைகளை அழிக்கும். உங்கள் ஆடுமாடுகளை அழித்து, உங்களைக் குறைந்துபோகச் செய்யும். உங்கள் பாதைகள் பயன்படுத்துவோரில்லாமல் பாழாகும்.

அப்படியும், இந்தத் தண்டனையால் திருந்தாமல், எனக்கு எதிராக நீங்கள் நடந்தால்,

நான் உங்களுக்கு எதிராக நின்று, உங்கள் பாவங்களுக்கு ஏற்ப ஏழு மடங்கு தண்டனை வரச்செய்வேன்.

உடன்படிக்கையின் நீதியை நிலைநாட்டி, பழிக்குப் பழிவாங்கும் வாளை வரச்செய்வேன். உங்கள் நகர்களுக்குள் நீங்கள் வந்த பின்னர் உங்களுக்குள் கொள்ளை நோயை வரச்செய்வேன்: எதிரிகளிடம் உங்களைக் கையளிப்பேன்.

உணவு என்னும் ஆதரவை உங்களிடமிருந்து அகற்றிவிடுவேன். பத்துப்பெண்கள் ஒரே அடுப்பில் அப்பம் சுட்டு அதைச் சமநிறையாகப் பங்கிட்டுப் கொடுப்பர். நீங்கள் உண்டும் நிறைவடையமாட்டீர்கள்.

இதற்குப்பின்னும், நீங்கள் என் சொல்லுக்குக் கீழ்ப்படியவில்லை எனில்,

நான் பெரும் கோபம் கொண்டு உங்களை எதிர்த்து உங்கள் குற்றங்களுக்காக ஏழுமடங்கு தண்டிப்பேன்.

உங்கள் புதல்வர்களின் சதையையும் புதல்வியரின் சதையையும் தின்பீர்கள்.

நான் தொழுகை மேடுகளையும் தூபபீடங்களையும் தகர்த்து, உங்கள் சடலங்களை உயிரற்ற தெய்வச் சிலைகள்மீது விழச் செய்வேன். என் உள்ளம் உங்களை வெறுக்கும்.

உங்கள் நகர்கள் பாலை நிலமும், உங்கள் புனித இடங்கள் பாழ்நிலமும் ஆகும். உங்கள் பலிகளின் நறுமணம் எனக்கு உவப்பாய் இராது.

உங்கள் எதிரிகளே அதிர்ச்சி அடையும் வகையில் அவர்கள் குடியிருக்கும் உங்கள் நாட்டைப் பாழாக்குவேன்.

உங்களை உலக மக்களுக்குள்ளே சிதறடித்து, உங்களை உருவின வாளால் துரத்துவேன். உங்கள் நாடு பாழ்நிலமும் உங்கள் நகர் பாலை நிலமும் ஆகும்.

நாடு பாழாய்க் கிடக்கும். அப்போது அது தன் ஓய்வாண்டுகளை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும். அது ஓய்வடைந்து தன் ஓய்வை அனுபவித்து முடிக்கும். அப்போது நீங்கள் எதிரிகளின் நாட்டில் இருப்பீர்கள்.

நீங்கள் குடியிருந்தபோது அது ஓய்வாண்டுகளிலே ஓய்வற்று இருந்தபடியால், அது பாழாய்க் கிடக்கும் காலங்களில் ஓய்வாயிருக்கும்.

உங்கள் எதிரிகளின் நாட்டில் உங்களுள் எஞ்சியிருப்போரின் உள்ளத்தில் நான் சோர்வை ஏற்படுத்துவேன். காற்றில் பறக்கும் இலையின் ஓசைகூட அவர்களை அச்சுறுத்தும். வாளுக்குத் தப்பியோடுவதுபோல ஓடி, யாரும் துரத்தாமலேயே விழுவார்கள்.

வாளால் துரத்தப்படுவதுபோல யாரும் துரத்தாமலேயே ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள். உங்கள் எதிரிகளுக்கு முன் உங்களால் நிற்கவும் இயலாது.

வேற்றினத்தாரிடையே அழிந்து போவீர்கள். உங்கள் எதிரிகளின் நாடு உங்களை விழுங்கும்.

உங்களுள் எஞ்சியிருப்போர் எதிரிகளின் நாடுகளில் தங்கள் குற்றங்களாலும் தங்கள் மூதாதையரின் குற்றங்களாலும் சோர்வுற்று

எனக்கு எதிராக அவர்கள் செய்த குற்றங்களும், அவர்கள் மூதாதையர் செய்த குற்றங்களும்,

நான் அவர்களுக்கு எதிராகமாறி அவர்களை அவர்களின் எதிரிகளின் நாட்டிற்கு அனுப்பச்செய்தன. அதனை அவர்கள் அறிக்கையிட்டு, அப்போது அவர்கள் விருத்தசேதனம் அற்ற இதயத்தைத் தாழ்த்தி, குற்றத்திற்குக் கழுவாய் தேடினால்,

நான் யாக்கோபுடன் செய்த உடன்படிக்கையையும், ஈசாக்குடன் செய்த உடன்படிக்கையையும், ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையையும் நினைவு கூர்வேன்: நாட்டையும் நினைவுகூர்வேன்.

அவர்களின் செயலால் வெறுமையாய் விடப்பட்டு, பாழாய்ப்போன நிலம் தனது ஓய்வாண்டுகளை நிறைவாய் அனுபவிக்கும்: என் கட்டளைகளை ஏற்காததாலும் நியமங்களை வெறுத்ததாலும் தங்கள் தங்கள் குற்றங்களுக்கு அவர்கள் கழுவாய் தேடுவர்.

ஆயினும், அவர்கள் தங்கள் எதிரிகளின் நாட்டில் இருக்கும்பொழுது, என் உடன்படிக்கை பொருளற்றதாகி விடுமாறு நான் அவர்களை முற்றிலும் அழிக்கவோ புறக்கணிக்கவோ மாட்டேன். ஏனெனில், நானே அவர்களின் கடவுளாகிய ஆண்டவர்!

நான் அவர்களுடைய கடவுளாகிய வேற்றினத்தார் கண்முன்னே எகிப்திலிருந்து அவர்களின் மூதாதையரை அழைத்து வந்து அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அவர்களுக்காக நினைவுகூர்வேன், நானே ஆண்டவர் .

ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயின் மூலம் அவருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட நியமங்களும் நெறிமுறைச் சட்டங்களும் இவையே!

அதிகாரம் 27.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: ஒருவர் யாரையேனும் பொருத்தனையாகச் செலுத்தத் திட்டமிட்டிருந்தால் அவர்கள் உன் மதிப்பின்படி ஆண்டவருக்கு உரியவர்.

இருபது வயதிலிருந்து அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்மகனுக்குத் திருக்கோவில் அளவையின்படி அறுநூறு கிராம் வெள்ளி:

பெண்ணாய் இருந்தால் முன்னூற்றைம்பது கிராம்.

ஜந்து வயது முதல் இருபது வயது வரையுள்ள ஆண்பிள்ளைக்கு இருநூற்று முப்பது கிராம் பெண் பிள்ளைக்கு நூற்றுப் பதினைந்து கிராம்

ஒரு மாதம் முதல் ஜந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளைக்கு அறுபது கிராம் வெள்ளி: பெண்பிள்ளைக்கு முப்பத்தைந்து கிராம் வெள்ளி,

அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவரை நூற்று எழுபது கிராம் வெள்ளியாகவும் மூதாட்டியை நூற்றுப் பதினைந்து கிராம் வெள்ளியாகவும் மதிப்பிட வேண்டும்.

தம் மதிப்பைச் செலுத்த வாய்ப்பற்ற ஏழை எனில், குரு முன்னிலையில் அவர் வந்து நிற்க, பொருத்தனை செய்தவரின் நிதி நிலைக்கு ஏற்பக் குரு அவரை மதிப்பிடவேண்டும்.

ஆண்டவருக்குக் காணிக்கையாக பொருத்தனை செய்தது விலங்கு எனில், அது ஆண்டவருக்கெனப் பிரித்துவைக்கப்பட்டது ஆகும்.

அது மாற்றத் தகுந்தது அன்று. நல்லதுக்குப் பதில் கெட்டதையும் கெட்டதுக்குப் பதில் நல்லதையும் கொடுக்கலாகாது. ஒரு விலங்குக்குப் பதிலாக வேறொரு விலங்கைக் கொடுக்க விரும்பினால், அவை இரண்டும் ஆண்டவருக்கெனப் பிரித்துவைக்கப்பட்டவை ஆகும்.

அது பலியீடத் தகுதியற்ற தீட்டான விலங்கு எனில், அதைக் குருமுன் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்.

குரு அதன் தரத்தின் உயர்வு, தாழ்வை மதிப்பிடுவான். அவன் மதிப்பிடுவதே அதன் மதிப்பு ஆகும்.

அதனை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஜந்தில் ஒரு பங்கை மிகுதியாகச் செலுத்தவேண்டும்.

ஒருவர் நேர்ச்சையாகத் தன் இல்லத்தை ஆண்டவருக்கு நேர்ந்து கொண்டால், குரு அதன் தரத்தின் உயர்வு, தாழ்வை மதிப்பிடுவான். அவன் மதிப்பீடே அதன் மதிப்பு ஆகும்.

அதன் உடைமையாளர் அந்த வீட்டை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஜந்தில் ஒருபங்கை மிகுதியாகச் செலுத்த வேண்டும். அது மீண்டும் அவருடையது ஆகும்.

ஒருவர் தன் குடும்ப நிலத்தின் பகுதியை நேர்ந்துகொண்டால், அதன் மதிப்பு விதைப்பாட்டிற்கேற்ப இருக்க வேண்டும். ஒரு கலம் பார்லி விதைப்பாடுள்ள வயல் அறுநூறு கிராம் வெள்ளி ஆகும்.

யூபிலி ஆண்டில் தம் வயலை நேர்ச்சை செய்தால், நீ மதிக்கிறபடியே அதன் மதிப்பு இருக்கும்.

யூபிலி ஆண்டுக்குப் பின்னர் அதை நேர்ந்துகொண்டால், அடுத்த யூபிலி ஆண்டுவரை எஞ்சியுள்ள ஆண்டுகளுக்கு ஏற்ப, அதன் மதிப்பு குருவினால் கணக்கிடப்பட்டு, அதன் உண்மை மதிப்பிலிருந்து குறைக்கப்படும்.

வயலை நேர்ச்சையாகச் செலுத்தினவர் அதை மீட்க விரும்பினால், மதிப்புப் பணத்துடன் ஜந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க அது அவருடையது ஆகும்.

வயலை மீட்காமல், அதை வேறொருவருக்கு விற்றால், அதனை மீட்க இயலாது.

அது யூபிலி ஆண்டில் விடுவிக்கப்படும்போது, ஆண்டவருக்கென நேர்ந்துகொள்ளப்பட்ட நிலமாகக் கருதப்படும்: அது குருவின் உடைமை ஆகும்.

ஒருவர், தன் குடும்பச் சொத்து அல்லாத ஒது வயலை வாங்கி அதை ஆண்டவருக்கென நேர்ச்¨யாகச் செலுத்தினால்,

யூபிலி ஆண்டு மட்டும் அதற்குண்டான மதிப்பிற்கேற்ப, அதன் விலை குருவினால் கணக்கிடப்படும். அந்த மதிப்பு அன்றே ஆண்டவருக்கு நேர்ச்சையாகச் செலுத்தப்படும்.

எவரிடமிருந்து அந்த வயலை வாங்கினாரோ, அவருக்கு யூபிலி ஆண்டில் அது திருப்பிக் கொடுக்கப்படும்.

மதிப்பீடுகள் அனைத்தும் தூயகத்துச் செக்கேலின்படி கணக்கிட வேண்டும். ஒரு செக்கேல் என்பது பதினொன்றரை கிராம்.

தலையீற்று ஆண்டவருடையது. அதனை நேர்ச்சையாக்க வேண்டாம்: ஏனெனில் அது, மாடோ ஆடோ, ஆண்டவருக்கு உரியதே.

தீட்டான கால்நடையின் முதற்பிறப்பு எனில், அதன் மதிப்பினால் அதனை மீட்டு, அதனுடன் மீண்டும் ஜந்திலொரு பங்கைக் கூட்டிக்கொடுக்க வேண்டும். மீட்கப்படாவிடில் அதன் மதிப்பிற்கேற்ப அதனை விற்றுவிடலாம்.

ஒருவர் காணிக்கையாகச் செலுத்¢ய தனக்குரிய மனிதரையும், விலங்கையும், குடும்ப நிலத்தையும் ஆண்டவருக்கென நேர்ந்துவிட்டால், அவற்றுள் எதையும் விற்கவோ, மீட்டுக் கொள்ளவோ வேண்டாம். நேர்ச்சை அனைத்தும் ஆண்டவருக்கே முற்றிலுமாகப் பிரித்து வைக்கப்பட்டன.

சபிக்கப்பட்ட எவரும் மீட்கப்படலாகாது. அவர் கொல்லப்படவேண்டும்.

நிலத்தின் தானியங்களிலும், மரங்களின் கனிகளிலும் பத்திலொன்று ஆண்டவருக்குரியது. அது ஆண்டவருக்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டியதே.

அவற்றில் எதையேனும் மீட்க விரும்பினால், அதன் மதிப்போடு ஜந்தில் ஒரு பங்கைக் கூடச்செலுத்த வேண்டும்.

மேய்ச்சலுக்கு உட்பட்ட ஆடு மாடுகளின் பத்திலொன்று ஆண்டவர்க்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டும்.

எது உயர்ந்தது, எது தாழ்ந்தது எனப் பார்க்க வேண்டாம். அதை மாற்றவும் வேண்டாம்: மாற்றினால் அவை இரண்டும் ஆண்டவருக்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டாம். அவை மீட்கப்படலாகா.

இஸ்ரயேலருக்குக் கூறும்படியாக ஆண்டவர் மோசேக்கு சீனாய் மலையில் வழங்கிய கட்டளைகள் இவையே.

புத்தகம் 4. எண்ணிக்கை

அதிகாரம் 1.

இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு, இரண்டாம் மாதம், முதல் நாளன்று, சீனாய்ப் பாலைநிலத்தில் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் மோசேயுடன் பேசினார். அவர் கூறியது:

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாகக் கணக்கெடுங்கள்.

இஸ்ரயேலில் இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குச் செல்லத்தக்க அனைவரையும் அணி அணியாக நீயும், ஆரோனும் எண்ணுங்கள்.

ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவன் உங்களோடிருப்பான்: அவன் தன் மூதாதையரின் வீட்டுத் தலைவனாக இருக்க வேண்டும்.

உங்களுக்குத் துணை நிற்க வேண்டியவர்களின் பெயர்களாவன: ரூபன் குலத்திலிருந்து எலிட்சூர்: இவன் செதேயூர் மகன்:

சிமியோன் குலத்திலிருந்து செலுமியேல்: இவன் சுரிசத்தாய் மகன்:

யூதா குலத்திலிருந்து நகுசோன்: இவன் அம்மினதாபின் மகன்:

இசக்கார் குலத்திலிருந்து நெத்தனியேல்: இவன் சூவார் மகன்:

செபுலோன் குலத்திலிருந்து எலியாபு: இவன் கேலோன் மகன்:

யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் குலத்திலிருந்து எலிசாமா: இவன் அம்மிகூதின் மகன்: மனாசே குலத்திலிருந்து கமாலியேல்: இவன் பெதாசூரின் மகன்:

பென்யமின் குலத்திலிருந்து அபிதான்: இவன் கிதயோனின் மகன்:

தாண் குலத்திலிருந்து அகியசேர்: இவன் அம்மிசத்தாயின் மகன்:

ஆசேர் குலத்திலிருந்து பகியேல்: இவன் ஒக்ரானின் மகன்:

காத்து குலத்திலிருந்து எல்யாசாபு: இவன் தெகுவேலின் மகன்:

நப்தலி குலத்திலிருந்து அகிரா: இவன் ஏனானின் மகன்:

மக்கள் கூட்டமைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்களே. இவர்கள் தங்கள் மூதாதையர் குலங்களின் முதல்வர்களும் இஸ்ரயேலில் ஆயிரவர் தலைவர்களும் ஆவர்.

பெயர் குறிக்கப்பட்ட இவர்களை மோசேயும் ஆரோனும் தங்களுடன் சேர்த்துக்கொண்டனர்.

இரண்டாம் மாதம் முதல் நாளன்று அவர்கள் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுகூட்டினர். அவர்கள் தங்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக இருபதோ அதற்குமேலோ வயதுடையவர்களைப் பதிவு செய்தனர்.

ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தும் இதுவே: அவ்வாறே அவர் சீனாய்ப் பாலைநிலத்தில் அவர்களை எண்ணினார்.

இஸ்ரயேலின் தலைப்பேறான ரூபன் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக, இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்:

ரூபன் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தாறாயிரத்து ஜந்நூறு பேர்.

சிமியோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி தலைக்கட்டு வாரியாக இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குப் போகத்தக்க மொத்த ஆண்கள்:

சிமியோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஜம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு பேர்.

காத்து மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:

காத்து குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது பேர்.

யூதா மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:

யூதா குலத்தில் எண்ணப்பட்டோர் எழுபத்து நாலாயிரத்து அறுநூறு பேர்.

இசக்கார் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடம்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:

இசக்கார் குலத்தில் எண்ணப்பட்டோர் ஜம்பத்து நாலாயிரத்து நானு¡று பேர்.

செபுலோன் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:

செபுலோன் குலத்தில் எண்ணப்பட்டோர் ஜம்பத் தேழாயிரத்து நானு¡று பேர்.

யோசேப்பின் மைந்தருள் எப்ராயிம் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:

எப்ராயிம் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பதாயிரத்து ஜந்நூறுபேர்.

மனாசே மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:

மனாசே குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.

பென்யமின் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:

பென்யமின் குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தையாயிரத்து நானு¡று பேர்.

தாண் மக்களின் தலைமுறைகளில், அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:

தாண் குலத்தில் எண்ணப்பட்டோர் அறுபத்தீராயிரத்து எழுநூறு பேர்.

ஆசேர் மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:

ஆசேர் குலத்தில் எண்ணப்பட்டோர் நாற்பத்தோராயிரத்து ஜந்நூறு பேர்.

நப்தலி மக்களின் தலைமுறைகளில் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்கள் மொத்தம்:

நப்தலி குலத்தில் எண்ணப்பட்டோர் ஜம்பத்து மூவாயிரத்து நானு¡று பேர்.

மூதாதையர் ஒவ்வொருவரின் வீட்டு முதல்வர்களான தலைவர் பன்னிருவரின் துணையுடன் மோசேயாலும் ஆரோனாலும் எண்ணப்பட்டவர்கள் இவர்களே.

ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை:

மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஜந்நூற்றைம்பது பேர்.

ஆனால் இவர்களோடு லேவியர் தங்கள் மூதாதையர் குலப்படி எண்ணப்படவில்லை.

ஏனெனில் ஆண்டவர் மோசேயிடம் சொன்னது:

லேவி குலத்தை மட்டும் நீ எண்ணவேண்டாம்: இஸ்ரயேல் மக்களுக்குள் அவர்களை நீ கணக்கெடுப்புச் செய்ய வேண்டாம்:

லேவியரை உடன்படிக்கைக் கூடாரம், அதன் பணிப்பொருள்கள், அதற்குச் சொந்தமான அனைத்துப் பொருள்கள் ஆகியவற்றின் பொறுப்பாளராக ஏற்படுத்து: அவர்கள் கூடாரத்தையும் அதன் பணிப் பொருள்களையும் சுமந்து செல்ல வேண்டியவர்கள்: அவர்கள் கூடாரத்தைச் சுற்றித் தங்கியிருந்து அதைப் பேணி வருவார்கள்.

புறப்பட வேண்டிய நேரத்தில் லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பர்: கூடாரம் இடிக்கும்போது லேவியரே அதனை எழுப்பி நிறுத்துவர். வேறு எவனும் அதன் அருகில் வந்தால் அவன் கொல்லப்படுவான்.

இஸ்ரயேல் மக்கள் அணி அணியாகச் சென்று ஒவ்வொருவரும் தம் பாளையம், கொடி இவற்றுக்கேற்பத் தங்கியிருப்பர்.

லேவியரோ இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் மேல் சினம் வராதபடி உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றிப் பாளையமிறங்குவர்: உடன்படிக்கைக் கூடாரத்தைக் காவல் செய்ய வேண்டியவரும் லேவியரே.

இஸ்ரயேல் மக்கள் இவ்வாறே செய்தனர்: ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவர்கள் செய்தனர்.

அதிகாரம் 2

ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:

இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் கொடி, மூதாதையர் வீட்டுச் சின்னங்கள் இவற்றின்படி பாளையமிறங்குவர்: எல்லாப் பக்கத்திலிருந்தும் சந்திப்புக் கூடாரத்தை நோக்கியவாறு அவர்கள் பாளையமிறங்குவர்.

கிழக்கே கதிரவன் உதயத்தை நோக்கிப் பாளையமிறங்க வேண்டியவர் யூதாவின் கொடியையுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர். யூதா மக்களின் தலைவன் நக்சோன்: இவன் அம்மினதாபின மகன்.

எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை எழுபத்து நாலாயிரத்து அறுநூறு.

அவனையடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் இசக்கார் குலத்தார்: இசக்கார் மக்களின் தலைவன் நெத்தனியேல்: இவன் சூவாரின் மகன்:

எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஜம்பத்து நாலாயிரத்து நானு¡று.

அடுத்து வருவது செபுலோன் குலம்: செபுலோன் மக்களின் தலைவன் எலியாபு: இவன் கேலோனின் மகன்:

எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஜம்பத்தேழாயிரத்து நானு¡று.

இவ்வாறாக யூதா அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத்தொகை ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரத்து நானு¡று: இவர்கள் முதலாவதாக அணிவகுத்துச் செல்வர்.

தெற்கே பாளையமிறங்க வேண்டியவர் ரூபனின் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்: ரூபன் மக்களின் தலைவன் எலிட்சூர், இவன் செதேயூரின் மகன்:

எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தாறாயிரத்து ஜந்நூறு.

இவனையடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் சிமியோன் குலத்தார்: சிமியோன் மக்களின் தலைவன் செலுமியேல், இவன் சுரிசத்தாயின் மகன்:

எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஜம்பத்தொன்பதாயிரத்து முந்நூறு.

அடுத்து வருவது காத்து குலம்: காத்து மக்களின் தலைவன் எல்யாசாபு, இவன் இரகுவேலின் மகன்:

எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது.

இவ்வாறாக ரூபன் அணிகளில் எண்ணப்பட்டோரின் மொத்தத் தொகை ஒரு இலட்சத்து ஜம்பத்தோராயிரத்து நானு¡ற்றைம்பது: இவர்கள் இரண்டாவதாக அணிவகுத்துச் செல்வர்.

அதன் பின் சந்திப்புக்கூடாரம் லேவியர் அணியினரோடு ஏனைய அணியினர் நடுவே செல்லும். அவர்கள் பாளையமிறங்கும்போது செய்வது போன்றே தம் தம் வரிசையில் தம் தம் கொடியேந்தி அணிவகுத்துச் செல்வர்.

மேற்கே பாளையமிறங்க வேண்டியவர் எப்ராயிம் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்: எபிராயிம் மக்களின் தலைவன் எலிசாமா: இவன் அம்மிகூதின் மகன்.

எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பதாயிரத்து ஜந்நூறு.

அவனையடுத்திருப்போர் மனாசே குலத்தார்: மனாசே மக்களின் தலைவன் கமாலியேல், இவன் பெதாசூரின் மகன்:

எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை முப்பத்தீராயிரத்து இருநூறு.

அடுத்து வருவது பென்யமின் குலம்: பென்யமின் மக்களின் தலைவன் அபிதான்: இவன் கிதயோனியின் மகன்:

எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை முப்பத்தையாயிரத்து நானு¡று.

இவ்வாறாக எப்ராயிம் அணிகளில் எண்ணப்பட்டோரின் தொகை ஒரு இலட்சத்து எண்ணாயிரத்து நூறு. அவர்கள் மூன்றாவதாக அணிவகுத்துச் செல்வர்.

வடக்கே பாளையமிறங்க வேண்டியவர் தாண் கொடியுடைய பாளையத்தவரும் அவர்களைச் சார்ந்த அணியினருமாவர்: தாண் மக்களின் தலைவன் அகியேசர்: இவன் அம்மி சத்தாயின் மகன்:

எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை அறுபத்தீராயிரத்து எழுநூறு.

அவனை அடுத்துப் பாளையமிறங்க வேண்டியவர் ஆசேர் குலத்தார்: ஆசேர் மக்களின் தலைவன் பகியேல், இவன் ஒக்ரானின் மகன்:

எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை நாற்பத்தோராயிரத்து ஜந்நூறு.

அடுத்து வருவது நப்தலிக் குலம்:நப்தலி மக்களின் தலைவன் அகிரா: இவன் ஏனானின் மகன்:

எண்ணிக்கைப்படி அவன் அணியினர் தொகை ஜம்பத்து மூவாயிரத்து நானு¡று.

இவ்வாறாக, தாண் அணிகளில் எண்ணப்பட்டோரின் தொகை ஒரு இலட்சத்து ஜம்பத்தேழாயிரத்து அறுநூறு. இவர்கள் அணிவகுப்பில் இறுதியாகச் செல்வர்.

தங்கள் மூதாதையர் வீடுகள் வாரியாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்கள் இவர்களே: அனைத்துப் பாளையங்களிலும் தங்களைச் சார்ந்த அணியினரோடு எண்ணப்பட்டோரின் தொகை ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஜந்நூற்றைம்பது.

ஆனால் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி லேவியர் இஸ்ரயேல் மக்களுள் எண்ணப்படவில்லை.

ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரயேல் மக்கள் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கொடிகளைச் சுற்றிப் பாளையமிறங்கி தங்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின்படி அணிவகுத்துச் சென்றனர்.

அதிகாரம் 3

ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயுடன் பேசிய காலத்தில் ஆரோன், மோசே ஆகியோரின் வழிமரபினர் இவர்களே:

ஆரோனின் புதல்வர் பெயர்கள் இவையே: தலைமகன் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர்.

இவை குருத்துவப் பணிக்கென அருள்பொழிவு பெற்றுத் திருநிலைப்படுத்தப்பட்ட குரு ஆரோனின் புதல்வர் பெயர்கள்:

ஆனால் நாதாபும் அபிகூவும் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் திருமுன் வேற்று நெருப்பைக் கொண்டு வந்ததால் ஆண்டவர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டனர்: அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே எலயாசரும் இத்தாமரும் தங்கள் தந்தை ஆரோன் முன்னிலையில் குருக்களாகப் பணியாற்றினர்.

மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

லேவிக் குலத்தை அழைத்து வந்து குரு ஆரோன் முன் அவர்களை நிறுத்து: அவர்கள் அவனுக்குப் பணிவிடை செய்யட்டும்.

திருஉறைவிடத்தில் அவர்கள் பணிசெய்யும்போது, சந்திப்புக் கூடாரத்தின் முன் அவனுக்காகவும் அனைத்து மக்கள் கூட்டமைப்புக்காகவும் தங்களுக்குரிய பொறுப்பை நிறைவேற்றுவர்.

சந்திப்புக் கூடாரத்தின் அனைத்துப் பணிப் பொருட்களுக்கும் பொறுப்பு அவர்களே: திருஉறைவிடத்தில் அவர்கள் பணி செய்கையில் இஸ்ரயேல் மக்களுக்கானத் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவர்.

லேவியரை ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் ஒப்படைத்துவிடு: இஸ்ரயேல் மக்களுள் அவர்கள் முற்றிலும் அவனுக்குக் கொடுக்கப்பட்டடிருக்கிறார்கள்.

நீ ஆரோனையும் அவன் புதல்வரையும் அவர்கள் குருத்துவப் பொறுப்புகளை நிறைவேற்றுமாறு நியமனம் செய். ஆனால் வேறு எவனும் நெருங்கி வந்தால் அவன் கொல்லப்படுவான்.

மீண்டும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இதோ! நான் இஸ்ரயேல் மக்களிலிருந்து லேவியரைப் பிரித்தெடுத்துள்ளேன்: இஸ்ரயேல் மக்களில் கருப்பையைத் திறக்கும் தலைப்பேறனைத்திற்கும் இவர்கள் ஈடாக இருப்பார்கள். லேவியர் எனக்கே உரியவர்.

ஏனெனில் எல்லாத் தலைப்பேறும் என்னுடையது. எகிப்து நாட்டில் தலைப் பேறனைத்தையும் நான் சாகடித்த நாளில் இஸ்ரயேலின் தலைப்பேறனைத்தையும் மனிதரையும் விலங்கையும், எனக்கெனப் புனிதப்படுத்தினேன்: அவர்கள் எனக்கே உரியவர்கள்: நானே ஆண்டவர்.

பின்னர் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக லேவியின் புதல்வரைக் கணக்கெடு: ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஒவ்வோர் ஆண்பிள்ளையையும் நீ எண்ண வேண்டும்.

ஆண்டவர் கட்டளையிட்டுக் கூறிய அவர் வார்த்தையின்படி மோசே அவர்களை எண்ணினார்.

பெயர் வாரியாக லேவியின் புதல்வர் இவர்களே: கேர்சோன், கோகாத்து, மொராரி ஆகியோர்.

குடும்ப வாரியாகக் கேர்சேன் புதல்வர் பெயர்களாவன: லிப்னி, சிமயி.

குடும்ப வாரியாக கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எபிரோன், உசியேல் ஆகியோர்.

குடும்ப வாரியாக மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி ஆகியோர். மூதாதையர் வீடு வாரியாக லேவியர் குடும்பங்கள் இவைகளே.

கேர்சோனிலிருந்து லிப்னியர், சிமயியர் ஆகிய குடும்பங்கள் தோன்றின: இவை கேர்சோனியக் குடும்பங்கள்.

எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் அனைவரின் தொகை ஏழாயிரத்து ஜந்நூறு.

திருஉறைவிடத்துக்குப் பின்னால் மேற்கே பாளையமிறங்க வேண்டியவர்கள் கேர்சோனியக் குடும்பங்கள்.

இவர்களோடிருக்கும் எல்யாசாபு கேர்சோனிய மூதாதையர் வீட்டுக் குடும்பங்களின் தலைவன், இவன் இலாவேலின் மகன்.

சந்திப்புக் கூடாரத்தில் கேர்சோன் புதல்வரின் பொறுப்பில் உள்ளவை: திருஉறைவிடம், கூடாரத்துடன் அதன் அடைப்பு, சந்திப்புக் கூடாரத்தின் வாயில் திரை,

தளத்திலுள்ள தொங்கு திரைகள், திருஉறைவிடத்தையும் பலிபீடத்தையும் சுற்றியுள்ள வாயில்திரை, அதன் கயிறுகள் ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.

கோகாத்திலிருந்து தோன்றியவை அம்ராமியர் குடும்பம், எபிரோனியர் குடும்பம், உசியேலியர் குடும்பம் ஆகியவை. இவை கோகாத்தியர் குடும்பங்கள்.

எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் எண்ணாயிரத்து அறுநூறு பேர்: இவர்கள் தூயகத்திற்குரிய பொறுப்புகளை நிறைவேற்றி வந்தனர்.

திருஉறைவிடத்துக்குத் தெற்கே பாளையமிறங்க வேண்டியவர்கள் கோகாத்துப் புதல்வர் குடும்பங்கள்.

இவர்களோடிருக்கும் எலிட்சாபான் கோகாத்தியக் குடும்பங்களின் மூதாதையர் வீட்டுத் தலைவன்: இவன் உசியேலின் மகன்.

அவர்களின் பொறுப்பில் உள்ளவை பேழை, மேசை, விளக்குத் தண்டு, பலிபீடங்கள், குரு தூயகப் பணிகளுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள், திரை ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.

மேலும் குரு ஆரோன் புதல்வன் எலயாசர் லேவியர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்: தூயகத்துக்குப் பொறுப்பானவர்களை மேற்பார்வை செய்ய வேண்டியவன் இவனே.

மெராரியிடமிருந்து தோன்றியவை மக்லியர் குடும்பமும் மூசியர் குடும்பமுமாகும். இவை மெராரியின் குடும்பங்கள்.

எண்ணிக்கைப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்கள் அனைவரின் தொகை ஆறாயிரத்து இருநூறு.

மொராரி குடும்பங்களின் மூதாதையர் வீட்டுத் தலைவன் சூரியேல்: இவன் அபிகயிலின் மகன்: இவர்கள் திருஉறைவிடத்துக்கு வடக்கே பாளையமிறங்க வேண்டியவர்கள்.

மெராரி புதல்வரின் பொறுப்பில் ஒப்புவிக்கப்பட்டவை: திருஉறைவிடத்தின் சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதங்கள், அனைத்துத் துணைக்கலன்கள் ஆகியவையும் அவை தொடர்பான அனைத்துப் பணிகளுமே.

சுற்றுத்தளத் தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், கயிறுகள் ஆகியவையும் அவர்கள் பொறுப்பே.

திருஉறைவிடத்தின் கிழக்கே சந்திப்புக் கூடாரத்தின் முன் கதிரவன் உதிக்கும் திசையில் பாளையமிறங்க வேண்டியோர் மோசே, ஆரோன், அவன் புதல்வர், திருஉறைவிடத்தில் இஸ்ரயேல் மக்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்திற்கும் பொறுப்பும் உரிமையும் இவர்களுக்கே உண்டு. வேறு எவனும் நெருங்கி வந்தால் அவன் கொல்லப்படுவான்.

ஆண்டவர் வார்த்தைப்படி மோசேயும் ஆரோனும் லேவியரைக் குடும்பங்கள் வாரியாக எண்ணயபோது அவர்களில் ஒரு மாதமும் அதற்கு மேலுமான ஆண்பிள்ளைகள் அனைவரின் தொகை இருபத்தீராயிரம்.

மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களில் ஒரு மாதமும் அதற்கு மேலுமான தலைப்பேறான ஆண்கள் அனைவரையும் அவர்கள் பெயர்கள் வாரியாகக் கணக்கெடு.

இஸ்ரயேல் மக்களுள் தலைப்பேறான ஆண்கள் அனைவருக்கும் பதிலாக லேவியரையும் இஸ்ரயேல் மக்களுடைய கால்நடைகளின் தலையீற்றுகள் அனைத்துக்கும் பதிலாக லேவியரின் கால்நடைகளையும் எனக்கென்று பிரித்தெடு: நானே ஆண்டவர்.

ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே இஸ்ரயேல் மக்களில் தலைப்பேறுகள் அனைத்தையும் எண்ணினார்.

பெயர்களின் எண்ணப்படி ஒரு மாதமும் அதற்கு மேலுமான தலைப்பேறான ஆண்கள் அனைவரின் தொகை இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று.

பின் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல் மக்களுள் எல்லாத் தலைப்பேறுகளுக்கும் பதிலாக லேவியரையும் அவர்கள் கால்நடைகளுக்குப் பதிலாக லேவியரின் கால்நடைகளையும் பிரித்தெடு: லேவியர் எனக்கே உரியவர்: நானே ஆண்டவர்.

இஸ்ரயேல் மக்களின் தலைப்பேறுகளில் எண்ணிக்கைக்கு மேலாக, மீட்கப்பட வேண்டியவர் இருநூற்று எழுபத்து மூன்றுபேர்.

இருபது கேரா மதிப்புடைய தூயகத்து செக்கேலில் தலைக்கு ஜந்து செக்கேல் வீதம் வாங்கிக்கொள்.

எண்ணிக்கைக்கு மேலாக இருப்போர் மீட்கப்படுவதற்காக வரும் இப்பணத்தை நீ ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் கொடுக்க வேண்டும்.

லேவியரால் மீட்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாயிருந்தோரிடமிருந்து வந்த மீட்புப் பணத்தை மோசே எடுத்துக் கொண்டார்.

இஸ்ரயேல் மக்களுள் தலைப்பேறாயிருந்தோரிடமிருந்து அவர் எடுத்த பணம் தூயகத்து செக்கேல் கணக்குப்படி ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து செக்கேல்.

ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டுக் கூறியபடியே மோசே மீட்புப் பணத்தை ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் கொடுத்தார்.

அதிகாரம் 4

ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:

லேவியின் புதல்வர்களிலிருந்து கோகாத்தின் புதல்வரை அவர்கள் மூதாதையர், வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.

சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஜம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு.

சந்திப்புக் கூடாரத்தில் கோகாத்துப் புதல்வரின் மிகப் புனிதமானப் பணி இதுவே:

பாளையத்தினர் பறப்பட்டுச் செல்லும்போது ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே சென்று மூடுதிரையை இறக்கி அதனைக் கொண்டு உடன்படிக்கைப் பேழையை மூடுவர்.

பின் வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடி கருநீலமான ஒரு துணியை அதன் மேல் விரித்து நிலைக்கால்களில் வைப்பர்.

திருமுன் அப்பத்து மேசையின் மேல் அவர்கள் ஒரு நீலத்துணியை விரிப்பர்: அதன் மேல் தட்டுகள், பூக்கரண்டிகள், கிண்ணங்கள் ஆகியவற்றை வைப்பர்: அப்பம் அதன் மேல் எப்போதும் இருக்கும்:

பின் அவர்கள் அவற்றின்மேல் ஒரு கருஞ்சிவப்புத் துணியை விரித்து, அவற்றை வெள்ளாட்டுத் தோலால் மூடி, நிலைக்கால்களில் வைப்பர்.

பின்னர் அவர்கள் ஒரு நீலத்துணியை எடுத்து அதை விளக்குத்தண்டு, அதன் விளக்குகள், அதன் திரிகள், அதன் சாம்பல் தட்டுகள் ஆகியவற்றின் மேலும் எண்ணெய்க்காகப் பயன்படுத்தும் பாத்திரங்கள் அனைத்தின் மேலும் விரிப்பர்.

அவர்கள் அதனை அதன் துணைக்கலன்களோடு ஒரு வெள்ளாட்டுத் தோலால் மூடி அதனைச் சுமக்கும் சட்டத்தின் மேல் வைப்பர்.

பின் பொற்பீடத்தின் மேல் ஒரு நீலத்துணியை அவர்கள் விரித்து, வெள்ளாட்டுத் தோலால் அதனை மூடிநிலைக்கால்களில் வைப்பர்.

தூயகப்பணியில் பயன்படுத்தும் அனைத்துப் பாத்திரங்களையும் அவர்கள் எடுத்து, அவற்றை ஒரு நீலத் துணியில் வைத்து வெள்ளாட்டுத் தோலால் அவற்றை மூடிச் சுமக்கும் சட்டத்தின்மேல் வைப்பர்.

அவர்கள் பலிபீடத்திலிருந்து சாம்பலை வெளியே எடுத்து அதன் மேல் ஊதாத் துணியொன்றை விரிப்பர்.

திருப்பணியில் பயன்படுத்தும் துணைக்கலன்களான தீச்சட்டிகள், முள்குறடுகள், சாம்பற் கரண்டிகள், கலங்கள் ஆகிய பலிபீடத்துத் துணைக்கலன்கள் அனைத்தையும் அவர்கள் அதன்மேல் வைப்பர்: வெள்ளாட்டுத்தோலை அதன் மேல் பரப்பி மூடி, அதன் நிலைக்கால்களில் வைப்பர்.

ஆரோனும் அவன் புதல்வரும் திருஉறைவிடத்தையும் திருஉறைவிடத்துப் பணிக்கலன்கள் அனைத்தையும் மூடியதும் பாளையத்தினர் புறப்பட்டுச் செல்வர். உடனே கோகாத்தின் புதல்வர் இவற்றைத் தூக்கிச் செல்ல வருவர்: ஆனால் சாகாதபடிக்குத் தூய பொருள்களை அவர்கள் தொடக்கூடாது. மீறினால் அவர்கள் சாவுக்கு உள்ளாவார்: கோகாத்தின் புதல்வர் எடுத்துச் செல்ல வேண்டிய சந்திப்புக் கூடாரப் பொருள்கள் இவையே.

விளக்கிற்கான எண்ணெய், வாசனைத் தூபம், அன்றாட உணவுப் படையல், திருப்பொழிவு எண்ணெய் ஆகியவற்றின் பொறுப்பு குரு ஆரோன் புதல்வன் எலயாசருடையது: திருஉறைவிடம் முழுவதையும், அதிலிருக்கும் அனைத்தையும், தூயகத்தையும் அதிலிருக்கும் பாத்திரங்களையும் அவனே மேற்பார்வை செய்ய வேண்டும்.

ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:

லேவியருள் கோகாத்து மரபைச் சார்ந்த குடும்பங்கள் அழிந்துபடாதிருக்கட்டும்.

எனவே புனிதமிகு பொருள்களை அவர்கள் நெருங்கி வருகையில் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டியது: ஆரோனும் அவன் புதல்வரும் உள்ளே சென்று அவர்களில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டியது பற்றியும் தூக்கிச் செல்ல வேண்டியது பற்றியும் பணிப்பர்.

ஆயினும் புனிதப் பொருள்கள் மூடப்படும்போது கோகாத்தியர் உள்ளே சென்று பார்க்கக் கூடாது. மீறினால் அவர்கள் சாவுக்குள்ளாவார்.

பின்னர் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

கேர்சோன் புதல்வர்களையும் அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.

சந்திப்புக் கூடாரவேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஜம்பது வயதுவரையுள்ள அனைவரையும் கணக்கெடு.

பணி செய்ய வேண்டியோரும் சுமைகள் தூக்க வேண்டியோருமான கேர்சோனியர் குடும்பங்களின் பணி இதுவே:

அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை: திருஉறைவிடத்தின் திரைகள், மூடுதிரையோடு சேர்ந்து சந்திப்புக் கூடாரம், அதன் மேலே உள்ள வெள்ளாட்டுத் தோல், மூடுதிரை, சந்திப்புக் கூடாரத்தின் வாயில்திரை,

சுற்றுமுற்றத் தொங்கு திரைகள். திருஉறைவிடத்தையும் பலிபீடத்தையும் சுற்றியிருக்கும் முற்றத்தின் வாயில்திரை, அவற்றின் கயிறுகள், அவர்களின் வேலைக்கான அனைத்துக் கருவிகள் ஆகியவை. அவை தொடர்பான அனைத்துப் பணிகளையும் அவர்கள் செய்வார்கள்.

ஆரோன், அவன் புதல்வர் கட்டளையிட்டபடியே கேர்சோனியர் புதல்வர் செய்யவேண்டிய எல்லா வேலைகளும், அதாவது அவர்கள் செய்ய வேண்டியவை. சுமக்க வேண்டியவை அனைத்தும் இருக்கும்: தூக்கிச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்தையும் நீங்கள் அவர்களிடம் விட்டுவிடுங்கள்:

இதுவே சந்திப்புக் கூடாரத்தில் கேர்சோனியர் குடும்பங்கள் செய்ய வேண்டிய பணி: அவர்களின் பணி குருவாகிய ஆரோன் மகன் இத்தாமரின் மேற்பார்வையின் கீழ் இருக்கும்.

மெராரி புதல்வரை அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.

சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் ஜப்பது வயது முதல் ஜம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு.

சந்திப்புக் கூடாரத்தின் மொத்த வேலையில் அவர்கள் தூக்கிச் செல்ல வேண்டியவற்றிற்கான ஏற்பாடு இதுவே: திருஉறைவிடச் சட்டங்கள், அதன் குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதங்கள்.

சுற்றுமுற்றத்தூண்கள், அவற்றின் பாதங்கள், முளைகள், கயிறுகள், அவற்றுக்கான எல்லாக் கருவிகள் அவை தொடர்பான அனைத்துப் பணிகளே. அவர்கள் தூக்கிச்செல்ல வேண்டிய பொருள்களைப் பெயர் குறித்து அவர்களிடம் ஒப்புவி.

இதுவே சந்திப்புக் கூடாரத்தில் மெராரியர் குடும்பங்கள் செய்யவேண்டிய மொத்தப்பணி: அவர்கள் குரு ஆரோனின் மகன் இத்தாமரின் கீழ் இருப்பர்.

மோசேயும் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களும் சேர்ந்து கோகாத்தியர் புதல்வரை அவர்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடுத்தனர்.

சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஜம்பது வயது வரையிருந்த அனைவரையும் கணக்கெடுத்தனர்.

குடும்பங்கள் வாரியாக, எண்ணப்பட்டவர்களின் தொகை இரண்டாயிரத்து எழுநூற்றைம்பது:

மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே மோசேயும் ஆரோனும் எண்ணியதில் கோகாத்தியர் குடும்பங்களில் சந்திப்புக் கூடாரப்பணி செய்தோரின் மொத்தத்தொகை இதுவே.

தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக கேர்சோன் புதல்வருள் எண்ணப்பட்டோர்.

சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஜம்பது வயது வரையிருந்த அனைவரிலும்,

தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பது பேர்.

ஆண்டவர் வார்த்தையின்படி மோசேயும் ஆரோனும் எண்ணியதில் கேர்சோனியர் குடும்பங்களில் சந்திப்புக் கூடாரப் பணி செய்தோரின் மொத்தத் தொகை இதுவே.

தங்கள் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக மெராரியர் குடும்பங்களில் எண்ணப்பட்டோர்:

சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஜம்பது வயது வரையிருந்த அனைவரிலும்,

குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் மூவாயிரத்து இருநூறு பேர்.

மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே மோசேயும் ஆரோனும் எண்ணியதில் மெராரியர் குடும்பங்களில் எண்ணப்பட்டோர் இவர்களே.

மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் தலைவர்களும் எண்ணியதில் மூதாதையர் வீடுகள், குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்டோர் எல்லோரும்:

சந்திப்புக் கூடார வேலையில் சுமை தூக்கும் திருப்பணிக்கு வந்த முப்பது வயது முதல் ஜம்பது வயது வரையிருந்தவர்கள்,

அவர்களில் எண்ணப்பட்டோர் எண்ணாயிரத்து ஜந்நூற்று எண்பது பேர்.

மோசே வழியாக ஆண்டவர் கூறியபடியே அவர்களில் ஒவ்வொருவரும் பணி செய்யவும், சுமை சுமக்கவும் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர் அவர்களைக் கணக்கெடுத்தார்.

அதிகாரம் 5

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

தொழுநோயர், வெட்டையுள்ளோர், பிணத்தால் தீட்டுப்பட்டோர் அனைவரையும் பாளையத்துக்குப் புறம்பாக்குமாறு இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு.

மக்களிடையே நான் தங்கியிருக்கும் பாளையத்தை அவர்கள் தீட்டுப்படுத்தி விடாதபடி ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பாக்கிவிடுங்கள்.

இஸ்ரயேல் மக்கள் அவ்வாறே அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பே துரத்திவிட்டனர். ஆண்டவர் மோசேயிடம் சொன்னபடியே இஸ்ரயேலர் செய்தனர்.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல் மக்களிடம் சொல்: மனிதர் ஆண்டவரை மீறிச் செய்யும் பாவங்களில் எதையும் ஓர் ஆணோ, பெண்ணோ செய்து குற்றவாளியானால்,

அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிட வேண்டும்: தீங்கிழைக்கப்பட்டவனுக்கு ஈடுகட்டி, அத்துடன் ஜந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க வேண்டும்.

குற்ற ஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முறைஉறவினன் இல்லையெனில் அந்தக் குற்ற ஈட்டுத் தொகை ஆண்டவருக்கு, அதாவது குருவிடம் சேரும்: இது அவன் குற்ற நீக்கத்துக்காகச் செலுத்தும் ஈட்டுப்பலி: ஆட்டைத் தவிரச் சேர வேண்டியது,

இஸ்ரயேல் மக்கள் குருவிடம் கொண்டு வரும் புனிதப் பொருள்கள் அனைத்திலும் உயர்த்திப் படைப்பவை அவனையே சேரும்.

ஒவ்வொரு மனிதனின் புனிதப் பொருள்களும் அவனுக்குரியவை: ஆனால் அவன் குருவுக்குக் கொடுப்பது அவனையே சேரும்.

மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஒருவனின் மனைவி நெறி தவறி அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால்,

வேறொருவன் அவளோடு படுத்து உடலுறவு கொள்ள, அது அவள் கணவனின் கண்களுக்கு மறைக்கப்பட்டு அவள் கறைப்பட்டிருந்தும் கண்டு பிடிக்கப்படாதிருந்து, அவள் தவறு செய்த நிலையிலேயே பிடிக்கப்படாமலிருந்தால்,

வெஞ்சினத்தின் ஆவி, கணவனை ஆட்கொண்டு தன்னையே கறைப்படுத்திவிட்ட மனைவியின் மேல் அவன் வெகுண்டழுந்தால் அல்லது வெஞ்சினத்தின் ஆவி அவனை ஆட்கொண்டு தன் மனைவி தன்னையே கறைபடுத்தாதிருந்தும் அவன் வெகுண்டெழுந்தால்,

அவன் தன் மனைவியை குருவின் முன் கொண்டு வரவேண்டும். அவளை முன்னிட்டுத் தேவைப்படும் பத்தில் ஒரு ஏப்பாவாற்கோதுமை உணவைப் படைக்க வேண்டும்: அவன் அதன் மேல் எண்ணெய் ஊற்றவோ தூபப்பொருள்கள் தூவவோ கூடாது. ஏனெனில் அது நினைவுபடுத்தும் உணவுப்படையல், அதாவது குற்றத்தை நினைவூட்டக்கூடிய சினத்தின் உணவுப்படையல்.

பின் குரு அவளைக் கூட்டிக் கொண்டு வந்து ஆண்டவர் முன் நிறுத்துவார்:

குரு ஒரு மண் பாத்திரத்தில் புனித நீர் எடுத்து, திருக்கூடாரத்தின் தரையில் இருந்து கொஞ்சம் துகள் எடுத்து நீரில் போடுவார்.

குரு அப்பெண்ணின் தலைமுடியைக் கலைத்துவிட்டு, வெஞ்சினத்தின் உணவுப் படையலாகிய நினைவுபடுத்தும் உணவுப்படையலை அவள் கைகளில் வைப்பார்: சாபத்தைக் கொண்டு வரும் கசப்பு நீரையும் குரு தன் கையில் வைத்திருப்பார்.

அதன் பின்னர் குரு அவளை ஆணையிடச் சொல்லிக் கூற வேண்டியது: நீ உன் கணவனின் அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கும்போது வேறு எந்த மனிதனும் உன்னோடு படுக்காமலும், நீ ஒழுக்கக்கேட்டுக்கு உடன்படாமலுமிருந்தால் சாபங்களைக் கொண்டு வரும் இக்கசப்பு நீர் உன்னை ஒன்றுஞ் செய்யாது:

ஆனால் நீ உன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறி தவறி, உன்னையே கறைப்படுத்தி, உன் கணவன் தவிர வேறொருவன் உன்னோடு படுத்திருக்க உடன்பட்டால்

குரு அப்பெண்ணைச் சாப ஆணை இடச் சொல்லி அவளிடம், ஆண்டவர் உன் தொடைகள் அழுகி விழவும் உன் வய்று வீங்கவும் செய்து உன் மக்களிடையே உன்னை ஒரு சாபமாகவும், ஆணைக்கூற்றாகவும் ஆக்குவார்:

சாபத்தைக் கொண்டு வரும் இந்த நீர் உன் குடல்களில் இறங்கி உன் வயிற்றை வீங்கச் செய்து உன் தொடைகளை அழுகி விழச் செய்யட்டும் என்பார். அதற்கு அப்பெண் ஆமென், ஆமென் என்பாள்.

பின்னர் குரு இச்சாபங்களை ஓர் ஏட்டில் எழுதிக் கசப்பு நீரால் அவற்றை அழித்து விடுவார்:

சாபத்தைக் கொண்டுவரும் அக் கசப்பு நீரை அப்பெண் குடிக்கச் செய்வார்: சாபத்தைக் கொண்டு வரும் அந்நீர் அவளுக்குள் சென்று கொடிய வேதனையை உண்டாக்கும்.

குரு வெஞ்சினத்தின் உணவுப்படையலைப் பெண்ணின் கையிலிருந்து வாங்கி அதை ஆண்டவர் முன்னிலையில் ஆரத்தியாகக் காடடிப் பலிபீடத்துக்குக் கொண்டு வருவார்.

குரு அந்த உணவுப் படையிலிலிருந்து அதன் நினைவுப் பகுதியாக ஒரு கைப்பிடி எடுத்து அதனைப் பீடத்தின் மேல் எரித்து விடுவார்: இறுதியாக அப்பெண், அந்நீரைக் குடிக்கச் செய்வான்.

அவன் அவளை நீர் குடிக்கச் செய்யும்போது அவள் உண்மையிலேயே தன்னைக் கறைப்படுத்தித் தன் கணவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருந்தால் சாபத்தைக் கொண்டுவரும் நீர் அவளுக்குள் போய் கொடிய வேதனையை உண்டாக்கும்: அவள் வயிறு வீங்கி, தொடைகள் அழுகிவிடும்: அவள் தன் மக்களிடையே ஒரு சாபமாக இருப்பாள்.

ஆனால், அப்பெண் கறைபடாது தூயவளாயிருந்தால் அவளுக்கு ஒரு கேடும் வராது: அவள் குழந்தையைக் கருத்தரிப்பாள்.

வெஞ்சினத்தின் வேளைகளில் இதுவே சட்டம்: அதாவது ஒரு மனைவி தன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறிதவறித் தன்னையே கறைபடுத்தியிருந்தால்,

அல்லது வெஞ்சினத்தின் ஆவி ஒரு மனிதன் மேல் வந்து அவன் தன் மனைவி மேல் வெகுண்டெழுந்தால் அவன் அவளை ஆண்டவர் திருமுன் நிறுத்துவான்: குரு இச்சட்டத்தையெல்லாம் அவளிடம் செயல்படுத்துவார்.

ஆடவன் தன் குற்றப்பழி அற்றவனாவான்: பெண்ணோ தன் குற்றப்பழியைச் சுமப்பாள்.

அதிகாரம் 6

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஓர் ஆணோ பெண்ணோ தன்னை ஆண்டவருக்குத் தனிப்படுத்திச் சிறப்பான பொருத்தனையான நாசீர் பொருத்தனை செய்து ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தல்,

திராட்சை இரசம், மது ஆகியவற்றை அவன் விலக்க வேண்டும்: திராட்சை இரசம், மது ஆகியவற்றின் காடியை அருந்தக் கூடாது. திராட்சைப்பழச் சாற்றைக் குடிக்கக் கூடாது. திராட்சைப் பழங்களையோ, வற்றலையோ உண்ணவும் கூடாது.

பொருத்தனைக் காலம் முழுதும் திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கும் எதையும், விதைகள், தோல்களைக் கூட, அவன் உண்ணக்கூடாது.

அர்ப்பணம் செய்துகொண்ட பொருத்தனைக் காலம் முழுதும் சவரக்கத்தி அவன் தலையில் படக்கூடாது: ஆண்டவருக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முடியுமட்டும் அவன் தூய்மையுடன் இருப்பான்: அவன் தன் தலை முடியை நீளமாக வளர விடுவான்.

ஆண்டவருக்கென்று தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முழுதும் பிணத்தருகே அவன் போகக்கூடாது.

தன் தந்தை, தாய், சகோதரன், சகோதரி இறந்தால் கூட அவர்களுக்காகத் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது: ஏனெனில் கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதின் அடையாளம் அவன். தலையில் இருக்கிறது.

அர்ப்பண காலம் முழுதும் அவன் ஆண்டவருக்குத் தூய்மையாக இருப்பான்.

எவரேனும் திடீரென அவன் அருகே இறந்து, புனிதப்படுத்தப்பட்ட அவன் தலையைத் தீட்டுப்படுத்தினால் தூய்மைப்படுத்தும் நாளில் அவன் தன் தலையைச் சிரைத்துக் கொள்ள வேண்டும். ஏழாம் நாளில் அவன் அதைச் சிரைத்துக்கொள்வான்:

எட்டாம் நாளில் அவன் இரு காட்டுப் புறாக்களையோ, இரு மாடப்புறாக்குஞ்சுகளையோ சந்திப்புக் கூடாரநுழை வாயிலுக்கு குருவிடம் கொண்டு வர வேண்டும்.

குரு ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் ஒப்புக் கொடுப்பார்: பிணத்தை முன்னிட்டு அவன் பாவம்செய்துள்ளதால், அவனுக்காகக் கறைநீக்கம் செய்வார்: அதே நாளில் அவன் தலையையும் புனிதப்படுத்துவார்.

அவன் பொருத்தனை செய்த காலத்திற்காக மீண்டும் தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பான்: குற்றநீக்கப்பலிக்காக ஓராண்டு ஆட்டுக்கிடாய் ஒன்றைக் கொண்டு வருவான்: அவன் அர்ப்பண நிலை தீட்டுப்பட்டதால் கடந்துவிட்ட காலம் கணக்கில் வராது.

அர்ப்பண காலம் நிறைவுறும் போது நாசீருக்கான சட்டம் இதுவே: சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்கு அவன் கொண்டு வரப்படுவான்:

ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப் பொருள்: பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, பாவ நீக்கப் பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு ஆட்டுக்குட்டி ஒன்று, நல்லுறவுப் பலிக்காகப் பழுதற்ற ஆட்டுக்கிடாய் ஒன்று.

புளிப்பற்ற அப்பம் ஒரு கூடை, எண்ணெயில் மெல்லிய மாவைப் பிசைந்து செய்த நெய்யப்பங்கள், எண்ணெய் தடவிப் புளிப்பற்ற மாவால் செய்த அடைகள், அவற்றின் உணவுப் படையல், நீர்மப்படையல் ஆகியவை.

குரு அவற்றை ஆண்டவர்முன் கொண்டு வந்து அவனுக்காகப் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் நிறைவேற்றுவார்.

கூடையிலுள்ள புளிப்பற்ற அப்பத்தோடு ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்கு நல்லுறவுப் பலியாக ஒப்புக்கொடுப்பார்: மேலும், அவனுக்காக குரு உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் படைப்பார்:

நாசீர் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் மழித்து, புனிதப்படுத்தப்பட்ட தன் தலைமுடியை எடுத்து நல்லுறவுப் பலியின் அடியில் இருக்கும் நெருப்பில் போடுவான்.

அவன் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையை மழித்த பின்னர் குரு வெந்துகொண்டிருக்கும் ஆட்டுக்கிடாயின் முன் சந்தை எடுத்து, கூடையிலிருந்து நெய்யப்பம் ஒன்றையும் புளிப்பற்ற அடை ஒன்றையும் எடுத்து நாசீர் கைகளில் வைப்பார்.

அவற்றை ஆரத்திப் படையலாகக் குரு ஆண்டவர் திருமுன் காட்டுவார். ஆரத்தியாகக் காட்டப்பட்ட மார்புப்பகுதியும் உயர்த்திப் படைக்கப்பட்ட தொடையும் புனிதப் பங்காகக் குருவைச் சேரும்: அதன் பின்னரே நாசீர் திராட்சை இரசம் குடிக்கலாம்.

நாசீர்ப் பொருத்தனை செய்பவனுக்கான சட்டம் இதுவே: ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப்படையல், அவனது நாசீர்ப் பொருத்தனைக்கேற்ப இருக்க வேண்டும்: இது மற்றப்படி அவன் தர இயன்றதற்கு நீங்கலானது: அவனது பொருத்தனைக்கேற்பத் தன் நாசீர் அர்ப்பணத்துக்குரிய சட்டத்தின்படி அவன் செய்ய வேண்டும்.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை:

ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!

ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!

ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!

இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

அதிகாரம் 7

மோசே திருஉறைவிடத்தை எழுப்பிமுடித்து, அதனை அதன் அனைத்துப் பொருள்களோடும் திருப்பொழிவு செய்து அர்ப்பணித்து. பீடத்தையும், அதன் துணைக்கலன்களோடு திருப்பொழிவு செய்து அர்ப்பணித்த நாளில்,

கணக்கிடப்பட்டோர்க்கு மேற்பார்வையாளராயிருந்த இஸ்ரயேல் தலைவர்கள், அவர்கள் மூதாதையர் வீட்டுத்தலைவர்கள், குலத் தலைவர்கள் ஆகியோர் காணிக்கைகள் கொணர்ந்தனர்.

அவர்கள் ஆண்டவர் திருமுன் இரு தலைவர்களுக்கு ஒரு வண்டியும், ஒவ்வொருவருக்கும் ஒரு மாடுமாக ஆறுகூண்டு வண்டிகளையும், பன்னிரண்டு மாடுகளையும் திருஉறைவிடத்திற்குத் தங்கள் காணிக்கைகளாகக் கொண்டு வந்தனர்.

பின் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

சந்திப்புக் கூடாரப் பணியைச் செய்வதற்குப் பயன்படும்படி இவற்றைப் பெற்றுக்கொள்: ஒவ்வொருவரின் பணிக்கும் ஏற்ப இவற்றை லேவியரிடம் ஒப்படைப்பாய் .

அவ்வாறே மோசே வண்டிகளையும் மாடுகளையும் பெற்று லேவியரிடம் ஒப்படைத்தார்.

கேர்சோன் புதல்வருக்கு அவரவர் பணிக்கேற்ப இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் கொடுத்தார்.

அவர் மெராரிப் புதல்வருக்கு அவர்கள் பணிக்கேற்ப நான்கு வண்டிகளையும், எட்டு மாடுகளையும் கொடுத்தார்: இவர்கள் பணி குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமரின் மேற்பார்வையில் இருந்தது.

ஆனால் கோகாத்தின் புதல்வருக்கு அவர் ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் தோளில் வைத்துச் சுமக்க வேண்டிய புனிதப் பொருள்களைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்தனர்.

மேலும் பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்ட நாளில் அதன் அர்ப்பணத்துக்காகவும் தலைவர்கள் காணிக்கைகள் கொண்டு வந்து பலிபீடத்தின் முன்வைத்தனர்.

ஆண்டவர் மோசேயிடம் நாளுக்கு ஒருவராகத் தலைவர்கள் தங்கள் காணிக்கைகளைப் பலிபீட அர்ப்பணத்திற்காகக் கொண்டு வரட்டும் என்றார்.

முதல் நாளில் தம் காணிக்கையைக் கொண்டு வந்தவர் நகசோன், இவர் யூதா குலத்து அம்மினதாபின் மகன்.

அவரது காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று: உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது:

நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறையத் தூபம் இருந்தது:

இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று இவை எரிபலிக்குரியவை.

பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று.

நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக்கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து அம்மினதாபின மகன் நகசோனின் காணிக்கை இதுவே.

இரண்டாம் நாளில் காணிக்கை கொண்டு வந்தவர் இசக்கார் தலைவரான சூவாரின் மகன் நெத்தனியேல்.

அவர் கொண்டு வந்த காணிக்கை: தூயகச்செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறையத் தூபம் இருந்தது.

இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று: இவை எரிபலிக்குரியவை.

பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று:

நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக்கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து சூவாரின் மகன் நெத்தனியேலின் காணிக்கை இதுவே.

மூன்றாம் நாள்: செபுலோன் மக்கள் தலைவரான கேலோனின் மகன் எலியாபு.

அவரது காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு இருந்தது.

நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறையத் தூபம் இருந்தது.

இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று. ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று இவை எரிபலிக்குரியவை.

பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று:

நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து கேலோனின் மகன் எலியாபின் காணிக்கை இதுவே.

நான்காம் நாள்: ரூபன் மக்களின் தலைவர் எலிட்சூர்: இவர் செதேயூரின் மகன்.

அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறைய தூபம் இருந்தது.

இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று: இவை எரி பலிக்குரியவை.

பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,

நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டுகள் செம்மறிக் கிடாய்கள் ஜந்து, செதேயூரின் புதல்வன் எலிட்சூரின் காணிக்கை இதுவே.

ஜந்தாம் நாள்: சிமியோன் மக்களின் தலைவர் செலுமியேல்: இவர் கரிசத்தாயின் மகன்.

அவர் காணிக்கை: தூயகச்செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறையத் தூபம் இருந்தது.

இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரிபலிக்குரியவை.

பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று:

நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து சுரிசத்தாயின் புதல்வன் செலுமியேலின் காணிக்கை இதுவே.

ஆறாம் நாள்: காத்து மக்களின் தலைவர் எல்யாசாபு: இவர் தெகுவேலின் மகன்.

அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரைக் கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று: அது நிறையத் தூபம் இருந்தது.

இளங்காளை ஒன்று: ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரி பலிக்குரியவை.

பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று:

நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து தெகுவேலின் புதல்வன் எல்யாசாபின் காணிக்கை இதுவே.

ஏழாம் நாள்: எப்ராயிம் மக்களின் தலைவர் எலிசாமா: இவர் அம்மிகூதின் மகன்.

அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று: அது நிறையத் தூபம் இருந்தது.

இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று இவை எரிபலிக்குரியவை.

பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,

நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக் கிடாய்கள் ஜந்து அம்மிகூதின் புதல்வன் எலிசாமாவின் காணிக்கை இதுவே.

எட்டாம் நாள்:

அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித் தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று: அது நிறைய தூபம் இருந்தது.

இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று: இவை எரி பலிக்குரியவை.

பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,

நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து பெதாசூரின் புதல்வன் காமாலியேலின் காணிக்கை இதுவே.

ஒன்பதாம் நாள்: பென்யமின் மக்களின் தலைவர் அபிதான்: இவர்கிதயோனியின் மகன்.

அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று: அது நிறைய தூபம் இருந்தது.

இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரிபலிக்குரியவை.

பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,

நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள்கள் ஜந்து கிதயோனியின் புதல்வன் அபிதானியின் காணிக்கை இதுவே.

பத்தாம் நாள்: தாண் மக்களின் தலைவர் அகியேசர், இவர் அம்மிசத்தாயின் மகன்.

அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று: அது நிறையத் தூபம் இருந்தது.

இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று: இவை எரி பலிக்குரியவை.

பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று,

நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து அம்மிசத்தாயின் புதல்வன் அகியேசரின் காணிக்கை இதுவே.

பதினோராம் நாள்: ஆசேர் மக்களின் தலைவர் பகியேல், இவர் ஒக்ரானின் மகன்.

அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று: அது நிறையத் தூபம் இருந்தது.

இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று: இவை எரிபலிக்குரியவை.

பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று.

நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து ஒக்ரானின் மகன் பகியேலின் காணிக்கை இதுவே.

பன்னிரண்டாம் நாள்: நப்தலி மக்களின் தலைவர் அகிரா, இவர் ஏனானின் மகன்:

அவர் காணிக்கை: தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.

நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று: அது நிறையத் தூபம் இருந்தது.

இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக் கிடாய் ஒன்று: இவை எரி பலிக்குரியவை.

பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,

நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஜந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஜந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஜந்து ஏனானின் புதல்வன் அகிராவின் காணிக்கை இதுவே.

பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்ட நாளில் இஸ்ரயேல் தலைவர்களிடமிருந்து வந்த அதற்கான அர்ப்பணக்காணிக்கை இதுவே: வெள்ளித்தட்டுகள் பன்னிரண்டு, வெள்ளிக் கலங்கள் பன்னிரண்டு, பொன் பாத்திரங்கள் பன்னிரண்டு:

தூயகச் செக்கேலின்படி வெள்ளித்தட்டின் நிறை ஒன்றரை கிலோ கிராம், வெள்ளிக்கலத்தின் நிறை எண்ணூறு கிராம். ஆக, தூயகச் செக்கேலின்படி அனைத்து வெள்ளிப்பாத்திரங்களின் நிறை இருபத்தியேழு கிலோ அறுநூறு கிராம்.

தூபம் நிறைந்திருந்த பொன் பாத்திரங்கள் பன்னிரண்டு: தூயகச் செக்கேலின்படி ஒவ்வொன்றின் நிறை நூற்றுப் பதினைந்து கிராம். ஆக, பொன் பாத்திரங்கள் அனைத்தின் நிறை ஒரு கிலோ முந்நூற்றி எண்பது கிராம்.

எரிபலிக்கான மொத்த கால்நடைகள்: காளைகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் பன்னிரண்டு: இவற்றின் உணவுப் படையலும், இவற்றுடன் சேரும்: பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு:

நல்லுறவுப் பலி செலுத்துவதற்கான மொத்தக் கால்நடைகள்: காளைகள் இருபத்துநான்கு, ஆட்டுக்கிடாய்கள் அறுபது, வெள்ளாட்டுக் கிடாய்கள் அறுபது, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் அறுபது, பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்டபின் அதன் அர்ப்பண காணிக்கை இதுவே.

ஆண்டவருடன் பேசும்படி மோசே சந்திப்புக் கூடாரத்தினுள் சென்றார். இரு கெருபுகளிடையே உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அரியணையிலிருந்து பேசிய குரலை அவர் கேட்டார்: ஆண்டவர் அவருடன் பேசினார்.

அதிகாரம் 8

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

ஆரோனிடம் சொல்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு அகல்களும் விளக்குத் தண்டுக்கு முன்பக்கம் ஒளிதர வேண்டும் .

ஆரோன் அப்படியே செய்தார்: ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி விளக்குத்தண்டுக்கு முன்பக்கம் ஒளி தரும்படி அதன் அகல்களை ஏற்றினார்.

விளக்குத் தண்டின் வேலைப்பாடு: அது பொன் அடிப்பு வேலையால் செய்யப்பட்டிருந்தது: அதன் பாதம் முதல் மலர்கள் வரை அடிப்பு வேலையால் செய்யப்பட்டது: ஆண்டவர் மோசேக்குக் காட்டிய வடிவமைப்பின்படியே அவர் விளக்குத் தண்டைச் செய்தார்.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல்மக்களிடமிருந்து லேவியரைப் பிரித்தெடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்து:

அவர்களைத் தூய்மைப்படுத்த நீ செய்யவேண்டியது: பாவம் போக்கும் பலியின் நீரை அவர்கள் மேல் தெளிப்பாய்: அவர்கள் உடல் முழுவதையும் சிரைத்து, தங்கள் துணிகளைத் துவைத்துத் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ளட்டும்.

அதன் பின் அவர்கள் இளங்காளை ஒன்றையும் எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவான அதன் உணவுப்படையலையும் எடுத்துக் கொள்ளட்டும்: நீயோ பாவம் போக்கும் பலிக்கென வேறோர் இளங்காளையை எடுத்துக்கொள்.

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்று திரட்டு: சந்திப்புக் கூடாரத்தின் முன் லேவியரை அழைத்து வந்து நிறுத்து.

நீ லேவியரை ஆண்டவர் திருமுன் நிறுத்தும்போது, இஸ்ரயேல் மக்கள் தங்கள் கைகளை லேவியர் மேல் வைப்பார்கள்:

பின் ஆரோன் லேவியரை இஸ்ரயேல் மக்களிடமிருந்து வரும் ஆரத்திபலியாக ஆண்டவர் திருமுன் அர்ப்பணிப்பான்: அதனால் ஆண்டவர் பணியைச் செய்ய மக்கள் சார்பில் இவர்கள் இருப்பார்கள்.

அதன்பின் லேவியர் தங்கள் கைகளைக் காளைகளின் தலைகள்மேல் வைப்பர்: லேவியருக்குக் கறைநீக்கம் செய்யும்படி நீ ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை ஆண்டவருக்கு எரி பலியாகவும் செலுத்துவாய்.

மேலும் நீ லேவியரை ஆரோன், அவன் புதல்வர் முன் நிற்கச் செய்து, ஆரத்திபலியாக அவர்களை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்.

இவ்வாறு இஸ்ரயேல் மக்களிடமிருந்து லேவியரைப் பிரித்தெடுக்க வேண்டும். லேவியர் எனக்கே உரியவர்.

நீ அவர்களைத் தூய்மைப்படுத்தி, ஆரத்திபலியாக அர்ப்பணித்த சந்திப்புக் கூடாரத்தில் பணி செய்ய அவர்கள் உள்ளே போவார்கள்.

இஸ்ரயேல் மக்களிடமிருந்து அவர்கள் முற்றிலும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறார்கள்: இஸ்ரயேல் மக்களில் கருப்பையைத் திறந்து பிறக்கும் தலைப்பேறு அனைத்திற்கும் ஈடாக அவர்களை நான் எனக்கென உரிமையாக்கிக் கொண்டேன்.

ஏனெனில் இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் தலைப்பேறனைத்தும் என்னுடையவை: எகிப்து நாட்டில் நான் தலைப்பேறனைத்தையும் சாகடித்த நாளில் அவர்களை நான் எனக்கென அர்ப்பணித்துக் கொண்டேன்.

இஸ்ரயேல் மக்களில் தலைப்பேறு அனைத்துக்கும் ஈடாக லேவியரை நான் உரிமையாக்கிக் கொண்டேன்.

இஸ்ரயேல் மக்களுள் லேவியரை நான் ஆரோனிடமும், அவன் புதல்வரிடமும் கொடையாக அளித்துவிட்டேன்: இஸ்ரயேல் மக்களுக்காக அவர்கள் சந்திப்புக் கூடாரத்தில் பணி செய்வார்கள்: இஸ்ரயேல் மக்களுக்காகக் கறை நீக்கப் பலியையும் செலுத்துவார்கள்: இதனால் இஸ்ரயேல் மக்கள் தூயகத்தை அடுத்து வரவேண்டியிருந்தாலும், இஸ்ரயேல் மக்களுக்குத் தீங்கு ஏதும் நேரிடாது.

மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் லேவியருக்கு இவ்வாறே செய்தனர்: லேவியரைப் பற்றி ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாம் இஸ்ரயேல் மக்கள் அவர்களுக்குச் செய்தனர்.

லேவியர் பாவத்திலிருந்து தங்களை தூய்மைப்படுத்திக் கொண்டார்: தங்கள் துணிகளைத் துவைத்தனர். ஆரோன் அவர்களை ஆரத்திப்பலியாக ஆண்டவர் திருமுன் அர்ப்பணித்தார்: அவர்களைத் தூய்மைப்படுத்தும்படி ஆரோன் அவர்களுக்காகக் கறை நீக்கப் பலியாகச் செலுத்தினார்.

அதன்பின் ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் முன்பாகச் சந்திப்புக் கூடாரத்தில் தங்களுக்குரிய பணி செய்யும்படி லேவியர் உள்ளே சென்றனர். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் லேவியருக்குச் செய்தனர்.

மேலும் ஆண்டவர் மோசேயிடம்,

லேவியர் பற்றிக் கூறியது: இருபத்தைந்து வயதும், அதற்கு மேலுமானோர் சந்திப்புக் கூடார வேலையின் பணிகளைச் செய்யச் செல்வர்.

ஜம்பது வயதுக்கும் மேலானோர் வேலையின் பணிகளிலிருந்து விலகிக் கொள்வார்: அதன் பின் பணிகள் ஏதும் கிடையாது.

ஆனால் சந்திப்புக் கூடாரத்தில் தங்கள் சகோதரரின் பணிக்குத் துணை நிற்பர்: தாங்களாக ஏதும் செய்யலாகாது: லேவியர் பணிகளை நீ இவ்வாறு ஒழுங்குபடுத்துவாய் .

அதிகாரம் 9

எகிப்து நாட்டிலிருந்து அவர்கள் வெளியேறி வந்த இரண்டாம் ஆண்டு முதல் மாதம் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் மோசேயோடு பேசினார். அவர் கூறியதாவது:

இஸ்ரயேல் மக்கள் குறிக்கப்பட்ட காலத்தில் பாஸ்காவைக் கொண்டாடட்டும்.

இம்மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப்பொழுதில் குறிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் அதைக் கொண்டாடுவீர்கள்: அதன் எல்லா விதிமுறைகளின்படியும் எல்லா ஒழுங்குகளின்படியும் நீங்கள் அதைக் கொண்டாட வேண்டும்.

அவ்வாறே பாஸ்காவைக் கொண்டாடும்படி மோசே இஸ்ரயேல் மக்களிடம் கூறினார்.

அவர்கள் முதல் மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப் பொழுதில் சீனாய்ப் பாலைநிலத்தில் பாஸ்காவைக் கொண்டாடினார்கள். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாம் இஸ்ரயேல் மக்கள் செய்தனர்.

ஒருவனின் பிணத்தைத் தொட்டுத் தீட்டுப்பட்டதை முன்னிட்டுச் சிலர் அந்நாளில் பாஸ்காவைக் கொண்டாட முடியவில்லை: அவர்கள் அந்நாளில் மோசேயிடமும் ஆரோனிடமும் வந்தனர்.

அந்த ஆள்கள் மோசேயிடம், ஒருவனின் பிணத்தைத் தொட்டதால் நாங்கள் தீட்டுப்பட்டிருக்கிறோம்: ஆண்டவருக்கான காணிக்கையைக் குறித்த காலத்தில் செலுத்த இஸ்ரயேல் மக்களிடையே நாங்கள் மட்டும் ஏன் விலக்கப்படவேண்டும்? என்று கேட்டனர்.

அவர் அவர்களிடம், உங்களைப் பற்றி ஆண்டவர் இடும்கட்டளை என்னவென்று நான் கேட்டறியும்வரை பொறுத்திருங்கள் என்றார்.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல் மக்களிடம் சொல்: உங்களிலும் உங்களுக்குப் பின் வரும் தலைமுறைகளிலும் எவனாவது ஒரு பிணத்தைத் தொட்டுத் தீட்டுப்பட்டிருந்தால் அல்லது நெடும் பயணத்தில் ஈடுபட்டிருந்தால் அவனும் ஆண்டவருக்குப் பாஸ்காவைக் கொண்டாடவேண்டும்.

இரண்டாம் மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப் பொழுதிலேயே அவர்கள் கொண்டாட வேண்டும்: அவர்கள் புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்பான கீரைகளோடும் அதை உண்பார்கள்.

அவர்கள் காலை வரை எதையும் மீதி வைக்கவோ அதன் எலும்பு எதையும் முறிக்கவோ கூடாது: எல்லா விதிமுறைகளின்படியும் அவர்கள் பாஸ்காவைக் கொண்டாடுவார்கள்.

ஆனால் ஒருவன் தீட்டுப்படாதிருந்தும் பயணத்தில் ஈடுபடாதிருந்தும் பாஸ்காவைக் கொண்டாடாது ஒதுங்கியிருந்தால், அவன் தன் மக்களிலிருந்து விலக்கப்படுவான்: ஏனெனில் அவன் ஆண்டவருக்கு உரிய காணிக்கையைக் குறித்த காலத்தில் செலுத்தவல்லை: அந்த ஆள் தன் பாவப்பழியைச் சுமப்பான்.

உங்களோடு தங்கியிருக்கும் வேற்றினத்தவன் ஒருவன், ஆண்டவருக்குப் பாஸ்காவைக் கொண்டாட விரும்பினால், பாஸ்காவின் விதிமுறைகள், ஒழுங்குகளுக்கேற்ப அவன் செய்யவேண்டும்: வேற்று நாட்டவனுக்கும், சொந்த நாட்டவனுக்கும் இருக்க வேண்டியது ஒரே விதிமுறையே.

திரு உறைவிடம் எழுப்பப்பட்ட நாளில் மேகம் திரு உறைவிடத்தை, அதாவது உடன்படிக்கை திருஉறைவிடத்தை மூடியது: அது திரு உறைவிடத்தின் மேல் மாலைமுதல் காலைவரை நெருப்பு மயமாய் இருந்தது.

இது தொடர்ந்து நிகழ்ந்தது: மேகம் மூடியது: இரவில் நெருப்பு மயமாய் இருந்தது.

கூடாரத்தின் மேலேயிருந்து மேகம் எழும்பிச் சென்றபோது இஸ்ரயேல் மக்கள் புறப்படுவர்: மேகம் தங்கி இருந்த இடத்தில் இஸ்ரயேல் மக்கள் பாளையம் இறங்குவர்.

ஆண்டவர் கட்டளைப்படியே இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டனர்: ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் பாளையம் இறங்கினர்: மேகம் திருஉறைவிடத்தின்மேல் தங்கி இருந்த நாளெல்லாம் அவர்களும் பாளையத்தில் தங்கியிருந்தனர்.

மேகம் திருஉறைவிடத்தின்மேல் பல நாள்கள் தொடர்ந்திருந்தபோது கூட இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் வார்த்தையைக் கடைப்பிடித்தனர்: அவர்கள் புறப்படவில்லை.

சில வேளைகளில் மேகம் திருஉறைவிடத்தின்மேல் சில நாள்களே இருந்தது: ஆண்டவர் கட்டளைப்படி அவர்கள் பாளையத்தில் தங்கியிருந்தனர்: பின் ஆண்டவர் கட்டளைப்படி அவர்கள் புறப்பட்டனர்.

சில நேரங்களில் மேகம் மாலைமுதல் காலைவரை தங்கியிருந்தது: காலையில் மேகம் எழும்பிச் சென்றதும் அவர்கள் புறப்பட்டனர்.

இரண்டு நாள்கள் மட்டுமோ, ஒரு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட நாள்களோ மேகம் திருஉறைவிடத்தின்மேல் இஸ்ரயேல் மக்களும் பாளையத்திலேயே தங்கியிருந்தனர்: அவர்கள் புறப்படவில்லை.

ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் பாளையமிறங்கி, ஆண்டவர் கட்டளைப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டபடி அவர்கள் ஆண்டவர் வார்த்தையைக் கடைப்பிடித்தனர்.

அதிகாரம் 10

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்துகொள்: அடிப்பு வேலையாக அவற்றைச் செய்ய வேண்டும். மக்கள் கூட்டமைப்பை ஒன்று கூட்டவும், பாளையத்தைப் பெயர்க்கவும் நீ அவற்றைப் பயன்படுத்துவாய்.

அவை இரண்டும் ஊதப்படும்போது மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சந்திப்புக்கூடார வாயிலில் உன்முன்னே ஒன்றுகூட வேண்டும்.

ஆனால் ஒன்றை மட்டும் ஊதினால், இஸ்ரயேலின் ஆயிரத்தவர் தலைவர்களாகிய முதல்வர்கள் உன்னிடத்தில் கூடிவருவார்கள்.

நீ பெருந்தொனியாய் ஊதுகையில், கீழ்ப்புறப் பாளையங்கள் புறப்படும்.

அத்துடன் இரண்டாம் முறை நீ பெருந்தொனியாய் ஊதுகையில் தென்புறப் பாளையங்கள் புறப்படும்: அவர்கள் புறப்படும் போதெல்லாம் பெருந்தொனியாய் ஊத வேண்டும்.

சபையை ஒன்றுகூட்ட நீ ஊதும்போது பெருந்தொனி எழுப்பக்கூடாது.

ஆரோனின் புதல்வரான குருக்கள் எக்காளங்களை ஊதவேண்டும். எக்காளங்கள் உங்கள் தலைமுறைதோறும் நிலையான நியமமாக இருக்கும்.

உங்கள் நாட்டில் உங்களை ஒடுக்குகிற பகைவருக்கெதிராகப் போருக்குச் செல்கையில் எக்காளங்களால் பெருந்தொளி எழுப்புங்கள்: அப்போது கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நீங்கள் நினைவுகூரப்பட்டு, பகைவரிடமிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.

மகிழ்ச்சியின் நாள், குறிக்கப்பட்ட திருநாள்கள், மாதப் பிறப்புகள், ஆகியவற்றில் நீங்கள் எரிபலியையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தும் போது எக்காளங்களை ஊதுவீர்கள். அவை கடவுள் திருமுன் உங்களுக்கு நினைவூட்டுதலாகப் பயன்படும். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.

இரண்டாம் ஆண்டு இரண்டாம் மாதம் இருபதாம் நாள் உடன்படிக்கைத் திரு உறைவிடத்தின் மேலிருந்து மேகம் எழும்பியது.

இஸ்ரயேல் மக்கள் சீனாய்ப் பாலை நிலத்திலிருந்து பகுதி பகுதியாகக் கடந்து சென்றனர். பாரான் பாலை நிலத்தில் மேகம் தங்கிற்று.

மோசே வழிவந்த கடவுளின் கட்டளைப்படி இப்பொழுது முதன்முறையாக அவர்கள் புறப்பட்டனர்.

யூதா மக்களது பாளையத்தின் கொடி அவர்களைச் சேர்ந்த கூட்டத்தவரோடு முதலில் புறப்பட்டது: அவர்கள் படைத்தலைவன் அம்மினதாபின் மகன் நகசோன்:

இசக்கார் மக்கள் குலத்தின் படைத்தலைவன் சூவாரின் மகன் நெத்தனியேல்:

செபுலோன் மக்கள் குலத்தின் படைத்தலைவன் கேலோனின் மகன் எலியாபு:

மேலும் திருவுறைவிடம் இறக்கி வைக்கப்பட்டதும் கேர்சோனின் புதல்வரும், மெராரியின் புதல்வரும் அதைச் சுமந்து கொண்டு புறப்பட்டனர்.

அடுத்து ரூபன் பாளையத்தின் கொடி அவர்களைச் சேர்ந்த கூட்டத்தவரோடு புறப்பட்டது: அவர்கள் படைத்தலைவன் செதேர் மகன் எலிட்சூர்.

சிமியோன் மக்கள் குலத்தின் படைத்தலைவன் சுரிசத்தாயின் மகன் செலுமியேல்:

காத்து மக்கள் குலத்தின் படைத்தலைவன் தெகுவேலின் மகன் எல்யாசாபு.

பின்னர் கோகாத்தியர் தூயபொருள்களைச் சுமந்துகொண்டு புறப்பட்டனர். அவர்கள் போய்ச் சேருமுன் திருவுறைவிடம் எழுப்பப்பட்டிருந்தது.

அடுத்து, எப்ராயிம் மக்களது பாளையத்தின் கொடி அவர்களைச் சேர்ந்த கூட்டத்திவரோடு புறப்பட்டது: அவர்களின் படைத்தலைவன் அம்மிகூதின் மகன் எலிசாமா:

மனாசே மக்கள் குலத்தின் படைத்தலைவன் பெதாசூரின் மகன் கமாலியேல்:

பென்யமீன் மக்கள் குலத்தின் படைத்தலைவன் கிதயோனியின் மகன் அபீதான்:

அனைத்துப் பாளையங்களுக்கும் பின்காவலாகத் தாண் மக்களது பாளையத்தின் கொடி அவர்களைச் சேர்ந்த கூட்டத்தவரோடு புறப்பட்டது. அவர்களின் படைத்தலைவன் அம்மிசத்தாயின் மகன் அகியேசர்:

ஆசேர் மக்கள் குலத்தின் படைத்தலைவன் ஒக்ரானின் மகன் பகியேல்:

நப்தலி மக்கள் குலத்தின் படைத்தலைவன் ஏனானின் மகன் அகிரா:

இஸ்ரயேல் மக்கள் புறப்படுகையில் அவர்கள் படைகளின் அணி வரிசை இதுவே.

பின்னர் மோசே மீதியானியனும் தன் மாமனுமாகிய இரகுவேலின் மகன் கோபாபிடம் கூறியது: உங்களுக்குத் தருவேன் என்று ஆண்டவர் கூறிய இடத்திற்கு நாங்கள் போய்க் கொண்டு இருக்கிறோம்: நீ எங்களோடு வா, நாங்கள் உனக்கு நல்லது செய்வோம்: ஆண்டவர் இஸ்ரயேலுக்கு நல்லதையே வாக்களித்துள்ளார்.

அவனோ அவரிடம், நான் வரமாட்டேன், நான் என் சொந்த நாட்டுக்கு என் இனத்தவரிடம் போவேன் என்றான்.

அதற்கு அவர்: எங்களை விட்டுப் போகாதிருக்கும்படி உன்னை வேண்டிக்கொள்கிறேன்: பாலை நிலத்தில் எப்படிப் பாளையமிறங்க வேண்டும் என்று உனக்குத் தெரியும்: எங்களுக்கு நீ கண்களாயிருப்பாய்:

நீ எங்களோடு வந்தால், ஆண்டவர் எங்களுக்கு என்னென்ன நன்மை செய்வாரோ, அதை உனக்கும் நாங்கள் செய்வோம் என்றார்.

ஆண்டவர் மலையைவிட்டு இஸ்ரயேலர் மூன்று நாள் பயணம் செய்தனர்: அவர்கள் அடுத்துத் தங்குமிடத்தைக் காட்டும்படி ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை மூன்று நாள் பயணத்திலும் அவர்கள்முன் சென்றது.

அவர்கள் பாளையத்திலிருந்து புறப்பட்டபோதெல்லாம் ஆண்டவரின் மேகம் பகலில் அவர்கள்மேல் இருந்தது.

பேழை புறப்படும்போதெல்லாம் மோசே,

அது தங்கும்போதோ அவர், ஆண்டவரே! பல்லாயிரவரான இஸ்ரயேலிடம் திரும்பும் என்பார்.

அதிகாரம் 11

பின்னர் ஆண்டவரின் செவிகளில் படுமாறு தங்கள் கடினப்பாடுகளைப் பற்றி மக்கள் முறையிட்டனர்: ஆண்டவர் அதைக் கேட்டபோது அவருக்குச் சினம் மூண்டது: ஆண்டவரின் நெருப்பு அவர்களிடையே பற்றி எரிந்தது: பாளையத்தின் கடைக்கோடிப் பகுதிகள் சிலவற்றை அது எரித்துவிட்டது.

அப்போது மக்கள் மோசேயிடம் அழுதனர்: மோசே ஆண்டவரிடம் மன்றாடவே நெருப்பு அணைந்தது.

எனவே அந்த இடத்துக்குத் தபேரா என்று பெயராயிற்று: ஏனெனில், ஆண்டவரின் நெருப்பு அவர்களிடையே எரிந்தது.

மேலும் அவர்களிடையே இருந்த பல இன மக்கள் உணவில் பெரு விருப்புக் கொண்டனர்: இஸ்ரயேல் மக்களும் மீண்டும் அழுது கூறியது: நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்?

நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றின் நினைவு வருகிறது.

ஆனால் இப்பொழுதோ நம்வலிமை குன்றிப் போயிற்று: மன்னாவைத் தவிர வேறெதுவும் நம் கண்களில் படுவதில்லையே!

மன்னா கொத்துமலிலி விதைபோன்றும் அதன் தோற்றம் முத்துப்போன்றும் இருந்தது.

மக்கள் வெளியில் சென்று அதைச் சேகரித்தனர்: அரவைக் கல்லில் அரைத்தனர் அல்லது உரலில் போட்டு இடித்தனர்: பானைகளில் அதை வேக வைத்து அதில் அப்பங்கள் செய்தனர்: அதன் சுவை எண்ணெயில் செய்த அப்பங்களின் சுவையை ஒத்திருந்தது.

இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது.

எல்லா வீடுகளிலுமிருந்த மக்களும் தம்தம் கூடார வாயிலில் இருந்து அழும் குரலை மோசே கேட்டார்: ஆண்டவரின் சினம் கொழுந்துவிட்டெரிந்தது: மோசேக்கும் அது பிடிக்கவில்லை.

மோசே ஆண்டவரிடம் கூறியது: உம் அடியானுக்கு ஏன் இந்தக்கேடு? நீர் எனக்குக் கருணை கட்டாமல் இம்மக்களின் எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்?

இம்மக்களையெல்லாம் நானா கருத்தரித்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்? பாலுண்ணும் குழந்தையை ஏந்திச் செல்பவள் போன்று இவர்களை மார்போடு ஏந்தி, அவர்கள் மூதாதையருக்கு நான் வாக்களித்திருந்த நாட்டுக்குக் கொண்டு செல் என்று நீர் சொல்வானேன்?

இம்மக்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய இறைச்சிக்கு நான் எங்குபோவேன்? அவர்கள் எனக்கு முன் அழுது, உண்ண எங்களுக்கு இறைச்சி தாரும் என்றும் கேட்கிறார்களே?

நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது: இது எனக்கு மிகப்பெரும் பளு.

இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்: உம் பார்வையில் எனக்குத் தயை கிடைத்தால் இந்தக் கொடுமையை நான் காணாதிருக்கட்டும்.

ஆண்டவர் மோசேயிடம் சொன்னது: இஸ்ரயேல் மூப்பரில் எழுபதுபேரை என்னிடம் கூட்டிவா: அவர்கள் மக்களுள் உனக்குத் தெரிந்தவர்களாகவும், பெரியோர்களாகவும், அதிகாரிகளாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்: அவர்களைச் சந்திப்புக் கூடாரத்துக்கு அழைத்து வா: அவர்கள் அங்கே உன்னோடு நிற்கட்டும்.

நான் இறங்கி வந்து அங்கே உன்னோடு பேசுவேன்: உன்னிலிருக்கும் ஆவியில் கொஞ்சம் எடுத்து நான் அவர்களுக்கு அளிப்பேன்: நீ மட்டும் சுமக்காதபடி மக்களின் பளுவை அவர்களும் உன்னோடு சேர்ந்து தாங்குவார்கள்.

மக்களிடம் சொல்: நாளை உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்: நீங்கள் இறைச்சி உண்பீர்கள்: ஆண்டவரின் செவிகளில்பட, நமக்கு உண்ணஇறைச்சி யார் தருவார்? எகிப்தில் எங்களுக்கு எவ்வளவோ நன்றாக இருந்தது! என்று அழுதிருக்கிறீர்கள்: எனவே ஆண்டவர் உங்களுக்கு இறைச்சி தருவார், நீங்கள் உண்பீர்கள்.

ஒரு நாள், இரண்டு நாள், ஜந்து நாள், பத்து நாள், இருபது நாள் அல்ல,

அது உங்கள் மூக்கில் வெளி வந்து உங்களுக்குத் திகட்டிப்போகும்வரை ஒரு மாதம் முழுதும் உண்பீர்கள்: ஏனெனில் உங்களிடையே இருக்கும் ஆண்டவரை நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள்: ஏன் நாங்கள் எகிப்திலிருந்து வந்தோம்? என்று கூறி அவர்முன் நீங்கள் அழுதிருக்கிறீர்கள்.

ஆனால் மோசே கூறியது: என்னோடிருக்கும் காலாட்படையினர் எண்ணிக்கையோ ஆறு இலட்சம்: அவர்கள் ஒரு மாதம் முழுதும் உண்ண அவர்களுக்கு இறைச்சி தருவேன் என்று நீர் சொல்லியிருக்கிறீர்.

அவர்களுக்குப் போதுமானதாய் இருக்கும்படி ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும் அடிக்கப்படுமோ? அல்லது அவர்களுக்குப் போதுமான அளவில் கடலின் மீன்கள் எல்லாம் அவர்களுக்காகப் பிடித்துச் சேர்க்கப்படுமோ?

ஆண்டவர் மோசேயிடம், ஆண்டவரின் கை குறகிவிட்டதா? இப்போது எனது வார்த்தையின்படியே உங்களுக்கு நடக்குமா, இல்லையா என்று பார் என்றார்.

அவ்வாறே மோசே வெளியே சென்று மக்களிடம் ஆண்டவரின் வார்த்தைகளைக் கூறினார்: மக்களின் மூப்பரில் எழுபது பேரை அழைத்துக் கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தி வைத்தார்.

பின்னர் ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து அவரோடு பேசினார்: அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்: ஆவி அவர்கள்மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்: அதன் பின்னர் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கிவிட்டனர்: ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள் மீதும் ஆவி இறங்கியது: பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு: ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை: ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்குரைத்தனர்:

ஓர் இளைஞன் ஓடிவந்து மோசேயிடம், எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்குரைக்கின்றனர் என்று சொன்னான்.

உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும் என்றார்.

ஆனால் மோசே அவரிடம், என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச்சிறப்பு! என்றார்.

பின் மோசேயும் இஸ்ரயேலின் மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர்.

மேலும் ஆண்டவரிடமிருந்து ஒரு காற்றுப் புறப்பட்டுச் சென்றது: அது கடலிலிருந்து காடைகளை அடித்துக் கொண்டு வந்தது: பாளையத்தின் அருகில் ஒருபுறம் ஒருநாள் பயணத்தொலையிலும் மறுபுறம் ஒருநாள் பயணத் தொலையிலும் பாளையத்தைச் சுற்றித் தரைக்கு மேல் இரண்டு முழ அளவு உயரத்தில் விழும்படி செய்தது.

மக்கள் எழுந்து அந்தப் பகல்முழுதும் இரவு முழுதும், மறுநாள் பகல் முழுதும் காடைகளைச் சேர்த்தார்கள். மிகக் குறைவாகச் சேர்த்தவன் பத்து கலம் அளவு சேர்த்திருந்தான்: அதை அவர்கள் பாளையத்தைச் சுற்றி வெளியே முழுதும் தங்களுக்காகப் பரப்பி வைத்தார்கள்.

அவர்கள் விழுங்கு முன் பற்களிடையில் இறைச்சி இருக்கையிலேயே ஆண்டவரின் சினம் மக்களுக்கு எதிராக மூண்டது: ஆண்டவர் மாபெரும் வாதையால் மக்களைச் சாகடித்தார்.

ஆகவே அந்த இடத்துக்கு கிப்ரோத்து அத்தாவா என்ற பெயர் வழங்கியது. ஏனெனில் பெருவிருப்புக் கொண்டிருந்த மக்களை அவர்கள் அங்கேயே புதைத்து விட்டனர்.

கிப்ரோத்து அத்தாவிலிருந்து மக்கள் பயணமாகி அசரோத்துக்கு வந்து, அங்கே தங்கினர்.

அதிகாரம் 12

மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்: அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர்.

அவர்கள், ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா? என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார்.

பூவுலகின் அனைத்து மாந்நரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார்.

உடனே ஆண்டவர் மோசே, ஆரொன், மிரியாம் ஆகியோரிடம், நீங்கள் மூவரும் சந்திப்புக் கூடாரத்தருகே வாருங்கள் என்றார். அவர்கள் மூவரும் வந்தனர்.

மேகத்தூண் ஒன்றில் ஆண்டவர் இறங்கி வந்து கூடார வாயிலருகே நின்று ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார்: அவர்கள் இருவரும் முன் வந்தனர்.

அவர் கூறியது: என் வார்த்தைகளைக் கேளுங்கள்: உங்களுக்குள் இறைவாக்கினன் ஒருவன் இருந்தால் ஆண்டவராகிய நான் ஒரு காட்சியின் வழியாக அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன். கனவில் அவனோடு பேசுவேன்.

ஆனால் என்அடியான் மோசேயோடு அப்படியல்ல: என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன்:

நான் அவனோடு பேசுவது மறைபொருளாக அல்ல, நேர்முகமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆண்டவர் உருவையும் அவன் காண்கிறான். பின்னர் ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை?

மேலும் ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது: அவர் அகன்று சென்றார்.

கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனிபோன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது: ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே அவள் தொழுநோயாளியாயிருக்கக் கண்டார்.

ஆரோன் மோசேயிடம், என் தலைவரே! அறிவீனமாக நாங்கள் செய்த பாவத்தை எங்கள்மேல் சுமத்த வேண்டாம்:

தாயின் வயிற்றிலிருந்து செத்துப் பிறந்த அரைகுறைக்குழந்தை போன்று இவள் ஆகாதிருக்கட்டும் என்றார்.

மோசே ஆண்டவரிடம் முறையிட்டு, கடவுளே, இவளைக் குணமாக்க வேண்டுகிறேன் என்றார்.

ஆனால் ஆண்டவர் மோசேயிடம், அவள் தந்தை அவள் முகத்தில் காறித் துப்பியிருந்தால், ஏழுநாள்கள் அவள் வெட்கப்பட வேண்டாமோ? பாளையத்துக்குப் புறம்பே அவள் ஏழுநாள்கள் விலக்கப்பட்டிருக்கட்டும்: அதன் பின் மீண்டும் அவள் உள்ளே கொண்டுவரப்படலாம் என்றார்.

அவ்வாறே மிரியாம் ஏழு நாள்கள் பாளையத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்: மிரியாம் மறுபடியும் உள்ளே கொண்டு வரப்படும்வரை மக்கள் தங்கள் பயணத்தைத் தொடரவில்லை.

அதன்பின் மக்கள் அசரோத்திலிருந்து புறப்பட்டுப் பாரான் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.

அதிகாரம் 13

ஆண்டவர் மோசேயிடம்,

இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்பு: மூதாதையர் குலம் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களுள் தலைவனாயிருக்கும் ஒருவனை நீ அனுப்ப வேண்டும் என்றார்.

ஆண்டவர் கட்டளைப்படியே மோசெ அவர்களைப் பாரான் பாலைநிலத்திலிருந்து அனுப்பினார்: அந்த ஆள்கள் அனைவரும் இஸ்ரயேல் மக்களின் தலைவர்களாக இருந்தவர்கள்.

அவர்களின் பெயர்கள்: ரூபன் குலத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா:

சிமியோன் குலத்திலிருந்து ஓரியின் மகன் சாபாற்று:

யூதாக் குலத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேபு:

இசக்கார் குலத்திலிருந்து யோசேப்பின் மகன் இகால்:

எப்ராயிம் குலத்திலிருந்து நூனின் மகன் ஓசெயா:

பென்யமின் குலத்திலிருந்து இராபின் மகன் பல்தி:

செபுலோன் குலத்திலிருந்து சோதியின் மகன் காதியேல்:

யோசேப்பு குலத்திலுள்ள மனாசே குலத்திலிருந்து சூசியின் மகன் காத்தி:

தாண் குலத்திலிருந்து கெமல்லியின் மகன் அம்மீயேல்:

ஆசேர் குலத்திலிருந்து மிக்கேலின் மகன் செதூர்:

நப்தலி குலத்திலிருந்து ஓப்சியின் மகன் நக்பி:

காத்து குலத்திலிருந்து மாக்கியின் மகன் கெயுவேல்:

நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பிய ஆள்களின் பெயர்கள் இவைகளே. மோசே நூனின் மகன் ஓசேயாவை யோசுவா என்று பெயரிட்டு அழைத்தார்.

கானான் நாட்டை உளவு பார்க்கும்படி மோசே அவர்களை அனுப்பினார்: அவர் அவர்களிடம், நீங்கள் நெகேபுக்குச் சென்று அதற்கு அப்பால் மலைநாட்டுக்குப் போங்கள்:

அந்த நாடு எப்படியிருக்கிறது, அங்கு வாழும் மக்கள் வலிமையுள்ளவரா வலிமையுற்றவரா, அவர்கள் பலரா சிலரா,

அவர்கள் குடியிருக்கும் நாடு வளமையானதா வளமையற்றதா, அவர்கள் தங்கியிருக்கும் நகர்கள் பாளையங்களா கோட்டைகளா,

அந்த நாடு செல்வம் மிக்கதா ஏழ்மையானதா, மரங்கள் அங்கு உண்டா இல்லையா என்று பார்த்து வாருங்கள்: துணிவுடன் இருங்கள்: அந்நாட்டின் கனிகள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார். அது திராட்சையின் முதற்கனிப் பருவம்.

அவ்வாறே அவர்கள் போய் சின் பாலைநிலத்திலிருந்து ஆமாத்து நுழைவாயிலருகில் இருந்த இரகோபு வரையிலும் நாட்டை உளவு பார்த்தனர்.

அவர்கள் நெகேபினுள் சென்று, பின் எபிரோனுக்கு வந்தனர். அங்கு ஆனாக்கின் வழிமரபினரான அகிமான், சேசாய், தல்மாய் ஆகியோர் இருந்தனர்: எகிப்திலுள்ள சோவானிலும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே எபிரோன் கட்டப்பட்டிருந்தது.

பின்னர் அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்குக்கு வந்தனர்: அங்கிருந்து ஒரே குலையாயிருந்த திராட்சைப் பழங்களின் கிளையொன்றை அறுத்தனர்: அதை ஒரு தடியில் கட்டி, இருவர் சுமந்து வந்தனர்: அத்துடன் அவர்கள் மாதுளம் பழங்கள், அத்திப் பழங்கள் சிலவற்றையும் கொண்டு வந்தனர்.

இந்த இடம் இஸ்ரயேல் ஆள்கள் இங்கிருந்து வெட்டிய திராட்சைக் குலையை முன்னிட்டு எசுக்கோல் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது.

நாற்பது நாள்கள் நாட்டை உளவு பார்த்த பின் அவர்கள் திரும்பி வந்தனர்.

அவர்கள் பாரான் பாலை நிலத்தில் காதேசில் இருந்த மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் வந்தனர்: அவர்களுக்கும் முழு மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் செய்தி கொண்டு வந்தனர்: நாட்டின் கனியையும் அவர்களுக்குக் காட்டினர்.

அவர்கள் மோசேயிடம் கூறியது: நீர் எங்களை அனுப்பிய நாட்டுக்கு நாங்கள் சென்று வந்தோம்: அதில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது: இதுவே அதன் கனி.

ஆயினும் அந்நாட்டில் வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள்: நகர்கள் அரண் சூழ்ந்தவை, மிகப் பெரியவை: அத்துடன் ஆனாக்கின் வழி மரபினரையும் நாங்கள் அங்குக் கண்டோம்:

அமலேக்கியர் நெகேபு நாட்டில் வாழ்கின்றனர்: இத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலை நாட்டில் வாழ்கின்றனர்: கானானியர் கடலருகிலும் யோர்தானை ஒட்டியும் வாழ்கின்றனர்.

காலேபு மோசேமுள்ள மக்களை உடனே அமைதிப்படுத்தி, நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக் கொள்வோம்: ஏனெனில் நாம் அதை எளிதில் வென்றுவிடமுடியும் என்றார்.

ஆனால் அவருடன் சென்றிருந்த ஆள்கள், நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது: ஏனெனில் அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள் என்றனர்.

இவ்வாறு அவர்கள் உளவு பார்த்து வந்த நாட்டைப் பற்றித் தவறான தகவலை இஸ்ரயேல் மக்களுக்குக் கொண்டு வந்தனர்: அவர்கள் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் சென்றிருந்த நாடு தன் குடிமக்களையே விழுங்குவதாய் இருக்கிறது: அதில் நாங்கள் கண்ட மனிதர் அனைவரும் மிகவும் நெடிய உருவத்தினர்:

அத்துடன் நெப்பிலிமிலிருந்து வருகிற ஆனாக்கின் புதல்வராகிய அரக்கரையும் கண்டோம்: எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போன்றிருந்தோம்: அவர்களுக்கும் நாங்கள் அவ்வாறே காணப்பட்டோம்.

அதிகாரம் 14

உடனே மக்கள் கூட்டமைப்பு முழுதும் உரத்தக் குரலில் புலம்பிற்று: மக்கள் அன்றிரவு அழுது கொண்டே இருந்தனர்.

இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்: மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவர்களிடம், எகிப்து நாட்டில் நாங்கள் இறந்திருந்தால் எவ்வளவோ நலம்! இந்தப் பாலை நிலத்தில் மடிந்தால் அதுவும் நலமே!

வாளுக்கு இரையாகும்படியா ஆண்டவர் எங்களை இந்த நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்? எங்கள் மனைவியரும் குழந்தைகளும் மடியப்போகிறார்கள்! நாம் எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் செல்வது நலமன்றோ? என்றனர்.

மேலும் அவர்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, நாம் ஒரு தலைவனை நியமித்துக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிச் செல்வோம் என்றனர்.

உடனே மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் முழுவதற்கும் முன்பாக முகங்குப்புற விழுந்தனர்.

மேலும் நாட்டை உளவு பார்த்து வந்தவர்களிடையே இருந்த நூன் மகன் யோசுவாவும் எப்புன்னே மகன் காலேபும் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு,

இஸ்ரயேலர் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் கடந்து சென்ற நாடு மிகச் சிறந்த நாடு.

ஆண்டவருக்கு நம்மேல் நல்விருப்பு ஏற்பட்டால் பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டினுள் அவர் நம்மை அழைத்துச் சென்று அதை நமக்குத் தருவார்.

எனவே ஆண்டவருக்கெதிராக மட்டும் கிளர்ந்தெழாதீர்: நாட்டின் மக்களுக்கு அஞ்சாதீர்: அவர்கள் நமக்கு இரையாவர்: அவர்களின் பாதுகாவல் அகன்று போயிற்று: ஆண்டவரோ நம்மோடு இருக்கிறார்: அவர்களுக்கு அஞ்சவேண்டாம்.

ஆனால் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அவர்களைக் கல்லால் எறியும்படி கூறினர்: உடனே ஆண்டவரின் மாட்சி சந்திப்புக் கூடாரத்தில் இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தோன்றியது.

ஆண்டவர் மோசேயிடம், எதுவரை இம்மக்கள் என்னை இழிவுபடுத்துவார்கள், நான் அவர்களுக்கு அடையாளங்கள் தந்தும் எதுவரை இவர்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாதிருப்பார்கள்?

நான் அவர்களைக் கொள்ளை நோயால் வதைத்து அவர்களைப் புறக்கணித்து விடுவேன்: உன்னையோ அவர்களைவிடப் பெரியதும் வலியதுமான இனமாக்குவேன் என்றார்.

ஆனால் மோசே ஆண்டவரிடம் கூறியது: அப்போது எகிப்தியர் இதைப்பற்றிக் கேள்விப்படுவார்களே! நீர் அவர்களிடமிருந்துதானே இம்மக்களை உம் ஆற்றலால் கொண்டு வந்தீர்!

அதோடு இந்த நாட்டுக் குடிகளிடமும் அவர்கள் சொல்லி வைப்பார்கள். ஆண்டவரே, நீர் இம்மக்களிடையே இருக்கிறீர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் ஆண்டவரே, நீர் நேர் முகமாய்க் காணப்படுகிறீர்: உமது மேகம் அவர்கள்மேல் நிற்கிறது: பகலில் மேகத் தூணிலும் இரவில் நெருப்புத் தூணிலும் நீர் அவர்களுக்கு முன்னே போகிறீர்.

நீர் இப்போது இம்மக்களை ஓர் ஆள் எனக் கொன்றுவிட்டால், உம் புகழைக் கேள்விப்பட்டிருந்த இனத்தவரெல்லாம்,

ஆண்டவர் இம்மக்களுக்கு வாக்களித்த நாட்டுக்குள் அவர்களைக் கொண்டுவர இயலாததால் பாலைநிலத்தில் அவர்களைக் கொன்று போட்டார் என்று சொல்வார்களே!

இப்போதும் உம்மை மன்றாடிக் கேட்கிறேன்: நீர் வாக்களித்தபடி ஆண்டவர் ஆற்றல் சிறப்புறுவதாக.

ஆண்டவர் சினங்கொள்ளத் தாமதிப்பவர்: அருளிரக்கம் காட்டுவதில் அளவு கடந்தவர்: குற்றங்களையும் குறைகளையும் மன்னிப்பவர்: எவ்விதத்திலும் நம்பிக்கைத் துரோகம் செய்வோரை விட்டு விடாதவர்: மூதாதையர் குற்றங்களுக்காக அவர்கள் பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறை வரை தண்டிப்பவர் என்றும் சொல்லியிருக்கிறீரே!

உம்மை மன்றாடிக் கேட்கிறேன், இம்மக்களின் குற்றங்களை மன்னியும்: உன் அருளிரக்கத்தின் பேரளவின்படியும் எகிப்திலிருந்து இதுகாறும் இம்மக்களை நீர் மன்னித்து வந்தது போன்றும் செய்யும்.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: உன் வாக்கின்படி நான் மன்னித்துவிட்டேன்:

ஆயினும் உண்மையாகவே என் உயிர்மேல் ஆணை! பூவுலகனைத்தும் நிறைந்துள்ள ஆண்டவரின் மாட்சியின் மேல் ஆணை!

எகிப்திலும் இப்பாலை நிலத்திலும் என் மாட்சியையும் நான் செய்த அருஞ்செயல்களையும் கண்டிருந்தும், இப் பத்துத் தடவையும் இம்மனிதர்கள் என்னைச் சோதித்து என் குரலுக்குச் செவிகொடுக்காததால்,

இவர்களில் ஒருவன்கூட இவர்கள் மூதாதையருக்குத் தருவதாக நான் வாக்களித்திருந்த நாட்டினைக் காண மாட்டான்: என்னை இழிவுபடுத்திய எவனுமே அதைப் பார்க்கமாட்டான்.

ஆனால் என் அடியான் காலேபு வேறுபட்ட மனநிலை கொண்டு என்னை முழமையாகப் பின்பற்றினான்: ஆகவே அவன் சென்று வந்த நாட்டுக்குள் அவனைக் கொண்டு வருவேன்: அவன் தலைமுறையினர் அதனை உடைமையாக்கிக்கொள்வர்.

இப்போது அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றனர். எனவே நாளைக்கு நீங்கள் செங்கடலுக்குப் போகும் வழியே பாலைநிலத்துக்குத் திரும்பிச் செல்லுங்கள்.

மேலும் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:

இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பினர் எதுவரை எனக்கெதிராக முறுமுறுப்பர்? எனக்கெதிராக முறுமுறுக்கும் இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புகளை நான் கேட்டேன்.

நீங்கள் அவர்களிடம் சொல்லவேண்டியது, ஆண்டவர் கூறுவதாவது: என் உயிர் மேல் ஆணை! என் செவிகளில்படுமாறு நீங்கள் சொன்னதையே நான் உங்களுக்குச் செய்வேன்:

எனக்கெதிராக முறுமுறுத்த, இருபது வயதும் அதற்கு மேலும் எண்ணப்பட்ட மொத்தத் தொகையினரான நீங்கள் இப்பாலைநிலத்¢ல் பிணங்களாக விழுவீர்கள்.

நீங்கள் குடியிருக்கும்படி நான் வாக்களித்த நாட்டிற்குள் எப்புன்னே மகன் காலேபையும் நூன் மகன் யோசுவாவையும் தவிர ஒருவருமே வரமாட்டீர்கள்.

ஆனால் இரையாகிவிடப்போவதாக நீங்கள் கருதிய உங்கள் குழந்தைகளை நான் கொண்டு போய்ச் சேர்ப்பேன்: நீங்கள் இழிவாய் எண்ணின நாட்டை அவர்கள் கண்டறிவார்கள்.

உங்களைப் பொறுத்தமட்டில் நீங்கள் இப் பாலைநிலத்தில் பிணங்களாக விழுவீர்கள்.

நாற்பது ஆண்டுகள் உங்கள் பிள்ளைகள் இப் பாலைநிலத்தில் அலைந்து திரிவர்: உங்கள் நம்பிக்கைத் துரோகத்திற்காக இப் பாலைநிலத்தில் உங்களுள் கடைசி ஆள்பிணமாக விழும்வரை அவர்கள் துன்புறுவர்.

நீங்கள் நாட்டை உளவு பார்த்த நாள்களின் எண்ணிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆண்டாக நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப்பழியைச் சுமப்பீர்கள்: என் வெறுப்பையும் அறிந்துகொள்வீர்கள்.

ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்: எனக்கெதிராக ஒன்று கூடிய இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் இதை நான் கட்டாயம் செய்துமுடிப்பேன்: இப்பாலைநிலத்தில் அவர்கள் முற்றிலும் அழிந்தொழிந்து அங்கேயே மடிவார்கள்.

நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பி, பின் திரும்பி வந்து நாட்டைப் பற்றித் தவறான அறிக்கையைக் கொண்டுவந்து மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவருக்கு எதிராக முறுமுறுக்கச் செய்த ஆள்கள்,

அதாவது, நாட்டைப்பற்றித் தவறான அறிக்கை கொண்டு வந்த ஆள்கள் ஆண்டவர் முன்னிலையில் வாதையால் மாண்டனர்.

ஆயினும் நாட்டை உளவு பார்க்கச் சென்றவர்களில் நூன் மகன் யோசுவாவும் எப்புன்னே மகன் காலேபும் உயிர் தப்பி வாழ்ந்தனர்.

மோசே இவ்வார்த்தைகளை இஸ்ரயேல் மக்கள் எல்லாரிடமும் கூறினார்: மக்கள் மிகவும் அழுது புலம்பினர்.

அவர்கள் காலையில் எழுந்து, இதோ நாம் இங்கிருந்து ஆண்டவர் வாக்களித்த இடத்திற்கு ஏறிச் செல்வோம்: நாம் பாவம் செய்து விட்டோம் என்று சொல்லி மலையுச்சிகளை நோக்கிச் சென்றனர்.

அப்போது மோசே சொன்னது: ஏன் இப்போது ஆண்டவர் கட்டளையை மீறுகிறீர்கள்? அது நடக்கப் போவதில்லை.

உங்கள் எதிரிகளால் முறியடிக்கப்படாதபடி நீங்கள் ஏறிச் செல்ல வேண்டாம்: ஆண்டவர்தாம் உங்களிடையே இல்லையே!

அங்கே அமலேக்கியரும் கானானியரும் உங்களை எதிர்க்க இருக்கிறார்கள்: நீங்கள் வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள், ஏனெனில் ஆண்டவரைப் பின்பற்றுவதினின்று நீங்கள் விலகிவிட்டீர்கள்: ஆண்டவர் உங்களோடிருக்கமாட்டார்.

ஆனாலும் அவர்கள் மலையுச்சிகளுக்கு ஏறிச் செல்லத் துணிந்தனர்: ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையோ, மோசேயோ பாளையத்தை விட்டுப் புறப்படவேயில்லை.

அப்போது அம் மலை நாட்டில் தங்கியிருந்த அமலேக்கியரும் கானானியரும் இறங்கி வந்து அவர்களை முறியடித்து ஓர்மா மட்டும் அவர்களைத் துரத்திச் சென்றனர்.

அதிகாரம் 15

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீ இஸ்ரயேல் மக்களிடம் இவ்வாறு சொல்: நீங்கள் குடியிருக்க நான் உங்களுக்குத் தரும் நாட்டினுள் வரும்போது மாட்டுமந்தையிலிருந்து அல்லது ஆட்டு மந்தையிலிருந்து நெருப்புப் பலியொன்றை ஆண்டவருக்குப் படைப்பாய்:

அது எரிபலியாகவோ வேறு பலியாகவோ இருக்கும்: அது பொருத்தனையை நிறைவேற்றுவதாகவோ, தன்னார்வப் படையலாகவோ, குறிக்கப்பட்ட திருநாளில் செய்வதாகவோ இருக்கும்: அது ஆண்டவர் விரும்பத்தக்க நறுமணத்தை ஏற்படுத்தும்.

அப்போது ஆண்டவருக்குப் படையல் கொண்டு வருபவன் உணவுப் படையலாகப் பத்திலொரு மரக்கால் மெல்லிய மாவைக் கால்படி எண்ணெயில் பிசைந்து படைக்க வேண்டும்.

எரிபலியோ வேறு பலியோ செலுத்துகையில் ஆட்டுக்குட்டி ஒவ்வொன்றுக்கும் கால்படி திராட்சைரசம் என நீர்மப்படையல் ஆயத்தப்படுத்தி வைக்க வேண்டும்.

ஆட்டுக் கிடாயாக இருந்தால், உணவுப் படையலாகப் பத்தில் இரண்டு பங்கு மரக்கால் மிருதுவான மாவை மூன்றிலொருபடி எண்ணெயில் பிசைந்து ஆயத்தப்படுத்துவீர்கள்.

நீர்மப்படையலாக நீங்கள் மூன்றிலொருபடி திராட்சை ரசம் படைப்பீர்கள்: இது ஆண்டவர் விரும்பும் நறுமணமாயிருக்கும்.

ஒரு பொருத்தனையை நிறைவேற்ற அல்லது ஆண்டவருக்கு நல்லுறவுப் பலியாக ஒரு காளையை எரிபலியாகவோ வேறுபலியாகவோ நீங்கள் ஆயத்தப்படுத்தும்போது,

அந்தக் காளையுடன் உணவுப் படையலாக பத்தில் மூன்று பங்கு மரக்கால் மெல்லிய மாவை அரைப்படி எண்ணெயில் பிசைந்து படைக்க வேண்டும்.

நீர்மப் படையலாக அரைப்படித் திராட்சை ரசத்தைக் கொண்டுவர வேண்டும். அது நெருப்புப் பலியாகி ஆண்டவர் விரும்பும் நறுமணமாக விளங்கும்.

காளை, ஆட்டுக்கிடாய், செம்மறிக் குட்டி அல்லது வெள்ளாட்டுக்குட்டி ஒவ்வொன்றுக்கும் இவ்வாறே செய்யவேண்டும்.

நீங்கள் ஆயத்தம் செய்யும் எண்ணிக்கைப்படி அவற்றின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொன்றிற்கும் நீங்கள் இப்படியே செய்வீர்கள்.

உள்நாட்டவர் அனைவரும் ஆண்டவர் விரும்பும் நறுமணமான நெருப்புப் பலியாக இவற்றை இம்முறையில் செலுத்த வேண்டும்.

உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவரோ தலைமுறைதோறும் உங்களோடிருப்பவரோ ஆண்டவர் விரும்பும் நறுமணமாக நெருப்புப் பலி செலுத்த விரும்பினால் அவரும் நீங்கள் செய்கிறபடியே செய்ய வேண்டும்.

சபையில், உங்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவருக்கும் ஒரே விதிமுறையே: உங்கள் தலைமுறைதோறும் என்றுமுள்ள விதிமுறை இதுவே: உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவர் ஆண்டவர் திருமுன் உங்களைப் போன்றே இருப்பார்.

உங்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவருக்கும் ஒரே சட்டம், ஒரே நீதித் தீர்ப்பு.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது: நான் உங்களை அழைத்துச் செல்லும் நாட்டுக்குள் நீங்கள் வந்து,

அந்நாட்டின் உணவை நீங்கள் உண்ணும்போது ஆண்டவருக்கென உயர்த்திப் படைக்கும் படையலொன்றை அர்ப்பணிப்பீர்கள்.

முதல் மாவிலிருந்து பிசைந்து செய்த ஓர் அடையை நீங்கள் உயர்த்திப் படைக்கும் படையலாக அர்ப்பணிக்க வேண்டும்: போரடிக்கும் களத்திலிருந்து வரும் படையல் போன்றே அதை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும்.

முதல் மாவிலிருந்து பிசைந்து செய்ததை ஆண்டவருக்கு ஒரு உயர்த்திப் படைக்கும் படையலாக உங்கள் தலைமுறை தோறும் கொடுப்பீர்கள்.

ஆயினும் நீங்கள் ஆண்டவர் மோசேக்கு இட்ட இந்தக் கட்டளைகளை மீறினால்,

ஆண்டவர் கட்டளை கொடுத்தநாள் முதல் தலைமுறைதோறும் மோசே வழியாக அவர் கட்டளையிட்ட எல்லாவற்றிலும்

மக்கள் கூட்டமைப்புக்கு அறியாப் பிழையேதும் செய்தால், முறைப்படி மக்கள் கூட்டமைப்பு முழுவதும் ஆண்டவர் விரும்பும் நறுமணமாக, அதன் உணவுப் படையலோடும் நீர்மப் படையலோடும் சேர்த்து ஓர் இளங்காளையை எரிபலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாயைப் பாவம் போக்கும் பலியாகவும் செலுத்த வேண்டும்.

குரு இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதுக்குமாக பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்: அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்: ஏனெனில் அது ஓர் அறியாப்பிழை: அவர்கள் தங்கள் படையலை ஆண்டவருக்கு ஒரு நெருப்புப் பலியாகவும் தங்கள் அறியாப் பிழைக்காக ஆண்டவர் முன் பாவம்போக்கும் பலியாகவும் கொண்டுவந்து விட்டார்கள்.

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும், அவர்களிடையே தங்கியிருக்கும் அயல் நாட்டவரும் மன்னிக்கப்படுவார்கள்: ஏனெனில் மக்கள் அனைவருமே இந்த அறியாப் பிழையில் பங்கு கொண்டவர்கள்.

அறியாமல் ஓர் ஆள் பாவம் செய்தால் அவன் பாவ நீக்கப்பலியாக ஒரு வயது வெள்ளாடு ஒன்றைப் படைக்க வேண்டும்.

ஒருவன் அறியாப்பிழை செய்தால் அவனுக்காகக் குரு ஆண்டவர்முன் கறைநீக்கம் செய்வார்: அவனது அறியாப் பிழைக்காக அவனுக்குக் கறை நீக்கம் செய்யப்படும்: அவன் மன்னிக்கப்படுவான்.

ஒருவன் அறியாமல் செய்யும் எதற்கும், அவன் இஸ்ரயேல் மக்களைச் சார்ந்த உள்நாட்டவனாயினும் அவர்களிடையே தங்கியிருக்கும் அயல் நாட்டவனாயினும் உங்களிடம் இருக்க வேண்டியது ஒரே சட்டமே.

ஆனால் ஒருவன் வேண்டுமென்றே எதையும் துணிந்து செய்தால் அவன் உள்நாட்டவனாயினும் உங்களிடையே இருக்கும் அயல்நாட்டவனாயினும் அவன் ஆண்டவரை ஏளனம் செய்கிறான்: அந்த ஆள் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்படவேண்டும்.

ஏனெனில் அவன் ஆண்டவரின் வாக்கை இகழ்ந்துவிட்டான், அவர்தம் கட்டளையை மீறிவிட்டான்: அந்த ஆள் முற்றிலும் விலக்கிவைக்கப்படவேண்டும்: அவன் குற்றம் அவன் மேலேயே இருக்கும்.

இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் இருக்கையில் ஓய்வுநாளில் ஒரு மனிதன் விறகு பொறுக்கிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.

அவன் விறகு பொறுக்கியதைக் கண்டவர்கள் அவனை மோசேயிடமும் ஆரோனிடமும் மக்கள் கூட்டமைப்பு அனைத்திடமும் கூட்டி வந்தனர்.

அவர்கள் அவனைக் காவலில் வைத்தனர்: ஏனெனில் அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்பது தெளிவாக இல்லை.

ஆண்டவர் மோசேயிடமும், இந்த மனிதன் கொல்லப்படவேண்டும்: மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் பாளையத்துக்கு வெளியே அவனைக் கல்லால் எறிய வேண்டும் என்றார்.

மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவனைப் பாளையத்துக்கு வெளியே கொண்டுவந்து ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவனைக் கல்லால் எறிந்தனர்: அவனும் செத்தான்.

மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு: அவர்கள் தலைமுறைதோறும் தங்கள் உடைகளின் முனைகளில் குஞ்சங்கள் செய்து ஒவ்வொரு குஞ்சத்திலும் ஒரு நீல நாடாவைக் கட்டச் செய்:

நீங்கள் ஒழுக்கம் கெட்டு நடப்பதற்கு ஏதவாய் உங்கள் இதயங்களும் உங்கள் கண்களும் விரும்புவதைப் பின்பற்றாமல் நீங்கள் அவற்றைப் பார்த்து ஆண்டவர் கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் நினைவு கூர்ந்து அவற்றைச் செய்திடவே இக்குஞ்சம்.

அதனால் நீங்கள் என் கட்டளைகளையெல்லாம் நினைவில் கொண்டு அவற்றை நிறைவேற்றுவீர்கள், உங்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாகிருப்பீர்கள்.

உங்களுக்குக் கடவுளாயிருக்கும்படி உங்களை எகிப்து நாட்டிலிருந்து கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே: நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.

அதிகாரம் 16

லேவியின் மகன் கோகாத்துக்குப் பிறந்த இட்சகாரின் புதல்வன் கோராகும், ரூபன் வழிவந்த எலியாபு புதல்வர்கள் தாத்தான், அபிராமும், பெலேத்தின் மகன் ஓனம்,

இஸ்ரயேல் மக்களில் சிலரைச் சேர்த்துக்கொண்டு மோசேக்கு எதிராக எழும்பினர். இவர்கள் மக்கள் கூட்டமைப்பிலிருந்து சபையில் தெரிந்தெடுக்கப்பட்ட பேர்பெற்ற இருநூற்றைம்பது தலைவர்கள் ஆவர்.

அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்து அவர்களிடம், நீங்கள் மிதமிஞ்சிப் போய்வீட்டீர்கள்: மக்கள் கூட்டமைப்பு முழுவதிலுமுள்ள ஒவ்வொருவரும் தூயவர்தாம்: ஆண்டவரும் அவர்களோடு இருக்கிறார்: அப்படியிருக்க ஏன் ஆண்டவரின் சபைக்கு மேலாக உங்களை உயர்த்திக் கொள்கிறீர்கள்? என்று கேட்டனர்.

மோசே இதைக் கேட்டு முகங்குப்புற விழுந்தார்.

அவர் கோராகிடமும் அவன் கூட்டத்தவரிடமும் கூறியது: காலையில் ஆண்டவர் தம்முடையவன் யார், தூய்மையானவன் யார் என்று காட்டி அவனைத் தம்மருகே வரச் செய்வார்: தாம் தெரிந்துகொண்டவனையே அவர் தம்மருகே வரச் செய்வார்:

செய்யவேண்டியது இதுவே: கோராகே! அவன் கூட்டத்தவரே! தூபக் கலசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்:

நாளை ஆண்டவர் திருமுன் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போடுங்கள்: ஆண்டவர் தெரிந்து கொள்ளுகிற மனிதனே தூயவனாயிருப்பான்: லேவியின் புதல்வரே! நீங்கள்தாம் மிதமிஞ்சிப் போய் விட்டீர்கள்.

மேலும் மோசே கோராகிடம் கூறியது: லேவியின் புதல்வரே! இப்போதும் கேளுங்கள்:

இஸ்ரயேலின் கடவுள் உங்களைத் தம்மருகில் வரச்செய்து, ஆண்டவரின் திருவுறைவிடத்தல் நீங்கள் பணி செய்யவும் மக்கள் கூட்டமைப்பின்முன் நின்று அவர்களுக்குச் சேவை செய்யவும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்தது அற்பமான காரியமா?

அவர் உன்னையும் லேவியின் புதல்வரின் உன் சகோதரர் அனைவரையும் தம்மருகில் வரச் செய்தாரே! இதனோடு குருத்துவத்தையும் நாடுவீர்களோ?

ஆதலால் நீயும் உன் கூட்டத்தவரும் ஆண்டவருக்கு எதிராகவே இருக்கிறீர்கள்: ஆரோனுக்கு எதிராக நீங்கள் முறுமுறுப்பதற்கு அவர் யார்?

பின் மோசே ஆளனுப்பி எலியாபின் புதல்வர் தாத்தானையும் அபிராமையும் அழைத்தார். அவர்களோ, நாங்கள் வர மாட்டோம்:

இப்பாலை நிலத்தில் எங்களைக் கொல்லும்படி, பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிலிருந்து எங்களைக் கொண்டு வந்து, இப்போது எங்கள்மேல் நீர் உம்மை அதிகாரியாக்கிக் கொள்வது அற்பமான காரியமா?

மேலும் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிற்கு நீர் எங்களைக் கொண்டு வரவுமில்லை: திராட்சைத் தோட்டங்களை எங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கவுமில்லை: இம்மனிதர்களின் கண்களைப் பிடுங்கி விடுவீரோ? நாங்கள் வரவே மாட்டோம் என்றனர்.

மோசே கடுஞ்சினம் கொண்டார். அவர் ஆண்டவரிடம், இவர்கள் படையலை ஏற்க வேண்டாம்: இவர்களிடமிருந்து ஒரு கழுதையைக் கூட நான் வாங்கியதில்லை: இவர்களில் ஒருவனுக்கும் நான் தீங்கிழைத்ததில்லை என்றார்.

பின் மோசே கோராகிடம், நீயும் உன் கூட்டத்தார் எல்லாரும்-நீயும் அவர்களும் ஆரோனும் நாளை ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்:

உங்களுள் ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்து, அதில் தூபமிட்டு, ஆளுக்கு ஒன்றாக மொத்தம் இருநூற்றைம்பது தூப கலசங்களை, ஆண்டவர் திருமுன் கொண்டு வரட்டும். நீயும் ஆரோனும் உங்கள் தூப கலசங்களைக் கொண்டு வாருங்கள் என்றார்.

அவ்வாறே ஒவ்வொருவனும் தன் தூப கலசத்தை எடுத்துக்கொண்டான்: அவர்கள் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போட்டார்கள்: அவர்கள் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் மோசேயுடனும் ஆரோனுடனும் நின்றார்கள்.

பின் கோராகு மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவர்களுக்கெதிரே சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் ஒன்று கூட்டினான். ஆண்டவரின் மாட்சி மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் தோன்றியது.

ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும்,

ஒரு நொடியில் நான் இவர்களை எரித்து விடும்படி இந்த மக்கள் கூட்டமைப்பிலிருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள் என்றார்.

அவர்களோ முகங்குப்புறவிழுந்து, கடவுளே! உடல் பூண்ட உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே! ஒரேயொருவன் பாவம் செய்திருக்க மக்கள் கூட்டமைப்பு முழுவதன் மீதும் நீர் சினங்கொள்வது ஏன்? என்றனர்.

உடனே ஆண்டவர் மோசேயிடம்,

கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அகன்று போகும்படி மக்கள் கூட்டமைப்பிடம் சொல் என்றார்.

மோசே எழுந்து தாத்தானிடமும் அபிராமிடமும் போனார்: இஸ்ரயேல் மூப்பர் அவருக்குப் பின்னால் சென்றனர்.

அவர் மக்கள் கூட்டமைப்பிடம், இந்தப் பொல்லாத மனிதரின் பாவங்களோடு சேர்ந்து நீங்கள் அழிக்கப்படாதபடி அவர்கள் கூடாரங்களை விட்டு அகன்று போகும்படி உங்களை வேண்டுகிறேன்: அவர்களுக்குரிய எதையும் தொட வேண்டாம் என்றார்.

அவ்வாறே கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் கூடாரத்தை விட்டு அவர்கள் அகன்றனர்: தாத்தானும் அபிராமும் வெளியே வந்து தங்கள் மனைவியர், புதல்வர், குழந்தைகளோடு தங்கள் கூடாரங்களின் வாயிலருகில் நின்றனர்.

மோசே கூறியது: இப்பணிகளையெல்லாம் செய்யும்படி ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கிறார், இது என் சொந்த விருப்பம் அல்ல என்பதை இதன்மூலம் அறிந்து கொள்வீர்கள்.

எல்லா மனிதரும் சாவதுபோல் இம்மனிதரும் செத்தால் அல்லது எல்லா மனிதருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை அடைந்தால் ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கவில்லை என்பது பொருள்.

ஆனால் ஆண்டவர் புதுமையான ஒன்றைச் செய்தால் நிலம் தன் வாயைத் திறந்து அவர்களையும் அவர்களுக்குரிய அனைத்தையும் விழுங்கிவிட, அவர்கள் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினால் அப்போது, இம்மனிதர் ஆண்டவரை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதை நீங்களும் அறிந்துகொள்வீர்கள்.

இவ்வார்த்தைகளையெல்லாம் அவர் பேசி முடிந்ததும் அவர்கள் அடியிலிருந்த தரை பிளந்தது:

தரை தன் வாயைத் திறந்து, அவர்களை அவர்கள் வீட்டாரோடும் கோராகைச் சேர்ந்த மனிதர்களோடும் அவர்கள் உடைமைகளோடும் விழுங்கிவிட்டது.

இவ்வாறு, அவர்களும் அவர்களைச் சேர்ந்த அனைவரும் உயிரோடு பாதாளத்துக்குள் இறங்கினர்: தரை தன் வாயை மூடிக்கொண்டது: சபையிலிருந்து அவர்கள் அழிந்து போயினர்.

அவர்களின் கூக்குரல் கேட்டு அவர்களைச் சுற்றியிருந்த இஸ்ரயேலர் அனைவரும், நம்மையும் தரை விழுங்கி விடக்கூடாதே என்று அஞ்சியோடினர்.

பின்பு, ஆண்டவரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபம் காட்டிய இரு நூற்றைம்பது மனிதரையும் விழுங்கிவிட்டது.

பின்னர் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

எரிநெருப்பிலிருந்து தூப கலசங்களை எடுத்து நெருப்பை அப்பால் கொட்டிவிடும்படி குருவாகிய ஆரோன் மகன் எலயாசரிடம் சொல்.

ஏனெனில் அவை புனிதமானவை: பாவம் செய்த இந்த மனிதர்களின் தூபகலசங்கள், அவர்களது உயிர் பறிக்கப்பட்டுவிட்டதால், தூய்மையாக்கப்பட்டுவிட்டன: அவை பீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பு வேலையால் செய்யப்படட்டும்: அவற்றை அவர்கள் ஆண்டவர் திருமுன் கொண்டு வந்தார்கள்: ஆகவேதான் அவை புனிதமானவை: இங்ஙனம் அவை இஸ்ரயேல் மக்களுக்கு ஓர் அடையாளமாக இருக்கும்.

அதன்படியே குரு எலயாசர் எரிக்கப்பட்டவர்கள் கொண்டு வந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்தார்: பீடத்தை மூடுவதற்கு அவை அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டன.

இது இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னம்: இதனால் ஆரோன் வழித் தோன்றியிராத எவனும் கோராகையும் அவன் கூட்டத்தவரையும் போன்று ஆகிவிடாதபடி ஆண்டவர் திருமுன் தூபங்காட்டுவதற்கு நெருங்கி வரத் துணியான்: மோசே மூலம் ஆண்டவர் எலயாசருக்குச் சொன்னதும் அதுவே.

ஆயினும் மறுநாளில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுதும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்து, ஆண்டவரின் மக்களை நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்றனர்.

மக்கள் கூட்டமைப்பு மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கூடி வந்தபோது அவர்கள் சந்திப்புக் கூடாரத்தை நோக்கித் திரும்பினர்: உடனே மேகம் அதை மூடியது, ஆண்டவரின் மாட்சி தோன்றியது.

மோசேயும் ஆரோனும் சந்திப்புக்கூடாரத்தின் முன் பக்கத்திற்கு வந்தார்கள்.

ஆண்டவர் மோசேயிடம் உரைத்தது:

நான் இந்த மக்கள் கூட்டமைப்பை ஒரு நொடியில் எரித்து விடும்படி அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். மோசேயும் ஆரோனும் முகங்குப்புற விழுந்தனர்.

மோசே ஆரோனிடம், உன் தூபகலசத்தைப் பலிபீடத்திலிருந்து எடுத்து அதில் நெருப்பையும் தூபத்தையும் போட்டு விரைவாக அதனை மக்கள் கூட்டமைப்பினரிடம் கொண்டு போய் அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்: ஆண்டவரிடமிருந்து கடுஞ்சினம் புறப்பட்டுவிட்டது கொள்¨நோய் தொடங்கிவிட்டது என்றார்.

மோசே சொன்னபடியே ஆரோன் தூபகலசத்தை எடுத்துக் கொண்டு சபை நடுவே ஓடினார்: அந்தோ, மக்களிடையே கொள்ளை நோய் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அவர் தூபம் போட்டு மக்களுக்காகக் கறை நீக்கம் செய்தார்.

அவர் இறந்தோர்க்கும் வாழ்ந்தோர்க்கும் இடையே நின்றார்: கொள்ளைநோய் நின்றது.

அப்போது கோராகின் செயல்முன்னிட்டு இறந்தோர் தவிர அக்கொள்ளைநோயால் இறந்தோர் பதினாலியிரத்து எழுநூறு பேர்.

கொள்ளைநோய் நின்றதும் ஆரோன் சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலருகில் மோசேயிடம் திரும்பி வந்தார்.

அதிகாரம் 17

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு: மூதாதையர் குலம் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோல் வீதம் அவர்கள் தலைவர்களிடம் தங்கள் மூதாதையர் குலங்களுக்கேற்பப் பன்னிரண்டு கோல்களைப் பெற்றுக் கொள்: ஒவ்வொருவன் பெயரையும் அவன் கோலின் மேல் எழுது:

ஆரோன் பெயரை லேவியின் கோலின் மேல் எழுது: இவ்வாறு ஒவ்வொரு மூதாதையர் குலத் தலைவனுக்கும் ஒரு கோல் இருக்கும்.

பின் அவற்றைச் சந்திப்புக் கூடாரத்தில் நான் உன்னைச் சந்திக்கும் உடன்படிக்கைப்பேழை முன் வைப்பாய்.

நான் தெரிந்து கொள்பவரின் கோல் துளிர்க்கும். இங்ஙனம் உங்களுக்கெதிராக முறுமுறுக்கிற இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புக்களை என் முன்னின்று ஒழித்து விடுவேன்.

மோசே இஸ்ரயேல் மக்களிடம் பேசினார்: ஒரு தலைவனுக்கு ஒன்று வீதம் அவர்கள் மூதாதையர் குலங்களுக்கேற்பப் பன்னிரு கோல்களை அவர்கள் தலைவர்கள் அவரிடம் கொடுத்தனர்: அவர்கள் கோல்களுள் ஆரோன் கோலும் இருந்தது.

மோசே அந்தக் கோல்களை உடன்படிக்கைக் கூடாரத்தினுள் ஆண்டவர் திருமுன் வைத்தார்.

மறுநாள் மோசே உடன்படிக்கைக் கூடாரத்தினுள் சென்றார்: லேவிகுலத்துக்காக இருந்த ஆரோனின் கோல் துளிர் விட்டிருந்தது: அது துளிர்த்துப் பூத்து வாதுமைப் பழங்களைத் தாங்கியிருந்தது.

பின்னர் மோசே ஆண்டவர் முன்னின்று எல்லாக் கோல்களையும் எடுத்து வெளியே இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கொண்டு வந்தார்: அவர்கள் பார்த்தார்கள்: ஒவ்வொரு தலைவனும் தன் கோலை எடுத்துக் கொண்டான்.

ஆண்டவர் மோசேயிடம், ஆரோன் கோலைத் திரும்ப எடுத்து உடன்படிக்கைப் பேழை முன் வை: எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோர் சாகாதபடி அவர்கள் முறுமுறுப்புகளை என் முன்னின்று நீ ஒழித்துவிட்டதற்கு ஓர் அடையாளமாக அது வைக்கப்படட்டும் என்றார்.

அப்படியே மோசே செய்தார்: ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்.

இஸ்ரயேல் மக்கள் மோசேயிடம், இதோ நாங்கள் மடிந்தோம், நாங்கள் அழிந்தோம், அனைவரும் அழிந்தே போனோம்:

நெருங்கி வருகிற எவனும், அதாவது ஆண்டவரின் திருஉறைவிடத்தை நெருங்கி வருகிற எவனும் செத்தே போவான்: நாங்கள் அனைவரும் சாகத்தான் வேண்டுமா? என்றனர்.

அதிகாரம் 18

பின்னர் ஆண்டவர் ஆரோனிடம் கூறியது: நீயும் உன் புதல்வரும் உன்னோடிருக்கும் உன் மூதாதையர் வீட்டாரும் திருஉறைவிடம் தொடர்பான குற்றத்தைச் சுமப்பீர்கள்: உங்கள் குருத்துவம் தொடர்பான குற்றத்தையோ நீயும் உன்னோடிருக்கும் உன் புதல்வரும் சுமப்பீர்கள்.

மூதாதையர் குலமான லேவிக் குலத்திலுள்ள உன் சகோதரரையும் உன்னுடன் கூட்டிக்கொண்டு வர வேண்டும்: அவர்கள் உங்களோடு சேர்ந்து, நீயும் உன்னோடிருக்கும் உன் புதல்வரும் உடன்படிக்கைக்கூடாரத்தின் முன்நிற்கும்போது உங்களுக்கு உதவி செய்யட்டும்.

அவர்கள் உங்களுக்கு உதவி செய்து, கூடாரத்தின் அனைத்துக் கடமைகளையும் கவனித்துக் கொள்வார்கள்: ஆனால் நீங்களும் அவர்களோடு சாகாதபடி, திருஉறைவிடத்தின் பாத்திரங்களையோ பலிபீடத்தையோ அவர்கள் நெருங்குமாறு அனுமதிக்க வேண்டாம்.

அவர்கள் உங்களோடு சேர்ந்து சந்திப்புக்கூடாரத்தையும் கூடாரத்தின் அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொள்வார்கள்: வேறு எவரும் உங்களருகில் வரலாகாது.

இஸ்ரயேல் மக்கள் மேல் இனி என்றுமே சினம் இராதபடி திருஉறைவிடத்தின் கடமைகளையும் பலிபீடத்தின் கடமைகளையும் நீங்களே கவனித்துக்கொள்ள வேண்டும்.

இதோ! உங்கள் சகோதரராகிய லேவியரை இஸ்ரயேல் மக்களிலிருந்து நான் தெரிந்தெடுத்தேன்: சந்திப்புக்கூடார வேலை செய்ய அவர்கள் உங்களுக்கென ஆண்டவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட கொடை ஆவர்.

நீயும் உங்களோடிருக்கும் உன் புதல்வரும் உங்கள் குருத்துவத்திற்கு உரியதை, அதாவது பலிபீடம் தொடர்பான அனைத்தையும் தொங்கு திரைக்குள் இருப்பதையும் கவனித்துக்கொள்ளுங்கள்: நீங்கள் பணிபுரியும்படி உங்கள் குருத்துவத்தையும் ஒரு கொடையாகவே தருகிறேன்: அவற்றை நெருங்குகிற வேறு எவனும் கொல்லப்படுவான்.

மேலும் ஆண்டவர் ஆரோனிடம் கூறியது: இதோ எனக்கென உயர்த்திப் படைக்கப்படும் படையல்களில் உன் பொறுப்பில் காக்கப்படும் எதையும், அதாவது இஸ்ரயேல் மக்களின் அர்ப்பணிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் உங்களுக்குத் தந்து விட்டேன்: இது உனக்கும் உன்புதல்வருக்கும் என்றுமுள்ள நியமமாக விளங்கும்.

நெருப்புக்குட்படாத மிகப் புனிதமான பொருள்களில் உனக்குரியது இதுவே: அவர்கள் எனக்கு அர்ப்பணிக்கிற அவர்களின் படையல், உணவுப் படையல், பாவம் போக்கும் படையல், குற்ற நீக்கப்படையல் ஒவ்வொன்றும் உனக்கும் உன் புதல்வருக்கும் மிகவும் புனிதமானவை.

மிகவும் தூய்மையான தலத்தில் நீ அதனை உண்பாய்: ஆண்மகன் ஒவ்வொருவனும் அதனின்று உண்ணலாம்: அது உனக்குப் புனிதமானது.

இஸ்ரயேல் மக்கள் உயர்த்திப் படைக்கும் படையல்களும் அவர்களின் அனைத்து ஆரத்திப் படையல்களும் உன்னுடையவையே: இது உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாக விளங்கும். உன் வீட்டில் தீட்டுப்படாத ஒவ்வொருவரும் அதிலிருந்து உண்ணலாம்.

உயர்தர எண்ணெய், உயர்தரத் திராட்சை இரசம், உயர்தரத் தானியம் அனைத்தையும் அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்தும் முதற்பலன்களையும் நான் உனக்குத் தருகிறேன்.

அவர்களது நிலத்தின் முதற்கனிகளாக அவர்கள் ஆண்டவரிடம் கொண்டு வரும் அனைத்தும் உன்னுடையதே: உன் வீட்டில் தீட்டுப்படாத ஒவ்வொருவரும் அதிலிருந்து உண்ணலாம்.

இஸ்ரயேலில் அர்ப்பணிக்கப்பட்ட பொருள் ஒவ்வொன்றும் உன்னுடையதாக இருக்கும்.

மனிதராயினும் விலங்காயினும் முதலில் கருப்பை திறக்கும் அனைத்திலும் அவர்கள் ஆண்டவருக்குப் படைக்கின்ற ஒவ்வொன்றும் உன்னுடையது: ஆயினும் மனிதரில் தலைப்பேறானவனை நீ மீட்டுக்கொள்வாய்: தீட்டான விலங்கின் தலையீற்றையும் நீ மீட்க வேண்டும்.

ஒரு மாத காலத்தில் நீ அவற்றை மீட்கும்போது அவற்றின் மீட்புத்தொகை தூயகச் செக்கேல் நிறைப்படி ஜந்து வெள்ளிக் காசுகள் என்று விலை குறிப்பாய்: அது பன்னிரண்டு கிராம் ஆகும்.

ஆனால் மாடு, ஆடு, வெள்ளாடு இவற்றின் தலையீற்றை நீ மீட்க வேண்டாம்: அவை புனிதமானவை. அவற்றின் இரத்தத்தை நீ பலிபீடத்தின்மேல் தெளிப்பாய்: அவற்றின் கொழுப்பை நெருப்புப் பலியாக்குவாய்: அது ஆண்டவருக்கு உகந்த நறுமணமாக விளங்கும்.

ஆரத்திப் படையலாக அளிக்கப்படும் இறைச்சியான அவற்றின் மார்பகமும் முன்னந்தொடையும் உன்னைச் சேரும்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் புனிதப்படையல்கள் அனைத்தையும் நான் உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாகத் தருகிறேன்: இது உனக்கும் உன்னோடிருக்கும் உன்வழி மரபுக்கும் ஆண்டவர் திருமுன் என்றுமுள உப்பு உடன்படிக்கை ஆகும்.

மேலும் ஆண்டவர் ஆரொனிடம் கூறியது: அவர்கள் நாட்டில் உனக்கு உரிமைச் சொத்து ஏதமில்லை, அவர்களிடையே உனக்குப் பங்கும் இல்லை: இஸ்ரயேல் மக்களிடையே உனக்குப் பங்கும் உரிமைச் சொத்தும் நானே.

இஸ்ரயேலின் பத்திலொன்று அனைத்தையும் லேவியருக்கு உரிமைச் சொத்தாகத் தந்திருக்கிறேன்: சந்திப்புக் கூடாரப் பணியில் அவர்கள் ஏற்கும் பங்கிற்கு இதுவே கைம்மாறு,

இது முதல் இஸ்ரயேல் மக்கள் சந்திப்புக் கூடாரத்தருகில் வர வேண்டாம்: வந்தால் அவர்கள் பாவம் சுமந்து மாள்வர்.

ஆனால் லேவியர் சந்திப்புக்கூடாரத்தில் பணி செய்வர்: அவர்கள் குற்றம் அவர்கள் மேலேயே இருக்கும்: உங்கள் தலைமுறைதோறும் இது என்றுமுள நியமமாக விளங்கும்: இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு உரிமைச் சொத்தாக ஏதுமில்லை.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலின் பத்தில் ஒன்றை நான் லேவியருக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்தேன்: எனவே இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு உரிமைச் சொத்து ஏதுமில்லை என்று அவர்களைக் குறித்துக் கூறினேன்.

பின்னர், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீ லேவியரிடம் சொல்ல வேண்டியது: நான் இஸ்ரயேல் மக்களிடமிருந்து உங்களுக்கு உரிமைச் சொத்தாகத் தந்த பத்திலொன்றை அவர்களிடமிருந்து நீங்கள் எடுக்கும்போது, நீங்களும் அதிலிருந்து ஒரு படையலை, அதாவது, பத்திலொன்றிலிருந்து பத்திலொன்றை ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்க வேண்டும்.

அவ்வாறளிக்கும் உங்கள் படையல் போரடிக்கும் களத்தின் தானியமாகவும் திராட்சைப் பழ ஆலையின் இரசமாகவும் கருதப்படும்.

அப்படியே நீங்களும் இஸ்ரயேல் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுகின்ற உங்கள் பத்திலொன்று அனைத்திலுமிருந்து ஒரு படையலை ஆண்டவருக்கு உயர்த்திப் படைப்பீர்கள்: இவ்வாறு வரும் ஆண்டவரின் படையலை குரு ஆரோனுக்குக் கொடுப்பீர்கள்.

உங்களுக்கு வரும் கொடைகள் அனைத்திலும் மிகச் சிறந்ததும் தூய்மையானதுமானவற்றை ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலாக அளிக்க வேண்டும்.

எனவே நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது, அதிலிருந்து மிகச் சிறப்பானதை நீங்கள் படைத்தபின் மீதியானது லேவியருக்குப் போரடிக்கும் களத்தினின்றும் திராட்சைப் பழ ஆலையினின்றும் வர வேண்டியவையாகக் கருதப்படும்:

அதனை எவ்விடத்திலும் நீங்களும் உங்கள் வீட்டாரும் உண்ணலாம்: அது சந்திப்புக்கூடாரத்தில் நீங்கள் செய்யும் பணிக்காக வரும் கைம்மாறு ஆகும்.

நீங்கள் அதில் மிகச் சிறப்பானதை படைப்பதால் இந்தக் காரியத்தில் உங்கள்மேல் பாவம் இராது: நீங்கள் இஸ்ரயேல் மக்களின் புனிதப் பொருள்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள், இல்லையேல் சாவீர்கள்.

அதிகாரம் 19

பின்னும் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:

ஆண்டவர் கட்டளையிட்ட சட்டவிதிமுறை இதுவே: பழுதற்ற செங்கிடாரி ஒன்றை உன்னிடம் கொண்டு வரும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்: அது குறையற்றதும் ஒருபோதும் நுகம் சுமக்காததுமாய் இருக்கட்டும்.

அதை நீ குரு எலயாசரிடம் கொடுப்பாய்: அது பாளையத்துக்கு வெளியே எடுத்துச்செல்லப்பட்டு அவன் முன்னிலையில் அடிக்கப்படும்:

எலயாசர் தன் விரலினால் அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து சந்திப்புக்கூடாரத்திற்கு முன்புறம் ஏழு முறை தெளிப்பான்.

அந்தக் கிடாரி அவன் முன்னிலையில் சுட்டெரிக்கப்படும்: அதன் தோல், தசை, இரத்தம் ஆகியவையும் சாணியுடன் சுட்டெரிக்கப்படும்:

அப்போது குரு கேதுருக்கட்டை, ஈசோப்பு, கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றை எடுத்து எரிக்கப்படும் கிடாரி மேல் போடுவான்.

பின் குரு தன் உடைகளைத் துவைத்துத் தண்ணீரில் குளிப்பான்: அதன் பின்னர்தான் அவன் பாளைத்தினுள் வர வேண்டும்: அந்த மாலைவரை குரு தீட்டுப்பட்டவனாயிருப்பான்.

கிடாரியைச் சுட்டெரிக்கிறவனும் தன் உடைகளைத் துவைத்துத் தண்ணீரில் குளிப்பான்: அவனும் மாலைவரை தீட்டுப்பட்டவனாயிருப்பான்.

தீட்டுப்படாத ஒருவன் கிடாரியின் சாம்பலைக் கூட்டி அதைப் பாளையத்துக்கு வெளியே ஒரு தூய்மையான இடத்தில் கொட்டி வைப்பான்: அது இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்புக்கென்று தீட்டகற்றும் தண்ணீருக்காக வைக்கப்படும்: அது பாவ நீக்கத்திற்காகப் பயன்படும்.

கிடாரியின் சாம்பலை அள்ளிக் கூட்டுகிறவன் தன் உடைகளைத் துவைப்பான்: அவன் மாலைவரை தீட்டுப்பட்டவனாயிருப்பான். இது இஸ்ரயேல் மக்களுக்கும் அவர்களிடையே தங்கும் அயல்நாட்டவருக்கும் என்றுமுள நியமமாக விளங்கும்.

மனிதப் பிணத்தைத் தொடுபவன் எவனும் ஏழு நாள்களுக்குத் தீட்டுப்பட்டிருப்பான்.

மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அவன் தன்னைத் தண்ணீரால் தூய்மையாக்கிக் கொள்வான்: இங்ஙனம் அவன் தூய்மையாயிருப்பான்: ஆனால் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அவன் தன்னைத் தூய்மைப்படுத்தவில்லையெனில் அவன் தூய்மையடையான்.

பிணத்தை, அதாவது இறந்துபட்ட எந்த ஒரு மனிதனின் உடலைத் தொட்டபின், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாதவன் எவனோ அவன் ஆண்டவரின் திருஉறைவிடத்தைத் தீட்டுப்படுத்துகிறான்: அந்த ஆள் இஸ்ரயேலிடமிருந்து விலக்கப்பட வேண்டும்: ஏனெனில் தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன் மேல் ஊற்றப்படவில்லை, அவன் தீட்டுப்பட்டவனாகவே இருப்பான்: அவன் தீட்டு இன்னும் அவன் மேலிருக்கிறது.

கூடாரத்தில் ஒரு மனிதன் இறக்கும் போது இதுவே சட்டம். அதனுள் வரும் ஒவ்வொருவனும் அதில் இருக்கும் ஒவ்வொருவனும் ஏழு நாள்கள் தீட்டுப்பட்டவனாகவே இருப்பான்.

அத்துடன் இறுக மூடப்படாமல் திறந்திருக்கும் பாத்திரம் எதுவும் தீட்டுப்பட்டதாகும்.

திறந்த வெளியில் ஒருவன் வாளால் கொல்லப்பட்டவனையோ, தானாகச் செத்தவனையோ, மனித எலும்பையோ, கல்லறையையோ தொட்டால் அவன் ஏழு நாள்கள் தீட்டுப்பட்டவனாயிருப்பான்.

தீட்டுப்பட்டிருப்போருக்காக நெருப்பாலான பாவம் போக்கும் பலியின் சாம்பலில் அவர்கள் கொஞ்சம் எடுப்பர்: ஒரு பாத்திரத்தில் ஊற்று நீரை முகந்து அதில் சாம்பலை இடுவர்:

தூய்மையாயிருக்கும் ஒருவன் ஈசோப்பை எடுத்து அதைத் தண்ணீரில் தோய்த்துக் கூடாரம், அதன் பாத்திரங்கள் மேலும் அங்கிருக்கும் ஆள்கள் மேலும் எலும்பையோ, கொலையுண்டவனையோ, தானாகச் செத்தவனையோ, கல்லறையையோ தொட்டவன் மேலும் தெளிக்க வேண்டும்:

தூய்மையாயிருப்பவன் தீட்டுப்பட்டவன் மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிப்பான்: இங்ஙனம் ஏழாம் நாள் இவன் அவனைத் தூய்மைப்படுத்துவான்: தூய்மைப்படுத்தியவன் தன் உடைகளைத் துவைத்துத் தண்ணீரில் குளிப்பான்: மாலையில் அவன் தூய்மையாகிவிடுவான்.

ஆனால் தீட்டுப்பட்டிருந்தும் தன்னைத் தூய்மைப்படுத்தாதவன் ஆண்டவரின் திருஉறைவிடத்தைக் கறைப்படுத்திவிட்டபடியால் சபையிலிருந்து விலக்கப்படுவான்: ஏனெனில் தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன் மேல் ஊற்றப்படவில்லை, அவன் தீட்டுப்பட்டவனாகவே இருக்கிறான்.

இது அவர்களுக்கு என்றுமுள நியமமாக விளங்கும்: தீட்டுக் கழிக்கும் தண்ணீரைத் தெளிப்பவன் தன் உடைகளைத் துவைக்க வேண்டும்: தீட்டுக் கழிக்கும் தண்ணீரைத் தொடுபவன் மாலை வரை தீட்டுப்பட்டவனாயிருப்பான்.

தீட்டுப்பட்டவன் தொடுவதெல்லாம் தீட்டுப்பட்டதாகவே இருக்கும்: அதனைத் தொடுபவன் எவனும் மாலைவரை தீட்டுப்பட்டவனாயிருப்பான்.

அதிகாரம் 20

முதல் மாதத்தில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சீன் பாலைநிலத்துக்கு வந்தது: மக்கள் காதேசில் தங்கினர். மிரியாம் அங்கே இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள்.

அப்போது மக்கள் கூட்டமைப்புக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது: அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக ஒன்று கூடினர்.

மக்கள் மோசேயுடன் வாதாடிக் கூறியது: ஆண்டவர் திருமுன் எங்கள் சகோதரர்கள் மாண்டபோது நாங்களும் மாண்டிருந்தால் நலமாயிருந்திருக்குமே!

ஆண்டவரின் சபையை இந்தப் பாலைநிலத்துக்கு நீங்கள் கொண்டு வந்தது ஏன்? நாங்களும் எங்கள் கால்நடைகளும் இங்குச் சாகவேண்டுமென்றா?

இந்தக் கொடிய இடத்துக்கு அழைத்துவர, எங்களை எகிப்திலிருந்து வெளியேறபப் பண்ணினது ஏன்? தானிய நிலம், அத்தி மரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எவையுமே இங்கு இல்லை: குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லையே!

பின், மோசேயும் ஆரோனும் சபைக்கு முன்னின்று சந்திப்புக்கூடாரத்தின் நுழைவாயிலுக்குச் சென்று முகங்குப்புற விழுந்தனர். ஆண்டவரின் மாட்சி அவர்களுக்குத் தோன்றியது.

ஆண்டவர் மோசேயிடம்,

கோலை எடுத்துக் கொள்: நீயும் உன் சகோதரன் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பைக் கூடிவரச் செய்யுங்கள்: அவர்கள் பார்வையில் பாறைத் தண்ணீரைத் தரும்படி அதனிடம் பேசுங்கள்: இவ்வாறு அவர்களுக்காகப் பாறையிடமிருந்து நீங்கள் தண்ணீர் பெறுவீர்கள்: மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் கால்நடைகளுக்கும் குடிக்கக் கொடுப்பீர்கள் என்றார்.

அவர் கட்டளைப்படியே மோசே ஆண்டவர் திருமுன்னின்று கோலை எடுத்தார்.

மோசேயும் ஆரோனும் பாறைக்கு முன்பாகச் சபையை ஒன்று கூட்டினர். மோசே அவர்களிடம், கலகக்காரரே, இப்போது கேளுங்கள், இப்பாறையிலிருந்து உங்களுக்குத் தண்ணீர் வரவழைக்க எங்களால் கூடுமா? என்று கேட்டார்.

பின் மோசே தம் கையை ஓங்கித் தம் கோலால் பாறையை இருமறை அடித்தார்: தண்ணீர் தாராளமாக வந்தது, மக்கள் கூட்டமைப்பினரும் அவர்கள் கால்நடைகளும் குடித்தனர்.

ஆண்டவரோ மோசேயிடமும் ஆரோனிடமும், இஸ்ரயேல் மக்கள் பார்வையில் நான் தூயவராக விளங்கும்படி நீங்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாமல் போனதால் இந்தச் சபையை நான் அவர்களுக்குக்கொடுக்கவிருக்கும் நாட்டில் கொண்டு சேர்க்க மாட்டீர்கள் என்றார்.

இது மெரிபாவின் தண்ணீர்: இங்குத்தான் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் வாதாடினர், அவர் அவர்களிடையே தம்மைத் தூயவராகக் காண்பித்தார்.

காதேசிலிருந்து மோசே ஏதொம் மன்னனிடம் தூதரை அனுப்பிக் கூறியது: உன் சகோதரன் இஸ்ரயேல் கூறுவது இதுவே: எங்களுக்கு நேர்ந்த இடர்ப்பாடுகள் அனைத்தையும் நீர் அறிவீர்:

எங்கள் மூதாதையர் எகிப்துக்குச் சென்றனர்: நாங்கள் எகிப்திலே நெடுங்காலம் தங்கியிருந்தோம்: எகிப்தியர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் மிகவும் கொடுமையாக நடத்தினார்கள்:

நாங்கள் ஆண்டவரை நோக்கி அழுதபோது அவர் எங்கள் குரலைக் கேட்டு எங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர ஒரு தூதனை அனுப்பினார்: நாங்கள் இங்கு உமது எல்லையின் ஓரத்திலுள்ள காதேசு நகரில் இருக்கிறோம்.

இப்போதும் உம் நாடு வழியே எங்களைப் போக விடும்: நாங்கள் வயலின் ஊடேயோ திராட்சைத் தோட்டத்தின் ஊடேயோ கடந்து செல்ல மாட்டோம்: எந்தக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்கமாட்டோம்: நாங்கள் அரச நெடுஞ்சாலை வழியே செல்வோம்: உம் எல்லையைத் தாண்டும்வரை நாங்கள் வலப்புறமோ இடப்புறமோ திரும்ப மாட்டோம்.

ஆனால் ஏதொம், நீங்கள் கடந்து செல்லக்கூடாது, மீறினால் நான் உங்களுக்கெதிராக வாளெடுத்து வரவேண்டியிருக்கும் என்று அவருக்குக் கூறியனுப்பினான்.

இஸ்ரயேல் மக்கள் அவனிடம், நாங்கள் நெடுஞ்சாலை வழியே செல்வோம்: நாங்களோ, எங்கள் கால்நடைகளோ, உம் தண்ணீரைக் குடித்தால், அதற்கான விலையைத் தருவோம்: கால்நடையாகக் கடந்து செல்லமட்டும் எங்களுக்கு அனுமதி தாரும், வேறெதுவும் வேண்டாம் என்றனர்.

ஆனால் அவனோ, நீங்கள் கடந்து செல்லவே கூடாது என்று கூறிவிட்டான். ஏதோம் திரண்ட வலிமை மிகுந்த படையோடு அவர்களுக்கெதிராக வந்தான்.

இவ்வாறு ஏதோம் தன் எல்லைக்குள் இஸ்ரயேலுக்கு வழி தர மறுத்தான்: எனவே இஸ்ரயேலர் அவனை விட்டு விலகிப் போயினர்.

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் காதேசிலிருந்து பயணம்செய்து, ஓர் என்ற மலைக்கு வந்தனர்.

ஆண்டவர் ஏதோம் நாட்டின் எல்லையில் ஓர் என்ற மலையில் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:

ஆரோன் தன் மக்களோடு சேர்த்துக்கொள்ளப்படுவான்: நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டுக்குள் அவன் நுழைய மாட்டான்: ஏனெனில், மெரிபாவின் தண்ணீர் அருகில் நீங்கள் என் கட்டளையை மீறினீர்கள்.

ஆரோனையும் அவனுடைய மகன் எலயாசரையும் ஓர் என்ற மலைக்குக் கூட்டிக் கொண்டு வா:

ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவனுடைய மகன் எலயாசருக்கு உடுத்து: ஆரோன் தன் மக்களோடு சேர்த்துக் கொள்ளப்படுவான், அங்கேயே இறப்பான் .

ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார்: மக்கள் கூட்டமைப்பு முழுவதின் பார்வையிலும் அவர்கள் ஓர் என்ற மலைக்கு ஏறிப் போனார்கள்.

மோசே ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவர் மகன் எலயாசருக்கு உடுத்தினார்: ஆரோன் அங்கேயே மலையுச்சியில் இறந்தார். பின் மோசேயும் எலயாசரும் மலையைவிட்டுக் கீழிறங்கி வந்தனர்.

ஆரோன் இறந்ததை மக்கள் கூட்டமைப்பு அறிந்தது: இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரோனுக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர்.

அதிகாரம் 21

இஸ்ரயேல் அத்தாரிம் வழியாக வருவதை நெகேபில் வாழ்ந்த கானானியனாகிய அராது மன்னன் கேள்வியுற்றான்: அப்போது அவன் இஸ்ரயேலோடு போரிட்டு அவர்களில் சிலரைச் சிறைபிடித்தான்.

உடனே ஆண்டவரிடம் இஸ்ரயேல் பொருத்தனை செய்து, நீர் உண்மையில் இம்மக்களை என்கையில் ஒப்படைத்தால் அர்கள் நகர்களை நான் அழித்துவிடுவேன் என்று கூறியது.

அவ்வாறே ஆண்டவர் இஸ்ரயேலின் குரலைக் கேட்டுக் கானானியரை ஒப்படைத்தார்: அவர்கள் அவர்களையும் அவர்கள் நகர்களையும் அழித்தனர்: எனவே அந்த இடத்தின் பெயர் ஓர்மா என்று வழங்கியது.

ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள் செங்கடல் சாலை வழியாகப் பயணப்பட்டனர்: அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர்.

மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது என்றனர்.

உடனே ஆண்டவர் கொள்ளி வாய்ப் பாம்புகளை மக்களிடையே அனுப்பினார்: அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர்.

அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, நாங்கள் பாவம் செய்துள்ளோம் நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்: அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும் என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார்.

அப்போது ஆண்டவர் மோசேயிடம், கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து: கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான் என்றார்.

அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்: பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான்.

பின், இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு ஓபோத்தில் பாளையம் இறங்கினர்.

அடுத்து ஓபோத்திலிருந்து பயணமாகிக் கதிரவன் உதயம் நோக்கி மோவாபுக்கு எதிரேயுள்ள பாலை நிலத்தில் இய்யா அபாரிமில் பாளையம் இறங்கினர்.

அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச் செரத் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கினர்.

அங்கிருந்து அவர்கள் பயணமாகி அர்னோனுக்கு அப்பால் பாளையம் இறங்கினர்: அது எமோரியர் எல்லையிலிருந்து தொடங்கும் பாலைநிலத்தில் உள்ளது: அர்னோன் மோவாபுக்கும் எமோரிய நாட்டுக்குமிடையேயான மோவாபிய எல்லையாகும்.

ஆண்டவரின் போர்கள் என்ற நூல் இவ்வாறு கூறுகிறது: சூப்பாவிலுள்ள வாகேபும் அர்னோன் சிற்றாறுகளும்,

ஆர் என்னும் பகுதியை நோக்கி விரிவதும் மோவாபு எல்லை மேல் சாய்வதுமான பள்ளத்தாக்குகளின் சரிவு .

அங்கிருந்து தொடர்ந்து அவர்கள் பெயேருக்குச் சென்றனர். மக்களை ஒன்றுகூட்டு: நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று ஆண்டவர் மோசேக்குக் கூறிய கிணறு இதுவே.

பின், இஸ்ரயேல் பாடிய பாடல்: ஊறிப் பெருகிடு கிணறே! அதைப் புகழ்ந்து பாடுங்கள்:

இளவரசர்கள் செய்கோலால் அகழ்ந்த கிணறு இதுவே: மேன்மக்கள் கோல்கொண்டு குடைந்த கிணறும் இதுவே. பின் பாலை நிலத்திலிருந்து அவர்கள் மத்தானாவுக்குச் சென்றனர்.

மத்தானாவிலிருந்து நகலியேலுக்குச் சென்றனர்: நகலியேலிலிருந்து பாமோத்துக்குச் சென்றனர்.

பாமோத்திலிருந்து பாலை நிலத்தை நோக்கி நிற்கும் பிஸ்காவின் கொடுமுடிக்கருகில் மோவாபு பகுதியில் இருந்த பள்ளத்தாக்குக்குச் சென்றனர்.

இஸ்ரயேல் எமோரியர் மன்னன் சீகோனிடம் தூதர்களை அனுப்பிக் கூறியது:

உம் நாடு வழியே நான் செல்ல அனுமதியும்: நாங்கள் வயல் பக்கமோ திராட்சைத் தோட்டப் பக்கமோ திரும்ப மாட்டோம்: நாங்கள் யாதொரு கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்கவுமாட்டோம்: நாங்கள் உம் எல்லையைத் தாண்டும் வரை அரச நெடுஞ்சாலை வழியாகவே செல்வோம்.

ஆனால் தன் எல்லை வழியே இஸ்ரயேல் கடந்து செல்ல சீகோன் இடந்தரவில்லை. அவன் தன் ஆள்கள் எல்லாரையும் சேர்த்துக் கொண்டு இஸ்ரயேலுக்கு எதிராகப் பாலை நிலத்துக்குச் சென்றான்: யாகாசுக்கு வந்து இஸ்ரயேலை எதிர்த்துப் போரிட்டான்.

இஸ்ரயேல் வாள் முனையில் அவனைக் கொன்று அர்னோன் தொடங்கி அம்மோனியர் வரையுள்ள யாப்போகு மட்டும் அவன் நாட்டைக் கைப்பற்றியது: அம்மோனியர் எல்லை அரணாய் அமைந்திருந்தது.

இஸ்ரயேல் இந்த நகர்கள் அனைத்தையும் சொந்தமாக்கிக் கொண்டது: இஸ்ரயேல் எமோரியரின் அனைத்து நகர்களிலும் எஸ்போனிலும் அதன் எல்லாக் கிராமங்களிலும் குடியிருந்தது.

போன் என்பது எமோரிய மன்னன் சீகோனின் நகர்: அவன் மோவாபின் முன்னைய மன்னனோடு போரிட்டு அவன் கையிலிருந்து அர்னோன் வரை இருந்த நாடு முழுவதையும் கைப்பற்றி இருந்தான்.

எனவேதான் கவிஞர் பாடுகின்றனர்: எஸ்போனுக்கு வாருங்கள்: அது கட்டப்படட்டும்: சீகோன் நகர் நிறுவப்படட்டும்.

நெருப்பு, எஸ்போனிலிருந்தும் நெருப்புத் தழல் சீகோன் நகரிலிருந்தும் சென்றது: அது மோவாபிலுள்ள அர் நகரையும் அர்னோன் மேடுகளிலுள்ள தலைவர்களையும் விழுங்கிவிட்டது.

மோவாபு! உனக்கு ஜயோ கேடு: கெமொசின் மக்களே, உங்களுக்கு முடிவு வந்துவிட்டது: எமோரிய அரசன் சீகோனுக்கு கெமோசின் காரணமாய் அவன் புதல்வர் புறங்காட்டி ஓடினர்: அவன் புதல்வியர் சிறைக் கைதிகளாயினர்:

எனவே எஸ்போன் முதல் தீபோன் வரை அழிந்தது: மேதபா வரையுள்ள நோபுபாக்குப் பகுதியைப் பாழாக்கினோம்.

இவ்வாறு இஸ்ரயேல் எமோரியர் நாட்டில் தங்கிற்று.

பின்னர் யாசேரை உளவு பார்க்கும்படி மோசே ஆளனுப்பினார்: அவர்கள் அதன் கிராமங்களைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்தி விட்டனர்.

அதன் பிறகு அவர்கள் திரும்பிப் பாசான் நெடுஞ்சாலை வழியாகப் போனார்கள்: பாசான் மன்னன் ஓகு என்பவனும் அவன் மக்கள் அனைவரும், எதிரேயி என்னுமிடத்தில் போர் புரியும்படி அவர்களுக்கு எதிராக வந்தனர்.

ஆனால் ஆண்டவர் மோசேயிடம், அவனுக்கு அஞ்ச வேண்டாம், நான் அவனையும் அவன் மக்கள் அனைவரையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்படைத்து விட்டேன்: நீ எஸ்போனில் வாழ்ந்த எமோரியர் மன்னன் சீகோனுக்குச் செய்தது போல இவனுக்கும் செய்வாய் என்றார்.

அங்ஙனமே அவர்கள் அவனையும் அவன் புதல்வரையும் அவன் மக்கள் அனைவரையும் ஒருவர் கூட எஞ்சியிராதபடி கொன்றொழித்தனர்: அவன் நாட்டையும் அவர்கள் கைப்பற்றினர்.

அதிகாரம் 22

அதன் பின்னர் இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு யோர்தானுக்கு அக்கரையில் எரிகோவுக்கு அருகிலுள்ள மோவாபிய சமவெளிகளில் பாளையமிறங்கினார்கள்.

சிப்போர் மகன் பாலாக்கு இஸ்ரயேல் எமோரியருக்குச் செய்திருந்த அனைத்தையும் கண்டான்.

இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை முன்னிட்டு மோவாபு பெரிதும் கலங்கிற்று: அம்மக்களைப் பற்றிய அச்சம் மோவாபை மேற்கொண்டது.

மோவாபு மிதியானின் மூப்பர்களிடம், மாடு வயல்வெளியில் புல்லை வேரற மேய்வது போல் இக்கும்பலும் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மேய்ந்துவிடும் என்று கூறிற்று. அச்சமயம் மோவாபிய மன்னன், சிப்போர் மகன் பாலாக்கு.

அவன் பெத்தோரைச் சார்ந்த பெகோரின் மகன் பிலயாமை அழைத்துவரத் தூதரை அனுப்பினான்: அந்த இடம் ஆமாபு நாட்டின் ஆற்றருகே இருந்தது. அவன் கூறியது: இதோ ஒரு மக்கள் கூட்டம் எகிப்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது: அவர்கள் நிலம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்: அவர்கள் எனக்கு எதரில் குடியேறியிருக்கிறார்கள்.

இப்போதே நீர் புறப்பட்டு வந்து எனக்காக இம்மக்களைச் சபித்துவிடும்: அவர்கள் என்னிலும் மிகவும் வலிமை மிக்கவராய் இருக்கின்றனர்: ஒரு வேளை நான் அவர்களை முறியடித்து நாட்டிலிருந்து துரத்தக்கூடும்: ஏனெனில், நீர் எவனுக்கு ஆசி வழங்குவீரோ அவன் ஆசிபெறுவான், நீர் எவனைச் சபிப்பீரோ அவன் சாபம் அடைவான் என்று நான் அறிவேன்.

அங்ஙனமே மோவாபு மூப்பரும் மிதியான் மூப்பரும் குறிசொல்வதற்கான கட்டணத்தையும் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போயினர். அவர்கள் பிலயாமிடம் வந்து பாலாக்கு அனுப்பிய செய்தியைச் சொன்னார்கள்.

அவர் அவர்களிடம், இந்த இரவில் இங்குத் தங்கியிருங்கள்: ஆண்டவர் என்னோடு பேசுகிறபடி நான் உங்களுக்கு வார்த்தை தருவேன் என்றார். அவ்வாறே மோவாபின் தலைவர்கள் பிலயாமுடன் தங்கினார்கள்.

கடவுள் பிலயாமிடம் வந்து, உன்னோடிருக்கிற இந்த ஆள்கள் யார்? என்று கேட்டார்.

பிலயாம் கடவுளிடம், மோவாபின் மன்னனான சிப்போர் மகன் பாலாக்கு என்னிடம் அனுப்பியுள்ளான்:

இதோ ஒரு மக்கள் கூட்டம் எகிப்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது: அவர்கள் நிலம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்: இப்போதே நீர் புறப்பட்டு வந்து எனக்காக அவர்களைச் சபித்துவிடும்: ஒரு வேளை நான் அவர்களுடன் போரிட்டு அவர்களை நாட்டிலிருந்து துரத்திவிடக்கூடும் என்று கூறியனுப்பியுள்ளான் என்றார்.

கடவுள் பிலயாமிடம், நீ அவர்களோடு போக வேண்டாம்: அம்மக்களைச் சபிக்கவும் வேண்டாம்: ஏனெனில் அவர்கள் ஆசி பெற்றோர் என்று கூறினார்.

அப்படியே பிலயாம் காலையில் எழுந்து பாலாக்கு அனுப்பிய தலைவர்களிடம், உங்கள் சொந்த நாட்டுக்குப் போங்கள்: நான் உங்களோடு வருவதற்கு ஆண்டவர் அனுமதி மறுத்துவிட்டார் என்று சொன்னார்.

அதன்படி மோவாபின் தலைவர்கள் எழுந்து பாலாக்கிடம் போய், பிலயாம் எங்களுடன் வர மறுக்கிறார் என்றார்கள்.

மீண்டும் பாலாக்கு அவர்களைவிட மதிப்பில் உயர்ந்த இன்னும் பல தலைவர்களை அனுப்பினான்.

அவர்கள் பிலயாமிடம் வந்து, சிப்போர் மகன் பாலாக்கு கூறுவது, என்னிடம் நீர் வருவதைத் தடுக்க எதற்கும் இடம் கொடாதேயும் :

உறுதியாக நான் உமக்கு மிகுந்த மரியாதை செய்வேன்: நீர் எனக்குச் சொல்லுவதையெல்லாம் நான் செய்வேன்: வாரும், இந்த மக்களை எனக்காகச் சபியும் என்றனர்.

ஆனால் பிலயாம் பாலாக்கின் அலுவலர்களிடம் பதில் மொழியாகக் கூறியது: பாலாக்கு தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் எனக்குத் தந்தாலும் என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையைக் குறைவாகவோ கூடுதலாகவோ என்னால் மீற முடியாது:

இன்றிரவு நீங்கள் தங்கிச் செல்லுங்கள்: ஆண்டவர் கூடுதலாக எனக்கு அறிவிக்கலாம்.

கடவுள் இரவில் பிலயாமிடம் வந்து அவரிடம், இந்த ஆள்கள் உன்னை அழைக்க வந்தால் நீ எழுந்து அவர்களுடன் போ: ஆயினும் நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும் என்றார்.

அங்ஙனமே பிலயாம் காலையில் எழுந்து தம் கழுதைக்குச் சேணங்கட்டி மோவாபின் தலைவர்களோடு போனார்.

ஆயினும், அவர் போனதை முன்னிட்டுக் கடவுளின் சினம் மூண்டது: ஆண்டவரின் தூதர் வழியிலே அவருக்கு எதிரியாக நின்றார். அப்போது அவர் தம் கழுதைமேல் ஏறித் தம் பணியாளர் இருவருடன் சென்று கொண்டிருந்தார்.

ஆண்டவரின் தூதர் கையில் உருவிய வாளுடன் பாதையில் நின்றுகொண்டிருப்பதைக் கழுதை கண்டது: எனவே கழுதை பாதையை விட்டு விலகி வயலுக்குள் சென்றது: பாதைக்கு அது திரும்பும்படி பிலயாம் கழுதையை அடித்தார்.

அடுத்து ஆண்டவரின் தூதர் திராட்சைத் தோட்டங்களிடையே இருபறமும் சுவர்களுள்ள ஒரு குறகிய பாதையில் நின்றார்.

ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை சுவரில் முட்டிப் பிலயாம் காலைச் சுவரோடு நெருக்கியது: ஆதலால் அதை அவர் மறுபடியும் அடித்தார்.

பின் ஆண்டவரின் தூதர் முன்னதாகவே சென்று வலப்புறமோ இடப்புறமோ திரும்ப முடியாத ஒரு குறுகிய இடத்தில் நின்றார்.

ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை பிலயாமுக்கு அடியில் படுத்துக்கொண்டது: பிலயாம் சினம் கொண்டு தம் கோலால் கழுதையை அடித்தார்.

உடனே ஆண்டவர் கழுதையின் வாயைத் திறந்தார்: அது அவரிடம், நீர் மூன்று முறை இவ்வாறு என்னை அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்? என்றது.

பிலயாம் கழுதையிடம், நீதான் என்னை ஏளனம் செய்து கொண்டிருக்கிறாய்: என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்தால் உன்னை இந்நேரம் கொன்றிருப்பேன் என்றார்.

கழுதை பிலயாமிடம், நான் உம் கழுதையன்றோ? இன்றுவரை உம் வாழ்நாளெல்லாம் என் மீது ஏறி வந்துள்ளீரே! எப்போதாவது நான் இப்படிச் செய்து பழக்கமுண்டா? என்றது, அதற்கு அவர், இல்லை என்றார்.

ஆண்டவர் பிலயாமின் கண்களைத் திறந்தார், கையில் உருவிய வாளுடன் ஆண்டவரின் தூதர் பாதையில் நின்றுகொண்டிருப்பதை அவர் கண்டார்: அவர் தலை வணங்கி முகங்குப்புற விழுந்தார்.

ஆண்டவரின் தூதர் அவரிடம் கூறியது: ஏன் மூன்று முறை இவ்வாறு கழுதையை அடித்தாய்? இதோ நான் உனக்கு எதிரியாக வந்திருக்கிறேன்: ஏனெனில் என் பார்வையில் உன் வழி தவறானது.

இந்தக் கழுதை என்னைக் கண்டு இந்த மூன்று முறையும் என் முன்னின்று திரும்பி விலகியது. அது என் முன்னின்று திரும்பி விலகாதிருந்தால் உறுதியாக இப்போதே உன்னை நான் கொன்று, அதை வாழ விட்டிருப்பேன்.

பிலயாம் ஆண்டவரின் தூதரிடம், நான் பாவம் செய்துவிட்டேன்: நீர் பாதையிலே எனக்கு எதிராக நின்றதை நான் அறிந்து கொள்ளவில்லை: எனவே இப்போதும் இது உம் பார்வையில் தீயதாக இருப்பின் நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றார்.

ஆண்டவரின் தூதர் பிலயாமிடம், இந்த ஆள்களுடன் நீ போ: ஆயினும் நான் சொல்லும் வார்த்தையை மட்டுமே நீ பேச வேண்டும் என்றார்.

பிலயாம் வந்திருப்பதைப் பாலாக்கு கேட்டதும் அவரைச் சந்திக்கும்படி அவன் மோவாபு நகருக்குப் புறப்பட்டுப்போனான்: அது அர்னோன் எல்லையின் இறுதியில் இருந்தது.

பாலாக்கு பிலயாமிடம், நான் உம்மை அழைத்து வர ஆளனுப்பவில்லையா? பின்னர் ஏன் நீர் வரவில்லை? உமக்கு மரியாதை செய்ய நான் இயலாதவனோ? என்று கேட்டான்.

பிலயாம் பாலாக்கிடம், இதோ நான் உம்மிடம் வந்துள்ளேன்: நானாக எதையும் பேச இப்போது என்னால் இயலாதே! கடவுள் என் வாயில் வைக்கும் வார்த்தையாலேயே நான் பேச வேண்டும் என்றார்.

அதன் பின் பிலயாம் பாலாக்குடன் போனார்: அவர்கள் கிர்யத்து குசோத்துக்கு வந்தனர்.

பாலாக்கு ஆடு மாடுகளைப் பலியிட்டு அவற்றிலிருந்து பிலயாமுக்கும் அவரோடிருந்த தன் அலுவலர்க்கும் கொடுத்தடுப்பினான்.

மறுநாள் பாலாக்கு பிலயாமை பாமோத்து பாகாலுக்குக் கூட்டிக் கொண்டு வந்தார்: அங்கிருந்து அவன் இஸ்ரயேல் மக்களில் மிகவும் அண்மையிலிருந்தோரைப் பார்த்தான்.

அதிகாரம் 23

பிலயாம் பாலாக்கிடம், எனக்காக இங்கு ஏழு பலி பீடங்களை எழுப்பும்: எனக்காக இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் தாரும் என்றார்.

பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்தான்: பிலயாமும் பாலாக்கும் ஒவ்வொரு பலி பீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டனர்.

பிலயாம், பாலாக்கைப் பார்த்து, உம் எரிபலியருகே நின்று கொள்ளும்: நான் போகிறேன்: அவர் எதையெல்லாம் எனக்குக் காண்பிக்கிறாரோ அதை உமக்கு அறிவிப்பேன் என்றார். பின் அவர் மொட்டை மேடு நோக்கிப் போனார்.

கடவுள் பிலயாமைச் சந்தித்தார். பிலயாம் அவரிடம், நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம் செய்து ஒவ்வொரு பலிபீடத்தின் மேலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டுள்ளேன் என்றார்.

ஆண்டவர் ஒரு வார்த்தையை பிலயாமின் வாயில் வைத்து அவரிடம், பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு என்றார்.

அவர் அவனிடம் திரும்பிப் போகையில் அவன் மோவாபின் எல்லாத் தலைவர்களோடும் தன் எரிபலியருகில் நின்று கொண்டிருந்தான்.

பிலயாம் திருஉரையாகக் கூறியது: ஆராமிலிருந்து பாலாக்கு, கீழை மலைகளிலிருந்து மோவாபின் மன்னன், என்னைக் கொண்டு வந்துள்ளான். வா, எனக்காக யாக்கோபைச் சபி! வா, இஸ்ரயேலைப் பழித்துரை! என்கிறான்.

கடவுள் சபிக்காதவனை நான் எப்படிச் சபிப்பேன்? கடவுள் பழித்துரைக்காதவனை நான் எப்படிப் பழித்துரைப்பேன்?

மலைகளின் உச்சியிலிருந்து நான் அவனை நோக்குகிறேன்: குன்றுகளிலிருந்து நான் அவனைப் பார்க்கிறேன்: இதோ! தனியாக வாழ்கின்றதொரு மக்கள் கூட்டம். இது வேற்றினத்தாரோடு தன்னையும் ஓர் இனமாய்க் கொள்ளவில்லை:

யாக்கோபின் தூசியை எண்ணிக்கையிடவோ இஸ்ரயேலின் கால் பங்கைக் கணக்கெடுக்கவோ யாரால் இயலும்? நான் நேர்மையாளர் இறப்பை அடைவேனாக! என் முடிவும் அவர் போன்று இருப்பதாக!

பின்னர் பாலாக்கு பிலயாமிடம், நீர் என்ன எனக்கு இப்படிச் செய்துவிட்டீர்! என் எதிரிகளைச் சபிக்கும்படி நான் உம்மைக் கொண்டுவந்தேன்: ஆனால் இதோ! நீர் அவர்களுக்கு ஆசிமேல் ஆசி வழங்குகிறீர்! என்றான்.

அதற்கு மறுமொழியாக அவர், ஆண்டவர் என் வாயில் வைத்ததைப் பேசுவது என் கடமையன்றோ? என்றார்.

பாலாக்கு அவரிடம், வேறோர் இடத்திற்கு என்னோடு வாரும்: அங்கிருந்து நீர் அவர்களில் எல்லாரையும் பார்க்காமல், அண்மையிலிருப்போரையே பார்ப்பீர்: பின்பு எனக்காக அவர்களை அங்கிருந்து சபியும் என்றான்:

அவ்வாறே பாலாக்கு அவரைப் பிஸ்காவின் கொடுமுடிவில் சோபிம் வயல்வெளிக்குக் கொண்டு போனான்: அங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான்.

பிலயாம் பாலாக்கிடம், நான் அப்பால் ஆண்டவரைச் சந்திக்கையில் நீர் உம் எலிபலியருகில் நின்றுகொள்ளும் என்றார்.

ஆண்டவர் பிலயாமைச் சந்தித்தார்: அவர் அவரது வாயில் ஒரு வார்த்தையை வைத்து, பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு என்று சொன்னார்.

அவர் அவனிடம் வந்தபொழுது, அவன் தன் எரிபலியருகில் நின்றுகொண்டிருந்தான்: மோவாபின் தலைவர்களும் அவனோடிருந்தார்கள். பாலாக்கு அவரிடம், ஆண்டவர் என்ன உரைத்துள்ளார்? என்று கேட்டான்.

பிலயாம் திருஉரையாகக் கூறியது: பாலாக்கு, எழுந்து கேள்: கிப்போர் மகனே, எனக்குச் செவிகொடு.

பொய் சொல்வதற்குக் கடவுள் மனிதன் அல்லர்: மனத்தை மாற்றிக்கொள்ள ஒரு மனிதப் பிறவியும் அல்லர். அவர் சொல்லியரைச் செய்யாமலிருப்பாரா? அல்லது உரைத்ததை நிறைவேற்றிமலிருப்பாரா?

இதோ, நான் ஆசி கூறவே ஒரு கட்டளை பெற்றேன்: அவர் ஆசி பொழிந்துள்ளார்: அதை என்னால் மாற்றியமைக்க இயலாது.

யாக்கோபில் தீங்கினை அவர் கண்டதில்லை! இஸ்ரயேலில் துயரத்தை அவர் பார்த்ததுமில்லை! ஆண்டவராம் கடவுள் அவர்களோடிருக்கிறார்? ஓர் அரசனின் பெருமுழக்கம் அவர்களிடையே உண்டு.

எகிப்திலிருந்து இறைவன் அவர்களை வெளிக்கொணர்கின்றார்: காண்டாமிருகத்தின் கொம்புகள் அவர்களுக்கு உண்டு.

யாக்கோபுக்கு எதிரான மந்திர மாயம் ஏதமில்லை. இஸ்ரயேலுக்கு எதிரான குறி கூறல் யாதுமில்லை: யாக்கோபையும் இஸ்ரயேலையும் பற்றி இப்போது சொல்லப்படுவது: எத்துணை அரியன ஆற்றியுள்ளார் கடவுள்!

இதோ ஒரு மக்களினம்: அது ஒரு பெண் சிங்கம் போன்று எழும்புகிறது: ஒரு சிங்கம் போன்று அது தன்னை உயர்த்துகிறது. இரையை விழுங்கி, கொலையுண்டதின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் அது படுப்பதில்லை.

பாலாக்கு பிலாயாமிடம், ஒருபோதும் நீர் அவர்களைச் சபிக்க வேண்டாம். ஒருபோதும் அவர்களுக்கு ஆசி கூறவும் வேண்டாம் என்றான்.

ஆனால் பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாக, ஆண்டவர் சொல்கிறபடியெல்லாம் செய்வேனென்று நான் உம்மிடம் சொல்லவில்லையோ? என்றார்.

பின்னர் பாலாக்கு பிலயாமிடம், மீண்டும் வாரும், நான் உம்மை வேறோர் இடத்துக்குக் கொண்டு செல்வேன். ஒருவேளை நீர் எனக்காக அங்கிருந்து அவர்களைச் சபிப்பது கடவுளுக்கு உகந்ததாயிருக்கும் என்றான்.

அங்ஙனமே பாலாக்கு பிலயாமைப் பெகோரின் கொடுமுடிக்குக் கொண்டு போனான்: அது பாலை நிலத்தை நோக்கியவாறு அமைந்திருந்தது.

பிலயாம் பாலாக்கிடம், எனக்காக இங்கு ஏழு பலிபீடங்களைக் கட்டும்: எனக்கு இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் ஏற்பாடு செய்யும் என்றார்.

பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்து ஒவ்வொரு பலிபீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டான்.

அதிகாரம் 24

இஸ்ரயேலுக்கு ஆசி கூறுவதே ஆண்டவருக்கு விருப்பம் என்று பிலயாம் கண்போது, முன்பு செய்தது போன்று அவர் சகுனம் பார்க்கச் செல்லாமல், தம் முகத்தைப் பாலைநிலத்துக்கு நேரே திருப்பினார்.

பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே குலம் குலமாகப் பாளையமிறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர் மேல் இறங்கியது.

அவர் திருஉரையாகக் கூறியது: பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி!

கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின், பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி!

யாக்கோபே! உன் கூடாரங்களும் இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை!

அவை விரிந்து கடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை: ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை: நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை.

அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்: அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்: அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்: அவனது அரசு உயர்த்தப்படும்.

கடவுள் அவனை எகிப்திலிருந்து கொண்டு வருகிறார்: காண்டா மிருகத்தின் கொம்புகள் அவனுக்குண்டு: அவன் தன் எதிரிகளாகிய வேற்று இனத்தவரை விழுங்கிவிடுவான்: அவர்கள் எலும்புகளைத் தூள் தூள்களாக நொறுக்குவான்: அவர்களைத் தன் அம்புகளால் ஊடுருவக் குத்துவான்:

அவன் துயில் கொண்டான்: சிங்கம் போன்றும் பெண் சிங்கம் போன்றும் படுத்துக்கொண்டான்: அவனை எழுப்பி விடுவோன் யார்? உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்: எனவே உன்னைச் சபிப்போன் சாபமடைவான்!

எனவே பிலயாம் மீது பாலாக்கு கடும் சினம் கொண்டு தன் கைகளைத் தட்டி பிலயாமிடம், என் எதிரிகளைச் சபிக்கவே நான் உம்மை அழைத்தேன்: ஆனால் நீர் இம்மூன்று முறையும் அவர்களுக்கு ஆசி கூறியுள்ளீர்:

எனவே உடனே உம் இடத்துக்கு ஓடிவிடும்: உமக்கு உறுதியாக மரியாதை செய்வேன் என்று சொல்லியிருந்தேன்: ஆண்டவரோ நீர் மரியாதை பெறாதபடி தடுத்துவிட்டார் என்றான்.

பிலயாம் பாலாக்குக்கு மறுமொழியாகக் கூறியது: நீர் என்னிடம் அனுப்பிய உம் தூதரிடம் நான் சொல்லவில்லையா?

பாலாக்கு வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும் ஆண்டவரின் வார்த்தையை மீறிச் சென்று என் விருப்பப்படி நன்மையோ தீமையோ செய்ய இயலாது: ஆண்டவர் பேசுவதையே நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா?

இப்போது நான் என் மக்களிடம் போகிறேன்: வாரும், பிற்காலத்தில் இம்மக்கள் உம் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்று உமக்குத் தெரிவிப்பேன் என்றார்.

அவர் திரு உரையாகக் கூறியது: பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி!

கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதர் அளித்த அறிவைப் பெற்று பேராற்றலுடையவரின் காட்சி கண்டு கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி!

நான் அவரைக் காண்பேன்: ஆனால் இப்போதன்று: நான் அவரைப் பார்ப்பேன்: ஆனால் அண்மையிலன்று: யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்! அது மோவாபின் நெற்றிப் பிறையை நசுக்கும்: சேத்தின் புதல்வர் அனைவரையும் அழித்துவிடும்.

அவன் எதிரியான ஏதோம் பாழாகிவிடும்: சேயிரும் கைப்பற்றப்படும்: இஸ்ரயேலோ வலிமையுடன் செயல்படும்.

யாக்கோபு ஆளுகை செய்வான்: நகர்களில் எஞ்சியிருப்போர் அழிக்கப்படுவர்.

பின் அவர் அமலேக்கைப் பார்த்துத் திருவுரையாகக் கூறியது: வேற்றினங்களில் முதன்மையானவன் அமலேக்கு: இறுதியில் அவன் அழிந்துபோவான்.

அடுத்துக் கேனியனை நோக்கித் திருவுரையாக் கூறியது: உன் வாழ்விடம் உறுதியானது: உன் கூடு பாறையில் அமைந்துள்ளது:

ஆயினும் கேனியன் பாழாய்ப் போவான்: ஆசீரியர் உன்னைச் சிறைப் பிடித்துச் செல்ல எவ்வளவு காலந்தான் ஆகும்?

பின்னும் அவர் திருவுரையாகக் கூறியது: அந்தோ, கடவுள் இதனைச் செய்யும்போது எவன்தான் பிழைப்பான்?

கித்திம் தன் கப்பல்களால் ஆசீரியாவையும் ஏபேரையும் துன்புறுத்துவான்

பின்பு பிலயாம் எழுந்து தம் இடத்துக்குத் திரும்பினார்: பாலாக்கும் தன்வழியே சென்றான்!

அதிகாரம் 25

இஸ்ரயேல் சித்திமில் தங்கியிருந்தபோது மக்கள் மோவாபின் புதல்வியரோடு முறைகேடாக நடக்கத் தொடங்கினர்.

அவர்கள் தங்கள் தெய்வங்களின் பலிகளில் பங்கேற்க மக்களை அழைத்தனர்: மக்கள் உண்டு அவர்கள் தெய்வங்களைப் பணிந்து வணங்கினர்.

இங்ஙனம் இஸ்ரயேல் பாகால்பெகோரை அடிபணிந்தது: எனவே ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது.

ஆண்டவர் மோசேயிடம், மக்களின் தலைவர்கள் அனைவரையும் கொண்டு வந்து பட்டப்பகலில் ஆண்டவர் முன் தூக்கிலிடு. அதனால் ஆண்டவர் கடுஞ்சினம் இஸ்ரயேலை விட்டு நீங்கும் என்று கூறினார்.

மோசே இஸ்ரயேலின் தலைவர்களிடம், உங்கள் ஒவ்வொருவரும் பாகால் பெகோரை அடிபணிந்த தம் ஆள்களைக் கொன்று விடுங்கள் என்றார்.

மேலும் இஸ்ரயேல் மக்கள் சந்திப்புக் கூடார வாயிலில் அழுது கொண்டிருந்தபொழுது அவர்களில் ஒருவன் மிதியானியப் பெண்ணொருத்தியைத் தன் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தான்: இது மோசேயின் பார்வையிலும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவர் பார்வையிலும் நடந்தது.

குரு ஆரோன் மகன் எலயாசரின் புதல்வன் பினகாசு இதனைப் பார்த்ததும் அவன் மக்கள் கூட்டமைப்பை விட்டு எழுந்து தன் கையில் ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான்.

அவன் அந்த இஸ்ரயேல் மனிதனின் பின்னே உள்ளறைக்குச் சென்று அந்த இஸ்ரயேல் மனிதனையும் அந்தப் பெண்ணையும் சேர்த்து அவள் வயிறு வழியே ஊடுருவக் குத்தினான். இதனால் இஸ்ரயேல் மக்களிடையே கொள்ளைநோய் அகன்றது.

எனினும் அக்கொள்ளை நோயால் இறந்தோர் இருபத்து நான்காயிரம் பேர்.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

குரு ஆரோன் மகன் எலயாசரின் புதல்வன் பினகாசு இஸ்ரயேல் மக்களிடமிருந்து என் சினத்தை அகற்றி விட்டான்: நான் அவர்கள் மீது கொண்டிருந்த அன்பின் வெறியை அவனும் காட்டிவிட்டான்: ஆகவே என் பேரார்வத்தால் இஸ்ரயேல் மக்களை நான் முற்றிலும் அழித்து விடவில்லை.

எனவே நீ சொல்ல வேண்டியது: இதோ என் நல்லுறவு உடன்படிக்கையை அவனுக்குக் கொடுக்கிறேன்:

அது அவனுக்கும் அவனுக்குப் பின் அவன் வழித்தோன்றல்களுக்கும் நிலையான குருத்துவத்தின் உடன்படிக்கையாயிருக்கும்: அவன் தன் கடவுள் மீது பேரார்வம் கொண்டிருந்ததால் இஸ்ரயேல் மக்களுக்காகக் கறை நீக்கம் செய்தான்.

மிதியானியப் பெண்ணுடன் சேர்த்துக் கொல்லப்பட்ட இஸ்ரயேலன் பெயர் சிம்ரி: இவன் சிமியோன் குலத்தைச் சார்ந்த மூதாதையர் வீட்டுத் தலைவனான சாலூவின் மகன்:

கொல்லப்பட்ட அந்த மிதியானியப் பெண்ணின் பெயர் கோசுபி: இவள் மிதியானில் மூதாதையர் வீடொன்றுக்குத் தலைவனான சூரின் மகள்.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

மிதியானியரைத் தாக்கி அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்:

ஏனெனில், அவர்களும் தங்கள் சூழ்ச்சிகளால் உங்களை ஏமாற்றினார்கள்: இதனால் பெகோரை முன்னிட்டு மிதியான் தலைவனின் மகளாகிய அவர்கள் சகோதரி கோசுபியின் காரியத்திலும் அவர்கள் உங்களைக் கெடுத்து விட்டார்கள். பெகோரை முன்னிட்டு ஏற்பட்ட கொள்ளை நோய்க் காலத்தில் அவள் கொல்லப்பட்டாள்.

அதிகாரம் 26

அந்தக் கொள்ளை நோய்க்குப் பின்பு ஆண்டவர் மோசேயிடமும் குரு ஆரோன் மகன் எலயாசரிடமும்,

இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதிலும் இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள போருக்குச் செல்லத்தக்க இஸ்ரயேலின் ஆண் மக்கள் அனைவரையும் அவர்கள் மூதாதையர் வீடுகள் வாரியாகக் கணக்கெடுங்கள் என்றார்.

மோசேயும் குரு எலயாசரும் எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபு சமவெளியில் அவர்களிடம்,

ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இருபது வயதும் அதற்கு மேலுமுள்ளவர்களைக் கணக்கெடுங்கள் என்று கூறினர். எகிப்து நாட்டிலிருந்து வெளியேறி வந்த இஸ்ரயேலின் ஆண் மக்கள் பின்வருமாறு:

ரூபன் இஸ்ரயேலின் தலைமகன். ரூபன் புதல்வர்: அனோக்கு, அனோக்கு வீட்டார்: பல்லூ, பல்லூ வீட்டார்:

எட்சரோன், எட்சரோன் வீட்டார், கர்மி, கர்மி வீட்டார்,

ரூபன் குடும்பங்கள் இவைகளே. இவற்றில் எண்ணப்பட்டோர் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பது பேர்.

பல்லூ புதல்வர் எலியாபு.

எலியாபு புதல்வர்: நெமுவேல், தாத்தான், அபிராம். கோராகின் கூட்டத்தார் ஆண்டவருடன் வாக்குவாதம் செய்தபோது மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகப் போராடுமாறு மக்கள் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்த தாத்தானும் அபிராமும் இவர்களே.

அப்போது நிலம் வாயைத் திறந்து கோராகுடன் சேர்ந்து அவர்களை விழுங்கியது. நெருப்பு இருநூற்றைம்பது பேரைக் கவ்வியது: அக்கூட்டம் மாண்டது: இவ்வாறு அவர்கள் ஓர் எச்சரிப்பாயினர்.

ஆனால் கோராகு புதல்வர் மடியவில்லை.

தங்கள் குடும்பங்கள் வாரியாகச் சிமியோன் புதல்வர்: நெமுவேல், நெமுவேல் வீட்டார்: யாமீன், யாமீன் வீட்டார்: யாக்கின், யாக்கின் வீட்டார்:

செராகு, செராகின் வீட்டார்: சாவூல், சாவூல் வீட்டார்:

சிமியோன் குடும்பங்கள் இவையே. இவர்கள் இருபத்து இரண்டாயிரத்து இருநூறு பேர்.

தங்கள் குடும்பங்கள் வாரியாக காத்துப் புதல்வர்: செப்போன், செப்போன் வீட்டார்: அதி, அதி வீட்டார்: சூனி, சூனி வீட்டார்:

ஒசுனீ, ஒசுனீ வீட்டார்: ஏரி, ஏரி வீட்டார்:

அரோது, அரோது வீட்டார்: அரேலி, அரேலி வீட்டார்.

அவர்கள் எண்ணிக்கைப்படி காத்துப் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் நாற்பதாயிரத்து ஜந்நூறு பேர்.

யூதாவின் புதல்வர் ஏர், ஓனான் என்போர்: ஏர், ஓனான் ஆகியோர் கானான் நாட்டில் இறந்தனர்.

தங்கள் குடும்பங்கள் வாரியாக யூதாவின் புதல்வர்: சேலா, சேலா வீட்டார்: பெரேட்சு, பெசேட்சு வீட்டார்: செராகு, செராகு வீட்டார்.

பெரேட்சின் புதல்வர்: எட்சரோன், எட்சரோன் வீட்டார்: ஆமூல், ஆமூல் வீட்டார்:

அவர்கள் எண்ணிக்கைப்படி யூதாவின் குடும்பங்கள் இவையே. அவர்கள் எழுபத்தாறாயிரத்து ஜந்நூறு பேர்.

தங்கள் குடும்பங்கள் வாரியாக இசக்கார் புதல்வர்: தோலா, தோலா வீட்டார்: பூவா, பூவா வீட்டார்:

யாசூபு, யாசூபு வீட்டார்: சிம்ரோன், சிம்ரோன் வீட்டார்.

அவர்கள் எண்ணிக்கைப்படி இசக்கார் குடும்பங்கள் இவையே. அவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறு பேர்.

தங்கள் குடும்பங்கள் வாரியாக செபுலோன் புதல்வர்: செரேது, செரேது வீட்டார்: ஏலோன், ஏலோன் வீட்டார்: யாகுலவேல், யாகுலவேல் வீட்டார்.

அவர்கள் எண்ணிக்கைப்படி செபுலோன் குடும்பங்கள் இவையே. அவர்கள் அறுபதாயிரத்து ஜந்நூறு பேர்.

தங்கள் குடும்பங்கள் வாரியாக யோசேப்புப் புதல்வர் மனாசேயும் எப்ராயிமும் ஆவர்.

மனாசே புதல்வர்: மாக்கிர், மாக்கிர் வீட்டார்: மாக்கிர் கிலயாதின் தந்தை: கிலயாது, கிலயாது வீட்டார்.

கிலயாது புதல்வர் இவர்களே: இயசேர், இயசேர் வீட்டார்: ஏலேக்கு, ஏலேக்கு வீட்டார்:

அசிரியேல், அசிரியேல் வீட்டார்: செக்கேம், செக்கேம் வீட்டார்:

செமிதா, செமிதா வீட்டார்: ஏபேர், ஏபேர் வீட்டார்.

ஏபேர் மகன் செலோபுகாதுக்குப் புதல்வர்கள் இல்லை: ஆனால் புதல்வியர் இருந்தனர்: செலோபுகாதின் புதல்வியர் பெயர்கள்: மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா.

மனாசேயின் குடும்பங்கள் இவைகளே. அவர்கள் தொகை ஜம்பத்தீராயிரத்து எழுநூறு.

தங்கள் குடும்பங்கள் வாரியாக எப்ராயிம் புதல்வர் இவர்களே: சுத்தேலாகு, சுத்தேலாகு வீட்டார்: பெக்கேர், பெக்கேர் வீட்டார்: தகான், தகான் வீட்டார்.

சுத்தேலாகின் புதல்வர், ஏரானும் ஏரான் வீட்டாருமே.

அவர்கள் எண்ணிக்கைப்படி எப்ராயிம் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் முப்பத்தீராயிரத்து ஜந்நூறு பேர். ஆக மொத்தம் தங்கள் குடும்பங்கள் வாரியாக யோசேப்புப் புதல்வர் இவர்களே.

தங்கள் குடும்பங்கள் வாரியாகப் பென்யமின் புதல்வர்: பேலா, பேலா வீட்டார், அசுபேல், அசுபேல் வீட்டார்: அகிராம், அகிராம் வீட்டார்:

செபூபாம், செபூபாம் வீட்டார்: கூபாம், கூபாம் வீட்டார்:

பேலா புதல்வர் அருது, நாமான் என்போரே: அருது, அருது வீட்டார்: நாமான், நாமான் வீட்டார்.

தங்கள் குடும்பங்கள் வாரியாகப் பென்யமின் புதல்வர் இவர்களே. அவர்கள் தொகை நாற்பத்தையாயிரத்து அறுநூறு.

தங்கள் குடும்பங்கள் வாரியாக தாண் புதல்வர் இவர்களே: சூகாம், சூகாம் வீட்டார். தங்கள் குடும்பங்கள் வாரியாக இவைகளே தாண் குடும்பங்கள்.

அவர்கள் எண்ணிக்கைப்படி சூகாம் குடும்பத்தினர் அறுபத்து நாலாயிரத்து நானு¡று பேர்.

தங்கள் குடும்பங்கள் வாரியாக ஆசேர் புதல்வர்: இம்னா, இம்னா வீட்டார்: இசுவி, இசுவி வீட்டார்: பெரியா, பெரியா வீட்டார்.

பெரியா புதல்வர்: எபேர், எபேர் வீட்டார்: மல்கியேல், மல்கியேல் வீட்டார்.

ஆசேர் புதல்வி பெயர் செராகு.

அவர்கள் எண்ணிக்கைப்படி ஆசேர் புதல்வர் குடும்பங்கள் இவையே. அவர்கள் ஜம்பத்து மூவாயிரத்து நானு¡று பேர்.

தங்கள் குடும்பங்கள் வாரியாக நப்தலி புதல்வர்: யாகுட்சேல், யாகுட்சேல் வீட்டார்: கூனி, கூனி வீட்டார்:

எட்சேர், எட்சேர் வீட்டார், சில்லேம், சில்லேம் வீட்டார்.

அவர்கள் எண்ணிக்கைப்படி நப்தலிக் குடும்பங்கள் இவையே. அவர்கள் தொகை நாற்பத்தையாயிரத்து நானு¡று.

ஆக, இஸ்ரயேலின் ஆண் மக்கள் தொகை ஆறு லட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

பெயர்களின் எண்ணிக்கைக்குத்தக்கவாறு இவர்களுக்கு இந்த நாடு உரிமைச் சொத்தாகப் பங்கிடப்படும்.

குலங்களுள் பெரியவற்றுக்குக் கூட்டியும், சிறியவற்றுக்குக் குறைத்தும் நீ அதனதன் உரிமைச் சொத்தைக் கொடுப்பாய். ஒவ்வொன்றுக்கும் அதன் தொகைக்கேற்ப உரிமைச் சொத்து வழங்கப்படும்.

ஆயினும், திருவுளச் சீட்டு முறையிலேயே நாடு பங்கிடப்படும். அவர்கள் தங்கள் மூதாதையர் குலப்பெயர்கள் வாரியாக உரிமைச் சொத்தைப் பெறுவர்.

பெரியவற்றுக்கும், சிறியவற்றுக்குமிடையே திருவுளச் சீட்டு முறைப்படி அதனதன் உரிமைச் சொத்து பங்கிடப்படும்.

தங்கள் குடும்பங்கள் வாரியாக எண்ணப்பட்ட லேவியர் இவர்களே: கேர்சோன், கேர்சோன் வீட்டார்: கெகாது, கெகாது வீட்டார்: மெராரி, மெராரி வீட்டார்.

லேவி குடம்பங்களாவன: லிப்னி குடும்பம், எபிரோன் குடும்பம், மக்லி குடும்பம், மூசி குடும்பம், கோராகு குடும்பம். கெகாது அம்ராமின் தந்தை.

அம்ராம் மனைவி பெயர் யோக்கபெத்து. இவள் லேவி மகள்: லேவிக்கு எகிப்தில் பிறந்தவள். அம்ராமுக்கு இவள் ஆரோன், மோசே, அவர்களின் சகோதரி மிரியாம் ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.

ஆரோனுக்குப் பிறந்தவர்கள் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர் ஆகியோர்.

ஆனால் நாதாபும், அபிகூவும் ஆண்டவர் முன் வேற்று நெருப்பைக் கொண்டு வந்தபோது கொல்லப்பட்டனர்.

லேவியருள் ஒரு மாதமும் அதற்கு மேலும் வயதுடைய ஆண்களில் எண்ணப்பட்டோர் இருபத்து மூவாயிரத்து பேர். இஸ்ரயேல் மக்களிடையே அவர்கள் பதிவு செய்யப்படவில்லை. ஏனெனில் இஸ்ரயேல் மக்களிடையே அவர்களுக்கு எந்த உரிமைச் சொத்தும் தரப்படவில்லை.

மோசேயாலும் குரு எலயாரசராலும் எண்ணப்பட்டோர் இவர்களே. அவர்கள் இஸ்ரயேல் மக்களை எரிகோவுக்கு எதிரே யோர்தானை அடுத்த மோவாபியச் சமவெளியில் எண்ணினார்கள்.

ஆனால், சீனாயப் பாலை நிலத்தில் எண்ணப்பட்டிருந்த இஸ்ரயேல் மக்களில், அதாவது மோசேயாலும் குரு ஆரோனாலும் எண்ணப்பட்டோருள் எவரும் இவர்களிடையே இல்லை.

ஏனெனில், அவர்கள் பாலைநிலத்தில் மடிந்து விடுவர் என்று ஆண்டவர் சொல்லியிருந்தார். எப்புன்னே புதல்வன் காலேபையும் நூன் புதல்வன் யோசுவாவையும் தவிர அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை.

அதிகாரம் 27

யோசேப்புப் புதல்வரான மனாசே குடும்பங்களைச் சார்ந்தவர் செலொபுகாத்து. இவர் மனாசேயின் மைந்தர் மாக்கிரின் புதல்வர் கிலியாதுக்குப் பிறந்த ஏபேரின் மகன், இவருக்கு மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா என்ற புதல்வியர் இருந்தனர்.

அவர்கள் வந்து மோசே, குரு எலயாசர், தலைவர்கள், மக்கள் கூட் டமைப்பினர் அனைவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலருகில் நின்று கூறியது:

எங்கள் தந்தை பாலை நிலத்தில் இறந்து போனார். கோராகைச் சார்ந்தவர்கள் ஆண்டவருக்கு எதிராகக் கூடிய கூட்டத்தினுள் அவர் இல்லை. அவர்தம் பாவத்துக்காகவே இறந்தார். அவருக்குப் புதல்வர்கள் இல்லை.

இப்போதும் தமக்குப் புதல்வர் இல்லாத காரணத்துக்காக எங்கள் தந்தையின் பெயர் அவர் குடும்பத்திலிருந்து ஏன் நீக்கப்பட வேண்டும்? எங்கள் தந்தையின் சகோதரர்களிடையே எங்களுக்கும் பங்கு தாருங்கள்.

மோசே அவர்கள் வழக்கை ஆண்டவரிடம் கொண்டு வந்தார்.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

செலொபுகாதின் புதல்வியர் கேட்பது சரியே: அவர்கள் தந்தையின் சகோதரரிடையே அவர்களுக்கும் உரிமைச் சொத்தில் பங்கு கொடுத்து, அவர்கள் தந்தையின் உரிமைச் சொத்து அவர்களுக்குக் கிடைக்கச் செய்.

நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறு: மகன் இல்லாமலே ஒருவன் இறந்து விட்டால் அவன் உரிமைச் சொத்து அவன் மகளுக்குச் சேர வேண்டும்.

அவனுக்கு மகளும் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்க வேண்டும்.

அவனுக்குச் சகோதரரும் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் தந்தையின் சகோதரருக்குக் கொடுக்க வேண்டும்.

அவன் தந்தைக்கும் சகோதரர் இல்லையெனில் அவன் உரிமைச் சொத்தை அவன் குடும்பத்தில் அவனுக்கடுத்த உறவினனுக்குக் கொடுக்க வேண்டும்: அவன் அதை உடைமையாக்கிக் கொள்வான். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இது இஸ்ரயேல் மக்களுக்கு நியமமாகவும், விதிமுறையாகவும் விளங்கும்.

மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இந்த அபாரிம் மலை மேல் ஏறிச் சென்று நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்துள்ள நாட்டைப் பார்.

நீ அதைப் பார்த்த பின் உன் சகோதரன் ஆரோன் சேர்த்துக் கொள்ளப்பட்டது போன்று, நீயும் உன் மக்களுடன் சேர்த்துக்கொள்ளப்படுவாய்.

ஏனெனில் சீன் பாலைநிலத்தில் மக்கள் கூட்டமைப்பு தண்ணீருக்காக வாக்குவாதம் செய்தபொழுது நீங்கள் அவர்கள் பார்வையில் என்னைப் புனிதப்படுத்தாது என் வார்த்தையை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள் - இவையே சீன் பாலை நிலத்தில் காதேசிலுள்ள மெரிபாவின் நீர்நிலைகள்.

மோசே ஆண்டவரிடம்,

உயிர்க்கு எல்லாம் கடவுளாகிய ஆண்டவர் இந்த மக்கள் கூட்டமைப்புக்கு ஒருவனைப் பொறுப்பாளனாக ஏற்படுத்துவாராக:

அவன் அவர்களுக்கு முன்னே போகவும், அவர்களுக்கு முன்னே வரவும் வேண்டும்: அவ்வாறே வெளியே நடத்திச் செல்லவும் உள்ளே அழைத்து வரவும் வேண்டும். இதனால் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பு மேய்ப்பனில்லா ஆடுகளாக இராது என்றார்.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நூன் புதல்வன் யோசுவாவைத் தேர்ந்துகொள்: அவன் ஆவியைத் தன்னுள் கொண்டவன்: நீ அவன் மேல் உன் கையை வை.

குரு எலயாசருக்கும் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவருக்கும் முன்பாக அவனை நிற்கச் செய்: அவர்கள் பார்வையில் நீ அவனைப் பொறுப்பாளனாக ஏற்படுத்து.

மக்கள் கூட்டமைப்பின் அனைத்து மக்களும் கீழ்ப்படியும்படி உன் அதிகாரத்தை அவனுடன் பகிர்ந்துகொள்.

அவன் குரு எலயாசருக்கு முன் நிற்க, அவனுக்காக எலயாசர் ஆண்டவர் முன்னிலையில் ஊரிம் வழங்கும் தீர்ப்பை நாடுவான்: அவனும் அவனுடன் இருக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவருமான மக்கள் கூட்டமைப்பு முழுவதும் எலயாசரின் வார்த்தையின்படியே வெளியே செல்லவும், உள்ளே வரவும் வேண்டும்.

ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார். அவர் யோசுவாவை அழைத்து குரு எலயாசர் மக்கள் அனைவர் முன்னிலையில் அவரை நிற்கச் செய்தார்.

ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே தம் கைகளை அவர் மேல் வைத்து அவரைப் பொறுப்பாளராக நியமித்தார்.

அதிகாரம் 28

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்: எனக்குரிய நேர்ச்சையை, நெருப்புப் பலியான உணவை, எனக்கு உகந்த நறுமணத்தைக் குறிக்கப்பட்ட காலத்தில் எனக்குப் படைப்பதில் நீங்கள் கருத்தாயிருக்க வேண்டும்.

நீ அவர்களிடம் சொல்: நெருப்புப் பலியாக நீங்கள் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியது: அன்றாட எரிபலியாக எந்நாளும் செலுத்த ஒரு வயதுடைய பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகள்.

இவற்றுள் ஒன்றைக் காலையிலும், மற்றதை மாலையிலும் பலியிட வேண்டும்.

அத்துடன், உணவுப் படையலாக இருபதுபடி மரக்காலில் பத்தில் ஒரு அளவு மிருதுவான மாவை அடித்துப் பிழியப்பட்ட கால் கலயம் எண்ணெயுடன் பிசைய வேண்டும்.

இது எந்நாளும் செலுத்தும் எரிபலி: இது ஆண்டவருக்குரிய நெருப்புப் பலியாகவும் உகந்த நறுமணமாகவும் சீனாய் மலையில் ஏற்படுத்தப்பட்டது.

அத்துடன் ஒவ்வோர் ஆட்டுக்குட்டிக்கும் கால் கலயம் வீதம் நீர்மப் படையல் நீங்கள் செலுத்த வேண்டும்: ஆண்டவருக்கு நீர்மப் படையலாகத் திருஉறைவிடத்தில் மதுபானத்தை ஊற்ற வேண்டும்.

மற்ற ஆட்டுக் குட்டியை நீங்கள் மாலையில் பலியிட வேண்டும். காலையிலுள்ள உணவுப் படையல் போன்றும், அதன் நீர்மப்படையல் போன்றும் அதை நெருப்புப் பலியாகவும் ஆண்டவருக்கு உகந்த நறுமணமாகவும் நீங்கள் படைக்க வேண்டும்.

ஓய்வு நாளில், ஒரு வயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த இருபதுபடி மரக்காலில் பத்தில் இரண்டு அளவு மிருதுவான மாவையும், அத்துடன் நீர்மப் படையலையும் செலுத்த வேண்டும்.

எந்நாளும் செலுத்தும் எரிபலியும் நீர்மப் படையலும் நீங்கலாக இது ஒவ்வோர் ஓய்வு நாளிலும் செலுத்தப்பட வேண்டிய எரிபலி ஆகும்.

மாதத் தொடக்கத்தில் எரிபலியாக நீங்கள் ஆண்டவருக்குச் செலுத்த வேண்டியவை: இளங்காளைகள் இரண்டு: ஆட்டுக் கிடாய் ஒன்று: ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு: இவை பழுதற்றவையாக இருக்க வேண்டும்.

அவற்றுடன், உணவுப் படையலுக்காகக் காளை ஒவ்வொன்றுக்கும் எண்ணெயில் பிசைந்த இருபதுபடி மரக்காலில் மூன்று அளவு மெல்லிய மாவு: உணவுப் படையலுக்காக ஆட்டுக் கிடாய் ஒன்றுக்கு எண்ணெயில் பிசைந்த பத்தில் இருபங்கு மெல்லிய மாவு:

இவை எரிபலிக்காகவும் ஆண்டவருக்கு உகந்த நறுமணமான நெருப்புப் பலிக்காகவும் இருக்க வேண்டியவை.

அவற்றின் நீர்மப் படையல்களுக்கான திராட்சை இரசம் காளை ஒன்றுக்கு அரை கலயம், ஆட்டுக்கிடாய் ஒன்றுக்கு மூன்றிலொரு கலயம், ஆட்டுக்குட்டி ஒன்றுக்கு கால் கலயம் என்ற அளவில் இருக்க வேண்டும். இது ஆண்டில் எல்லா மாதங்களிலும் ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய எரி பலி.

எந்நாளும் செலுத்தப்படும் எரிபலியும், நீர்மப் படையலும் நீங்கலாகப் பாவம் போக்கும் பலியாக ஆண்டவருக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாய் செலுத்த வேண்டும்.

முதல் மாதத்தின் பதினான்காம் நாள் ஆண்டவரின் பாஸ்கா.

இந்த மாதத்தின் பதினைந்தாம் நாள் திருவிழா. ஏழுநாள்களும் புளிப்பற்ற அப்பமே உண்ண வேண்டும்.

முதல் நாளில் திருப்பேரவை கூட்டப்படும். கடின வேலை ஏதும் நீங்கள் செய்யக்கூடாது.

ஆனால் நெருப்புப் பலியொன்றை, எரிபலியொன்றை ஆண்டவருக்குச் செலுத்த வேண்டும்.

அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, காளை ஒன்றுக்கு ஆறு படியும், வெள்ளாட்டுக்கிடாய் ஒன்றுக்கு நான்கு படி அளவு வீதம் நீங்கள் படைக்க வேண்டும்.

ஏழு ஆட்டுக் குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு படி அளவு வீதம் படைக்க வேண்டும்.

இத்துடன் உங்களுக்குக் கறைநீக்கம் செய்யப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டிய ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.

எந்நாளும் செலுத்தும் எரிபலியாக, காலை தோறும் செலுத்தும் எரிபலி நீங்கலாக, இவற்றை நீங்கள் செலுத்த வேண்டும்.

நாள்தோறும் இதே முறையில் ஏழு நாள்களுக்கும் நெருப்புப் பலியாகிய உணவை, ஆண்டவருக்கு உகந்த நறுமணத்தை நீங்கள் படைக்க வேண்டும். இது எந்நாளும் செலுத்தும் எரி பலியும் நீர்மப் படையலும் நீங்கலாகப் படைக்க வேண்டியது.

ஏழாம் நாள் உங்களுக்குத் திருப்பேரவை நாள். நீங்கள் கடினமான வேலை ஏதும் செய்யக்கூடாது.

வாரங்களின் விழாவில் முதற்பலன்களின் நாளன்று புதுத் தானியத்திலிருந்து நீங்கள் ஆண்டவருக்கு உணவுப் படையல் படைக்கும் போதும் உங்களுக்குத் திருப்பேரவை இருக்கும்: கடினமான வேலை ஏதும் நீங்கள் செய்யக்கூடாது.

ஆண்டவருக்கு உகந்த நறுமணமாக எரிபலியொன்றைச் செலுத்துவீர்கள். இதற்கு வேண்டியவை: இளங்காளைகள் இரண்டு, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் ஏழு.

அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு, காளை ஒன்றுக்கு ஆறுபடியும் ஆட்டுக்கிடாய் ஒன்றுக்கு நான்குபடி அளவில் இருக்கும்.

ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு படி என்ற அளவில் இருக்கும்.

மேலும், உங்களுக்குக் கறை நீக்கம் செய்ய வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று தேவை.

இவையும், இவற்றின் இனப் படையலும், எந்நாளும் செலுத்தும் எரிபலியும், அதன் உணவுப் படையலும் நீங்கலாக, நீங்கள் படைக்க வேண்டும். இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.

அதிகாரம் 29

ஏழாம் மாதம் முதல் நாளன்று உங்களுக்குத் திருப்பேரவை இருக்கும்: நீங்கள் கடினவேலை ஏதும் செய்யக்கூடாது. உங்களுக்காக எக்காளங்கள் முழங்கும் நாள் அது.

ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியை நீங்கள் செலுத்த வேண்டும். அதற்கு வேண்டியவை: இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு: இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.

அத்துடன் உணவுப் படையலாக எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, காளைக்காக ஆறு படியும், ஆட்டுக் கிடாய்க்காக நான்கு படி அளவில் இருக்கும்.

ஏழு ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொன்றுக்கும் இரண்டுபடி அளவாக இருக்கும்.

மேலும் உங்களுக்குக் கறை நீக்கம் செய்யப் பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று தேவை.

இவை தவிர மாதந்தோறும் அளிக்கும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய நீர்மப் படையல் ஆகியவை அவர்கள் முறைமையின்படி ஆண்டவருக்கு உகந்த நறுமணமான நெருப்புப் பலியாக அமையும்.

இந்த ஏழாம் மாதம் பத்தாம் நாளில் உங்கள் திருப்பேரவை கூடும்: அப்போது உங்களை நீங்களே வருத்திக் கொள்ளுங்கள்: நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருங்கள்.

ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியொன்றை நீங்கள் அவருக்குச் செலுத்துங்கள். அதற்குத் தேவையானவை: இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு: இவை பழுதற்றவையாய் இருக்கவேண்டும்.

அத்துடன் உணவுப்படையலாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு காளைக்காக ஆறுபடியும் ஆட்டுக்கிடாய்க்காக நான்குபடி அளவில் இருக்கும்.

ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்கும் இரண்டுபடி என்ற அளவில் இருக்கும்.

மேலும் கறை நீக்கத்திற்கான பாவம் போக்கும் பலி, எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதற்குரிய நீர்மப்படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கிடாய் செலுத்துவாய்.

ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளில் உங்கள் திருப்பேரவை கூடும்: நீங்கள் கடின வேலை ஏதும் செய்யக்கூடாது: ஏழு நாள்கள் நீங்கள் ஆண்டவருக்கு விழா எடுக்க வேண்டும்.

ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியாகவும், நெருப்புப் பலியாகவும் நீங்கள் செலுத்த வேண்டியவை: இளங்காளைகள் பதின் மூன்று, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு: இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.

அத்துடன் உணவுப் படையலான எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு, பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுக்கும் ஆறு படி இரண்டு ஆட்டுக்கிடாய்களில் ஒவ்வொன்றுக்கும் நான்குபடி பங்கு.

பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்கும் இரண்டு படி அளவில் இருக்கும்.

மேலும் எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதற்குரிய நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய் செலுத்துவாய்.

இரண்டாம் நாள்: இளங்காளைகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு: இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.

அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக் கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றிற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள்.

மேலும் எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அவற்றுக்குரிய நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.

மூன்றாம் நாள்: காளைகள் பதினொன்று, ஆட்டுக் கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடையனவும் பழுதற்றனவுமான ஆட்டுக்குட்டிகள் பதினான்கு: இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.

அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய படையல், நீர்மப் படையல்கள்.

மேலும் எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப்படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிரப் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.

நான்காம் நாள்: காளைகள் பத்து, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு: இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.

அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள்:

மேலும் எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், அதன் நீர்மப் படையல் ஆகியவை தவிரப் பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.

ஜந்தாம் நாள்: காளைகள் ஒன்பது, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு: இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்:

அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய நீர்மப் படையல்கள்.

மேலும் எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.

ஆறாம் நாள்: காளைகள் எட்டு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு: இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.

அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப்படையல், நீர்மப் படையல்கள்,

மேலும் எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய அதன் உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.

ஏழாம் நாள்: காளைகள் ஏழு, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு: இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.

அவற்றுடன் முறைமைப்படி காளைகள், ஆட்டுக்கிடாய்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப அவற்றுக்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல்கள்.

மேலும், எந்நாளும் செலுத்தம் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப் படையல் ஆகியவை தவிர பாவம் போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக் கிடாய்.

எட்டாம் நாளன்று சிறப்புக் கூட்டம் நடைபெறும்: நீங்கள் கடின வேலை ஏதும் செய்யக்கூடாது.

ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியாகவும், நெருப்புக் பலியாகவும் நீங்கள் செலுத்த வேண்டுபவை: காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் ஏழு: இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.

அவற்றுடன் முறைமைப்படி காளை, ஆட்டுக்குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கேற்ப உணவுப் படையல், அவற்றுக்குரிய நீர்மப் படையல்கள்:

மேலும் எந்நாளும் செலுத்தும் எரிபலி, அதற்குரிய உணவுப் படையல், நீர்மப்படையல் ஆகியவை தவிரப் பாவம்போக்கும் பலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்.

நியமிக்கப்பட்ட திருநாள்களில் நீங்கள் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியவை இவையே. உங்கள் பொருத்தனைகள், தன்னார்வப் படையல்கள், எரிபலிகள், உணவுப் படையல்கள், நீர்மப் படையல்கள், நல்லுறவுப் பலிகள் ஆகியவை நீங்கலாகச் செய்ய வேண்டியவை இவையே.

ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் மோசே இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னார்.

அதிகாரம் 30

மோசே இஸ்ரயேல் மக்களின் குலத் தலைவர்களிடம் கூறியது: கடவுள் கட்டளையிட்டிருப்பது இதுவே:

ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றை ஒருவன் செய்துகொண்டால் அல்லது ஆணையிட்டுக் கூறிய உறுதிமொழிக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் அவன் தன் வார்த்தையை மீறக்கூடாது. தான் உரைத்தபடியெல்லாம் அவன் செய்ய வேண்டும்.

ஒரு பெண் இளமையில் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போது ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றைச் செய்து உறுதிமொழிக்குத் தான் கட்டுப்பட்டிருக்க,

அவள் தந்தை அவள் செய்து கொண்ட பொருத்தனையையும் அவள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியையும் கேட்டும் எதையும் அவளிடம் சொல்லவில்லையெனில் அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் அனைத்தும் நிலைக்கும்: அவள் எடுத்துக்கொண்ட ஒவ்வோர் உறுதிமொழியும் நிலைக்கும்.

ஆனால் அவள் தந்தை அதைக் கேட்ட நாளில் அவளுக்கு ஒப்புதல் தராமலிருந்தால் அவள் செய்துகொண்ட பொருத்தனையோ, அவள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியோ எதுவும் நிலைக்காது. ஆண்டவரும் அவளை மன்னிப்பார். ஏனெனில் அவள் தந்தை அதற்கு ஒப்புதல் தரவில்லை.

ஆனால் அவள் பொருத்தனை செய்திருக்கையில் அல்லது கருத்தின்றிக் கூறிய சொற்களால் கட்டுண்டிருக்கையில் ஒருவனுக்கு மணம் முடிக்கப்பட்டிருக்க,

தன் கணவன் அதைக் கேட்டு அவன் அதைக் கேட்ட நாளில் அவளிடம் ஒன்றும் சொல்லாதிருந்தால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் நிலைக்கும்: அவள் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளும் நிலைக்கும்.

ஆனால் அவள் கணவன் அதை அறியவரும் நாளில் ஒப்புதல் தராமலிருந்தால் அவள் செய்துகொண்ட பொருத்தனைகளையும் தன்னைக் கட்டுக்குள்ளாக்கும் அளவில் கருத்தின்றிக் கூறிய சொற்களையும் அவன் ஒன்றுமில்லாமல் ஆக்குகிறான். ஆண்டவரும் அவளை மன்னிப்பார்.

ஒரு விதவை அல்லது மணமுறிவு செய்யப்பட்டவள் செய்துகொண்ட பொருத்தனைக்கும் அவள் தன்னைக் கட்டுக்குள்ளாக்கும் அளவில் கூறிய எதற்கும் அவளே பொறுப்பாவாள்.

மேலும் அவள் கணவன் வீட்டில் பொருத்தனை செய்திருக்க அல்லது தன்னைக் கட்டக்குள்ளாக்கும் அளவில் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்க,

அவள் கணவன் அதைக் கேட்டும் அவளிடம் ஒன்றும் சொல்லாமலும் அதற்கு மறுப்புத் தெரிவிக்காமலும் இருந்திருந்தால் அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் அனைத்தும் நிலைக்கும்: அவள் தன்னைக் கட்டுக்குள்ளாக்கும் அளவில் கூறியது ஒவ்வொன்றும் நிலைக்கும்.

ஆனால் அவள் கணவன் அவற்றைக் கேட்ட நாளில் அவற்றை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கி விட்டால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகளோ, அவளைக் கட்டுப்படுத்தும் அளவில் அவள் கூறிய வார்த்தைகளோ எவையும் நிலைக்கா: அவள் கணவன் அவற்றை ஒன்றுமில்லாமலாக்கி விட்டான்: ஆண்டவரும் அவளை மன்னிப்பார்.

தன்னை வருத்திக்கொள்ளுமாறு அவள் செய்து கொண்ட எந்தப் பொருத்தனையையும் தன்னைக் கட்டுப்படுத்தும் அளவில் அவள் எடுத்துக்கொண்ட எந்த உறுதி மொழியையும் அவள் கணவன் நிலைப்படுத்தலாம்: அல்லது ஒன்றுமில்லாமல் ஆக்கலாம்.

ஆயினும் அவள் கணவன் ஒருநாளும் அவளிடம் ஒன்றும் சொல்லாதிருந்தால் அவள் செய்துகொண்ட எல்லாப் பொருத்தனைகளையும் அல்லது அவளைக் கட்டுக்குள்ளாக்கும் அவளின் உறுதிமொழிகள் அனைத்தையும் அவன் நிலைப்படுத்துகிறான். அவன் அவற்றைக் கேட்ட அவளிடம் ஒன்றும் சொல்லாதபடியால் அவன் அவற்றை நிலைப்படுத்தி விட்டான்.

ஆனால் அவற்றைப் பற்றிக் கேட்டபின் அவன் அவற்றை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கி விட்டால் அவளின் குற்றத்திற்கு அவனே பொறுப்பு.

ஒரு கணவனுக்கும் அவன் மனைவிக்குமிடையிலும், ஒரு தந்தைக்கும் அவர் வீட்டில் இளமையாயிருக்கும் ஒரு மகளுக்குமிடையிலும் இருக்குமாறு ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிமுறைகள் இவையே.

அதிகாரம் 31

ஆண்டவர் மோசேயிடம்,

இஸ்ரயேல் மக்களை முன்னிட்டு மிதியானியரைப் பழி வாங்கு: அதன்பின் நீ உன் மக்களுடன் சேர்க்கப்படுவாய் என்றார்.

மோசே மக்களிடம் கூறியது: ஆண்டவருக்காக மிதியானியரைப் பழிவாங்குமாறு அவர்களுக்கு எதிராகச் செல்லும்படி உங்களிலிருந்து ஆள்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள்.

இஸ்ரயேல் குலங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஆயிரம் பேரைப் போருக்கு அனுப்ப வேண்டும்.

அப்படியே இஸ்ரயேலின் பல்லாயிரத்தவர்களிலிருந்து குலம் ஒன்றுக்கு ஆயிரம் வீதம் பன்னீராயிரம் பேர் போரிடுவதற்குத் தயார் நிலையில் அனுப்பப்ட்டனர்.

மோசே ஒவ்வொரு குலத்திலிருந்தும் வந்த ஆயிரம் பேரை குரு எலயாசர் மகன் பினகாசுடன் போருக்கு அனுப்பினார். அவர் திருத்தலத் துணைக்கலன்களையும் போர் எக்காளங்களையும் கையோடு எடுத்துச் சென்றார்.

ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் மிதியானுக்கெதிராகப் எதிராக போரிட்டு ஆண்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தினர்.

இவ்வாறு வெட்டி வீழ்த்தப்பட்டவர்களைத் தவிர மிதியான் மன்னர்களையும் அவர்கள் கொன்றனர்: மிதியானின் ஜந்து அரசர்கள் ஏலி, இரக்கேம், சூர், கூர், இரபா ஆகியோர்: அத்துடன் பெகோரின் மகன் பிலயாமையும் அவர்கள் வாளால் வெட்டி வீழ்த்தினர்.

இஸ்ரயேல் மக்கள் மிதியானின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் சிறைப்பிடித்தனர்: அவர்களுடன் அவர்களின் கால்நடைகள், மந்தைகள் அனைத்தையும் அவர்களின் உடைமைகள் அனைத்தையும் கொள்ளைப் பொருளாகக் கவர்ந்து கொண்டனர்.

அவர்கள் குடியிருந்த இடங்களின் அனைத்து நகர்களையும் அவர்களின் அரண்கள் அனைத்தையும் தீக்கிரையாக்கினர்.

ஆள்களும் கால்நடைகளும் உட்பட அவர்கள் கொள்ளையடித்தவை, சூறையாடியவை அனைத்தையும் கொண்டு சென்றனர்.

பின்பு அவர்கள் சிறைப்பிடித்தோர், கொள்ளையடித்தவை, சூறையாடியவை ஆகியவற்றை எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் பாளையத்திலிருந்த மோசே, குரு எலயாசர், இஸ்ரயேல் கூட்டமைப்பினர் ஆகியோரிடம் கொண்டு சென்றனர்.

மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் அவர்களைச் சந்திக்கும்படி பாளையத்துக்கு வெளியே வந்தனர்.

ஆயிரவர், நூற்றுவர் தலைவர்களாகிய படைத்தளபதிகள், போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த போது அவர்கள் மேல் மோசே சினங்கொண்டார்.

மோசே அவர்களிடம் கூறியது: பெண்கள் எல்லாரையும் உயிரோடு விட்டு விட்டீர்களா?

பிலயாமின் சொல் கேட்டு இஸ்ரயேல் மக்கள் பெகோர் காரியத்தில் ஆண்டவருக்கு எதிராக இழிவாக நடக்கக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே! அதனால்தான் ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பினுள் கொள்ளைநோய் வந்தது.

எனவே ஆண் குழந்தைகள் அனைவரையும் இப்போது கொன்றுவிடுங்கள்: ஆணுறவு கொண்ட பெண்கள் அனைவரையும் கொன்றுவிடுங்கள்.

ஆனால் ஆணுறவு கொள்ளாத இளம்பெண்கள் அனைவரையும் உங்களுக்காக உயிருடன் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுள் ஆளைவெட்டி வீழ்த்திய ஒவ்வொருவனும் தீட்டுப்பட்டதைத் தொட்டவர்கள் அனைவரும் ஏழு நாள்கள் பாளையத்துக்கு வெளியே தங்கியிருங்கள். உங்களையும், நீங்ள் சிறைப்பிடித்தவர்களையும் மூன்றாம் நாளிலும், ஏழாம் நாளிலும் தூய்மைப்படுத்துங்கள்.

உடைகள், தோல் பொருள்கள், வெள்ளாட்டு உரோம வேலைப்பாடுகள், மரப்பொருட்கள் அனைத்தையும் நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டும்.

பின்னர் குரு எலயாசர் போர்க் களத்திலிருந்து திரும்பி வந்த வீரர்களைப் பார்த்துக் கூறியது: ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டருளிய திருச்சட்ட நியமம் இதுவே:

பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய,

நெருப்பைத் தாங்கக் கூடிய அனைத்தையும் நீங்கள் நெருப்பிலே போட்டு எடுக்க வேண்டும். அப்பொழுது அவற்றின் தீட்டு அகலும். மேலும் அவை தண்ணீராலும் தூய்மையாக்கப்பட வேண்டும்: நெருப்பைத் தாங்கக் கூடாதது எதுவோ அதைத் தண்ணீரில் தோய்த்தெடுத்த வேண்டும்.

ஏழாம் நாளில் உங்கள் உடைகளைத் துவைத்துக்கொள்ள வேண்டும்: அப்பொழுது உங்கள் தீட்டு அகலும்: நீங்கள் பாளையத்துக்குள் வரலாம்.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

ஆள்களிலும், கால்நடைகளிலும் கொள்ளையடிக்கப்பட்டவற்றை நீயும் குரு எலயாசரும் மக்கள் கூட்டமைப்பின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களும் கணக்கெடுங்கள்.

போருக்குச் சென்றிருந்த படைவீரருக்கும் மக்கள் கூட்டமைப்பினர் அனைவருக்குமிடையில் கொள்ளைப் பொருளைப் பங்கிடுங்கள்.

போருக்குச் சென்றிருந்த படை வீரரிடமிருந்த ஆள்கள், மாடுகள், கழுதைகள், மந்தைகள், ஆகியவற்றில் ஜந்நூற்றில் ஒன்றை ஆண்டவருக்குரிய பங்காகக் கொடுங்கள்.

அவர்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து அதை எடுத்து ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் படையலாககக் குரு எலயாசரிடம் கொடுக்க வேண்டும்.

இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கான ஆள்கள், காளைகள், கழுதைகள், மந்தைகள் ஆகியவற்றிலிருந்து ஜம்பதுக்கு ஒன்று வீதம் எடுத்து ஆண்டவரின் திருவுறைவிடத்துக்குப் பொறுப்பாயிருக்கும் லேவியரிடம் கொடுக்க வேண்டும்.

மோசேயும் குரு எலயாசரும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தனர்.

படைவீரர் சூறையாடிய கொள்ளைப் பொருளில் மீந்திருந்தவை: ஆறு லட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகள்,

எழுபத்தீராயிரம் மாடுகள்,

அறுபத்தோராயிரம் கழுதைகள்,

ஆள்கள் மொத்தம் முப்பத்தீராயிரம் பேர்: அவர்கள் ஆணுறவு கொண்டிராத பெண்கள்.

போருக்குச் சென்றவர்களுக்குரிய பாதிப் பங்கிலுள்ள ஆடுகளின் தொகை மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஜந்நூறு.

ஆண்டவர் பங்கில் இருந்த ஆடுகள் அறுநூற்று எழுபத்தைந்து.

காளைகளின் தொகை முப்பத்தாறாயிரம்: அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று.

கழுதைகளின் தொகை முப்பத்தாயிரத்து ஜந்நூறு: அவற்றிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குரிய பங்காக அளித்தவை அறுபத்து ஒன்று.

ஆள்கள் தொகை பதினாறாயிரம்: அவர்களிலிருந்து ஆண்டவருக்குரிய பங்காகத் தரப்பெற்றவர்கள் முப்பத்திரண்டு பேர்.

ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆண்டவருக்குரிய பங்காகிய உயர்த்திப் படைக்கும் படையலை மோசே குரு எலயாசரிடம் கொடுத்தார்.

போருக்குச் சென்றிருந்த ஆள்களுக்குரியது போக மோசே இஸ்ரயேல் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தப் பாதிப் பங்கு:

மக்கள் கூட்டமைப்புக்குரிய பாதிப் பங்கில் ஆடுகள் மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரத்து ஜந்நூறு.

காளைகள் முப்பத்தாறாயிரம்.

கழுதைகள் முப்பத்தாறாயிரத்து ஜந்நூறு.

ஆள்கள் பதினாறாயிரம் பேர்.

ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்களுக்குரிய பாதிப் பங்கிலிருந்து ஆள்களிலும் கால்நடைகளிலும் ஜம்பத்துக்கு ஒன்று வீதம் எடுத்து அவற்றை ஆண்டவரின் திருவுறைவிடத்திற்குப் பொறுப்பாயிருந்த லேவியரிடம் மோசே கொடுத்தார்.

பின்பு பல்லாயிரத்தவர் படைத்தளபதிகள் ஆயிரத்தவர் தலைவர்களும், நூற்றுவர் தலைவர்களும் மோசேயை அணுகினர்.

அவர்கள் மோசேயிடம், உமது அடியார்களாகிய நாங்கள் எங்கள் அதிகாரத்திற்குட்பட்ட போர்வீரரை எண்ணியபோது ஒருவரும் குறையவில்லை.

அத்துடன் ஆண்டவர் முன்னிலையில் எங்களுக்குக் கறை நீக்கம் செய்வதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் தேடி எடுத்த பொன்னணிகளான காப்பு வகைககள், கடகங்கள், முத்திரை மோதிரங்கள், காது வளையங்கள், குமிழ் மணிகள் ஆகியவற்றை ஆண்டவருக்கு நேர்ச்சையாகக் கொண்டு வந்துள்ளோம் என்றனர்.

மோசேயும் குரு எலயாசரும் அவர்களிடமிருந்த கைவினைப் பொருள்களான எல்லாப் பொன் அணிகளையும் பெற்றுக் கொண்டனர்.

ஆயிரத்தவர் தலைவர்களும் நூற்றுவர் தலைவர்களும் ஆண்டவருக்கு உயர்த்திப் படைத்த பொன்னின் நிறை மொத்தம் ஏறக்குறைய இருநூறு கிலோ கிராம்.

ஒவ்வொரு படைவீரனும் கொள்ளைப் பொருளைக் கவர்ந்து கொண்டான்.

மோசேயும் குரு எலயாசரும் ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களிடமிருந்து பொன்னைப் பெற்றுக்கொண்டனர்: அதை ஆண்டவர் திருமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு நினைவுச் சின்னமாகச் சந்திப்புக் கூடாரத்தினுள் கொண்டு வந்தனர்.

அதிகாரம் 32

ரூபன் புதல்வருக்கும் காத்துப் புதல்வருக்கும் ஆடு, மாடுகள் பெருந்திரளாயிருந்தன: அவர்கள் யாசேர் நாட்டையும், கிலயாது நாட்டையும் கண்டனர்: அந்த இடம் ஆடு, மாடுகளுக்கேற்றதாக இருந்தது.

எனவே அவர்கள் மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகியோரிடம் வந்து,

அற்றரோத்து, தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலயாலே, செபாம், நெபோ, பெயோன் ஆகிய பகுதிகள்

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் பார்வையில் ஆண்டவர் அடக்கிய நிலப் பகுதிகள் ஆடு, மாடுகளுக்கு ஏற்றவை: உம் அடியார்களுக்கு ஆடு மாடுகள் உண்டு என்றனர்.

மேலும் அவர்கள், உங்கள் பார்வையில் எங்களுக்குத் தயை கிடைத்தால் இந்த நாடு உம் அடியார்களுக்கு உடைமையாகத் தரப்படட்டும்: எங்களை யோர்தானுக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டாம் என்றனர்.

ஆனால் மோசே காத்துப் புதல்வரிடமும் ரூபன் புதல்வரிடமும் கூறியது: நீங்கள் இங்கு உட்கார்ந்திருக்க உங்கள் சகோதரர் மட்டும் போருக்குப் போக வேண்டுமா?

ஆண்டவர் தங்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி ஏன் இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்கிறீர்கள்?

அவர்கள் நாட்டைப் பார்ப்பதற்குக் காதேசுபர்னேயாவிலிருந்து நான் உங்கள் மூதாதையரை அனுப்பியபோது அவர்களும் இவ்வாறே செய்தனர்.

அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்கினுள் சென்று நாட்டைக் கண்டபோது ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த நாட்டுக்குள் செல்லாதபடி இஸ்ரயேல் மக்களின் நெஞ்சம் துணிவிழக்கச் செய்தனர்.

அந்நாளில் ஆண்டவருக்குச் சினம் மூண்டது: அவர் தம் மேல் ஆணையிட்டுக் கூறியது:

எகிப்திலிருந்து வெளிவந்தவர்களில் இருபதோ, அதற்கு மேலோ வயதுடைய ஒருவரும் நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியநாட்டினைக் காணமாட்டார்கள்: ஏனெனில் அவர்கள் என்னை முழுமையாகப் பின்பற்றவில்லை.

எபுன்னேயின் புதல்வன் காலேபும், நூனின் புதல்வன் யோசுவாவும் இதற்கு விதிவிலக்கு: ஏனெனில் அவர்கள் ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியுள்ளனர்.

அத்துடன் ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது: அவர் இப்பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் அவர்களை அலையச் செய்தார்: ஆண்டவர் பார்வையில் தீயன செய்த தலைமுறை அனைத்தும் அழியுமட்டும் இது நடந்தது.

இப்போதும் நீங்கள் உங்கள் மூதாதையருக்குப் பதிலாகப் பாவ மனிதராக எழும்பிவிட்டீர்கள். இஸ்ரயேலுக்கு எதிராக உள்ள ஆண்டவரின் கோபக் கனலை இன்னும் கடுமையாக்கி விடுகிறீர்களே!

அவரைப் பின்பற்றுவதைவிட்டு நீங்கள் விலகினால் அவரும் அவர்களைப் பாலைநிலத்தில் விட்டு விடுவார்: இம்மக்கள் அனைவரையும் நீங்கள் அழியப் பண்ணுவீர்கள்.

பின்னும் அவர்கள் அவரிடம் நெருங்கி வந்து, நாங்கள் இங்கே எங்கள் மந்தைகளுக்குப் பட்டிகளையும், தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் கட்டுவோம்:

ஆயினும் நாங்கள் இஸ்ரயேல் மக்களை அவர்கள் இடத்திற்குக் கொண்டு சேர்க்குமளவும் அவர்கள் முன்பாகப் போர்க்கலம் தாங்கிச் செல்ல ஆயத்தமாயிருப்போம்: எங்கள் பிள்ளைகள் இந்நாட்டுக் குடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அரண் சூழ் நகர்களில் வாழ்வார்கள்:

இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தை உடைமையாக்கிக் கொள்ளும்வரை நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்ப மாட்டோம்.

நாங்கள் யோர்தானுக்கு அக்கரையிலும் அதற்கப்பாலும் அவர்களுடன் எதையும் உடைமையாக்கிக் கொள்வோம். ஏனெனில் எங்கள் உரிமைச் சொத்து கிழக்கே யோர்தானுக்கு இக்கரையில் கிடைத்துள்ளது என்றார்கள்.

மோசே அவர்களிடம் கூறியது: நீங்கள் இதைச் செய்தால் ஆண்டவர் முன் போர்க்கலம் தாங்கிச் சென்றால்,

உங்களில் போர்க்கலந்தாங்கியோர் ஒவ்வொரு வரும் ஆண்டவர்முன், அவர் தமக்கு முன் எதிரிகளை விரட்டி அடிக்கும் மட்டும், யோர்தானைக் கடந்து சென்றால்

நாடு ஆண்டவர் முன்னிலையில் பணிந்தடங்கும்: அதன் பின்பு நீங்கள் திரும்பி வருவீர்கள்: ஆண்டவருக்கு இஸ்ரயேலுக்குமுரிய கடமையை நிறைவேற்றியவராவீர்கள்: இந்த நாடும் ஆண்டவர் முன்னிலையில் உங்கள் உடைமையாகிவிடும்.

ஆனால் நீங்கள் இதைச் செய்யாவிட்டால் நீங்கள் ஆண்டவருக்கெதிராகப் பாவம் செய்திருக்கிறீர்கள்: உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிப்பது திண்ணம்.

உங்கள் பிள்ளைகளுக்கு நகர்களையும் உங்கள் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டுங்கள்: நீங்கள் வாக்களித்ததையே இப்பொழுது செய்யுங்கள்.

காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மோசேயிடம், எம் தலைவர் கட்டளைப்படியே உம் அடியார்கள் செய்வோம்:

எங்கள் பிள்ளைகளும், மனைவியரும், எங்கள் மந்தைகள், கால்நடைகள் அனைத்தோடும் கிலயாதின் நகர்களில் தங்கியிருப்பர்:

ஆனால் எம் தலைவர் ஆணைப்படியே உம் அடியார் ஒவ்வொருவரும் போர்க்கலந் தாங்கியவராய் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்காகத் தொடர்ந்து செல்வோம் என்றனர்.

இதுபற்றி மோசே, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் மக்களின் குலங்களில் மூதாதையர் வீட்டுத் தலைவர்கள் ஆகியோருக்குக் கட்டளை கொடுத்தார்.

மோசே அவர்களிடம், காத்துப் புதல்வரிலும் ரூபன் புதல்வரிலும் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்குப் போர்க்கலந் தாங்கிய ஒவ்வொருவரும் உங்களோடு யோர்தானைக் கடந்து செல்வர்: நாடு உங்களுக்கு முன் பணிந்தடங்கும்: பின் நீங்கள் கிலயாது நாட்டை அவர்களுக்கு உடைமையாகக் கொடுக்க வேண்டும்:

ஆனால் அவர்கள் போர்க்கலந்தாங்கி உங்களோடு கடந்து செல்லாவிட்டால் கானான் நாட்டில் உங்களுக்கிடையே அவர்களும் உடைமைகள் பெறுவர் என்றார்.

காத்துப் புதல்வரும், ரூபன் புதல்வரும் மறுமொழியாக, ஆண்டவர் உம் அடியார்களுக்குச் சொன்னபடியே நாங்கள் செய்வோம்:

நாங்கள் ஆண்டவர் முன்னிலையில் போர்க் கலந்தாங்கிக் கானான் நாட்டுக்குள் தொடர்ந்து செல்வோம்: எங்கள் உரிமைச் சொத்தான உடைமை யோர்தானுக்கு அப்பால் எங்களுடனேயே இருக்கும் என்றனர்.

மோசே, காத்துப் புதல்வர், ரூபன் புதல்வர், யோசேப்பு மகன் மனாசேயின் பாதிக் குலத்தவர் ஆகியோருக்கு எமோரிய மன்னன் சீகோனின் அரசையும் பாசான் மன்னன் ஓகின் அரசையும், நிலப்பகுதி நாடு முழுவதையும், அதன் நகர்களையும், அதைச் சுற்றியுள்ள எல்லைப்புற நகர்களையும் கொடுத்தார்.

காத்துப் புதல்வர் தீபோன், அற்றரோத்து, அரோயேர்,

அற்றரோத்து சோபான், யாசேர், யோக்பகா,

பெத்நிம்ரா, பெத்காரான் ஆகிய அரண்சூழ் நகர்களையும் ஆட்டு மந்தைகளுக்குப் பட்டிகளையும் கட்டினர்.

ரூபன் புதல்வர் எஸ்போன், எலயாலே, கிரியத்தாயிம்,

நெபோ, பாகால்மெகோன், (இந்த பெயர்கள் மாற்றப்பட்டன) சிப்மா ஆகியவற்றைக் கட்டினார்கள்: அவர்கள் கட்டிய நகர்களுக்குப் பெயர் சூட்டினர்.

மனாசே மகன் மாக்கிர் புதல்வர் கிலயாதுக்குச் சென்று அதைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்திவிட்டனர்.

மோசே கிலயாதை மனாசே மகன் மாக்கீருக்குக் கொடுத்தார்: அவர் அதில் வாழ்ந்தார்.

மனாசே மகன் யாயிர் புறப்பட்டுச் சென்று அவற்றின் சிற்றூர்களைக் கைப்பற்றிக் கொண்டார்: அவற்றை அவர் அவ்வோத்துயாயிர் என்று அழைத்தார்.

நோபாகு என்பவர் புறப்பட்டுச் சென்று கெனாத்தையும், அதன் சிற்றூர்களையும் கைப்பற்றிக்கொண்டார்: அவர் அதைத் தம் பெயராலேயே நோபாகு என்று அழைத்தார்.

அதிகாரம் 33

மோசே, ஆரோன் ஆகியோர் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டைவிட்டுப் படைத்திரளாக வெளியேறிச் சென்றபோது அவர்கள் பயணம் செய்த பகுதிகள் இவையே:

அவர்கள் புறப்பட்ட இடங்களை மோசே ஆண்டவர் கட்டளைப்படி படிப்படியாக எழுதி வைத்தார்: அவர்கள் படிப்படியாகத் தங்கிப் புறப்பட்ட இடங்கள் இவையே:

முதல் மாதம் பதினைந்தாம் நாள் அவர்கள் இராம்சேசிலிருந்து புறப்பட்டனர்: பாஸ்காவின் மறுநாளில் இஸ்ரயேல் மக்கள் எகிப்தியர் அனைவரின் பார்வையிலும் வெற்றிக்கை ஓங்கியவராய் வெளியேறினர்.

ஆண்டவர் அவர்களுக்குச் சாகடித்த தங்கள் எல்லாத் தலைப்பேறுகளையும் அவர்கள் புதைத்துக் கொண்டிருந்தபோது இது நடந்தது: அவர்கள் தெய்வங்கள் மேலும் ஆண்டவர் நீதித் தீர்ப்பு வழங்கினார்.

இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து புறப்பட்டுச் சுக்கோத்தில் பாளையமிறங்கினர்.

அவர்கள் சுக்கோத்திலிருந்து புறப்பட்டு பாலை நிலத்தின் ஓரத்திலுள்ள ஏத்தாமில் பாளையமிறங்கினர்.

பின் அவர்கள் ஏத்தாமிலிருந்து பயணமாகிப் பாகால் செபோனுக்குக் கிழக்கே பிசுகிரோத்துக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன் பாளையமிறங்கினர்.

அகிரோத்தின் முன்னிருந்து கிளம்பி அவர்கள் கடல் நடுவே பாலைநிலத்துக்குள் கடந்து சென்றனர்: அவர்கள் ஏத்தாம் பாலை நிலத்தில் மூன்றுநாள் பயணம் செய்து மாராவில் பாளையம் இறங்கினர்.

பின்பு மாராவிலிருந்து புறப்பட்டு அவர்கள் ஏலிமுக்கு வந்தனர். ஏலிமில் பன்னிரு நிரூற்றுகளும், எழுபது போ£ச்சை மரங்களும் இருந்தன. அவர்கள் அங்கே பாளையமிறங்கினர்.

அவர்கள் ஏலிமிலிருந்து பயணமாகிச் செங்கடல் அருகில் பாளையம் இறங்கினர்.

பின்பு செங்கடலிலிருந்து கிளம்பி அவர்கள் சீன் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.

அவர்கள் சீன் பாலை நிலத்திலிருந்து புறப்பட்டுத் தொப்காவில் பாளையம் இறங்கினர்.

அவர்கள் தொப்காவிலிருந்து பயணமாகி ஆலுசில் பாளையம் இறங்கினர்.

அவர்கள் ஆலுசிலிருந்து கிளம்பி இரபிதிமில் பாளையம் இறங்கினர். அங்கு மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை.

பின் அவர்கள் இரபிதிமிலிருந்து புறப்பட்டு, சீனாய்ப் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.

சீனாய்ப் பாலை நிலத்திலிருந்து பயணமாகி, அவர்கள் கிப்ரோத்து அத்தாவில் பாளையம் இறங்கினர்.

கிப்ரோத்து அத்தாவிலிருந்து கிளம்பி, அவர்கள் அட்சரோத்தில் பாளையம் இறங்கினர்.

அவர்கள் அட்சத்ரோத்திலிருந்து புறப்பட்டு, ரித்மாவில் பாளையம் இறங்கினர்.

பின் அவர்கள் ரித்மாவிலிருந்து பயணமாகி, ரிம்மோன் பாரேசில் பாளையம் இறங்கினர்.

ரிம்மோன் பாரேசிலிருந்து கிளம்பி, அவர்கள் லிப்னாவில் பாளையம் இறங்கினர்.

லிப்னாவிலிருந்து புறப்பட்டு, அவர்கள் இரிசாவில் பாளையம் இறங்கினர்.

பின்னர் இரிசாவிலிருந்து அவர்கள் பயணமாகிக் கெகேலாதாவில் பாளையம் இறங்கினர்.

கெகேலாதாவிலிருந்து கிளம்பி, அவர்கள் செபேர் மலையில் பாளையம் இறங்கினர்.

பின்பு அவர்கள் செபேர் மலையிலிருந்து புறப்பட்டு, அராதாவில் பாளையம் இறங்கினர்.

அராதாவிலிருந்து அவர்கள் பயணமாகி, மக்கலோத்தில் பாளையம் இறங்கினர்.

மக்கலோத்திலிருந்து கிளம்பி, அவர்கள் தாகாத்தில் பாளையம் இறங்கினர்.

அவர்கள் தாகாத்திலிருந்து புறப்பட்டு, தெராகில் பாளையம் இறங்கினர்.

தெராகிலிருந்து பயணமாகி, அவர்கள் மித்காவில் பாளையம் இறங்கினர்.

மித்காவிலிருந்து கிளம்பி, அவர்கள் அசுமோனாவில் பாளையம் இறங்கினர்.

பின்பு அசுமோனாவிலிருந்து புறப்பட்டு மோசரோத்தில் பாளையம் இறங்கினர்.

மோசரோத்திலிருந்து அவர்கள் பயணமாகிப் பெனயாக்கானில் பாளையம் இறங்கினர்.

பெனயாக்கானிலிருந்து கிளம்பி, அவர்கள் ஓரகித்துகாதில் பாளையம் இறங்கினர்.

ஓரகித்துகாதிலிருந்து புறப்பட்டு, அவர்கள் யோற்றுபாவில் பாளையம் இறங்கினர்.

பின்பு யோற்றுபாவிலிருந்து பயணமாகி, அப்ரோனாவில் பாளையம் இறங்கினர்.

அப்ரோனாவிலிருந்து கிளம்பி அவர்கள் எட்சியோன்கெபேரில் பாளையம் இறங்கினர்.

எட்சியோன்கெபேரிலிருந்து அவர்கள் புறப்பட்டு, காதேசு என்னும் சீன் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.

அவர்கள் சாதேசிலிருந்து பயணமாகி, ஏதோம் நாட்டின் ஓரத்திலிருந்த ஓர் மலையில் பாளையம் இறங்கினர்.

பின்பு குரு ஆரோன் ஆண்டவர் கட்டளைப்படி ஓர் மலைக்கு ஏறிச் சென்றார்: அவர் அங்கேயே இறந்தார்: இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாற்பதாம் ஆண்டு ஜந்தாம் மாதம் முதலாம் நாளில் இது நடந்தது.

ஓர் மலையில் ஆரோன் இறந்தபோது அவருக்கு வயது நூற்று இருபத்து மூன்று.

கானான் நாட்டிலுள்ள நெகேபில் வாழ்ந்த கானானியனான அராது மன்னன் இஸ்ரயேல் மக்கள் வருவதைக் கேள்விப்பட்டான்.

பின்னர் ஓர் மலையிலிருந்து அவர்கள் புறப்பட்டு, சல்மோனாவில் பாளையம் இறங்கினர்.

சல்மோனாவிலிருந்து பயணமாகி, அவர்கள் பூனோனில் பாளையம் இறங்கினர்.

பூனோனிலிருந்து கிளம்பி, அவர்கள் ஒபோத்தில் பாளையம் இறங்கினர்.

அவர்கள் ஒபோத்திலிருந்து புறப்பட்டு, மோவாபின் எல்லையிலுள்ள இய்யாபரிமில் பாளையம் இறங்கினர்.

இய்யாபரிமிலிருந்து அவர்கள் பயணமாகி, தீபோன்காதில் பாளையம் இறங்கினர்.

தீபோன் காதிலிருந்து கிளம்பி, அவர்கள் அல்மோன் திப்லாத்தாயிமில் பாளையம் இறங்கினர்.

அல்மோன் திப்லாத்தாயிமிலிருந்து புறப்பட்டு, அவர்கள் நெபோவுக்கு முன் அபாரிம் மலைகளில் பாளையம் இறங்கினர்.

அபாரிம் மலைகளிலிருந்து அவர்கள் பயணமாகி, எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் பாளையம் இறங்கினர்.

அவர்கள் யோர்தானை அடுத்த மோவாபுச் சமவெளியில் பெத்தசிமோத்திலிருந்து ஆபெல் சித்திம் வரை இருந்த பகுதியில் பாளையம் இறங்கினர்.

எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்: யோர்தானைக் கடந்து நீங்கள் கானான் நாட்டுக்குள் செல்லுகையில்,

உங்கள் முன்னிலிருந்து நாட்டின் குடிகள் அனைவரையும் துரத்திவிடுங்கள்: அவர்களின் செதுக்கிய சிலைகள் அனைத்தையும் அழித்துவிடுங்கள்: அவர்களின் வார்ப்புப் படிமங்கள் அனைத்தையும் உடைத்து விடுங்கள்.

நீங்கள் நாட்டை உடைமையாக்கி அதில் குடியிருப்பீர்கள்: நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளும்படி அதை உங்களுக்குத் தந்துள்ளேன்.

உங்கள் குடும்பங்கள் வாரியாகத் திருவுளச் சீட்டுப் போட்டு நீங்கள் நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுங்கள். குலங்களுள் பெரியவற்றுக்குக் கூட்டியும், சிறியவற்றுக்குக் குறைத்தும் உரிமைச் சொத்து வழங்க வேண்டும். எவ்விடத்திற்காக ஒருவனுக்குச் சீட்டு விழுகிறதோ, அது அவனுக்குரியது. உங்கள் மூதாதையரின் குலங்களின்படியே நீங்கள் உரிமைச் சொத்து பெறுவீர்கள்.

நாட்டின் குடிகளை உங்கள் முன்னின்று நீங்கள் துரத்தவில்லையெனில் நீங்கள் தங்கியிருக்க அனுமதிப்போர் உங்கள் கண்களைக் குத்தும் கூராணிகளாகவும் உங்கள் விலாவைக் கீறும் முட்களாகவும் இருந்து நீங்கள் குடியிருக்கும் நாட்டில் உங்களைத் துன்புறுத்துவார்கள்.

நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்கே செய்வேன்.

அதிகாரம் 34

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்: கானான் நாட்டின் முழுப்பரப்பும் உங்களுக்கு உரிமைச் சொத்தாக வந்து சேரும். கானான் நாட்டில் நீங்கள் நுழையும் போது,

உங்கள் தெற்குப் பகுதி சீன்பாலை நிலத்திலிருந்து ஏதோமின் ஓரமாகச் செல்லும். அதன் எல்லை கிழக்கில் உப்புக் கடலின் முடிவிலிருந்து துவங்கும் பகுதியாகும்.

அந்த எல்லை அக்கிரபிம் மேட்டுக்குத் தெற்கே சுற்றிச் சீனைத் தாண்டிக் காதேசு பர்னேயாவுக்குத் தென்புறத்தை அடையும்: பின் அது அட்சராதாருக்குச் சென்று அட்சமோன் ஓரமாகக் கடந்து செல்லும்.

அந்த எல்லை அட்சமோனிலிருந்து எகிப்தின் சிற்றாறு வரைக்கும் சுற்றிப் போய்ப் பெருங்கடலில் முடிவுறும்.

உங்கள் மேற்கு எல்லை பெருங்கடலும், அதன் கரையோரமும்: இதுவே உங்கள் மேற்கு எல்லை.

உங்கள் வட எல்லையாகப் பெருங்கடலிலிருந்து ஓர் மலை வரை நீங்கள் எல்லையை வரையறுத்துக் கொள்ளுங்கள்.

ஓர் மலையிலிருந்து காமாத்தின் நுழைவாயில் வரை அதனைக் குறிப்பீர்கள்: எல்லையின் முடிவு செதாதில் இருக்கும்.

அந்த எல்லை சிப்ரோன் வரை தொடர்ந்து சென்று அட்சரேனோனில் முடிவுறும்: இதுவே உங்கள் வடஎல்லை.

உங்கள் கிழக்கு எல்லையாக அட்சரேனோனிலிருந்து செபாம் வரைக்குமுள்ள பகுதியைக் குறித்துக் கொள்ளுங்கள்.

அந்த எல்லை அயினுக்குக் கிழக்கே செபாம் முதல் ரிப்லா வரைக்கும் செல்லும்: அந்த எல்லை கிழக்கு நோக்கிச் சென்று கினரேத்துக் கடலின் சரிவை வந்தடையும்:

அந்த எல்லை யோர்தானுக்குச் சென்று பின் உப்புக் கடலில் முடிவுறும்.

மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது: திருவுளச் சீட்டு மூலம் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப் போகும் நாடு இதுவே: இதனை ஒன்பது குலங்களுக்கும் பாதிக் குலத்துக்கும் கொடுக்க ஆண்டவர் கட்டளையிட்டுள்ளார்:

மூதாதையர் வீடுகள் வாரியாக ரூபன் புதல்வர் குலமும், தங்கள் மூதாதையர் வீடுகள் வாரியாகக் காத்து புதல்வர் குலமும் மனாசேயின் பாதிக் குலமும் தங்கள் உரிமைச் சொத்தினைப் பெற்றுவிட்டனர்.

இரண்டு குலங்களும் பாதிக் குலமும் யோர்தானுக்கு அப்பால் எரிகோவின் கிழக்கே கதிரவன் உதயம் நோக்கித் தங்கள் உரிமைச் சொத்தைப் பெற்றுள்ளார்கள்.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

உரிமைச் சொத்துக்காக உங்களுக்கு நாட்டைப் பங்கிட்டுத் தருவோரின் பெயர்களாவன: குரு எலயாசர்: நூனின் மகன் யோசுவா.

இவர்களைத் தவிர உரிமைச் சொத்துக்காக நாட்டைப் பங்கிடும்படி ஒவ்வொரு குலத்திலிருந்தும் தலைவன் ஒருவனை நீங்கள் தேர்ந்து கொள்ள வேண்டும்.

அவர்களின் பெயர்கள்:

சிமியோன் மக்களின் குலத்திலிருந்து அம்மிகூதின் மகன் செமுவேல்.

பென்யமீன் குலத்திலிருந்து கிஸ்லோனின் மகன் எலிதாது:

தாண் மக்களின் குலத்திலிருந்து வரும் தலைவன், யோக்லியின் மகன் புக்கி.

யோசோப்பின் மக்களில் மனாசே புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன் எப்போத்தின் மகன் கன்னியேல்:

எப்ராயிம் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், சிப்தானின் மகன் கெமுவேல்:

செபுலோன் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், பர்னாக்கின் மகன் எலிசாபான்:

இசக்கார் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், அசானின் மகன் பல்தியேல்:

ஆசேர் புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், செலோமியின் மகன் அகிகூத்து:

நப்தலி புதல்வர் குலத்திலிருந்து வரும் தலைவன், அம்மிகூத்தின் மகன் பெதாவேல்:

கானான் நாட்டில் இஸ்ரயேல் மக்களுக்கு உரிமைச் சொத்தைப் பங்கிடும்படி ஆண்டவரால் பணிக்கப்பட்டவர்கள் இவர்களே.

அதிகாரம் 35

எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

தாங்கள் உடைமையாக்கிக் கொண்ட உரிமைச் சொத்திலிருந்து லேவியர் குடியிருப்பதற்காக நகர்களைக் கொடுக்கும்படி இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு: அவற்றுடன் நகர்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களையும் நீங்கள் லேவியருக்குக் கொடுக்க வேண்டும்.

இந்நகரில் அவர்கள் தங்கியிருப்பர்: இவற்றின் மேய்ச்சல் நிலங்கள் அவர்கள் கால்நடைகளுக்கும், மந்தைகளுக்கும், வீட்டு விலங்குகள் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.

நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் மேய்ச்சல் நிலங்கள் நகரின் சுவரைச் சுற்றிலும் ஆயிரம் முழம் அகலமாய் இருக்கும்.

நகருக்கு வெளியில் கிழக்கே இரண்டாயிரம் முழமும், தெற்கே இரண்டாயிரம் முழமும், மேற்கே இரண்டாயிரம் முழமும், வடக்கே இரண்டாயிரம் முழமும் நீங்கள் அளக்க வேண்டும். இதுநடுவே இருக்கும் நகர்களுக்கு இது மேய்ச்சல் நிலமாகும்.

நீங்கள் லேவியருக்குக் கொடுக்க வேண்டிய நகர்களாவன: கொலையாளி தப்பியோடித் தஞ்சம் புகம் அடைக்கல நகர்கள் ஆறு: அவை தவிர நாற்பத்திரண்டு நகர்கள்.

மேய்ச்சல் நிலங்கள் உட்பட நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் மொத்த நகர்கள் நாற்பத்தெட்டு.

இஸ்ரயேல் மக்களின் உடைமையிலிருந்து நீங்கள் கொடுக்கும் நகர்களைப் பொறுத்த வரை குலங்களில் பெரியவற்றிலிருந்து மிகுதியாகவும், சிறியவற்றிலிருந்து குறைவாகவும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு குலமும் உடைமையாக்கியுள்ள உரிமைச் சொத்தின் விகிதப்படி அதன் நகர்களை லேவியருக்குக் கொடுக்க வேண்டும்.

ஆண்டவர் மோசேயிடம் கூறியது:

இஸ்ரயேல் மக்களிடம் சொல்: நீங்கள் யோர்தானைக் கடந்து கானான் நாட்டுக்குள் நுழையும் போது,

உங்களுக்காக அடைக்கல நகர்களைத் தேர்ந்து கொள்ளுங்கள்: தற்செயலாய் ஓர் ஆளைக் கொல்பவன் எவனும் அங்கே ஓடிச் சென்று புகலிடம் பெறுவான்.

இந்த நகர்கள் பழிவாங்குவோனிடமிருந்து உங்களுக்குப் பாதுகாப்பைத் தரும்: இதனால் கொலை செய்தவன் நீதித் தீர்ப்புக்காக மக்கள் கூட்டமைப்புக்கு முன் நிற்கும் முன்னரே அவன் சாகவேண்டியதில்லை.

நீங்கள் கொடுக்கும் நகர்கள் ஆறும் அடைக்கல நகர்களாயிருக்கும்.

யோர்தானுக்கு அப்பால் மூன்று நகர்களும், கானான் நாட்டுக்குள் மூன்று நகர்களும், நீங்கள் அடைக்கல நகர்களாகக் கொடுக்க வேண்டும்.

இந்த ஆறு நகர்களும் இஸ்ரயேல் மக்களுக்கும்,அன்னியருக்கும் அவர்களிடையே தற்காலிகமாகத் தங்கியிருப்போருக்கும் அடைக்கல நகர்களாயிருக்கும்: தற்செயலாய் ஓர் ஆளைக் கொல்பவன் எவனும் அங்கே ஓடிச் சென்று புகலிடம் பெறலாம்.

ஆனால் அவன் ஓர் இரும்புக் கருவியினால் ஒருவனை அடிக்க அவன் இறந்தால் அவன் ஒரு கொலைகாரன்: அந்தக் கொலைகாரன் கொல்லப்பட வேண்டும்.

ஒரு மனிதன் சாகும்படி கையில் ஒரு கல்லை வைத்து அடித்து அவன் இறந்தாலும் அவன் ஒரு கொலைகாரனே: அந்தக் கொலைகாரனும் கொல்லப்பட வேண்டும்.

அல்லது ஒரு மனிதன் சாகும்படி கையில் மர ஆயதம் ஒன்றை வைத்து அவனை அடித்து அவன் இறந்தாலும் அவன் ஒரு கொலைகாரனே: அந்தக் கொலைகாரனும் கொல்லப்பட வேண்டும்.

இரத்தப் பழி வாங்குவோன்தான் கொலைகாரனைக் கொல்ல வேண்டும்: அவனைச் சந்திக்கும்போது அவன் அவனைக் கொல்ல வேண்டும்.

மேலும் பகை முன்னிட்டு அவன் அவனை விழத்தள்ளினால் அல்லது பதுங்கியிருந்து எறிந்து அவன் மடிந்தால்,

அவன் பகை முன்னிட்டு அவன் அவனைக் கையினால் அடித்து அவன் மடிந்தால், அடித்தவன் கொல்லப்பட வேண்டும்: அவன் ஒரு கொலைகாரன்: இரத்தப்பழி வாங்குவோன் கொலைகாரனைச் சந்திக்கும் போதே அவனைக் கொன்று விடவேண்டும்.

ஆயினும் பகை ஏதமின்றித் திடீரென்று அவனைக் கீழே விழத்தள்ளி, அல்லது பதுங்கியிராமலேயே எதையாவது அவன் மேல் எறிந்து,

கொலைகாரனுக்கும் இரத்தப்பழி வாங்குவோனுக்குமிடையில் இந்த நீதித் தீர்ப்புகளைக் கொண்டு மக்கள் கூட்டமைப்பு தீர்ப்பு வழங்க வேண்டும்.

மக்கள் கூட்டமைப்பினர் இரத்தப் பழி வாங்குவோன் கையிலிருந்து கொலைகாரனைக் காப்பாற்ற வேண்டும்: அவன் ஓடித் தஞ்சம் புகுந்த அடைக்கல நகருக்கு மக்கள் கூட்டமைப்பினர் அவனைத் திரும்பக் கொண்டு வர வேண்டும்:

தூய தைலத்தால் திருநிலைப்படுத்தப்பட்ட தலைமைக் குரு இறக்குமட்டும் அவன் அதில் தங்குவான்.

ஆனால் அவன் ஓடித் தஞ்சம் புகுந்திருந்த அடைக்கல நகரின் எல்லைக்கு அப்பால் எப்போதாவது போயிருந்து,

அவனை இரத்தப்பழி வாங்குவோன் அடைக்கல நகரின் எல்லைகளுக்கு வெளியே கண்டு அவனை வெட்டினால் இரத்தப்பழி வாங்குவோன் மேல் பழி இராது.

ஏனெனில் அவன் தன் தலைமைக் குரு இறக்கும்வரை தன் அடைக்கல நகரில்தான் தங்கியிருக்க வேண்டும்: தலைமைக் குரு இறந்த பின்னர்தான் அந்தக் கொலைகாரன் தனக்குரிய நாட்டுக்குத் திரும்பிச் செல்லலாம்.

என்றும் எங்கும் உங்களுக்கு இதுவே நீதி நியமம்.

எவனாவது இன்னொருவனைக் கொன்றால் சாட்சிகளின் வாக்குமூலம் முன்னிட்டுக் கொலைகாரன் கொல்லப்பட வேண்டும்: ஆனால் ஒரே சாட்சியின் கூற்றை வைத்து ஒருவனும் கொல்லப்படக் கூடாது.

மேலும் மரண தண்டனைக்குரிய கொலைக்காரன் ஒருவனின் உயிருக்காக ஈட்டுத்தொகை எதுவும் நீங்கள் வாங்க வேண்டாம்: அவன் கொல்லப்படத்தான் வேண்டும்.

அடைக்கல நகருக்குள் ஓடித் தஞ்சம் புகுந்து விட்டு, தலைமைக் குரு இறக்கும் முன் தனக்குரிய நாட்டில் குடியிருக்கும்படி ஒருவன் திரும்பிச் சென்றால் அவனிடமிருந்து ஈட்டுத் தொகை எதுவும் நீங்கள் வாங்க வேண்டாம்.

நீங்கள் வாழும் நாட்டைத் தீட்டுப்படுத்தாதீர்கள். இரத்தம் நாட்டைத் தீட்டுப்படுத்தும், நாட்டுக்காக, அதில் சிந்தப்பட்ட இரத்தத்திற்காக அதனைச் சிந்தினவனின் இரத்தமே ஈடு செய்ய முடியும்.

நீங்கள் வாழும் நாட்டை நீங்கள் கறைப்படுத்தவே கூடாது. நான் அதன் நடுவில் வாழ்கிறேன்: நானே இஸ்ரயேல் மக்கள் நடுவில் வாழும் ஆண்டவர்.

அதிகாரம் 36

யோசேப்பு புதல்வரைச் சார்ந்த குடும்பங்களில் மனாசே மகனான மாக்கிரின் புதல்வனான கிலயாதின் மைந்தரது குடும்பத்தைச் சார்ந்த மூதாதையர் வீடுகளின் தலைவர்கள், மோசேயிடமும், இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகிய பெரியோர்களிடமும் சென்றனர்.

அவர்கள் கூறியது: இஸ்ரயேல் மக்களின் உரிமைச் சொத்துக்காக நாட்டைத் திருவுளச்சீட்டு முறையில் கொடுக்கும்படி ஆண்டவர் எம் தலைவராகிய உமக்குக் கட்டளையிட்டார். எம் சகோதரன் செலோபுகாதின் உரிமைச் சொத்தை அவர் புதல்வியருக்குக் கொடுக்கும்படியும் ஆண்டவரால் உமக்குக் கட்டளையிடப்பட்டது.

ஆனால் இஸ்ரயேல் மக்களின் வேறு குலங்களின் புதல்வர்களை அவர்கள் மணம் புரிந்தால் அவர்களின் உரிமைச் சொத்து எங்கள் மூதாதையர் உரிமைச் சொத்திலிருந்து எடுக்கப்பட்டு அவர்களுக்குச் சொந்தமான குலத்தின் உரிமைச் சொத்துடன் சேர்க்கப்பட்டுவிடும்: இவ்வாறு திருவுளச் சீட்டால் எங்களுக்குக் கிடைத்த உரிமைச் சொத்து குறைய நேரிடும்.

அத்துடன் இஸ்ரயேல் மக்களுக்கு மீட்பின் ஆண்டு வரும்போது அவர்கள் உரிமைச் சொத்து அவர்களுக்குரிய குலத்தின் உரிமைச் சொத்துடன் சேர்க்கப்படும்: இவ்வாறு அவர்களின் உரிமைச் சொத்து எங்கள் மூதாதையரின் உரிமைச் சொத்திலிருந்து குறைய நேரிடும்.

மோசே ஆண்டவரின் வார்த்தைப்படியே மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: யோசேப்புப் புதல்வரின் குலம் கூறுவது சரியே:

செலொபுகாதின் புதல்வியரைக் குறித்து ஆண்டவர் கட்டளையிடுவது இதுவே. தாங்கள் விரும்பியோரை அவர்கள் மணம் முடிக்கட்டும்: ஆனால் தங்கள் தந்தையின் குலக் குடும்பத்திற்குள் மட்டுமே அவர்கள் மணம் முடிக்க வேண்டும்.

இஸ்ரயேல் மக்களின் உரிமைச் சொத்து ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றப்படக்கூடாது: இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் குல உரிமைச் சொத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

இஸ்ரயேல் மக்களில் எந்த ஒரு குலத்திலும் உரிமைச் சொத்தில் உடைமை கொண்ட ஒவ்வொரு பெண்ணும் தன் தந்தையின் குலத்திலுள்ள குடும்பம் ஒன்றிலேயே மனைவி ஆவாள். இதனால் இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர் உரிமைச் சொத்தில் உடைமை கொண்டிருப்பார்.

எனவே ஒரு குலத்திலிருந்து இன்னொன்றுக்கு எந்த உரிமைச் சொத்தும் மாற்றப்படக் கூடாது: இஸ்ரயேல் மக்களின் குலங்கள் ஒவ்வொன்றும் தன் உரிமைச் சொத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.

ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலோபுகாதின் புதல்வியர் செய்தனர்.

செலோபு காதின் புதல்வியரான மக்லா, திர்சா, ஒக்லா, மில்கா, நோவா ஆகியோர் தங்கள் தந்தையாரின் சகோதரர் புதல்வரையே மணந்தனர்.

அவர்கள் யோசேப்பின் மகனான மனாசேயின் புதல்வர் குடும்பங்களில் மணம் புரிந்தனர். எனவே அவர்களின் உரிமைச் சொத்து அவர்கள் தந்தையர் குலக்குடும்பத்திற்கே சொந்தமாயிருந்தது.

எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்துள்ள மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே வழியாக ஆண்டவர் விதித்த கட்டளைகளும் நீதிச் சட்டங்களும் இவையே.

புத்தகம் 5. இணைச் சட்டம்

அதிகாரம் 1.

யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும் இடையே, சூபுக்குக் கிழக்கே அமைந்த அராபா பாலை நிலத்தில் இஸ்ரயேலர் அனைவருக்கும் மோசே உரைத்த வார்த்தைகள் இவையே.

காதேசுபர்னேயா என்ற அந்த இடம் ஓரேபிலிருந்து சேயிர் மலை வழியாகப் பதினொரு நாள் பயணத் தொலையில் இருந்தது.

இஸ்ரயேல் மக்களுக்கென ஆண்டவர் கட்டளையிட்ட யாவற்றையும் நாற்பதாவது ஆண்டின் பதினொன்றாம் திங்கள் முதல் நாளன்று மோசே அவர்களுக்கு உரைத்தார்.

போனில் வாழ்ந்த எமோரியரின் அரசன் சீகோனையும், எதிரேயி அருகே அசித்தரோத்தில் வாழ்ந்த பாசானின் அரசன் ஓகையும் முறியடித்த பின்னர்,

யோர்தானுக்கு அப்பால் மோவாபு நாட்டில், பின்வரும் இந்தச் சட்டங்களை மோசே எடுத்துரைத்தார். அவர் கூறியது:

ஆண்டவராகிய நம் கடவுள் ஓரேபில் நமக்கு உரைத்தது: இந்த மலைப்பகுதியில் நீங்கள் நெடுநாள் தங்கிவிட்டீர்கள்.

புறப்படுங்கள், எமோரியரின் மலைப்பகுதி நோக்கிப் பயணமாகுங்கள். சமவெளியிலும், குன்றுகளிலும், பள்ளத்தாக்கிலும், நெகேபிலும், கடற்கரையோரங்களிலும் வாழும் எல்லா மக்களிடமும் செல்லுங்கள். கானானிய நாட்டுக்கும், லெபனோனுக்கும், யூப்பிரத்தீசு பேராறு வரைக்கும் செல்லுங்கள்.

இதோ! அந்த நாட்டை உங்கள்முன் வைத்துள்ளேன். ஆண்டவர் உங்கள் மூதாதையராகிய, ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் வழி மரபினருக்கும் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறியபடி நீங்கள் போய் அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுங்கள்.

அப்பொழுது நான் உங்களுக்குக் கூறியது: என்னால் தனியாளாக உங்களைத் தாங்க முடியாது.

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைப் பலுகச் செய்துள்ளார். இதோ, இப்பொழுது நீங்கள் விண்மீன்களைப் போல் பெருந்திரளாய் உள்ளீர்கள்.

உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் இப்பொழுது இருப்பதைவிட ஆயிரம் மடங்கு உங்களைப் பெருகச் செய்வாராக! வாக்களித்தது போல உங்களுக்கு ஆசி வழங்குவாராக!

உங்கள் பளுவையும் துன்பத்தையும் வழக்குகளையும் என்னால் தனியாளாகத் தாங்கமுடியுமா?

உங்கள் ஒவ்வொரு குலத்திலும் ஞானமும், அறிவாற்றலும், நற்பெயரும் கொண்டவர்களைத் தேர்வு செய்யுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன்.

நீங்களும் எனக்கு மறுமொழியாக, செய்ய வேண்டியது குறித்து நீர் சொன்னது நன்று! என்றீர்கள்.

எனவே, ஞானமும் நற்பெயரும் கொண்ட உங்கள் குலத் தலைவர்களை நான் தேர்ந்தெடுத்தேன்: அவர்களை ஆயிரவர் தலைவராக, நூற்றுவர் தலைவராக, ஜம்பதின்மர் தலைவராக, பதின்மர் தலைவராக, மற்றும் உங்கள் ஒவ்வொரு குலத்தின் அலுவலர்களாக ஏற்படுத்தினேன்.

மேலும், உங்கள் நீதித்தலைவர்களுக்கு நான் கட்டளையிட்டு, உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேளுங்கள், ஒருவனுக்கும் அவன் சகோதரனுக்குமிடையே அல்லது அவனோடு தங்கும் அன்னியனுக்குமிடையே நீதியின்படி தீர்ப்பிடுங்கள்.

விருப்பு வெறுப்பின்றித் தீர்ப்பிடுங்கள்: உயர்ந்தோனுக்கும் தாழ்ந்தோனுக்கும் ஒன்றுபோல் செவிகொடுங்கள்: எந்த மனிதனுக்கும் அஞ்ச வேண்டாம், ஏனெனில், நீதித்தீர்ப்பு கடவுளுக்கே உரியது. உங்களால் தீர்க்க இயலாததை என்னிடம் கொண்டு வாருங்கள்: நான் வழக்கைக் கேட்பேன் என்றேன்.

இவ்வாறு, நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் அந்நேரத்தில் நான் உங்களுக்குக் கட்டளையாகக் கூறினேன்.

பின்னர் தம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருந்தபடி, நாம் ஓரேபை விட்டுப் புறப்பட்டு, நீங்களே கண்டு அஞ்சிய பெரும் பாலை நிலம் முழுவதும், எமோரியரின் மலைப்பாதை வழி நடந்து, காதேசுபர்னேயாவுக்கு வந்து சேர்ந்தோம்.

அங்கு, நான் உங்களை நோக்கி, நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருக்கும் எமோரியரின் மலை நாட்டுக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள்:

இதோ, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குத் தந்துள்ள நாட்டைப் பாருங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் மூதாதையருக்கு அளித்த வாக்கிற்கிணங்க நீங்கள் போய் அதை உரிமையாக்கிக் கொள்ளுங்கள். அஞ்சவேண்டாம். கலக்கமுற வேண்டாம் என்றேன்.

அப்பொழுது, நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து, நமக்கு முன் ஆள்களை அனுப்புவோம், அவர்கள் நமக்காக அந்த நாட்டை ஆய்ந்து பார்ப்பார்கள், நாம் அதனுள் செல்லவேண்டிய பாதையைப் பற்றியும் நாம் செல்ல வேண்டிய நகர்களைக் குறித்தும் அவர்கள் செய்தியுடன் நம்மிடம் திரும்புவார்கள் என்றீர்கள்.

அது நல்லதாக எனக்குத் தோன்றியது. உங்களிலிருந்து குலத்துக்கு ஒருவராகப் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தேன்.

அவர்கள் புறப்பட்டு, மலையில் ஏறி, எசுக்கோல் பள்ளத்தாக்கு வரை சென்று, அதை உளவு பார்த்தனர்.

மேலும், அவர்கள் அந்த நாட்டின் கனிகளில் சிலவற்றைப் பறித்து நம்மிடம் கொணர்ந்து, நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருப்பது நல்ல நாடு என்று நமக்குச் செய்தி சொன்னார்கள்.

ஆயினும், நீங்கள் முன்னேறிச் செல்ல மறுத்தீர்கள். மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய வார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தீர்கள்.

உங்கள் கூடாரங்களில் நீங்கள் முறுமுறுத்து, ஆண்டவர் நம்மை வெறுத்ததால், நம்மை அழிக்கும்படி, எமோரியரிடம் கையளிப்பதற்காக, எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டு வரச் செய்துள்ளார்.

நாம் எங்கே போவது? நம்மைவிட வலிமையிலும் உயரத்திலும் மிகுந்த மக்களையும், அவர்களுடைய வானளாவிய மதில்கள் கொண்ட மாபெரும் நகர்களையும், மற்றும் ஏனாக்கின் புதல்வர்களையும் அங்கு கண்டோம் என்று சொல்லி நம் சகோதரர்கள் நம் உள்ளங்களைக் கலங்கடித்தார்களே என்று கூறினீர்கள்.

ஆனால், நான் உங்களுக்குச் சென்னேன்: நீங்கள் கலக்கமுற வேண்டாம், அவர்களுக்கு அஞ்சவும் வேண்டாம்.

உங்களுக்கு முன்னே செல்கின்ற உங்கள் கடவுளாகிய ஆண்டவர், நீங்கள் காண எகிப்தில் எல்லாவற்றிலும் அவர் செய்தது போலவே, இப்பொழுதும் உங்களுக்காகப் போர் புரிவார்.

பாலை நிலத்தில், நீங்கள் நடந்து வந்த வழிகளில் எல்லாம் இங்கு வந்து சேரும்வரை ஒருவன் தன் மகனைத் தூக்கிச் செல்வது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களைத் தூக்கி வந்ததைக் கண்டீர்களே!

ஆயினும் இவற்றுக்குப் பின்னும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் உறுதியுடன் பற்றிக் கொள்ளவில்லை.

பாளையமிறங்கத் தக்க இடத்தை உங்களுக்காகத் தேடவும், நீங்கள் செல்ல வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும், இரவில் நெருப்பிலும் பகலில் மேகத்திலும் உங்கள் முன் அவர் நடந்து சென்றாரே!

ஆகையால், உங்கள் முறையீட்டுக் குரலைக் கேட்டுக் கடுஞ்சினமுற்று ஆண்டவர் ஆணையிட்டுக் கூறியதாவது:

உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த நல்ல நாட்டை இந்தக் கெட்ட தலைமுறையின் மனிதருள் எவனும் காணப் போவதில்லை.

எப்புன்னேயின் மகனாகிய காலேபு மட்டும் அதைக் காண்பான். அவன் நடந்து வந்த நாட்டை அவனுக்கும் அவன் புதல்வருக்கும் நான் கொடுப்பேன். ஏனெனில் அவன் ஆண்டவரை முற்றிலும் பின்பற்றினான்.

அன்றியும், உங்கள் பொருட்டு ஆண்டவர் என்மீதும் சினம் கொண்டு, நீயும் அங்கு போகமாட்டாய்.

நூனின் மகனும் உன் ஊழியனுமாகிய யோசுவா அங்குச் செல்வான். நீ அவனை உறுதிப்படுத்து. ஏனெனில், அவன் இஸ்ரயேல் அதை உரிமையாக்கிக் கொள்ளுமாறுசெய்வான்.

இவர்கள் கடத்திச் செல்லப்படுவர் என்று நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சிறுவரும், இன்றுவரை நன்மை தீமை பற்றிய அறிவற்ற உங்கள் புதல்வரும் அதனுள் செல்வர். அவர்களுக்கே அதை நான் கொடுப்பேன். அவர்கள் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்.

நீங்களோ புறப்பட்டு, செங்கடல் நெடுஞ்சாலை வழியே பாலை நிலத்துக்குப் பயணமாகுங்கள் என்றார்.

உடனே நீங்கள் எனக்கு மறுமொழியாக, நாங்கள் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாங்கள் போய்ப் போர் புரிவோம் என்றீர்கள். பிறகு, நீங்கள் ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டீர்கள். மலைமீது ஏறிப்போவது எளிது என்றும் எண்ணினீர்கள்.

அப்பொழுது ஆண்டவர் என்னிடம், நீங்கள் போக வேண்டாம்: போர்புரியவும் வேண்டாம்: உங்கள் பகைவர் உங்களை முறியடிப்பார்: ஏனெனில் நான் உங்கள் நடுவே இருக்கமாட்டேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

நானும் உங்களுக்கு அதையே சொன்னேன். நீங்களோ கேட்கவில்லை. மாறாக, நீங்கள் செருக்குற்று ஆண்டவரின் வாக்கை மீறி மலைமீது ஏறினீர்கள்.

அந்த மலைப் பகுதிவாழ் எமோரியர் உங்களுக்கு எதிராகப் புறப்பட்டு, தேனீக்கள் போல் உங்களைத் துரத்தியடித்தனர். சேயிர் தொடங்கி ஓர்மாவரையிலும் உங்களை முறியடித்தனர்.

அப்பொழுது, நீங்கள் திரும்பி வந்து ஆண்டவர்முன் அழுதீர்கள். ஆனால், ஆண்டவர் உங்கள் குரலைக் கேட்கவில்லை, உங்களுக்காகச் செவி சாய்க்கவும் இல்லை.

இவ்வாறு நீங்கள் வெகு நாள்கள் காதேசில் தங்க நேர்ந்தது.

அதிகாரம் 2.

பின்னர் ஆண்டவர் எனக்குச் சொல்லியபடி, நாங்கள் புறப்பட்டுச் செங்கடல் நெடுஞ்சாலை வழியாகப் பாலைநிலத்தில் பயணம் செய்து, பல நாள்கள் சேயிர் மலைநாட்டைச் சுற்றித் திரிந்தோம்.

அப்பொழுது ஆண்டவர் என்னிடம் உரைத்தது:

நீங்கள் நெடுங்காலமாக இந்த மலைப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளீர்கள்: இப்போது வடக்கு நோக்கிச் செல்லுங்கள்.

மேலும், மக்களுக்கு நீ கட்டளையிட வேண்டியது: சேயிர் வாழ் ஏசாவின் புதல்வராகிய உங்கள் சகோதரர்களுடைய எல்லையைக் கடக்கப் போகின்றீர்கள். அவர்கள் உங்களுக்கு அஞ்சுவார்கள். எனவே நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.

அவர்களோடு தகராறு செய்ய வேண்டாம். ஏனெனில் அவர்களுடைய நாட்டில் ஓரடி நிலம்கூட உங்களுக்குக் கொடுக்கமாட்டேன். ஏனெனில், ஏசாவுக்கு சேயிர் மலை நாட்டை உடைமையாகக் கொடுத்துள்ளேன்.

நீங்கள் அவர்களிடமிருந்து விலைக்கு உணவு வாங்கி உண்பீர்கள். அவ்வாறே நீங்கள் அவர்களிடமிருந்து விலைக்குத் தண்ணீர் வாங்கிக் குடிப்பீர்கள்.

ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் செய்த அனைத்திலும் உங்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். இப் பெரும் பாலைநிலம் வழியாக நீங்கள் நடந்து வந்திருப்பதை அவர் அறிவார். இந்த நாற்பது ஆண்டுகளும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருந்துள்ளார். உங்களுக்கு எதுவுமே குறைவுபடவில்லை.

அதன்பிறகு, நாம் சேயிர்வாழ் நம் சகோதரராகிய ஏசாவின் மக்களிடமிருந்து புறப்பட்டு, அராபா வழியாய் ஏலாத்துக்கும், எட்சியோன்கெபேருக்கும் சென்றோம். மீண்டும் புறப்பட்டு மோவாபுப் பாலைநிலம் வழியாகச் சென்றோம்.

அப்பொழுது, ஆண்டவர் என்னிடம், நீ மோவாபைத் துன்புறுத்தாமலும் அவர்களோடு போரிட்டுத் தகராறு செய்யாமலும் இரு. ஏனெனில் அவர்களது நாட்டை உனக்கு உடைமையாகக் கொடுக்க மாட்டேன். மாறாக, ஆர்பகுதிகளை லோத்தின் புதல்வருக்கு உடைமையாகக் கொடுத்துள்ளேன்.

முற்காலத்தில் ஏமியர் அங்குக் குடியிருந்தனர். அம்மக்கள் ஏனாக்கியர் போன்று வலிமைமிக்கவர்கள், நெடியதாய் வளர்ந்தவர்கள், எண்ணிக்கையில் மிகுதி உடையவர்கள்.

அவர்கள் ஏனாக்கியர்போல் அரக்கர்கள் எனக் கருதப்பட்டனர். மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று அழைக்கின்றனர்.

முற்காலத்தில் ஓரியர் சேயிரில் குடியிருந்தனர். ஆண்டவர் தங்களுக்கு உடைமையாகக் கொடுத்த நாட்டில் இஸ்ரயேல் செய்ததுபோல், ஏசாவின் மக்களும் ஓரியரைத் தங்கள் முன்னின்று வெளியேற்றி அழித்து அவர்கள் இடத்தில் குடியேறினர்.

இப்பொழுது, எழுந்து, செரேது ஓடையைக் கடந்து செல்லுங்கள் என்றார். நாமும் செரேது ஓடையைக் கடந்து சென்றோம்.

நாம் காதேசு பர்னேயாவினின்று புறப்பட்டு செரேது ஓடையைக் கடப்பதற்கு ஆன காலம் முப்பத்தெட்டு ஆண்டுகள். அதற்குள் அந்தத் தலைமுறையின் போர்வீரர் அனைவரும், ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியபடியே, பாளையத்தினின்று அடியோடு அழிந்தொழிந்தனர்.

உண்மையாகவே, அவர்கள் அனைவரும் அடியோடு அழிந்தொழியும்வரை ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராய் இருந்தது.

மக்களுள் போர்வீரராய் இருந்த எல்லோரும் முற்றிலும் இறந்தனர்.

பின்னர், ஆண்டவர் என்னிடம் கூறியது:

இன்று நீ ஆர் நகரைத் தாண்டி மோவாபின் எல்லையைக் கடந்து செல்வாய்.

அப்பொழுது அம்மோனின் புதல்வரை நெருங்கி வருவாய். நீ அவர்களைத் துன்புறுத்தாமலும், அவர்களோடு போரிட்டுத் தகராறு செய்யாமலும் இரு. ஏனெனில், அம்மோனியரின் நாட்டை உனக்கு மாறாக, அதை லோத்தின் புதல்வருக்கு உடைமையாகக் கொடுத்துள்ளேன்

ஏனெனில் அதுவும் அரக்கர்களின் நிலம் எனக் கருதப்பட்டது. முற்காலத்தில் அங்கு அரக்கர்கள் குடியிருந்தனர். அம்மோனியர் அவர்களை சம்சுமியர் என்று அழைக்கின்றனர்.

அம்மக்கள் ஏனாக்கியர் போன்று வலிமைமிக்கவர்கள், நெடியதாய் வளர்ந்தவர்கள், எண்ணிக்கையில் மிகுந்தவர்கள். ஆனால் ஆண்டவர் அவர்களை அம்மோனியர் முன்னிலையில் அழித்தார். அம்மோனியரும் அவர்களை வெளியேற்றித் தங்கள் முன்னின்று அழித்து அவர்களது இடத்தில் குடியேறினர்.

இது ஆண்டவர் சேயிர்வாழ் ஏசாவின் மக்களுக்குச் செய்ததற்கு ஒப்பாகும். ஆண்டவர் ஓரியரை அழித்தார். ஏசாவின் மக்கள் ஓரியரை வெளியேற்றிவிட்டு அவர்கள் இடத்தில் இன்றுவரை வாழ்கின்றனர்.

அதுபோல் கட்சேரிம் தொடங்கி ஆசா வரை வாழ்ந்த அவ்வியரை கப்தோரிலிருந்து வந்த கப்தோரியர் அழித்து, அவர்கள் இடத்தில் குடியேறினர்.

இப்பொழுது, எழுந்து பயணமாக்குங்கள். அர்னோன் ஓடையைக் கடந்து செல்லுங்கள். இதோ, எமோரியனும் எஸ்போனின் அரசனுமாகிய சீகோனையும் அவனது நாட்டையும் உங்களிடம் கையளித்துள்ளேன். அதை உடைமையாக்கிக் கொள்ளுமாறு, அவனோடு போரிடுங்கள்.

உன்னைப்பற்றிய திகிலும் அச்சமும் வானத்தின் கீழுள்ள எல்லா மக்களினங்கள் மீதும் உண்டாகுமாறு இன்று செய்வேன். அவர்கள் உன்னைப் பற்றிக் கேள்வியுற்று நடுங்கி, உன் பொருட்டுப் பதைபதைப்பர்.

அப்பொழுது நான் கெதமோத்துப் பாலைநிலத்திலிருந்து எஸ்போனின் மன்னனாகிய சீகோனிடம் தூதரை அனுப்பி நல்லுறவுச் செய்தியுடன் சொன்னது:

நாங்கள் உமது நாட்டின் நெடுஞ்சாலை வழியே கடந்து செல்ல அனுமதி கொடும். வலமோ இடமோ திரும்பாமல், நெடுஞ்சாலையில் மட்டும் நாங்கள் செல்வோம்.

நீர் எமக்கு உணவை விலைக்குத் தாரும். நாங்கள் உண்போம். எமக்கு நீரை விலைக்குத் தாரும், நாங்கள் பருகுவோம். நாங்கள் கால்நடையாய்க் கடந்து போக மட்டும் அனுமதி கொடும்.

சேயிர் வாழ் ஏசாவின் மக்களும், ஆர் நகர் வாழ் மோவாபியரும் எமக்கு அனுமதி கொடுத்தது போல், யோர்தானைக் கடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்குக் கொடுக்க இருக்கிற நாட்டில் சேர்வதற்கு அனுமதி கொடும்.

ஆனால் எஸ்போனின் மன்னன் சீகோன் தன் நாட்டின் வழியே கடந்து செல்ல நமக்கு அனுமதியளிக்கவில்லை. இன்றும் இருப்பதுபோல் அவனை உங்கள் கையில் ஒப்படைக்கும் பொருட்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவன் மனத்தைக் கடினப்படுத்தியிருந்தார்: அவன் இதயத்தையும் கல்லாக்கியிருந்தார்.

அப்பொழுது ஆண்டவர் என்னிடம், இதோ, சீகோனையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கிறேன். அவனது நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுமாறு அதைக் கைப்பற்றத் தொடங்கு என்றார்.

சீகான் தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண்டு யாகசுவில் போரிடப் புறப்பட்டு வந்தான்.

நம் கடவுளாகிய ஆண்டவர் அவனை நம் கையில் ஒப்படைத்தார். நாம் அவனையும் அவன் புதல்வரையும் அவன் குடிமக்கள் அனைவரையும் முறியடித்தோம்.

அச்சமயம் அவன் நகர்கள் அனைத்தையும் கைப்பற்றி அங்கிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், எவரையுமே தப்பவிடாமல் அழித்தொழித்தோம்.

கால்நடைகளையும், நாம் பிடித்த நகர்களின் கொள்ளைப் பொருள்களையும் நமக்கெனச் சூறையாடினோம்.

அர்னோன் ஓடையின் ஓரத்தில் உள்ள அரோயேரும், ஓடையை ஒட்டியுள்ள நகர் தொடங்கி, கிலயாது வரைக்கும் நம்மை எதிர்க்கக் கூடிய அரண்சூழ் நகர் எதுவுமே இருந்ததில்லை. நம் கடவுளாகிய ஆண்டவர் எல்லாவற்றையும் நம் கையில் ஒப்படைத்தார்.

ஆனால், நம் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட இடங்கள் அனைத்தையும், அம்மோனியரின் நாட்டையும், யாபேக்கு ஓடைக் கரையிலுள்ள ஊர்களையும் மலை நாட்டு நகர்களையும் நீங்கள் அணுகவில்லை.

அதிகாரம் 3.

பின்பு நாம் திரும்பி பாசானுக்குப் போகும் வழியில் சென்றோம். பாசானின் மன்னன் ஓகு, தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண்டு எதிரேயியில் போரிடப் புறப்பட்டு வந்தான்.

அப்பொழுது ஆண்டவர், என்னை நோக்கிக் கூறியது, அவனுக்கு நீ அஞ்சாதே, ஏனெனில், அவனையும், அவன் மக்கள் அனைவரையும், அவன் நாட்டையும் உன்னிடம் ஒப்படைத்துள்ளேன். எஸ்போனில் வாழ்ந்த எமோரியரின் அரசன் சீகோனுக்கு நீ செய்தது போலவே, அவனுக்கும் செய் என்றார்.

அவ்வாறே, நம் கடவுளாகிய ஆண்டவர் பாசானின் மன்னனாகிய ஓகையும் அவன் மக்கள் அனைவரையும் நம்மிடம் ஒப்படைத்தார். அவனுக்குச் சொந்தமான எவனும் எஞ்சியிராதபடி அவர்களைத்தாக்கினோம்.

அச்சமயம் அவன் நகர்கள் அனைத்தையும் கைப்பற்றினோம். அப்பகுதியில் நாம் கைப்பற்றாத நகர் எதுவுமே இல்லை. அர்கோபின் எல்லா பகுதிகளிலும், பாசானிலிருந்த ஓகின் நாட்டிலும் மொத்தம் அறுபது நகர்களைக் கைப்பற்றினோம்.

அந்த நகர்களெல்லாம் மிக உயர்ந்த மதில்களாலும், இரட்டைக் கதவுகளாலும், தாழ்ப்பாள்களாலும் அரண் செய்யப்பட்டிருந்தன. அவை தவிர மதில்கள் இல்லாத நகர்களும் எண்ணிறந்தவை.

அவற்றை அழித்தொழித்தோம். எஸ்போனின் அரசன் சீகோனுக்குச் செய்ததுபோலவே எல்லா நகர்களையும், ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அழித்தொழித்தோம்.

எல்லாக் கால்நடைகளையும் நகர்களின் கொள்ளைப் பொருள்களையும் நமக்கெனச் சூறையாடினோம்.

அவ்வேளையில் எமோரியரின் இரண்டு மன்னர்களிடமிருந்ததும், யோர்தானுக்கு இக்கரையிலிருக்கும் அர்னோன் ஓடை தொடங்கி எர்மோன் மலை வரையிலும் உள்ள நாட்டைக் கைப்பற்றினோம்.

சீதோனியர் அந்த எர்மோனை சிரியோன் என்றழைக்கின்றனர். எமோரியரோ அதைச் செனீர் என்றழைக்கின்றனர்

சமவெளியில் உள்ள எல்லா நகர்களையும், கிலயாது முழுவதையும், பாசான் முழுவதையும், சல்கா, எதிரேயிவரை உள்ள, பாசானிலிருந்த ஓகின் அரச நகர்களையும் கைப்பற்றினோம்.

அரக்கர்களில் பாசானின் மன்னனாகிய ஓகு மட்டுமே எஞ்சியிருந்தான். அவனது கட்டில் இரும்பினால் ஆனது. அதுமனிதரின் கைமுழத்தின்படி, ஒன்பது முழ நீளமும் நான்கு முழ அகலமும் கொண்டது. அது அம்மோனியரின் இரப்பா நகரில் உள்ளதன்றோ!

அக்காலத்தில் நாம் உடைமையாக்கிக் கொண்ட இந்த நாட்டில், அர்னோன் ஓடைக் கரையிலுள்ள அரோயேர் முதல் கிலயாது மலை நாட்டின் ஒரு பகுதியையும், அதன் நகர்களையும் ரூபன் குலத்திற்கும் காத்துக் குலத்திற்கும் நான் கொடுத்தேன்.

கிலயாதின் மறு பகுதியையும், ஓகின் ஆட்சிக்குட்பட்ட பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் குலத்திற்குக் கொடுத்தேன். மேலும், அரக்கர்களின் நாடு எனப்பட்ட பாசானைச் சார்ந்த அர்கோபுப் பகுதி முழுவதையும் கொடுத்தேன்.

மனாசேயின் மகன் யாயிர் அர்கோபுப் பகுதி முழுவதையும், கெசூரியர், மாகாத்தியர் என்பவர்களது எல்லை வரை உடைமையாக்கிக் கொண்டு, பாசான் என்னும் அப்பகுதி யைத் தனது பெயராலேயே, அவ்வோத்து யாயீர் என்றழைத்தான். அது இன்றுவரை வழக்கில் உள்ளது.

மாக்கிருக்குக் கிலயாதைக் கொடுத்தேன்.

அர்னோன் ஓடைவரை உள்ள கிலயாதின் பகுதியையும், அர்னோன் நடு ஓடையும் அதன் எல்லைப்புற நாடும் தொடங்கி, அம்மோனியரின் எல்லையாகிய யாபோக்கு ஆறுவரைக்கும் ரூபன் குலத்திற்கும் காத்துக் குலத்திற்கும் கொடுத்தேன்.

மற்றும், கினரேத்து முதல் பிஸ்காவுக்குக் கிழக்கே தாழ்வாக இருக்கும் அராபாவின் உப்புக் கடல் வரை, யோர்தானை எல்லையாகக் கொண்ட சமவெளியையும் அவர்களுக்குக் கொடுத்தேன்.

அப்பொழுது நான் உங்களை நோக்கிக் கட்டளையிட்டது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இந்த நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு தந்துள்ளார், உங்களுள் போர்வீரர் அனைவரும், போர்க்கலன் தாங்கியவராய் உங்கள் சகோதரராகிய இஸ்ரயேல் மக்களுக்கு முன்னே செல்லுங்கள்.

உங்கள் மனைவியரும், பிள்ளைகளும், மந்தைகளும் மட்டும் உங்களுக்குத் திரளான மந்தைகள் உண்டென்று நான் அறிவேன். நான் உங்களுக்குத் தந்துள்ள நகர்களில் தங்கட்டும்.

ஆண்டவர் உங்களுக்கு அமைதி அளித்ததுபோல், உங்கள் சகோதரருக்கும் அமைதி அளிப்பர். உங்கள் கடவுளாகிய ஆண்டவர், யோர்தானுக்கு மேற்கே அவர்களுக்குக் கொடுக்கும் நாட்டை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளும் வரையிலும் நீங்கள் இருங்கள். பின்னர் நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள உரிமைப் பகுதிக்குத் திரும்பலாம்.

மேலும் நான் யோசுவாவுக்குக் கட்டளையிட்டது: உன் கடவுளாகிய ஆண்டவர்: அந்த இரண்டு அரசர்களுக்கும் செய்தவைகளை நீ கண்ணால் கண்டாயே! நீ செல்கின்ற எல்லா நாடுகளுக்கும் ஆண்டவர் அதுபோலவே செய்வார்.

நீ அவர்களுக்கு அஞ்சாதே. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்காகப் போர் புரிவார்.

அந்நாளில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடிச் சொன்னது:

தலைவராகிய ஆண்டவரே, நீர் உம் ஊழியனுக்கு உமது கைவன்மையையும் மாண்பையும் காட்டியுள்ளீர். உம் ஆற்றல்மிகு செயல்களுக்கு ஒப்பானவற்றைச் செய்யக்கூடிய கடவுள் எவராவது விண்ணிலோ மண்ணிலோ உண்டா?

நான் கடந்து சென்று, யோர்தானுக்கு மேற்கிலுள்ள நல்ல நாட்டையும், அழகிய மலைப்பகுதியையும், லெபனோனையும் கண்டிட எனக்கு அனுமதி அளியும்.

ஆண்டவரோ, உங்கள் பொருட்டு என்மேல் சினம் கொண்டவராய், எனக்குச் செவி கொடுக்கவில்லை. அவர் என்னை நோக்கிக் கூறியது: போதும், இது குறித்து இனி நீ என்னிடம் எதுவும் பேச வேண்டாம்.

பிஸ்கா மலை முகட்டுக்கு ஏறிப்போ: மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் உன் பார்வையைச் செலுத்து. கண்குளிரப் பார்த்துக்கொள். ஏனெனில் நீ இந்த யோர்தானைக் கடந்து செல்லமாட்டாய்.

நீ யோசுவாவுக்குப் பொறுப்பளித்து, அவனைத் திடப்படுத்தி, உறுதிப்படுத்து. ஏனெனில், அவனே இந்த மக்கள் முன்னால் செல்வான்: நீ காணும் நாட்டை அவர்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்வான்.

பின்னர், நாங்கள் பெத்பகோருக்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம்.

அதிகாரம் 4.

இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்: நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள்.

நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்: அவற்றைப் பின்பற்றுங்கள்.

பாகால் பெகோரில் ஆண்டவர் செய்ததை உங்கள் கண்களால் கண்டீர்கள். பெகோரின் தெய்வமாகிய பாகாலைப் பின்பற்றியவர்கள் உங்களிடையே இல்லாதவாறு உங்கள் கடவுளாகிய ஆண்டவரால் அழிக்கப்பட்டார்கள்.

மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை உறுதியாகப் பற்றிக்கொண்ட நீங்கள் இன்றும் வாழ்கின்றீர்கள்.

நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும்.

நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்.

நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?

நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறுபேரினம் ஏதாகிலும் உண்டா?

கவனமாய் இருங்கள்: உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்து போகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள்.

ஓரேபில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீங்கள் நின்ற நாளை மறந்து விட வேண்டாம். அன்று ஆண்டவர் என்னிடம், மக்கள் கூட்டமைப்பை என்முன் கூடிவரச் செய். அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கச் செய்வேன். அதனால், அவர்கள் இத்தரையில் வாழும் நாளெல்லாம் எனக்கு அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வர்: அவ்வாறே பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்பர் என்றார்.

நீங்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றீர்கள். மலையினின்று நெருப்பு எழும்பி, வானம் மட்டும் எட்ட, மலைமுகட்டைக் காரிருளும் மேகமும் சூழ்ந்தன.

நெருப்பிலிருந்து ஆண்டவர் உங்களோடு பேசினார். பேச்சு ஒலியை நீங்கள் கேட்டீர்கள்: உருவம் எதையும் காணவில்லை: குரல் மட்டும் கேட்டது.

அப்பொழுது, அவர் தம் உடன்படிக்கையை உங்களுக்கு அறிவித்து, பத்துக்கட்டளைகளைத் தந்து, அதைப் பின்பற்றும்படி ஆணையிட்டார். அதை அவர்படி ஆணையிட்டார். அதை அவர் இரண்டு கற்பலகைகளில் எழுதினார்.

நீங்கள் சென்று உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் கடைப்பிடிக்கும்படி உங்களுக்கு நியமங்களையும் முறைமைகளையும் கற்பிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்.

ஓரேபு மலையில் நெருப்பினின்று ஆண்டவர் உங்களோடு பேசிய அந்நாளில், நீங்கள் எந்த உருவத்தையும் காணவில்லை. எனவே மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள்.

நீங்கள் அழிவுக்கு உள்ளாகாதபடி சிலைகளைச் செய்யாதீர்கள்.

ஆண் அல்லது பெண், நிலத்தின் விலங்குகள் அல்லது வானத்துப் பறவைகள்,

தரையில் ஊர்வன அல்லது தரைக்குக் கீழே நீரில் வாழும் மீன்கள், எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள்.

மேலும், வான் நோக்கிக் கண்களை உயர்த்தி, கதிரவன், நிலா, விண்மீன்கள், வான்படைகள் ஆகிய நீங்கள் கண்ணால் காணும் பொருள்களுக்குமுன் மண்டியிட்டு வணங்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர், வானத்துக்குக் கீழுள்ள எல்லா மக்களினங்களுக்கும் பணிபுரியவே அவற்றை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று இருப்பதுபோல், நீங்கள் அவரது உரிமைச் சொத்தான மக்களாகும்படி இரும்புச் சூளையாகிய எகிப்திலிருந்து உங்களைக் கூட்டி வந்தவர் ஆண்டவரே!

ஆனால், உங்களின் செயல்களுக்காக ஆண்டவர் என்மேல் சினம் கொண்டார். நான் யோர்தானைக் கடந்து போகமாட்டேன் எனவும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கவிருக்கும் அந்த வளமிகு நாட்டுக்குள் நான் நுழையமாட்டேன் எனவும் ஆணையிட்டுக் கூறினார்.

ஏனெனில், நான் இப்பகுதியிலேயே இறப்பேன். யோர்தானைக் கடந்து செல்ல மாட்டேன். ஆனால், நீங்கள் கடந்து அந்த வளமிகு நாட்டை உடைமையாக்கிக் கொள்வீர்கள்.

எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையை மறந்துவிடாதீர்கள், மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி எந்தவொரு உருவத்திலும் உங்களுக்கெனச் சிலையைச் செய்யாதபடி கவனமாய் இருங்கள்.

ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர்: அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்.

நீங்கள் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் பெற்று, நாட்டில் நெடுநாள் வாழ்ந்தபின், இழி செயல்புரிந்து ஏதேனும் ஓர் உருவத்தில் சிலையை உருவாக்கி, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகத் தீயதைச் செய்து, அவருக்குச் சினமூட்டுவீர்களாயின்,

இன்றே விண்ணையும் மண்ணையும் உங்களுக்கு எதிரான சான்றுகளாக ஏற்படுத்துவேன். நீங்கள் யோர்தானைக் கடந்து சென்று, உடைமையாக்கிக் கொள்ளப்போகும் அந்த நாட்டிலிருந்து விரைவில் முற்றிலும் அழிந்து போவீர்கள். நீங்கள் அங்கு வெகுநாள் வாழமாட்டீர்கள். மாறாக, வேரோடு சாய்க்கப்படுவீர்கள்.

ஆண்டவர் உங்களை மக்களினத்தாரிடையே சிதறடிப்பார்: அவர் உங்களைக் கொண்டு சேர்க்கும் வேற்றினத்தாரிடையே உங்களுள் எஞ்சியிருப்போர் எண்ணிக்கை மிகச் சிறியதாக இருக்கும்.

அங்கு மரத்தாலும் கல்லாலுமான, மனிதரின் கையால் செய்யப்பட்ட தெய்வங்களை வழிபடுவீர்கள். அவற்றால் காணவோ கேட்கவோ உண்ணவோ நுகரவோ முடியாது.

மாறாக, அங்கு இருக்கையில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் நாடினால், உங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் தேடினால், அவரைக் கண்டடைவீர்கள்.

உங்களுக்குப் பெருந்துயர் உண்டாகும் பொழுது, இவ்வார்த்தைகளின் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். இறுதி நாள்களில் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி அவரது குரலுக்குச் செவிகொடுப்பீர்கள்.

ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இரக்கம் மிகு இறைவன். அவர் உங்களைக் கைவிடமாட்டார், அழிக்கவும் மாட்டார். உங்கள் மூதாதையரோடு அவர் ஆணையிட்டுச் செய்த உடன்படிக்கையை மறக்கவும் மாட்டார்.

உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்துண்டோ? அல்லது இதுபோல் கேள்விப்பட்டதுண்டா?

நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்ததுபோல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா?

அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல, சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக்கொள்ள முன்வரும் கடவுள் உண்டா?

ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர், என நீங்கள் அறிந்து கொள்ளும் படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப்பட்டன.

நீங்கள் கற்றுக்கொள்ளும்படி வானினின்று வந்த அவர்தம் குரலை நீங்கள் கேட்குமாறு செய்தார். அந்நெருப்பினின்று வந்த அவரது வாக்கை நீங்கள் கேட்டீர்கள்.

உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுக்குப்பின் அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்து கொண்டார். எனவே அவரே முன்நின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார்.

உங்களை விட ஆற்றலும் வலிமையும் மிகுந்த வேற்றினத்தாரை உங்கள் முன்னின்று துரத்தவும், உங்களை அவர்களது நாட்டிற்குள் இட்டுச் சென்று இன்றும் உள்ளது போல், அதை உங்களது உரிமைச் சொத்தாகத் தரவுமே கூட்டி வந்தார்.

மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர் என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்.

நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

அப்பொழுது மோசே, யோர்தானுக்குக் கிழக்கே மூன்று நகர்களைக் குறித்துக் கொடுத்தார்.

முன் பகையின்றி, தவறுதலாகத் தன் தோழனைக் கொன்றுவிட்ட எவனும், இந்த நகர்கள் ஒன்றினுள் ஓடிப்புகுந்து அடைக்கலம் பெற்று உயிர் தப்புமாறு அந்நகர்களைக் குறித்தார்.

ரூபனியர் எல்லையில் பாலை நிலச் சமவெளியில் உள்ள பெட்சேர், காத்தியர் எல்லையில் உள்ள கிலயாதின் இராமோத்து, மனாசே எல்லையில் உள்ள பாசானின் கோலான் ஆகிய நகர்களே அவை.

இஸ்ரயேல் புதல்வரின் முன்னிலையில் மோசே அளித்த சட்டம் இதுவே:

இஸ்ரயேல் புதல்வர் எகிப்திலிருந்து வெளியேறியபோது, மோசே அவர்களுக்கு அளித்த சான்றுகள், நியமங்கள், முறைமைகள் இவையே.

யோர்தானுக்குக் கிழக்கே பெத்பகோருக்கு எதிரே உள்ள சமவெளியில் எஸ்போனில் வாழ்ந்த எமோரியின் அரசனாகிய சீகோனின் நாட்டில் இது நிகழ்ந்தது. மோசேயும் இஸ்ரயேல் புதல்வரும் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டு வரும் வழியில் சீகோனையும் அவன் நாட்டையும் முறியடித்திருந்தனர்.

அவர்கள் அவனது நாட்டைத் தங்களது உடைமையாக்கியிருந்தனர். மேலும் பாசானின் அரசன் ஓகின் நாட்டையும் யோர்தானுக்குக் கிழக்கே வாழ்ந்த எமோரியரின் இரு அரசர்களையும் முறியடித்திருந்தனர்.

அர்னோன் ஓடைக்கரையிலுள்ள அரோயேர் முதல் எர்மோன் என்ற சிரியோன் மலைவரையிலும்,

யோர்தானுக்குக் கிழக்கே அராபா பாலைநிலம் அனைத்தையும், பீஸ்காவிற்குக் கிழக்கே தாழ்வாக இருக்கும் அரபாக் கடல் வரைக்கும் அவர்கள் கைப்பற்றியிருந்தனர்.

அதிகாரம் 5.

மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியதாவது: இஸ்ரயேலரே, உங்கள் காதுகள் கேட்க நான் இன்று கூறப்போகும் நியமங்களையும் முறைமைகளையும் கேளுங்கள். அவைகளைக் கற்று, கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள்.

கடவுளாகிய ஆண்டவர் ஓரேபில் நம்மோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.

நம் மூதாதையரோடு ஆண்டவர் இது போன்ற உடன்படிக்கையைச் செய்து கொள்ளவில்லை. மாறாக, நம்மோடு, ஆம் இன்று இங்கு உயிரோடிருக்கும் நம் அனைவரோடும் செய்து கொண்டார்.

மலையில் நெருப்பின் நடுவிலிருந்து ஆண்டவர் உங்களோடு நேருக்கு நேர் பேசினார்.

ஆண்டவரின் வாக்கை உங்களுக்கு அறிவிக்க நானே அவ்வேளையில் ஆண்டவருக்கும் உங்களுக்கும் உடையே நின்றேன். ஏனெனில், நீங்கள் நெருப்பைக் கண்டு அஞ்சினீர்கள்: மலைமீதும் ஏறவில்லை. அப்பொழுது அவர் கூறியது:

கடவுளாகிய ஆண்டவர் நானே. அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உன்னைப் புறப்படச் செய்தவர் நானே.

என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இருத்தல் ஆகாது.

மேலே விண்ணுலகிலும், கீழே மண்ணுலகிலும், மண்ணுலகின் கீழுள்ள நீர்த்திரளிலும் உள்ள எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே.

நீ அவைகளை வழிபடவோ அவற்றுக்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்: என்னை வெறுக்கும் மூதாதையரின் தீச்செயலுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் பிள்ளைகளைத் தண்டிப்பவன்.

மாறாக, என்மீது அன்பு கூர்ந்து என் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்க்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுபவன்.

கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. ஏனெனில் தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவனை ஆண்டவர் தண்டியாது விடார்.

கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் புனிதமாகக் கடைப்பிடி.

ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலைகளையும் செய்வாய்.

ஏழாம் நாளோ உன் கடவுளாகிய அண்டவருக்கான ஓய்வுநாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும், மாடு, கழுதை மற்றெல்லாக் கால்நடைகளும், உன் வாயில்களுக்கும் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ ஓய்வெடுப்பதுபோல் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் ஓய்வெடுக்கட்டும்.

எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்தாய் என்பதையும், உன் கடவுளாகிய ஆண்டவரே தம் வலிய கரத்தாலும் ஓங்கிய புயத்தாலும் உன்னை அங்கிருந்து கூட்டி வந்தார் என்பதையும் நினைவில் கொள். ஆதலால் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டார்.

தந்தையையும் தாயையும் மதித்து நட இதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்கும் நாட்டில் நீ நெடுநாள் நலமுடன் வாழ்வாய். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இடும் கட்டளை இதுவே.

கொலை செய்யாதே.

விபசாரம் செய்யாதே.

களவு செய்யாதே.

பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.

பிறர் மனைவியைக் காமுறாதே! பிறர் வீடு, நிலம், அடிமை, அடிமைப்பெண், மாடு கழுதை அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.

இவ்வார்த்தைகளை ஆண்டவர், மலைமேல் நெருப்பு, மேகம் காரிருள் நடுவிலிருந்து, உரத்தக்குரலில் உங்கள் சபையோர் எல்லோரிடமும் பேசினார். மேலும், வேறு எதையும் கூட்டாமல் அவர் அவற்றை இரு கற்பலகைகளில் எழுதி என்னிடம் தந்தார்.

மலையில் தீப்பற்றிஎரியும் பொழுதே, இருளின் நடுவிலிருந்து வந்த குரலொலியை நீங்கள் கேட்டதும், நீங்கள் எல்லோரும், உங்கள் குலத்தலைவர்களும் உங்கள் பெரியோர்களும் என்னை அணுகினீர்கள்.

நீங்கள் என்னிடம் கூறியது: இதோ, நம் கடவுளாகிய ஆண்டவர் அவர்தம் மாட்சியையும் ஆற்றலையும் நமக்குக் காண்பித்துள்ளார். மேலும், நெருப்பின் நடுவிலிருந்து வந்த அவரது குரலையும் நாம் கேட்டோம். கடவுள் மனிதரோடு பேசியதையும், ஆயினும் அம்மனிதன் உயிரோடிருப்பதையும் இன்று கண்டோம்.

அப்படியானால் இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும்? ஏனெனில் இப்பெரும் நெருப்பு எங்களை விழுங்குமே! நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலை இனியும் கேட்போமாகில் நாங்கள் மடிவோம்.

நெருப்பிலிருந்து பேசுகின்ற வாழும் கடவுளின் குரலை நாங்கள் கேட்டும் உயிரோடு இருப்பதுபோல், கடவுளது குரலைக் கேட்டும் உயிரோடு இருக்கின்ற மானிடன் எவனாவது உண்டா?

நீரே அருகில் சென்று, நம் கடவுளாகிய ஆண்டவர் கூறப்போவது அனைத்தையும் கேட்டு, அவர் கூறுவது அனைத்தையும் நீரே எமக்குச் சொல்லும், நாங்கள் கேட்டு அதன்படியே செய்வோம்.

நீங்கள் என்னிடம் சொன்ன வார்த்தைகளை ஆண்டவர் கேட்டு, அவர் என்னிடம் கூறியது: இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்: அவர்கள் சொல்வது சரியே.

அவர்களும், அவர்கள் மக்களும் என்றென்றும் நலமாயிருக்குமாறு எந்நாளும் எனக்கு அஞ்சி நடந்து, என் கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிக்கும் இத்தகைய உள்ளம் அவர்களுக்கு இருந்தால் எவ்வளவோ நல்லது!

நீ சென்று உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள் என அவர்களுக்குச் சொல்.

நீயோ இங்கே என்னோடு இரு. எல்லாக் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நான் உனக்குச் சொல்வேன். அவர்களுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாட்டில் அவர்கள் கடைப்பிடிக்குமாறு அவற்றை நீ கற்றுக் கொடு.

ஆகவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிருங்கள். வலமோ இடமோ விலகி நடக்கவேண்டாம்.

மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டுக் கூறிய எல்லா வழிகளிலும் நடங்கள்: அப்பொழுது வாழ்வீர்கள், அது உங்களுக்கு நலமாகும். நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டிலும் நெடுநாள் வாழ்வீர்கள்.

அதிகாரம் 6.

உங்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறும், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில் கடைப்பிடிக்குமாறும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட கட்டளைகளும், நியமங்களும், முறைமைகளும் இவைகளே.

நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ் நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.

இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.

முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.

கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப்பட்டமாக அவை இருக்கட்டும்.

வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது.

மேலும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச் செய்யும்போதும், நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும்,

நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுக்கும் போதும், நீ உண்டு நிறைவுகொள்ளும் போதும்,

அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே கூட்டிவந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு.

கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு!

உங்களைச் சுற்றிலுமுள்ள மக்களின் தெய்வங்களாகிய வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில், உங்களிடையே உள்ள உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள்.

இல்லையெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சினம் உங்கள்மேல் மூண்டு, உலகினின்றே உங்களை அழித்து விடலாம்.

மாசாவில் நீங்கள் சோதித்தது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுவதில் கருத்தாய் இருங்கள்.

ஆண்டவருக்கு முன்னால் நேரியதையும் நல்லதையுமே செய்யுங்கள். அப்பொழுது, எல்லாம் உங்களுக்கு நலமாகும். உங்கள் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நல்ல நாட்டில் நீங்கள் புகுந்து அதை உடைமையாக்கிக் கொள்வீர்கள்.

மேலும், ஆண்டவர் உரைத்தபடி உங்கள் பகைவர் அனைவரையும் உங்கள் முன்பாகவே அழித்தொழிப்பார்.

வருங்காலத்தில், உன் பிள்ளை உன்னை நோக்கி, நம் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்ட கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றின் உட்பொருள் என்ன? என்று கேட்கும் போது,

நீ உன் பிள்ளைக்கு இவ்வாறு சொல்: நாங்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாய் இருந்தோம். ஆனால், ஆண்டவர் தம் வலிய கரத்தால் எங்களை எகிப்திலிருந்து வெளியேறச் செய்தார்.

எங்கள் கண்கள் காண எகிப்து நாட்டின் மீதும், பார்வோன் மீதும், ஆண்டவர் மாபெரும் அடையாளங்களையும் அச்சுறுத்தும் அருஞ்செயல்களையும் செய்தார்.

நம் மூதாதையருக்குக் கொடுப்பதாக அவர் ஆணையிட்டுச் சொன்ன நாட்டுக்கு எங்களை அழைத்து வந்தார்: அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அங்கிருந்து வெளியே கொணர்ந்தார்.

நமக்கு இன்று இருப்பதுபோல் என்றும் நலமாகும்பொருட்டும், நமது வாழ்வை அவர் பாதுகாக்கும் பொருட்டும், நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும்படி இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற நம் ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டார்.

நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டது போல அவரது திருமுன் இந்த எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற முனைந்தால் அதுவே நேரிய வாழ்வாகும்.

அதிகாரம் 7.

நீ உரிமையாக்கிக் கொள்ளைப்போகும் நாட்டில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்து, உன்னைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுந்த மக்களாகிய இத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் எனும் முன்னே விரட்டியடித்து,

கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன்னிடம் கையளிக்கும்போது, நீ அவர்களை முறியடித்து முற்றிலும் அழிப்பாய். அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளவோ அவர்களுக்கு இரங்கவோ வேண்டாம்.

நீ அவர்களோடு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளாதே. உன் மகளை அவர்கள் மகனுக்குக் கொடுக்காதே. உன் மகனுக்கு அவர்கள் மகளைக் கொள்ளாதே.

ஏனெனில், என்னைப் பின்பற்றுவதிலிருந்து உன் பிள்ளைகளை அவர்கள் விலக்கி, வேற்றுத் தெய்வங்களை வணங்கும்படி செய்வார்கள். அதனால், ஆண்டவரின் சினம் உனக்கெதிராய் மூண்டு உன்னை விரைவில் அழிக்கும்.

மாறாக, நீ அவர்களுக்கு இவ்வாறு செய்: அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத் தூண்களை உடைத்து, அவர்களின் அசேராக் கம்பங்களை வெட்டி, அவர்களின் கைவினையான சிலைகளைத் தீயில் எரித்துவிடு.

ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீங்கள். மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார்.

எல்லா மக்களிலும் நீங்கள் திரளானவர்கள் என்பதற்காக ஆண்டவர் உங்கள்மீது அன்பு கொண்டு உங்களைத் தேர்ந்து கொள்ளவில்லை. உண்மையில், எல்லா மக்களிலும் நீங்கள் சொற்பமானவர்களே?

மாறாக, உங்களிடம் அன்புகூர்ந்ததனாலும், உங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் பொருட்டும், ஆண்டவர் தமது வலிமைமிகு கரத்தால் உங்களைப் புறப்படச் செய்து, அடிமைத்தன வீட்டினின்றும் எகிப்து மன்னனாகிய பார்வோனின் கையினின்றும் உங்களை விடுவித்தார்.

எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவரே கடவுள் எனவும், அவரே உண்மையான இறைவன் எனவும் அறிந்து கொள்ளுங்கள். அவர்மீது அன்பு கூர்வோர்க்கும் அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்கும் ஆயிரம் தலைமுறைவரைக்கும் தம் இரக்கத்தின் உடன்படிக்கையைக் காக்கின்றவர் அவரே!

ஆனால், அவரைப் பகைப்பவரை அழிப்பதன் மூலம் நேரடியாகப் பதிலளிப்பார்: அவரை வெறுப்பவரை நேரடியாகத் தண்டிப்பதற்கும் காலம் தாழ்த்த மாட்டார்.

எனவே நீங்கள் கடைப்பிடிக்கும்படி நான் உங்களுக்கு இன்று இடும் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுங்கள்.

இந்த முறைமைகளை நீங்கள் கேட்டு, அவைகளைக் கடைப்பிடித்து நிறைவேற்றுவீர்களாயின் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் மூதாதையரிடம் ஆணையிட்டுச் செய்த இரக்கத்தின் உடன்படிக்கையைக் காப்பார்.

அவர் உங்களிடம் அன்பு கூர்வார். உங்களுக்குத் தரப்படுமென்று உங்கள் மூதாதையருக்கு அவர் ஆணையிட்டு வாக்களித்த நாட்டில் உங்களைப் பெருகச் செய்வார். உங்கள் கருவின் கனிகளும், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகிய உங்கள் நிலத்தின் விளைவுகளும், உங்கள் கால்நடையின் கன்றுகளும், உங்கள் மந்தையின் குட்டிகளும் பெருகும்படி செய்து ஆசி வழங்குவார்.

மற்றெல்லா மக்களினங்களையும்விட நீங்கள் ஆசி பெற்றவர்களாய் இருப்பீர்கள். உங்களுக்குள்ளும் உங்கள் கால்நடைகளுக்குள்ளும் ஆணிலும் பெண்ணிலும் மலடு இராது.

எல்லா நோய்களும் உங்களிடமிருந்து அகலும்படி ஆண்டவர் செய்வார். நீங்கள் அறிந்துள்ள எகிப்தியரின் கொடிய நோய்கள் எல்லாம் உங்களிடையே இல்லாமல் உங்கள்பகைவர் மேல் வரும்படி செய்வார்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களிடம் கையளிக்கவிருக்கும் எல்லா மக்களையும் முற்றிலும் அழித்துவிடுங்கள். உங்கள் கண்கள் அவர்களுக்கு இரங்காதிருக்கட்டும். அவர்களின் தெய்வங்களுக்கு நீங்கள் பணிய வேண்டாம். அது உங்களுக்குக் கண்ணியாக ஆகிவிடும்.

இந்த மக்களினங்கள் எல்லாம் எங்களைவிடத் திரளானவர்களாய் உள்ளதால், அவர்களை விரட்டியடிக்க எங்களால் எப்படி முடியும் என்று உங்கள் உள்ளத்தில் நீங்கள் உரையாடும்போது,

அவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம். மாறாக, பார்வோனுக்கும் எகிப்தியர் அனைவருக்கும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் செய்ததை நினைவில் நிறுத்துங்கள்.

உங்கள் கண்கள் கண்ட கொடிய வாதைகளையும், உங்களைப் புறப்படும்படி செய்யுமாறு, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் வலிமைமிகு கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும், புரிந்த அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் நினைவில் நிறுத்துங்கள்: நீங்கள் அஞ்சுகின்ற எல்லா மக்களினங்களுக்கும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவ்வாறே செய்வார்.

அதற்கும் தப்பி, உங்களிடமிருந்து ஓடி ஒளிந்து கொள்பவர்களுக்குள்ளே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் செங்குளவிகளை அனுப்பி அவர்களை அழிப்பார்.

அவர்களுக்கு அஞ்சவேண்டாம்: ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களிடையே உள்ளார்: அஞ்சுதற்குரிய ஆற்றல்மிகு கடவுள் அவரே.

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அந்த மக்களை, உங்கள் கண்கள் காண, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகச் செய்வார். உடனடியாக அவர்களை அழித்துவிட வேண்டாம். அப்படிச் செய்தால், உங்களிடையே காட்டு விலங்குகள் பெருகிவிடும்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உங்களிடம் கையளிப்பார். அவர்கள் அழிந்துபோகுமட்டும் அவர்களைப் பெரிதாகக் கலங்கடிப்பார்.

அவர்களின் மன்னர்களையும் உங்களிடம் கையளிப்பார். அவர்களது பெயர் மண்ணினின்று மறைந்து போகச் செய்யுங்கள். நீங்கள் அவர்களை முற்றிலும் அழிக்கும்வரை எந்த மனிதரும் உங்களுக்கு எதிராக நிற்க முடியாது.

கைவினையான அவர்களின் தெய்வச் சிலைககளைத் தீயில் எரித்து விடுங்கள்: அவைகளின் மேலுள்ள வெள்ளியையோ தங்கத்தையோ நீங்கள் விரும்பவோ உங்களுக்காக எடுக்கவோ வேண்டாம்: ஏனெனில் அவை உங்களுக்குக் கண்ணியாக ஆகிவிடும். அவை உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவை.

அவைகளைப்போலச் சாபத்துக்கு உள்ளாகாதபடி, அருவருப்பான எதையும் உங்கள் வீட்டுக்குக் கொண்டு வராதிருங்கள், அவைகளை முற்றிலும் அருவருக்கவேண்டும். ஏனெனில், அவை சாபத்துக்கு உள்ளானவை.

அதிகாரம் 8.

இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அதனால், நீங்கள் வாழ்ந்து, பெருகி, ஆண்டவர் உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டில் புகுந்து, அதை உங்கள் உடைமையாக்கிக் கொள்வீர்கள்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன்மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார்.

அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.

இந்த நாற்பது ஆண்டுகளும் உங்கள் மேலுள்ள ஆடை நைந்து போகவில்லை: உங்கள் காலடிகள் வீங்கவும் இல்லை.

ஒருவன் தன் மகனுக்குக் கற்றுக்கொடுப்பதுபோல, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கும் கற்றுக்கொடுத்தார் என்பதை உங்கள் உள்ளத்தில் உணர்வீர்களாக.

உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள். அதுவே அவர்தம் வழிகளில் நடந்து அவருக்கு அஞ்சி வாழ்வதாகும்.

ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வளமிகு நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த நாடு பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பாய்கின்ற ஆறுகளையும் ஊற்றுகளையும் ஏரிகளையும் கொண்டது.

கோதுமை, திராட்சை, அத்தி, மாதுளை, பார்லி ஆகியவை நிறைந்த நாடு. அது ஒலிவ எண்ணெயும் தேனும் நிறைந்த நாடு.

அந்த நாட்டில் பஞ்சமின்றி நீங்கள் அப்பங்களை உண்பீர்கள். அங்கு உங்களுக்கு எந்தக் குறையும் இராது. அந்த நாட்டின் பாறைகள் அனைத்தும் இரும்பு. அதன் மலைகளிலிருந்து செம்பு வெட்டி எடுக்கலாம்.

நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள். அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள்.

இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள்.

நீங்கள் உண்டு நிறைவுகொள்ளும் போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும்,

உங்கள் ஆடுமாடுகள் பலுகும் போதும், வெள்ளியும் பொன்னும் உங்களுக்கு உள்ளதெல்லாம் பெருகும் போதும்.

நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம்.

அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழி நடத்தியவர்: இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர்.

உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்: இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே.

எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையு§ம் இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள்.

உங்கள் மூதாதையருடன் ஆணையிட்டுச் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துமாறு, இந்நாளில் இருப்பது போன்ற செல்வங்களை ஈட்ட வல்ல ஆற்றலை உங்களுக்கு அளித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நினைவில் கொள்ளுங்கள்.

மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று இன்றே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீங்கள் கீழ்ப்படியாமலிருந்தால், உங்கள் கண்கள் காண, அவர் அழியச் செய்த மற்ற மக்களினங்கள் போல, இறுதியில் நீங்களும் அழிந்து போவீர்கள்.

அதிகாரம் 9.

இஸ்ரயேலரே, செவிகொடுங்கள்! நீங்கள் இன்று யோர்தானைக் கடந்து, உங்களைவிட எண்ணிக்கையும் வலிமையும் மிகுந்த நாடுகளையும், வானளாவிய மதில்கள் கொண்ட மாபெரும் நகர்களையம் கைப்பற்றுவீர்கள்.

அந்த மக்கள், எண்ணிக்கையிலும் உயரத்திலும் மிகுந்த ஏனாக்கின் வழிமரபினர். அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஏனாக்கின் புதல்வரை எதிர்த்து நிற்கக் கூடியவன் எவன்? என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பது அவர்களைப்பற்றியே.

சுட்டெரிக்கும் நெருப்பைப் போன்று உங்களை வழி நடத்திச் செல்பவர் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் அவர்களை முறியடித்து உங்கள் முன் வீழ்ச்சியுறச் செய்வார். அதனால், ஆண்டவர் வாக்களித்தபடி, நீங்கள் அவர்களைத் துரத்தி விரைவில் அழிப்பீர்கள்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னின்று அவர்களை விரட்டியடித்தபின், எங்களுடைய நேரிய நடத்தையின் பொருட்டே இந்த நாட்டை உடைமையாக்கிக்கொள்ளும்படி ஆண்டவர் எங்களைக் கூட்டி வந்தார் , என்று உங்கள் உள்ளத்தில் எண்ண வேண்டாம். ஏனெனில், அந்த நாடுகளின் நெறிகெட்ட நடத்தையின் பொருட்டே ஆண்டவர் அவைகளை உங்கள் முன்னின்று விரட்டியடிப்பார்.

அவர்களது நாட்டை நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளப்போவது உங்களது நேரிய நடத்தையினாலோ உங்களது உள்ளத் தூய்மையினாலோ அன்று: மாறாக, அந்த நாடுகளின் நெறிகெட்ட நடத்தையின் பொருட்டே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னின்று அவர்களை விரட்டியடிப்பார். அதனால், உங்கள் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு ஆண்டவர் ஆணையிட்டு உரைத்த வாக்கு நிறைவேறும்.

எனவே, நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளும்படி இந்த வளமிகு நாட்டை உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குத் தரப்போவது உங்களது நேரிய நடத்தையின் பொருட்டு அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் வணங்காகக் கழுத்தினர்.

பாலைநிலத்தில் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் சினத்துக்கு உள்ளாக்கினதை நினையுங்கள்: அதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியே வந்த நாள் முதல் இந்த இடத்திற்கு வரும்வரை ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள்.

ஓரேபிலும் நீங்கள் ஆண்டவரைக் கடுஞ்சினத்துக்கு உள்ளாக்கினீர்கள். அதனால், உங்களை அழிக்கும் அளவுக்கு ஆண்டவர் சினம்கொண்டார்.

ஆண்டவர் உங்களோடு செய்து கொண்ட உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக் கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தேன். அப்பொழுது, நான் அப்பம் உண்டதுமில்லை: நீர் பருகியதுமில்லை.

கடவுளின் விரலால் எழுதப்பட்டிருந்த இரு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் தந்தார். சபை கூடிய நாளில், மலையில் நெருப்பின் நடுவிலிருந்து ஆண்டவர் உங்களோடு பேசிய எல்லா வார்த்தைகளும் அவற்றில் இருந்தன.

நாற்பது பகலும் நாற்பது இரவும் கழிந்த பின், உடன்படிக்கைப் பலகைகளான இரு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் தந்தார்.

அப்பொழுது, ஆண்டவர் என்னிடம், எழுந்து, இங்கிருந்து விரைந்து இறங்கிச் செல். ஏனெனில், நீ எகிப்திலிருந்து அழைத்துவந்த உன் மக்கள் சீரழிந்து விட்டனர். நான் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து விரைவில் விலகிவிட்டனர். வார்ப்புச்சிலை ஒன்றை அவர்களுக்கெனச் செய்து கொண்டனர் என்றார்.

மேலும் அவர் என்னிடம், நானும் இந்த மக்களைப் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன்: இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள்.

என்னை விட்டு விடு. நான் அவர்களை அழிப்பேன். மண்ணினின்று அவர்கள் பெயர் இல்லாது ஒழிப்பேன். பிறகு, அவர்களைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுதியான மக்களினமாக உன்னை ஆக்குவேன் என்றார்.

பின்னர் நான் திரும்பி, மலையிலிருந்து இறங்கினேன். மலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடன்படிக்கையின் இரு பலகைகளும் என் இருகைகளிலும் இருந்தன.

நான் பார்த்தபொழுது நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்து கொண்டிருந்தீர்கள். உங்களுக்கென வார்ப்புக் கன்றுக்குட்டியைச் செய்து, ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து விரைவில் விலகியிருந்தீர்கள்.

அப்பொழுதுநான் இரு பலகைகளையும் தூக்கி என் இரண்டு கைகளிலுமிருந்து வீசி எறிந்து உங்கள் கண்களுக்கு முன்னே உடைத்தேன்.

பிறகு, ஆண்டவர் சினம்கொள்ளுமாறு நீங்கள் அவர் முன்னிலையில் தீச்செயல் செய்து புரிந்த பாவம் அனைத்துக்காகவும் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் ஆண்டவர்முன் தாழ்ந்து பணிந்து கிடந்தேன். முன்புபோலவே நான் அப்பம் உண்ணவும் இல்லை, நீர் பருகவும் இல்லை.

உங்களை அழிக்கும்படி ஆண்டவர் உங்கள்மேல் கொண்டிருந்த சினத்தையும் கோபக் கனலையும் கண்டு நான் அஞ்சினேன். ஆனால் ஆண்டவர் மீண்டும் ஒருமுறை என் மன்றாட்டைக் கேட்டார்.

ஆரோன் மீதும் ஆண்டவர் கடும் சினம் கொண்டு அவனை அழிக்க எண்ணியிருந்தார். நான் ஆரோனுக்காகவும் மன்றாடினேன்.

அப்பொழுது, நீங்கள் செய்த உங்கள் பாவப் பொருளாகிய கன்றுக்குட்டியை நான் எடுத்து, நெருப்பில் சட்டெரித்து, தூசுபோல் ஆகுமட்டும் நொறுக்கித் தூளாக்கி, அந்தத் தூளை மலையிலிருந்து கீழே ஓடும் ஆற்றில் கொட்டினேன்.

தாபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத்து அத்தாவாவிலும் ஆண்டவருக்குக் கடும் சினம் வரச் செய்தீர்கள்.

ஆண்டவர் உங்களைக் காதேசு பர்னேயாவிலிருந்து அனுப்பி, நான் உங்களுக்குக் கொடுத்துள்ள நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுங்கள் என்றார். நீங்களோ உங்கள் கடவுளாகிய ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள். அவர்மீது நம்பிக்கை கொள்ளவும் இல்லை: அவர் குரலுக்குச் செவி கொடுக்கவும் இல்லை.

நான் உங்களை அறிந்த நாளிலிருந்து நீங்கள் ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்துகொண்டே இருக்கிறீர்கள்.

ஆண்டவர், நான் உங்களை அழிப்பேன் என்று சொன்னதால் நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவர் முன்னால் தாழ்ந்து பணிந்து கிடந்தேன்.

அப்போது இறைவனாகிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடியது: என் தலைவராம் ஆண்டவரே! நீர் உமது மாட்சியால் விடுவித்து, உமது வலிமைமிகு கரத்தால் எகிப்திலிருந்து அழைத்துவந்த உம் உடைமையாகிய மக்களை அழிக்க வேண்டாம்.

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எனும் உம் அடியார்களை நினைவு கூர்ந்தருளும், இம்மக்களின் வணங்காக் கழுத்தையும், அவர்களது தீய நடத்தையையும், பாவங்களையும் பொருட்படுத்த வேண்டாம்.

இல்லையெனில், நீர் எந்த நாட்டினின்று எங்களை விடுவித்து அழைத்து வந்தீரோ, அந்த நாட்டினர் ஆண்டவர் அவர்களுக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுச் சொன்ன நாட்டில் அவர்களைக் கொண்டு போக இயலாததாலும், அவர்களை வெறுத்ததாலும், பாலை நிலத்தில் அவர்களைக் கொல்லுமாறு எகிப்திலிருந்து கூட்டிவந்தார் என்று ஏளனம் செய்வர் அன்றோ!

ஆண்டவரே, உமது மிகுந்த வலிமையாலும் ஓங்கிய புயத்தாலும் வெளிக்கொணர்ந்த இவர்கள் உமது உடைமையாகிய மக்களாய் உள்ளனர் அன்றோ!

அதிகாரம் 10.

அந்நாளில் ஆண்டவர் என்னை நோக்கி, முன்னவைப்போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக் கொண்டு மலைமேல் ஏறி என்னிடம் வா. மரத்தால் ஆன பேழையையும் உனக்காகச் செய்துகொள்.

நீ உடைத்துப் போட்ட முன்னைய பலகைகளில் இருந்த வார்த்தைகளையே நான் இப்பலகைகளிலும் எழுதுவேன். நீ அவற்றைப் பேழையில் வை என்றார்.

எனவே சித்திம் மரத்தாலான ஒரு பேழையைச் செய்தேன். முன்னவை போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்தேன். அவ்விரு கற்பலகைகளையும் என் கையில் எடுத்துக்கொண்டு மலைமேல் ஏறினேன்.

சபை கூடிய நாளில், மலையில் நெருப்பினின்று, உங்களுக்குக் கூறிய பத்துக்கட்டளைகளை முன்பு எழுதியது போலவே ஆண்டவர் அப்பலகைகளில் எழுதினார். பின்னர் அவர் அவற்றை என்னிடம் கொடுத்தார்.

அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, நான் செய்திருந்த பேழையில் பலகைகளை வைத்தேன். ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி அவை அங்கே உள்ளன.

அதன்பின், இஸ்ரயேல் மக்கள பெனயாக்கானுக்கு அருகிலுள்ள பெயரோத்திலிருந்து மோசேராவுக்குப் பயணம் செய்தார்கள். அங்கே ஆரோன் இறந்து அடக்கம் செய்யப்பட்டார். அவர் மகன் எலயாசர் அவருக்குப் பதிலாக குரு ஆனார்.

அங்கிருந்து அவர்கள் குத்கோதாவுக்கும் தொடர்ந்து பாய்ந்தோடும் ஆறுகள் உள்ள யோற்றுபாத்தாவுக்கும் பயணம் செய்தார்கள்.

அந்நாளில் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கவும், இந்நாள்வரை இருப்பது போல ஆண்டவர் திருமுன் நின்று பணிபுரியவும், அவருடைய பெயரால் ஆசி வழங்கவும், ஆண்டவர் லேவியின் குலத்தைத் தனித்து வைத்தார்.

எனவேதான், லேவியர்க்குத் தம் சகோதரர்களுடன் பங்கு இல்லை: உரிமைச் சொத்தும் இல்லை: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களுக்குச் சொல்லி இருப்பதுபோல, ஆண்டவரே அவர்களது உரிமைச் சொத்து.

முதன்முறை போன்றே நான் நாற்பது பகலும் நாற்பது இரவும் மலைமீது தங்கியிருந்தேன். மீண்டும் ஒருமுறை ஆண்டவர் என் மன்றாட்டைக் கேட்டார். உங்களை அழிப்பதை ஆண்டவர் விரும்பவில்லை.

ஆண்டவர் என்னிடம், நீ எழுந்து மக்களுக்குமுன் புறப்பட்டுச் செல். நான் அவர்களுக்கு அளிப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொன்ன நாட்டுக்குள் சென்று அதை அவர்கள் உடைமையாக்கிக்கொள்ளட்டும் என்றார்.

எனவே இஸ்ரயேலரே, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவர்தம் அனைத்து வழிகளிலும் நடந்து, அவர் மீது அன்புகூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்குப் பணிபுரிந்து,

உங்களுக்கு எல்லாம் நலமாகும் பொருட்டு நான் இன்று கற்பிக்கின்ற அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதன்றி, அவர் உங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றார்?

விண்ணும் விண்ணின் வானங்களும், மண்ணும் அதில் உள்ள அனைத்தும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியன.

இருப்பினும், உங்கள் மூதாதையரின்மீது பற்றுவைத்து அன்பு கூர்ந்தார். அவர்களுக்குப்பின் அவர்களுடைய வழிமரபினராகிய உங்களை எல்லா மக்களினங்களினின்றும், இந்நாளில் இருப்பதுபோலத் தெரிந்துகொண்டார்.

ஆகவே, உங்கள் உள்ளத்தை விருத்த சேதனம் செய்யுங்கள். வணங்காக் கழுத்தினராய் இராதீர்கள்.

ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவாக்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுததற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை: கையூட்டு வாங்குவதும் இல்லை.

அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே.

அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்: ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்: அவருக்கே பணிபுரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் பெயராலே ஆணையிடுங்கள்.

அவரே உங்கள் புகழ்ச்சி! அவரே உங்கள் கடவுள்! உங்கள் கண்கள் கண்ட ஆற்றல்மிகு அச்செயல்களை உங்களுக்காகச் செய்தவர் அவரே.

உங்கள் மூதாதையர் எழுபது ஆள்களாய் எகிப்துக்குப் போனார்கள். இப்பொழுதோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை வானத்து விண்மீன்கள் போல் பெருகச் செய்துள்ளார்.

அதிகாரம் 11.

ஆகையால் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு கூருங்கள். அவருடைய நெறிகளையும், நியமங்களையும், முறைமைகளையும், கட்டளைகளையும் எந்நாளும் கடைப்பிடியுங்கள்.

உங்கள் பிள்ளைகள், கடவுளாகிய ஆண்டவரின் படிப்பினைகள் அறிந்ததுமில்லை: பார்த்ததுமில்லை. அவர்தம் மாட்சி, வலிய கரம், ஓங்கிய புயம்,

எகிப்திய மன்னனாம் பார்வோனுக்கும் அவனது நாடு முழுமைக்கும் எகிப்தில் அவர் செய்த எல்லாச் செயல்கள், அவர்தம் அடையாளங்கள்,

எகிப்தியப்படையும், அவர்கள் குதிரைகளும், தேர்களும் உங்களைப் பின்தொடர்ந்து வருகையில், செங்கடலின் நீரை ஆண்டவர் அவர்கள் மேல் பொங்கி வரச்செய்து இந்நாள்வரை இருப்பது போல அவர்களை அழித்தது,

நீங்கள் இந்த இடத்திற்கு வரும்வரை பாலைநிலத்தில் அவர் உங்களுக்குச் செய்தது,

ரூபனின் பேரர்களும், எலியாபின் புதல்வர்களுமான தாத்தானையும், அபிராமையும், அவர்கள் குடும்பங்கள், அவர்கள் கூடாரங்கள், அவர்களைப் பின்பற்றிய எல்லா உயிரினங்கள் ஆகியவற்றை இஸ்ரயேலர் எல்லோர் நடுவிலும் நிலம் தன் வாயைப் பிளந்து விழுங்கும்படி செய்தது ஆகியவை அனைத்தையும் எண்ணிப் பாருங்கள்.

ஏனெனில் ஆண்டவர் செய்த மாபெரும் செயல்கள் அனைத்தையும் உங்கள் கண்கள் கண்டன.

எனவே இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள். அதனால் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளும்படி கடந்து சென்றடையும் நாட்டை உடைமையாக்கும் வலிமை பெறுவீர்கள்.

மேலும், உங்கள் மூதாதையருக்கும் அவர்கள் வழிமரபினருக்கும் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்ன மண்ணில் நீங்கள் நெடிது வாழ்வீர்கள். அது பாலும் தேனும் நிறைந்து வழியும் நாடு.

ஏனெனில், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாடு, நீங்கள் விட்டு வந்த எகிப்து நாட்டைப் போன்றது அன்று. அங்கு நீங்கள் விதை விதைத்து, காய்கறித் தோட்டத்திற்குப் பாய்ச்சுவதுபோல மெய்வருத்தி நீர் பாய்ச்சி வந்தீர்கள்.

ஆனால் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளுமாறு கடந்து சென்றடையவிருக்கும் நாடு, மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த நாடு: வானத்தின் மழை நீரையே குடிக்கும் நாடு!

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கண்காணிக்கும் நாடு! ஆண்டின் தொடக்கம் முதல் ஆண்டின் முடிவுவரை உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கண் காத்திடும் நாடு!

இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற என் கட்டளைகளைப் பின்பற்றி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்தால்,

தக்க காலத்தில் அவர் உங்கள் நிலத்திற்கு மழை தருவார், முன்மாரியும் பின்மாரியும் தருவார். அதனால் உங்கள் தானியத்தையும், திராட்சை இரசத்தையும், எண்ணையையும் சேகரிப்பீர்கள்.

வயல்வெளிகளில் உங்கள் கால்நடைகளுக்கு அவர் புல் தருவார். நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள்.

நீங்கள் வேற்றுத் தெய்வங்கள் பக்கம் திரும்பி, அவற்றுக்கு ஊழியம் செய்து, அவற்றை வணங்கிடுமாறு, உங்கள் உள்ளங்கள் வஞ்சிக்கப்படாதபடி கவனமாய் இருங்கள்.

இல்லையெனில், ஆண்டவரின் சினம் உங்கள் மீது வரும். மழையே இல்லாதபடி வானங்களை அவர் மூடிவிடுவார். உங்கள் நிலம் தன்பலனைத் தராது. அவர் உங்களுக்குக் கொடுக்கும் அந்த வளமிகு நாட்டினின்று விரைவில் அழிந்து போவீர்கள்.

எனவே என் வார்த்தைகளை உங்கள் நெஞ்சிலும் நினைவிலும் நிறுத்துங்கள். அவற்றை உங்கள் கைகளில் அடையாளமாகக் கட்டிக் கொள்ளுங்கள். உங்கள் கண்களுக்கிடையே அவை அடையாளப் பட்டமாக இருக்கட்டும்.

நீங்கள் அவற்றை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், பயணம் செய்யும்போதும், படுக்கும் போதும், எழும்போதும் அவற்றைப் பேசுங்கள்.

உங்கள் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழைவாயில்களிலும் அவற்றை எழுதுங்கள்.

அதனால், விண்ணுலகு மண்ணுலகின்மீது நிற்குமட்டும், உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீங்களும் உங்கள் மக்களும் நெடுநாள் வாழ்வீர்கள்.

ஏனெனில், நீங்கள் பின்பற்றுமாறு நான் உங்களுக்குக் கட்டளையிடும் இந்த எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் நீங்கள் கருத்தாய் இருந்தால்,

உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு கூர்ந்து அவர் வழிகளில் நடந்து, அவரைப் பற்றிக் கொண்டால், அவர் இந்த நாட்டினரை எல்லாம் உங்கள் முன்பே விரட்டியடிப்பார். உங்களைவிட எண்ணிக்கையிலும் வலிமையிலும் மிகுந்த அந்நாடுகளை நீங்கள் முறியடிப்பீர்கள்.

உங்கள் காலடிபடும் இடங்கள் எல்லாம் உங்களுடையவை ஆகும். பாலைநிலமும் லெபனோனும், யூப்பிரத்தீசு ஆறும் மேற்குக் கடற்கரையும் உங்கள் எல்லையாயிருக்கும்.

எவனாலும் உங்களை எதிர்த்து நிற்க இயலாது. ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் செல்லும் நாடுகள் அனைத்திலும் உங்களைப்பற்றி அச்சத்தையும் திகிலையும் உண்டாக்குவார்.

இதோ! இன்று உங்கள் முன்பாக ஆசியையும் சாபத்தையும் வைக்கின்றேன்.

நான் இன்று உங்களுக்கு விதித்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடித்தால், ஆசியும்,

உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், நான் இன்று உங்களுக்கு விதித்த வழிகளினின்று விலகி நடந்து, நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினால் சாபமும் உண்டாகும்.

நீங்கள் சென்று உடைமையாக்கிக் கொள்ளப் போகும் நாட்டுக்குள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை இட்டுச் செல்லும் போது, கெரிசிம் மலையிலிருந்து ஆசியையும் ஏபால் மலையிலிருந்து சாபங்களையும் அறிவிப்பீர்கள்.

யோர்தானுக்கு அப்பால், சாலைக்கு மேற்கே கதிரவன் மறையும் திசையில், அராபாவில் வாழும் கானானியரின் நாட்டில், கில்காலுக்கு எதிர்ப்புறமாக மோசே தோப்பு அருகே அல்லவா அவ்விடம் உள்ளது?

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டை உடைமையாக்கிக்கொள்ள நீங்கள் யோர்தானைக் கடந்து செல்ல வேண்டும். அதை உடைமையாக்கி, அங்கு வாழும்போது,

நான் இன்று உங்கள்முன் வைக்கின்ற நியமங்களையும் முறைமைகளையும் நிறைவேற்றுவதில் கருத்தாய் இருங்கள்.

அதிகாரம் 12.

மண்ணில் வாழும் நாளெல்லாம், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளுமாறு, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் கவனமாய்ப் பின்பற்ற வேண்டிய நியமங்களும் முறைமைகளும் இவையே:

நீங்கள் விரட்டியடிக்கப்போகும் மக்களினங்கள் தங்கள் தெய்வங்களுக்கு, உயர்ந்த மலைகளின்மீதும், குன்றுகளின் மீதும், பசுமையான மரங்களின் மீதும், ஊழியம் செய்த எல்லா இடங்களையும் முற்றிலும் அழித்து விடுங்கள்.

அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத்தூண்களை நொறுக்கி, அவர்களின் அசேராக்கம் பங்களைத் தீயில் சுட்டெரித்து, அவர்களின் கைவினையான தெய்வங்களின் சிலைகளை உடைத்து, அவர்களின் பெயர் அவ்விடங்களில் இல்லாது ஒழியுங்கள்.

ஆனால் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அவ்விதம் செய்யாதீர்கள்.

ஆண்டவராகிய கடவுள் தம் பெயர் விளங்கவும், அங்கே குடியமரவும், உங்கள் எல்லாக் குலங்களிலிருந்து தெரிந்தெடுக்கும் இடத்தையே நீங்களும் நாடி அங்கே செல்லுங்கள்.

உங்கள் எரி பலிகளையும், மற்றப் பலிகளையும், பத்திலொரு பங்கையும், அர்ப்பணக் காணிக்கைகளையும், நேர்ச்சைக் காணிக்கைகளையும் தன்னார்வப் பலிகளையும், ஆடுமாடுகளின் தலையீற்றையும் அங்கே கொண்டு வாருங்கள்.

அங்கே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்பீர்கள். உங்கள் உழைப்பின் பயனும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரால் ஆசி பெற்றதுமாகிய எல்லாவற்றுக்காகவும் நீங்களும் உங்கள் வீட்டார் அனைவரும் மகிழ்வீர்கள்.

இந்த நாள்களில் இங்கே நாம் செய்வது போல ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனத் தோன்றுவதைச் செய்ய வேண்டாம்.

ஏனெனில், உங்கள் ஆண்டவராகிய கடவுள் கொடுக்கப்போகும் உரிமைச் சொத்துக்கும் ஓய்வுக்கும் இன்னும் நீங்கள் போகவில்லை.

ஆனால், நீங்கள் யோர்தானைக் கடந்து சென்று, உங்கள் ஆண்டவராகிய கடவுள் உரிமையாகத் தருகின்ற நாட்டில் குடியமரும்போது, நீங்கள் அச்சமின்றி வாழும்பொருட்டு, உங்களைச் சுற்றிலுமுள்ள உங்கள் பகைவர் அனைவரிடமிருந்தும் உங்களுக்கு அவர் ஓய்வு தரும்போது,

அவர்தம் பெயர் விளங்குமாறு அவர் தெரிந்தெடுக்கும் இடத்திற்கு நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாவற்றையும் கொண்டு செல்வீர்கள். உங்கள் எரி பலிகளையும், மற்றப் பலிகளையும், பத்திலொரு பங்கையும், அர்ப்பணக் காணிக்கைகளையும், ஆண்டவருக்கு நேர்ந்துகொண்ட சிறந்த நேர்ச்சைக் காணிக்கைகள் அனைத்தையும் கொண்டு செல்வீர்கள்.

நீங்களும், உங்கள் புதல்வரும், உங்கள் புதல்வியரும், அடிமைகளும், அடிமைப் பெண்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன் அகமகிழ்வீர்களாக! தங்களுக்கெனத் தனிப்பங்கோ உரிமைச் சொத்தோ இல்லாவிடில், உங்கள் நகர்களில் உள்ள லேவியரும் அவ்விதமே மகிழ்வார்களாக!

கண்ட இடமெல்லாம் உங்கள் எரி பலிகளைச் செலுத்தாதபடி கவனமாய் இருங்கள்.

ஆனால், உங்கள் குலங்களுள் ஒன்றிலிருந்து ஆண்டவர் ஓர் இடத்தைத் தெரிந்தெடுப்பார். அங்கே நீங்கள் உங்கள் எரி பலிகளைச் செலுத்துங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாவற்றையும் அங்கே நிறைவேற்றுங்கள்.

ஆயினும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு அளித்துள்ள ஆசிக்கு ஏற்ப, உங்கள் நகர்களில், உங்கள் விருப்பப்படியே விலங்குகளை அடித்து உண்ணலாம். தீட்டுள்ளவனும் தீட்டற்றவனும் அவற்றிலிருந்து உண்ணலாம். பெண் மானையும் கலைமானையும் உண்பதுபோல் உண்ணலாம்.

இரத்தத்தை மட்டும் அருந்த வேண்டாம்: தண்ணீரை ஊற்றுவதுபோல அதைத் தரையில் ஊற்றி விடுங்கள்.

உங்கள் விளைச்சலின் பத்திலொரு பங்கிலிருந்தோ, திராட்சை இரசத்திலிருந்தோ, ஆடு மாடுகளின் தலையீற்றுக்களிலிருந்தோ, நீங்கள் நேர்ந்துகொண்ட சிறந்த நேர்ச்சைக் காணிக்கைகளிலிருந்தோ, உங்கள் தன்னார்வப் பலிகளிலிருந்தோ, உங்கள் அர்ப்பணப் பலிகளிலிருந்தோ எதையும் எடுத்து உங்களது நகரில் உண்ண வேண்டாம்.

ஆனால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் நீங்கள் அதை அவர் முன்னிலையில் உண்ணுங்கள். நீங்களும், உங்கள் மகன், மகள், அடிமை, அடிமைப்பெண் ஆகியோரும் உங்கள் நகர்களில் உள்ள லேவியரும் உண்ணுங்கள். நீங்கள் செய்யும் அனைத்திலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரில் அகமகிழுங்கள்!

உங்கள் நாட்டில் வாழும் நாளெல்லாம் லேவியரைக் கைவிடாதபடி கவனமாய் இருங்கள்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தபடி உங்களது எல்லையை விரிவுபடுத்தும் போது நீங்கள் இறைச்சி உண்ண விரும்பி, நான் இறைச்சி உண்பேன் என்றால் நீங்கள் விரும்பிய அளவு உண்ணலாம்.

அவர்தம் பெயர் விளங்குமாறு ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடம் உங்களுக்கு வெகு தொலைவில் இருந்தால், அவர் உங்களுக்குக் கொடுத்துள்ள ஆட்டையோ மாட்டையோ நான் உங்களுக்கு விதித்துள்ளபடி, உங்கள் நகரிலேயே அடித்து நீங்கள் விரும்புவதுபோல் உண்ணலாம்.

பிணைமானையும் கலைமானையும் உண்பதுபோல உண்ணலாம். தீட்டுள்ளவர்களும் தீட்டற்றவர்களும் உண்ணலாம்.

இரத்தத்தை அருந்தாதபடி மட்டும் கவனமாய் இருங்கள். ஏனெனில் இரத்தமே உயிர். சதையோடு உயிரையும் சேர்த்து உண்ணாதீர்கள்.

இரத்தத்தை நீங்கள் அருந்த வேண்டாம். தண்ணீரை ஊற்றுவதுபோல அதைத் தரையில் ஊற்றிவிடுங்கள்.

நீங்கள் அதை அருந்தலாகாது. அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப்பின் உங்கள் மக்களுக்கும் எல்லாம் நலமாகும். ஆண்டவரின் பார்வையில் நீங்கள் நேரியன செய்தவர்கள் ஆவீர்கள்.

உங்களிடமிருந்து வரவேண்டிய புனிதப் பொருள்களையும் உங்களது நேர்ச்சைக் காணிக்கைகளையும் எடுத்துக்கொண்டு ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்லுங்கள்.

அங்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பீடத்தில் உங்கள் எரிபலிகளைச் செலுத்துங்கள். சதையோடும் இரத்தத்தோடும் செலுத்துங்கள். உங்கள் பலிப்பொருள்களின் இரத்தத்தை நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பீடத்திலே ஊற்றி விடுங்கள். ஆனால் இறைச்சியை நீங்கள் உண்ணலாம்.

நான் உங்களுக்கு விதிக்கும் இக்கட்டளைகளை எல்லாம் கடைப்பிடிப்பதில் கவனமாய் இருங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீங்கள் நவமானதையும் நேரியதையும் செய்தால் உங்களுக்கும் உங்களுக்குப்பின் உங்கள் பிள்ளைகளுக்கும் என்றும் எல்லாம் நலமாகும்.

நீங்கள் சென்று விரட்டியடிக்கும் மக்களினங்களை உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேரறுப்பார். நீங்கள் அவர்களை விரட்டியடித்துவிட்டு அவர்களது நாட்டில் குடியேறுங்கள்.

உங்கள் முன்னிலையில் அவர்கள் முறியடிக்கப்பட்டபின் அவர்களைப் பின்பற்றி வஞ்சிக்கப்படாதபடியும், இந்த மக்களினங்கள் தங்கள் தெய்வங்களுக்கு எப்படி ஊழியம் செய்தனவோ அவ்விதமே நாங்களும் செய்வோம், என்று சொல்லி அவர்களின் தெய்வங்களைப்பற்றிக் கேட்டறியாதபடியும் கவனமாய் இருங்கள்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அவர்களது முறைப்படி செய்யவேண்டாம். ஏனெனில், ஆண்டவர் வெறுக்கும் எல்லா அருவருப்பானவற்றையும் அவர்களுடைய தெய்வங்களுக்கு அவர்கள் செய்தார்கள். தங்கள் புதல்வரையும், புதல்வியரையும் கூட அவர்களின் தெய்வங்களுக்கென நெருப்பில் சுட்டெரித்தார்கள்.

நான் உங்களுக்கு விதிக்கிற யாவற்றையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இருங்கள். அவற்றோடு எதையும் கூட்டவோ அவற்றிலிருந்து எதையும் குறைக்கவோ வேண்டாம்.

அதிகாரம் 13.

உங்கள் நடுவில் ஓர் இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவன் தோன்றி உங்களிடையே ஓர் அடையாளம் அல்லது அருஞ்செயல் காட்டுவேன் என்று சொல்லலாம்.

அவன் சொல்வதுபோல் அடையாளம் அல்லது அருஞ்செயல் நடக்கலாம். அதன்பின் அவன், வாருங்கள், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் புரிவோம் என்று கூறலாம். அவை நீங்கள் அறியாதவை.

அந்த இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவனின் சொற்களுக்குச் செவி கொடுக்க வேண்டாம். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது நீங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்கின்றீர்களா என்று அவர் உங்களைச் சோதிக்கின்றார்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றி அவருக்கு அஞ்சி, அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவர் குரலுக்குக் கீழ்ப்படிந்து, அவருக்கு ஊழியம் செய்து அவரைப் பற்றிக் கொள்ளுங்கள்.

ஆனால், அந்த இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவன் கொல்லப்பட வேண்டும். ஏனெனில் எகிப்து நாட்டிலிருந்து, உங்களை அழைத்துவந்த, அடிமைத்தனத்தின் வீட்டிலிருந்து உங்களை விடுவித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக, அவர் உங்களை வாழச் சொன்ன வழிகளிலிருந்து கலகம் செய்ய அவன் தூண்டினான். இத்தகைய தீமையை உங்களிடமிருந்து கருவறுங்கள்.

தாயின் மகனாகிய உன் சகோதரன், உன் மகன், மகள், அன்பு மனைவி, ஆருயிர் நண்பன் ஆகியோருள் எவராவது, நீயும் உன் மூதாதையரும் அறிந்திராத வேற்றுத் தெய்வங்களிடம் சென்று அவற்றுக்கு ஊழியம் செய்வோம், என்று இரகசியமாக, நயவஞ்சகமாகக் கூறலாம்.

உன்னைச் சுற்றிலும், உனக்கு அருகிலோ தொலையிலோ உலகின் ஒரு முனை முதல் மறுமுனை வரையிலோ உள்ள மக்களினத்தாரின் சில தெய்வங்களைப்பற்றி உன்னிடம் கூறலாம்.

நீ அவனுக்கு இணங்கவோ, செவிகொடுக்கவோ, இரக்கம் காட்டவோ வேண்டாம். அவனைத் தப்பவிடவோ ஒளித்துவைக்கவோ வேண்டாம்.

மாறாக நீ அவனைக் கொல்வாய். முதலில் உன் கையும், பின்னர் மக்கள் அனைவரின் கைகளும் அவனைக் கொல்வதற்காக அவன்மீது படட்டும்.

அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளிக் கொணர்ந்த உன் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து உன்னை விலக்கிவிட அவன் முயற்சி செய்த காரணத்தால் நீ அவனைக் கல்லால் எறிந்து கொல்வாய்.

இஸ்ரயேல் முழுவதும் இதைக் கேட்டு அஞ்சட்டும். அதனிடையே இதுபோன்ற தீயசெயல்கள் இனி ஒருபோதும் நடவாதிருக்கட்டும்.

நீங்கள் குடியேறும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கும் நகர் ஒன்றினுள்

சில கயவர் வந்த அந்நகரின் மக்களில் சிலரிடம், வாருங்கள் வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் புரிவோம் என்று கூறிச் சிலரைத் தவறான வழியில் இட்டுச் சென்றதாக நீங்கள் கேள்விப்படலாம். அவற்றை நீங்கள் அறியீர்கள்.

நீங்கள் நன்றாக விசாரித்து, ஆராய்ந்து, கவனமுடன் கேட்டுத் தெளிந்தபின், உண்மையாகவும் உறுதியாகவும் உங்களிடையே இத்தகைய அருவருக்கத்தக்க செயல் நடந்தது என்று அறிய வரலாம்.

அப்பொழுது நீங்கள் அந்த நகரின் மக்களைக் கருக்கு வாய்ந்த வாளால் வெட்டுங்கள். அந்நகரிலுள்ள எல்லோரையும் கால்நடைகளையும் வாளுக்கு இரையாக்குங்கள். அதை முற்றிலும் அழித்துவிடுங்கள்.

அந்நகரில் உள்ள பொருள்களை எல்லாம் அதன் நாற்சந்தியில் ஒன்று சேர்த்து நகரையும் பொருள்களையும் தீயால் சுட்டெரித்து உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலி ஆக்குங்கள். அந்நகர் ஒரு மேடாக என்றும் இருக்கும். அது மீண்டும் கட்டி எழுப்பப்படாது.

அழிவுக்குரிய அப்பொருள் எதையும் உங்கள் கைதொட வேண்டாம். அதனால் ஆண்டவர் தமது கடுஞ்சினத்திலிருந்து மனம்மாறி, பேரிரக்கம் காட்டுவார். உங்கள் மூதாதையருக்கு அவர் வாக்களித்தபடி உங்களைப் பலுகச் செய்வார்.

நீங்களோ உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் அனைத்துக் கட்டளைகளையும் நான் இன்று உங்களுக்கு விதித்தபடி கடைப்பிடியுங்கள். அவர் பார்வையில் நேரியதைச் செய்யுங்கள்!

அதிகாரம் 14.

நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் மக்கள். எனவே, இறந்தவருக்காக உங்கள் உடலைச் சிதைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் தலைமுடியை மழித்துக்கொள்ளவும் வேண்டாம்.

ஏனெனில், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். மண்ணுலகின்மீது உள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் தனிச்சொத்தாக ஆண்டவர் தேர்ந்துகொண்டார்.

தீட்டான எதையும் உண்ணவேண்டாம்.

நீங்கள் உண்ணத்தகும் விலங்குகள் இவையே: மாடு, செம்மறியாடு,

வெள்ளாடு, கலைமான், காட்டுமான், கவரிமான், காட்டு வெள்ளாடு, கொம்புமான், காட்டெருது, காட்டுச் செம்மறி ஆகியன.

மேலும், விரிகுளம்பு உள்ள விலங்குகளில் குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருப்பதும் அசை போடுவதுமான விலங்குகளை உண்ணலாம்.

ஆயினும், அசைபோடுவனவற்றிலும், விரிகுளம்பு உள்ளவைகளிலும், ஒட்டகம், முயல், குழி முயல் போன்றவற்றை உண்ண வேண்டாம். ஏனெனில், அவை அசை போடுகின்றன. ஆனால், அவற்றுக்கு விரிகுளம்பு இல்லை. அவை உங்களுக்குத் தீட்டானவை.

பன்றி விரிகுளம்பு உள்ளதாயினும், அசைபோடுவதில்லை: அதுவும் உங்களுக்குத் தீட்டானது. இவற்றின் இறைச்சியை உண்ணவும் வேண்டாம்: இவற்றின் இறந்த உடலைத் தொடவும் வேண்டாம்.

நீர்வாழ்வன அனைத்திலும் சிறகும் செதிலும் உள்ளவற்றை நீங்கள் உண்ணலாம்.

சிறகும் செதிலும் அற்ற எதையும் உண்ணலாகாது. அவை உங்களுக்குத் தீட்டானவை.

தீட்டற்ற எல்லாப் பறவைகளையும் நீங்கள் உண்ணலாம்.

ஆனால் பறவைகளில் பின்வருவனவற்றை நீங்கள் உண்ணலாகாது:

கழுகு, கருடன், பைரி, வல்லூறு, எல்லாவிதப் பருந்துகள்,

எல்லாவிதக் காகங்கள்,

நெருப்புக் கோழிகள், கூகைகள், செம்புகங்கள், எல்லாவிதமான வேட்டைப் பருந்துகள்,

ஆந்தை, கோட்டான், நாரை

மீன்கொத்தி, நீர்க்காகங்கள், நீர்க்கோழி,

கொக்கு மற்றும் எல்லாவித வல்லூறு, புழுக்கொத்தி, வெளவால் ஆகியன.

மேலும், பறப்பனவற்றில் பூச்சிகள் யாவும் உங்களுக்குத் தீட்டானவை. அவற்றை உண்ண வேண்டாம்.

தீட்டற்ற பறவைகள் அனைத்தையும் நீங்கள் உண்ணலாம்.

தானாய் இறந்துபோன எதையும் உண்ண வேண்டாம். ஆனால், அதை உன்வீட்டிலிருக்கும் அன்னியனுக்கு உண்ணும்படி நீ கொடுக்கலாம், அல்லது வேற்றினத்தானுக்கு விற்கலாம். ஏனெனில் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். வெள்ளாட்டுக் குட்டியை அதன் தாய்ப்பாலில் சமைக்க வேண்டாம்.

ஆண்டுதோறும் உன் நிலத்தில் விளையும் எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்தெடு.

தம்பெயர் விளங்கும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொண்ட இடத்தில், உன் தானியங்களிலும், உன் திராட்சை இரசத்திலும், எண்ணெயிலும் பத்திலொரு பாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுக்களையும் அவரது திருமுன் உண்பாய். அதனால் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு என்றும் அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வாய்.

கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசியளிக்கும் போது, அவர் தம் பெயர் விளங்கும்படி தேர்ந்து கொண்ட இடம் உனக்கு வெகு தொலையில் இருந்தால், நெடும் பயணம் செய்யவேண்டியதாயும், உன் பொருள்களைத் தூக்கிச் செல்ல முடியாததாயும் இருந்தால்,

நீ அதை விற்று, பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்திற்குச் செல்.

அங்கே உன் விருப்பம் போல் மாடு, ஆடு, திராட்சை இரசம், அல்லது மது ஆகியவற்றையும் உன் நெஞ்சம் விரும்பும் எதையும் அந்தப் பணத்திற்கு வாங்கி, நீயும் உன் வீட்டாரும் உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்டு மகிழ்வீர்களாக!

நகரில் குடியிருக்கும் லேவியனுக்கு உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாததால், அவனைக் கைவிட்டு விடாதே.

மூன்றாம் ஆண்டின் இறுதியில் அவ்வாண்டில் விளைகின்ற எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்து, உனது நகரின் வாயிலருகே வை.

உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாத லேவியரும், உன் நகரில் வாழும் அன்னியரும், அனாதைகளும், கைம்பெண்களும் உண்டு நிறைவு கொள்வர். அப்போது அனைத்துச் செயல்களிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.

அதிகாரம் 15.

ஏழாம் ஆண்டின் முடிவில் நீ விடுதலை அளிப்பாய்.

விடுதலையின் விவரம் இதுவே: ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனுக்குக் கொடுத்த கடனிலிருந்து அவனை விடுதலை செய்யட்டும். அது ஆண்டவருக்கெனக் குறிக்கப்பட்ட விடுதலை ஆண்டாகையால், தனக்கு அடுத்திருப்பவனுக்கோ தன் சகோதரனுக்கோ கொடுத்த கடனைத் தண்டல் செய்ய வேண்டாம்.

வேற்றினத்தானின் கடனை நீ தண்டலாம். ஆனால், உன் சகோதரன் பட்ட கடனிலிருந்து விடுதலை கொடு.

உன்னிடம் வறியவர் இல்லாதிருக்கட்டும். அப்பொழுது நீ உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் உன்னை ஆசியால் நிரப்புவார்.

நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்து, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு.

அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குத் தந்த வாக்குறுதியின்படி உனக்கு ஆசி வழங்குவார். நீ பல இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்க மாட்டாய். நீ பல இனத்தாரையும் ஆளுவாய். உன்னையோ எவனும் ஆள மாட்டான்.

கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள எந்த நகரிலாவது உன் சகோதரன் ஒருவன் வறியவனாய் இருந்தால், உன் வறிய சகோதரன் மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே, உன் கையை மூடிக்கொள்ளாதே.

மாறாக, அவனுக்கு உன் கரங்களைத் தாராளமாகத் திறந்து, அவன் தேவைக்கு ஏற்ப, எவ்வளவு தேவையானாலும், கடன் கொடு.

விடுதலை ஆண்டாகிய ஏழாம் ஆண்டு அண்மையில் உள்ளதே என்று ஏங்குமாறு உன் உள்ளத்தில் நெறி கெட்ட சிந்தனைகள் எழாதபடி எச்சரிக்கையாய் இரு. ஏனெனில் உன் வறிய சகோதரனை எரிச்சலுடன் நோக்கி, அவனுக்கு எதுவும் தரவில்லையெனில், உனக்கு எதிராக அவன் ஆண்டவரிடம் முறையிடுவான். அது உன்னைக் குற்றத்திற்கு உள்ளாக்கும்.

நீ அவனுக்குத் தாராளமாய்க் கொடு. அவனுக்குக் கொடுக்கும்போது உள்ளத்தில் பொருமாதே. அப்போது, நீ செய்யும் அனைத்துச் செயல்களிலும், மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.

உனது நாட்டில் ஏழைகள் என்றும் இருப்பர். எனவே நான் உனக்குக்கட்டளையிட்டுச் சொல்கிறேன்: உன் சகோதரனுக்கும், உன் நாட்டிலுள்ள வறியவர்க்கும், தேவையுள்ளோர்க்கும் உன் கையைத் தாராளமாய்த் திற.

இனத்து ஓர் எபிரேயனோ ஓர் எபிரேயளோ உன்னிடம் அடிமையாய் விலைப்பட்டிருந்தால் ஆறு ஆண்டுகள் அவர்கள் உனக்குப் பணிபுரியட்டும். ஏழாம் ஆண்டில் உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பி விடு.

உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பும்போது, வெறுங்கையராய் அனுப்பாதே.

கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளபடி, உன் ஆட்டுமந்தையிலும், உன்களத்திலும், உன் திராட்சை ஆலையிலுமிருந்து தாராளமாக அவனுக்குக் கொடுத்து அனுப்பு.

எகிப்து நாட்டில் நீ அடிமையாக இருந்தாய் என்பதையும் உன் கடவுளாகிய ஆண்டவரே உன்னை மீட்டார் என்பதையும் நினைவில் கொள். எனவே நான் உனக்கு இதைக் கட்டளையிடுகிறேன்.

ஆனால், அவன் உன்மீதும் உன் வீட்டார் மீதும் அன்பு கூர்வதாலும், உன்னிடம் தங்குவது அவனுக்கு நலமென்று தோன்றுவதாலும், உம்மைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னிடம் கூறுவானாகில்,

நீ ஒரு குத்தூசியால் அவன் காதைக் கதவோடு சேர்த்துக் குத்துவாய். அதன்பின் அவன் என்றென்றும் உன் அடிமையாய் இருப்பான். உன் அடிமைப் பெண்ணுக்கும் அவ்வாறே செய்.

நீ அவனுக்கு விடுதலை கொடுத்து அனுப்பிவிடுவது உனக்கு வருத்தம் தரலாகாது. ஏனெனில், அவன் ஒரு வேலையாளின் பாதிக்கூலிக்கு ஆறு ஆண்டுகள் உனக்குப் பணி செய்திருப்பான். மேலும் உன் கடவுளாகிய ஆண்டவர், நீ மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும், உனக்கு ஆசி வழங்குவார்.

ஆடு மாடுகளின் ஆண் தலையீற்றுகளை உன் கடவுளாகிய ஆண்டவருக்கென ஒப்புக்கொடு. உன் மாட்டின் தலையீற்றிடம் வேலை வாங்காதே: உன் ஆட்டின் தலையீற்றின் உரோமத்தை கத்தரியாதே.

கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளுமிடத்தில், நீயும் உன் வீட்டாரும், ஆண்டுதோறும் அவர்தம் திருமுன் அவற்றை உண்பீர்கள்.

அவை ஏதாகிலும் குறை உள்ளனவாய் இருப்பின்-முடம், குருடு அல்லது வேறு எந்த ஊனமும் இருப்பின் அவற்றை உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடாதே.

அவற்றை உன் நகர எல்லைக்குள் உண்பாயாக. கலைமானையும் கவரிமானையும் உண்பது போல் உண்ணலாம். தீட்டுள்ளவனும் தீட்டற்றவனும் உண்ணலாம்.

அதன் இரத்தத்தையோ உண்ண வேண்டாம். தண்ணீரைப் போல் அதைத் தரையில் ஊற்றிவிடு.

அதிகாரம் 16.

ஆபீபு மாதத்தை நினைவில்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவருக்கெனப் பாஸ்காவைக் கொண்டாடு. ஏனெனில் ஆபீபு மாதத்தில்தான், ஓர் இரவில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தார்.

தம் பெயர் விளங்கும் பொருட்டு ஆண்டவர் தெரிந்து கொள்ளும் இடத்தில், உன் ஆடுமாடுகளிலிருந்து உன் ஆண்டவராகிய கடவுளுக்குப் பாஸ்காப் பலிசெலுத்து.

அதனுடன் புளிப்புள்ள அப்பத்தை உண்ணாதே. எகிப்து நாட்டிலிருந்து நீ வெளியேறிய நாளை உன் வாழ்நாளெல்லாம் நினைவுகூரும் வண்ணம், ஏழு நாள்கள் அவற்றைப் புளிப்பற்ற அப்பத்தோடு உண்பாய். அது துயரத்தின் அப்பம். ஏனெனில் நீ எகிப்து நாட்டிலிருந்து அவசரமாய்ப் புறப்பட்டு வந்தாய்.

எல்லைக்குள் எங்கும் ஏழு நாள்களுக்குப் புளிப்புள்ள அப்பம் இருத்தலாகாது. நீ முதல் நாள் மாலையில் செலுத்தும் பலியின் இறைச்சி எதுவும் இரவு முழுவதும் காலை வரையிலும் இருத்தலாகாது.

கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் எந்த நகருக்குள்ளும் நீ பாஸ்காப் பலியைச் செலுத்தவேண்டாம்.

ஆனால் அவர்தம் பெயர் அதில் நிலைக்கும்படி, உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில், நீ பாஸ்காப்பலியைச் செலுத்து, கதிரவன் மறையும் மாலை வேளையில், நீ எகிப்திலிருந்து புறப்பட்ட அந்த நேரத்தில், பலி செலுத்து.

கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அதை நெருப்பில் வாட்டி உண்பாய். விடியற் காலையில் உன் கூடாரத்திற்குத் திரும்பிச் செல்வாய்.

ஆறு நாள்களுக்கு நீ புளிப்பற்ற அப்பத்தை உண்பாய். ஏழாம் நாள் உன் கடவுளாகிய ஆண்டவருக்காகத் திருப்பேரவை கூடும். அன்று நீ வேலை ஏதும் செய்யாதே.

நீ ஏழு வாரங்களை எண்ணிக்கொள். விளைந்து நிற்கும் கதிரில் கதிரரிவாளை முதலில் வைத்தநாள் தொடங்கி ஏழு வாரங்களைக் கணக்கிடு.

அதன்பின், உன் கடவுளாகிய ஆண்டவருக்கென வாரங்களின் விழாவைக் கொண்டாடு. அவர் உனக்கு ஆசி வழங்குவதற்கேற்ப, உன் கைகளால் அவருக்குத் தன்னார்வக் காணிக்கைகளைச் செலுத்து.

கடவுளாகிய ஆண்டவர் தம்பெயர் விளங்குமாறு தெரிந்தெடுக்கும் இடத்தில், நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் ஆண் ஊழியர்களும் பெண் ஊழியர்களும், உன் நகரில் உள்ள லேவியனும் அன்னியனும் அனாதைகளும், கைம்பெண்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் மகிழ்வீர்களாக.

நீ எகிப்தில் அடிமையாய் இருந்தாய் என்பதை நினைவிலிருத்தி, இந்த முறைமைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.

களத்தின் பலனையும் ஆலையின் பலனையும் சேகரித்தபின், கூடார விழாவை ஏழு நாள்கள் கொண்டாடுவாய்.

நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் அடிமைகளும், உன் அடிமைப் பெண்களும், உன் நகரில் உள்ள லேவியனும், அன்னியனும், அனாதைகளும், கைம்பெண்களும் இவ்விழாவில் மகிழுங்கள்.

ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏழு நாள்கள் விழாக் கொண்டாடு. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார். அப்பொழுது நீ நிறைவாக மகிழ்ச்சியுறுவாய்.

ஆண்டில் மூன்று முறை உன் ஆண்மக்கள் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அவர் திருமுன் வரவேண்டும், வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும். புளிப்பற்ற அப்ப விழாவிலும், வாரங்கள் விழாவிலும், கூடார விழாவிலும் வரவேண்டும். ஆண்டவர் திருமுன் அவர்கள் வெறுங்கையராய் வரவேண்டாம்.

கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளதற்கேற்ப, ஒவ்வொருவனும் தன்னால் ஆனதைக் கொண்டு வருவானாக!

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் குலங்களுக்கெனக் கொடுக்கும் எல்லா நகர்களிலும் நீதிபதிகளையும் தலைவர்களையும் நியமனம் செய்வாய். அவர்கள் நீதியுடனும் நேர்மையுடனும் மக்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்.

நீதியைத் திரித்துவிடாதே. ஒருதலைச்சார்பாகச் செயல்படாதே. கையூட்டு வாங்காதே. ஏனெனில், கையூட்டு ஞானிகளின் கண்களைக் குருடாக்கும், நேர்மையாளரின் வழக்கைப் புரட்டிவிடும்.

நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து. அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உடைமையாக்கிக் கொள்வாய்.

கடவுளாகிய ஆண்டவருக்கு நீ எழுப்பவிருக்கும் பீடத்தின் அருகில் அசேராக் கம்பங்களை ஊன்ற வேண்டாம்.

சிலைத் தூண்களையும் நிறுத்தாதே. ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் அவற்றை வெறுக்கிறார்.

அதிகாரம் 17.

ஊனமோ வேறு எந்தக் குறையோ உள்ள மாட்டையாவது ஆட்டையாவது உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலி செலுத்த வேண்டாம். ஏனெனில், அதை உன் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார்.

கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கிற நகர்கள் ஒன்றில், ஓர் ஆண் அல்லது பெண், உன் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி, அவருக்கு எதிராகக் குற்றம் செய்வதாக உனக்குத் தெரிந்தால்,

நான் கட்டளையிட்டதற்கு எதிராக, வேற்றுத் தெய்வங்கள் அல்லது நிலா, கதிரவன் அல்லது வேறு யாதொரு வான் கோளங்களைப் பின்சென்று, பணிந்து வணங்கினால்

அது பற்றி உனக்குச் சொல்லப்படும் போது அல்லது நீ கேள்விப்படும் போது அதை நீ நன்கு விசாரி. அது உண்மை எனவும் அத்தகைய அருவருப்பான செயல் இஸ்ரயேலில் நடந்தது உறுதி எனவும் நீ கண்டால்,

அக்குற்றத்தைச் செய்த ஆணையோ பெண்ணையோ உன் நகர வாயிலுக்குக் கூட்டிச் சென்று அவனை அல்லது அவளைக் கல்லால் எறிந்து கொல்.

இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை முன்னிட்டே, குற்றவாளி கொலை செய்யப்பட வேண்டும். ஒரே சாட்சியின் வாக்குமூலத்தை முன்னிட்டு எவரும் கொலை செய்யப்படலாகாது.

முதலில் சாட்சிகளின் கைகளும் பின்னர் எல்லா மக்களின் கைகளும் கொல்லப்பட வேண்டியவனுக்கு எதிராக ஓங்கட்டும். இவ்வாறு உன்நடுவிலிருந்து தீமையை அகற்றுவாய்.

இரத்தப் பழிகளைக் குறித்தோ, உரிமை வழக்குகளைக் குறித்தோ, தடியடியைக் குறித்தோ தீர்ப்புக் கூறுவது கடினமாய் இருந்தால் அல்லது உன் நகரிலுள்ள வேறு எந்த வழக்கும் சிக்கலானதாக இருந்தால், நீ எழுந்து உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்.

அங்கு, லேவியரான குருக்களிடத்திலும் அன்றைய நாளின் நீதிபதிகளிடமும் அறிவுரை கேள். நியாயத் தீர்ப்பை அவர்கள் உனக்குத் தெரிவிப்பார்கள்.

ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்திலிருந்து அவர்கள் உனக்குத் தெரிவிப்பதன்படி நட. அவர்கள் கற்பித்தபடி எல்லாம் செயல்படுவதில் கருத்தாயிரு.

அவர்கள் உனக்குக் கற்பித்த சட்டங்களின்படியும், அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பின்படியும் செயல்படு. அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பினின்று இடமோ வலமோ பிறழாதே.

கடவுளாகிய ஆண்டவருக்கு ஊழியம் புரிய அங்கே நிற்கும் குருக்களுக்கோ நீதிபதிகளுக்கோ செவிகொடாமல் செருக்குடன் செயல்படுகிறவன் சாகவேண்டும். இவ்வாறு இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்றுவாய்.

எல்லா மக்களும் அதைக் கேட்டு, அஞ்சுவர்: எவரும் செருக்குடன் செயல்படார்.

கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் நாட்டுக்குள் சென்று அதை உடைமையாக்கி அதில் குடியேறியபின், என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா வேற்றினத்தாரையும் போல, நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்துவேன் என்று நீ சொல்வாய்.

அப்போது உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்துவாய். உன் இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய். உன் இனத்தான் அல்லாத அன்னியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே.

அவன் தனக்கெனக் குதிரைகளை மிகுதியாக்கிக் கொள்ளாமலும், குதிரைகளை மிகுதியாக்கிக்கொள்ளும் பொருட்டு மக்களை மீண்டும் எகிப்துக்குப் போகச் சொல்லாமலும் இருக்கட்டும். ஏனெனில், இனி அந்த வழியாகத் திரும்பவும் செல்லக்கூடாதென ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியுள்ளார்.

அவன் இதயம் ஆண்டவரைவிட்டு விலகாதிருக்க வேண்டுமானால், பல மனைவியரைக் கொள்ளலாகாது: வெள்ளியும் பொன்னும் அளவுமீறிச் சேர்க்கலாகாது.

அவன் தன் அரசுக் கட்டிலில் அமர்ந்தபின், லேவியராகிய குருக்கள் பொறுப்பிலுள்ள இச்சட்ட நூலின் நகல் ஒன்றைத் தனக்கென ஓர் ஏட்டில் எழுதிக் கொள்ளட்டும்.

அதைத் தன்னோடு வைத்துக்கொள்ளட்டும். அதை நாள்தோறும் அவன் வாழ்நாள் முழுவதும் வாசிக்கட்டும். அதனால், அந்தச் சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், அதன் நீதிமுறைகளையும் நிறைவேற்றுதவன் மூலம் அவன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வான்.

அதனால், அவன் இதயத்தில் இறுமாப்புக்கொண்டு, தன் சகோதரருக்கு மேல் தன்னை உயர்த்திக் கொள்ளாமலும், கட்டளைகளிலிருந்து வலமோ இடமோ பிறழாமலும் இருப்பான் . அப்போது அவனும் அவன் புதல்வர்களும் இஸ்ரயேலில் நெடுநாள் ஆட்சி புரிவர்.

அதிகாரம் 18.

லேவிய குருக்களுக்கும் அனைத்து லேவிய குலத்தாருக்கும் இஸ்ரயேல் மக்களிடையே பங்கும் சொத்துரிமையும் இல்லை. ஆண்டவருக்கெனச் செலுத்தப்படும் எரிபலிகளையும் அவருக்கே உரியவைகளையும் அவர்கள் உண்பார்கள்.

அவர்கள் சகோதரர்கள் நடுவே அவர்களுக்கு உரிமைச்சொத்து இல்லாதிருக்கட்டும். ஆண்டவர் அவர்களுக்கு வாக்களித்தபடி அவரே அவர்களின் உரிமைச் சொத்து.

மக்களிடமிருந்து குருக்களுக்குச் சேரவேண்டிய உரிமம் ஆவது: பலியிட வருவோர் பலியிடப்படும் ஆடு, மாடு இவற்றின் முன்னந்தொடை, தாடைகள், இரைப்பை ஆகியவற்றைக் குருவுக்குக் கொடுக்க வேண்டும்.

தானியம், திராட்சை இரசம், எண்ணெய் இவற்றின் முதற்பலனையும், கத்தரித்த ஆட்டு மயிரின் முதற்பங்கையும் அவனுக்குக் கொடுக்க வேண்டும்.

ஏனெனில், அவனும் அவன் புதல்வர்களும் உன் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் அவர் முன்னிலையில் என்றென்றும் ஊழியம் செய்யும்படி அவர் அவனை உங்களது குலங்கள் அனைத்திலிருந்தும் தேர்ந்து கொண்டார்.

இஸ்ரயேலில் பரவியுள்ள யாதொரு நகரில் வாழும் ஒரு லேவியன் அங்கிருந்து புறப்பட்டு ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்திற்கு விரும்பி வந்தால்,

அங்கே ஆண்டவரின் முன்னிலையில் ஊழியம் செய்யும் லேவியராகிய தன் சகோதரரைப் போல, அவனும் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் ஊழியம் செய்வான்.

அவன் தன் தந்தைவழிச் சொத்தில் வரவேண்டியதை அனுபவிப்பதுமின்றி, தன் ஊழியத்திற்கான பங்கையும் உணவுக்காகப் பெற்றுக்கொள்ளட்டும்.

கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டுக்குள் போனபின், அந்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்களைக் கற்றுக் கொள்ளாதே.

தன் புதல்வனை அல்லது புதல்வியைத் தீ மிதிக்கச் செய்கிறவனும், குறி சொல்கிறவனும், நாள் பார்க்கிறவனும், சகுனங்களை நம்புகிறவனும், சூனியக்காரனும்,

மந்திரவாதியும், ஏவிவிடுகிறவனும், மாயவித்தைக்காரனும், இறந்தவர்களிடம் குறிகேட்கிறவனும் உங்களிடையே இருத்தலாகாது.

ஏனெனில், இவற்றையெல்லாம் செய்கிறவன் ஆண்டவருக்கு அருவருப்பானவன். இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களின் நிமித்தம், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் முன்னிலையினின்று அவனைத் துரத்திவிடுவார்.

கடவுளாகிய ஆண்டவருக்கு நீ முற்றிலும் உண்மையாய் இரு.

ஏனெனில், நீ துரத்திவிடவிருக்கும் இந்த வேற்றினத்தார் குறிசொல்லுகிறவர்களுக்கும், நாள் பார்க்கிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள். அவ்வாறு செயல்பட உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அனுமதிக்கவில்லை.

கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு.

ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று விண்ணப்பித்தபோது,

ஆண்டவர் என்னைநோக்கி, அவர்கள் சொன்னதெல்லாம் சரி என்றார்.

உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான்.

என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பான்.

ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.

ஆண்டவர் சொல்லாத வார்த்தை இன்னதென்று எப்படி நான் அறிவது? என்று நீ உன் மனத்தில் எண்ணலாம்.

ஓர் இறைவாக்கினன் ஆண்டவரின் பெயரால் உரைப்பது நடைபெறாமலும் நிறைவேறாமலும் போனால், அந்த இறைவாக்கினன் தன் எண்ணப்படியே பேசுபவன். அவனுக்கு நீ அஞ்ச வேண்டியதில்லை.

அதிகாரம் 19.

கடவுளாகிய ஆண்டவர் வேற்றினத்தாரை வேரறுத்து, அவர்களின் நாடுகளை உனக்குக் கொடுப்பார். நீ அவற்றை உடைமையாக்கி, அவர்களது நகர்களிலும் வீடுகளிலும் குடியேறுவாய்.

நீ உடைமையாக்கிக்கொள்ளும்படி, உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் நாட்டினிடையே மூன்று நகர்களை உனக்கென ஒதுக்கி வை.

கொலை செய்தவன் எவனும் அங்கே தப்பி ஓடம்படி சாலைகளை அமை. இவ்வாறு, உன் உரிமைச் சொத்தாகுமாறு கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை மூன்று பாகங்களாகப் பிரி.

அங்கே ஓடிப்போவதன் மூலம் உயிர் வாழத்தக்க கொலையாளி யாரெனில், தற்செயலாய் முன்பகை ஏதுமின்றித் தனக்கு அடுத்திருப்பவனைக் கொலைசெய்பவனே.

சான்றாக: ஒருவன் மரம் வெட்டுவதற்காகத் தனக்கு அடுத்திருப்பவனோடு காட்டுக்குள் செல்கிறான். மரத்தை வெட்டுவதற்காகக் கோடரியைத் தன் கையால் ஓங்கும்போது, கோடரியின் இரும்பு கைப்பிடியினின்று கழன்று அடுத்திருப்பவன் மீது விழ அவன் இறந்து போகிறான். அப்போது அப்படிப்பட்டவன் இந்நகர்கள் ஒன்றினுக்குள் தப்பியோடி அங்கே வாழலாம்.

இல்லையெனில் கொலை செய்யப்பட்டவனின் முறை உறவினன், கோப வெறியால் பழிவாங்கும்படி கொலையாளியைப் பின்தொடரும் போது, செல்லும் வழி நீண்டதாக இருந்தால் அவனைப் பிடித்துக் கொன்றுவிட ஏதுவாகும். ஆனால், கொலை செய்யப்பட்டவன் மீது கொலையாளிக்கு முன்பகை இல்லாததால் அவன் சாவுக்குரிய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது உண்மை.

எனவேதான் நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்: மூன்று நகர்களை உனக்கென ஒதுக்கி வை.

நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்றுவதில் நீ கருத்தாய் இருந்து, உன் கடவுளாகிய ஆண்டவர்மேல் அன்புகூர்ந்து, அவரது வழிகளில் என்றும் நடந்தால்,

உன் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு வாக்களித்தபடி, உனக்கு இந்த நாடுகள் அனைத்தையும் கொடுத்து, உன் எல்லைகளை விரிவாக்குவார். அப்போது இன்னும் மூன்று நகர்களை இந்த நகர்களோடு சேர்த்துக்கொள்.

இல்லையெனில், நீ உரிமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் நாட்டில், குற்றமில்லாதவனின் இரத்தம் சிந்தப்படுவதால், உன் மேல் இரத்தப்பழி வரலாம்.

ஆனால், ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனைப் பகைத்து, அவனுக்காகப் பதுங்கியிருந்து, அவனைத் தாக்கி, அவனை வெட்டிச் சாகடித்தபின், இந்த நகர்கள் ஒன்றினுக்குள் ஓடி ஒளிந்தால்,

அவனது நகர்ப் பெரியோர்கள் ஆளனுப்பி, அங்கிருந்து அவனைக் கொண்டுவந்து கொலை செய்யப்பட்டவனின் முறை உறவினனின் கையில் அவனை ஒப்படைப்பர்.

நீ அவனுக்கு இரக்கம் காட்டாதே. குற்றமில்லாதவனின் இரத்தப்பழியை இஸ்ரயேலில் இருந்து துடைத்துவிடு. அப்போது உனக்கு நலமாகும்!

நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் உன் உரிமைச் சொத்தாகிய நாட்டில் முன்னோர்கள் குறித்துள்ள உனக்கு அடுத்திருப்பவனின் எல்லைக் கல்லை நகர்த்தி வைக்காதே.

ஒருவனது எந்தக் குற்றத்தையும் எந்தப் பழிபாவச்செயலையும் உறுதி செய்ய, ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அது உறுதிசெய்யப்பட வேண்டும்.

ஒருவன்மேல் குற்றம் சுமத்தும்படி ஒரு பொய்ச்சாட்சி முன்வந்தால்,

வழக்காடுகிற இருவரும் ஆண்டவரின் திருமுன் அன்றைய நாளில் ஊழியம் புரியும் குருக்களிடமும் நீதிபதிகளிடமும் வரட்டும்.

நீதிபதிகள் தீர விசாரிப்பர். சான்று சொன்னவன் பொய்ச்சாட்சி என்றும், தன் சகோதரனை அநியாயமாகக் குற்றம் சாட்டியுள்ளான் என்றும் அறிந்தால்,

அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்ததுபோலவே, அவனுக்குச் செய்யுங்கள். இவ்வாறு, உங்கள் நடுவிலிருந்து தீமையை அகற்றுங்கள்.

அப்போது அதைக்கேட்டு மற்றவர்களும் அஞ்சுவர். அத்தகைய தீச்செயலை உங்களிடையே எவரும் செய்யத் துணியார்.

நீ அவனுக்கு இரக்கம் காட்டாதே: உயிருக்கு உயிர்: கண்ணுக்குக் கண்: பல்லுக்குப் பல்: கைக்குக் கை: காலுக்குக் கால்!

அதிகாரம் 20.

நீ உன் பகைவருக்கு எதிராகப் போருக்குப் போகையில், உன்னிடம் உள்ளதைவிட மிகுதியான குதிரைகளையும், தேர்களையும், பெரும் படையையும் நீ கண்டால், அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில், எகிப்திலிருந்து உன்னை வெளியே கூட்டிவந்த உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு உள்ளார்.

நீ போரிடத் தொடங்குமுன், குருக்கள் முன்வந்து வீரர்களிடம் கூற வேண்டியது:

இஸ்ரயேலே கேள்! இன்று நீங்கள் உங்கள் பகைவர்களுக்கு எதிராகப் போர்புரிய முன்வந்துள்ளீர்கள். உங்கள் இதயம் சோர்ந்து போக வேண்டாம்: அஞ்ச வேண்டாம்: கலங்க வேண்டாம்: அவர்களைப் பார்த்துத் தத்தளிக்கவும் வேண்டாம்.

ஏனெனில், உங்களுக்காக உங்கள் பகைவருக்கு எதிராகப் போர்புரியவும், உங்களைக் காப்பாற்றவும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களோடு செல்கிறார்.

அதன்பின், படைத்தலைவர்கள் வீரர்களிடம் கூறவேண்டியது: புது வீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால், வேறு ஒருவன் அதை அர்ப்பணம் செய்ய வேண்டியிருக்கும்.

திராட்சைத் தோட்டம் அமைத்து அதன் பயனை அனுபவிக்காதவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால், வேறு ஒருவன் அதன் பயனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

ஒரு பெண்ணை மண உறுதிப்பாடு செய்தும் அவளோடு கூடி வாழாதவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால் வேறு ஒருவன் அவளை மணக்க வேண்டியிருக்கும்.

மீண்டும் படைத்தலைவர்கள் வீரர்களிடம் கூறவேண்டியது: உங்களில் அச்சமுற்று உள்ளம் சோர்ந்திருப்பவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும். இல்லையெனில், அவன் தோழனும் அவனைப்போல் ஊக்கம் இழந்து விடுவான்.

இவ்வாறு படைத்தலைவர்கள் வீரர்களிடம் பேசி முடித்தபின், அவர்களை நடத்திச் செல்லும் படைத்தளபதிகளை நியமிக்கட்டும்.

ஒரு நகரோடு போரிட நீ அதை நெருங்கும் போது, அது சரணடையுமாறு முயற்சி செய்.

அது சரணடைந்து, தன் வாயில்களை உனக்குத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லாரும் உனக்கு அடிமைகளாகி உனக்குப் பணிவிடை செய்வர்.

அது உன்னிடம் சரணடையாது உனக்கு எதிராகப் போர் தொடுத்தால், நீ அதை முற்றுகையிடு.

கடவுளாகிய ஆண்டவர் அதை உன்கையில் ஒப்படைக்கும்போது, அதிலுள்ள எல்லா ஆண்களையும் வாளால் கொன்றுவிடு.

ஆனால், பெண்களையும் சிறுவர்களையும், ஆடு மாடுகளையும் நகரிலுள்ள அனைத்தையும் உன் கொள்ளைப் பொருளாகக் கொள். உன் கடவுளாகிய ஆண்டவர் எதிரியிடமிருந்து உனக்குக் கொடுத்துள்ள கொள்ளைப் பொருள்களை நீ அனுபவிக்கலாம்.

இந்த நாடுகளைச் சாராத தொலையிலுள்ள எல்லா நகர்களுக்கும் அவ்வாறே செய்வாய்.

ஆனால், இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாபமல் விடாதே.

இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர் மற்றும் எபூசியர் அனைவரையும் உன் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி அழித்தொழிப்பாய்.

அதனால், தங்கள் தெய்வங்களுக்காகச் செய்கின்ற அருவருக்கத்தக்கவற்றை உனக்குக் கற்றுக்கொடுத்து, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்ய உன்னைத் தூண்டமாட்டார்கள்.

ஒரு நகருக்கு எதிராகப் போர் தொடுத்து நீ அதை நெடுநாள் முற்றுகையிட்டுக் கைப்பற்றினால், அதிலுள்ள மரங்களைக் கோடரியால் வெட்டி அழிக்காதே. நீங்கள் அவற்றின் பழங்களை உண்ணலாம். ஆனால் அவற்றை வெட்டலாகாது. வயல்வெளி மரங்கள் உன்னை முற்றுகையிட வரும் மனிதர் அல்லவே!

உணவுக்கு உதவாத மரங்கள் என்று உனக்குத் தெரிபவற்றை மட்டும் வெட்டி அழிக்கலாம். உன்னோடு போர் புரியும் நகருக்கு எதிராக அதை வீழ்த்தும்வரை அவற்றைக் கொண்டு முற்றுகைக் கொத்தளங்களை எழுப்பலாம்.

அதிகாரம் 21.

நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுத்த மண்ணில் திறந்த வெளியில் ஒருவன் கொலையுண்டு கிடக்க, அவனைக் கொலைசெய்தவன் யாரென்று தெரியாதிருந்தால்,

தலைவர்களும் நீதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலையுண்டு கிடப்பவனைச் சுற்றிலுமுள்ள நகர்களுக்கு உள்ள தொலைவு எவ்வளவு என்று அளப்பார்களாக.

கொலையுண்டு கிடப்பவனுக்கு மிக அருகிலுள்ள நகர்த் தலைவர்கள், வேலையில் பழக்கப்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஓர் இளம் பசுவை மந்தையிலிருந்து பிடிப்பர்.

பின்னர், உழப்படாததும் விதைக்கப்படாததும் நீரோடுவதுமான பள்ளத்தாக்கிற்கு அந்தக் கிடாரியை அந்நகர்த்தலைவர்கள் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கில் அதன் கழுத்தை முறிப்பர்.

அப்பொழுது, தனக்கு ஊழியம் செய்யவும், ஆண்டவர் பெயரால் ஆசி வழங்கவும், உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்ட லேவியின் புதல்வர்களாகிய குருக்கள் முன்வர வேண்டும். ஏனெனில், அவர்களது வாக்கின்படியே எல்லா வழக்குகளும் எல்லாத் தடியடிகளும் தீர்க்கப்படவேண்டும்.

அப்போது கொலையுண்டவனுக்கு மிக அருகில் உள்ள நகர்த் தலைவர்கள் எல்லோரும் பள்ளத்தாக்கில் கழுத்து முறிக்கப்பட்ட கிடாரியின் மீது அவர்கள் கைகளைக் கழுவி,

உரத்துச் சொல்ல வேண்டியது: எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தியதுமில்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதுமில்லை.

ஆண்டவரே, நீர் மீட்ட உம் மக்களாகிய இஸ்ரயேலை மன்னித்தருளும். குற்றமற்றவனின் இரத்தத்தைச் சிந்தினபழியை உம்மக்கள் இஸ்ரயேல்மேல் சுமத்தாதேயும். இரத்தப் பழியிலிருந்து அவர்களை விடுவித்தருளும்.

இவ்வாறு குற்றமற்றவனின் இரத்தத்தைச் சிந்தின பழியை உன்னிடமிருந்து நீக்கி விடுவாய். ஏனெனில் ஆண்டவரின் முன்னிலையில் நேரியதைச் செய்துள்ளாய்.

உன் பகைவர்களுக்கு எதிராகப் போர் புரியப்போகையில், உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கையில் ஒப்படைப்பார். நீ அவர்களைச் சிறைப்பிடிப்பாய்.

அப்போது, சிறைப்பட்டவர்களில் அழகிய தோற்றமுடைய ஒரு பெண்ணைக் கண்டு, அவள்மேல் காதல்கொண்டு, அவளை உன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால்,

அவளை உன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போ. அவள் தன் தலையை மழித்து, நகங்களை வெட்டிக்கொள்வாள்.

அவள் சிறைக் கைதியின் ஆடையைக் கழற்றிவிட்டு, உன்வீட்டில் தங்கி, ஒரு மாதகாலம் தன் தந்தையையும் தாயையும் நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். அதன்பின் நீ அவளோடு கூடி அவள் கணவனாவாய்: அவள் உனக்கு மனைவியாவாள்.

அவள்மேல் உனக்கு விருப்பமில்லாமற் போனால், அவள் விருப்பம் போல் அவளைப் போகவிடு. நீ அவளைக் கெடுத்துவிட்டதால் பணத்துக்கு விற்கவோ அடிமைபோல் நடத்தவோ வேண்டாம்.

இரண்டு மனைவியரைக் கொண்ட ஒருவன் ஒருத்தியின்மேல் விருப்பாகவும், மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்கும்போது, இருவருமே அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கையில், வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வன் தலைப்பேறாக இருப்பானாயின்,

அவன் தனக்குண்டான சொத்தைத் தன் புதல்வர்களுக்குப் பங்கிடும் நாளில், தலைச்சனுக்குரிய உரிமையைத் தலைச்சனாகிய வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனுக்கன்றி, விரும்ப்பட்ட பெண்ணின் புதல்வனுக்குக் கொடுக்கக்கூடாது.

வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனையே தலைச்சனாக ஏற்றுக் கொண்டு, தன்னிடம் உள்ள சொத்துக்களில் அவனுக்கு இரண்டு பங்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் அவனே தன் தந்தையின் ஆற்றலது முதற் கனி. தலைச்சனுக்குரிய உரிமை அவனையே சாரும்.

ஒருவனுடைய புதல்வன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய், தந்தை சொல்லையோ தாய் சொல்லையோ கேளாமல், அவர்களால் தண்டிக்கப்பட்ட பின்பும் அடங்காமல் போனால்,

தந்தையும் தாயும் அவனைப் பிடித்து, அவனது நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கொண்டு போவர்.

எங்கள் மகனாகிய இவன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய் இருக்கிறான்: எங்கள் சொல் கேட்பதில்லை: பெருந்தீனிக்காரனும் குடிவெறியனுமாய் இருக்கிறான் என்று நகர்த் தலைவர்களிடம் அவர்கள் சொல்ல வேண்டும்.

உடனே, அந்நகரத்து மனிதர் எல்லோரும் அவனைக் கல்லால் எறிவர்: அவனும் செத்தொழிவான். இவ்வாறு, உன்னிடமிருந்து தீமையை அகற்று. அதைக் கேட்டு இஸ்ரயேலர் எல்லோரும் அஞ்சுவர்.

சாவுக்கு ஏதுவான பாவம் செய்த மனிதன் சாகடிக்கப்பட்டபின் அவனது பிணத்தை ஒரு மரத்திலே தொங்கவிடு,

ஆனால் அவன் பிணம் இரவில் மரத்தில் தொங்கக்கூடாது. அவனை நீ அன்றே அடக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டைத் தீட்டுப் படுத்தாதே.

அதிகாரம் 22.

உன் இனத்தவன் ஒருவனின் ஆடோ மாடோ வழிதவறித் திரிவதைக் கண்டும், அதைக் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதை உன் இனத்தானிடம் திருப்பிக் கொண்டு போ:

உனக்கு அடுத்திருப்பவன் உன்னிடமிருந்து வெகு தொலையில் இருந்தால், அல்லது அவன் யாரென்று நீ அறியாதிருந்தால், அதை உன் வீட்டுக்குள் கொண்டுபோய் உன்னோடு வைத்துக்கொள். உனக்கு அடுத்திருப்பவன் அதைத் தேடி வரும்பொழுது அதை அவனிடம் திரும்பக் கொடு.

உனக்கு அடுத்திருப்பவனிடமிருந்து காணாமல் போன கழுதைக்கோ, ஆடைக்கோ வேறு எந்தப் பொருளுக்கோ அவ்விதமே செய். நீ அவற்றைக் கண்டும் காணாதவன் போல் இருந்துவிடாதே.

உனக்கு அடுத்திருப்பவனின் கழுதையோ மாடோ வழியில் விழுந்து கிடப்பதைக் கண்டும் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதைத் தூக்கிவிட அவனுக்கு உதவிசெய்.

ஆண்களின் ஆடைகளைப் பெண்கள் அணியலாகாது. பெண்களின் உடைகளை ஆண்கள் உடுத்தலாகாது. ஏனெனில் அப்படிச் செய்பவர்கள் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவர்கள்.

வழியோரமாய், மரத்திலோ தரையிலோ, குஞ்சுகள் அல்லது முட்டைகள் உள்ள பறவைக்கூட்டையும், அந்தக் குஞ்சுகள் அல்லது முட்டைகள்மேல் தாய் உட்கார்ந்து கொண்டிருப்பதையும் கண்டால், குஞ்சுகளோடு தாயைப் பிடிக்காதே.

தாயைப் போகவிடு. குஞ்சுகளை உனக்கென எடுத்துக்கொள். அப்போது உனக்கு நலமாகும். நீ நெடுநாள் வாழ்வாய்.

நீ புது வீட்டைக் கட்டும்போது உன் வீட்டு மாடியைச் சுற்றிக் கைப்பிடிச் சுவரைக் கட்டு. இல்லையெனில், ஒருவன் மாடியிலிருந்து விழுந்தால், விழுந்தவனின் இரத்தப்பழி உன் வீட்டின்மீது வரும்.

திராட்சைத் தோட்டத்தில் வேறு விதைகளை விதைக்காதே. அப்படிச் செய்தால், நீ விதைத்தவற்றின் பயிரையும் திராட்சைத் தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.

மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழலாகாது.

ஆட்டுமயிரும் நூலும் கலந்து நெய்யப்பட்ட ஆடையை உடுத்தாதே.

உன்னை நீ மூடிக்கொள்ளும் மேற்போர்வையின் நான்கு மூலைகளிலும் தொங்கல்களை அமைத்துக்கொள்.

ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளை வெறுத்து,

அவள் மீது அவதூறுசொல்லி, அவளது பெயரைக் கெடுத்து, நான் இந்தப்பெண்ணை மணம் முடித்தேன்: ஆனால் அவளோடு உறவுகொண்டபோது, அவள் கன்னியல்ல என்று கண்டுகொண்டேன் என்று கூறினால்,

அப்பெண்ணின் தந்தையும் தாயும் அவளது கன்னிமையின் அடையாளத்தை எடுத்துக்கொண்டு, அவளை நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கூட்டி வருவார்கள்.

அப்போது, அப்பெண்ணின் தந்தை தலைவர்களிடம், என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன்: அவனோ அவளை வெறுக்கிறாள்.

அத்தோடு, உன் மகளிடம் கன்னிமையைக் காணவில்லை என்று கூறி அவளைப் பற்றி அவதூறு சொல்லுகிறான்: இதோ என் மகளின் கன்னிமைக்கான சான்று என்று சொல்லுவான். பின்பு அவர்கள் நகர்த் தலைவர்களின் முன்னர் அந்தத் துணியை விரிப்பார்கள்.

அப்போது அந்நகர்த் தலைவர்கள் அம்மனிதனைப் பிடித்துத் தண்டிப்பார்கள்.

பின்னர், அவனுக்கு நூறு வெள்ளிக் காசுகள் தண்டம் விதித்து, அதைப் பெண்ணின் தந்தையிடம் கொடுப்பார்கள். ஏனெனில், இஸ்ரயேலின் கன்னி ஒருத்தியின் மேல் அவன் அவதூறு கூறியுள்ளான். அவளே இவனுக்கு மனைவியாக இருப்பாள். அவன் வாழ்நாள் முழுவதும் அவளைத் தள்ளிவிட முடியாது.

ஆனால், அப்பெண்ணிடம் கன்னிமை காணப்படவில்லை என்பது உண்மையானால்,

அந்தப் பெண்ணை அவள் தந்தையின் வீட்டு வாயிலுக்கு வெளியே கொண்டுவந்து அவளது நகரின் மனிதர் அவளைக் கல்லால் எறிவர். அவளும் சாவாள். ஏனெனில், அவள் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போதே வேசித்தனம் பண்ணி இஸ்ரயேலுக்கு இழுக்கானதைச் செய்தாள். இவ்வாறு தீமையை உன்னிடமிருந்து அகற்று.

ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு படுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவனும், இருவரும் சாவர். இவ்வாறு இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்று.

மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை நகரில் ஒருவன் சந்தித்து அவளோடு உறவுகொண்டால்,

அவர்கள் இருவரையும் நகர் வாயிலுக்குக் கொண்டு போய்க் கல்லால் எறிவர்: அவர்களும் சாவர். அவள் நகரில் இருந்தும் உதவிக்காகக் கூக்குரலிடாததாலும், அவன் மற்றொருவனின் மனைவியைக் கெடுத்ததாலும் அவர்கள் சாவர். இவ்வாறு உன்னிடமிருந்து தீமையை அகற்று.

ஆனால், மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை வயல்வெளியில் ஒருவன் கண்டு அவளைப் பலவந்தமாகப் பிடித்து அவளோடு உறவுகொண்டால், அவளோடு உறவுகொண்ட அம்மனிதன் மட்டுமே சாகட்டும்.

அந்தப் பெண்ணுக்கு ஒரு தீங்கும் செய்ய வேண்டாம். சாவுக்கு ஏதுவான பாவம் எதுவும் அவள் செய்யவில்லை. தனக்கு அடுத்திருப்பவனை ஒருவன் தாக்கி அவனைக் கொல்வது போலத்தான் இதுவும்.

ஏனெனில், அவன் அவளை வயல்வெளியில் மேற்கொண்டான். மணமாகியும் கன்னிமை கழியாத அவள் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்ற எவரும் இல்லை.

மணமாகாத ஒரு கன்னிப் பெண்ணை ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தப்படுத்தி, அவளோடு உறவுகொண்டது கண்டுபிடிக்கப்பட்டால்,

அப்பெண்ணின் தந்தைக்கு அவளோடு உறவு கொண்டவன் ஜம்பது வெள்ளிக்காசுகள் தரவேண்டும். அவன் அவளைக் கெடுத்துவிட்டதால் அவளை மனைவியாக்கிக்கொள்ள வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அவளை மணமுறிவு செய்யமுடியாது.

எவனும் தன் தந்தையின் மனைவியோடு கூடலாகாது: தன் தந்தையின் படுக்கையை இழிபுபடுத்தலாகாது.

அதிகாரம் 23.

விதையடிக்கப்பட்டவனும் ஆண் குறி அறுக்கப்பட்டவனும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது.

வேசித்தனத்தால் பிறந்தவன், அவனது பத்தாம் தலைமுறை வரைக்கும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது.

அம்மோனியரும் மோவாபியரும், அவர்களது பத்தாம் தலைமுறைவரைக்கும், அவர்களைச் சார்ந்த எவரும் எக்காலத்திலும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையக்கூடாது.

ஏனெனில், நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வரும்வழியில் அவர்கள் அப்பங்களோடும் தண்ணீரோடும் உங்களை எதிர்கொள்ளவில்லை. அத்தோடு, ஆராம் நகராயிலுள்ள பெத்தோர் எனும் ஊரிலிருந்து பெகோரின் மகன் பிலயாமை உன்னைச் சபிக்கும்படி கூலிக்கு அமர்த்தினார்கள்.

ஆயினும், உன் கடவுளாகிய ஆண்டவர் பிலயாமுக்குச் செவிகொடுக்கமனமின்றி, சாபத்தை உனக்கு ஆசியாக மாற்றினார். ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்மீது அன்புகூர்கிறார்.

வாழ்நாள் எல்லாம் நீ அவர்களது நல்லுறவையும் நலத்தையும் நாடாதே.

ஏதோமியனை வெறுக்காதே: ஏனெனில் அவன் உன் சகோதரன். எகிப்தியனை வெறுக்காதே: ஏனெனில் அவன் நாட்டில் நீ அன்னியனாய் வாழ்ந்தாய்.

அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் மூன்றாம் தலைமுறை தொடங்கி ஆண்டவரின் திருப்பேரவைக்குள் வரலாம்.

நீ உன் பகைவருக்கு எதிராகச் சென்று பாளையம் இறங்கியிருக்கையில் எல்லாத் தீச்செயல்களிலிருந்தும் விலகியிரு.

உங்களில் ஒருவன் இரவில் நிகழ்ந்த செயலால் தீட்டுப்பட்டிருந்தால், அவன் பாளையத்திற்கு வெளியே செல்லட்டும். பாளையத்திற்குள்ளே வரக்கூடாது.

மாலையானதும் நீரில் குளித்து கதிரவன் மறைந்ததும் அவன் பாளையத்துக்குள் வரட்டும்.

நீ வெளிக்குச் செல்வதற்கெனப் பாளையத்திற்கு வெளியே ஓர் இடம் இருக்கட்டும்.

படைக்கலன்களோடு ஒரு மண்வெட்டியும் வைத்துக்கொள். நீ வெளிக்குச் செல்கையில் அதனால் ஒரு குழி தோண்டு. நீ கழித்ததை அதனால் மூடிவிட்டுத் திரும்பு.

ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைக் காக்கவும் உன் பகைவர்களை உன்னிடம் ஒப்படைக்கவும் பாளையத்துக்குள்ளே உலா வருகிறார். அவர் உன்னிடத்தில் கழிவைக்கண்டு உன்னைவிட்டு விலகாதவாறு உன் பாளையம் தூய்மையாய் இருக்கட்டும்.

தம் தலைவனிடமிருந்து தப்பிவந்து உன்னிடம் அடைக்கலம் தேடியுள்ள அடிமைகளை அவனிடம் ஒப்படைக்காதே.

குடியிருப்பு ஒன்றில் தமக்குப் பிடித்தமானதைத் தேர்ந்து கொண்டு அவர்கள் உன்னோடு உன்னிடையே இருப்பாராக. நீ அவர்களைக் கொடுமைப்படுத்தாதே.

இஸ்ரயேலின் புதல்வியருள் எவளும் விலைமகளாய் இருத்தலாகாது. இஸ்ரயேலின் புதல்வர் எவனும் விலைமகனாய் இருத்தலாகாது.

விலைமாதின் வாடகையையோ, விலை மகளின் கூலியையோ எவ்வித நேர்ச்சையின் பொருட்டும் உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்திற்குள் கொண்டு வராதே. ஏனெனில், இவை இரண்டுமே அவருக்கு அருவருப்பானவை.

இனத்தவனிடமிருந்து வட்டி வாங்காதே. பணத்துக்கோ, தானியத்துக்கோ, கடனாகக் கொடுத்த எந்தப் பொருளுக்கோ வட்டி வாங்காதே.

வேற்று இனத்தானிடமிருந்து நீ வட்டி வாங்கலாம். ஆனால், நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில், நீ மேற்கொள்ளும் செயல்களில் எல்லாம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கும் பொருட்டு உன் இனத்தானிடம் வட்டி வாங்காதே.

கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சை செய்திருந்தால், அதைச் செலுத்துவதற்குக் காலந்தாழ்த்தாதே. ஏனெனில், அது உனக்குப் பாவமாகும். உன் கடவுளாகிய ஆண்டவரும் அதை உன்னிடம் கேட்பார் என்பது உறுதி.

ஆனால் நேர்ச்சை செய்யாதிருந்தால் அது உனக்குப் பாவமாகாது.

உனது வாயால் வாக்களித்து, உன் சொந்த விருப்பத்தினால் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு நேர்ச்சை செய்வதால் உன்வாயால் சொல்வதைச் செயலில் காட்டக் கருத்தாயிரு.

உனக்கு அடுத்திருப்பவனின் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்றால், உன் விருப்பம்போல் திராட்சையை உண்ணலாம்: ஆனால் உன் கூடையில் எதையும் வைத்தலாகாது.

உனக்கு அடுத்திருப்பவனுடைய விளை நிலத்திற்குச் சென்றால், உன்கையால் கதிர்களைக் கொய்யலாம்: ஆனால் கதிர் அரிவாளை உனக்கு அடுத்திருப்பவனின் கதிர்களில் வைக்காதே.

அதிகாரம் 24.

ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான்.

அவள் அவனது வீட்டைவிட்டு வெளியே சென்று வேறொருவனுக்கு மனைவி ஆகிறாள்.

இரண்டாம் கணவனும் அவளை வெறுத்து, முறிவுச்சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான், அல்லது அவளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொண்ட இரண்டாம் கணவன் இறந்துவிடுகிறான்.

இந்நிலையில், அவள் தீட்டுப்பட்டுவிட்ட காரணத்தால், அவளைத் தள்ளிவைத்த முதல் கணவன் அவளை மீண்டும் தன் மனைவியாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஏனெனில் அது ஆண்டவர் முன்னிலையில் வெறுப்பானதாகும். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டை நீ பாவத்துக்கு உள்ளாக்காதே!

ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாகத் திருமணம் செய்திருந்தால், அவன் போருக்குப் போக வேண்டாம். அவன்மீது யாதொரு பொறுப்பும் சுமத்தப்படலாகாது. அவன் ஓராண்டு காலம் எவ்வித இடையூறுமின்றித் தன்வீட்டில் இருந்துகொண்டு தன் மனைவியை மகிழ்விப்பான்.

மாவரைக்கும் கல்லின் கீழ்க்கல்லையாவது மேற்கல்லையாவது அடகாக வாங்காதே. அது அவன் மனித உயிரை அடகாக வாங்குவது போலாகும்.

இஸ்ரயேலின் மக்களாகிய தன் இனத்தாருள் ஒருவரைக் கடத்திக் கொண்டு போய் அவரை அடிமையாக நடத்துவதாக அல்லது விற்பதாக ஒருவன் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தக் கடத்தல்காரன் சாகட்டும். இவ்வாறு உன்னிடமிருந்து தீமையை அகற்று.

தொழுநோயைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. லேவிய குருக்கள் உனக்குக் கற்பிப்பதுபோல் அனைத்தையும் செய்வதில் மிகக் கவனமாயிரு. நான் அவர்களுக்குக் கட்டளையிட்டுள்ளவாறு செய்வதில் கருத்தாயிரு.

எகிப்திலிருந்து நீ புறப்பட்டு வரும் வழியில் உன் கடவுளாகிய ஆண்டவர் மிரியாமுக்குச் செய்ததை நினைவில இருத்து.

உனக்கு அடுத்திருப்பவருக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அதற்க அடகாக எதையும் வாங்க அவரது வீட்டினுள் நுழையாதே.

வெளியே நில். உன்னிடம் கடன் வாங்கியவர், வெளியே உன்னிடம் அடகைக் கொண்டுவரட்டும்.

அவர் வறியவராயின், நீ அந்த அடகை வைத்துக்கொண்டு தூங்கச் செல்லாதே.

மாறாக, கதிரவன் மறைவதற்குள் அந்த அடகை அவரிடம் நீ திருப்பிக்கொடுத்தாக வேண்டும். அதனால், அவர் தம் மேலாடையை விரித்துப் படுக்கும்போது உனக்கு ஆசி வழங்குவார். உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீ ஏற்புடையவன் ஆவாய்.

வறியவரும் எளியவருமான கூலியாள்கள், உன் இனத்தாராயினும் சரி அல்லது உன்நாட்டில் உன் நகர்வாயிலுக்குள் உள்ள அன்னியராயினும் சரி, அவரைக் கொடுமைப்படுத்தாதே.

அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்துவிடு. கதிரவன் மறையுமுன்னே கொடு. ஏனெனில் அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது. இல்லையெனில், உனக்கெதிராக ஆண்டவரை நோக்கி முறையிடுவார். அப்போது அது உனக்குப் பாவமாகும்.

பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.

அன்னியர் அல்லது அனாதைக்கு உரிய நீதியைப் புரட்டாதே. கைம்பெண்ணின் ஆடையை அடகாக வாங்காதே.

எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததையும், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை விடுவித்ததையும் நீ நினைவில் இருத்தி, இவற்றைச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

வயலில், விளைச்சல் அறுவடை செய்யும்போது, அரிக்கட்டினை மறந்து வயலிலே விட்டு வந்தால், அதை எடுக்கத் திரும்பிப் போகாதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. அப்போது நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.

நீ உன் ஒலிவ மரத்தை அடித்து உதிர்க்கும்போது, உதிராததைப் பறிக்காதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு.

நீ உன் திராட்சைத் தோட்டக் கனிகளைச் சேகரித்தபின், பொறுக்காமல் கிடப்பதை எடுக்கச் செல்லாதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு.

எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததை நினைவிலிருத்தி, இவற்றைச் செய்யும்படி, நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

அதிகாரம் 25.

மனிதரிடையே வழக்கு ஏற்பட்டு அவர்கள் நீதிமன்றத்தை நாடும்பொழுது, நீதிபதிகள் நேர்மையாளரை நேர்மையாளர் என்றும், குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்ப்பிடுவர்.

குற்றவாளி அடிபட வேண்டியவனென்றால், நீதிபதி அவனைப் படுக்கச்செய்து தம் முன்னிலையில் அடிக்கச் செய்வார். அவனது குற்றத்திற்கு ஏற்ப அடிகளின் எண்ணிக்கையும் இருக்கும்.

அவனுக்கு நாற்பது அடிகள் கொடுக்கலாம்: அதற்குமேல் வேண்டாம். அதற்குமேல் அடித்தால் உன் கண்களுக்கு முன்பாக உன் இனத்தான் மானமிழந்தவன் ஆவான்.

போர் அடிக்கும் மாட்டின் வாயைக் கட்டாதே.

உடன்பிறந்தோர் சேர்ந்து வாழ்கையில், அவர்களில் ஒருவன் மகப்பேறின்றி இறந்துபோனால், இறந்தவனின் மனைவி குடும்பத்திற்கு வெளியே அன்னியனுக்கு மனைவியாக வேண்டாம். அவள் கொழுந்தனே அவளைத் தன் மனைவியாக ஏற்று, அவளோடு கூடிவாழ்ந்து, கணவனின் உடன்பிறந்தோன் செய்ய வேண்டிய கடமையை அவளுக்குச் செய்யட்டும்.

அவளுக்குப் பிறக்கும் ஆண் தலைப்பேறு இறந்துபோன சகோதரனின் பெயரிலேயே வளரட்டும். இதனால் அவன் பெயர் இஸ்ரயேலிலிருந்து அற்றுப்போகாது.

இறந்தவனின் உடன்பிறந்தான் தன் அண்ணியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனில், அவள் நகர்வாயிலில் உள்ள தலைவர்களிடம் சென்று, தன் அண்ணன் பெயரை இஸ்ரயேலில் நிலைநிறுத்தும்படி ஒரு கணவனின் தம்பிக்குரிய கடமையை எனக்குச் செய்ய என் கொழுந்தனுக்கு விருப்பமில்லை என்று கூறுவாள்.

அப்போது நகர்த் தலைவர்கள் அவனைக் கூப்பிட்டு அவனோடு பேசுவர். அவனோ விடாப்படியாக அவளை ஏற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை என்று கூறினால்

அவன் அண்ணி அவனை அணுகி, தலைவர்களின் கண்முன்பாக, அவன் காலிலுள்ள மிதியடிகளைக் கழற்றி, அவன் முகத்தில் துப்பி, தன் சகோதரனின் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படும் என்று கூறுவாள்.

இஸ்ரயேலில் அவளது பெயர் மிதியடிகழற்றப்பட்டவனின் வீடு என்றழைக்கப்படும்.

ஆண்கள் ஒருவரோடொருவர் சண்டையிடுகையில், ஒருவனுடைய மனைவி, தன் கணவனை, அவனை அடிப்பவனின் கையிலிருந்து விடுவிப்பதற்காக வந்து, கையை நீட்டி, மற்றவனது ஆண்குறியைப் பிடிப்பாளாகில்,

அவளுடைய கையைத் துண்டிப்பாய். அவளுக்கு இரக்கம் காட்டாதே.

பெரியதும் சிறியதுமான ஏமாற்று எடைக்கற்களை உன் பையில் வைத்திருக்காதே.

பெரியதும் சிறியதுமான ஏமாற்று முகத்தல் அளவைகளை உன் வீட்டில் வைத்திருக்காதே.

நிறைவான நேர்மையான எடைக்கற்கள் உன்னிடம் இருக்கட்டும். நிறைவான நேர்மையான முகத்தல் அளவைகள் உன்னிடம் இருக்கட்டும். அதனால், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் உன் நாள்கள் நீடித்திருக்கும்: நீ நெடுநாள் வாழ்வாய்:

மாறாக, மேற்குறிப்பிட்டவற்றில் நேர்மையற்று நடப்போர் அனைவரும் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவர்.

நீ எகிப்திலிருந்து புறப்பட்டு வருகையில் அமலேக்கு உனக்குச் செய்ததை நினைவில் இருத்து.

நீ களைத்துச் சோர்ந்திருக்கையில் வழியிலே அவன் உன்னை எதிர்த்து, உன் பின்னால் வலுவற்றவர்களை வெட்டி வீழ்த்தினான். ஏனெனில் அவன் கடவுளுக்கு அஞ்சவில்லை.

ஆகவே, உன் கடவுளாகிய ஆண்டவர், உனது உரிமைச் சொத்தாக உடைமையாக்கிக் கொள்ளுமாறு உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டைச் சுற்றியுள்ள பகைவர் அனைவரையும் உனக்குக் கீழ்ப்படுத்தி, உனக்கு ஓய்வு தரும்போது, அமலேக்கின் நினைவு வானத்தின் கீழ் இல்லாதவாறு அழிக்க வேண்டும். இதை மறந்துவிடாதே!

அதிகாரம் 26.

உனது உரிமைச்சொத்தாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குள் சென்று, அதை உன் உடைமையாக்கி, அதில் நீ குடியேறும்போது,

அந்த நாட்டின் நிலத்து முதற்பலன் அனைத்தையும் எடுத்துக்கூடையில் வைத்து, உன் கடவுளாகிய ஆண்டவர் தம் பெயர் விளங்குமாறு தேர்ந்து கொள்ளும் இடத்திற்குக் கொண்டுபோ.

அன்றைய நாளில் அங்கு பணியில் இருக்கும் குருவிடம் சென்று அவரை நோக்கி, எங்களுக்குக் கொடுப்பதாக எங்கள் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் வந்து சேர்ந்துள்ளேன் என எம் கடவுளாகிய ஆண்டவர்முன் இன்று அறிக்கையிடுகிறேன் என்று சொல்.

அப்போது, குரு அந்தக் கூடையை உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார்.

நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார்.

எகிப்தியர் எங்களை ஒடுக்கினார்: துன்புறுத்தினர்: கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர்.

அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார்.

தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.

அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார்.

எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.

பின்னர், நீயும் லேவியரும், உன்னோடு உள்ள அன்னியரும், கடவுளாகிய ஆண்டவர் உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த அனைத்து நன்மைகளை முன்னிட்டு அக்களியுங்கள்.

பத்திலொரு பகுதி செலுத்தும் ஆண்டாகிய மூன்றாம் ஆண்டில், அவ்வாண்டின் விளைச்சலில் பத்திலொரு பாகத்தை, லேவியருக்கும், அன்னியருக்கும், அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் கொடு. அதனால் அவர்கள் உன் வாயில்களுக்குள்ளே உண்டு நிறைவு அடைவர்.

அதன்பின், நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிவிக்க வேண்டியது: நீர் எனக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி, தூய பகுதியை என் வீட்டிலிருந்து எடுத்து அவற்றை லேவியருக்கும், அன்னியருக்கும், அனாதைக்கும், கைம்பெண்ணுக்கும் கொடுத்துள்ளேன். உம் கட்டளைகளை நான் மீறவில்லை, அவைகளை நான் மறக்கவுமில்லை.

எனது துயர நாளில் அதிலிருந்து உண்டதுமில்லை: தீட்டான போது அதிலிருந்து எடுக்கவுமில்லை: இழவுக்காக அதிலிருந்து கொடுக்கவும் இல்லை. என் கடவுளாகிய ஆண்டவர் குரலுக்குக் கீழ்ப்படிந்து, நீர் எனக்குக் கட்டளையிட்டபடி அனைத்தையும் செய்துள்ளேன்.

நீர் உமது தூய உறைவிடமாகிய விண்ணிலிருந்து கண்ணோக்கி, நீர் எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கூறியபடி உம் மக்களாகிய எங்களுக்கும் எங்களுக்குக் கொடுத்துள்ள பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்கும் ஆசிவழங்குவீராக .

இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு.

ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும் உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும், கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாகவும், அவர் குரலுக்குச் செவி கொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.

நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும்,

அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.

அதிகாரம் 27.

மோசே இஸ்ரயேலின் தலைவர்களோடு சேர்ந்து மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: இன்று நான் உங்களுக்கு விதிக்கும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள்.

நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நுழையும் நாளில், பெரிய கற்களை நாட்டி, அவற்றின்மேல் சாந்து பூசுங்கள்.

உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தது போல், உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்குள் நீங்கள் நுழையுமாறு கடந்து சென்றதும், அக்கற்களின் மீது திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் எழுதிவையுங்கள்.

நீங்கள் யோர்தானைக் கடந்து சென்றதும், நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டது போல, இத்தகைய கற்களை ஏபால் மலைமீது நாட்டி, அவற்றின் மீது சாந்து பூசுங்கள்.

அங்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குக் கற்களாலான ஒரு பலிபீடத்தைக் கட்டுங்கள். அவற்றின்மீது இரும்புக்கருவிபடவேண்டாம்.

கற்களால் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிபீடம் கட்டுங்கள். அதன்மேல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலிகளைச் செலுத்துங்கள்.

நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி அங்கேயே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உணவருந்தி மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

மேலும், அக்கற்களின்மீது இத்திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் மிகத் தெளிவாக எழுதிவையுங்கள்.

பின்னர், மோசே லேவியக் குருக்களோடு சேர்ந்து இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் சொன்னதாவது: இஸ்ரயேலே, கவனமாகக் கேள். நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவரின் மக்களினம் ஆகியுள்ளாய்.

எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நிறைவேற்று .

மோசே அன்று மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது:

நீங்கள் யோர்தானைக் கடந்தபின், மக்களுக்கு ஆசிவழங்குமாறு, சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமின் ஆகியோர் கெரிசிம் மலைமீது நிற்கட்டும்.

மக்களுக்குச் சாபம் வழங்குமாறு, ரூபன், காத்து, ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகியோர் ஏபால் மலைமீது நிற்கட்டும்.

லேவியர் இஸ்ரயேலர் அனைவருக்கும் உரத்த குரலில் கூறவேண்டியது:

ஆண்டவருக்கு அருவருப்பானதும், சிற்பியின் கைவினைப் பொருள்களுமான வார்ப்புச் சிலையையோ செதுக்குச் சிலையையோ செய்து அதை மறைவான இடத்தில் வைப்பவர் சபிக்கப்படட்டும் . உடனே மக்கள் அனைவரும் பதில் மொழியாக அப்படியே ஆகட்டும் என்பர்.

தம் தந்தையையோ தாயையோ பழிக்கிறவர் சபிக்கப்படட்டும். உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.

தமக்கு அடுத்திருப்பவரின் எல்லைக் கல்லை அப்புறப்படுத்துபவர் சபிக்கப்படட்டும் : உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.

பார்வையற்றவரை வழிதவறச் செய்பவர் சபிக்கப்படட்டும். உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.

அன்னியருக்கும், அனாதைக்கும், கைம்பெண்ணுக்கும் உரிய நீதியைப் புரட்டுபவர் சபிக்கப்படட்டும் : உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.

தன் தந்தையின் மனைவியோடு கூடுகிறவன் தன் தந்தைக்கு உரியவளின் உடையைத் திறந்ததனால் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.

எந்தவொரு விலங்கோடும் புணர்கிறவன் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.

தன் தந்தையில் புதல்வி அல்லது தன் தாயின் புதல்வியாகிய தன் சகோதரியுடன் கூடுகிறவன் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.

தன் மனைவியின் தாயோடு கூடுபவன் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.

தமக்கு அடுத்திருப்பவரை ஒளிந்திருந்து கொல்பவன் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.

குற்றமற்றவரைக் கொல்வதற்காகக் கையூட்டு வாங்குபவர் சபிக்கப்படட்டும் : உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.

இத்திருச் சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதவர் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும் அப்படியே ஆகட்டும் என்பர்.

அதிகாரம் 28.

கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிக்கொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்திற்கும் மேலாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை உயர்த்துவார்.

கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும்.

நீ நகரிலும் ஆசி பெற்றிடுவாய்: வயல் வெளியிலும் ஆசிபெற்றிடுவாய்.

கருவின் கனியும், உன் நிலத்தின் பயனும் உன் கால்நடைகளின் ஈற்றுகளும், உன் மாடுகளின் கன்றுகளும் உன் ஆடகளின் குட்டிகளும் ஆசி பெற்றிடும்.

கூடையும் உன் மாவுபிசையும் தொட்டியும் ஆசி பெற்றிடும்.

நீ வருகையிலும் செல்கையிலும் ஆசி பெற்றிடுவாய்.

உனக்கு எதிராக எழும் உன் பகைவர்கள் உனக்குமுன் முறியடிக்கப்படும்படி ஆண்டவர் அவர்களை உன்னிடம் ஒப்படைப்பார். அவர்கள் ஒருவழியாய் உனக்கு எதிராக வருவர்: ஆனால் ஏழு வழியாய் உன் கண்களுக்கு முன்னே ஓடிப்போவர்.

களஞ்சியங்களிலும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் நீ ஆசி பெறும்படி ஆண்டவர் ஆணையிடுவார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீ ஆசி பெற்றிடுவாய்.

கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவர்தம் வழிகளில் நடந்தால், அவர் உனக்கு ஆணையிட்டுச் சொன்னபடி, உன்னைத் தம் தூய மக்களினமாக நிலைநிறுத்துவார்.

அப்போது, பூவுலகில் மக்களினத்தார் அனைவரும், ஆண்டவர் தம் பெயரை உனக்கு வழங்கி இருக்கிறார் எனக்கண்டு உனக்கு அஞ்சுவர்.

உனக்குக் கொடுப்பதாக, உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில், உன் கருவின் கனி உன் கால் நடைகளின் ஈற்றுகள், உன் நிலத்தின் பயன்கள் ஆகியவற்றில் நலன்களால் நீ நிறைவு பெறும்படி ஆண்டவர் அருள்வார்.

தக்க காலத்தில் உன் நிலத்திற்கு மழை கொடுக்கவும், அதனால் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும், தம் நன்மைகளின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார். நீ பல்வேறு இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய்: நீயோ கடன் வாங்கமாட்டாய்.

இன்று நான் உனக்கு விதிக்கும் உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி, கடையனாக ஆக்கமாட்டார். நீ உயர்வாயேயன்றித் தாழ்ந்து போகமாட்டாய்.

எனவே, நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எதிலிருந்தும் விலகாதே. வலமோ இடமோ விலகி நடக்காதே, வேற்றுத் தெய்வங்களின் பின்சென்று அவற்றுக்கு ஊழியம் செய்யாதே.

ஆனால், உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாமலும், இன்று நான் உனக்கு விதிக்கும் இந்தக் கட்டளைகளையும், நியமங்களையும் கடைப்பிடிப்பதில் கருத்தின்றியும் இருந்தால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும்.

நீ நகரிலும் சபிக்கப்படுவாய், வயல்வெளியிலும் சபிக்கப்படுவாய்.

கூடையும் உன் மாவு பிசையும் தொட்டியும் சபிக்கப்படும்.

கருவின் கனியும், உன் நிலத்தின் பயனும், உன் மாடுகளின் கன்றுகளும், உன் ஆடுகளின் குட்டிகளும் சபிக்கப்படும்.

நீ வருகையிலும் சபிக்கப்படுவாய், செல்கையிலும் சபிக்கப்படுவாய்.

நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும், நீ கெட்டு விரைவில் அழியுமட்டும், ஆண்டவர் உன்மீது சாபமும், குழப்பமும் பேரழிவுமே வரச்செய்வார். ஏனெனில் உன் பொல்லாத செயல்களினால் என்னைவிட்டு விலகிவிட்டாய்.

நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டிலிருந்து, ஆண்டவர் உன்னை அழிக்குமட்டும், கொள்ளை நோய் உன்னைவிடாது தொற்றிக்கொள்ளச் செய்வார்.

உருக்கு நோய், காய்ச்சல், கொப்புளம், எரிவெப்பம், வாள், இடி, நச்சுப்பனி ஆகியவற்றால் ஆண்டவர் உன்னை வதைப்பார்.

உன்னை தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமாகவும் உனக்குக் கீழேயுள்ள நிலம் இரும்பாகவும் இருக்கும்.

ஆண்டவர் புழுதியையும் தூசியையும் உன் நாட்டின் மழையாகப் பொழியச் செய்வார். நீ அழியுமட்டும் அவை வானத்திலிருந்து உன்மேல் விழும்.

பகைவர்களுக்கு முன்னால் நீ முறியடிக்கப்படுமாறு ஆண்டவர் உன்னை விட்டுவிடுவார். ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்த நீ ஏழு வழியாய் அவர்கள் கண்களுக்கு முன்னே ஓடிப்போவாய். உனக்கு நேர்வதைக்கண்டு பூவுலகின் எல்லா நாடுகளும் பேரச்சம் கொள்ளும்.

பிணம் வானத்துப் பறவைகள் அனைத்திற்கும் நிலத்தின் விலங்குகளுக்கும் இரையாகும். அவற்றை விரட்டியடிப்பார் எவரும் இரார்.

எகிப்தின் கொப்புளங்களாலும், மூல நோயாலும், சொறியினாலும், சிரங்கினாலும், ஆண்டவர் உன்னை வதைப்பார். அவற்றிலிருந்து நீ நலம் பெற முடியாது.

மூளைக்கோளாறினாலும், பார்வையிழப்பாலும், மனக் குழப்பத்தாலும் ஆண்டவர் உன்னை வதைப்பார்.

பார்வையற்றோன், இருளில் தடவித்திரிவது போல் நீ பட்டப்பகலில் தடவித்திரிவாய். உன் முயற்சிகளில் நீ வெற்றிபெறமாட்டாய். நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறி கொடுக்கிறவனுமாய் இருப்பாய். உன்னை விடுவிக்க எவரும் இரார்.

நீ ஒரு பெண்ணை மணமுடிப்பாய்: வேறு ஒருவன் அவளோடு கூடி வாழ்வான். நீ ஒரு வீட்டைக்கட்டுவாய்: ஆனால் அதில் நீ குடியிருக்க மாட்டாய். நீ திராட்சைத் தோட்டத்தை அமைப்பாய்: ஆனால், அதன் பயனை அனுபவிக்கமாட்டாய்.

மாடு உன் கண்களுக்கு முன்னால் வெட்டப்படும்: ஆனால் அதிலிருந்து நீ உண்ண முடியாது. உன் கழுதை உன் கண்களுக்கு முன்னால் கொள்ளையிடப்படும்: அது உன்னிடம் திருப்பிக்கொடுக்கப்படமாட்டாது. உன் ஆடுகள் உன் பகைவனுக்குக் கொடுக்கப்படும். அவற்றை விடுவிப்பார் எவரும் இரார்.

கண்முன்னே, உன் புதல்வரும் புதல்வியரும் வேற்று மக்களுக்குக் கொடுக்கப்படுவர். அவர்களைப் பார்க்க நாள்தோறும் உன் கண்கள் ஏங்கி எதிர்பார்த்துப் பூத்துப்போகும். உன் கைகளும் வலிமையற்றுப்போகும்.

நீ அறியாத மக்களினம் உன் நிலத்தின் கனிகளையும் உன் உழைப்பின் பயனையும் உண்ணும். நீயோ எந்நாளும் ஒடுக்கப்பட்டவனும் நொறுக்கப்பட்டவனுமாய் இருப்பாய்.

உன்கண்கள் காணும் இக்காட்சிகளால் உனக்குப் பைத்தியம் பிடிக்கும்.

முழங்கால்களிலும் தொடைகளிலும் தோன்றும், குணப்படுத்தவே முடியாத, கொடிய கொப்புளங்களால் ஆண்டவர் உன்னை வதைப்பார். உன் உள்ளங்கால்முதல் உச்சந்தலைவரை அது பரவும்.

உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திய அரசனையும், உனக்கும், உன் மூதாதையருக்கும் தெரியாத இனத்தாரிடம் ஆண்டவர் போகச் செய்வார். அங்கு மரத்தாலும் கல்லாலுமான வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய்.

ஆண்டவர் உன்னைக் கொண்டுபோய்விடும் அனைத்து மக்கள் நடுவிலும், நீ அருவருப்புப் பொருளாக, கேலிப் பழமொழியாக, நகைப்புச் சொல்லாக ஆகிவிடுவாய்.

வயலில் மிகுதியாக விதைத்துக் கொஞ்சமே அறுப்பாய்: ஏனெனில் வெட்டுக் கிளிகள் அதைத்தின்று அழித்துவிடும்.

திராட்சைத் தோட்டங்களை அமைத்துப் பேணுவாய்: ஆயினும் இரசம் குடிக்கவும் மாட்டாய்: பழங்களைச் சேகரிக்கவும் மாட்டாய்: ஏனெனில் புழுக்கள் அவற்றைத் தின்றழிக்கும்.

ஒலிவ மரங்கள் உனக்குரிய நிலமெங்கும் இருக்கும்: ஆனால் நீ எண்ணெய் தேய்க்க மாட்டாய். ஏனெனில் உன் ஒலிவம்பிஞ்சுகள் உதிர்ந்துவிடும்.

நீ புதல்வரையும் புதல்வியரையும் பெற்றெடுப்பாய்: ஆயினும் அவர்கள் உனக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அடிமைகளாக கொண்டு போகப்படுவர்.

மரங்கள் எல்லாவற்றையும், உன் நிலத்தின் பயனையும் வெட்டுக்கிளி உடைமையாக்கிக் கொள்ளும்.

உன்னிடையே வாழும் அன்னியர் உன்னைவிட மேம்பட்டு மேலும் மேலும் உயர்வர்: நீயோ படிப்படியாகத் தாழ்ந்து போவாய்.

உனக்கு கடன் கொடுக்க அவர்களால் முடியும். அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னால் இயலாது. அவர்கள் முதல்வராய் இருக்க நீ கடையன் ஆவாய்.

இந்தச் சாபங்கள் அனைத்தும் உன்னைத் துரத்திவந்து பிடித்து, நீ அழியுமட்டும் உன்னை வதைக்கும். ஏனெனில், நான் உனக்குக் கட்டளையிட்ட அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீ கடைப்பிடிக்கவில்லை: உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவுமில்லை.

இச்சாபங்கள் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் அடையாளமாகவும் வியத்தகு செயலாகவும் என்றும் இருக்கும்.

எல்லா நலன்களும் நிறைந்திருக்கையில் நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு மன மகிழ்வோடும் இதயக்களிப்போடும் ஊழியம் செய்யவில்லை.

எனவே, பசியோடும், தாகத்தோடும், வெற்றுடம்போடும் யாது மற்ற நிலையிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கெதிராக அனுப்பும் உன் பகைவர்களுக்கு நீ பணிவிடை செய்வாய். அவர்கள் உன்னை அழித்தொழிக்கும் மட்டும் இரும்பு நுகத்தடியை உன் கழுத்தில் வைப்பர்.

வெகு தொலையிலிருந்து, பூவுலகின் கடைக்கோடியிலிருந்து, ஓர் இனத்தை ஆண்டவர் உனக்கு எதிராக எழச்செய்வார். அது கழுகைப்போல மிக வேகமாக வரும். அந்த இனத்தின் மொழி உனக்குப் புரியாது.

அந்த இனம் கொடிய முகம் கொண்டது: முதியவர்களை மதிக்காது: இளைஞர்களுக்கு இரக்கம் காட்டாது.

நீ அழிந்து போகும்வரை அந்த இனம் உன் கால்நடைகளின் ஈற்றுகளையும், உன் நிலத்தின் பயனையும் உண்ணும். உன்னை அழிக்கும்வரை, உன் தானியத்தையும், இரசத்தையும், எண்ணெயையும், உன் மாடுகளின் கன்றுகளையும், உன் ஆடுகளின் குட்டிகளையும் அந்த இனம்விட்டு வைக்காது.

உனது நாடெங்கும், நீ நம்பியிருக்கும் உயர்ந்தவையும், அரண்சூழ் கொத்தளங்கள் கொண்டவையுமான மதிற்சுவர்கள் விழும்வரை, அந்த இனம் உன் நகர் வாயில்களையெல்லாம் முற்றுகையிடும். ஆம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த நாடெங்கிலுமுள்ள உன் நகர் வாயில்களை முற்றுகை இடும்.

உன் பகைவன் முற்றுகையிட்டு உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்துள்ள உன் கருவின் கனிகளான உன் புதல்வர், புதல்வியரின் சதையைக்கூட உண்பாய்.

உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவன், இனி எதுவுமே இல்லாததால், தான் உண்ணும் தன் பிள்ளையின் சதையைத் தன் சகோதரனுக்கோ, தன் அன்பு மனைவிக்கோ, எஞ்சியுள்ள தன் பிள்ளைகளுக்கோ கொடுக்கமாட்டான்:

உணவின் பொருட்டு அவர்களை வெறுப்பான்.

உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவள், தன் உள்ளங்காலைத் தரையில் நன்றாக ஊன்றி நடக்காத அளவு இனிமையும் மென்மையும் மிக்கவள், இனி எதுவுமே இல்லாததால், குழந்தை பிறந்த உடனே தன் குழந்தையையும் அதனோடு வருகின்ற கழிவுகளையும் மறைவாக உண்பாள்:

எவருக்கும் கொடுக்க மாட்டாள். உணவின் பொருட்டுத் தன் இனிய கணவனையும், தன் புதல்வர் புதல்வியரையும் வெறுப்பாள்.

உன் கடவுளாகிய ஆண்டவர் என்னும் மாட்சிமிகு, அச்சந்தரும் இந்தத் திருப்பெயருக்கு அஞ்சும்படி, இந்நூலில் எழுதியுள்ள திருச்சட்டத்தின் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.

இல்லையெனில், உன்மீதும் உன் வழிமரபினர்மீதும் விவரிக்க இயலாத வாதைகளை, கொடிய, நீங்கா வாதைகளை, கடின, நீங்கா நோய்களை ஆண்டவர் வரச்செய்வார்.

மேலும், நீ கண்டு அஞ்சிய, அனைத்து எகிப்திய கொள்ளை நோய்களையெல்லாம் உன்மீது வரச் செய்வார். அவை உன்னைத் தொற்றிக்கொள்ளும்.

திருச்சட்ட நூலில் எழுதப்படாத எல்லா நோய்களையும் வாதைகளையும் நீ அழிந்து போகும்வரை ஆண்டவர் உன்மீது வரச்செய்வார்.

எண்ணிக்கையில் வானத்து விண்மீன்களைப் போன்று இருந்த உங்களுள் மிகச் சிலரே எஞ்சியிருப்பீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீங்கள் செவிகொடுக்கவில்லை.

உங்களுக்கு நன்மைகள் செய்து உங்களைப் பெருகச் செய்வதில் மகிழ்ந்த ஆண்டவர், உங்கள்மேல் அழிவைக் கொணர்ந்து உங்களை வேரறுப்பதில் மகிழ்வார். நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிலிருந்து நீங்கள் பிடுங்கி எறியப்படுவீர்கள்.

உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை உள்ள எல்லா மக்களினங்களிடையிலும் ஆண்டவர் உன்னைச் சிதறடிப்பார். அங்கு, நீயும் உன் மூதாதையரும் அழியாத, மரத்தாலும் கல்லாலும் ஆன வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய்.

அந்த மக்களினங்களிடையே உனக்கு ஓய்வு இராது: உன் உள்ளங்கால்கள் தங்கி இளைப்பாற இடம் இராது. அங்கே ஆண்டவர் நடுநடுங்கும் இதயத்தையும், பஞ்சடைந்த கண்களையும், தளர்வுற்ற மனத்தையும் உனக்குக் கொடுப்பார்.

உயிர் உனக்குக் கேள்விக் குறியாகும். உன் வாழ்வுமீது நம்பிக்கையிழந்து இரவும் பகலும் அச்சத்தோடு வாழ்வாய்.

கண்களால் காணும் காட்சிகளால் உன் இதயம் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், காலையானதும், இது மாலையாக இருக்கக் கூடாதா? என்பாய்: மாலையானதும், இது காலையாக இருக்கக்கூடாதா? என்பாய்.

நீங்கள் இனி ஒரு நாளும் மீண்டும் மேற்கொள்ள மாட்டீர்கள் என எந்தப் பயணத்தைப்பற்றி நான் உங்களுக்கு வாக்களித்திருந்தேனோ, அந்தப் பயணத்தைக் கப்பல்களில் மேற்கொண்டு நீங்கள் எகிப்துக்குத் திரும்பிச் செல்லுமாறு ஆண்டவர் செய்வார். அங்கே உங்களை நீங்களே அடிமைகளாக, ஆண், பெண் அடிமைகளாக, உங்கள் பகைவர்களுக்கு விற்க முயல்வீர்கள்: ஆனால் உங்களை எவரும் விலைக்கு வாங்கமாட்டார்.

அதிகாரம் 29.

ஓரேபில் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைத் தவிர, மேவாபு நாட்டில் அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு மோசேக்குக் கட்டளையிட்டு உரைத்த வார்த்தைகள் பின்வருமாறு:

மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியது: எகிப்து நாட்டில் பார்வோனுக்கும், அவன் அலுவலர் அனைவருக்கும், அவன் நாடு முழுமைக்கும் உங்கள் கண்முன்பாக ஆண்டவர் செய்தவற்றை நீங்கள் கண்டீர்கள்.

கொடிய சோதனைகளையும், அடையாளங்களையும், அருஞ்செயல்களையும், வியத்தகு செயல்களையும் அங்கே உங்கள் கண்களால் கண்டீர்கள்.

ஆயினும், புரிந்துகொள்ளும் உள்ளத்தையும், காண்கின்ற கண்களையும், கேட்கின்ற செவிகளையும் இந்நாள் வரை ஆண்டவர் உங்களுக்குத் தரவில்லை.

நாற்பது ஆண்டுகள் நான் உங்களைப் பாலைநிலத்தில் கூட்டிவந்தேன். அப்பொழுது உங்கள் மேலுள்ள ஆடைகள் நைந்து போகவில்லை: உங்கள் காலிலுள்ள காலணிகள் பழுதடைந்து போகவுமில்லை.

நீங்கள் அப்பம் உண்ணவோ, இரசம் குடிக்கவோ, மதுபானம் அருந்தவோ இல்லை. இதனால், நானே கடவுளாகிய ஆண்டவர் என்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் இந்த இடத்திற்கு வந்தபோது எஸ்போனின் அரசனாகிய சீகோனும், பாசானின் அரசனாகிய ஓகும் நமக்கு எதிராகப் போர்புரிய வந்தனர். நாம் அவர்களை முறியடித்தோம்.

அவர்களது நாட்டைப் பிடித்து, ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் குலத்தாருக்கும் உரிமைச் சொத்தாகக் கொடுத்தோம்.

எனவே, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அப்போது நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.

இன்று நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றீர்கள். உங்கள் குலங்களின் தலைவர்களும், உங்கள் பெரியோர்களும், உங்கள் அலுவலர்களும், இஸ்ரயேலின் ஆடவர் ஏனையோரும்.

உங்கள் சிறுவரும், உங்கள் மனைவியரும், உங்கள் பாளையத்தில் உங்களோடு உள்ள அன்னியராகிய விறகு வெட்டியும் தண்ணீர் சுமப்பவனும் ஆகிய எல்லோரும் நிற்கின்றீர்கள்.

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் மூதாதையருக்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னது போலவும், அவர் உங்களுக்கு வாக்களித்தது போலவும், அவர் இன்று உங்களைத் தம் சொந்த மக்களாக நிலைநிறுத்தி உங்கள் கடவுளாக இருக்குமாறும்,

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இன்று உங்களோடு செய்யப்போகின்ற அவர்தம் உடன்படிக்கையிலும் வாக்குறுதியிலும் பங்கு கொள்ளுமாறும் நீங்கள் நிற்கின்றீர்கள்.

வாக்குறுதியுடன் கூடிய இந்த உடன்படிக்கையை உங்களோடு மட்டும் அவர் செய்து கொள்ளவில்லை.

மாறாக, இங்கு நம்மோடு நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றவர்களோடும், இன்று இங்கு நம்மோடு இல்லதாவர்களோடும் செய்துகொள்கிறார்.

எகிப்து நாட்டில் நாம் எவ்வாறு குடியிருந்தோம் என்பதையும் வேற்றினங்களிடையே நாம் எவ்வாறு கடந்து வந்தோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

அவர்களின் அருவருப்புகளை, மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும் பொன்னாலுமான அவர்களின் தெய்வச் சிலைகளை நீங்கள் பார்த்தீர்கள்.

அந்த வேற்றினங்களின் தெய்வங்களுக்குப் பணிபுரியுமாறு நம் கடவுளாகிய ஆண்டவரைவிட்டு விலகிச் செல்லும் மனமுள்ள ஆணோ, பெண்ணோ, குடும்பமோ, குலமோ உங்களிடையே இன்று இல்லாதிருக்கட்டும். நச்சுத்தன்மையும் கறையான் அரிப்பும் கொண்ட வேரைப் போன்ற எவரும் உங்களிடையே இல்லாதிருக்கட்டும்.

அத்தகையோர் இந்த வாக்குறுதியின் வார்த்தைகளைக் கேட்ட பின்பும், நாங்கள் இதயப்பிடிவாதத்தோடு நடந்தாலும், எங்களுக்கு எல்லாம் நலமாகும் என்று சொல்லித் தங்களையே தேற்றிக் கொள்வார்களாகில், பசுமையானதும் உலர்ந்ததும் சேர்ந்தழியும்.

ஆண்டவர் அவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டார். மாறாக ஆண்டவரின் சினமும் சகிப்பின்மையும் அவர்கள் மீது கனன்றெரியும். இந்த நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தும் அவர்கள்மேல் விழும். ஆண்டவர் அவர்களது பெயரை மண்ணுலகினின்று துடைத்து விடுவார்.

திருச்சட்ட நூலில் எழுதியுள்ள உடன்படிக்கையின் சாபங்களுக்கு ஏற்ப, ஆண்டவர் அத்தகையோரை இஸ்ரயேலின் குலங்கள் அனைத்தினின்றும் பிரித்தெடுத்துத் தீமைக்கு உள்ளாக்குவார்.

அப்பொழுது, உங்களுக்குப் பின்வரும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், நெடுந்தொலை நாட்டிலிருந்து வரும் அன்னியரும், ஆண்டவர் இந்த நாட்டின்மேல் வரச்செய்த வாதைகளையும், நோய்களையும் காணும்போது,

ஆண்டவர் தம் சினத்திலும் சீற்றத்திலும் வேரறுத்த சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் போன்ற இடங்கள் அழிந்ததைப்போல, இந்த நாட்டின் நிலம் முழுவதும், கந்தகமும் உப்புமாக வெந்துபோய் விதைப்பும், விளைச்சலுமின்றி யாதொரு புற்பூண்டும் முளைக்காமல் இருப்பதைக் காணும் போது,

வேற்றினத்தார் அனைவரும் ஆண்டவர் ஏன் இவ்வாறு இந்த நாட்டுக்குச் செய்தார்? இந்தக் கடுஞ்சீற்றம் கனன்றெழக் காரணம் என்ன? என்று கேட்பர்.

அதற்கு மறுமொழியாக, அவர்களுடைய மூதாதையரின் கடவுள் அவர்களை எகிப்திலிருந்து கூட்டி வரும்பொழுது, அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை அவர்கள் விட்டு விலகினர்.

அவர் அவர்களுக்குக் கொடுக்காதவையும் அவர்கள் அறியாதவையுமான வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு ஊழியம் செய்தனர்.

ஆகவே, ஆண்டவர் சீற்றம் கொண்டு, இந்நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தையும் இந்நாட்டின்மீது வரச்செய்தார்.

அவர் தம் சினத்தாலும், கோபத்தாலும், சீற்றத்தாலும், அவர்களை அவர்களது நாட்டிலிருந்து வேரறுத்தார். இந்நாளில் இருப்பது போல் அவர்களை வேற்று நாட்டுக்கு விரட்டியடித்தார் என்று சொல்லப்படும்.

எனவே, மறைவானவை நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியவை. வெளிப்படுத்தப்பட்டவையோ, இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்குமாறு, நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை.

அதிகாரம் 30.

இவை எல்லாம் நிகழும்போது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிதறடித்துள்ள மக்களினங்களுக்கிடையே வாழ்கையில், நான் உனக்கு முன்னே வைத்த ஆசி, சாபம் ஆகியவற்றை, உன் உள்ளத்தில் சிந்தனை செய்.

நான் இன்று உனக்கு அளிக்கும் அனைத்துக் கட்டளைகளின்படி உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா. நீயும் உன் பிள்ளைகளும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால்,

கடவுளாகிய ஆண்டவர் உன்னை அடிமைத்தனத்தினின்று விடுவிப்பார். உன்மேல் இரக்கம்கொண்டு, உன்னை அவர் சிதறடித்துள்ள எல்லா நாடுகளிலுமிருந்து மீண்டும் கூட்டிச் சேர்ப்பார்.

நீ வானத்தின் கடையெல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் கடவுளாகிய ஆண்டவர், அங்கிருந்து உன்னைக் கூட்டிச் சேர்ப்பார். ஆண்டவர் அங்கிருந்து உன்னை அழைத்துக் கொண்டு வருவார்.

கடவுளாகிய ஆண்டவர், உன் மூதாதையர் உடைமையாக்கியிருந்த நாட்டுக்குள் உன்னைக் கொணர்வார். நீயும் அதை உடைமையாக்கிக்கொள்வாய். உனக்கு நன்மைகள் ஈந்து உன் மூதாதையரைவிட உன்னைப் பெருகச் செய்வார்.

கடவுளாகிய ஆண்டவர் உன் உள்ளத்தையும் உன் வழிமரபின் உள்ளத்தையும் பண்படுத்துவார். அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர்மீது நீ முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்வாய். அப்போது, நீயும் வாழ்வு பெறுவாய்.

கடவுளாகிய ஆண்டவர், இந்தச் சாபங்களை எல்லாம் உன் பகைவர்மீதும், உன்னை வெறுப்பவர்மீதும், உன்னைக் கொடுமைப்படுத்துவோர் மீதும் வரச்செய்வார்.

நீ ஆண்டவரிடம் திரும்பிவா. அவரது குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் கடைப்பிடி.

நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீ நிறைவு பெறும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் செய்வார். உனது கருவின் கனி, உன் கால்நடைகளின் ஈற்று, உனது நிலத்தின் பயன் அனைத்தும் நலமே அமையுமாறு செய்வார். உன் மூதாதையரில் மகிழ்வு கொண்டது போல், உன் நன்மையின் பொருட்டு உன்மீது மீண்டும் மகிழ்வார்.

எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழ இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.

ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை: உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை.

நாம் அதைக்கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை.

நாம் அதைக்கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார் என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை.

ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது: உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.

இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்.

அது இதுதான்: இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசிவழங்குவார்.

ஆனால், உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால்,

இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்துபோவாய். நீ உரிமையாக்கிக் கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது.

மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள்.

கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு: அவரது குரலுக்குச் செவிகொடு: அவரையே பற்றிக் கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு: அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய்.

அதிகாரம் 31.

மோசே தொடர்ந்து பின்வரும் வார்த்தைகளை இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறினார்:

அவர் சொன்னது: இன்று எனக்கு வயது நூற்று இருபது. இனி என்னால் நடமாட இயலாது. மேலும், நீ யோர்தானைக் கடக்க மாட்டாய் என்று ஆண்டவர் எனக்குக் கூறியுள்ளார்.

கடவுளாகிய ஆண்டவரே உன்முன் செல்வார். அவரே உன் முன்னின்று இந்த வேற்றினங்களை அழிப்பார். நீ அவற்றுக்கு உரியவற்றை உடைமையாக்கிக் கொள்வாய். ஆண்டவர் சொன்னபடி, யோசுவா உனக்கு முன்பாகச் செல்வான்.

எமோரியரின் மன்னர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் அவர்களின் நாட்டுக்கும் செய்ததுபோல அவர்களை அழித்தது போல ஆண்டவர் அவற்றுக்கும் செய்வார்.

ஆண்டவர் அவர்களை உங்களிடம் ஒப்படைப்பார். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்.

வலிமைபெறு: துணிவுகொள்: அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே: ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர்! அவர் உன்னை விட்டு விலக மாட்டார்: உன்னைக் கைவிடவும் மாட்டார்.

பின்னர் மோசே யோசுவாவை வரவழைத்து, இஸ்ரயேலர் அனைவர் முன்னிலையிலும் அவரிடம் கூறியது: வலிமை பெறு: துணிவுகொள்: இவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், இந்த மக்களோடு நீ செல்லவேண்டும். அதை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளமாறு செய்யவேண்டும்.

ஆண்டவரே உனக்குமுன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார் அஞ்சாதே, திகைக்காதே!

பின்னர், மோசே இந்தத் திருச்சட்டநூலை எழுதி, ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கிற லேவியின் வழி வந்த குருக்களிடமும் இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவரிடமும் ஒப்படைத்தார்.

மேலும் மோசே அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது: விடுதலை ஆண்டாகிய ஒவ்வொரு ஏழாம் ஆண்டின் முடிவில் வரும் கூடார விழாவில்,

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்தில், இஸ்ரயேலர் அனைவரும் அவர் முன்னிலையில் வந்து கூடும்போது, அவர்கள் அனைவரும் கேட்க இத்திருச்சட்ட நூலை அவர்களுக்கு உரக்க வாசியுங்கள்.

மக்களை ஒன்று திரட்டுங்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உங்கள் நகரில் வாழும் அன்னியரும் அதைக் கேட்டு அறிந்து கொள்ளட்டும். அவர்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இருக்கட்டும்.

இவற்றை அறியாத அவர்களுடைய புதல்வர்களும், நீங்கள் யோர்தானைக் கடந்து, உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் வாழும் நாளெல்லாம், இவற்றைக் கேட்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சக் கற்றுக் கொள்ளட்டும்.

பின்னர் ஆண்டவர் மோசேயிடம், நீ இறக்கும் நாள் நெருங்கிவிட்டது. யோசுவாவைக் கூப்பிடு. இருவரும் சந்திப்புக் கூடாரத்துக்கு வாருங்கள். நான் அவனுக்குப் பணிப் பொறுப்புத் தரவேண்டும் என்றார். அவ்வாறே மோசேயும் யோசுவாவும் போய்ச் சந்திப்புக் கூடாரத்தில் நின்றனர்.

ஆண்டவர் கூடாரத்தில் மேகத்தூணில் தோன்றினார். மேகத்தூண் கூடாரத்தின் நுழைவாயிலில் நின்றது.

அப்பொழுது ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ உன் மூதாதையரோடு துஞ்சப்போகிறாய். இந்த மக்களோ தாங்கள் போகவிருக்கும் நாட்டில் கிளர்ந்தெழுந்து வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றிக் கள்ள உறவு கொள்வர். அவர்கள் என்னைவிட்டு விலகி, நான் அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மீறுவர்.

அப்போது, எனது சினம் அந்நாளில் அவர்களுக்கு எதிராகக் கனன்றெரியும். நான் அவர்களைக் கைவிடுவேன். அவர்களிடமிருந்து என் முகத்தை மறைத்துக் கொள்வேன். அவர்கள் அறியும்படி பல தீங்குகளும், இன்னல்களும் அவர்கள் மேல் வரும். அந்நாளில் அவர்கள் நம் கடவுள் நம்மோடு இல்லாததால் அன்றோ இத்தகைய தீங்குகள் நமக்கு வந்துள்ளன என்பர்.

அவர்கள் வேற்றுத் தெய்வங்களை அணுகி, செய்த தீய செயல்கள் அனைத்தின் பொருட்டும், அந்நாளில் நான் என்முகத்தை மறைத்துக் கொள்வேன்.

எனவே, இப்பொழுது நீ இந்தப்பாட்டை எழுது. அதை இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக்கொடு. அதை அவர்கள் நாவில் வை. அதனால், இந்தப் பாடலே இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக நான் தரும் சான்றாக விளங்கும்.

ஏனெனில், அவர்களின் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொன்ன, பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டுக்குள் நான் அவர்களைக் கொண்டு போனதும் அவர்கள் உண்டு நிறைவு பெற்று கொழுத்துப் போவர். அப்போது அவர்கள் வேற்றுத் தெய்வங்களை அணுகி அவற்றுக்கு ஊழியம் செய்து, எனக்குச் சினமூட்டுவர்: என் உடன்படிக்கையையும் மீறுவர்.

பல்வேறு தீங்குகளும் இன்னல்களும் அவர்கள் மேல் வரும்போது, அவர்களுடைய மரபினரின் வாய் பாடலை மறந்து போகாதிருக்கும். இப்பாடலே அவர்களுக்கு எதிராகச் சான்று பகரும். ஏனெனில் இப்பொழுதே, அவர்கள் தீட்டியுள்ள திட்டத்தை நான் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் அவர்களைக் கொண்டுபோகுமுன்பே அறிவேன் என்றார்.

ஆகையால், மோசே இப்பாடலை அன்றே எழுதி இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

மேலும், ஆண்டவர் நூனின் மகனாகிய யோசுவாவுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: வலிமை பெறு, துணிவு கொள், ஏனெனில் நீ இஸ்ரயேல் மக்களை நான் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் கொண்டு போவாய். நான் உன்னோடு இருப்பேன் என்றார்.

மோசே இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளை ஒரு நூலாய் எழுதி முற்றிலும் முடித்த பின்பு,

ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கி வந்த லேவியரை நோக்கிக் கட்டளையிட்டுக் கூறியது:

இத்திருச்சட்ட நூலை எடுத்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் அருகில் வையுங்கள். அங்கே அது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும்.

ஏனெனில், நான் உங்கள் கலகக் குணத்தையும் முரட்டுப் பிடிவாதத்தையும் அறிவேன். இன்று நான் உங்களுடன் உயிரோடு இருக்கையில், ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்கிறீர்கள்: நான் இறந்த பின் இன்னும் எவ்வளவு செய்வீர்களோ?

எனவே, உங்கள் குலங்களின் தலைவர்கள் அனைவரையும் உங்கள் அலுவலர்களையும் ஒன்று கூட்டுங்கள். அவர்கள் கேட்க நான் இவ்வார்த்தைகளை எடுத்துரைத்து, அவர்களுக்கு எதிராக விண்ணையும் மண்ணையும் சான்றாக வைப்பேன்.

ஏனெனில், நான் இறந்தபின் நீங்கள் கெட்டுச் சீரழிவீர்கள்: நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழிகளிலிருந்து விலகி, ஆண்டவரின் முன்னிலையில் அருவருப்பானவைகளைச் செய்வீர்கள். நீங்கள் செய்துகொள்ளும் சிலைகளால் அவருக்குச் சினமூட்டுவீர்கள். ஆகையால் இறுதிக் காலத்தில் உங்களுக்குத் தீங்குகள் நேரிடும் என்பதையெல்லாம் நான் அறிவேன்.

பின்னர் இஸ்ரயேல் சபையினர் அனைவரும் கேட்க, மோசே பின்வரும் பாடலின் வார்த்தைகள் அனைத்தையும் சொன்னார்:

அதிகாரம் 32.

வானங்களே! நான் பேசுவேன்: செவிகொடுப்பீர்: பூவுலகே! என் சொல்லை உற்றுக்கேள்.

பெருமழை பைந்தளிர்மீது பொழிவதுபோல், மென்சாரல் பசும்புல்மீது விழுவதுபோல், என் அறிவுரை மழையெனப் பெய்திடுக! என் சொற்கள் பனியென இறங்கிடுக!

நான் ஆண்டவரின் பெயரைப் பறைசாற்றுவேன்: நம் கடவுளின் மாட்சியைப் பாராட்டுவேன்.

அவரே பாறை! அவர் செயல் நிறைவானது! அவர்தம் வழிகள் அனைத்தும் நீதியானவை! வஞ்சகம் அற்ற உண்மைமிகு இறைவன்! அவரே நீதியும் நேர்மையும் உள்ளவர்!

அவர்தம் கேடுகெட்ட பிள்ளைகள் அவரிடம் பொய்ம்மையாய் நடந்துகொண்டனர்: அவர்கள் நெறிபிறழ்ந்த வஞ்சகம் மிக்க தலைமுறையினர்!

ஞானமற்ற, மதிகெட்ட மக்களே! ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும் கைம்மாறு இதுதானா? உங்களைப் படைத்து, உருவாக்கி, நிலை நிறுத்திய உங்கள் தந்தை அவரல்லவா?

பண்டைய நாள்களை நினைத்துப்பார்! பலதலைமுறையின் ஆண்டுகளைக் கவனித்துப்பார்! உன் தந்தையிடம் கேள்: அவர் உனக்கு அறிவிப்பார்: பெரியோரிடம் கேள்: அவர்கள் உனக்குச்சொல்வர்.

உன்னதமானவர் வெவ்வேறு இனங்களுக்கு உரிமைச்சொத்துக்களைப் பங்கிட்டபோது, ஆதாமின் பிள்ளைகளை அவர் பிரித்தபோது, இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்கள் இனங்களின் எல்லைகளையும் திட்டமிட்டார்.

ஆண்டவரின் பங்கு அவர்தம் மக்களே! அவரது உரிமைச் சொத்து யாக்கோபே!

பாழ்வெளியில் அவர் அவ¨ன் கண்டார்: வெறுமையான ஓலமிடும் பாலையில் அவனைக் கண்டார்: அவர் அவனைப் பாதுகாத்துப் பேணினார்: கண்ணின் மணியென அவனைக் காத்தருளினார்.

கழுகு தன் கூட்டின்மேல் அசைத்தாடித் தன் குஞ்சுகளின்மேல் படந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைச் சுமந்து செல்வது போலும் அவற்றைத் தன் சிறகுகளில் சுமப்பது போல்,

ஆண்டவர் ஒருவரே அவனை வழிநடத்தினார்: வேற்றுத் தெய்வங்கள் அவனோடு இருந்ததில்லை.

பூவுலகின் முகடுகளில் அவனை வாழச்செய்தார்: வயல்வெளியின் விளைச்சலை அவன் உண்டான்: கன்மலைத் தேனை அவன் சுவைத்தான்: கற்பாறை எண்ணெயைப் பயன்படுத்தினான்.

பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் செம்மறிக்கிடாய், வெள்ளாட்டுக்கிடாய் இவற்றின் கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம் போன்ற முந்திரிச் சாற்றையும் அவர்கள் உண்ணும்படி ஆண்டவர் கொடுத்தார்.

ஆனால் கொழுத்த காளை மார்பிலே பாய்ந்தது: எசுரூன் கொழுத்துப் பருத்து முரடனானான்: தனைப்படைத்த கடவுளை விட்டு அவன் விலகினான்: தனது மீட்பின் பாறையை எள்ளி நகைத்தான்.

வேற்றுத் தெய்வங்களால் அவருக்கு எரிச்சலூட்டினர்: அருவருப்புகளால் அவருக்குச் சினமூட்டினர்.

இறையல்லாத பேய்களுக்குப் பலி செலுத்தினர்: அவர்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களுக்கு, நேற்று முளைத்த புதிய தெய்வங்களுக்கு, உங்கள் முன்னோர் அஞ்சாத அவற்றிற்குப் பலியிட்டனர்.

உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்: உன்னை உருவாக்கிய கடவுளை மறந்து விட்டாய் .

தன் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார்.

அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்: அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்: ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்: நேர்மை அறவே அற்ற பிள்ளைகள்.

இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்: அவர்களின் சிலைகளால் எனக்குச் சினமூட்டினர்: ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்: மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன்.

எனது சினத்தில் நெருப்புப்பொறி தெறிக்கும்: கீழுலகின் அடிமட்டம்வரை அது எரிக்கும்: பூவுலகையும் அதன் விளைபலன்களையும் அழிக்கும்: மாமலைகளின் அடித்தளமே தீப்பற்றி எரியும்.

தீங்குகளை அவர்கள்மேல் கொட்டிக் குவிப்பேன்: என் அம்புகளை அவர்கள்மேல் எய்து தீர்ப்பேன்.

பசியினால் அவர்கள் வாடுவர்: கொள்ளை நோயால் மாய்வர்: கொடிய வாதைகளால் மடிவர்: விலங்குகளின் பற்களுக்கு இரையாவர்: புழுதியில் ஊரும் நச்சுப்பூச்சிகளால் மடிவர்.

வெளியிலே வாள்: உள்ளே பேரச்சம்! இளைஞனும் கன்னிப் பெண்ணும் பால்குடி மறைவாக் குழந்தையும் முடிநரைத்த கிழவனும் அழிவர்.

நான் சொன்னேன்: அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்: அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன்.

ஆயினும், எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை! என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன்.

அவர்கள் புத்தி கெட்ட மக்கள்: அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை.

அவர்கள் ஞானமடைந்து இதனை உணர்ந்து தங்களுக்கு நிகழப்போவதை உய்த்துணர்ந்தால் எத்துணை நலம்!

ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறையை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ? அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ?

அவர்களது பாறை நமது பாறை போன்றன்று என்று நம்முடைய பகைவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.

அவர்களது கொடிமுந்திரி சோதோமிலிருந்து வருவதாகும்: கொமோராவின் வயல்வெளியிலிருந்து வருவதாகும்: அவர்களது திராட்சைகள் நச்சுத் திராட்சைகள்: அவர்களது திராட்சைக் கொத்துக்கள் கசப்பானவை.

அவர்களது இரசம் பாம்பின் நஞ்சு போன்றது: விரியன் பாம்பின் கொடிய நஞ்சு போன்றது.

இது என்னிடம் சேமிக்கப்பட்டுள்ளது அன்றோ? என் கருவூலங்களில் முத்திரையிடப்பட்டுள்ளது அன்றோ?

பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன: உரிய நாளில் அவர்களின் கால்கள் தள்ளாடும்: அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது: அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன.

அவர்கள் ஆற்றல் இழந்து விட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்: அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார்.

அப்பொழுது அவர் உரைப்பார்: அவர்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் தஞ்சம் புகுந்த பாறை எங்கே?

அவர்கள் பலியிட்டவற்றின் கொழுப்பை உண்டவர்கள் எங்கே? நீர்மப்படையல் இரசத்தைக் குடித்தவர்கள் எங்கே? அவர்கள் இப்போது முன்வந்து உனக்கு உதவட்டுமே! அவர்களது உனது புகலிடம் ஆகட்டுமே!

நானே இருக்கிறவர்! என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள்! கொல்பவரும் நானே: உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும் நானே: குணமாக்குபவரும் நானே! என் கைகளிலிருந்து விடுவிப்பார் எவரும் இரார்.

ஏனெனில், என் கைகளை வானோக்கி உயர்த்தி என்றும் வாழும் என்மீது ஆணையிட்டு உரைக்கிறேன்.

மின்னும் என் வாளை நான் தீட்டி, நீதித் தீர்ப்பை என் கையில் எடுக்கும்போது என் பகைவரைப் பழி வாங்கி என்னைப் பகைப்பவருக்குப் பதிலடி கொடுப்பேன்.

கொலையுண்டோர், சிறைப்பட்டோரின் இரத்தத்திலும் நீள்முடித் தலைவரின் இரத்தத்திலும் என் அம்புகள் குடிக்கச் செய்வேன்: என் வாள் சதையை உண்ணச் செய்வேன்.

வேற்றினங்களே! ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்: அவர் தம் ஊழியரின் இரத்தத்திற்குப் பழி வாங்கினார்: அவர் தம் பகைவர்களுக்குப் பதிலடி கொடுத்தார். தம் மக்களின் நாட்டைக் கறைநீக்கம் செய்தார்.

மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எழுத்துரைத்தார்கள்.

இந்த வார்த்தைகளை எல்லாம் இஸ்ரயேலுக்குச் சொல்லி முடித்தபின், மோசே அவர்களுக்குச் சொன்னது:

உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். அப்போதுதான் இத்திருச்சட்டத்தின் வார்த்தைகள் அனைத்தையும் கருத்தாய்க் கடைப்பிடிக்குமாறு நீங்கள் உங்கள் மக்களுக்குக் கட்டளையிடுவீர்கள்.

இத்திருச்சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல. அதுவே உங்களது வாழ்வு. யோர்தானைக் கடந்து, நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

அதே நாளில் ஆண்டவர் மோசேயுடன் பேசியது:

மோவாபு நாட்டில் எரிகோவுக்கு எதிரேயுள்ள, அபாரிம் மலையில் நெபோ என்னும் மலைமீது ஏறிக் கானான் நாட்டைப் பார். உன் மக்கள் இஸ்ரயேலுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாடு அதுவே.

சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து, உன் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான். அதுபோல நீ ஏறிச் செல்லவிருக்கும் மலையில் நீயும் இறந்து உன் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்படுவாய்.

ஏனெனில், சீன் என்னும் பாலை நிலத்தில், மெரிபத்து-காதேசு எனும் நீர்ச்சுனைக்கு அருகில், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் எனக்குத் துரோகம் செய்தாய். அதனால், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் என்னைப் புனிதப்படுத்தவில்லை.

எனினும், உனக்கு முன்பாக உள்ள நாட்டை நீ பார்ப்பாய். அதையே நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப் போகிறேன். நீயோ அதனுள் செல்ல மாட்டாய்.

அதிகாரம் 33.

கடவுளின் அடியவரான மோசே, தாம் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது:

ஆண்டவர் சீனாயினின்று வந்தார்: சேயிரினின்று அவர்களுக்குத் தோன்றினார்: பாரான் மலையினின்று அவர்கள் மீது ஒளிர்ந்தார்: பல்லாயிரம் புனிதர் புடைசூழ வந்தார்: அவரது வலப்புறத்தினின்று மின்னல் ஒளிர் திருச்சட்டம் ஏந்திவந்தார்.

உண்மையாகவே, மக்களினங்களின் அன்பர் அவர்: அவர்தம் புனிதர்கள் அவர் கையில் உள்ளனர். அவர்கள் அவரது பாதங்களில் அமர்வர்: அனைவரும் அவரது கூற்றுகளை ஏற்றுக்கொள்வர்.

மோசே எங்களுக்குத் திருச்சட்டத்தைக் கட்டளையாக வழங்கினார்: அதுவே யாக்கோபினது திருக்கூட்டத்தின் உடைமை.

மக்கள் தலைவர்களும் இஸ்ரயேலின் குலங்களும் ஒன்று திரட்டப்பட்ட பொழுது அவர் எசுரூன்மீது அரசனாய் இருந்தார்.

ரூபன் வாழட்டும்: அவன் மடிந்து போகாதிருக்கட்டும்: அவன்தன் புதல்வர் குறையாதிருக்கட்டும்!

யூதாவுக்கான ஆசி இதுவே. அவர் கூறியது: ஆண்டவரே, யூதாவின் குரலைக் கேளும்: அவனை அவனுடைய மக்களிடம் கொண்டு வாரும்: அவனது கைகள் அவனுக்குப் போதுமானது ஆகட்டும். அவனுக்குத் துணை நின்று அவனுடைய பகைவரிடமிருந்து காத்தருளும்.

லேவியைக் குறித்து அவர் கூறியது: ஆண்டவரே, உம் தும்மிம், ஊரிம் என்பவை மாசாவில் சோதிக்கப்பட்டு மெரிபாவின் நீரூற்றருகில் வழக்காடிய உம் பற்றுமிகு அடியானிடம் இருக்கட்டும்.

அவனிடமே அவற்றைக் கொடும்: ஏனெனில் அவன் தன் தந்தையையும் தாயையும் நோக்கி நான் உங்களைப் பாரேன் என்றவன்: தன் சகோதரர்களை அடையாளம் கண்டு கொள்ளாதவன்: தன் சொந்தப் பிள்ளைகளையே அறியாதவன்: உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்து உம் உடன்படிக்கையை நிறைவேற்றுபவன்:

யாக்கோபுக்கு உம் நீதிமுறைமைகளையும் இஸ்ரயேலுக்கு உம் திருச்சட்டத்தையும் கற்றுத்தருபவன்: உமது முன்னிலையில் தூபம் காட்டுபவன்: உமது பீடத்தில் எரிபலிகளைச் செலுத்துபவன்.

ஆண்டவரே, அவனது ஆற்றலை ஆசியால் நிரப்பும்: அவனுடைய கரங்களின் உழைப்பை ஏற்றுக்கொள்ளும்: அவனுக்கு எதிராக எழும்புவோரை அவர்களின் இடுப்பு ஒடிந்துவிழும் வண்ணம் வதையும். அவனைப் பகைப்பவர் மீண்டும் எழாதவாறு செய்யும்.

பென்யமினைக் குறித்து அவர் கூறியது: ஆண்டவரின் அன்புக்கு உரியவன்: அவரால் அவன் பாதுகாப்புடன் வாழ்வான். எக்காலமும் அவனை அவர் அரவணைத்துக் காப்பார்: அவர்தம் கரங்களுக்கிடையே அவன் வாழ்வான்.

யோசேப்பைக் குறித்து அவர் கூறியது: அவனது நிலம் ஆண்டவரால் ஆசி பெற்றது: அது வானத்தின் செல்வத்தாலும் பனியாலும்,

ஆழ்நிலத்தின் நீரூற்றுகளாலும் கதிரவன் வழங்கும் கனிகளாலும் பருவங்கள் விளைவிக்கும் பயன்களாலும்

பண்டைய மலைகளின் உயர் செல்வங்களாலும், என்றுமுள குன்றுகளின் அரும் பொருள்களாலும் ஆசிபெற்றது.

நிலம் தரும் பெரும் விளைச்சலும் அதன் நிறைவும், முட்புதரில் வீற்றிருந்தவரின் அருளன்பும், எல்லா ஆசிகளும் யோசேப்பின் தலைமீதும் தன் சகோதரருள் தேர்ந்தெடுக்கப்பட்டவனின் உச்சந்தலைமீதும் தங்குவதாக!

அவனது நடை தலையீற்றுக் காளையின் பீடுநடை போன்றது. அவனின் கொம்புகள் காட்டெருமையின் கொம்புகள் போன்றவை: அவற்றால் மக்களினத்தாரைப் பூவுலகின் கடை எல்லைவரை முட்டித் துரத்துவான். அவை எப்ராயிமின் பதினாயிரம் படைகளும் மனாசேயின் ஆயிரம் படைகளும் ஆகும்.

செபுலோனைக் குறித்து அவர் கூறியது: செபுலோனே. நீ பயணம் செய்கையில் மகிழ்ந்திடு! இசக்காரே, நீ கூடாரங்களில் தங்கும் போது மகிழ்ந்திடு!

அவர்கள் மக்களினங்களை மலைக்கு அழைத்துச் செல்வர்: அங்க அவர்கள் ஏற்புடைய பலிகளைச் செலுத்துவர்: அவர்கள் கடலில் பலுகியிருப்பதும் மணலில் புதைந்திருப்பதுமான திரளான செல்வங்களை அனுபவிப்பார்.

காத்தைக் குறித்து அவர் கூறியது: காத்தைப் பெருகச் செய்பவர் போற்றி! போற்றி! காத்து சிங்கத்தைப்போல் தங்கியிருந்து புயத்தையும் தலையையும் பீறிப் பிளந்திடுவான்.

அவன் தனக்கெனச் சிறந்த இடத்தைத் தேர்ந்து கொண்டான்: தலைவனுக்குரிய பங்கு அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது: மக்களின் தலைவணாகி, அவன் ஆண்டவரின் நீதியை நிலை நிறுத்தினான்: ஏனைய இஸ்ரயேலரோடு சேர்ந்து, அவர்தம் நீதிமுறையை நிலைநாட்டினான்.

தாணைக் குறித்து அவர் கூறியது: தாண் பாசானினின்று பாய்ந்துவரும் சிங்கக்குட்டி.

நப்தலியைக் குறித்து அவர் கூறியது: ஆண்டவரின் அருளன்பால் நிறைவு பெற்றவன்: கலிலேயக் கடலையும் தென்திசையையும் உடைமையாக்கிக் கொள்வான்.

ஆசேரைக் குறித்து அவர் கூறியது: ஆசேர் எல்லாக் குலங்களிடையே ஆசி பெற்றவனாவான்: தன் உடன்பிறந்தாருக்கு உகந்தவனாய் இருப்பான்: அவன் தன் காலை எண்ணெயில் தோய்ப்பான்.

தாழ்ப்பாள்கள் இரும்பாலும் செம்பாலும் ஆனவை: உன் வாழ்நாள் அனைத்தும் நீ பாதுகாப்புடன் இருப்பாய்.

எசுரூபின் இறைவன்போல் எவருமில்லை: அவர் உனக்கு உதவிட வானங்களின் வழியாக தமது மாட்சியுடன் மேகங்கள்மீது ஏறிவருவார்.

என்றுமுள கடவுளே உனக்குப் புகலிடம்: என்றுமுள அவரது புயம் உனக்கு அடித்தளம்: பகைவரை உன் முன்னின்று விரட்டியடித்து, அவர்களை அழித்துவிடு என்பார் அவர்.

அப்போது, இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழ்ந்திடும்: யாக்கோபின் உறைவிடம், தானியமும், இரசமும் மிகுந்த நிலத்தில் இருக்கும்: அவர்தம் மேகங்கள் பனி மழை பொழியும்.

இஸ்ரயேலே! நீ பேறு பெற்றவன்: ஆண்டவரால் மீட்கப்பட்ட மக்களினமே! உன்னைப்போல் வேறு இனம் உண்டோ? உன்னைக் காக்கும் கேடயமும் உன் வெற்றி வாளும் அவரே! உன் பகைவர் உன்முன் கூனிக்குறுகுவர்!

அதிகாரம் 34.

அதன்பின், மோசே மோவாபுச் சமவெளியிலிருந்து எரிகோவுக்குக் கிழக்கே நெபோ மலையில் உள்ள பிஸ்காவின் உச்சிக்கு ஏறிச் சென்றார். ஆண்டவர் அவருக்குத் தாண் வரையில் உள்ள கிலயாது நாடு முழுவதையும் காட்டினார்.

மேலும் நப்தலி முழுவதையும் எப்ராயிம் நிலப்பகுதியையும், மனாசே நிலப்பகுதியையும் யூதாவின் நிலப்பகுதி முழுவதையும், மேற்கே மத்தியதரைக் கடல் வரையிலும் காட்டினார்:

மற்றும் நெகேபையும் போ£ச்சை மாநகராகிய எரிகோ முதல் சோவார் வரையிலும் உள்ள நிலப்பரப்பையும் காட்டினார்.

அப்போது ஆண்டவர் மோசேக்கு உரைத்தது: நான் உன் வழிமரபினருக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கூறிய நிலம் இதுவே. உன் கண்களால் நீ அதைப் பார்க்கும்படி செய்துவிட்டேன். ஆனால் நீ அங்கு போகமாட்டாய் .

எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார்.

மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால் இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது.

மோசே இறக்கும் போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை: அவரது வலிமை குறைந்ததுமில்லை.

மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் மோசேக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர். மோசேக்காக இஸ்ரயேல் மக்கள் அழுது துக்கம் கொண்டாடின நாள்கள் நிறைவுற்றன.

நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் மோசே தம் கைகளை வைத்ததால், அவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப் பெற்றிருந்தார். இஸ்ரயேல் மக்கள் யோசுவாவுக்குச் செவிகொடுத்து, மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி நடந்தார்கள்.

ஆண்டவர் நேருக்குநேர் சந்திக்க மோசேயைப்போல், இறைவாக்கினர் வேறெவரும் இஸ்ரயேலில் இதுகாறும் எழுந்ததில்லை.

ஏனெனில். எகிப்து நாட்டில், பார்வோனுக்கும், அவன் அலுவலருக்கும், அவன் நாடு முழுவதற்கும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்யும்படி ஆண்டவர் மோசேயை அனுப்பினார்.

இஸ்ரயேலர் அனைவரின் கண்கள் காணுமாறு அவர் ஆற்றிய அனைத்து ஆற்றல்மிகு செயல்களும் அச்சுறுத்தும் மாபெரும் செயல்களுமே இதற்குச் சான்றாகும்.

புத்தகம் 6. யோசுவா

அதிகாரம் 1.

ஆண்டவரின் ஊழியர் மோசே இறந்தபின், நூனின் மகனும் மோசேயின் உதவியாளருமாகிய யோசுவாவிடம் ஆண்டவர் பின்வருமாறு கூறினார்:

என் ஊழியன் மோசே இறந்துவிட்டான். இப்பொழுது நீ புறப்பட்டு, யோர்தானைக் கடந்து, இந்த மக்கள் அனைவரோடும் நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் செல்.

மோசேக்கு நான் கூறியவாறு உன் காலடிபடும் இடத்தை எல்லாம் உங்களுக்குக் கொடுப்பேன்.

பாலைநிலத்திலிருந்து இந்த லெபனோன் வரையிலும், யூப்பிரத்தீசு பேராறு தொடங்கி இத்தியர் நாடு முழுவதுமாகக் கதிரவன் மறையும் பெருங்கடல் வரையிலும் உங்கள் நிலமாக இருக்கும்.

உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான். மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன்: கைவிடவும் மாட்டேன்.

வீறுகொள், துணிந்துநில். ஏனெனில் இம்மக்களின் மூதாதையருக்குக் கொடுப்பதாக நான் வாக்களித்த நாட்டை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்வாய்.

திடமும் உறுதியும் கொண்டு என் ஊழியன் மோசே கட் டளையிட்ட எல்லாச் சட்டங்களையும் கடைப்பிடிப்பதில் கவனமாயிரு. நீ அதனின்று வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே. அப்பொழுதுதான் நீசெல்லும் வழியெல்லாம் வெற்றி பெறுவாய்.

இந்தத் திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே. இரவும் பகலும் இதனைத் தியானம் செய்து, இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இரு. அப்பொழுது தான் நீ செல்லும் இடம்எல் லாம் நலம் பெறுவாய்: வெற்றி காண்பாய்.

நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்.

யோசுவா மக்களின் மேற்பார்வையாளருக்குக் கட்டளையிட்டுக் கூறியது:

பாளையத்தின் நடுவே சென்று இவ்வாறு மக்களுக்குரிய கட்டளையாகக் கூறுங்கள்: உங்களுக்கு வேண்டிய உணவைத் தயார் செய்யுங்கள். ஏனெனில், இன்னும் மூன்று நாள்களில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் உடைமையாக உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை உரிமையாக்கிக்கொள்ள இந்த யோர்தானைக் கடப்பீர்கள்.

ரூபன், காத்தின் மக்களுக்கும், மனாசேயின் அரைக் குலத்திற்கும் யோசுவா கூறியது:

உங்களுக்கு ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்டதை நினைவுகொள்ளுங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு அமைதி அருள்வார். இந்நாட்டை உங்களுக்கு அளிப்பார்.

உங்கள் மனைவியரும், குழந்தைகளும், கால்நடைகளும், மோசே உங்களுக்குக் கொடுத்த கீழை யோர்தானில் தங்கலாம். ஆனால் வலிமைமிக்க நீங்கள் படைக்கலம் தாங்கிய போர் வீரர்களாக உங்கள் சகோதரர்களுக்கு முன்பாகக் கடந்து சென்று அவர்களுக்கு முன்பாகக் கடந்து சென்று அவர்களுக்கு உதவுங்கள்.

ஆண்டவர் உங்களுக்குச் செய்ததுபோல் உங்கள் சகோதரர்களையும் அந்நாட்டில் குடியேற்றி அவர்களுக்கும் அமைதி அருள்வார். அதுவரை அவர்களுக்கு உதவுங்கள். அவர்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கும் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர். பின்னர், கதிரவன் உதிப்பதும், கடவுளின் ஊழியர் மோசே உங்களுக்கு அளித்ததும், நீங்கள் ஏற்கனவே உடைமையாக்கிக் கொண்டதுமான கீழையோர்தானுக்குத் திரும்பிவந்து அந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.

அவர்கள் யோசுவாவிடம், நீர் எங்களுக்குக் கட்டளை இடுவதை நாங்கள் செய்வோம். நீர் அனுப்பும் இடத்திற்கெல்லாம் நாங்கள் செல்வோம்.

நாங்கள் மோசேக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்ததுபோல் உமக்கும் கீழ்ப்படிவோம் . உம் கடவுளாகிய ஆண்டவர் மோசேயுடன் இருந்ததுபோல் உம்மோடும் இருப்பாராக.

உம் வாய் மொழியை எதிர்ப்பவன் எவனும், நீர் எங்களுக்குக் கட்டளை இடுபவை அனைத்திற்கும் செவிகொடுக்காதவன் எவனும் கொல்லப்பட வேண்டும். வீறுகொண்டு துணிந்து நிற்பீராக என்றனர்.

அதிகாரம் 2.

நூனின் மகனாகிய யோசுவா சித்திமிலிருந்து இரண்டு ஒற்றர்களை வேவு பார்க்க அனுப்பினார். அவர்களிடம், நீங்கள் சென்று நிலப்பகுதியையும், குறிப்பாக எரிகோ நகரையும் பாருங்கள் என்றார். அவர்கள் சென்று இராகாபு என்ற பெயருள்ள விலைமாதின் வீட்டுக்கு வந்து, அங்குத் தங்கினர்.

சில இஸ்ரயேலர், இரவில் நாட்டைப்பற்றிய உளவு அறிய வந்தனர் என்ற செய்தி எரிகோ மன்னனுக்கு எட்டியது.

உடனே அவன், உன் வீட்டுக்கு வந்து உன்னோடு தங்கியிருக்கும் ஆள்களை வெளியே கொண்டுவா. ஏனெனில் அவர்கள் நாடு முழுவதையும் உளவறிய வந்துள்ளனர் என்று இராகாபிடம் சொல்லுமாறு ஆள் அனுப்பினான்.

அப்பெண் அவ்விருவரையும் அழைத்து ஒளித்துவைத்தபின், சில மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது.

இருட்டியபின் வாயில் கதவு சாத்தப்படும்பொழுது அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. விரைவாக அவர்களைப் பின்தொடர்ந்து பிடியுங்கள் என்றார்.

அவர் அவர்களை மாடியில் ஏற்றி அங்கிருந்த சணல் தட்டைகளுக்குள் மறைத்து வைத்தார்.

அந்த ஆள்கள் யோர்தானுக்குச் செல்லும் வழியில் ஆற்றந்துறைவரை அவர்களைத் தேடிச் சென்றனர். தேடி வந்தவர்கள் வெளியேறியதும் வாயிற்கதவு மூடப்பட்டது.

அவரோ, மாடியில் இருந்த ஒற்றர்கள் உறங்குமுன் அவர்களிடம் சென்றார்.

அவர்களிடம் அவர், இந்நாட்டை ஆண்டவர் உங்களுக்கு அளிப்பார் என்று நான் அறிவேன். ஏனெனில் உங்களைப் பற்றிய அச்சம் எங்களிடையே எழுந்துள்ளது. உலகில் வாழ்வோர் அனைவரும் உங்கள்முன் நடுங்குகின்றனர்.

எகிப்தினின்று நீங்கள் வெளியேறும்பொழுது செங்கடலின் நீரை ஆண்டவர் வற்றச்செய்தது பற்றி அவர்கள் கேள்விப்பட்டுள்ளனர். நீங்கள் கீழை யோர்தானில் இரண்டு எமோரிய அரசர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் அவர்களை அழித்ததையும் அவர்கள் அறிவார்கள்.

அதைக் கேள்விப்பட்டவுடன் எங்கள் இதயம் கலக்கமுற்றது. உங்கள் முன்னிலையில் எங்கள் உள்ளம் தளர்ந்திருக்கிறது. ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர், மேலே விண்ணுலகம் முதல் கீழே மண்ணுலகம் அனைத்திற்கும் கடவுள்.

நான் உங்களுக்கு இரக்கம் காட்டியதுபோல் நீங்களும் என் தந்தை வீட்டிற்கு இரக்கம் காட்டுவீர்கள் என்று இப்பொழுது எனக்கு ஆண்டவரின் பெயரால் வாக்குறுதி அளியுங்கள். நம்பத் தகுந்த அடையாளம் ஒன்றினை எனக்குக் கொடுங்கள்.

என் தாய், தந்தை, என் சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான குடும்பங்கள் அனைத்தையும் வாழவிடுங்கள்.

அதற்கு அந்த ஒற்றர்கள், எங்கள் உயிர் உம்கையில் உள்ளது. எங்களைப் பற்றி வெளியில் சொல்லாமல் இருந்தால் ஆண்டவர் எங்களுக்கு நாட்டை அளிக்கும்போது நாங்கள் உங்களுக்கு இரக்கம் காட்டுவோம். நம்பிக்கையுடன் நடந்துகொள்வோம் என்றனர்.

அவர் ஒரு கயிற்றின்மூலம் அவர்களைச் சாளரம் வழியாக இறக்கிவிட்டார். ஏனெனில், அவரது வீடு கோட்டைச் சுவரோடு இணைந்திருந்தது. அங்கே அவர் வாழ்ந்து வந்தார்.

அவர் அவர்களிடம், உங்களைத் துரத்துபவர்கள் கண்டுபிடிக்காதபடி நீங்கள் மலையை நோக்கிப் போங்கள். துரத்துபவர்கள் திரும்பும்வரை அங்கே மூன்று நாள்கள் ஒளிந்து கொள்ளுங்கள். பின்னர், உங்கள் வழியே செல்லுங்கள் என்றார்.

அப்பொழுது ஒற்றர்கள், நீர் எங்களிடமிருந்து பெற்ற வாக்குறுதியிலிருந்து நாங்கள் தவற மாட்டோம்.

நாங்கள் இந்நாட்டுக்குத் திரும்பி வரும்பொழுது நீர் இந்தச் சிவப்புக் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட சாளரத்தில் கட்டிவையும். உம் தாய், தந்தை, உம் சகோதரர்கள், மற்றும் உம் தந்தை வீட்டில் உள்ள அனைத்தையும் உம் வீட்டில் சேர்த்து வைத்திரும்.

உம் வீட்டடிலிருந்து கதவுக்கு வெளியே எவராவது வந்தால் அவரது சாவுக்கு அவரே பொறுப்பாவார். நாங்கள் குற்றமற்றவர்கள். ஆனால் உம்மோடு வீட்டிலிருப்பவர் மீது எவராவது கை வைத்ததால் அந்த இரத்தப்பழி எங்கள் தலைமீது விழும்.

நமக்குள் நடந்த இந்தப் பேச்சு வார்த்தையை நீர் வெளிப்படுத்தினால், எங்களிடமிருந்து நீர் பெற்ற வாக்குறுதிக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல என்றனர்.

அவர், உங்கள் வார்த்தைப்படியே ஆகட்டும் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் வெளியே சென்றபின் அவர் ஒரு கருஞ்சிவப்புக் கயிற்றைச் சாளரத்தில் கட்டி வைத்தார்.

அவர்கள் மலைக்குச் சென்று, துரத்தி வந்தவர்கள் திரும்பிச் செல்லும் வரை மூன்று நாள்கள் அங்கே தங்கினார்கள். துரத்தியவர்கள் வழிநெடுகத்தேடியும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அங்கே தங்கியிருந்த இரண்டு ஒற்றர்களும் மலையிலிருந்து கீழே இறங்கிப் பயணம் செய்து நூனின் மகன் யோசுவாவிடம் வந்து தங்களுக்கு நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தனர்.

மேலும், அவர்கள் யோசுவாவிடம், நாடு அனைத்தையும் கடவுள் நம் கையில் ஒப்படைத்துள்ளார். நாட்டில் வாழ்பவர் அனைவரும் நம்மைக் கண்டு நடுங்குகின்றனர் என்றார்கள்.

அதிகாரம் 3.

யோசுவா அதிகாலையில் விழித்தெழுந்தார். அவரும் இஸ்ரயேல் மக்களனைவரும் சித்திமிலிருந்து புறப்பட்டு யோர்தான் வந்தடைந்தனர். அதைக் கடக்குமுன் அங்கே தங்கினர்.

மூன்று நாள்கள் கழிந்தபின் மேற்பார்வையாளர் பாளையமெங்கும் போய்,

மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை லேவியக் குருக்கள் தூக்குவதை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் இடங்களிலிருந்து புறப்பட்டு அதன் பின்னால் செல்லவேண்டும்.

ஆயினும் உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் அடி இடைவெளி இருக்கட்டும். யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் வழி உங்களுக்குத் தெரியவேண்டும். ஏனெனில் நீங்கள் அவ்வழியில் இதுவரை சென்றதில்லை.

யோசுவா மக்களிடம், உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார் என்றார்.

யோசுவா குருக்களிடம், உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிப் பிடியுங்கள். மக்கள்முன் கடந்து செல்லுங்கள் என்றார். அவ்வாறே அவர்களும் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள்முன் சென்றனர்.

ஆண்டவர் யோசுவாவிடம், இன்று இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உன்னை உயர்த்தத் தொடங்குகிறேன். அதனால் நான் மோசேயுடன் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிவரும் குருக்கள் யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தவுடன் அங்கேயே நிற்குமாறு அவர்களுக்குக் கட்டளையிடு என்றார்.

யோசுவா இஸ்ரயேல் மக்களிடம், இங்கே வாருங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளுங்கள்.

வாழும் இறைவன் உங்களிடையே இருக்கின்றார் என்று இதனால் அறிவீர்கள். அவர் உங்கள் முன்னிருந்து கானானியர், இத்தியர், இவ்வியர், பெரிசியர், கிர்காசியர், எமோரியர், எபூசியர் ஆகியோரை விரட்டிவிடுவார்.

இதோ, உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை உங்கள்முன் யோர்தானைக் கடக்கின்றது.

இப்போது இஸ்ரயேலின் பன்னிரு குலங்களிலிருந்தும் குலத்திற்கு ஒருவராக நீங்கள் தேர்ந்தெடுங்கள்.

உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் செல்லும் குருக்களின் காலடிகள் யோர்தான் நீரில் பட்டவுடன் அத்தண்ணீர் பிரிந்து போகும். மேற்பகுதியிலிருந்து ஓடிவரும் தண்ணீர் குவியலாக நிற்கும் என்றார்.

மக்கள் தங்கள் கூடாரஙகளிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர்.

உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும்.

மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம் நகருக்கு எதிரில் வெகு தொலையில் மேலெழும்பி நின்றது. கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல் வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு நேர்எதிராகக் கடந்து சென்றனர்.

இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர்.

அதிகாரம் 4.

மக்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்து முடிந்தபின் ஆண்டவர் யோசுவாவை நோக்கி,

மக்களிலிருந்து குலத்திற்கு ஒருவராகப் பன்னிருவரை நீங்கள் தேர்ந்தெடுங்கள். அவர்களுக்குப் பின்வருமாறு கட்டளையிடுங்கள்.

குருக்களின் பாதங்கள் இருக்கும் இடத்திலிருந்து பன்னிரு கற்களை எடுத்து உங்களுடன் கொண்டு வாருங்கள். அவற்றை நீங்கள் இவ்விரவு தங்குமிடத்தில் வையுங்கள் என்றார்.

யோசுவா இஸ்ரயேல் மக்களிலிருந்து குலத்திற்கு ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிருவரை அழைத்தார்.

யோசுவா அவர்களிடம், உங்கள் கடவுளாகிய ஆண்டவரது பேழைக்கு முன்பாக யோர்தான் நடுவில் கடந்து செல்லுங்கள். இஸ்ரயேல் குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப உங்களில் ஒவ்வொருவனும் ஒரு கல்லைத் தோளில் சுமந்து செல்லட்டும்.

இவை உங்களிடையே ஓர் அடையாளமாக இருக்கும். இக்கற்கள் உங்களுக்கு எதைக் குறிக்கும் என்று பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகள் கேட்பார்கள்.

அப்பொழுது நீங்கள் அவர்களுக்கு இவ்வாறு சொல்லுங்கள்: யோர்தான் நீர் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையின்முன் பிரிந்து நின்றது. அப்பேழை யோர்தானைக் கடக்கும்பொழுது யோர்தானின் தண்ணீர் பிரிந்து நின்றது. இக்கற்கள் இஸ்ரயேல் மக்களுக்கு என்றும் இந்நிகழ்ச்சியை நினைவூட்டுவதற்காக உள்ளன என்று சொல்லுங்கள் என்றார்.

யோசுவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் செய்தனர். ஆண்டவர் யோசுவாவிடம் சொல்லியபடி யோர்தான் நதியின் நடுவிலிருந்து இஸ்ரயேல் மக்களின் குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப பன்னிரு கற்களை எடுத்துக் கொண்டு தாங்கள் தங்கிய இடத்திற்குச் சென்று அங்கே வைத்தனர்.

யோசுவா பன்னிரு கற்களையும் யோர்தான் நடுவில் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்களின் பாதங்கள் நின்ற இடத்தில் வைத்தார். அவை அங்கே இந்நாள்வரை உள்ளன.

இவ்வாறு மக்களுக்குக் கூறும்படி ஆண்டவர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார். இவை அனைத்தும் முடியும் வரை பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவிலேயே நின்று கொண்டிருந்தனர். மக்களும் விரைவாகக் கடந்தனர். இதுவே மோசே யோசுவாவுக்கு அளித்திருந்த கட்டளை.

மக்கள் அனைவரும் கடந்த பின், ஆண்டவரது பேழையோடு குருக்களும், மக்கள் காணக் கடந்து வந்தனர்.

மோசே அவர்களுக்குக் கூறியபடி ரூபன், காத்தின் மக்களும் மனாசேயின் அரைக் குலமும் படைக்கலன்கள் தாங்கியவராய், இஸ்ரயேல் மக்கள் காணக் கடந்து வந்தனர்.

ஏறக்குறைய நாற்பதாயிரம் பேர் போருக்குத் தயாராக ஆண்டவரின் முன்னால் எரிகோ சமவெளிக்குச் சென்றனர்.

அன்று ஆண்டவர் யோசுவாவை இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உயர்த்தினார். அவர்கள் மோசேயை மதித்தது போல் இவரையும் வாழ்நாள் முழுவதும் மதித்தனர்.

ஆண்டவர் யோசுவாவிடம் கூறியது:

உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிநிற்கும் குருக்களை யோர்தானிலிருந்து வெளியேறுமாறு கட்டயிடு!

அவ்வாறே யோசுவா குருக்களுக்கு யோர்தானிலிருந்து வெளியேறுங்கள் என்று கட்டளையிட்டார்.

ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானின் நடுவிலிருந்து வெளியேறி, தங்கள் பாதங்களைக் கரையில் வைத்தவுடன் யோர்தான் நீர் தன்னிடத்திற்குத் திரும்பியது. முன்புபோல் கரைகளைத் தொட்டு ஓடியது.

முதல் மாதத்தின் பத்தாம் நாளன்று மக்கள் யோர்தானிலிருந்து வெளியேறினர். அவர்கள் எரிகோவில் கிழக்குப் பகுதியில் இருந்து கில்காலில் தங்கினர்.

யோர்தானிலிருந்து எடுத்து வந்த பன்னிரு கற்களையும் யோசுவா கில்காலில் நாட்டினார்.

அவர் இஸ்ரயேலரிடம், எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் ஏன் இந்தக் கற்கள்? என்று வினவினால்,

அவர்களிடம், இவ்வாறு தெரிவியுங்கள்: உலர்ந்த தரை வழியாக இஸ்ரயேலர் இந்த யோர்தானைக் கடந்தனர்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவர், நாங்கள் கடக்கும் வரை செங்கடலின் நீரை எங்கள் கண்முன் வற்றச் செய்ததுபோல, நீங்கள் கடக்கும் வரையிலும் யோர்தான் நீரை உங்கள் கண்முன் வற்றச் செய்துள்ளார் .

அதனால் உலகின் எல்லா மக்களும் ஆண்டவரின் கை வலிமையுள்ளது என்று அறிவர். நீங்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வாழ்நாள் முழுவதும் அஞ்சுவீர்கள் என்றார்.

அதிகாரம் 5.

மேலை யோர்தானில் இருந்த எமோரிய நாட்டு அரசர்களும் கடலுக்கு அருகிலிருந்த கானானிய மன்னர்களும் ஆண்டவர் யோர்தான் நீரை இஸ்ரயேலர் கண்முன் அவர்கள் கடக்கும் வரையில் வற்றச்செய்தார் என்று கேள்வியுற்றபொழுது, அவர்களின் இதயங்கள் கலக்கமுற்றன. இஸ்ரயேலர்முன் அவர்கள் மனந்தளர்ந்தனர்.

அப்பொழுது ஆண்டவர் யோசுவாவிடம், கற்களால் கத்திகள் செய்துகொள். இஸ்ரயேலருக்கு மீண்டும் விருத்தசேதனம் செய் என்றார்.

அவ்வாறே யோசுவா கற்களால் கத்திகள் செய்து கொண்டார். கிபயத்துகாரலோத்து என்னுமிடத்தில் அவர் இஸ்ரயேலருக்கு விருத்தசேதனம் செய்தார்.

விருத்தசேதனம் செய்ததன் காரணம்: எகிப்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரிலும் போர்வீரர்களான ஆண்கள் எல்லாரும் வழியில் பாலைநிலத்தில் இறந்துவிட்டனர்.

வெளியேறிய மக்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தனர். எகிப்திலிருந்து வெளியேறியபின் வழியில் பாலைநிலத்தில் பிறந்தவர் எவருக்கும் விருத்தசேதனம் செய்யப்படவில்லை.

எகிப்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரிலும் போர்வீரர்களான ஆண்கள் எல்லாரும் அழியும்வரை, இஸ்ரயேலர் நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் அலைந்தனர். ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் குரலைக் கேட்கவில்லை. ஆகவே, ஆண்டவர் அவர்களுக்குக் கொடுப்பதாக ஏற்கெனவே அவர்கள் மூதாதையருக்கு உறுதியளித்திருந்த அந்தப் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை அவர்கள் காணக் கூடாதென ஆணையிட்டுக் கூறினார்.

அழிந்தவர்களுக்குப் பதிலாக அவர்களின் பிள்ளைகளுக்கு யோசுவா விருத்தசேதனம் செய்தார். ஏ¦னினல் வழியில் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படவில்லை.

எல்லா மக்களும் விருத்தசேதனம் செய்யப்பெற்று முடிந்ததும், அவர்கள் குணமாகும் வரையில் அங்கேயே பாளையத்தில் தங்கினர்.

ஆண்டவர் யோசுவாவிடம், இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன் என்றார். ஆகவே அந்த இடம் இந்நாள்வதை கில்கால் என்று அழைக்கப்படுகின்றது.

இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர்.

பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர்.

நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.

அச்சமயத்தில் யோசுவா எரிகோவில் இருந்தார். அப்போது அவர் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ! ஓர் ஆடவர் அவர் எதிரில் தோன்றினார். கையில் உருவிய கத்தியுடன் அவர்நின்று கொண்டிருந்தார். யோசுவா அவரிடம் சென்று, நீர் எங்கள் பக்கமா? அல்லது எதிரிகள் பக்கமா? என்று கேட்டார்.

அவரோ, இல்லை, நான் ஆண்டவரின் படைத்தலைவன் என்ற முறையில் இப்பொழுது வந்துள்ளேன் என்றார். யோசுவா முகம் தரையில்பட வீழ்ந்து வணங்கி அவரிடம், என் ஆண்டவர் தம் அடியானுக்கு என்ன கூறியுள்ளார்? என்ற கேட்டார்.

ஆண்டவரின் படைத்தலைவர் யோசுவாவிடம், உன் காலணியை உன் காலிலிருந்து அகற்று. ஏனெனில் நீ நிற்கும் இடம் புனிதமானது என்றார். யோசுவாவும் அப்படியே செய்தார்.

அதிகாரம் 6.

இஸ்ரயேல் மக்களுக்கு அஞ்சி, எரிகோ இறுக்கமாக அடைக்கப்பட்டது. ஒருவரும் வெளியே வரவுமில்லை: உள்ளே போகவுமில்லை.

கடவுள் யோசுவாவிடம், பார்! எரிகோவையும், அதன் மன்னனையும், அதன் வலிமை மிக்க போர்வீரர்களையும் உன் கையில் ஒப்படைத்துவிட்டேன்.

போர்வீரர்களாகிய நீங்கள் அனைவரும் நகரை வளைத்துக் கொண்டு அதை ஒருமுறை சுற்றி வாருங்கள். இவ்வாறு ஆறு நாள்கள் செய்யுங்கள்.

ஏழு குருக்கள் கொம்புகளால் ஆகிய எக்காளங்களைப் பேழைக்கு முன் ஏந்திச் செல்லட்டும். ஏழாம் நாளில் நீங்கள் நகரை ஏழுமுறை சுற்றி வாருங்கள். அப்பொழுது குருக்கள் எக்காளங்களை முழங்கட்டும்.

அவர்களுடைய எக்காளத்தின் நீண்ட முழக்கத்தை நீங்கள் கேட்டவுடன், நிங்கள் அனைவரும் பேரொலி எழுப்புங்கள். அப்பொழுது நகரின் மதில்கள் இடிந்துவிழும். உடனே மக்கள் அவரவர்களுக்கு முன்னே உள்ள பகுதிக்கு ஏறிச்செல்ல வேண்டும் என்றார்.

நூனின் மகனாகிய யோசுவா குருக்களை அழைத்து அவர்களிடம், உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொள்ளுங்கள். ஏழு குருக்களும் ஏழு எக்காளங்களை ஆண்டவரது பேழைக்குமுன் ஏந்திக்கொண்டு போகட்டும் என்று உரைத்துவிட்டு,

மக்களை நோக்கி, முன்னால் போங்கள்: நகரைச் சுற்றி வாருங்கள். போர்வீரர்கள் ஆண்டவரது பேழைக்குமுன் செல்லட்டும் என்றார்.

இவ்வாறு யோசுவா மக்களுக்குக் கூறியவுடன் கொம்புகளால் ஆகிய ஏழு எக்காளங்களை ஏந்திய ஏழு குருக்கள் ஆண்டவரின் முன் எக்காளம் முழங்கிக்கொண்டே நடந்து சென்றனர். உடன்படிக்கைப் பேழை அவர்களுக்குப் பின் சென்றது.

முன்னணி வீரர் எக்காளங்களை ஊதிய குருக்களுக்குமுன் நடந்து சென்றனர். பின்னணி வீரர் பேழைக்குப்பின் நடந்து சென்றனர். எக்காளங்கள் தொடர்ந்து முழங்கின.

யோசுவா மக்களை நோக்கி, நான் சொல்லும் நாள்வரை நீங்கள் ஆரவாரம் செய்யாமலும், யாதோர் ஓசை எழுப்பாமலும் இருங்கள். உங்கள் வாயினின்று ஒரு வார்த்தையும் புறப்படலாகாது. நான் கூறும்பொழுது ஆர்ப்பரியுங்கள் என்று கட்டளையிட்டார்.

ஆண்டவரின் பேழை நகரை ஒருமுறை சுற்றி வந்தது. பின்னர் அவர்கள் பாளையத்திற்கு வந்து அங்கே இரவைக் கழித்தார்கள்.

யோசுவா அதிகாலையில் எழுந்தார். குருக்கள் ஆண்டவரின் பேழையைச் சுமந்து சென்றார்கள்.

கொம்புகளாலான ஏழு எக்காளங்களை ஏந்திய ஏழு குருக்கள் ஆண்டவரின் பேழைக்குமுன் அவற்றை முழங்கிக்கொண்டே நடந்து சென்றனர். முன்னணி வீரர் அவர்களுக்கு முன் நடந்து சென்றனர். பின்னணி வீரர் ஆண்டவரின் பேழைக்குப்பின் நடந்து சென்றனர். எக்காளங்கள் தொடர்ந்து முழங்கின.

இரண்டாம் நாளிலும் அவர்கள் நகரை ஒருமுறை சுற்றி வந்தனர். பின்னர் பாளையத்திற்குத் திரும்பினர். இவ்வாறு ஆறுநாள்கள் செய்தனர்.

ஏழாம் நாள் வைகறையில் அவர்கள் எழுந்து முன்போலவே நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர். அன்று மட்டும் நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர்.

ஏழாவது முறை குருக்கள் எக்காளங்களை முழங்குகையில் யோசுவா மக்களிடம், இப்பொழுது ஆரவாரம் செய்யுங்கள். ஏனெனில் ஆண்டவர் உங்களிடம் நகரை ஒப்படைத்துவிட்டார்.

நகரும் அதனுள் இருக்கும் அனைத்தும் ஆண்டவருக்குரியன. ஆகவே அவை அழிவுக்குரியன. விலைமாது இராகாபும் அவருடன் வீட்டில் உள்ள அனைவரும் உயிருடன் இருப்பர். ஏனெனில் நாம் அனுப்பிய போர்வீரர்களை அவர் ஒளித்துவைத்தார்.

நீங்கள் அழிந்து போகாதபடி கைப்பற்றிய பொருள்களிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எதையாவது கவர்ந்தால், இஸ்ரயேலின் பாளையத்தையும் அழிவுக்குரியதாக்கிக் கலங்கச் செய்வீர்கள்.

எல்லா வெள்ளியும் பொன்னும் வெண்கல இரும்புப் பாத்திரங்களும் ஆண்டவருக்குப் புனிதமானவை. எனவே ஆண்டவரின் கருவூலத்தைச் சேரும் என்றார்.

மக்கள் ஆரவாரம் செய்தனர். எக்காளங்கள் முழங்கின. எக்காளத்தின் ஓசையைக் கேட்ட மக்கள் பேரொலி எழுப்பினர். மதில் இடிந்து விழுந்தது. மக்கள் நகரினுள் நுழைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு முன்னிருந்த பகுதியைத் தாக்கி நகரைக் கைப்பற்றினர்.

நகரில் இருந்த அனைத்தையும் அழித்தனர். ஆண்பெண், இளைஞர் முதியோர், ஆடு, மாடு கழுதை அனைத்தையும் வாள் முனையால் அழித்தனர்.

நாட்டை உளவு பார்த்த இரண்டுபேரிடம் யோசுவா, விலைமாதின் வீட்டுக்குச் செல்லுங்கள். அவருக்கு வாக்களித்தபடி அங்கிருந்து அப்பெண்ணையும், அவருக்குரிய அனைத்தையும் வெளியே கொண்டுவாருங்கள் என்றார்.

உளவு பார்த்த இளைஞர்கள் சென்றனர். இராகாபையும் அவர் தந்தையையும் தாயையும் அவர் சகோதரர்களையும் அவருக்கிருந்த அனைத்தையும் வெளியே கொண்டுவந்தனர். அவருடைய உறவினர்களையும் அழைத்து வந்தனர். அவர்களை இஸ்ரயேலின் பாளையத்திற்கு வெளியே தங்கச் செய்தனர்.

நகரையும் அதனுள் இருந்த அனைத்தையும் நெருப்பிலிட்டு எரித்தனர். வெள்ளியையும், பொன்னையும், வெண்கல இரும்புப் பாத்திரங்களையும் மட்டுமே ஆண்டவரது வீட்டின் கருவூலத்தின் சேர்த்தனர்.

விலைமாது இராகாபையும் அவர் தந்தையின் வீட்டாரையும் அவரைச் சார்ந்த அனைவரையும் யோசுவா உயிருடன் காப்பாற்றினார். அவர் இஸ்ரயேல் நடுவில் இன்றுவரை வாழ்கின்றார். ஏனெனில் எரிகோவை உளவு பார்க்க அனுப்பப்பட்ட தூதர்களை அவர் ஒளித்துவைத்தார்.

அச்சமயம் யோசுவா எழுந்து, எரிகோ என்னும் இந்நகரை மீண்டும் கட்டும் மனிதன் சபிக்கப்பட்டவன். அவன் கடைக்கால் இடுகையில் தன் முதல் மகனையும், அதன் வாயிற்கால்களை இடுகையில் தன் கடைசி மகனையும் இழப்பான் என்றார்.

ஆண்டவர் யோசுவாவுடன் இருந்தார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவிற்று.

அதிகாரம் 7.

இஸ்ரயேல் மக்கள் அழிவுக்குரியவைபற்றிய கட்டளையை மீறினார்கள். யூதா குலத்தைச் சார்ந்த செராகின் மகனாகிய சபதியின் மகன் சர்மிக்குப் பிறந்த ஆக்கான் என்பவன் அழிவுக்குரியவற்றிலிருந்து சிலவற்றைக் கவர்ந்து கொண்டான். இஸ்ரயேல் மக்கள் மீது ஆண்டவர் சினம் மூண்டது.

பெத்தேலுக்குக் கிழக்கே, பெத்தாவேனுக்கு அருகில் இருந்த ஆயி என்னும் நகருக்கு எரிகோவிலிருந்து யோசுவா ஆள்களை அனுப்பினார். அவர்களிடம், சென்று, நாட்டை உளவறிந்து வாருங்கள் என்றார். அவர்கள் சென்று ஆயி நகரை உளவறிந்தார்கள்.

அவர்கள் திரும்பி வந்து யோசுவாவிடம், மக்கள் எல்லாரையும் அனுப்பவேண்டாம். இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் சென்று ஆயி நகரைத் தாக்கட்டும். மக்கள் எல்லாரும் அங்குச் சென்று களைப்படைய வேண்டாம். ஏனெனில் அங்குள்ளவர்கள் சிலரே என்றனர்.

அவ்வாறே மக்களிலிருந்து மூவாயிரம் பேர் சென்றனர். ஆனாலும் அவர்கள் ஆயி நகரின் ஆள்களுக்குமுன் தோற்று ஓடினார்கள்.

ஆயி நகரின் ஆள்கள் நகரின் வாயிலிலிருந்து செபாரிம் வரை அவர்களைத் துரத்திச்சென்று மலைச்சரிவில் அவர்களில் முப்பத்தாறு பேரைக் கொன்றார்கள். எனவே மக்களின் நெஞ்சம் உறுதி இழந்து தண்ணீர்போல் ஆனது.

யோசுவா தம் ஆடைகளைக் கிழித்துக்கொள்ள, அவரும் அவருடன் இஸ்ரயேலின் முதியோரும் ஆண்டவரின் பேழைக்குமுன் மாலைவரை தரையில் முகம்குப்புற விழுந்து கிடந்தனர். தம் தலைமீது புழுதியைப் போட்டுக் கொண்டனர்.

யோசுவா, ஜயோ, என் தலைவராகிய ஆண்டவரே! மக்களை எமோரியர் கையில் ஒப்படைத்து, அழிப்பதற்காகவா யோர்தானைக் கடக்குமாறு செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்பாலேயே மனநிறைவோடு தங்கி இருந்திருக்க வேண்டும்.

என் ஆண்டவரே! இஸ்ரயேலர் தங்கள் எதிரிகளின்முன் புறமுதுகுகிட்டு ஓடிவிட்டார்களே! நான் இப்போது என்ன சொல்வேன்?

கானானியரும் நாட்டில் வாழும் அனைவரும் இதைக் கேட்டு எங்களைச் சூழ்ந்துகொண்டு எங்கள் பெயரை உலகிலிருந்தே அழித்துவிடுவார்களே? அப்போது உமது பெருமை மிக்க பெயரைக் காக்க என்ன செய்வீர்? என்றார்.

ஆண்டவர் யோசுவாவிடம், எழுந்திரு! ஏன் முகம்குப்புற விழுந்து கிடக்கின்றாய்?

இஸ்ரயேலர் பாவம் செய்தனர். நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையை மீறிவிட்டனர். அவர்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எடுத்துக்கொண்டனர்: களவுசெய்தனர்: வஞ்சித்தனர்: அவற்றைத் தங்கள் பொருள்களுடன் சேர்த்துக் கொண்டனர்.

ஆகவேதான் இஸ்ரயேல் மக்கள் தங்கள் எதிரிகளின்முன் நிற்க முடியவில்லை: புறமுதுகிட்டு ஓடினர். அவர்கள் அழிவுக்குரியவர்கள். உங்கள் நடுவிலிருந்து அழிவுக்குரியவற்றை நீங்கள் அழிக்காவிடில் நான் இனி உங்களுடன் இருக்கமாட்டேன்.

எழுந்திரு. மக்களைப் புனிதமாக்கு: நாளையதினம் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறு. ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: இஸ்ரயேலரே! உங்களிடையே உள்ள அழிவுக்குரியவற்றை உங்களிடமிருந்து நாங்கள் விலக்கும்வரை உங்கள் எதிரிகளின்முன் உங்களால் நிற்க முடியாது.

காலையில் நீங்கள் உங்கள் குலங்களுக்கு அருகில் வருவீர்கள். எந்தக் குலத்தைக் கடவுள் குறிப்பிடுகிறாரே அந்தக் குலம் குடும்பம் குடும்பமாக அருகில் வரும். எந்தக் குடும்பத்தைக் கடவுள் குறிப்பிடுகிறாரே, அந்தக் குடும்பம் வீடுவீடாக வரும். எந்த வீட்டைக் குறிப்பிடுகின்றாரோ, அந்த வீட்டார் ஆள் ஆளாக வருவர்.

அழிவுக்குரியவற்றுடன் பிடிபடுபவனும் அவனுடையதனைத்தும் நெருப்பில் எரிக்கப்படும். ஏனெனில் அவன் ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி இஸ்ரயேலுக்குத் தீமை செய்தான் என்றார்.

யோசுவா காலையில் எழுந்து இஸ்ரயேலைக் குலம் குலமாக முன்னே வரச்செய்தார். யூதா குலம் பிடிபட்டது.

எனவே அவர் யூதா குலத்தை முன்னே வரச்செய்தார். செராகின் குடும்பம் பிடிபட்டது. ஆகவே, அவர் செராகின் குடும்பத்தை வீடு வீடாக முன்னே வரச் செய்தார். சபதி வீடு பிடிபட்டது.

அவனது வீட்டாரை ஆள் ஆளாக முன்னே வரச்செய்தார். செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் பிடிபட்டான். அவன் யூதா குலத்தைச் சார்ந்தவன்.

யோசுவா ஆக்கானிடம், என் மகனே! இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு மாட்சி செலுத்தி அவருக்கு நன்றி கூறு! நீ என்ன செய்தாய் என்பதை எனக்குச் சொல். என்னிடமிருந்து மறைக்காதே என்றார்.

ஆக்கான் யோசுவாவுக்கு மறுமொழியாக, உண்மையில் நான் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன். நான் செய்தது இதுவே:

அழிவுக்குரியவற்றுள்ஓர் அழகான பாபிலோனிய மேலாடையையும், ஒரு கிலோ முந்நூறு கிராம் வெள்ளியையும், ஜந்நூற்று எழுபத்தைந்து கிராம் தங்கக் கட்டியையும் கண்டேன். அவற்றின்மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக்கொண்டேன். எனது கூடாரத்திற்குள் வெள்ளி அடிப்பகுதியில் இருக்க அவற்றைத் தரையில் புதைத்து வைத்துள்ளேன் என்றார்.

யோசுவா தூதரை அனுப்பினார். அவர்கள் கூடாரத்திற்குள் விரைந்து சென்றனர். இதோ! வெள்ளி அடிப்பகுதியில் இருக்க, அவை அவனது கூடாரத்திற்குள் தரையில் புதைக்கப்பட்டிருந்தன.

அவர்கள் கூடாரத்திலிருந்து அவற்றைக் கைப்பற்றினர். அவர்கள் அவற்றை யோசுவாவிடமும் எல்லா இஸ்ரயேல் மக்களிடமும் கொண்டுவந்து ஆண்டவர் திருமுன் பரப்பி வைத்தனர்.

செராகின் மகன் ஆக்கான், வெள்ளி, மேலாடை, தங்கக்கட்டி, அவனுடைய புதல்வர், புதல்வியர், அவனுடைய மாடு, கழுதை, ஆடு, கூடாரம் ஆகிய அவனுக்கிருந்த அனைத்தையும் யோசுவா கைப்பற்றி அவர்களோடு எல்லா இஸ்ரயேல் மக்களையும் ஆக்கோர் பள்ளத்தாக்கிற்குக் கூட்டி வந்தார்.

யோசுவா, ஏன் நீ எங்களுக்குத் தொல்லை வருவித்தாய்? இன்றே ஆண்டவரும் உனக்குத் தொல்லை வருவிப்பார் என்றார். இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர். அப்பொருள்களைத் தீக்கிரையாக்கி அவனைச் சார்ந்தவர்களைக் கல்லால் எறிந்து கொன்றனர்.

அவன்மீது ஒரு பெரும் கற்குவியல் எழுப்பினர். அது இந்நாள்வரை உள்ளது. ஆண்டவர் தம் கடுஞ்சினத்தைத் தணித்துக்கொண்டார். ஆதலால், இந்நாள் வரை அவ்விடத்தின் பெயர் ஆக்கோர் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகின்றது.

அதிகாரம் 8.

ஆண்டவர் யோசுவாவிடம், அஞ்சாதே, கலங்காதே: உன்னுடன் எல்லாப் போர்வீரர்களையும் சேர்த்துக் கொள். ஆயியை நோக்கிப் புறப்பட்டுச்செல்! இதோ! ஆயியின் மன்னனையும், அதன மக்களையும், அவனது நகரையும் அவனது நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கிறேன்.

எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்ததுபோல் ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்வாய்: கைப்பற்றப்பட்ட பொருள்களையும் கால்நடைகளையும் உங்களுக்கு வைத்துக் கொள்ளுங்கள். நகருக்குப் பின்புறத்தில் ஒரு பதுங்கிடம் அமை என்றார்.

அவ்வாறே யோசுவாவும் எல்லாப் போர்வீரர்களும் ஆயிக்குப் புறப்படத் தயாராயினர். யோசுவா முப்பதாயிரம் வலிமை வாய்ந்த போர் வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினார்.

அவர்களிடம், பாருங்கள், நீங்கள் அந்நகருக்குப் பின்புறம் பதுங்கி இருங்கள். நகரிலிருந்து மிகவும் தொலையில் போய்விடாதீர்கள். அனைவரும் தயாராக இருங்கள்.

நானும் என்னுடன் இருக்கும் மக்கள் எல்லாரும் நகருக்கு அருகில் வருவோம். நம்மைப் பிடிக்க முன்புபோல் அவர்கள் வெளியே வருவார்கள். அவர்கள்முன் நாங்கள் ஓடுவோம்.

அவர்கள் எங்கள்பின் வெளியே வருவார்கள். நகரிலிருந்து வெகுதூரம் வரும்வரை அவர்களைக் கொண்டுவந்து விடுவோம். அவர்கள் முன்புபோலத் தப்பி ஓடுகின்றார்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். நாங்கள் அவர்கள் முன் ஓடுவோம்.

நீங்கள் பதுங்கிடத்திலிருந்து எழுந்து நகரைக் கைப்பற்றுங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அதை உங்கள் கையில் கொடுப்பார்.

நீங்கள் நகரைக் கைப்பற்றியதும், அதை நெருப்பினால் எரியுங்கள். கடவுள் கூறியது போலவே செய்யுங்கள். உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். கவனமாயிருங்கள் என்றார்.

யோசுவா அவர்களை அனுப்ப, அவர்கள் பதுங்கிடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் ஆயிக்கு மேற்காகப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் பதுங்கிக்கொண்டனர். யோசுவா இரவில் மக்கள் நடுவே தங்கினார்.

யோசுவா வைகறையில் எழுந்து மக்களை எண்ணினார். அவரும் இஸ்ரயேலின் முதியோரும் மக்களுக்கு ஆயிக்குச் சென்றனர்.

அவருடன் இருந்த போர்வீரர்கள் எல்லாரும் புறப்பட்டுச் சென்று, அந்நகருக்கு அருகில் வந்தனர். அவர்கள் ஆயிக்கு வடக்கே பாளையம் இறங்கினார்கள். அவர்களுக்கும் ஆயிக்கும் இடையில் ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.

யோசுவா ஏறக்குறைய ஜயாயிரம் பேரைக் கூட்டிக் கொண்டு சென்று பெத்தேலுக்கும் ஆயிக்கும் அடையில் நகருக்குக் கிழக்கே பதுங்கிடத்தில் தங்கச் செய்தார்.

மக்கள் நகருக்கு வடக்காகவும், பள்ளத்தாக்கிற்குக் கிழக்காகவும் இருந்த இடத்தில் பாளையம் இறங்கினார்கள். யோசுவா அவ்விரவைப் பள்ளத்தாக்கில் கழித்தார்.

ஆயியின் மன்னன் இதைக் கண்டதும், அந்நகர மக்கள் காலையில் விரைந்து எழுந்து இஸ்ரயேலுடன் போரிட வெளியே வந்தனர். அவனும் மக்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு, அராபாவுக்குமுன் வந்தனர். நகருக்குப் பின்புறம் எதிரிகள் பதுங்கியிருந்ததை அவன் அறியவில்லை.

யோசுவாவும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அவர்கள் முன் தோற்றவர்கள்போல் பாலைநிலம் நோக்கி ஓடினார்கள்.

நகரில் இருந்த மக்கள் எல்லாரும் ஒன்றுகூடி அவர்களைத் துரத்தினர். அவர்கள் யோசுவாவின்பின் ஓட, நகரிலிருந்து பிரிக்கப்பட்டனர்.

இஸ்ரயேலைத் துரத்தி ஆயி, பெத்தேல் இவற்றிலிருந்து வெளியே வராதவன் எவனும் இல்லை. அனைவரும் நகரைத் திறந்துவிட்டபடியே வெளியேறி இஸ்ரயேலின் பின்னே ஓடினர்.

ஆண்டவர் யோசுவாவிடம், உன் கையிலுள்ள ஈட்டியை ஆயியை நோக்கி ஓங்கு. ஏனெனில் நான் அதை உன் கையில் ஒப்படைப்பேன் என்றார். அவ்வாறே யோசுவா தம் கையில் இருந்த ஈட்டியை ஆயியை நோக்கி ஓங்கினார்.

பதுங்கியிருந்தவர் வேகமாகத் தம் இடத்திலிருந்து எழுந்தனர். யோசுவா கையை ஓங்கியதும் அவர்கள் வேகமாக ஓடிவந்து நகரினுள் புகுந்து அதைக் கைப்பற்றி விரைவாக அந்நகரை நெருப்பால் எரித்தனர்.

ஆயியின் மக்கள் திரும்பிப் பார்த்தனர். இதோ நகரினின்று எழும்பிய புகை விண்ணை நோக்கிப் போவதைக் கண்டனர். எப்பக்கமும் தப்பியோட அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. பாலைநிலம் நோக்கி ஓடிய இஸ்ரயேல் மக்கள் தங்களைத் துரத்தியவர்மீது திரும்பிப் பாய்ந்தனர்.

பதுங்கியிருந்தவர்கள் நகரைக் கைப்பற்றியதையும் ஆயியின் புகை மேலே எழும்புவதையும் கண்ட யோசுவாவும் எல்லா இஸ்ரயேல் மக்களும் திரும்பிச்சென்று ஆயி மக்களைத் தாக்கினார்.

இந்நேரத்தில் பதுங்கியிருந்தோரும் நகரிலிருந்து வெளியே வந்து அவர்களைத் தாக்கினர். எனவே இருபக்கமும் இஸ்ரயேலருக்கு இடையே அவர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களுள் ஒருவனும் உயிரோடு தப்பிக்காதபடி அவர்கள் தாக்கப்பட்டனர்.

இஸ்ரயேலர் ஆயியின் மன்னனை உயிருடன் பிடித்து யோசுவாவிடம் கொண்டுவந்தனர்.

இஸ்ரயேலர் ஆயி மக்கள் அனைவரையும் பாலை நிலத்தில் துரத்திச் சென்று கொன்றனர்: அனைவரையும் வாள் முனையில் அடியோடு அழித்தனர். பின்னர் இஸ்ரயேலர் அனைவரும் ஆயிக்குத் திரும்பி அதையும் வாள்முனைக்கு இரையாக்கினர்.

ஆண்களும் பெண்களுமாக அன்று இறந்தவர் பன்னிரண்டாயிரம் பேர். ஆயியின் ஆண்கள் எல்லாருமே அன்று வீழந்தனர்.

ஆயியின் எல்லா மக்களையும் கொல்லும் வரை, யோசுவா ஈட்டியுடன் ஓங்கிய கையை மடக்கவில்லை.

யோசுவாவுக்கு ஆண்டவர் கூறியபடியே, கால்நடையையும், நகரின் பொருள்களையும் மட்டும் இஸ்ரயேல் மக்கள் கொள்ளைப் பொருளாக எடுத்துக் கொண்டனர்.

யோசுவா ஆயியைத் தீக்கிரையாக்கி, அது என்றென்றும் அழிவின் மேடாக இருக்குமாறு செய்தார்.

அது இன்றுவரை அப்படியே உள்ளது. அவர் ஆயி மன்னனைத் தூக்கிலேற்றினார். கதிரவன் சாய்ந்தவுடன் யோசுவாவின் கட்டளைப்படி அவர்கள் அவன் உடலைத் தூக்கிலிருந்து இறக்கி, நகரின் நுழைவாயிலில் எறிந்தார்கள். அதன் மீது பெரும் கற்குவியலை எழுப்பினர். அது இன்றுவரை உள்ளது.

இதன்பின் யோசுவா இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏபால் மலையில் ஒரு பீடம் எழுப்பினார்.

அது ஆண்டவரின் ஊழியராகிய மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடி அமைந்தது. மோசேயின் திருச்சட்டநூலில் எழுதியுள்ளது: இரும்புக் கருவிகளைக் கொண்டு செதுக்காத முழுக் கற்களால் பீடம் அமைக்கப்பட வேண்டும். அவர்கள் அதன்மீது ஆண்டவருக்கு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக்கொடுத்தனர்.

அங்குக் கற்களின் மீது மோசேயின் கட்டளையை யோசுவா இஸ்ரயேலர் முன்னிலையில் எழுதினார்.

இஸ்ரயேல் மக்களும் வெளிநாட்டவரும் முதியோர்: அலுவலர், நீதிபதிகளுடன் பேழைக்கு முன்னே இருமருங்கிலும் நின்றுகொண்டிருந்தனர். லேவியக் குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஏந்திக்கொண்டிருந்தனர். பாதிப்பேர் கெரிசிம் மலை முன்பும், பாதிப்பேர் ஏபால் மலை முன்பும், கடவுளின் ஊழியராகிய மோசே ஏற்கெனவே கட்டளையிட்டபடி, இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி தர நின்றுகொண்டிருந்தனர்.

அதன்பின் திருச்சட்டநூலில் எழுதியுள்ள அனைத்து ஒழுங்குகளின்படி ஆசிகளையும், சாபங்களையும், சட்டத்தின் எல்லா நியமங்களையும் அவர் வாசித்தார்.

மோசே கட்டளையிட்ட எல்லாவற்றினின்றும் இஸ்ரயேல் சபைமுன் யோசுவா வாசிக்காதது எதுவுமில்லை. அப்போது பெண்கள், குழந்தைகள், அவர்களிடையே வாழ்ந்த அயலார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

அதிகாரம் 9.

யோர்தானுக்கு இப்பக்க மலைப்பகுதிகளிலும் பள்ளத்தாக்கிலும் பெருங்கடலின் கரை முழுவதிலும் லெபனோனின் முன்பக்கம்வரை இருந்த மன்னர்கள் அனைவரும் இத்தியர், எமோரியர், கானானியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரும் இதைப்பற்றிக் கேள்வியுற்றனர்.

யோசுவாவுடனும் இஸ்ரயேலருடனும் போர் தொடுக்க அவர்கள் ஒன்றுகூடினர்.

கிபயோன் குடிமக்கள் எரிகோவிற்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைப் பற்றிக் கேள்வியுற்றனர்.

கிபயோன் குடிமக்கள் தூதர் போல் தந்திரமாகச் சென்றார்கள். அவர்கள் தங்கள் கழுதைகளின் மீது கிழிந்த மூட்டைகளையும், பழைய,

கிழிந்து தைக்கப்பட்ட திராட்சை இரசத் தோல்பைகளையும் ஏற்றிக் கொண்டு, பழைய தைக்கப்பட்ட காலணிகளையும், பழைய ஆடைகளையும் அணிந்துகொண்டு, காய்ந்து சாம்பல் பூத்துவிட்ட அப்பங்களை உணவாக எடுத்துக்கொண்டு சென்றனர்.

அவர்கள் கில்காலில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் சென்றார்கள். அவர்கள் யோசுவாவிடமும் இஸ்ரயேல் மக்களிடமும், நாங்கள் தொலைநாட்டிலிருந்து வருகின்றோம். இப்பொழுது எங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ளுங்கள் என்றனர்.

இஸ்ரயேல் மக்கள் இவ்வியரிடம், நீங்கள் எங்கள் நடுவில் வாழ்கின்றீர்கள். நாங்கள் உங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ளமாட்டோம் என்றார்கள்.

அவர்கள் யோசுவாவிடம், நாங்கள் உங்கள் பணியாளர்கள் என்றனர். யோசுவா அவர்களிடம் நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள்? என்று கேட்டார்.

அவர்கள் அவரிடம், மிகவும் தொலையில் உள்ள நாட்டிலிருந்து உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரால் உங்கள் பணியாளர்கள் வந்திருக்கின்றார்கள். ஏனெனில் அவரது பெயரைப் பற்றியும், அவர் எகிப்து நாட்டில் செய்த அனைத்தைப்பற்றியும் கேள்விப்பட்டோம்.

யோர்தானுக்கு அப்பால் வாழ்ந்த எஸ்போன் மன்னன் சீகோன், அஸ்தரோத்திலிருந்த பாசான் மன்னன் ஓகு ஆகிய இரண்டு எமோரிய மன்னர்களுக்கும் அவர் என்ன செய்தார் என்பதைப் பற்றியும் கேள்வியுற்றோம்.

எங்கள் பெரியோர்களும் எங்கள் நாட்டில் வாழ்வோர் அனைவரும் எங்களிடம், உங்கள் கைகளில் வழி உணவை எடுத்துக்கொண்டு அவர்களைச் சந்திக்கச் செல்லுங்கள். அவர்களிடம் நாங்கள் உங்கள் பணியாளர்கள். இப்போது எங்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள் என்று கூறுங்கள் என்றனர்.

நாங்கள் உங்களிடம் வர எங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, வழி உணவாக எடுத்துக் கொண்ட இந்த அப்பம் சூடாக இருந்தது. இப்போதோ காய்ந்து சாம்பல் பூத்துவிட்டது.

இவை திராட்சை ரசத் தோல்பைகள். நாங்கள் நிரப்பிய போது புதியனவாக இருந்தன. இப்போதோ கிழிந்துவிட்டன. எங்கள் ஆடைகளும் எங்கள் மிதியடிகளும் மிகநெடும் பயணத்தினால் கிழிந்து விட்டன என்றனர்.

இஸ்ரயேல் மக்கள் அவர்களது உணவை எடுத்துக் கொண்டனர்: ஆண்டவரது வார்த்தையை நாடவில்லை.

யோசுவா கிபயோன் மக்களை நல்லிணக்கத்தோடு ஏற்று, அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அவர்களை வாழவிட்டார். சபைத்தலைவர்கள் அவர்களுக்கு ஆணையிட்டு வாக்களித்தனர்.

அவர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட மூன்றாம் நாள் இஸ்ரயேல் மக்கள் அவர்கள் தங்களுக்கு அருகில் உள்ளவர்கள் என்றும், அடுத்து வாழ்பவர்கள் என்றும் கேள்வியுற்றனர்.

இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு, மூன்றாம் நாள் அவர்கள் நகருக்கு வந்தனர். கிபயோன், கெபிரா, பெயரோத்து, கிரியத்து எயாரிம் ஆகியவையே அந்நகர்கள்.

இஸ்ரயேல் மக்கள் அவர்களைக் கொல்லவில்லை. ஏனெனில் சபையின் தலைவர்கள் அவர்களுக்கு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் ஆணையிட்டு வாக்களித்திருந்தார்கள். சபை முழுவதும் தலைவர்களுக்கு எதிராக முணுமுணுத்தது.

எல்லாத் தலைவர்களும் சபையின் அனைவரிடமும், அவர்களுக்கு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயரால் வாக்குறுதி அளித்துவிட்டோம். இப்பொழுது நாங்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது.

நாம் இவ்வாறு செய்வோம்: அவர்களை வாழ விடுவோம். நாம் அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் குறித்து ஆண்டவரின் சினம் நம்மீது விழாமலிருக்கும் என்றனர்.

மேலும் தலைவர்கள் அவர்களிடம், அவர்கள் வாழட்டும். ஆனால் சபை முழுவதற்கும் அவர்கள் மரம் வெட்டுபவர்களாகவும் தண்ணீர் எடுப்பவர்களாகவும் ஆகட்டும் என்று கூறித் தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றிக் கொண்டனர்.

யோசுவா அவர்களை அழைத்து, நீங்கள் எங்களுக்கு மிக அருகில் வாழ்கின்றீர்களே! பின்னர் நாங்கள் உங்களிடமிருந்து வெகு தொலையில் வாழ்பவர்கள் என்று கூறி எங்களை ஏன் ஏமாற்றினீர்கள்?

நீங்கள் இப்போது சபிக்கப்பட்டவர்கள். உங்கள் அடிமைத்தனம் நீங்காது. மரம் வெட்டுபவர்களாகவும் என் கடவுளின் இல்லத்திற்குத் தண்ணீர் எடுப்பவர்களாகவும் இருப்பீர்கள் என்றார்.

அவர்கள் யோசுவாவிற்கு மறுமொழியாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவர், தம் ஊழியர் மோசேக்கு எல்லா நாட்டையும் உங்களுக்குக் கொடுக்கவும், உங்கள் முன்னிலையில் நாட்டில் வாழ்பவர்கள் அனைவரையும் அழிக்கவும் கட்டளையிட்டார் என்று உங்கள் பணியாளர்களுக்குக் கூறப்பட்டது. ஆகவே நாங்கள் மிகவும் அஞ்சி இவ்வாறு செய்தோம்.

இப்பொழுது இதோ! நாங்கள் உங்கள் கையில் உள்ளோம். எது நல்லதும் நீதியும் ஆனதோ அதைச் செய்யுங்கள் என்றனர்.

அவர் அவர்களுக்குச் செய்தது: அவர் இஸ்ரயேல் மக்களின் கைகளினின்று அவர்களை விடுவித்தார். இஸ்ரயேல் மக்கள் அவர்களைக் கொல்லவில்லை.

யோசுவா, அந்நாளில் அவர்களை மரம் வெட்டுபவர்களாகவும், சபைக்கும் ஆண்டவரின் பீடத்திற்கும் தண்ணீர் எடுப்பவர்களாகவும் நியமித்தார். அவர் அவர்களுக்குக் குறித்த இடத்தில் இன்றுவரை அவர்கள் உள்ளனர்.

அதிகாரம் 10.

யோசுவா ஆயியைக் கைப்பற்றி அழித்தார் என்றும், எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்தது போல ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்தார் என்றும் கிபயோன் குடிமக்கள் இஸ்ரயேலுடன் சமாதானம் செய்துகொண்டு அவர்களிடையே வாழ்கின்றார்கள் என்றும், எருசலேமின் மன்னன் அதோனிசெதக்கு கேள்விப்பட்டான்.

அவன் மிகவும் அச்சமுற்றான். ஏனெனில், பெருநகரான கிபயோன் அரச நகர்களில் ஒன்றாகவும் ஆயியைவிடப் பெரிய நகராகவும் அதன் மக்கள் அனைவரும் வலிமை மிக்கவர்களாகவும் இருந்தும் அது சமாதானம் செய்து கொண்டது.

எபிரோன் மன்னன் ஓகாம், யார்முத்து மன்னன் பிராம், இலாக்கிசு மன்னன் யாப்பியா, எக்லோன் மன்னன் தெபீர் ஆகியோருக்கு எருசலேம் மன்னன் அதோனிசெதக்கு

எனக்கு உதவி செய்ய வாருங்கள். நாம் கிபயோனைத் தாக்குவோம். ஏனெனில் அது யோசுவாவுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் சமாதானம் செய்து கொண்டுள்ளது என்று சொல்லியனுப்பினான்.

அவ்வாறே எமோரிய இனத்தைச் சார்ந்த எருசலேம், ஏபிரோன், யார்முத்து, இலாக்கீசு, எக்லோன் ஆகியவற்றின் ஜந்து மன்னர்களும் ஒன்றுகூடி அவர்கள் படைகளுடன் சென்றார்கள்: கிபயோனுக்கு எதிரில் பாளையம் இறங்கி அதன்மீது போர்தொடுத்தார்கள்.

கிபயோன் மக்கள் கில்காலில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவுக்குச் சொல்லி அனுப்பியது: உம் பணியாளர்களைக் கைவிடாதீர். விரைந்து வந்து எங்களைக் காப்பாற்றும். எங்களுக்கு உதவி செய்யும். ஏனெனில் மலைப்பகுதியில் வாழும் எல்லா எமோரிய மன்னர்களும் எங்களை எதிர்க்க ஒன்று கூடியுள்ளனர்.

எனவே, கில்காலிலிருந்து, யோசுவா தம் போர்வீரர்கள் அனைவருடனும் வலிமைமிக்க வீரர்களுடனும் புறப்பட்டுச் சென்றார்.

ஆண்டவர் யோசுவாவிடம், அவர்கள் முன் அஞ்சாதே: ஏனெனில் அவர்களை உன்கையில் ஒப்படைத்துள்ளேன். அவர்களில் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான் என்றார்.

யோசுவா கில்காலிலிருந்து இரவு முழுவதும் பயணம் செய்து, அவர்களை நோக்கித் திடீரென வந்தார்.

ஆண்டவர் இஸ்ரயேல்முன் எமோரியரைத் துன்புறுத்தினார்: கிபயோனில் அவர்களை வன்மையாகத் தாக்கித் தோல்வியுறச் செய்தார்: அவர் அவர்களைப் பெத்கோரோனின் மேட்டு வழியே அசேக்கா, மக்கேதா வரை துரத்தித் தாக்கினார்.

அவர்கள் இஸ்ரயேலரிடமிருந்து பெத்கோரோனுக்குத் தப்பி ஓடுகையில் ஆண்டவர் அவர்கள்மீது அசேக்காவரை பெரும் கற்களை வானத்திலிருந்து பொழிந்தார். இஸ்ரயேலரின் வாளால் கொல்லப்பட்டவர்களைவிடக் கல்மழையால் இறந்தவர்கள் அதிகம்.

கடவுள் எமேரியரை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்த அன்று யோசுவா ஆண்டவரிடம் பேசினார். அவர் இஸ்ரயேலர் கண்முன், கதிரவனே! கிபயோனில் நில்! நிலவே! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில் என்றார்.

அவர்கள் தம் எதிரியின் மீது வஞ்சம் தீர்க்கும்வரை கதிரவனும் நிலவும் அசையாது நின்றன. இது யாசாரின் நூலில் எழுதப்படவில்லையா? கதிரவன் நடுவானில் நின்றது. ஒரு நாள் முழுவதும் அது இறங்குவதற்கு விரையவில்லை .

ஆண்டவர் மனிதக் குரலைக் கேட்டு, இஸ்ரயேலுக்காகப் போரிட்ட அந்நாளைப்போன்று அதற்கு முன்னும் பின்னும் இருந்ததில்லை.

யோசுவாவும் அவருடன் இருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் கில்காலில் இருந்த பாளையத்திற்குத் திரும்பினர்.

அந்த ஜந்து எமோரிய மன்னர்களும் தப்பி ஓடி, மக்கேதாவில் ஒரு குகையில் ஒளிந்து கொண்டார்கள்.

அவர்கள் மக்கேதாக் குகையில் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பற்றி யோசுவாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

யோசுவா, குகையின் வாயிலில் பெருங்கற்களை வையுங்கள். அவர்களைக் காவல் காக்க அதற்கருகில் ஆள்களை நிறுத்துங்கள்.

நீங்கள் நிற்காதீர்கள். உங்கள் பகைவர்களைத் துரத்திச் செல்லுங்கள். அவர்களைப் பின்புறத்திலிருந்து தாக்குங்கள். அவர்களைத் தங்கள் நகருக்குள் செல்ல அனுமதிக்காதீர்கள். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார் என்றார்.

யோசுவாவும் இஸ்ரயேல் மக்களும் அவர்களை வன்மையாகத் தாக்கி அவர்கள் முற்றிலும் அழியும்வரை அவர்களைக் கொன்று முடித்தனர். அவர்களிடமிருந்து தப்பி ஓடியவர்கள் பாதுகாக்கப்பட்ட நகர்களுக்குள் நுழைந்தார்கள்.

மக்கேதாவில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் மக்கள் அனைவரும் நலமே திரும்பினர். இஸ்ரயேலுக்கு எதிராக எவரும் வாய்திறக்கக்கூட இல்லை.

யோசுவா, குகையின் வாயிலைத் திறந்து, அந்த ஜந்து மன்னர்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள் என்றார்.

அவர்கள் அவ்வாறே செய்தனர்: எருசலேம், எபிரோன், யார்முத்து, இலாக்கிசு, எக்லோன் ஆகிய நகர்களின் ஜந்து மன்னர்களையும் குகையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள்.

அவர்கள் அந்த மன்னர்களை யோசுவாவிடம் கொண்டு வந்தபொழுது, யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் ஒருங்கே அழைத்து, அவருடன் சென்ற போர்த் தலைவர்களிடம், அருகில் சென்று உங்கள் பாதங்களை இம்மன்னர்களின் கழுத்தின்மீது வையுங்கள் என்றார். அவர்கள் நெருங்கி வந்து தங்கள் பாதங்களை அவர்கள் கழுத்தின்மீது வைத்தனர்.

யோசுவா அவர்களிடம், அஞ்சாதீர்கள்: கலங்காதீர்கள்: திடமும் துணிவும் கொண்டிருங்கள். ஏனெனில் ஆண்டவர் நீங்கள் போரிடும் எதிரிகள் அனைவருக்கும் இவ்வாறே செய்வார் என்றார்.

அதற்குப்பின் யோசுவா அந்த ஜந்து மன்னர்களை வாளால் வெட்டிக் கொன்றார். அவர்களின் சடலங்களை ஜந்து மரங்களில் மாலைவரை தொங்கவிட்டார்.

கதிரவன் மறையும் நேரத்தில் யோசுவா அச்சடலங்களை இறக்கிவிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவற்றை அவர்கள் முன்பு ஒளிந்திருந்த குகைக்குள் எறிந்தார்கள். குகையின் வாயிலில் பெருங்கற்களை வைத்தார்கள். அவை இந்நாள்வரை உள்ளன.

யோசுவா அன்று மக்கேதாவைப் கைப்பற்றினார். அதையும் அதன் மன்னனையும் வாள்முனையில் கொன்றார். அவர்களைக் கொன்று அழித்தார். அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை. எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், மக்கேதா மன்னனுக்கும் செய்தார்.

யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் மக்கேதாவிலிருந்து லிப்னாவுக்குச் சென்று அதனுடன் போர் தொடுத்தனர்.

ஆண்டவர் லிப்னா மக்களையும் மன்னனையும் இஸ்ரயேல் மக்கள் கையில் ஒப்படைத்தார். அதை அவர் வாள்முனையில் அழித்தார். அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை. எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், அதன் மன்னனுக்கும் செய்தார்.

யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் லிப்னாவிலிருந்து இலாக்கிசுக்குச் சென்று அதை முற்றுகையிட்டுத் தாக்கினார்கள்.

ஆண்டவர் இலாக்கிசை இஸ்ரயேலின் கையில் ஒப்படைத்தார். அதை இரண்டாம் நாளில் யோசுவா கைப்பற்றினார். வாள்முனையில் அதை அழித்தார்: அதனுள் இருந்த அனைவருக்கும் லிப்னாவுக்குச் செய்தது போல் செய்தார்.

கெசேரின் மன்னன் ஓராம் இலாக்கிசுக்கு உதவி செய்யச் சென்றான். யோசுவா அவனையும் அவன் மக்களையும் எவரும் தப்பாதபடி கொன்றார்.

யோசுவாவும் அவருடன் இஸ்ரயேலர் எல்லாரும் இலாக்கிசிலிருந்து எக்லோனுக்குச் சென்று, அதை முற்றுகையிட்டுத் தாக்கினர்.

அவர்கள் அதை அன்றே கைப்பற்றி, இலாக்கிசுக்குச் செய்ததுபோல், அன்றே அதையும் அதில் வாழ்ந்த அனைவரையும் கொன்று அழித்தனர்.

யோசுவாவும் அவர் மக்களாகிய இஸ்ரயேலர் எல்லாரும் எக்லோனிலிருந்து எபிரோனுக்குச் சென்று அதைத் தாக்கினர்.

அதைத் தாக்கி, அதன் மன்னனையும், அதன் நகர்களையும், அதனுள் இருந்த அனைத்து உயிர்களையும் வாள்முனையில் கொன்றனர். எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. எக்லோனுக்கு செய்த அனைத்தையும் அதற்கும் அவர் செய்தார்: அதையும் அதனுள் இருந்த அனைவரையும் அழித்தார்.

யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்களும் தெபீருக்குத் திரும்பி அதனைத் தாக்கினார்.

அதன் மன்னனையும் எல்லா நகர்களையும் கைப்பற்றினர். அவர்களை வாள்முனையில் தாக்கினர். அதனுள் இருந்த அனைவரையும் அழித்தனர். எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. லிப்னாவுக்கும்அதன் மன்னனுக்கும் செய்ததுபோல், தெபீருக்கும் அதன் மன்னனுக்கும் அவர் செய்தார்.

0 யோசுவா எல்லா மலைநாட்டையும் தாக்கினார். நெகேபு சமவெளியையும், பள்ளத்தாக்கையும் அதன் மன்னர்களையும் கைப்பற்றினார்: எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டது போல் அவர்களை அழித்தார்.

1 யோசுவா காதேசு பர்னேயாவிலிருந்து காசா வரை கோசேன் நாடு முழுவதையும் கிபயோன்வரை தோற்கடித்தார்.

2 யோசுவா எல்லா மன்னர்களையும் நாடுகளையும் ஒரே படையெடுப்பில் கைப்பற்றினார். ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இஸ்ரயேலுக்காகப் போரிட்டார்.

3 யோசுவாவும் அவருடன் இருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் கில்காலில் இருந்த பாளையத்திற்குத் திரும்பினர்.

அதிகாரம் 11.

ஆட்சோர் மன்னன் யாபின் இதைக் கேள்வியுற்று மாதோன் மன்னன் யோபாபுக்கும், சிம்ரோன் மன்னனுக்கும், அக்சாபு மன்னனுக்கும் ஆளனுப்பினான்.

மலைப்பகுதியின் வடபுறத்திலும், கினரேத்திற்குத் தெற்கில் அராபாவிலும், சமவெளிப்பகுதிகளிலும் மேற்கே நாபோத்தோரில் இருந்த மன்னர்களுக்கும்

கிழக்கிலும் மேற்கிலும் இருந்த கானானியர், எமோரியர், இத்தியர், பெரிசியர், மலைவாழ் எபூசியர், மிஸ்பா நாட்டில் எர்மோனின் அடிவாரத்தில் இருந்த இவ்வியர் ஆகியோருக்கும் ஆளனுப்பினான்.

அவர்களும் அவர்களுடைய படைகளும் கடற்கரையில் உள்ள மணலைப் போல் எண்ணிறந்த மக்களும் குதிரைகளும் தேர்களும் சென்றனர்.

அந்த மன்னர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக மேரோம் நீரோடைக் கரையில் இஸ்ரயேலருடன் போரிடப் பாளையம் இறங்கினார்கள்.

ஆண்டவர் யோசுவாவிடம், அவர்கள் முன் அஞ்சாதே, ஏனெனில் நாளை இந்நேரம் நான் அவர்கள் அனைவரையும் கொலையுண்டவர்களாய் இஸ்ரயேல்முன் ஒப்படைப்பேன். அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை நீ வெட்டுவாய். அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்குவாய் என்றார்.

யோசுவாவும் அவருடன் இருந்த எல்லாப் போர்வீரர்களும் திடீரென அவர்களுக்கெதிராக மேரோம் நீரோடைக்கருகில் வந்து அவர்களைத் தாக்கினர்.

ஆண்டவர் அவர்களை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்தார். அவர்களை இஸ்ரயேலர் கொன்றனர். அவர்களைப் புகழ்மிக்க சீதோன் வரையிலும், மிஸ்ரபோத்துமயிம் வரையிலும், கிழக்கே மிஸ்பே பள்ளத்தாக்கு வரையிலும் எவரும் தப்பி விடாதவாறு தாக்கினர்.

ஆண்டவர் சொன்னபடியே யோசுவா அவர்களுக்குச் செய்தார். குதிரைகளின் குதிகால் நரம்புகளை வெட்டினார். அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்கினார்.

இச்சமயம் யோசுவா திரும்பி வந்து ஆட்சோரைக் கைப்பற்றினார். அதன் மன்னனை வாளால் தாக்கினார். ஏனெனில், ஆட்சோர் அந்த அரசுகள் அனைத்திற்கும் தலைமை தாங்கி வந்தது.

இஸ்ரயேலர் அந்நகரில் இருந்த உயிர்கள் அனைத்தையும் வாள் முனையில் கொன்று அடியோடு அழித்தனர்: ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை: ஆட்சோரைத் தீக்கிரையாக்கினர்.

யோசுவா, அந்த எல்லா நகர்களையும் அவற்றின் மன்னர்களையும் கைப்பற்றினார். ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்டிருந்தபடி அவர்களை வாள்முனையில் கொன்று அடியோடு அழித்தார்.

மேட்டுப் பகுதியில் நிறுவப்பட்ட நகர்களை இஸ்ரயேல் மக்கள் எரிக்கவில்லை. யோசுவா ஆட்சோரை மட்டும் எரித்தார்.

அந்நகர்களில் கைப்பற்றிய பொருள்களையும் கால்நடைகளையும் இஸ்ரயேலர் கொள்ளைப் பொருளாகக் கொண்டனர். மனிதர்களை மட்டும், எவரும் தப்பாமல் அடியோடு அழியும்வரை, வாள்முனையில் கொன்றனர்: ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை.

தம் ஊழியர் மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி, மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தார். யோசுவா அதன்படியே செய்தார். ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவை அனைத்திலும் யோசுவா ஒன்றையும் விட்டுவிடவில்லை.

யோசுவா இந்த எல்லா நாடுகளையும், மலைகளையும், நெகேபு அனைத்தையும், கோசேன் நாடு முழுவதையும், சமவெளிப் பகுதிகளையும், அராபாவையும், இஸ்ரயேல் மலைகளையும் அதன் சமவெளிப் பகுதிகளையும் கைப்பற்றினார்.

ஆலாக்கு மலையிலிருந்து சேயிர் வரை உயர்ந்து செல்லும் எர்மோன் மலைக்குக்கீழ் லெபனோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகால்காது வரை இருந்த பகுதிகளைக் கைப்பற்றி, அவற்றின் அரசர்களைப் பிடித்து, வெட்டிக் கொன்றார்.

யோசுவா அந்த அரசர்களுடன் நீண்டநாள் போர் புரிந்தார்.

கிபயோன் குடிமக்களான இவ்வியரைத்தவிர வேறெந்த நகரினரும் இஸ்ரயேலருடன் நல்லுறவு கொள்ளவில்லை. எல்லோரையும் போரில் இஸ்ரயேலர் தோற்கடித்தனர்.

இஸ்ரயேலருடன் போர் புரியுமாறு அவர்கள் இதயங்களை ஆண்டவர் கடினப்படுத்தினார். அதனால் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டதுபோல் அவர்கள் இரக்கமின்றி அழிக்கப்பட்டனர்.

இச்சமயம் யோசுவா சென்று, மலைநாடு, எபிரோன், தெபீர், அனாபு, யூதாவின் அனைத்து மலைப்பகுதிகள், இஸ்ரயேலின் அனைத்து மலைப்பகுதிகள் ஆகியவற்றிலிருந்த அனாக்கியரை அழித்தார். அவர்களை அவர்களின் நகர்களுடன் யோசுவா முற்றிலும் அழித்தார்.

இஸ்ரயேல் நாட்டில் அனாக்கியர் பெருமளவில் எஞ்சி இருக்கவில்லை. காசா, காத்து, அஸ்தோது ஆகிய இடங்களில் மட்டும் எஞ்சி இருந்தனர்.

ஆண்டவர் மோசேக்குக் கூறிய அனைத்தின்படி, யோசுவா எல்லா நிலத்தையும் கைப்பற்றினார். யோசுவா அதை அவர்கள் குலப் பிரிவுகளின்படி இஸ்ரயேலுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார். நாடு முழுவதும் போரின்றி அமைதிகண்டது.

அதிகாரம் 12.

யோர்தானுக்கு அப்பால் கதிரவன் உதிக்கும் பக்கம் அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரை கிழக்குப் பகுதியில் அராபா முழுவதிலும் இஸ்ரயேலர் கைப்பற்றிய நாடுகளின் அரசர்கள் இவர்களே:

எமோரிய மன்னன் சீகோன் எஸ்போனில் வாழ்ந்தான். அவன் அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையிருக்கும் அராயேரிலிருந்து பள்ளத்தாக்கின் நடுவில் கிலயாதின் பகுதிவரையிலும் அம்மோனியரின் எல்லையான யப்போக்குப் பள்ளத்தாக்குவரையிலும்

அராபாவிலிருந்து கிழக்கே கினரோத்துக் கடல்வரையிலும் உப்புக்கடலான அராபா கடல்வரையிலும், கிழக்கு நோக்கி பெத்தசிமோத்து வரையிலும், தெற்கில் பிஸ்கா மலைச்சரிவு வரையிலும் அரசாண்டான்.

இரபாயியருள் எஞ்சி இருந்தவனும் பாசானின் மன்னனுமான ஓகின் எல்லை இதுவே: அவன் அஸ்தரோத்திலும் எதிரேயிலும் வாழ்ந்தான்.

எர்மோன்மலை, சல்காமலை, கெசூரியர், மாக்காத்தியரின் எல்லைவரையிலும் எஸ்போன் மன்னன் சீகோனின் எல்லையான கிலயாதின் பாதிவரையிலும் ஆண்டான்.

ஆண்டவரின் ஊழியரான மோசேயும் இஸ்ரயேலரும் அவர்களைத் தோற்கடித்தனர். ஆண்டவரின் ஊழியரான மோசே அதை ரூபனுக்கும் காத்துக்கும் மனாசேயின் பாதிக் குலத்திற்கும் உரிமையாகக் கொடுத்தார்.

யோசுவாவும் இஸ்ரயேலரும் கைப்பற்றிய நாடுகளின் மன்னர்கள் இவர்களே. யோர்தானுக்கு மேற்கே பாகால்காதில் லெபனோன் பள்ளத்தாக்கிலிருந்து சேயிர்பக்கம் செல்லும் ஆலாக்கு மலைவரை இருந்த மன்னர்களின் நாட்டை யோசுவா இஸ்ரயேலருக்கு அவர்களின் குலப்பிரிவின்படி உடைமையாக அளித்தார்.

மலைச்சரிவு, பள்ளத்தாக்கு, அராபா மலைச்சரிவு, பாலைநிலம், நெகேபு, இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரின் நாடுகள்.

எரிகோ மன்னன் ஒருவன்: பெத்தேலுக்கு அருகில் இருந்த ஆயி மன்னன் ஒருவன்.

எருசலேம் மன்னன் ஒருவன்: எபிரோன் மன்னன் ஒருவன்,

யார்முத்து மன்னன் ஒருவன்: இலாக்கிசு மன்னன் ஒருவன்.

எக்லோன் மன்னன் ஒருவன்: கெசேர் மன்னன் ஒருவன்.

தெபீர் மன்னன் ஒருவன்: கெதேர் மன்னன் ஒருவன்.

ஒர்மா மன்னன் ஒருவன்: அராது மன்னன் ஒருவன்.

லிப்னா மன்னன் ஒருவன்: அதுல்லாம் மன்னன் ஒருவன்.

மக்கேதா மன்னன் ஒருவன்: பெத்தேல் மன்னன் ஒருவன்.

தப்புவாகு மன்னன் ஒருவன்: ஏபேர் மன்னன் ஒருவன்.

அப்பேக்கு மன்னன் ஒருவன்: இலாசரோன் மன்னன் ஒருவன்.

மாதோன் மன்னன் ஒருவன்: ஆட்சோர் மன்னன் ஒருவன்.

சிம்ரோன் மெரோன் மன்னன் ஒருவன்: அக்சாபு மன்னன் ஒருவன்.

தானாக்கு மன்னன் ஒருவன்: மெகிதோ மன்னன் ஒருவன்.

கெதேசு மன்னன் ஒருவன்: யோக்னயாம் கர்மேல் மன்னன் ஒருவன்.

நாபோத்தோரில் இருந்த தோர் மன்னன் ஒருவன்: கில்காலில் ஒருந்தகோயிம் மன்னன் ஒருவன்.

திர்சா மன்னன் ஒருவன்: ஆக மொத்தம் முப்பத்தொரு மன்னர்கள்.

அதிகாரம் 13.

யோசுவா வயதாகி முதுமை அடைந்தார். ஆண்டவர் அவரிடம், உனக்கு வயதாகி, நீ முதுமை அடைந்துவிட்டாய். இன்னும் உடைமையாக்க வேண்டிய நிலம் ஏராளமாக உள்ளது.

எஞ்சியுள்ள நிலங்கள் இவையே: பெலிஸ்தியர், கெசூரியரின் எல்லாப் பகுதிகள்,

எகிப்துக்கு எதிரில் உள்ள சீகோரிலிருந்து வடக்கில் எக்ரோன் எல்லைவரை, கானானியருடையதாகக் கருதப்பட்ட காசா, அஸ்தோத்து, அஸ்கலோன், காத்து, எக்ரோன் ஆகிய பகுதிகளின் ஜந்து பெலிஸ்திய மன்னர்கள், மற்றும் அவ்வாயர்,

தெற்கிலிருந்து கானான் நாடு முழுவதும்:

கெபாலியரின் நாடு, லெபனோன் முழுவதும், எர்மோன் மலையின்கீழ் கதிரவன் உதிக்கும் பாகால்காதிலிருந்து ஆமாத்துக் கணவாய் வரை உள்ள பகுதியும்.

லெபனோனிலிருந்து மிஸ்ரபோத்துமயிம் வரை உள்ள அனைத்து மலைவாழ் மக்கள், அனைத்து சீரோனியர் இவர்களை இஸ்ரயேல் முன்னிலையில் நானே வெளியேற்றுவேன். நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீயும் அதை இஸ்ரயேலுக்கு உடைமையாகக் கொடு.

இப்போது இந்த நாட்டை ஒன்பது குலங்களுக்கும் மனாசேயின் பாதிக் குலத்திற்கும் உடைமையாகக் குறித்துக்கொடு என்றார்.

அத்துடன் ரூபன், காத்து மக்களுக்கும், மனாசேயின் பாதிக் குலத்திற்கும் யோர்தானுக்கு கிழக்கே ஆண்டவரின் ஊழியர் மோசே குறித்துக் கொடுத்தவாறே உடைமையாக்கப் பெற்றவை:

அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையில் உள்ள அரோயேரிலிருந்து பள்ளத்தாக்கின் நடுவில் உள்ள நகர்வரையிலும் மெதபா சமவெளி முழுவதும், தீபோன் வரையிலும்,

எஸ்போனில் ஆட்சிசெய்த எமோரியரின் மன்னன் சீகோனின் நகரங்கள் அனைத்தும், அம்மோனியரின் எல்லை வரையிலும்,

கிலயாத்து, கெசூரியர், மாக்காத்தியரின் எல்லைகள், எர்மோன்மலை முழுவதும், சால்காவரை பாசான் முழுவதும்:

இரபாத்தியரில் எஞ்சியிருந்தவனும், பாசானில் இருந்து அஸ்தரோத்தையும் எதிலேயியையும் ஆட்சி செய்தவனுமாகிய ஓகின் பகுதி முழுவதும், மோசே அவர்களைத் தாக்கிக் கைப்பற்றியிருந்தார்.

கெசூரியர், மாக்காத்தியரின் நாடுகளையோ இஸ்ரயேலர் கைப்பற்றவில்லை. கெசூரியரும் மாக்காத்தியரும் இந்நாள்வரை இஸ்ரயேலர் இடையே வாழ்கின்றனர்.

லேவியர் குலத்திற்கு மட்டும் அவர் உடைமை அளிக்கவில்லை. அவர் அவர்களுக்குக் கூறியபடி அவர்களது உடைமை இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் செலுத்தப்படும் எரிபலியாகும்.

ரூபனின் குலத்திற்கு அவர்களின் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன:

அவர்களது எல்லை அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்தில் அரோயேரிலிருந்து சமவெளியின் நடுவில் உள்ள நகர்வரை, மற்றும் மேதபாவில் உள்ள சமவெளி முழுவதும்:

சமவெளியில் உள்ள எஸ்போனும் அதன் எல்லா நகர்களும், தீபோன் பாமோத்துபாகால், பெத்பாகால்மெகோன்:

யாகசு, கெதமோத்து, மேபாத்து:

கிரியத்தாயிம், சிப்மா, கர் சமவெளியில் உள்ள செரெத்துசாகர்:

பெத்பெகோர், பிஸ்கா பள்ளத்தாக்கு, பெத்தசிமோத்து:

அதாவது, சமவெளியில் உள்ள எல்லா நகர்களும், எஸ்போனில் ஆண்டு வந்த எமோரிய அரசன் சீகோனின் எல்லா அரசுகளும், மோசே அவனையும், மிதியான், ஏவி, இரக்கேம், கூர், இரபா ஆகியவற்றின் தலைவர்களையும், அந்நாட்டில் வாழ்ந்த சீகோன் தலைவர்களையும் தாக்கினார்.

இஸ்ரயேல் மக்கள் வாளால் கொன்றவர்களில் நிமித்திகள் பெகோரின் மகன் பிலயாமும் ஒருவன்.

ரூபன் மக்களின் எல்லை யோர்தான் நதிக்கரை. அப்பகுதியின் நகர்களும், குடியிருப்புகளும், அவர்கள் குடும்பங்களுக்கேற்ப ரூபன் மக்களின் உடைமையாகியது.

காத்தின் குலத்தைச் சார்ந்த மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன:

யாசேர், கிலயாதின் எல்லா நகர்கள், இரபாவின் கிழக்கில் அரோயேர்வரை, அம்மோனியரின் நிலத்தில் பாதி,

எஸ்போனிலிருந்து இராமத்து மிட்சப்பே வரை, பெத்தோனிம் மகனயிம் இவற்றிலிருந்து தெபீரின் எல்லைவரை.

பெத்தோராம் பள்ளத்தாக்கில் பேத்நிம்ரா, சுக்கோத்து, சாபோன், எஸ்போனின் மன்னன் சீகோனின் எஞ்சியிருந்த அரசுகள், யோர்தான் எல்லையாக கினரேத்துக் கடல் முடிவு வரை. யோர்தானுக்கு அப்பால் கிழக்குவரை உள்ள பகுதிகள்.

காத்தின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி இப்பகுதி நகர்களும் குடியிருப்புகளும் உடைமையாயின.

மனாசேயின் பாதிக் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன:

அவர்களுடைய எல்லை, மகனயிமிலிருந்து பாசான் முழுவதும், பாசானின் அரசன் ஓகின் அரசு முழுவதும், பாசானில் உள்ள அறுபது நகர்களும் யாயிரின் குடியிருப்புகள் முழுவதும்:

கிலயாதில் பாதி, அஸ்தரோத்து, எதிரேயி, பாசானில் இருந்த ஓகின் அரசு நகர்கள். இவை மனாசேயின் மகன் மாக்கிருக்கும், மாக்கிரின் பாதி மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் அளிக்கப்பட்டன.

எரிகோவிற்குக் கிழக்கே யோர்தானுக்கு அப்பால் மோவாபுச் சமவெளியில் இருந்தபோது, மோசே இப்பகுதிகளை உடைமையாகக் கொடுத்தார்.

ஆனால், லேவியர் குலத்திற்கு மோசே உடைமை அளிக்கவில்லை. அவர்களுக்கு அவர் கூறியபடி இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே அவர்களின் உடைமை.

அதிகாரம் 14.

கானான் நாட்டில் இஸ்ரயேலர் பெற்ற உடைமைகள் இவையே. இவற்றைக் குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, குலங்களின் தந்தையர்களின் தலைவர்கள் ஆகியோர் இஸ்ரயேல் மக்களுக்கு உடைமையாக அளித்தனர்.

மோசேயின் மூலம் ஆண்டவர் கட்டளையிட்டபடி ஒன்பது குலங்களுக்கும், அரைக் குலத்திற்கும் திருவுளச்சீட்டு மூலம் உடைமை அளிக்கப்பட்டது.

மோசே இரண்டு குலங்களுக்கும், அரைக் குலத்திற்கும் யோர்தானுக்கு அப்பால் உடைமை அளித்தார். லேவியர்களுக்கும் அவர்கள் நடுவில் உடைமை அளிக்கவில்லை.

யோசேப்பின் புதல்வர் மனாசே, எப்ராயிம் என்று இரண்டு குலங்களாக இருந்தனர். லேவியருக்கு நிலத்தில் பங்கு தரப்படவில்லை. ஆனால் அவர்கள் தங்குவதற்கு நகர்களும் அவர்களின் கால்நடைகளுக்கும் மற்ற உடைமைகளுக்கும் மேய்ச்சல் நிலங்களும் தரப்பட்டன.

ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்து நிலத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

யூதாவின் மக்கள் கில்காலில் யோசுவாவிடம் வந்தனர். கெனிசியனும் எபுன்னேயின் மகனுமான காலேபு அவரிடம், ஆண்டவர் கடவுளின் மனிதரான மோசேயிடம் காதேசு பர்னேயாவில் என்னைப்பற்றியும் உன்னைப்பற்றியும் கூறிய வார்த்தை என்ன என்று உனக்குத் தெரியும்.

நான் நாற்பது வயதாக இருக்கும்போது ஆண்டவரின் ஊழியராகிய மோசே என்னைக் காதேசு பர்னேயாவிலிருந்து நாட்டை உளவறிய அனுப்பினார். திரும்பி வந்து என் மனத்திற்குப்பட்டதை அவருக்குத் தெரிவித்தேன்.

என்னுடன் வந்த என் சகோதரர் மக்களின் இதயத்தை அச்சத்தால் நடுங்கச் செய்தனர். நான் முற்றிலும் என் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றினேன்.

மோசே அந்நாளில், நீ என் கடவுளாகிய ஆண்டவரை முற்றிலும் பின்பற்றியதால், உன் காலடி பட்ட நிலத்தை எல்லாம் உறுதியாகவே உனக்கும் உன் மக்களுக்கும் என்றும் உடைமையாக அளிப்பேன் என்று எனக்கு ஆணையிட்டுக் கூறினார்.

இதோ! அவர் கூறியது போல் நாற்பது ஆண்டுகளாக இதுவரை ஆண்டவர் என்னை உயிருடன் வைத்துள்ளார். இதை ஆண்டவர் மோசேயிடம் கூறியபொழுது இஸ்ரயேலர் பாலைநிலத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

மோசே என்னை அனுப்பிய நாளன்று வலிமையுடன் இருந்ததுபோல் மீண்டும் போர் புரிவதற்கும் போவதற்கும் வருவதற்கும் வலிமையுடன் இருக்கின்றேன்.

ஆண்டவர் அந்நாளில் கூறியதுபோல் இப்பொழுது எனக்கு இந்த மலைநாட்டைக் கொடு. ஏனெனில் அங்கே ஆனாக்கியர் இருக்கின்றனர். அவர்கள் அரண்சூழ்ந்த மாநகர்களில் வாழ்கின்றனர் என்று நீ கேள்விப்பட்டிருக்கின்றாய். ஆண்டவர் என்னோடு இருக்கக்கூடும். ஆண்டவர் கூறியபடி அவர்களைத் துரத்தியடிப்பேன் என்றார்.

யோசுவா எபுன்னேயின் மகன் காலேபுக்கு ஆசி வழங்கி எபிரோனை உடைமையாக அளித்தார்.

இந்நாள்வரை எபிரோன் கெனிசியனான எபுன்னேயின் மகன் காலேபின் உடைமையாக உள்ளது. ஏனெனில் அவர் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை முற்றிலும் பின்பற்றினார்.

முன்னாளில் எபிரோனுக்குக் கிர்யத்து அர்பா என்ற பெயர் வழங்கியது. அர்பா ஆனாக்கியருள் பெருமைமிக்க மனிதன் ஆவான். நாட்டில் போரின்றி அமைதி நிலவிற்று.

அதிகாரம் 15.

யூதா மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த நிலப்பகுதி தெற்கே ஏதோம் வரையிலும் அதன் தென்கோடி எல்லைசீன் பாலைநிலம் வரையிலும் அமைந்திருந்தது.

அவர்களது தென் எல்லை சாக்கடலின் தென்முனை வளைவிலிருந்து,

தெற்குநோக்கி அக்கிரபிம் மேட்டைத்தாண்டி, சீன் பாலைநிலத்தைக் கடந்து, தெற்கே காதேசு பர்னேயாவை நோக்கி மேலே ஏறுகிறது. எஸ்ரோனைக் கடந்து அத்தார்வரை ஏறி கர்க்காவை நோக்கித் திரும்புகிறது:

அட்சமோனைக் கடந்து, எகிப்தின் நதியைத் தொட்டுக் கடலுடன் முடிவடைகிறது. இதுவே உங்கள் தென் எல்லை.

கிழக்கு எல்லை யோர்தானின் முகத்துவாரம் வரை உள்ள சாக்கடல்: வட எல்லை யோர்தானின் முகத்துவாரத்திலிருந்து தொடங்கி

பேத்தொகிலா வரை மேலேறி, வடக்கே பெத்தராபா வரை செல்கிறது. இவ்வெல்லை தொடர்ந்து ரூபனின் மகன் போகனின் கல்வரை செல்கிறது.

இவ்வெல்லை ஆக்கோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீர்வரை சென்று பள்ளத்தாக்கிற்குத் தெற்கே அதும்மிம் மேட்டுக்கு எதிரே உள்ள கில்காலுக்குப் பக்கமாக வடக்கே ஓடி, ஏன்செமசு நீர்நிலைகளைத் தொட்டு ஏன்ரோகேல்வரை செல்கிறது.

மேலும் இவ்வெல்லை இன்னோம் மகன் பள்ளத்தாக்கின் வட எல்லையாகிய இன்னோம் பள்ளத்தாக்கின் வழியே சென்று எபூசியரின் தென் அரணாகிய எருசலேம் வழியாக மேற்கே இரபாயிம் பள்ளத்தாக்கின் வடஎல்லையாகிய இன்னோம் பள்ளத்தாக்கின் எதிரே உள்ள மலை உச்சிவரை செல்கிறது.

மேலும் இவ்வெல்லை மலை உச்சியிலிருந்து நெப்தோவாகு நீரூற்றுவரை எபிரோன் மலை நகர்களுக்கு வெளியே செல்கிறது. பிறகு இவ்வெல்லை பாலாவுக்கு, அதாவது கிரியத்து எயாரிமுக்குச் செல்கிறது.

மேலும் இவ்வெல்லை பாலாவின் மேற்கே சேயிர் மலையை நோக்கிச் சுற்றுகிறது. எயாரிம் மலையின் வடக்குச் சரிவான கெசலோன் பக்கம் செல்கிறது. பெத்சமேசில் இறங்கி திம்னா பக்கம் செல்கிறது.

பிறகு இவ்வெல்லை எக்ரோனின் வடக்கிலுள்ள மலைச்சரிவில் சென்று சிக்ரோனைச் சுற்றுகிறது. பிறகு பாலா மலையைக் கடந்து யாப்னவேலுக்குச் சென்று கடலில் முடிவடைகிறது.

மேற்கு எல்லை பெருங்கடல். இவையே யூதா மக்களின் குடும்பங்களைச் சுற்றி அமைந்த எல்லைகள்.

யோசுவாவுக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி, எபுன்னேயின் மகன் காலேபுக்கு யோசுவா யூதாவின் நடுவில் எபிரோன் என்ற கிரியத்து அர்பா நிலப்பகுதியை அளித்தார், அர்பா என்பவன் ஆனாக்கின் தந்தை.

சேசாய், அகிமான், தல்மாய் என்ற ஆனாக்கின் மூன்று புதல்வர்களை காலேபு அங்கிருந்து துரத்திவிட்டார்.

அங்கிருந்து அவர் தெபீர்வாழ் மக்களுக்கு எதிராகச் சென்றார். கிரியத்சேபர் என்பது தெபீரின் முன்னாளைய பெயர்.

கிரியத்து சேபேரைத் தாக்கி அதைக் கைப்பற்றுபவருக்கு என் மகள் அக்சாவை மனைவியாகக் கொடுப்பேன், என்று காலேபு அறிவித்தார்.

காலேபின் சகோதரர் கெனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினார். காலேபு தம் மகள் அக்சாவை அவருக்கு மனைவியாகக் கொடுத்தார்.

அவள் வந்தபோது அவளுடைய தந்தையிடமிருந்து ஒரு நிலம் கேட்குமாறு அவர் அவளைத் தூண்டினார். எனவே அவள் கழுதை மேலிருந்து இறங்கியபொழுது காலேபு அவளிடம், உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார்.

அவள், எனக்கு ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். நீர் எனக்கு வறண்ட நிலத்தைக் கொடுத்துள்ளீர். இப்பொழுது எனக்கு நீரூற்றுகளையும் தாரும் என்றாள். அவர் அவளுக்கு மேல் ஊற்றுகளையும் கீழ் ஊற்றுகளையும் கொடுத்தார்.

இது யூதா மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களின் உரிமைச் சொத்து:

தென்கோடியில் ஏதோம் எல்லையில் யூதா குலத்திற்குச் சொந்தமான நகர்களின் பின்வருமாறு: கப்சாவேல், ஏதேர், யாகூர்:

கீனா, தீமோனா, அதாதா,

கெதேசு, ஆட்சோர். இத்னான்:

சீபு, தெலேம், பெயலோத்து:

ஆட்சோர் அதாத்தா, கெரியோத்து, எட்சரோன் என்னும் ஆட்சோர்:

அமாம், சேமா, மோலதா:

ஆட்சோர் கத்தா, எஸ்மோன், பெத்பலேத்து

அட்சர்சூவால், பெயேர் செபா, பிஸ்தோத்தியா:

பாலா, ஈயிம், எட்சேம்,

எல்தோலது, கெசீல், ஓர்மா:

சிக்லாகு, மத்மன்னா, சன்சன்னா:

இலபவோத்து, சில்கிம், அயின், ரிம்மோன்: ஆகிய இவை அனைத்தும் இருபத்தொன்று நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

தாழ்வான நிலப்பகுதியில் எசுத்தாவோல், சோரா, அஸ்னா:

சானோவாகு, ஏன்கன்னிம், தப்புவாகு, ஏனாம்:

யார்முத்து, அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,

சாராயிம், அதித்தாயிம், கேதரா, கெதரோத்தாயிம்: ஆகிய இவை பதினான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

செனான், அதாசா, மிக்தல்-காத்து:

திலயான், மிஸ்பே, யோக்தவேல்:

இலாக்கிசு, பொட்சகாது, எக்லோன்: 40 கபோன், இலகுமாசு, கித்திலுசு:

கெதேரோத்து, பெத்தாகோன், நாமா, மக்கேதா ஆகிய இவை பதினாறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

லிப்னா, எத்தேர், ஆசான்:

இப்தா, அஸ்னா, நெட்சிபு:

கெயிலா, அக்சீபு, மாரேசா ஆகிய இவை ஒன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

எக்ரோன், அதன் நகர்களும் சிற்றூர்களும்:

எக்ரோனிலிருந்து கடல்வரை, அஸ்தோது அருகில் உள்ள அனைத்து நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்:

அஸ்தோது, அதன் நகர்களும் சிற்றூர்களும்: எகிப்தின் ஆறுவரை பரவியுள்ள காசாவும் அதன் நகரங்களும் சிற்றூர்களும் பெருங்கடலே அதன் எல்லை.

மலைப்பகுதியில் உள்ள சாமீர், யாத்திர், சோக்கோ:

தன்னா, தெபீர் என்னும் கிரியத்துசன்னா:

அனாபு, எஸ்தமோ, ஆனிம்:

கோசேன், கோலோன், கீலோ ஆகிய இவை பதினொரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

அராபு, தூமா, எசான்:

யானிம், பெத்தபுவாகு, அப்பேக்கா:

உமற்றா, எபிரோன், கிரியத்து அர்பா, சீயோர் ஆகிய இவை ஒன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

மாவோன், கர்மேல், சீபு, யூற்றா:

இஸ்ரியேல், யோக்தயாம், சானோவாகு:

காயின், கிபயா, திம்னா ஆகிய இவை பத்து நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

கல்குல், பெட்சூர், கெதோர்,

மாராத்து, பெத்தனோத்து, எல்டதக்கோன் ஆகிய இவை ஆறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

கிரியத்து எயாரிம் என்ற கிரியத்துபாகால், இரபா ஆகிய இவை இரண்டு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

பாலை நிலப்பகுதியில் பெத்தராபா, மிதின், செகாக்கா,

நிப்சான், ஈர்மலாக்கு, ஏன்கேதி ஆகிய இவை ஆறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

எருசலேமில் வாழ்ந்த எபூசியரை யூதா மக்கள் வெளியேற்ற இயலவில்லை. எபூசியர் யூதா மக்களுடன் இன்றும் வாழ்கின்றனர்.

அதிகாரம் 16.

யோசேப்பின் மக்களுக்குக் கிடைத்த நிலப்பகுதியின் எல்லைகள்: எரிகோ பகுதியின் யோர்தானிலிருந்து எரிகோ நீர் நிலைகளுக்குக் கிழக்காக, எரிகோவிலிருந்து பெத்தேல் குன்றுவரை உள்ள பாலைநிலத்தின் ஊடேசென்று,

பெத்தேலிலிருந்து லூசுக்குச் சென்று அர்கியரின் எல்லையான அதாரோத்தைக் கடந்து,

மேற்காக, யாப்லேற்றியரின் எல்லை நோக்கி இறங்கி, பெத்கோரோன்கெசேர் எல்லைமட்டும் சென்று கடலில் முடிகின்றது.

யோசேப்பின் மக்களான மனாசேயும் எப்ராயிமும் இதை உரிமைச்சொத்தாகப் பெற்றனர்.

எப்ராயிம் புதல்வருக்கு அவர்கள் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நிலப்பகுதியின் எல்லைகள்: கிழக்கே எல்லை அற்றரோத்து அதார் முதல் மேல் பெத்கோரோன்வரை செல்கின்றது.

மேற்கு எல்லை மிக்மெத்தாத்துக்கு வடக்கே சென்று கிழக்கே தானத்து சீலோவுக்குத் திரும்பி, அதை யானோவாவுக்குக் கிழக்காகக் கடந்து,

யானோவாவிலிருந்து அற்றரோத்து நகருக்கு இறங்கி, எரிகோவைத் தொட்டு யோர்தானில் முடிவடைகின்றது.

இவ்வெல்லை தப்பூவாகிலிருந்து மேற்காக கானா நதிவரை ஏறிக் கடலில் முடிவடைகின்றது. இதுவே எப்ராயிம் மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த உரிமைச் சொத்து.

இதுவன்றி, எப்ராயிம் மக்களுக்கு மனாசேயின் மக்களின் உடைமைகளான நகர்களுக்கும் அவற்றின் சிற்றூர்களுக்கும் நடுவில் நகர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

அவர்கள் கெசேரில் வாழ்ந்து வந்த கானானியரை வெளியேற்றவில்லை. ஆகையால் இன்றும் கானானியர் எப்ராயிம் நடுவில் அடிமைகளாக வேலைசெய்து வாழ்ந்து வருகின்றனர்.

அதிகாரம் 17.

யோசேப்பின் முதல் மகனான மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதியின் விவரம்: மனாசேயின் முதல் மகனும் கிலயாதின் தந்தையுமான மாக்கிர் போர்வீரனாக இருந்ததால் அவனுக்குக் கிலயாதும் பாசானும் அளிக்கப்பட்டன.

மனாசேயின் ஏனைய மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அபியேசர், ஏலக்கு, அசிரியேல், செக்கேம், ஏபேர், செமிதா ஆகியோரின் புதல்வர்கள். இவர்கள் யோசேப்பின் மகனான மனாசேயின் ஆண்மக்களும் அவர்கள் குடும்பத்தாரும் ஆவர்.

மனாசேயின் மகனான மாக்கிருக்குப் பிறந்த கிலயாதின் மகனாகிய ஏபேரின் புதல்வன் செலோபுகாதுக்கு ஆண்மக்கள் இல்லை: பெண்மக்கள் மட்டும் இருந்தனர். அவனுடைய பெண்மக்களின் பெயர்கள்: மக்லா, நோவா, ஒகுலா, மில்கா, தீரட்சா.

அவர்கள் குரு எலயாசரையும், நூனின் மகன் யோசுவாவையும், தலைவர்களையும் அணுகி, எங்கள் சகோதரர்கள் நடுவில் எங்களுக்கு உடைமைகள் அளிக்க ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றனர். ஆண்டவரின் கட்டளைப்படி அவர்களுக்கு அவர்களுடைய தந்தையின் சகோதரர்களின் நடுவில் உரிமைச்சொத்து அளித்தார்.

யோர்தானுக்கு அப்பால் உள்ள கிலயாது, பாசான் நிலம் தவிர மனாசேக்குப் பத்துப் பங்குகள் விழுந்தன.

ஏனெனில் மனாசேயின் புதல்வியர் அவனுடைய புதல்வர்களுடன் சொத்துரிமை பெற்றனர். கிலயாது நாடு மனாசேயின் ஏனைய புதல்வருக்குக் கிடைத்தது.

மனாசேயின் எல்லை ஆசேரிலிருந்து செக்கேமின் எதிரில் உள்ள மிக்மத்தாத்துவரை செல்கின்றது. அவ்வெல்லை தென் பக்கமாக ஏன் தப்புவாகு பகுதியில் வாழ்கின்ற மக்களையும் உள்ளடக்கியது.

தப்புவாகு நிலப்பகுதி மனாசேக்குச் சொந்தமாயிற்று. மனாசேயின் எல்லையில் இருந்த தப்புவாகு நகர் எப்ராயிமின் மக்களுக்குச் சொந்தமானது.

இவ்வெல்லை கானா நதியை நோக்கி இறங்குகின்றது. நதிக்குத் தென்புறமாக உள்ள இந்நகர்கள் எபிராயிமுக்குச் சொந்தமானவை. இவை மனாசேயின் நகர்களுக்கு நடுவில் உள்ளன. மனாசேயின் எல்லை ஓடைக்கு வடக்கில் உள்ளது. அது கடலில் முடிவடைகிறது.

எப்ராயிமின் பகுதிக்குத் தெற்காகவும், மனாசேயின் பகுதிக்கு வடக்காகவும் கடல் அதன் எல்லையாக இருந்தது. அவை வடக்கில் ஆசேருக்கு உரிய எல்லையையும், கிழக்கில் இசக்காருக்கு உரிய எல்லையையும் தொட்டன.

இசக்கார், ஆசேர் எல்லைகளுக்குள் பெத்சானும் அதன் ஊர்களும், இப்லயாமும் அதன் ஊர்களும், தோரின் குடிமக்களும் அதன் ஊர்களும், ஏன்தோரின் குடிமக்களும், அதன் ஊர்களும், தானாக்கின் குடிமக்களும் அதன் ஊர்களும், மெகிதோவின் குடிமக்களும் அதன் ஊர்களும் மனாசேக்கு உரிமையாக்கப்பட்டன.

மனாசேயின் மக்களால் இந்நகர்களைக் கைப்பற்ற முடியவில்லை. கானானியர் அப்பகுதியிலேயே உறுதியுடன் தங்கிவிட்டனர்.

இஸ்ரயேலரின் புதல்வர் வலிமை பெற்றவுடன் கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அடிமை வேலைக்கு அமர்த்திக் கொண்டனர்.

யோசேப்பின் புதல்வர் யோசுவாவிடம், ஏன் எங்களுக்கு உரிமைச் சொத்தாக ஒரே ஒரு பங்கு அளித்தீர்? எங்கள் மக்கள் பெருந்தொகையினர். ஆண்டவர் எங்களுக்கு இத்துணை ஆசி வழங்கியுள்ளார்! என்றனர்.

யோசுவா அவர்களிடம், நீங்கள் திரளான மக்களாக இருப்பதால் பெரிசியர், இரபாயிம் ஆகியோரின் காட்டு நிலத்திற்குப் போய் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். எப்ராயிம் மலைப்பகுதியோ உங்களுக்கு மிகவும் குறுகலானது என்றார்.

யோசேப்பின் மக்கள், மலைப்பகுதி எங்களுக்குப் போதாது. மேலும் சமவெளியில் இருக்கும் பெத்சானிலும் அதன் ஊர்களிலும், மற்றும் இஸ்ரியேல் சமவெளியிலும் வாழும் கானானியர் அனைவரிடமும் இரும்புத் தேர்கள் இருக்கின்றன என்றனர்.

யோசுவா யோசேப்பின் வீட்டாரான எப்ராயிமிடமும் மனாசேயிடமும், நீங்கள் திரளான மக்கள். வலிமை மிக்கவர்கள். உங்களுக்கு ஒரு பங்கு மட்டும் இல்லை.

மலைப்பகுதியும் உங்களுடையதே. அது காட்டுப் பகுதியாக இருப்பதால் அதை நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள். அதன் எல்லை அனைத்தும் உங்களுக்குச் சொந்தம். ஏனெனில் கானானியருக்கு இரும்புத் தேர்கள் இருந்தாலும், அவர்கள் வலிமையுள்ளவர்களாய் இருந்தாலும் நீங்கள் அவர்களை விரட்டுவீர்கள் என்றார்.

அதிகாரம் 18.

இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதும் சீலோவில் ஒன்று கூடியது. அங்குச் சந்திப்பு கூடாரத்தை அமைத்தனர். ஏற்கெனவே அவர்கள் நிலத்தைக் கைப்பற்றியிருந்தனர்.

இஸ்ரயேல் மக்களில் ஏழு குலங்களுக்கு அவர்களுடைய உரிமைச் சொத்துப் பிரித்துத் தரப்படவில்லை.

இஸ்ரயேல் மக்களிடம் யோசுவா, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் எவ்வளவு காலம் சோம்பேறிகளாக இருப்பீர்கள்?

குலத்திற்கு மும்மூன்று பேரைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் நான் அனுப்ப, அவர்கள் புறப்பட்டு, நாடெங்கும் சுற்றிச் சென்று அவரவர் உரிமைச்சொத்து இன்னதென்று வரைந்து, என்னிடம் கொண்டு வருவார்கள்.

அவர்கள் நாட்டை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பர். யூதா தெற்கில் தங்கள் எல்லையில் தங்கியிருப்பர். யோசேப்பின் வீட்டார் வடக்கில் அதன் எல்லையில் தொடர்ந்து தங்கியிருப்பர்.

நீங்கள் நிலத்தை ஏழு பிரிவுகளாக வரைந்து என்னிடம் கொண்டு வருவீர்கள். நான் இங்கு உங்களுக்குக் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் திருவுளச்சீட்டுப் போடுவேன்.

லேவியர்க்கு உங்கள் நடுவில் பங்கு இல்லை. ஏனெனில் ஆண்டவருக்குக் குருத்துவப்பணி புரிவதே அவர்கள் உரிமைச் சொத்து என்றார். ஆண்டவரின் ஊழியர் மோசே அவர்களுக்குக் கொடுத்தபடி, காத்து, ரூபன், மனாசேயின் அரைக்குலம் ஆகியோர் தங்களுடைய உரிமைச் சொத்தினை யோர்தானுக்கு அப்பால் கிழக்கில் பெற்றனர்.

அவ்வாறே அம்மனிதர் புறப்பட்டுச் சென்றனர். நிலத்தை வரையுமாறு செல்பவர்களுக்கு யோசுவா கட்டளையிட்டுக் கூறியது: சென்று, நிலத்தைச் சுற்றிப்பார்த்து வரைந்து கொண்டு வாருங்கள். நான் உங்களுக்கு ஆண்டவர் முன்னிலையில் சீலோவில் திருவுளச்சீட்டுப் போடுவேன் .

அம்மனிதர் சென்று நிலத்தைச் சுற்றிப் பார்த்தனர். நகர்களின் பட்டியலை ஏழு தொகுதிகளாகப் புத்தகத்தில் எழுதினர். சீலோவில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் திரும்பி வந்தனர்.

யோசுவா சீலோவில் ஆண்டவர் முன்னிலையில் அவர்களுக்குத் திருவுளச்சீட்டுப் போட்டார். அங்கே யோசுவா இஸ்ரயேல் மக்களுக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நிலத்தைப் பங்கிட்டார்.

முதல் சீட்டு பென்யமின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது எல்லை யூதா மக்களுக்கும் யோசேப்பின் மக்களுக்கும் இடையில் விழுந்தது.

அவர்களது எல்லை வடக்குப் பகுதியில் யோர்தானிலிருந்து தொடங்கிப் பின்னர் எரிகோவில் வட சரிவில் ஏறி, பிறகு மேற்கில் மலைப்பக்கம் சென்று பெத்சாவேன் பாலைநிலத்தில் முடிவடைகிறது.

மீண்டும் அவ்வெல்லை அங்கிருந்து தெற்குப்பக்கமாகப் பெத்தேல் என்னும் லூசின் சரிவை நோக்கிச் சென்று அதனைக் கடக்கிறது. பின்னர் அவ்வெல்லை கீழ் பெத்கோரோனுக்குத் தெற்கே மலைமீது உள்ள அத்தராத்து அதாரை நோக்கிச் செல்கிறது.

பின்பு அவ்வெல்லை மேற்கு முகமாகத் திரும்பி அங்குள்ள மலைக்குத் தெற்காக பெத்கோரோனுக்கு எதிராக யூதா மக்களுக்குரிய கிரியத்துஎயாரிம் எனப்படும் கிரியத்துபாகாலில் முடிவடைகிறது. இதுவே மேற்கு எல்லை.

அதன் தென் எல்லை கிரியத்து எயாரிமின் எல்லைப்புறத்தில் தொடங்கி மேற்காகச் சென்று, பிறகு நெப்தோவாகு நீர்நிலைகள்வரை போகிறது.

மேலும் அவ்வெல்லை இரபாயிம் பள்ளத்தாக்கின் வடகோடியில் உள்ள இன்னோம் மகனின் பள்ளத்தாக்கை நோக்கி நிற்கும் மலைவரை செல்கிறது. பின்னர் அது எபூசியரின் மலைச்சரிவிற்குத் தெற்கேயுள்ள இன்னோம் பள்ளத்தாக்கை நோக்கி ஏன்ரோகேல் பக்கமாக இறங்குகிறது.

பிறகு அது வட பக்கம் திரும்பி அதும்மிம் மேட்டுக்கு எதிரில் உள்ள கெலிலோத்துப் பக்கம் திரும்பி ரூபனின் மகன் போகனின் கல் பக்கம் செல்கிறது.

பிறகு அது வடக்கே மலைச்சரிவில் அராபாவின் எதிராகச் சென்று அராபாவில் இறங்குகிறது.

பிறகு அது பெத்தொகிலாவின் வடசரிவைக் கடந்து உப்புக் கடலின் வடக்கு வளைவில் யோர்தானின் தென்பகுதியில் முடிவடைகிறது. இதுவே தென் எல்லை.

கிழக்கே யோர்தான் நதி எல்லையாக அமைந்துள்ளது. இது பென்யமின் மக்களின் குடும்பங்களுக்கு கிடைத்த, சுற்றிலும் எல்லையிடப்பட்ட உரிமைச் சொத்து.

பென்யமின் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி உடைமையான நகர்கள்: எரிசோ, பெத்தொகிலா, ஏமக்கசீசு

பெத்தராபா, செமாரயிம், பெத்தேல்,

அவ்விம், பாரா, ஒபிரா,

கெபரம்மோனி, ஒப்னி, கேபா ஆகிய பன்னிரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

கிபயோன், இராமா, பெயரோத்து,

மிஸ்பே, கெப்பிரா, மோசா,

இரக்கேம், இரிப்பயேல், தராலா,

சேலா, எலேபு, எருசலேம் என்னும் எபூசி, கிபயத்து, கிரியத்து ஆகிய பதினான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. இது பென்யமின் மக்களுக்கு அவர்களின் குடும்பங்களின்படிக் கிடைத்த உடைமை.

அதிகாரம் 19.

இரண்டாவது சீட்டு சிமியோனின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது உரிமைச்சொத்து யூதா மக்களின் பங்கிற்கு நடுவில் அமைந்திருந்தது.

அவர்களுக்கு உடைமையான நகர்கள்: பேயோசெபா, சேபா, மோலாதா,

அட்சர்சூவால், பாலா எட்சேம்,

எல்தோலகு, பெத்தூல், ஓர்மா,

சிக்லாகு, பெத்மர்க்கபோத்து, அட்சர்சூசா,

பெத்லாபாவோத்து, சாருகன் ஆக, பதின்மூன்று நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

அயின், ரிம்மோன், எக்தேர், ஆசான், ஆக, நான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

இவைகளன்றித் தெற்கே இராமாது எனப்படும் பாகலாத்பெயேர்வரை உள்ள நகர்களும் அவற்றின் சிற்றூர்கள் அனைத்தும். இதுவே சிமியோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து.

சிமியோன் மக்களின் உரிமைச்சொத்து யூதா மக்களுக்குரிய பங்கில் ஒரு பகுதி. யூதா மக்களுக்கு ஏராளமான உடைமை இருந்தது. அவர்களின் உரிமைச் சொத்தின் நடுவில் சிமியோனின் மக்கள் உரிமைச் சொத்தைப் பெற்றனர்.

மூன்றாவது சீட்டு செபுலோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்கள் உடைமையின் எல்லை சா¡£துவரை சென்றது.

அவர்களது எல்லை மேற்கே மரியலாவுக்கு ஏறி, தபா சேத்துக்கு வந்து யோக்னயாமுக்கு எதிரில் உள்ள ஓடையைத் தொடுகின்றது.

சா¡£திலிருந்து கதிரவன் உதிக்கும் கிழக்குப்பக்கம் திரும்பி கிஸ்லோத்து தாபோரையும், தாபராத்தையும் நோக்கிச் சென்று யாப்பியாமேல் ஏறுகிறது.

அங்கிருந்து கிழக்காகக் காத்கேப்பேரையும் இத்தகாச்சினையும் ரிம்மோனையும் கடந்து சென்று நேயா பக்கம் வளைகிறது.

மேலும் இவ்வெல்லை வடக்கில் அன்னாத்தோனைச் சுற்றுகிறது. இது இப்தாவேல் பள்ளத்தாக்கில் முடிவடைகிறது.

கற்றாத்து, நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் ஆக பன்னிரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களுமே செபுலோன் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச்சொத்து.

நான்காவது சீட்டு இசக்காரின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.

அவர்களது எல்லை: இஸ்ரியேல், கெசுல்லோத்து, சூனேம்,

அப்பாராயிம், சியோன், அனகராத்து,

இரப்பீத்து, கிசியோன், எபெசு,

இரமேத்து, ஏன்கன்னிம், ஏன்கத்தா, பெத்-பசேசு என்பவையே.

அவ்வெல்லை தாபோரையும் சகட்சி மாவையும் பெத்சமேசையும் தொட்டு, யோர்தானில் முடிவடைகின்றது. ஆக, பதினாறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

இவை இசக்கார் மக்களின் குலத்தாருக்கு அவர்களின் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.

ஜந்தாவது சீட்டு ஆசேர் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.

அவர்களின் எல்லை: எல்காத்து, அலீ, பெத்தேன், அக்சாபு,

அல்லமெலக்கு, அமாது, மிசால் என்பவை. மேற்குப்பக்கம் கர்மேலையும் சகோர் லிப்னாத்தையும் தொட்டு,

கிழக்குப் பக்கம் திரும்பி, பெத்தாகோன் சென்று அசபுலுன், இப்தாவேல் பள்ளத்தாக்கையும், பெத்தேமக்கு நெகியேலுக்கு வடக்காகத் தொட்டு, காபூலில் இடப்பக்கம் திரும்புகின்றது.

எபிரோன், இரகோபு, அம்மோன், தானா, பெரிய சீதோன்வரை சென்று,

பிறகு இராமா பக்கம் திரும்புகின்றது. அரண்சூழ் நகரான தீர் வரை சென்று, கோசா பக்கம் திரும்பிக் கடலில் முடிவடைகிறது. மேகேபல், அக்சீபை ஒட்டிய கடலில் முடிவடைகிறது.

உம்மா, அபேக்கு, இரகோபு, ஆக, இருபத்திரண்டு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

இவையே ஆசேர் மக்கள் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்தாகிய நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.

ஆறாவது சீட்டு நப்தலியின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.

அவர்களது எல்லை ஏலப்பிலிருந்து சானான்னிமிலுள்ள கருவாலி மரத்திலிருந்து, அதாமி நெகேபு, யப்னவேல், இலக்கும் வரை சென்று யோர்தானில் முடிகின்றது.

பிறகு அவ்வெல்லை மேற்கில் அசனோத்துதாபோர் பக்கம் திரும்புகின்றது: அங்கிருந்து உக்கோகில் வெளியேறுகின்றது. தெற்கில் செபுலோனையும், மேற்கில் ஆசேரையும் கிழக்கில் யோர்தானையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

அரண்சூழ் நகர்கள்: சித்திம், சேர், அம்மாத்து, இரக்காத்து, கினரேத்து,

அதாமா, இராமா, ஆட்சோர்,

கெதேசு, எதிரேயி, ஏன் ஆட்சோர்,

ஈரோன், மிக்தலேல், ஒரேம், பெத்தனாத்து, பெத்சமேசு, ஆக, பத்தொன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.

இவை நப்தலியின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்.

ஏழாவது சீட்டு தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.

அவர்களது உரிமைச் சொத்தின் எல்லை: சோரா, எசுத்தாவோல், ஈர்சமேசு,

சாயலாபிம், அய்யலோன், இதிலா,

ஏலோன், திமினா, எக்ரோன்,

எல்தெக்கே, கிபதோன், பாகலாத்து,

எகூது, பெனபராக்கு, காத்ரிம்மோன்,

மேயர்க்கோன், இரக்கோன் ஆகிய இந்நகர்களும் யோப்பாவுக்கு எதிரே எல்லைப் பகுதியும்.

தாண் மக்களின் எல்லை ஒடுக்கமாக இருந்ததால், அவர்கள் புறப்பட்டுப்போய் இலசேமை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டனர்: அதை வாள் முனையில் தாக்கித் தங்கள் உடைமையாக்கிக் கொண்டு அங்கு வாழ்ந்தனர். தங்கள் மூதாதையான தாணின் பெயரை ஒட்டி, இலசேமிற்குத் தாண் என்று பெயரிட்டார்கள்.

இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து.

நாட்டுக்கு எல்லை வகுத்து அவரவர்களுக்கு உரிமைச்சொத்து பிரித்துக் கொடுத்தபின், நூனின் மகன் யோசுவாவுக்கு இஸ்ரயேல் மக்கள் தங்கள் நடுவில் உரிமைச்சொத்து அளித்தனர்.

எப்ராயிம் மலைநாட்டில் அவர் கேட்ட நகரான திம்னத்செராவை ஆண்டவரின் கட்டளைப்படி அவருக்குக் கொடுத்தனர். அவர் அந்நகரைக் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தார்.

இவ்வாறு, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் குலங்களின் முதுபெரும் தலைவர்கள் ஆகியோர் இவற்றை இஸ்ரயேல் மக்களின் குடும்பங்களுக்கு உரிமைச் சொத்தாகச் சீலோவில் ஆண்டவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலில் திருவுளச்சீட்டுப் போட்டு உரிமையாக்கி, நாட்டின் பங்கீட்டுப் பணியை நிறைவு செய்தனர்.

அதிகாரம் 20.

ஆண்டவர் யோசுவாவை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:

இஸ்ரயேல் மக்களிடம் அவர்களுக்கு மோசே வழியாகக் கூறியபடி, அடைக்கல நகர்களை உங்களுக்கெனத் தேர்ந்துகொள்ளுங்கள் என்று கூறுவாய்.

அறியாமல் தவறுதலாக ஒருவரைக் கொன்றவர் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்பி ஓடித் தஞ்சம்புக இந்நகர்கள் உங்களுக்கு அடைக்கலமாக அமையும்.

கொலையாளி இந்நகர்களில் ஒன்றனுள் ஓடி, நுழைவாயிலில் நின்று, அந்நகர்ப் பெரியவர்களின் காதில்படும்படியாக தம் நிலையை எடுத்துரைப்பார். அவர்கள் அவரைத் தங்கள் நகருக்குள் அழைத்துச்சென்று தங்களுடன் தங்கியிருப்பதற்கு ஓர் இடம் கொடுப்பர்.

இரத்தப்பழி வாங்குபவர் துரத்திவந்தால், கொலையாளியை அவர் கையில் ஒப்படைக்க மாட்டார்கள். ஏனெனில் அவர் அறியாமல்தான் மற்றவரைக் கொன்றுவிட்டார். இதற்கு முன் கொலையாளி அவரை வெறுத்ததில்லை.

கொலையாளி தீர்ப்புக்காக அவையின் முன் நிற்கும்வரை, அந்நாள் தலைமைக் குரு சாகும்வரை அவர் அந்நகரில் தங்குவார்.

அதன்பின் கொலையாளி தம் நகருக்கு எந்த நகரிலிருந்து ஓடி வந்திருந்தாரோ, அந்த நகருக்கு தம் வீட்டுக்குச் செல்வார். தேர்ந்து கொள்ளப்பட்ட அடைக்கல நகர்கள்: நப்தலி மலைநாட்டில் கலிலேயாவில் கெதேசு எப்ராயிம்: மலைநாட்டில் செக்கேம்: யூதா மலை நாட்டில் எபிரோன் எனப்படும் கிரியத்து அர்பா:

யோர்தானுக்கு அப்பால் எரிகோவுக்குக் கிழக்காக ரூபனின் குலத்திற்குரிய பாலைநிலச் சமவெளியில் பெட்சேர்: காத்துக் குலத்திற்குரிய கிலயாதில் இராமோத்து: மனாசேயின் குலத்திற்குரிய பாசானில் கோலான்:

இஸ்ரயேலர் அனைவருக்கும் அவர்கள் நடுவில் வாழும் வேற்றினத்தாருக்கும் மேற்குறிப்பிட்டவை அடைக்கல நகர்களாக விளங்கின. அறியாமல் பிறரைக் கொன்ற எவரும் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்புவதற்கு இவற்றில் அடைக்கலம் புகுவார். மக்களவை அவருக்குத் தீர்ப்பு வழங்கும் வரை அவர் கொல்லப்படுவதில்லை.

அதிகாரம் 21.

லேவியரின் முதுபெரும் தலைவர்கள், குரு எலயாசரையும் நூனின் மகன் யோசுவாவையும், இஸ்ரயேல் மக்கள் குலங்களின் முதுபெரும் தலைவர்களையும் அணுகி,

கானான் நாட்டில் சீலோவில் கூறியது: நாங்கள் வாழ நகர்களையும், எங்கள் கால்நடைகள் மேய நிலங்களையும் கொடுக்கும்படி ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டார்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் கட்டளைப்படி தங்கள் பங்கிலிருந்து லேவியருக்குப் பின்வருமாறு நகர்களையும் நிலங்களையும் கொடுத்தனர்.

கோகாத்தியரின் குடும்பங்களுக்காகச் சீட்டுப் போட்டனர். லேவியருள் குரு ஆரோனின் மக்களுக்கு, யூதா குலத்திலிருந்தும் சிமியோன் குலத்திலிருந்தும் பென்யமின் குலத்திலிருந்தும் பதின்மூன்று நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.

கோகாத்தியரில் ஏனைய மக்களுக்கு, எப்ராயிம் குலத்தின் குடும்பத்திலிருந்தும், தாண் குலத்திலிருந்தும் மனாசேயின் பாதிக் குலத்திலிருந்தும் பத்து நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.

கேர்சோன் மக்களுக்கு இசக்கார் குலத்தின் குடும்பங்களிலிருந்தும், ஆசேர் குலத்திலிருந்தும், நப்தலி குலத்திலிருந்தும், பாசானிலிருந்த மனாசேயின் பாதிக் குலத்திலிருந்தும் பதின்மூன்று நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.

மெராரியின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களுக்கேற்ப ரூபன் குலத்திலிருந்தும், காத்துக் குலத்திலிருந்தும், செபுலோன் குலத்திலிருந்தும் பன்னிரு நகர்கள் கிடைத்தன.

ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டபடி, சீட்டுப் போட்டு, இஸ்ரயேல் மக்கள் லேவியருக்கு இந்நகர்களையும் மேய்ச்சல் நிலங்களையும் அளித்தனர்.

யூதா மக்களின் குலத்திலிருந்தும் சிமியோன் மக்களின் குலத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட நகர்களின் பெயர்ப்பட்டியல்:

லேவியரின் மக்கள் கோகாத்தியரின் குடும்பத்தைச் சார்ந்த ஆரோனின் மக்களுக்கு முதல் சீட்டு விழுந்ததால் அவர்களுக்குப் பின்வருமாறு நகர்கள் கிடைத்தன.

யூதா மலைநாட்டில் உள்ள எபிரோன் என்னும் கிரியத்து அர்பாவைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலம் அவர்களுக்குக் கிடைத்தது. அர்பா ஆனாக்கின் தந்தை.

நகரின் விளைநிலமும் அதன் சிற்றூர்களும் எபுன்னேயின் மகன் காலேபுக்கு உடைமையாகக் கிடைத்தன.

குரு ஆரோனின் மக்களுக்குக் கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான எபிரோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: லிப்னா, அதன் மேய்ச்சல் நிலங்கள்:

யாத்திர், அதன் மேய்ச்சல் நிலம்: எசுத்தமோவா, அதன் மேய்ச்சல் நிலம்:

கோலோன், அதன் மேய்ச்சல் நிலம்: தெபீர், அதன் மேய்ச்சல் நிலம்:

அயின், அதன் மேய்ச்சல் நிலம்: யுற்றா, அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, இவ்விரு குலங்களினின்று ஒன்பது நகர்கள்.

பென்யமின் குலத்திலிருந்து கொடுக்கப்பட்டவை: கிபயோன், அதன் மேய்ச்சல் நிலம்: கேபா, அதன் மேய்ச்சல் நிலம்:

அனத்தோத்து, அதன் மேய்ச்சல் நிலம்: அல்மோன், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள்.

குரு ஆரோனின் மக்களுக்குக் கிடைத்தவை மொத்தம் பதின் மூன்று நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.

லேவியரைச் சார்ந்த கோகாத்தின் ஏனைய குடும்பங்களுக்கு எப்ராயிம் குலத்தின் உடைமைகளிலிருந்து நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கொடுக்கப்பட்டன.

அவர்களுக்குக் கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான எப்ராயிம்: மலையில் அமைந்துள்ள செக்கெம் நகர், அதன் மேய்ச்சல் நிலம்:

கிபட்சயிம், அதன் மேய்ச்சல் நிலம், பெத்கோரோன், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள்.

தாணின் குலத்திலிருந்து கிடைத்தவை: எல்தக்கே, அதன் மேய்ச்சல் நிலம்: கிபத்தோன், அதன் மேய்ச்சல் நிலம்:

அய்யலோன், அதன் மேய்ச்சல் நிலம்: கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள்.

மனாசேயின் பாதிக் குலத்திலிருந்து கிடைத்தவை: தானாக்கு, அதன் மேய்ச்சல் நிலம்: கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, இரண்டு நகர்கள்.

இவ்வாறு கோகாத்தின் எஞ்சிய குடும்பங்களுக்குப் பத்து நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் அளிக்கப்பட்டன.

லேவியரின் குடும்பத்தைச் சார்ந்த கேர்சோனின் குடும்பங்களுக்கு மனாசேயின் பாதிக் குலத்திலிருந்து கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான பாசானில் கோலான், அதன் மேய்ச்சல் நிலம்: பெயசுதரா, அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, இரண்டு நகர்கள்.

இசக்காரின் குலத்திலிருந்து கிடைத்தவை: கிசியோன், அதன் மேய்ச்சல் நிலம்: தாபராத்து, அதன் மேய்ச்சல் நிலம்:

யார்முத்து, அதன் மேய்ச்சல் நிலம்: ஏன்கன்னிம், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள்.

ஆசேரின் குலத்திலிருந்து கிடைத்தவை: மிசால், அதன் மேய்ச்சல் நிலம்:

எல்காத்து, அதன் மேய்ச்சல் நிலம்: இரகோபு, அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள்.

நப்தலி குலத்திலிருந்து கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான கலிலேயாவின் கெதேசு, அதன் மேய்ச்சல் நிலம்: அம்மோத்தோர், அதன் மேய்ச்சல் நிலம்: காத்தான், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக மூன்று நகர்கள்.

இவ்வாறு கேர்சோனின் குடும்பங்களுக்குக் கிடைத்தவை இப் பதின்மூன்று நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.

எஞ்சிய லேவியருள் மெராரி மக்களின் குடும்பத்தினருக்கு செபுலோன் குலத்திலிருந்து கிடைத்தவை: யோக்னயாம், அதன் மேய்ச்சல் நிலம்: கர்த்தா, அதன் மேய்ச்சல் நிலம்.

திம்னா, அதன் மேய்ச்சல் நிலம்: நகலால், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள்.

ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை: பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலம்: யாகசு, அதன் மேய்ச்சல் நிலம்:

கெதமோத்து, அதன் மேய்ச்சல் நிலம்: மேபாத்து, அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள்.

காத்துக் குலத்திலிருந்து கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான கிலயாத்து ராமோத்து, அதன் மேய்ச்சல் நிலம்: மகனயிம், அதன் மேய்ச்சல் நிலம்:

எஸ்போன், அதன் மேய்ச்சல் நிலம்: யாசேர், அதன் மேய்ச்சல் நிலம்: ஆக, நான்கு நகர்கள்.

இவ்வாறு எஞ்சிய லேவியருள் மெராரி குடும்பங்களுக்குச் சீட்டு விழுந்ததன்படி கிடைத்த மொத்த நகர்கள் பன்னிரண்டு.

இஸ்ரயேல் மக்களுக்குரிய நிலப்பகுதியில் லேவியருக்கு ஆங்காங்கே விடப்பட்டவை நாற்பத்தெட்டு நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.

எல்லா நகர்களைச் சுற்றிலும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன.

இவ்வாறு ஆண்டவர் அவர்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாடு முழுவதையும் இஸ்ரயேலுக்குக் கொடுத்தார். அவர்கள் அதனை உடைமையாக்கிக் கொண்டு அதில் வாழ்ந்தார்கள்.

அவர்கள் மூதாதையருக்கு வாக்களித்தபடி ஆண்டவர் அவர்களுக்கு நாட்டின் எல்லை எங்கும் அமைதி நிலவச் செய்தார். பகைவர்களில் எவனாலும் அவர்களை எதிர்த்து நிற்க இயலவில்லை. கடவுள் அவர்களுடைய பகைவர்களை அவர்கள் கையில் ஒப்படைத்தார்.

ஆண்டவர் இஸ்ரயேல் வீட்டாருக்கு உரைத்த எல்லா நல்வாக்குகளும் தவறாமல் நிறைவேறின.

அதிகாரம் 22.

யோசுவா ரூபன் குலத்தாரையும், காத்துக் குலத்தாரையும், மனாசேயின் குலத்தாரையும் அழைத்து,

அவர்களின், நீங்கள் ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்ட அனைத்தையும் கைக்கொண்டீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுக் கூறிய அனைத்திற்கும் கீழ்ப்படிந்தீர்கள்.

நீங்கள் இதுவரை பலநாள்களாக உங்கள் சகோதரர்களைக் கைவிடாமல், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டவற்றைக் கைக்கொண்டீர்கள்.

அவர்களுக்கு வாக்களித்தபடி உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரர்களுக்கு இப்போது அமைதிக் காலம் அளித்துள்ளார். இப்பொழுது உங்கள் கூடாரங்களுக்கு யோர்தானுக்கு அப்பால் ஆண்டவரின் ஊழியர் மோசே உங்களுக்கு உடைமையாகக் கொடுத்த பகுதிக்குச் செல்லுங்கள்.

உங்கள் முழு இதயத்துடனும் உங்கள் முழு உள்ளத்துடனும் ஆண்டவராகிய கடவுள்மீது அன்பு கூருமாறும், அவருடைய வழிகள் அனைத்திலும் நடக்குமாறும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுமாறும், அவரைப் பற்றிக்கொள்ளுமாறும், அவருக்குப் பணிபுரியுமாறும், ஆண்டவரின் ஊழியராகிய மோசே உங்களுக்கு இட்ட கட்டளைகளையும் சட்டத்தையும் நிறைவேற்றுவதில் மிகவும் கவனமாயிருங்கள் என்றார்.

யோசுவா ஆசி வழங்கி அவர்களை அனுப்பினார். அவர்களும் தங்கள் கூடாரங்களுக்குச் சென்றார்கள்.

மோசே மனாசேயின் குலத்தில் ஒரு பாதிக்கு பாசானில் நிலம் கொடுத்தார். யோசுவா அக்குலத்தின் மறுபாதிக்கு அவர்களுடைய சகோதரர்களிடையே யோர்தானுக்கு மேற்கில் நிலம் கொடுத்தார். யோசுவா அவர்களை அவர்களுடைய கூடாரங்களுக்கு அனுப்பியபொழுது அவர்களுக்கு ஆசி வழங்கி,

மிகுந்த செல்வத்துடன் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் எதிரிகளிடமிருந்து கொள்ளை கொண்ட மிகுதியான கால்நடைகள், வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மிகுதியான ஆடைகள் ஆகியவற்றை உங்கள் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறினார்.

ரூபனின் மக்களும் காத்தின் மக்களும் மனாசேயின் பாதிக் குலத்தினரும் கானானில் உள்ள சீலோவில் இஸ்ரயேல் மக்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, மோசே வழியாக ஆண்டவர் கட்டளையிட்டபடி அவர்கள் பெற்றுக்கொண்ட தம் சொந்த நாடான கிலயாதுக்குச் சென்றனர்.

அவர்கள் கானான் நாட்டில் யோர்தானுக்கருகே இருந்த கெலிலோத்திற்கு வந்தனர். ரூபனின் மக்களும், காத்தின் மக்களும், மனாசேயின் பாதிக் குலத்தினரும், யோர்தான் அருகில் மிகப்பெரிய பலிபீடம் ஒன்று எழுப்பினர்.

ரூபனின் மக்களும் காத்தின் மக்களும் மனாசேயின் பாதிக் குலத்தாரும் கானான் நாட்டின் எதிரில் யோர்தான் பகுதிகளில் இஸ்ரயேல் மக்களுக்கு அண்மையில் ஒரு பீடம் எழுப்பியுள்ளனர் என்று இஸ்ரயேல் மக்கள் கேள்வியுற்றனர்.

இஸ்ரயேல் மக்கள்பேரவை இதைக் கேள்வியுற்று, அவர்களுக்கு எதிராகப் படையுடன் செல்லும் நோக்கத்துடன் சீலோவில் கூடியது.

இஸ்ரயேல் மக்கள் குரு எலயாசரின் மகன் பினகாசைக் கிலயாது நாட்டில் இருந்த ரூபனின் மக்கள், காத்தின் மக்கள், மனாசேயின் பாதிக் குலத்தினர் ஆகியவரிடம் அனுப்பினர்.

அவருடன் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் குடும்பத்துக்கு ஒரு தலைவராகப் பதின்மரை அனுப்பினர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்தவர் தலைவர்.

அவர்கள் கிலயாது நாட்டில் இருந்த ரூபன் மக்களிடமும் காத்து மக்களிடமும் மனாசே பாதிக்குலத்தினரிடமும் சென்று பின்வருமாறு கூறினர்:

ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் இவ்வாறு சொல்கின்றது: இந்நாளில் உங்களுக்கென்று இஸ்ரயேல் கடவுளுக்கு எதிராக ஒரு பலிபீடம் எழுப்பியதால் ஆண்டவரை விட்டு விலகி விட்டீர்கள். ஆண்டவருக்கு எதிராக ஏன் இந்தத் துரோகம்?

பெகோரில் நாம் செய்த பாவம் நமக்குப் போதாதா? இந்நாள் வரை நாம் அதற்குக் கழுவாய் தேடவில்லை. அதற்குரிய தண்டனை ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்புக்குக் கிடைத்துவிட்டது.

நீங்கள் இன்று ஆண்டவரை விட்டு விலகிவிட்டீர்கள். இன்று நீங்கள் ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்திருக்கின்றீர்கள். நாளை இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதன்மீதும் அவர் சினம்கொள்வார்.

உங்களுக்கு உரிமையாக்கப்பட்ட நிலம் தூய்மையற்றதாயின் ஆண்டவருக்கு உரிய நிலத்திற்கு வாருங்கள். அங்கு ஆண்டவரின் திருஉறைவிடம் அமைந்துள்ளது. எங்கள் நடுவில் தங்குங்கள். ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்யவேண்டாம். நம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தை விட்டு வேறொரு பலிபீடத்தைக் கட்டும் உங்கள் குற்றத்திற்கு எங்களை ஆளாக்க வேண்டாம்.

செராகின் மகன் ஆக்கான் கொள்ளைப் பொருளைத் திருடியதால் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதன்மீதும் அவர் சினம் கொள்ளவில்லையா? தன் குற்றத்திற்காக அவன் ஒருவன் மட்டுமா அழிந்தான்?

அப்பொழுது ரூபன் மக்களும் காத்து மக்களும் மனாசேயின் அரைக்குலத்தாரும் இஸ்ரயேலின் ஆயிரத்தவர் தலைவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது:

உன்னத கடவுளாகிய ஆண்டவரே இறைவன்! உன்னத கடவுளாகிய ஆண்டவரே இறைவன்! அவர் இதை அறிவார். இஸ்ரயேலும் இதை அறிவதாக! இது ஆண்டவருக்கு எதிரான கலகமும் துரோகமுமானால் நீங்கள் எங்களை இன்று தப்பிப் போக விடாதீர்கள்.

நாங்கள் ஆண்டவரைவிட்டு விலகவா இப்பலிபீடத்தை எழுப்பினோம். அதன்மீது எரிபலி, உணவுப்படையல், நல்லுறவுப்பலி செலுத்துவதாக இருந்தால் ஆண்டவர்தாமே எங்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்.

எங்களுக்கு ஏற்பட்ட ஓர் அச்சத்தினால் இவ்வாறு செய்தோம். பிற்காலத்தில் உங்கள் மக்கள் எங்கள் மக்களிடம் உங்களுக்கும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கும் என்ன தொடர்பு?

ரூபன், காத்து ஆகியோரின் மக்களே! ஆண்டவர் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே யோர்தானை எல்லையாக வைத்தார். உங்களுக்கு ஆண்டவரிடத்தில் பங்கு இல்லை என்று சொல்லி, உங்கள் மக்கள் எங்கள் மக்களை ஆண்டவரை வழிபடுவதிலிருந்து நிறுத்தக்கூடும்.

எனவே, நமக்கென ஒரு பலிபீடம் எழுப்புவோம். இது எரி பலிக்கோ வேறு பலிக்கோ அன்று.

மாறாக, ஆண்டவர் திருமுன் எரிபலிகளையும் வேறு பலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி அவரை வழிபடுகிறோம் என்பதற்கு, இது நமக்கிடையிலும் நம் வழிமரபினரிடையிலும் சான்றாக இருக்கும். அதனால் உங்கள் மக்கள் எதிர்காலத்தில் எங்கள் மக்களிடம் உங்களுக்கு ஆண்டவரிடத்தில் பங்கு இல்லை என்று சொல்லமாட்டார்கள்.

அப்படி எதிர்காலத்தில் எங்களுக்கும் எங்கள் வழிமரபினருக்கும் சொல்லப்பட்டால் நாங்கள் எங்கள் தந்தையர் செய்த பலிபீடத்தின் படிவத்தைப் பாருங்கள். எரிபலியோ வேறு பலியோகளுக்கும் உங்களுக்கும் உடையே சான்றாக இருந்திடவே என்று கூறுவோம்.

ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்வதோ, ஆண்டவரை விட்டு விலகுவதோ, எரிபலி, உணவுப் படையல், வேறுபலிகள் ஆகியவற்றுக்காக பலிபீடம் எழுப்புவதோ எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அவரது திரு உறைவிடத்தின்முன் இருக்கும் பலிபீடத்தைத் தவிர வேறொன்றும் வேண்டாம் .

ரூபன் மக்களும், காத்து மக்களும், மனாசே மக்களும் கூறியதைக் குரு பினகாசும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களான ஆயிரத்தவர் தலைவர்களும் கேட்டனர். அவர்களுக்கு அது நலமெனப்பட்டது.

எலயாசரின் மகனும் குருவுமான பினகாசு, ரூபன் மக்களிடமும், காத்து மக்களிடமும், மனாசே மக்களிடமும், ஆண்டவர் நம் நடுவில் உள்ளார் என்று இன்று நாங்கள் அறிந்து கொண்டோம். ஆண்டவருக்கு எதிராக நீங்கள் இந்தத் துரோகத்தைச் செய்யாதிருந்ததால், ஆண்டவரின் கையிலிருந்து இஸ்ரயேல் மக்களை நீங்கள் காப்பாற்றினீர்கள். என்று கூறினர்.

எலயாசரின் மகனும் குருவுமான பினகாசும் தலைவர்களும் ரூபன் மக்களிடமிருந்தும் காத்து மக்களிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டு கிலயாது நாட்டிலிருந்து கானான் நாட்டுக்கு இஸ்ரயேல் மக்களிடம் திரும்பிவந்து அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்தனர்.

அந்தப் பதில் இஸ்ரயேல் மக்களுக்கு நலமெனத் தோன்றியது. இஸ்ரயேல் மக்கள் கடவுளை வாழ்த்தினர். அவர்கள் ரூபன் மக்களும் காத்து மக்களும் வாழும் நாட்டின்மீது போரிடச் செல்வதுபற்றியோ, அதை அழிப்பது பற்றியோ மேற்கொண்டு பேசவில்லை.

ரூபன் மக்களும் காத்து மக்களும், ஆண்டவரே கடவுள் என்பதற்கு நம் அனைவருக்கும் இப்பலிபீடமே சான்று என்று சொல்லி அதற்குக் கிலயாது என்று பெயரிட்டனர்.

அதிகாரம் 23.

ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு, அவர்களைச் சூழ்ந்திருந்த எதிரிகள் அனைவரிடமிருந்தும் அமைதி அளித்த பல நாள்களுக்குப்பின், யோசுவா மிகவும் வயதாகி முதுமை எய்தினார்.

யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும், அவர்களுடைய முதியோர்களையும், தலைவர்களையும், நீதிபதிகளையும், அதிகாரிகளையும் அழைத்து அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: நான் வயதாகி முதுமை எய்திவிட்டேன்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை முன்னிட்டு வேற்றினத்தாருக்குச் செய்த அனைத்தையும் கண்டீர்கள். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களுக்காகப் போரிட்டார்.

பாருங்கள்! யோர்தானிலிருந்து மேற்கே பெருங்கடல்வரை நான் சிதறடித்த எல்லா நாடுகளையும் மீதியிருக்கின்ற நாடுகளையும் உங்கள் குலங்களுக்கு உரிமையாகக் கொடுத்துள்ளேன்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னிருந்து அவர்களைத் துரத்தி வெளியேற்றுவார். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கூறியபடி, அவர்கள் நிலங்களை உங்கள் உடைமைகளாக்கிக் கொள்வீர்கள்.

மோசேயின் திருச்சட்டநூலில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் கைக்கொள்வதில் கவனமாயிருங்கள். அதனின்று வலப்புறமோ இடப்புறமோ விலகாதபடி உறுதிகொண்டிருங்கள்.

உங்கள் நடுவில் எஞ்சியிருக்கும் இந்த வேற்றினத்தாருடன் சேராதிருங்கள். அவர்களுடைய தெய்வங்களின் பெயரைச் சொல்லாமலும், அவற்றின்மீது ஆணையிடாமலும், அவற்றுக்கு ஊழியம் செய்யாமலும், அவற்றை வணங்காமலும் இருப்பதில் உறுதியாக இருங்கள்.

இந்நாள் வரை நீங்கள் செய்ததுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மட்டும் பற்றிக்கொள்ளுங்கள்.

ஆண்டவர் மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்த வேற்றினங்களை உங்கள் முன்னிருந்து விரட்டினார். இந்நாள்வரை எவனாலும் உங்களை எதிர்த்து நிற்க இயலவில்லை.

உங்களுள் ஒரே மனிதன் ஆயிரம் பேரை வெல்வான். ஏனெனில் தம் வாக்குறுதிக்கிணங்க உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்புகூர்வதில் மட்டும் கருத்தாயிருங்கள்.

மாறாக, நீங்கள் வழிவிலகி இங்கு எஞ்சியுள்ள வேற்றினத்தாருடன் சேர்ந்துகொண்டு அவர்களுடன் கலப்புமணம் செய்து கொண்டால்,

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னிருந்து அவ்வேற்றினத்தவரைத் தொடர்ந்து விரட்டிக் கொண்டிருக்கமாட்டார் என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள்.

இதோ! மண்ணில் தோன்றிய யாவரும் செல்லும் வழியில் இப்பொழுது நானும் செல்லவிருக்கிறேன். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த எல்லா நல்ல வாக்குறுதிகளிலும் ஒன்றுகூடத் தவறவில்லை என்பதை உங்கள் முழு இதயத்துடனும் முழு உள்ளத்துடனும் அறிந்து கொள்ளுங்கள். அவை அனைத்தும் உங்களுக்கு நிறைவேறின: ஒன்றுகூடத் தவறவில்லை.

உங்கள் கடவுளாகிய ஆண்டவர், உங்களுக்குக் கொடுத்த எல்லா நல்ல வாக்குறுதிகளும், உங்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுபோலவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர், உங்களுக்கு அளித்த இந்த நல்ல நிலத்திலிருந்து உங்களை அழிக்கும்வரை உங்கள்மீது ஆண்டவர் எல்லாத் தீமைகளையும் விழச்செய்வார்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கடடளையிட்ட உடன்படிக்கையை மீறி, நீங்கள் சென்று வேற்றுத் தெய்வங்களை வணங்கி, அவற்றுக்கு ஊழியம் செய்தால் ஆண்டவரின் சினம் உங்களுக்கெதிராகப் பற்றி எரியும். அவர் உங்களுக்கு அளித்த நல்ல நிலத்திலிருந்து விரைவில் அழிந்து போவீர்கள்.

அதிகாரம் 24.

செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர்.

யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: முற்காலத்தில் ஆபிரகாம், நாகோர் ஆகியோரின் தந்தை தேரா உட்பட்ட உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் வாழ்ந்தபொழுது அவர்கள் மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர்.

உங்கள் தந்தையாகிய ஆபிரகாமை நதிக்கு அப்பாலிருந்து அழைத்து வந்து. கானான் நாடு முழுவதிலும் நடத்திச் சென்றேன்: அவனது வழிமரபைப் பெருக்கினேன்: அவனுக்கு ஈசாக்கை அளித்தேன்.

ஈசாக்கிற்கு யாக்கோபையும் ஏசாவையும் அளித்தேன்: ஏசாவுக்குச் செபீர் மலையை உடைமையாக அளித்தேன். யாக்கோபும் அவன் மக்களும் எகிப்திற்குச் சென்றனர்.

மோசேயையும் ஆரோனையும் அனுப்பி அங்கே என் செயல்களின் மூலம் எகிப்தை வதைத்தேன். பின்னர் உங்களை வெளியே கொணர்ந்தேன்.

உங்கள் தந்தையரை எகிப்திலிருந்து வெளியே கொணர்ந்தேன். அவர்கள் கடலுக்குள் சென்றார்கள். எகிப்தியர் தேரில் குதிரைகளுடன் செங்கடலுக்குள் உங்கள் தந்தையரைத் துரத்திச் சென்றனர்.

அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கதறினர். அவர் அவர்களுக்கும் எகிப்தியருக்கும் இடையில் இருளை வைத்தார். அவர் எகிப்தியரைக் கடலில் அமிழ்த்தினார். நான் எகிப்தியருக்குச் செய்ததை அவர்கள் கண்கள் கண்டன. நீங்கள் நீண்ட காலம் பாலைநிலத்தில் வாழ்ந்தீர்கள்.

யோர்தானுக்குக் கிழக்கில் வாழும் எமோரியரின் நாட்டுக்கு உங்களைக் கொண்டுவந்தேன். அவர்கள் உங்களுடன் போரிட்டார்கள். நான் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்தேன். அவர்களது நிலத்தை நீங்கள் உடைமையாக்கிக்கொண்டீர்கள். உங்கள் முன்னிருந்து அவர்களை அழித்து ஒழித்தேன்.

மோவா பின் அரசன் சிப்போரின் மகன் பாலாக்கு இஸ்ரயேலுக்கு எதிராகப் படை திரட்டிப் போர் தொடுத்தான். உங்களைச் சபிக்குமாறு பேகோரின் மகன் பிலயாமை அழைக்க ஆளனுப்பினான்.

நான் பிலயாமுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை. அவன் உங்களுக்கு ஆசி வழங்கினான். உங்களைப் பாலாக்கின் கையினின்று விடுவித்தேன்.

நீங்கள் யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள். எரிகோவின் மக்களும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், இத்தியரும், கிர்காசியரும், இவ்வியரும், எபூசியரும், உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். அவர்களையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன்.

நான் உங்களுக்கு முன்னே குளவிகளை அனுப்பினேன். அவை உங்கள் முன்னிருந்து இரு எமோரிய அரசர்களை விரட்டின. இது நிகழ்ந்தது உங்கள் வாளாலும் அன்று: உங்கள் அம்பாலும் அன்று.

நீங்கள் உழுது பயிரிடாத நிலத்தில் அறுவடை செய்தீர்கள். நீங்கள் கட்டாத நகர்களில் நீங்கள் வாழ்கின்றீகள். நீங்கள் நடாத திராட்சை, ஒலிவத் தோட்டங்களின் பயனை நீங்கள் நுகர்கின்றீர்கள். இவை அனைத்தும் நான் உங்களுக்குக் கொடுத்தவையே.

இப்பொழுது, ஆண்டவருக்கு அஞ்சி உண்மையோடும் நேர்மையோடும் அவருக்கு ஊழியம் புரியுங்கள். நதிக்கு அப்பாலும், எகிப்திலும், உங்கள் மூதாதையர் பணிந்து வந்த தெய்வங்களை விட்டு விலகுங்கள்.

ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.

மக்கள் மறுமொழியாக, ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக!

ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார்.

ஆண்டவர் எல்லா மக்களையும், இந்நாட்டில் வாழ்ந்த எமோரியரையும் எங்கள் முன்னிருந்து விரட்டினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள் என்றனர்.

யோசுவா மக்களிடம், உங்களால் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய இயலாது. ஏனெனில் அவர் தூய கடவுள். அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத கடவுள். உங்கள் குற்றங்களையும் பாவங்களையும் அவர் மன்னிக்கமாட்டார்.

ஆனால் நீங்கள் ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்கினால் அவர் மீண்டும் உங்களுக்குத் தீங்கு செய்வார். உங்களுக்கு நன்மை செய்த அவர் உங்களை அழித்து விடுவார் என்றார்.

மக்கள் யோசுவாவிடம், இல்லை, நாங்கள் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம் என்றனர்.

யோசுவா மக்களிடம், ஆண்டவருக்கு ஊழியம் செய்ய அவரை நீங்களே தெரிந்து கொண்டீர்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகள் என்றார். அவர்கள், நாங்களே சாட்சிகள் என்றனர்.

இப்பொழுது உங்கள் நடுவில் உள்ள வேற்றுத் தெய்வங்களை விலக்கி விடுங்கள். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடம் உங்கள் இதயங்களைத் திருப்புங்கள் என்றார்.

மக்கள் யோசுவாவிடம், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் ஊழியம் புரிவோம். அவரது குரலுக்குக் கீழ்ப்படிவோம் என்றனர்.

அன்று யோசுவா மக்களுக்காக உடன்படிக்கை செய்தார். செக்கேமில் அவர் அவர்களுக்கு விதிமுறைகளையும் ஒழுங்குகளையும் கொடுத்தார்.

யோசுவா இவ்வார்த்தைகளைக் கடவுளின் திருச்சட்டநூலில் எழுதினார். ஒரு பெரும் கல்லை எடுத்து அதை ஆண்டவரின் திருத்தலத்தில் ஒரு கருவாலி மரத்தின் கீழ் நாட்டினார்.

யோசுவா எல்லா மக்களிடமும், இதோ! இக்கல் நமக்கு எதிரான சான்றாக இருக்கும். ஏனெனில் ஆண்டவர் நம்மோடு பேசிய எல்லாவற்றையும் இது கேட்டது. நீங்கள் உங்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்தால் இது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும் என்றார்.

யோசுவா மக்களை அவரவர் உரிமைச் சொத்தாகிய பகதிகளுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் நூனின் மகனும் ஆண்டவரின் ஊழியருமாகிய யோசுவா இறந்தார். அவருக்கு வயது நூற்றுப்பத்து.

அவரை அவரது உரிமை நிலத்தின் எல்லையில் இருந்த திம்னத்செரா என்ற இடத்தில் அடக்கம் செய்தனர். இது எப்ராயிம் மலைநாட்டில் காகசு மலைக்கு வடக்கே உள்ளது.

யோசுவாவின் வாழ்நாள் முழுவதிலும், யோசுவாவுக்குப்பின் வாழ்ந்த முதியோர்களின் நாள்களிலும் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து வந்தனர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குச் செய்த அனைத்தையும் அம்முதியோர் அறிந்திருந்தனர்.

இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளைச் செக்கேமில் ஒரு நிலப்பகுதியில் புதைத்தனர். இப்பகுதி யாக்கோபு செக்கேமின் தந்தையாகிய ஆமோரின் மக்களிடமிருந்து நூறு வெள்ளிக் காசுக்கு வாங்கியது. யோசேப்பின் மக்களுக்கு இது உரிமையாயிற்று.

பின்னர் ஆரோனின் மகன் எலயாசர் இறந்தார். அவருடைய மகன் பினகாசுக்கு எப்ராயிம் மலைநாட்டில் கொடுக்கப்பட்ட கிபயாவில் அவரை அடக்கம் செய்தனர்.

புத்தகம் 7. நீதித்தலைவர்கள்

அதிகாரம் 1.

யோசுவா இறந்த பின் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம், யார் கானானியருக்கு எதிராகச் சென்று எங்கள் சார்பாக முதலில் அவர்களுடன் போரிடுவர்? என்று கேட்டனர்.

ஆண்டவர், யூதா செல்வான். இதோ! அவன் கையில் நிலத்தைக் கொடுத்துள்ளேன் என்றார்.

யூதாவின் மக்கள் தம் சகோதரராகிய சிமியோனின் மக்களிடம், எங்களுடன் எங்கள் நிலப்பகுதிக்குள் வாருங்கள். கானானியருக்கு எதிராக நாம் போரிடுவோம். நாங்களும் உங்கள் நிலப்பகுதிக்குள் உங்களுடன் வருவோம் என்றனர். சிமியோனின் மக்கள் அவர்களுடன் சென்றனர்.

அவ்வாறே யூதா போரிடச் சென்றபொழுது ஆண்டவர் கானானியரையும் பெரிசியரையும் அவர்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் பெசக்கில் பத்தாயிரம் பேரைக் கொன்றனர்.

அதோனிபெசக்கைப் பெசக்கில் கண்டுபிடித்து, அவனை எதிர்த்துப் போரிட்டுக் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் வீழ்த்தினர்.

தப்பி ஓடிய அதோனிபெசக்கை அவர்கள் துரத்திச் சென்று பிடித்து, அவனுடைய கை, கால்களின் பெருவிரல்களைத் துண்டித்தனர்.

அப்பொழுது, அதோனிபெசக்கு, கை, கால்களின் பெருவிரல்கள் துண்டிக்கப்பட்ட எழுபது அரசர்கள் என் உணவு மேசையிலிருந்து சிதறியவற்றைப் பொறுக்கினார்கள். நான் செய்தவாறே, கடவுள் எனக்குச் செய்துள்ளார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். அவன் அங்கே இறந்தான்.

யூதாவின் மக்கள் எருசலேமுக்கு எதிராகப் போரிட்டு அதைக் கைப்பற்றினர். வாள்முனையால் மக்களை வெட்டிவீழ்த்தி, நகரை நெருப்புக்கு இரையாக்கினர்.

பின்னர் யூதாவின் மக்கள் மலைநாட்டிலும், நெகேபிலும், மலை அடிவாரங்களிலும் வாழும் கானானியருக்கு எதிராகப் போர்புரியச் சென்றனர்.

யூதாவின் மக்கள் கிரியத்து அர்பா என்று முன்னர் அழைக்கப்பட்ட எபிரோனில் வாழ்ந்த கானானியருக்கு எதிராகச் சென்றனர் என்பதாகும். அவர்கள் சேசாய், அகிமான், தல்மாய் இனங்களைத் தோற்கடித்தனர்.

அங்கிருந்து தெபீர்வாழ் மக்களுக்கு எதிராகச் சென்றனர். தெபீரின் முன்னாள் பெயர் கிரியத்து சேபேர் என்பதாகும்.

காலேபு, கிரியத்து சேபேரைத் தாக்கிக் கைப்பற்றுபவருக்கு என் மகள் அக்சாவை மனைவியாக அளிப்பேன் என்றார்.

காலேபின் இளைய சகோதரனும், கெனாசின் மகனுமாகிய ஒத்னியேல் அதைக் கைப்பற்றினார். எனவே காலேபு அவருக்குத் தம்மகள் அக்சாவை மனைவியாக அளித்தார்.

அவள் வந்தபோது, அவளுடைய தந்தையிடமிருந்து ஒரு நிலம் கேட்குமாறு அவர் அவளைத் தூண்டினார். எனவே அவள் கழுதையைவிட்டு இறங்கியபோது காலேபு அவளிடம், உனக்கு என்ன வேண்டும்? என்று அவளைக் கேட்டார்.

அவள் அவரிடம், எனக்கு நீர் ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். எனக்கு வறண்ட நிலத்தைத்தான் கொடுத்துள்ளீர். எனக்கு நீரூற்றுகளையும் தாரும் என்றாள். எனவே காலேபு அவளுக்கு மேல் ஊற்றுகளையும் கீழ் ஊற்றுகளையும் கொடுத்தார்.

மோசேயின் மாமனாரின் மக்களாகிய கேனியர், போ£ச்ச நகரிலிருந்து யூதா மக்களுடன், யூதா பாலைநிலத்திற்குச் சென்றனர். அது ஆராத்துக்குத் தெற்கே உள்ளது. அவர்கள் அங்குச் சென்று அங்கிருந்த மக்களுடன் வாழ்ந்தனர்.

யூதாவின் மக்கள் தம் சகோதரர் சிமியோனின் மக்களுடன் சென்றனர். அவர்கள் செப்பாத்தில் வாழும் கானானியரைக் கொன்று அந்நகரை முற்றிலும் அழித்தனர், நகரின் பெயரை ஒர்மா என்று அழைத்தனர்.

யூதாவின் மக்கள் காசாவையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் அஸ்கலோனையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் எக்ரோனையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் கைப்பற்றினர்.

ஆண்டவர் யூதாவின் மக்களுடன் இருந்தார். அவர்கள் மலைப்பகுதியை உரிமையாக்கிக் கொண்டனர். ஆனால் சமவெளியில் வாழ்ந்தவர்களை அவர்களால் விரட்ட முடியவில்லை. ஏனெனில் அவர்களிடம் இரும்புத் தேர்கள் இருந்தன.

ஆனாக்கின் மூன்று புதல்வர்களை விரட்டியடித்த காலேபுக்கு மோசே கூறியிருந்தவாறு, எபிரோன் கொடுக்கப்பட்டது.

எருசலேமில் வாழ்ந்த எபூசியரைப் பென்யமின் மக்கள் விரட்டவில்லை. இந்நாள்வரை எபூசியர் பென்யமின் மக்களுடன் எருசலேமில் வாழ்கின்றனர்.

யோசேப்பின் வீட்டார் பெத்தேலுக்கு எதிராகச் சென்றனர். ஆண்டவர் அவர்களுடன் இருந்தார்.

யோசேப்பின் வீட்டார் பெத்தேலை உளவு பார்த்தனர். இந்நகரின் முன்னாள் பெயர் லூசு என்பதாகும்.

ஒற்றர்கள், ஓர் ஆள் நகரிலிருந்து வெளியே வருவதைக் கண்டனர். அவர்கள் அவனிடம், தயவு செய்து நகரின் நுழைவாயிலைக் காட்டு. நாங்கள் உனக்குக் கருணை காட்டுவோம் என்றனர்.

அவனும் அவர்களுக்கு நகரின் நுழைவாயிலைக் காட்டினான். அவர்கள் நகரை வாள்முனையில் தாக்கினர். ஆனால் அவர்கள் அந்த ஆளையும் அவன் குடம்பம் முழுவதையும் தப்பிச்செல்ல விட்டுவிட்டனர்.

அந்த ஆள் இத்தியரின் நாட்டுக்குச் சென்று ஒரு நகரைக் கட்டி எழுப்பினான். அதற்கு லூசு என்று பெயரிட்டான். அப்பெயர் இந்நாள்வரை நிலவி வருகின்றது.

பெத்சானையும், அதன் சிற்றூர்களையும், தனாக்கையும், அதன் சிற்றூர்களையும், தோர்வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும், இபிலயாம்வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும், மெகிதோ வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும் மனாசேயின் மக்கள் முறியடிக்கவில்லை. கானானியர் அந்நிலத்தில் தொடர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர்.

இஸ்ரயேலர் வலிமை பெற்றதும், கானானியரை அடிமை வேலைக்கு அமர்த்தினர். ஆனால் அவர்களை முற்றிலும் விரட்டவில்லை.

எப்ராயிமின் மக்கள் கெசேரில் வாழ்ந்த கானானியரை விரட்டவில்லை. கானானியர் கெசேரில் அவர்களிடையே வாழ்ந்தனர்.

கிற்றரோன்வாழ் மக்களையோ, நகலோல் வாழ் மக்களையோ செபுலோனின் மக்கள் விரட்டவில்லை. கானானியர் அவர்களிடையே வாழ்ந்தனர். அவர்கள் அடிமைகள் ஆயினர்.

அக்கோ வாழ் மக்களையும், சீதோன், அக்லாபு, அக்சீபு, எல்பா, அப்பீகு, இரகோபு வாழ் மக்களையும் ஆசேரின் மக்கள் விரட்டவில்லை.

ஆசேரின் மக்கள் அந்நாட்டில் வாழும் கானானியரிடையே வாழ்கின்றனர். ஏனெனில் அவர்கள் அவர்களை விரட்டவில்லை.

நப்தலியின் மக்கள் பெத்சமேசுவாழ் மக்களையும், பெத்தனாத்து வாழ் மக்களையும் விரட்டவில்லை. அந்நாட்டில் வாழும் கானானியர், பெத்சமேசுவாழ் மக்கள், பெத்தனாத்துவாழ் மக்கள் ஆகியோரிடையே வாழ்கின்றனர்.

எமோரியர், தாண் மக்களைச் சமவெளிக்கு இறங்கவிடாமல் தடுத்து, மலைநோக்கிச் செல்லுமாறு நெருக்கினார்கள்.

எமோரியர் கர்கரேசிலும், அய்யலோனிலிருந்த சாலபிமிலும் தொடர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். யோசேப்பு வீட்டாரின் கை ஓங்கியது. எமோரியர் அடிமைகள் ஆயினர்.

எமோரியரின் எல்லை அக்ரபிம் ஏற்றத்திலிருந்து, சேலாவுக்கு வடக்கே மேல் நோக்கிச் சென்றது.

அதிகாரம் 2.

ஆண்டவரின் தூதர் கில்காலிலிருந்து பொக்கிமுக்குச் சென்று கூறியது: நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். உங்கள் தந்தையருக்கு வாக்களித்த நாட்டுக்கு உங்களைக் கூட்டி வந்தேன். உங்களுடன் செய்துகொண்ட எனது உடன்படிக்கையை என்றுமே முறிக்கமாட்டேன்.

நீங்கள் இந்நாட்டில் வாழ்பவர்களுடன் உடன்படிக்கை செய்யக்கூடாது. அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்தெறியுங்கள் என்று கூறியிருந்தேன். நீங்களோ என் குரலைக் கேட்கவில்லை. நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்?

ஆகவே இப்பொழுது கூறுகின்றேன்: நான் அவர்களை உங்கள் முன்னிலையிலிருந்து துரத்திவிடமாட்டேன். அவர்கள் உங்களுக்கு முன்னாக இருப்பார்கள். அவர்கள் தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாக இருப்பார்கள் .

ஆண்டவரின் தூதர் இவ்வார்த்தைகளை எல்லா இஸ்ரயேல் மக்களிடம் கூறியதும், மக்கள் தங்கள் குரலை எழுப்பி அழுதனர்.

அவ்விடத்தின் பெயரைப் பொக்கிம் என அழைத்தனர். அங்கு ஆண்டவருக்குப் பலியிட்டனர்.

யோசுவா இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிட, அவர்கள் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தாகிய நிலத்தை உடைமையாக்கிக் கொள்ளச் சென்றனர்.

யோசுவாவின் வாழ்நாள் முழுவதிலும் யோசுவாவுக்குப் பின் வாழ்ந்த முதியோரின் நாள்களிலும் மக்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து வந்தனர். ஆண்டவர் இஸ்ரயேலருக்குச் செய்த மாபெரும் செயல்கள் அனைத்தையும் அம்முதியோர் கண்டிருந்தனர்.

நூனின் மகனும் ஆண்டவரின் ஊழியருமாகிய யோசுவா இறந்தார். அவருக்கு வயது நூற்றுப் பத்து.

காகசு மலைக்கு வடக்கே எப்ராயிம் மலைநாட்டில் அவரது உரிமை நிலத்தின் எல்லையிலிருந்த திம்னத்கெரேசில் அவரை அடக்கம் செய்தனர்.

அத்தலைமுறையினரும் தம் மூதாதையரைப்போல இறந்தனர். அவர்களுக்குப்பின் வந்த தலைமுறையினர் ஆண்டவரையோ அவர் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்ததையோ அறிந்திருக்கவில்லை.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். அவர்கள் பாகால்களுக்கு ஊழியம் செய்தனர்.

அவர்கள் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிட்டனர். தங்களைச்சுற்றி வாழ்ந்த மக்களினங்களின் தெய்வங்களைப் பின்பற்றி, வழிபட்டு, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.

அவர்கள் ஆண்டவரைக் கைவிட்டுப் பாகாலுக்கும் அஸ்தரோத்துக்கும் ஊழியம் செய்தனர்.

இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. எனவே, அவர் கொள்ளையடிப்போரிடம் அவர்களை ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தனர். அவர்களைச் சூழ்ந்திருக்க எதிரிகளிடம் ஆண்டவர் அவர்களை விற்றார். அதனால் அவர்கள் எதிரிகளின் முன், அவர்களால் எதிர்த்து நிற்க இயலாமற்போயிற்று.

ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியதுபோல், அவர்கள் போருக்குச் சென்றபொழுதெல்லாம், ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராகத் தீமை விளைவித்தது. அவர்கள் பெருந்துயரத்துக்கு உள்ளாயினர்.

ஆண்டவர் நீதித் தலைவர்களை எழச்செய்தார். அவர்கள் அவர்களைக் கொள்ளையடித்தவர்களின் கைகளிலிருந்து விடுவித்தனர்.

ஆயினும் அவர்கள், தங்கள் நீதித் தலைவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை: ஏனெனில் அவர்கள் வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றித் தொழுது வேசித்தனம் செய்தனர்: தங்கள் மூதாதையர் ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவி கொடுத்து நடந்த நெறியைவிட்டு விரைவில் விலகினர்.

ஆண்டவர் அவர்களுக்காக நீதித் தலைவர்களை எழச்செய்த பொழுதெல்லாம் அவர் அந்தத் தலைவர்களுடன் இருந்து, அத்தலைவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிரிகளின் கையிலிருந்து மக்களை விடுவித்தார். ஏனெனில் துன்புறுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட அவர்களின் அழுகுரலைக் கேட்டு ஆண்டவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டார்.

ஆனால் அவர்கள் ஒவ்வொரு நீதித் தலைவர் இறந்தபொழுதும், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றியும், அவற்றுக்கு ஊழியம் செய்தும், அவற்றை வழிபட்டும், தங்கள் மூதாதையரைவிட இழிவாக நடந்தனர். அவர்களுடைய தீய பழக்கங்களையும் முரட்டுத்தனமான நடத்தையையும் விட்டகலவில்லை.

எனவே இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. அவர், இம்மக்களின் மூதாதையர் கைக்கொள்ளுமாறு கட்டளையிட்ட என் உடன்படிக்கையை இவர்கள் மீறிவிட்டனர். என் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை.

ஆகவே நானும் யோசுவா இறக்கும்பொழுதுவிட்டு வைத்த வேற்றினத்தாரை இவர்கள் முன்னிருந்து இனியும் விரட்டமாட்டேன்.

ஆண்டவரது நெறிமுறையில் நடப்பதில் இஸ்ரயேலின் மூதாதையர் கவனமாக இருந்ததுபோல், இஸ்ரயேலரும் கவனமாக இருக்கின்றார்களா இல்லையா என இவர்களைக்கொண்டு நான் சோதிக்கின்றேன் என்றார்.

எனவே, ஆண்டவர் இந்த வேற்றினத்தாரை யோசுவாவிடம் ஒப்படைக்காமலும் விரைவில் விரட்டாமலும் விட்டு வைத்தார்.

அதிகாரம் 3.

இஸ்ரயேல் மக்களைச் சோதிக்கும்படி இந்த வேற்றினங்களை ஆண்டவர் விட்டு வைத்திருந்தார். இம்மக்கள் அனைவரும் கானானின் போர் முறையை அறிந்திருக்கவில்லை.

இஸ்ரயேல் மக்களின் இத்தலைமுறையினர் போர்முறையைக் கற்றுக் கொள்ளுமாறும் இதனை இதுவரை அறியாதோர்க்குக் கற்றுத்தருமாறும் விட்டுவைக்கப்பட்டோர்:

ஜந்து பெலிஸ்திய இளவரசர், அனைத்துக் கானானியர், சீதோனியர், பாகால் எர்மோன் மலைநாட்டிலிருந்து ஆமாத்துக் கணவாய்வரை லெபனோன் மலையில் வாழ்ந்த இவ்வியர்.

மோசே வழியாக இஸ்ரயேலரின் மூதாதையருக்கு ஆண்டவர் இட்ட கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிவார்களா என்று சோதித்து அறியும் பொருட்டு அவர்கள் விடப்பட்டிருந்தனர்.

இஸ்ரயேல் மக்கள் கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் நடுவில் வாழ்ந்தனர்.

இவர்கள், அவர்கள் புதல்வியரைத் தங்கள் மனைவியராகக் கொண்டனர்: தங்கள் புதல்வியரை அவர்கள் புதல்வருக்குக் கொடுத்தனர்: அவர்களுடைய தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர்.

ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை இஸ்ரயேலர் செய்தனர். தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, பாகாலுக்கும் அசேராக்களுக்கும் ஊழியம் செய்தனர்.

இஸ்ரயேலருக்கு எதிராக ஆண்டவரின் சினம் மூண்டது. அவர் அவர்களை மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத்தாயிமிடம் ஒப்படைத்து விட்டார். இஸ்ரயேலர் கூசான் ரிசத்தாயிமுக்கு எட்டாண்டுகள் அடிமைப்பட்டிருந்தனர்.

இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க ஒருவரை எழச் செய்தார். அவர் காலேபின் இளைய சகோதரரான கெனாசின் மகன் ஒத்னியேல். அவர் அவர்களுக்கு விடுதலை அளித்தார்.

அவர்மீது ஆண்டவரின் ஆவி இருந்தது. அவர் இஸ்ரயேலருக்கு நீதித்தீர்ப்பு வழங்கினார். அவர் போருக்குச் சென்றார். அவரிடம் மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத்தாயிமை ஆண்டவர் ஒப்படைத்தார். அவர் கூசான் ரிசத்தாயிமின் மீது வெற்றி கொண்டார்.

நாடு நாற்பது ஆண்டுகள் அமைதியாக இருந்தது. பின் கெனாசின் மகன் ஒத்னியேல் இறந்தார்.

இஸ்ரயேல் மக்கள் மீண்டும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். மோவாபின் மன்னன் எக்லோனை இஸ்ரயேலருக்கு எதிராக ஆண்டவர் வலிமைப்படுத்தினார். ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர்.

அவன் தன்னுடன் அம்மோனியரையும் அமலேக்கியரையும் சேர்த்துக்கொண்டு சென்று, இஸ்ரயேலரை வென்று, போ£ச்ச நகரைக் கைப்பற்றினான்.

இஸ்ரயேல் மக்கள் மோவாபின் மன்னன் எக்லோனுக்குப் பதினெட்டு ஆண்டுகள் அட¢மைப்பட்ட¢ருந்தனர்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க பென்யமினைச் சார்ந்த கேராவின் மகன் ஏகூதை எழச் செய்தார். அவர் இடக்கை மனிதர். இஸ்ரயேல் மக்கள் மோவாபின் மன்னன் எக்லோனுக்குக் கப்பம் கட்டுமாறு அவரை அனுப்பிவைத்தனர்.

ஏகூது தமக்கு ஒரு முழ நீளமும், இருபக்கம் கருக்குமுள்ள வாள் ஒன்றைச் செய்து கொண்டார். அதை அவர் தம் ஆடைகளுக்கு அடியில் வலதுதொடையில் கட்டி வைத்துக்கொண்டார்.

அவர் மோவாபு மன்னன் எக்லோனுக்குக் கப்பத்தைச் செலுத்தினார். எக்லோன் மிகவும் பருத்த மனிதன்.

ஏகூது கப்பத்தைச் செலுத்தி முடித்ததும், கப்பப் பொருள்களைச் சுமந்து வந்த மக்களை அவர் அனுப்பிவிட்டார்.

அவர் கில்காலுக்கு அருகில் உள்ள சிலைகள் வரை சென்று திரும்பி வந்து, மன்னரே! என்னிடம் உமக்கு ஓர் இரகசிய செய்தி உள்ளது என்றார். அவன் அமைதி என்றான். அவனைச் சுற்றி நின்ற அனைவரும் அவனை விட்டுவிட்டு வெளியேறினர்.

ஏகூது அவன் அருகில் வந்தார். அப்பொழுது அவன் குளிர்ந்த மேலறையில் தனியாக அமர்ந்திருந்தான். ஏகூது, உமக்கான கடவுளின் செய்தி ஒன்று என்னிடம் உள்ளது என்று கூற, அவன் தன் இருக்கையிலிருந்து எழுந்தான்.

ஏகூது தம் இடக்கையை நீட்டி வலது தொடையிலிருந்து வாளை உருவி அவனுடைய வயிற்றில் குத்தினார்.

வாளோடு கைப்பிடியும் உள்ளே இறங்கியது. கொழப்பு கைப்பிடியை மூடியதால், வாளை வயிற்றிலிருந்து வெளியே அவரால் உருவ முடியவில்லை. அது பின்புறமாக வெளியே வந்தது.

ஏகூது முன்தளத்திற்கு வந்து மேலறையின் கதவுகளை அடைத்துப் பூட்டினார்.

அவர் வெளியே சென்றபின், மன்னனின் வேலையாளர்கள் வந்தனர். இதோ! அவனது மேலறையில் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். அவன் குளிர்ந்த மேலறையின் கழிவறைக்குத்தான் சென்றிருப்பான் என்று கூறிக் கொண்டனர்.

அவர்கள் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். மேலறையின் கதவுகளை அவன் திறக்காமல் போகவே, அவர்கள் சாவியை எடுத்துத் திறந்தார்கள். இதோ! அவர்கள் தலைவன் தரையில் இறந்து கிடந்தான்.

அவர்கள் காத்திருந்த நேரத்தில் ஏகூது கற்சிலைகளைக் கடந்து, செயிராவுக்குத் தப்பி ஓடினார்.

அவர் அங்கு வந்து எப்ராயிம் மலையில் எக்காளம் ஊதினார். அவர் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் மலைநாட்டிலிருந்து கீழே இறங்கினர்.

அவர் அவர்களிடம், என் பின்னால் வாருங்கள். ஆண்டவர் மோவாபியராகிய உங்கள் எதிரிகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளார் என்றார். அவர்கள் அவர் பின்னே சென்று மோவாபுக்கு எதிரே இருந்த யோர்தானின் கடவுதுறைகளைக் கைப்பற்றினர். எவரும் கடந்து செல்ல அனுமதிக்கவில்லை.

அவர்கள் அவ்வமயம் மோவாபியருள் உடற்கட்டும் வலிமையும் வாய்ந்த பத்தாயிரம் பேரைக் கொன்றனர். எவரும் தப்பிவில்லை.

அந்நாளில் மோவாபு இஸ்ரயேலின் ஆற்றலால் அடக்கப்பட்டது. எண்பது ஆண்டுகள் நாடு அமைதியாக இருந்தது.

ஏகூதுக்குப் பின், அனாத்தின் மகன் சம்கார் தலைவராக இருந்தார். அவர் அறுநூறு பெலிஸ்தியரைக் கலப்பைக் கொழுவால் கொன்றார். அவரும் இஸ்ரயேலுக்கு விடுதலை அளித்தார்.

அதிகாரம் 4.

ஏகூது இறந்தபின், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர்.

ஆட்சோரை ஆண்ட கானானிய மன்னன் யாபினிடம் ஆண்டவர் அவர்களை ஒப்படைத்தார். அவனுடைய படைத்தலைவன் சீசரா அரோசத்கோயிமில் வாழ்ந்து வந்தான்.

இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஏனெனில் அவனிடம் தொள்ளாயிரம் இரும்புத் தேர்கள் இருந்தன. அவன் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலரைக் கடுமையாக ஒடுக்கினான்.

அச்சமயத்தில் இஸ்ரயேலருக்கு இறைவாக்கினரும் இலப்பிதோத்தின் மனைவியுமான தெபோரா நீதித் தலைவியாக இருந்தார்.

அவர் எப்ராயிம் மலைநாட்டில் இராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையில் தெபோராப் போ£ச்சை என்ற மரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். தீர்ப்புப் பெறுதற்காக இஸ்ரயேலர் அவரிடம் செல்வர்.

நப்தலியில் இருந்த கெதேசில் வாழ்ந்த அபினொவாமின் மகன் பாராக்கை அவர் ஆளனுப்பிக் கூப்பிட்டார். அவர் அவரிடம், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உமக்குக் கட்டளையிடுகிறார்: நீர் போய் நப்தலி, செபுலோன் மக்களைத் தாபோர் மலையில் ஒன்று கூட்டி அவர்களிலிருந்து பத்தாயிரம் பேரைச் சேர்த்துக்கொள்ளும்.

யாபினின் படைத்தலைவன் சீசராவையம் அவன் தேர்களையும் படையையும் கீசோன் ஆற்றின் அருகே இழுத்து வந்து உம் கையில் கொடுப்பேன் என்றார்.

பாராக்கு அவரிடம், நீர் என்னுடன் வந்தால் நான் செல்வேன். நீர் என்னுடன் வராவிடில் நான் செல்லமாட்டேன் என்றார்.

அவர் அவரிடம், நான் உம்முடன் உறுதியாக வருவேன். ஆயினும், நீர் செல்லும் வழி உமக்குப் பெருமை தராது. ஏனெனில், ஆண்டவர் ஒரு பெண்ணிடம் சீசராவை ஒப்படைப்பார் என்றார். பின்பு தெபோரா எழுந்து பாராக்குடன் கெதேசு நோக்கிச் சென்றார்.

பாராக்கு செபுலோனையும் நப்தலியையும் கெதேசில் ஒன்று கூட்டினார். பத்தாயிரம் பேர் அவர்பின் அணிவகுத்துச் சென்றனர். தெபோராவும் அவருடன் சென்றார்.

கேனியரான எபேர், மோசேயின் மாமனார் ஒபாபின் மக்களான கேனியரிடமிருந்து பிரிந்து, வாழ்ந்து வந்தார். அவர் கெதேசுக்கு அருகில் சானானிமிலிருந்த கருவாலி மரத்திற்கு அருகில் தம் கூடாரத்தை அமைத்திருந்தார்.

அபினோவாமின் மகன் பாராக்கு தாபோர் மலைமீது ஏறிவிட்டதைச் சீசராவுக்கு அறிவித்தனர்.

சீசரா தன்னிடமிருந்த மொத்தம் தொள்ளாயிரம் இரும்புத்தேர்களையும், தன்னுடன் இருந்த மக்கள் எல்லாரையும் அரோசத்கோயிமிலிருந்து கீசோன் ஆற்றின் அருகே ஒன்று திரட்டினான்.

தெபோரா பாராக்கிடம், எழுந்திரும்: இந்நாளில் ஆண்டவர் சீசராவை உம்மிடம் ஒப்படைப்பார். ஆண்டவர் உம்முன் செல்லவில்லையா? என்றார். பாராக்கு தாபோர் மலையிலிருந்து இறங்கினார். பத்தாயிரம் பேர் அவரைப் பின்தொடர்ந்தனர்.

ஆண்டவர் சீசராவையும் அவனுடைய தேர்கள் அனைத்தையும் படை முழுவதையும் வாள் முனையில் பாராக்கின் முன்னால் சிதறடித்தார். சீசரா தன் தேரிலிருந்து இறங்கித் தப்பி ஓடினான்.

பாராக்கு தேர்களையும், படையையும் அரோசத்கோயிம் வரை துரத்தினார். சீசராவின் படை முழுவதும் வாள்முனைக்கு இரையாயிற்று. ஒருவர்கூட தப்பவில்லை.

சீசரா கேனியரான எபேரின் மனைவி யாவேலின் கூடாரத்திற்கு ஓடினான். ஏனெனில் ஆட்சோர் மன்னன் யாபினுக்கும் கேனியரான எபேரின் வீட்டுக்கும் இடையே நல்லிணக்கம் நிலவி இருந்தது.

யாவேல் சீசராவைச் சந்திக்க வெளியே வந்து இங்கே திரும்பும், என் தலைவரே! என்னிடம் திரும்பும்: அஞ்ச வேண்டாம் என்றார். அவன் அவரோடு கூடாரத்திற்குச் சென்றான். அவர் அவனை ஒரு போர்வையால் மூடினார்.

அவன் அவரிடம், எனக்குச் சிறிது தண்ணீர் கொடு. நான் தாகமாயிருக்கிறேன் என்றான். பால் வைக்கும் தோற்பையைத் திறந்து அவர் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தார். பின் அவனை மூடினார்.

அவன் அவரிடம், கூடாரத்தின் வாயிலில் நின்று கொள், எவனாவது வந்து, இங்கு ஓர் ஆள் இருக்கின்றானா? என்று உன்னைக் கேட்டால் நீ இல்லை என்று சொல் என்றான்.

அவன் களைப்பால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது, எபேரின் மனைவி யாவேல் கூடார முளை ஒன்றையும் கத்தியல் ஒன்றையும் தம் கையில் எடுத்துக் கொண்டு ஓசைப்படாமல் அவனிடம் வந்து அவன் நெற்றிப் பொட்டில் முளைதரையில் இறங்கும்வரை அடிக்க, அவன் மடிந்தான்.

இதோ! பாராக்கு சீசராவைத் துரத்திக் கொண்டு வந்தார். யாவேல் அவரைச் சந்திக்க வெளியே வந்தார். யாவேல் அவரிடம், வாரும்! நீர் தேடும் ஆளை நான் உமக்குக் காட்டுகிறேன் என்றார். அவரும் அவருடன் உள்ளே செல்ல, இதோ! சீசரா இறந்து கிடந்தான். கூடார முளை அவன் நெற்றிப் பொட்டில் அடிக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறு அந்நாளில் கடவுள் கானானிய மன்னன் யாபினை இஸ்ரயேல் மக்களின் முன் ஒடுக்கினார்.

இஸ்ரயேல் மக்களின் கை மேன்மேலும் வலுவடைந்து, கானானிய மன்னன் யாபினை நசுக்கி அழித்தது.

அதிகாரம் 5.

அந்நாளில், தெபோராவும் அபினோவாமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்:

இஸ்ரயேலின் தலைவர்கள் தலைமை தாங்கிச் செல்ல மக்களும் தங்களை மனமுவந்து அளிக்கின்றனர்.

அரசர்களே, கேளுங்கள்! இளவரசர்களே, செவிகொடுங்கள்! நான் ஆண்டவருக்குப் பண் இசைப்பேன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் புகழ்பாடுவேன்.

ஆண்டவரே, நீர் சேயிரிலிருந்து வெளிவந்தபோது, நீர் ஏதொமின் வயல்வெளியைக் கடந்தபோது, நிலம் நடுங்கியது, வானம் பொழிந்தது, கார்மேகம் நீரைச் சொரிந்தது.

ஆண்டவரின் முன்னிலையில் மலைகள் நடுங்கின. சீனாய் மலையே! நீயும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்முன் நடுங்கினாய்.

அனாத்தின் மகன் சம்காரின் நாள்களிலும் யாவேலின் நாள்களிலும் நெடுஞ்சாலைகள் வெறுமையாகிக் கிடந்தன. பயணிகள் சுற்றுப் பாதைகளில் சென்றனர்.

தெபோரா! நீ எழும்பும் வரை, இஸ்ரயேலின் தாயாகத் தோன்றும் வரை, இஸ்ரயேலின் தாயாகத் தோன்றும் வரை, இஸ்ரயேலின் சிற்றூர்கள் வாழ்விழந்து கிடந்தன.

வேற்றுத் தெய்வங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டதும், வாயில்களில் போர் வந்துற்றது. இஸ்ரயேலின் நாற்பதாயிரம் பேர்களுள் எவரிடம் கேடயமோ ஈட்டியோ இருந்தது?

என் இதயம் இஸ்ரயேலின் படைத்தலைவர்களில் பெருமிதம் கொள்கிறது. மக்கள் நடுவில் தங்களை மனமுவந்து அளித்தவர்கள் இவர்களே! ஆண்டவரைப் போற்றுங்கள்!

பெண் கழுதைகள் மீது விரைந்து செல்வோரே! விலைமிகு கம்பளத்தில் வீற்றிருப்போரே! பாதையில் பயணம் செய்வோரே! பாடி மகிழுங்கள்!

நீர்நிலைகளின் அருகிலிருந்து எழும் பாடகர்குரல் அங்கே ஆண்டவரின் வெற்றியைப் பாடுகின்றது. இஸ்ரயேல் ஊரக வாழ்வின் பொலிவை முழங்குகின்றது. அப்பொழுது, ஆண்டவரின் மக்கள் நகர வாயில்களுக்கு இறங்கிச் சென்றார்கள்.

எழுந்திடு! தெபோரா! எழுந்திடு! பாடல் ஒன்று பாடு! எழுந்திடு! பாராக்கு! அபினோவாம் புதல்வா! உன் கைதிகளை இழுத்துச் சென்றிடு!

அப்பொழுது, எஞ்சிய உயர்குடியினர்பீடு நடைபோட்டனர். வலியோரை எதிர்த்து நிற்க ஆண்டவரின் மக்கள் என்னிடம் இறங்கி வந்தனர்.

எப்ராயிமிலிருந்து அதன் மக்கள் அமலேக்கிற்குப் போயினர். பென்யமின்! உன் பின்னால் உன் மக்களும் மாக்கிரிலிருந்து தலைவர்களும் செபுலோனிலிருந்து தலைவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.

இசக்காரின் இளவரசர்கள் தெபோராவுடன் சென்றனர். இசக்காரின் மக்கள் பாராக்குடன் சென்றனர்: அவர்கள் கால்நடையாக பள்ளத்தாக்கிற்கு விரைந்தனர். ரூபனின் பிரிவுகளிடையே விளைந்தது மாபெரும் இதய சோதனையே!

மந்தைகளில் இரைச்சலைக் கேட்கவோ தொழுவங்களிடையே நீ நின்று விட்டாய்? ரூபனின் பிரிவுகளிடையே விளைந்தது மாபெரும் இதய சோதனையே!

கிலயாது யோர்தானுக்கு அப்பால் தங்கியது. தாண்! நீ ஏன் கப்பல்களில் தங்கிவிட்டாய்? ஆசேர் கடற்கரைப்பகுதியில் தங்கி, அதன் துறைமுகத்தில் குடியிருந்தான்.

செபுலோன் மக்களோ தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். உயர் நிலத்து நப்தலியும் அவ்வாறே!

மன்னர்கள் வந்து போரிட்டனர். கானானிய மன்னர்கள் தானாக்கில் மெகிதோ நீர் நிலைகளில் போரிட்டனர். கொள்ளைப்பொருளாக வெள்ளி எதுவும் கிடைக்கவில்லை.

வானிலிருந்து விண்மீன்கள் போரிட்டன! தங்கள் பாதையிலிருந்து சீசராவுடன் போரிட்டன!

கீசோன் ஆறு அவர்களை அடித்துச் சென்றது. பெருக்கெடுத்து வரும் ஆறெ கீசோன் ஆறு. என் உயிரே! வலிமையுடன் பீடு நடை போடு!

குதிரைகளின் குளம்புகள் நிலத்தை அதிரச் செய்தன. குதிரைகள் பாய்ந்து ஓடின: வேகமாக விரைந்து ஓடின.

மேரோசைச் சபியுங்கள் என்கிறார் ஆண்டவரின் தூதர். அதில் வாழ்வோரைக் கடுமையாகச் சபியுங்கள். ஏனெனில் அவர்கள் ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை. வலிமை மிக்கோருக்கு எதிராக ஆண்டவருக்கு உதவி செய்ய வரவில்லை.

கேனியனான கெபேரின் மனைவி யாவேல்! நீ பெண்களுள் பேறு பெற்றவள்! கூடாரம்வாழ் பெண்களுள் நீ பேறு பெற்றவள்!

அவன் கேட்டதோ தண்ணீர்! இவள் கொடுத்ததோ பால்! அவள் உயர்தரக் கிண்ணத்தில் தயிர் கொண்டு வந்தாள்.

அவள் தன் கையைக் கூடாரமுளையில் வைத்தாள். அவள் வலக்கை தொழிலாளர் சுத்தியலைப் பிடித்தது. சீசராவின் தலையில் அடித்தாள்: சிதைத்தாள்: அவன் நெற்றிப்பொட்டினை நொறுக்கினான்: துளைத்தான்.

அவன் சரிந்தான்: விழுந்தான்: அவ5 காலடியில் உயிரற்றுக் கிடந்தான்: அவள் காலடியில் அவன் சரிந்தான்: விழுந்தான்: அவன் விழுந்த இடத்திலேயே இறந்து கிடந்தான்.

சீசராவின் தாய் சாளரம் வழியாக எட்டிப்பார்த்தாள். சாளரத்தில் சாய்ந்துகொண்டு அவள் கத்தினாள்: அவன் தேர்வர ஏன் இந்தத் தாமதம்? அவன் தேர்க்குதிரைகளின் குளம் பொலி ஏன் இன்னும் கேட்கவில்லை?

அவளுடைய அறிவார்ந்த பணிப்பெண்கள் அவளுக்கு விடை கூறுகின்றனர்: அவளது கேள்விக்கு அவளே விடை கூறுகின்றாள்:

அவர்கள் கொள்ளைப் பொருளைக் கண்டுபிடித்துப் பங்கிடுகிறார்களோ? ஆளுக்கு ஓரிரண்டு பெண்கள்: சீசராவுக்குக் கொள்ளைப் பொருளில் வண்ண ஆடைகள்: என் தோளுக்குக் கொள்ளையடித்த வண்ண ஆடைகள்: இரண்டு பூப்பின்னல் ஆடைகள்.

ஆண்டவரே, இவ்வாறு உம் எதிரிகள் அழியட்டும்! உம்மீது அன்பு கூர்வோர் பொலிவுடன், கதிரவன் போல வாழட்டும்! பின்னர் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவிற்று.

அதிகாரம் 6.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தனர். அவர்களை ஆண்டவர் மிதியானியரிடம் ஏழு ஆண்டுகள் ஒப்படைத்தார்.

மிதியானியரின் ஆட்சியில் இஸ்ரயேலர் கொடுமைப்படுத்தப்பட்டனர். எனவே மிதியானியரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மலைப்பிளவுகளையும், குகைகளையும், கோட்டைகளையும் தங்கள் பதுங்கிடமாக அமைத்துக் கொண்டனர்.

இஸ்ரயேல் மக்கள் பயிரிட்டதை மிதியானியரும் அமலேக்கியரும் கிழக்கில் வாழ்ந்த மக்களும் அழித்து வந்தனர்.

அவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராக முற்றுகையிட்டுக் காசா வரையில் உள்ள நிலப்பகுதியின் விளைச்சலை அழித்து வந்தனர்: இஸ்ரயேலில் உணவை விட்டுவைக்கவில்லை: ஆட்டையும் மாட்டையும் கழுதையையும் எதையுமே விட்டுவைக்கவில்லை.

அவர்கள் தங்கள் கால்நடைகளுடனும் கூடாரங்களுடனும் வெட்டுக்கிளிகள்போல் பெருங்கூட்டமாக வந்தனர். அவர்களும் அவர்களுக்குரிய ஒட்டகங்களும் எண்ணிக்கையில் அடங்கா. அவர்கள் கொள்ளையடிக்க நாட்டினுள் வந்தனர்.

மிதியானியரிடம் மிகவும் சிறுமையுற்ற இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர்.

இவ்வாறு மிதியானியரை முன்னிட்டு, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் கூக்குரலிட்ட பொழுது,

ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் ஒருவரை அனுப்பினார். அவர் அவர்களுக்குக் கூறியது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தேன். உங்களை அடிமைத்தனத்தின் வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தேன்.

எகிப்தியரின் கையிலிருந்தும், உங்களை நசுக்கியோர் அனைவரின் கையிலிருந்தும், உங்களை நான் மீட்டேன். அவர்களை உங்கள் முன்னிருந்து விரட்டிவிட்டு அவர்கள் நிலத்தை உங்களுக்குக் கொடுத்தேன்.

நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர். நீங்கள் வாழும் நாட்டில் உள்ள அம்மோனியரின் தெய்வங்களை வணங்காதீர்கள் என நான் உங்களுக்குக் கூறியிருந்தேன். நீங்களோ என் குரலைக் கேட்கவில்லை.

பின்பு ஆண்டவரின் தூதர் ஒபிராவில் உள்ள ஒரு கருவாலி மரத்தடியில் வந்து அமர்ந்தார். அந்த மரம் அபியேசர் குடம்பத்தவரான யோவாசுக்குச் சொந்தமானது. அவர் மகன் கிதியோன், மிதியானியரிடமிருந்து கோதுமையை மறைப்பதற்காக, திராட்சை ஆலையில் கதிர்களை அடித்துக்கொண்டிருந்தார்.

ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார் என்றார்.

கிதியோன் அவரிடம், என் தலைவரே! ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவையெல்லாம் எமக்கு நேரிடுகின்றன? ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வரவில்லையா என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு வியந்துரைத்த அவரது வியத்தகு செயல்களெல்லாம் எங்கே? இப்பொழுது ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்? எம்மை மிதியானியரின் கைகளில் ஒப்படைத்துவிட்டாரே! என்றார்.

ஆண்டவர் அவர் பக்கம் திரும்பி, உன்னுடைய இதே ஆற்றலுடன் செல்வாய். மிதியானியர் கையிலிருந்து இஸ்ரயேலை நீ விடுவிப்பாய். உன்னை அனுப்புவது நான் அல்லவா? என்றார்.

கிதியோன் அவரிடம், என் தலைவரே! எவ்வழியில் நான் இஸ்ரயேலை விடுவிப்பேன்! இதோ! மனாசேயிலேயே நலிவுற்று இருப்பது என் குடம்பம். என் தந்தை வீட்டிலேயே நான்தான் சிறியவன் என்றார்.

ஆண்டவர் அவரிடம், நான் உன்னோடு இருப்பதால் நீ தனி ஒரு ஆளாக மிதியானியரை வெல்வாய் என்றார்.

கிதியோன், உம் பார்வையில் எனக்குத் தயவு கிடைத்துள்ளது என்றால், நீர்தான் என்னுடன் பேசுகிறவர் என்பதற்கு அடையாளம் ஒன்று காட்டும்.

நான் உம்மிடம் திரும்பிவந்து எனது உணவுப் படையலைக் கொண்டு வந்து உம் திருமுன் வைக்கும்வரை இவ்விடத்தைவிட்டு அகலாதீர் என்றார். அவரும், நீ திரும்பும்வரை நான் இங்கேயே இருப்பேன் என்றார்.

கிதியோன் வந்து ஆட்டுக் குட்டியையும், இருபதுபடி அளவுள்ள ஒரு மரக்கால் மாவால் புளியாத அப்பத்தையும் தயார் செய்தார். பிறகு அவர் இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு சட்டியிலும், எடுத்துக்கொண்டு அந்தக் கருவாலி மரத்தடிக்கு வந்து அவரிடம் கொடுத்தார்.

கடவுளின் தூதர் அவரிடம், இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் கொண்டு வந்து இப்பாறைமீது வைத்துக் குழம்பை ஊற்று என்றார். அவரும் அவ்வாறே செய்தார்.

ஆண்டவரின் தூதர் தம் கையிலிருந்த கோலின் முனையால் இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் தொட்டார். பாறையிலிருந்து நெருப்பு எழும்பி, இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் எரித்தது. ஆண்டவரின் தூதர் அவர் பார்வையிலிருந்து மறைந்தார்.

அப்போது கிதியோன் அவர் ஆண்டவரின் தூதர் என அறிந்து கொண்டார். கிதியோன், ஜயோ! இவர் என் தலைவராகிய ஆண்டவர்! ஆண்டவரின் தூதரை நேருக்கு நேராக நான் பார்த்துவிட்டேனே! என்றார்.

ஆண்டவர் அவரிடம், உனக்கு நலமே ஆகக! அஞ்சாதே! நீ சாகமாட்டாய் என்றார்.

கிதியோன் அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி எழுப்பினார். அதை நலம் நல்கும் ஆண்டவர் என அழைத்தார். அது இந்நாள் வரை அபியேசர் குடும்பத்தவருக்குச் சொந்தமான ஒபிராவில் உள்ளது.

அவ்விரவில் ஆண்டவர் அவரிடம், உன் தந்தைக்குச் சொந்தமான ஓர் இளங்காளையையும் ஏழு வயதுள்ள மற்றொரு காளைளையும் தேர்ந்தெடுத்துக் கொள். உன் தந்தைக்குச் சொந்தமான பாகாலின் பீடத்தை இடித்து ஏறி: அதை அடுத்துள்ள அசேராக் கம்பத்தை வெட்டி வீழ்த்து!

உன் கடவுளாகிய ஆண்டவருக்கு இக்கோட்டையின் உச்சியில் முறையாக ஒரு பலிபீடம் கட்டு. இரண்டாவது காளையைக் கொண்டுவந்து நீ வெட்டிய அசேராக் கம்பத்தை விறகாக்கி எரி பலியாகச் செலுத்து என்றார்.

கிதியோன் தம் வேலையாள்களில் பத்துப்பேரைக் கூட்டிக் கொண்டு, தமக்கு ஆண்டவர் இட்ட கட்டளையை நிறைவேற்றினார். அவர் தம் தந்தை வீட்டாருக்கும் நகர மக்களுக்கும் அஞ்சி அதைப் பகலில் செய்யாமல் இரவில் செய்து முடித்தார்.

நகர மக்கள் காலையில் துயிலெழுந்தனர். இதோ! பாகாலின் பலிபீடம் இடித்தெறியப்பட்டிருந்தது. அதை அடுத்திருந்த அசேராக் கம்பம் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தது. அங்கே எழுப்பப்பட்ட பலி பீடத்தின்மீது இரண்டாவது காளை எரி பலியாக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு வரும் தமக்கு அடுத்தவரிடம், இதைச் செய்தவர் யார்? என்று வினவினர்.

நகர மக்கள் யோவாசிடம், உன் மகன் கிதியோனை வெளியே கொண்டுவா. அவன் சாக வேண்டும். ஏனெனில் அவன் பாகாலின் பலி பீடத்தைத் தகர்த்தெறிந்தான். அதை அடுத்திருந்த அசேராக் கம்பத்தை வெட்டி வீழ்த்தினான் என்றனர்.

யோவாசு தம்மை எதிர்த்து வந்த அனைவரிடமும், நீங்கள் பாகாலுக்காகப் போராடுகிறீர்களா? அவனைக் காப்பாற்றப் போகிறீர்களா? பாகாலுக்காகப் போராடுபவன் காலைக்குள் கொல்லப்படுவான். பாகால் கடவுளாக இருந்தால், தன் பலி பீடத்தைத் தகர்த்தவனோடு, அவனே போராடிக் கொள்ளட்டும் என்றார்.

தன் பலிபீடத்தைத் தகர்த்தெறிந்த இந்த மனிதனோடு பாகாலே போராடிக்கொள்ளட்டும் என்று கூறி, அவர்கள் கிதியோனுக்கு எருபாகால் என்று அந்நாளில் பெயரிட்டனர்.

எல்லா மிதியானியரும், அமலேக்கியரும் கிழக்கில் வாழும் மக்களும் ஒன்றுகூடி, யோர்தானைக் கடந்து இஸ்ரயேல் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கினர்.

ஆண்டவரின் ஆவி கிதியோனை ஆட்கொண்டது. அவர் எக்காளம் ஊதி, அபியேசர் குடம்பத்தவரைத் தம்மைப் பின்பற்றி வருமாறு அழைத்தார்.

மனாசே குலம் முழுவதற்கும் அவர் தூதரை அனுப்பினார். அவர்களும் அவர் பின்வர அழைக்கப்பட்டனர். ஆசேர், செபுலோன், நப்தலி குலங்களுக்கும் தூதரை அனுப்பினர். அவர்களும் அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.

கிதியோன் கடவுளிடம், நீர் கூறியபடி இஸ்ரயேலை என்மூலம் விடுவிக்க விரும்பினால்,

இதோ! நான் ஆட்டுக் கம்பளியைப் போர் அடிக்கும் களத்தில் வைக்கிறேன். கம்பளிமேல் மட்டும் பனி இறங்கி இருந்து, தரைமுழுவதும் காய்ந்திருந்ததேயானால், நீர் கூறியபடி என்மூலம் இஸ்ரயேலை நீர் விடுவிப்பீர் என அறிந்து கொள்வேன் என்றார்.

அவ்வாறே நடந்தது. மறுநாள் காலை அவர் எழுந்து கம்பளியைப் பிழிந்தார். அவர் கம்பளியை முறக்கிப் பிழிய, பனி நீர் ஒரு கிண்ணம் முழுவதையும் நிரப்பியது.

கிதியோன் கடவுளிடத்தில், எனக்கு எதிராக நீர் சினம் கொள்ளாதீர். மீண்டும் ஒரு முறை நான் பேசுகிறேன். இன்னும் ஒருமுறை மட்டும் நான் கம்பளியால் சோதித்துப் பார்க்கிறேன். கம்பளி மட்டும் உலர்ந்திருக்க வேண்டு . தரைமீதெங்கும் பனி இறங்கி இருக்க வேண்டும் என்றார்.

அவ்விரவில் ஆண்டவர் அவ்வாறே செய்தார். கம்பளி மட்டும் உலர்ந்திருக்க, தரை மீதெங்கும் பனி இறங்கி இருந்தது.

அதிகாரம் 7.

எருபாகால் என்ற கிதியோனும் அவருடன் இருந்த மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து அரோது நீரூற்றருகே பாளையம் இறங்கினர். மிதியானியர் பாளையம் இவரது பாளையத்திற்கு வடக்கே மோரே மலை அருகே பள்ளத்தாக்கில் இறங்கி இருந்தது.

ஆண்டவா கிதியோனை நோக்கி, உன்னுடன் இருக்கும் மக்கள் ஏராளமாக இருப்பதால், மிதியானியரை அவர்கள் கையில் ஒப்படைக்கமாட்டேன். இல்லையெனில், எம் கையே எம்மைக் காத்தது என்று கூறி, இஸ்ரயேல் மக்கள் எனக்கெதிராகத் தற்பெருமை கொள்வர்.

இப்பொழுது மக்கள் கேட்குமாறு நீ கூறவேண்டியது: போருக்கு அஞ்சி நடுங்குகின்றவன் போய்விடட்டும். கிலயாது மலையை விட்டகலட்டும் என்றார். மக்களுடன் இருபத்திரண்டாயிரம் பேர் திரும்பிச் சென்றனர். பத்தாயிரம் பேர் எஞ்சி இருந்தனர்

ஆண்டவர் கிதியோனிடம், மக்கள் இன்னும் ஏராளமாக உள்ளனர். அவர்களை நீர்நிலைக்கு அழைத்துவா. அங்கே உனக்காக அவர்களைத் தேர்ந்தெடுப்பேன். இவன் உனடனுடன் செல்வான் என்று யாரைக் குறித்து உன்னிடம் குறிப்பிடுகிறேனோ அவன் உன்னுடன் செல்வான்: இவன் உன்னுடன் செல்லமாட்டான் என்று யாரைக் குறித்துக் குறிப்பிடுகிறேனோ, அவன் உன்னுடன் செல்லமாட்டான் என்றார்.

அவர் மக்களை நீர்நிலைக்கு அழைத்துச் சென்றார். ஆண்டவர் கிதியோனிடம், நாய் போன்று நாக்கினால் நீரை நக்கிக் குடிப்பவர்களை எல்லாம் தனியாக நிறுத்து: முழங்காலில் மண்டியிட்டு நீரைக் குடிப்பவர்களை எல்லாம் தனியாக நிறுத்து என்றார்.

நாக்கினால் நக்கிக் குடித்தவர்களின் எண்ணிக்கை முந்நூறு. மற்ற மக்கள் அனைவரும் நீர் அருந்த முழங்காலில் மண்டியிட்டனர்.

ஆண்டவர் கிதியோனிடம், நக்கிக் குடித்த முந்நூறு பேர் மூலம் நான் உங்களை விடுவிப்பேன். நான் மிதியானியரை உன் கையில் ஒப்படைப்பேன்.

அந்த முந்நூறு பேர் தங்கள் கைகளில் உணவுப் பொருள்களையும் தங்கள் எக்காளங்களையும் எடுத்துக் கொண்டனர். அவர் மற்ற எல்லா இஸ்ரயேலரையும் அவர்கள் கூடாரத்திற்கு அனுப்பிவிட்டு அந்த முந்நூறு பேரைத் தம்முடன் நிறுத்திக்கொண்டார். மிதியானியரின் பாளையம் அவர் இருந்த இடத்திற்குக் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது.

அவ்விரவில் ஆண்டவர் அவரிடம், எழுந்து பாளையத்திற்குள் இறங்கிச் செல். நான் அதை உன்கையில் ஒப்படைத்துவிட்டேன்.

ஆயினும், நீ போக அஞ்சினால், முதலில் பூரா என்ற உன் வேலையாளுடன் பாளையத்திற்குச் செல்.

அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை நீ உற்றுக்கேள். அதன்பின், உன் கைகள் வலுப்பெற, நீ பாளையத்திற்கு எதிராகச் செல்வாய் என்றார். அவர் பூரா என்ற தம் வேலையாளுடன் பாளையத்தில் இருந்த போர்வீரர்களின் எல்லைக் காவலுக்குச் சென்றார்.

மிதியானியரும் அமலேக்கியரும் கிழக்கில் வாழ்ந்த மக்கள் அனைவரும் வெட்டுக்கிளி போன்று ஏராளமாகப் பள்ளத்தாக்கில் தங்கியிருந்தனர். கடற்கரையில் உள்ள ஏராளமான மணலைப் போன்று அவர்கள் ஒட்டகங்களுக்கு எண்ணிக்கை இல்லை.

கிதியோன் வந்து சேர்ந்தபொழுது, ஒருவன் தன் தோழனிடம் தன் கனவுபற்றிக் கூறிக் கொண்டிருந்தான். அவன் கூறியது: நான் கனவு ஒன்று கண்டேன். வட்டமான ஒரு வாற்கோதுமை அப்பம் மிதியானியரின் பாளையத்திற்குச் சுழன்று வந்தது. அது கூடாரத்திற்கு வந்து அதன்மேல் மோதிக் கீழே விழுந்தது. அது கூடாரத்தைத் தலை கீழாகப் புரட்டியது. கூடாரம் கீழே விழுந்தது என்றான்.

அவன் தோழன் மறுமொழியாக, இஸ்ரயேலனும் யோவாசின் மகனுமாகிய கிதியோனின் வாளைத் தவிர இது வேறொன்றுமில்லை. கடவுள் மிதியானியரையும் பாளையம் முழுவதையும் அவர் கையில் ஒப்படைத்துவிட்டார் என்று கூறினான்.

கனவையும் அதன் பொருளையும் அவன் கூறக் கேட்டதும் கிதியோன் தலை வணங்கினார். பின்னர் இஸ்ரயேலின் பாளையத்திற்குத் திரும்பினார். எழுங்கள், ஏனெனில் மிதியானியரின் பாளையத்தை ஆண்டவர் உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார் என்றார்.

அவர் முந்நூறு பேரையும் மூன்று பிரிவாகப் பிரித்தார். அவர்கள் அனைவரின் கையிலும் எக்காளங்களையும், காலிப் பானைகளையும், அந்தப் பானைகளுக்குள் வைக்க நெருப்புப் பந்தங்களையும் கொடுத்தார்.

அவர்களிடம் அவர், என்னைப் பார்த்து நான் செய்வது போலச் செய்யுங்கள். நான் பாளையத்தின் எல்லைக்காவல் வரை செல்வேன். நான் செய்வதுபோல நீங்களும் செய்யுங்கள்.

நான் எக்காளம் ஊதுவேன். நானும் என்னோடு உள்ளவர்களும் ஊதும்பொழுது நீங்கள் அனைவரும் பாளையத்தைச் சுற்றிலும் ஊதிக்கொண்டு, ஆண்டவருக்காக! கிதியோனுக்காக! என்று கூறுங்கள் என்றார்.

நள்ளிரவுக் காவல் தொடங்கும் நேரத்தில் காவலர் மாற்றி நிறுத்தப்பட்டனர். அப்போது கிதியோனும் அவருடன் இருந்த நூறுபேரும் எல்லைக் காவலை அடைந்தனர். கிதியோனும் அவருடன் இருந்தவர்களும் எக்காளம் ஊதினர். தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தனர்.

மூன்று பிரிவினரும் எக்காளம் ஊதினர். பானைகளை உடைத்தனர்: தங்கள் இடக்கையில் நெருப்புப் பந்தங்களையும், வலக்கையில் ஊதுவதற்கு எக்காளங்களையும் ஏந்தியிருந்தனர். அவர்கள், ஆண்டவருக்காக! கிதியோனுக்காக! ஒரு வாள்! என்று முழங்கினர்.

பாளையத்தைச் சுற்றி ஒவ்வொருவனும் தன் இடத்தில் நின்றான். பாளையத்தில் இருந்த அனைவரும் ஓட்டமெடுத்தனர்: ஓலமிட்டுக் கொண்டு தப்பி ஓடினர்.

அப்பொழுது முந்நூறு பேரும் எக்காளம் ஊதினர். ஆண்டவர் பாளையம் முழுவதிலும் ஒவ்வொருவனும் மற்றவன்மீது வாள்வீசச் செய்தார். பாளையத்தினர் செரேராவை நோக்கி பெத்சிற்றாவரையிலும் தபாத்தாவில் உள்ள ஆபல்மெகோலா எல்லைவரையிலும் தப்பி ஓடினர்.

நப்தலியிலிருந்தும் ஆசேரிலிருந்தும் மனாசே முழுவதிலிருந்தும் இஸ்ரயேல் வீரர் ஒன்று திரட்டப்பட்டனர். அவர்கள் மிதியானியரைத் துரத்திச் சென்றனர்.

கிதியோன் எப்ராயிம் மலையில் உள்ள அனைவருக்கும் தூதரை அனுப்பி, மிதியானியரை எதிர்க்கக் கீழே இறங்கி வாருங்கள். பெத்பராவரை உள்ள நீரூற்றுகளையும் யோர்தானையும் கைப்பற்றுங்கள் என்றார்.

எப்ராயிம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் பெத்பராவரை உள்ள நீரூற்றுகளையும் யோர்தானையும் கைப்பற்றினர். அவர்கள் ஓரேபு, செயேபு என்ற இரு மிதியானியத் தலைவர்களைச் சிறைப்பிடித்தனர். ஓரேபை ஓரெபாவில் உள்ள பாறை மேல் கொன்றனர். செயேபைச் செயேபில் உள்ள திராட்சை ஆலையில் கொன்றனர். அவர்கள் மிதியானியரை மிதியான்வரை துரத்திச்சென்றனர். ஓரெபின் தலையையும் செயேபின் தலையையும் யோர்தானுக்கு அப்பாலிருந்து கிதியோனிடம் கொண்டு வந்தனர்.

அதிகாரம் 8.

எப்ராயிம் மக்கள் கிதியோனிடம், என்ன, எங்களுக்கு இப்படிச் செய்து விட்டீரே? நீர் மிதியானியருக்கு எதிராகப் போரிடச் சென்றபொழுது எங்களைக் கூப்பிடவில்லையே! என்று சொல்லி அவர்கள் அவரோடு தீவிரமாக வாக்குவாதம் செய்தனர்.

அவர் அவர்களிடம், நான் இப்பொழுது உங்களைவிட என்ன சாதித்து விட்டேன்? எப்ராயிமின் இரண்டாம் திராட்சைப்பழப் பறிப்பு அபியேசரின் முதல் பறிப்பைவிடச் சிறந்ததல்லவா?

ஆண்டவர் மிதியானியரின் சிற்றரசர்கள் ஒரேபையும் செயேபையும் உங்கள் கையில் ஒப்படைத்தார். நான் உங்களைவிட என்ன சாதித்துவிட முடிந்தது? என்று சொன்னதும், அவர்மீது அவர்கள் கொண்ட சினம் தணிந்தது.

கிதியோன் யோர்தானுக்கு வந்து அதைக் கடந்தார். அவரும் அவரோடு இருந்த முந்நூறு பேரும் களைப்புற்றிருந்தாலும் துரத்திச் சென்றனர்.

அவர் சுக்கோத்து மக்களிடம், என் பின்னே வரும் இவர்களுக்கு உணவு கொடுங்கள். ஏனெனில் இவர்கள் களைத்திருக்கின்றனர். நான் மிதியானிய அரசர்களான செபாகு. சல்முன்னா என்பவர்களைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு செல்கிறேன் என்றார்.

செபாகையும் சல்முன்னாவையம் நீ பிடித்துவிட்டாயா? உமது படைக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்கவேண்டும்? என்று சுக்கோத்தின் மக்கள் கேட்டனர்.

கிதியோன், அவ்வாறே ஆண்டவர் செபாகையும் சல்முன்னாவையும் என்கையில் ஒப்படைக்கும்பொழுது நான் உங்கள் உடலைப் பாலைநில முட்களாலும் நெருஞ்சிகளாலும் கிழப்பேன் என்றார்.

அங்கிருந்து பெனுவேலுக்குச் சென்று இதேபோல அவர்களிடமும் கேட்டார். சுக்கோத்து மக்கள் பதிலளித்தது போலவே, பெனுவேல் மக்களும் அவருக்குப் பதிலளித்தனர்.

பெனுவேல் மக்களிடம், நான் வெற்றியுடன் திரும்பி வரும்பொழுது இந்தக் கோபுரத்தை இடித்துத் தள்ளுவேன் என்றார்.

செபாகும் சல்முன்னாவும் கற்கோரில் இருந்தனர். பதினைந்தாயிரம் பேர் கொண்ட படையும் அவர்களோடு இருந்தது. அவர்கள் அனைவரும் கிழக்கில் வாழும் மக்களின் படை அனைத்திலிருந்தும் எஞ்சி இருந்தவர்கள். ஏற்கெனவே ஓர் இலட்சத்து இருபதாயிரம் போர் வீரர் மடிந்திருந்தனர்.

கிதியோன் கூடாரங்களில் வாழ்வோரின் பாதைவழியாக நோபாவுக்கும் யோக்பகாவுக்கும் கிழக்காகச் சென்று, எதிர்பாராத நேரத்தில் படையைத் தாக்கினார்.

செபாகும் சல்முன்னாவும் தப்பி ஓடினர். அவர் அவர்கள் பின்னே துரத்திச் சென்று மிதியானின் இரண்டு அரசர்களான செபாகையும் சல்முன்னாவையும் பிடித்தார். படைமுழுவதையும் சிதறடித்தார்.

யோவாசின் மகன் கிதியோன் போரிலிருந்து எரேசு மேட்டின் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அவர் சுக்கோத்தைச் சார்ந்த ஓர் இளைஞனைப் பிடித்து அவனை விசாரித்தனர். அவன் அவருக்குச் சுக்கோத்தின் தலைவர்களும் பெரியோர்களுமாக எழுபத்தேழுபேரின் பெயர்களை எழுதிக்கொடுத்தான்.

அவர் சுக்கோத்து மக்களிடம் வந்து, இப்பொழுதே செபாகையும் சல்முன்னாவையும் பிடித்துவிட்டாய்? களைப்புற்ற உன் வீரர்களுக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்க வேண்டும் என்று கூறி என்னைப் பழித்தீர்களே! அந்தச் செபாகையும் சல்முன்னாவையும் இதோ பாருங்கள் என்று கூறினார்.

பாலைநில முட்களையும் நெருஞ்சிகளையும் கொண்டு நகரின் பெரியோர்களை வதைத்துச் சுக்கோத்து மக்களுக்குப் பாடம் புகட்டினார்.

பெனுவேலின் கோபுரத்தை இடித்து நகரின் மக்களைக் கொன்றார்.

செபாகிடமும் சல்முன்னாவிடமும், நீங்கள் போரில் கொன்ற மனிதர்கள் எத்தகையோர்? என்று கேட்டார். அவர்கள், உம்மைப் போல் அவர்கள் ஒவ்வொருவரும் அரச மைந்தரைப் போல் தோற்றமளித்தனர் என்றனர்.

அவர், அவர்கள் என் சகோதரர்கள், என் தாயின் மக்கள்: நீங்கள் அவர்களை உயிரோடு விட்டிருந்தால் நான் உங்களைக் கொல்லமாட்டேன். இது வாழும் ஆண்டவர் மீது ஆணை! என்றார்.

அவர் தம் தலைமகன் எத்தேரிடம், எழு! அவர்களைக் கொல் என்றார். இளைஞன் தன் வாளை உருவவில்லை. ஏனெனில் அவன் இன்னும் சிறுவனாக இருந்ததால் அஞ்சினான்.

செபாகும் சல்முன்னாவும், நீயே எழுந்து எங்களைத் தாக்கு. ஆளைப்போன்றே அவனது ஆற்றல் என்றனர். கிதியோன் எழுந்து செபாகையும் சல்முன்னாவையும் கொன்றார். அவர்களது ஒட்டகங்களின் கழுத்தில் இருந்த இளம்பிறை அணிகளை எடுத்துக் கொண்டார்.

இஸ்ரயேலர் கிதியோனிடம், எங்களை ஆள்வீர்! நீரூம் உம் மகனும், உம் மகனின் மகனும் ஆள்வீர்களாக! ஏனெனில் நீர் மிதியானியரின் கையிலிருந்து எங்களை விடுவித்தீர்! என்றனர்.

கிதியோன் அவர்களிடம், நான் உங்களை ஆளமாட்டேன். என் மகனும் உங்களை ஆளமாட்டான். ஆண்டவரே உங்களை ஆள்வார் என்றார்.

அவர் அவர்களிடம், நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் ஒவ்வொரு வரும் கொள்ளையடித்தவற்றிலிருந்து காதணியை எனக்குக் கொடுங்கள் என்றார். ஏனெனில் இஸ்மயேலரான மிதியானியர் தங்கக் காதணிகள் அணிவது வழக்கம்.

இஸ்ரயேலர், நாங்கள் உறுதியாகச் செய்வோம் என்றனர். அவர்கள் ஒரு துணியை விரித்தனர். அதன்மீது ஒவ்வொருவனும் தான் கொள்ளையடித்தவற்றிலிருந்து காதணியைப் போட்டான்.

அவர் கேட்ட தங்கக் காதணிகளின் எடை ஆயிரத்து எழுநூறு செக்கேல் ஆகும். அத்தோடு இளம்பிறை அணிகள், தொங்கணிகள், மிதியான் அரசர்களின் பட்டாடைகள், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்தின்மீது இருந்த அணிகலன்கள் ஆகியவற்றையும் கொடுத்தனர்.

கிதியோன் அவற்றைக் கொண்டு ஓர் ஏப்போதைச் செய்து தம் நகராகிய ஒபிராவில் அதை நிறுவினார். இஸ்ரயேலர் அனைவரும் அங்கே வேசித்தனம் செய்தனர். கிதியோனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அது ஒரு கண்ணியாக இருந்தது.

மிதியானியர் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் தாழ்த்தப்பட்டனர். அவர்களால் தலைதூக்க முடியவில்லை. கிதியோனின் காலத்தில் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவியது.

யோவாசின் மகன் எருபாகால் திரும்பிச்சென்று தம் வீட்டில் வாழ்ந்தார்.

கிதியோனுக்கு அவருடைய சொந்த மக்கள் எழுபது பேர். ஏனெனில் அவருக்குப் பல மனைவியர் இருந்தனர்.

செக்கேமிலிருந்த அவருடைய வைப்பாட்டி அவருக்கு ஓர் ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். அவர் அவனுக்கு அபிமெலக்கு என்று பெயரிட்டார்.

யோவாசின் மகன் கிதியோன் மிகுந்த வயதாகி இறந்தார். அவரை அபியேசருக்குரிய ஒபிராவில் அவர் தந்தை யோவாசின் கல்லறையில் அடக்கம் செய்தனர்.

கிதியோன் இறந்த பின் இஸ்ரயேல் மக்கள் மீண்டும் பாகாலிடம் திரும்பி வேசித்தனம் செய்தனர். பாகால் பெரித்ததைத் தங்கள் தெய்வமாக வைத்துக்கொண்டனர்.

தங்களைச் சூழ்ந்து வாழ்ந்த எதிரிகளின் கையிலிருந்து விடுவித்த தங்கள் கடவுளாகிய ஆண்டவரை இஸ்ரயேல் மக்கள் நினைவிற் கொள்ளவில்லை.

கிதியோன் என்ற எருபாகால் இஸ்ரயேலுக்குச் செய்த அனைத்து நன்மைகளுக்கும் தக்க நன்றியை அவர்கள் அவரது வீட்டுக்குக் காட்டவில்லை.

அதிகாரம் 9.

எருபாகாலின் மகன் அபிமெலக்கு செக்கேமிலிருந்த தன் தாயின் சகோதரர்களிடம் சென்றான். அவர்களிடமும் தன் தந்தை, தாய் குடும்பத்தைச் சார்ந்த தன் இனத்தார் அனைவரிடமும் கூறியது:

செக்கேமிலுள்ள எல்லாக் குடிமக்களும் கேட்குமாறு கூறுங்கள்: எது உங்களுக்கு நல்லது? எருபாகாலின் எழுபது புதல்வர் உங்களை ஆள்வதா? அல்லது ஒருவன் உங்களை ஆள்வதா? நான் உங்கள் எலும்பும் சதையுமாக இருக்கின்றேன் என்பதை நினைவிற்கொள்ளுங்கள் .

அவன் தாயின் சகோதரர் அவனுக்காக, செக்கேமின் எல்லா மக்களும் கேட்குமாறு, இந்த வார்த்தைகள் அனைத்தையும் கூறினர். அவர்களது இதயம் அபிமெலக்கின் பக்கம் திரும்பியது. ஏனெனில் அவர்கள் அவன் நம் சகோதரன் என்றனர்.

பாகால் பெரித்தின் கோவிலிருந்து அவனுக்கு எழுபது வெள்ளிக் காசுகள் கொடுத்தனர். அபிமெலக்கு அவற்றைக் கொண்டு வீணரும் முரடருமான ஆள்களைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டான். அவர்களும் அவனோடு சேர்ந்து கொண்டனர்.

ஒபிராவிலிருந்த தன்தந்தை வீட்டுக்கு வந்து எருபாகாலின் மக்களும் தன் சகோதரர்களுமாகிய எழுபது பேரை ஒரே கல் மீது வைத்துக் கொன்றான். எருபாகாலின் கடைசி மகன் யோத்தாம் மட்டும் ஒளிந்து கொண்டதால் தப்பித்துக்கொண்டான்.

செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்கள் அனைவரும் செக்கேமில் சிலைத்தூண் கருவாலி மரத்தடியில் அபிமெலக்கை அரசனாக ஏற்படுத்தினர்.

இது யோத்தாமுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கெரிசிம் மலைக்கு ஏறிச் சென்று அதன் உச்சியில் நின்று கொண்டு உரத்த குரலில் கூப்பிட்டுக் கூறியது: செக்கேமின் மக்களே, எனக்குச் செவிசாயுங்கள்: கடவுள் உங்களுக்குச் செவி கொடுப்பார்.

மரங்கள், தங்களுக்கு ஓர் அரசனைத் திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன. அவை ஒலிவ மரத்திடம், எங்களை அரசாளும் என்று கூறின.

ஒலிவ மரம் அவற்றிடம், எனது எண்ணெயால் தெய்வங்களும் மானிடரும் மதிப்புப் பெறுகின்றனர். அப்படியிருக்க அதை உற்பத்தி செய்வதை நான் விட்டுக் கொடுத்து மரங்களுக்கு மேல் அசைந்தாட வருவேனா? என்றது.

மரங்கள் அத்தி மரத்திடம், வாரும், எங்களை அரசாளும் என்றன.

அத்தி மரம் அவற்றிடம், எனது இனிமையையும் நல்ல பழத்தையும் விட்டுவிட்டு, மரங்கள் மீது அசைந்தாட வருவேனா? என்றது.

மரங்கள் திராட்சைக் கொடியிடம், வாரும், எங்களை அரசாளும் என்றன.

திராட்சைக் கொடி அவற்றிடம், தெய்வங்களையும் மானிடரையும் மகிழ்விக்கும் எனது திராட்சை இரசத்தை விட்டுவிட்டு மரங்கள்மேல் அசைந்தாட வருவேனா? என்றது.

மரங்கள் எல்லாம் முட்புதரிடம், வாரும், எங்களை அரசாளும் என்றன.

முட்புதர் மரங்களிடம், உண்மையில், உங்கள் மீது ஆட்சி செய்ய நீங்கள் என்னைத் திருப்பொழிவு செய்தால், வாருங்கள்: என் நிழலில் அடைக்கலம் புகங்கள்: இல்லையேல், முட்புதரான என்னிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து லெபனோனின் கேதுரு மரங்களை அழித்துவிடும் என்றது.

இப்பொழுது நீங்கள் அபிமெலக்கை அரசனாக்கியிருக்கிறீர்களே! உண்மையுடனும் நேர்மையுடனுமா இதைச் செய்தீர்கள்? நீங்கள் எருபாகாலுக்கும் அவர் குடும்பத்திற்கும் நல்லதா செய்திருக்கிறீர்கள்? அவரது செயலுக்கேற்பவா நீங்கள் அவருக்குக் கைம்மாறு செய்திருக்கிறீர்கள்?

என் தந்தை உங்களுக்காகப் போரிட்டார்: தம் உயிரைப் பணயம் வைத்தார்: உங்களை மிதியானியர் கையிலிருந்து விடுவித்தார்.

இன்று நீங்கள் என் தந்தையின் குடும்பத்திற்கு எதிராக எழுந்து, அவருடைய புதல்வர் எழுபது பேரை ஒரே கல்லின் மேல் வைத்துக் கொன்றீர்கள். அவருடைய வேலைக்காரியின் மகன் அபிமெலக்கைச் செக்கேமின் குடிமக்களுக்கு அரசனாக்கினீர்கள்.

இதை உண்மையுடனும் நேர்மையுடனும் எருபாகாலுக்கும் அவர் குடும்பத்திற்கும் இந்நாளில் செய்திருந்தால், நீங்கள் அபிமெலக்கைக் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். அவனும், உங்களைக் குறித்து மகிழ்ச்சி அடைவான்.

இல்லையேல், அபிமெலக்கிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து, செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்களை எரித்தழிக்கட்டும்! செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்களிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து அபிமெலக்கை எரித்தழிக்கட்டும்! என்றார்.

பின்னர் யோத்தாம் தம் சகோதரன் அபிமெலக்கிற்கு அஞ்சிப் பெயேருக்குத் தப்பி ஓடிச் சென்று, அங்கே வாழ்ந்து வந்தார்.

அபிமெலக்கு இஸ்ரயேல் மக்கள் மீது மூன்றாண்டுகள் ஆட்சி செய்தான்.

கடவுள் அபிமெலக்கிற்கும் செக்கேம் குடிமக்களுக்கும் இடையே கடும் பகையை மூட்ட, அவர்கள் அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தனர்.

எருபாகாலின் எழுபது புதல்வர்களது இரத்தத்தை வன்முறையில் சிந்திய அபிமெலக்கின் மீதும் அவன் அவர்களைக் கொல்லத் துணைநின்ற செக்கேமின் குடிமக்கள் மீதும் அத்தீமை திரும்பி விழுமாறு இவ்வாறு நடந்தது.

செக்கேமின் குடிமக்கள் அவனுக்கு எதிராக மலைகளின் உச்சிகளில் ஆள்களைப் பதுங்கி இருக்க வைத்து அவ்வழியே கடந்து செல்வோரை எல்லாம் கொள்ளையடிக்கச் செய்தனர். இது அபிமெலக்கிற்குத் தெரிவிக்கப்பட்டது.

தன் சகோதரர்களுடன் செக்கேமுக்கு வந்திருந்த எபேதின் மகன் ககால், செக்கேம் குடிமக்களின் நம்பிக்கைக்குரியவனானான்.

அவர்கள் அனைவரும் தம் விளைநிலங்களுக்குச் சென்று திராட்சையைப் பறித்து, பிழிந்து விழாக் கொண்டாடினர். அவர்கள் தம் தெய்வங்களின் கோவிலுக்குச் சென்று உண்டு குடித்து அபிமெலக்கைப் பழித்துப் பேசினர்.

எபேதின் மகன் ககால், அபிமெலக்கு என்பவன் யார்? செக்கேமின் மக்கள் யார்? நாம் ஏன் அவனுக்கு அடி பணிய வேண்டும்? எருபாகாலின் மகனும் செபூல் என்ற அவனுடைய அதிகாரியும் செக்கேமின் தந்தையாகிய ஆமோரின் ஆள்களுக்கு அடிபணிந்திருந்தார்களே? அப்படியிருக்க, நாம் ஏன் அவனுக்கு அடிபணிய வேண்டும்?

இம்மக்களை யார் என் கையில் ஒப்படைப்பர்? அப்பொழுது நான் அபிமெலக்கை ஒழித்துவிடுவேன். நான் அபிமெலக்கிடம் உன் படையைத் திரட்டிக் கொண்டு புறப்பட்டு வா என்று கூறுவென் என்றான்.

நகரின் அதிகாரி செபூல், எபேதின் மகன் ககாலின் வார்த்தைகளைக் கேட்டுச் சினமுற்றான்.

அவன் அபிமெலக்கிற்கு மறைவாகத் தூதரை அனுப்பித் தெரிவித்தது: இதோ! எபேதின் மகன் ககாலும் அவன் சகோதரர்களும் செக்கேமுக்கு, வந்துள்ளனர். அவர்கள் உனக்கெதிராக நகரைத் தூண்டிவிடுகின்றனர்.

இப்பொழுது இரவோடு இரவாக எழுந்து நீயும் உன்னோடு உள்ள மக்களும் விளைநிலங்களில் பதுங்கியிருங்கள்.

காலையில் கதிரவன் உதிக்கும் பொழுது நீ புறப்பட்டு நகருக்குள் பாய்ந்து செல்: அவனும் அவனோடு இருக்கும் மக்களும் உன்னை நோக்கி வெளியே வருவார்கள். உனக்குத் தோன்றுவது போல் அவனுக்குச் செய் .

அபிமெலக்கும் அவனோடு இருந்த மக்களும் இரவில் எழுந்து நான்கு பிரிவுகளாகச் செக்கேமுக்கு அருகில் பதுங்கியிருந்தனர்.

எபேதின் மகன் ககால் வெளியே சென்று நகரின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தான். அபிமெலக்கும் அவனுடன் இருந்த மக்களும் பதுங்கியிருந்த இடத்திலிருந்து எழுந்தனர்.

ககால் அவர்களைப் பார்த்துச் செபூலிடம், இதோ! மக்கள் மலைகளின் உச்சிகளிலிருந்து இறங்குகின்றனர் என்றான். அதற்குச் செபூல், மலைகளின் நிழலை நீ மனிதர்களாகக் காண்கிறாய் என்றான்.

ககால் மீண்டும் இவ்வாறு கூறினான்: இதோ! மக்கள் நாட்டின் மிக உயர்ந்த பகுதியிலிருந்து வருகின்றார்கள். ஒரு பிரிவு, குறி சொல்வோர் கருவாலி மரப்பாதையிலிருந்து வருகின்றது .

செபூல் அவனிடம், அபிமெலக்கு என்பவன் யார்? நாம் ஏன் அவனுக்கு அடிபணிய வேண்டும் என்று கூறிய உன்வாய் எங்கே? இம்மக்களையன்றோ நீ இழித்துரைத்தாய்? இப்பொழுது புறப்பட்டுச் சென்று அவனோடு போரிடு என்றான்.

ககால் செக்கேம் மக்களின் முன்னே சென்று அபிமெலக்குடன் போரிட்டான்.

அபிமெலக்கு அவனைத் துரத்த, அவனிடமிருந்து தப்பி ஓடினான். நுழைவாயில் வரை பலர் காயமுற்று விழுந்தனர்.

அபிமெலக்கு அருமாவில் தங்கினான். ககாலையும் அவன் சகோதரர்களையும் செக்கோமில் வாழாதபடி செபூல் துரத்திவிட்டான்.

மறுநாள் வெளியே விளைநிலத்திற்கு மக்கள் செல்லவிருந்தது அபிமெலக்கிற்கு அறிவிக்கப்பட்டது.

அவன் தன் ஆள்களைக் கூட்டி, அவர்களை மூன்று பிரிவாகப் பிரித்து, விளைநிலங்களில் பதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். இதோ! மக்கள் நகரிலிருந்து வெளியே வந்தனர். அவன் அவர்கள் மீது பாய்ந்து அவர்களைக் கொன்றான்.

அபிமெலக்கும் அவனோடு இருந்த பிரிவும் விரைந்து சென்று நகரின் நுழைவாயிலில் நின்று கொண்டனர். மற்ற இரண்டு பிரிவுகள் விளைநிலங்களில் இருந்த அனைவர் மீதும் பாய்ந்து அவர்களைக் கொன்றன.

அபிமெலக்கு அந்நாள் முழுதும் நகருக்கு எதிராகப் போரிட்டு, நகரைக் கைப்பற்றினான்: அதனுள் இருந்த மக்களைக் கொன்றான்: நகரைத் தரை மட்டமாக்கி அதில் உப்பை விதைத்தான்.

செக்கேமின் கோட்டை வாழ் மக்கள் அனைவரும் இதைக் கேள்வியுற்று, ஏல்பெரித்துக் கோவிலின் அரணுக்குள் அடைக்கலம் புகுந்தனர்.

செக்கேமின் கோட்டை வாழ் மக்கள் அனைவரும் அங்கே கூடியிருந்தது அபிமெலக்கிற்குத் தெரிவிக்கப்பட்டது.

அபிமெலக்கும் அவனுடன் இருந்த ஆள்கள் அனைவரும் சால்மோன் மலைக்கு ஏறிச்சென்றனர். அபிமெலக்கு கோடரியைத் தன் கையிலெடுத்து மரங்களின் கிளைகளை வெட்டித் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டான். அவன் தன்னோட இருந்தவர்களிடம், நான் செய்வதைக் கண்டீர்கள். விரைந்து அவ்வாறே செய்யுங்கள் என்றான் .

அவர்களுள் ஒவ்வொருவனும் கிளையை வெட்டினான். அவர்கள் அபிமெலக்கின் பின் சென்று, .மதிலோடு சேர்த்து அடுக்கி, அதற்குத் தீ வைத்தனர். செக்கேமின் கோட்டை வாழ் மக்கள் அனைவரும் ஆணம் பெண்ணுமாக ஆயிரம் பேர் இறந்தனர்.

அபிமெலக்கு தெபேசுக்குச் சென்று அந்நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.

நகரின் நடுவே உறுதியான மலைக்கோட்டை ஒன்று இருந்தது. ஆண்கள், பெண்கள் ஆகிய நகரக் குடி மக்கள் அனைவரும் மலைக் கோடடைக்குள் தப்பி ஓடி அதைப் பூட்டிக் கொண்டு அதன் உச்சிக்குச் சென்றனர்.

அபிமெலக்கு மலைக்கோட்டையைத் தாக்க வந்தான்: அதன் கதவுக்கு நெருப்பிட அதன் அருகே வந்தான்.

அப்பொழுது ஒரு பெண் ஓர் அரைக்கும் கல்லை அபிமெலக்கின் தலைமீது போட்டு அவன் மண்டையைப் பிளந்தாள்.

உடனே அவன் அவனுடைய படைக்கலம் தாங்கியிருந்த பணியாளனை அழைத்து அவனிடம், உன் வாளை உருவு: ஒலு பெண் அவனைக் கொன்றாள்! என்று என்னைப் பற்றிச் சொல் என்றான். அந்தப் பணியாளன் அவனை ஊடுருவக் குத்தவே அவனும் மடிந்தான்.

இஸ்ரயேல் மக்கள் அபிமெலக்கு மடிந்ததைக் கண்டனர். ஒவ்வொருவரும் தம் இடத்திற்குத் திரும்பினர்.

இவ்வாறு அபிமெலக்குக தன் எழுபது சகோதரர்களைக் கொன்று தன் தந்தைக்கு எதிராகச் செய்த தீச்செயலுக்கு உரிய தண்டனையை கடவுள் அவனுக்கு வழங்கினார்.

ஆண்டவர் செக்கேமின் மக்கள் செய்த எல்லாத் தீய செயலுக்குரிய தண்டனையையும் அவர்கள் தலைமீதே விழச்செய்தார். எருபாகாலின் மகன் யோத்தாமின் சாபம் அவர்கள்மீது விழுந்தது

அதிகாரம் 10.

அபிமெலக்கிற்குப் பின் இஸ்ரயேலை விடுவிக்கத் தோதுவின் புதல்வன் பூவாவின் மகனான தோலா எழுந்தார். அவர் இசக்கார் குலத்தைச் சார்ந்தவர். அவர் எப்ராயிம் மலையில் சாமீரில் வாழ்ந்து வந்தார்.

அவர் இஸ்ரயேல் மக்களுக்கு இருபத்து மூன்று ஆண்டுகள் நீதித் தலைவராக விளங்கினார். அவர் இறந்து சாமீரில் அடக்கம் செய்யப்பட்டார்.

அவருக்குப் பின் கிலாயத்தைச் சார்ந்த யாயிர் என்பவர் எழுந்தார். அவர் இஸ்ரயேல் மக்களுக்கு இருபத்திரண்டு ஆண்டுகள் நீதித் தலைவராக விளங்கினார்.

அவருக்கு முப்பது புதல்வர். அவர்கள் முப்பது கோவேறு கழுதைகள் மீது சவாரி செய்தனர். அவர்களுக்கு முப்பது நகர்கள் இருந்தன. அவற்றை அவ்வோத்து-யாயிர் என்று இந்நாள் வரை அழைக்கின்றனர். அது சிலயாது நிலப்பகுதியில் உள்ளது.

அவர் இறந்து காமோனில் அடக்கம் செய்யப்பட்டார்.

ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதை இஸ்ரயேல் மக்கள் மீண்டும் செய்யத் தொடங்கினர். பாகால்களுக்கும், அஸ்தரோத்துகளுக்கும், சீதோனின் தெய்வங்களுக்கும், மோவாப்பின் தெய்வங்களுக்கும், அம்மோனிய மக்களின் தெய்வங்களுக்கும், பெலிஸதியாவின் தெய்வங்களுக்கும் ஊழியம் செய்தனர். ஆண்டவரைக் கைவிட்டனர். அவருக்கு ஊழியம் புரியவில்லை.

இஸ்ரயேலுக்குக எதிராக ஆண்டவரின் சினம் மூண்டது. அவா அவர்களைப் பெலிஸ்தியரின் கையிலும் அமமோனியரின் கையிலும் ஒப்படைத்தார்.

அவர்கள் அந்த ஆண்டு இஸ்ரயேல் மக்களை ஒடுக்கித் துன்புறுத்தினர். யோர்தானுக்கு அப்பால் கிலாயத்தில் இருந்த அம்மோனியர் நிலத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைப் பதினெட்டு ஆண்டுகள் துன்புறுத்தினர்.

யூதாவுடனும், பென்யமினுடனும், எப்ராயிம் வீட்டுடனும் போரிட அம்மோனியர் யோர்தானைக் கடந்து வந்தனர். இஸ்ரயேலர் மிகவும் அல்லலுற்றனர்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம், உடக்கெதிராகப் பாவம் செய்தோம். ஏனெனில், நாங்கள் எங்கள் கடவுளாகிய உம்மைவிட்டு விலகிப் பாகாலுக்கு ஊழியம் புரிந்தோம் என்று கூறிக் கூக்குரலிட்டனர்.

ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம், எகிப்தியரிடமிருந்தும் எமோரியரிடமிருந்தும் அம்மோன் மக்களிடமிருந்தும் அம்மோன் மக்களிடமிருந்தும் பெலிஸ்தியரிடமிருந்தும் நான் உங்களை விடுவிக்கவில்லையா?

சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும் உங்களை நசுக்கிய பொழுது நீங்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டீர்கள். நான் உங்களை அவர்கள் கையிலிருந்து விடுவித்தேன்.

ஆனால் நீங்கள் என்னைவிட்டு விலகி வேற்றுத் தெய்வங்களை வணங்கினீர்கள். ஆகவே நான் உங்களை மீண்டும் விடுவிக்கமாட்டேன்.

நீங்கள் தேர்ந்தெடுத்த தெய்வங்களிடமே சென்று கூக்குரலிடுங்கள். அவர்கள் உங்கள் துன்ப வேளையில் உங்களை விடுவிக்கட்டும் என்றார்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் நாங்கள் பாவம் செய்தோம். உம் பார்வையில் நல்லதெனப் பட்டதை எங்களுக்குச் செய்யும். இன்று எங்களை விடுவித்தருளும், என்று வேண்டினர்.

அவர்கள் தங்களிடையே இருந்த வேற்றித் தெய்வங்களை அகற்றி ஆண்டவருக்கு ஊழியம் புரிந்தனர். எனவே, அவர் இஸ்ரயேல் மக்களின் துன்பம் குறித்து வருத்தமுற்றார்.

அம்மோனியர் ஒன்று திரண்டு கிலாயத்தில் பாளையம் இறங்கினர். இஸ்ரயேல் மக்கள் ஒன்று கூடி மிஸ்பாவில் பாளையம் இறங்கினர்.

மக்களும் கிலாயத்தின் தலைவர்களும் ஒவ்வொருவரும் தம் நண்பரிடம், அம்மோனியருக்கு எதிராக யார் போரிடத் தொடங்குகின்றானோ, அவனே கிலாயதுவாழ் மக்கள் அனைவருக்கும் தலைவனாக இருப்பான் என்றனர்.

அதிகாரம் 11.

கிலாயத்தைச் சார்ந்த இப்தா வலிமைமிக்க போ¡வீரர். அவா ஒரு விலைமாதின் மகன்: இப்தா கிலாயாதுக்குப் பிறந்தவர்.

கிலாயாதின் மனைவியும் அவருக்குப் புதல்வரைப் பெற்றெடுத்தாள். அம்மனைவியின் புதல்வர் பெரியவர்களானதும் இப்தாவைத் துரத்திவிட்டனர். அவாகள் அவரிடம் எங்கள் தந்தையின் வீட்டில் உனக்குப் பங்கு இல்லை. ஏனெனில் நீ வேறொரு பெண்ணின் மகன் என்று கூறினர்.

இப்தா தம் சகோதரர்களிடமிருந்து தப்பி ஓடி, தோபு நாட்டில் வாழ்ந்து வந்தார்.

வீணர்கள் இப்தாவுடன் சேர்ந்துகொண்டு அவருடன் திரிந்தனர்.

அம்மோனியர் இஸ்ரயேலருடன் போர் தொடுத்த பொழுது, கிலாயதின் பெரியோர்கள் இப்தாவைத் தோபிலிருந்து கூட்டி வரச் சென்றனர்.

அவர்கள் இப்தாவிடம், நீர் வந்து எங்களுக்குத் தலைவராக இரும். அம்மோனியருக்கு எதிராக நாம் போரிடுவோம் எனறனர்.

இப்தா கிலாயதின், பெரியோர்களிடம் நீங்கள் என்னை வெறுக்கவில்லையா?, என் தந்தையின் வீட்டிலிருந்து என்னை வெளியே துரத்தவில்லையா? நீங்கள் துன்புறும் இந்நேரத்தில் மட்டும் ஏன் என்னிடம் வருகின்றீர்கள், என்று கேட்டார்.

கிலாயதின் பெரியோர்கள் இப்தாவிடம், அதனால்தான் நாங்கள் உம்மை அழைத்துச் செல்ல வந்துள்ளோம். எங்களுடன் வந்து அம்மோனியருடன் போரிடும். நீர் எங்களுக்கும் கிலாயதில் வாழும் அனைவருககும் தலைவராக இருப்பீர் என்றனர்.

இப்தா கிலாயதின் பெரியோர்களிடம், நீங்கள் அம்மோனியருடன் போரிடுவதற்காக என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றீர்கள். ஆண்டவர் அவர்களை என்னிடம் ஒப்புவித்தால், நான் உறுதியாக உங்கள் தலைவனாக இருப்பேன் என்றார்.

கிலயாதின் பெரியோர்கள் இப்தாவிடம், நீர் கூறியபடி நாங்கள் செய்வது உறுதி. ஆண்டவரே நமக்கிடையே சாட்சியாக இருப்பார் என்றனர்.

இப்தா கிலயாதின் பெரியோர்களுடன் புறப்பட்டுச் சென்றார். மக்கள் அவரைத் தங்கள் தலைவராகவும் போர்த் தளபதியாகவும் ஏற்றுக்கொண்டனர். இப்தா மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் தம் காரியங்கள் அனைத்தையும் பற்றிக் கூறினார்.

இப்தா அம்மோனிய மன்னரிடம் தூதரை அனுப்பி, எனக்கும் உமக்கும் இடையே என்ன வழக்கு? நீர் ஏன் எனக்கெதிராக வந்து என் நிலத்தில் போரிடுகின்றீர்? என்று கேட்டார்.

அம்மோனியரின் மன்னன் இப்தாவின் தூதரிடம், இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியே வருகையில் அர்னோனிலிருந்து யாபோக்குவரை, யோர்தான் வரையிலும் என் நிலத்தைப் பறித்துக் கொண்டனர். இப்பொழுது அவற்றைச் சமாதானமாகத் திருப்பிக் கொடும் என்றான்.

இப்தா தூதரை மீண்டும் அம்மோனிய மன்னனிடம் அனுப்பி அறிவித்தது.

இப்தா கூறுவது இதுவே: இஸ்ரயேலர் மோவாபியரின் நிலத்தையோ, அம்மோனியரின் நிலத்தையோ, பறித்துக்கொள்ளவில்லை.

ஏனெனில் அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறி வருகையில் இஸ்ரயேலர் பாலைநிலத்தில் நடந்து செங்கடலுக்கும் பின்னர் காதேசுக்கும் வந்தனர்.

இஸ்ரயேலர் ஏதோமின் மன்னனுக்கு, நாங்கள் உம் நாட்டைக் கடக்க அனுமதி அளியும் என்று தூதரிடம் சொல்லி அனுப்பினர். ஏதோமின் மன்னன் அதைக் கேட்கவில்லை. மோவாபு மன்னனிடமும் அனுப்பினர். அவனும் இசையவில்லை. எனவே இஸ்ரயேலர் காதேசில் தங்கினர்.

பின்னர் அவர்கள் பாலைநிலத்தில் ஏதோம் நாட்டையும் மோவாபு நாட்டையும் சுற்றிச் சென்று மோவாபின் கிழக்குப்பகுதிக்கு வந்தனர். அங்கு மோவாபின் எல்லையான அர்னோனின் அக்கரைப் பகுதியில் தங்கினர். மோவாபின் எல்லைக்குள் கால்வைக்கவே இல்லை.

இஸ்ரயேலர் எஸ்போனில் ஆட்சி செய்த எமோரிய மன்னன் சீகோனிடம் தூதரை அனுப்பினர். இஸ்ரயேலர் அவனிடம், உம் நாட்டைக் கடந்து எம் இடத்தை அடைய அனுமதி தாரும் என்று வேண்டினர்.

ஆனால் சீகோன் இஸ்ரயேலரை நம்பாததால் அவர்களைத் தன் எல்லைக்குள் விடாது, தன் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, யாகசிவில் பாளையம் இறங்கி இஸ்ரயேல் மக்களுடன் போர்புரிந்தான்.

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர், சீகோனையும் அவன் மக்கள் அனைவரையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்புவித்தார். இஸ்ரயேலர் எமோரியரை வென்று அவர்கள் வாழ்ந்த அந்த நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர்.

அர்னோனிலிருந்து யாபோக்குவரை, பாலை நிலத்திலிருந்து யோர்தான்வரை, இருந்த எமோரியரின் நாடு முழுவதையும் இஸ்ரயேலர் உரிமையாக்கிக் கொண்டனர்.

இப்பொழுது இஸ்ரயேலரின் கடவுளாகிய ஆண்டவர் எமோரியரைத் தம் மக்கள் இஸ்ரயேலின் முன்னிலையிலிருந்து துரத்தியிருக்க, அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்வது எப்படி?

உம் கடவுளாகிய கெமோசு உமக்கு உடைமையாகக் கொடுப்பதை நீர் உரிமையாக்கிக் கொள்ள மாட்டீரா? அவ்வாறே, எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு உடைமையாகக் கொடுத்ததை நாங்கள் உரிமையாக்கிக் கொள்ளாது இருப்போமா?

நீர் மோவாபின் மன்னன் சிப்போரின் மகன் பாலாக்கைவிடச் சிறந்தவரா? அவன் இஸ்ரயேலருடன் எப்போதாவது வழக்காடினானா? அல்லது அவர்களோடு போரிட்டானா?

இஸ்ரயேலர் எஸ்போனிலும் அதன் சிற்றூர்களிலும், அரோயேரிலும் அதன் சிற்றூர்களிலும், அர்னோனின் கரைகளில் இருந்த எல்லா நகர்களிலும் முந்நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்க, இவ்வளவு காலமாய் நீர் ஏன் அவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை?

நான் உமக்குத் தீங்கிழைக்கவில்லை. ஆனால் நீர் எனக்கு எதிராகப் போர் தொடுத்துத் தீமை விளைவிக்கின்றீர். நீதி வழங்கும் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கும் அம்மோனிய மக்களுக்கும் அம்மோனிய மக்களுக்கும் இடையே இன்று நீதி வழங்கட்டும் .

அம்மோனியரின் மன்னன் தனக்கு இப்தா சொல்லி அனுப்பிய வார்த்தைகளை ஏற்கவில்லை.

ஆண்டவரின் ஆவி இப்தாவுக்கு அருளப்பட்டது. அவர் கிலயாதையும், மனாசேயையும் கடந்து, கிலயாதிலிருந்த மிஸ்போவைக் கடந்து, அங்கிருந்து அம்மோனியரை நெருங்கினார்.

இப்தா ஆண்டவருக்கு ஒரு நேர்ச்சை செய்தார். நீர் அம்மோனிய மக்களை என் கையில் ஒப்புவித்தால்,

அவர்களிடமிருந்து நான் வெற்றியோடு திரும்பும் பொழுது யார் என்னைச் சந்திக்க என் வீட்டு வாயிலிலிருந்து புறப்பட்டு வருகின்றாரோ, அவர் ஆண்டவருக்கு உரியவர். அவரைக் கொண்டு வந்து எரி பலியாக்குவேன்.

இப்தா அம்மோனியருடன் போரிடச் சென்றார். ஆண்டவர் அவர்களை அவர் கையில் ஒப்புவித்தார்.

இப்தா அரோயேரிலிருந்து மின்னித்து அருகாமை வரை இருபது நகர்களையும், ஆபல்-கெராமிம் வரை இருந்த பகுதிகளையும் அழித்தார். இஸ்ரயேல் முன்னிலையில் அம்மோனியர் அடக்கப்பட்டனர்.

இப்தா மிஸ்பாவிலிருந்து தம்வீடு திரும்பினார். இதோ! அவர் மகள் மேளதாளத்துடன் நடனமாடிக் கொண்டு அவரைச் சந்திக்கப் புறப்பட்டு வந்தாள். அவள் அவருடைய ஒரே மகள். அவருக்கு வேறு மகனோ மகளோ இல்லை.

அவர் அவளைப் பார்த்தார்: தம் உடைகளைக் கிழித்துக் கொண்டு, ஜயோ! என் மகளே! நீ எனக்கு மோசம் செய்துவிட்டாயே! நீ என்னைத் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாயே! நான் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே! அதை நான் மாற்ற முடியாதே! என்றார்.

அவள் அவரிடம், அப்பா, நீங்கள் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டீர்களென்றால் உங்கள் வாக்கின்படியே எனக்குச் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்கள் எதிரிகளான அம்மோனியரை உங்களுக்காகப் பழிவாங்கிவிட்டார் என்றாள்.

அவள் தந்தையிடம், என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன் என்றாள்.

அவர், சென்று வா என்று சொல்லி அவளை இரண்டு மாதங்களுக்கு அனுப்பி வைத்தார். அவள் தன் தோழியருடன் சென்று தன் கன்னிமை குறித்து மலைமீது துக்கம் கொண்டாடினாள்.

இரண்டு மாதங்கள் முடிந்தபின் அவள் தன் தந்தையிடம் வந்தாள். அவர் தாம் செய்திருந்த நேர்ச்சையின்படி அவளுக்குச் செய்தார். அவள் ஆணுறவு கொள்ளவே இல்லை.

அன்று முதல் இஸ்ரயேல் மகளிர் ஆண்டுதோறும் நான்கு நாள்கள் கிலயாதைச் சார்ந்த இப்தாவின் மகளுக்காகத் துக்கம் கொண்டாடுவது இஸ்ரயேலில் வழக்கமாயிற்று.

அதிகாரம் 12.

எப்ராயிம் மக்கள் ஒன்று திரண்டு சாப்போனைக் கடந்து சென்று இப்தாவிடம், எங்களை உம்முடன் செல்ல அழைக்காமல் நீர் ஏன் அம்மோனியருடன் போர்புரியச்சென்றீர்? என்று கேட்டனர். உமக்கு எதிராக நாங்கள் உம் வீட்டை நெருப்பில் எரிப்போம் என்றனர்.

இப்தா அவர்களிடம், அம்மோனியருடன் எனக்கும் என் மக்களுக்கும் பெரும் சச்சரவு ஏற்பட்டபோது, நான் உங்களை உதவிக்கு அழைத்தேன். நீங்கள் என்னை அவர்கள் கையிலிருந்து விடுவிக்கவில்லை.

நீங்கள் என்னை விடுவிக்க வரவில்லை எனக் கண்டு நான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அம்மோனியரிடம் சென்றேன். ஆண்டவர் அவர்களை என் கையில் ஒப்புவித்தார். இப்படியிருக்க இன்று நீங்கள் என்னோடு சண்டையிடவா வருகின்றீர்கள்? என்று கேட்டார்.

இப்தா கிலயாதின் எல்லா ஆள்களையும் ஒன்று திரட்டி, எப்ராயிமுக்கு எதிராகப் போரிட்டார். கிலயாதியர் எப்ராயிம் மக்களைக் கொன்றனர். ஏனெனில் அவர்கள், கிலயாதியரே! எப்ராயிமுக்கும் மனாசேக்கும் இடையில் வாழும் நீங்கள் எப்ராயிமிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள் என்று பழித்துரைத்திருந்தனர்.

கிலயாதியர் எப்ராயிமுக்க உரிய யோர்தானின் தொங்கு பாலங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். எப்ராயிமிலிருந்து தப்பி ஓடிவந்தவர்களுள் ஒருவன், நான் கடந்து செல்கிறேன் என்று சொன்னால், கிலயாதியர் அவனிடம், நீ எப்ராயிமைச் சார்ந்தவனா? என்று கேட்பர். அவன் இல்லை எனச் சொன்னால்,

அவர்கள் அவனிடம், ‘¢போலத்து என்று சொல் என்பர். அவன் சிபோலத்து என்பான். அவ்வார்த்தையை அவனால் சரியாக உச்சரிக்க முடியாது. உடனே அவர்கள் அவனைப் பிடித்து யோர்தானின் வழித்தடங்களில் கொல்வர். இவ்வாறு அவர்கள் எப்ராயிம் மக்களில் நாற்பத்திரண்டாயிரம் பேரைக் கொன்றனர்.

இப்தா ஆறு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார். கிலயாதைச் சார்ந்த இப்தா இறந்து, கிலயாதின் நகர் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டார்.

அவருக்குப்பின் பெத்லகேமைச் சார்ந்த இப்சான் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.

அவருக்கு முப்பது புதல்வரும் முப்பது புதல்வியரும் இருந்தனர். அவர் தம் புதல்வியரை வேற்றினத்தாருக்கு மணமுடித்து வைத்தார். வேற்றினத்துப் பெண்கள் முப்பது பேரைத் தம் புதல்வருக்கு மணமுடித்து வைத்தார். அவர் ஏழு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.

இப்சான் இறந்து பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டார்

அவருக்குப் பின் செபுலோனைச் சார்ந்த ஏலோன் பத்து ஆண்டுகள் இஸ்ரயேலின் நீதித்தலைவர்களாக விளங்கினார்.

செபுலோனைச் சார்ந்த ஏலோன் இறந்து, செபுலோன் நிலப்பகுதியில் இருந்த அய்யலோனில் அடக்கம் செய்யப்பட்டார்.

அவருக்குப்பின் பிராத்தோனாகிய இல்லேலின் மகன் அப்தோன் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.

அவருக்கு நாற்பது பதல்வரும் முப்பது பேரன்களும் இருந்தனர். அவர்கள் எழுபது கோவேறு கழுதைகள்மீது சவாரி செய்தனர். அவர் எட்டு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.

பிராத்தோனாகிய இல்லேலின் மகன் அப்தோன் இறந்து அமலேக்கியரின் மலைநாட்டு எப்ராயிம் நிலப்பகுதியில் இருந்த பிராத்தோனில் அடக்கம் செய்யப்பட்டார்.

அதிகாரம் 13.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர். ஆண்டவர் அவர்களைப் பெலிஸ்தியர் கையில் நாற்பது ஆண்டுகள் ஒப்படைத்தார்.

சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை.

ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்குத் தோன்றி அவரிடம், நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை. ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்.

இப்பொழுது கவனமாயிரு! திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும் உண்ணாதே.

ஏனெனில் நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது. ஏனெனில் பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென நாசீர் ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான் என்றார்.

அப்பெண் தம் கணவரிடம் வந்து கூறியது: கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார். அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாக இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை.

அவர் என்னிடம், இதோ! நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். ஆகவே நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே. தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான் என்றார்.

மனோவாகு ஆண்டவரை நோக்கி, என் தலைவரே! நீர் அனுப்பிய கடவுளின் மனிதர் மீண்டும் எங்களிடம் வந்து, பிறக்கப்போகும் குழந்தைக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைக் கற்றுத் தரட்டும் என்று கூறி வேண்டினார்.

கடவுள் மனோவாகின் வேண்டுதலைக் கேட்டார். கடவுளின் தூதர் மீண்டும் அப்பெண்ணிடம் வந்தார். அப்போது அவர் வயலில் அமர்ந்திருந்தார். அவருடைய கணவர் மனோவாகு அவருடன் இல்லை.

அவர் தம் கணவரிடம் விரைந்து ஓடிச் சென்று அவரிடம், இதோ! அன்று என்னிடம் வந்த மனிதர் எனக்குத் தோன்றியுள்ளார் என்று தெரிவித்தார்.

மனோவாகு எழுந்து தம் மனைவியின் பின்னே சென்றார். அவர் அம்மனிதரிடம் வந்து, இப்பெண்ணிடம் பேசிய மனிதர் நீர்தாமா? என்று கேட்டார். அதற்கு அவர், நான் தான் என்றார்.

மனோவாகு உம் வார்த்தைகள் நிறைவேறும்பொழுது பையனின் நெறிமுறையும் செயலும் எப்படியிருக்கும்? என்று கேட்டார்.

ஆண்டவரின் தூதர் மனோவாகிடம், நான் இப்பெண்ணிடம் சொன்ன அனைத்தையும் அவள் கவனமாய்க் கடைப்பிடிக்கட்டும்.

திராட்சைக் கொடியிலிருந்து வரும் எதையும் அவள் உண்ணக்கூடாது. திராட்சை இரசமோ மதுபானமோ அவள் அருந்தக்கூடாது. தீட்டான எதையும் அவள் உண்ணக்கூடாது. நான் அவளுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவள் கடைப்பிடிக்கட்டும் என்றார்.

மனோவாகு ஆண்டவரின் தூதரிடம், தயவு கூர்ந்து சற்று நேரம் காத்திரும். உமக்காக ஓர் ஆட்டுக்குட்டியைச் சமைக்கின்றோம் என்றார்.

ஆண்டவரின் தூதர் மனோவாகிடம், நீ என்னைக் காத்திருக்க வைத்தாலும், நான் உனது உணவை உண்ண மாட்டேன். நீ ஒரு எரி பலியைச் செலுத்துவதாக இருந்தால், அதை ஆண்டவருக்குச் செலுத்து என்றார். ஏனெனில் மனோவாகு அவர் ஆண்டவரின் தூதர் என்பதை அறியவில்லை.

மனோவாகு ஆண்டவரின் தூதரிடம், உமது பெயர் என்ன? உம் வார்த்தைகள் நிறைவேறும் பொழுது நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்துவோம் என்றார்.

ஆண்டவரின் தூதர் அவரிடம், எனது பெயரை ஏன் கேட்கின்றாய்? அது வியப்புக்கு உரியது என்றார்.

மனோவாகு ஓர் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்து உணவுப்படையலுடன் பாறைமீது ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது, மனோவாகும் அவர் மனைவியும் காணும் வண்ணம் ஆண்டவர் வியப்பானதொன்றைச் செய்தார்.

பலிபீடத்திலிருந்து தீப்பிழம்பு வான்நோக்கி மேல் எழும்பியபோது, அப்பிழம்பில் ஆண்டவரின் தூதரும் மேல் நோக்கிச் சென்றார். மனோவாகும் அவர் மனைவியும் அதைப்பார்த்து முகம் தரைப்பட விழுந்தனர்.

ஆண்டவரின் தூதர் மனோவாகிற்கும் அவர் மனைவிக்கும் மீண்டும் தோன்றவில்லை. மனோவாகு அவர் ஆண்டவரின் தூதர் என்பதை அறிந்து கொண்டார்.

மனோவாகு தம் மனைவியிடம், நாம் செத்தோம். ஏனெனில் நாம் கடவுளைப் பார்த்து விட்டோம் என்றார்.

அவர் மனைவி அவரிடம், ஆண்டவர் நம்மைக் கொல்வதாயிருந்தால் நம் கையிலிருந்து எரிபலியையும் உணவுப் படையலையும் ஏற்றிருக்கமாட்டார்: இவற்றை எல்லாம் காட்டியிருக்க மாட்டார்: இதை நமக்கு இப்போது அறிவித்திருக்கவும் மாட்டார் என்றார்.

அப்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார்.

சோராவுக்கும், எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போது தான் ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கியது.

அதிகாரம் 14.

சிம்சோன், திமினாவுக்குச் சென்றார்: திமினாவில் பெலிஸ்தியர் மகளிருள் ஒருத்தியைக் கண்டார்.

அவர் திரும்பிச் சென்று தம் தந்தையிடமும் தாயிடமும், நான் திமினாவில் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் பெலிஸ்திய மகளிருள் ஒருத்தி, இப்பொழுது அவளை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்றார்.

அவர் தந்தையும் தாயும் அவரிடம், உன் உறவுப் பெண்களிடையே யாரும் இல்லையா? நம் மக்கள் அனைவரிடையே ஒரு பெண் கிடைக்கவில்லையா? நீ ஏன் விருத்தசேதனம் செய்யப்படாத பெலிஸ்தியரிடம் சென்று பெண் எடுக்க வேண்டும்? என்ற கேட்டனர். சிம்சோன் தம் தந்தையிடம், அவளை எனக்கு மணமுடித்து வையும். ஏனெனில் அவளை எனக்குப் பிடித்திருக்கிறது என்றார்.

அவர் தந்தையும் தாயும் இது ஆண்டவரின் செயல் என்று அறியவில்லை. ஏனெனில் அந் நாள்களில் இஸ்ரயேல் மீது அதிகாரம் செலுத்தி வந்த பெலிஸ்தியரைத் தண்டிக்க ஆண்டவர் வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தார்.

சிம்சோனும் அவர் தந்தையும் தாயும் திமினாத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் திமினாத்தின் திராட்சைத் தோட்டங்களை வந்தடைந்தனர். அப்போது ஒரு சிங்கக்குட்டி கர்ச்சித்துக்கொண்டு அவர் மீது பாய்ந்தது.

ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர் மீது இறங்கியது. ஆட்டை இரண்டாகக் கிழிப்பது போல் சிங்கக்குட்டியை அவர் வெறுங்கையால் கிழித்தார். அவர் தாம் செய்ததைத் தம் தந்தைக்கும் தாய்க்கும் கூறவில்லை.

அவர் சென்று அப்பெண்ணிடம் பேசினார். சிம்சோனுக்கு அவள் பிடித்தவளாகத் தோன்றினாள்.

சில நாள்கள் கழித்து அவளைக் கூட்டிச் செல்ல அவர் மீண்டும் வந்தார். அவர் சிங்கத்தின் பிணத்தைக் காணத் திரும்பினார். இதோ! சிங்கத்தின் பிணத்தில் தேன்கூடும் தேனும் காணப்பட்டன.

அவர் தேனடையைக் கையில் எடுத்து அருந்திக் கொண்டே தொடர்ந்து நடந்தார்: தம் தந்தை தாயிடம் சென்று அவர்களுக்கும் கொடுத்தார். அவர்களும் அருந்தினர். அவர் அவர்களிடம் சிங்கத்தின் பிணத்திலிருந்து தேனடையை எடுத்ததாகச் சொல்லவில்லை.

அவர் தந்தை பெண்வீட்டுக்குச் சென்றார். அங்குச் சிம்சோன் விருந்தளித்தார். ஏனெனில் இளைஞர்கள் அவ்வாறு செய்வது வழக்கம்.

அவர்கள் அவரைப் பார்த்து அவருடைய தோழராய் இருக்குமாறு முப்பது பேரைக் கூட்டி வந்தனர்.

சிம்சோன் அவர்களிடம், நான் உங்களுக்கு ஒரு விடுகதை கூறுகின்றேன். நீங்கள் விருந்தின் ஏழு நாள்களுக்குள் அதற்கு விடை கண்டுபிடித்து எனக்குக் கூறினால், நான் உங்களுக்கு முப்பது நார்ப்பட்டாடைகளையும் முப்பது மேலாடைகளையும் அளிப்பேன்.

நீங்கள் எனக்குச் சரியான விடை கூறமுடியாவிடில், எனக்கு முப்பது நார்ப்பட்டாடைகளையும் முப்பது மேலாடைகளையும் நீங்கள் அளிக்கவேண்டும் என்றார். அவர்கள் அவரிடம், விடுகதையைச் சொல்: நாங்கள் கேட்கின்றோம் என்றனர்.

அவர் அவர்களிடம், உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது: வலியவனிடமிருந்து இனியது வந்தது என்றார். மூன்று நாளாகியும் அவர்களால் விடு கதைக்கு விடை காணமுடியவில்லை.

நான்காம் நாள் அவர்கள் சிம்சோனின் மனைவியிடம், உன் கணவனை மயக்கி, விடுகதையின் விடையை எங்களுக்குக் கூறச் சொல். இல்லையேல், உன்னையும் உன் தந்தையின் வீட்டையும் தீக்கிரையாக்குவோம். நீங்கள் எங்களைக் கூப்பிட்டது கொள்ளையடிக்கவா? என்றனர்.

சிம்சோனின் மனைவி அவர்முன் அழுது அவரிடம், நீர் எனக்கு அன்பு காட்டாமல் வெறுப்பையே காட்டுகின்றீர். என் உறவுப் பையன்களுக்கு ஒரு விடுகதை கூறினீர். எனக்கு அதன் விடையைக் கூறவில்லையே என்றாள்.

அவர்களுக்கு நடந்த விருந்தின் ஏழு நாள்களும் அவள் அவர் முன் அழுதாள். அவள் அவரை மிகவும் நச்சரிக்க, அவளிடம் விடையைக் கூறினார். அவளோ, தன் உறவுப் பையன்களிடம் விடுகதையின் விடையை அறிவித்து விட்டாள்.

ஏழாம் நாள் கதிரவன் மறையும் முன் அந்நகரின் ஆண்கள் அவரிடம், தேனினும் இனியது எது? சிங்கத்தினும் வலியது எது? என்றனர். அவர் அவர்களிடம், என் இளம் பசுவைக்கொண்டு நீங்கள் உழுதிருக்காவிடில், என் விடுகதைக்கு விடை கண்டு பிடித்திருக்கவே மாட்டீர்கள் என்றார்.

ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர் மீது இறங்கியது. அவர் அஸ்கலோனுக்குச் சென்று, அங்குள்ளவர்களுள் முப்பது பேரைக் கொன்று, அவர்கள் உடைகளை உரிந்து விடுகதைக்கு விடை கூறியவர்களுக்குக் கொடுத்தார். அவருக்குச் சினம் பொங்கியெழ, அவர் தம் தந்தையின் வீட்டுக்குத் திரும்பிச்சென்றார்.

சிம்சோனின் மனைவி, அவருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.

அதிகாரம் 15.

சில நாள்களுக்குப் பிறகு, கோதுமை அறுவடைக் காலத்தில் சிம்சோன் ஓர் ஆட்டுக்குட்டியுடன் தம் மனைவியைச் சந்திக்கச் சென்றார்.

அவள் தந்தை, நீர் அவளை உண்மையாக வெறுப்பதாக நினைத்து அவளை உம் தோழனுக்குக் கொடுத்துவிட்டேன். அவளுடைய இளைய சகோதரி அவளைவிட அழகாக இல்லையா? அவளுக்குப் பதிலாக இவள் உமக்கு மனைவியாக இருக்கட்டும் என்றார்.

சிம்சோன் இம்முறை நான் பெலிஸ்தியருக்குத் தீமை செய்யும் பொழுது அவர்களின் முன் குற்றமற்றவன் என்றார்.

சிம்சோன் சென்று முந்நூறு நரிகளைப் பிடித்தார். அவர் தீப்பந்தங்களை எடுத்து, வாலோடு வால் சேர்த்து, இரு வால்களுக்கு இடையே ஒரு தீப்பந்தமாக வைத்தார்.

பந்தங்களில் தீ மூட்டி பெலிஸ்தியரின் முற்றிய பயிர்களிடையே நரிகளை அனுப்பினார். அவை தானியங்களையும், முற்றிய பயிர்களையும், திராட்சை, ஒலிவத் தோட்டங்களையும் எரித்தன.

பெலிஸ்தியர் இதைச் செய்தது திமினாவின் மருமகன் சிம்சோன். ஏனெனில் திமினா அவர் மனைவியை எடுத்து அவருடைய தோழனுக்குக் கொடுத்துவிட்டான் என்றனர். எனவே பெலிஸ்தியர் சென்று அவளையும் அவள் தந்தையையும் நெருப்பில் எரித்தனர்.

சிம்சோன், நீங்கள் இப்படிச் செய்ததற்கு நான் உங்களைப் பழிவாங்கும் வரை ஓயமாட்டேன் என்றார்.

அவர் அவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களுள் பலரை வெட்டி வீழ்த்தினார். அங்கிருந்து புறப்பட்டு ஏற்றாமின் பாறைப்பிளவில் தங்கியிருந்தார்.

பெலிஸ்தியர் யூதாவில் பாளையம் இறங்கி, இலேகியைத் தாக்கினர்.

யூதா மக்கள் அவர்களிடம், ஏன் எங்களுக்கு எதிராக வந்துள்ளீர்கள்? என்றனர். அதற்குப் பெலிஸ்தியர் சிம்சோனைப் பிடித்து, அவன் எங்களுக்குச் செய்ததுபோல், நாங்களும் அவனுக்குச் செய்ய வந்துள்ளோம் என்றனர்.

யூதாவிலிருந்து மூவாயிரம் பேர் ஏற்றாமின் பாறைப்பிளவுக்குச் சென்று சிம்சோனிடம், பெலிஸ்தியருக்குக் கீழ் நாம் இருக்கின்றோம் என்பது உனக்குத் தெரியாதா? ஏன் எங்களுக்கு இவ்வாறு செய்தாய்? என்றனர். அவர் அவர்களிடம், அவர்கள் எனக்குச் செய்தது போல், நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றார்.

அவர்கள் அவரிடம், உன்னைப் பிடித்துக் கட்டிப் பெலிஸ்தியர் கையில் ஒப்படைக்க நாங்கள் வந்துள்ளோம் என்றனர். சிம்சோன் அவர்களிடம், என்னைத் தாக்கமாட்டீர்கள் என்று எனக்கு உறுதி கூறுங்கள் என்றார்.

அவர்கள் அவரிடம், இல்லை: நாங்கள் உன்னைப் பிடித்துக் கட்டி அவர்கள் கையில் ஒப்படைப்போம். நாங்கள் உன்னைக் கொல்லமாட்டோம் என்றனர். அவர்கள் அவரை இரண்டு புதிய கயிறுகளால் கட்டிப் பாறைப் பிளவிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தனர்.

அவர் இலேகியை நெருங்கி வருகையில், பெலிஸ்தியர் கூச்சலிட்டுக்கொண்டு அவரைக் காண வந்தனர். ஆண்டவரின் ஆவி அவர் மீது ஆற்றலுடன் இறங்கியது. அவர் கையில் இருந்த கயிறுகள் நெருப்பில் எரிந்த சணலைப் போல் ஆக, அவர் கையிலிருந்த கட்டுகள் தளர்ந்து வீழ்ந்தன.

அவர் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றார்.

சிம்சோன், கழுதைத் தாடையால் குவியல் குவியல்கள்! கழுதையின் தாடையால் கொன்றேன் ஆயிரம் பேரை என்றார்.

அவர் இதைச் சொல்லி முடித்ததும், தாடை எலும்பைத் தம் கையிலிருந்து வீசி எறிந்தார். அவ்விடத்தை இராமேத்து இலேகி என அழைத்தார்.

அவர் மிகவும் தாகமுற்று, ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பி, நீர் உம் ஊழியன்மூலம் இம் மாபெரும் விடுதலையைத் தந்தீர். ஆனால் இப்பொழுது நான் தாகத்தால் செத்து, விருத்தசேதனம் செய்யப்படாதவரின் கையில் வீழ்வேனோ? என்று மன்றாடினார்.

கடவுள் இலேகியில் ஒரு நிலப்பிளவைத் தோற்றுவிக்க, அதிலிருந்து தண்ணீர் வெளிவந்தது. சிம்சோன் அதைக் குடித்ததும் அவருக்கு உயிர் திரும்ப, அவர் புத்துயிர் பெற்றார். அவ்விடத்தை ஏன்ககோரே என அழைத்தார்.

பெலிஸ்தியரின் காலத்தில் அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.

அதிகாரம் 16.

சிம்சோன் காசாவுக்குச் சென்றார். அவர் அங்கே ஒரு விலைமாதைக் கண்டு, அவளிடம் சென்றார்.

சிம்சோன் இங்கு வந்துள்ளார் என்று காசா மக்களுக்குக் கூறப்பட்டது. அவர்கள் அவ்விடத்தைச் சூழ்ந்து கொண்டு இரவு முழுவதும் அவருக்காக நகர வாயிலில் காத்துக்கிடந்தனர். பொழுது புலரும்வரை காத்திருப்போம்: பின்னர் அவனைக்கொல்வோம் என்று கூறி இரவு முழுவதும் அமைதியாக இருந்தனர்.

சிம்சோன் நடுச்சாமம் வரை படுத்துக்கிடந்தார். நள்ளிரவில் அவர் எழுந்து, நகர் வாயிலின் கதவுகளையும் இரண்டு கதவு நிலைகளையும் பிடித்து, அவைகளைக் குறுக்குச் சட்டங்களுடன் பிடுங்கினார். அவற்றைத் தம் தோள்களின்மீது வைத்துக் கொண்டு எபிரோனுக்கு எதிரில் இருந்த மலைக்குத் தூக்கிச் சென்றார்.

அதன்பின் சோரேக்குப் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்தார். அவள் பெயர் தெலீலா.

பெலிஸ்தியச் சிற்றரசர் அவளிடம், சென்று, நீ அவனை மயக்கி, எதில் அவனுடைய பெரும் வலிமை உள்ளது: எப்படி நாங்கள் அவனை வென்று கட்டி வதைத்து அடக்கமுடியும் என்று கண்டுபிடி. நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு ஆயிரத்து நூறு வெள்ளிக் காசு தருவோம் என்றனர்.

தெலீலா சிம்சோனிடம், எதில் உமது பெரும் வலிமை உள்ளது என்றும், எப்படி உம்மைக் கட்டி அடக்கமுடியும் என்றும் என்னிடம் சொல்லும் என்றாள்.

சிம்சோன் அவளிடம், ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப் போல் ஆகிவிடுவேன் என்றார்.

பெலிஸ்தியச் சிற்றரசர் அவளிடம் ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளைக் கொண்டு வந்தனர். அதைக் கொண்டு அவள் அவரைக் கட்டினாள்.

ஆள்கள் அறையில் ஒளிந்துகொண்டிருக்க, அவள் அவரிடம், சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர் என்று கத்தினாள். நெருப்புப்பட்டதும் கணல்கயிறு அறுவது போன்று அவர் நரம்புக் கயிறுகளை அறுத்தெறிந்தார். அவரது ஆற்றலின் இரகசியம் புலப்படவில்லை.

தெலீலா சிம்சோனிடம், இதோ! நீர் என்னை அற்பமாக நினைத்து என்னிடம் பொய்கள் சொல்லிவீட்டீர். எதனால் உம்மைக் கட்டவேண்டும் என்று இப்பொழுது தயவு செய்து எனக்குச் சொல்லும் என்றாள்.

அவர் அவர்களிடம் , இதுவரை உபயோகிக்கப்படாத புதிய கயிறுகளால் என்னை அவர்கள் கட்ட¢னால் நான் வலிமையிலந்து மற்ற மனிதர்ரைப் போல் ஆகிவிடுவேன் என்றார்.

தெலீலா புதிய கயிறுகளை எடுத்து அவற்றால் அவரைக் கட்ட¢ய பின் , சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர் என்று கத்தினாள். ஆள்கள் அறையில் ஒளிந்துகொண்ட¢ருந்தனர். நுல்கயிற்றைப்போல் அவர் தம் கைகளிலிருந்து அவற்றை அறுத்தெறிந்தார்.

தெலீலா சிம்சோனிடம், இதோ நீர் என்னை அற்பமாக நினைத்து , என்னிடம் பொய்கள் சொல்லிவிட்ட£ர். எதனால் உம்மைக் கட்டவேண்டும் என்று எனக்குச் சொல்லும் என்றாள். அவர், என்னுடைய ஏழு மயிர்க் கற்றைகளையும் பாவுநூலால் பின்னினால் போதும் என்றார்.

ஆகவே, அவர் தூங்கும்பொழுது தெலீலா அப்படியே செய்து, முளை அடித்து மாட்டி, சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர் என்று கத்தினாள். அவர் தம் தூக்கத்திலிருந்து எழுந்து, முளையோடு பாவுநூலைப் பிடுங்கி எறிந்தார்.

அவள் அவரிடம், மனம் திறந்து பேசாமல் நீர் எம்மீது அன்பு செலுத்துவதாய் எப்படிக் கூறலாம்? மும்முறை நீர் என்னை அற்பமாய் நடத்திவிட்டீர். உமது பேராற்றல் எதில் உள்ளது என்று நீர் எனக்கு இன்னும் சொல்லவில்லை என்றாள்.

அவள் தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள். அவர் உயிர் போகுமளவிற்கு வருத்தமுற்றார்.

எனவே எதையும் மறைக்காமல் அவர் அவளிடம் கூறியது: சவரக் கத்தி என் தலைமீது பட்டதேயில்லை. ஏனெனில் பிறப்பிலிருந்தே நான் கடவுளின் நாசீராக இருக்கின்றேன். என் தலை மழிக்கப்பட்டால் எனது ஆற்றல் என்னிடமிருந்து அகன்று விடும். நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப்போல் ஆகிவிடுவேன் என்றார்.

அவர் தன்னிடம் மனம் திறந்து எல்லாவற்றையும் கூறிவிட்டார் என்பதை தெலீலா உணர்ந்தாள். எனவே அவள் பெலிஸ்தியச் சிற்றரசருக்கு, உடனே வாருங்கள்: அவர் என்னிடம் மனம் திறந்து அனைத்தையும் கூறிவிட்டார் என்ற ஆளனுப்பினாள். பெலிஸ்தியச் சிற்றரசர் வெள்ளிக்காசுகளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் சென்றனர்.

அவள் அவரைத் தன் மடியில் தூங்க வைத்தாள். ஓர் ஆளைக் கூப்பிட, அவன் அவர் தலையின் ஏழு மயிர்க்கற்றைகளையும் மழித்தான். அவரது ஆற்றல் அவரிடமிருந்து அகன்றது. எனவே அவள் அவரைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்.

அவள், சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்! என்று கத்தினாள். அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்து முன்பு போல் இப்பொழுதும் என்னை விடுவித்துக்கொண்டு வெளியே செல்வேன் என்று சொன்னார். ஏனெனில் ஆண்டவர் அவரிடமிருந்து அகன்றுவிட்டார் என்பதை அவர் உணரவில்லை.

பெலிஸ்தியர் அவரைப் பிடித்து அவர் கண்களைத் தோண்டி எடுத்து அவரைக் காசாவுக்குக் கொண்டு சென்றார்கள். அவரை வெண்கலச் சங்கிலிகளால் கட்டினர். சிறையில், அரைக்கும் வேலைக்கு அவரை உட்படுத்திர்.

மழிக்கப்பட்ட அவரது தலைமுடி வளரத் தொடங்கியது.

பெலிஸ்தியச் சிற்றரசர், நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார் என்று சொல்லித் தம் தெய்வமான தாகோனுக்கு மாபெரும் பலி செலுத்தி விழா எடுக்க ஒன்று கூடினர்.

மக்கள் அவரைப் பார்த்ததும் தங்கள் தெய்வத்தைப் புகழ்ந்தனர். நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார். அவன் நம் விளைநிலங்களை அழித்தவன்: நம்மில் பலரைக் கொன்றவன்: என்றனர்.

அவர்கள் அகமகிழ்ந்திருக்க, சிம்சோனைக் கூப்பிடுங்கள். அவன் நமக்கு வேடிக்கை காட்டட்டும் என்றனர். சிறையிலிருந்து சிம்சோனைக் கொண்டுவர, அவர் அவர்கள் முன்னிலையில் வேடிக்கை காட்டினார். அவர்கள் அவரைத் தூண்களுக்கு இடையே நிற்கும்படி செய்தனர்.

சிம்சோன் கையால் தம்மைப் பிடித்திருந்த இளைஞனிடம் இவ்வீட்டைத் தாங்கி நிற்கும் தூண்களை நான் தொடுமாறு அங்கு என்னை இட்டுச்செல்: நான் அவற்றின்மீது சாய்ந்து நிற்பேன் என்றார்.

ஆண்களாலும் பெண்களாலும் வீடு நிரம்பியிருந்தது. பெலிஸ்தியச் சிற்றரசர் அனைவரும் அங்கே வந்திருந்தனர். ஏறக்குறைய மூவாயிரம் ஆண்களும் பெண்களும் மேல்தளத்திலிருந்து சிம்சோன் காட்டிய வேடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

சிம்சோன் ஆண்டவரை நோக்கி, என் தலைவராகிய ஆண்டவரே! இந்த முறை மட்டும் என்னை நினைவுகூரும். எனக்கு ஆற்றல் அளியும். என் கடவுளே! என் இரு கண்களுக்கு ஈடாக பெலிஸ்தியர் மீது ஒரே தாக்குதலால் வஞ்சம் தீர்க்கச் செய்யும் என்று மன்றாடினார்.

சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நின்ற இரண்டு நடுத்தூண்களில் ஒன்றின்மீது வலக்கையும் மற்றொன்றின்மீது இடக்கையும் வைத்துச் சாய்ந்தார்.

சிம்சோன், என் உயிர் பெலிஸ்தியருடன் மடியட்டும் என்று சொல்லிக்கொண்டு முழு வலிமையுடன் சாய்ந்தார். வீடு சிற்றரசர் மீதும், அதனுள் இருந்த அனைத்து மக்கள் மீதும் சரிந்து விழுந்தது. இவ்வாறு, அவர் உயிரோடு இருந்தபோது கொன்றதைவிட, மிகுதியான பேரை அவர் சாகும்போது கொன்றார்.

அவருடைய சகோதரர்களும் அவர் தந்தை வீட்டார் அனைவரும் வந்து அவரைத் தூக்கிக் கொண்டு சென்றனர். காசாவுக்கும் எசுத்தாவோலுக்கும் இடையில் அவருடைய தந்தை மனோவாகின் கல்லறையில் அவரை அடக்கம் செய்தனர். அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலின் நீதித் தலைவராக விளங்கினார்.

அதிகாரம் 17.

எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் பெயர் மீக்கா.

அவர் தம் தாயிடம், உம்மிடமிருந்து ஆயிரத்து நூறு வெள்ளிக் காசுகள் திருடப்பட்டதைப் பற்றி என் காதுபடச் சபித்துக் கூறினீரா? இதோ! அந்த வெள்ளிக்காசுகள் என்னிடமே உள்ளன. அவற்றை எடுத்தவன் நான்தான் என்றார். அப்பொழுது அவர் தாய், என் மகனே, ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! என்றார்.

அவர் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகளைத் தம் தாயிடம் திருப்பிக் கொடுக்க, அவர் தாய், என் மகன் உனக்காக என் கையிலிருந்து இந்த வெள்ளிக் காசுகளை ஆண்டவருக்கு நேர்ச்சையாக அர்ப்பணிக்கின்றேன். அவற்றைக் கொண்டு செதுக்கிய உருவத்தையும் வார்ப்புச் சிலையையும் செய்துகொள். எனவே அவற்றை இப்பொழுதே உன்னிடம் திருப்பித் தருகின்றேன் என்றார்.

அவர் தம் தாயிடம் திருப்பிக் கொடுத்த வெள்ளிக் காசுகளிலிருந்து அவர் தாய் இருநூறு வெள்ளிக் காசுகளை எடுத்து, அதைத் தட்டானிடம் கொடுத்தார். அவர் அதை செதுக்கிய உருவமாகவும், வார்ப்புச் சிலையாகவும் செய்தார். அது மீக்காவின் வீட்டில் இருந்தது.

இந்தத் தெய்வங்களுக்கான கோவில் ஒன்று மீக்காவிற்குச் சொந்தமாக இருந்தது. அவர் ஏபோதையும் தெராபிமையும் செய்தார்: தம் புதல்வருள் ஒருவரைக் குரவாக நியமித்தார்.

அந்நாள்களில் இஸ்ரயேலில் அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப் பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்.

யூதாநாட்டுப் பெத்லகேமில், யூதா குலத்தைச் சார்ந்த லேவியரான ஓர் இளைஞர் தங்கியிருந்தார்.

அவர் யூதாநாட்டுப் பெத்லகேம் நகரிலிருந்து தாம் தங்கி வாழ, வேறோர் இடத்தைத் தேடிப் புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில் எப்ராயிம் மலைப்பகுதியில் இருந்த மீக்காவின் வீட்டை நெருங்கினார்.

மீக்கா அவரிடம், எங்கிருந்து வருகின்றீர்? என்று கேட்டார். அவர் அவரிடம், நான் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வரும் ஒரு லேவியன். நான் தங்கி வாழ்வதற்கு ஓர் இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றேன் என்றார்.

மீக்கா அவரிடம், என்னுடன் தங்கும்: எனக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பீர். நான் உமக்கு ஆண்டொன்றுக்குப் பத்து வெள்ளிக் காசுகளும் உடையும் உணவும் தருவேன் என்றார்.

லேவியர் அவருடன் சென்றார். லேவியர் அவரோடு விருப்பமுடன் தங்கினார். அவ்விளைஞர் அவருடைய புதல்வருள் ஒருவரைப் போல் இருந்தார்.

மீக்கா, இளைஞரான அந்த லேவியரைக் குரவாக நியமித்தார். அவர் மீக்காவின் வீட்டில் வாழ்ந்து வந்தார்.

மீக்கா, இப்பொழுது ஆண்டவர் எனக்கு நல்லது செய்வார் என அறிவேன். ஏனெனில் ஒரு லேவியரே எனக்குக் குருவாக இருக்கின்றார் என்றார்.

அதிகாரம் 18.

அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் இல்லை: அந்நாள்களில் தாண் குலத்தார் தாம் வாழ்வதற்கென உரிமைப் பகுதியைத் தேடிக் கொண்டிருந்தனர். ஏனெனில் அந்நாள்வரை இஸ்ரயேலின் குலங்களிடையே அவர்களுக்கு உரிமைப் பகுதி கிடைக்கவில்லை.

தாண் மக்கள் தங்கள் குலத்தாருள் ஆற்றல் வாய்ந்த அனைவரிலிருந்தும், சோராவையும் எசுத்தாவோலையும் சார்ந்த ஜந்து போர்வீரர்களை, நாட்டை உளவு பார்க்கவும் வேவு பார்க்கவும் அனுப்பினர். அவர்கள் அவர்களிடம், செல்லுங்கள், நிலத்தை வேவு பாருங்கள் என்றனர். ஜவரும் எப்ராயிம் மலைநாட்டில் இருந்த மீக்காவின் வீட்டுக்கு அருகே வந்து இரவைக் கழித்தனர்.

அவர்கள் மீக்காவின் வீட்டருகே இருந்தபொழுது, லேவியரான இளைஞரின் குரலைக் கண்டுகொண்டு, அவர் பக்கம் திரும்பிச் சென்று, அவரிடம் உன்னை இங்கு அழைத்து வந்தது யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய்? இங்கு உனக்கு என்ன வேலை? என்று கேட்டனர்.

அவர் அவர்களிடம் மீக்கா தமக்குச் செய்ததனைத்தையும்பற்றிக் கூறியபொழுது, அவர் என்னை வேலைக்கு அமர்த்தியுள்ளார். நான் அவரிடம் குருவாக இருக்கின்றேன் என்றார்.

அவர்கள் அவரிடம், நாங்கள் செல்லும் பயணம் வெற்றிகரமாக இருக்குமா என்பதை நாங்கள் அறியுமாறு கடவுளிடம் கேள் என்றனர்.

குரு அவர்களிடம், மன அமைதியுடன் செல்லுங்கள். நீங்கள் மேற்கொண்டுள்ள பயணத்தை ஆண்டவர் கண்ணோக்கிக் காப்பார் என்றார்.

ஜவரும் பயணத்தைத் தொடர்ந்து இலாயிசை வந்தடைந்தபொழுது அங்கிருந்த மக்கள் அச்சமின்றி, சீதோனியர் நெறிமுறைக்கேற்ப, அமைதியாக கவலையற்றவர்களாக வாழ்வதைக் கண்டனர். நாடு எதிலும் குறைவற்றதாகவும், செழிப்புடையதாகவும் இருந்தது. அம்மக்கள் சீதோனியரிடமிருந்து தூரத்தில் இருந்ததால் அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை.

அவர்கள் சோராவிலும் எசுத்தாவோலிலும் இருந்த சகோதரர்களிடம் திரும்பி வந்தனர். அவர்கள் சகோதரர்கள் அவர்களிடம், நீங்கள் கண்டதென்ன? என்று கேட்டனர்.

அவர்கள், வாருங்கள், அவர்களுக்கு எதிராகப் புறப்படுவோம். ஏனெனில் நாங்கள் ஒரு நாட்டைக் கண்டோம். அது மிகவும் செழிப்பானது. நீங்கள் எதுவும் செய்யப் போவதில்லையா? அங்கு செல்லவும், அந்நாட்டில் நுழைந்து அதை உரிமையாக்கிக் கொள்ளவும் தயங்க வேண்டாம்.

நீங்கள் கவலையற்ற மக்களிடம் செல்லவிருக்கின்றீர்கள். பரந்த அந்நிலத்¨தாக் கடவுள் உங்கள் கையில் ஒப்புவித்துவிட்டார். நாடு அனைத்திலும் குறைவற்றதாக உள்ளது என்றனர்.

தாண் குலத்தார் அறுநூபோர் போர்க்கோலம் தாங்கிச் சோராவிலிருந்தும் எசத்தாவோலிலிருந்தும் புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் யூதாநாட்டுக் கிரியத்து எயாரிமில் அவ்விடத்தை மகனே தாண் என்று இந்நாள் வரை அழைக்கின்றனர். அது கிரியத்து எயாரிமுக்கு மேற்கே உள்ளது.

அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு எப்ராயிம் மலைநாட்டுக்குச் சென்று மீக்காவின் வீட்டை நெருங்கினார்கள்.

இலாயிசு நாட்டை வேவு பார்க்கச் சென்றிருந்த ஜவரும் உடன்வந்த பிறரிடம் கூறியது: இவ்வீடுகளில் ஏபோது, தெராபிம், செதுக்கிய உருவம், வார்ப்புச்சிலை, ஆகியவை உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதைப்பற்றிச் சிந்தியுங்கள் என்றனர்.

அவர்கள் மீக்காவின் வீட்டில் லேவியரான இளைஞர் இருந்த இடம் நோக்கித் திரும்பி வந்து, அவரிடம் நலம் விசாரித்தனர்.

போர்க்கோலம் தாங்கிய அறுநூறு தாண்வீரர்களும் நுழைவாயிலின் முன் நின்றனர்.

நாட்டை வேவு பார்க்க வந்திருந்த ஜவரும் உள்ளே சென்று, செதுக்கிய உருவம், ஏபோது, தெராபிம், வார்ப்புச்சிலை ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். குருவும் போர்க் கோலம் தாங்கிய அறுநூறு வீரர்களும் நுழைவாயிலின்முன் நின்று கொண்டிருந்தனர்.

மீக்காவின் வீட்டுக்குள் சென்ற ஜவரும் செதுக்கிய உருவம், ஏபோது, தெராபீம், வார்ப்புச்சிலை, ஆகியவற்றை எடுத்தபொழுது குரு அவர்களிடம், நீங்கள் செய்வது என்ன? என்று கேட்டார்.

அவர்கள் அவரிடம், பேசாதே! வாயை மூடு!! எங்களுடன் நட. எங்களுக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பாய். எது உனக்கு நலம்? ஒரு தனி மனிதனின் வீட்டிற்கு குருவாக இருப்பதா? என்றனர்.

குருவின் இதயம் மகிழ்வுற்றது. அவர் ஏபோது, தெராபிம் செதுக்கிய உருவம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு மக்களிடையே வந்தார்.

குழந்தைகளும் கால்நடைகளும் உடைமைகளும் அவர்கள் முன்னே செல்ல, அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

அவர்கள் மீக்காவின் வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றபின், அடுத்த வீட்டு ஆள்கள் ஒன்றுதிரண்டு, குரலெழுப்பி, தாண் மக்களைத் துரத்திச் சென்றனர்.

அவர்கள் தாண் மக்களை நோக்கிக் கத்தினர். தாண் மக்கள் திரும்பிப் பார்த்து மீக்காவிடம், நீ ஏன் ஆள்திரட்டி வருகின்றாய்? உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டனர்.

அவர், நான் செய்த தெய்வங்களை நீங்கள் எடுத்துச் செல்கிறீர்கள்: குருவையும் கூட்டிக் கொண்டு செல்கிறீர்கள். எனக்கு வேறு என்ன இருக்கிறது? இப்படி இருக்க உனக்கு என்ன வேண்டும் என்று என்னையே கேட்கிறீர்களே? என்றார்.

தாண் மக்கள் அவரிடம், எங்களோடு விவாதம் செய்யாதே! செய்தால் கொடிய மனம் கொண்ட இம்மனிதர் உங்களைத் தாக்குவர். நீயும் உன் வீட்டாரும் உயிரிழக்க நேரிடும் என்றனர்.

தாண் மக்கள் தங்கள் வழியே சென்றனர். மீக்கா அவர்கள் தம்மைவிட வலிமை வாய்ந்தவர்கள் என்று கண்டு தம் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்.

தாண் மக்கள் மீக்கா செய்து வைத்திருந்ததையும் அவருடைய குருவையும் கவர்ந்து சென்றனர். அவர்கள் அமைதியாகவும் கவலையற்றும் வாழ்ந்த இலாயிசு மக்களுக்கு எதிராக நின்று அவர்களை வாளுக்கு இரையாக்கி நகரை எரித்தனர்.

ஏனெனில் இலாயிசு மக்கள் சீதோனிலிருந்து தொலையில் இருந்ததாலும், அவர்களுக்கு மற்ற மனிதர்களுடன் தொடர்பு இல்லாதிருந்ததாலும் அவர்களைக் காப்பாற்ற யாருமில்லை. இலாயிசு நகர் பெத்ரகோபின் பள்ளத்தாக்கில் இருந்தது. தாண் மக்கள் நகரை மீண்டும் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தனர்.

இஸ்ரயேலுக்குப் பிறந்த தங்கள் தந்தை தாண் பெயரால் அந்நகரை தாண் என்று அழைத்தனர். அந்நகரின் முன்னைய பெயர் இலாயிசு.

செதுக்கிய உருவத்தைத் தாணின் மக்கள் தங்களுக்கென்று நிறுவிக்கொண்டனர். மோசேயின் புதல்வனான கெர்சோமின் மகன் யோனத்தானும் அவன் மக்களும் தாணின் குடும்பத்தினருக்கு, மக்கள் நாடு கடத்தப்படும் வரை, குரக்களாக இருந்தனர்.

கடவுளின் உறைவிடம் சீலோவில் இருந்தவரை, மீக்கா செய்திருந்த செதுக்கப்பட்ட உருவத்தைத் தாண் மக்கள் தங்களுக்கென்று வைத்திருந்தனர்.

அதிகாரம் 19.

இஸ்ரயேல் மக்களுக்கு அரசன் இல்லாத அந்நாள்களில் லேவியர் ஒருவர் எப்ராயிம் மலைநாட்டின் எல்லைப்புறத்தில் தங்கியிருந்தார். யூதாநாட்டுப் பெத்லகேமைச் சார்ந்த ஒரு பெண்ணை மறு மனைவியாகக் கொண்டிருந்தார்.

அவள் அவருக்கு எதிராக வேசித்தனம் செய்துவிட்டு அவரிடமிருந்து பிரிந்து யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்த தன் தந்தையின் வீட்டுக்குச் சென்றாள். அங்கு நான்கு மாதம் தங்கியிருந்தாள்.

அவளிடம் நயந்து பேசி, அவளைத் தன்னுடன் மீண்டும் அழைத்து வர அவள் கணவன் அவளை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். அவர் தம்முடன் தம் வேலையாளையும் இரு கழுதைகளையும் கூட்டிக்கொண்டு சென்று அவள் தந்தையின் வீட்டை வந்தடைந்தார். அவரைக் கண்டதும் பெண்ணின் தந்தை மகிழ்வுடன் வரவேற்றார்.

பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே அவர் அவருடன் மூன்று நாள்கள் தங்கினார்.

நான்காம் நாள் அவர்கள் அதிகாலையில் எழுந்தார்கள். அவர் புறப்படுகையில் பெண்ணின் தந்தை தம் மருமகனிடம், சிறிது உணவருந்தித் திடம் கொண்டபின் போகலாம் என்றார்.

அவர்கள் இருவரும் ஒன்றாக அங்கே அமர்ந்து உண்டு குடித்தனர். பெண்ணின் தந்தை அவரிடம், உம் இதயம் மகிழுமாறு இரவும் இங்கே தங்கும் என்றார்.

அவர் போவதற்கு எழுந்தார். அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே, அவர் அங்கேயே தங்கி இரவைக் கழித்தார்.

அவர், ஜந்தாம் நாள் புறப்படுவதற்காக அதிகாலையில் எழுந்தார். அப்போது பெண்ணின் தந்தை உம் இதயம் மகிழுமாறுபொழுது சாயும்வரை இங்கே தங்கும் என்றார். இருவரும் உண்டனர்.

அவரும் அவர் மறுமனைவியும் அவருடைய வேலையாளும் புறப்படத் தயாராயினர், பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரிடம், இதோ! நாள் முடிந்து மாலையாகி விட்டது. நாள் முடிவடைந்துவிட்டது. இரவு இங்கே தங்கி, உம் இதயத்தை மகிழ்வியும்: நாளை அதிகாலையில் எழுந்து உங்கள் வீட்டுக்குப் பயணமாகலாம் என்றான்.

அம்மனிதர் இரவு தங்க விரும்பவில்லை. எனவே அவர் சேணமிட்ட இரு கழுதைகளுடனும் தம் மறு மனைவியுடனும் புறப்பட்டு எருசலேம் என்ற எபூசுக்கு அருகே வந்தார்.

அவர்கள் எபூசை நெருங்கியபொழுது அந்திமாலை ஆகிவிட்டது. வேலையாள் தம் தலைவரிடம், நாம் எபூசுக்குச் சென்று அங்கே இரவைக் கழிப்போம் என்றான்.

அவன் தலைவர் அவனிடம், நாம் இஸ்ரயேல் மக்கள் அல்லாத வேற்றினத்தார் நகர்ப்பக்கம் செல்லாமல், கிபயாவுக்குக் கடந்து செல்வோம் என்றார்.

அவர் தம் வேலையாளிடம், கிபயா அல்லது இராமாவுக்குச் சென்று அவற்றுள் ஏதாவது ஓரிடத்தில் இரவைக் கழிப்போம் என்றார்.

அவ்வாறே அவர்கள் சென்று பென்யமினைச் சார்ந்த கிபயாவை அடைந்தபொழுது கதிரவன் மறைந்தான்.

அவர்கள் கிபயாவில் இரவைக் கழிக்க அங்கே சென்றனர். ஆனால் இரவைக் கழிக்கத் தன் வீட்டிற்குள் வருமாறு அவர்களை ஒருவனும் அழைக்கவில்லை. ஆகவே நகரின் சதுக்கத்தில் அமர்ந்தனர்.

மாலையில் ஒரு முதியவர் தம் வேலையை முடித்துவிட்டு, வயலிலிருந்து வந்தார். அவர் எப்ராயிம் மலை நாட்டைச் சார்ந்தவர். அவர் கிபயாவிற்கு வந்து தங்கியிருந்தார். ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் பென்யமின் மக்கள்,

அவர் உற்றுப்பார்த்த பொழுது, வழிப்போக்கரான அந்த மனிதரை நகரின் சதுக்கத்தில் கண்டார். அம்முதியவர் அவரிடம், எங்கே போகின்றாய்? எங்கிருந்து வருகின்றாய்? என்று கேட்டார்.

அவரிடம், நாங்கள் யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்து எப்ராயிமின் மலை நாட்டு எல்லைப்புறத்திற்குச் செல்கின்றோம். நான் அப்பகுதியைச் சேர்ந்தவன். யூதாநாட்டுப் பெத்லகேமிற்குச் சென்றிருந்தேன். நான் என் வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றேன். இங்கே தன் வீட்டுக்குள் வருமாறு என்னை ஒருவனும் அழைக்கவில்லை.

எங்கள் கழுதைகளுக்கு வேண்டிய வைக்கோலும், தீவனமும் தம் ஊழியர்களாகிய எனக்கும் என் மறுமனைவிக்கும் வேலையாளுக்கும் வேண்டிய அப்பமும் திராட்சை இரசமும் எங்களிடம் உள்ளன. எங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்றார்.

அப்பொழுது முதியவர், உனக்கு நலம் உண்டாகுக! உன் தேவைகள் அனைத்தையும் நான் கவனித்துக்கொள்கிறேன். இரவில் சதுக்கத்தில் மட்டும் தங்காதே என்றார்.

அவர் அவரைத் தம் வீட்டுக்கு அழைத்து வந்தார். கழுதைகளுக்குத் தீவனம் அளித்தார். அவர்கள் தங்கள் பாதங்களைக் கழுவினர்: உண்டு குடித்தனர்.

அவர்கள் மனமகிழ்ந்திருந்தபொழுது இதோ! அந்நகரின் இழி மனிதர் அவ்வீட்டைச் சூழ்ந்துகொண்டு கதவைத் தட்டினர். அவ்வீட்டின் உரிமையாளரான முதியவரிடம், உன் வீட்டிற்கு வந்திருக்கும் மனிதனை வெளியே கொண்டு வா. நாங்கள் அவனுடன் உறவு கொள்ள வேண்டும் என்றனர்.

வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து அவர்களிடம், வேண்டாம், என் சகோதரர்களே, என் வீட்டிற்கு வந்திருக்கும் இம்மனிதனுக்குத் தீங்கு எதுவும் செய்ய வேண்டாம். இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள்.

இதோ! கன்னிப்பெண்ணான என் மகளையும், அவர் மறுமனைவியையும் வெளியே அழைத்து வருகிறேன். அவர்களோடு உறவு கொண்டு உங்கள் விருப்பப்படியே நடந்துகொள்ளுங்கள். ஆனால் இம்மனிதனுக்கு இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள் என்றார்.

அவர்களோ அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பொழுது அந்த லேவியர் தம் மறுமனைவியை அவர்களுக்காக வெளியே தள்ளிவிட்டார். அவர்கள் அவளோடு உறவு கொண்டு இரவு முழுவதும் வைகறைவரை அவளை இழிவுபடுத்தினர். அவர்கள் வைகறையானதும் அவளைப் போகவிட்டனர்.

வைகறையில் அப்பெண் வந்து தன் கணவன் இருந்த வீட்டின் கதவருகில் காலைவரை விழுந்துகிடந்தான்.

காலையில் அவள் கணவர் எழுந்து, பயணத்தைத் தொடர, வீட்டின் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். அவர் மறுமனைவியான அப்பெண் வீட்டின் கதவருகில் விழுந்துகிடந்தாள். அவள் கைகள்

அவர் அவளிடம் எழுந்திரு புறப்படுவோம் என்றார். பதில் இல்லை எனவே அவர் அவளைக் கழுதை மீது தூக்கி வைத்து தன் வீட்டை நோக்கி சென்றார்.

அவர் தம் வீட்டிற்கு வந்ததும் ஒரு கத்தியால் தம் மறுமனைவியின் உடலைப் பன்னிரு துண்டுகளாக வெட்டி, அவற்றை இஸ்ரயேலின் எல்லா நிலப்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்.

அதைக் கண்ட அனைவரும், இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து, இந்நாள் வரை இது போன்றது நடந்ததில்லை: இது போன்றதைக் கண்டதுமில்லை: இதைப் பற்றி நீங்கள் சிந்தியுங்கள்: கலந்து பேசுங்கள்: உங்கள் முடிவைத் தெரிவியுங்கள் என்று சொல்லிக் கொண்டனர்.

அதிகாரம் 20.

தாண் தொடங்கிப் பெயேர் செபா வரையிலும், கிலயாது நாட்டிலும் இருந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பாக ஆண்டவர் திருமுன் மிஸ்பாவில் ஒன்று கூடினர்.

இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களைச் சார்ந்த எல்லா மக்களின் தலைவர்களும் கடவுளின் மக்களது சபையாக வந்து நின்றனர். அவர்கள் வாளேந்திய நான்கு இலட்சம் போர் வீரர்கள்.

இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவுக்குச் சென்றனர் என்பதை பென்யமின் மக்கள் கேள்வியுற்றனர். இஸ்ரயேல் மக்கள், இந்தக் கொடிய நிகழ்ச்சி எவ்வாறு நடந்தது என்பதைக் கூறுங்கள் என்று கேட்டனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனான லேவியர் பதிலளித்துக் கூறியது: நானும் என் மறுமனைவியும் இரவில் தங்குவதற்குப் பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவுக்கு வந்தோம்.

கிபயா ஆள்கள் எனக்கெதிராகப் புறப்பட்டு வந்து இரவில் என்னையும் வீட்டையும் சூழ்ந்துகொண்டு என்னைக் கொல்ல முயற்சி செய்தனர். அவர்கள் என் மறுமனைவியை இழிவுபடுத்தவே, அவள் இறந்து போனாள்.

மறுமனைவியின் சடலத்தை எடுத்து வந்து அதைத் துண்டு துண்டாக வெட்டி இஸ்ரயேலின் உரிமைச் சொத்தான அனைத்துப்பகுதிகளுக்கும் அனுப்பினேன். ஏனெனில் அவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராக ஒழுக்கக் கேடான அருவருக்கத்தக்க செயலைச் செய்தனர்.

இதோ! இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் கலந்து பேசி உங்கள் முடிவைத் தெரிவியுங்கள்.

எல்லா மக்களும் ஒரே மனத்தவராயக் கூறியது: நம்மில் எவனும் அவனன் கூடாரத்தில் தங்கியிருந்தாலும், வீட்டில் வாழ்ந்தாலும்-திரும்பிச் செல்லமாட்டான்.

இப்பொழுது நாம் கிபயாவுக்குச் செய்யப்போவது இதுதான்: நம்மில் சீட்டு விழுந்தவர்கள் அதற்கு எதிராகச் செல்வர்.

இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் நூற்றுக்குப் பத்துப்பேரையும், ஆயிரத்துக்கு நூறுபேரையும், பத்தாயிரத்துக்கு ஆயிரம் பேரையும் தேர்ந்தெடுப்போம். இவர்கள் சென்று பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவின் ஆள்கள் இஸ்ரயேலுக்கு எதிராகச் செய்த அருவருக்கத்தக்க செயலுக்குப் பழிவாங்கச் செல்பவர்களுக்கு உணவுப் பொருள்களைக் கொண்டு வரட்டும்.

இஸ்ரயேலின் எல்லா ஆள்களும் ஒன்றிணைந்து நகரை நோக்கிச் சென்றனர்.

இஸ்ரயேலின் குலங்களைச் சார்நந்தவர்கள் பென்யமின் குலம் முழுவதற்கும் ஆளனுப்பி, இந்தத் தீய செயல் உங்கள் நடுவில் நடை பெற்றது ஏன்?

இப்பொழுது கிபயாவில் உள்ள இழிமனிதரை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவர்களைக் கொன்று இஸ்ரயேல் நடுவிலிருந்து தீயதை அழிப்போம் என்றனர். தங்கள் சகோதரரான இஸ்ரயேல் மக்கள் சொன்னதைப் பென்யமின் மக்கள் ஏற்கவில்லை.

பென்யமின் மக்கள் இஸ்ரயேல் மக்களுடன் போரிடுமாறு தங்கள் நகர்களிலிருந்து புறப்பட்டுக் கிபயாவில் வந்து கூடினர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட எழுநூறு கிபயா வாழ் மக்கள் போருக்கு தயாராக இருந்ததுபோக, அன்று பென்யமின் மக்களுள் அதன் நகர்களிலிருந்து வாளேந்திப் போருக்கென ஒன்று திரண்டவர் இருபத்தாறாயிரம் பேர்.

இவர்களைத் தவிர கிபயா வாழ் மக்கள் எழுநூறு பேர் தலைமுடி இழையளவும் குறி தவறாது இடக்கையால் கவண் எறிவர்.

இந்தப் பென்யமின் ஆள்களைத் தவிர இஸ்ரயேல் மக்களுள் நான்கு இலட்சம் பேர் ஒன்று திரண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் போர் வீரர்கள்.

அவர்கள் எழுந்து பெத்தேலுக்குச் சென்றனர். இஸ்ரயேல் மக்கள் யார் எங்களுக்காக முதலில் பென்யமின் மக்களுடன் போருக்குச் செல்வர்? என்று கடவுளிடம் கேட்டனர். ஆண்டவர் முதலில் யூதா செல்லட்டும் என்றார்.

இஸ்ரயேல் மக்கள் சாலையில் எழுந்து, கிபயாவுக்கு எதிரில் பாளையம் இறங்கினர்.

இஸ்ரயேல் ஆள்கள் பென்யமின் மக்களுடன் போர்புரியச் சென்றனர். கிபயாவை நோக்கி அணிவகுத்து நின்றனர்.

பென்யமின் மக்கள் கிபயாவிலிருந்து வெளியே வந்து, அந்நாளில் இருபதாயிரம் இஸ்ரயேல் மக்களை வெட்டி வீழ்த்தினர்.

இஸ்ரயேல் வீரர்கள் தங்களைத் தேற்றிக்கொண்டு முதல் நாள் கூடிய அதே இடத்தில் மீண்டும் போருக்கு அணி வகுத்து நின்றனர்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் திருமுன் மாலைவரை அழுதனர். இஸ்ரயேல் மக்கள் தம் சகோதரர்களாகிய் பென்யமின் மக்களுடன் மீண்டும் போரிடச் செல்லலாமா என்று ஆண்டவரிடம் கேட்டனர். ஆண்டவர், அவர்களுக்கு எதிராகச் செல்லுங்கள் என்றார்.

இரண்டாம் நாள் இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களை நெருங்கினர்.

அன்று பென்யமின் மக்களும் அவர்களுக்கு எதிராகக் கிபயாவிலிருந்து புறப்பட்டு வந்தனர். அவர்கள் மீண்டும் இஸ்ரயேல் மக்களுள் பதினெட்டாயிரம் பேரை வெட்டி வீழ்த்தினர். இவர்கள் அனைவரும் போர்வீரர்.

இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பெத்தேலுக்கு வந்து அழுதனர். அங்கே ஆண்டவர் திருமுன் அமர்நந்து அன்று மாலைவரை உண்ணாநோன்பு இருந்தனர். மேலும் அவர்கள் எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக்கொடுத்தனர்.

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் அறிவுரை கேட்டனர். ஏனெனில் அந்நாள்களில் கடவுளின் உடன்படிக்கையில் பேழை அங்கு இருந்தது.

ஆரோனின் புதல்வன் எலயாசரின் மகன் பினகாசு அன்று அதற்குமுன் நின்று, என் சகோதரர்களாகிய பென்யமின் மக்களுடன் போரிட நான் மீண்டும் செல்ல வேண்டாமா? என்று கேட்டான். ஆண்டவர் செல்லுங்கள் நாளைக்கு அவர்களை உங்களை கையில் ஒப்படைப்பேன் என்றார்.

இஸ்ரயேல் மக்கள் கிபயாவைச் சுற்றி பதுங்கிடம் அமைத்தனர்.

மூன்றாம் நாள் இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களுக்கு எதிராகச் சென்றனர். இம்முறையும் முன்புபோல் கிபயாவுக்கு எதிராக அணிவகுத்து நின்றனர்.

பென்யமின் மக்கள் இஸ்ரயேல் மக்கள் இஸ்ரயேல் மக்களை எதிர்க்க வெளியே வந்தனர். அவர்கள் நகரிலிருந்து வெகு தொலைவுக்கு வந்து விட்டனர். முன்புபோல் இம்முறையும் அவர்கள் பெத்தேலுக்கு செல்லும் நெடுஞ்சாலையிலும், கிபயாவுக்குச் செல்லும் நெடுஞ்சாலையிலும் தாக்கத் துவங்கித் திறந்த வெளியில் ஏறக்குறைய முப்பது பேரைக் கொன்றனர்.

எனவே பென்யமின் மக்கள் முன்பு போலவே நம் முன்னிலையில் இஸ்ரயேல் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர் என்று கூறிக்கொண்டனர். இஸ்ரயேல் மக்களோ நாம் தப்பி ஓடுவதுபோல நடித்து அவர்களை நகரிலிருந்து நெடுஞ்சாலைக்கு இழுப்போம் என்று திட்டமிட்டிருந்தனர்.

எனவே இஸ்ரயேல் வீரர்கள் அனைவரும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து பின்வாங்கிப் பால்தாமாரில் அணிவகுத்து நின்றனர். இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தாயிரம் பேர் கிபயாவுக்கு அருகில் தங்கள் பதுங்கிடங்களிலிருந்து வெளிவந்து நகரைக் கிழக்கிலிருந்து தாக்கினர்.

போர் கடுமையாக இருந்தது. ஆனால் பென்யமின் மக்கள் தங்களுக்குத் தீமை வரப்போகிறது என்பதை உணரவில்லை.

ஆண்டவர் இஸ்ரயேலின் பொருட்டுப் பென்யமினைத் தோற்கடித்தார். அன்று இஸ்ரயேலர் பென்யமின் மக்களுள் இருபத்தையாயிரம் பேரைக் கொன்றனர். அவர்கள் அனைவரும் போர்வீரர்கள்.

பென்யமின் மக்கள் தாங்கள் தோல்வியுற்றதைக் கண்டனர். இஸ்ரயேல் மக்கள் தாங்கள் அமைத்திருந்த பதுங்கிடங்களில் நம்பிக்கை வைத்திருந்ததால் பென்யமின் மக்கள் முன்னேற இடம் அளித்தனர்.

பதுங்கியிருந்தோர் திடீரென கிபயாமீது பாய்ந்தனர். அவர்கள் அணிவகுத்துச் சென்று நகரத்தவர் அனைவரையும் வாளுக்கு இரையாக்கினர்.

பதுங்கியிருந்தோர் இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளமாக பெரும்புகைப் படலத்தை நகரிலிருந்து மேல் எழச்செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய முன்னேற்பாடு.

இஸ்ரயேல் மக்கள் போரில் பின்வாங்கியபோது, அவர்களுள் ஏறக்குறைய முப்பது பேரைப் பென்யமின் மக்கள் கொன்றுவிட்டனர். முன்புபோல், அவர்கள் நம் முன்னிலையில் விரட்டியடிக்கப்பட்டனர் என்று கூறிக்கொண்டனர்.

நகரிலிருந்து பெரும் புகைப்படலம் அடையாளமாக மேல் எழும்பத் தொடங்கியபொழுது, பென்யமின் மக்கள் பின்புறம் திரும்பிப்பார்த்தனர். அந்தோ! நகர் முழுவதும் புகை விண்ணை நோக்கி எழும்பிக் கொண்டிருந்தது.

இஸ்ரயேல் வீரர்கள் திரும்பித் தாக்கவே பென்யமின் வீரர் தங்களுக்கு அழிவு நெருங்குவதைக் கண்டு அஞ்சி நடுங்கினர்.

அவர்கள் இஸ்ரயேல் வீரர் முன்னிலையில் பாலைநிலப்பாதையில் புறமுதுகிட்டு ஓடினர். போரினின்று அவர்களால் தப்ப முடியவில்லை. இஸ்ரயேல் நகர்களிலிருந்து வந்தோர் அவர்களை வெட்டி வீழ்த்தினர்.

அவர்கள் பென்யமின் மக்களை அடித்து நொறுக்கி, அவர்களைத் துரத்திச் சென்று கதிரவன் உதிக்கும் திசையில் கிபயாவின் எதிர்ப்புறம் வரை விடாது துரத்திச் சென்று அழித்தனர்.

பென்யமின் மக்களுள் பதினெட்டாயிரம்பேர் மடிந்தனர். இவர்கள் அனைவரும் ஆற்றல்மிகு வீரர்கள்.

ஏனையோர் பாலைநிலம் நோக்கித் திரும்பி ரிம்மோன் பாறைக்கு ஓடிவந்தனர். இஸ்ரயேலர் பென்யமின் மக்களுள் ஜயாயிரம் பேரை நெடுஞ்சாலைகளில் கொன்றனர். தொடர்ந்து கிதாம்வரை துரத்திச் சென்று அவர்களுள் இரண்டாயிரம் பேரைக் கொன்றனர்.

அந்நாள்களில் பென்யமின் மக்களுள் மடிந்தோரின் எண்ணிக்கை மொத்தம் இருபத்தையாயிரம். இவர்கள் அனைவரும் ஆற்றல்மிகு வாளேந்திய வீரர்கள்.

எஞ்சியிருந்த அறுநூறு பேர் பாலைநிலம் நோக்கித் திரும்பி ரிம்மோன் பாறைக்குத் தப்பி ஓடி அங்கே நான்கு மாதங்கள் வாழ்ந்தனர்.

இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களை நோக்கித் திரும்பி, நகரில் கண்ட அனைவரையும் கால்நடைகளையும் வாளுக்கு இரையாக்கினர். தாங்கள் கண்ட நகர்கள் அனைத்தையும் நெருப்பில் எரித்தனர்.

அதிகாரம் 21.

மிஸ்பாவில் இருந்த இஸ்ரயேல் வீரர்கள், எங்களில் ஒருவனும் தன் மகளைப் பென்யமினுக்கு மணமுடித்து கொடுக்கமாட்டான் என்று ஆணையிட்டுக் கூறினர்.

ஆயினும் மக்கள் பெத்தேலுக்கு வந்து மாலைவரை அங்கே கடவுளின் திருமுன் அமர்நந்து ஓலமிட்டு அழுதனர்.

அவர்கள் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் இந்நாளில் குறைந்திருக்கும் இந்நிலை ஏற்பட்டது ஏன்? என்று கேட்டனர்.

மறுநாள் பொழுது புலர்ந்ததும் அவர்கள் எழுந்து அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக் கொடுத்தனர்.

இஸ்ரயேலின் புதல்வர், இஸ்ரயேல் குலங்கள் அனைத்திலிருந்தும் ஆண்டவர்திருமுன் கூடிய சபைக்கு யார் வரவில்லை? என்று கேட்டனர். ஏனெனில் அவர்கள் மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் கூடும் சபைக்கு வராதவனைக் கண்டிப்பாகக் கொல்வோம் என்று ஆணையிட்டுக் கடும் சபதம் எடுத்திருந்தனர்.

அவர்கள் தங்கள் சகோதரர்களாகிய பென்யமின் புதல்வர் மீது இரக்கம் கொண்டனர். இன்று இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் துண்டிக்கப்பட்டு விட்டது.

நாம் நம் பெண்களை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்க மாட்டோம் என்று ஆண்டவர் பெயரால் ஆணையிட்டுக் கூறியுள்ளோம். அவர்களில் எஞ்சியிருப்போருக்கு மனைவியர் கிடைக்க நாம் என்ன செய்யலாம் என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர்.

இஸ்ரயேலின் குலங்களிலிருந்து மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் கூடிய சபைக்கு எந்தக் குலம் வரவில்லை என்று பார்த்தபொழுது கிலயாதைச் சார்ந்த யாபேசிலிருந்து சபைக்கு ஒருவரும் வரவில்லை என்று கண்டனர்.

மக்கள் எண்ணப்பட்டனர். கிலயாதைச் சார்ந்த யாபேசுவாழ் மக்களுள் ஒருவரும் அங்கே இல்லை.

இஸ்ரயேல் கூட்டமைப்பினர் ஆற்றல்மிகு வீரர்களுள் பன்னீராயிரம் பேர்களிடம், புறப்பட்டுச் செல்லுங்கள், கிலயாதைச் சார்ந்த யாபேசில் வாழும் ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் வெட்டி வீழ்த்துங்கள் என்று கட்டளையிட்டு அனுப்பினர்.

மேலும் அவர்கள் கூறியது: நீங்கள் செய்ய வேண்டியது, எல்லா ஆண்களையும் ஆணுடன் உறவு கொண்ட பெண்களையும் கொன்று விடுங்கள்.

அவ்வாறே வீரர்கள் கிலயாதைச் சார்ந்த யாபேசுவாழ் மக்களுள் ஆணுடன் உறவு கொண்டிராத நானூறு கானான் நாட்டில் இருந்த சீலோ பாசறைக்குக் கொண்டு சென்றனர்.

இஸ்ரயேல் கூட்டமைப்பினா அனைவரும் ரிம்மோன் பாறையில் இருந்து பென்யமின் மக்களுக்குத் தூதனுப்பி, அவர்களுடன் சமாதானம் செய்து கொண்டனர்.

உடனே பென்யமின் புதல்வர் அங்குத் திரும்பி வந்தனர். இஸ்ரயேலர் கிலயாதைச் சார்ந்த யாபேசில் உயிருடன் இருந்த பெண்களை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் மடிமுடித்துக் கொடுக்க பெண்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.

மக்கள் பென்யமின் புதல்வரைக் குறித்து மனம் வருந்தினர். ஏனெனில் ஆண்டவர் இஸ்ரயேல் குலங்களில் ஒரு பிளவை ஏற்படுத்தினார்.

கூட்டமைப்பின் முதியோர்கள் பென்யமின் மக்களில் பெண்கள் அழிக்கப்பட்டு விட்டதால், எஞ்சியோருக்கு மனைவியாகக் கிடைக்கும்படி என்ன செய்யலாம்? என்று கேட்டனர்.

மேலும் அவர்கள் கூறியது: பென்யமின் மக்களுக்குச் சொந்த வாரிசு வேண்டும். இல்லையேல், இஸ்ரயேலில் ஒரு குலம் அழிந்துவிடும்.

நாம் நம் புதல்வியரை அவர்களுக்கு மனைவியாக அளிக்க முடியாது, ஏனெனில் பென்யமின் புதல்வருக்குப் பெண் கொடுப்பவன் சபிக்கப்பட்டவன் என்று ஆணையிட்டுக் கூறியுள்ளோம்.

இதோ! பெத்தேலுக்கு வடக்கே, லெபனோனுக்குத் தெற்கே, பெத்தேலிலிருந்து செக்கேமுக்குச் செல்லும் நெடுஞ்சாலையின் கிழக்கே இருக்கும் சீலோவில் ஆண்டுதோறும் ஆண்டவருக்கு விழா நடைபெறுகின்றது.

எனவே அவர்கள் பென்யமின் புதல்வரை நோக்கி, செல்லுங்கள். திராட்சைத் தோட்டங்களில் ஒளிந்துகொண்டு,

கவனமாக உற்று நோக்குங்கள், சீலோ மகளிர் நடனமாட வெளியே வரும்பொழுது, நீங்கள் திராட்சைத் தோட்டங்களிலிருந்து வெளியே வாருங்கள். ஒவ்வொருவனும் சீலோவின் மகளிருள் ஒருத்தியை உங்களுக்கு மனைவியாகத் தூக்கித் கொண்டு பென்யமின் நாட்டுக்கு ஓடிவிடுங்கள்.

அவர்கள் தந்தையரோ சகோதரரோ எங்களிடம் முறையிட வந்தால் நாங்கள் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் போரில் எங்களுள் எவனும் மனைவியாக எப்பெண்ணையும் கவர்ந்து கொள்ளவில்லை. நீங்களும் அவர்களுக்குப் பெண் கொடுக்கவில்லை. எனவே நீங்கள்தாம் குற்றவாளிகள் என்று பதில் அளிப்போம் என்றனர்.

பென்யமின் புதல்வரும் அவ்வாறே செய்தனர். தங்கள் எண்ணிக்கைக் கேற்ப நடனமாடியவர்களிலிருந்து கவர்ந்த பெண்களைத் தூக்கிக் கொண்டு தங்கள் உரிமைப் பகுதிகளுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கு நகர்களைக் கட்டியெழுப்பி அவற்றில் குடியேறினர்.

அப்பொழுது இஸ்ரயேல் புதல்வர்களுள் ஒவ்வொருவனும் தன் குலத்திற்கும் குடும்பத்திற்கும் திரும்பிச் சென்றான். அங்கிருந்து ஒவ்வொருவனும் தன் உரிமைப் பகுதிக்கு சென்றான்.

அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மைனெப்பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்.

புத்தகம் 8. ரூத்து

அதிகாரம் 1.

நீதித் தலைவர்கள் ஆட்சியாளராய் இருந்த காலத்தில். நாட் டில் ஒரு கோடிய பஞ்சம் உண்டாயிற்று. யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரைச் சார் ந்த ஒருவர் பிழைப்பதற்கென்று தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக் கொண்டு மோவாயு நாட்டிற்கு சென்றார்.

அவர் பெயர் எலிமலேக்கு: அவர் மனைவி பெயர் நகோமி. மைந்தர் இருவரின் பெயர்கள் மக்லோன், கிலியோன் என்பன. அவர்கள் யூதாவிலிருந்த பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்துக் குடியினர்.

அவர்கள் மோவாபு நாட்டை அடைந்து அங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அங்கே இருந்த காலத்தில் எலிமலேங்கு இறந்துபோனார். எனவே, நகோமி தம் இரு மைந்தரைத் தவிர வேறு துணையற்றவரானார்.

அவ்விருவரும் மோவாபு நாட்டுப் பெண்களை மணந்து கொண்டார். ஒருவர் பெயர் ஓர்பா: மற்றவர் பெயர் ரூத்து. அவர்கள் பிழைக்க வந்து ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஆயின.

பிறகு மக்லோனும் கிலியோனும் இறந்து போயினர். நகோமி தம் கணவரையும் இரு மைந்தரையும் இழந்து தன்னந் தனியராய் விடப்பட்டார்.

நாகோமியின் சொந்த நாட்டில் ஆண்டவர் தம் மக்களைக் கருணையுடன் கண்ணோக்கி, அவர்களுக்கு உணவு கிடைக்கும்படிச் செய்தார். இதை நகோமி மோவாபு நாட்டில் இருந்தபோதே கேள்விப்பட்டார். எனவே, அவர் மோவாபு நாட்டை விட்டுப்போக ஏற்பாடு செய்தார்.

பிறகு அவரும், அவருடைய மருமக்கள் இருவரும் தாங்கள் இருந்த இடத்தை விட்டு யூதா நாட்டுக்குப் பயணமானார்கள்.

ஆனால் வழியில் நகோமி அவர்களிடம், உங்கள் தாய் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள். இறந்தவர்களுக்கு எனக்கும் நீங்கள் பரிவு காட்டியதுபோல், ஆண்டவரும் உங்களுக்குப் பரிவு காட்டுவாராக!

நீங்கள் இருவரும் மீண்டும் மணம் செய்துகொண்டு நலமுடன் இல்வாழ்க்கை நடத்த ஆண்டவர் அருள்புரிவாராக! என்று சொல்லி அவர்களை அணைத்து முத்தமிட்டார்.

அவர்களோ கதறி அழுது, இல்லையம்மா, நாங்கள் உம்மோடு வந்து, உம்முடைய இனத்தவரிடையே இருப்போம் என்றார்கள்.

அதற்கு நகோமி, மக்களே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்: என்னோடு வருவதால் உங்களுக்கு என்ன பயன்? நீங்கள் மணந்து கொள்ள மீண்டும் மைந்தரைப் பெற்றுத்தர இனி என்னால் இயலுமா?

மக்களே, திரும்பிச் செல்லுங்கள். எனக்கோ வயதாகிவிட்டது. கணவரோடு கூடி வாழும் பருவமும் கடந்துவிட்டது. அவ்வாறன்றி, பிள்ளை பிறக்கும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு எனச் சொல்லி, இன்றிரவே நான் கணவரோடு கூடி மைந்தரைப் பெற்றெடுத்தாலும்

அவர்கள் பெரியவர்களாகும் வரையில் நீங்கள் வேறு யாரையும் மணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்காகக் காத்திருப்பீர்களா? மக்களே, வேண்டாம். ஆண்டவர் என்னைப் பெருந்துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். என்னால் உங்களுக்கு நேர்ந்தவற்றிற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று சொன்னார்.

அதைக் கேட்டு அவர்கள் மீண்டும் கதறி அழுதார்கள். பிறகு ஓர்பா தம் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றார்.

ஆனால் ரூத்தோ பிரிந்துபோக மறுத்துவிட்டார். நகோமி அவரிடம், இதோ பார்! உன் ஓரகத்தி தன் இனத்தவரையும் தன் தெய்வங்களையும் நோக்கித் திரும்பிப் போய்விட்டாள். அவளைப் போல் நீயும் திரும்பிப்போ என்றார்.

அதற்கு ரூத்து, உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்: உமது இல்லமே எனது இல்லம்: உம்முடைய இனமே எனது இனம்: உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்.

நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன்: அங்கேதான் என் கல்லைறையும் இருக்கும்: சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்: அப்படிப் பிரித்தால் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக& என்றார்.

ரூத்து தம்மோடு வர மன உறுதியுடன் இருப்பதைக் கண்டு, நகோமி வேறொன்றும் கூறவில்லை.

பின்னர் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்து பெத்லகேகம் ஊரை அடைந்தார்கள். அங்கு அவர்கள் வந்து சேர்ந்ததும் அந்த ஊர் முழுவதிலும் பெரும் பரபரப்பு உண்டாயிற்று. ஊர்பெண்கள் இவள் நகோமி தானே? என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். அவரோ,

என்னை நகோமி என அழைக்காதீர்கள்: மாரா என அழையுங்கள்.

நிறைவுடன் இங்கிருந்து சென்றேன். ஆனால் ஆண்டவர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரச் செய்தார். ஆண்டவர் என்னைத் தண்டித்து விட்டார். எல்லாம் வல்லவர் என்மீது துயரத்தைச் சுமத்தியுள்ளார். இப்படியிருக்க என்னை நகோமி என அழைப்பது ஏன்? என்றார்.

இவ்வாறு நகோமியும் அவர் தம் மருமகளான மொவாபியப் பெண் ரூத்தும் அந்நாட்டை விட்டுத்திரும்பி வந்தார். அவர்கள் பெத்லகேகம் ஊர் வந்து சேர்ந்தபோது, வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது.

அதிகாரம் 2.

நகோமிக்குப் போவாக என்ற உறவினர் ஒருவர் இருந்தார். அவர் செல்வமும் செல்வாக்கும் உடையவர்: எலிமலேக்கின் வழியில் உறவானவா.

ரூத்து நகோமியிடம், நான் வயலுக்குப் போய், யார் என்னைக் கருணைக் கண்டுகொண்டு நோக்குவாரோ, அவர் பின்னே சென்று கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருகிறேன். எனக்கு அனுமதி தாரும் எனறார். அவரும், போய் வா, மகளே என்றார்

ரூத்து ஒரு வயலுக்குப் போய் அறுவடையாளர்கள் பின்னால் சென்று, அவர்கள் சிந்திய கதிர்களைப் பொறுக்கிச் சேர்த்தார். தற்செயலாக அவர் போயிருந்த அந்த வயல் எலிமலேக்கிற்கு உறவினராக போவாசுக்கு உரியதாய் இருந்தது.

சிறிது நேரம் கழித்து, போவாசு பெத்லகேமிலிருந்து அங்கு வந்து அவர் சேர்ந்தார். அவர் அறுவடையாளர்களை நோக்கி, ஆண்டவர் உங்களோடு இருப்பாராக! என்றார். அவர்களும் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக! என்றார்கள்.

அவர் அறுவடையாள்களின் கண்காணியிடம் இவள் யார் வீட்டுப் பெண்? என்று கேட்டார்.

அதற்கு அறுவடையாள்களுக்கு மேற்பார்வையாளராய் நியமிக்கப்பட்டிருந்த வேலையாள், இவள்தான் மோவாபு நாட்டிலிருந்து திரும்பியுள்ள நகோமியோடு வந்திருக்கும் மோவாபியப் பெண்.

அறுவடையாள்களின பின்னே சென்று, சிந்தும் கதிர்களைப் பொறுக்கிக் கொள்வதற்கு என்னிடம் அனுமதி கேட்டாள். காலை முதல் இதுவரையில் அவள் சிறிதும் ஓய்வின்றிக் கதிர் பொறுக்கிக் கொண்டிருந்தாள். இப்போதுதான் அவள் பந்தல் நிழலில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள் என்றார்.

பிறகு போவாசு ரூத்தை நோக்கி பெண்ணே நான் சொல்வதைக் கேள். இந்த வயலைத் தவிர வேறு எந்த வயலுக்கும் போய் நீ கதிர் பொறுக்க வேண்டாம். என் வயலில் வேலை செய்யும் பெண்களுடன் இங்கேயே இரு.

அறுவடையாளர்கள் வேலை செய்யும் இடத்தை நன்றாகக் கவனித்து. அங்கே போய் அவர்கள் பின்னால் கதிர் பொறுக்கும் பெண்களோடு நீயும் இரு. எந்த வேலைக்காரனும் உனக்குத் தொந்தரவு கொடுக்க கூடாதென நான் கட்டளையிட்டிருக்கிறேன். உனக்குத் தாகம் எடுத்தால் அவர்கள் நிரப்பி வைத்துள்ள பாண்டங்களிலிருந்து தண்ணீர் அருந்திக் கொள் என்றார்.

ரூத்து போவாசின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி என்னைஏன் இவ்வாறு கருணைக் கண் கொண்டு நோக்குகிறீர். அயல் நாட்டுப்பெண்ணாகிய என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறீர்? என்று கேட்டார்.

போவாசு, உன் கணவன் இறந்ததிலிருந்து உன் மாமியாருக்காக நீ செய்துள்ள அனைத்தையும் கேள்விப்பட்டேன். உன் தந்தையையும் தாயையும் சொந்த நாட்டையும் துறந்துவிட்டு, முன்பின் தெரியாத ஓர் இனத்தாருடன் வாழ நீ வந்திருப்பது எனக்குத் தெரியும்.

நீ செய்துள்ள அனைத்திற்கும் ஆண்டவர் உனக்குத் தகுந்த பலன் அளிப்பார். இஸ்ரயோலின் கடவுளான ஆண்டவருடைய இறக்கைகளின் அரவணைப்பை நீ தேடி வந்திருக்கிறாய். அவர் உனக்கு முழு நிறைவான பலனை அருள்வார் என்றார்.

அதற்கு ரூத்து, ஜயா, கருணைமிகும் கண்கொண்டு நோக்கின்றீர். உம்முடைய பணிப்பெண் அல்லாத என்னைக் கனிமொழி கொண்டே தேற்றுகின்றீ+ என்றார்.

உணவு வேளை வந்ததும் போவாசு ரூத்திடம், இங்கே வந்து இந்த அப்பத்தை எடுத்துப் புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்துச் சாப்பாடு என்றார். அவரும் அவ்வாறே போய் அறுவடையாள்களுடன் உட்கார்ந்து கொண்டார். அவர் பசிதீர உண்டபின்னும் சிறிதளவு உணவு எஞ்சியது.

பிறகு அவர் மீண்டும் கதிர் பொறுக்க எழுந்து சென்றார். போவாசு தம் அறுவடையாள்களிடம், அரிகட்டுகள் கிடக்குமிடத்தில் அவள் கதிர் பொறுக்கட்டும். அவளை யாரும் அதட்ட வேண்டாம்.

மேலும் கட்டுக்களிலிருந்து சில கதிர்களை உருவிப்போட்டு விடுங்கள். அவள் பொறுக்கி கொள்ளட்டும். யாரும் அவளை தடுக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார்.

அவருடைய வயலில் ரூத்து மாலை வரை கதிர்களை பொறுக்கிச் சேர்த்தார். அவற்றைத் தட்டி புடைத்து நிறுத்த போது வாற்கோதுமை ஏறத்தாழ இருபது படி இருந்தது.

அவர் அதை எடுத்துக் கொண்டு ஊருக்குள் சென்று தம் மாமியாரிடம் காட்டினார்: அவர் உண்ட பின் எடுத்து வைத்திருந்த உணவையும் அவரிடம் கொடுத்தார்.

அவர்தம் மாமியார் அவரிடம், இன்று எந்த வயலில் கதிர் பொறுக்கினாய்? அது யாருடைய வயல்? என்று கேட்டுவிட்டு, உனக்குப் பரிவு காட்டியவருக்கு ஆண்டவர் ஆசி வழங்குவாராக! என்றார். ரூத்து தம் யாரிடமும் தாம் கதிர் பொறுக்கின வயல் இன்னாருடையது என்பதைத் தெரிவிப்பதற்காக, நான் இன்று கதிர் பொறுக்கின வயலின் உரிமையாளர் போவாசு என்றார்.

நகோமி அவரிடம், அப்படியா? வாழ்வோருக்கும் இறந்தோர்க்கும் என்றும் பேரன்பு காட்டும் ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்குவாராக என்றார். மேலும் அவர், போவாசு நமக்கு நெருங்கிய உறவினர்: நம்மைக் காப்பாற்றும் கடமையுள்ள முறை உறவினரும் ஒருவர் என்றார்.

மோவாபியரான ரூத்து மீண்டும் அவர் அறுவடை முடியும்வரை தம்முடைய ஆள்களுடன் நான் கதிர் பொறுக்கிக் கொள்ளலாமென்று என்னிடம் சொன்னா+ என்றார்.

நகோமி தம் மருமகள் ரூத்திடம் ஆம் மகளே நீ அவருடைய பணிப் பெண்களோடு இருப்பதுதான் நல்லது. வேறொருவனது வயலுக்கு நீ போனால், அங்குள்ள ஆண்கள் உனக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடும் என்று சொன்னார்.

அவ்வாறே ரூத்து போவாசின் பணிப்பெண்களை விட்டுப் பிரியாதிருந்து, வாற்கோதுமையும் கோதுமையும் அறுவடையாகும் வரை கதிர் பொறுக்கி வந்தார்: தம் மாமியாருடனேயே தங்கியிருந்தார்.

அதிகாரம் 3.

ஒரு நாள் மாமியாராகிய நகோமி ரூத்திடம் நீ இல்வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் இருக்குமாறு செய்வது என் கடமை அல்லவா?

போவாசு நமக்கு உறவினர். அவருடைய பணிப்பெண்களோடுதான் நீ இத்தனை நாள்களும் இருந்தாய். நான் சொல்வதைக் கவனமாயக் கேள். இன்றிரவு அவர் களத்தில் வாற்கோதுமையைத் தூற்றிக் கொண்டிருப்பார்.

நீ குளித்துவிட்டு, எண்ணெய் தடவிக் கொண்டு, உன்“னிடமுள்ள ஆடைகளில் மிகவும் நல்லதை உடுத்திக் கொள்: பின்னர் அவருடைய களத்துக்குப் போ. ஆனால் அவர் உண்டு குடிக்கும் வரை, அவர் கண்ணில் படாமலிரு: அவர் படுக்கும் இடத்தைப் பார்த்து வைத்துக் கொள்.

அவர் உறங்கியதும், நீ சென்று அவர் கால்களை மூடியிருக்கும் போர்வையை விலக்கிவிட்டு, அங்கேயே படுத்துக் கொள். அதற்கு மேல் நீ செய்ய வேண்டியதை அவரே உன்னிடம் சொல்வார் என்றார்.

ரூத்து, நீர் சொல்லித்தந்த அனைத்தையும் நான் செய்கிறேன் என்றார்.

அவ்வாறே ரூத்து அந்தக் களத்துக்கு சென்று, தம் மாமியார் சொல்லித் தந்த அனைத்தையும் செய்தார். போவாசு உண்டு குடித்து மகிழ்ச்சியாய் இருந்தார்.

பிறகு, அவர் தானியக் குவியல் ஒன்றின் அருகே சென்று உறங்குவதற்காகப் படுத்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து ரூத்து ஓசையின்றி அங்கே சென்று அவர் கால்களை மூடியிருந்த போர்வையை விலக்கி விட்டுப் படுத்துக் கொண்டார்.

நள்ளிரவில் திடீரென்று போவாசு விழித்துக் கொண்டார்: தலை உயர்த்திப் பார்க்கையில் தம் காலருகில் ஒரு பெண் படுத்துக்கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டார். உடனே அவர், யார் நீ? என்று கேட்க, அவர், நான் தான் ஜயா, ரூத்து உம்முடைய அடியாள். நீரே என்னைக் காப்பாற்றும் கடமையுள்ள என் முறை உறவினர். அந்த முறைப்படி என்னை உமது போர்வையால் மூடும் என்றார்.

அதற்கு அவர் என் மகளே, ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! நீ இது வரை காட்டிய குடும்பப் பற்றை விட இப்போது காட்டும் குடும்பப் பற்றே மேலானது என்பேன்.

ஏனெனில் பணமுள்ள ஓர் இளைஞனை நீ நாடவில்லை: ஏழையாயினும் இளைஞனே வரவேண்டும் என்று நீ கேட்கவில்லை.

என் மகளே, கவலைப்படாதே! என் உறவின் முறையினர் அனைவருக்கும் நீ எவ்வளவு நல்லவள் என்பது தெரியும். நீ கேட்பது அனைத்தையும் நான் செய்து முடிப்பேன்.

நான் உன்னைக் காப்பாற்றும் கடமையுள்ள உன்னுடைய முறை உறவினன் என்பது உண்மைதான். எனினும், என்னைவிட இன்னும் நெருங்கிய முறைஉறவினர் ஒருவர் உனக்கு இருக்கிறார்.

இந்த இரவு கழியும்வரை நீ இங்கேயே இரு. காலையில் அவர் உன்னுடைய முறை உறவினராகத் தம் கடமையை ஏற்றுக் கொள்ள முன்வருவாரானால் நல்லது. அவர் ஏற்றுக் கொள்ளாவிடில், நானே அக்கடமையை ஏற்றுக்கொள்வேன். வாழும் ஆண்டவர் மேல் இதை ஆணையிட்டுக் கூறுகிறேன். பொழுது புலரும்வரை இங்கேயே படுத்திரு என்றார்.

அவ்வாறே ரூத்து பொழுது புலரும்வரை அவர் அருகே படுத்திருந்தார். ஒரு பெண் களத்திற்கு வந்திருந்தது யாருக்கும் தெரியக்கூடாது என்று போவாசு ஏற்கனவே அவரிடம் சொல்லியிருந்தார். அதற்கிணங்க, ஆள் அடையாளம் கண்டுகொள்ள இயலாத வைகறைப் பொழுதிலேயே ரூத்து எழுந்து விட்டார்.

போவாசு அவரிடம், உன் போர்வையை விரித்துப்பிடி என்றார். அவரும் அவ்வாறே செய்தார். அவர் ஆறு மரக்கால் எடையுள்ள வாற்கோதுமையை அதில் கொட்டி, அதை அவர் எடுத்துப் போகுமாறு கொடுத்தார்.

ரூத்து மாமியாரிடம் வந்ததும், நகோமி, மகளே, என்ன நடந்தது? என்று கேட்டார். போவாசு தமக்குச் செய்ததையெல்லாம் ரூத்து கூறினார்.

மேலும் அவர், நான் உம்மிடம் வெறுங்கையோடு வரக்கூடாது என்று அவர் ஆறு மரக்கால் வாற்கோதுமையும் கொடுத்தார் என்றார்.

நகோமி அவரிடம், மகளே, இது எப்படி முடியும் என்பதை அறியும்வரை காத்திரு. அவர் காலந்தாழ்த்தமாட்டார்: இன்றே இதற்கு நல்லதொரு முடிவு காண்பார் என்றார்.

அதிகாரம் 4.

இதற்கிடையில், போவாசு பொது மன்றம் கூடும் நகர வாயிலுக்குச் சென்று அங்கே அமர்ந்து கொண்டார். போவாசு முன்பு குறிப்பிட்ட எலிமலேக்கின் முறைஉறவினர் அவ்வழியாக வந்தார். போவாசு அவரைப் பெயர் சொல்லி அழைத்து, இங்கே வந்து சற்று உட்காரும் என்றார். அவரும் அவ்வாறே அருகில் வந்து உட்கார்ந்தார்.

பிறகு போவாசு ஊர்ப்பெரியோருள் பத்துப் பேரை வரவழைத்து இங்கே சற்று உட்காருங்கள் என்றார்.

அவர்கள் உட்கார்ந்தவுடன் போவாசு அந்த உறவினரை நோக்கி, நம் நெருங்கிய உறவினரான எலிமலேக்கிற்குச் சொந்தமான துண்டு நிலம் ஒன்று இருப்பது உமக்கு தெரியும் அல்லவா? மோவாபு நாட்டிலிருந்து திரும்பி வந்திருக்கும் நகோமி இப்போது அதை விற்கப் போகிறார்.

இதை உம் காதில் போட்டு வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இங்கு அமர்ந்திருப்பவர் முன்னிலையிலும் என் உறவின்முறைப் பெரியோர் முன்னிலையிலும் அந்த நிலத்தை நீர் வாங்கிக் கொள்ளும்: விருப்பமில்லையெனில் சொல்லிவிடும். ஏனெனில் அதை மீட்கும் உரிமை முதலில் உமக்கும் உமக்குப் பின் எனக்கும் உண்டு: வேறெவர்க்கும் இல்லை என்றார். அதற்கு அவர், சரி வேண்டுமானால் வாங்கிக் கொள்கிறேன் என்றார்.

போவாசு அவரிடம், ஆனால் நகோமியிடமிருந்து இந்த நிலத்தை நீர் வாங்கும் நாளில், இறந்தவனின் மனைவியான மோவாபியப் பெண் ரூத்தை உம் மனைவியாக ஏற்றுக்கொள்கின்றீர் என்பதைத் தெரிந்து கொள்ளும். இறந்துபோனவருக்கு வழிமரபு தோன்றுவதற்காகவும் அவரது குடும்பச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருப்பதற்காகவும் நீர் இதைச் செய்ய வேண்டும் என்றார்.

அவரோ என்னால் அந்த நிலத்தை வாங்க இயலாது. ஏனெனில் இதனால், என் குடும்பத்திற்குரிய உரிமைச் சொத்து குறைந்து போகும். நீரே அந்த உரிமையை எடுத்துக் கொள்ளும். என்னால் நிலத்தை வாங்கவே இயலாது என்றார்.

இஸ்ரயேலரிடையே பண்டைக் காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நிலவிற்பனை அல்லது கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது எடுக்கும் முடிவை உறுதிப்படுத்துவதற்காக, ஒருவர் தம் காலணியைக் கழற்றி மற்றவரிடம் கொடுத்துவிடுவார். எடுக்கப்பட்ட முடிவை உறுதிப்படுத்தும் முறை இதுவே.

அவ்வாறே அந்த முறை உறவினர் போவாசிடம், நீரே வாங்கிக்கொள்ளும் என்று சொன்னபோது, அவர் தம் காலணியைக் கழற்றி அவரிடம் கொடுத்தார்.

அதன்பின் போவாசு அங்கிருந்த பெரியோரையும் மற்றெல்லாரையும் நோக்கி, நான் எலிமலேக்கு, கிலியோன், மக்லோன் ஆகியோருக்கு உரிமையான அனைத்தையும் நகோமியிடமிருந்து வாங்கி விட்டேன்: இதற்கு இன்று நீங்களே சாட்சி.

மேலும், மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபியப் பெண் ரூத்தை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இறந்தவரின் உரிமைச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருக்கவும் அப்பெயர் அவருடைய உறவின்முறையிலும் ஊரிலும் நீடித்திருக்கவும் இதைச் செய்கிறேன். இதற்கும் நீங்கள் இன்று சாட்சி என்றார்.

அதற்கு நகர வாயிலில் இருந்த பெரியோரும் மற்றெல்லாரும் ஆம்: நாங்கள் சாட்சிகள். இஸ்ரயேலின் குடும்பம் பெருகச் செய்த ராகேல் லேயாள் இருவரைப் போல உமது இல்லம் புகுந்திடும் இந்தப் பெண்ணும் இருக்கும் வண்ணம் ஆண்டவர் அருள்க! எப்ராத்தில் வளமுடன் நீர் வாழ்க! பெத்லகேமில் புகழுடன் நீர் திகழ்க!

ஆண்டவர் இந்தப் பெண் வழியாக அருளும் பிள்ளைகளால் உமது குடும்பம் யூதா தாமார் மகனாம் பெரேட்சு குடும்பம் போன்று விளங்குதாக! என்று வாழ்த்தினர்.

இவ்வாறு போவாசு தாம் சொன்னபடியே ரூத்தைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரை மணந்து கொண்டார். அவர்கள் கூடி வாழ்ந்த போது, அவர் கருத்தரிக்க ஆண்டவர் அருள்கூர்ந்தார். ரூத்து ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார்.

ஊர்ப் பெண்கள் நகோமியைப் பார்த்து, ஆண்டவர் திருப்பெயர் போற்றி! போற்றி! உன்னைக் காக்கும் பொறுப்பினை உடையான் ஒருவனை அவர்தாம் அருளியுள்ளாரே: இஸ்ரயேலில் அவனது பெயரும் புகழுடன் ஓங்கித் திகழுவதாக!

புதுவாழ்வுனக்கு அன்னவன் தருவான்: முதுமையில் உனக்கு அன்னமும் அளிப்பான்: உன்பால் கொண்ட அன்பால், உனக்கு மைந்தர் எழுவரின் மேலாய் விளங்கும், மருமகள் அவனை ஈன்றவள் அன்றோ! என்று வாழ்த்தினார்கள்.

நகோமி குழந்தையைக் கையில் எடுத்து மார்போடணைத்துக் கொண்டார். அவரே, அதைப் பேணி வளர்க்கும் தாயானார்.

சுற்றுப்புறப் பெண்கள், நகோமிக்கு ஒரு மகன் பிறந்துள்ளான் என்று சொல்லி, அவனுக்கு ஓபேது என்று பெயரிட்டார்கள், அவனே தாவீதின் தந்தையான ஈசாயின் தந்தை.

பெரேட்சின் வழித்தோன்றல்களின் அட்டவணை இதுவே: பெரேட்சுக்கு எட்சரோன் பிறந்தார்.

எட்சரோனுக்கு இராம் பிறந்தார்: இராமுக்கு அம்மினதாபு பிறந்தார்:

அம்மினதாபுக்கு நகுசோன் பிறந்தார்: நகுசோனுக்குச் சல்மோன் பிறந்தார்.

சல்மோனுக்குப் போவாசு பிறந்தார்: போவாசுக்கு ஓபேது பிறந்தார்.

ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்: ஈசாய்க்குத் தாவீது பிறந்தார்.

புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல்

அதிகாரம் 1.

எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிரம் சோப்பிமில் எல்கானா என்ற ஒருவர் இருந்தார். இவர் எப்ராயிமைச் சார்ந்த சூப்பின் மகனான தோகூவின் மைந்தனான எலிகூபின் புதல்வனான எரொகாமின் மகன்.

அவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரு மனைவியர் இருந்தனர்: பெனின்னாவுக்குக் குழந்தைகள் இருந்தனர். அன்னாவுக்கோ குழந்தைகள் இல்லை

எல்கானா ஆண்டுதோறும் சீலோவில் படைகளின் ஆண்டவரை வழிபடவும் அவருக்குக் பலி செலுத்தவும் தம் நகரிலிருந்து சென்று வருவார். அங்கே ஆண்டவரின் குருவான ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் இருந்தனர்.

எல்கானா, தாம் பலி செலுத்திய நாளில், தம் மனைவி பெனின்னாவுக்கும் அவளுடைய புதல்வர் புதல்வியர் அனைவருக்கும் பங்கு கொடுப்பதுண்டு.

அன்னாவின் மீது அன்புகொண்டிருந்தும் அவருக்கு ஒரே பங்கைத்தான் அளித்தா+. ஏனெனில் ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார்.

ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார் அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள்.

இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது: அவர் ஆண்டவரின் இல்லம் வந்த போதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார்.

அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி அன்னா ந¨ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரை விட மேலானவன் அன்¥றோ? என்பார்.

ஒருநாள் அவர்கள் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி,ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அன்னா மனம் கசந்து அழுது புலம்பி, ஆண்டவரிடம் மன்றாடினார்.

அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டது: படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி. என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியேபடாது.

அவர் இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார்.

அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன: குரல் கேட்கவில்லை, ஆகவே ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார்.

ஏலி அவரை நோக்கி, எவ்வளவு காலம் நீர் குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து என்றார்,

அதற்கு அன்னா மறுமொழியாக, இல்லை உன் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண், திராட்சை இரசத்தையோ நான் அருந்தவில்லை, மாறாக, ஆண்டவர் திரு முன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்,

உம் அடியாளை ஒரு கீழ்த்தரப்பெண்ணாகக் கருதவேண்டாம், ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக்கொண்டிருந்தேன் என்று கூறினார்.

பிறகு ஏலி, மனநிறைவோடு செல், இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வா+ என்று பதிலளித்தார்,

அதற்கு அன்னா, உம் அடியாள் உம் கண்முன்னே அருள்பெறுவாளாக! என்று கூறித் தம் வழியே சென்று உணவு அருந்தினார். இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவலேலை,

அவர்கள் காலையில் எழுந்து ஆண்டவர் திருமுன் வழிபட்டுவிட்டுத் திரும்பிச்சென்று இராமாவில் இருந்த தங்கள் இல்லம் அடைந்தனர். எல்கானா தம் மனைவி அன்னாவோடு கூடி வாந்தனர், ஆண்டவரும் அவரை நினைவு கூர்ந்தார்,

உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுத்தார், நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன் என்று சொல்லி, அவர் அவனுக்குச் சாமுவேல் என்று பெயரிட்டார்.

எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனை¨யும் செலுத்தச் சென்றார்கள்,

ஆனால், அன்னா செல்லவில்லை, அவர் தம் கணவரிடம், பையன் பால் குடி மறந்ததும் அவனை எடுத்ச செல்வேன், அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான் என்று சொன்னார்.

அவர் கணவர் எல்கானா, உனக்குச் சிறந்தது எனப்படுவதைச் செய், பையன் பால் குடி மறக்கும் வரை இரு, ஆண்டவர் தம் வார்த்தையை உறுதிப்படுத்துவாராக! என்று அவரிடம் கூறினார், ஆகவே அவர் தங்கியிருந்து பால்குடி மறக்கும் வரை தம் மகனுக்குப் பாலூட்டி வந்தார்,

அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக் கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார், அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான்,

அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள்,

பின் அவர் கூறியது: என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டிருந்த பெண் நானே.

இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன், நான் ஆண்டவரிடம் வ§ண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேகட்டருளினார்,

ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன், அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன், அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்,

அதிகாரம் 2.

அப்பொழுது அன்னா மன்றாடிக் கூறியது: ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன்.

ஆண்டவரைப் போன்ற தூயவர் வேறு எவரும் இலர்! உம்மையன்றி வேறு எவரும் இலர்! நம் கடவுளைப் போன்ற வேறு பாறை இல்லை,

இறுமாப்புடன் இனிப்பேச வேண்டாம்! உங்கள் வாயில் வீம்பு வெளிப்பட வேண்டாம்! ஏனெனில், ஆண்டவர் அறிவின் இறைவன்! செயல்களின் அளவை எடை போடுபவர் அவரே!

வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!

நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர். பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தோர் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ தனியள் ஆகின்றாள்!

ஆண்டவர் கொல்கிறார்: உயிரும் தருகின்றார்: பாதாளத்தில் தள்ளுகிறார்: உயர்த்துகின்றார்:

ஆண்டவர் ஏழையாக்குகிறார்: செல்வராக்குகின்றார்: தாழ்த்துகின்றார்: மேன்மைப்படுத்துகின்றார்:

புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்: குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்: உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! உலகின் அடித்தளங்கள் ஆண்டவருக்கு உரியவை! அவற்றின் மேல் அவர் உலகை நிறுவினார்!

தம்மில் பற்றுக்கொண்டோர் காலடிகளை அவர் காப்பார்! தீயோர், இருளுக்கு இரையாவார்! ஏனெனில் ஆற்றலால் எவரும் வலியவர் ஆவதில்லை!

ஆண்டவரை எதிர்ப்போர் நொறுக்கப்படுவர்! அவர் அவர்களுக்கு எதிராக வானில் இடிமுழங்கச் செய்வார்! ஆண்டவர் உலகின் எல்லை வரை தீர்ப்பிடுவார்!

எல்கானா இராமாவிலுள்ள தம் வீட்டிற்குச் சென்றார். சிறுவனோ குரு ஏலியின் முன்பாக ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான்.

அப்போது ஏலியின் புதல்வர்கள் கீழ்த்தரமானவராக இருந்தனர். அவர்கள் ஆண்டவர்மீது அக்கறை கொள்ளவில்லை.

அந்தக் குருக்களின் மக்களிடம் பின் வருமாறு நடந்து கொண்டனர். யாராவது பலி செலுத்தினால், இறைச்சி வேகும்போதே கையில் மூன்று பல் கொக்கியுடன் குருவின் பணியாள் வருவாள்.

அவன் அதைக் கொப்பறையிலோ, அண்டாவிலோ, சட்டியிலோ, பானையிலோ விடுவாள். கொக்கியில் அகப்படுவதை எல்லாம் குருவுக்கென்று எடுத்துக்கொள்வான். சீலோவுக்கு வந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் இவ்வாறு செய்தனர்.

அதோடு கொழுப்பு எரிவதற்கு முன்பே குருவின் பணியாள் பலி செலுத்தபவரிடம் வந்து, குருவுக்குச் கமைக்க இறைச்சி கொடும். வெந்த இறைச்சியன்று, பச்சையானதே அவர் உம்மிடமிருந்து பெறுவார் என்பான்.

யாராவது அவனிடம் தற்போது கொழுப்பு எரியட்டும்: பிறகு நீ விரும்பியதை எடுத்துக்கொள் என்று சொன்னால் அதற்கு அவன், இல்லை. நீர் இப்பொழுதே கொடும், இல்லையேல், நான் வலிந்து எடுத்துக் கொள்வேன் என்று சொல்வான்.

ஆகவே அந்த இளைஞரின் பாவம் ஆண்டவரின் திருமுன் மிகப் பெரியதாகவே இருந்தது. ஏனெனில் அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட படையல்களைத் துச்சமாகக் கருதினார்கள்.

ஆண்டவர்முன் ஊழியம் செய்த சிறுவன் சாமுவேல் நார்ப்பட்டாலான ஏபோது அணிந்திருந்தான்,

சாமுவேலின் தாய் அவனுக்காக ஆண்டுதோறும் ஒரு சிற்றாடை தைத்து தம் கணவரோடு ஆண்டுப்பலி செலுத்தச் சென்றபோது அவனிடம் கொடுப்பார்.

எல்கானாவுக்கும் அவர் மனைவிக்கும் ஏலி ஆசி வழங்கி எல்கானாவை நோக்கி, ஆண்டவர் இப் பெண் வழியாக, இவள் அவருக்கு நேர்ந்தளித்தவனுக்குப் பதிலாக, உனக்கு வழிமரபை அருள்வாராக என்று கூறுவார். பிறகு அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வர்.

ஆண்டவர் அன்னாவைக் கடைக்கண் நோக்கினார். அவர் கருவுற்று மூன்று ஆண்களையும் இரண்டு பெண்களையும் பெற்றெடுத்தார். சிறுவன் சாமுவேலோ ஆண்டவர் திருமுன் வளரலானான்.

ஏலி முதிர்ந்த வயதடைந்தார். தம் பிள்ளைகள் இஸ்லயேருக்கு எதிராகச் செய்த அனைத்தையும், சந்திப்புக் கூடார வாயிலில் ஊழியம் செய்து வந்த பெண்களோடு தகாத உறவு கொண்டிருந்ததையும் கேட்டறிந்தார்,

அவர் அவர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? இவ்வனைத்தும் மக்களிடமிருந்தும் உங்கள் தீய நடவடிக்கைகளைப்பற்றிக் கேள்விப்படுகிறேனே!

வேண்டாம் பிள்ளைகளே! ஆண்டவரின் மக்களிடையே பரவி இருப்பதாக நான் கேள்விப்படும் இச்செய்தி நல்லதல்ல.

ஒருவர் மனிதருக்கு எதிராகப் பாவம் செய்தால் வேறெவராவது கடவுளிடம் அவருக்காகப் பரிந்து பேசலாம். ஆனால் ஒருவர் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தால் அவருக்காகப் பரிந்து பேசுவோர் யார்? இருப்பினும் அவர்கள் தங்கள் தந்தையின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் கொல்லப்பட வேண்டுமென்பது ஆண்டவரின் திருவுளமாக இருந்தது.

சிறுவன் சாமுவேல் வளர்ந்து ஆண்டவருக்கும் மனிதருக்கும் உகந்தவனாய் இருந்து வந்தான்.

அப்ஆபாது இறையடியார் ஒருவர் ஏலியிடம் வந்து கூறியது: ஆண்டவர், இவ்வாறு கூறுகிறார்: எகிப்து நாட்டில் பார்வோன் வீட்டாருக்கு உன் மூதாதை வீட்டார் அடிமைகளாக இருந்தபோது அவர்களுக்கு நான் என்னையே வெளிப்படுத்தினேன்.

என் பீடத்தில் திருப்பணி புரியவும், தூபம் காட்டவும், என்முன் ஏபோது அணியவும், அவர்களை நான் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களினின்றும் தேர்ந்தெடுத்தேன். இஸ்ரயேல் மக்கள் எனக்குச் செலுத்திய நெருப்புப் பலிகள் அனைத்தையும் நான் உன் மூதாதை வீட்டாருக்கே கொடுத்தேன்.

பின் நானே கட்டளையிட்ட பலிகளையும், படையல்களையும் துச்சமாய் மதிப்பது ஏன்? உன் புதல்வர்களை எனக்கு மேலாக உயர்த்தி, என் மக்கள் இஸ்ரயேல் செலுத்தும் ஒவ்வொரு படையலிலும் சிறந்தவற்றை எடுத்துக்கொண்டு உங்களையே கொழுக்க வைப்பதேன்?

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: உன் வீடும் உன் மூதாதை வீடும் என்முன்பாக என்றென்றும் ஊழியம் புரிவீர் என வாக்களித்திருந்தேன். ஆனால் தற்போது ஆண்டவர் கூறுவது: இவ்வாக்கு என்னைவிட்டு அகல்வதாக! ஏனெனில், என்னை மதிப்போரை நான் மதிப்பேன் : என்னை இகழ்வோர் இகழ்ச்சி அடைவர்.

இதோ! நாள்கள் நெருங்குகின்றன. அப்பொழுது, உன் ஆற்றலையும் உன் மூதாதை வீட்டாரின் ஆற்றலையும் நான் அழிப்பேன். உன் வீட்டில் ஒரு முதியவர்கூட இருக்கமாட்டார்.

அப்போது ஏனைய இஸ்ரயேலருக்கு அருளப்படும் அனைத்து நலனையும் நீ பொறாமையோடு மனம் வெதும்பிப் பார்ப்பாய். உனது வீட்டிலோ என்றென்றும் ஒரு முதியவர் கூட இருக்கமாட்டார்.

என் பீடப்பணியினின்று விலக்கி விடாமல் நான் வைத்துக் கொள்ளவிருக்கும் உங்களுள் ஒருவன் கண்கள் மங்கி, மனம் தளர்வடையுமட்டும் இருப்பான். ஆனால் உன் வீட்டில் வளரும் தலைமுறையினர் இளம் வயதில் சாவர்.

உன் இரு புதல்வராக ஒப்னிக்கும் பினகாசுக்கும் ஏற்பட விருப்பது உனக்கு ஓர் அடையாளமாக இருக்கட்டும். ஒரே நாளில் அவர்கள் இருவரும் மடிவர்.

என் திட்டத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்பச் செயல்படும் நம்பிக்கைக்குரிய ஒரு குருவை நான் எழுப்புவேன். அவனுக்கு ஒரு நிலையான வீட்டைக் கட்டி எழுப்புவேன். அவன் எந்நாளும் என்னிடம் திருப்பொழிவு பெறுபவனுக்குப் பணி செய்வான்.

எஞ்சியுள்ள உன் வீட்டார் அனைவரும் ஒரு வெள்ளிக் காசுக்கோ ஓர் அப்பத்துக்கோ அவனிடம் வந்து கையேந்தி நின்று தயைகூர்ந்து எனக்கு ஓர் அப்பம் கிடைக்குமாறு குருத்துவ ஊழியத்தில் என்னைச் சேர்த்தருளும் என்பார்கள்.

அதிகாரம் 3.

சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை.

அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண் பார்வை மங்கிவிட்டதால் அவளால் பார்க்க முடியவில்லை.

கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார்.

அப்போது ஆண்டவர், சாமுவேல் என்று அழைத்தார். அதற்கு அவன், இதோ! அடியேன் என்று சொல்லி,

ஏலியிடம் ஓடி, இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா? என்று கேட்டான். அதற்கு அவர், நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள் என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான்.

ஆண்டவர் மீண்டும் சாமுவோல் என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா? என்று கேட்டான். அவரோ, நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள் என்றார்.

சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

மூன்றாம் முறையாக ஆண்டவர் சாமுவேல் என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று இதோ அடியேன். என்ன¨ அழைத்தீர்களா? என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டாள்.

பின்பு ஏலி சாமுவேலை நோக்கி சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ ஆண்டவரே பேசும் உம் அடியேன் கேட்கிறேன் என்று பதில் சொல் என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.

அப்போது ஆண்டவர் வந்து நின்று, சாமுவேல் சாமுவேல் என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல், பேசும், உம் அடியேன் கேட்கிறேன் என்று மறு மொழி கூறினான்.

ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: இதோ கேட்பார் அனைவரின் இரு காதுகளும் அதிர்ச்சியடையக்கூடிய ஒரு செயலை இஸ்ரயேலில் செய்யப்போகிறேன்.

அந்நாளில் ஏலியிடம் நான் அவன் வீட்டுக்கு எதிராக பேசியது அனைத்தையும் தொடக்கத்திலிருருந்து முடிவுவரை நிறைவேற்றுவேன்.

ஏனெனில் அவன் தன் புதல்வர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டதை அறிந்து கொண்டும் தடுக்காத குற்றத்திற்காக அவனது வீட்டிற்கு நீங்காத தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன் என்று அறிவித்தேன்.

ஆகவே எலி வீட்டின் குற்றத்துக்கு பலியினாலோ படையல்களினாலோ என்றென்றும் கழுவாய் செய்யப்பட முடியாது என்று ஏலி வீட்டுக்கு ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.

சாமுவேல் காலை வரை படும்மிருத்டதான். பிறகு ஆண்டவரது இல்லத்தின் கதவுகளைத் திறந்து வைத்தான். தான் கண்ட காட்சியை ஏலியிடம் சொல்ல அங்சினான்.

பிறகு ஏலி சாமுவேல் என் மகனே!, என்று கூப்பிட, சாமுவேல். இதோ அடியேன் என்று பதில் சொன்னான்.

அவர் அவனை நோக்கி உனக்கு அவர் சொன்ன வார்த்தை என்ன? தயவு செய்து என்னிடம் மறைக்காதே. அவர் உன்னிடம் பேசியதிலிருந்து நீ என்னிடம் ஏதாவது மறைத்தால், கடவுள் உனக்கு தகுந்தவாறும் அதற்கு மேலும் செய்வார் என்றார்.

சாமுவேல் அவருக்கு எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். அவரிடமிருந்து எதையும் மறைக்கவி¨ல்லை. அதற்கு அவர், அவர் ஆண்டவர் தான்! அவரது பார்வையில் எது நல்லதோ அதை அவர் செய்யட்டும் என்றார்.

சாமுவேல் வளர்ந்தான்: ஆண்டவர் அவனோடு இருந்தார்: சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.

சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டு விட்டார் என்று தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்தும் இஸ்ரயேலரும் அறிந்து கொண்டார்.

ஆண்டவர் மீண்டும் சீலோவில் தோன்றினார். அங்கேதான் சாமுவேலுக்கு ஆண்டவர் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்.

அதிகாரம் 4.

அதைச் சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் எடுத்துரைத்தார். இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்த்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினார்.

பெலிஸ்தியர் இஸ்ரேயலருக்கு எதிராக அணிவகுத்துச் செல்ல போர் மூண்டது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரை முறியடித்து அவர்களுக்குள் நாலாயிரம் பேரைப் போர்களத்தில் வெட்டி வீழ்த்தினர்.

வீரர்கள் பாளையிற்குத் திரும்பிய போது, இஸ்ரயேலின் பெரியார் கூறியது: இன்று பெலிஸ்தியரிடம் நம்மை ஆண்டவர் தோல்வியுறச் செய்தது ஏன்? ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை சீலோவினின்று நம்மிடையே கொண்டு வருவோ¡ம். அது நம்மிடையே வந்தால், நம் எதிரிகள்கையினின்று நம்மை காக்கும்.

ஆகவே வீரர்கள் சீலோவுக்கு ஆள்களை அனுப்பி கெரும்புகளின் மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையை அங்கிருந்து கொண்டு வரச் செய்தா+ ஏலியின் இரு புதல்வர்களான ஒப்புனியும் பினகாசும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையோடு இருந்தனர்.

ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாழையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேல் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர்.

இந்த ஆரவாரத்தை கேட்டதும் பெலிஸ்தியர், எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன்? என்று வினாவினார். ஆண்டவரது உடன்படிக்கை பேழை பாளயத்தினுள் வந்து விட்டது என்று அறிந்து கொண்டார்.

அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு: கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஜயோ கேடு! இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை!

நமக்கு ஜயோ கேடு! இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மை காப்பவர் யார்? இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலை நிலத்தில் பல்வேறு வதைகளால் துன்புறுத்தியவர்!

பெலிஸ்தியரே! துணிவு கொள்ளுங்கள்! ஆண்மையோடு இருங்கள்! எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்தும் போல, நீங்களும் எபிரேயேருக்கு அடிமைகளாக ஆகாதபடிக்கு ஆண்மையோடு போரிடுங்கள்! என்றார்.

பெலிஸ்தியர் மீண்டும் போர் தொடுத்தார். இஸ்ரயேலர் தோல்வியுற, அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கூடாரத்திற்கு தப்பியோடினான். அன்று மாபெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் மாண்டனர்.

கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்பினியும் பினகாசும் மாண்டனர்.

போர்களத்தினின்று பென்யமின் குலத்தினன் ஒருவன் ஓடிச் சென்று அன்றே சீலோவை அடைந்தான். அவன் ஆடைகள் கிழிந்திருந்தன: தலையோ புழுதிபடிந்திருந்தன.

அவன் வந்தபோது ஏலி வழியோரம் ஓர் இருக்கையில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் கடவுளின் பேழையைப் பற்றி அவர் உள்ளம் கலக்கமுற்றிருந்தது. அம் மனிதன் நகரினுள் வந்து செய்தியை அறிவித்தபோது, நகர் முழுவதும் அழுதது,

அழுகையின் குரல் கேட்ட ஏலி, ஏன் இந்தக் கூக்குரல்? என்று வினவ அம்மனிதன் விரைந்து சென்று ஏலிக்கு செய்தியைத் தெரிவித்தான்.

அப்போது ஏலியின் வயது தொண்ணூற்று எட்டு. கண் பார்வை மங்கி இருந்ததனால் அவரால் பார்க்க முடியவில்லை.

அம்மனிதன் ஏலியை நோக்கி நான் போர்களத்திலிருந்து வருகிறேன், இன்று தான் அங்கிருந்து ஓடி வருகிறேன் என்று சொல்ல, அதற்கு ஏலி, மகனே! செய்தி என்ன? என்று வினவினார்.

அதற்கு அத்தூதன், இஸ்ரயேலர் பெலிஸ்தியர்முன் புற முதுக்கிட்டு ஓடினர். மேலும் மக்களிடையே பெரும் உயிர்சேதம் ஏற்பட்.டுவிட்டது. உம் இருபுதல்வர்கள் ஒப்பினியும் பினகாசும் மாண்டனர். கடவுளின் பேழையும் கைப்பற்றபட்டுவிட்டது என்று சொன்னான்.

கடவுளின் பேழை பற்றி அவன் சொன்னதும் அவர் தம் இருக்கையின்று பின்புறம் கதவருகே விழுந்து, கழுத்து முறிந்து இருந்தார். ஏனெனில், அவர் வயது முதிர்ந்து உடல் பெருத்தவராய் இருந்தார். அவர் இஸ்ரயேலுக்கு நாற்பது ஆண்டுகள் நீதித் தலைவராய் இருந்தார்.

அப்பொழுது பினகாசின் மனைவியான அவருடைய மருமகள் நிறைகர்ப்பினியாய் இருந்தாள். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்து விட்டதையும் கேட்டு அவள் பேறுகால வேதனைக்குள்ளாகி, குனிந்து மகவைப் பெற்றெடுத்தாள்.

அவள் சாகும் தருவாயில் இருந்தபோது அவள் அருகில் இருந்த தாதியர் அவளை நோக்கி, அஞ்சாதே, நீ ஒரு மகனை பெற்றெடுத்துள்ளாய் என்று கூறினர். அவளோ அதற்கு மறுமொழி கூறவில்லை: அதைப் பொருட்படுத்தவுமில்லை.

கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்ததையும் முன்னிட்டு இஸ்ரயேலினின்று மாட்சி அகன்று விட்டது என்னும் பொருள்பட அவள் தன் குழந்தைக்கு இக்க போது என்று பெயரிட்டாள்.

அவள் கூறியது: இஸ்ரயேலினின்று மாட்சி அகன்றுவிட்டது, ஏனெனில் கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது என்றாள்.

அதிகாரம் 5.

பெலிஸ்தியர் கடவுளின் பேழையைக் கைப்பற்றி, அதை எபனேசரிலிருந்து அஸ்தோதிற்குக் கொண்டு சென்றனர்.

பெலிஸ்தியர் கடவுளின் பேழையைத் தாகோன் கோவிலுக்குத் தூக்கிக் கொண்டு வந்து, தாகோன் சிலை அருகில் வைத்தனர்.

அஸ்தோதின் மக்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்தபோது, தாகோன் சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்த¨த்க் கண்டனர். அவர்கள் அதை எடுத்து அதன் இடத்தில் மீண்டும் நிறுத்தினார்கள்.

அவர்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்த போது தாகோன், சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டனர். ஆனால் அதன் தலையும், இருகைகளும் துண்டிக்கப்பட்டு, வாயிற்படியில் கிடந்தன. அதன் உடல் பகுதி மட்டும் எஞ்சியிருந்தது.

ஆகவே தான் தாகோனின் கோவிலுக்குள் செல்லும் அனைவரும் அஸ்தோதிலிருக்கும். தாகோனின் வாயிற்படியை இந்நாள்வரை மிதிப்பதில்லை.

அஸ்தோதின் மக்களை அழிக்கும் படியாக ஆண்டவரின் கை அவர்களை வன்மையாகத் தாக்கியது. அஸ்தோது வாழ் மக்களையும் அதன் எல்லைக்கு உட்பட்டவர்களையும் அவர் மூலக் கட்டிகளல் வாட்டி வைத்தனர்.

அஸ்தோதின் மக்கள் இவ்வாறு நிகழ்ந்ததைக் கண்டபோது, இஸ்ரயேலின் கடவுளது பேழை நம்மிடையே இருக்கலாகாது. ஏனெனில் அவரது கை நம்மையும் நம் தெய்வம் தாகோனையும் வன்மையாகத் தாக்கியுள்ளது என்று பேசிக் கொண்டனர்.

ஆகவே அவர்கள் ஆளனுப்பி பெலிஸ்தியத் தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை நாம் என்ன செய்வோம்? என்று கேட்டனர். அவர்கள், இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் காத்து நகருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பதிலுரைத்தனர். அவ்வாறே இஸ்ரயேலரின் கடவுளது பேழையை எடுத்துச் சென்றனர்.

அதை அங்கு எடுத்துச் சென்ற பின், ஆண்டவரின் கை அந்நகரை வன்மையாகத் தாக்கி, மாபெரும் அழிவை ஏற்படுத்தியது. அவர் அந்நகர் மக்களை, சிறியோர் முதல் பெரியோர் வரை, மூலக் கட்டிகளால் வதைத்தார்.

அவர்கள் கடவுளின் பேழையை எக்ரோனுக்கு அனுப்பினார்கள். கடவுளின் பேழை எக்ரோனுக்கு வரவே, எக்ரோனியர். எங்களையும் எங்கள் மக்களையும் அழிக்கவே இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் கொண்டு வந்து விட்டார்கள் என்று கத்தினார்க்ள.

எனவே அவர்கள் ஆள்அனுப்பி பெலிஸ்திய தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம், இஸ்ரயேலின் கடலுளது பேழையைத் திருப்பி அதன் இடத்திற்கே அனுப்பி விடுங்கள். எங்களையும் எங்கள் மக்களையும் அவர் கொல்லா திருக்கட்டும் என்று கேட்டுக் கொண்டனர். கடவுளின் கை அவர்களை தாக்கியதால், அந்நகர் எங்கும் மக்கள் இறந்தார்கள்.

இறவாமல் இருந்த மக்கள் மூலக் கட்டிகளால் வதைக்கப்பட்டவர்கள். அந்நகரின் கூக்குரல்கள் வான் மட்டும் எழும்பியது.

அதிகாரம் 6.

ஆண்டவரின் பேழை பெலிஸ்தியரின் நாட்டில் ஏழு மாதம் இருந்தது.

பெலிஸ்தியர் அர்ச்சகர்களையும் குறி சொல்கிறவர்களையும் அழைத்து, ஆண்டவரின் பேழையை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை எவ்வாறு அதன் இடத்திற்கு நாங்கள் அனுப்ப வேண்டுமென்று தெரிவியுங்கள் எனக் கேட்டனர்.

அவர்கள் கூறியது: நீங்கள் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை அனுப்பினால் அதை வெறுமையாக அனுப்பலாகாது: குற்றநீக்கப்பலி கட்டாயமாக அவருக்குச் செலுத்தவேண்டும். அப்போது நீங்கள் குணமாக்கப் படுவீர்கள். அவரது கை உங்களைவிட்டு விலகாதிருறந்ததன் காரணத்தையும் அறிந்து கொள்வீர்கள்.

அதற்கு அவர்கள், நாங்கள் அவருக்குச் செலுத்த வேண்டய குற்ற நீக்க பலி யாது? என்று கேட்க, அவர்கள் கூறியது: பெலிஸ்தியத் தலைவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஜந்து பொன் மூலக் கட்டிகளின் உருவங்களும் ஜந்து பொன் சுண்டெலிகளும் மட்டுமே. ஏனெனில் உங்கள் அனைவர் மீதும் உங்கள் தலைவர்கள் மீதும் ஒரே வாதைதான் ஏற்பட்டது.

ஆகவே உங்கள் மூலக் கட்டிகளின் உருவங்களையும் நிலத்தைப் பாழ்படுத்தும் சுண்டெலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ரயேலரின் கடவுளைப் புகழுங்கள். அப்போது ஒருவேளை உங்கிளடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடமிருந்தும் நாட்டினின்றும் அவரது கை விலக்கும்.

எகிப்தியரும் பார்வோனும் தங்கள் அதயங்களைக் கடிகப்படுத்தியது போல நீங்க்ள ஏன் உங்கள் இதயங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்? அவர்ளைத் துன்புறுத் அவர்களுத் இஸ்லயேலரைச் சொல்லுமாறு விட்டுவிட்னரே?

இப்போது நீங்கள் ஒரு புதிய வண்டியைச் செய்யுங்கள். இதுவரை நுகம் பூட்டாத இரு கறவைப் பகக்¨ள் பிடித்து அவற்றை வண்டியில் பூட்டுங்கள். அவற்றின் கன்றுக்குட்டிகளை விலகிக்விட்டுச் செல்லுங்கள்.

ஆண்டவரின் பேழையை எடுத்து அதை வண்டியின் மீது வைத்து குற்ற நீக்கப்பலி¡க நீங்கள் செலுத்தும் பொன் உருவங்களை அருகே ஒரு பெட்டியில் வையுங்கள். பிறகு வண்டியை அனுப்பிவிடுங்கள்: அது தானே செல்லட்டும்.

பின் கவனியுங்கள்: அது தன் நாட்டு எல்லைக்குச் செல்லும் வழியாக பெத்சமேசுக்குச் சென்றால், இப்பெரிய தீங்கை நமக்கு இழைத்தவர் அவரே என்று அறியலாம். இல்லையேல், அவரது கை நம்மைத் தொடவில்லை, மாறாக அது நமக்குச் தற்செயலாக நாம் அறியலாம்.

அவர்களும் அவ்வாறே செய்தனர். இரு கறவைப் பசுக்களைக் கொண்டு வந்து பூட்டினர். அவற்றின் கன்றுகளைத் தொழுவத்தில் அடைத்து வைத்தனர்.

ஆண்டவரின் பேழையையும் பொன் சுண்டெகளும், மூலக்கட்டிகளின் உருவங்களுத் வைத்தி நத பெட்டியையும் அவ்வண்டியில் வைத்தனர்.

பசுக்கள் பெத்சமேசுக்குச் செல்லும் பெருஞ்சாலையில் இடமோ வலிமோ விலகாமல் நேரே கத்திக் கொண்டே சென்றன. பெலிஸ்தியத் தலைவர்கள் அவற்றின் பின் பெத்சமேசு எல்லை வரை சென்றனர்.

அப்போது பெத்சமேசு வாழ் மக்கள் பள்ளத்தாக்கில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் கண்களை உயர்த்திய போது பேழையைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர்.

பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலுக்குள் வண்டி வந்து நின்றது. அங்கே ஒரு பாறை இருந்தது. அவர்கள் வண்டியின் மரத்தை பிழந்து பசுக்களை ஆண்டவருக்கு எரி பலி செலுத்தினர்.

லேவியர் ஆண்டவரின் பேழையையும் அதன் அருகில் இருந்த பொன் உருவங்களைக் கொண்டிருந்த பெட்டியையும் இறக்கி, பாறையின் மீது வைத்தனர். பெத்சமேசின் மக்கள் அன்றையதினம் எரி பலிகளையும் வேறு பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர்.

பெலிஸ்தியரின் ஜந்து தலைவர்களும் இதைக் கண்டபின் அன்றே எக்ரோககுத் திருத்பினர்.

பெலிஸ்தியர் குற்ற நீக்க பலியாக ஆண்டவருக்குச் செலுத்திய மூலக் கட்டிகளின் பொன் உருவங்கள் இவையே: அஸ்தோதுக்கு ஒன்று, காசாவுக்கு ஒன்று, அஸ்லோனுக்கு ஒன்று, மாதத்திற்கு ஒன்று, எக்ரோனுக்கு ஒன்று.

பொன் சுண்டெலிகள், அரண் சூழ் நகர்கள் தொடங்கி, நாட்டுப்புறச் சிற்றூர்கள் வரை ஜந்து தலைவர்க ககுச் சொந்தமான அனைத்து பெலிஸ்திய நகர்களின் எண்ணிக்கைக்குச் சரியாக இருந்தன. ஆண்டவரின் பேழையை வைக்கப்பட்ட அந்தப் பாறை இந்நாள் வரை பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலில் உள்ளது.

பெத்சமேசு வாழ் மக்களை ஆண்டவர் சாகடித்தார். ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் பேழைக்குள் உற்று நோக்கினர். மக்களுள் எழுபது பேரை அவர்வீழ்த்தினர். மக்களிடையே இப்பெரும் அழிவை ஏற்படுபடுத்தியதற்காக மக்கள் புலமபினார்கள்.

பெத்சமேசு வாழ் மக்கள் இநதத் தூய கடவுளாகிய அண்டவர் திருமுன் நிற்கத் தகுந்தவன் யார்? நம்மிடமிருந்து அவர் யாரிடம் செல்லப் போகிறார்? என்றுக் கேட்டுக் கொண்டனர்.

ஆகவே, கிரியத்து எயாரிம் வாழ் மக்களுக்கு ஆள்களை அனுப்பி, ஆண்டவரின் பேழையைப் பெலிஸ்தியர் திருப்பி அனுப்பிவிட்டார்கள். நீங்கள் வந்து அதை உங்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.

அதிகாரம் 7.

கிரியத்து எயாரிமின் ஆள்கள் வந்து ஆண்டவரின் பேழையைத் தூக்கிச் சென்று, குன்றின் மீதிருந்த அபினதாபின் வீட்டில் வைத்தனர். ஆண்டவா§ன் பேழையை காக்கும் படி அவன் மகன் எல்யாசரைத் திரு நிலைப்படுத்தினர்.

பேழை கிரியத்து எயாரில் பலநாள்கள் தங்கியது: இருபது ஆண்டுகள் ஆயின. இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆண்டவரை நினைத்துப் புலம்பிக்கொண்டிருந்தனர்.

இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் சாமுவேல் கூறியது: நீங்கள் முழுஉள்ளத்தோடு .ஆண்டவரிடம் திரும்பினால் வேற்றுத் தெய்வங்களையும் அஸ்தரோதையும் உங்களிடமிருந்து அகற்றி விடுங்கள். உங்கள் உள்ளங்களை ஆண்டவருக்காத் தயார் செய்யுங்கள். அவருக்கு மட்டுமே ஊழியம் செய்யுங்கள். பெலிஸ்தியர் கையிலினின்று அவர் உங்களை விடுவிப்பார்.

இஸ்ரயேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோதையும் விலக்கிவிட்டு ஆண்டவருக்கு மட்டுமே ஊழியம் செய்தார்கள்.

மேலும் சாமுவேல், இஸ்ரயேலர் அனைவரையும் மிஸ்பாவில் ஒன்று கூட்டுங்கள். உங்களுக்காக நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன் என்றார்.

ஆகவே அவர்க்ள மிஸ்பாவில் ஒன்றுகூடி தண்ணீர் மொண்டு ஆண்டவர் திருமுன் ஊற்றி, அன்று நோன்பிருந்து ஆண்டவருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம் என்று அறிக்கையிட்டார். சாமுவேல் மிஸ்பாவில் தங்கி இஸ்ரயேல் மக்களுக்கு தலைவராய் இருந்தார்.

இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவில் ஒன்று கூடியதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டடார். அப்போது பெலிஸ்திய தலைவர்கள் இஸ்ரயே ககு புறப்பட்டார்கள். இதைக் கேட்ட இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியரை முன்னிட்டு அச்சமுற்றார்கள்.

இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் கூறியது: நம் கடவுளாகிய ஆண்டவர் பெலிஸ்தியர் கையினின்று நம்மை காக்கும் படி அவரிடம் விடாமல் மன்றாடம் .

ஆகவே பால் குடிக்கும் ஓர் ஆட்டுக் குட்டியை சாமுவேல் பிடித்து அதை ஆண்டவ ககு ஒரு முழு எரி பலியாக செலுத்தி, இஸ்ரயேலுக்காக அவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவருடைய மன்றாட்டை கேட்டார்.

சாமுவேல் இவ்வாறு எரி பலி செலுத்திக் கொண்டிருந்த போது, பெலிஸ்தியர் இஸ்ரயேலுடன் போரிட நெருங்கினார். அன்று ஆண்டவர் பெலிஸ்தியர் மீது பேரிடி முழங்கச் செய்து அவர்களைக் கலங்கடிக்க, அவர்கள் இஸ்ரயேல் முன்பாகத் தோல்லியுற்றார்.

இஸ்ரயேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டுப் பெத்கார் பள்ளத்தாக்கு வரை பெலிஸ்தியரைத் தூறத்திச் சென்று, அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.

சாமுவேல் ஒரு கல்லை எடுத்து அதை மிஸ்பாவுக்கு சொனாவுக்கும் நடுவில், ஆண்டவர் இதுவரை நமக்கு உதவி செய்தார், என்று கூறி அதற்கு எபனேசர் என்று பெயரிட்டார்.

பெலிஸ்தியர் சிறுமையுற்று அதன்பின் மீண்டும் இஸ்ரயேல் எல்லைக்குள் வரவில்லை. சாமுவேலின் வாழ் நாள் முழுவதும் ஆண்டவரின் பெலிஸ்தியருக்கு எதிராக இருந்தது.

எக்ரோன் முதல் காத்துவரை இஸ்ரயேலிடமிருந்து பெலிஸ்தியர் கைப்பற்றியிருந்த நகர்கள் இஸ்ரயேலுக்கு திரும்பக் கிடைத்தன. பெலிஸ்தியர் கையினின்று இஸ்ரயேல் தங்கள் எல்லைப் பகுதியை மீட்டுக் கொண்டனர். மேலும் இஸ்லயேருக்கும் எமோரியருக்குமிடையே அமைதி நிலவிற்று.

சாமுவேல் தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரயேலுக்குத் தலைவராய் இருந்தார்.

அவர் ஆண்டு தோறும் சுற்றுப் பயணம் செய்து, மிஸ்பா ஆகிய இடங்களில் எல்லாம் இஸ்ரயேலுக்கு நீதி வழங்கினார்.

பின்பு அவர் வீடு இருந்த இராமாவுக்குத் திரும்பி அங்கேயும் இஸ்ரயேலருக்கு நீதி வழங்கினார்: அங்கே ஆண்டவருக்கு ஒரு பலி பீடம் எழுப்பினார்.

அதிகாரம் 8.

சாமுவேலுக்கு வயது முதிர்ந்த போது அவர் தம் புதல்வர்களை இஸ்ரயேலின் மீது நீதித் தலைவராக அமர்த்தினார்.

அவருடைய தலைமகனின் பெயர் யோவேல்: இளையவனின் பெயர் அபியா: இவர்கள் பெயேர்செபாவில் நீதித்தலைவர்களாய் இருந்தனர்.

ஆனால், அவருடைய புதல்வர்கள் அவர் தம் வழிமுறைகளில் நடவாமல், பொருளாச¨க்கு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை.

எனவே, இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடி சாமுவேலிடம் இராமாவுக்கு வந்தனர்.

அவர்கள் அவரிடம், இதோ உனக்கு வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறையில் நடப்பதில்லை. ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும் என்று கேட்டுக் கொண்டார்.

எங்களுக்கு நீதி வழங்க ஊர் அரசனைத் தாரும் என்று அவர்கள் கேட்டதும் சாமுவேலுக்குத் தீயதெனப்பட்டது. சாமுவேல் ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டார்.

ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: மக்கள் குரலையும், அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள். ஏனெனில், அவர்கள் உன்னை புறக்கணிக்கவில்லை. அவர்களை நான் ஆளாதபடி என்னைத் தான் புறக்கணித்துவிட்டார்.

நான் அவர்களை எகிப்தினின்று கொண்டுவந்த நாள் முதல் இந்நாள் வரை அவர்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் அனைத்திலும் அவ்வாறே செய்தது போல் உனக்கும் செய்கிறார்கள்.

இப்போது அவர்கள் குரலுக்குச் செவிகொடு. ஆனால் அவர்களைக் கண்டித்து எச்சரி. அவர்களை ஆளப் போகும் அரசனின் உரிமைகளைத் தெரியப்படுத்து .

ஓர் அரசன் வேண்டுமென்று தம்மிடம் கேட்ட மக்களுக்கு சாமுவேல் ஆண்டவர் கூறிய அனைத்தையும் கூறினார்.

உங்கள் மீது ஆட்சி செய்யும் உண்மைகளாவன: அவன் உங்கள் புதல்வர்ளை தன் தோரோட்டிகளாகவும் தன் குதிரை வீர்களாகவும் வைத்துக் கொள்வான். அவர்களைத் தன் தேர்களுக்கு முன் ஓடச் செய்வான் .

அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும், ஜம்பதிமர் தலைவராகவும், தன் நிலத்தை உழுபவராகவும், தன் விள¨ச்சலை அறுவடை செய்வராகவும், தன் போர்கருவிகளையும் தேர்க் கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான்.

மேலும் அவன் உங்கள் புதல்வியரைப் பரிமளப் தைலம் செய்கிறர்களாகவும், சமைப்பவர்களாகவும், அப்பம் சடுபவர்களாகவும், வைத்க கொள்வான்.

அவன் உங்கள் வயல்களிலும், திராட்சைத் தோட்டங்களிலும், ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலர்களுக்கு கொடுப்பான்.

உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும், பத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டு தன் காரியத் தலைவருக்கும் கொடுப்பான்.

உங்கள் வேலைகாரரையும் வேலைக்காரிகளையும், உங்கள் கால்நடைகளில் சிறந்தவற்றை உங்கள் கழுதைகளையும் தன் சொந்த அலுவலுக்காகப் பயன்படுத்துவான்.

உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான். நீங்கள் அவனுக்கு பணியாளராய் இருப்பீர்கள்.

அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்து கொண்ட அரசனை முன்னிட்டு முறையிடுவீ+கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்கு செவி கொடுக்கமாட்டார்.

மக்களோ சாமுவேலின் குரலுக்கு செவி கொடுக்க மறுத்தது, இல்லை எங்களுக்குக் கட்டாயமாய் ஒர் அரசன் வேண்டும்.

அனைத்து வேற்றின மக்கள் போலவே நாங்களும் இருப்போம். எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவார். எங்கள் போர்களை முன்னிட்டு நடத்துவார். என்றனர்.

மக்கள் கூறியவை அனைத்தையும் சாமுவேல் கேட்டு, அவற்றை ஆண்டவர் காதில் போட்டு வைத்தார்.

ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: அவர் குரலுக்கு செவி கொடுத்து அவர்கள் மீது ஓர் அரசனை ஆளச் செய். பின்பு சாமுவேல் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, ஒவ்வொருவரும் தம் நகருக்குச் செல்லட்டும் என்றார்.

அதிகாரம் 9.

பென்மியன் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்மியனின் அபியாவுக்குப் பிறந்த பெர்ககோரத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குக் பிறந்தவர்.

அவருக்குச் சவுல் என்ற இளமையும் அழகும் கொண்ட ஓர் மகன் இருந்தார். இஸ்ரயேலின் புதல்வருள் அவரைவிட அழகு வாய்ந்தவராய் எவரும் இலர். மற்ற அனைவரையும் விட அவர் உயரமானவர். மற்ற அனைவரும் அவர் தோள் உயரமே இருந்தனர்.

சவுலின் தந்தை கீசின் கழுதைகள் காணாமற் போயின. கீசு தம் மகன் சவுலை அழைத்து, பணியாளன் ஒருவனை உன்னோடு கூட்டிக் கொண்டு கழுதைகளைத் தேடிப்போ என்றார்.

அவர் எப்ராயிம் மலைநாட்டையும் சாலிசா பகுதியையும் கடந்து சென்றார். அவற்றைக் காணவில்லை: சாலிம் நாட்டு வழியே சென்றார். அங்கும் அவை இல்லை. பென்யமின் நாட்டைக் கடந்து சென்றார். அங்கும் அவை தென்படவில்லை.

பிறகு அவர்கள் சூபு நாட்டுககு வந்தபோது, சவுள் தம் பணியாளிடம், வா, நாம் திரும்பிச் செல்வோம். ஏனெனில் என் தந்தை கழுதைகளை மறந்துவிட்டு கவலைக் கொள்வார்.

அதற்குப் பணியாள் இதோ, இந்நகரில் கடவுளின் அடியவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெருமதிப்புக்கு உரியவர். அவர் சொல்வதெல்லாம் அப்படியே நடக்கிறது. ஆகவே நாம் செல்வோம். ஒரு வேளை நாம் செல்ல வேண்டிய வழி எதுவென்று அவர் நமக்கு எடுத்துரைப்பார் என்றான்.

சவுல் தம் பணியாளிடம் சரி செல்வோம். ஆனால் அவருக்கு நாம் என்ன கொடுப்போம்? ஏனெனில் நம் பைகளிலிருந்த அப்பம் தீர்ந்து விட்டது. கடவுளின் அன்பருக்கு அன்பளிப்புத் தர எதுவும் இல்லையே! என்ன செய்வோம்? என்றார்.

பணியாள் சவுலை நோக்கி, இதோ! என்கையில் இன்னும் மூன்று கிராம் அளவுள்ள வெள்ளி இருக்கிறது. அதைக் கடவுளின் அடியாருக்குத் தருவேன். அவர் நம் வழியை நமக்கு எடுத்துரைப்பார் என்றான்.

அக்காலத்தில் இஸ்ரயேலில் கடவுளின் திருவுள்ளத்தை நாடிச் செல்வோர் வாருங்கள் திருக்காட்சியாளரிடம் செல்வோம் என்பர். ஏனெனில் இன்றைய இறைவாக்கினர் அன்று திருக்காட்சியாளர் என்று அழைக்கப்பட்டார்.

சவுல் தம் பணியாளரிடம், நீ சொன்னது சரியே, வா செல்வோம் என்றார். அவர்கள் கடவுளின் அடியாள் இருந்த நகருக்குள் சென்றனர்.

அவர்கள் நகரில் மேட்டில் ஏறிக் கொண்டிருந்தபோது இளம் பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதைக் கண்டு அவர்களிடம் திருக்காட்சியாளர் இங்கே இருக்கிறாரா?என்று கேட்டனர்.

அதற்கு அவர்கள் ஆம், உங்களுக்கு முன்பே வந்துவிட்டார். விரைந்து செல்லுங்கள். இன்று அவர் நகருக்குள் வந்துள்ளார். இன்று தொழுகை மேட்டில் மக்களுக்காகப் பலி செலுத்தப்படுகிறது.

நீங்கள் நகருக்குள் நுழையும் போது, உண்பதற்காக அவர் தொழுகைமேட்டிற்கு ஏறிச் செல்வதற்கு முன்பே அவரை நீங்கள் காண்பீர்கள். ஏனெனில் அவர் பலிக்கு சென்று ஆசி வழங்கும் வரை மக்கள் உண்ண மாட்டார்கள்: பிறகு தான் உழைக்கப்பட்டோர் உண்பர். உடனே சென்றால் இப்போதே நீங்கள் அவரைக் காணலாம் என்றனர்.

அவ்வாறே அவர்கள் நகருக்குள் சென்றனர். அவர்கள் நகரின் மையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, தொழுகை மேட்டுக்கு வந்துகொண்டிருந்த சாமுவேல் அவர்களுக்கு எதிரே வந்தார்.

சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே சாமுவேல் செவியில் விழும் படிஆண்டவர் வெளிபடுத்தியது.

நாளை இந்நேரம் பென்யமின் நாட்டின் ஒருவனை உன்னிடம் அனுப்புவேன். என் மக்களான இஸ்ரயேலின் தலைவனாக அவனை நீ திருப்பொழிவு செய். பெலிஸ்தியரின் கையின்று அவன் என் மக்களை விடுவிப்பான். என் மக்களான அவர்களின் கூக்குரல் என்னிடம் வந்துள்ளது.

சாமுவேல் சவுலை கண்டதும்¥¥¥¥. ஆண்டவர் அவரிடம் இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன் இவனே என் மக்கள் மீது ஆட்சிபுரிவான் என்றார்.

சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி, திருக்காட்சியாளரின் வீடு எங்கே? தயைகூர்ந்து சொல்லும் என்று கேட்டார்.

சாமுவேல் சவுலுக்கு கூறியது: நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன்.

மூன்று நாளுக்குமுன் காணாமற் போன கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அவை அகப்பட்டுவிட்டன. இஸ்ரயேலின் முழு விருப்பமும் யார் மீது? உன் மீது உன் தந்தையின் வீட்டார் அனைவர் மீதும் அன்றோ?

சவுல் மறுமொழியாக கூறியது: இஸ்ரயேலில் மிகச் சிறிதான பென்யமின் குலத்தில் சார்ந்தவனன்றோ நான்? பென்யமின் குலத்தில் அனைத்துக் குடும்பங்களிலும் என்னுடையது மிகச் சிறந்ததன்றோ! பின்பு, நீர் ஏன் என்னிடம் இவ்வாறு பேசுகின்றீர்?

பின்னர், சாமுவேல் சவுலையும் அவருடைய பணிகளையும் உணவறைக்குக் கூட்டிவந்து, அழைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ முப்பது ஆள்களுள் அவர்களுக்கு முதலிடம் கொடுத்தார்.

மேலும் சாமுவேல் சமையல் காரனை நோக்கி, நான் உன்னிடம் ஒரு பங்கைக் கொடுத்து, பத்திரப் படுத்தச் சொல்லியிருந்தேனே அதைக் கொண்டு வந்து வை என்றார்.

சமையல்காரன் ஒரு தொடையை அதன் மேற்பாதியோடு எடுத்து வந்து சவுலுக்குமுன் வைத்தான். அப்போது சாமுவேல் இதோ! உனக்கு முன்பாக வைத்தி பபதை சாப்பிடு. நான் மக்களை விருந்துக்கு அழைத்தது முதல், இது உனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தது என்றார். அன்று சவுல் சாமுவேலுடன் உண்டார்.

பிறகு அவர்கள் தொழுகை மேட்டிலிருந்து இறங்கி நகருக்கு வந்தார். சாமுவேல் சவுலுடன் மாடியில் பேசிக் கொண்டிருந்தார்.

அவர்கள் வைகறையில் துயில் எழுத்தனர். சாமுவேல் மாடியில் இருந்த சவுலை அழைத்து, எழுந்திரு நான் உன்னை அனுப்பிவிடுகிறேன் என்றார். சவுல் எழுந்தார். பின் அவரும் சாமுவேலும் இருவருமாக வெளியே சென்றனர்.

அவர்கள் நகரில் எல்லை வரை வந்த போது, சாமுவேல் சவுலை நோக்கி, பணியாளை நமக்கு முன் நடந்து போகச் சொல் என்றார். அவ்வாறே அவனும் முன்னே நடந்து சென்றான். அப்பொழுது சாமுவேல் சவுலிடம் நீ சற்று நில். கடவுளின் வார்த்தையை நான் உணர்த்தி வைக்க வேண்டும் என்றார்.

அதிகாரம் 10.

அப்போது சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்து அவரை முத்தமிட்டு கூறியது: ஆண்டவர் நம் உரிமைச் சொத்துக்கு தலைவனாக இருக்கும் படி உன்னைத் திருப் பொழிவு செய்துள்ளார் அன்றோ?

இன்று நீ என்னைவிட்டு செல்லும் போது பென்யமின் எல்லையாம் செல்குயில்ராகேலின் கல்லறையருகே இரு மனிதரைக் காண்பாய். அவர்கள் என்னிடம் நீங்கள் தேடிப்போன கழுதைகள் அகப்பட்டுவிட்டன: இதோ உன் தந்தை கழுதை பற்றி கவலையை விட்டு உனக்காக ஏங்கி என் மகனுக்காக என் செய்வேன்? என்று கூறிக் கொண்டிருக்கிறார் என்று சொல்வார்கள்.

நீ அங்கிருந்து மேலும் கடந்து சென்று

அவர்கள் உன் நலம் கேட்டு உன்னிடம் இரண்டு அப்பங்களைத் தர அவர்கள் கைகளினின்று நீயும் பெற்றுக் கொள்வாய்.

அதன் பிறகு பெலிஸ்தியரின் எல்லைக் காவல் இருக்கும் கடவுளின் மலைக்குச் செல்வாய். அங்கு நகருக்குள் நுழையும் போது தொழுகை மேட்டிலிருந்து இறங்கிவரும் ஒர் அறைவாக்கினர் குழுவைச் சந்திப்பாய். அவர்களுககு முன்பாக யாழும், மேளமும், நாதசுரமும், சுரமண்டலமும் செல்லும். அவர்கள் பரவரமடைந்து பேசுவார்.

பிறகு ஆண்டவரின் ஆவி உன் மேல் வலிமையோடு வரும். நீயும் அவர்களோடு பரவசமடைந்து பேசுவாய். நீயும் வேறு மனிதனாய் மாற்றப்படுவாய்.

இந்த அறிகுறிகள் உனக்கு நேரிடும் போது, உன் கைக்கு வந்ததை நீ செய்து கொள். ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.

பிறகு நீ எனக்கு முன்பாக கில்காலுக்கு இறங்கிச் செல். எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக் கொடுப்பதற்காக நான் உன்னிடம் வருவேன். நான் உன்னிடம் வந்து நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்கும் வரை ஏழு நாள்கள் காத்திரு.

சவுல் சாமுவேலை விட்டு திரும்பிய பொழுது கடவுள் அவரின் உள்ளத்தை மாற்றினார். அன்றே இந்த எல்லா அறிகுறிகளும் நிறைவேறின.

அவர்கள் அந்த மலையை அடைந்த போது, இறைவாக்கினர் குழு அவரை எதிர் கொண்டது. கடவுளின் ஆவி அவரை வழிமையோடு ஆட்கொள்ள, அவர் அவர்கள் நடுவே பரவசம் அடைந்து பேசினார்.

அவரை ஏற்கெனவே அறிந்தவ+கள் அவர் இறைவாக்கினறோடு பரவசமடைந்து பேசுவதைக் கண்டார்கள். மக்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, கீசின் மகனுக்கு என்ன நேரிட்டது? சவுலுக்கு இறைவாக்கினருள் ஒருவனோ? என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு அங்கிருந்தவள் ஒருவன், இவர்கள் தந்தை யார்? என்று கேட்டான். ஆகவே, சவுலும் இறைவாகினருள் ஒருவானோ? என்ற பழமொழி உருவாயிற்று.

அவர் பரவசமடைந்து பேசி முடிந்தபின் தொழுகை மேட்டுக்கு வந்தார்.

அப்போது சவுலின் சிற்றப்பன், சவுலையும் அவர் வேலைக் காரனையும் நோக்கி, நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்? என்று வினவ, அவர், நாங்கள் கழுதையை தேடிச் சென்றோம். அவை கிடைக்கவில்லை. எனவே சாமுவேலிடம் சென்றோம். என்ன சொன்னார்.

சவுலின் சிற்றப்பன், சாமுவேல் உனக்குக் கூறியதை தயைகூர்ந்து எனக்குச் சொல் என்றார்,

சவுல் தம் சிற்றப்பனிடம், கழுதைகள் அகப்பட்டனவென்று அவர் எங்களுக்கு உறுதியாகச் சொன்னார். என்றார். ஆனால் அரசு பற்றி சாமுவேல் சொன்ன செய்தியை அவருக்குச் சொல்லவில்லை.

சாமுவேல் மக்களை மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் அழைத்தார்.

பின்னர் அவர் இஸ்ரயேல் மக்களை நோக்கிக் கூறியது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். நான் இஸ்ரயேல் எகிப்தினின்று கொண்டு வந்தேன் எகிப்தியர் கையினின்று உங்களைத் துன்புறுத்திய அனைத்து அரசுகளின் கைகளினின்று நான் உங்களை விடுவித்தேன்.

நீங்களோ உங்கள் துன்ப துயரங்களில் உங்களுக்கு மீட்பாராக இருந்த கடவுளை புறக்கணித்து விட்டு எங்கள் மீது ஓர் அரசனை ஏற்படுத்தும் என்று அவரிடம் கேட்கிறீர்கள். ஆகவே குலங்கள் வாரியாகவும் குடும்பங்கள் வாரியாகவும் ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்.

பிறகு ஆண்டவர் அனைத்து இஸ்ரயேல் குலங்களையும் ஒருங்கே கொண்டு வர, பென்யமின் குலத்தின் மீது சீட்டு விழுந்தது.

பென்யமின் புலத்ததை அதன் குடும்பங்கள் வாரியாக ஒருங்கே கொண்டு வர, மதிரி குடும்பத்தின் மீது சீட்டு விழுந்தது. அவரைத் தேடிய போது அவரைக் காணவில்லை.

ஆள் இங்கே வந்துவிட்டானா? என்று அவர்கள் ஆண்டவரை வினவ, ஆண்டவர் ஆம்! அவன் பொருட்குவியலிடையே ஒளிந்துள்ளேன் என்று கூறினார்.

அவர்கள் ஓடிச் சென்று அங்கிருந்து அவரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். மக்கள் நடுவே நின்ற போது அவர் அனைவரிலும் உயரமாக இருந்தார். மக்கள் அவர் அனைவரும் தோளுயரமே இருந்தார்கள்.

சாமுவேல் மக்கள் அனைவரையும் நோக்கி, ஆண்டவர் தேர்ந்தெடுத்ததைப் பாருங்கள். மக்கள் அவரைப்போல் வேறொருவரும். உண்டா? என்றார். அப்போது மக்கள் அனைவரும் அரசர் நீடூழி வாழ்க! என்று ஆர்பரித்தார்.

சாமுவேல் அரசரின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து, அவை ஓர் ஏட்டில் எழுதி, ஆண்டவர் திருமுன் வைத்தார். பிறகு மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைத்தார்.

சவுலும் கிபியாவிலிருந்த தம் வீட்டிற்குச் சென்றார். கடவுளால் தூண்டப்பட்ட வீரர்கள் அவரோடு சென்றார்கள்.

ஆனால் தீயோர் சிலர், இவன் நம்மை எவ்வாறு மீட்க முடியும்? என்று கூறி, அவரைப் புறக்கணித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு எதுவும் தரவில்லை. அவரோ அமைதியாக இருந்தா+.

அதிகாரம் 11.

அக்காலத்தில் நாகாசு என்னும் அம்மோனியன் வந்து, கிலயாதில் உள்ள யாபோசை முற்றுக்கையிட்டான். யாபோசிலிருந்து மக்கள் அனைவரும் நாகாசிடம் சென்று, எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். நாங்கள் உங்களுக்கு பணிந்திருப்போம். என்றனர்.

அம்மோனியன் நாகாசு அவர்களை நோக்கி, நான் உங்களோடு செய்யும் உடன்படிக்கை: உங்களுக்குள் எவ்வொருவனின் வலக் கண்ணும் பிடுங்கிடும். இஸ்ரயேலர் அனைவரையும் அவமானத்திற்கு உள்ளாக்குவேன் என்றான்.

யாபேசின் பெரியோர்அவனிடம் கூறியது: ஏழு நாள்கள் எங்களுக்கு தவணை தாரும். நாங்கள் இஸ்ரயேல் எல்லை முழுவதும் தூதர்களை அனுப்புவோம். எங்களை மீட்பர் எவரும் இல்¨யெனில் நாங்கள் உங்களிடம் சரணடைவோம்.

தூதர்கள் சவுலின் ஊராகிய கிபயாவுக்கு வந்து மக்கள்செவிபடச் செய்தியை சொல்ல, மக்கள் அனைவரும் குரலெழுப்பி அழுதனர்.

அப்போது சவுல் வயலினின்று மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். மக்களுக்கு என்ன நேரிட்டது? அவர்கள் ஏன் அழுகிறார்கள்? என்று சவுல் கேட்டார். யாபோசின் ஆள்கள் அவரிடம் சொன்னதை சொன்னார்.

இச்செய்தியை அவர் கேட்டுக் கொண்டிருந்தபோது, கடவுளின் ஆவி அவரை வலிமையுடன் ஆட்கொள்ள, அவரது சினம் கனன்றது.

அவர் ஒரு சோடி மாடுகளை பிடித்து, துண்டுகளாக வெட்டி, அவற்றை தூதர்கள் வழியாக இஸ்ரயேல் எல்லை முழுவதும் அனுப்பி, சவுலின் பின்னும் சாமுவேலின் பின்னும் வராதவனின் மாடுகளுக்கு இவ்வாறு நேரிடும் என்று சொல்லியனுப்பினார். அப்போது ஆண்டவர் பற்றிய அச்சம் மக்களை ஆட் கொண்டது. அவர்கள் ஒன்றுதிரண்டு வந்தார்கள்.

அவர் அவர்களை பெசேக்கில் கணக்கெடுத்தபோது இஸ்ரயேலின் மக்கள் மூன்று இலட்சம் பேரும் யூதாவினர் முப்பதாயிரம் பேரும் இருந்தனர்.

வந்திருந்த தூதர்களிடம், நாளை வெயில் ஏறும்முன் உங்களுக்கு மீட்பு கிடைக்கும் என்று கிலயாதிலுள்ள யாபோசின் மக்களுக்கு தெரிவியுங்கள் என்று அறிவிக்கப்பட்டது. தூதரும் இவ்வாறே யாபோசின் மக்களிடம் சொல்ல, அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்.

ஆகவே யாபோசின் ஆட்கள் நாளை நாங்கள் உம்மிடம் சரணடைவோம். உம் விருப்பப்படியே எங்களுக்குச் செய்யும் என்றனர்.

மறுநாள் சவுல் மக்களை மூன்று படையாள்களாக பிரித்தார். கீழ்வானம் வெளுத்தபோது அவர்கள் பாளையத்தினுள் வந்து, வெயில் ஏறுவதற்குள் அம்மோனியரை வெட்டி வீழ்த்தினர். இருவர் கூட இணையாதபடி எஞ்சி இருந்தவர்கள் சிதறடிக்கப்கபட்டார்கள்.

பிறகு மக்கள் சாமுவேலை நோக்கி, சவுலா எங்களை ஆள்வது? ஔனறு கேட்டவர்களை கொண்டு வாருங்கள். அவர்க¨ள்க கொன்று போடுவோம் ஔனறனர்.

ஆனால் சவுல், இன்று யாரையும் கொல்லக் கூடாது. ஏனெனில் ஆண்டவர் இஸ்ரயேலுக்கு மீட்பு அளித்துள்ளார் என்றார்.

சாமுவேல் மக்களை நோக்கி, வாருங்கள் கில்கதலுக்கு சென்று, அங்கே அரசாட்சியை உறுதிப்படுத்துவோம். என்றார்.

மக்கள் அனைவரும் கில்கா கச சென்று அங்கே ஆண்டவர் திருமுன் சவுலை அரசராக்கி, நல்லுறவுப் பலிகளைச் செலுத்தினார்கள். சவுலும் இஸ்ரயேலும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அதிகாரம் 12.

அப்போது சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறியது: நீங்கள் கேட்டுக் கொண்ட அனைத்தின் படிநடந்து, உங்கள் குரலுக்குச் செவிகொடுத்து, உங்களுக்காக ஓர் அரசனை ஏற்படுத்தினேன்.

இதோ! ஓர் அரசர்! இவர் உங்களை வழிநடத்துவார். எனக்கோ வயதாகித் தலைநரைத்து விட்டது. என் புதல்வர்தாம் இருக்கின்றனர். என் இளமைமுதல் இந்நாள்வரை நான் உங்களை வழி நடத்தியிருக்கிறேன்.

இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன். ஆண்டவர் முன்பும் அவர் திருப்பொழிவு செய்தவர். முன்பும் என்மீது குற்றம் சாட்ட முடியுமா? யாருடைய மாட்டையாவது நான் எடுத்துக் கொண்டோனா? யாருடைய கழுதையாவது நான் எடுத்துக் கொண்டேனா? யாரையாவது நான் ஏமாற்றினேனா? யாரையாவது நான் ஒடுக்கினேனா? யாரிடமிருந்தாவது நான் கைப்பூட்டுப் பெற்று நான் அநீதியைக் கண்டுகொள்ளாமல் இருந்தேனா? சொல்லுங்கள். நான் திருப்பித் தந்து விடுகிறேன்.

அதற்கு அவர்கள் நீர்எங்களை ஏமாற்ற வில்லை, ஒடுக்கவில்லை, கைப்பூட்டு யாரிடமும் பெறவில்லை என்றார்கள்.

அவர் அவர்களை நோக்கி, நீங்கள் என்னிடம் எக்குற்றமும் காணவில்லை என்பதற்கு இன்று ஆண்டவர் சாட்சி. அவர் திருப்பொழிவு செய்தவரும் சாட்சி.! அதற்கு அவர்கள், அவரே சாட்சி! என்றார்கள்.

மீண்டும் சாமுவேல் மக்களிடம் கூறியது: ஆண்டவர் தம் மோசையையும் ஆரோனையும் நியமித்து, உங்கள் மூதாயதரை எகிப்து நாட்டினின்று கொண்டு வந்தார்.

ஆண்டவர் திருமுன் நில்லுங்கள். உங்களுக்காகவும் உங்கள் மூதாதையருக்காகவும் ஆண்டவர் செய்த அனைத்து மீட்பின் செயல்களையும் முன் வைத்து அவர் முன்னிலையில் உங்களோடு வழக்காடுவேன்.

யாக்கோபு எகிப்திற்குச் சென்ற பின்,உங்கள் மூதாதையர் ஆண்டவரிடம் கூக்குரலிட்டபோது, அவர் மோசையையும் ஆரோனையும் அனுப்பினர். அவர்கள் உங்கள் மூதாயதரை எகிப்தினின்று கொண்டுவந்து இவ்விடத்தில் குடியேறவைத்தனர்.

உங்கள் மூதாதையர் கடவுளாகிய ஆண்டவரை மறந்தபோது, அவர் அவர்களை ஆசோரின் படைத்தலைவன் சீசராவின் கையிலும், பெலிஸ்தியரின் கையிலும் மோவாபு அரசரின் கையிலும் விட்டு விட்டார். இவர்கள் அவர்களோடு போரிட்டனர்.

அவர்கள் ஆண்டவரிடம் கூக்குரலிட்டு, நாங்கள் ஆண்டவரை புறக்கணித்தோம். பாகால்களையும் அஸ்தரோத்துகளையும் வழிப்பட்டு பாவம் செய்துள்ளோம். இப்போது எங்களை எங்கள் எதிரிகளிடமிருந்து விடுவியும். நாங்கள் உங்களையே வழிபடுவோம் என்றனர்.

ஆண்டவர் எருபாகால், பேதான், இப்தாகு, சாமுவேல் ஆகியோரை அனுப்பி, சுற்றிலுமிருந்த உங்கள் எதிரிகளின் கையினின்று உங்களை விடுவித்தார். நீங்களும் அச்சமின்றி வாழ்ந்தீர்கள்.

அம்மோனிய அரசன் நாகாசு உங்களை எதிர்த்து வருவதைக் கண்டபொழுது நீங்கள், இல்லை, எங்களை அரசாள எங்களுக்கு ஓர் அரசர் வேண்டும்! என்று உன்னிடம் கூறினீர்கள்.

இதோ நீங்கள் விரும்பிக் கூர்ந்து கொண்ட அரசர்! நீங்கள் வேண்டியவாறு உங்களை ஆள ஆண்டவர் ஓர் அரசரைத் தந்துள்ளார்.

நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்கு பணிந்து, அவர் குரலுக்குச் செவி கொடுத்து, ஆண்டவரின் கட்டளைக்கு எதிராகக் கலக்கம் விலைவிக்காமல் இருந்தால், நீங்களும் உங்களை ஆளும் அரசரும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றுபவராக இருப்பீர்கள்.

ஆனால் நீங்கள் ஆண்டவர் குரலுக்குச் செவிக் கொடுக்காமல், அவர் தம் கட்டளைக்கு எதிராக கலங்கம் விளைவித்தால், ஆண்டவரின் கை உங்கள் மூதாதையருக்கு எதிராக இருந்தது போல், உங்களுக்கும் எதிராகவும் இருக்கும்.

இப்பொழுது ஆண்டவர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யவிருக்கும் மாபெரும் நிகழ்ச்சியை நின்று பாருங்கள்.

இன்று கோதுமை அறுவடையன்றோ? இடியும் மழையும் அனுப்பும்படி நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன். எங்களுக்காக ஓர் அரசனைக் கேட்டது, ஆண்டவன் கண்முன் நீங்கள் செய்த மாபெரும் குற்றம் என்பதை இதனால் நீங்கள் கண்டுணர்வீர்கள்.

சாமுவேல் ஆண்டவரிடம் மன்றாட, ஆண்டவர் அன்று இடியும் மழையும் அனுப்பினார். மக்கள் அனைவரும் ஆண்டவரிடமும் சாமுவேலிடமும் மிகுந்த அச்சம் கொண்டனர்.

அனைத்து மக்களும் சாமுவேலை நோக்கி, நாங்கள் சாகாவண்ணம், உம் அடியார்களுக்காக உம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும். ஏனெனில் நாங்கள் செய்த பாவங்கள் அனைத்தோடும் எங்களுக்காக ஓர் அரசனைக் கேட்ட இந்தக் குற்றமும் சேர்ந்துக் கொண்டது என்றார்.

பின் சாமுவேல் மக்களிடம் கூறியது: அஞ்ச வேண்டாம்?, நீங்கள் இக்குற்றங்களை எல்லாம் செய்திருப்பினும் ஆண்டவரைப் பின்பற்றுவதிலிருந்து விலகாமல் அவரையே உங்கள் முழு மனத்தோடு வழிபடுங்கள்.

பயணற்ற, விடுவிக்க இயலாத சிலைகளை நாடிச் செல்லவேண்டாம். அவை வீணே.

தம் மாபெரும் பெயரின் பொருட்டு ஆண்டவர் தம் மக்களைப் புறங்கணிக்கமாட்டார். ஏனெனில் உங்களை தம் மக்களாக அவரே திருவுளங் கொண்டார்.

என்னைக்பொருத்தமட்டில்,உங்களுக்காகமன்றாடுவதைநிறுத்துவதனால் ஆண்டவருக்கு எதிராக புரியும் குற்றம் என்னை விட்டு விலகி இருக்கட்டும். நான் உங்களுக்கு நல்ல, நேரிய வழியைக் காட்டிக் கொடுப்பேன்.

ஆண்டவருக்கு மட்டும் அஞ்சி நடந்து, உங்கள் முழு மனத்தோடு உண்மையாகவே அவருக்கு ஊழியம் செய்யுங்கள். அவர் உங்களுக்கு ஆற்றிய மாபெரும் செயல்களை நினைத்து பாருங்கள்.

ஆனால் நீங்கள் தொடர்ந்து தீமை செய்தால் நீங்களும் உங்கள் அரசனும் அழிந்து விடுவீர்கள்.

அதிகாரம் 13.

சவுல் அரசராகி ஓராண்டு ஆனபின், இஸ்ரயேல் மீது இரண்டாம் ஆண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது சவுல் தமக்காக இஸ்ரயேலிருந்து மூவாயிரம் பேரைத் தேர்ந்து கொண்டார். மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும் சவுலுடன் இரண்டாயிரம் பேர் இருந்தனர். பென்யமினைச் சார்ந்த கிபயாவில் யோனாத்துடன் ஆயிரம் பேர் இருந்தனர். எஞ்சிய மக்களை அவர் அவரவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.

யோனத்தான் கெபாவில் எல்லைக் காவலில் இருந்த பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினர். பெலிஸ்திய மக்கள் அதைக் கேள்வியுற்றனர். எபிரேயரும் இதைக் கேட்கட்டும் என்று நாடெங்கும் சவுல் எக்காளம் ஊதுவித்தார்.

சவுல் பெலிஸ்தியரின் எல்லைக் காவலரை வெட்டி வீழ்த்தியதையும் அதனால் பெலிஸ்தியருக்கு இஸ்ரயேல்மீது கடும்பகை ஏற்பட்டதையும் அறிந்து இஸ்ரயேலர் அனைவரும் சவுலோடு சேர்ந்து கொண்டு கில்காலுக்குச் சென்றனர்.

பெலிஸ்தியர் இஸ்ரயேலோடு போரிட முப்பதாயிரம் தேர்களோடும் ஆறாயிரம் குதிரை வீரர்களோடும் கடற்கரை மணலளவு வீரர்களோடும் திரண்டு வந்து பெத்தேலுக்குக் கிழக்கே மிக்மாசில் பாளையம் இறங்கினார்கள்.

இஸ்ரயேலர் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் இன்னலுற்று குகைகளிலும், புதர்களிலும், பாறைகளிலும், கல்லறைகளிலும், பள்ளங்களிலும் ஒளிந்து கொண்டனர்.

எபிரேயர் சிலர் யோர்தனைக் கடந்து காத்து, ஓகிலயாது நாடுகளுக்குச் சென்றனர். சவுல் இன்னும் கில்காலில் இருந்தார். மக்கள் அனைவரும் நடுங்கிக் கொண்டே அவரைப் பின்சென்றனர்.

அவர் சாமுவேல் குறிப்பிட்ட படி ஏழு நாள் காத்திருந்தார். ஆனால் சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. ஆகவே மக்கள் அவரைவிட்டுச் சிதறத் தொடங்கினர்.

அப்போது சவுல் எரிபலியையும் நல்லுறவுப் பலியையும் என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி எரிபலி செலுத்தினார்.

அவர் எரிபலி செலுத்தி முடிந்த வேளை சாமுவேல் அங்கு வந்தார். சவுல் அவரை சந்திக்கச் சென்று வரவேற்றார்.

சாமுவேல், நீர் என்ன செய்தீர்? என்று கேட்க அதற்கு சவுல் கூறியது: மக்கள் என்னிடமிருந்து சிதறிப் போவதைக் கண்டேன். நீரும் குறித்த காலத்தில் வரவில்லை. பெலிஸ்தியரும் மிக்ஸ்பாவில் ஒன்று திரண்டு கொண்டிருந்தார்கள்.

அப் பொழுது பெலிஸ்தியர் எனக்கு எதிராகக் கில்காலுக்கு இறங்கி வருவர்: நானோ இன்னும் ஆண்டவரின் தயவை நாடவில்லை என்று உணர்ந்ததால், நான் எரிபலி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானேன்.

சாமுவேல் சவுலை நோக்கி, நீர் அறிவீனமாய்ச் செயல்பட்டீர். உம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படி நீர் நடக்கவில்லை. இல்லையேல் ஆண்டவர் இஸ்ரயேல் மீது உமது அரசை என்றென்றும் நிறுவியிருந்திருப்பார்.

ஆனால் உமது அரசு நிலைக்காது. ஆண்டவர் தம் மனதிற்கு ஏற்ப ஒருவரைத் தமக்கெனத்தேடி அவரையே தம் மக்களின் தலைவராய் நியமித்துள்ளார். ஏனெனில் ஆண்டவர் கட்டளையின் படி நீர் நடக்கவில்லை என்றார்.

சாமுவேல் எழுந்து கில்காலிலிருந்து பென்யமினைச் சார்ந்த கிபயாவுக்கு சென்றார். சவுல் தம்மோடு இருந்த வீரர்களைக் கணக்கெடுத்தார். அவர்கள் ஏறத்தாழ அறுநூறு பேர்.

சவுலும் அவர் மகன் யோனத்தானும், அவரோடு இருந்த வீரர்கள் பென்யமினைச் சார்ந்த கொபாவில் தங்கினர். பெலிஸ்தியரோ மிக்மாசில் பாளையம் இறங்கியிருந்தார்கள்.

பெலிஸ்தியரின் பாளையத்திலிருந்து மூன்று படைகளாகக் கொள்ளைக்காரர் புறப்பட்டு வந்தனர். ஒரு படையினர் ஒபிரா வழியாகச் சூவால் நாட்டிற்குப் பிரிந்து சென்றனர்.

இன்னொரு படையினர் பெத்கோரோன் வழியாகச் சென்றனர். வேறொரு படையினர் பாலைநில கெபோயிமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லை வழியில் சென்றனர்.

எபிரேயர் தங்களுக்காக வாள்களையும் ஈட்டிகளையும் செய்து கொள்ளக் கூடாது என்று பெலிஸ்தியர் திட்டமிட்டுயிருந்தால், இஸ்ரயேல் நாடெங்கும் கொல்லன் எவனும் காணப்படவில்லை.

இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் கலப்பைக் கொழுக்களையும் மண்வெட்டிகளையும், கடப்பாரைகளையும், கோடாரிகளையும், அரிவாள்களையும் தீட்டுவதற்காகப் பெலிஸ்தியரிடமே சென்றனர்.

தீட்டுவதற்கான கூலி கலப்பைக் கொழு மண்வெட்டி, முக்கூர்க்கருவி, கோடாரி தாற்றுக்கோல் ஆகிய ஒவ்வொன்றும் எட்டுகிராம் அளவுள்ள நாணயம் ஆகும்.

ஆகவே போரிடும் நாள் வந்த போது சவுலோடும் யோனத்தானோடும் இருந்த வீரர் கையில் வாளோ ஈட்டியோ கிடையாது. சவுலும் யோனத்தானும் மட்டும் அவற்றை வைத்திருந்தார்கள்.

பெலிஸ்தியரின் எல்லைக் காவல் மிக்மாசு கணவாய் வரை நீடித்திருந்தது.

அதிகாரம் 14.

ஒருநாள் சவுலின் மகன் யோனத்தான் தம் படைக்கலன்களை வைத்திருந்த ஊழியனை நோக்கி வா நமக்கு எதிரே அந்தப்பக்கம் இருக்கின்ற பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்கு செல்வோம். என்றார். ஆனால் தம் தந்தையிடம் சொல்லவில்லை.

சவுல் கிபாவின் எல்லையில் மிக்ரோனிலிருந்து ஒரு மாதுளை மரத்தின் கீழ் காத்திருந்தார். அவறோடு இருந்த மக்கள் ஏறக்குறைய அறுநூறு பேர்.

அப்போது ஆண்டவரின் குரு ஏலியின் மகன் பினகாசுக்குப் பிறந்த இக்காபோதின் சகோதரனான அகிப்தூபின் மகன் அகியா ஏபோதை அணிந்திருந்தான். யோனத்தான் சென்றிருந்தது மக்களுக்கு தெரியாது.

யோனத்தான் பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்கு செல்ல முயன்ற கணவாயில் இப்பக்கமும் அப்பக்கமும் செங்குத்தான பாறைகள் இருந்தன. ஒன்று போட்சேசு மற்றொன்று செனே என்றும் அழைக்கப்பட்டன.

ஒரு தூண் பாறை வடக்கே மிக்மாககு எதிரிலும், மற்றொன்று தெற்கே கிபாவுக்கு எதிரிலும் இருந்தன.

யோனத்தான் தம் படைக்கலன்களை வைத்திரந்த ஊழியனை நோக்கி வா, இந்த விருத்தசேதனம் அற்றோரின் எல்லைக்காவலுக்கு கடந்து செல்வோம். ஒரு வேளை ஆண்டவர் நம் சார்பாகச் செயல்படுவார். ஏனெனில் சிலரைக் கொண்டோ பலரைக் கொண்டோ மீட்பு அளிப்பதில் ஆண்டவருக்கு தடையில்லை என்றார்.

அதற்கு அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவேன். உம் மனம் போல் செய்யும். நீர் முதலில் செல்லும். உம் மனதிற்கேற்ப செய்யுமாறு நான் உம்மோடு இருக்கிறேன் என்று சொன்னான்.

பிறகு யோனத்தான், இதோ! நாம் கடந்து அம்மனிதரிடம் சென்று, நம்மையே அவர்களுக்கு வெளிப்படுத்துவொம்.

அவர்கள் நம்மிடம் நாங்கள் உங்களிடம் வரும்வரை அங்கேயே நில்லுங்கள் என்று கூறினால், நாம் அவர்களிடம் சொல்லாமல் நம் இடத்திலேயே நிற்போம்.

மாறாக, எங்களிடம் வாருங்கள் என்று சொன்னால் நாம் அவர்களிடம் சொல்வோம். ஆண்டவர் அவர்களை நம்மிடம் ஓப்படைத்துள்ளார் என்பதற்கு இதுவே அடையாளமாய் இருக்கும்.

ஆகவே இருவரும் பெலிஸ்தியரின் எல்லைக் காவலக்குச் சென்று தங்களையே வெளிப்படுத்த, பெலிஸ்தியர், இதோ! தாங்கள் ஒளிந்திருந்த குழிகளைவிட்டு எலிரேயர் வெளியே வருகின்றனர். என்று கூறினர்.

எல்லைக் காவலர் யோனத்தானுக்கும் அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவோனுக்கு மறுமொழி கூறி, எம்மிடம் வாருங்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம் என்றனர்.அப்போது யோனத்தான் தம் படைகளைக் தாங்குவேனிடம், என் பின்னால் வா ஏனெனில் ஆண்டவர் அவர்களை இஸ்ரயேலின் கையில் ஒப்புவைத்துள்ளார் என்றார்.

யோனத்தான் தன் கைகளாலும் கால்களாலும் ஊர்ந்து மேலே செல்ல அவர் தம் படைக்கலன்களை தாங்குவேன் பின்னால் சென்றான். யோனத்தான் அவர்களைத் தாக்க அவர்தம் படைக்கலன்களைத் தாக்குவோன் அவருக்குப் பின் வந்து அவர்களைக் கொன்றான்.

யோனத்தானும் அவர்தம் படைக்கலன்களைத் தாக்குவோனும் நடத்திய முதல் தாக்குதலில் ஏறக்குறைய இருவது பேர், அரை ஏர் நிலப்பரப்பில் வீழ்த்தினார்கள்.

அப்போது பாளையத்திலும் நிலவொளியிலும் மக்கள் அனைவரிடத்திலும் நடுக்கம் ஏற்பட்டது. எல்லைக் காவலர்களும் கொள்ளையிடுவோரும் கூட நடுநடுங்கினர். நிலமும் நடுங்கிற்று. அது ஆண்டவரால் ஏற்பட்ட நடுக்கமாக இருந்தது.

பென்யமின் பகுதியிலுள்ள கிபயாவில் இருந்த சாமக் காவலர் பெலிஸ்தியர் கூட்டம் இன்னும் அங்கும் சதறிக் கரைந்து விட்டதை கண்டார்கள்.

சவுல் தம் ஆள்களை நோக்கி, கணக்கெடுத்து நம்மைவிட்டுச் சென்றவர் யார் என்று பாருங்கள் என்றார். அவர்கள் கணக்கெடுத்து பார்க்க யோனத்தானும் அவர்தம் படைக்கலன்கலைத் தாக்குவோனும் இல்லை என்று கண்டனர்.

பிறகு சவுல் அகியாவை நோக்கி, கடவுளின் பேழையைக் கொண்டு வா என்றார். ஏனெனில் அக்காலத்தில் பேழை இஸ்ரயேல் மக்களோடு இருந்தது.

குருவிடம் சவுல் பேசிக்கொண்டிருந்த போது பெலிஸ்தியரின் பாளையத்தில் ஏற்பட்ட குழப்பம் மிகுதியாயிற்று. சவுல் குருவிடம் உன் கையை விலக்கிக் கொள் என்றார். அதன்பின் சவுலும் அவரோடிருந்த ஆள்கள் அனைவரும் ஒன்று திரண்டு போருக்குச் சென்றனர். இதோ, பெலிஸ்தியர் ஒருவனுக்கு ஒருவன் வாளெடுக்க அவர்களிடையே மாபெரும் அச்சம் ஏற்பட்டது.

ஏற்கெனவே பெலிஸ்தியரோடு சேர்ந்து கொண்டு அவர்களோடு பாளையத்தில் திரிந்துவந்த எபிரேயரும் சவுலோடும் யோனாத்தானோடும் இருந்த இஸ்ரயேலுடன் இணைந்து கொண்டனர்.

எக்ராயிம் மலைநாட்டில் ஒளிந்து கொண்டிருந்த இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியர் தப்பியோடுவதைக் கேள்வியுற்று அவர்களும் அவர்களைத் துரத்திதாக்கினார்கள்.

அன்று ஆண்டவர் இஸ்ரயேலை விடுவித்தார். போர் பெத்தாவேனையும் தாண்டி நடந்தது.

இஸ்ரயேல் மக்கள் அன்று தோல்வியுற்றனர். ஏனெனில் சவுல் அவர்களை நோக்கி, நான் என் எதிரிகளை பழிவாங்க வேண்டும். ஆகவே மலைக்குள் யாராவது உணவு கொண்டால் அரசன் சபிக்கப்படுவான் என்று ஆணையிட்டுக் கூறினார். மக்களில் அன்று எவரும் உண்ணவில்லை.

பின்பு நாட்டின் மக்கள் அனைவரும் ஒரு காட்டினுள் வந்தனர். அங்கே தரையில் தேன் காணப்பட்டது.

மக்கள் காட்டினுள் நுழையும் போது தேன் ஒழுகிக் கொண்டிருந்தது. ஆனால் எவனும் தன் வாயில் தன் கையை வைக்கவில்லை. ஏனெனில் மக்கள் சாபத்திற்கு அஞ்சினார்கள்.

ஆனால், தன் தந்தை மக்களுக்கு ஆணையிட்டுச் சொன்னதை யோனத்தான் கேள்விப் படவில்லை. ஆகவே அவர் தம் கையிலிருந்த கோலை நீட்டி, அதன் நுனியில் தேன் கூட்டைக் குத்தி, கையில் எடுத்ததைத் தன் வாயில் வைத்தார். அவர் கண்கள் தெளிவடைந்தன.

அதற்கு வீரர்களுள் ஒருவர் கூறியது: இன்றைக்கு உணவு கொள்பவன் சபிக்கப்பட்டவன் என்று உம் தந்தை உறுதியாக ஆணையிட்டார். மக்களும் சேர்ந்துள்ளார்கள்.

அபபோது யோனத்தான், என் தந்தை நாட்டைக் குழப்புகிறார். பாருங்கள்: நான் சிறிதளவு தேனைச் சுவைத்தேன். இப்போது என் கண்கள் தெளிவடைந்துள்ளன. இன்று மக்கள் தங்களுக்குக் கிடைத்த பொருள்களை நன்றாக உண்டிருந்தால், பெலிஸ்தியருக்கு பெரிய அழிவு ஏற்பட்டிருக்கும் என்றார்.

அன்று வீரர்கள் பெலிஸ்தியரை மிக்காசு முதல் அய்யலோன்வரை முறியடித்தனர். எனவே அவர்கள் மிகவும் சோற்வுற்றிருந்தார்கள்.

அப்போது வீரர்கள் கொள்ளைப் பொருள்கள் மேல் பாய்ந்து ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையில் போட்டு, அடித்து, அவற்றை இரத்ததோடே உண்டார்கள்.

வீரர்கள் இரத்தத்தோடு உண்டு ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்கிறார்கள் என்று சவுலிடம் அறிவிக்கப்பட்டது. அதற்குச் சவுல் நீங்கள் வஞ்சித்து விட்டீர்கள் இப்போதே ஒரு பெரும் கல்லை என்னிடம் உருட்டிக் கொண்டு வாருங்கள் என்றார்.

மேலும் சவுல் கூறியது: நீங்கள் வீரர்கிளடையே சென்று, ஒவ்வொருவனும் தன் மாட்டையோ ஆட்டையோ என்னிடம் கொண்டு வந்து இங்கே அடித்துச் சாப்பிடட்டும்.

இரத்தத்தோடு உண்ட ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்ய வேண்டாம் எனச் சொல்லுங்கள் , ஆகவே ஒவ்வொருவனும் அன்று இரவே தன் மாட்டைக் கொண்டு வந்து அங்கே அடித்தான்.

சவுல் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார். அதுவே அவர் ஆண்டவருக்கு எழுப்பிய முதல் பலிபீடம்.

அதற்கு பின் சவுல் இரவில் பெலிஸ்தியரைக் பிக் தொடர்ந்து சென்று விடியற் காலை அவர் அவர்களைக் கொள்ளையடிப்போம்.

அவர்களுள் ஒருவரையும் விட மாட்டோம் என்றார். அதற்கு வீரர்கள், உமக்கு நல்லதெனப் பட்டத்தைச் செய்யுங்கள். குருக்களோ, நாம் இங்கே கடவுளை அனுகுவோம் என்றார்கள்.

சவுல் கடவுளை நோக்கி, நான் பெலிஸ்தியரைப் பின் தொடரலாமா? அவர்களை இஸ்ரயேலிடம் ஒப்படைப்பீரோ? என்று கேட்டார்.

ஆனால் அன்று அவர் மறுமொழி கூறவில்லை.எனவே சவுல், வீரர்கள் தலைவர்களே, நீங்கள் அனைவரும் இங்கேவாருங்கள்: இன்று இப்பாவம் எவ்வாறு ஏற்பட்டது என்று கவனியுங்கள்.

இஸ்ரயேலை விடுவிக்கும் ஆண்டவர் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குக் காரணமாக மகன் யோனத்தான் இருந்தாலும் அவன் கட்டாயம் சாவான் என்றார். எனினும் அவனும் மறுமொழி கூறவில்லை.

மேலும் அவர் இஸ்ரயேலர் அனைவரையும் நோக்கி, நீங்கள் ஒருபக்கம் இருங்கள். என் மகன் யோனத்தானும் நானும் ஒரு பக்கம் இருக்கிறோம். என்று கூற வீரர்களும், உமக்கு நலமெனத் தோன்றியதைச் செய்யும் என்று சவுலிடம் சொன்னார்கள்.

ஆகவே சவுல், இஸ்ரயேலின் கடவுலாகிய ஆண்டவரே! முன் உண்¨மையை வெளிப்படுத்தும் என்று மன்றாட, யோனத்தான் மீதும் சீட்டு விழுந்தது: வீரர்களோ தப்பினர்.

பிறகு சவுல், எனக்கும் என் மகன் யோனத்தானுக்கும் இடையே சீட்டு போடுங்கள், எனச் சொல்ல, யோனத்தான்மீது சீட்டு விழுந்தது.

சவுல் யோனத்தானை நோக்கி நீ என்ன செய்தாய்? சொல் என வினவ, அதற்கு யோனத்தான், என் கையில் இருந்த கோலின் நுனியால் கொஞ்சம் தேன் எடுத்து சுவைத்தேன். இதோ நான் சாகத் தயார் என்று கூறினார்.

அதற்குச் சவுல், யோனத்தான் நீ சாகத்தான் வேண்டும். இல்லையேல் கடவுள் எனக்கு அப்படியே செய்யட்டும்: அதற்கு மேலும் செய்யட்டும் என்றார்.

ஆனால் மக்கள் சவுலை நோக்கி, இஸ்ரயேலுக்காக இவ்வளவு பெரிய விடுதலையைக் கொணர்ந்த யோனத்தான் சாகலாமா? அது கூடவே கூடாது! ஆண்டவர் மேல் ஆணை! அவர் தலையிலிருந்து ஒரு முடி தரையில் விழக்கூடாது. ஏனெனில் கடவுளின் கருணையோடுத்தான் இன்று அவர் செயல்பட்டார். என்றார்க்ள. இவ்வாறு வீரர்கள் அவரை சாவினின்று தப்புவித்தார்கள்.

சவுல் பெலிஸ்தியரை பின் தொடராமல் செல்ல, பெலிஸ்தியர் தாங்கள் இடத்துக்குச் சென்றார்.

இவ்வாறு சவுல் இஸ்ரயேல் மீது ஆட்சி செலுத்தி மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், பெலிஸ்தியர் ஆகிய சுற்றிலுமிருந்த எதிரிகளிமிருந்து அனைவருக்கும் எதிராக போர்தொடுத்தார். அவர் திரும்பிய இடமெல்லாம் அழிவை விளைவித்தார்.

அவர் வீருகொண்டெழுந்து அமலேக்கியரை முறியடித்து, கொள்ளையிடுவோரின் கையினின்று இஸ்ரயேலை விடுவித்தார்.

சவுலுக்கு பிறந்த புதல்வர் யோனத்தான், இஸ்வி, மல்கிசுவா. அவருடைய புதல்வியரின் பெயர்களாவன: மூத்தவள் மேராபு: இளையவள் மீக்கால்.

சவுலின் மனைவியர் பெயர் அகினோவாம். அவர் அகிமாசின் மகள் அப்பேனர் படைத்தலைவனாக இருந்தான்.

சவுலின் தந்தை கீசும், அப்னேரின் தந்தையான நேரும் அரியேலின் புதல்வர்.

சவுலின் வாழ் நாள் முழுவதும் பெலிஸ்தியரோடு கடும் போர் நடந்து வந்தது. வீரனையும் வலிபனையும் கண்டபோது சவுல் அவர்கள் எல்லோரையும் தம்மோடு சேர்த்துக் கொள்வதுண்டு.

அதிகாரம் 15.

சாமுவேல் சவுலை நோக்கி, கூறியது: ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேலின் அரசராக உம்மைத் திருப்பொழிவு செய்ய என்னை அனுப்பினார். ஆகவே இப்பொது ஆண்டவரினட வார்த்தைகளைக் கேளுங்கள்.

படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். இஸ்ரயேலர் எகிப்தினின்று வெளிவந்தபோது அமலேக்கியர் அவர்களை வழிமறித்தாதற்காக அவர்களை நான் தண்டிக்கப் போகிறேன்.

ஆகவே சென்று அமலேக்கியரை தாக்கி, அவர்கள் உடைமைகளை அனைத்தையும் அழித்தொழியும். அவர்கள் மீது இறக்கம்காட்டாமல் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும, பாலகர்களையும்,காடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்று விடும் .

சவுல் வீரர்களைத் திரட்டி அவர்களை தெலாயிமில் கணக்கெடுத்தார். இரண்டு இலட்சம் காலன் படையினரும், பத்தாயிரம் யூதரும் இருந்தனர்.

சவுல் அமலேக்கியரின் நகரை வந்தடைந்து ஒரு பள்ளத்தாக்கில் பதுங்கியிருந்தார்.

சவுல் கோனியரை நோக்கி, இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் எகிப்தினின்று வெளிவந்த போது நீங்கள் இரக்கம் காட்டீனீர்கள். ஆகவே நீங்கள் அமலேக்கியரிடமிருந்து விலகிச் சென்று விடுங்கள். ஏனெனில் அவர்களோடு நான் உங்களையும் அழிக்க வேண்டியிருக்கும் என்றார். எனவே கேனியர் அமலேக்கியரிடமிருந்து விலகிச் சென்றார்.

பின்னர் சவுல் அவிலா தொடங்கி எகிப்துக்குக் கிழக்கே இருக்கம் சூருக்குச் செல்லும் வரை இருந்த அமலேக்கியரைத் தாக்கினார்.

அமலேக்கியரின் மன்னன் ஆகாகை அவர் உயிரோடு பிடித்தார். ஆனால் மக்கள் அனைவரும் வாளுக்கு இரையாக்கினர்.

சவுலும் வீரர்களும் ஆகாகைக் கொல்லாமல் விட்டனர். மேலும் ஆடு மாடுகளில் முதல் தரமானவைகளையும் ஆட்டுக் குட்டிகளையும், நல்லவை அனைத்தையும் அழிக்கவில்லை. அற்பமானவைகளையும் பயனற்றவைகளையும் முற்றிலும் அழித்து விட்டார்.

அப்பொது ஆண்டவரின் வார்த்தை சாமுவேலுக்கு அருளப்பட்டது. அவர் கூறியது,

சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னை பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கிவல்லை. சாமுவேல் மனம்வருந்தி இரவெல்லாம் மன்றாடினார்.

சவுலை சந்திப்பதற்காக சாமுவேல் வைகறையில் துயிலெழுந்தார். அப்போது சவுல் கர்மேலுக்கு வந்ததாகவும் தமக்கென ஒரு நினைவுச் சின்னம் அமைத்ததாகவும், கில்காலுகு கடந்து சென்றுவிட்டதாகவும் சாமுவேலுக்கு தெரிவிக்கப்பட்டது.

சாமுவேல் சவுலிடம் வந்தார். சவுல் அவரை நோக்கி, நீர் ஆண்டவரால் ஆசி பெற்றவர்! ஆண்டவரின் வார்த்தையை நான் நிறைவேற்றிவிட்டேன் என்றார்.

அதற்கு சாமுவேல், அப்படியானல் நான் கேட்கும் ஆடுகளின் ஒலியும் மாடுகளின் இரைச்சலும் என்ன? என்று கேட்டார்.

சவுல் மறுமொழியாக, அவை அமலேக்கியரிடமி நது கொண்டுவரப்பட்டவை. வீரர்கள் முதல் தரமான ஆடுகளையும் மாடுகளையும் கடவுளாகிய ஆண்டவருக்காகப் பலி செலுத்துவதற்காக விட்டுவைத்துள்ளார். எஞ்சியவற்றை நாங்கள் முற்றிலும் அழித்து விட்டோம் என்றார்.

அப்பொது சாமுவேல் சவுலை நோக்கி, நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்கு கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன் என சவுல், சொல்லுங்கள் என்றார்.

சாமுவேல் கூறியது: நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்தபோதல்லவா இஸ்ரயேல் குலங்கலுக்குத் தலைவர் ஆனீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ரயேலுக்கு அரசராகத் திருப்பொழிவு செய்தார்.

ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, நீ சென்ற அந்தப் பதவிகளான அமலேக்கியரை அழித்து விட்டு வா. இறுதிவரை போரிட்டு அவரை ஒழித்துவிடு என்று சொன்னார்.

அப்படியிருக்க, நீர் ஏன் ஆண் டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவில்லை? கொள்ளைப் பொருள் மீது பாய்ந்து ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தேன்?

அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, ஆண்டவரின் குரலுக்கு நான் செவி கொடுத்தேன். அவர் காட்டிய வழியிலும் நான் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால் அமலேக்கியரை அழித்துவிட்டேன்.

ஆனால் வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர் என்றார்.

அப்பொது சாமுவேல் கூறியது: ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள் பிற பலிகள் வெலுத்துவதா? அவரது குரலுக்கு கீழ்ப்படிவதா? கீழ்படிதல் பலியைவிடச் சிறந்தது. கீழ்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது!

கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்! முரட்டுத்தனம் சிலை வழிப்பாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையை புறங்ணித்தீர்! அவரும் உம்மை அரசப் பதவியினின்று நீக்கிவிட்டார்.

அப்பொது சவுல் சாமுவேலை நோக்கி, நான் பாவம் செய்து விட்டேன். வீரர்களுக்கு அஞ்சி அவர்களின் குரலுக்குச் செவி கொடுத்து, ஆண்டவரின் வாய்மொழியையும் உம் வார்த்தையையும் மீறிவிட்டான்.

தயைகூர்ந்து இப்போது என் பாவத்தை மன்னியும். என்னோடு திரும்பி வாரும். நான் ஆண்டவரைப் பணிந்து தொழுவேன் என்றார்.

அப்போது சாமுவேல் சவுலிடம் நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறங்கணித்துவிட்டதாலும், ஆண்டவர் இஸ்ரயேல் மீது அரசு செலுத்துவதினின்று உம்மை விலகிவிட்டதாலும், நான் உம்மோடு திரும்ப வர மாட்டேன் என்றார்.

சாமுவேல் செல்லத் திரும்பியபோது,சவுல் அவரது ஆடையின் விளிம்பைப் பிடிக்க, அது கிழிந்தது.

அப்போது சாமுவேல் ஆண்டவர் இன்று இஸ்ரயேல் அரசை உம்மிடமிருந்து கிழித்து உம்மைவிடச் சிறந்த, உமக்கு நெருங்சிய ஒரவனுக்கு அதைத் தந்துவிட்டார்.

மேலும், இஸ்ரயேலின் மாட்சி ஏமாற்ற மாட்டார். மனம் மாறவும் மாட்டார். மனம் மாறுவதற்கு அவர் என்ன மனிதரா? என்று அவரிடம் கூறினார்.

மீண்டும் சவுல், நான் தவறிவிட்டேன். என் மக்களின் பெரியோருக்கு முன்பாகவும், இஸ்ரயேலுக்கு முன்பாகவும் தயைகூர்ந்து என்னைப் பெருமைப்படுத்தும். உம் கடவுளாகிய ஆண்டவரைப் பணிந்து வாரும் என்றார்.

சாமுவேல் திரும்ப சவுலின் பின்னே செல்ல, சவுலும் ஆண்டவரைப் பணிந்து தொழுவார்.

பிறகு சாமுவேல், அமலேக்கியரின் மன்னன் ஆகாகை என்னிடம் கொண்டு வாரும் என்றார். ஆகாகு அவரிடம் வந்து மகிழ்ச்சியுடன் உறுதியாகச் சாவின் கொடுமை அகன்றுவிட்டது என்றான்.

அதற்குச் சாமுவேல் பெண்கள் உனது வாளால் பிள்ளையற்றோர் ஆகியது போல, உன் தாயும் பெண்களுக்கு பிள்ளையற்றவள் ஆகட்டும் என்று கூறி, கில்காலில் ஆண்டவர் திருமுன் ஆகாகைத் துண்டு துண்டாக வெட்டினார்.

அதன் பின் சாமுவேல் இராமாவுக்குச் சொந்த ஊரான கிபியாவிலிருந்த தம் வீட்டுக்குச் சென்றார்.

சாமுவேல் தாம் இறக்கும் நாள் வரை சவுலை மீண்டும் பார்க்கவில்லை. ஆனால் அவர் சவுலுக்காகத் துக்கம் கொண்டாடினார். ஆண்டவரும் சவுலை இஸ்ரயேல்மீது அரசராக்கியதற்காக மனம் வருந்தினார்.

அதிகாரம் 16.

ஆண்டவர் சாமுவேலை நோக்கி, இஸ்ரயேலின் அரசராகத் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறங்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டுவருவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்: ஏனெனில் அவர் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன் என்றார்.

அதற்குச் சாமுவேல் எப்படிப்போவேன்? சவுல் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுவிடுவானே? என்றார். மீண்டும் ஆண்டவர் நீ ஒரு கன்றுக்குட்டியை எடுத்துச் செல்! ஆண்டவருக்கு பலியிட வந்துள்ளேன் என்று சொல்:

ஈசாயைப் பலிக்க அழைத்திடு: அப்போது நீ என்ன செய்யவேண்டியதென்று நான் உனக்கு அறிவிப்பேன்: நான் உனக்கு காட்டுகிறவனை நீ எனக்குத் திருப்பொழிவு செய் என்றார்.

ஆண்டவர் கட்டளையிட்டவாறு சாமுவேல் செய்து பின் பெத்லகேமுக்குச் சென்றார். அப்பொழுது அவ்வூரின் பெரியோர்கள் அஞ்சி நடுங்கி அவரை எதிர் கொண்டு வந்து, உங்கள் வருகையின் நோக்கம் சமாதானம் தானே என்று கேட்டார்.

அதற்கு அவர், ஆம் சமாதானம்தான்: ஆண்டவருக்குப் பலி செலுத்த வந்துள்ளேன்: உங்களையே தூய்மையாக்கிக் கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள் என்றார். மேலும் ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியிட வருமாறு அழைத்தார்.

அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் என்று எண்ணினார்.

ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே: ஏனெனில் நான் அவனைப் புறங்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்: ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் என்றார்.

அடுத்து, ஈசாய் அரினதாபை அழைத்து சாமுவேல் முன்பாக நடந்துப்போகச் செய்தார். அவர், இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை என் று கூறினார்.

பிறகு ஈசாய் சம்மாகுவைக் கடந்து போகச் செய்தார். இவர்களையும் ஆண்டவர் சேர்த்துக் கொள்ளவில்லை என்றார் சாமுவேல்.

இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். இவர்களையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை என்றார் சாடுவேல்.

தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, என் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா? என்று கேட்க, இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான் என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம் ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன் என்றார்.

ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றத்துடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம் தேர்ந்துக் கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்! என்றார்.

உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகேதரர் முன்னிலையில் அவனைத் திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது.

அப்பபொழுது சவுலின் பணியாளர்கள் அவரிடம், ஜயா, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம்மைக் கலக்கமுறச் செய்கிறதே!

உம் முன் நிற்கும் உம் பணியாளர்களாகிய நாங்கள் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை அழைத்து வர எங்களுக்குக் கட்டளையிடும்! ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம் மீது இறங்கும் பொழுது அவன் யாழ் மீட்டுவான்! என்றனர்.

எனவே சவுல் தம் பணியாளரிடம் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை கண்டுபிடித்து என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார்.

பணியாளர்களில் ஒருவன் இதோ பெதலரகேமைச் சார்ந்த ஈசாயின் மகனைப் பார்த்தேன்: அவன் யாழ் மீட்டுவதில் வல்லவன்: வீரமுள்ளவன்: போர்த்திறன் பெற்றவன்: பேச்சுத் திறன் பெற்றவன்: அழகானவன்: மேலும் ஆண்டவர் அவனோடு இருக்கிறார் என்றார்.

அதைக் கேட்ட சவுல் ஈசாயிடம் தம் தூதுர்களை அனுப்பி, ஆட்டு மந்தையை மேய்க்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பும் என்று தெரிவித்தார்.

அதைக் கேட்ட ஈசாய் கொஞ்சம் அப்பத்தையும் ஒரு தோற்பை நிறைய திராட்சை இரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கழுதை ஒன்றின் மேல் ஏற்றி தம் மகன் தாவீது மூலம் சவுலுக்கு அனுப்பினார்.

தாவீது சவுலிடம் வந்தவுடன் அரசவைப் பணியில் சேர்ந்து விட்டார். சவுல் அவர் மீது மிகவும் அன்பு கொண்டு அவரை தம் படைக்கலன்கொண்டு தாக்குவோனாக நியமித்தார்.

தாவீது என் அவையிலேயே இருக்கட்டும்: ஏனெனில் என் கண்களில் அவனுக்கு தயவு கிடைத்துள்ளது எனறு சவுல் ஈசாயிடம் சொல்லியனுப்பினார்.

அதன் பின் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார். தீய ஆவியும் அவரை விட்டு அகலும்: சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார்.

அதிகாரம் 17.

பெலிஸ்தியர் போருக்குப் படைகளை யூதாவிலுள்ள சோக்கோவில் ஒன்று திரட்டினார். சோக்காவுக்கும் அசேக்காவுக்கும் இடையேயுள்ள எபெசுதம்மில் அவர்கள் பாசறை அமைத்தார்.

சவுலும் இஸ்ரயேல் மக்களும் ஒன்றுதிரண்டு ஏலா என்ற பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து பெலிஸ்தியருக்கு எதிராக போரிட அணிவகுத்தார்.

பெலிஸ்தியர் அப்பக்கம் ஒரு மலையின் மீதும், இஸ்ரயேல் இப்பக்கம் ஒரு மலையின் மீதும் நின்றிருக்க அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.

அப்பொழுது காத்து நகரைச் சார்ந்த கோலியாத்து என்ற வீரன் பெலிஸ்தியர் பாசறையிலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் உயரம் ஆறரை முழம்.

அவன் வெண்கலம் தலைக்கவசமும் ஜம்பத்தேழு கிலோ வெண்கல்தாலான மீன் செதிலைப் போன்ற மார்புக் கவசமும் அணிந்திருந்தான்.

காலகளில் வெண்வலக் கவசமும் தோள்களுக்கிடையில் வெண்கல எறிவேலும் அவன் அணிந்திருந்தான்.

அவனது ஈட்டிக்கோல் தறிக்கட்டை போல் பெரிதாயிருந்தது. அவனது ஈட்டியின் முனை ஏழு கிலோ அரும்பால் ஆனது. அவனுடைய கேடயம் தாங்குவோன் அவனுக்கு முன்பாக நடப்பான்.

அவன் இஸ்ரயேல் படைகளுக்கு எதிராக நின்று உரத்த குரலில் நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள்? நான் ஒரு பெலிஸ்தியன்! நீங்கள் சவுலின் அடிமைகள் அல்லவா! உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும்.

அவன் என்னிடம் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம்: நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிடைகளாகி எங்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றான்.

மேலும் அந்தப் பெலிஸ்தியன், இதோ, இஸ்ரயேல் படைகளுக்கு சவால் விடுகிறேன். என்னோடு போரிட இப்பொழுதே ஒருவனை அனுப்புங்கள் என்றான்.

சவுலும் இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கலங்கிப் பெரிதும் அச்சமுற்றனர்.

தாவீது யூதாவின் பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்தியரான ஈசாய் என்பவரின் மகன். ஈசாய்க்கு எட்டு புதல்வர்கள் இருந்தனர்: சவுலின் காலத்திலேயே ஈசாய் மிகவும் மூதிர்ந்தவராய்யிருந்தார்.

இவருடைய மூத்த புதல்வர் மூவர் போருக்குச் சென்றிருந்தனர். அம் மூவரில் மூத்தவர் பெயர் எலியாபு, அடுத்தவன் பெயர் அபினதாபு, மூன்றாமவன் பெயர் சம்மாகு.

சாவீது எல்லோருக்கும் இளையவன். மூத்தவர்களாகிய அம்மூவர்களே சவுலோடு சென்றிருந்தனர்.

ஆனால் தாவீது சவுலை விட்டுச் சென்று பெத்லகேமில் தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பெலிஸ்தியன் காலையிலும், மாலையிலும் நாற்பது நாள்கள் இவ்வாறு சவால் விட்டான்.

ஈசாய் தம் மகன் தாவீதிடம் உன் சகோதரர்களுக்காக இந்த இருபதுபடி அளவுள்ள ஒரு மரக்கால் மாலையும் பத்து அப்பத்துண்டுகளையும் எடுத்துக் கொண்டு பாளையத்தில் இருக்கும் உன் சகோதரனிடம் விரைந்து செல்.

இந்தப் பத்து பால் கட்டிகளை ஆயிரத்தவர் தலைவனிடம். அளித்து விட்டு உன் சகோதரர் நலமுடன் இருக்கிறார்களா என்று கேட்டு அவர்களிடம் ஒரு அடையாளம் ஒன்று பெற்றுவா: என்று கூறினார்.

அப்பொழுது சவுலும் அவர்களும் இஸ்ரயேலர் எல்லோரும் ஏலா பள்ளத்தாக்கில் பெலிஸ்தியருடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

தாவீது விடியற் காலையில் எழுந்து ஆடுகளைக் காவலன் ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டு, உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு, ஈசாய் தமக்குக் கட்டளையிட்டவாறு புறப்பட்டுச் சென்று பாசறையை அடைந்தார்: அப்பபொழுது இஸ்ரயேல் படைகள் அணிவகுப்பு நடத்திப் போர்க்குரல் எழுப்பினர்.

இஸ்ரயேலரும் பெலிஸ்தியரும் எதிர் எதிராக அணிவகுத்து நின்றனர்.

தாவீது தாம் கொண்டுவந்தவற்றை பொருள்களைப் பாதுகாக்கும் காவலன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு போர்களத்திற்குள் ஓடினார். அங்கு தம் சகோதரர்களைக் கண்டு நலம் விசாரித்தார்.

அவர் அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் இதோ காத்து நக¨ரைச் சார்ந்த பெலிஸ்திய வீரனான கோலியாத்து என்பவன் பெலிஸ்தியர் அணிகலினின்று தோன்றி தான் முன்பு சொன்ன வார்த்தைகளையே மீண்டும் சொன்னான்: தாவீது அதைக் கேட்டார்.

அவனைக் கண்ட இஸ்ரயேல் அனைவரும் மிகவும் அச்சமுற்று அவன் முன்னின்று ஓடினர்.

இதோ நிற்கிற இம்மனித்தனைப் பார்த்தீர்களா? இஸ்ரயேலை உண்மையாகவே இழிவுப்படுத்த இவன் வந்துள்ளான். இவனைக் கொல்பவனுக்கு அரசர் மிகுந்த செல்வம் அளித்துத் தம் மக்களை மணம் முடித்துக் கொடுப்பார். அத்துடன் இஸ்ரயேலருக்கு அவன் தந்தை வீட்டாருக்கு மட்டும் வரிவிலக்குச் செய்வார் என்று இஸ்ரயேலர் தங்களுக்குள் பேசிக் கொண்டார்.

இப்பொழுது தாவீது தம்மருகில்யிருந்தவர்களை நோக்கி, இந்தப் பெலிஸ்தியனை கொன்ற இஸ்ரயேலின் இழிவை நீக்குகிறவனுக்கு என்ன கிடைக்கும்? வாழும் கடவுளின் படைகளைப் பழிப்பவனுக்கு விருத்த சேதனம் இல்லாத பெலிஸ்தியனாகிய இவன் யார்? என்று கேட்டார்.

அதற்கு மக்கள், அவனைக் கொல்பவனுக்கு இவை அனைத்தும் அளிக்கப்படும் என்று முன்பு சொன்னவாறே பதிலளித்தார்.

மக்களோடு அவர் பேசிக் கொண்டிருந்ததை அவர் மூத்த சகோதரன் எலியாபு கேட்டு, தாவீதின் மேல் வெஞ்சினமுற்று நீ ஏன் இங்கு வந்தாய்? அந்தச் சில ஆடுகளையும் பாலையத்தில் நீ யாரிடம் ஒப்படைத்தாய்? உன் செருக்கையும் ஆணவத்தையும் நான் அறிவேன்: ஏனெனில் போரை வேடிக்கைப் பார்க்கத்தான் நீ வந்துள்ளாய் என்றான்.

அதற்குத் தாவீது இப்பொழுது நான் என்ன செய்து விட்டேன்? ஒரு கேள்வித்தானே கேட்டேன்? என்று கூறி.

அவனைவிட்டு வேறொருவனிடம் சென்று அவனிடம் கேட்டார். மக்களும் முன்போலவே அவருக்குப் பதிலளித்தார்.

தாவீது கூறிய வார்த்தைகளைக் கேட்டவர்கள் இவற்றைச் சவுலிடம் தெரிவித்தார். அப்பொழுது சவுல் அவரை வரவழைத்தார்.

தாவீது சவுலை நோக்கி, இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வெண்டியதில்லை: உம் அடியானாகிய நானே அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன் என்றார்.

அதற்குச் சவுல் தாவீதிடம் இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் முடியாது. நீயோ இளைஞன் ஆனால் அவனோ தன் இளம் வயது முதல் போரில் பயிற்சியுள்ளவன் என்றார்.

தாவீது சவுலை நோக்கி உம் அடியானகிய நான் என் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமோ அல்லது கரடியோமந்தையில் புகுந்து ஆட்டைக் கவ்விக் கொண்டு ஓடினால்,

நான் பின் தொடர்ந்து ஓடி அதை அடித்து அதன் வாயினிற் ஆட்டைவிடுவிப்பேன்: அது என் மீது பாய்ந்தால் அதன் தாடியை பிடித்து நன்றாக அடித்துக் கொல்வேன்.

உம் அடியானகிய நான் சிங்கங்களையும் கரடிகளையும் இவ்வாறு கொன்று இருக்கிறேன். விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தியனும் அவற்றில் ஒன்றைப் போல்தான்: ஏனெனில் அவன் வாழும் படைகளை இழிவுப்படுத்தியுள்ளான். என்றார்.

மேலும் தாவீது என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார் என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம் சென்று வா! ஆண்டவர் உன்னொடு இருப்பார் என்றார்.

பின்பு சவுல் தாவீதுக்குத் தம் உடைகளை அணிவித்து, வெண்கலத் தலைக்கவசத்தை அவர் தலைமேல் வைத்து மார்புக் கவசத்தையும் அவருக்கு அணிவித்தார்.

தாவீது சவுலின் வாளைத் தம் உடையின் மீது கட்டிக் கொண்டு தமக்குப் பழக்கமில்லாததால் நடந்து பார்த்தார். தாவீது சவுலை நோக்கி, இவற்றுடன் என்னால் நடக்கவியலாது, ஏனெனில் இதில் எனக்குப் பழக்கம் இல்லை. என்று அவரை கலைத்து விட்டார்.

தாவீது தம் கோலைப் கையில் எடுத்துக் கொண்டார். நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஜந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் கையில் போட்டுக் கொண்டார். தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார்.

தன் கேடயமேந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான்.

பெலிஸ்தியன் தாவீதை கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான்: ஏனெனில் அவன் சிவந்த மேனியும் அழகிய தோற்றம் உடைய இளைஞனாய் இருந்தான்.

அப்பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து, நீ கோலுடன் என்னிடம் வர நான் என்ன நாயா? என்று சொல்லி தெய்வங்களின் பெயரால் தாவீதை சபிக்கத் தொடங்கனான்.

மீண்டும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி அருகே வா, வானத்துப் பறவைகளுக்கும் விளங்குகளுக்கும் உன் உடலை இறையாக்குவேன் என்றான்.

அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம் நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய் நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன் இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்.

நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன் பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்: இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர்.

மேலும் ஆண்டவர் வாளினாலும் ஈட்டினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள்கூட்டம் அறிந்து கொள்ளட்டும் ஏனெனில் இது ஆண்டவரின் போர் அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார் என்றார்.

பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கி புறப்படுகையில் தாவீது அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார்.

தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார் அதை கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லிலும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான்.

இவ்வாறு தாவீது கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு அவனை வீழ்த்திக் கொன்றார்.

உடனே தாவீது ஓடி அந்தப் பெலிஸ்த்தியனின்மேல் ஏறிநின்றார்: அவனது வாளை அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையை கொய்தார்.

யூதா மக்களுக்கு இஸ்ரயேல் மக்களும் எழுந்து ஆர்ப்பரித்து எக்ரோன் வாயில் மட்டுமுள்ள காத்து பள்ளத்தாக்கு வரை துரத்திச்சென்றனர். சாராயி மின் சாலையில் காத்து எக்ரோன் எல்லை வரையிலும் பெலிஸ்தியர் வெட்டுண்டு கிடந்தனர்.

இஸ்ரயேலர் பெலிஸ்தியரைப் பின்தொடர்வதை நிறுத்தி விட்டு அவர்களது பாசறையைக் கொள்ளையடித்தனர்.

தாவீது அப் பெலிஸ்தியனின் தலையை எடுத்து எருசலேமுக்குக் கொண்டு சென்றார். ஆனால் தம் படைக்கலன்களைத் தம் கூடாரத்தில் வைத்தார்.

பெலிஸ்தியனுக்கு எதிராகத் தாவீது சென்றதை சவுல் கண்டபோது அவர் படைத்தலைவன் அப்னேரிடம் அப்னேர் இந்த இளைஞன் யாருடைய மகன்? என்று கேட்டார்.அப்னேர் அதற்கு அரசே உம் உயிர் மேல் ஆணை! அதை நான் அறியேன் என்றார்.

மீண்டும் அரசர், இவ்விளைஞன் யாருடைய மகன் என்று விசாரித்து வா என்றார்.

தாவீது பெலிஸ்தியனைக் கொன்றுவிட்டு திரும்பிய போது அப்னேர் அவரை சவுலிடம் அழைத்துச் சென்றார்: அப்பொழுது அவர் கையில் பெலிஸ்தியனின் தலை இருந்தது.

சவுல் அவரிடம் இளைஞனே நீ யாருடைய மகன்? என்று கேட்டார்.

அதிகாரம் 18.

தாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுப்பட்டது. யோனத்தான் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.

அன்று சவுல் தாவீதை தம்முடன் அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை வீட்டுக்கு திரும்பிப் போக இசைவு அழிக்கவில்லை.

பின்பு யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஏனெனில் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.

யோனத்தான் தான் அணிந்திருந்த மேலங்கியைச் சுழற்றி தாவிதுக்குக் கொடுத்தார். அத்துடன் தம் அங்கி, வாள் வில், கச்சை ஆகியவற்றையும் கொடுத்தார்.

தாவீது சவுல் தம்மை அனுப்பிய இடமெல்லாம் சென்று வெற்றியைக் கொடுத்தார். அதனால் சவுல் அவரை படைத்தலைவராக்கினார். மக்கள் எல்லோரும் மற்றும் சவுலின் அலுவலர்களும் இதைப் பெரிதும் விரும்பினர்.

தாவீது பெலிஸ்தியனைக் கொன்ற பின், வீரர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும் பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலை சந்திக்க வந்தார். அவர்கள் கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடன் மகிழ்ச்சிப் பாடல் எழுப்பினர்.

அப்பெண்பள் அப்படி ஆடிப்பாடுகையில் சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார். என்று பாடினார்.

இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை: அவர் மிகவும் சினமுற்று, அவர்கள் தாவீதுக்குப் பதினாயிரம் பேர் என்றனர். எனக்கோ, ஆயிரம் பேர் என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்று தான்! என்று கூறினார்.

அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கொண்டு பார்க்கலானார்.

மறுநாளே கடவுல் அனுப்பிய தீய ஆவி சவுலை ஆட்கொள்ள, அவர் தம் வீட்டில் பிதற்றினார். அப்போது தாவீது ஒவ்வொரு நாளும் செய்வது போல் யாழ் எடுத்து மீட்டினார். சவுலின் கையில் ஈட்டி இருந்தது.

நான் தாவீதை சுவரோடு சேர்த்துக் குத்துவேன் என்று சவுல் நினைத்துத் தம் ஈட்டியை அவர் மேல் எறிந்தார். ஆனால் தாவீது அதை இருமுறை தவிர்த்து விட்டார்.

ஆண்டவர் தம்மிடமிருந்து விலகி, தாவீதுடன் இருந்ததனால் அவருக்குச் சவுல் அஞ்சினார்.

ஆதலால் சவுல் அவரைத் தம் முன்னின்று அகற்றி, ஆயிரவர் தலைவராக்கினார். தாவீது வீரர்களை முன்னின்று நடத்தினார்.

ஆண்டவர் தாவீதுடன் இருந்ததால் அவர் செய்த யாவற்றிலும் வெற்றிக் கண்டார்.

அவர் பெரும் வெற்றியை குவிப்பதைக் கண்ட போது, சவுல் அவருக்கு இன்னும் அஞ்சினார்.

ஆனால் இஸ்ரயேலரும் யூதா மக்கள் அனைவரும் தாவீதின் மீது அன்பு செலுத்தினர். ஏனெனில் அவர் அவர்களை முன்னின்று நடத்திச் சென்றார்.

பின்பு சவுல், என்கை அவன் மேல் படாமல் பெலிஸ்தியர் கை அவன் மேல் படட்டும் என்று எண்ணி, தாவீதை நோக்கி, இதோ என் மூத்த மகன் மோராபு! அவனை எனக்கு மனம் முடித்துக் கொடுப்பேன். நீ மட்டும் வீரம்முள்ளவனாக செயல்பட்டு ஆண்டவரின் படைகளை நடத்திச் செல் என்றார்.

அப்பொழுது தாவீது சவுலிடம், அரசனின் மருமகன் ஆவதற்கு நான் யார்? என் உறவினர் யார்? இஸ்ரயேல் என் தந்தையின் குலம் என்ன? என்று கேட்டார்.

சவுலின் மகள் மேராபைத் தாவீதுககு மனம் முடிக்கவிருந்த நேரத்தில், அவள் மெகொலாயனாகிய அதிரியேலுக்கு மனம் முடிக்கப்பட்டாள்.

அதன் பின், சவுலின் மகள் மீக்கால் தாவீதின் மீது காதல் கொண்டாள். இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது சவுல் மகிழ்ச்சியுற்றார்.

நான் அவளை அவனுக்கு கொடுப்பேன் அவளும் அவனுக்கு மனைவியாய் இருப்பாள் பெலிஸ்தியரும் அவனுக்கு எதிராக எழுவார் என்று சவுல் நினைத்து, தாவீதை நோக்கி, இப்பொழுது என் இரண்டாம் மகள்மூலம் நீ என்மருமகனாய் ஆவாய் என்று கூறினார்.

சவுல் தம் பணியாளர்களிடம் தாவீதோடு இரகசியமாய் பேசி, இதோ! அரசர் உம்மீது விருப்பம் கொண்டுள்ளார். அவர்கள் அலுவலர்கள் எல்லோரும் உம்மீது அன்பு கொண்டுள்ளனர். ஆதலால் நீ இப்போது அரசருக்கு மருமகனாய் இரும் என்று செல்லுங்கள் என்றார்.

சவுலின் பணியாளர்கள் அந்த வார்த்தைகளை தாவீதின் காதில் ஓதினர். அப்பபொழுது தாவீது, அரசருக்கு மருமகனாய் ஆவது உங்களுக்கு அவ்வளவு எளிதானதாய் தோன்றுகிறதா? நான் எளியவனும் தாழ்ந்தவனுமாய் உள்ளேன் அன்றோ? என்றார்.

சவுலின் பணியாளர்கள் அவரிடம், தாவீது இவ்வார்த்தைகளை சொன்னான் என்றார்.

பின்பு சவுல், தாவீதிடம் இவ்வாறு சொல்லுங்கள்: அரசர் திருமணப் பரிசும் எதுவும் விரும்பவில்லை: அரசருடைய எதிரிகளை பழிவாங்கி, பெலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை நீ கெண்டுவந்தால் போதும் என்று சொல்லுங்கள் என்றார். தாவீது பெலிஸ்தியனின் கையில் அகப்பட்டு மடியவேண்டுமென்பதே சவலின் திட்டம்.

சவுலின் பணியாளர்கள் தாவீதுக்கு அந்த வார்த்தைகளை கூறிய போது, அரசருக்கு மருமகனாய் ஆவது பற்றி மகிழ்ச்சியுற்றார்.

திருமணநாள் நெருங்குமுன் தாவீது தம் ஆள்களுடன் சென்று பெலிஸ்தியரில் இருநூறு பேரைக் கொன்றார். பின்னர் தாவீது அவர்களின் நுனித் தோல்களைக் கொண்டுவந்து, அரசனின் மருமகனாய் ஆகும் பொருட்டு, அவற்றை அவரிடம் சரியாக எண்ணிவைத்தார். எனவே சவுல் தம் மகளை மீக்காலைத் தாவீதுக்கு மணம்முடித்துக் கொடுத்தார்.

ஆனால் ஆண்டவர் தாவீதோடு இருப்பதையும், இஸ்ரயேல் முழுவதும் அவர் மீது அன்புக் கொண்டுள்ளதையும், சவுல் தெளிவாகக் கண்டுணர்ந்தார்.

எனவே சவுல் தாவீதுக்கு மிகவும் அஞ்சினார். சவுல் தாவீதை என்றென்றும் தம் எதிரியாக கருதினார்.

பின்பு பெலிஸ்திய படைத் தலைவர்கள் போரிடுமாறு புறப்பட்டு வந்தனர். அப்படி அவர்கள் வந்தபோதெல்லாம் சவுலின் மற்ற எல்லாத் தலைவர்களைவிடத் தாவீது மிகுதியான வெற்றி அடைந்தார். அதனால் தாவீதின் புகழ் மேலோங்கியது.

அதிகாரம் 19.

தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தன் மகன் யோனத்தானிடம் தம் அலுவலர் எல்லோரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மீது அதிகமாக அன்புக் கொண்டிருந்தார்.

ஆதலால் தாவீதைப் பார்த்து யோனத்தான், என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார். ஆதலால் எச்சரிக்கையான இரு. காலையிலேயே புறப்பட்டு ஓர்யிடத்திற்குச் சென்று ஒளிந்துக் கொள்.

நீ வெளியில் இருக்கம் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்துக் கொண்டு, உன்கைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்: அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன் ஔனறார்.

யோனத்தான் தாவீதைப் பற்றித் தம் தந்தையிடம் நல்லவிதமாகப் பேசி, அரசர் தம் அடியான் தாவீதின் பொருட்டு பாவம் ¦ச்யய வேண்டாம்: ஏனெனில் அவன் உமக்குத் எந்டத தீங்கு செய்ததில்லை: மேலும் அவனுடைய அரசியல் உமக்கு பயனுடையதாய் இருந்தன.

அவன் தன் உயிரைப் ஒரு பொருட்டாய் எண்ணாது அப் பெலிஸ்தியனைக் கொன்றான். ஆதலால் ஆண்டவர் பெலிஸ்தியர் எல்லோருக்கும் பெரும் வெற்றியை அளித்தார். நீர் அதைக் கண்டு மகிழ்ச்சியுற்றீர். அப்படியிருக்க எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொள்வதன் மூலம் குற்றமற்ற இரத்தத்திற்டகு எதிராக நீ ஏன் பாவம் செய்ய வேண்டும்? ஔனறு கூறினார்.

சவுல் யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்டார். அதனால் சவுல் ஆண்டவர் மேல் ஆணை! அவன் கொலை செய்யப்படமாட்டான் ஔனறார்.

பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவருக்குக் கூறினார். மேலும் யோனத்தான் தாவீதை சவுலிடம் அழைத்துச் செல்ல, முன்பு போலவே சவுல் அவரது பணியில் ஈடுபட்டார்.

மீண்டும் போர் மூண்டது: தாவீது புறப்பட்டு பெலிஸ்தியருடன் போரிட்டு அவர்கிளல் மிகுதியனோரை வெட்டி வீழ்த்தினார். அதனால் அவர்கள் சிதறி ஓடினர்.

பின்னர் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மேல் இறங்கியது. அப்பொழுது அவர் தம் வீட்டில் ஈட்டியுடன் வீற்றிருக்க, தாவீது யாழ் எடுத்து மீட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது சவுல் தாவீதை ஈட்டியால் சுவரோடு குத்த முயன்றார். ஆனால் சவுலின் ஈட்டி குறியிலிருந்து விலகியதனால் சுவரில் பாய்ந்தது. அன்றிரவே தாவீது அங்கிருந்து தப்பி ஓடினார்.

உடனே சவுல் தாவீதை அவர் வீட்டில் கண்காணித்து மறுநாள் காலையில் கொன்றுவிடுமாறு காவலர்களை அனுப்பினர். ஆனால் தாவீதின் மனைவி மீக்கால் அவரிடம், நீர் இன்றிரவே உம் உயிலைக் காப்பற்றிக் கொள்ளவிட்டால் நாளை நீர் கொள்ளப்படுவீர் என்றாள்.

ஆதலால் மீக்காலை தாவீதை பலகலணி வழியே இறக்கிவிடவே அவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மீக்கால் குடும்பச் சிலையை எடுத்து அதை படுக்க¨யில் கிடத்தினாள். அதன் தலைபாகத்தில் ஒரு வெள்ளாட்டுத்தோலைவைத்து ஒர போர்வையால் மூடினாள்.

தாவீதைப் பிடித்து வரச் சொல்லி தூதர்களை சவுல் அனுப்பிய போது அவள் அவர் நோயுற்றிருக்கிறார் என்றாள்.

மறுபடியும் சவுல் தாவீதைப் பார்க்கும் படி தூதர்களை அனுப்பி, நான் கொல்லுமாறு அவனைப் படுக்கையோடு கொண்டு வாருங்கள் என்றார்.

அவர்க்ள வந்தபோது இதோ படுக்க¨யின் மேல் குடம்பச் சிலையும் அதன் ஆமல் வெள்ளாட்டுத் தோலும் இருக்கக் கண்டார்.

சவுல் மீக்காலிடம் என் பகைவனை தப்பிக்குமாறு அனுப்பி, ஏன் ஔனனை வஞ்சித்தாய்? ஔனறு கேட்டார். அதற்கு மீக்கால் சவுலிடம், ஔனனை போகவிடு: இல்லையெனில் என்னைக் கொன்று விடுவேன்: என்று அவர் மிரட்டினார் என்ற மறுமொழி கூறினாள்.

அப்பொழுது தாவீது அங்கிருந்து தப்பியபடியே இராமாவில் இருந்த சாமுவேலிடம் வந்து, சவுல் தமக்கு ¦ச்யத யாவற்¨றுய கூறனார். பின்னா அவரும் சாமுவேலும் நாவோத்துக்குச் சென்று தங்கினர்.

இதோ இராமாவில் உள்ள நாவோத்தில் தாவீது இருக்கிறார். என்று சவுலுக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே சவுல் தாவீதை பிடித்து வர ஆள்களை அனுப்பினார். அவர்கள் சென்ற போது இறைவாக்கினர் இறைவாக்குறைப்பதையும், சாமுவேல் அவர்களுக்க தலைமைத் தாங்கி நிற்பதையும் கண்டார். அத்துடன் சவுலின் ஆள்கள் மேலும் கடவுலின் ஆவி இறங்கி வரவே அவர்களுத் இறைவாக்குரைத்தார்.

சவுலுக்க இது தெரி¢வக்கப்பட்டபோது அவர் மூன்றாம் முறையாக ஆள்களை அனுப்ப அவர்களும் இறைவாக்குரைத்தார்.

அடுத்து அவரே இராமாவுக்கு ¦ச்னறு, சேக்குவிலிருக்கம் பெரிய கிணற்றே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே?, ஔனறு கேட்டார். இதோ இராமாவிலுள்ள நாவோத்தில் அவர்களைக் காணலாம் என்றான்.

ஆதலால் அவர் அங்கிருந்து இரதமாவிலிருந்த நாவோத்துக்குப் புறப்பட்டார். கடவுலின் ஆவி மேலும் இறங்கி வரவே, ராமாவின் நாவோத்துக்குச் சென்றடையும் வரை அவரும் இறைவாக்குரைத்தார்.

அவரும் தம் மேலுடையைக் களைத்துவிட்டு சாமுவேலின் முன் அவரும் இழறவாக்குரைத்தார். அன்ற பவல் இரவு முழுவதும் ஆடையணியாமல் விழுந்துக் கிடந்தார். அதனால் தான் சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ? என்ற சொல் வழங்கலாயிற்று.

அதிகாரம் 20.

பின்பு, தாவீது இராமாவிலிருந்த நாவோத்திலிருந்து புறப்பட்டுச் சென்று யோனத்தானிடம் வந்து, நான் செய்தது என்ன? நான் செய்து குற்றம் என்ன? உன் தந்தைக்கு எதிராக நான் செய்த பாவம் என்ன? பின்பு, ஏன் என்னை கொள்ளத் தேடுகிறார்? என்று கேட்டார்.

அதற்கு அவர், ஒருக்காலும் இல்லை. நீ சாக மாட்டாய். என்னொடு கலந்தாலோசிக்காமல் என் தந்தை பெரிதோ சிறிதோ எதுவும் செய்யமாட்டார். இச்செயலை மட்டும் ஔன தந்தை மட்டும் மறைப்பானே? அப்படி மறக்காது என்றார்.

அதற்குத் தாவீது, என் கண்களில் எனக்கு இரக்கம் கிடைத்துள்ளது என்று உன் தந்தைக்கு நன்கு தெரியும். ஆகையால் உனக்கு யோனத்தான் இதை அரிய நேர்ந்தால் அவன் வேதனையடைவான் என்று அவர் நினைக்கிறார். ஆனால் எனக்கும் என் சாவுக்கும் ஓர் அடித் தூரம் உள்ளது. வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் மேலும் ஆணை! என்றார்.

அப்பொழுது யோனத்தான் தாவீதிடம் உன் விருப்பப்படி நான் உனக்கு எதுவும் செய்யத் தயார். என்றார்.

தாவீது யோனத்தானை நோக்கி, இதோ! நாளை அமாவாசை: அரவரோடு நான் பந்தியிலிருக்கும் நாள். ஆனால் மூன்றாம் நாள் மாலைவரை வெளியில் சென்று ஒளிந்திருக்க எனக்கு விடை கொடு.

உன் தந்தை என்னைக் காணாது பற்றி விசாரித்தால் தாவீது தன் சொந்த நகரான பெத்லகேமுக்குச் சென்றுள்ளான்: அவன் குடும்பத்தார் அனைவருக்கும் அன்று ஆண்டுப் பலி இருக்கிறதாம்! அங்கே விரைந்து செல்ல என்னிடம் அனுமதி கேட்டான் என்று சொல்.

அவர் நல்லது என்று சொன்னால் உன் அடியான் அமைதியடைவான்: அவர் எனக்குத் தீங்கு செய்ய முடிவு செய்துள்ளார் என அறிந்துகொள்வாய்.

ஆண்டவர் திருமுன் நீ உன் அடியானுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்பொருட்டு என் மேல் இரக்கம் வை. நான் குற்றவாளியாயின் நீயே என்னைக் கொன்று விடு. நீ ஏன் என்னை உன் தந்தையிடம் கொண்டுபோக வேண்டும்? என்றார்.

அதற்கு யோனத்தான், அப்படி உனக்கு நேராது உனக்குத் த¨ங்கு செய்ய என் தந்தை முடிவுசெய்துள்ளார் என நான் அறிந்தால் உனக்கு சொல்லாமல் இருப்பேனா? என்றார்.

பின்பு தாவீது யோனத்தானை நோக்கி உன் தந்தை உன்னிடம் கடுமையான பதிலளித்தால் அதையார் எனக்குத் தெரிவிப்பார். என்று கேட்டா+.

அதற்குயோனா¡த்தான் தாவீதிடம் வெளியில் செல்வோம் வா! என்றார். இருவரும் வயல்வெளிக்குச் சென்றனர்.

யோனாத்தான் தாவீதை நோக்கி இஸ்ரயேல் கடவுளாகிய ஆண்டவர் சான்று பகர்வாராக! நாளை இதே நேரத்தில் அல்லது மூன்றாம் நாளில் என் தந்தையின் கருத்தை அறிவேன்: அது தாவீதுக்கு சாதகமாய் இருந்ததால் உனக்கு அதைத் தெரிவிக்க ஆள்னுப்பமாட்டேனா?

ஆனால் என் தந்தை உனக்கு தீங்கு செய்ய விரும்பியுள்ளதை அறிந்து, அதை நான் உனக்கு வெளிப்படுத்தி உன்னைப் பாதுகாப்புடன் அனுப்பிவைக்காவிடில் ஆண்டவர் என்னைத் தண்டிப்¡ராக! ஆண்டவர் என் தந்தையுடன் இருந்தது போல் உன்னோடு இருப்பாராக!

நான் தொடர்ந்து உயிருடன் இருந்தால் நான் சாகாதவாறு ஆண்டவரின் பொருட்டு என்மேல் இரக்கம் வை.

ஆண்டவர் தாவீதின் எல்லா எதிரிகளையும் இம்மண்ணிலிருந்து அழித்தொழிக்கும் போது என் வீட்டாரை அழிக்காதிருக்கும்படி இரக்கம் வை.

ஆண்டவர் தாவீதின் எதிரிகளுக்குத் தகுந்த பதிலளிப்பாராக என்று கூறி யோனத்தான் தாவீதின் வீட்டாருடன் உடன்படிக்கை செய்தார்.

தாவீதின் மேல் கொண்டுள்ள அன்பின் பெயரால் யோனத்தான் மீண்டும் அவருக்கு ஆணையிட்டுக் கூறினார். ஏனெனில் அவர் தாவீதின் மேல் தம் உயிரென அன்புக் கொண்டிருந்தார்.

பின்பு யோனத்தான் நாளை அமாவாசை: உனது இருக்கை காலியாக இருப்பதைக் கண்டு விசாரித்தார்.

மூன்றாம் நாள் உன்னைக் கண்டிப்பாக தேடுவார். ஆதலால் நீ முன்பு ஒளிந்திருக்கும் இடத்திற்கே போ: அங்கே ஏசேல் கல் அருகே ஒளிந்துக் கொண்டிரு.

நான் குறி வைத்து அம்பு விடுவது போல் மூன்று அம்புகளை எய்வேன்.

பின்பு, போய் அம்புகளைத் தேடிவா என்று ஒரு பையனை அனுப்புவேன். இதோ அம்புகள் இப்பக்கம் கிடக்கின்றன. அவற்றைக் கொண்டு வா, என் பேனாகில் நீ என்னிடம் வா. ஏனெனில் ஆண்டவன் மீது ஆணை! உனக்குப் பாதுகாப்பு உண்டு. ஆபத்து நேராது.

மாறாக, இதோ அம்புகள் உனக்கு இப்பக்கம் கிடக்கின்றன. என்று அந்தப் பையனிடம் சொல்வேனாகில் நீ ஓடி விடு: ஏனெனில் ஆண்டவரே உன்னை அனுப்பி வைக்கிறார்.

நீயும் நானும் பேசியவற்றிற்கு உனக்கும் எனக்கும் ஆண்டவரே என்றென்றும் சாட்சியாக இருப்பார் என்றார்.

ஆதலால் தாவீது வயல் வெளியில் ஒளிந்து கொண்டார். அமாவாசை நாள் வந்தபோது உணவருந்த அரசர் அமர்ந்தார்.

அரசர் சுவரோரம் இருக்கும் தமது இருக்கையில் வழக்கம் போல் அமர்ந்தார். சவுலுக்கு எதிரில் யோனத்தானும் பக்கவாட்டில் அப்னேரும் அமர்ந்தனர். ஆனால் தாவீதின் இருக்கை காலியாயிருந்தது.

இருப்பினும் அவனுக்கு ஏதோ நேர்ந்துள்ளது, அவன் தூய்மையின்றி இருக்கலாம், கண்டிப்பாக அவன் தீட்டாயிருக்க வேண்டும். என்று நினைத்து சவுல் அன்று சவுல் ஏதும் சொல்லவில்லை.

ஆனால் அமாவாசைக்கு அடுத்த நாளும் தாவீதின் இருக்கை காலியாக இருந்தது. அப்பொழுது சவுல் யோனத்தனை நோக்கி, ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் உணவருந்த வராதது ஏன்? என்று கேட்டார்.

யோனத்தான் சவுலிடம், தான் பெத்தலேகம் செல்ல வேண்டுமென்று வருந்திக் கேட்டுக் கொண்டான்.

நான் செல்ல விடைக்கொடு: ஊரில் என் குடும்பத்தார் பலிக் செலுத்துகிறார்கள். மேலும் என் சகோதரர்கள் அங்கிருக்க வேண்டுமென்று எனக்கு கட்டளையிட்டுள்ளார். ஆதலால் என் கண்களில் எனக்கு இரக்கம் கிடைத்தால் என் சகோதரர்களைக் காண போகவிடு: என்றான். இக்காரணத்தினால் தான் அவன் அசைப்பந்திக்கு வரவில்லை என்று பதிலளித்தா+.

அப்பொழுது யோனத்தான் மீது சவுல் கடும் சினமுற்று அவரைப் பார்த்து, பொய்யும் புரட்டும் நிறைந்த பெண்ணின் மகன் நீ. நீ உனக்கு மானங்கெட்ட தாய்க்கும் அவமானமாய் இருக்கும்படி நீ ஈசாயின் மகன் மீது அன்புக் கொண்டுள்ளாய் என்பதை நான் அறியேனோ?

ஈசாயின் மகன் உயிரோடு வாழும் வரை நீயும் நிலைத்துயிருக்கமாட்டாய்.: உன் ஆட்சியும் நிலை பெறாது: ஆதலால் ஆளனுப்பி அவனை என்னிடம் கொண்டு வா: அவன் சாகவே வேண்டும் என்றார்.

அப்பொழுது யோனத்தான் தம் தந்தை சவுலிடம், அவன் ஏன் சாகவேண்டும்? அவன் என்ன செய்தான் என்று கேட்டார்.

ஆனால் அவரைக் குத்தி வீழ்த்த எண்ணி அவரை நோக்கி தம் ஈட்டியை எறிந்தார்: ஆதலால் தாவீதை கொன்று விட தம் தந்தை முடிவு எடுத்துவிட்டார் என்று யோனத்தான் அறிந்து கொண்டார்.

உடனே யோனத்தான் வெஞ்சினமுற்று பந்நியைவிட்டு எழுந்துவிட்டார். அமாவாசையின் மறுநாளகிய அன்று அவர் உணவு அருந்தவில்லை. ஏனெனில் தன் தந்தை இழிவுப்படுத்தியது குறித்து அவர் மிகவும் மனம் வருந்தினார்.

அடுத்த நாள் காலை யோனத்தான் தாவீதை சந்திக்குமாறு ஒரு பையனை அழைத்துக் கொண்டு வயல்வெளிக்குச் சென்றார்.

அவர் அப்பையனிடம், நீ ஓடி நான் எய்கிற அம்புகளை எடுத்து வா என்றார். அப்பபையன் ஓடும் போது அவனுக்கு அப்பால் ஓர் அம்பை எய்தார்.

யோனத்தான் எய்த அம்பு கிடந்த இடத்திற்கு அப்பையன் சென்ற போது, யோனத்தான் அவனைக் கூப்பிட்டு உனக்கு அப்பால் அல்லவா அம்பு கிடக்கிறது, என்றார்.

மீண்டும் பையனை உரத்த குரலில் கூப்பிட்டு நிற்காதே, விரைந்து செல். என்றார். அப்போது யோனத்தானின் பையன் அம்புகளை பொறுக்கிக் கொண்டு தன் தலைவனிடம் திரும்பினான்.

யோனத்தானுக்கும் தாவீதுக்கும் மட்டுமே அந்தப் பொருள் தெரியும்: ஆனால் அப்பையனுக்கோ ஒன்றும் தெரியாது.

பின்பு யோனத்தான் படைக் கலன்களைப் பையனிடம் கொடுத்து, இதை நகருக்கு எடுத்துச் செல் என்று பணிந்தார்.

பையன் அங்கிருந்து சென்றவுடன், தாவீது தென்புறம் தாம் ஒளிந்திருந்த இடத்தினின்று வெளியே வந்து குப்புற விழுந்து மூன்று முறை வணங்கினார். அதன் பின் அவர் ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அழுதார்கள். தாவீது மிகவும் அழுதார்கள்.

பின்பு யோனத்தான் தாவீதிடம், நீ சமாதானமாய்ச் செல், ஆண்டவர் நாமிருவரும் செய்து கொண்ட உடன்படிக்கையினன் பொருட்டு ஆண்டவர் உனக்கும் எனக்கும், உன் வழிமரபிற்கும் என் வழிமரபிற்கும் நடுவே என்றென்றும் சாட்சியாய் இருப்பாராக! என்றார். பின்னர், தாவீது தன் வழியே சென்றார். யோனத்தான் நகருக்குத் திரும்பினார்.

அதிகாரம் 21.

பின்பு தாவீது இருந்த குரு அகிமெலக்கிடம் சென்றார். அகிமெலங்கு தாவீதை நோக்கி நடுக்கத்துடன் வந்து அவரிடம், நீ ஏன் தனியே இருக்கிறாய்? உன்னுடன் யாரும் வரவில்லையே? என்றார்.

அதற்கு தாவீது குரு அமெலக்கிடம் அரசர் எனக்கு ஒரு பணியைக்கட்டளையிட்டுள்ளார். நான் உனக்கு அனுப்பிய நோக்கத்தையும் உனக்கு அளித்த கட்டளைய¨யும் ஒருவரும் அறியக்கூடாது என்று அரசர் கட்டளையிட்டுள்ளார். எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோற்றியுள்ளார். எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோழற்களுக்குச் சொல்லியுள்ளேன்.

உண்பதற்கு இப்பொழுது உன்னிடம் என்ன இருக்கிறது.? இரண்டு, மூன்று அப்பங்களோ வேறு என்ன உம்மிடம் உள்ளதோ எனக்குத் தாரும் என்றார்.

குரு தாவீதை நோக்கி, தூய அப்பம் உன்னிடம் உள்ளது: சாதரணமாக அப்பங்கள் இல்லை. இளைஞர்களான நீங்கள் பெண்களோடு உறவு கொள்ளாமல் இருந்தால் நீங்கள் அதை உண்ணலாம், என்றார்.

தாவீது குருவை நோக்கி, சாதாரண பயணத்தின் போதே இந்த இளைஞர்கள் உறவுக்கொள்ளவில்லை:இன்றோ சிறப்புப் பணியை மேற்கொள்வதால் நேற்றும் முந்தின நாளும் தூய்மைக் காத்துள்ளார் என்றனர்.

ஆதலால் குரு அவருக்கு தூய அப்பத்தை அவருக்கு அளித்தார்: ஏனெனில் ஆண்டவனின் திரு முன்னிலையில் அப்பத்தைத் தவிர வேறு அப்பம் அங்கு இல்லை.அது எடுக்கப்படும் நாளில் அங்கு சூடான அப்பம் அங்கு வைக்கப்படும்.

சவுல் பணியாளர்களில் ஒருவனும் ஆண்டவரால் தடைசெய்யப்பட்டவனுமான தோயேகு என்ற ஏதோமியன் அந்நாளில் அங்கு இருக்க நேர்ந்தது. அவன் சவுலின் இடையர்களுக்கு தலைவன்.

அப்பொழுது தாவீது அகிமெலக்கிடம், இங்கு ஈட்டியோ வாளோ உம்மிடம் உள்ளதா? அரசனின் கட்டளை அவசரமானதாய் இருந்ததால் என் வாளையோ என் படைக்கலன்களையோ கையோடு கொண்டு வரவில்லை, என்றார்.

குரு அவரிடம் ஏலா பள்ளத்தாக்கில் நீ கொன்ற பெலிஸ்தியன் கோலியாத்தின் வாள், அதோ, ஏபாத்துக்கு பின்னால் துணிகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. நீ விருமம்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேற வாள் இங்கு இல்லை. என்று கூறினார். அதற்கு தாவீது, அதற்கு நிகரானது வேறு எதுவும் இல்லை. அதை எனக்குத் தாரும் என்றார்.

பிறகு தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்சிடம் சென்றார்.

ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். என்று பெண்கள் நடனமாடிப் பாடிக் கொள்ளவில்லையா? என்றனர்.

தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினர்.

அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக் காரண் போல் நடித்தார்.

அப்போது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், இதோ அம்மனிதனைப் பாருங்கள்.: இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்?

என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தை காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா? என்று சினமுற்றான்.

அதிகாரம் 22.

தாவீது அங்கிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்ற குகைக்கு தப்பியோடினார்: அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் அதைக் கேள்வியுற்று அங்கு அவரிடம் சென்றார்.

ஒடுக்கப்பட்டோர், கடன்பட்டோர், சோர்வுற்றோர், யாவரும் அவரிடம் ஒன்று திரண்டனர்: அவர்களுக்கு அவர் தலைவரானார். இவ்வாறு அவரோடு சுமார் நானூறு பேர் இருந்தனர்.

தாவீது அங்கிருந்து மோவாபிலுள்ள மிஸ்போக்குச் சென்று, அங்கே மோவாபு மன்னனைப் பார்த்து, கடவுள் எனக்கு என்ன செய்யவிரும்புகிறார் என்பதை நான் அறியுமட்டும் என் தந்தையும் தாயும் உம்மிடம் தங்கியிருக்க எனக்கு அனுமதி தாரும், என்று வேண்டினார்.

பின்பு அவர் அவர்களை மோவாபு மன்னன் பொறுப்பில் விட்டுச் சென்றார். தாவீது குகையில் இருந்த நாளெல்லாம் அவர்கள் மன்னனிடம் தங்கியிருந்தார்.

பின்பு இறைவாக்கினர் காது தாவீதைக் கண்டு நீ குகையில் தங்காதே! யூதா நாட்டுக்குப் புறப்பட்டுப்போ! என்றார். எனவே தாவீது புறப்பட்டு எரேத்து என்ற காட்டிற்குச் சென்றார்.

தாவீதும் அவருடன் இருந்த வீரர்களும் கண்டுபிடிக்கப்பட்டதைச் சவுல் கேள்விப்பட்டார். கிபாவிலிருந்த மலைமீது தமாரிஸ்கு மரத்தின் கீழ் சவுல் கையில் தன் ஈட்டியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருடைய எல்லா அலுவலர்களும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.

சவுல் தன்னைச் சூழ்ந்து நின்ற பணியாளர்களை நோக்கி, பென்யமின் புதல்வர்களே! கேளுங்கள்: ஈசாயின் மகன் உங்கள் ஒவ்வொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்கள¨யும் கொடுப்பானோ? அதனால் எங்கள் எல்லோரையும் ஆயிரவர் தலைவர்களாகவும், நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்த முடியும்?

பின் எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்த போது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை: என்மேல் மனமிரங்கி அதை எனக்கு தெரிவிக்க உங்களில் ஒருவனும் வரவில்லையே! இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கு எதிராகத் தூண்டிவிட்டான் என்றான்.

அப்பபொழுது சவுலின் பணியாளருடன் நின்ற ஏதோமியனாகிய தோயோகு, நோபில் உள்ள அகித்தூபின் மகன் அகிமெலக்கிடம் ஈசாயின் மகன் தாவீது வருவதை நான் கண்டேன்.

அகிமெலங்கு அவனுக்காக ஆண்டவரிடம் திருவுள்ளத்தைக் கேட்டறிந்தார். மேலும் அவனுக்கு வழியுனவும், பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளும் கொடுத்தார் என்றான்.அதைக் கேட்ட அரசர், அகித்தூபின் மகனாகிய குரு அகிமெலக்கையும், நோபிலிருக்கிற அவர் தந்தையின் குடும்பத்துக் குருக்கள் அனைவரையும் வரவழைத்தார். எல்லோரும் அரசிடம் வந்தனர்.

அப்பொழுது சவுல், அகிப்தூபின் மகனே கேள் , என அவரும், இதோ உள்ளேன் தலைவரே! என்றார்.

சவுல் அவரிடம், நீயும் ஈசாயின் மகனும் எனக்கு எதிராக ஏன் சூழ்ச்சி செய்தீர்கள்? இந்நாள் வரை அவன் எனக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் படி ஏன் அவனுக்கு நீ அப்பமும் வாளும் தந்து, அவனுக்காக கடவுளின் திருவுள்ளத்தைக் கேட்டறிந்தாய்? என்று கேட்டார்.

அதற்கு அகிமெலக்கு அரசரிடம், உம் பணியாளர் அனைவரும் தாவீதைப் போல் உண்மையுள்ளவன் யார்? அரசராகிய உமக்கு மருமகனும் மெய்காப்பாஅரசர் தளர் தலைவனுமாகிய அவன் உம் வீட்டரையே மேன்மைப் பெற்றவர் அன்றோ?

அவனுக்காக நான் கடவுலின் திருவுள்ளத்தைக் கேட்பது இன்று தான் முதல்தடைவையா? இல்லை.

அரசர் தம் பணியாளர் மேலும் என் தந்தை வீட்டார் எவர் மேலும் குற்றம் சுமத்த வேண்டாம்: ஏனெனில் உம் பிணயாளனாகிய எனக்கு இக்காரியம் குறித்து எதுவும் தெரியாது என்று பதிலளித்தார்.

அரசர் அவரிடம் அகிமெலக்கு நீயும் உம் தந்தை வீட்டாரும் கண்டிப்பாகச் சாக வேண்டும் என்றார்.

அரசர் தம்மைச் சூழந்து நின்ற காவலர்களிடம், நீங்கள் சென்று ஆண்டவரின் குருக்களை கொன்று விடுங்கள்: ஏனெனில் அவர்கள் தாவீது ஓடிப்போனதை அறிந்தும் எனக்கு அறிவிக்கவில்லை.

அப்போது அரசர் தோயோகிடம், நீ சென்ற தாவீதுக்கு உடன்பட்ட குருக்களை வீழ்த்து , என்று கட்டளையிட்டார். உடனே ஏதோமியன் தோயோகு சென்று குருக்களை வெட்டி வீழ்த்தினார். அன்றுமட்டும் அவன் நார்பட்டு ஏபோது அணிந்திருந்த எண்பத்தைந்து பேரைக் கொன்றான்.

மேலும் அவன் குருக்கள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றை வாளுக்கு இரையாக்கினார்.

ஆனால் அகித்தூபின் மகனான அகிமெலக்கின் புதல்வர்களில் ஒருவரான அபியத்தார் தப்பியோடித் தாவீதை அடைந்தார்.

ஆண்டவரின் குருக்களை சவுல் கொன்றுவிட்டார் என்று அபியத்தார் தாவீதிடம் கூறினார்.

தாவீது அபியத்தாரிடம், ஏதோமியன் தோயோகு அங்கு இருந்ததால், அவன் கண்டிப்பாகச் சவுலிடம் அறிவிப்பான் என்பதை அன்றே அறிவித்திருந்தேன்: உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்!

என்னோடு தங்கு! அஞ்சாதே! என் உயிரைப் பறிக்கத் தேடுவான்: ஆனால் என்னோடு நீ இருந்தால் பாதுகாப்புடன் நீ இருப்பாய் என்றார்.

அதிகாரம் 23.

பின்னர், பெலிஸ்தியர் கெயிலாவுக்கு எதிராகப் போர் தொடுத்துக் களஞ்சியங்களைக் கொள்ளையடிக்கின்றனர் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.

ஆதலால் தாவீது, நான் சென்று இப்பெலிஸ்தியரை முறியடிக்கலாமா? என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டதற்கு, ஆண்டவர் தாவீதிடம், நீ போய் பெலிஸ்தியரை முறியடித்துக் கெயிலாவைக் காப்பாற்று! என்று பதிலளித்தார்.

ஆனால் தாவீதின் வீரர்கள் அவரை நோக்கி, நாம் யூதாவில் இருக்கும் போதே இப்படி அஞ்சுகிறோம். பெலிஸ்தியர் படைகளுக்கு எதிராக நாம் கெயிலாவுக்கு சென்றால் இன்னும் எவ்வளவு அஞ்வோம்? என்றன+.

தாவீது மீண்டும் ஆண்டவரிடம் கேட்டார்: ஆண்டவர் மீண்டும் மறுமொழியாக, கெயிலாவுக்குப் புறப்பட்டுப் போ! ஏனெனில் பெலிஸ்தியரை உன்னிடம் ஒப்புவிப்பேன் என்றார்.

பின்பு தாவீதும் அவர்தம் வீரர்களும் கெயிலாவுக்குச் சென்று, பெலிஸ்தியரோடு போரிட்டனர். அவர் அவர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கி அவர்களின் கால்நடைகளை ஓட்டிச்சென்றனர்.இவ்வாறு தாவீது கெயிலாவாழ் மக்களை விடுவித்தார்.

அகிமெலக்கின் மகன் அபியத்தார் தாவீதிடம் ஓடிவந்த போது ஓர் ஏபோதை தம்முடன் எடுத்து வந்திருந்தார்.

பின்னர் தாவீது கெயிலாவுக்கு வந்திருப்பது பற்றிச் சவுலுக்கு தெரிவிக்கப்பட்டபோது, சவுல் கடவுள் அவனை என்னிடம் ஒப்புவித்துள்ளார். ஏனெனில் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள நகரில் நுழைந்து அவன்மாட்டிக் கொண்டான் என்றார்.

அடுத்து, கெயிலாமீது படையெடுத்த தாவீதையும் அவர் வீரர்களையும் முற்றுக்கையிடுமாறு சவுல் தம் எல்லோரையும் போருக்கு அழைத்தார்.

சவுல் தமக்குத் தீங்கு செய்யத்திட்டமிடுகிறார் என்று தாவீது அறிந்து, குரு அபியத்தாரிடம், ஏபோதை இங்குக் கொண்டுவா என்றார்.

பிறகு தாவீது, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் பொருட்டு சவுல் கெயிலாவுக்கு வந்து அந்நகரை அழிக்க திட்டமிட்டுள்ளதை உம் அடியான் நான் பன்முறை கேள்விப்பட்டேன்.

கெயிலாவின் குடிமக்கள் என்னை அவரிடம் ஒப்புவிப்பார்களா? உம் அடியோன் கேள்விப்பட்டது போல் சவுல் வருவாரா? என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், அவன் வருவான் என்று பதிலளித்தார்.

மீண்டும் தாவீது, கெயிலா மக்கள் என்னையும் என் வீரர்களையும் சவுலிடம் ஒப்புவிப்பார்களா? என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், அவர்கள் உங்களை ஒப்புவிப்பார்கள் என்றார்.

பின்பு தாவீதும் அவருடன் இருந்த சுமார் அறுநூறு பேரும் கெயிலாவைவிட்டுப் புறப்பட்டு இடமாறிச் சென்று கொண்டிருந்தார்கள். தாவீது தப்பிவிட்டதைக் கேள்விப்பட்ட சவுல் மேலும் தொடர்வதைக் கைவிட்டார்.

தாவீது பாளைவனத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்தார். மலை நாடான சீபு பாலை நிலப் பகுதிகளில் தங்கியிருந்தவரைச் சவுல் ஒவ்வொரு நாளும் தேடியும் கடவுள் அவரிடம் ஒப்புவிக்கவில்லை.

சவுல் தம்மைக் கொலைச் செய்யத் தேடுகிறார் என்று அறிந்த தாவீது மிகுந்த அச்சம் கொண்டார்: ஆதலால் ஓர்சாவில் உள்ள சீபு பாலைநிலத்தில் தங்கியிருந்தார்.

சவுலின் மகன் யோனத்தான் புறப்பட்டு ஓர்சாவில் இருந்த தாவீதிடம் வந்து கடவுள் அவரைப் பாதுகாப்பார் என்று அவரைத் திடப்படுத்தினார்.

அவர் தாவீதிடம் அஞ்சாதே! என் தந்தை உன்னைக் கண்டு பிடிக்கமாட்டார். நீ இஸ்ரயேலுக்கு அரசனாவாய்: அப்பொழுது நான் உனக்கு அடுத்த இடத்தை வகிப்பேன்: என் தந்தை சவுல் கூட இதை அறிவார் என்றார்.

ஆண்டவர் திருமுன் இருவரும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். தாவீது ஓர்சாவிலேயே இருக்க, யோனத்தான் வீடுதிரும்பினான்.

பின்பு சீபியர் கிபாவிலிருந்த சவுலிடம் சென்று, தாவீது எங்கள் பகுதியில் எசிமேனுக்குத் தெற்கே உள்ள அக்கிலா என்ற மலைநாட்டில் ஓர்சாவின் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான் அல்லவா?

அரசே, உம் விருப்பத்தின் படி இப்பொழுதே வாரும்: அவனை நாங்களே அரசரிடம் ஒப்புவிக்கிறோம் என்று கூறினார்.

சவுல் அவர்களைப் பார்த்து, நீங்கள் என் மீது இரக்கம் காட்டியதால் ஆண்டவரின் ஆசியைப் பெறுவீர்களாக!

நீங்கள் போய் நடமாடுகிற இடம் எதுவென்றும், யார் அவனை அங்கு பார்த்தவன் என்றும் இன்றும் நன்றாக ஆய்ந்து அறியுங்கள்: ஏனெனில் அவன் மிகவும் சூழ்ச்சிமிக்கவன் என்று எனக்குத் தெரிய வந்தது.

ஆதலால் அவன் ஒளிந்துக் கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் குறித்துக் கொண்டு, எல்லாத் தகவல்களுடன் என்னிடம் திரும்பி வாருங்கள். அப்பொழுது நான் உங்களோடு செல்வேன். அவன் நாட்டில் இருந்தால் பல்லாயிர யூதா மக்கள் வாழும் பகுதியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன் என்றார்.

அவர்கள் சவுலுக்கு முன்னரே சீபுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பின்பு தாவீதும் அவர்தம் ஆள்களும் எசிமோனுக்குத் தெற்கே, அராபாவிலுள்ள மாவோன் பாலைநிலத்தில் இருந்தனர்.

சவுலும் அவர் ஆள்களும் அவரைத் தேடிச் சென்றனர். தாவீது இதை அறிந்து மாவோன் பாலைநிலத்தில் உள்ள பாறைக்குச் சென்றார். சவுல் இதை கேள்வியுற்று, அவரும் மாவோன் பாலைநிலத்தில் தாவீதைச் தேடிச் சென்றார்.

சவுல் மலையின் ஒரு பக்கத்தில் செல்ல, தாவீதும் அவர் ஆள்களும் மலையின் மறுப்பக்கத்தில் நடந்தனர். சவுலிடமிருந்து தப்பித்துக்கொள்ள தாவீது விரைந்து சென்ற போதும், சவுலும் அவர்தம் ஆள்களும் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் பிடிப்பதற்கு வளைத்துக் கொண்டார்.

அவ்வேளையில் ஒரு தூதன் சவுலிடம் வந்து, விரைந்து வாரும்! பெலிஸ்தியர் நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றார்.

அதனால் சவுல் தாவீதைக் தொடர்வதைக் கைவிட்டு, பெலிஸ்தியரை எதிர்க்கச் திரும்பச் சென்றார். ஆதலின் அவ்விடம், பிரிக்கும் பாறை என்று அழைக்கப்பட்டது.

தாவீது அங்கிருந்து புறப்பட்டு ஏன்கேதிலுள்ள பாதுகாப்பான இடத்தில் தங்கினார்.

அதிகாரம் 24.

சவுல் பெலிஸ்திரைத் தொடர்வதைக் கைவிட்டுத் திரும்பிய போது: இதோ ஏன்கேதிப் பாலைநிலத்தில் தாவீது இருக்கிறான் என்று தெரிவிக்கப்பட்டது.

சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்புறம் சென்றனர்.

அவர் சென்ற போது வழியோரத்தில் ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்: அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்க்கைகடன் கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர்.

தாவீதின் ஆள்கள் அவரிடம், இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன். உன் விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்குச் செய், என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே! என்றனர். உடனே தாவீது தவழ்ந்து சென்று சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார்.

தாவீது சவுலின் தொங்கலை அறுத்தப்பின் அதற்காக மனம் வருந்தினார்.

அவர் தம் ஆள்களை பார்த்து, ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கும் எத்தீங்கும் ¦ச்யயாதவாறு ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானால் நான் அவர் மேல் கைவைக்ககூடாது என்றார்.

ஆதலின் தம் ஆள்கள் சவுலைத் தாக்கதவாறு தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார். பின்பு சவுல் எழுந்து குகையை விட்டு தம் வழியே சென்றார்.

அதன்பின் தாவீது எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின் தொடர்ந்து, அரசே, என் தலைவரே! என்று அழித்தார். சவுல் பின்புறம் திரும்பிய போது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார்.

பின்பு தாவீது சவுலை நோக்கி, தாவீது உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறான் என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளைக் கேட்கலாமா?

இதோ! குகையில் ஆண்டவர் என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று எம் கண்களே கண்டன: உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்: ஆனால் அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்: என் தலைவருக்கு எதிராக நான் கை ஓங்கக் கூடாது என்று சொல்லி நான்தான் உம்மைக் காப்பாற்றினேன்.

என் தந்தையே பாரும்! என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லையென்பதை நீர் அறிவீர்! நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை.

உமக்கு எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக! என்பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்: ஆனால் உமக்கு எதிராக என் கை எழாது.

முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும் ஆதலால் உம் மேல் நான் கைவைக்க மாட்டேன்.

இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின் தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தெள்ளுப் பூச்சியை அன்றோ?

ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எமக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்ன¨ விடுவிப்பாராக! என்றார்.

தாவீது இவ்வாறு சவுலிடம் பேசி முடித்தப்பின் சவுல், என்மகன் தாவீதே! இது உன் குரல்தானா! என்று சொல்லி உரத்த குரலில் அழுதார்.

அவர் தாவீதிடம், நீ என்னிலும் நீதிமான். நீ எனக்கு நன்மை செய்தாய்: ஆனால் நானோ உனக்கு தீங்கு செய்தேன்.

ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய்.

ஏனெனில் ஒருவன் தன் எதிரியைக் கண்ட பின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்கு செய்த நன்மைக்கு ஈடாக ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக!

இதோ, நீ எனக்கு திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்று நான் அறிகிறேன்.

ஆதலால் பின்வரும் என் வழிமரபை நீ வேரறுப்பதில்லை என்றும் என் தந்தை வீட்டாரிலிருந்து என் பெயரை அழிக்கமாட்டாய் என்றும் ஆண்டவர் மேல் எனக்கு ஆணையிட்டுக் கூறு என்றார்.

அவ்வாறே தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக் கூறினார். பின்னர் சவுல் வீடு திரும்ப, தாவீதும் அவர் தம் ஆள்களும் பாதுகாப்பான இடம் நோக்கிச் சென்றனர்.

அதிகாரம் 25.

சாமுவேல் இறந்தார்: இஸ்ரயேலர் எல்லாரும் ஒன்றுகூடி அவருக்காத் துக்கம் கொண்டாடினர். பின்பு அவர்கள் அவரை இராமாவிலுள்ள அவரது இல்லத்தில் அடக்கம் செய்தனர். தாவீது புறப்பட்டு பாரான் பாலைநிலத்திற்குச் சென்றார்.

கர்மேலில் சொத்துக்களை உடைய ஒருவன் மாவோனில் இருந்தான். அம் மனிதன் செல்வம் மிக்கவன். அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரித்துக் கொண்டிருந்தான்.

அம் மனிதன் பெயர் நாபால், அவன் மனைவியின் பெயர் அபிகாயில், அப்பெண் மிகுந்த அறிவும் அழகும் வாய்ந்தவள்: அவன் கணவனோ முரடனும் இழிந்தவனுமாய் இருந்தான். அவன் ஒரு காலோபியன்.

நாபால் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்ததிப்பதற்காகத் தாவீது பாலைநிலத்தில் கேள்வியுற்றார்.

தாவீது அங்கே பத்து இளைஞர்களை அனுப்ப எண்ணி, அப் பத்துப் பேரை அழைத்து. நீங்கள் கர்மேலுக்குச் சென்று அங்கே நாபாலைக் கண்டு என் பெயரால் அவனுக்கு சமாதான வாழ்த்து கூறுங்கள்.

அவனை நோக்கி, உமக்கும், எம் குடும்பத்துக்கும், உமக்கு உள்ள அனைத்துக்கும் நலம் உண்டவதாக!

ஆடுகள் உரோமம் கத்தரிப்பவர்கள் உம்மிடம் இருக்கிறார்கள் என்று கேள்வியுற்றேன்! உம் இடையர்க்ள எம்மோடு இருந்தார்கள்: நாங்கள் அவர்களை துன்புறுத்தியதில்லை: கர்மேலில் அவர்கள் இருந்த காலம் மெல்லாம் எதையும் இழக்கவில்லை.

உம் பணியாளர்களை கேளும்: அவர்கள் உமக்கு சொல்வார்கள். ஆதலால் இந்த இளைஞர்களுக்கு உம் கண்களில் தயவு கிடைக்கட்டும். ஏனெனில் நாங்கள் ஒரு திருவிழா நாளில் வந்துள்ளோம். உம்மால் கொடுக்க முடிந்ததை உம் அடியார்களுக்கு உம் புதல்வன் தாவீதுக்கும் தந்தருள்க! எனக் கூறுங்கள் என்று சொல்லியனுப்பினார்.

தாவீதின் இளைஞர்கள் சென்ற நாபாலிடம் தாவீதின் பெயரால் அவை யாவற்ற¨யும் கூறிக் காத்திருந்தனர்.

நாபால் தாவீதின் இளைஞர்களிடம், தாவீது என்பவன் யார்? ஈசாயின் மகன் யார்? தங்கள் தலைவர்களைவிட்டுப் பிரிந்து செல்லும் பணியாளர் பலர் உள்ளனர்.

என் அப்பங்களையும் தண்ணீரையும் உரோமம் கத்திரிப்பவர்களுக்காக நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியும் எடுத்து எங்கிருந்தோ வந்த வந்த மனிதர்களுக்கு நான் கொடுப்பதா? என்று பதிலளித்தான்.

ஆதலால் தாவீதின் இளைஞர்கள் அவரிடம் எல்லாவற்றையும் அப்படியே கூறினர்.

தாவீது தம் ஆள்களை நோக்கி, நீங்கள் அவரவர் வாளை எடுத்துக் கட்டிக்கொள்ளுங்கள், என்றார். அதன்படி அவர்கள் ஒவ்வொருவனும் தன் வாளை கட்டிக்கொண்டான்: தாவீதும் கட்டிகொண்டார். அவருடன் நானூறு பேர் செல்ல, இருநூறு பேர் பயணமூட்டைகளின் அருகில் இருந்தனர்.

நாபாலுடைய பணியாள்களின் ஒருவன் அவன் மனைவி அபிகாலிடம், இதோ நம் தலைவருக்கு வாழ்த்துச் சொல்ல பாலைநிலத்திலிருந்து தாவீது தூதர்களை அனுப்பினார். அவர்களை இவர் அவம்மானப்படுத்தினார்.

இருப்பினும் அந்த ஆள்கள் எங்களுக்கு நன்மையே செய்தார்: எங்களைத் துன்புறுத்தியதில்லை, நாங்கள் வயல் வெளியில் அவர்களோடு நடமாடிய காலமெல்லாம் எதையும் இழக்கவில்லை.

நாங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவர்களோடு வாழ்நத நாள் முழுவதும் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றி சுவராக இருந்தார்.

எனவே இதையறிந்து நீ யோசித்து என்ன செய்ய முடியுமென்று பாரும்: ஏனெனில் நம் தலைவர் மேலும் அவர் வீட்டார் மேலும் கண்டிப்பாக தீமை வரவிருக்கிறது. இவரோ யாருமே அவரோடு பேசத்துணியாத அளவுக்கு தீய குணமுடையவராய் இருக்கிறார் என்றனர்.

இதைக் கேட்ட அபிகாயில் இருநூறு அப்பங்கள், இரண்டு துருத்தி திராட்சைப்பழ இரசம், தோலுரித்த ஜந்து ஆடுகள், ஜந்து படி வறுத்த பயறு, திராட்சைப் பழ அடைகள் நூறு அத்திப்பழ அடைகள் இருநூறு ஆகியவ்றறை விரைந்தே எடுத்து ஒரு கழுதை மேல் ஏற்றினார்.

அவர் தம் பணியாளர்களை நோக்கி, நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள், நான் உங்களுக்குப் பின் வருகிறேன், என்றார்.

அவர் கழுதை மேல் ஏறிப் பயணமாகி, மலைச் சரிவுப் பாதையில் இறங்கி வருகையில் தாவீது அவருடைய ஆள்களும் அவரை நோக்கி இறங்கி வந்தனர். அவர் அவர்களை சந்தித்தார்.

அப்பொழுது தாவீது, இந்த மனிதனுக்குப் பாலைநிலத்தில் இருந்ததையெல்லாம் நான் காப்பாற்றியது வீண்தான்! அவனுடைய பொருள் எதையும் அவன் இழக்கவில்லை. இருப்பினும் நன்மைக்குப் பதிலாக அவன் தீமையே செய்தான்.

அவனுக்குச் சொந்த மாணவர்களில் ஒர் ஆண்மகன் கூடப் பொழுது விடியும் உயிரோடு விட்டு வைத்தால், கடவுள் அதற்கும் அதற்கு மேலும் அவரைத் தண்டிப்பாராக என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அபிகாயில் தாவீதைப் பார்த்த போது கழுதையினின்று வேகமாக இறங்கி அவர் முன் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கினார்.

அவர் தாவீதின் காலில் விழுந்து, என் தலைவரே பழி என் மேல் மட்டும் இருக்கட்டும்! உம் அடியவள் நீ சொல்லப் போவதை நீர் செவிக் கொடுத்துக் கேட்க வேண்டுகிறேன்.

என் தலைவரே, அந்தத் தீய குணமுடைய மனிதராகிய நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம் ஏனெனில் அவர் தம் பெயருக்கேற்ப ஒரு மூடர். நாபால் என்பது அவருடைய பெயர்: அதன் படி மூடத்தணமும் அவருக்குண்டு. இளைஞர்களை உம் அடியவள் பார்க்கவில்லை.

இப்பொழுது, என் தலைவரே, நீர் இரத்தத்தைச் சிந்தாதவாறு, நீர் உம் கைகளினால் பழிக்குப் பழி வாங்காதவாறும் உம்மைத் தடுத்தவர் ஆண்டவரே! வாழும் ஆண்டவர் மேலும் உம் இருக்கையின் மேலும் ஆணை! உம் பகைவர்களும் என் தலைவராகிய உமக்கு தீங்கு செய்ய முயல்பவர்களும் நாபாலைப்போல் ஆவார்களாக!

இப்பொழுது உம் அடியவள் என் தலைவருக்கு கொண்டு வந்துள்ள காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு என் தலைவரின் அடிச்சுவட்டைப் பின் தொடரும் இவ்விளைஞர்களிடம் அளிப்பாராக!

உம் அடியவளின் குற்றத்தை மன்னிக்க வேண்டுகிறேன்: என் தலைவரே நீர் ஆண்டவரின் போர்களை நடத்துவதால், என் தலைவராகிய ஆண்டவர் உமக்கு ஒரு நிலையான வீட்டை உறுதியாக கட்டிய¦ழுப்புவார். உம் வாழ்நாள் முழுவதும் எத்தீங்கும் உன்னை அணுகாது!

உம்மைத் தாக்கவும் உம்மைக் கொல்லவும் யாராவது எப்பொழுதாவது எழுந்தால், என் தலைவரின் உயிர் உம் கடவுளாகிய ஆண்டவரின் பாதுகாப்பில் வாழ்வோரின் கட்டுகளில் இருக்கட்டும். உம் எதிரிகிளன் உயிர் கவனத்தில் வைத்து எறிந்தார்போல் எறியப்படும்.

ஆண்டவர் தலைவாராகிய உம்மைக் குறித்துத்தாம் வாக்களித்த நன்மைகளை எல்லாம் செய்து இஸ்ரயேலின் அரசராக ஏற்படுத்துவார்.

அப்பொழுது காரணமின்றி இரத்தம் சிந்தினது குறித்தோ, என் தலைவர் பழிக்குப் பழி வாங்கியது குறித்தோ, என் தலைவருக்கு துயரமோ மனவருத்தமோ உண்டாகாது. எம் தலைவராகிய ஆண்டவர் உமக்கு வெற்றியளிக்கின்றபோது உம் அடியவளை நினைவு கூர்ந்தருளும்! என்றார்.

தாவீது அபிகாயிலை நோக்கி, இன்று உன்னை என்னிடம் அனுப்பிய இஸ்லயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!

இரத்தப் பழிக்குற்றத்திலிருந்தும் பழித்தீர்ப்பதிலிருந்தும் என்னை தடை செய்த நீ ஆசிப்பெறுவதாக! உன் நுண்ணறிவும் ஆசிப்பெறுவதாக!

நீ என்னை விரைவாக சந்திக்க வராதிருந்தால் பொழுது விடியலுக்குள் நாபாலுக்குச் சொந்தமான வயல்களில் ஓர் ஆண்மகனைக் கூட உயிரோடு விட்டு வைத்திருக்க மாட்டேன். இதை உனக்கு தீங்கு செய்வரிலிருந்து என்னைத் தடுத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் உறுதியாகச் சொல்கிறேன்! என்றார்.

பின்பு அபிகாலில் தாம் கொண்டு வந்ததை தாவீது அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவரை நோக்கி, சமாதனத்துடன் நீ உன் வீட்டுக்குப் போ! உனக்குச் செவிக் கொடுத்து உன் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன் என்றார்.

அபிகாலில் நாபாலிடம் வந்த பொழுது அவன் அரசவிருந்துக்கு ஒப்பான விருந்தொன்றை தன் வீட்டில் அனுபவித்துக் கொண்டிருந்தான்: அவன் உள்ளம் களிப்புற்றிருந்தது அவன் மிகுந்த குடிப் போதையில் இருந்ததால் பொழுது விடியும் வரை அவர் எதுவும் பேசாதிருந்தார்.

காலையில் நாபால் திராட்சை மதுவின் போதை தெளிந்தப் பின் அவன் மனைவி இவையனைத்தையும் அவனிடம் கூறினார். அப்பொழுது அவன் அதிர்ச்சிக்குள்ளாகிய கல்லைப் போல் செயலற்றவன் ஆனான்.

ஆண்டவர் நாபாலை வதைத்ததால் சுமார் பத்துநாள்களுக்குபின் அவன் இறந்தான்.

நாபால் இறந்து விட்டதைக் தாவீது கேள்வியுற்றபோது, நாபால் கையினால் எனக்கு வந்த இழிவுக்கு எதிராக நீதி வழங்கி தம் அடியானைத் தீமை செய்யாதவாறு காப்பாற்றிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! நாபாலின் தீமைகள் அவன் தலைமேல் விழுமாறு ஆண்டவர் அதைத் திருப்பிவிட்டார். பின்பு அபிகாயிலை மணந்துக்கொள்வதற்காக தாவீது அவரிடம் தூதனுப்பினார்.

தாவீது பணியாளர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாலிடம் வந்து அவரை நோக்கி, தாவீது உம்மை மணந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக எங்களை உங்களிடம் அனுப்பினார் என்றார்.

அவர் எழுந்து தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கி, இதோ! உம் அடிமைகளாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக! என்றாள்.

உடனே அபிகாயில் ஒரு கழுதை மேல் ஏறி விரைந்துச் சென்றார். பணிப்பெண்கள் ஜவர் அவருடன் சென்றார்கள்: அவர் தாவீது தூதர்களை பின் தொடர்ந்து அவருக்கு மனைவியானார்.

இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமையும் தாவீது மணந்து கொண்டார்: அவர்கள் இருவரும் அவருக்கு மனைவியானார்கள்.

சவுல் தம் புதல்வியையும் தாவீதின் மனைவியான மீக்காலைக் கல்லிம் ஊரானாகிய இலாயிசின் மகன் பல்திக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்.

அதிகாரம் 26.

பின்னர் சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, தாவீது எசிமேனுக்கு எதிரே உள்ள அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான் என்று கூறினார்.

ஆதலால் சவுல் சீபு பாலைநிலத்தில் தாவீதைத் தேடுவதற்காக இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் அதை நோக்கி புறப்பட்டு ¦ச்னறார்.

சவுல் எசிமேனுக்கு எதிரே சாலையோரம் அக்கிலா குன்றின் மேல் பாசறை அமைத்தார். ஆனால் தாவீது பாலைநிலத்திலேயே இருந்தார். சவுல் பாலை நிலத்தில் தன்னை பின் தொடர்வதை அறிந்து,

தாவீது ஒற்றர்களை அனுப்பி சவுல் வந்தது உண்மைத்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.

உடனே தாவீது எழுந்து சவுல் பாளையம் இறங்கியிருந்த இடத்திற்கே சென்றார்: சவுலும் அவர் படைத்தலைவனும் நேரின் மகனுமான அப்னேரும் படுத்திருந்த இடத்தைப் பார்த்தார்: சவுல் பாசறையினுள் படுத்திருக்க, அவர்தம் வீரர்கள் அவரைச் சுற்றிலும் படுத்திருந்தனர்.

அப்பொழுது தாவீது இத்தியன் அகிமெலக்கையும் செரூயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் நோக்கி, சவுல் இருக்கும் பாளையத்திற்கு என்னோடு வருவது யார்? என்று கேட்க நான் வருகிறேன் என்று அபிசாய் பதிலளித்தார்.

ஆதலால் தாவீதும் அபிசாயும் இரவில் அப்பாளையத்திற்குச் சென்றனர்: சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவருடைய ஈட்டி குத்தியிருப்பதையும் கண்டனர்: அப்னேரும் அவரது படைவீரர்களும் அவரைச் சுற்றிக் படுத்து உறங்கினர்.

அபிசாய் தாவீதிடம் இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார். ஆதலால் இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறைக் குத்தாமல் ஒரே குத்தாய் நிலத்தில் பதியப்போகிறேன் என்றான்.

ஆனால் தாவீது அபிசாயியை நோக்கி, அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்? என்று சொல்லித் தடுத்தார்.

மேலும் தாவீது வாழும் ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவரே அவரைக் கொல்லட்டும். அவர் காலம் நிறைவுற்று தாமதமாக இருக்கட்டும் அல்லது போரில் சென்று அவர் மடியட்டும்!

ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கைவைக்காதபடி ஆண்டவர் என்னைக் காப்பாராக! எனவே அவர் தலைமாட்டில் இருக்கும் ஈட்டியையும் தண்ணீர் குவளையையும் எடுத்துக் கொண்டு புறப்படுவோம் என்றார்.

அவ்வாறே தாவீது தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக் கொண்டப்பின், அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஒருவரும் விழிக்கவில்லை: அதைக் காணவுமில்லை: அறியவுமில்லை: ஆண்டவர் அவருக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளித்திருந்தபடியால் அவர்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

பின்பு தாவீது கடந்துச் சென்று தொலைவிலிருந்த ஒரு குன்றின் மீது ஏறி நின்றார். அவர்களிடையே மிகுந்த இடைவெளி இருந்தது.

அங்கிருந்து படைவீரர்களையும் நேரின் மகன் அப்னோரையும் தாவீது கூப்பிட்டு, அப்பேனர், நீ மறுமொழி சொல்ல மாட்டாயா? என்று கேட்டார்? அப்னேர் அதற்கு அரசரை நேராக அழைக்க நீ யார்? என்று கேட்டான்.

அப்பொழுது தாவீது அப்னேரிடம், நீ வீரன் அல்லவா? இஸ்ரயேலில் உனக்கு நிகரானவன் யார்? பின் ஏன் உன் தலைவராகிய விழித்திருந்து காக்கவில்லை? மக்களில் ஒருவன் என் தலைவரைக் கொல்ல அங்கு வந்தானே!

நீ செய்த இச்செயல் சரியல்ல: ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட உங்கள் தலைவரை நீங்கள் விழித்திருந்து காக்கத் தவறியதால், நீ சாவுக்கு உள்ளாவாய் என்று ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். அரசரின் ஈட்டியையும் அவர் தலைமாட்டிலிருந்த குவளையையும் இப்பொழுது எங்கே உள்ளன என்று பார் என்றார்.

சவுல் தாவீதின் குரலை அறிந்துக் கொண்டு, என் மகன் தாவீதே, இது உன் குரல்தானா?என்று கேட்க அதற்குத் தாவீது என் தலைவராகிய அரசே! இது என் குரல் தான் என்றார்.

மீண்டும் அவர், என் தலைவராகிய நீர் உம் அடியனைப் இப்படிப் பின் தொடர்ந்து வருவது ஏன்? நான் என்ன செய்தேன்? என்னிடமுள்ள குற்றம் தான் என்ன?

ஆதலால் இப்பொழுது அரசராகிய என் தலைவர் அடியானின் வார்த்தைகளைக் கேட்பாராக! ஆண்டவர் உம்மை எதிராக ஏவி விட்டிருப்பின், அவர் என் பலியை ஏற்றுக் கொள்ளட்டும்: மனிதர்க்ள அப்படிச் செய்திருந்தால் அவர்கள் ஆண்டவர் திருமுன் சபிக்கப்படுக! ஏனெனில் நீ சென்று வேற்றுத் தெய்வங்களை வழிப்படு என்று அவர்கள் கூறி நான் ஆண்டவருடைய உரிமையில் பங்கு பெருவதிலிருந்து என்னைத் துரத்திவிட்டார்.

ஆதலால் ஆண்டவர் திருமுன்னிலைக்கு வெகு தொலைவில் உள்ள நிலத்தில் என் இரத்தம் சிந்தப்படாதிருக்கட்டும்! ஏனெனில் மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல் இஸ்ரயேலின் அரசர் ஒரு தொள்ளுப்பூச்சியைத் தேடி வந்துள்ளார் என்றார்.

அப்பொழுது சவுல் நான் பாவம் செய்துள்ளேன் என் மகன் தாவீதே! திரும்பி வா, என் உயிரை இன்று நீ இவ்வளவு மதித்தபடியால் இனி நான் உனக்கு எத்தீங்கும் செய்யமாட்டேன். இதோ, நான் மூடத்தனமாய் நடந்து பெரும் தவறு இழைக்கிறேன் என்றார்.

தாவீது மறுமொழியாக, அரசே உம் ஈட்டி இதோ உள்ளது: இளைஞரில் ஒருவன் வந்து இப்போது அதைக் கொண்டு போகட்டும்.

அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை ஒப்புவித்து ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை.

இன்று உம் உயிர் என் கண்களில் மிகவும் மதிப்பு மிகுந்ததாக இருந்தது, போல் என் உயிரும் ஆண்டவர் கண்களுக்கு அருமையாய் இருப்பதாக! அவரே என்னை இக்கட்டிலிருந்து விடுவிப்பாராக! என்றார்.

அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, என் மகன் தாவீதே! நீ ஆசி பெறுவாயாக! நீ பலக் காரியங்களை செய்வாய்: அவையனைத்திலும் வெற்றி பெறுவாய்! என்று வாழ்த்தினார். பின்னர் தாவீது தம் வழியே செல்ல, சவுல் தம் இருப்பிடம் திரும்பினார்.

அதிகாரம் 27.

பின்னர் தாவீது இங்கே சவுலின் கையில் ஒருநாள் மடிவது திண்ணம். ஆதலால் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று தப்பித்துக் கொள்வதைவிட எனக்கு வேறு வழியில்லை: அப்பொழுது தான் இஸ்ரயேலின் எல்லைக்குள் என்னைக் கண்டு பிடிக்கலாமென்ற நம்பிக்கை அற்றுப் போகும்: நானும் அவர் கையிலிருந்து தப்பி விடுவேன் என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

பின் தாவீது அவருடன் அறுநூறு ஆள்களும் புறப்பட்டுச் சென்று மாவோசின் மகனும் காத்து மன்னருமான ஆக்கிசு என்பவரிடம் சேர்நதனர்.

அங்கே தாவீது அவர் தம் ஆள்களும் அவரவர் குடும்பத்தாரும் தாவீதோடு அவரது இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், நாபாலின் மனைவியும் கர்மேலைச் சார்ந்தவருமான காத்து நகரில் ஆக்கிசுடன் தங்கினார்.

தாவீது காத்து நகருக்கு ஓடிவிட்டார் என்று சவுலுக்கு அறிவித்தார். அதன் பின் அவர் அவரைத் தேடிச்செல்லவில்லை.

தாவீது ஆக்கிசை நோக்கி, என் மேல் உமக்கு இரக்கம் இருந்தால் நான் குடியிருக்க நாட்டுப் புற ஊர்கள் ஒன்றில் எனக்கு இடம் தாரும்: உம் அடியன் ஏன் தலைநகரில் வாழ வேண்டும்? என்றார்.

ஆதலால் அன்று ஆக்கிசு அவருக்குச் சிக்லாகைக் கொடுத்தார்: அதனால் இந்நாள் வரை சிக்லாகு யூதா அரசருக்கு உரியதாய் இருக்கிறது.

தாவீது பெலிஸ்திய எல்லைக்குள் ஓர் ஆண்டும் நான்கு மாதங்களும் குடியிருந்தார்.

பின்னர் தாவீதும் அவர் தம் ஆள்களும் புறப்பட்டுக் கெசூரியர், கிர்சியர், அமலேக்கியர் ஆகியேரைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஏனெனில் சூர் தொடங்கி எகிப்து நாடுவரை உள்ள நிலப்பகுதியில் பண்டைக்காலந்தொட்டு இவர்கள் குடியிருந்தனர்.

தாவீது அந்நாட்டைத் தாக்கியபோது ஆண் பெண் எவரையும் விட்டுவைக்கவில்லை: ஆனால் ஆடு, மாடுகள் கழுதைகள், எருது, ஒட்டகங்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கொண்டு ஆக்கிசிடம் திரும்பினார்.

ஆக்கிசு அவரிடம், .இன்று நீ யாரைக் கொள்ளையடித்தீர்? என்று கேட்க தாவீது மறுமொழியாக, யூதாவின் தென் பகுதியில், அல்லது எரகு மவேலரின் தென்பகுதியில் அல்லது கேனியரின் தென்பகுதியியல் கொள்ளையடித்தேன் என்பார்.

தாவீது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைப்பதில்லை: ஏ¦னினல் அவர்கள் யாராவது காத்துக்குச் செய்தி கொண்டுவந்தால், இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான் என்று மன்னரிடம் தம்மைப் பற்றித் தெரிவித்துவிடுவார்கள் என்று தாவீது நினைத்தார். அவர் பெலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த நாளில் இதுவே அவரது வழக்கமாய் இருந்தது.

ஆக்கிசு தாவீதின் மேல் நம்பிக்கை வைத்தார்: ஏனெனில் அவர் இஸ்ரயேலராகிய தம் மக்களின் முழு வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், அவர் என்றும் என் பணியாளராய் இருப்பார் என்று நினைத்தார்.

அதிகாரம் 28.

அக்காலத்தில் பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போர் தொடுக்க தங்கள் படைகளை உன்று திரட்டினார். அப்பொழுது ஆக்கிசு தாவீதிடம், நீரும் உம் ஆள்களும் என்னோடு போர்க்களம் வரவேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் என்றார்.

அதற்குத் தாவீது ஆக்கிசை நோக்கி, உம் பணியாளன் செய்யப்போவதை நீர் அறிந்து கொள்வீர் என்றார். ஆக்கிசு தாவீதிடம், எனக்கு என்றும் மெய்க்காப்பளராய் இருக்ககும்படி உம்மை நான் நியமிக்கிறேன் என்று சொன்னார்.

சாமுவேல் இறந்தார். இஸ்ரயேலர் அவருக்காகத் துக்கம் கொண்டாடியப்பின் அவரது நகரான இராமாவில் அவரை அடக்கம் செய்தனர். சவுல் சூனியாக்காரரையும் குறிச்சொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தியிருந்தார்.

பெலிஸ்தியர் ஒன்று திரண்டு வந்து சூனேமில் பாளையம் இறங்கினர். சவுல் இஸ்லயேரர் அனைவரையும் ஒன்று திரட்ட அவர்கள் கில்போவாவில் பாளைமிறங்கினர்.

பெலிஸ்தியரின் படையைக் கண்ட போது சவுல் அச்சம் கொண்டார்: அவருடைய உள்ளம் பெரிதும் திகிலுற்றது.

சவுல் ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்க, ஆண்டவர் கனவு மூலமோ, ஊரிம் மூலமோ அவருக்கு பதிலளிக்கவில்லை.

பின்பு சவுல் தம் பணியாளரிடம் குறி சொல்லும் ஒரு பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள்: நான் அவளிடம் ஆலோசனைக் கேட்க வேண்டும் என்றார். அதற்கு அவர்தம் பணியாளர்கள் அவரை நோக்கி, இதோ ஏன்தோரில் குறி சொல்பவர் ஒருத்தி இருக்கிறாள் என்றார்.

சவுல் மாறுவேடமிட்டு வேற்றுடைஅணிந்து கொண்டார். அவரும் அவருடன் இரு ஆள்களும் இரவில் புறப்பட்டு அப்பெண்ணிடம் சென்றனர். அவர் அவளை நோக்கி, ஏதாவதொரு ஆவியின் துணைக்கொண்டு குறிகேட்டுச் சொல். நான் பெயரிட்ச சொல்பவனை எனக்காக எழுப்பு, என்றார்.

அப்பெண் அவரை நோக்கி,சவுல், சூனியக்காரர்களையும் குறிச்சொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தி விட்ட செய்தியை நீர் அறிவீர்: என்னைக் கொல்லத்தானே இப்பொழுது என் உயிருக்குக் கண்ணிவைக்கிறீர்? என்றாள்.

அதற்கு சவுல் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! இது குறித்து எத்தண்டனையும் உனக்கு வராது! என்று ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறினார்.

பின்பு அப்பெண், நான் உமக்காக யாரை எழுப்ப வேண்டும்? என்று கேட்க, அவர் சாமுவேலை எழுப்பு என்று பதிலளித்தார்.

அப்பெண்ணின் பார்வையில் சாமுவேல் பட்டவுடன் உரத்த குரலில் கதறி, நீர் தாமே சவுல், ஏன் என்னை ஏமாற்றினீர்? என்று சவுலை நோக்கிக் கூறினாள்.

அதற்கு அரசர் அவளை நோக்கி, அஞ்சாதே நீர் பார்ப்பது என்ன? என்று கேட்க அதற்கு அவள் சவுலிடம், நிலத்திலிருந்து ஒரு தெய்வ உருவம் வெளிவருவதைக் காண்கிறேன் என்றாள்.

அவர் அவளிடம் அவள் தோற்றம் என்ன? என்று கேட்க அவள் முதியவர் ஒருவர் எழுந்து வருகிறார். அவர் ஒர் போர்வை அணிந்திருக்கிறார், என்றாள். அவர் சாமுவேல் தான் என்று சவுல் அறிந்து முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கினார்.

அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி, என்னை எழுப்பி நீ ஏன் தொந்தரவு செய்கிறாய்? என்று கேட்க அதற்குச் சவுல் நான் பெரும் இக்கட்டில் இருக்கிறேன்? ஏனெனில் பெலிஸ்தியர் எனக்கெதிராக போர் தொடுத்து வந்துள்ளனர். கடவுள் என்னை விட்டு அகன்று சென்று விட்டார்: இறைவாக்கினர் மூலமாகவோ அவர் எனக்குப் பதில் சொல்வதில்லை: ஆதலால் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு அறிவிக்கும்படி உன்னை நான் அழைத்தேன் என்றார்.

அதற்குச் சாமுவேல், ஆண்டவர் உன்னை விட்டு விலகி என் பகைவராய் மாறியப்பின் என்னிடம் ஏன் ஆலோசனைக் கேட்கிறாய்?

ஆண்டவர் என் மூலம் உரைத்தது போல் உனக்குச் செய்தார்: அரசை உன் கையினின்று பறித்து உனக்கு அடுத்திருப்பவராகிய தாவீதிடம் கொடுப்பார்.

நீ ஆண்டவர் வார்த்தையைக் கேளாமலும், அமலேக்கின் மேல் அவருக்கு இருந்த வெஞ்சினத்திற்கு ஏற்ப நீ நடந்துகொள்ளாமலும் இருந்ததால், ஆண்டவர் இன்று அதைச் செய்துள்ளார்.

மேலும் ஆண்டவர் உன்னையும் உன்னோடு இருக்கும் இஸ்ரயேல் மக்களையும் பெலிஸ்தியரிடம் ஒப்புவிப்பார். நாளை நீயும் என் புதல்வர்களும் என்னுடன் இருப்பீர்கள்: ஆண்டவர் இஸடரயேல் பெலிஸ்தியர் கையில் ஒப்புவிப்பார்.

சாமுவேலின் வார்த்தைகளினால் அச்சமுற்ற, சவுல் உடனே என்னை நெடுங்கிடையாய் விழுந்தார். மேலும் அவர் இரவு பகலாய் ஒன்றும் உண்ணாது இருந்தமையால் வலிமையற்றிருந்தார்.

அப்பெண் சவுலிடம் நெருங்கி வந்து, அவர் மிகவும் கலக்கமுற்றிருப்பதைக் கண்டு அவரை நோக்கி, இதோ உம் அடியான் உம் சொல்லைக் கேட்டு, என் உயிரைப் பொருட்படுத்தாது நீர் சொன்ன உம் வார்த்தைகளுக்கு கீழ்ப் படிந்தேன்.

ஆதலால் இப்பொழுது நீரும் உம் அடியான் வார்த்தைகளும் கேளும். நான் உமக்கு முன் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன். வழிப் பயணத்திற்கான வலிமையை நீர் பெறுவதற்கு அதை நீர் உண்ணும் என்றாள்.

அதற்கு அவர் நான் உண்ண மாட்டேன் என்று மறுத்தார். அதனால் அவர் தரையிலிருந்து எழுந்து படுக்கையின் மேல் உட்கார்ந்தார்.

அப்பெண் வீட்டில் ஒரு கொழுத்த கன்றுக்குட்டி வைத்திருந்தாள்: அதை விரைவில் அடித்து, மாவை எடுத்துப் பிசைந்து புளிப்பற்ற அப்பங்கள் சுட்டாள்.

அவள் அவற்றை சவுலுக்கும் அவர்தம் பணியாளர்களுக்கும் முன்னே வைத்தாள். அவர்களும் உண்டனர்: பின்னர் அவர்கள் எழுந்து அன்றிரவே புறப்பட்டுச் சென்றார்.

அதிகாரம் 29.

பெலிஸ்தியர் தங்கள் படைகளை எல்லாம் அபேக்கில் ஒன்றுத்திரட்டினார்: இஸ்ரயேலர் இஸ்ரயேலில் உள்ள நீருற்றின் அருகே பாளையம் இறங்கினார்.

பெலிஸ்தியரின் தலைவர்கள் நூற்றுவர் படைகளுடனும் அணிவகுத்துச் சென்றார். தாவீது அவருடைய ஆள்களும் ஆக்கிசோடு கடைக்கோடியில் சென்றார்.

அப்பொழுது பெலிஸ்தியப் படைத்தலைவர்கள் இந்த எபிரேயர் இங்கு என்ன செய்கின்றனர்? என்று கேட்க அதற்கு ஆக்கிசு அவர்களை நோக்கி, இஸ்ரயேலின் அரசர் சவுலின் பணியாளராய் இருந்த இந்தத் தாவீது பல நாள்களாக, ஆண்டுகளாக என்னோடு வந்ததுமுதல் இந்நான் வரை அவரிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை என்றார்.

ஆனால் பெலிஸ்திய படைத்தலைவர்கள் அவர்மீது சினமுற்று அவரை நோக்கி, நீர் குறித்துக் கொடுத்துள்ள இடத்திற்கே இந்தத் தாவீதை திருப்பி அனுப்பும்: நம்மோடு அவன் போருக்கு வரலாகாது. போரில் அவன் நமக்கு எதிராக எழலாம் அன்றோ? இவன் எதனால் தன் தலைவனோடு நல்லுறவு கொள்வான்? இங்கிருக்கும் ஆள்களின் தலைகளை வெட்டுவதால் அல்லவா?

சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான்: ஆனால் தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றான் என்று சொல்லிப் பெண்கள் தங்களுக்குள் பாடி ஆடியது இந்த தாவீதைக் குறித்தது அன்றோ? என்றனர்.

அப்பொழுது தாவீது ஆக்கிசு தாவீதை அழைத்து அவரிடம் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நீர் நேர்மை மிக்கவர்: நீர் போருக்கு என்னோடு செல்வது சரியாக தோன்றுகிறது: ஏனெனில் நீர் என்னிடம் வந்தால் முதல் இறுதிவரை உம்மிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை. இருப்பினும் நீர் வருவதை தலைவர்கள் விரும்பவில்லை.

ஆதலால் இப்பொழுது திரும்பிச் செல்லும்: பெலிஸ்தியரின் தலைவர்கள் மனம் வருந்துமாறு எதையும் செய்யாதீர். சமாதானமாயச் செல்லும் என்றார்.

ஆனால் தாவீது அவரிடம் நான் செய்தது என்ன? நான் மன்னராகிய என் தலைவரும் எதிரிகளுடன் போரிட்டுச் செல்லாதவாறு நான் உம்மிடம் வந்தநாள் முதல் இன்று வரை, அடியேனிடம் நீர் கண்டது என்ன? என்று கேட்டார்.

அதற்கு ஆக்கிசு தாவீதை நோக்கி, கடவுளின் தூதரைப் போல் நீர் என் பார்வையில் குற்றமற்றவர் என்று எனக்குத் தெரியும்: இருப்பினும் இவன் என்னோடு போருக்கு வரலாகாது என்று பெலிஸ்தியப் படைத்தலைவர்கள் சொல்கிறார்கள்.

ஆதலால் உம்முடன் பிரிந்துவந்த உம் தலைவர் சவுலின் பணியாளர்களுடன் நீர் அதிகாலையில் எழுந்து விடிவதற்குள் புறப்பட்டுச் செல்லும் என்றார்.

ஆதலால் தாவீது தம் ஆள்களுடன் அதிகாலையில் புறப்பட்டு பெலிஸ்திய நாட்டுக்கு திரும்பினார்: ஆதலால் பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்குச் சென்றனர்.

அதிகாரம் 30.

மூன்றாம் நாள் தாவீது அவர் தம் ஆள்களும் சிக்லாவை அடைவதற்குள் அமலேக்கியர் நெகேபு: சிக்லாகு ஆகிய பகுதிகளைக் கொள்ளையடித்தனர். சிக்லாவைத் தாக்கி தீக்கிரையாக்கினார்.

அங்கிருந்த பெண்கள் சிறியோர் பெரியோர் அனைவரையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுவிடாமல், அவர்களை கூட்டிக் கொண்டு தங்கள் வழியே சென்றனர்.

தாவீதும் அவர்தம் ஆள்களும் நகருக்கு வந்த போது அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியர், புதல்வர் மற்றும் புதல்வியர் சிறைப்பட்டிருப்பதையும் அறிந்தார்.

அப்பொழுது தாவீது அவருடன் வந்த மக்களும் வலிமை உள்ள மட்டும் ஓலமிட்டு அழுதனர்.

தாவீதின் இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம் பெண்ணான அபிகாயிலும்கூடச் சிறைக்கப்பட்டிருந்தனர்.

தாவீது மிகவும் மன வருத்தமடைந்தார்: வீரர் அனைவரும் தங்கள் புதல்வர் புதல்வியர் பொருட்டு மிகவும் துயருற்றதால் அவரைக் கல்லால் எறிய வேண்டும் எனப் பேசிக் கொண்டனர். ஆனால் தாவீது கடவுளாகிய ஆண்டவரின் வலிமைப் பெற்றிருந்தார்.

பின்பு தாவீது, அகிமலக்கின் மகன் அபயத்தாரிடம் ஏபோதை என்னிடம் கொண்டுவாரும்! என்று கூறவே அபியத்தார்ஏபோதைக் தாவீதிடம் கொண்டு வந்தார்.

அப்பொழுது தாவீது, நான் கொள்ளைக் கூட்டத்தாரைப் பின் தொடரட்டுமா? நான் வெற்றி கொள்வேனா? என்று ஆண்டவரிடம் வினவினார். அதற்கு அவர் பின்தொடர்! நீ வெற்றியடைவது உறுதி! என்று பதிலளித்தார்.

ஆதலால் தாவீது அவருடன் இருந்த அறுநூறு பேரும் புறப்பட்டு, பெசோர் என்ற ஓடைக்கு வந்தார். களைப்படைந்தோர் அங்கேயே தங்கிவிட்டனர்.

எனவே தாவீது அவர்களை நானூறு பேரோடு அவர்களை பின்தொடர்ந்தார்: களைப்படைந்த இருநூறு பேர் பெசோர் ஓடையை கடக்க இயலாமல் அங்கேயே தங்கிவிட்டார்.

வயல் ¦விளயில் ஓர் எகிப்தியனை கண்டு, அவனைத் தாவீதிடம் அழைத்து வந்தனர்: உண்பதற்கு அப்பமும் குடிப்பதற்கும் தண்ணீரும் கொடுத்தார்.

மேலும் அவர்கள் அத்திப்பழ அடையின் ஒருத் துண்டையும், வற்றலான திராட்சைப்பழ அடைகள் இரண்டையும் அவனுக்கு கொடுத்தார். அவன் இதை சாப்பிட்டப்பின் புத்துயிர் பெற்றான். ஏனெனில் அவன் இரவு பகல் மூன்று நேரமும் உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.

தாவீது அவனை நோக்கி, நீ யாரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். அதற்கு அவன், நான் ஒர் எகிப்திய இளைஞன்: ஓர் அமலேக்கிய மனிதன் பணியாள்: நான் நோயுற்றதால் மூன்று நாள்களுக்கு என் தலைவர் என்னை விட்டுச் சென்றார்.

நாங்கள் கிரேத்தியரின் தென்பகுதியையும், யூதாவின் தென்பகுதியையும் காலேபின் தென்பகுதியையும் கொள்ளையடித்துச், சிக்லாவைத் தீக்கிரையாக்கியிருக்கிறோம் என்று பதிலளித்தான்.

தாவீது அவனிடம் அக்கொள்ளைக் கூட்டத்தாரிடம் என்னை அழைத்துச் செல்வாயா? என்று கேட்க என்னைக் கொல்லவோ அல்லது என்னை என் தலைவனிடம் ஒப்புவிக்கவோமாட்டீர் என்று ஆண்டவர் பெயரால் என்னிடம் ஆணையிட்டுக் கூறுங்கள்: அப்பொழுது அக்கூட் டத்தாரிடம் உங்களை அழைத்துச் செல்வேன் என்றான்.

அவ்வாறே அவன் தாவீதை அழைத்துச் சென்ற போது, இதோ, தாங்கள் பெலிஸ்தியர் நாட்டினின்றும் யூதா நாட்டினின்றும் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களை முன்னிட்டு அவர்கள் வெளியில் கும்பல் கும்பலாய் உண்டு குடித்து, நடனமாடிக் கொண்டிருந்தனர்.

தாவீது அன்று காலை தொடங்கி மறுநாள் வரை அவர்களோடு போரிட்டார்: ஒட்டகங்கள் மீது ஏறிய நானூறு வீரர்களைத்தவிர அவர்களுள் ஒருவனும் தப்பவில்லை.

அமலேக்கியர் கொண்டு சென்ற எல்லாவற்றையும், தாவீது மீட்டதுடன், தம் மனைவியர் இருவரையும் விடுவித்தார்.

அவர்கள் சிறைப்பிடித்த ஒருவருள் சிறுவரோ முதியவரோ புதல்வரோ புதல்வியரோ எவரும் விடுபடாமல் அவர் மீட்டார். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தாவீது மீட்க கொண்டு வந்தார்.

ஆடு மாடுகள் எல்லாவற்ற¨யும் தாவீது கைப்பற்றினார். அந்தக் கால்நடைகளைத் தாவீதுக்குமுன் ஓட்டிவந்த மக்கள் இது தாவீதின் கொள்ளைப் பொருள் என்றார்.

பின்பு களைப்பு மிகுதியினால் தாவீதைப் பின்தொடராமல் பெசோர் ஓடை அருகே தங்கிவிட்ட இருநூறு பேரிடம் தாவீது வந்தார்: அப்போது தாவீது அவரிடம் இருந்த மக்களையும் சந்திக்க எதிர் கொண்டு வந்தார். தாவீது மக்களை நெருங்கிபோது அவர்களுக்கு நல்வாழ்த்துக் கூறினார்.

ஆனால் தாவீதோடு சென்றவர்களில் இருந்த தீயவர் மற்றும் கயவர் எல்லாரும், அவர்கள் நம்முடன் வராததால் நாம் மீட்டுக் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களை ஒன்றும் அளிக்க மாட்டோம்: அவர்களுள் ஒவ்வொருவரும் தம் மனைவியையும் பிள்ளைகளையும் மட்டும் அழைத்துச் செல்லட்டும் என்றார்.

அதற்கு தாவீது என் சகோதரர்களே, ஆண்டவர் நமக்கு அளித்துள்ளவற்றிலிருந்து இப்படியெல்லாம் நீங்கள் செய்யக்கூடாது:

இதன் பொருட்டு நீங்கள் சொல்வதைக் யார் கேட்பார்கள்? ஏனெனில் போரிடச் செல்வோரின் பங்கு எவ்வளவோ அதே அளவு நான் போர் பொருள்களை காத்தவரின் பங்கும் இருக்கும் என்றார்.

இந்த முறையை இன்று வரை உள்ளதுபோல், இஸ்ரயேலர் பின்பற்றும்படி தாவீது நியமக் கட்டளையுமாக ஏற்படுத்தினார்.

தாவீது சிக்லாகுக்கு வந்த போது கொள்ளைப் பொருள்களின் ஒரு பகுதியை யூதாவின் பெரியோர்களான தம் நண்பர்களுக்கு அனுப்பிவைத்துக் கூறியது: இதோஆண்டவரின் எதிரிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுள் ஒரு பகுதியை உங்களுக்கு என் அன்பளிப்பாய் அனுப்புகிறேன் என்றார்.

பின்வரும் தம் நண்பர்களுக்கு அவர் அனுப்பினார்: பெத்தேல், இராமோத்தின் தென்பகுதி, யாத்திர் ஆகியவற்றில் இருந்தார்.

அரோயேர், சிப்மேத்து, எசுத்தமோகு ஆகியவற்றில் இருந்தோர்.

இராக்கால், எரகுமவேலரின் நகர்கள், கேனயரின் நகர்கள் ஆகியவற்றில் இருந்தோர்:

ஓர்மா, பொராசான், அத்தாகு ஆகியவற்றில் இருந்தோர்:

எபிரோனில் தாவீதும் அவர் தம் ஆள்களும் நடமாடிய எல்லா இடங்களில் இருந்தோர்.

அதிகாரம் 31.

பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்: பெலிஸ்தியருக்கு முன் இஸ்ரயேலர் புறமுதுக்கிட்டு ஓடினர்: பலர் கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்த்தினார்.

பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வர்களையும் பின் தொடர்ந்து, அவர் தம் புதல்வர்களான யோனத்தான், அபினதாபு, மல்கிசுவா ஆகியோரை வெட்டிக் கொன்றனர்.

சவுல் இருந்த இடத்தில் போர் மிகவும் வலுத்தது: வில்வீரர் அவர் மீது குறி வைத்துத் தாக்க, அவரும் அந்த வில்வீரர்களால் பெரிதும் காயமுற்றார்.

அப்பொழுது சவுல் தம் படைவீரர்களை தாங்குவோனை நோக்கி, இந்த விருத்தசேதனமற்றோர் என்னைக் குத்திக் கொன்று எனக்கு அவமானத்தை வருவிக்காவண்ணம் நீ உன் வாளை உருவி என்னைக் குத்திக் கொன்று விடு, என்றார். ஆனால் அவருடைய படைக்கலன் தாக்குவோன் மிகவும் அஞ்சியாதால் அதற்கு அவன் இசையவில்லை. ஆதலால் சவுல் தம் வாளை எடுத்து, தாமே அதன்மீது வீழ்ந்து மடிந்தார்.

சவுல் இறந்துவிட்டதைக் கண்ட அவருடைய படைக்கலன் தாங்கு வோனும் தன் வாள்மீது விழுந்து அவரோடு மடிந்தான்.

இவ்வாறு சவுலும் அவரின் மூன்று புதல்வர்களும் அவருடைய படைக்கலன் தாங்குவோனும் மற்றும் அவர் ஆள்கள் எல்லோரும் அதே நாளில் ஒன்றாக இறந்தனர்.

இஸ்ரயேல் புறமுதுகிட்டு ஓடிவிட்டனர் என்றும் சவுலும் அவர்தம் புதல்வர்களும் மடிந்தனர் என்றும் பள்ளத்தாக்கு அருகே யோனத்தானும் கிழக்கேயும் இருந்த இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் தங்கள் நகர்களை விட்டுவிட்டு ஓடினார். அதனால் பெலிஸ்தியர் வந்து அங்கே குடியேறினர்.

வெட்டுண்டவர்களைக் கொள்ளையிடப் பெலிஸ்தியர் மறுநாள் சென்ற போது, சவுலும் அவரின் மூன்ற புதல்வர்களும் கில்போவா மலையின் மேல் ஏறி இறந்துகிடப்பதைக் கண்டார்கள்.

அவர்களை சவுலின் தலையைக் கொய்து, அவர் படைக்கலன்களை எடுத்துக் கொண்டபின், தங்கள் சிலைகளின் கோவில்களிலும் மக்களிடையிலும் இந்தச் செய்தியை அறிவிக்கம் பொருட்டும், பெலிஸ்தியர் நாடெங்கும் தூதர்களை அனுப்பினர்.

அவர்கள் அவர்தம் படைகலன்களை அஸ்தரோத்துக்கு கோவிலில் வைத்தனர். அவரது சடலத்தை பெத்சான் சுவரில் தொடங்கிவிட்டார்.

பெலிஸ்தியர் சவுலக்கு செய்ததைக் கிலயாது நாட்டு யாபேசு நகர மக்கள் கேள்விப்பட்டபோது,

அவர்களுள் வலிமை மிகு வீரர்கள் அனைவரும் இரவில் புறப்பட்டுச் சென்று, சவுலின் சடலத்தையும், அவர்தம் புதல்வர்களின் சடலத்தையும் பெத்சான் சுவரிலிருந்து இறங்கி யோபாசுக்குக் கொண்டுவந்து, அங்கே அவற்றை எரிந்தார்.

பின்பு அவர்களுடைய எலும்புகளை எடுத்து யோபாசில் தமரிஸ்கு மரத்தின் அடியில் புதைந்துவிட்டு, ஏழு நாள்கள் நோன்பு இருந்தனர்.

புத்தகம் 10. சாமுவேல் - இரண்டாம் நூல்

அதிகாரம் 1.

சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்து திரும்புகையில் தாவீது சிக்லாவில் இரண்டு நாள் தங்கினார்.

மூன்றாம் நாள், சவுலின் பாசறையிலிருந்து கிழிந்த ஆடைகளோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான்.

நீ எங்கிருந்து வருகிறாய்? என்று தாவீது அவனை வினவ, நான் இஸ்ரயேல் பாசறையிலிருந்து தப்பி வந்துவிட்டேன் என்று அவன் பதில் கூறினான்.

என்ன நடந்தது? என்னிடம் சொல், என்று தாவீது கேட்க, அவன் வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்: அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்: சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துமடிந்துவிட்டனர் என்று கூறினான்.

சவுலும் அவனுடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர் என்று உனக்கு எப்படி தெரியும்? என்று தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞனிடம் தாவீது கேட்டார்.

அதற்கு அந்த அளைஞன் நான், தற்செயலாக கில்போவா மலையில் இருந்தேன். சவுல் தன் ஈட்டியின் மீது சாய்ந்து கொண்டிருந்தார். அப்போது தேர்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

அவர் பின்னால் திரும்பிய போது என்னை பார்த்து கூப்பிட்டார், இதோ இருக்கிறேன் என்று நான் கூறினேன்.

யார் நீ? என்று அவர் என்னை வினவ, நான் ஓர் அமலேக்கியன் என்று பதிலளித்தான்.

என்மீது நின்று, என்னைக் கொல், ஏனெனில் நான் மரணவேதனையில் நான் சிக்கியுள்ளேன். ஆனால் என் உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டுயிருக்கிறது என்று அவர் என்னிடம் கூறினார்.

நான் அவர் மீது நின்று அவரைக் கொன்றேன். ஏனெனில் விழுந்த பின்பு அவர் பிழைக்கமாட்டார் என நான் அறிவேன். அவர் தலையிலிருந்த மகுடத்தையும் பையிலிருந்த காப்பையும் எடுத்துக் கொண்டு, உம்மிடம் வந்துள்ளேன் என்று கூறினார்.

தாவீது தம் ஆடைகளை பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர்.

சவுலுக்காகவும் அவருடைய மகன் யோனத்தானுக்காகவும் ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்லயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்க்ள.

தாவீது தமக்கு செய்தி கொண்டு வந்த இளைஞனிடம், நீ எங்கிருந்து வருகிறாய்? என்று மீண்டும் வினவ, நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன் என்று மறுமொழிக் கூறினான்.

ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைக் கையோங்கிக் கொலை செய்ய நீ அஞ்சாதது ஏன்? என்று தாவீது அவனைக் கேட்டார்.

பின்பு தாவீது இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டுபோ, அவனை வெட்டு என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான்.

இரத்தம் உன் தலைமேல் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் கொன்றேன் என்ற உன் வாயே எனக்கு சான்று சொல்லிவிட்டது என்று தாவீது அவனை நோக்கி கூறினார்.

பிறகு தாவீது சவுலையும் அவருடைய மகள் யோனத்தானையும் குறித்து இரங்கற்பா ஒன்ற பாடினார்.

யூதாவின் மக்களுக்கும் இது கற்ப்பிக்கப்பட வேண்டும் என்ற யாசாரின் நூலில் எழுதப்பட்டுள்ள வில்லலின் பாடல் :

இஸ்ரயேல்! உனது மாட்சி உனது மலைகளிலே மாண்டு கிடக்கிறதா! மாவீரர் எவ்வாறு மடிந்தார்!

காத்தில் இதைச் சொல்ல வேண்டாம்: அஸ்கலோன் பகுதிகளில் இதை அறிவிக்கப்பட வேண்டாம்: ஏனெனில், பெலிஸ்தியரின் மனைவிகள் அகமகிழக்கூடாது: விருத்தசேதனமற்றோரின் புதல்வியர் ஆர்ப்பரிக்கக்கூடாது.

கில்போவா மலைகளே! பனியோ மழையோ உம்மீது பொழியாதிருப்பதாக! வயல்கள் முதற்கனிகளை தராதிருப்பனவாக! ஏனெனில் வீரர்கள் கேடயங்கள் தீட்டப்பட்டனவே! சவுலின் கேடயங்கள் எண்ணெயால் மெருகு பெறாதே!

வீழ்த்தப்பட்டோரின் இரத்தத்தினின்றும் வீரர்களின் கொழுப்பினின்றும் யோனத்தானின் அம்பு பின் வாங்கியதும் இல்லை!

சவுல்! யோனத்தான்! அன்புடையார், அருள்வுடையார்! வாழ்விலும் சாவிலும் இணைப்பிரியார்! கழுகினும் அவர்கள் விரைந்து செல்வார்! அரியினும் அவர்கள் வலிமைமிக்கோர்!

இஸ்ரயேல் புதல்வியரே! சவுலுக்காக அழுங்கள்! செந்நிற மென்துகிலால் உங்களை உடுத்தியவர் அவரே! பொன்னின் நகைகளினால் உம் உடைகளை ஒளிரச் செய்தாரே!

போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்த்தபட்டனர்!உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்!

சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உள்ளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என் மீது அளித்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலை மிஞ்சியது அன்றோ!

மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! போர்க்கலன்கள் எங்ஙனம் அழித்தன!

அதிகாரம் 2.

இதன்பின் தாவீது, நான் யூதாவின் நகருக்கு ஏதேனும் ஒன்றிற்கு செல்லட்டுமா? என்று ஆண்டவரிடம் கேட்டார். செல் என்றார் ஆண்டவர். எங்கு செல்லலாம்? என்று தாவீது மீண்டும் வினவ, எபிரான் என்று ஆண்டவர் மீண்டும் பதிலளித்தார்.

ஆகவே தாவீது தம் இரு மனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுடனும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுடனும் அங்கு சென்றார்.

தம்மோடு இருந்த ஆள்களையும் அவரது குடும்பத்தினரோடு, தாவீது அங்கே கூட்டி வந்தார். அவர்கள் எபிரோன் நகர்களில் குடியேறினர்.

யூதாவின் மக்கள் வந்து, தங்கள் குலத்தின் அரசராக தாவீதை திருப்பொழிவு செய்தார். யாபோசு கிலயாதின் ஆள்கள் சவுலை அடக்கம் செய்தார்கள். என்று அவர் தாவீதிடம் கூறினர்.

யாபேசு கிலயாதின் ஆள்களுக்கு தாவீது தூதுனுப்பி, நீங்கள் உங்கள் தலைவர் சவுல் மீது அன்புகாட்டி அவரை அடக்கம் செய்தீர்கள். ஆண்டவரின் ஆசி பெறுவீர்களாக!

ஆண்டவர் உங்களுக்கு நிலையான அன்பும் அடக்கமும் காட்டுவாராக! நீங்கள் இவவாறு செய்ததால் நானும் உங்களுக்கு நன்மை செய்வேன்!

வலிமைப் பெற்ற வீரர்களாக திகழுங்கள்! உங்கள் தலைவர் சவுல் இறந்துவிட்டார்: எனினும் யூதா குலத்தார் தங்கள் அரசனாக என்னைத் திருப்பொழிவு செய்துள்ளனர் என்று கூறினார்.

இதற்கிடையில் சவுலின் படைத்தலைவனாகிய நேரின் மகன் அப்பேனர் சவுலின் மகன் இஸ்பொசேத்தை மகனயிமுக்கு அழைத்துச் சென்று

கிலயாது, அசூரி, இஸ்ரியேல், எப் ராயிம், பென்யமின் மேலும் அனைத்து இஸ்ரயேல் மேலும் அவனை அரசனாக்கினான்.

சவுலின் மகன் இஸ்பொசத்து இஸ்ரயேல் மீது அரசனாய் தொடங்கிய போது அவனுக்கு வயது நாற்பது. இரண்டு ஆண்டு அவன் அரசனாய் இருந்தான். ஆனால் யூதா குலமோ தாவீதை பின்பற்றியது.

தாவீது எபிரோனில் யூதா குலத்தின் மீது ஆட்சி புரிந்த காலம் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களுமே.

நேரின் மகன் அப்னேரும் சவுலின் மகன் இஸ்பொசத்தின் பணியாளர்களும் மகனயிமியிலிருந்து புறப்பட்டுக் கிபயோனுக்குச் சென்றனர்.

செரூயாவின் மகன் யோவாபும் தாவீதின் பணியாளர்களும் புறப்படடுச் சென்று அவர்களைக் கிபயோன் குளத்தருகே எதிர் கொண்டனர். ஒரு சாரார் இப்பக்கமும் மறுசாரார் அப்பக்கமும் குளத்தின் அருகே அமர்ந்தனர்.

இளைஞர்கள் எழுந்து நமக்கு முன்பு வாள் போர் செய்யட்டும் என்று அப்னேர் யோவாபிடம் கூறினார். அவர்கள் அவ்வாறே செய்யட்டும் என்று யோவாபு கூறினான்.

பென்யமின் மற்றும் சவுலின் மகன் இஸ்பொசேத்து சார்பில் பன்னிருவரும், தாவீதின் பணியாளர் பன்னிருவரும் எழுந்து வந்தனர்.

ஒவ்வொருவனும் தன் எதிரியின் தலையைப் பிடித்துக் கொண்டு அவனது விலாவில் வாளை ஊடுருவினான். இருவரும் ஒன்றாக மடிந்தனர். அந்த இடத்தை எல்காத் அட்சூரிம் என்று அழைத்தனர்.

போர் அன்று மிகக் கடுமையாக உருவெடுத்தது, அப்னேரும் இஸ்ரயேல் ஆள்களும் தாவீதின் பணியாளர்கள் முன் முறியடிக்கப்பட்டனர்.

அங்கே செரூயாவின் புதல்வர் யோவாபு, அபிசாய், அசாவேல் ஆகிய மூவரும் இருந்தனர். அசாவேல் காட்டு மான் போல் வேகமாக ஓடக் கூடியவன்.

அசாவேல் அப்னோரை பின் தொடர்ந்து, வலமோ, இடமோ விலகாமல் துரத்தினான்.

அப்னேர் பின்னால், திரும்பி அசாவேல் நீயா? என்று கேட்டான் நான் தான் என்று அவன் பதில் கூறினான்.

வலமோ இடமோ விலகி இளைஞன் ஒருவனை பிடித்து, அவன் உடைமைகளை பிடுங்கிக் கொள் என்று அப்னேர் அசாவேலிடம் கூறினான். ஆனால் அசாவேலுக்கு அவனை பின்தொடர்வதிலிருந்து விலகிவிட மனம் இல்லை.

என்னை பின்தொடர்வதிலிருந்து விலகி விடு. நான் உன்னைக் குத்தி வீழ்த்த வேண்டும்? உன் சகோதரன் யோவாபுக்கு நான் எவ்வாறு முகத்தைக் காட்டுவேன்? என்று மீண்டும் அப்னேர் அசாவேலிடம் கூறினான்.

ஆனால் அசாவேல் அதைக் கேட்காமல் தொடர்ந்தான் ஆகவே அப்னேர் அவனை ஈட்டியின் முனையால் அவன் வயிற்றில் குத்த, அது அவனை பின்னாக ஊடுருவியது. அந்த இடத்திலேயே அவன் விழுந்து இறந்தான். அசாவேல் விழுந்து இறந்த இடத்திற்கு வந்த அனைவரும் நிலைகுலைந்து நின்றனர்.

பின் யோவாபுக்கு அபிசாயும் அப்னேரைப் பின் தொடர்ந்தனர். கிபயோன் பாலைநிலப் பாதையில் கீகுக்கு முன்பாக அம்மா மலையை அவர்கள் வந்தடைந்த போது கதிரவன் மறைந்துக் கொண்டிருந்தான்.

அப்போது பென்யமின் ஆள்கள் அப்னேருக்கு பின் ஒரே படையாக நின்று ஒரு குன்றின் உச்சியில் நின்றனர்.

அப்னேர் யோவாபைக் கூப்பிட்டு, வாளுக்கு இரை கொடுக்க வேண்டுமா? முடிவு கசப்பாக இருக்கும் நீ அறிவாயா? தங்கள் சகோதரர்களை பின் தொடராமல் திரும்பச் செல்லுமாறு மக்களிடம் நீ சொல்ல மாட்டாயோ? என்று கூறினான்.

அதற்கு யோவாபு வாழும் கடவுள் மேலும் ஆணை! நீ பேசாதிருந்தால், காலையிலேயே தங்கள் சகோதரர்களை பின் தொடராமல் மக்கள் விலகியிருப்பார்கள் என்று கூறி,

எக்காளம் ஊதினான். அனைத்து மக்களும் நின்றனர். அதற்கு மேல் அவர்கள் இஸ்ரயேலை பின்தொடவில்லை. போரிடவுமில்லை.

அப்னேரும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து அராபா வழியாக யோர்தானைக் கடந்தனர். தொடர்ந்து பிக்ரோன் முழுவதும் கடந்து மகனயிமை அடைந்தார்.

யோவாபு அப்னேரைப் பின்தொடர்வதினின்று திரும்பியபின் தன் ஆள்கள் அனைவரையும் ஒன்று திராட்டினான். அசாவேல் நீங்கலாக, தாவீதின் பணியாளர்களும் பத்தொன்பது பேரைக் காணவில்லை.

தாவீதின் பணியாளர்களோ அப்னேரின் ஆள்களான முந்நூற்று அறுபது பென்யமினியரைக் கொன்றிருந்தனர்.

அவர்கள் அசாவேலின் சடலத்தைத் தூக்கி வந்து பெத்லகேமிலிருந்த அவனுடைய தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். யோவாபும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து, பொழுது புலர்ந்ததும் எபிரோனை அடைந்தனர்.

அதிகாரம் 3.

சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே ஒரு நீண்ட போர் ஏற்பட்டது: தாவீது வலிமை பெற்றோர்: சவுலின் வீட்டாரோ தொடர்ந்து வலிமை இழந்தவர்.

எபிரோனில் தாவீதுக்கு புதல்வர்கள் பிறந்தனர். இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுக்குப் பிறந்த அம்னோன் அவர்தம் தலைமகன்.

கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுக்குப் பிறந்த கிலயாபு அவர்தம் இரண்டாம் மகன். கெசூர் மன்னனான தால்மாயின் மகன் மாக்கவுக்குப் பிறந்த அப்சலோம் அவர்தம் மூன்றாம் மகன்.

அகீத்துக்குப் பிறந்த அதோனியா நான்காம் மகன்: அபித்தாலுக்குப் பிறந்த செபற்றியா ஜந்தாம் மகன்:

தாவீதின் மனைவி எக்லாவுக்குப் பிறந்த இத்ராயம் ஆறாம் மகன்: இவர்கள் தாவீதுக்க எப்ரோனில் பிறந்தவர்கள்.

சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் பூசல் நிலவிய போது, சவுலின் வீட்டில் அப்னேர் தன்னையும் வலிப்படுத்திக் கொண்டான்.

அய்யாவின் மகனான இரிஸ்பா, சவுலின் வைப்பாட்டியாக இருந்தவள். இஸ்பொசேத்து அப்னேரை நோக்கி, என் தந்தையின் வைப்பாட்டியோடு நீ என்ன உறவு கொண்டாய்? என்று கேட்டான்.

இஸ்பொசேத்தின் கேள்வி அப்னேருக்குக் கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது. நான் என்ன யூதாவுக்கு வாலாட்டும் நாயா? என் தந்தை சவுலின் வீட்டாருக்கும் அவருடைய சகோதரர் நண்பர்களுக்கும் இன்று நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறேன். தாவீதின் கைகளில் நான் ஒப்புவிக்கவில்லை. நீயோ, இன்று ஒரு பெண்ணைக் குறித்து குற்றம் சாட்டுகிறாய்!

தாவீதுக்கு கடவுள் ஆணையிட்டுக் கூறியவாறே சவுலின் வீட்டிலிருந்து என்னை மாற்றச் செய்து, தாணிலிருந்து பெயேர்! செபா வரை இஸ்ரயேல் மீதும் தாவீதின் அரியணையை நிறுவவில்லையென்றால்,

கடவுள் அப்னேருக்கு உரியதும் கொடுமைத்தனமாய் தண்டனையை அளிப்பாராக! என்று அப்னேர் கூறினான்.

இஸ்பொசேத்து அப்னேருக்கு அஞ்சியதில் மறுமொழி எதுவும் பேசவில்லை.

பிறகு அப்னேர் தன் சார்பாக தாவீதிடம் தூதனுப்பி நாடு யாருடையது? என்னோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். அனைத்து இஸ்ரயேலையும் உம்மிடம் கொண்டுவர, எனது கை உம்மோடு இருக்கட்டும் என்று கூறினான்.

தாவீது நல்லது உன்னோடு நான் உடன்படிக்கை செய்து கொள்கிறேன். ஆனால் உன்னிடமிருந்து நான் ஒன்று கேட்கிறேன்: அதாவது நீ என்னுடன் வரும் போது சவுலின் மகள் மீக்காலை கொண்டு வரவேண்டும். இல்லையெனில் என் முகத்தில் விழிக்காதே என்று மறுமொழி கூறினான்.

அதற்குபின் தாவீது சவுலின் மகன் இஸ்பொசேத்திடம் தூதனுப்பி, பெலிஸ்தியர் நூறு பேரின் நுனித் தோலை ஈடாகக் கொடுத்து நான் மணந்த என் மீக்காலை எனக்குக் கொடு என்ற கேட்டார்.

இஸ்பொசேத்து ஆளனுப்பி அவளை அவள் கணவன் இலாயிசின் மகன் பல்தியேலிடமிருந்து கொண்டுவரச் செய்தான்.

அவள் கணவனோ அழுது கொண்டே அவளைத் தொடர்ந்து பகுரிம் வரை சென்றான். அங்கே அப்னேர் அவனிடம் திரும்பிச் செல் என்றான்: அவனும் திரும்பிச் சென்றான்.

அப்னேர் இஸ்ரயேலின் பெரியோர்களிடம் இவ்வாறு பேசினான்: தாவீது உங்கள் மீது ஆட்சி செய்ய வேண்டுமென்று கடந்த சில நாள்களாக நீங்கள் விரும்பிக் கொண்டிருந்தீர்கள்.

இப்போது அதை நிலை நாட்டுங்கள்: ஏனெனில் ஆண்டவர் தாவீதிடம் என் ஊழியன் தாவீதின் கையால் என் மக்கள் இஸ்ரயேலை பெலிஸ்தியரிடமிருந்து அவர்களின் அனைத்து எதிரிகளிடமிருந்தும் நான் காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

அப்னேர் பென்யமினரோடு தனியாகப் பேசியப்பின், எபிரோனுக்குச் சென்று இஸ்ரளேலுக்கும் பென்யமின் வீட்டாருக்கும் நல்ல தெனப்பட்ட அனைத்தையும் திடம் எடுத்துக் கூறினான்.

ஆப்னேர் இருபது ஆள்களோடு தாவீதைக் காண எபிரோன் வந்தான். அப்னேருக்கும் அவரோடு இருந்த ஆள்களுக்கும் தாவீது விருந்து படைத்தார்.

பிறகு அப்னேர் தாவீதிடம், நான் எழுந்து சென்று அனைத்து இஸ்ரயேலையும் அரசரும் என் தலைவருமாகிய உமக்கு முன் ஒன்று திரட்டி வருகிறேன். அவர்கள் உம்மோடு உடன்படிக்கை செய்து கொள்ளட்டும், நீரும் உம் விருப்படி ஆட்சி செய்யலாம். என்று கூறினான். தாவீது அப்னேரை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்றான்.

அப்போது தாவீதின் பணியாளர்களும் யோவாபும் கொள்ளையடித்து திரும்பினர். தங்களோடு மிகுதியான கொள்ளைப் பொருள்களைக் கொண்டுவந்தனர். அச்சமயம் அப்னேர் தாவீதோடு எபிரோனில் இல்லை. ஏனெனில் அவர் ஏற்கனவே வழியனுப்ப்பட்டு பாதுகாப்புடன் சென்றுவிட்டான்.

யோவாபும் படைவீரர் அனைவரும் வந்தபோது, நேரின் மகன் அப்னேர் தாவீதிடம் வந்தான். அவர் அவனை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்று விட்டான் என்று யோவாபிடம் கூறப்பட்டது.

யோவாபு அரசனிடம் சென்று, நீர் என்ன காரியம் செய்தீர்! அப்னேர் உன்னிடம் வந்தானல்லவா? நீர் ஏன் அவரை போகவிட்டீர்? அவனும் சென்று விட்டானே!

நேரின் மகன் அப்னேர் உனக்கு தெரியும். உமது போக்குவரத்தையும் நீர் செய்வது அனைத்தையும் அறிந்து கொண்டு உம்மை ஏமாற்றவே அவன் வந்தான் என்றான்.

யோவாபு தாவீதைவிட்டுச் சென்று அப்னேரின் பின்னால் தூதர்களை அனுப்பினான். அவர்கள் அவனைச் சீராவின் ஊற்றினருவிலிருந்து திருப்பியழைத்து வந்தார்கள். தாவீதுக்கோ இது தெரியாது.

அப்னேர் எபிரோனுக்கு திரும்பி வந்ததும் யோவாபு அவனிடம் தனிமையில் பேசுவதற் கென ஒதுக்கமாக அவனை வாயில் மையத்திற்கு அழைத்துச் சென்றான். தன் சகோதரன் அசாவேலின் இரத்தத்திற்காக அவன் வாயில் குத்த, அவன் இறந்தான்.

பிறகு தாவீது அதை கேள்வியுற்ற போது, நேரின் மகன் அப்னேரின் இரத்தத்தின் மட் டில் நானும் என் அரசர் ஆண்டவர் முன்பு என்றென்றும் குற்றமற்றவர்.

யோவாபின் தலைமீதும், அவன் தந்தையின் வீட்டார் மீதும் அது விழட்டும். இரத்த கசிவு உடையவனோ, தொழுநோயாளியோ, அண்ணகனோ, வாளால் மடிபவனோ, உணவுக்காகத் தவிப்பனோ, யோவாபின் குடும்பத்தில் இல்லாமல் போகமாட்டார்கள். என்றார்.

தங்கள் சகோதரர் அசாவேலைக் கிபியோனில் நடந்த போரில் அப்னேர் கொன்றத்தற்காக யோவாபும் அவன் சகோதரன் அவிசாயும் அவனைக் கொன்றார்கள்.

உங்கள் உடைகளை கிழித்துக் கொள்ளுங்கள். சாக்கு உடைகளை அணியுங்கள்: அப்னேருக்காகப் புலம்புங்கள் என்று தாவீது யோவாபுக்கும் அவனோடு இருந்த அனைத்து மக்களுக்கும் கட்டளையிட்டார். பாடையின் பின்னால் அரசர் தாவீது நடந்து சென்றார்.

அப்னேரை எபிரோனில் அடக்கம் செய்தார்கள். அப்னேரின் கல்லறையருகே

அரசர் இவ்வாறு கூறி அழுதார்: மூடன் மடிவதுபோல் அப்னேர் மடியவேண்டுமா?

கைகள் விலங்கிடப்படவில்லை: உன் பாதங்கள் கட்டப்படவில்லை: தீயோர் முன் வீழ்பவன் போல், நீயும் வீழ்ந்தாயே! மீண்டும் அனைத்து மக்களும் அவனுக்காக புலம்பினார்கள்.

பிறகு மக்கள் அனைவரும் தாவீதிடம் வந்து பகலாக இருக்கும் போதே உண்ணும் படி அவரைத் தூண்டினர். கதிரவன் மறைவதற்குள் நான் உணவையோ வேறு எதையோ சுவைத்தேனாகில், கடவுள் தக்கவாறு அதற்கு மேலும் என்னைத்தண்டிப்பாராக! என்று தாவீது ஆணையிட்டுக் கூறினார்கள்.

மக்கள் அனைவரும் இதைக் கேட்டார்கள். அவர்களுக்கு அது நல்லதெனபட்டது. அரசன் செய்ததெல்லாம் மக்களுக்கு நல்லதெனப்பட்டது.

நேரின் மகன் அப்னேரின் கொலையில் அரசருக்கு பங்கில்லை, என்று மக்கள் அனைவருக்கும் அனைத்து இஸ்ரயேலுக்கும் தெரிய வந்துள்ளது.

மேலும் அரசர் தம் பணியாளர்களிடம் இவ்வாறு கூறினார்: இன்று இஸ்ரயேலில் தலைவனும் உயர்குடிமகனுமான ஒருவன் மடிந்துவிட்டான் என்று நீங்கள் அறியீரோ?

நான் அரசனாய் திருப்பொழிவு செய்யபட்டும் இன்று வலுவிழந்தனவாய் இருக்கிறேன்! செரூபாவின் புதல்வர்களான இவர்கள் என்னைவிட வலியவர் ஆகிவிட்டனர்! தீங்கிழைப்பவனுக்கு அவன் தீங்கிற்கு ஏற்ப ஆண்டவர் தண்டனை வழங்கட்டும்.

அதிகாரம் 4.

அப்னேர் எபிரோனில் இறந்ததை கேட்டதும் சவுலின் மகன் இஸ்பொசேத்து நிலைக்குலைந்தான். அனைத்து இஸ்ரயேலும் கலங்கியது.

சவுலின் மகனிடம் இரண்டு படைத்தலைவர்கள் இருந்தனர். ஒருவன் பெயர் பானா: மற்றவன்பெயர் இரோக்காபு. பென்யமின் குலத்தைச் சார்ந்த பெயரோத்தில் வாழும் ரிம்மோன் என்பவனின் புதல்வர்கள் இவர்கள். பெயரோத்தும் பென்மினியரைச் சார்ந்ததாகவே கருதப்பட்டது.

பெயரோத்தியர் கித்தாயிமுக்குத் தப்பியோடி இந்நாள்வரை அங்கே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

சவுலின் மகன் யோனத்தானுக்கு மெபிபொசேத்து என்ற மகன் ஒருவன் இருந்தான். இஸ்ரயேலிலிருந்து, சவுல் யோனத்தான் பற்றிய செய்தி வந்தபோது அவனுக்கு வயது ஜந்து. அவனுடைய செவிலித் தாய் அவனைத் தூக்கிக் கொண்டு தப்பி ஓடுகையில் விரைந்து சென்றதால், அவன் கீழே விழுந்து கால் முடமானவன்.

பெயரோத்தைச் சார்ந்த ரிம்மேனின் புதல்வர்களான இரோக்கபும் பானாவும் உச்சிவேளையில் இஸ்பொசேத்தின் வீட்டுக்கு வந்தார்கள். நண்பகல் வேளையில் அவன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.

கோதுமை கொண்டு செல்பவர்கள் போல் நடுவீட்டிற்கு வந்து, அவனது வயிற்றில் ஊடுருவக் குத்திவிட்டு, இரோக்காபும் அவனுடைய சகோதரன் தப்பிவிட்டார்கள்.

இவ்வாறு அவர்கள் வீட்டினுள் நுழைந்து, தன் படிக்கை அறையில் கட்டினில் படுத்திருந்த போது அவனை ஊடுருவக் குத்திக் கொன்று தலையை வெட்டினார்கள். அத்தலையை எடுத்துக் கொண்டு இரவு முழுவதும் அராபா வழியாகப் பயணம் செய்தார்கள்.

இஸ்பொசேத்தின் தலையை எபிரோனில் இருந்த தாவீதிடம் கொண்டு வந்தார்கள். உமது உயிரை பறிக்கத் தேடிய உம் எதிரி சவுலின் மகன் இஸ்பொசேத்தின் தலை இதோ! ஆண்டவர் தலைவராம் அரசர் சார்பாக சவுலையும் அவனுடைய வாரிசையும் பழிவாங்கி விட்டார் என்று அவர்கள் கூறினார்கள்.

பெயரோத்தைச் சார்ந்த ரிம்மோனின் புதல்வர்களான இரோக்காபையும் அவனுடைய சகோதரன் பானாவையும் நோக்கி தாவீது இவ்வாறு கூறினார்கள். அனைத்து துயரங்களினின்றும் என்னை விடுவித்த ஆண்டவர் பெயரால் ஆணையிட்டு சொல்கிறேன்.

இதோ சவுல் இறந்து விட்டான் என்று எனக்குச் சொல்ல வந்தான், தான் நற்செய்தி கொண்டு வந்தவனாகவே இருந்தான். நானோ அவனை பிடித்துச் சிக்லாவில் கொன்றேன். அவனுக்கு நான் வெகுமதியாகக் தந்தது அதுவே.

இப்பொழுது குற்றமற்றவனைத் தீயவர்கள் அவன் வீட்டிலே அவனது படுக்கையிலே கொன்று விட்டார்கள். அவனது இரத்தத்தை சிந்திய பழிக்கு ஈடாக உங்களை நான் உலகினின்றே அழித்துவிடமாட்டேனோ?

தாவீது ஆணையிட்டு அவர்தம் பணியாளர் அவர்களை கொன்றனர்: கைகளையும் கால்களையும் வெட்டியபின் அவர்களை எபிரோன் குளத்தருகே தொங்கவிட்டனர்: இஸ்பொசேத்தின் தலையை எடுத்து எபிரோனில் அப்னேரின் கல்லறைக்கு அருகே புதைத்தனர்.

அதிகாரம் 5.

இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள்.

சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்: நீயே இஸ்ரயேலுக்கு தலைமைதாங்குவாய் என்று உமக்கே ஆண்டவர் கூறினார்.

இஸ்ரயேலின் பெரியோர்கள் அனைவரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு எபிரோனில் உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதை திருப்பொழிவு செய்தார்கள்.

முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல் யூதாவை மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார்.

அரசரும் அவருடைய ஆள்களும் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம் சென்ற போது, அவர்கள் தாவீதை நோக்கி, நீர் இங்கே வர முடியாது. பார்வையற்றவரும் முடவரும் கூட உம்மை அப்புறப்படுத்திவிடுவார்கள் அதாவது இங்கே தாவீது வர முடியாது என்றார்.

இருப்பினும் தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீது நகர்.

அன்று தாவீது, எபூசியரைத் தாக்குகின்றவர்கள் குடைகால்வாய் வழியே தாவீது உளமார வெறுக்கும் முடவரையும் பார்வையற்றவரையும் கைப்பற்றட்டும் என்று கூறினார். ஆகவே, பார்வையற்றவரும் முடவரும் கோவிலுனுள் நுழையலாகாது என்று கூறப்பட்டது.

தாவீது கோட்டையில் தங்கி, அதற்கு தாவீது நகர் என்று பெயரிட்டார். மில்லோவிலிருந்து உட்புறமாக தாவீது சுற்றிலும் மதில் எழுப்பினார்.

தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்தார்.

தீர் மன்னன் ஈராம் தாவீதிடம் தூதர்களையும், கேதுரு மரங்களோடு தச்சர், கொத்தர்களையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கு ஓர் அரண்மனை கட்டினர்.

ஆண்டவர் தம்மை இஸ்ரயேலின் அரசராக தம்மை நியமித்தார் என்றும் தம் மக்கள் இஸ்ரயேலுக்காகவே அவர் தம்மை உயர்த்தினார் என்றும் தாவீது உணர்ந்தார்.

எபிரோனை விட்டு வந்ததும் தாவீது மேலும் பல வைப்பாட்டியரையும் மனைவியரையும் எருசலேமில் தேர்ந்தெடுத்தார். மேலும் பல புதல்வர்களும் புதல்வியரும் தாவீதுக்குப் பிறந்தனர்.

எருசலேமில் அவருக்குப் பிறந்தவர்களின் பெயர்களாவன: சம்மூவா, சோபாபு, நாத்தான், சாலமோன்,

இப்கார், எலிசுவா, நேபேகு, யாபியா,

எலிசாமா, எலயாதா, எலிப்பலேற்று.

தாவீது இஸ்ரயேலின் அரசராக திருப்பொழிவு செய்யப்பட்டார் என்று கேட்டதும் பெலிஸ்தியர் அனைவரும் தாவீதை பிடிப்பதற்கு புறப்பட்டுச் சென்றனர். தாவீது அதைக் கேட்டதும் கோட்டைக்குள் புகுந்துவிட்டார்.

பெலிஸ்தியர் வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர்.

பெலிஸ்தியருக்கு எதிராக நான் செல்லட்டுமா? நீர் அவர்களை என் கையில் ஒப்புவிப்பீரா? என்று தாவீதிடம் ஆண்டவர் கேட்டார். சொல், உறுதியாக நான் பெலிஸ்தியரை உன் கையில் ஒப்புவிப்பேன் என்று ஆண்டவர் தாவீதிடம் கூறினார்.

தாவீது பாபால் பெராட்சிம்வரை வந்து அவர்களை தோற்கடித்தார். தகர்த்தெறியும் வெள்ளம் போல் ஆண்டவர் என் எதிரிகளை உன் கண்முன்னே தகர்த்தெறிந்தார் என்ற தாவீது கூறினார். ஆகவே தான் இந்த இடம் பாகால் பெராட்சியம் என்று அழைக்கப்படுகிறது.

பெலிஸ்தியர் தங்களை தெய்வச்சிலைகளை விட்டு செல்ல, தாவீதும் அவர்தம் ஆள்களும் அவற்றை எடுத்துச் சென்றனர்.

பெலிஸ்தியர் மீண்டும் எதிர்த்து வந்து இராபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர்.

தாவீது ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்க, நீ எதிர்த்துச் செல்ல வேண்டாம். சுற்றி வளைத்து அவர்கள் பின்னால் சென்று, முசுக்கொட்டை மரங்களுக்கு எதிரில் அவர்களை அணுக வேண்டும்.

முசுக் கொட்டை மரங்களுக்கு மேல் அணி வகுப்புப் பேரொலி ஒலிக்கும் போது நீ தயாராக இருக்கவேண்டும். ஏனெனில் அப்போது ஆண்டவர் பெலிஸ்தியர் படைகளை தாக்குவதற்காக உனக்கு முன்பாக செல்கிறார் என்று ஆண்டவர் கூறினார்.

ஆண்டவர் தமக்கு கட்டளையிட்டவாறே தாவீது சென்று, பெலிஸ்தியரை கெபா முதல் பெசேர் வரை தாக்கினார்.

அதிகாரம் 6.

தாவீது அனைத்து இஸ்ரயேலிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம் பேரை மீண்டும் என்று திரட்டனார்.

தாவீது அவரோடு இருந்த மக்கள் அனைவரும் கடவுளின் பேழையைக் கொண்டுவர பாலை யூதாவுக்குச் சென்றனர். இது கெருபுகளின் மீது வீற்றிருக்கும் படைகளின் பெயரால் ஆண்டவர் அழைக்கப்படுகிறது.

குன்றின் மீது இறந்த அபினதாபின் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை ஒரு புதிய வண்டியில் வைத்துக் கொண்டு வந்தார்கள். அபினதாபின் புதல்வர்கள் உசாவும் அகியோவும் அப் புது வண்டியை நடத்திவந்தார்கள்.

குன்றின் மீது இறந்த அபினதாபின் இல்லத்திலிருந்து அவர்கள் கடவுளின் பேழையைக் கொண்டு வந்தார்கள். அகியோ பேழைக்கு முன்னால் சென்றார்.

தாவீது இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் தேவதாரு மரத்தாலான இசைக்கருவிகளோடு, யாழ், வீணை, சுரமண்டலம், மேளம், தாளம் ஆகியவற்றோடும் ஆண்டவருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தார்கள்.

அவர்கள் நாக்கோனின் களத்திற்கு வந்தபோது காளைமாடுகள் மிரள, உசா கடவுளின் பேழையை தாக்கிப் பிடித்தான்.

அப்போது உசாவுக்கு எதிராக ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. கடவுள் அவனது தவற்றுக்காக அங்கேயே அவனை வீழ்த்தினார். அவன் கடவுலின் பேழைக்கருகே இறந்தான்.

ஆண்டவர் சினமுற்று உசாவைத் திடீரெனத் தாக்கியதால் தாவீது மனவேதனை அடைந்தார். இந்நாள் வரை பெரேசு உசா என்று அழைக்கப்பட்டது.

அன்று தாவீது ஆண்டவருக்கு அஞ்சி, இத்தகைய பேழையை நான் எவ்வாறு ஏற்றுக் கொள்வேன்? என்று வினவினார்.

எனவே, ஆண்டவரின் பேழையைத் தாவீதின் நகருக்குத் தம்மோடு எடுத்துச் செல்ல அவர் விரும் பவில்லை. கித்தியான ஓபோது ஏதோமின் இல்லத்திற்கு அதை திருப்பிவிட்டார்.

ஆண்டவரின் பேழை கித்தியான ஓபோது ஏதோமின் மூன்று மாதங்கள் தங்கிற்று. ஆண்டவர் ஓபோது ஏதோமுக்கும் அவன் வீட்டார் அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

ஆண்டவரின் பேழையை முன்னிட்டு ஓபோது ஏதோமின் வீட்டாருக்கும் அவனுக்குரிய அனைத்துக்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார் என்று அரசர் தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபோது ஏதோமின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார்.

ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்தும் ஒரு காளையையும் ஒரு ஆட்டுக் கிடாவையையும் பலியிட்டார்.

நார்ப்பட்டால் நெய்யப்பட்ட ஏபோதை அணிந்து கொண்டு, தாவீது தம் முழுவலிமையோடு ஆண்டவர் முன்பாக நடமாடிக் கொண்டிருந்தார்.

தாவீது இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத் தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.

ஆண்டவரின் பேழை தாவீதின் நகரை அடைந்த போது சவுலின் மகள் மீக்கால் பலகணி வழியாகப் பார்த்தாள். அரசர் தாவீது முன்பு ஆடிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் தன் உள்ளத்தில் வெறுத்தாள்.

ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார்.

எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தியப்பின் தாவீது படைகளின் ஆண்டவரின் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார்.

பிறகு தாவீது ஆண் முதல் பெண் வரை உள்ள அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப்பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்கு சென்றனர்.

தாவீது தம் வீட்டாருக்கு ஆசி வழங்க வந்தார். அப்போது சவுலின் மகள் மீக்கால் தாவீதை எதிர் கொண்டு, இழிந்தவன் ஒருவன் வெட்கமின்றித் தன் ஆடைகளைக் கழட்டுவது போல, இஸ்ரயேலின் அரசர் தன் பணியாளரின் பணிப்பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளைக் கழற்றி இன்று பெருமைக் கொண்டாரே! என்று ஏளனம் செய்தாள்.

ஆண்டவரின் மக்கள் மீதும் இஸ்ரயேல் மீதும் தலைவனாக இருக்குமாறு உன் தந்தையும் அவர் தம் வீட்டாரையும் ஒதுக்கிட்டு, என்னைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் திருமுன் நான் ஆடினேன்: இன்னும் ஆடுவேன்.

நான் என்னை இன்னும் என்னைக் கடையவனாக்கிக் கொள்வேன்: நீ குறிப்பிட்ட பெண்களுக்கு முன்பா நான் பெருமை அடைவேன் என்று தாவீது மீக்காலிடம் கூறினார்.

சவுலின் மகள் மீக்காலுக்குச் சாகும் வரை குழந்தைப் பேறு கிட்டவில்லை.

அதிகாரம் 7.

அரசர் தம் அரண்மனையில் குடியேறியப்பின், சுற்றிலிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார்.

அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, பாரும் நான் கேதுரு மரங்களான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் வாழ்கிறது என்று கூறினார்.

அதற்கு நாத்தான் நீர் விரும்பிய அனைத்தையும் செய்துவிடும்: ஏனெனில் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்று அரசனிடம் சொன்னார்.

அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது.

நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தாக்குவதற்காக எனக்கு கோவில் கட்டப்போகிறாயா?

இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்ததும் இந்நாள் வரை நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை: மாறாக ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்குமிடாய் இருந்தது.

இஸ்ரயேல் அனைவரும் சென்ற இடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன் அவர்களுள் எவரிடமாவது எனக்காக கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாததேன்? என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பானோ?

எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன்.

நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்: உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்: மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர் போல் நீ புகழுறச் செய்தேன்.

எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே வாழ வைப்பேன். என் மக்களாகிய இஸ்ரயேல் மீதும் நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்கத்தில் தீயவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள்.

அனைவரின் தொல்லைகளினின்றும் எனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே என் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.

வாழ் நாள் நிறைவுபெற்று நீ என் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்.

எனது பெயருக்காக கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன்.

நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறுசெய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன்.

முன்பாக நான் சவுலை விலக்கியது போல, என் பேரன்பினின்றும் அவனை விலக்கமாட்டேன்.

முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!

மேற்கூறிய வெளிப்பாட்டின் வார்த்தைகள் அனைத்தையும் நாத்தான் தாவீதுக்கு எடுத்துரைத்தார்.

பின் தாவீது ஆண்டவர் திருமுன் வந்து அமர்ந்து இவ்வாறு பேசினார்: என் தலைவராம் ஆண்டவரே! இதுவரை நீர் என்னை வழி நடத்தி வந்தமைக்கும், நான் யார்? என் குடும்பம் யாது?

இருப்பினும் என் தலைவராம், ஆண்டவரே உம் திருமுன் இது சிறிது, உம் ஊழியனின் குடும்பத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் பேசியுள்ளீர்! என் தலைவராம் ஆண்டவரே மனித வழக்கம் இது வல்லவே!

தாவீது மேலும் உன்னிடம் என்ன கூற முடியும்? என் தலைவராம் ஆண்டவரே! உம் ஊழியனைப் பற்றி உமக்கே தெரியும்.

உம் ஊழியன் அறிந்து கொள்ளட்டும் என்று உம் வார்த்தையை முன்னிட்டும் உம் இதயத்திற்கு ஏற்பவும் மாபெரும் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளீர்.

ஆகவே என் தலைவராம் ஆண்டவரே! எங்கள் காதுகளால் கேட்ட அனைத்தின்படி நீர் மகத்தானவர்: வேறு எவரும் இலர்: உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை.

உம் மக்கள் இஸ்ரயேலைப் போல் வேறு யார் உளர்? அவர்கள் உம் மக்களாக்கிக் கொள்ளுமாறும் உம் பெயர் விளங்குமாறும் கடவுளாகிய நீரே சென்று உலகின் ஒப்பற்ற அந்த இனத்தை மீட்டு, அவர்களுக்காக வியத்தகு அருஞ்செயல்கள் புரிந்தீர்! எகிப்து நாட்டினின்றும் வேற்று இனங்களினின்றும் அவர்களின் தெய்வங்களினின்றும் நீரே உம் மக்களை மீட்டீர்!

என்றும் உம் மக்களாகவே நிலைத்து இருக்குமாறு இஸ்ரயேலை நீர் உமக்கு உரியவர் ஆக்கினீர்! ஆண்டவரே! நீரே அவர்களின் கடவுள் ஆனீர்!

ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப் பற்றியும் உமது குடும்பத்தைப் பற்றியும் நீர் தந்த உறுதி மொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்!

உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள் என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும்.

ஏனெனில் படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன் என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத்தியவர் நீரே! ஆகவே இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத்துணிவு ஏற்பட்டது.

தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! இந்த நல்வாக்கை அடியவனுக்கு அருளியவர் நீரே!

உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள் கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியன் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!

அதிகாரம் 8.

இதன் பிறகு தாவீது பெலிஸ்தியரைத் தோற்கடித்து அவர்களை அடிமைப்படுத்தினார். மெதகம்மாவை தாவீது பெலிஸ்தியரிடமிருந்து கைப்பற்றினார்.

அவர் மோவாபியரையும் தோற்கடித்தார். அவர்களை தரையில் படுக்கச் செய்து நூலால் அளந்து இருபகுதியினரைக் கொன்று ஒரு பகுதியினரை வாழவிட்டார். மோவாபியர் தாவீதின் அடிமைகளாகி அவருக்குக் கப்பம் கட்டினார்கள்.

மேலும் யூப்பரத்தீசு நதியருகே தனது ஆட்சியை மீண்டும் அமைக்கச் சென்ற சோபா மன்னன் இரகோபின் மகன் அத்தேசரையும் தாவீது தோற்கடித்தார்.

தாவீது அவனிடமிருந்து ஆயிரத்து எழுநூறு குதிரை வீரர்களையும், இருபதாயிரம் காலாள் படையினரையும் சிறைப்பிடித்தார். நூறு தேர்களுக்குத் தேவையானவற்றைத்தவிர மீதியான தேர்க்குதிரைகளைத் தாவீது நரம்பறுக்கச் செய்தார்.

தமஸ்கு நாட்டுச் சிரியர்கள் சோபா மன்னன் அத்தேசருக்கு உதவவந்தபோது, இருபத்து இரண்டாயிரம் பேரைக் கொன்றார்.

பிறகு தமஸ்கு நகரின் ஆராம் பகுதியில் தாவீது படைத்தளங்களை அமைத்தார். சிரியா நாட்டினர் தாவீதின் அடிமைகளாகி அவருக்கு கப்பம் கட்டினர். தாவீது சென்ற இடமெல்லாம் அவருக்கு சிறப்பு அளித்தார்.

அத்தேசரின் பணியாளர் தாங்கிச் சென்ற பொற் கேடயங்களைத் தாவீது கைப்பற்றி அவற்றை எருசலேமுக்கு கொண்டு வந்தார்.

அத்தேசரின் நகர்களான பெற்றகுவிலிருந்து, பெரோத்தாவிலிருந்தும் தாவீது மிகுதியான வெண்கலத்தைக் கொண்டு வந்தார்.

அத்தேசரின் அனைத்துப் படையையும் தாவீது முறியடித்ததை ஆமாத்து மன்னன் தோயி கேள்வியுற்றான்.

உடனே அவன் தன் மகன் யோராமைத் தாவீது அரசரிடம் அனுப்பி அவரை வாழ்த்திப் பாராட்டினான்: ஏனெனில் தோயி அத்தேசரைத் தோற்கடித்திருந்தான். யோராம் தன்னோடு வெள்ளி, பொன், வெண்கலத்தால் ஆகிய பொருள்களைக் கொண்டு வந்தான்.

இவற்றையும் தாம் தோற்கடித்த அனைத்து நாடுகளின் வெள்ளி, பொன்னையும் தாவீது அரசர் ஆண்டவருக்கு காணிக்கையாக்கினார்.

அந்நாடுகளாவன: ஏதோம், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர், சோபாவின் மன்னன் அத்தேசரிடமிருந்து எடுத்த கொள்ளைப் பொருளையும் காணிக்கையாக்கினார்.

தாவீது உப்புக் கணவாயில் பதினெட்டாயிரம் ஏதோமியரை முறியடித்துத் திரும்பியபின் அவருக்கு பெரும் புகழ் உண்டாயிற்று.

அவ+ ஏதோம் முழுவதும் படைத்தளங்களை அமைத்தார். ஏதோமியர் அனைவரும் அவருக்கு கப்பம் கட்டலாயினர். தாவீது எங்குச் சென்றாலும் அவருக்கு ஆண்டவர் வெற்றி அளித்தார்.

தாவீது அனைத்து இஸ்ரயேல் மீதும் ஆட்சிப்புரிந்து நீதியும் நேர்மையும் விளங்கச் செய்தார்.

செரூயாவின் மகன் யோவாபு படைத்தலைவராகவும் அகிலூதின் மகன் யோசபத்து ஆவணக் காப்பளராகவும்

அகிதூபின் மகன் சாதோக்கும் அபியத்தார் மகன் அகிமெலக்கும் குருக்களாகவும், செராயா செயலாரகவும் பணியாற்றினார்.

யோயாதாவின் மகன் பெனாயா கெரேத்தியருக்கும் பெலேத்தியருக்கும் மேலாளராக இருந்தார். தாவீதின் புதல்வர்கள் குருக்களாக இருந்தார்கள்.

அதிகாரம் 9.

யோனத்தானின் பொருட்டு சவுலின் வீட்டாருக்கும் நான் கருணைக் காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா? என்று தாவீது கேட்டார்.

சவுலின் வீட்டைச் சார்ந்த சீபா என்ற ஓர் பணியாளன் இருந்தான். அவனை தாவீதிடம் கூட்டிச் சென்றனர். நீ தான் சீபாவா? என்று அரசர் அவனிடம் கேட்க, அடியேன் தான் என்று அவன் பதிலளித்தான்.

கடவுளின் கருணையை நான் சவுலின் வீட்டாருக்குக் காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா? என்று அரசர் கேட்டார். யோனத்தானின் இருகால் ஊனமுற்ற மகன் ஒருவன் இருக்கிறான் என்று அரசனிடம் சீபா பதிலளித்தான்.

எங்கே அவன்? என்று அரசர் அவனிடம் கேட்க, லோதாபாரில் அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டில் அவன் இருக்கிறான் என்று அரசனிடம் சீபா கூறினான்.

லோதாபாருக்கு ஆளனுப்பி அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டிலிருந்த அவனை அரசர் தாவீது கொண்டு வரச் செய்தார்.

சவுலின் புதல்வனான யோனத்தானின் மகன் மெபிபொசேத்து தாவீதிடம் வந்து முகம் குப்புற வீழ்ந்து வணங்கினான். மெபிபொசேத்து என்று தாவீது அழைக்க, இதோ! உம் அடியான் என்று அவன் பதிலிறுத்தான்.

தாவீது அவனிடம் அஞ்சாதே! உன் தந்தை யோனத்தானின் பொருட்டு நான் உனக்க கருணை காட்டுவது உறுதி, உன் மூதாதை சவுலின் நிலம் அனைத்தையும் உனக்க மீண்டும் கிடைக்கச் செய்வேன். நீ எப்போதும் என்னுடன் உணவருந்துவாய் என்று கூறினார்.

அவன் வணங்கி, நான் செத்த நாய் போன்ற பணியாளன்: நீர் என்னைக் கடைக்கண் பார்ப்பதற்கு எனக்கு என்ன தகுதி உள்ளது? என்றான்.

பிறகு அரசர் சவுலின் பணியாளன் சீபாவை அழைத்து சவுலுக்கும் அவர் தம் அனைத்து வீட்டாருக்கும் உரியதெல்லாம் நான் உன் தலைவரின் பேரனுக்கு அளித்துவிட்டேன்.

தலைவரின் பேரன் உண்பதற்காக நீயும், உன் பிள்ளைகளும், உன் பணியாளரும் அவனுக்காக நிலத்தை உழுது விளைச்சலைக் கொண்டு வருவீர்கள். ஆனால் உன் தலைவரின் பேரன் மெபிபோசேத்து எப்போதும் உன்னுடன் உணவருந்துவான் என்று கூறினார்.

தலைவராம் அரசர் தம் பணியாளனுக்கு இட்ட கட்டளைபடியே உம் பணியாளனும் செய்வான் என்று அரசரிடம் சீபா கூறினான். இளவரசர்களில் ஒருவரைப் போலவே மெபிபொசேத்து தாவீதுடன் உணவருந்தி வந்தான்.

மெபிபொசேத்துக்கு மீக்கா என்ற ஓர் இளம் மகன் இருந்தான். சீபாவின் வீட்டைச் சார்ந்த அனைவரும் மெபிபொசேத்து பணியாளராக இருந்தனர்.

இரு கால் ஊனமான மெபிபொசேத்து அரசருடன் தொடர்ந்து உணவருந்திவந்தான், எனவே எருசலேமிலேயே தங்கியிருந்தான்.

அதிகாரம் 10.

இதன் பிறகு அம்மோனியரின் மன்னன் இறந்தான். அவனுக்குப் பதிலாக அவன் மகன் ஆனூன் அரசாண்டான்.

நாகாசின் மகன் ஆனூனுடன் நான் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொள்வேன்: ஏனெனில் அவன் தந்தையும் என்னோடு அவ்வாறே நடந்து கொண்டார் என்று தாவ¤து கூறனார். அவனுடைய தந்தையை குறித்து அவனுக்கு ஆறுதல் சொல்ல தாவீது தம் பணியாளரை அனுப்பினார். தாவீதின் பணியாளரும் அம்மோனியர் நாட்டுக்கு சென்றார்.

ஆறுதல் கூறுமாறு ஆள்களை அனுப்பியதால் தாவீது உம் தந்தையை மேம்படுத்துகிறா என்று நினைக்கிறாயா? நகரைக் கண்டு வேவுபார்த்து அதை அழிக்கவன்றோ உன்னிடம் தாவீது தம் பணியாளரை அனுப்பியுள்ளார்! என்று ஆனூனிடம் அம்மோனியத் தலைவர்கள் கூறினார்கள்.

எனவே ஆனூன் தாவீதின் பணியாளரை பிடித்து அவர்களுடைய தாடியில் ஒரு பகுதியைச் சிரைத்து அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை கத்திரித்து அவர்களை அனுப்பி வைத்தான்.

இது தாவீதுக்க அறிவிக்கப்பட, அவரும் தம் பணியாளரை சந்திக்க ஆளனுப்பினார். உங்கள் தாடிகள் வளரும் வரை எரிகோவில் தங்கி பிறகு திரும்புங்கள் என்ற அரசர் சொல்லியனுப்பினார். ஏனெனில் அவர்கள் மிகவும் அவமானப்பட்டிருந்தனர்.

அம்மோனியர் தாங்கள் தாவீதின் வெஞ்சினத்திற்கு உள்ளானதைக் கண்டனர். அவர்கள் ஆளனுப்பி பெத்ரகோபிலிருந்து சோபாவிலிருந்தும் இருபதாயிரம் காலாள் படையினரையும், மாக்கா நாட்டு அரசரோடும் ஆயிரம் ஆள்களோடும் தோபிலிருந்து பன்னீராயிரம் ஆள்களையும் கூலிக்கு அமர்த்தினர்.

தாவீது இதைக் கேட்டு, யோவாபையும் வலிமை மிகு வீரர் அனைவரையும் அனுப்பினார்.

அம்மோனியர் புறப்பட்டு வந்து நுழைவாயில் அருகே போருக்காக அணிவகுத்தனர். சோபாவிலிருந்தும் இரகோபிலிருந்தும் வந்த சிரியர்களும் தோபையும் மாக்காவையும் சார்ந்த ஆள்களும் திறந்த வெளியில் தனியாக இந்தனர்.

தனக்கு எதிராக முன்னும் பின்னும் போரணிகள் இருந்ததைக் கண்ட யோவாபு இஸ்ரயேலின் வலிமை மிகு வீரருள் சிலரைத் தேர்ந்தெடுத்து சிரியருக்கு எதிராக நிறுத்தினார்.

மீதியானவரைத் தம் சகோதரன் அபிசாயின் பொறுப்பில் ஒப்படைத்தார்: அவன் அவர்களை அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான்.

மேலும் யோவாபு சிரியர் என்னை மேற்கொள்வதாக இருந்தால், நீ எனக்கு உதவ வரவேண்டும்.

நம் மக்களுக்காகவும் நம் கடவுளின் நகர்களுக்காகவும் நாம் வீறுகொண்டு போரிடுவோம், ஆண்டவர் தம் விருப்பப்படி செய்யட்டும் என்று கூறினார்.

யோவாபும் அவரோடு இருந்தவர்களும் சிரியருக்கு எதிராகப் போரிடுமாறு அணிவகுத்துச் சென்றனர்: சிரியர் புறமுதுகு காட்டி ஓடினர்.

சிரியர் தப்பியோடியதைக் கண்ட அம்மோனியரும் அபிசாயிடமிருந்து தப்பியோடி நகருக்குள் வந்தனர். அம்மோனியருடன் போரிட்ட யோவாபு எருசலேமுக்கு திரும்பிவந்தார்.

இஸ்ரயேலிடம் தாங்கள் தோற்றத்தைக் கண்ட சிரியர் மீண்டும் ஒன்றாக கூடினர்.

அததேசர் ஆளனுப்பி யூப்பிரத்தீசு ஆற்றுக்கு அப்பால் இருந்த சிரியரையும் திரட்டிக் கொண்டு வரச்செய்தான். படைத்தலைவனான சோபாக்கின் தலைமையில் அவர்கள் ஏலாமுக்கு வந்தனர்.

தாவீது இதைக் கேட்டதும் இஸ்ரயேலையும் ஒன்று திரட்டி யோர்தானைக் கடந்து ஏலாமுக்கு வந்தார். சிரியர் தாவீதுக்கு எதிராக அணிவகுத்து அவரோடு போரிட்டனர்.

சிரியர் இஸ்ரயேலருக்குமுன்பாக புறமுதுகாட்டி ஓடினர். சிரியருள் எழுநூறு தேர்வீரர்களையும், நாற்பதாயிரம் குதிரை வீரர்களையும் தாவீது கொன்றார். மேலும் படைத்தலைவன் சோபாக்கை அவர் வாளால் தாக்க அவனும் அங்கே மடிந்தான்.

அததேசருக்குத் கப்பம் கட்டி வந்த மன்னர்கள் அனைவரும் இஸ்ரயேலிரிடம் தாங்கள் தோற்றத்தைக் கண்டு, அவர்களோடு சமாதானம் செய்து அவர்களுக்குப் பணிந்திருந்தனர். இதற்கு பின் சிரியர் அம்மோனியருக்கு உதவ அஞ்சினர்.

அதிகாரம் 11.

இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்கு செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இராபாவை முற்றுக்கையிட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.

ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பதைக் தாவீது கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்ருந்தாள்.

தாவீது அவளை யார் என்று கேட்க, ஆளனுப்பினார். அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா என்று கூறினர்.

தாவீது தூதனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாதவிலக்கு முடிந்து அவள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தம் இல்லம் சென்றாள்.

அப்பெண் கருவுற்று தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.

அப்பொழுது தாவீது இத்தியனான உரியவை என்னிடம் அனுப்பி வை என்று யோபாவுக்குச் செய்தி செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பிவைத்தார்.

உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார்.

பிறகு தாவீது உரியாவிடம் உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக் கொள் என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார்.

உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக் கொண்டார். தம் வீட்டுக்குச் சென்றார்.

உரியா தம் வீட்டுக்கு செல்லவில்லை என்று தாவீது அறிந்தும் அவரிடம் நீ நெடும் தொலைவிலிருந்தும் வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை? என்று கேட்டார்.

அதற்கு உரியா தாவீதிடம் பேழையும் இஸ்ரயேலரும் யூதாவினரும் கூடாரங்கிளல் தங்கியிருந்தனர். என் தலைவர் யோவாபும் என் தலைவரின் பணியாளர்களும் திறந்த வெளியல் தங்கியிருக்கின்றனர். நான் மட்டும் என் வீட்டிற்குச் சென்று உண்டு குடித்து என் மனைவியோடு இருப்பேனா? உம் மேலும் உம் உயிர்மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யமாட்டேன் என்று சொன்னார்.

தாவீது உரியாவிடம் இன்னும் இங்கேயே தங்கு. நாளை உன்னை அனுப்பிவைக்கிறேன் என்றார். அன்றும் மறுநாளும் உரியா எருசலேமிலேயே தங்கினார்.

தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்கு குடிப்போதை யூட்டினார். தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார். தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை.

காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார்.

அம்மடலில் அவர், உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டு பின்வாங்கு அவன் வெட்டுண்டு மடியட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த போது வலிமைமிகு எதிரிகள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார்.

நகரின் ஆள்கள் புறப்பட்டு வந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவருள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.

பிறகு யோவாபு போரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் தாவீதுக்கு சொல்லி அனுப்பினார்.

மேலும் அவர் தூதனுக்கு இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்: போரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அரசருக்கு சொல்லி முடிப்பதற்குள்

அரசர் ஒரு வேளை வெகுண்டெழுந்து, உன்னிடம், நீங்கள் ஏன் நகரை அணுகிப் போரிட்டீர்கள்? அவர்கள் மதில்களினின்று தாக்குவார்கள் என அறியீரோ?

எருபசத்தின் மகன் அபிமெலக்கை கொன்றது யார்? மதில் சுவரினின்று ஒரு எந்திரக் கல்லை எறிந்தவள் ஒரு பெண்ணல்லவா? அவன் தேபேசில் இறந்துவிட்டானே? நீங்கள் ஏன் மதில்களை நெருங்கினீர்கள்? என்று கேட்டால், நீ உம் பணியாளன் இறந்து விட்டான் என்று சொல்.

தூதன் புறப்பட்டுச் சென்று யோவு¡பு சொல்லியனுப்பிய அனைத்தையும் தாவீதிடம் கூறினான்.

அந்த ஆள்கள் எங்களை மேற்கொண்டு எங்களுக்கு எதிராக திறந்த வெளிக்கு வந்தார். நாங்களோ நுழைவாயில்வரை அவர்களைத் துரத்தினோம்.

அப்போது மதில் மேலிருந்து வில்வீரர் உம் பணியாளரைத் தாக்கினார். அரசரின் பணியாளருள் சிலர் இறந்தனர். இத்தியரான உம் பணியாளர் உரியாவும் இறந்துவிட்டார்.

அப்போது தாவீது தூதனிடம் நீ யோவாபிடம் சென்று இதைப்பற்றி நீ கவலைப் படவேண்டாம். இங்கொருவனும் அங்கொருவனும் வாளுக்கு இரையாக்கின்றனர். நகருக்கு எதிராக இன்னும் கடுமையாகப் போர் புரிந்து அதை அழைத்து விடு என்று அவனை உற்சாகப்படுத்து என்றார்.

உரியானின் மனைவி தன் கணவன் இறந்துவிட்டதைக் கேள்வியுற்று அவருக்காகப் புலம்பி அழுதார்கள்.

துக்ககாலம் முடிந்ததும் தாவீது ஆளனுப்பி அவளைத் தம் வீட்டிற்கு கொண்டு வந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். தாவீது செய்த இச்செயல் ஆண்டவரின் பார்வையில் தீயதாக இருந்தது.

அதிகாரம் 12.

ஆண்டவர் நாத்தானைச் தாவீதிடம் அனுப்பினார்: நாத்தான் அவரிடம் வந்து, பின்வருமாறு கூறினார்: ஒரு நகரில் இரு மனிதர்கள் இருந்தனர். ஒருவன் செல்வன் மற்றவன் ஏழை.

செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன.

ஏழையிடம் ஒரு ஆட்டுக் குட்டியைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அவன் அதை விலைக்கு வாங்கியிருந்தான். அது அவனோடும் அவன் குழந்தைகளோடும் இருந்து வளர்ந்து பெரியதாகியது. அவனது உணவை உண்டு, அவனது கிண்ணத்திலிருந்தும் நீர்குடித்து அவனது மடியில் உறங்கி, அவனுக்கு ஒரு மகனைப் போலவே அது இருந்தது.

வழிப்போக்கான ஒருவன் செல்வனிடம் வந்தான். தன்னிடம் வந்த வழிப்போக்கானுக்கு உணவு தயார் செய்ய தன் ஆடுமாடுகளினின்று ஒன்றை எடுப்பதை விட்டு, அந்த ஏழையின் ஆட்டுக் குட்டியை எடுத்து அந்த வழிப்போக்கனுக்கு உணவு தயார் செய்தான்.

உடனே தாவீது அம்மனிதன் மேல் சீற்றம் கொண்டு, ஆண்டவர் மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்.

இரக்கமின்றி அவன் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்கான நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும் என்று நாத்தானிடம் கூறினார்.

அப்போது நாத்தான் தாவீதிடம், நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன். நான் உன்னைச் சவுலின் கையிலினின்று விடுவித்தேன்.

தலைவரிடம் வீட்டையும் ஒப்படைத்தேன்: அவன் மனைவியரையும் உன் மனைவியர் ஆக்கினேன்: இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்: இது போதாதென்றால் நான் மேலும் உனக்கு மிகுதியாய் கொடுத்திருப்பேன்.

பின் ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் வார்த்தையில் தீங்கு செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இறையாக்கினாய், அவன் மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய்: அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்!

இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது. ஏனெனில் இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாய் ஆக்கிக் கொண்டாய்.

இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன் குடும்பத்தினின்றே நான் எனக்கு தீங்கை வர வழைப்பேன்: உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப் பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான்.

நீ மறைவில் செய்ததை இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச் செய்வேன் என்று கூறினார்.

அப்போது தாவீது நாத்தானிடம், நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன் என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், ஆண்டவர் பாவத்தை நீக்கிவிட்டார்.

ஆயினும், ஆண்டவர் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்தால் உனக்கு பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான் என்று சொன்னார்.

பின்பு நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் தாவீதிற்கு பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது.

தாவீது அக்குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் படுத்துக்கிடந்தார்.

அவர்கள் வீட்டின் பெரியோர்கள் தரையினின்று அவரை எழுப்பச் சென்றனர்: அவருக்கோ விருப்பமில்லை: அவர்களோடு அவர்களும் உண்ணவில்லை.

பின்பு ஏழாவது நாள் குழந்தை இறந்தது. குழந்தை இறந்ததை தாவீதிடம் பணியாளர் சொல்ல அஞ்சினர். குழந்தை உயிரோடு இருந்தும் நாம் அவரிடம் பேசிய போது அவர் நம் குரலுக்கு செவி கொடுக்கவில்லையே! குழந்தை இறந்து விட்டது நாம் அவரிடம் சொன்னால் அவர் தமக்கு என்ன தீங்கு இழைத்துக் கொள்வாரோ! என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

பணியாளர்கள் தங்களுக்குள் இரகசியமாக பேசிக்கொண்டதைத் தாவீது கண்டு, குழந்தை இறந்து விட்டதை உணர்ந்து, தம் பணியாளரிடம் குழந்தை இறந்து விட்டதா? என்று கேட்க அவர்களும், ஆம் இறந்துவிட்டது என்று பதில் கூறினர்.

உடனே தாவீது தரையினின்று எழுந்தார். குளித்து, நறு நெய் பூசி, உடைகளை மாற்றிக் கொண்டார். கடவுளின் இல்லம் சென்று அவரைத் தொழுதார். பிறகு அவர்தம் இல்லம் வந்தார். அவரே கேட்க, உணவு பரிமாறப்பட்டது. அவர் அதை உண்டார்.

நீவிர் செய்ததை என்னென்போம்! உயிரோடிருந்த குழந்தைக்காக நீர் உண்ணாமல் அழுதீர்: ஆனால் குழந்தை இறந்ததும் எழுந்து உணவு கொண்டீரே! என்று அவருடைய பணியாளர் அவரிடம் கூறினார்.

குழந்தை உயிரோடிருந்த போது ஒரு வேளை ஆண்டவர் இரங்குவார்: அவனும் பிழைப்பான் என்று நினைத்து நான் உண்ணா நோன்பிருந்து அழுதேன்.

இப்போது அவன் இறந்துவிட்டான். இனி நான் ஏன் உண்ணா நோன்பு இருக்கவேண்டும்? என்னால் அவனைத் திருப்பி கொண்டுவர முடியுமா? நான் தான் அவனிடம் சொல்ல முடியுமோ ஒழிய, அவன் என்னிடம் திரும்பி வர மாட்டான் என்று கூறினார்.

தாவீது தம் மனைவி பத்சேபாவுக்கு ஆறுதல் கூறினார். பிறகு அவளுடன் உடலுறவு கொண்டார். அவள் ஒரு குழந்தையை பெற்றெடுக்க அவனை சாலமோன் என்று அழைத்தார். ஆண்டவர் அவன் மீது அன்பு கொண்டிருந்தார்.

ஆண்டவர் இறைவாக்கினர் நாத்தானை அனுப்பினார். அவர் ஆண்டவரை முன்னிட்டு அவனை எதிதியா என்று அழைத்தார்.

யோவாபு அம்மோனியரின் நகரான இரபாவுக்கு எதிராகப் போரிட்டு அதன் கோட்டையை கைப்பற்றினார்.

யோவாபு தாவீதிடம் தூதரை அனுப்பி, இராபாவுக்கு எதிராக போரிட்டு அதன் நீருற்றுகளை கைப்பற்றிவிட்டேன்.

இப்போது எஞ்சியுள்ள மக்களை நீர் ஒன்றுதிரட்டி நகருக்கு எதிரே கூடாரமிட்டு அதைக் கைப்பற்றிக்கொள்ளும். ஏனெனில் நான் இந்நகரைக் கைப்பற்றிக் கொண்டால் அதை என் பெயரால் அழைக்க நேரிடும் அல்லவா? என்று கூறினார்.

தாவீது மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இரபாவுக்கு சென்று அதற்கு எதிராக போரிட்டு அதைக் கைப்பற்றினார்.

அதன் மன்னனின் தலையிலிருந்த மகுடத்தை எடுத்தார். பொன்னாலும் விலையுயர்ந்த கற்களாலுமான அம் மகுடம் ஒரு தாலந்து எடைக் கொண்டதாய் இருந்தது. அதைக் கொண்டு தாவீது முடி சூட்டினார். அந்நகரிலிருந்து கொள்ளைப் பொருளையும் மிகுதியாக கொண்டு வந்தார்.

அங்கிருந்த மக்களையும் கொண்டு வந்து இரம்பம், கடப்பாரை, கோடரி வேலைகளுக்கும் செங்கல் சூளை வேலைகளுக்கும் அவர்களை அமர்த்தினார். இவ்வாறே அனைத்து அம்மோனிய நகர்களுக்கும் செய்தார். பிறகு தாவீதும் மக்கள் அனைவரும் எருசலேம் திரும்பினர்.

அதிகாரம் 13.

பின்னர் நிகழ்ந்தது: தாவீதின் மகன் அப்சலோமிற்குத் தாமார் என்ற சகோதரி இருந்தாள். அவள் பேரழகி. தாவீதின் இன்னொரு மகன் அம்னோன் அவள் மீது மோகம் கொண்டிருந்தான்.

அம்மோன் தன் சகோதரி தாமாருக்காக மிகவும் ஏங்கி நோயுற்றான். அவள் கன்னியாக இருந்ததால். அவளிடம் அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

அம்மோனுக்கு யோனத்தாபு என்ற ஒரு நண்பன் இருந்தான். அவன் தாவீதின் சகோதரனான சிமயியின் மகன் யோனத்தாபு சூழ்ச்சி மிக்கவன்.

இளவரசே!நீர் நாளுக்கு நாள் சோர்ந்து போவதேன்? என்னிடம் சொல்லமாட்டீரா? என்று கேட்க, அதற்கு அம்மோன், என் சகோதரன் அப்சலோமின் சகோதரி மீது நான் மையல் கொண்டுள்ளேன் என்று அவனிடம் கூறினான்.

யோனத்தாபு அவனிடம், உம் படுக்கையில் படுத்துக்கொண்டு நோயுற்றவர் போல் பாசாங்கு செய்யும். உம் தந்தை உம்மைக் காணவருவார். அவரிடம் என் சகோதரி தாமாரைத் தயைகூர்ந்து அனுப்பி வையுங்கள். அவள் எனக்கு உணவு தரட்டும். என் கண்முன்னே அவள் உணவு தயாரிக்கட்டும். நான் அதைக் கண்டு அவள் கையிலிருந்து உண்பேன் எனச் சொல்லும் என்று யோத்தாபு அவனுக்கு ஆலோசனைக் கூறினார்.

அவ்வாறே இம்மோன் படுத்துக் கொண்டு நோயுற்றவன் போல் பாசாங்கு செய்தான். அரசர் அவனைக் காண வந்தபோது, அம்மோன் அவரிடம், தயைகூர்ந்து என் சகோதரி தாமாரை அனுப்பி வையுங்கள், அவள் என் கண்முன்னே இரண்டொரு பணியாரங்கள் செய்தால், நான் அவள் கையிலிருந்து உண்பேன் எனக் கூறினான்.

தாவீது வீட்டுக்கு ஆளனுப்பி தாமாரை வரச்சொல்லி, உடனே உன் சகோதரன் அம்மோன் வீட்டுக்குச் சென்று அவனுக்கு உணவு தயார் செய் என்றார்.

தாமார் தன் சகோதரன் அம்மோன் வீட்டுக்குச் சென்றாள். அவனோ படுத்திருந்தான். அவள் மாவு எடுத்து அவன் கண்முன்னே பணியாரங்கள் சுட்டாள்.

பிறகு அவள் பாத்திரத்தைக்கொண்டு வந்து அவனுக்குப் பரிமாறினாள். அவன் உண்ண மறுத்தான். எல்லாரையும் என்னிடமிருந்து போகச் சொல் என்று அம்மோன் கேட்க, எல்லோரும் அவனை விட்டுச் சென்றனர்.

உணவை உள்ளறைக்குக் கொண்டுவா. நான் உன் கையிலிருந்து உண்பேன் என்று அம்மோன் தாமாரிடம் கூறினான். தாமார் சுட்ட பணியாரங்களை எடுத்துக் கொண்டு தன் சகோதரன் அம்மோனிடம் படுக்கையறைக்குள் சென்றாள்.

அவன் உண்பதற்காக அவற்றை எடுத்துக் கொண்டு அவனருகே சென்ற போது அவன் அவளை பிடித்து இழுத்து, என் சகோதரியே! வா என்னோடு படு என்றான்

வேண்டாம் சகோதரனே! என்னைக் கட்டாயப் படுத்த வேண்டாம். ஏனெனில் இஸ்ரயேலில் இவ்வாறு நடப்பதில்லை. இந்த மடமையைச் செய்யாதே.

எனது அவமானத்தை நான் எப்படி போக்குவேன்? நீயும் இஸ்ரயேலில் மதிக் கெட்ட ஒருவனாய் இருப்பாய். தயைகூர்ந்து அரசரிடமே கேள். அவர் என்னை உனக்குக் கொடுக்க மறுக்க மாட்டார் என்று அவளிடம் கெஞ்சினாள்.

அவனோ அவளது குரலுக்கு செவிகொடுக்கவில்லை. அவளை விட வலிமைமிக்கவனாக இருந்ததால், அவன் அவளை கற்பழித்தான்.

அதன் பிறகு அம்மோன் அவளை மிகவும் அதிகமாக வெறுத்தான். அவன் எந்த அளவுக்கு அவள் மீது மோகம் கொண்டிருந்தானோ அந்த அளவுக்கு மிகுதியாக அவளை வெறுத்து, எழுந்து சென்று விடு என்று அவளிடம் கூறினான்.

அவளோ, வேண்டாம், என்னை அனுப்பிவிடும் கொடுமை, நீ எனக்குச் செய்த முன்னைய கொடுமையை விடவும் மோசமானது என்று கதறினாள். ஆனால் அவன் அவளுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை.

தனக்குப் பணிவிடை செய்து வந்த இளைஞனை அவன் அழைத்து, இந்தப் பெண்ணை என்னிடமிருந்து வெளியேற்று: அவள் சென்றதும் கதவைத் தாழிடு என்று கூறினான்.

பணியாளன் அவளை வெளியேற்றி, அவள் சென்றதும் கதவைத் தாழிட்டான். கன்னியராக இருந்த அரச மகளிரின் வழக்கப்படி அவள் பல்வண்ண, நீண்ட ஆடை அணிந்திருந்தாள்.

தாமார் தன் தலைமீது சாம்பல் தூவினான்: தன் மீதிருந்த பல்வண்ண ஆடையைக் கிழித்தாள்: தன் தலை மீது கைவைத்து அழுதுக் கொண்டே சென்றாள்.

அப்பொழுது அவள் சகோதரன் அப்சலோம் அவளிடம், இதை எனக்குச் செய்தது அம்னோனா? என் சகோதரி! இப்போது நீ அமைதியாய் இரு. அவன் என் சகோதரன்! இதை மனதில் வைக்காதே என்று கூறினான். தாமார் தன் சகோதரன் அப்சலோமின் வீட்டில் ஆறுதலின்றி வாழ்ந்தாள்.

நடந்த இவ்வனைத்தையும் தாவீது கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்டார்.

அப்சலோம் அம்னோனுடன் நல்லதோ தீயதோ ஒன்றுமே பேசவில்லை. ஏனெனில் தன் சகோதரி தாமாரைக் கற்பழித்ததற்காக அப்சலோம் அம்னோனை வெறுத்தாள்.

ஈராண்டுகள் கழிந்தபிறகு அப்சலோம் எப்ராயிம் அருகே பாகால் ஆட்சோரில் ஆடுகளுக்கு முடிகத்தரித்தான். அப்போது அப்சலோம் இளவரசர் அனைவரையும் அழைத்திருந்தான்.

அப்சலோம் அரசரிடம் வந்து, இதோ! அடியேன் ஆடுகளுக்கு முடிக்கத்தரிக்கிறேன். அரசரும் அவருடைய பணியாளரும் தயைகூர்ந்து அடியேனோடு வாருங்கள் என்றான்.

அரசர் அப்சலோமிடம், என் மகன், அப்சலோம் வேண்டாம்! உனக்கு நாங்கள் சுமையாக இருக்க வேண்டாம் என்று கூறினார். அவன் அவரை வலியுறுத்தியும் அவர் சொல்ல விரும்பாமல், அவனுக்கு ஆசியளித்தார்.

பின் அப்சலோம், இல்லாவிடில் என் சகோதரன் அம்மோன் உங்களோடு செல்லட்டும் என்று கேட்க, அரசர், அவன் உன்னோடு ஏன் செல்ல வேண்டும்? என்று அவனிடம் வினவினார்.

அவன் அவரை வற்புறுத்தியதால் அம்னோனையும் இளவரசர் அனைவரையும் அவரோடு அனுப்பி வைத்தார்.

அப்சலோம் தம் பணியாளரிடம், அம்னோனின் மனம் மதுவால் மயங்கும் நேரம் பாருங்கள்: அம்னோனைத் தாக்குங்கள் என்று நான் உங்களிடம் கூறும் போது, அவனைக் கொன்றுவிடுங்கள். அஞ்சவேண்டாம். உங்களுக்குக் கட்டளையிடுபவன் நான் அல்லவா? உறுதிபூண்டு வீரர் புதல்வர்களாகச் செயல்படுங்கள் என்று கூறினான்.

அப்சலோமின் பணியாளன் அவன் கட்டளையிட்டவாறே அம்மோனுக்குச் செய்தார்கள். இளவரசர் அனைவரும் அவரவர் தம் கழுதைகளில் ஏறித் தப்பி ஓடினார்.

அவர்கள் திரும்பிச் செல்கையில் அப்சலோம் இளவரசர் அனைவரையும் கொன்றதாகவும் அவருக்குள் ஒருவரும் தப்பவில்லை என்றும் தாவீதுக்குச் செய்து கிடைத்தது.

அரசர் எழுந்து தம் ஆடைகளை கிழித்து கொண்டு தரையில் படுத்தார். அங்கே நின்று கொண்டிருந்த பணியாளர் அனைவரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர்.

தாவீதின் சகோதரன் சிமயாவின் மகன் யோனத்தாபு, உம் புதல்வர்களாகிய இளவரசர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார்கள் என்று என் தலைவர் நினைக்க வேண்டாம். ஏனெனில் அம்னோன் மட்டுமே இறந்துள்ளான். தன் சகோதரி கற்பழிக்கப்பட்ட நாளிலிருந்து அப்சலோம் தன் எண்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தான்.

ஆகவே என் தலைவராம் அரசர், இளவரசர் அனைவரும் இறந்துவிட்டதாக நினைத்துக் கவலைப்படவேண்டாம்: ஏனெனில் அம்னோன் மட்டுமே இறந்துள்ளான் என்று கூறினான்.

இதற்கிடையில் அப்சலோம் ஓட்டம் பிடித்தான். அப்போது அரண்மனைக் காவலன் தன் கண்களை உயர்த்திப் பார்த்த பொழுது, இதோ, திரளான மக்கள் மலையோரமாகப் பின்னால் இருந்த சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.

அப்போது யோனதாபு அரசரிடம் பாருங்கள் இளவரசர் வந்துவிட்டனர்: நான் சொன்னது போலவே நிகழ்ந்து விட்டது என்றான்.

அவன் பேசி முடிக்கும் போது இளவரசரும் வந்து, ஓலமிட்டு அழுதனர். அரசரும் பணியாளர் அனைவரும் வெகுவாய்ப் புலம்பி அழுதனர்.

தப்பியோடிய அப்சலோம் கெசூர் அரசன் அம்மிகூதின் மகள் தல்மாயிடம் சென்றடைந்தான். தாவீது தம் மகனுக்காக நாள்தோறும் புலம்பிக் கொண்டிருந்தார்.

கெசூருக்குத் தப்பியோடிய அப்சலோம் அங்கே மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான்.

அம்மோனின் மறைவு பற்றிய கவலை நீங்கியப் பின், அரசர் தாவீது அப்சலோமைக் காணும் ஏக்கத்தில் இருந்தார்.

அதிகாரம் 14.

அரசரின் உள்ளம் அப்சலோமின் மீது அன்பு கொண்டிருந்ததை செரூயாவின் மகன் யோவாபு அறிந்திருந்தான்.

தெக்கோவாவுக்கு ஆளனுப்பி அங்கிருந்து கூர்ந்த அறிவுடைய ஒரு பெண்ணை யோவாபு தன்னிடம் கூட்டிவரச்சொல்லி, அவளிடம், நீ துக்கம் கொண்டாடுபவளைப் போல் நடி: இழவு ஆடைகளை அணிந்து கொள்: நறு நெய் பூசிக் கொள்ளாதே: இறந்தவர்க்காக பல நாள்கள் இழவு கொண்டாகிறவளைப்போல் நீ இருக்க வேண்டும்.

பின் அரசரிடம் சென்று அவரிடம் நீ இவ்வாறு பேச வேண்டும், என்று கூறி அவள் என்ன பேச வேண்டும் என்றும் யோவாபு சொல்லிக் கொடுத்தார்.

தெக்கோவாவைச் சார்ந்த பெண் அரசனிடம் சென்று முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கி, அரசே காப்பாற்றும் என்று கதறினாள்.

உனக்கு என்ன வேண்டும்? என்று அரசர் அவளிடம் கேட்டார்.

நான் ஒரு கைம்பெண். என் கணவர் இறந்துவிட்டார். உம் அடியவளுக்கு இரு பிள்ளைகள் இருந்தனர். இருவரும் திறந்த வெளியில் சண்டையிட்டுக் கொண்டனர். அவரைத் தடுத்து நிறுத்த யாரும் இல்லாததால் ஒருவன் மற்றவனைத் தாக்கிக் கொன்று விட்டான்.

இதோ! உம் அடியவளுக்கு எதிராக என் குடும்பத்தார் அனைவரும் எழும்பி, தன் சகோதரனைக் கொன்றவனைக் கொடுத்து விடு. அவன் சகோதரனின் உயிருக்காக நான் அவனைக் கொல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் எனக்கு இருக்கும் ஒவ்வொரு வாரிசையும் அவர்கள் அழைத்து எனக்கு எஞ்சியுள்ள ஒளியையும் அணைத்து, இவ்வுலகில் என் கணவனுக்குப் பெயரும் வழிமரபும் இல்லாமல் செய்து விடுவார்கள் என்று அவள் சொன்னாள்.

நீ உன் வீட்டுக்குச் செல். உனக்காக நான் கட்டளை பிறப்பிப்பேன் என்று அரசர் அப்பெண்ணிடம் கூறினார்.

பின் தெக்கோவாவைச் சார்ந்த பெண் அரசரிடம், என் தலைவராம் அரசே! என் குற்றம் என் மீதும் என் தந்தையின் வீட்டின் மீதும் இருக்கட்டும். அரசரும் அவரது அரியணையும் குற்றமற்று இருக்கட்டும் என்று கூறினாள்.

உன்னிடம் யார் எதைச் சொன்னாலும் அவனை என்னிடம் கொண்டு வா, அவன் இனி உன்னைத் தொடவே மாட்டான் என்று அரசர் கூறினார்.

இரத்தப் பழி வாங்க விழைவோர் இனிக் கொல்லாமல் இருக்கவும் என் மகன் சாகாமல் இருக்கவும் அரசராகிய நீர் ஆண்டவராகிய கடவுளிடம் மன்றாடுவீர் என்று அவள் சொன்னாள். வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உன் மகனின் ஒரு முடி கூடத் தரையில் விழாது என்று அவர் பதிலளித்தார்.

பிறகு அப்பெண், உம் அடியவள் என் தலைவராம் அரசரிடம் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி தாரும் என்ற கேட்க, அவரும் சொல் என்று பதிலளித்தார்.

அவள் சொன்னது: கடவுளின் மக்களுக்கு எதிராக இத்தகைய எண்ணத்தை நீர் கொண்டிருப்பது ஏன்? தம்மால் துரத்தப்பட்டவனை அரசர் திரும்ப அழைக்காமல் இருப்பதனால் இந்தத் தீர்ப்பு அவரையே குற்றவாளி ஆக்குகிறது!

நாம் இறப்பது உறுதி. தரையில் சிந்தப்பட்டு மீண்டும் சேகரிக்க முடியாத நீரைப் போன்றவர்கள் நாம். ஆனால் துரத்தப்பட்டவனைப் பொறுத்த மட்டில், அவன் தம்மிடமிருந்து விலகிவிடாதபடி கடவுள் திட்டமிடுகிறார். அவன் உயிரை எடுக்க மாட்டார்.

இதைக் என் தலைவராம் அரசரிடம் நான் கூறவந்தபோது, மக்கள் என்னை அச்சுறுத்தினர்: உமது அடியவளோ நான் அரசரிடம் போவோம். ஒரு வேளை அரசர் அடியவளின் வார்த்தைக்குச் செவிக் கொடுப்பார்.

அரசர் செவி கொடுத்து, என்னையும் என் மகனையும் கடவுளின் உரிமைச்சொத்தினின்று அழிக்க வருபவனின் கையினின்று தம் அடியவளைக் காப்பாற்றுவார் என்று எண்ணினேன்.

ஏனெனில் உம் அடியவள் எண்ணப்படி, எம் தலைவராம் அரசரின் வார்த்தை எனக்கு அமைதி தரும்: கடவுளின் தூதரைப் போல் என் தலைவராம் அரசர் நன்மையும் தீமையும் புரிந்துகொள்வார். ஆண்டவராம் கடவுள் உம்மோடு இருப்பார் என்று கூறினாள்.

அதன்பின் தாவீது அப்பெண்ணிடம் மறுமொழியாக, நான் உன்னிடம் கேட்பது எதற்கும் மறைக்காமல் பதில் சொல்! என்றார். அதற்கு அவள், தயைகூர்ந்து என் தலைவராம் அரசர் கேட்கட்டும் என்றாள்.

இதிலெல்லாம் உன்னோடு யோவாபுக்குப் பங்கு உண்டு அல்லவா? என்று அரசர் தாவீதிடம் கேட்டார். என் தலைவராம் அரசே! உம் உயிர் மேல் ஆணை! என் தலைவராம் அரசரின் வார்த்தையிலிருந்து யாரும் வலமோ இடமோ திரும்ப முடியாது. உம் அடியான் யோவாபுதான் என்னைப் பணித்தவர். அவரே இச்சொற்கள் அனைத்தையும் உம் அடியவளுக்குச் சொல்லித் தந்தார்.

உம் அடியான் யோவாபு தற்போதைய நிலை மாற வேண்டுமென இதைச் செய்தார். ஆனால் கடவுளின் தூதருக்கு நிகரான பேரறிவு கொண்ட என் தலைவர் உலகில் நடக்கும் அனைத்தையும் அறிவார் என்று அப்பெண் கூறினாள்.

அப்போது அரசர் யோவாபை அழைத்து, இதைச் செய்தவன் நீயே போ! இளைஞன் அப்சலோமைக் கூட்டிவா என்றார்.

யோவாபு முகம் குப்புறத் தரையில் வணங்கி, அரசரை வாழ்த்தி, என் தலைவராம் அரசே! உம் அடியானின் சொற்படி அரசர் செய்துவிட்டார். இதிலிருந்து நான் உன் கண்முன் கருணைப் பெற்றுவிட்டேன் என்று உம் அடியான் அறிவான் என்று கூறினார்.

யோவாபு எழுந்து கெசூருக்குச் சென்று அப்சலோமை எருசலேமுக்குச் கூட்டி வந்தார்.

அவன் தன் வீட்டுக்கே திரும்பட்டும். என் முகத்தில் அவன் விழிக்கக்கூடாது என்று அரசர் கூற, அப்சலோம் தன் வீட்டுக்குத் திரும்பினான். அரசரின் முகத்தில் அவன் விழிக்கவில்லை.

இஸ்ரயேல் அனைத்திலும் அப்சலோமைப் புகழ்பெற்ற அழகன் வேறு எவனும் இல்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை எந்தக் குறையும் இல்லை.

அவன் முடிவெட்டிக் கொள்ளும் போது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தலைக்குப் பாரமாயிருந்தால், அவன் முடி வெட்டிக் கொள்வான் அது அரச அளவையின் படி இரண்டு கிலோவுக்கு மேலாக இருக்கும்.

அப்சலோமுக்கு மூன்று ஆண்குழந்தைகள் பிறந்தன. தாமார் என்ற பெயர் கொண்ட இரு மகளும் இருந்தாள். அவள் பேரழகியாக இருந்தாள்.

அப்சலோம் எருசலோமில் ஈராண்டுகள் வாழ்ந்தான்: ஆனால் அவன் அரசன் முகத்தில் விழிக்கவில்லை.

அப்சலோம் யோவாபை அரசனிடம் அனுப்புவதற்காக அவனைத் தன்னிடம் வரும்படி அழைத்தான். ஆனால் யோவாபு அவனிடம் செல்ல விரும்பவில்லை. இரண்டாம் முறை ஆளனுப்பியும் யோவாபு அவனிடம் செல்ல விரும்பவில்லை.

அப்போது அவன் தன் பணியாளரிடம், கவனியுங்கள், யோவாபின் வயல் என் வயலுக்கு அருகே உள்ளது. அங்கே வாற்கோதுமை விளைந்துள்ளது. நீங்கள் சென்று அதற்கு தீ வையுங்கள் என்றான். அப்சலோமின் பணியாளர்கள் அதற்குத் தீ வைத்தனர்.

பின் யோவாபு புறப்பட்டு அப்சலோம் வீட்டுக்குச் சென்று அவனிடம், உன் பணியாளன் என் வயலுக்கு தீ வைத்தது ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அப்சலோம் யோவாபிடம் கூறியது: நான் கெசூரியாவிலிருந்து இங்கு வந்தது ஏன்? நான் அங்கேயே இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும். என்று அரசரிடம் கேட்க விரும்புகிறேன். இதற்காக உம்மை அவரிடம் அனுப்ப, உமக்கு ஆளனுப்பினேன். நான் இப்போது அரசனின் முகத்தில் விழிக்க வழி செய்யும். ஏனெனில் ஏதாவது குற்றம் இருப்பின் அவர் என்னைக் கொல்லட்டும்.

யோவாபு அரசனிடம் சென்று இதைத் தெரிவித்தார். அவர் அப்சலோமை அழைத்து வரச்செய்தார். அவன் அரசனிடம் சென்று முகம் குப்புற அரசர் முன் தரையில் வீழ்ந்து வணங்கினான். அரசர் அப்சலோமை முத்தமிட்டார்.

அதிகாரம் 15.

அதற்குப் பின்னர் அப்சலோம் தனக்கென ஒரு தேரையும் குதிரையும் தனக்கு முன்பாக ஓட ஜம்பது ஆள்களையும் அமர்த்திக்கொண்டான்.

அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வயலின் பாதை அருகே நிற்பான்: யாரேனும் தனக்கிருந்த வழக்கை முன்னிட்டு அரசரிடம் தீர்ப்பு கேட்க வந்தால் அவனை அப்சலோம் தன்னிடம் அழைத்து, நீ எந்நகரிலிருந்து வருகிறாய்? என்று கேட்பான். அவன், உம் அடியான் இந்த நகரிலிருந்து இஸ்ரயேலின் இந்தக் குடும்பத்திலிருந்து வருகிறேன் என்று பதில் சொல்வான்.

அப்போது அப்சலோம், உன் வழக்கு சரியானது, நியாயமானது. ஆனால் அரசரின் சார்பாக உன்னை விசாரிக்க எவரும் இல்லை.

நான் மட்டும் இந்நாட்டில் நீதிபதியாக இருந்தால் வழக்குள்ளவர்கள் அனைவரும் என்னிடம் வருவார்கள். நானும் அவர்களுக்கு நீதிவழங்குவேன் என்பான்.

யாரேனும் அவனை வணங்குவதற்காக நெருங்கினால், தன் கையை நீட்டி அவனை முத்தமிடுவான்.

அரசரிடம் வழக்கை முன்னிட்டு வந்த இஸ்ரயேல் அனைவரிடமும் அப்சலோம் இவ்வாறு செய்து இஸ்ரயேலின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டான்.

நான்கு ஆண்டுகள் கழிந்தபின் ஒருநாள் அப்சலோம் அரசரிடம், நான் ஆண்டவருக்குச் செய்துள்ள நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும். எபிரோன் செல்ல தயைகூர்ந்து அனுமதிதாரும்.

உமது அடியான் சிரியாவிலுள்ள கெசூரில் வாழ்ந்த போது, ஆண்டவர் எருசலோமுக்குத் திரும்பிக் கொண்டு சென்றால், நான் ஆண்டவரைத் தொழுவேன், என்று ஒரு நேர்ச்சை செய்தேன் என்றான்.

நலமாய்ச் சென்று வா, என்று அரசர் அவனிடம் கூற அவனும் புறப்பட்டு எபிரோனுக்குச் சென்றான்.

பின் அப்சலோம் இஸ்ரயேல் அனைத்துக் குலங்களுக்கும் இரகசியத் தூதர் மூலம் நீங்கள் எக்காள முழக்கம் கேட்டவுடன் அப்சலோம் எபிரோனில் அரசர் ஆகிவிட்டார் என்று முழங்குங்கள் என்று சொல்லியனுப்பினான்.

எருசலோமிலிருந்து அழைக்கப்பட்ட இருநூறு பேர் சென்றனர். வஞ்சகமின்றி இதுபற்றி ஏதும் அறியாதவராய் அப்சலோமிடம் சென்றார்.

அப்சலோம் பலி செலுத்திய போது, தாவீதின் ஆலோசகனான கீலோவியன் அகிதோபலை அவனது நகர் கீலோவிலிருந்து வருமாறு சொல்லியனுப்பினான். சதி வலுவடைந்தது: அப்சலோமின் ஆதரவாளருடைய எண்ணிக்கையும் மிகுதியானது.

அப்போது தூதுன் ஒருவன் தாவீதிடம் வந்து, அப்சலோம் இஸ்ரயேலின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டான் என்று கூறினான்.

தாவீது தம்மோடு எருசலேமிலிருந்த அலுவலர் அனைவரிடமும், வாருங்கள் நாம் தப்பியோடுவோம், ஏனெனில் அப்சலோமிற்கு முன்பாக நாம் தப்பியோட முடியாது. விரைவில் வெளியேறுங்கள். இல்லையேல் அவன் நம்மை விரைவில் மேற்கொண்டு, நமக்குத் தீங்கு விளைவிப்பான்: நகரையும் வாள்முனையால் தாக்குவான் என்றார்.

அதற்கு அரச அலுவலர், எம் தலைவராம் அரசரின் ஏவல்களுக்காகவே உம் அடியார்கள் காத்திருக்கிறோம் என்று அரசரிடம் கூறினார்.

அரசரும் அவருடன் அவர் வீட்டார் அனைவரும் வெளியேறினர். ஆனால் வீட்டைக் காக்கும்படி தம் வைப்பாட்டியர் பத்துப் பேரை அரசர் விட்டுச் சென்றார்.

அரசரும் அவர் மக்கள் அனைவரும் வெளியேறி சிறிது தூரம் சென்று ஓரிடத்தில் நின்றார்கள்.

அவர் தம் அனைத்து அலுவலர்களும் அவர் முன் அணிவகுத்துச் சென்றனர். காத்திலிருந்து அவர் பின் வந்த அறுநூறு பேர் கெரேத்தியர், பெலேத்தியர், கித்தியர் ஆகியோர் அனைவரும் அரசருக்கு முன்பாக அணிவகுத்துச் சென்றனர்.

அப்போது அரசர் கித்தியன் இத்தாயிடம், நீ ஏன் எங்களோடு வருகிறாய்? திரும்பிச் சென்று அரசனோடு தங்கு. ஏனெனில் நீர் ஓர் அன்னியன். நாடு கடத்தப்பட்டவன்.

நீ நேற்று வந்தவன். இன்று நான் எங்களோடு அலையச் செய்யலாமா? கால் போன போக்கிலே நான் போகின்றேன். திரும்பிச் செல். உன் சகோதரர்களையும் கூட்டிச் செல். உண்மையுள்ளவரின் பேரன்பு உன்னோடு இருப்பதாக என்று கூறினார்.

இத்தாய் அதற்கு மறுமொழியாக, வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவராம் அரசர் மேல் ஆணை! வாழ்வாகட்டும். சாவாகட்டும். என் தலைவர் அரசர் எங்கிருப்பாரோ, அங்கே உம் அடியேனும் இருப்பான் என்று அரசரிடம் கூறினான்.

தாவீது இத்தாயிடம், சரி முன்னே செல் என்று சொல்ல, கித்தியான இத்தாயும் அவனோடு அவன் ஆள்களும் சிறுவர் சிறுமியர் அனைவரும் முன்சென்றனர்.

மக்கள் யாவரும் கடந்து சென்றதைக் கண்டு, நாடு முழுவதும் புலம்பிற்று, அரசர் கிதரோன் அருவியைக் கடந்தார். மக்கள் அனைவரும் பாலை நிலத்தை நோக்கிச் சென்றனர்.

இதோ! சாதோக்கும் அவரோடு லேவியர் அனைவரும் கடவுளின் பேழையைச் சுமந்து கொண்டு வந்தனர். மக்கள் அனைவரும் நகரைக் கடக்கும் வரை கீழே வைத்திருந்தனர். அபியாத்தார் அங்கே வந்தார்.

அரசர் சாதோக்கை நோக்கி, கடவுளின் பேழையை நகருக்குத் திருப்பி எடுத்துச் செல். ஆண்டவரின் பார்வையில் எனக்கு கருணைக் கிடைத்தால், அவர் என்னை திருப்பிக் கொணர்ந்து அதனையும் அதன் உறைவிடத்தையும் நான் காணச் செய்வார்.

மீது எனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறினால், இதோ நான் இருக்கிறேன்! அவர் விருப்படியே எனக்கு செய்யட்டும் என்று கூறினார்.

மேலும் அரசர் குருவாகிய சாதோக்கை நோக்கி, நீரும், திருக்காட்சியாளர்தாமே. நீரும் உம்மோடு இருக்கும் இரு புதல்வரும், உம் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானின் நலத்துடன் நகருக்குத் திரும்புங்கள்.

நான் பாலைநிலத்தில் எல்லைப் பகுதிகளில் உன்னிடமிருந்து எனக்கு செய்தி வரும் வரை நான் காத்திருப்பேன் என்றார்.

அவ்வாறே சாதோக்கும் அபியத்தாரும் கடவுளின் பேழையோடு எருசலோம் திரும்பி, அங்கேயே தங்கிவிட்டார்கள்.

தாவீது அழுதுக் கொண்டே ஒலிவமலை ஏறிச்சென்றார். தலையை மூடிக் கொண்டு வெறுங்காலோடு அவர் நடந்தார். அவரோடிருந்த மக்கள் அனைவரும் தன் தலையை மூடிக் கொண்டே ஏறிச் சென்றனர்.

அப்சலோமுடன் இருக்கும் சதிகாரருள் அகிதோபாலும் ஒருவன் என்று கூறப்பட்ட போது, தாவீது, ஆண்டவரே! உம்மை வேண்டுகிறேன். அகிதோபல் மூடத்தனமான ஆலோசனையை அளிப்பானாக! என்றார்.

மக்கள் கடவுளைத் தொழுத மலையுச்சிக்குத் தாவீது வந்து சேர்ந்தார். அப்போது அர்க்கியனான ஊசாய் கிழிந்த ஆடையோடும் புழிதிபடிந்த தலையோடும் அவரைச் சந்தித்தான்.

தாவீது அவனிடம், நீ என்னோடு வந்தால் எனக்குச் சுமையாக இருப்பாய்.

ஆனால் நீ நகருக்குத் திரும்பினால், அப்சலோமிடம் அரசே நான் முன்பு உம் தந்தைக்கு பணியாளாக இருந்தது போலவே இனி உனக்கும் பணியானாக இருப்பேன் எனச் சொல்லி எனக்காக அகிதோபலின் ஆலோசனையை முறியடிக்க முடியும்.

அங்குக் குருசாதோக்கும் அபியத்தாரும் உன்னோடு இருக்கின்றனர் அல்லவா? அரச மாளிகையிலிருந்து நீ கேட்கின்ற அனைத்தையும் குரு சாதோக்கிடம் அபியத்தாரிடமும் எடுத்துச் செல்.

அவர்களோடு இரு புதல்வர்களும், அதாவது சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும் இருக்கின்றனர். நீ கேட்ட அனைத்தையும் அவர்கள் வழியாக எனக்கு சொல்லி அனுப்பு என்று கூறினார்.

தாவீதின் மகன் ஓசாய் நகருக்குள் சென்று கொண்டிருந்த போது, அப்சலோம் எருசலோமுக்குள் நுழைந்தான்.

அதிகாரம் 16.

தாவீது தலை உச்சியைக் கடந்து சிறிது தொலை சென்றதும் மெபிபொசேத்தின் பணியாளன் அவரைச் சந்திக்க வந்தான். அவன் இருநூறு அப்பங்கள், நூறு உலர்ந்த திராச்சை அடைகள், நூறு அத்திப் பழ அடைகள், ஒரு தோற்பை திராட்சை இரசம் ஆகியவற்றைக் கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு வந்தான்.

இதெல்லாம் என்ன? என்று சீபாவை அரசர் கேட்க கழுதைகள் அரச வீட்டார் சவாரி செய்யவும் அப்பமும் அத்திப்பழமும் இளைஞர்கள் உண்ணவும், திராட்சை இரசம் பாலைநிலத்தில் களைப்புற்றோர் குடிக்கவும் தான் என்று சீபா பதிலளித்தான்.

சவுலின் பேரன் எங்கே? என்று தாவீது மீண்டும் வினவ, அவர் எருசலேமிலேயே தங்கியுள்ளார். ஏனெனில் அவர் இன்று இஸ்ரயேல் வீட்டார் என் பாட்டனாரின் வீட்டை எனக்கு திருப்பித் தருவார். என எண்ணுகிறார். என்று சீபா அரசனிடம் கூறினார்.

இதோ மெபிபொசேத்தின் உடைமையெல்லாம் உன்னுடையதே என்று அரசர் சீபாவிடம் கூற, நான் பணிவோடு வணங்குகிறேன்: என் தலைவராம் அரசே! உம் கண்முன் நான் கருணைப் பெறுவேனாக என்று சீபா அரசருக்கு மறுமொழி கூறினான்.

தாவீது பகூரிம் வந்தபோது சவுலின் குடும்பத்தையும் வீட்டையும் சார்ந்த ஒருவன் அவனை எதிர்கொண்டான். அவன் கேராவின் மகனான சிமயி. அவன் பழித்துக் கொண்டே எதிரே வந்தான்.

அவன் தாவீது மீதும், தாவீது அரசரின் எல்லாப் பணியாளர் மீதும் எல்லா மக்கள் மீதும், அவர்தம் வலமும் இடமும் இருந்த வீரர்கள்மீதும் கல்லெறிந்தான்.

சிமயி பழித்துக் கூறியது: இரத்த வெறியனே! பரத்தை மகனே! போ! போ!.

நீ சிந்திய சவுல் வீட்டாரின் இரத்தப் பழி அனைத்தையும் ஆண்டவர் என்மீது வரச்செய்துள்ளார். சவுலுக்குப் பதிலாக நீ ஆட்சி செய்தாய் அன்றோ! ஆண்டவர் மகன் அப்சலோமின் கையில் அரசைத் தருவார்! இரத்த வெறியனான நீ உன் தீமையிலேயே அழிவாய் .

அப்போது செரூயவின் மகன் அபிசாய் அரசரிடம் வந்து, இச்செத்த நாய் என் தலைவராம் அரசைப் பழிப்பதா? இதோ நான் சென்று தலையைக் கொய்து எறிய எனக்கு அனுமதிதாரும் என்றான்.

அதற்கு அரசர் செரூயாவின் மக்களே! இதைப்பற்றி நீங்கள் கவலைக் கொள்ள வேண்டாம். அவன் பழிக்கட்டும்! ஒரு வேளை தாவீதைப் பழி! என்று ஆண்டவரே அவனுக்குச் சொல்லியிருந்தால், இவ்வாறு நீ ஏன் செய்தாய்? என்று யார் சொல்ல முடியும் என்றார்.

மீண்டும் தாவீது அபிசாயிடம் தம் பணியாளர் அனைவரிடமும் கூறியது: இதோ எனக்கு பிறந்த மகன் என் உயிரைப் பறிக்கத் தேடுகிறான். பென்யமின் குலத்தைச் சார்ந்த இவன் செய்யலாகாதோ? அவனை விட்டுவிடு! அவன் பழிக்கட்டும்! ஏனெனில் ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார்.

ஒருவேளை ஆண்டவர் என் துயரத்தை காண்பார். இன்று அவன் பழித்து பேசியதற்காக எனக்கு அவர் நன்மை செய்வார்.

தாவீது தன் ஆள்களோடு பயணத்தை தொடர்வார். சிமயி அவருக்கு எதிராகப் பழித்துரைத்து கல்லெறிந்து, புழுதியை வாரித் தூற்றிக் கொண்டு மலையோரமாகச் சென்றான்.

அரசரும் அவரோடிருந்த மக்கள் அனைவரும் யோர்தானை வந்தடைந்தார். அங்கே அவர் இளைப்பாறினார்.

இதற்கிடையில் அப்சலோமும் இஸ்ரயேல் அரனைவரும் எருசலோம் வந்தடைந்தார். அகிதோபலும் அவனோடு இருந்தான்.

தாவீதின் நண்பனான அர்க்கியன் ஊசாய் அப்சலோமிடம் சென்று, வாழ்க அரசர்! வாழ்க அரசர்! என்று வாழ்த்தினான்.

அப்சலோம் ஊசாயை நோக்கி, உன் நண்பருக்கு நீ காட்டும் விசுவாசம் இதுதானா? நீ ஏன் உன் நண்பரோடு செல்லவில்லை? என்று கேட்டான்.

அதற்கு ஊசாய் அப்சலோமிடம் கூறியது: இல்லை! ஆண்டவரும் இந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் யாரைத் தேர்ந்தெடுத்துள்ளார்களோ அவருக்காகவே நான் இருப்பேன்: அவரோடு தான் நான் தங்குவேன்:

நான் யாருக்கு பணிபுரிய வேண்டும்? அவருடைய மகனுக்கு அல்லவா? என் தந்தைக்கு நான் பணிபுரிந்தது போலவே நான் உனக்கும் பணிபுரிவேன்.

அப்சலோம் அகிதோபலிடம், நான் என்ன செய்யலாம் என்று அறிவுரை கூறு என்று கேட்டான்.

அகிதோபல் அப்சலோமிடம், என் தந்தை தன் வீட்டைக் காக்க இங்கு விட்டுச் சென்றுள்ள வைப்பாட்டியரிடம் சென்று அவர்களோடு உறவு கொள். நீ உன் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டாய் என்று இஸ்ரயேல் அனைவரும் கேள்விப்படுவர். உன்னொடு இருப்பவர் கை ஓங்கும் என்றான்.

அப்சலோமுக்காக மாடியில் ஒரு கூடாரம் அடைக்கப்பட்டது. இஸ்ரயேல் முழுவதும் அறிய, அப்சலோம் தன் தந்தையின் வைப்பாட்டியரோடு உறவு கொண்டான்.

அந்நாளில் அகிதோபலின் ஆலோசனை கடவுளின் வாக்காக கருதப்பட்டது. இவ்வாறு தான் தாவீது அப்சலோமும் அகதோபலின் அனைத்து ஆலோசனைகளையும் கருதினர்.

அதிகாரம் 17.

அப்போது அகிதோபல் அப்சலோமை நோக்கி, நான் பன்னீராயிரம் ஆள்களைத் தேர்வு செய்துஇன்றிரவே புறப்பட்டு தாவீதை பின் தொடர்வேன்.

அவர் களைத்துச் சோர்ந்த வேளையில் அவர் மேல் பாய்ந்து அவரை அச்சுறுத்துவேன். அவரோடு இருக்கும் மக்கள் அனைவரும் தப்பி ஓடுவர்: அரசரை மட்டும் நான் வெட்டி வீழ்த்துவேன்.

மக்கள் அனைவரையும் உன்னிடம் திருப்பிக் கொணர்வேன். நீ தேடும் ஒரு மனிதரைத் தவிர அனைவரையும் அழைத்து வருவேன். மக்கள் அனைவரும் நலமாய் இருப்பர்.

அப்சலோமுக்கும் இஸ்ரயேலின் பெரியோருக்கும் இந்தக் கருத்து பிடித்திருந்தது.

அப்சலோம், அர்க்கியனான ஊசாவை அழையுங்கள். அவன் சொல்ல வேண்டியதை கேட்போம் என்றான்.

ஊசாய் அப்சலோமிடம் வர, அப்சலோம், இது அகிதோபலின் அறிவுரை. இவ்வாறு நாம் செய்யலாமா? இல்லையேல் என் கருத்து என்ன? என்று அவனிடம் கேட்டான்.

ஊசாய் அப்சலோமை நோக்கி, அகிதோபல், கருத்து இப்போதைக்கு சரியானதல்ல என்றான்.

மேலும் ஊசாய் அப்சலோமிடம் கூறியது: என் தந்தையும் அவர்தம் ஆள்களும் வலிமைமிகு வீரர் என்பதை நீ அறிவாய். காட்டில் தன் குட்டிகளை இழந்த கரடிபோல் அவர்கள் சினமுற்றிருக்கிறார்கள். உன் தந்தை போர்திறன் மிக்கவர்: இரவில் மக்களோடு தங்கமாட்டார்.

இப்பொழுது கூட அவர் ஒரு குகையிலோ வேறெந்த இடத்திலோ ஒளிந்து கொண்டிருப்பார். அவர் அவர்களைத் தாக்கியவுடன் அதைக் கேட்பவர்கள், அப்சலோமைப் பின்பற்றும் மக்கள் வீழ்ந்தனர் என்று சொல்வார் என்றான்.

அப்போது சிங்கத்தின் வலிமைக் கொண்ட அஞ்சா நெஞ்சனும் அச்சத்தால் அறவே நிலைகுலைந்து விடுவான். உன் தந்தை வலியவர் என்றும் அவரோடு இருப்பவர்களும் வலிமைவாய்ந்தவர்கள் என்றும் இஸ்ரயேல் அனைவரும் அறிவர்.

ஆகவே எனது கருத்து என்வென்றால், தாண் முதல் பெயேர் செபா வரை கடற்கரை மணல் திறன் போல் உள்ள இஸ்ரயேல் அனைவரும் உன்னிடம் ஒன்றுதிரளட்டும். பிறகு நீயே போருக்குச் செல்.

நாம் அவரை எதிர்த்து சென்று அவர் தங்கியுள்ள இடத்தை கண்டுபிடிப்போம். தரையின் மீது விழும் பனி போல், அவர் மீது நாமும் விழுவோம். அவரும், அவரோடு இருக்கும் ஆள்களும் எவரும் தப்பமாட்டார்கள்.

ஒரு வேளை அவர் ஒரு நகரினுள் நுழைந்திரந்தால், இஸ்ரயேலர் கொண்டுவரும் கயிறுகளால் அந்நகரைக் கட்டியிழுத்து அங்கே ஒரு சிறு கல்லும் இராதபடி ஒரு கணவாய்க்குள் தள்ளுவோம்

அப்சலோமும் இஸ்ரயேலர் அனவைரும் அர்க்கியனான ஊசாயின் கருத்து அகிதோபலின் அறிவுரையை விடச் சிறந்தது என்று கூறினர். ஆனால், ஆண்டவர் அப்சலோமிற்குத் தீங்கிழைக்குமாறு அகிதோபலின் சிறந்த அறிவுரை எடுபடாது போகச் செய்தார்.

பின்பு ஊசாய் குரு சாதோக்கிடமும் அபியத்தாரிடமும் அப்சலோமுக்கும் அகிதோபல் இவ்வாறு அறிவுரைத் தந்தான், நானோ இவ்வாறு கருத்துச் சொன்னேன்.

இப்போது உடனே ஆளனுப்பி, பாலைநில எல்லைப் பகுதியில் இரவு தங்க வேண்டாம் என்று அரசரும் அவரோடுள்ள மக்களும் இரையாகதபடி அவர்கள் கண்டிப்பாக வேறிடத்திற்ச செல்ல வேண்டும் என்று தாவீதிடம் சொல்லுங்கள் என்றான்.

அப்போது யோனத்தானும் அகிமாசும் ஏன்ரோகேலில் காத்திருக்க, ஒரு பணிப்பெண் அவர்களிடம் சென்று செய்தி சொல்ல, அவர்கள் தாவீதிடம் சென்று அதை அறிவித்தார்கள். ஏனெனில் அவர்கள் நகருக்குள் செல்வது, யாரும் காணமல் இருக்க வேண்டியிருந்தது.

ஆனால் சிறுவன் ஒருவன் பார்த்து விட்டு அப்சலோமுக்குத் தெரியப்படுத்தினான். இருவரும் விரைவாகச் சென்று பகூரிமில் ஒருவரின் வீட்டில் நுழைந்தனர். அவரது முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது. அவர்கள் அதற்குள் இறங்கினார்கள்.

வீட்டுக்காரி கிணற்று முகப்பினை ஒரு போர்வையால் மூடி அதன்மேல் தானியங்களைப் பரப்பினாள். அவர்கள் இறங்கியது யாருக்கும் தெரியவில்லை,

அப்சலோமின் பணியாளர் வீட்டினுள் நுழைந்து அப்பெண்ணை நோக்கி, அனிமாசும் யோனத்தானும் எங்கே? என்று கேட்க, அவள், அவர்கள் ஆற்றைக் கடந்து சென்றுவிட்டார் என்று சொன்னான். அவர்கள் தேடியும் கண்டுபிடிக்க இயலாததால் எருசலேம் திரும்பினர்.

அவர்கள் அகன்றதும் யோனத்தானும் அகிமாசும் கிணற்றிலிருந்து ஏறி வந்து அரசர் தாவீதிடம் சென்று, உடனே புறப்பட்டு ஆற்றைக் கடந்து செல்லுங்கள். ஏனெனில் அகிதோபல் உமக்கு எதிராக இவ்வாறு கூறியுள்ளான் என்று தாவீதிடம் உரைத்தார்.

தாவீதும் அவரோடு இருந்த மக்களும் புறப்பட்டு யோர்த்தானைக் கடந்து சென்றார்கள். பொழுது புலர்ந்த போது யோர்த்தானைக் கடக்காதவன் எவனும் இல்லை.

தன் அறிவுரை ஏற்றுக் கொள்ளபடவில்லை என்று கண்டதும் அகிதோபல் தன் கழுதைக்குச் சேணமிட்டு, தன் நகருக்குப் புறப்பட்டு தன் வீட்டை அடைந்தான். தன் வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு அவன் நான்று கொண்டு இருந்தான். அவனை அவனுடைய தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தனர்.

தாவீது மகனயிம் வந்தடைந்தார்: அப்சலோமும் அவனோடு இஸ்ரயேலும் அனைவரும் யோர்த்தானைக் கடந்தார்கள்.

அப்சலோம் யோவாபுக்குப் பதிலாக அமாசாவைப் படைத் தலைவனாக நியமித்திருந்தான். இவன் இஸ்ரயேலன் இத்ரா என்பவனின் மகன். இந்த இத்ராதான் அபிகாலை மணந்தான். இவள் யோவாபின் தாயும் செரூயாவின் சகோதிரியுமான நாகசின் மகள்.

அப்சலோமும் இஸ்ரயேலரும் கிலயாது நாட்டில் பாளையம் இறங்கினர்.

தாவீது மகனயிம் வந்தடைந்த போது அம்மோனியரின் இராபாவிலிருந்து நாகாசின் மகன் சோபியும் லோதபாரிலிருந்து அம்மியேலின் மகன் மாக்கிரும், ரோகிலிமிலிருந்து கிலயாதியன் பர்சில்லாயும்

தாவீதிடம் வந்து அவருக்கு படுக்கைகள், கிண்ணங்கள், மண்பாண்டங்கள். கோதுமை, வாற்கோதுமை, மாவு, வறுத்த தானியம், மொச்சை, அவரை, பயிறு, தேன், தயிர், ஆடுகள், பசும்பாற்கட்டிகள் ஆகியவற்றைக் கொடுத்தார்.

பாலைவெளியில் மக்கள் பசித்தும் களைத்தும் தாகமாகவும் இருக்கிறார்க்ள என்று சொல்லி, தாவீதும் அவரோடு இருந்தவர்கள் உண்பதற்காக அவர்கள் இவற்றைத் தந்தனர்.

அதிகாரம் 18.

தாவீது தம்மோடிருந்த வீரர்களை கணக்கெடுத்து, அவர்கள் மீது, ஆயிரத்தவர்,நூற்றவர், தலைவர்களை நியமித்தார்.

வீரர்கள் மூன்றில் ஒருபகுதியினரை யோவாபின் தலைமையிலும், அடுத்த மூன்றில் ஒரு பகுதியினரை யோவாபின் சகோதரன் செரூயாவின் மகன் அபிசாயின் தலைமையிலும், இன்னும் மூன்றில் ஒரு பகுதியினரை கித்தியன் இத்தாயின் தலைமையிலும் தாவீது அனுப்பினார். தாமும் அவர்களோடு புற்ப்படுவதாக அரசர் வீரர்களிடம் கூறினார்.

நீர் வெளியே வரவேண்டாம். ஏனெனில் நாங்கள் புறமுதுகாட்டி ஓடினால், அவர்கள் எங்களைப் பற்றிக் கவலைப்படமட்டார்கள். எங்களுள் பாதிப்போர் மடிந்தாலும் எங்களைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். நீர் ஒருவர் எங்களுள் பத்தாயிரம் பேருக்குச் சமம். தற்போது நீர் எங்களுக்கு நகரிலிருந்தே உதவி செய்வது நல்லது என்று வீரர்கள் அவரிடம் சொன்னார்கள்.

எங்களுக்கு எதுநல்லதெனப்படுகிறதோ அதையே நான் செய்வேன் என்று அரசர் அவர்களிடம் கூறி, வாயிலருகே நின்றார். வீரர்கள் நாநூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டுச் சென்றனர்.

பொருட்டு எந்த இளைஞனும் அப்சலோமுக்கு தீங்கிழைக்க வேண்டாம் என்று யோவாபு அபிசாய், இத்தாய் ஆகியோருக்கு அரசர் கட்டளையிட்டார். எல்லாப் படைத்தலைவருக்கும் அரசர் கட்டளையிட்டதை வீரர்கள் அனைவரும் கேட்டார்கள்.

இஸ்ரயேலரை எதிர்கொள்ள வீரர்கள் புறப்பட்டுத் திறந்த வெளிக்குச் சென்றனர்.போர் எப்ராயிம் காட்டில் நடந்தது.

இஸ்ரயேல் தாவீது பணியாளரால் தோற்கடிக்கப்பட்டனர். அன்று மாபெரும் அழிவு ஏற்பட்டது. இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

நாடெங்கும் போர் பரவியது. அன்று வாளுக்கு இரையானவர்களைவிடக் காட்டுக்கு இரையானவர்களே மிகுதியானவர்.

அப்சலோம் தாவீதின் பணியாளரை எதிர்கொள்ள நேர்ந்தது. அவன் ஒரு கோவேறு கழுதை மீது ஏறி வந்துக் கொண்டிருந்தான். அது ஒரு பெரிய கருவாலி மரத்தின் அடர்த்தியான கிளைகளுக்குக் கீழே சென்று கொண்டிருந்தது. அப்போது அவனது தலை கருவாலி மரத்தில் சிக்கிக் கொள்ள, அவன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தங்கினான். அவன் ஏறிவந்த கோவேறு கழுதை முன்னே சென்றுவிட்டது.

இதைக் கண்ட ஒரு வீரன் யோவாபிடம் சென்று இதோ! அப்சலோம் கருவாலி மரத்தில் தொங்குவதைக் கண்டேன் என்று கூறினான்.

யோவாபு அதைச் சொன்னவனை நோக்கி, என்ன? நீ கண்டாயா? அவனை ஏன் நீ வெட்டித் தரையில் வீழ்த்தவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக் காசுகளையும் ஒரு கச்சையையும் தந்திருப்பேனே! என்று கூறினார்.

அதற்கு அம்மனிதன் யோவாபிடம் கூறியது: என் கையில் ஆயிரம் வெள்ளிக் காசுகளை நீர் நிறுத்துக் கொடுத்தாலும் அரசரின் மகனுக்கு எதிராக நான் கையோங்க மாட்டேன். இளைஞன் அப்சலோமுக்குத் தீங்கிழைக்க வேண்டாம் என்று உமக்கும், அபிசாய்க்கும், இத்தாய்க்கும் அரசர் கட்டளையிட்டதை நாங்கள் கேட்டோமே!

மாறாக நான் என் மனச்சான்றுக்கு எதிராக நடந்திருந்தால், அது அரசருக்குத் தெரியாமல் போகாது நீர் என்னைக் கைவிட்டிருப்பீர்.

உன்னோடு இவ்வாறு நான் நேரத்தை வீணாக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு யோவாபும் கையில் மூன்று ஈட்டிகளை எடுத்துச் சென்று உயிருடன் கருவாலி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் அவற்றைப் பாய்ச்சினார்.

மேலும் யோவாபின் படைக்கலன் தாங்கிய பத்துப்பேர் அப்சலோமைச் சூழ்ந்து வெட்டிக் கொன்றனர்.

யோவாபு எக்காளம் ஊத, வீரர்களை நிறுத்தி அவர்கள் இஸ்ரயேலைப் பின் தொடர்வதை விட்டனர்.

அவர்கள் அப்சலோமைத் தூக்கிச் சென்ற காட்டில் ஒரு பெருங்குழியில் தள்ளி, அவன்மேல் பெரும் கற்குவியலை எழுப்பினர். அச்சமயம் இஸ்ரயேலர் அனைவரும் தம் வீடுகளுக்கு ஓடி விட்டனர்.

அப்சலோம் தனக்கு ஒரு மகன் இல்லாத காரணத்தால் தன் பெயரை நினைவுகூறுவதற்காக, தன் வாழ்நாளிலேயே தனக்கென்று அரசக் கணவாயில் ஒரு தூண்நிறுவியிருந்தான். அதற்கு அவன் தன் பெயரையே வைத்தான். இந்நாள்வரை அது அப்சலோமின் நினைவுச் சின்னமாக இருக்கிறது.

சாதோக்கின் மகனாகிய அகிமாசு, நான் ஓடி அரசரிடம் சென்று ஆண்டவர் தன் எதிரிகளிடமிருந்து விடுவித்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்க அனுமதி தாரும் என்று சொன்னான்.

அதற்கு யோவாபு, இன்று நீ செய்தியை எடுத்துச் செல்ல வேண்டாம்: இளவரசர் இறந்து விட்டதால் இன்று வேண்டாம்: வேறொரு நாள் செய்தியை எடுத்துச் செல்லலாம் என்று சொன்னார்.

ஆனால், யோவாபு ஒரு கூசியனிடம் நீ சென்று கண்டவை அனைத்தையும் அரசரிடம் சொல், என்று சொல்ல, அவனும் யோவாபை வணங்கிட்டு ஓடிச் சென்றான்.

சாதோக்கின் மகன் அகிமாசு மீண்டும் யோவாபிடம், என்ன நேரிடினும் நானும் கூசியனின் பின் ஓட எனக்கு அனுமதி தாரும். என்று கேட்டான். மகனே! இச்செய்தியை சொல்வதனால், உனக்கு எப்பரிசும் கிடைக்கப்போவதில்லை. பின் ஏன் நீ ஓட வேண்டும்? என்று யோவாபு பதில் கூறினார்.

நடப்பது நடக்கட்டும். நான் ஓட விரும்புகிறேன் என்று அவன் மீண்டும் சொல்ல, சரி ஓடு என்று யோவாபு மறுமொழி கூறினார். அகிமாசு குறுக்குப்பாதையில் ஓடி கூசியனை முந்திச் சென்றான்.

அப்போது தாவீது இரு வாயில்களுக்குமிடையே அமர்ந்துக்கொண்டிருந்தார். காவலன் மதிலின் வாயிலுக்கு மேல் ஏறிச் சென்று கண்களை ஏறெடுத்துப் பார்த்தான். ஓர் ஆள் தனியாக ஓடி வருவதைக் கண்டான்.

காவலன் குரலெழுப்பி அரசரிடம் கூற, அரசர், தனியாக வந்தால் அவனிடம் நற்செய்தியுள்ளது என்றார். அந்த ஆள் இன்னும் அருகில் வந்துக்கொண்டிருந்தான்.

காவலன் இன்னொரு ஆளும் ஓடிவருவதைக் கண்டான். கண்டு அவன் குரலெழுப்பி வாயில் காப்பானிடம். இதோ, இன்னொருவன் தனியாக ஓடிவருகிறான் என்று கூற அரசர், இவனும் நற்செய்தி கொண்டு வருகிறான் என்றார்.

முதலில் வருகிறவனின் ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசின் ஓட்டத்தைப்போல் உள்ளது என்று காவலன் உரைக்க, அதற்கு அரசர், இவன் நல்லவன், இவன் நற்செய்தியோடு வருகிறான் என்றான்.

அப்போது அகிமாசு குரலெழுப்பி, நலம் உண்டாகுக! என்று அரசரிடம் சொன்னான். அவன் முகம் குப்புற தரையில் வீழ்ந்து அரசரை வணங்கி, என் தலைவராம் அரசருக்கு எதிராகக் கையோங்கியவர்களை ஒப்படைத்த உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! என்றான்.

இளைஞன் அப்சலோம் நலமா? என்று அரசர் வினவ, அகிமாசு, அரச பணியாளனும் உம் அடியானுமாகிய என்னை யோவாபு அனுப்பும் போது அங்கு பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால் அது என்ன வென்று எனக்கு தெரியாது என்றான்.

அரசர் அவனை நோக்கி, விலகி, அங்கே நில் என்று கூற அவனும் விலகி நின்றான்.

அப்போது கூசியனும் வந்து, என் தலைவராம் அரசே! நற்செய்தி! இன்று ஆண்டவர் உமக்கு எதிராக எழுபவர்களின் காத்தினின்று உம்மை விடுவித்துள்ளார் என்று கூறினான்.

இளைஞன் அப்சலோம் நலமா? என்று அரசர் வினவ, கூசியன், என் தலைவராம் அரசரின் எதிரிகளும் எனக்கு எதிராக தீங்கிழைக்க எழுந்துள்ள அனைவரும், அந்த இளைஞனைப் போல் ஆவார்களாக! என்றான்.

அப்போது அவர் அதிர்ச்சியுற்று, என்மகன் அப்சலோமே! என் மகனே! என் மகன் அப்சலோமே! உனக்கு நான் பதில் நான் இறந்திருக்கலாமே! அப்சலோமே! என் மகனே! என்று கதறிக்கொண்டே அவர் வாயிலின் மாடியறைக்குச் சென்றார்.

அதிகாரம் 19.

அரசர் தம் மகனுக்காக அழுது புலம்புவதாக யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.

அரசர் தம் மகனுக்காக வருந்துகிறார் என்று வீரர்கள் அனைவரும் கேள்விப்பட்டதால் அன்றைய வெற்றி அனைவருக்குமே ஒரு துக்கமாயிற்று.

போர்¢லிருந்து புறமுதுகுகாட்டி வெட்கத்தோடு ஓடுபவர்களைப் போன்று அன்று வீரர்கள் யாருமறியாமல் நுழைந்தார்கள்.

அரசர் தம் முகத்தை முடிக் கொண்டு, என் மகன் அப்சலோமே! அப்சலோமே!, என் மகனே! என் மகனே! என்று குரலெப்பி அழுதுகொண்டிருந்தார்.

அப்போது யோவாபு அரசர் இருந்த வீட்டிற்குள் வந்து அவரை நோக்கி, உம் உயிரையும் உம் புதல்வர் புதல்வியர் உயிரையும், உம் மனைவியர், வைப்பாட்டியரின் உயிரையும் காத்த உம் பணியாளர் அனைவரையும் இன்று தாழ்வடையச் செய்துவிட்டீர்.

உம்மை வெறுப்பவனுக்கு அன்பு செலுத்தி, உமக்கு அன்பு செலுத்துபவர்களை நீ வெறுப்பதால், படைத் தலைவர்களோ பணியாளர்களோ உமக்கு பொருட்டில்லை என்படை எடுத்துக்காட்டிவிட்டீர். இன்று அப்சலோம் உயிரோடு இருந்து, நாங்கள் அனைவருமே மடிந்திருந்தால் உமக்கு அது பிடித்திருக்கும் என்பதையும் நான் இன்று புரிந்து கொண்டேன்.

இப்போது எழுந்திரும். வெளியே சென்று உம் பணியாளர் மகிழ்ச்சியுறுமாறு பேசும். ஏனெனில் ஆண்டவர் மேல் ஆணை! நீர் வெளியே வராவிட்டால் ஒரு மனிதனும் இன்றிரவு வெளியே தங்கமாட்டான். உம் இளமைமுதல் இன்று வரை உமக்கு ஏற்பட்ட அனைத்துத் தீமைகளைவிடவும் இந்தத் தீமை கடுமையாக இருக்கும் என்று கூறினார்.

அரசர் எழுந்து வாயிலில் அமர, இதோ அரசர் வாயிலில் அமர்ந்துள்ளார் என்று அனைவருக்கும் சொல்லப்பட்டது. வீரர்கள் அவர் முன் வந்தனர். இதற்கிடையில் இஸ்ரயேலர் தம் வீடுகளுக்குத் தப்பியேடினார்.

அப்போது இஸ்ரயேலின் குலங்களின் மக்கள் அனைவரிடையே இவ்வாறு வாக்கு வாதம் ஏற்பட்டது: நம் எதிரிகளின் கையினின்று அரசர் நம்மை விடுவித்தார். பெலிஸ்தியரின் கையினின்று நம்மை விடுவித்தவரும் அவரே. அப்சலோமின் பொருட்டு அவர் இப்போது நாட்டினின்று வெளியேறியுள்ளார்.

நம்மை ஆளுமாறு நாம் திருப்பொழிவு செய்த அப்சலோமோ போரில் இறந்துவிட்டான். இனி நீங்கள் அரசரைத் திருப்பியழைத்து வராமல் வாளாயிருப்பதேன்?

அரசர் தாவீது

நீங்கள் என் சகோதரர்கள்: நீங்கள் என் எலும்பும் சதையும் ஆனவர்கள்: அரசை பின் தங்குவதில் நீங்கள் ஏன் பின் தங்க வேண்டும்?

அமாசாவிடம் இவ்வாறு கூறுங்கள்: நீ என் எலும்பும் சதையும் அல்லவா? யோவாபுக்குப் பதிலாக என்முன்பாக எந்நாளும் படைத்தலைவனாய் இராவிட்டால், கடவுள் என்னைத் தக்கவாறு, அதற்கு மேலும் தண்டிக்கட்டும்.

யூதா வீரர்கள் அனைவரின் உள்ளங்களையும் அவன் இவ்வாறு இணங்கச் செய்து அவர்களை ஒருமனப்படுத்தினான். அவர்கள் அரசரிடம் ஆளனுப்பி, நீரும் உம் பணியாளர் அனைவரும் திரும்பி வாருங்கள் என்று கூறினார்.

அரசர் திரும்பி யோர்த்தான்வரை வந்தார் யூதாவினர் கில்கால்வரை சென்று அரசை சந்தித்து அவர் யோர்த்தானைக் கடக்கச் செய்தனர்.

பகூரிமைச் சார்ந்த பென்யமினியனான கேராவின் மகன் சிமயி யூதாவினரோடு அரசர் தாவீதை சந்திக்க விரைந்தான்.

அவனோடு பென்யமினியர் ஆயிரம்பேர் இருந்தனர். சவுல் பணியாளன் சீபா தன் பதினைந்து புதல்வரோடும் இருபது பணியாளரோடும் அங்கே இருந்தான். அவர்கள் அரசர் வருமுன் யோர்த்தானுக்கு விரைந்தனர்.

அரச குடும்பத்தினரைக் கொண்டு வரவும், அரசரின் ஏவல்களைச் செய்யவும் அவர்கள் துறைவழி ஆற்றைக் கடந்தனர். அரசர் யோர்தானைக் கடக்கவிருக்கையில் கேராவின் மகன் சிமயி அவர்முன் விழுந்தான்.

தலைவரே! என் குற்றத்தைப் பொருட்படுத்தாதீர்! என் தலைவராம் அரசர் எருசலேமை விட்டுச் சென்ற போது உம் பணியாளன் செய்த தீமையை நினைவுகூராதேயும்! அரசர் அதை மனத்தில் கொள்ளாமல் இருப்பாராக!

தான் பாவம் செய்துள்ளதைத் தங்கள் பணியாளன் அறிவான். இதோ இன்று யோசேப்பின் வீட்டார் அனைவரிலும் முதல் ஆளாக, என் தலைவராம் அரசரைச் சந்திக்க நான் வந்திருக்கிறேன் என்று அவன் அரசரிடம் கூறினான்.

அப்போது செரூயாவின் மகன் அபிசாய், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை பழித்ததற்காக சிமயி கொல்லப்பட வேண்டாமா? என்று கேட்டான்.

அதற்கு தாவீது செரூயாவின் புதல்வர்களே! இது பற்றி உங்களுக்கு என்ன? இன்று நீங்கள் எனக்கு எதிரிகள் போல் நடந்து கொள்வது ஏன்? இன்று இஸ்ரயேலில் யாராவது கொல்லப்பட வேண்டுமா? இன்று நான் இஸ்ரயேலின் அரசர் என்பது எனக்குத் தெரியாதா? என்று கூறினார்.

பிறகு அரசர் சிமியயை நோக்கி, நீ சாக மாட்டாய் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்.

சவுலின் பேரன் மெபிபொசேத்து அரசரைச் சந்திக்கச் சென்றான். அரசர் புறப்பட்டு சென்ற நாளிலிருந்து அவர் நலத்துடன் திரும்பிய நாள்வரை அவள் தன் பாதங்களை கழுவவில்லை. தாடியைத் திருத்தவில்லை: தன் ஆடைகளை வெளுக்கவுமில்லை.

அவன் எருசலோமில் அரசரை சந்திக்க வந்தபோது, அரசர் அவரை நோக்கி, மெபிபொசேத்து! என்னோடு நீ ஏன் வரவில்லை? என்று வினாவினார்.

அதற்கு என் தலைவராம் அரசரே! என் பணியாளன் என்னை ஏமாற்றி விட்டான். உம் அடியான் கால் ஊனமுற்றிருப்பதால், நானே என் கழுதைக்குச் சேணமிட்டு அதன் மீது சவாரி செய்து அரசரோடு செல்வேன் என்று உம் அடியானாகிய நான் கூறினேன்.

அவனோ உம் அடியனைப் பற்றி என் தலைவராம் அரசரிடம் அவதூறு பேசினான். ஆனால் என் தலைவராம் அரசர் கடவுளின் தூதரைப் போன்றவர். உமக்குச் சரியெனப்பட்டதையே செய்யும்.

தலைவராம் அரசரின் பார்வையில் என் தந்தையின் குடும்பத்தார் அனைவரும் சாவதைத் தவிர வேறு எதற்கும் உரியவர் அல்லர்! இருப்பினும் உம் அடியனை உம்மோடு உணவருந்துபவர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டீர்! இனி அரசரிடம் எனக்கு மன்றாட என்ன உரிமை இருக்கிறது? என்று சொன்னான்.

அதற்கு அரசர், உன்னைப்பற்றி இன்னும் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப்பகிர்ந்து கொள்ளுமாறு நான் சொல்லிவிட்டேன்! என்று அவனிடம் சொன்னார்.

மெபிபொசேத்து மறுமொழியாக, இல்லை அவனே அனைத்தையும் எடுத்துக் கொள்ளட்டும். என் தலைவராம் அரசர் நலமே தம் வீடு திரும்பியதே எனக்கு போதும்! என்று அரசரிடம் கூறினான்.

கிலயாதைச் சார்ந்த பர்சில்லாய் அவரைஅங்கிருந்து வழியனுப்புவதற்காக ரோகலிமிலிருந்து அரசரோடு யோர்த்தானைக் கடந்து வந்தார்.

பர்சில்லாய் வயது முதிர்ந்தவர்: எண்பது வயதினர்: பெரும் பணக்காரர். அரசர் மகனயிமில் தங்கியிருந்த போது அவரின் தேவைகளைக் கொண்டவர்.

அரசர் பர்சில்லாயிடம் இப்பொழுது ஆற்றைக் கடந்து என்னோடு எருசலேமுக்கு வந்து தங்கியிருக்கும். நான் உம் தேவைகளை கவனித்துக் கொள்வேன் என்றான்.

அப்பொழுது பர்சில்லாய் மறுமொழியாகக் கூறியது: அரசரோடு வந்திருப்பதற்கேற்றவாறு நான் இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருக்கப்போகிறேன்?

இப்பொழுதே எனக்கு வயது எண்பது ஆகிவிட்டது: நல்லதையும் கெட்டதையும் என்னால் வேறுபடுத்திச் சொல்ல முடியுமா? உம் அடியானால் உண்பதையும் குடிப்பதையும் அனுபவிக்க முடியுமா? என் தலைவராம் அரசருக்கு உம் அடியான் இன்னும் ஏன் சுமையாக இருக்க வேண்டும்?

உம் பணியாளன் அரசரோடு சற்றுத் தொலைவே யோர்தான் மீது கடந்து வருவேன். அதற்காக அரசர் எனக்கு இத்தகைய கைம்மாறு செய்வானேன்?

உம் பணியாளனைப் போகவிடு. நான் என் நகரில் என் தாய் தந்தையரின் கல்லறைக்கு அருகே இறப்பேன். இதோ! உம் பணியாளன் கிம்காம்! என் தலைவராம் அரசரோடு அவன் செல்லட்டும். உம் விருப்பம்போல் அவனுக்குச் செய்யும்.

அப்பொழுது அரசர், கிம்காம் என்னோடு கடந்து வரட்டும். உம் விருப்பம்போல் நான் அவனுக்குச் செய்வேன். நீர் என்னிடமிருந்து எதை விருப்பினாலும் நான் உமக்குச் செய்வேன் என்று கூறினார்.

பிறகு, மக்கள் அனைவரும யோர்தானைக் கடந்தனர். அரசரும் யோத்தானைக் கடந்தார். பர்சில்லாயை அரசர் முத்தமிட்டு வாழ்த்தினார். அவரும் தம் இடத்திற்கு திரும்பினார்.

அரசர் கில்காலுக்குக் கடந்து சென்றார். கிம்காமும் அவரோடு கடந்து சென்றான். யூதாவினர் அனைவரும் இஸ்ரயேலில் பாதிப்பேரும் அரசரைக் கொண்டு வந்துவிட்டனர்.

உடனே இஸ்ரயேல் அனைவரும் அரசரிடம் வந்து, எங்கள் சகோதர்களான யூதாவினர் அரசரையும் அவர் வீட்டாரையும் அவர் ஆள்கள் அனைவரையும் திருட்டுத்தனமாக் கொண்டு வந்து யோர்தானைக் கடக்கச் செய்தது ஏன்? என்று கேட்டார்கள்.

யூதாவினர் அனைவரும் இஸ்ரயேலுக்கு மறுமொழியாக, அரசர் எங்களுக்கு நெருங்கியவர். இக்காரியத்தைப்பற்றி நீங்கள் சினமுறுவது ஏன்? நாங்கள் அரசரிடம் ஏதாவது உண்டோமா? அவரிடமிருந்து நாங்கள் ஏதாவது பெற்றுக்கொண்டோமா? என்றார்கள்.

இஸ்ரயேலர் யூதாவினரை நோக்கி, எங்களுக்கு அரசரிடம் பத்து பங்குகள் உண்டு. பின் ஏன் எங்களை அற்பமாக நடத்துகிறீர்? எங்கள் அரசரை திருப்பியழைத்து வர வேண்டுமென்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா? என்று பதில் சொன்னார்கள். இஸ்ரயேலின் பேச்சைவிட யூதாவினர் பேச்சு கடுமையாக இருந்தது.

அதிகாரம் 20.

அப்போது பென்யமின் குலத்தைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்ற இழி மகன் அங்கு இருந்தான். அவன் எக்காளம் ஊதி, எங்களுக்பு தாவீதிடம் பங்கு இல்லை: ஈசாயின் மகனிடம் மரபுரிமையும் இல்லை: இஸ்ரயேலரே! ஒவ்வொருவரும் உங்கள் கூடாரங்களுக்கச் செல்லுங்கள் என்றான்.

இஸ்ரயேலர் அனைவரும் தாவீதைப் பின்பற்றுவதை விட்டுவிட்டுப் பிக்ரியின் மகன் சேபாவின் பின் சென்றனர்.ஆனால் யூதாவினரோ யோர்த்தான் முதல் எருசலேம் வரை, தங்கள் அரசரைச் சார்ந்திருந்தனர்.

தாவீது எருசலேமிலுள்ள தம் வீட்டுக்கு வந்தார். தம் வீட்டை பாதுக்காக்க தாம் விட்டு வந்த பத்து வைப்பாட்டியரையும் அழைத்து, பாதுகாப்புள்ள ஒரு வீட்டில் அவரை வைத்துத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தார். ஆனால் அவர்களோடு உறவு கொள்ளவில்லை. அவர்கள் இறக்கும் வரை காவலில் வைக்கப்பட்டு கைம் பெண்களைப் போல் வாழ்ந்தனர்.

பிறகு அரசர் அமாசாவை நோக்கி, மூன்று நாள்களுக்குள் யூதாவினரையும் என்னிடம் வரச்சொல் அப்போது நீயும் இங்கே இரு என்றார்.

அமாசா யூதா மக்களை அழைத்துச் சென்றான். ஆனால் தனக்கு குறித்த காலத்தை மீறிக் காலம் தாழ்த்தினான்.

தாவீது அபிசாயை நோக்கி, பிக்ரியின் மகன் சேபா அப்சலோமைவிட மிகுதியாக நமக்குத் தீங்கிழைப்பான். உன் தலைவரின் பணியாளரை அழைத்துக் கொண்டு, அவனைத் துரத்திச் செல்லுங்கள். இல்லையேல் அரண்சூழ் நகர்களைக் கண்டு நம் கண்ணிலிருந்து தப்பிவிடுவான் என்று சொன்னார்.

யோவாபின் ஆள்களும், கெரேத்தியர், பெலேத்தியரும், வலிமைமிகு வீரர்கள் அனைவரும் தலைமையில் சென்றனர். அவர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டுப் பிக்ரியின் மகன் சேபாவைப் பின்தொடர்ந்தனர்.

அவர்கள் கிபயோனிலுள்ள பெருங்கல் அருகே வந்தனர். யோவாபு தாம் உடுத்தியிருந்த போருடைமீது ஒரு கச்சைக்கட்டியிருந்தார். அதிலே ஒரு உறையோடு கூடிய ஒரு குறிவாள் செருகப்பட்டிருந்தது. அவர் முன்னால் சென்றபோது அது கீழே வீழ்ந்தது.

யோவாபு அமாசாவை நோக்கி, சகோதரனே நலமா? என்று அவனை கேட்டு அவனை முத்தமிடுவதற்காக வலக்கையால் அவனது தாடியைப் பற்றினார்.

யோவாபின் இடக் கையிலிருந்து குறுவாளை பற்றி அமாசா எச்சரிக்கையாக இல்லை. யோவாபு அதை அவன் வயிற்றில் குத்த, அவனது குடல் தரையில் சரிந்தது. மீண்டும் குத்துவதற்கு அவசியமில்லாமல் அமாசா இறந்தான். அதன் பின் யோவாபும் அவருடைய சகோதரன் அபிசாயும் பிக்ரியின் மகன் சேபாவைப் பின் தொடர்ந்தனர்.

யோவாபின் ஆள்களுள் ஒருவன் அவர் அருகே நின்று கொண்டு, யோவாபை விரும்புகிறவர்களும், தாவீதின் பக்கமுள்ளவர்களும், யோவாபின் பின் செல்லட்டும் என்றான்.

சாலை நடுவே அமாசா தன் இரத்தத்தில் மூழ்கிக் கிடக்கவே, வீரர்கள் அனைவரும் அங்கேயே நின்றுவிட்டதை அவன் கண்டான். அமாசாயின் அருகே வந்தார்கள் அனைவரும் நின்றுவிட்டதைக் கண்டு, அவனைச் சாலையிலிருந்து வயலுக்கு இழுத்து ஒரு துணியால் மூடினான்.

அமாசா சாலையிலிருந்து விலக்கப்பட்டதும் அனைவரும் யோவாபின் பின் சென்று, பிக்ரியின் மகன் சேபாவைப் பின் தொடர்ந்தனர்.

சேபா அனைத்து இஸ்ரயேல் குலங்களின் நிலப்பகுதி வழியாக பெத்மாக்காவின் ஆபேல் வரை சென்றான். பெரியோர் அனைவரும் ஒன்று திரண்டு அவன் பின் சென்றனர்.

யோவாபும் அவர் படையினரும் பெத்மாக்காவின் ஆபேலில் முற்றுக்கையிட்டு சேபாவை வளைத்தனர். நகருக்கு எதிராக முற்றுக் கோட்டை எழுப்பினர். அது மதிலுக்கு அருகில் இருந்தது. அதனின்று யோவாபோடு இருந்த வீரர்கள் அனைவரும் அம்மதிலை தகர்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அறிவுக்கூர்மையுள்ள ஒரு பெண் நகரிலிருந்து குரல் கொடுத்து, கேளுங்கள்: கேளுங்கள். தயைகூர்ந்து யோவாபை இங்கே வரச் சொல்லுங்கள். நான் அவரிடம் பேச வேண்டும் என்றான்.

அவரும் அவளருகே வந்தார். அப்பெண் அவரை நோக்கி, யோவாபு நீர் தாமா? என்றாள். நானேத்தான் என்றார் யோவாபு. உம் அடியவளின் வார்த்தைகளைக் கேளும் என்றான் அப்பெண். கேட்கிறேன் என்றார். யோவாபு.

அவள் தொடர்ந்து கூறியது: முற்காலத்தில் அடிக்கடி கூறுவார்கள் ஆபேலுக்குச் சென்று ஆலோசனை கேட்பார்களாக! அதன் படியே பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

இஸ்ரயேலில் நாங்கள் அமைதியும் நாணயமும் உடையவர்கள். இஸ்ரயேலின் தாயென விளங்கும் இந்நகரை நீர் அழிக்கத் தேடுவதேன்? ஆண்டவரின் உரிமைச் சொத்தை நீர் விழுங்குவானேன்? என்று அப்பெண் கேட்டாள்.

அதற்கு யோவாபு இல்லை, விழுங்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

காரியம் அதுவல்ல. எப்ராயிம் மலைப்பகுதியைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்பவன் அரசர் தாவீதுக்கு எதிராகக் கையோங்கியுள்ளான். அவனை மட்டும் தாருங்கள். நான் நகரிலிருந்து விலகிச் செல்வேன் என்று பதில் கூறினார். அப்பொழுது அப்பெண் இதோ! அவன் தலை மதிலுக்கு அப்பால் உம்மிடம் தூக்கி எறியப்படும் என்றாள்.

மக்கள் அனைவரும் அவள் அணுகி அறிவார்த்த ஆலோசனை கூறினாள். அவர்களும் பிக்ரியின் மகன் சேபாவின் தலையை வெட்டி யோவாபிடம் எறிந்தார்கள். யோவாபு எக்காளம் ஊத. அவர்கள் நகரை விட்டு நீங்கித் தம் வீடுகளுக்குச் சென்றனர். யோவாபு எருசலேமுக்குத் திரும்பி அரசரிடம் சென்றார்.

யோவாபு அனைத்து இஸ்ரயேலின் படைத்தலைவராகவும், பெனாயாவின் மகன் யோயாதா கெரேத்தியர், பெலேத்தியரின் தலைவனாகவும் இருந்தனர்.

அதோராம் கொத்தடிமைகளுக்குப் பொறுப்பாளனாகவும், அகிலுதின் மகன் யோசபாத்து பதிலாளனாகவும் இருக்க,

சேவா செயலராகவும், சாதோக்கும் அபியத்தாரும் குருக்களாகவும் பணியாற்றினர்.

யாயிரைச் சார்ந்த ஈசாவும் தாவீதின் குருக்கலில் ஒருவனாக இருந்தான்.

அதிகாரம் 21.

தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரின் திருவுள்ளத்தை நாடினார். கிபாயோனியரைச் சவுல் கொலை செய்ததன் காரணத்திற்காக அவன் மீதும் அவன் வீட்டார் மீதும் இரத்தப்பழி உள்ளது என்றார் ஆண்டவர்.

அரசர் கிபயோனியரை அழைத்துப் பேசினார். கிபயோனியர் இஸ்ரயேலரை சார்ந்தவர் அல்ல: அவர்கள் எமோரியருள் எஞ்சியவர். இஸ்ரயேலர் அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தும், இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் தாம் கொண்டிருந்த பேரார்வத்தின் காரணமாகச் சவுல் அவரை அழிக்க முயன்றார்.

தாவீது கிபயோனியரிடம் உங்களுக்காக நான் செய்ய வேண்டியது என்ன? நீங்கள் ஆண்டவரின் உரிமைச் சொத்துக்கு ஆசிவழங்குமாறு நான் என்ன கழுவாய் செய்ய வேண்டும்? என்று கேட்டார்.

கிபயோனிர் தாவீதிடம், சவுலிடமிருந்தோ அவன் வீட்டாரிடமிருந்தோ நாங்கள் பொன்னையோ வெள்ளியையோ எதிர்பாக்கவில்லை: இஸ்ரயேலருள் ஒருவனைக் கொல்ல வேண்டும் என்று நாங்கள் விருப்பவில்லை என்று கூறினார். தாவீது, நீங்கள் வீம்புவதை நான் செய்வேன் என்றார்.

கிபயோனியர் அரசரிடம், நாங்கள் இஸ்ரயேல் எல்லையில் எங்குமே ஒழிந்து போகச் சதிசெய்தவன், எங்களை அழித்தவன் ஒருவன் உண்டு.

அவன் புதல்வருள் ஏழு பேர் எங்களிடம் ஒப்புவிக்கப்பட்டும் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுலின் நகரான கிபயோனில் அவர்களை ஆண்டவருக்காகக் கழுவிலேற்றுவோம் என்று கூறினர். அரசரும் அவர்களை ஒப்புவிக்கிறேன் என்றார்.

ஆனால் சவுலின் மகன் யோனத்தானும் ஆண்டவர் முன்னிலையில் செய்துகொண்ட வாக்குறுதியின் பொருட்டு சவுலின் மகன் யோனத்தானுக்குப் பிறந்த பெரிபொசேத்தை அரசர் தப்பவிட்டார்.

அய்யாவின் மகள் இரிசபா சவுலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்களான அர்மோனி, மெபிபொசேத்து ஆகிய இருவரையும் சவுலின் மகள் மேராபு மெகொலாத்தியன் பர்சில்லாயின் மகன் அத்ரியேலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள் ஜவரையும் பிடித்து,

கிபயோனியர் கையில் அரசர் ஒப்படைத்தார். இவர்களை ஆண்டவர் முன்னிலையில் மலையில் கழுவேற்றினர். அந்த ஏழுபேரும் ஒன்றாக மடிந்தார்கள். அவர்கள் வாற்கோதுமை அறுவடை தொடங்கிய முதல் நாள்களிலே கொலையுண்டார்கள்.

அப்போழுது அய்யாவின் மகன் ரிஸ்பா சாக்குத் துணியை எடுத்துக் கொண்டுபோய் அதைப் பாறைமீது தனக்காக விரித்துக் கொண்டு, அறுவடை தொடங்கிய நாள் முதல் வானத்தினின்று அவர்கள் மீது மழை பொழியும்மட்டும் இருந்தாள்: பகலில் வானத்துப் பறவைகளையோ, இரவில் காட்டு விலங்குகளையோ அவர்களைத் தொட அனுமதிக்கவில்லை.

சவுலின் வைப்பாட்டியான அய்யாவின் மகள் இரிசபா செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.

எனவே, தாவீது சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் யாபேசு கிவயாதின் மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்தார். பெலிஸ்தியர் அவர்களை கில்போவாவில் வெட்டி வீழ்த்தி, பெத்சான் நகர முற்றத்தில் கழுவிலேற்றினர். அந்த முற்றத்திலிருந்துதான் யாபேசு கியாதின் ஆள்கள் எலும்புகளை திருடிச் சென்றிருந்தனர்.

சவுலின் எலும்புகளையும் யோனத்தானின் எலுக்புகளையும் அங்கிருந்து கழுவிலேற்றப்பட்ட இவர்களின் எலும்புகளையும் ஒன்று சேர்த்தனர்.

சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் பென்யமின் நிலப்பகுதியான செலாவில் அவர்தம் தந்தை கீசின் கல்லறையில் அடக்கம் செய்தனர். அரசர் கட்டளையிட்டவாறே அனைத்தையும் செய்தனர். அதன் பின் நாட்டுக்காகச் செய்யப்பபட்ட வேண்டுதலைக் கடவுள் கேட்டார்.

பெலிஸ்தியர் இஸ்ரயேலரோடு மீண்டும் போரிட வந்தனர். தாவீதும் அவரோடு அவருடைய பணியாளரும் இறங்கிச் சென்று பெலிஸ்தியரோடு போரிட்டனர். தாவீது களைப்புற்றிருந்தார்.

அப்போது மூன்றரை கிலோகிராம் எடையுள்ள ஈட்டியை கையில் ஏந்தி, புதிய வாளை இடையில் கட்டியிருந்த, இஸ்பிபெனோபு என்னும் அரக்கர் இனத்தவன் ஒருவன், தாவீதைத் தாக்கவிருந்தான்.

செரூயாவின் மகன் அபிசாய் அவருடைய உதவிக்கு வந்து அப்பெலிஸ்தியனைக் வெட்டிக் கொன்றான். எனவே தாவீதின் ஆள்கள், இஸ்ரயேலின் விளக்கு அணைந்து போகாதவண்ணம் நீர் இனி எங்களோடு போருக்கு வரக்கூடாது என்று அவரிடம் ஆணையிட்டுச் சொன்னார்கள்.

இது நடந்தபின் மீண்டும் பெலிஸ்தியரோடு கோபி என்னுமிடத்தில் பேர் மூண்டது. அரக்கர் இனத்தவன் ஒருவரான சாபை ஊசாத்தியனான சிபெக்காய் கொன்றான்.

மீண்டும் கோபில் பெலிஸ்தியரோடு போர் நடந்தது. பெத்லகேமைச் சார்ந்த யாகரே ஓர்கிமின் மகன் எல்கனான் கித்தியனான ஆகோலியாத்தைக் கொன்றான். அவனது ஈட்டியின் கோல் நெசவாளரின் படைமரம் போன்றிருந்தது.

மீண்டும் காத்தில் போர் மூண்டது. கைகளிலும் கால்களிலும் ஆறு விரள்களுடன், இருபத்து நான்கு விரல்களைக் கொண்ட நெட்டையன் ஒருவன் இருந்தான்.

அவன் இஸ்ரயேலை பழித்தவன். தாவீதின் சகோதரர் சிமயியின் மகன் யோனத்தான் அவனைக் கொன்றான்.

தாவீதின் கையாலும் அவனது பணியாளரின் கையாலும் வீழ்த்தப்பட்ட இந்த நால்வரும் காத்து நாட்டில் அரக்கர் வழிமரபினரே.

அதிகாரம் 22.

ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர்கள் ஆண்டவருக்கு பண்ணிசைத்துப் பாடியது?

ஆண்டவர் என் காப்பாறை: என் கோட்டை: என் மீட்பர்:

கடவுள்: நான் புகலிடம் தேடும் மலை அவரே: என் கேடயம்: எனக்கு மீட்பளிக்கும் வல்லமை: என் அரண்: என் தஞ்சம்: என் மீட்பர்: கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே.

போற்றர்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன். என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.

ஏனெனில், சாவின் அலைகள் என்னை சூழ்ந்துக் கொண்டன: அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.

பாதளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின: சாவின் கண்ணிகள் என்னை சிக்க வைத்தன.

நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்: என் கடவுளை நோக்கி கதறினேன். தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்: என் கதறல் அவர் செவிக்கு எட்டியது.

அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது:

அவரது நாசியினின்று புகை கிளம்புற்று: அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது: அவரிடமிருந்து நெருப்பு கனல் வெளிப்பட்டது.

வானை வாழ்த்தி அவர் கீழிறங்கினார்: கார் முகில் அவர் காலடியில் இருந்தது.

கெரபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்: காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.

காரிருளை அவர் மூடுதிரை ஆக்கிக் கொண்டார்: நீர் கொண்ட முகிலைக் கூடாரமாக்கிக் கொண்டார்.

அவர் தம் திருமுன்னின் பேரொளியினின்று நெருப்புக் கனல் தெரிந்தது.

ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்: உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார்.

தம் அம்புகளை எய்து அவர் அவர்களை சிதறடித்தார்: மின்னல்களால் அவர்களை கலங்கடித்தார்.

ஆண்டவரின் கடிந்துரையாலும் அவரது மூச்சுக் காற்றின் வலிமையாலும் கடவுளது அடிப்பரப்பு தென்பட்டது: நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.

உயரத்தினின்று அவர் என்னை எட்டிப்பிடித்துக்கொண்டார்: வெள்ளைப் பெருக்கினின்று அவர் என்னை காப்பாற்றினார்.

வலிமைமிகு எதிரிகளிடமிருந்து என்னை விடுவித்தார். என்னை விட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னை பாதுகாத்தார்.

எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்: ஆண்வரோ எனக்கு ஊண்று கோலாய் இருந்தார்.

நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்: நான் அவர் மனதிற்கு உகந்தவனாய் இருந்ததால் அவர் என்னைவிடுவித்தார்.

ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தா+ என் மாசற்ற செயலுக்கு ஏற்பக் கைம்மாறு செய்தார்.

ஏனெனில் நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்: பொல்லாங்கு செய்து என் கடவுளை விட்டு அகலவில்லை.

அவர் தம் நீதி நெறிமுறைகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்: அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை.

அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்: தீங்கு செய்யா வண்ணம் என்னைக் காத்துக்கொண்டேன்.

ஆண்டவர் என் நேர்மைக்பு உரிய பயனை அளித்தார்: அவர்தம் பார்வையில் குற்றமற்றவனாய் இருந்தேன்.

மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும் மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குகின்றீர்!

தூயோர்க்கு தூயோராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர்.

எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்: செருக்குற்றோரை ஏளனத்துடன் நீர் பார்க்கின்றீர்.

ஆண்டவரே! நீரே என் ஒளி விளக்கு! ஆண்டவர் என் இருளை ஒளிமயமாக்குகின்றார்.

உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்: என் கடவுளின் துணையால் எம்மதிலையும் நான் தாண்டுவேன்.

இந்த இறைவனின் வழி நிறைவானது: ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது: அவரிடம் அடைக்கலம்புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார்.

ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு இறைவன் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது?

இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு கோட்டையமாய் உள்ளார்: என் வழியை பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே.

அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்: உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார்.

போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்: எனவே வெண்கல வில்லையும் என் புயங்கள் வளைக்கும்!

பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்னீர்: உமது துணையால் என்னை நீர் பெருமைப்படுத்தினீர்.

நான் நடக்கும் வழியை நீர் அகலமாக்கினீர்: என் கால்களை தடுமாறவில்லை.

எதிரிகளைத் துரத்திச் சென்று அழித்தேன்: அவர்களை அழித்தொழிக்கும் வகையில் நான் திரும்பவில்லை.

நான்அவர்களை கொன்று அழித்தேன்: அவர்கள் எழுந்திருக்கவில்லை: அவர்கள் என் காலடியில் வீழ்ந்துகிடந்தார்கள்.

போரிடும் ஆற்றலை எனக்கு அரைக் கச்சையாக அளித்தீர்: என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிப்பணியச் செய்தீர்.

எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்: என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன்.

உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்: ஆனால் அவர்களுக்கு உதவ யாருமில்லை: அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்: ஆனால் அவர்கள்களுகு ஆண்டவர் பதிலளிக்கவில்லை.

எனவே நான் அவர்கழள மண்ணின் பழுதியென நசுக்கினேன்: அவர்களைத் தெரு சேறென மிதித்துத் தெறிக்கச் செய்தேன்.

மக்களின் கலத்தினின்று என்னை விடுவித்தீர்: பிற இனங்களுக்கு என்னைத் தலைவாக்கினீர்: முன்பின் அறியாத மக்கள் எனக்கும் பணிவிடை செய்தனர்.

வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக்குறிகி வந்தனர்: அவர்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குக் கீழ்படிந்தனர்.

வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்: தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.

ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்: என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பின் கற்பாறையாம் கடவுள் மாட்சியுறுவாராக!

எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்: மக்களினங்களைக் கீழ்ப்படுத்தியவரும் அவரே!

பகைவரிடமிருந்து என்னை அழைத்து வந்தவரும் அவரே! என் எதிரிகளின் மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்

ஆகவே ஆண்டவரே! பிற இனத்தவரிடையே என்னைப் போற்றுவேன்: உம் பெயருக்குப் புகழ் மாலை சாற்றுவேன்.

தாம் ஏற்படுத்திய அரசருக்கு வெற்றியை அவளிப்பவர் அவரே! தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கு அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே!

அதிகாரம் 23.

மேன்மை மிக்கவரும் யாக்கோபின் கடவுளிடமிருந்து திருப்பொழிவு பெற்றவரும் இஸ்ரயேலின் இனிமைமிகு பாடகரும் ஈசாயின் மைந்தருமான தாவீதின் இறுதிமொழிகளாவன:

ஆண்டவரின் ஆவி என் மூலம் பேசினார்: அவரது வார்த்தை என் நாவில் ஒலித்தது.

இஸ்ரயேலின் கடவுள் என்னோடு பேசினார்: இஸ்ரயேலின் பாறை எனக்கு கூறினார்.

விடியற்கால ஒளியென திகழ்கிறான்: முகிலற்ற காலை கதிரவனென ஒளிர்கிறான்: மண்ணின்று புல் முளைக்கச் செய்யும் மழையென விளங்குகிறான்.

குடும்பம் இறைவனோடு இணைந்துள்ளது அன்றோ? அனைத்திலும், திட்டமிடப்பட்டு உறுதியாக்கப்பட்டு, என்றும் நிலைக்கும் உடன்படிக்கை அவர் என்னோடு செய்து கொண்டார். என் அனைத்து மீட்பும் விருப்பும் அவரால் உயர்வு பெறாதோ?

இழிமக்கள் அனைவரும் இரும்பும் தடியும் ஈட்டிக் கோலும் கொண்டு, நெருப்பால் முற்றிலும் சுட்டெரிக்கப்படுவனவாகவும் கையால் தொடத்தகாதவனவுமான காட்டு முட்களைப் போன்றவர்.

பாசெபத்து மூவருள் முதல்வனாக இருந்த அவன், எஸ்னீயன் அதினோ என்று அழைக்கப்பட்டான். ஏனெனில் அவன் ஒரே சமயத்தில் எண்ணூறு பேரைத் தக்கிக் கொன்றான்.

அவனுக்கு அடுத்தவன் அகோகிக்குப் பிறந்த தோதோவின் மகன் எலியாசர், போரிடுமாறு ஒன்றுதிரண்டு வந்த பெலிஸ்தியரை எதிர்த்துச் சென்ற போது தாவீதுடன் இருந்த வலிமைமிகு வீரர் மூவருள் ஒருவன் அவன். முதலில் இஸ்ரயேலர் பின் வாங்கினர்.

அப்பொழுது அவன் தனித்து நின்று, கை சோர்வுற்று வாளோடு ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு பெலிஸ்தியரைத் தாக்கினான்.

ஆண்டவர் பெரும் வெற்றியைத் தந்தார். அவன் வீரர்கள் அவனை கொள்ளையடிப்பதற்காக அவனிடம் திரும்பினர்.

அடுத்தவன் ஆராரியன் ஆகேயின் மகன் சம்பா. பயறு நிறைந்த வயல் ஒன்றில் பெலிஸ்தியர் கூட்டமாகத் திரள, மக்கள் புறமுதுகுகாட்டி ஓடினார்கள்.

அபபோது அவன் வயல் நடுவே நின்று அதைப் பாதுகாத்தான்: பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினான். ஆண்டவர் மாபெரும் வெற்றியை தந்தார்.

மூப்பது படைத்தலைவருள் மூவர் அறுவடைக் காலத்தில் தாவீது தங்கியிருந்த அதுல்லாம் குகைக்கு வந்தனர். அரக்கர்களின் கணவாயில் பெலிஸ்தியர் கூட்டம் பாளையம் இறங்கி இருந்தது.

அப்போது தாவீது பாதுகாப்பான கோட்டைக்குள் இருந்தார். பெலிஸ்தியர் பெத்லகேமில் இருந்தார்.

தாவீது, ஏக்கத்துடன், பெத்லகேம் வாயிலருகே உள்ள கிணற்றிலிருந்து எனக்குக் குடிக்க தருபவன் யார்? என்று கேட்டார்.

அம்மூன்று வலிமைமிகு வீரரும் பெலிஸ்தியரின் அணிகளுக்குள் புகுந்து சென்று பெத்லகேம் வாயிலருகே உள்ள கிணற்றிலிருந்து நீர் மொண்டு, அதைத் தாவீதிடம் எடுத்து வந்தனர். தாவீதோ அதை குடிக்க விரும்பாமல் ஆண்டவருக்காக வெளியே ஊற்றினார்.

தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்றவர்களின் இரத்தமன்றோ இது! ஆண்டவரே, இதை நான் எவ்வாறு குடிக்க முடியும்? என்று சொல்லி, அவர் அதை குடிக்க விரும்பவில்லை. இம் மூன்று வீரரும் ஆற்றிய செயல்கள் இவையே.

யோவாபின் சகோதரன், செரூயாவின் மகன் அபிசாய் முப்பதின்மருக்குத் தலைவனாக இருந்தான். அவன் முந்நூறுபேருக்கு எதிராக தன் ஈட்டியை சுழற்றி அவர்களை கொன்றான். மூவருக்கு இணையாக அவன் பெயர் பெற்றவன்.

அம்முப்பதின்மரில் அவனல்லவோ அதிக புகழ்பெற்றவன்? அவர்களின் தலைவனும் அவனே. ஆயினும் முன்னைய மூவருக்கும் அவன் சமமாகஇல்லை.

கப்சவேலைச் சார்ந்த யோயாதாவின் மகன் பெனாயா பல வீரச் செயல்கள் புரிந்தவன். சிங்கம் போன்ற இரு மோவாபிய வீரரைக் கொன்றவன். பனி பெய்து கொண்டிருந்த ஒருநாள் குகைக்குள் அவன் சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான்.

உருவில் பெரிய ஒரு எகிப்தியனை அவன் கொன்று போட்டான். ஈட்டியைக் கையில் கொண்டிருந்த அந்த எகிப்தியனிடம் இவன் ஒரு கோலோடு சென்று, ஈட்டியை அவன் கையிலிருந்து பிடுங்கினான். பின் அவன் ஈட்டியைக் கொண்டே அவனைக் கொன்றான்.

யோயாதாவின் மகன் பெனாயா இவற்றைச் செய்து, முதல் மூவருக்கு இணையாக புகழ் பெற்று திகழ்ந்தான்.

முப்பது பேரில் அவனும் புகழ் பெற்றிருந்தான். ஆனால் முதல் மூவருக்கு சமமாக இல்லை. ஆயினும் அவனைத் தாவீது தன் மெய்க்காப்பாளனாக ஏற்படுத்தினார்.

யோவாபின் சகோதரன் அசாவேல் முப்பது பேரில் ஒருவன். அவர்கள் யாரெனில், பெத்லகேமைச் சார்ந்த தோதோவின் மகன் எல்கானான்.

அரோத்தியன், சம்மா, அரோதியன், எலிக்கா,

பல்தியன் ஏலேசு, தெக்கோவைச்சார்ந்த இக்கேசின் மகன் ஈரா.

அனத்தோத்தியன் அபியேசர், ஊசாத்தியன் மெபுன்னாய்,

அகோகியன் சல்மோன், நெற்றோபாயன் மகராய்,

நெற்றோபாயன் பானாவின் மகன் ஏலேபு, பென்யதியனின் கிபயாவைச் சார்ந்த இரிபாயின் மகன் இத்தாய்,

பிரத்தோனியன் பெனாயா, காகசு நீரோடைகளின் இதாய்,

அர்பாத்தியன் அபிஅல்போன், பர்குமியன் அஸ்மவேத்து,

சால்போனியன் எலியகுபா, யாசேனின் மகன் யோனத்தான்,

அராரியன் சம்மா, அராரியன் சாராரின் மகன் அகீயாம்,

மாகாத்தியன் அகஸ்பாயியின் மகன் எலிபலேற்று, கிலோனியன் அகித்தோபலின் மகன் எலியாம்,

கர்மேலியன் எட்சரோ, அர்பியன் பாராய்,

சோபாவைச் சார்ந்த நாத்தானின் மகன் இகால், காத்தியன்பானி,

அம்மோனியனின் செலேக்கு, செரூயாவின் மகனும் யோவாபின் படைக்கலன் தாக்குவோனுமான பெயரோத்தியன் நகராய்,

இத்ரியன் ஈரா, இத்ரியன் காரேபு,

இத்தியன் உரியா, இவர்கள் அனைவருமே அந்த முப்பது பேர்.

அதிகாரம் 24.

மீண்டும் இஸ்ரயேல் மீது ஆண்டவரின் சினம் பற்றி எரிந்தது. அவர்களுக்கு எதிராகச் செயல்பட அவர் தாவீதிடம், புறப்பட்டுப் போய், இஸ்ரயேல், யூதா மக்களை எண்ணுவாய் என்று தூண்டிவிட்டார்.

அரசர் யோவாபையும் அவரோடிருந்த படைத்தலைவர்களையும் அழித்து, மக்கள் தொகை என்னவென்று நான் அறிய வேண்டும். நீங்கள் தாண் முதல் பெயேர்செபா வரை அனைத்து இஸ்ரயேல் குலங்களிடையே சென்று வீரர்கள் தொகையை கணக்கிடுங்கள் என்றார்.

யோவாபு அரசரை நோக்கி, ஆண்டவராம் கடவுள் வீரர்களை இப்போது இருபதைப்போல் இன்னும் நூறு மடங்கு மிகுதிப்படுத்துவாராக! என் தரைவராம் அரசர் இதைக் காண்பாராக! ஆனால் என் தலைவராம் ஆண்டவர் இதை செய்ய விரும்புவது ஏன்? என்று கேட்டார்.

இருப்பினும் யோவாபுக்கும் படைத்தலைவருக்கும் எதிராக அரசரின் வார்த்தையே நிலைத்தது. இஸ்ரயேல் வீரர்களைக் கணக்கிடுவதற்காக யோவாபும் படைத்தலைவர்களும் அரசர் முன்னிலையினின்று புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் யோர்தானைக் கடந்து, காத்துப் பள்ளத்தாக்கின் நடுவே இருந்த நகரின் வலப்புறம் ஆரோயரில் கூடாரமிட்டு: பின் யாசேர் நோக்கிச் சென்றனர்.

கிலாது வந்தடைந்த பிறகு, தத்தீம் கொத்சி எல்லைக்குள் சென்று, தாண்யானுக்கும் சீதோன் சுற்றுப்புறத்திற்கும் சென்றனர்.

பிறகு தீர் கோட்டைக்கும், இப்பியர் கானானியரின் அனைத்து நகரங்களுக்கும் சென்று, அங்கிருந்து யூதாவின் தென்புறமான பெயேர்செபாவரை சென்றனர்.

இவ்வாறு அவர்கள் நாடெங்கும் சென்று ஒன்பது மாதங்களும் இருபது நாள்களும் கடந்தபின் எருசலோமை வந்தடைந்தனர்.

யோவாபு, வீரர்களின் தொகைக்கணக்கை அரசரிடம் தந்தார். வாளை ஏந்தும் வீரர்கள் எண்ணூறு பேர், இஸ்ரயேலிலும், ஜந்நூறு பேர் யூதாவிலும் இருந்தனர்.

வீரர்களின் தொகையைக் கணக்கெடுத்தபிறகு தாவீது மனம் வருந்தினார். நான் மாபெரும் பாவம் செய்தேன்! ஆண்டவரே! உன் அடியானின் குற்றத்தை மன்னித்தருளும்! ஏனெனில் நான் பெரும் மதியீனனாய் நடந்து கொண்டேன் என்று தாவீது ஆண்டவரிடம் மன்றாடினார்.

தாவீது காலையில் எழுந்தார். தாவீதின் திருக்காட்சியளராகிய இறைவாக்கினர் காதிற்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.

நீ சென்று ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகத் தாவீதிடம் சொல்: நான் உன் மீது மூன்று தண்டனைகளைக் குறிப்பிடுகிறேன். நீ ஒன்றைத் தேர்ந்தெடு. அதன் படி நான் செய்வேன்.

காது தாவீதிடம் வந்து அவரிடம் பேசி வெளிப்படுத்தியது: உனது நாட்டில் ஏழு ஆண்டு பஞ்சம் வரட்டுமா? உன் எதிரிகள் உன்னைப்பின்தொடர, மூன்று மாதங்கள் நீ தப்பியோட வேண்டுமா? அல்லது உன் நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்படலாமா? என்னை அனுப்பியவருக்கு நான் என்ன மறுமொழி சொல்ல வேண்டும் என்று சிந்தித்து முடிவுசெய் .

நான் மிகவும் மனவேதனையுற்றுள்ளேன். ஆண்டவரது கையில் நாம் விழுவோம். ஏனெனில் அவரது இரக்கம் பெரிது! மனிதரின் கையில் விழவேண்டாம் என்று தாவீது கூறினார்.

ஆண்டவர் காலை முதல் குறித்த நேரம் வரை இஸ்ரயேலின் மீது கொள்ளை நோய் அனுப்பினார். தாண் முதல் பெயேர்செபாவரை எழுபதாயிரம் மக்கள் மாண்டனர்.

வானதூதர் எருசலேமை அழிப்பதற்காக அவன்மீது தன் கையை ஓங்கினார். ஆண்டவர் அத்தீமையை குறித்து மனம் வருந்தி மக்களை அழித்துக் கொண்டிருந்த வானத்தூதரை நோக்கி, போதும்! உன் கையைக் கீழே போடு என்றார். அப்போது ஆண்டவரின் தூதர், எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே இருந்தார்.

மக்கள் அழித்துக் கொண்டிருந்த ஆண்டவரின் தூதரை தாவீது கண்டபோது, அவர் ஆண்டவரை நோக்கி, பாவம் செய்தவன் நானல்லவோ? தீச்செயல் புரிந்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது? இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் வதைப்பதாக! என்று கூறினார்.

அன்று காது தாவீதிடம் வந்து அவரை நோக்கி, நா சென்று எபூசியன் அரவுனாவின் போரடிக்கும் களத்தருகே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பும் என்றார்.

தாவீது காதின் வார்த்தைப்படி எழுந்து சென்று ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றினார்.

அப்போது அரசரும் அவருடைய பணியாளரும் தன்னை நோக்கி வருவதை அரவுனா கண்டான். அரவுனா புறப்பட்டு சென்று முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கினான்.

தலைவராம் அரசர் உம் அடியானிடம் வருவது ஏன்? என்று அரவுனா வினவ, தாவீது மக்களிடமிருந்து கொள்ளை நோய் விலக ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பவேண்டும். அதற்காக உன்னிடமிருந்து உன் போரடிக்கின்ற களத்தை விளைக்கு வாங்க வந்தேன் என்று கூறினார்.

தலைவராம் அரசர் அதை எடுத்துக்கொண்டு தம் விருப்பம் போல் பலி செலுத்துவாராக! இதோ எரிபலிக்கு வேண்டிய காளைகள்: போரடிக்கும் உருளை காளைகளின் நுகத்தடிகளும் விறகாகட்டும்!

அரசரே! இவையனைத்தையும் அரவுனா தங்களுக்குத் தருகிறான்! ஆண்டவராம் கடவுள் உம்மை ஏற்றுக் கொள்வாராக! என்று அரவுனா தாவீதிடம் கூறினான்.

இல்லை! நான் உன்னிடம் விலைக்குத்தான் வாங்குவேன். நான் இலவசமாக பெற்று என் கடவுளாம் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தமாட்டேன் என்று அரசர் அரவுனாவிடம் கூறி, போரடிக்கும் களத்தையும் காளைகளையும் ஜம்பது வெள்ளிக் காசுகளுக வாங்கினார்.

தாவீது அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி, ஆண்டவருக்கு எரிபலிகளும், நல்லுறவு பலிகளும் செலுத்தினார். நாட்டுக்காகச் செய்த மன்றாட்டை ஆண்டவர் கேட்டருள, இஸ்ரயேலிலிருந்து கொள்ளை நோய் நீங்கியது.

புத்தகம் 11. அரசர்கள் - முதல் நூல்

அதிகாரம் 1.

தாவீது அரசர் முதுமைப் பருவம் அடைந்தார். அத்தள்ளாத வயதில் போர்வைகளால் அவரைப் போர்த்தியும் அவரால் குளிரைத் தாங்க இயலவில்லை.

எனவே அவருடைய அலுவலர் அவரிடம், அரசே! எம் தலைவராகிய உமக்கென ஒர் இளம் கன்னிப் பெண்ணைத் தேடப்போகிறோம். அவள் அரசராகிய உமக்குத் தாதியாக இருந்து பணிவிடை புரிவாள்: அவள் உமக்கருகில் படுத்து எம் தலைவரும் அரசருமாகிய உமது குளிரைப் போக்குவாள் என்றனர்.

அவ்வாறே அவர்கள் இஸ்ரயேல் நாடெங்கும் சென்று அழகிய ஓர் இளம் பெண்ணுக்காகத் தேடி அலைந்து, சூனேம் ஊரைச் சார்ந்த அபிசாகு என்பவளைக் கண்டு, அவளை அரசரிடம் அழைத்து வந்தார்கள்.

பேரழகியான அந்த இளம்பெண் அரசருக்குத் தாதியாயிருந்து பணிவிடை புரிந்து வந்தாள். ஆனால், அரசர் அவளோடு கூடி வாழவில்லை.

அகித்து என்பவளிடம் பிறந்தவனான அதோனியா, நானே அரசனாவேன் என்று செருக்குடன் சொல்லிக் கொண்டு தனக்கெனத் தேர்ப்படையையும், குதிரைப்படையையும் தன்முன் கட்டியம் கூறிச் செல்ல ஜம்பது பேரையும் பயிற்சி செய்து வைத்திருந்தான்.

“நீ ஏன் இப்படிச் செய்கிறாய்” என்று அவன் தந்தை அவைன ஒருபோதும் கண்டித்ததே இல்லை. அவன் அழகு மிக்கவன்: அப்சலோமுக்குப் பின் பிறந்தவன்.

அவன் செரூயாவின் மகனான யோவாபுடனும் குருவாகிய அபியத்தாலுடனும் கூடி ஆலோசனை செய்தான். அவர்கள் அதோனியாவுக்குத் துணை நின்றார்கள்.

ஆனால், குருவாகிய சாதோக்கும் யோயாதாவின் மகன் பெனாயாவும் இறைவாக்கினர் நாத்தானும் சிமயி, இரேயி என்பவர்களும் தாவீதின் மெய்க்காப்பாளர்களும் அதோனியாவின் பக்கம் சேரவில்லை.

அதன் பிறகு ஏன்ரோகேல் அருகேயுள்ள சோகலேத்து என்ற பாறையின் மேல் அதோனியா ஆடுகளையும் எருதுகளையும் கொழுத்த கன்றுகளையும் பலியிட்டான். அரசரின் மைந்தரான தன் உடன் பிறந்தார் அனைவரையும் அரச அலுவலரான யூதாவைச் சேர்ந்த அனைவரையும் அதற்கு அழைத்திருந்தான்.

ஆனால் அவன் இறைவாக்கினர் நாத்தானையோ, பெனாயாவையோ மெய்க்காப்பாளர்களையோ தன் சகோதரன் சாலமோனையோ அழைக்கவில்லை.

இப்படியிருக்க, நாத்தான் சாலேமோனின் தாயான பத்சேபாவிடம் அகித்தின் மகன் அதோனியா அரசனாகிவிட்டான். இது நம் தலைவர் தாவீதுக்குக் தெரியாது. நீர் இதுபற்றிக் கேள்விப்படவில்லையா?

உம் உயிரையும் உம் மகன் சாலமோன் உயிரையும் காத்துக்கொள்ள, நான் உமக்கு ஆலோசனை ஒன்று கூறுகிறேன்:

உடனே அரசர் தாவீதைப் போய்ப் பாரும். அவரிடம் என் தலைவரே! என் அரசே! நீர் உம் அடியவளாகிய எனக்கு, “உம் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் அமர்வான் என்று ஆணையிட்டுக் கூறவில்லையா? அப்படியாயின் அதோனியா அரசனாகியிருப்பது எப்படி?“ என்று கேளும்.

அங்கு நீர் அரசரோடு பேசிக்கொண்டிருக்கையில் நானும் உமக்குப்பின் வருகிறேன். வந்து நீர் பேசியவற்றை உறுதிப்படுத்துகிறேன் என்றார்.

அவ்வாறே பத்சேபா பள்ளியறையில் இருந்த வயது முதிர்ந்த அரசரைப் பார்க்கச் சென்றார். அங்கே சூனேமைச் சார்ந்த அபிசாகு அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.

பத்சேபா, அரசரைத் தாள் பணிந்து வணங்க, அரசர் என்ன வேண்டும்? என்று கேட்டார்.

அவரோ அவரிடம், என் தலைவரே! நீர் அடியவளாகிய எனக்கு, “உன் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் அமர்வான்“ என்று உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறவில்லையா?

ஆனால் என் தலைவராகிய அரசே! இதோ உமக்குத் தெரியாமலே அதோனியா அரசனாகி விட்டான்.

அவன் மிகுதியான எருதுகளையும் கொழுத்த கன்றுகளையும் ஆடுகளையும் பலியிட்டிருக்கிறான். அரசரின் மைந்தர் அனைவரையும் குருவாகிய அபியத்தாரையும் படைத்தலைவன் யோவாபையும் அழைத்திருக்கிறான். ஆனால் உம் அடியான் சாலமோனை மட்டும் அழைக்கவில்லை.

என் தலைவராகிய அரசே! உமக்குப் பின் அரியணை ஏறுபவன் யார் என்று நீரே அறிவிக்க வேண்டுமென்று இஸ்ரயேல் மக்கள் அனைவரும் எதிர்நோக்கியிருக்கின்றனர்.

அப்படி அறிவிக்காவிடில் என் தலைவராகிய அரசர் தம் மூதாதையரோடு துயில் கொள்ளும் நாளில் நானும் என் மகன் சாலமோனும் குற்றவாளிகளாகக் கருதப்படுவோம் என்றார்.

அவர் இவ்வாறு அரசரோடு பேசிக்கொண்டிருக்கையில், இறைவாக்கினர் நாத்தான் உள்ளே வந்தார்.

அங்கே இருந்தவர்கள் அரசரிடம், இறைவாக்கினர் நாத்தான் இங்கு வந்திருக்கிறார் என்றார்கள். அவர் உள்ளே நுழைந்து அரசர்முன் சென்று தரைமட்டும் பணிந்து வணங்கினார்.

அப்பொழுது, நாத்தான், என் தலைவராகிய அரசே! உமக்குப் பின் அதோனியா அரசாள்வான்: அவன் உம் அரியணைமீது அமர்வான் என்று நீர் கூறினதுண்டா?

ஏனெனில் அதோனியா இன்று இங்கிருந்து போய் மிகுதியான எருதுகளையும், கொழுத்த கன்றுகளையும் ஆடுகளையும் பலியிட்டிருக்கிறான். அரசரின் மைந்தர் அனைவரையும் படைத்தலைவராகிய யோவாபையும் குருவாகிய அபியத்தரையும் அதற்கு அழைத்திருக்கிறான். அவர்கள் அவனோடு உண்டு குடித்து “அரசர் அதோனியா வாழ்க!“ என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உம் அடியானாகிய என்னையும் குருசாதோக்கையும் யோயாதாவின் மகன் பெனாயாவையும் உம் அடியான் சாலமோனையும் அவன் அழைக்கவில்லை.

என் தலைவரும் அரசருமாகிய உமக்குப் பின் அரியணையில் யார் அமர வேண்டுமென்று அடியேனுக்கு இதுவரை நீர் தெரிவிக்கவில்லை. அவ்வாறிருக்க இவையெல்லாம் என் தலைவராகிய அரசரது சொற்படி நடந்திருக்கக்கூடுமா? என்று கேட்டார்.

அப்பொழுது தாவீது அரசர் மறுமொழியாக, பத்சோபாவை என் முன்னே வரவழையுங்கள் என்றார். அவரும் அரசரிடம் வந்து அவர் முன்னிலையில் நின்றார்.

அரசர், எல்லாத் துன்பங்களினின்றும் என் உயிரைக் காத்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை!

“உன் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் எனக்குப் பதிலாக அரியணையில் அமர்வான்“ என்று இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்மேல் ஆணையிட்டு முன்பு நான் சொன்னதை இன்று நான் செய்து முடிப்பேன் என்றார்.

அப்பொழுது பத்சேபா முகம் தரையில்படத் தாழ்ந்து அரசரை வணங்கி, என் தலைவராகிய தாவீது அரசர் நீடூழி வாழ்க! என்றார்.

தாவீது அரசர், குரு சாதோக்கையும் இறைவாக்கினர் நாத்தானையும் யோயாதாவின் மகன் பெனாயாவையும் என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார். அவ்வாறே அவர்கள் அரசர்முன் வந்தார்கள்.

அரசர் அவர்களிடம், உங்கள் தலைவனுடைய அலுவலரும் நீங்களும் சேர்ந்து என் மகன் சாலமோனை என் கோவேறு கழுதையின்மேல் அமர்த்திக் கீகோனுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

அங்கே குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனை இஸ்ரயேலின் அரசனாகத் திருப்பொழிவு செய்யட்டும். எக்காளம் முழங்க, “சாலமோன் அரசர் வாழ்க!“ என்று வாழ்த்துங்கள்.

அதன்பின் அவனை இங்கே அழைத்து வாருங்கள். அவன் வந்து என் அரியணைமீது அமர்ந்து, எனக்குப் பதிலாக அரசாள்வான். இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் அவனைத் தலைவனாக நியமிக்கிறேன் என்றார்.

யோயாதாவின் மகன் பெனாயா அரசருக்கு மறுமொழியாக அப்படியே ஆகுக! என் தலைவரான அரசரின் ஆண்டவராகிய கடவுள் நீர் சொன்னதை உறுதிப்படுத்துவாராக!

ஆண்டவர் என் தலைவரான அரசருடன் இருந்தது போல் சாலமோனுடனும் இருப்பதாக! அவரது அரியணையை என் தலைவர் தாவீது அரசர் அரியணையைவிட மாண்பு மிக்கதாக ஆக்கியருள்வாராக! என்றான்.

அவ்வாறே குரு சாதோக்கு, இறைவாக்கினர் நாத்தான், யோயாதாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பெலேத்தியர் ஆகியோர் அங்கிருந்து போய், சாமோனைத் தாவீது அரசரின் கோவேறு கழுதையின் மேல் அமர்த்தி, கீகோனுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே குரு சாதோக்கு கூடாரத்திலிருந்து எண்ணெய்க் கொம்பை எடுத்து வந்து, சாலமோனை திருப்பொழிவு செய்தார். அப்பொழுது எக்காளம் முழங்க எல்லா மக்களும் சாலமோன் அரசர் வாழ்க! என்றனர்.

எல்லா மக்களும் தாரை ஊதிக் கொண்டு மிகுந்த அக்களிப்போடும் ஆர்ப்பரிப்போடும் அவர் பின்னால் சென்றனர். அவர்கள் எழுப்பிய பேரொலியால் நிலமே நடுங்கிற்று.

அதோனியாவும் அவனோடிருந்த அனைத்து விருந்தினரும் உண்டு முடித்த வேளையில், இப்பேரொலி அவர்கள் காதுக்க எட்டியது. எக்காள ஒலி காதில்விழவே யோவாபு, நகரில் ஏன் இத்துணை ஆரவாரம்? என்று வினவினார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுது குரு அபியத்தாரின் மகன் யோனத்தான் அங்கு வந்தான். அதோனியா உள்ளே வா: நீ திறமை மிக்கவன்: நல்ல செய்தியே கொண்டு வருவாய் என்றான்.

யோனத்தான் அதோனியாவிடம் கூறியது: அதுதான் இல்லை: நம் தலைவராகிய அரசர் தாவீது சாலமோனை அரசராக்கி விட்டார்.

குரு சாதோக்கு, இறைவாக்கினர் நாத்தான், யோயாதாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பெலேத்தியர் ஆகியோரை அவனோடு அனுப்பி விட்டார். அவர்கள் அவனை அரசரின் கோவேறு கழுதைமேல் அமர்த்தினர்.

குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனைக் கீகோனில் அரசனாகத் திருப்பொழிவு செய்துவிட்டனர். பிறகு அங்கிருந்து அக்களிப்போடு அவனை அழைத்து வந்துள்ளனர். எனவேதான் நகரில் இத்துணை ஆரவாரம்!

நீங்கள் கேட்டது அந்த இரைச்சல்தான். சாலமோனும் இப்பொழுது அரச அரியணைமீது அமர்ந்துள்ளான்.

மேலும், அரசரின் அலுவலர் நம் தலைவராகிய தாவீது அரசரிடம் வந்து, “உம் கடவுள் உமது பெயரைவிடச் சாலமோன் பெயரைச் சிறப்புடையதாய் ஆக்குவாராக! உமது அரியணையை விட அவரது அரியணையை மாண்புடையதாய் ஆக்குவாராக! என்று வாழ்த்தினர். அரசரும் தம் படுக்கையில் வணங்கித் தொழுது,

இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் போற்றி! அவர் இன்று என் அரியணைமீது ஒருவனை அமர்த்தியுள்ளார்! அதை நான் கண்குளிரச் கண்டேன்! என்றார்.

உடனே அதோனியாவின் விருந்தினர் அனைவரும் அச்சமுற்று எழுந்து மூலைக்கு ஒருவராக ஓட்டம் பிடித்தனர்.

அதோனியா சாலமோனுக்கு அஞ்சி ஓடி, பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டான்.

அப்பொழுது சாலமோனுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது: அதோனியா, சாலமோன் அரசருக்கு அஞ்சிப் பலி பீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டிருக்கிறான். மேலும் அவன், அரசர் சாலமோன், “என் அடியானாகிய உன்னை வாளால் கொல்லமாட்டேன்“ என்று இன்றே ஆணையிட்டுக் கூறட்டும் என்று வேண்டுகிறான்.

சாலமோனும், அவன் ஒழுங்கான முறையில் நடந்து கொண்டால், அவன் தலைமுடி ஒன்றுகூடத் தரையில் விழாது. ஆனால் அவனிடம் வஞ்சனை எதுவும் காணப்பட்டால் அவன் சாக வேண்டும் என்று பதிலளித்தார்.

எனவே சாலமோன் அரசர் ஆளனுப்பிப் பலிபீடத்திலிருந்து அவனை இழுத்துக்கொண்டு வரச் செய்தார். அவனும் வந்து சாலமோன் அரசர்முன் வீழ்ந்து வணங்கினான். சாலமோன் அவனிடம் நீ உன் வீட்டுக்குப் போகலாம் என்றார்.

அதிகாரம் 2.

தாவீதின் இறுதி நாள் நெருங்கினபோது அவர் தம் மகன் சாலமோனுக்குப் பணித்துக் கூறியது இதுவே: 7அனைத்துலகும் போகும் வழியே நானும் போகிறேன். நீ நெஞ்சுறுதியும் வீரமும் கொண்டவனாயிரு.

உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆணைகளைக் கடைப்படி. அவர் காட்டும் வழியில் நட. மோசேயின் சட்ட மலில் எழுதப்பட்டுள்ள கடவுளுடைய நியமங்கள், விதிமுறைகள், நீதிச் சட்டங்கள், ஒழுங்கு முறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடி. இப்படிச் செய்தால், நீ செய்யும் காரியங்களிலும் செல்லும் இடங்களிலும் வெற்றி காண்பாய்.

ஏனெனில் ஆண்டவர் என்னை நோக்கி, “உன் மைந்தர்கள் தங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் என் முன்னிலையில் உண்மையுடன் நடப்பார்களானால், இஸ்ரயேலின் அரியணையில் அமர்வதற்கேற்ற ஒருவன் அவர்களுள் இல்லாமல் போவதில்லை“ என்று எனக்குக் கொடுத்த வாக்கு அப்போதுதான் நிலைத்திருக்கும்.

இஸ்ரயேலின் இரு படைத்தலைவர்களான நேரின் மகன் அப்னேர், எத்தேரின் மகன் அமாசா ஆகியோருக்கு செரூயாவின் மகன் யோவாபு செய்ததும் அதனால் எனக்கு நேர்ந்ததும் உனக்குத் தெரியும். அவன், போர்க்காலத்தில் சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பழிவாங்கச் சமாதான காலத்தில் அவர்களைக் கொன்றான். அவ்வாறு செய்து, அவன் தன் அரைக்கச்சையிலும் தன் மிதியடிகளிலும் இரத்தக்கறை படியச் செய்தான்.

ஆகையால் அவனுடன் விவேகமாய் நடந்துகொள். அவன் நரைமுடியனாய் மன அமைதியுடன் பாதாளத்தில் இறங்க விட்டுவிடாதே.

கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் மைந்தர்களுக்கோ இரக்கம் காட்டு. உன் பந்தியில் உண்பவர்களோடு அவர்களும் இருக்கட்டும். ஏனெனில் உன் சகோதரன் அப்சலோமுக்கு அஞ்சி நான் ஓடியபொழுது எனக்கு அவர்கள் துணைநின்றார்கள். இன்னும் கேள்.

பகுரிம் ஊரைச் சார்ந்த பென்யமினனாகிய கேராவின் மகன் சிமயி உன்னோடு இருக்கிறான் அல்லவா? அவன், மகனயிமுக்கு நான் சென்றபோது, மிகவும் இழிவான முறையில் பேசி என்னைச் சபித்தான். ஆயினும் யோர்தானுக்கு அருகில் என்னைச் சந்திக்க வந்தபோது, “உன்னை வாளால் கொல்லமாட்டேன்“ என்று ஆண்டவர்மேல் ஆணையிட்டு அவனுக்கு நான் சொன்னேன்.

எனினும் நீ அவனைக் குற்றமற்றவனென எண்ணி விடாதே. நீ விவேகமுள்ளவன். அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியும். அவன் நரைமுடியாய் இரத்தத்தில் தோய்ந்து பாதாளத்தில் இறங்கும்படி செய்.

பின்னர் தாவீது தம் மூதாதையருடன் துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார்.

தாவீது இஸ்ரயேலின்மீது ஆட்சி செலுத்திய காலம் நாற்பது ஆண்டுகள். அவர் எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினார்.

சாலமோன் தம் தந்தை தாவீதின் அரியணையில் அமர்ந்தார். அவருடைய ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டது.

அகித்தின் மகன் அதோனியா சாலமோனின் தாய் பத்தேசாபவிடம் வந்தான். நீ வருவதன் நோக்கம் என்ன? சமாதானமா? என்று அவர் கேட்டார்.

அதற்கு அவன், ஆம்: சமதானமே என்றான். பிறகு அவன், நான் உம்மிடம் ஒன்று சொல்லவேண்டும் என்றான். அவரும் சொல் என்றார்.

அதற்கு அவன், அரசுரிமை என்னுடையதே. நான் அரசனாக வேண்டும் என்று இஸ்ரயேல் மக்கள் அனைவரும் விரும்பினர். இது உமக்குத் தெரிந்ததே. ஆனால் நடந்தது வேறு. அரசுரிமை என் சகோதரனுக்குப் போய்விட்டது.

அது ஆண்டவரின் திருவுளம். ஆயினும் உம்மிடம் ஒன்று வேண்டிக் கொள்ள விரும்புகிறேன். அதை நீர் எனக்கு மறுக்கக்கூடாது என்றான்.

அதற்கு அவர், அது என்ன? சொல் என, அவன், அரசர் சாலமோன் உம் சொல்லைத் தட்டமாட்டார். சூனேமைச் சார்ந்த அபிசாகை எனக்கு மணமுடித்து வைக்கும்படி அவரிடம் சொல்லும் என்றான்.

அதற்குப் பத்சேபா, நல்லது: நான் உனக்காக அரசரிடம் பரிந்து பேசுகிறேன் என்றார்.

பத்சேபா அதோனியாவுக்காக அரசர் சாலமோனிடம் பரிந்து பேசும் படி போனார். அப்போது அரசர் எழுந்து அவரை எதிர்கொண்டு வந்து வணங்கியபின், தம் அரியணையில் அமர்ந்து கொண்டார். அரசரின் தாய்க்கு அவரது வலப்புறத்தில் ஓர் இருக்கை போடப்பட்டது. அவரும் அதில் அமர்ந்தார்.

அப்போது அவர், நான் உன்னிடம் கேட்க விரும்பும் சிறு வேண்டுகோள் ஒன்று உண்டு. அதை நீ மறுக்கக்கூடாது என்றார். அதற்கு அரசர், கேளுங்கள் அம்மா! நான் மறுக்கமாட்டேன் என்றார்.

அப்போது அவர், சூனேமைச் சார்ந்த அபிசாகை உன் சகோதரன் அதோனியாவுக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்றார்.

அரசர் சாலமோன் தம் தாய்க்கு மறுமொழியாக, சூனேமைச் சார்ந்த அபிசாகை அதோனியாவுக்காக நீர் கேட்பானேன்? இந்த அரசையும் அவனுக்காக நீர் கேட்டிருக்கலாமே? அவன்தான் என் மூத்த சகோதரனயிற்றே! மேலும் குரு அபியத்தாரும் செரூயாவின் மகன் யோவாபும் அவர் பக்கம் இருக்கின்றனரே! என்று சொன்னார்.

பிறகு அரசர் சாலமோன் ஆண்டவர் மேல் ஆணையிட்டு அதோனியா சொன்ன இந்த வார்த்தை அவன் உயிருக்கே கேடு விளைவிக்கும். இல்லையேல் கடவுள் எனக்குத் தகுந்த தண்டணை அளிப்பாராக!

எனவே என் அரசுரிமையை நிலைநிறுத்தி என் தந்தை தாவீதின் அரியணையில் என்னை அமர்த்தித் தாம் சொன்னபடி என் குடும்பத்தை அரச பரம்பரையாக்கியவரான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அதோனியா இன்றே கொல்லப்படுவான் என்று சொன்னார்.

சாலமோன் அரசர் யோயாதாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார். அவனும் அதோனியாவைத் தாக்கவே, அவனும் இறந்தான்.

பிறகு அரசர் குரு அபித்தாரை நோக்கி, உம் நிலங்கள் இருக்கிற அனத்தோத்திற்குப் போய்விடும். நீர் சாகவேண்டியவர். இருப்பினும், இன்று நான் உம்மைக் கொல்ல மாட்டேன். ஏனெனில், நீர் என் தந்தை தாவீதுக்கு முன்னனால் தலைவராகிய ஆண்டவரின் பேழையைத் தாக்கி வந்தீர். மேலும் என் தந்தைக்குத் துன்பம் வந்த போதெல்லாம் நீரும் அவரோடிருந்து துன்பம் அனுபவித்தீர் என்றார்.

இவ்வாறு அபித்தார் ஆண்டவரின் குருவாய் இராதபடி சாலமோன் அவரை விலக்கிவிட்டார். ஆண்டவர் சீலோவில் ஏலியின் வீட்டாரைப் பற்றி உரைத்த வார்த்தை இவ்வாறு நிறைவேறியது.

இந்தச் செய்தி யோவாபுக்கு எட்டியது. அவர் அப்சலோமின் பக்கம் சாராமல், அதோனியாவின் பக்கம் சார்ந்திருந்தவர். ஆகையால் அவர் ஆண்டவரின் கூடாரத்திற்கு ஓடிப் பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டார்.

யோவாபு ஆண்டவரின் கூடாரத்திற்கு ஓடிப்போனார் என்றும் பலிபீடத்தின் அருகே அவர் நிற்கிறார் என்றும் சாலமோன் அரசருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது சாலமோன் யோயாதாவின் மகன் பெனாயாவை அனுப்பி, நீ போய் அவனை வெட்டி வீழ்த்து என்றார்.

பெனாயா ஆண்டவரின் கூடாரத்திற்குப் போய் அவரைக் கண்டு, வெளியே வா: இது அரச கட்டளை என்றான். அதற்கு அவர் மறுமொழியாக, முடியாது: நான் இங்கேயே சாவேன் என்றான். எனவே பெனாயா அரசரிடம் திரும்பி வந்து யோவாபு தனக்குக் கூறிய மறுமொழியைத் தெரிவித்தான்.

அப்போது அரசர் அவனை நோக்கி, அவன் சொன்னபடியே செய். அவனைக் கொன்று அடக்கம் செய். இவ்வாறு, யோவாபு சிந்திய குற்றமற்ற இரத்தத்தின் பழி என்னையும் என் தந்தையின் வீட்டாரையும் விட்டு நீங்கச் செய்.

இந்த இரத்தப் பழியை ஆண்டவர் அவன் தலைமேலேயே விழச் செய்வாராக! ஏனெனில், அவன் தன்னை விட நேர்மையிலும் பண்பிலும் சிறந்தவர்களான நேரின் மகனும் இஸ்ரயேலின் படைத் தலைவனுமான அப்னேர், எத்தேரின் மகனும் யூதாவின் படைத்தலைவனுமான அமாசா ஆகியோரை என் தந்தை தாவீதுக்குத் தெரியாமல் தாக்கி வாளால் கொன்றான்.

இந்த இரத்தப்பழி யோவாபின் தலைமேல் மட்டுமன்று: அவன் வழி மரபினர் தலை மேலும் என்றென்றும் இருப்பதாக! ஆனால் தாவீது, அவர் வழிமரபினர், அவர் வீட்டார் ஆகியோர் மீதும் அவர் அரியணை மீதும் என்றென்றும் ஆண்டவரின் சமாதானம் தங்கி இருப்பதாக! என்றார்.

அவ்வாறே யோயாதாவின் மகன் பெனாயா புறப்பட்டுப் போய் யோவாபைத் தாக்கிக் கொன்றான். அவர் பாலை நிலத்திலிருந்த தம் வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார்.

அப்பொழுது அரசர் யோவாபுக்குப் பதிலாக யோயாதாவின் மகன் பெனாயாவைப் படைத்தலைவனாக நியமனம் செய்தார். மேலும் அபியத்தாருக்குப் பதிலாகச் சாதோக்கைக் குருவாக நியமித்தார்.

பிறகு அரசர் சிமயியை வரவழைத்து அவனை நோக்கி, நீ எருசலேமில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு வேறெங்கும் செல்லாமல் அங்கேயே குடியிரு.

என்று நீ வெளியேறித் கிதரோன் நீரோடையைக் கடப்பாயோ, அன்றே நீ கொல்லப்படுவது உறுதி. இதைத் திண்ணமாய் அறிந்துகொள். உன் இரத்தத்தின் பழி உன் தலைமேலேயே விழும் என்றார்.

சிமயி அரசரைப் பார்த்து, நல்லது, அரசே! என் தலைவராகிய நீர் சொன்னபடியே அடியேன் செய்வேன் என்றான்.

அவ்வாறே சிமயி நெடுநாள் எருசலேமில் குடியிருந்தான். மூன்று ஆண்டுகளுக்குப் பின் சிமயியின் அடிமைகளில் இருவர் காத்தின் மன்னனாகிய மாக்கா மகன் ஆக்கிசிடம் ஓடிவிட்டனர். அந்த அடிமைகள் காத்தில் இருப்பதாகச் சிமயி கேள்விப்பட்டான்.

உடனே சிமயி தன் கழுதைக்குச் சேணம் பூட்டித் தன் அடிமைகளைத் தேடப் புறப்பட்டான். அவன் காத்திலிருந்து ஆக்கிசிடம் சென்று, தன் அடிமைகளைக் கண்டு அங்கிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தான்.

சிமயி எருசலேமிலிருந்து காத்துக்குப் போய்த் திரும்பி வந்தான் என்று சாலமோனுக்கு அறிவிக்கப்பட்டது.

அப்போது அரசர் சிமயியை வரவழைத்து என்று நீ வெளியேறி வேறெங்காவது போவாயோ, அன்றே நீ கொல்லப்படுவது உறுதி. இதைக் திண்ணமாய் அறிந்து கொள் என்று நான் உனக்கு முன்பே எச்சரிக்கை செய்து, உன்னையும் ஆண்டவர்மேல் ஆணையிடச் செய்யவில்லையா? நீயும் அதற்கு, நல்லது, நீர் சொன்னபடி கேட்கிறேன் என்று பதில் கூறவில்லையா?

அப்படியிருக்க ஆண்டவர்மேல் நீ இட்ட ஆணையையும் உனக்கு நான் இட்ட கட்டளையையும் மீறியது ஏன்? என்று கேட்டார்.

மேலும் அரசர் சிமயியைப் பார்த்து, என் தந்தை தாவீதுக்கு நீ இழைத்த தீங்குகள் அனைத்தையும் பற்றி உன் நெஞ்சே அறியும். ஆகையால் நீ செய்த தீங்கு உன்னையே அழிக்கும்படி ஆண்டவர் செய்வார்.

ஆனால் அரசராகிய சாலமோன் ஆசி பெற்றவராய் இருப்பார். தாவீதின் அரியணையும் ஆண்டவர் முன்னிலையில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று சொன்னார்.

பின்னர் யோயாதாவின் மகன் பெனாயாவுக்கு அரசர் கட்டளையிட, அவன் சென்று சிமயியைத் தாக்கவே, அவனும் இறந்தான். இவ்வாறு சாலமோனின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது.

அதிகாரம் 3.

பின்னர் சாலமோன் எகிப்து மன்னனான பார்வோனின் மகளை மணந்து, பார்வோனுடன் உடன்பாடு செய்துகொண்டார். மேலும் தம் அரண்மனை, ஆண்டவர் இல்லம், எருசலேமின் சுற்றுமதில் ஆகியவற்றைக் கட்டி முடிக்கும் வரை அவளைத் தாவீதின் நகரில் தங்கியிருக்கச் செய்தார்.

அந்நாள் வரை ஆண்டவரின் பெயருக்குக் கோவில் எழுப்பப்படவில்லை. எனவே, மக்கள் தொழுகை மேடுகளில் பலியிட்டு வந்தார்கள்.

ஆண்டவர்மீது சாலமோன் அன்பு கொண்டு, தம் தந்தையான தாவீது விதித்த நியமங்களின்படி நடந்து வந்தார். ஆனால், அவரும் தொழுகை மேடுகளில் பலியிட்டுத் பபம் காட்டி வந்தார்.

ஒருநாள் அரசர் பலி செலுத்துமாறு கிபயோனுக்குச் சென்றார். அங்கேதான் மிக முக்கியமான தொழுகைமேடு இருந்தது. அங்கிருந்த பலிபீடத்தின் மேல்தான் சாலமோன் ஆயிரம் எரிபலிகளைச் செலுத்தியிருந்தார்.

அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்! என்று கடவுள் கேட்டார்.

அதற்குச் சாலமோன், உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர்.

என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை.

இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடைளே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர்.

எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்? என்று கேட்டார்.

சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது.

கடவுள் அவரிடம், நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீத்¢ வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்.

இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை.

அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்.

மேலும், உன் தந்தை தாவீதைப் போல் நீயும் என் வழிகளில் நடந்து, என் நியமங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடித்து வந்தால் உனக்கு நீண்ட ஆயுளையும் வழங்குவேன் என்றார்.

சாலமோன் கனவினின்று விழித்தெழுந்தார். பின்னர், எருசலேமுக்குப் புறறப்பட்டுச் சென்று ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின்முன் நின்று எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார். பின் தம் அலுவலர் அனைவருக்கும் பெரும் விருந்து அளித்தார்.

ஒரு நாள், இரு விலைமாதர் அரசர் முன்னிலையில் வந்து நின்றனர்.

அவர்களுள் ஒருத்தி, என் தலைவரே! இந்தப் பெண்ணும் நானும் ஒரே வீட்டில் குடியிருக்கிறோம். அந்த வீட்டில் அவள் என்னுடன் இருந்தபோது நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன்.

என் குழந்தை பிறந்து மூன்று நாள் ஆன பின், அவளம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்த வீட்டில் எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

இவள் இரவில் பங்கும்போது தன் மகன் மீது புரண்டுவிட்டதால் அவன் இறந்துபோனான்.

அவள் நள்ளிரவில் எழுந்து, உம் பணிப்பெண்ணாகிய நான் பங்கிக் கொண்டிருக்கையில், என்னருகில் கிடந்த என் மகனை எடுத்துத் தன் நெஞ்சருகில் வைத்துக்கொண்டு, இறந்துவிட்ட தன் மகனை என் நெஞ்சருகில் கிடத்திவிட்டாள்.

விடியற்காலையில் பிள்ளைக்குப் பால் கொடுக்க நான் எழுந்தபோது, ஜயோ! அது செத்துக் கிடந்தது. சற்று விடிந்தபின் பிள்ளையை உற்று பார்த்தபோது, அது நான் பெற்ற பிள்ளை அல்ல என்று கண்டேன் என்றாள்.

இதைக் கேட்ட மற்றவளோ, இல்லை! உயிரோடிருப்பதே என் பிள்ளை. செத்துப் போனது என் பிள்ளை என்றாள். முதல் பெண்ணோ, இல்லை! செத்த பிள்ளைதான் உன்னுடையது. உயிரோடிருக்கும் பிள்ளை என்னுடையது என்றாள். இவ்வாறு அரசர்முன் அவர்கள் வாதாடினர்.

அப்பொழுது அரசர், என்ன இது? ஒருத்தி, “உயிரோடு இருக்கிற இவன் என் மகன்: செத்துவிட்டவன் உன் மகன்“ என்கிறாள். மற்றவளோ “இல்லை! செத்துவிட்டவன் என் மகன்: உயிரோடு இருக்கிறவன் என் மகன்“ என்கிறாள் என்றார்.

பின்னர் அரசர், ஒரு வாளைக் கொண்டு வாருங்கள் என்றார்.

அவ்வாறே அவர்கள் அரசரிடம் ஒரு வாள் கொண்டு வந்தனர். பிறகு அரசர், உயிரோடிருக்கும் குழந்தையை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை ஒருத்தியிடமும் மறு பாதியை மற்றொருத்தியிடமும் கொடுங்கள் என்றார்.

உடனே, உயிரோடிருந்த பிள்ளையின் தாய் தன் மகனுக்காக நெஞ்சம் பதறி அரசரிடம், வேண்டாம் என் தலைவரே! கொல்ல வேண்டாம். உயிரோடிருக்கும் குழந்தையை அவளிடமே கொடுத்து விடுங்கள் என்று வேண்டினாள். மற்றவளோ, அது எனக்கும் வேண்டாம்: உனக்கும் வேண்டாம்: அதை இரண்டாக வெட்டுங்கள் என்றாள்.

உடனே அரசர், உயிரோடிருக்கும் அந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டாம். முதல் பெண்ணிடமே கொடுங்கள். அவள்தான் அதன் தாய் என்று முடிவு கூறினார்.

அரசர் அளித்த தீர்ப்பைப் பற்றி இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் கேள்விப்பட்டனர். நீதித் தீர்ப்பு வழங்குவதற்கெனக் கடவுள் அருளிய ஞானம் அவரிடம் உள்ளது என்று கண்டு, அவருக்கு அஞ்சி நடந்தனர்.

அதிகாரம் 4.

சாலமோன் அரசர் இஸ்ரயேலர் அனைவர்மீதும் அட்சி செலுத்தி வந்தார்.

அவருடன் இருந்த அதிகாரிகள் இவர்களே:

குரு: சாதோக்கின். மகன் அசரியா. தலைமைச் செயலர்: சீசாவின் மைந்தர் எலிகோரேபு, அகியா. அமைச்சன்: அகிலு¡தின் மகன் யோசபாத்து.

படைத் தலைவன்: யோயாதாவின் மகன் பெனாயா. குருக்கள்: சாதோக்கு, அபியத்தார்.

தலைமைக் கண்காணிப்பாளன்: நாத்தானின் மகன் அசரியா. அரசரின் ஆலோசகன்: நாத்தானின் மகன் குரு சாபூது.

அரண்மனை மேற்பார்வையாளன்: அகிசார். கட்டாய வேலைக்காரர் மேற்பார்வையாளன்: அப்தாவின் மகன் அதோனிராம்.

இஸ்ரயேல் நாடெங்கும் சாலமோனின் கீழ் பன்னிரு ஆளுநர் இருந்தனர். அவர்கள் அரசருக்கும் அவரது அரண்மனைக்கும் வேண்டிய உணவுப் பொருட்களைச் சேகரித்துக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் மாதத்திற்கு ஒருவராக ஆண்டு முழுவதும் தேவையான பொருள்களைச் சேகரித்துத் தந்தார்கள்.

அவர்களின் பெயர்கள்: பென்கூர்-மலை நாடான எப்ராயிம் இவனுக்கு உரியது:

பென்தெக்கர்-மாக்காசு, சாயல்பிம், பேத்சமேசு, ஏலோன் பெத்கானான் ஆகிய நகர்கள் இவனுக்கு உரியவை.

பென்கெசது-அருபோத்து, சோக்கோவும் ஏபேர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியவை.

சாலமோனின் மகள் தாப்பாத்தின் கணவன் பென் அபினதாபு-நாபத்தோர் பகுதி முழுவதும் இவனுக்கு உரியது.

அகிலு¡தின் மகன் பாகனா-தானாக்கு, மெகிதோ, பெத்சான் நகர்ப் பகுதிகளும் சாத்தானை அடுத்து, இஸ்ரயேலுக்குத் தெற்கே, பெத்சானிலிருந்து ஆபேல் மெகோலா வரை, யோக்மாயமின் மறுபக்கம் உள்ள பகுதியும் இவனுக்குரியவை.

பென்கெபர்-ராமோத்து கிலயாதும் மனாசேயின் மகன் யாயிர்க்குச் சொந்தமான கிலயாது நாட்டுச் சிற்டிர்களும், பாசானிலுள்ள அர்கோபு நாட்டின் மதிற்சுவர்களும் வெண்கலக் குறுக்குக் கம்பிகளும் கொண்ட அறுபது நகர்களும் இவனுக்கு உரியவை.

இத்தோவின் மகன் அகினதாபு-மகனயிம் இவனுக்கு உரியது.

சாலமோனின் மகள் பாஸ்மத்தின் கணவன் அகிமாசு-நப்தலி இவனுக்கு உயரியது.

ஊசாயின் மகன் பாகனா-ஆசேர், பெயலோத்து இவனுக்கு உரியவை.

பாருவாகின் மகன் யோசபாத்து-இசக்கார் இவனுக்கு உரியது.

ஏலாவின் மகன் சிமயி-பென்யமின் இவனுக்கு உரியது.

ஊரியின் மகன் கெபேர்-எமேரியரின் மகன் சீகோனுக்கும் பாசானின் மன்னன் ஓகுக்கும் உரியதாய் இருந்த கிலயாது நாடு இவனுக்குரியது.

இவர்களைத் தவிர யூதாப் பகுதிக்கு ஆளுநர் ஒருவர் இருந்தார். யூதா, இஸ்ரயேல் மக்கள் கடற்கரை மணலைப் போல் திரளாய் இருந்தனர்: உண்டு குடித்து மகிழ்ந்திருந்தனர்.

சாலமோன், யூப்பிரத்தீசு, தொடங்கிப் பெலிஸ்தியரின் நாடு வரையிலும், எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த நாடுகளின் மேலும் ஆட்சி செலுத்தி வந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அந்நாடுகளின் மக்கள் சாலமோனுக்குக் கப்பம் கட்டி அடிபணிந்திருந்தனர்.

சாலமோன் வீட்டில் நாள்தோறும் உணவுக்காகத் தேவைப்பட்டவை: முப்பது கலம் மிருதுவான மாவு: அறுபது கலம் நொய்:

கொழுத்த மாடுகள் பத்து: மேய்ச்சலிலிருந்து வந்த மாடுகள் இருபது: ஆடுகள் மறு: கலைமான்கள், சிறுமான்கள், வரையாடுகள், கொழுத்த கோழிகள் ஆகியவை.

திப்சாவிலிருந்து காசா வரையிலும் யூப்பரத்தீசின் மேற்குப் புறத்தில் உள்ள நாடுகள் அனைத்தின் மீதும், அந்த ஆற்றுக்கு மேற்கே இருந்த ஆட்சி செலுத்தி வந்தார். எல்லைப் புறப் பகுதிகள் அனைத்திலும் அமைதி நிலவியது.

சாலமோனின் வாழ்நாளெல்லாம் தாண் முதல் பெயேர்செபா வரையிலும் பரவியிருந்த யூதா, இஸ்ரயேல் மக்கள் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். அவர்களுள் ஒவ்வொருவரும் திராட்சைத் தோட்டங்களையும் அத்திமரங்களையும் உடைமையாகக் கொண்டிருந்தனர்:

சாலமோனுக்கு இருந்த தேர்க் குதிரைஇலாயங்கள் நாற்பதினாயிரம்: குதிரை வீரர்கள் பன்னீராயிரம்.

ஆளுநர்கள் அவரவர் முறைப்படி மாதந்தோறும் அரசர் சாலமோனுக்கும் அவரோடு உணவு அருந்தி வந்த அனைவருக்கும் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுத்து வந்தார்கள். ஒரு குறையும் வைக்கவில்லை.

மேலும், அவர்கள் தேர்க் குதிரைகளுக்கும் கோவேறு கழுதைகளுக்கும் தேவைப்பட்ட வாற்கோதுமையையும் வைக்கோலையும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட முறையின்படி, அவை இருந்த இடத்திற்குக் கொண்டு வந்தார்கள்.

கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் கடற்கரை மணலெனப் பரந்த அறிவாற்றலையும் அளித்திருந்தார்.

கீழை நாட்டினர் அனைவரின் ஞானத்தையும், எகிப்தியரின் எல்லாவகை ஞானத்தையும்விடச் சாலமோனின் ஞானம் சிறந்ததாய் விளங்கிற்று.

எசுராகியனான ஏத்தானைவிட, ஏமான், கல்கோல், தர்தா என்ற மாகோலின் புதல்வர், மற்ற மனிதர் அனைவரையும் விட, அவரே ஞானத்தில் சிறந்து விளங்கினார்.

சுற்றிலுமிருந்த நாடுகள் அனைத்திலும் அவர் புகழ் பரவிற்று. அவர் மூவாயிரம் நீதிமொழிகளை உரைத்தார். அவர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை ஆயிரத்து ஜந்து.

லெபனோனின் கேதுரு முதல் சுவரில் முளைக்கும் ஈசோப்பு வரை உள்ள எல்லா மர வகைகளைக் குறித்தும், நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆகியவற்றைக் குறித்தும் கருத்துரை வழங்கினார்.

சாலமோனின் ஞானத்தைக் கேட்கப் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர் அவரை நாடி வந்தனர். அவரது ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்ற பின்னர் அனைவரும் அவரைத் தேடி வந்தனர்.

அதிகாரம் 5.

தீரின் மன்னர் ஈராம் தாவீதுக்கு அவரது வாழ்நாளெல்லாம் நண்பராயிருந்தார். சாலமோன் தம் தந்தையாகிய தாவீதுக்குப் பின் அரசராகத் திருப்பொழிவு பெற்றுள்ளார் என்று அவர் கேள்விப்பட்டுத் தம் பதரை அவரிடம் அனுப்பினார்.

சாலமோனும் ஈராமிடம் பதனுப்பி, ஆண்டவர் என் தந்தை தாவீதின் எதிரிகளை அவருக்கு அடிபணியச் செய்யும் வரை, எப்பக்கமும் இடையறாது போர் நடந்து வந்தது என்பது உமக்குத் தெரியும்.

இதனால் தம் ஆண்டவராகிய கடவுளின் பெயருக்குக் கோவில் எழுப்ப அவரால் முடியாமல் போயிற்று என்பதும் உமக்குத் தெரியும்.

இப்பொழுதோ, என் கடவுளாகிய ஆண்டவர் என் எல்லைகள் எங்கும் அமைதி நிலவும்படி செய்திருக்கிறார். எனக்கு எதிரியுமில்லை: இடையூறுமில்லை.

ஆகையால், ஆண்டவர் என் தந்தை தாவீதை நோக்கி, “உனக்குப் பின் உன் அரியணையில் நான் அமர்த்தும் உன் மகனே என் பெயருக்குக் கோவில் கட்டுவான்“ என்று சொன்னபடியே, என் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்குக் கோவில் எழுப்ப எண்ணியுள்ளேன்.

எனக்குத் தேவையாயிருக்கும் கேதுரு மரங்களை லெபனோனிலிருந்து வெட்டித்தருமாறு உம் பணியாளருக்குக் கட்டளையிடும். முரம் வெட்டுவதில் சீதோனியரைப் போல் திறமையுள்ளவர் என் குடிமக்களுள் ஒருவரும் இல்லை என்பது உமக்குத் தெரியும். என் பணியானர் உம் பணியாளரோடு சேர்ந்து வேலை செய்வார்கள். உம் பணியாளருக்கு நீர் குறிப்பிடும் கூலியை நான் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லக் சொன்னார்.

ஈராம் சாலமோனின் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து, அந்த ஏராளமான மக்கள் ஆளும்படி, தாவீதுக்கு ஞானமுள்ள ஒருமகனைக் கொடுத்த ஆண்டவர் இன்று வாழ்த்தப் பெறுவாராக! என்றார்.

மேலும் ஈராம் சாலமோனிடம் ஆளனுப்பி, நீர் எனக்குச் சொல்லி அனுப்பியதைக் கேட்டேன். உமது விருப்பப்படியே, கேதுரு மரங்களையும், மக்கு மரங்களையும் அனுப்பி வைக்கிறேன்.

என் பணியாளர் லெபனோனிலிருந்து அவற்றைக் கடற்கரைக்குக் கொண்டு வருவார்கள். தெப்பம் தெப்பமாகக் கட்டி, கடல் வழியாக நீர் குறிக்கும் இடத்தற்கு அனுப்பி, அங்கே அவற்றை அவிழ்த்து உம்மிடம் சேர்ப்பிப்பேன். அவற்றை நீர் பெற்றுக் கொள்ளும். என் வீட்டாருக்கு உணவுப் பொருள் கொடுத்தால் போதும், இதுவே என் விருப்பம் என்று தெரிவித்தார்.

அப்படியே ஈராம் சாலமோனுக்குக் கேதுரு மரங்களையும் மக்கு மரங்களையும் அவர் விரும்பியபடி அனுப்பிக் கொண்டிருந்தார்.

சாலமோன் ஈராம் வீட்டாரின் உணவுக்காக இருபதாயிரம் கலம் கோதுமையும் இருமறு குடம் பிழிந்து வடிகட்டிய ஒலிவ எண்ணெயும் கொடுத்தார். இவ்வாறு ஈராமுக்குச் சாலமோன் ஆண்டுதோறும் கொடுத்து வந்தார்.

ஆண்டவர் தாம் சாலமோனுக்கு வாக்களித்திருந்தபடியே அவருக்கு ஞானத்தைத் தந்தருளினார். ஈராமும் சாலமோனும் நல்லுறவு கொண்டிருந்தனர். இருவரும் உடன்படிக்கை செய்து கொண்டனர்.

அரசர் சாலமோன் இஸ்ரயேல் முழுவதிலிருந்தும் முப்பதாயிரம் பேரைக் கட்டாய வேலைக்கு உட்படுத்தினார்.

ஒவ்வொரு மாதமும் அவர்களுள் பத்தாயிரம் பேரை லெபனோனுக்கு மாற்றி மாற்றி அனுப்பி வைத்தார். அவர்கள் ஒரு மாதம் லெபலோனில் வேலை செய்வார்கள் : இரண்டு மாதம் வீட்டிலிருப்பார்கள். அதோனிராம் கட்டாய வேலையைக் கண்காணித்து வந்தான்.

சுமைபக்க எழுபதானாயிரம் பேரையும், மலை நாட்டில் கல்வெட்ட எண்பதாயிரம் பேரையும் சாலமோன் அமர்த்தியிருந்தார்.

வேலையைக் கவனிக்கச் சாலமோனால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகளைத் தவிர, வேலையாட்களை மேற்பார்வையிட மூவாயிரத்து முந்மறு கண்காணிகளும் இருந்தார்கள்.

அரசரின் கட்டளைப்படி அவருடைய ஆட்கள் கோவிலுக்கு அடித்தளமிடத் தேவையான கற்களைச் செதுக்குவதற்கென மிகப்பெரிய தரமான கற்களை வெட்டினார்கள்.

சாலமோனின் சிற்பிகளும், ஈராமின் சிற்பிகளும் கெபேல் ஊராரும் சேர்ந்து கோவில் கட்டுவதற்கான மரங்களையும் கற்களையும் செதுக்கித் தயார் செய்தனர்.

அதிகாரம் 6.

இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நாடீற்று எண்பதாம் ஆண்டு, சாலமோன் இஸ்ரயேலுக்கு அரசரான நானகாம் ஆண்டு, சிவு என்ற இரண்டாம் மாத்தில் அவர் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டத் தொடங்கினார்.

அரசர் சாலமோன் ஆண்டவருக்கென கட்டின இல்லத்தின் இளவு: நீளம் அறுபது முழம், அகலம் இருபது முழம், உயரம் முப்பது முழம்.

கோவிலது பயத்தின் முன் மண்டபம், கோவிலின் அகலத்திற்குச் சமமாய் இருபது முழ நீளமும், கோவிலுக்கு முன்னால் பத்து முழு அகல, கொண்டிருந்தது.

வெளிப்புறம் குறுகி உட்புறம் விரிந்த பலகணிகளை அவர் கோவிலில் அமைத்தார்.

கோவிலின் சுவரைச் சுற்றி,-அதாவது பயகத்தையும் கருவறையையும் சுற்றி இருந்த-சுவரை ஒட்டி மேடை எழுப்பி அதன் மேல் அடுக்கடுக்காயச் சிற்றறைகளைக் கட்டினார்.

கீழிருந்த அறைகள் ஜந்து முழ அகலமும், நடுவிலிருந்த அறைகள் ஆறு முழ அகலமும், மேலிருந்த அறைகள் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. அந்த அறைகளின் விட்டங்கள் கோவிலின் சுவருக்குள் போகாதபடி அவற்றைத் தாங்குவதற்கென, சுற்றிலும் வெளிப்புறத்தில் ஒட்டுச்சுவர் அமைத்தார்.

செதுக்கி மடித்த கற்களாலேயே கோவில் கட்டப்பட்டதால், அது கட்டப்பட்டபோது, சுத்தியல் உளி போன்ற எந்த இரும்புக் கருவியின் ஒலியும் கோவிலில் கேட்கவில்லை.

கீழறைகளுக்குப் போகும் வாயில் கோவிலின் தென்புறம் இருந்தது. சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், அங்கிருந்து மேல் அறைகளுக்கும் ஏறிச் செல்வர்.

அவர் கேதுரு மர விட்டங்களாலும் பலகைகளாலும் கோவிலுக்கு மச்சுப்பாவி அதைக் கட்டிமுடித்தார்.

கோவிலைச் சுற்றிலும் ஜந்து முழ உயரமாகச் சுற்றுக்கட்டு எழுப்பி, அதைக் கேதுரு மரங்களால் கோவிலோடு இணைத்தார்.

அப்போது ஆண்டவரின் வாக்கு சாலமோனுக்கு உரைக்கப்பட்டது.

அவர், நீ என் நியமங்களின்படி ஒழுகி, என் நீதிச்சட்டங்களின்படி செயலாற்றி, என் கட்டளைகளைக் கடைப்பிடித்து நடந்து வருவாயாகில், நீ கட்டுகிற இக் கோவிலைக் குறித்து நான் உன் தந்தை தாவீதுக்குச் சொன்ன என் வாக்கை உன்னிடம் நிறைவேற்றுவேன்.

இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன்: என் மக்களாகிய இஸ்ரயேலரைக் கைவிடமாட்னே என்றார்.

சாலமோன் கோவிலைக் கட்டிமுடித்தார்.

பின்னர், கோவில் சுவர்களின் உட்புறத்தைக் கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுரு பலகைகளால் அவர் மூடினார்: இவ்வாறு உட்புறம் முழுவதையும் மரத்தால் அவர் மூடினார்: மேலும் கோவிலின் கீழ்த்தளத்தை மக்கு மரப்பலகைகளால் பாவினார்.

கோவிலின் பிற்பகுதியில் இருபது முழ இடத்தை, கீழ்த்தளம் முதல் மேல் மச்சுவரை, கேதுருப் பலகைகளால் தடுத்து, திருத்பயகமாகிய கருவறையை அவர் அமைத்தார்.

அதற்கு முன்னால் நாற்பது முழஇடம் கோவில் பயகமாய் அமைந்தது.

கோவிலின் உட்புறமெங்கும் மூடியிருந்த கோதுருப் பலகைகளில் மொக்கு வடிவங்களும் விரிந்த மலர்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டிருந்தன. உட்புறமெங்கும் முற்றிலும் கேதுருப் பலகை மூடியிருந்ததால் கல்லே காணப்படவில்லை.

ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்கென்று கோவிலின் உட்புறத்தில் கருவறையை அவர் அமைத்திருந்தார்.

கருவறை இருபது முழ நீளமும், இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாய் இருந்தது. அவர் அதனைப் பசும்பொன் தகடுகளால் மூடினார். பீடத்தையும் கேதுருப் பலகைகளால் மூடினார்.

கோவிலின் உட்புறத்தைச் சாலமோன் பசும் பொன்னால் மூடினார்: கருவறைக்கு முன்னால் பொன்னில் பொதியப்பட்ட பொற்சங்கிலிகளைத் தொங்கவிட்டார்.

இவ்வாறு கோவில் முழுவதையும், ஓரிடமும் விடாமல், பொன்னால் அவர் மூடினார்: கருவறைப் பீடம் முழுவதையும் பொன்னால் மூடினார்.

கருவறையில் ஒலிவ மரத்தால் பத்து முழ உயரமான இரு கெருபுகளை அவர் செய்து வைத்தார்.

முதல் கெருபின் ஓர் இறக்கையின் நீளம் ஜந்து முழம், கெருபின் மறு இறக்கையின் நீளமும் ஜந்து முழம். இரு இறக்கை நுனிகளுக்கு இடையே இருந்த பரம் பத்து முழம்.

இரண்டாம் கெருபின் அளவும் இருந்தன. இரண்டாம் கெருபின் அளவும் பத்து முழம். இரு கெருபுகளும் ஒரே அளவாயும் ஒரே வடிவமாயும் இருந்தன.

ஒரு கெருபு பத்து முழ உயரம் இருந்தது.

மற்ற கெருபும் அதே அளவாய் இருந்தது. அவர் அந்தக் கெருபுகளைக் கோவிலின் உட்பகுதியில் வைத் தார். அவற்றின் இறக்கைகள் விரிந்தவாறு இருந்தன. ஒரு கெருபின் இறக்கை ஒரு பக்கத்துச் சுவரையும் மறு கெருபின் இறக்கை மறுபக்கத்துச் சுவரையும் தொட்டுக் கொண்டிருந்தன.

அவர் அக்கெருபுகளையும் பொன்னால் மூடினார்.

கோவிலின் சுவர்களெங்கும் சுற்றிலும், உள்ளும் புறமும் கெருபுகள் ஈச்ச மரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களை அவர் செதுக்கி வைத்தார்.

கோவிலின் பிற்பகுதியிலும் முற்பகுதியிலும் தளத்தைப் பொன்னால் அவர் மூடினார்.

கருவறையின் நுழைவாயிலுக்கு இரட்டைக் கதவையும் ஜங்கோண வடிவத்தில் கதவு நிலைகளையும் ஒலிவ மரத்தால் அவர் செய்து வைத்தார்.

ஒலிவ மரத்தாலான இந்த இரட்டைக் கதவில் கெருபுகள், ஈச்சமரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களை அவர் செதுக்கி வைத்தார். அவற்றைப் பொன்னால் வேய்ந்தார்.

அவர் பயக நுழைவாயிலுக்கு நாற்கோண வடிவத்தில் கதவு நிலைகளை ஒலிவ மரத்தால் செய்து நிறுத்தினார்.

அதன் இரு கதவுகளும் மக்கு மரத்தால் செய்யப்பட்டிருந்தன. மறுகதவும் இரு மடிப்பாய்ச் செய்யப்பட்டிருந்தது.

அவற்றில் கெருபுகள், ஈச்சமரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களைச் செதுக்கி, அவற்றின் அளவுக்கேற்ற பொன் தகட்டால் அவர் மூடினார்.

உள் முற்றதின் சுவர்களை, மூன்று வரிசை செதுக்கி கற்களாலும், ஒரு வரிசை கேதுருக் கட்டைகளாலும் அவர் அமைத்தார்.

நான்காம் ஆண்டு சிவு மாதத்தில் ஆண்டவரின் இல்லத்திற்கு அடித்தளம் இடப்பட்டது.

பதினோராம் ஆண்டு பூல் என்ற எட்டாம் மாதத்தில் கோவிலின் எல்லாப் பகுதிகளும் திட்டமிட்டபடியே கட்டி முடிக்கப்பட்டன. இவ்வாறு கோவிலைக் கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆயின.

அதிகாரம் 7.

சாலமோன் தம் அரண்மனை முழுவதையும் கட்டி முடிக்கப் பதின்மூன்று ஆண்டுகள் ஆயின.

அவர் லெபனோனின் வனம் எனப்பட்ட மாளிகையையும் கட்டினார். அதன் நீளம் மறு முழம்: அகலம் ஜம்பது முழம்: உயரம் முப்பது முழம். நான்கு வரிசையாக கேதுருத் பண்களை நிறுத்தி, அவற்றின் மேல் கேதுரு விட்டங்களைப் பொருத்தி அம்மாளிகையை அவர் கட்டினார்.

வரிசைக்குப் பதினைந்தாக நின்ற நாறபத்தைந்து பண்களின்மேல் அமைந்திருந்த அறைகள், கேதுரு மரங்களாலேயே மச்சுப் பாவபட்டிருந்தன. பலகணிகள் மூன்று வரிசையாக அமைந்திருந்தன.

மூன்று வரிசையிலும் அவை ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன.

எல்லா கதவுகளும் கதவு நிலைகளும் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று வரிசையிலும் அவை ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன.

அவர் பண்-மண்டபம் ஒன்றும் கட்டினார். அதன் நீளம் ஜம்பது முழம்: அகலம் முப்பது முழம். அதற்கு முன் பண்களும் விதானமும் கொண்ட வேறோரு மண்டபமும் அவர் அமைத்தார்.

நீதி வழங்குவதற்கென்று அரியணை மண்டபம் ஒன்றையும் கட்டினார். அது நீதி மண்டபம் எனப்படும். அது தளம் முழுவதும் கேதுருப் பலகைகளால் பாவப் பெற்றிருந்தது.

இம்மண்டபத்திற்குப் பின்புறம் இருந்த முற்றத்தில், அவர் குடியிருப்பதற்காகக் கட்டிய அரண்மனையும் அதே வேலைப்பாடு கொண்டதாய் இருந்தது. சாலமோன் தாம் மணந்து கொண்ட பார்வோனின் மகளுக்கென்று அம்மண்டபத்தைப் போன்ற ஒரு மாளிகையையும் கட்டினார்.

இவையனைத்தும், அளவுக்கேற்ப இருபுறமும் வெட்டிச் செதுக்கிய விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டன. அடித்தளம் முதல் கூரை வரை, வெளிச்சுற்று முதல் பெரு முற்றம் வரை, இவ்வாறே செய்யப்பட்டன.

அடித்தளம் பத்து, எட்டு முழ அரிய பெரிய கற்களால் ஆனது.

அதன் மேல் அளவுக்கேற்பச் செதுக்கப் பெற்ற தரமான கற்களும் கேதுருப் பலகைகளும் பொருத்தப் பெற்றிருந்தன.

பெரு முற்றத்தைச் சுற்றிலும் இருந்த சுவர்கள் மூன்று வரிசை செதுக்கப் பெற்ற கற்களாலும், ஒரு வரிசை கேதுரு கட்டைகளாலும் அமைக்கப் பெற்றிருந்தன. ஆண்டவரின் இல்லத்தின் உள்முற்றமும் கோவிலின் முன்மண்டபமும் அவ்வாறே அமைக்கப்பெற்றிருந்தன.

அரசர் சாலமோன் தீரிலிருந்து ஈராமை வரவழைத்திருந்தார்.

இவர் நப்தலி குலத்தைச் சார்ந்த ஒரு கைம்பெண்ணின் மகன். இவர் தந்தை தீர்நகரத்தவர்: வெண்கல வேலையில் கை தேர்ந்தவர். ஈராமும் எல்லா வகையாக வெண்கல வேலையும் செய்யத்தக்க அறிவுக்கூர்மையும் நுண்ணறிவும் கைத்திறனும் கொண்டிருந்தார். இவர் அரசர் சாலமோனிடம் வந்து, அவர் இட்ட வேலையை எல்லாம் செய்தார்.

அவர் இரண்டு வெண்கலத் பண்களை வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்: சுற்றளவு பன்னிரண்டு முழம்: வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை.

அத்பண்களின் உச்சியல் வைப்பதற்கென்று வெண்கலத்தால் இரு போதிகைகள் வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் ஜந்து முழம்.

அவர் அவ்விரு பண்களின் மேல் இருந்த போதிகைகளுக்கென வலைப்பின்னல்களும் சங்கிலித் தொங்கல்களும் ஏழேழு செய்தார்.

மேலும் அவர் இரண்டு வரிசை மாதுளம் பழ வடிவங்கள் செய்து அவற்றைத் பணின் உச்சியிலுள்ள போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலின் மேல் இரு வரிசையாக அமைத்தார்: மற்றதற்கும் அவ்வாறே செய்தார்.

முன்மண்டபத் பண்களின் உச்சியில் இருந்த போதிகைகள் அல்லி மலர் வடிவாய் இருந்தன. அவற்றின் உயரம் நான்கு முழம்.

மேலும் பண்களின் மேலுள்ள போதிகைகளின் பின்னல்களை ஒட்டிப் புடைத்திருந்த பகுதிகளைச் சுற்றிலும் பணுக்கு இருமறு மாதுளம் பழ வடிவங்கள் இரண்டு வரிசையில் இருந்தன.

இவ்விரு பண்களையும் பயகத்தின் முன்மண்டபத்தின் முன் அவர் நாட்டினார். அவர் தென்புறம் நாட்டிய பணுக்கு யாக்கின் என்றும் வடபுறம் நாட்டிய பணுக்குப் போவாசு என்றும் பெயரிட்டார்.

பண்களின் உச்சியில் அல்லி மலர் வேலைப்பாடு இருந்தது. இவ்வாறு பண்களின் வேலைப்பாடு முடிவுற்றது.

அவர் வாப்புக் கடல் அமைத்தார். அது வட்ட வடிவமாய் இருந்தது. அதன் விட்டம் பத்து முழம்: உயரம் ஜந்து முழம்: சுற்றளவு முப்பது முழம்.

அதன் விளிம்பைச் சுற்றிலும் கீழே முழத்திற்குப் பத்தாக மொக்கு வடிவங்கள் செய்யப்பட்டிருந்தன. இரு வரிசையில் இருந்த மொக்குகளும் அந்த வார்ப்புக் கடலோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தன.

அது பன்னிருகாளை வடிவங்களின்மேல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும், மூன்று மேற்கையும், மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கி இருந்தன. அவற்றின்மேல் வார்ப்புக்கடல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் பின்புறங்கள் உள்நோக்கி இருந்தன.

வார்ப்புக் கடலின் கன அளவு நான்கு விரற்கடை: அதன் விளிம்பு பானையின் விளிம்பைப் போலவும் அல்லி மலரைப் போலவும் விரிந்து இருந்தது. அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும்.

மேலும் அவர் பத்து வெண்கலத் தள்ளுவண்டிகளைச் செய்தார். ஒவ்வொரு வண்டியும் நான்கு முழ நீளமும், நான்கு முழ அகலமும், மூன்று முழ உயரமும் கொண்டது.

வண்டிகளின் அமைப்ப பின்வருமாறு: அவற்றுக்குக் குறுக்குக் கம்பிகள் இருந்தன. அவை சட்டங்களின் மேல் இணைக்கப்பட்டிருந்தன.

சட்டங்களில் இணைக்கப் பெற்றிருந்த கம்பிகளின்மேல் சிங்கங்கள், காளைகள், கெருபுகள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் மேலும் கீழும், சட்டங்களின் மேல் கைவினைத் தோரணங்கள் இருந்தன.

ஒவ்வொரு வண்டிக்கும் நான்கு வெண்கலச் சக்கரங்களும், வெண்கல அச்சுகளும், அதன் நான்கு மூலைகளிலும் தொட்டியைத் தாங்க நான்கு முட்டுகளும் இருந்தன. அந்த முட்டுகள் ஒவ்வொன்றைச் சுற்றிலும் தோரணங்கள் பதிக்கப் பெற்றிருந்தன.

அதன் வாய்ப்பகுதி ஒரு வளையத்தினுள் ஒரு முழ உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அது வட்டமாகவும், ஒன்றரை முழ ஆழம் உடையதாகவும் ஒரு தாங்கியைப் போல் செய்யப்பட்டிருந்தது. வாய்ப்பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் இருந்தன. அதன் குறுக்குக் கம்பிகள் வட்டமாக இல்லாமல், சதுரமாக அமைக்கப்பட்டிருந்தன.

நான்கு சக்கரங்களும் குறுக்குக் கம்பிகளின் கீழே இருந்தன. சக்கரங்களின் அச்சுகள், வண்டியுடன் ஒரே வார்ப்பாய் இருந்தன. சக்கரங்களின் உயரம் ஒன்றரை முழம்.

சக்கரங்கள் தேர்ச்சக்கரங்கள் போல் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் அச்சுகள், வட்டைகள், ஆரக்கால்கள், குடங்கள் ஆகியவை வார்ப்பால் ஆனவை.

வண்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு பிடிகள் இருந்தன.

அவையும் வண்டியும் ஒரே வார்ப்பாய் இருந்தன. ஒவ்வொரு வண்டியின் மேற்பகுதியிலும் அரை முழ உயரமான வட்ட விளிம்பு இருந்தது. வண்டியின் மேற்பகுதியில் அதன் பிடிகளும் குறுக்குக் கம்பிகளும் ஒரே வார்ப்பாய் இருந்தன.

அதன் பிடிகள், குறுக்குக் கம்பிகள் ஆகியவற்றின் மேல் கெருபுகள், சிங்கங்கள், ஈச்ச மரங்கள் ஆகியவற்றை அவற்றுக்குரிய இடத்தில் சுற்றுத் தோரணங்களோடு அவர் செதுக்கினார்: இவ்வாறு பத்து வண்டிகள் செய்தார்.

இதே முறையில் பத்து வண்டிகளையும் அவர் செய்தார்: அவை யாவும் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரே வடிவமும் கொண்டனவாய் இருந்தன.

அவர் பத்து வெண்கலத் தொட்டிகளைச் செய்தார். ஒவ்வொரு தொட்டியும் நாற்பது குடம் கொள்ளும். ஒவ்வொன்றின் அகலமும் நான்கு முழம், வண்டிக்கு ஒரு தொட்டியாக பத்து வண்டிகளிலும் தொட்டிகள் இருந்தன.

அவர் ஜந்து வண்டிகளைக் கோவிலின் தென்புறத்திலும் ஜந்து வண்டிகளைக் கோவிலின் வடபுறத்திலும் நிறுத்தினார். ஆனால் வார்புக் கடலைத் தென்கிழக்கு மூலையில் வைத்தார்.

பின்னர் கொப்பரைகள், கரண்டிகள், கிண்ணங்கள் ஆகியவற்றை ஈராம் செய்தார். ஆண்டவரின் இல்லத்திற்காக அரசர் சாலமோன் பணித்தபடி ஈராம் செய்து முடித்த அனைத்துப் பணிகள்:

இரு பண்கள், பண்களின் உச்சியில் வைக்க இரு கிண்ணப் போதிகைகள்: அவற்றை மூட இரு வலைப் பின்னல்கள்:

நாடீறு மாதுளம் பழ வடிவங்கள். இவை ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் இரு வரிசைகளாக அமைக்கபட்டுத் பண்களின் உச்சியிலிருந்த கிண்ணப் போதிகைகளை மூடியிருந்தன.

பத்து வண்டிகள், அவற்றின் மேல் வைக்கப் பத்துப் தொட்டிகள்.

வார்ப்புக் கடல் ஒன்று: அதைத் தாங்கப் பன்னிரு காளை வடிவங்கள்.

கொப்பரைகள், கரண்டிகள், கிண்ணங்கள். அரசர் சாலமோன் கட்டளைப்படி ஆண்டவரின் இல்லத்திற்காக ஈராம் செய்த துணைக் கலன்கள் எல்லாம் பளபளக்கும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன.

அரசர் இவற்றை யோர்தானுக்கடுத்த சமவெளியில் சுக்கோத்துக்கும் சாரத்தானுக்கும் நடுவேயுள்ள களிமண் களத்தில் வார்ப்பித்தார்.

இந்தத் துணைக்கலன்கள் ஏராளமாய் இருந்தமையால், சாலமோன் அவற்றை எடை பார்க்கவில்லை. வெண்கலத்தின் எடையும் கணிக்கப்படவில்லை.

மேலும் சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்காகப் பின்வரும் பொருள்கள் அனைத்தையும் செய்தார்: பொன் பலிபீடம், திருமுன்னிலை அப்பத்திற்கான பொன் மேசை:

கருவறையின் முன்னே, தென்புறம் ஜந்தும் வடபுறம் ஜந்துமாக வைக்க, பசும்பொன் விளக்குத் தண்டுகள்: பொன்னாலான மலர் வடிவங்கள், அகல்கள், குறடுகள்:

பசும் பொன்னாலான மலர்க் குவளைகள், அணைப்பான்கள், கிண்ணங்கள், தட்டுகள், தீச்சட்டிகள்: உட்கோவிலின் திருத்பயகத்தின் கதவுகளுக்கும் கோவிலின் பயகத்தின் கதவுகளுக்கும் வேண்டிய பொன் முளைகள்.

இவ்வாறு, அரசர் சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்காகச் செய்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. மேலும் சாலமோன் தம் தந்தை தாவீது அர்ப்பணித்திருந்த வெள்ளி, பொன், துணைக்கலன்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து ஆண்டவரின் இல்லத்துக் கருவூலத்தில் வைத்தார்.

அதிகாரம் 8.

பின்னர், சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டுவர விரும்பினார். அதற்காக அவர் இஸ்ரயேலின் பெரியோரையும் எல்லாக் குலத்தவர்களையும் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களையும் எருசலேமிற்குத் தம்மிடம் வரும்படி அழைத்தார்.

அதற்கிணங்க, அவர்கள் அனைவரும் ஏழாம் மாதமாகிய ஏத்தானிம் மாதத்தின் பண்டிகையின் போது, அரசர் சாலமோன் முன் கூடினர்.

இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் வந்தனர். குருக்கள் பேழையைத் பக்கிக் கொண்டனர்.

ஆண்டவரின் பேழை, சந்திப்புக் கூடாரம், கூடாரத்தின் பய கலன்கள் அனைத்தையும் குருக்களும் லேவியரும் சுமந்துசென்றனர்.

அரசர் சாலமோனும், அவரிடம் வந்து குழுமிய இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும், எண்ணவோ கணக்கிடவோ முடியாத அளவு திரளான ஆடுகளையும் மாடுகளையும் பேழைக்கு முன்னால் பலியிட்டனர்.

பின்னர், குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கோவில் கருவறையாகிய திருத்பயகத்தில் அதற்குரிய இடத்தில் கெருபுகளின் இறக்கைகளின் கீழே கொண்டு வந்து வைத்தனர்.

அக்கெருபுகள் பேழை இருக்கும் இடத்தில் கங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, பேழையையும், அதன் தண்டுகளையும் மூடியவாறு இருந்தன.

தண்டுகள் நீளமாய் இருந்ததால், அவற்றின் முனைகள் கருவறைக்கு முன்னுள்ள பயகத்திலிருந்து காணக் கூடியவையாய் இருந்தன: ஆனால், வெளியினின்று தெரியாது. இன்றுவரை அந்தத் தண்டுகள் அங்கேதான் இருக்கின்றன.

இரு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் பேழைக்குள் இல்லை: இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறியபொழுது அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட ஓரேபு மலையில் மோசே அதற்குள் வைத்தவை அவை.

குருக்கள் பயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று.

அம்மேகத்தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்க இயலவில்லை. ஏனெனில் ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பிற்று.

அப்பொழுது சாலமோன், ஆண்டவரே! நீர் கரிய மேகத்தில் உறைவதாகக் கூறினீர்.

நீர் என்றென்னும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை உமக்காக நான் கட்டியுள்ளேன் என்றார்.

பின்னர் அரசர் மக்கள் பக்கம் திரும்பி, இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசி வழங்கினார். அப்பொழுது இஸ்ரயேல் சபையார் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர் உரைத்தது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! அவர் என் தந்தை தாவீதுக்கு வாயால் உரைத்ததைக் கையால் செய்து முடித்தார்.

என் மக்களாகிய இஸ்ரயேலை எகிப்திலிருந்து அழைத்து வந்த நாள் முதல் இன்றுவரை, என் பெயர் விளங்கும்படி ஒரு கோவிலைப் கட்டுவதற்காக, இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களுக்குச் சொந்தமான எந்த நகரையும் நான் தேர்ந்து கொள்ளவில்லை. ஆனால் தாவீதாகிய உன்னை என் மக்களாகிய இஸ்ரயேலை ஆளும்படி தேர்ந்து கொண்டேன்.

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்குக் கோவில் கட்டவேண்டும் என்ற எண்ணம் என் தந்தை தாவீதின் உள்ளத்தில் இருந்தது.

ஆயினும் ஆண்டவர் என் தந்தை தாவீதை நோக்கி, என் பெயருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் இருக்கிறது. அது நல்லதுதான்,

ஆயினும் நீ அக்கோவிலைக் கட்டபோவதில்லை. உனக்குப் பிறக்கும் உன் மகனே என் பெயருக்கு அக்கோவிலைக் கட்டுவான் என்றார்.

இவ்வாறு, ஆண்டவர் தாம் உரைத்த வாக்கை இப்போது நிறைவேற்றியுள்ளார். ஆண்டவர் சொன்னடியே நான் என் தந்தை தாவீதின் இடத்திற்கு உயர்ந்து, இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்துள்ளேன். மேலும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு இந்தக் கோவிலையும் கட்டியுள்ளேன்.

இதனுள் ஆண்டவர் நம் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த போது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை வைக்க, ஒரு தனி இடத்தையும் ஏற்பாடு செய்துள்ளேன்.

பின்னர், சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி நின்று கொண்டு, இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையில் வானத்திற்கு நேரே தம் கைகளை உயர்த்தி

அவர் மன்றாடியது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை. உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உமது உடன்படிக்கையின்படி தவறாது பேரன்பு காட்டி வருகிறீர்.

நீர் உம் அடியானாகிய என் தந்தை தாவீதுக்கு உரைத்ததை நிறைவேற்றினீர். அன்று உம் வாயால் உரைத்ததை இன்று கையால் செய்து முடித்தீர்.

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! நீர் உம் அடியானாகிய என் தந்தை தாவீதை நோக்கி, நீ என்னை மறவாமல் நடந்து கொண்டதுபோல் உன் பிள்ளைகள் என்னை மறவாது தக்க நெறியில் நடப்பார்களேயாகில், இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க அவர்களுள் ஒருவன் இல்லாமல் போகமாட்டான் என்று சொன்னதை நிறைவேற்றும்!

இஸ்ரயேலின் கடவுளே! உம் அடியானாகிய என் தந்தை தாவீதுக்கு நீர் சொன்ன உமது வார்த்தை நிலை பெறுவதாக!

கடவுள் உண்மையில் இந்த மண்ணுலகில் தங்கியிருப்பாரா? வானமும் வான மண்டலங்களும் உம்மைக் கொள்ள இயலாதிருக்க நான் கட்டியுள்ள இக்கோவில் எப்படி உம்மைக் கொள்ளும்?

என் கடவுளாகிய ஆண்டவரே! உம் அடியான் செய்கிற வேண்டுதலையும் விண்ணபத்தையும் கேட்டருளும்: உம் அடியான் இன்று உம் முன்னிலையில் எழுப்பும் கூக்குரலுக்கும் செய்யும் வேண்டுதலுக்கும் செவிசாய்த்தருளும்!

என் பெயர் இவ்விடத்தில் விளங்கும் என்று இக்கோவிலைப்பற்றி நீர் சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக!

உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் இவ்விடத்தை நோக்கிச் செய்கிற உம் மக்கள் இஸ்ரயேலர் வேண்டுதலுக்கும் செவிசாய்ப்பீராக! உமது உறைவிடமாகிய விண்ணப்பத்திலிருந்து கேட்டு அருள்வீராக! கேட்டு மன்னிப்பு அருள்வீராக!

ஒருவர் தமக்கு அடுத்திருப்பவர்க்கு எதிராகப் பாவம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்தக் கோவிலில் உமது பீடத்தின் முன் ஆணையிடுமாறு கொண்டு வரப்பட்டால்,

விண்ணிலிருந்து நீர் அதைக் கேட்டுச் செயல்பட்டு உமது அடியாருக்குத் தீர்ப்பு வழங்குவீராக! தீயவரை தீயவராகக் கணித்து, அதற்குரிய பழியை அவர் தலைமேல் சுமத்துவீராக! நேர்மையானவருக்கு அவரது நேர்மைக்குத் தக்கவாறு, அவர் நேர்மையாளர் எனத் தீர்ப்பளிப்பீராக!

உம் மக்களாகிய இஸ்ரயேலர் உமக்கு எதிராய்ப் பாவம் செய்ததனால், எதிரியிடம் தோலிவியுற்றுப் பின் உம்மிடம் திரும்பி வந்து, உம் திருப்பெயரை ஏற்றுக்கொண்டு இக்கோவிலில் உம்மை நோக்கி வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் செய்தால்,

விண்ணிலிருந்து நீர் அவர்களுக்கு செவிசாய்த்து உம் மக்களாகிய இஸ்ரயேலரின் பாவத்தை மன்னித்து, அவர்களின் மூதாதையர்க்கென நீர் அளித்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பி வரச் செய்வீராக!

அவர்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்ததனால், வானம் அடைப்பட்டு மழை பெய்யாதிருக்கும்போது அவர்கள் இவ்விடத்தை நோக்கி வேண்டுதல் செய்து, உம் பெயரை ஏற்றுக் கொண்டு, நீர் அனுப்பும் துன்பத்தினால் பாவம் செய்வதிலிருந்து மனம் மாறினால்,

விண்ணிலிருந்து நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து, உம் அடியாரும் உம் மக்களாகிய இஸ்ரயேலரும் செய்த பாவத்தை மன்னிப்பீராக! அவர்கள் நநடக்க வேண்டிய நல்வழியை அவர்களுக்குக் காட்டுவீராக! நீர் உம் மக்களுக்கு உரிமைச் சொத்தாக அளித்த நாட்டில் மழை பொழியச் செய்வீராக!

நாட்டில் பஞ்சம், கொள்ளை நோய் உண்டாகும் போதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, தத்துக்கிளி ஆகியவற்றால் பயிர் அழிவுறும் போதும், நாட்டின் எந்த நகரையாவது எதிரிகள் முற்றுகையிடும் போதும், கொள்ளை நோயோ வேறெந்த நோயோ வரும் போதும்,

உம் மக்களாகிய இஸ்ரயேலருள் யாராவது மனம் நொந்து, இக்கோவிலை நோக்கித் தம் கைகளை உயர்த்திச் செய்யும் எல்லா வேண்டுதலுக்கும், விண்ணப்பத்திற்கும்,

உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் செவி சாய்த்து மன்னிப்பீராக! ஒவ்வொருவரின் உள்ளத்தையும் அறியும் நீர் அவரவர் செயல்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பீராக! ஏனெனில், நீர் ஒருவரே எல்லா மானிடரின் உள்ளங்களையும் அறிபவர்.

இதனால் அவர்கள் தங்கள் மூதாதையருக்கு நீர் அளித்த நாட்டில் தம் வாழ்நாள் எல்லாம் உமக்கு அஞ்சி நடப்பார்கள்.

இஸ்ரயேல் மக்களைச் சாராத அன்னியர் ஒருவர் உமது பெயரை முன்னிட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து,

மாண்புமிக்க உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றல் மிகுந்த உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு வந்து, இந்தக் கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால்,

உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்குச் செவி சாய்த்து அந்த அன்னியர் கேட்பதை எல்லாம் அருள்வீராக! இதனால் உலகின் மக்கள் எல்லோரும் உம் மக்களாகிய இஸ்ரயேலரைப் போல், உமது பெயரை அறிந்து உமக்கு அஞ்சி வாழ்வார்கள். மேலும் நான் எழுப்பியுள்ள இக்கோவிலில் உமது பெயர் போற்றப்படுவதை உணர்வார்கள்.

உம் மக்கள் தங்கள் பகைவர்களோடு போரிடச் செல்லும் பொழுது, நீர் காட்டும் வழியில் அவர்கள் செல்கையில் நீர் தேர்ந்து கொண்ட இந்நகரையும் உமது பெயருக்கு நான் காட்டியுள்ள இக்கோவிலையும் நோக்கி ஆண்டவராகிய உம்மிடம் வெண்டினால்,

விண்ணிலிருந்து நீர் அவர்களுடைய வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து அவர்களுக்கு நீதி வழங்குவீராக!

அவர்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தால்-பாவம் செய்யாத மனிதர் ஒருவருமில்லை-நீர் அவர்கள்மேல் சினம் கொண்டு அவர்களை எதிரிகளிடம் ஒப்படைக்க, அவர்கள் தொலையிலோ அருகிலோ இருக்கும் எதிரியின் நாட்டுக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டால்,

அப்படிக் கொண்டு செல்லப்பட்ட நாட்டில் உணர்வு பெற்று, மனம் மாறி நாங்கள் பாவம் செய்தோம்: நெறி தவறினோம்: தீய வழியில் நடந்தோம் என்று விண்ணப்பம் செய்தால்,

தங்களைக் கைதிகளாகக் கொண்டு சென்ற பகைவரின் நாட்டில் தங்கள் முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உம்மிடம் திரும்பி வந்து, நீர் அவர்கள் மூதாதையர்க்கு அளித்த தங்கள் நாட்டையும், நீர் தேர்ந்து கொண்ட இந்நகரையும், உமது பெயருக்கு நான் கட்டியுள்ள இந்தக் கோவிலையும் நோக்கி நின்று, உம்மிடம் வேண்டுதல் செய்தால்,

உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவர்களுடைய வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து அவர்களுக்கு நீதி வழங்குவீராக! உமக்கு எதிராகப் பாவம் செய்த உம் மக்களை மன்னிப்பீராக! உமக்கு எதிராக அவர்கள் செய்த எல்லாத் தவறுகளையும் மன்னிப்பீராக!

அவர்களைக் கைதிகளாகக் கொண்டு சென்றவர்களின் பார்வையில் நீர் அவர்களுக்குக் கருணை காட்டும்! இதனால் அவர்களும் உம் மக்களுக்குக் கருணை காட்டுவார்களாக!

ஏனெனில் அவர்கள் உம்முடையவர்கள், உமது உரிமைச் சொத்து. அவர்களை எகிப்து என்ற இரும்பு உலைக்களத்தினின்று நீர் அழைத்து வந்தீர்!

உம் அடியானின் விண்ணப்பத்திற்கும்: உம் மக்களாகிய இஸ்ரயேலரின் விண்ணப்பத்திற்கும், அவர்கள் உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம் நீர் உம் அவர்களுக்குச் செவிசாய்க்கும்படி உம் கண்கள் திறந்திருப்பதாக!

ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! நீர் எம் மூதாதையரை எதிப்திலிருந்து அழைத்து வந்தபோது, உம் ஊழியர் மோசேயைக் கொண்டு நீர் சொன்னபடியே செய்திருக்கிறீர்! ஊமது உரிமைச் சொத்தாக இருக்குமாறு உலகின் எல்லா இனத்தவரிடமிருந்தும் அவர்களையே நீர் பிரித்தெடுத்தீர்!

இவ்வாறு சாலமோன் வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி, முழந்தாளிட்டு ஆண்டவரிடம் இந்த வேண்டுதல், விண்ணப்பத்தை எல்லாம் சொல்லி, மன்றாடினார். வேண்டி முடித்தபின் ஆண்டவரது பலிபீடத்தின்முன் எழுந்துநின்றார்.

மேலும் அவர் இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசி வழங்கி உரத்த குரலில் சொன்னது:

தாம் வாக்களித்தபடியெல்லாம் தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு அமைதியை அருளிய ஆண்டவர் போற்றி! போற்றி! அவர் தம் ஊழியர் மோசேயின் மூலம் கொடுத்த நல்வாக்குகள் அனைத்தும் நிறைவேறின: ஒன்றேனும் பொய்க்கவில்லை.

நம் கடவுளாகிய ஆண்டவர் நம் மூதாதையரோடு இருந்தது போல, நம்மோடும் இருப்பாராக! நம்மைக் கைவிடாமலும் நம்மை விட்டுப் பிரியாமலும் இருப்பாராக!

நம் மூதாதையருக்கு அவர் கொடுத்த விதிமுறைகளையும் நியமங்களையும், நீதிச் சட்டங்களையும் நாமும் கடைப்பிடித்து, அவர் வகுத்த வழிகளிலெல்லாம் நடக்கும் வண்ணம் நம் உள்ளங்களைத் தம் பக்கம் ஈர்ப்பாராக!

ஆண்டவர் முன்னிலையில் நான் செய்த இவ்விண்ணப்பம் இரவும் பகலும் நம் கடவுளாகிய ஆண்டவர் அருகில் இருப்பதாக! அவர் அடியேனுக்கும் நம் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் நாள்தோறும் தேவைக்கேற்ப நீதி வழங்குவாராக!

ஆண்டவரே! கடவுள்-வேறு எவரும் இல்லை என்று உலகின் எல்லா மக்களும் அறிவார்களாக!

நீங்களும் இன்றுபோல் அவருடைய நியமங்களின்படி நடக்கவும், விதி முறைகளைக் கடைப்பிடிக்கவும், நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உங்கள் உள்ளம் முற்றிலும் பணிந்திருப்பதாக!

பின்பு அரசரும் அவருடன் இருந்த இஸ்ரயேலர் அனைவரும் ஆண்டவர் முன்னிலையில் பலி செலுத்தினர்.

சாலமோன் ஆண்டவர் முன்னிலையில் இருபத்திரண்டாயிரம் காளைகளையும், ஓர் இலட்சத்து இருபதினாயிரம் ஆடுகளையும் நல்லுறவுப் பலியாகச் செலுத்தினார். இவ்வாறு செய்து, அரசரும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரின் இல்லத்தை அர்ப்பணம் செய்தனர்.

ஆண்டவர் திருமுன் இருந்த வெண்கலப் பலிபீடம் எரிபலிகளையும் உணவுப் படையல்களையும் நல்லுறவுப் பலிகளின் கொழுப்பையும் கொள்ளமாட்டாமல் மிகச் சிறியதாய் இருந்தது. எனவே அரசர் ஆண்டவரது இல்லத்தின் முன்னேயுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை இந்த நாளன்று திருநிலைப்படுத்தி அங்கே எரிபலிகளையும் உணவுப் படையல்களையும் நல்லுறவுப்பலிகளின் கொழுப்பையும் படைத்தார்.

அந்த நாள்களில் சாலமோனும் இலெபோயாமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் ஓடை வரையுள்ள பகுதிகளிலிருந்து வந்த இஸ்ரயேல் சபையார் அனைவரும், அவரோடு சேர்ந்து ஆண்டவர் முன்னிலையில் விழாக்கொண்டாடினர். இந்த விழா ஏழு நாள்கள் கொண்டாடப்பட்டது.

எட்டாம் நாளன்று அவர் மக்களை அனுப்பி வைத்தார். அவர்கள் அரசரை வாழ்த்தி ஆண்டவர் தம் அடியார் தாவீதுக்கும் தம் மக்கள் இஸ்ரயேலருக்கும் செய்தருளிய எல்லா நன்மைகளையும் நினைத்து மகிழ்ச்சியோடும் உள்ளத்து உவகையோடும் தம் இல்லங்களுக்குத் திரும்பினார்கள்.

அதிகாரம் 9.

சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் அரச மாளிகையையும் இன்னும் கட்ட விரும்பிய, எல்லாவற்றையும் கட்டி முடித்த பின்,

ஆண்டவர் கிபயோனில் சாலமோனுக்குக் காட்சியளித்தது போல், மீண்டும் அவருக்குக் காட்சியளித்தார்.

ஆண்டவர் அவரிடம் சொன்னது: என் முன்னிலையில் நீர் செய்த வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டேன். நீ கட்டின இக்கோவிலில் எனது பெயர் என்றென்றும் விளங்கும்படி அதைப் புனிதமாக்கினேன். என் கண்களும் என் இதயமும் எந்நாளும் அங்கே இருக்கும்.

உன் தந்தை தாவீதைப் போல் மனத்பய்மையுடனும், நேர்மையுடனும் நான் கட்டளையிட்ட அனைத்தையும் கடைப்பிடித்து, நான் கொடுத்த நியமங்களுக்கும் நீதிச் சட்டங்களுக்கும் ஏற்ப என் முன்னிலையில் நீ நடப்பாயாகில்,

இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க ஒருவன் இல்லாமல் போகமாட்டான் என்று உன் தந்தை தாவீதுக்கு நான் சொன்னபடி, இஸ்ரயேலின் மீது உன் ஆட்சி என்றென்றும் நிலைக்குமாறு செய்வேன்.

ஆனால், நீயோ உன் பிள்ளைகளோ என்னைவிட்டு விலகி, நான் உங்களுக்கு இட்ட விதிமுறைகளையும் நியமங்களையும் பின்பற்றாமல், வேறு வழியில் சென்று, வேற்றுத் தெய்வங்களை வணங்கி, அவற்றுக்கு ஊழியம் செய்தால்,

நான் இஸ்ரயேலருக்கு அளித்துள்ள நாட்டிலிருந்து அவர்களை விரட்டி விடுவேன். என் பெயர் விளங்க நான் புனிதமாக்கின இக்கோவிலை என் பார்வையில் இராதபடி தகர்த்து விடுவேன். அப்பொழுது இஸ்ரயேல் மற்றெல்லா மக்களினங்களிடையே பழமொழியாகவும் இழுக்குச் சொல்லாகவும் அமையும்.

இக்கோவில் இடிந்த கற்குவியல் ஆகும். அதைக் கடந்து செல்லும் எவனும் திகிலடைவான்: சீழ் க்கையடித்து இகழ்ச்சியாய்ப்பேசி ஆண்டவர் இந்நாட்டுக்கும் இக்கோவிலுக்கும் இப்படிச் செய்தது ஏன்? என்று கேட்பான்.

அதற்கு மற்றவர்கள், இவ்வினத்தார் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த தங்கள் கடவுளாகிய ஆண்டவரை விட்டு விலகி வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு வணங்கி அவற்றுக்கு ஊழியம் செய்தனர். எனவே, ஆண்டவர் இத்துன்பமெல்லாம் அவர்களுக்கு வரச் செய்திருக்கிறார் என்பார்கள்.

ஆண்டவரின் இல்லம், அரச மாளிகை ஆகிய இவ்விரண்டையும் சாலமோன் கட்டி முடிக்க இருபது ஆண்டுகள் ஆயின.

இந்த வேலைகளுக்குத் தேவைப்பட்ட கேதுரு மரங்களையும் மக்கு மரங்களையும் பொன்னையும், தீரின் மன்னன் ஈராம் சாமோனுக்குக் கொடுத்திருந்தார். அரசர் சாலமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது ஊர்களை ஈராமுக்கு வழங்கினார்.

தமக்குச் சாலமோன் தந்த ஊர்களைப் பார்வையிட ஈராம் தீரிலிருந்து புறப்பட்டு வந்தார்.

அவை அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர், சகோதரரே! இந்த ஊர்களைத் தானா நீர் எனக்குக் கொடுப்பது? என்றார். ஆகையால் அந்தப் பகுதி காபூல் என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது.

ஈராம் நாலாயிரத்து எண்ணூறு கிலோ பொன்னை அரசருக்கு அனுப்பியிருந்தார்.

அரசர் சாலமோன் கட்டாய வேலைத் திட்டத்தின்மூலம் ஆண்டவரின் இல்லம், தம் மாளிகை, கீழைத் தாங்குதளம், எருசலேமின் மதில், மெகிதோ, கெசேர் ஆகியவற்றைக் கட்டினார்.

இந்தக் கெசேர் எகிப்திய மன்னன் பார்வோனால் சாலமோனுக்குக் கொடுக்கப்பட்ட நகர். முன்பு அம்மன்னன் படையெடுத்து வந்து அந்நகரைப் பிடித்து, அதைத் தீக்கிரையாக்கி, அதில் குடியிருந்த கானானியரைக் கொன்றிருந்தான். அவன் தன் மகளைச் சாலமோனுக்கு மண முடித்துக் கொடுத்துபோது, அந்த இடத்தைச் சீர்வரிசையாகக் கொடுத்திருந்தான்.

சாலமோன் கெசேரைப் புதுப்பித்துக் கட்டினார். மேலும் கீழைப் பெத்கோரோனையும்,

பாலாத்து, பாலை நிலத்தில் உள்ள தாமார் ஆகிய நகர்களையும் கட்டினார்.

பண்டகசாலை நகர்கள், தேர்ப்படை நகர்கள், குதிரை வீரர் நகர்கள் ஆகியவற்றையும் கட்டினார். மேலும் எருசலேமிலும் லெபனோனிலும் தம் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடெங்கும் தமக்கு விருப்பமான எல்லாவற்றையும் சாலமோன் கட்டினார்.

இஸ்ரயேல் மக்கள் அல்லாத வேற்று இனத்தவரான எமோரியர், இத்தியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர், ஆகியோரில் விடப்பட்டிருந்தோர்-

அதாவது, இஸ்ரயேல் மக்களால் முற்றிலும் அழிக்கப்பட இயலாமல் நாட்டில் விடப்பட்டிருந்தோரின் புதல்வர்கள்-சாலமோனின் அடிமை வேலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இன்றும் அவர்கள் அவ்வாறே இருக்கின்றனர்.

ஆனால், இஸ்ரயேல் மக்களுள் ஒருவரையும் சாலமோன் அடிமையாக்கவில்லை: அவர்கள் போர்வீரர், மெய்க்காப்பாளர், மேற்பார்வையாளர், படைத்தலைவர், தேர்ப்படைவீரர், குதிரைப்படை வீரர் ஆகியோராய் அமர்த்தப்பட்டனர்.

சாலமோனின் வேலைகள் அனைத்தையும், அவற்றில் ஈடுபட்டிருந்த வேலையாள்களையும் கண்காணிப்பதற்கென்று ஜந்மற்றைம்பது பேர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டனர்.

தாவீதின் நகரை விட்டுப் பார்வோனின் மகள் சென்று, சாலமோன் அவளுக்கெனக் கட்டியிருந்த மாளிகையில் குடிபுகுந்தாள். அதற்குப் பின் அவர் கீழைத் தாங்கு தளத்தைக் கட்டினார்.

சாலமோன் கோவிலைக் கட்டி முடித்த பின்: ஆண்டவருக்காகக் கட்டியிருந்த பலிபீடத்தின் மேல் ஆண்டுக்கு மும்முறை எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி, ஆண்டவர் முன்னிலையில் பபம் காட்டி வந்தார்.

அரசர் சாலமோன் ஏதோம் நாட்டில் செங்கடல் கரையிலுள்ள ஏலோத்திற்கு அருகில் உள்ள எட்சியோன் கெபேரில் கப்பல்களைக் கட்டினார்.

அக்கப்பல்களில் சாலமோனின் பணியாளருக்குத் துணையாயிருக்கத் தேர்ச்சி மிகுந்த மாலுமிகளை ஈராம் அனுப்பி வைத்தார்.

இவர்கள் ஓபிருக்குச் சென்று, அங்கிருந்து ஏறத்தாழ பதினேழாயிரம் கிலோ பொன்னைச் சாலமோன் அரசரிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.

அதிகாரம் 10.

ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, சாலமோன் அடைந்திருந்த புகழைப் பற்றிச் சேபா நாட்டு அரசி கேள்வியுற்றுக் கடினமான கேள்விகள் மூலம் அவரைச் சோதிக்க வந்தார்.

அவர் பரிவாரங்களோடும், நறுமணப் பொருள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள், ஆகியவற்றைச் சுமந்துவந்த ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்து சேர்ந்தார். அவர் சாலமோனிடம் தம் மனத்திலிருந்த கேள்விகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார்.

சாலமோன் அவருடைய கேள்விகளுக்கெல்லாம் விடை கூறினார். அவர் கேட்டவற்றுள் பதிலளிக்க இயலாதபடி எதுவும் அரசருக்குப் புதிராகத் தோன்றவில்லை.

சேபாவின் அரசி, சாலமோனுக்கிருந்த பல்வகை ஞானம், அவர் கட்டியிருந்த அரண்மனை,

அவர் உண்டு வந்த உணவு வகைகள், அவருடைய அலுவலரின் வரிசைகள், பணியாளர்களின் சுறுசுறுப்பு, அவர்களுடைய சீருடை, பானம் பரிமாறுவோரின் திறமை, ஆண்டவரின் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் ஆகியவற்றைக் கண்டு பேச்சற்றுப் போனார்.

அவர் அரசரை நோக்கிக் கூறியது: உம்முடைய செயல்களையும் ஞானத்தையும் பற்றி என் நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே எனத் தெரிகிறது.

நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை, அச்செய்திகளை நம்பவில்லை. இப்பொழுதோ இங்குள்ளவற்றில் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லையென அறிகிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விட, உம் ஞானமும் செல்வமும் மிகுதியாய் இருக்கின்றன.

உம்முடைய மனைவியர் நற்பேறு பெற்றோர்! எப்போதும் உமக்குப் பணிபுரிந்து உம்முடைய ஞானம் நிறைந்த மொழிகளைக் கேட்கும் உம்முடைய பணியாளரும் நற்பேறு பெற்றவரே!

உம்மீது பரிவு கொண்டு உம்மை இஸ்ரயேலின் அரியணையில் அமர்த்திய உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! ஆண்டவர் இஸ்ரயேலின் மீது என்றென்றும் அன்பு கொண்டுள்ளதால், அவர்களுக்கு நீதி நியாயம் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார்.

அவர் ஏறத்தாழ நாலாயிரத்து எண்ணூறு கிலோ பொன், ஏராளமான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அரசருக்கு அளித்தார். சேபாவின் அரசியிடமிருந்து வந்தது போல, அத்துணை நறுமணப் பொருள்கள் அரசர் சாலமோனுக்கு அதன் பிறகு வந்ததே இல்லை.

ஓபீரிலிருந்து பொன்னைக் கொணர்ந்த ஈராமின் கப்பல்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டு வந்தன.

அவ்வாசனை மரங்களால் அரசர் ஆண்டவரின் இல்லத்திற்கும் அரண்மனைக்கும் ஊன்றுகால்களையும் பாடகருக்கு இசைக் கருவிகளையும் யாழ்களையும் செய்தார். அத்தகைய வாசனை மரங்கள் அதன்பின் அங்கு வந்ததுமில்லை: இன்றுவரை காணப்படவுமில்லை.

அரசர் சாலமோன் சேபாவின் அரசிக்கு ஏராளமான பரிசுகள் கொடுத்ததுமன்றி, அவர் விரும்பிக் கேட்டவற்றையெல்லாம் கொடுத்தார். அதன்பின் அவர் தம் பணியாளர்களோடு தம் சொந்த நாட்டுக்குத் திரும்பிப்போனார்.

சாலமோனுக்கு ஆண்டுதோறும் வந்து கொண்டிருந்த பொன்னின் நிறை ஏறத்தாழ இருபத்தி ஏழாயிரம் கிலோ.

அதைத் தவிர, அவரிடம் வியாபாரிகளும், வணிகர்களும் அரபு நாட்டு அரசர்கள் அனைவரும் உள்நாட்டு ஆளுநர்களும் பொன் கொண்டு வருவதுண்டு.

அரசர் சாலமோன் பொன் தகட்டால் இருமறு கேடயங்கள் செய்தார். ஒவ்வொரு கேடயத்திற்கும் ஏறத்தாழ ஏழு கிலோ பொன் பயன்படுத்தப்பட்டது.

மேலும் அவர் முந்மறு சிறு கேடயங்களையும் பொன் தகட்டால் செய்தார். ஒவ்வொரு சிறு கேடயத்திற்கும் ஏறத்தாழ இரண்டு கிலோ பொன் பயன்படுத்தப்பட்டது. அவற்றை அரசர் லெபனோனின் வனம் எனப்பட்ட மாளிகையில் வைத்தார்.

அரசர் தந்தத்தினால் பெரியதோர் அரியணை செய்து அதைப் பசும்பொன்னால் வேய்ந்தார்.

அவ்வரியணைக்கு ஆறு படிகள் இருந்தன. அரியணையின் பின்புற உச்சி காளையின் தலை உருவம் கொண்டிருந்தது. இருக்கையின் இரு புறமும் கைப்பிடிகள் இருந்தன. அவற்றின் அருகே இரு சிங்கங்கள் வடிவங்கள் நின்றன.

ஆறு படிகளின் இருபக்கத்திலும் ஒவ்வொரு சிங்கமாக பன்னிரு சிங்க வடிவங்கள் இருந்தன. வேறெந்த அரசனுக்கும் இத்தகைய அரியணை இருந்ததில்லை.

சாலமோன் அரசரின் பான பாத்திரங்கள் எல்லாம் தங்கத்தாலும் லெபனோனின் வனம் எனப்பட்ட மாளிகையின் கலன்கள் அனைத்தும் பசும் பொன்னாலும் ஆனவை. ஒன்றும் வெள்ளியானால் செய்யப்படவில்லை: சாலமோனின் காலத்தில் வெள்ளியை யாரும் உயர்வாக மதிக்கவில்லை.

அரசரின் வணிகக் கப்பல்கள், ஈராமின் கப்பல்களோடு சென்று கடல் வாணிபம் செய்தன. வணிகக் கப்பல்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, பொன், வெள்ளியையும் தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றையும் கொண்டு வந்தன.

உலகின் மன்னர் அனைவருள்ளும் சாலமோன் அரசரே செல்வத்திலும் ஞானத்திலும் மிகச் சிறந்து விளங்கினார்.

சாலமோனுக்கு ஆண்டவர் அருளியிருந்த ஞானத்தை நேரில் கேட்டறிய எல்லா நாட்டு மக்களும் அவரை நாடி வந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் வெள்ளியாலும், பொன்னாலுமான பொருள்கள், பட்டாடைகள், படைக் கலன்கள், நறுமணப் பொருள்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அன்பளிப்பாக அரசருக்குக் கொண்டு வந்தனர்.

சாலமோன் ஆயிரத்து நாடீறு தேர்களும் பன்னீராயிரம் குதிரை வீரர்களும் கொண்ட படையொன்றைத் திரட்டினார். அதனைத் தேர்ப்டை நகர்களிலும் எருசலேமில் அரசனுடனும் நிறத்தி வைத்தார்.

அவருடைய ஆட்சியின் போது, எருசலேமில் வெள்ளிக் கற்களைப் போலவும், கேதுரு மரங்கள் செப்பேலா சமவெளியின் காட்டத்தி போலவும் மிகுதியாய் இருந்தன.

சாலமோன் எகிப்திலிருந்தும் கேவேயிலிருந்தும் குதிரைகளை இறக்குமதி செய்தார். அரசரின் வணிகர் அவற்றைக் கேவேயிலிருந்து விலைக்கு வாங்கி வந்தனர்.

எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தேரின் விலை அறுமறு வெள்ளிக்காசு. ஒரு குதிரைகள் விலை மற்றைம்பது வெள்ளிக்காசு. இவ்வாறே, அவர்கள் இத்தியரின் அனைத்து மன்னர்களுக்கும் சிரியாவின் மன்னர்களுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்தார்கள்.

அதிகாரம் 11.

அரசர் சாலமோன் அயல்நாட்டுப் பெண்கள் பலர்மேல் மோகம் கொண்டார். பார்வோனின் மகளை மணந்ததுமின்றி மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சீதோனியா, இத்தியர் ஆகிய பல நாட்டுப் பெண்களையும் மணந்தார்.

அவ்வேற்றினத்தாரைக் குறித்து ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம், நீங்கள் அயல்நாடுகளிலிருந்து பெண் கொள்ளவும் வேண்டாம்: கொடுக்கவும் வேண்டாம்: ஏனெனில் அவர்கள் தம் தெய்வங்களை வணங்கும்படி உங்கள் உள்ளங்களை மயக்கி விடுவார்கள் என்று கூறியிருந்தார். அப்படிக் கூறியிருந்தும் அந்நாட்டுப் பெண்கள்மேல் சாலமோன் மையல் கொண்டிருந்தார்.

சாலமோனுக்கு எழுமறு அரசகுலப் பெண்கள் மனைவியராகவும் முந்மறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும் இருந்தார்கள். அப்பெண்கள் அவரது இதயத்தைத் தவறான வழியில் திருப்பி விட்டார்கள்.

சாலமோன் முதுமை அடைந்தபோது, அவருடைய மனைவியர் அவர் இதயத்தை வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றும்படி மாற்றிவிட்டனர். அதனால் அவர் உள்ளம் தம் தந்தை தாவீதின் உள்ளத்தைப் போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கிவில்லை.

சாலமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்தையுதம் அம்மோனியரின் அருவருப்பான மில்க்கோவையும் வழிபடலானார்.

இவ்வாறு சாலமோன், ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தார். தம் தந்தை தாவீது ஆண்டவரை முழுமையாகப் பின்பற்றியது போன்று அவர் செய்யவில்லை.

சாலமோன் எருசலேமுக்கு எதிரில் இருந்த மலையில் மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும் அம்மோனியரின் அருவருப்பான மோலேக்குக்கும் தொழுகைமேடுகளைக் கட்டினார்.

இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் பபம் காட்டிப் பலியிடுவதற்காக, வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லோருக்கும் சாலமோன் இவ்வாறு செய்து கொடுத்தார்.

ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றார். ஏனெனில் தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச் சென்றது.

வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆண்டவர் அவருக்குக் கட்டளையிட்டிருந்தும், அக்கட்டளையை அவர் கடைப்பிடிக்கவில்லை.

ஆகையால் ஆண்டவர் சாலமோனை நோக்கி, நான் உன்னோடு செய்த உடன்படிக்கையையும், நான் உனக்கு விதித்த நியமங்களையும் மீறி, நீ இவ்வாறு நடந்துகொண்டதால் உன் அரசை உன்னிடமிருந்து பறித்து அதை உன் பணியாளனுக்குக் கொடுக்கப்போவது உறுதி.

ஆயினும் உன் தந்தை தாவீதின் பொருட்டு, உன் காலத்தில் நான் இதைச் செய்யமாட்டேன். உன் மகன் கையினின்று அதைப் பறித்து விடுவேன்.

ஆயினும் அரசு முழுவதையும் பறித்துவிடாமல், என் அடியான் தாவீதின் பொருட்டும் நான் தேர்ந்து கொண்ட எருசலேமின் பொருட்டும் ஒரு குலத்தை உன் மகனிடம் விட்டுவைப்பேன் என்றார்.

பிறகு ஆண்டவர் ஏதோமியனாகிய அதாது என்பவனைச் சாலமோனுக்கு எதிராக எழச் செய்தார். இவன் ஏதோம் மன்னர் குலத்தைச் சார்ந்தவன்.

முன்பு தாவீது ஏதோமில் இருந்தபோது படைத்தலைவன் யோவாபு ஏதோமின் எல்லா ஆண்களையும் வெட்டி வீழ்த்திப் புதைக்கச் சென்றார்.

யோவாபும் இஸ்ரயேலர் அனைவரும் அங்கு ஆறு மாதம் தங்கியிருந்து ஏதோமிலிருந்த எல்லா ஆண்களையும் வெட்டி வீழ்த்தினர்.

ஆனால், அதாது அவன் தந்தையின் ஏதோமியப் பணியாளருள் சிலரோடு சேர்ந்து எகிப்துக்குத் தப்பி ஓடிப் போனான். அப்போது அவன் சிறு பையனாய் இருந்தான்.

அவர்கள் மிதியானிலிருந்து புறப்பட்டுப் பாரானுக்குச் சென்று பாரானில் சில ஆள்களைச் சேர்த்துக் கொண்டு எகிப்திய அரசன் பார்வோனிடம் சென்றார்கள். பார்வோன் அதாதுக்கு வீடொன்று கொடுத்து, உணவுக்கும் வழி செய்து நிலமும் அளித்தான்.

பார்வோனுக்கு அதாது மிகவும் உகந்தவனாய் இருந்தபடியால், தன் மனைவியும் அரசியுமான தகபெனேசின் தங்கையை அவனுக்கு மணமுடித்து வைத்தான்.

தகபெனேசின் தங்கையாகிய இவள் அவனுக்கு கெனுபத்து என்ற ஒரு மகளைப் பெற்றாள். தகபெனேசு அவனைப் பார்வோன் வீட்டில் வளர்த்தாள். அப்படியே கெனுபத்து பார்வோனின் வீட்டில் அவனுடைய புதல்வருடன் வளர்ந்து வந்தான்.

தாவீது துயில்கொண்டு தம் மூதாதையரோடு சேர்ந்து கொண்டார் என்றும், படைத்தலைவர் யோவாபு இறந்துவிட்டார் என்றும், எகிப்தில் அதாது கேள்விப்பட்டு பார்வோனை நோக்கி, நான் என் சொந்த நாட்டுக்குப் போக விரும்புகிறேன்: என்னை அனுப்பி வைக்கவேண்டும் என்றான்.

அதற்குப் பார்வோன், நீ உன் சொந்த நாட்டுக்குப் போக விரும்புவது ஏன்? இங்கு உனக்கு என்ன குறை? என்று கேட்டான். அதற்கு அவன், ஒரு குறையுமில்லை: ஆயினும் எனக்குப் போக விடைதாரும் என்றான்.

மேலும் கடவுள் எலயாதாவின் மகன் இரேசோனையும் சாலமோனுக்கு எதிராக எழச் செய்தார். அவன் தன் தலைவனாகிய அதாதேசர் என்னும் சோபா நாட்டு மன்னனிடமிருந்து தப்பி ஓடியவன்.

முன்பு தாவீது படையெடுத்து அந்நாட்டினரை வெட்டி வீழ்த்தியபோது இரேசோன் தன்னோடு சிலரைச் சேர்த்துக் கொண்டு தன் தலைமையில் ஒரு கிளர்ச்சிக் கூட்டத்தை அமைத்துக் கொண்டான். அவன் அவர்களோடு தமஸ்குவுக்குச் சென்று, அதில் குடியேறி அங்கே அரசன் ஆனான்.

சாலமோன் வாழ்நாள் முழுவதும் அவன் இஸ்ரயேலின் எதிரிராய் இருந்தான். அவன் சிரியாவை ஆண்டு கொண்டு, இஸ்ரயேலைப் பகைத்து அதாதைப் போல் தீங்கிழைத்து வந்தான்.

எப்ராயிமின் செரேதாவைச் சார்ந்த நெபாற்று என்பவனின் மகனும் சாலமோனின் பணியாளருள் ஒருவனுமான எரொபவாம் அரசருக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்தான். அவனுடைய தாய் செருவா என்பவள் ஒரு கைம்பெண்.

அவன் அரசருக்கு எதிராயக் கிளர்ச்சி செய்ததன் விவரம் பின்வருமாறு: சாலமோன் கீழைத் தாங்குதளத்தைக் கட்டித் தம் தந்தை தாவீதின் நகரில் இடிந்து போன இடங்களைப் பழுது பார்த்தார்.

எரொபவாம் ஆற்றல் மிக்கவனாய் இருந்தான். அவன் செயல்திறமை மிக்க ஓர் இளைஞன் என்று கண்டு, சாலமோன் யோசேப்பு வீட்டிலிருந்து கட்டாய வேலைசெய்ய வந்த அனைவரையும் கண்காணிக்கும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்திருந்தார்.

ஒரு நாள் எரொபவாம் எருசலேமிலிருந்து வெளியே போனபோது சீலோமைச் சார்ந்த அகியா என்ற இறைவாக்கினர், அவனை வழியில் கண்டார். அவர் புதுச் சால்வை ஒன்று அணிந்திருந்தார். இருவரும் வயல் வெளியே தனித்திருந்தனர்.

அப்பொழுது அகியா நாம் போர்த்தியிருந்த புதுச் சால்வையை எடுத்து அதைப் பன்னிரு துண்டுகளாய்க் கிழித்தார்.

பிறகு அவர் எரொபவாமை நோக்கிப் பின் வருமாறு கூறினார்: இவற்றில் பத்துத் துண்டுகளை உனக்கென எடுத்தக் கொள். ஏனெனில் இஸ்ரயேலரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இவ்வாறு கூறுகிறார்: இதோ, நான் சாலமோன் கையினின்று அரசைப் பறித்து, பத்துக் குலங்களை உனக்கு அளிக்கப் போகிறேன்.

ஆயினும் உன் ஊழியன் தாவீதை முன்னிட்டும், இஸ்ரயேலரின் நகர்கள் அனைத்திலிருந்தும் நான் தேர்ந்து கொண்ட எருசலேம் நகரை முன்னிட்டு ஒரு குலம் மட்டும் அவன் கையில் இருக்கும்.

ஏனெனில், சாலமோன் என்னைவிட்டு விலகி, சீதோனியரின் தேவதையான அஸ்தரேத்து, மோவாபியரின் தெய்வமான கெமோசு, அம்மோனியரின் தெய்வமான மில்க்கோம் ஆகியவற்றை வழிபட்டு வருகிறான். அவனுடைய தந்தை தாவீது நடந்தது போல் அவன் என் வழிகளைப் பின்பற்றவில்லை. என் முன்னிலையில் நேர்மையாக நடக்கிவில்லை. என் நியமங்களையும், நீதிச் சட்டங்களையும் கடைப்பிடிக்கவுமில்லை.

ஆயினும், அரசு முழுவதையும் அவன் கையிலிருந்து நான் எடுத்து விடப்போவதில்லை. நான் தேர்ந்து கொண்டவனும் என் விதிமுறைகளையும் நியமங்களையும் கடைப்பிடித்தவனுமான என் ஊழியன் தாவீதின் பொருட்டு அவன் வாழ்நாள் முழுவதும் அரசனாக இருக்கும்படி செய்வேன்.

எனினும் அரசை அவன் மகன் கையிலிருந்து எடுத்து, அதிலிருந்து பத்துக் குலங்களை உனக்குக் கொடுப்பேன்.

எனது பெயர் நிலைத்திருக்குமாறு நான் தேர்ந்து கொண்ட நகரகிய எருசலேமில் என் திருமுன் அடியான் தாவீதின் குலவிளக்கு எந்நாளும் என் முன்னிலையில் ஒளிரும் வண்ணம் நான் அவன் மகனுக்கு ஒரு குலத்தை அளிப்பேன்.

உன் விருப்பப்படியே நீ ஆட்சிசெலுத்தும்படி உன்னை நான் இஸ்ரயேலின் அரசனாய் அமர்த்துவேன்.

நான் கட்டளையிடும் அனைத்தையும் நீ கேட்டு, என் வழிகளில் நடந்து என் ஊழியன் தாவீது செய்தது போல் என் நியமங்களையும், விதிமுறைகளையும் கைக்கொண்டு, எனக்கு ஏற்புடையதைச் செய்தால், நான் உன்னோடு இருந்து தாவீதின் குடும்பத்தைப்போல் உன் குடும்பத்தையும் நிலை நாட்டி இஸ்ரயேலை உன்னிடம் ஒப்படைப்பேன்.

தாவீதின் வழிமரபினர் செய்தவற்றுக்காக, அவர்களைத் தாழ்வுறச் செய்வேன்: ஆயினும் எந்நாளுமன்று.

இதன் பொருட்டுச் சாலமோன் எரொபவாமைக் கொல்ல வழி தேடினார். ஆனால், அவன் எகிப்திற்குத் தப்பி ஓடி அங்கு எகிப்திய மன்னன் சீசாக்கிடம் தஞ்சம் புகுந்து, சாலமோன் இறக்கும்வரை அங்கேயே தங்கியிருந்தான்.

சாலமோனின் பிற செயல்களும், அவர் செய்தவை அனைத்தும் அவரது ஞானமும் சாலமோன் வரலாற்று மலில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?

சாலமோன் எருசலேமில் இருந்து கொண்டு இஸ்ரேயல் முழுவதன்மீதும் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.

பின்பு சாலமோன் தம் மூதாதையரோடு துயில் கொண்டு தம் தந்தை தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் மகன் ரெகபெயாம் அவருக்குப் பின் ஆட்சி செய்தான்.

அதிகாரம் 12.

ரெகபெயாம் செக்கேமுக்குச் சென்றான். ஏனெனில் அங்கு இஸ்ரயேலர் அனைவரும் அவனை அரசனாக்குவதற்காக ஒன்று கூடியிருந்தனர்.

சாலமோன் அரசருக்கு அஞ்சி எகிப்திற்கு ஓடிப் போய் அங்குக் குடியிருந்தவனும் நெபாற்றின் மகனுமான எரொபவாம் இதைக் கேள்வியுற்றான்.

இஸ்ரயேல் சபையார் ஆளனுப்பி அவனை வரவழைத்தார்கள். பின்பு அவர்கள் அனைவருடன் எரொபவாமும், ரெகபெயாமிடம் வந்து அவனை நோக்கி,

உம் தந்தை பளுவான நுகத்தை எங்கள் மேல் சுமத்தினார். இப்போது நீர் உம் தந்தை சுமத்திய கடும் வேலைகளைக் குறைத்து, அவர் எங்கள் மேல் வைத்த பளுவான நுகத்தை எளிதாக்க வேண்டும். அப்படிச் செய்தால் நாங்கள் உமக்காகப் பணியாற்றுவோம் என்றனர்.

அவன் அவர்களிடம், நீங்கள் போய் மூன்று நாள் கழித்து என்னிடம் திரும்பி வாருங்கள் என்றான். அப்படியே மக்கள் சென்றனர்.

அப்பொழுது அரசன் ரெகபெயாம் தன் தந்தை சாலமோன் உயிரோடிருக்கையில் அரசவையில் பணியாற்றிய முதியோரிடம் இம் மக்களுக்கு என்ன மறுமொழி கூறலாம்? உங்கள் கருத்தென்ன? என்று ஆலோசனை கேட்டான்.

அவர்கள் அவனிடம், இன்று இம்மக்களுக்கு நீ பணியாளனாகி அவர்களுக்குப் பணிந்து இனிய சொற்களில் பதிலளித்தால், அவர்கள் எந்நாளும் உனக்குப் பணியாளர்களாய் இருப்பார்கள் என்றனர்.

அவனோ முதியோர் தனக்களித்த அறிவுரையைத் தள்ளி விட்டு, தன்னோடு வளர்ந்து தன் அவையில் இருந்த இளைஞரோடு கலந்து ஆலோசித்தான்.

”” உம் தந்தை எம்மேல் வைத்த நுகத்தை எளிதாக்கும் என்று என்னிடம் சொன்ன இம்மக்களுக்கு என்ன மறுமொழி கூறலாம்? உங்கள் கருத்தென்ன?”” என்று அவன் அவர்களிடம் வினவினான்.

அவனோடு வளர்ந்த அந்த இளைஞர் அவனை நோக்கி, ””உம் தந்தை எங்கள் மீதுள்ள நுகத்தைப் பளுவாக்கினார். நீர் அதன் பளுவைக் குறைத்தருளும் என்று அம்மக்கள் உம்மிடம் வேண்டினார்கள் அல்லவா? அவர்களுக்கு இந்தப் பதில் கொடும்: என் சுண்டு விரல் என் தந்தையின் இடுப்பை விடப் பெரியது:

என் தந்தை பளுவான நுகத்தை உங்கள் மேல் சுமத்தினார்: நானோ அதை இன்னும் பளுவாக்குவேன். என் தந்தை உங்களைச் சாட்டையால் அடித்தார்: நானோ உங்களை முள் சாட்டையால் அடிப்பேன் என்று நீர் சொல்லும்”” என்றனர்.

மூன்றாம் நாள் மீண்டும் என்னிடம் வாருங்கள் என்று ரெகபெயாம் சொல்லியிருந்தபடியே எரொபவாமுடன் மக்கள் அனைவரும் அவனிடம் மூன்றாம் நாள் வந்தனர்.

அப்பொழுது அரசன், முதியோர் தனக்கு அளித்த அறிவுரையைத் தள்ளிவிட்டு, மக்களுக்கு மிகக் கடுமையான பதில் அளித்தான்.

இளைஞரின் அறிவுரைக்கேற்ப, என் தந்தை பளுவான நுகத்தை உங்கள் மேல் சுமத்தினார்: நானோ அதை இன்னும் பளுவாக்குவேன். என் தந்தை உங்களைச் சாட்டையால் அடித்தார்: நானோ உங்களை முள் சாட்டையால் அடிப்பேன் என்று கூறினான்.

இவ்வாறு அரசன் மக்களின் வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டான். இந்தத் திருப்பம் ஆண்டவரால் நிகழ்ந்தது. சீலோவைச் சார்ந்த அகியாவின் மூலம் நெபாற்றின் மகன் எரொபவாமிற்குத் தாம் கூறிய வாக்கை ஆண்டவர் இவ்வாறு நிறைவேற்றினார்.

இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அரசன் தங்களது வேண்டுகோளுக்கு இணங்க மறுத்து விட்டதைக் கண்டு, எங்களுக்குத் தாவீதுடன் என்ன பங்கு? எங்கள் உரிமைச் சொத்து ஈசாயின் மகனிடம் இல்லை. இஸ்ரயேலரே! உங்கள் கூடாரங்களுக்குத் திரும்புங்கள். தாவீதே! உன் வீட்டை நீயே பார்த்துக்கொள்! என்று அவனுக்கு எதிராக முழங்கிக் கொண்டே தம் கூடாரங்களுங்குத் திரும்பினார்.

எனினும், யூதாவின் நகர்களில் குடியிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ரெகபெயாமே அரசனாய் இருந்தான்.

பின்பு அரசன் ரெகபெயாம் கட்டாய வேலைத் திட்டத்தைச் செயல்படுத்தியவனான அதோராமைப் பிற இஸ்ரயேலரிடம் பதனுப்பி வைத்தான். ஆனால், அவர்கள் எல்லாரும் சேர்ந்து அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர். அதைக் கேட்ட அரசன் ரெகபெயாம் விரைந்து தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பி ஓடிப்போனான்.

தாவீதின் குடும்பத்துக்கு எதிராக அன்று கிளர்ந்தெழுந்த இஸ்ரயேலர் இன்றுவரை அவ்வாறே இருக்கின்றனர்.

எரொபவாம் திரும்பி வந்து விட்டான் என்பதை இஸ்ரயேலர் அனைவரும் கேள்வியுற்று, அவனுக்கு ஆளனுப்பிச் சபைக்கு வரவழைத்து அவனை இஸ்ரயேல் நாடு முழுவதற்கும், அரசனாக்கினர். யூதா குலம் தவிர, வேறு எந்தக் குலமும் தாவீது குடும்பத்தின் பக்கம் சேரவில்லை.

எருசலேமுக்குத் திரும்பி வந்த சாலமோனின் மகனாகிய ரெகபெயாம் இஸ்ரயேலர்மீது போர் தொடுக்கவும் அந்நாட்டைத் தன்னுடைய ஆட்சிக்குள் கொண்டு வரவும் எண்ணினான். இதற்கென அவன் யூதாவின் வீட்டிலிருந்தும் பென்யமின் குலத்திலிருந்தும் இலட்சத்து எண்பதினாயிரம் போர் வீரர்களைத் திரட்டினான்.

அப்போது இறையடியார் செமயாவுக்குக் கடவுள் அருளிய வாக்கு:

சாலமோனின் மகனும் யூதாவின் அரசனுமான ரெகபெயாமிடமும் யூதா, பென்யமின் வீட்டார் அனைவரிடமும் ஏனைய மக்களிடமும் போய்ச் சொல்:

நீங்கள் படையெடுத்து உங்கள் சகோதரரான இஸ்ரயேலரோடு போரிடச் செல்ல வேண்டாம். எல்லாரும் அவரவர் வீடு திரும்புங்கள். இது நிகழ்வது என்னாலேயே என்று ஆண்டவர் உரைக்கிறார். ஆண்டவரின் வாக்கைக் கேட்ட அவர்கள் அவரது சொற்படியே திரும்பிப் போய் விட்டார்கள்.

எரொபவாம், எப்ராயிம் மலைநாட்டில் செக்கேமைக் கட்டி எழுப்பி, அங்குக் குடியிருந்தான். பின்பு அங்கிருந்து வெளியேறிப் பெனுவேலைக் கட்டி எழுப்பினான்.

அப்பொழுது எரொபவாம் இப்போதுள்ள நிலை நீடித்தால் அரசு தாவீதின் வீட்டுக்கே திரும்பிச் சென்று விடும்.

ஏனெனில், இம்மக்கள் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்தில் பலிசெலுத்த இனிமேலும் போவார்களானால் அவர்களது உள்ளம் யூதாவின் அரசன் ரெகபெயாம் என்ற தங்கள் தலைவனை நாடும்: என்னைக் கொலை செய்து விட்டு யூதாவின் அரசன் ரெகபெயாம் பக்கம் சேர்ந்து கொள்வார்கள் என்று தன் இதயத்தில் சொல்லிக் கொண்டான்.

இதைப் பற்றித் தீரச் சிந்தித்து, அவன் பொன்னால் இரு கன்றுக் குட்டிகளைச் செய்தான். மக்களை நோக்கி, நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா! இஸ்ரயேலரே! இதோ, உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டுவந்த உங்கள் தெய்வங்கள்! என்றான்.

இவற்றுள் ஒன்றைப் பெத்தேலிலும் மற்றொன்றைத் தாணிலும் வைத்தான்.

இச்செயல் பாவத்துக்குக் காரணமாயிற்று. ஏனெனில் மக்கள் கன்றுக் குட்டியை வணங்கத் தாண் வரையிலும் செல்லத் தொடங்கினர்.

மேலும் அவன் தொழுகை மேட்டுக் கோவில்கள் கட்டி லேவியரல்லாத சாதாரண மக்களை அவற்றில் குருக்களாக நியமித்தான்.

அதுவுமின்றி, யூதாவின் விழாவுக்கு இணையாக, எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் எரொபவாம் ஒரு விழாவை ஏற்படுத்திப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான். அவ்வாறே பெத்தேலிலும் தான் செய்து வைத்த கன்றுக் குட்டிகளுக்குப் பலியிட்டான். மேலும் தான் அமைத்திருந்த தொழுகை மேடுகளின் குருக்களைப் பெத்தேலில் பணி செய்யும்படி அமர்த்தினான்.

தான் நினைக்கும்படி குறித்த எட்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அவன் பெத்தேலில் கட்டியிருந்த பலிபீடத்திற்குச் சென்றான். இஸ்ரயேல் மக்களுக்கென்று தான் ஏற்படுத்திய விழாவின்போது பலிபீடத்தின்மேல் பலி செலுத்தித் பபம் காட்டினான்.

அதிகாரம் 13.

எரொபவாம் பபம் காட்டப் பீடத்தருகில் நிற்கையில், இதோ இறையடியார் ஒருவர் ஆண்டவரின் சொற்படி யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்தார்.

ஆண்டவரின் வாக்கிற்கு இணங்க அவர் அப்பீடத்திற்கு எதிராகக் குரலேழுப்பி, பலிபீடமே! பலிபீடமே! இதோ, தாவீதின் குடும்பத்தில் யோசியா என்ற பெயருள்ள ஒரு மகன் பிறப்பான்: அவன் உன்மீது பபத்தை எரிக்கும் தொழுகைமேடுகளின் குருக்களை உன்மீதே பலியிடுவான்! மனிதரின் எலும்புகளை உன்மீது சுட்டெரிப்பான், என்கிறார் ஆண்டவர் என்றார்.

பேசியுள்ளவர் ஆண்டவரே என்பதற்கு இதுவே அடையாளம்: இதோ! இப்பலிபீடம் இடிந்து விழும்: அதன் மீதுள்ள சாம்பல் கீழே கொட்டப்படும் என்று கூறி ஓர் அடையாளத்தையும் அதே நாளில் தந்தார்.

பெத்தேலில் இருந்த அப்பலிபீடத்துக்கு எதிராக இறையடியார் கூறின சொற்களை அரசன் எரொபவாம் கேட்டவுடன், பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, அவனைப் பிடியுங்கள் என்றான். ந¨ட்டிய கை விறைத்து நின்று விட்டது: அதை அவனால் மடக்க முடியவில்லை.

ஆண்டவரின் வாக்கிற்கு இணங்க இறையடியார் கொடுத்திருந்த அடையாளத்திற்கேற்ப, பலிபீடம் இடிந்து விழுந்தது: அதன் மேலிருந்த சாம்பலும் கீழே கொட்டியது.

அப்போது அரசன் இறையடியாரை நோக்கி, எனக்காக நீர் உம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி இறைஞ்சி மன்றாடும்: என் கை முன்போல் ஆகிவிடும் என்றான். அவ்வாறே இறையடியார் ஆண்டவரை நோக்கி மன்றாட, அரசனது கை முன் போல் ஆயிற்று.

அப்பொழுது அரசன் இறையடியாரிடம், நீர் என்னோடு என் வீட்டுக்கு வந்து உண்டு இளைப்பாறும். உமக்கு அன்பளிப்பு வழங்குவேன் என்றான்.

ஆனால், இறையடியார் அரசனிடம், நீர் எனக்கு உம் வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடு வரமாட்டேன். இவ்விடத்தில் உண்ண மாட்டேன்: தண்ணீர் குடிக்கவும் மாட்டேன்.

ஏனென்றால், உணவு அருந்தக் கூடாது, தண்ணீர் குடிக்ககூடாது, போன் வழியாய்த் திரும்பி வரக்கூடாது என்று ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொன்னார்.

அவ்வாறே அவர் பெத்தேலுக்குத் தாம் வந்த வழியாகச் செல்லாமல் வேறு வழியாகத் திரும்பிப் போனார்.

வயது முதிர்ந்த இறைவாக்கினர் ஒருவர் பெத்தேலில் வாழ்ந்து வந்தார். அவருடைய மைந்தர்கள் தங்கள் தந்தையிடம் வந்து இறையடியார் அன்று பெத்தேலில் செய்தவை அனைத்தையும், அரசனுக்குக் கூறியவற்றையும் அறிவித்தார்கள்.

அவர்களின் தந்தை அவர்களை நோக்கி, அவர் எவ்வழியாகச் சென்றார்? என்று வினவினார். அதற்கு அவர்கள் யூதாவிலிருந்து வந்த அந்த இறையடியார் சென்ற வழியைச் சுட்டிக் காட்டினார்கள்.

அவர் தம் மைந்தர்களிடம், கழுதைக்குச் சேணம் பூட்டுங்கள் என்றார். அவர்களும் கழுதைக்குச் சேணம் பூட்டிக் கொண்டுவர, அவர் அதன் மேல் ஏறிக் கொண்டார்.

அந்த இறையடியாரைப் பின்தொடர்ந்து சென்று அவர் ஒரு கருவாலி மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு, யூதாவிலிருந்து வந்த இறையடியார் நீர்தாமோ? என்று அவரைக் கேட்டார். அதற்கு அவர், நான்தான் என்றார்.

முதியவர் அவரை நோக்கி, என்னோடு என் வீட்டிற்கு வந்து உணவருந்தும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு அவர், நான் திரும்பி உம்மோடு வர இயலாது. இந்த இடத்தில் உம்மோடு உணவு அருந்த மாட்டேன். தண்ணீர் குடிக்கவும் மாட்டேன். ஏனென்றால், “அங்கே நீ உணவு அருந்தக் கூடாது:

தண்ணீர் குடிக்கக் கூடாது: போன வழியாய்த் திரும்பி வரக்கூடாது“ என்று ஆண்டவர் எனக்குக் கூறியிருக்கிறார் என்றார்.

அதற்கு முதியவர், உம்மைப் போல் நானும் இறைவாக்கினர்தான். “உணவருந்திக் தண்ணீர் குடிக்க நீ அவனை உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போ“ என்று ஆண்டவர் ஒரு வானபதர் வாயிலாக எனக்குச் சொன்னார் என்றார். ஆனால் அவர் சொன்னதோ பொய்.

ஆயினும் இறையடியார் அதை நம்பி அவரோடு திரும்பிச் சென்று அவரது வீட்டில் உணவருந்தித் தண்ணீர் குடித்தார்.

அவர்கள் பந்தியில் அமர்ந்திருந்தபோது, அவரை அழைத்துக் கொண்டு வந்த இறைவாக்கினருக்கு ஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது.

அவர் யூதாவிலிருந்து வந்த இறையடியாரை நோக்கி உரத்த குரலில், ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவரின் சொல்லை நீ மீறினாய்: உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இட்ட கட்டளையின்படி நீ நடக்கவில்லை.

நீ உணவு அருந்தவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டிருக்க, நீ அவர் விலக்கின இடத்திற்குத் திரும்பி வந்து உணவு அருந்தித் தண்ணீர் குடித்ததால், உனது சடலம் உன் மூதாதையரின் கல்லறையில் வைக்கப்படமாட்டாது என்று கூறினார்.

அழைத்து வரப்பட்ட இறைவாக்கினர் உண்டு குடித்த பிறகு முதியவர் அவருக்காகக் கழுதைக்குச் சேணம் பூட்டிக் கொடுத்தார்.

அவர் திரும்பிப் போகையில், ஒரு சிங்கம் வழியில் அவரைக் கண்டு அடித்துக் கொன்றது. அவரது சடலம் வழியில் கிடந்தது. அதன் அருகில் கழுதை நின்று கொண்டிருந்தது. சிங்கமும் அச்சடலத்தின் அருகே நின்று கொண்டிருந்தது.

அவ்வழியே சென்ற ஆள்கள் வழியில் கிடந்த சடலத்தையும் அதனருகில் நின்று கொண்டிருந்த சிங்கத்தையும் கண்டனர். அவர்கள் முதிய இறைவாக்கினர் குடியிருந்த நகருக்கு வந்து அதைத் தெரிவித்தார்கள்.

தம் வழியே சென்ற இறையடியாரைத் திரும்பி வரச் செய்த இறைவாக்கினர் அதைக் கேட்டபோது, இந்த இறையடியார் ஆண்டவரின் சொல்லை மீறியவர். எனவே ஆண்டவர் அவருக்குச் சொல்லியிருந்தபடியே அவரைச் சிங்கத்துக்கு இரையாக்கினார். அது அவரைப் பீறிக் கொன்றுவிட்டது என்றார்.

பின்னர் தம் மைந்தரை நோக்கி, எனக்காகக் கழுதைக்குச் சேணம் பூட்டுங்கள் என்றார். அவர்களும் சேணம் பூட்டினார்கள்.

அவர் புறப்பட்டுச்சென்று வழியில் அந்த இறையடியாரின் சடலம் கிடப்பதையும் அதனருகில் கழுதை, அந்தச் சிங்கமும் நிற்பதையும் கண்டார். அந்தச் சிங்கமோ சடலத்தைத் தின்னவுமில்லை: கழுதையைப் பீறிப் போடவுமில்லை.

அப்பொழுது அந்த முதிய இறைவாக்கினர் இறையடியாரின் சடலத்தை எடுத்துக் கழுதையின்மேல் ஏற்றி, துக்கம் கொண்டாடவும் அதை அடக்கம் செய்யவும் தம் ஊருக்குக் கொண்டு வந்தார்.

அவர் அவரது சடலத்தைத் தம் கல்லறையில் அடக்கம் செய்தார். பிறகு அவர்கள், ஜயோ! என் சகோதரனே! என்று அவருக்காகப் புலம்பித் துக்கம் கொண்டாடினார்கள்.

அவர் அவரை அடக்கம் செய்தபின் தம் மைந்தரை நோக்கி, நான் இறந்த பின் இறையடியாராகிய இவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள். அவர் எலும்புகள் அருகே என் எலும்புகளையும் வையுங்கள்.

பெத்தேலில் இருக்கும் பலிபீடத்தையும் சமாரியாவின் நகர்களிலிருக்கும் எல்லாத் தொழுகை மேட்டுக் கோவில்களைப் பற்றியும் அவர் கூறிய ஆண்டவரின் வாக்கு திண்ணமாக நிறைவேறும் என்றார்.

இவற்றின் பின்னும் எரொபவாம் தன் தீய வழியை விட்டு விலகாமல் சாதாரண மக்களைத் தொழுகை மேட்டுக் குருக்களாக அமர்த்தினான். யார் விரும்பினார்களோ, அவர்களை அவன் திருநிலைப்படுத்த, அவர்கள் தொழுகை மேட்டுக் குருக்கள் ஆயினர்.

இச்செயல் எரொபவாமின் வீடு பாவத்திற்கு உள்ளாவதற்கும் மண்ணிலிருந்து அழித்தொழிந்து போவதற்கும் காரணமாயிற்று.

அதிகாரம் 14.

அக்காலத்தில் எரொபவாமின் மகன் அபியா நோயுற்றான்.

அப்போது எரொபவாம் தன் மனைவியைப் பார்த்து, நீ எரொபவாமின் மனைவி என்று ஒருவரும் அறியாதபடி மாறுவேடம் பூண்டு சீலோவுக்குப் போ. நான் இம்மக்களுக்கு அரசனாவேன் என்று சொன்ன இறைவாக்கினர் அகியா அங்கேதான் குடியிருக்கிறார்.

பத்து அப்பங்களையும் தின்பண்டங்களையும் ஒரு கலயம் தேனையும் எடுத்துக் கொண்டு அவரிடம் போ. பிள்ளைகளுக்கு என்ன நேரும் என்று அவர் உனக்கு அறிவிப்பார் என்றான்.

எரொபவாமின் மனைவியும் அவ்வாறே செய்தாள். அவள் சீலோவுக்குப் புறப்பட்டுப் போய் அகியாவின் வீட்டை அடைந்தான். அகியா முதியவராய் இருந்ததால், கண்கள் மங்கிப் பார்க்க முடியாதவராய் இருந்தார்.

ஆண்டவர் அகியாவிடம், இதோ! எரொபவாமின் மனைவி நோயுற்றிருக்கிற தன் மகனைப் பற்றி உன்னிடம் கேட்க வருகிறாள். நான் கூறும் வண்ணம் நீ அவளிடம் பேச வேண்டும். அவள் மாறுவேடத்தில் வருகிறாள் என்றார்.

அவ்வாறே அவள் வாயிலில் நுழைந்தவுடன், அவளது காலடி ஓசை கேட்ட அகியா கூறியது: எரொபாவாமின் மனைவியே! உள்ளே வா! மாறுவேடத்தில் நீ வருவது ஏன்? துயரமான செய்தியையே உனக்குச் சொல்ல வேண்டும் என்பது எனக்கு வந்த கட்டளை.

நீ எரொபவாமிடம் போய், “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: மக்களிடையே நான் உன்னை உயர்த்தினேன். என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு உன்னைத் தலைவனாக்கினேன்.

தாவீதின் வீட்டினின்று அரசைப் பிடுங்கி, அதை உன் கையில் ஒப்படைத்தேன். ஆயினும் என் ஊழியன் தாவீதைப் போல் நீ நடந்து கொள்ளவில்லை. அவன் என் விதிமுறைகளைக் கைக்கொண்டு, நான் காட்டிய வழியில் தன் முழு இதயத்தோடு நடந்து, என் பார்வையில் ஏற்புடையவற்றை மட்டுமே செய்தான். நீயோ அவ்வாறு செய்யவில்லை.

அது மட்டுமின்றி, உனக்கு முன் ஆட்சியில் இருந்த எல்லாரையும் விட நீ மிகுதியான தீமைகளைச் செய்துள்ளாய். நீ போய் வேற்றுத் தெய்வங்களை, வார்ப்புச் சிலைகளை உனக்கென உருவாக்கிக் கொண்டு என்னை ஒதுக்கிக் தள்ளினாய்: எனக்குச் சின மூட்டினாய்: ஆகையால் எரொபவாம் வீட்டுக்கு அழிவு வரும்.

இஸ்ரயேலில் அடிமையாகவோ, குடிமகனாகவோ உள்ள எரொபவாமின் ஆண் மக்கள் அனைவரையும் அழித்து விடுவேன். குப்பையை எரித்து ஒன்றும் இல்லாமல் ஆக்குவது போல், எரொபவாமின் வீட்டை அறவே அழித்தொழிப்பேன்.

எரொபவாமைச் சார்ந்தவருள் நகரில் மடிபவர்கள் நாய்களுக்கு இரையாவர்: வயல் வெளியில் மடிபவர் வானத்துப் பறவைகளுக்கு இரையாவர், இது ஆண்டவர் தரும் வாக்கு. நீ புறபப்பட்டு உன் வீட்டிற்குப் போ.

நீ நகரினுள் கால் வைத்தவுடன் உன் பிள்ளை இறந்து போவான்.

அவனுக்காக இஸ்ரயேலர் அனைவரும் துக்கம் கொண்டாடி அவனை அடக்கம் செய்வர். எரொபவாமின் வீட்டில் அவன் ஒருவன் மட்டுமே இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு உகந்தவனாய் இருந்ததால், அவன் மட்டும் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவான்.

ஆண்டவர்தாமே இஸ்ரயேலுக்கு ஓர் அரசன் எழுப்புவார். அவன் இன்றே, இப்போதே எரொபவாமின் வீட்டை அழித்து விடுவான்.

ஆண்டவர் இஸ்ரயேலரைத் தண்டிப்பா+: தண்ணீரில் நாணல் போல் அவர்கள் அலைக்கழிக்கப்படுவார்கள்: அவர்களுடைய மூதாதையருக்குத் தாம் வழங்கியிருந்த நல்ல நாட்டிலிருந்து இஸ்ரயேலரை வேரோடு பிடுங்குவார்: அவர்களை யூப்பிரத்தீசு ஆற்றுக்கு அப்பால் சிதறடிப்பார்: ஏனெனில் அவர்கள் அசேராக் கம்பங்கள் செய்து, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.

எரொபவாம் செய்த பாவத்திற்காகவும், அவன் காரணமாக இஸ்ரயேல் செய்த பாவத்திற்காகவும் ஆண்டவர் இஸ்ரயேலைக் கைவிட்டு விடுவார்.

பிறகு எரொபவாமின் மனைவி புறப்பட்டுத் தீர்சாவுக்கு வந்தாள். அவள் தன் வீட்டு வாயிலில் கால் வைத்தவுடன் பிள்ளை இறந்து போனான்.

இறைவாக்கினரான அகியா என்ற தம் அடியார் மூலம் ஆண்டவர் சொல்லியிருந்த வாக்கின்படியே, அப்பிள்ளையை அடக்கம் செய்து இஸ்ரயேலர் எல்லாரும் துக்கம் கொண்டாடினர்.

எரொபவாமின் பிற செயல்கள், அவன் செய்த போர், அவனது ஆட்சியைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

எரொபவாம் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தபின் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் நாதாபு அரசன் ஆனான்.

இப்படியிருக்க, சாலமோனின் மகன் ரெகபெயாம் யூதாவில் ஆட்சி செய்து வந்தான். ரெகபெயாம் அரசனான போது, அவனுக்கு வயது நாற்பத்தொன்று. ஆண்டவர் தமது திருப்பெயரை நிலைநாட்டும் பொருட்டு இஸ்ரயேலின் குலங்கள் அனைத்திலிருந்தும், தேர்ந்து கொண்ட நகராகிய எருசலேமில் அவன் பதினேழு ஆண்டுகள் அரசாண்டான். அம்மோனிய நாட்டினளான நாமா என்பவளே அவன் தாய்.

யூதா நாட்டு மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தார்கள். அவர்கள் தம் மூதாதையர் செய்த எல்லாவற்றையும் விட, மிகுதியான பாவம் செய்து அவருக்குப் பொறாத சினத்தைக் கிளப்பினர்.

அவர்கள் தொழுகைமேடுகள் எழுப்பி, ஒவ்வோர் உயர் குன்றிலும், பசுமரத்தின் அடியிலும், கல்பண்களையும் அசேராக் கம்பங்களையும் நிறுத்தினர்.

நாட்டில் விலைஆடவர் இருந்தனர். இஸ்ரயேல் மக்கள்முன் இராதபடி ஆண்டவர் விரட்டியத்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்கள் அனைத்தையும் அவர்கள் செய்தார்கள்.

ரெகபெயாம் ஆட்சி செய்த ஜந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான்.

ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களையும் அரசனது அரண்மனையின் செல்வங்களையும் சாலமோன் செய்து வைத்த பொற்கேடயங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனான்.

அக்கேடயங்களுக்குப் பதிலாக, அரசன் ரெகபெயாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவற்றை அரண்மனை வாயிற்காப்போரின் தலைவர்களிடம் கொடுத்தான்.

அரசன் ஆண்டவரது இல்லத்திற்குள் நுழையும் போதெல்லாம் அரண்மனைக் காவலர்கள் அவற்றைத் பக்கிக் கொண்டு போய்த் திரும்பி வந்து அவற்றைக் காவலறையில் வைப்பார்கள்.

ரெகபெயாமின் பிற செய்திகளும் அவன் செய்தவை யாவும் “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

ரெகபெயாமுக்கும் எரொபவாமுக்கும் இடையே அவர்கள் ஆண்ட காலமெல்லாம் தொடர்ந்து போர்நடந்து வந்தது.

ரெகபெயாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, அவர்களோடு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அம்மோனியா நாட்டினளான நாமா என்பவளே அவன் தாய். அவனுக்குப் பின் அவனுடைய மகன் அபியாம் அரசன் ஆனான்.

அதிகாரம் 15.

நெபாற்றின் மகன் எரொபவாம் ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் அபியாம் யூதாவின் அரசன் ஆனான்.

அவன் எருசலேமில் மூன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். அபிசலோமின் மகள் மாக்கா என்பவளே அவன் தாய்.

அவனுக்குமுன் அரசனாயிருந்த அவன் தந்தை செய்த எல்லாப் பாவங்களையும் அவனும் செய்தான். அவன் உள்ளம் தம் மூதாதையான தாவீதின் உள்ளத்தைப்போல் கடவுளாகிய ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருக்கவில்லை.

ஆயினும் தாவீதின் பொருட்டு அவருடைய கடவுளாகிய ஆண்டவர் எருசலேமில் அசரது குலவிளக்கை ஒளிரச் செய்தார். அவருடைய மகனை அவருக்குப் பின் எழுப்பி, எருசலேமை நிலைபெறச் செய்தார்.

ஏனெனில், தாவீது ஆண்டவரின் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தார். இத்தியனான உரியாவிடம் நடந்து கொண்ட முறையைத் தவிர, தம் வாழ்நாளெல்லாம் அவர் ஆண்டவரின் கட்டளைகளினின்று வழுவியதில்லை.

அபியாம் ஆண்ட காலமெல்லாம் அவனுக்கும் எரொபவாமுக்குமிடையே தொடர்ந்து போர் நடந்து வந்தது.

அபியாமின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், “யூதா அரசாகளின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா? அபியாமிற்கும் எரொபவாமுக்குமிடையே போர் நடந்தது.

பிறகு, அபியாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆசா அரசன் ஆனான்.

இஸ்ரயேலின் அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற இருபதாம் ஆண்டில், ஆசா யூதாவின் அரசன் ஆனான். அவன் நாற்பத்தோராண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான்.

அபிசலோமின் மகள் மாக்கா என்பவளே அவன் தாய்.

ஆசா தன் மூதாதை தாவீதைப் போல் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தான்.

அவன் விலை ஆடவர்களை நாட்டிலிருந்து துரத்திவிட்டுத் தன் மூதாதையர் செய்து வைத்திருந்த சிலைகளையெல்லாம் அகற்றினான்.

மேலும் அவனுடைய தாய் மாக்கா அசேராவுக்கு அருவருப்பான உருவமொன்றைச் செய்து வைத்திருந்தாள். எனவே அவன் அவளை அரச அன்னைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவ்வுருவத்தைத் தகர்த்து கிதரோன் ஓடையருகே சுட்டெரித்தான்.

ஆனால் தொழுகை மேடுகள் அப்படியே இருந்தன. எனினும் ஆசாவின் உள்ளம் அவன் வாழ்நாளெல்லாம் ஆண்டவருக்கு முற்றிலும் பணிந்திருந்தது.

தன் தந்தை நேர்ந்து கொண்டவற்றையும் தான் நேர்ந்து கொண்ட வெள்ளி, தங்கத்தால் ஆன பொருள்களையும் ஆசா ஆண்டவரின் இல்லத்திற்குள் கொண்டு வந்து சேர்த்தான்.

ஆசாவுக்கும் இஸ்ரயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் ஆண்ட காலமெல்லாம் தொடர்ந்து போர் நடந்து வந்தது.

இஸ்ரயேலின் அரசன் பாசா யூதாவின்மீது படையெடுத்து வந்து, அரசன் ஆசாவுடன் இருந்த போக்குவரத்தைத் தடுக்க இடையில் இராமா நகரைக் கட்டினான்.

ஆசா ஆண்டவரது இல்லத்தின் செல்வங்களிலும் அரண்மனைச் செல்வங்களிலும் எஞ்சியிருந்த எல்லா வெள்ளியையும், பொன்னையும் தன் பணியாளர் மூலம், எசியோனின் மகனான தபரிம்மோனுக்குப் பிறந்து, தமஸ்குவில் வாழந்த பெனதாது என்ற சிரியா மன்னனுக்கு அனுப்பிக் கூறியது:

என் தந்தையும் உம் தந்தையும் செய்தது போல், நீரும் நானும் உடன்படிக்கை செய்து கொள்வோம். இதற்கெனப் பொன், வெள்ளி முதலியவற்றை நான் உமக்கு அன்பளிப்பாய் அனுப்புகிறேன். இஸ்ரயேலின் அரசன் பாசாவோடு நீர் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்து விடும். அப்பொழுது அவன் என்னைவிட்டு அகன்று போவான் .

பெனதாது அரசன் ஆசாவுக்கு இணங்கித் தன் படைத் தலைவர்களை இஸ்ரயேலின் நகர்களின் மேல் படை எடுக்குமாறு அனுப்பினான். அவர்கள் ஈயோன், தாண், ஆபேல், பெத்மாக்கா ஆகிய நகர்களையும் கினரோத்து முழுவதையும் நப்தலி நாடு அனைத்தையும் தாக்கி முறியடித்தார்கள்.

பாசா இதைக் கேள்வியுற்று, இராமாவைக் கட்டுவதை நிறுத்தி விட்டு, தீர்சா நகருக்குத் திரும்பினான்.

அப்பொழுது அரசன் ஆசா, யூதா முழுவதற்கும் விதி விலக்கின்றி அனைவருக்கும் ஆணையிட்டான். அதன்படி அவர்கள் பாசா இராமாவைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கற்களையும், மரங்களையும் எடுத்து வந்தனர். அவற்றைக்கொண்டு அரசன் ஆசா பென்யமினைச் சார்ந்த கேபாவையும் மிஸ்பாவையும் கட்டி எழுப்பினான்.

ஆசாவின் பிற செயல்களும் அவனுடைய எல்லா வீரச் செயல்களும் அவன் செய்தவை யாவும் அவன் நகர்களைக் கட்டியதும், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா? முதியவயதில் அவன் கால்களில் நோய் கண்டது.

ஆசா தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தன் மூதாதை தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் யோசபாத்து அரசன் ஆனான்.

யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில் எரொபவாமின் மகன் நாதாபு இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் இஸ்ரயேலின் மீது ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினான்.

அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து தன் தந்தையின் வழியிலேயே நடந்து, அவனைப் போலவே இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்தான்.

இசக்கார் வீட்டைச் சேர்ந்த அகியாவின் மகன் பாசா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான். நாதாபும் இஸ்ரயேல் படை முழுவதும் பெலிஸ்தியருடைய கிபத்தோன் என்னும் நகரை முற்றுகையிட்டிருக்கையில், பாசா அங்கே சென்று அவனை வெட்டி வீழ்த்தினான்.

இவ்வாறு, யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற மூன்றாம் ஆண்டில் பாசா நாதாபுவைக் கொன்று விட்டு அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.

அவன் அரசன் ஆனவுடன் எரொபவாமின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்று போட்டான். சீலோவைச் சார்ந்த அகியா என்ற தம் ஊழியர் மூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, எரொபவாமின் குடும்பத்தவர் அனைவரையும், எந்த உயிரையும் விட்டு வைக்காமல், அடியோடு அழித்தான்.

இந்த அழிவுக்கு எரொபவாம் தானே பாவங்கள் செய்ததும், இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்ததும், இவற்றால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு அவன் சினமூட்டியதுமே காரணம்.

நாதாபின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும், “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

ஆசாவுக்கும் இஸ்ரயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் ஆண்ட காலமெல்லாம் தொடர்ந்து போர் நடந்து வந்தது.

யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற மூன்றாம்ஆண்டில் அகியாவின் மகன் பாசா இஸ்ரயேல் முழுவதின்மீதும் தீர்சாவில் இருந்து கொண்டு இருபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

அவனும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். எரொபவாமின் வழியிலேயே நடந்து, அவனைப் போல் இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாயிருந்தான்.

அதிகாரம் 16.

பாசாவுக்கு எதிராக அனானியின் மகனான ஏகூவுக்கு ஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது:

பசிக்கு நிகரான உன்னை நான் உயர்த்தி என் மக்களாகிய இஸ்ரயேலுக்குத் தலைவனாக ஏற்படுத்தினேன். நீயோ எரொபவாமின் வழி நடந்து என் மக்களாகிய இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்து, அவர்களுடைய பாவங்களால் எனக்குச் சினமூட்டினாய்.

எனவே, இதோ! நான் பாசாவையும் அவன் வீட்டையும் முற்றிலும் அழிக்கப்போகிறேன். நெபாற்றின் மகனான எரொபவாமின் வீட்டுக்குச் செய்ததைப் போல, உன் வீட்டுக்கும் செய்வேன்.

பாசாவைச் சார்ந்தவருள் நகரில் மடிபவர் நாய்களுக்கு இரையாவர்: வயல்வெளியில் இறப்பவர் வானத்துப் பறவைகளுக்கு இரையாவர்.

பாசாவின் பிறசெயல்களும் அவன் செய்தவை யாவும் அவனுடைய வீரச் செயல்களும், இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

பாசா தன் மூதாதையரோடு துயில் கொண்டபின் திர்சாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் ஏலா அரசன் ஆனான்.

ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைப் பாசா செய்ததாலும், எரொபவாமின் வீட்டை அடியோடு அழித்ததாலும் அவன் அவருக்குச் சினமூட்டினான். ஆகையால் அவர்களுக்கு நேர்ந்தது போலவே பாசாவுக்கும் அவன் குடும்பத்துக்கும் நேரும் என்று அனானியின் மகன் ஏகூ என்ற இறைவாக்கினர் மூலம் ஆண்டவரின் வாக்கு உரைக்கபட்டது.

யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இருபத்தாறாம் ஆண்டில், பாசாவின் மகனான ஏலா இஸ்ரயேலின் அரசனாகித் திர்சாவில் இருந்து கொண்டு ஈராண்டுகள் ஆட்சி செய்தான்.

அவனது தேர்ப்படையின் பாதிக்குத் தலைவனாய் இருந்த சிம்ரி என்ற அவனுடைய பணியாளன் அவனை ஒழித்து விடச் சூழ்ச்சி செய்தான். திர்சாவில் அரண்மனை மேற்பார்வையாளன் அர்சாவின் வீட்டில் ஏலா குடிபோதையில் இருந்துபோது,

சிம்ரி உட்புகுந்து அவனை வெட்டிக் கொன்று விட்டு, அவனுக்குப் பதிலாக அரசனானான். இது யூதா அரசன் ஆசாவினது ஆட்சியின் இருபத்தேழாம் ஆண்டில் நிகழ்ந்தது.

அவன் அரியணை ஏறி அரசாளத் தொடங்கியவுடன், பாசாவின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றான். பாசாவின் உறவினர், நண்பர் ஆகியோருள் எந்த ஆணையும் அவன் விட்டுவைக்கவில்லை.

இவ்வாறு இறைவாக்கினர் ஏகூவின்மூலம் ஆண்டவர் பாசாவுக்கு எதிராக உரைத்த வாக்கின்படி, பாசாவின் குடும்பத்தினர் அனைவரையும் சிம்ரி ஒழித்துக் கட்டினான்.

பாசாவும் அவன் மகன் ஏலாவும் பல்வேறு பாவங்கள் செய்ததாலும், இஸ்ரயேல் பாவம் செய்யக் காரணமாய் இருந்து சிலை வழிபாட்டினால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டியதாலும், இது நேர்ந்தது.

ஏலாவின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இருபத்தேழாம் ஆண்டு, சிம்ரி திர்சாவில் இருந்துகொண்டு ஏழு நாள்கள் அரசாண்டான். அப்போது படைவீரர் பெலிஸ்தியருக்குச் சொந்தமான கிபத்தோனுக்கு எதிராகப் பாளையம் இறங்கியிருந்தனர்.

சிம்ரி சூழ்ச்சி செய்து அரசனைக் கொன்றுவிட்டான் என்பதை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள் கேள்விப்பட்டு, படைத்தலைவனாகிய ஓம்ரியை அன்றே பாளையத்திலிருந்து இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாக்கினர்.

அப்போது ஓம்ரி கிபத்தோனிலிருந்து இஸ்ரயேலர் அனைவருடன் சேர்ந்து புறப்பட்டுப் போய்த் தீர்சாவை முற்றுகையிட்டான்.

நகர் வீழ்ச்சியுற்றதைக் கண்டு, சிம்ரி அரண்மனையின் உட்கோட்டைக்குள் புகுந்தான். அந்த அரண்மனைக்குத் தீயிட்டு, தானும் அதில் மாண்டான்.

ஏனெனில். அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து, எரொபவாமின் வழியில் நடந்து, அவனைப் போலவே இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாயிருந்தான்.

சிம்ரியின் பிற செயல்களும் அவன் செய்த சூழ்ச்சியும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

அப்போது இஸ்ரயேலின் மக்கள் இரு பகுதியாகப் பிரிந்தனர். ஒரு பகுதியினர் கீனத்தின் மகன் திப்னியையும் மறுபகுதியினர் ஓம்ரியையும் அரசனாக்க முயன்றனர்.

கீனத்தின் மகன் திப்னியின் ஆள்களை விட ஓம்ரியின் ஆள்கள் வலிமை மிகுந்திருந்ததால், ஓம்ரி அரசனானான். திப்னி உயிரிழந்தான்.

ஓம்ரி அரசனாகி இஸ்ரயேல்மீது பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். முதல் ஆறு ஆண்டுகள் அவன் திர்சாவில் இருந்து கொண்டு அரசாண்டான்.

பின்னர் அவன் செமேர் என்பவனிடமிருந்து “சமாரியா“ என்ற மலையை ஏறத்தாழ எண்பது கிலோ எடையுள்ள வெள்ளிக்கு வாங்கினான். அம்மலையின் முன்னாள் உரிமையாளனான செமேரின் பெயரையொட்டி அந்நகருக்குச் “சமாரியா“ என்று பெயரிட்டான்.

ஓம்ரி ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அவன் தனக்கு முன்பிருந்த எல்லாரையும் விட மிகவும் தீயவனாய் இருந்தான்.

அவன் நெபாற்றின் மகன் எரொபவாமின் எல்லா வழிகளிலும் நடந்து, இஸ்ரயேலர் பாவம் செய்யக் காரணமாய் இருந்து, சிலை வழிபாட்டினால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான்.

ஓம்ரியின் பிறசெயல்களும் அவனுடைய வீரச் செயல்களும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

ஓம்ரி தன் மூதாதையரோடு துயில் கொண்டு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் ஆகாபு அரசன் ஆனான்.

யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற முப்பத்தெட்டாம் ஆண்டில், ஓம்ரியின் மகன் ஆகாபு இஸ்ரயேலை அரசாளத் தொடங்கினான். அவன் சமாரியாவில் இருந்துகொண்டு இஸ்ரயேலின்மீது இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.

ஓம்ரியின் மகன் ஆகாபு ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைத் தனக்கு முன் இருந்த எல்லாரையும் விட மிகுதியாய்ச் செய்தான்.

நெபாற்றின் மகன் எரொபவாமின் வழிகளில் அவன் நடந்தது போதாதென்று, சீதோனிய மன்னன் எத்பாகாலின் மகள் ஈசபேலை மணந்துகொண்டு பாகால் தெய்வத்தை வணங்கி வழிபடலானான்.

மேலும் சமாரியாவில் பாகாலுக்கு ஒரு கோவில் கட்டி, அத்தெய்வத்துக்கு ஒரு பலிபீடமும் எழுப்பினான்.

அதுவுமின்றி, ஆகாபு அசேராக் கம்பத்தை நிறுத்தி, தனக்கு முன்பிருந்த இஸ்ரயேலின் அரசர்கள் எல்லாரையும்விட மிகுதியாக, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான்.

அவனது ஆட்சியில் பெத்தேலைச் சார்ந்த ஈயேல் எரிகோவைக் கட்டினான். மனின் மகன் யோசுவாமூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, ஈயேல் அதற்கு அடிக்கல் இட்டபோது தன் தலைமகன் அபிராமையும், அதன் வாயில்களை அமைத்தபோது தன் கடைசி மகன் செகுபையும் சாகக் கொடுத்தான்.

அதிகாரம் 17.

கிலயாதில் குடியிருந்த திஸ்பே ஊரைச் சார்ந்த எலியா ஆகாபு அரசனிடம், நான் பணியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது என்றார்.

பின்னர் ஆண்டவரின் வாக்கு எலியாவுக்கு வந்தது:

இங்கிருந்து ஓடிவிடு: கிழக்கு முகமாகப் போய் யோர்தானுக்கு அப்பாலுள்ள கொ£த்து ஓடையருகில் ஒளிந்து கொள்.

அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக் கொள். அங்கே உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் .

அவ்வாறே அவர் போய் ஆண்டவரது வாக்கின்படி செய்தார். அவர் சென்று யோர்தானுக்கு அப்பாலிருந்த கொ£த்து ஓடையருகில் தங்கியிருந்தார்.

காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்குக் கொண்டு வந்தன. ஓடையில் தண்ணீர் குடித்துக் கொண்டார்.

நாட்டில் மழை பெய்யாத காரணத்தால் சில நாள்களில் அந்த ஓடையும் வற்றிப் போனது.

அப்பொழுது ஆண்டவரது வாக்கு அவருக்கு வந்தது:

நீ புறப்பட்டுச் சீதோன பகுதியிலிருக்கும் சாரிபாத்துக்குப் போய் அங்கே தங்கியிரு. அங்கு உனக்கு உணவு அளிக்குமாறு ஒரு கைம்பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் .

எலியா புறபட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்த பொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்றார்.

அவர் அதைக் கொண்ட வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, எனக்குக் கொஞ்சம் அபப்மும் கையோடு கொண்டு வருவாயா? என்றார்.

அவர், வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை: பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும் என்றார்.

எலியா அவரிடம், அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள்.

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது: கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது என்று சொன்னார்.

அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர்.

எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை: கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.

இதற்குப் பின், ஒருநாள், வீட்டுத் தலைவியான அந்தப் பெண்ணின் மகன் நோயுற்றான். அவனது நோய் மிகவும் முற்றவே, அவன் மூச்சு நின்று விட்டது.

அவர் எலியாவிடம், கடவுளின் அடியவரே, எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? என் பாவத்தை நினைவூட்டவும் என் மகனைச் சாகடிக்கவுமா நீர் வந்திருக்கிறீர்? என்றார்.

எலியா அவரிடம், உன் மகனை என்னிடம் கொடு என்று சொல்லி, அவனை அவர் மடியிலிருந்து எடுத்துத் தாம் தங்கியிருந்த மாடியறைக்குத் பக்கிச்சென்று தம் படுக்கையில் கிடத்தினார்.

அவர் ஆண்டவரை நோக்கி, என் கடவுளாகிய ஆண்டவரே, எனக்குத் தங்க இடம் கொடுத்த கைம்பெண்ணின் மகனைச் சாகடித்து அவளைத் துன்புறுத்தலாமா? என்று கதறினார்.

அவர் அந்தச் சிறுவன்மீது மூன்று முறை குப்புறப்படுத்து ஆண்டவரை நோக்கி, என் கடவுளாகிய ஆண்டவரே, இந்தச் சிறுவன் மீண்டும் உயிர் பெறச் செய்யும் என்று மன்றாடினார்.

ஆண்டவரும் எலியாவின் குரலுக்குச் செவி கொடுத்தார். சிறுவனுக்கு மீண்டும் உயிர் திரும்பி வரவே, அவன் பிழைத்துக் கொண்டான்.

எலியா சிறுவனைத் பக்கிக் கொண்டு மாடி அறையிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து, இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான் என்று கூறி அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார்.

அந்தப் பெண் எலியாவிடம், நீர் கடவுளின் அடியவரென்றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையானதென்றும் தெரிந்து கொண்டேன் என்றார்.

அதிகாரம் 18.

பல நாள்களுக்குப் பிறகு, பஞ்சத்தின் மூன்றாம் ஆண்டில். ஆண்டவர் எலியாவிடம், ஆகாபு உன்னை காணுமாறு போய் நில். நான் நாட்டில் மழை பெய்யச் செய்வேன் என்று கூறினார்.

அவ்வாறே எலியா தம்மை ஆகாபு காணுமாறு அவனிடம் சென்றார். அப்பொழுது சமாரியாவில் பஞ்சம் கடுமையாக இருந்தது.

அரண்மனைக் கண்காணிப்பாளன் ஒபதியாவை, ஆகாபு தன்னிடம் அழைத்தான். ஒபதியா ஆண்டவருக்கு மிகவும் அஞ்சி நடந்தவர்.

ஆண்டவரின் இறைவாக்கினரை ஈசபேல் அழிக்க முயன்றபோது, அவர்களுள் மறு பேரைக் குகைக்கு ஜம்பதாக மறைத்து வைத்திருந்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து வந்தார்.

ஆகாபு ஒபதியாவிடம், நாடெங்கும் சென்று எல்லா நீருற்றுகளையும், நீரோடைகளையும் பா¡ப்போம். ஒருவேளை குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் உயிர் வாழத் தேவையான புல் கிடைக்கலாம். நம்முடைய கால் நடைகளை இழக்க வேண்டியிராது என்றான்.

சுற்றிப்பார்ப்பதற்கென நாட்டைப் பிரித்துக் கொண்டபின் ஆகாபு ஒரு திசையை நோக்கிச் சென்றார்: ஒபதியா மறுதிசையை நோக்கிச் சென்றார்.

போகும் வழியில் ஒபதியா திடீரென எலியாவைச் சந்தித்தார். அவர் அவரை அடையாளம் கண்டு கொண்டு, தாழ்ந்து வணங்கி, நீர் என் தலைவர் எலியா தாமோ? என்றார்.

அவர், ஆம், நான்தான்! நீ உன் தலைவனிடம் சென்று, “எலியா வந்துள்ளார்“ என்று சொல் என்றார்.

அப்பொழுது ஒபதியா, நான் என்ன பாவம் செய்தேன்? உம் அடியானாகிய என்னை ஆகாபு கொலை செய்யும்படி நீர் ஏன் அவனிடம் கையளிக்கிறீர்?

வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவன் உம்மைத் தேடிப் பிடிக்கும்படி ஆளனுப்பாத நாடோ பேரரசோ இல்லை. எந்த நாடோ அரசோ “உம்மைக் காணவில்லை“ என்று சொன்னால், “உம்மைக் காணவில்லை“ என்று ஆணையிடச் செய்தான்.

ஆனால் நீரோ, “எலியா வந்துள்ளார் “ என என் தலைவனிடம் சொல்லச் சொல்கீறீர்.

நான் உம்மைவிட்டு அகன்றவுடன், ஆண்டவரின் ஆவி உம்மை எனக்குத் தெரியாமல் பக்கிக் கொண்டு போய்விடலாம். ஆகாபிடம் சென்று நான் தெரிவிக்கையில், உம்மை அவன் காணவில்லையெனில், என்னைக் கொன்று விடுவான். உம் அடியானாகிய நான் இளமை முதல் ஆண்டவருக்கு அஞ்சி நடந்திருக்கின்றேன்.

ஆண்டவரின் இறைவாக்கினரை ஈசபேல் அழிக்க முயன்றபோது, அவர்களில் மறு பேரைக் குகைக்கு ஜம்பதாக மறைத்து வைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து வந்தது பற்றி நீர் கேள்விப்படவில்லையா?

இப்படியிருக்க, நான் என் தலைவனிடம் சென்று, “எலியா வந்துள்ளார்“ என்று சொல்லச் சொல்கிறீர். என்னை அவன் கொன்றுவிடுவான் என்றார்.

அப்பொழுது எலியா, நான் பணியும் படைகளின் ஆண்டவர் மேல் ஆணை! இன்று அவன் காணுமாறு அவன்முன் நிற்பேன் என்றார்.

ஒபதியா புறப்பட்டு ஆகாபைச் சந்தித்து இதைத் தெரிவித்தார். உடனே ஆகாபு எலியாவைச் சந்திக்கச் சென்றான்.

ஆகாபு எலியாவைக் கண்டதும், இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நீதானே? என்றான்.

அதற்கு எலியா, இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நானல்ல: நீயும் உன் தந்தையின் வீட்டாரும்தான். ஏனெனில் நீங்கள் ஆண்டவரின் கட்டளைகளைப் புறக்கணித்துப் பாகால் பின்னே செல்கிறீர்கள்!

இப்போதே ஆளனுப்பி இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் கர்மேல் மலையில் என் முன்னிலையில் ஒன்று திரட்டு. ஈசபேலின் பந்தியில் உணவருந்தும் பாகாலின் நாடீற்றைம்பது பொய்வாக்கினரையும் அசேராவின் நாடீறு பொய்வாக்கினரையும் கொண்டு வந்துசேர் என்றார்.

அவ்வாறே ஆகாபு இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் அழைத்தான். பொய்வாக்கினரையும் கர்மேல் மலையில் ஒன்று திரண்டினான்.

எலியா, மக்கள் அனைவர்முன் சென்று, எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கக் போகிறீர்கள்? ஆண்டவர்தாம் கடவுள் என்றால், அவரைப் பின்பற்றுங்கள்! பாகால் தான் என்றால், அவன் பின்னே செல்லுங்கள்!

அப்பொழுது எலியா மக்களிடம், ஆண்டவரின் திருவாக்கினருள் நான் ஒருவன்தான் எஞ்சியிருக்கிறேன்! பாகாலின் பொய்வாக்கினரோ நாமற்றைம்பது பேர் இருக்கின்றனர்.

இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டு வாருங்கள். அவர்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்து, அதைத் துண்டு துண்டாக வெட்டி, விறகின் மேல் வைக்கட்டும்: ஆனால் நெருப்பு வைக்கலாகாது. மற்றக் காளையை நான் தயார் செய்து விறகின் மேல் வைப்பேன்: நானும் நெருப்பு வைக்க மாட்டேன்.

நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி அழையுங்கள். நானோ ஆண்டவரின் பெயரைச் சொல்லி அழைப்பேன். அதற்கு நெருப்பு மூலம் பதிலளிக்கும் கடவுளே உண்மைக் கடவுள் என்றார். மக்கள் அனைவரும் பதில்மொழியாக, நீர் சொல்வது சரியே என்றனர்.

பிறகு எலியா பாகாலின் பொய்வாக்கினரிடம், நீங்கள் அதிகம் பேராய் இருப்பதால் முதலில் நீங்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யுங்கள்: ஆனால் நெருப்பு மூட்டாதீர்கள் என்றார்.

அவ்வாறே அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையைக் கொண்டு வந்து தயார் செய்த பின், காலை முதல் நண்பகல் வரை பாகாலின் பெயரைக் கூப்பிட்டு, பாகாலே! பதில் தாரும் என்று கத்தினர். ஆனால் எக்குரலும் கேட்கவில்லை: எப்பதிலும் வரவில்லை. எனவே அவர்கள் தாங்கள் கட்டிய பலிபீடத்தைச் சுற்றி ஆடலாயினர்.

நண்பகலாயிற்று. எலியா அவர்களைக் கேலி செய்து, இன்னும் உரத்த குரலில் கத்துங்கள். அவன் ஒரு தெய்வம்! ஒரு வேளை அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கலாம்! அல்லது ஒதுக்குப்புறம் போயிருக்கலாம்! அல்லது பயணம் செய்து கொண்டிருக்கலாம்! அவன் பங்கிக் கொண்டிருக்கலாம்: அவன் விழித்தெழ வேண்டியிருக்கும்! என்றார்.

எனவே அவர்கள் இன்னும் உரத்த குரல§ல் கத்தினர். தங்கள் வழக்கப்படி வாளினாலும் வேலினாலும், இரத்தம் கொட்டும் வரை, தங்களையே கீறிக் கிழித்துக் கொண்டார்கள்,

பிற்பகல் ஆய§ற்று. அவர்கள் மாலைப் பலி செலுத்தும் நேரம்வரை தொடர்ந்து உளறிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் எக்குரலும் கேட்கவில்லை. எப்பதிலும் வரவில்லை. கவனிப்பார் யாருமில்லை.

அப்போது எலியா எல்லா மக்களையும் நோக்கி, என் அருகில் வாருங்கள் என்றார். மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். உடனே எலியா அங்கே இடிந்து கிடந்த ஆண்டவரது பலிபீடத்தைச் செப்பனிட்டார்.

“உன் பெயர் இஸ்ரயேல்“ என்று ஆண்டவர் யாக்கோபுக்கு உரைத்திருந்ததன் பொருட்டு, அவர் வழிவந்த குலங்களின் எண்ணிக்கைப்படி எலியா பன்னிரு கற்களை எடுத்தார்.

அக்கற்களைக் கொண்டு ஆண்டவர் பெயா§ல் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அப்பலி பீடத்தைச் சுற்றிலும் இரண்டு உழவுகால் அகலம் உள்ள வாய்க்காலை வெட்டினார்.

அதன்பின் விறகுக் கட்டைகளை அடுக்கி, காளையைத் துண்டு துண்டாக வெட்டி, அவற்றின் மேல் வைத்தார்.

நான்கு குடங்கள் நிறைய தண்ணீர் கொண்டு வந்து, எரிபலியின் மேலும் விறகுக் கட்டைகளின்மேலும் ஊற்றுங் கள் என்றார். அவர் இரண்டாம் முறையும் செய்யுங்கள் , என்றார். அவர்கள் இரண்டாம் முறையும் அவ்வாறே செய்தனர். அவர் மூன்றாம் முறையும் செய்யுங்கள் என்றார். அவர்கள் மூன்றாம் முறையும் அப்படியே செய்தனர்.

எனவே தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது. மேலும் வாய்க்காலை அவர் தண்ணீரால் நிரப்பினார்.

மாலைப் பலி செலுத்தும் நேரமாயிற்று. இறைவாக்கினர் எலியா பலிபீடத்தின் அருகில் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் என்பவர்களின் கடவுளாகிய ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுள் நீரே என்றும், இவற்றையெல்லாம் நான் உம் வாக்கின்படியே செய்தேன் என்றும் இன்று விளங்கச் செய்தருளும்.

நீரே கடவுளாகிய ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை மீண்டும் மாற்றுவீர் என்றும் இம்மக்களின் மனத்தை மீண்டும் மாற்றுவீர் என்றும் இம்மக்கள் அறியும்படி எனக்குப் பதில் தாரும்! ஆண்டவரே எனக்குப் பதில் தாரும்! என்றார்.

உடனே ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலியையும், விறகுக் கட்டைகளையும், கற்களையும், மணலையும் சுட்டெரித்து வாய்க்கால் நீரையும் வற்றச் செய்தது.

இதைக் கண்டவுடன் மக்கள் அனைவரும் முகங்குப்புற விழுந்து, ¥ஆண்டவரே கடவள்! ஆண்டவரே கடவுள்! என்றனர்.

அப்போது எலியா அவர்களை நோக்கி, நீங்கள் பாகாலின் பொய்வாக்கினருள் எவனும் தப்பியோடாதபடி அவர்களைப் பிடியுங்கள் என்றார். மக்கள் அவர்களைப் பிடித்துக்கொடுக்க, எலியா அவர்களைக் கீசோன் ஓடைக்குக் கொண்டுபோய் அங்கே கொன்றார்.

பின்பு எலியா ஆகாபை நோக்கி, நீர் போய் உணவும் பானமும் அருந்துவீர். ஏனெனில் பெருமழையின் ஓசை கேட்கிறது என்றார்.

ஆகாபு உணவும் பானமும் அருந்தச் சென்றவுடன், எலியா கர்மேல் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று. அங்கே தரையில் மண்டியிட்டுத் தம் முழங்கால்களுக்கு இடையே முகத்தைப் புதைத்துக்கொணடார்.

பின்பு அவர் தம் பணியாளனை நோக்கி, நீ போய்க் கடல் பக்கமாய்ப் பார் என்றார். அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான். எலியா அவனை நோக்கி, ஏழுமுறை மீண்டும் சென்று பார் என்றார்.

ஏழாம் முறை அவன் சென்று பார்த்து இதோ, மனித உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருகிறது என்றான். அப்போது எலியா அவனை நோக்கி, நீ போய் ஆகாபிடம், மழை தடுத்து நிறுத்தாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்படி சொல் என்றார்.

இதற்கிடையில் வானம் இருண்டது: கார் மேகம் சூழ்ந்தது. காற்று அடித்தது. பெரும் மழை பெய்தது. ஆகாபு தேரில் ஏறி இஸ்ரயேலுக்குச் சென்றான்.

அந்நேரத்தில் ஆண்டவரின் ஆற்றல் எலியாவின்மேல் வந்திறங்க, அவர் தம் இடையே வரிந்து கட்டிக் கொண்டு, இஸ்ரயேல்வரை ஆகாபுக்கு முன்னே ஓடினார்.

அதிகாரம் 19.

எலியா செய்த அனைத்தையும் பொய்வாக்கினர் அனைவரையும் அவர் வாளினால் கொன்றதையும் ஆகாபு ஈசபேலுக்குத் தெரிவித்தான்.

எனவே ஈசபேல் எலியாவிடம் பது அனுப்பி, நீ அவர்களது உயிரைப் பறித்தது போல், நானும் நாளை இந்நேரத்திற்குள் உன் உயிரைப் பறிக்காவிடில், தெய்வங்கள் எனக்குத் தண்டனை கொடுக்கட்டும் என்று சொல்லச் சொன்னாள்.

ஆகவே அவர் அச்சமுற்று, தம் உ¢யரைக் காத்துக் கொள்ளுமாறு தப்பி ஓடினார். யூதாவிலிருந்து பெயேர்செபாவை அடைந்ததும் அங்கே தம் பணியாளனை விட்டு விட்டு,

அவர் பாலை நிலத்தில் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டுமெனப் பின்வருமாறு மன்றாடினார்: ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்: என் உயிரை எடுத்துக் கொள்ளும்: நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல:

பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார். அப்போது வானபதர் அவரைத் தட்டி எழுப்பி, எழுந்து சாப்பிடு என்றார்.

அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக் கொண்டார்.

ஆண்டவரின் பதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, எழுந்து சாப்பிடு: ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும் என்றார்.

அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

அவர் அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவரது வாக்கு அவருக்கு வந்தது. அவர் எலியா! நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று வினவினார்.

அதற்கு அவர், படைகளின் கடவுளாகிய ஆண்டவர் மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர். உம் பலிபீடங்களைத் தகர்த்து விட்டனர். உம் இறைவாக்கினரை வாளால் கொன்றுவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர் என்றார்.

அப்போது ஆண்டவர், வெளியே வா: மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன் என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை.

நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது.

அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று ஒரு குரல் கேட்டது.

அதற்கு அவர், படைகளின் கடவுளாகிய ஆண்டவர்மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறி விட்டனர்: உம் பலிபீடங்களைத் தகர்த்து விட்டனர். உம் இறைவாக்கினரை வாளால் கொன்று விட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர் என்றார்.

அப்போது ஆண்டவர் அவரிடம், நீ வந்த வழியே திரும்பித் தமஸ்குப் பாலைநிலம் நோக்கிச் செல். அவ்விடத்தை அடைந்தவுடன் அசாவேலைச் சிரியாவுக்கு மன்னனாகத் திரும்பொழிவு செய்.

நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசனாக திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்.

அசாவேலின் வாளுக்குத் தப்பினவனை ஏகூ கொல்லட்டும், ஏகூவின் வாளுக்குத் தப்பினவனை எலிசா கொல்லட்டும்.

ஆயினும் பாகாலுக்கு மண்டியிடாமலும் அவனை முத்தி செய்யாதவர்களுமான ஏழாயிரம் பேரை மட்டும் நான் இஸ்ரயேலில் விட்டுவைப்பேன் என்றார்.

எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது பக்கிப் போட்டார்.

எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன் என்றார். அதற்கு அவர், சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்! என்றார்.

எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

அதிகாரம் 20.

சிரியாவின் மன்னன் பெனதாது தன் படை முழுவதையும் திரட்டிக்கொண்டு, முப்பத்திரண்டு மன்னர்களோடு சேர்ந்து, குதிரைகளோடும் தேர்களோடும் சமாரியாவை முற்றுகையிட்டுத் தாக்கினான்.

அப்போது நகருக்குள் இருந்த இஸ்ரயேலின் அரசனான ஆகாபிடம் பதனுப்பி, பெனதாது கூறுவது இதுவே:

உன் வெள்ளியும் பொன்னும் என்னுடையவை. உன் மனைவியரிலும் புதல்வியரிலும் சிறந்தவர் என் உடைமை ஆவர் என்று சொல்லச் சொன்னான்.

இஸ்ரயேலின் அரசன், மன்னரே! என் தலைவரே! உமது வார்த்தையின்படி அடியேனும் என் உடைமைகள் யாவும் உம்முடையவையே என்று பதிலளித்தான்.

அத்பதர்கள் மீண்டும் வந்து, பெனதாது கூறுவது இதுவே: “உன் வெள்ளியையும் பொன்னையும் உன் மனைவியரையும் புதல்வியரையும் என்னிடம் அளித்துவிடு“ என்று நான் முன்பே உனக்குச் சொல்லி அனுப்பினேன்.

அவ்வாறே நாளை இந்நேரம் என் அலுவலரை உன்னிடம் அனுப்புவேன். அவர்கள் உன் அரண்மனையையும் உன் அதிகாரிகளின் மாளிகைகளையும் சோதித்து உன் பார்வையில் விலைமதிப்புள்ள அனைத்தையும் கைப்பற்றி எடுத்துச் செல்வார்கள் என்று சொன்னார்கள்.

அப்போது இஸ்ரயேலின் அரசன் நாட்டின் பெரியோர்களை எல்லாம் அழைத்து, இவன் நமக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்யும் விதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். பாருங்கள்! இவன் என் மனைவியரையும் மைந்தரையும் என் வெள்ளியையும் பொன்னையும் கேட்டான். அவற்றைக் கொடுக்க நான் மறுக்கவில்லையே! என்று கூறினான்.

அப்போது பெரியோர் அனைவருமே அவனை நோக்கி, நீர் அவனுக்குச் செவி கொடுக்கவோ இணங்கவோ வேண்டாம் என்றனர்.

அவன் பெனதாதின் பதரை நோக்கி, நீங்கள் அரசராகிய என் தலைவரிடம் சென்று, “நீர் உம் அடியவனாகிய என்னிடம் முதல் முறை சொல்லியனுப்பியவாறு நான் யாவற்றையும் செய்து தருவேன். ஆனால் இம்முறை நீர் கேட்பவற்றை என்னால் தர முடியாது“ என்று தெரிவியுங்கள் என்றான். அத்பதரும் திரும்பிச் சென்று இப்பதிலை அவனுக்குத் தெரிவித்தனர்.

பெனதாது மீண்டும், எனக்கடியில் உள்ள மக்கள் ஒவ்வொருவரும் கைக்கு ஒரு பிடி சமாரியாவின் புழுதியை அள்ளாமல் போனால், என் தெய்வங்கள் எனக்குத் தகுந்த தண்டனை கொடுக்கட்டும்! என்று சொல்லி அனுப்பினான்.

அதற்கு இஸ்ரயேலின் அரசன் மறுமொழியாக, போர்க் கவசம் அணிந்தவுடன் போரில் வென்றவன் போல் பிதற்றக்கூடாது என்று அவனிடம் சொல் என்று பதிலளித்தான்.

மறுமொழி வந்து சேர்ந்த நேரத்தில் பெனதாது மற்ற மன்னர்களோடு மது அருந்திக்கொண்டிருந்தான். அதைக் கேட்டு அவன் தம் அலுவலரை நோக்கி, போரிடத் தயாராகுங்கள் என்றான். அவர்களும் நகருக்கு எதிராகப் போரிடத் தயாராயினர்.

அப்பொழுது ஓர் இறைவாக்கினர் இஸ்ரயேலின் அரசன் ஆகாபை அனுகி, ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: இந்தப் பெரும் படை முழுவதையும் பார்த்தாயா? நானே உன் ஆண்டவர் என்று நீ உணரும்படி, இதோ இன்று அதை உன் கையில் ஒப்புவிக்கிறேன் என்றார்.

ஆகாபு அவரைப் பார்த்து, யார் மூலம் இது நடைபெறும்? என்று வினவ அவர் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்கள் மூலம் என்றார். மறுபடியும் அவன் போரை யார் தொடங்க வேண்டும்? என்று கேட்க, அவர் நீ தான்? என்றார்.

மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்களைக் கூட்டிச் சேர்க்க, அவர்கள் இருமற்று முப்பத்திரண்டு பேர் இருந்தனர். பின்பு இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் கூட்டிச் சேர்க்க அவர்கள் ஏழாயிரம் பேர் இருந்தனர்.

இவர்கள் நண்பகல் வேளையில் வெளியே புறப்படனர். பெனதாதும் அவனுக்குத் துணையாக வந்த ஏனைய முப்பத்திரண்டு மன்னர்களும் பாசறையில் குடிவெறியில் இருந்தனர்.

மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்கள் முதலில் வெளியே வந்தனர். பெனதாது அவர்கள் யாரென்று பார்த்து வர ஆள்களை அனுப்ப, அவர்கள் சமாரியாவிலிருந்து வந்தவர்கள் என்று அவனுக்கு அவர்கள் அறிவித்தனர்.

அப்போது மன்னன், அவர்கள் சமாதான நோக்கில் வந்திருந்தாலும், போரிடும் நோக்கில் வந்திருந்தாலும், அவர்களை உயிரோடு பிடியுங்கள் என்றான்.

மாநிலத் தலைவர்களின் இளம் வீரர்களும் அவர்கள் பின்வந்த படையினரும் நகரை விட்டு வெளியே வந்ததும்,

ஒவ்வொருவரும் தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை வெட்டி வீழ்த்தினர். சிரியர் புறமுதுகு காட்டி ஓட, இஸ்ரயேலர் அவர்களைத் துரத்திச் சென்றனர். சிரியாவின் மன்னன் பெனதாது குதிரைமீது ஏறிக் குதிரை வீரரோடு தப்பியோடினான்.

இஸ்ரயேலரின் அரசன் துரத்திச் சென்று குதிரைகளையும் தேர்களையும் கைப்பற்றி, பரைக் கொன்று குவித்தான்.

பின்பு இறைவாக்கினர் இஸ்ரயேலின் அரசனிடம் வந்து, அவனை நோக்கி, நீ போய் உன் படைவலிமையை மிகுதியாக்கிக் கொள். அடுத்த இளவேனிற் காலத்தில் சிரியாவின் மன்னன் மீண்டும் உன்னோடு போரிட வருவான். அதற்குள் நீ செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தித்துப்பார்! என்றார்.

மேலும் சிரியாவின் மன்னனுடைய அலுவலர் அவனிடம் கூறியது: இஸ்ரயேலரின் கடவுள் மலைகளின் கடவுள். எனவே, அவர்கள் நம்மை விட வலிமை மிகுந்தவராயிருந்தனர். ஒருவேளை நாம் அவர்களோடு சமவெளியில் போரிட்டோமானால், அவர்களை விட நாமே வலிமை மிகுந்தவராயிருப்போம்.

இதற்கு ஏற்ற வழியாதெனில் மன்னர்களைப் படைத் தலைமையினின்று நீக்கவிட்டு அவர்களுக்குப் பதிலாகப் படைத்தலைவர்களை நீர் நியமிக்க வேண்டும்.

நீர் இழந்து விட்ட படைக்குச் சமமான படையை மறுபடியும் திரட்டிக் கொள்ளும். குதிரைக்கு குதிரை, தேருக்குத் தேர், அதே அளவில் திரட்டிக் கொள்ளும். சமவெளியில் அவர்களோடு போரிட்டால், நாமே அவர்களை விட வலிமை மிக்கவராயிருப்போம் என்பது உறுதி என்றனர். அவனும் அவர்களது பேச்சை நம்பி அவ்வாறே செய்தான்.

இளவேனிற் காலம் வந்ததும் பெனதாது சிரியரைத் திரட்டிக் கொண்டு இஸ்ரயேலரோடு போரிட அபேக்குக்கு வந்தான்.

இஸ்ரயேல் மக்கள் ஒன்றுதிரண்டு, வேண்டிய உணவோடு அவர்களுக்கு எதிராய்ப் புறப்பட்டுச் சென்று பளையம் இறங்கினர். அவர்களுக்குமுன் இவர்கள் இரு சிறிய ஆட்டு மந்தைகளைப் போல் காணப்பட்டனர். சிரியரோ அங்குள்ள பகுதியையே நிரப்பி விட்.டனர்.

அப்போது கடவுளின் அடியார் ஒருவர் இஸ்ரயேலின் அரசனை அணுகி, அவனிடம், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: சிரியர், “ஆண்டவர் மலைகளின் கடவுள்தான்: பள்ளத்தாக்குகளின் கடவுள் அல்லர்“. என்று நினைக்கின்றனர். எனவே இந்தப் பெரும் படை முழுவதையும் உன் கையில் ஒப்புவிப்பேன். நானே ஆண்டவர் என்று நீ அறிந்துகொள்வாய் என்று கூறினார்.

ஏழு நாள்களாகப் படைகள் நேருக்கு நேர் பாளையம் இறங்கி இருந்தன. ஏழாம் நாளன்று போர் தொடங்கியது. இஸ்ரயேல் மக்கள் ஒரே நாளில் சிரியரது காலாள் படையில் இலட்சம் பேரை வெட்டி வீழ்த்தினர்.

எஞ்சியவர் அபேக்குக்குள் தப்பி ஓடினர். அங்கே மீதியிருந்த இருபத்தேழாயிரம் பேர் மீது மதில் இடிந்து விழுந்தது. பெனதாது தப்பி ஓடி நகருக்குள் ஓர் உள்ளறையில் ஒளிந்து கொண்டான்.

அப்போது அவன் பணியாளர் வந்து அவனை நோக்கி, இஸ்ரயேல் குல அரசர்கள் இரக்கத்தின் மன்னர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே நாம் சாக்குத் துணியை இடுப்பிலும், கயிற்றைத் தலையிலும் கட்டிக்கொண்டு இஸ்ரயேலின் அரசனிடம் போவோம். ஒருவேளை அவர் உமக்காகிலும் உயிர்ப் பிச்சை அளிக்கலாம் என்று சொன்னார்கள்.

அவ்விதமே அவர்கள் சாக்குத் துணியை இடுப்பிலும் கயிற்றைத் தலையிலும் கட்டிக்கொண்டு இஸ்ரயேல் அரசனிடம் வந்தனர். அவர்கள் அரசனிடம், உம் பணியாளர் பெனதாது, “எனக்கு உயிர்ப்பிச்சை தாரும்“ என்று உம்மிடம் மன்றாடுகிறார் என்று கூறினர். அதற்கு அரசன், அவர் என் சகோதரர்: அவர் இன்னும் உயிரோடு இருக்கின்றாரா? என்றார்.

அந்த ஆள்கள் இச்சொற்களை நல்லதோர் அடையாளமாக எடுத்துக்கொண்டு, அவன் சொற்களிலேயே உடனடியாக ஆம் , உம் சகோதரர் பெனதாது உயிரோடிருக்கின்றார் என்று பதிலளித்தனர். அப்போது அவன், நீங்கள் போய் அவரை அழைத்து வாருங்கள் என்றான். பெனதாது அவனிடம் வந்ததும் ஆகாபு அவனைத் தேரில் ஏற்றிக்கொண்டான்.

அப்போது பெனதாது அவனைப் பார்த்து, என் தந்தை உம் தந்தையிடமிருந்து கைப்பற்றிய நகர்களை நான் திருப்பிக்கொடுத்து விடுகிறேன். என் தந்தை சமாரியாவில் செய்தது போல், நீரும் தமஸ்குவில் கடைவீதிகளை அமைத்துக்கொள்ளும். இதற்கான உடன்படிக்கை செய்து கொண்டபின், உம்மை நான் அனுப்பி வைப்பேன் என்றான். அப்படியே ஆகாபு அவனோடு உடன்படிக்கை செய்து கொண்ட பின், அவனை அனுப்பிவைத்தான்.

இறைவாக்கினர் குழுவைச் சார்ந்த ஒருவர் ஆண்டவரின் வாக்கிற்கிணங்க தம் தோழன் ஒருவனை நோக்கி, என்னை அடி என்றார்.

அவனோ அவரை அடிக்க மறுத்துவிட்டான். அவர் அவனைப் பார்த்து, நீ ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனதால், நீ என்னைவிட்டு அகன்றவுடன் ஒரு சிங்கம் உன்னை அடித்துக் கொல்லும் என்றார். அவ்வாறே அவன் அவரை விட்டுச் செல்கையில் ஒரு சிங்கம் அவனைக் கண்டு அடித்துக் கொன்றது.

அதன் பிறகு அவர் வேறொருவனை நோக்கி, என்னை அடி என்றார். அம்மனிதனோ அவரைக் காயமுற அடித்தான்.

அவ்விறைவாக்கினர் அங்கிருந்து சென்று தம் கண்ணைக் கட்டிக்கொண்டு, மாறுவேடத்தில் அரசனுக்காக வழியில் காத்திருந்தார்.

அவ்வழியே அரசன் வந்தபோது அவர் அரசனை அழைத்து, உம் அடியான் போர்க்களத்தினுள் நுழைந்தபோது ஒருவன் திரும்பி என்னிடம் ஓர் ஆளைக் கொண்டு வந்து, “இம்மனிதனைக் காவல் செய். அவன் தப்பி ஓடினால், அவன் உயிருக்கு ஈடாக உன் உயிரையோ நாற்பது கிலோ நிறையுள்ள வெள்ளியையோ கொடுக்க வேண்டும்“ என்றான்.

உம் அடியான் இங்குமங்கும் வேலையாய் இருந்தபோது, அவனைக் காணவில்லை என்றார். இஸ்ரயேலின் அரசன் அவரைப் பார்த்து உன் தீர்ப்பை நீயே உனக்கு அளித்துவிட்டாய் என்றான்.

உடனே அவர் தமது கண்கட்டை அவிழ்த்துக் கொள்ளவே, இஸ் ரயேலின் அரசன் அவர் இறைவாக்கினருள் ஒருவர் என்று அறிந்து கொண்டான்.

அப்போது இறைவாக்கினர் அரசனை நோக்கி, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: சாவுக்குக் குறிக்கப்பட்டவனை நீ உன் கையிலிருந்து தப்பிப் போகும்படி செய்ததால், அவன் உயிருக்குப் பதிலாக உன் உயிரையும் அவன் மக்களுக்கு ஈடாக உன் மக்களையும் எடுத்துக் கொள்வேன் என்றார்.

இஸ்ரயேலின் அரசனோ ஆத்திரமும் கோபமும் கொண்டவனாய் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டுச் சமாரியாவுக்குச் சென்றான்.

அதிகாரம் 21.

இவற்றுக்குப் பின் நிகழ்ந்ததாவது: இஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு இஸ்ரயேலில், சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.

ஆகாபு நாபோத்திடம், உன் திராட்சைத் தோட்டம் என் அரண்மனை அருகிலிருப்பதால், நான் அதைக் காய்கறித் தோட்டம் ஆக்கும்படி என்னிடம் கொடுத்து விடு. அதற்குப் பதிலாய் அதைவிட நல்ல திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன். உனக்கு விருப்பமானால், அதன் விலையை வெள்ளியாகத் தருகிறேன் என்றான்.

அதற்கு நாபோத்து ஆகாபிடம், என் மூதாதையரின் உரிமைச் சொத்தை நான் உமக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! என்றான்.

என் மூதாதையரின் உரிமைச் சொத்தை உமக்குக் கொடுக்க மாட்டேன் என்று இஸ்ரயேலனாகிய நாபோத்து தன்னிடம் சொன்ன வார்த்தைகளை முன்னிட்டு, ஆகாபு ஆத்திரத்துடனும் கோபத்துடனும் தன் அரண்மனைக்கு வந்தான்: முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் கட்டிலில் படுத்துக்கிடந்தான்: உணவருந்த மறுத்துவிட்டான்.

அப்போது அவனுடைய மனைவி ஈசபேல் அவனிடம் வந்து, நீர் ஏன் மனம் சோ¡ந்திருகக்கிறீர்? ஏன் உணவருந்தவில்லை? என்று அவனைக் கேட்டாள்.

அதற்கு அவன் அவளிடம், நான் இஸ்ரயேலனாகிய நாபோத்திடம் பேசினேன். “உன் திராட்சைத் தோட்டத்தை அதற்கான வெள்ளிக்கு எனக்குக் கொடுத்து விடு. உனக்கு விருப்பமானால், அதற்குப் பதிலாக வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்“ என்றேன். அதற்கு அவன் “என் திராட்சைத் தோட்டத்தை உமக்குத் தர மாட்டேன்“ என்று சொல்லிவிட்டான் என்றான்.

அப்போது அவன் மனைவி ஈசபேல் அவனை நோக்கி, இஸ்ரயேலின் அரசராகிய நீர் இப்படியா நடந்துகொள்வது? எழுந்திருந்து உணவருந்தி மனமகிழ்வாய் இரும். இஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நானே உம்மிடம் ஒப்படைக்கிறேன் என்றாள்.

எனவே அவன் ஆகாபின் பெயரால் மடல்கள் எழுதி, அவற்றில் அவனது முத்திரையைப் பொறித்து, அம்மடல்களை நாபோத்துடன் நகரில் குடியிருந்த பெரியோருக்கும் உயர்குடி மக்களுக்கும் அனுப்பினாள்.

அம்மடல்களில் அவள், நீங்கள் ஒரு நோன்பு அறிவித்து நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமரச் செய்யுங்கள்.

அவனுக்கு எதிராய் இழி மனிதர் இருவரை ஏவி விட்டு, “நீ கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தாய்“ என்று அவன் மீது குற்றம் சாட்டச்செய்யுங்கள். பின்னர் அவனை வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றுபோடுங்கள் என்று எழுதியிருந்தாள்.

நாபோத்துடன் அந்நகரில் குடியிருந்த பெரியோரும் உயர்குடி மக்களும் ஈசபேல் தமக்கு அனுப்பிய மடல்களில் எழுதி இருந்தவாறே செய்தனர்.

அவர்கள் ஒரு நோன்பு அறிவித்து, நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமர்த்தினர்.

அப்பொழுது அந்த இழி மனிதர் இருவரும் வந்து நாபோத்துக்கு எதிரே உட்கார்ந்தனர். அந்த இழி மனிதர் மக்களைப் பார்த்து, நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான் என்று அவன் மீது குற்றம் சாட்டினர். எனவே, அவர்கள் அவனை நகருக்கு வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றனர்.

பிறகு அவர்கள் நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான் என்று ஈசபேலுக்குச் செய்தி அனுப்பினர்.

நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்ததை ஈசபேல் கேட்டவுடன் அவள் ஆகாபை நோக்கி, நீர் எழுந்து சென்று இஸ்ரயேலனாகிய நாபோத்து உமக்கு விற்க மறுத்த அதே திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும்: நாபோத்து உயிரோடில்லை: அவன் இறந்து போனான் என்றாள்.

நாபோத்து இறந்துபோனதை ஆகாபு கேட்டு, இஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை உடைமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டுப் போனான்.

அந்நேரத்தில் திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்தவாக்கு:

நீ புறப்பட்டு, சமாரியவிலிருந்து ஆட்சிசெய்யும் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைப் போய்ப் பார். அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன் உடைமையாக்கிக் கொள்ள அங்குப் போயிருக்கிறான்.

நீ அவனிடம் சொல்ல வேண்டியது: ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ கொலை செய்து, கொள்ளையடித்திருக்கிறாய் இல்லையா? எனவே, நீ அவனிடம் சொல்ல வேண்டியது. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும்.

அப்போது ஆகாபு எலியாவை நோக்கி, என் எதிரியே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயா? என்று கேட்டான். அதற்கு அவர் ஆம், நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யும் அளவுக்கு உன்னையே விற்றுவிட்டாய்.

இதோ! நான் உனக்குத் தீங்கு வரச் செய்வேன். உனது வழிமரபை ஒழித்து விடுவேன். உரிமை மக்களாகினும், அடிமைகளாயினும், இஸ்ரயேல் ஆண்மக்களை ஆகாபிடமிருந்து வெட்டி எறிவேன்.

நெபாற்றின் மகன் எரொபவாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோல, உன் குடும்பத்திற்கும் செய்வேன். ஏனெனில் நீ இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கி எனக்குப் பெருஞ்சினம் மூட்டினாய்.

மேலும் ஈசபேலைக் குறித்து ஆண்டவர் சொல்வது: இஸ்ரயேலின் மதிலருகே நாய்கள் ஈசபேலைத் தின்னும்.

ஆகாபைச் சார்ந்தவர்கள் இரையாவர்: நகர்ப்புறத்தே இறந்தால், வானத்துப் பறவைகளுக்கு இரையாவர் என்றார்.

ஆண்டவர் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்யுமளவுக்குத் தன்னையே விற்றவிட்ட ஆகாபைப்போல் கெட்டவன் எவனும் இருந்ததில்லை. ஏனெனில் அவனுடைய மனைவி ஈசபேல் அவனைத் பண்டிவிட்டாள்.

மேலும், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த எமோரியர் செய்து கொண்ட சிலைகளை எல்லாம் வழிபடும் அளவுக்கு அவன் மிகவும் இழிவாக நடந்து கொண்டான்.

அச்சொற்களை ஆகாபு கேட்டவுடன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு வெற்றுடல்மீது சாக்கு உடை உடுத்தி, நோன்பு காத்துச் சாக்குத் துணிமீது படுத்தான்: பணிவோடு நடந்துகொண்டான்.

அப்பொழுது திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு:

என் திருமுன் ஆகாபு தன்னைத் தாழ்த்திக் கொண்டதைத் கண்டாயன்றோ? அவன் என் திருமுன் தன்னைத் தாழ்த்திக்கொண்டதால் நான் அவன் வாழ்நாளின்போது தீமை வரச் செய்யாமல், அவனுடைய மகனது வாழ்நாளின்போது அவனுடைய குடும்பத்தாரின் மேல் தீமை விழச்செய்வேன்.

அதிகாரம் 22.

மூன்று ஆண்டுகளாகச் சிரியாவுக்கும் இஸ்ரயேலுக்குமிடையே போர் எதுவும் நடக்கவில்லை.

ஆனால் மூன்றாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோசபாத்து இஸ்ரயேலின் அரசனான ஆகாபைக் காண வந்தான்.

இஸ்ரயேலின் அரசன் தன் அலுவலரை நோக்கி, இராமோத்து-கிலயாது நமக்குரியது என்று அறியீர்களோ? ஆயினும் அதைச் சிரியாவின் மன்னனிடமிருந்து கைப்பற்றுவதற்கு ஏதும் நாம் செய்யாதிருக்கிறோமே? என்று கூறியிருந்தான்.

எனவே அவன் யோசபாத்திடம், இராமோத்து-கிலாயாதோடு போரிட என்னுடன் வருகின்றீரா? என்று கேட்டான். அதற்கு யோசபாத்து இஸ்ரயேலின் அரசனை நோக்கி, உம்மைப் போலவே நானும் தயார்: உம் மக்களைப் போலவே என் மக்களும்: உம் குதிரைகளைப் போலவே என் குதிரைகளும் என்றான்.

யோசபாத்து மீண்டும் இஸ்ரயேலின் அரசனை நோக்கி, ஆண்டவரின் வாக்கு யாது என்று இன்று நீர் கேட்டறிய வேண்டும் என்றான்.

அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஏறக்குறைய நாடீறு பொய்வாக்கினரைக் கூட்டி வரச்செய்து அவர்களை நோக்கி, நான் இராமோத்து-கிலயாதின் மீது போரிடப் போகலாமா? கூடாதா? என்று கேட்டான். அதற்கு அவர்கள், போகலாம். அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார் என்றனர்.

பின்பு யோசபாத்து, ஆண்டவரின் திருவாக்கினருள், ஒருவரேனும் இங்கில்லையா? அவரிடமும் இதுபற்றி நாம் கேட்டறியலாமே? என்றான்.

அப்போது இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, இம்லாவின் மகன் மீக்காயா என்னும் ஒருவன் இருக்கிறான். அவன்மூலம் ஆண்டவரைக் கேட்டறிந்து கொள்ளலாம். ஆனால் அவனை நான் வெறுக்கிறேன். ஏனெனில் அவன் நல்லதையன்று, தீங்கானதையே எனக்கு இறைவாக்காய் உரைக்கிறான் என்றான். அதற்கு யோசபாத்து, அரசே! நீர் அப்படிச் சொல்ல வேண்டாம் என்றான்.

அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஒர் அண்ணகனைக் கூப்பிட்டு, இம்லாவின் மகன் மீக்காயாவை விரைவில் அழைத்து வா என்றான்.

இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் சமாரியாவின் வாயில் மண்டபத்தில் அரச உடை பூண்டு தம்தம் அரியணையில் வீற்றிருந்தனர். எல்லாப் பொய்வாக்கினரும் அவர்களுக்கு முன்பாக வாக்குரைத்துக் கொண்டிருந்தனர்.

கெனானாவின் மகன் செதேக்கியா இரும்புக் கொம்புகளைச் செய்து, “இவற்றால் நீர் சிரியரைக் குத்தி அவர்களை அழித்துவிடுவீர்,“ என்று ஆண்டவர் கூறுகின்றார் என்றான்.

அவ்வாறே மற்றெல்லாப் பொய்வாக்கினரும் வாக்குரைத்துப்கொண்டிருந்தனர்: இராமோத்து-கிலயாதைத் தாக்குவீர்: வெற்றி கொள்வீர். ஏனெனில் அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார் என்றனர்.

மீக்காயாவை அழைக்கச் சென்ற பதன் அவரிடம், இதோ! இறைவாக்கினர் அனைவரும் ஒரே வாய்பட அரசருக்கு உகந்ததாகவே இறைவாக்குரைத்துக் கொண்டிருக்கின்றனர். உம் வாக்கு அவர்களது வாக்கைப் போல் இருக்கட்டும். அரசருக்கு உகந்ததாகவே பேசும்! என்றான்.

அதற்கு மீக்காயா, ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவர் என்னிடம் சொல்வதையே நான் உரைப்பேன் என்றார்.

அவர் அரசன் முன் வந்து நிற்க, அவன் அவரை நோக்கி மீக்காயா! நாங்கள் இராமோத்து-கிலயாதின்மீது போரிடப் போகலாமா? கூடாதா? என்று கேட்டான். அதற்கு அவர், போகலாம்! வெற்றிகொள்வீர்! அரசராகிய உம் கைகளில் ஆண்டவர் அதனை ஒப்புவிப்பார்! என்றார்.

அப்பொழுது அரசன் அவரிடம், ஆண்டவர் பெயரால் உண்மையைத் தவிர வேறெதையும் என்னிடம் சொல்லலாகாது என்று எத்தனை முறை உன்னை ஆணையிட வைப்பது? என்றான்.

அதற்கு அவர், இஸ்ரயேலர் அனைவரும் ஆயன் இல்லா ஆடுகளைப் போல் மலைகளில் சிதறுண்டு கிடக்கக் கண்டேன். அப்பொழுது ஆண்டவர் கூறியது: இவாகளக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவனும் அமைதியாகத் தன் சொந்த வீட்டுக்குத் திரும்பிச் செல்லட்டும் என்றார்.

அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, “இவன் நல்லமையன்று, தீங்கானதையே எனக்கு இறைவாக்காய் உரைப்பான்“ என்று உம்மிடம் நான் கூறவில்லையா? என்றான்.

மீக்காயா மீண்டும் கூறியது: ஆண்டவரின் வாக்கைக் கேளும்: ஆண்டவர் தமது அரியணையில் வீற்றிருக்கக் கண்டேன். வானகப் படைத்திரள் முழுவதும் அவரருகில் வலத்திலும் இடத்திலும் நின்றனர்.

அப்பொழுது ஆண்டவர் “இராமோத்து-கிலயாதைத் தாக்கி வீழ்ச்சியுறும்படி ஆகாபைத் பண்டிவிடக் கூடியவன் யாரேனும் உண்டா?“ என்று கேட்டார். அதற்கு ஒருவன் ஒன்றைச் சொல்ல, வேறொருவன் வேறொன்னைச் சொன்னான்.

இறுதியாக, ஓர் ஆவி ஆண்டவர் திருமுன் வந்து நின்று, “நான் அவனைத் பண்டி விடுகிறேன்.“ என்றது. அதற்கு ஆண்டவர், “அது எப்படி?“ என்றார்.

அப்பொழுது அது, “நான் போய் அவனுடைய போலி இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் இருந்துகொண்டு பொய் உரைக்கும் ஆவியாய் இருப்பேன்“ என்றது. அதற்கு அவர், “நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அப்படியே செய்“ என்றார்.

ஆதலால், இங்குள்ள உம்முடைய எல்லாப் போலி இறைவாக்கினரும் உம்மிடம் பொய் சொல்லும்படி ஆவியை ஆண்டவர் ஏவியிருக்கிறார். ஆண்டவர் உமக்குத் தீங்கானவற்றையே கூறியிருக்கிறார் என்றார்.

அப்பொழுது கெனானாவின் மகன் செதேக்கியா, மீக்காயாவின் அருகே வந்து, அவரைக் கன்னத்தில் அறைந்து, ஆண்டவரின் ஆவி உன்னிடம் பேசும்படி எப்படி என்னை விட்டுவிட்டு வந்தது? என்று கேட்டான்.

அதற்கு மீக்காயா, நீ உன் அறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நாளன்று, அதைத் தெரிந்து கொள்வாய் என்றார்.

அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் கட்டளையிட்டது: மீக்காயாவைக் கைது செய்து அவனை நகரின் ஆளுநன் ஆமோனிடமும் அரசனின் மகன் யோவாசிடமும் இழுத்துச் செல்லுங்கள்.

நீங்கள், “அரசர் கூறுவது இதுவே: போரை முடித்து நலமாய் நான் திரும்பும் வரை இவனைச் சிறையில் அடைத்து வையுங்கள். இவனுக்குச் சிறிதளவு அப்பமும் தண்ணீருமே கொடுத்து வாருங்கள் என்றும் கூறுங்கள்.

அப்பொழுது மீக்காயா, நலமாய் நீர் திரும்பி வந்தீரானால், ஆண்டவர் என் மூலம் பேசவில்லை என்பது பொருள். அனைத்து மக்களே! நான் சொல்வதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

பின்பு இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் இராமோத்து-கிலயாதை நோக்கிச் சென்றனர்.

இஸ்ரயேலின் அரசன் யோசபாத்தை நோக்கி, நான் மாறுவேடம் பூண்டு போர்க்களத்திற்கு வருவேன். ஆனால் நீர் அரச உடைகளை அணிந்துகொள்ளும்: என்று சொன்னான். அவ்வாறே இஸ்ரயேலின் அரசன் மாறுவேடம் பூண்டு போர்க்களம் புகுந்தான்.

இப்படியிருக்க, சிரியாவின் மன்னன் தன் முப்பத்திரண்டு தேர்ப்படைத் தலைவர்களை நோக்கி, நீங்கள் நிறியோர், பெரியோர் யாரோடும் போரிடாமல் இஸ்ரயேலின் அரசன் ஒருவனோடு மட்டும் போரிடுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.

ஆதலால் தேர்ப்படைத் தலைவர்கள் யோசபாத்தைக் கண்டவுடன், இவன்தான் இஸ்ரயேலின் அரசன் என்று நினைத்து அவனைத் தாக்குவதற்காக அவன்மேல் பாய்ந்தார்கள். அப்பொழுது யோசபாத்து பெரும் கூக்குரலிட்டான்.

அதனால், அவன் இஸ்ரயேலின் அரசன் இல்லை என்று கண்டுகொண்ட தேர்ப்படைத் தலைவர்கள் அவனை மேலும் தொடரவில்லை.

ஆயினும் ஒருவன் வில்லை நாணேற்றிச் சரியாய்க் குறிவைக்காது அம்பை எய்தான். அது இஸ்ரயேல் அரசனது கவசத்தின் இடைவெளியே பாய்ந்தது. எனவே அவன் தன் தேரோட்டியை நோக்கி, தேரைத் திருப்பிப் போர் முனையினின்று வெளியே என்னைக் கொண்டு போ: ஏனெனில் நான் காயமுற்றிருக்கிறேன் என்றான்.

அன்று முழுவதும் போர் தீவிரமாய் இருந்ததால், தேரிலேயே சிரியருக்கு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டான். அவனது காயத்திலிருந்து இரத்தம் வழிந்து தேரின் அடித்தளத்தை நனைத்தது. அன்று மாலையே அவன் இறந்தான்.

கதிரவன் மறைந்த நேரத்தில் “ஒவ்வொருவரும் அவரவர் தம் நாட்டுக்கும், தம் நகருக்கும் திரும்பட்டும்“ என்ற குரல் படை முழுவதும் எதிரொலித்தது.

இவ்வாறு அரசன் இறந்து, சமாரியாவிற்குக் கொண்டு வரப்பட்டான். சமாரியாவில் அவனை அடக்கம் செய்தனர்.

சமாரியாக் குளத்தில் அவனது தேரையும் கவசத்தையும் கழுவினர். ஆண்டவரின் வாக்கின்படியே நாய்கள் அவனது இரத்தத்தை நக்கின.

ஆகாபின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் அவன் மாளிகை கட்டியதும், பல்வேறு நகர்கள் எழுப்பியதும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

ஆகாபு தன் மூதாதையரோடு துயில் கொண்ட பின், அவன் மகன் அகசியா அரியணை ஏறினான்.

இஸ்ரயேலின் அரசன் ஆகாபு ஆட்சி தொடங்கிய நான்காம் ஆண்டில், ஆசாவின் மகன் யோசபாத்து யூதாவின் அரசன் ஆனான்.

யோசபாத்து ஆட்சி தொடங்கிய பொழுது, அவனுக்கு வயது முப்பத்தைந்து. அவன் இருபத்தைந்து ஆண்டுகள் எருசலேமில் இருந்து கொண்டு ஆட்சி செலுத்தினான். சில்கியின் மகளான அசுபா என்பவளே அவனுடைய தாய்.

அவன் தன் தந்தை ஆசாவின் வழிகள் அனைத்திலும் நடந்தான். அவற்றினின்று அவன் பிறழவில்லை. ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்துகொண்டான். ஆயினும் அவன் தொழுகை மேடுகளை உடைத்தெறியவில்லை. மக்கள் அம்மேடைகளில் பலியிட்டுத் பபம் காட்டி வந்தனர்.

யோசபாத்து இஸ்ரயேலின் அரசனுடன் நல்லுறவு கொண்டிருந்தான்.

யோசபாத்தின் பிற செயல்களும், அவன் காட்டிய வீரமும், அவன் புரிந்த போர்களும் “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

அவன் தந்தை ஆசாவின் காலத்தில் எஞ்சியிருந்த விலை ஆடவர்களுள் ஒருவரும் நாட்டில் இராதவாறு யோசபாத்து அவர்களை ஒழித்துக்கட்டினான்.

அப்போது ஏதோமில் மன்னன் இல்லாததால் ஒரு பிரதிநிதியே மன்னனாய் இருந்தான்.

யோசபாத்து தங்கம் கொண்டு வருவதற்காக ஓபீருக்குச் செல்லும் தர்சீசுக் கப்பல்களைக் கட்டினான். ஆனால் அவை அங்குப் போய்ச் சேரவில்லை. ஏனெனில் அவை எசியோன் கெபேரில் உடைந்து போயின.

அப்போது ஆகாபின் மகன் அகசியா யோசபாத்தை நோக்கி, என்னுடைய பணியாளர் உம் பணியாளரோடு கப்பலில் செல்லட்டும் என்று கேட்டுக்கொண்டான். ஆனால் அதற்கு யோசபாத்து இணங்கவில்லை.

யோசபாத்து தன் மூதாதையருடன் துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் யோராம் அவனுக்குப் பின் அரியணை ஏறினான்.

யூதாவின் அரசன் யோசபாத்தின் பதினேழாம் ஆட்சி ஆண்டில் ஆகாபின் மகன் அகசியா இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் சமாரியாவில் இருந்து கொண்டு இஸ்ரயேல் மீது ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினான்.

அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்து தன் தந்தையின் வழியிலும் தம் தாயின் வழியிலும் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரோபவாமின் வழியிலும் நடந்தான்.

மேலும், அவன் பாகாலையும் வணங்கி வழிபட்டு எல்லாவற்றிலும் தன் தந்தை வழிநின்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் சினமூட்டினான்.

புத்தகம் 12. அரசர்கள் - இரண்டாம் நூல்

அதிகாரம் 1.

ஆகாபு இறந்தபின் மோவாபியர் இஸ்ரயேலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.

அப்பொழுது அகசியா சமாரியாவில் தன் மேல் மாடியிலிருந்து பலகணி வழியாய்க் கீழே விழுந்து காயமுற்றான். எனவே அவன் பதரிடம், நீங்கள் எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் சென்று, “இக்காயம் எனக்குக் குணமாகுமா?“ என்று கேட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பினான்.

ஆனால் ஆண்டவரின் பதர் திஸ்பேயைச் சார்ந்த எலியாவிடம், நீ புறப்பட்டுச் சமாரிய அரசனின் பதரைச் சந்தித்து அவர்களிடம், “இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் நீங்கள் குறிகேட்கப்போகிறீர்கள்? எனவே ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:

நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்: அங்கேயே செத்துப் போவாய்: இது உறுதி! என்று சொல் என்றார். அவ்வாறே எலியா புறப்பட்டுப் போனார்.

திரும்பி வந்த பதரை நோக்கி, அரசன், ஏன் திரும்பி வந்துவிட்டீர்கள்? என்று அவர்களைக் கேட்டான்.

அதற்கு அவர்கள் மறுமொழியாக, வழியில் ஓர் ஆள் எங்களைச் சந்தித்து, “நீங்கள் உங்களை அனுப்பின அரசனிடம் போய், ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் குறிகேட்க ஆள் அனுப்புகிறாய்? நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்: அங்கேயே செத்துப் போவாய்: இது உறுதி! என்று சொல்லுங்கள்“ என்றார் என்று கூறினர்.

அவன் அவர்களிடம், உங்களைச் சந்திக்க வந்து உங்கள்டம் இவற்றை அறிவித்த ஆள் எப்படி இருந்தான்? என்று கேட்டான்.

அவனுக்கு அவர்கள் மறுமொழியாக, அவர் மயிரடர்ந்த மனிதர்: இடையில் தோற்கச்சை அணிந்திருந்தார் என்றனர். அப்பொழுது அவன், அந்த ஆள் திஸ்பேயைச் சா¡ந்த எலியாதான்! என்றான்.

உடனே அரசன் ஜம்பதின்மர் தலைவன் ஒருவனை அவனுடைய ஜம்பது வீரரோடு அவரிடம் அனுப்பினான். தலைவனும் சென்று, ஒரு மலையின் உச்சியில் அமர்ந்திருந்த எலியாவைக் கண்டு அவரிடம், கடவுளின் அடியவரே! கீழே இறங்கி வாரும்: இது அரச கட்டளை! என்றான்.

எலியா ஜம்பதின்மர் தலைவனுக்கு மறுமொழியாக, நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஜம்பது பேரையும் சுட்டெரிக்கும்! என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கி வந்து அவனையும் அவனோடிருந்த ஜம்பது பேரையும் சுட்டெரித்தது.

அகசியா மீண்டும் வேறொரு தலைவனை அவனுடைய வீரரோடு அனுப்பினான். அத்தலைவனும் மேலேறிச் சென்று எலியாவிடம், கடவுளின் அடியவரே! விரைவாய் கீழே இறங்கி வாரும்: இது அரச கட்டளை! என்றான்.

எலியா மறுமொழியாக, நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஜம்பது பேரையும் சுட்டெரிக்கட்டும்! என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கிவந்து, அவனையும் அவனோடிருந்த ஜம்பது பேரையும் சுட்டெரித்தது.

அகசியா மூன்றாம் முறையாகத் தலைவன் ஒருவனை அவனுடைய ஜம்பது வீரரோடு அனுப்பினான். மூன்றாம் தலைவனும் மேலேறிச் சென்று, எலியாவின் முன் முழந்தாளிட்டு, கடவுளின் அடியவரே! என் உயிரையும், உம் அடியாராகிய இந்த ஜம்பதின்மர் உயிரையும் காத்தருளும்!

வானினின்று நெருப்பு இறங்கி வந்து, முன்னைய ஜம்பதின்மர் தலைவர் இருவரையும் அவரவருடைய ஜம்பது வீரர்களையும் சுட்டெரித்து விட்டது. எனவே, இப்பொழுது என் உயிரைக் காத்தருளும்! என்று மன்றாடினான்.

அப்பொழுது ஆண்டவரின் பதர் எலியாவிடம், அவனோடு இறங்கிச் செல். அவனுக்கு அஞ்ச வேண்டாம் என்றார். எனவே எலியா எழுந்து அரசனைப் பார்க்க அவனோடு இறங்கிச் சென்றார்.

அவர் அரசனை நோக்கி, ஆண்டவர் கூறுவது இதுவே: இறை உளத்தைத் தெரிந்துகொள்ள இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் பதரை அனுப்பினாய்? எனவே நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்: அங்கேயே செத்துப்போவாய்: இது உறுதி! என்றார்.

எனவே எலியா வாயிலாக அறிவிக்கப்பட்ட ஆண்டவரது வாக்கிற்கேற்ப, அகசியா இறந்தான். அவனுக்குப் புதல்வர் இல்லாமையால், அவனுக்குப் பின் யோராம் அரசன் ஆனான். இது யூதா அரசன் யோசபாத்தின் மகன் யோராமின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் நிகழ்ந்தது.

அகசியாவின் ஆட்சியைப் பற்றிய பிற செய்திகளும், அவனுடைய பிற செயல்களும், “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

அதிகாரம் 2.

ஆண்டவர் எலியாவைச் சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக் கொள்ள இருந்த பொழுது, எலியாவும் எலிசாவும் கில்காலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

எலிசா எலிசாவை நோக்கி, ஆண்டவர் என்னைப் பெத்தேலுக˜கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு என்றார். எலிசா அவரை நோக்கி, வாழும் ஆண்டவர்மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன் என்றார். ஆகவே அவர்கள் பெத்தேலுக்குப் போனார்கள்.

அப்பொழுது, பெத்தேலில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவிடம் வந்து, ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். அதற்கு அவர் ஆம், எனக்குத் தெரியும்: அதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று கூறினார்.

எலியா அவரை நோக்கி, எலிசா! ஆண்டவர் என்னை எரிகோ நகருக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு என்றார். அதற்கு அவர், வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன் என்றார். ஆகவே அவர்கள் எரிகோவுக்குச் சென்றனர்.

அப்பொழுது, எரிகோவில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை அணுகி, ஆண்டவர் இன்று உம் தலைவரை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பது உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். அதற்கு அவர், ஆம், எனக்குத் தெரியும்: அதைப் பற்றிப் பேச வேண்டாம் என்றார்.

மீண்டும் எலியா எலிசாவை நோக்கி, ஆண்டவர் என்னை யோர்தானுக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு என்றார். அதற்கு அவர்1வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர் மேலும் ஆணை! நான் உம்மைவிட்டுப் பிரியமாட்டேன் என்றார். ஆகவே அவர்கள் இருவரும் தொடர்ந்து பயணம் செய்தனர்.

அவர்கள் யோர்தான் நதிக் கரையை அடைந்து அங்கே நின்றனர். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற இறைவாக்கினர் குழுவினர் ஜம்பது பேரும் சற்றுத் தொலையில் நின்று கொண்டனர்.

அப்பொழுது, எலியா தம் போர்வையை எடுத்துச் சுருட்டி அதைக் கொண்டு நீரை அடித்தார். தண்ணீர் இருபுறமும் பிரிந்து கொள்ள, இருவரும் உலர்ந்த தரைமீது நடந்து நதியைக் கடந்தனர்.

அவர்கள் அக்கரைக்குச் சென்றவுடன் எலியா எலிசாவை நோக்கி, உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுமுன் நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல் என்று கேட்டார். அதற்கு எலிசா, உமது ஆவி என்மீது இரு மடங்காக இருப்பதாக! என்றார்.

எலியா அவரை நோக்கி, நீ கேட்பது கடினமான காரியம். உன்னிடமிருந்து நான் எடுத்துக் கொள்ளப்படும்போது, நீ என்னைக் காண்பாயாகில், அது உனக்குக் கிடைக்கும்: இல்லையெனில் கிடைக்காது என்றார்.

இவர்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டு வழிநடந்து செல்கையில், இதோ! நெருப்புத் தேரும் நெருப்புக் குதிரைகளும் திடீரென நடுவே வந்து அவர்களைப் பிரித்தன. எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார்.

எலிசா அதைக் கண்டு, என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே! என்று கதறினார். அதற்கு மேல் அவரால் அவரைக் காணமுடியவில்லை. எனவே அவர் தம் உடைகளைப் பிடித்து இரண்டாகக் கிழித்துக் கெண்டார்.

மேலும் அவர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எடுத்துக் கொண்டு, திரும்பிச் சென்று யோர்தான் கரையில் நின்றார்.

பின்பு அவர், எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்? என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார்.

எரிகோவில் இருந்த இறைவாக்கினர் குழுவினர் தம் கண் முன்னால் நிகழந்தவற்றைக் கண்டு, எலியாவின் ஆவி எலிசாவின் மீது இறங்கியுள்ளது! என்று கூறி அவர்கள் அவரிடம் வந்து, அவர்முன் தரையில் வீழ்ந்து வணங்கினர்.

மேலும் அவரை நோக்கி, இதோ! உம் அடியார்களிடம் ஜம்பது வலிமையான ஆள்கள் இருக்கின்றார்கள். அவர்கள் போய் உம் தலைவரைத் தேடிக் கண்டுபிடிக்கத் தயவுசெய்து அனுமதி தாரும். ஒருவேளை ஆண்டவரின் ஆவி அவரைத் பக்கி, ஏதாவதொரு மலையிலோ பள்ளத்தாக்கிலோ போட்டிருக்கக் கூடும்! என்றனர். அதற்கு அவர், அவர்களை அனுப்ப வேண்டாம் என்றார்.

ஆனால் எலிசா சலிப்படையும் வரை அவர்கள் அவரை வற்புறுத்தினர். இறுதியாக அவர், அனுப்பிவையுங்கள் என்றார். எனவே அவர்கள் ஜம்பது ஆள்களையும் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் மூன்று நாள் தேடியும் அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

எனவே அவர்கள் எரிகோவில் தங்கியிருந்த எலிசாவிடம் திரும்பி வந்தனர். அவர் அவர்களிடம், போக வேண்டாம் என்று நான் உங்களுக்கு முன்பே சொல்லவில்லையா? என்றார்.

அந்த நகர மக்கள் எலிசாவை நோக்கி, இந்நகர் நல்ல இடத்தில் அமைந்துள்ளது என்பதை எம் தலைவராகிய தாங்கள் அறிவீர். ஆயினும், இங்கு நல்ல தண்ணீர் இல்லை, நிலமும் நற்பலன் தருவதில்லை என்றனர்.

அதற்கு அவர் ஒரு புதுக்கிண்ணத்தில் கொஞ்சம் உப்பைப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றார்.

அவர்கள் அவ்வாறே கொண்டுவர, எலிசா நீருற்றின் அருகே சென்று, நீரில் உப்பைக் கொட்டி, இதோ! ஆண்டவர் கூறுகிறார்: இத் தண்ணீரை நான் நல்லதாக மாற்றியுள்ளேன். இனி மேல் சாவும் இராது: நிலமும் பயன் தரும் என்றார்.

அன்று முதல் இன்று வரை அத்தண்ணீர் எலிசாவின் வாக்கிற்கேற்ப நல்லதாக இருக்கின்றது.

அங்கிருந்து எலிசா பெத்தேலுக்கு ஏறிச் சென்றார். அவ்வாறு அவர் செல்லும் வழியில் சில சிறுவர் நகரினின்று வந்து, வழுக்கைத் தலையா, போ! வழுக்கைத் தலையா, போ! என்று ஏளனம் செய்தனர்.

எலிசா அவர்களைத் திரும்பிப் பார்த்து ஆண்டவரின் பெயரால் அவர்களைச் சபித்தார். உடனே காட்டிலிருந்து இரு பெண் கரடிகள் வெளி வந்து சிறுவர்களுள் நாற்பத்திரண்டு பேரைக் குதறிப்போட்டன.

பின்பு எலிசா கர்மேல் மலைக்குச் சென்று, அங்கிருந்து சமாரியாவுக்குத் திரும்பினர்.

அதிகாரம் 3.

யூதாவின் அரசன் யோசபாத்தினுடைய ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், ஆகாபின் மகன் யோராம் இஸ்ரயேலின் அரசன் ஆனான். அவன் பன்னிரண்டு ஆண்டுகள் சமாரியாவில் இருந்து கொண்டு ஆட்சி செலுத்தினான்.

அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்த போதிலும், தன் தாய் தந்தையைப் போல் அவ்வளவு தீயவனாய் இல்லை. ஏனெனில், அவன் தன் தந்தை செய்து வைத்திருந்த பாகால் சிலைத்பணை அகற்றி விட்டான்.

எனினும், இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் தீயவழியில் அவனும் நிலையாய் நின்றான். அதை விட்டு அவன் விலகவில்லை.

இது நிற்க, மோவாபிய மன்னன் மேசா ஏராளமான ஆட்டு மந்தைகளை வளர்த்து வந்தான். அவன் இஸ்ரயேல் அரசனுக்கு ஆண்டுக்கு ஒர் இலட்சம் செம்மறிகளையும் ஓர் இலட்சம் ஆட்டுக்கிடாய்களின் கம்பளி உரோமத்தையும் கப்பமாகக் கொடுத்து வந்தான்.

ஆனால் ஆகாபு இறந்தபின், மோவாபிய மன்னன் இஸ்ரயேல் அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.

எனவே அரசன் யோராம் உடனே இஸ்ரயேலர் அனைவரையும் சமாரியாவில் ஒன்று திரட்டினான்.

அவ்வாறு அவன் செல்கையில், மோவாபிய மன்னன் எனக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்கிறான். எனவே, மோவாபுக்கு எதிராய்ப் போரிட என்னோடு வருவீரா? என்று கேட்குமாறு யூதாவின் அரசன் யோசபாத்திடம் ஆளனுப்பினான். அவன் மறுமொழியாக, வருகிறேன். உம்மைப்போலவே நானும் தயார்! உம் மக்களைப் போலவே என் மக்களும்: உம் குதிரைகளைப் போலவே என் குதிரைகளும் என்றான்.

பின்பு அவன், எவ்வழியே சென்று நாம் தாக்கலாம்? என்று கேட்டான். அதற்கு அவன், ஏதோம் பாலைநில வழியாகப் போவோம் என்று பதிலளித்தான்.

அவ்வாறே இஸ்ரயேல் அரசன் யூதாவின் அரசனோடும், ஏதோமின் மன்னனோடும் புறப்பட்டான். அவர்கள் ஏழு நாள் சுற்று வழியில் சென்றபின், படை சீரர்களுக்கும் அவர்களைப் பின் தொடர்ந்த விலங்கினங்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

அப்பொழுது இஸ்ரயேலின் அரசன், அந்தோ! அரசர்களாகிய நம் மூவரையும் ஆண்டவர் இங்கே கூட்டி வந்தது மோவாபியர் கையில் ஒப்புவிக்கவா? என்றான்.

அப்பொழுது, யோசபாத்து, ஆண்டவரின் விருப்பத்தைத் தெரிவிக்கக் கூடிய இறைவாக்கினர் யாரும் இங்கு இல்லையா? என்று கேட்டான். இஸ்ரயேல் அரசனின் பணியாளன் ஒருவன், சாபாற்றின் மகன் எலிசா இங்கே இருக்கிறார். இவர் எலியா கைகளைக் கழுவும்போது தண்ணீர் ஊற்றி வந்தவர் என்றான்.

யோசபாத்து, ஆம், ஆண்டவரின் வாக்கு அவரிடம் உள்ளது என்றான். எனவே இஸ்ரயேலின் அரசன், யோசபாத்து, ஏதோமின் மன்னன் ஆகிய மூவரும் எலிசாவிடம் சென்றனர்.

எலிசா இஸ்ரயேல் அரசனிடம், உனக்கும் எனக்கும் என்ன உறவு? உன் தந்தையின் இறைவாக்கினரையும், உன் தாயின் இறைவாக்கினரையும் நாடிச் செல்! என்றார். ஆனால், இஸ்ரயேலின் அரசன், இல்லை, ஆண்டவர்தாம் அரசர்களாகிய எங்கள் மூவரையும், மோவாபியர் கையில் ஒப்புவிக்கும்படி இங்கே கூட்டி வந்துள்ளார் என்றான்.

எலிசா அவனை நோக்கி, நான் பணியும் படைகளின் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! யூதாவின் அரசன் யோசபாத்தின் மீது நான் பெருமதிப்புக் கொண்டுள்ளேன். இல்லையேல், உன் முகத்தில் விழித்திருக்கவே மாட்டேன். ஒரு பாணனை அழைத்து வாருங்கள் என்றார்.

அவ்வாறே பாணன் ஒருவன் வந்து யாழிசைக்கவே ஆண்டவரது ஆற்றல் எலிசாவின் மேல் இறங்கியது.

அப்பொழுது அவர், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இந்தப் பள்ளத்தாக்கு எங்கும் குழிகளை வெட்டுங்கள்.

ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் காற்றையோ மழையையோ காணப்போவதில்லை. ஆயினும் இந்தப்பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும். நீங்களும், உங்கள் கால்நடைகளும், விலங்கினங்களும் நீர் அருந்துவீர்கள்.

இது ஆண்டவரது பார்வையில் எளிதான ஒன்று. அவர் மோவாயிரை உங்கள் கையில் ஒப்புவிப்பார்.

நீங்கள் எல்லா அரண்சூழ் நகர்களையும் எல்லா மாநகர்களையும் முறியடிப்பீர்கள். நீங்கள் எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்துவீர்கள். எல்லா நீருற்றுகளையும் பர்த்துவிடுவீர்கள். எல்லா நல்ல வயல்களையும் கல்லால் நிரப்பி விடுவீர்கள் என்றார்.

மறுநாள் காலை, பலி செலுத்தும் நேரத்தில் இதோ! தண்ணீர் ஏதோம் திக்கிலிருந்து ஓடி வந்தது! நாடு தண்ணீரால் நிரம்பியது.

“தங்களோடு போர் புரிய அரசர்கள் வருகிறார்கள்“ என்று மோவாபியர் அனைவரும் கேள்வியுற்று, படைக்கலம் தாங்கக் கூடிய இளையோர், முதியோர் அனைவரையும் ஒன்று திரட்டி எல்லையில் அணிவகுத்து நின்றனர்.

மோவாபியர் காலையில் எழுந்த பொழுது, கதிரவனின் ஒளி தண்ணீர்மீது ஒளிர்ந்தது. மறுபக்கம் இருந்த அவர்களுக்குத் தண்ணீர் இரத்த வெள்ளமாயத் தோன்றியது.

உடனே அவர்கள், அது இரத்தம்! அந்த அரசர்கள் தங்களுக்குள் போர் புரிந்து ஒருவர் மற்றவரை வெட்டி வீழ்த்திவிட்டனர். மோவாபியரே! வாருங்கள்! கொள்ளையடிப்போம்! என்றனர்.

ஆனால் அவர்கள் இஸ்ரயேலின் பாசறைக்குள் நுழைந்தவுடன், இஸ்ரயேலர் எழுந்து மோவாபியரைத் தாக்கினர். இவர்கள் அவர்கள் முன்னிலையிலிருந்து பாய்ந்து தப்பி ஓடினர். ஆயினும், இஸ்ரயேலர் துரத்திச் சென்று மோவாபியரை வெட்டி வீழ்த்தினர்.

பின்னர் அவர்கள் நகர்களைத் தகர்த்து, எல்லா நல்ல நிலங்கள் மீதும் ஆளுக்கு ஒரு கல் வீசி நிரப்பினர். எல்லா நீருற்றுக்களையும் பர்த்து, எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்தினர். அரண் சூழ்ந்த கீர் அரசேத்து மட்டும் எஞ்சி நின்றது. அந்நகரையும் கவண் வீசுவோர் வளைத்து அழித்தனர்.

தனக்கு எதிராகப் போரின் முடிவு இருந்ததை அறிந்த மோவாபிய மன்னன், வாளேந்திய எழுமறு வீரர்களைச் சேர்த்துக் கொண்டு, ஏதோம் மன்னனை எதிர்க்கச் சென்றான். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பின்னர், அவன் தனக்குப்பின் அரசாளும் உரிமையுள்ள தன் தலைமகனை இட்டுச் சென்று, மதிலின்மேல் அவனை எரிபலியாக ஒப்புக் கொடுத்தான். இஸ்ரயேலர் தங்களுக்கு எதிராகக் கடுஞ்சினம் மூள்வதைக் கண்டு, அவனை விட்டு அகன்று தம் சொந்த நாட்டுக்குத் திரும்பினர்.

அதிகாரம் 4.

அப்பொழுது இறைவாக்கினர் குழுவினரைச் சார்ந்த ஒருவரின் மனைவி எலிசாவிடம் வந்து கதறி அழுது, உம் அடியவனாகிய என் கணவர் இறந்து விட்டார். அவர் ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர் என்பது உமக்குத் தெரியும். அவருடைய கடன்காரன் என் இரு பிள்ளைகளையும் தனக்கு அடிமைகளாக எடுத்துக் கொள்ள வந்திருக்கிறான் என்றார்.

எலிசா அவரை நோக்கி, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வீட்டில் என்ன வைத்திருக்கிறாய்? என்று சொல் என்றார். அதற்கு அவர் உம் அடியவளாகிய என்னிடம் கலயத்தில் சிறிது எண்ணெய் மட்டுமே இருக்கிறது. வேறு ஒன்றும் வீட்டில் இல்லை என்றார்.

எலிசா, நீ சுற்றிலும் சென்று உன் அண்டை வீட்டார் அனைவரிடமிருந்தும் பல வெற்றுப் பாத்திரங்களைக் கேட்டுக் வாங்கிக் கொள்.

நீ உன் புதல்வருடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக்கொள். பாத்திரங்களில் அந்த எண்ணெயை ஊற்று. நிறைந்தவற்றை ஒரு பக்கத்தில் எடுத்துவை என்றார்.

அவ்வாறே, அவரும் தம் புதல்வருடன் வீட்டினுள் சென்று கதவை மூடிக் கொண்டார். அவர்கள் எடுத்துத் தந்த கிண்ணங்களில் அவர் எண்ணெய் ஊற்றினார்.

எல்லாப் பாத்திரங்களும் நிறைந்தபின் அவர் தம் மகன் ஒருவனை நோக்கி, இன்னும் ஒரு பாத்திரம் கொண்டு வா என்றார். அதற்கு அவன், வேறு பாத்திரம் இல்லை என்றான். அத்தோடு எண்ணெய் வருவதும் நின்றுவிட்டது.

கடவுளின் அடியவரிடம் அவர் வந்து அதை அறிவித்தார். அதற்கு அவர், நீ போய் எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்துவிடு. எஞ்சியதைக் கொண்டு நீயும் உன் புதல்வரும் பிழைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றார். அங்கேயிருந்த பணக்காரப் பெண் ஒருவர் அவரை உணவருந்தும்படி வற்புறுத்தினார். அதன்பின் அவர் அவ்வழியே சென்ற போதெல்லாம் அங்கே உணவருந்திவிட்டுச் செல்வார்.

அவர் தம் கணவனை நோக்கி, நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன்.

ஆதலால் வீட்டு மேல் தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர் வரும் பொழுதெல்லாம் அங்கே தங்கிச் செல்லட்டும் என்றார்.

ஒரு நாள் எலிசா அங்கு வந்து மாடி அறையில் தங்கி ஓய்வுஎடுத்துக் கொண்டிருந்தார்.

பின்பு அவர் தம் பணியாளன் கேகசியை நோக்கி, அந்தச் சூனேம் பெண்ணைக் கூப்பிடு என்றார்.

அவனும் அவரை அழைத்துவர, அவர் அவர் முன்னே வந்து நின்றார். அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, நீ அவளிடம் “அம்மா, நீங்கள் எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்திருக்கிறீர்கள். ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? அரசரிடமோ படைத்தலைவரிடமோ பரிந்து பேசும்படி ஏதாவது உண்டா?“ என்று கேள் என்றார். அதற்கு அவர், என்னுடைய இனத்தாரிடையே நான் நலமாய்த்தான் வாழ்ந்து வருகிறேன் என்று பதிலளித்தார்.

மீண்டும் எலிசா, வேறு எந்த விதத்தில் அவருக்கு உதவி செய்யலாம்? என்று கேட்டார். அதற்குக் கேகசி, அவருக்குக் குறையேதும் இல்லை. ஆனால், அவருக்குப் பிள்ளையில்லை. அவருடைய கணவருக்கும் வயதாகி விட்டது என்றான்.

எலிசா, அவளை இங்கு வரச் சொல் என்றார். அவ்வாறே அவன் அவரை அழைக்க, அவரும் கதவருகில் வந்து நின்றார்.

எலிசா அவரை நோக்கி, அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான் என்றார். அதற்கு அவர், என் தலைவரே, கடவுளின் அடியவரே! உம் அடியவளை ஏமாற்ற வேண்டாம் என்றார்.

எலிசா, அப்பெண்ணுக்கு முன்னறிவித்தவாறே அவர் கருவுற்று அடுத்த ஆண்டு அதே பருவத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.

குழந்தையும் வளர்ந்தான். ஒரு நாள் அவன் அறுவடை செய்வோருடன் இருந்த தன் தந்தையிடம் சென்றான்.

அவன் தன் தந்தையிடம், ஜயோ! தலை வலிக்கிறது, தலை வலிக்கிறது என்று சொன்னான். தந்தையும் தம் வேலையாள் ஒருவனிடம், நீ இவனை இவன் தாயிடம் பக்கிக் கொண்டு போ என்றார்.

அவன் அப்படியே பிள்ளையைத் பக்கிச் சென்று அதன் தாயிடம் கொண்டுவந்து விட்டான். நண்பகல் வரை அவர் மடியில் கிடந்தபின், அது இறந்து போனது.

அவரோ கடவுளுடைய அடியவரின் அறைக்குச் சென்று, அவருடைய படுக்கையின் மேல் பிள்ளையைக் கிடத்தினார். பின்னர் கதவைத் பூட்டிவிட்டு வெளியே வந்தார்.

தம் கணவனை அழைத்து அவரிடம், வேலைக்காரன் ஒருவனை ஒரு கழுதையுடன் என்னோடு அனுப்பி வைக்கவும். கடவுளின் அடியவரிடம் நான் உடனே போக வேண்டும். விரைவில் திரும்பி வருகிறேன் என்றார்.

அதற்கு அவருடைய கணவர், நீர் அவரிடம் போக வேண்டிய காரணம் என்ன? இன்று அமாவாசையும் இல்லை: ஓய்வு நாளும் இல்லையே! என்றார். அதற்கு அப்பெண், நல்லதற்குத் தான் என்றார்.

கழுதைக்குச் சேணமிடச் செய்தபின், அவர் தம் வேலையாளை நோக்கி, கழுதையை வேகமாக ஓட்டிச் செல். நான் சொன்னால் ஒழிய, அதன் வேகத்தைக் குறைக்காதே! என்றார்.

அவ்வாறே அவர் புறப்பட்டு, கர்மேல் மலையிலிருந்து அடியவரிடம் வந்து சேர்ந்தார். அவர் தம்மை நோக்கி வருவதைத் தொலையிலிருந்து பார்த்த எலிசா தம் வேலையாள் கேகசியை நோக்கி,

இதோ! சூனேம் பெண் வருகிறாள். அவளைச் சந்திக்க உடனே விரைந்து செல். அவளிடம், “நீ நலமா? உன் கணவர் நலமா? உன் குழந்தை நலமா?“ என்று கோள் என்றார்.

அப்பெண் மறுமொழியாக, ஆம், நலமே என்றார், பிறகு அவர் மலையில் இருந்த கடவுளின் அடியவரிடம் வந்து, அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டார். அவரை அப்புறப்படுத்த கேகசி அருகில் வந்தபோது, கடவுளின் அடியவர், அவளை விட்டுவிடு, ஏனெனில் அவளது உள்ளம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. ஆண்டவர் அதை எனக்கு அறிக்காமல் மறைத்து விட்டார் என்றார்.

அப்பொழுது அப்பெண் ஜயா! உம்மிடம் நான் மகப்பேறு கேட்டதுண்டா? “என்னை ஏமாற்ற வேண்டாம்“ என்று உமக்கு நான் முன்பே சொல்லவில்லையா? என்றார்.

அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, நீ இடுப்பை வரிந்து கட்டிக் கொண்டு, எனது ஊன்று கோலை உன் கையில் எடுத்துக் கொண்டு போ. வழியில் யாரையாவது கண்டால் வணக்கம் செய்யாதே. உனக்கு யாராவது வணக்கம் செய்தாலும் பதில் வணக்கம் செய்யாதே. என் ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின் மேல் வை என்றார்.

ஆனால், பிள்ளையின் தாய் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உம் உயிர்மேலும் ஆணை! உம்மை நான் விடமாட்டேன் என்றார்.

எனவே எலிசா எழுந்து அவரைப் பின் தொடர்ந்து சென்றார். கேகசி இவர்களுக்கு முன்பே புறப்பட்டுச் சென்று, ஊன்றுகோலைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான். ஆயினும் பிள்ளைக்குப் பேச்சுமில்லை, மூச்சுமில்லை. எனவே அவன் தன் தலைவரை எதிர்கொண்டு வந்து, பிள்ளை கண் திறக்கவில்லை என்று அறிவித்தான்.

எலிசா வீட்டினுள் நுழைந்தபோது, இறந்த பிள்ளை தம் படுக்கையில் கிடப்பதைக் கண்டார்.

உடனே அவர் உள்ளே சென்று, அவர்கள் இருவரும் வெளியே இருக்க, கதவைத் தாழிட்டுக் கொண்டு ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.

பின்பு படுக்கையின் மேல் ஏறி வாயோடு வாயும் கண்களோடு கண்களும், கைகளோடு கைகளும் வைத்து பிள்ளையின்மேல் படுத்தார். உடனே பிள்ளையின் உடம்பில் சூடு ஏறியது.

பின்பு கீழிறங்கி, அறையிலேயே அங்குமிங்கும் உலாவினார். மறுபடியும் படுக்கையின்மேல் ஏறி அவன் மீது படுத்துக் கொண்டார். அப்பொழுது பிள்ளை ஏழுமுறை தும்மிய பின் கண் திறந்தது.

எனவே எலிசா கேகசியைக் கூப்பிட்டு, அந்த சூனேம் பெண்ணை அழைத்து வா என்றார். அவ்வாறே அவன் அழைக்க, அவர் எலிசாவிடம் வந்தார். அவர் அப்பெண்ணை நோக்கி, உன் மகனைத் பக்கிக்கொள் என்றார்.

அப்பெண் உள்ளே வந்து அவர் காலடியில் தரை மட்டும் வீழ்ந்து வணங்கியபின், தன் மகனைத் பக்கிக்கொண்டு போனார்.

எலிசா கில்காலுக்குத் திரும்பினார். அப்பொழுது நாட்டில் பஞ்சம் நிலவியது. இறைவாக்கினர் குழுவினர் அவர் முன் அமர்ந்திருக்கையில், எலிசா தம் பணியாளன் ஒருவனை நோக்கி, நீ ஒரு பெரிய பானையை எடுத்து அதில் இறைவாக்கினர் குழுவினர்க்குக் கூழ் காய்ச்சு என்றார்.

அப்பொழுது அவர்களுள் ஒருவன் காட்டுக் கீரை பறிப்பதற்காக வயலுக்குச் சென்றான். அங்கே அவன் பேய்க்குமட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களைத் தன் போர்வை நிறையப் பறித்துக் கொண்டு வந்தான். அவை என்னவென்று தெரியாமல், அவற்றை நறுக்கிப் பானையில் போட்டு அவன் வேக வைத்தான்.

பின்பு அவன் அவர்கள் உண்ணுமாறு அதைப் பறிமாறினான். அவர்கள் அந்தக் கூழை உண்ணத் தொடங்கியதும், கடவுளின் அடியவரே! பானையிலே நஞ்சு! என்று அலறினர். அவர்களால் அதை மேலும் உண்ண முடியவில்லை.

அப்பொழுது அவர், கொஞ்சம் மாவு கொண்டு வாருங்கள் என்றார். அவர் அதை பானையில் போட்டு, இவர்கள் உண்ணும்படி இதைப் பறிமாறுங்கள் என்று சொன்னார். பானையில் இருந்தது அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை.

பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, மக்களுக்கு உண்ணக் கொடு என்றார்.

அவருடைய பணியாளன், இந்த மறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்? என்றான். அவரோ, இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் “உண்ட பின்னும் மீதி இருக்கும்“ என்று ஆண்டவர் கூறுகிறார் என்றார்.

அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.

அதிகாரம் 5.

சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமை மிக்க வீரர்: ஆனால் தொழுநோயாளி.

சு¢ரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்ற பொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக் கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள்.

அவள் தன் தலைவியை நோக்கி, என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார் என்றாள்.

எனவே நாமான் தம் தலைவனிடம் சென்று, இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு கூறுகின்றாள் என்று அவனுக்குத் தெரிவித்தார்.

அப்பொழுது சிரியா மன்னர், சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசனுக்கு மடல் தருகிறேன் என்றார். எனவே நாமான் ஏறத்தாழ நாடீறு கிலோ வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக்கொண்டு பயணமானார்.

அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார். அதில், இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன். அவனது தொழு நோயை நீர் குணமாக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.

இஸ்ரயேல் அரசன் அம்மடலைப் படித்தவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, நானென்ன கடவுளா? உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா? சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழு நோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே! என்னோடு போரிட அவன் வாய்ப்புத் தேடுவதைப் பார்த்தீர்களா! என்று கூறினான்.

கடவுளின் அடியவரான எலிசா இஸ்ரயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்ட செய்தியைக் கேள்வியுற்று அவனிடம் ஆளனுப்பி, நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும் என்று சொன்னார்.

அவ்வாறே நாமான் தம் குதிரைகளுடனும் தேருடனும் எலிசா விட்டு வாயில்முன் வந்து நின்றார்.

எலிசா, நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும் என்று ஆளனுப்பிச் சொல்லச் சொன்னார்.

எனவே, நாமான் சினமுற்று வெளியேறினார். அப்பொழுது அவர், அவர் என்னிடம் வந்து, என் அருகில் நின்று, தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து, தொழுநோய் கண்ட இடத்தின்மேல் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவார் என்று நான் எண்ணியிருந்தேன்.

அபானா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரயேலில் உள்ள ஆறுகள் அனைத்தையும்விட மேலானவை அல்லவா? அவற்றில் மூழ்கி நான் நலமடைய முடியாதா? என்று கூறி ஆத்திரமாய்த் திரும்பிச் செல்லலானார்.

அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி, அவரிடம், எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறிஇருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, “மூழ்கி எழும்: நலமடைவீர்“ என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன? என்றனர்.

எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது.

பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும் என்றார்.

அதற்கு எலிசா, நான் பணியும் வாழும் ஆண்டவர்மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன் என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்பொழுது நாமான் அவரை நோக்கி, சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்: இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒரு போதும் செலுத்தமாட்டேன்.

ஆயினும1 ஒரு காரியத்திற்காக உம் அடியானாகிய என்னை ஆண்டவர் மன்னிப்பாராக! என் தலைவன் வழிபடுவதற்காக ரிம்மோன் கோவிலுக்குச் சென்று என் கையில் சாய்ந்து கொண்டு அதனை வணங்குகையில் நானும் அங்குத் வலை வணங்க நேரிட்டால், உம் அடியானாகிய என்னை அச்செயலுக்காக ஆண்டவர் மன்னிப்பாராக! என்றார்.

அதற்கு எலிசா, அமைதியுடன் சென்று வாரும் என்றார். நாமான் அவரிடமிருந்து விடைபெற்றுச் சற்றுத் பரம் போனபின்,

கடவுளின் அடியவரான எலிசாவின் பணியாளன் கேகசி, என் தலைவர் இந்தச் சிரியா நாட்டு நாமானிடமிருந்து அவன் கொண்டு வந்தவற்றில் எதையும் பெறாமல் அவனை விட்டுவிட்டார். வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவர் பின் ஓடி அவரிடமிருந்து எதையாவது வாங்கிக் கொள்வேன் என்று சொல்லிக் கொண்டான்.

எனவே கேகசி நாமான் பின்னே ஓடிவந்தான். அவன் ஓடிவருவதை நாமான் கண்டு தம் தேரிலிருந்து விரைவாய் இறங்கி அவனை எதிர்கொண்டு போய், என்ன, எல்லாம் நலமா? என்று வினவினார்.

அவன் மறுமொழியாக, ஆம், எல்லாம் நலமே! என் தலைவர் தங்களிடம் என்னை அனுப்பி, “இறைவாக்கினர் குழுவினரான இரண்டு இளைஞர் எப்ராயிம் மலைநாட்டிலிருந்து இப்பொழுது தான் வந்துள்ளனர். அவர்களுக்கு நாற்பது கிலோ வெள்ளியும் இரண்டு பட்டாடைகளும் கொடுத்து அனுப்பும்“ என்று சொல்லச் சொன்னார் என்றான்.

அதற்கு நாமான், எண்பது கிலோ வெள்ளியை ஏற்றுக் கொள்ள மனம் வையும் என்று சொல்லி அவனை வற்புறுத்தி, இரு பைகளில் எண்பது கிலோ வெள்ளியைக் கட்டி இரண்டு பட்டாடைகளோடு இரு பணியாளரிடம் கொடுக்க, அவர்கள் அவற்றை அவனுக்கு முன்னே கொண்டு சென்றனர்.

கேகசி மலையை வந்தடைந்ததும் அவர்களிடமிருந்து அவற்றைப் பெற்றுத் தன் வீட்டில் வைத்துக் கொண்டான். பின்னர் அவர்களை அனுப்பி வைக்க, அவர்களும் திரும்பிச் சென்றனர்.

அவன் தன் தலைவரிடம் வந்து அவர்முன் நின்றான். எலிசா அவனை நோக்கி, கேகசி! நீ எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். அவன், அடியேன் எங்கும் செல்லவில்லை என்றான்.

அதற்கு அவர், அந்த ஆள் தேரினின்று இறங்கி உன்னை எதிர்கொண்டு வந்ததை நான் ஞானத்தால் அறிந்தேன். வெள்ளி, ஆடைகள், ஒலிவத் தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், ஆடுமாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள்- இவைகளைப் பெற்றுக் கொள்ள இதுவா சமயம்?

எனவே, நாமானின் தொழுநோய் உன்னையும் உன் வழிவந்தோரையும் என்றென்றும் பீடிக்கும்! என்றார். அவ்வாறே அவனுக்குத் தொழுநோய் பிடிக்க, அவன் உடம்பெல்லாம் வெண்பனி போலாயிற்று. அவன் அவரை விட்டுப் பிரிந்து சென்றான்.

அதிகாரம் 6.

ஒரு நாள் இறைவாக்கினர் குழுவினர் எலிசாவை நோக்கி, உம்மோடு நாங்கள் வாழும் இந்த இடம் மிகக் குறுகியதாய் உள்ளது.

எனவே நாங்கள் யோர்தானுக்குச் சென்று ஆளுக்கொரு உத்திரம் கொண்டு வந்து வீடொன்று கட்டி அதில் குடிபுகுவோம் என்றனர். அதற்கு அவர், போய், வாருங்கள் என்றார்.

அவர்களில் ஒருவன், நீரும் உம் அடியாராகிய எம்மோடு வாரும் என்று அழைத்தான். நானும் வருகிறேன் என்று அவர் கூறினார்.

எனவே அவரும் அவர்களுடம் யோர்தானுக்குச் சென்றார்.

அவர்கள் மரங்களை வெட்டி வீழ்த்தினர். அவ்வாறு ஒருவன் உத்திரம் வெட்டிக்கொண்டிருந்தபோது அவனது கோடரி கழன்று தண்ணீரில் விழுந்தது. உடனே அவன் ஜயோ! என் தலைவரே, இது இரவல் பொளாயிற்றே! என்று கத்தினான்.

அப்போது கடவுளின் அடியவர், அது எங்கு வீழ்ந்தது என்று கேட்டார். அவனும் அந்த இடத்தைக் காட்டினான். உடனே எலிசா ஒரு கம்பை வெட்டி அங்கு எறியவே கோடரியும் மிதக்கத் தொடங்கியது.

அவர் அதை எடுத்துக் கொள் என்று அவனிடம் கூற, அவனும் கை நீட்டி அதை எடுத்துக் கொண்டான்.

சிரியாவின் மன்னன் இஸ்ரயேல் நாட்டின் மீது போர் தொடுத்தான். அப்பொழுது அவன் தன் அலுவலரோடு கலந்து பேசி, இந்த இடத்தில் பாளையம் இறங்குவோம் என்றான்.

அப்பொழுது கடவுளின் அடியவர் இஸ்ரயேல் அரசனிடம் ஆளனுப்பி, அந்த இடத்திற்குப் போகாமல் எச்சரிக்கையாயிரும், ஏனெனில் அங்கே சிரியர் பதுங்கி இருக்கின்றனர் என்று சொல்லச் சொன்னார்.

இஸ்ரயேல் அரசன் கடவுளின் அடியவர் எச்சரித்துக் குறிப்பிட்ட ஒவ்வோர் இடத்திற்கும் ஆளனுப்பினான். இவ்வாறு அவன் தன்னைக் காத்துக் கொண்டது ஒருமுறை, இருமறை அல்ல.

இதன் பொருட்டுச் சிரியாவின் அரசன், நெஞ்சம் கொதித்துத் தன் பணியாளர்களைக் கூப்பிட்டு, இஸ்ரயேல் அரனுக்கு ஒற்றனாக நம்மிடையே ஒருவன் இருக்கின்றான். அவன் யாரென்று தெரிய வேண்டும் என்றான்.

பணியாளருள் ஒருவன் அவனை நோக்கி, என் தலைவரான அரசே! அப்படி ஒருவனும் இங்கில்லை. ஆனால், இஸ்ரயேலில் இருக்கும் எலிசா என்ற இறைவாக்கினர் தாங்கள் பள்ளியறையில் பேசுவதைக்கூடத் தம் அரசனுக்கு வெளிப்படுத்தி விடுகிறார் என்றான்.

அதற்கு அரசன், நீங்கள் போய், அவர் எங்கு இருக்கிறார் என்று பார்த்து வாருங்கள். நான் ஆள்களை அனுப்பி அவரைப் பிடிக்கச் செய்வேன் என்றான். “அவர் தோத்தானில் இருக்கிறார்“ என்று தெரிவிக்கப்பட்டது.

ஆதலால் அரசன் அங்குக் குதிரைகளையும், தேர்களையும் பெரிய படையையும் அனுப்பினான். அவர்கள் இரவோடு இரவாக வந்து நகரைச் சூழ்ந்து கொண்டனர்.

கடவுளுடைய அடியவரின் வேலைக்காரன் வைகறையில் எழுந்து வெளியே வந்தான். அப்பொழுது படைகளும், குதிரைகளும், தேர்களும் நகரைச் சூழ்ந்திருக்கக் கண்டு, ஜயோ! என் தலைவரே, என்ன செய்வோம்? என்று கதறினான்.

அதற்கு அவர், அஞ்ச வேண்டாம். அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள் அதிகம் என்றார்.

பின்பு எலிசா, ஆண்டவரே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்! என்று வேண்டினார். ஆண்டவர் அவ்விதமே வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். இதோ! மலை எங்கணும் நெருப்புக் குதிரைகளும், தேர்களும் எலிசாவைச் சூழ்ந்து நிற்பதைக் கண்டான்.

சிரியா நாட்டினர் அவரை நெருங்கி வந்த பொழுது, எலிசா ஆண்டவரை நோக்கி, இவ்வினத்தாரைக் குருடாக்கியருளும் என்று மன்றாடினார். உடனே ஆண்டவர் எலிசாவின் மன்றாட்டுக்கு இணங்கி அவர்களைக் குருடாக்கினார்.

அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி, இது நீங்கள் செல்ல வேண்டிய பாதையுமல்ல, நகருமல்ல. என்னைப் பின் தொடருங்கள். நீங்கள் தேடும் மனிதனிடம் நான் உங்களை அழைத்துச் செல்வேன் என்று சொல்லி அவர்களைச் சமாரியாவிற்கு அழைத்துச் சென்றார்.

அவர்கள் அந்நகருக்குள் நுழைந்ததும் எலிசா, ஆண்டவரே! இவர்கள் பார்வை பெறும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும்! என்றார். ஆண்டவர் அவர்கள் கண்களைத் திறக்கவே, சமாரிய நகரின் நடுவில் தாங்கள் இருப்பதை இவர்கள் கண்டனர்.

இஸ்ரயேல் அரசன் அவர்களைக் கண்டவுடன் எலிசாவை நோக்கி, என் தந்தையே! இவர்களை நான் வெட்டி வீழ்த்தட்டுமா? என்றான்.

அதற்கு அவர், கொல்லாதே! நீ சிறைப்படுத்தியவர்களை நீயே உன் வாளினாலோ அம்பினாலோ கொல்வாயா? எனவே அவர்கள் பசிதாகம் தீர அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்கள் தங்கள் தலைவனிடம் திரும்பிச் செல்லட்டும் என்றார்.

அவ்வாறே அரசன் அவர்களுக்குப் பெரிய விருந்தளித்தான். அவர்களும் உண்டு குடித்தனர். பின்னர் அவன் அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களும் தங்கள் தலைவனிடம் திரும்பிச் சென்றனர். அதன்பின் சிரியாக் கொள்ளைக் கூட்டத்தினர் இஸ்ரயேல் நாட்டுக்குள் காலெடுத்து வைக்கவில்லை.

பின்னர் சிரியா மன்னன் பெனதாது தன் முழுப் படையையும் திரட்டிக் கொண்டு சமாரியாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான்.

எனவே சமாரியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. ஒரு கழுதைத் தலை, எண்பது வெள்ளிக் காசுக்கும், புறாவின் எச்சம் கால்படி ஜந்து வெள்ளிக் காசுக்கும் விற்கும் அளவுக்கு முற்றுகை கடுமையாய் இருந்தது.

இஸ்ரயேலின் அரசன் நகர மதில்மேல் நடந்து செல்கையில் ஒரு பெண், அரசே, என் தலைவரே! என்னைக் காப்பாற்றும்! என்று கூக்குரலிட்டாள்.

அதற்கு அவன், ஆண்டவரே, உன்னைக் காப்பாற்றவில்லையெனில், நான் எப்படி உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தா? ஆலையிலிருந்தா? என்றான்.

பின்னும் அரசன் அவளிடம், உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டான். அதற்கு அவள், இதோ! ஒரு நாள் இந்தப் பெண் என்னை நோக்கி, “இன்று நாம் உண்பதற்கு உன் மகனைக் கொடு: நாளை என் மகனைத் தின்போம்“ என்றாள்,

அவ்வாறே நாங்கள் என் மகனைச் சமைத்துத் தின்றோம். மறுநாள் நான் அவளிடம், “நாம் உண்ணும்படி என் மகனைக் கொடு!“ என்றேன். ஆனால் அவளோ தன் மகனை ஒளித்து வைத்துவிட்டாள் என்று சொன்னாள்.

அரசன் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். அவன், நகர மதில் வழியாக நடந்து செல்கையில், தன் உடலின்மேல் கோணியாடை அணிந்திருந்ததை மக்கள் கண்டனர்.

அரசன், இன்றைக்குள் நான் சாபாற்றின் மகன் எலிசாவின் தலையை வெட்டாது விட்டால் கடவுள் என்னை இப்படியும் இதற்கு மேலும் தண்டிப்பாராக! என்றான்.

அப்பொழுது எலிசா தம் வீட்டில் பெரியோர்களுடன் அமர்ந்திருந்தார். அரசன் தனக்குமுன் ஒரு மனிதனை அவரிடம் அனுப்பியிருந்தான். அத்பதன் வருவதற்குள் எலிசா தம்மோடு இருந்த பெரியோர்களை நோக்கி, இந்தக் கொலைகார மகன் என் தலையை வெட்டும்படி, இதோ ஒருவனை அனுப்பியிருப்பது தெரியவில்லையா? அத்பதன் வரும்பொழுது அவன் உள்ளே வராதவாறு கதவை அடைத்து விடுங்கள். அவனைப் பின்தொடர்ந்து வரும் அவன் தலைவனின் காலடி ஓசையும் இதோ கேட்கிறதல்லவா? என்றார்.

இவ்வாறு அவர் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், அரசன் அவரிடம் வந்து சேர்ந்தான். அப்பொழுது அவன், இந்தத் தீமை ஆண்டவரிடமிருந்தே வருகிறது! அப்படியிருக்க ஆண்டவருக்காக நான் இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும்? என்றான்.

அதிகாரம் 7.

அப்பொழுது எலிசா, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும் என்றார்.

அரசனுக்குப் பக்கபலமாயிருந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, இதோ பாரும்! ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்து விட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா? என்று கேட்டான். அதற்கு அவர், இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் நீ எதையும் உண்ணமாட்டாய் என்றார்.

நகர வாயிலின் அருகே நான்கு தொழுநோயாளிகள் இருந்தனர். இவர்கள் ஒருவர் ஒருவரிடம், சாவை எதிர்நோக்கி, நாம் ஏன் இங்கு உட்கார்ந்து இருக்க வேண்டும்? நாம் நகருக்குள் செல்வோமாயின், நகரில் பஞ்சம் இருப்பதால், நாம் செத்தப் போவோம்.

இங்கேயே தங்கி இருந்தாலும் சாக வேண்டியதுதான். வாருங்கள்! சிரியாவின் பாசறைக்குச் சென்று தஞ்சம் புகுவோம். அவர்கள் நம்மை வாழவிட்டால், நாம் உயிர் பிழைப்போம். அவர்கள் நம்மைக் கொன்றுபோட்டால் செத்துப்போவோம் என்று பேசிக் கொண்டனர்.

இருள் கவிழ்ந்த வேளையில் அவர்கள் சிரியரின் பாசறையின் எல்லையை நெருங்கியபோது, அங்கே ஒருவரும் இல்லை.

ஏனெனில் தேர்கள், குதிரைகள், பெரும் படை ஆகியவற்றின் பேரொலியை சிரியாப் படையினர் கேட்கும்படி “தலைவர்“ செய்திருந்தார். எனவே அவர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, இதோ! இஸ்ரயேல் அரசன் தனக்குத் துணையாக இத்திய அரசர்களையும் எகிப்தி அரசர்களையும் கூலிக்கு அமர்த்திக் கொண்டு நம்மைத் தாக்க வருகிறான் என்று சொல்லிக்கொண்டனர்.

எனவே அவர்கள் இருள் கவிழ்ந்த வேளையில் ஓட்டம்பிடித்தனர். தங்கள் கூடாரங்களையும், கழுதைகளையும், பாசறையையும் அப்படியே விட்டுவிட்டு உயிருக்காகத் தப்பி ஓடினர்.

ஆகவே இந்தத் தொழுநோயாளிகள் பாசறையின் எல்லையை நெருங்கி, ஒரு கூடாரத்தின் உள்ளே நுழைந்து அங்கே உண்டு குடித்தனர். மேலும் அங்கிருந்த வெள்ளி, பொன், ஆடைகள் முதலியவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் திரும்பி வந்து வேறொரு கூடாரத்தில் புகுந்து அங்கிருந்தவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்தனர்.

பிறகு அவர்கள் ஒருவர் ஒருவரிடம், இன்று நாம் இப்படிச் செய்வது சரியன்று. இந்நாள் நல்ல செய்தியின் நாள். நாளைக் காலை வரை இதை வெளியிடாது மெளனமாய் இருந்தால், நாம் குற்றவாளிகள் ஆவோம். வாருங்கள்! நாம் போய் அரச மாளிகையில் இதை அறிவிப்போம் என்று சொல்லிக்கொண்டனர்.

அவர்கள் சென்று நகர வாயிற் காவலனை அணுகி, நாங்கள் சிரியாவின் பாசறைக்குள் சென்றோம். அங்கு யாரையும் காணவில்லை. அங்குக் கட்டியிருந்த குதிரைகளும் கழுதைகளும், கூடாரங்களும் அப்படியே இருந்தன என்று தெரிவித்தனர்.

வாயிற் காவலர் இதை உரத்த குரலில் சொல்ல, அது உள்ளே அரச மாளிகைக்குத் தெரிவிக்கப்பட்டது.

அரசன் இரவிலேயே எழுந்து தன் பணியாளரை நோக்கி, சிரியர் நமக்கு எதிராகச் செய்துள்ளதைக் கேளுங்கள்: நாம் பட்டினியால் வருந்துவதை அறிந்து, அவர்கள் தங்கள் பாசறையை விட்டு வெளியேறி, “இஸ்ரயேலர் நகரிலிருந்து வெளியேறுவார் அப்பொழுது நாம் அவர்களை உயிரோடு பிடித்துக்கொண்டு நகரினுள் நுழையலாம்“ என்று எண்ணி வயல்வெளிகளில் ஒளிந்திருக்கின்றனர் என்றான்.

அவனுடைய பணியாளருள் ஒருவன், இங்கே எஞ்சியுள்ள குதிரைகளுள் ஜந்தினைச் சிலர் ஓட்டிக்கொண்டு செல்லட்டும். இங்கே எஞ்சியுள்ள இஸ்ரயேலர் அனைவருக்கும் நேரிடுவதை அவர்களுக்கும் நேரிடட்டும். ஆம்: ஏற்கெனவே அழிவுக்குள்ளான இஸ்ரயேலர் அனைவரையும்போல் இவர்களும் அழிவுக்கு உள்ளாவர். எனவே அவர்களை அனுப்பிப் பார்ப்போம் என்றான்.

அவ்வாறே இரண்டு குதிரைத் தேர்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் அரசன் சிலரைச் சிரியர் பாசறைக்கு அனுப்பி, சென்று பாருங்கள் என்று கட்டளையிட்டான்.

அவர்களோ சிரியரைத் தேடி யோர்தான்வரை போனார்கள். இதோ! சிரியர் தப்பிஓடிய வேகத்தில் விட்டெறிந்த ஆடைகளும் படைக்கலன்களும் சிதறிக் கிடந்தன. அத்பதர்கள் அரசனிடம் திரும்பிவந்து அதைத் தெரிவித்தனர்.

உடனே மக்கள் புறப்பட்டுச் சென்று சிரியர் பாசறையைக் கொள்ளையடித்தனர். இவ்வாறு ஆண்டவரின் வாக்கின்படி ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக்காசுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்பட்டன.

அரசன் தனக்குப் பக்க பலமாயிருந்த அதிகாரியிடம1 நகர்வாயிலின் காவல் பொறுப்பை ஒப்படைத்திருந்தான். மக்கள் நகர்வாயிலில் அவனை மிதித்துப் போடவே, அவன் இறந்து போனான். இவ்வாறு கடவுளின் அடியவர் தம்மிடம் வந்த அரசனுக்கு அறிவித்தபடியே நடந்தது.

இங்ஙனம், நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் இரண்டு மரக்கால் வாற்கோதுமை, ஒரு வெள்ளிக் காசுக்கும், ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும் என்று கடவுளின் அடியவர் அரசனிடம் கூறியிருந்த வாக்கு நிறைவேறியது.

ஏனெனில், அந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, இதோ! பாரும் ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்துவிட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா? என்று கேட்டிருந்தான். அதற்கு அவர், இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் எதையும் நீ உண்ணமாட்டாய் என்று கூறியிருந்தார்.

அவ்வாறே அவனுக்கு நேரிட்டது. மக்கள் அவனை நகர வாயிலில் மிதித்துப்போட அவனும் இறந்து போனான்.

அதிகாரம் 8.

எலிசா தாம் உயிர்ப்பித்துக் கொடுத்த சிறுவனின் தாயான பெண்ணை நோக்கி, நீயும் உன் குடும்பத்தினரும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு உங்களுக்கு வசதியான வேறோர் இடத்தில் தங்கியிருங்கள். ஏனெனில் ஆண்டவர் பஞ்சத்தை வருவித்துள்ளார். அது நாட்டில் ஏழாண்டுகள் நிலைத்திருக்கும் என்றார்.

எனவே அப்பெண் எழுந்து கடவுளின் அடியவர் வாக்கின்படி செய்தார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் புறப்பட்டுப் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று அங்கு ஏழாண்டுகள் தங்கியிருந்தனர்.

ஏழாண்டுகள் கடந்தபின் அந்தப் பெண் பெலிஸ்தியர் நாட்டினின்று திரும்பி வந்து தம் வீடும் நிலங்களும் தமக்குக் கிடைக்கும் பொருட்டு அரசனிடம் முறையிடச் சென்றார்.

அப்பொழுது அரசனும் கடவுளின் அடியவர்க்குப் பணிவிடை செய்து வந்த கேகசியிடம், எலிசா புரிந்துள்ள அரும்பெரும் செயல்களையெல்லாம் எனக்குச் சொல்லும் என்று கேட்டு உரையாடிக் கொண்டிருந்தான்.

அவனும் இறந்தவனை எலிசா உயிர்ப்பித்துக் கொடுத்த நிகழ்ச்சியை அரசனுக்கு எடுத்துக்கூறிக் கொண்டிருந்தான். உயிர்ப்பிக்கப்பட்ட அதே சிறுவனின் தாய் அப்பொழுது அரசன்முன் வந்து, தம் வீட்டையும் நிலங்களையும் முன்னிட்டு அரசனிடம் முறையிட்டார். அப்பொழுது கேகசி, அரசே! என் தலைவரே! இவள்தான் அந்தப் பெண். இவள் மகனாகிய இவனைத்தான் எலிசா உயிர்ப்பித்தார் என்றான்.

அரசன் அந்தப் பெண்ணிடம் அதைப்பற்றி வினவ, அவரும் நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார். அப்பொழுது அரசன் ஓர் அலுவலனை அழைத்து, அவளுடைய உடைமைகள் எல்லாவற்றையும் அவளுக்குத் திருப்பிக் கொடுத்து விடு. மேலும் அவள் நாட்டை விட்டுச் சென்ற நாள்முதல் இன்றுவரை அவளுடைய நிலங்களிலிருந்து கிடைத்த வருவாயையும் அவளுக்குக் கொடுத்து விடு என்று கட்டளையிட்டான்.

எலிசா தமஸ்கு நகருக்கு வந்தபோது சிரியாவின் மன்னன் பெனதாது நோயுற்றிருந்தான். “கடவுளின் அடியவர் இங்கு வந்திருக்கிறார்“ என்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மன்னன் அசாவேலிடம், கையோடு ஓர் அன்பளிப்பு எடுத்துக் கொண்டு கடவுளின் அடியவரைச் சந்திக்கச் செல். “நான் இந்நோயினின்று நலம் பெறுவேனா?“ என்று அவர் மூலம் ஆண்டவரிடம் கேட்டறிந்து வா என்றான்.

எனவே அவன் தமஸ்குவில் கிடைக்கக்கூடிய எல்லா விதமான அரும்பொருள்களையும் நாற்பது ஒட்டகச் சுமையளவு கையோடு அன்பளிப்பாக எடுத்துக்கொண்டு சென்றான். அவர் முன் வந்து நின்று அவன் அவரை நோக்கி, நான் இந்நோயினின்று நலம் பெறுவேனா? என்று கேட்குமாறு சிரியாவின் மன்னனும் உம் புதல்வனுமான பெனதாது உம்மிடம் என்னை அனுப்பியுள்ளார் என்றான்.

எலிசா மறுமொழியாக, நீ போய், “நீர் நலமடைவது உறுதி“ என்று சொல்: ஆனால், “அவன் செத்துப்போவது திண்ணம்“ என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார் என்றார்.

பிறகு கடவுளின் அயடிவர் அசாவேலின் முகத்தை அவன் வெட்கமுறும் அளவுக்கு வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்து அழுதார்.

அசாவேல் அவரை நோக்கி, என் தலைவரே, நீர் அழுவது ஏன்? என்று கேட்டான். அதற்கு அவர், நீ இஸ்ரயேல் மக்களுக்கு செய்யவிருக்கிற தீமைகளை நான் அறிவேன்: அவர்களின் கோட்டைகளைத் தீக்கிரையாக்குவாய்: அவர்களுடைய இளைஞர்களை வாளுக்கு இரையாக்குவாய்: அவர்களுடைய சிறு குழந்தைகளைத் தரையில் மோதிக் கொல்வாய்: அவர்களுடைய கருவுற்ற பெண்களின் வயிற்றைக் குத்திக் கிழிப்பாய் என்றார்.

அசாவேல் அவரை நோக்கி, நாயினும் இழிந்தவன் அடியேன். இவ்வளவு கேவலமான செயலை நான் செய்வேனா? என்றான். அதற்கு எலிசா, நீ சிரியாவின் மன்னனாகப் போகின்றாய் என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்றார்.

அசாவேல் எலிசாவிடமிருந்து விடைபெற்றுத் தன் தலைவனிடம் திரும்பிச் சென்றான். மன்னன் அவனை நோக்கி, எலிசா உன்னிடம் என்ன சொன்னார் என்று கேட்டான். அதற்கு அசாவேல், நீர் நலமடைவது உறுதி என்று அவர் எனக்குச் சொன்னார் என்றார்.

மறுநாள் அசாவேல் ஒரு போர்வையை எடுத்துத் தண்ணீரில் நனைத்து மன்னன் முகத்தை மூட, அவன் இறந்து போனான். அசாவேல் அவனுக்குப் பதிலாக அரசனானான்.

இஸ்ரயேல் அரசன் ஆகாபின் மகன் யோராம் ஆட்சியேற்ற ஜந்தாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோசபாத்தின் மகன் யோராம் யூதா நாட்டின் அரசனானான்.

அவன் தன் முப்பத்திரண்டாம் வயதில் அரசனாகி எட்டு ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி புரிந்தான்.

அவன் ஆகாபின் மகளை மணந்தவன்: ஆதலால் ஆகாபின் குடும்பத்தவரைப்போல இஸ்ரயேல் அரசர்களின் வழியில் நடந்தான்¥¥¥ : ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.

ஆயினும் ஆண்டவர் தம் அடியான் தாவீதை முன்னிட்டு யூதாவை அழிக்க விரும்பவில்லை: ஏனெனில் அவர்தம் மைந்தராம் குல விளக்கை எந்நாளும் காப்பதாக அவருக்க வாக்களித்திருந்தார்.

யோராமின் காலத்தில் ஏதோமியர் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, தங்களுக்கென ஓர் அரசனை நியமித்துக் கொண்டனர்.

ஆனால் யோராம் சாயிருக்குத் தன் தேர்ப்படைகள் அனைத்தோடும் சென்றான். ஏதோமியர் அவனையும் அவனுடைய தேர்ப்படை தலைவர்களையும் சூழ்ந்து கொண்டனர். அவன் இரவில் எழுந்து ஏதோமியரை யூதாவின் வெட்டி வீழ்த்தினான். மக்கள் தம்தம் கூடாரத்திற்கு தப்பி ஓடினர்.

எனவே இந்நாள் வரை ஏதோமியர் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்துகொண்டே இருக்கின்றனர். அதே காலத்தில் லிப்னாவும் கிளர்ச்சி செய்தது.

யோராமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

யோராம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பதிலாக அவன் மகன் அகசியா அரசனானான்.

இஸ்ரயேலின் அரசனான ஆகாபின் மகன் யோராம் ஆட்சியேற்ற பன்னிரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசனான யோராமின் மகன் அகசியா அரசாளத் தொடங்கினான்.

தன் இருபத்திரண்டாம் வயதில் அரசனான அகசியா எருசலேமில் இருந்துகொண்டு ஓராண்டு ஆட்சி செலுத்தினான். இஸ்ரயேல் அரசன் ஓம்ரியின் பேத்தியான அத்தலியா என்பவளே அவன் தாய்.

அவன் ஆகாபு வீட்டு மருமகனாதலின், ஆகாபு குடும்பத்தவரைப் போல நடந்து, ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான்.

மேலும் சிரியாவின் மன்னன் அசாவேலுக்கு எதிராய்போரிட ஆகாபின் மகன் யோராமுடன் இராமோத்து கிலயாதுக்குப் போனான். ஆனால் அங்குச் சிரியாப் படையினர் யோராமைத் தாக்கினர்.

சிரியாவின் மன்னன் அசாவேலுடன் இராமோத்தில் போரிடுகையில் சிரியரால் ஏற்பட்ட காயங்களை ஆற்றிக்கொள்வதற்காக யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பி வந்தான். அப்பொழுது யூதாவின் அரசனான யோராமின் மகன் அகசியா, ஆகாபின் மகனும் காயமுற்றிருந்தவனுமான யோராமை இஸ்ரயேலில் காணச் சென்றான்.

அதிகாரம் 9.

அப்பொழுது இறைவாக்கினர் எலிசா இறைவாக்கினரின் குழுவைச் சார்ந்த ஒருவனை அழைத்து, உன் இடையை வரிந்துகட்டி உன் கையில் இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு இராமோத்து கிலயாதுக்குச் செல்.

அங்குச் சென்றதும் நிம்சியின் மகனான யோசபாத்தின் புதல்வன் ஏகூவைத் தேடிக் கண்டுபிடி. அவனை அணுகி, அவனுடைய தோழர்களினின்று அவனைத் தனியே கூப்பிட்டு ஓர் உள்ளறைக்கு அழைத்துச் செல்.

அங்கே இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்து அவனை நோக்கி, “ஆண்டவர் கூறுவது இதுவே: உன்னை நான் இஸ்ரயேலின் அரசனாகத் திருப்பொழிவு செய்கிறேன்“ என்று சொல்லி, அவன் மேல் எண்ணெய் வார்ப்பாய். அங்கே நில்லாது கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்துவிடு என்றார்.

அவ்வாறே இறைவாக்கினனான அவ்விளைஞன் இராமோத்து கிலயாதுக்குச் சென்றான்.

அவன் அங்கு வந்ததும் படைத்தலைவர்கள் அமர்ந்திருந்ததைக் கண்டான். அவன் தளபதியே! உம்மிடம் ஒரு வார்த்தை சொல்லவேண்டும் என்றான். அதற்கு ஏகூ, எங்களுள் யாரிடம்? என்று கேட்டான். அதற்கு அவன், தளபதியே! உம்மிடம்தான் என்றான்.

எனவே ஏகூ எழுந்து மாளிகைக்குள் சென்றான். இளைஞனோ அவனது தலையின்மேல் எண்ணெய் வார்த்து, இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: “ஆண்டவராகிய நான் என் மக்களாகிய இஸ்ரயேலுக்கு அரசனாக உன்னைத் திருப்பொழிவு செய்கிறேன்.

உன் தலைவன் ஆகாபின் குடும்பத்தை நீ அழிக்க வேண்டும். இங்ஙனம் ஈசபேலால் சிந்தப்பட்ட என் ஊழியரான இறைவாக்கினரின் இரத்தத்திற்கும் ஆண்டவராகிய என் எல்லா அடியவர்களின் இரத்தத்திற்கும் நான் பழிவாங்குவேன்.

இவ்வாறு ஆகாபின் குடும்பம் முழுவதும் அழியும். இஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்தைச் சார்ந்த ஆண்கள் அனைவரையும், அடிமைகளாகியனும் உரிமை மக்களாயினும், வெட்டி வீழ்த்துவேன்.

இந்த ஆகாபின் குடும்பத்தை நெபாற்றின் மகன் எரோபவாமின் குடும்பத்தைப் போலும், அகியாவின் மகன் பாசாவின் குடும்பத்தைப் போலும் ஒழித்துக் கட்டுவேன்.

இஸ்ரயேல் நிலப்பகுதியில் ஈசபேலை நாய்கள் தின்னும். அவளைப் புதைக்க யாரும் வரமாட்டார்கள் என்று கூறிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டான்.

பின்பு ஏகூ தன் தலைவரின் ஊழியர் கூடியிருந்த இடத்திற்கு வந்தான். அவர்கள் அவனை நோக்கி, நல்ல செய்திதானா? இந்தப் பைத்தியக்காரன் உன்னிடம் வந்தது ஏன்? என்று கேட்டனர். அதற்கு அவன், அவன் யாரென்றும் அவன் சொன்னது என்னவென்றும் உங்களுக்குத் தெரியுமோ! என்றான்.

அதற்கு அவர்கள், அது பொய்! உண்மையை எங்களுக்குத் தெரிவி என்றனர். அப்போது ஏகூ, அவன் என்னிடம் “ஆண்டவர் கூறுவது இதுவே: உன்னை இஸ்ரயேலுக்கு அரசனாகத் திருப்பொழிவு செய்கிறேன்“ என்றான் என்று பதிலளித்தான்.

இதைக் கேட்டவுடன் அவர்கள் அனைவரும் விரைந்து தம் போர்வையைக் கழற்றி அவற்றை வெறுமையாய் இருந்த படிகளில் விரித்து எக்காளம் ஊதி, ஏகூவே அரசர்! என்று முழங்கினர்.

நிம்சியின் மகனான யோசபாத்தின் புதல்வன் ஏகூ யோராமுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான். அப்பொழுது யோராம் சிரியாவின் மன்னன் அசாவேலுக்கு எதிராக இஸ்ரயேலின் எல்லாப் படைகளோடும் இராமோத்து கிலயாதை முற்றுகையிட்டிருந்தான்.

அனால் சிரியாவின் மன்னன் அசாவேலோடு போரிடுகையில், சிரியரால் பட்ட காயங்களை ஆற்றிக்கொள்வதற்காக அரசன் யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பி வந்திருந்தான். ஏகூ, இதை நீங்கள் மனமார விரும்பினால், இஸ்ரயேலுக்குப் போய் யாரும் செய்தியைப் பரப்பாதபடி, இந்நகரினின்று எவரையும் தப்பி வெளியேற விடாதீர் என்றான்.

பிறகு அவன் தேரின்மீது ஏறி இஸ்ரயேலுக்குச் சென்றான். ஏனெனில் அங்கே யோராம் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான். இச்சமயம் யூதாவின் அரசன் அகசியாவும் யோராமைப் பார்க்க வந்திருந்தான்.

இஸ்ரயேலின் காவல்மாடத்தில் நின்று கொண்டிருந்த காவலன், ஏகூ படையோடு வருவதைக் கண்டு, படையொன்றைக் காண்கிறேன் என்றான். அதற்கு யோராம், ஒரு குதிரை வீரனைத் தயார் செய். அவனை அவர்களைச் சந்திக்குமாறு அனுப்பு. “அமைதிக்காவா?“ என்று அவன் கேட்கட்டும் என்றான்.

அவ்வாறு குதிரை வீரன் ஒருவன் ஏகூவைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்று, “அமைதிக்காகவா?“ என்று அரசர் கேட்கச் சொன்னார் என்றான். அதற்கு ஏகூ, சமாதானம் பேசுவதற்கு நீ யார்? திரும்பி என் பின்னே வா என்றான். அப்பொழுது காவலன்?, பதன் அவர்களைச் சென்றடைந்தான். ஆனால் இன்னும் திரும்பி வரவில்லை என்று அறிவித்தான்.

அரசன் மற்றொரு குதிரை வீரனை அனுப்ப, அவன் அவர்கள் முன்பாக வந்து, “அமைதிக்காகவா?“ என்று அரசர் கேட்கச் சொன்னார் என்றான். அதற்கு ஏகூ, சமாதானம் பேசுவதற்கு நீ யார்? திரும்பி என் பின்னே வா என்றான்.

காவலன் மீண்டும் அவன் அவர்களைச் சென்றடைந்துவிட்டான். ஆனால் அவனும் இன்னும் திரும்பி வரவில்லை. வேறெவனோ தேரோட்டிக் கொண்டு வருகிறான். அது நிம்சியின் மகன் ஏகூவைப்போன்று உள்ளது. அவன்தான் பைத்தியக்காரன் போல் ஓட்டுவான்! என்றான்.

உடனே யோராம், தேரைப் பூட்டுங்கள் என்று கூற, அவர்கள் அவனது தேரில் குதிரைகளைப் பூட்டினார்கள். இஸ்ரயேலின் அரசன் யோராமும் யூதாவின் அரசன் அகசியாவும் தம் தேரில் ஏறி ஏகூவைச் சந்திக்கச் சென்றனர்: அவனை இஸ்ரயேலைச் சார்ந்த நாபோத்தின் நிலப்பகுதியில் சந்தித்தனர்.

யோராம் ஏகூவைக் கண்டு, ஏகூ! அமைதிக்காகவா வருகிறீர்? என்று கேட்டான். அதற்கு அவன், உன் தாய் ஈசபேலின் வேசித்தனமும் மாய வித்தைகளும் மிகுந்திருக்கும்வரை அமைதி எப்படி இருக்கமுடியும்? என்று மறுமொழி கூறினான்.

உடனே யோராம் கைகளால் கடிவாளத்தை இழுத்து, அகசியாவை நோக்கி, அகசியா! சதி! என்று சொல்லிக்கொண்டு தப்பி ஓட முயன்றான்.

உடனே ஏகூ தன் வலிமையோடு வில்லை வளைத்து யோராமின் புயங்கள் நடுவே அம்பினை எய்தான். அந்த அம்பு அவன் இதயத்தை ஊடுருவிச் செல்ல, அவன் தேரிலேயே சரிந்து விழுந்தான்.

ஏகூ குதிரைப்படைத் தலைவன் பித்காரை நோக்கி, அவனைத் பக்கி இஸ்ரயேலைச் சார்ந்த நாபோத்தின் நிலப்பகுதியில் எறிந்துவிடு. ஏனெனில் நாம் இருவரும் சேர்ந்து அவனுடைய தந்தை ஆகாபைத் தொடர்ந்து சென்றபோது அவனுக்கு எதிராக ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:

“நேற்று நாபோத்தின் இரத்தத்தையும் அவன் பிள்ளைகளின் இரத்தத்தையும் கண்டேன். நான் கண்டதற்காக நாபோத்தின் இந்த நிலத்திலேயே உன்னைப் பழிவாங்குவது உறுதி“ என்கிறார் ஆண்டவர். எனவே இப்பொழுது அவனைத் பக்கி ஆண்டவரின் வாக்கிற்கிணங்க அந்த நிலப்பகுதியில் எறிந்துவிடு என்றான்.

யூதாவின் அரசன் அகசியா இதைக் கண்டு பெத்தகான் சாலையில் தப்பி ஓடலானான். ஏகூ அவனைப் பின்தொடர்ந்து சென்று தன் ஆள்களிடம், இவனையும் வெட்டி வீழ்த்துங்கள் என்றான். அவர்களும் இபிலயாம் அருகே இருந்த கூர் மலைச்சரிவில் தேரிலிருந்த அவனைக் காயப்படுத்தினார்கள். அவனோ மெகிதோ வரை சென்று அங்கு இறந்தான்.

அவனுடைய அலுவலர் அவனது சடலத்தை எருசலேமுக்கு எடுத்துச் சென்று, தாவீதின் நகரில் அவனுடைய மூதாதையருடன் அவனது கல்லறையில் அடக்கம் செய்தனர்.

இதற்கிடையில் ஆகாபின் மகனான யோராம் ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டில் அகசியா யூதாவின் அரசனானான்.

ஏகூ இஸ்ரயேலுக்கு வந்து சேர்ந்ததைக் கேள்வியுற்ற ஈசபேல் தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலைமுடியை அழகுபடுத்திக் கொண்டு பலகணி வழியாக எட்டிப் பார்த்தான்.

ஏகூ நகர வாயிலில் நுழைந்த போது அவள், உன் தலைவனைக் கொலை செய்து, சிம்ரிக்கு நிகர் ஆனவனே! சமாதான நோக்கோடுதான் வருகிறாயா? என்று கேட்டாள்.

அவன் முகத்தை உயாத்தி பலகணியைப் பார்த்து, என் சார்பாக இருப்பது யார்? யார்? என்றான். உடனே இரண்டு, மூன்று அண்ணகர் குனிந்து அவனைப் பார்த்தனர்.

ஏகூ, அவனைக் கீழே தள்ளிவிடுங்கள் என்றான். அவ்வாறே அவர்களும் அவளைத் தள்ளிவிட்டனர். அவளது இரத்தம் மதிற்சுவரிலும் குதிரைகள் மீதும் சிதறியது. மேலும் அக்குதிரைகள் அவளைக் காலால் மிதித்துக் கொன்றன.

அவன் உள்ளே சென்று உண்டு குடித்தபின், நீங்கள் போய் அந்தச் சபிக்கப்பட்டவளைத் தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யுங்கள். ஏனெனில், அவள் ஓர் அரசன் மகள் என்றான்.

அவர்கள் அவளை அடக்கம் செய்யச் சென்றபோது அவளுடைய மண்டைஓடு, கால்கள், உள்ளங்கைகள் தவிர வேறொன்றையும் அவர்கள் காணவில்லை.

எனவே அவர்கள் திரும்பி வந்து அதை அவனுக்கு அறிவித்தனர். அப்பொழுது அவன், திஸ்பேயைச் சார்ந்தவரும் தம் ஊழியருமான எலியாவின் வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:

இஸ்ரயேல் நிலப் பகுதியில் ஈசபேலின் உடலை நாய்கள் தின்னும். ஈசபேலின் பிணம் இஸ்ரயேல் நிலப்பகுதியில் சாணத்தைப் போன்று கிடப்பதைப் பார்த்த எவருமே “இதுதான் ஈசபேல்“ என்ற கூற முடியாது! என்றான்.

அதிகாரம் 10.

ஆகாபிற்குச் சமாரியாவில் எழுபது மைந்தர்கள் இருந்தனர். ஆதலால் ஏகூ சமாரியாவின் தலைவர்களுக்கும் இஸ்ரயேலின் பெரியோர்களுக்கும் ஆகாபின் மைந்தர்களின் காப்பாளர்களுக்கும் எழுதி அனுப்பிய மடல் இதுவே:

இம்மடல் உங்களை வந்தடைந்தவுடன் உங்கள் தலைவரின் மைந்தர்கள் உங்களோடு இருப்பதாலும், தேர்களும், குதிரைகளும் அரண்சூழ் நகரும் படைக்கலங்களும் உங்களிடமிருப்பதாலும்,

உங்கள் தலைவரின் மைந்தர்களுள் சிறந்தவனும் தகுதி உடையவனுமான ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுடைய தந்தையின் அரியணையில் அமர்த்தி, உங்கள் தலைவரின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடுங்கள்.

ஆனால் அவர்கள் மிகமிக அச்சமுற்று, அவனை எதிர்த்து நிற்க, இரண்டு அரசர்களால் முடியவில்லையே! அப்படியிருக்க, நாம் எங்ஙனம் எதிர்த்து நிற்க கூடும்? என்றனர்.

எனவே அரண்மனை மேற்பார்வையாளனும், நகரின் ஆளுநனும், பெரியோர்களும், ஆகாபின் மைந்தர்களின் காப்பாளர்களும், ஏகூவிடம் பதனுப்பித் தெரிவித்ததாவது: நாங்கள் உம் அடிமைகள். நீர் கட்டளையிடுவதை எல்லாம் நாங்கள் செய்யக் காத்திருக்கிறோம். நாங்கள் யாரையும் அரசனாக்கப் போவதில்லை உமக்கு நல்லதென்றுபடுவதையே செய்தருளும் என்று தெரிவித்தனர்.

அவன் மீண்டும் அவர்களுக்குக் கீழ்க்கண்டவாறு மற்றொரு மடல் அனுப்பினான்: நீங்கள் எனக்குக் கட்டுப்பட்டு எனக்குக் கீழ்ப்படியத் தயாராய் இருந்தால், உங்கள் தலைவருடைய மைந்தர்களின் தலைகளைக் கொய்து, நாளை இதே நேரத்தில் என்னிடம் இஸ்ரயேலுக்குக் கொண்டு வாருங்கள். அச்சமயம் அரசனின் மைந்தர் எழுபது பேரும் தங்களை வளர்த்து வந்த நகரப் பெரியோரோடுதான் இருந்தனர்.

அம்மடலை அவர்கள் பெற்றுக்கொண்டவுடன், அரசனின் மைந்தர்களைப் பிடித்து அந்த எழுபது பேரையும் கொன்று, அவர்களின் தலைகளைக் கூடைகளில் வைத்து ஏகூவிடம் இஸ்ரயேலுக்கு அனுப்பி வைத்தனர்.

பதன் ஒருவன் அவனிடம் வந்து அரச மைந்தர்களின் தலைகளைக் கொண்டு வந்திருக்கின்றனர் என்றான். அதற்கு அவன், நாளைக் காலைவரை அவற்றை நகரின் நுழைவாயிலில் இரு குவியலாக வையுங்கள் என்று சொன்னான்.

மறுநாள் பொழுது புலர்ந்ததும் அவன் வெளியே வந்து மக்கள் அனைவரின் முன்னிலையில் நின்றுகொண்டு கூறியது: நீங்கள் குற்றமற்றவர்கள். என் தலைவனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்து அவனைக் கொன்றவன் நான்தான். இவர்கள் எல்லாரையும் கொன்றது யார் தெரியுமா?

ஆகாபின் குடும்பத்திற்கு எதிராகக் கடவுள் உரைத்த வாக்கில் எதுவும் பொய்க்கவில்லையென்று இப்பொழுது அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில் ஆண்டவர் தம் அடியான் எலிசாவின் மூலம் உரைத்ததை அவரே நிறைவேற்றினார்.

பின்னர் ஏகூ இஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்தில் எஞ்சியிருந்த அனைவரையும்-அவனைச் சார்ந்த பெரியோர்கள், உற்ற நண்பர்கள் அர்ச்சகர்கள் அனைவரையும்-வெட்டி வீழ்த்தினான்: அவனைச் சார்ந்த எவனையும் விட்டு வைக்கவில்லை.

பின்பு ஏகூ புறப்பட்டுச் சமாரியாவுக்குச் சென்றான். செல்லும் வழியில் அவன் இடையர்களின் பெத் ஏக்கதை அடைந்தான்.

அங்கு ஏகூ யூதாவின் அரசனான அகசியாவின் உறவினரைச் சந்தித்து, நீங்கள்யார்? என்று கேட்டான். அவர்கள், நாங்கள் அகசியாவின் உறவினர். அரசரின் மைந்தர்களையும் பட்டத்தரசியின் மைந்தர்களையும் நலம் விசாரிக்க வந்துள்ளோம் என்று மறுமொழி கூறினர்.

அவன், இவர்களை உயிரோடு பிடியுங்கள் என்று கட்டளையிட, அவன் ஆள்கள் அவர்களைப் பிடித்துப் பெத்ஏக்கதில் இருந்த குழியருகே வெட்டி வீழ்த்தினர். அவர்கள் நாற்பத்திரண்டு பேர்: அவர்களுள் எவனையும் விட்டுவைக்கவில்லை.

அவன் அங்கிருந்து புறப்பட்டுப் போகும்போது தன்னைச் சந்திக்க வந்து கொண்டிருந்த இரேக்காபின் மகன் யோனதாபைக் கண்டு அவனுக்கு வாழ்த்துரைத்துக் கூறியது: என் இதயம் உன் இதயத்தோடு இருப்பது போல், உன் இதயமும் நட்புறவு கொண்டுள்ளதா? என்று கேட்டான். அதற்கு யோனதாகு ஆம் என்று பதிலுரைத்தான். அப்படியானால் கை கொடு என்றான். அவன் கை கொடுக்க ஏகூ அவனைத் தன்னோடு தேரில் ஏற்றிக் கொண்டான்.

மேலும் அவன் அவனை நோக்கி, நீ என்னோடு வந்து ஆண்டவர்மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தைப் பார்! என்றான். இவ்வாறு அவன் அவனைத் தன்னோடு தேரில் பயணம் செய்யச் செய்தான்.

அவன் சமாரியாவுக்கு வந்தவுடன், எலிசாவுக்கு உரைத்த ஆண்டவர் வாக்கின்படி ஆகாபின் குடும்பத்தவருள் அங்கு எஞ்சியிருந்த அனைவரையும் அழித்தொழித்தான்.

பிறகு ஏகூ மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களை நோக்கி, பாகாலுக்கு ஆகாபு சிறிதளவு ஊழியமே செய்தான். ஏகூவாகிய நானோ பேரளவு ஊழியம் செய்யப் போகிறேன்.

எனவே பாகாலின் வாக்குரைப்போர் அனைவரையும் அதற்கு ஊழியம் செய்யும் எல்லாரையும் அதன் அர்ச்சகர்கள் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள். அவர்களில் ஒருவரும் வரத் தவறக்கூடாது. ஏனெனில் நான் பாகாலுக்கு ஒரு மாபெரும் பலி செலுத்த வேண்டியிருக்கிறது. வராதவர் அனைவரும், உயிரிழப்பர் என்றான். பாகாலுக்கு ஊழியம் செய்வோரை ஒழித்துக்கட்டும் நோக்கிலேதான் இவ்வாறு ஏகூ சூழ்ச்சி செய்தான்.

மேலும் ஏகூ, பாகாலுக்கென்று ஒரு திருவிழா கொண்டாடுங்கள் என்று ஆணையிட்டு, இஸ்ரயேல் நாடெங்கும் ஆள்களை அனுப்பி, பாகாலுக்கு ஊழியம் செய்தோர் அனைவரையும் வரவழைத்தான்.

அவர்களுள் எவனும் வரத்தவறவில்லை. அவர்கள் பாகாலின் கோவிலினுள் நுழைந்தனர். பாகாலின் கோவில் ஒருமுனை முதல் மறுமுனை வரை நிறைந்திருந்தது.

அப்பொழுது ஏகூ ஆடைப் பொறுப்பாளனிடம், பாகாலின் ஊழியர்கள் அனைவருக்கான ஆடைகளை எடுத்து வந்து கொடு என்றான். அவ்வாறே அவன் அவர்களுக்கான ஆடைகளை எடுத்து வந்து கொடுத்தான்.

பிறகு ஏகூ இரேக்காபின் மகன் யோனதாபுடன் பாகாலின் கோவிலினுள் நுழைந்தான். அவன் பாகால் ஊழியர்களை நோக்கி, உங்களிடையே ஆண்டவரின் அடியார்கள் யாராவது இருக்கிறார்களா எனத் தேடிப் பாருங்கள்! இங்கே பாகாலின் அடியார்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்றான்.

பிறகு அவர்கள் பலிப்பொருள்களையும், எலிபலிகளையும் செலுத்த உள்ளே நுழைந்தார்கள். ஆனால் ஏகூ எண்பது காவலரை வெளியே நிறுத்தி வைத்து, உங்கள் கையில் அளிக்கப்போகிற ஆள்களில் எவனையாவது நீங்கள் தப்பியோட விட்டால், அவனுக்குப் பதிலாக உங்கள் உயிரை இழப்பீர்கள் என்று கூறியிருந்தான்.

எரிபலி முடிந்தவுடன் ஏகூ காவலர்களையும் படைத்தலைவர்களையும் நோக்கி, நீங்கள் உள்ளே சென்று அவர்களில் ஒருவனும் தப்பி ஓடிவிடாமல், எல்லாரையும் வெட்டி வீழ்த்துங்கள் என்றான். அதன்படியே காவலர்களும், படைத்தலைவர்களும் அவர்களை வாளுக்கு இரையாக்கி, அவர்களுடைய பிணங்களை வெளியே எறிந்த பின், பாகால் கோவிலின் உள்ளறைக்குச் சென்றனர்.

அவர்கள் அங்கிருந்த பாகாலின் சிலைத் பண்களை வெளியே கொண்டுவந்து எரித்துப்போட்டனர்.

இவ்வாறு பாகாலின் சிலைத் பண்களை எரித்து, பாகாலின் கோவிலையும் இடித்து, அவ்விடத்தைக் கழிவறை ஆக்கினர்: இன்றுவரை அப்படியேதான் பயன்பட்டு வருகிறது.

இவ்வாறு ஏகூ இஸ்ரயேல் நாட்டினின்று பாகால் வழிபாட்டை அறவே ஒழித்தான்.

ஆயினும் இஸ்ரயேலரைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியினின்று ஏகூ விலகவுமில்லை: பெத்தேலிலும் தாணிலும் இருந்த பொற்கன்றுகளைக் கைவிடவுமில்லை.

பின்பு ஆண்டவர் ஏகூவை நோக்கி, என் பார்வையில் செம்மையானதை நீ நன்கு செய்து முடித்ததாலும், ஆகாபின் குடும்பத்தினர்க்கு எதிராக நான் விரும்பியவற்றையெல்லாம் நிறைவேற்றினதாலும், உன் புதல்வர்கள் இஸ்ரயேலின் அரியணையில் நான்காம் தலைமுறைவரை வீற்றிருப்பர் என்றார்.

ஆனால் ஏகூ இஸ்ரயேலின் கடவுளாகிய தன் ஆண்டவரின் சட்டத்தைத் தன் முழு இதயத்தோடு பின்பற்றவில்லை. அவன் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய எரோபவாமின் பாவ வழியினின்று விலகவில்லை.

அக்காலத்தில், ஆண்டவர் இஸ்ரயேல் நாட்டின் அளவைக் குறைக்கத் தொடங்கினர். அசாவேல் அதன் எல்லைப் பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றலானான்.

காத்து, ரூபன், மனாசே ஆகிய குலங்களுக்குரிய, யோர்தானுக்குக் கிழக்கே இருந்த கிலயாது நாடு முழுவதிலும், அர்னோன் பள்ளத்தாக்கிலுள்ள அரோயேர் முதல் கிலயாது, பாசான் நாடுகள் வரையிலும் அவன் வெற்றி பெற்றான்.

ஏகூவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் வீரச் செயல்கள் யாவும், “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

ஏகூ தன் மூதாதையருடன் துயில் கொண்டான். சமாரியா நகரில் அவனை அடக்கம் செய்தனர். அவனுக்குப் பின் அவனுடைய மகன் யோவகாசு அரசனானான்.

ஏகூ சமாரியாவிலிருந்து கொண்டு இருபத்தெட்டு ஆண்டுகள் இஸ்ரயேலை ஆட்சி செய்தான்.

அதிகாரம் 11.

அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்துவிட்டதைக் கண்டு கிளர்ந்தெழுந்து அரசு குடும்பத்தார் அனைவரையும் கொன்றாள்.

அரசன் யோராமின் மகளும், அகசியாவின் சகோதரியுமான யோசேபா அகசியாவின் மகன் யோவாசைத் பக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்தாள். அவன் கொல்லப்படவிருந்த அரசிளம் புதல்வர்களில் ஒருவன். அவனையும் அவன் செவிலித் தாயையும், தனது பள்ளியறையினுள் அத்தலியாவின் பார்வையிலிருந்து யோசேபா மறைத்து வைத்தாள். எனவே அவன் உயிர் தப்பினான்.

அவன் ஆறு ஆண்டுகள் அவளோடு ஆண்டவரின் இல்லத்தில் தலைமறைவாய் இருந்தான். அந்நாள்களில் அத்தலியாவே நாட்டை ஆண்டு வந்தாள்.

ஏழாம் ஆண்டில், அரச மெய்காப்பாளர், அரண்மனைக் காவலர் ஆகியோரின் மற்றுவர் தலைவர்களை குரு யோயாதா வரவழைத்து ஆண்டவரின் இல்லத்திற்குள் கூட்டிச் சென்றார். அங்கு அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். அக்கோவிலில் அவர்களை ஆணையிடச் செய்து அரசனின் மகனை அவர்களுக்குக் காட்டினார்.

அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: நீங்கள் செய்யவேண்டியது இதுவே: நீங்கள் ஓய்வு நாளில் பணியேற்கும் பொழுது, உங்களில் மூன்றில் ஒரு பங்கினர் அரண்மனைக்குக் காவல் இருக்கவேண்டும்.

அடுத்த பங்கினர் சூர் வாயிலில் காவல் காத்து நிற்க வேண்டும். மூன்றாவது பங்கினர் மற்றைய காவலர்களுக்குப் பின்னால் வாயிலில் காவலிருக்க வேண்டும்.

ஓய்வு நாளில் விடுப்பில் செல்லும் இரு குழுக்களும் அரசனை ஆண்டவரின் இல்லத்தில் பாதுகாத்து நிற்கவேண்டும்.

யோவாசு அரசனை ஒவ்வொருவனும் படைக்கலங்களுடன் பாதுகாத்து உங்களை நெருங்குபவன் எவனாயினும் அவனைக் கொல்லவேண்டும். அரசன் வந்து போகுமிடம் எல்லாம் நீங்களும் அவனோடிருக்க வேண்டும்.

குரு யோயாதா கட்டளையிட்டுக் கூறிய அனைத்ததையும் மற்றுவர் தலைவர்கள் செய்தனர். ஓய்வு நாளில் விடுப்பில் செல்வோர், பணியேற்போர் ஆகிய தங்கள் வீரர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு குரு யோயாதாவிடம் வந்தனர்.

அவர் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த தாவீது அரசரின் ஈட்டிகளையும் கேடயங்களையும் மற்றுவர் தலைவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.

காவலர், கையில் படைக்கலன் தாங்கி, திருக்கோவிலின் தென்புறம் தொடங்கி வடபுறம் வரை, பலிபீடத்தையும் திருக்கோவிலையும் அரசனையும் சூழ்ந்து நின்று கொண்டனர்.

பின்பு அவர் இளவரசனை வெளியே கூட்டி வந்து அவனுக்கு முடிசூட்டி, உடன்படிக்கைச் சுருளை அளித்தார். இவ்வாறு அவன் திருப்பொழிவு பெற்று அரசனானான். அனைவரும் கைதட்டி அரசர் நீடுழி வாழ்க! என்று முழங்கினர்.

மக்களும், காவலரும் எழுப்பிய ஒலியை அத்தலியா கேட்டு ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் வந்தாள்.

மரபுக்கேற்ப, அரசன் பணருகில் நிற்பதையும், படைத் தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அவனருகில் இருப்பதையும், நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடி எக்காளம் ஊதுவதையும் கண்டாள். உடனே அவன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, சதி! சதி! என்று கூக்குரலிட்டாள்.

அப்பொழுது குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த மற்றுவர் தலைவர்களை நோக்கி, படையணிகளுக்கு வெளியே அவளைக் கொண்டு செல்லுங்கள். அவளை எவனாவது பின்பற்றினால் அவனை வாளால் வெட்டி வீழ்த்துங்கள் என்று கட்டளையிட்டார். அவளை ஆண்டவரின் இல்லத்தினுள் கொல்லலாகாது என்றும் கூறியிருந்தார்.

எனவே அவர்கள் அரண்மனையின் குதிரை நுழைவாயிலை அவள் அடைந்தபொழுது, அவளைப் பிடித்தனர். அங்கே அவள் கொல்லப்பட்டாள்.

பின்பு யோயாதா, ஆண்டவர் ஒரு பக்கமும், அரசன், மக்கள் மறுபக்கமுமாக அவர்களிடையே உடன்படிக்கை செய்து வைத்தார். இதன் மூலம் அரசனும் மக்களும் ஆண்டவரின் மக்களாய் இருப்பதாக ஏற்றுக்கொண்டனர். அவ்வாறே அவர் அரசனுக்கும் மக்களுக்குமிடையே உடன்படிக்கை செய்து வைத்தார்.

பிறகு நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் பாகாலின் கோவிலுக்குச் சென்று பலிபீடங்களையும் சிலைகளையும் தகர்த்தெறிந்தனர்: பாகாலின் அர்ச்சகன் மத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொலை செய்தனர். பிறகு குரு ஆண்டவரின் இல்லத்தில் காவலரை நிறுத்தி வைத்தார்.

மேலும் அவர், மற்றுவர் தலைவர்கள், அரச மெய்க்காப்பாளர், காவலர், நாட்டு மக்கள் எல்லாரையும் ஒன்று திரட்டினார். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தினின்று காவலர் வாயில் வழியாக அரசனை அழைத்துக் கொண்டு வந்தடைந்தனர். அரசன் அரியணையில் ஏறி அமர்ந்தான்.

நாட்டின் எல்லா மக்களும் மகிழ்ச்சி கொண்டாடினர். அத்தலியா வாளால் அரண்மனையில் கொல்லப்பட்டபின் நகரில் அமைதி நிலவியது.

ஏழாம் வயதிலேயே யோவாசு அரசனானான்.

அதிகாரம் 12.

ஏகூ ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில் யோவாசு அரசனாகி எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பெயேர்செபாவைச் சார்ந்த சிபியா என்பவளே அவன் தாய்.

யோவாசு, குரு யோயாதா அவனுக்குக் கற்றுத் தந்தபடியே, ஆண்டவரின் திருமுன் தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையாய் நடந்து வந்தான்.

ஆயினும் தொழுகை மேடுகள் அகற்றப்படவில்லை. அத்தொழுகை மேடுகளில் மக்கள் இன்னும் பலியிட்டுக் கொண்டும் பபம் காட்டிக்கொண்டும் வந்தனர்.

யோவாசு குருக்களை நோக்கி, ஆண்டவரின் இல்லத்திற்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் பணத்தையெல்லாம்-கணக்கெடுப்பு வரிப்பணத்தையும் ஒவ்வொருவரும் நேர்ச்சையாக அளிக்கும் பணத்தையும் ஆண்டவரின் இல்லத்திற்கு ஒவ்வொருவரும் அளிக்கும் தன்னார்வக் காணிக்கையையும் சேகரியுங்கள்.

ஒவ்வொரு குருவும் பணத்தைத் தனக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பெற்று கோவிலில் சிதைந்த பகுதிகளைப் பழுதுபார்க்க வேண்டும் என்றான்.

ஆயினும், யோவாசு அரியணை ஏறிய இருபத்து மூன்றாம் ஆண்டுவரை, குருக்கள் கோவிலைப் பழுதுபார்க்கவே இல்லை.

எனவே, அரசன் யோவாசு குரு யோயாதாவையும் ஏனைய குருக்களையும் வரவழைத்து, அவர்களை நோக்கி, நீங்கள் ஏன் கோவிலைப் பழுது பார்க்கவில்லை? உங்களுக்கு அறிமுகமானவர்களிடமிருந்து பணத்தை வாங்கி வைத்துக்கொள்ளாதீர்கள். அதைக் கோவிலைப் பழுதுபார்க்கக் கொடுத்து விடுங்கள் என்றான்.

அவ்வாறே குருக்கள் மக்களிடமிருந்து பணத்தை இனி பெற்றுக் கொள்வதில்லை என்றும், கோவிலைப் பழுதுபார்க்கும் பொறுப்பேற்பதில்லை என்றும் ஏற்றுக் கொண்டனர்.

குரு யோயாதா ஒரு பணப் பெட்டியை எடுத்து, அதன் மூடியில் துளையிட்டு, கோவிலின் நுழைவாயிலின் வலப்பக்கமாக பீடத்தருகே வைத்தார். வாயிலைக் காவல் செய்த குருக்கள் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்த பணம் அனைத்தையும் அதில் போட்டு வந்தனர்.

அப்பணப் பெட்டியில் அதிகப் பணம் சேர்ந்தபோது, அரசனுடைய கணக்கனும், தலைமைக் குருவும் வந்து ஆண்டவரின் இல்லத்தில் சேர்ந்த பணத்தை எண்ணிப் பைகளில் கட்டி வைத்தனர்.

இவ்வாறு கணக்கிடப்பட்ட பணத்தை, ஆண்டவரின் இல்லத்தில் பணியைக் கண்காணிக்குமாறு நியமிக்கப்பட்டவர்களிடம் கொடுத்தனர். அவர்களும் ஆண்டவரின் இல்லத்தில் பணியாற்றிய தச்சர்களும், கொத்தர்களுக்கும்,

சிற்பிகளுக்கும், கல்வெட்டுவோர்க்கும் ஊதியம் அளித்தனர். மேலும் அதிலிருந்து ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்ப்பதற்குத் தேவையான மரங்கள், பொழிந்த கற்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், அக்கோவிலைச் சீர்ப்படுத்துவதற்குத் தேவையான மற்றச் செலவுகளுக்கும் பயன்படுத்தினர்.

ஆயினும் ஆண்டவரின் இல்லத்திற்குத் தேவையான வெள்ளிக் கோப்பைகள், அணைப்பான்கள், கிண்ணங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு ஆண்டவரின் இல்லத்தில் செலுத்தப்பட்ட வெள்ளிப் பணம் பயன்படுத்தப்படவில்லை.

ஏனெனில் ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்த்த வேலையாள்களுக்காக மட்டுமே அது பயன்படுத்தப்பட்டது.

வேலையாள்களுக்குப் கூலி கொடுக்குமாறு அப்பணத்தைப் பெற்றுக் கொண்டவர்களிடம் ஒரு கணக்கும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் நாணயமாக நடந்துகொண்டார்கள்.

குற்ற நீக்கப்பலிக்கான பணமும் பாவம் போக்கும் பலிக்கான பணமும் ஆண்டவரின் இல்லத்திற்குப் கொண்டுவரப்படவில்லை. ஏனெனில் அவை குருக்களுக்கு உரியவை.

அப்பொழுது, சிரியா மன்னன் அசாவேல் காத்து நகரோடு போரிடச் சென்று அதைக் கைப்பற்றினான். பின்பு அசாவேல் எருசலேமைத் தாக்கும் நோக்கில் புறப்பட்டு வந்தான்.

எனவே யூதாவின் அரசன் யோவாசு தன் முன்னோர்களாகிய யூதா அரசர்கள் யோசபாத்து, யோராம், அகசியா ஆகியோர் நேர்ந்தளித்த காணிக்கைப் பொருள்கள் அனைத்தையும், தான் நேர்ந்தளித்திருந்த காணிக்கைகளையும் ஆண்டவர் இல்லம், அரச மாளிகை இவற்றின் கருவூலங்களில் காணப்பட்ட தங்கம் அனைத்தையும் எடுத்து சிரியா மன்னன் அசாவேலுக்கு அனுப்பினான். எனவே அசாவேல் எருசலேமை விட்டுத் திரும்பிச் சென்றான்.

யோவாசின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

யோவாசின் அலுவலர் அவனுக்கு எதிராகக் கிளம்பிச் சதித் திட்டம் செய்து சில்லாவுக்கு இறங்கிச் செல்லும் வழியில் மில்லோபேத்தில் அவனைக் கொன்றனர்.

அவனைக் கொன்ற அலுவலர் சிமயாத்தின் மகன் யோசக்காரும் சோமேரின் மகன் யோசபாத்தும் ஆவர். அவன் இறந்து தாவீதின் நகரில் தன் மூதாதையருடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் அமட்சியா அரசன் ஆனான்.

அதிகாரம் 13.

யூதா அரசன் அகசியாவின் மகன் யோவாசு ஆட்சியேற்ற இருபத்து மூன்றாம் ஆண்டில் ஏகூவின் மகன் யோவாசு சமாரியாவில் இருந்து கொண்டு இஸ்ரயேல் நாட்டைப் பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து வந்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரோபவாமின் பாவ வழியிலேயே அவனும் நடந்து வந்தான்.

எனவே ஆண்டவருக்கு இஸ்ரயேல்மீது சினம்மூள அவர்களைச் சிரியா மன்னன் அசாவேலின் கையிலும் அசாவேலின் மகன் பெனதாதின் கையிலும் நீண்டநாள் விட்டுவிட்டார்.

ஆனால் யோவகாசு ஆண்டவரின் கருணைப் பார்வையை நாட, ஆண்டவரும் அவனுக்குச் செவிசாய்த்தார். ஏனெனில் சிரியா மன்னன் பிடியில் இஸ்ரயேல் நசுக்குண்டு கிடப்பதை அவர் கண்டார்.

இஸ்ரயேலுக்கு ஆண்டவர் ஒரு மீட்பரைத் தரவே, இஸ்ரயேலர் சிரியரின் பிடியினின்று விடுதலை அடைந்தனர். இஸ்ரயேல் மக்கள் முன்னைய நாள்களில் இருந்தது போல் தங்கள் சொந்த வீட்டில் குடியிருந்தனர்.

ஆயினும் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய எரொபவாம் வீட்டாரின் பாவ வழியை விட்டு விலகாது வாழ்ந்தனர். மேலும் அசேராக் கம்பம் சமாரியாவில் இன்னும் நின்று கொண்டிருந்தது.

யோவாசுக்கு அவன் குடிகளுள் ஜம்பது குதிரை வீரரும் பத்துப் தேர்களும் பதினாயிரம் காலாள் படையினரமே எஞ்சியிருந்தனர். ஏனெனில் சிரியா மன்னன் அவர்களை அழித்துப் போரடிக்கும் களத்துத் பசிபோல் ஆக்கியிருந்தான்.

யோவகாசின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் பேராற்றலும், “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

யோவகாசு தன் மூதாதையருடன் துயில்கொண்டு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் யோவாசு அரசனானான்.

யூதா அரசன் யோவாசு ஆட்சியேற்ற முப்பத்தேழாம் ஆண்டில், யோவகாசின் மகன் யோவாசு, இஸ்ரயேல் நாட்டின் அரசனாகி, சமாரியாவில், இருந்துகொண்டு பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான்: இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியிலேயே நடந்து வந்தான்.

யோவாசின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசன் அமட்சியாவுடன் போரிட்டபொழுது காட்டிய பேராற்றலும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

யோவாசு தன் மூதாதையரோடு துயில் கொண்டபின், எரொபவாம் அரியணை ஏறினான். யோவாசு சமாரியாவில் இஸ்ரயேலின் அரசர்களோடு அடக்கம் செய்யப்பட்டான்.

எலிசா நோயினால் வாதைப்பட்டுச் சாகக் கிடந்தபொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாசு அவரிடம் சென்று, என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே! என்று அவருக்கு முன்பாகக் கதறி அழுதான்.

எலிசா அவனை நோக்கி, வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொள் என்றார். அவ்வாறே அவன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டான்.

அப்பொழுது அவர் இஸ்ரயேலின் அரசனை நோக்கி, வில்லை உன் கையால் வளை என்றார்.

எலிசா தம் கைகளை அரசனின் கைகளின்மேல் வைத்து அவனை நோக்கி. கீழ்ப்பக்கமுள்ள பலகணியைத் திற என்றார். அவன் அதைத் திறந்தவுடன் எலிசா, ஓர் அம்பை எய் என்றார். அவனும் அவ்வாறே எய்தான். அவர், அது ஆண்டவரது மீட்பின் அம்பு: சிரியர் மீது கொள்ளவிருக்கும் வெற்றியின் அம்பு: நீ அபேக்கில் சிரியரை முற்றிலும் அழிப்பாய் என்றார்.

அவர் மீண்டும் அம்புகளைக் கையில் எடு என்றார். அவற்றை அவன் எடுக்கவே அவர் இஸ்ரயேல் அரசனைத் தரையில் அம்பு எய் என்றார். அவன் மூன்று முறை எய்துவிட்டு நிறுத்தினான்.

எனவே ஆண்டவரின் அடியவர் அவன்மேல் சினம் கொண்டு, நீ ஜந்து அல்லது ஆறுமுறை எய்திருந்தால், சிரியரை முற்றிலும் கொன்றழித்திருப்பாய்! ஆனால் இப்பொழுதோ அவர்களை மூன்று முறை மட்டுமே முறியடிப்பாய் என்றார்.

இதன்பின் எலிசா இறந்தார். அவரை அடக்கம் செய்தனர். ஒவ்வொரு இளவேனிற் காலத்திலும் மோவாபியக் கொள்ளைக் கூட்டத்தினர் வந்து நாட்டைத் தாக்குவது வழக்கம்.

மக்கள் இறந்த ஒருவனைப் புதைத்துக் கொண்டிருந்தபொழுது, அந்தக் கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டார்கள்: எனவே அவன் பிணத்தை எலிசாவின் கல்லறையில் போட்டு விட்டு ஓடினர். எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டவுடனே அந்த ஆள் உயிர் பெற்று எழுந்து நின்றான்.

யோவகாசின் வாழ்நாள் முழுவதும் சிரியாவின் மன்னன் அசாவேல் இஸ்ரயேலைத் துன்புறுத்தி வந்தான்.

ஆனால் ஆண்டவர் அவர்களுக்குக் கருணையும் இரக்கமும் காட்டி அவர்களைப் பரிவுடன் பாதுகாத்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவரோடு தாம் செய்திருந்த உடன்படிக்கையின் பொருட்டு அவர்களை அழிக்கவோ, தம் திருமுன்னின்று தள்ளிவிடவோ இன்றுவரை அவர் மனம் ஒப்பவில்லை.

சிரியாவின் மன்னன் அசாவேல் இறந்தவுடன், அவன் மகன் பெனதாது அவனக்குப் பின் மன்னன் ஆனான்.

யோவகாசின் மகன் யோவாசு தன் தந்தையின் கையிலிருந்து அசாவேலின் மகன் பெனதாது கைப்பற்றியிருந்த நகர்களை மீண்டும் கைப்பற்றினான். யோவாசு மூன்றுமுறை அவனை முறியடித்து இஸ்ரயேலின் நகர்களை மீட்டுக் கொண்டான்.

அதிகாரம் 14.

இஸ்ரயேல் அரசன் யோவகாசின் மகன் யோவாசு ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில், யூதா அரசன் யோவாசின் மகன் அமட்சியா அரசன் ஆனான்.

அவன் அரசனான போது அவனுக்க வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த யோவதீன் என்பவளே அவன் தாய்.

அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்தான். ஆயினும் தன் மூதாதையான தாவீது போல் அவன் செய்யவில்லை. அனைத்திலும் தன் தந்தை யோவாசு செய்தபடியெல்லாம் செய்துவந்தான்.

தொழுகை மேடுகளை அவன் அழிக்கவில்லை. மக்கள் அம்மேடுகளில் பலியிட்டும் பபம்காட்டியும் வந்தனர்.

ஆட்சி தன் கைக்கு வந்து உறுதியானவுடன், அரசனாகிய தன் தந்தையைக் கொலை செய்த அலுவலரைக் கொன்று போட்டான்.

ஆயினும், கொலைகாரர்களின் பிள்ளைகளை அவன் கொல்லவில்லை. ஏனெனில் ஆண்டவரின் கட்டளைப்படி மோசேயின் சட்டமலில் எழுதப்பட்டுள்ளதாவது: பிள்ளைகளின் பாவத்திற்காகப் பெற்றோர் கொல்லப்படலாகாது: பெற்றோரின் பாவத்திற்காகப் பிள்ளைகள் கொல்லப்படலாகாது. எல்லாரும் அவரவர் செய்த பாவத்திற்காகவே கொல்லப்படுவர்.

அமட்சியா போரிட்டு உப்புப் பள்ளத்தாக்கில் பதினாயிரம் ஏதோமியரைக் கொன்று, சேலாவைக் கைப்பற்றி அதற்கு இன்றுவரை வழங்கி வரும் “யோக்தவேல்“ என்ற பெயரை இட்டான்.

பின்பு அவன் இஸ்ரயேலின் அரசனும் ஏகூவின் மகன் யோவகாசின் புதல்வனுமாகிய யோவாசிடம் பதனுப்பி, வாரும்! போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திப்போம் என்று சொல்லச் சொன்னான்.

அதற்கு இஸ்ரயேலின் அரசன் யோவாசு யூதாவின் அரசன் அமட்சியாவிடம் ஆளனுப்பி, லெபனோனின் நெருஞ்சிச் செடி லெபனோனின் கேதுரு மரத்திடம் பதனுப்பி, “என் மகனுக்கு என் மகளை மணமுடித்துக் கொடு“ என்றதாம்: ஆனால் லெபனோனின் விலங்கு ஒன்று அவ்வழியே போகையில் நெருஞ்சிச் செடியை மிதித்துப் போட்டதாம்!

நீ ஏதோமியரை முறியடித்தது உண்மைதான். எனவே நீ நெஞ்சிலே செருக்குற்றாய்! பெருமைப்பட்டுக் கொள்! ஆனால் உன் வீட்டினுள்ளே தங்கியிரு! நீயும் உன்னோடு யூதாவும் வீழ்ச்சியுறவா தீமையை நீ நாடுகிறாய்? என்று சொன்னான்.

அதற்கு அமட்சியா செவி கொடுக்கவில்லை. எனவே இஸ்ரயேலின் அரசன் யோவாசு போருக்குப் பறப்பட்டு வந்தான். அவனும் யூதா அரசன் அமட்சியாவும் யூதாவைச் சார்ந்த பெத்செமேசில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.

யூதாவின் மக்கள் இஸ்ரயேலரிடம் தோல்வியுற்று, தம் வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.

இஸ்ரயேலின் அரசன் யோவாசு பெத்செமேசில் அகசியாவின் மகனான யோவாசின் புதல்வனும் யூதாவின் அரசனுமான அமட்சியாவைக் கைது செய்து, எருசலேமைத் தாக்கச் சென்றான். அவன் எருசலேமின் மதிற் சுவரில், எப்ராயிம் வாயில் முதல் மூலை வாயில்வரை நாடீறு முழ நீளம் இடித்துத் தள்ளினான்.

ஆண்டவரின் இல்லத்திலும் அரசமாளிகையின் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லாப் பொன்னையும், வெள்ளியையும் தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டான். மேலும், அவன் சிலரைப் பிணையாளராகப் பிடித்துக் கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிச் சென்றான்.

யோவாசின் பிற செயல்களைப் பற்றியும் யூதா அரசன் அமட்சியாவுடன் இட்ட போரில் அவன் காட்டின பேராற்றலைப் பற்றியும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளது அல்லவா?

யோவாசு தன் மூதாதையரோடு துயில் கொண்டு சமாரியாவில் இஸ்ரயேல் அரசர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் எரோபவாம் அரசனானான்.

இஸ்ரயேல் அரசன் யோவகாசின் மகன் யோவாசு இறந்தபின், யூதா அரசனான யோவாசின் மகன் அமட்சியா பதினைந்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான்.

அமட்சியாவின் பிற செயல்கள் “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

எருசலேமில் சிலர் அமட்சியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். எனவே அவன் இலாக்கிசுக்குத் தப்பி ஓடினான். ஆனால் அவர்கள் இலாக்கிசுக்கு ஆளனுப்பி அவனை அங்குக் கொலை செய்து,

அவனது சடலத்தைத் குதிரைகளின் மேல் ஏற்றிக்கொண்டு வந்தனர். அவன் மூதாதையருடன் எருசலேமில் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான்.

பின்னர் யூதா மக்கள் எல்லாரும் பதினாறு வயதினனாய் இருந்த அசரியாவைத் தேர்ந்தெடுத்து அவனை அவன் தந்தை அமட்சியாவுக்குப் பதிலாக அரசனாக்கினர்.

அமட்சியா தன் மூதாதையரோடு துயில் கொண்ட பின், அவன் ஏலத்து நகரை மீண்டும் உருவாக்கி யூதாவுடன் இணைத்துக் கொண்டான்.

யூதா அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியா ஆட்சியேற்ற பதினைந்தாம் ஆண்டில், இஸ்ரயேல் அரசனும் யோவாசின் மகனுமான எரொபவாம் சமாரியாவில் அரசனானான். அவன் நாற்பத்தொன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அவன் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியை விட்டு அகலவில்லை.

இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர், தம் அடியவரும் கத்கேப்பரைச் சார்ந்த அமித்தாயின் மகனுமான இறைவாக்கினர் யோனாவின் மூலம் உரைத்த வாக்கின்படியே, எரொபவாம், அமாத்து கணவாய் முதல் அராபாக் கடல்வரை, இஸ்ரயேலுக்குரிய நிலப் பகுதிகளை மீண்டும் இணைத்துக் கொண்டான்.

ஏனெனில் இஸ்ரயேலர் மிகக் கடுமையாகத் துன்புறுவதையும் அவர்களுக்குத் துணை செய்ய, அடிமையோ, குடிமகனோ எவனும் இல்லை என்பதையும் ஆண்டவர் கண்டார்.

ஆனால் ஆண்டவர், இஸ்ரயேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்து விடுவதாகக் கூறியிருக்கவில்லை. எனவே அவர் அவர்களை யோவாசின் மகன் எரொபவாமின் மூலம் விடுவித்தார்.

எரொபவாமின் பிறசெயல்கள், அவனுடைய அனைத்துச் செயல்பாடுகள், போரில் அவன் காட்டிய பேராற்றல், யூதா நாட்டுக்கு உரிமையாயிருந்த தமஸ்கு, ஆமாத்து ஆகிய நகர்களை இஸ்ரயேல் நாட்டுடன் இணைத்துக் கொண்ட முறை-ஆகியன பற்றி இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?

எரொபவாம் தன் மூதாதையரான இஸ்ரயேல் அரசர்களுடன் துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் செக்கரியா அரசன் ஆனான்.

அதிகாரம் 15.

இஸ்ரயேலின் அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற இருபத்தேழாம் ஆண்டில், யூதா அரசனும் அமட்சியாவின் மகனுமான அசரியா அரசனானான்.

அவன் ஆட்சியேற்ற பொழுது அவனக்கு வயது பதினாறு. அவன் எருசலேமில் ஜம்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். எருசலேம் நகரைச் சார்ந்த எக்கொலியா என்பவளே அவன் தாய்.

அவன் தன் தந்தை அமட்சியா செய்ததுபோலவே, எல்லாவற்றிலும் ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்தான்.

ஆயினும், அவன் தொழுகை மேடுகளை அழிக்கவில்லை. மக்கள் இன்னும் அம்மேடுகளில் பலியிட்டும் பபம் காட்டியும் வந்தனர்.

எனவே, ஆண்டவர் அவ்வரசனைத் தண்டித்து அவன் இறக்குமட்டும் அவனைத் தொழுநோயாளன் ஆக்கினார். அவனும் ஒரு ஒதுக்குப் புறமான வீட்டில் வாழ்ந்து வந்தான். எனவே அரசனின் மகன் யோத்தாம் அரண்மனைப் பொறுப்பேற்று நாட்டு மக்களை ஆண்டு வந்தான்.

அசரியாவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் “யூதாவின் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

அசரியா தன் மூதாதையரோடு துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் யோத்தாம் அரசன் ஆனான்.

யூதா அரசன் அசரியா ஆட்சி ஏற்ற முப்பத்தெட்டாம் ஆண்டில் எரொபவாமின் மகன் செக்கரியா சமாரியாவிலிருந்துகொண்டு இஸ்ரயேலை ஆறு மாதம் ஆண்டான்.

அவனும் தன் மூதாதையர் செய்தது போல் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியை விட்டு அவன் விலகவில்லை.

யாபேசின் மகன் சல்லு¡ம், அவனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்து அவனை இப்லாயமில் வெட்டிக் கொன்றுவிட்டு அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.

செக்கரியாவின் பிற செயல்கள் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

உன் மைந்தர் நான்கு தலைமுறைகளுக்கு இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருப்பர் என்று ஏகூவுக்கு ஆண்டவர் கூறிய வாக்கு இவ்வாறு நிறைவேறிற்று.

யூதா அரசன் அசரியா ஆட்சியேற்ற முப்பத்தொன்பதாம் ஆண்டில், யாபேசின் மகன் சல்லு¡ம் அரசனானான்: சமாரியாவில் அவன் ஒரு மாதமே ஆட்சி செய்தான்.

காதி என்பவனின் மகனான மெனகேம், திர்சாவிலிருந்து புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்து, சல்லு¡மை வெட்டிக் கொன்றுவிட்டு, அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.

சல்லு¡மின் பிற செயல்களும் அவன் செய்த சதியும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

பிறகு மெனகேம் திப்சாவையும் திர்சா முதல் அதன் எல்லைகள் அனைத்தையும் அதில் இருந்த அனைவரையும் அழித்தான். அவர்கள் தங்கள் நகர் வாயில்களைத் திறக்கவில்லையாதலின், அவன் அவர்களை வெட்டி வீழ்த்தியதோடு, கருவுற்றிருந்த எல்லாப் பெண்களையும் வயிற்றைக் கிழித்துக் கொன்றான்.

யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற முப்பத்தொன்பதாம் ஆண்டில், காதியின் மகன் மெனகேம் இஸ்ரயேலின் அரசனாகி, சமாரியாவில் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். மேலும் அவன், தன் வாழ்நாள் முழுவதும், இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியைவிட்டு விலகவில்லை.

அசீரியா மன்னனான பூல் நாட்டின்மீது படையெடுத்து வந்தான். அப்பொழுது மெனகேம், பூலுக்கு, அவன் ஆற்றலினால் தன் அரசை உறுதியாக்கிக் கொள்ளும் பொருட்டு, நாற்பதாயிரம் வெள்ளி கொடுத்தான்.

மெனகேம் இஸ்ரயேலில் இருந்த செல்வர்களிடமிருந்து இப்பணத்தை, ஆள் ஒன்றுக்கு ஜம்பது வெள்ளிக் காசுகள் வீதம், அசீரியா மன்னனுக்குக் கொடுக்கும்படியாக வசூலித்தான். அசீரியா மன்னனும் அங்கே தங்காது நாட்டை விட்டு வெளியேறினான்.

மெனகேமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

மெனகேம் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப்பின் அவன் மகன் பெக்ககியா அரசன் ஆனான்.

யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற ஜம்பதாம் ஆண்டில், மெனகேமின் மகன் பெக்ககியா இஸ்ரயேலின் அரசனாகிச் சமாரியாவில் ஈராண்டுகள் ஆட்சி செய்தான்.

அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியைவிட்டு அவன் விலகவில்லை.

இரமலியாவின் மகனும் படைத் தலைவனுமான பெக்கா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து தன்னோடு இருந்த ஜம்பது கிலயாதியரோடு சமாரியாவிலுள்ள அரண்மனைக் கோட்டைக்குள் புகுந்து அரசனையும், அர்கோபு, அரியே என்பவர்களையும் கொன்று அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.

பெக்ககியாவின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற ஜம்பத்திரண்டாம் ஆண்டில், இரமலியாவின் மகன் பெக்கா இஸ்ரயேலின் அரசனாகி சமாரியாவில் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவவழியை விட்டு அவன் விலகவில்லை.

இஸ்ரயேல் அரசன் பெக்காவின் ஆட்சிக் காலத்தில், அசீரியா மன்னன் திக்லத்-பிலேசர் படையெடுத்து வந்து, ஈயோன், ஆபல்பெத்மாக்கா, யானோவாக்கு, கெதேசு, ஆட்சோர் ஆகிய நகர்களையும் கிலயாது, கலிலேயா, நப்தலி ஆகிய நிலப்பகுதிகளையும் கைப்பற்றினான்: மேலும் மக்களை அசீரியாவுக்கு நாடு கடத்தினான்.

ஏலாவின் மகன் ஓசேயா, இரமலியாவின் மகன் பெக்காவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து, அவனை வெட்டிக் கொன்றுவிட்டு, அசரியாவின் மகன் யோத்தாம் ஆட்சியேற்ற இருபதாம் ஆண்டில், பெக்காவுக்குப் பின் அரசன் ஆனான்.

பெக்காவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் “இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

இஸ்ரயேலின் அரசனும் இரமலியாவின் மகனுமான பெக்கா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசனும் அசரியாவின் மகனுமான யோத்தாம் அரசன் ஆனான்.

அவன் அரசனான போது, அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். சாதோக்கின் மகளான எருசா என்பவளே அவனுடைய தாய்.

அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து, அவன் தந்தை அசரியா செய்தது போலவே, அனைத்தையும் செய்தான்.

ஆயினும் அவன் தொழுகை மேடுகளை அழிக்கவில்லை. இன்னும் மக்கள் அம்மேடுகளில் பலியிட்டும் பபம் காட்டியும் வந்தனர். கோவிலின் உயர்வாயிலைக் கட்டியவன் இவனே.

யோத்தாமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

அந்நாள்களில் ஆண்டவர் சிரியாவின் மன்னன் ரெட்சீனையும் இரமலியாவின் மகன் பெக்காவையும் யூதாவுக்கு எதிராய் அனுப்பத் தொடங்கினார்.

யோத்தாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தன் தந்தையாகிய தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆகாசு அரசனானான்.

அதிகாரம் 16.

இரமலியாவின் மகன் பெக்கா ஆட்சியேற்ற பதினேழாம் ஆண்டில் யூதா அரசன் யோத்தாமின் மகன் ஆகாசு அரசனானான்.

ஆகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபது. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் தன் மூதாதையான தாவீதைப் போல் தன் கடவுளான ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.

இஸ்ரயேல் அரசர்களின் வழியிலேயே தானும் நடந்து, இஸ்ரயேலரின் பார்வையில் ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் அருவருப்பான வழக்கத்தின்படியே தன் மகனைத் தீயிலிட்டுப் பலியாக்கினான்.

மேலும் தொழுகை மேடுகளிலும், குன்றுகளிலும், செழித்த மரங்களின் அடியிலும் பலியிட்டுத் பப வழிபாடு நடத்தி வந்தான்.

அப்பொழுது சிரியாவின் மன்னன் ரேட்சீனும் இஸ்ரயேலின் அரசனும் இரமலியாவின் மகனுமான பெக்காவும் எருசலேமுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்து, ஆகாசுக்கு எதிராக முற்றுகையிட்டனர். ஆனால் அவர்களால் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.

அவ்வேளையில், ஏதோம் மன்னன் தன் நாட்டிற்காக ஏலத்தைக் கைப்பற்றி அங்கிருந்து யூதா மக்களை விரட்டியடித்தான். ஏதோமியர் ஏலாத்திற்குள் நுழைந்து வருகின்றனர்.

எனவே, ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரிடம் பதனுப்பி நான் உம் பணியாளன்: உம் மகன் நீர் புறப்பட்டு வந்து என்னை முற்றுகையிட்டிருக்கும் சிரியா மன்னன் கையினின்றும் இஸ்ரயேல் அரசன் கையினின்றும் விடுவிப்பீர் என்று சொன்னான்.

மேலும் ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனைக் கருவூலங்களிலும் இருந்த பொன்னையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய மன்னனுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தான்.

அசீரிய மன்னன் அதற்கு இணங்கி, தமஸ்குவைக் கைப்பற்றி அதன் குடிமக்களைக் கீருக்கு நாடு கடத்தினான்.

எனவே, அரசன் ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரைச் சந்திக்கத் தமஸ்குக்குச் சென்றான். அப்பொழுது, அவன் அந்நகரிலுள்ள பலிபீடத்தைக் கண்டு அதன் வரைபடத்தையும், தன் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளையும் குரு உரியாவுக்கு அனுப்பி வைத்தான்.

அரசன் ஆகாசு தமஸ்குவிலிருந்து அனுப்பிய பலிபீடக் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளுக்கும் ஏற்ப, குரு உரியா அவன் திரும்பி வருவதற்குள் கட்டி முடித்தார்.

அரசன் தமஸ்குவிலிருந்து திரும்பி வந்தான். அவன் பலிபீடத்தைக் கண்டு, நெருங்கிச் சென்றான்.

அவன் எரிபலியும் உணவுப் படையலும் அதில் செலுத்தி, நீர்மப் படையலை வார்த்தான்: தனக்கென்று நல்லுறவுப் பலியின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மீது தெளித்தான்.

மேலும், அவன் ஆண்டவர் திருமுன் இருந்த வெண்கலப் பலிபீடத்தைக் கோவிலின் முன்புறமிருந்து அகற்றித் தன் பலிபீடத்திற்கும் ஆண்டவரின் இல்லத்திற்கும் இடையே வடபுறத்தில் வைத்தான்.

பிறகு அரசன் ஆகாசு குரு உரியாவை நோக்கி. பெரிய பலிபீடத்தின்மேல் காலை எரிபலியையும், மாலை உணவுப்படையலையும், அரசனின் எரிபலியையும், உணவுப் படையலையும், நாட்டு மக்கள் அனைவரின் எரிபலியையும் உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் செலுத்தி எரிபலிகளின் எல்லா இரத்தத்தையும் மற்றப் பலிகளின் எல்லா இரத்தத்தையும் அதன்மேல் தெளிப்பீர். வெண்கலப் பலிபீடம் திருவுளத்தை நான் அறிவதற்கென்று இருக்கட்டும் என்றான்.

அரசன் ஆகாசு கட்டளையிட்டபடியே, அனைத்தையும் குரு உரியா செய்தார்.

அப்பொழுது, அரசன் ஆகாசு சக்கரத் தாங்கிகளைப் பிரித்துக் கொப்பரைகளை அவற்றினின்று அகற்றினான். வெண்கல நீர்த் தொட்டியைக் காளைகளினின்று அகற்றி, அதனைக் கல்தளத்தின்மீது வைத்தான்.

மேலும் அசீரிய மன்னனின் விருப்பத்திற்கிணங்க, ஆண்டவரின் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த அரியணை மேடையையும் வெளியிலிருந்த அரச நுழைவாயிலையும் அவன் அகற்றினான்.

ஆகாசு செய்த பிற செயல்கள், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

ஆகாசு தன் மூதாதையரோடு துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் எசேக்கியா அரசர் ஆனார்.

அதிகாரம் 17.

யூதா அரசன் ஆகாசு ஆட்சியேற்ற பன்னிரண்டாம் ஆண்டில், ஏலாவின் மகன் ஓசேயா சமாரியாவில் அரசனாகி இஸ்ரயேலின் மீது ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான். ஆயினும் முன்பிருந்த இஸ்ரயேலின் அரசர்களைப்போல் அவ்வளவு தீயவனாக இல்லை.

அசீரிய மன்னன் சல்மனேசர் அவனுக்கு எதிராய்ப் படையெடுத்து வரவே, ஓசேயா அவனுக்கு அடிபணிந்து கப்பம் செலுத்தி வந்தான்.

ஆனால் இடையில் ஓசேயா எகிப்திய மன்னனான சோவிடம் உதவி கேட்டுத் பதனுப்பியதோடு, அசீரியாவுக்கு ஆண்டுதோறும் செலுத்தி வந்த கப்பத்தையும் நிறுத்திக்கொண்டான். இதை அறிந்த சல்மனேசர் ஓசேயாவைப் பிடித்துச் சிறையிலிட்டான்.

பின்னர் அசீரியா மன்னன், நாடு முழுவதன்மேலும் படையெடுத்து, சமாரியாவுக்கு வந்து, அதை மூன்றாண்டு அளவு முற்றுகையிட்டான்.

ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான். அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக் கரையிலும், மேதியர் நகர்களிலும் குடியேற்றினான்.

ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும் அந்நாட்டு மன்னன் பார்வோனின் கையினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து வேற்றுத் தெய்வங்களைத் தொழுது வந்தனர்.

மேலும் இஸ்ரயேல்மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் விதிமுறைகளின்படியும். இஸ்ரயேல் அரசர்கள் புகுத்திய வழக்கங்களின்படியும் நடந்து வந்தனர்.

இஸ்ரயேல் மக்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகத் தகாதனவற்றை மறைவாய்ச் செய்தனர்: மேலும் காவல் மாடம் முதல் அரண்சூழ் கோட்டைவரை எல்லா நகர்களிலும் தங்களுக்குத் தொழுகை மேடுகளை அமைத்துக் கொண்டனர்:

உயர் குன்றுகளிலும், பசுமையான மரங்களின் அடியிலும், நடுகற்களையும், அசேராக் கம்பங்களையும் அமைத்துக் கொண்டனர்.

அங்கு அவர்கள் பபம் காட்டி அம்மேடுகள் அனைத்திலும், ஆண்டவர் அவர்கள் முன்னிலையிலிருந்து விரட்டியடித்த வேற்றினத்தாரைப் போல் தீயன புரிந்து, ஆண்டவருக்குச் சினமூட்டினர்.

“இக்காரியத்தை நீங்கள் செய்யலாகாது“ என ஆண்டவர் அவர்களுக்கு உரைத்திருந்தாலும், அவர்கள் சிலைகளை வழிபட்டு வந்தனர்.

ஆயினும் ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர் மூலம் இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் விடுத்திருந்த எச்சரிக்கை இதுவே: உங்கள் தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்கள் மூதாதையருக்கு நான் கட்டளையிட்டு என் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம் நான் அறிவித்த திருச்சட்டத்தின்படி என் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடியுங்கள்.

ஆனால் அவர்களோ செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்:

ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்த, வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்: “வேற்றினத்தாரைப் பின்பற்றலாகாது“ என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர்.

தங்கள் கடவுளான ஆண்டவரின் எல்லாக் கட்டளைகளையும் கைவிட்டனர்: இரண்டு கன்றுகளைத் தங்களுக்கென வார்த்துக்கொண்டு, அசேராக் கம்பம் நிறுத்தி, வானத்தின் அணிகளுக்குத் தலைவணங்கி, பாகாலை வழிபட்டனர்:

தங்கள் புதல்வரையும், புதல்வியரையும் நெருப்பில் பலியிட்டனர். குறிகேட்டும் சூனியம் வைத்தும் வந்தனர்: ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து அவருக்குச் சினமூட்டுமாறு தங்களையே விற்று விட்டனர்.

எனவே ஆண்டவர் இஸ்ரயேலின்மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளி விட்டார். யூதா குலத்தார் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

யூதா குலத்தாரும் தங்கள் கடவுளான ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, இஸ்ரயேலின் விதிமறைகளைப் பின்பற்றி வந்தனர்.

எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் வழிமரபினர் அனைவரையும் கைவிட்டு, அவர்களை ஒடுக்கி, கொள்ளைக்காரரின் கையில் ஒப்புவித்து, தமது திருமுன்னின்று தள்ளிவிட்டார்.

அவர் இஸ்ரயேலைத் தாவீதின் மரபினின்று வெட்டிப் பிரித்தபோது நெபாற்றின் மகன் எரொபவாமைத் தங்களுக்கு அரசனாக ஏற்படுத்திக் கொண்டனர். எரொபவாம் இஸ்ரயேலர் ஆண்டவரை விட்டு விலகும்படி செய்து, அவர்களைப் பெரும் பாவத்திற்கு உள்ளாக்கியிருந்தான்.

இவ்வாறு எரொபவாம் நடந்த பாவ வழிகளில் அனைத்திலும் இஸ்ரயேல் மக்கள் நடந்து வந்தனர். அவற்றை விட்டு அவர்கள் விலகவில்லை.

ஆண்டவர் தம் அடியாரான இறைவாக்கினர் அனைவரின் வாயிலாக உரைத்திருந்தபடி, அவர்களைத் தமது திருமுன்னின்று முற்றும் தள்ளிவிடும் வரை, அவர்கள் அந்தப் பாவ வழிகளைவிட்டு விலகவில்லை. எனவே இஸ்ரயேலர் தமது சொந்த நாட்டினின்று அசீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, இன்றுவரை அங்கேயே இருக்கின்றனர்.

பாபிலோன், கூத்தா, அவ்வா, ஆமாத்து, செபர்வயிம் ஆகியவற்றினின்று அசீரிய மன்னன் ஆள்களைக் கொண்டு வந்து, இஸ்ரயேல் மக்களுக்குப் பதிலாகச் சமாரியா நகர்களில் குடியேற்றினான். அவர்கள் சமாரியாவை உரிமையாகக் கொண்டு அதன் நகர்களில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் அங்கு வாழத் தொடங்கியபோது ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை. எனவே, ஆண்டவர் அவர்கள் நடுவே சிங்கங்களை ஏவிவிட, அவை அவர்களுள் சிலரைக் கொன்று போட்டன.

எனவே அசீரிய மன்னனுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது: நாட்டினின்று அப்புறப்படுத்திச் சமாரியாவின் நகர்களில் நீர் குடியேற்றிய இந்த மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறை தெரியாது. எனவே அவர் அவர்களிடையே சிங்கங்களை அனுப்பியுள்ளார். இதோ, அவை அவர்களைக் கொன்று கொண்டிருக்கின்றன! ஏனெனில் அவர்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறை தெரியாது.

எனவே, அசீரியா மன்னன், நீங்கள் சமாரியாவிலிருந்து நாடு கடத்தியிருக்கும் குருக்களுள் ஒருவன், அங்குத் திரும்பிச் செல்லட்டும். அவன் அங்கே சென்று, அவர்களுடன் தங்கியிருந்து நம் மக்களுக்கு அந்நாட்டுக் கடவுளை வழிபடும் முறையைக் கற்பிக்கட்டும் என்று கட்டளையிட்டான்.

அவ்வாறே, சமாரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட குருக்களுள் ஒருவன், பெத்தேலுக்கு வந்து அங்கே தங்கியிருந்து ஆண்டவருக்கு அஞ்சி வாழும் முறைபற்றிக் கற்றுக்கொடுத்தான்.

ஆயினும், ஒவ்வோர் இனத்தாரும் தம் தெய்வங்களுக்குத் தாம் குடியேறிய நகர்களில் சிலை செய்து, சமாரியர் முன்பு அமைத்திருந்த தொழுகை மேடுகளில் வைத்துக் கொண்டனர்.

பாபிலோனியா சுக்கோத் பெனோத்து சிலையையும், கூத்தியர் நேர்கால் சிலையையும், ஆமாத்தியர் அசமா சிலையையும்,

அவ்வியர் நிபுகசு, தர்த்தாக்குச் சிலைகளையும் செய்து வைத்துக் கொண்டனர். மேலும் செபர்வயர் தம் நாட்டுத் தெய்வங்களான அதிரம்மெலக்கு, அனம் மெலக்கிற்குத் தங்கள் பிள்ளைகளைத் தீயிலிட்டு பலி கொடுத்தனர்.

அவர்கள் ஆண்டவரையும் வழிபட்டு வந்தனர். ஆயினும் தொழுகை மேடுகளில் பணிபுரியத் தங்களுக்குள் அர்ச்சகர்களை நியமித்துக் கொண்டனர்.

அவர்கள், ஆண்டவரை வழிபட்டுவந்து போதிலும், எங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தார்களோ அங்கிருந்த வழக்கப்படியே தம்தம் தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.

இன்றுவரை அவர்கள் தங்கள் முன்னைய வழக்கத்தையே கைக்கொண்டுள்ளனர். ஆண்டவரிடம் அவர்கள் அச்சம் கொள்வதில்லை: மேலும் ஆண்டவரால் “இஸ்ரயேல்“ என்று பெயரிடப்பட்ட யாக்கோபின் மக்களுக்குக் கட்டளையிட்ட நியமங்களையும் விதிமுறைகளையும், சட்டத்தையும், கட்டளைகளையும் கடைப்பிடிப்பதுமில்லை.

ஆண்டவர் இஸ்ரயேலரோடு உடன்படிக்கை செய்து அவர்களுக்கு இட்ட கட்டளை இதுவே: வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சவேண்டாம்: அவைகளை வணங்கி வழிபடவும் வேண்டாம்: அவைகளுக்குப் பலியிடவும் வேண்டாம்:

ஆனால், உங்களைப் பேராற்றலோடும் ஓங்கிய புயத்தோடும் எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த ஆண்டவருக்கு மட்டுமே நீங்கள் அஞ்ச வேண்டும். அவரையே வணங்கி வழிபட வேண்டும். அவருக்கே பலி செலுத்த வேண்டும்.

அவர் உங்களுக்கு எழுதித் தந்த நியமங்களையும், விதிமுறைகளையும், சட்டத்தையும், கட்டளைகளையும் எந்நாளும் கருத்தோடு கடைப்பிடித்து வாழுங்கள். வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள்.

நான் உங்களோடு செய்த உடன்படிக்கையை மறவாதீர்கள். வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சி நடங்கள். அவரே உங்கள் எதிரிகள் அனைவரின் கையினின்றும் உங்களை விடுவிப்பார்.

ஆயினும், அவ்வேற்றினத்தார் அதற்குச் செவிகொடாமல் அவர்களது முன்னைய வழக்கத்தின்படியே செய்து வந்தனர். 41 அவர்கள் ஆண்டவரை வழிபட்டு வந்தபோதிலும், தங்கள் தெய்வச் சிலைகளையும் வணங்கி வந்தனர். இன்றுவரை அவர்களுடைய பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் அவர்கள் மூதாதையரைப் போலவே செய்து வருகின்றனர்.

அதிகாரம் 18.

இஸ்ரயேல் அரசன் ஏலாவின் மகன் ஓசேயா ஆட்சியேற்ற மூன்றாம் ஆண்டில், ஆகாசின் மகன் எசேக்கியா யூதாவின் அரசனானார்.

அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து. அவர் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். செக்கரியாவின் மகளாகிய அபி என்பவரே அவருடைய தாய்.

அவர் தம் தந்தை தாவீதைப் போலவே அனைத்திலும் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தார்.

அவர் தொழுகை மேடுகளை அழித்து, நடுகற்களைத் தகர்த்து அசேராக் கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினர். மோசேயால் செய்து வைக்கப்பட்ட வெண்கலப் பாம்புச் சிலையையும் உடைத்தெறிந்தார். ஏனெனில் இஸ்ரயேல் மக்கள் அன்று வரை அதற்கத் பபங்காட்டி வந்தனர். அது நெகுஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்தது.

அவர் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரில் முழு நம்பிக்கை வைத்திருந்தார். அவருக்குப் பின்னோ அவருக்கு முன்னோ இருந்த யூதாவின் அரசர் அனைவரிலும், அவரைப்போல் வேறு எவரும் இருந்ததில்லை.

அவர் ஆண்டவர்மீது பற்றுக் கொண்டு அவரிடமிருந்து விலகாமல், ஆண்டவர் மோசேக்கு இட்ட கட்டளைகளைப் பின்பற்றினார்.

ஆதலால் ஆண்டவரும் அவரோடு இருந்தார். அவர் சென்றவிடமெல்லாம் சிறப்புற்றார். மேலும் அவர் அசீரிய மன்னனுக்கு எதிராக எழுந்து அவனுக்குப் பணிய மறுத்தார்.

அவர் பெலிஸ்தியரைக் காவல்மாடம் முதல் அரண் சூழ் நகரம் வரை, காசாவினின்றும் அதன் எல்லைக்குள்ளிருந்தும் விரட்டியடித்தார்.

இஸ்ரயேல் அரசன் ஏலாவின் மகனான ஓசேயா ஆட்சியேற்ற ஏழாவது ஆண்டில், அதாவது அரசர் எசேக்கியாவின் நான்காம் ஆட்சி ஆண்டில், அசீரிய மன்னன் சல்மனேசர் சமாரியாவுக்கு எதிராக வந்து அதை முற்றுகையிட்டான்.

மூன்று ஆண்டுகளின் முடிவில் அவன் அதைக் கைப்பற்றினான். அரசர் எசேக்கியா ஆட்சியேற்ற ஆறாம் ஆண்டில், அதாவது இஸ்ரயேல் அரசன் ஓசேயாவின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் சமாரியா கைப்பற்றப்பட்டது.

அசீரிய மன்னன் இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான்: அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக்கரையிலும் மேதியர் நகர்களிலும் குடியேற்றினான்.

ஏனெனில், அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்காமல், அவரது உடன்படிக்கையையும் ஆண்டவரின் ஊழியர் மோசே இட்ட கட்டளைகள் யாவற்றையும் மீறினார்கள். ஆவர்கள் செவிகொடுக்கவுமில்லை, கீழ்படியவுமில்லை.

எசேக்கியா ஆட்சியேற்ற பதினான்காம் ஆண்டில் அசீரிய மன்னன் சனகெரிபு யூதாவிலிருந்த அரண்சூழ் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.

அப்போது, யூதா அரசர் எசேக்கியா இலாக்கிசிலிருந்து அசீரிய மன்னனிடம் பதனுப்பி, நான் பாவம் செய்துவிட்டேன். எனவே என்னை விட்டுத் திரும்பிச் செல்லும். நீர் கேட்பதை நான் தந்து விடுகிறேன் என்றார். அப்படியே அசீரிய மன்னன், யூதா அரசர் எசேக்கியாவை பன்னிரண்டாயிரம் கிலோ கிராம், வெள்ளியையும் ஆயிரத்து இருமறு கிலோ கிராம் பொன்னும் செலுத்துமாறு கட்டளையிட்டான்.

எசேக்கியா ஆண்டவரது இல்லத்திலும், அரசரது அரண்மனைக் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தார்.

இச்சமயம் யூதா அரசர் எசேக்கியா, ஆண்டவரின் இல்லக் கதவுகளிலும் கதவு நிலைகளிலும், தாம் பதித்திருந்த பொன் தகடுகளைக் கழற்றி அசீரிய மன்னனுக்குக் கொடுத்தார்.

ஆயினும் அசீரிய மன்னன் இலாக்கிசிலிருந்து தர்த்தானையும் இரப்சாரிசையும் இரப்சாக்கேயையும் பெரும் படையுடன் எருசலேமுக்கு அரசர் எசேக்கியாவுக்கு எதிராக அனுப்பினான். இவர்கள் புறப்பட்டு எருசலேமை வந்தடைந்து, வண்ணான் துறை வழியருகிலுள்ள மேல் குளத்துக் கால்வாய் அருகே நின்றனர்.

அப்பொழுது அவர்கள் அரசரைத் தங்களிடம் அழைத்தனர். ஆனால் அரண்மனையின் மேலாளனும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிமும், எழுத்தனான செபுனாவும் அரசருடைய பதிவாளனும் ஆசாபின் மகனுமான யோவாகும் அவர்களைச் சந்திக்கச் சென்றனர்.

அப்பொழுது, இரப்சாக்கே அவர்களைப் பார்த்து, நீங்கள் எசேக்கியாவுக்குக் கீழ்கண்டவாறு கூறுங்கள்: பேரரசராகிய அசீரிய மன்னர் கூறுவது இதுவே:

உனது துணிச்சலின் காரணம் என்ன? வெறும் சொற்கள் போர்த் தந்திரமும் வீரமும் ஆகிவிடுமா? யாரை நம்பி என்னை எதிர்க்கத் துணிகிறாய்?

இதோ பார்! தன் மீது சாய்பவனின் உள்ளங்கையைக் குத்திக் கழிக்கும் பிளவுபட்ட நாணல் குச்சியான எகிப்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்! எகிப்திய மன்னனான பார்வோனும் தன்னை நம்புகிற யாவருக்கும் அவ்விதமே செய்வான்.

நீ ஒருவேளை, “எங்கள் கடவுளான ஆண்டவரின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்“ என்று சொல்லலாம். ஆனால் யூதா மக்களையும் எருசலேம் மக்களையும் பார்த்து, “நீங்கள் எருசலேமிலிருக்கும் இப்பலிபீடத்தில் மட்டும் வழிபடுங்கள்“ என்று கட்டளையிட்டபொழுது எசேக்கியாவாகிய நீ அவருடைய தொழுகை மேடுகளையும் பலிபீடங்களையும் அழிக்கவில்லையா?

இப்பொழுது என் தலைவராகிய அசீரிய மன்னன் சார்பாகச் சவால் விடுக்கிறேன். நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைத் தருவேன். அவற்றுக்குத் தேவையான குதிரை வீரர்களை உன்னால் தர முடியுமா?

தேர்களுக்கும் குதிரை வீரர்களுக்கும் எகிப்தை நம்பியிருக்கும் உன்னால் என் தலைவரின் பணியாளருள் கடையனான ஒரு படைத் தலைவனைக் கூட எதிர்த்து நிற்க முடியுமா?

ஆண்டவரின் திருவுளம் அறியாமலா நான் இவ்விடத்தை அழிக்க வந்துள்ளேன்? ஆண்டவர் என்னைப் பார்த்து, “நீ புறப்பட்டுச் சென்று அந்நாட்டை அழித்துவிடு“ என்று கூறியுள்ளார் என்றான்.

அப்போது இல்க்கியாவின் மகன் எலியாக்கிமும், செபுனாவும், யோவாகும் இரப்சாக்கேயை நோக்கி, உம் பணியாளராகிய எங்களோடு சிரியா மொழியிலேயே பேசும். அது எங்களுக்குப் புரியும். மதிலின்மேல் இருக்கும் மக்கள் காதில் விழும்படியாக யூத மொழியில் எங்களோடு பேச வேண்டாம் என்றனர்.

அதற்கு அவன் அவர்களிடம், என் தலைவர் என்னை அனுப்பியது உங்கள் தலைவரிடமும் உங்களிடமும் மட்டுமா? இல்லை. தங்கள் மலத்தைத் தின்று, தங்கள் சிறுநீரைக் குடித்து உங்களுடன் மடியவிருக்கும் மதிற்சுவர் ஆள்களுக்கும் இது புரியட்டும் என்றான்.

இதன்பின் இரப்சாக்கே எழுந்து நின்று யூத மொழியில் உரத்த குரலில் பேசலானான்: மாவேந்தரான அசீரிய மன்னரின் வார்த்தையைக் கேளுங்கள்.

அவர் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில் உங்களை என் கையிலிருந்து விடுவிக்க அவனால் முடியாது.

அவன், “ஆண்டவர் நம்மை விடுவிப்பது உறுதி. இந்நகர் அசீரிய மன்னனின் கையில் ஒப்பவிக்கப்படாது“ என்று கூறி உங்களை ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளச் செய்வான்.

எசேக்கியாவின் சொல்லுக்குச் செவி கொடாதீர்கள். ஏனெனில் அசீரிய மன்னர் கூறுவது இதுவே: நீங்கள் என்னோடு சமாதானம் செய்து கொண்டு வெளியே என்னிடம் வாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த திராட்சைக் கொடியின் பழத்தைச் சுவைத்து, தம் சொந்த அத்திமரத்தின் பழத்தைத் தின்று, சொந்தக் கிணற்றின் தண்ணீரைக் குடிக்கலாம்.

பின் நான் வந்து உங்கள் நாட்டைப் போன்ற ஒரு நாட்டுக்கு, தானியமும் திராட்சைக் கனியும் மிக்க நாட்டுக்கு, அப்பமும் திராட்சைத் தோட்டமும் மிகுந்த நாட்டுக்கு, ஒலிவ மரங்களும் தேனும் மிகுந்த நாட்டுக்கு, உங்களை அழைத்துச் செல்வேன். நீங்கள் சாகாமல் உயிரோடு இருக்கப் பாருங்கள். ஆண்டவர் நம்மைக் காப்பார் என்று கூறி உங்களை ஏமாற்றும் எசேக்கியாவுக்குச் செவி கொடாதீர்கள்.

எந்த ஒரு நாட்டின் தெய்வமாவது தன் நாட்டை அசீரிய மன்னரிடமிருந்து மீட்டதுண்டா?

ஆமாத்து, அர்ப்பாது நகர்களின் தெய்வங்கள் எங்கே? செபர்வயிம், ஏனா, இவ்வா ஆகியவற்றின் தெய்வங்கள் எங்கே? அவை சமாரியாவை என் கையினின்று விடுத்தனவா?

அத்தனை நாடுகளின் தெய்வங்களில் ஒன்றாவது தன் நாட்டை என் கையினின்று விடுவித்ததுண்டா? அப்படியிருக்க, ஆண்டவரால் எவ்வாறு எருசலேமை என் கையினின்று விடுவிக்க முடியும்?

ஆனால் மக்கள் மெளனமாய் இருந்தனர். ஒரு வார்த்தைகூடப் பதில் கூறவில்லை. ஏனெனில், “அவனுக்கு ஒரு பதிலும் கூறவேண்டாம்“ என்று அரசர் கட்டளையிட்டிருந்தார்.

பின்பு அரண்மனையின் மேலாளனும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிமும், எழுத்தனான செபுனாவும், பதிவாளனும் ஆசாபின் மகனுமான யோவாகும் தம் ஆடைகளைக் கிழித்து விட்டு சாக்கு உடை உடுத்திக் கொண்டு எசேக்கியாவிடம் வந்து, இரப்சாக்கே கூறியவற்றை அவருக்குத் தெரிவித்தனர்.

அதிகாரம் 19.

அரசர் எசேக்கியா இதைக் கேட்டு தம் ஆடைகளைக் கிழித்துவிட்டு சாக்கு உடை உடுத்திக் கொண்டு ஆண்டவரின் இல்லத்தினுள் நுழைந்தார்.

அரண்மனையின் மேலதிகாரியான எலியாக்கிமையும், எழுத்தன் செபுனாவையும், குருக்களில் முதியோரையும் சாக்கு உடை உடுக்கச் செய்து ஆமோசின் மகன் எசாயா இறைவாக்கினரிடம் அனுப்பினார்.

அவர்கள் அவரிடம், எசேக்கியா கூறுவது இதுவே: இன்று துன்பமும் கண்டனமும் அவமானமும் மிக்க நாள். பிள்ளைகளைப் பெற்றெடுக்க நேரம் வந்துவிட்டது: ஆனால் பெற்றெடுக்கவோ வலிமையில்லை.

வாழும் கடவுளைப் பழித்து இகழும்படி அசீரிய மன்னனாகிய தன் தலைவனால் அனுப்பப்பட்ட இரப்சாக்கே சொன்னவற்றையெல்லாம் உம் கடவுளாகிய ஆண்டவர் கேட்டிருப்பார்! அச்சொற்களை முன்னிட்டு உம் கடவுளாகிய ஆண்டவர் அவனைத் தண்டிக்க வேண்டும். நீரோ இன்னும் இங்கு எஞ்சியிருப்போர்க்காக மன்றாடும் என்றனர்.

அரசர் எசேக்கியாவின் அலுவலர் எசாயாவிடம் வந்தபொழுது,

எசாயா அவர்களை நோக்கி, உங்கள் தலைவனிடம் இவ்வாறு சொல்லுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னனின் கைக்கூலிகள் என்னை இகழ்ந்து சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அஞ்சவேண்டாம்.

இதோ, நான் அவனிடம் ஓர் ஆவியை அனுப்புவேன். அவன் ஒரு வதந்தியைக் கேட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பி போய்விடுவான். அவனது நாட்டில் வாளால் வெட்டுண்டு அவன் இறக்கும்படி செய்வேன் என்றார்.

அவ்வாறே, “அசீரிய மன்னன் இலாக்கிசை விட்டு வெளியேறிவிட்டான்“ என்று கேள்விப்பட்டு அங்கிருந்து கிளம்பிய இராப்சாக்கே தன் மன்னன் லிப்னாவுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான்.

அப்பொழுது, அசீரிய மன்னன், எத்தியோப்பிய மன்னனான திராக்கா தனக்கு எதிராய்ப் படைதிரட்டிக்கொண்டு வருவதாகக் கேள்வியுற்று எசேக்கியாவிடம் மீண்டும் பதரை அனுப்பி,

யூதா அரசன் எசேக்கியாவிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: “எருசலேம் அசீரிய மன்னனின் கையில் ஒப்புவிக்கப்பட மாட்டாது“ என்று கூறும் உன் கடவுளை நம்பி ஏமாந்துவிடாதே.

இதோ! அசீரியா மன்னர்கள் எல்லா நாடுகளுக்கும் செய்திருப்பதையும், அவற்றை முற்றிலும் அழித்ததையும் நீ கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ மட்டும் தப்பிவிட முடியுமா?

என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசான், ஆரான், இரட்சேபு, ஏதேனியர் வாழ்ந்த தெலாசர் ஆகியவற்றை அந்நாடுகளின் தெய்வங்களால் விடுவிக்க முடிந்ததா?

ஆமாத்தின் மன்னன் எங்கே? அர்பாதின் மன்னன் எங்கே? செபர்வயிம் நகர், ஏனா, இவ்வா இவற்றின் மன்னர்கள் எங்கே? என்று கூறியிருந்தான்.

எசேக்கியா பதரின் கையிலிருந்த மடலை வாங்கி வாசித்தபின் கோவிலினுள் சென்று ஆண்டவர் திருமுன் மடலை விரித்து வைத்தார்.

மேலும் எசேக்கியா ஆண்டவரை மன்றாடிக் கூறியது: கெருபுகள்மேல் வீற்றிருக்கும் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! இவ்வுலகத்து அரசுகளுக்கெல்லாம் நீர் ஒருவரே கடவுள்! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே!

ஆண்டவரே! நீர் செவி சாய்த்துக் கேட்டருளும். ஆண்டவரே! உம் விழிகளைத் திறந்து என்னை நோக்கியருளும். பதனுப்பி என்றுமுள கெரிபின் சொற்களைக் கேட்பீராக!

ஆண்டவரே! அசீரிய மன்னர்கள் வேற்றினத்தாரையும், அவர்கள் நாடுகளையும் அழித்தது உண்மைதான்!

அவர்கள் வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளை நெருப்பிலிட்டு எரித்தனர். ஏனெனில் அவை உண்மைக் கடவுளல்ல: மரத்தாலும் கல்லாலும் மனிதன் செய்தவையே: எனவே அவற்றை அழிக்க முடிந்தது.

எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும்.

அப்பொழுது ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவிடம் ஆளனுப்பிச் சொன்னது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அசீரிய மன்னன் சனகெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டேன்.

அவனக்கு எதிராக ஆண்டவர் கூறிய வார்த்தை இதுவே: கன்னிமகள் சீயோன் உன்னை இகழ்கிறாள்: உன்னைப் பார்த்து நகைக்கிறாள்: மகள் எருசலேம் பின் நின்று தலையசைக்கிறாள்.

யாரை நீ பழித்து இகழ்ந்தாய்? யாருக்கு எதிராய்க் குரல் எழுப்பினாய்? யாரை நீ இறுமாப்புடன் நோக்கினாய்? இஸ்ரயேலின் புனிதமானவரை அன்றோ!

நீ உன் பதர்மூலம் என் தலைவரைப் பழித்துரைத்து, “எண்ணற்ற என் தேர்களோடு நான் மலையுச்சிகளுக்கு லெபனோனின் சிகரங்களுக்கு ஏறிச் சென்றேன். வானளாவிய கேதுரு மரங்களையும் அங்கு நின்ற உயர்ந்த தேவதாரு மரங்களையும் வெட்டினேன். அதன் காடுகளின் மிக அடர்ந்த பகுதியான கடையெல்லைவரை சென்றேன்.

நான் அயல்நாடுகளில் கிணறு வெட்டி நீர் பருகினேன். எகிப்தின் நதிகளையெல்லாம் என் உள்ளங்கால்களினால் வற்றச் செய்தேன்“ என்றாய்!

நீ கேட்டதில்லையோ? நான் தான் பல நாள்களுக்கு முன்பே இதை முடிவு செய்தேன். நான்தான் தொன்று தொட்டே இதைத் திட்டமிட்டேன். அரண்சூழ் நகர்களைப் பாழடைந்த கற்குவியலாக நீ ஆக்க வேண்டுமென்பதை இப்பொழுது நான்தான் நிறைவேறச் செய்தேன்.

அவற்றின் குடிமக்கள் வலிமை இழந்து கலக்கமுற்று அவமானமடைந்தனர்: வயல்வெளிப் புல் போலவும், கூரைகளில் முளைத்து வளருமுன்னே பட்டுப்போகும் பச்சைப் பூண்டு போலவும் ஆயினர்.

நீ இருப்பதும் போவதும் வருவதும் எனக்குத் தெரியும் எனக்கு எதிராக நீ பொங்கி எழுவதையும் நான் அறிவேன்.

நீ எனக்கு எதிராகப் பொங்கி எழுந்தாலும் உன் ஆணவம் என் செவிகளுக்கு எட்டி உள்ளதாலும், உன் மூக்கில் வளையத்தையும் உன் வாயில் கடிவாளத்தையும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திருப்பி விரட்டுவேன்!

எசேக்கியா! இதோ உனக்கு ஓர் அடையாளம் தருகிறேன்: இவ்வாண்டு தானாக விளைவதை நீ உண்பாய்: அடுத்த ஆண்டு அதன் முளையிலிருந்து விளைவதை உண்பாய்: ஆனால் மூன்றாம் ஆண்டில் நீ விதைத்து அறுவடை செய்வாய்: திராட்சைச் செடிகளை நட்டு அவற்றின் கனிகளை உண்பாய்.

யூதா வீட்டில் எஞ்சியவை எல்லாம் கீழே வேரூன்றி மேலே பயன் அளிக்கும்.

ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்து வெளியேறுவர். உயிர் பிழைத்தோர் சீயோன் மலையினின்று புறப்படுவர். படைகளின் ஆண்டவரது ஆர்வமே இதை நிறைவேற்றும்!

ஆதலால் ஆண்டவர் அசீரிய மன்னனைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்: இந்நகருக்குள் அவன் நுழையமாட்டான்: அதில் அம்பு எய்ய மாட்டான்: அதை எதிர்த்துக் கேடயத்துடன் வரமாட்டான். அதற்கு எதிராக முற்றுகைத்தளம் எழுப்ப மாட்டான்.

அவன் வந்த வழியே திரும்பிப் போவான்: இந்நகருக்குள் நுழையவே மாட்டான் என்கிறார் ஆண்டவர்.

இந்நகரை நான் பாதுகாப்பேன்: என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் நான் அதை விடுவிப்பேன்.

அன்றிரவு ஆண்டவரின் பதர் புறப்பட்டுச் சென்று அசீரியரின் பாளையத்தில் இலட்சத்து என்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். மக்கள் காலையில் எழுந்தபோது அங்கு அனைவரும் செத்துப் பிணமாய்க் கிடந்ததைக் கண்டனர்.

எனவே அசீரிய மன்னன் சனகெரிபு திரும்பிச் சென்று நினிவேயில் தங்கியிருந்தான்.

தன் தெய்வமாகிய நிஸ்ரோக்கின் கோவிலில் அவன் வழிபாடு செய்துகொண்டிருந்த பொழுது, அவன் புதல்வர்களாகிய அதிரம் மெலக்கும், சரேத்சரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, அரராத்து நாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டனர். அவனுடைய மகன் ஏசகத்தோன் அவனுக்குப்பின் அரசன் ஆனான்.

அதிகாரம் 20.

அந்நாள்களில் எசேக்கியா நோயுற்றுச் சாகும் தருவாயில் இருந்தார். ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயா அவரிடம் வந்து, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்: ஏனெனில் நீர் சாவினின்று பிழைக்க மாட்டீர் என்றார்.

எசேக்கியா சுவர்ப் பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டு

ஆண்டவரை நோக்கி, ஆண்டவரே! நான் எப்படி உம் திருமுன் முற்றிலும் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொண்டேன் என்பதையும், உமது பார்வையில் நேர்மையானதையே செய்தேன் என்பதையும் நினைத்தருளும் என்று வேண்டுதல் செய்து கதறி அழுதார்.

எசாயா அரண்மனை முற்றத்தின் நடுப்பகுதியைக் கடப்பதற்குள், ஆண்டவரது வார்த்தை அவருக்கு வெளியாயிற்று:

நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனான எசேக்கியாவை நோக்கி, “உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் மன்றாட்டைக் கேட்டேன். உன் கண்ணீரையும் கண்டேன். இதோ உன்னைக் குணப்படுத்துவேன். இன்றைக்கு மூன்றாம் நாள் நீ ஆண்டவராகிய எனது இல்லத்துக்குச் செல்வாய்.

உனது ஆயுளுக்கு இன்னும் பதினைந்து ஆண்டுகள் கூட்டுவேன். மேலும் உன்னையும் இந்நகரையும் அசீரிய மன்னனின் கையினின்று விடுவிப்பேன். என் பொருட்டும் என் ஊழியன் தாவீதின் பொருட்டும் இந்நகரைப் பாதுகாப்பேன்“ என்று சொல்.

அப்பொழுது எசாயா, ஓர் அத்திப் பழ அடை கொண்டு வாருங்கள் என்றார். அவர்களும் அவ்வாறு கொண்டுவந்து அவர் குணமடையும்படி அதைக் கட்டியின்மேல் வைத்தனர்.

எசேக்கியா எசாயாவை நோக்கி, ஆண்டவர் எனக்கு நலம் அளிப்பார் என்பதற்கும், மூன்றாம் நாள் நான் கோவிலுக்குச் செல்வேன் என்பதற்கும் அவர் எனக்கு என்ன அடையாளம் கொடுப்பார்? என்று கேட்டார்.

அதற்கு எசாயா, ஆண்டவர் தாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதைக் காட்ட அவர் உமக்குக் கொடுக்கும் அடையாளமாவது: இப்பொழுது நிழல் பத்துப் பாகை முன்னோக்கிப் போகவேண்டுமா? பின்னோக்கி வர வேண்டுமா? என்று கேட்டார்.

அதற்கு எசேக்கியா, நிழல் பத்துப் பாகை முன்னோக்கிப் போவது எளிது. எனவே நிழல் பத்துப் பாகை பின்னோக்கி வர வேண்டும் என்றார்.

அப்பொழுது இறைவாக்கினர் எசாயா ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் ஆகாசின் நிழற்கடிகையில் பத்துப்பாகை முன்னோக்கிப் போயிருந்த நிழல் பத்துப் பாகை பின்னோக்கி வரச் செய்தார்.

அக்காலத்தில் பாபிலோனியரின் மன்னன் பலதானின் மகன் மெரோதாக்கு, எசேக்கியா நோயுற்றிருப்பதைக் கேள்விப்பட்டு, அவனுக்கு மடலும் அன்பளிப்பும் அனுப்பி வைத்தான்.

எசேக்கியா அவர்களை வரவேற்று, தம் கருவூலம் அனைத்தையும் வெள்ளியையும், பொன்னையும், நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும் படைக்கலக் கூடத்தையும் சேமிப்புக் கிடங்கில் காணப்பட்ட எல்லாப் பொருள்களையும் அவர்களுக்குக் காட்டினார். அதன் அரசு முழுவதிலும், தம் அரண்மனையிலும் இருந்தவற்றில் எசேக்கியா அவர்களுக்குக் காட்டாதது எதுவுமில்லை.

இறைவாக்கினர் எசாயா அரசர் எசேக்கியாவிடம் வந்து, அந்த ஆள்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? என்று கேட்டார். அதற்கு எசேக்கியா, வெகுபரத்திலிருக்கும் நாடான பாபிலோனிலிருந்து வந்தார்கள் என்று மறுமொழி கூறினார்.

அவர், உம் அரண்மனையில் எதைப் பார்த்தானர்? என்று கேட்டார். அதற்கு எசேக்கியா என் அரண்மனையில் உள்ள அனைத்தையும் பார்த்தனர். என் சேமிப்புக் கிடங்கில் நான் அவர்களுக்குக் காட்டாதது எதுவுமில்லை என்றார்.

அப்பொழுது எசாயா எசேக்கியாவை நோக்கி, ஆண்டவர் கூறுவதைக் கேளும்:

இதோ! நாள்கள் வரும்! அப்போது உன் அரண்மனைப் பொருள்கள் அனைத்தும், உன் மூதாதையர் இன்றுவரை சேகரித்து வைத்துள்ள யாவும், ஒன்று விடாமல் பாபிலோன் நகருக்குக் கொண்டு போகப்படும்.

மேலும் நீ பெற்றெடுத்துள்ள உன் சொந்தப் புதல்வர் சிலர் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னனின் அரண்மனையில் அண்ணகராய் இருப்பர் என்று சொன்னார்.

அப்பொழுது எசேக்கியா எசாயாவை நோக்கி, “ஆண்டவரின் வார்த்தையாக நீர் கூறியது நல்வாக்கே!“ என்றார். ஏனெனில் அவர் தம் வாழ்நாள்களில் அமைதியும் பாதுகாப்பும் இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

எசேக்கியாவின் பிற செயல்களும், அவரது பேராற்றலும், அவர் குளமொன்று வெட்டி கால்வாய் அமைத்துக் தண்ணீரை நகருக்குள் கொண்டு வந்ததும், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

எசேக்கியா தம் மூதாதையருடன் துயில் கொண்ட பின், அவருக்குப் பதிலாக அவர் மகன் மனாசே அரசன் ஆனான்.

அதிகாரம் 21.

மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு. அவன் ஜம்பத்தைந்து ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். எப்சிபா என்பவரே அவன் தாய்.

இஸ்ரயேலர் முன்னிருந்து ஆண்டவர் விரட்டிய வேற்றினத்தாரின் அருவருப்புகளை அவன் பின்பற்றி ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.

அவன் அவனுடைய தந்தை எசேக்கியா தகர்த்தெறிந்த தொழுகை மேடுகளை மீண்டும் கட்டியெழுப்பினான்: பாகாலுக்குப் பலிபீடங்களைக் கட்டினான்: இஸ்ரயேல் அரசன் ஆகாசு செய்தது போல், அசேராக் கம்பங்களை நிறுவினான்: வானத்துப் படைகளையெல்லாம் வணங்கி வழிபட்டான்.

“எருசலேமில் என் பெயர் விளங்கச் செய்வேன்“ என்று ஆண்டவர் கூறியிருந்த அவரது கோவிலில் அவன் பலிபீடங்களை நிறுவினான்.

ஆண்டவரின் இல்லத்தின் இரு முற்றங்களிலும் வானத்துப் படைகளுக்கெல்லாம் அவன் பலிபீடங்களைக் கட்டினான்.

மேலும் அவன் தன் மகனை நெருப்பில் பலியாக்கினான்: குறி கேட்பதிலும் சகுனம் பார்ப்பதிலும் நம்பிக்கை கொண்டு குறி கூறுபவர்களோடும், சகுனம் பார்ப்பவர்களோடும் தொடர்பு கொண்டு ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து ஆண்டவருக்குச் சினமூட்டினான்.

மேலும், அவன் அசேராவின் செதுக்கிய சிலையை ஆண்டவரின் இல்லத்தில் நிறுவினான். இவ்விடத்தைப் பற்றி ஆண்டவர் தாவீதிடமும் அவருடைய மகன் சாலமோனிடமும் பின்வருமாறு கூறினார்: இக்கோவிலிலும் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் நான் தேர்ந்துகொண்ட எருசலேமிலும், எனது பெயரை என்றென்றும் விளங்கச் செய்வேன்.

நான் இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அவர்கள் பின்பற்றி, என் அடியான் மோசே அவர்களுக்கு அளித்த சட்டம் முழுவதையும் கடைப்பிடிப்பார்களேயானால், அவர்களை நான் அவர்கள் மூதாதையருக்கு அளித்த நாட்டிலிருந்து வெளியேறி அலைந்து திரிய விடமாட்டேன்.

ஆனால், அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில் மனாசே அவர்களை வழி தவறி நடக்கச் செய்தான். இஸ்ரயேலர், தம் முன்னிலையில் ஆண்டவர் அழித்த வேற்றினத்தாரைவிட அதிகமாக, தீயன செய்தனர்.

ஆண்டவர் தம் அடியார்களான இறைவாக்கினர் மூலம் சொன்னதாவது:

யூதாவின் அரசன் மனாசே அருவருப்பான வழக்கங்களில் ஈடுபட்டுத் தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்தவற்றைவிட மிகவும் தீயன செய்தான். சிலைகளை வழிபடச் செய்து யூதாவைப் பெரும் பாவத்திற்கு உள்ளாக்கினான்.

எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ! நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும், கேட்கும் ஒவ்வொருவருடைய இரு காதுகளும் அதிரும் அளவுக்கு, கேடு வரச் செய்வேன்.

சமாரியாவுக்கு எதிராக நான் பிடித்த அளவுமலையும், ஆகாபின் வீட்டிற்கு எதிராக நான் பிடித்த பக்குமலையும் எருசலேமுக்கு எதிராகப் பிடிப்பேன். ஒருவர் உள்ளும் புறமும் தட்டினைத் துடைத்துத் பய்மையாக்குவதுபோல நானும் எருசலேமைத் துடைத்துத் பய்மையாக்குவேன்.

எனவே எனது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரைக் கைவிட்டு, அவர்களின் பகைவரிடம் ஒப்புவிப்பேன். அப்போது அவர்கள் எதிரிகளுக்கெல்லாம் இரையாகவும் கொள்ளைப் பொருளாகவும் இருப்பர்.

ஏனெனில் அவர்களின் நாள்முதல் எகிப்திலிருந்து வெளிவந்த நாள்முதல் இன்றுவரை இடைவிடாமல் என் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்து எனக்குச் சினமூட்டியுள்ளனர்.

மனாசே, எருசலேமில் ஒருமுனை முதல் மறு முனைவரை நிரம்பும் படியாக, மிகுதியான மாசற்றவரின் குருதியைச் சிந்தினான். இவ்வாறு அவன் பாவம் செய்ததோடு யூதா மக்களை ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ய வைத்துப் பாவத்துக்கு உள்ளாக்கினான்.

மனாசேயின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் அவன் செய்த பாவமும், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

மனாசே தன் மூதாதையரோடு துயில் கொண்டு, “ஊசாப் பூங்கா“ என்ற அவனது அரண்மனைப் பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் ஆமோன் அரசனானான்.

ஆமோன் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்திரண்டு, அவன் ஈராண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தான். யோற்றுபாவைச் சா¡ந்த ஆரூசின் மகள் மெசுல்லமேத்து என்பவளே அவன் தாய்.

அவன் தன் தந்தை மனாசேயைப் போலவே ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.

தன் தந்தை நடந்த வழியிலெல்லாம் அவனும் நடந்தான்: தன் தந்தை வணங்கி வழிபட்டு வந்த சிலைகளை அவனும் வழிபட்டான்.

அவன் தன் மூதாதையரின் கடவுளான ஆண்டவரைப் பறக்கணித்தான்: ஆண்டவரின் வழியில் நடக்கவே இல்லை.

ஆமோனுடைய அலுவலர் அவ்வரசனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து அவனை அவன் மாளிகையிலேயே கொலை செய்தனர்.

ஆனால் நாட்டு மக்கள் ஆமோன் அரசனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்தவர்களையெல்லாம் கொன்றுவிட்டு, அவனுடைய மகன் யோசியாவை அவனுக்குப் பதிலாக அரசனாக்கினர்.

ஆமோனின் பிற செயல்கள், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

ஊசாப் பூங்காவிலிருந்த அவனது கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர். அவனு¨.டய மகன் யோசியா அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.

அதிகாரம் 22.

யோசியா அரசரானபோது அவருக்கு வயது எட்டு. அவர் முப்பத்தொன்று ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி செய்தார்.

பொட்சத்தைச் சார்ந்த அதாயாவின் மகள் எதிதா என்பவரே அவருடைய தாய். அவர் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்தார். தம் தந்தை தாவீது நடந்த எல்லா வழிகளிலும் வடப்புறமோ இடப்புறமோ பிறழாது அவரும் நடந்தார்.

தமது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அரசர் யோசியா, மெசுல்லாமின் புதல்வன் அட்சலியாவின் மகன் சாப்பான் என்னும் எழுத்தனை ஆண்டவரின் இல்லத்துக்கு அனுப்பிக் கூறியது:

நீ தலைமைக் குரு இல்க்கியாவிடம் சென்று, ஆண்டவரின் இல்லத்திற்கென மக்களிடமிருந்து வாயிற் காப்போர் பெற்றுக்கொண்ட எல்லாப் பணத்தையும் மொத்தக் கணக்கெடுக்கச் சொல்.

அவர்கள் அப்பணத்தை ஆண்டவரின் இல்லத்தில் பழுது பார்க்க நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரின் கையில் ஒப்புவிக்கட்டும். அவர்கள் ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்க்கும் வேலைகாரர்களுக்குக் கொடுக்கட்டும்.

அதாவது தச்சர்கள், கொத்தர்கள், கட்டடச் சிற்பிகளுக்குக் கொடுக்கட்டும்.

பெற்றுக்கொள்ளும் பணத்தின் கணக்கை அவர்களிடம் கேட்கவேண்டாம். ஏனெனில் அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள்.

தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட மலைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்மலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான்.

பின் எழுத்தன் சாப்பான் அரசரிடம் வந்து பதில் மொழியாக, அரசே! உம் அடியார்கள் கோவிலில் கிடைத்த பணத்தைச் சேகரித்து, ஆண்டவரின் இல்லத்தில் வேலை செய்வோரின் மேற்பார்வையாளரிடம் கொடுத்து விட்டனர் என்று சொன்னான்.

மேலும் அவன் அரசரிடம், குரு இல்க்கியா என்னிடம் ஒரு மலைக் கொடுத்துள்ளார் என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான்.

அரசர் சட்டமலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்.

பின் குரு இல்க்கியாவையும் சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்போரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, அரசர் இட்ட கட்டளை இதுவே:

நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்மலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். ஏனெனில் இந்மலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் மூதாதையர்கள் செவிகொடுக்கவும் இல்லை. அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவரின் சினம் நமக்கெதிராகக் கொழுந்து விட்டு எரிகிறது என்றார்.

குரு இல்க்கியாவும் அகிக்காமும் அக்போரும், சாப்பானும், அசாயாவும் குல்தா என்ற இறைவாக்கினளிடம் சென்று அவரைக் கண்டு பேசினர். இவர் எருசலேமில் இரண்டாம் தொகுதியைச் சாந்தவர்: அர்கசின் புதல்வனான திக்வாயின் மகனும் ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லு¡ம் என்பவனின் மனைவி.

அவர் அவர்களை நோக்கி, இஸ்ரயேலின் கடவுளாசிய ஆண்டவர் கூறுவது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் நீங்கள் சொல்ல வேண்டியது:

ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த மலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன்.

ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் பபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்: அதைத் தணிக்க இயலாது.

ஆண்டவரின் திருவுளம் தெரிந்து வருமாறு உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீ கேட்ட வார்த்தைகளைப் பொறுத்தமட்டில்,

“இந்த இடத்திற்கும் இதில் வாழ்வோருக்கும் எதிராக, இவர்கள் அழிவிற்கும், சாபத்திற்கும் உரியவர்“ என்று சொல்லப்பட்டுள்ளதைக் கேட்டு, நீ உள்ளம் கலங்கி, ஆண்டவர் திருமுன் உன்னைத் தாழ்த்தி உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, என் திருமுன் அழுததனால், உன் வேண்டுதலுக்கு நான் செவி கொடுத்துள்ளேன், என்கிறார் ஆண்டவர்.

ஆதலால் இவ்விடத்தின் மேல் நான் வருவிக்க இருக்கும் தீமைகளையெல்லாம் உன் கண்ணால் காணாதபடி, உன்னை உன் மூதாதையர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பேன். நீ மன அமைதியுடன் உன் கல்லறைக்குச் செல்வாய் என்றார். அவர்கள் திரும்பிச்சென்று அரசருக்கு இச்செய்தியைத் தெரிவித்தனர்.

அதிகாரம் 23.

அரசரது அழைப்புக்கிணங்கி யூதாவிலும் எருசலேமிலும் இருந்த பெரியோர்கள் யாவரும் அவரிடம் வந்து குழுமினர்.

அப்பொழுது அரசரும், யூதா நாட்டினர் அனைவரும், எருசலேம் குடிகள் அனைவரும், குருக்களும், இறைவாக்கினரும், சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவரும் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தனர். அரசரோ ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை மலில் எழுதப்பட்டிருந்த யாவற்றையும் அவர்கள் காதில் விழுமாறு வாசித்தார்.

அரசர் பணருகில் நின்று கொண்டு ஆண்டவரைப் பின்பற்றி நடப்பதாகவும், அவருடைய விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும், நியமங்களையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும் அந்மலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்துகொண்டார். மக்களும் அவ்வுடன்படிக்கைக்கு உடன்பட்டனர்.

அப்பொழுது அரசர் பாகாலுக்காகவும் அசேராவுக்காகவும் வானத்தின் படைத்திரள் அனைத்துக்காகவும் பயன்படுத்திய எல்லாக் கலன்களையும், பயகத்தினின்று வெளியே எறிந்துவிடும்படி தலைமைக் குரு இல்க்கியாவுக்கும் துணைக் குருக்களுக்கும், வாயிற்காப்போருக்கும் கட்டளையிட்டார். அவர் அவற்றை எருசலேமுக்கு வெளியே கிதரோன் வெளிகளில் சுட்டெரித்து, சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டு சென்றார்.

அத்தோடு, யூதாவின் நகர்களிலும் எருசலேமைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருந்த தொழுகை மேடுகளில் பபம் காட்டுமாறு யூதா அரசர்களால் நியமிக்கப்பட்டிருந்த அர்ச்சகர்களை நீக்கினார். மேலும் பாகால், கதிரவன், நிலா, விண்மீன்கள், வானத்துப் படைத்திரள் அனைத்திற்கும் பபம் காட்டியவர்களையும் நீக்கினார்.

ஆண்டவரின் இல்லத்திலிருந்து அசேராவை அகற்றி எருசலேமுக்கு வெளியே உள்ள கிதரோன் நீரோடைக்குக் கொண்டு சென்றார். அங்கே அதைச் சுட்டெரித்துத் பளாக்கி அத்பளைப் பொது மக்களின் கல்லறைகளின்மேல் பவுமாறு பணித்தார்.

மேலும் ஆண்டவரின் இல்லத்திலிருந்த விலைஆடவரின் விடுதிகளையும், அசேராவுக்குத் தேவையான துணிகளை நெய்த பெண்களின் விடுதிகளையும் இடித்துத் தள்ளினார்.

அவர் யூதா நகர்களில் இருந்த எல்லாக் குருக்களையும் எருசலேமுக்கு அழைத்துக் கொண்டார். மேலும் அவர் கேபா முதல் பெயேர்செபாவரை அர்ச்சகர்கள் பபம் காட்டிவந்த எல்லாத் தொழுகை மேடுகளையும் மாசுபடுத்தினார். நகர வாயிலின் இடப்புறம், நகரின் ஆளுநனான யோசுவா நுழைவாயிலின் முகப்பில் எழுப்பியிருந்த தொழுகை மேடுகளையும் இடித்துத் தள்ளினார்.

ஆயினும், தொழுகை மேடுகளின் அர்ச்சகர்கள் எருசலேமில் இருந்த ஆண்டவரது பலிபீடத்தை நெருங்காமல் தங்கள் சகோதரர்களோடு புளியாத அப்பங்களை உண்டு வந்தனர்.

மேலும் மோலெக்கு சிலைக்கு எவனும் தன் மகனையோ மகளையோ பலியாக்காதவாறு, பென்இன்னோம் பள்ளத்தாக்கிலிருக்கும் தொப்பேத்தையும் மாசுபடுத்தினார்.

அவர், ஆண்டவரின் இல்லத்தின் வாயிலருகில் இருந்த நாத்தான்மெலேக்கு என்ற மேற்பார்வையாளன் அறையை அடுத்து, யூதா அரசர்களால் கதிவனுக்கென்று எழுப்பப்பட்டிருந்த குதிரைச் சிலைகளையும் அகற்றினார். கதிரவனின் தேர்களையோ நெருப்பில் சுட்டெரித்தார்.

மேலும் யூதா அரசர்களால் ஆகாசின் மாடியறை மேல்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த பலிபீடங்களையும், ஆண்டவரின் இல்லத்தின் இரண்டு முற்றங்களிலும் மனாசேயால் கட்டப்பட்டிருந்த பலிபீடங்களையும், அரசர் இடித்துத் பளாக்கி அந்த இடிப்பாட்டைப் கிதரோன் நீரோடையில் கொட்டினார்.

எருசலேமுக்குக் கிழக்கே, அழிவின் மலைக்குத் தெற்கே இருந்த தொழுகை மேடுகளை அவர் மாசுபடுத்தினார். இவை, சீதோனியரின் அருவருப்பான அஸ்தரோத்துக்கும், மோவாபியரின் அருவருப்பான கெமோசுக்கும், அம்மோனியரின் இழிபொருளான மில்க்கோமுக்கும் இஸ்ரயேலின் அரசர் சாலமோனால் கட்டப்பட்டவை.

மேலும் அவர் சிலைத்பண்களையும், அசேராக் கம்பங்களையும் வெட்டி வீழ்த்தி, அவ்விடங்களை மனித எலும்புகளால் நிரப்பினார்.

இஸ்ரயேலைப் பாவத்துக்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாம் பெத்தேலில் எழுப்பியிருந்த தொழுகை மேட்டையும் அதன் பலிபீடத்தையும், அவர் தகர்த்துத் தீக்கிரையாக்கினார்: அசேராவைத் பள்பளாக்கி நெருப்பிலிட்டார்.

யோசியா திரும்பிப்பார்த்தபோது, அங்கு மலையின்மேல் கல்லறைகள் இருக்கக் கண்டார். அவர் ஆளனுப்பி அக்கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்துவந்து, கடவுளின் அடியவர் உரைத்த ஆண்டவரின் வாக்கிற்கிணங்க, அவற்றைப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து மாசுபடுத்தினார்.

பின்பு அவர், அதோ! அங்கு தெரியும் நினைவுச் சின்னம் யாருடையது? என்று கேட்டார். அந்நகர மக்கள், அது யூதா நாட்டைச் சார்ந்த கடவுளின் அடியவர் ஒருவரின் கல்லறை. நீர் பெத்தேலின் பலிபீடத்திற்கு இப்படியெல்லாம் செய்வீர் என்று உரைத்தவர் அவர் தான் என்றனர்.

அதற்கு அவர், அப்படியே இருக்கட்டும். அவருடைய எலும்புகளை ஒருவனும் தொடவேண்டாம் என்றார். அப்படியே அவருடைய எலும்புகளையும், சமாரியவைச் சார்ந்த இறைவாக்கினர்களின் எலும்புகளையும் அங்கேயே விட்டு வைத்தனர்.

ஆண்டவருக்குச் சினமுண்டாகுமாறு, இஸ்ரயேலின் அரசர்கள் சமாரிய நகர்களில் எழுப்பியிருந்த தொழுகைமேட்டுக் கோவில்களை எல்லாம் யோசியா அகற்றி, பெத்தேலில் செய்தவாறே அவற்றிற்கும் செய்தார்.

அவர் அங்கிருந்த தொழுகைமேடுகளின் அர்ச்சகர் அனைவரையும் பலிபீடங்களின்மேல் கொன்றார். அப்பலிபீடங்களின்மேல் மனித எலும்புகளைச் சுட்டெரித்தப்பின், அவர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்.

பிறகு அரசர் மக்கள் எல்லோரையும் பார்த்து, இவ்வுடன்படிக்கை மலில் எழுதப்பட்டுள்ளதுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாடுங்கள்.

இந்தப் பாஸ்காவைப்போல், முன்பு இஸ்ரயேலக்குத் தலைமை தாங்கிளய நீதித் தலைவர்களின் காலத்திலோ, இஸ்ரயேல், யூதா அரசர்களின் எல்லாக் காலங்களிலுமோ கொண்டாடப்பட்டதில்லை.

யோசியா ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் எருசலேமில் ஆண்டவரின் பாஸ்கா கொண்டாடப்பட்டது.

குரு இல்க்கியா ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுத்த மலில் எழுதப்பட்டிருந்த திருச்சட்டத்தின் சொற்களை நிறைவேற்றும்படி, யூதா நாட்டிலும், எருசலேம் நகரிலும் இருந்த மந்திரவாதிகளையும், குறிசொல்வோரையும், குலதெய்வங்களையும், சிலைகளையும், அருவருப்புகளையும், யோசியா அகற்றினார்.

இவரைப் போல், தம் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் மோசேயின் சட்ட மலுக்கேற்ப ஆண்டவர்பால் திரும்பிய அரசர் அவருக்குமுன் இருந்ததில்லை: அவருக்குப்பின் தோன்றியதுமில்லை.

எனினும், மனாசே செய்திருந்த அனைத்தையும் முன்னிட்டு யூதாவின் மேல் ஆண்டவர் கடும் சினம் கொண்டிருந்தார்: அதாவது கொடிய சினம் இன்றும் தணியவில்லை.

எனவே, ஆண்டவர், நான் இஸ்ரயேலைப் போல் யூதாவையும் என் திருமுன்னின்று தள்ளவிடுவேன். நான் தேர்ந்து கொண்ட எருசலேம் நகரையும் “எனது பெயர் இங்கு விளங்கும்“ என்று நான் கூறின கோவிலையும் உதறித் தள்ளுவேன் என்றார்.

யோசியாவின் பிற செயல்களும் அவர் செய்தவை யாவும் “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

அவரது காலத்தில் எகிப்து நாட்டின் மன்னன் நெக்கொ என்ற பார்வோன் அசீரிய அரசனை நோக்கிச் செல்கையில், யூப்பிரத்தீசு ஆற்றை வந்தடைந்தான். அப்பொழுது அரசர் யோசியா அவனைத் தாக்கப்புறப்பட்டு வந்தார். ஆனால் பார்வோன் மெகிதோவில் அவரோடு போரிட்டு அவரைக் கொன்றான்.

அவருடைய பணியாளர் அவருடைய சடலத்தை மெகிதோவிலிருந்து எருசலேமுக்குத் தேரில் கொண்டுசென்று, அவருடைய கல்லறையில் அடக்கம் செய்தனர். பிறகு நாட்டு மக்கள் யோசியாவின் மகன் யோவகாசைத் தேர்ந்தெடுத்து, திருப்பொழிவு செய்து அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை அரசனாக்கினர்.

யோவகாசு அரசனான போது அவனுக்கு வயது இருபத்து மூன்று. அவன் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமூற்றால் என்பவளே அவனுடைய தாய்.

யோவகாசு தன் மூதாயைர்கள் செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.

அவன் எருசலேமில் அரசாளாதபடி ஆமாத்து நாட்டு இரிபலாவில் பார்வோன் நெக்கோ அவனைச் சிறையிலிட்டான். மேலும் யூதா நாடு நாலாயிரம் கிலோ வெள்ளியும், நாற்பது கிலோ பொன்னும் கப்பமாகச் செலுத்தவேண்டும் என்று கட்டளையிட்டான்.

பார்வோன் நெக்கோ யோசியாவின் மூத்த மகன் எலியாக்கிமை அவனுடைய தந்தைக்குப் பதிலாக அரசனாக்கி, அவனுடைய பெயரை யோயாக்கிம் என்று மாற்றினான். பின்னர் அவனால் எகிப்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட யோவகாசு அங்கேயே இறந்தான்.

பார்வோனின் கட்டளைப்படி வெள்ளியையும் பொன்னையும் செலுத்த எண்ணிய யோயாக்கிம் தன் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மேலும் வரி விதித்தான். அவரவர் நிலைக்கேற்ப, அவன் வெள்ளியையும் பொன்னும் மிகுதியாகத் திரட்டி, அவற்றைப் பார்வோன் நெக்கோவுக்குச் செலுத்தினான்.

யோயாக்கிம் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து அவன் பதினோர் ஆண்டுகள் எருசலேமில் அரசாண்டான். ரூமாவைச் சார்ந்த பெதாயாவின் மகள் செபுதா என்பவளே அவனுடைய தாய்.

யோயாக்கிம் தன் மூதாதையர் செய்த அனைத்தின்படியே, ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.

அதிகாரம் 24.

அவனது ஆட்சிக் காலத்தில் பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் யூதாவின்மேல் படையெடுத்து வந்தான். எனவே யோயாக்கிம் மூன்று ஆண்டுகள் அவனுக்கு அடி பணிந்திருந்தான்: பின்பு மனத்தை மாற்றிக்கொண்டு அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.

ஆண்டவர் கல்தேயா, சிரியா, மோவாபு, அம்மோன் ஆகிய மகக்ளினங்களைச் சார்ந்தக் கொள்ளைக் கூட்டத்தாரை அவன்மீது ஏவிவிட்டார். அவர்தம் அடியாரான இறைவாக்கினர்மூலம் உரைத்திருந்த வாக்கின்படி யூதாவுக்கு எதிராக அதனை அழிப்பதற்காகவே அவர்களை அங்கே அனுப்பினார்.

உண்மையாகவே ஆண்டவரின் கட்டளைப்படி மனாசேயின் பாவங்களை முன்னிட்டும், அவன் செய்த எல்லாக் காரியங்களை முன்னிட்டும் அவர் அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளவிடுமாறு, இவையெல்லாம் யூதாவுக்கு நிகழ்ந்தன.

மேலும் அவன் குற்றமற்றவர்களின் குருதியைச் சிந்தியதாலும், எருசலேமை மாசற்றவர்களின் குருதியால் நிரப்பியதாலும், ஆண்டவர் அவனை மன்னிக்க மறுத்துவிட்டார்.

யோயாக்கிமின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், “யூதா அரசர்களின் குறிப்பேட்டில்“ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

யோயாக்கிம் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் யோயாக்கின் அரசனானான்.

எகிப்திய மன்னன் மீண்டும் தன் நாட்டை விட்டுப் போருக்கென வெளிவரவில்லை. ஏனெனில், எகிப்திய நதிமுதல் யூப்பரத்தீசு ஆறுவரை எகிப்திய மன்னன் கைவசம் இருந்த அனைத்தையும் பாபிலோனிய மன்னன் கைப்பற்றிக்கொண்டான்.

யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. எருசலேமில் மூன்று மாதமே அவன் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த எல்நாத்தானின் மகள் நெகுஸ்தா என்பவளே அவனுடைய தாய்.

யோயாக்கின் தன் தந்தை செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.

அக்காலத்தில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் படைவீரர் எருசலேமின் மீது படையெடுத்து வந்து நகரை முற்றுகையிட்டனர்.

அப்பொழுது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும் வந்து நகரை முற்றுகையிட்டிருந்த வீரர்களோடு சேர்ந்து கொண்டான்.

எனவே யூதாவின் அரசன் யோயாக்கினும் அவன் தாயும் அவன் அலுவலர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் பாபிலோன் மன்னனிடம் சரணடைந்தனர். அவனைப் பாபிலோன் மன்னன் தான் ஆட்சியேற்ற எட்டாம் ஆண்டில் சிறைப்படுத்தினான்.

பின்பு அவன் ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களை எல்லாம் எடுத்துக் சென்றான். ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, ஆண்டவரின் இல்லத்தில் இஸ்ரயேலின் அரசர் சாலமோன் செய்து வைத்திருந்த எல்லாப் பொன்கலன்களையும் துண்டுதுண்டாக்கினான்.

மேலும் அவன் எருசலேம் முழுவதையும1 தலைவர்கள் அனைவரையும், ஆற்றல் வாய்ந்த பதினாயிரம் படை வீரர்களையும் சிற்பக் கலைஞர்களையும், கொல்லர்களையும் நாடு கடத்தினான். நாட்டில் ஏழை மக்களைத் தவிர எவரையும் விட்டுவைக்கவில்லை.

மேலும் அவன் யோயாக்கினையும், அரசனின் தாயையும், மனைவியரையும், அவனுடைய அதிகாரிகளையும், நாட்டின் தலைவர்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தினான்.

மேலும் வலிமை வாய்ந்த ஏழாயிரம் பேர்களைக் கொண்ட முழுப்படையையும் போர்த் திறனும் உடல் ஆற்றலும் கொண்ட ஆயிரம் தச்சர்களையும், கொத்தர்களையும் அவன் சிறைப்படுத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான்.

யோயாக்கினுக்குப் பதிலாக அவனுடைய சிறிய தந்தை மத்தனியாவை அரசனாக்கி, அவனது பெயரைச் செதேக்கியா என்று மாற்றினான்.

செதேக்கியா அரசனான போது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமூற்றால் என்பவளே அவன் தாய்.

யோயாக்கிம் செய்ததுபோல, செதேக்கியாவும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்ட அனைத்தையும் செய்தான்.

ஆண்டவர், எருசலேமையும் யூதாவையும் தம்முன்னின்று தள்ளிவிடும் அளவுக்கு, அவற்றின் மீது சினம் கொண்டார். மேலும் செதேக்கியா பாபிலோனிய மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.

அதிகாரம் 25.

செதேக்கியாவினது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதம் பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடு எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி அதைச் சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான்.

இவ்வாறு அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டுவரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது.

அவ்வாண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகரில் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.

அப்பொழுது, நகர் மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசர் பூங்காவின் இரு மதில்களுக்கு இடையே அமைந்த வாயில் வழியாக அராபாவை நோக்கி இரவில் ஓடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.

கல்தேயப் படையினர் அரசனைப் பின் தொடர்ந்து சென்று, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்: அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று.

அவர்கள் அரசனைப் பிடித்து, இரிபலாவில் இருந்து பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான்.

பாபிலோனிய மன்னன் செதேக்கியாவின் புதல்வர்களை அவனது கண்முன்னே கொன்றான். மேலும் அவனுடைய கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்.

பாபிலோனிய மன்னன் நெபுகத்தேனசர் ஆட்சியேற்ற பத்தொன்பதாம் ஆண்டு ஜந்தாம் மாதம் ஏழாம் நாளன்று, அவன் பணியாளனும், மெய்க்காப்பாளர் தலைவனமாகிய நெபுசரதான் எருசலேமிற்குள் நுழைந்தான்.

அவன் ஆண்டவரின் இல்லத்தையும், அரசனது அரண்மனையையும், எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் தீக்கிரையாக்கினான்: பெரிய வீடுகளை எல்லாம் தீயிட்டுப் பொசுக்கினான்.

மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்த கல்தேயரின் படையினர் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களைத் தகர்த்தெறிந்தனர்.

மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நகரில் எஞ்சியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னனிடம் சரணடைந்திருந்தவர்களையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்ந்து நாடுகடத்தினான்.

மெய்க்காப்பாளர் தலைவன் திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.

ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத்பண்களையும், தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும் கல்தேயர் பள்பளாக்கி, வெண்கலத்தைப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.

சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், பபக் கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்ட வெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள்.

மேலும், வெள்ளியாலான நெருப்புச் சட்டிகளையும் பலிக்கிண்ணங்களையும் மெய்க்காப்பாளர் தலைவன் எடுத்துச் சென்றான்.

சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்கென்று செய்திருந்த இரு பண்கள், வெண்கலக்கடல், தள்ளு வண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்துமாளாது.

முதல் பண் உயரம் பதினெட்டு முழம். அதன் உச்சியில் மூன்று முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப் பின்னலும் மாதுளம் பழவடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன. இரண்டாம் பணும் அவ்வாறே வலைப் பின்னல் வேலைப்பாடு கொண்டிருந்தது.

தலைமைக் குரு செராயாவையும், துணைக் குரு செப்பனியாவையும், காவலர் மூவரையும் மெய்க்காப்பாளர் தலைவன் சிறைப்படித்தான்:

போர்வீரர்களின் தலைமை அதிகாரியையும், நகரில் இருந்த அரசவையோருள் ஜவரையும் படைத்தேர்வு மற்றும் பயிற்சி அலுவலரின் செயலரையும், நகருள் கண்ட பொதுமக்களுள் அறுபது பேரையும் அவன் நகரினின்று கடத்தினான்.

மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் அவர்களைப் பிடித்து இரிபலாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றான்.

பாபிலோனிய மன்னன் ஆமாத்து நாட்டின் இரிபலாவில் இவர்களை வதைத்துக் கொன்றான். இவ்வாறு யூதா மக்கள் தங்கள் சொந்த நாட்டினின்று கடத்தப்பட்டார்கள்.

மேலும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் சிறைப்பிடிக்காது யூதா நாட்டில் விட்டு வைத்திருந்த மக்களுக்குக் கெதலியாவை ஆளுநனாக நியமித்தான். இவன் சாப்பாவின் மகன் அகீக்காமின் புதல்வன்.

பாபிலோனிய மன்னன் கெதலியாவை ஆளுநனாக நியமித்த செய்தியைப் படைத்தலைவர்களும் அவர்களோடு இருந்த வீரர்களும் கேள்விப்பட்டனர். எனவே நெத்தனியா மகன் இஸ்மயேல், காரயாகு மகன் யோகனான், நெற்றோபாவைச் சார்ந்த தன்குமத்து மகன் செராயா, மாக்காவைச் சார்ந்த யாசனியா ஆகியோர் தம் ஆள்களுடன் மிஸ்பாவிலிருந்து கெதலியாவிடம் வந்தனர்.

கெதலியா அவர்களையும் அவர்களின் ஆள்களையும் நோக்கி, கல்தேய அலுவலர்களுக்கு நீங்கள் அஞ்சவேண்டாம். உங்கள் நாட்டில் இருந்துகொண்டே பாபிலோனிய மன்னனுக்குப் பணிவிடை செய்யுங்கள். அது உங்களுக்கு நல்லது என்று ஆணையிட்டுக் கூறினான்.

ஏழாம் மாதத்தில் அரச குலத்தைச் சார்ந்த எலிசாமாவின் புதல்வனான நெத்தனியா மகன் இஸ்மயேல், பத்து ஆள்களுடன் வந்து கெதலியாவையும், அவனுடன் மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் தாக்கிக் கொன்றான்.

அப்பொழுது மக்கள் யாவரும், சிறியோர் முதல் பெரியோர் வரை, கல்தேயர்களுக்கு அஞ்சித் தங்கள் படைத்தலைவர்களோடு எகிப்துக்கு ஓடிப்போனார்கள்.

யூதா அரசன் யோயாக்கினுடைய அடிமைத்தனத்தின் முப்பத்தேழாம் ஆண்டு, பன்னிரண்டாம் மாதம், இருபத்தேழாம் நாளன்று, அதாவது பாபிலோனிய மன்னன் எபில்மெரொதாக்கு ஆட்சியேற்ற ஆண்டில், யூதா அரசன் யோயாக்கினைத் தலைநிமிரச் செய்து சிறையினின்று விடுவித்தான்.

அவன் யோயாக்கினுடன் கனிவாய்ப் பேசிப் பாபிலோனில் தன்னோடிருந்த அரசர்களுக்கு இல்லாத சிறப்பை அவனுக்கு அளித்தான். எனவே யோயாக்கின் தன் சிறை உடைகளைக் களைந்தெறிந்தான்.

அவன் தன் வாழ்நாள் எல்லாம் அரசனுடன் தவறாது விருந்துண்டு வந்தான்.

அவனுடைய அன்றாடத் தேவைகளுக்காக அவன் வாழ்நாள் முழுவதும் மன்னனால் அவனுக்கு ஒவ்வொரு நாளும் செலவுப்படி வழங்கப்பட்டு வந்தது.

புத்தகம் 13 - குறிப்பேடு - முதல் நூல்

அதிகாரம் 1.

ஆதாம், சேத்து, ஏனோசு:

கேனான், மகலலேல், எரேது,

ஏனோக்கு, மெத்பசேலா, இலாமேக்கு,

நோவா, சேம், காம், எப்பேத்து.

எப்பேத்தின் மைந்தர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், பபால், மேசேக்கு, தீராசு,

கோமேரின் மைந்தர்: அஸ்கெனாசு, இரிப்பாத்து, தோகர்மா.

யாவானின் மைந்தர்: எலிசா, தர்சீசு, இத்திம், தோதானிம்.

காமின் மைந்தர்: கூசு, எகிப்து, பூத்து, கானான்.

கூசின் மைந்தர்: செபா, அவிலா, சப்தா, இரகமா, சப்தக்கா: இரகமாவின் மைந்தர்: சேபா, தெதான்.

கூசுக்கு நிம்ரோது பிறந்தார்: அவர் உலகில் ஆற்றல் மிக்கவர் ஆனார்.

எகிப்தின் வழிவந்தோர்: ழதியர், அனாமியர், இலகாபியர், நப்துகியர்,

பத்ரூசியர், பெலிஸ்கியரின் மூல இனத்தவரான கஸ்லுகியர், கப்தோரியர்.

கானானின் வழிவந்தோர்: தலை மகன் சீதோன், இரண்டாம் மகன் கேத்து,

மற்றும் எபூசியர், எமோரியர், கிர்காசியர்,

இவ்வியர், அர்க்கியர், சீனியர்,

அர்வாதியர், செமாரியர், ஆமாத்தியர்.

சேமின் மைந்தர்: ஏலாம், அசூர், அர்ப்பகசாது, ழது, ஆராம், ஊசு, ஊல், கெத்தேர், மேசெக்கு,

அர்ப்பகசாதுக்குச் சேலா பிறந்தார். சேலாவுக்கு ஏபேர் பிறந்தார்.

ஏபேருக்கு இரண்டு மைந்தர் பிறந்தனர்: ஒருவர் பெயர் பெலேகு, ஏனெனில் அவருடைய நாள்களில் மண்ணகம் பிரிவுற்றது. அவர் சகோதரர் பெயர் யோக்தான்.

யோக்தானுக்குப் பிறந்தோர்: அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு,

ஆதோராம், ஊசால், திக்லா,

ஏபால், அபிமாவேல், சேபா,

ஓபீர், அவிலா, யோபாபு: இவர்கள் அனைவரும் யோக்தானின் புதல்வர்.

சேம், அர்பகசாது, சேலா,

ஏபேர், பெலேகு, இரெயு,

செருகு, நாகோர், தெராகு,

ஆபிராம் என்ற ஆபிரகாம்.

ஆபிரகாமின் மைந்தர்: ஈசாக்கு, இஸ்மயேல்: அவர்களுடைய தலைமுறைகள் பின்வருமாறு:

இஸ்மயேலின் தலைமகன் நெபயோத்து, மற்றும் கேதார், அத்பியேல், மிப்சாம்,

மிஸ்மா, பமா, மாசா, அதாது, தேமா,

எற்டிர், நாபிசு, கேதமா: இவர்களே இஸ்மயேலின் மைந்தர்.

ஆபிரகாமின் மறுமனைவி கெற்டிரா பெற்றெடுத்த மைந்தர்: சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இஸ்பாக்கு, சூவாகு, யோக்சானின் மைந்தர்: சேபா, தெதான்.

மிதியானின் மைந்தர்: ஏப்பாகு, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா: இவர்கள் அனைவரும் கெற்டிராவிடம் பிறந்த புதல்வர்.

ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார்: ஈசாக்கின் மைந்தர்: ஏசா, இஸ்ரயேல்.

ஏசாவின் புதல்வர்: எலிப்பாசு. இரகுவேல், எயூசு, யாலாம், கோராகு.

எலிப்பாசின் புதல்வர்: தேமான், ஓமார், சேபி, காத்தாம், கெனாசு, திம்னா, அமலேக்கு.

இரகுவேலின் புதல்வர்: நாகத்து, செராகு, சம்மாகு, மிசா.

சேயிரின் மைந்தர்: லோத்தான், சோபால், சிபயோன், அனா, தீசோன், ஏட்சேர், தீசான்.

லோத்தானின் புதல்வர்: ஓரி, ஓமாம்: லோத்தானின் சகோதரி திம்னா,

சோபாலின் புதல்வர்: அலயான், மானகாத்து, ஏபால், செப்பி, ஓனாம்: சிபயோனின் புதல்வர்: அய்யா, அனா.

அனாவின் மகன் தீசோன்: தீசோனின் புதல்வர்: அம்ரான், எஸ்பான், இத்ரான், கெரான்.

ஏட்சேரின் புதல்வர்: பில்கான், சகவான், யாக்கான்: தீசானின் புதல்வர்: ஊசு, ஆரான்.

இஸ்ரயேல் மக்களை அரசர் ஆட்சி செய்யுமுன் ஏதோம் நாட்டை ஆண்ட அரசர் பெகோரின் பேலோ: இவரது நகரின் பெயர் தின்காபா.

பேலோ இறந்தபோது, போஸ்ராவைச் சார்ந்த செராகு மகன் யோவாபு அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.

யோவாபு இறந்தபோது, தேமானியர் நாட்டைச் சார்ந்த ஊசாம் அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.

ஊசாம் இறந்தபோது, மோவாபு நாட்டில் மிதியானியரை முறியடித்த பெதாதின் மகன் அதாது அரசர் ஆனார். இவரது நகரின் பெயர் அவித்து.

அதாது இறந்தபோது மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார்.

சம்லா இறந்தபோது நதியோர இரகபோத்தியர் சாவூல் அரசர் ஆனார்.

சாவூல் இறந்தபின் அக்போரின் மகன் பாகால் அனான் அவருக்குப் பதிலாக அரசர் ஆனார்.

பாகால் அனான் இறந்தபின், அதாது அவருக்குப் பதிலாக அரசர் ஆனார். அவரது நகரின் பெயர் பாயி: மேசகாபின் பேத்தியும் மத்ரேத்தின் மகளுமான மெகேற்றபேல் என்பவரே அவர் தம் மனைவி.

அதாது இறந்தார். ஏதோமின் குடும்பத் தலைவர்கள்: திம்னா, அலியா, எத்தேத்து,

ஓகோலிபாமா, ஏலா, பீனோன்.

கெனாசு, தேமான், மிபுசார்,

மக்தியேல், ஈராம்: இவர்களே ஏதோமின் குடும்பத் தலைவர்கள்.

அதிகாரம் 2.

இஸ்ரயேலின் மைந்தர்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,

தாண், யோசேப்பு, பென்யமின், நப்தலி, காத்து, ஆசேர்.

யூதாவின் புதல்வர்: ஏர், ஓனான், சேலா, இம்மூவரும் கானானியப் பெண் பத்சூவாவிடம் அவருக்குப் பிறந்தவர்கள். அவர்களில் யூதாவின் தலைமகன் ஏர் ஆண்டவரின் பார்வையில் தீயவனாய் இருந்ததால் அவர் அவனைச் சாகடித்தார்.

யூதாவின் மருமகள் தாமார் அவருக்குப் பெற்ற புதல்வர்: பேரேட்சு, செராகு: யூதாவின் புதல்வர் மொத்தம் ஜந்து பேர்.

பெரேட்சின் புதல்வர்: எட்சரோன், ஆமூல்.

செராகின் புதல்வர்: சிமிரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா, ஆக மொத்தம் ஜந்து போர்.

விலக்கப்பட்டதை வைத்துக் கொண்டதால் தவறிழைத்து இஸ்ரயேலருக்குப் பெருங்கேடு விளைவித்த ஆக்கார் கர்மியின் புதல்வருள் ஒருவன்.

ஏத்தானின் மகன் அசரியா.

எட்சரோனுக்குப் பிறந்த புதல்வர்: எரகுமவேல், இராம், கெழபாய்.

இராமுக்கு அம்மினதாபு பிறந்தார், அம்மினதாபுக்கு யூதா மக்களின் தலைவராகிய நகசோன் பிறந்தார்.

நகசோனுக்கு சல்மா பிறந்தார்: சல்மாவுக்குப் போவாசு பிறந்தார்.

போவாசுக்குப் ஒபேது பிறந்தார்: ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்.

ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: தலைமகன் எலியாபு, இரண்டாம் மகன் அபினதாபு, மூன்றாம் மகன் சிமயா.

நான்காம் மகன் நெத்தனியேல், ஜந்தாம் மகன் இரதாய்,

ஆறாம் மகன் ஒட்சேம், ஏழாம் மகன் தாவீது.

இவர்களின் சகோதரரிகள்: செரூயா, அபிகாயில். செருயாவின் புதல்வர்: அபிசாய், யோவாப், அசாயேல் என்னும் மூவர்.

அபிகாயில் இஸ்மயேலராகிய எத்தேருக்கு அமாசாவைப் பெற்றெடுத்தார்.

எட்சரோனின் மகன் காலேபுக்கு தம் மனைவி எரியோதைச் சார்ந்த அசூபா மூலம் பிறந்த புதல்வர் இவர்களே: ஏசேர், சோபாபு, அர்தோன்.

அசூபா இறந்தபோது, காலேபு எப்ராத்தை மணந்து கொண்டார்: அவர் அவருக்குக் கூரைப் பெற்றெடுத்தார்.

கூருக்கு ஊரி பிறந்தார். ஊரிக்கு பெட்சலயேல் பிறந்தார்.

பின்பு, எட்சரோன் தமக்கு அறுபது வயதானபோது கிலயாதின் மூதாதையான மாக்கிரின் புதல்வியை மணந்து அவருடன் உறவு கொண்டார். அவர் அவருக்குச் செகூபைப் பெற்றெடுத்தார்.

செகூபுக்கு யாயிர் பிறந்தார். இவருக்கு கிலயாது நாட்டில் இருபத்து மூன்று நகர்கள் இருந்தன.

கெசூரும் ஆராமும் அவர்களிடமிருந்து அவ்வோத்யாயிரையும் கெனாத்திலுள்ள சிற்டிர்களையும் சேர்த்து மொத்தம் அறுபது நகர்களைக் கைப்பற்றினார்கள். இவை யாவும் கிலயாதின் மூதாதையாகிய மாக்கிரின் புதல்வர்களுக்கு உரியவை.

எட்சரொன் எப்ராத்தாவில் இறந்தபின், அவர் மனைவி அபியா காலேபுக்கு தெக்கோவாவின் மூதாதையான அஸ்கூரைப் பெற்றெடுத்தாள்.

எட்சரோனின் தலைமகனான எரகுமவேலின் மைந்தர்: தலைமகன் இராம் மற்றும் பூனா, ஒரேன், ஒட்சேம், அகியா.

எரகுமவேலுக்கு அத்தாரா என்ற மற்றொரு மனைவி இருந்தார். அவரே ஒனாமின் தாய்.

எரகுமவேலின் தலை மகனான இராமின் புதல்வர்: மாகாசு, யாமின், ஏக்கேர்.

ஓனாமின் புதல்வர்: சம்மாய், யாதா: சம்மாயின் புதல்வர்: நாதாபு, அபிசூர்.

அபிசூரின் மனைவியின் பெயர் அபிகாயில்: அவர் அவருக்கு அக்பானையும் மோலிதையும் பெற்றெடுத்தார்.

நாதாபின் புதல்வர்: செலேது, அப்பயிம்: செலேது புதல்வரின்றி இறந்தார்.

அப்பயிம் புதல்வர், இசி: இசியின் புதல்வர், சேசான்: சேசானின் புதல்வருள் அக்லாய் ஒருவர்.

சம்மாயின் சகோதரரான யாதாவின் புதல்வர்: எத்தேர், யோனத்தான். எத்தேர் புதல்வரின்றி இறந்தார்.

யோனத்தானின் புதல்வர்: பெலேத்து, சாசா: இவர்கள் எரகுமவேலின் வழிமரபினர்.

சேசானுக்கு புதல்வர் இல்லை: புதல்வியர் மட்டுமே இருந்தனர். சேசானுக்கு யார்கா என்ற எகிப்தியப் பணியாளர் ஒருவர் இருந்தார்.

சேசான் தம் புதல்வியருள் ஒருவரை யார்கா என்ற தம் பணியாளருக்கு மணமுடித்துக் கொடுத்தார். அவர் அவருக்கு அத்தாயைப் பெற்றெடுத்தார்.

அத்தாய்க்கு நாத்தான் பிறந்தார்: நாத்தானுக்குப் சாபாத்து பிறந்தார்.

சாபாத்துக்கு எப்லால் பிறந்தார்: எப்லாலுக்கு ஓபேது பிறந்தார்.

ஓபேதுக்கு ஏகூ பிறந்தார். ஏகூவுக்கு அசரியா பிறந்தார்.

அசரியாவுக்கு ஏலேசு பிறந்தார்: ஏலேசுக்கு எலயாசா பிறந்தார்.

எலியாசாவுக்குச் சிஸ்மாய் பிறந்தார்: சிஸ்மாய்க்குச் சல்ழம் பிறந்தார்.

சல்ழமுக்கு எக்கமியா பிறந்தார்: எக்கமியாவுக்கு எலிசாமா பிறந்தார்.

எரமகுமவேலின் சகோதரரான காலேபின் மைந்தர்: தலைமகன் மேசா: இவர் சீபின் தந்தை: இவர் எப்ரோனின் தந்தையாகிய மாரேசாவின் புதல்வர்.

எப்ரோனின் புதல்வர்: கோராகு, தப்புவாகு, இரக்கேம், செமா.

செமாவுக்கு இரகாம் பிறந்தார்: இவர் யோர்க்கயாமின் தந்தை. இரக்கேமுக்கு சம்மாய் பிறந்தார்.

சம்மாயின் புதல்வர்: மாகோன்: மாகோன் பெத்சூரின் தந்தை.

காலேபின் மறுமனைவி ஏப்பா ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றெடுத்தார்: ஆரானுக்குக் காசேஸ் பிறந்தார்.

யக்தாயின் புதல்வர்: இரகேம், யோத்தாம், கேசான், பெலேது, ஏப்பா, சாகாபு.

காலேபின் மறுமனைவி மாக்கா செபேரையும் திர்கனாவையும் பெற்றெடுத்தார்.

மேலும் அவர் மத்மன்னாவின் தந்தை சாகாபையும் மக்பேனாவிற்கும் கிபயாவிற்கும் தந்தையான சொவாவையும் பெற்றெடுத்தார்: காலேபின் புதல்வி அக்சா.

இவர்களே காலேபின் புதல்வர்கள்: எப்ராத்தாவின் தலைமகனான கூரின் புதல்வர்: கிரியத்து எயாரிமின் மூதாதையான சோபால்.

பெத்லகேமின் மூதாதையான சல்மா, பெத்காதேரின் மூதாதையான ஆரேபு.

கிரியத்து எயாரிமின் மூதாதையாகிய சோபாலின் மற்ற புதல்வர்: ஆரோவே, ஆட்சி மெனுகோத்து.

கிரியத்து எயாரிமின் குடும்பங்கள்: இத்திரியர், பூத்தியர், சுமாத்தியர், மிஸ்ராவியர், இவர்களிடமிருந்து சோராத்தியரும் எஸ்தாவோலியரும் தோன்றினர்.

சல்மாவின் புதல்வர்: பெத்லகேமியர், நெற்றோபாயர், அற்றரோத் பெத்யோவாபு, மானகத்தியரிலும் பாதி மக்களான சோரியர்.

யாபேத்தில் குடியிருந்த எழுத்தரின் குடும்பங்கள்: திராத்தியர், சிமயாத்தியர், சூக்காத்தியர்: இரேக்கபு வீட்டாரின் மூதாதையான அமாத்திலிருந்து தோன்றிய கேனியர் அவர்களே.

அதிகாரம் 3.

எபிரோனில் தாவீதுக்குப் பிறந்த புதல்வர் இவர்களே: இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாம் பெற்றெடுத்த தலைமகன் அம்னோன்: கர்மேலைச் சார்ந்த அபிகாயில் பெற்றெடுத்த தானியேல் இரண்டாமவர்:

கெசூரின் அரசன் தல்மாய் மகள் மாக்கா பெற்றெடுத்த அப்சலோம் மூன்றாமவர்: அகீத்து பெற்றெடுத்த அதோனியா நான்காமவர்:

அபித்தால் பெற்றெடுத்த செப்பத்தியா ஜந்தாமவர்: மனைவி எக்லா பெற்றெடுத்த இத்ரயாம் ஆறாமவர்.

இந்த ஆறு பேரும் எரிரோனில் அவருக்குப் பிறந்தவர்கள். அங்கே அவர் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் ஆட்சி செலுத்தினார். எருசலேமிலோ முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.

எருசலேமில் அவருக்குப் பிறந்தோர் இவர்களே: அம்மியேலின் புதல்வி பத்சூவா பெற்றெடுத்த சிமயா, சோபாபு, நாத்தான், சாலமோன் ஆகிய நால்வர்.

ஏனையோர்: இப்கார், எலிசாமா, எலிப்பலேற்று,

நோகாகு, நெபேகு, யாப்பியா,

எலிசாமா, எலயாதா, எலிப்பலேற்று ஆகிய ஒன்பது பேர்.

இவர்கள் அனைவரும் தாவீதின் புதல்வர்: மற்றும் இவர்களின் சகோதரி தாமார்: இன்னும் மறுமனைவியர் மூலம் அவருக்கு வேறு புதல்வரும் இருந்தனர்.

சாலமோனின் புதல்வர்: இரகபெயாம், அவர் மகன் அபியா, அவர் மகன் ஆசா, அவர் மகன் யோசபாத்து.

அவர் மகன் யோராம், அவர் மகன் அகசியா, அவர் மகன் யோவாசு,

அவர் மகன் அமட்சியா, அவர் மகன் அசரியா, அவர் மகன் யோத்தாம்,

அவர் மகன் ஆகாசு, அவர் மகன் எசேக்கியா, அவர் மகன் மனாசே,

அவர் மகன் ஆமோன், அவர் மகன் யோசியா.

யோசியாவின் புதல்வர்: தலைமகன் யோகனான், இரண்டாமவர் யோயாக்கிம், மூன்றாமவர் செதேக்கியா, நான்காமவர் சல்ழம்.

யோயாக்கிமின் புதல்வர்: அவர் மகன் எக்கொனியா, அவர் மகன் செதேக்கியா.

சிறைப்பட்ட எக்கோனியாவின் புதல்வர்: அவர் மகள் செயல்தியேல்,

மல்கிராம், பெதாயா, செனாட்சர், எக்கமியா, ஒசாமா, நெதமியா.

பெதாயாவின் புதல்வர்: செருபாபேல், சிமயி: செருபாபேலின் புதல்வர்: மெசுல்லாம், அனனியா, அவர்களின் சகோதரி செலோமித்து

மற்றும் ஆசுபா, ஒகேல், பெரக்கியா, அசதியா, “யூசபு கெசேது“ என்னும் ஜவர்.

அனனியாவின் புதல்வர்: பெலற்றியா, ஏசாயா: அவர் மகன் இரபாயா: அவர் மகன் அர்னான்: அவர் மகன் ஒபதியா: அவர் மகன் செக்கனியா.

செக்கனியாவின் புதல்வர்: செமாயா: அவர் புதல்வர்: அற்டிசு, இகால், பாரியகு, நெயரியா, சாபாற்று ஆக மொத்தம் அறுவர்.

நெயரியாவின் புதல்வர்: எலியோவனாய், எசேக்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூவர்.

எலியோவனாயின் புதல்வர்: ஓதவியா, எலியாசிபு, பெலாயா, அக்கூபு, யோகனான், தெலாயா, அனானி என்னும் எழுவர்.

அதிகாரம் 4.

யூதாவின் புதல்வர்: பெரேட்சு, எட்சரோன், கர்மி, கூர், சோபால்.

சோபாலின் மகன் இரயாயாவுக்கு யாகத்து பிறந்தார்: யாகத்துக்கு அகுமாயும் இலாகாதும் பிறந்தனர்: சோராவியர் குடும்பங்கள் இவையே.

ஏத்தாம் என்னும் மூதாதையின் வழிமரபினர் இவர்கள்: இஸ்ரியேல், இஸ்மா, இத்பாசு: அவர்களின் சகோதரி பெயர் அட்சலெல்போனி.

மேலும் கெதோரின் மூதாதை பெனுவேல், ஊசாவின் மூதாதை எட்சேர். இவர்கள் பெத்லகேமியரின் மூதாதையும் எப்ராத்தா என்பவரின் தலைமகனுமான கூரின் புதல்வர்கள்.

தெக்கோவாவின் மூதாதையான அஸ்கூருக்கு ஏலா, நாரா என்னும் இரு மனைவியர் இருந்தனர்.

நாரா அவருக்கு அகுசாம், ஏப்பேர், தேமனி, அகஸ்தாரி ஆகியோரைப் பெற்றெடுத்தாள்: நாராவின் புதல்வர் இவர்களே.

ஏலாவின் புதல்வர்: செரேத்து, இட்சகார், எத்னான்.

அனுபு, சோபேபா, ஆரூம் மகன் அகரகேலின் குடும்பத்தினர் ஆகியோருக்குக் கோசு தந்தை.

யாபேசு தம் சகோதரரைவிடச் சிறப்பு மிக்கவராய் இருந்தார். அவர் தம் தாய் “நான் வேதனையுற்று அவனைப் பெற்றெடுத்தேன்“ என்று சொல்லி அவருக்கு “யாபேசு“ என்று பெயரிட்டார்.

யாபேசு இஸ்ரயேலின் கடவுளை நோக்கி, கடவுளே, மெய்யாகவே நீர் எனக்கு ஆசிவழங்கி, என் எல்லையைப் பெரிதாக்குவீராக! உம் கை என்னோடு இருப்பதாக! தீங்கு என்னைத் துன்புறத்தாது நீர் பாதுகாத்தருள்வீராக! என்று மன்றாடினார். கடவுளும் அவர் வேண்டியதை அருளினார்.

சூகாவின் சகோதரருக்குக் கெலுபுக்கு மெகீர் பிறந்தார். அவர் எஸ்தோனின் மூதாதை.

எஸ் தோனுக்கு பெத்ராபா, பாசயாகு, ஈர்னகாசின் மூதாதை தெகின்னா ஆகியோர் பிறந்தனர். இவர்கள் இரேக்காவில் வாழும் மனிதர்கள்.

கெனாசின் புதல்வர்: ஒத்னியேல், செராயா: ஒத்னியேலின் புதல்வர்: அத்தாத்து, மெயோனத்தாய்.

மெயோனத்தாய்க்கு ஒப்ரா பிறந்தார்: கோராசிம் பள்ளத்தாக்கில் வாழ்ந்த கைவினைஞரின் மூதாதையான யோவாபு செராயாவுக்குப் பிறந்தார்.

எப்புன்னே மகன் காலேபின் புதல்வர்: ஈரு, ஏலா, நாவாம்: ஏலாவின் மகன் கெனானி.

எகலலேலின் புதல்வர்: சீபு, சிப்பா, தீரியா, அசரேல்.

எஸ் ராவின் புதல்வர்: எத்தேர், மெரேது, ஏப்பேர், யாலோன். மெரேது மணந்த பார்வோன் மகள் பித்தியா பெற்றெடுத்த புதல்வர்: மிரியாம், சம்மாய், எஸ்தமோவாவின் மூதாதை இஸ்பாக்:

மெரேகின் யூதா குல மனைவி பெற்றெடுத்தவர்: கெதோரின் மூதாதை எரேது, சோக்கோவின் மூதாதை கெபேர், சானோவக்கின் மூதாதை எகுத்தியேல்.

நகாமின் சகோதரியாகிய ஓதியாவின் மனைவி பெற்றெடுத்தவர்: கர்மியரான கெயிலாவின் மூதாதை, மாக்காத்தியரான எஸ்தெமோவாவின் மூதாதை.

சீமோனின் புதல்வர்: அம்னோன், ரின்னா, பென்கனான், தீலோன்: இசீயின் புதல்வர்: சோகேத்து, பென்சோகேத்து.

யூதாவின் மகன் சேலாவின் புதல்வர்: லேக்காவின் மூதாதை ஏர், மாரேசாவின் மூதாதை இலாதா, பெத்தஸ் பெயாவில் நார்ப்பட்டு நெய்த தொழிலாளர் குடும்பங்கள்,

யோக்கீம், கோஸ்பாவைச் சார்ந்த ஆள்கள், மோவாபியரை மணந்த யோவாசு, சாராபு என்பவர்களுமே. அவர்கள் பெத்லகேம் திரும்பியுள்ளார்கள். இவற்றுக்கான பதிவேடுகள் பழங்காலத்தவை.

அவர்கள் நெத்தாயிமிலும் கெதேராவிலும் குயவராய் வாழ்ந்தனர். அவர்கள் அரசப் பணிக்கென அரசருடன் அங்கே வாழ்ந்து வந்தனர்.

சிமியோனின் புதல்வர்: நெமுவேல், யாமின், யாரிபு, செராகு, சாவூல்

அவர் மகன் சல்ழம், அவர் மகன் மிப்சாம், அவர் மகன் மிஸ்மா.

மிஸ்மாவின் புதல்வர்: அவர் மகன் அம்முயேல், அவர் மகன் சக்கூர், அவர் மகன் சிமயி.

சிமயிக்கு பதினாறு புதல்வரும் ஆறு புதல்வியரும் இருந்தனர்: அவரின் சகோதரர்களுக்குப் புதல்வர் பலர் இருந்ததில்லை: அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் யூதாவின் புதல்வரைப்போல் பெருகவில்லை.

அவர்கள் குடியேறிய இடங்கள்: பெயேர்செபா, மேலதா, அட்சார் சூவால்,

பில்கா, எட்சேம், தோலாது,

பெத்துவேல், ஒர்மா, கீக்லாகு,

பெத்மர்காபோத்து, அட்சார்சூசிம், பெத்பிரி, சாரயிம் என்பவை. தாவீது அரசாளும்வரை இவை அவர்களின் நகர்களாய் இருந்தன.

அவர்கள் வாழ்ந்த ஜந்து வேறு இடங்கள்: ஏத்தாம், அயின்: ரிம்மோன், தோக்கேன், ஆசான்:

இந்நகர்களைச் சுற்றிலும் பாகால்வரை அமைந்த அனைத்துச் சிற்டிர்களும் அவர்களுடையவை. இவை அவர்களின் குடியிருப்புகள்: அவர்கள் தங்களுக்கென ஒரு தலைமுறைக் குறிப்பேடு வைத்திருந்தனர்.

மெசோபாபு, யம்லேக்கு, அமட்சியா மகன் யோசா,

யோவேல், அசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் மகன் ஏகூ,

எலியோவனாய், யாக்கோபா, எசோகாயா, அசாயா, அதியேல், எசிமியேல், பெனாயா,

செமாயாவின் மகன் சிம்ரிக்குப் பிறந்த எதாயாவின் புதல்வனான அல்லோனின் மகன் சிபியின் புதல்வன் சீசா.

பெயர் பெயராகக் குறிக்கப்பட்டிருந்த இவர்கள் தம் குடும்பங்களில் தலைவர்களாய் இருந்தனர். இவர்களின் மூதாதை வீட்டார் பெருவாரியாகப் பெருகினர்.

அவர்கள் தங்கள் மந்தைக்கு மேய்ச்சலைத் தேடிப் பள்ளத்தாக்கின் கீழ்ப்புறத்தில் கெதோர் நுழைவுவரை சென்றனர்.

அங்கே அவர்கள் செழிப்புமிகு, நல்ல மேய்ச்சலைக் கண்டார்கள். நிலம் விரிந்து பரந்து, அமைதியுடனும் வளத்துடனும் இருந்தது. காமைச் சார்ந்தோர் முன்பு அங்குக் குடியிருந்தனர்.

பெயர் பெயராகக் குறிக்கபட்டுள்ள இவர்கள் யூதா அரசன் எசேக்கியாவின் நாள்களில் அங்குச் சென்றார்கள். அங்குக் காணப்பட்ட கூடாரங்களையும் மெயுனியரையும் வெட்டி வீழ்த்தினர். இந்நாளில் இருப்பது போல் அவர்களை அழித்தொழித்து, தங்களின் ஆட்டுமந்தைக்கு மேய்ச்சல் நிலத்தைக் கண்டதால், அங்கேயே அவர்கள் குடியேறினார்கள்.

சிமியோன் புதல்வர்களாகிய அவர்களுள் ஜந்மறு பேர், இசீயின் புதல்வர்களான பெலத்தியா, நெகரியா, இரபாயா, உசியேல் ஆகியோரின் தலைமையில் சேயிர் மலைக்குச் சென்றனர்.

அவர்கள் அமலேக்கியருள் தப்பிப் பிழைத்த எஞ்சியோரை அழித்து, அன்று முதல் இந்நாள்வரை அங்கே வாழ்ந்து வருகின்றனர்.

அதிகாரம் 5.

இஸ்ரயேலின் தலைமகன் ரூபனின் புதல்வர்: அவர் தலைமகனாய் இருந்தும் தம் தந்தையின் மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தியதால் அவரது தலைமகனுரிமை இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் புதல்வர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே தலைமுறை அட்டவணையில் அவர் தலைமகனாய்க் கருதப்படவில்லை.

யூதா, தம் சகோதரருள் வலிமைமிக்கவராயிருந்தும் அவரிடமிருந்து தலைவர் ஒருவர் தோன்றியபோதிலும், தலைமகனுரிமை யோசேப்புக்கே உரித்தாயிற்று.

இஸ்ரயேலின் தலைமகன் ரூபனின் புதல்வர்: அனோக்கு, பல்ழ, எட்சரோன், கர்மி.

யோவேலின் புதல்வர்: அவர் மகன் செமாயா, அவர் மகன் கோகு, அவர் மகன் சிமயி,

அவர் மகன் மீக்கா, அவர் மகன் இரயாயா, அவர் மகன் பாகால்,

அவர் மகன் பெயேரா: ரூபனியரின் தலைவரான அவரை அசீரிய மன்னன் தில்கத்பில்னேசர் சிறைப்படுத்திச் சென்றான்.

அவர்களது உறவின்முறையில் குடும்ப வாரியாகத் தலைமுறை அட்டவணையில் குறிக்கப்பட்டோர்: தலைவர் எயியேல், செக்கரியா,

யோவேல் மகன் செமாவிற்குப் பிறந்த ஆசாசு புதல்வன் பெலா. அவர் வழிமரபினர் அரோயேரிலிருந்து நேபோ, பாகால்மெயோன் வரை குடியேறியிருந்தனர்.

அவர்கள் கிழக்கே யூப்பிரத்தீசு நதி முதல் பாலைநிலத்தின் எல்லை வரை வாழ்ந்து வந்தனர்: கிலயாது நாட்டில் அவர்களின் கால்நடைகள் பெருகின.

அவர்கள் சவுலின் நாள்களில் அகாரியருடன் போர்த்தொடுத்துத் தம் கையால் அவர்களை வீழ்த்தினர்: கிலயாதின் கிழக்குப் புறம் எங்கும் தங்கள் கூடாரங்களில் வாழ்ந்தனர்.

அவர்களுக்கு வடக்கே பாசான் நிலப்பகுதியில் சலிக்காவரை காத்தின் புதல்வர் குடியேறியிருந்தனர்.

பாசானில், தலைவரான யோவேல், அடுத்தவரான சாப்பாம், யானாய், சாப்பாத்து ஆகியோர் வாழ்ந்தனர்.

அவர்கள் மூதாதையர் வீட்டுச் சகோதரர் மிக்கேல், மெசுல்லாம், சேபா, யோராய், யாக்கான், சீயா, ஏபேர் என்னும் ஏழு பேர்.

இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபிகயிலின் புதல்வர்: ஊரி யாரோவாகின் மகன்: அவர் கிலெயாதின் மகன்: அவர் மிக்கேலின் மகன்: அவர் எசிசாயின் மகன்: அவர் யாகுதோவின் மகன்: அவர் பூசின் மகன்.

கூனிக்குப் பிறந்த அப்தியேலின் மகன் அகி அவர்களின் மூதாதை வீட்டுக்குத் தலைவராய் இருந்தார்.

அவர்கள் கிலயாது, பாசான், அதைச் சார்ந்த நகர்கள், சாரோனின் மேய்ச்சல் நிலப்பகுதிகள் மற்றும் அவற்றின் எல்லைகள்வரை குடியேறினர்.

அவர்கள் யாவரும் யூதா அரசன் யோத்தாம் காலத்திலும் இஸ்ரயேல் அரசன் எரொபவாம் நாள்களிலும் தலைமுறை அட்டவணையில் பதிவு செய்யப்பட்டனர்.

ரூபனின் புதல்வர், காத்தின் புதல்வர், மனாசேயின் பாதிக்குலத்தார் ஆகியோர்களிடையே கேடயத்தையும் வாளையும் ஏந்தி, வில் எய்து, போர்ப்பயிற்சி பெற்ற வலிமைமிக்கோர் நாற்பத்து நாலாயிரத்து எழுமற்று அறுபது பேர் இருந்தனர்.

அவர்கள் ஆகாரியர், எத்பர், நாப்பிசு, நோதாபு ஆகியோரை எதிர்த்துப் போரிட்டனர்.

அப்பொழுது அவர்கள் ஆகாரியரையும் அவர்களோடு இருந்த யாவரையும் எதிர்ப்பதற்குரிய ஆற்றலைக் கடவுளிடமிருந்து பெற்றார்கள். பகைவரும் அவர்களிடம் கையளிக்கப்பட்டனர். ஏனெனில் அவர்கள் போர் நடக்கும் போது கடவுளை நோக்கி மன்றாடினார்கள். அவர் மேல் அவர்கள் நம்பிக்கை வைத்ததால் அவரும் அவர்களின் மன்றாட்டைக் கேட்டருளினார்.

அவர்கள் தம் எதிரிக்குச் சொந்தமான கால்நடைகளான ஜமபத்தாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு இலட்சத்து ஜம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், இலட்சம் ஆள்களையும் உயிருடன் கைப்பற்றினார்கள்.

அந்தப் போர் கடவுளால் நடத்தப்பட்டதால், பலர் வெட்டி வீழ்த்தப்பட்டனர். நாடு கடத்தப்படும்வரை அவர்கள் அங்கேயே வாழ்ந்தார்கள்.

மனாசேயின் பாதிக்குலத்துப் புதல்வரும் இந்த நாட்டிலேயே வாழ்ந்த வந்தனர். அவர்கள் பாசான் முதல் பாகால்எர்மோன், செனிர், எர்மோன் மலைவரைக்கும் பெருவாரியாகப் பெருகியிருந்தனர்.

அவர்களின் மூதாதை வீட்டுத் தலைவர்கள் இவர்களே: ஏப்பேர், இசி, எலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஓதவியா, எகுதியேல். அவர்கள் ஆற்றல்மிக வீரர்களாகவும் புகழ்மிக்கவர்களாகவும் தம் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

அவர்களோ தங்கள் கண்முன்னே கடவுள் அழித்து விட்ட நாட்டு மக்களின் தெய்வங்களைப் பின்பற்றிய வேசித்தனத்தின் மூலம் தங்கள் மூதாதையரின் கடவுளுக்குத் துரோகம் செய்தனர்.

ஆதலால் இஸ்ரியேலின் கடவுள் அசீரிய மன்னன் பூலையும், அசீரிய மன்னன் தில்கத்பில்னேசரையும் கிளர்ந்தெழச் செய்தார். அவன் ரூபனியரையும், காத்தியரையும், மனாசேயின் பாதிக்குலத்தாரையும் சிறைப்படுத்தி, அலாகு, ஆபோர், ஆரா, கோசான் ஆற்றுப்பகுதி ஆகிய இடங்களுக்கு இழுத்துச் சென்றான். இன்று வரை அவர்கள் அங்கேயே உள்ளனர்.

அதிகாரம் 6.

லேவியின் புதல்வர்: கேர்சோன், கோகாத்து, மெராரி.

கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல்.

அம்ராமின் புதல்வர்: ஆரோன், மோசே, மிரியாம்.

ஆரோனின் புதல்வர்: நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர். எலயாசருக்குப் பினகாசு பிறந்தார்: பினகாசுக்கு அபிசூவா பிறந்தார்.

அபிசூவாவுக்குக் புக்கி பிறந்தார்: புக்கிக்கு உசீ பிறந்தார்.

உசீக்கு செரகியா பிறந்தார்: செரகியாவுக்கு மெரயோத்து பிறந்தார்.

மெரயோத்துக்கு அமரியா பிறந்தார்: அமரியாவுக்கு அகித்பபு பிறந்தார்:

அகித்பபுக்குச் சாதோக்கு பிறந்தார்: சாதோக்குக்கு அகிமாசு பிறந்தார்.

அகிமாசுக்கு அசரியா பிறந்தார்: அசரியாவுக்கு யோகனான் பிறந்தார்.

யோகனானுக்கு அசரியா பிறந்தார்: சாலமோன் எருசலேமில் கட்டிய திருக்கோவிலில் குருவாகப் பணி புரிந்தவர் இவரே.

அசரியாவுக்கு அமரியா பிறந்தார்: அமரியாவுக்கு அகித்பபு பிறந்தார்.

அகித்பபுக்குச் சாதோக்கு பிறந்தார்: சாதோக்குக்கு சல்ழம் பிறந்தார்.

சல்ழமுக்கு இல்க்கியா பிறந்தார்: இல்க்கியாவுக்கு அசரியா பிறந்தார்.

அசரியாவுக்குச் செராயா பிறந்தார்: செராயாவுக்கு யோசதாக்கு பிறந்தார்.

ஆண்டவர் நெபுகத்னேசரின் கைவன்மை கொண்டு எருசலேமையும் யூதாவையும் சிறைப்படுத்தியபோது யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டார்.

லேவியின் புதல்வர்: கேர்சோம், கோகாத்து, மெராரி,

கேர்சோமின் புதல்வர் பெயர்கள் இவையே: லிப்னி, சிமயி,

கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல்.

மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி: இவர்கள் அவர்களின் மூதாதை வழி வந்த லேவியர் குடும்பங்கள்.

கேர்சோமின் புதல்வர்: லிப்னி: அவர் மகன் யாகத்து: அவர் மகன் சிம்மா:

அவர் மகன் யோவாகு: அவர் மகன் இத்தோ: அவர் மகன் செராகு: அவர் மகன் எயத்தராய்.

கோகாத்தின் புதல்வர்: அம்மினதாபு: அவர் மகன் கோராகு: அவர் மகன் அசீர்:

அவர் மகன் எல்கானா: அவர் மகன் எபியசாபு: அவர் மகன் அசீர்:

அவர் மகன் தாகத்து: அவர் மகன் ஊரியேல்: அவர் மகன் உசியா: அவர் மகன் சாவூல்.

எல்கானாவின் புதல்வர்: அமாசாய், அகிமோத்து,

அவர் மகன் எல்கானா: அவர் மகன் சோப்பாய்: அவர் மகன் நாகத்து,

அவர் மகன் எலியாபு: அவர் மகன் எரோகாம்: அவர் மகன் எல்கானா.

சாமுவேலின் புதல்வர்: தலை மகன் யோவேல், இரண்டாமவர் அபியா.

மெராரியின் புதல்வர்: மக்லி: அவர் மகன் லிப்னி: அவர் மகன் சிமயி: அவர் மகன் உசா,

அவர் மகன் சிமயா, அவர் மகன் அகியா: அவர் மகன் அசாயா.

ஆண்டவரின் இல்லத்தில் பேழை தங்கியிருந்தபோது அங்கே திருப்பாடல் பணிக்கெனத் தாவீது நியமித்திருந்தவர்கள் இவர்களே.

எருசலேமில் சாலமோன் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டியெழுப்பும் வரை, அவர்கள் சந்திப்புக்கூடாரத் திருஉறைவிடத்தின்முன் திருப்பாடல்கள் பாடிப் பணியாற்றினார்கள். அவர்கள் தங்கள் பணிமுறையின்படி ஊழியம் செய்து வந்தார்கள்.

அங்குத் திருப்பணியாற்றியவர்களும் அவர்களின் புதல்வரும் இவர்களே: கோகாத்திய மக்களுள் ஏமான் என்னும் பாடகர்: அவர் யோவேலின் மகன்: அவர் சாமவேலின் மகன்:

அவர் எல்கானாவின் மகன்: அவர் எரோகாமின் மகன்: அவர் எலியேலின் மகன்: அவர் தோவாகின் மகன்:

அவர் சூப்பின் மகன்: அவர் எல்கானாவின் மகன்: அவர் மாகாத்தின் மகன்: அவர் அமாசாயின் மகன்:

அவர் எல்கானாவின் மகன்: அவர் யோவேலின் மகன்: அவர் அசரியாவின் மகன்: அவர் செப்பனியாவின் மகன்:

அவர் தாகத்தின் மகன்: அவர் அசீரின் மகன், அவர் எபியாசாபின் மகன்: அவர் கோராகின் மகன்:

அவர் இஸ்காரின் மகன், அவர் கோகாத்தின் மகன்: அவர் லேவியின் மகன்: அவர் இஸ்ரயேலின் மகன்.

ஏமானின் வலப்புறம் பணியாற்றியவர் அவர் சகோதரர் ஆசாபு. ஆசாபு பெரக்கியாவின் மகன்: அவர் சிமயாவின் மகன்.

அவர் மிக்கேலின் மகன்: அவர் பாசேயாவின் மகன்: அவர் மல்கியாவின் மகன்:

அவர் எத்னியின் மகன்: அவர் செராகின் மகன்: அவர் அதாயாவின் மகன்:

அவர் ஏத்தானின் மகன்: அவர் சிம்மாவின் மகன்: அவர் சிமயியின் மகன்:

அவர் யாகாத்தின் மகன்: அவர் கேர்சோமின் மகன், அவர் லேவியின் மகன்.

ஏமானின் இடப்புறம் பணியாற்றிய அவர்களின் சகோதரரான மெராரியின் புதல்வர்: அவர் ஏத்தான், அவர் கீசியின் மகன்: அவர் அப்தியின் மகன்: அவர் மல்ழக்கின் மகன்,

அவர் அசபியாவின் மகன்: அவர் அமட்சியாவின் மகன், அவர் இல்க்கியாவின் மகன்:

அவர் அம்சியின் மகன்: அவர் பானியின் மகன்: அவர் செமேரின் மகன்:

அவர் மக்லியின் மகன்: அவர் மூசியின் மகன்: அவர் மெராரியின் மகன்: அவர் லேவியின் மகன்.

அவர்கள் சகோதரராகிய பிற லேவியர் கடவுளது இல்லத்தின் திருஉறைவிடத்து அனைத்துப் பணிகளுக்குமென்று நியமிக்கப்பட்டனர்.

ஆரோனும் அவர் புதல்வரும் எரி பலி பீடத்தில் பலியிட்டு, பபப் பீடத்தில் பபம் காட்டினர். அவர்கள் திருத்பயகத் தொடர்பான அனைத்துத் திருப்பணிகளையும், செய்து ஆண்டவரின் ஊழியன் மோசேயின் கட்டளைப்படி இஸ்ரயேலுக்கெனப் பாவம் போக்கும் பலி செலுத்தி வந்தார்கள்.

ஆரோனின் புதல்வர் இவர்களே: பினகாசின் மகன் எலயாசர்: அவர் மகன் அபிசூவா:

அவர் மகன் புக்கி: அவர் மகன் உசி: அவர் மகன் செரகியா:

அவர் மகன் மெரயோத்து: அவர் மகன் அமரியா: அவர் மகன் அகித்பபு

அவர் மகன் சாதோக்கு, அவர் மகன் அகிமாசு.

லேவியரின் எல்லைகளுக்குள் விழுமாறு குறிக்கப்பட்ட குடியிருப்புகள் இவையே: ஆரோன் புதல்வருள் கோகாத்தியக் குடும்பத்தாருக்கு முதல் சீட்டு விழுந்தது.

அதன்படி யூதா நாட்டிலுள்ள எபிரோனும் அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் அளிக்கப்பட்டன.

அந்நகரின் வயல்வெளிகளும் அதன் சிற்டிர்களும் எபுன்னேயின் மகன் காலேபுக்கு அளிக்கப்பட்டன.

ஆரோனின் புதல்வருக்கு வழங்கப்பட்ட புகலிடங்கள்: எபிரோன், லிப்னா, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள்: யத்தீர், எஸ்தமோவா, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள்:

ஈலேன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: தெபீர் அதன் மேய்ச்சல் நிலங்கள்:

ஆசான், அதன் மேய்ச்சல் நிலங்கள்: பெத்-செமேசு அதன் மேய்ச்சல் நிலங்கள்.

பென்யமின் குலத்தினின்று கிடைத்தவை: கேபா, அதன் மேய்ச்சல் நிலங்கள்: ஆலமேத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்: அனத்தோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள். இந்த நகர்கள் பதின்மூன்றும் அவர்கள் குடும்பங்கள் வாரியாகக் கோகாத்தியருக்கு வழங்கப்பட்டன.

எஞ்சியருந்த கோகாத்தின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக மனாசேயின் பாதிக்குலத்தின் பத்து நகர்கள் சீட்டுக் குலுக்கி வழங்கப்பட்டன.

கேர்சோம் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக இசக்கார், ஆசேர், நப்தலி பாசானிலிருக்கும் மனாசே ஆகிய குலங்களிலிருந்து கிடைத்த நகர்கள் பதின்மூன்று.

மெராரியின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக ரூபன், காத்து, செபுலோன் ஆகிய குலங்களிலிருந்து விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு நகர்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் லேவியருக்கு நகர்களையும் மேய்ச்சல் நிலங்களையும் வழங்கினர்.

இவ்வாறு அவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட நகர்களை குலுக்கல் முறையில் இஸ்ரயேலுக்கு யூதா, சிமியோன், பென்யமின் ஆகிய குலங்களிலிருந்து லேவியருக்கு வழங்கினார்கள்.

கோகாத்தின் புதல்வர்களுள் இன்னும் சில குடும்பங்களுக்கு எப்ராயிம் குலத்தின் எல்லைகளிலிருந்து நகர்கள் கிடைத்தன.

அவர்களுக்கு அளிக்கப்பட்ட புகலிட நகர்கள்: எப்ராயிம் மலைப்பகுதியில் இருக்கும் செக்கேம், அதன் மேய்ச்சல் நிலங்கள்: கெசேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்:

யோக்மயாம், அதன் மேய்ச்சல் நிலங்கள்: பெத்கோரோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்:

அய்யலோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: கத்ரிம்மோன் அதன் மேய்ச்சல் நிலங்கள்,

மனாசேயின் பாதிக்குலத்தில் ஆனேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்: பிலயாம், அதன் மேய்ச்சல் நிலங்கள்: இவையே கோகாத்தின் புதல்வரின் எஞ்சிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டவை.

கேர்சோம் புதல்வருக்கு மனாசே பாதிக்குலக் குடும்பங்களினின்று கிடைத்தவை: பாசானிலுள்ள கோலான், அதன் மேய்ச்சல் நிலங்கள்: அஸ்தரோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.

இசக்கார் குலத்திலிருந்து கிடைத்தவை: கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்: தபராத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.

இராமோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்: ஆனேம் அதன் மேய்ச்சல் நிலங்கள்.

ஆசேர் குலத்திலிருந்து கிடைத்தவை: மாசால், அதன் மேய்ச்சல் நிலங்கள்: அப்தோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்:

உக்கோக்கு, அதன் மேய்ச்சல் நிலங்கள்: இரகோபு, அதன் மேய்ச்சல் நிலங்கள்.

நப்தலி குலத்திலிருந்து கிடைத்தவை: கலிலேயாவிலிருக்கும் கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்: அம்மோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: கிரித்தாயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள்.

மெராரியின் எஞ்சிய புதல்வருக்குச் செபுலோன் குலத்திலிருந்து கிடைத்தவை: ரிம்மோனோ, அதன் மேய்ச்சல் நிலங்கள்: தாபோர், அதன் மேய்ச்சல் நிலங்கள்.

எரிகோவுக்கு அப்பால், யோர்தானுக்குக் கிழக்கே ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை: பாலை நிலத்திலுள்ள பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்: யாகுசா, அதன் மேய்ச்சல் நிலங்கள்:

கெதமோத்து அதன் மேய்ச்சல் நிலங்கள்: மேபாத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.

காத்து குலத்திலிருந்து கிடைத்தவை: கிலயாதிலுள்ள இராமோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்: மகனயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள்:

கெஸ்போன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: யாசேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்.

அதிகாரம் 7.

இசக்காரின் புதல்வர்: தோலா, பூவா, யாசபு, சிம்ரோன் என்ற நால்வர்.

தோலாவின் புதல்வர்: உசீ, இரபாயா, எரியேல், யாகுமாய், இபிசாம், செமுவேல். தோலாவுக்குப் பிறந்த அவர்கள் தங்கள் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும், தங்கள் தலைமுறைகளில் வலிமைமிகு வீரர்களாயும் திகழ்ந்தார்கள். தாவீதின் நாள்களில் அவர்களின் எண்ணிக்கை இருபத்தி இரண்டாயிரத்து ஜமறாக இருந்தது.

உசீயின் புதல்வர்: இஸ்ரகியா, அவர்தம் புதல்வர்களான மிகேல், ஒபதியா, யோவேல், இசியா என்னும் ஜவர். அவர்கள் யாவரும் தலைவர்களாய் இருந்தனர்.

அவர்கள் மூதாதையர் குடும்பங்களின் தலைமுறை அட்டவணைப்படி போர் அணிகளில் முப்பத்தாறாயிரம் வீரர்கள் இருந்தனர். ஏனெனில் அவர்களுக்கு மனைவியரும் புதல்வரும் ஏராளமாய் இருந்தனர்.

இசக்காரின் அனைத்துக் குடும்பங்களின் உறவின்முறையில் வலிமைமிகு வீரர்கள் யாவரும் வழிமரபு அட்டவணையின்படி எண்பத்தேழாயிரம் பேர்.

பென்யிமினின் புதல்வர்: பேலா, பெக்கேர், எதியேல் என்னும் மூவர்.

பேலாவின் புதல்வர்: எட்சபோன், உசீ, உசியேல், எரிமோத்து, ஈரி என்னும் ஜவர். அவர்கள் தங்கள் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாயும் வலிமைமிகு வீரர்களாயும் திகழ்ந்தனர். அவர்களுள் வழமரபு அட்டவணையில் குறிக்கப்பட்டோர் இருபத்து இரண்டாயிரத்து முப்பத்து நான்கு.

பெக்கேரின் புதல்வர்: செமிரா, யோவாசு, எலியேசர், எல்யோவனாய், ஓம்ரி, எரேமோத்து, அபியா, அனத்தோத்து, அலமேத்து. இவர்கள் யாவரும் பெக்கேரின் புதல்வர்.

அவர்களின் தலைமுறை அட்டவணைப்படி தங்கள் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகவும் வலிமைமிகு வீரர்களாகவும் திகழ்ந்தோரின் எண்ணிக்கை இருபத்து இரண்டாயிரத்து இருமறு.

எதியேலின் புதல்வர்: பில்கான்: பில்கானின் புதல்வர்: எயூசு, பென்யமின், ஏகூது, கெனானா, சேத்தான், தர்சீசு, அகிசாகர்.

எதியேலின் புதல்வரான இவர்கள் யாவரும் தம் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகவும், போருக்குச் செல்லத்தக்க வலிமைமிகு வீரர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை பதினேழாயிரத்து இருமறு.

சுப்பிமும் குப்பிமும் ஈரின் புதல்வர்கள்: ஊசிம் அகேரின் புதல்வர்.

நப்தலி புதல்வர்: யாட்சியேல், கூனி, எட்சேர், சல்ழம்: இவர்கள் பில்காவின் பேரப்பிள்ளைகள்.

மனாசேயின் புதல்வர்: அவரின் அரமேயமறுமனைவி பெற்றெடுத்த அஸ்ரியேல், கிலயாதின் மூதாமையான மாக்கீர்.

குப்பிம், சுப்பிம் ஆகியோருக்கு மாக்கிர் பெண்களை மணமுடித்து வைத்தார். அவர் சகோதரியின் பெயர் மாக்கா. மனாசேயின் இரண்டாம் புதல்வர் பெயர் செலோபுகாது. சேலோபுகாதிற்குப் புதல்வியர் இருந்தனர்.

மாக்கிரின் மனைவி மாக்கா ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்து அதற்குப் பெரேட்சு என்று பெயரிட்டார். அவர் சகோதரர் பெயர் செரேசு. பெரேட்சியின் புதல்வர்: ஊலாம், இரக்கேம்.

ஊலாமின் புதல்வர்: பெதான். இவர்கள் மனாசே மகன் மாக்கிருக்குப் பிறந்த கிலயாதின் புதல்வர்.

கிலயாதின் சகோதரி அம்மோலக்கேத்து பெற்றெடுத்தவர்: இஸ்கோது, அபியேசர், மக்லா.

செமிதாவின் புதல்வர்: அகியான், செக்கேம், இலிக்கி, அனியாம்.

எப்ராயிமின் புதல்வர்: சுத்தெலாகு: அவர் மகன் பெரேது: அவர் மகன் தகாத்து: அவர் மகன் எலயாதா: அவர் மகன் தகாத்து:

அவர் மகன் சாபாது: அவர் மகன் சுத்தெலாகு: மற்றும் எட்சேர், எலயாது. இவர்கள் கால்நடைகளைக் கவர்ந்து கொள்ளச் சென்றபொழுது அந்நாட்டில் பிறந்து வாழ்ந்த காத்தின் புதல்வரால் கொல்லப்பட்டார்கள்.

அவர்களின் தந்தை எப்ராயிம் பல நாள்களாகப் புலம்பியழுதார். அவர்களின் சகோதரர் அவருக்கு ஆறுதல் கூற வந்தனர்.

எப்ராயிம் தம் மனைவியுடன் உறவு கொண்டார். அவர் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார். அவர் அவருக்குப் பெரியா என்று பெயரிட்டார். ஏனெனில் தீங்கு அவர் வீட்டை வந்தடைந்தது.

எப்ராயிமின் மகள் செயேரா, கீழ்-மேல் பெத்கோரோனையும் உசேன்செயேராவையும் கட்டியெழுப்பினார்.

எப்ராயிமின் மற்றப் புதல்வர்: அவர் மகன் இரபாகு: மற்றும் இரசேபு: அவர் மகன் தெலாகு: அவர் மகன் தாகான்:

அவர் மகன் லாதான்: அவர் மகன் அம்மிகூது: அவர் மகன் எலிசாமா:

அவர் மகன் மன்: அவர் மகன் யோசுவா.

அவர்கள் உடைமைப் பகுதிகளும் குடியிருப்புகளும் இவையே: பெத்தேல், அதன் சிற்டிர்கள்: கீழ்ப்புறத்தில் நாரான்: மேற்புறத்தில் கெசேர், அதன் சிற்டிர்கள்: செக்கேம், அதன் சிற்டிர்கள்: அய்யா, அதன் சிற்டிர்கள்.

மனாசேயின் புதல்வரை அடுத்துள்ள பகுதிகளில் பெத்சான், அதன் சிற்டிர்கள்: தானாக்கு, அதன் சிற்டிர்கள்: மெகிதோ, அதன் சிற்டிர்கள்: தோர், அதன் சிற்டிர்கள். இவற்றில் இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் புதல்வர் வாழ்ந்து வந்தனர்.

ஆசேரின் புதல்வர்: இம்னா, இஸ்வா, இஸ்வீ, பெரியா: அவர்களின் சகோதரி செராகு.

பெரியாவின் புதல்வர்: எபேர், மல்கியேல், அவர் பிர்சாவித்தின் மூதாதை.

ஏபேருக்குப் பிறந்தோர்: யாப்லேற்று, சோமேர், ஓதாம், அவர்களின் சகோதரி சூவா.

யாப்லேற்றின் புதல்வர்: பாசாக்கு, பிம்கால், அஸ்வாத்து: இவர்கள் யாப்லேற்றின் புதல்வர்.

செமேரின் புதல்வர்: அகீ, ரோககா, எகுபா, ஆராம்.

அவர் சகோதரர் ஏலேமின் புதல்வர்: சோப்பாகு, இம்னா, சேலேசு, ஆமால்.

சோப்பாகின் புதல்வர்: சூவாகு, கர்னப்பேர், சூவால், பேரி, இம்ரா.

பெட்சேர், ஓது, சம்மா, சில்சா, இத்ரான், பெயேரா.

எத்தேரின் புதல்வர்: எபுன்னே, பிஸ்பா, அரா.

உல்லாவின் புதல்வர்: ஆராகு, அன்னியேல், ரிட்சியா.

ஆசேர் புதல்வருள் இவர்கள் யாவரும் தங்கள் மூதாதையர், வீட்டுத் தலைவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வலிமைமிகு வீரர்களும் தலைவர்களுள் முதல்வருமாய் இருந்தார்கள். அவர்கள் தலைமுறை அட்டவணைகளில் போருக்குச் செல்லத்தக்க படை வீரரின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்.

அதிகாரம் 8.

பென்யமினுக்குப் பிறந்தோர்: தலைமகன் பேலா, இரண்டாமவர் அஸ்பேல், மூன்றாமவர் அகிராகு,

நான்காமவர் நோகா, ஜந்தாமவர் இராப்பா.

பேலாவுக்கு இருந்த புதல்வர்: அதார், கேரா, அபிகூது,

அபிசூவா, நாகமான், அகோகு,

கேரா, செபுவான், ஊராம்.

ஏகூதின் புதல்வர்: அவர்கள் மானகாத்திற்கு நாடு கடத்தப்பட்ட கெபாலின் குடிகளின் மூதாதை வீட்டுக்குத் தலைவர்கள்:

நாகமான், அகியா, கேரா என்ற எக்லாம். அவர் உசாவையும் அகிகூதையும் பெற்றார்.

சகரயிம், தம் மனைவியர் கூசீம், பாரா என்பவர்களைத் தள்ளிவைத்தபின், மோவாபு நாட்டில் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தனர்.

ஓதேசு என்னும் மனைவிமூலம் அவர் பெற்ற புதல்வர்கள்: யோபாப், சிபியா, மேசா, மலகாம்.

எயூசு, சாக்கியா, மிர்மா. மூதாதையரின் வீட்டுத் தலைவர்களான இவர்கள் அவரின் புதல்வர்.

ஊசிம் மூலம் அவர் அபிபபையும் எல்பாகாலையும் பெற்றார்.

எல்பாகாலின் புதல்வர்: ஏபேர், மிஸ்யாம், சாமேது. அவர் ஓனோ, லோது மற்றும் அதன் சிற்டிர்களையும் கட்டி எழுப்பினார்.

பெரியாவும் செமாவும் அய்யலோன் குடிகளின் மூதாதையர் வீட்டுத் தலைவராய் இருந்தனர். அவர்கள் காத்தின் குடிகளைத் துரத்தியடித்தனர்.

அகியோ, சாசாக்கு, எரேமோத்து,

செபதியா, அராது, ஏதேர்,

மிக்கேல், இஸ்பா, யோகா என்போர் பெரியாவின் புதல்வர்.

செபதியா, மெசுல்லாம், இசுக்கி, எபேர்,

இஸ்மராய், இஸ்லியா, யோபாபு என்போர் எல்பாகாலின் புதல்வர்.

யாக்கிம், சிக்ரி, சப்தி,

எலியேனாய், சில்தாய், எலியேல்,

அதாயா, பெராயா, சிம்ராது என்போர் சிமயியின் புதல்வர்.

இஸ்பான், ஏபேர், எலியேல்,

அப்தோன், சிக்ரி, ஆனான்,

அனனியா, ஏலாம், அன்தோதியா,

இப்தியா, பெனுவேல் என்போர் சாசாக்கின் புதல்வர்.

சம்சராய், செகரியா, அத்தலியா,

யகரேசியா, எலியா, சிக்ரி என்போர் எரொகாமின் புதல்வர்.

இவர்கள் தங்கள் தலைமுறைகளில் மூதாதையர் வீட்டுத் தலைவர்களுள் முதல்வராய் இருந்தனர். இவர்கள் எருசலேமில் வாழ்ந்தார்கள்.

கிபயோனில் வாழ்ந்த கிபயோனியரின் மூதாதை எயியேல். அவரின் மனைவி பெயர் மாக்கா.

அவரின் தலைமகன் அப்தோன்: மற்றவர்கள்: சூர், கீசு, பாகால், நாதாபு,

கெதோர், அகியோ, செகேர்,

மிக்லோத்து: இவருக்குச் சிமயா பிறந்தார். அவர்களின் வழிமரபினர் தங்கள் உறவின் முறையாருடன் எருசலேமில் வாழ்ந்தார்கள்.

நேருக்குக் கீசு பிறந்தார். கீசுக்குச் சவுல் பிறந்தா+ சவுலுக்கு யோனத்தான், மல்கிசூவா, அபினதாபு, எஸ்பாகால் ஆகியோர் பிறந்தனர்.

யோனத்தானின் மகன் மெரிபுபாகால், மெரிபுபாகாலுக்கு மீக்கா பிறந்தார்.

மீக்காவின் புதல்வர்: பித்தோன், மெலேக்கு, தாரேயா, ஆகாசு.

ஆகாசுக்கு யோயாதா பிறந்தார்: யோயாதாவுக்குப் பிறந்தோர்: ஆலமேத்து, அஸ்மாவேத்து, சிம்ரி. சிம்ரிக்கு மோட்சா பிறந்தார்.

மோட்சாவுக்குப் பினியா பிறந்தார். அவர் மகன் இராப்பா: அவர் மகன் எலயாசர்: அவர் மகன் ஆட்சேல்.

ஆட்சேலுக்கு ஆறு புதல்வர் இருந்தனர். அவர்களின் பெயர்களாவன: அஸ்ரிக்காம், பொக்கரு, இஸ்மயேல், செயரியா, ஒபதியா, ஆனான். இவர்கள் அனைவரும் ஆட்சேலின் புதல்வர்கள்.

அவர் சகோதரரான ஏசேக்கின் புதல்வர்: தலைமகன் ஊலாம், இரண்டாமவர் எயூசு, மூன்றாமவன் எலிப்பலேற்று.

ஊலாமின் புதல்வர்கள் ஆற்றல்மிகு வீரர்களாயும், வில்வல்லோர்களாயும் இருந்தனர். அவர்களுக்குப் பல பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாய் மொத்தம் மற்று ஜம்பது பேர் இருந்தனர். இவர்கள் யாவரும் பென்யமின் புதல்வர்கள்.

அதிகாரம் 9.

இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் தலைமுறை அட்டவணையின்படி புதிவு செய்யப்பட்டனர். இவை இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்று மலில் எழுதப்பட்டுள்ளன. யூதா மக்கள் அவர்களது துரோகத்தை முன்னிட்டு பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

தங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் நகர்களிலும் முதன் முதலாகக் குடியேறியவர்கள் இஸ்ரயேலரும் குருக்களும் லேவியரும் கோவில் பணியாளருமே.

யூதா, பென்யமின் எப்ராயிம் மனாசே மக்களுள் எருசலேமில் குடியிருந்தவர்:

ஊத்தாய்: இவர் அம்மிகூதின் மகன்: இவர் ஓம்ரியின் மகன்: இவர் இம்ரியின் மகன்: இவர் பானியின் மகன்: இவர் பெரேட்சியின் புதல்வருள் ஒருவர்: இவர் யூதாவின் மகன்.

சீலோன் மரபில் தலைமகன் அசாயாவும் அவர் புதல்வரும்.

கேராகின் புதல்வருள் எகுவேல்: அவர் உறவினர் அறுமற்றுத் தொண்ணூபேர்.

பென்யமின் புதல்வருள் சல்ழ: இவர் மெசுல்லாமின் மகன்: இவர் ஓதவியாவின் மகன்: இவர் அஸ்னுவாவின் மகன்:

எரோகாமின் மகன் இப்னயா: மிக்¡£யின் புதல்வராகிய உசீயின் மகன் ஏலா: இப்னயாவின் புதல்வராகிய இரகுவேலுக்குப் பிறந்த செபத்தியாவின் மகன் மெசுல்லாம்.

தலைமுறை அட்டவணைப்படி அவர்கள் உறவினர் தொள்ளாயிரத்து ஜம்பத்து ஆறுபேர். இந்த ஆள்கள் அனைவரும் தங்கள் மூதாதையர் மரபில் குடும்பத் தலைவர்களாயிருந்தனர்.

குருக்கள் எதாயா, யோயாரிபு, யாக்கின்:

அசரியா: இவர் இல்க்கியாவின் மகன்: இவர் மெசுல்லாமின் மகன்: இவர் சாதோக்கின் மகன்: இவர் மெராயோத்தின் மகன்: இவர் கடவுளின் இல்லப் பொறுப்பளாரான அகித்பபின் மகன்.

அதாயா: இவர் மல்கியாவின் புதல்வரான பஸ்கூருக்குப் பிறந்த எரொகாமின் மகன்: இவர் அதியேலின் மகன்: இவர் யாகிசேராவின் மகன்: இவர் மெசுல்லாமின் மகன்: இவர் மெசில்லேமித்தின் மகன்: இவர் இம்மேரின் மகன்.

அவர்கள் உறவினரும் அவர்கள் மூதாதையர் மரபில் குடும்பத் தலைவர்களுமாயிருந்த ஆற்றல்மிகு வீரர் ஆயிரத்து எழுமற்று அறுபது பேர். இவர்கள் கடவுளின் இல்லப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

லேவியருள் செமாயா: இவர் அசூபின் மகன்: இவர் அஸ்ரிகாமின் மகன்: இவர் அசபியாவின் மகன்: இவர் மெராரியின் புதல்வருள் ஒருவர்.

பகபக்கர், எரேசு, காலால்: ஆசாவின் புதல்வர் சிக்ரிக்குப் பிறந்த மீக்காவின் மகன் மத்தனியா.

எதுத்பனின் புதல்வன் காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா: நெற்றோபாவியரின் சிற்டிர்களில் வாழ்ந்த எல்கானாவுக்குப் பிறந்த ஆசாவின் மகன் பெரக்கியா.

வாயில் காப்போர் சல்ழம், அக்கூபு, தல்மோன், அகிமான், மற்றும் இவர்கள் உறவினர்: சல்ழம் இவர்களின் தலைவர்.

இவர்கள் இன்றுவரை கிழக்கில் அரச வாயிலைக் காத்து வருகின்றனர். இவர்களே லேவியர் பாளையத்தின் காவலராய் இருந்தவர்கள்.

கோராகின் புதல்வர் எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்ழமும் அவர் தந்தையின் வீட்டாரும் உறவினருமாகிய கோராகியரும் கூடார நுழைவாயில் மேற்பார்வைப்பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். முன்பே அவர்களின் மூதாதையர் ஆண்டவரது பாளையவாயிலைக் காத்து வந்தனர்.

எலயாசர் மகன் பினகாசு முற்காலத்தில் அவர்களின் அதிகாரியாக இருந்தார். ஆண்டவர் அவரோடிருந்தார்.

மெசல்லேமியாவின் மகன் செக்கரியா சந்திப்புக் கூடார நுழைவாயிலின் காவலராக இருந்தார்.

நுழைவாயில்களைக் காப்பதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களின் எண்ணிக்கை இருமற்றுப் பன்னிரண்டு பேர். இவர்கள் தங்கள் சிற்டிர்களில் தலைமுறை அட்டவணைப்படி பதிவு செய்யப்பட்டவர்கள். அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்ததால், தாவீதும், திருக்காட்சியாளர் சாமுவேலும் அவர்களை இப்பணியில் அமர்த்தினார்கள்.

அவர்களும் அவர்கள் புதல்வரும் கடவுளின் இல்லக் கூடாரத்தின் வாயில்களைக் காத்து வந்தனர்.

வாயில் காப்போர், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு பக்கங்களிலும் இருந்தனர்.

சிற்டிர்களில் இருந்த அவர்களின் உறவின் முறையினர் ஏழு நாள்கள் இவர்களோடிருக்க மாறி மாறி வரவேண்டும்.

தலைமை வாயில் காவலராகிய நான்கு லேவியரும் கடவுளின் இல்லப் பண்டக சாலைகளுக்கும், கருவூலங்களுக்கும் பொறுப்பாளர்களாய் இருந்தனர்.

காவல் காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருந்ததால் அவர்கள் கடவுளின் இல்லத்தைச் சுற்றிலும் இரவில் தங்கியிருந்து காலைதோறும் கதவுகளைத் திறந்து விடுவார்கள்.

அவர்களில் சிலரிடம் வழிபாட்டுக்குரிய கலங்களின் பொறுப்பு இருந்தது. அவற்றை உள்ளே கொண்டு போகும் போதும் வெளியே கொண்டு வரும்போதும் எண்ணிச் சரிபார்ப்பர்.

மற்றும் சிலரிடம் தட்டுமுட்டுகள், எல்லாப்புனித கலங்கள், மிருதுவான மாவு, திராட்சை ரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப்பொருள்கள் ஆகியவற்றின்மேல் பொறுப்பு தரப்பட்டிருந்தது.

குருக்களின் புதல்வர் சிலர் நறுமணப் பொருள்களில் இருந்து நறுமணக் கலவை தயாரித்தனர்.

கோராகியரான சல்ழமின் தலைமகன் மத்தித்தியா என்ற லேவியருக்குத் தட்டைச் சட்டியில் பண்டங்கள் சுடும் பொறுப்பு விடப்பட்டிருந்தது.

அவர்கள் உறவினராகிய கோகாத்தியரின் புதல்வருள் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் திருமுன் அடுக்கும் அப்பங்களைத் தயாரிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இவர்களில் லேவியரின் மூதாதையருள் பாடகர் கடவுளின் இல்ல அறைகளிலேயே தங்கயிருந்தனர். ஏனெனில் அவர்கள், இரவும் பகலும், பணி செய்ய வேண்டியிருந்ததால், பிற பணியின்றிக் கடவுளின் இல்ல அறைகளிலேயே தங்கியிருந்தனர்.

தலைவராகிய இவர்களே தலைமுறை அட்டவணைப்படி லேவியருள் குடும்பத் தலைவர்கள்: எருசலேமில் குடியிருந்த தலைவர்கள்.

கிபயோனில் கிபயோனின் தந்தை எயியேல் வாழ்ந்து வந்தார். அவர் மனைவியின் பெயர் மாக்கா.

அவர் தலைமகன் அப்தோன்: மற்றவர்கள் சூர், கீசு, பாகால், நேர், நாதாபு,

கெதார், அகியோ, செக்கரியா, மிக்லோத்து.

மிக்லோத்திற்கு சிமயாம் பிறந்தார். இவர்கள் எருசலேமில் தங்கள் உறவின்முறையாரோடு வாழ்ந்து வந்தார்கள்.

நேருக்குக் கீசு பிறந்தார்: கீசுக்கு சவுல் பிறந்தார்: சவுலுக்கு யோனத்தான், மல்கிசூவா, அபினதாபு, எஸ்பாகால் ஆகியோர் பிறந்தனர்.

யோனத்தானின் மகன் மெரிபு பாகால்: மெரிபு பாகாலுக்கு மீக்கா பிறந்தார்.

மீக்காவின் புதல்வர்கள் பித்தோன், மெலேக்கு, தகரேயா, ஆகாசு.

ஆகாசுக்கு யாரா பிறந்தார்: யாராவுக்கு அலமேத், அஸ்மாவேத், சிம்ரி பிறந்தனர். சிம்ரிக்கு மோட்சா பிறந்தார்.

மோட்சாவுக்கு பினேயா பிறந்தார்: இவர் மகன் இரபாயா: இவர் மகன் எலயாசர்: இவர் மகன் ஆட்சேல்.

ஆட்சேலுக்கு ஆறு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் பெயர்களாவன: அசிரிக்காம், பொக்கரு, இஸ்மயேல், செயர்யா, ஒபதியா, ஆனான். இவர்கள் ஆட்சேலின் புதல்வர்கள்.

அதிகாரம் 10.

பெலிஸ்தியர் இஸ்ரயேலரோடு போரிட்டனர். இஸ்ரயேலர் பெலிஸ்தியர் முன்பாக புறமுதுகு காட்டி ஓடினர்: கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்ந்தனர்.

பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வரையும் துரத்திப் பிடித்துச் சவுலின் புதல்வர் யோனத்தான், அபினதாபு, மல்கிசூவா, ஆகியோரை வெட்டி வீழ்த்தினர்.

சவுலுக்கு எதிராய் அவர்கள் கடும்போர் புரிந்தனர். வில்வீரர் அவரைக் கண்டு கொண்டதும் அம்புகளால் அவரைக் காயப்படுத்தினர்.

அப்போது சவுல் தமது போர்க்கலன் சுமப்போனை நோக்கி, விருத்த சேதனம் அற்ற இவர்கள் என்னை ஏளனம் செய்யாதபடி உன் வாளை உருவி என்னைக் கொன்று விடு என்றார். அவர் தம் போர்கலன் சுமப்போன் மிகவும் அச்சமுற்று அவ்வாறே செய்யமாட்டேன் என்றான். எனவே சவுல் தம் வாளை நட்டுவைத்து அதன்மேல் வீழ்ந்தார்.

சவுல் இறந்ததை அவர்தம் போர்க்கலன் சுமப்போன் கண்டு அவனும் தன் வாளின்மேல் விழுந்து மடிந்தான்.

இவ்வாறு சவுலும் அவர்தம் புதல்வர் மூவரும் மடிந்தனர். அவரோடு அவர் குடும்பம் முழுவதும் அழிந்தது.

பள்ளத்தாக்கிலே குடியிருந்த இஸ்ரயேலர் தங்கள் படை புறமுதுகிட்டு ஓடியதையும், சவுலும் அவர் புதல்வரும் இறந்துபோனதையும் கண்டு, அவர்கள் தங்கள் நகர்களைவிட்டுத் தப்பி ஓடினர். பெலிஸ்தியர் வந்து அவற்றில் குடியேறினர்.

பெலிஸ்தியர் மடிந்தோரின் உடைகளை உரிந்துகொள்ள மறுநாள் வந்தபோது, சவுலும், அவர்தம் புதல்வரும் கில்போவா மலையில் கிடப்பதைக் கண்டனர்.

அவர்தம் உடைகளை உரிந்து, தலையை வெட்டி, போர்க்கலன்களையும் எடுத்துக் கொண்டனர். பின்னர் தம் வழிபாட்டுச் சிலைகளுக்கு முன்னும், மக்களுக்கும் அந்த நற்செய்தியை அறிவிக்குமாறு பெலிஸ்தியர் நாடெங்கும் ஆள்களை அனுப்பி வைத்தனர்.

அவர்தம் போர்க்கலன்களைத் தங்கள் தெய்வத்தின் கோவிலில் வைத்தனர். அவரது தலையைத் தாகோன் கோவிலில் கட்டித் தொங்க விட்டனர்.

பெலிஸ்தியர் சவுலுக்குச் செய்ததையெல்லாம் யாபேசு-கிலயாதுவாழ் மக்கள் அனைவரும் கேள்வியுற்றனர்.

அப்போது அவர்களுள் வலிமைமிக்கோர் அனைவரும் புறப்பட்டுச் சென்று சவுலின் பிணத்தையும், அவர் புதல்வர் பிணங்களையும் எடுத்து அவற்றை யாபேசுக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவர்கள் எலும்புகளை அடக்கம் செய்து, ஏழு நாள் நோன்பிருந்தனர்.

இவ்வாறு சவுல் தம் துரோகங்களை முன்னிட்டு மடிந்தார். அவர் ஆண்டவர் கட்டளையைக் கடைப்பிடிக்காமல் அவருக்குத் துரோகம் செய்தார். மேலும் இறந்தோர் ஆவியிடம் ஆலோசனை கேட்டார்:

ஆனால், ஆண்டவரிடம் ஆலோசனை கேட்கவில்லை. ஆகையால் ஆண்டவர் அவரைச் சாகடித்து, அவர் அரசை ஈசாயின் மகன் தாவீதுக்குக் கொடுத்தார்.

அதிகாரம் 11.

எனவே இஸ்ரயேலர் அனைவரும் ஒன்றுதிரண்டு எபிரோனிலிருந்த தாவீதிடம் வந்து, இதோ நாங்கள் உம் எலும்பும் சதையுமாய் இருக்கிறோம்.

சென்ற நாள்களில் சவுல் அரசனாயிருந்தபோதும், நீர்தாம் இஸ்ரயேலரின் எல்லாப் போர்களிலும் தலைமை தாங்கினீர். “என் மக்களாகிய இஸ்ரயேலை நீ மேய்த்து, அவர்களின் தலைவனாயிருப்பாய்“ என்று உம் கடவுளாகிய ஆண்டவரும் உம்மிடமே சொன்னார் என்றார்கள்.

இஸ்ரயேலின் மூப்பர்கள் எல்லாரும் எபிரோனிலிருந்த அரசரிடம் வந்தார்கள். ஆண்டவர் திருமுன் தாவீது அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். ஆண்டவர் சாமுவேல் வழியாக உரைத்தபடி அவர்கள் தாவீதை இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்தார்கள்.

பின்பு தாவீதும் இஸ்ரயேலர் அனைவரும் எருசலேமுக்குச் சென்றனர். அது அந்நாட்களில் எபூசு என்று அழைக்கப்பட்டது: எபூசியர் அங்கே அப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

எபூசுவாழ் மக்கள் தாவீதை நோக்கி: நீர் இங்கு நுழையவே முடியாது என்றனர்: ஆயினும் தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே “தாவீதின் நகர்“ ஆயிற்று.

தாவீது, எபூசியரை முதலில் வெட்டி வீழ்த்துபவன் படைத்தலைவனும் தளபதியுமாய் இருப்பான் என்று அறிவித்திருந்தார். செரூயாவின் மகன் யோவாபு முதலில் உட்புகுந்தார். எனவே, அவர் படைத்தலைவர் ஆனார்.

தாவீது அக்கோட்டைக்குள் வாழ்ந்ததன் காரணமாக அது “தாவீதின் நகர்“ என்று அழைக்கப்பட்டது.

அவர் கிழக்கிலிருந்த பள்ளத்தை நிரப்பி நகரைச் சற்றிலும் மதில் எழுப்பினார்: யோவாபு நகரின் ஏனைய பகுதிகளைப் பழுது பார்த்தார்.

படைகளின் ஆண்டவர் தாவீதோடு இருந்ததால், தாவீதின் புகழ் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே வந்தது.

ஆண்டவர் இஸ்ரயேலரைக் குறித்து உரைத்த வாக்கின்படி தாவீது அரசராவதற்கு இஸ்ரயேல் மக்கள் அனைவரோடும் அவருக்கு உறுதுணையாய் இருந்த தாவீதின் ஆற்றல்மிகு வீரர்களின் தலைவர்கள் இவர்களே:

தாவீதின் ஆற்றல்மிகு வீரர்களின் பெயர்ப்பட்டியல்: அக்மோனியின் மகன் யாசொபயாம்: இவர் முப்பதின்மர் தலைவர்: தம் ஈட்டியால் முந்மறு பேரை ஒரே நேரத்தில் குத்திக் கொன்றவர்.

அவரை அடுத்து அகோகியராகிய தோதோவின் மகன் எலயாசர்: இவர் மாவீரர் மூவருள் ஒருவர்.

பெலிஸ்தியர் போரிடப் படைதிரட்டிக் கொண்டு வந்திருந்த பொழுது, பஸ்தம்மில் தாவீதுடன் இருந்தார். வாற்கோதுமைப் பயிர் நிறைந்த ஒரு வயல் அங்கிருந்தது. மக்களோ பெலிஸ்தியருக்கு அஞ்சி ஓடினர்.

அப்போது அவர்கள் அவ்வயலின் நடுவே நின்றுகொண்டு, அதைக் காத்து, பெலிஸ்தியரை முறியடித்தனர். இவ்வாறு ஆண்டவர் மாபெரும் வெற்றியைத் தந்தருளினார்.

பெலிஸ்தியரின் படை இரபாயிம் பள்ளத்தாக்கில் பாளையமிறங்கி இருந்தபோது, முப்பதின்மர் தலைவருள் மூவர் அதுல்லாம் குகைக்குச் சென்றனர்.

தாவீது கோட்டைக்குள் இருந்தார். பெலிஸ்தியரின் பாளையம் பெத்லகேமில் இருந்தது.

ஒருநாள் தாவீது, பெத்லகேம் நுழைவாயிலில் உள்ள கிணற்று நீரில் கொஞ்சம் யாராவது குடிக்கக் கொடுத்தால் நலமாயிருக்கும் என்று ஆவலுடன் கூறினார்.

அப்போது அந்த மூவரும் பெலிஸ்தியரின் பாளையத்தினுள்ளே துணிந்து சென்று, பெத்லகேம் நுழைவாயிலில் இருந்த கிணற்று நீரை மொண்டு தாவீதிடம் கொண்டு வந்தார்கள். தாவீதோ அதைக் குடிக்கமனமில்லாமல், அதை ஆண்டவருக்கென்று கீழே கொட்டிவிட்டார்.

நான் இதைச் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! தங்கள் உயிரை ஒரு பொருட்டாக எண்ணாத இந்த மனிதரின் இரத்தத்தை நான் குடிப்பது எப்படி? இவர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது இந்தத் தண்ணீரைக் கொண்டுவந்தனரே! என்று கூறி அதைக் குடிக்க மறுத்துவிட்டார். அந்த மாவீரர் மூவரும் இத்தகையவற்றைச் செய்தனர்.

யோவாபின் சகோதரராகிய அபிசாய் முப்பதின்மருள் தலைசிறந்தவர். இவரே தம் ஈட்டியால் முந்மறு பேரைக் கொன்றவர்: எனவே முப்பதின்மருள் பெயர் பெற்றவராய் இருந்தார்.

இவர் முப்பதின்மருள் மிகுந்த புகழ் பெற்றிருந்தார். எனவே அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். ஆயினும் முந்தின மூவருக்கு அவர் சமமானவர் அல்ல.

கப்சியேலைச் சார்ந்தவரும் வலிமைமிக்கவருமான யோயாதாவின் மகன் பெனாயா தீரச் செயல்கள் பல புரிந்தார். மோவாபிய வீரர் இருவரைக் கொன்றார்: மேலும், உறைபனி நாளில் ஒரு குழியினுள் இறங்கி அங்கிருந்த சிங்கத்தைக் கொன்றார்.

ஜந்து முழ உயரமுடைய ஒரு எகிபத்தியனையும் இவர் கொன்றார். அந்த எகிப்தியன் கையில் தறிக்கட்டை போன்ற ஈட்டி இருக்கையில் இவர் ஒரு தடியோடு அவனுக்கு எதிராகச் சென்று, அந்த எகிபத்தியனின் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அதே ஈட்டியால் அவனைக் கொன்றார்.

யோயாதாவின் மகன் பெனாயா இத்தகையவற்றைச் செய்து மாவீரர் மூவருள் பெயர் பெற்றவராய் இருந்தார்.

அம்முப்பதின்மருள் அவர் முதல்வராய் இருந்தாலும், முந்தின மூவருக்கு அவர் இணையானவர் அல்ல. அவரையே தாவீது தம் மெய்க்காப்பாளர்க்குத் தலைவராக நியமித்தார்.

படையின் மாவீரர் பின்வருமாறு: யோவாபின் சகோதரர் அசாவேல்: பெத்லகேமைச் சார்ந்த தோதோவின் மகன் எல்கானான்:

அரோரியரான சம்மோத்து: பெலொனியரான ஏலேசு,

தெக்கோவாவைச் சார்ந்த இக்கேசின் மகன் ஈரா: அனதோத்தியரான அபியேசர்,

ஊசாயரான சிபக்காய்: அகோகியரான ஈலாய்:

நெற்றோபாயரான மகராய், நெற்றோபாயரான பானாவின் மகன் ஏலேது.

பென்யமின் குலத்தில், கிபயாவைச் சார்ந்த இரிபாயின் மகன் இத்தாய்: பிராத்தோனியரான பெனாயா:

காகசு நீரோடைப் பகுதியைச் சார்ந்த ஊராய்: அர்பாயரான அபியேல்:

பகரூமியரான அஸ்மவேத்து: சால்போனியரான எல்யக்பா:

கீசோனியரான ஆசேமின் புதல்வர்: ஆராரியரான சாகேயின் மகன் யோனத்தான்:

ஆராரியரான சாகாரின் மகன் அகியாம்: ஊரின் மகன் எலிப்பால்:

மெக்கராயரான ஏபேர்: பெலோனியரான அகியா:

கர்மேலியரான எட்சரோ: எஸ்பாயின் மகன் நாராய்:

நாத்தானின் சகோதரர் யோவேல்: அக்ரியின் மகன் மிப்கார்:

அம்மோனியரான செலேக்கு: பெயரோத்தியரான நகராய்: இவர் செரூயாவின் மகனான யோவாபின் படைக்கலன் சுமப்பவர்.

இத்ரியரான ஈரா: இத்ரியரான காரேபு:

இத்ரியரான உரியா: அக்லாயின் மகன் சாபாது:

ரூபன் குலத்தலைவரும் சீசாவின் மகனுமான அதீனா: இவரோடிருந்த முப்பது பேர்:

மாக்காவின் மகன் ஆனான்: மித்னியரான யோசபாற்று:

அஸ் தராயரான உசியா: அரோயேரியரான ஓதாமின் புதல்வர் சாமா, எயியேல்:

தீட்சியரான சிம்ரியின் மகன் எதியவேல்: அவன் சதோதரர் யோகா:

மகவாயரான எலியேல்: எல்னாமின் புதல்வர் எரிபாய், யோசவியா: மோவாபியரான இத்மா:

மெட்சோபாயரான எலியேல், ஓபேது, யகசியேல் என்பவர்களே.

அதிகாரம் 12.

தாவீது, கீசின் புதல்வர் சவுலிடமிருந்து தப்பித் தலைமறைவாய் சிக்லாகு என்னுமிடத்தில் தங்கியிருக்கையில், அவரிடம் வந்தவர்கள் இவர்களே: அவர்கள் போரில் தோள் கொடுத்த ஆற்றல்மிகு படை வீரர்.

அவர்கள், வில்வீரர்: கவண்கல் எறிதற்கும், வில்லினால் அம்பு எய்தற்கும், வலக்கை இடக்கைப் பழக்கமானவர்களாயும் இருந்தனர். அவர்கள் பென்யமின் குலத்தவரான சவுலின் குடும்பத்தவர்கள்.

அவர்களுள் முதன்மையானவரான அகியேசர், யோவாசு இருவரும் கிபயாவைச் சார்ந்த செமாயாவின் புதல்வர்கள். அஸ்மவேத்தின் புதல்வர்களான எசியேல், பெலவேற்று, பெராக்கா, அனதோத்தியரான எகூ:

முப்பத்தின்மருள் ஆற்றல்மிக்கவரும் முப்பதின்மருக்குத் தலைவருமான கிபயோனியர் இஸ்மாயா, எரேமியா, யகசியேல், யோகனான், கெதேராவியரான யோசபாத்து,

எழசாய், எரிமோத்து, பெயெலியா, செமாரியா, அருப்பியரான செபத்தியா:

எல்கானா, எஸ்யா, அசரியேல், யோவேசர், கோராகியரான யாசொபெயாம்:

கெதோரியரான எரொகாமின் புதல்வர்கள் யோவேலா, செப்தியா.

பேராற்றலும் படைத்திறனும் கேடயம், ஈட்டி கையாள்வதில் தேர்ச்சியும், சிங்கத்தின் முகமும், மலைவாழ் கலைமானின் வேகமும் உடைய காத்தியர் சிலர் பாலைநில அரணில் இருந்த தாவீதிடம் வந்து சேர்ந்துகொண்டார்கள்.

அவர்கள் யாரெனில்: தலைவரான ஏட்சேர், இரண்டாவது ஒபதியா, மூன்றாவது எலியாபு,

நான்காவது மிஸ்மன்னா, ஜந்தாவது எரேமியா,

ஆறாவது அத்தாய், ஏழாவது எலியேல்,

எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சாபாது,

பத்தாவது எரேமியா, பதினொன்றாவது மக்பன்னாய்.

இவர்களே காத்தின் புதல்வர்களான படைத்தலைவர்கள். இவர்களில் சிறியவர் மறுபேருக்கும், பெரியவர் ஆயிரம் பேருக்கும் சமம3

யோர்தான் நதி கரைபுரண்டு ஓடும் முதல் மாதத்தில் அதைக் கடந்து, பள்ளத்தாக்குகளில் வாழ்ந்துவந்த யாவரையும் கிழக்கேயும் மேற்கேயும் துரத்தி அடித்தவர்கள் இவர்களே.

பென்யமின், யூதா புதல்வர்களில் சிலர் அரணில் இருந்த தாவீதிடம் வந்தனர்.

தாவீது அவர்களைச் சந்திக்க வெளியே வந்து அவர்களை நோக்கி: நீங்கள் சமாதான நோக்குடன் எனக்கு உதவி செய்ய வந்துள்ளீர்களென்றால், நான் உங்களை இதயப் பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். மாறாக, குற்றமற்றவனான என்னை என் எதிரிகள் கையில் ஒப்புவிக்கும் பொருட்டு வந்துள்ளீர்களென்றால் நம் முன்னோரின் கடவுள் அதைக் கண்டு தீர்ப்புக் கூறட்டும் என்றார்.

அப்போது முப்பதின்மர் தலைவராகிய அமாசாயை ஆவி ஆட்கொள்ளவே, அவர்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்: ஈசாயின் மகனே! நாங்கள் உம்மோடிருப்போம்: வெற்றி! உமக்கே வெற்றி! உமக்கு உதவிசெய்வோருக்கும் வெற்றி! ஏனெனில் , உம் கடவுள் உமக்குத் துணைநிற்கிறார் என்றார். அப்போது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு தம் படைக்குத் தலைவர்கள் ஆக்கினார்.

தாவீது, பெலிஸ்தியரோடு சேர்ந்து சவுலுக்கு எதிராகப் போரிடச் செல்கையில், மனாசேயருள் சிலர் அவரோடு சேர்ந்து கொண்டனர். பெலிஸ்தியத் தலைவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து, தாவிது தன் தலைவன் சவுலோடு சேர்ந்து கொண்டால், நம் தலை உருளும், என்று சொல்லி அவர் உதவி பெறாமல் அவரை அனுப்பிவிட்டார்கள்.

தாவீது சீக்லாகுக்குத் திரும்பி வந்தபோது மனாசேயருள் ஆயிரத்தவர்க்குத் தலைவர்களான யோசபாத்து, எதியவேல், மிக்கேல், யோசபாத்து, எலிகூ, சில்தாய் ஆகியோர் மனாசேயைவிட்டு அவரோடு சேர்ந்து கொண்டனர்.

அங்கே வந்த கொள்ளைக்காரரை முறியடிக்க இவர்கள் தாவீதுக்குத் துணை நின்றனர். ஏனெனில் இவர்கள் அனைவரும் வலிமைமிகு வீரர்கள்: ஆற்றல்மிக்க படைத்தலைவர்கள்.

இவ்விதமாகத் தாவீதுக்கு உதவிசெய்வோர் ஒவ்வொரு நாளும் அவரிடம் வந்துசேர்ந்துகொண்டே இருந்தனர். எனவே அவர்கள் கடவுளின் படையெனப் பெரும்படை ஆயினர்.

ஆண்டவரின் வாக்குறுதிப்படி சவுலின் அரசைத் தாவீதிடம் ஒப்படைக்குமாறு, எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்த படைக்கலன் தாங்கிய தலைவர்களின் எண்ணிக்கை இதுவே:

யூதா புதல்வரில், கேடயமும் ஈட்டியும் தாங்கிப் போர்க்கோலம் பூண்ட ஆறாயிரத்து எண்ணூறு பேர்:

சிமியோன் புதல்வரில் போரிடத் தயாரான ஆற்றல் மிகு வீரர் ஏழாயிரத்து மறு பேர்.

லேவி புதல்வர்களில் நாலாயிரத்து அறுமறு பேர்.

ஆரோன் வழிவந்த தலைவரான யோயாதா மற்றும் அவரோடிருந்த மூவாயிரத்து எழுமறு பேர்:

ஆற்றல்மிகு இளைஞரான சாதோக்கு மற்றும் அவர் மூதாதை வீட்டைச் சார்ந்த அதிகாரிகள் இருபத்திரண்டு பேர்.

பென்யமின் புதல்வரில், சவுலின் உறவினர் மூவாயிரம் பேர்: அவர்களில் பெரும்பான்மையோர் அதுவரை சவுலின் குடும்பத்திற்குச் சார்பாய் இருந்தவர்கள்:

எப்ராயிம் புதல்வரில், ஆற்றல் மிகு வீரர் இருபதினாயிரத்து எண்ணூறு பேர், அவர்கள் தங்கள் மூதாதை வீட்டில் புகழ்பெற்றவர்கள்.

மனாசேயின் பாதி குலத்தில், பதினெட்டாயிரம் பேர்: அவர்கள் பெயர்ப் பட்டியலின்படி தாவீதை அரசராக்குவதற்கு வந்தனர்.

இசக்கார் புதல்வரில், இஸ்ரயேலர் செய்யவேண்டியது இன்னதென்று குறித்த காலத்தில் அறிவுரை வழங்கி வந்த நுண்ணறிவுடைய இரு மறு தலைவர்கள் மற்றும் இவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்த இவர்களின் எல்லா உறவினர்:

செபுலோன் புதல்வரில், அனைத்துப் போர்க்கலன்களுடன் ஒரே மனத்தோராய்ப் போருக்குத் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற வீரர் ஜம்பதாயிரம் பேர்.

நப்தலியைச் சார்ந்த ஆயிரம் அதிகாரிகளும் மற்றும் கேடயமும் ஈட்டியும் தாங்கிய முப்பத்தேழாயிரம் பேர்.

தாணைச் சார்ந்த போருக்கு அணிவகுத்து நின்ற இருபத்து எட்டாயிரத்து அறுமறு பேர்.

ஆசேரைச் சார்ந்த போருக்குத் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற நாற்பதாயிரம் பேர்.

யோர்தானுக்கு அப்பால் ரூபன், காத்து, மனாசேயின் பாதிக்குலம் இவற்றைச் சார்ந்த அனைத்துப் போர்க்கோலம் பூண்ட ஓர் இலட்சத்து இருபதினாயிரம் பேர்.

இந்தப் போர்வீரர் அனைவரும் போர்க்கள அணி வகுப்பில், தாவீதை இஸ்ரயேல் அனைத்துக்கும் அரசராக ஏற்படுத்துமாறு உறுதிபூண்டவராய் எபிரோனுக்கு வந்தனர். மேலும் எஞ்சியிருந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒரே மனதாய் தாவீதையே அரசராக்க விரும்பினர்.

அவர்கள் அங்கே தாவீதோடு உண்டு குடித்து மூன்று நாள் தங்கினார்கள். அவர்கள் உறவினர் அவர்களுக்காக எல்லாவற்றையும் தயார் செய்திருந்தனர்.

மேலும் இசக்கார், செபுலோன், நப்தலி நிலப்பகுதிகளில் அவர்களுக்கு அருகே இருந்தவர்கள், கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், மாடுகள் ஆகியவற்றின் மீது ஏராளமான அப்பங்கள், உணவுக்கான மாவு, அத்திப்பழ அடைகள், திராட்சைப் பழ அடைகள், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றையும் மேலும் ஆடு மாடுகளையும் கொண்டு வந்தார்கள். இஸ்ரயேல் மகிழ்ச்சியில் திளைத்தது.

அதிகாரம் 13.

தாவீது ஆயிரத்தவர், மற்றுவர் தலைவர்களோடும் ஏனைய தலைவர் அனைவரோடும் கலந்தாலோசித்தார்.

தாவீது இஸ்ரயேல் சபை முழுவதையும் நோக்கிக் கூறியது: உங்களுக்கு நலமெனத் தோன்றினால், அது நம் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து வருகின்றதென்றால், இஸ்ரயேல் நாடெங்கிலும் வாழ்ந்துவரும் நம் சகோதரர் அனைவருக்கும் அவர்களுடன் மேய்ப்பு நிலம் சூழ்ந்த நகர்களில் வாழ்ந்துவரும் குருக்களும், லேவியரும் நம்மோடு வந்து சேரும்படி ஆளனுப்புவோம்.

சவுலின் காலத்தில் நாம் நாடிச்செல்லாமல் விட்டுவிட்ட நம் கடவுளின் பேழையைத் திரும்பக் கொண்டு வருவோம் .

இது அனைவருக்கும் நலமென்று தோன்றியதால் சபையோர் அனைவரும் அவ்வாறே செய்ய இசைந்தனர்.

எனவே தாவீது கடவுளின் பேழையைக் கிரியத்எயாரிமிலிருந்து கொண்டு வரும்படி எகிப்தைச் சேர்ந்த சீகோர் முதல் ஆமாத்து எல்லைவரை வாழ்ந்து வந்த இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்று கூட்டினார்.

பின்னர் கெருபுகள் மேல் வீற்றிருக்கும் ஆண்டவர் பெயர் தாங்கிய கடவுளின் பேழையை யூதாவைச் சார்ந்த கிரியத்எயாரிம் என்னும் பாகலாவிலிருந்து எடுத்துக்கொண்டு வரும்படி தாவீதும் இஸ்ரயேல் அனைவரும் அவ்விடத்துக்குச் சென்றனர்.

அவர்கள் கடவுளின் பேழையை அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்து ஒரு புது வண்டியின் மேல் ஏற்றினர். உசாவும் அகியோவும் வண்டியை ஓட்டிவந்தனர்.

தாவீதும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தங்கள் முழு ஆற்றலுடன் கடவுளுக்கு முன்பாகச் சுர மண்டலங்கள், யாழ்கள், மத்தளங்கள், கைத்தாளங்கள், எக்காளங்கள் இவற்றை இசைத்து மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரித்துப் பாடினர்.

அவர்கள் கீதோன் களத்தில் வந்தபோது மாடுகள் இடறவே, உசா பேழையைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.

நீட்டவே, ஆண்டவரின் சினம் உசாவுக்கு எதிராகக் கிளர்ந்து, அவன் தன் கையைப் பேழையை நோக்கி நீட்டினதால் அவனைச் சாகடித்தார்: அவன் அங்கேயே கடவுள் திருமுன் இறந்தான்.

ஆண்டவர் உசாவை அழித்ததை முன்னிட்டுத் தாவீது பெருந்துயருற்றார். அந்த இடத்துக்குப் “பேரேட்சு உசா“ என்று பெயரிட்டார். அப்பெயர் இந்நாள்வரை வழங்கி வருகிறது.

அந்நாளில் தாவீது கடவுளுக்கு அஞ்சி, கடவுளின் பேழையை என்னிடம் கொண்டுவருவது எப்படி? என்று சொல்லி,

தாவீதின் நகருக்கு, தம்மிடம் பேழையைக் கொண்டுவராமல், இத்தியரான ஓபேது-ஏதோம் வீட்டில் கொண்டுபோய் வைத்தார்.

கடவுளின் பேழை ஓபேது-ஏதோம் வீட்டில் அவர் வீட்டாரோடு மூன்று மாதம் இருந்தது. அந்நாளில் அவர் வீட்டாருக்கும் அவருக்கு உரிய அனைத்திற்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார்.

அதிகாரம் 14.

தீர் மன்னன் ஈராம் தாவீதிடம் பதர்களையும் அவருக்கு ஓர் அரண்டனை கட்ட கேதுரு மரங்களையும் மற்றும் கொத்தர், தச்சரையும் அனுப்பிவைத்தார்.

இதனால், ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் தம்மை அரசராக உறுதிப்படுத்தினார் என்றும் அவருடைய மக்களாகிய இஸ்ரயேலின் பொருட்டுத் தமது அரசை மிகவும் சிறந்தோங்கச் செய்தார் என்றும் தாவீது அறிந்து கொண்டார்.

எருசலேமிலும் தாவீது பல பெண்களை மணம் செய்து கொண்டார். அவருக்கு இன்னும் புதல்வர், புதல்வியர் பலர் பிறந்தனர்.

அவருக்கு எருசலேமில் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்: சம்முவா, சோபாபு, நாத்தான், சாலமோன்,

இப்கார், எலிசுவா, எல்பலேற்று,

நோகாசு, நெபேகு, யாப்பியா,

எலிசாமா, பெகலியாதா, எலிப்பலேற்று.

தாவீது இஸ்ரயேல் முழுவதற்கும் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, அவர்கள் அனைவரும் தாவீதைத் தேடிப்பிடிக்கும்படி வந்தனர். தாவீது அதை அறிந்து அவர்களை எதிர்க்கச் சென்றார்.

பெலிஸ்தியர் வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் கொள்ளையிட்டனர்.

தாவீது கடவுளிடம், நான் பெலிஸ்தியரை எதிர்த்துச் செல்லலாமா? அவர்களை என்கையில் ஒப்புவிப்பீரா? என்று கேட்டார். ஆண்டவர் அவருக்குப் பதிலுரையாக போ, அவர்களை உன் கையில் ஒப்புவிப்பேன் என்றார்.

தாவீதும் அவர் ஆள்களும் பாகால் பெராசிமுக்கு வந்து, அவர்களை அங்கே முறியடித்தார். வெள்ளம் அடித்துக் கொண்டு போவதுபோலக் கடவுள் என் எதிரிகளை என் கைவன்மையால் அழித்துவிட்டார் என்றார் தாவீது. அதன் காரணமாக, அவ்விடத்திற்குப் “பாகால் பெராசிம்“ என்று பெயரிட்டனர்.

பெலிஸ்தியர் தங்கள் தெய்வச் சிலைகளை அங்கு விட்டுச் சென்றிருந்தனர்: தாவீது கட்டளையிட, அவற்றைத் தீக்கிரையாக்கினர்.

பெலிஸ்தியர் மீண்டும் அந்தப் பள்ளத்தாக்கில் கொள்ளையிட்டனர்.

தாவீது திரும்பவும் கடவுளின் ஆலோசனையைக் கேட்டார். கடவுள், நீ அவர்களை எதிர்த்து நேராகச் செல்லாமல் அவர்களைச் சுற்றிவளைத்து பிசின் மரத்தோப்புக்கு வா.

அம்மரங்களின் உச்சியல் படைசெல்வதன் இரைச்சல் கேட்கும் போது, உடனே போருக்குப் புறப்படு: ஏனெனில் பெலிஸ்தியரின் படையை முறியடிக்கக் கடவுள் உனக்கு முன் செல்கிறார் என்றார்.

கடவுள் கட்டளையிட்டபடியே தாவீது செய்தார். கிபயோன் தொடங்கிக் கெசேர் வரை பெலிஸ்தியரின் படையை முறியடித்தனர்.

தாவீதின் புகழ் எல்லா நாடுகளிலும் பரவியது: அனைத்து மக்களினங்களும் அவருக்கு அஞ்சி நடுங்கும்படி ஆண்டவர் செய்தார்.

அதிகாரம் 15.

தாவீது நகரில் அவர் தமக்கு வீடுகளைக் கட்டினார். கடவுளின் பேழைக்கென ஓர் இடத்தில் ஏற்பாடு செய்து அதற்கென ஒரு கூடாரத்தையும் அமைத்தார்.

பின்னர் தாவீது, கடவுளின் பேழையைச் சுமக்கவும், என்றென்றும் தமக்குப் பணிவிடை செய்யவும் ஆண்டவர் தேர்ந்துகொண்ட லேவியர் தவிர வேறெருவரும் கடவுளின் பேழையைச் சுமக்கலாகாது என்றார்.

ஆண்டவரின் பேழைக்கெனத் தாம் ஏற்பாடு செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டு வரும்படி தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் எருசலேமில் ஒன்று திரட்டினார்.

அவ்வாறே தாவீது ஆரோனின் புதல்வரையும் லேவியரையும் ஒன்று திரட்டினார்.

கோகாத்தின் புதல்வருள் தலைவர் உரியேல், அவர் உறவின்முறையினர் மற்றிருபது பேர்:

மெராரியின் புதல்வருள் தலைவர் அசாயா, அவர் உறவின்முறையினர் இருமற்றிருபது பேர்:

கெர்சோம் புதல்வருள், தலைவர் யோவேல், அவன் உறவின்முறையினர் மற்று முப்பது பேர்:

எலிசாப்பான் புதல்வருள் தலைவர் செய்யா, அவர் உறவின்முறையினர் இருமறு பேர்:

எலிசாப்பான் புதல்வருள் தலைவர் எலியேல், அவர் உறவின்முறையினர் எண்பது பேர்:

உசியேல் புதல்வருள் தலைவர் அம்மினதாபு, அவர் உறவின்முறையினர் மற்றிப் பன்னிரண்டுபேர்.

தாவீது, குருக்களாகிய சாதோக்கு அபியத்தார் ஆகியோரையும் லேவியராகிய உரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாபு ஆகியோரையும் வரவழைத்தார்.

தாவீது அவர்களை நோக்கி, நீங்கள் லேவியரின் மூதாதையர் வீட்டுத் தலைவர்கள்: ஆண்டவராகிய கடவுளின் பேழைக்கென நான் ஏற்பாடு செய்துள்ள இடத்திற்கு அதைக் கொண்டுவரும்படி நீங்களும் உங்கள் உறவின்முறையினரும் உங்களைத் பய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

முன்பு ஒருமுறை நீங்கள் சுமக்காததால் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குள் அழிவ உண்டாகச் செய்தார். ஏனெனில் நாம் அவர் கட்டளைப்படி செயற்படாமற் போனோம் என்றார்.

எனவே, குருக்களும் லேவியரும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பேழையைக் கொண்டு வரத் தங்களைத் பய்மைப்படுத்திக் கொண்டார்கள்.

பின்பு லேவியர், மோசேயின் கட்டளையாகத் தந்த ஆண்டவரது வாக்கின்படி, கடவுளின் பேழையை அதன் தண்டுகளால் தங்கள் தோள்மேல் சுமந்து வந்தனர்.

தாவீது, லேவியரின் தலைவர்களிடம் தங்கள் உறவின்முறையிலிருந்து தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் ஆகிய கருவிகளை இசைத்து மகிழ்ச்சி ஒலி எழுப்பக்கூடிய பாடகரை நியமிக்கக் கட்டளையிட்டார்.

எனவே, லேவியர் யோவேலின் மகன் ஏமானையும், அவர் உறவின்முறையினருள் பெராக்கியாவின் புதல்வர் ஆசாபையும், மெராரியின் மைந்தரான அவர்கள் உறவின் முறையினருள் கூசயாவின் மகன் ஏத்தானையும்,

அவர்களோடு இரண்டாம் நிலையில், அவர்கள் உறவின்முறையினர் செக்கரியா, யகசியேல், செமிராமோத்து, எகியேல், உன்னி, எலியாபு, பெனாயா, மகசேயா, மத்தித்தியா, எலிப்பலேகு, மிக்னேயா மற்றும் வாயில் காவலரான ஓபேது, ஏதோம், எயியேல் ஆகியோரையும் நியமித்தனர்.

பாடகரான ஏமான், ஆசாபு, ஏத்தான் ஆகியோர் வெண்கலக் கைத்தாளங்களை ஒலிக்கச் செய்வார்கள்.

செக்கரியா, அசியேல், செமிராமோத்து, எகியேல், உன்னி, எலியாபு, மகசேயா, பெனாயா, ஆகியோர் “அலமோத்து“ இசையில் தம்புருகளை வாசிப்பவர்கள்.

மத்தித்தியா, எலிப்பலேகு, மிக்னேயா, ஓபேது-ஏதோம், எயியேல், அசசியா ஆகியோர் உச்சத்தொனியில் சுரமண்டலங்கள் வாசிப்பவர்கள்.

லேவியர் தலைவர் கெனனியா இசையில் தேர்ச்சி பெற்றவராகையால், அவர் இசை கற்பிக்கவேண்டும்.

பெரக்கியாவும் எல்கானாவும் பேழையின் காவலர்.

குருக்களான செபனியா, யோசபாத்து, நெத்தனியேல், அமாசாய், செக்கரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் கடவுளுடைய பேழைக்கு முன்பாக எக்காளங்களை ஊதியவர்கள். ஓபேது ஏதோமும், எகியாவும் பேழைக்குக் காவலாளர்.

இவ்வாறு தாவீதும், இஸ்ரயேலின் பெரியோரும், ஆயிரவர் தலைவரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஓபேது-ஏதோம் வீட்டிலிருந்து மகிழ்ச்சியுடன் கொண்டு வரச் சென்றார்கள்.

ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமந்த லேவியருக்குக் கடவுள் உதவி செய்தபடியால், அவர்கள் அவருக்கு ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கிடாய்களையும் பலி செலுத்தினர்.

தாவீதும், பேழையைச் சுமந்த லேவியர் எல்லாரும், பாடகரும், பாடகர் தலைவரான கெனனியாவும், மெல்லிய நார்ப்பட்டு அங்கி அணிந்திருந்தனர். மேலும் தாவீது நார்ப்பட்டாலான ஏபோது அணிந்திருந்தார்.

இஸ்ரயேல் அனைவரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஆர்ப்பரிப்போடும், இசைக்கொம்பு, எக்காளம். கைத்தாள ஒலியோடும், தம்புரு சுரமண்டல இசையோடும் கொண்டு வந்தார்கள்.

ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை தாவீதின் நகரை அடைந்த போது, சவுலின் புதல்வி மீக்கால் சன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள். அப்பொழுது, தாவீது அரசர் அக்களித்து ஆடிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரைத் தன்னுள்ளத்தில் இகழ்ந்தாள்.

அதிகாரம் 16.

அவர்கள் கடவுளின் பேழையைக் கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தனர். பின்பு கடவுளின் முன் எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினர்.

தாவீது எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின்பு மக்களுக்கு ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்கினார்.

அவர் இஸ்ரயேலராகிய ஆண் பெண் அனைவருக்கும் ஆளுக்கு ஓர் அப்பமும், ஒரு துண்டு இறைச்சியும், ஒரு திராட்சைப்பழ அடையும் கொடுத்தார்.

பின்பு அவர் ஆண்டவரின் பேழையின் முன் வழிபாடு நடத்தவும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்தவும், அவரைப் போற்றவும், லேவியரில் சிலரைத் திருப்பணியாளராக நியமித்தார்.

ஆசாபு தலைவராகவும், செக்கரியா துணைத் தலைவராகவும் எயியேல், செமிரா மோத்து, எகியேல், மத்தித்தியா, எலியாபு, பெனாயா, ஓபேது-ஏதோம், எயியேல் ஆகியோர் தம்புரு, சுரமண்டலம் கருவிகளை வாசிக்கவும், ஆசாபு கைத்தாளம் கொட்டவும்,

பெனாயா, யகசியேல் ஆகிய குருக்கள் இருவரும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையின் முன் இடைவிடாமல் எக்காளங்களை ஊதவும் நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு, தாவீது ஆண்டவருக்கு நன்றிப்பாடல்களைப் பாடும் பொறுப்பை ஆசாபுக்கும் அவர் உறவின்முறையினருக்கும் முதன்முதலாக அளித்தார்:

. ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்: அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.

அவருக்குப் பாடல் பாடுங்கள்: அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!

அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!

ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்: அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!

அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்: அவர்தம் அருஞ்செயல்களையும் அவரது வாய் மொழிந்த நீதித்தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.

அவரின் ஊழியராம் இஸ்ரயேலின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் புதல்வரே!

அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.

அவரது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்ளுங்கள்: ஆயிரம் தலைமுறைக்கென அவர் அளித்த வாக்குறுதியை மறவாதீர்கள்!

ஆபிரகாமுடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்கு அவர் ஆணையிட்டுக் கூறியதையும் நினைவில் கொள்ளுங்கள்!

யாக்கோபுக்கு நியமமாகவும் இஸ்ரயேலுக்கு என்றுமுள உடன்படிக்கையாகவும் அதை அவர் உறுதிப்படுத்தினார்.

“கானான் நாட்டை உனக்கு அளிப்பேன்: அப்பங்கே உனக்கு உரிமைச்சொத்தாய் இருக்கும்“ என்றார் அவர்.

அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும் மிகக் குறைந்தவராய் இருந்தார்கள்: அங்கே அன்னியராய் இருந்தார்கள்.

ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டிற்கும் ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும் அலைந்துதிரிந்தார்கள்.

யாரும் அவர்களை ஒடுக்குமாறு அவர் விட்டுவிடவில்லை: அவர்களின் பொருட்டு மன்னர்களை அவர் கண்டித்தார்:

“நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்: என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர்“, என்றார் அவர்.

உலகெங்கும் வாழ்வோரே! ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்: அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்!

பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்: அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்: பெரிதும் போற்றத்தக்கவர்: தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே!

மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே! ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்!

மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன! ஆற்றலும் அக்களிப்பும் அவரது திருத்தலத்தில் உள்ளன!

மக்களினங்களின் குடும்பங்களே! ஆண்டவருக்குச் சாற்றுங்கள்! மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்!

ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்: உணவுப் படையல் ஏந்தி அவர்திருமுன் வாருங்கள்: பய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்!

உலகெங்கும் வாழ்வோரே! அவர் திருமுன் நடுங்குங்கள்: உலகம் உறுதியுடன் நிலை கொண்டுள்ளது: இனி அது அசைக்கப்படுவதில்லை.

விண்ணுலகம் மகிழ்வதாக! மண்ணுலகம் களிகூர்வதாக! “ஆண்டவர் ஆள்கின்றார்“ என்று பிற இனத்தார்க்கு அறிவிப்பராக!

கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்: வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்!

அப்பொழுது காட்டு மரங்கள் ஆண்டவர் திருமுன் மகிழ்ந்து பாடட்டும்! ஏனெனில், அவர் மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு!

எங்கள் மீட்பராகிய கடவுளே! எங்களை விடுவித்தருளும்! வேற்று நாடுகளினின்று எங்களை விடுவித்து ஒன்று சேர்த்தருளும்! அப்பொழுது, நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்: உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்:

“இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாகப் புகழப் பெறுவாராக“ என்று சொல்லுங்கள். அப்பொழுது, மக்கள் அனைவரும் “ஆமென்“ என்று சொல்லி, ஆண்டவரைப் போற்றினர்.

பின்பு, தாவீது ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின்முன் தொடர்ந்து எந்நாளும் பணிவிடை செய்வதற்காக, பேழைக்கு முன்பாக இருக்குமாறு ஆசாபையும் அவரின் உறவின் முறையாரையும் பணித்தார்.

ஓபேது ஏதோமும் அவரின் உறவின் முறையாளர்களான அறுபத்து எட்டுப்பேரும் அவர்களுக்கு உதவி வெய்யவேண்டும். எதுத்பணின் மகனான ஓபேது ஏதோமும், கோசாவும் வாயில் காவலராக நியமிக்கப்பட்டனர்.

குரு சாதோக்கும் அவர் உறவின் முறைக் குருக்களும் கிபயோன் தொழுகைமேட்டில் ஆண்டவரின் திருக்கூடாரத்தின்முன் பணிசெய்ய வேண்டும்.

இஸ்ரயேலுக்கு ஆண்டவர் கட்டளையாகத் தந்த திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, காலையிலும் மாலையிலும் தவறாமல் எரி பலிபீடத்தின் மேல் அவர்கள் எரிபலிகளைச் செலுத்த வேண்டும்.

இவர்களோடு ஏமானையும் எதுத்பனையும் பெயர் சொல்லித் தேர்ந்து கொள்ளப்பட்ட சிலரையும் “ஆண்டவரின் பேரன்பு என்றென்றும் உள்ளது“ என்றுரைத்து அவருக்கு நன்றி செலுத்துமாறு கட்டளையிட்டார்:

இவர்களோடு ஏமான், எதுத்பன் ஆகியோரை எக்காளங்களையும், கைத்தாளங்களையும், இறைப்பாடலுக்குரிய இசைக் கருவிகளையும் இசைக்க ஏற்படுத்தினார்: எதுத்பனின் புதல்வரை வாயில் காவலராக நியமித்தார்.

பின்னர் மக்கள் அனைவரும் தம் வீடு திரும்பினர்: தாவீதும் தம் வீட்டாருக்கு ஆசி வழங்க, வீடு திரும்பினார்.

அதிகாரம் 17.

தாவீது தம் அரண்மனையில் வாழ்ந்து வரும் நாளில் இறைவாக்கினர் நாத்தானை நோக்கி, இதோ நான் கேதுரு மரத்தாலான அரண்மனையில் வாழ்கிறேன். ஆனால் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையோ திரைக்கூடாரத்தில் இருக்கிறதே என்றார்.

அதற்கு நாத்தான் தாவீதை நோக்கி, நீர் விரும்புவதை எல்லாம் செய்யும். ஏனெனில் கடவுள் உம்மோடு இருக்கிறார் என்றார்.

அன்றிரவு கடவுளின் வாக்கு நாத்தானுக்கு அருளப்பட்டது:

. என் ஊழியனாகிய தாவீதிடம் சென்று சொல்: “ஆண்டவர் கூறுவது இதுவே: நான் தங்கியிருப்பதற்கான கோவிலை நீ கட்ட வேண்டாம்.

இஸ்ரயேலரை விடுவித்த நாளிலிருந்து இன்றுவரை நான் எந்தக் கோவிலிலும் தங்கியதில்லை: நான் என்றுமே திருக்கூடாரத்தில் இருந்து, ஒரு கூடாரத்தைவிட்டு மற்றொரு கூடாரத்துக்கு மாறி வந்துள்ளேன்.

இஸ்ரயேல் மக்கள் அனைவரோடும் நான் பயணம் செய்த நாள்களிலும், அவர்களை வழிநடத்த நான் ஏற்படுத்திய எந்த ஒரு விடுதலைத் தலைவரிடமும், எனக்குக் கேதுரு மரத்தால் ஏன் ஒரு கோவிலைக் கட்டவில்லை எனக் கேட்டேனா?“

எனவே நீ என் ஊழியனாகிய தாவீதிடம் சொல்ல வேண்டியதாவது: “படைகளின் ஆண்டவராகிய நான் சொல்வது இதுவே: வயல்வெளிகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த உன்னை ஆடுகளை மேய்ப்பதினின்று என் மக்கள் இஸ்ரயேலை ஆள்பவனாக மாற்றினேன்.

நீ சென்றவிடமெல்லாம் உன்னோடிருந்து, உன் முன்னிலையில் உன் எதிரிகளை அழித்தேன். உலகின் பெருந்தலைவர்களுக்கு இணையான புகழை உனக்கு அளிப்பேன்.

என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு ஓர் இடத்தைத் தயாரிப்பேன்: அங்கே அவர்களை வேர் கொள்ளச் செய்வேன். எனவே அவர்கள் நிலையாய்க் குடிவாழ்வர், ஒருகாலும் அலைந்து திரியார், முன்புபோல் கொடியோர் கையில் சிறுமையுறமாட்டார்:

என் மக்களாகிய இஸ்ரயேலர்மேல் நீதித்தலைவர்களை நான் ஏற்படுத்திய நாள்களில் இருந்தது போல் சிறுமையுறார். நான் உன் எதிரிகளைப் பணியச் செய்வேன். மேலும் ஆண்டவர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று அறிவிக்கிறேன்.

உன் வாழ்நாள் முடிந்து உன் மூதாதையரோடு நீ சேர்ந்து கொள்ளும்பொழுது, உன் வழித்தோன்றல்களுள்-உன் புதல்வர்களுள்-ஒருவனை எழுப்பி அவனது அரசை நிலை நாட்டுவேன்.

அவன் எனக்குக் கோவில் கட்டுவான்: அவன் அரியணையை என்றென்றும் நிலைபெறச் செய்வேன்.

நான் அவனுக்குத் தந்தையாய் இருப்பேன்: அவன் எனக்கு மகனாய் இருப்பான். உனக்கு முன்னிருந்தவனிடமிருந்து என் பேரன்பை நான் விலக்கிக் கொண்டதுபோல அவனைவிட்டு விலக்கிக்கொள்ள மாட்டேன்.

மாறாக அவனை என் கோவிலின் மேலும், அரசின் மேலும் தலைவனாக என்றென்றும் நியமிப்பேன். அவன் அரியணை என்றென்றும் நிலைக்கும்.

இவ்வாக்குகள் அனைத்தையும், இக்காட்சி முழுவதையும் அப்படியே நாத்தான் தாவீதிடம் அறிவித்தார்.

அப்போது, தாவீது அரசர் ஆண்டவர்முன்பாகச் சென்று அமர்ந்து கூறியது: கடவுளாகிய ஆண்டவரே, என்னை இவ்வளவு உயர்த்தியமைக்கு எனக்கும் என் வீட்டாருக்கும் என்ன அருகதை?

ஆயினும், கடவுளே! அதுவும் உமக்குச் சிறியதாய்த் தோன்றிற்று: உம் அடியானுடைய வீட்டுக்கு வரவிருக்கும் பெரும் சிறப்பைப் பற்றி வெளிப்படுத்தினீரே! கடவுளாகிய ஆண்டவரே! நீர் ஏற்கெனவே என்னைப் பெரியவனாக மதித்து வருகிறீர்.

நீர், உம் அடியானாகிய என்னைப் பெருமைப்படுத்தியதற்கு ஈடாக தாவீதாகிய நான் சொல்ல வேறு என்ன உளது? ஏனெனில் நீர் உம் அடியானை அறிந்திருக்கிறீர்.

ஆண்டவரே, நீர் உம் அடியான்பொருட்டு, உம் திருவுளப்படி இத்தகைய மாபெரும் செயல்கள் அனைத்தையும் செய்ததுமன்றி, இத்தகைய மாண்புமிக்க செயல்களையெல்லாம் அறிவித்தீர்.

ஆண்டவரே, உமக்கு ஒப்பானவர் எவருமில்லை: எங்கள் காதுகளினாலே நாங்கள் கேள்விப்பட்டதின்படி உம்மைத் தவிர வேறு கடவுளும் இல்லை.

உம் மக்களாகிய இஸ்ரயேலுக்கு இணையான வேறொரு மக்களினம் உலகில் உண்டோ? அவர்கள் உம்முடைய மக்களாயிருக்கவும், நீர் பெரும் புகழ் பெறவும், அவர்களை மீட்கும்படி கடவுளாகிய நீர் தாமே முன்சென்றீர். எகிப்திலிருந்து நீர் மீட்டுக்கொண்ட உமது மக்கள் முன்பாக வேற்றின மக்களைத் துரத்தும்படி அச்சத்திற்குரிய செயல்களைச் செய்தீர்.

உம் மக்களாகிய இஸ்ரயேலர் என்றும் உம் மக்களாக இருக்கச் செய்தீர்: ஆண்டவராகிய நீர்தாமே அவர்களுக்குக் கடவுளானீர்.

இப்போதும் ஆண்டவரே, நீர் உமது அடியானையும், அவன் வீட்டையும் குறித்துக் கூறிய வார்த்தைகளை என்றென்றும் உறுதிப்படுத்தும். நீர் கூறியபடியே செய்தருளும்.

“இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவரே, இஸ்ரயேலின் கடவுள்“ என்று உமது பெயர் மாட்சியுற்று எந்நாளும் நிலைபெற்றிருப்பதாக! உம் அடியானாகிய தாவீதின் வீடும் உமக்கு முன்பாக உறுதி பெற்றிருப்பதாக!

என் கடவுளே, நீர் உம் அடியானின் வீட்டை நிலைப்படுத்துவேன் என என் காது கேட்க வெளிப்படுத்தினீரே! எனவே உம் அடியானாகிய நான் உமக்கு முன்பாக வேண்டுதல் செய்ய மனத்துணிவு பெற்றேன்.

ஆண்டவரே! நீரே கடவுள்: இந்த நன்மையை உம் அடியானுக்குக் கொடுப்பதாய்க் கூறியுள்ளீர்.

இப்போதும் உம் அடியானின் வீடு என்றும் உமக்கு முன்பாக நிலைநிற்கும்படி அதற்கு ஆசி வழங்கினீர்: ஏனெனில், ஆண்டவரே! உமது ஆசி பெற்றது என்றென்றும் ஆசி பெற்றதாகவே இருக்கும்.

அதிகாரம் 18.

அதன் பின்னர் தாவீது பெலிஸ்தியரைத் தோற்கடித்து அவர்களைப் பணியச் செய்தார்: காத்து நகரையும் அதன் சிற்டிர்களையும் பெலிஸ்தியரிடமிருந்து கைப்பற்றினார்.

அவர் மோவாபைத் தோற்கடித்தார். மோவாபியர் தாவீதுக்கு அடிமைகளாகி வரி செலுத்தினர்.

சோபாவின் மன்னனான அதரேசர் தன் ஆட்சியைப் பலப்படுத்தும் நோக்குடன் யூப்பிரத்தீசு நதியோரம் செல்கையில் தாவீது அவனையும் காமாத்தின் அருகே புறமுதுகு காட்டச் செய்தார்.

அவனிடமிருந்து ஆயிரம் தேர்களையும், ஏழாயிரம் குதிரை வீரரையும், இருபதினாயிரம் காலாள் படையினரையும் அவர் கைப்பற்றினார். அவற்றுள் மறு தேர்களுக்கான குதிரைகளை வைத்துக்கொண்டு ஏனைய தேர்க்குதிரைகளின் கால் நரம்பையும் வெட்டிப் போட்டார்.

சோபாவின் அரசனான அதரேசருக்கு உதவி செய்ய தமஸ்கு நகர் சிரியர் வந்தனர். தாவீது சிரியரில் இருபத்திரண்டாயிரம் பேரைக் கொன்று குவித்தார்.

மேலும் தாவீது தமஸ்கு நகரின் நடுவில் பாளையங்களை அமைத்தார். சிரியர் தாவீதுக்கு அடிமைகளாகி அவருக்கு வரி செலுத்தினர். தாவீது சென்றவிடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.

மேலும் தாவீது அதரேசரின் அலுவலர் வைத்திருந்த பொற்கேடயங்களைக் கைப்பற்றி எருசலேமுக்குக் கொண்டு வந்தார்.

அதுரேசரின் நகர்களாகிய திப்காத்திலும், கூனிலுமிருந்தும் தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்து வந்தார். அதைக் கொண்டு சாலமோன் வெண்கலக் கடலையும் பண்களையும் தேவையான வெண்கலங்களையும் செய்தார்.

தாவீது சோபாவின் அரசனான அதரேசரின் படைகள் முழுவதையும் புறமுதுகு காட்டச் செய்தது பற்றிக் காமாத்தின் மன்னனான தோகு கேள்விப்பட்டான்.

அவன் தாவீது அரசருக்கு வாழ்த்துக் கூறவும், அதரேசரோடு போரிட்டு அவன்மீது வெற்றி கொண்டதற்காக தாவீதுக்குப் பாராட்டுக் கூறவும், தன் மகன் அதோராமை அனுப்பினான். ஏனெனில் அதரேசர் அதுவரை தோகுவுடன் அடிக்கடி போரிட்டுக் கொண்டிருந்தான். மேலும் தோகு பொன், வெள்ளி, வெண்கலத்தாலான அனைத்துக் கலங்களையும் தன் மகன் மூலம் அனுப்பி வைத்தான்.

தாவீது அரசர் இவற்றையும், தாம் ஏதோமியர், மோவாபியர், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர் ஆகியோரிடமிருந்து கைப்பற்றிய வெள்ளி, பொன் யாவற்றையும் ஆண்டவருக்கென்று அர்ப்பணம் செய்தார்.

செருயாவின் மகன் அபிசாய் உப்புப்பள்ளத்தாக்கில் பதினெட்டாயிரம் ஏதோமியரை வெட்டி வீழ்த்தினார்.

அவர் ஏதோமில் பாளையங்களை அமைத்தார். ஏதோமியர் யாவரும் தாவீதுக்கு அடிமைகளாயினர். தாவீது சென்ற இடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.

தாவீது இஸ்ரயேலர் எல்லாருக்கும் அரசராய் இருந்தார். அவர் தம் மக்கள் அனைவருக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கச் செய்தார்.

செருயாவின் மகன் யோவாபு படைத்தலைவராய் இருந்தார். அகிழதின் மகன் யோசபாத்து பதிவாளராய் இருந்தார்.

அகிபபின் மகன் சாதோக்கும் அபியத்தாரின் மகன் அபிமெலக்கும் குருக்களாய் இருந்தனர். சவ்சா எழுத்தராய் இருந்தார்.

யோயாதாவின் மகன் பெனாயா கெரேத்தியர் பெலேத்தியருக்குத் தலைவராய் இருந்தார். தாவீதின் புதல்வர் அவர்தம் அரசில் உயர் பதவிகள் வகித்தனர்.

அதிகாரம் 19.

இவற்றின்பின் அம்மோனியரின் மன்னன் நாகாசு இறந்தான். அவனுக்குப் பின் அவன் மகன் அரசனானான்.

அப்பொழுது தாவீது, அடீனின் தந்தையாகிய நாகாசு எனக்கு அன்பு காட்டியதுபோல், நானும் அவன் மகனாகிய இவனுக்கு அன்பு காட்டுவேன் என்று கூறி, அவர் தமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கும்படி பதர்களை அனுப்பினார். அவர்கள் ஆடீனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோனியரின் நாட்டை அடைந்தனர்.

அப்போது அம்மோனியரின் தலைவர்கள் ஆடீனை நோக்கி, தாவீது ஆறுதல் கூறுபவர்களை உம்மிடம் அனுப்பியுள்ளது உம் தந்தையைச் சிறப்பிப்பதற்கென்று நினைக்கிறீரா? உமது நாட்டைத் துருவி ஆராயவும், அதை நிலை குலையச் செய்யவும் உளவு பார்க்கவுமே அவன் அலுவலர் வந்துள்ளனர் அன்றோ? என்று கூறினர்.

எனவே ஆடீன் தாவீதின் அலுவலரைக் கைது செய்து, அவர்கள் தாடியைச் சிரைத்து அவர்களுடைய ஆடைகளை இடுப்பிலிருந்து கத்தரித்து அவர்களை அனுப்பி வைத்தான்.

அவர்களுக்குச் செய்யப்பட்டதைச் சிலர் வந்து தாவீதுக்குத் தெரிவித்தனர். அவர்கள் மிகவும் கேவலப்பட்டிருந்ததால், தாவீது அவர்களுக்கு ஆளனுப்பி, எரிகோவில் தங்கியிருந்து உங்கள் தாடி வளர்ந்தபின் திரும்பி வாருங்கள் என்று கூறினார்.

அம்மோனியர் தாங்கள் தாவீதின் பகைமையைத் தேடிக் கொண்டதை உணர்ந்தனர். உடனே ஆடீனும், அம்மோனியரும் மெசப்பொத்தாமியா, மாக்கா, சோபா என்ற சிரிய நாட்டுப் பகுதிகளினின்று தங்களுக்குத் தேர்ப்படையையும் குதிரைப்படையையும் கூலிக்கு அமர்த்துமாறு, ஆயிரம் தாலந்து வெள்ளியை அனுப்பிவைத்தனர்.

அவ்வாறே, கூலிக்கு அமர்த்தப்பட்ட முப்பத்து இரண்டாயிரம் தேர்களும் மாக்கா மன்னனின் படைகளும் வந்து மேதபாவுக்கு முன்பாக பாளையம் இறங்கினர். அம்மோனியரும் அவர்களுடைய எல்லா நகர்களிலிருந்தும் திரண்டு வந்து போருக்குத் தயாராயினர்.

தாவீது அதைக் கேள்வியுற்றபோது, யோவாபையும் ஆற்றல் மிக்க தம் படை முழுவதையும் அனுப்பினார்.

அம்மோனியர் புறப்பட்டு வந்து நகர வாயிலில் அணிவகுத்து நின்றனர். அவர்களுக்கு உதவியாக வந்த மன்னர்கள் திறந்த வெளியில் அணிவகுத்து நின்றனர்.

யோவாபு தமக்கு முன்னும் பின்னும் பகைவர் படை தாக்கவிருப்பதைக் கண்டபோது, இஸ்ரயேல் அனைத்திலும் ஆற்றல்மிகு வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைச் சிரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார்.

மற்றப் படைவீரரைத் தம் சகோதரன் அபிசாயின் தலைமையில் அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார்.

யோவாகு அவனை நோக்கி, சிரியர் என்னை விட ஆற்றல்மிக்கவராய் இருந்தால், நீ எனக்கு உதவியாக வரவேண்டும்: அம்மோனியர் உன்னைவிட ஆற்றல்மிக்கவராய் இருந்தால், நான் உனக்கு உதவியாக வருவேன்.

மனஉறுதியுடன் இரு! நம் மக்களுக்காகவும் கடவுளின் நகர்களுக்காகவும் வலிமையுடன் போராடுவோம். ஆண்டவர் தமக்கு நலமாய்த் தோன்றுவதைச் செய்வாராக! என்றார்.

பின்பு யோவாபும் அவரோடிருந்த மக்களும் சிரியரோடு போரிட நெருங்கினார்கள். அவர்களோ அவருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர்.

சிரியர் புறமுதுகிட்டு ஓடுவதை அம்மோனியர் கண்டபோது, அவர்களும் யோவாபின் சகோதரன் அபிசாயிக்கு முன்பாகச் சிதறியோடி நகருக்குள் புகுந்தனர். யோவாபும் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.

தாங்கள் இஸ்ரயேலருக்கு முன்பாக முறியடிக்கப்பட்டதைக் கண்ட சிரியர், பதர்களை அனுப்பி நதிக்கு அப்பாலிருந்த சிரியரையும் வரவழைத்தனர். அதரேசரின் படைத்தலைவன் சோபாகு அவர்களை முன்னின்று நடத்தினான்.

அதைக் கேள்வியுற்ற தாவீது இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்றுதிரட்டி, யோர்தானைக் கடந்து சென்று, சிரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார். அவ்வாறு தாவீது போருக்கு அணிவகுத்து நிற்கையில் சிரியப் படைகள் அவரோடு மோதின.

சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகப் புறமுதுகிட்டு ஓடினர். தாவீது சிரியர் படையின் ஏழாயிரம் தேர்ப்படை வீரரையும், நாற்பதாயிரம் காலாள்படையினரையும், வெட்டி வீழ்த்தினார்: படைத் தலைவன் சோபாகையும் கொன்றார்.

அதரேசரின் அலுவலர், தாங்கள் இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்டதைக் கண்டு, தாவீதோடு சமாதானம் செய்து அவருக்கு அடிபணிந்தனர். அதன்பின் அம்மோனியருக்கு உதவி செய்ய சிரியர் என்றுமே விரும்பவில்லை.

அதிகாரம் 20.

ஓர் ஆண்டு கழிந்தபின் அரசர்கள் போருக்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாபு ஆற்றல்மிக்க படையோடு சென்று அம்மோனியர் நாட்டை அழித்தார். பின்பு இரபாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டார். தாவீதோ எருசலேமில் தங்கிவிட்டார். யோவாபு இரபாவைத் தாக்கி அதை வீழ்த்தினார்.

தாவீது அவர்கள் மன்னனின் தலையிலிருந்த மகுடத்தை எடுத்துக் கொண்டார். அது ஒரு தாலந்து பொன் எடையுடையது. அதில் ஒர் இரத்தினம் இருந்தது. அதைத் தாவீது தம் மகுடத்தில் பதித்துக்கொண்டார். மேலும் நகரினின்று ஏராளமான கொள்ளைப் பொருள்களையும் கொண்டு வந்தார்.

தாவீது அங்குக் குடியிருந்த மக்களைச் சிறைப்படுத்தி இரம்பம், கடப்பாரை, கோடரி ஆகியவற்றால் அவர்களை வேலை செய்ய வைத்தார். தாவீது அம்மோனியரின் எல்லா நகர் மக்களுக்கும் இவ்விதமே செய்தார். பின்னர் அவர்தம் மக்கள் அனைவருடனும் எருசலேமுக்குத் திரும்பினார்.

அதன் பின்னர் கெசேரில் பெலிஸ்தியரோடு போர்நடந்தது. அதில் ஊசாவியனான சிபக்காய் அரக்கர் இனத்தானான சிபாயைக் கொன்றான். அதனால் பெலிஸ்தியரும் அடிபணிந்தனர்.

மேலும் ஒரு போர் பெலிஸ்திரோடு நடந்தது. யாயிரின் மகன் எல்கானான் இத்தியனான கோலியாத்தின் சகோதரன் இலகுமியைக் கொன்றான். இவனது ஈட்டியின் பிடி தறிக்கட்டை அளவு பெரிதாயிருந்தது.

காத்தில் மற்றொரு போரும் நடந்தது. ஒவ்வொரு கையிலும் காலிலும் ஆறு ஆறு விரல்களாக இருபத்தி நான்கு விரல்களைக் கொண்ட அரக்கர் இனத்தானான நெட்டையன் ஒருவன் அவ்வூரில் இருந்தான்.

அவன் இஸ்ரயேலைப் பழித்துரைத்தான். தாவீதின் சகோதரராகிய சிமயா மகன் யோனத்தான் அவனைக் கொன்றார்.

காத்து ஊரிலிருந்த அரக்கருக்குப் பிறந்த இவர்கள் தாவீதாலும் அவர் அலுவலராலும் சாகடிக்கப்பட்டனர்.

அதிகாரம் 21.

சாத்தான் இஸ்ரயேலுக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடுமாறு தாவீதைத் பண்டினான்.

தாவீது யோவாபையும், மற்றப் படைத்தலைவர்களையும் நோக்கி, நீங்கள் போய் பெயேர்செபா தொடங்கி தாண்வரை வாழும் இஸ்ரயேல் மக்கள் தொகையைக் கணக்கிட்டு என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதை அறியவேண்டும் என்றார்.

யோவாபு பதிலுரையாக, ஆண்டவர் தன் மக்களை இப்போது இருப்பதினும் மறு மடங்கு மிகுதியாய்ப் பெருகச் செய்வாராக! என் தலைவராகிய அரசரே, அவர்கள் யாவரும் என் தலைவரின் பணியாளர் அன்றோ! என் தலைவர் இதை ஏன் நாட வேண்டும்? இஸ்ரயேலின் மீது பழி விழக் காரணமாக வேண்டும்? என்றார்.

இறுதியில், அரசரின் கட்டளை யோவாபைப் பணிய வைத்தது. எனவே யோவாபு புறப்பட்டுப்போய் இஸ்ரயேல் நாடெங்கும் சென்று எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.

போருக்குத் தகுந்த ஆள்களின் தொகையை யோவாபு தாவீதிடம் அறிவித்தார். வாளேந்தும் வீரர் இஸ்ரயேலில் பதினோர் இலட்சம் பேரும், யூதாவில் நான்கு இலட்சத்து எழுபதினாயிரம் பேரும் இருந்தனர்.

எனினும், அரசரின் ஆணையை வேண்டாவெறுப்பாய் நிறைவேற்றினபடியால் லேவி, பென்யமின் குலத்தாரை யோவாபு கணக்கிடவில்லை.

இக்கணக்கெடுப்பு கடவுளின் பார்வையில் தீயதெனப்பட்டதால், அவர் இஸ்ரயேலைத் தண்டித்தார்.

தாவீது கடவுளிடம், நான் இந்தச் செயலைச் செய்தபடியால் பெரும் பாவம் செய்தேன். உம் அடியேனை மன்னியும், மதியீனமாய்ச் செயல்பட்டேன் என்று சொன்னார்.

அப்போது தாவீதுக்குக் காட்சியாளராய் இருந்த காத்து கூறியதாவது:

நீ தாவீதிடம் சென்று, “ஆண்டவர் கூறுவது இதுவே: நான் மூன்று காரியங்களை உனக்குமுன் வைக்கிறேன்: அவற்றுள் ஒன்றை நீ தெரிந்து கொள்: அவ்வாறே உனக்குச் செய்வேன்“ என்று சொல் என்றார்.

காத்து தாவீதிடம் சென்று ஆண்டவர் கூறுவது இதுவே: “நீயே தேர்ந்துகொள்:

மூன்று ஆண்டுப்பஞ்சமா? உன் எதிரிகளின் வாளுக்கு அஞ்சி மூன்று மாதம் அவர்கள்முன் ஓடுவதா? இஸ்ரயேல் நாடெங்கும் சாவுண்டாகும்படி ஆண்டவரின் பதர் மூன்று நாள்கள் நாட்டில் வருவிக்கும் ஆண்டவரின் வாளான கொள்ளை நோயா?“ இப்போது, என்னை அனுப்பியவருக்குப் பதிலளிக்குமாறு உம் முடிவைக் கூறும் என்றார்.

தாவீது காத்தை நோக்கி, நான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன்: ஆண்டவர் கையில் நான் சரண் அடைவதே மேல்! ஏனெனில் அவர் மிகவும் இரக்கம் உள்ளவர். மனிதர் கையில் நான் அகப்படக்கூடாது என்றார்.

எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் கொள்ளை நோயை அனுப்பினார். அதனால் இஸ்ரயேலருள் எழுபதினாயிரம் பேர் மாண்டனர்.

பின்னர், எருசலேமை அழிக்கக் கடவுள் ஒரு பதரை அனுப்பினார். எனினும், அவர் அவ்வாறு அழிக்கும்போது ஆண்டவர் அந்தத் தீங்கைப் பார்த்து மனம் வருந்தி, அழித்துக் கொண்டிருந்த பதரைப் பார்த்து, போதும் உடனே நிறுத்து! என்று கட்டளையிட்டார். அந்நேரம் ஆண்டவரின் பதர் எபூசியனான ஒர்னானின் களத்தருகில் நின்று கொண்டிருந்தார்.

தாவீது தம் கண்களை உயர்த்தியபோது, ஆண்டவரின் பதர் மண்ணுலகுக்கும் விண்ணுலகுக்கும் நடுவே, தன் கையில் உருவிய வாள் பிடித்து, அதை எருசலேமில்மீது நீட்டியிருக்கக் கண்டார். அப்போது தாவீதும் பெரியோர்களும் சாக்கு உடை உடுத்தி முகம் குப்புற விழுந்தனர்.

தாவீது கடவுளை நோக்கி, மக்களைக் கணக்கிடச் சொன்னவன் நானல்லவா? நானே குற்றவாளி: நானே தீமை செய்தேன்: இந்த ஆடுகள் என்ன செய்தன? என் கடவுளாகிய ஆண்டவரே! உமது கை என்மேலும் என் தந்தையின் வீட்டாரின் மேலும் இருக்கட்டும், கொள்ளை நோய் மக்களிடமிருந்து விலகட்டும் என்று வேண்டினார்.

ஆண்டவரின் பதர் காத்தை நோக்கி, எபூசியனான ஒர்னாவின் களத்திற்குச் சென்று ஆண்டவருக்கு ஒரு பலி பீடம் எழுப்புமாறு தாவீதுக்குச் சொல் என்றார்.

ஆண்டவர் பெயரால் காத்து கூறிய வாக்கின்படி தாவீது சென்றார்.

அந்நேரத்தில் ஒர்னான் கோதுமை போரடித்துக் கொண்டிருந்தார். அவர் திரும்பியபோது பதரைக் கண்டார். அவரோடிருந்த அவருடைய நான்கு புதல்வர்களும் ஒளிந்து கொண்டனர்.

தாவீது தன்னிடம் வருவதை ஒர்னான் தலைநிமிர்ந்து பார்த்து, போரடிக்கும் களத்தை விட்டு வெளியேறி, முகம்குப்புறத்தரையில் விழுந்து அவரை வணங்கினார்.

தாவீது ஒர்னானை நோக்கி, உமது போரடிக்கும் களம் இருக்கும் இடத்தை எனக்குக் கொடும். கொள்ளை நோய் மக்களைவிட்டு நீங்கும்படி அவ்விடத்தில் ஆண்டவருக்கு நான் ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டும்: அதன் முழு விலையையும் உமக்குத் தருவேன் என்றார்.

ஒர்னான் தாவீதை நோக்கி, என் தலைவராகிய அரசர் அதை எடுத்துக்கொண்டு தாம் விரும்பும் வண்ணம் செய்வாராக! இதோ! எரிபலிக்காக மாடுகளும் விறகுக்காகப் போரடிக்கும் கருவிகளும் படையலுக்காகக் கோதுமையும் இருக்கின்றன. அனைத்தையும் நான் தருகிறேன் என்றார்.

அரசர் தாவீது ஒர்னானை நோக்கி, அப்படியல்ல, நான் அதை முழு விலைக்கு வாங்குவேன். உமக்கு உரியதை ஆண்டவருக்காக எடுத்துக்கொள்ளமாட்டேன். எனக்கு எந்தச் செலவுமின்றி எரிபலி செலுத்தவும் மாட்டேன் என்றார்.

அவ்வாறே தாவீது அறுமறு பொற்காசுகளை ஒர்னானுக்குக் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்.

தாவீது அங்கு ஒரு பலிபீடத்தை ஆண்டவருக்குக் கட்டி எலிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி, ஆண்டவரிடம் வேண்டுதல் செய்தார். அவர் பலிபீடத்தின் மேலிருந்த பலியின்மேல் வானின்று இறங்கிய நெருப்பின்மூலம் ஆண்டவர் பதிலளித்தார்.

பதரிடம் அவருடைய வாளை மறுபடியும் அதன் உறையில் வைக்குமாறு ஆண்டவர் கட்டளையிட்டார்.

அப்பொழுது தாவீது எபூசியரான ஒர்னானின் களத்தில் ஆண்டவர் தமக்குப் பதிலளித்ததைக் கண்டு அங்கேயே பலி செலுத்தினார்.

மோசே பாலைநிலத்தில் எழுப்பிய ஆண்டவரின் திருக்கூடாரமும், எரிபலிபீடமும் அந்நாள்களில் கிபயோனின் தொழுகை மேட்டில் இருந்தன.

தாவீது ஆண்டவரின் பதரது வாளுக்கு அஞ்சியபடியால், கடவுள் அருளும் வாக்கைப் பெற அவர் அங்குச் செல்ல இயலவில்லை.

அதிகாரம் 22.

அப்பொழுது தாவீது, கடவுளாகிய ஆண்டவரின் கோவில் இங்கே இருக்கும். இஸ்ரயேலர் பலியிடும் எரிபலிபீடமும் இங்கேயே இருக்கும் என்றார்.

தாவீது இஸ்ரயேல் நாட்டில் வாழ்ந்துவந்த அன்னியரைக் கூடிவரச் செய்தார். கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கான செதுக்கப்பட்ட கற்களைத் தயார் செய்வதற்கென்று கல் தச்சரை அவர் நியமித்தார்.

தாவீது வாயில்களின் கதவுகளுக்குத் தேவையான ஆணிகளுக்கும் கீல் முளைகளுக்குமான ஏராளமான இரும்பையும் அளவிட இயலா வெண்கலத்தையும் தயார் செய்தார்.

அவர் எண்ணிலடங்காக் கேதுரு மரங்களையும் தயார் செய்தார். ஏனெனில், சீதோன், தீரின் மக்கள் ஏராளமான கேதுரு மரங்களைத் தாவீதுக்குக் கொண்டு வந்தார்கள்.

தாவீது, என் மகன் சாலமோன் அனுபவமற்ற இளைஞன். ஆண்டவருக்குக் கட்டப்பட்ட வேண்டிய கோவிலோ பெரியதும் உலகெங்கிலும் பெரும் புகழும் மாட்சியும் பெற்றதாயும் இருக்க வேண்டும். எனவே அதற்கு வேண்டியவற்றை நானே தயாரித்த வைப்பேன் என்று கூறி, தாவீது அவருடைய சாவுக்குமுன் ஏராளமான பொருள்களைச் சேகரித்து வைத்தார்.

மேலும் தம் மகன் சாலமோனை அழைத்து இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தைக் கட்டுமாறு பணித்தார்.

தாவீது தம் மகன் சாலமோனை நோக்கி, என் மகனே, கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு ஒரு கோவிலைக் கட்ட என் மனத்தில் நினைத்திருந்தேன்.

மாறாக, ஆண்டவர் என்னோடு பேசி, “நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய்: எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில் கட்ட வேண்டாம்.

இதோ! உனக்கு ஒரு மகன் பிறப்பான்! அவன் அமைதியின் மன்னனாய் இருப்பான்! சுற்றிலுமுள்ள அவனுடைய பகைவர்களிடமிருந்து அவனுக்கு அமைதியை அருள்வேன்! எனவே அவனுடைய பெயர் சாலமோன் எனப்படும்! அவனுடைய வாழ் நாள்களில் இஸ்ரயேலுக்கு நிறைவாழ்வும் அமைதியும் அருள்வேன்.

அவன் என் பெயருக்குக் கோவில் கட்டுவான்: அவன் எனக்கு மகனாய் இருப்பான்: நான் அவனுக்குத் தந்தையாயிருப்பேன்: இஸ்ரயேலில் அவன் அரச அரியணையை என்றென்றும் நிலைநாட்டுவேன்“ என்றார்.

இப்போதும், என் மகனே! ஆண்டவர் உன்னோடு இருப்பராக! அவர் உன்னைக் குறித்துக் கூறியபடியே உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தை நீ கட்டி முடிப்பதில் வெற்றி பெறுவாயாக!

உன் கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து இஸ்ரயேலை ஆள்வதற்கு வேண்டிய அறிவையும் விவேகத்தையும் ஆண்டவர் உனக்குக் தந்தருள்வாராக!

ஆண்டவர் மோசேயின் மூலம் இஸ்ரயேலுக்குக் கட்டளையிட்ட நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து அதன்படி செய்தால் நீ வளம் பெறுவாய்! திடம் கொள்! உறுதியாயிரு! அஞ்சாதே! கலங்காதே!

இதோ! எளியேன் ஆண்டவரின் இல்லத்திற்காக நாலாயிரம் டன் பொன்னும், நாற்பதாயிரம் டன் வெள்ளியும் எடை மதிப்பட இயலா வெண்கலமும், இரும்பும் ஏராளமாய்ச் சேகரித்துள்ளேன்: மரங்களும், கற்களும் தயார் செய்து வைத்துள்ளேன்: நீ இன்னும் அதிகம் சேகரிப்பாய்.

வேலை செய்யத் திரளான ஆள்களும், கல்தச்சர், கொத்தர், தச்சர் ஆகியோரும், பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றைக் கொண்டும் எல்லாவித வேலைப்பாடுகளையும் செய்யக்கூடிய எண்ணற்ற கைவினைஞர்களும் இருக்கின்றனர்.

எழு! செயல்படு! ஆண்டவர் உன்னோடு இருப்பராக! என்றார்.

மேலும் தம் மகன் சாலமோனுக்கு உதவி செய்யும்படி இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவருக்கும் தாவீது கட்டளையிட்டுக் கூறியது:

உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடிருந்து, எத்திக்கிலும் உங்களுக்கு அமைதியைத் தந்துள்ளார் அல்லவா? உலகில் வாழ்வோரை என் கையில் ஒப்படைத்துள்ளார். ஆண்டவருக்கு முன்பாகவும், அவர் தம் மக்களுக்கு முன்பாகவும், உலக நாடுகள் அடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இப்போது, உங்கள் இதயத்தாலும், உங்கள் உள்ளத்தாலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நாடுங்கள். நீங்கள் சென்று, ஆண்டவரின் திருத்தலத்தை எழுப்புங்கள். ஆண்டவரின் பெயருக்கென எழுப்பப்படும் கோவிலுக்கு ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையும், கடவுளின் எல்லாப் புனித கலன்களும் கொண்டு வரப்படட்டும்.

அதிகாரம் 23.

தாவீது வயது முதிர்ந்து கிழவரான போது, தம் மகன் சாலமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினார்.

அவர் இஸ்ரயேலின் எல்லாத் தலைவர்களையும், குருக்களையும் லேவிரையும் ஒன்றுகூட்டினார்.

லேவியருள் முப்பதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் எண்ணப்பட்டனர். அவர்கள் மொத்தம் முப்பத்து எட்டாயிரம் ஆண்கள்.

அவர்களுள் இருபத்து நாலாயிரம் பேரை ஆண்டவரின் இல்லப் பணிகளுக்குப் பொறுப்பாளராகவும், ஆறாயிரம் பேரை அலுவலர், நீதிபதிகளாகவும்,

நாலாயிரம் பேரை வாயில்காப்போராகவும், நாலாயிரம் பெரை ஆண்டவரைப் புகழ்வதற்காகத் தாம் செய்து வைத்திருந்த இசைக்கருவிகளுடன் புகழ் பாடுவோராகவும் நியமித்தார்.

தாவீது அவர்களை லேவிய மக்களான கேர்சோன், கோகாத்து, மெராரி என்னும் குடும்பங்களின்படி பிரித்தார்:

கேர்சோனியரில் இலாதானும் சிமயியும்:

இலாதானின் புதல்வர்: தலைவரான எகியேல், சேத்தாம், யோவேல் ஆகிய மூவர்:

சிமயின் புதல்வர்: செலமோத்து, அசியேல், ஆரான், ஆகிய மூவர். இவர்கள் இலாதானின் மூதாதையரில் தலைவர்கள்.

சிமயின் புதல்வர்: யாகாத்து, சீனா, எயூசு, பெரியா இந்த நால்வர் சிமயியின் புதல்வர்.

இவர்களுள் யாகாத்து மூத்தவர், சீசா இரண்டாம் மகன், எயூசுக்கும் பெரியாவுக்கும் புதல்வர் பலர் இல்லாததால், ஒரே மூதாதையரின் குடும்பத்தினராய்க் கணக்கிடப்பட்டனர்.

கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல் ஆகிய நால்வர்.

அம்ராமின் புதல்வர்: ஆரோன், மோசே. ஆரோனும் அவர் புதல்வரும் திருத்பயகத்தை என்றும் புனிதமாய்க் காக்கவும், என்றென்றும் ஆண்டவருக்கு முன்பாகத் பபங்காட்டவும், அவர்தம் திருமுன் பணிசெய்யவும், அவர் பெயரால் ஆசி வழங்கவும், அர்ப்பணிக்கப்பட்டனர்.

கடவுளின் அடியவரான மோசேயின் புதல்வரும் லேவி குலத்தாரோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர்.

மோசேயின் புதல்வர்: கெர்சோம், எலியேசர்,

கெர்சோமின் புதல்வருள் செபுயேல் தலைவராய் இருந்தார்.

எலியேசர் புதல்வருள் இரகபியா தலைவராய் இருந்தார். எலியேசருக்கு வேறு புதல்வர் இல்லை. ஆனால் இரகபியாவுக்குப் புதல்வர் பலர் இருந்தனர்.

இட்சகார் புதல்வருள் செலோமித்து தலைவராய் இருந்தார்.

எப்ரோன் புதல்வர்: தலைவரான எரிய்யா, இரண்டாமவர் அமரியா, மூன்றாமவர் யாகசியேல், நான்காமவர் எக்கமயாம்.

உசியேல் புதல்வர்: தலைவரான மீக்கா, இரண்டாமவர் இசியா.

மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி, மக்லியின் புதல்வர்: எலயாசர், கீஸ்.

எலயாசர் இறந்தபோது அவருக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வர் எவரும் இல்லை. அவர் சகோதரராகிய கீசின் புதல்வர் அவர்களை மணந்து கொண்டனர்.

மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரேமோத்து ஆகிய மூவர்.

தங்கள் மூதாதையரின் குலங்களின்படியே, மூதாதையர் குடும்பத் தலைவர்களாய் இருந்த லேவியரின் புதல்வர் இவர்களே. இவர்கள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள். தனித்தனியே நபர்களின் பெயர்களின் எண் வரிசைப்படியே பதிவு செய்யப்பட்டு ஆண்டவரின் திருக்கோவிலின் பணியோடு தொடர்புகொண்ட வேலைகளைச் செய்யவேண்டியவர்கள்.

ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி தந்து, எருசலேமில் என்றும் குடியிருக்கிறார்.

அதுவுமன்றி, லேவியர் திருக்கூடாரத்தையும் வழிபாட்டுக்கான அனைத்துக் கலங்களையும் இனிச் சுமக்க வேண்டுவதில்லை என்று தாவீது கூறினார்.

தாவீதின் இறுதிச் சொற்களின்படி லேவியருள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதினர் பதிவு செய்யப்பட்டனர்.

அவர்கள், ஆண்டவரின் இல்லப்பணியில் ஆரோனின் புதல்வரின்கீழ் வேலை செய்யவும், முற்றங்களையும் உள்ளறைகளையும் புனிதக் கலங்கள் அனைத்தையும் பய்மைப்படுத்தவும், கோவிலில் எவ்வகைப் பணியையும் செய்யவும் வேண்டும்:

திருமுன்னிலை அப்பங்கள், உணவுப்பலிக்கான மிருதுவான மாவு, புளிப்பற்ற அப்பம், சட்டிகளில் சுட்ட, பொரித்த அடைகள் ஆகியவற்றைத் தயாரித்து, அவற்றின் எடையையும் அளவையும் கணக்கிடுதல் வேண்டும்.

ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறவும் அவரைப் போற்றவும் வேண்டும்:

அத்தோடு, ஓய்வு நாள்களிலும் அமாவாசை நாள்களிலும் மற்றைய விழாக்களிலும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தும்போது எண்ணிக்கைப்படியும் பிரிவுகளின்படியும் ஆண்டவர் முன் எப்போதும் நிற்கவேண்டும்.

ஆண்டவர் தங்கும் சந்திப்புக் கூடாரத்தையும், திருத்தலத்தையும் கண்காணிக்கவும், ஆரோனின் வழிமரபில் வந்த அவர்கள் சகோதரரான குருக்களுக்கு ஆண்டவரின் இல்லப் பணியில் உதவி செய்யவும் வேண்டும்.

அதிகாரம் 24.

ஆரோனின் புதல்வர்தம் பிரிவுகளாவன: ஆரோனின் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர்.

நாதாபும், அபிகூவும் புதல்வரின்றி அவர்கள் தந்தைக்கு முன்னரே இறந்து போயினர். எலயாசரும், இத்தாமரும் குருக்களாகப் பணி செய்தனர்.

தாவீது எலயாசரின் குடும்பத்தைச் சார்ந்த சாதோக்கு, இத்தாமர் குடும்பத்தைச் சார்ந்த அகிமெலக்கு ஆகியோரின் துணைகொண்டு பதவிவாரியாகவும் பணிவாரியாகவும் அவர்களில் பிரிவுகளை ஏற்படுத்தினார்.

இத்தாமரின் குடும்பத்தை விட எலயாசரின் குடும்பத்தில் மிகுதியான தலைவர்களைக் கொண்டிருந்தது. எனவே எலயாசரின் புதல்வரில் பதினாறு பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும், இத்தாமரின் புதல்வரிலும் எட்டுப்பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

எலயாசர், இத்தாமர் ஆகிய இரு குடும்பங்களின் புதல்வரிலும் திருத்தலத் தலைவர்களும் இறைப்பணித் தலைவர்களும் இருந்தமையால், சீட்டுக் குலுக்கல் முறையில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.

நெத்தனியேலின் மகனும் லேவியனும் எழுத்தனுமான செமாயா, அரசர் அலுவலர்கள், குருக்களாகிய சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் முன்னிலையில் பதிவுசெய்தான். எலயாசரின் குடும்பத்திற்கும், இத்தாமரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.

சீட்டு விழுந்த முறை: முதல் சீட்டு யோயாரிபுக்கு: இரண்டாம் சீட்டு எதாயாவுக்கு:

மூன்றாவது ஆரிமுக்கு: நான்காவது செயோரிமுக்கு:

ஜந்தாவது மல்கியாவுக்கு: ஆறாவது மியாமினுக்கு:

ஏழாவது அக்கோட்சுக்கு: எட்டாவது அபியாவுக்கு:

ஒன்பதாவது ஏசுவாவுக்கு: பத்தாவது செக்கனியாவுக்கு:

பதினொன்றாவது எலியாசிபுக்கு: பன்னிரண்டாவது யாக்கிமுக்கு:

பதின்மூன்றாவது உப்பாவுக்கு: பதினான்காவது எசேபயாவுக்கு:

பதினைந்தாவது பில்காவுக்கு: பதினாறாவது இம்மேருக்கு:

பதினேழாவது ஏசீருக்கு: பதினெட்டாவது அப்பிசேசுக்கு:

பத்தொன்பதாவது பெத்தகியாவுக்கு: இருபதாவது எசக்கேலுக்கு:

இருபத்தொன்றாவது யாக்கினுக்கு: இருபத்திரண்டாவது காமுலுக்கு:

இருபத்து மூன்றாவது தெலாயாவுக்கு: இருபத்து நான்காவது மாசியாவுக்கு.

இவர்களே தங்கள் மூதாதையாகிய ஆரோன் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தந்த விதிமுறைகளை, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கேற்ற வரிசை முறைப்படி ஆண்டவரின் இல்லம் சென்று, அங்கு நிறைவேற்றுவதற்காகப் பதிவு செய்யப்பட்டவர்கள்.

எஞ்சிய லேவியின் மக்களுள், அம்ராமின் புதல்வருள் சூபாவேல்: சூபாவேலின் புதல்வருள் எகதியா:

இரகபியாவின் புதல்வர்களுள் இசியா தலைவராய் இருந்தார்.

இசுராகியரில் செலமோத்தும், செலமோத்தின் புதல்வருள் யாகாத்தும்:

இவருடைய புதல்வருள் முதல் மகன் எரிய்யா, இரண்டாம் மகன் அமரியா, மூன்றாம் மகன் யாகசியேல், நான்காவது மகன் எகமயாம்.

உசியேலின் புதல்வர், மீக்கா: மீக்காவின் புதல்வர் சாமீர்:

மீக்காவின் சகோதரர் இசியா: இசியாவின் புதல்வருள் செக்கரியா:

மெராரியின் புதல்வர் மக்லி, மூசி: மற்றும் அவர் மகன் யகசியா:

மெராரியின் மகனான யகசியாவின் புதல்வர்கள்: சோகாம், சக்கூர், இப்ரி.

மக்லியின் புதல்வர்: புதல்வர்கள் இல்லாத எலயாசர்:

மற்றும் கீசு, கீசின் புதல்வர் எரகுமவேல்.

மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரிமோத்து தங்கள் மூதாதையர் வீட்டு லேவியரின் புதல்வர் இவர்களே.

இவர்களும், தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் புதல்வர் செய்ததுபோல, தாவீது அரசர், சாதோக்கு, அகிமலேக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர், லேவியர் குடும்பங்களின் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் அவர் இளைய சகோதரருள் ஒருவருமாகச் சீட்டுப் போட்டு, தங்கள் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.

அதிகாரம் 25.

தாவீதும் படைத்தலைவர்களும் ஆசாபு, எமான், எதுத்பன் ஆகியோரின் புதல்வருள் சிலரைத் தெரிந்தெடுத்தனர். அவர்கள் சுரமண்டலங்களையும், தம்புருகளையும், கைத்தாளங்களையும் இசைத்து இறைவாக்குரைக்க நியமிக்கப்பட்டனர். பணியாளர் பட்டியலும், அவர்கள் செய்த பணிகளும் பின்வருமாறு:

ஆசாபின் புதல்வர் சக்கூர், யோசேப்பு நெத்தனியா, அசரேலா. இவர்கள் ஆசாபின் மேற்பார்வையில் அரச கட்டளைப்படி இறைவாக்குரைத்தனர்.

எதுத்பனும், கெதலியா, சொ£, ஏசாயா, அசபியா, மத்தித்தயா ஆகிய எதுத்பனின் புதல்வர்கள் மொத்தம் அறுவர். இவர்கள் தந்தை எதுத்பனின் மேற்பார்வையில் சுரமண்டலத்துடன் இறைவாக்குரைத்து ஆண்டவருக்கு நன்றியும் புகழும் செலுத்தினர்.

ஏமானின் புதல்வர் புக்கியா, மத்தனியா, உசியேல், செபுவேல், எரிமோத்து, அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்த்தி, ரோமம்த்தி, எசேர், யோசபக்காசா, மல்லோத்தி, ஓதிர், மகசியோத்து.

இவர்கள் அனைவரும் அரசரின் திருக்காட்சியாளரான ஏமானின் புதல்வர். ஆற்றலை உயர்த்துவதாகக் கூறிய வாக்குறுதியின்படியே, கடவுள் ஆமானுக்குப் பதினான்கு புதல்வரையும் மூன்று புதல்வியரையும் அளித்திருந்தார்.

இவர்கள் எல்லாரும் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் ஆண்டவரின் கோவில் கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைத்துக் கடவுளின் கோவிலில் பணியாற்றினர். இவ்வாறு ஆசாபு, எதுத்பன், ஏமான் ஆகியோர் அரசரின் கட்டளைப்படி செயல்பட்டனர்.

இவர்களும் இவர்களின் உறவின்முறையினராக ஆண்டவரின் பாடல்களில் தேர்ச்சி பெற்றவர்களும் மொத்தம் இருமற்று எண்பத்து எட்டுப்பேர்.

முதியோரும் இளைஞரும், ஆசிரியரும் மாணவரும் யாவரும் ஒன்றுபோல் திருவுளச்சீட்டின் மூலமாக முறைப்பணிக்கு நியமிக்கப்பட்டார்கள்.

சீட்டு விழுந்த முறை: முதல் சீட்டு ஆசாபு குடும்பத்தின் யோசேப்புக்கு: இரண்டாவது கெதலியா, அவர் சகோதரர்களும் அவர் புதல்வர்களும் ஆகிய பன்னிருவர்க்கும்,

மூன்றாவது சக்கூர், அவர் புதல்வர்கள் அவர் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

நான்காவது இட்சரி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

ஜந்தாவது, நெத்தனியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

ஆறாவது புக்கியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

ஏழாவது அசரேலா, அவர் புதல்வர்கள் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

எட்டாவது ஏசாயா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

ஒன்பதாவது மத்தனியா, அவர் புதல்வர்கள் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

பத்தாவது சிமயி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

பதினொன்றாவது அசரியேல், அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

பன்னிரண்டாவது அசபியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

பதின்மூன்றாவது சூபாவேல், அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

பதினான்காவது மத்தித்தியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

பதினைந்தாவது எரேமோத்து, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

பதினாறாவது அனனியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

பதினேழாவது யோசபக்காசா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

பதினெட்டாவது அனானி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

பத்தொன்பதாவது மல்லோத்தி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

இருபதாவது எலியாத்தா, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

இருபத்து ஒன்றாவது ஓதீர், அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

இருபத்து இரண்டாவது கிதல்த்தி, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,

இருபத்து மூன்றாவது மகசியோத்து, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்.

இருபத்து நான்காவது ரோமம்த்திஎசேர், அவர் புதல்வர், சகோதரர்கள் பன்னிருவர்க்கும்.

அதிகாரம் 26.

வாயில் காப்போரின் பிரிவுகளாவன: கோராகியரில், ஆசாபின் குடும்பத்தைச் சேர்ந்த கோரேயின் மகன் மெசலேமியா:

மெசலேமியாவின் புதல்வருள் செக்கரியா மூத்தவர்: இரண்டாமவர் எதியவேல், மூன்றாமவர் செபதியா, நான்காமவர் யாத்தனியேல்

ஜந்தாமவர் ஏலாம், ஆறாமவர், யோகனான், ஏழாவது எல்யகோவெனாய்.

ஓபேதுஏதோமின் புதல்வருள், செமாயா மூத்தவர், இரண்டாமவர் யோசபாத்து, மூன்றாமவர் யோவாகு, நான்காமவர் சாக்கார், ஜந்தாமவர் நெத்தனியேல்,

ஆறாமவர் அம்மியேல், ஏழாமவர் இசக்கார், எட்டாமவர் பெயுலத்தாய்: கடவுள் ஓபேது ஏதோமுக்கு ஆசி வழங்கியிருந்தார்.

அவருடைய புதல்வர் செமாயாவுக்கும் புதல்வர் பிறந்தனர்: அவர்கள் ஆற்றல் மிக்கவராய் இருந்தனர்: தங்கள் தந்தையின் குடும்பத்தின்மீது ஆட்சி செய்தனர்.

செமாயாவின் புதல்வர்: ஒத்னி, இரபாவேல், ஓபேது, எல்சபாது. அவர்கள் சகோதரர் எலிகூ, செமக்கியா ஆகியோர் ஆற்றல் மிக்கவராயிருந்தனர்.

ஓபேது ஏதோமின் புதல்வருள் அவர்களின் புதல்வரும் உறவின் முறையினரும் அறுபத்து இரண்டு பேர். அவர்கள் தங்கள் வேலையில் திறமைமிக்கவராய் இருந்தனர்.

மெசலேமியாவின் புதல்வருள் அவர்கள் சகோதரரும் திறமைமிக்கவர்கள்: இவர்கள் பதினெட்டுப் பேர்.

மெராரியின் புதல்வருள் ஒருவர் கோசா. இவர்தம் புதல்வருள் சிம்ரி தலைமகன் அல்லாதவராயிருந்தும், அவர் தந்தை அவரைத் தலைவராக்கியிருந்தார்.

இரண்டாமவர் இலிக்கியா, மூன்றாமவர் தெபலியா, நான்காமவர் செக்கரியா. கோசாவின் புதல்வரும் சகோதரருமாகப் பதின்மூன்று பேர்.

இந்தப் பிரிவுகளில் இருந்த அவர்கள் சகோதரரைப் போல் வாயில்காப்போர் தங்கள் தலைவர்கள்கீழ் ஆண்டவரின் கோவிலில் பணிபுரிய நியமிக்கப்பட்டனர்.

அவர்கள், தாங்கள் காவல் புரியவேண்டிய வாயிலைத் தெரிந்துகொள்ளுமாறு, தங்கள் தந்தையின் குடும்பங்களின்படி, சிறியோர் பெரியோர் என்னும் வேறுபாடின்றி, சீட்டுப்போட்டனர்.

கிழக்கு வாயிலுக்கான சீட்டு செலேமியாவுக்கு விழுந்தது. அவர் மகனும் விவேகமுள்ள ஆலோசகருமான செக்கரியாவுக்கு வடக்கு வாயிலுக்கான சீட்டு விழுந்தது.

தெற்கு வாயிலுக்கான சீட்டு ஓபேது ஏதோமுக்கு விழுந்தது: அவர் புதல்வருக்குப் பண்டசாலைகளுக்கானது விழுந்தது.

சுப்பிமுக்கும், ஓசாவுக்கும் மேற்கு வாயிலும், மேட்டுப்பாதை நோக்கிய சல்லக்கேத்து வாயிலும் விழுந்தன. காவல் முறை ஒரே சீராக அமைந்திருந்தது.

கிழக்கே லேவியர் ஆறு பேரும், வடக்கே நாளுக்கு நான்கு பேரும், தெற்கே நாளுக்கு நான்கு பேரும், கருவூலத்தில் இரண்டு இரண்டு பேரும்,

நெடுஞ்சாலை நோக்கிய மேற்கு பண்வரிசை வாயிலில் நால்வரும், உட்புறத்தில் இருவரும் நியமிக்கப்பட்டனர்.

கோராகின் புதல்வருக்கும் மெராகியின் புதல்வருக்கும் குறிக்கப்பட்ட காவல்முறை இதுவே.

லேவியருள் அகியா என்பவர் கடவுளுடைய கோவிலின் கருவூலத்திற்கும் புனிதப் பொருள்கள் வைக்கப்பட்ட கருவூலத்திற்கும் பொறுப்பேற்றிருந்தார்.

இலாதானின் புதல்வர்: இலாதான் வழிவந்த கெர்சோனியர்: கெர்சோனியரான இலாதாவின் வழிமரபில் மூதாதையர் குடும்பத் தலைவரான எகியேலி,

எகியேலின் புதல்வருள் சேத்தாமும் அவர் சகோதரராகிய யோவேலும் ஆண்டவரின் இல்லக் கருவூலத்திற்குப் பொறுப்பேற்றிருந்தனர்.

அம்ராமியர், இட்சகாரியர், எப்ரோனியர், உசியேலியர் ஆகியோருக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன.

மோசேயின் மகனான கெர்சோமின் வழிமரபில் தோன்றிய செபுவேல் கருவூலத்திற்குப் தலைமைப் பொறுப்பேற்றிருந்தார்.

அவர் சகோதரர் எலியேசர், இவர் மகன் இரகபியா, இவர் மகன் ஏசாயா, இவர் மகன் யோராம், இவர் மகன் சிக்ரி, இவர் மகன் செலோமித்து.

தாவீது அரசரும், மூதாதையர் குடும்பத் தலைவர்களும், ஆயிரத்தவர் தலைவர்களும், மற்றுவர் தலைவர்களும், படைத்தளபதிகளும், அர்ப்பணித்த புனித பொருள்களின் கருவூலம் முழுவதற்கும் இந்தச் செலோமித்தும் அவர் சகோதரரும் பொறுப்பாய் இருந்தனர்.

அவர்கள் போரில் கைப்பற்றிய கொள்ளைப் பொருள்களினின்றும் எடுத்து ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்ப்பதற்காக அர்ப்பணித்திருந்தனர்.

அவ்வாறே, திருக்காட்சியாளர் சாமுவேல், கீசின் மகன் சவுல், நேரின் மகன் அப்னேர், செரூயாவின் மகன் யோவாபு ஆகியோர் அர்ப்பணித்திருந்தவை யாவும், செலோமித்தினுடையவும், அவர் சகோதரருடையவும் பொறுப்பில் இருந்தன.

இட்சகாரியரில், கெனனியாவும் அவர் புதல்வரும் இஸ்ரயேலின் மேல் பொதுநிர்வாகப் பணியை ஏற்று அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் செயல்பட்டனர்.

எப்ரோனியரில், அசபெயாவும் அவர் உறவின்முறையினருள் திறமை மிக்க ஆயிரத்து எழுமறுபோர் யோர்தானுக்கு மேற்குப்புற இஸ்ரயேலின் மேல் ஆண்டவரின் பணி, அரசரின் பணி அனைத்திலும் நிர்வாகப் பொறுப்பேற்றிருந்தனர்.

எப்ரோனியரில், எரியா தன் மூதாதையின் தலைமுறை அட்டவணைப்படி தலைவராய் இருந்தார். தாவீது ஆட்சி நாற்பதாம் ஆண்டில் எப்ரோனியருள் ஆற்றல்மிகு வீரர்களைத் தேடியபோது, அவர்கள் கிலயாதிலுள்ள யாசேரில் இருப்பதாகத் தெரிய வந்தது.

ரூபன் குலம், காத்தின் குலம், மனாசேயின் பாதிக்குலம் ஆகியோர்க்குக் குறிக்கப்பட்ட ஆண்டவரின் பணி, அரசரின் பணி அனைத்துப் பொறுப்பையும் வலிமைமிகுந்தவர்களும் மூதாதையர் குடும்பத் தலைவர்களுமான எரியாவின் உறவின்முறையினர் இரண்டாயிரத்து எழுமறு பேரிடம் அரசர் தாவீது ஒப்படைத்தார்.

அதிகாரம் 27.

இஸ்ரயேல் மக்களின் குடும்பத் தலைவர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், மற்றுவர் தலைவர்கள், மற்றும் அரச அலுவலர்கள் ஆகியோர் இவர்களே: ஆண்டின் ஒவ்வொருமாதமும் வெவ்வேறு பிரிவினர் மாறி மாறி அரசருக்கான பணியில் பங்கேற்றனர். அப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.

முதல் மாதத்தில், முதல் படைப்பிரிவுக்குச் சப்தியேலின் மகன் யாசொபியாம் தலைவராய் இருந்தார். அவரது பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.

பெரேட்சு வழிவந்த அவர், முதல் மாதத்தில் எல்லாப் படைத் தலைவர்களுக்கும் தலைவராய் இருந்தார்.

இரண்டாம் மாதத்தில் இரண்டாம் படைப்பிரிவுக்கு அகோகியரான தோதாய் தலைவராய் இருந்தார். மிக்லோத்து இவரின்கீழ் படைத்தலைவராய் இருந்தார். இவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.

மூன்றாம் மாதத்தில் மூன்றாம் படைப்பிரிவுக்கு குரு யோயாதாவின் மகன் பெனாயா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.

இந்த பெனாயா முப்பதின்மருக்குள் ஆற்றல்மிக்கவரும், அவர்களுக்குத் தலைவருமாய் இருந்தவர். அவர் மகன் அம்மிசபாது அவர் பிரிவை மேற்பார்வை செய்து வந்தார்.

நான்காம் மாதத்தில், நான்காம் படைப்பிரிவுக்கு யோவாபின் சகோதரராகிய அசாவேலும் அவருக்குப் பின் அவர் மகன் செபதியாவும் தலைவராய் இருந்தனர். அவர்களுக்குக்கீழ் இருபத்துநாலாயிரம் பேர் இருந்தனர்.

ஜந்தாம் மாதத்தில் ஜந்தாம் படைப்பிரிவுக்கு இஸ்ராகியரான சங்கூத்து தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.

ஆறாம் மாதத்தில், ஆறாம் படைப்பிரிவுக்கு தெக்கோவாவியரான இக்கேசு மகன் ஈரா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.

ஏழாம் மாதத்தில், ஏழாம் படைப்பிரிவுக்கு எப்ராயிம் குலத்துப் பெலோனியரான ஏலேசு தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.

எட்டாம் மாதத்தில், எட்டாம் படைப்பிரிவுக்கு சர்கியைச் சார்ந்த ஊசாயரான சிபக்காய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.

ஒன்பதாம் மாதத்தில், ஒன்பதாம் படைப்பிரிவுக்கு பென்யமின் குலத்து அனத்தோத்தியரான அபியேசர் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.

பத்தாம் மாதத்தில், பத்தாம் படைப்பிரிவுக்கு சர்கியைச் சார்ந்த நெற்றோபாயரான மகராய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.

பதினொன்றாம் மாதத்தில், பதினொன்றாம் படைப்பிரிவுக்கு எப்ராயிம் குலத்து பிராத்தோனியரான பெனாயா தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.

பன்னிரண்டாம் மாதத்தில், பன்னிரண்டாம் படைப்பிரிவுக்கு ஒத்னியேல் வழிவந்த நெற்றோபாயரான கெல்தாய் தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.

இஸ்ரயேலில் குலத் தலைவர்களாய் இருந்தவர்கள் வருமாறு: ரூபனியருக்குத் தலைவர் சிக்ரியின் மகன் எலியேசர்: சிமியோனியருக்கு மாக்காலின் மகன் செபற்றியா:

லேவியருக்குக் கெமுயேல் மகன் அசபியா: ஆரோனியருக்குச் சாதோக்கு:

யூதாவினர்க்குத் தாவீதின் சகோதரரில் ஒருவராகிய எலிகூ: இசக்கார் குலத்துக்கு மிக்கேல் மகனான ஓம்ரி:

செபுலோனியருக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா: நப்தலி குலத்துக்கு அஸ்ரியேல் மகன் எரிமோத்து:

எப்ராயிம் மக்களுக்கு அசரியாவின் மகன் ஓசேயா: மனோசேயின் பாதிகுலத்துக்கு பெதாயாவின் மகன் யோவேல்:

கிலயாதிலுள்ள மனாசேயின் பாதிக் குலத்துக்குச் செக்கரியாவின் மகன் இத்தோ, பென்யமினியருக்கு அப்னேரின் மகன் யாகசியேல்:

தாண் குலத்துக்கு எரொகாமின் மகன் அசரியேல்: இவர்கள் இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர்களாய் இருந்தனர்.

இஸ்ரயேலை வானத்தின் விண்மீன்களைப் போல் பெருகச் செய்வேன் என்று ஆண்டவர் வாக்களித்திருந்ததால், அரசர் தாவீது இருபது வயதுக்குட்பட்டோரைக் கணக்கிடவில்லை.

செருயாவின் மகன் யோவாபு கணக்கெடுக்கத் தொடங்கியபொழுது, இஸ்ரயேலின்மேல் கடுஞ்சினம் வீழ்ந்ததால், அவர் அதை முடிக்கவில்லை. எனவே, அரசர் தாவீதின் குறிப்பேட்டில் எண்ணிக்கை இடம் பெறவில்லை.

அரசரது கருவூலத்திற்கு அதியேல் மகன் அஸ்மாவேத்து பொறுப்பேற்றிருந்தார். வயல்வெளிகள், நகர்கள், சிற்டிர்கள், கோட்டைகள் ஆகியவற்றிலிருந்த கருவூலங்களுக்கு உசியாவின் மகன் யோனத்தான் பொறுப்பேற்றிருந்தார்.

வயல்வெளியில் உழைக்கும் விவசாயிகளுக்குக் கெழபின் மகன் எஸ்ரி கண்காணியாய் இருந்தார்.

திராட்சைத் தோட்டங்களுக்கு இராமாவைச் சார்ந்த சிமயி: திராட்சை ரசக் கிடங்குகளுக்கு சிபிமியரான சப்தி:

செபேலாவின் ஒலிவமரங்களுக்கும் அத்திமரங்களுக்கும் கெதேரியரான பாகால்கானான்: எண்ணெய்க் கிடங்குகளுக்கு யோவாசு:

சாரோனின் மாட்டு மந்தைகளுக்கு சாரோனியரான சித்ராய்: பள்ளத்தாக்குகளின் மாட்டு மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாபாத்து:

ஒட்டகங்களுக்கு இஸ்மயேலரான ஓபில்: கழுதைகளுக்கு மெரோனோவியரான எகுதியா,

ஆட்டு மந்தைகளுக்கு ஆகாலியரான யாசிசு. இவர்கள் எல்லாரும் அரசர் தாவீதின் உடைமைகளுக்குப் பொறுப்பாளர் ஆவர்.

தாவீதின் சிற்றப்பா யோனத்தான் விவேகமிகு ஆலோசகரும், எழுத்தருமாய் இருந்தார். அவரும் அக்மோனியின் மகனான எகியேலும் அரசரின் புதல்வருக்குப் பொறுப்பேற்றிருந்தனர்.

அகித்தோபல் அரசரின் ஆலோசகர்: அர்கியரான ஊசாய் அரசரின் நண்பர்.

அகித்தோபலுக்குப் பின் பெனாயாவின் மகன் யோயாதாவும், அபியத்தாரும் அவர் பதவியை ஏற்றனர். யோவாபு அரசரின் படைத் தலைவராய் இருந்தார்.

அதிகாரம் 28.

பின்பு தாவீது, குலத்தலைவர்கள், அரசருக்குப் பணியாற்றிவந்த பிரிவுகளின் தலைவர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், மற்றுவர் தலைவர்கள், அரசருக்கும் அவர் புதல்வருக்கும் உடைமையான அனைத்துச் சொத்துக்கள் மற்றும் மந்தைகளைக் கண்காணித்து வந்த தலைவர்கள் ஆகிய இஸ்ரயேலின் அனைத்துத் தலைவர்களையும், மற்றும் அரண்மனை அலுவலர்கள், போர்வீரர்கள், வலிமைமிகு எல்லா வீரர்கள் ஆகியோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தார்.

பின்பு அரசர் தாவீது எழுந்து நின்று கூறியது: என் சகோதரரே! என் மக்களே! எனக்குச் செவி கொடுங்கள். நம் கடவுளின் கால்மணையாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை வைப்பதற்குக் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு என் மனத்தில் எண்ணினேன்: அதைத் கட்டுவதற்குரிய முன்னேற்பாடுகளையும் செய்தேன்.

ஆனால் கடவுள், “நீ என் பெயருக்குக் கோவில் கட்ட வேண்டாம், ஏனெனில் நீ போர் பல செய்து இரத்தத்தைச் சிந்தியுள்ளாய்“ என்றார்.

ஆயினும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இஸ்ரயேல்மேல் என்றென்றும் அரசனாய் இருப்பதற்கு என் தந்தை வீட்டாரிலெல்லாம் என்னைத் தேர்ந்துகொண்டார். தலைமை ஏற்குமாறு யூதா குடும்பத்தையும், யூதா குடும்பத்தில் என் தந்தை வீட்டையும் தேர்ந்து கொண்ட என் தந்தையின் புதல்வருள் என்மேல் விருப்பமுற்று இஸ்ரயேல் அனைவர் மேலும் என்னை அரசன் ஆக்கினார்.

ஆண்டவர் எனக்குப் புதல்வர் பலரை அளித்துள்ளார். அவர்களுள், இஸ்ரயேலில் ஆண்டவரது அரசின் அரியணைமீது அமர்வதற்கு, என் மகன் சாலமோனைத் தேர்ந்து கொண்டார்.

அவர் என்னை நோக்கி, “உன் மகன் சாலமோனே என் இல்லத்தையும் என் முற்றங்களையும் கட்டியெழுப்புவான். அவனை நான் எனக்கு மகனாகத் தேர்ந்து கொண்டுள்ளேன். நானும் அவனுக்குத் தந்தையாய் இருப்பேன்.

அவன் என் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் இன்றுபோல் உறுதியுடன் கடைப்பிடித்து வந்தால் நான் இவன் அரசை என்றென்றும் நிலைநாட்டுவேன்“ என்றார்.

எனவே இப்பொழுது ஆண்டவரின் சபையாகிய இஸ்ரயேலர் எல்லாரின் கண் காண, நம் கடவுளின் செவி கேட்க, நான் கூறுவது: உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் விதிமுறைகள் அனைத்தையும் நாடிக் கடைப்பிடிப்பீர்களாக! அப்போது நீங்கள் இந்த நல்ல நாட்டை உடைமையாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குப் பின் உங்கள் புதல்வர் அதை என்றென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

என் மகனே, சாலமோன்! நீயோ, உன் தந்தையின் கடவுளை அறிந்து, முழு மனத்தோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்: ஏனெனில் ஆண்டவர் எல்லா இதயங்களையும் ஆய்ந்தறிகிறார்: எல்லாத் திட்டங்களையும், எல்லா எண்ணங்களையும் பகுத்தறிகிறார்: நீ அவரைத் தேடினால் கண்டடைவாய், நீ அவரைப் புறக்கணித்தால் அவர் உன்னை என்றென்றும் கைவிடுவார்.

இதோ பார்! திருத்தலமாகக் கோவில் ஒன்று கட்டுவதற்கு ஆண்டவர் உன்னைத் தெரிந்தெடுத்துள்ளார்! துணிவுடன் அதைச் செய்வாயாக!

தாவீது தம் மகனிடம் கோவிலின் மண்டபம், அதன் அறைகள், அதன் கருவூல அறைகள், அதன் மேல்மாடிகன், அதன் உள்ளறைகள், இரக்கத்தின் இருக்கைக்கான அறை ஆகியவற்றின் மாதிரி வடிவத்தைக் கொடுத்தார்.

மேலும் தம் மனத்தில் எண்ணியபடி, ஆண்டவரது இல்லத்தின் முற்றங்கள், அதைச் சுற்றியுள்ள அறைகள், கடவுளின் கோவிலுக்கான கருவூலங்கள், நேர்ச்சைப் பொருள்களின் கருவூலங்கள் ஆகியவற்றின் மாதிரி வடிவத்தைக் கொடுத்தார்.

அவர், குருக்கள், லேவியர் ஆகியோரின் பிரிவுகள், ஆண்டவரின் இல்லப் பணிக்கான அனைத்து முறைவேலை, ஆண்டவரது இல்லப் பணிக்கான அனைத்துக் கலங்கள் ஆகியவற்றின் செய்முறை குறிப்புகளைக் கொடுத்தார்.

ஒவ்வொரு திருப்பணிக்கும் தேவையான பொன், வெள்ளிக் கலங்களைச் செய்வதற்கான பொன், வெள்ளியின் செக்கேல் நிறையையும்,

பொன் விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் பொன் அகல்களுக்கும் தேவையான பொன்னின் நிறையையும், வெள்ளி விளக்குத் தண்டுகளுக்கும் அவற்றின் அகல்களுக்கும் தேவையான வெள்ளியின் நிறையையும்,

திருமுன்னிலை அப்ப மேசை ஒவ்வொன்றிற்குமான பொன் நிறையையும், வெள்ளி மேசைக்கான வெள்ளி நிறையையும்,

அள்ளுக்கருவிகளுக்கும், கலங்களுக்கும், கிண்ணங்களுக்குமான பசும்பொன்னின் நிறையையும் பொற்கலங்களில் ஒவ்வொரு கலத்திற்கும் தேவையான நிறையையும் வெள்ளிக் கலங்களின் ஒவ்வொரு கிண்ணத்திற்கும் தேவையான நிறையையும் கொடுத்தார்.

பபபீடத்திற்கான புடமிடப்பட்ட பொன்னின் நிறையையும் கொடுத்தார். இறக்கைகளை விரித்து ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை மூடும் பொற்கெருபுகளைக் கொண்ட பொன் தேரின் மாதிரி வடிவத்தையும் கொடுத்தார்.

தாவீது, இந்த மாதிரிகள் அனைத்தையும் ஆண்டவரே தம் கையால் வரைந்தளித்து அவை அனைத்தையும் செய்யும்படி எனக்கு உணர்த்தினார் என்றார்.

தாவீது தம் மகன் சாலமோனை நோக்கி, நீ மன வலிமை கொள்! திடம் கொள்! உறுதியாயிரு! அஞ்சாதே! கலங்காதே! செயல்படு! கடவுளாகிய ஆண்டவர், என் கடவுள் உன்னோடும் இருக்கிறார். ஆண்டவரின் இல்லப்பணி அனைத்தும் நிறைவு பெறும்வரை அவர் உன்னைவிட்டு விலகார்: உன்னைக் கைவிடார்.

இதோ, கடவுளது கோவிலின் அனைத்துத் திருப்பணிக்கெனவும், குருத்துவ, லேவியப் பிரிவுகள் தயாராய் உள்ளன: எல்லா வகைப் பணியிலும் உனக்கு உதவி செய்ய, எந்த ஒரு பணியையும் செய்வதற்குத் திறமை வாய்ந்தோரும் ஆர்வமிக்கோரும் உன்னோடு இருக்கின்றனர். மேலும் தலைவர்களும் மக்கள் யாவரும் உன் கட்டளைகள் அனைத்திற்காகவும் காத்திருக்கின்றனர்.

அதிகாரம் 29.

தாவீது அரசர் சபையார் அனைவரையும் நோக்கி, என் மகன் சாலமோனை மட்டுமே கடவுள் தேர்ந்து கொண்டார். அவன் அனுபவமற்ற இளைஞன். செய்ய வேண்டிய பணியோ பெரிது. கட்டவிருக்கும் இல்லமோ மனிதனுக்கு அன்று, கடவுளாகிய ஆண்டவருக்கே!

நான் என்னால் முடிந்தவரைக்கும் என் கடவுளின் கோவிலுக்கென்று, பொன் வேலைக்குரிய பொன், வெள்ளி வேலைக்குரிய வெள்ளி, வெண்கல வேலைக்குரிய வெண்கலம், இரும்பு வேலைக்குரிய இரும்பு, மரவேலைக்குரிய மரம் ஆகியவற்றையும், பதிப்பதற்கான கோமேதகக் கற்கள். மாணிக்கக் கற்கள், படிகப்பச்சைக் கற்கள், எல்லாவகை விலையுயர்ந்த கற்கள், சலவைக் கற்கள் ஆகியவற்றையும் பெருவாரியாகச் சேர்த்து வைத்துள்ளேன்.

என் கடவுளின் கோவிலின் மேல் நான் வைத்துள்ள பற்றார்வத்தால், திருத்தலத்திற்கென்று நான் சேர்த்து வைத்துள்ள யாவற்றையும் தவிர, என் சொந்தக் கருவூலத்திலிருந்து என் கடவுளின் கோவிலுக்குப் பொன்னையும் வெள்ளியையும் வழங்குகிறேன்.

கோவிற்சுவர்களில் பொதிவதற்காக மூவாயிரம் தாலந்து ஓபீரின் பொன்னும் ஏழாயிரம் தாலந்து பய வெள்ளியும் கொடுக்கிறேன்.

மற்றும் திறன் மிக்க கைவினைஞரால் செய்யப்பட வேண்டிய அனைத்துப் பணிக்காக பொன் வேலைக்காகப் பொன்னும், வெள்ளி வேலைக்காக வெள்ளியும் தருகிறேன். இன்று இப்பணிக்கெனத் தம் கையிலிருந்து தாராளமாக ஆண்டவருக்குக் கொடுப்பது வேறு யார்? என்றார்.

அப்போது மூதாதைவீட்டுத் தலைவர்களும் இஸ்ரயேல் குலத் தலைவர்களும் ஆயிரத்தவர், மற்றுவர் தலைவர்களும் அரசப் பணிக்கான அலுவலர்களும் தன்னார்வக் காணிக்கை செலுத்தினார்கள்.

அவர்கள், கடவுளின் கோவில் வேலைக்கென்று, ஜயாயிரம் தாலந்து பொன்னும் பத்தாயிரம் பொற்காசுகளும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியும், பதினெட்டாயிரம் தாலந்து வெண்கலமும், ஓர் இலட்சம் தாலந்து இரும்பும் செலுத்தினார்கள்.

விலையுயர்ந்த கற்கள் வைத்திருந்தோர் ஆண்டவரின் இல்லக் கருவூலத்தில் சேர்ப்பதற்கென்று கேர்சோனியனான எகியேலின் கையில் கொடுத்தனர்.

அவர்களின் தன்னார்வக் காணிக்கையை முன்னிட்டு மக்கள் மகிழ்ந்தனர். ஏனெனில் அவர்கள் முழுமனத்தோடும் ஆர்வத்தோடும் ஆண்டவருக்குக் கொடுத்தனர். தாவீது அரசரும் பெரிதும் மகிழ்ந்தார்.

ஆதலால் சபையார் அனைவரின் பார்வையில் தாவீது ஆண்டவரை வாழ்த்தினார். அவர் கூறியது: எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவீராக!

ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப் பெற்றுள்ளீர்.

செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம்கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன.

இப்பொழுது எங்கள் கடவுளே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்தி உம் மாட்சிமிகு பெயரைப் போற்றுகிறோம்.

இவ்வாறு இந்தத் தன்விருப்பக் காணிக்கையை அளிப்பதற்கான ஆற்றலை நாங்கள் பெறுவதற்கு, நான் யார்? என் மக்கள் யார்? யாவும் உம்மிடத்திலிருந்து வந்தவை. உம் கையினின்று நாங்கள் பெற்றுக்கொண்டவற்றையே நாங்கள் உமக்குக் கொடுத்துள்ளோம்.

உம் திருமுன் நாங்கள் எம் மூதாதையரைப் போலவே அன்னியரும் நாடோடிகளுமாய் இருக்கிறோம். மண்ணுலகில் எங்கள் வாழ்நாள்கள் நிழல் போன்றவை: நிலையற்றவை.

எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம் புனித பெயருக்கென்று உமக்குக் கோவில் கட்டுவதற்கு நாங்கள் சேர்த்து வைத்துள்ள இந்தப் பெருங்குவியல் முழுமையும் உம் கையிலிருந்து வந்தது: உமக்கே உரியது.

என் கடவுளே, நீர் இதயத்தை ஆய்ந்தறிபவர் என்றும், நேரியனவற்றை நாடுபவர் என்றும் நான் அறிவேன். நான் நேரிய மனத்தினனாய்த் தாராளமனத்துடன் இவை அனைத்தையும் கொடுத்துள்ளேன். இங்கே குழுமியிருக்கும் உம் மக்களும் இப்பொழுது தாராள மனத்துடன் கொடுத்ததைக் கண்டு மகிழ்கிறேன்.

ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் என்னும் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, உம் மக்களின் இத்தகைய இதய நோக்கங்களையும் எண்ணங்களையும் என்றென்றும் காத்து, அவர்களின் நெஞ்சங்களை உம்பால் திருப்பியருளும்.

என் மகன் சாலமோன் உம் விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும், நியமங்களையும் கடைப்பிடித்து ஒழுகுவதற்கும், இவை அனைத்தையும் செய்து நான் வைத்துள்ள இந்த இல்லத்தைக் கட்டியெழுப்பவும் நிறைவான உள்ளத்தையும் அவனுக்கு அளித்தருளும்.

பின்பு தாவீது சபையார் அனைவரையும் நோக்கி, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்துங்கள் என்றார். உடனே சபையார் அனைவரும் தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரை வாழ்த்திப் பணிந்து தொழுதனர்: அரசனையும் வணங்கினர்.

அவர்கள் ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தினர். மறுநாள் அவர்கள் ஆண்டவருக்குரிய எரிபலியாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கிடாய்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தினர். அத்துடன் நீர்மப் படையல்களையும் இஸ்ரயேலர் யாவருக்காகவும் பல்வேறு பலிகளையும் செலுத்தினர்.

இவர்கள் அன்று உண்டு, குடித்து ஆண்டவர் திருமுன் பெரிதும் மகிழ்ந்தனர். தாவீதின் மகன் சாலமோனை இரண்டாம் முறையாக அரசன் ஆக்கினார்கள். ஆண்டவரின் பெயரால் அவரைத் தலைவராகவும் சாதோக்கைக் குருவாகவும் திருப்பொழிவு செய்தனர்.

அவ்வாறே, சாலமோனும் தம் தந்தை தாவீதுக்குப் பதிலாக ஆண்டவரின் அரியணையில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செலுத்தினார். இஸ்ரயேலர் அனைவரும் அவருக்குப் பணிந்திருந்தனர்.

எல்லாத் தலைவர்களும், வீரர்களும், தாவீது அரசரின் புதல்வர் அனைவரும் சாலமோன் அரசரின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டனர்.

ஆண்டவர் சாலமோனை உயாத்தி, இஸ்ரயேலர் அனைவர் பார்வையிலும் பெருமைக்குரியவர் ஆக்கினார். அவருக்குமுன் இருந்த இஸ்ரயேல் அரசர் எவரும் பெறாத அரச மாண்பை அவருக்கு அளித்தார்.

இவ்வாறு ஈசாயின் மகன் தாவீது இஸ்ரயேல் அனைத்தின் மேலும் ஆட்சி செலுத்தினார்.

அவர் இஸ்ரயேலில் ஆட்சி செலுத்திய நாள்கள் நாற்பது ஆண்டுகள்: எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினார்.

அவர் முதிர்ந்த வயதினராய்ச் செல்வமும் மேன்மையும் பெற்று நெடுநாள்கள் வாழ்ந்தபின் இறந்தார். அவர் மகன் சாலமோன் அவருக்குப் பதிலாக ஆட்சி செலுத்தினார்.

தாவீது அரசரின் செயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை, திருக்காட்சியாளர் சாமுவேலின் குறிப்பேட்டிலும், இறைவாக்கினர் நாத்தானின் குறிப்பேட்டிலும் திருக்காட்சியாளர் காத்தின் குறிப்பேட்டிலும் எழுதப்பட்டுள்ளன.

அக்குறிப்பேடுகளில் அவரது ஆட்சி பற்றியும், அவரது ஆற்றல் பற்றியும், அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகள் பற்றியும் இஸ்ரயேலுக்கும் அதைச் சுற்றியிருந்த அரசுகளுக்கும் நேர்ந்தவை பற்றியும் காணக்கிடக்கின்றன.

புத்தகம் 14 - குறிப்பேடு - இரண்டாம் நூல்

அதிகாரம் 1

தாவீதின் மகன் சாலமோன் தம் ஆட்சியை உறுதியாக நிலைநாட்டினார். அவருடைய கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்து அவரை மேன்மை மிக்கவர் ஆக்கினார்.


சாலமோன், இஸ்ரயேலர் அனைவரையும் - ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்கள், நீதிபதிகள், இஸ்ரயேலரின் தலைவர்கள், குடும்பத் தலைவர்கள் அனைவரையும் - வரவழைத்துப் பேசினார்.


அங்கே இருந்த சபையார் அனைவரும் சாலமோனுடன், கிபயோனிலிருந்த தொழுகை மேட்டுக்குச் சென்றனர். ஏனெனில் ஆண்டவரின் அடியார் மோசே பாலை நிலத்தில் செய்த கடவுளின் சந்திப்புக் கூடாரம் அங்கே இருந்தது.


ஆனால் இதற்குமுன் தாவீது கடவுளின் பேழையை கிரியத்து எயாரிமிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அங்கே ஏற்கெனவே தாம் அதற்கென அமைத்திருந்த கூடாரத்தில் வைத்திருந்தார்.


இருப்பினும் கூரின் பேரரும் ஊரியின் மகனுமான பெட்சலேல் செய்த வெண்கலப் பலிபீடம் கிபயோனில் ஆண்டவரின் திருஉறைவிடத்திற்குமுன் இருந்தது. சாலமோனும் சபையாரும் அங்கே வழிபாடு நடத்தச் சென்றனர்.


சாலமோன் சந்திப்புக்கூடாரத்திற்கு முன்பாக ஆண்டவர் திருமுன் அமைந்திருந்த வெண்கலப் பலிபீடத்திற்கு ஏறிச்சென்று, அதன்மேல் ஆயிரம் எரி பலிகள் செலுத்தினார்.


அன்றிரவு கடவுள் சாலமோனுக்குத் தோன்றி, "உனக்கு என்ன வரம் வேண்டும்; கேள்" என்று கூறினார்.


அதற்குச் சாலமோன் கடவுளை நோக்கி, "என் தந்தை தாவீதுக்கு மாபேரன்பு காட்டினீர்; அவருக்குப் பின் நீர் என்னை அரியணையில் அமர்த்தியிருக்கிறீர்.


கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தை தாவீதுக்கு நீர் அளித்த வாக்குறுதியை இப்பொழுது நிறைவேற்றுமாறு வேண்டுகிறேன்; ஏனெனில், நிலத்தின் மணல் போன்ற எண்ணற்ற மக்களுக்கு நீர் என்னை அரசனாக்கினீர்;


எனவே, நான் இம்மக்களை நன்கு அரசாள வேண்டிய ஞானத்தையும் அறிவையும் எனக்கு அளித்தருளும்; ஏனெனில் கணக்கற்ற உம் மக்களுக்கு நீதி வழங்க யாரால் முடியும்?" என்றார்.


கடவுள், சாலமோனை நோக்கி, "செல்வத்தையோ, சொத்தையோ, புகழையோ, உன்னை வெறுப்பவர்களின் உயிரையோ, நீடிய ஆயுளையோ, நீ கேட்கவில்லை. மாறாக, அரசாளும்படி உன்னிடம் நான் ஒப்படைத்த மக்களுக்கு நீதி வழங்கத் தேவையான ஞானத்தையும் அறிவையும் நீ உள்ளார்ந்த விருப்பத்தோடு கேட்டிருக்கிறாய்.


எனவே, நான் உனக்கு ஞானத்தையும் அறிவையும் வழங்குகிறேன். அத்துடன் உனக்கு முன் இருந்த அரசர்களோ உனக்குப் பின் வரும் அரசர்களோ பெறாத அளவுக்கு செல்வத்தையும், சொத்தையும், புகழையும் நான் உனக்குத் தருவேன்" என்றார்.


பிறகு சாலமோன் கிபயோனிலிருந்த தொழுகை மேட்டிலிருந்தும் சந்திப்புக் கூடாரத்திலிருந்தும் புறப்பட்டு எருசலேமுக்கு திரும்பி வந்து, தொடர்ந்து இஸ்ரயேலை ஆட்சி செய்தார்.


சாலமோன் தேர்ப் படையையும் குதிரைப் படையையும் அமைத்தார். அவருக்கு ஆயிரத்து நானூறு தேர்கள் இருந்தன; பன்னீராயிரம் குதிரை வீரர்களும் இருந்தனர். அவர்களைத் தேர்ப்படை நகர்களிலும், அரசராகிய தம்மோடு எருசலேமிலும் நிறுத்தி வைத்தார்.


வெள்ளியும் பொன்னும் கற்களைப்போன்றும், கேதுரு மரங்கள் சமவெளிப் பகுதிகளில் வளரும் அத்தி மரங்களைப் போன்றும் எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கும்படி அரசர் செய்தார்.


சாலமோனின் குதிரைகள் எகிப்திலிருந்தும் கேவேயிலிருந்தும் வந்தவை. அரச வணிகர்கள் சிலிசியாவிலிருந்து குறிப்பிட்ட விலைக்கு வாங்கி வந்தனர்.


அவர்கள் தேர் ஒன்றிற்கு அறுநூறு செக்கேல் எனவும் எகிப்திலிருந்து விலைக்கு வாங்கினர். அவை அவர்கள் வழியாகவே இத்திய மன்னர், சிரிய மன்னர் அனைவரையும் சென்றடைந்தன.


அதிகாரம் 2

சாலமோன் ஆண்டவரின் திருப்பெயருக்கென ஒரு கோவிலையும் தமக்கென ஓர் அரச மாளிகையையும் கட்டியெழுப்ப முடிவு செய்தார்.

சுமைசுமப்பதற்கு எழுபதினாயிரம் பேரையும், மலைகளில் கருங்கற்களை வெட்டுவதற்கு எண்பதினாயிரம் பேரையும், அவர்களைக் கண்காணிக்க மூவாயிரத்து அறுநூறு பேரையும் நியமித்தார்.

தீரின் மன்னன் ஈராமிடம் சாலமோன் தூதனுப்பிக் கூறியது: "என் தந்தை தாவீது வாழும்படி ஒரு மாளிகை கட்ட நீர் அவருக்குக் கேதுரு மரங்களை அனுப்பி வைத்தீரே! அவருக்குச் செய்ததுபோலவே எனக்கும் செய்தருளும்.

நான் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கென ஒரு கோவில் கட்டி, அவருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன். இஸ்ரயேலரின் என்றுமுள நியமத்திற்கேற்ப ஆண்டவரது திருமுன் நறுமணத் தூபம் காட்டுவதற்காகவும், திருமுன்னிலை அப்பங்களை எந்நாளும் வைப்பதற்காகவும், காலை மாலையிலும், ஓய்வு, அமாவாசை நாள்களிலும், எம் கடவுளாகிய ஆண்டவரின் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்துவதற்காகவும் அதை அவரது பெயருக்கு அர்ப்பணிக்கவிருக்கிறேன்.

எம் கடவுள் எல்லாத் தெய்வங்களையும் விட மிகப் பெரியவர்! எனவே, நான் கட்டப்போகிற கோவிலும் மிகப் பெரியதாயிருக்கும்.

விண்ணும் விண்ணுலகும் அவரைக் கொள்ள இயலாதிருக்க, அவருக்கேற்ற ஒரு கோவில் கட்ட யாரால் முடியும்? அவரது திருமுன் தூபம் காட்டவதற்கேயன்றி அவருக்கென ஒரு கோவில் எழுப்ப நான் யார்?

ஆகவே, ஒரு திறமைமிக்க கலைஞனை என்னிடம் அனுப்பும். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றிலும் ஊதா, கருஞ்சிவப்பு, நீலநூல் வேலைப்பாட்டிலும், சிற்பம் செதுக்குவதிலும் தேர்ந்தவனாக இருக்க வேண்டும். என் தந்தை தாவீதால் தேர்ந்தெடுக்க்பட்டவர்களும், என்னோடு யூதா, எருசலேமில் இருக்கிறவர்களுமான கலைஞரோடு சேர்ந்து அவன் வேலை செய்ய வேண்டும்.

மேலும், லெபனோலிருந்து கேதுரு மரங்கள், தேவதாரு மரங்கள், வாசனை மரங்கள் ஆகியவற்றை நீர் எனக்கு அனுப்பிவையும். ஏனெனில், உம் பணியாளர் லெபனோனின் மரங்களை வெட்டுவதிலும் திறமைமிக்கவர் என நான் அறிவேன். என் பணியாளரும் அவர்களோடு சேர்ந்து உழைப்பர்.

அவர்கள் எனக்கு ஏராளமான மரங்களைத் தயார் செய்ய வேண்டும். ஏனெனில், மிகவும் பெரிய, சிறந்த கோவில் ஒன்றை நான் கட்டவிருக்கிறேன்.

மரங்களை வெட்டும் உம் பணியாளருக்கு நான் இருபதினாயிரம் மரக்கால் பதப்படுத்தப்பட்ட கோதுமையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும், இருபதினாயிரம் குடம் திராட்சை இரசமும், இருபதினாயிரம் குடம் எண்ணெயும் கொடுப்பேன்."

அதற்கு தீரின் மன்னன் ஈராம் சாலமோனுக்கு எழுதி அனுப்பிய மடல்: "ஆண்டவர் தம் மக்களுக்கு அன்பு காட்டுகிறார். ஆதனால் உம்மை அவர்களின் அரசராக நியமித்திருக்கிறார்.

விண்ணகம், மண்ணகம் அனைத்தையும் படைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! அவரே ஆண்டவராகிய தமக்கு ஒர் இல்லத்தையும் அரசராகிய உமக்கு ஓர் அரண்மனையையும் கட்டுவதற்கு விவேகமும் அறிவாற்றலுமுடைய ஞானியாம் உம்மைத் தாவீது அரசருக்கு மகனாகத் தந்தருளினார்!

எனவே, அறிவும் திறமையும் படைத்த ஈராம் அபி என்பவனை நான் உம்மிடம் அனுப்பிகிறேன்.

அவன் தாண் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்; அவன் தந்தை தீர் நாட்டைச் சேர்ந்தவன். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கருங்கல், மரம் ஆகியவற்றிலும், ஊதா நீலம் கருஞ்சிவப்பு நூல், மெல்லிய சணல் வகைகளிலும் வேலை செய்யும் திறன்மிக்கவன். எல்லாவித சித்திர சிற்ப வேலைகளையும் அறிந்தவன்; அவனது வேலைக்குத் தேவையானவற்றை எல்லாம் அவனே உய்த்துணரும் ஆற்றல் படைத்தவன்; உம் கலைஞரோடும், உம் தந்தையும் என் தலைவருமான தாவீதின் கலைஞரோடும் இணைந்து வேலை செய்யக்கூடியவன்.

எனவே, என் தலைவரே, நீர் வாக்களித்தபடி கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், திராட்சை இரசம் ஆகியவற்றை உம் பணியாளர்களுக்கு அனுப்பும்.

நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லெபனோனில் வெட்டி, அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, கடல் வழியாக யாப்பாவரை கொண்டு வருவோம். அங்கிருந்து அவற்றை எருசலேமுக்கு நீர் கொண்டு செல்லலாம்."

பிறகு சாலமோன் தம் தந்தை தாவீதைப்போன்று இஸ்ரயேல் நாட்டில் வாழ்ந்து வந்த அன்னியரைக் கணக்கிட்டார். அவர்கள் எண்ணிக்கை ஓர் இலட்சத்து ஐம்பத்து மூவாயிரத்து அறுநூறு.

அவர்களுள் எழுபதினாயிரம் பேரைச் சுமை சுமக்கவும், எண்பதினாயிரம் பேரை மலையில் கல் வெட்டவும், மூவாயிரத்து அறுநூறு பேரை மக்களின் வேலையை மேற்பார்வையிடவும் அவர் அமர்த்தினார்.

அதிகாரம் 3

பின்பு சாலமோன் எருசலேமில் அவர் தந்தை தாவீதுக்கு ஆண்டவர் தோன்றிய மோரியா மலைமேல் எபூசியராகிய ஒர்னானின் களத்தில் ஆண்டவருக்கு ஒர் இல்லம் எழுப்பத் தொடங்கினார். இந்த இடத்தைத் தாவீது ஏற்கெனவே தயார் செய்திருந்தார்.

தம் ஆட்சியின் நான்காம் ஆண்டு, இரண்டாம் மாதம், இரண்டாம் நாள் சாலமோன் வேலை தொடங்கினார்.

கடவுளின் இல்லத்தைக் கட்டுமாறு சாலமோன் இட்ட அடித்தளம், அக்கால அளவின்படி, அறுபது முழ நீளமும் இருபது முழ அகலமும் கொண்டதாயிருந்தது.

முகப்பில் இருந்த மண்டபம், கோவிலின் அகலத்தைப் போல், இருபது முழ நீளமும், நூற்றிருபது முழ உயரமும் கொண்டதாய் இருந்தது. சாலமோன் அதன் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் மூடினார்.

கோவிலின் மையப் பகுதியைத் தேவதாரு மரப்பலகைகளால் மூடி, இவற்றையும் பசும் பொன்னால் பொதிந்தார். அதன் மேல், பேரீச்சை மடல், சங்கிலி இவற்றின் வேலைப்பாடுகள் பதிக்கப்பெற்றன.

கோவில் தளத்தை விலை உயர்ந்த கற்களால் அழகுபடுத்தினார்; பர்வாயிமினின்று கொண்டு வரப்பெற்ற பொன்னே பயன்படுத்தப்பட்டது.

கோவிலின் உத்திரங்கள், நிலைகள், சுவர்கள், கதவுகள் ஆகியவற்றைப் பொன் தகடுகளால் மூடினார்; சுவர்களில் கெருபுகளைப் பதித்தார்.

பிறகு கோவிலின் திருத்தூயகத்தைக் கட்டினார். அதன் நீளம், கோவிலின் அகலத்தைப் போல், இருபது முழம்; அதன் அகலமும் இருபது முழம். அதை ஏறக்குறைய இருபத்திநான்கு "டன்" நிறையுள்ள பொன் தகடுகளால் மூடினார்.

ஆணிகள் அறுநூற்று எழுபது கிராம் நிறையுள்ள பொன்னால் ஆனவை. மேல் அறைகளையும் அவர் பொன்னால் மூடினார்.

திருத்தூயகத்தில் இரு கெருபுகளின் உருவங்களைச் செய்துவைத்துப் பொன் தகட்டால் மூடினார்.

அவற்றின் இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழம்; அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம். அது கோவிலின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையின் நீளமும் ஐந்து முழமே. அது மற்றக் கெருபின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது.

அவ்வாறே இரண்டாவது கெருபின் அளவும்; அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம். அவ்விறக்கை கோவிலின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையும் ஐந்து முழமே. அது மற்றக் கெருபின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது.

இவ்வாறு அகன்று விரிந்திருந்த அந்த கெருபுகளுடைய இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழம். அவை தம் கால்களை ஊன்றி நின்று கொண்டிருந்தன. அவை கோவிலின் மையப் பகுதியை நோக்கியவண்ணமாய் இருந்தன.

சாலமோன், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மெல்லிய சணல் ஆகிய நூல்களினால் ஒரு திரையை நெய்யச் செய்தார். அதில் கெருபுகளின் உருவங்கள் பின்னப்பெற்றிருந்தன.

கோவிலுக்கு முன்பாக முப்பதைந்து முழம் உயரமான இரண்டு தூண்களைச் செய்தார். அவற்றின் உச்சியில் இருந்த போதிகைகளின் உயரம் ஐந்து முழம்.

கழுத்தணி போன்ற சங்கிலிகளைச் செய்து, தூண்களின் போதிகைகளின்மேல் பொருத்தி வைத்தார். மேலும் வெண்கலத்தால் நூறு மாதுளம் பழங்களைச் செய்து அவற்றைச் சங்கிலிகளில் தொங்க விட்டார்.

அந்தத் தூண்களைக் கோவில் முன்பாக வலப்பக்கத்திலும் இடப்பக்கதிலுமாக நாட்டினார். வலப்பக்கத் தூணுக்கு 'யாக்கீன்' என்றும், இடப்பக்கத் தூணுக்குப் 'போவாசு' என்றும் பெயரிட்டார்.

அதிகாரம் 4

சாலமோன் ஒரு வெண்கலப் பலிபீடத்தைச் செய்தார். அதன் நீளம் இருபது முழம்; அகலம் இருபது முழம்; உயரம் பத்து முழம்.

மேலும் கடல் என்னும் வட்டவடிவமான வெண்கலத் தொட்டியை அவர் வார்ப்பித்தார். அதன் விட்டம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம்.

அதன் அடியில் சுற்றிலும் காளை வடிவங்கள் இருந்தன. பத்து முழ அகலத்தில் அவை இரண்டு வரிசைகளாக வைக்கப்பட்டிருந்தன. அவை தொட்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன.

அத்தொட்டி பன்னிரு காளைகளின்மேல் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும் மூன்று மேற்கையும் மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கிய வண்ணம் இருந்தன. காளைகளின் பின்பக்கம் உட்புறம் இருந்தது.

தொட்டியின் கனம் நான்கு விரல் கடை. அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போன்றும், மலர்ந்த லீலியைப்போன்றும் இருந்தது. அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

கழுவுவதற்குப் பத்துக் கொப்பரைகளைச் செய்து, ஐந்தை வலப்பக்கத்திலும், ஐந்தை இடப்பக்கத்திலும் அவர் வைத்தார். எரிபலிக்கான அனைத்தும் அவற்றின் கழுவப்பட்டன. குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகக் 'கடல்' பயன்படுத்தப்பட்டது.

மேலும் அவர் பத்துப் பொன் விளக்குத் தண்டுகளை அவற்றிற்குரிய நியமத்தின்படி செய்து, ஐந்தை வலப்புறமும் ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்;

பத்து மேசைகளைச் செய்து ஐந்தை வலப்புறமும், ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்; நூறு பொற்கிண்ணங்களையும் செய்தார்;

குருக்களின் முற்றத்தையும், பெரிய முற்றத்தையும் அமைத்தார்; முற்றத்தின் வாயில்களை அமைத்து, அவற்றின் கதவுகளை வெண்கலத் தகட்டால் மூடினார்;

'கடலை' வலப்பக்கம் தென்கிழக்கே நிறுவினார்.

ஈராம், பாத்திரங்களையும் சாம்பல் அள்ளுகருவிகளையும் கிண்ணங்களையும் செய்தார். இவ்வாறு அரசர் சாலமோன் கட்டளையிட்டபடி கடவுளின் இல்லத்திற்கான வேலைகளை அவர் செய்து முடித்தார்.

அவையாவன: இரு தூண்கள், இரு தூண்களின் உச்சியில் கிண்ண வடிவம் கொண்ட இரு போதிகைகள், தூண்களின் உச்சியிலுள்ள அப்போதிகைகளை மூட இரு வலைப்பின்னல்கள்,

அவ்விரு வலைப்பின்னல்களுக்கான நானூறு மாதுளை வடிவங்கள். அவை ஒவ்வொன்றிலும் மாதுளை வடிவங்கள் இரு வரிசைகளில் வைக்கப்பட்டிருந்தன. வலைப்பின்னல்கள் தூண்களின் கிண்ண வடிவம் கொண்ட போதிகைகளை மூடியிருந்தன.

மேலும் அவர் செய்தவை: கொப்பரைகள், அவற்றுக்கான தள்ளுவண்டிகள்,

ஒரு 'கடல்'. அதன்கீழ் பன்னிரு காளைகள்,

பாத்திரங்கள், அள்ளுகருவிகள், முட்கரண்டிகள், மற்றும் துணைக்கலன்கள். ஈராம் அபி ஆண்டவரின் இல்லத்திற்கு வேண்டிய பாத்திரங்ளைக் கலப்பற்ற வெணகலத்தால் சாலமோனுக்குச் செய்து கொடுத்தார்.

அரசர் சுக்கோத்துக்கும் செரேதாவுக்கும் இடையிலுள்ள யோர்தான் சமவெளிக் களிமண் பகுதியில் அவற்றை வார்ப்பித்தார்.

சாலமோன் செய்த கலன்கள் எல்லாம் கணக்கிலடங்கா; அவற்றுக்கான வெண்கலத்தை நிறுத்து மாளாது.

சாலமோன் கடவுளின் இல்லத்திற்கு வேண்டிய கலன்கள் எல்லாவற்றையும், பொற்பலிபீடத்தையும், திருமுன்னிலை மேசைகளையும்,

திருத்தூயகத்திற்கு முன்பாக முறைப்படி வைக்கவேண்டிய விளக்குத் தண்டுகளையும், ஏற்றவேண்டிய அகல்களையும் பசும் பொன்னால் செய்தார்;

அதேபோன்று மலர்களையும், அகல்களையும், அணைப்பான்களையும் பசும்பொன்னால் செய்தார்;

கத்தரிக்கோல்களையும், தீர்த்தச் செம்புகளையும், கரண்டிகளையும் தூபகலசங்களையும் பசும் பொன்னால் செய்தார்; மேலும் கோவில் வாயில்களையும், அதாவது திருத்தூயகக் கதவுகளையும் தூயகக் கதவுகளையும் தங்கத்தால் செய்தார்.

அதிகாரம் 5

கர்த்தருடைய ஆலயத்துக்காகச் சாலொமோன் செய்த வேலையெல்லாம் முடிந்தபோது, சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்தவைகளைக் கொண்டுவந்து, வெள்ளியையும், பொன்னையும், சகல பணிமுட்டுகளையும், தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.


பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவரெல்லாரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.


அப்படியே இஸ்ரவேலர் எல்லாரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.


இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் வந்தபின்பு லேவியர் பெட்டியை எடுத்து,


பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருக்கிற பரிசுத்த பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கொண்டுவந்தவர்கள் லேவியரான ஆசாரியரே.


ராஜாவாகிய சாலொமோனும், அவனோடே கூடின இஸ்ரவேல் சபையாரனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள்.


அப்படியே ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.


கேருபீன்கள், பெட்டியிருக்கும் ஸ்தானத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு செட்டைகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன.


பெட்டியிலிருக்கிற தண்டுகளின்முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.


இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணினபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.


வகுப்புகளின் முறைகளைப் பாராமல், ஆசாரியர் எல்லோரும் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டார்கள்.


ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லியபுடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும்கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.


அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது.


அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.


6 அதிகாரம்

அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,


தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக்கட்டினேன் என்றும் சொல்லி,


ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்.


அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.


அவர் நான் என் ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக்கோத்திரங்களிலுமுள்ள வேறே யாதொரு பட்டணத்தைத் தெரிந்துகொள்ளாமலும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி வேறே ஒருவரைத்தெரிந்துகொள்ளாமலும்,


என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.


இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது.


ஆனாலும் கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான்.


ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்; உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.


இப்போதும் கர்த்தர் சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி,


கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடனே பண்ணின உடன்படிக்கையிருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி,


கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லாருக்கும் எதிராக நின்று தன் கைகளை விரித்தான்.


சாலொமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான ஒரு வெண்கலப்பிரசங்கபீடத்தை உண்டாக்கி, அதை நடுப்பிராகாரத்திலே வைத்திருந்தான்; அதின்மேல் அவன் நின்று, இஸ்ரவேலின் சபையாரெல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து:


இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.


தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தினால் அதை இந்நாளிலிருக்கிறபடி நிறைவேற்றினீர்.


இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.


இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியானாகிய தாவீதுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய் என்று விளங்குவதாக.


தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?


என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.


உமது அடியேன் இவ்விடத்திலேசெய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும்பகலும் திறந்திருப்பதாக.


உமது அடியேனும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபங்களைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.


ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால்,


அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனுக்கு நீதியைச் சரிக்கட்டவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவுந்தக்கதாய், உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக.


உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத்திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,


பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக.


அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தேவரீர் தங்களைக் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால்,


பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக.


தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும் அவர்களுடைய சத்துருக்கள் அவர்கள் வாசஞ்செய்கிற தேசத்திலே அவர்களை முற்றிக்கை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வந்திருக்கிறபோதும்,


எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,


உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,


தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக்கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுபுத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலனளிப்பீராக.


உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தமும், உம்முடைய பலத்த கரத்தினிமித்தமும், ஓங்கிய உம்முடைய புயத்தினிமித்தமும், தூரதேசங்களிலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக நின்று விண்ணப்பம்பண்ணினால்,


உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல, உம்முடைய நாமத்தை அறிந்து உமக்குப்பயப்பட்டு, நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கு, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படி தேவரீர் செய்வீராக.


நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம்பண்ணினால்,


பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக.


பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கையில்,


அவர்கள் சிறைப்பட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி,


தாங்கள் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்ட தங்கள் சிறையிருப்பான தேசத்திலே, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணினால்,


உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும்கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்த உம்முடைய ஜனத்திற்கு மன்னித்தருளும்.


இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.


தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய தாபர ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய கர்த்தாவே, உமது ஆசாரியர் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.


தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கணியாமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும் என்றான்.


7 அதிகாரம்

சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.


கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது.


அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்துபணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.


அப்பொழுது ராஜாவும் சகல ஜனங்களும் கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள்.


ராஜாவாகிய சாலொமோன் இருபத்தீராயிரம் மாடுகளையும், லட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் சகல ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.


ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீதுராஜா லேவியரைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப்பாடும்படியாக செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.


சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால், கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.


அக்காலத்தில்தானே சாலொமோனும் ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து, அவனோடேகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்து,


எட்டாம்நாளை விசேஷித்த ஆசரிப்புநாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழுநாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.


ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக ஜனங்களுக்கு விடைகொடுத்தான்; கர்த்தர் தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் போனார்கள்.


இவ்விதமாய் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும் கட்டித் தீர்த்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அநுகூலமாயிற்று.


கர்த்தர் இரவிலே சாலொமோனுக்குத் தரிசனமாகி: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன்.


நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள்ளே கொள்ளைநோயை அனுப்பும்போது,


என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.


இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.


என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் அதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.


உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால்,


அப்பொழுது இஸ்ரவேலை அரசாளும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடே உடன்படிக்கைபண்ணினபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கப்பண்ணுவேன்.


நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்குமுன் வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் விட்டுப்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களேயாகில்,


நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்தில் இருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தினின்று தள்ளி, அதை எல்லா ஜனசதளங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் வைப்பேன்.


அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து கர்த்தர் இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன என்று கேட்பான்.


அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தேவர்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை நமஸ்கரித்து, சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.


8 அதிகாரம்

சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரமனையையும் கட்ட இருபது வருஷகாலம் சென்றபின்பு,


ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் புத்திரரைக் குடியேற்றினான்.


பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான்.


அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான்.


சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்ப்பெத்தொரோனையும், அலங்கங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி,


பாலாத்தையும், தனக்கு இருக்கிற இரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் சகல பட்டணங்களையும், குதிரைவீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும் தான் ஆளும் தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான்.


இஸ்ரவேல் புத்திரர் சங்காரம்பண்ணாதிருந்த இஸ்ரவேல் ஜாதியல்லாத ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியரில் மீதியான சகல ஜனத்திலும்,


அவர்களுக்குப்பிறகு தேசத்திலிருந்த அவர்கள் பிள்ளைகளை சாலொமோன் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பகுதி கட்டச்செய்தான்.


இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் தன் வேலையைச் செய்ய அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தமனுஷரும், அவனுடைய சேர்வைக்காரரின் தலைவரும், அவனுடைய இரதங்களுக்கும் குதிரைவீரருக்கும் தலைவருமாயிருந்தார்கள்.


ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரரின் தலைவராகிய இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர் ஜனத்தை ஆண்டார்கள்.


சாலொமோன்: கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரமனையிலே என் மனைவி வாசம்பண்ணலாகாது என்று சொல்லி, பார்வோனின் குமாரத்தியைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரப்பண்ணினான்.


அதுமுதற்கொண்டு சாலொமோன் தான் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டியிருந்த கர்த்தருடைய பலிபீடத்தின்மேல்,


ஒவ்வொரு நாளின் கட்டளைக்குந்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.


அவன் தன் தகப்பனாகிய தாவீதுடைய பிரமாணத்தின்படியே, ஆசாரியர்கள் தங்கள் தங்கள் ஊழியத்தைச் செய்யும் வகுப்புகளையும், லேவியர் ஒவ்வொரு நாளின் கட்டளைப்படியே துதித்து சேவித்து ஆசாரியருக்கு முன்பாகத் தங்கள் ஊழியத்தைச் செய்யும் முறைகளையும், வாசல் காப்பவர்கள் ஒவ்வொரு வாசலில் காவல்காக்கும் வகுப்புகளையும் நிற்கப்பண்ணினான்; தேவனுடைய மனுஷனாகிய தாவீது இப்படிக் கட்டளையிட்டிருந்தான்.


சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து, ராஜா ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்த கட்டளையை விட்டு அவர்கள் விலகாதிருந்தார்கள்.


இப்படியே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்ட நாள்முதல் அதை முடிக்குமட்டும் சாலொமோனின் வேலையெல்லாம் நடந்தேறிக் கர்த்தருடைய ஆலயம் கட்டித்தீர்ந்தது.


பின்பு சாலொமோன் ஏதோம்தேசத்துக் கடல் ஓரத்திலிருக்கும் எசியோன்கேபேருக்கும் ஏலோத்துக்கும் போனான்.


அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர் முகாந்தரமாய்க் கப்பல்களையும், சமுத்திர யாத்திரையில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனின் வேலைக்காரரோடேகூட ஓப்பீருக்குப்போய், அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.


9 அதிகாரம்

சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.


அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான்; அவளுக்கு விடுவிக்காதபடிக்கு ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.


சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய பானபாத்திரக்காரரையும், அவர் அரமனையையும்,


அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவர்கள் வஸ்திரங்களையும், கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,


ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி மெய்யாயிற்று.


நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது.


உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.


உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கப்பண்ண, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்குச் சிநேகிக்கிறதினாலே, அவர் நியாயமும் நீதியும்செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள்


அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக்கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருக்காலும் வரவில்லை.


ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரரும் சாலொமோனின் வேலைக்காரரும் வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.


அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்டவைகள் அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை.


சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைப்பார்க்கிலும் அதிகமாய் அவள் ஆசைப்பட்டுக்கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடுங்கூட தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.


வியாபாரிகளும் வர்த்தகரும் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.


அரபிதேசத்துச் சகல ராஜாக்களும் மாகாணங்களின் அதிபதிகளும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.


ராஜாவாகிய சாலொமோன் இருநூறு பரிசைகளை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன்தகட்டைச் செலவழித்தான்.


அடித்த பொன்தகட்டால் முந்நூறுகேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல்நிறை பொன்னைச் செலவழித்தான்; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.


ராஜா தந்தத்தினால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.


அந்தச் சிங்காசனத்துக்குப் பொன்னினால் செய்யப்பட்ட ஆறு படிகளும், ஒரு பாதபடியும், உட்காரும் இடத்திற்கு இருபுறத்திலும் கைச்சாய்மானங்களும் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே நின்றது.


அந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது, எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை.


ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.


ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.


பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.


சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.


வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், சுகந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறுகழுதைகளையும் கொண்டுவருவார்கள்.


சாலொமோனுக்கு நாலாயிரம்குதிரை லாயங்களும் இரதங்களும் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும்பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான்.


நதிதுவக்கிப் பெலிஸ்தரின் தேசமட்டுக்கும் எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற சகல ராஜாக்களையும் அவன் ஆண்டான்.


எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.


எகிப்திலும் மற்ற தேசங்களிலுமிருந்து சாலொமோனுக்குக் குதிரைகள் கொண்டுவரப்பட்டது.


சாலொமோனுடைய ஆதியந்தமான நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமைக்குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது.


சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் நாற்பது வருஷம் அரசாண்டான்.


பின்பு சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.


10 அதிகாரம்

ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப்போனான்.


ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் அதைக்கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.


ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேலனைத்துமாய் வந்து, ரெகொபெயாமை நோக்கி:


உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் இலகுவாக்கும்; அப்பொழுது உம்மைச்சேவிப்போம் என்றார்கள்


அதற்கு அவன்: நீங்கள் மூன்றுநாளைக்குப்பிற்பாடு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.


அப்பொழுது ராஜாவாகிய ரெகொபயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.


அதற்கு அவர்கள்: நீர் இந்த ஜனங்களுக்குத் தயவையும் பட்சத்தையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.


முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்தவர்களும் தன் சமுகத்தில் நிற்கிறவர்களுமாகிய வாலிபரோடே ஆலோசனைபண்ணி,


அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த நுகத்தை இலகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.


அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.


இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொல்லும் என்றார்கள்.


மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.


ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோர் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, அவர்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.


வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி, என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் அதை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான்.


ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான், கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்தும்படி தேவனாலே இப்படி நடந்தது.


ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரமாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.


ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.


பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேல் புத்திரர் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான்.


அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர் தாவீதின் வம்சத்தை விட்டுக் கலகம்பண்ணிப் பிரிந்துபோயிருக்கிறார்கள்.


11 அதிகாரம்

ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரரான லட்சத்து எண்பதினாயிரம்பேரைக் கூட்டினான்.


தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது:


நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ரவேலரையும் நோக்கி:


நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும் அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள்.


ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.


அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும்,


பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும்,


காத்தும், மரேஷாவும், சீப்பும்,


அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,


சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலுமிருக்கிற அரணிப்பான பட்டணங்களைக்கட்டி,


அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும்,


யூதாவும் பென்யமீனும் அவன் பட்சத்திலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.


இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்தில் வந்தார்கள்.


லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டபடியினால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் காணியாட்சிகளையும்விட்டு, யூதாதேசத்துக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.


அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்.


அந்த லேவியரின் பிறகாலே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள்.


இப்படி மூன்று வருஷமட்டும் யூதாவின் ராஜ்யத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்றுவருஷமட்டும் நடந்தார்கள்.


ரெகொபெயாம் தாவீதின் குமாரனாகிய எரிமோத்தின் குமாரத்தி மகலாத்தையும், ஈசாயின் குமாரனாகிய எலியாபின் குமாரத்தி அபியாயேலையும் விவாகம்பண்ணினான்.


இவள் அவனுக்கு ஏயூஸ் சமரியா சாகாம் என்னும் குமாரரைப் பெற்றாள்.


அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும், செலோமித்தையும் பெற்றாள்.


ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான்.


ரெகொபெயாம் மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.


அவன் புத்தியாய் நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள அரணான சகல பட்டணங்களிலும் தன் குமாரர் யாவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக்கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்


12 அதிகாரம்

ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலரனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.


அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினபடியினால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதினாயிரம் குதிரைவீரரோடும் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான்.


அவனோடேகூட எகிப்திலிருந்து வந்த லூபியர், சூக்கியர், எத்தியோப்பியரான ஜனங்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்களாயிருந்தார்கள்.


அவன் யூதாவுக்கு அடுத்த அரணான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம்மட்டும் வந்தான்.


அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்துக்கும் சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்துக்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னைவிட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழும்படி விட்டுவிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.


அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி: கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள்.


அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக் கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.


ஆனாலும் என்னைச் சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனைச் சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்.


அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகளாகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டுபோய்விட்டான்.


அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.


ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.


அவன் தன்னைத் தாழ்த்தினபடியினால், கர்த்தர் அவனை முழுதும் அழிக்காதபடிக்கு அவருடைய கோபம் அவனைவிட்டுத் திரும்பிற்று; யூதாவிலே இன்னும் சில காரியங்கள் சீராயிருந்தது.


அப்படியே ராஜாவாகிய ரெகொபெயாம் எருசலேமிலே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு அரசாண்டான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின் பேர் நாமாள்.


அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான்.


ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.


ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.


13 அதிகாரம்

ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருஷத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,


மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மிகாயாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது.


அபியா தெரிந்துகொள்ளப்பட்ட நாலுலட்சம்பேராகிய பராக்கிரம சேவகரின் இராணுவத்தாரை யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணினான்; யெரொபெயாம் தெரிந்துகொள்ளப்பட்ட எட்டுலட்சம் பேராகிய பலத்த பராக்கிரமசாலிகளை அவனுக்கு எதிராக யுத்தத்திற்கு நிறுத்தினான்.


அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயிம் என்னும் மலையின்மேல் ஏறிநின்று, யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.


இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் ராஜ்யபாரத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் மாறாத உடன்படிக்கையாய்க் கட்டளையிட்டதை நீங்கள் அறியீர்களா?


ஆகிலும் தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் ஊழியக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் குமாரன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.


பேலியாளின் மக்களாகிய வீணர் அவனோடேகூடி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் அவர்களை எதிர்க்கக் கூடாமல் வாலவயதும் திடனற்ற மனதுமாயிருக்கையில், அவனுக்கு விரோதமாய்த் தங்களைப் பலப்படுத்திக்கொண்டார்கள்.


இப்போதும் தாவீதுடைய குமாரன் கையிலிருக்கிற கர்த்தருடைய ராஜ்யத்திற்கு விரோதமாக நீங்கள் பெலன்கொள்ளலாமென்று நினைக்கிறீர்கள்; நீங்கள் ஏராளமான கூட்டம்; யெரொபெயாம் உங்களுக்கு தேவர்களாக உண்டாக்கினபொன் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் இருக்கிறதே.


நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும் லேவியரையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.


எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.


அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்தவாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும் மாலையிலும் பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்தப்பங்களை அடுக்கிவைக்கிறதையும், பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளைச் சாயங்காலந்தோறும் ஏற்றுகிறதையும் விசாரிக்கிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரின் காவலைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள்.


இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யாதேயுங்கள்; செய்தால் உங்களுக்குச் சித்திக்காது என்றான்.


யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு பதிவிடையைச் சுற்றிப்போகப்பண்ணினான்; அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்தப் பதிவிடை அவர்களுக்குப்பின் இருந்தது.


யூதா ஜனங்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக் கண்டு, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள்.


யூதா மனுஷர் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனுஷர் ஆர்ப்பரிக்கிறபோது, தேவன் யெரொபெயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்தார்.


இஸ்ரவேல் புத்திரர் யூதாவுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தேவன் அவர்களை இவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.


அபியாவும் அவனுடைய ஜனங்களும் அவர்களில் மகா சங்காரம்பண்ணினார்கள்; தெரிந்துகொள்ளப்பட்ட ஐந்துலட்சம்பேர் இஸ்ரவேலிலே வெட்டுண்டுவிழுந்தார்கள்.


அப்படியே இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள்; யூதா புத்திரரோ தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொண்டதினால் மேற்கொண்டர்கள்.


அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான்.


அப்புறம் அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலங்கொள்ளமாட்டாதேபோய், கர்த்தர் அவனை அடித்ததால் மரணமடைந்தான்.


அபியா பலத்துப்போனான்; அவன் பதினாலு ஸ்திரீகளை விவாகம்பண்ணி, இருபத்திரண்டு குமாரரையும் பதினாறு குமாரத்திகளையும் பெற்றான்.


அபியாவின் மற்றக் கிரியைகளும், அவன் நடபடிகளும் அவன் வர்த்தமானங்களும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதியிருக்கிறது.


14 அதிகாரம்

அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது.


ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.


அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,


தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து,


யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.


கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.


அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.


யூதாவிலே பரிசையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேருமான சேனை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லாரும் பராக்கிரமசாலிகள்.


அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும் வந்தான்.


அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேசாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.


ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.


அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும்முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.


அவர்களை ஆசாவும் அவனோடிருந்த ஜனங்களும் கேரார்மட்டும் துரத்தினார்கள்; எத்தியோப்பியர் திரும்பப் பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளை அடித்து,


கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் முறிய அடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டாயிற்று; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாய் அகப்பட்டது.


மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.


15 அதிகாரம்

அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,


அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.


இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.


தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.


அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகளெல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,


ஜாதியை ஜாதியும், பட்டணத்தைப் பட்டணமும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித இடுக்கத்தினாலும் கலங்கப்பண்ணினார்.


நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான்.


ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் திடன்கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்து,


அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.


ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருஷம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி,


தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டுவந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்குப் பலியிட்டு,


தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்;


சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷரெல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து,


மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள்.


இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள், தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார்.


தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் நிர்மூலமாக்கித் தகர்த்து, கீதரோன் ஆறண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.


மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவினின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது.


தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.


ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது.


16 அதிகாரம்

ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதடிக்கு ராமாவைக் கட்டினான்.


அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:


எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டுவிலகிப்போகும்படிக்கு நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லி அனுப்பினான்.


பெனாதாத் ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் எல்லாப் பண்டகசாலைகளையும் முறிய அடித்தார்கள்.


இதைப் பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைவிட்டு ஒழிந்தான்.


அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.


அக்காலத்திலே ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா ராஜாவின் இராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று.


மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரைவீரருமுள்ள எத்தியோப்பியரும் லூபியரும் மகா சேனையாயிருந்தார்களல்லவா? நீர் கர்த்தரைச் சார்ந்துகொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.


தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.


அதினிமித்தம் ஆசா ஞானதிருஷ்டிக்காரன்மேல் சினந்து கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதல்லாமலும் அக்காலத்தில் ஜனங்களுக்குள் சிலரைக் கொடூரமாய் நடப்பித்தான்.


ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.


ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.


ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருஷத்தில் மரித்து, தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்.


தைலக்காரரால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்பண்ணினார்கள்.


17 அதிகாரம்

அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலப்பட்டான்.


அவன் யூதாவின் அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதாதேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் தாணையங்களையும் வைத்தான்.


கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து,


தன் தகப்பனுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான்.


ஆகையால் கர்த்தர் அவன் கையில் ராஜ்யபாரத்தைத் திடப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லாரும் யோசபாத்துக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது.


கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவை விட்டகற்றினான்.


அவன் அரசாண்ட மூன்றாம் வருஷத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்பண்ணும்படிக்கு, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும், நெதனெயேலையும், மிகாயாவையும்,


இவர்களோடேகூடச் செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியரையும், இவர்களோடேகூட ஆசாரியரான எலிஷமாவையும், யோராமையும் அனுப்பினான்.


இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேத புஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப்போதித்தார்கள்.


யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்யங்களின்மேலெல்லாம் கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததினால், யோசபாத்தோடு யுத்தம்பண்ணாதிருந்தார்கள்.


பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்துக்குப் பகுதிப்பணத்தோடேகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்துஎழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள்.


இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், ரஸ்துக்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான்.


யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளை நடத்தினான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள்.


தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய இலக்கமாவது: யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்றுலட்சம்பேர் இருந்தார்கள்.


அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதியிருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதினாயிரம் பேர் இருந்தார்கள்.


அவனுக்கு உதவியாக கர்த்தருக்குக் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்த சிக்ரியின் குமாரனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.


பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.


அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே சேவகத்திற்கு ஆயுதபாணிகள் லட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்.


ராஜா யூதா எங்குமுள்ள அரணான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவைச் சேவித்தவர்கள்.


18 அதிகாரம்

யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து,


சில வருஷங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடத்துக்குப் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற ஜனத்திற்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை ஏவினான்.


எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகிறீரா என்று கேட்டதற்கு, அவன்: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன் என்றான்.


பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.


அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள்: போம், தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.


பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.


அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.


அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.


இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுக வாசலுக்கு முன்னிருக்கும் விசாலமான இடத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்திலே உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.


கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.


சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப்போம், உமக்கு வாய்க்கும், கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.


மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடனே பேசி: இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்.


அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.


அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றான்.


ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனை தரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.


அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர் இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.


அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்.


அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதையும், பரம சேனையெல்லாம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.


அப்பொழுது கர்த்தர்: இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.


அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டுவந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனைசெய்வேன் என்றது; எதினால் என்று கர்த்தர் அதைக்கேட்டார்.


அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படியே செய் என்றார்.


ஆனதினால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.


அப்பொழுது கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டே வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.


அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.


அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்துக்கும், ராஜகுமாரனாகிய யோவாசிடத்துக்கும் திரும்பக் கொண்டுபோய்,


அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.


அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான்.


பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.


இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து: நான் வேஷமாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷமாறி யுத்தத்தில் பிரவேசித்தான்.


சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.


ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.


இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள்.


ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலே பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து, நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான்.


அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சீரியருக்கு எதிராக இரதத்தில் சாயங்காலமட்டும் நின்றிருந்து, சூரியன் அஸ்தமிக்கும்போது இறந்துபோனான்.


19 அதிகாரம்

யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான்.


அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.


ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.


யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயர்செபாதொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப்போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் இடத்திற்குத் திரும்பப்பண்ணினான்.


அவன் யூதாவின் அரணான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து,


அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.


ஆதலால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமுமில்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான்.


அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியரிலும், ஆசாரியரிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக் குறித்தும் விவாதவிஷயங்களைக்குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து,


அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து செய்யவேண்டியது என்னவென்றால்,


நானாவித இரத்தப்பழிச் சங்கதிகளும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த நானாவித வழக்குச் சங்கதிகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு நேரஸ்தராகாதபடிக்கும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் நேரஸ்தராகமாட்டீர்கள்.


இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.


20 அதிகாரம்

இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்.


சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.


அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்


அப்படியே யூதா ஜனங்கள் கர்த்தரிடத்திலே சகாயந்தேடக் கூடினார்கள்; யூதாவிலுள்ள எல்லாப் பட்டணங்களிலும் இருந்து அவர்கள் கர்த்தரைத் தேடவந்தார்கள்.


அப்பொழுது யோசபாத் கர்த்தருடைய ஆலயத்திலே புதுப்பிராகாரத்துமுகப்பிலே, யூதா ஜனங்களும் எருசலேமியரும் கூடின சபையிலே நின்று:


எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீரல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக் கூடாது.


எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்த தேசத்துக் குடிகளைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றைக்குமென்று கொடுக்கவில்லையா?


ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.


எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்துநின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.


இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத்தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களை விட்டுவிலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள்.


இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப்பண்ணின உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள்.


எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.


யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.


அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது:


சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.


நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்.


இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.


அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்குமுன்பாகத் தாழவிழுந்தார்கள்.


கோகாத்தியரின் புத்திரரிலும் கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள்.


அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.


பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகக்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான்.


அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.


எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக்குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்.


யூதா மனுஷர் வனாந்தரத்திலுள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டமிருக்கும் திக்கை நோக்குகிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை.


யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகக் கூடாதிருந்தது; மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.


நாலாம் நாளில் பொராக்காவிலே கூடினார்கள்; அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்னும் பேர் தரித்தார்கள்.


பின்பு கர்த்தர் அவர்களை அவர்கள் சத்துருக்கள்பேரில் களிகூரச் செய்தபடியால் யூதா மனுஷர் யாவரும் எருசலேம் ஜனங்களும், அவர்களுக்கு முன்னாலே யோசபாத்தும் மகிழ்ச்சியோடே எருசலேமுக்குத் திரும்பினார்கள்.


அவர்கள் தம்புருகளோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள்.


கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடு யுத்தம்பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்து ராஜ்யத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரமும் வந்தது.


இவ்விதமாய் தேவன் சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதினால், யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது.


யோசபாத் யூதாவை அரசாண்டான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அசுபாள்.


அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழியிலே நடந்து, அதைவிட்டு விலகாதிருந்து, கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.


ஆனாலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் தங்கள் இருதயத்தைத் தங்கள் பிதாக்களின் தேவனுக்கு இன்னும் நேராக்காதிருந்தார்கள்.


யோசபாத்தின் ஆதியந்தமான மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேலில் ராஜாக்களின் புஸ்தகத்தில் கண்டிருக்கிற ஆனானியின் குமாரனாகிய யெகூவின் வசனங்களில் எழுதியிருக்கிறது.


அதற்குப்பின்பு யூதாவின் ராஜாவாகிய யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனாகிய அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடே தோழமைபண்ணினான்.


தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடே கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள்.


மரேசா ஊரானாகிய தொதாவானின் குமாரனான எலியேசர் யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர் அகசியாவோடே கூடிக்கொண்டபடியினால், கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார் என்றான்; அந்தக் கப்பல்கள் உடைந்துபோயிற்று, அவர்கள் தர்ஷீசுக்குப் போகக் கூடாமற்போயிற்று.


21 அதிகாரம்

யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோராம் ராஜாவானான்.


அவனுக்கு யோசபாத்தின் குமாரராகிய அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா என்னும் சகோதரர் இருந்தார்கள்; இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோசபாத்தின் குமாரர்.


அவர்களுடைய தகப்பன் வெள்ளியும், பொன்னும் உச்சிதங்களுமான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே அரணான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் சேஷ்டபுத்திரனானபடியால், அவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்.


யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்.


யோராம் ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.


அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.


கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடே பண்ணின உடன்படிக்கையினிமித்தம் தாவீதின் வம்சத்தை அழிக்கச் சித்தமில்லாதிருந்தார்.


அவன் நாட்களில் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.


அதினால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தான்.


ஆகிலும் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணிப் பிரிந்தார்கள்; அவன் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், அக்காலத்திலே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.


அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிகளைச் சோரம்போகப்பண்ணி, யூதாவையும் அதற்கு ஏவிவிட்டான்.


அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல்,


இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபுடைய குடும்பத்தின் சோரமார்க்கத்திற்கு ஒத்தபடியே யூதாவையும் எருசலேமின் குடிகளையும் சோரம்போகப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரரையும் கொன்றுபோட்டபடியினால்,


இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார்.


நீயோ உனக்கு உண்டாகும் குடல்நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.


அப்படியே கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார்.


அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை.


இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்.


அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருஷம் முடிகிறகாலத்தில் அவனுக்கு உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான்; அவனுடைய பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை.


அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.


22 அதிகாரம்

எருசலேமின் குடிகள், அவன் இளையகுமாரனாகிய அகசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்; அரபியரோடே கூடவந்து பாளயமிறங்கின தண்டிலிருந்தவர்கள் மூத்தகுமாரரையெல்லாம் கொன்றுபோட்டார்கள்; இவ்விதமாய் அகசியா என்னும் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அரசாண்டான்.


அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் அத்தாலியாள்.


அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாய் நடக்க அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள்.


அவன் ஆகாபின் குடும்பத்தைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் தகப்பன் சென்றுபோனபின்பு, அவர்கள் அவனுக்குக் கேடாக அவனுடைய ஆலோசனைக்காரராயிருந்தார்கள்.


அவர்களுடைய ஆலோசனைக்கு உட்பட்டவனாய், அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் குமாரனோடே கூட, கிலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ணப்போனான்; அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.


அப்பொழுது தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணுகையில், தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான், அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் தாவீதின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.


அகசியா யோராமிடத்துக்கு வந்தது அவனுக்கு தேவனால் உண்டான கேடாக லபித்தது; எப்படியென்றால், அவன் வந்தபோது யோராமுடனே கூட, கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாரைச் சங்கரிக்க அபிஷேகம்பண்ணுவித்த நிம்சியின் குமாரனாகிய யெகூவுக்கு நேராக வெளியே போனான்.


யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு ஆக்கினை நடப்பிக்கும்போது, அவன் அகசியாவைச் சேவிக்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரரின் குமாரரையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான்.


பின்பு அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழுஇருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன் என்று சொல்லி, அவனை அடக்கம்பண்ணினார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் அகசியாவின் குடும்பத்தில் இல்லாமற்போயிற்று.


அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரையும் சங்காரம்பண்ணினாள்.


ராஜாவின் குமாரத்தியாகிய யோசேபியாத், கொன்றுபோடப்படுகிற ராஜகுமாரருக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசைக் களவாயெடுத்துக்கொண்டு, அவனையும் அவன் தாதியையும் சயனவீட்டிலே வைத்தாள்; அப்படியே அத்தாலியாள் அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, ராஜாவாகிய யோராமின் குமாரத்தியும் ஆசாரியனாகிய யோய்தாவின் பெண்ஜாதியுமாகிய யோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள், அவள் அகசியாவின் சகோதரியாயிருந்தாள்.


இவர்களோடு அவன் ஆறுவருஷமாய்க் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.


23 அதிகாரம்

ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.


அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியரையும், இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தலைவரையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்.


அந்தச் சபையார் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடே உடன்படிக்கை செய்தார்கள்; யோய்தா அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் தாவீதின் குமாரரைக் குறித்துச் சொன்னபடியே ராஜாவின் குமாரன் ராஜாவாக வேண்டும்.


நீங்கள் செய்யவேண்டிய காரியமென்னவென்றால், இவ்வாரத்தில், முறைப்படி வருகிற ஆசாரியரும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒருபங்கு ஒலிமுகவாசல்களையும்,


மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனையையும், மூன்றில் ஒருபங்கு அஸ்திபார வாசலையும் காக்கவும், ஜனங்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.


ஆசாரியரும் லேவியரில் ஊழியம்செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.


லேவியர் அவரவர் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்றுகொண்டிருக்கவேண்டும்; ஆலயத்துக்குட்படுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா உட்பிரவேசிக்கிறபோதும் வெளியே புறப்படுகிறபோதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.


ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியரும் யூதாகோத்திரத்தார் அனைவரும் செய்து, அவரவர் அவ்வாரத்து முறைப்படி வருகிறவர்களும், முறைதீர்ந்து போகிறவர்களுமான தம்தம் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோனார்கள்; வகுப்புகள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா உத்தரவுகொடுக்கவில்லை.


தாவீதுராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் பரிசைகளையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து,


அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய் ஆலயத்தின் வலதுபக்கந்தொடங்கி, ஆலயத்தின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க ஜனங்களையெல்லாம் நிறுத்தினான்.


பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் குமாரரும் அவனை அபிஷேகம்பண்ணி, ராஜா வாழ்க என்றார்கள்.


ஜனங்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,


இதோ, நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினாள்.


ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவனாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து, அவர்களை நோக்கி: இவளை வரிசைக்குப்புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தரின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடாதேயுங்கள் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.


அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரமனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடமட்டும் போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.


அப்பொழுது யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ராஜாவும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி செய்தான்.


அப்பொழுது ஜனங்களெல்லாரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் தகர்த்து, பாகாலின் பூசாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள்.


தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும் சங்கீதத்தோடும் கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளை மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக, யோய்தா கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகங்களைத் தாவீது கர்த்தருடைய ஆலயத்துக்கென்று பகுத்துவைத்த லேவியரான ஆசாரியர்களின் கையில் ஒப்புவித்து,


யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.


நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், ஜனத்தை ஆளுகிறவர்களையும், தேசத்து சமஸ்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, உயர்ந்த வாசல்வழியாய் ராஜ அரமனைக்குள் அழைத்துவந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரப்பண்ணினார்கள்.


தேசத்து ஜனங்களெல்லாரும் மகிழ்ந்தார்கள், அத்தாலியாளை பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமரிக்கையாயிற்று.


24 அதிகாரம்

யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபாபட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.


ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.


அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.


அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான்.


அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.


அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன?


அந்தப் பொல்லாத ஸ்திரீயாகிய அத்தாலியாளுடைய மக்கள் தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை பண்ணப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காகச் செலவுபண்ணிப்போட்டார்களே என்றான்.


அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து,


கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.


அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் சந்தோஷமாய்க் கொண்டுவந்து பெட்டிநிறைய அதிலே போட்டார்கள்.


வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்குநாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.


அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள்; அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி, கல்தச்சரையும் தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.


அப்படி வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.


அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாக கொண்டுவந்தார்கள்; அதிலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்.


யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.


அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தபடியினால், அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.


யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவை பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்.


அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.


அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பப்பண்ணக் கர்த்தர் அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் ஜனங்களைத் திடச்சாட்சியாகக் கடிந்துகொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் செவிகொடுக்கவில்லை.


அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்களென்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.


அதினால் அவர்கள் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கற்பனையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.


அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.


மறு வருஷத்திலே சீரியாவின் சேனைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்.


சீரியாவின் சேனை சிறுகூட்டமாய் வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டபடியினால், கர்த்தர் மகா பெரிய சேனையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள்.


அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.


அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணினவர்கள், அம்மோனிய ஸ்திரீயான சீமாத்தின் குமாரனாகிய சாபாத்தும், மோவாப் ஸ்திரீயான சிம்ரீத்தின் குமாரனாகிய யோசபாத்துமே.


அவன் குமாரரைப்பற்றியும். அவன்மேல் வந்த பெரிய பாரத்தைப்பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைப்பற்றியும் ராஜாக்களின் புஸ்தகமான சரித்திரத்தில் எழுதியிருக்கிறது; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.


25 அதிகாரம்

அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின்பேர் யோவதானாள்.


அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை.


ராஜ்யபாரம் அவனுக்கு ஸ்திரப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.


ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்களும், பிதாக்களினிமித்தம் பிள்ளைகளும் கொலைசெய்யப்படாமல், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டுமென்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்டபிரகாரம், அவர்களுடைய பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான்.


அமத்சியா யூதா மனுஷரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும் நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபது வயதுமுதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை இலக்கம்பார்த்து, யுத்தத்திற்குப் புறப்படவும், ஈட்டியையும் கேடகத்தையும் பிடிக்கவுந்தக்க யுத்தவீரர் மூன்றுலட்சம்பேரென்று கண்டான்.


இஸ்ரவேலிலும் லட்சம் பராக்கிரமசாலிகளை நூறுதாலந்து வெள்ளி கொடுத்துக் கூலிக்கு அமர்த்தினான்.


தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.


போக மனதானால் நீர் போம், காரியத்தை நடத்தும்; யுத்தத்திற்குத் திடன்கொண்டு நில்லும்; தேவன் உம்மைச் சத்துருவுக்கு முன்பாக விழப்பண்ணுவார்; ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும் என்றான்.


அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.


அப்பொழுது அமத்சியா எப்பிராயீமரில் தன்னிடத்துக்கு வந்த சேனையைத் தங்கள் வீட்டிற்குப் போய்விடப் பிரித்துவிட்டான்; அதினால் அவர்களுக்கு யூதாவின்மேல் மிகுந்த கோபமூண்டு, உக்கிரமான எரிச்சலோடே தங்களிடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.


அமத்சியாவோ திடன்கொண்டு, தன் ஜனத்தைக் கூட்டி, உப்புப் பள்ளத்தாக்குக்குப் போய், சேயீர் புத்திரரில் பதினாயிரம்பேரை வெட்டினான்.


யூதா புத்திரர், பதினாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையுச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லாரும் நொறுங்கிப்போகத்தக்கதாய் அந்தக் கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள்.


தன்னோடுகூட யுத்தத்திற்கு வராதபடிக்கு, அமத்சியா திருப்பிவிட்ட யுத்தபுருஷர், சமாரியா துவக்கிப் பெத்தொரோன்மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்து, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாய்க் கொள்ளையிட்டார்கள்.


அமத்சியா ஏதோமியரை முறிய அடித்து, சேயீர் புத்திரரின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு, அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்குத் தூபங்காட்டினான்.


அப்பொழுது, கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபமூண்டவராகி, அவனிடத்துக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் ஜனத்தை உமது கைக்குத் தப்புவிக்காதேபோன ஜனத்தின் தெய்வங்களை நீர் நாடுவானேன் என்றான்.


தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதைவிட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.


பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம்வா என்று சொல்லியனுப்பினான்.


அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்து கொடு என்று கேட்கச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒருகாட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.


நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.


ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படிக்கு தேவனாலே இப்படி நடந்தது.


அப்படியே இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலிருக்கிற பெத்ஷிமேசிலே அவனும், அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள்.


யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.


இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அகசியாவின் குமாரனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்ஷிமேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக்கொண்டுவந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல்தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறுமுழ நீளம் இடித்துப்போட்டு,


தேவனுடைய ஆலயத்தில் ஓபேத் ஏதோமின் வசத்திலே அகப்பட்ட சகல பொன்னையும், வெள்ளியையும், சகல பணிமுட்டுகளையும், ராஜாவின் அரமனைப்பொக்கிஷங்களையும், கிரியிருப்பவர்களையும், பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.


யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் குமாரனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான்.


அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.


அமத்சியா கர்த்தரை விட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணிக்கொண்டார்கள்; அதினிமித்தம் அவன் லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பினார்கள்; அவர்கள் அங்கே அவனைக் கொன்றுபோட்டு,


குதிரைகள்மேல் அவனை எடுத்துவந்து, யூதாவின் நகரத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.


26 அதிகாரம்

அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.


ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.


உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.


அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,


தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.


அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, காத்தின் அலங்கத்தையும், யப்னேயின் அலங்கத்தையும், அஸ்தோத்தின் அலங்கத்தையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.


பெலிஸ்தரையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியரையும் மெகுனியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணைநின்றார்.


அம்மோனியர் உசியாவுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய கீர்த்தி எகிப்தின் எல்லைமட்டும் எட்டினது; அவன் மிகவும் பெலங்கொண்டான்.


உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், அலங்கத்துக் கோடிகள்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான்.


அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.


உசியாவுக்கு யுத்தவீரரின் சேனையுமிருந்தது; அது சம்பிரதியாகிய ஏயெலினாலும் ஆதிக்கக்காரனாகிய மாசேயாவினாலும் இலக்கம்பார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் வகுப்பு வகுப்பாய்ச் சேவகம்பண்ணப் புறப்பட்டது.


பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.


இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணைநிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.


இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.


கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று.


அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.


ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து,


ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டுவெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.


அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று.


பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு, அவனைத் தீவிரமாய் அங்கிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியேபோகத் தீவிரப்பட்டான்.


ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம்விசாரித்தான்.


உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்களை ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான்.


உசியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.


27 அதிகாரம்

யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் எருசாள்.


அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.


அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான்.


யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.


அவன் அம்மோன் புத்திரருடைய ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறுதாலந்து வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும், பதினாயிரங்கல வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருஷத்திலும் அம்மோன் புத்திரர் அப்படியே அவனுக்குச் செலுத்தினார்கள்.


யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.


யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய சகல யுத்தங்களும், அவனுடைய நடைகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.


அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.


யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய, ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.


28 அதிகாரம்

ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,


இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான்.


அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தூபங்காட்டி, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரரை அக்கினியிலே தகித்துப்போட்டு,


மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான சகல மரங்களின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான்.


ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்.


எப்படியெனில், யூதா மனுஷர் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா அவர்களில் ஒரேநாளில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அவர்கள் எல்லாரும் மகா வீரராயிருந்தவர்கள்.


அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் குமாரனாகிய மாசேயாவையும், அரமனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாவதான எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்.


இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்கு, கொண்டுபோனார்கள்.


அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு திரளாகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்.


இப்போதும் யூதாவின் புத்திரரையும் எருசலேமியரையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?


ஆதலால் நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, நீங்கள் உங்கள் சகோதரரிடத்தில் சிறைபிடித்துக்கொண்டுவந்தவர்களைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்; கர்த்தருடைய உக்கிரமான கோபம் உங்கள்மேல் இருக்கிறது என்றான்.


அப்பொழுது எப்பிராயீம் புத்திரரின் தலைவரில் சிலபேராகிய யோகனானின் குமாரன் அசரியாவும், மெஷிலெமோத்தின் குமாரன் பெரகியாவும், சல்லூமின் குமாரன் எகிஸ்கியாவும், அத்லாயின் குமாரன் அமாசாவும் யுத்தத்திலிருந்து வந்தவர்களுக்கு விரோதமாக எழும்பி,


அவர்களை நோக்கி: நீங்கள் சிறைபிடித்த இவர்களை இங்கே உள்ளே கொண்டுவரவேண்டாம்; நம்மேல் திரளான குற்றமும், இஸ்ரவேலின்மேல் உக்கிரமான கோபமும் இருக்கையில், நீங்கள் கர்த்தருக்கு முன்பாக நம்மேல் குற்றம் சுமரப்பண்ணத்தக்கதாய், நம்முடைய பாவங்களையும் நம்முடைய குற்றங்களையும் அதிகமாக்க நினைக்கிறீர்கள் என்றார்கள்.


அப்பொழுது ஆயுதபாணிகளானவர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், பிரபுக்களுக்கு முன்பாகவும் சமஸ்த சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்.


அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக்கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.


அக்காலத்திலே ஆகாஸ் என்னும் ராஜா அசீரியாவின் ராஜாக்கள் தனக்கு ஒத்தாசைபண்ண அவர்களிடத்துக்கு ஆட்களை அனுப்பினான்.


ஏதோமியரும் கூடவந்து, யூதாவைமுறிய அடித்து, சிலரைச் சிறைபிடித்துப்போயிருந்தார்கள்.


பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட்டணங்களின்மேல் விழுந்து, பெத்ஷிமேசையும், ஆயலோனையும், கெதெரோத்தையும், சொக்கோவையும் அதின் கிராமங்களையும், திம்னாவையும் அதின் கிராமங்களையும், கிம்சோவையும் அதின் கிராமங்களையும் பிடித்து அங்கே குடியேறினார்கள்.


யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவைச் சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாய் மிகவும் துரோகம்பண்ணினான்.


அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.


ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும் ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக்கொடுத்தும், அவனுக்கு உதவிகிடைக்கவில்லை.


தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.


எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணைசெய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று.


ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைச் சேர்த்து, தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைத் துண்டுதுண்டாக்கி, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில் மூலைக்குமூலை பலிபீடங்களை உண்டுபண்ணி,


அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணி, தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான்.


அவனுடைய மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய ஆதியோடந்தமான சகல நடபடிகளும் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.


ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனைக் கொண்டுவந்து வைக்கவில்லை; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.


29 அதிகாரம்

எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள்.


அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.


அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,


ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,


அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்; நீங்கள் இப்போது உங்களைப்பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்பண்ணி அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.


நம்முடைய பிதாக்கள் துரோகம்பண்ணி, நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவரை விட்டு விலகி, தங்கள் முகங்களைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தை விட்டுத் திருப்பி, அதற்கு முதுகைக் காட்டினார்கள்.


அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்.


ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் காண்கிறபடி, துயரத்துக்கும் திகைப்புக்கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தார்.


இதோ, இதினிமித்தம் நம்முடைய பிதாக்கள் பட்டயத்தினால் விழுந்து, நம்முடைய குமாரரும் நம்முடைய குமாரத்திகளும் நம்முடைய மனைவிகளும் சிறையிருப்பில் அகப்பட்டார்கள்.


இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கைபண்ண மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன்.


என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துகொண்டார் என்றான்.


அப்பொழுது கோகாத் புத்திரரில் அமாசாயின் குமாரன் மாகாத்தும், அசரியாவின் குமாரன் யோவேலும், மெராரியின் புத்திரரில் அப்தியின் குமாரன் கீசும், எகலேலின் குமாரன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் குமாரன் யோவாகும், யோவாகின் குமாரன் ஏதேனும்,


எலிச்சாப்பான் புத்திரரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் புத்திரரில் சகரியாவும், மத்தனியாவும்,


ஏமானின் புத்திரரில் எகியேலும், சிமேயியும், எதுத்தூனின் புத்திரரில் செமாயாவும், ஊசியேலும் என்னும் லேவியர் எழும்பி,


தங்கள் சகோதரரைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்க வந்தார்கள்.


ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்கும்படி உட்புறத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டுவந்தார்கள்; அப்பொழுது லேவியர் அதை எடுத்து, வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோனார்கள்.


முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம்பண்ணத்துவக்கி, எட்டாந்தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்பண்ணி, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்.


அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தரின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதினுடைய சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களின் மேஜையையும், அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரித்து,


ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதகத்தினால் எறிந்துபோட்ட சகல பணிமுட்டுகளையும் முஸ்திப்பாக்கிப் பரிசுத்தம்பண்ணினோம்; இதோ, அவைகள் கர்த்தரின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள்.


அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.


அப்பொழுது ராஜ்யபாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான்.


அப்படியே ஆசாரியர் காளைகளை அடித்து, அந்த இரத்தத்தைப் பிடித்துப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்கடாக்களை அடித்து, அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்குட்டிகளையும் அடித்து, அவைகளின் இரத்தத்தையும் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்.


பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.


இஸ்ரவேல் அனைத்திற்காகவும், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரண பலியையும் செலுத்துங்கள் என்று ராஜா சொல்லியிருந்தான்; ஆதலால் ஆசாரியர் அவைகளை அடித்து, இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவநிவிர்த்தி உண்டாக்க, அவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின்மேல் பிராயச்சித்தஞ்செய்தார்கள்.


அவன், தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படிச் செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டு உண்டாயிருந்தது.


அப்படியே லேவியர் தாவீதின் கீதவாத்தியங்களையும், ஆசாரியர் பூரிகைகளையும் பிடித்து நின்றார்கள்.


அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அவன் அதைச் செலுத்தத் துவக்கின நேரத்தில் கர்த்தரைத் துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத்தொடங்கினது.


கீதத்தைப்பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கையில், சர்வாங்க தகனபலியைச் செலுத்தித் தீருமட்டும் சபையார் எல்லாரும் பணிந்துகொண்டிருந்தார்கள்.


பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.


பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியரை நோக்கி: நீங்கள் தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடே துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.


அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்பண்ணினீர்கள்; ஆகையால் கிட்டவந்து, கர்த்தருடைய ஆலயத்திற்குத் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவாருங்கள் என்றான்; அப்பொழுது சபையார் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும், இஷ்டமுள்ளவர்களெல்லாம் சர்வாங்க தகனபலிகளையும் கொண்டுவந்தார்கள்.


சபையார் கொண்டுவந்த சர்வாங்கதகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்கடாக்களும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனமாயின.


அறுநூறு காளைகளும் மூவாயிரம் ஆடுகளும் பிரதிஷ்டையாக்கப்பட்டது.


ஆனாலும் ஆசாரியர்கள் கொஞ்சம் பேரானதினால் அவர்களால் அந்தச் சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாதிருந்தது; அதினாலே அந்த வேலை தீருமட்டாகவும், மற்ற ஆசாரியர் தங்களைப் பரிசுத்தம்பண்ணுமட்டாகவும், அவர்கள் சகோதரராகிய லேவியர் அவர்களுக்கு உதவிசெய்தார்கள்; தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ள லேவியர் ஆசாரியரைப்பார்க்கிலும் மன உற்சாகமுள்ளவர்களாயிருந்தார்கள்.


சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்க தகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இவ்விதமாய் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம்பண்ணப்பட்டது.


தேவன் ஜனத்தை ஆயத்தப்படுத்தினதைக்குறித்து எசேக்கியாவும் ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்படார்கள்; இந்தக் காரியத்தைச் செய்யும்படியான யோசனை சடுதியாய் உண்டாயிற்று.


30 அதிகாரம்

அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.


பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள்.


ஆசாரியர் போதுமானபேர் தங்களைப் பரிசுத்தம்பண்ணாமலும், ஜனங்கள் எருசலேமில் இன்னும் கூடிவராமலும் இருந்தபடியினால், அதின் காலத்தில் அதை ஆசரிக்கக் கூடாமற்போயிற்று.


இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய்க் காணப்பட்டது.


எழுதியிருக்கிறபடி வெகுகாலமாய் அவர்கள் அதை ஆசரிக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமுக்கு வாருங்கள் என்று பெயெர்செபாமுதல் தாண்மட்டுமுள்ள இஸ்ரவேலுக்கு பறை சாற்றுவித்தார்கள்.


அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும்போய்: இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார்.


தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குத் துரோகம்பண்ணின உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரரைப்போலவும் இராதேயுங்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் பாழாய்ப்போகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.


இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள்; அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களைவிட்டுத் திரும்பும்.


நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.


அப்படி அந்த அஞ்சல்காரர் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன் மட்டுக்கும் ஊரூராகத் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரிகாசம்பண்ணினார்கள்.


ஆகிலும் ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும், சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள்.


யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.


அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஆசரிக்க வெகு ஜனங்கள் எருசலேமில் மகாபெரிய சபையாய்க் கூடினார்கள்.


அவர்கள் எழும்பி, எருசலேமில் உண்டான பலிபீடங்களையும், தூபபீடங்களையும் அகற்றிக் கீதரோன் ஆற்றிலேபோட்டார்கள்.


பின்பு அந்த இரண்டாம் மாதம் பதினாலாந்தேதியில் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்; ஆசாரியரும் லேவியரும் வெட்கி, தங்களைச் சுத்தம்பண்ணி, சர்வாங்க தகனபலிகளைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து,


தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற தங்கள் முறைமையின்படியே தங்கள் ஸ்தானத்திலே நின்றார்கள்; ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித்தெளித்தார்கள்.


சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லா எல்லாரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ண, லேவியர் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்.


அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராதபிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.


எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான்.


கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்.


அப்படியே எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளளவும் மகா ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்; லேவியரும் ஆசாரியரும் தினந்தினம் கர்த்தருக்கென்று பேரோசையாய்த் தொனிக்கும் கீதவாத்தியங்களால் கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.


கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள எல்லா லேவியரோடும் எசேக்கியா பட்சமாய்ப் பேசினான்; இப்படி அவர்கள் பண்டிகையின் ஏழுநாளளவும் புசித்து, ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.


பின்பு வேறே ஏழுநாளளவும் ஆசரிக்கச் சபையார் எல்லாரும் யோசனைபண்ணி, அந்த ஏழுநாளும் ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்.


யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சபைக்கு ஆயிரம் காளைகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்தான்; பிரபுக்களும் சபைக்கு ஆயிரம் காளைகளையும் பதினாயிரம் ஆடுகளையும் கொடுத்தார்கள்; ஆசாரியரில் அநேகம்பேர் தங்களைச் சுத்தம்பண்ணினார்கள்.


யூதாவின் சபையனைத்தும், ஆசாரியரும், லேவியரும், இஸ்ரவேலிலிருந்து வந்தவர்களுடைய சபையனைத்துமாகிய இஸ்ரவேல் தேசத்திலிருந்துவந்த அந்நியரும் யூதாவில் குடியிருந்தவர்களும் மகிழ்ச்சியாயிருந்தார்கள்.


அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள்முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.


லேவியரான ஆசாரியர்கள் எழுந்துநின்று, ஜனத்தை ஆசீர்வதித்தார்கள்; அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.


31 அதிகாரம்

இவையெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல்புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள்.


எசேக்கியா ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை அவர்கள் வரிசைகளின்படியேயும் அவரவரை அவர்கள் ஊழியத்தின்படியேயும் திட்டப்படுத்தி, ஆசாரியரையும் லேவியரையும், சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குப்படுத்தினான்.


ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்கதகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான்.


ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.


இந்த வார்த்தை பிரசித்தமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரத்திலும் முதற்பலன்களை திரளாகக்கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாய்க் கொடுத்தார்கள்.


யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் புத்திரரும், யூதாபுத்திரரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள்.


மூன்றாம் மாதத்தில் குவியல் செய்யத்தொடங்கி ஏழாம் மாதத்தில் முடித்தார்கள்.


எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைக் காணும்போது, கர்த்தருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள்.


அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா ஆசாரியரையும் லேவியரையும் விசாரித்தபோது,


சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.


அப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் பண்டகசாலைகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான்.


அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்.


ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அகசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.


கிழக்கு வாசலைக் காக்கிற இம்னாவின் குமாரனாகிய கோரே என்னும் லேவியன், கர்த்தருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிடும்படிக்கு, தேவனுக்குச் செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தான்.


அவனுடைய கைக்கு உதவியாக ஆசாரியரின் பட்டணங்களில் வகுப்புகளின்படியிருக்கிற தங்கள் சகோதரரிலே பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரிசமானமாய்க் கொடுக்கும்படிக்கு, உண்மையுள்ளவர்களாக எண்ணப்பட்ட ஏதேனும், மின்யமீனும், யெசுவாவும், செமாயாவும், அமரியாவும், செக்கனியாவும் ஏற்படுத்தப்பட்டார்கள்.


வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத் தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் வகுப்புகளின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாய் அநுதின படி கொடுக்கப்பட்டது.


தங்கள் பிதாக்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் வகுப்புகளின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியருக்கும், லேவியருக்கும்,


அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாய் விசாரித்தார்கள்.


ஆசாரியரில் எல்லா ஆண்பிள்ளைகளுக்கும் லேவியருக்குள்ளே அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லாருக்கும் படிகொடுக்க, ஆசாரியருடைய ஒவ்வொரு பட்டணத்துக்கடுத்த வெளிநிலங்களிலும் ஆரோன் புத்திரரில் பேர்பேராகக் குறிக்கப்பட்ட மனுஷர் இருந்தார்கள்.


இந்தப்பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.


அவன் தேவனுடைய ஆலயத்தின்வேலையிலும், தன் தேவனைத் தேடும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்னசெய்யத் தொடங்கினானோ, அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து சித்திபெற்றான்.


32 அதிகாரம்

இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான்.


சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண நோக்கங்கொண்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,


நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.


அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரைக் கண்டுபிடிப்பானேன் என்று சொல்லி, அநேகம் ஜனங்கள் கூடி, எல்லா ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் தூர்த்துப்போட்டார்கள்.


அவன் திடன் கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி, தாவீது நகரத்தின் கோட்டையைப் பலப்படுத்தி, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்பண்ணி,


ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:


நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.


அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.


இதின்பின்பு அசீரியா ராஜாவாகிய சனகெரிப் தன் முழுச் சேனையுடன் லாகீசுக்கு எதிராய் முற்றிக்கைபோட்டிருக்கையில், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடத்துக்கும், எருசலேமிலுள்ள யூதா ஜனங்கள் யாவரிடத்துக்கும் தன் ஊழியக்காரரை அனுப்பி:


அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றிக்கை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருக்கும்படிக்கு, நீங்கள் எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?


நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தினாலும் சாகும்படி உங்களைப் போதிக்கிறான் அல்லவா?


அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களைத் தள்ளிவிட்டவனும், ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப்பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்கும் எருசலேமியருக்கும் சொன்னவனும் அந்த எசேக்கியாதான் அல்லவா?


நானும் என் பிதாக்களும் தேசத்துச்சகல ஜனங்களுக்கும் செய்ததை அறியீர்களோ? அந்த தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் அவர்கள் தேசத்தை நம்முடைய கைக்குத் தப்புவிக்க அவர்களுக்குப் பெலன் இருந்ததோ?


உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கக்கூடும்படிக்கு, என் பிதாக்கள் பாழாக்கின அந்த ஜாதிகளுடைய எல்லா தேவர்களிலும் எவன் தன் ஜனத்தை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்?


இப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும், இப்படி உங்களைப் போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும், எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை, என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக் கூடாதிருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி,


அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.


தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்.


அவர்கள் அலங்கத்தின்மேலிருக்கிற எருசலேமின் ஜனங்களைப் பயப்படுத்தி, கலங்கப்பண்ணி, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூதபாஷையிலே மகா சத்தமாய்க் கூப்பிட்டு,


மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.


இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தைநோக்கி அபயமிட்டார்கள்.


அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன்தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.


இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் அசீரியருடைய ராஜாவாகிய சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.


அநேகம்பேர் கர்த்தருக்கென்று எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு உச்சிதங்களையும் கொண்டுவந்தார்கள்; அவன் இதற்குப்பிற்பாடு சகல ஜாதிகளின் பார்வைக்கும் மேன்மைப்பட்டவனாயிருந்தான்.


அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.


எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபமூண்டது.


எசேக்கியாவின் மனமேட்டிமையினிமித்தம் அவனும் எருசலேமின் குடிகளும் தங்களைத் தாழ்த்தினபடியினால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை.


எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும் பொன்னும் இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும் கேடகங்களும் விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,


தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.


அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டுவித்து ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகாதிரளான ஆஸ்தியைக் கொடுத்தார்.


இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.


ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்.


எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.


எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.


33 அதிகாரம்

மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.


கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.


அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் சேனையையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளைச் சேவித்து,


எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று கர்த்தர் சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி,


கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.


அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.


இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்றும்,


நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்.


அப்படியே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப்பண்ணினான்.


கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்.


ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.


இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக்கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்குமுன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.


அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.


பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்குதொடங்கி மீன்வாசல்மட்டும் கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தலைவரை வைத்து,


கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லா பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப்புறம்பாகப் போடுவித்து,


கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதின்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.


ஆகிலும் ஜனங்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; என்றாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள்.


மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப்பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.


அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்குமுன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.


மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆமோன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.


ஆமோன் ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.


அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய மனாசே பண்ணுவித்திருந்த விக்கிரகங்களுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளைச் சேவித்தான்.


தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான்.


அவன் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் அரமனையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.


அப்பொழுது தேசத்து ஜனங்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணின யாவரையும் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.


34 அதிகாரம்

யோசியா ராஜாவாகிறபோது எட்டுவயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.


அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்.


அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்களாகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்.


அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின் மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி,


பூஜாசாரிகளின் எலும்புகளை அவர்களுடைய பீடங்களின்மேல் சுட்டெரித்து, இவ்விதமாய் யூதாவையும் எருசலேமையும் சுத்திகரித்தான்.


அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டணங்களிலும், நப்தலிமட்டும் பாழான அவைகளின் சுற்றுப்புறங்களிலும் செய்தான்.


அவன் இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள பலிபீடங்களையும் விக்கிரகத்தோப்புகளையும் தகர்த்து, விக்கிரகங்களை நொறுக்கித் தூளாக்கி, எல்லாச் சிலைகளையும் வெட்டிப்போட்டபின்பு, எருசலேமுக்குத் திரும்பினான்.


அவன் தேசத்தையும் ஆலயத்தையும் சுத்திகரித்தபின்பு, அவன் தன் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே, அத்சலியாவின் குமாரனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் குமாரனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு அனுப்பினான்.


அவர்கள் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் வந்து, வாசற்படியைக் காக்கிற லேவியர் மனாசேயிலும் எப்பிராயீமிலும் இஸ்ரவேலில் மீதியானவர்களெல்லாரின் கையிலும் யூதா பென்யமீன் எங்கும் சேர்த்து, எருசலேமுக்குத் திரும்பி தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்த பணத்தை ஒப்புவித்து,


வேலையைச் செய்விக்கும்படி, கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரரானவர்களின் கையில் அதைக் கொடுத்தார்கள்; இவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்துச் சீர்ப்படுத்துகிறதற்கு ஆலயத்தில் வேலைசெய்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள்.


அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பாவுகிறதற்குப் பலகைகளையும் வாங்கத் தச்சருக்கும் சிற்பாசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள்.


இந்த மனுஷர் வேலையை உண்மையாய்ச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும், கோகாதியரின் புத்திரரில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இந்த லேவியர் எல்லாரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள்.


அவர்கள் சுமைகாரரை விசாரிக்கிறவர்களாயும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லாரையும் கண்காணிக்கிறவர்களாயும் இருந்தார்கள்; லேவியரில் இன்னும் சிலர் கணக்கரும் மணியகாரரும் வாசற்காவலாளருமாயிருந்தார்கள்.


கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்கிறபோது மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான்.


அப்பொழுது இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பான் கையில் கொடுத்தான்.


சாப்பான் அந்தப் புஸ்தகத்தை ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய், அவனை நோக்கி: உம்முடைய ஊழியக்காரருக்கு கட்டளையிடப்பட்டவைகளையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.


கர்த்தருடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர் கையிலும், வேலைசெய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்திசொன்னதும் அல்லாமல்,


ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்பதைச் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான்.


நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,


இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனாகிய, அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது:


கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதேபோனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.


அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனாள்; அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்; அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள்.


அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது,


இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.


அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்குமென்று கர்த்தர் உரைக்கிறார்.


கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,


இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளப்பட, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.


அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,


ராஜாவும், சகல யூதா மனுஷரும், எருசலேமின் குடிகளும், ஆசாரியரும், லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.


ராஜா தன் ஸ்தானத்திலே நின்று, அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளின்படியே தான் செய்வதினாலே, கர்த்தரைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழுஇருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணி,


எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு உட்படப்பண்ணினான்; அப்படியே எருசலேமின் குடிகள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய அந்த தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள்.


யோசியா இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கும்படி செய்தான்; அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை.


35 அதிகாரம்

அதற்குப் பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.


அவன் ஆசாரியர்களை அவர்கள் முறைவரிசைகளில் வைத்து, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதனைசெய்யத் திட்டப்படுத்தி,


இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியரை நோக்கி: பரிசுத்தப் பெட்டியைத் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதைச் சுமக்கும் பாரம் உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியஞ்செய்து,


இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது எழுதின கட்டளைக்கும், அவன் குமாரனாகிய சாலொமோன் எழுதின கட்டளைக்கும் ஒத்தபடியே உங்கள் பிதாக்களின் குடும்பத்தாருக்காகக் குறிக்கப்பட்ட வரிசையிலே உங்களை ஆயத்தப்படுத்தி,


ஜனங்களாகிய உங்கள் சகோதரருக்காகப் பரிசுத்த ஸ்தலத்திலே பிதாக்களுடைய வம்சப் பிரிவுகளின்படியேயும், லேவியருடைய வம்சத்தார் வகுக்கப்பட்டபடியேயும் நின்று,


பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து, உங்களைப் பரிசுத்தம்பண்ணி, மோசேயைக்கொண்டு கர்த்தர் சொன்னபடியே உங்கள் சகோதரர் செய்யும்படி, அவர்களுக்கு அவைகளை ஆயத்தப்படுத்துங்கள் என்றான்.


வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும், அவர்கள் இலக்கத்தின்படியே, பஸ்காபலிக்காக முப்பதினாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய ஆஸ்தியிலிருந்து கொடுத்தான்.


அவனுடைய பிரபுக்களும் மனப்பூர்வமான காணிக்கையாக ஜனத்திற்கும் ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்தார்கள்; தேவனுடைய ஆலய விசாரணைக்கர்த்தாவாகிய இல்க்கியாவும் சகரியாவும் யெகியேலும் ஆசாரியர்களுக்குப் பஸ்காபலிக்கென்று இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.


கொனானியா, செமாயேல், நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரரும், அசபியா, ஏயெல், யோசபாத் என்னும் லேவியரின் பிரபுக்களும், லேவியருக்குப் பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.


இப்படி ஆராதனை திட்டம்பண்ணப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர் தங்கள் ஸ்தானத்திலும், லேவியர் தங்கள் வகுப்புகளின் வரிசையிலும் நின்று,


பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்; ஆசாரியர் அவர்கள் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்; லேவியர் தோலுரித்தார்கள்.


மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி ஜனங்கள் கர்த்தருக்குப் பலிசெலுத்தும்படி, அவர்கள் தகனபலி மிருகங்களைப் பிதாக்களுடைய வம்சப்பிரிவுகளின்படியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாய் அவைகளைப் பிரித்துவைத்தார்கள்; காளைகளையும் அப்படியே செய்தார்கள்.


அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, ஜனங்களுக்கெல்லாம் தீவிரமாய்ப் பங்கிட்டுக்கொடுத்தார்கள்.


பின்பு தங்களுக்காகவும் ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்; ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் நிணத்தையும்செலுத்துகிறதில், இரவுமட்டும் வேலையாயிருந்தபடியினால், லேவியர் தங்களுக்காகவும், ஆரோனின் புத்திரராகிய ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்.


தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் புத்திரராகிய பாடகர் தங்கள் ஸ்தானத்திலும், வாசல்காவலாளர் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் ஊழியத்தை விட்டு விலகக் கூடாதிருந்தது; லேவியரான அவர்கள் சகோதரர் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தினார்கள்.


அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை ஆசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளை இடுகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் திட்டமாய்ச் செய்யப்பட்டது.


அங்கே வந்திருந்த இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழுநாளளவும் ஆசரித்தார்கள்.


தீர்க்கதரிசியாகிய சாமுவேலின்நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை.


யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.


யோசியா தேவாலயத்திற்கு அடுத்ததைத் திட்டப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும்பின்பு, எகிப்தின்ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டத்தின்மேல் யுத்தம்பண்ண வந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப் புறப்பட்டான்.


அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்கவேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.


ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன அவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும் அவனோடே யுத்தம்பண்ண வேஷம்மாறி, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம்பண்ணுகிறதற்கு வந்தான்.


வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான்.


அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அந்த இரதத்தின் மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.


எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.


யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கொத்த அவன் செய்த நன்மைகளும்,


அவனுடைய ஆதியோடந்த நடபடிகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின்புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.


6 அதிகாரம்

அப்பொழுது ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.


யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்றுமாதம் எருசலேமில் அரசாண்டான்.


அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான தண்டத்தைச் சுமத்தி,


அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.


யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.


அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான்.


கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளிலும் சிலவற்றை நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவர்களைப் பாபிலோனிலுள்ள, தன்னுடைய கோவிலிலே வைத்தான்.


யோயாக்கீமுடைய மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்ததும், அவனிடத்திலே கண்டுபிடிக்கப்பட்டதுமான அவனுடைய அருவருப்புகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோயாக்கீன் ராஜாவானான்.


யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.


மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நெபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்குக் கொண்டுவரப்பண்ணி, அவன் சிறியதகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.


சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு,


தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை.


தேவன்மேல் தன்னை ஆணையிடுவித்துக்கொண்ட நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.


ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும் ஜனங்களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தை தீட்டுப்படுத்தினார்கள்.


அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பினார்.


ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.


ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.


அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான பணிமுட்டுகளனைத்தையும், கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களுக்கும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.


அவர்கள் அவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்.


பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள்.


கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.


எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின்முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.


அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன்போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று, தன் ராஜ்யம் எங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணினான்.


புத்தகம் 15 - எஸ்ரா

அதிகாரம் 1.

எரேமியா வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி பாரசீக மன்னர் சைரசின் முதல் ஆண்டில் பண்டினார். எனவே சைரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதைத் தம் நாடெங்கும் எழுத்துமூலம் வெளியிட்டார்.

பாரசீக மன்னர் சைரசு கூறுவது: விண்ணகக் கடவுளான ஆண்டவர் மண்ணகத்திலுள்ள எல்லா அரசுகளையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார். மெலும் யூதாவிலுள்ள எருசலேமில் தமக்கென ஒரு வோவிலைக் கட்டும்படி அவர் என்னை நியமித்துள்ளார்.

அவருடைய எல்லா மக்களிலும் யார் யார் அவரைச் சார்ந்துள்ளனரோ-கடவுள் அவர்களோடு இருப்பாராக!-அவர்கள், யூதாவிலுள்ள எருசலேமுக்குச் சென்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக! எருசலேமில் இருக்கும் அவரே கடவுள்!

எஞ்சியுள்ளவன் ஒவ்வொருவனும் எங்குத் தங்கியிருந்தாலும் அங்கு வாழும் மக்கள், எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலுக்குத் தன்னார்வக் காணிக்கை அனுப்புவதோடு, அவனுக்கும் வெள்ளி, பொன், மற்றப்பொருள்கள், கால்நடைகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவுவார்களாக!

அப்போது யூதா, பென்யமினுடைய குலத்தவர்களும், குருக்களும் லேவியரும், எருசலேமில் ஆண்டவரின் கோவிலைக் கட்டச் செல்லுமாறு ஆண்டவரால் பண்டப்பெற்ற அனைவரும் புறப்பட்டா¡கள்.

அவர்களைச் சூழந்து வாழ்ந்த மக்கள் தன்னார்வக் காணிக்கை அனைத்தும் கொடுத்ததுமல்லாமல் அவர்களுக்கு வெள்ளிப் பாத்திரங்களையும், பொன்னையும் மற்றப் பொருள்களையும், கால்நடைகளையும், விலையுயர்ந்த பொருள்களையும் கொடுத்து உதவினார்கள்.

நேபுகத்னேசர் எருசலேமில் இருந்த ஆண்டவரின் கோவிலுக்கு உரிமையான பாத்திரங்களை எடுத்து வந்து தன் தெய்வங்களின் கோவிலில் வைத்திருந்தான். அவற்றைச் சைரசு மன்னர் திரும்பிக் கொடுத்தார்.

பாரசீக மன்னரான சைரசின் பொருளாளரான மித்ரதாத்தின் கையில் அவற்றை ஒப்படைத்தார். அவர் அவற்றை யூதாவின் தலைவரான சேஸ்பட்சரிடம் எண்ணிக் கொடுத்தார்.

அவற்றின் எண்ணிக்கை பின் வருமாறு: பொற்பாத்திரங்கள் முப்பது, வெள்ளிப் பாத்திரங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது.

பொற் கிண்ணங்கள் முப்பது, வேறு வகையான வெள்ளிக் கிண்ணங்கள் நாடீற்றுப் பத்து, மற்றப் பாத்திரங்கள் ஆயிரம்.

பொன், வெள்ளியாலான பாத்திரங்கள் அனைத்தும் ஜயாயிரத்து நாடீறு. அவற்றையெல்லாம் சேஸ்பட்சரும், பாபிலோன் அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்களும் கொண்டு வந்தார்கள்.

அதிகாரம் 2.

அடிமைத்தனத்திலிருந்தும் நாடு கடத்தப்பட்ட இடத்தனின்றும் திரும்பி வந்த அம் மாநில மக்கள் இவர்களே. அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், பாபிலோனுக்கு அடிமைகளாக இட்டுச் சென்றிருந்தான். இவர்களே எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தம் நகர்களுக்கும் திரும்பிச் சென்றவர்கள்.

செருபாபேலோடு வந்தவர்கள்: ஏசுவா, நெகேமியா, செராயா, இரகேலயா, மொர்தக்காய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், இரகூம், பானா. இஸ்ரயேல் மக்களுள் ஆண்களின் எண்ணிக்கை:

பரோசின் மக்கள் இரண்டாயிரத்து மற்று எழுப்பத்திரண்டு பேர்.

செபத்தியாவின் மக்கள் முன்டீற்று எழுபத்திரண்டு பேர்.

ஆரகின் மக்கள் எழுமற்று எழுபத்தைந்து பேர்.

ஏசுவா, யோவாபு இவர்களின் வழிவந்த பகத்து, மோவாபு மக்கள் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டு பேர்.

ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருமற்று ஜம்பத்து நான்கு பேர்.

சத்பவின் மக்கள் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து பேர்.

சக்காயின் மக்கள் எழுமற்று அறுபது பேர்.

பானியின் மக்கள் அறுமற்று நாற்பத்திரண்டு பேர்.

பேபாயின் மக்கள் அறுமற்று இருபத்து மூன்று பேர்.

அசகாதின் மக்கள் ஆயிரத்து இருமற்று இருபத்திரண்டு பேர்.

அதோனிக்காமின் மக்கள் அறுமற்று அறுபத்தாறு பேர்.

பிக்வாயின் மக்கள் இரண்டாயிரத்து ஜம்பத்தாறு பேர்.

அதீனின் மக்கள் நாடீற்று ஜம்பத்து நான்கு பேர்.

எசேக்கியாவின் வழிவந்த ஆற்றேரின் மக்கள் தொண்ணூற்றெட்டுப் பேர்.

பேசாயின் மக்கள் முந்மற்று இருபத்து மூன்று பேர்.

யோராவின் மக்கள் மற்றுப் பன்னிரண்டு பேர்.

ஆசுமின் மக்கள் இருமற்று இருபத்து மூன்று பேர்.

கிப்பாரின் மக்கள் தொண்ணூற்றைந்து பேர்.

பெத்லகேமின் மக்கள் மற்று இருபத்து மூன்று பேர்.

நெற்றோபாவின் ஆண்கள் ஜம்பத்தாறு பேர்.

அனாதோதின் ஆண்கள் மற்று இருபத்தெட்டுப் பேர்.

அஸ்மாவேத்தின் மக்கள் நாற்பத்திரண்டு பேர்.

கிரியத்து ஆரிம், கெபீரா, பெயரோத்து மக்கள் எழுமற்று நாற்பத்து மூன்று பேர்.

இராமா, கேபா மக்கள் அறுமற்று இருபத்தொருபேர்.

மிக்மாசின் ஆண்கள் மற்றுஇருபத்திரண்டு பேர்.

பெத்தேலிலும், ஆயிலும் உள்ள ஆண்கள் இருமற்று இருபத்து மூன்று பேர்.

நெபோவின் மக்கள் ஜம்பத்திரண்டு பேர்.

மக்பீசின் மக்கள் மற்றைம்பத்தாறு பேர்.

மற்றொரு ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருமற்று ஜம்பத்து நான்கு பேர்.

ஆரிமின் மக்கள் முந்மற்றிருபது பேர்.

லோது, ஆதிது, ஒனோ ஆகியோரின் மக்கள் எழுமற்றிருபத்தைந்து பேர்.

எரிகோவின் மக்கள் முந்மற்று நாற்பதைந்து பேர்.

செனா மக்கள் மூவாயிரத்து அறுமற்று முப்பது பேர்.

குருக்கள்: யோசுவாவின் வீட்டாரான எதாயாவின் மக்கள் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்.

இம்மேரின் மக்கள் ஆயிரத்து ஜம்பத்திரண்டு பேர்.

பஸ் கூரின் மக்கள் ஆயிரத்து இருமற்று நாற்பத்தேழு பேர்.

ஆரிமின் மக்கள் ஆயிரத்துப் பதினேழு பேர்.

லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யேசுவா கத்மியேலின் மக்கள் எழுபத்து நான்கு பேர்.

பாடகர்கள்: ஆசாபு மக்கள் மற்று இருபத்தெட்டுப் பேர்.

வாயிற்காவலரின் வழிவந்த சல்லு¡ம், ஆற்றேர், தல்மோன், அக்கூபு, அத்தித்தா, சோபாய் ஆகியவரின் மக்களனைவரும் மற்று முப்பத்தொன்பது பேர்.

கோவில் ஊழியர்கள்: சிகாபின் மக்கள், அசுபாவின் மக்கள், தபாயோத்தின் மக்கள்.

கேரோசின் மக்கள், சீயகாவின் மக்கள், பாதோனின் மக்கள்,

இலபனாவின் மக்கள், அகாபாவின் மக்கள், அக்கூபின் மக்கள்,

காகாபின் மக்கள், சம்லாயின் மக்கள், கானானின் மக்கள்,

கிதேலின் மக்கள், ககாரின் மக்கள், இரயாயாவின் மக்கள்,

இரத்சீனின் மக்கள், நெக்கோதாவின் மக்கள், கசாம் மக்கள்,

ஊசாவின் மக்கள், பர்சயாகின் மக்கள், பேசாயின் மக்கள்,

அஸ்னாவின் மக்கள், மெய்யோனிம் மக்கள், நெபிசிம் மக்கள்,

பக்பூக்கின் மக்கள், அகுப்பாவின் மக்கள், அர்கூரின் மக்கள்,

பட்கலு¡த்தின் மக்கள், மெகிதாவின் மக்கள், அர்சாவின் மக்கள்,

பர்கோசின் மக்கள், சீசராவின் மக்கள், தேமாவின் மக்கள்,

நெட்சியாகின் மக்கள், அத்திபாவின் மக்களுமே!

சாலமோன் ஊழியரின் மக்கள்:

சோற்றாயின் மக்கள், அசோபரேத்தின் மக்கள், பெருதாவின் மக்கள், யாலாவின் மக்கள், தர்கோனின் மக்கள், கிதேலின் மக்கள்,

செபற்றியாவின் மக்கள், அற்றலின் மக்கள், சபாயிம் வழிவந்த போக்கரேத்தின் மக்கள், ஆமியின் மக்கள்.

கோவில் ஊழியர்களும் சாலமோன் ஊழியரின் மக்களுமாக மொத்தம் முந்மற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.

மற்றும், தெல்மெலகு, தெல்லர்சா, கெருபு, அதான், இம்மேர் என்ற ஊர்களிலிருந்து புறப்பட்டு வந்தவர்களும், தங்கள் மூதாதையரின் குடும்பத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்களா என்பதையும் நிருபிக்க அறியாதவர்கள் இவர்களே:

தெலாயாவின் மக்களும், தோபியாவின் மக்களும், நெக்கோதாவின் மக்களும் சேர்ந்து அறுமற்று ஜம்பத்திரண்டு பேர்.

மற்றும், குருக்களின் புதல்வர்கள்: அபய்யாவின் மக்கள், அக்கோசின் மக்கள், கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மனைவியாகக் கொண்டதால் அவர்தம் பெயரைத் தாங்கிய பர்சில்லாயின் மக்கள்.

இவர்கள் தங்கள் பெயர்ப் பதிவைத் தலைமுறை அட்டவணையில் தேடியும் காணாததால் தீட்டுப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டு குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

அவர்கள் பய்மையிலும் பய்மையான பொருள்களை ஊரிம், தும்மிமைக் காட்டுவதற்கு ஒரு குரு வரும்வரை உண்ணக்கூடாது என்று ஆளுநர் அவர்களிடம் கூறினார்.

மக்கள் சபையின் மொத்த எண்ணிக்கை நாற்பத்து இரண்டாயிரத்து முந்மற்று அறுபது.

அவர்களைத் தவிர அவர்களின் ஆண், பெண், ஊழியர்களின் எண்ணிக்கை, ஏழாயிரத்து முந்மற்று முப்பத்தேழு. மேலும் அவர்களுடன் இருமறு பாடகர்களும், பாடகிகளும் இருந்தனர்.

அவர்களின் குதிரைகள் எழுமற்று முப்பத்தாறு: கோவேறு கழுதைகள் இருமற்று நாற்பத்தைந்து.

ஒட்டகங்கள் நாடீற்று முப்பத்தைந்து: கழுதைகள் ஆறாயிரத்து எழுமற்று இருபது.

குலத் தலைவர்களில் சிலர் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்திற்கு வந்து, கடவுளின் கோவிலை அதே இடத்தில் கட்டி எழுப்பத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக் கொடுத்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் தம் வசதிக்கேற்ப, ஜமறு கிலோகிராம் பொன்னும், மூவாயிரத்து நாடீற்று இருபத்தைந்து கிலோகிராம் வெள்ளியும், மறு குருத்துவ ஆடைகளும் கொடுத்தார்கள்.

குருக்கள், லேவியர், வேறு சிலர், பாடகர், வாயிற்காப்பாளர், கோவில் ஊழியர் ஆகியோர் தம் நகர்களிலும், எல்லா இஸ்ரயேலருள் ஏனையோரும் தம் நகர்களிலும் குடியேறியிருந்தார்கள்.

அதிகாரம் 3.

தம் நகரில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் ஏழாம் மாதம் வந்த போது எருசலேமில் ஒருசேரக் கூடினர்.

அப்பொழுது யோசதாக்கின் மகன் ஏசுவாவும் அவருடைய சகோதர குருக்களும், செயல்தியேல் மகனான செருபாபேலும், அவருடைய சகோதரர்களும், கடவுளின் மனிதரான மோசே திருச்சட்டமலில் எழுதியுள்ளபடி எரிபலிகள் ஒப்புக்கொடுக்க இஸ்ரயேலின் கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டியெழுப்பினர்.

வேற்று நாட்டு மக்களால் அச்சம் தோன்றினும் பலிபீடத்தை அதற்குரிய இடத்திலே அமைத்தார்கள். காலையிலும், மாலையிலும் ஆண்டவருக்கு எரிபலிகள் ஒப்புக்கொடுத்தனர்.

திருச்சட்ட மலில் உள்ளபடி கூடாரத்திருவிழாவைக் கொண்டாடினர். ஒவ்வொரு நாளும் முறைமைப்படி அந்நாளக்குரிய எரிபலிகளைச் செலுத்தினர்.

அதன்பிறகு ஒவ்வொரு அமாவாசையின்போதும், ஆண்டவரின் எல்லாத் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்தினர். ஆண்டவருக்குத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக்கொடுக்க விரும்பியவர்கள் ஒப்புக்கொடுத்தார்கள்.

ஏழாவது மாதத்தில் முதல் நாளிலிருந்து ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தத் தொடங்கினா¡கள். ஆனால், ஆண்டவருடைய கோவிலுக்கு இன்னும் அடிக்கல் நாட்டப்படவில்லை.

பாரசீக மன்னர் சைரசு அவர்களுக்குக் கொடுத்திருந்த அனுமதியின்படி, கொத்தர்களுக்கும் தச்சர்களுக்கும் பணம் கொடுத்தார்கள். கேதுரு மரங்களை லெபனோனிலிருந்து யோப்பா கடலுக்குக் கொண்டுவரச் சீதோன், தீர் நகரத்தினருக்கு உணவு, பணம், எண்ணெய் ஆகியன கொடுத்தார்கள்.

அவர்கள் எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் தளத்திற்கு வந்தடைந்த இரண்டாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில், செயல்தியேலின் மகன் செருபாபேல், யோசதாக்கின் மகன் ஏசுவா, அவருடைய சகோதர குருக்கள், லேவியர்கள், மற்றும் அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்கள் அனைவரும் கோவில் வேலையைத் தொடங்கினர். ஆண்டவரின் இல்ல வேலையைக் கண்காணிக்க இருபதும், அதற்கு மேற்பட்ட வயதுமுடைய லேவியர்களை நியமித்தனர்.

ஏசுவா, அவருடைய புதல்வர், உறவினர், கத்மியேல், அவருடைய புதல்வர், யூதாவின் பதல்வர், லேவியரான ஏனிதாதின் புதல்வர், அவர்களுடைய புதல்வர், உறவினர் ஆகியோர் கோவில் வேலையைக் கண்காணிக்க ஒருசேர நின்றனர்.

கட்டுபவர்கள் ஆண்டவரின் கோவிலுக்கு அடித்தளம் இட்டபோது இஸ்ரயேலின் அரசர் தாவீது உரைத்தபடி குருக்கள் தங்களுக்குரிய ஆடை அணிந்துகொண்டு, எக்காளத்தோடும், ஆசாபின் புதல்வரான லேவியர் கைத்தாளங்களோடும் ஆண்டவரைப் புகழ்ந்தனர்.

அவர்கள் ஆண்டவரைப் புகழ்ந்து நன்றி கூறி, அவர் நல்லவர், ஏனெனில் அவர் இரக்கம் இஸ்ரயேல்மீது என்றென்றும் உள்ளது என்று பாடினர். ஆண்டவரின் இல்லம் அடித்தளம் இடப்பட்டதைக் குறித்து எல்லா மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்து மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர்.

முதல் கோவிலைக் கண்டிருந்த குருக்கள், லேவியர், குலத்தலைவர்கள், மூப்பர்கள் பலர் இந்தப் புதிய கோவிலின் அடித்தளத்தைக் கண்டபோது, உரத்த குரலில் அழுதனர். வேறு பலர் மகிழ்ச்சியாலும் ஆர்ப்பரிப்பாலும் குரல் எழுப்பினர்.

நெடுந்தொலைவு கேட்குமளவுக்கும் மக்கள் பெருங்கூக்குரல் எழுப்பியதால், மகிழ்ச்சிக் குரலொலியை அவர்களின் அழுகைக் குரலிலிருந்து பிரித்துணர எவராலும் இயலவில்லை.

அதிகாரம் 4

அடிமைத்தனத்திலிருந்து திரும்பியிருந்த மக்கள் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவருக்குக் கோவில் கட்டுவதை யூதா, பென்யமின் குலங்களின் பகைவர் அறிந்தனர்.

அவர்கள் செருபாபேலையும் குலத்தலைவர்களையும் அணுகி, நாங்களும் உங்களோடு சேர்ந்து கட்டுகின்றோம். ஏனெனில் உங்கள் கடவுளையே நாங்களும் உங்களைப்போல் வழிபடுகின்றோம். அசீரிய மன்னன் ஏசர்கத்தோன் எங்களை இங்கு கொண்டுவந்த நாளிலிருந்து அவருக்கே பலி செலுத்தி வருகின்றோம் .

ஆனால், செருபாபேலும் ஏசுவாவும் இஸ்ரயேலின் எஞ்சிய குலத்தலைவர்களும் அவர்களிடம், நீங்களும் நாங்களும் சேர்ந்து எங்கள் கடவுளுக்கு கோவில் கட்ட வேண்டியதில்லை. மாறாகப் பாரசீக மன்னரான சைரசு எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்கள் மட்டுமே, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோவில் கட்டுவோம் என்றனர்.

ஆதலால், அந்நாட்டு மக்கள், யூதாவின் மக்களது கோவில் கட்டும் பணியைத் தடுத்தனர்: அவர்களை அச்சுறுத்தவும் செய்தனர்.

பாரசீக மன்னரான சைரசு ஆட்சிக்காலம் தொடங்கிப் பாரசீக மன்னரான தாரியு ஆட்சிக்காலம்வரை அரசு அலுவலர்களுக்குக் கையூட்டுக் கொடுத்து, அவர்களின் திட்டங்களைச் சீர்குலைக்கத் பண்டினர்.

அகஸ்வேர் ஆட்சியின்போது, அவரது ஆட்சியின் தொடக்கத்திலேயே யூதாவிலும் எருசலேமிலும் குடியிருந்தவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு ஒன்று எழுதினர்.

அர்த்தக்சஸ்தாவின் காலத்தில் பிஸ்லாம், மித்ரதாத்து, தாபேல், அவர்களைச் சா¡ந்த மற்றவர்களும், பாரசீக மன்னனான அர்த்தக்சஸ்தாவிற்கு ஒரு மடல் எழுதினர். அம்மடல் அரமேயத்தில் எழுதப்பட்டிருந்தால், மொழிபெயர்க்கப்பட வேண்டியிருந்தது.

ஆறுநர் இரகூமும் எழுத்தாளரான சிம்சாயும் எருசலேமுக்கு எதிராக அர்த்தக்சஸ்தா மன்னருக்குக் கீழ்க் கண்டவாறு ஒரு மடல் எழுதினர்:

ஆளுநர் இரகூம், எழுத்தர் சிம்சாய், அவர்களைச் சார்ந்து நீதிபதிகள், பதர், ஆலாசகர், அதிகாரிகள் மேலும் எரோக்கியர், பாபிலோனியர், எலாமித்தியரான சூசா நகரின் மக்கள்,

மாட்சியும், மேன்மையும் பொருந்திய ஒஸ்னப்பர் அடிமைதனத்திற்கு இட்டுச் சென்ற மக்களைச் சமாரியா நதியின் அக்கரைப் பகுதியின் ஊர்களிலும் குடியேற்றிய பிற மக்கள் ஆகியோர் எழுதும் மடல்:

மன்னர் அர்த்தக்சஸ்தாவுக்கு அனுப்பிய கடிதத்தின் உட்பொருள் இதுவே: நதியின் அக்கரையில் வாழும் உம் பணியாளராகிய மக்கள் அறிவிப்பது:

உம்மிடமிருந்து எங்களிடம் வந்த யூதர்கள் எருசலேமுக்கச் சென்று கலகம் மிகுந்த, தீங்கு நிறைந்த அந்நகரைக் கட்டுகின்றார்கள்: மதில் சுவர்களைக் கட்டி முடிக்கின்றார்கள், அடித்தளங்களைப் பழுதுபார்க்கின்றார்கள்.

மேலும் மன்னர் அறிய வேண்டியது: அந்நகர் கட்டப்படுமானால், அதன் மதில்கள் கட்டி முடிக்கப்படுமானால், அவர்கள் வரியும், தீர்வையும் தரவோ, கட்டாய வேலை செய்யவோ மாட்டார்கள். எனவே மன்னருக்குரிய வருமானம் குறையும்.

நாங்களோ அரண்மனை உப்பைத் தின்பதாலும், மன்னரின் இழிவைப் பார்ப்பது முறையற்றது என்பதாலும், நாங்கள் மன்னருக்கு இதை அனுப்பித் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எனவே, உம்முடைய முன்னோரின் வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் அதில் அந்நகர் கலகம் மிகுந்த அரசர்களுக்கும், மாநிலங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதைக் கண்டுணர்வீர். அதில் தொன்றுதொட்டுக் கலகங்கள் எழுந்துள்ளன. அதன் பொருட்டே அந்நகர் அழிக்கப்பட்டது.

ஆகையால் அந்நகர் கட்டப்படுமானால், அதன் மதிற் சுவர்கள் கட்டுதல் நிறைவேறுமானால் பேராற்றுக்கு அக்கரைப் பகுதி உமக்குச் சொந்தமாகாது என்பதை மன்னருக்குத் தெரிவிக்கின்றோம்.

ஆட்சியாளரான இரகூம், எழுத்தாளரான சிம்சாய், அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் சமாரியாவில் வாழ்ந்தவர்களுக்கும், நதிக்கு அக்கரையில் வாழும் மற்றவர்களுக்கும் சமாதானம் கூறி மன்னர் அனுப்பிய செய்தி பின்வருமாறு:

நீங்கள் எங்களுக்கு அனுப்பிய மடல் என்முன் தெளிவாக் வாசிக்கப்பட்டது.

எனவே என்னிடமிருந்து ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டு தொன்றுதொட்டு அந்நகர் மன்னருக்கு எதிராக எழுந்தது என்றும், குழப்பமும் கிளர்ச்சியும் அதில் இருந்து வந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் எருசலேமில் ஆற்றல்மிக்க அரசர்கள் இருந்திருக்கின்றனர்: அவர்கள் பேராற்றுக்கு அக்கரைப் பகுதிகளையெல்லாம் ஆட்சி செய்துள்ளனர்: வரி மற்றும் ஆயம் வசூலித்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே நான்ன மறுஆணை பிறப்பிக்கும் வரை அந்நகரைக் கட்டியெழுப்பாமல் இந்த ஆள்கள் வேலையை நிறத்துமாறு கட்டளை கொடுங்கள்.

இதைச் செய்வதில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். மன்னருக்குத் தீங்கு வரும் அளவிற்குத் தீமை ஏன் பெருகவேண்டும்?

மன்னர் அர்த்தக்சஸ்தாவின் மடலின் நகல் இரகூம், எழுத்தாளரான சிம்சாய், அவர்களைச் சார்ந்தவர்கள் ஆகியோர்முன் வாசிக்கப்பட்டது. உடனே அவர்கள் எருசலேமில் வாழ்ந்த யூதர்களிடம் சென்று ஆற்றலையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வேலையை நிறத்தும்படி செய்தனர்.

எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் வேலை தடைப்பட்டு, பாரசீக மன்னர் தாரியு ஆட்சியின் இரண்டாம் ஆண்டுவரை நிறுத்தப்பட்டிருந்தது.

அதிகாரம் 5

அப்பொழுது, இறைவாக்கினர் ஆகாயும், இத்தோ மகன் செக்கரியாவும்- யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்த யூதருக்கு இஸ்ரயேலின் கடவுள் பெயரால் இறைவாக்கு உரைத்தனர்.

அப்போது செயல்தியேல் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் ஏசுவாவும் முன்வந்து, எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கினர். கடவுளின் இறைவாக்கினர் அவர்களோடு இருந்து உதவி செய்தனர்.

அக்காலத்தில், பேராற்றின் அக்கரைப்பகுதிக்கு ஆளுநராக இருந்த தத்னாயும், செத்தர்போசனாயும் அவர்களைச் சார்ந்தவர்களும், அவர்களிடம் வந்து, இக்கோவிலைக் கட்டியெழுப்பவும் இம்மதில்களைக் கட்டி முடிக்கவும் உங்களுக்கு உத்தரசு கொடுத்தது யார்? என்று வினவினர்.

மேலும் அவர்கள், இக்கட்டடத்தைக் கட்டுவோர் யார், யார்? என்று வினவினர்.

கடவுளின் கருணைக் கண் யூத மூப்பர்கள் மேல் இருந்தால் இச்செய்தி தாரியுவைச் சென்றடையும்வரை அவர்களால் தடுத்து நிறத்த இயலவில்லை. எனவே அவர்கள் தாரியுவுக்கு இதைப்பற்றி ஒரு மடல் அனுப்பினார்கள்.

பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநனாக இருந்த தத்னாயும் செத்தர்போசனாயும் அவனைச் சார்ந்தவர்களும் பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு அதிகாரியானவர்களும் மடலின் நகல் ஒன்றை மன்னர் தாரியுவுக்கு அனுப்பினர்.

அவருக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது பின்வருமாறு: மன்னர் தாரியுவுக்கு எல்லா நலமும் உரித்தாகுக!

மன்னர் அறியவேண்டியது: யூதா மாநிலத்திலுள்ள மாபெரும் கடவுளின் கோவிலுக்குச் சென்றிருந்தோம்: பெரும் கற்களால் அது கட்டப்பட்டு வருகிறது. சுவரில் மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வேலை நுணுக்கமாகவும் விரைவாகவும் செய்யப்பட்டு வருகின்றது.

எனவே அம் மூப்பர்களை நோக்கி, “இக்கோவிலைக் கட்டவும், இச்சுவர்களைக் கட்டி முடிக்கவும் உத்தரவு கொடுத்தது யார்?“ என்றோம்.

அவர்கள் தலைவர்கள் யார், யார் எனபதை உமக்கு எழுதி அறிவிக்க அவர்களின் பெயர்களைக் கேட்டோம்.

அவர்கள் எங்களுக்குச் சொன்ன மறுமொழியாவது: “விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளானவரின் ஊழியர்கள் நாங்கள். பல ஆண்டுகளுக்குமுன் இஸ்ரயேலின் பேரரசர் ஒருவர் கட்டிய கோவிலைத் தான் மீண்டும் கட்டியெழுப்புகிறோம்.

எம் முன்னோர் விண்ணகக் கடவுளுக்குச் சினமூட்டியதால், அவர் பாபிலோனின் மன்னனும் கல்தேயனுமான நெபுகத்னேசரின் கையில் அவர்களையும், இக்கோவிலையும் ஒப்புவித்தார். அவன் இக்கோவிலை அழித்தான். மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்தினான்.

ஆனால் பாபிலோன் மன்னர் சைரசு தம் முதலாம் ஆட்சி ஆண்டில் கடவுளின் இக்கோவிலைக் கட்ட ஆணையிட்டார்.

மேலும் நெபுகத்னேசர் எருசலேமிலுள்ள கோவிலிருந்து பாபிலோன் கோவிலுக்குக் கொண்டு வந்த திருக்கோவில் பொன், வெள்ளிப் பாத்திரங்களை மன்னர் சைரசு பாபிலோன் கோவிலிருந்து எடுத்தார். ஆளுநராகத் தாம் நியமித்த சேஸ்பட்சர் என்பவரிடம் ஒப்படைத்தார்.

மன்னர் அவரிடம் இப்பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் எருசலேம் கோவிலில் வை. கடவுளின் கோவில் அது இருந்த இடத்திலேயே கட்டப்படட்டும் என்றார்.

எனவே சேஸ்பட்சர் திரும்பி வந்து எருசலேமில் கடவுளின் கோவிலுக்கு அடித்தளம் இட்டார். அதனால் அன்று முதல் இன்று வரை இது கட்டப்பட்டு வருகின்றது. ஆனால் அது முடிவு பெறவில்லை.

ஆகவே, இப்பொழுது மன்னர் விரும்பினால், பாபிலோனில் உள்ள தமது கருவூலத்தில் தேடிப்பார்க்கட்டும். எருசலேமில் கடவுளுக்குக் கோவில் கட்டச் சைரசு மன்னர் கட்டளை கொடுத்திருக்கின்றாரா என்பதை அறியட்டும். இதைக் குறித்து மன்னர் தம் விருப்பத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டுகின்றோம்“.

அதிகாரம் 6

பின்பு மன்னர் தாரியு கட்டளையிடவே, பாபிலோனிலுள்ள கருவூலத்தைக் கொண்ட ஏட்டுச் சுருள்கள் வைக்கப்படும் அறையைச் சோதனையிட்டார்கள்.

மேதிய மாநிலத்தில் இருந்த எக்பத்தான அரண்மனையில் ஏட்டுச் சுருள் ஒன்று அகப்பட்டது. அது ஒரு பத்திரம். அதில் எழுதியிருந்ததாவது:

“சைரசு மன்னர் அரியணை ஏறிய முதலாம் ஆண்டு, சைரசு மன்னர், எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலைப் பற்றி ஆணையொன்று பிறப்பித்தார். எங்கே பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டனவோ அங்கேயே கோவில் கட்டப்படட்டும். அடித்தளம் உறுதியாக்கப்படட்டும். அதன் உயரம் அறுபது முழம், அதன் அகலம் அறுபது முழம் இருக்கட்டும்.

மூன்று வரிசை பெரிய கற்களாலும், மூன்று வரிசை புது மரங்களாலும் அமையட்டும். அதற்குத் தேவையான செலவை அரசு கருவூலத்திலிருந்து கொடுக்கட்டும்.

நெபுகத்னேசர் எருசலேம் கோவிலிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுவந்த கோவிலுக்குரிய பொன், வெள்ளிப் பாத்திரங்கள் எருசலேம் கோவிலுக்குத் திரும்பிக் கொடுக்கப்படட்டும். அவை கடவுளின் கோவிலில் முன்பு இருந்த இடத்திலேயே வைக்கப்படட்டும்.“

எனவே, பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநராக இருக்கும் தத்னாய்! செத்தர்போசனாய்! நீங்களும் பேராற்றின் அக்கரைப் பகுதியிலுள்ள உங்களைச் சார்ந்த அதிகாரிகளும், அவ்விடத்தைவிட்டு விலகுங்கள்!

கடவுளின் கோவிலைக் கட்டும் பனியைத் தடைசெய்யாதிருங்கள். யூதர்களின் ஆளுநரும், யூதர்களின் மூப்பர்களும் கடவுளின் கோவிலை, அது முன்பு இருந்த இடத்தில், மீண்டும் எழுப்பட்டும்.

யூதர்களின் மூப்பர் கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி ஆணை பிறப்பிக்கின்றேன். அவர்கள் வேலை தடைப்படாதபடி, அதற்கான முழுச் செலவைப் பேராற்றின் அக்கரைப் பகுதியிலிருந்து வரும் வரியாகிய அரச வருவாயினின்று கொடுக்கவேண்டும்.

மேலும் விண்ணகக் கடவுளுக்கு எரிபலி ஒப்புக் கொடுக்கத் தேவையான இளங்காளைகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ஆகியவையும் எருசலேமின் குருக்கள் தேவையொன்று கேட்கும் கோதுமை, உப்பு, திராட்சை இரசம், எண்ணெய் முதலியவையும் நாள்தோறும் தவறாது கொடுக்கப்படட்டும்.

இதனால் குருக்கள் விண்ணகக் கடவுளுக்கு நறுமணப் பலி செலுத்தி, மன்னரும் அவர் தம் மைந்தரும் நீடூழி வாழு வேண்டுமென மன்றாடுவார்களாக!

எவராவது இக்கட்டளையை மாற்றினால், அவருடைய வீட்டிலுள்ள உத்திரத்தைப் பிடுங்கி அவரை அதில் கழுவேற்றித் தொங்கிவிட வேண்டும். இதனால் அவருடைய வீடு குப்பை மேடாகக்கடவது. இது எனது ஆணை.

எந்த மன்னராவது, மக்களாவது இவ்வாணையை மாற்றவோ எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலை அழிக்கவோ முற்பட்டால், தமது பெயரை அங்கு விளங்கும்படி நிலைநாட்டிய கடவுள் அவர்களை அழிப்பாராக! தாரியு என்னும் நானே இக்கட்டளையைப் பிறப்பித்தேன். இது சரிவர நிறைவேற்றப்படட்டும்.

பின்பு, பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநராக இருந்த தத்னாயும் செத்தர்போசனாயும் அவர்களைச் சார்ந்தவர்களும் மன்னர் தாரியு அனுப்பிய ஆணைப்படியே எல்லாவற்றையும் சரிவரச் செய்து முடித்தனர்.

இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்காரியும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர்: வேலையும் முன்னேறிக்கொண்டிருந்தது. இஸ்ரயேலின் கடவுளது ஆணையாலும், பாரசீக மன்னர்களான சைரசு, தாரியு, அர்த்தக்சஸ்தா ஆகியோரின் கட்டளையாலும் அவர்கள் கட்டடப்பணியை முடித்தனர்.

மன்னர் தாரியு ஆட்சியின் ஆறாம் ஆண்டிலே, அதார் திங்கள் மூன்றாம் நாளிலே, கோவில் வேலை நிறைவுற்றது.

இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர், அடிமைத் தனத்திலிருந்து திரும்பிவந்த ஏனையோர், கடவுளின் கோவில் அர்ப்பண விழாவை அக்களிப்புடன் கொண்டாடினார்கள்:

கடவுளின் கோவில் அர்ப்பண விழாவில் மறு காளைகளையும், இருமறு செம்மறிக்கிடாய்களையும், நாடீறு செம்மறிக்குட்டிகளையும் ஒப்புக் கொடுத்தார்கள்: இஸ்ரயேல் குலக்கணக்கின்படி பன்னிரண்டு வெள்ளாட்டுக் கிடாய்களை இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பாவம் போக்கும் பலியாகச் செலுத்தினார்கள்.

மோசேயின் மலில் எழுதியுள்ளபடி எருசலேமில் அவர்களின் பணிக்காகக் குருக்களை அவர்களின் பிரிவின்படியும் லேவியரை அவர்களின் துறைகளின்படியும் அவர்கள் நியமித்தனர்.

மேலும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த மக்கள் பாஸ்கா விழாவை முதல் மாதத்தின் பதினான்காம் நான் கொண்டாடினர்.

குருக்களும் லேவியரும் ஒன்றிணைந்து தங்களைத் பய்மைப்படுத்திகொண்டனர். அவர்கள் பய்மையானார்கள். அடிமைத் தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த எல்லா மக்களுக்காகவும், சகோதரக் குருக்களுக்காகவும், தங்களுக்காகவும் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொன்றனர்.

அடிமைத்தனதத்திலிருந்து திரும்பிவந்திருந்த இஸ்ரயேல் மக்களும், மேலும், இஸ்ரயேல் கடவுளை வழிபட வேற்றினத் தீட்டிலிருந்து ஒதுங்கி இவர்களோடு சேர்ந்து கொண்டவர்களும் பாஸ்கா உணவை உண்டனர்.

புளிப்பற்ற அப்ப விழாவை ஏழு நாள்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். ஏனெனில் ஆண்டவர் அவர்களை மகிழ்வுபடுத்தினார். இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரின் இல்லப் பணியில் அவர்களுக்குத் துணைபுரியமாறு ஆண்டவர் அசீரிய மன்னரின் மனத்தை மாற்றியிருந்தார்.

அதிகாரம் 7

இதன்பின், பாரசீக மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக் காலத்தில் எஸ்ரா பாபிலோனிலிருந்து புறப்பட்டா+.

இந்த எஸ்ரா செராயாவின் மகன்: இவர் அசாரியாவின் மகன்: இவர் இல்கியாவின் மகன்: இவர் சல்லு¡மின் மகன்: இவர் சாதோக்கின் மகன்: இவர் அகித்தோப்பின் மகன்:

இவர் அமாரியாவின் மகன்: இவர் அசரியாவின் மகன்: இவர் மெரயோத்தின் மகன்:

இவர் செரகியாவின் மகன்: இவர் உசீயின் மகன்: இவர் புக்கீயின் மகன்:

இவர் அபிசுவாவன் மகன்: இவர் பினகாசின் மகன்: இவர் எலயாசரின் மகன்: இவர் தலைமைக் குருவான ஆரோனின் மகன்.

எஸ்ரா இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் மோசேக்கு அளித்திருந்த திருச்சட்டமலில் வல்லுநர். அவருடைய கடவுளான ஆண்டவரின் அருட்கரம் அவரோடு இருந்ததால், அவருக்குத் தேவையான அனைத்தையும் மன்னர் அவருக்குக் கொடுத்தார்.

அவரோடு இஸ்ரயேல் மக்களில் சிலரும், குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காப்போர், கோவில் ஊழியர் ஆகியோரில் சிலரும், மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஏழாம் ஆட்சி ஆண்டில் எருசலேமிற்குப் புறப்பட்டனர்.

அவர்கள் மன்னரின் ஏழாம் ஆட்சியாண்டில் ஜந்தாம் திங்கள் எருசலேமை அடைந்தார்கள்.

ஆண்டவரின் அருட்கரம் எஸ்ராவோடு இருந்ததால், முதலாம் திங்களின் முதல் நாள் பாபிலோனிலிருந்து புறப்பட்ட அவர் ஜந்தாம் திங்கள் முதல் நாள் எருசலேமை வந்தடைந்தார்.

எஸ்ரா ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கற்று அதன்படி நடப்பதிலும், சட்டத்தையும், முறைமையையும் இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.

ஆண்டவரின் கட்டளைகளைச் சார்ந்த காரியங்களிலும், இஸ்ரயேலரின் சட்டங்களிலும் வல்லுநரான குரு எஸ்ராவிடம் மன்னர் அர்த்தக்சஸ்தா வழங்கிய ஆவணத்தின் நகல் பின்வருமாறு:

மன்னர்களின் மன்னரான அர்த்தக்சஸ்தா என்னும் நான் விண்ணகக் கடவுளின் சட்டத்தில் வல்லுநரான குரு எஸ்ராவிற்கு வாழ்த்துக்கூறி எழுதுவது:

என் ஆட்சிக்குட்பட்ட இஸ்ரயேல் மக்களினத்திலும், குருக்களிலும், லேவியர்களிரும் விருப்பமுள்ளவர்கள் உம்மோடு எருசலேமிற்குச் செல்ல நான் அனுமதி வழங்குகிறேன்.

ஏனெனில், உமது கையிலிருக்கிற உம் கடவளின் திருச்சட்டத்தின்படி, யூதாவிலும் எருசலேமிலும் விசாரணை செய்யும்படி மன்னராகிய நானும் என் ஆலோசகர் எழுவரும் உம்மை அனுப்புகிறோம்.

மேலும் மன்னராகிய நானும் என் ஆலோசகர்களும் எருசலேமில் வாழும் இஸ்ரயேலின் கடவுளுக்கு நாங்கள் மனமுவந்து ஒப்புக்கொடுத்த பொன்னையும், வெள்ளியையும் எடுத்துச் செல்லவும்,

மற்றும், பாபிலோன் நாடெங்கும் உமக்குக் கிடைக்கும் பொன்னையும் வெள்ளியையும், அவற்றோடு எருசலேமில் உள்ள தங்கள் கடவுளின் இல்லத்திற்காக ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளையும் எடுத்துச் செல்லவும் நாங்கள் அனுமதி அளிக்கிறோம்.

இப்பணத்தைகொண்டு காளைகளையும், ஆட்டுக்கிடாய்களையும், செம்மறிக் குட்டிகளையும், தானிய, நீர்மப் படையல்களையும் கவனத்துடன் வாங்கி, எருசலேமில் உள்ள உங்கள் கடவுளின் இல்லப்பீடத்தில் காணிக்கையாக்கும்.

எஞ்சிய வெள்ளியையும், பொன்னையும், உமக்கும் உம் சகோதரர்களுக்கும் நலமெனப்பட்டதை உங்கள் கடவுளின் திருவுளப்படி செய்யும்.

உம் கடவுளின் இல்ல வழிபாட்டுக்காக உம்மிடம் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை எருசலேமில் உள்ள உம் கடவுளின் திருமுன் வையும்.

மேலும், உம் கடவுளின் இல்லதிற்கு இதற்குமேல் தேவையானவற்றை மன்னரின் கருவூலத்திலிருந்து நீர் பெற்றுக் கொள்ளலாம்.

மன்னர் அர்த்தக்சஸ்தா என்னும் நான் யூப்ரத்தீசின் அக்கரைப் பகுதியில் உள்ள பொருளாளர்களுக்குக் கட்டளையிடுவது: விண்ணகக் கடவுளின் திருச்சட்ட வல்லுநரும் குருவுமாகிய எஸ்ரா உங்களிடம் கேட்பதையெல்லாம் உடனடியாகக் கொடுக்கவும்.

அவருக்கு மறு தாலந்து வெள்ளி, மறு படி கோதுமை, மறு குடம் திராட்சை இரசம், மறு குடம் எண்ணெய் ஆகியவற்றைத் தேவையான அளவு கொடுக்கலாம்.

நாட்டை ஆளும் மன்னர்மீதும், அவர் மக்கள் மீதும், விண்ணகக் கடவுள் சினம் கொள்ளாதபடி, அவரின் இல்லத்திற்கு, அவர் கட்டளையிட்ட அனைத்தும் கொடுக்கப்படவேண்டும்.

மேலும், நான் அறிவிப்பது: குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காவலர், கோவிற் பணியாளர், கடவுளது இந்த இல்லத்தின் மற்ற ஊழியர் எவர் மீதும் திறையோ, வரியோ, தீர்வையோ சுமத்துவது முறையன்று.

எஸ்ரா, கடவுள் உமக்குக் கொடுத்துள்ள ஞானத்தின்படி யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியில் வாழும் எல்லா மக்களுக்கும் நீதி வழங்க, உம் கடவுளின் திருச்சட்டத்தை அறிந்தவரான நீதிபதிகளையும், ஆளுநர்களையும் ஏற்படுத்தும்: திருச்சட்டம் அறியாதவர்களுக்கு அதைக் கற்பியும்.

மேலும் திருச்சட்டத்திற்கும், மன்னரின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாதவருக்குக் கண்டிப்பாய் தண்டனை கொடுக்கப்படவேண்டும்: மரண தண்டனையோ நாடு கடத்தபடுதலோ சொத்துப் பறிமுதலோ சிறைத் தணடனையோ கொடுக்கப்படட்டும் .

எருசலேமிலுள்ள ஆண்டவரின் இல்லத்தை அழகுபடுத்தும்படி மன்னரைத் பண்டிய நம் முன்னோரின் கடவுளான வாழ்த்தப்பெறுவாராக!

மன்னர், அவர்தம் ஆலோசகர், ஆற்றல்மிகு அரச அதிகாரங்கள் ஆகியோரின் பார்வையில் தயவுகிடைக்கும்படி செய்தவர் அவரே! என் கடவுளான ஆண்டவரின் அருள்கரம் என்னோடு இருந்ததால், நான் திடம் கொண்டு, இஸ்ரயேலின் தலைவர்களை ஒன்று சேர்த்து, அவர்களை என்னோடு அழைத்துவந்தேன்.

அதிகாரம் 8

மன்னர் அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக்காலத்தில் எஸ்ராவோடு பாபிலோனியாவிலிருந்து வந்தவர்களின் குடும்பத் தலைவர்களது தலைமுறை அட்டவணை அவர்களின் மூதாதையர் மரபின்படி பின்வருமாறு:

பினகாசின் வழிமரபில் கெர்சோம்: இத்தாமர் வழிமரபில் தானியேல்: தாவீதின் வழிமரபில் ஆற்டிசு:

பாரோசு வழிமரபில் செக்கனியாவின் மகன் செக்கரியா: மற்றும் அவரோடு மற்றைம்பது ஆண்கள்:

பாகாத்மோவாபு வழிமரபில் செரெகியாவின் மகன் எல்யகோவனாய்: மற்றும் அவரோடு இருமறு ஆண்கள்:

சாத்து வழிமரபில் எகசியேலின் மகன் செக்கனியா: மற்றும் அவரோடு முந்மறு ஆண்கள்:

ஆதின் வழிமரபில் யோனத்தானின் மகன் எபேது: அவரோடு ஜம்பது ஆண்கள்:

ஏலாமி வழிமரபில் அத்தலியாவின் மகன் ஏசாயா: மற்றும் அவரோடு எழுபது ஆண்கள்:

செபத்தியா வழிமரபில் மிக்கேலின் மகன் செபதியா: மற்றும் அவரோடு என்பது ஆண்கள்:

யோவாபு வழிமரபில் எகியேலின் மகன் ஒபதியா: மற்றும் அவரோடு இருமற்றுப் பதினெட்டு ஆண்கள்:

பானி வழிமரபில் யோசிப்பியாவின் மகன் செலோமித்து: மற்றும் அவரோடு மற்றிருபது ஆண்கள்:

பேபாய் வழிமரபில் பேபாயின் மகன் செக்கரியா: மற்றும் அவரோடு இருபத்தெட்டு ஆண்கள்:

அஸ் காது வழிமரபில் அக்காற்றானின் மகன் யோகனான்: மற்றும் அவரோடு மற்றுப்பத்து ஆண்கள்:

அதோனிக்காம் வழிமரபில் பிற்காலத்தவர்களான எலிப்பலேற்று எவேல், செமாயா:

மற்றும் அவர்களோடு அறுபது ஆண்கள்: பிக்வாயின் வழிமரபில் உத்தாய், சக்கூர்: மற்றம் அவர்களோடு எழுபது ஆண்கள்.

அகவா செல்லும் ஆற்றருகில் அவர்களை நான் ஒன்று சேர்த்தேன். அங்கே மூன்று நாள்கள் தங்கியிருந்தோம். மக்களையும் குருக்களையும் பற்றிக் கேட்டறிந்தபோது, அங்கே அவர்களுள் எவரும் லேவியர் இல்லை என்று கண்டேன்.

ஆகையால், எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிபு, எல்நாத்தான், நாத்தான், செக்கரியா, மெசுல்லாம் ஆகிய தலைவர்களையும் யோயாரிபு, எல்நாத்தான் ஆகிய ஞானியரையும் என்னிடம் அழைத்தேன்.

அவர்களைக் கசிப்பியாவில் இருந்த மக்கள் தலைவரான இத்தோவிடம் அனுப்பி வைத்தேன். கசிப்பியாவில் இருந்த இத்தோவிடம் அவருடைய சகோதரர்களான கோவில் பணியாளர்களிடமும், “நம் கடவுளின் இல்லத்திற்குப் பணியாளரை அனுப்புங்கள்“ என்று சொல்லும்படி கூறினேன்.

எங்கள் கடவுளின் அருட்கரம் எங்களோடு இருந்ததால், இஸ்ரயேல் இனத்தவரும் லேவியருமான, மக்லியின் புதல்வருள் புத்திக்கூர்மையுடைய செரேபியாவையும், அவருடைய புதல்வர்களும் உறவினர்களுமாகப் பதினெட்டுப் பேரையும்,

அசபியாவையும், அவரோடு மெரா¡ரியின் புதல்வர்களில் ஒருவரான ஏசாயின் அவருடைய சகோதரர்களும், அவர்களின் புதல்வர்களுமான இருபது பேரையும்,

மற்றும் தாவீதும் அவரின் அலுவலர்களும் லேவியர்களுக்கு உதவி செய்யப் பிரித்து வைத்திருந்த இருமற்று இருபது கோவில் பணியாளரையும் அவர்கள் எங்களிடம் அழைத்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் தம் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.

இதன்பின் எங்கள் கடவுள்முன் எங்களையே நாங்கள் தாழ்த்திக் கொண்டு, எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும், எங்கள் எல்லா உடைமைகளுக்கும் பயணம் நலமாக அமையவேண்டுமென்று மன்றாடுமாறு, அகவா ஆற்றருகே நோன்பு ஒன்று அறிவித்தேன்.

ஏனெனில் வழியில் எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்படி காலட்படையினரையும், குதிரைப்படையினரையும் எங்களோடு அனுப்பி வைக்குமாறு மன்னனைக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தது. இதற்குக் காரணம் நாங்கள் மன்னரை நோக்கி, எங்கள் கடவுளின் அருட்கரம் அவரை நேர்மையுடன் தேடுகிற அனைவர்மீதும் இருக்கின்றது என்றும், அவரைப் புறக்கணிப்பவர்கள் அவரது வலிமைக்கும், சினத்துக்கும் ஆளாவர்கள் என்றும் சொல்லியிருந்தோம்.

எனவே நாங்கள் நோன்பிருந்து, இதற்காக எங்கள் கடவுளிடம், வேண்டிக் கொண்டோம். அவரும் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளினார்.

பின்னர் குருக்களின் தலைவர்கள் பன்னிருவராகிய செரெபியா, அசபியா மற்றும் அவர்களின் உறவினர் பத்துப் பேரைப் பிரித்து, அவர்களிடம்

அரசரும் அவருடைய ஆலோகசர்களும் அவருடைய அலுவலர்களும் அங்கிருந்த மக்களும் எங்கள் கடவுளின் இல்லத்திற்குக் காணிக்கையாக அளித்திருந்த வெள்ளி, தங்கம், பாத்திரங்கள் யாவற்றையும் நிறுத்துக் கொடுத்தேன்.

அவர்களிடம் நிறுத்துக் கொடுத்தவை: இருபத்தாறு டன் நிறைவுள்ள வெள்ளி: நாலாயிரம் கிலோகிராம் நிறைவுள்ள வெள்ளிப் பாத்திரங்கள்: ஆயிரம் பொற்காசு மதிப்புள்ள இருபது பொற் கிண்ணங்கள்:

பொன்போன்று மெருகேற்றப்பட்ட இரு வெண்கலப் பாத்திரங்கள்.

பின்பு, அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள்: இந்தப் பாத்திரங்களும் அ¡ப்பணிப்பட்டவையே. இந்த வெள்ளியும் பொன்னும் உங்கள் மூதாதையரின் கடவுளுக்கு அளிக்கப்பட்ட தன்னார்வக் காணிக்கைகள்.

நீங்கள் எருசலேமிலுள்ள குருக்களின் தலைவர்கள், லேவியர், இஸ்ரயேல் குலத்தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில், ஆண்டவரின் இல்லக் கருவூலத்தில் ஒப்படைக்கும்வரை இவற்றைப் பாதுகாத்து வாருங்கள்“ என்று சொன்னேன்.

எனவே குருக்களும், வேலியரும் நிறுக்கப்பட்ட வெள்ளி, பொன்பாத்திரங்கள் ஆகியவற்றை எருசலேமிலுள்ள நம் கடவுளின் இல்லதிற்குக் கொண்டுபோகும்படி பெற்றுக் கொண்டனர்.

பிறகு முதல் திங்கள் பன்னிரண்டாம் நாள், அகவா ஆற்றைவிட்டு எருசலேமுக்குப் புறப்பட்டோம். எங்கள் கடவுளின் அருட்கரம் எங்களோடு இருந்ததால் போகும் வழியில் நாங்கள் எங்கள் பகைவர் கையினின்றும் திருடர் கையினின்றும் பாதுகாக்கப்பட்டோம்.

நாங்கள் எருசலேமை அடைந்து அங்கு மூன்று நாள்கள் தங்கினோம்.

நான்காம் நாள், நம் கடவுளின் இல்லத்தில் உரியாவின் மகனும் குருவுமாகிய மெரமோத்தின் கையில் வெள்ளியும் பொன்னும் பாத்திரங்களும் நிறுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. அப்போது அவரோடு பினகாசின் மகன் எலயாசரும், லேவியரான ஏசுவாவின் மகன், யோசபாத்தும் பின்டீயின் மகன் நோவதியாவும் இருந்தனர்.

அவற்றின் எண்ணிக்கையும், எடையையும் அன்ற அவர்கள் குறித்து வைத்துக் கொண்டார்கள்.

அப்பொழுது அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்து, திரும்பி வந்தவர்கள், இஸ்ரயேலின் கடவுளுக்கு எரிபலிகள் செலுத்தினர்: இஸ்ரயேலின் எல்லா மக்களுக்காகவும் பன்னிரு இளங் காளைகளையும் தொண்ணூற்றாறு செம்மறிக் கிடாய்களையும், எழுபத்தேழு ஆட்டுக் குட்டிகளையும் பாவம் போக்கும் பலியான பன்னிரு வெள்ளாட்டுக் கிடாய்களையும் ஆண்டவருக்கு எரிபலியாக ஒப்புக் கொடுத்தனர்.

மேலும் அவர்கள் மன்னரின் ஆவண மடல்களைச் சிற்றரசர்களிடமும், யூப்பிரத்தீசின் அக்கரையில் இருந்த ஆளுநர்களிடமும் கொடுத்தனர். இவர்கள் மக்களுக்கும் கடவுளின் இல்லத்திற்கும் உறுதுணையாய் இருந்தனர்.

அதிகாரம் 9.

இவைகளுக்குப் பின்னர், அதிகாரிகள் என்னிடம் வந்து, “இஸ்ரயேல் மக்களும் குருக்களும் லேவியரும், கானானியர், இத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எமோரியர் ஆகிய நாட்டினரின் வெறுக்கத்தக்க செயல்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவில்லை.

ஏனெனில் அவர்கள் தங்களுக்கும் தங்கள் புதல்வர்களுக்கும் அவர்களுடைய புதல்வியரை மனைவியராக எடுத்துக்கொண்டனர். எனவே புனித இனம் வேற்று நாட்டு மக்களோடு கலக்கப்பட்டது. இந்தப் பற்றுறுதியின்மைக்கு அதிகாரிகளும், ஆளுநர்களுமே முதற்காரணம் ஆவர்“ என்று கூறினார்கள்.

இதைக் கேட்டவுடன், நான் என் ஆடையையும், மேலுடையையும் கிழித்தேன்: மேலும் மலைமுடியையும் தாடியையும் பிய்த்துக் கொண்டு திகைப்புற்று உட்கார்ந்தேன்.

இஸ்ரயேலின் கடவுளின் வார்த்தைகளுக்கு அஞ்சிய யாவரும், அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்தவர்களின் குற்றத்திற்காக என்னைச் சூழ்ந்து நின்றனர். நானோ மாலைப்பலி நேரம்வரை செயலற்று அமர்ந்திருந்திருந்தேன்.

மாலைப்பலி நேரத்தில் நோன்பை முடித்துக் கிழிந்த ஆடையோடும் மேலுடையோடும் முழந்தாளிட்டு என் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி கைகளை விரித்து நான் கூறியது: 6.. கடவுளே: உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எங்கள் பாவங்கள் எங்கள் தலைக்கு மேல் பெருகிவிட்டன. எங்கள் குற்றங்கள் விண்ணைத் தொட்டு விட்டன.

எம் முன்னோர் காலமுதல் இதுவரை நாங்கள் பெரும் பாவம் செய்துள்ளோம். எங்கள் பாவங்களினால், நாங்களும் எங்கள் அரசர்களும், குருக்களும் வேற்று நாட்டு மன்னர்களின் கைக்கும், வாளுக்கும் அடிமைத்தனத்திற்கும் கொள்ளைக்கும் வெட்கக் கேட்டுக்கும் இதுவரை ஒப்பவிக்கப்பட்டோம்.

ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளாம் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது: எங்களுள் சிலரை எஞ்சியோராக விட்டுவைத்தீர்: உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தந்தீர்: எம் கடவுளாகிய நீர் என் கண்களுக்கு ஒளி தந்தீர்: எமது அடிமைத் தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர்.

நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்குக் கையளிக்கவில்லை. மாறாக நாங்கள் உயிர் பிழைக்கவும், எங்கள் கடவுளின் கோவிலை எழுப்பவும், பாழடைந்ததைப் பழுதுபார்க்கவும் யூதேயாவிலும் எருசலேமிலும் பாதுகாப்பு அளிக்கவும் பாரசீக மன்னர்களின் முன் எமக்கு உமது தயை கிடைக்கவும் செய்தருளீர்!

ஆயினும், எம் கடவுளே! இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும் நாங்கள் இப்பொழுது என்ன சொல்லமுடியும்? நாங்கள் உம் கட்டளைகளைப் புறக்கணித்துவிட்டோமே!

நீர் உம் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம், “நீங்கள் குடியேறவிருக்கிற நாடு வேற்றினத்தாரின் தீட்டினாலும், பிற நாடுகளின் தீட்டினாலும் அந்நாட்டை ஒருமுனை தொடங்கி மறுமுனை வரை மாசுபடுத்தியுள்ள மக்களின் அருவருப்புகளாலும் பய்மை இழந்திருக்கின்றது.

எனவே நீங்கள் வலிமை பெறவும் நாட்டின் நலன்களை அனுபவிக்கவும், அந்நாட்டை என்றென்றும் உங்கள் மக்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளவும் வேண்டுமாயின் வேற்றினத்தாருடன் பெண் கொள்வதும் கொடுப்பதும் இருத்தலாகாது. மேலும் அவர்களின் நல்லலுறவையும் நலத்தையுமே என்றுமே நாடாலாகாது“ என்று நீர் கட்டளையிட்டிருப்பதைப் புறக்கணித்தோம்.

எம் தீச்செயல்களினாலும் எமது பெரும் பாவத்தினாலுமே இவையெல்லாம் எங்கள்மீது வந்தன. ஆனால் எங்கள் கடவுளாகிய நீர் எங்கள் குற்றத்திற்கு ஈடாக தண்டியாமல் எங்களை எஞ்சியிருக்கச் செய்தீர்.

நாங்கள் மீண்டும் உமது கட்டளைகளை மீறுவோமா? இவ்வாறு வெறுப்பானவைகளைச் செய்கின்ற மக்களோடு இனி கலப்பு மணம் செய்து கொள்வோமா? அப்படிச் செய்தால், எஞ்சியுள்ள எங்களுள் எவரும் இல்லாதபடி, யாரும் தப்பாதபடி, நீர் எம்மை அழிக்கும்வரை எம்மீது சினம் கொள்வீர் அன்றோ?

இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! நீர் நீதியுள்ளவர். ஏனெனில், இன்று நாங்களே எஞ்சியுள்ளோராய் விடப்பட்டிருக்கிறோம். இதோ நாங்கள் உம்முன் குற்றவாளிகளாய் இருக்கிறோம். இதனால் எங்களில் யாரும் உம்முன் நிற்க இயலாது.

அதிகாரம் 10

இவ்வாறு, எஸ்ரா கடவுளின் இல்லத்தின்முன் விழுந்து மன்றாடி விண்ணப்பித்துக்கொண்டு இருந்தார். அப்பொழுது ஆண், பெண், குழந்தைகள் உள்பட இஸ்ரயேல் மக்களின் பெருங்கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு கூக்குரலிட்டு அழுதனர்.

அப்பொழுது ஏலாமியருள் ஒருவரான எகியேல் மகன் செக்கனியா எஸ்ராவை நோக்கி, நாங்கள் கடவுளுக்கு எதிராக நேர்மையற்றவர்களாய் நடந்து கொண்டோம். ஏனெனில் இந்நாட்டின் மக்களான வேற்றினப் பெண்களை மணந்தோம். ஆயினும், இஸ்ரயேலுக்கு இன்னும் நம்பிக்கை உண்டு.

ஆகவே, என் தலைவரின் அறிவுரைக்கும் கடவுளின் கட்டளைகளுக்கும் அஞ்சி நடப்போரின் விருப்பத்திற்கும் ஏற்ப, அப்பெண்கள் அனைவரையும் அவர்களின் பிள்ளைகளையும் அகற்றி விடுவோம் என்று நம் கடவுளோடு உடன்படிக்கை செய்வோம் . திருச்சட்டத்திற்கு ஏற்ப இது செய்யப்படட்டும்.

எழுந்திரும்! இது உம் கடமை. நாங்கள் உம்மோடு இருக்கின்றோம். இதை மனஉறுதியுடன் செய்யும் என்றார்.

எஸ்ரா எழுந்து, குருக்களின் தலைவர்களையும், லேவியர்களையும், எல்லா இஸ்ரயேல் மக்களையும் இவ்வாறு வாக்குறுதி அளிக்கச் செய்தார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

பின்பு, எஸ்ரா கடவுளது இல்லத்தின் முகப்பினின்று எழுந்தார்: எலியாசிபின் மகனான யோகனானின் அறையினுள் சென்றார். அங்கே உணவு உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தார். ஏனெனில் அடிமைத்தனத்திலிருந்து திரும்பிவந்தவர்களின் நேர்மையின்மையின் பொருட்டுப் புலம்பி அழுது கொண்டிருந்தார்.

அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த மக்கள் அனைவரும் எருசலேமில் கூடவேண்டுமென்றும்,

அவர்களுள் எவராவது மூன்று நாள்களுக்குள் வராமல் இருந்தால், மக்கள் தலைவர்கள் பெரியோர் ஆகியோரின் அறிவரைப்படி, அவனுடைய உடைமைகள் பறிமுதல் செய்யப்படவேண்டும் என்றும் அடிமைத்தனத்திலிருந்து வந்தவர்களின் கூட்டத்திலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படவேண்டும் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் அறிவிக்கப்பட்டது.

எனவே, யூதா, பென்யமின் குலத்தார் அனைவரும் எருசலேமில் மூன்று நாள்களுக்குள் அதாவது, ஒன்பதாம் மாதம், இருபதாம் நாளன்று ஒன்று கூட்டப்பட்டனர். மக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்டதன் காரணமாகவும், மழையின் காரணமாகவும் கடவுளது இல்லத்தின் வளாகத்தில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்துக் கூறியது: நீங்கள் வேற்றினப் பெண்களை மணந்ததால் நேர்மையற்றவர்களாகி, இஸ்ரயேலின் பாவத்தைப் பெருகச் செய்துள்ளீர்கள்.

எனவே, இப்பொழுது உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் மன்றாடுங்கள்: அவர் திருவுளப்படி நடங்கள்: இந்நாட்டில் வாழும் மக்களிடமிருந்தும், வேற்றினப் பெண்களிடமிருந்தும் விலகி இருங்கள் .

அப்பொழுது குழுமியிருந்த அனைவரும் உரத்த குரலில் கூறியது: நீர் சொல்வதே சரி! உமது வார்த்தையின்படியே நாங்கள் செய்வோம்.

ஆயினும் இதனை ஓரிரு நாள்களில் செய்ய இயலாது: ஏனெனில் மக்கள் மிகுதியாக உள்ளனர். இது மாரிக்காலமாக இருப்பதால், வெளியே நிற்க முடியவில்லை. மேலும், இக்கரியத்தில் எங்களுள் பாவம் செய்தோர் பலர்.

எனவே, எல்லா மக்களின் சார்பில் தலைவர்கள் இதன் காரணமாக மூண்ட நம் கடவுளின் கோபக்கணல் நம்மைவிட்டு விலகும்வரை தங்கியிருக்கட்டும், நம் நகர்களில் வாழும் வேற்றினப் பெண்களை மணந்தவர்கள் அனைவரும் குறித்த காலத்தில் வரட்டும்: அவர்களோடு ஒவ்வொரு நகரத்தின் பெரியோர்களும், அதன் நீதிபதிகளும் வரட்டும்.

அசாவேலின் மகனான யோனத்தானும், திக்வாவின் மகன் யாகிசியாவுமே இதை எதிர்த்து நின்றனர். மெசுல்லாமும் லேவியரான சபத்தாயும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தனர்.

அடிமைத்தனத்தலிருந்து திரும்பி வந்திருந்தோர் அவ்வாறே செய்தனர். குரு எஸ்ராவும் மக்கள் தலைவர்களும் அவர்களின் மூதாதையரின் வழிமரபின்படியும், ஒவ்வொருவரின் பெயர் வரிசைப்படியும், பத்தாம் மாதம் முதல் நாள் இதைப்பற்றி விசாரணை செய்ய அமர்ந்தனர்.

முதல் மாதம் முதல் நாளிலே வேற்றினப் பெண்களை மணைந்தவர்கள் அனைவரையும் விசாரித்து முடித்தனர்.

குருக்களின் மரபில் வேற்றினப் பெண்களை மணந்தவர்களாகக் கண்டு பிடிக்கப்பட்டவர்கள்: ஏசுவா வழிமரபில் யோசதாக்கின் மகனான ஏசுவா, அவர் சகோதரரின் வழிமரபில், மாசேயா, எலியேசர், யாரிபு, கெதலியா ஆகியோர்.

அவர்கள் தம் மனைவியரை அனுப்பி விட வாக்களித்தனர்: தங்கள் குற்றநீக்கப் பலியாக ஒரு கிடாயைச் செலுத்தினர்.

இம்மேயின் வழிமரபில், அனானி, செபதியா ஆகியோர்.

ஆரிம் வழிமரபில் மாசேயா, எலியா, செமாயா, எகியேல், உசியா ஆகியோர்.

பஸ்கூர் வழிமரபில் எலியேனாய், மாசேயா, இஸ்மயேல், நத்தனியேல், யோசபாது, எலாசா ஆகியோர்.

லேவியரில், யோசபாது, சிமயி, கெலித்தா என்ற கேலாயா, பெத்தகியா, யூதா, எலியேசர் ஆகியோர்.

பாடகரில் எலியாகிபு: வாயிற்காவலரில், சல்லு¡ம், தேலம், ஊரி, ஆகியோர்.

மற்ற இஸ்ரயேலருள் பாரோகின் வழிமரபில் இரமியா, இசியா, மல்கியா, மிய்யாமின், எலியாசர், மல்கியா, பெனாயா ஆகியோர்.

ஏலாம் வழிமரபில1 மத்தானியா, செக்கரியா, எகியேல், அப்தி, ஏரேமோத்து, எலியா ஆகியோர்.

சத்ப வழிமரபில், எலியேனாய், எலியாகிபு, மத்தனியா, எலிமோது, சாபாது, அசிசா ஆகியோர்.

பேபாய் வழிமரபில் யோகனான், அனனியா, சபாய், அத்லாய் ஆகியோர்.

பானி வழிமரபில், மெசுல்லாம், மல்லு¡க்கு, அதாயா, யாசூபு, செயால், எரேமேத்து ஆகியோர்.

பாகாத்மோவாபு வழிமரபில், அத்னா, கெலால், பெனாயா, மாசேயா, மத்தனியா, பெசலேல், பின்டீய், மனாசே ஆகியோர்.

ஆரிம் வழிமரபில், எலியேசர், இசிய்யா, மல்கியா, செமாயா, சிமியோன்,

பென்யமின், மல்லு¡க்கு, செமரியா ஆகியோர்.

ஆசூம் வழிமரபில், மத்தனாய், மத்தாத்தா, சாபது, எலிப்பலேற்று, எரேமாய், மனாசே, சிமயி ஆகியோர்.

பானி வழிமரபில், மாகதாய், அம்ராம், ஊவேல்,

பெனாயா, பேதயா, கெலு¡கி,

வானியா, மெரேமோத்து, எலியாசிபு,

மத்தனியா, மத்தனாய், யகசு ஆகியோர்.

பின்டீய் வழிமரபில், சிமயி,

செலேமியா, நாத்தான், அதாயா,

மாக்னதபாய், சசாய், சாராய்,

அசரியேல், செலேமியா, செமரியா,

சல்லு¡ம், அமரியா, யோசேப்பு ஆகியோர்.

நெபோ வழிமரபில், எயியேல், மத்தித்தியா, சாபது, செபினா, யாதாய், யோவேல், பெனாயா ஆகியோர்.

வேற்றினப் பெண்களை மணந்திருந்த இவர்கள் அனைவரும் இப்பெண்களையும் அவர்களிடமிருந்து பிறந்த பிள்ளைகளையும் விலக்கிவிட்டனர்.

புத்தகம் 16. - "நெகேமியா"

அதிகாரம் 1.

அக்கல்யா மகனான நெகேமியா கூறியது: இருபதாம் ஆண்டின் கிசிலேவு மாதத்தில், நான் தலைநகரான சூசாவில் இருந்தேன்.

அப்பொழுது, என் சகோதரர்களில் ஒருவரான அனானியும் சில ஆண்களும் யூதாவிலிருந்து வந்தார்கள். அடிமைத்தனத்திற்குத் தப்பித்துக்கொண்டு உயிரோடிருக்கும் யூதர்களைப்பற்றியும் எருசலேமைப் பற்றியும் அவர்களிடம் விசாரித்தேன்.

அதற்கு அவர்கள், அடிமைத்தனத்திற்குத் தப்பித்துக் கொண்டு அம்மாநிலத்தில் உயிரோடிருப்பவர்கள் பெருந் துயரும் சிறுமையும் அடைகிறார்கள். எருசலேமின் மதில்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளன: அதன் வாயிற்கதவுகள் தீக்கு இரையாகிவிட்டன என்று கூறினர்.

இவற்றைப் பற்றிக் கேள்விபட்டதும் நான் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன்: பல நாள்கள் துக்கம் கொண்டாடினேன்: மேலும் நான் நோன்பிருந்து விண்ணகக் கடவுளின்முன் மன்றாடினேன்:

விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரே! பெரியவரும் அஞ்சுதற்கு உரியவரும் ஆனவரே! தமக்கு அன்பு காட்டுபவர்களிடமும் தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களிடமும் உடன்படிக்கையையும் இரக்கத்தையும் காப்பவரே!

உம் ஊழியர்களாகிய இஸ்ரயேல் மக்களுக்காக இரவும் பகலும் இன்று உம்முன் மன்றாடினேன்: இஸ்ரயேல் மக்களாகிய நாங்கள் உமக்கு எதிராகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிறேன். அடியேனுடைய மன்றாட்டைக் கேட்பதற்கு உம் செவிகள் திறந்திருப்பதாக! உன் கண்கள் விழித்திருப்பதாக! நானும் என் தந்தை வீட்டாரும் பாவம் செய்தோம்.

நாங்கள் உமக்கு எதிராக முறைகேடாக நடந்து கொண்டோம். உமது ஊழியரான மோசேக்குத் தந்த கட்டளைகளையும், சட்டங்களையும், நீதி முறைமைகளையும் கடைப்பிடிக்கவில்லை.

உம் ஊழியரான மோசேக்கு நீர் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தருளும். “நீங்கள் நேர்மையற்றவர்களாக இருப்பீர்களேயாகில் உங்களை மக்களினங்களிடையே சிதறடிப்பேன்:

இருப்பினும், நீங்கள் என்னிடம் திரும்பிவந்து, என் கட்டளைகளைப் பின்பற்றி நடப்பீர்களாகில், நீங்கள் உலகின் கடை எல்லைக்கு ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பினும், அங்கிருந்து உங்களை ஒன்று சேர்த்து எனது பெயர் விளங்கும் பொருட்டு நான் தேர்ந்துகொண்ட இடத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்“.

உமது பேராற்றலாலும் கைவன்மையாலும் நீர் மீட்ட உம் மக்களும் ஊழியர்களும் இவர்களே.

ஆண்டவரே, உம் ஊழியனான அடியேனின் மன்றாட்டையும், உமது பெயருக்கு அஞ்சி நடக்க விரும்பும் உம் ஊழியர்களின் மன்றாட்டையும் கேட்டருளும். உம் ஊழியனாகிய எனக்கு இன்று வெற்றியை அருளும். இம்மனிதர் எனக்கு இரக்கம் காட்டச் செய்தருளும் . அப்பொழுது, நான் மன்னருக்குப் பானம் பரிமாறுவோனாக இருந்தேன்.

அதிகாரம் 2.

மன்னர் அர்த்தக்சஸ்தாவின் இருபதாம் ஆட்சி ஆண்டில், நீசான் மாதத்தில் அவரது முன்னிலையில் திராட்சை இரசம் வைக்கப்பட்டிருந்தது. நான் திராட்சை இரசத்தை எடுத்து மன்னருக்குக் கொடுத்தேன். அப்பொழுது அவர் முன்னிலையில் நான் துயருற்றவனாய் இருந்தேன்.

மன்னர் என்னைப் பார்த்து, ஏன் உன் முகம் வாடியுள்ளது? நீ நோயுற்றவனாகத் தெரியவில்லையே! இது மனவேதனையே அன்றி வேறொன்றுமில்லை என்றார். நானோ மிகவும் அஞ்சினேன்.

நான் மன்னரை நோக்கி, மன்னரே! நீர் நீடூழி வாழ்க! என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்? என்றேன்.

அதற்கு மன்னர் என்னை நோக்கி, உனக்கு என்ன வேண்டும்? என்றார். அப்பொழுது நான் விண்ணகக் கடவுளிடம் வேண்டினேன்.

நான் மன்னரைப் பார்த்து, நீர் மனம் வைத்தால், உமது பார்வையில் தயவு கிடைத்தால் என் மூதாதையரின் கல்லறைகளைக் கொண்டுள்ள யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும் என்று கூறினேன்.

அப்பொழுது மன்னரும் அவர் அருகில் அமர்ந்திருந்த அரசியும் என்னைப் பார்த்து, உன் பயணத்திற்கு எத்தனை நாள்கள் ஆகும்? எப்பொழுது நீ திரும்பி வருவாய்? என்று கேட்டனர். மன்னர் என்னை அனுப்ப விரும்பியதால் திரும்பிவரும் காலத்தை அவரிடம் குறிப்பிட்டேன்.

மீண்டும் மன்னரைப் பார்த்து, உமக்கு மனமிருந்தால், நான் யூதாவை அடையும்வரை யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியிலுள்ள ஆளுநர்கள் எனக்கு வழிவிட வேண்டுமென மடல்கள் கொடுத்தருளும்.

கோவிலின் கொத்தளக் கதவுகளுக்கும் நகர் மதிலின் கதவுகளுக்கும், நான் தங்கவிருக்கும் வீட்டின் கதவுகளுக்கும் குறுக்குச் சட்டங்கள் அமைக்கத் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி மன்னரின் காடுகளுக்குக் காவலரான ஆசாபுக்கு மடல் கொடுத்தருளும் என்றேன். கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால், மன்னரும் அவ்வாறே கொடுத்தார்.

யூப்பிரத்தீசின் அக்கரைப்பகுதியின் ஆளுநர்களிடம் வந்து, மன்னரின் மடல்களை அவர்களிடம் தந்தேன். மன்னரோ என்னோடு படைத்தலைவர்களையும் குதிரை வீரர்களையும் அனுப்பி வைத்திருந்தார்.

ஓரோனியனான சன்பலாற்றும், அரச அலுவலனும் அம்மோனியனுமான தோபியாவும் அதைக் கேள்வியுற்றபோது, இஸ்ரயேல் மக்களுக்கு நன்மை செய்ய ஒருவன் வந்துவிட்டானே என்று எரிச்சலுற்றனர்.

நான் எருசலேமுக்கு வந்து அங்கே மூன்றுநாள் தங்கி இருந்தேன்.

நான் எருசலேமுக்குச் செய்யுமாறு கடவுள் என் உள்ளத்தில் பண்டியிருந்த எதையும் நான் ஒருவருக்கும் சொல்லவில்லை. ஓரிரவு நான் எழுந்து சில ஆள்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நான் ஏறிச்சென்ற விலங்கைத் தவிர வேறொரு கால்நடையும் என்னிடமில்லை.

நான் இரவில் பள்ளத்தாக்கு வாயில் வழியாக வெளியே சென்று “நரி“ நீருற்றைக் கடந்து, “குப்பைமேட்டு“ வாயிலுக்கு வந்தேன். அங்கிருந்து, இடிந்து கிடந்த எருசலேமின் மதில்களையும், தீக்கிரையாகியிருந்த அதன் கதவுகளையும் பார்வையிட்டேன்.

அங்கிருந்து “ஊருணி வாயிலுக்கும்“, “அரசனின் குளத்திற்கும்“ சென்றேன். ஆனால் நான் சவாரி செய்த விலங்கு செல்லப் பாதை இல்லை.

எனவே இரவிலே நான் ஆற்றோரமாக நடந்து சென்று மதில்களைப் பார்வையிட்ட பின், பள்ளத்தாக்கு வாயில் வழியாகத் திரும்பி வந்தேன்.

நான் எங்குச் சென்றேன் என்றும் என்ன செய்தேன் என்றும் அலுவலர் ஒருவருக்கும் தெரியாது. ஏனெனில் யூதர்களுக்கும், குருக்களுக்கும், உயர்குடி மக்களுக்கும், அலுவலர்களுக்கும், வேலையில் ஈடுபடவிருக்கும் ஏனையோருக்கும் அதுவரை ஒன்றையும் நான் சொல்லவில்லை.

பின்னர் நான் அவர்களைப் பார்த்து, எவ்வித இழிநிலையில் நாம் இருக்கிறோம் என்பதையும், எருசலேம் பாழடைந்து கிடப்பதையும், அதன் வாயிற் கதவுகள் தீக்கிரையாக்கப்பட் டிருப்பதையும் நீங்களே பாருங்கள்! எனவே, இனியும் நமக்குச் சிறுமை வராதபடி, எருசலேமின் மதில்களைச் கட்டியெழுப்புவோம், வாருங்கள் என்று சொன்னேன்.

என் கடவுளின் அருட்கரம் என்னோடு இருக்கிறதையும், மன்னர் எனக்கு உரைத்ததையும் அவர்களுக்குச் சொன்னேன். அவர்களும் ¥வாரும் கட்டுவோம் என்றனர்: நற்பணி செய்யத் தங்களைத் தயார் செய்து கொண்டனர்.

ஓரோனியனான சன்பலாற்றும் அரச அலுவலனும் அம்மோனியனுமான தோபியாவும், அரபியனான கெசேமும் கேள்வியுற்று எங்களை எள்ளி நகையாடினர். நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்? நீங்கள் மன்னருக்கு எதிராகக் கலகம் செய்யப் போகிறீர்களா? என்று கேட்டனர்.

நானோ அவர்களுக்கு மறுமொழியாக, விண்ணகக் கடவுள்தாமே எங்களுக்கு வெற்றி அளிப்பார்! அவருடைய ஊழியர்களாகிய நாங்கள் கட்டட வேலையைத் தொடங்கப் போகிறோம். உங்களுக்கு எருசலேமில் பங்கில்லை, உரிமையில்லை, நினைவுச் சின்னமும் இல்லை என்றேன்.

அதிகாரம் 3.

அப்பொழுது, பெரிய குரு எலியாசிபும், அவருடைய சகோதரக் குருக்களும் முன்வந்து “ஆட்டு வாயிலைக˜ கட்டி அர்ப்பணம் செய்தனர்: அதற்குக் கதவுகளைப் பொருத்தினர்: மேயா காவல்மாடம் வரையும் அன்னியேல் காவல்மாடம் வரையும் அர்ப்பணம் செய்தனர்.

அவர்களுக்குப்பின் எரிகோ மக்களும், அவர்களுக்குப்பின் இம்ரியின் மகனான சக்கூரும் கட்டினர்.

பின் அசனாவாவின் வழிமரபினர் “மீன் வாயிலைக்“ கட்டினர்: நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.

அக்கோசு மகனான உரியாவின் மகன் மெரேமோத்து அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார். மெசசபேலின் மைந்தரான பெராக்கியாவின் மகன் மெசுல்லாம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்ததார். பானாவின் மகன் சாதோக்கு அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.

தெக்கோவாவினர் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர். ஆனால் அவர்களின் உயர்குடி மக்கள் ஆண்டவரின் பணியில் பங்கெடுக்கவில்லை.

பாசயாகின் மகனான யோயாதாவும், பெசோதியாவின் மகனான மெசல்லாமும் “பழைய வாயிலைப்“ பழுது பார்த்தனர்: நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுக்களையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.

யூப்பிரத்தீசின் அக்கரைப்பகுதியில் வாழ்ந்த ஆளுநரின் ஆட்சிக்குட்பட்ட கிபயோனியனான மெலற்றியாவும், மெரோனியரான யாதோனும், கிபயோன்- மிஸ்பாவைச் சார்ந்தவர்களும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர்.

பொற்கொல்லரில் ஒருவரான அர்காயாவின் மகன் உசியேல் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். நறுமண வணிகரில் ஒருவரான அனனியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். இவர்கள் எருசலேமின் “பெரிய மதில்“ வரை புதுப்பித்தார்கள்.

எருசலேம் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநரும், ஊரின் மகனுமான இரபாயா அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார்.

இவர்களுக்கு அடுத்து, அருமப்பின் மகனான எதாயா தம் வீட்டிற்கு எதிரே இருந்த பகுதியைப் பழுதுபார்த்தார். அசாபினியாவின் மகனான அற்டிசு அதற்கு அடுத்து பகுதியைப் பழுதுபார்த்தார்.

ஆரிமின் மகனான மல்கியாவும், பகத்மோவாபின் மகனான அசுபும் மற்றொரு பகுதியையும், “சூளைக்காவல் மாடத்தையும்“ பழுது பார்த்தனர்.

எருசலேம் மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும், அல்லோகேசின் மகனுமான சல்லு¡மும் அவருடைய புதல்வியரும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர்.

ஆடீனும் சானோவாகில் வாழ்ந்தவர்களும், “பள்ளத்தாக்கு வரியலைப்“ பழுதுபார்த்தனர்: அதற்குத் கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர். “குப்பைமேட்டு வாயில்“ வரை ஆயிரம் முழம் மதிலைப் பழுதுபார்த்தார்கள்.

பெத்தக் கரேம் மாவட்டத்தின் ஆளுநரும், இரேக்காபின் மகனுமான மல்கியா, “குப்பைமேட்டு வாயிலைப்“ பழுது பார்த்தார்: அதைப் புதுப்பித்துக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தார்.

மிஸ்பா மாவட்டத்தின் ஆளுநரும், கொல்கோசேயின் மகனுமான சல்லு¡ம், “ஊருணிவாயிலைப்“ பழுது பார்த்தார்: அதைப் புதுப்பித்து முகடு கட்டுக் கதவுகளையும், பூட்டுகளையும் , தாழ்ப்பாள்களையும் அமைத்தார். மேலும் அவர் அரச பூங்காவிலிருந்த சேலா குளத்துச் சுவர்களைத் தாவீதின் ஊரிலிருந்து கீழே செல்லும் படிகள் வரை பழுது பார்த்தார்.

அவருக்குப் பிறகு, பெட்சூர் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநராய் இருந்த அசபூக்கின் மகனாகிய நெகேமியா தாவீதின் கல்லறைக்கு எதிரே, வெட்டப்பட்டிருந்த குளமும், படைவீரரின் பாசறையும் இருந்த பகுதிவரை பழுதுபார்த்தார்.

அவருக்குப் பிறகு, லேவியர் பழுதுபார்த்தனர். பானியின் மகனான இரகூம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். கெயிலா மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு ஆளுநரான அசபியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.

பிறகு, அவர்களுடைய உறவினர் பழுது பா¡த்தனர். கெயிலா மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும் ஏனதாதின் மகனுமான பவ்வாயும் பழுதுபார்த்தார்.

மிஸ்பாவின் ஆளுநரும் ஏசுவாவின் மகனுமான ஏட்சேர் மதிலின் மூலையில் ஆயுதக் கிடங்குக்கு எதிரே இருந்த அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.

அவருக்கு அடுத்து, சபாயின் மகன் பாரூக்கு அந்த மூலையிலிருந்து பெரிய குரு எலியாசிபின் வீட்டு வாயில்வரை பழுது பார்த்தார்.

அவருக்கு அடுத்து, ஆக்கோகின் மகனான உரியாவின் மகன் மெரேயோத்து எலியாசிபின் வீட்டு வாயிற்படி முதல் அவ்வீட்டின் கடைக்கோடிவரை பழுது பார்த்தார்.

அவருக்குப்பின் சமவெளியில் வாழ்ந்த குருக்கள் பழுது பார்த்தார்கள்.

இதன்பின் பென்யமினும், அசுபும் தங்கள் வீட்டுக்கு எதிரேயிருந்த பாகத்தைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குப்பின், அனனியாவின் மகனான மாசேயாவின் மகன் அசரியா, தம் வீட்டிற்கு அருகேயிருந்த பகுதியைப் பழுதுபார்த்தார்.

அவருக்குப்பின் அசரியாவின் வீட்டின் மூலையிலிருந்து மதிலின் மூலைவரையிலுள்ள மற்றொரு பகுதியை ஏனதாதின் மகன் பழுது பார்த்தார்.

மூலைக்கும் சிறைமுற்றத்தை நோக்கி அரச மாளிகையிலிருந்து உயர்ந்திருக்கும் காவல் மாடத்திற்கும் எதிரே இருந்த பகுதியை ஊசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அவருக்குப்பின் பாரோசின் மகன் பெதாயாவும்

ஒபேல் வாழ் கோவில் பணியாளர்களும், கிழக்கிலிருந்த “தண்ணீர் வாயிலின்“ எதிர்ப்புறத்தையும் உயர்ந்திருக்கும் கோபுரத்தையும் பழுதுபார்த்தனர்.

அவருக்குபின், உயர்ந்திருந்த பெரிய காவல்மாடத்திலிருந்து ஒபேல் வரையிலுள்ள பகுதியைத் தெக்கோவாவினர் பழுது பார்த்தனர்.

“குதிரை வாயில்“ முதற்கொண்டு குருக்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டிற்கு எதிரே உள்ள பகுதிகளைப் பழுது பார்த்தனர்.

அவர்களுக்குப்பின், இம்மேரின் மகன் சாதோக்கு தம் வீட்டிற்கு எதிரேயுள்ள பகுதியைப் பழுது பார்த்தார். அவருக்குப்பின் கீழ்வாயில் காவலரும், செக்கனியாவின் மகனுமான செமாயா பழுது பார்த்தார்.

அவர்களுக்குப் பின், செலேமியாவின் மகனான அனனியாவும், சாலபின் ஆறாவது மகனான காலு¡வும் மற்றொரு பகுதியைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குபின் பெரேக்கியாவின் மகனான மெசுல்லாம் தம் அறைக்கு எதிரே உள்ள பாகத்தைப் பழுதுபார்த்தார்.

அவருக்குப்பின், பொற்கொல்லர்களில் ஒருவரான மல்கியா கணக்கர் வாயிலுக்கு எதிரேயிருந்த கோவிற்பணியாளர், வணிகர் ஆகியோரின் குடியிருப்பிலிருந்து மூலையிலிருந்த மேல்மாடிவரையும் பழுது பார்த்தார்.

மூலையிலிருந்த மேல் மாடிக்கும் “ஆட்டு வாயிலுக்கும்“ இடையிலுள்ள பகுதியைப் பொற்கொல்லரும் வணிகரும் பழுது பார்த்தனர்.

அதிகாரம் 4.

நாங்கள் மதிலைக் கட்டுவதுபற்றிக் கேள்வியுற்ற சன்பலாற்று சினமுற்று வெகுண்டெழுந்து, யூதர்களை ஏளனம் செய்தான்.

தன் தோழர்கள் முன்னிலையிலும், சமாரியப் படையின் முன்னிலையிலும், இந்த அற்ப யூதர்கள் என்ன செய்யமுடியும்? அவர்கள் சும்மா விடப்படுவார்களா? அவர்களால் பலி செலுத்த முடியுமா? ஒரு நாளில் வேலையை முடித்து விடுவார்களா? எரிந்துபோன சாம்பல் குவியலிலிருந்து அவர்களால் கற்கள் உண்டாக்க இயலுமா? என்று எள்ளி நகையாடினான்.

அவனுக்கு அருகிலிருந்த அம்மோனியனான தோபியா ஆமாம், அவர்கள் அதைக் கட்டுகிறார்களாம்: ஆனால், ஒரு நரி அதன் மேல் ஏறிச்சென்றால்கூட அந்தக் கல்மதில் இடிந்துவிழும் என்று ஏளனம் செய்தான்.

எம் கடவுளே! நாங்கள் ஏளனம் செய்யப்படுவதைப் பாரும்! இந்த இழிவு அவர்களின் தலைமேலேயே சுமத்தப்படட்டும். அன்னியரின் நாட்டில் அவர்கள் அடிமைகளாகிக் கொள்ளையடிக்கப்படட்டும்.

அவர்களின் குற்றத்தை மூடிவிடாதேயும்! அவர்களின் பாவத்தை உம் முகத்திலிருந்து கழுவிவிடாதேயும்! ஏனெனில், கட்டுவோரை இழித்துரைத்தார்கள்.


இவ்வாறு நாங்கள் மதிலைத் தொடர்ந்து கட்டினோம். எல்லா மதில்களும் உயரத்திற்கு எழும்பிவிட்டன. மக்களும் பணி செய்வதில் முழு உள்ளத்துடன் ஈடுபட்டனர்.


சன்பலாற்று, தோபியா, அரேபியர், அம்மோனியர், அஸ்தோதியர் ஆகியோர், எருசலேமின் மதில்களைப் பழுதுபார்க்கும் வேலை முன்னேறிச் செல்வதையும், உடைப்புகள் அடைக்கப்பட்டுவருவதையும் கேள்வியுற்று மிகவும் சீற்றம் கொண்டனர்.

அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து எருசலேமின்மீது போர் தொடுக்கவும், அங்கே கலகத்தை உருவாக்கவும் சதி செய்தனர்.

நாங்களோ எங்கள் கடவுளை வேண்டினோம்: அவர்களிடமிருந்து காத்துக்கொள்ள, இரவும் பகலும் காவலர்களை அமர்த்தினோம்.

அப்பொழுது யூதா நாட்டினர், சுமப்போர் தளர்ந்து போயினர்: மண்மேடோ பெரிதாய் உள்ளது: மதில்களை நம்மால் கட்டிமுடிக்க இயலாது என்றனர்.

எங்கள் எதிரிகளோ, நாம் அவர்கள் நடுவே சென்று அவர்களைக் கொன்று, வேலையை நிறுத்தும்வரை, அவர்கள் இதை அறியாமலும், தெரியாமலும் இருக்கட்டும் என்று சொல்லிக்கொண்டனர்.

அவர்களைச் சுற்றி வாழ்ந்து வந்த யூதர்கள் பத்துமுறை வந்து எங்களிடம், எல்லாத் திசைகளிலிருந்தும் நம்மை எதிர்த்து வருகிறார்கள் என்று அறிவித்தனர்.

எனவே மதிலுக்குப் பின்புறமாக மிகத் தாழ்வான பகுதியில் திறந்த வெளியில் மக்களைக் குடும்பம் குடும்பமாக அவர்களின் வாள், ஈட்டி, வில்களோடு நிறத்தி வைத்தேன்.

தலைவர்களையும், அலுவலர்களையும், ஏனைய மக்களையும் பார்த்தேன். நான் எழுந்து அவர்களை நோக்கி, பகைவருக்கு அஞ்சாதீர்கள். மேன்மை மிக்கவரும் அஞ்சுதற்கு உரியவருமான ஆண்டவரை மனத்தில் கொண்டு உங்கள் சகோதரர், மகன்கள், மகள்கள், மனைவியர் ஆகியோர்க்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் போராடுங்கள் என்றேன்.

தங்கள் சதி எங்களுக்குத் தெரிந்துவிட்டது என்பதையும், அதைக் கடவுள் சிதறடித்ததார் என்பதையும் எங்கள் எதிரிகள் அறிய வந்தபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.

அந்நாள்முதல், என் பணியாளர்களில் பாதிப்பேர் வேலை செய்தனர். மற்றப் பாதிப்பேர் ஈட்டி, கேடயம், வில், மார்புக்கவசம் இவைகளை அணிந்துகொண்டு நின்றனர். மக்கள் தலைவர்கள் யூதா வீட்டார் அனைவரையும் மேற்பார்வை செய்தனர்.

மதில் கட்டுவோரும், சுமை சுமப்பவரும் ஒரு கையால் வேலை செய்தனர்: மறு கையிலோ ஆயுதம் தாங்கியிருந்தனர்.

கட்டுவோர் ஒவ்வொருவரும் தம் வாளை இடையில் கட்டிக்கொண்டு வேலை செய்தனர். எக்காளம் ஊதுபவன் என் அருகிலேயே இருந்தான்.

பிறகு நான் தலைவர்களையும், அலுவலர்களையும் ஏனைய மக்களையும் நோக்கிக் கூறியது: வேலை மிகுந்துள்ளது: பரந்துள்ளது: நாமோ மதில்நெடுகத் தனித்தனியே சிதறி நிற்கின்றோம்.

எந்த இடத்திலிருந்து எக்காள முழக்கம் கேட்குமோ, அந்த இடத்திற்கு எங்களிடம் ஒன்று கூடி வாருங்கள். நம் கடவுள் நமக்காகப் போர் புரிவார் .

இவ்வாறு நாங்கள் வேலை செய்துவந்தோம். எங்களுள் பாதிப்போர் அதிகாலைமுதல் விண்மீன்கள் தோன்றும்வரை ஆயுதம் தாங்கியிருந்தனர்.

அப்பொழுது மக்களைப் பார்த்து நான் கூறியது: ஒவ்வொருவரும் தம் வேலைக்காரரோடு இரவை எருசலேமில் கழிக்கட்டும். இவ்வாறு அவர்கள் நமக்காக இரவில் காவலும் பகலில் வேலையும் செய்வர் :

நான், என் சகோதரர், என் ஊழியர், என் மெய்க்காவலர் யாருமே எம் உடைகளைக் களையவேயில்லை. ஒவ்வொருவரும் வலக்கையில் ஆயுதம் தாங்கியிருந்தோம்.

அதிகாரம் 5.

பின்னர் ஆடவரும் பெண்டிரும் தங்கள் இனத்தவரான யூதர்களுக்கு எதிராகப் பெரிதும் முறையிட்டனர்.

அவர்களில் சிலர், எங்கள் புதல்வர், புதல்வியர் உள்பட நாங்கள் பலர். எனவே நாங்கள் உண்டு, உயிர் வாழும் பொருட்டு எங்களுக்குத் தானியம் கிடைக்கும்படி செய்யும் என்றனர்.

இன்னும் சிலர் கூறியது: எங்கள் நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் அடைமானம் வைத்துப் பஞ்சத்தில் பிழைக்கத் தானியம் வாங்கினோம் என்றனர்.

வேறு சிலர் கூறியது: எங்கள் நிலங்களுக்காகவும் திராட்சைத் தோட்டத்திற்காகவும் மண்ணுக்குச் செலுத்த வேண்டிய தீர்வைக்காகக் கடன் வாங்கினோம். எங்கள் மக்களும் அவர்களின் மக்களைப் போன்றவர்கள் தாமே!

எங்கள் சகோதரர்களும் எங்களைப் போன்றவர்கள் தாமே! இருப்பினும் நாங்கள், எங்கள் புதல்வரையும் புதல்வியரையும் அடிமைகளாக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே! எங்கள் புதல்வியர் ஏற்கனவே அடிமைகளாகி விட்டனர். அவர்களை மீட்க எங்களிடம் வசதியில்லை. ஏனெனில் எங்கள் நிலங்களும், திராட்சைத் தோட்டங்களும் மற்றவர் கையில் உள்ளன .

அவர்களது முறையீடுகளையும், இவ்வார்த்தைகளையும் கேட்டபொழுது, நான் மிகவும் சினமுற்றேன்.

நான் என்னுள் சிந்தித்தேன். பின் தலைவர்களையும், அதிகாரங்களையும் கண்டித்து அவர்களிடம் கூறியது: நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரர்களிடமிருந்து அநியாய வட்டி வாங்குவதேன்? பிறகு அவர்களுக்கு எதிராகப் பெரும் சபையைக் கூட்டினேன்.

அவர்களைப் பார்த்து நான், வேற்றினத்தாருக்கு விற்கப்பட்டிருந்த யூத சகோதரர்களை, நம்மால் முடிந்த அளவு மீட்டு வந்துள்ளோம். அப்படியிருக்க நீங்கள் உங்கள் சகோதரர்களை விற்கலாமா? அவர்கள் நமக்கே விற்கப்பட வேண்டுமா? என்று கேட்டேன். அவர்களோ மறுமொழி கூற இயலாது மெளனமாக இருந்தனர்.

மீண்டும் நான் கூறியது: நீங்கள் செய்வது சரியில்லை. நம் எதிரிகளான வேற்றினத்தார் நம்மை ஏளனம் செய்யாதவாறு நீங்கள் நம் கடவுளுக்கு அஞ்சி நடப்பதே முறை.

நானும் என் சகோதரரும் என் பணியாளரும் கடனாகப் பணத்தையும், தானியத்தையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அக்கடனைக் கேளாது விட்டு விடுவோம்.

இன்றே நீங்களும் அவர்களது நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும், வீடுகளையும் மற்றுக்கு ஒன்று வட்டியாக வாங்கிய பணம், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவைகளையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள் .

அதற்கு அவர்கள், நீர் சொன்னபடியே நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். நாங்கள் அவர்களிடமிருந்து எதையும் கேட்கமாட்டோம் என்றனர். நான் குருக்களை அழைத்து இவ் வார்த்தையின்படி செய்வோம் என்று அவர்களை ஆணையிட்டுக் கூற வைத்தேன்.

மேலும், நான் என் ஆடையை உதறிவிட்டு, இவ் வார்த்தையின்படி நடக்காத ஒவ்வொருவரையும் கடவுள் இவ்வாறே தம் வீட்டினின்றும், திருப்பணியினின்றும் உதறிவிடுவாராக. அவர்கள் இவ்வாறு உதறிவிடப்பட்டு, வெறுமையாக்கப்படுவர் என்றேன். இதற்குச் சபையார் அனைவரும் ஆமென் என்று சொல்லி ஆண்டவரைப் புகழ்ந்தனர். பின்னர் மக்கள் தாங்கள் வாக்களித்தபடியே செய்தனர்

மேலும் யூதா நாட்டில் ஆளுநராய் இருக்குமாறு அர்த்தக்சஸ்தா என்னை நியமித்த நாள்முதல், அதாவது மன்னரது ஆட்சியின் இருபதாம் ஆண்டுமுதல் முப்பத்திரண்டாம் ஆண்டுவரை, ஆக இப்பன்னிரண்டு ஆண்டுகளாய், நானும் என் சகோதரரும், ஆளுநர்களுக்குரிய படியை வாங்கி உண்ணவில்லை.

எனக்கு முன்னிருந்த ஆளுநர்கள் அதிகத் தீர்வை விதித்து மக்களை வதைத்தனர். உணவு, திராட்சை இரசத்தோடு நாற்பது செக்கேல் வெள்ளியும் அவர்களிடம் வசூலித்தனர். அவர்களுடைய அலுவலர்கள் மக்கள்மீது அதிகாரம் காட்டி வந்தனர். நானோ கடவுளுக்கு அஞ்சி அவ்வாறெல்லாம் செய்யவில்லை.

மேலும் இம்மதில் வேலைக்கு என்னை முற்றும் ஈடுபடுத்திக் கொண்டேன். என் பணியாளர்கள் அனைவரும் அவ்வேலைக்கே அங்குக் கூடிவந்தார்கள். நாங்கள் நிலம் ஏதும் வாங்கிச் சேர்க்கவில்லை.

மேலும் யூதர்களும், மக்கள் தலைவர்களுமான மற்றைம்பது பேரும், எங்களைச் சுற்றி அண்டை நாட்டினின்று வந்திருந்த அனைவரும் எனது பந்தியில் உணவருந்தினார்கள்.

ஒவ்வொரு நாளும் என் பந்திக்குத் தயார் செய்யப்பட்டவை பின்வருமாறு: ஒரு காளை, கொழுத்த ஆறு ஆடுகள், மேலும் கோழி வகைகள் பத்து. நாளுக்கு ஒருமுறை எல்லாவித இரசமும் ஏராளமாகக் கொள்முதல் செய்யப்பட்டது: எனினும் ஆளுநருக்குரிய படிக்கு நான் உரிமை கொண்டாடவில்லை. ஏனெனில் இம்மக்கள் பட்ட பாடு மிகப்பெரிது.

என் இற¨வா! இம் மக்களுக்கு நான் செய்துள்ள எல்லா நன்மைகளுக்கும் ஏற்ப எனக்கு ஆதரவாயிரும்.

அதிகாரம் 6.

நான் மதிலைக் கட்டி முடித்துவிட்டேன் என்றும், அதில் உடைப்பு ஒன்றுமில்லையென்றும், மேலும் இதுவரை நான் கோட்டை வாயில்களில் கதவுகள் அமைக்கவில்லை என்றும், சன்பலாற்று, தோபியா, கெசேம், அரேபியர், மற்றும் எங்கள் எதிரிகள் அறிய வந்தனர்.

அப்பொழுது, சன்பலாற்று, தோபியா, கெசேம் ஆகியோர் என்னிடம் பதனுப்பி, நீர் புறப்பட்டு வாரும்: ஓனோ சமவெளியிலுள்ள ஊர் ஒன்றில் சந்திப்போம் என்றனர். ஆனால் அவர்கள் எனக்குத் தீங்கிழைக்கவே எண்ணியிருந்தனர்.

அப்பொழுது நான் அவர்களிடம் பதனுப்பி, முக்கியமான அலுவலில் நான் ஈடுபட்டுள்ளேன். எனவே நான் அங்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளேன். நான் இந்த வேலையை விட்டு விட்டு உங்களிடம் வந்தால், இது முடங்கிவிடும் அன்றோ! என்றேன்.

இவ்வாறாக அவர்கள் எனக்கு நான்கு முறை பதனுப்பினார்கள். நானும் இதேமுறையில் பதில் அனுப்பினேன்.

ஜந்தாம் முறையும் சன்பலாற்று தன் அலுவலன் மூலம் இதே செய்தியை எனக்கு அனுப்பினான். அவனுடைய கையில் திறந்த மடல் ஒன்றிருந்தது.

அதில் எழுதுப்பட்டிருந்தது பின்வருமாறு: கெசேமின் கூற்றின்ப்டி வேற்றினத்தாரிடையே ஒரு செய்தி பரவியுள்ளது. அதன்படி, நீரும் யூதர்களும் கலகம் ஏற்படுத்திச் சூழ்ச்சி செய்துள்ளீர்கள். இதற்காகவே நீர் மதிலைக் கட்டி எழுப்புகிறீர். நீர் அவர்களுக்கு அரசர் ஆக விரும்புகிறீர்.

யூதாவில் ஓர் அரசர் உங்களுக்கு இருக்கிறார் என்று எருசலேமில் அறிவிக்க இறைவாக்கினர்களை நீர் ஏற்படுத்தியுள்ளீர். இச்செய்திகள் மன்னருக்கு எட்டிவிடும். எனவே நீர் வாரும். நாம் ஒன்றாக ஆலோசிக்கலாம்.

நான் அவனுக்குப் பதில் அனுப்பினேன்: நீர் சொல்வதுபோல் எவையும் நடக்கவில்லை. இவையெல்லாம் நீர் செய்யும் கற்பனையே.

ஏனெனில் அவர்கள் அனைவரும் எங்களை அச்சுறுத்தினர், அவர்கள் கைகள் வேலை செய்வதில் தளர்ந்துவிடும். வேலை நின்று விடும் என்று சொல்லி வந்தனர். எனவே, கடவுளே! என் கைளை வலிமைப்படுத்தும்.

நான், மெகேற்றபேலுக்குப் பிறந்த தெலாயாவின் மகன் செமாயாவின் வீட்டுக்குச் சென்றேன். அவன் அங்கு அடைபட்டுக்கிடந்தான். அவன், நாம் கடவுளின் இல்லமான கோவிலின் உள்ளே சந்திப்போம். கோவிலின் கதவுகளை நாம் மூடிக்கொள்வோம். ஏனெனில் அவர்கள் உம்மைக் கொல்ல வருகிறார்கள். உம்மைக் கொல்ல இரவில் வருகிறார்கள்.

நான் மறுமொழியாக: என்னைப்போன்ற மனிதன் ஓடி ஒளிவது முறையா? நான் பிழைத்துக் கொள்ளக் கோவிலுக்குள் செல்வதா? நான் செல்ல மாட்டேன் என்றேன்.

அப்பொழுது, கடவுள் அவனை அனுப்பவில்லை என்றும் , தோபியாவும் சன்பலாற்றும் அவனுக்குக் கையூட்டுக் கொடுத்து எனக்கு எதிராக இறைவாக்கு உரைக்கச் செய்தனர் என்றும் நான் அறிந்து கொண்டேன்.

அஞ்சியவாறு நான் இதைச் செய்யவும், இதனால் பாவம் கட்டிக்கொள்ளவும், என் பெயருக்கு இழிவு ஏற்படுத்தி என்னைச் சிறுமைப்படுத்தவும் அவர்கள் அவனுக்குக் கையூட்டுத் தந்திருந்தனர்.

“என் கடவுளே! தோபியா, சன்பலாற்று இவர்களின் இச்செயல்களையும் இறைவாக்கினனான நொவாதியாவையும் என்னை அச்சுறுத்த முயன்ற ஏனைய இறைவாக்கினர்களையும் மறந்து விடாதேயும்.“

மதில் ஜம்பத்திரண்டு நாள்களுள் கட்டப்பட்டு எலு¡ல் மாதம் இருபத்தைந்தாம் நாளில் நிறைவடைந்தது.

இதை எங்கள் எதிரிகள் அனைவரும் கேள்வியுற்றபோது, எங்களைச் சூழ்ந்திருந்த எல்லா நாட்டினரும் அஞ்சி, மனம் தளர்ந்து போயினர்: ஏனெனில் இவ்வேலை நம் கடவுளின் உதவியால் நிறைவேறியது என்று கண்டனர்.

அக்காலத்தில் யூதாவின் தலைவர்கள் தோபியாவுக்குப் பல மடல்கள் அனுப்பி வந்தார்கள். தோபியாவின் மடல்களும் அவர்களுக்கு வந்து கொண்டிருந்தன.

ஏனெனில், யூதாவில் பலர் அவனுக்கு வாக்குறுதி தந்திருந்தார்கள். ஏனென்றால் அவன், ஆரகின் மகனான செக்கனியாவுக்கு மருமகன். அவனுடைய யோகனான், பெரக்கியாவுக்குப் பிறந்த மெசுல்லாவின் மகளை மணந்திருந்தான்.

எனவே அவர்கள் எனக்கு முன்பாக அவனது நற்செயல்களைப்பற்றிச் சொல்வார்கள். நான் சொன்னதை அவனிடம் சொல்வார்கள். என்னை அச்சுறுத்துப்படி தோபியா மடல்கள் அனுப்பிக் கொண்டிருந்தான்.

அதிகாரம் 7.

மதிலைக் கட்டி முடித்தபின், நான் கதவுகளை அமைத்தேன்: வாயிற் காவலர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் அமர்த்தினேன்.

என் சகோதரர் அனானியிடமும், கொத்தளத் தலைவர் அனனியாவிடமும், எருசலேமின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தேன். ஏனெனில் அனானி மற்றவர்களை விட உண்மையானவர்: கடவுளுக்கு அஞ்சியவர்.

நான் அவர்களைப் பார்த்து, வெயில் ஏறும்வரை எருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம்: காவலர்கள் போகுமுன் கதவுகளை மூடித் தாழிடுங்கள்: புதல்வர் எருசலேமில் வாழ்வோரைக் காவலராய் நியமியுங்கள்: அவர்களுள் சிலர் குறிக்கப்பட்ட இடங்களிலும் மற்றும் சிலர் தங்கள் வீட்டிற்கு எதிரேயும் காவல் புரியட்டும் என்று சொன்னேன்.

எருசலேம் நகர் பரந்ததும் பெரியதுமாய் இருந்தது. ஆனால் அதனுள் வாழ்ந்து வந்த மக்கள் வெகு சிலரே. வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை.

அப்பொழுது கடவுள் என்னைத் பண்டியபடி, தலைவர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரையும் வழிமரபு வாரியாகப் பதிவு செய்தேன். அப்பொழுது அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தவர்¢ன் தலைமுறைப் பதிவேட்டைக் கண்டுபிடித்தேன். அதில் எழுதியிருக்கக் கண்டது பின்வருமாறு:

பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்படுத்தப்பட்டு, பின்னர் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு, எருசலேமுக்கும் யூதாவில் அவரவர் நகருக்கும் திரும்பி வந்த மாநில மக்கள் இவர்களே: செருபாபேல், ஏசுவா, நெகேமியா, அசரியா, இரகமியா, நகமானி, மோர்தக்காய், பில்சான், மிசுபெரேத்து, பிக்வாய், நெகூம், பானா.

இவர்களோடு வந்த இஸ்ரயேல் மக்களில் ஆடவரின் எண்ணிக்கை:

பாரோசின் புதல்வர் இரண்டாயிரத்து மற்றுமுப்பதிரண்டு பேர்:

செபாற்றியாவின் புதல்வர் முந்மற்று எழுபத்திரண்டு பேர்:

அராகின் புதல்வர் அறுமற்று ஜம்பத்திரண்டு பே+¥:

பாகாத் மோவாபின் புதல்வரான ஏசுவா, யோவாபு ஆகியோரின் புதல்வர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப் பேர்:

ஏலாமின் புதல்வர் ஆயிரத்து இருமற்று ஜம்பத்து நான்கு பேர்:

சத்பவின் புதல்வர் எண்ணூற்று நாற்பத்தைந்து பேர்:

சக்காயின் புதல்வர் எழுமற்று அறுபது பேர்:

பின்டீயின் புதல்வர் அறுமற்று நாற்பத்தெட்டு பேர்:

பேபாயின் புதல்வர் அறுமற்று இருபத்தெட்டு பேர்:

அசகாதின் புதல்வர் இரண்டாயிரத்து முந்மற்று இருபத்திரண்டு பேர்:

அதோனிக்காமின் புதல்வர் அறுமற்று அறுபத்தேழு பேர்:

பிக்வாயின் புதல்வர் இரண்டாயிரத்து அறுபத்தேழு பேர்:

ஆதினின் புதல்வர் அறுமற்று ஜம்பத்தைந்து பேர்:

எசேக்கியாவின் வழிவந்த அற்றேரின் புதல்வர் தொண்ணூற்றெட்டுப் பேர்:

ஆசுமின் புதல்வர் முந்மற்று இருபத்தெட்டுப் பேர்:

பேசாயின் புதல்வர் முந்மற்று இருபத்து நான்கு பேர்:

ஆரிப்பின் புதல்வர் மற்றுப்பன்னிரண்டு பேர்:

கிபயோனின் புதல்வர் மற்றுத் தொண்ணூற்றைந்து பேர்:

பெத்லகேம், நேற்றோபாவின் ஆண்கள் மற்று எண்பத்தெட்டுப் பேர்:

அனத்தோத்தின் ஆண்கள் மற்று இருபத்தெட்டுப் பேர்:

பெத்தசுமாவேத்தின் ஆண்கள் நாற்பத்திரண்டு பேர்:

கிரியத்து எயாரிம், கெபிரா, பெயரோத்து ஆகியவற்றின் ஆண்கள் எழுமற்று நாற்பத்திமூன்று பேர்:

இராமா, மற்றும் கேபாவின் ஆண்கள் அறுமற்று இருபத்தொரு பேர்:

மிக்மாசின் ஆண்கள் மற்று இருபத்திரண்டு பேர்:

பெத்தேல், மற்றும் ஆயினின் ஆண்கள் மற்று இருபத்து மூன்று பேர்:

மற்றொரு நெபோவின் ஆண்கள் ஜம்பத்திரண்டு பேர்:

மற்றொரு ஏலாமின் புதல்வர் ஆயிரத்து இருமற்று ஜம்பத்திநான்கு பேர்:

ஆரிமின் புதல்வர் முந்மற்று இருபது பேர்:

எரிகோவின் புதல்வர் முந்மற்று நாற்பத்தைந்து பேர்:

லோது, ஆதிது, ஓனோ ஆகியோரின் புதல்வர் எழுமற்று இருபத்தொரு பேர்:

செனாவின் புதல்வர் மூவாயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது பேர்.

குருக்கள்: ஏசுவாவின் வீட்டைச் சார்ந்த எதாயாவின் புதல்வர் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்:

இம்மேரின் புதல்வர் ஆயிரத்து ஜம்பத்திரண்டு பேர்:

பஸ்கூரின் புதல்வர் ஆயிரத்து இருமற்று நாற்பத்தேழு பேர்:

ஆரிமின் புதல்வர் ஆயிரத்துப் பதினேழு பேர்.

லேவியர்: ஓதவாவின் புதல்வரில், கத்மியேலின் வழிவந்த ஏசுவாவின் புதல்வர் எழுபத்து நான்கு பேர்:

பாடகர்: ஆசாபின் புதல்வர் மற்று நாற்பத்தெட்டுப் பேர்:

வாயிற்காவலர்: சல்லு¡ம், ஆற்றேர், தல்மோன், அக்குபு, அத்தித்தா, சோபாய் ஆகியோரின் புதல்வர் மற்று முப்பத்தெட்டுப் பேர்.

கோவில் ஊழியர்: சிகாவின் புதல்வர்: அசுப்பாவின் புதல்வர்: தபாயோத்தின் புதல்வர்:

கேரோசின் புதல்வர்: சீயாவின் புதல்வர்: கிதோனின் புதல்வர்:

இலபனாவின் புதல்வர்: அகாபாவின் புதல்வர்: சல்மாயின் புதல்வர்:

அனானின் புதல்வர்: கிதேலின் புதல்வர்: ககாரின் புதல்வர்:

இரயாயாவின் புதல்வர்: இரசினின் புதல்வர்: நெக்கோதாவின் புதல்வர்:

கசாமின் புதல்வர்: உசாவின் புதல்வர்: பாசயாகின் புதல்வர்:

பேசாயின் புதல்வரான மெயோனிமின் புதல்வர்: நெபுசசிமின் புதல்வர்:

பக்புகின் புதல்வரான அகுப்பாவின் புதல்வர்: அர்குரின் புதல்வர்:

பட்சிலித்தின் புதல்வர்: மெகிதாவின் புதல்வர்: அர்சாவின் புதல்வர்:

பர்கோசின் புதல்வர்: சீசாவின் புதல்வர்: தேமாகின் புதல்வர்:

நெட்சியாகின் புதல்வர்: அற்றிப்பாவின் புதல்வர்:

சாலமோனுடைய பணியாளர்களின் புதல்வர்: சோற்றாவின் புதல்வர்: சொபரேத்தின் புதல்வர்: பெரிதாவின் புதல்வர்:

ஏலாவின் புதல்வர்: தர்கோனின் புதல்வர்: கித்தேலின் புதல்வர்:

செபத்தியாவின் புதல்வர்: அற்றிலின் புதல்வர்: பொக்கரேத்து சபாயிமின் புதல்வர்: அம்மோனின் புதல்வர்:

கோவில் பணியாளரும் சாலமோனின் பணியாளரின் புதல்வர்களும் மொத்தம் முந்மற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.

மேலும் தெல்மெல்லா, தெல்கர்சா, கெருபு, அதோன் இம்மேர் ஆகிய இடங்களிலிருந்து வந்தும், தங்கள் மூதாதையரின் குலத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்கள் என்பதையும் எண்பிக்க இயலாதவர்கள் பின்வருமாறு:

தெலாயாவின் புதல்வர் தோபியாவின் புதல்வர், நெக்கோதாவின் புதல்வர் ஆகிய அறுமற்று நாற்பத்திரண்டு பேர்.

குருக்கள்: ஒபய்யாவின் புதல்வர்: அக்கோசின் புதல்வர்: பர்சில்லாயின் புதல்வர். பர்சில்லாய் கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மணந்ததால் அப்பெயரால் அழைக்கப்பட்டார்.

இவர்கள் அனைவரும் தங்கள் தலைமுறை அட்டவணை எழுதப்பட்ட ஏடுகளைத் தேடியும் கிடைக்காததால் குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

ஊரிம், தும்மிம் கொண்ட குரு ஒருவர் வரும் வரை திருத்பயக உணவில் பங்கு கொள்ளக்கூடாது என்று அவர்களுக்கு ஆளுநர் ஆணையிட்டார்.

மக்கள் சபையாரின் மொத்த எண்ணிக்கை நாற்பத்திரண்டு ஆயிரத்து முந்மற்று அறுபது.

அவர்களைத் தவிர அவர்களின் ஆண் ஊழியர்களும் பெண் ஊழியர்களும் ஏழாயிரத்து முந்மற்று முப்பத்தேழு. மற்றும் அவர்களுக்கு இருமற்று நாற்பத்தைந்து பாடகரும், பாடகிகளும் இருந்தார்கள்.

அவர்களுடைய குதிரைகள் எழுமற்று முப்பத்தாறு: கோவேறு கழுதைகள் இருமற்று நாற்பத்தைந்து:

அவர்களுடைய ஒட்டகங்கள் நாடீற்று முப்பத்தைந்து: கழுதைகள் ஆறாயிரத்து எழுமற்றிருபது.

இறுதியாக குலத்தலைவர்களில் சிலர் வேலைக்காகச் கொடுத்தது பின்வருமாறு: ஆளுநர், கருவூலத்திற்கு ஆயிரம் பொற்காசுகள், ஜம்பது பாத்திரங்கள், ஜந்மற்று முப்பது குருத்துவ ஆடைகள் ஆகியவற்றைத் தந்தார்.

குலத்தலைவர்களில் வேறுசிலர், வேலைக்காகக் கருவூலத்திற்கு இருபதாயிரம் பொற்காசுகளும் ஆயிரத்து ஜமறு கிலோகிராம் வெள்ளியும் கொடுத்தார்கள்.

ஏனைய மக்கள் கொடுத்ததாவது: இருபதாயிரம் பொற்காசுகள், ஆயிரத்து முந்மற்று எழுபது கிலோகிராம் வெள்ளி, அறுபத்தேழு குருத்துவ உடைகள்.

குருக்களும், லேவியரும், வாயிற்காவலரும், பாடகரும், மக்களுள் சிலரும், கோவில் பணியாளரும் ஆகிய இஸ்ரயேலர் அனைவரும் தம் நகர்களில் குடியேறினர். ஏழாவது மாதம் வந்தபோது இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தம் நகர்களில் இருந்தார்கள்.

அதிகாரம் 8.

மக்கள் அனைவரும், ஒரே ஆளென, தண்ணீர் வாயிலுக்கு எதிரே இருந்த வளாகத்தில் ஒன்றுகூடினர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குக் கொடுத்த மோசேயின் திருமலைக் கொண்டுவருமாறு திருமல் வல்லுநர் எஸ்ராவை வேண்டினர்.

அவ்வாறே ஏழாம் மாதம் முதல்நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலயில் திருமலைக் கொண்டு வந்தார்.

தண்ணீர் வாயிலுக்குமுன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருமலுக்குச் செவி கொடுத்தனர்.

திருமல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மர மேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு அருகே வலப்பக்கத்தில் மத்தித்தியா, சேமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசேயா ஆகியோரும், இடப்பக்கத்தில் பெதாயா, மிசாவேல், மல்கியா, ஆசும், அசுபதீனா, செக்கரியா, மெசுல்லாம் ஆகியோரும் நின்று கொண்டிருந்தார்கள்.

எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருமலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்: திருமலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள்.

அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி ஆமென்! ஆமென்! என்று பதிலுரைத்தார்கள்: பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்.

மேலும் லேவியரான ஏசுவா, பானி, செரேபியா, யாமின், கூபு, சபத்தாய், ஓதியா, மாசேயா, கெலிற்றா, அசரியா, யோசபாத்து, அனான், பெலாயா ஆகியோர் சட்டத்தை மக்களுக்கு விளக்கினார்கள். மக்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.

மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.

ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருமல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்: எனவே நீங்கள் அழுதுபுலம்ப வேண்டாம் என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக்கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள். 10 . அவர் அவர்களைப் பார்த்து, நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்: எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே: எனவே வருந்த வேண்டாம்: ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை என்று கூறினார்.

எனவே லேவியர் எல்லா மக்களையும் நோக்கி, அமைதியாயிருங்கள்: ஏனெனில் இன்று புனித நாள், துயரம் கொள்ளாதீர்கள் எனச் சொல்லி அழுகையை அமர்த்தினார்கள்.

எல்லா மக்களும் அவர்களுக்குக் கூறப்பட்ட வார்த்தைகளைப் புரிந்துகொண்டதால், உண்ணவும், குடிக்கவும், உணவு அனுப்பவும், மகிழ்ச்சி கொண்டாடவும் புறப்பட்டுச் சென்றார்கள்.

இரண்டாம் நாள் அனைத்து மக்களின் குலத்தலைவர்களும், குருக்களும், லேவியர்களும், திருமல் வல்லுநரான எஸ்ராவிடம் திருச்சட்டத்தின் சொற்களைக் கற்றுக்கொள்ளக் கூடி வந்தார்கள்.

அப்பொழுது அவர்கள், ஏழாம் மாதத் திருவிழாக் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் கூடாரங்களில் தங்கியிருக்க வேண்டும் என்று ஆண்டவர் மோசே வழியாகத் தந்த கட்டளை திருச்சட்டத்தில் எழுதியிருக்கக் கண்டார்கள்.

ஆகையால், திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, கூடாரங்கள் அமைப்பதற்கு மலைகளுக்குச் சென்று ஒலிவக் கிளைகள், காட்டு ஒலிவக் கிளைகள், மிருதுச்செடி கிளைகள், போ£ச்ச ஓலைகள் மற்றும் அடர்ந்த மரக் கிளைகளையும் கொண்டு வாருங்கள் என்று தங்களுடைய நகரங்கள் எல்லாவற்றிலும் எருசலேமிலும் பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்கள்.

எனவே மக்கள் புறப்பட்டுச் சென்று, அவற்றைக் கொண்டு வந்தார்கள். ஒவ்வொருவரும், தம் வீட்டின் மேல்மாடியிலும் தங்கள் முற்றங்களிலும், கடவுளின் இல்லமுற்றங்களிலும், தண்ணீர் வாயில் வளாகத்திலும், எப்ராயிம் வாயில் வளாகத்திலும் தமக்குக் கூடாரங்கள் அமைத்துக் கொண்டார்கள்.

அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த சபையார் அனைவரும் கூடாரங்கள் அமைத்து அக்கூடாரங்களில் தங்கினர். மனின் மகன் யோசுவாவின் காலத்திலிருந்து அன்றுவரை இஸ்ரயேல் மக்கள் இவ்விதம் செய்ததில்லை. அன்று பெருமகிழ்ச்சி நிலவியது.

எஸ்ரா முதல்நாள் தொடங்கிக் கடைசிநாள்வரை கடவுளின் திருச்சட்டமலை உரக்க வாசித்தார். அவர்கள் ஏழு நாளளவும் திருவிழாக் கொண்டாடினர். சட்ட ஒழுங்கின்படி, எட்டாம் நாள் பெரும் சபையைக் கூட்டினர்.

அதிகாரம் 9.

சாக்கு உடை அணிந்து, புழுதியைத் தங்கள்மேல் பூசிக் கொண்டு நோன்பிருக்குமாறு அம்மாதத்தின் இருபத்து நான்காம் நாளன்று மக்கள் ஒன்று கூட்டப்பட்டனர்.

இஸ்ரயேல் இனத்தார் வேற்றினத்தாரிடமிருந்து பிரிந்து நின்றனர். எழுந்து நின்று தங்கள் பாவங்களையும், தங்கள் முன்னோரின் குற்றங்களையும் அறிக்கையிட்டனர்.

ஒவ்வொரு நாளும் பகலில் கால் பகுதியைத் தங்கள் இடத்திலேயே எழுந்து நின்று கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டமலை வாசிப்பதிலும், மற்றொரு கால் பகுதியைத் தங்கள் பாவங்களை அறிக்கையிடுவதிலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரைத் தொழுவதிலும் செலவழித்தனர்.

மீண்டும், லேவியரான ஏசுவா, பானி, கெத்மியேல், செபானியா, பூனி, செரேபியா, பானி, கெனானி ஆகியோர், படியின்மேல் நின்று கொண்டு உரத்த குரலில் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினார்கள்.

பின்பு, லேவியரான ஏசுவா, கத்மியேல், பானி, அசபினியா, செரேபியா, ஓதியா, செபானியா, பெத்தகியா எழுந்து, என்றுமுள உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுங்கள் என்றனர். அவர்கள் பதில்மொழியாக உரைத்தது. எல்லாப் புகழ்ச்சிக்கும், வாழ்த்துக்கும் எட்டாத மாட்சி மிகு உமது பெயர் போற்றி! போற்றி!

நீர் ஒருவரே ஆண்டவர்! நீரே வானத்தையும், விண்வெளி வானங்களையும், வான அணிகளையும், நிலத்தையும், அதிலுள்ள அனைத்தையும், கடலையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தவர்! அவற்றையெல்லாம் வாழ வைப்பவர்! வானக அணிகள் உமக்கு அடிபணிகின்றன.

ஆபிராமைத் தேர்ந்தேடுத்து, ஊர் என்ற கல்தேயர்களின் நகரினின்று வெளிக்கொணர்ந்து அவர் பெயரை ஆபிரகாம் என்று மாற்றியமைத்த கடவுளாகிய ஆண்டவர் நீரே!

உம்மீது பற்றுக் கொண்ட அவருடைய இதயத்தைக் கண்டீர்! கானானியா, இத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியர் ஆகியோரின் நாட்டை அவருடைய வழி மரபினருக்குத் தருவதாக அவரோடு உடன்படிக்கை செய்தீர்! நீர் நீதி உள்ளவர்! எனவே உமது வார்த்தையை நிறைவு செய்தீர்!

எகிப்தில் வாழ்ந்த எங்கள் மூதாதையரின் துன்பத்தைக் கண்ணோக்கினீர். செங்கடலில் அவர்களின் கூக்குரலுக்குச் செவிசாய்த்தீர்!

பார்வோனிடமும், அவன் அலுவலர்கள் எல்லோரிடமும் அவனது நாட்டின் அனைத்து மக்களிடமும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் விளங்கச் செய்தீர்! ஏனெனில் எம் மூதாதையர்களை அவர்கள் செருக்குடன் நடத்தினார்கள் என்பதை நீர் அறிவீர்! இந்நாளில் இருப்பது போல் உமது பெயரை நீர் விளங்கச் செய்தீர்!

அவர்கள்முன் கடலைப் பிளந்தீர்: எனவே, கடலின் நடவே உலர்ந்த தரையில் அவர்கள் கடந்து போனார்கள். அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையோ கல்லைப் போன்று ஆழ்கடலின் பாதாளத்திற்குள் வீழ்த்தினீர்!

நீர் அவர்களைப் பகலில் மேகத் பணினால் வழி நடத்தினீர்! இரவில் நெருப்புத் பணினால் அவர்களின் வழிக்கு ஒளி கொடுத்து அதில் நடக்கச் செய்தீர்!

நீர் சீனாய் மலை இறங்கினீர்! விண்ணிலிருந்து அவர்களோடு பேசினீர்! நேர்மையான நீதி நெறிகளையும், உண்மையான சட்டங்களையும், நல்ல நியமங்களையும் விதிமுறைகளையும் தந்தீர்!

புனிதமான ஓய்வு நாளைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்தீர்! விதிமுறைகளையும், நியமங்களையும், சட்டங்களையும், உமது அடியாராகிய மோசே வழியாக அவர்களுக்குக் கட்டளையிட்டீர்!

அவர்கள் பசியாயிருக்கையில், விண்ணிலிருந்து உணவு அளித்தீர்! அவர்கள் தாகமாயிருக்கையில், பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்தீர்! நீர் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த நாட்டை அடைந்து அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு பணித்தீர்.

ஆனால் அவர்களும், எங்கள் முன்னோரும், செருக்குடன் நடந்து வணங்காக் கழுத்தினராகி, உமது விதிமுறைகளுக்குச் செவி கொடுக்கவில்லை.

அவர்கள் செவி கொடுக்க மறுத்ததுமல்லாமல், நீர் அவர்களிடம் செய்திருந்த உமது அருஞ்செயல்களையும் நினைத்துப் பார்க்கவுமில்லை. மாறாக, வணங்காக் கழுத்தினராயக் கலகம் செய்து ஒரு தலைவரை ஏற்படுத்தி, அடிமை வாழ்வுக்கு மீண்டும் செல்ல முற்பட்டனர். தயை, சாந்தம், இரக்கம், நீடிய பொறுமை மற்றும் பரிவிரக்கம் கொண்ட கடவுளான நீரோ அவர்களைத் தள்ளிவிடவில்லை.

அவர்கள் ஒரு வார்ப்புக் கன்றுக் குட்டியைச் செய்து, “உங்களை எகிப்திலிருந்து மீட்டுவந்த உங்கள் கடவுளைப் பாருங்கள்“ என்று பெரும் இறைநிந்தனைகளைச் செய்த போதும்,

நீர் உமது பேரிரக்கத்தினால் அவர்களைப் பாலை நிலத்திலே கைவிட்டு விடவில்லை, அவர்களைப் பகலில் வழிநடத்தி வந்த மேகத் பணையும், அவர்கள் செல்ல வேண்டிய பாதையை அரவில் காட்டி வந்த நெருப்புத்பணையும் அவர்களை விட்டு விலக்கவுமில்லை.

அவர்களுக்கு அறிவு புகட்ட உமது நல்ல ஆவியைக் கொடுத்தீர். உமது மன்னாவை அவர்களுக்கு உண்ணக் கொடுக்க நீர் மறுக்கவில்லை. அவர்களின் தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தீர்.

நாற்பது ஆண்டுகளாய்ப் பாலை நிலத்தில் அவர்களைப் பராமரித்தீர். அவர்களுக்கு எந்தக் குறையுமில்லை. அவர்கள் ஆடைகள் கிழிந்து போகவுமில்லை. அவர்கள் கால்கள் கொப்பளிக்கவுமில்லை.

அரசுகளையும், மக்களினங்களையும் அவர்களிடம் ஒப்புவித்தீர். அவற்றின் எல்லைவரையும் பங்கிட்டளித்தீர். இவ்வாறு அவர்கள் சீகோன் நாட்டையும், எஸ்போன் அரசனின் நாட்டையும் ஓகு அரசனின் நாடான பாசானையும் உரிமையாக்கிக் கொண்டனர்.

அவர்களின் மக்களை விண்மீன்களைப் போன்று பெருகச் செய்தீர். அவர்கள் உட்புகுந்து உரிமையாக்கிக் கொள்ளும்படி அவர்களின் மூதாதையர்களுக்கு வாக்களித்திருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்துவந்தீர்.

அவர்களின் மக்கள் அங்குவந்து, அந்நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர். அவர்களின் முன்னிலையில் அந்நாட்டின் மக்களான கானானியரை அடக்கினீர். அவர்களையும் அவர்கள் மன்னர்களையும், நாட்டின் மக்களையும் அவர்கள் கையில் ஒப்புவித்து, அவர்களின் விருப்பத்தின்படி நடத்த விட்டு விட்டீர்.

எனவே அவர்கள் அரண்சூழ் நகர்களையும் செழிப்பான நிலத்தையும் கைப்பற்றினீர். எல்லாவித உடைமைகளையும் கொண்ட வீடுகளையும், வெட்டப்பட்ட கிணறுகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கணிதரும் மிகுதியான மரங்களையும் சொந்தமாக்கிக் கொண்டனர். உண்டு, நிறைவு கொண்டு, கொழுத்துப் போயினர். மிகுதியான உமது நன்மைத்தனத்தை அனுபவித்து மகிழ்ந்தனர்.

இருப்பினும், அவர்கள் கீழ்ப்படியாது, உமக்கு எதிராகச் கிளர்ச்சி செய்தனர்: உமது திருச்சட்டத்தைப் புறக்கணித்தனர். உம்மை நோக்கித் திரும்பும்படி அவர்களை எச்சரித்த உமது இறைவாக்கினர்களைக் கொன்றனர். இவ்வாறு பெரும் இறை நிந்தனைகளைச் செய்தார்கள்.

அப்பொழுது நீர் அவர்களை எதிரிகளிடம் கையளித்தீர். அவர்கள் அவர்களைத் துன்புறுத்தினர். தங்களது துன்ப வேளையில் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டனர். நீர் விண்ணிலிருந்து கேட்டருளினீர். அளவுகடந்த உமது இரகத்தினால் அவர்களுக்கு விடுதலைத் தலைவர்களைத் தந்து, அவர்களின் எதிரிகளிடமிருந்து விடுவித்தீர்.

அவர்கள் அமைதி கண்டபின்னர், உமது திருமுன் மீளவும் தீயது செய்யத் தலைப்பட்டனர். நீர் அவர்களை அவர்களின் எதிரிகளிடம் கையளித்தீர். எதிரிகள் அவர்களை அடக்கி ஆண்டார்கள். எனவே மீண்டும் உம்மிடம் கூக்குரலிட்டார்கள். நீரோ விண்ணிலிருந்து செவிசாய்த்து உமது பேரிரக்கதின்படி பலமுறை அவர்களுக்கு விடுதலையளித்தீர்.

உமது திருச்சட்டதுக்கு திரும்பிவர அவர்களை நீர் எச்சரித்தீர். அவர்களோ செருக்குற்றவர்களாய் உமது விதிமுறைகளுக்குச் செவிசாய்க்காமல், உமது நீதிநெறிகளுக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஒருவர் அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்வு பெறமுடியும். இருப்பினும், அவர்கள் பிடிவாதமாகப் புறக்கணித்தனர்: வணங்காக் கழுத்தினராக அடிபணிய மறுத்தனர்.

நீரோ பல்லாண்டுகளாய் அவர்கள்மேல் பொறுமையாய் இருந்தீர். இறைவாக்கினர்மூலம் உமது ஆவியால் அவர்களை எச்சரித்து வந்தீர். இருப்பினும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. எனவே நாடுகளின் மக்களுக்கு அவர்களைக் கையளித்தீர்.

ஆயினும் உமது பேரிரக்கத்தின் பொருட்டு, நீர் அவர்களை அழித்து, விடவுமில்லை. கைவிட்டு விடவுமில்லை: ஏனெனில், நீரே கனிவும் கருணையும் உள்ள கடவுள்.

எங்கள் கடவுளே! மேன்மை மிக்க வரும், வல்லவரும், அஞ்சுவதற்குரியவரும், உடன்படிக்கையையும், பேரிரக்கத்தையும் காப்பவருமான கடவுளே! அசீரிய மன்னர்களின் காலமுதல் இன்றுவரை, எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் குருக்களுக்கும், எங்கள் இறைவாக்கினர்களுக்கும், எங்கள் மூதாதையர்களுக்கும், உம் மக்கள் எல்லாருக்கும் நேரிட்டுள்ள துன்பங்கள் அனைத்தையும் அற்பமாய் எண்ணாதேயும்.

எமக்கு நேரிட்டவை அனைத்திலுமே நீர் நீதியுள்ளவர். ஏனெனில் நீர் உமது சொல்லுறுதியைக் காட்டியுள்ளீர். நாங்களோ தீயவை செய்துள்ளோம்.

எங்கள் அரசர்களும், எங்கள் தலைவர்களும், எங்கள் குருக்களும், எங்கள் மூதாதையர்களும், உமது திருச்சட்டத்தைக் கடைப் பிடிக்கவில்லை. உமது விதிமுறைகளையும், நீர் அவர்களுக்குக் கொடுத்துள்ள எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தவில்லை.

உமது நல்லுளத்திற்கேற்ப அவர்களுக்குத் தந்துள்ள அவர்களின் நாட்டிலும், அவர்களுக்குத் தந்துள்ள பரந்த, செழிப்பான நிலத்திலும் அவர்கள் உமக்கு ஊழியம் செய்யவுமில்லை, தங்கள் தீச்செயல்களை விட்டு விலகவுமில்லை.

நாங்கள் இப்பொழுது அடிமைகளாக இருக்கிறோம். அதன் நற்கனிகளையும் நற்பலன்களையும் அனுபவிக்கும்படி நீர் எம் முன்னோருக்குக் கொடுத்த வளமிகு நாட்டிலேயே நாங்கள் அடிமைகாளக இருக்கிறோம்.

எங்கள் பாவங்களால் இந்நாட்டின் மிகுந்த விளைச்சல் நீர் எங்கள் மீது ஏற்படுத்தியுள்ள மன்னர்களுக்கே சேருகிறது. அவர்களோ தங்கள் விருப்பப்படி எங்களையும் எங்கள் கால்நடைகளையும் ஆட்டிப் படைக்கிறார்கள். நாங்களோ மிகுந்த வேதனையில் அமிழ்ந்துள்ளோம்.

இவற்றின்பொருட்டே நாங்கள் நிலையான உடன்படிக்கை செய்து அதை எழுதிவைத்திருக்கிறோம். எங்கள் தலைவர்கள், லேவியர்கள் மற்றும் குருக்கள் அதில் தங்களது முத்திரையை இட்டுள்ளார்கள்.

அதிகாரம் 10.

முத்திரையிட்டவர்கள் பின் வருமாறு: அக்கலியாவின் மகனும், ஆளுநருமான நெகேமியா, செதேக்கியா,

குருக்கள்: செராயா அசரியா, எரேமியா,

பஸ்கூர், அமரியா, மல்கியா,

அத்பசு, செபானியா, மல்லு¡க்கு,

ஆரிம், மெரேமோத்து, ஒபதியா, தானியேல், கின்னத்தோன், பாரூக்கு,

மெசுல்லாம், அபியா, மியாமின்,

மாசியா, பில்காய், செமாயா.

லேவியர்: அசனியாவின் மகன் ஏசுவா, ஏனாதாத்தின் புதல்வரில்

பின்டீய், கத்மியேல்,

இவர்களின் சகோதரர்கள் செபானியா, ஓதியா, கெலிற்றா, பெலாயா, ஆனான்,

மீக்கா, இரகோபு, அசபியா,

சக்கூர், செரேபியா, செபானியா,

ஓதியா, பானி, பெனினு.

மக்கள் தலைவர்: பாரோசு, பாகத்து மோவாபு, ஏலாம், சத்ப, பானி,

புன்னி, அஸ்காது, பேபாய்,

அதோனியா, பிக்வாய், ஆதின்,

அத்தேர், எசேக்கியா, அசூர்,

ஓதியா, ஆசும், பெசாய்,

ஆரிபு, அனத்தோத்து, நேபாய்,

மக்பியாசு, மெசுல்லாம், ஏசீர்,

மெசபேல், சாதோக்கு யாதுவா,

பெலாத்தியா, ஆனான், அனாயா,

ஓசேயா, அனனியா, அசூபு,

அல்லோகேசு, பில்கா, சோபேக்கு,

இரகூம், மாசேயா,

அகியா, ஆனான், அனான்,

மல்லு¡க்கு, ஆரிம், பானா.

ஏனைய மக்களும், குருக்களும், லேவியரும், வாயிற்காப்போரும், பாடகர்களும், கோவிற் பணியாளர்களும், வேற்றின மக்களிடமிருந்து பிரிந்து கடவுளின் திருச்சட்டப்படி வாழ்ந்த அனைவரும், அவர்களின் மனைவியரும், புதல்வரும், புதல்வியரும், அறிவுத் தெளிவு அடைந்த அனைவரும்,

மேன்மக்களாகிய தங்கள் சகோதரர்களோடு சேர்ந்து, கடவுளின் ஊழியனான மோசே வழியாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியும் சாபமும் உள்ளிட்ட கடவுளின் திருசட்டத்தை ஏற்றுக் கடைப்பிடிப்பதாகவும், தம் தலைவராகிய ஆண்டவரின் அனைத்து விதிமுறைகளையும் நீதி நெறிகளையும், நியமங்களையும் காத்து நடப்பதாகவும் வாக்குறுதி தந்தார்கள்.

சிறப்பாக, நாங்கள் வேற்றின மக்களுக்குப் பெண் கொடுக்கவும் மாட்டோம்: எங்கள் புதல்வருக்கு அவர்கள் பெண்களை எடுக்கவும் மாட்டோம்.

வேற்றின மக்கள் ஓய்வு நாளில் சரக்குகளையும், தானிய வகைகளையும் விற்கக் கொண்டு வந்தால், நாங்கள் அவர்களிடமிருந்து ஓய்வு நாளிலும், புனித நாளிலும் வாங்கமாட்டோம். ஏழாம் ஆண்டின் விளைச்சலை விட்டுக் கொடுப்போம்: எவ்விதக் கடனையும் திரும்பக் கேட்க மாட்டோம்.

காணிக்கை அப்பங்கள், அன்றாட உணவுப் படையல்கள், ஓய்வுநாள்கள் மற்றும் அமாவாசைகளில் செலுத்தும் வழக்கமான பலிகள், குறிக்கப்பட்ட திருவிழாக்கள், புனிதப் பொருள்கள், இஸ்ரயேலுக்காகச் செலுத்தவேண்டிய பாவம் போக்கும் பலிகள், எங்கள் கடவுளது கோவிலின் அனைத்து வேலைகள் ஆகியவற்றிற்காக

ஆண்டுக்கு நான்கு கிராம் வெள்ளியை நாங்கள் கோவிலுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை விதிமுறையாக ஏற்படுத்திக் கொண்டோம்.

திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, எம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தின்மீது எரிப்பதற்காக, ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், எம் முன்னோரின் குல வரிசைப்படி, விறகுக் காணிக்கை எம் கடவுளின் கோவிலுக்குக் கொண்டுவர குருக்களும், லேவியரும், மக்களும் ஆகிய நாங்கள் சீட்டுப் போட்டுத் தெரிந்தெடுப்போம்.

எங்கள் நிலத்தின் முதற் பலனையும் எல்லா மரங்களின் முதற் கனிகளையும் ஆண்டுதோறும் ஆண்டவரின் இல்லத்திற்குக் கொண்டு வர நேர்ந்து கொண்டோம்.

திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி எங்கள் மக்களின் தலைப்பிள்ளைகளையும், எங்கள் கால்நடைகளின் தலைப்பேறுகளையும், அதாவது மாட்டு மந்தைகளின் தலைப்பேறுகளையும், ஆட்டுக் கிடைகளின் தலைப்பேறுகளையும், நம் இறைவனின் இல்லத்தில் பணி செய்யும் குருக்களிடம் கொண்டு வர நேர்ந்து கொண்டோம்.

மேலும், எங்களது முதல் பிசைந்த மாவையும், எங்கள் படையல்களையும், ஒவ்வொரு மரத்தின் கனிகளையும், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றையும் குருக்களுக்காக, நம் கடவுளின் கோவில் அறைகளில் கொடுப்போம் என்றும், எங்கள் நிலப் பலனில் பத்தில் ஒரு பகுதியை லேவியருக்குக் கொடுப்போம் என்றும் நேர்ந்து கொண்டோம். ஆனால், அதை நாங்கள் உழைக்கும் ஒவ்வொரு நகரிலும் லேவியர் வசூல் செய்வர்.

பத்தில் ஒரு பகுதியை லேவியர் பெறும்போது, ஆரோனின் வழிமரபினரான குரு ஒருவர் லேவியரோடு இருக்கட்டும். லேவியர்கள் தங்கள் வசூலில் பத்தில் ஒரு பகுதியை நம் கடவுளின் கோவிலுக்கு கொண்டு வந்து, கருவூல அறைகளில் சேர்த்து வைக்கட்டும்.

ஏனெனில், அக்கருவூல அறைகளில்தான் இஸ்ரயேல் மக்களும், லேவியரும் கொடையாகக் கொடுத்த தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றைச் சேர்த்து வைத்தனர். அங்கேதான் கோவில் திருப்பணிக்குரிய பாத்திரங்களும் இருந்தன. குருக்களும், பாடகர்களும், வாயிற்காவலரும், திருப்பணியாளர்களும் அங்கு இருந்து வந்தனர். “எங்கள் கடவுளின் கோவிலைப் புறக்கணிக்க மாட்டோம்“ என்று வாக்குறுதி அளித்தனர்.

அதிகாரம் 11.

மக்கள் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தனர். ஏனைய மக்களில் பத்தில் ஒருவர் புனித நகரான எருசலேமில் வாழ்வதற்குக் கொண்டு வரப்படச் சீட்டுப் போட்டார்கள். மற்ற ஒன்பது பேர் தங்கள் நகர்களிலேயே வாழ்ந்தார்கள்.

எருசலேமில் மனமுவந்து வாழ முன்வந்த மனிதர்கள் அனைவரையும் மக்கள் வாழ்த்தினர்.

இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர்கள், கோவில் பணியாளர்கள், சாலமோனின் பணியாளரின் வழிமரபின+ ஆகியோர் யூதாவின் நகர்களில், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மனைகளில் சொந்த நகர்களில் வாழ்ந்து வந்தார்கள்.

எருசலேமில் வாழ்ந்து வந்த மாநிலத் தலைவர்கள் பின்வருமாறு: இவர்கள் யூதா புதல்வர் சிலரும், பென்யமின் புதல்வா சிலரும் ஆவர். யூதாவின் புதல்வர் பின்வருமாறு: உசியா மகன் அத்தாயா-உசியா செக்கரியாவின் மகன்: இவர் அமரியாவின் மகன்: இவர் செபற்றியாவின் மகன்: இவர் மகலலேலின் மகன். பேரேட்சின் வழிமரபினர்:

மாவேசியா பாரூக்கின் மகன்: இவர் கொல்கோசியின் மகன்: இவர் அசாயாவின் மகன்: இவர் அதாயாவின் மகன்: இவர் யோயாரிபின் மகன்: இவர் செக்கரியாவின் மகன்: இவர் சீலோனியின் மகன்.

எருசலேமில் குடியிருந்த பேரேட்சியின் புதல்வர் நாடீற்று அறுபத்து எட்டு மாபெரும் வீரர்கள்.

பென்யமினின் புதல்வர் இவர்களே: சல்லு¡ மெசுல்லாமின் மகன்: இவர் யோபேதுவின் மகன்: இவர் பெத்யாவின் மகன்: இவர் கொலயாவின் மகன்: இவர் மாசேயாவின் மகன்: இவர் இத்தியேலின் மகன்: இவர் ஏசாயாவின் மகன்.

அவருக்குப் பின் கபாயும் சல்லாயும். இவர்கள் மொத்தம் தொள்ளாயிரத்து இருபத்தெட்டுப் பேர்.

சிக்ரியின் மகன் யோவேல் அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். அசனுவாவின் மகன் யூதா மற்றோர் ஊருக்குத் தலைவராக விளங்கினார்.

குருக்கள்: யோயாரிபு மகன் எதாயா, யாக்கின்:

செராயா: இவர் இல்க்கியாவின் மகன்: இவர் மெசுல்லாவின் மகன்: இவர் சாதோக்கின் மகன்: இவர் மெரயோத்தின் மகன்: இவர் கோவில் மேற்பார்வையாளரான அகித்பபின் மகன்.

கோவில் திருப்பணி செய்துவந்த இவர்களுடைய சகோதரர் எண்ணூற்று இருபத்திரண்டு பேர். அதாயா எரோகாமின் மகன்: இவர் பெலலியாவின் மகன்: இவர் அம்சியின் மகன்: இவர் செக்கரியாவின் மகன்: இவர் அம்சியின் மகன்: இவர் பஸ்கூரின் மகன்: இவர் மல்கியாவின் மகன்.

குலத்தலைவர்களான இவர் சகோதரர் இருமற்று நாற்பத்திரண்டு பேர். அமசசாய் அசரியேலின் மகன்: இவர் அகிசாயின் மகன்: இவர் மெசில்ல மோத்தின் மகன்: இவர் இம்மேரின் மகன்.

படைவீரர்களான அவர்களுடைய சகோதரர் மற்று இருபத்து எட்டு. அக்கெதோலியின் மகன் சப்தியேல் அவர்களுக்குத் தலைவராக இருந்தார்.

லேவியர்: செமாயா: இவர் அசூபாவின் மகன்: இவர் அசபியாவின் மகன்: இவர் பூனியின் மகன்.

கடவுளின் இல்லத்தின் வெளிப்புற வேலைக்குப் பொறுப்பானவர்களாகவும், லேவியருக்குத் தலைவர்களாகவும் இருந்த சபத்தாய்: யோசபாத்து:

மன்றாட்டில் நன்றிப்பண் ஆரம்பிக்கும் தலைவர் மத்தனியா: இவர் மீக்காவின் மகன்: இவர் சப்தியின் மகன்: இவர் ஆசாபின் மகன்: பக்புக்கியா அவருடைய சகோதரரில் இரண்டாம் இடத்தை வகித்தார். அப்தா சம்முவாவின் மகன்: இவர் காலாயின் மகன்: இவர் எதுத்பனின் மகன்.

புனித நகரில் வாழ்ந்த லேவியர் மொத்தம் இருமற்று எண்பத்துநான்கு பேர்.

வாயிற்காவலர்: வாயில் காக்கும் அக்கூபு, தல்மோன், இவர்களுடைய சகோதரர் மொத்தம் மற்று எழுபத்திரண்டு பேர்.

ஏனைய இஸ்ரயேல் மக்களும், குருக்களும், லேவியரும், யூதாவின் எல்லா நகர்களிலும் அவரவர் தம் உரிமைச் சொத்தில் குடியிருந்தனர்.

கோவில் பணியாளர் ஒபேலில் குடியிருந்தனர். சிகாவும் கிஸ்பாவும் கோவில் பணியாளருக்குத் தலைவர்களாக இருந்தனர்.

எருசலேமில் வாழ்ந்துவந்த லேவயிருக்குத் தலைவராயிருந்த உசி, பானின் மகன்: இவர் அசபியாவின் மகன்: இவர் மத்தனியாவின் மகன்: இவர் மீக்காவின் மகன்: இவர் கடவுளின் கோவில் பணிசெய்கின்ற பாடகர்களாகிய ஆசாபின் மக்களில் ஒருவர்.

பாடகர்களைக் குறித்து அரச கட்டளை ஒன்று இருந்தது. அதன்படி அவர்களின் அன்றாடப் படி வரையறுக்கப்பட்டிருந்தது.

மேலும் யூதாவின் மகனான செராகின் வழித்தோன்றிய மெசசபேலின் மகன் பெத்தகியா மக்களைக் குறித்த எல்லாக் காரியங்களிலும் அரசருக்கு உதவியாக இருந்தார்.

சிற்டிர்கள், அவைகளைச் சார்ந்த நிலங்களைப்பற்றிய குறிப்பு பின்வருமாறு: யூதா மக்கள் கிரியத்து அர்பாவிலும் அதன் குடியிருப்புகளிலும், தீபோனிலும் அதன் குடியிருப்புகளிலும் எக்கபட்சவேலிலும் அதன் நிலங்களிலும் குடியிருந்தனர்:

மேலும் ஏசுவாபிலும், மோலதாவிலும், பெத்பலேத்திலும்

அட்சர்சூவாவிலும் பெயேர்சபாவிலும் அதன் குடியிருப்புகளிலும்,

சிக்லாசிலும், மெக்ககோனாவிலும், அதன் குடியிருப்புகளிலும்,

ஏன்ரிம்மோனிலும், சோராவிலும், யார்முத்திலும்,

சானோவாகிலும், அதுல்லாமிலும், அதன் குடியிருப்புகளிலும், இலாக்கிசிலும் அதன் நிலங்களிலும், அசோக்காவிலும் அதன் குடியிருப்புகளிலும், ஆகப் பெயேர்செபா முதல் இன்னோம் பள்ளத்தாக்கு வரை குடியிருந்தனர்.

பென்யமின் மக்கன் கெபா முதல் மிக்மாசிலும், அயாவிலும், பெத்தேலிலும் அதன் குடியிருப்புகளிலும்,

அனத்தோத்திலும், நோபிலும் அனனியாவிலும்

ஆட்சோரிலும், இராமாவிலும், சித்தயிமிலும்

ஆதிது, சேபோயிம் நேபல்லாற்று,

லோது, ஒனோ என்ற ஊர்களிலும், தொழிலாளர் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர்.

லேவியரில் சில பிரிவினர் யூதாவிலும் பென்யமினிலும் குடியிருந்தனர்.

அதிகாரம் 12.

செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், ஏசு¡வுடனும், வந்த குருக்களும், லேவியரும் பின் வருமாறு: செராயா, எரேமியா, எஸ்ரா,

அமரியா, மல்லு¡க்கு, அத்பசு,

செக்கனியா, இரகூம், மெரமோத்து,

இத்தோ, சின்னத்தோய், அபியா,

மியாமின், மாதியா, பில்கா,

செமாயா, யோயாரிபு, எதாயா,

சல்லு¡, அமோக்கு, இல்க்கியா, எதாயா ஆகியோர் ஏசுவாவின் நாள்களில், குருக்களுக்கும்-தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக விளங்கினர்.

லேவியர்களில் ஏசுவா, பின்டீய், கத்மியேல், செரேபியா, யூதா, மத்தனியா ஆகியோரும், இவர்கள் சகோதரர்களும் நன்றிப் பாடல்களுக்குப் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.

பக்புக்கியாவும், உன்னியும் இவர்களின் சகோதரர்களும் அவர்களுக்கு எதிரே நின்று கவனித்துக் கொண்டு வந்தார்கள்.

ஏசுவாவுக்கு யோவாக்கிம் பிறந்தார்: யோவாக்கிமுக்கு எலியாசிபு பிறந்தார்: எலியாசிபுக்கு யோயாதா பிறந்தார்.

யோயாதாவுக்கு யோனத்தான் பிறந்தார்: யோனத்தானுக்கு யாதுவா பிறந்தார்.

யோவாக்கிமின் நாள்களில் குலத் தலைவர்களாக இருந்த குருக்கள் பின்வருமாறு: செராயா வழிவந்த மெராயா: எரேமியா வழிவந்த அனனியா:

எஸ்ரா வழிவந்த மெசுல்லாம்: அமரியா வழிவந்த யோகனான்:

மல்லு¡க்கி வழிவந்த யோனத்தான்: செபனியா வழி வந்த யோசேப்பு:

ஆரிம் வழிவந்த அத்னா: மெரயோத்து வழிவந்த எல்க்காய்:

இத்தோ வழிவந்த செக்கரியா: கின்னத்தோன் வழிவந்த மெசுல்லாம் :

அபியா வழிவந்த சிக்ரி: மின்யமீன், மோவதியா, பில்த்தாய்:

பில்கா வழிவந்த சம்முவா: செமாயா வழிவந்த யோனத்தான்:

யோயாரிபு வழிவந்த மத்தனாய்: எதாயா வழிவந்த உசீ:

சல்லாம் வழிவந்த கல்லாய்: அமோக்கு வழிவந்த ஏபேர்:

இல்க்கியா வழிவந்த அசுபியா: யாதாய் வழிவந்த நத்தானியேல் ஆவர்.

லேவியரில், எல்யாசிபு, யோயாதா, யோகானான், யாதுவா ஆகிய தலைமைக் குருக்களின் காலத்திலிருந்து பாரசீகரான தாரியுவின் காலம் வரையுள்ள லேவியர் குலத் தலைவர்களும் குருக்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

லேவியின் மக்களான குலத்தலைவர்கள், குறிப்பேட்டில் எல்யாசிபின் மகன் யோகனானின் நாள்கள் வரை பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

லேவியரின் தலைவர்களான அசபியா, சேரேபியா, கத்மியேலின் மகன் ஏசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்களின் சகோதரரும் நின்று கொண்டு, கடவுளின் மனிதர் தாவீது கொடுத்த கட்டளையின்படி, புகழும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்தி வந்தனர்.

மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூபு ஆகிய வாயிற்காப்போர், வாயிலருகில் இருந்த கருவூல அறைகளைக் காத்து வந்தனர்.

இவர்கள் யோசாதாக்கிற்குப் பிறந்த ஏசுவாவின் மகன் யோவாக்கிமின் காலத்திலும், ஆளுநர் நெகேமியா, குருவும் சட்ட வல்லுநருமான எஸ்ரா ஆகியோரின் காலத்திலும் வாழ்ந்தனர்.

எருசலேம் மதிலின் அர்ப்பண நாள் வந்தபோது லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடி எருசலேமுக்குக் கொண்டு வந்தார்கள். ஏனெனில், மதில் அர்ப்பணம் மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும், கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவை ஒலிக்கப் பாடல்களுடனும் கொண்டாட வேண்டியிருந்தது.

பாடகர்கள், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் நெற்றோபாயரின் சிற்டிர்களிலிருந்தும்,

பெத்கில்காலிலிருந்தும், கேபா, அஸ்மவேத்து ஆகிய பகுதிகளிலிருந்தும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் எருசலேமைச் சுற்றிக் குடியிருப்புகள் அமைத்திருந்தார்கள்.

குருக்களும் லேவியரும் தங்களைத் பய்மை செய்துகொண்டு மக்களையும் வாயில்களையும் மதில்களையும் பய்மைப்படுத்தினர்.

அப்பொழுது நான், யூதாவின் தலைவர்களை மதில்மேல் ஏறச் சொல்லி, புகழ்பாட இரண்டு பாடகர் குழுக்களை நிறுத்தினேன். ஒரு குழுவினர் வலப்பக்கம் இருந்த குப்பைமேட்டு வாயிலை நோக்கி, மதிலின்மேல் பவனியாகச் சென்றார்கள்.

அவர்களுக்குப் பின்னானல் ஒசயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப்பேரும்,

அசரியா, எஸ்ரா, மெசுல்லாம்,

யூதா, பென்யமின், செமாயா, எரேமியா ஆகியோரும் சென்றனர்.

மேலும் எக்காளம் ஏந்தி இருந்த குருத்துவப் புதல்வர்கள்: ஆசாபு வழி வந்த சக்கூருக்குப் பிறந்த மீக்காயாவின் மைந்தனான மத்தனியாவின் புதல்வனான செமாயாவின் மைந்தனான யோனத்தானின் மகன் செக்கரியாவும்,

அவர் சகோதரர்களான செமாயா, அசரியேல், மில்லலாய், கில்லேல், மாவாய், நெத்தனேல், யூதா, அனானி என்பவர்களும் கடவுளின் மனிதர் தாவீதின் இசைக்கருவிகளை ஏந்தியிருந்தனர். நீதிச் சட்ட வல்லுநரான எஸ்ரா அவர்களுக்கு முன்பாகச் சென்றார்.

அவர்கள் ஊருணி வாயிலைக் கடந்து தங்களுக்கு எதிரே இருந்த தாவீது நகரின் படிகளின் வழியாக மேலே சென்று தாவீதின் அரண்மணைக்கு மேலே செல்லும் மதிற்சுவரின் படிகளைக் கடந்து கிழக்கே இருந்த தண்ணீர் வாயில்வரை சென்றனர்.

இரண்டாவது பாடற் குழுவினர் இடப்பக்கமாக நடந்து செல்லுகையில், நானும் மக்களில் பாதிப்பேரும் மதிலின் மேல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம். சூளைக் காவல் மாடத்தைக் கடந்து அகன்ற மதில்வரை வந்தோம்.

எப்ராயிம் வாயில்மேலும், பழைய வாயில்மேலும், மீன்வாயில்மேலும், அனனியேல் காவல் மாடம், மேயா காவல் மாடம் ஆகியவை வழியாகவும் ஆட்டு வாயிலை அடைந்தோம். அவர்களோ “காவலர்“ வாயிலில் நின்று கொண்டா¡கள்.

பின்பு, இரண்டு பாடகர் குழுவினர்களும் கடவுளின் இல்லத்தில் நின்றகொண்டார்கள். நானும் என்னோடு அலுவலர்களில் பாதிப்பேரும் அங்கு இருந்தோம்.

குருக்களில் எலியாக்கிம், மாசேயா, மின்யமின், மீக்காயா, எலியோனாய், செக்கரியா, அனனியா ஆகியோர் எக்காளம் தாங்கி இருந்தனர்.

மாசேயா, செமாயா, எலயாசர், உசீ, யோகனான், மல்கியா, ஏலாம், ஆசேர் ஆகியோரும் நின்றனர். பாடகர்களும், அவர்களின் தலைவர் இஸ்ரகியாவும், உரக்கப் பாடினார்கள்.

அன்று அவர்கள் மிகுதியாகப் பலி செலுத்தி மகிழ்ந்தனர். ஏனெனில், கடவுள் அவர்களைப் பெரும் மகிழ்ச்சியால் நிரப்பினார். அவர்களின் மனைவியரும் பிள்ளைகளும் மகிழ்ச்சி கொண்டாடினர். எருசலேமின் ஆரவாரம் வெகுபரம்வரை கேட்டது.

கருவூலம், படையல்கள், முதற்கனி, பத்திலொரு பகுதி ஆகியவைகளுக்கான அறைகளின் பொறுப்பாளர்களையும், திருச்சட்டத்தின்படி, குருக்களுக்கும் லேவியருக்கும் உரிய பகுதிகளை நகர்களின் வயல்களில் தண்டல் செய்யும் ஆள்களையும் அன்று நியமித்தார்கள். ஏனெனில் அங்கே பணிபுரிந்த குருக்களையும் லேவியர்களையும் குறித்து யூதா மகிழ்ச்சி கொண்டது.

தாவீது, அவருடைய மகன் சாலமோன் ஆகியோரின் கட்டளைப்படி, இவர்கள் தங்கள் கடவுளின் பணியிலும், பய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறே பாடகர்களும் வாயிற்காப்போரும் பணி செய்தனர்.

ஏனெனில், தாவீது, ஆசாபு ஆகியோரின் பழங்காலத்திலிருந்தே பாடகர் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடவுளுக்குரிய புகழ்ப் பாடல்களும் நன்றிப் பாடல்களும் இருந்தன.

மேலும் செருபாபேலின் நாள்களிலிருந்தும் நெகேமியாவின் நாள்களிலிருந்தும், இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகர்களுக்கும், வாயிற்காப்போருக்கும் உரிய பகுதிகளை நாள்தோறும் கொடுத்து வந்தனர். அவர்கள் லேவியர்க்கு உரியதைப் பிரித்து வைத்தனர். லேவியர் ஆரோனின் மக்களுக்கு உரியதைப் பிரித்து வைத்தனர்.

அதிகாரம் 13.

அந்நாளில் மோசேயின் மலை மக்கள் கேட்கும்படி உரக்கப் படித்தனர். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதைக் கண்டனர்: அம்மோனியரும் மோவாபியரும் என்றுமே கடவுளின் சபைக்குள் நுழையக் கூடாது.

ஏனெனில் அவர்கள் இஸ்ரயேல் மக்களை அப்பத்தோடும் நீரோடும் சந்திக்காது, அவர்களைச் சபிக்குமாறு பிலயாமுக்குக் கையூட்டுக் கொடுத்தனர். ஆனால் எங்கள் கடவுள் சாபத்தை ஆசியாக மாற்றிவிட்டார் .

திருச்சட்டத்தைக் கேட்டவுடன் அவர்கள் எல்லா வேற்றினத்தாரையும் இஸ்ரயேல் மக்களிடமிருந்து பிரித்து விட்டனர்.

இதற்குமுன் தோபியாவுக்கு உறவினரான குரு எல்யாசிபிடம் எங்கள் கடவுளின் இல்லக் கருவூல அறைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

எனவே இவர் தோபியாவுக்குப் பெரியதோர் அறை ஒன்றைக் கொடுத்திருந்தார். அங்கே தான் முன்பு படையல்களும், சாம்பிராணியும், பாத்திரங்களும், லேவியர், பாடகர், வாயிற்காப்போர் ஆகியோருக்குக் கட்டளைப்படி கொடுக்கப்பட்ட பத்திலொரு பகுதியான தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவையும் குருக்களைச் சேரவேண்டிய காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன.

இவை எல்லாம் நடந்தபோது நான் எருசலேமில் இல்லை. ஏனெனில் பாபிலோனிய மன்னர் அர்த்தக்சஸ்தாவின் முப்பத்து இரண்டாம் ஆண்டில் நான் மன்னரிடம் சென்றேன். சில காலத்துக்குப் பின் மன்னரிடம் நான் விடைபெற்றுத் திரும்பி வந்தேன்.

எல்யாசிபு தோபியாவுக்குக் கடவுளின் இல்ல முற்றத்தில் ஓர் அறை கொடுத்திருந்ததால் விளைந்த தீமையை நான் எருசலேமுக்கு வந்தபோது கண்டுபிடித்தேன்.

நான் மிகவும் சீற்றமுற்று, தோபியாவின் வீட்டுப் பாத்திரங்களை அறைக்கு வெளியே எறிந்தேன்.

பின்னர் நான் கட்டளையிட்டபடி அவர்கள் அறைகளைத் துப்புரவு செய்தார்கள். பிறகு நான் கடவுளின் இல்லத்துப் பாத்திரங்களையும், காணிக்கையையும், சாம்பிராணியையும் அங்குத் திரும்பக் கொண்டுவரச் செய்தேன்.

மேலும் லேவியருக்குச் சேர வேண்டிய காணிக்கைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்றும், இதனால் அங்குப் பணிபுரிந்து வந்த லேவியரும் பாடகரும் அவரவர் தம் நிலங்களுக்கு ஓடிப்போய் விட்டனர் என்றும் அறிந்தேன்.

அப்பொழுது அலுவலர்களைக் கடிந்துகொண்டு, அவர்களிடம் கடவுளின் கோவில் கைவிடப்பட்டுக் கிடப்பதேன்? என்று கேட்டேன். பின்பு அவர்களை ஒன்றுகூட்டி, ஒவ்வொருவரும் தம் கடமையைச் செய்யுமாறு பணித்தேன்.

அதன்பின் யூதாவின் மக்கள் அனைவரும் தானியத்தையும், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றில் பத்திலொரு பங்கையும் கருவூல அறைக்குக் கொண்டு வந்தனர்.

குரு செலேமியாவையும், மறை மல் வல்லுநர் சாதோக்கையும், லேவியர் பெதாயாவையும் கருவூலங்களுக்குப் பொருளாளராகவும், மத்தனியாவுக்குப் பிறந்த சக்கூரின் மகனான அனானை அவர்களுக்கு உதவியாளராகவும் நியமித்தேன். ஏனெனில் அவர்கள் நேர்மையானவர்கள் என்று கருதப்பட்டார்கள். தங்கள் சதோதரர்களுக்குப் பங்கிட்டு அளிப்பதே அவர்கள் கடமையாகும்.

“என் கடவுளே! இதன் பொருட்டு என்னைக் கண்ணோக்கும். என் கடவுளின் கோவிலுக்கும் அதன் திருப்பணிக்கும் அடியேன் உண்மையாய்ச் செய்துள்ளதை மறவாதேயும்“.

அக்காலத்தில் யூதா மக்கள் ஓய்வு நாளில் திராட்சை ஆலைகளில் வேலை செய்வதையும், தானியப் பொதிகள் கொண்டு வந்து கழுதைகள் மீது சுமத்துவதையும், திராட்சை இரசம், திராட்சைப் பழங்கள், அத்திப் பழங்கள் இன்னும் பலவித சுமைகளை ஓய்வு நாளில் எருசலேமுக்குக் கொண்டு வருவதையும் கண்டேன். அன்று உணவுப் பொருள் விற்பதை நான் கண்டித்தேன்.

மேலும், அங்கு வாழ்ந்து வந்த தீர் நகர மக்கள், மீன் மற்றும் வணிகப் பொருள்களை யூதா மக்களுக்கும் எருசலேமில் வாழ்வோருக்கும் ஓய்வுநாளில் விற்றார்கள்.

எனவே யூதாவின் தலைவர்களைக் கடிந்து கொண்டு நான் அவர்களிடம் கூறுயது: எத்துணைத் தீமையான செயலை நீங்கள் செய்கிறீர்கள்? நீங்கள் ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தலாமா?

உங்கள் மூதாதையர் இவ்வாறு செய்ததால் அல்லவோ நம் கடவுள் நம் மீதும், இந்நகர் மீதும் இத்தீமையெல்லாம் வரச் செய்தார். இருப்பினும், ஒய்வு நாளை நீங்கள் மீறுகிறீர்கள். இஸ்ரயேல்மீது கடவுளின் கடுங்கோபத்தை வரவழைக்கிறீர்கள்.

ஓய்வு நாளுக்குமுன் எருசலேம் வாயில்களில் இருள் படரும்போது,கதவுகள் மூடப்படவேண்டும் என்றும் ஓய்வுநாள் முடியும்வரை அவற்றைக் திறக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டேன். எச்சுமையும் உள்ளே வராதபடி எனது வேலையாள்களை வாயிலருகில் நிறுத்தினேன்.

எனவே வணிகரும், பலசரக்குகளை விற்பவர்களும் ஓரிருமுறை எருசலேமுக்கு வெளியே தங்க வேண்டியிருந்தது.

நான் அவர்களை எச்சரித்து, என் மதிலுக்கு எதிரில் நீங்கள் காத்திருக்கிறீர்கள்? மறுபடியும் இப்படிச் செய்வீர்களாகில் உங்களை நான் ஒரு கை பார்ப்பேன் என்று கூறினேன். அப்பொழுதிலிருந்து அவர்கள் ஒய்வு நாளில் வராமலிருந்தார்கள்.

¥ ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கும்படி உங்களைத் பய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்: வாயிலைக் காக்க வாருங்கள் என்று லேவியரிடம் கூறினேன். இதன் பொருட்டும் “என் கடவுளே, என்னைக் கண்ணோக்கும். உமது பேரிரக்கத்தினால் என்னை மீட்டருளும்“.

அக்காலத்தில்கூட, அஸ்தோது, அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளின் பெண்களை மணந்திருந்த யூதர்களைக் கண்டேன்.

அவர்கள் பிள்ளைகளில் பாதிப்பேர் அஸ்தோதிய மொழி பேசினார்கள்: அல்லது வேறு ஏதோ ஒரு மொழியை பேசினார்கள். யூத மொழியை அவர்களால் பேச இயலவில்லை.

நான் அவர்களைக் கண்டித்துச் சபித்தேன். சில ஆள்களை அடித்து முடியைப் பிடித்து இழுத்தேன். இனி நாங்கள் அவர்களின் புதல்வருக்குப் பெண் கொடுக்கவோ, அவர்களிடமிருந்து நாங்களும் எங்கள் புதல்வரும் பெண் கொள்ளவோமாட்டோம் எனக் கடவுள்மேல் அவர்களை ஆணையிட்டுக் கூறச் செய்தேன்.

நான் சொன்னது: இஸ்ரயேலின் அரசர் சாலமோனின் பாவம் இதுதான் அல்லவோ! அவரைப் போன்ற மன்னர் பல நாடுகளிலும் இருந்ததில்லையே! அவருடைய கடவுள் அவருக்கு அன்பு காட்டினார். கடவுள் அவரை இஸ்ரயேலர் அனைவருக்கும் அரசராக ஏற்படுத்தியிருந்தார். இருப்பினும் வேற்றினப் பெண்கள் அவரையும் பாவம் செய்திடச் செய்தார்கள்.

வேற்றினப் பெண்களை மணந்து கடவுளுக்கு எதிராக இப்பெரும் தீமை அனைத்தையும் நீங்கள் செய்து வருவதைப்போல் நாங்களும் செய்ய வேண்டுமா?

பெரிய குரு எல்யாசிபின் மகன் யோயாதாவின் மக்களில் ஒருவன் ஓரானியனான சன்பலாற்றுக்கு மருமகனாய் இருந்தான். அவனை என்னிடமிருந்து துரத்திவிட்டேன்.

என் கடவுளே, குருத்துவத்தையும், குருத்துவ உடன்படிக்கையையும், லேவியரையும் மாசுபடுத்தியவர்களாகிய அவர்களை மறந்து விடாதேயும்.

வேற்றினத்தார் அனைவரிடமிருந்தும் அவர்களைத் பய்மைப்படுத்தினேன். குருக்களுக்கும் லேவியருக்கும் அவர் அவர்களுக்குரிய வேலையைக் கொடுத்து பணிமுறைமைகளை அமைத்தேன்.

விறகுக் காணிக்கைகளையும் முதற் கனிகளையும் குறிப்பிட்ட காலங்களில் கொடுக்க ஆவன செய்தேன். என் கடவுளே, என்னை நினைவு கூர்ந்து எனக்கு நன்மை செய்தருளும்.

புத்தகம் 17 - "எஸ்தர்"

அதிகாரம் 1.

இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரை இருந்த மற்றிருபத்தேழு மாநிலங்களையும் ஆட்சி செய்த மன்னர் அகஸ்வேரின் காலத்தில்,

அவர் சூசான் தலைநகரில் அரசுக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி புரிந்தார்.

மூன்றாம் ஆண்டில் தம் குறுநில மன்னர்கள், அலுவலர் அனைவருக்கும் விருந்தொன்று அளித்தார். பாரசீக, மேதியப் படைத் தளபதிகளும், உயர்குடி மக்களும், மாநிலத் தலைவர்களும் அவர்முன் வந்திருந்தனர்.

அவர் தம் அரசின் செல்வச் செழிப்பினையும், தம் மாண்பின் மேன்மைமிகு பெருமையையும் மற்றி எண்பது நாள்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்.

அந்நாள்கள் அனைத்தும் நிறைவு பெற்றபின் சூசான் தலைநகரிலிருந்து சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவருக்கும் அரண்மனைத் தோட்ட வளாகத்தில் ஏழு நாள்களுக்கு அவர் விருந்து அளித்தார்.

அங்கு வெண்ணிற, நீல நிறத் தொங்கு திரைகள், வெள்ளித் தண்டுகளிலும் வெண்ணிறப் பளிங்குத் பண்களிலும் மென்துகிலாலும் கருஞ்சிவப்புப் பட்டாலும் பிணைக்கப் பெற்றிருந்தன. வெண்ணீலக் கற்கள், பளிங்கு, முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவை பதிக்கப்பெற்ற பல வண்ண ஓட்டுத் தளத்தின் மீ£து பொன், வெள்ளி இழைகள் கலந்த மஞ்சங்கள் இருந்தன.

வெவ்வேறு வகையான பொற்கிண்ணங்களில் அனைவருக்கும் திராட்சை மது வழங்கினர். அரச மேன்மைக்கு ஏற்பப் பெருமளவில் திராட்சை மது வழங்கப்பட்டது.

திராட்சை மது அருந்துதல் சட்டப்படி ஏற்புடையதாக இருந்தது. ஒருவரும் வற்புறுத்தப்படவில்லை. விருந்தினரின் விருப்பத்திற்கிணங்கப் பரிமாறுமாறு அரண்மனையின் தலைமை அலுவலர்களுக்கு அரசர் கட்டளையிட்டிருந்தார்.

அவ்வாறே அரசி வஸ்தியும் மன்னர் அகஸ்வேரின் பெண்டிர்க்கு விருந்தளித்தாள்.

ஏழாம் நாளன்று திராட்சை மதுவினால் மனம் பூரித்திருந்த மன்னர் அகஸ்வேர் தம் முன்னிலையில் பணியாற்றிய அண்ணகர்களான மெகுமான், பிஸ்தா, அர்போனா, பிக்தா, அபக்தா, சேத்தார், கர்க்கசு ஆகியோருக்கு,

பேரழிகியான அரசி வஸ்தியின் எழிலை மக்களும் தலைவர்களும் காணுமாறு அவளை அரச மகுடம் சூட்டப்பட்டவளாகத் தம்முன் அழைத்து வரும்படி கட்டளையிட்டார்.

ஆனால் அரசி வஸ்தி அண்ணகர்களின் வழியாக வந்த மன்னரின் சொல்லுக்கு இணங்க மறுத்துவிட்டாள். எனவே மன்னர் கடுஞ்சினமுற்றார். பெரும் கோபக்கனல் அவர் மனத்தில் பற்றி எரிந்தது.

உடனே அவர் காலங்கள் பற்றிய நுண்ணறிவுடைய ஞானிகளிடம் கலந்துரையாடினார். ஏனெனில் சட்டங்களிலும், நெறிமுறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களிடம் கலந்துரையாடுவது மன்னரின் வழக்கம்.

கர்சனா, சேத்தார், அதிமாத்தா, தர்சீசு, மெரேசு, மர்சனா, மெமுக்கான் ஆகிய பாரசீகத்தையும் மேதியாவையும் சார்ந்த ஏழு தலைவர்களும் மன்னருக்கு மிக நெருக்கமானவர்கள்: ஆட்சிப் பொறுப்பில் முதன்மை பெற்றோர். அவர்கள் மன்னரின் முகமாற்றத்தைக் கண்டனர்.

மன்னர் அகஸ்வேர், அண்ணகர்களின் வழியாய் இட்ட கட்டளைப்படி செய்ய மறுத்த அரசி வஸ்திக்குச் சட்டப்படி செய்ய வேண்டியது என்ன? என்று வினவினார்.

மன்னருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் முன்பாக மெமுக்கான் கூறியது: அரசி வஸ்தி மன்னருக்கு எதிராக மட்டுமன்றித் தலைவர் அனைவர்க்கு எதிராகவும், அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநில மக்களுக்கு எதிராகவும், தவறிழைத்துவிட்டாள்.

அரசி வஸ்தியின் நடத்தை எல்லாப் பெண்களுக்கும் தெரியவரும். அவர்கள் பார்வையில் அவர்களின் கணவர் இழிவுப்படுத்தப்படுவர். ஏனெனில், மன்ன+ அகஸ்வேர் அவளைத் தம்முன் வருமாறு பணித்தும்கூட அவர்முன் அவள் வரவில்லையே! என்பர்.

இன்றே அரசியின் நடத்தை பற்றிக் கேள்வியுறும் பாரசீக, மேதிய இளவரசிகளும் தம் தலைவர்களிடமும் இதுபோன்றே கூறுவர். ஆதலின் ஏளனத்திற்கும் சினத்திற்கும் முடிவே இராது.

எனவே, அரசே! உமக்கு நலமெனப்படின் தாங்கள் ஆணையொன்று பிறப்பிக்க வேண்டும். அவ்வாணை பாரசீக, மேதியச் சட்டங்களில் நிலையாய் இருக்கும்படி எழுதப்படல் வேண்டும். அரசராகிய தங்கள் முன் வஸ்தி இனிவருதல் கூடாது. அவளது அரசுரிமையை அவளைக் காட்டிலும் சிறந்த ஒருத்திக்குத் தாங்கள் கொடுப்பீராக!

அரசரால் பிறக்கப்படும் இந்த ஆணை உமது ஆட்சிக்குட்பட்ட, பரந்துகிடக்கும் நாடுகளில் அறிவிக்கப்பட்டவுடன் சிறியோர் பெரியோர் அனைவரின் மனைவியரும் அவர்களின் கணவருக்கு மரியாதை செலுத்துவர்.

இவ்வார்த்தை அரசர் மற்றும் தலைவர்களின் பார்வையில் நலமெனத் தோன்றியது. மெமுக்கானின் கருத்திற்கு ஏற்ப மன்னர் செயல்பட்டார்.

அவர் தம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் அவரவர் மாநில வரிவடிவ வாரியாகவும், ஒவ்வொரு மக்களினத்திற்கும் அதனதன் மொழிவாரியகவும் எழுதிய மடல்களில், ஒவ்வொரு ஆண்மகனும் தனது வீட்டில் ஆளுகை செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்.

அதிகாரம் 2.

இவற்றுக்குப்பின் மன்னர் அகஸ்வேர் சினம் தணிய அவர் வஸ்தியையும் அவளது செயலையும் அவளுக்கு எதிராய்த் தாம் விடுத்த ஆணையையும் எண்ணிப் பார்த்தார்.

அவ்வமயம் மன்னருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த பணியாளர் அவரை நோக்கிக் கூறியது: அரசராகிய உமக்கென அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்களைத் தேடுவார்களாக!

அரசரின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து மாநிலங்களிலும் அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்கள் அனைவரையும் ஒன்று கூட்டும்படி மேற்பார்வையாளர்களை மன்னர் நியமிப்பாராக! சூசான் அரண்மணையின் அந்தப்புரத்தில் மன்னரின் அண்ணகரான ஏகாயிடம் அப்பெண்களை ஒப்படைத்து, பய்மைப்படுத்தும் பொருள்களை அவர்களுக்குத் தர ஆவன செய்வாராக!

மன்னரின் கண்களில் இனியவளாய்க் காணப்படுகின்ற இளம் பெண்ணே வஸ்திக்குப் பதிலாக அரசி ஆவாள். இது மன்னருக்கு நலமெனப் பட்டதால் அவரும் அவ்வாறே செய்தார்.

சூசான் அரண்மனையில் மொர்தக்காய் என்னும் பெயர்கொண்ட யூதர் ஒருவர் இருந்தார்.

அவர் பென்யமினைச் சார்ந்த கீசின் மகனான சிமயியின் புதல்வரான யாயிரின் மைந்தர்: இந்தக் கீசு எருசலேமில் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்பிடிக்கப்பட்ட யூதாவின் அரசன் எக்கோனியாவுடன் நாடு கடத்தப்பட்டவர்களுள் ஒருவர்.

மொர்தக்காய் அதசா என்னும் மறுபெயர் கொண்ட எஸ்தர் என்பவரை எடுத்து வளர்த்தார். அவர் அவருடைய சிற்றப்பன் மகள்: தாய் தந்தையை இழந்தவர்: எழில்மிகு தோற்றமும் வடிவழங்கும் கொண்ட இளம் பெண்.

மன்னரின் சொற்களும் ஆணையும் அறிவிக்கப்பட்டபொழுது, இளம் பெண்கள் பலர் சூசான் அரண்மனைக்குள் ஒன்று சேர்க்கப்பட்டு ஏகாயிடம் ஒப்படைக்கப்பட்டனர். எஸ்தரும் அவ்வாறே அரண்மனையில் அந்தப்புரப் பொறுப்பேற்றிருந்த ஏகாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவ்விளம் பெண் ஏகாயின் கண்களுக்கு இனியவளெனக் காணப்பெற்று, அவரது தயவைப் பெற்றார். அவரும் அவருக்குத் தேவையான அழகு சாதனங்களை உடனே தந்து, அரண்மனையில் சிறந்த செவிலியர் எழுவரையும் கொடுத்தார். மேலும் எஸ்தரையும் அவருடைய செவிலியரையும் அந்தப்புரத்தின் சிறந்த பகுதிக்கு மாற்றினார்.

யாரிடமும் சொல்லக்கூடாது என்று மொர்தக்காய் ஆணையிட்டிருந்ததால் எஸ்தர் தம் இனத்தையோ வழி மரபையோ வெளிப்படுத்தவில்லை.

ஒவ்வொரு நாளும் மொர்தக்காய் அந்தப்புர முற்றத்தில் அங்கும் இங்கும் உலவி, எஸ்தரின் நலன்பற்றியும் அவருக்கு என்னென்ன செய்யப்படுகிறது என்பதைப் பற்றியும் அறிந்து வந்தார்.

ஆறு மாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறு மாதம் பெண்டிர்க்கான வாசனைத் தைலங்கள், நறுமணத் பொருள்கள் ஆகியவற்றாலும் அழகுபடுத்தும் பன்னிரு மாதங்கள் நிறைவெய்தின. பின்னர் ஒவ்வொரு இளமங்கையும் மன்னர் அகஸ்வேரின் முன் செல்லும் சமயம் வந்தது.

மன்னரிடம் செல்லும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும், அந்தரப்புரத்திலிருந்தது அரச மாளிகைக்குச் செல்லும்போது, அவள் கேட்பதனைத்தும் கொடுக்கப்பட்டது.

அவள் மாலையில் சென்று, மறுநாள் காலையில் இரண்டாம் அந்தப்புரத்திற்குச் செல்வாள்: அங்கு வைப்பாட்டியரின் கண்காணிப்பாளரான அரச அண்ணகர் சாட்சகாசின் பொறுப்பில் விடப்படுவாள். மன்னர் அவள் மீது விருப்பம் கொண்டு பெயர் சொல்லி அழைக்கும் வரை மன்னிரிடம் அவள் மீண்டும் செல்ல இயலாது.

அபிகாயிலின் புதல்வியும், மொர்தக்காயின் வளர்ப்பு மகளுமாகிய எஸ்தர் மன்னருக்கு முன்னே செல்லும் முறை வந்தபொழுது, பெண்களைக் கண்காணிக்கும் அரச அண்ணகர் ஏகாயின் அறிவுரையைத் தவிர வேறெதையும் நாடாமல், காண்போர் அனைவரின் கண்களிலும் அவர் தயவு பெற்றிருந்தார்.

அகஸ்வேரின் ஆட்சியின் ஏழாம் ஆண்டில், பத்தாம் மாதமாகிய தேபேத்து மாதத்தில், அகஸ்வேரின் அரச மாளிகைக்குள் எஸ்தர் அழைத்துச் செல்லப்பட்டார்.

பெண்கள் அனைவரிலும் எஸ்தரையே மன்னர் மிகுதியாய் விரும்பினார். கன்னிப் பெண்கள் அனைவருள்ளும் அவரே மன்னரின் கண்களில் மிகுதியான தயவு பெற்றார். எனவே அவர் அவரது தலைமீது அரசியின் மகுடம் வைத்து, வஸ்திக்குப் பதிலாக அவரை அரசி ஆக்கினார்.

இவற்றிற்குப்பின், எஸ்தரை முன்னிட்டுக் குறுநில மன்னர்களுக்கும் தம் அலுவலர் அனைவருக்கும் பெரிய விருந்து வைத்தார். மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் மன்னர் விடுமுறை நாளை அறிவித்துத் தம் கைகளினால் அன்பளிப்புகள் வழங்கினார்.

கன்னிப் பெண்கள் இரண்டாம் முறையாய் ஒன்று கூட்டப்பட்டபொழுது, மொர்தக்காய் அரசவாயிலில் பணி புரிந்து கொண்டிருந்தார்.

மொர்தக்காய் கட்டளையிட்டவாறு, எஸ்தர் தம் வழிமரபிபையோ, இனத்தையோ வெளிப்படுத்தாதிருந்தார். அவரால் வளர்க்கப்பட்டபோது செய்தது போலவே, அப்பொழுதும், எஸ்தர் மொர்தக்காயின் கட்டளைக்கு இணங்கி நடந்தார்.

மொர்தக்காய் அரசவாயிலருகில் பணிபுரிந்த நாள்களில், பிகதான், தெ§ருசு என்ற இருவர் சினமுற்று மன்னர் அகஸ்வோரைத் தாக்க வகை தேடினர்.

இக்காரியம் மொர்தக்காய்க்குத் தெரிந்தது. இதனை அவர் அரசி எஸ்தரிடம் கூற, அவர் மொர்தக்காயின் பெயரால் அதனை மன்னரிடம் அறிவித்தார்.

உடனே அக்காரியம் புலனாய்வு செய்யப்பட, உண்மை வெளிப்பட்டது. அவர்கள் இருவரும் பக்கிலிடப்பட்டனர். இந்நிகழ்ச்சி மன்னர் முன்னிலையில் குறிப்பேட்டில் எழுதிவைக்கப்பட்டது.

அதிகாரம் 3.

இந்நிகழ்ச்சிக்குப்பின், மன்னர் அகஸ்வேர் ஆகாகியனான அம்மதாத்தின் மகன் ஆமானை உயர்த்தி அவனுடன் இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மேலான பதவியில் அமர்த்தினார்.

மன்னரின் ஆணைப்படி, அரசவாயிலில் பணிபுரிந்த அனைத்து அலுவலர்களும் தலை வணங்கி ஆமானைப் பணிந்தனர். ஆனால் மொர்தக்காய் மட்டும் அவன்முன் மண்டியிட்டு வணங்கவில்லை.

அவ்வமயம் அரச வாயிலில் இருந்த அரசப் பணியாளர் மொர்தக்காயிடம், நீ ஏன் மன்னரின் ஆணைக்குக் கீழ்ப்படிவதில்லை? என வினவினர்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் இவ்வாறு சொல்லியும் மொர்தக்காய் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை. தாம் ஒரு யூதர் என்று மொர்தக்காய் அவர்களுக்கு அறிவிக்க, விளைவைக் காணுமாறு அவர்கள் அதை ஆமானுக்குத் தெரிவித்தனர்.

மொர்தக்காய் தம்முன் மண்டியிட்டு வணங்குவதில்லை என்பதைக் கண்ட ஆமானின் நெஞ்சில் வெஞ்சினம் நிரம்பியது.

மொர்தக்காயை மட்டும் அழிக்க அவன் விரும்பவில்லை. அவர்தம் இனத்தார் யார் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததால், அகஸ்வேரின் அரசெங்கும் இருந்த அவர்தம் இனத்தாராகிய யூதர் அனைவரையும் அழிக்க ஆமான் வழிதேடினான்.

அகஸ்வேரது ஆட்சியில் பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதமாகிய நீசானில், யூதரைப் கொன்று ஒழிப்பதற்கான மாதத்தையும், நாளையும் அறியுமாறு, ஆமானின் முன்னிலையில் “பூர்“ என்ற சீட்டுப் போடப்பட்டது. அதார் என் னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளுக்குச் சீட்டுச் விழுந்தது.

ஆமான் அகஸ்வேரிடம், உம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களின் மக்களிடையே மாறுபட்ட மக்கள் சிதறுண்டு பரவியுள்ளனர். அவர்தம் நியமங்கள் மற்றெல்லா மக்களின் நியமங்களிலும் மாறுபட்டவை. அவர்கள் மன்னரின் நியமங்களின்படி செய்வதில்லை. அவர்களை அவ்வாறே விட்டுவைப்பதில் மன்னருக்கு நன்மை ஏதுமில்லை.

இது மன்னருக்கு நலமெனப்பட்டால், அவர்களை அழிக்கும்படி கட்டளையிடவேண்டும். இவ்வேலையைச் செய்வோருக்குக் கொடுக்குமாறு நாடீறு டன் வெள்ளியை நிறுத்து மன்னரின் கருவூலத்தில் சேர்ப்பேன் என்று கூறினான்.

அப்போது, மன்னர் தம் கணையாழியைக் கழற்றி, யூதரின் பகைவனாம் ஆகாகியனான அம்மதாத்தின் மகன் ஆமானிடம் கொடுத்தார்.

மன்னர் ஆமானிடம், வெள்ளியும், யூத மக்களும் உன் கையில்: உனக்கு நலமெனப்பட்டதை அவர்களுக்கச் செய் என்றார்.

உடனே அரச எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். முதல் மாதம் பதின்மூன்றாம் நாளில் ஆமான் கட்டளையிட்ட அனைத்து அரசின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களுக்கும் அனைத்து ஆளுநர்களுக்கும், அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும், அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும், மொழி வாரியாகவும் அரசரின் பெயரால் எழுதப்பெற்று, அரச கணையாழியால் முத்திரையிடப் பெற்று அனுப்பப்பட்டது.

அதார் என்ற பன்னிரண்டாம் மாதத்தின் பதின்மூன்றாம் நாளன்று, ஒரே நாளில், சிறுவர்முதல் பெரியோர் வரை, குழந்தைகளும் பெண்களும் உட்பட யூதர் அனைவரும் கொல்லப்பட்டு, அழிந்து ஒழிந்துபோகுமாறும், அவர்தம் உடைமைகள் கொள்ளையிடப்பட வேண்டும் எனவும் எழுதப்பட்ட மடல்கள் விரைவு அஞ்சலர் வழியே அரசின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டன.

இம்மடலின் நகல் ஒவ்வொன்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமாக அறிவிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் அந்நாளுக்கென ஆயத்தமாகும்படி அழைக்கப்பட்டனர்.

விரைவு அஞ்சலர் மன்னரின் ஆணையால் ஏவப்பட்டு விரைந்து வெளியேற, சூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது. மன்னரும் ஆமானும் மது அருந்துமாறு அமர்ந்தனர். சூசான் நகரே கலங்கிற்று.

அதிகாரம் 4.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் அறிந்த மொர்தக்காய் தம் ஆடைகளைக் கிழித்து, சாக்கு உடை அணிந்து, சாம்பல் பூசிக்கொண்டு, வெளியே நகரின் மையத்திற்குச் சென்று ஓலமிட்டு, மனங்கசிந்து அழுதார்.

அரச வாயிலுள் சாக்கு உடை அணிந்து எவரும் நுழையக்கூடாது என்பதால் அவர் வாயில் வரை சென்றார்.

மன்னரின் வார்த்தையும் நியமமும் எந்தெந்த மாநிலங்களை அடைந்தனவோ, அங்கெல்லாம் இருந்த யூதரிடையே பெரும் புலம்பலும், நோன்பும், கண்ணீரும், அழுகையும் விளங்க, அனைவரும் சாக்கு உடை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டனர்.

எஸ்தரின் செவிலியரும் அண்ணகர்களும் வந்து இவற்றை அவரிடம் சொல்ல, அரசி பெரிதும் வாடித் துடித்தார். மொர்தக்காய் சாக்கு உடை களைந்து, நல்லாடை அணிந்து கொள்ளும்படி ஆடைகளை அவர் அனுப்பி வைத்தார். அவரோ அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.

எஸ்தருக்குப் பணிபுரியும்படி மன்னரால் நியமிக்கப்பட்டிருந்த அண்ணகர் அத்தாக்கை அவர் அழைத்து, மொர்தக்காயின் அவலநிலைக்குக் காரணம் யாதென அறிந்து வருமாறு அனுப்பினார்.

அத்தாக்கு அரச வாயிலுக்கு எதிரே நகர்ச் சந்தியில் இருந்த மொர்தக்காயிடம் சென்றார்.

மொர்தக்காய் தமக்கு நேரிட்ட அனைத்தைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி அரச கருவூலத்தில் சேர்ப்பதற்காக ஆமான் வாக்களித்த வெள்ளி பற்றியும் அவருக்குத் தெரிவித்தார்.

மேலும், சூசானில் பிறப்பிக்கப்பட்ட நியமத்தின் ஒரு நகலை எஸ்தரிடம் காட்டும்படி கொடுத்து, அலர் மன்னரிடம் சென்று மன்றாடி, அவர் முன்னிலையில் தம் மக்களுக்காகப் பரிந்து பேசுமாறு வேண்டினார்.

அத்தாக்கு அவ்வாறே சென்று, எஸ்தரிடம் மொர்தக்காயின் வார்த்தைகளை எடுத்துரைத்தார்.

எஸ்தர் மறுபடியும் அத்தாக்கு வழியாய் மொர்தக்காய்க்குச் சொல்லி அனுப்பியது:

மன்னரால் அழைப்புப் பெறாத ஆண், பெண் எவரும் மன்னரின் உள்முற்றத்திற்குச் சென்றால் கொல்லப்படுவர் என்பதும், யாருக்கு மன்னர் தம் பொற்செங்கோலை நீட்டுகிறாரோ அவரே பிழைப்பார் என்பதும் அரச நியமம்: இதனை மன்னரின் அனைத்து ஊழியர்களும், மாநில மக்கள் அனைவரும் அறிவர்.

அவரும் எஸ்தரின் வார்த்தைகளை மொர்தக்காயிடம் அறிவித்தார்.

அதற்கு மொர்தக்காய் எஸ்தரிடம் அறிவிக்கும்படியாகக் கூறியது: அனைத்து யூதருள்ளும் அரச மாளிகையில் உள்ள நீ மட்டும் காப்பாற்றப் பெறுவாய் என உனக்குள் கற்பனை செய்ய வேண்டாம்.

ஏனெனில், இவ்வமயம் நீ மெளனமாய் வாளாவிருப்பின், விடுதலையும் பாதுகாப்பும் யூதருக்குப் பிறிதொரு இடத்தினின்று தோன்றும். ஆனால் நீயும் உன் தந்தையின் வீட்டாரும் அழிவீர். யார் அறிவார்? ஒருவேளை இதுபோன்ற நேரத்திற்கெனவே நீ அரசியாகி உள்ளாய் போலும்! .

இது கேட்ட எஸ்தர் மொர்தக்காயிடம் சொல்லும்படியாகக் கூறியது:

சூசானில் காணப்படும் அனைத்து யூதரையும் ஒன்று சேர்ப்பீராக! எனக்காக நோன்பிருந்து, மூன்றுநாள் இரவு பகல் உண்ணாமலும், குடியாமலும் இருப்பீராக! நானும் என் செவிலியரும் அவ்வாறே நோன்பிருப்போம். சட்டத்திற்குப் புறம்பே எனினும் நான் மன்னரிடம் செல்வேன்! அழிவதாயின் அழிகின்றேன்.

மொர்தக்காய் அவ்வாறே சென்று, எஸ்தரின் வாக்கின்படியே அனைத்தையும் செய்தார்.

அதிகாரம் 5.

மூன்றாம் நாள் எஸ்தர், அரசியின் ஆடையணிந்து அரச மாளிகைக்கு எதிரில் இருந்த உள்முற்றத்தில் நின்றார். அரண்மனை நுழைவாயிலின் எதிரில் இருந்த அரசவை மண்டபத்தில், அரியணை மீது மன்னர் வீற்றிருந்தார்.

உள்முற்றத்தில் நின்ற அரசி எஸ்தரைக் கண்டதும் மன்னரின் கண்களில் அவருக்குத் தயவு கிடைத்தது. மன்னர் தம் கைகளில் இருந்த பொற்செங்கோலை எஸ்திரிடம் நீட்ட, எஸ்தர் அருகில் சென்று செங்கோலின் நுனியைத் தொட்டார்.

மன்னர் அவரை நோக்கி, எஸ்தர் அரசியே! உனக்கு என்ன வேண்டும்? என் அரசின் பாதியேயாகிலும் அது உனக்களிக்கப்படும் என்றார்.

அதற்கு எஸ்தர், மன்னர் விரும்பினால், இன்று நான் வைத்திருக்கும் விருந்திற்குத் தாங்களும் ஆமானும் வருகை தர வேண்டும் என்று பதிலிறுத்தார்.

எஸ்தரின் அழைப்பிற்கிணங்கி மன்னர் ஆமானை விரைந்து வருமாறு பணித்தார். அவ்வாறே மன்னரும் ஆமானும் எஸ்தர் வைத்த விருந்திற்குச் சென்றனர்.

விருந்தில் திராட்சை மது அருந்துகையில், மன்னர் எஸ்தரை நோக்கி, உன் வேண்டுகோள் எதுவோ அது உனக்குக் கொடுக்கப்படும்: அது அரசின் பாதியே ஆனாலும் உனக்குக் கொடுக்கப்படும் என்றார்.

அதற்கு எஸ்தர், என் விண்ணப்பமும் வேண்டுகோளும் இதுவே: மன்னரின் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், மன்னரின் பார்வையில் இது நலமெனத் தோன்றினால்,

மன்னரும் ஆமானும் நான் நாளைய தினமும் உங்களுக்காய் ஆயத்தம் செய்யும் விருந்திற்கு வருகை தருமாறு வேண்டுகின்றேன். அவ்வமயம் மன்னரின் வார்த்தையின்படி என் விண்ணப்பத்தைத் தெரிவிப்பேன் என்று பதிலிறுத்தாள்.

அன்று ஆமான் மகிழ்வுடனும் உவகையுடனும் வெளியே சென்றான். ஆயினும் அரச வாயிலருகில் பணிபுரிந்த மொர்தக்காய் எழுந்து நிற்காததையும் தன்னைக் கண்டு ஒதுங்கி நில்லாததையும் பார்த்தபொழுது அவருக்கெதிராய் ஆமானின் நெஞ்சம் வெஞ்சினத்தால் நிறைந்தது.

எனினும், ஆமான் தன்னைக் கட்டுப்படுத்தியவாறே வீட்டிற்கு வந்து, தன் நண்பர்களையும் மனைவி செரேசையும் வரும்படி அழைத்தான்.

ஆமான் அவர்களிடம் தன் செல்வச் சிறப்பைப் பற்றியும், தன் மைந்தர்களின் எண்ணிக்கையைப் பற்றியும், மன்னர் தன்னை எவ்வாறு அனைத்துத் தலைவர்களுக்கும் அரச அலுவலர்களுக்கும் மேலாய் உயர்த்தியுள்ளார் என்பதைப் பற்றியும் விரித்துரைத்தான்.

மேலும் அவன், அரசி எஸ்தர் ஆயத்தம் செய்த விருந்திற்குத் தன்னையன்றி வேறெவரையும் மன்னருடன் வரும்படி அனுமதியாமல், நாளையும் விருந்திற்கு என்னை மன்னருடன் வருமாறு அழைத்திருக்கிறாள்.

எனினும், அரசவாயிலருகில் அமர்ந்திருக்கும் யூதனாகிய மொர்தக்காயைக் காண்கையில் இவையனைத்தும் எனக்கு ஒன்றும் இல்லை எனவும் கூறினான்.

இதைக் கேட்ட அவன் மனைவி செரேசும், நண்பர்களும் அவனை நோக்கி, ஜம்பது முழ உயரத் பக்கு மரம் செய்து, நாளை மன்னரிடம் கூறி மொர்தக்காயை அதில், பக்கிலிட்டுப் பின்னர் அரசருடன் விருந்துண்டு மகிழச் செல்லும்! என்றனர். இவ் வார்த்தை ஆமானுக்கு நலமெனப்பட்டதால் அவன் பக்குமரம் ஒன்று செய்வித்தான்.

அதிகாரம் 6.

அன்றிரவு மன்னருக்குத் பக்கம் வரவில்லை. எனவே அவர் தம் ஆட்சியின் குறிப்புகள் அடங்கிய ஏட்டைத் தம்மிடம் கொண்டுவந்து வாசிக்குமாறு பணித்தார்.

அரண்மனை வாயிற் காவலர்களான அலுவலர் பிக்தானாவும், செரேசும் மன்னர் அகஸ்வோரை கொல்ல வகை தேடினதை மொர்தக்காய் அறிவித்ததாக அதில் எழுதப்பட்டிருந்தது.

அச்சமயம் மன்னர், இதற்காக மொர்தக்காய்க்கு என்ன மரியாதையும் சிறப்பும் செய்யப்பட்டடன? என்று வினவ, மன்னரின் பணியாளர் அவருக்கு யாதென்றும் செய்யப்படவில்லை என்றனர்.

முற்றத்தில் இருப்பது யார்? என்று மன்னர் வினவினார். தான் நாட்டிய பக்கு மரத்தில் மொர்தக்காயை பக்குலிட வேண்டும் என்று மன்னரிடம் வேண்டுவதற்காய் ஆமான் அவ்வமயம் அரசமாளிகையின் வெளிமுற்றத்தில் வந்து நின்றான்.

மன்னரின் பணியாளர் மன்னரை நோக்கி, இதோ, ஆமான் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் என்றனர். உடனே மன்னர் அவனை உள்ளே வரச் சொன்னார்.

ஆமானிடம், மன்னர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு என்ன செய்ய வேண்டும்? என்று மன்னர் வினவினார். என்னைவிட வேறு எவருக்கு மன்னர் மரியாதை செய்ய விரும்புவார்? என்று ஆமான் தன் உள்ளத்தில் நினைத்துக் கொண்டான்.

எனவே ஆமான் மன்னரை நோக்கி, மன்னர் தாம் மரியாதை செய்ய விரும்பும் ஒருவருக்கென,

மன்னர் அணிகின்ற ஆடைகளும், அமர்கின்ற புரவியும், தலையில் சூடும் மகுடமும் கொண்டுவரப்பட வேண்டும்.

அந்த ஆடைகளும் புரவியும் அரசரின் தலைமை அதிகாரிகளுள் சிறந்த உயர்குடிமகன் ஒருவரிடம் ஒப்படைக்கப்படவேண்டும். மன்னர் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு அவர் அந்த ஆடைகளை அணிவித்து, புரவியின்மீது, அமர்த்தி அவரை நகர் வீதிகளில் வரம் வரச் செய்து, “இதுவே அரசர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்குச் செய்யும் சிறப்பாகும்!“ என, அவருக்கு முன்னால் அறிவிக்கவேண்டும் என்று பதிலிறுத்தான்.

உடனே மன்னர் ஆமானை நோக்கி, ஆடைகளையும் புரவியையும் விரைவாய்க் கொணர்ந்து நீ கூறியவாறே அரசவாயிலில் நிற்கும் யூதராகிய மொர்தக்காய்க்குச் செய். நீ கூறியவற்றில் எதையும் விட்டுவிடாதே என்று கூறினார்.

அவ்வாறே ஆமான் ஆடைகளையும் புரவியையும் கொணர்ந்து, மொர்தக்காய்க்கு அந்த ஆடைகளை உடுத்துவித்து, புரவியின் மீது அமர்த்தி, நகர் வீதிகளில் வலம் வரச் செய்து, இதுவே அரசர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்குச் செய்யும் சிறப்பாகும் என்று அவருக்கு முன்பாய் அறிவிக்கப்படுமாறு செய்தான்.

இதற்குப்பின் மொர்தக்காய் அரச வாயிலுக்குச் சென்றார். ஆமானோ புலம்பிக்கொண்டு, தன் தலைக்கு முக்காடிட்டுத் தன் வீட்டிற்கு விரைந்தான்.

ஆமான் தன் மனைவி செரேசு, நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு நேரிட்ட அனைத்தையும் கூறினான். ஊடனே அந்த ஆலோசகர்களும் அவன் மனைவி செரேசும் அவனை நோக்கி, யூத குலத்தினனாகிய மொர்தக்காய்க்கு முன்பாக நீ வீழ்ச்சியுறத் தொடங்கிவிட்டாய்: நீ அவனை எதிர்த்து நிற்க மாட்டாய்: அவனுக்கு முன்பாய் முற்றிலும் வீழ்வது திண்ணம் என்றனர்.

இவ்வாறு அவர்கள் அவனிடம் பேசிக்கொண்டிருக்கையில், மன்னரின் அலுவலர் அவ்விடம் வந்து, எஸ்தர் ஏற்பாடுசெய்திருந்த விருந்திற்கு வருமாறு ஆமானை விரைவுப்படுத்தினர்.

அதிகாரம் 7.

மன்னரும் ஆமானும் அரசி எஸ்தர் வைத்த விருந்துக்கச் சென்றனர்.

மன்னர் இரண்டாம் நாள் விருந்தில் திராட்சை மதுவை மீண்டும் அருந்துகையில், எஸ்தரிடம், எஸ்தர் அரசியே உன் விண்ணப்பம் யாது? அது உனக்கு அளிக்கப்படும். நீ வேண்டுவது என் அரசின் பாதியே ஆனாலும் அது உனக்குக் கொடுக்கப்படும் என்றார்.

அப்பொழுது, அரசி எஸ்தர், உம் கண்களில் எனக்குத் தயவுகிடைத்திருப்பின், அரசே! உமக்கு நலமெனப்பட்டால் எனது விண்ணப்பத்திற்கிணங்க எனக்கும் என் வேண்டுகோளின்படி என் மக்களுக்கும் உயிர்ப்பிச்சை அருள்வீராக!

என் மக்களும் நானும் கொலையுண்டு அழிந்து ஒழிந்து போகும்படி விலை பேசப்பட்டிருக்கிறோம்: ஆண்களும் பெண்களுமாக நாங்கள் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால்கூட நான் மெளனமாய் இருந்திருப்பேன். ஆனால் மன்னருக்கு உண்டாகும் இழப்பிற்கு எதிரியால் ஈடு செய்ய முடியாது என்று பதிலிறுத்தார்.

மன்னர் அகஸ்வேர் அரசி எஸ்தரை நோக்கி, இப்படிச் செய்தவன் எவன்? தன் இதயத்தில் செருக்குற்று இவ்வாறு செய்யும்படி நினைத்த அவன் எங்கே? என வினவினார்.

எதிரியும் வஞ்சகனுமாகிய மனிதன் இந்த ஆமானே: இவனே அந்தத் தீயவன்! என்று எஸ்தர் பதிலுரைத்தார். இது கேட்ட ஆமான், மன்னருக்கும் எஸ்தருக்கும் முன்பாகப் பேரச்சம் கொண்டான்.

மன்னர் கடுஞ்சினமுற்று, விருந்தில் திராட்சைமது அருந்துவதை விட்டுவிட்டு: எழுந்து அரண்மனைப் பூங்காவில் நுழைந்தார். தனக்குத் தீங்கிழைக்க மன்னர் முடிவு செய்துவிட்டார் என்று கண்ட ஆமான் அரசி எஸ்தரிடம் தன் உயிருக்காய் மன்றாட எண்ணிப் பின்தங்கினான்.

மன்னர் அரண்மனைப் பூங்காவிலிருந்து விருந்து நடைபெற்ற இடத்திற்குத் திரும்பிய பொழுது, எஸ்தரின் மெத்தையில் ஆமான் வீழ்ந்து கிடக்கச் கண்டனர். என் மாளிகையில நான் இருக்கும் போதே, இவன் அரசியைக் கெடுப்பானோ? என்ற சொற்கள் மன்னரின் வாயினின்று வெளிப்பட காவலர் ஆமானின் முகத்தை மூடிவிட்டனர்.

அச்சமயம், மன்னருக்குப் பணிவிடை செய்த அர்பேனா என்ற அலுவலர் மன்னரை நோக்கி, அதோ! ஆமானின் வீட்டெதிரே மன்னருக்கு நல்லது செய்த மொர்தக்காயைத் பக்கிலிட ஆமான் நாட்டிய ஜம்பது முழத் பக்குமரம்! என்றார். அதற்கு மன்னர், அதிலேயே அவனைத் பக்கிலிடுங்கள்! என்றார்.

மொர்தக்காயைக் பக்கிலிட அவன் நாட்டிய பக்கு மரத்திலேயே ஆமான் பக்கிலிடப்பட்டான். மன்னரின் சீற்றமும் தணிந்தது.

அதிகாரம் 8.

சில நாள்களில் மன்னர் அகஸ்வேர், யூதரின் பகைவனான ஆமானின் இல்லத்தை அரசி எஸ்தருக்கு வழங்கினார். மொர்தக்காய்க்கும் தமக்கும் உள்ள உறவை எஸ்தர் வெளிப்படுத்த, அவரும் மன்னரின் முன்னிலைக்கு வந்தார்.

ஆமானிடமிருந்து கழற்றப்பெற்ற தம் கணையாழியை மன்னர் எடுத்து மொர்தக்காய்க்கு அளித்தார். எஸ்தரும் மொர்தக்காயை ஆமான் வீட்டின் பொறுப்பாளராக நியமித்தார்.

மீண்டும் எஸ்தர், யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த தீயோன் ஆகாகியனான ஆமானின் திட்டங்கள் யாவும் குலைந்து போகுமாறு, மன்னரின் காலடிகளில் வீழ்ந்து, அழுது மன்றாடி, அவரது தயவினை நாடினார்.

உடனே மன்னர் தம் பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்ட, அவர் எழுந்து மன்னர்முன் நின்றார்.

அவர், மன்னருக்கு இது நலமெனப்பட் டால், அவர்தம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், அரசருக்கு இது சரியெனத் தோன்றினால், நானும் உம் பார்வையில் இனியவளெனப்பட்டால் மன்னரின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள யூதர் அழிந்துபோகமாறு வஞ்சனையாய்த் திட்டமிட்ட அம்மதாத்தின் மகனும் ஆகாகியனுமான ஆமான் எழுதிய மடல்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பும்படி எழுதுவீராக!

என் மக்களுக்கு நேரிடும் தீங்கனையும், என் உறைவினரின் படுகொலையினையும் நான் எவ்வாறு காண இயலும்? என்று கூறினார்.

அப்பொழுது மன்னர் அகஸ்வேர், அரசி எஸ்தரையும் யூதரான மொர்தக்காயையும் நோக்கி, இதோ! ஆமானின் இல்லத்தை எஸ்தருக்கு அளித்தேன்: யூதருக்கு எதிராய்க் கை நீட்டிய ஆமான் பக்கிலிடப்பட்டான்.

மன்னரின் பெயரால் எழுதப்பட்டு, அவர் கணையாழியின் முத்திரை பதிக்கப்பெற்ற எம்மடலும் திருப்பிப் பெற இயலாதபடியால் உங்கள் பார்வையில் நலடிமனத்தோன்றும் அனைத்தையும் மன்னரின் பெயரால் நீங்கள் யூதருக்கு எழுதி, மன்னரின் கணையாழியால் முத்திரையிடுங்கள் என்று கூறினார்.

சீவான் என்ற மூன்றாம் மாதத்தில், இருபத்து மூன்றாம் நாளன்று மன்னரின் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். மொர்தக்காய் இட்ட ஆணையின்படியே யூதர் அனைவருக்கும் இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரையிலுள்ள மற்றிருபத்தேழு மாநிலங்களின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களின் ஆளுநர் அனைவர்க்கும் மாநிலத் தலைவர்கள் அனைவருக்கும் அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும், மொழி வாரியாகவும் மடல்கள் வரையப் பெற்றன.

மன்னர் அகஸ்வேர் பெயரால் எழுதப் பெற்று, அரச கணையாழி முத்திரையிடப்பெற்ற இம்மடல்கள், அரசக் கொட்டிலைச் சார்ந்த அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும் விரைவு அஞ்சலர் மூலம் அனுப்பப்பட்டன.

ஒவ்வொரு நகரிலும் உள்ள யூதர் ஒன்றுதிரண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், அவர்களையும் அவர்களின் குழந்தைகள், பெண்கள் ஆகியோரையும் தாக்கக்கூடிய எந்த நாட்டையும் மாநிலத்தையும் சார்ந்த படைகளை அழித்துக் கொன்று ஒழிக்கவும், அவற்றின் உடைமைகளைக் கொள்ளையிடவும், தேவையான அதிகாரத்தை மன்னரின் பெயரால் எழுதப்பட்ட இம்மடல்கள் அளித்தன.

மன்னர் அகஸ்வேரின் மாநிலங்கள் அனைத்திலும், அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளன்று, ஒரே நாளில் இவ்வாறு செய்வதென அறிவிக்கப்பட்டது.

அம்மடலின் நகல் ஒவ்வொரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் சட்டமாக அறிவிக்கப்பட்டது. யூதரும் தம் பகைவரைப் பழிதீர்க்க இந்நாளில் ஆயத்தமாகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும் விரைவு அஞ்சலர் மன்னரின் ஆணையால் ஏவப்பட்டு, வெளி மாநிலங்களுக்கு விரைந்தனர். சூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது.

நீலமும் வெண்மையுமான அரச உடையணிந்து, பெரிய பொன் மகுடம் சூடி, கருஞ்சிவப்பு மென்துகில் அணிந்தவராய் மொர்தக்காய் மன்னரின் முன்னிலையிலிருந்து வெளியேற, சூசான் நகர் மகிழ்ந்து களிகூர்ந்தது.

இச்செய்தி யூதருக்கு நம்பிக்கை ஒளியாகவும், மகிழ்வுக்கும், அக்களிப்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஒன்றாகவும் விளங்கியது.

ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும், எங்கெல்லாம் மன்னரின் இந்த வாக்கும் நியமமும் எட்டினவோ, அங்கெல்லாம் வாழ்ந்த யூதர் மகிழ்ந்து களிகூர்ந்தனர். அந்நாள் விருந்தாடும் விழா நாளாக விளங்கியது. யூதரைப்பற்றிய அச்சம் பிறர்மீது விழ, நாட்டு மக்களில் பலர் யூதாராயினர்.

அதிகாரம் 9.

மன்னரின் வாக்கும் நியமும் நிறைவேற்றப்படவேண்டிய அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாள் வந்தது. எதிரிகள் யூதரை மேற்கொள்ளலாம் என்று நம்பியிருந்த அந்த நாள், யூதர் தம் பகைவரை மேற்கொள்ளும் நாளாக மாறியது.

அகஸ்வேர் மன்னரின் மாநிலங்களில் இருந்த யூதர் அனைவரும் தமக்குத் துன்பம் விளைவிக்க எண்ணியோர்க்கு எதிராயத் தம் கைகளை நீட்ட அவரவர் தம் இடங்களில் ஒன்று திரண்டனர். வேற்றினத்தாரை அச்சம் ஆட்கொள்ள, அவர்களுள் எவராலும் யூதரை எதிர்த்து நிற்க இயலவில்லை.

மொர்தக்காயைப் பற்றிய அச்சம் மன்னரின் அலுவல்களில் உதவி செய்கின்ற மாநிலத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், ஆளுநர்கள், அரச ஊழியம் செய்வோர் அனைவரையும் ஆட்கொள்ள, அவர்களும் யூதருக்கு உதவி செய்யலாயினர்.

மொர்தக்காய் அரச மாளிகையில் வல்லவரானார். அவரது புகழ் அனைத்து மாநிலங்களிலும் பரவியது. அவரது ஆற்றல் மென்மேலும் வளர்ந்தது.

எனவே, யூதர் தம் பகைவருக்கு எதிராய்த் தாம் விரும்பியபடி செய்தனர். அவர்களை வாளால் தாக்கி வெட்டி வீழ்த்தினர்.

சூசான் அரண்மனையில் ஜந்மறு பேரை யூதர் கொன்றொழித்தனர்.

பர்சந்தத்தா, தல்போன், அஸ்பாத்தா,

போராத்தா, அதலியா, அரிதாத்தா,

பர்மஸ்தா, அரிசாய், அரிதாய், வய்சாத்தா ஆகிய

யூதரின் எதிரியும் அம்மதாத்தின் மகனுமான ஆமானின் புதல்வர் பதின்மரையும் அவர்கள் கொன்றனர்: ஆயினும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.

மன்னரின் பிற மாநிலங்களில் வாழ்ந்த யூதர் ஒன்று திரண்டு தம்மைப் பாதுகாத்துக்கொன்டனர். தம் பகைவரிடமிருந்து விடுதலை பெறுமாறு அவர்கள் எழுபத்தைந்து ஆயிரம் பேரைக் கொன்றனர்: ஆயினும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.

அதார் மாதம் பதின்மூன்றாம் நாளையடுத்த பதினான்காம் நாளன்று அவர்கள் ஓய்வெடுத்தனர். அந்நாளை விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர்.

சூசான் வாழ் யூதரோ அதார் மாதம் பதின்மூன்றாம் பதினான்காம் நாள்களில் ஒன்றுகூடி அடுத்துவந்த பதினைந்தாம் நாளை ஒய்வெடுத்து, விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர்.

அரணற்ற நகர்ப்புறச் சிற்டிர்களில் வாழந்த யூதர், அதார் மாதம் பதினான்காம் நாளை விருந்துண்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளும் விழாவாக ஆக்கினர்.

மொர்தக்காய் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மடல்களில் வரைந்து, அவற்றை அருகிலும் தொலையிலும், மன்னர் அகஸ்வேரின் அனைத்து மாநிலங்களிலும் வாழந்த யூதருக்கு அனுப்பி,

ஆண்டுதோறும் அதார் மாதம் பதினான்காம், பதினைந்தாம் நாள்களை

யூதர் தம் பகைவரின் தொல்லையினின்று விடுதலை பெற்ற நாள்களாகவும், அவர்களின் துன்பம் மகிழ்ச்சியாகவும், புலம்பல் விழாக் கோலமாகவும் மாறின மாதமாகவும் கொண்டு, அந்நாள்களில் விருந்துண்டு மகிழவும், ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளவும், ஏழைகளுக்கு உணவளிக்கவும், வேண்டுமென்று நியமம் தந்தார்.

யூதர்கள் தாம் செய்யத் தொடங்கியவாறும், மொர்தக்காய் தங்களுக்கு எழுதியவாறும் செய்ய உடன்பட்டார்கள்.

ஆகாகியனும் அம்மதாத்தின் மகனுமான ஆமான், யூதர்க்கெல்லாம் எதிராய் இருந்து, அவர்களை அழிக்கவும், அடியோடு ஒழிக்கவும் பூர் என்ற சீட்டைப் போட்டான்.

அப்போது எஸ்தர், மன்னரின் உதவியை நாட, யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த ஆமானின் தீவினை அவன் தலைமேல் விழுமாறு அவர் கட்டளை பிறப்பித்தார். அதன்படி அவனும் அவன் புதல்வரும் பக்கிலிடப்பட்டனர்.

எனவே, யூதர் இந்நாள்களை பூர் என்ற சொல்லினின்று எழுந்த பூரிம் என்ற பெயரால் அழைக்கலாயினர். பூரிம் என்ற இவ்விழாவிற்கு மொர்தக்காயின் மடலின் வாசகமும் அவர்கள் கண்டவையும் அனுபவித்தவையுமே அடிப்படை ஆயின.

அவர்களும் அவர்களின் வழிமரபினரும் அவர்களைச் சார்ந்தோர் அனைவரும், இந்த இரு நாள்களை அவை பற்றிய மடல்களின்படியும் குறிக்கப்பட்ட காலத்திலும் கண்டிப்பாய்க் கொண்டாடுவது என்று கீழ்க் கண்டவாறு உறுதி பூண்டனர்:

இந்நாள்கள் தலைமுறைதோறும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும் நினைவுகூரப்பட்டுக் கொண்டாடப்படவேண்டும். பூரிம் என்ற இந்நாள்கள் யூதரிடையே கொண்டாடப்படாமல் போகா. இவற்றின் நினைவு அவர்களின் வழிமரபினரிடையிலும் ஒழிந்து போகாது .

அபிகாயிலின் மகளான அரசி எஸ்தரும் யூமராகிய மொர்தக்காயும் பூரிம் பற்றிய இந்த இரண்டாம் மடலை முழு அதிகாரத்துடன் எழுதி உறுதிப்படுத்தினர்.

அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அம்மடல் எழுதப்பட்டு, அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட மற்றிருப்பத்தேழு மாநிலங்களிலும் வாழ்ந்த யூதருக்கு அனுப்பட்டது.

யூதராகிய மொர்தக்காயும் அரசி எஸ்தரும் இட்ட ஆணையின்படி, பூரிம் என்ற இந்த நாள்களை யூதரும் அவர்களின் வழிமரபினரும் குறிக்கப்பட்ட காலத்தில் நோன்பு, புலம்பல் நாள்களாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தப் பூரிம் விழாப்பற்றிய ஒழுங்குமுறைகள் யாவற்றையும் உறுதிப்படுத்திய எஸ்தரின் ஆணை ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைக்கப்பட்டது.

அதிகாரம் 10.

மன்னர் அகஸ்வேர் நிலங்களின் மீதும், கடலின் தீவுகளின்மீதும் தீர்வை விதித்தார்.

அவருடைய ஆற்றலும் வலிமைமிகு செயல்களும், அவர் மொர்தக்காய்க்கு அளித்த மேன்மையின் முழு விவரமும், மேதியா மற்றும் பாரசீக மன்னர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?

யூதராகிய மொர்தக்காய், மன்னர் அகஸ்வேருக்கு அடுத்த நிலைபெற்று, யூதருள் மேன்மை நிறைந்தவராகவும், தம் சகோதரர் பலருக்கு இனியவராகவும், தம் மக்களின் நன்மையை நாடுபவராகவும், தம் இனத்தார் அனைவரின் நல்வாழ்வுக்காகப் பரிந்துரை செய்பவராகவும் விளங்கினார்.

புத்தகம் 18 - "யோபு"

அதிகாரம் 1.

ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார்.

அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்.

அவருடைய உடைமைகளாக ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஜந்மறு ஏர்க் காளைகளும், ஜந்மறு பெண் கழுதைகளும் இருந்தன. பணியாள்களும் மிகப் பலர் இருந்தனர். கீழை நாட்டு மக்கள் எல்லாரிலும் இவரே மிகப் பெரியராக இருந்தார்.

அவருடைய புதல்வர்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டில் தமக்குரிய நாளில் விருந்து தயாரித்து, தம் மூன்று சகோதரரிகளைத் தம்முடன் உண்டு குடிப்பதற்கு அழைப்பது வழக்கம்.

விருந்து நாள்களின் முறை முடிந்ததும், யோபு அவர்களை வரவழைத்துத் பய்மைப்படுத்துவார். என் பிள்ளைகள் ஒருவேளை பாவம் செய்து, உள்ளத்தில் கடவுளைத் பற்றியிருக்கக்கூடும் என்று யோபு நினைத்து, காலையில் எழுந்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எல்லார்க்காகவும் எரிபலியை ஒப்புக்கொடுப்பார். யோபு எப்பொழுதும் இவ்வாறு செய்வது வழக்கம்.

ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்துநின்றான்.

ஆண்டவர் சாத்தானிடம், எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் உலகைச் சுற்றி உலவி வருகிறேன் என்றான்.

ஆண்டவர் சாத்தானிடம், என் உழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை என்றார்.

மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம் ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்?

அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா?

ஆனால், உமது கையை நீட்டும்: அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான் என்றான்.

ஆண்டவர் சாத்தானிடம், இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே: அவன்மீது மட்டும் கை வைக்காதே என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.

ஒருநாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் மூத் த சகோதரன் வீட்இல் உண்டு திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பதன் ஒருவன் யோபிடம் வந்து, எருதுகள் உழுதுகொண்டிருந்தன: கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர். ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன் என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன் என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து அவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். ஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன் என்றான்.

இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர். நான் ஒருவன்மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன் என்றான்.

யோபு எழுந்தார்: தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்: பின்பு தரையில் விழுந்து வணங்கி,

என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியானாய் யான் வந்தேன்: அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்: ஆண்டவ+ அளித்தார்: ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக! என்றார்.

இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை: கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.

அதிகாரம் 2.

ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தானும் அவர்கள் நடுவே வந்து, ஆண்டவர்முன் நின்றான்.

ஆண்டவர் சாத்தானிடம் எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம், உலகைச் சுற்றி உலவி வருகிறேன் என்றான்.

அப்போது ஆண்டவர் சாத்தானிடம், என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப்போல் மாசற்றவனும் நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனுமில்லை. காரணமின்றி அவனை அழிக்க நீ என்னை அவனுக்கு எதிராகத் பண்டிவிட்ட போதிலும், அவன் தன் மாசின்மையில் உறுதியாக நிலைத்துள்ளான் என்றார்.

சாத்தான் மறுமொழியாக ஆண்டவரிடம், தோலுக்குத் தோல்: எவரும் தம் உயிருக்காகத் தமக்கு உள்ளதெல்லாம் கொடுப்பார்.

உமது கையை நீட்டி அவனுடைய எலும்பு, சதைமீது கைவையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மை இழித்துரைப்பது உறுதி என்றான்.

ஆண்டவர் சாத்தானை நோக்கி, இதோ! அவன் உன் கையிலே! அவன் உயிரை மட்டும் விட்டுவை என்றார்.

சாத்தானும் ஆண்டவரின் முன்னின்று புறப்பட்டுப் போனான். அவன் யோபை உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை எரியும் புண்களால் வாட்டி வதைத்தான்.

ஓடொன்றை எடுத்துத் தம்மைச் சொறிந்து கொண்டு, யோபு சாம்பலில் உட்கார்ந்தார்.

அப்போது அவரின் மனைவி அவரிடம், இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே? என்றாள்.

ஆனால் அவர் அவளிடம், நீ அறிவற்ற பெண்போல் பேசுகிறாய்! நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது? என்றார். இவை அனைத்திலும் யோபு தம் வாயால் பாவம் செய்யவில்லை.

அப்போது யோபின் நண்பர் மூவர், அவருக்கு நேர்ந்த இத்தீமை அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டனர். தேமாவைச் சார்ந்த எலிப்பாசு, சூகாவைச் சார்ந்த பில்தாது, நாமாவைச் சார்ந்த சோப்பார் ஆகியோர் தம்மிடமிருந்து கிளம்பி வந்து, அவரிடம் துக்கம் விசாரிக்கவும், அவருக்கு ஆறுதல் கூறவும் ஒன்றுகூடினர்.

தொலையிலிருந்தே கண்களை உயர்த்திப் பார்த்தபோது, அவரை அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அவர்கள் வாய் விட்டு அழுதார்கள்: ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். வானத்தை நோக்கித் தங்கள் தலையில் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டார்கள்.

அவரோடு அவர்கள் ஏழு பகலும், ஏழு இரவும் தரையில் உட்கார்ந்திருந்தனர். அவருடைய துயரின் மிகுதியைக் கண்டு எவரும் ஒரு வா¡த்தைகூட அவருடன் பேசவில்லை.

அதிகாரம் 3.

இதன்பிறகு யோபு வாய்திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார்.

யோபு கூறியது:

ஒழிக நான் பிறந்த அந்த நாளே! ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே!

அந்த நாள் இருளாகட்டும்: மேலிருந்து கடவுள் அதை நோக்காதிருக்கட்டும்: ஒளியும் அதன்மேல் வீசாதிருக்கட்டும்.

காரிருளும் சாவிருட்டும் அதைக் கவ்விக்கொள்ளட்டும்: கார்முகில் அதனை மூடிக் கொள்ளட்டும்: பகலை இருளாக்குபவை அதனை அச்சுறுத்தட்டும்.

அவ்விரவைக் பேயிருட்டு பிடிப்பதாக! ஆண்டின் நாள்கணக்கினின்று அது அகற்றப்படுவதாக! திங்கள் எண்ணிக்கையிலும் அது சேரா தொழிக!

அவ்விரவு வெறுமையுற்றுப் பாழாகட்டும்: மகிழ்ச்சியொலி ஒன்றும் அதில் எழாதிருக்கட்டும்:

பகலைப் பழிப்போரும் லிவியத்தானைக் பண்டி எழுப்புவோரும் அதனைப் பழிக்கட்டும்.

அதன் விடியற்காலை விண்மீன்கள் இருண்டு போகட்டும்: அது விடியலொளிக்குக் காத்திருக்க அதுவும் இல்லாமற்போகட்டும்: அது வைகறையின் கண்விழிப்பைக் காணாதிருக்கட்டும்.

ஏனெனில் என் தாயின் கருப்பையை அவ்விரவு அடைக்காமற்போயிற்றே! என் கண்களினின்று வேதனையை அது மறைக்காமற் போயிற்றே!

கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா? கருவறையினின்று வெளிப்பட்டவுடனே நான் ஒழிந்திருக்கலாகாதா?

என்னை ஏந்த முழங்கால்கள் முன் வந்ததேன்? நான் பாலுண்ண முலைகள் இருந்தேன்?

இல்லாதிருந்திருந்தால், நான் வெறுமனே கிடந்து துயில் கொண்டிருப்பேன்.

பாழானவைகளைத் தமக்குக் கட்டிக்கொண்ட மாநிலத்து மன்னர்களோடும் அமைச்சர்களோடும்

அல்லது பொன்னை மிகுதியிருக்கக் கொண்டு, வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின உயர்குடி மக்களோடும் நான் உறங்கியிருந்திருப்பேன்.

அல்லது முழுமை பெறாக் கருவைப் போலவும் ஒளியைக் காணாக் குழவியைப் போலவும் அழிந்திருப்பேன்.

அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர். களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர்.

சிறைப்பட்டோர் அங்கு நிம்மதியாகக் கூடியிருப்பர்: ஒடுக்குவோரின் அதட்டலைக் கேளாதிருப்பர்.

சிறியவரும் பெரியவரும் அங்கு இருப்பர்: அடிமை தம் ஆண்டான் பிடியில் இரான்.

உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்? உள்ளம் கசந்தோர்க்கு உயி¡ கொடுப்பானேன்?

சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்: அதைப் புதையலினும் மேலாய்க் கருதித் தேடுகிறார்கள். ஆனால் அதுவோ வந்த பாடில்லை.

கல்லறை காணின் களிப்பெய்தி அகமகிழ்வோர்க்கு, வாழ்வு வழங்கப்படுவதேன்?

எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ, எவரைச் சுற்றிலும் கடவுள் தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ, அவருக்கு ஒளியால் என்ன பயன்?

பெருமூச்சு எனக்கு உணவாயிற்று: வேதனைக்கதறல் வெள்ளமாய் ஓடிற்று.

ஏனெனில் நான் அஞ்சியது எதுவோ? அதுவே எனக்கு நேர்ந்தது: திகிலுற்றது எதுவோ அதுவே என்மேல் விழுந்தது.

எனக்கு நிம்மதி இல்லை: ஓய்வு இல்லை: அமைதி இல்லை: அல்லலே வந்துற்றது.

அதிகாரம் 4.

அதன்பின் தேமானியன் எலிப்பாக பேசத் தொடங்கினான்:

ஒன்று சொன்னால் உமக்குப் பொறுக்குமோ? சொல்லாமல் நிறத்த யாரால்தான் முடியும்?

பலர்க்கு அறிவுரை பகர்ந்தவர் நீர்! தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியவர் நீர்!

உம் சொற்கள், தடுக்கி விழுவோரைத் தாங்கியுள்ளன: தள்ளாடும் கால்களை உறுதியாக்கியுள்ளன.

ஆனால் இப்பொழுதோ, ஒன்று உமக்கு வந்துற்றதும் வருந்துகின்றீர்: அது உம்மைத் தாக்கியதும் கலங்குகின்றீர்.

இறையச்சம் அல்லவா உமது உறுதி? நம்பிக்கையல்லவா உமது நேரிய வழி?

நினைத்துப்பாரும்! குற்றமற்றவர் எவராவது அழிந்ததுண்டா? நேர்மையானவர் எங்கேயாவது ஒழிந்ததுண்டா?

நான் பார்த்த அளவில், தீவினையை உழுது, தீங்கினை விதைத்தவர் அறுப்பது அதையே!

கடவுளின் மூச்சினால் அவர்கள் அழிவர்: அவரின் கோபக் கனலால் எரிந்தொழிவர்.

அரியின் முழக்கமும் கொடுஞ்சிங்கத்தின் உறுமலும் அடங்கும்: குருளையின் பற்களும் உடைபடும்.

இறந்துபோம் சிங்கம் இரையில்லாமல்: குலைந்துபோம் பெண்சிங்கத்தின் குட்டிகள்.

எனக்கொரு வார்த்தை மறைவாய் வந்தது: அதன் மெல்லிய ஓசை என் செவிக்கு எட்டியது.

ஆழ்ந்த உறக்கம் மனிதர்க்கு வருகையில், இரவுக் காட்சியின் சிந்தனைகளில்,

அச்சமும் நடுக்கமும் எனை ஆட்கொள்ள, என் எலும்புகள் பலவும் நெக்குவிட்டனவே.

ஆவி ஒன்று என் முன்னே கடந்து சென்றது: என் உடலின் மயிர் சிலிர்த்து நின்றது.

ஆவி நின்றது: ஆனால், அதன் தோற்றம் எனக்குத் தெளிவில்லை: உருவொன்று என் கண்முன் நின்றது: அமைதி நிலவிற்று: குரலொன்றைக் கேட்டேன்.

கடவுளைவிட மனிதர் நேர்மையாளரா? படைத்தவரைவிட மானிடர் மாசற்றவரா?

அவர் தம் தொண்டர்களிலே நம்பிக்கை வைக்கவில்லையெனில், அவருடைய வான பதரிடமே அவர் குறைகாண்கின்றாரெனில்,

புழுதியைக் கால்கோளாகக்கொண்டு, மண் குடிசையில் வாழ்ந்து, அந்துப்பூச்சிபோல் விரைவில் அழியும் மனிதர் எம்மாத்திரம்?

காலைமுதல் மாலைவரையில் அவர்கள் ஒழிக்கப்டுவர்: ஈவு இன்றி என்றென்றும் அழிக்கப்படுவர்.

அவர்களின் கூடாரக் கயிறுகள் அறுபட, அவர்கள் ஞானமின்றி மடிவதில்லையா?

அதிகாரம் 5.

இப்போது கூப்பிட்டுப்பாரும்! யார் உமக்குப் பதிலுரைப்பார்? எந்தத் பயவரிடம் துணை தேடுவீர்?

உண்மையில், அறிவிலியைத்தான் எரிச்சல் கொல்லும்: பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்,

அறிவிலி வேரூன்றுவதை நானே கண்டேன்: ஆனால் உடனே அவன் உறைவிடத்தில் வெம்பழி விழுந்தது,

அவனுடைய மக்களுக்கப் பாதுகாப்பு இல்லை: ஊர்மன்றத்தில் அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்: மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.

அவனது அறுவடையைப் பசித்தவர் உண்பர்: முள்ளுக்கு நடுவிலுள்ளதையும் அவர்கள் பறிப்பர்: பேராசைக்காரர் அவன் சொத்துக்காகத் துடிப்பர்.

ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது: மண்ணினின்று இன்னல் விளையாது.

நெருப்புச்சுடர் மேல்நோக்கி எழுவதுபோல, துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்.

ஆனால், நான் கடவுளையே நாடுவேன்: அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.

ஆராய முடியாப் பெரியனவற்றையும் எண்ணிலடங்கா வியக்கத்தக்கனவற்றையும் செய்பவர் அவரே.

மண் முகத்தே மழையைப் பொழிபவரும் வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.

அவர் தாழ்ந்தோரை மேலிடத்தில் அமர்த்துகின்றார்: அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.

வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்: அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.

ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில் சிக்க வைக்கின்றார்: வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன:

அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்: நண்பகலிலும் இரவில்போல் தடுமாறுகின்றனர்.

அவர் வறியவரை அவர்களின் வாயெனும் வாளினின்று காக்கின்றார்: எளியவரை வலியவரின் கையினின்று மீட்கின்றார்.

எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு: அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.

இதோ! கடவுள் திருத்தும் மனிதர் பேறு பெற்றோர்: ஆகவே, வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர்.

காயப்படுத்தினாலும் கட்டுப்போடுபவர் அவரே: அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே.

ஆறு வகை அல்லல்களினின்றும் அவர் உம்மை மீட்பார்: ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.

பஞ்சத்தில் சாவினின்றும் சண்டையில் வாள் முனையினின்றும் உம்மை விடுவிப்பார்.

நாவின் சொல்லடியினின்றும் நீர் மறைக்கப்படுவீர்: நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.

அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்: மண்ணக விலங்குகளுக்கு மருளீர்.

வயல்வெளிக் கற்களோடு உம் உடன்படிக்கை இருக்கும்: காட்டு விலங்குகளோடும் நீர் அமைதியில் வாழ்வீர்.

உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்: உம் மந்தையைச் சென்று காண்கையில் ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.

உமது வித்து பெருகுவதையும், உமது வழிமரபினர் நிலத்துப்புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.

பழுத்த வயதில் தளர்வின்றிக் கல்லறை செல்வீர், பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.

இதுவே யாம் கண்டறிந்த உண்மை! செவிகொடுப்பீர்: நீவிரே கண்டுனர்வீர்.

அதிகாரம் 6.

யோபு கூறிய பதிலுரையாவது:

ஓ! என் வேதனைகள் உண்மையாகவே நிறுக்கப்பட்டு, என் இன்னல்கள் அனைத்தும் சீர்பக்கப்படுமானால் நலமாயிருக்குமே!

கடற்கரை மணலிலும் இப்போது அவை கனமானவை: பதற்றமான என் சொற்களுக்குக் காரணமும் அதுவே:

எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் தைத்துள்ளன: அவற்றின் நஞ்சு என் உயிரைக் குடிக்கின்றது: கடவுளின் அச்சுறுத்தல்கள் எனக்கெதிராய் அணிவகுத்துள்ளன.

காட்டுக் கழுதைக்குப் புல் இருக்க, அது கனைக்குமா? காளைக்குத் தீனி இருக்க, அது கத்துமா?

சுவையற்றது உப்பின்றி உண்ணப்படுமா? துப்பும் எச்சிலில் சுவை இருக்குமா?

அவற்றைத் தொட என் நெஞ்சம் மறுக்கிறது: அவை எனக்கு அருவருப்புத்தரும் உணவாமே!

ஓ! என் வேண்டுதலுக்கு அருள்பவர் யார்? நான் ஏங்குவதை இறைவன் ஈந்திடமாட்டாரா?

அவர் என்னை நசுக்கிவிடக்கூடாதா? தம் கையை நீட்டி எனைத் துண்டித்திடலாகாதா?

அதுவே எனக்கு ஆறுதலாகும்: அழிக்கும் அல்லலிலும் அகமகிழ்வேன்: தொடரும் துயரிலும் துள்ளி மகிழ்வேன்: ஏனெனில் பயவரின் சொற்களை மறுத்தேனில்லை.

நான் இன்னும் பொறுத்திருக்க வலிமை ஏது? என நெஞ்சம் காத்திருக்க நோக்கமேது?

என் வலிமை கல்லின் வலிமையோ? என் சதை வெண்கலத்தாலானதோ?

இதோ! என்னில் உதவி ஏதுமில்லை: என்னிலிருந்து உரம் நீக்கப்பட்டது.

அடுத்திருப்போர்க்கு கனிவு காட்டாதோர் எல்லாம் வல்லவரையே புறக்கணிப்போர்.

காய்ந்துவிடும் காட்டாற்றுக் கண்ணிகள் போலும் சிற்றாறுகள்போலும் வஞ்சினத்தனர் என் உறவின் முறையார்.

அவற்றில் பனிக்கட்டி உருகிச் செல்லும்: அவற்றின் மேற்பகுதியை உறைபனி மூடி நிற்கும்.

வெப்பக் காலத்திலோ அவை உருகி மறைந்துபோம்: வெயில் காலத்திலோ அவை இடந்தெரியாது ஒழியும்.

வணிகர் கூட்டம் தம் வழியை மாற்றுகின்றது: பாலையில் அலைந்து தொலைந்து மடிகின்றது.

தேடி நிற்கின்றனர் தேமாவின் வணிகர்: நாடி நிற்கின்றனர் சேபாவின் வழிப்போக்கர்.

அவர்கள் நமிபியிருந்தனர்: ஆனால், ஏமாற்றமடைகின்றனர்: அங்கு வந்தடைந்தனர்: ஆனால் திகைத்துப் போகின்றனர்.

இப்போது நீங்களும் எனக்கு அவ்வாறே ஆனீர்கள்: என் அவலம் கண்டீர்கள்: அஞ்சி நடுங்குகின்றீர்கள்.

எனக்கு அன்பளிப்புத் தாரும் என்றோ, உம் செல்வத்திலிருந்து என் பொருட்டுக் கையூட்டுக் கொடும் என்றோ சொன்னதுண்டா?

எதிரியின் கையினின்று என்னைக் காப்பாற்றும் என்றோ, கொடியவர் பிடியினின்று என்னை மீட்டருளும் என்றோ நான் எப்போதுதாவது வேண்டியதுண்டா?

அறிவு புகட்டுக! அமைதியடைவேன்: என்ன தவறிழைத்தேன்? எடுத்துக்காட்டுக!

நேர்மையான சொற்கள் எத்துணை ஆற்றலுள்ளவை? ஆனால், நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது?

என் வார்த்தைகளைக் கண்டிக்க எண்ணலாமா? புலம்புவோரின் சொற்கள் காற்றுக்கு நிகராமா?

திக்கற்றோர் மீது சீட்டுப் போடுவீர்கள்: நண்பர்மீதும் பேரம் பேசுவீர்கள்.

பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்: உங்கள் முகத்திற்கெதிரே உண்மையில் பொய் சொல்லேன்,

போதும் நிறுத்துங்கள்: அநீதி செய்ய வேண்டாம்! பொறுங்கள்! நீதி இன்னும் என் பக்கமே:

என் நாவில் அநீதி உள்ளதா? என் அண்ணம் சுவையானதைப் பிரித்துணராதா?

அதிகாரம் 7.

மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே?

நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும்,

வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன: இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின.

படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்: விடியும்வரை புரண்டு உழல்வேன்,

புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின என் உடலை: வெடித்தது என் தோல்: வடிந்தது சீழ்.

என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன: அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.

என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூருவீர்: என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.

என்னைக் காணும் கண் இனி என்னைப் பார்க்காது. என் மேல் உம் கண்கள் இருக்கும்: நானோ இரேன்.

கார்முகில் கலைந்து மறைவதுபோல் பாதாளம் செல்வோர் ஏறி வாரார்.

இனி அவர்களது இருப்பிடம் அவர்களை அறியாது.

ஆகையால், நான் என் வாயை அடக்கமாட்டேன்: என் மனத்தின் வேதனையை எடுத்துரைப்பேன்: உள்ளக் கசப்பில் முறையிடுவேன்.

கடலா நான்? அல்லது கடலின் பெருநாகமா? காவல் என்மீது வைக்கலானீர்!

என் படுக்கை ஆறுதல் அளிக்கும்: என் மெத்தை முறையீட்டைத் தணிக்கும்¥ என்பேனாகில்,

கனவுகளால் என்னைக் கலங்க வைக்கின்றீர்: காட்சிகளால் என்னைத் திகிலடையச் செய்கின்றீர்.

ஆதலால் நான் குரல்வளை நெரிக்கப்படுவதையும் வேதனையைவிடச் சாவதையும் விரும்புகின்றேன்.

வெறுத்துப்போயிற்று: என்றென்றும் நான் வாழப்போவதில்லை: என்னைவிட்டுவிடும். ஏனெனில் என் வாழ்நாள்கள் காற்றுப்போன்றனவே.

மனிதர் எம்மாத்திரம், நீர் அவர்களை ஒரு பொருட்டாய் எண்ண? உமது இதயத்தை அவர்கள்மேல் வைக்க?

காலைதோறும் நீர் அவர்களைச் ஆய்ந்தறிய? மணித்துளிதோறும் அவர்களைச் சோதிக்க?

எவ்வளவு காலம் என்மேல் வைத்த கண்ணை எடுக்காதிருப்பீர்? என் எச்சிலை விழுங்குமளவுக்குக் கூட என்னை விடமாட்டீரா?

மானிடரின் காவலரே! நான் பாவம் இழைத்துவிட்டேனா? உமக்கு நான் செய்ததென்னவோ? என்னை உம் இலக்காக ஆக்கியதேன்? உமக்கு நான் சுமையாய்ப் போனதேன்?

ஏன் மீறலை மன்னியாதது ஏன்? என் அக்கிரமங்களை அகற்றாதது ஏன்? இப்பொழுதோ நான் மண்ணுக்குள் உறங்கப் போகின்றேன்: நீர் என்னைத் தேடுவீர்: நான் இல்லாதுபோவேன்.

அதிகாரம் 8.

அதற்குச் சூகாயனான பில்தாது கூறிய பதில்:

எதுவரை இவ்வாறே பேசிக் கொண்டிருப்பீர்? உம் வாய்ச்சொற்கள் புயல்காற்றைப் போல் இருக்கின்றன.

இறைவனே நீதியைப் புரட்டுவாரா? எல்லாம் வல்லவரே நேர்மை பிறழ்வாரா?

உம் புதல்வர்கள் அவருக்கெதிராயப் பாவம் செய்ததால், குற்றப்பழியின் ஆற்றலிடம் அவர்களைக் கையளித்தார்.

ஆனால், நீர் இறைவனை ஆர்வத்துடன் நாடினால், எல்லாம் வல்லவரிடம் இறைஞ்சினால்,

நீர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தால் இப்பொழுது கூட அவர் உம்பொருட்டு எழுந்திடுவார், உமக்குரிய உறையுளை மீண்டும் ஈந்திடுவார்.

உம்முடைய தொடக்கம் எளிமையாக இருப்பினும், உம் வருங்காலம் வளமைமிகக் கொழிக்கும்.

முன்னோரின் தலைமுறையைக் கேட்டுப்பாரும்: அன்னரின் தந்தையர் ஆய்ந்ததை அறியும்.

நேற்றுத் தோன்றிய நாம் உன்றும் அறியோம்: நிலமிசை நம் வாழ்நாள் நிழலைப் போன்றது,

அவர்களன்றோ உமக்கு அறிவித்து உணர்த்துவர்! புரிந்த வார்த்தைகளை உமக்குப் புகட்டுவர்!

சேறின்றி நாணல் தழைக்குமா? நீரின்றிக் கோரை வளருமா?

இன்னும் பசுமையாக வெட்டாது இருக்கையிலே எல்லாப் புற்களுக்கு முன்னே அவை வாடிடும்.

இறைவனை மறப்போரின் கதி இதுவே: இறைப்பற்றில்லாரின் நம்பிக்கை இடிந்துபோம்:

அவர்களின் நம்பிக்கை முறிந்துபோம்: அவர்கள் சார்ந்திருப்பது சிலந்திக் கூட்டையே.

யாராவது அவ்வீட்டின்மீது சாய்ந்தால், அது நில்லாதுபோம்: யாராவது அதை பற்றி பிடித்தால், அது நிலைத்திராது.

பகலவன்முன் பசுஞ்செடி போன்றோர் அவர்கள்: படரும் தோட்டமொங்கும் அவர்களின் கிளைகள்.

கற்குவியலில் பின்னிடும் அவர்களின் வேர்கள் கற்களிடையே இடம் தேடும்.

அவர்கள் தம் இடத்திலிருந்து எடுபட்டால், “உங்களை நான் கண்டதேயில்லை“ என உதறிவிடும் அவ்விடம்.

பார்! அவர்கள் தம் வாழ்வில் கண்ட இன்பம் இதுவே: மண்ணினின்று மற்றவர் முளைத்தெழுவர்.

இதோ! கறையிலாதவரை இறைவன் கைவிடுவதில்லை: காதகர்க்கு அவர் கைகொடுப்பதுமில்லை.

இருப்பினும், உம் வாயைச் சிரிப்பாலும், இதழ்களை மகிழ்வொலியாலும் நிரப்புவர்.

உம்மைப் பகைப்பர் வெட்கத்தால் உடுத்தப்படுவர்: தீயோர் கூடாரம் இல்லாது போகும்.

அதிகாரம் 9.

யோபு அதற்கு உரைத்த பதில்:

உண்மையில் இது இவ்வாறு என்று அறிவேன்: ஆனால், மனிதர் இறைவன்முன் நேர்மையாய் இருப்பதெப்படி?

ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால், ஆயிரத்தில் ஒன்றுக்கேனும் அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா?

இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்: ஆற்றலில் வல்லவர்: அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினபடுத்தி, வளமுடன் வாழ்ந்தவர் யார்?

அவர் மலைகளை அகற்றுவார்: அவை அதை அறியா: அவர் சீற்றத்தில் அவைகளைத் தலைகீழாக்குவார்.

அசைப்பார் அவர் நிலத்தை அதனிடத்தினின்று: அதிரும் அதனுடைய பண்கள்.

அவர் கட்டளையிடுவார்: கதிரவன் தோன்றான்: அவர் மறைத்திடுவார் விண்மீன்களை.

தாமே தனியாய் வானை விரித்தவர், ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர்.

வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை விண்மீன் குழுக்களையும் அமைத்தவர் அவரே.

உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும், கணக்கிட முடியா அருஞ்செயல்களையும் ஆற்றுநர் அவரே.

இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில் நான் பார்க்க முடியவில்லை: நழுவிச் செல்கையில் நான் உணர முடியவில்லை.

இதோ! அவர் பறிப்பாரானால், அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர் என அவரைத் கேட்பார் யார்?

கடவுள் தம் சீற்றத்தைத் தணிக்கமாட்டார்: அவரடி பணிந்தனர் இராகாபின் துணைவர்கள்.

இப்படியிருக்க, எப்படி அவருக்குப் பதிலுரைப்பேன்? எதிர்நின்று அவரோடு எச்சொல் தொடுப்பேன்?

நான் நேர்மையாக இருந்தாலும் அவருக்குப் பதிலுரைக்க இயலேன்: என் நீதிபதியிடம் நான் இரக்கத்தையே கெஞ்சுவேன்.

நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும், என் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.

புயலினால் என்னை நொறுக்குவார்: காரணமின்றி என் காயங்களைப் பெருக்குவார்.

அவர் என்னை மூச்சிழுக்கவும் விடாது, கசப்பினால் என்னை நிரப்புகின்றார்.

வலிமையில் அவருக்கு நிகர் அவரே! அவர்மேல் வழக்குத் தொடுப்பவர் யார்?

நான் நேர்மையாக இருந்தாலும், என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்: நான் குற்றமற்றவனாக இருந்தாலும், மாறுபட்டவனாக அது என்னைத் தீர்ப்பிடும்.

குற்றமற்றவன் நான்: என்னைப்பற்றிக் கவலையில்லை: என் வாழ்க்கையையே வெறுக்கின்றேன்.

எல்லாம் ஒன்றுதான்: எனவேதான் சொல்கின்றேன்: ”அவர் நல்லவரையும் பொல்லாரையும் ஒருங்கே அழிக்கின்றார்“.

பேரிடர் சாவைத் திடீரெனத் தரும்போது, அவர் மாசற்றவரின் நெருக்கடி கண்டு நகைப்பார்.

வையகம் கொடியோர் கையில் கொடுக்கப்படுகின்றது: அதன் நீதிபதிகளை கண்களை அவர் கட்டுகின்றார். அவரேயன்றி வேறு யார் இதைச் செய்வார்?

ஓடுபவரைவிட விரைந்து செல்கின்றன என் வாழ்நாள்கள்: அவை பறந்து செல்கின்றன: நன்மையொன்றும் அவை காண்பதில்லை.

நாணற் படகுபோல் அவை விரைந்தோடும்: இரைமேல் பாயும் ஒரு கழுகைப்போல் ஆகும்.

“நான் துயர் மறப்பேன்: முகமலர்ச்சி கொள்வேன்: புன்முறவல் பூப்பேன், எனப் புகல்வேனாயினும்,

என் இடுக்கண் கண்டு நடுக்க முறுகின்றேன், ஏனெனில், அவர் என்னைக் குற்றமற்றவனாய்க் கொள்ளார் என அறிவேன்.

நான்தான் குற்றவாளி எனில், வீணே ஏன் நான் போராடவேண்டும்?

பனிநீரில் நான் என்னைக் கழுவினும், சவர்க்காரத்தினால் என் கைகளைத் பய்மையாக்கினும்,

குழியில் என்னை அவர் அமிழ்த்திடுவார்: என் உடையே என்னை வெறுத்திடுமே!

ஏனெனில், அவரோடு நான் வழக்காடவும், வழக்கு மன்றத்தில் எதிர்க்கவும் என்னைப்போல் அவர் மனிதர் இல்லை.

இருவர்மீதும் தம் கையை வைக்க, ஒரு நடுவர்கூட எம் நடுவே இல்லையே.

அகற்றப்படுக அவர் கோல் என்னிடமிருந்து! அப்போது மிரட்டாது என்னை அவரைப்பற்றிய அச்சம்!

அவரிடம் அச்சமின்றிப் பேசுவேன் அப்போது: அப்படிப் பேசும் நிலையில் நான் இல்லையே இப்போது.

அதிகாரம் 10.

என் உள்ளம் என் வாழ்வை அருவருக்கின்றது: என் ஆற்றாமையைத் தாராளமாய்க் கொட்டித் தீர்ப்பேன்: உள்ளத்தில் கசப்பினை நான் உரைத்திடுவேன்.

நான் கடவுளிடம் சொல்வேன்: என்னைக் கண்டனம் செய்யாதீர்: என் மீது நீர் சாட்டும் குற்றத்தின் காரணம் என்னவெனச் சாற்றுவீர்.

என்னை ஒடுக்குவதும் உமது கையின் படைப்பை இகழ்வதும் உலுத்தர் சூழ்ச்சயில் உளம் மகிழ்வதும் உமக்கு அழகாமோ?

ஊனக் கண்களா உமக்கு உள்ளன? உண்மையில், மானிடப்பார்வையா உமது பார்வை?

மானிட நாள்கள் போன்றவோ உம் நாள்கள்? மனிதரின் வாழ்நாள் அனையவோ உம் ஆண்டுகள்?

பின், ஏன் என் குற்றங்களைத் துருவிப் பார்க்கிறீர்? ஏன் என் பாவங்களைக் கிளருகின்றீர்?

நான் குற்றமற்றவன் என நீர் அறிந்தாலும், உம் கையினின்று என்னைத் தப்புவிப்பவர் ஒருவருமில்லை.

என்னை வனைந்து வடிவமைத்து உண்டாக்கின உம் கைகள்: இருப்பினும், நீரே என்னை அழிக்கின்றீர்.

தயைகூர்ந்து நினைத்துப் பாரும்! களிமண்போல் என்னை வனைந்தீர்: அந்த மண்ணுக்கே என்னைத் திரும்பச் செய்வீரோ?

பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா? தயிர்போல் என்னை நீர் உறைக்கவில்லையா?

எலும்பும் தசைநாரும் கொண்டு என்னைப் பின்னினீர்: தோலும் சதையும் கொண்டு என்னை உடுத்தினீர்.

வாழ்வையும் இரக்கத்தையும் எனக்கு வழங்கினீர்: என் உயிர் மூச்சை உம் கரிசனை காத்தது.

எனினும், இவற்றை உம் உள்ளத்தில் ஒளித்திருந்தீர்: இதுவே உம் மனத்துள் இருந்ததென நான் அறிவேன்.

நான் பாவம் செய்தால், என்னைக் கவனிக்கிறீர்: என் குற்றத்தை எனக்குச் சுட்டிவிடகாட்டாது விடமாட்டீர்: நான் குற்றம் புரிந்தால் அதை என்மீது சுமத்தாது விடீர்.

நான் தீங்கு செய்தால், ஜயோ ஒழிந்தேன்! நான் நேர்மையாக இருந்தாலும் தலைபக்க முடியவில்லை: ஏனெனில், வெட்கம் நிறைந்தாலும் வேதனையில் உள்ளேன்.

தலைநிமிர்ந்தால் அரிமாபோல் எனை வேட்டையாடுவீர்: உம் வியத்தகு செயல்களை எனக்கெதிராய்க் காட்டுவீர்:

எனக்கெதிராய்ச் சான்றுகளைப் புதுப்பிக்கிறீர்: என்மீது உமது சீற்றத்தைப் பெருக்குகிறீர்: எனக்கெதிராய்ப் போராட்டத்தைப் புதிதாக எழுப்புகிறீர்.

கருப்பையிலிருந்து என்னை ஏன் வெளிக் கொணர்ந்தீர்? கண் ஏதும் என்னைக் காணுமுன்பே நான் இறந்திருக்கலாகாதா?

உருவாகதவன் போலவே இருந்திருக்கக்கூடாதா? கருவறையிலிருந்தே கல்லறைக்குப் போயிருப்பேனே:

என்னுடைய நாள்கள் சிலமட்டுமே: என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால், மணித்துளி நேரமாவது மகிழ்ந்திருப்பேன்:

பின்னர், இருளும் இறப்பின் நிழலும் சூழ்ந் த திரும்ப இயலாத நாட்டிற்குப் போவேன்.

அது காரிருளும் சாவின் நிழலும் சூழ்ந்த இருண்ட நாடு: அங்கு ஒழுங்கில்லை: ஒளியும் இருள்போல் இருக்கும்.

அதிகாரம் 11.

அதற்கு நாமாவியனான சோப்பார் சொன்ன மறுமொழி:

திரளான சொற்கள் பதிலின்றிப் போகலாமா? மிகுதியாகப் பேசுவதால், ஒருவர் நேர்மையாளர் ஆகிவிடுவாரோ?

உம் வீண் வார்த்தைகள் மனிதரை வாயடைத்திடுமோ? நீர் நகையாடும் போது உம்மை யாரும் நையாண்டி செய்யாரோ?

”என் அறிவுரை பயது: நானும் என் கண்களுக்கு மாசற்றவன்” என்கின்றீர்.

ஆனால், ”கடவுளே பேசட்டும்: தம் இதழ்களை உமக்கெதிராயத் திறக்கட்டும்” என யாரேனும் அவரை வேண்டாரோ!

அவரே ஞானத்தின் மறைபொருளை உமக்கு அறிவிக்கட்டும்: அவர் இரட்டிப்பான அறிவும் திறனுமுடையவர்: கடவுள் உம் தீமைகளில் சிலவற்றை மறந்தார் என்பதை அறிக!

கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா? எல்லாம் வல்லவரின் எல்லையைக் கண்டுணர முடியுமா?

அவை வானங்களை விட உயர்ந்தவை: நீர் என்ன செய்வீர்? அவை பாதாளத்தைவிட ஆழமானவை: நீர் என்ன அறிவீர்?

அதன் அளவு பாருலகைவிடப் பரந்தது: ஆழ்கடலைவிட அகலமானது.

அவர் இழுத்து வந்து அடைத்துப் போட்டாலும், அவைமுன் நிறுத்தினாலும் அவரைத் தடுப்பார் யார்?

ஏனெனில், அவர் மனிதரின் ஒன்றுமில்லாமையை அறிவார்: தீமையைக் காண்கின்றார்: ஆனால், அதை ஒருபொருட்டாகக் கருதுவதில்லை.

காட்டுக்கழுதைக்குட்டி மனிதனாகப் பிறந்தால், அறிவிலியும் அறிவு பெறுவான்.

உம்முடைய உள்ளத்தை நீர் ஒழுங்குபடுத்தினால், உம்முடைய கைகளை அவரை நோக்கி நீட்டுவீராக!

உம் கையில் கறையிருக்குமாயின் அப்புறப்படுத்தும்: உம் கூடாரத்தில் தீமை குடிகொள்ளாதிருக்கட்டும்.

அப்போது உண்மையாகவே நாணமின்றி உம் முகத்தை ஏறெடுப்பீர்: நிலைநிறுத்தப்படுவீர்: அஞ்சமாட்டீர்.

உம் துயரை நீர் மறந்துபோவீர்: கடந்துபோன வெள்ளம்போல் அதை நினைகூர்வீர்.

உம் வாழ்வுக்காலம் நண்பகலைவிட ஒளிரும்: காரிருளால் மூடப்பட்டிருந்தாலும் காலைபோல் ஆவீர்:

நம்பிக்கை இருப்பதனால் உறுதிகொள்வீர்: சுற்றிலும் நோக்கிப் பாதுகாப்பில் ஓய்வீர்:

ஓய்ந்து படுப்பீர்: ஒருவரும் உம்மை அச்சுறுத்தார்: உம் முகம்தேடிப் பலர் உம் தயவை நாடுவர்:

தீயோரின் கண்கள் மங்கிப்போம்: அனைத்துப் புகலிடமும் அவர்க்கு அழிந்துபோம்: உயிர்பிரிதலே அவர்தம் நம்பிக்கை!

அதிகாரம் 12.

அதற்கு யோபு உரைத்த மறுமொழி:

உண்மையிலும் உண்மை: நீங்கள்தாம் எல்லாம் தெரிந்தவர்கள். உங்களோடு ஞானமும் ஒழிந்துவிடும்!

உங்களைப்போல அறிவு எனக்கும் உண்டு: உங்களுக்கு நான் தாழ்ந்தவன் அல்லன்: இத்தகையவற்றை யார்தான் அறியார்?

கடவுளை மன்றாடி மறுமொழி பெற்ற நான், என் நண்பர்க்கு நகைப்புப் பொருள் ஆனேன். குற்றமற்ற நேர்மையாளனாகிய நான் நகைப்புப் பொருள் ஆனேன்.

இன்பத்தில் திளைத்திருக்கும் நீங்கள் என்னை ஏளனம் செய்கின்றீர்கள்: அடிசறுக்கிய என்னைத் தாக்குகின்றீர்கள்.

கொள்ளையரின் கூடாரங்கள் கொழிக்கின்றன! இறைவனைச் சினந்தெழச் செய்வோரும் கடவுளுக்குச் சவால் விடுப்போரும் பாதுகாப்பாய் உள்ளனர்!

இருப்பினும், விலங்கிடம் வினவுக: உமக்கு அது கற்றுக்கொடுக்கும்: வானத்துப் பறவை உமக்கு அறிவுறுத்தும்.

அல்லது மண்ணில் ஊர்வனவற்றிடம் பேசுக: அவை உமக்குக் கற்பிக்கும். ஆழியின் மீன்கள் உமக்கு அறிவிக்கும்.

இவற்றில் ஆண்டவரை அறியாதது எது? அவரது கைதான் இதைச் செய்தது என எது அறியாது?

அவர் கையில்தான் அனைத்துப் படைப்புகளின் உயிரும் மனித இனத்தின் மூச்சும் உள்ளன.

செவி, சொற்களைப் பிரித்து உணர்வதில்லையா? நாக்கு, உணவைச் சுவைத்து அறிவதில்லையா?

முதியோரிடம் ஞானமுண்டு: ஆயுள் நீண்டோரிடம் அறிவுண்டு.

ஞானமும் வலிமையும் அவரிடமே உள்ளன! ஆலோசனையும் அறிவும் அவர்க்கே உரியன!

இதோ! அவர் இடித்திடுவதை எழுப்பிட இயலாது: அவர் அடைத்திடுபவரை விடுவித்திட முடியாது.

இதோ: அவர் மழையைத் தடுப்பாரெனில், அனைத்தும் வறண்டுபோம்: வெளியே அதை வரவிடுவாரெனில், நிலத்தையே மூழ்கடிக்கும்.

வல்லமையும் மதிநுட்பமும் அவருக்கே உரியன: ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும் அவருடையோரே!

அமைச்சர்களை அறிவிழக்கச் செய்கின்றார்: நடுவர்களை மடையர்கள் ஆக்குகின்றார்.

அரசர்களின் அரைக்கச்சையை அவிழ்க்கின்றார்: அவர்களின் இடையில் கந்தையைக் கட்டுகின்றார்:

குருக்களைத் தம் நிலையிலிருந்து விழச் செய்கின்றார்: நிலைபெற்ற வலியோரைக் கவிழ்த்து வீழ்த்துகின்றார்:

வாய்மையாளரின் வாயை அடைக்கினார்: முதியோரின் பகுத்துணர் மதியைப் பறிக்கின்றார்:

உயர்குடி மக்கள் மீது வெறுப்பினைப் பொழிகின்றார்: வலியோரின் கச்சை கழன்றுபோகச் செய்கின்றார்:

புரியாப் புதிர்களை இருளினின்று இலங்கச் செய்கின்றார். காரிருளை ஒளிக்குக் கடத்திவருகின்றார்.

மக்களினங்களைப் பெருகச் செய்கின்றார்: பின்பு அழிக்கின்றார்: மக்களினங்களைப் பரவச் செய்கின்றார்: பின், குறையச் செய்கின்றார்.

மண்ணக மக்களின் தலைவர்தம் அறிவாற்றலை அழிக்கின்றார். வழியிலாப் பாழ்வெளியில் அவர்களை அலையச் செய்கின்றார்.

இருளில் ஒளியிலாது தடவுகின்றார்கள்: குடித்தவர்போல் அவர்களைத் தடுமாற வைக்கின்றார்.

அதிகாரம் 13.

இதோ! இவை என் கண்களே கண்டவை: என் காதுகளே கேட்டு உணர்ந்தவை.

நீங்கள் அறிந்திருப்பதை நானும் அறிந்திருக்கின்றேன்: நான் உங்களுக்கு எதிலும் இளைத்தவன் இல்லை.

ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு சொல்லாடுவேன்: கடவுளோடு வழக்காட விழைகின்றேன்,

நீங்களோ பொய்யினால் மழுப்புகின்றவர்கள்: நீங்கள் எல்லாருமே பயனற்ற மருத்துவர்கள்.

ஜயோ! பேசாது அனைவரும் அமைதியாக இருங்கள்: அதுவே உங்களுக்கு ஞானமாகும்.

இப்பொழுது என் வழக்கினைக் கேளுங்கள்: என் இதழின் முறையீட்டைக் கவனியுங்கள்.

இறைவன் பொருட்டு முறைகேடாய்ப் பேசுவீர்களா? அவர்பொருட்டு வஞ்சகமாயப் பேசுவீர்களா?

கடவுள் பொருட்டு ஒரு சார்பாகப் பேசுவீர்களா? அல்லது அவர்க்காக வாதாடுவீர்களா?

அவர் உங்களை ஆராய்ந்தால் உங்களில் நல்லதைக் காண்பாரா? அல்லது மனிதரை வஞ்சிப்பதுபோல, அவரையும் வஞ்சிப்பீர்களா?

நீங்கள் மறைவாக ஓரவஞ்சனை காட்டினால் உங்களை உறுதியாக அவர் கண்டிப்பார்.

அவருடைய மாட்சி உங்களை மருளவைக்காதா? அவருடைய அச்சுறுத்தல் உங்கள் மீது விழாதா?

உங்களுடைய மூதுரைகள் சாம்பலையொத்த முதுமொழிகள்: உங்கள் எதிர்வாதங்கள் உண்மையில் களிமண்மையொத்த வாதங்கள்.

பேசாதிருங்கள்: என்னைப் பேசவிடுங்கள்: எனக்கு எது வந்தாலும் வரட்டும்.

என் சதையை என் பற்களிடையே ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்? என் உயிரை என் கைகளால் ஏன் பிடித்துக்கொள்ளவேண்டும்?

அவர் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும்: இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என எடுத்துரைப்பதில் நான் தளரேன்.

இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்: ஏனெனில், இறைப்பற்றில்லாதார் அவர்முன் வர முடியாது.

என் வார்த்தையைக் கவனித்துக்கேளுங்கள்: என் கூற்று உங்கள் செவிகளில் ஏறட்டும்.

இதோ! இப்பொழுது என் வழக்கை வகைப்படுத்தி வைத்தேன்: குற்றமற்றவன் என மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன்.

இறைவா! நீர்தாமோ எனக்கெதிராய் வழக்காடுவது? அவ்வாறாயின், இப்போதே வாய்பொத்தி உயிர் நீப்பேன்.

எனக்கு இரண்டு செயல்களை மட்டும் செய்யும்: அப்போது உமது முகத்திலிருந்து ஒளியமாட்டேன்.

உமது கையை என்னிடமிருந்து எடுத்துவிடும்: உம்மைப்பற்றிய திகில் என்னைக் கலங்கடிக்காதிருக்கட்டும்.

பின்னர் என்னைக் கூப்பிடும்: நான் விடையளிப்பேன்: அல்லது என்னைப் பேசவிடும்: பின் நீர் மறுமொழி அருளும்.

என்னுடைய குற்றங்கள், தீமைகள் எத்தனை? என் மீறுதலையும் தீமையையும் எனக்குணர்த்தும்.

உம் முகத்தை ஏன் மறைக்கின்றீர்? பகைவனாய் என்னை ஏன் கருதுகின்றீர்?

காற்றடித்த சருகைப் பறக்கடிப்பீரோ? காய்ந்த சுளத்தைக் கடிது விரட்டுவீரோ?

கசப்பானவற்றை எனக்கெதிராய் எழுதுகின்றீர்: என் இளமையின் குற்றங்களை எனக்கு உடைமையாக்குகின்றீர்.

என் கால்களைத் தொழுவில் மாட்டினீர்: கண் வைத்தீர் என் பாதை எல்லாம்: காலடிக்கு எல்லை குறித்துக் குழிதோண்டினீர்.

மனிதர் உளுத்தமரம்போல் விழுந்து விடுகின்றனர்: அந்துப்பூச்சி அரிக்கும் ஆடைபோல் ஆகின்றனர்.

அதிகாரம் 14.

பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு. வருத்தமோ மிகுதி.

மலர்போல் பூத்து அவர்கள் உலர்ந்து போகின்றனர்: நிழல்போல் ஓடி அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.

இத்தகையோர்மீதா உம் கண்களை வைப்பீர்? தீர்ப்பிட அவர்களை உம்மிடம் கொணர்வீர்?

அழுக்குற்றதினின்று அழுக்கற்றதைக் கொணர முடியுமா? யாராலும் முடியவே முடியாது.

அவர்களுடைய நாள்கள் உண்மையாகவே கணிக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய திங்கள்களின் எண்ணிக்கை உம்மிடம் உள்ளது: அவர்கள் கடக்க இயலாத எல்லையைக் குறித்தீர்.

எனவே அவர்களிடமிருந்து உம் பார்வையைத் திருப்பும்: அப்பொழுது, கூலியாள்கள் தம் நாள் முடிவில் இருப்பது போல், அவர்கள் ஓய்ந்து மகிழ்வர்.

மரத்திற்காவது நம்பிக்கையுண்டு: அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்: அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்.

அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும், அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப்போனாலும்,

தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும்: இளஞ்செடிபோல் கிளைகள் விடும்.

ஆனால், மனிதர் மடிகின்றனர்: மண்ணில் மறைகின்றனர்: உயிர் போனபின் எங்கே அவர்கள்?

ஏரியில் தண்ணீர் இல்லாது போம்: ஆறும் வறண்டு காய்ந்துபோம்.

மனிதர் படுப்பர்: எழுந்திருக்கமாட்டார்: வானங்கள் அழியும்வரை அவர்கள் எழுவதில்லை: அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை.

ஓ! என்னைப் பாதாளத்தில் ஒளித்து வைக்கமாட்டீரா? உமது சீற்றம் தணியும்வரை மறைத்து வைக்கமாட்டீரா? என்னை நினைக்க ஒருநேரம் குறிக்கமாட்டீரா?

மனிதர் மாண்டால், மறுபடியும் வாழ்வரா? எனக்கு விடிவு வரும்வரை, என் போராட்ட நாள்களெல்லாம் பொறுத்திருப்பேன்.

நீர் அழைப்பீர்: உமக்கு நான் பதிலளிப்பேன்: உம் கைவினையாம் என்னைக் காண விழைவீர்.

அப்பொழுது, என் காலடிகளைக் கணக்கிடுவீர்: என் தீமைகளைத் துருவிப் பார்க்கமாட்டீர்.

என் மீறுதலைப் பையிலிட்டு முத்திரையிட்டீர்: என் குற்றத்தை மூடி மறைத்தீர்.

ஆனால் மலை விழுந்து நொறுங்கும்: பாறையும் தன் இடம்விட்டுப் பெயரும்.

கற்களைத் தண்ணீர் தேய்த்துக் கரைக்கும்: நிலத்தின் மண்ணை வெள்ளம் அடித்துப்போகும்: இவ்வாறே ஒரு மனிதனின் நம்பிக்கையை அழிப்பீர்.

ஒடுக்குவீர் அவனை எப்பொழுதும்: ஒழிந்துபோவான் அவனும்: அவனது முகத்தை உருக்குலைத்து, விரட்டியடிப்பீர்.

புதல்வர்கள் புகழ்பெறினும் அவன் அறிந்தான் இல்லை: கதியிழந்தாலும் அதை அவன் கண்டான் இல்லை.

அவன் உணர்வது தன் ஊனின் வலியையே: அவன் புலம்புவது தன் பொருட்டே.

அதிகாரம் 15.

அதற்குத் தேமானியனான எலிப்பாசு சொன்னான்:

வெற்று அறிவினால் ஞானி விடையளிக்கக்கூடுமோ? வறண்ட கீழ்க்காற்றினால் வயிற்றை அவன் நிரப்பவோ?

பயனிலாச் சொற்களாலோ, பொருளிலாப் பொழிவினாலோ அவன் வழக்காடத் தகுமோ?

ஆனால், நீர் இறையச்சத்தை இழந்துவிட்டீர்: இறைச்சிந்தனை இல்லாது போனீர்.

உம் குற்றம் உம் வாயை உந்துகின்றது: வஞ்சக நாவை நீர் தேர்ந்துகொண்டீர்.

கண்டனம் செய்தது உம் வாயே: நானல்ல: உம் உதடே உமக்கு எதிராய்ச் சான்றுரைக்கின்றது.

மாந்தரில் முதல்பிறவி நீர்தாமோ? மலைகளுக்கு முன்பே உதித்தவர் நீர்தாமோ?

கடவுளின் மன்றத்தில் கவனித்துக் கேட்டீரோ? ஞானம் உமக்கு மட்டுமே உரியதோ?

எங்களுக்குத் தெரியாத எது உமக்குத் தெரியும்? எங்களுக்குப் புரியாத எது உமக்குப் புரியும்?

நரைமுடியும் நிறைவயதும்கொண்டு, நாள்களில் உம் தந்தைக்கு மூத்தோர் எங்களிடை உள்ளனர்.

கடவுளின் ஆறுதலும், கணிவான சொல்லும் உமக்கு அற்பமாயினவோ?

மனம்போன போக்கில் நீர் செல்வது ஏன்? உம் கண்கள் திருதிருவென விழிப்பது ஏன்?

அதனால், இறைவனுக்கு எதிராய் உம் கோபத்தைத் திருப்புகின்றீர்: வாயில் வந்தபடி வார்த்தைகளைக் கொட்டுகின்றீர்.

மாசற்றவராய் இருக்க மானிடர் எம்மாத்திரம்? நேர்மையாளராய் இருக்கப் பெண்ணிடம் பிறந்தவர் எம்மாத்திரம்?

வான பதரில் இறைவன் நம்பிக்கை வையார்: வானங்களும் அவர்தம் கண்முன் பயவையல்ல:

தீமையை தண்ணீர் போல் குடிக்கும் அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர் எத்துணை இழிந்தோர் ஆவர்?

கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்: நான் பார்த்த இதனை நவில்கின்றேன்:

ஞானிகள் உரைத்தவை அவை! அவர்கள் தந்தையர் மறைக்காதவை அவை!

அவர்களுக்கே நாடு வழங்கப்பட்டது: அன்னியர் அவர்களிடையே நடமாடியதில்லை.

துடிக்கின்றனர் துன்பத்தில் மூர்க்கர் தம் நாளெல்லாம்: துன்பத்தின் ஆண்டுகள் கொடியோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.

திகிலளிக்கும் ஒலி அவர்களின் செவிகளில் கேட்கும்: நலமான காலத்தில் அழிப்பவர் தாக்கலாம்.

அவர்கள் இருளினின்று தப்பிக்கும் நம்பிக்கை இழப்பர்: வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர்.

எங்கே உணவு என்று ஏங்கி அலைவர்: இருள்சூழ்நாள் அண்மையில் உள்ளதென்று அறிவர்.

இன்னலும் இடுக்கணும் அவர்களை நடுங்க வைக்கும்: போருக்குப் புறப்படும் அரசன்போல் அவை அவர்களை மேற்கொள்ளும்.

ஏனெனில், இறைவனுக்கு எதிராக அவர்கள் கையை ஓங்கினர்: எல்லாம் வல்லவரை எதிர்த்து வீரம் பேசினர்.

வணங்காக் கழுத்தோடும் வலுவான பெரிய கேடயத்தேடும், அவரை எதிர்த்து வந்தனர்.

ஏனெனில், அவர்களின் முகத்தைக் கொழுப்பு மூடியுள்ளது: அவர்களின் தொந்தி பருத்துள்ளது.

பாழான பட்டணங்களிலும், எவரும் உறைய இயலா இல்லாங்களிலும், இடிபாடுகளுக்குரிய வீடுகளிலும் அவர்கள் குடியிருப்பர்.

அவர்கள் செல்வர் ஆகார்: அவர்களின் சொத்தும் நில்லாது: அவர்களது உடைமை மண்ணில் பெருகாது.

இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை: அவர்களது தளிரை அனல் வாட்டும். அவர்களது மலர் காற்றில் அடித்துப்போகப்படும்.

வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்: ஏனெனில், வெறுமையே அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.

அவர்களது வாழ்நாள் முடியுமுன்பே அது நடக்கும்: அவர்களது தளிர் உலர்ந்துவிடும்:

பிஞ்சுகளை உதிர்க்கும் திராட்சைச் செடிபோன்றும் பூக்களை உகுக்கும் ஒலிவமரம் போன்றும் அவர்கள் இருப்பர்.

ஏனெனில், இறையச்சமிலாரின் கூட்டம் கருகிப்போம்: கையூட்டு வாங்குவோரின் கூடாரம் எரியுண்ணும்.

இன்னலைக் கருவுற்று அவர்கள் இடுக்கண் ஈன்றெடுப்பர்: வஞசகம் அவர்களது வயிற்றில் வளரும்.

அதிகாரம் 16.

அதற்கு யோபு உரைத்த மறுமொழி:

இதைப்போன்ற பலவற்றை நான் கேட்டதுண்டு: புண்படுத்தும் தேற்றுவோர் நீவிர் எல்லாம்.

உங்களின் வெற்று உரைக்கு முடிவில்லையா? வாதாட இன்னும் உம்மை உந்துவது எதுவோ?

என்னாலும் உங்களைப்போல் பேச இயலும்: என்னுடைய நிலையில் நீவிர் இருந்தால், உங்களுக்கெதிராய்ச் சொற்சரம் தொடுத்து, உங்களை நோக்கித் தலையசைக்கவும் முடியும்.

ஆயினும், என் சொற்களால் உங்களை வலுப்படுத்துவேன்: என் உதட்டின் ஆறுதல் உங்கள் வலியைக் குறைக்குமே!

நான் பேசினாலும் என் வலி குறையாது: அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது.

உண்மையில், கடவுளே! இப்போது என்னை உளுத்திட வைத்தீர்: என் சுற்றம் முற்றும் இற்றிடச் செய்தீர்.

நீர் என்னை இளைக்கச் செய்தீர்: அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று: என் மெலிவு எழுந்து எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது.

அவர் என்னை வெறுத்தார்: வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்: என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்: என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான்.

மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்: ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்: எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர்.

இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார். கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்:

நலமுடன் இருந்தேன் நான்: தகர்த்தெறிந்தார் என்னை அவர்: பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்: என்னையே தம் இலக்காக ஆக்கினார்.

அவர் தம் வில்வீரர் என்னை வளைத்துக் கொண்டனர்: என் ஈரலை அவர் பிளந்து விட்டார்: ஈவு இரக்கமின்றி என் ஈரலின் பித்தை மண்ணில் சிந்தினார்.

முகத்தில் அடியடியென்று என்னை அடித்தார்: போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார்.

சாக்கு உடையை நான் என் உடலுக்குத் தைத்துக் கொண்டேன்: புழுதியில் என் மேன்மையைப் புதைத்தேன்.

அழுதழுது என் முகம் சிவந்தது: என் கண்களும் இருண்டு போயின,

இருப்பினும், வன்செயல் என் கையில் இல்லை: மாசு என் மன்றாட்டில் இல்லை.

மண்ணே! என் குருதியை மறைக்காதே: என் கூக்குரலைப் புதைக்காதே.

இப்பொழுதும் இதோ! என் சான்று விண்ணில் உள்ளது: எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார்.

என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே! கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன்.

ஒருவன் தன் நண்பனுக்காகப் பேசுவதுபோல், அவர் மனிதர் சார்பாகக் கடவுளிடம் பரிந்து பேசுவார்.

இன்னும் சில ஆண்டுகளே உள்ளன: பிறகு திரும்ப வரவியலா வழியில் செல்வேன்.

அதிகாரம் 17.

என் உயிர் ஊசலாடுகின்றது: என் நாள்கள் முடிந்துவிட்டன: கல்லறை எனக்குக் காத்திருக்கின்றது.

உண்மையாகவே, எள்ளி நகைப்போ+ என்னைச் சூழ்ந்துள்ளனர்: என் கண்முன் அவர்தம் பகைமையே நிற்கின்றது.

நீரே எனக்குப் பணையமாய் இருப்பீராக! வேறுயார் எனக்குக் கையடித்து உறுதியளிப்பார்?

அறியமுடியாதபடி அவர்கள் உள்ளத்தை அடைத்துப் போட்டீர்: அதனால் அவர்கள் மேன்மையடைய விடமாட்டீர்.

கைம்மாறு கருதி நண்பர்க்கு எதிராயப் புறங்கூறுவோரின் பிள்ளைகளின் கண்களும் ஒளியிழந்துபோம்.

என் இனத்தார்க்கு அவர் என்னைப் பழிச் சொல்லாக்கியுள்ளார்: என்னைக் காண்போர் என்முன் துப்புகின்றனர்.

கடுந்துயரால் என் கண்கள் மங்குகின்றன: என் உறுப்புகளெல்லாம் நிழல்போலாகின்றன.

இதைக்கண்டு நேர்மையானவர் திகைக்கின்றனர்: குற்றமற்றோர் இறைப்பற்று இல்லார் மேல் சீற்றமடைகின்றனர்.

நேர்மையாளர் தம் நெறியைக் கடைப்பிடிப்பர்: கறையற்ற கையினர் இன்னும் வலிமை அடைவர்.

ஆனால், இப்பொழுது நீங்கள் எல்லாரும் திரும்பி வாருங்கள். வந்தாலும் ஞானமுள்ள எவரையும் உங்களில் காணமாட்டேன்.

கடந்தன என் நாள்கள்: தகர்ந்தன என் திட்டங்கள்: அவ்வாறே ஆயின என் இதய நாட்டங்கள்.

அவர்கள் இரவைப் பகலாகத் திரிக்கின்றனர்: ஒளி இருளுக்கு அண்மையில் உளது என்கின்றனர்.

இருள் உலகையே என் இல்லமென எதிர்பார்ப்பேனாகில், என் படுக்கையை இருளிலே விரிப்பேனாகில்,

படுகுழியை நோக்கி என் தந்தையே என்றும், புழுவை நோக்கி என் தாயே, என் தமக்கையே என்றும் புகல்வேனாகில்,

பின் எங்கே என் நம்பிக்கை? என் நம்பிக்கையைக் காணப்போவது யார்?

நாம் ஒன்றாய்ப் புழுதிக்குப் போகும் போது, இருள் உலகில் வாயில்வரை அது இறங்குமா?

அதிகாரம் 18.

அதற்குச் சூகாவியனான பில்தாது சொன்ன பதில்:

எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்? சிந்தித்திப் பாரும்: பின்னர் நாம் பேசுவோம்.

மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்? மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?

சீற்றத்தில் உம்மையே நீர் கீறிக்கொள்வதனால், உம்பொருட்டு உலகம் கைவிடப்பட வேண்டுமா? பாறையும் தன் இடம்விட்டு நகர்த்தப்படவேண்டுமா?

தீயவரின் ஒளி அணைந்துபோம்: அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம்.

அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்: அவர்கள்மீது ஒளிரும் விளக்கு அணைந்துபோம்.

அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்: அவர்களின் திட்டமே அவர்களைக் கவிழ்க்கும்.

அவர்களின் கால்களே அவர்களை வலைக்குள் தள்ளும்: அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.

கண்ணி அவர்களின் குதிகாலைச் சிக்கிப்பிடிக்கும்: சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.

மண்மீது அவர்களுக்குச் சுருக்கும், பாதையில் அவர்களுக்குப் பொறியும் மறைந்துள்ளன.

எப்பக்கமும் திகில் அவர்களை நடுங்க வைக்கும்: கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.

பட்டினி அவர்களின் வலிமையை விழுங்கிடும்: தீங்கு அவர்களின் வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.

நோய் அவர்களின் தோலைத் தின்னும்: சாவின் தலைப்பேறு அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.

அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று பிடுங்கப்படுவர்: அச்சம்தரும் அரசன்முன் கொணரப்படுவர்.

அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது: அவர்களின் உறைவிடங்களில் கந்தகம் பவப்படுகின்றது.

கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்: மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.

அவர்களின் நினைவே அவனியில் இல்லாதுபோம்: மண்ணின் முகத்தே அவனுக்குப் பெயரே இல்லாது போம்.

ஒளியிலிருந்து இருளுக்குள் அவர்கள் தள்ளப்படுவர்: உலகிலிருந்தே அவர்கள் துரத்தப்படுவர்.

அவர்களின் இனத்தாரிடையே அவர்களுக்கு வழிமரபும் வழித்தோன்றலுமில்லை: அவர்கள் வாழ்ந்த இடத்தில் அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.

அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது மேற்றிசை: திகிலுற்றது கீழ்த்திசை.

கொடியவரின் குடியிருப்பெல்லாம் இத்தகையதே: இறைவனை அறியாதவரின் நிலையும் இதுவே.

அதிகாரம் 19.

பின் யோபு உரைத்த மறுமொழி:

என் உள்ளத்தை எவ்வளவு காலத்திற்குப் புண்படுத்துவீர்? என்னை வார்த்தையால் நொறுக்குவீர்?

பன்முறை என்னைப் பழித்துரைத்தீர்: வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசினீர்.

உண்மையாகவே நான் பிழை செய்திருந்தாலும் என்னுடன் அன்றோ அந்தப் பிழை இருக்கும்?

எனக்கு எதிராய் நீங்களே உங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வீர்களாகில், என் இழிநிலையை எனக்கு விரோதமாய்க் காட்டுவீராகில்,

கடவுள்தான் என்னை நெருக்கடிக்குள் செலுத்தினார் என்றும், வலைவீசி என்னை வளைத்தார் என்றும் அறிந்துகொள்க!

இதோ! “கொடுமை“ எனக் கூக்குரலிட்டாலும் கேட்பாரில்லை: நான் ஓலமிட்டாலும் தீர்ப்பாரில்லை.

நான் கடந்துபோகாவண்ணம், கடவுள் என் வழியை அடைத்தார்: என் பாதையை இருளாக்கினார்.

என் மாண்பினை அவர் களைந்தார்: மணிமுடியை என் தலையினின்று அகற்றினார்.

எல்லாப் பக்கமும் என்னை இடித்துக் தகர்த்தார்: நான் தொலைந்தேன்: மரம்போலும் என் நம்பிக்கையை வேரோடு பிடுங்கினார்.

அவர்தம் கோபக்கனல் எனக்கெதிராய்த் தெறித்தது: அவர் எதிரிகளில் ஒருவனாய் என்னையும் எண்ணுகின்றார்.

அவர்தம் படைகள் ஒன்றாக எழுந்தன: அவர்கள் எனக்கெதிராய் முற்றுகை இட்டனர்: என் கூடாரத்தைச் சுற்றிப் பாசறை அமைத்தனர்.

என் உடன் பிறந்தவரை என்னிடமிருந்து அகற்றினார்: எனக்கு அறிமுகமானவரை முற்றிலும் விலக்கினார்:

என் உற்றார் என்னை ஒதுக்கினர்: என் நண்பர்கள் என்னை மறந்தனர்.

என் வீட்டு விருந்தினரும் என் பணிப்பெண்களும் என்னை அன்னியனாகக் கருதினர்: அவர்கள் கண்களுக்குமுன் நான் அயலானானேன்.

என் அடிமையை அழைப்பேன்: மறுமொழி கொடான்: என் வாயால் அவனைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது.

என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று: என் தாயின் பிள்ளைகளுக்கு நாற்றம் ஆனேன்.

குழந்தைகளும் என்னைக் கேலி செய்கின்றனர்: நான் எழுந்தால் கூட ஏளனம் செய்கின்றனர்.

என் உயிர் நண்பர் எல்லாரும் என்னை வெறுத்தனர்: என் அன்புக்குரியவராய் இருந்தோரும் எனக்கெதிராக மாறினர்.

நான் வெறும் எலும்பும் தோலும் ஆனேன்: நான் பற்களின் ஈறோடு தப்பினேன்.

என் மேல் இரங்குங்கள்: என் நண்பர்கள்! என் மேல் இரக்கம் கொள்ளுங்கள்: ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது.

இறைவனைப் போல் நீங்களும் என்னை விரட்டுவது ஏன்? என் சதையை நீங்கள் குதறியது போதாதா?

ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது வரையப்படலாகாதா? ஓ! அவை ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா?

இரும்புக்கருவியாலும் ஈயத்தாலும் என்றென்றும் அவை பாறையில் பொறிக்கப்படவேண்டும்.

ஏனெனில், என் மீட்பர் வாழ்கின்றார் என்றும் இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன்.

என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும் போதே கடவுளைக் காண்பேன்.

நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்: என் கண்களே காணும்: வேறு கண்கள் அல்ல: என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.

ஆனால், நீங்கள் பேசிக்கொள்கின்றீர்கள்: “அவனை எப்படி நாம் வதைப்பது? அவனிடம் அடிப்படைக் காரணத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?“

மாறாக-வாளுக்கு நீங்களே அஞ்சவேண்டும்: ஏனெனில், சீற்றம் வாளின் தண்டனையைக் கொணரும்: அப்போது, நீதித் தீர்ப்பு உண்டு என்பதை அறிந்துகொள்வீர்கள்.

அதிகாரம் 20.

அதற்கு நாமாயனான சோப்பார் கூறின பதில்:

என்னுள் இருக்கும் துடிப்பின் பொருட்டு, என் எண்ணங்கள் பதில் சொல்ல வைக்கின்றன.

என்னை வெட்கமடையச் செய்யும் குத்தல்மொழி கேட்டேன்: நான் புரிந்து கொண்டதிலிருந்து விடை அளிக்க மனம் என்னை உந்துகிறது.

மாந்தர் மண்ணில் தோன்றியதிலிருந்து, தொன்றுதொட்டு நடக்குமிது உமக்குத் தெரியாதா?

கொடியவரின் மகிழ்ச்சி நொடிப் பொழுதே! கடவுளுக்கு அஞ்சாதவரின் களிப்பு கணப்பொழுதே!

அவர்களின் பெருமை விசும்பு மட்டும் உயர்ந்தாலும், அவர்களின் தலை முகிலை முட்டுமளவு இருந்தாலும்,

அவர்கள் தங்களின் சொந்த மலம் போன்று என்றைக்கும் ஒழிந்திடுவர்: அவர்களைக் கண்டவர், எங்கே அவர்கள்? என்பர்.

கனவுபோல் கலைந்திடுவர்: காணப்படார்: இரவு நேரக் காட்சிபோல் மறைந்திடுவர்.

பார்த்த கண் இனி அவர்களைப் பார்க்காது: வாழ்ந்த இடம், அவர்களை என்றும் காணாது.

ஏழைகளின் தயவை அவர்களின் குழந்தைகள் நாடுவர்: அவர்களின் கைகளே அவர்களின் செல்வத்தைத் திரும்ப அளிக்கும்.

எலும்புகளை நிரப்பிய அவர்களின் இளமைத் துடிப்பு, மண்ணில் அவர்களோடு மறைந்துவிடும்.

தீங்கு அவர்களின் வாயில் இனிப்பாய் இருப்பினும், நாவின் அடியில் அதை அவர்கள் மறைத்து வைப்பினும்,

இழந்து போகாமல் அதை அவர்கள் இருத்தி வைத்தாலும், அண்ணத்தின் நடுவே அதை அடைத்து வைத்தாலும்,

வயிற்றிலே அவர்களின் உணவு மாற்றமடைந்து, அவர்களுக்கு விரியன் பாம்பின் நஞ்சாகிவிடுமே:

செல்வத்தை விழுங்கினர்: அதை அவர்களே கக்குவர்: இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து அதை வெளியேற்றுவார்.

விரியன் பாம்பின் நஞ்சை அவர்கள் உறிஞ்சுவர்: கட்டு விரியனின் நாக்கு அவர்களைக் கொன்றுபோடும்.

ஓலிவ எண்ணெய்க் கால்வாய்களிலும், தேன், வெண்ணெய் ஆறுகளிலும் அவர்கள் இன்பம் காணார்.

தங்களின் உழைப்பின் பயனை அவர்கள் திரும்ப அளிப்பர்: அதை அவர்கள் உண்ணமாட்டார்: வணிகத்தின் வருவாயில் இன்புறார்.

ஏனெனில், அவர்கள் ஏழைகளை ஒடுக்கி, இல்லாதவராக்கினர்: தாங்கள் கட்டாத வீட்டை அவர்கள் அபகரித்துக் கொண்டனர்.

அவர்களின் ஆசைக்கோர் அளவேயில்லை: ஆதலால், அவர்கள் இச்சித்த செல்வத்தில் மிச்சத்தைக் காணார்.

அவர்கள் தின்றபின் எஞ்சியது எதுவும் இல்லை: எனவே அவர்களது செழுமை நின்று நிலைக்காது.

நிறைந்த செல்வத்திடை அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்: அவலத்தின் பளுவெல்லாம் அவர்கள்மேல் விழும்.

அவர்கள் வயிறு புடைக்க உண்ணும்போது, இறைவன் தம் கோபக்கனலை அவர்கள்மேல் கொட்டுவார்: அதையே அவர்களுக்கு உணவாகப் பொழிவார்.

அவர்கள் இரும்பு ஆயுதத்திற்கு அஞ்சி ஓடுவர்: ஆனால், வெண்கல வில் அவர்களை வீழ்த்திடுமே!

அவர்கள் அதைப் பின்புறமாக இழப்பர்: மின்னும் முனை பிச்சியிலிருந்து வெளிவரும்: அச்சம் அவர்கள் மேல் விழும்.

காரிருள் அவர்களது கருவூலத்திற்குக் காத்திருக்கும்: மூட்டாத தீ அதனைச் சுட்டெரிக்கும்: அவர்களின் கூடாரத்தில் எஞ்சியதை விழுங்கும்.

விண்ணகம் அவர்களின் பழியை வெளியாக்கும்: மண்ணகம் அவர்களை மறுத்திட எழுந்து நிற்கும்.

அவர்களது இல்லத்தின் செல்வம் சூறையாடப்படும்: இறைவனின் வெஞ்சின நாளில் அது அடித்துப்போகப்படும்.

இதுவே பொல்லார்க்குக் கடவுள் அளிக்கும் பங்கு: அவர்களுக்கு இறைவன் குறிக்கும் உரிமைச் சொத்து.

அதிகாரம் 21.

அதற்கு யோபு கூறிய மறுமொழி:

நான் கூறுவதைக் கவனமாய்க் கேளுங்கள்: இதுவே நீங்கள் எனக்கு அளிக்கும் ஆறுதலாயிருக்கும்.

பொறுங்கள்! என்னைப் பேசவிடுங்கள்: நான் பேசிய பிறகு கேலி செய்யுங்கள்.

என்னைப் பொறுத்த மட்டில், நான் முறையிடுவது மனிதரை எதிர்த்தா? இல்லையேல் நான் ஏன் பொறுமை இழக்கக்கூடாது?

என்னை உற்றுப்பாருங்கள்: பதறுங்கள்: கையால் வாயில் அடித்துக்கொள்ளுங்கள்.

இதை நான் நினைக்கும்பொழுது திகிலடைகின்றேன்: நடுக்கம் என் சதையை ஆட்டுகிறது.

தீயோர் வாழ்வதேன்? நீண்ட ஆயுள் பெறுவதேன்? வலியோராய் வளர்வதேன்?

அவர்களின் வழிமரபினர் அவர்கள்முன் நிலைபெறுகின்றனர்: அவர்களின் வழித்தோன்றல்கள் அவர்கள் கண்முன் நிலைத்திருக்கின்றனர்.

அவர்களின் இல்லங்களில் அச்சமற்ற அமைதி நிலவுகின்றது. கடவுளின் தண்டனை அவர்கள்மேல் விழவில்லை.

அவர்களின் காளைகள் பொலிகின்றன. ஆனால் பிசகுவதில்லை: அவர்களின் பசுக்கள் கருவுறும்: ஆனால் கரு கலைவதில்லை.

மந்தைபோல அவர்கள் தம் மழலைகளை வெளியனுப்புகின்றனர்: அவர்களின் குழந்தைகள் குதித்தாடுகின்றனர்.

அவர்கள் தம்புரு, சுரமண்டலம் இசைத்துப் பாடுகின்றன+: குழல் ஊதி மகிழ்ந்திருக்கின்றனர்.

அவர்கள் மகிழ்வில் தம் நாள்களைக் கழிக்கின்றனர்: அமைதியில் பாதாளம் இறங்குகின்றனர்.

அவர்கள் இறைவனிடம் இயம்புகின்றனர்: “எம்மை விட்டு அகலும்: ஏனெனில், உமது வழிகளை அறிந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை:“

எல்லாம் வல்லவர் யார் நாங்கள் பணி புரிய? அவரை நோக்கி நாங்கள் மன்றாடுவதால் என்ன பயன்?

இதோ! அவர்களின் வளமை அவர்களின் கையில் இல்லை. எனவே தீயோரின் ஆலோசனை எனக்குத் தொலையிலிருப்பதாக!

எத்தனைமுறை தீயோரின் ஒளி அணைகின்றது? அழிவு அவர்கள்மேல் வருகின்றது? கடவுள் தம் சீற்றத்தில் வேதனையைப் பங்கிட்டு அளிக்கின்றார்.

அவர்கள் காற்றுக்குமுன் துரும்பு போன்றோர்: சூறாவளி அடித்துப் போகும் பதர் போன்றோர்.

அவர்களின் தீங்கைக் கடவுள் அவர்களின் பிள்ளைகளுக்கா சேர்த்து வைக்கின்றார்? அவர்களுக்கே அவர் திரும்பக் கொடுக்கின்றார்: அவர்களும் அதை உணர்வர்.

அவர்களின் அழிவை அவர்களின் கண்களே காணட்டும்: எல்லாம் வல்லவரின் வெஞ்சினத்தை அவர்கள் குடிக்கட்டும்.

அவருடைய நாள்கள் எண்ணப்பட்டபின், அவர்களது இல்லத்தில் அவர்கள் கொள்ளும் அக்கறை என்ன?

இறைவனுக்கு அறிவைக் கற்பிப்போர் யார்? ஏனெனில், அவரே உயர்ந்தோரைத் தீர்ப்பிடுகின்றார்.

சிலர் வளமையோடும் வலிமையோடும் நிறைவோடும் முழு அமைதியோடும் சாகின்றனர்.

அவர்களின் தொடைகள் கொழுப்பேறி உள்ளன: அவர்களின் எலும்புகளின் சோறு உலரவில்லை.

வேறு சிலர், கசந்த உள்ளத்துடன் இனிமையையச் சுவைக்காதவராயச் சாகின்றனர்:

புழுதியில் இருசாராரும் ஒன்றாய்த் துஞ்சுவர்: புழுக்கள் அவர்களைப் போர்த்தி நிற்குமே.

இதோ! உம் எண்ணங்களையும் எனக்கெதிராய்த் தீட்டும் திட்டங்களையும் நான் அறிவேன்.

ஏனெனில், நீங்கள் கூறுகின்றீர்கள்: “கொடுங்கோலனின் இல்லம் எங்கே? கொடியவன் குடியிருக்கும் கூடாரம் எங்கே?“

வழிப்போக்கர்களை நீங்கள் வினவவில்லையா? அவர்கள் அறிவித்ததை நீங்கள் கேட்கவில்லையா?

தீயோர் அழிவின் நாளுக்கென விடப்பட்டுள்ளனர்: வெஞ்சின நாளில் அவர்கள் விடுவிக்கப்படுவாரா?

யார் அவர்களின் முகத்துக்கு எதிரே அவர்களின் போக்கை உரைப்பார்? யார் அவர்களின் செயலுக்கேற்பக் கொடுப்பார்?

இருப்பினும், கல்லறைக்கு அவர்கள் கொண்டுவரப்படுவர்: அவர்களின் சமாதிக்குக் காவல் வைக்கப்படும்.

பள்ளத்தாக்கின் மண் அவர்களுக்கு இனிமையாய் இருக்கும்: மாந்தர் அனைவரும் அவர்களைப் பின்தொடர்வர்: அவர்களின் முன் செல்வோர்க்குக் கணக்கில்லை.

அப்படியிருக்க, வெற்றுமொழியால் நீர் என்னைத் தேற்றுவதெப்படி? ஊமது மறுமொழி முற்றிலும் பொய்யே!

அதிகாரம் 22.

பின்னர் தேமானியனான எலிப்பாசு பேசத் தொடங்கினான்:

மனிதரால் இறைவனுக்குப் பயன் உண்டா? மதிநுட்பம் உடையவரால் அவருக்குப் பயன் உண்டா?

நீர் நேர்மையாக இருப்பது எல்லாம் வல்லவர்க்கு இன்பம் பயக்குமா? நீர் உமது வழியைச் செம்மைப்படுத்துவது அவர்க்கு நன்மை பயக்குமா?

நீர் அவரை அஞ்சி மதிப்பதாலா அவர் உம்மைக் கண்டிக்கிறார்? அதனை முன்னிட்டா உம்மைத் தீர்ப்பிடுகிறார்?

உமது தீமை பெரிதல்லவா? உமது கொடுமைக்கு முடிவில்லையா?

ஏனெனில், அற்பமானவற்றுக்கும் உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்: ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்!

தாகமுள்ளோர்க்குக் குடிக்கத் தண்ணீர் தரவில்லை: பசித்தோர்க்கு உணவு கொடுக்க முன்வரவில்லை.

வலிய மனிதராகிய உமக்கு வையகம் சொந்தமாயிற்று: உம் தயவு பெற்றவர்க்கே அது குடியிருப்பாயிற்று.

விதவைகளை நீர் வெறுங்கையராய் விரட்டினீர்: அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர்.

ஆகையால், கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன: கிலி உம்மைத் திடீரென ஆட்கொள்ளும்.

நீர் காணாவண்ணம் காரிருள் சூழ்ந்தது: நீர்ப்பெருக்கு உம்மை மூழ்கடித்தது.

உயரத்தே விண்ணகத்தில் கடவுள் இல்லையா? வானிலிருக்கும் விண்மீன்களைப் பாரும்! அவை எவ்வளவு உயரத்திலுள்ளன!

ஆனால், நீர் சொல்கின்றீர்: “இறைவனுக்கு என்ன தெரியும்? கார்முகிலை ஊடுருவிப் பார்த்து அவரால் தீர்ப்பிட முடியுமா?

அவர் பார்க்காவண்ணம் முகில் மறைக்கின்றது: அவர் வான்தளத்தில் உலவுகின்றனார்“.

பாதகர் சென்ற பழைய நெறியில் நீரும் செல்ல விழைகின்றீரோ!

நேரம் வருமுன்பே அவர்கள் பிடிப்பட்டனர்: அவர்கள் அடித்தளத்தை வெள்ளம் அடித்துச் சென்றது.

அவர்கள் இறைவனிடம், “எங்களைவிட்டு அகலும்: எல்லாம் வல்லவர் எங்களுக்கு என்ன செய்ய முடியும்?“ என்பர்.

இருப்பினும், அவரே அவர்களின் இல்லத்தை நம்மையினால் நிரப்பினார்: எனினும், தீயவரின் திட்டம் எனக்குத் தொலைவாயிருப்பதாக!

நேர்மையுள்ளோர் அதைக் கண்டு மனம் மகிழ்கின்றனர்: மாசற்றோர் அவர்களை எள்ளி நகையாடுகின்றனர்:

“இதோ! நம் பகைவர் வீழ்த்தப்பட்டனர்: அவர்களின் சேமிப்பு தீயால் விழுங்கப்பட்டது“ என்கின்றனர்.

இணங்குக இறைவனுக்கு: எய்துக அமைதி: அதனால் உமக்கு நன்மை வந்தடையும்.

அவர் வாயினின்று அறிவுரை பெறுக: அவர்தம் மொழிகளை உம் நெஞ்சில் பொறித்திடுக:

நீர் எல்லாம் வல்லவரிடம் திரும்பி வருவீராகில், நீர் கட்டியெழுப்பப்படுவீர்: தீயவற்றை உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்!

பொன்னைப் புழுதியிலே எறிந்து, ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்!

எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும், வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.

அப்போது எல்லாம் வல்லவரில் நீர் நம்பிக்கை கொள்வீர். கடவுளைப் பார்த்து உம் முகத்தை நிமிர்த்திடுவீர்.

நீர் அவரிடம் மன்றாடுவீர்: அவரும் உமக்குச் செவி கொடுப்பார்.

நீர் நினைப்பது கைகூடும்: உம் வழிகள் ஒளிமயமாகும்.

ஏனெனில், அவர் செருக்குற்றோரின் ஆணவத்தை அழிக்கின்றார்: தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார்.

குற்றவாளிகளையும் அவர் விடுவிப்பார்: அவர்கள் உம் கைகளின் பய்மையால் மீட்கப்படுவர்.

அதிகாரம் 23.

யோபு அதற்கு உரைத்த மறுமொழி:

இன்றுகூட என் முறைப்பாடு கசப்பாயுள்ளது: நான் வேதனைக் குரல் எழுப்பியும், என் மேல் அவரது கை பளுவாயுள்ளது.

அவரை எங்கே கண்டுபிக்கலாமென நான் அறிய யாராவது உதவுவாரானால், நான் அவர் இருக்கையை அணுகுவேன்.

என் வழக்கை அவர்முன் எடுத்துரைப்பேன்: என் வாயை வழக்குரைகளால் நிரப்புவேன்.

அவர் எனக்கு என்ன வார்த்தை கூறுவார் என அறிந்து கொள்வேன்: அவர் எனக்கு என்ன சொல்வார் என்பதையும் நான் புரிந்து கொள்வேன்.

மாபெரும் வல்லமையுடன் அவர் என்னோடு வழக்காடுவாரா? இல்லை: அவர் கண்டிப்பாக எனக்குச் செவி கொடுப்பார்.

அங்கே நேர்மையானவன் அவரோடு வழக்காடலாம்: நானும் என் நடுவரால் முழுமையாக விடுவிக்கப்படுவேன்.

கிழக்கே நான் சென்றாலும் அவர் அங்கில்லை: மேற்கேயும் நான் அவரைக் காண்கிலேன்.

இடப்புறம் தேடினும் செயல்படுகிற அவரைக் காணேன்: வலப்புறம் திரும்பினும் நான் அவரைப் பார்த்தேனில்லை.

ஆயினும் நான் போகும் வழியை அவர் அறிவார்: என்னை அவர் புடமிட்டால், நான் பொன்போல் துலங்கிடுவேன்.

அவர் அடிச்சுவடுகளை என் கால்கள் பின்பற்றின: அவர் நெறியில் நடந்தேன்: பிறழவில்லை.

அவர் நா உரைத்த ஆணையினின்று நான் விலகவில்லை: அவர்தம் வாய்மொழிகளை அரும்பொருளின் மேலாகப் போற்றினேன்.

ஆனால், அவர் ஒரு முடிவை எடுத்தால், யாரால் மாற்ற முடியும்? ஏனெனில், எதை அவர் விரும்புகிறாரோ அதை அவர் செய்கிறார்.

ஏனெனில் எனக்கு அவர் குறித்துள்ளதை அவர் நிறைவேற்றுவார்: இத்தகையன பல அவர் உள்ளத்தில் உள்ளன.

ஆகையால், அவர்முன் நடுங்குகின்றேன்: அவரைப்பற்றி நினைக்கையில் திகிலடைகின்றேன்.

இறைவன் எனை உளம் குன்றச் செய்தார்: எல்லாம் வல்லவர் என்னைக் கலங்கச் செய்தார்.

ஏனெனில் இருள் என்னை மறைக்கிறது: காரிருள் என் முகத்தைக் கவ்வுகிறது.

அதிகாரம் 24.

குறித்த காலத்தை எல்லாம் வல்லவர் ஏன் வெளிப்படுத்தவில்லை? அவரை அறிந்தோரும் ஏன் அவர் தம் நாள்களைக் காணவில்லை?

தீயோர் எல்லைக்கல்லை எடுத்துப்போடுகின்றனர். மந்தையைக் கொள்ளையிட்டு மேய்கின்றனர்.

அனாதையின் கழுதையை ஓட்டிச் செல்கின்றனர். விதவையின் எருதை அடகாய்க் கொள்கின்றனர்.

ஏழையை வழியினின்று தள்ளுகின்றனர். நாட்டின் வறியோர் ஒன்றாக ஒளிந்து கொள்கின்றனர்.

ஏழைகள் உணவுதேடும் வேலையாய்க் காட்டுக் கழுதையெனப் பாலைநிலத்தில் அலைகின்றனர்: பாலைநிலத்தில் கிடைப்பதே அவர்கள் பிள்ளைகளுக்கு உணவாகும்.

கயவரின் கழனியில் அவர்கள் சேகரிக்கின்றனர்: பொல்லாரின் திராட்சைத் தோட்டத்தில் அவர்கள் பொறுக்குகின்றனர்.

ஆடையின்றி இரவில் வெற்று உடலாய்க் கிடக்கின்றனர்: வாடையில் போர்த்திக் கொள்ளப் போர்வையின்றி இருக்கின்றனர்:

மலையில் பொழியும் மழையால் நனைகின்றனர்: உறைவிடமின்றிப் பாறையில் ஒண்டுகின்றனர்:

தந்தையிலாக் குழந்தையைத் தாயினின்று பறிக்கின்றனர்: ஏழையின் குழந்தையை அடகு வைக்கின்றனர்.

ஆடையின்றி வெற்றுடலாய் அலைகின்றனர்: ஆறாப்பசியுடன் அரிக்கட்டைத் பக்குகின்றனர்.

ஒலிவத் தோட்டத்தில் எண்ணெய் ஆட்டுகின்றனர்: திராட்சைத் பிழிந்தும் தாகத்தோடு இருக்கின்றனர்.

நகரில் இறப்போர் முனகல் கேட்கின்றது: காயமடைந்தோர் உள்ளம் உதவிக்குக் கதறுகின்றது: கடவுளோ அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.

இன்னும் உள்ளனர் ஒளியை எதிர்ப்போர்: இவர்கள் அதன் வழியை அறியார்: இவர்கள் அதன் நெறியில் நில்லார்.

எழுவான் கொலைஞன் புலரும் முன்பே: ஏழை எளியோரைக் கொன்று குவிக்க: இரவில் திரிவான் திருடன் போல.

காமுகனின் கண் கருக்கலுக்காய்க் காத்திருக்கும்: கண்ணெதுவும் என்னைக் காணாது என்றெண்ணி: முகத்தை அவனோ மூடிக் கொள்வான்!

இருட்டில் வீடுகளில் கன்னம் இடுவர்: பகலில் இவர்கள் பதுங்கிக் கிடப்பர்: ஒளியினை இவர்கள் அறியாதவரே!

ஏனென்றால் இவர்களுக்கு நிழல் காலைபோன்றது: சாவின் திகில் இவர்களுக்குப் பழக்கமானதே!

வெள்ளத்தில் விரைந்தோடும் வைக்கோல் அவர்கள்: பார்மேல் அவர்கள் பங்கு சபிக்கப்பட்டது: அவர்தம் திராட்சைத் தோட்டத்தை எவரும் அணுகார்.

வறட்சியும் வெம்மையும் பனிநீரைத் தீய்க்கும்: தீமை செய்வோரைப் பாதாளம் விழுங்கும்.

தாங்கிய கருப்பையே அவர்களை மறக்கும்: புழு அவர்களைச் சுவைத்துத் தின்னும். அவர்கள் கொடுமை மரம்போல் முறிந்துபோம்.

ஏனெனில், மகவிலா மலடியை இழிவாய் நடத்தினர்: கைம்பெண்ணுக்கு நன்மையைக் கருதினாரில்லை.

இருப்பினும், கடவுள் தம் வலிமையால் வலியோரின் வாழ்வை நீட்டிக்கிறார்: அவர்கள் தம் வாழ்வில் நம்பிக்கையோடு இருந்தாலும் நிலைக்கமாட்டா¡கள்.

அவர் அவர்களைப் பாதுகாப்புடன் வாழவிடுகிறார்: அவர்களும் அதில் ஊன்றி நிற்கிறார்கள்: இருப்பினும் அவரது கண் அவர்கள் நடத்தைமேல் உள்ளது.

அவர்கள் உயர்த்தப்பட்டனர்: அது ஒரு நொடிப்பொழுதே: அதன்பின் இல்லாமற் போயினர்: எல்லோரையும் போல் தாழ்த்தப்பட்டனர்: கதிர் நுனிபோல் கிள்ளி எறியப்பட்டனர்.

இப்படி இல்லையெனில், என்னைப் பொய்யன் என்றோ, என் மொழி தவறு என்றோ, எண்பிப்பவன் எவன்?

அதிகாரம் 25.

பிறகு சூகாவியனான பில்தாது பேசினான்:

ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன: அமைதியை உன்னதங்களில் அவரே நிலைநாட்டுவார்.

அளவிட முடியுமா அவர்தம் படைகளை? எவர்மேல் அவரொளி வீசாதிருக்கும்?

அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் பயவராய் இருக்கக் கூடும்?

இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே! விண்மீனும் அவர்தம் பார்வையில் பய்மையற்றதே!

அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!

அதிகாரம் 26.

அதற்கு யோபு கூறிய பதில்:

என்போன்ற வலிமையற்றவர்க்கு எத்துணைப் துணைபுரிந்தீர்! ஆற்றலற்ற தோளுக்கு எவ்வளவு துணைநின்றீர்!

என் போன்ற அறிவற்றவர்க்கு எவ்வளவு அறிவுரை கூறினீர்! நன்னெறிகளை நிறையக் காட்டீனீர்!

எவர் துணைகொண்டு இயம்பினீர் இம்மொழிகளை? எவர்தம் ஏவுதல் உம்மிடமிருந்து வெளிப்பட்டது?

கீழ்உலகின் ஆவிகள் நடுங்குகின்றன: நீர்த் திரள்களும் அவற்றில் வாழ்வனவும் அஞ்சுகின்றன.

பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது: படுகுழி அவர்முன் மூடப்படவில்லை.

வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்: காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.

நீரினை மேகத்துள் பொதித்துள்ளார்: அதன் நிறைவால் முகிலும் கிழிவதில்லை.

தம் அரியணையின் முகத்தை மூடுகின்றார்: முகிலை அதன்மேல் பரப்புகின்றார்.

நீர்ப்பரப்பின் மீது வட்டம் வரைந்து, இருளுக்கும் ஒளிக்குமிடையில் எல்லை அமைத்தார்.

விண்ணின் பண்கள் அதிர்கின்றன: அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன.

ஆழியைத் தம் ஆற்றலால் அடக்கினார்: இராகாபை அழித்தார் அறிவுக்கூர்மையால்.

தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்: தம் கையால் விரைந்தோடும் பாம்பை ஊடுருவக் குத்தினார்.

ஓ! இவையாவும் அவர்தம் செயல்களின் விளிம்புகளே! எத்துணை மென்குரல் அவற்றில் கேட்கின்றது. அவர்தம் வல்லமையின் இடிமுழக்கத்தை அறிய யாரால் இயலும்?

அதிகாரம் 27.

யோபு தமது உரையைத் தொடர்ந்து கூறியது:

என்றுமுள்ள இறைவன்மேல் ஆணை! அவர் எனக்கு உரிமை வழங்க மறுத்தார்: எல்லாம் வல்லவர் எனக்கு வாழ்வைக் கசப்பாக்கினார்.

என் உடலில் உயிர் இருக்கும்வரை, என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்கும்வரை,

என் உதடுகள் வஞ்சகம் உரையா: என் நாவும் பொய்யைப் புகலாது.

நீங்கள் சொல்வது சரியென ஒருகாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன். சாகும்வரையில் என்வாய்மையைக் கைவிடவும் மாட்டேன்.

என் நேர்மையை நான் பற்றிக் கொண்டேன்: விடவே மாட்டேன்: என் வாழ்நாளில் எதைக் குறித்தும் என் உள்ளம் உறுத்தவில்லை.

என் பகைவர் தீயோராக எண்ணப்படட்டும்: என் எதிரிகள் நேர்மையற்றோராகக் கருதப்படட்டும்.

கடவுள் இறைப்பற்றில்லாதோரை அழித்து, அவர்களின் உயிரைப் பறிக்கும்போது, அவர்களுக்கு என்ன நம்பிக்கை?

அவர்கள்மேல் கேடுவிழும்போது இறைவன் அவர்களின் கூக்குரலைக் கேட்பாரா?

எல்லாம் வல்லவர் தரும் மகிழ்ச்சியை அவர்கள் நாடுவார்களா? கடவுளைக் காலமெல்லாம் அழைப்பார்களா?

இறைவனின் கைத்திறனை நான் உங்களுக்குக் கற்பிப்பேன்: எல்லாம் வல்லவரின் திட்டங்களை மறைக்கமாட்டேன்.

இதோ! நீங்கள் யாவருமே இதைக் கண்டிருக்கின்றீர்கள்: பின், ஏன் வறட்டு வாதம் பேசுகின்றீர்கள்?

இதுவே கொடிய மனிதர் இறைவனிடமிருந்து பெறும் பங்கு: பொல்லாதவர் எல்லாம் வல்லவரிடம் பெறும் சொத்து.

அவர்களின் பிள்ளைகள் பெருகினும் வாளால் மடிவர்: அவர்களின் வழிமரபினர் உண்டு நிறைவடையார்.

அவர்களின் எஞ்சியோர் நோயால் மடிவர்: அவர்களின் கைம்பெண்கள் புலம்ப மாட்டார்.

மணல்போல் அவர்கள் வெள்ளியைக் குவிப்பர்: அடுக்கடுக்காய் ஆடைகளைச் சேர்ப்பர்.

ஆனால் நேர்மையாளர் ஆடைகளை அணிவர்: மாசற்றவர் வெள்ளியைப் பங்கிடுவர்.

சிலந்தி கூடு கட்டுவதுபோலும், காவற்காரன் குடில் போடுவதுபோலும் அவர்கள் வீடு கட்டுகின்றனர்.

படுக்கைக்குப் போகின்றனர் பணக்காரராய்: ஆனால் இனி அவ்வாறு இராது: கண் திறந்து பார்க்கின்றனர்: செல்வம் காணாமற் போயிற்று.

திகில் வெள்ளம்போல் அவர்களை அமிழ்த்தும்: சுழற்காற்று இரவில் அவர்களைத் பக்கிச் செல்லும்.

கீழைக் காற்று அவர்களை அடித்துச் செல்லும்: அவர்களின் இடத்திலிருந்து அவர்களைப் பெயர்த்துச் செல்லும்:

ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டும்: அதன் பிடியிலிருந்து தலைதெறிக்க ஓடுவர்.

அவர்களைப் பார்த்து அது கைகொட்டி நகைக்கும்: அதன் இடத்திலிருந்து அவர்கள்மேல் சீறிவிழும்.

அதிகாரம் 28.

வெள்ளிக்கு விளைநிலம் உண்டு: பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.

மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது: கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.

மனிதர் இருளுக்கு இறுதி கண்டு, எட்டின மட்டும் தோண்டி, இருட்டிலும் சாவின் இருளிலும் கனிமப் பொருளைத் தேடுகின்றனர்.

மக்கள் குடியிருப்புக்குத் தொலையில் சுரங்கத்தைத் தோண்டுவர்: வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்: மனிதரிடமிருந்து கீழே இறங்கி ஊசலாடி வேலை செய்வர்.

மேலே நிலத்தில் உணவு விளைகின்றது: கீழே அது நெருப்புக் குழம்பாய் மாறுகின்றது.

நீலமணிகள் அதன் கற்களில் கிட்டும்: பொன்துகளும் அதில் கிடைக்கும்.

அதற்குச் செல்லும் பாதையை, ஊன் உண்ணும் பறவையும் அறியாது: கழுகின் கண்களும் அதைக் கண்டதில்லை.

வீறுகொண்ட விலங்குகள் அதன் மேல் சென்றதில்லை: சிங்கமும் அவ்வழி நடந்து கடந்ததில்லை.

கடின பாறையிலும் அவர்கள் கைவைப்பர்: மலைகளின் அடித்தளத்தையே பெயர்த்துப் புரட்டிடுவர்.

பாறைகள் நடுவே சுரங்க வழிகளை வெட்டுகின்றனர்: விலையுயர் பொருளையே அவர்களது கண் தேடும்.

ஒழுகும் ஊற்றுகளைத் தடுத்து நிறுத்துகின்றனர்: மறைவாய் இருப்பதை ஒளிக்குக் கொணர்கின்றனர்.

ஆனால், ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?

மனிதர் அதன் மதிப்பை உணரார்: வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.

“என்னுள் இல்லை“ என உரைக்கும் ஆழ்கடல்: “என்னிடம் இல்லை“ என இயம்பும் பெருங்கடல்.

தங்கத்தைக் கொடுத்து அதைப் பெறமுடியாது: வெள்ளியால் அதன் விலையை நிறுக்க இயலாது.

ஓபீர்த் தங்கமும் கோமேதகமும் அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!

பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா: பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.

மணியும் பவளமும் அதற்கு இணையில்லை: மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.

எத்தியோப்பிய புட்பராகம் அதற்கு இணையல்ல: பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.

அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்? எங்குள்ளது அறிவின் உறைவிடம்?

வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும் ஒளிந்துள்ளது: வானத்துப் பறவைகளுக்கும் மறைவாய் உள்ளது.

படுகுழியும் சாவும் பகர்கின்றன: அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது:

அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்: அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!

ஏனெனில், வையகத்தின் எல்லை வரை அவர் காண்கின்றார்: வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.

காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது, நீரினை அளவையால் அளந்தபோது,

மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது, இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,

அவர் ஞானத்தைக் கண்டார்: அதைப்பற்றி அறிவித்தார்: அதை நிலைநாட்டினார்: இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.

அவர் மானிடர்க்குக் கூறினார்: ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்: அதுவே ஞானம்: தீமையை விட்டு விலகுங்கள்: அதுவே அறிவு.

அதிகாரம் 29.

யோபு இன்னும் தொடர்ந்து பேசிய உரை:

காண்பேனா முன்னைய திங்கள்களை: கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை!

அப்போது அவர் விளக்கு என் தலைமீது ஒளிவீசிற்று: அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன்.

அப்போது என் இளமையின் நாள்களில் நான் இருந்தேன்: கடவுளின் கருணை என் குடிசை மீது இருந்தது.

அன்று வல்லவர் என்னோடு இருந்தார்: என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர்.

அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன: பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாயப் பாய்ந்தது.

நகர வாயிலுக்கு நான் செல்கையிலும், பொது மன்றத்தில் என் இருக்கையில் அமர்கையிலும்,

என்னைக் கண்டதும் இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்: முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர்.

உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்: கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர்.

தலைவர்தம் குரல் அடங்கிப்போம்: அவர் நா அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்.

என்னைக் கேட்ட செவி, என்னை வாழ்த்தியது: என்னைப் பார்த்த கண் எனக்குச் சான்று பகர்ந்தது.

ஏனெனில், கதறிய ஏழைகளை நான் காப்பாற்றினேன்: தந்தை இல்லார்க்கு உதவினேன்.

அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்: கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக் களிப்பால் பாடச் செய்தேன்.

அறத்தை அணிந்தேன்: அது என் ஆடையாயிற்று. நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று.

பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்: காலு¡னமுற்றோர்க்குக் கால் ஆனேன்.

ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்: அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக வாதிட்டேன்.

கொடியவரின் பற்களை உடைத்தேன்: அவரின் பற்களுக்கு இரையானவரை விடுவித்தேன்.

நான் எண்ணினேன்: “மணல் மணியைப்போல் நிறைந்த நாள் உடையவனாய் என் இல்லத்தில் சாவேன்.

என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்: இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும்.

என் புகழ் என்றும் ஓங்கும்: என் வில் வளைதிறன் கொண்டது. “

எனக்குச் செவிகொடுக்க மக்கள் காத்திருந்தனர்: என் அறிவுரைக்காக அமைதி காத்தனர்.

என் சொல்லுக்கு மறுசொல் அவர்கள் கூறவில்லை: என் மொழிகள் அவர்களில் தங்கின.

மழைக்கென அவர்கள் எனக்காய்க் காத்திருந்தனர்: மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர்.

நம்பிக்கை இழந்தோரை என் புன்முறவல் தேற்றியது: என் முகப்பொலிவு உரமூட்டியது.

நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்: தலைவனாய்த் திகழ்ந்தேன்: வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்: அழுகின்றவர்க்கு ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.

அதிகாரம் 30.

ஆனால், இன்று என்னை, என்னைவிட இளையோர் ஏளனம் செய்கின்றனர்: அவர்களின் தந்தையரை என் மந்தையின் நாய்களோடு இருத்தவும் உடன் பட்டிரேன்.

எனக்கு அவர்களின் கைவன்மையால் என்ன பயன்? அவர்கள்தாம் ஆற்றல் இழந்து போயினரே?

அவர்கள் பட்டினியாலும் பசியாலும் மெலிந்தனர்: வறண்டு, இருண்டு அழிந்த பாலைக்கு ஓடினர்.

அவர்கள் உப்புக்கீரையைப் புதரிடையே பறித்தார்கள்: காட்டுப் பூண்டின் வேரே அவர்களின் உணவு.

மக்கள் அவர்களைத் தம்மிடமிருந்து விரட்டினர்: கள்வரைப் பிடிக்கத் கத்துவதுபோல் அவர்களுக்குச் செய்தனர்.

ஓடைகளின் உடைப்புகளிலும் நிலவெடிப்புகளிலும் பாறைப்பிளவுகளிலும் அவர்கள் வாழ்ந்தனர்.

புதர்களின் நடுவில் அவர்கள் கத்துவர்: முட்செடியின் அடியில் முடங்கிக் கிடப்பர்.

மடையனின் மக்கள் பெயரில்லாப் பிள்ளைகள்: அவர்கள் நாட்டிலிருந்து விரட்டப்பட்டனர்.

இப்பொழுதோ, அவர்களுக்கு நான் வசைப்பாட்டு ஆனேன்: அவர்களுக்கு நான் பழமொழியானேன்.

என்னை அவர்கள் அருவருக்கின்றனர்: என்னைவிட்டு விலகிப் போகின்றனர்: என்முன் காறித் துப்பவும் அவர்கள் தயங்கவில்லை.

என் வில்லின் நாணைக் கடவுள் தளர்த்தி, என்னைத் தாழ்த்தியதால், என்முன் அவர்கள் கடிவாளம் அற்றவராயினர்.

என் வலப்பக்கம் கும்பல் கூடுகின்றது: என்னை நெட்டித் தள்ளுகின்றது: அழிவுக்கான வழிகளை எனக்கெதிராய் வகுத்தது.

எனக்கு அவர்கள் குழி தோண்டுகின்றனர்: என் அழிவை விரைவுபடுத்துகின்றனர்: அவர்களைத் தடுப்பார் யாருமில்லை.

அகன்ற உடைப்பில் நுழைவது போலப் பாய்கின்றனர்: இடிபாடுகளுக்கு இடையில் அலைபோல் வருகின்றனர்.

பெருந்திகில் மீண்டும் என்னைப் பிடித்தது: என் பெருமை காற்றோடு போயிற்று: முகிலென மறைந்தது என் சொத்து.

இப்பொழுதோ? என் உயிர் போய்க்கொண்டே இருக்கின்றது: இன்னலின் நாள்கள் என்னை இறுக்குகின்றன.

இரவு என் எலும்புகளை உருக்குகின்றது: என்னை வாட்டும் வேதனை ஓய்வதில்லை.

நோயின் கொடுமை என்னை உருக்குலைத்தது: கழுத்துப்பட்டை போல் என்னை ஒட்டிக்கொண்டது.

கடவுள் சேற்றில் என்னை அமிழ்த்தி விட்டார்: புழுதியும் சாம்பலும்போல் ஆனேன்.

நான் உம்மை நோக்கி மன்றாடினேன். ஆனால், நீர் எனக்குப் பதில் அளிக்கவில்லை, நான் உம்முன் நின்றேன்: நீர் என்னைக் கண்ணோக்கவில்லை.

கொடுமையுள்ளவராய் என்மட்டில் மாறினீர்: உம் கை வல்லமையால் என்னைத் துன்புறுத்துகின்றீர்:

என்னைத் பக்கிக் காற்றில் பறக்கவிட்டீர்: புயலின் சீற்றத்தால் என்னை அலைக்கழித்தீர்.

ஏனெனில், சாவுக்கும், வாழ்வோர் அனைவரும் கூடுமிடத்திற்கும் என்னைக் கொணர்வீர் என அறிவேன்.

இருப்பினும், அழிவின் நடுவில் ஒருவர் உதவிக்கு அலறும்பொழுது, அவல நிலையில் அவர் இருக்கும்பொழுது, எவர் அவருக்கு எதிராகக் கையை உயர்த்துவார்?

அவதிபட்டவருக்காக நான் அழவில்லையா? ஏழைக்காக என் உள்ளம் இளகவில்லையா?

நன்மையை எதிர்பார்த்தேன்: தீமை வந்தது. ஒளிக்குக் காத்திருந்தேன்: இருளே வந்தது.

என் குலை நடுங்குகிறது, அடங்கவில்லை: இன்னலின் நாள்கள் என்னை எதிர்கொண்டு வருகின்றன.

கதிரோன் இன்றியும் நான் கருகித் திரிகிறேன்: எழுகிறேன்: மன்றத்தில் அழுகிறேன் உதவிக்கு.

குள்ள நரிக்கு உடன்பிறப்பானேன்: நெருப்புக் கோழிக்குத் தோழனும் ஆனேன்.

என் தோல் கருகி உரிகின்றது: என் எலும்புகள் வெப்பத்தால் தீய்கின்றன.

என் யாழின் ஓசை புலம்பலாயிற்று: என் குழலின் ஒலி அழுகையாயிற்று.

அதிகாரம் 31.

கண்களோடு நான் உடன்படிக்கை செய்துகொண்டேன்: பின்பு, கன்னி ஒருத்தியை எப்படி நோக்குவேன்?

வானின்று கடவுள் வழங்கும் பங்கென்ன? விசும்பினின்று எல்லாம் வல்லவர் விதிக்கும் உரிமையென்ன?

தீயோர்க்கு வருவது கேடு அல்லவா? கொடியோர்க்கு வருவது அழிவு அல்லவா?

என் வழிகளை அவர் பார்ப்பதில்லையா? என் காலடிகளை அவர் கணக்கிடுவதில்லையா?

பொய்ம்மையை நோக்கி நான் போயிருந்தால், வஞ்சகத்தை நோக்கி என் காலடி விரைந்திருந்தால்,

சீர்பக்கும் கோலில் எனை அவர் நிறுக்கட்டும்: இவ்வாறு கடவுள் என் நேர்மையை அறியட்டும்.

நெறிதவறி என் காலடி போயிருந்தால், கண்ணில் பட்டதையெல்லாம் என் உள்ளம் நாடியிருந்தால், என் கைகளில் கறையேதும் படிந்திருந்தால்,

நான் விதைக்க, இன்னொருவர் அதனை உண்ணட்டும்: எனக்கென வளர்பவை வேரொடு பிடுங்கப்படட்டும்.

பெண்ணில் என் மனம் மயங்கியிருந்திருந்தால்: பிறரின் கதவருகில் காத்துக்கிடந்திருந்தால்,

என் மனைவி மற்றொருவனுக்கு மாவரைகட்டும். மற்றவர்கள் அவளோடு படுக்கட்டும்.

ஏனெனில், அது தீச்செயல்: நடுவரின் தண்டனைக்குரிய பாதகம்.

ஏனெனில் படுகுழிவரை சுட்டெரிக்கும் நெருப்பு அது: வருவாய் அனைத்தையும் அடியோடு அழிக்கும் தீ அது.

என் வேலைக்காரனோ, வேலைக்காரியோ எனக்கெதிராய் வழக்குக் கொணரும்போது நான் அதைத் தட்டிக் கழித்திருந்தால்,

இறைவன் எனக்கெதிராய் எழும்போது நான் என்ன செய்வேன்? அவர் என்னிடம் கணக்குக் கேட்டால் நான் என்ன பதிலளிப்பேன்?

கருப்பையில் என்னை உருவாக்கியவர்தாமே அவனையும் உருவாக்கினார். கருப்பையில் எங்களுக்கு வடிவளித்தவர் அவர் ஒருவரே அல்லவோ?

ஏழையர் விரும்பியதை ஈய இணங்காது இருந்தேனா? கைம்பெண்டிரின் கண்கள் பூத்துப்போகச் செய்தேனா?

என் உணவை நானே தனித்து உண்டேனா? தாய் தந்தையற்றோர் அதில் உண்ணாமல் போயினரா?

ஏனெனில், குழந்தைப் பருவமுதல் அவர் என்னைத் தந்தைபோல் வளர்த்தார்: என் தாய்வயிற்றிலிருந்து என்னை வழி நடத்தினார்.

ஆடையில்லாமல் எவராவது அழிவதையோ போர்வையின்றி ஏழை எவராவது இருந்ததையோ பார்த்துக்கொண்டு இருந்தேனா?

என் ஆட்டுமுடிக் கம்பளியினால் குளிர்போக்கப்பட்டு, அவர்களின் உடல் என்னைப் பாராட்டவில்லையா?

எனக்கு மன்றத்தில் செல்வாக்கு உண்டு எனக்கண்டு, தாய் தந்தையற்றோர்க்கு எதிராகக் கைஓங்கினேனா?

அப்படியிருந்திருந்தால், என் தோள்மூட்டு தோளிலிருந்து நெகிழ்வதாக! முழங்கை மூட்டு முறிந்து கழல்வதாக!

ஏனெனில், இறைவன் அனுப்பும் இடர் எனக்குப் பேரச்சம்: அவர் மாட்சிக்குமுன் என்னால் எதுவும் இயலாது.

தங்கத்தில் நான் நம்பிக்கை வைத்திருந்தேனாகில், “பசும்பொன் என்உறுதுணை “ என்று பகர்ந்திருப்பேனாகில்,

செல்வப் பெருக்கினால், அல்லது கை நிறையப் பெற்றதால் நான் மகிழ்திருப்பேனாகில்,

சுடர்விடும் கதிரவனையும் ஒளியில் தவழும் திங்களையும் நான் கண்டு,

என் உள்ளம் மறைவாக மயங்கியிருந்தால், அல்லது, என் வாயில் கை வைத்து முத்திமிட்டிருந்தால்,

அதுவும் நடுவர் தீர்ப்புக்குரிய பழியாய் இருக்கும்: ஏனெனில், அது உன்னத இறைவனை நான் மறுப்பதாகும்.

என்னை வெறுப்போரின் அழிவில் நான் மகிழ்ந்ததுண்டா? அல்லது அவர்கள் இடர்படும் போது இன்புற்றதுண்டா?

சாகும்படி அவர்களைச் சபித்து, என் வாய் பாவம் செய்ய நான் விடவில்லை.

“இறைச்சி உண்டு நிறைவு அடையாதவர் யாரேனும் உண்டோ?“ என்று என் வீட்டார் வினவாமல் இருந்ததுண்டா?

வீதியில் வேற்றார் உறங்கியதில்லை: ஏனெனில், வழிப்போக்கருக்கு என் வாயிலைத் திறந்து விட்டேன்.

என் தீச்செயலை உள்ளத்தில் புதைத்து, என் குற்றங்களை மானிடர்போல் மறைத்ததுண்டா?

பெருங்கும்பலைக் கண்டு நடுங்கி, உறவினர் இகழ்ச்சிக்கு அஞ்சி, நான் வாளாவிருந்ததுண்டா? கதவுக்கு வெளியே வராதிருந்தது உண்டா?

என் வழக்கைக் கேட்க ஒருவர் இருந்தால் எத்துணை நன்று! இதோ! என் கையொப்பம்: எல்லாம் வல்லவர் எனக்குப் பதில் அளிக்கட்டும்! என் எதிராளி வழக்கை எழுதட்டும்.

உண்மையாகவே அதை என் தோள்மேல் பக்கிச்செல்வேன்! எனக்கு மணி முடியாகச் சூட்டிக்கொள்வேன்.

என் நடத்தை முழுவதையுமே அவருக்கு எடுத்துரைப்பேன்: இளவரசனைப்போல் அவரை அணுகிச் செல்வேன்.

எனது நிலம் எனக்கெதிராயக் கதறினால், அதன் படைச்சால்கள் ஒன்றாக அழுதால்,

விலைகொடாமல் அதன் விளைச்சலை உண்டிருந்தால், அதன் உரிமையாளரின் உயிரைப் போக்கியிருந்தால்,

கோதுமைக்குப் பதில் முட்களும், வாற்கோதுமைக்கு பதில் களையும் வளரட்டும். யோபின் மொழிகள் முடிவுற்றன.

அதிகாரம் 32.

யோபு தம்மை நேர்மையாளராகக் கருதியதால் இந்த மூன்று மனிதர்களும் அவருடன் சொல்லாடுவதை நிறுத்திவிட்டார்கள்.

அப்பொழுது பூசியனும், இராமின் வீட்டைச் சார்ந்த பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ சீற்றம் அடைந்தான்.

யோபு கடவுளைவிடத் தம்மை நேர்மையாளராய்க் கருதியதால் அவர்மீது சினம் கொண்டான். மூன்று நண்பர்கள்மீதும் அவன் கோபப்பட்டான். ஏனெனில் யோபின் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்களேயன்றி, அதற்கான ஆதாரத்தை எடுத்துக் கூறவில்லை.

எலிகூ யோபிடம் பேச இதுவரை காத்திருந்தான். ஏனெனில், அவனை விட அவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள்.

அந்த மூவரும் தகுந்த மறுமொழி தரவில்லை எனக் கண்ட எலிகூ இன்னும் ஆத்திரம் அடைந்தான்.

ஆகவே பூசியனும் பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ பேசத் தொடங்கினான்: நான் வயதில் சிறியவன்: நீங்களோ பெரியவர். ஆகவே, என் கருத்தை உங்களிடம் உரைக்கத் தயங்கினேன்: அஞ்சினேன்.

நான் நினைத்தேன்: “முதுமை பேசட்டும்: வயதானோர் ஞானத்தை உணர்த்தட்டும்.“

ஆனால், உண்மையில் எல்லாம் வல்லவரின் மூச்சே, மனிதரில் இருக்கும் அந்த ஆவியே உய்த்துணர்வை அளிக்கின்றது.

வயதானோர் எல்லாம் ஞானிகள் இல்லை: முதியோர் நீதியை அறிந்தவரும் இல்லை.

ஆகையால் நான் சொல்கின்றேன்: எனக்குச் செவி கொடுத்தருள்க! நானும் என் கருத்தைச் சொல்கின்றேன்.

இதோ! உம் சொற்களுக்காகக் காத்திருந்தேன், நீங்கள் ஆய்ந்து கூறிய வார்த்தைகளை, அறிவார்ந்த கூற்றை நான் கேட்டேன்.

உங்களைக் கவனித்துக் கேட்டேன்: உங்களுள் எவரும் யோபின் கூற்று தவறென எண்பிக்கவில்லை. அவர் சொற்களுக்கு தக்க பதில் அளிக்கவுமில்லை.

எச்சரிக்கை! “நாங்கள் ஞானத்தைக் கண்டு கொண்டோம்: இறைவனே அவர்மீது வெற்றி கொள்ளட்டும்: மனிதரால் முடியாது“ என்று சொல்லாதீர்கள்!

என்னை நோக்கி யோபு தம்மொழிகளைக் கூறவில்லை: உங்கள் சொற்களில் அவருக்கு நான் பதிலளிக்கமாட்டேன்.

அவர்கள் மலைத்துப் போயினர்: மீண்டும் மறுமொழி உரையார்: அவர்கள் ஒரு வார்த்தையும் சொல்வதற்கில்லை.

அவர்கள் பேசவில்லை: நின்று கொண்டிருந்தாலும் பதில் சொல்லவில்லை: நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா?

நானும் எனது பதிலைக் கூறுவேன்: நானும் எனது கருத்தை நவில்வேன்.

ஏனெனில், சொல்லவேண்டியவை என்னிடம் நிறையவுள்ளன: என் உள்ளத்தில் ஆவி என்னை உந்துகின்றது.

இதோ! என் நெஞ்சம் அடைபட்ட திராட்சை இரசம் போல் உள்ளது: வெடிக்கும் புது இரசத் துருத்தி போல் உள்ளது.

நான் பேசுவேன்: என் நெஞ்சை ஆற்றிக் கொள்வேன்: வாய்திறந்து நான் பதில் அளிக்க வேண்டும்.

நான் யாரிடமும் ஒருதலைச் சார்பாய் இருக்கமாட்டேன்: நான் யாரையும் பொய்யாகப் புகழ மாட்டேன்.

ஏனெனில், பசப்பிப் புகழ எனக்குத் தெரியாது: இல்லையேல், படைத்தவரே விரைவில் என்னை அழித்திடுவார்.

அதிகாரம் 33.

ஆனால் இப்பொழுது, யோபே! எனக்குச் செவிகொடும்: என் எல்லா வார்த்தைகளையும் கேளும்.

இதோ! நான் வாய் திறந்துவிட்டேன்: என் நாவினால் பேசுகிறேன்.

என் உள்ளத்தின் நேர்மையை என் சொற்கள் விளம்பும்: அறிந்ததை உண்மையாய் இயம்பும் என் உதடுகள்.

இறைவனின் ஆவி என்னைப் படைத்தது: எல்லாம் வல்லவரின் மூச்சு என்னை வாழ்விக்கின்றது.

உம்மால் முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்: என்னோடு வழக்காட எழுந்து நில்லும்.

இதோ! இறைவன் முன்னிலையில் நானும் நீவிரும் ஒன்றே: உம்மைப்போல் நானும் களிமண்ணிலிருந்து செய்யப்பட்டவனே!

இதோ! நீர் எனக்கு அஞ்சி நடுங்க வேண்டியதில்லை: நான் வலுவாக உம்மைத் தாக்கமாட்டேன்.

உண்மையாகவே என் காதுகளில் விழ நீர் கூறினீர்: நானும் அம்மொழிகளின் ஒலியைக் கேட்டேன்:

“குற்றமில்லாத் பயவன் நான்: மாசற்ற வெண் மனத்தான் யான்.

இதோ! அவர் என்னில் குற்றம்காணப் பார்க்கின்றார்: அவர் என்னை எதிரியாக எண்ணுகின்றார்.

மரத் துளையில் என் கால்களை மாட்டுகின்றார்: என் காலடிகளையெல்லாம் கவனிக்கின்றார்“.

இதோ! இது சரியென்று: பதில் உமக்குக் கூறுகிறேன்: கடவுள் மனிதரைவிடப் பெரியவர்.

“என் சொல் எதற்கும் அவர் பதில் கூறுவதில்லை“ என ஏன் அவரோடு வழக்காடுகின்றீர்?

ஏனெனில், இறைவன் முதலில் ஒருவகையில் இயம்புகின்றார்: இரண்டாவது வேறுவகையில் விளம்புகின்றார்: அதை யாரும் உணர்வதில்லை.

கனவில், இரவின் காட்சியில் ஆழ்துயில் மனிதரை ஆட்கொள்கையில்: படுக்கையில் அவர்கள் அயர்ந்து உறங்குகையில்,

அவர் மனிதரின் காதைத் திறக்கின்றார்: எச்சரிக்கை மூலம் அச்சுறுத்துகின்றார்.

இவ்வாறு மாந்தரிடமிருந்து தீவினையை நீக்குகின்றார்: மனிதரிடமிருந்து ஆணவத்தை அகற்றுகின்றார்.

அவர்களின் ஆன்மாவைக் குழியிலிருந்தும், உயிரை வாளின் அழிவிலிருந்தும் காக்கின்றார்.

படுக்கையில் படும் வேதனையினாலும் எலும்பில் தீரா வலியினாலும் அவர்கள் கண்டித்துத் திருத்தப்படுகின்றார்கள்.

அப்போது அவர்களின் உயிர் உணவையும், அவர்களின் ஆன்மா அறுசுவை உண்டியையும் அருவருக்கும்.

அவர்களின் சதை கரைந்து மறையும்: காணப்படா அவர்களின் எலும்புகள் வெளியே தெரியும்.

அவர்களின் ஆன்மா குழியினையும் அவர்களின் உயிர் அழிப்போரையும் அணுகும்.

மனிதர் சார்பாக இருந்து, அவர்களுக்கு நேர்மையானதைக் கற்பிக்கும் ஓர் ஆயிரத்தவராகிய வானபதர்

அவர்களின் மீது இரங்கி, குழியில் விழாமல் இவர்களைக் காப்பாற்றும்: ஏனெனில், இவர்களுக்கான மீட்டுத் தொகை என்னிடமுள்ளது:

இவர்களின் மேனி இளைஞனதைப்போல் ஆகட்டும்: இவர்கள் இளமையின் நாள்களுக்குத் திரும்பட்டும்

என்று கடவுளிடம் மன்றாடினால், அவர் அவர்களை ஏற்றுக் கொள்வார்: அவர்தம் முகத்தை மகிழ்ச்சியோடு அவர்கள் காணச் செய்வார்: அவர்களுக்குத் தம் மீட்பை மீண்டும் அளிப்பார்.

அவர்கள் மனிதர் முன் இவ்வாறு அறிக்கையிடுவர்: “நாங்கள் பாவம் செய்தோம்: நேரியதைக் கோணலாக்கினோம்: இருப்பினும் அதற்கேற்ப நாங்கள் தண்டிக்கப்படவில்லை:

எங்கள் ஆன்மாவைக் குழியில் விழாது அவர் காத்தார்: எங்கள் உயிர் ஒளியைக் காணும்.“

இதோ இறைவன் இவற்றையெல்லாம் மனிதர்க்கு மீண்டும் மீண்டும் செய்கிறார்.

இவ்வாறு குழியிலிருந்து அவர்களின் ஆன்மாவைக் காப்பாற்றுகின்றார்: வாழ்வோரின் ஒளியை அவர்கள் காணச் செய்கின்றார்.

யோபே! கவனியும்! எனக்குச் செவிகொடும்: பேசாதிரும்: நான் பேசுவேன்.

சொல்வதற்கு இருந்தால், எனக்குப் பதில் சொல்லும்: பேசுக! உம்மை நேர்மையுள்ளவரெனக் காட்டவே நான் விழைகின்றேன்.

இல்லையெனில், நீர் எனக்குச் செவி சாயும்: பேசாதிரும்: நான் உமக்கு ஞானத்தைக் கற்பிப்பேன்.

அதிகாரம் 34.

எலிகூ தொடர்ந்து கூறினான்:

ஞானிகளே! என் சொற்களைக் கேளுங்கள்: அறிஞர்களே! எனக்குச் செவிகொடுங்கள்.

நாக்கு உணவைச் சுவைத்து அறிவதுபோல, காது சொற்களைப் பகுத்துணர்கின்றது.

நேர்மை எதுவோ அதை நமக்கு நாமே தேர்ந்துகொள்வோம்: நல்லது எதுவோ அதை நமக்குள்ளேயே முடிவு செய்வோம்.

ஆனால் யோபு சொல்லியுள்ளார்: நான் நேர்மையானவன்: ஆனால் இறைவன் என் உரிமையைப் பறித்துக் கொண்டார்,

நான் நேர்மையாக இருந்தும் என்னைப் பொய்யனாக்கினார்: நான் குற்றமில்லாதிருந்தும் என் புண் ஆறாததாயிற்று.“

யோபைப் போன்று இருக்கும் மனிதர் யார்? நீர்குடிப்பதுபோல் அவர் இறைவனை இகழ்கின்றார்:

தீங்கு செய்வாரோடு தோழமை கொள்கின்றார்: கொடியவருடன் கூடிப் பழகுகின்றார்.

ஏனெனில், அவர் சொல்லியுள்ளார்: “கடவுளுக்கு இனியவராய் நடப்பதானால் எந்த மனிதருக்கும் எப்பயனுமில்லை.“

ஆகையால், அறிந்துணரும் உள்ளம் உடையவர்களே! செவிகொடுங்கள்! தீங்கிழைப்பது இறைவனுக்கும், தவறு செய்வது எல்லாம் வல்லவருக்கும் தொலைவாய் இருப்பதாக!

ஏனெனில், ஒருவரின் செயலுக்கேற்ப அவர் கைம்மாறு செய்கின்றார்: அவரது நடத்தைக்கேற்ப நிகழச்செய்கின்றார்.

உண்மையாகவே, கொடுமையை இறைவன் செய்யமாட்டார்: நீதியை எல்லாம் வல்லவர் புரட்டமாட்டார்.

பூவுலகை அவர் பொறுப்பில் விட்டவர் யார்? உலகனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தவர் யார்?

அவர்தம் ஆவியைத் தம்மிடமே எடுத்துக்கொள்வதாக இருந்தால், தம் உயிர் மூச்சை மீண்டும் பெற்றுக் கொள்வதாய் இருந்தால்,

ஊனுடம்பு எல்லாம் ஒருங்கே ஒழியும்: மனிதர் மீண்டும் மண்ணுக்குத் திரும்புவர்:

உமக்கு அறிவிருந்தால் இதைக் கேளும்: என் சொற்களின் ஒலிக்குச் செவிகொடும்.

உண்மையில், நீதியை வெறுப்பவரால் ஆட்சி செய்ய இயலுமா? வாய்மையும் வல்லமையும் உடையவரை நீர் பழிப்பீரோ?

அவர் வேந்தனை நோக்கி வீணன் என்றும் கோமகனைப் பார்த்து “கொடியோன்“ என்றும் கூறுவார்.

அவர் ஆளுநனை ஒருதலைச்சார்பாய் நடத்த மாட்டார்: ஏழைகளை விடச் செல்வரை உயர்வாயக் கருதவுமாட்டார்: ஏனெனில், அவர்கள் அனைவரும் அவர் கைவேலைப்பாடுகள் அல்லவா?

நொடிப்பொழுதில் அவர்கள் மடிவர்: நள்ளிரவில் நடுக்கமுற்று அழிவர்: ஆற்றல் மிக்காரும் மனித உதவியின்றி அகற்றப்படுவர்.

ஏனெனில், அவரின் விழிகள் மனிதரின் வழிகள்மேல் உள்ளன: அவர்களின் அடிச்சுவடுகளை அவர் காண்கிறார்.

கொடுமை புரிவோர் தங்களை ஒளித்துக்கொள்ள இருளும் இல்லை: இறப்பின் நிழலும் இல்லை.

இறைவன்முன் சென்று கணக்குக் கொடுக்க, எவருக்கும் அவர் நேரம் குறிக்கவில்லை.

வலியோரை நொறுக்குவதற்கு அவர் ஆய்ந்தறிவு செய்யத்தேவையில்லை, அன்னார் இடத்தில் பிறரை அமர்த்துவார்.

அவர்களின் செயலை அவர் அறிவார்: ஆதலால் இரவில் அவர்களை வீழ்த்துவார்: அவர்களும் நொறுக்கப்படுவர்.

அவர்கள் கொடுஞ்செயலுக்காக அவர் மக்கள் கண்முன் அவர்களை வீழ்த்துவார்.

ஏனெனில், அவரைப் பின்பற்றாமல் அவர்கள் விலகினர்: அவர்தம் நெறியனைத்தையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை:

ஏழையின் குரல் அவருக்கு எட்டச் செய்தனர்: அவரும் ஒடுக்கப்பட்டவர் குரலைக் கேட்டார்.

அவர் பேசாதிருந்தால், யார் அவரைக் குறைகூற முடியும்? அவர்தம்முகத்தை மறைத்துக் கொண்டால், யார்தான் அவரைக் காணமுடியும்? நாட்டையும் தனி மனிதரையும் அவரே கண்காணிக்கின்றார்.

எனவே, இறைப்பற்றில்லாதவரோ மக்களைக் கொடுமைப் படுத்துபவரோ ஆளக்கூடாது.

எவராவது இறைவனிடம் இவ்வாறு கேட்பதுண்டா: “நான் தண்டனை பெற்றுக் கொண்டேன்: இனி நான் தவறு செய்யமாட்டேன்.

தெரியாமல் செய்ததை எனக்குத் தெளிவாக்கும்: தீங்கு செய்திருந்தாலும், இனி அதை நான் செய்யேன்.“

நீர் உம் தவற்றை உணர மறுக்கும்போது, கடவுள் உம் கருத்துக்கேற்ப கைம்மாறு வழங்கவேண்டுமா? நீர் தான் இதைத் தீர்மானிக்க வேண்டும்: நான் அல்ல: ஆகையால் உமக்குத் தெரிந்ததைக் கூறும்.

புரிந்துகொள்ளும் திறன் உடையவரும் எனக்குச் செவி சாய்ப்பவர்களில் ஞானம் உள்ளவரும் இவ்வாறு சொல்வர்:

யோபு புரியாமல் பேசுகின்றார்: அவர் சொற்களும் பொருளற்றவை.

யோபு இறுதிவரை சோதிக்கப்படவேண்டுமா? ஏனெனில், அவரின் மொழிகள் தீயோருடையவைபோல் உள்ளன.

யோபு தாம் பாவம் செய்ததோடு கிளர்ச்சியும் செய்கின்றார்: ஏளனமாய் நம்மிடையே அவர் கை தட்டுகின்றார்: இறைவனுக்கு எதிராக வார்த்தைகளைக் கொட்டுகின்றார்.

அதிகாரம் 35.

எலிகூ தொடர்ந்து கூறினான்:

“நான் இறைவன்முன் நேர்மையானவன்“ என நீர் சொல்வது சரியனெ நினைக்கின்றீரா?

“நான் பாவம் செய்யாததனால் எனக்கு என்ன ஆதாயம்? எனக்கு என்ன நன்மை?” என நீர் கேட்கின்றீர்.

உமக்கும் உம் நண்பர்களுக்கும் சேர்த்து நான் பதில் அளிக்கின்றேன்:

வானங்களைப் பாரும்: கவனியும்: இதோ! உம்மைவிட உயரேயிருக்கும் முகில்கள்!

நீர் பாவம் செய்தால், அவருக்கெதிராய் என்ன சாதிக்கின்றீர்? நீர் மிகுதியான குற்றங்களைச் செய்வதால் அவருக்கு என்ன செய்து விடுகின்றீர்?

நீர் நேர்மையாய் இருப்பதால் இவருக்கு நீர் அளிப்பதென்ன? அல்லது உம் கையிலிருந்து அவர் பெறுவதென்ன?

உம் கொடுமை உம்மைப்போன்ற மனிதரைக் துன்புறுத்துகின்றது: உம் நேர்மையும் மானிடர்க்கே நன்மை பயக்கின்றது.

கொடுமைகள் குவிய அவர்கள் கூக்குரலிடுவர்: வலியவர் கைவன்மையால் கத்திக் கதறுவர்.

ஆனால் இவ்வாறு எவரும் சொல்வதில்லை: “எங்கே என்னைப் படைத்த கடவுள்? இரவில் பாடச் செய்பவர் எங்கே?

நானிலத்தின் விலங்குகளைவிட நமக்கு அதிகமாய்க் கற்பிக்கின்ற வரும் வானத்துப் புள்ளினங்களை விட நம்மை ஞானி ஆக்குகின்ற வரும் அவரன்றோ?”

அங்கே அவர்கள் கூக்குரலிடுகின்றனர்: பொல்லார் செருக்கின் பொருட்டு அவர் பதில் ஒன்றும் சொல்லார்.

வீண் வேண்டலை இறைவன் கண்டிப்பாய்க் கேளார்: எல்லாம் வல்லவர் அதைக் கவனிக்கவும் மாட்டார்.

இப்படியிருக்க, “நான் அவரைப் பார்க்கவில்லை: தீர்ப்பு அவரிடம் இருக்கின்றது. நான் அவருக்காகக் காத்திருக்கின்றேன்:“ என்று நீர் கூறும்போது, எப்படி உமக்குச்செவிகொடுப்பார்?

இப்பொழுதோ, “கடவுளின் சினம் தண்டிப்பதில்லை: மனிதனின் மடமையை அவ்வளவாய் அவர் நோக்குவதில்லை“ என எண்ணி,

யோபு வெற்றுரை விளம்புகின்றார்: அறிவில்லாமல் சொற்களைக் கொட்டுகின்றார்.

அதிகாரம் 36.

எலிகூ தொடர்ந்து பேசலானான்:

சற்றுப் பொறும்: காட்டுவேன் உமக்கு கடவுள் சார்பாய் நான் கூற வேண்டியவற்றை.

தொலையிலிருந்து என் அறிவைக் கொணர்வேன்: எனை உண்டாக்கியவர்க்கு நேர்மையை உரித்தாக்குவேன்.

ஏனெனில், மெய்யாகவே பொய்யன்று என் சொற்கள்: அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.

இதோ! இறைவன் வல்லவர்: எவரையும் புறக்கணியார்: அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர்.

கொடியவரை அவர் வாழவிடார்: ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்:

நேர்மையாளர்மீது கொண்ட பார்வையை அகற்றார்: அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்: என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர்.

ஆனால் அவர்கள் சங்கிலியால் கட்டுண்டாரெனில், வேதனையின் கயிற்றில் அகப்பட்டாரெனில்,

அவர்கள் செய்ததையும் மீறியதையும், இறுமாப்புடன் நடந்ததையும் எடுத்து இயம்புவார்.

அறிவுரைகளுக்கு அவர்கள் செவியைத் திறப்பார்: தீச்செயலிலிருந்து திரும்புமாறு ஆணையிடுவார்.

அவர்கள் கேட்டு, அவர்க்குப் பணி புரிந்தால், வளமாய்த் தங்கள் நாள்களையும் இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பர்.

செவிகொடுக்காவிடில் வாளால் மடிவர். அறிவின்ற§ அவர்கள் அழிந்துபோவர்.

தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்: அவர்களை அவர் கட்டிப்போடுகையில் உதவிக்காகக் கதறமாட்டார்.

அவர்கள் இளமையில் மடிவர்: காமுகரோடு அவர்கள் வாழ்வு முடியும்.

துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்: வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.

இடுக்கண் வாயினின்று உங்களை இழுத்துக் காத்தார்: ஒடுக்கமற்ற பரந்த வெளியில் சேர்த்தார். உங்கள் பந்தியை ஊட்டமுள உணவால் நிரப்பினார்.

பொல்லார்க்குரிய தீர்ப்பு உங்கள்மீது வந்தது: தீர்ப்பும் நீதியும் உங்களைப் பற்றிப் பிடித்தன.

வளமையால் வழிபிறழாமல் பார்த்துக்கொள்ளும்: நிறைந்த கையூட்டால் நெறிதவறாதேயும்.

உம் நிறைந்த செல்வமும் வல்லமையின் முழு ஆற்றலும் இன்னலில் உமக்கு உதவுமா?

இருந்த இடத்திலேயே மக்கள் மடியும் இரவுக்காக ஏங்காதீர்.

துன்பத்தைவிட தீச்செயலையே நீர் தேர்ந்துகொண்டீர்: எனவே அதற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.

இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்: அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?

அவர் நெறியை அவர்க்கு வகுத்தவர் யார்? அவர்க்கு “நீர் வழிதவறினிர்” எனச் சொல்ல வல்லவர் யார்?

அவர் செயலைப் புகழ்வதில் கருத்தாயிரும். மாந்தர் அதனைப் பாடிப்போயினர்.

மனித இனம் முழுவதும் அதைக் கண்டது: மனிதன் தொலையிலிருந்தே அதை நோக்குவான்.

இதோ! இறைவன் பெருமை மிக்கவர்: நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்: அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை: கணக்கிட முடியாதவை.

நீர்த்துளிகளை அவர் ஆவியாக இழுக்கின்றார்: அவற்றை மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.

முகில்கள் அவற்றைப் பொழிகின்றன: மாந்தர்மேல் அவற்றை மிகுதியாகப் பெய்கின்றன.

பரவும் முகில்களையும் அவர்தம் மணிப்பந்தலின் ஆர்ப்பரிப்பினையும் ஆய்ந்தறிபவர் யார்?

இதோ! தம்மைச் சுற்றி மின்னல் ஒளிரச் செய்கின்றார். கடலின் அடித்தளத்தை மூடுகின்றார்.

இவற்றால், மக்களினங்கள்மீது தீர்ப்பளிக்கின்றார்: அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.

மின்னலைத் தம் கைக்குள் வைக்கின்றார்: இலக்கினைத் தாக்க ஆணை இடுகின்றார்.

இடிமுழக்கம் அவரைப்பற்றி எடுத்துரைக்கும்: புயல் காற்று அவர் சீற்றத்தைப் புகலும்.

அதிகாரம் 37.

இதைக்கண்டு நடுங்குகிறது என் இதயம்: தன் இடம் பெயர்ந்து அது துடிக்கின்றது.

அவரது குரலின் இடியோசையையும் அவர் வாயினின்று வரும் முழக்கத்தையும் கவனமுடன் கேளுங்கள்.

விசும்பின்கீழ் மின்னலை மிளிரச் செய்கின்றார்: மண்ணகத்தின் எல்லைவரை செல்ல வைக்கின்றார்.

அதனை அடுத்து அதிரும் அவர் குரல்: பேரொலியில் அவர் முழங்கிடுவாரே: மின்னலை நிறுத்தார் அவர்தம் குரல் ஒலிக்கையிலே.

கடவுள் வியத்தகு முறையில் தம் குரலால் முழங்குகின்றார்: நம் அறிவுக்கு எட்டாத பெரியனவற்றைச் செய்கின்றார்.

ஏனெனில், உறைபனியை “மண்மிசை விழு” என்பார்: மாரியையும் பெருமழையையும் “உரத்துப் பெய்க” என்பார்.

எல்லா மனிதரும் அவரது கைத்திறனை அறிய, எல்லா மாந்தரின் கையையும் கட்டிப்போடுவார்.

பின்னர் விலங்கு தன் பொந்தினுள் நுழையும்: தம் குகைக்குள் அது தங்கும்.

அவர்தம் கிடங்கிலிருந்து சுழற்காற்றும் வாடைக்காற்றிலிருந்து குளிரும் கிளம்பும்.

கடவுளின் மூச்சால் பனிக்கட்டி உறையும்: பரந்த நீர்நிலை உறைந்து போகும்.

அவர் முகிலில் நீர்த்துளிகளைத் திணிப்பார்: கொண்டல் அவர் ஒளியைத் தெறிக்கும்.

மேகம் அவரது ஆணைப்படியே சுழன்று ஆடும்: அவர் ஆணையிடுவதை எல்லாம் மண்மிசை செய்யும்.

கண்டிக்கவோ, கருணைக்காட்டவோ இவற்றை உலகில் அவர் நிகழச்செய்கின்றார்.

யோபே! செவிகொடும்: இறைவனின் வியத்தகு செயல்களை நின்று நிதானித்துக் கவனியும்.

கடவுள் எவ்வாறு அவற்றை ஒழுங்குபடுத்துகின்றார் என்றோ, அவர்தம் முகில்கள் எப்படி மின்னலைத் தெறிக்கின்றன என்றோ அறிவீரா?

முகில்கள் எவ்வாறு மிதக்கின்றன என உமக்குத் தெரியுமா? அவை நிறை அறிவுள்ளவரின் வியத்தகு செயல்கள் அல்லவா!

தென்திசைக் காற்றினால் நிலம் இறுக்கப்படுகையில் உம் உடையின் வெப்பத்தால் நீவிர் புழுங்குகின்றீர்.

வார்ப்படக் கண்ணாடியை ஒத்த திண்ணிய விசும்பை அவரோடு உம்மால் விரிக்கக்கூடுமோ?

நாம் அவர்க்கு என்ன சொல்லக்கூடும் என்று கற்பியும்: இருளின் முகத்தே வகைதெரியாது உழல்கின்றோம்.

“நான் பேசுவேன்” என்று எவர் அவரிடம் சொல்வார்? அவ்வாறு பேசி எவர் அழிய ஆசிப்பார்?

காற்று வீசி கார்முகிலைக் கலைத்தபின் வானில் கதிரவன் ஒளிரும்போது, மனிதர் அதனைப் பா¡க்க ஒண்ணாதே!

பொன்னொளி வடதிசையிலிருந்து வரும்: அஞ்சுதற்குரிய மாட்சி கடவுளிடம் விளங்கும்.

எல்லாம் வல்லவரை நாம் கண்டுபிடிக்க முடியாது: ஆற்றலிலும் நீதியிலும் உயர்ந்தவர் அவரே! நிறைவான நீதியை மீறபவர் அல்ல.

ஆதலால், மாந்தர் அவர்க்கு அஞ்சுவர்: எல்லாம் தெரியும் என்போரை அவர் திரும்பியும் பாரார்.

அதிகாரம் 38.

ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்:

அறிவற்ற சொற்களால் என் அறிவுரையை இருட்டடிப்புச் செய்யும் இவன் யார்?

வீரனைப்போல் இடையினை இறுக்கிக்கட்டு: வினவுவேன் உன்னிடம், விடை எனக்களிப்பாய்.

மண்ணகத்திற்கு நான் கால்கோள் இடும்போது நீ எங்கு இருந்தாய்? உனக்கு அறிவிருக்குமானால் அறிவிப்பாயா?

அதற்கு அளவு குறித்தவர் யார்? உனக்குத்தான் தெரியுமே! அதன்மேல் மல் பிடித்து அளந்தவர் யார்?

எதன்மேல் அதன் பண்கள் ஊன்றப்பட்டன? அல்லது யார் அதன் மூலைக் கல்லை நாட்டியவர்?

அப்போது வைகறை விண்மீன்கள் ஒன்றிணைந்து பாடின! கடவுளின் புதல்வர் களிப்பால் ஆர்ப்பரித்தனர்!

கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடியபொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்?

மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதிதுணியாக்கி,

எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி

“இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல: உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!” என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?

உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா?

இவ்வாறு, அது வையக விளிம்பைத் தொட்டிழுத்து, பொல்லாதவரை அதனுளிருந்து உதறித்தள்ளுமே!

முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல் மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.

அப்போது, கொடியவரிடமிருந்து ஒளி பறிக்கப்படும்: அடிக்க ஓங்கியகை முறிக்கப்படும்.

கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா? ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ?

சாவின் வாயில்கள் உனக்குக் காட்டப்பட்டனவோ? இருள் உலகின் கதவுகளைக் கண்டதுண்டோ நீ?

அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா? அறிவிப்பாய் அதிலுள்ள அனைத்தையும் அறிந்திருந்தால்!

ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ! இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ?

அதன் எல்லைக்கு அதனை அழைத்துப் போவாயோ? அதனுறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ!

ஆம், அறிவாய்: அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்: ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!

உறைபனிக் கிடங்கினுள் புகுந்ததுண்டோ?

இடுக்கண் வேளைக்கு எனவும் கடும் போர், சண்டை நாளுக்கு எனவும் அவற்றை நான் சேர்த்து வைத்தேன்.

ஒளி தோன்றும் இடத்திற்குப் பாதை எது? கீழைக்காற்று அவனிமேல் வீசுவது எப்படி?

வெள்ளத்திற்குக் கால்வாய் வெட்டியவர் யார்? இடி மின்னலுக்கு வழி வகுத்தவர் யார்?

மனிதர் வாழா மண்ணிலும் மாந்தர் குடியிராப் பாலையிலும் மழை பெய்வித்துப்

பாழ்வெளிக்கும் வறண்ட நிலத்திற்கும் நீ¡ பாய்ச்சிப் பசும்புல் முளைக்கச் செய்தவர் யார்?

மழைக்குத் தந்தை உண்டோ? பனித்துளிகளைப் பிறப்பிப்பவர் யார்?

பனிக்கட்டி யாருடைய உதரத்தில் தோன்றுகின்றது? வானின் மூடுபனியை ஈன்றெடுப்பவர் யார்?

கல்லைப்போல் புனல் கட்டியாகிறது: ஆழ்கடலின் பரப்பு உறைந்து போகிறது.

கார்த்திகை மீனைக் கட்டி விலங்கிடுவாயோ? மார்கழி மீனின் தலையை அவிழ்த்திடுவாயோ?

குறித்த காலத்தில் விடிவெள்ளியைக் கொணர்வாயோ? வடதிசை விண்மீன் குழுவுக்கு வழி காட்டுவாயோ?

வானின் விதிமுறைகளை அறிந்திடுவாயோ? அதன் ஒழுங்கை நானிலத்தில் நிலைநாட்டிடுவாயோ?

முகில்வரை உன் குரலை முழங்கிடுவாயோ? தண்ணீர்ப் பெருக்கு உன்னை மூடச் செய்வாயோ?

“புறப்படுக“ என மின்னலுக்கு ஆணையிடுவாயோ? “இதோ! உள்ளோம்“ என அவை உனக்கு இயம்புமோ?

நாரைக்கு ஞானத்தை நல்கியவர் யார்? சேவலுக்கு அறிவைக்கொடுத்தவர் யார்?

ஞானத்தால் முகில்களை எண்ணக் கூடியவர் யார்? வானத்தின் நீர்க்குடங்களைக் கவிழ்ப்பவர் யார்?

துகள்களைச் சேர்த்துக் கட்டியாக்குபவர் யார்? மண்கட்டிகளை ஒட்டிக் கொள்ளச் செய்பவர் யார்?

பெண் சிங்கத்திற்கு இரை தேடுவாயோ? அரிமாக் குட்டியின் பசியை ஆற்றுவாயோ?

குகைகளில் அவை குறுகி இருக்கையிலே, குழிகளில் அவை பதுங்கி இருக்கையிலே.

காக்கைக் குஞ்சுகள் இறைவனை நோக்கிக் கரையும் போது, அவை உணவின்றி ஏங்கும்போது, காகத்திற்கு இரை அளிப்பவர் யார்?

அதிகாரம் 39.

வரையாடு ஈனும் பருவம் தெரியுமோ? மான் குட்டியை ஈனுதலைப் பார்த்தது உண்டா?

எண்ணமுடியுமா அவை சினையாயிருக்கும் மாதத்தை? கணிக்க முடியுமா அவை ஈனுகின்ற காலத்தை?

குனிந்து குட்டிகளை அவை தள்ளும்: வேதனையில் அவற்றை வெளியேற்றும்.

வெட்ட வெளியில் குட்டிகள் வளர்ந்து வலிமைபெறும்: விட்டுப் பிரியும்: அவைகளிடம் மீண்டும் வராது.

காட்டுக் கழுதையைக் கட்டற்று திரியச் செய்தவர் யார்? கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?

பாலைநிலத்தை அதற்கு வீடாக்கினேன்: உவர் நிலத்தை அதற்கு உறைவிடமாக்கினேன்.

நகர அமளியை அது நகைக்கும்: ஓட்டுவோன் அதட்டலுக்கும் செவிகொடாது.

குன்றுகள் எங்கும் தேடும் மேய்ச்சலை: பசுமை அனைத்தையும் நாடி அலையும்.

காட்டெருமை உனக்கு ஊழியம் செய்ய விரும்புமா? உன் தொழுவத்தில் ஓர் இரவேனும் தங்குமா?

காட்டெருமையைக் கலப்பையில் பூட்டி உழுதிடுவாயோ? பள்ளத்தாக்கில் பரம்படிக்க அது உன் பின்னே வருமோ?

அது மிகுந்த வலிமை கொண்டதால் அதனை நம்பியிருப்பாயோ? எனவே, உன் வேலையை அதனிடம் விடுவாயோ?

அது திரும்பி வரும் என நீ நம்புவாயோ? உன் களத்திலிருந்து தானியத்தைக் கொணருமோ?

தீக்கோழி சிறகடித்து நகைத்திடும்: ஆனால், அதன் இறக்கையிலும் சிறகுகளிலும் இரக்கம் உண்டோ?

ஏனெனில், மண்மேலே அது தன் முட்டையை இடும்: புழுதிமேல் பொரிக்க விட்டுவிடும்.

காலடி பட்டு அவை நொறுங்குமென்றோ காட்டு விலங்கு அவைகளை மிதிக்குமென்றோ அது நினைக்கவில்லை.

தன்னுடையவை அல்லாதன போன்று தன் குஞ்சுகளைக் கொடுமையாய் நடத்தும்: தன் வேதனை வீணாயிற்று என்று கூடப் பதறாமல்போம்.

கடவுள் அதை மதிமறக்கச் செய்தார்: அறிவினில் பங்கு அளித்தார் இல்லை.

விரித்துச் சிறகடித்து எழும்பொழுது, பரியோடு அதன் வீரனையும் பரிகசிக்குமே!

குதிரைக்கு வலிமை கொடுத்தது நீயோ? அதன் கழுத்தைப் பிடரியால் உடுத்தியது நீயோ?

அதனைத் தத்துக்கிளிபோல் தாவச் செய்வது நீயோ? அதன் செருக்குமிகு கனைப்பு நடுங்க வைத்திடுமே?

அது மண்ணைப் பறிக்கும்: தன் வலிமையில் மகிழும் போர்க்களத்தைச் சந்திக்கப் புறப்பட்டுச் செல்லும்.

அது அச்சத்தை எள்ளி நகையாடும்: அசையாது: வாள் முனைக்கண்டு பின்வாங்காது.

அதன்மேல் அம்பறாத் பணி கலகலக்கும்: ஈட்டியும் வேலும் பளபளக்கும்:

அது துள்ளும்: பொங்கி எழும்: மண்ணை விழுங்கும்: ஊதுகொம்பு ஓசையில் ஓய்ந்து நிற்காது:

எக்காளம் முழங்கும்போதெல்லாம் ஜஇ என்னும்: தளபதிகளின் இடி முழக்கத்தையும் இரைச்சலையும் அப்பால் போரினையும் இப்பாலே மோப்பம் பிடிக்கும்.

உன் அறிவினாலா வல்லு¡று பாய்ந்து இறங்குகின்றது? தெற்கு நோக்கி இறக்கையை விரிக்கின்றது?

உனது கட்டளையாலா கழுகு பறந்து ஏறுகின்றது? உயர்ந்த இடத்தில் தன் உறைவிடத்தைக் கட்டுகின்றது?

பாறை உச்சியில் கூடுகட்டித் தங்குகின்றது: செங்குத்துப் பாறையை அரணாகக் கொண்டுள்ளது.

அங்கிருந்தே அது கூர்ந்து இரையைப் பார்க்கும்: தொலையிலிருந்தே அதன் கண்கள் அதைக் காணும்.

குருதியை உறிஞ்சும் அதன் குஞ்சுகள்: எங்கே பிணமுண்டோ அங்கே அது இருக்கும்.

அதிகாரம் 40.

பின்பு யோபைப் பார்த்து ஆண்டவர் கூறினார்:

குற்றம் காண்பவன், எல்லாம் வல்லவரோடு வழக்காடுவானா? கடவுளோடுவாதாடுபவன் விடையளிக்கட்டும்.

யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி:

இதோ! எளியேன் யான் இயம்புதற்குண்டோ? என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன்.

ஒருமுறை பேசினேன்: மறுமொழி உரையேன்: மீண்டும் பேசினேன்: இனிப் பேசவேமாட்டேன்.

ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்:

வீரனைப்போல் இடையை இறுக்கிக் கட்டிக்கொள்: வினவுவேன் உன்னிடம்: விடையெனக்கு அளிப்பாய்.

என் தீர்ப்பிலேயே நீ குற்றம் காண்பாயா? உன்னைச் சரியெனக் காட்ட என்மீது குற்றம் சாட்டுவாயா?

இறைவனுக்கு உள்ளதுபோல் உனக்குக் கையுண்டோ? அவர்போன்று இடிக்குரலில் முழங்குவாயோ?

சீர் சிறப்பினால் உன்னை அணி செய்துகொள்: மேன்மையையும், மாண்பினையும் உடுத்திக்கொள்.

கொட்டு உன் கோபப் பெருக்கை! செருக்குற்ற ஒவ்வொருவரையும் நோக்கிடு: தாழ்த்திடு!

செருக்குற்ற எல்லாரையும் நோக்கிடு: வீழ்த்திடு! தீயோரை அவர்கள் இடத்திலேயே மிதித்திடு!

புழுதியில் அவர்களை ஒன்றாய்ப் புதைத்திடு! காரிருளில் அவர் முகங்களை மூடிடு.

அப்பொழுது, உனது வலக்கை உன்னைக் காக்குமென்று நானே ஒத்துக்கொள்வேன்.

இதோ பார், உன்னைப் படைத்ததுபோல் நான் உண்டாக்கிய பெகிமோத்து காளைபோல் புல்லைத் தின்கின்றது.

இதோ காண், அதன் ஆற்றல் அதன் இடுப்பில்: அதன் வலிமை வயிற்றுத் தசைநாரில்.

அது தன் வாலைக் கேதுருமரம்போல் விரைக்கும்: அதன் தொடை நரம்புகள் கயிறுபோல் இறுகியிருக்கும்:

அதன் எலும்புகள், வெண்கலக் குழாய்கள்: அதன் உறுப்புகள் உருக்குக் கம்பிகள்.

இறைவனின் படைப்புகளில் தலையாயது அதுவே! படைத்தவரே அதைப் பட்டயத்துடன் நெருக்க முடியும்.

மலைகள் அதற்குப் புற்பூண்டுகளை விளைவிக்கின்றன: விலங்குகள் எல்லாம் விளையாடுவதும் அங்கேதான்.

அது நிழற்செடிக்கு அடியிலும் நாணல் மறைவிலும் உளைச் சேற்றிலும் படுத்துக் கிடக்கும்.

அச்செடி தன் நிழலால் அதை மறைக்கும்: ஓடையின் அலரி அதைச் சூழ்ந்து நிற்கும்.

ஆறு புரண்டோடினும் அது மிரண்டோடாது: அதன் முகத்தே யோர்தான் மோதினும் அசைவுறாது.

அதன் கண்காண அதனைக் கட்டமுடியுமோ? கொக்கியால் அதன் மூக்கைத் துளைக்க முடியுமோ?

அதிகாரம் 41.

பண்டிலால் லிவியத்தனைத் பக்கிடுவாயோ? கயிற்றினால் அதன் நாக்கினைக் கட்டிடுவாயோ?

அதன் மூக்கிற்குச் கயிறு இட உன்னால் முடியுமோ? அதன் தாடையில் கொக்கியினால் குத்த முடியுமோ?

வேண்டுகோள் பல அது உன்னிடம் விடுக்குமோ? கனிவாக உன்னிடம் கெஞ்சுமோ?

என்றும் உனக்கு ஏவல்புரிய உன்னுடன் அது உடன்படிக்கை செய்யுமோ?

பறவைபோல் துள்ளி அதனுடன் ஆடுவாயா? உம் மகளிர்க்கென அதனைக் கட்டிவைப்பாயா?

மீனவர் குழுவினர் அதன்மேல் பேரம் பேசுவார்களோ?அவர்கள் வணிகரிடையே அதைக் கூறுபோடுவார்களோ?

கூரிய முட்களால் அதன் தோலையும் மீன் எறி வேல்களால் அதன் தலையையும் குத்தி நிரப்புவாயோ?

உன் கையை அதன்மேல் வைத்துப்பார்: எழும் போராட்டத்தை மறக்கமாட்டாய். மீண்டும் அதைச் செய்ய மாட்டோம்.

இதோ! தொடுவோர் நம்பிக்கை தொலைந்துபோம்: அதனைக் கண்டாலே ஒருவர் கதிகலங்குவார்.

அதை எழுப்பும் வீரம் எவருக்கும் இல்லை: பின்பு அதன்முன் நிற்கத் துணிபவர் யார்?

அதனை எதிர்த்து உயிரோடிருந்தவர் எவராவது உண்டோ? விண்ணகத்தின்கீழ் அப்படிப்பட்டவர் யாருமில்லை!

அதன் உறுப்புகள், அதன் ஆற்றல் அதன் அமைப்பின் அழகு அனைத்தையும் பற்றி அறிவிக்காது விடேன்.

அதன் மேல்தோலை உரிப்பவர் யார்? அதன் தாடை இரண்டுக்குமிடையே நுழைபவர் யார்?

அதன் முகத்தில் வாயிலைத் திறப்பவன் யார்? அதன் பற்களைச் சூழ்ந்து பேரச்சமே உள்ளது.

அதன் முதுகு கேடய வரிசையாம்: நெருங்க மூடி முத்திரை இடப்பட்டதாம்.

ஒன்றோடு ஒன்று ஒட்டி உள்ளது. காற்றும் அதனிடையே கடந்திடாது:

ஒன்றோடு ஒன்றாய் இணைந்துள்ளன: பிரிக்கமுடியாதவாறு ஒன்றாய்ப் பிடித்துள்ளன.

துலங்கும் மின்னல் அதன் தும்மல்: வைகறை இமைகள் அதன் கண்கள்.

அதன் வாயினின்று புறப்படுவது தீப்பிழம்பு: அங்கிருந்து பறப்பது நெருப்புப் பொறிகளே.

நாணல் நெருப்புக் கொதிகலனின்று வருவதுபோல் அதன் நாசியினின்று புகை கிளம்பும்.

அதன் மூச்சு கரிகளைப் பற்றவைக்கும்: அதன் வாயினின்று தீப்பிழம்பு கிளம்பிவரும்.

அதன் கழுத்தில் வலிமை வதிகின்றது: நடுக்கம் அதன்முன் துள்ளியாடுகின்றது.

அதன் தசைமடிப்புகள் ஒட்டியிருக்கும்: கெட்டியாயிருக்கும் அவற்றை அசைக்க ஒண்ணாது.

அதன் நெஞ்சம் கல்லைப்போல் கடினமானது: திரிகையின் அடிக்கல்போல் திண்மையானது.

அது எழும்பொழுதே தெய்வங்கள் அஞ்சுகின்றன: அது அறையவரும்போதே நிலைகுலைகின்றன.

வாள் அதைத் தாக்கிடினும், ஊடுருவாது: ஈட்டியோ, அம்போ, எறிவாலோ உட்செல்லாது.

இரும்பை அது துரும்பெனக் கருதும்: வெண்கலத்தை உளுத்த கட்டையெனக் கொள்ளும்.

வில்வீரன் அதை விரட்ட முடியாது: கவண் கல்லும் கூளம்போல் ஆகுமே.

பெருந்தடியைத் தாளடி எனக்கருதும்: எறிவேல் ஒலிகேட்டு எள்ளி நகைக்கும்.

அதன் வயிற்றுப்புறம் ஒட்டுத் துண்டுகளின் அடுக்கு: அது சேற்றில் படுத்துக்கிடக்கையில் பரம்புக் கட்டை.

கொதிகலமென அது கடலைப் பொங்கச் செய்யும்: தைலச் சட்டியென அது ஆழியைக் கொப்பளிக்கச் செய்யும்.

அது போனபிறகு பாதை பளபளக்கும்: கடலே நரைத்ததெனக் கருதத்தோன்றும்.

அகிலத்தில் அதற்க இணையானது இல்லை: அச்சம் கொண்டிலாப் படைப்பு அதுவே.

செருக்குற்ற படைப்பு அனைத்தையும் ஏளனமாய் நோக்கும்: வீறுகொண்ட விலங்குகட்கு வேந்தனும் அதுவே.

அதிகாரம் 42.

அப்பொழுது யோபு ஆண்டவர்க்குக் கூறிய பதில்:

நீர் அனைத்தையும் ஆற்றவல்லவர்: அறிவேன் அதனை: நீர் நினைத்த எதையும் தடுக்க இயலாது.

“அறிவில்லாமல் ஆலோசனையை மறைப்பவன் எவன்?” என்று கேட்டீர்: உண்மையில் நான்தான் புரியாதவற்றைப் புகன்றேன்: அவை எனக்கு விளங்கா அளவுக்கு விந்தையானவை.

அருள்கூர்ந்து கேளும் அடியேன் பேசுவேன்: வினவுவேன் உம்மை: விளங்க வைப்பீர் எனக்கு.

உம்மைப்பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்: ஆனால் இப்பொழுது, என் கண்களே உம்மைக் காண்கின்றன.

ஆகையால் என்னையே நொந்து கொள்ளுகின்றேன்: புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன்.

ஆண்டவர் இவ்வாறு யோபிடம் பேசினபிறகு, தேமானியனான எலிப்பாசைப் பார்த்துக் கூறியது: உன்மீதும், உன் இரு நண்பர்கள் மீதும் எனக்குச் சினம் பற்றி எரிகிறது. ஏனெனில் என் ஊழியன் யோபு போன்று நீங்கள் என்னைப்பற்றிச் சரியாகப் பேசவில்லை.

ஆகவே இப்பொழுது, ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக் கிடாய்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்: என் ஊழியன் யோபிடம் செல்லுங்கள்: உங்களுக்காக எரிபலியை ஒப்புக்கொடுங்கள். என் ஊழியன் யோபு உங்களுக்காக மன்றாடும் பொழுது, நானும் அவன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வேன். என் ஊழியன் யோபு போன்று என்னைப் பற்றிச் சரியாகப் பேசாத உங்கள் மடமைக்கு ஏற்றவாறு செய்யாது விடுவேன் .

அவ்வாறே தேமானியனான எலிப்பாசும், சூகாவியனான பில்தாதும், நாமானியனான சோப்பாரும் சென்று ஆண்டவர் அவர்களுக்குக் கட்டளை இட்டவாறே செய்தார்கள். ஆண்டவரும் யோபின் இறைஞ்சுதலை ஏற்றார்.

யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடின பிறகு, ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் நல்கினார். மேலும் அவர் யோபுக்கு இருந்தனவற்றை எல்லாம் இரண்டு மடங்கு ஆக்கினார்.

பின்னர் அவருடைய எல்லாச் சகோதரர்களும், சகோதரிகளும், அவரை முன்பு தெரிந்திருந்த அனைவரும் அவரிடம் வந்தனர்: அவரது இல்லத்தில் அவரோடு விருந்துண்டனர்: ஆண்டவர் அவருக்கு வரச்செய்த தீமை அனைத்திற்காகவும் ஆறுதல் கூறி அவரைத் தேற்றினர். ஒவ்வொருவரும் அவருக்கு வெள்ளியும் பொன்மோதிரமும் வழங்கினர்.

யோபின் முன்னைய நாள்களில் இருந்ததைவிட, பின்னைய நாள்களில் ஆண்டவர் அதிகமாக ஆசிவழங்கினார். இப்பொழுது பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் பெட்டைக் கழுதைகளும் அவருக்கு இருந்தன.

அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்.

மூத்த மகளுக்கு எமிமா என்றும், இரண்டாவது மகளுக்குக் கெட்டிசியா என்றும், மூன்றாவது மகளுக்குக் கெரென் அப்பூக்கு என்றும் பெயரிட்டார்.

யோபின் புதல்வியரைப் போல் அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை. அவர்களின் தந்தை, அவர்களின் சகோதரர்களோடு அவர்களுக்கும் சொத்தில் உரிமை கொடுத்தார்.

அதன்பின் யோபு மற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார்: தம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறைவரை கண்டுகளித்தார்.

இவ்வாறு யோபு முதுமை அடைந்து, பல்லாண்டு வாழ்ந்து இறந்தார்.

புத்தகம் 19 - "திருப்பாடல்கள்"

அதிகாரம் 1.

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்: பாவிகளின் தீயவழி நில்லாதவர்: இகழ்வாரின் குழுவினில் அமராதவர்:

ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்: அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்:

அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்: பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்: தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.

ஆனால், பொல்லார் அப்படி இல்லை: அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.

பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்: பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார்.

நேர்மையாளரின் நெறியை ஆணடவர் கருத்தில் கொள்வார்: பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.

அதிகாரம் 2

வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களின்ஙகள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?

ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்: ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்:

“அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்: அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்“ என்கின்றார்கள்.

விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்: என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார்.

அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்: கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்:

“என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திரு¢நிலைப்படுத்தனேன்.“

ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்: “நீர் என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.

நீர் விரும்புவதை என்னிடம் கேளும்: பிறநாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்: பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.

இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்: குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்.“

ஆகவே, மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்: பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.

அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்: நடுநடுங்குங்கள்! அவர்முன் அக மகிழுங்கள்!

அவர் சினங்கொள்ளாதபடியும் நீங்கள் வழியில் அழியாதபடியும் அவரது காலடியை முத்தமிடுங்கள்: இல்லையேல், அவரது சினம் விரைவில் பற்றியெரியும? அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.

அதிகாரம் 3

ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்!

“கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்” என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். (சேலா)

ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்: நீரே என் மாட்சி: என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே.

நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்: அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். (சேலா)

நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்: ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.

என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.

ஆண்டவரே, எழுந்தருளும்: என் கடவுளே, என்னை மீட்டருளும்: என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்! பொல்லாரின் பல்லை உடையும்!

விடுதலை அளிப்பவர் ஆண்டவ+: அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! (சேலா)

அதிகாரம் 4

எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்: நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்: இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்:

மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டு வருவீர்கள்? எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா)

ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்: நான் மன்றாடும் போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்: -இதை அறிந்துகொள்ளுங்கள்.

சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்: படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள். (சேலா)

முறையான பலிகளைச் செலுத்துங்கள்: ஆண்டவரை நம்புங்கள்.

“நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?” எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.

தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.

இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்: ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.

அதிகாரம் 5

ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்: என் பெருமூச்சைக் கவனித்தருளும்.

என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்: ஏனெனில். நான் உம்மை நோக்கியே மன்றாடுகின்றேன்.

ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்: வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன்.

ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை: உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.

ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார்: தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர்.

பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்: கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர்.

நானோ உம் பேரருளால் உமது இல்லம் சென்றிடுவேன்: உம் திருத்பயகத்தை நோக்கி இறையச்சத்துடன் உம்மைப் பணிந்திடுவேன்:

ஆண்டவரே, எனக்குப் பகைவர் பலர் இருப்பதால், உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்: உமது செம்மையான வழியை எனக்குக் காட்டியருளும்.

ஏனெனில், அவர்கள் வாயில் உண்மை இல்லை: அவர்கள் உள்ளம் அழிவை உண்டாக்கும்: அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி: அவர்கள் நா வஞ்சகம் பேசும்.

கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய தண்டனையை அவர்களுக்கு அளியும்: அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே வீழ்ச்சியுறட்டும்: அவர்களுடைய ஏராளமான தீச்செயல்களை முன்னிட்டு, அவர்களைப் புறம்பே தள்ளிவிடும். ஏனெனில், அவர்கள் உம்மை எதிர்த்துள்ளார்கள்.

ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்: அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்: நீர் அவர்களைப் பாதுகாப்பீர்: உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர்.

ஏனெனில், ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்: கருணை என்னும் கேடயத்தால் அவரை மறைத்துக் காப்பீர்.

அதிகாரம் 6

ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்: என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும்.

ஆண்டவரே, எனக்கு இரங்கும்: ஏனெனில், நான் தளர்ந்து போனேன்: ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்: ஏனெனில், என் எலும்புகள் வலுவிழந்து போயின.

என் உயிர் ஊசலாடுகின்றது: ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?

ஆண்டவரே, திரும்பும்: என் உயிரைக் காப்பாற்றும், உமது பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும்.

இறந்தபின் உம்மை நினைப்பவர் எவருமில்லை: பாதாளத்தில் உம்மைப் போற்றுபவர் யார்?

பெருமூச்சினால் இளைத்துப் போனேன்: ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது.

துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று: என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று.

தீங்கிழைப்போரே! நீ£ங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்: ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்து விட்டார்.

ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்: அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.

என் எதிரிகள் யாவரும் வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்: அவர்கள் திடீரென நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.

அதிகாரம் 7

என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகந்தேன்: என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.

இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்: விடுவிப்போர் எவரும் இரார்.

என் கடவுளாகிய ஆண்டவரே, நான் இவற்றைச் செய்திருந்தால்-என் கை தவறிழைத்திருந்தால்,

என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு நான் தீங்கிழைத்திருந்தால், என் பகைவனைக் காரணமின்றிக் காட்டிக்கொடுத்திருந்தால்-

எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்: என்னைத் தரையில் தள்ளி மிதித்து நசுக்கட்டும்: என் பெருமையைப் புழுதியில் புதைக்கட்டும். (சேலா)

ஆண்டவரே, சினங்கொண்டு எழுந்தருளும்: என் பகைவரின் சீற்றத்தை அடக்க வாரும்: எனக்காக விழித்தெழும்: ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர் நீர் ஒருவரே.

எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி உம்மைச் சூழச் செய்யும்: அவர்கள்மீது உயரத்தினின்று ஆட்சி செலுத்தும்.

ஆண்டவரே, நீரே மக்களினத்தார் அனைவருக்கும் நீதி வழங்குபவர்: ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.

பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்: நல்லாரை நிலைநிறுத்தும்: நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்: நீதி அருளும் கடவுள்.

கடவுளே என் கேடயம்: நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.

கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி: நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன்.

பொல்லார் மனமாற்றம் அடையாவிடில், அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்: வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்.

கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்: அம்புகளை அனல் பறக்கும்படி எய்வா+:

ஏனெனில், பொல்லார் கொடுமையைக் கருக்கொள்கின்றனர்: அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி, பொய்ம்மையைப் பெற்றெடுக்கின்றனர்.

அவர்கள் குழியை வெட்டி ஆழமாகத் தோண்டுகின்றனர்: அவர்களே வெட்டிய விழுகின்றனர்:

அவர்கள் செய்த கேடு அவர்கள் தலைக்கே திரும்பும். அவர்கள் செய்த கொடுமை அவர்கள் உச்சந்தலையிலேயே விழும்.

ஆண்டவர் வழங்கிய நீதிக்காக அவருக்கு நன்றி கூறுவேன்: உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப்பாடுவேன்.

அதிகாரம் 8

ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.

பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்: எதிரியையும் பழிவாங்குவோரையும் அடக்கினீர்.

உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,

மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் கற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்: மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.

உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்: எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.

ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,

வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர்.

ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!

அதிகாரம் 9

ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன் : வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.

உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களி கூர்வேன்: உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.

என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்: உமது முன்னிலையில் இடறிவிழுந்து அழிவார்கள்.

நீர் நீதியுள்ள நடுவராய் அரியணையில் வீற்றிருக்கின்றீர்: என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.

வேற்றினத்தாரைக் கண்டித்தீர்: பொல்லாரை அழித்தீர்: அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர்.

எதிரிகள் ஒழிந்தார்கள்: என்றும் தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள்.

அவர்களின் நகர்களை நீர் தரைமட்டம் ஆக்கினீர்: அவர்களைப்பற்றிய நினைவு அற்றுப் போயிற்று. ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்: நீதி வழங் குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார்.

உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்: மன்னளினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.

ஒடுக்கப்படுவோருக்கு ஆண்டவரே அடைக்கலம்: நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே.

உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கைகொள்வர்: ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை.

சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்:

ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர் எளியோரை நி¢னைவில் கொள்கின்றார்: அவர்களின் கதறலை அவர் கேட்க மறவார்.

ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்: என்னைப் பகைப்போரால் எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்: சாவின் வாயினின்று என்னை விடுவியும்.

அப்பொழுது, மகள் சீயோனின் வாயில்களில் உம் புகழ் அனைத்தையும் பாடுவேன்: நீர் அளிக்கும் விடுதலைகுறித்து அகமகிழ்வேன்.

வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்: அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன.

ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம் தம்மை வெளிப்படுத்தியுள்ளார்: பொல்லார் செய்த செயலில் அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை, இசை: சேலா)

பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்: கடவுளை மறந்திருக்கும் வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர்.

மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை: எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது.

ஆண்டவரே, எழுந்தருளும்: மனிதரின் கை ஓங்க விடாதேயும் : வேற்றினத்தார் உமது முன்னிலையில் தீர்ப்புப் பெறுவார்களாக!

ஆண்டவரே, அவர்களைத் திகிலடையச் செய்யும்: தாம் வெறும் மனிதரே என்பதை வேற்றினத்தார் உணர்வார்களாக!

அதிகாரம் 10

ஆண்டவரே, ஏன் தொலைவில் நிற்கின்றீர்? தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்?

பொல்லார் தம் இறுமாப்பினால் எளியோரைக் கொடுமைப்படுத்துகின்றீர்? அவர்கள் வகுத்த சதித்திட்டங்களில் அவர்களே அகப்பட்டுக்கொள்வார்களாக.

பொல்லார் தம் தீய நாட்டங்களில் தற்பெருமை கொள்கின்றனர்: பேராசையுடையோர் ஆண்டவரைப் பழித்துப் புறக்கணிக்கின்றனர்.

பொல்லார் செருக்கு உள்ளவராதலால் அவரைத் தேடார்: அவர்கள் எண்ணமெல்லாம் கடவுள் இல்லை!

எம் வழிகள் என்றும் நிலைக்கும்“ என்பதே. உம் தீர்ப்புகளோ மிக மேலானவை: அவர்களின் அறிவுக்கு எட்டாதவை. தம் பகைவர் அனைவரையும் பார்த்து அவர்கள் நகைக்கின்றனர்.

˜எவராலும் என்னை அசைக்க முடியாது: எந்தத் தலைமுறையிலும் எனக்குக் கேடுவராது“ என்று அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வர்.

அவர்களது வாய் சாபமும் கபடும் கொடுமையும் நிறைந்தது: அவர்களது நாவினடியில் கேடும் தீங்கும் இருக்கின்றன.

ஊர்களில் அவர்கள் ஒளிந்து காத்திருக்கின்றனர்: சூதறியாதவர்களை மறைவான இடங்களில் கொலை செய்கின்றனர்: திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.

குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள் மறைவில் பதுங்கியிருக்கின்றனர்: எளியோரைப் பிடிப்பதற்காகவே அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்: தம் வலையில் சிக்கவைத்து இழுத்துச் செல்கின்றனர்.

அவர்கள் எளியோரை நலிவுறச் செய்து நசுக்குகின்றனர்: அவர்களது கொடிய வலிமையால் ஏழைகள் வீழ்த்தப்படுகின்றனர்.

“இறைவன் மறந்துவிட்டார்: தம் முகத்தை மூடிக்கொண்டார்: என்றுமே எம்மைப் பார்க்க மாட்டார்“ என்று பொல்லார் தமக்குள் சொல்லிக் கொள்கின்றனர்.

ஆண்டவரே, எழுந்தருளும்! இறைவா, எமது ஆற்றலை வெளிப்படுத்தும்! எளியோரை மறந்துவிடாதேயும்.

பொல்லார் கடவுளைப் புறக்கணிப்பது ஏன்? அவர் தம்மை விசாரணை செய்யமாட்டாரென்று அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வது ஏன்?

ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்: கேட்டையும் துயரத்தையும் பார்த்து, உதவி செய்யக் காத்திருக்கின்றீர்: திக்கற்றவர் தம்மை உம்மிடம் ஒப்படைக்கின்றனர்: அனாதைக்கு நீரே துணை.

பொல்லார் மற்றும் தீயோர் கைகளை முறித்துவிடும்: அவர்களது பொல்லாங்கைத் தேடிக் கண்டுபிடித்து, அது அற்றுப்போகச் செய்யும்.

ஆண்டவர் என்றுமுள அரசர்: அவரது நிலத்தினின்று வேற்றினத்தார் அகன்று விடுவர்.

ஆண்டவரே, எளியோரின் விருப்பத்தை நீர் நிறைவேற்றுகின்றீர்: அவர்கள் உள்ளத்திற்கு ஊக்கம் அளித்து அவர்களுக்குச் செவிசாய்க்கின்றீர்.

நீர் அனாதைகளுக்கும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் நீதி வழங்குகின்றீர்: மண்ணினின்று தோன்றிய மனிதர் இனியும் அவர்களைத் துன்புறுத்த மாட்டார்.

அதிகாரம் 11

நான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகந்துள்ளேன்: நீங்கள் என்னிடம், ˜பறவையைப் போல மலைக்குப் பறந்தோடிப் போ:

ஏனெனில், இதோ! பொல்லார் வில்லை வளைக்கின்றனர்: நாணில் அம்பு தொடுக்கின்றனர்: நேரிய உள்ளத்தார்மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்:

அடித்தளங்களே தகர்க்கப்படும் பொழுது, நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?“ என்று சொல்வது எப்படி?

ஆண்டவர் தம் பய கோவிலில் இருக்கின்றார்: அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது: அவர் கண்கள் உற்று நோக்குகின்றன: அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன.

ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்: வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார்.

அவர் பொல்லார்மீது கரிநெருப்பும் கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்: பொசுக்கும் தீக்காற்றே அவர்கள் குடிக்கும் பானமாகும்.

ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்: அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர்.

அதிகாரம் 12

ஆண்டவரே, காத்தருளும்: ஏனெனில் உலகில் இறையன்பர்கள் அற்றுப் போயினர்: மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.

ஒருவர் அடுத்திருப்பாரிடம் பொய் பேசுகின்றனர்: தேனொழுகும் இதழால் இருமனத்தோடு பேசுகின்றனர்.

தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும் ஆண்டவரே, துண்டித்துவிடுவாராக! பெருமையடித்துக் கொள்ளும் நாவை அறுத்துவிடுவீராக!

“எங்கள் நாவன்மை எங்கள் வலிமை: எங்கள் பேச்சுத்திறனே எங்கள் பக்கத் துணை: எங்களுக்குத் தலைவர் வேறு யார்?“ என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!

˜எளியோரின் புலம்பலையும் வறியோரின் பெருமூச்சையும் கேட்டு இப்பொழுதே எழுந்து வருகின்றேன் : அவர்கள் ஏங்குகின்றபடி அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்“ என்கின்றார் ஆண்டவர்.

ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்: மண் உலையில் பய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை: ஏழுமுறை புடமிடப்பட்டவை.

ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்: இத்தகைய தலைமுறையிடமிருந்து எம்மை என்றும் காப்பாற்றும்.

பொல்லார் எம்மருங்கும் உலாவருகின்றனர்: மானிடரிடையே பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது.

அதிகாரம் 13

ஆண்டவரே, எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்? இறுதிவரை மறந்துவிடுவீரோ? இன்னும் எத்தனை நாள் உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?

எத்தனை நாள் வேதனையுற்று எனக்குள் போராடுவேன்? நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது: எத்தனை நாள் என் எதிரி எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?

என் கடவுளாகிய ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கி எனக்குப் பதில் அளித்தருளும்: என் விழிகளுக்கு ஒளியூட்டும்.

அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில் ஆழ்ந்து விடமாட்டேன்: என் எதிரி, ˜நான் அவனை வீழ்த்திவிட்டேன்“ என்று சொல்லமாட்டான்: நான் வீழ்ச்சியுற்றேன் என்று என் பகைவர் அக்களிக்கவுமாட்டார்.

நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்: நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும்.

நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்: ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார்.

அதிகாரம் 14

கடவுள் இல்லை என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்: அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்: நல்லது செய்வார் எவருமே இல்லை.

ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்: மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார்.

எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்: ஒருமிக்கக் கெட்டுப்போயினர்: நல்லது செய்வார் யாரும் இல்லை: ஒருவர்கூட இல்லை.

தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே! அவர்கள் ஆண்டவரைநோக்கி மன்றாடுவதுமில்லை.

அவர்கள் அஞ்சி நடுங்குவர்: ஏனெனில், கடவுள் நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்றார்.

எளியோரின் திட்டத்தை அவர்கள் தோல்வியுறச் செய்கின்றார்கள்: ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு அடைக்கலமாய் இருக்கின்றார்.

சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! ஆண்டவர் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!

அதிகாரம் 15

ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?

மாசற்றவராய் நடப்போரே! -இன்னோர் நேரியவற்றைச் செய்வர்: உளமார உண்மை பேசுபவர்:

தம் நாவினால் குறங்கூறார்: தம் தோழருக்குத் தீங்கிழையார்: தம் அடுத்தவரைப் பழித்துரையார்.

நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்: ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்: தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்:

தம் பணத்தை வட்டிக்குக் கொடார்: மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்: -இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.

அதிகாரம் 16

இறைவா, என்னைக் காத்தருளும்: உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

நான் ஆண்டவரிடம் “நீரே என் தலைவர்: உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை“ என்று சொன்னேன்.

பூவுலகில் உள்ள பயோர் எவ்வளவோ உயர்ந்தோர்! அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.

வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர் தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வ+: அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில் நான் கலந்து கொள்ளேன்: அவற்றின் பெயரைக்கூட நாவினால் உச்சரியேன்.

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து: அவரே என் கிண்ணம்: எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே:

இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன: உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே.

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்: இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.

ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்: அவர் என் வலப்பக்கம் உள்ளார்: எனவே, நான் அசைவுறேன்.

என் இதயம் அக்களிக்கின்றது: என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது: என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.

ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்: உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்: உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு: உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.

அதிகாரம் 17

ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்: என் வேண்டுதலை உற்றுக் கேளும்: வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.

உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்: உம் கண்கள் நேரியன காணட்டும்.

என் உள்ளத்தை ஆய்ந்தறியும்: இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்: என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்: தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்: என் வாய் பிழை செய்யக்கூடாதென உறுதி கொண்டேன்.

பிற மானிடர் செய்வது போல் அல்லாமல், நீர் உரைத்த வாக்கிற்கிணங்க, வன்முறையாளரின் வழிகளை விட்டு விலகியுள்ளேன்.

என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது: என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.

இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்: ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்: என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்.

உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்: உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!

உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்: உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.

என்னை ஒழிக்கத் தேடும் பொல்லாரிடமிருந்தும் என்னைச் சூழ்ந்து கொண்ட எதிரிகளிடமிருந்தும் என்னை மறைத்துக் கொள்ளும்.

அவர்கள் ஈவு இரக்கம் அற்ற கல் நெஞ்சர்கள்: தங்கள் வாயினால் இறுமாப்புடன் பேசுபவர்கள்.

அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர்: இதோ! என்னை வளைத்துக் கொண்டனர்: அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு, வைத்த கண் வாங்காது காத்திருக்கின்றனர்.

பீறிப்போடத் துடிக்கும் சிங்கத்திற்கும் அவர்கள் ஒப்பாவர்: மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்.

ஆண்டவரே, எழுந்து வாரும்: அவர்களை நேருக்குநேர் எதிர்த்து முறியடையும்: பொல்லாரிடமிருந்து உமது வாளால் என்னைக் காத்தருளும்.

ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து-இவ்வுலகமே தங்கள் கதியென வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து- உமது கைவலிமையினால் என்னைக் காப்பாற்றும். அவர்களுக்கென நீர் ஒதுக்கி வைத்துள்ளவற்றால் அவர்கள் வயிற்றை நிரப்பும் : அவர்களின் மைந்தர் வேண்டிய மட்டும் நிறைவு பெறட்டும்: எஞ்சியிருப்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்லட்டும்:

நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்: விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.

அதிகாரம் 18

அவர் உரைத்தது: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.

ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர்: என் இறைவன்: நான் புகலிடம் தேடும் மலை அவரே: என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.

போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்: என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.

சாவின் கயிறுகள் என்னை இறுக்கின: அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.

பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின: சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன.

என் நெருக்கடிவேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்: என் கடவுளை நோக்கிக் கதறினேன்: தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்: என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.

அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது: மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன:அவர்தம் கடுஞ்சினத்தால் அவை நடுநடுங்கின.

அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று: அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது: அவரிடமிருந்து நெருப்பக்கனல் வெளிப்பட்டது.

வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்: கார் முகில் அவரது காலடியில் இருந்தது.

கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்: காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.

காரிருளைத் தமக்கு அவர் மூடுதிரை ஆக்கிக்கொண்டார்: நீர்கொண்ட முகிலைத் தமக்குக்கூடாரம் ஆக்கிக்கொண்டார்.

அவர்தம் திருமுன்னின் பேரொளியில், மேகங்கள் கல் மழையையும் நெருப்புக் கனலையும் பொழிந்தன.

ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்: உன்னதர்தம் குரலை அதிரச்செய்தார். கல் மழையையும் நெருப்புக் கனலையும் பொழிந்தார்.

தம் அம்புகளை எய்து அவர் அவர்களைச் சிதறடித்தார்: பெரும் மின்னல்களைத் தெறித்து அவர்களைக் கலங்கடித்தார்.

ஆண்டவரே, உமது கடிந்துரையாலும் உமது மூச்சுக் காற்றின் வலிமையாலும் நீர்த்திரளின் அடிப்பரப்பு தென்பட்டது: நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.

உயரத்தினின்று அவர் என்னை எட்டிப் பிடித்துக் கொண்டார்: வெள்ளப்பெருக்கினின்று என்னைக் காப்பாற்றினார்.

என் வலிமைமிகு எதிரியிடமிருந்து அவர் என்னை விடுவிடுத்தார்: என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னைப் பாதுகாத்தார்:

எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்: ஆண்டவரோ எனக்கு ஊன்றுகோலாய் இருந்தார்.

நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்: நான் அவர் மனத்திற்கு உகந்தவனாய் இருந்ததால், அவர் என்னை விடுவித்தார்.

ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார்: என் மாசற்ற செயலுக்கு ஏற்ப கைம்மாறு செய்தார்.

ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்: பொல்லாங்கு செய்து என் கடவுளை விட்டு அகலவில்லை.

அவர்தம் நீதிநெறிகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்: அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை.

அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்: தீங்கு செய்யாவண்ணம் என்னைக் காத்துக் கொண்டேன்.

ஆண்டவர், என் நேர்மைக்கு உரிய பயனை அளித்தார்: அவர்தம் பார்வையில் நான் குற்றம் அற்றவனாய் இருந்தேன்.

ஆண்டவரே, மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும் மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குவீர்.

பயோருக்குத் பயவராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர்.

எளியோருக்கு நீர் மீட்பளிக்கின்றீர்: செருக்குற்றோரை ஏளனத்துடன் நீர் பார்க்கின்றீர்.

ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்.

உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்: என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன்.

இந்த இறைவனின் வழி நிறைவானது: ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது: அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார்.

ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு கடவுள் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது?

வலிமையை அரைக்கச்சையாக அளித்த இறைவன் அவரே: என் வழியைப் பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே.

அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்: உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார்.

போருக்கு என்னை அவர் பழக்குகின்றா+: எனவே, வெண்கல வில்லையும் என் புயங்கள் வளைக்கும்.

ஆண்டவரே, பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்கினீர்: உமது வலக்கரத்தால் என்னைத் தாங்கிக் கொண்டீர்: உமது துணையால் என்னைப் பெருமைப்படுத்தினீர்.

நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்: என்கால்கள் தடுமாறவில்லை.

என் எதிரிகளைத் துரத்திச்சென்று நான் அவர்களைப் பிடித்தேன்: அவர்களை அழித்தொழிக்கும் வரையில் திரும்பவில்லை.

அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை நான் வெட்டித்தள்ளினேன்: அவர்கள் என் காலடியில் வீழ்ந்தார்கள்.

போரிடும் ஆற்றலை நீர் எனக்கு அரைக்கச்சையாக அளித்தீர்: என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிபணியச் செய்தீர்.

என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்: என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன்.

உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்: ஆனால், அவர்களுக்கு உதவுவார் யாருமில்லை. அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்: ஆனால், அவர்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

எனவே, நான் அவர்களை நொறுக்கிக் காற்றடித்துச் செல்லும் புழுதிபோல் ஆக்கினேன்: தெருச் சேறென அவர்களைத் பர எறிந்து விட்டேன்.

என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீர்: பிற இனங்களுக்கு என்னைத் தலைவன் ஆக்கினீர்: நான் முன்பின் அறியாத மக்கள் எனக்குப் பணிவிடை செய்தனர்.

அவர்கள் என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குப் பணிந்தனர்: வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக் குறுகி வந்தனர்.

வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்: தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.

ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவராக!

எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்: மக்களினங்களை எனக்குக் கீழிப்படுத்தியவரும் அவரே!

என் பகைவரிடமிருந்து என்னை விடுவித்தவரும் அவரே! ஆண்டவரே! என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக் கொடுமைப்படுத்தயவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்!

ஆகவே, பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்: உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்.

தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்: தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே.

அதிகாரம் 19

வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன: வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.

ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது: ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.

அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை: அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.

ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது: அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.

மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப் போல அது வருகின்றது: பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல் அது தன் பாதையில் ஓடுகின்றது.

அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது: அதன் பாதை மறுமுனை வரையிலும் செல்கின்றது: அதன் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது: அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது: எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை: அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை: அவை கண்களை ஒளிர்விக்கின்றன.

ஆண்டரைப் பற்றிய அச்சம் பயது: அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை: அவை முற்றிலும் நீதியானவை.

அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை: தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.

அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்: அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு.

தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும்.

மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்: அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்: பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.

என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்: என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.

அதிகாரம் 20

நெருக்கடி வேளையில் உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக! யாக்கோபின் கடவுளது பெயர் உம்மைப் பாதுகாப்பதாக!

பயகத்திலிருந்து அவர் உமக்கு உதவி அனுப்புவாராக! சீயோனிலிருந்து அவர் உமக்குத் துணை செய்வாராக!

உம் உணவுப் படையலை எல்லாம் அவர் நினைவில் கொள்வராக! உமது எரி பலியை ஏற்றுக்கொள்வாராக!

உமது மனம் விரும்புவதை அவர் உமக்குத் தந்தருள்வாராக! உம் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றுவாராக!

உமது வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக! நம் கடவுளின் பெயரால் வெற்றிக்கொடி நாட்டுவோமாக! உம் விண்ணப்பங்களையெல்லாம் ஆண்டவர் நிறைவேற்றுவாராக!

ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார். தமது பய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார். வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார் என்று இப்பொழுது நான் அறிந்து கொள்கிறேன்.

சிலர் தேர்ப்படையிலும், சிலர் குதிரைப் படையிலும் பெருமை கொள்கின்றனர்: நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரில் பெருமை கொள்கின்றோம்.

அவர்கள் தடுமாறி வீழ்ந்தார்கள்: நாமோ நிமிர்ந்து உறுதியாய் நிற்கின்றோம்.

ஆண்டவரே, அரசருக்கு வெற்றியருளும்: நாங்கள் கூப்பிடும் வேளையில் எங்களுக்குப் பதிலளியும்.

அதிகாரம் 21

ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்: நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!

அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்: அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை.

உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர்கொண்டீர்: அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர்.

அவர் உம்மிடம் வாழ்வுவேண்டி நின்றார்: நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர்.

நீர் அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று: மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர்,

உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்: உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர்.

ஏனெனில், அரசர் ஆண்டவரில் நம்பிக்கை வைக்கின்றார்: உன்னதரின் பேரன்பினால் அவர் அசைவுறாதிருப்பார்.

உமது கை உம் எதிரிகளையெல்லாம் தேடிப்பிடிக்கும்: உமது வலக்கை உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும்.

நீர் காட்சியளிக்கும் பொழுது, அவர்களை நெருப்புச்சூளை ஆக்குவீர்: ஆண்டவர் சினங்கொண்டு அவர்களை அழிப்பார்: நெருப்பு அவர்களை விழுங்கிவிடும்.

அவர்கள் தலைமுறையைப் பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்: அவர்கள் வழிமரபை மனு மக்களிடமிருந்து எடுத்துவிடுவீர்.

உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், சதித்திட்டம் தீட்டினாலும், அவர்களால் வெற்றிபெற இயலாது.

நீரோ அம்புகளை நாணேற்றி அவர்களது முகத்தில் எய்வீர்: அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.

ஆண்டவரே, உமது வலிமையோடு எழுந்து வாரும்: நாங்கள் உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவோம்.

அதிகாரம் 22

என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?

என் கடவுளே, நான் பகலில் மன்றாடுகின்றேன்: நீர் பதில் அளிப்பதில்லை, இரவிலும் மன்றாடுகின்றேன்: எனக்கு அமைதி கிடைப்பதில்லை.

நீரோ பயவராய் விளங்குகின்றீர்: இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய் வீற்றிருக்கின்றீர்:

எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்: அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர்.

உம்மை அவர்கள் வேண்டினார்கள்: விடுவிக்கப்பட்டார்கள்: உம்மை அவர்கள் நம்பினார்கள்: ஏமாற்றமடையவில்லை.

நானோ ஒரு புழு, மனிதனில்லை: மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்: மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.

என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்: உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,

“ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்: தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டுமஙு என்கின்றனர்.

என்னைக் கருப்பையினின்று வெளிக்கொணர்ந்தவர் நீரே: என் தாயிடம் பால்குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்துவரும் நீரே!

கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்: நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே!

என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்: ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது: மேலும், உதவி செய்வார் யாருமில்லை.

காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன: பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன.

அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்: இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள்.

நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்: என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின: என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று: என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று.

என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது: என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது: என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.

தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது: நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து கொண்டார்கள்: என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்.

என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்: அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.

என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்: என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.

நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்: என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.

வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்: இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்:

இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்: காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.

உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்: சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

ஆண்டவருக்கு அஞ்சுவோரே: அவரைப் புகழுங்கள்: யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்: இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள்.

ஏனெனில், எளியோரின் சிறுமையை அவர் அற்பமாக எண்ணவில்லை: அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை: தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை: தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில் அவர்களுக்குச் செவிசாய்த்தார்.

மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக! உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.

எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்: ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!

பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்: பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.

ஏனெனில் அரசு ஆண்டவருடையது: பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்.

மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்: புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர்.

வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்: இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.

அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்: இனி பிறக்கப்போகும் மக்களுக்கு இதை அவரே செய்தா+ என்பர்.

அதிகாரம் 23

ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை.

பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வா+: அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்: தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்:

மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்: உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்: என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்: எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்: நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

அதிகாரம் 24

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை: நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.

ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்: ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே.

ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?

கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்: பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்: வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர்,

இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்: தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.

அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே.

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்: தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்: மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.

மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்: இவரே போரில் வல்லவரான ஆண்டவர்.

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்: தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்: மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.

மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்: இவரே மாட்சிமிகு மன்னர்.

அதிகாரம் 25

ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.

என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்: நான் வெட்கமுற விடாதேயும்: என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும்.

உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை: காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்.

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்: உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.

உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்: ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்: உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்:

ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்: ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.

என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்: ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.

ஆண்டவர் நல்லவர்: நேர்மையுள்ளவர்: ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.

எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்: எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.

ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு , அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.

ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு என் குற்றத்தை மன்னித்தருளும்: ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்து கொள்ளும் வழியை அவர் கற்பிப்பார்.

அவர் நலமுடன் வாழ்வார்: அவருடைய மரபினர் நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.

ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்: அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்:

என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன: அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார்.

என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்: ஏனெனில், நான் துணையற்றவன்: துயருறுபவன்.

என் வேதனைகள் பெருகிவிட்டன: என் துன்பத்தினின்று என்னை விடுவித்தருளும்.

என் சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்: என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்.

என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும். அவர்கள் எத்துணைக் கொடுமையாய் என்னை வெறுக்கின்றனர்!

என் உயிரைக் காப்பாற்றும்: என்னை விடுவித்தருளும்: உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள என்னை வெட்கமுற விடாதேயும்.

வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்: ஏனெனில், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.

கடவுளே, இஸ்ரயேலரை அவர்கள் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும்.

அதிகாரம் 26

ஆண்டவரே, நான் குற்றமற்றவன் என்பதை அறிவியும்: ஏனெனில், என் நடத்தை நேர்மையானது: நான் ஆண்டவரை நம்பினேன்: நான் தடுமாறவில்லை.

ஆண்டவரே, என்னைச் சோதித்து ஆராய்ந்து பாரும்: என் மனத்தையும் உள்ளத்தையும் புடமிட்டுப் பாரும்:

ஏனெனில், உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது: உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன்.

பொய்யரின் நடுவில் நான் அமர்வதில்லை: வஞ் சகரோடு நான் சேர்வதில்லை.

தீயோரின் மன்றத்தை நான் வெறுக்கின்றேன்: பொல்லாரின் நடுவில் நான் அமர்வதில்லை.

மாசற்றவனாய் என் கைகளைக் கழுவுகின்றேன்: ஆண்டவரே, உம் பலிபீடத்தை வலம் வருவேன்.

உரத்த குரலில் உமக்கு நன்றிப்பா பாடுகின்றேன்: வியத்தகு உம் செயல்களை எல்லாம் எடுத்துரைக்கின்றேன்:

ஆண்டவரே, நீர் குடிகொள்ளும் இல்லத்தை நான் விரும்பிகின்றேன்: உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை நான் விரும்புகின்றேன்:

பாவிகளுக்குச் செய்வது போல் என் உயிரைப் பறித்துவிடாதீர்! கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல் என் வாழ்வை அழித்து விடாதீர்!

அவர்கள் கைகளில் தீச்செயல்கள்: அவர்கள் வலக்கையில் நிறையக் கையூட்டு.

நானோ மாசற்றவனாய் நடந்து கொள்கின்றேன்: என்னை மீட்டருளும்: எனக்கு இரங்கியருளும்.

என் கால்கள் சமமான தளத்தில் நிற்கின்றன: மாபெரும் சபையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.

அதிகாரம் 27

ஆண்டவரே என் ஒளி: அவரே என் மீட்பு: யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்: யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?

தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள்.

எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது: எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன்.

நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்: அதையே நான் நாடித் தேடுவேன்: ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்: அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.

ஏனெனில், கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்: தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்: குன்றின்மேல் என்னை பாதுகாப்பாய் வைப்பார்.

அப்பொழுது, என்னைச் சுற்றிலுமுள்ள என் எதிரிகளுக்கு எதிரில் நான் தலைநிமிரச் செய்வார்: அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன் பலிகளைச் செலுத்துவேன்: ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன்.

ஆண்டவரே, நான் மன்றாடும் போது என் குரலைக் கேட்டருளும் : என் மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.

புறப்படு, அவரது முகத்தை நாடு என்றது என் உள்ளம்: ஆண்டவரே உமது முகத்தையே நாடுவேன்.

உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்: நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்: நீரே எனக்குத் துணை: என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதேயும்: என்னைக் கைவிடாதிரும்.

என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்.

ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பித்தருளும்: என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச் செம்மையான பாதையில் நடத்தும்.

என் பகைவரின் விருப்பத்திற்கு என்னைக் கையளித்துவிடாதிரும்: ஏனெனில், பொய்ச்சாட்சிகளும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.

நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு: மன உறுதிகொள்: உன் உள்ளம் வலிமை பெறட்டும்: ஆண்டவருக்காகக் காத்திரு.

அதிகாரம் 28

ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்: என் கற்பாறையே, என் குரலைக் கேளாதவர்போல் இராதேயும்: நீர் மெளனமாய் இருப்பீராகில், படுகுழியில் இறங்குவோருள் நானும் ஒருவனாகிவிடுவேன்.

நான் உம்மிடம் உதவி வேண்டுகையில், உமது திருத்பயகத்தை நோக்கி நான் கையுயர்த்தி வேண்டுகையில், பதில் அளித்தருளும்.

பொல்லாரோடு என்னை ஒழித்து விடாதேயும்! தீயவரோடு என்னை அழித்து விடாதேயும்! அவர்கள் தமக்கு அடுத்திருப்பாரோடு பேசுவதோ சமாதானம்: அவர்களது உள்ளத்தில் உள்ளதோ நயவஞ்சகம்.

அவர்களின் செய்கைக்கேற்ப, அவர்களின் தீச்செயலுக்கேற்ப, அவர்களுக்குத் தண்டனை அளியும்: அவர்கள் கைகள் செய்ய தீவினைகளுக்கேற்ப, அவர்களுக்குத் தண்டனை வழங்கியருளும், அவர்களுக்குத் தகுந்த கைம்மாறு அளித்தருளும்.

ஏனெனில், ஆண்டவரின் செயல்களையோ அவர் கைகள் உருவாக்கியவற்றையோ அவர்கள் மதிக்கவில்லை: ஆகையால் அவர் அவர்களைத் தகர்த்தெறிவார்: ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்பார்.

ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், அவர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தார்.

ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்: அவரை என் உள்ளம் நம்புகின்றது: நான் உதவி பெற்றேன்: ஆகையால் என் உள்ளம் களிகூர்கின்றது: நான் இன்னிசை பாடி அவருக்கு நன்றி கூறுவேன்.

ஆண்டவர்தாமே தம் மக்களின் வலிமை: தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே பாதுகாப்பான அரண்.

ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும்: உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு ஆசி வழங்கும்: அவர்களுக்கு ஆயராக இருந்து என்றென்றும் அவர்களைத் தாங்கிக்கொள்ளும்.

அதிகாரம் 29

இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆம்! ஆண்டவருக்கே உரித்தாக்குங்கள்!

ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்: பய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள்.

ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது: மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றா+: ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்.

ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது: ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது.

ஆண்டவரின்குரல் கேதுருமரங்களை முறிக்கின்றது: ஆண்டவர் லெபனோன் கேதுரு மரங்களை முறித்துவிடுகின்றார்.

லெபனோனின் மலையைக் கன்றுக் குட்டியெனத் துள்ளச் செய்கின்றார்: சிரியோன் மலையைக் காட்டெருமைக் கன்றெனக் குதிக்கச் செய்கின்றார்.

ஆண்டவரின் குரல் மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது:

ஆண்டவரின் குரல் பாலைவனத்தை அதிரச் செய்கின்றது: ஆண்டவர் காதேசு பாலைவனத்தை நடுங்கச் செய்கின்றார்.

ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை முறித்து விடுகின்றது: காடுகளை வெறுமை ஆக்குகின்றது: அவரது கோவிலில் உள்ளஅனைவரும் இறைவனுக்கு மாட்சி என்று ஆர்ப்பரிக்கின்றனர்.

ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்: ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார்.

ஆண்டவர் தம் மக்களுக்கு ஆற்றல் அளிப்பாராக! ஆண்டவர் தம் மக்களுக்கு சமாதானம் அருள்வாராக! ஆண்டவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக!

அதிகாரம் 30

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைபக்கி விட்டீர்: என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.

என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் உதவி வேண்டினேன்: என்னை நீர் குணப்படுத்துவீர்.

ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்: சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்.

இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: பயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.

அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்: அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்: மாலையில் அழுகை: காலையிலோ ஆர்ப்பரிப்பு.

நான் வளமுடன் வாழந்தபோது, “என்னை ஒருபோதும் அசைக்க முடியாது“ என்றேன்.

ஆனால், ஆண்டவரே! உமது கருணையினால் மலையென உறுதியாக என்னை நிலைநிற்கச் செய்தீர்: உம் முகத்தை மறைத்துக் கொண்டீர்: நான் நிலைகலங்கிப் போனேன்.

ஆண்டவரே, உம்மைநோக்கி மன்றாடினேன்: என் தலைவரிடம் எனக்கு இரங்குமாறு வேண்டினேன்.

நான் சாவதால், படுகுழிக்குப் போவதால், உமக்கு என்ன பயன்? புழுதியால் உம்மைப் புகழ முடியுமா? உமது வாக்குப் பிறழாமையை அறிவிக்க இயலுமா?

ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்: என்மீது இரங்கும் : ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.

நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்: என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.

ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்: மெளனமாய் இராது: என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.

அதிகாரம் 31

ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்: நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்: உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்:

உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்: விரைவில் என்னை மீட்டருளும்: எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்: என்னைப் பாதுகாக்கும் வலிமை மிகு கோட்டையாய் இரும்.

ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே: உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.

அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்: ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.

உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்: வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுனீர்.

நானோ, பயனற்ற சிலைகளில் பற்றுடையோரை வெறுத்து, ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன்.

உமது பேரன்பில் நான் களிகூர்வேன்: அக்களிப்பேன்: என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீ+ என் இக்கட்டுகளையும் நீர் அறிந்துள்ளீர்.

என் எதிரியின் கையில் என்னை நீர் விட்டுவிடவில்லை: அகன்ற இடத்தில் காலு¡ன்றி நற்கவைத்தீர்.

ஆண்டவரே, எனக்கு இரங்கும்: ஏனெனில் நான் இக்கட்டான நிலையில் உள்ளேன்: துயரத்தால் என் கண்ணும் என் உயிரும் என் உடலும் தளர்ந்து போயின.

என் வாழ்க்கை வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது: ஆம், என் வாழ்நாள் புலம்புவதிலேயே கழிகின்றது: துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது: என் எலும்புகள் தளர்ந்து போகின்றன.

என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்: என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன்: என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்: என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர்.

இறந்தோர் போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்: உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன்.

பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது: எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது. அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்: என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள்.

ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்: நீரே என் கடவுள் என்று சொன்னேன்.

என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது: என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.

உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்: உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.

ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்: என்னை வெட்கமுற விடாதேயும்: பொல்லார் வெட்கிப்போவார்களாக! பாதாளத்தில் வாயடைத்துப் போவார்களாக!

பொய்சொல்லும் வாய் அடைபட்டுப் போவதாக! செருக்கும் பழிப்புரையும் கொண்டு, நேர்மையாளருக்கு எதிராக இறுமாப்புடன் பேசும் நா கட்டுண்டு கிடப்பதாக!

உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி!

மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்!

ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில், அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில் எனக்கு விளங்கச் செய்தார்.

நானோ, கலக்கமுற்ற நிலையில் “உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன்“ என்று சொல்லிக் கொண்டேன்: ஆனால், நான் உம்மிடம் உதவிக்காக வேண்டினபோது, நீர் என் கெஞ்சும் குரலுக்கு செவிசாய்த்தீர்.

ஆண்டவரின் அடியார்களே, அவரிடம் அன்பு கொள்ளுங்கள்: ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப் பாதுகாக்கின்றார்: ஆனால், இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர் முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார்.

ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்.

அதிகாரம் 32

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர்.

ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர்.

என் பாவத்தை அறிக்கையிடாதவரை, நாள்முழுவதும் நான் கதறி அழுததால், என் எலும்புகள் கழன்று போயின.

ஏனெனில், இரவும் பகலும் உம் கை எனக்கு எதிராக ஓங்கி நின்றது: கோடையின் வறட்சிபோல என் வலிமை வறண்டுபோயிற்று.

“என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்: என் தீச்செயலை நான் மறைத்ததில்லை: ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்“ என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.

ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்: பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது.

நீரே எனக்குப் புகலிடம்: இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்: உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர்.

நான் உனக்கு அறிவு புகட்டுவேன்: நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்: உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்.

கடிவாளம் பூட்டி வாரினால் இழுத்தாலன்றி உன்னைப் பின்தொடர்ந்து வராத குதிரை போன்றோ கோவேறு கழுதை போன்றோ அறிவிலியாய் இராதே!

பொல்லாருக்கு வரும் துன்பங்கள் பல: ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோரை அவரது பேரன்பு சூழந்து நிற்கும்.

நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்: நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள்.

அதிகாரம் 33

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்: நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.

யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்:

புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்: திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள்.

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.

அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின: அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின.

அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்துவைத்தார்: அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்துவைத்தார்.

அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக! உலகில் வாழ்வோர் அ¨வைரும் அவருக்கு அஞ்சிநடுங்குவராக!

அவர் சொல்லி உலகம் உண்டானது: அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது.

வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்: மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார்.

ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்: அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.

ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது: அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறபெற்றோர்.

வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்: மானிடர் அனைவரையும் காண்கின்றார்.

தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார்.

அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே!

தன் படைப் பெருக்கத்தால் வெற்றிபெரும் அரசருமில்லை: தன் வலிமையின் மிகுதியால் உயிர் தப்பிய வீரருமில்லை.

வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்: மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது.

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.

அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்: அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்: ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

அதிகாரம் 34

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்: அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்: எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.

என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்: அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்: அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்: எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்: அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

இந்த ஏழை கூவியழைத்தான்: ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்: அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.

ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் பதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.

ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்: அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்.

ஆண்டவரின் பயோரே, அவருக்கு அஞ்சுங்கள்: அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது.

வா¡£ர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.

வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா?

அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு: வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு!

தீமையைவிட்டு விலகு: நன்மையே செய்: நல்வாழ்வை நாடு: அதை அடைவதிலேயே கருத்தாயிரு.

ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன: அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.

ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது: அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.

நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்: அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.

உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்: நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.

நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல: அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.

அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்: அவற்றுள் ஒன்றும் முறிபடாது.

தீயோரைத் தீவினையே சாகடிக்கும்: நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்.

ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்: அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார்.

அதிகாரம் 35

ஆண்டவரே, எனக்கெதிராய் வழக்காடுவோருடன் வழக்காடும்: என்மீது போர் தொடுப்போரோடு போர் புரியும்.

கேடயமும் படைக்கலமும் எடுத்துவாரும்: எனக்குத் துணை செய்ய எழுந்து வாரும்.

என்னைத் துரத்திவரும் எதிரிகளைத் தடுத்து நிறுத்தும்: ஈட்டியையும் வேலையும் கையிலெடும்: நானே உன் மீட்பர் என்று என் உள்ளத்திற்குச் சொல்லும்.

என் உயிரைக் குடிக்கத் தேடுவோர்: மானக்கேடுற்று இழிவடையட்டும்: எனக்குத் தீங்கிழைக்க நினைப்போர், புறமுதுகிட்டு ஓடட்டும்.

ஆண்டவரின் பதர் அவர்களை விரட்டியடிக்க, காற்றில் பறக்கும் பதர்போல அவர்கள் சிதறட்டும்.

ஆண்டவரின் பதர் அவர்களைத் துரத்திட, அவர்கள் வழி இருளும் சறுக்கலும் ஆகட்டும்.

ஏனெனில், காரணமின்றி எனக்குக் கண்ணி வைத்தனர்: காரணமின்றி எனக்குக் குழிதோண்டினர்.

அவர்களுக்கு அழிவு எதிர்பாராமல் வரட்டும்: அவர்களுக்கு வைத்த கண்ணியில் அவர்களே சிக்கக்கொள்ளட்டும்: அவர்கள் தோண்டிய குழியில் அவர்களே விழட்டும்.

என் உள்ளம் ஆண்டவரை முன்னிட்டுக் களிகூரும்: அவர் அளிக்கும் மீட்பில் அகமகிழும்.

ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்? எளியோரை வலியோரின் கையினின்றும் எளியோரையும் வறியோரையும் கொள்ளையடிப்போர் கையினின்றும் விடுவிப்பவர் நீரே என்று என் எலும்புகள் எல்லாம் சொல்லும்.

பொய்ச்சான்று சொல்வோர் எனக்கெதிராய் எழுகின்றனர்: எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி என்னிடம் வினவுகின்றனர்.

நான் அவர்களுக்கு நன்மையே செய்தேன்: அவர்களோ, அதற்குப் பதிலாக எனக்குத் தீங்கிழைத்தனர். என் நெஞ்சைத் துயரில் ஆழத்தினர்.

நானோ, அவர்கள் நோயுற்றிருந்தபோது சாக்கு உடுத்திக் கொண்டேன்: நோன்பிருந்து என்னை வருத்திக் கொண்டேன்: முகம் குப்புற வீழ்ந்து மன்றாடினேன்.

நண்பர்போலும் உடன்பிறந்தோர் போலும் அவர்களுக்காய் மன்றாடினேன்: தாய்க்காகத் துக்கம் கொண்டாடுவோரைப்போல வாட்டமுற்றுத் துயரத்தோடு நடமாடினேன்.

நான் தடுக்கி விழுந்தபோது அவர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்: எனக்கெதிராய் ஒன்று சேர்ந்தனர்: யாதென்றும் அறியாத என்னைச் சின்னாபின்னமாக்கி ஓயாது பழித்துரைத்தனர்.

இறைப்பற்று இல்லாரோடு சேர்ந்து அவர்கள் என்னை இகழ்ந்தனர்: எள்ளி நகையாடினர்: என்னைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தனர்.

என் தலைவரே, இன்னும் எத்தனை நாள் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்?: என் உயிரை அவர்களது தாக்குதலினின்றும் என் ஆருயிரைச் சிங்கக் குட்டிகளினின்றும் மீட்டருளும்.

மாபெரும் சபையில் உமக்கு நன்றி செலுத்துவேன்: திரளான மக்களிடையே உம்மைப் புகழ்வேன்.

வஞ்சகரான என் எதிரிகள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதீர்: காரணமின்றி என்னை வெறுப்போர் கண்சாடை காட்டி இகழவிடாதீர்.

ஏனெனில், அவர்களது பேச்சு கமாதானத்தைப் பற்றியதன்று: நாட்டில் அமைதியை நாடுவோர்க்கு எதிராக அவர்கள் வஞ்சகமாய்ச் சூழ்ச்சி செய்கின்றனர்.

எனக்கெதிராக அவர்கள் வாய் திறந்து, ஆ! ஆ! நாங்களே எங்கள் கண்ணால் கண்டோம் என்கின்றனர்.

ஆண்டவரே, நீர் இதைக் கண்டும் மெளனமாய் இராதீர்: என் தலைவரே, என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதீர்.

என் கடவுளே, கிளர்ந்தெழும்! என் தலைவரே, விழித்தெழுந்து என் வழக்குக்கு நீதி கிடைக்கச் செய்யும்.

என் கடவுளாகிய ஆண்டவரே, உமது நீதிக்கேற்ப என் நேர்மையை நிலைநாட்டும்! அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதேயும்!

அவர்கள் தங்கள் உள்ளத்தில் ஆம், நாம் விரும்பினது இதுவே எனச் சொல்லாதபடி பாரும்! அவனை விழுங்கிவிட்டோம் எனப் பேசிக்கொள்ளாதபடி பாரும் !

எனக்கு நேரிட்ட தீங்கைப் பார்த்து மகிழ்ச்சி அடைவோர் எல்லாரும் கலக்கமுறட்டும்! என்னைவிடத் தம்மைச் சிறந்தோராய்க் கருதுவோர்க்கு வெட்கமும் மானக்கேடும் மேலாடை ஆகட்டும்!

என் நேர்மை நிலைநாட்டப்படுவதை விரும்புவோர் ஆரவாரத்துடன் அக்களிக்கட்டும்: ஆண்டவர் எத்துணைப் பெரியவர்! அவர் தம் அடியாரின் நல்வாழ்வைக் காண விரும்புவோர் என்று எப்பொழுதும் சொல்லட்டும்.

அப்பொழுது, என் நா உம் நீதியை எடுத்துரைத்து, நாள்முழுதும் உம் புகழ் பாடும்.

அதிகாரம் 36

பொல்லாரின் உள்ளத்தில் தீமையின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது: அவர்களின் மனக்கண்களில் இறையச்சம் இல்லை.

ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என, இறுமாந்து தமக்குத்தாமே பெருமை பாராட்டிக்கொள்கின்றனர்.

அவர்கள் வாயின் சொற்கள் தீமையும் வஞ்சகமும் நிறைந்தவை: நல்லுணர்வோடு நற்செயல் ஆற்றுவதை அவர்கள் அடியோடு விட்டுவிட்டனர்.

படுக்கையில் கிடக்கையில் அவர்கள் சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர், தகாத வழியை உறுதியாகப் பற்றிக் கொள்கின்றனர்: தீமையைப் புறம்பே தள்ளுவதில்லை.

ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு: முகில்களைத் தொடுகின்றது உமது வாக்குப் பிறழாமை.

ஆண்டவரே, உமது நீதி இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது: உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை: மனிதரையும் விலங்கையும் காப்பவர் நீரே:

கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர்.

உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்: உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர்.

ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது: உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம்.

உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும், நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும் தொடர்ந்து வழங்கியருளும்!

செருக்குற்றோரின் கால் என்னை நசுக்க விடாதேயும்! பொல்லாரின் கை என்னைப் பிடிக்க விடாதேயும்!

தீங்கிழைப்போர் அதோ அங்கே குப்புற வீழ்ந்து கிடக்கின்றனர், அவர்கள் நசுக்கப்பட்டனர்: அவர்களால் எழவே இயலாது.

அதிகாரம் 37

தீமை செய்வோரைக் கண்டு மனம் புழுங்காதே: பொல்லாங்கு செய்வாரைக் கண்டு பொறாமைப்படாதே:

ஏனெனில், அவர்கள் புல்லைப் போல் விரைவில் உலர்ந்து போவர்: பசும் பூண்டைப்போல் வாடிப்போவர்.

ஆண்டவரை நம்பு: நலமானதைச் செய்: நாட்டிலேயே குடியிரு: நம்பத் தக்கவராய் வாழ்.

ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்: உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.

உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு: அவரையே நம்பியிரு: அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.

உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார்.

ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு: தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.

வெஞ்சினம் கொள்ளாதே: வெகுண்டெழுவதை விட்டுவிடு: எரிச்சலடையாதே: அதனால் தீமைதான் விளையும்.

தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்: ஆண்டவருக்காகக் காத்திருப்போரே நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்.

இன்னும் சிறிதுகாலம்தான்: பிறகு பொல்லார் இரார்: அவர்கள் இருந்த இடத்தில் நீ அவர்களைத் தேடினால் அவர்கள் அங்கே இரார்.

எளியோர் நிலத்தை உடைமையாகப் பெறுவர்: அவர்கள் வளமிகு வாழ்க்கையில் இன்பம் காண்பர்.

பொல்லார் நேர்மையாளருக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்: அவர்களைப் பார்த்துப் பல்லை நெரிக்கின்றனர்.

என் தலைவர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றார்: அவர்களது முடிவுகாலம் நெருங்குவதை அவர் காண்கின்றார்.

எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும், நேர்மையான வழியில் நடப்போரைக் கொல்லவும் பொல்லார் வாளை உருவுகின்றனர்: வில்லை நாணேற்றுகின்றனர்.

ஆனால், அவர்கள் வாள் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்: அவர்கள் வில்லும் முறிக்கப்படும்.

பொல்லாரின் திரளான செல்வத்தைவிட நல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது.

பொல்லாரின் தோள்வலிமை முறிக்கப்படும்: ஆனால் நேர்மையாளரை ஆண்டவர் தாங்கிடுவார்.

சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்: அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும்.

கேடுகாலத்தில் அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை: பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள்.

ஆனால், பொல்லார் அழிவுக்கு ஆளாவர்: ஆண்டவரின் எதிரிகள் கொழுத்த பலியாடுகளுக்கு ஒப்பாவர். அவர்கள் எரியுண்டு புகையென மறைவர்.

பொல்லார் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்: நேர்மையாளரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர்.

இறைவனின் ஆசி பெற்றோர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்: அவரால் சபிக்கப்பட்டோர் வேரறுக்கப்படுவர்.

தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார்.

அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்: ஆண்டவர் அவர்களைத் தம் கையால் பக்கி நிறுத்துவார்.

இளைஞனாய் இருந்திருக்கிறேன்: இதோ! முதியவன் ஆகிவிட்டேன்: ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை நான் கண்டதில்லை: அவர்களுடைய மரபினர் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.

நேர்மையாளர் எப்போதும் மனமிரங்கிக் கடன் கொடுப்பர்: அவர்களின் மரபினர் இறையாசி பெற்றவராய் இருப்பர்.

தீமையினின்று விலகு: நல்லது செய்: எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.

ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்: தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை: அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர்.

நேர்மையாளர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்: அதிலேயே என்றென்றும் குடியிருப்பர்.

நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்: அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.

கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது: அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை.

பொல்லார் நேர்மையாளரை வேவு பார்த்துக் கொண்டிருப்பர்: அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர்.

ஆனால், ஆண்டவர் நேர்மையாளரை அவர்களின் கையில் ஒப்புவிக்கமாட்டார்: நீதி விசாரணையின்போது அவர்களைத் தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளாக்கமாட்டார்.

ஆண்டவருக்காகக் காத்திரு: அவர்தம் வழியைப் பின்பற்று: அப்பொழுது நீ நிலத்தை உடைமையாக்கிக்கொள்ளும்படி அவர் உன்னை உயர்த்துவார். பொல்லார் வேரறுக்கப்படுவதை நீ காண்பாய்.

வளமான நிலத்தில் தழைத்தோங்கும் மரம்போல் கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார் செழித்திருக்கக் கண்டேன்.

ஆனால், அவர்கள் மறைந்துவிட்டார்கள்: அந்தோ! அவர்கள் அங்கில்லை: தேடிப் பார்த்தேன்: அவர்களைக் காணவில்லை.

சான்றோரைப் பார்: நேர்மையானவரைக் கவனி: அமைதியையே நாடும் அம்மனிதருக்கு வழிமரபினர் இருப்பர்.

அநீதியாளர் அனைவரும் ஒன்றாக அழிக்கப்படுவர்: பொல்லாரின் வழிமரபினர் வேரறுக்கப்படுவர்.

நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.

ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்: பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்: அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார்.

அதிகாரம் 38

ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும் : என் மீது சீற்றம்கொண்டு என்னைத் தண்டியாதேயும்:

ஏனெனில், உம் அம்புகள் என்னுள் பாய்ந்திருக்கின்றன: உமது கை என்னை அழுத்திக் கொண்டிருக்கின்றது.

நீர் கடுஞ்சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை: என் பாவத்தால் என் எலும்புகளில் வலுவே இல்லை.

என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன: தாங்கவொண்ணாச் சுமைபோல அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன.

என் புண்கள் அழுகி நாற்றமெடுக்கின்றன: என் மதிகேடுதான் இதற்கெல்லாம் காரணம்.

நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்: நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன்.

என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று: என் உடலில் சற்றேனும் நலம் இல்லை.

நான் வலுவற்றுப் போனேன்: முற்றிலும் நொறுங்கிப்போனேன்: என் உள்ளக் கொதிப்பினால் கதறுகின்றேன்.

என் தலைவரே, என் பெருமூச்செல்லாம் உமக்குத் தெரியும்: என் வேதனைக் குரல் உமக்கு மறைவாயில்லை.

என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது: என் வலிமை என்னைவிட்டு அகன்றது: என் கண்களும்கூட ஒளி இழந்தன.

என் நண்பர்களும் தோழர்களும் நான் படும் வாதை கண்டு விலகி நிற்கின்றனர்: என் உறவினரும் என்னைவிட்டு ஒதுங்கி நிற்கின்றனர்.

என் உயிரைப் பறிக்கத்தேடுவோர் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்: எனக்குத் தீங்கிழைக்கத் துணிந்தோர் என் அழிவைப் பற்றிப் பேசுகின்றனர்: எப்போதும் எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்கின்றனர்.

நானோ செவிடர்போல் காது கேளாமலும் ஊமைபோல் வாய் திறவாமலும் இருக்கின்றேன்.

உண்மையாகவே, நான் செவிப்புலனற்ற மனிதர்போலும் மறுப்புரை கூறாத நாவினர் போலும் ஆனேன்:

ஏனெனில் ஆண்டவரே, நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்: என் தலைவராகிய கடவுளே, செவிசாய்த்தருளும்.

“அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க விடாதேயும்: என் கால் தடுமாறினால் அவர்கள் பெருமை கொள்வர்“ என்று சொன்னேன்.

நான் தடுமாறி விழும் நிலையில் இருக்கின்றேன்: நான் எப்போதும் வேதனையில் உள்ளேன்.

என் குற்றத்தை நான் அறிக்கையிடுகின்றேன்: என் பாவத்தின் பொருட்டு நான் அஞ்சுகின்றேன்.

காரணமின்றி என்னைப் பகைப்போர் வலுவாய் உள்ளனர்: வீணாக என்னை வெறுப்போர் பலராய் உள்ளனர்:

நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமை செய்கின்றனர்: நன்மையே நாடும் என்னைப் பகைக்கின்றனர்:

ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்: என் கடவுளே! என்னைவிட்டு அகன்றுவிடாதேயும்.

என் தலைவரே! மீட்பரே! எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்.

அதிகாரம் 39

˜நான் என் நாவினால் பாவம் செய்யாதவண்ணம் என் நடைமுறைகளைக் காத்துக்கொள்வேன்: பொல்லார் என்முன் நிற்கும் வரையில், என் வாய்க்குப் பூட்டுப் போட்டுக் காத்துக் கொள்வேன்“ என்று சொன்னேன்.

நான் ஊமையைப்போல் பேசாது இருந்தேன்: நலமானதைக்கூடப் பேசாமல் அமைதியாய் இருந்தேன்: என் வேதனையோ பெருகிற்று.

என் உள்ளம் என்னுள் எரியத் தொடங்கிற்று: நான் சிந்தனையில் ஆழ்ந்தபோது நெருப்பு மூண்டது: அப்பொழுது என் நா பேசியதாவது:

“ஆண்டவரே! என் முடிவு பற்றியும் என் வாழ்நாளின் அளவு பற்றியும் எனக்கு அறிவுறுத்தும்: அப்போது, நான் எத்துணை நிலையற்றவன் என உணர்ந்து கொள்வேன்.

என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்: என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை: உண்மையில், மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)

அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்: அவர்கள் வருந்தி உழைப்பது வீண்: அவர்கள் சேமித்து வைக்கின்றனர்: ஆனால் அதை அனுபவித்து யாரென அறியார்.

என் தலைவரே, நான் இப்போது எதை எதிர்பார்க்கட்டும்? நான் உம்மையே நம்பியிருக்கிறேன்.

என் குற்றங்கள் அனைத்தினின்றும் என்னை விடுவித்தருளும்: மதிகேடரின் பழிப்புரைக்கு என்னை ஆளாக்காதேயும்.

நான் ஊமைபோல் ஆனேன்: வாய் திறவேன்: ஏனெனில், எனக்கு இந்நிலைமையை வருவித்தவர் நீரே.

நீர் தந்த வாதையை என்னிடமிருந்து நீக்கிவிடும்: உமது கை அடித்த அடிகளால் நான் அழிவுக்கு ஆளானேன்.

குற்றத்தின் பொருட்டு நீர் மனிதரைத் தண்டிக்கும்போது பூச்சி அரிப்பதுபோல் அவர்களுக்கு விருப்பமானவற்றை நீர் அழிக்கின்றீர்: உண்மையில் மானிடர் அனைவரும் நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)

ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்: என்னுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்: என் கண்ணீரைக் கண்டும் மெளனமாய் இராதேயும்: ஏனெனில், உமது முன்னிலையில் நான் ஓர் அன்னியன்: என் மூதாதையர் போன்று நான் ஒரு நாடோடி!

நான் பிரிந்து மறையும் முன்பு சற்றே மகிழ்ச்சி அடையும்படி, உம் கொடிய பார்வையை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளும்.

அதிகாரம் 40

நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்: அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.

அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார். சேறு நிறைந்த பள்ளத்தினின்று பக்கியெடுத்தார்: கற்பாறையின்மேல் நான் காலு¡ன்றி நிற்கச் செய்தார்: என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.

புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்: பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்:

ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்: அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்: பொய்யானவற்றைச் சாராதவர்.

ஆண்டவரே! எண்ணிறந்தவற்றை நீர் எமக்கெனச் செய்துள்ளீர்: உமக்கு நிகரானவர் எவரும் இலர்: என் கடவுளே! உம் அருஞ்செயல்களும் திட்டங்களும் எங்களுக்காகவே: அவற்றை நான் எடுத்துரைக்க விரும்புவேனாகில் அவை எண்ணிலடங்கா.

பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை: எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை: ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்.

எனவே, “இதோ வருகின்றேன்: என்னைக் குறித்துத் திருமல் சுருளில் எழுதப்பட்டுள்ளது:

என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்: உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது“ என்றேன் நான்.

என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்: நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை: ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.

உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை: உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப்பற்றியும் கூறியிருக்கின்றேன்: உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.

ஆண்டவரே: உமது பேரிரக்கத்தை எனக்குக் காட்ட மறுக்கதேயும்: உமது பேரன்பும் உண்மையும் தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக!

ஏனெனில், எண்ணிறிந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன: என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையை மறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை: என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது.

ஆண்டவரே, என்னை விடுவிக்க மனமிசைந்தருளும்: ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.

என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் அவமானமும் குழப்பமும் அடையட்டும்! என் கேட்டில் மகிழ்வுறுவோர் தலைகுனிந்து பின்னடையட்டும்!

என்னைப் பார்த்து ஆ!ஆ! என்போர் தாம் அடையும் தோல்வியினால் அதிர்ச்சியுறட்டும்!

உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், ஆண்டவர் எத்துணைப் பெரியவர்! என்று எப்போதும் சொல்லட்டும்!

நானோ ஏழை: எளியவன்: என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்: நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.

அதிகாரம் 41

எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்: துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.

ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்: நெடுங்காலம் வாழவைப்பார்: நாட்டில் பேறுபெற்றவராய் விளறங்கச் செய்வார்: எதிரிகளின் விருப்பத்திற்கு அரைக் கையளிக்க மாட்டார்.

படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில் ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்: நோய் நீங்கிப் படுக்கையினின்று அவர் எழும்பும்படிச் செய்வார்.

“ஆண்டவரே, எனக்கு இரங்கும்: என்னைக் குணப்படுத்தும்: உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்“ என்று மன்றாடினேன்.

என் எதிரிகள் என்னைப்பற்றித் தீயது பேசி, “அவன் எப்போது சாவான்? அவன் பெயர் எப்போது ஒழியும்“ என்கின்றனர்.

ஒருவன் என்னைப் பார்க்கவந்தால், நயவஞ்சகமாகப் பேசுகின்றான்: என்னைப்பற்றிய தவறான செய்திகளை சேகரித்துக்கொண்டு, வெளியே போய் அவற்றைப் பரப்புகின்றான்.

என்னை வெறுப்போர் அனைவரும் ஒன்றுகூடி எனக்கு எதிராய்க் காதோடு காதாய்ப் பேசுகின்றனர். எனக்குத் தீங்கிழைக்கத் திட் டமிடுகின்றனர்.

˜தீயது ஒன்று அவனை உறுதியாய்ப் பற்றிக்கொண்டது: படுக்கையில் கிடக்கின்ற அவன் இனி எழவே மாட்டான்“ என்று சொல்கின்றனர்.

என் உற்ற நணபன் , நான் பெரிதும் நம்பினவன், என் உணவை உண்டவன், எனக்கு இரண்டகமாகத் தம் குதிகாலைத் பக்குகின்றான்.

ஆண்டவரே! என் மீது இரங்கி, நான் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும்படி பக்கிவிடும்.

என் எதிரி என்னை வென்ற ஆர்ப்பரிக்கப் போவதில்லை: இதனால், நீர் என்னில் மகிழ்வுறுகின்றீர் என்பதை அறிந்து கொள்கின்றேன்.

நானோ நேர்மையில் உறுதியாய் இருக்கின்றேன்: நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்: உமது முன்னிலையில் என்னை என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர்.

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் புகழப் பெறுவராக! ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவராக! ஆமென்! ஆமென்!

அதிகாரம் 42

கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.

என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது: எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?

இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று: “உன் கடவுள் எங்கே?“ என்று என்னிடம் தீயோர் கேட்கின்றனர்.

மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே! இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது, என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது.

என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு: என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

என் நெஞ்சம் மிகவும் தளர்ந்துள்ளது: ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும், எர்மோன், மீசார் மலைப்பகுதிகளிலும் உம்மை நான் நினைத்துக்கொண்டேன்.

உம் அருவிகள் இடியென முழங்கிட ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது: உம் சிற்றலைகளும் பேரலைகளும் என்மீது புரண்டோகின்றன.

நாள்தோறும் ஆண்டவர் தமது பேரன்பைப் பொழிகின்றார்: இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்: எனக்கு வாழ்வளிக்கும் இறைவனை நோக்கி மன்றாடுவேன்.

என் கற்பாறையாகிய இறைவனிடம் “ஏன் என்னை மறந்தீர்: எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்“ என்கின்றேன்.

“உன் கடவுள் எங்கே?“ என்று என் பகைவர் நாள்தோறும் என்னைக் கேட்பது, என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல என்னைத் தாக்குகின்றது.

என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு. என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன். என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

அதிகாரம் 43

கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்: இறைப்பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்: வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும்.

ஏனெனில் கடவுளே! நீரே என் ஆற்றல்: ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துயருடன் நடமாடவேண்டும்?

உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்: அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும்.

அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்: என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்: கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன்.

என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு: என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

அதிகாரம் 44

கடவுளே, எங்கள் காதுகளால் நாங்களே கேட்டிருக்கின்றோம்: எங்கள் மூதாதையர் அவர்கள் காலத்திலும் அதற்குமுன்பும் நீர் என்னென்ன செய்துள்ளீர் என்று எங்களுக்கு எடுத்துரைத்தனர்.

உமது கையால் வேற்றினத்தாரை விரட்டியடித்து, எந்தையரை நிலைநாட்டினீர்: மக்களினங்களை நொறுக்கிவிட்டு எந்தையரைச் செழிக்கச் செய்தீர்.

அவர்கள் தங்கள் வாளால் நாட்டை உடைமையாக்கிக் கொள்ளவில்லை: அவர்கள் தங்கள் புயத்தால் வெற்றி பெறவில்லை. நீர் அவர்களில் மகிழ்ச்சியுற்றதால் உமது வலக்கையும் உமது புயமும் உமது முகத்தின் ஒளியுமே அவர்களுக்கு வெற்றியளித்தன.

நீரே என் அரசர்: நீரே என் கடவுள்! யாக்கோபுக்கு வெற்றி அளிப்பவர் நீரே.

எங்கள் பகைவர்களை உமது துணையால் தாக்கி வீழ்த்துவோம்: எங்களுக்கு எதிராய் எழுந்தோரை உமது பெயரால் மிதித்துப் போடுவோம்.

என் வில்லை நான் நம்புவதில்லை: என் வாள் என்னைக் காப்பாற்றுவதுமில்லை.

நீரே பகைவரிடமிருந்து எங்களைக் காப்பாற்றினீர்: எங்களை வெறுப்போரை வெட்கமுறச் செய்தீர்.

எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப் பெருமை கொண்டோம். என்றென்றும் உமது பெயருக்க நன்றி செலுத்திவந்தோம். (சேலா)

ஆயினும், இப்போது நீர் எங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்: இழிவுபடுத்திவிட்டீ+ எங்கள் படைகளுடன் நீர் செல்லாதிருக்கின்றீர்.

எங்கள் பகைவருக்கு நாங்கள் புறங்காட்டி ஓடும்படிச் செய்தீர். எங்களைப் பகைப்போர் எங்களைக் கொள்ளையிட்டனர்.

உணவுக்காக வெட்டப்படும் ஆடுகளைப்போல் எங்களை ஆக்கிவிட்டீர். வேற்றினத்தாரிடையே எங்களை சிதறி ஓடச் செய்தீர்.

நீர் உம் மக்களை அற்ப விலைக்கு விற்றுவிட்டீர்: அவர்கள் மதிப்பை மிகவும் குறைத்துவிட்டீர்.

எங்களை அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்: எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர்.

வேற்றினத்தாரிடையே எங்களை ஒரு பழிச்சொல்லாக்கினீர்: ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைத்து நகைக்கின்றனர்.

எனக்குள்ள மானக்கேடு நாள்முழுதும் என்கண்முன் நிற்கின்றது: அவமானம் என் முகத்தை மூடியுள்ளது.

என்னைப் பழித்துத் பற்றுவோரின் குரலை நான் கேட்கும்போதும், என் எதிரிகளையும், என்னைப் பழிவாங்கத் தேடுவோரையும் நான் பார்க்கும்போதும் வெட்கிப்போகின்றேன்.

நாங்கள் உம்மை மறக்காவிடினும், உமது உடன்படிக்கையை மீறாவிடினும், இவையெல்லாம் எங்களுக்கு நேரிட்டன.

எங்கள் உள்ளம் பின்வாங்கவில்லை: எங்கள் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.

ஆயினும், நீர் எங்களைக் கொடிய பாம்புகள் உள்ள இடத்தில் நொறுங்கும்படி விட்டுவிட்டீர்: சாவின் இருள் எங்களைக் கவ்விக்கொண்டது.

நாங்கள் எங்கள் கடவுளின் பெயரை மறந்துவிட்டு, வேற்றுத் தெய்வத்தைக் கைகூப்பி வணங்கியிருந்தோமானால்,

கடவுளாம் நீர் அதைக் கண்டுபிடித்திருப்பீர் அல்லவா? ஏனெனில், உள்ளத்தில் புதைந்திருப்பவற்றை நீர் அறிகின்றீர்.

உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகின்றோம்: வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளெனக் கருதப்படுகின்றோம்.

என் தலைவா! கிளர்ந்தெழும், ஏன் உறங்குகின்றீர்? விழித்தெழும்: எங்களை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாதேயும்.

நீர் உமது முகத்தை ஏன் மறைத்துக் கொள்கின்றீர்? எங்கள் சிறுமையையும் துன்பத்தையும் ஏன் மறந்து விடுகின்றீர்?

நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்: எங்கள் உடல் மண்ணோடு ஒட்டிக்கொண்டுள்ளது.

எழுந்துவாரும்: எங்களுக்குத் துணை புரியும்: உமது பேரன்பை முன்னிட்டு எங்களை மீட்டருளும்.

அதிகாரம் 45

மன்னரைக் குறித்து யான் கவிதை புனைகின்றபோழ்து, இனியதொரு செய்தியால் என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது: திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென என் நாவும் ஆகிடுமே!

மானிட மைந்தருள் பேரழகுப் பெருமகன் நீர்: உம் இதழினின்று அருள்வெள்ளம் பாய்ந்துவரும்: கடவுள் உமக்கு என்றென்றும் ஆசி வழங்குகின்றார்.

வீரமிகு மன்னா! மாட்சியொடு உம் மாண்பும் துலங்கிடவே, உம் இடையினிலே வீரவாள் தாங்கி வாரும்!

உண்மையைக் காத்திட, நீதியை நிலைநாட்டிட, மாண்புடன் வெற்றிவாகை சூடி வாரும்! உம் வலக்கை அச்சமிகு செயல்களை ஆற்றுவதாக!

உம்முடைய கணைகள் கூரியன: மன்னர்தம் மாற்றாரின் நெஞ்சினிலே பாய்வன: மக்களெல்லாம் உம் காலடியில் வீழ்ந்திடுவர்.

இறைவனே, என்றுமுளது உமது அரியணை: உமது ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்.

நீதியே உமது விருப்பம்: அநீதி உமக்கு வெறுப்பு: எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள், மகிழ்ச்சியின் நெய்யால் உமக்குத் திருப்பொழிவு செய்து, உம் அரசத் தோழரினும் மேலாய் உம்மை உயர்த்தினார்.

நறுமணத் துகள், அகிலொடு இலவங்கத்தின் மணங்கமழும் உம் ஆடையெலாம்: தந்தம் இழைத்த மாளிகைதனிலே யாழிசை உம்மை மகிழ்விக்கும்.

அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்: ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!

கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக்கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு: பிறந்தகம் மறந்துவிடு.

உனது எழிலில் நாட்டங்கொள்வார் மன்னர்: உன் தலைவர் அவரே: அவரைப் பணிந்திடு!

தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்: செல்வமிகு சீமான்கள் உன்னருள் வேண்டி நிற்பர்.

அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள்.

பலவண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்: கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள்.

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்.

உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்: அவர்களை நீர் உலகுக்கெலாம் இளவரசர் ஆக்கிடுவீர்.

என் பாடல் வழிவழியாய் உம் பெயரை நிலைக்கச் செய்யும்: ஆகையால், எல்லா இனத்தாரும் உமை வாழ்த்திடுவர்.

அதிகாரம் 46

கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்: இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே.

ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும்,

கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. (சேலா)

ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.

அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்: அது ஒருபோதும் நிலைகுலையாது: வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு.

வேற்றினத்தார் கலக்கமுற்றனர்: அரசுகள் ஆட்டம் கண்டன: கடவுளின் குரல் முழங்கிற்று: பூவுலகம் கரைந்தது.

படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்: யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். (சேலா)

வா¡£ர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பா¡£ர்!

உலகின் கடையெல்லைவரை போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்: வில்லை ஒடிக்கின்றார்: ஈட்டியை முறிக்கின்றார்: தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார்.

அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்: வேற்றினத்தாரிடையே நான் உயர்ந்திருப்பேன்: பூவுலகில் நானே மாட்சியுடன் விளங்குவேன்.

படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்: யாக்கோபின் கடவுளே நமக்கு அரண்.

அதிகாரம் 47

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்: ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.

ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்: உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே:

வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்: அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார்.

நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்: அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். (சேலா)

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.

பாடுங்கள்: கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்: பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்: அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.

கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்: அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார்.

மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்: ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்: கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.

அதிகாரம் 48

ஆண்டவர் மாண்பு மிக்கவர்: நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.

தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியால் இலங்குகின்றது: மாவேந்தரின் நகரும் அதுவே.

அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.

இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்: அணிவகுத்து ஒன்றாக வந்தனர்:

அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்: திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர்.

அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது: பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர்.

தர்சீசுக் கப்பல்களைக் கீழைக் காற்றினால் நீர் தகர்த்தெறிகின்றீர்.

கேள்விப்பட்டவாறே நேரில் யாம் கண்டோம்: படைகளின் ஆண்டவரது நகரில், ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்: கடவுள் அந்நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார். (சேலா)

கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம்.

கடவுளே! உமது பெயரைப் போலவே உமது புகழும் பூவுலகின் கடை எல்லைவரை எட்டுகின்றது: உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது.

சீயோன் மலை மகிழ்வதாக! யூதாவின் நகர்கள் உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு அக்களிப்பனவாக!

சீயோனை வலம் வாருங்கள்: அதைச்சுற்றி நடைபோடுங்கள்: அதன் காவல் மாடங்களை எண்ணிக்கையிடுங்கள்.

அதன் மதில்களைக் கவனித்துப் பாருங்கள்: அதன் கோட்டைகளைச் சுற்றிப் பாருங்கள்: அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு இதை உங்களால் விவரிக்க இயலும்.

“இத்தகைய கடவுளே என்றென்றும் நம் கடவுள்: அவரே நம்மை இறுதிவரை வழி நடத்துவார்.“

அதிகாரம் 49

மக்களினங்களே! அனைவரும் இதைக் கேளுங்கள்: மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள்.

தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே, அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள்.

என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும்: என் மனம் விவேகமானவற்றை ஆழ்ந்து சிந்திக்கும்.

நீதிமொழிக்குச் செவிசாய்ப்பதில் நான் கருத்தாய் உள்ளேன்: யாழிசைத்து அதன் புதிரை விடுவிப்பேன்.

துன்பக்காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக்கொண்டு கொடுமைப்படுத்தும் வஞசகர்க்கு நான் அஞ்சுவானேன்?

தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப்பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர்.

உண்மையில், தம்மைதாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது: தம் உயிரை மீட்க எதையும் கடவளுக்குத் தர இயலாது.

மனித உயிரின் ஈட்டுத்தொகை மிகப் பெரியது: எவராலும் அதனைச் செலுத்த இயலாது.

ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திடமுடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா?

ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவதுபோல, ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம் அன்றோ! அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர்.

கல்லறைகளே! அவர்களுக்கு நிலையான வீடுகள்! அவையே எல்லாத் தலைமுறைக்கும் அவர்கள் குடியிருப்பு! அவர்களுக்குத் தங்கள் பெயரில் நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை.

ஒருவர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது: அவர் விலங்குகளைப் போலவே மாண்டழிவார்.

தம்மையே மதியீனமாக நம்பியிருப்போரின் முடிவு இதுவே: தம் சொத்திலேயே மகிழ்ச்சி கொள்வோரின் கதி இதுவே. (சேலா)

பலியாடுகளைப் போலவே அவர்களும் சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்: சாவே அவர்களின் மேய்ப்பன்: அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்: அப்பொழுது அவர்களது உருவம் மாய்ந்து போகும்: பாதாளமே அவர்களது குடியிருப்பு.

ஆனால், கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி: பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து என்னைத் பக்கி நிறுத்துவார். (சேலா)

சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே!

ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை: அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை.

உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும், “நீங்கள் நன்மையையே நாடினீர்கள்“ என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும்,

அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்: ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை.

மனிதர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது: அவர்கள் விலங்குகளைப் போலவே மாண்டழிவர்.

அதிகாரம் 50

தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்: கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார்.

எழிலின் நிறைவாம் சீயோனின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள்.

நம் கடவுள் வருகின்றார்: மெளனமாய் இருக்கமாட்டார்: அவருக்கு முன்னே, சுட்டெரிக்கும் சுழல் நெருப்பு! அவரைச் சுற்றிலும், கடுமையான புயற்காற்று!

உயர் வானங்களையும் பூவுலகையும் அவர் அழைத்து, தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றார்.

“பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்று கூட்டுங்கள்.“

வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்: ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! (சேலா)

என் மக்களே, கேளுங்கள்: நான் பேசுகின்றேன்: இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்றுகூறப் போகின்றேன்: கடவுளாகிய நானே உன் இறைவன்:

நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை: உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.

உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ, நான் ஏற்றுக் கொள்வதில்லை.

ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்: ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகளும் என்னுடையவை.

குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன்: சமவெளியில் நடமாடும் யாவும் என்னுடையவை.

எனக்குப் பசியெடுத்தால் நான் உங்களைக் கேட்கப் போவதில்லை: ஏனெனில், உலகும் அதில் நிறைந்துள்ள யாவும் என்னுடையவையே.

எருதுகளின் இறைச்சியை நான் உண்பேனோ? ஆட்டுக் கிடாய்களின் குருதியைக் குடிப்பேனோ?

கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்: உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.

துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்: உங்களைக் காத்திடுவேன்: அப்போது, நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள்.

ஆனால், கடவுள் பொல்லாரைப் பார்த்து இவ்வாறு கூறுகின்றார்: என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?

நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்: என் கட்டளைகளைத் பக்கியெறிந்து விடுகின்றீர்கள்.

திருடர்களைக் கண்டால் அவர்களோடு விருப்புடன் சேர்ந்து கொள்கின்றீர்கள்: கற்பு நெறி தவறியவர்களோடும் உங்களுக்கு உறவு உண்டு.

உங்கள் வாய் உரைப்பது தீமையே: உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே.

உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்: உங்கள் தாயின் மக்களைப்பற்றி அவபறு பேசுகின்றீர்கள்.

இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மெளனமாய் இருந்தேன்: நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்: ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்: உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.

கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்: இல்லையேல், நான் உங்களைப் பீறிப் போடுவேன்: உங்களை விடுவிக்க யாரும் இரார்.

நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர்.

அதிகாரம் 51

கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்: உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.

என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்: என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் பய்மைப்படுத்தியருளும்:

ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்: என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது.

உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்: உம் பார்வையில் தீயது செய்தேன்: எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்: உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.

இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்: பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்.

இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே: மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.

ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்: நான் பய்மையாவேன்: என்னைக் கழுவியருளும்: உறைபனியிலும் வெண்மையாவேன்.

மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்: நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!

என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்: என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்.

கடவுளே! பயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்: உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.

உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்: உமது பய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.

உம் மீட்பின் மகிழ்ச்சயை மீண்டும் எனக்கு அளித்தருளும்: தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.

அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்: பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.

கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்: அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.

என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்: அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.

ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது: நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.

கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே: கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.

சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்: எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!

அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்: மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும்.

அதிகாரம் 52

வலியோனே! தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கின்றாய்? இறைவனின் பேரன்பு எந்நாளும் உள்ளது.

கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்: உனது நா தீட்டிய கத்தி போன்றது: வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ!

நன்மை செய்வதைவிட தீமை செய்வதையே விரும்புகின்றாய்: உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதையே விரும்புகின்றாய். (சேலா)

நரம்பில்லா நாவுடையோனே! நீ விரும்பும் சொற்கள் அனைத்தும் கேடு விளைவிப்பனவே!

ஆகவே! கடவுள் உன்னை என்றும் மீளாதபடி நொறுக்கிவிடுவார்: உன்னைத் பக்கி எறிவார்: கூடாரத்தினின்று உன்னைப் பிடுங்கி எறிவார்: உயிர் வாழ்வோரின் உலகினின்று உன்னை வேரோடு களைந்துவிடுவார். (சேலா)

நேர்மையாளர் அதன் கடுமையைக் கண்டு திகிலடைவர்: மேலும், உன்னை எள்ளி நகையாடிக் கூறுவர்:

“இதோ! பாருங்கள்: இவன் தான் கடவுளைத் தன் புகலிடமாய்க் கொள்ளாதவன்: தன் செல்வப் பெருக்கில் நம்பிக்கை வைத்தவன்: அழிவுச் செயலையே புகலிடமாய்க் கொண்டவன்!“

நானோ, கடவுளின் இல்லத்தில் பச்சை ஒலிவமரக்கன்றுபோல் இருக்கின்றேன்: கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்திருக்கின்றேன்.

கடவுளே! நீர் இவ்வாறு எனக்குச் செய்துள்ளதால் உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்: உம் அன்பரின் முன்னிலையில் உம் பெயர்மீது நம்பிக்கை கொள்வேன்: இதுவே நன்று.

அதிகாரம் 53

கடவுள் இல்லை என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்: அவர்களுள் சிலர் கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்: நல்லது செய்வார் யாரும் இல்லை.

கடவுள் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்: மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர் எவராவது உண்டோ என்று பார்க்கின்றார்.

எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்: ஒருமிக்கக் கெட்டு போயினர்: நல்லது செய்வார் யாரும் இல்லை: ஒருவர் கூட இல்லை.

“தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப் பார்க்கின்றார்களே!“

எனவே அவர்கள் இதுவரை கண்டிராத முறையில் பேரச்சத்தால் நடுநடுங்குவர்: இறைமக்களை ஒடுக்கியோரின் எலும்புகளைக் கடவுள் சிதறடிப்பார்: கடவுள் அவர்களைக் கைவிட்டதால் அவர்கள் மானக்கேடு அடைவர்.

சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! கடவுள் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!

அதிகாரம் 54

கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்: உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும்.

கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்: என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும்.

ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்: கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்: அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. (சேலா)

இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்:

என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையை அவர்கள் மேலேயே அவர் திருப்பிவிடுவாராக! “உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்ப அவர்களை அழித்தொழியும்!

தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்: ஆண்டவரே, உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்: இதுவே நன்று.“

ஏனெனில், அவர் என்னை எல்லா இன்னல்களினின்றும் விடுவித்துள்ளார்: என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாராக் கண்டுள்ளேன்.

அதிகாரம் 55

கடவுளே! என் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும்: நான் முறையிடும் வேளையில் உம்மை மறைத்துக் கொள்ளாதேயும்.

என் விண்ணப்பத்தைக் கேட்டு மறுமொழி அருளும்: என் கவலைகள் என் மன அமைதியைக் குலைத்துவிட்டன.

என் எதிரியின் கூச்சலாலும், பொல்லாரின் ஒடுக்குதலாலும் நடுங்குகின்றேன்: ஏனெனில், அவர்கள் எனக்கு இடையூறு பல செய்கின்றனர்: சினமுற்று என்னைப் பகைக்கின்றனர்.

கடுந்துயரம் என் உள்ளத்தைப் பிளக்கின்றது: சாவின் திகில் என்னைக் கவ்விக்கொண்டது.

அச்சமும் நடுக்கமும் என்னை ஆட்கொண்டன: திகில் என்னைக் கவ்விக்கொண்டது.

நான் சொல்கின்றேன்: “புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்? நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே!

இதோ! நெடுந்தொலை சென்று, பாலை நிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பேனே! (சேலா)

பெருங்காற்றினின்றும் புயலினின்றும் தப்பிக்கப் புகலிடம் தேட விரைந்திருப்பேனே!

என் தலைவரே! அவர்களின் திட்டங்களைக் குலைத்துவிடும்: அவர்களது பேச்சில் குழப்பத்தை உண்டாக்கும்: ஏனெனில், நகரில் வன்முறையையும் கலகத்தையும் காண்கின்றேன்“.

இரவும் பகலும் அவர்கள் அதன் மதில்கள் மேல் ஏறி அதைச் சுற்றி வருகின்றனர்: கேடும் கொடுமையும் அதில் நிறைந்திருக்கின்றன.

அதன் நடுவே இருப்பது அழிவு: அதன் தெருக்களில் பிரியாதிருப்பன கொடுமையும் வஞ்சகமுமே!

என்னை இழித்துரைக்கின்றவன் என் எதிரியல்ல: அப்படியிருந்தால் பொறுத்துக் கொள்வேன்: எனக்கெதிராயத் தற்பெருமை கொள்பவன் எனக்குப் பகைவன் அல்ல: அப்படியிருந்தால், அவனிடமிருந்து என்னை மறைத்துக் கொள்வேன்.

ஆனால், அவன் வேறு யாரும் அல்ல: என் தோழனாகிய நீயே: என் நண்பனும் என்னோடு நெருங்கிப் பழகினவனுமாகிய நீதான்.

நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்: கடவுளின் இல்லத்தில் பெருங்கூட்டத்தினிடையே நடமாடினோம்:

என் எதிரிகளுக்குத் திடீரெனச் சாவு வரட்டும்: அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கட்டும்: ஏனெனில் அவர்கள் தங்குமிடத்தில் அவர்கள் நடுவிலேயே தீமை புகுந்து விட்டது.

நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன்: ஆண்டவரும் என்னை மீட்டருள்வார்.

காலை, நண்பகல், மாலை வேளைகளில் நான் முறையிட்டுப் புலம்புகின்றேன்: அவர் என் குரலைக் கேட்டருள்வார்.

அணிவகுத்து என்னை எதிர்த்து வந்தோர் மிகப் பலர்: என்னோடு போரிட்டோர் கையினின்று அவர் என்னை விடுவித்துப் பாதுகாத்தார்.

தொன்றுதொட்டு அரியணையில் வீற்றிருக்கும் கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார்: அவர்களைத் தாழ்த்திவிடுவார்: (சேலா) ஏனெனில், அவர்கள் தம் நெறிமுறையை மாற்றிக் கொள்ளவில்லை: கடவுளுக்கு அஞ்சுவதும் இல்லை.

தன்னோடு நட்புறவில் இருந்தவர்களை எதிர்த்து அந்த நண்பன் தன் கையை ஓங்கினான்: தன் உடன்படிக்கையையும் மீறினான்.

அவன் பேச்சு வெண்ணெயிலும் மிருதுவானது: அவன் உள்ளத்திலோ போர்வெறி: அவன் சொற்கள் எண்ணெயிலும் மென்மையானவை: அவையோ உருவிய வாள்கள்.

ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு: அவர் உனக்கு ஆதரவளிப்பார்: அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்.

கடவுளே, நீர் அவர்களைப் படுகுழியில் விழச்செய்யும்: கொலைவெறியரும் வஞ்சகரும் தம் ஆயுள் காலத்தில் பாதிகூடத் தாண்டமாட்டார்: ஆனால், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.

அதிகாரம் 56

கடவுளே, எனக்கு இரங்கியருளும்: ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர்: அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்.

என் பகைவர் நாள்தோறும் கொடுமைப்படுத்துகின்றனர்: மிகப் பலர் என்னை ஆணவத்துடன் எதிர்த்துப் போரிடுவோர்.

அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில், உம்மையே நான் நம்பியிருப்பேன்.

கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்: கடவுளையே நம்பியிருக்கின்றேன்: எதற்கும் அஞ்சேன்: அற்ப மனிதர் எனக்கென்ன செய்ய முடியும்?

என் எதிரிகள் எந்நேரமும் என் சொற்களைப் புரட்டுகின்றனர்: அவர்கள் திட்டங்கள் எல்லாம் என்னைத் துன்புறுத்தவே.

அவர்கள் ஒன்றுகூடிப் பதுங்கி இருக்கின்றனர்: என் உயிரைப் போக்குவதற்காக என் காலடிச் சுவடுகளைக் கவனித்துக்கொண்டே இருக்கின்றனர்.

அவர்கள் தீமைகளைச் செய்துவிட்டுத் தப்பமுடியுமோ? கடவுளே, சினம் கொண்டெழுந்து இந்த மக்களினங்களைக் கீழே வீழ்த்தும்.

என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்: உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்: இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?

நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்: அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன்.

கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்: ஆண்டவனின் வாக்கை நான் புகழ்கின்றேன்.

கடவுளையே நம்பியிருக்கின்றேன்: எதற்கும் அஞ்சேன்: மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்?

கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை: உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்.

ஏனெனில், சாவினின்று என் உயிரை நீர் மீட்டருளினீர்: வாழ்வோரின் ஒளியில், கடவுளின் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு என் அடிகள் சறுக்காதபடி காத்தீர் அன்றோ!

அதிகாரம் 57

கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்: நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்: இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.

உன்னதரான கடவுளை நோக்கி, எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன்.

வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்: என்னை நசுக்குவோரை இழிவுப்படுத்துவார். (சேலா) கடவுள் தம் பேரன்பையும் வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார்.

மனிதரை வெறியோடு விழுங்கும் சிங்கங்கள் போன்றவரிடையே நான் கிடக்கின்றேன்: அவர்களின் பற்கள் ஈட்டியும் அம்பும் போன்றவை: அவர்களின் நா கூர்மையான வாள் போன்றது.

கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!

நான் நடக்கும் வழியில் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்: நான் மனம் ஒடிந்து போனேன்: என் பாதையில் குழி வெட்டினர்: அவர்களே அதில் விழுந்தனர்.

என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது: கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது: நான் பாடுவேன்: உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

என் நெஞ்சே, விழித்தெழு! வீணையே, யாழே, விழித்தெழுங்கள்: வைகறையை நான் விழித்தெழச் செய்வேன்.

என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்: எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப்பிறழாமை முகில்களைத் தொடுகின்றது!

கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக: பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக.

அதிகாரம் 58

ஆட்சியாளரே! நீவிர் வழங்கும் தீர்ப்பு உண்மையில் நீதியானதா? மாந்தர்க்கு நேர்மையுடன் தீர்ப்பு வழங்குகின்றீரா?

இல்லை: அநீதியானவற்றைச் செய்வதற்கே நீங்கள் திட்டமிடுகின்றீர்கள்: நீங்கள் நாட்டில் நடக்கும் அநீதிக்கு உடந்தையாய் இருக்கின்றீர்கள்.

பொல்லார் கருவிலிருந்தே நெறிதவறிச் செல்கின்றனர்: பிறப்பிலிருந்தே பொய் பேசித் திரிகின்றனர்.

அவர்களது நச்சுத்தன்மை நாகத்தின் நஞ்சு போன்றது: செவிட்டு விரியன் தன் காதை அடைத்துக்கொள்வதுபோல, அவர்களும் தங்களைச் செவிடாக்கிக் கொள்கின்றனர்.

பாம்பாட்டியின் மகுடியோசை அவ்விரியனின் காதில் விழாது: அவன் திறமையுடன் ஊதினாலும் அதற்குக் கேளாது.

கடவுளே, அவர்கள் வாயின் பற்களை நொறுக்கிவிடும்: ஆண்டவரே, அந்த இளஞ்சிங்கங்களின் கடைவாய்ப் பற்களை உடைத்துவிடும்.

காட்டாற்று நீர்போல அவர்கள் மறைந்தொழியட்டும்: அவர்கள் தம் வில்லை நாணேற்றியவுடன் அம்புகள் முறிந்து போகட்டும்!

ஊர்ந்து ஊர்ந்து தேய்ந்து போகும் நத்தைபோல் ஆகட்டும்: பிறந்தும் கதிரொளி காணாத பெண்வயிற்றுப் பிண்டம்போல் ஆகட்டும்.

முள் நெருப்பினால் உங்கள் பானை சூடேறுமுன்னே, பச்சையானதையும் வெந்து கொண்டிருப்பதையும் சுழற்காற்றினால் அவர் அடித்துக் கொண்டு போவார்.

தீயோர் தண்டிக்கப்படுவதை நேர்மையாளர் காணும்போது மகிழ்வர்: அவர்கள் தம் பாதங்களைப் பொல்லாரின் இரத்தத்தில் கழுவுவர்.

அப்போது மானிடர்: “உண்மையிலேயே நேர்மையாளருக்குக் கைம்மாறு உண்டு: மெய்யாகவே பூவுலகில் நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர் இருக்கின்றார்“ என்று சொல்வர்.

அதிகாரம் 59

என் கடவுளே! என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்: என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பளித்தருளும்.

தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்: கொலைவெறியரிடமிருந்து என்னைக் காத்தருளும்.

ஏனெனில், அவர்கள் என்னைக் கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்: கொடியவர் என்னைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர்: நானோ, ஆண்டவரே! குற்றம் ஏதும் இழைக்கவில்லை: பாவம் ஏதும் செய்யவில்லை:

என்னிடம் குற்றமில்லாதிருந்தும், அவர்கள் ஓடிவந்து என்னைத் தாக்க முனைகின்றனர்: என்னை எதிர்கொள்ளுமாறு எழுந்தருளும்: என்னைக் கண்ணோக்கும்,

படைகளின் கடவுளாகிய ஆண்டவரே! நீர் இஸ்ரயேலின் கடவுள்! பிற இனத்தார் அனைவரையும் தண்டிக்க எழுந்துவாரும்: தீங்கிழைக்கும் அந்தத் துரோகிகளுள் எவருக்கும் இரக்கம் காட்டாதேயும். (சேலா)

அவர்கள் மாலைவரை காத்திருந்து, அதன்பின் நாய்களைப் போலக் குரைத்து கொண்டு நகரினுள் சுற்றித் திரிகின்றனர்.

அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்: அவர்களின் நாவின் சொற்கள் வாள் போன்றவை: “நாங்கள் பேசுவதை கேட்கிறவர் யார்?“ என்கின்றார்கள்.

ஆனால், ஆண்டவரே, நீர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றீர்: பிற இனத்தார் எல்லாரையும் பார்த்து நீர் ஏளனம் செய்கின்றீர்:

நீரே என் ஆற்றல்! உமது உதவியை எதிர்பார்க்கின்றேன்: ஏனெனில், கடவுளே! நீரே என் அரண்.

என் கடவுள் தமது பேரன்பால் என்னை எதிர்கொள்ள வருவார்: கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் காணும்படி செய்வார்.

அவர்களை ஒரேயடியாய்க் கொன்று விடாதேயும்: இல்லையேல், உம் வல்லமையை என் மக்கள் மறந்துவிடுவர்: என் தலைவரே! எங்கள் கேடயமே! அவர்களை உமது வலிமையால் நிலைகுலையச் செய்யும்.

அவர்களின் வாய் பேசுவதும் நா உரைப்பதும் பாவமே: அவர்கள் தற்பெருமை அவர்களைச் சிக்கவைப்பதாக! அவர்கள் சபிக்கின்றனர்: அடுக்கடுக்காய்ப் பொய் பேசுகின்றனர்.

ஆகவே, வெகுண்டெழுந்து அவர்களை அழித்துவிடும்: இனி இராதபடி அவர்களை ஒழித்துவிடும்: அப்பொழுது, கடவுள் யாக்கோபின் மரபினரை ஆள்கின்றார் எனவும் அவரது அரசு உலகின் எல்லைவரைக்கும் உள்ளது எனவும் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். (சேலா)

அவர்கள் மாலைவரை காத்திருந்து, அதன்பின், நாய்களைப்போல குரைத்துக் கொண்டு நகரினுள் சுற்றித்திரிகின்றார்கள்.

அவர்கள் இரைதேடி அலைகின்றனர்: வயிறு நிறையாவிடில் முறுமுறுக்கின்றனர்.

நானோ உமது ஆற்றலைப் புகழ்ந்து பாடுவேன்: காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்ப்பரித்துப் பாடுவேன்: ஏனெனில், நெருக்கடியான வேளையில் நீர் எனக்கு அரணும் அடைக்கலமுமாய் இருந்தீர்.

என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்: ஏனெனில், கடவுள் எனக்கு அரண்: கடவுளே எனக்குப் பேரன்பு!

அதிகாரம் 60

கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிடடீர்: எங்களை நொறுக்கிவிடடீர்: எங்கள்மீது சீற்றம் கொண்டீர்: இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும்.

நிலத்தை நீர் அதிரச் செய்தீர்: அதில் பிளவு உண்டாகச் செய்தீர்: அதன் வெடிப்புகளைச் சீர்ப்படுத்தும், அது ஆட்டம் கண்டுள்ளது:

உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்: மதியை மயக்கும் மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.

உமக்கு அஞ்சி நடப்போர் அம்பினின்று தப்பித்துக்கொள்ளுமாறு அவர்களுக்கெனக் கொடி ஒன்றை ஏற்றிவைத்தீர். (சேலா)

5உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு, உமது வலக்கரத்தால் எங்களுக்குத் துணை செய்யும்: எங்கள் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!

கடவுள் தமது பயகத்தினின்று இவ்வாறு உரைத்தார்: வெற்றிக் களிப்பிடையே செக்கேமைப் பங்கிடுவேன்: சுக்கோத்துப் பள்ளத்தாக்கை அளந்து கொடுப்பேன்.

கிலயாது என்னுடையது: மனாசேயும் என்னுடையதே: எப்ராயிம் என் தலைச்சீரா: யூதா என் செங்கோல்!

மோவாபு எனக்குப் பாதம்கழுவும் பாத்திரம்: ஏதோமின்மீது என் மிதியடியை எறிவேன்: பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்.

அரண்சூழ் நகரினுள் என்னை இட்டுச் செல்பவர் யார்? ஏதோம்வரை என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?

கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு வீட்டீர் அன்றோ! கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ!

எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்: மனிதர் தரும் உதவியோ வீண்.

கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்: அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார்.

அதிகாரம் 61

கடவுளே! என் கூக்குரலைக் கேளும்: என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும்.

பூவுலகின் கடைமுனையினின்று உம்மைக் கூப்பிடுகின்றேன்: என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது: உயரமான குன்றுக்கு என்னை அழைத்துச் செல்லும்.

ஏனெனில் நீரே என் புகலிடம்: எதிரியின்முன் வலிமையான கோட்டை.

நான் உமது கூடாரத்தில் எந்நேரமும் தங்கியிருப்பேன்: உமது இறக்கைகளின் பாதுகாப்பில் தஞ்சம் புகுவேன். (சேலா)

ஏனெனில், கடவுளே! நான் செய்த பொருத்தனைகளை நீர் அறிவீர்: உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரிய உடைமையை எனக்குத் தந்தீர்.

அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்: அவரது ஆயுள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்!

கடவுள் முன்னிலையில் அவா என்றென்றும் வீற்றிருப்பாராக! பேரன்போடும் உண்மையோடும் அவரைக் காத்தருளும்!

உமது பெயரை என்றென்றும் புகழ்ந்து பாடுவேன்: நாள்தோறும் என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.

அதிகாரம் 62

கடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்: எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே:

உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே: என் கோட்டையும் அவரே: எனவே நான் சிறிதும் அசைவுறேன்.

ஒருவரைக் கொல்லவேண்டுமென்று நீங்கள் அனைவரும் எவ்வளவு காலம் வெறியுடன் தாக்குவீர்? நீங்கள் எல்லாரும் இடிந்த மதிலுக்கும் சிதைந்த வேலிக்கும் ஒப்பாவீர்.

அவர் இருக்கும் உயர்நிலையிலிருந்து அவரைத் தள்ளிவிடத் திட்டமிடுகின்றனர்: பொய் சொல்வதில் இன்பம் காண்கின்றனர்: அவர்களது வாயில் ஆசிமொழி: அவர்களது உள்ளத்திலோ சாபமொழி. (சேலா)

நெஞ்சே கடவுளுக்காக மெளனமாய்க் காத்திரு: ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே:

உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன்.

என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன: என் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமும் கடவுளே.

மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்: அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்: கடவுளே நமக்கு அடைக்கலம். (சேலா)

மெய்யாகவே, மானிடர் நீர்க்குமிழி போன்றவர்: மனிதர் வெறும் மாயை: துலாவில் வைத்து நிறுத்தால், அவர்கள் மேலே போகின்றார்கள்: எல்லாரையும் சேர்த்தாலும் நீர்க்குமிழியை விட எடை குறைகின்றார்கள்.

பிறரைக் கசக்கிப் பிழிவதில் நம்பிக்கை வைக்காதீர்: கொள்ளையடிப்பதில் குறியாய் இராதீர்: செல்வம் பெருகும்போது, உள்ளத்தை அதற்குப் பறிகொடுக்காதீர்.

“ஆற்றல் கடவுளுக்கே உரியது!“ என்று அவர் ஒருமுறை மொழிய, நான் இருமுறை கேட்டேன்.

“என் தலைவரே! உண்மைப் பேரன்பு உமக்கே உரியது!“ ஏனெனில், ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் செயல்களுக்குத் தக்க கைம்மாறு நீரே அளிக்கின்றீர்.

அதிகாரம் 63

கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்: என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது: நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது.

உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் பயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.

ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது: என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.

என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்: கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.

அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்: என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும்.

நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்: இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.

ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்: உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.

நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்: உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது.

என்னை அழித்துவிடத் தேடுவோர் பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர்.

அவர்கள் வாளுக்கு இரையாவர்: நரிகளுக்கு விருந்தாவர்.

அரசரோ கடவுளை நினைத்துக் களிகூர்வார்: அவர்மேல் ஆணையிட்டுக் கூறுவோர் அனைவரும் பெருமிதம் கொள்வர்: பொய் சொல்வோரின் வாய் அடைக்கப்படும்.

அதிகாரம் 64

கடவுளே! என் விண்ணப்பக் குரலைக் கேட்டருளும்: என் எதிரியினால் விளையும் அச்சத்தினின்று என் உயிரைக் காத்தருளும்.

பொல்லாரின் சூழ்ச்சியினின்றும் தீயோரின் திட்டத்தினின்றும் என்னை மறைத்துக் காத்திடும்.

அவர்கள் தங்கள் நாவை வாளைப் போலக் கூர்மையாக்குகின்றார்கள்: நஞ்சுள்ள சொற்களை அம்புபோல் எய்கின்றார்கள்:

மறைவிடங்களில் இருந்துகொண்டு மாசற்றோரைக் காயப்படுத்துகின்றார்கள்: அச்சமின்றி அவர்களைத் திடீரெனத் தாக்குகின்றார்கள்:

தீங்கு இழைப்பதில் உறுதியாய் இருக்கின்றார்கள்: “நம்மை யார் பார்க்க முடியும்“ என்று சொல்லி மறைவாகக் கண்ணிகளை வைப்பதற்குச் சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்:

நேர்மையற்ற செயல்களைச் செய்யத் திட்டமிடுகின்றார்கள்: எங்கள் திறமையில் தந்திரமான சூழ்ச்சியை உருவாக்கியுள்ளோம் என்கின்றார்கள்: மனிதரின் உள்ளமும் உள்நோக்கமும் மிக ஆழமானவை.

ஆனால், கடவுள் அவர்கள்மேல் அம்புகளை எய்ய, அவர்கள் உடனே காயமுற்று வீழ்வார்கள்.

தங்களது நாவினாலேயே அவர்கள் அழிவார்கள்: அவர்களைப் பார்ப்போர் அனைவரும் எள்ளி நகைப்பார்கள்.

அப்பொழுது எல்லா மனிதரும் அச்சம் கொள்வர்: கடவுளின் செயல்களை எடுத்துரைப்பர்: அவரது அருஞ்செயலைப்பற்றிச் சிந்திப்பர்.

நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்: அவரிடம் அடைக்கலம் புகுவர்: நேரிய உள்ளத்தோர் அவரைப் போற்றிடுவர்.

அதிகாரம் 65

கடவுளே, சீயோனில் உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது! உமக்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் சால்புடையது!

மன்றாட்டுக்களைக் கேட்கின்றவரே! மானிடர் யாவரும் உம்மிடம் வருவர்.

எங்கள் பாவங்களின் பளுவை எங்களால் தாங்கமுடியவில்லை: ஆனால் நீர் எங்கள் குற்றப் பழிகளைப் போக்குகின்றீர்.

நீர் தேர்ந்தெடுத்து உம்மருகில் வைத்துக்கொள்ளும் மனிதர் பேறு பெற்றோர்: உம் கோவிலின் முற்றங்களில் அவர்கள் உறைந்திடுவர்: உமது இல்லத்தில், உமது திருமிகு கோவிலில் கிடைக்கும் நன்மைகளால் நாங்கள் நிறைவு பெறுவோம்.

அஞ்சத்தகு செயல்களை நீர் புரிகின்றீர்: எங்கள் மீட்பின் கடவுளே! உமது நீதியின் பொருட்டு எங்கள் மன்றாட்டுக்கு மறுமொழி பகர்கின்றீர்: உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அனைவருக்கும் தொலையிலுள்ள தீவுகளில் உள்ளோருக்கும் நம்பிக்கை நீரே!

வல்லமையை இடைக்கச்சையாகக் கொண்ட நீர் உமது ஆற்றலால் மலைகளை உறுதிப்படுத்துகின்றீர்.

கடல்களின் இரைச்சலையும் அவற்றின் அலைகளின் ஓசையையும் மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றீர்!

உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் உம் அருஞ் செயல்களைக் கண்டு அஞ்சுவர்: கிழக்கு முதல் மேற்குவரை உள்ளோரைக் களிகூரச் செய்கின்றீர்!

மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது: அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது: நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர்.

அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்: அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்: அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர்.

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்: உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.

பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன: குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன.

புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன: பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன. அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை!

அதிகாரம் 66

அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!

அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்: அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.

கடவுளை நோக்கி “உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை: உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக உம் எதிரிகள் உமது முன்னலையில் கூனிக் குறுகுவர்:

அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்: அவர்கள் உம் புகழ் பாடிடுவர்: உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்“ என்று சொல்லுங்கள். (சேலா)

வா¡£ர்! கடவுளின் செயல்களைப் பா¡£ர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்: ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.

அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக் கவனித்து வருகின்றன: கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த் தலைபக்காதிருப்பதாக! (சேலா)

மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்: அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள்.

நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே: அவர் நம் கால்களை இடற விடவில்லை.

கடவுளே! எங்களை ஆய்ந்து, வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்:

கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்: பளுவான சுமைகளை எங்கள் முதுகின் மீது சுமத்தினீர்.

மனிதரை எங்கள் தலைகள்மீது நடந்துபோகச் செய்தீர்: நெருப்பிலும் தண்ணீரிலும் அகப்பட்டிருந்தோம்: ஆயினும், நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தீர்.

எரிபலியுடன் உமது இல்லத்தினுள் செல்வேன்: என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.

அவற்றை என் துன்ப வேளையில் என் நா உரைத்தது: என் வாய் உறுதி செய்தது.

கொழுத்த கன்றுகளை, செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு, உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்: காளைகளையும் வெள்ளாட்டுக் கிடாய்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வா¡£ர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.

அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது: அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.

என் உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்திருந்தேனாகில், என் தலைவர் எனக்குச் செவிசாய்த்திருக்கமாட்டார்.

ஆனால், உண்மையில் கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்: என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார்.

என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி!

அதிகாரம் 67

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! (சேலா)

அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்: பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். (சேலா)

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்: உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். (சேலா)

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!

நானிலம் தன் பலனை ஈந்தது: கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.

கடவுள் நமக்க ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!

அதிகாரம் 68

கடவுள் எழுந்தருள்வார்: அவருடைய எதிரிகள் சிதறடிக்கப்படுவார்கள்: அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்:

புகை அடித்துச் செல்லப்படுவது போல அடித்துச் செல்லப்படுவர்: நெருப்புமுன் மெழுகு உருகுவது போலக் கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர்.

நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்: கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்: மகிழ்ந்து கொண்டாடுவர்.

கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரை போற்றுங்கள்: மேகங்கள்மீது வருகிறவரை வாழ்த்திப் பாடுங்கள்: “ஆண்டவர்“ என்பது அவர்தம் பெயராம்: அவர்முன் களிகூருங்கள்.

திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், பயகத்தில் உறையும் கடவுள்!

தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்: சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்: ஆனால், அவருக்கு எதிராகக் கிளம்புவோர் வறண்ட நிலத்தில் வாழ்வர்.

கடவுளே! நீர் உம்முடைய மக்கள் முன்சென்று பாலைவெளியில் நடைபோட்டுச் செல்கையில், (சேலா)

சீனாயின் கடவுள் வருகையில், பூவுலகு அதிர்ந்தது: இஸ்ரயேலின் கடவுள் வருகையில் வானம் மழையைப் பொழிந்தது.

கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்: வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர்.

உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன: கடவுளே! நீர் நல்லவர்: எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர்.

என் தலைவர் செய்தி அறிவித்தார்: அச்செய்தியைப் பரப்பினோர் கூட்டமோ பெரிது:

“படைகளையுடைய அரசர்கள் ஓடினார்கள் புறங்காட்டி ஓடினார்கள்“! வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் கொள்ளைப்பொருள்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

நீங்கள் தொழுவங்களின் நடுவில் படுத்துக்கொண்டீர்களோ? வெள்ளியால் மூடிய புறாச் சிறகுகளும், பசும்பொன்னால் மூடிய அதன் இறகுகளும் அவர்களுக்குக் கிடைத்ததே!

எல்லாம் வல்லவர் அங்கே அரசர்களைச் சிதறடித்தபோது, சல்மோன் மலையில் பனிமழை பெய்தது.

ஓ மாபெரும் மலையே! பாசானின் மலையே! ஓ கொடுமுடி பல கொண்ட மலையே! பாசானின் மலையே!

ஓ பல முடி கொண்ட மலைத் தொடரே! கடவுள் தம் இல்லமாகத் தேர்ந்துகொண்ட இந்த மலையை நீ ஏன் பொறாமையோடு பார்க்கின்றாய்? ஆம், இதிலேதான் ஆண்டவர் என்றென்றும் தங்கி இருப்பார்.

வலிமைமிகு தேர்கள் ஆயிரமாயிரம், பல்லாயிரம் கொண்ட என் தலைவர் சீனாய் மலையிலிருந்து தம் பயகத்தில் எழுந்தருள வருகின்றார்.

உயர்ந்த மலைக்கு நீர் ஏறிச் சென்றீர்: சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றீர்: மனிதரிடமிருந்தும் எதிர்த்துக் கிளம்பியவரிடமிருந்தும் பரிசுகள் பெற்றுக் கொண்டீர்: கடவுளாகிய ஆண்டவர் அங்கேதான் தங்கியிருப்பார்.

ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்: இறைவனே நம் மீட்பு. (சேலா)

நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்: நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர்.

அவர் தம் எதிரிகளின் தலையை உடைப்பார்: தம் தீய வழிகளில் துணிந்து நடப்போரின் மணிமுடியை நொறுக்குவார்.

என் தலைவர் “பாசானிலிருந்து அவர்களை அழைத்து வருவேன்: ஆழ்கடலிலிருந்து அழைத்து வருவேன்.

அப்பொழுது, உன் கால்களை இரத்தத்தில் தோய்ப்பாய்: உன் நாய்கள் எதிரிகளிடம் தமக்குரிய பங்கைச் சுவைக்கும்“ என்று சொன்னார்.

கடவுளே! நீர் பவனி செல்வதை, என் கடவுளும் அரசருமானவர் பயகத்தில் பவனி செல்வதை, அனைவரும் கண்டனர்.

முன்னால் பாடகரும் பின்னால் இசைக்கருவிகளை வாசிப்போரும், நடுவில் தம்புரு வாசிக்கும் பெண்களும் சென்றனர்.

மாபெரும் சபை நடுவில் கடவுளைப் போற்றுங்கள்: இஸ்ரயேலர் கூட்டத்தில் ஆண்டவரை வாழ்த்துங்கள்.

அதோ! இளையவன் பென்யமின், அவர்களுக்கு முன்னே செல்கின்றான்: யூதாவின் தலைவர்கள் கூட்டமாய்ச் செல்கின்றார்கள்: செபுலோன் தலைவர்களும் நப்தலியின் தலைவர்களும் அங்குள்ளார்கள்.

கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்: என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்!

எருசலேமில் உமது கோவில் உள்ளது: எனவே, அங்கு அரசர் உமக்குக் காணிக்கை கொணர்வர்.

நாணலிடையே இருக்கும் விலங்கினைக் கண்டியும்: மக்களினங்களாகிய கன்றுகளோடு வருகிற காளைகளின் கூட்டத்தையும் கண்டியும்: வெள்ளியை நாடித் திரிவோரை உமது காலடியில் மிதித்துவிடும்: போர்வெறி கொண்டு மக்களினங்களைச் சிதறடியும்.

எகிப்திலிருந்து அரச பதர் அங்கே வருவர்: கடவுள்முன் எத்தியோப்பியர் கைகூப்பி நிற்க விரைவர்.

உலகிலுள்ள அரசர்களே! கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்: ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். (சேலா)

வானங்களின்மேல், தொன்மைமிகு வானங்களின்மேல், ஏறிவரும் அவரைப் புகழுங்கள்: இதோ! அவர் தம் குரலில் தம் வலிமைமிகு குரலில் முழங்குகின்றார்.

கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள்: அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது: அவரது வலிமை மேக மண்டலங்களில் உள்ளது.

கடவுள் தம் பயகங்களில் அஞ்சுவதற்கு உரியவராய் விளங்குகின்றார்: இஸ்ரயேலின் கடவுள் தம் மக்களுக்கு வலிமையையும் ஊக்கத்தையும் அளிக்கின்றார்: கடவுள் போற்றி! போற்றி!

அதிகாரம் 69

கடவுளே! என்னைக் காப்பாற்றும்: வெள்ளம் கழுத்தளவு வந்துவிட்டது.

ஆழமிகு நீர்த்திரளுள் அமிழ்ந்திருக்கின்றேன்: நிற்க இடமில்லை: நிலைக்கொள்ளாத நீருக்குள் ஆழ்ந்திருக்கின்றேன்: வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது.

கத்திக் கத்திக் களைத்துப்போனேன்: தொண்டையும் வறண்டுபோயிற்று: என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து என் கண்கள் பூத்துப்போயின:

காரணமில்லாமல் என்னை வெறுப்போர் என் தலைமுடியைவிட மிகுதியாய் இருக்கின்றனர்: பொய்க்குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர். நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்?

கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்: என் குற்றங்கள் உமக்கு மறைவானவை அல்ல.

ஆண்டவரே! படைகளின் தலைவரே! உமக்காகக் காத்திருப்போர் என்னால் வெட்கமுறாதபடி செய்யும்: இஸ்ரயேலின் கடவுளே! உம்மை நாடித் தேடுகிறவர்கள் என்பொருட்டு மானக்கேடு அடையாதபடி செய்யும்.

ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்: வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.

என் சகோதரருக்கு வேற்று மனிதனானேன்: என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்.

உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது: உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.

நோன்பிருந்து நான் நெக்குருகி அழுதேன்: அதுவே எனக்க இழிவாய் மாறிற்று.

சாக்குத் துணியை என் உடையாகக் கொண்டேன்: ஆயினும், அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன்.

நகர வாயிலில் அமர்வோர் என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்: குடிகாரர் என்னைப்பற்றிப் பாட்டுக் கட்டுகின்றனர்.

ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்: துணை செய்வதில் நீர் மாறாதவர்.

சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்: என்னை வெறுப்போரிடமிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும்.

பெருவெள்ளம் என்னை அடித்துக் கொண்டு போகாதிருப்பதாக! ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக! படுகுழி தன்வாய் திறந்து என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!

ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்: உம் பேரன்பு நன்மை மிக்கது: உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும்.

உமது முகத்தை அடியேனக்கு மறைக்காதேயும்: நான் நெருக்கடியான நிலையிலிருக்கிறேன்: என் மன்றாட்டுக்கு விரைவில் பதில்மொழி தாரும்.

என்னை நெருங்கி, என்னை விடுவித்தருளும்: என் எதிரிகளிடமிருந்து என்னை மீட்டருளும்.

என் இழிவும், வெட்கக்கேடும், மானக்கேடும் உமக்குத் தெரியும்: என் பகைவர் அனைவரும் உம் முன்னிலையில் இருக்கின்றனர்.

பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்து விட்டது: நான் மிகவும் வருந்துகிறேன்: ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்: யாரும் வரவில்லை: தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்: யாரையும் காணவில்லை.

அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்: என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்.

அவர்களுடைய விருந்துகளே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்! அவர்களுடைய படையல் விருந்துகளே அவர்களுக்குப் பொறியாகட்டும்!

அவர்களின் கண்கள் காணாதவாறு ஒளியிழக்கட்டும்! அவர்களின் இடைகள் இடையறாது தள்ளாடட்டும்!

உமது கடுஞ்சினத்தை அவர்கள்மேல் கொட்டியருளும்: உமது சினத்தீ அவர்களை மடக்கிப் பிடிப்பதாக!

அவர்களின் பாசறை பாழாவதாக! அவர்களின் கூடாரங்களில் ஒருவனும் குடிபுகாதிருப்பானாக!

நீர் அடித்தவர்களை அவர்கள் இன்னும் கொடுமைப்படுத்துகின்றார்கள்: நீர் காயப்படுத்தினவர்களின் நோவைப்பற்றித் பற்றித் திரிகின்றார்கள்.

அவர்கள்மீது குற்றத்தின்மேல் குற்றம் சுமத்தும்! உமது நீதித் தீர்ப்பினின்று அவர்களைத் தப்ப விடாதேயும்!

மெய்வாழ்வுக்குரியோரின் அட்டவணையிலிருந்து அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்! அவற்றை நேர்மையாளரின் பெயர்களோடு சேர்க்காதேயும்!

எளியோன் சிறுமைப்பட்டவன்: காயமுற்றவன்: கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!

கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்: அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன்:

காளையைவிட இதுவே ஆண்டவருக்கு உகந்தது: கொம்பும் விரிகுளம்பும் உள்ள எருதைவிட இதுவே அவருக்கு உகந்தது.

எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்: கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.

ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்: சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.

வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும்.

கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்: யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்: அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்: நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள்.

ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்: அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர்.

அதிகாரம் 70

கடவுளே! என்னை விடுவித்தருளும்: ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்!

என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் வெட்கமும் குழப்பமும் அடைவராக! எனக்குத் தீங்கு வருவதை விரும்புவோர் வெட்கத்தால் தலைகுனிந்து பின்னிட்டுத் திரும்புவராக!

என்னைப் பார்த்து, “ஆ! ஆ!“ என்று ஏளனம் செய்வோர் பெருங்கலக்கமுற்றுப் பின்னிடுவாராக!

உம்மை நாடித் தேடும் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூர்வராக! நீர் அருளும் மீட்பில் நாட்டம் கொள்வோர் கடவுள் மாட்சி மிக்கவர் என்று எப்போதும் சொல்வர்.

நான் சிறுமையுற்றவன், ஏழை: கடவுளே! என்னிடம் விரைந்து வாரும்: நீரே எனக்குத் துணை: என்னை விடுவிப்பவர்: என் கடவுளே! காலந்தாழ்த்தாதேயும்.

அதிகாரம் 71


ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்: ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.

உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்: எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்.

என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்: கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்: ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்.

என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும்: நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர் பிடியினின்று என்னைக் காத்தருளும்.

என் தலைவரே, நீரே என் நம்பிக்கை: ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை.

பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்: தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்: உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன்.

பலருக்கு நான் ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்: நீரே எனக்கு உறுதியான அடைக்கலம்.

என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.

முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்: என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்.

ஏனெனில், என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே: என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் ஒன்றுகூடிச் சதி செய்கின்றனர்:

கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்: அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்: அவனைக் காப்பாற்ற ஒருவருமில்லை என்று அவர்கள் சொல்கின்றார்கள்.

கடவுளே! என்னைவிட்டுத் தொலைவில் போய்விடாதேயும்: என் கடவுளே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.

என்னைப் பழிப்பவர்கள் வெட்கி அழிவார்களாக! எனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களை இழிவும் மானக்கேடும் சூழட்டும்!

ஆனால், நான் என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்: மேலும் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன்.

என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்: உம் அருட் செயல்களை என்னால் கணிக்க இயலாது.

தலைவராகிய ஆண்டவரே! உமது வலிமைமிகு செயல்களை எடுத்துரைப்பேன்: உமக்கே உரிய நீதிமுறைமையைப் புகழ்ந்துரைப்பேன்.

கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்: இனிவரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.

கடவுளே, உம் கைவன்மையையும் ஆற்றலையும் இனிவரும் தலைமுறைக்கு நான் அறிவிக்குமாறு வயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட என்னைக் கைவிடாதேயும்.

கடவுளே, உமது நீதி வானம் வரைக்கும் எட்டுகின்றது: மாபெரும் செயல்களை நீர் செய்திருக்கிறீர்: கடவுளே, உமக்கு நிகர் யார்?

இன்னல்கள் பலவற்றையும் தீங்குகளையும் நான் காணுமாறு செய்த நீரே, எனக்கு மீண்டும் உயிரளிப்பீர்: பாதாளத்தினின்று என்னைத் பக்கி விடுவீர்.

என் மேன்மையைப் பெருகச் செய்து மீண்டும் என்னைத் தேற்றுவீர்.

என் கடவுளே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உமது உண்மையையும் புகழ்வேன்: இஸ்ரயேலின் பயரே, யாழிசைத்து உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

நான் உமக்குப் புகழ்பாடுகையில் என் நா அக்களிக்கும்: நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும்.

என் வாழ்நாளெல்லாம் என் நா உமது நீதியை எடுத்துரைக்கும். ஏனெனில் எனக்குத் தீங்குசெய்யப் பார்த்தவர்கள் வெட்கமும் மானக்கேடும் அடைந்து விட்டார்கள்.

அதிகாரம் 72

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்: அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.

அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!

மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்: குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.

எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக: பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக!

கதிரவனும் நிலாவும் உள்ளவரையில், உம் மக்கள் தலைமுறை தலைமுறையாக உமக்கு அஞ்சி நடப்பார்களாக.

அவர் புல்வெளியில் பெய்யும் பறலைப்போல் இருப்பாராக: நிலத்தில் பொழியும் மழையைப் போல் விளங்குவாராக.

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக: நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.

ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்: பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.

பாலைவெளி வாழ்வோர் அவர்முன் குனிந்து வணங்குவர்: அவர் எதிரிகள் மண்ணை நக்குவார்கள்.

தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்: சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.

எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்: எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.

வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்: ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.

அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்: அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது.

அவர் நீடுழி வாழ்க! சேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்: அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக! அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக!

நாட்டில் தானியம் மிகுந்திடுக! மலைகளின் உச்சிகளில் பயிர்கள் அசைந்தாடுக! லெபனோனைப்போல் அவை பயன் தருக! வயல்வெளிப் புல்லென நகரின் மக்கள் பூத்துக் குலுங்குக!

அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக!

ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி! அவர் ஒருவரே வியத்தகு செயல்களைப் புரிகின்றார்!

மாட்சி பொருந்திய அவரது பெயர் என்றென்றும் புகழப்பெறுவதாக! அவரது மாட்சி உலகெல்லாம் நிறைந்திருப்பதாக! ஆமென், ஆமென்.

(ஈசாயின் மகனாகிய தாவீதின் மன்றாட்டுகள் நிறைவுற்றன.)

அதிகாரம் 73

உண்மையாகவே, இஸ்ரயேலர்க்குக் கடவுள் எவ்வளவு நல்லவர்! பய உள்ளதினர்க்கு ஆண்டவர் எவ்வளவோ நல்லவர்!

என் கால்கள் சற்றே நிலைதடுமாறலாயின: நான் அடிசறுக்கி விழப்போனேன்.

ஆணவம் கொண்டோர்மேல் நான் பொறாமை கொண்டேன்: பொல்லாரின் வளமிகு வாழ்வை நான் கண்டேன்.

அவர்களுக்குச் சாவின் வேதனை என்பதே இல்லை: அவர்களது உடல், நலமும் உரமும் கொண்டது.

மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம் அவர்களுக்கு இல்லை. மற்ற மனிதர்களைப் போல் அவர்கள் துன்புறுவதில்லை.

எனவே, மணிமாலைபோல் செருக்கு அவர்களை அணி செய்கிறது: வன்செயல் அவர்களை ஆடைபோல மூடிக்கொள்கிறது.

அவர்களின் கண்கள் கொழுப்பு மிகுதியால் புடைத்திருக்கின்றன: அவர்களது மனத்தின் கற்பனைகள் எல்லை கடந்து செல்கின்றன.

பிறரை எள்ளி நகையாடி வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்: இறுமாப்புக்கொண்டு கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர்.

விண்ணுலகை எதிர்த்து அவர்கள் வாய் பேசுகின்றது: மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல் விரிந்து பரவுகின்றது.

ஆதலால், கடவுளின் மக்களும் அவர்களைப் புகழ்ந்து பின்பற்றுகின்றனர்: இவ்வாறு, கடல் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட்டார்கள்.

“இறைவனுக்கு எப்படித் தெரியும்? உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?“ என்கின்றார்கள்.

ஆம்: பொல்லார் இப்படித்தான் இருக்கின்றனர்: என்றும் வளமுடன் வாழ்ந்து செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்.

அப்படியானால், நான் என் உள்ளத்தை மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா? குற்றமற்ற நான் என் கைகளைக் கழுவிக்கொண்டதும் வீண்தானா?

நாள்தோறும் நான் வதைக்கப்படுகின்றேன்: காலைதோறும் கண்டிப்புக்கு ஆளாகின்றேன்.

நானும் அவர்களைப்போல் பேசலாமே என்று நான் நினைத்திருந்தால், உம் மக்களின் தலைமுறைக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன்.

ஆகவே, இதன் உண்மை என்னவென்று கண்டறிய முயன்றேன்: ஆனால், அது பெரிய புதிராயிருந்தது.

நான் இறைவனின் பயகத்திற்குச் சென்றபின்புதான் அவர்களுக்கு நேரிடப்போவது என்ன என்பதை உணர்ந்துகொண்டேன்.

உண்மையில் அவர்களை நீர் சறுக்கலான இடங்களில் வைப்பீர்: அவர்களை விழத்தட்டி அழிவுக்கு உள்ளாக்குவீர்.

அவர்கள் எவ்வளவு விரைவில் ஒழிந்து போகிறார்கள்! அவர்கள் திகில் பிடித்தவர்களாய் அடியோடு அழிந்து போகிறார்கள்!

விழித்தெழுவோரின் கனவுபோல் அவர்கள் ஒழிந்து போவார்கள்: என் தலைவராகிய ஆண்டவரே, நீர் கிளர்ந்தெழும்போது அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர்.

என் உள்ளம் கசந்தது: என் உணர்ச்சிகள் என்னை ஊடுருவிக் குத்தின.

அப்பொழுது நான் அறிவிழந்த மதிகேடனானேன்: உமது முன்னிலையில் ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன்.

ஆனாலும், நான் எப்போதும் உமது முன்னிலையிலேதான் இருக்கின்றேன்: என் வலக்கையை ஆதரவாய்ப் பிடித்துள்ளீர்.

உமது திருவுளப்படியே என்னை நடத்துகின்றீர்: முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீர்.

விண்ணுலகில் உம்மையன்றி எனக்கிருப்பவர் யார்? மண்ணுலகில் வேறுவிருப்பம் உம்மையன்றி எனக்கேதுமில்லை.

எனது உடலும் உள்ளமும் நைந்து போயின: கடவுளே என் உள்ளத்திற்கு அரணும் என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார்.

உண்மையிலேயே, உமக்குத் தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்: உம்மைக் கைவிடும் அனைவரையும் அழித்துவிடும்.

நானோ கடவுளின் அண்மையே எனக்கு நலமெனக் கொள்வேன்: என் தலைவராகிய ஆண்டவரை என் அடைக்கலமாய்க்கொண்டு அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.

அதிகாரம் 74

கடவுளே! நீர் ஏன் எங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்? உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல் உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது?

பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபைக் கூட்டத்தை நினைத்தருளும்: நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட இனத்தாரை மறந்துவிடாதேயும்: நீர் கோவில் கொண்டிருந்த இனத்தாரை சீயோன் மலையையும் நினைவுகூர்ந்தருளும்.

நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவீராக! ஏதிரிகள் உமது பயகத்தில் அனைத்தையும் பாழ்படுத்திவிட்டார்கள்.

உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில் வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்: தங்கள் கொடிகளை வெற்றிக்கு அடையாளமாக நாட்டுகின்றா¡கள்.

அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட மரப்பின்னல் வேலைப்பாடுகளைக் கோடரிகளால் சிதைத்தார்கள்.

மேலும் அங்கிருந்த மர வேலைப்பாடுகள் அனைத்தையும் சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு தகர்த்தெறிந்தார்கள்:

அவர்கள் உமது பயகத்திற்குத் தீ வைத்தார்கள்: அவர்கள் உமது பெயருக்குரிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.

அவர்களை அடியோடு அழித்து விடுவோம் என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டார்கள்: கடவுளின் சபையார் கூடும் இடங்களையெல்லாம் நாடெங்கும் எரித்தழித்தார்கள்.

எங்களுக்கு நீர் செய்து வந்த அருஞ்செயல்களை இப்போது நாங்கள் காண்பதில்லை: இறைவாக்கினரும் இல்லை: எவ்வளவு காலம் இந்நிலை நீடிக்குமென்று அறியக் கூடியவரும் எங்களிடையே இல்லை.

கடவுளே! எவ்வளவு காலம் பகைவர் இகழ்ந்துரைப்பர்? எதிரிகள் உமது பெயரை எப்போதுமா பழித்துக் கொண்டிருப்பார்கள்?

உமது கையை ஏன் மடக்கிக் கொள்கின்றீர்? உமது வலக்கையை ஏன் உமது மடியில் வைத்துள்ளீர்? அதை நீட்டி அவர்களை அழித்துவிடும்.

கடவுளே! முற்காலத்திலிருந்தே நீர் எங்கள் அரசர்: நீரே உலகெங்கும் மீட்புச் செயலைச் செய்து வருகின்றீர்.

நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்தீர்: நீரில் வாழும் கொடும் பாம்புகளின் தலைகளை நசுக்கிவிட்டீர்.

லிவியத்தானின் தலைகளை நசுக்கியவர் நீரே: அதைக் காட்டு விலங்குகளுக்கு இரையாகக் கொடுத்தவர் நீரே:

ஊற்றுகளையும் ஓடைகளையும் பாய்ந்து வரச்செய்தவர் நீரே: என்றுமே வற்றாத ஆறுகளைக் காய்ந்துபோகச் செய்தவரும் நீரே.

பகலும் உமதே: இரவும் உமதே: கதிரவனையும் நிலவையும் தோற்றுவித்தவர் நீரே.

பூவுலகின் எல்லைகளையெல்லாம் வரையறை செய்தீர்: கோடைக் காலத்தையும் மாரிக் காலத்தையும் ஏற்படுத்தினீர்.

ஆண்டவரே, எதிரி உம்மை இகழ்வதையும் மதிகெட்ட மக்கள் உமது பெயரைப் பழிப்பதையும் நினைத்துப்பாரும்!

உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப் பொல்லாத விலங்கிடம் ஒப்புவித்து விடாதேயும்! சிறுமைப்படுகிற உம் மக்களின் உயிரை ஒரேயடியாக மறந்து விடாதேயும்!

உமது உடன்படிக்கையை நினைத்தருளும்! நாட்டின் இருளான இடங்களில் கொடுமை நடக்கும் குடியிருப்புகள் நிறைந்திருக்கின்றன.

சிறுமையுற்றோர் மீண்டும் வெட்கமுறாதபடி செய்யும்: எளியோரும் வறியோரும் உமது பெயரைப் புகழ்வராக!

கடவுளே! எழுந்துவாரும்: உமக்காக நீரே வழக்காடும்: மதிகேடரால் நாடோறும் உமக்கு வரும் இகழ்ச்சியை நினைத்துப்பாரும்.

உம்முடைய பகைவர் செய்யும் முழக்கத்தை மறவாதேயும்: உம் எதிரிகள் இடைவிடாது எழுப்பும் அமளியைக் கேளும்.

அதிகாரம் 75

உமக்கு நன்றி செலுத்துகின்றோம்: கடவுளே, உமக்கு நன்றி செலுத்துகின்றோம்: உமது பெயரைப் போற்றுகின்றோம்: உம் வியத்தகு செயல்களை எடுத்துரைக்கின்றோம்.

நான் தகுந்த வேளையைத் தேர்ந்துகோண்டு, நீதியோடு தீர்ப்பு வழங்குவேன்.

உலகமும் அதில் வாழ்வோர் அனைவரும் நிலைகுலைந்து போகலாம்: ஆனால், நான் அதன் பண்களை உறுதியாக நிற்கச் செய்வேன். (சேலா)

வீண் பெருமை கொள்வோரிடம், “வீண் பெருமை கொள்ள வேண்டாம்“ எனவும் பொல்லாரிடம், “உங்கள் வலிமையைக் காட்ட வேண்டாம்:

உங்கள் ஆற்றலைச் சிறிதளவும் காட்டிக்கொள்ள வேண்டாம்: தலையை ஆட்டி இறுமாப்புடன் பேச வேண்டாம்:“ எனவும் சொல்வேன்.

கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ, பாலைவெளியிலிருந்தோ, மலைகளிலிருந்தோ, உங்களுக்கு எதுவும் வராது.

ஆனால், கடவுளிடமிருந்தே தீர்ப்பு வரும்: அவரே ஒருவரைத் தாழ்த்துகின்றார்: இன்னொருவரை உயர்த்துகின்றார்.

ஏனெனில், மதிமயக்கும் மருந்து கலந்த திராட்சை மது பொங்கிவழியும் ஒரு பாத்திரம் ஆண்டவர் கையில் இருக்கின்றது: அதிலிருந்து அவர் மதுவை ஊற்றுவார்: உலகிலுள்ள பொல்லார் அனைவரும் அதை முற்றிலும் உறிஞ்சிக் குடித்துவிடுவர்.

நானோ எந்நாளும் மகிழ்திருப்பேன்: யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்:

பொல்லாரை அவர் வலிமை இழக்கச் செய்வார்: நேர்மையாளரின் ஆற்றலோ உயர்வுபெறும்.

அதிகாரம் 76

யூதாவில் கடவுள் தம்மையே வெளிப்படுத்தியுள்ளார்: இஸ்ரயேலில் அவரது பெயர் மாண்புடன் திகழ்கின்றது.

எருசலேமில் அவரது கூடாரம் இருக்கின்றது: சீயோனில் அவரது உறைவிடம் இருக்கின்றது.

அங்கே அவர் மின்னும் அம்புகளை முறித்தெறிந்தார். கேடயத்தையும் வாளையும் படைக்கலன்களையும் தகர்த்தெறிந்தார். (சேலா)

ஆண்டவரே, நீர் ஒளிமிக்கவர்: உமது மாட்சி என்றுமுள மலைகளினும் உயர்ந்தது.

நெஞ்சுறுதி கொண்ட வீரர் கொள்ளையிடப்பட்டனர்: அவர்கள் துயிலில் ஆழ்ந்துவிட்டனர்: அவர்களின் கைகள் போர்க்கலன்களைத் தாங்கும் வலுவிழந்தன.

யாக்கோபின் கடவுளே! உமது கடிந்துரையால் குதிரைகளும் வீரர்களும் மடிந்து விழுந்தனர்.

ஆண்டவரே, நீர் அஞ்சுதற்கு உரியவர்: நீர் சினமுற்ற வேளையில் உம் திருமுன் நிற்கக்கூடியவர் யார்?

கடவுளே! நீதித் தீர்ப்பளிக்க நீர் எழுந்தபோது, மண்ணுலகில் ஒடுக்கப்பட்டோரைக் காக்க விழைந்தபோது, வானின்று தீர்ப்பு முழங்கச் செய்தீர்:

பூவுலகு அச்சமுற்று அடங்கியது. (சேலா)

மாறாக, சினமுற்ற மாந்தர், உம்மைப் புகழ்தேத்துவர்: உமது கோபக் கனலுக்குத் தப்பியோர் உமக்கு விழாக்கொண்டாடுவர்:

உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பொருத்தனை செய்து அதை நிறைவேற்றுங்கள்: அவரைச் சுற்றலுமிருக்கிற அனைவரும் அஞ்சுதற்குரிய அவருக்கே காணிக்கைகளைக் கொண்டுவருவராக!

செருக்குற்ற தலைவர்களை அவர் அழிக்கின்றார்: பூவுலகின் அரசர்க்குப் பேரச்சம் ஆனார்.

அதிகாரம் 77

கடவுளை நோக்கி உரத்த குரலில் மன்றாடுகின்றேன்: கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று அவரை நோக்கி மன்றாடுகின்றேன்.

என் துன்ப நாளில் என் தலைவரை நாடினேன்: இரவில் அயராது கைகூப்பினேன்: ஆனாலும் என் ஆன்மா ஆறுதல் அடையவில்லை.

கடவுளை நினைத்தேன்: பெருமூச்சு விட்டேன்: அவரைப்பற்றி சிந்தித்தேன்: என் மனம் சோர்வுற்றது. (சேலா)

என் கண் இமைகள் மூடாதபடி செய்துவிட்டீர்: நான் கலக்கமுற்றிருக்கிறேன்: என்னால் பேச இயலவில்லை.

கடந்த நாள்களை நினைத்துப் பார்க்கின்றேன்: முற்கால ஆண்டுகளைப்பற்றிச் சிந்திக்கின்றேன்.

இரவில் என் பாடலைப்பற்றி நினைத்துப் பார்த்தேன்: என் இதயத்தில் சிந்தித்தேன்: என் மனம் ஆய்வு செய்தது:

“என் தலைவர் என்றென்றும் கைவிட்டுவிடுவாரோ? இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டாரோ?

அவரது பேரன்பு முற்றிலும் மறைந்துவிடுமோ? வாக்குறுதி தலைமுறைதோறும் அற்றுப்போய்விடுமோ?

கடவுள் இரக்கங்காட்ட மறந்துவிட்டாரோ? அல்லது சினங்கொண்டு தமது இரக்கத்தை நிறுத்திவிட்டாரோ?“ (சேலா)

அப்பொழுது நான், “உன்னதரின் வலக்கை மாறுபட்டுச் செயலாற்றுவதுபோல் என்னை வருத்துகின்றது“ என்றேன்.

ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்: முற்காலத்தில் நீர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துப் பார்ப்பேன்.

உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன்! உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந்திப்பேன்.

கடவுளே, உமது வழி பய்மையானது! மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்!

அரியன செய்யும் இறைவன் நீர் ஒருவரே! மக்களினங்களிடையே உமது ஆற்றலை விளங்கச் செய்தவரும் நீரே:

யாக்கோபு, யோசேப்பு என்போரின் புதல்வரான உம் மக்களை நீர் உமது புயத்தால் மீட்டுக் கொண்டீர். (சேலா)

கடவுளே, வெள்ளம் உம்மைப் பார்த்தது: வெள்ளம் உம்மைப் பார்த்து நடுக்கமுற்றது: ஆழ்கடல்களும் கலக்கமுற்றன.

கார்முகில்கள் மழை பொழிந்தன: மேகங்கள் இடிமுழங்கின: உம் அம்புகள் எத்திக்கும் பறந்தன.

உமது இடிமுழக்கம் கடும்புயலில் ஒலித்தது: மின்னல்கள் பூவுலகில் ஒலி பாய்ச்சின: மண்ணுலகம் நடுங்கி அதிர்ந்தது.

கடலுக்குள் உமக்கு வழி அமைத்தீர்: வெள்ளத்திரளிடையே உமக்குப் பாதை ஏற்படுத்தினீர்: ஆயினும் உம் அடிச்சுவடுகள் எவருக்கும் புலப்படவில்லை.

மோசே, ஆரோன் ஆகியோரைக் கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச் சென்றீர்.

அதிகாரம் 78

என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்: என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள்.

நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்: முற்காலத்து மறைசெய்திகளை எடுத்துரைப்பேன்.

நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை-இவற்றை உரைப்போம்.

அவர்களின் பிள்ளைகளுக்கு நாங்கள் அவற்றை மறைக்க மாட்டோம்: வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம்.

யாக்கோபுக்கென அவர் நியமங்களை வகுத்தார்: இஸ்ரயேலுக்கெனத் திருச்சட்டத்தை ஏற்படுத்தினார்: இதனையே தம் பிள்ளைகளுக்கும் கற்பிக்குமாறு நம் மூதாதையர்க்கு அவர் கட்டளையிட்டார்.

வரவிருக்கும் தலைமுறையினர் இவற்றை அறிந்திடவும், இனிப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள்-இவர்கள் தம் புதல்வர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும்,

அதனால், அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைக்கவும், இறைவனின் செயல்களை மறவாதிருக்கவும், அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும்,

தங்கள் மூதாதையரைப்போல், எதிர்ப்பு மனமும், அடங்காக் குணமும் கொண்ட தலைமுறையாகவும், நேரிய உள்ளமற்றவர்களாகவும் இறைவன்மீது உண்மைப் பற்று அற்றவர்களாகவும் இராதபடி அவர் கட்டளையிட்டார்.

வில் வீரரான எப்ராயிம் மக்கள், போரில் புறங்காட்டி ஓடினர்.

அவர்கள் கடவுளோடு செய்துகொண்ட உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கவில்லை: அவரது திருச்சட்டத்தைப் பின்பற்ற மறுத்துவிட்டனர்.

அவர்தம் செயல்களையும் அவர் ஆற்றிய அருஞ்செயல்களையும் அவர்கள் மறந்தனர்.

எகிப்து நாட்டில், சோவான் சமவெளியில் அவர்களின் மூதாதையர் காணுமாறு அவர் வியத்தகு செயல்கள் பல புரிந்தார்:

கடலைப் பிரித்து அவர்களை வழிநடத்தினார்: தண்ணீரை அணைக்கட்டுப்போல நிற்கும்படி செய்தார்:

பகலில் மேகத்தினாலும் இரவு முழுவதும் நெருப்பின் ஒளியாலும் அவர்களை வழி நடத்தினார்.

பாலைநிலத்தில் பாறைகளைப் பிளந்தார்: ஆழத்தினின்று பொங்கிவருவது போன்ற நீரை அவர்கள் நிறைவாகப் பருகச் செய்தார்:

பாறையினின்று நீரோடைகள் வெளிப்படச் செய்தார்: ஆறுகளென நீரை அவர் பாய்ந்தோடச் செய்தார்.

ஆயினும், அவர்கள் அவருக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர்: வறண்ட நிலத்தில் உன்னதருக்கு எதிராய் எழுந்தனர்.

தம் விருப்பம்போல் உணவு கேட்டு வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தனர்.

அவர்கள் கடவுளுக்கு எதிராக இவ்வாறு பேசினார்கள்: “பாலை நிலத்தில் விருந்தளிக்க இறைவனால் இயலுமா?

உண்மைதான்! அவர் பாறையை அதிரத் தட்டினார்: நீர் பாய்ந்து வந்தது: ஆறுகள் கரைபுரண்டு ஓடின. ஆயினும், அப்பமளிக்க இயலுமா அவரால்? தம் மக்களுக்கு இறைச்சி தர முடியுமா?“

எனவே, இதைக் கேட்ட ஆண்டவர் சினங்கொண்டார்: நெருப்பு யாக்கோபுக்கு எதிராய்க் கிளர்ந்தெழுந்தது. இஸ்ரயேல்மீது அவரது சினம் பொங்கியெழுந்தது.

ஏனெனில், அவர்கள் கடவுள்மீது பற்றுறுதி கொள்ளவில்லை: அவர் காப்பார் என்று நம்பவில்லை.

ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்: விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார்.

அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்: அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்.

வான பதரின் உணவை மானிடர் உண்டனர்: அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்பினார்.

அவர் விண்ணுலகினின்று கீழ்க்காற்றை இறங்கிவரச் செய்தார்: தம் ஆற்றலினால் தென்காற்றை அழைத்துவந்தார்.

அவர் இறைச்சியைத் துகள்துகளென அவர்கள்மீது பொழிந்தார்: இறகுதிகழ் பறவைகளைக் கடற்கரை மணலென வரவழைத்தார்.

அவற்றை அவர்தம் பாளையத்தின் நடுவிலும் கூடாரத்தைச் சுற்றிலும் விழச்செய்தார்.

அவர்கள் உண்டனர்: முற்றிலுமாய் நிறைவடைந்தனர்: அவர்கள் விரும்பியவற்றையே அவர் அவர்களுக்கு அளித்தார்.

அவர்களது பெருந்தீனி வேட்கை தணியுமுன்பே, அவர்கள் வாயிலில் உணவு இருக்கும் பொழுதே,

கடவுளின் சினம் அவர்களுக்கு எதிராக மூண்டெழுந்தது: அவர்களுள் வலியோரை அவர் கொன்றார்: இஸ்ரயேலின் இளைஞரை வீழ்த்தினார்.

இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும், அவர்கள் தொடர்ந்து பாவம் செய்தார்கள்: அவர்தம் வியத்தகு செயல்களில் நம்பிக்கை கொள்ளவில்லை.

ஆகையால், அவர்களது வாழ்நாளை மூச்சென மறையச் செய்தார்: அவர்களது ஆயுளைத் திடீர்த் திகிலால் முடிவுறச் செய்தார்.

அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்: மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர்.

கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர்.

ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்: தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள்.

அவர்கள் இதயம் அவரைப் பற்றிக் கொள்வதில் உறுதியாய் இல்லை: அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்: அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை.

அவர்கள் வெறும் சதையே என்பதையும் திரும்பி வராத காற்று என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

பாலை நிலத்தில் அவர்கள் எத்தனையோமுறை அவருக்கெதிராய்க் கிளர்ந்தெழுந்தனர்! வறண்ட நிலத்தில் அவர் மனத்தை வருத்தினர்!

இறைவனை அவர்கள் மீண்டும் மீண்டும் சோதித்தனர்: இஸ்ரயேலின் பயவருக்கு எரிச்சலு¡ட்டினர்.

அவரது கைவன்மையை மறந்தனர்: எதிரியிடமிருந்து அவர் அவர்களை விடுவித்த நாளையும் மறந்தனர்:

அந்நாளில் எகிப்தில் அவர் அருஞ்செயல்கள் செய்தார்: சோவான் சமவெளியில் வியத்தகு செயல்கள் புரிந்தார்.

அவர்களின் ஆறுகளைக் குருதியாக மாற்றினார்: எனவே, தங்கள் ஓடைகளினின்று அவர்களால் நீர் பருக இயலவில்லை.

அவர்களை விழுங்கு5மாறு அவர்கள்மீது ஈக்களையும், அவர்களது நாட்டை அழிக்குமாறு தவளைகளையும் அவர் அனுப்பினார்.

அவர்களது விளைச்சலைப் பச்சைப் புழுக்களுக்கும் அவர்களது உழைப்பின் பயனை வெட்டுக்கிளிகளுக்கும் அவர் கொடுத்தார்.

கல்மழையினால் அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும் உறைபனியால் அவர்களுடைய அத்தி மரங்களையும் அவர் அழித்தார்.

அவர்களுடைய கால்நடைகளைக் கல்மழையிடமும் அவர்களுடைய ஆடுமாடுகளை இடி மின்னலிடமும் அவர் ஒப்புவித்தார்.

தம் சினத்தையும், சீற்றத்தையும் வெஞ்சினத்தையும் இன்னலையும்-அழிவு கொணரும் பதர்க் கூட்டத்தை அவர் ஏவினார்.

அவர் தமது சினத்திற்கு வழியைத் திறந்துவிட்டார்: அவர்களைச் சாவினின்று தப்புவிக்கவில்லை: அவர்களின் உயிரைக் கொள்ளை நோய்க்கு ஒப்புவித்தார்.

எகிப்தின் அனைத்துத் தலைப்பேறுகளையும் காம் கூடாரங்களில் ஆண் தலைப்பேறுகளையும் அவர் சாகடித்தார்.

அவர்தம் மக்களை ஆடுகளென வெளிக்கொணர்ந்தார்: பாலைநிலத்தில் அவர்களுக்கு மந்தையென வழி காட்டினார்.

பாதுகாப்புடன் அவர்களை அவர் அழைத்துச் சென்றார்: அவர்கள் அஞ்சவில்லை: அவர்களுடைய எதிரிகளைக் கடல் மூடிக்கொண்டது.

அவர் தமது திருநாட்டுக்கு, தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு, அவர்களை அழைத்துச் சென்றார்.

அவர்கள் முன்னிலையில் வேற்றினத்தாரை அவர் விரட்டியடித்தார்: அவர்களுக்கு நாட்டைப் பங்கிட்டு உரிமைச் சொத்தாகக் கொடுத்தார்: இஸ்ரயேல் குலங்களை அவர்கள் கூடாரங்களில் குடியேற்றினார்.

ஆயினும், உன்னதரான கடவுளை அவர்கள் சோதித்தனர்: அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்: அவர்தம் நியமங்களைக் கடைப்பிடிக்கவில்லை.

தங்கள் மூதாதையர்போல் அவர்கள் வழி தவறினர்: நம்பிக்கைத் துரோகம் செய்தனர்: கோணிய வில்லெனக் குறி மாறினர்.

தம் தொழுகை மேடுகளால் அவருக்குச் சினமூட்டினர்: தம் வார்ப்புச் சிலைகளால் அவருக்கு ஆத்திரமூட்டினர்.

கடவுள் இதைக் கண்டு சினம் கொண்டார்: இஸ்ரயேலை அவர் முழுமையாகப் புறக்கணித்தார்:

சீலோவில் அழைந்த தம் உறைவிடத்தினின்று வெளியேறினார்: மானிடர் நடுவில் தாம் வாழ்ந்த கூடாரத்தினின்று அகன்றார்:

தம் வலிமையை அடிமைத் தனத்திற்குக் கையளித்தார்: தம் மாட்சியை எதிரியிடம் ஒப்புவித்தார்:

தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்: தம் உரிமைச்சசொத்தின்மீது கடுஞ்சினங்கொண்டார்.

அவர்களுடைய இளைஞரை நெருப்பு விழுங்கியது: அவர்களுடைய கன்னியர்க்குத் திருமணப் பாடல் இல்லாது போயிற்று.

அவர்களுடைய குருக்கள் வாளால் வீழ்த்தப்பட்டனர்: அவர்களுடைய கைம்பெண்டிர்க்கு ஒப்பாரி வைக்க வழியில்லை.

அப்பொழுது, உறக்கத்தினின்று எழுவோரைப்போல், திராட்சை மதுவால் களிப்புறும் வீரரைப்போல் எம் தலைவர் விழித்தெழுந்தார்.

அவர் தம் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தார்: அவர்களை என்றென்றும் இகழ்ச்சிக்கு உள்ளாக்கினார்.

அவர் யோயசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்: எப்ராயிம் குலத்தைத் தேர்வு செய்யவில்லை.

ஆனால், யூதாவின் குலத்தை தமக்கு விருப்பமான சீயோன் மலையை அவர் தேர்ந்துகொண்டார்.

தம் திருத்தலத்தை உயர் விண்ணகம் போல் அவர் அமைத்தார்: மண்ணுலகத்தில் என்றும் நிலைத்திருக்குமாறு எழுப்பினார்.

அவர் தாவீதைத் தம் ஊழியராய்த் தேர்ந்தெடுத்தார்: ஆட்டு மந்தைகளினின்று அவரைப் பிரித்தெடுத்தார்.

இறைவன் தம் மக்களான யாக்கோபை, தம் உரிமைச் சொத்தான இஸ்ரயேலை, பால் கொடுக்கும் ஆடுகளைப் பேணிய தாவீது மேய்க்குமாறு செய்தார்.

அவரும் நேரிய உள்ளத்தோடு அவர்களைப் பேணினார்: கைவன்மையாலும் அறிவுத்திறனாலும் அவர்களை வழிநடத்தினார்.

அதிகாரம் 79

கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்: உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர்: எருசலேமைப் பாழடையச் செய்தனர்.

உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள் அளித்துள்ளார்கள்:

அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்: அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை.

எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்: எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம்.

ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா? உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ?

உம்மை அறியாத வேற்று நாட்டினர்மீது, உமது பெயரைத் தொழாத அரசர்கள் மீது உம் சினத்தைக் கொட்டியருளும்.

ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்: அவரது உறைவிடத்தைப் பாழாக்கி விட்டார்கள்.

எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம்.

எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்: உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்: எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.

“அவர்களின் கடவுள் எங்கே?“ என்று அண்டை நாட்டினர் ஏன் சொல்லவேண்டும்? உம்முடைய ஊழியரின் இரத்தத்தைச் சிந்தியதற்காக நீர் அவர்களை, என் கண்ணெதிரே, பழிதீர்த்தருளும்.

சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக.

ஆண்டவரே, எம் அண்டை நாட்டார் உம்மைப் பழித்துரைத்த இழிச்சொல்லுக்காக, ஏழு மடங்கு தண்டனை அவர்கள் மடியில் விழச்செய்யும்.

அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம்.

அதிகாரம் 80

இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!

எப்ராயிம், பென்யமின், மனாசேயின் முன்னிலையில் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்!

கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!

படைகளின் கடவுளாம் ஆண்டவரே! உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?

கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்: கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர்.

எங்கள் அண்டை நாட்டாருக்கு எங்களைச் சர்ச்சைப்பொருள் ஆக்கினீர்: எங்கள் எதிரிகள் எம்மை ஏளனம் செய்தார்கள்.

படைகளின் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்: எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.

எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்: வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர்.

அதற்கென நிலத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்: அது ஆழ வேரூன்றி நாட்டை நிரப்பியது.

அதன் நிழல் மலைகளையும் அதன் கிளைகள் வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின.

அதன் கொடிகள் கடல்வரையும் அதன் தளிர்கள் பேராறுவரையும் பரவின.

பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச்செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!

காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன: வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன.

படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்: இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!

உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!

அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்: அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்: உமது முகத்தின் சினமிகு நோக்கினால், அவர்கள் அழிந்துபோவார்களாக!

உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!

இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்: எமக்கு வாழ்வு அளித்தருளும்: நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.

படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!

அதிகாரம் 81

நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்: யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து ஏத்துங்கள்.

இன்னிசை எழுப்புங்கள்: மத்தளம் கொட்டுங்கள்: யாழும் சுரமண்டலமும் இசைந்து இனிமையாய்ப் பாடுங்கள்.

அமாவாசையில், பெளர்ணமியில், நமது திருவிழாநாளில் எக்காளம் ஊதுங்கள்.

இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை: யாக்கோபின் கடவுள் தந்த நீதிநெறி.

அவர் எகிப்துக்கு எதிராகச் சென்றபொழுது யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே. அப்பொழுது நான் அறியாத மொழியைக் கேட்டேன்.

தோளினின்று உன் சுமையை அகற்றினேன்: உன் கைகள் கூடையினின்று விடுதலை பெற்றன.

துன்ப வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்: நான் உங்களை விடுவித்தேன்: இடிமுழங்கும் மறைவிடத்தினின்று நான் உங்களுக்கு மறுமொழி கூறினேன்: மெரிபாவின் நீருற்று அருகில் உங்களைச் சோதித்தேன்.

என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்: நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்: இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால், எவ்வளவு நலமாயிருக்கும்!

உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது: நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது.

உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்துவந்த கடவுளாகிய ஆண்டவர் நானே: உங்கள் வாயை விரிவாகத் திறங்கள்: நான் அதை நிரப்புவேன்.

ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை: இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை.

எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டுவிட்டேன்.

என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.

நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும்.

ஆண்டவரை வெறுப்போர் அவர்முன் கூனிக்குறுகுவர்: அவர்களது தண்டனைக் காலம் என்றென்றுமாய் இருக்கும்.

ஆனால், உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்: உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன்.

அதிகாரம் 82

தெய்வீக சபையில் கடவுள் எழுந்தருளியிருக்கின்றார்: தெய்வய்களிடையே அவர் நீதித்தீர்ப்பு வழங்கின்றார்.

“எவ்வளவு காலம் நீங்கள் நேர்மையற்ற தீர்ப்பு வழங்குவீர்கள்? எவ்வளவு காலம் பொல்லாருக்குச் சலுகை காட்டுவீர்கள்? (சேலா)

எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள்: சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும் நியாயம் வழங்குங்கள்!

எளியோரையும் வறியோரையும் விடுவிங்கள்! பொல்லாரின் பிடியினின்று அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்!

உங்களுக்கு அறிவுமில்லை: உணர்வுமில்லை: நீங்கள் இருளில் நடக்கின்றீர்கள்: பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே அசைந்துவிட்டன.

“நீங்கள் தெங்வங்கள்: நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்.

ஆயினும், நீங்களும் மனிதர்போன்று மடிவீர்கள்: தலைவர்களுள் ஒருவர்போல வீழ்வீர்கள்“ என்றேன்.

கடவுளே, உலகில் எழுந்தருளும், அதில் நீதியை நிலைநாட்டும்: ஏனெனில், எல்லா நாட்டினரும் உமக்கே சொந்தம்.

அதிகாரம் 83

கடவுளே! மெளனமாய் இராதேயும்: பேசாமல் இராதேயும்: இறைவனே! அமைதியாய் இராதேயும்.

ஏனெனில், உம் எதிரிகள் அமளி செய்கின்றார்கள்: உம்மை வெறுப்போர் தலைபக்குகின்றார்கள்.

உம் மக்களுக்கு எதிராக வஞ்சகமாயச் சதி செய்கின்றார்கள்: உம் பாதுகாப்பில் உள்ளோர்க்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றார்கள்.

அவர்கள் கூறுகின்றார்கள்: “ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு ஒழித்திடுவோம்: இஸ்ரயேலின் பெயரை எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.

அவர்கள் ஒருமனப்பட்டுச் சதி செய்கின்றார்கள்: உமக்கு எதிராக உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.

ஏதோமின் கூடாரத்தார், இஸ்மயேலர், மோவாபியர், அக்ரியர்,

கெபாலியர், அம்மோனியர், அமலேக்கியர், பெலிஸ்தியர் மற்றும் தீர்வாழ் மக்களே அவர்கள்.

அவர்களோடு அசீரியரும் சேர்ந்துகொண்டு, லோத்தின் மைந்தருக்கு வலக் கையாய் இருந்தனர்.

மிதியானுக்கும், கீசோன் ஆற்றின் அருகே சீசராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போல, அவர்களுக்கும் செய்தருளும்.

அவர்கள் ஏந்தோரில் அழிக்கப்பட்டார்கள்: அவர்கள் மண்ணுக்கு உரமானார்கள்.

ஓரேபுக்கும் செயேபுக்கும் செய்தது போல் அவர்களின் உயர்குடி மக்களுக்கும் செய்தருளும்! செபாருக்கும் சல்முன்னாவுக்கும் செய்ததுபோல் அவர்களின் தலைவர்களுக்கும் செய்தருளும்.

ஏனெனில், “கடவுளின் மேய்ச்சல் நிலத்தை நமக்கு உரிமையாக்கிக் கொள்வோம்“ என்று அவர்கள் கூறினார்கள்.

என் கடவுளே! சூறாவளியில் புழுதியென காற்றில் பதரென அவர்களை ஆக்கியருளும்.

நெருப்பு காட்டை எரிப்பது போலவும், தீக்கனல் மலைகளைச் சுட்டெரிப்பது போலவும் அவர்களுக்குச் செய்தருளும்.

உமது புயலால் அவர்களைத் துரத்திவிடும்! உமது சூறாவழியால் அவர்களைத் திகிலடையச் செய்யும்.

ஆண்டவரே, மானக்கேட்டினால் அவர்கள் முகத்தை மூடும்: அப்பொழுதுதான் அவர்கள் உமது பெயரை நாடுவார்கள்.

அவர்கள் என்றென்றும் வெட்கிக் கலங்குவார்களாக! நாணமுற்று அழிந்து போவார்களாக!

“ஆண்டவர்“ என்னும் பெயர் தாங்கும் உம்மை, உலகனைத்திலும் உன்னதரான உம்மை, அவர்கள் அறிந்து கொள்வார்களாக!

அதிகாரம் 84

படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!

என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது: என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.

படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது: தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது.

உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்: அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர் பேறு பெற்றோர்: அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.

வறண்ட பாக்கா பள்ளத்தாக்கை அவர்கள் கடந்து செல்கையில், அது நீருற்றுகள் உள்ள இடமாக மாறுகின்றது: முதல் பருவமழை அதனை நீர்நிலைகள் நிறைந்த இடமாக்கும்.

அவர்கள் நடந்து செல்கையில் மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள்: பின்பு, சீயோனின் தெய்வங்களின் இறைவனைக் காண்பார்கள்.

படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்! யாக்கோபின் கடவுளே! எனக்குச் செவிசாய்த்தருளும்! (சேலா)

எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கணிவுடன் பாரும்!

வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது: பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது.

ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குத் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்: ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்: மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார்.

படைகளின் ஆண்டவரே! உம்மை நம்பும் மானிடர் நற்பேறு பெற்றோர்!

அதிகாரம் 85

ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்: யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர்.

உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்: அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர். (சேலா)

உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர்: கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர்.

எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்: எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக் கொள்ளும்.

என்றென்றும் எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்? தலைமுறைதோறுமா உமது கோபம் நீடிக்கும்?

உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?

ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்: உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்: தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்: அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது.

அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி: நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்: நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.

மண்ணினின்று உண்மை முளைத்தெழும்: விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.

நல்லதையே ஆண்டவர் அருள்வார்: நல்விளைவை நம்நாடு நல்கும்.

நீதி அவர்முன் செல்லும்: அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.

அதிகாரம் 86

ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்: ஏனெனில், நான் எளியவன்: வறியவன்.

என் உயிரைக் காத்தருளும்: ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்: உம் ஊழியனைக் காத்தருளும்: நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்.

என் தலைவரே! என் மேல் இரக்கமாயிரும்: ஏனெனில், நான் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்: என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்: மன்னிப்பவர்: உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.

ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்: உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும்.

என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்: நீரும் எனக்குப் பதிலளிப்பீர்.

என் தலைவரே! தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவருமில்லை. உமது செயல்களுக்கு ஒப்பானவை எவையுமில்லை.

என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்: உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.

ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்: வியத்தகு செயல்கள் புரிபவர்: நீர் ஒருவரே கடவுள்!

ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும், உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.

என் தலைவரே! என் கடவுளே! என் முழு இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்: என்றென்றும் உமது பெயருக்கு மாட்சி அளிப்பேன்.

ஏனெனில், நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது! ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்!

கடவுளே! செருக்குற்றோர் எனக்கெதிராய் எழுந்துள்ளனர்: கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது: அவர்களுக்கு உம்மைப்பற்றிய நினைவே இல்லை.

என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்: அருள் மிகுந்தவர்: விரைவில் சினமுறாதவர்: பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர்.

என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்: உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்: உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.

நன் மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை எனக்கு அருளும்: என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்: ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமே எனக்குத் துணைசெய்து ஆறுதல் அளித்துள்ளீர்.

அதிகாரம் 87

நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.

யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றா+.

கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. (சேலா)

எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்: பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, “இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்“ என்று கூறப்படும்.

“இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்: உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!“ என்று சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.

மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, “இவர் இங்கேதான் பிறந்தார்“ என ஆண்டவர் எழுதுவார். (சேலா)

ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து “எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது: எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது“ என்பர்.

அதிகாரம் 88

ஆண்டவரே! என் மீட்பின் கடவுளே! பகலில் கதறுகிறேன்: இரவில் உமது முன்னிலையில் புலம்புகின்றேன்.

என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்!

ஏனெனில், என் உள்ளம் துன்பத்தால் நிறைந்துள்ளது: என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.

படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக நானும் கணிக்கப்படுகின்றேன்: வலுவிழந்த மனிதரைப்போல் ஆனேன்.

இறந்தோருள் ஒருவராகக் கைவிடப்பட்டேன்: கொலையுண்டு கல்லறையில் கிடப்பவர்போல் ஆனேன்: அவர்களை ஒருபோதும் நீர் நினைப்பதில்லை: அவர்கள் உமது பாதுகாப்பினின்று அகற்றப்பட்டார்கள்.

ஆழமிகு படுகுழிக்குள் என்னைத் தள்ளிவிட்டீர்! காரிருள் பள்ளங்களுக்குள் என்னைக் கைவிட்டு விட்டீர்.

உமது சினம் என்னை அழுத்துகின்றது: உம் அலைகள் அனைத்தும் என்னை வருத்துகின்றன. (சேலா)

எனக்கு அறிமுனமானவர்களை என்னைவிட்டு விலகச்செய்தீர்: அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்: நான் வெளியேற இயலாவண்ணம் அடைபட்டுள்ளேன்.

துயரத்தினால் என் கண் மங்கிப்போயிற்று: ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்: உம்மை நோக்கி என் கைகளைக் கூப்புகின்றேன்.

இறந்தோர்க்காகவா நீர் வியத்தகு செயல்கள் செய்வீர்? கீழுலகின் ஆவிகள் எழுந்து உம்மைப் புகழுமோ? (சேலா)

கல்லறையில் உமது பேரன்பு எடுத்துரைக்கப்படுமா? அழிவின் தலத்தில் உமது உண்மை அறிவிக்கப்படுமா?

இருட்டினில் உம் அருஞ்செயல்கள் அறியப்படுமா? மறதி உலகில் உம் நீதிநெறி உணரப்படுமா?

ஆண்டவரே! நானோ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்: காலையில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்.

ஆண்டவரே! என்னை ஏன் தள்ளவிடுகின்றீர்? உமது முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைக்கின்றீர்?

என் இளமைமுதல் நான் துன்புற்றுமடியும் நிலையில் உள்ளேன்: உம்மால் வந்த பெருந் திகிலால் தளாந்து போனேன்.

உமது வெஞ்சினம் என்னை மூழ்கடிக்கின்றது: உம் அச்சந்தரும் தாக்குதல்கள் என்னை அழிக்கின்றன.

அவை நான்முழுவதும் வெள்ளப்பெருக்கென என்னைச் சூழ்ந்து கொண்டன: அவை எப்பக்கமும் என்னை வளைத்துக்கொண்டன.

என் அன்பரையும் தோழரையும் என்னைவிட்டு அகற்றினீர்: இருளே என் நெருங்கிய நண்பன்.

அதிகாரம் 89

ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்: நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.

உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்: உமது உண்மை வானைப்போல் உறுதியானது.

நீர் உரைத்தது: “நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்: என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:

உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்: உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்“ (சேலா)

ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன: பயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும்.

வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்? தெய்வ மைந்தர் குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்?

பயவர் குழுவில் அவர் அஞ்சுதற்குரிய இறைவன்: அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர்.

படைகளின் கடவுளாகிய ஆண்டவரே! உம்மைப்போல் ஆற்றல் மிக்கவர் யார்? ஆண்டவரே! உம் உண்மை உம்மைச் சூழ்ந்துள்ளது.

கொந்தளிக்கும் கடல்மீது நீர் ஆட்சி செலுத்துகின்றீர்: பொங்கியெழும் அதன் அலைகளை அடக்குகின்றீர்.

இராகாபைப் பிணமென நசுக்கினீர்: உம் எதிரிகளை உம் வலிய புயத்தால் சிதறடித்தீர்.

வானமும் உமதே! வையமும் உமதே! பூவுலகையும் அதில் நிறைந்துள அனைத்தையும் நிலைநிறுத்தியவர் நீரே!

வடக்கையும் தெற்கையும் படைத்தவர் நீரே! தாபோரும் எர்மோனும் உம் பெயரைக் களிப்புடன் புகழ்கின்றன.

வன்மைமிக்கது உமது புயம்: வலிமைகொண்டது உமது கை: உயர்ந்து நிற்பது உம் வலக்கை:

நீதியும் நேர்மையும் உம் அரியணைக்கு அடித்தளம்: பேரன்பும் உண்மையும் உமக்கு முன்னே செல்லும்.

விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்: ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.

அவர்கள் நாள்முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்: உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள்.

ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை: உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது.

நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது: நம் அரசர் இஸ்ரயேலின் பயவருக்கு உரியவர்.

முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது: வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்: மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன்.

என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்: என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.

என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்: என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும்.

எதிரி எவனாலும் அவனை வஞ்சிக்க முடியாது: தீயவன் எவனாலும் அவனை ஒடுக்க இயலாது.

அவனுடைய எதிரிகளை அவன் கண்முன் நசுக்குவேன்: அவனை வெறுப்போரை வெட்டிக் கொல்வேன்.

என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்: என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.

அவன் கையைக் கடல்வரைக்கும் அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும் எட்டச் செய்வேன்.

“நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை“ என்று அவன் என்னை அழைப்பான்.

நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்: மண்ணகத்தின் மாபெரும் மன்னன் ஆக்குவேன்.

அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்: அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.

அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்: அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன்.

அவன் புதல்வர் என் திருச்சட்டத்தைக் கைவிட்டாலோ, என் நீதிநெறிகளின்படி நடக்காவிடிலோ,

என் விதிகளை மீறினாலோ, என் கட்டளைகளைக் கடைப்பிடிக்காவிடிலோ,

அவர்களது குற்றத்திற்காக அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்: அவர்களின் தீச்செயலுக்காக அவர்களைக் கசையால் அடிப்பேன்:

ஆயினும், என் பேரன்பை தாவீதைவிட்டு விலக்கமாட்டேன்: என் வாக்குப்பிறாழாமையினின்று வழுவமாட்டேன்.

என் உடன்படிக்கையை நான் மீறமாட்டேன். என் வாக்குறுதியை நான் மாற்றமாட்டேன்.

ஒரே முறையாய் என் புனிதத்தின் மீது ஆணையிட்டுக் கூறினேன்: ஒருபோதும் அவனுக்கு நான் பொய் உரைக்கமாட்டேன்.

அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்: அவனது அரியணை கதிரவன் உள்ளளவும் என்முன் நிலைக்கும்.

அது விண்ணின் உண்மையான சான்றென உறுதியாயிருக்கும்: நிலாவென என்றென்றும் நிலைத்திருக்கும். (சேலா)

ஆயினும், திருப்பொழிவு பெற்றவரை இப்போது நீர் புறக்கணித்துத் தள்ளிவிட்டீர்: அவர்மீது கடுஞ்சினம் கொண்டுள்ளீர்.

உம் ஊழியருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை வெறுத்து ஒதுக்கினீர்: அவரது மணிமுடியைப் புழுதில் தள்ளி இழிவுபடுத்தினீர்.

அவருடைய மதில்களைத் தகர்த்துவிட்டீர்: அவருடைய அரண்களைப் பாழடையச் செய்தீர்.

வழிப்போக்கர் அனைவரும் அவரைக் கொள்ளையிடுகின்றனர்: அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு அவர் ஆளானார்.

அவருடைய எதிரிகளின் கை ஓங்கச் செய்தீர்: அவருடைய பகைவர் அனைவரும் அக்களிக்கச் செய்தீர்.

அவரது வாளின் முனையை வளைத்துவிட்டீர்: போரில் அவரால் எதிர்த்து நிற்க முடியாதபடி செய்தீர்.

அவரது மாட்சி அவரைவிட்டு விலகச் செய்தீர்: அவரது அரியணையைக் கீழே தள்ளிவிட்டீர்,

அவரது இளமையைச் சுருக்கிவிட்டீர்: அவருக்கு வெட்கத்தை ஆடையாக்கினீர். (சேலா)

எவ்வளவு காலம் மறைந்திருப்பீர் ஆண்டவரே! என்றென்றுமா? எவ்வளவு காலம் உமது சினம் நெருப்பென எரிந்து கொண்டிருக்கும்?

எங்கள் ஆயுள் எவ்வளவு குறுகியது என்பதை நினைத்தருளும்: மானிடர் அனைவரையும் வீணாகவா படைத்துள்ளீர்?

என்றும் சாவைக் காணாமல் இருப்பவர் எவர்? பாதாளத்தின் பிடியினின்று தன்னைக் காத்துக் கொள்பவர் எவர்? (சேலா)

என் தலைவரே! தொடக்க காலத்தில் நீர் காட்டிய பேரன்பு எங்கே? தாவீதுக்கு உமது வாக்குப் பிறாழாமையை முன்னிட்டு உறுதியாகக் கூறியது எங்கே?

என் தலைவரே! உம் ஊழியர்மீது சுமத்தப்படும் பழியை நினைத்துப்பாரும்: மக்களினங்களின் பழிச்சொற்கள் அனைத்தையும் என் நெஞ்சில் தாங்குகிறேன்.

ஆண்டவரே! உம் எதிரிகள் அவர் மேல் பழி சுமத்துகின்றனர்: அவர்கள் உம்மால் திருப்பொழிவு பெற்றவரைச் சென்றவிடமெல்லாம் பற்றுகின்றனர்.

ஆண்டவர் என்றென்றும் புகழப்பெறுவாராக! ஆமென், ஆமென்.

அதிகாரம் 90

என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர்.

மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே!

மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்: “மானிடரே! மீண்டும் புழுதியாக்குங்கள்“ என்கின்றீர்.

ஏனெனில, ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.

வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்: அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்:

அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்: மாலையில் வாடிக் காய்ந்து போகும்.

உமது சினத்தால் நாங்கள் அழிந்து போகின்றோம்: உமது சீற்றத்தால் நாங்கள் திகைப்படைகின்றோம்.

எம் குற்றங்களை உம் கண்முன் நிறுத்தினீர்: மறைவான எம் பாவங்களை உம் திருமுக ஒளிமுன் வைத்தீர்.

எங்கள் அனைத்து வாழ்நாள்களும் உமது சினத்தால் முடிவுக்கு வந்துவிட்டன: எங்கள் ஆண்டுகள் பெருமூச்செனக் கழிந்துவிட்டன.

எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே: வலிமை மிகுந்தோர்க்கு எண்பது: அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்.

உமது சினத்தின் வலிமையை உணர்பவர் எவர்? உமது கடுஞ்சீற்றத்துக்கு அஞ்சுபவர் எவர்?

எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்: அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.

ஆண்டவரே, திரும்பி வாரும்: எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்: அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.

எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக எம்மை மகிழச் செய்யும்.

உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.

எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!

அதிகாரம் 91

உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர்.

ஆண்டவரை நோக்கி, நீரே என் புகலிடம்: என் அரண்: நான் நம்பியிருக்கும் இறைவன் என்று உரைப்பார்.

ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார்.

அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்: அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்: அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும்.

இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர்.

இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர்.

உம் பக்கம் ஆயிரம்போர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது.

பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை நீரே பார்ப்பீர்: உம் கண்ணாலேயே நீர் காண்பீர்.

ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்: உன்னதரை உம் உறைவிடமாக்கிக் கொண்டீர்.

ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது: வாதை உம் கூடாரத்தை நெருங்காது.

நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் பதர்க்கு அவர் கட்டளையிடுவார்.

உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்.

சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்: இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன்பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர்.

“அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்: அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்:

அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்: அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்: அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்:

நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளிப்பேன்: என் மீட்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்.“

அதிகாரம் 92

ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று: உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.

காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்

பத்துநரம்பு வீணையோடும் தம்புரு, சுரமண்டல இசையோடும் எடுத்துரைப்பது நன்று.

ஏனெனில், ஆண்டவரே! உம் வியத்தகு செயல்களால் என்னை மகிழ்வித்தீர்: உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து நான் மகிழ்ந்து பாடுவேன்.

ஆண்டவரே! உம் செயல்கள் எத்துணை மேன்மையாவை: உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை.

அறிவிலிகள் அறியாததும் மூடர் உணராததும் இதுவே:

பொல்லார் புல்லைப்போன்று செழித்து வளரலாம்: தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்! ஆனால், அவர்கள் என்றும் அழிவுக்கு உரியவரே:

நீரோ ஆண்டவரே! என்றுமே உயர்ந்தவர்.

ஏனெனில், ஆண்டவரே! உம் எதிரிகள் - ஆம், உம் எதிரிகள் - அழிவது திண்ணம்: தீமை செய்வோர் அனைவரும் சிதறுண்டுபோவர்.

காட்டைருமைக்கு நிகரான வலிமையை எனக்கு அளித்தீர்: புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர்.

என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டேன்: எனக்கு எதிரான பொல்லார்க்கு நேரிட்டதை நான் காதாரக் கேட்டேன்.

நேர்மையாளர் போ£ச்சை மரமெனச் செழித்தோங்குவர்: லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.

ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர்.

அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்: என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்:

“ஆண்டவர் நேர்மையுள்ளவர்: அவரே என் பாறை: அவரிடம் அநீதி ஏதுமில்லை“ என்று அறிவிப்பர்.

அதிகாரம் 93

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்: ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்: பூவுலகை அவர் நிலையப்படுத்தினார்: அது அசைவுறாது.

உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றள்ளது: நீர் தொ¡ன்றுதொட்டே நிலைத்துள்ளீர்.

ஆண்டவரே! ஆறுகள் குதித்தெழுந்தன: ஆறுகள் இரைச்சலிட்டன: ஆறுகள் ஆரவாரம் செய்தன.

பெருவெள்ளத்தின் இரைச்சலையும் கடலின் ஆற்றல்மிகு பேரலைகளையும்விட ஆண்டவர் வலிமை மிக்கவர்: அவரே உன்னதத்தில் உயர்ந்தவர்.

உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை: ஆண்டவரே! என்றென்றும் பய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும்.

அதிகாரம் 94

அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா! ஆண்டவரே! அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா, ஒளிர்ந்திடும்!

உலகின் நீதிபதியே, எழுந்தருளும்: செருக்குற்றோர்க்கு உரிய தண்டனையை அளியும்.

எத்துணைக் காலம், ஆண்டவரே! எத்துணைக் காலம் பொல்லார் அக்களிப்பர்?

அவர்கள் இறுமாப்புடன் பேசுகின்றனர்: தீமைசெய்வோர் அனைவரும் வீம்பு பேசுகின்றனர்.

ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்: உமது உரிமைச் சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர்.

கைம்பெண்டிரையும் அன்னியரையும் அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்: திக்கற்றவரை அவர்கள் கொலை செய்கின்றனர்.

“ஆண்டவர் இதைக் கண்டு கொள்வதில்லை: யாக்கோபின் கடவுள் கவனிப்பதில்லை“ என்கின்றனர்.

மக்களிடையே அறிவிலிகளாய் இருப்போரே, உணருங்கள்: மதிகேடரே, எப்பொழுது நீங்கள் அறிவு பெறுவீர்கள்?

செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ?

மக்களினங்களைக் கண்டிப்பவர், மானிடருக்கு அறிவூட்டுபவர் தண்டியாமல் இருப்பாரோ?

மானிடரின் எண்ணங்கள் வீணானவை: இதனை ஆண்டவர் அறிவார்.

ஆண்டவரே! நீர் கண்டித்து உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும் மனிதர் பேறுபெற்றோர்:

அவர்களின் துன்ப நாள்களில் அவர்களுக்கு அமைதி அளிப்பீர். பொல்லா¡க்குக் குழி வெட்டப்படும்வரை

ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்: தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார்.

தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்: நேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர்.

என் சார்பில் பொல்லார்க்கு எதிராக எழுபவர் எவர்? என் சார்பில் தீமை செய்வோர்க்கு எதிராக நிற்பவர் எவர்?

ஆண்டவர் எனக்குத் துணை நிற்காதிருந்தால், என் உயிர் விரைவில் மெளன உலகிற்குச் சென்றிருக்கும்!

“என் அடி சறுக்குகின்றது“ என்று நான் சொன்னபோது, ஆண்டவரே! உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று.

என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.

சட்டத்திற்குப் புறம்பாகத் தீமை செய்யும் ஊழல்மிகு ஆட்சியாளர் உம்மோடு ஒன்றாக இணைந்திருக்க முடியுமோ?

நேர்மையாளரின் உயிருக்கு உலை வைக்க அவர்கள் இணைகின்றனர்: மாசற்றோர்க்குக் கொலைத்தீர்ப்பு அளிக்கின்றனர்.

ஆண்டவரோ எனக்கு அரண் ஆனார்: என் கடவுள் எனக்குப் புகலிடம் தரும் பாறை ஆகிவிட்டார்.

அவர்கள் இழைத்த தீங்கை அவர்கள் மீதே திரும்பிவிழச் செய்வார்: அவர்கள் செய்த தீமையின் பொருட்டு அவர்களை அழிப்பார்: நம் கடவுளாம் ஆண்டவர் அவர்களை அழித்தே தீர்வார்.

அதிகாரம் 95

வாருங்கள்: ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.

நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்: புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.

ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்: தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.

பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன: மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன.

கடலும் அவருடையதே: அவரே அதைப் படைத்தார்: உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின.

வாருங்கள்: தாள்பணிந்து அவரைத் தொழுவோம்: நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.

அவரே நம் கடவுள்: நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்: நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!

அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்: என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.

நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது: “அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்: என் வழிகளை அறியாதவர்கள்“.

எனவே, நான் சினமுற்று, “நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்“ என்று ஆணையிட்டுக் கூறினேன்.

அதிகாரம் 96

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்:

ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்: அவர் பெயரை வாழ்த்துங்கள்: அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.

பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்: அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்: பெரிதும் போற்றத் தக்கவர்: தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.

மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே: ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்.

மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன: ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன:

மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.

ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்: உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.

பய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்: உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள்.

வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: “ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்: பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது: அது அசைவுறாது: அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.

விண்ணுலகம் மகிழ்வதாக: மண்ணுலகம் களிகூர்வதாக: கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.

வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்: அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.

ஏனெனில் அவர் வலுகின்றார்: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்: நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.

அதிகாரம் 97

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவுநாடுகள் களிகூர்வனவாக!

மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன: நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம்.

நெருப்பு அவர்முன் செல்கின்றது: சுற்றிலுமுள்ள அவர்தம் எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.

அவர்தம் மின்னல்கள் பூவுலகை ஒளிர்விக்கின்றன: மண்ணுலகம் அதைக் கண்டு நடுங்குகின்றது.

ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன.

வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன: அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன.

உருவங்களை வழிபடுவோரும் சிலைகள் பற்றிப் பெருமையடித்துக் கொள்வோரும் வெட்கத்துக்கு உள்ளாவர்: அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள்.

ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகளை சீயோன் கேட்டு மகிழ்கின்றது: யூதாவின் நகர்கள் களிகூர்கின்றன.

ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்: தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே!

தீமையை வெறுப்போர்மீது ஆண்டவர் அன்பகூர்கின்றார். அவர்தம் பற்றுமிகு அடியார்களின் உயிரைப் பாதுகாக்கின்றார்: பொல்லாரின் கையினின்று அவர்களை விடுவிக்கின்றார்.

நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.

நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்: அவரது பய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள்.

அதிகாரம் 98

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். ஆவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்: பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.

இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

உலகெங்கும் வாழ்வோரே! ஆனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்தேத்துங்கள்: யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.

ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்,

கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!

ஆறுகளே! கைகொட்டுங்கள்: மலைகளே! ஒன்றுகூடுங்கள்:

ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்: ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்: பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்: மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.

அதிகாரம் 99

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்: மக்களினத்தார் கலங்குவராக! அவர் கெருபுகள்மீது வீற்றிருக்கின்றார்: மண்ணுலகம் நடுநடுங்குவதாக!

சீயோனில் ஆண்டவர் மேன்மையுடன் விளங்குகின்றார்: எல்லா இனத்தார் முன்பும் மாட்சியுடன் திகழ்கின்றார்.

மேன்மையானதும் அஞ்சுதற்கு உரியதுமான அவரது பெயரை அவர்கள் போற்றுவார்களாக! அவரே பயவர்.

வல்லமைமிக்க அரசரே! நீதியை நீர் விரும்புகின்றீர்: நேர்மையை நிலைக்கச் செய்கின்றீர்: யாக்கோபினரிடையே நீதியையும் நேர்மையையும் நீர்தாமே நிலைநாட்டுகின்றீர்.

நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்: தாள் பணிந்து வணங்குங்கள்: அவரே பயவர்!

மோசேயும் ஆரோனும் அவர்தம் குருக்கள்: அவரது பெயரால் மன்றாடுவோருள் சாமுவேலும் ஒருவர்: அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினர்: அவரும் அவர்களுக்குச் செவிசாய்த்தார்.

மேகத் பணிலிருந்து அவர்களோடு பேசினார்: அவர்கள் அவருடைய ஒழுங்கு முறைகளையும் அவர் அவர்களுக்குத் தந்த நியமங்களையும் கடைப்பிடித்தார்கள்.

எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! நீர் அவர்களுக்குச் செவிசாய்த்தீர்: மன்னிக்கும் கடவுளாக உம்மை வெளிப்படுத்தினீர்: ஆயினும், அவர்களுடைய தீச்செயல்களுக்காய் நீர் அவர்களைத் தண்டித்தீர்.

நம் கடவுளாகிய ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்: அவரது திருமலையில் அவரைத் தொழுங்கள். ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவரே பயவர்.

அதிகாரம் 100

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!

ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!

ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்!

ஏனெனில், ஆண்டவர் நல்லவர்: என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு: தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.

அதிகாரம் 101

இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்: ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன்.

மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்: எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? பய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்.

இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்: அது என்னைப் பற்றிக்கொள்ளாது.

வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலைவில் இருக்கும்: தீதான எதையும் நான் அறியேன்.

தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்: கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்:

நாட்டில் நம்பிக்கைக்குரியோரைக் கண்டுபிடித்து என்னோடு வாழச் செய்வேன்: நேரிய வழியில் நடப்போரை எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன்:

வஞ்சனை செய்வோருக்கு என் மாளிகையில் இடமில்லை. பொய் உரைப்போர் என் கண்முன் நிலைப்பதில்லை.

நாட்டிலுள்ள பொல்லார் அனைவரையும் நாள்தோறும் அழிப்பேன்: ஆண்டவரின் நகரினின்ற தீங்கிழைப்போரை ஒழிப்பேன்.

அதிகாரம் 102

ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்! என் அபயக்குரல் உம்மிடம் வருவதாக!

நான் இடுக்கண் உற்ற நாளிலே உமது முகத்தை மறைக்காதீர்! உமது செவியை என் பக்கமாகத் திருப்பியருளும்! நான் மன்றாடும் நாளில் விரைவாய் எனக்குப் பதிலளியும்!

என் வாழ்நாள்கள் புகையென மறைகின்றன: என் எலும்புகள் தீச்சூழையென எரிகின்றன.

என் இதயம் புல்லைப்போலத் தீய்ந்து கருகுகின்றது: என் உணவையும் நான் உண்ண மறந்தேன்.

என் பெருமூச்சின் பேரொலியால், என் எலும்புகள் சதையோடு ஒட்டிக் கொண்டன.

நான் பாலைநிலப் பறவைபோல் ஆனேன்: பாழ் நிலத்தின் ஆந்தைபோல் ஆனேன்.

நான் பக்கமின்றித் தவிக்கின்றேன்: கூரைமேல் தனிமையாய் இருக்கும் பறவைபோல் ஆனேன்.

என் எதிரிகள் நாள்முழுதும் என்னை இழித்துரைக்கின்றனர்: என்னை எள்ளி நகையாடுவோர் என் பெயரைச் சொல்லிப் பிறரைச் சபிக்கின்றனர்.

சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்: என் மதுக்கலவையோடு கண்ணீரைக் கலக்கின்றேன்.

ஏனெனில், உமது சினத்திற்கும் சீற்றத்திற்கும் உள்ளானேன்: நீர் என்னைத் பக்கி எறிந்துவிட்டீர்.

மாலை நிழலைப்போன்றது எனது வாழ்நாள்: புல்லென நான் உலர்ந்து போகின்றேன்.

ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்: உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும்.

நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்: இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.

அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்: அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர்.

வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்: பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.

ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்: அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.

திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்: அவர்களின் மன்றாட்டை அவமதியார்.

இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்: படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.

ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்: அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்.

அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்: சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.

சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும்: எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும்.

அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர்.

என் வாழ்க்கைப் பாதையின் நடுவில் ஆண்டவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்: அவர் என் ஆயுளைக் குறுக்கிவிட்டார்.

நான் உரைத்தது: என் இற¨வா! என் வாழ்நாளின் இடையில் என்னை எடுத்துக் கொள்ளாதேயும்: உமது காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ?

முற்காலத்தில் நீர் பூவுலகுக்கு அடித்தளமிட்டீர்: விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ!

அவையோ அழிந்துவிடும்: நீரோ நிலைத்திருப்பீர்: அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்: அவற்றை நீர் உடையென மாற்றுகின்றீர்: அவையும் மறைந்துபோம்.

நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது.

உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்: அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்!

அதிகாரம் 103

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்: உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.

அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்: அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்.

அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்: உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்.

ஆண்டவரின் செயல்கள் நீதியானவை: ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார்.

அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்: அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார்.

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்: நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்: என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.

அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை: நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை.

அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது.

மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ: அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.

தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.

அவர் நமது உருவத்தை அறிவார்: நாம் பசி என்பது அவர் நினைவிலுள்ளது.

மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது: வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள்.

அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது: அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது.

ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்: அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்.

அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.

ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்: அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது.

அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் பதர்களே! அவரைப் போற்றுங்கள்.

ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள்.

ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும் அனைத்துப் படைப்புகளே! ஆண்டவரைப் போற்றுங்கள்! என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

அதிகாரம் 104

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.

பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்: வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்:

நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்: கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்: காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றனவர்!

காற்றுகளை உம் பதராய் நியமித்துள்ளவர்: தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர்.

நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்: அது என்றென்றும் அசைவுறாது.

அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது: மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது:

நீவீர் கண்டிக்கவே அது விலகி ஓடியது: நீவீர் இடியென முழங்க, அது திகைப்புற்று ஓடியது:

அது மலைகள்மேல் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, அதற்கெனக் குறித்த இடத்தை அடைந்தது:

அது மீறிச்செல்லாதவாறு அதற்கு எல்லை வகுத்தீர்: பூவுலகை அது மீண்டும் மூடிவிடாதபடி செய்தீர்:

பள்ளத்தாக்குகளில் நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்: அவை மலைகளிடையே பாய்ந்தோடும்:

அவை காட்டு விலங்குகள் அனைத்திற்கும் குடிக்கத் தரும்: காட்டுக் கழுதைகள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்:

நீருற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக்கொள்கின்றன: அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன:

உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்: உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது.

கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்: மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றர்: இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்:

மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத் திராட்சை இரசமும், முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும் மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட அப்பமும் அளிக்கின்றீர்.

ஆண்டவரின் மரங்களுக்கு - லெபனோனில் அவர் நட்ட கேதுரு மரங்களுக்கு -நிறைய நீர் கிடைக்கின்றது.

அங்கே பறவைகள் கூடுகள் கட்டுகின்றன: தேவதாரு மரங்களில் கொக்குகள் குடியிருக்கின்றன.

உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்: கற்பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாகும்.

காலங்களைக் கணிக்க நிலவை நீர் அமைத்தீர்: ஆதவன் தான் மறையும் நேரத்தை அறிவான்.

இருளை நீர் தோன்றச் செய்யவே, இரவு வருகின்றது: அப்போது, காட்டு விலங்குகள் அனைத்தும் நடமாடும்.

இளஞ்சிங்கங்கள் இரைக்காகக் கர்ச்சிக்கின்றன: அவை இறைவனிடமிருந்து தங்கள் உணவைத் தேடுகின்றன.

கதிரவன் எழவே அவை திரும்பிச் சென்று தம் குகைகளுக்குள் படுத்துக்கொள்கின்றன.

அப்பொழுது மானிடர் வேலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்: அவர்கள் மாலைவரை உழைக்கின்றனர்.

ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.

இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்: அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.

அங்கே கப்பல்கள் செல்கின்றன: அங்கே துள்ளிவிளையாட லிவியத்தானைப் படைத்தீர்!

தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன.

நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன: நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன.

நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்: நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.

உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன: மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!

மண்ணுலகின்மீது அவர் தம் பார்வையைத் திருப்ப, அது நடுங்கும்: மலைகளை அவர் தொட, அவை புகை கக்கும்.

நான் வாழும் நாளெல்லாம் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்: என்னுயிர் உள்ளவரையிலும் என் கடவுளுக்குப் புகழ் சாற்றிடுவேன்.

என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.

பாவிகள் பூவுலகினின்று ஒழிந்து போவார்களாக! தீயோர்கள் இனி இல்லாது போவார்களாக! என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! அல்லேலு¡யா!

அதிகாரம் 105

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.

அவருக்குப் பாடல் பாடுங்கள்: அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!

அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!

ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!

அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.

அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!

அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.

அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்: ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறதியை நினைவுகூர்கின்றார்.

ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார்.

யாக்கோபுக்கு நியமமாகவும் இஸ்ரயேலுக்கு என்றுமுள உடன்படிக்கையாகவும் அதை அவர் உறுதிப்படுத்தினார்.

“கானான் நாட்டை உங்களுக்கு அளிப்பேன்: அப் பங்கே உங்களுக்கு உரிமைச் சொத்தாய் இருக்கும்“ என்றார் அவர்.

அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும் குறைந்தவராய் இருந்தார்கள்: அங்கே அவர்கள் அன்னியராய் இருந்தார்கள்.

அவர்கள் ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டிற்கும் ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும் அலைந்து திரிந்தார்கள்.

யாரும் அவர்களை ஒடுக்குமாறு அவர் விட்டு விடவில்லை: அவர்களின் பொருட்டு மன்னர்களை அவர் கண்டித்தார்.

“நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்! என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர்“ என்றார் அவர்.

நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்: உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார்.

அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பிவைத்தார்: யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார்.

அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர். அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர்.

காலம் வந்தது: அவர் உரைத்தது நிறைவேறிற்று: ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது.

மன்னர் ஆளனுப்பி அவரை விடுதலை செய்தார்: மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்:

அவ+ அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்: தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார்.

அவர் அரச அலுவலரைப் பயிற்றுவித்தார்: அவருடைய அவைப்பெரியோருக்கு நல்லறிவு புகட்டினார்.

பின்னர், இஸ்ரயேல் எகிப்துக்கு வந்தார்: யாக்கோபு காம் நாட்டில் அன்னியராய் வாழ்ந்தார்.

ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்: அவர்களின் எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார்.

தம் மக்களை வெறுக்கும்படியும், தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும்படியும் அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார்.

அவர்தம் ஊழியராகிய மோசேயையும், தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.

அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்: காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர்.

அவர் இருளை அனுப்பி நாட்டை இருட்டாக்கினார்: அவருடைய சொற்களை எதிர்ப்பார் இல்லை.

அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார்: அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார்.

அவர்களது நாட்டிற்குள் தவளைகள் ஏறிவந்தன: மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும் அவை நுழைந்தன.

அவர் கட்டளையிட, அவர்களுடைய நாடு முழுவதிலும் ஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன.

அவர் நீருக்குப் பதிலாகக் கல்லை மழையாகப் பொழிந்தார்: அவர்களது நாடெங்கும் மின்னல் தெறிக்கச் செய்தார்.

அவர் அவர்களின் திராட்சைச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார்: அவர்களது நாடெங்குமுள்ள மரங்களை முறித்தார்.

அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும் எண்ணற்ற வெட்டுப்புழுக்களும் அங்கே தோன்றின.

அவை அவர்களது நாட்டின் பயிர் பச்சைகளைத் தின்றுத்தீ+த்தன: அவர்களது நிலத்தின் விளைச்சல்களை விழுங்கிவிட்டன.

அவர் அவர்களது நாட்டின் தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்: அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள் அனைத்தையும் வீழ்த்தினார்.

அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச் செய்தார்: அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை.

அவர்கள் வெளியேறுகையில் எகிப்தியர் அகமகிழ்ந்தனர்: ஏனெனில், இஸ்ரயேலர் பற்றிய பேரச்சம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.

அவர் அவர்களைப் பாதுகாக்க மேகத்தைப் பரப்பினார்: இரவில் ஒளிதர நெருப்பைத் தந்தார்.

அவர்கள் கேட்டதால் அவர் காடைகளை வரச்செய்தார்: வானினின்று வந்த உணவால் அவர்களை நிறைவுறச் செய்தார்.

அவர் கற்பாறையைப் பிளந்தார்: தண்ணீர் பொங்கி வழிந்தது: அது பாலைநிலங்களில் ஆறாய் ஓடிற்று.

ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது பய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.

அவர் தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்: அவர்தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்.

அவர் வேற்றினத்தாரின் நாடுகளை அவர்களுக்கு அளித்தார்: மக்களினங்களது உழைப்பின் பயனை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்தார்.

அவர்கள் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும், அவருடைய சட்டங்களின்படி ஒழுகவுமே அவர் இவ்வாறு செய்தார். அல்லேலு¡யா!

அதிகாரம் 106

அல்லேலு¡யா! ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றுமுள்ளது அவரது பேரன்பு!

ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? ஆவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்?

நீதிநெறி காப்போர் பேறு பெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபேற்றோர்!

ஆண்டவரே! நீர் உம்மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவு கூரும்! அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணைசெய்யும்!

நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்: உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்! அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும்.

எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்: குற்றம் புரிந்தோம்: தீமை செய்தோம்.

எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர்செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை: உமது மாபெரும் பேரன்பை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை: மாறாக உன்னதமானவரை எதிர்த்துச் செங்கடல் ஓரத்தில் கலகம் செய்தனர்.

அவரோ பெயரின் பொருட்டு அவர்களை விடுவித்தார்: இவ்வாறு அவர் தமது வலிமையை வெளிப்படுத்தினார்.

அவர் செங்கடலை அதட்டினார்: அது உலர்ந்து போயிற்று: பாலை நிலத்தில் நடத்திச் செல்வது போல் அவர்களை ஆழ்கடல் வழியே நடத்திச்சென்றார்.

எதிரியின் கையினின்று அவர்களை விடுவித்தார்: பகைவரின் பிடியினின்று அவர்களை மீட்டார்.

அவர்களுடைய எதிரிகளைக் கடல்நீர் மூழ்கடித்தது: அவர்களுள் ஒருவர்கூட எஞ்சியிருக்கவில்லை.

அப்பொழுது, அவர்கள் அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்தார்கள்: அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.

ஆயினும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவிலேயே மறந்துவிட்டார்கள்: அவரது அறிவுரைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை.

பாலைநிலத்தில் அவர்கள் பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள். பாழ்வெளியில் அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள்.

அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குச் கொடுத்தார்: அவர்களின் உயிரை அழிக்குமாறு அவர்கள்மீது நோயை அனுப்பினார்.

பாளையத்தில் இருக்கும்போது மோசேயின்மீதும், ஆண்டவருக்காகத் திருநிலைபெற்ற ஆரோன்மீதும், அவர்கள் பொறாமை கொண்டார்கள்.

நிலம்பிளந்து தாத்தானை விழுங்கியது: அபிராமின் கும்பலை அப்படியே புதைத்து விட்டது.

அக்கும்பலிடையே நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது: தீயோரைத் தீப்பிழம் பு எரித்தது.

அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக் குட்டியைச் செய்துகொண்டனர்: வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்:

தங்கள் மாட்சி க்குப் பதிலாக புல்தின்னும் காளையின் உருவத்தைச் செய்து கொண்டனர்:

தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்: எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்:

காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்: செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர்.

ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்: ஆனால், அவரால் தேர்ந்து கொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர் போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார்.

அருமையான நாட்டை அவர்கள் இகழ்ந்தார்கள்: அவரது வாக்குறுதியில் நம்பிக்கை கொள்ளவில்லை.

அவர்கள் தங்களின் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்: ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை.

ஆகவே அவர் அவர்களுக்கு எதிராகத் தம் கையை ஓங்கி “நான் உங்களைப் பாலைநிலத்தில் வீழ்ச்சியுறச் செய்வேன்:

உங்கள் வழிமரபினரை வேற்றினங்களிடையிலும் அன்னிய நாடுகளிலும் சிதறடிப்பேன்“ என்றார்.

பின்னர் அவர்கள் பாகால்பெயோரைப் பற்றிக் கொண்டார்கள். உயிரற்ற தெய்வங்களுக்குப் பலியிட்டவற்றை உண்டார்கள்:

இவ்வாறு தங்கள் செய்கைகளினால் அவருக்குச் சினமூட்டினார்கள்: ஆகவே, கொள்ளைநோய் அவர்களிடையே பரவிற்று.

பினகாசு கொதித்தெழுந்து தலையிட்டதால் கொள்ளைநோய் நீங்கிற்று.

இதனால், தலைமுறை தலைமுறையாக என்றென்றும், அவரது செயல் நீதியாகக் கருதப்பட்டது.

மெரிபாவின் ஊற்றினருகில் அவருக்குச் சினமூட்டினார்கள். அவர்களின் பொருட்டு மோசேக்கும் தீங்கு நேரிட்டது.

மோசேக்கு அவர்கள் மனக்கசப்பை ஏற்படுத்தியதால் அவர் முன்பின் பாராது பேசினார்.

ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, மக்களினங்களை அவர்கள் அழிக்கவில்லை.

வேற்றினத்தாரோடு கலந்துறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர்:

அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்: அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின.

அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர்:

மாசற்ற இரத்தத்தை, தங்கள் புதல்வர் புதல்வியரின் இரத்தத்தைச் சிந்தினர்: கானான் நாட்டுத் தெய்வங்களின் சிலைகளுக்கு அவர்களைப் பலியிட்டார்கள்: அவர்களின் இரத்தத்தால் நாடு தீட்டுப்பட்டது.

அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக் கறைப்படுத்திக் கொண்டனர்: தங்கள் செயல்கள் மூலம் வேசித்தனம் செய்தனர்.

எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கெதிராகப் பற்றியெரிந்தது: தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார்.

வேற்றினத்தாரின் கையில் அவர் அவர்களை ஒப்படைத்தார்: அவர்களை வெறுத்தோரே அவர்களை ஆட்சி செய்தனர்.

அவர்கள் எதிரிகள் அவர்களை ஒடுக்கினர்: தங்கள் கையின்கீழ் அவர்களைத் தாழ்த்தினர்.

பன்முறை அவர் அவர்களை விடுவித்தார்: அவர்களோ திட்டமிட்டே அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்: தங்கள் தீச்செயல்களினால் அவர்கள் தாழ்நிலை அடைந்தனர்.

எனினும் அவர் அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார்.

அவர்களுக்கு உதவுமாறு, அவர் தமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்: தமது பேரன்பிற்கேற்பக் கழிவிரக்கம் கொண்டார்:

அவர்களைச் சிறைசெய்த அனைவர் முன்னிலையிலும் அவர்கள் இரக்கம் பெறும்படி செய்தார்.

எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! எங்களை விடுவித்தருளும்: வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும்: அப்பொழுது நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்: உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்.

இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக! மக்கள் அனைவரும் ஆமென் எனச் சொல்வார்களாக! அல்லேலு¡யா!

அதிகாரம் 107

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று அவரால் மீட்கப்பட்டோர்,

கிழக்கினின்றும், மேற்கினின்றும் வடக்கினின்றும் தெற்கினின்றும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டோர் சொல்வார்களாக.

பாலைநிலத்தில் பாழ் வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்: குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை:

பசியுற்றனர்: தாகமுற்றனர்: மனச்சோர்வுற்றுக் களைத்துப்போயினர்.

தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார்.

நேரிய பாதையில் அவர்களை வழிநடத்தினார்: குடியிருக்கும் நகரை அவர்கள் அடையச் செய்தார்.

ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!

ஏனெனில், தாகமுற்றோ¡க்கு அவர் நிறைவளித்தார்: பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார்.

சிலர் காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்தனர்: விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர்.

ஏனெனில், அவர்கள் இறைவனின் கட்டளைகளை எதிர்த்து நின்றனர்: உன்னதரின் அறிவுரைகளைப் புறக்கணித்தனர்.

கடும் வேலையால் அவர் அவர்களின் உள்ளத்தைச் சிறுமைப்படுத்தினார்: அவர்கள் நிலைகுலைந்து போயினர்: அவர்களுக்குத் துணைசெய்வார் எவருமிலர்.

அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர் அவர்களைத் துன்பங்களிலிருந்து விடுவித்தார்.

காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்த அவர்களை அவர் வெளிக்கொணர்ந்தார். அவர்களைப் பிணித்திருந்த தளைகளைத் தகர்த்தெறிந்தார்.

ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!

ஏனெனில், வெண்கலக் கதவுகளை அவர் தகர்த்துவிட்டார்: இரும்புத் தாழ்ப்பாள்களை உடைத்துவிட்டார்.

சிலர் தங்கள் தீயநெறிகளை முன்னிட்டு நோய்களுக்கு உள்ளாயினர்: அவர்களுடைய தீச்செயல்களின் பொருட்டுத் துன்பங்களுக்கு உள்ளாயினர்.

எல்லா உணவையும் அவர்களின் மனம் வெறுத்தது: சாவின் வாயில்களை அவர்கள் நெருங்கினார்கள்.

அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார்.

தம் வார்த்தையை அவர் அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார்: அழிவினின்று அவர்களை விடுவித்தார்.

ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!

நன்றிப் பலிகளை அவர்கள் செலுத்துவார்களாக! அக்களிப்போடு அவர்தம் செயல்களைப் புகழ்ந்தேத்துவார்களாக!

சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்: நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர்.

அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்: ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர்.

அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது: அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது.

அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்: பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்: அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது.

குடிவெறியரைப் போல் அவர்கள் தள்ளாடித் தடுமாறினர்: அவர்களின் திறனெல்லாம் பயனற்றுப் போயிற்று.

தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.

புயல்காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்: கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன.

அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்: அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.

ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்தவார்களாக!

மக்களின் பேரவையில் அவரைப் புகழ்ந்தேத்துவார்களாக! பெரியோரின் மன்றத்தில் அவரைப் போற்றுவார்களாக!

ஆறுகளை அவர் பாலை நிலமாக்கினார்: நீரோடைகளை அவர் வறண்ட தரையாக்கினார்.

செழிப்பான நிலத்தை உவர் நிலமாக்கினார்: அங்குக் குடியிருந்தோரின் தீச்செயலை முன்னிட்டு இப்படிச் செய்தார்.

பாலை நிலத்தையோ நீர்த் தடாகமாக மாற்றினார்: வறண்ட நிலத்தை நீருற்றுகளாகச் செய்தார்.

பசியுற்றோரை அங்கே குடியேற்றினார்: அவர்கள் அங்கே குடியிருக்க நகரொன்றை அமைத்தனர்.

அங்கே அவர்கள் வயலில் விதைத்தனர்: திராட்சைத் தோட்டங்களை அமைத்தனர்: அறுவடைக்கான கனிகளை அவை ஈன்றன.

அவர் ஆசி வழங்கினார்: அவர்கள் மிகுதியாகப் பல்கிப் பெருகினர்: அவர்களின் கால்நடைகளைக் குறைந்துபோக விடவில்லை.

பின்பு, அவர்களின் தொகை குறைந்தது: அவர்கள் ஒடுக்கப்பட்டு, துன்புறுத்துப்பட்டு இகழ்ச்சிக்கு உள்ளாயினர்.

தலைவர்கள்மேல் இகழ்ச்சியைக் கொட்டி, அவர்களைப் பாதையற்ற பாழ் வெளியில் அலையச் செய்தார் அவர்.

ஆனால், எளியோரை அவர் துன்ப நிலையினின்று பக்கிவிட்டார், அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பெருகச் செய்தார்.

நேர்மையுள்ளோர் இதைப் பார்த்து மகிழ்கின்றனர்: தீயோர் யாவரும் தங்கள் வாயை மூடிக்கொள்கின்றனர்.

ஞானமுள்ளோர் இவற்றைக் கவனத்தில் கொள்ளட்டும்! அவர்கள் ஆண்டவரின் பேரன்பை உணர்ந்து கொள்ளட்டும்!

அதிகாரம் 108

என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது: கடவுளே! என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது: நான் பாடுவேன். உம்மைப் புகழ்ந்து பாடுவேன். என் நெஞ்சே! விழித்தெழு:

வீணையே! யாழே! விழித்தெழுங்கள்: வைகறையை விழித்தெழச் செய்வேன்.

ஆண்டவரே, மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்: எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

ஏனெனில், வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு! முகில்களைத் தொடுகின்றது உமது உண்மை!

கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!

உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு உமது வலக்கையால் அவர்களுக்குத் துணை செய்யும்! என் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!

கடவுள் தமது பயகத்தினின்று இவ்வாறு உரைத்தார்: வெற்றிக் களிப்பிடையே செக்கேமைப் பங்கிடுவேன்: சுக்கோத்துப் பள்ளத்தாக்கை அளந்து கொடுப்பேன்!

கிலயாது என்னுடையது: மனாசேயும் என்னுடையதே: எப்ராயிம் என் தலைச்சீரா, யூதா என் செங்கோல்!

மோவாபு! எனது பாதங்கழுவும் பாத்திரம்: ஏதோமின்மீது எனது மிதியடியை எறிவேன்: பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்!

அரண்சூழ் நகரினுள் என்னை இட்டுச் செல்பவர் யார்? ஏதோம்வரைக்கும் என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?

கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு விட்டீர் அன்றோ? கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ?

எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்: மனிதர் தரும் உதவியோ வீண்:

கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்: அவரே நம் எதிரிகளை மிதித்துவிடுவார்.

அதிகாரம் 109

என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மெளனமாய் இராதேயும்.

தீயோரும் வஞ்சனை செய்வோரும் எனக்கெதிராய்த் தம் வாயைத் திறந்துள்ளனர்: எனக்கெதிராய் அவர்கள் பொய்களைப் பேசியுள்ளனர்.

பகைவரின் சொற்கள் என்னைச் சூழ்ந்துள்ளன: அவர்கள் காரணமின்றி என்னைத் தாக்குகின்றனர்.

நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக என்மேல் குற்றம் சாட்டினர்: நானோ அவர்களுக்காக மன்றாடினேன்.

நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமையே செய்தனர்: அன்புக்குப் பதிலாக அவர்கள் வெறுப்பையே காட்டினர்:

அவர்கள் கூறியது: அவனுக்கு எதிராகத் தீயவனை எழும்பச் செய்யும்! “குற்றம் சாட்டுவோன்“ அவனது வலப்பக்கம் நிற்பானாக!

நீதி விசாரணையின்போது அவன் தண்டனை பெறட்டும்! அவன் செய்யும் வேண்டுகோள் குற்றமாகக் கருதப்படுவதாக!

அவனது வாழ்நாள் சொற்பமாகட்டும்: அவனது பதவியை வேறோருவன் எடுத்துக் கொள்ளட்டும்!

அவனுடைய பிள்ளைகள் தந்தை இழந்தோர் ஆகட்டும்! அவனுடைய மனைவி கைம்பெண் ஆகட்டும்!

அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சை எடுக்கட்டும்! பாழான தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படட்டும்!

அவனுக்கு உரியவற்றை எல்லாம் கடன் கொடுத்தவன் பறித்துக் கொள்ளட்டும்! அவனது உழைப்பின் பயனை அன்னியர் கொள்ளையடிக்கட்டும்!

அவனுக்கு இரக்கங்காட்ட ஒருவனும் இல்லாதிருக்கட்டும்! தந்தையை இழந்த, அவனுடைய பிள்ளைகள்மேல் யாரும் இரங்காதிருக்கட்டும்!

அவன் வழி மரபு அடியோடு அழியட்டும்! அடுத்த தலைமுறைக்கு அவர்களுடைய பெயர் இல்லாது போகட்டும்!

அவனுடைய மூதாதையரின் குற்றத்தை ஆண்டவர் நினைவில் கொள்ளட்டும்! அவனுடைய தாய் செய்த பாவத்தை அவர் மன்னியாது இருக்கட்டும்!

அவை என்றும் ஆண்டவர் திருமுன்னே இருக்கட்டும்! அவனது நினைவை பூவுலகினின்று அடியோடு அவர் அகற்றட்டும்!

ஏனெனில், அவன் இரக்கம் காட்ட நினைக்கவில்லை: எளியோரையும் வறியோரையும் கொடுமைப்படுத்தினான்: நெஞ்சம் நொறுங்குண்டோரைக் கொலைசெய்யத் தேடினான்.

சபிப்பதையே அவன் விரும்பினான்: விரும்பிய அதுவே அவன்மீது விழட்டும்! ஆசி வழங்குவதை அவன் விரும்பவில்லை: ஆகவே அது அவனைவிட்டுத் தொலைவில் செல்லட்டும்!

சாபமே அவன் அணிந்த ஆடை: தண்ணீரென அவன் உடலையும் எண்ணெயென அவன் எலும்புகளையும் அது நனைக்கட்டும்!

அது அவனைப் போர்த்தும் ஆடைபோல் இருக்கட்டும்! நாள்தோறும் அவன் கட்டும் கச்சைபோல் இருக்கட்டும்!

என்னைக் குற்றம் சாட்டுவோருக்கும், எனக்கு எதிராகத் தீயன பேசுவோருக்கும் ஆண்டவர் அளிக்கும் கைம்மாறாக அது இருப்பதாக!

ஆனால், என் தலைவராகிய கடவுளே! உமது பெயரை முன்னிட்டு என் சார்பாகச் செயல்படும்! உமது பேரன்பின் இனிமைபொருட்டு என்னை மீட்டருளும்!

நானோ எளியவன்: வறியவன்: என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.

மாலைநேர நிழலைப்போல் நான் மறைந்து போகின்றேன்: வெட்டுக் கிளியைப் போல நான் காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றேன்.

நோன்பினால் என் முழங்கால்கள் தளர்வுறுகின்றன: என் உடல் வலிமை இழந்து மெலிந்து போகின்றது.

நானோ அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன்: என்னைப் பார்க்கின்றோர் தலையை ஆட்டுகின்றனர்.

ஆண்டவரே! என் கடவுளே! எனக்கு உதவியருளும்! உமது பேரன்பிற்கேற்ப மீட்டருளும்!

இது உம் ஆற்றலால் நிகழ்ந்தது என அவர்கள் அறியட்டும்! ஆண்டவரே! இதைச் செய்தவர் நீரே என அவர்கள் உணரட்டும்.

அவர்கள் என்னைச் சபித்தாலும் நீர் எனக்கு ஆசி வழங்கும்! எனக்கு எதிராக எழுவோ+ இழிவுறட்டும்! உம் ஊழியனாகிய நான் அகமகிழ்வேன்.

என்னைக் குற்றஞ்சாட்டுவோர்க்கு மானக்கேடு மேலாடை ஆகட்டும்! அவர்களின் வெட்கம் அவர்களுக்கு மேலங்கி ஆகட்டும்!

என் நாவினால் ஆண்டவரைப் பெரிதும் போற்றிடுவேன்: பெரும் கூட்டத்திடையே அவரைப் புகழ்ந்திடுவேன்.

ஏனெனில், வறியோரின் வலப்பக்கம் அவர் நிற்கின்றார்: தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார்.

அதிகாரம் 110

ஆண்டவர் என் தலைவரிடம் “நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்“ என்று உரைத்தார்.

வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச்செய்வார்: உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!

நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் பய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்: வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.

“மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே“ என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார் அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்.

என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: தம் சினத்தின் நாளில் மன்னர்களை நொறுக்குவார்.

வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து அவற்றைப் பிணத்தால் நிரப்பவார்: பாருலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார்.

வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்: ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.

அதிகாரம் 111

அல்லேலு¡யா! நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்: நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை: அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர்.

அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது: அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது.

அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்: அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்.

அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்: தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்:

வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்: இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.

அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை: நீதியானவை: அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை.

என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை: உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை.

தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்: தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்: அவரது திருப்பெயர் பயது: அஞ்சுதற்கு உரியது.

ஆண்டவர்பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்: அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்: அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது.

அதிகாரம் 112

அல்லேலு¡யா! ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்: அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.

அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்: நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும்.

சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்: அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.

இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்: அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.

மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்: அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.

எந்நாளும் அவர்கள் அசைவுறார்: நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.

தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது: ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.

அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்: அவர்களை அச்சம் மேற்கொள்ளாது: இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி.

அவர்கள் வாரி வழங்கினர்: ஏழைகளுக்கு ஈந்தனர்: அவர்கள் நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்: அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்.

தீயோர் அதைப் பார்த்து எரிச்சல் அடைவர்: பல்லை நெரிப்பர்: சோர்ந்து போவர்: தீயோரின் விருப்பமெல்லாம் வீணாய்ப்போம்.

அதிகாரம் 113

அல்லேலு¡யா! ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்.

ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக!

கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!

மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்: வானங்களையும்விட உயர்ந்து அவரது மாட்சி.

நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்?

அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார்:

ஏழைகளைத் பசியிலிருந்து அவர் பக்கி நிறுத்துகின்றார்: வறியரைக் குப்பை மேட்டிலிருந்து கைபக்கி விடுகின்றார்:

உயர்குடி மக்களிடையே-தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே அவர்களை அமரச் செய்கின்றார்.

மலடியை அவள் இல்லத்தில் வாழ வைக்கின்றார்: தாய்மைப்பேறு பெற்று மகிழுமாறு அவளுக்கு அருள்கின்றார். அல்லேலு¡யா!

அதிகாரம் 114

எகிப்து நாட்டைவிட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது, வேற்று மொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் புறப்பட் டபொழுது,

யூதா அவருக்குத் பயகம் ஆயிற்று: இஸ்ரயேல் அவரது ஆட்சித்தளம் ஆனது.

செங்கடல் கண்டது: ஓட்டம் பிடித்தது: யோர்தான் பின்னோக்கிச் சென்றது.

மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன.

கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன? யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்?

மலைகளே! நீங்கள் செம்மறிக் கிடாய்கள்போல் குதித்தது ஏன்? குன்றுகளே! நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல் துள்ளியது ஏன்?

பூவுலகே! தலைவர் முன்னிலையில் நடுநடுங்கு! யாக்கோபின் கடவுள் முன்னிலையில் நடுக்கமுறு!

அவர் பாறையைத் தண்ணீர்த் தடாகம் ஆக்குகின்றார்: கற்பாறையை வற்றாத நீர்ச்சுனை ஆக்குகின்றார்.

அதிகாரம் 115

எங்களுக்கன்று, ஆண்டவரே! எங்களுக்கன்று: மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்: உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு அதை உமக்கே உரியதாக்கும்.

“அவர்களுடைய கடவுள் எங்கே“ எனப் பிற இனத்தார் வினவுவது ஏன்?

நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்: தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்.

அவர்களுடைய தெய்வச்சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே!

அவற்றுக்கு வாய்கள் உண்டு: ஆனால் அவை பேசுவதில்லை: கண்கள் உண்டு: ஆனால் அவை பார்ப்பதில்லை:

செவிகள் உண்டு: ஆனால் அவை கேட்பதில்லை: மூக்குகள் உண்டு: ஆனால் அவை முகர்வதில்லை.

கைகள் உண்டு: ஆனால் அவை தொட்டுணர்வதில்லை: கால்கள் உண்டு: ஆனால் அவை நடப்பதில்லை: தொண்டைகள் உண்டு: ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.

அவற்றைச் செய்கின்றோரும் அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவற்றைப்போல் ஆவர்.

இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்: அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

ஆரோனின் குலத்தாரே! ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்: அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே! அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்: அவரே உங்களுக்கத் துணையும் கேடயமும் ஆவார்.

ஆண்டவர் நம்மை நினைவு கூர்ந்துள்ளார்: நமக்குத் தம் ஆசியை அளிப்பார். இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு ஆசி வழங்குவார்: ஆரோனின் குடும்பத்தாருக்கு ஆசி வழங்குவார்:

தமக்கு அஞ்சிநடப்போர்க்கு ஆண்டவர் ஆசி வழங்குவார்: சிறியோர்க்கும் பெரியோர்க்கும் ஆசி வழங்குவார்.

ஆண்டவர் உங்கள் இனத்தைப் பெருகச் செய்வார்: உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வளரச் செய்வார்.

நீங்கள் ஆண்டவரிடமிருந்து ஆசி பெறுவீர்களாக! விண்ணையும் மண்ணையும் உருவாக்கியவர் அவரே.

விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது: மண்ணகத்தையோ அவர் மானிடர்க்கு வழங்கியுள்ளார்.

இறந்தோர் ஆண்டவரைப் புகழ்வதில்லை: மெளன உலகிற்குள் இறங்குவோர் எவருமே அவரைப் புகழ்வதில்லை:

நாமோ ஆண்டவரை வாழ்த்துகின்றோம்: இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்துகின்றோம்.

அதிகாரம் 116

அல்லேலு¡யா! ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்: ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.

அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார்.

சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன: பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக் கொண்டன: துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.

நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்: “ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்“ என்று கெஞ்சினேன்.

ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்: நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.

எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்: நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார்.

“என் நெஞ்சே! நீ மீண்டும் அமைதிகொள்: ஏனெனில், ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்“.

என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்: என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.

உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

“மிகவும் துன்புறுகிறேன்!“ என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்.

“எந்த மனிதரையும் நம்பலாகாது“ என்று என் மனக்கலக்கத்தில் நான் சொன்னேன்.

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?

மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.

இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.

ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.

ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்: நான் உம் பணியாள்: உம் அடியாளின் மகன்: என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.

நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்: ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்:

இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்:

உமது இல்லத்தில் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். அல்லேலு¡யா!

அதிகாரம் 117

பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்!

ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப்பெரியது: அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலு¡யா!

அதிகாரம் 118

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

“என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு“ என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!

“என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு“ என் ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!

“என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு“ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக!

நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்: ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார்.

ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்?

எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்: என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக் கண்ணாரக் காண்பேன்.

மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!

உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்!

வேற்றினத்தார் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.

எப்பக்கமும் அவர்கள் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்து விட்டேன்.

தேனீக்களைப்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்: நெருப்பிலிட்ட முட்களைப்போல் அவர்கள் சாம்பலாயினர்: ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.

அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்: ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.

ஆண்டவரே என் ஆற்றல: என் பாடல்: என் மீட்பும் அவரே.

நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது: ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது: ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

நான் இறந்தொழியேன்: உயிர் வாழ்வேன்: ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்:

கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்: ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.

நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்து விடுங்கள்: அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.

ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.

என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!

ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!

ஆண்டவர் தோற்றவித்த வெற்றியின் நாள் இதுவே: இன்று அக்களிப்போம்: அகமகிழ்வோம்.

ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்!

ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

ஆண்டவரே இறைவன்: அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்: கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்: பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.

என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்: என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

அதிகாரம் 119

மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்: முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர்.

அநீதி செய்யாமல் அவரது வழியில் நடப்போர் பேறுபெற்றோர்.

ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்: அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.

உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!

உம் கட்டளைகளை எல்லாம் கருத்தில் கொண்டிருந்தால், இகழ்ச்சியுறேன்:

உம் நீதிநெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன்.

உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்: என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும்.

இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?

முழுமனத்தோ:டு நான் உம்மைத் தேடுகின்றேன்: உம் கட்டளைகளைவிட்டு என்னை விலகவிடாதேயும்.

உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.

ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்: எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.

உம் வாயினின்று வரும் நீதித்தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.

பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.

உம் நியமங்களைக் குறித்து நான் சிந்திப்பேன்: உம் நெறிகளில் என் சிந்தையைச் செலுத்துவேன்:

உம் விதிமுறைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்: உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன்.

உம் அடியானுக்கு நன்மை செய்யும்: அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன்.

உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்.

இவ்வுலகில் நான் அன்னியனாய் உள்ளேன்: உம் கட்டளைகளை என்னிடமிருந்து மறைக்காதேயும்.

எந்நேரமும் உம் நீதிநெறிகளை முன்னிட்டு என் உள்ளம் ஏங்கி உருகின்றது.

செருக்குற்றோரைக் புறக்கணிப்போர் சபிக்கப்பட்டவரே.

பழிச்சொல்லையும், இழிவையும் என்னிடமிருந்து அகற்றியருளும்: ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்துள்ளேன்.

தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன்.

ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன: அவையே எனக்கு அறிவுரையாளர்.

நான் புழுதியில் வீழ்ந்து கிடக்கின்றேன்: உம் வாக்கின்படி எனக்கு வாழ்வளித்தருளும்.

என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்: நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்: உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும்.

உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்: உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன்.

துயரத்தால் என் உள்ளம் கலக்க முற்றுள்ளது: உமது வாக்கின்படி என்னைத் திடப்படுத்தும்.

பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்: உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.

உண்மையின் பாதையை நான் தேர்ந்துகோண்டேன்: உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன்.

உம் ஒழுங்குமுறைகளை நான் உறுதியாய்ப் பற்றிக்கொண்டுள்ளேன்: ஆண்டவரே! என்னை வெட்கமடையவிடாதேயும்.

நீர் என் அறிவை விரிவாக்கும்போது, உம் கட்டளைகள் காட்டும் வழியில் நான் விரைந்து செல்வேன்.

ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்: நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன்.

உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.

உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்: ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்: தன்னலத்தை நாடவிடாதேயும்.

வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களைத் திருப்பிவிடும்: உம் வழிகளின் வாயிலாய் எனக்கு வாழ்வளித்தருளும்.

உமக்கு அஞ்சி நடப்போர்க்கு அளித்த வாக்குறுதியை உம் ஊழியனுக்கும் நிறைவேற்றியருளும்.

என்னை அச்சுறுத்தும் பழிச்சொல் எதற்கும் என்னை உள்ளாக்காதேயும்: ஏனெனில், உம் நீதிநெறிகள் நலமார்ந்தவை.

உம் நியமங்களைப் பெர்¢தும் விரும்பினேன்: நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு வாழ்வளியும்.

ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்: உமது வாக்குறுதியின்படி நீர் என்னை மீட்பீராக!

அப்போது, என்னைப் பழிப்போர்க்கு நான் ஏற்ற பதில் கூறுவேன்: ஏனெனில், உமது வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு.

என் வாயினின்று உண்மையின் சொற்கள் நீங்கவிடாதேயும்: ஏனெனில், உம் நீதிநெறிகள்மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.

உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடித்தேன்: என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன்.

உம் நியமங்களை நான் நாடியுள்ளதால் பரந்த பாதையில் தடையின்றி நான் நடப்பேன்.

உம் ஒழுங்குமறைகளைப் பற்றி நான் அரசர் முன்னிலையிலும் பேசுவேன்: வெட்கமுறமாட்டேன்.

உம் கட்டளைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்: அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன்.

நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்: உம் விதிமுறைகளைப் பற்றி நான் சிந்திப்பேன்.

உம் ஊழியனுக்கு நீர் தந்த வாக்கை நினைவுகூரும்: அதனால் எனக்கு நம்பிக்கை அளித்தீர்.

உம் வாக்கு என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கின்றது: ஏனெனில், அது எனக்கு வாழ்வளிக்கின்றது.

செருக்குற்றோர் என்னை அளவின்றி ஏளனம் செய்கின்றனர்: ஆனால், உம் திருச்சட்டத்தினின்று நான் விலகவில்லை.

ஆண்டவரே! முற்காலத்தில் நீர் அளித்த நீதித் தீர்ப்புகளை நான் நினைவு கூர்கின்றேன்: அவற்றால் நான் ஆறுதல் அடைகின்றேன்.

உம் திருச்சட்டத்தை கைவிடும் தீயோரைப் பார்க்கும்போது சீற்றம் என்னைக் கவ்விக்கொள்கின்றது.

என் வாழ்க்கைப் பயணத்தில் உம் விதிமுறைகள் எனக்குப் புகழ்ப் பாக்களாய் உள்ளன.

ஆண்டவரே! இரவிலும் நான் உமது பெயரை நினைவு கூர்கின்றேன்: உமது திருச்சட்டத்தை கடைப்பிடிப்பேன்.

நான் இந்நிலையை அடைந்துள்ளது உமது நியமங்களைக் கடைப்பிடிப்பதால்தான்.

ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு: உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன்.

என் முழுமனத்தோடு உம் திருமுகத்தை நாடினேன்: உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு அருள்கூரும்.

நான் நடக்கும் வழிகளை நன்கு ஆய்ந்தேன்: உம் ஒழுங்குமறைகளின் பக்கமாய் அடியெடுத்து வைத்தேன்.

உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க நான் விரைகின்றேன்: காலம் தாழ்த்தவில்லை.

தீயோரின் கட்டுகள் என்னை இறுக்குகின்றன: ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.

நீதிநிறை உம் தீர்ப்புகளைக் குறித்து, உம்மைப் புகழ்ந்துபாட நள்ளிரவில் எழுகின்றேன்.

உமக்கு அஞ்சி நடப்போர் யாவர்க்கும் உம் நியமங்களைக் கடைப்பிடிப்போர்க்கும் நான் நண்பன்.

ஆண்டவரே! உமது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது: உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும்!

ஆண்டவரே! உமது வாக்குறுதிக்கேற்ப, உம் ஊழியனுக்கு நன்மையை செய்துள்ளீர்!

நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்: ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.

நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்: ஆனால், இப்போது உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன்.

நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்: எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.

செருக்குற்றோர் என்னைப்பற்றிப் பொய்களைப் புனைகின்றார்கள்: நானோ முழுமனத்துடன் உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன்.

அவர்கள் இதயம் கொழுப்பேறிப் போயிற்று. நானோ உம் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுகின்றேன்.

எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மையாகவே: அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன்.

நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது.

உம் கைகளே என்னை உருவாக்கின: என்னை வடிவமைத்தன: உம் கட்டளைகளை நான் கற்றுக்கொள்ள எனக்கு மெய்யுணர்வு தாரும்.

உமக்கு அஞ்சுவோர், உமது வாக்கை நான் நம்பினதற்காக என்னைக் கண்டு மகிழ்ச்சியுறுவர்.

ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்: நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே.

எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்: உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ!

நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்: ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம்.

செருக்குற்றோர் வெட்கிப்போவார்களாக! அவர்கள் பொய்யுரை கூறி என்னை ஒடுக்கினார்கள்: நானோ உம் நியமங்கள்பற்றிச் சிந்தனை செய்வேன்.

உமக்கு அஞ்சிநடப்போர், உம் ஒழுங்குமுறைகளைப்பற்றிய அறிவுடையோர் என் பக்கம் திரும்புவராக!

உம் நியமங்களைப் பொறுத்தமட்டில் என் உள்ளம் மாசற்றதாய் இருப்பதாக! அதனால், நான் வெட்கமுறேன்.

நீர் அளிக்கும் மீட்புக்காக என் நெஞ்சம் ஏங்குகின்றது: உம் வாக்கை நான் நம்புகின்றேன்.

உம் வாக்குறதியை எதிர்நோக்கி என் கண்கள் பூத்துப்போயின: “எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்?“ என்று வினவினேன்.

புகைபடிந்த தோற்பைபோல் ஆனேன்: உம் விதிமுறைகளை நான் மறக்கவில்லை.

உம் ஊழியன் எத்தனை நாள் காத்திருக்கவேண்டும்? என்னைக் கொடுமைப்படுத்துவோரை என்று தண்டிப்பீர்?

உமது திருச்சட்டப்படி நடக்காமல், செருக்குற்றோர் எனக்குக் குழிவெட்டினர்:

உம் கட்டளைகள் எல்லாம் நம்பத்தக்கவை: அவர்கள் பொய்யுரை கூறி என்னை ஒடுக்குகின்றனர்: எனக்குத் துணை செய்யும்.

அவர்கள் பூவுலகினின்று என் வாழ்வை ஏறக்குறைய அழித்துவிட்டனர்: நானோ உம் நியமங்களைக் கைவிடவில்லை.

உமது பேரன்புக்கேற்ப என்னை உயிரோடு வைத்திரும், நீர் திருவாய்மலர்ந்த ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்.

ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு: விண்ணுலகைப்போல் அது நிலைத்துள்ளது.

தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை: நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது.

உம் ஒழுங்குமறைகளின் படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன. ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன.

உமது திருச்சட்டம் எனக்கு இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால் என் துன்பத்தில் நான் மடிந்து போயிருப்பேன்.

உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்: ஏனெனில், அவற்றைக்கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர்.

உமக்கே நான் உரிமை: என்னைக் காத்தருளும்: ஏனெனில், உம் நியமங்களையே நான் நாடியுள்ளேன்.

தீயோர் என்னை அழிக்கக் காத்திருக்கின்றனர்: நானோ உம் ஒழுங்குமுறைகளை ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.

நிறைவான அனைத்தின் எல்லையையும் நான் பார்த்துவிட்டேன்: உமது கட்டளையின் நிறைவோ எல்லை அற்றது.

ஆண்டவரே! நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்! நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.

என் எதிரிகளைவிட என்னை ஞானியாக்கியது உமது கட்டளை: ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது.

எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் விவேகமுள்ளனவாய் இருக்கின்றேன்: ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே நான் சிந்திக்கின்றேன்:

முதியோர்களைவிட நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன். ஏனெனில், உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன்.

உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீயவழி எதிலும் நான் கால்வைக்காது பார்த்துக் கொள்கின்றேன்.

உம் நீதிநெறிகளைவிட்டு நான் விலகவில்லை: ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர்.

உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.

உம் நியமங்களால் நான் நுண்ணறிவு பெறுகின்றேன். ஆகவேதான் பொய்வழிகள் அனைத்தையும் நான் வெறுக்கின்றேன்.

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!

நீதியான உம் நெறிமுறைகளை நான் கடைப்பிடிப்பதாக ஆணையிட்டு உறுதிமொழி தந்துள்ளேன்.

ஆண்டவரே! மிக மிகத் துன்புறுத்தப்படுகின்றேன்: உம் வாக்குறுதியின்படி என்னை உயிரோடு வைத்தருளும்.

நான் மனமுவந்து வாயார உம்மைப் புகழ்வதை ஆண்டவரே! தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளும்: உம் நீதிநெறிகளை எனக்குக் கற்பியும்.

நான் என்னுயிரைக் கையில்வைத்துள்ளேன்: ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.

தீயோர் எனக்குக் கண்ணிவைத்தனர்: ஆனால், உம் நியமங்களினின்று நான் பிறழவில்லை.

உம் ஒழுங்குமறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.

உம் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் என் உள்ளம், என்றென்றும், இறுதிவரை நாட்டம் கொண்டிருக்கும்.

இருமனத்தோரை நான் வெறுக்கின்றேன்: உமது திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டுள்ளேன்.

நீரே என் புகலிடம்: நீரே என் கேடயம்: உமது வாக்கில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

தீயன செய்வோரே! என்னைவிட்டு விலகுங்கள்: என் கடவுளின் கட்டளைகளை நான் கடைப்பிடிப்பேன்:

நான் பிழைக்குமாறு, உமது வாக்குறுதிக்கேற்ப என்னைத் தாங்கியருளும்: எனது நம்பிக்கை வீண்போகவிடாதேயும்.

என்னைத் தாங்கிக்கொள்ளும்: நான் மீட்புப் பெறுவேன்: எந்நாளும் உம் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டிருப்பேன்.

உம் விதிமுறைகளைவிட்டு விலகுவோர் அனைவரையும் நீர் ஒதுக்கித் தள்ளுகின்றீர்: அவர்களின் சூழ்ச்சிகள் வீணாய்ப் போகும்.

பூவுலகின் பொல்லார் அனைவரையம் நீர் களிம்பெனக் கருதுகின்றீர்: ஆகவே, நான் உம் ஒழுங்குமுறைகள் மீது பற்றுக்கொண்டுள்ளேன்.

உம்மீது கொண்டுள்ள அச்சத்தால் என் உடல் சிலிர்க்கின்றது: உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு நான் அஞ்சி நடுங்குகின்றேன்.

நீதியும் நேர்மையும் ஆனவற்றையே செய்துள்ளேன்: என்னை ஒடுக்குவோர் கையில் என்னை விட்டுவிடாதேயும்.

உம் ஊழியனின் நலத்தை உறுதிப்படுத்தும்: செருக்குற்றோர் என்னை ஒடுக்கவிடாதேயும்.

நீர் தரும் விடுதலையையும் உமது நீதியான வாக்குறுதிகளையும் எதிர்பார்த்து, என் கண்கள் பூத்துப் போயின.

உம் பேரன்பிற்கேற்ப உம் ஊழியனுக்குச் செய்தருளும்: உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும்.

உம் ஊழியன் நான், எனக்கு நுண்ணறிவு புகட்டும்: அப்போது உம் ஒழுங்குமுறைகளை அறிந்துகொள்வேன்.

ஆண்டவரே! நீர் செயலாற்றும் நேரம் வந்துவிட்டது: உம் திருச்சட்டம் மீறப்பட்டுவிட்டது.

ஆகவே, பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன்.

உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக்கொண்டேன்: பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன்.

உம் ஒழுங்குமறைகள் வியப்புக்குரியவை: ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன்.

உம் சொற்களைப்பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது: அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது.

வாயை ஆ வெனத் திறக்கின்றேன்: பெருமூச்சு விடுகின்றேன்: ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன்.

உம் பெயரின்மீது பற்றுக்கொண்டோருக்கு நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல், என் பக்கம் திரும்பி எனக்கும் இரங்கும்!

உமது வாக்கில் என் காலடிகளை நிலைப்படுத்தும்! தீயது எதுவும் என்னை மேற்கொள்ளவிடாதேயும்!

மனிதர் செய்யும் கொடுமையினின்று என்னை விடுவியும்! உம் நியமங்களை நான் கடைப்பிடிப்பேன்.

உம் ஊழியன்மீது உமது முகஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும்.

உமது திருச்சட்டத்தைப் பலர் கடைப்பிடிக்காததைக் கண்டு, என் கண்களினின்று நீர் அருவியாய் வழிந்தது.

ஆண்டவரே! நீர் நீதி உள்ளவர்: உம் நீதிநெறிகள் நேர்மையானவை.

நீர் தந்த ஒழுங்குமுறைகள் நீதியானவை: அவை முற்றிலும் நம்பத்தக்கவை.

என் பகைவர் உம் வார்த்தைகளை மறந்துவிட்டதால், அவற்றின்மீது நான் கொண்டுள்ள தணியாத ஆர்வம் என்னை எரித்துவிடுகின்றது.

உம் வாக்குறுதி முற்றிலும் சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளது, உம் ஊழியன் அதன்மீது பற்றுக்கொண்டுள்ளான்.

சிறியன் அடியேன்! இழிவுக்கு உள்ளானவன்: ஆனால், உம் நியமங்களை மறக்காதவன்.

உமது நீதி என்றுமுள நீதி: உமது திருச்சட்டம் என்றும் நம்பத்தக்கது.

துன்பமும் கவலையும் என்னைப் பற்றிக்கொண்டன: எனினும் உம் கட்டளைகள் என்னை மகிழ்விக்கின்றன.

உம் ஒழுங்குமுறைகள் எக்காலமும் நீதியுள்ளவை: நான் வாழுமாறு எனக்கு நுண்ணறிவு புகட்டும்.

முழு இதயத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்: ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்: உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன்.

உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்: என்னைக் காத்தருளும்: உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்தேன்.

வைகறையில் நான் உம்மிடம் வந்து உதவிக்காக மன்றாடுகின்றேன்: உம் சொற்களில் நம்பிக்கை வைக்கின்றேன்.

உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக, இரவுச் சாம நேரங்களில் நான் கண்விழித்துள்ளேன்.

ஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப என் குரலைக் கேட்டருளும்: உமது நீதியின்பபடி என்னுயிரைக் காத்தருளும்.

சதிசெய்து ஒடுக்குவோர் என்னை நெருங்கி வருகின்றனர்: உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும் வெகு தொலைவு.

ஆண்டவரே! நீர் என் அருகில் இருக்கின்றீர்: உம் கட்டளைகள் எல்லாம் நிலையானவை.

அவற்றை நீர் எக்காலத்திற்குமாக ஏற்படுத்தினீர் என்று நீர் தந்த ஒழுங்குமுறைகளினின்று முன்பே நான் அறிந்திருக்கின்றேன்.

என் துன்ப நிலையைப் பார்த்து என்னை விடுவித்தருளும்: ஏனெனில், உமது திருச்சட்டத்தை நான் மறக்கவில்லை.

எனக்காக வழக்காடி என்னை மீட்டருளும்: உமது வாக்குக்கேற்றபடி என் உயிரைக் காத்தருளும்.

தீயோர்க்கு மீட்பு வெகு தொலைவில் உள்ளது: ஏனெனில், அவர்கள் உம் விதிமுறைகளைத் தேடுவதில்லை.

ஆண்டவரே! உம் இரக்கம் மிகப்பெரியது: உம் நீதித்தீர்ப்புகளின்படி எனக்கு வாழ்வளியும்.

என்னைக் கொடுமைப்படுத்துவோரும் பகைப்போரும் பலர்: ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு நான் தவறுவதில்லை.

துரோகம் செய்வோரை அருவருப்புடன் பார்க்கின்றேன்: ஏனெனில், அவர்கள் உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை.

ஆண்டவரே! நான் உம் கட்டளைகள் மீது எத்துணைப் பற்றுக்கொண்டுள்ளேன் என்பதைப் பாரும்: உம் பேரன்பிற்கேற்ப எனக்கு வாழ்வளியும்.

உண்மையே உமது வார்த்தையின் உட்பொருள்: நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம் என்றும் நிலைத்துள்ளன.

தலைவர்கள் என்னைக் காரணமின்றிக் கொடுமைப்படுத்துகின்றனர்: ஆனால், உம் வாக்கை முன்னிட்டு என் உள்ளம் நடுங்குகின்றது.

திரண்ட கொள்ளைப் பொருளை அடைந்தவன் மகிழ்வது போல உமது வாக்குறுதியில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன் .

பொய்யை வெறுத்து ஒதுக்குகின்றேன்: உமது திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டுள்ளேன்.

நீதியான உம் நெறிமுறைகளைக் குறித்து ஒரு நாளைக்கு ஏழுமுறை உம்மைப் புகழ்கின்றேன்.

உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு: அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை.

ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக நான் காத்திருக்கின்றேன்: உம் கட்டளைகளைச் செயல்படுத்துகின்றேன்.

உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்து வருகின்றேன்: நான் அவற்றின்மீது பற்றுக்கொண்டுள்ளேன்.

உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப்பிடிக்கின்றேன்: ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை.

ஆண்டவரே! என் வேண்டுதல் உம் திருமுன் வருவதாக! உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு நுண்ணறிவு புகட்டும்.

என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! உம் வாக்குறுதியின்படி என்னை விடுவியும்.

உம் விதிமுறைகளை எனக்கு நீர் கற்பிப்பதால், என் இதழ்களினின்று திருப்புகழ் பொங்கிவரும்.

உம் வாக்கைக் குறித்து என் நா பாடுவதாக! ஏனெனில், உம் கட்டளைகள் எல்லாம் நீதியானவை.

உம் கரம் எனக்குத் துணையாய் இருப்பதாக! ஏனெனில், உம் நியமங்களை நான் தேர்ந்தெடுத்தேன்.

ஆண்டவரே! உம்மிடமிருந்து வரும் மீட்பை நான் நாடுகின்றேன்: உமது திருச்சட்டத்தில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

உயிர்பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக!

காணாமல்போன ஆட்டைப்போல் நான் அலைந்து திரிகின்றேன்: உம் ஊழியனைத் தேடிப்பாரும்: ஏனெனில், உம் கட்டளைகளை நான் மறக்கவில்லை.

அதிகாரம் 120

நான் இன்னலுற்ற வேளையில் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்: அவரும் எனக்குச் செவி சாய்த்தார்.

ஆண்டவரே! பொய் பேசும் வாயினின்று என்னை விடுவித்தருளும்: வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும்.

வஞ்சகம் பேசும் நாவே! உனக்கு என்ன கிடைக்கும்? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?

வீரனின் கூரிய அம்புகளும் தணல் வீசும் கரிகளும்தான் கிடைக்கும்!

ஜயோ! நான் மேசேக்கில் அன்னியனாய் வாழ்ந்தபோதும், கேதாரில் கூடாரங்களில் தங்க நேர்ந்தபோதும்,

சமாதானத்தைக் குலைப்பவர்களோடு, நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.

நான் சமாதானத்தை நாடுவேன்: அதைப் பற்றியே பேசுவேன்: ஆனால், அவர்களுக்கோ போர் ஒன்றில்தான் நாட்டம்!

அதிகாரம் 121

மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்?

விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்.

அவர் உம் கால் இடறாதபடி பா¡த்துக் கொள்வார்: உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார்.

இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை: உறங்குவதும் இல்லை.

ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்: அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: அவரே உமக்கு நிழல் ஆவார்!

பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது: இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.

ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்: அவர் உம் உயிரைக் காத்திடுவார்.

நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.

அதிகாரம் 122

ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் , என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.

எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.

எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.

ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்: இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.

அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.

எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்: உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!

உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!

உன்னுள் சமாதானம் நிலவுவதாக! என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.

நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.

அதிகாரம் 123

விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.

பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.

எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும்: அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம்.

இன்பத்தில் திளைத்திருப்போரின் வசைமொழி போதும். இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும்.

அதிகாரம் 124

ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் - இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!

ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,

அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.

அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்: பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்:

கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும்.

ஆண்டவர் போற்றி! போற்றி! எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை.

வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்: கண்ணி அறுந்தது: நாம் தப்பிப் பிழைத்தோம்.

ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே!

அதிகாரம் 125

ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர் சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர்.

எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பதுபோல, ஆண்டவர் இப்போதும் எப்போதும் தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.

நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில் பொல்லாரின் ஆட்சி நிலைக்காது: இல்லையெனில் நல்லாரும் பொல்லாதது செய்ய நேரிடும்.

ஆண்டவரே! நல்லவர்களுக்கும் நேரிய இதயமுள்ளவர்களுக்கும் நீர் நன்மை செய்தருளும்.

கோணல் வழிநோக்கித் திரும்புவோரை ஆண்டவர் தீயவரோடு சேர்த்து இழுத்துச் செல்வார். இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!

அதிகாரம் 126

சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.

அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது: ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார் என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்: அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.

ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்: அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள்.

அதிகாரம் 127

ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்: ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்.

வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே! உறங்கும்போதும் கடவுளின் அன்பர் தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்.

பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்: மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்.

இளமையில் ஒருவருக்குப் பிறக்கும் மைந்தர் வீரரின் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்.

அவற்றால் தம் அம்பறாத் பணியை நிரப்பிய வீரர் நற்பேறு பெற்றோர்: நீதிமன்றத்தில் எதிரிகளோடு வழக்காடும்போது, அவர் இகழ்ச்சியடையமாட்டார்.

அதிகாரம் 128

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!

உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!

உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்: உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.

ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.

ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!

நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!

அதிகாரம் 129

என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள் - இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!

என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்: எனினும், அவர்கள் என்மீது வெற்றி பெறவில்லை.

உழவர் என் முதுகின்மீது உழுது நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர்.

ஆண்டவர் நீதியுள்ளவர்: எனவே, பொல்லார் கட்டிய கயிறுகளை அவர் அறுத்தெறிந்தார்.

சீயோனைப் பகைக்கும் அனைவரும் அவமானப்பட்டுப் புறமுதுகிடுவராக!

கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்: வளருமுன் அது உலர்ந்துபோகும்.

அதை அறுப்போரின் கைக்கு, ஒரு பிடி கூடக் கிடைக்காது: அரிகளைச் சேர்த்தால் ஒரு சுமைகூடத் தேறாது.

வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து, “ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்குவாராக!“ என்றோ “ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்குகிறோம்“ என்றோ சொல்லார்.

அதிகாரம் 130

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்:

ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்: என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்?

நீரோ மன்னிப்பு அளிப்பவர்: மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.

ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்: என் நெஞ்சம் காத்திருக்கின்றது: அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம் , விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.

இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு: பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது: மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.

எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!

அதிகாரம் 131

ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை: என் பார்வையில் செருக்கு இல்லை: எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.

மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது: தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது.

இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு!

அதிகாரம் 132

ஆண்டவரே! தாவீதையும் அவர் பட்ட இன்னல்கள் அனைத்தையும் நினைவு கூர்ந்தருளும்.

அவர் ஆண்டவராகிய உமக்கு ஆணையிட்டுக் கூறியதை, யாக்கோபின் வல்லவராகிய உமக்குச் செய்த பொருத்தனையை நினைவுகூர்ந்தருளும்.

ஆண்டவருக்கு ஓர் இடத்தை, யாக்கோபின் வல்லவருக்கு ஒர் உறைவிடத்தை நான் அமைக்கும் வரையில்,

என் இல்லமாகிய கூடாரத்தினுள் செல்ல மாட்டேன்: படுப்பதற்காக என் மஞ்சத்தில் ஏறமாட்டேன்:

என் கண்களைத் பங்க விடமாட்டேன்: என் இமைகளை மூடவிடமாட்டேன் என்று அவர் சொன்னாரே.

திருப்பேழை எப்ராத்தாவில் இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்: வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.

அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்! வாருங்கள்: அவரது திருவடிதாங்கி முன் வீழ்ந்து பணிவோம்! என்றோம்.

ஆண்டவரே! நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன் உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக!

உம் குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக! உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக!

நீர் திருப்பொழிவு செய்த அரசரை, உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப் புறக்கணியாதேயும்.

ஆண்டவர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்: அவர்தம் வாக்குறுதியினின்று பின்வாங்கமாட்டார்: உனக்குப் பிறந்த ஒருவனை அரசனாக ஏற்படுத்தி உன் அரியணையில் வீற்றிருக்கச் செய்வேன்.

உன் மைந்தர் என் உடன்படிக்கையையும், நான் அவர்களுக்குக் கற்பிக்கும் என் நியமங்களையும் கடைப்பிடித்தால் அவர்களுடைய மைந்தரும் என்றென்றும் உன் அரியணையில் வீற்றிருப்பர்.

ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்: அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார்.

இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்: இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன்.

இங்கே என் ஆசியால் உணவுப் பொருள் தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்: அதனை ஏழைகள் உண்டு நிறைவு பெறுமாறு செய்வேன்.

இங்குள்ள குருக்களுக்கு மீட்பெனும் உடையை உடுத்துவேன்: இங்குள்ள என் அன்பர்கள் மகிழ்ந்து ஆரவாரிப்பார்கள்.

இங்கே தாவீதின் மரபிலிருந்து ஒரு வல்லவனை எழச்செய்வேன்: நான் திருப்பொழிவு செய்தவனுக்காக ஒரு ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன்.

அவனுடைய எதிரிகளுக்கு இகழ்ச்சியெனும் உடையை உடுத்துவேன்: அவன்மீதோ அவனது மணிமுடி ஒளிவீசும் .

அதிகாரம் 133

சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது!

அது ஆரோனின் தலையினிலே ஊற்றப்பெற்ற நறுமணத்தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவருடைய அங்கியின் விளிம்பை நனைப்பதற்கு ஒப்பாகும்.

அது எர்மோனின் மலைப்பனி சீயோனின் மலைகள்மேல் இறங்குவதற்கு ஒப்பாகும்: ஏனெனில், அங்கிருந்தே என்றுமுள வாழ்வென்னும் ஆசிதனை ஆண்டவர் பொழிந்தருள்வார்.

அதிகாரம் 134

இரவு நேரங்களில் ஆண்டவரின் இல்லத்தில் பணி செய்யும் ஆண்டவரின் ஊழியரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.

பயகத்தை நோக்கித் கைகளை உயர்த்தி ஆண்டவரைப் போற்றுங்கள்.

விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர் சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி வழங்குவராக!

அதிகாரம் 135

அல்லேலு¡யா! ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்: ஆண்டவரின் ஊழியரே! அவரைப் புகழுங்கள்.

ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே! நம் கடவுளின் கோவில் முற்றங்களில் உள்ளவர்களே!

ஆண்டவரைப் புகழுங்கள்! ஏனெனில், அவர் நல்லவர்: அவரது பெயரைப் போற்றிப் பாடுங்கள்: ஏனெனில், அவர் இனியவர்.

ஆண்டவர் யாக்கோபைத் தமக்கென்று தேர்ந்துகொண்டார்: இஸ்ரயேலைத் தமக்குரிய தனிச் சொத்தாகத் தெரிந்தெடுத்தார்.

ஆண்டவர் மேன்மைமிக்கவர் என்பதை அறிவேன்: நம் ஆண்டவர் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவர் என்பதும் எனக்குத் தெரியும்.

விண்ணிலும் மண்ணிலும் கடல்களிலும் எல்லா ஆழ்பகுதிகளிலும், ஆண்டவர் தமக்கு விருப்பமான யாவற்றையும் செய்கின்றார்.

அவர் பூவுலகின் கடையெல்லைகளிலிருந்து மேகங்களை எழச் செய்கின்றார். மழை பெய்யும்படி மின்னலை உண்டாக்குகின்றார்: காற்றைத் தம் கிடங்குகளிலிருந்து வெளிவரச் செய்கின்றார்.

அவர் எகிப்தின் தலைப்பேறுகளைத் தாக்கினார்: மனிதர், கால்நடைகளின் தலைப்பேறுகளை அழித்தார்.

எகிப்து நாடே! உன் நடுவில் பார்வோனையும் அவனுடைய எல்லா ஊழியர்களையும் தண்டிக்குமாறு, அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் அவர் நிகழச் செய்தார்.

அவர் பல்வேறு இனத்தவரைத் தாக்கினார்: வலிமைவாய்ந்த மன்னர்களைக் கொன்றார்.

எமோரியரின் மன்னனாகிய சீகோனையும் பாசானின் மன்னனாகிய ஓகையும் கானானின் எல்லா அரசுகளையும் அழித்தார்:

அவர்கள் நாட்டைத் தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு உரிமைச்சொத்தாக, சொந்த உடைமையாகக் கொடுத்தார்.

ஆண்டவரே! உமது பெயர் என்றுமுள்ளது: ஆண்டவரே! உம்மைப்பற்றிய நினைவு தலைமுறை தலைமுறையாக நீடித்திருக்கும்.

ஆண்டவர் தம் மக்களை நீதியுடன் தீர்ப்பிடுவார்: தம் அடியாருக்கு இரக்கம் காட்டுவார்.

வேற்றினத்தார் வழிபடும் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே: அவை மனிதரின் கையால் செய்யப்பட்டவையே!

அவற்றுக்கு வாய்கள் உண்டு: ஆனால் அவை பேசுவதில்லை: கண்கள் உண்டு: அவை காண்பதில்லை:

காதுகள் உண்டு: ஆனால் அவை கேட்பதில்லை: மூக்குகள் உண்டு: ஆனால் அவை மூச்சுவிடுவதில்லை.

அவற்றைச் செய்து வைப்பவரும் அவற்றில் நம்பிக்கை வைக்கும் யாவரும் அவற்றைப் போலவே இருப்பார்கள்.

இஸ்ரயேல் குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்! ஆரோன் குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்!

லேவி குடும்பத்தாரே! ஆண்டவரைப் போற்றுங்கள்! அவருக்கு அஞ்சி நடப்போரே! அவரைப் போற்றுங்கள்!

எருசலேமைத் தம் உறைவிடமாகக் கொண்டிருக்கும் ஆண்டவர் போற்றப்படுவாராக: சீயோனிலிருக்கும் ஆண்டவர் போற்றப்படுவாராக அல்லேலு¡யா!

அதிகாரம் 136

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில் அவர் நல்லவர், என்றும் உள்ளது அவரது பேரன்பு.

தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

தலைவர்களின் தலைவருக்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

தாம் ஒருவராய் மாபெரும் அருஞ்செயல்களைப் புரிபவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

வான்வெளியை மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

பெருஞ்சடர்களை உருவாக்கிவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

பகலை ஆள்வதற்கெனக் கதிரவனை உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

இரவை ஆள்வதற்கென நிலாவையும் விண்மீன்களையும் உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

எகிப்தின் தலைப்பேறுகளைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை வெளிக்கொணர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

தோளின் வலிமையாலும் ஓங்கிய புயத்தாலும் அதைச் செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

அதன் நடுவே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

பார்வோனையும் அவன் படைகளையும் செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

பாலை நிலத்தில் தம் மக்களை வழிநடத்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

மாபெரும் மன்னர்களை வெட்டி வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

வலிமைமிகு மன்னர்களைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

எமோரியரின் மன்னன் சீகோனை கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

பாசானின் மன்னன் ஓகைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

அதைத் தம் அடியார்களாகிய இஸ்ரயேலர்க்கு உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

உடல்கொண்ட அனைத்திற்கும் உணவூட்டுபவர்க்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

விண்ணுலகின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்: என்றும் உள்ளது அவரது பேரன்பு.

அதிகாரம் 137

பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்.

அங்கிருந்த அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.

ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்: எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். “சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்“ என்றனர்.

ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?

எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக!

உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!

ஆண்டவரே! ஏதோமின் புதல்வருக்கு எதிராக, எருசலேம் வீழ்ந்த நாளை நினைத்துக் கொள்ளும்! “அதை இடியுங்கள்: அடியோடு இடித்துக் தள்ளுங்கள்“ என்று அவர்கள் எவ்வாறெல்லாம் சொன்னார்கள்!

பாழாக்கும் நகர் பாபிலோனே! நீ எங்களுக்குச் செய்தவற்றை உனக்கே திருப்பிச் செய்வோர் பேறுபெற்றோர்!

உன் குழந்தைகளைப் பிடித்து பாறையின்மேல் மோதி அடிப்போர் பேறுபெற்றோர்!

அதிகாரம் 138

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்: உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்: ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.

நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்: என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.

ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.

ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்: ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது!

ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்: எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்: ஆனால், செருக்குற்றோரைத் தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர்.

நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்: என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்: உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.

நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்: ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு: உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.

அதிகாரம் 139

ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!

நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்: என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.

நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்: என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே.

ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.

எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்: உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர்.

என்னைப்பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது: அது உன்னதமானது: என் அறிவுக்கு எட்டாதது.

உமது ஆற்றலைவிட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?

நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்!

நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,

அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்: உமது வலக்கை என்னைப் பற்றிக் கொள்ளும்.

“உண்மையில் இருள் என்னை மூடிக்கொள்ளாதோ? ஒளி சூழ்வதென இரவும் என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?“ என்று நான் சொன்னாலும்,

இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை: இரவும் பகலைப்போல ஒளியாய் இருக்கின்றது: இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும்.

ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே!

அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்: உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும்.

என் எலும்பு உமக்கு மறைவானதன்று: மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர்.

உம் கண்கள் கருமுளையில் என் உறுப்புகளைக் கண்டன: நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள நாள்கள் எல்லாம் எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்திலேயே உமது மலில் எழுதப்பட்டுள்ளன.

இறைவா! உம்முடைய நினைவுகளை நான் அறிந்துகொள்வது எத்துணைக் கடினம்! அவற்றின் எண்ணிக்கை எத்துணைப் பெரிது!

அவற்றைக் கணக்கிட நான் முற்பட்டால், அவை கடல் மணலிலும் மிகுதியாய் உள்ளன: அவற்றை எண்ணி முடிக்க வேண்டுமானால், நீர் உள்ளளவும் நான் வாழ வேண்டும்.

கடவுளே! நீர் தீயோரைக் கொன்றுவிட்டால், எவ்வளவு நலம்! இரத்தப்பழிகாரர் என்னிடமிருந்து அகன்றால், எத்துணை நன்று!

ஏனெனில், அவர்கள் தீயமனத்துடன் உமக்கு எதிராய்ப் பேசுகின்றார்கள்: அவர்கள் தலைபக்கி உமக்கு எதிராய்ச் சதி செய்கின்றார்கள்.

ஆண்டவரே! உம்மை வெறுப்போரை நானும் வெறுக்காதிருப்பேனோ? உம்மை எதிர்க்க எழுவோரை நானும் வெறுக்கின்றேன் அன்றோ?

நான் அவர்களை அடியோடு வெறுக்கின்றேன்: அவர்கள் எனக்கும் எதிரிகள் ஆனார்கள்.

இறைவா! நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும்: என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும்.

உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்: என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்.

அதிகாரம் 140

ஆண்டவரே! தீயோரிடமிருந்து என்னை விடுவியும்: வன் செயல் செய்வோரிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்.

அவர்கள் தம் மனத்தில் தீயனவற்றை திட்டமிடுகின்றனர்: நாள்தோறும் சச்சரவுகளைக் கிளப்பி விடுகின்றனர்.

அவர்கள் பாம்பெனத் தம் நாவைக் கூர்மையாக்கிக்கொள்கின்றனர்: அவர்களது உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சே! (சேலா)

ஆண்டவரே! தீயோரின் கையினின்று என்னைக் காத்தருளும்: கொடுமை செய்வோரிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்: அவர்கள் என் காலை வாரிவிடப் பார்க்கின்றார்கள்.

செருக்குற்றோர் எனக்கெனக் கண்ணியை மறைவாக வைக்கின்றனர்: தம் கயிறுகளால் எனக்கு சுருக்கு வைக்கின்றனர்:

நானோ ஆண்டவரை நோக்கி இவ்வாறு வேண்டினேன்: நீரே என் இறைவன்! ஆண்டவரே! உம் இரக்கத்திற்காக நான் எழுப்பும் குரலுக்குச் செவிசாயும்.

என் தலைவராகிய ஆண்டவரே! எனக்கு விடுதலை வழங்கும் வல்லவரே! போர் நடந்த நாளில் என் தலையை மறைத்துக் காத்தீர்!

ஆண்டவரே! தீயோரின் விருப்பங்களை நிறைவேற்றாதேயும்: அவர்களின் சூழ்ச்சிகளை வெற்றி பெறவிடாதேயும். இல்லையெனில், அவர்கள் ஆணவம் கொள்வார்கள். (சேலா)

என்னைச் சூழ்பவர்கள் செருக்குடன் நடக்கின்றார்கள்: அவர்கள் செய்வதாகப் பேசும் தீமை அவர்கள்மேலே விழுவதாக!

நெருப்புத் தழல் அவர்கள்மேல் விழுவதாக! மீளவும் எழாதபடி படுகுழியில் தள்ளப்படுவார்களாக!

புறங்கூறும் நாவுடையோர் உலகில் நிலைத்து வாழாதிருப்பராக! வன்செயல் செய்வாரைத் தீமை விரட்டி வேட்டையாடுவதாக!

ஏழைகளின் நீதிக்காக ஆண்டவர் வழக்காடுவார் எனவும் எளியவர்களுக்கு நீதி வழங்குவார் எனவும் அறிவேன்.

மெய்யாகவே, நீதிமான்கள் உமது பெயருக்கு நன்றி செலுத்துவார்கள்: நேர்மையுள்ளோர் உம் திருமுன் வாழ்வர்.

அதிகாரம் 141

ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்: விரைவாய் எனக்குத் துணைசெய்யும். உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.

பபம்போல் என் மன்றாட்டை உம் திருமுன் ஏற்றுக்கொள்ளப்படுவதாக! மாலைப் பலிபோல் என் கைகள் உம்மை நோக்கி உயர்வனவாக!

ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்: என் இதழ்களின் வாயிலில் காவலாளியை வைத்தருளும்.

என் இதயம் தீயது எதையும் நாடவிடாதேயும்: தீச்செயல்களை நான் செய்யவிடாதேயும்: தீச்செயல் செய்யும் மனிதரோடு என்னைச் சேரவிடாதேயும்: அவர்களோடு இனிய விருந்தினை நான் உண்ணவிடாதேயும்.

நீதிமான் என்னைக் கனிவோடு தண்டிக்கட்டும்: அது என் தலைக்கு எண் ணெய்போல் ஆகும்: ஆனால், தீயவரின் எண்ணெய் என்றுமே என் தலையில் படாமல் இருக்கட்டும் : ஏனெனில், அவர்கள் செய்யும் தீமைகளுக்கு எதிராய் நான் என்றும் வேண்டுதல் செய்வேன்.

அவர்கள் நீதிபதிகளிடம் தண்டனைக்கென ஒப்புவிக்கப்படும் பொழுது, நான் சொன்னது எவ்வளவு உண்மையானது என்று ஏற்றுக் கொள்வார்கள்:

“ஒருவரால் பாறை பிளந்து சிதறடிக்கப்படுவதுபோல், எங்கள் எலும்புகளும் பாதாளத்தின் வாயிலில் சிதறடிக்கப்படும் என்பார்கள்.

ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன: உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்: என் உயிரை அழியவிடாதேயும்.

அவர்கள் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்து என்னைக் காத்தருளும்: தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்து என்னைப் பாதுகாத்தருளும்.

தீயோர் தாங்கள் வைத்த கண்ணிகளில் ஒருங்கே வந்து விழுவார்களாக! நானோ தடையின்றிக் கடந்து செல்வேனாக!

அதிகாரம் 142

ஆண்டவரை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றேன்: உரத்த குரலில் ஆண்டவரின் இரக்கத்திற்காக வேண்டுகின்றேன்.

என் மனக்குறைகளை அவர் முன்னலையில் கொட்டுகின்றேன்: அவர் திருமுன்னே என் இன்னலை எடுத்துரைக்கின்றேன்:

என் மனம் சோர்வுற்றிருந்தது: நான் செல்லும் வழியை அவர் அறிந்தேயிருக்கின்றார்: நான் செல்லும் வழியில் அவர்கள் எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.

வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்: என்னைக் கவனிப்பார் எவருமிலர்: எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று: என் நலத்தில் அக்கறை கொள்வார் எவருமிலர்.

ஆண்டவரே! உம்மை நோக்கிக் கதறுகின்றேன்: “நீரே என் அடைக்கலம்: உயிர் வாழ்வோர் நாட்டில் நீரே என் பங்கு“.

என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்: ஏனெனில், நான் மிகவும் தாழ்த்தப்பட்டுள்ளேன்: என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்: ஏனெனில், அவர்கள் என்னைவிட வலிமைமிக்கோர்.

சிறையினின்று என்னை விடுவித்தருளும்: உமது பெயருக்கு நான் நன்றி செலுத்துவேன்: நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து நிற்பார்கள்: ஏனெனில், நீர் எனக்குப் பெரும் நன்மை செய்கின்றீர்.

அதிகாரம் 143

ஆண்டவரே! என்மன்றாட்டைக் கேட்டருளும்: நீர் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பதால், உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்: உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.

தண்டனைத் தீர்ப்புக்கு உம் அடியானை இழுக்காதேயும்: ஏனெனில், உயிர் வாழ்வோர் எவரும் உமது திருமுன் நீதிமான் இல்லை.

எதிரி என்னைத் துரத்தினான்: என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்: என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல் என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.

எனவே, என்னுள்ளே என் மனம் ஒடுங்கிப் போயிற்று: என்உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.

பண்டைய நாள்களை நான் நினைத்துக் கொள்கின்றேன்: உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச் சிந்தனை செய்கின்றேன்: உம் கைவினைகளைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.

உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்: வறண்ட நிலம் நீருக்காகத் தவிப்பது போல் என் உயிர் உமக்காகத் தவிக்கின்றது. (சேலா)

ஆண்டவரே! விரைவாக எனக்குச் செவிசாய்த்தருளும்: ஏனெனில், என் உள்ளம் உடைந்துவிட்டது: என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும்: இல்லையெனில், படுகுழி செல்வோருள் ஒருவராகிவிடுவேன்.

உமது பேரன்பை நான் வைகறையில் கண்டடையச் செய்யும்: ஏனெனில், உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்: நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்: ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.

ஆண்டவரே! என் எதிரிகளிடமிருந்து என்னை விடுவித்தருளும்: நான் உம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளேன்.

உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்: ஏனெனில், நீரே என் கடவுள்: உமது நலமிகு ஆவி என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக!

ஆண்டவரே! உமது பெயரின் பொருட்டு என் உயிரைக் காத்தருளும்! உமது நீதியின் பொருட்டு என்னை நெருக்கடியினின்று விடுவித்தருளும்.

உமது பேரன்பை முன்னிட்டு என் பகைவரை அழித்துவிடும்: என் பகைவர் அனைவரையும் ஒழித்துவிடும்: ஏனெனில், நான் உமக்கே அடிமை!

அதிகாரம் 144

என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே!

என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே!

ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்? மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்?

மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்: அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை.

ஆண்டவரே! உம் வான்வெளியை வளைத்து இறங்கிவாரும்: மலைகளைத் தொடும் : அவை புகை கக்கும்.

மின்னலை மின்னச் செய்து, அவர்களைச் சிதறடியும்: உம் அம்புகளை எய்து, அவர்களைக் கலங்கடியும்.

வானின்று உமது கையை நீட்டி எனக்கு விடுதலை வழங்கும்: பெருவெள்ளம் போல் எழும் வேற்றினத்தார் கையினின்று என்னை விடுவித்தருளும்.

அவர்களது வாய் பேசுவது பொய்! அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை!

இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்: பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்.

அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே!

எனக்கு விடுதலை வழங்கும்: வேற்றினத்தார் கையினின்று என்னை விடுவித்தருளும்: அவர்களது வாய் பேசுவது பொய்! அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை!

எம் புதல்வர்கள் இளமையில் செழித்து வளரும் செடிகள்போல் இருப்பார்களாக! எம் புதல்வியர் அரண்மனைக்கு அழகூட்டும் செதுக்கிய சிலைகள்போல் இருப்பார்களாக!

எம் களஞ்சியங்கள் நிறைந்திருப்பனவாக! வகைவகையான தானியங்களால் நிறைந்திருப்பனவாக! எங்கள் வயல்களில் ஆடுகள் ஆயிரம், பல்லாயிரம் மடங்கு பலுகட்டும்!

எங்கள் மாடுகள் சுமைசுமப்பனவாக! எவ்விதச் சிதைவோ இழப்போ இல்லாதிருக்கட்டும்! எங்கள் தெருக்களில் அழுகுரல் இல்லாதிருக்கட்டும் .

இவற்றைக் உண்மையாகவே அடையும் மக்கள் பேறுபெற்றோர்! ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொண்ட மக்கள் பேறுபெற்றோர்.

அதிகாரம் 145

என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்: உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.

நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்: உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.

ஆண்டவர் மாண்புமிக்கவர்: பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்: அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.

ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்: வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.

உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன்.

அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப்பற்றி மக்கள் பேசுவார்கள்: உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்,

அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்துக் கொண்டாடுவார்கள்: உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்.

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்: எளிதில் சினம் கொள்ளாதவர்: பேரன்பு கொண்டவர்.

ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்: தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்: உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.

அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்: உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.

மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.

உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு: உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.

தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் பக்கிவிடுகின்றார்.

எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன: தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.

நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.

ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்: அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.

தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.

அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்: அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்.

ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்: பொல்லார் அனைவரையும் அழிப்பார்.

என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல்கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!

அதிகாரம் 146

அல்லேலு¡யா! என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு:

நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்: என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன்.

ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்: உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம்.

அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்: அந்நாளில் அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம்.

யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்: தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.

அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்: என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே!

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்: பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்: சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்: நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.

ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்: அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்: ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.

சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலு¡யா!

அதிகாரம் 147

அல்லேலு¡யா! நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது: அவரைப் புகழ்வது இனிமையானது: அதுவே ஏற்புடையது.

ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்பிகின்றார்: நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார்:

உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்: அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.

விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார்.

நம் தலைவர் மாண்புமிக்கவர்: மிகுந்த வல்லமையுள்ளவர்: அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது.

ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்: பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார்.

ஆண்டவருக்கு நன்றி செலுத்திப் பாடுங்கள்: நம் கடவுளை யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள்.

அவர் வானத்தை மேகங்களால் மறைக்கின்றார்: பூவுலகின்மீது மழையைப் பொழிகின்றார்: மலைகளில் புல்லை முளைக்கச் செய்கின்றார்.

கால்நடைகளுக்கும் கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும், அவர் இரை கொடுக்கின்றார்.

குதிரையின் வலிமையில் அவர் மகிழ்ச்சி காண்பதில்லை: வீரனின் கால்வலிமையையும் அவர் விரும்புவதில்லை.

தமக்கு அஞ்சி நடந்து தம் பேரன்புக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம் அவர் மகிழ்ச்சி கொள்கின்றார்.

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!

அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்: உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.

அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்: உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.

அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்: அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.

அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழியச் செய்கின்றார்: சாம்பலைப்போல் உறைபனியைத் பவுகின்றார்:

பனிக்கட்டியைத் துகள் துகள்களாக விழச் செய்கின்றார்: அவர் வரவிடும் குளிரைத் தாங்கக் கூடியவர் யார்?

அவர் தம் கட்டளையால் அவற்றை உருகச் செய்கின்றார்: தம் காற்றை வீசச் செய்ய, நீர் ஓடத் தொடங்குகின்றது.

யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.

அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை: அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது: அல்லேலு¡யா!

அதிகாரம் 148

அல்லேலு¡யா! விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்: உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.

அவருடைய பதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்: அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்.

கதிரவனே, நிலாவே, அவரைப் போற்றுங்கள்: ஒளிவீசும் விண்மீன்களே, அவரைப் போற்றுங்கள்.

விண்ணுலக வானங்களே, அவரைப் போற்றுங்கள்: வானங்களின் மேலுள்ள நீர்த்திரளே, அவரைப் போற்றுங்கள்.

அவை ஆண்டவரின் பெயரைப் போற்றட்டும்: ஏனெனில், அவரது கட்டளையின்படி எல்லாம் படைக்கப்பட்டன:

அவரே அவற்றை என்றென்றும் நிலைபெறச் செய்தார்: மாறாத நியமத்தை அவற்றிற்கு ஏற்படுத்தினார்.

மண்ணுலகில் ஆண்டவரைப் போற்றுங்கள்: கடலின் பெரும் நாகங்களே, ஆழ்கடல் பகுதிகளே,

நெருப்பே, கல்மழையே, வெண்பனியே, மூடுபனியே, அவரது ஆணையை நிறைவேற்றும் பெருங்காற்றே,

மலைகளே, அனைத்துக் குன்றுகளே, கனிதரும் மரங்களே, அனைத்துக் கேதுரு மரங்களே.

காட்டு விலங்குகளே, அனைத்துக் கால்நடைகளே, ஊர்ந்து செல்லும் உயிரினங்களே, சிறகுள்ள பறவைகளே,

உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,

இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.

அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக: அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது: அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது.

அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்: அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். அல்லேலு¡யா!

அதிகாரம் 149

அல்லேலு¡யா! ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்: அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள்.

இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக!

நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக: மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!

ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்: தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.

அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக!

அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்: அவர்களின் கையில் இருபுறமும் கூர்மையான வாள் இருக்கட்டும்.

அவர்கள் வேற்றினத்தாரிடம் பழிதீர்த்துக் கொள்வார்கள்: மக்களினங்களுக்கு தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்:

வேற்றின மன்னர்களை விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்: உயர்குடி மக்களை இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.

முன்குறித்து வைத்த தீர்ப்பை அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்: இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலு¡யா!

அதிகாரம் 150

அல்லேலு¡யா! பயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்!

அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்!

எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்! வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள்.

மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்! யாழினை மீட்டி, குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்!

சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள்! கலீர் எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்!

அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக! அல்லேலு¡யா!

நீதிமொழிகள்

அதிகாரம் 1

தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:

இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,

விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.

இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.

புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;

நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்.

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.

என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.

எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;

பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்;

விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.

எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொல்வார்களாகில்;

என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.

அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது.

எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.

இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளிவைத்திருக்கிறார்கள்.

பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.

ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.

அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது:

பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.

நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.

என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.

ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.

நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.

அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.

அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்து கொள்ளாமற்போனார்கள்.

என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.

ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.

பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.

எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.

அதிகாரம் 2

என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,

நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,

அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.

அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.

அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.

அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.

ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,

நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.

அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும்,

அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு,

தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,

மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.

தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,

இச்சகமான வார்த்தைகளைப்பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.

அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.

அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.

ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.

செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.

துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.

அதிகாரம் 3

என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.

கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.

அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,

உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.

உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.

அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.

என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.

ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.

அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.

முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.

அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.

அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.

அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.

கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.

அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.

என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள்.

அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.

அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.

நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.

சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.

உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.

அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.

ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.

கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.

மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.

துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.

இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.

ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.

அதிகாரம் 4

பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.

நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள்.

நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.

அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.

ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.

அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.

நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.

அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.

என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.

ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.

நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.

புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.

துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.

அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.

பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.

அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.

நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.

துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.

என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.

அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.

அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.

வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.

உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.

உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.

வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.

அதிகாரம் 5

என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;

அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.

பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.

அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.

அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.

நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக் கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.

ஆதலால் பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள்.

உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே.

சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.

அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின் பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.

முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:

ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!

என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே!

சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.

உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.

உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.

அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக.

உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.

அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும்போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.

என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?

மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.

துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.

அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.

அதிகாரம் 6

என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால்,

நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.

இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.

உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.

வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.

சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.

அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,

கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.

சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?

இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?

உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.

பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான்.

அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.

அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.

ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.

அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை,

துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்,

அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.

என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள்.

நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.

கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி.

அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும்.

உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.

வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.

தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?

தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?

பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.

திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்;

அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.

ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.

வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.

ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.

அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.

அதிகாரம் 7

என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.

என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.

அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதய பலகையில் எழுதிக்கொள்.

இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,

ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.

நான் என் வீட்டின் ஜன்னலருகே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது,

பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக்கண்டு அவனைக் கவனித்தேன்.

அவன் மாலைமயங்கும் அஸ்தமனநேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும்,

அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய் நடந்துபோனான்.

அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.

அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை.

சிலவேளை வெளியிலிருப்பாள், சிலவேளை வீதியிலிருப்பாள், சந்துகள்தோறும் பதிவிருப்பாள்.

அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:

சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.

ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.

என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்.

என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.

வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.

புருஷன் வீட்டிலே இல்லை, தூரப் பிரயாணம் போனான்.

பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,

தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.

உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவது போலும்,

ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.

ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.

உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே.

அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.

அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.

அதிகாரம் 8

ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?

அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது.

அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:

மனுஷரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும்.

பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.

கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும்.

என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது.

என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.

அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும்.

வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப்பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.

முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.

ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.

தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.

ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது.

என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.

என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகைசெய்துவருகிறார்கள்.

என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.

ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.

பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது.

என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,

அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.

கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.

பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.

ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.

மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,

அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.

அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,

உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,

சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,

நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.

அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்.

ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.

நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.

என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.

என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.

எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.

அதிகாரம் 9

ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,

தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி,

தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,

புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.

நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்.

பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.

பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.

ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.

என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.

நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.

மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.

அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து,

தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:

எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,

மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.

ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.

அதிகாரம் 10

சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.

அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.

கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.

சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன்.

நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும்.

இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.

உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.

கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.

நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.

பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.

புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.

ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.

ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும்.

நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.

புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.

பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.

சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.

நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.

துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்.

பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.

கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.

நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.

கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம்.

நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.

நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம்.

நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.

அதிகாரம் 11

கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.

அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.

செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.

கோபாக்கினைநாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.

உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.

செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள்.

துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போம்.

நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.

மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.

நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.

செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும்.

மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.

புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.

ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.

அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.

நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்.

தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.

துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.

நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.

மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்.

கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.

மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன்மூக்குத்திக்குச் சமானம்.

நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.

வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.

உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.

தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.

நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.

தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.

தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.

நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.

இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.

அதிகாரம் 12

புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.

நல்லவன் கர்த்தரிடத்தில் தயைபெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.

துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.

குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.

நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள்.

துன்மார்க்கரின் வார்த்தைகள் இரத்தஞ்சிந்தப் பதிவிருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.

துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.

தன் புத்திக்குக்தக்கதாக மனுஷன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.

ஆகாரமில்லாதவனாயிருந்தும், தன்னைத்தான் கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும், கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.

நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.

தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.

துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.

துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்.

அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.

மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.

சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.

பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்.

சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.

தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம்பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்.

நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.

ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்.

மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.

நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.

சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.

அதிகாரம் 13

ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்.

மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும்.

தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.

சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.

நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான்.

நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.

ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு.

மனுஷனுடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான்.

நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்.

அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.

வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.

நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.

திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.

ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

நற்புத்தி தயையை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.

விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.

துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்; உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஔஷதம்.

புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்.

வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.

ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.

பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.

நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.

ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.

பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.

நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும்.

அதிகாரம் 14

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.

மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.

எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.

மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.

மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய்.

தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.

மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.

இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.

துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.

மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.

நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.

பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.

பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.

ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.

முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.

பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.

தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.

தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.

பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.

தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.

சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.

ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே.

மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.

கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.

கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.

ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை; ஜனக்குறைவு தலைவனின் முறிவு.

நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.

சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.

தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.

துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.

புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.

நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.

ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.

அதிகாரம் 15

மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.

கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.

ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.

மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.

நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.

ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.

துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.

வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.

பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?

பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.

மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்.

புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.

சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.

சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.

கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.

சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.

மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.

ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.

மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.

அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.

துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.

பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.

நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.

துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.

கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.

ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.

புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.

கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

அதிகாரம் 16

மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.

மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.

உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.

கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.

மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.

கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.

அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.

மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.

ராஜாவின் உதடுகளில் திவ்விய வாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.

சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.

அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.

நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.

ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.

ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.

பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!

தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.

அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.

அகங்காரிகளோடே கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.

விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.

இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.

புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவ ஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.

ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.

இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஔஷதமுமாகும்.

மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.

பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.

பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.

மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.

கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.

அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.

நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.

பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.

சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.

அதிகாரம் 17

சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப்பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.

புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.

வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.

துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.

ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.

பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.

மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.

பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.

குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.

மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.

துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.

தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி.

நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.

சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.

துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.

சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.

புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்.

வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.

மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.

மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.

மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.

துன்மார்க்கன், நீதியின் வழியைப் புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான்.

ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும்.

மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.

நீதிமானைத் தண்டம்பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.

அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.

பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.

அதிகாரம் 18

பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.

மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.

துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும்.

மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.

வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல.

மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.

மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.

கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.

தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.

ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்.

அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.

மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?

புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.

ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.

தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.

சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.

அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போலிருக்கும்.

அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.

மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.

தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவு கொடுக்கிறான்.

சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.

அதிகாரம் 19

மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.

ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.

மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.

செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்.

பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.

பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.

தரித்திரனை அவனுடைய சகோதரர் எல்லாரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாய் அவன் சிநேகிதர் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.

ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.

பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.

மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.

மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.

மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.

வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.

சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.

கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.

நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.

கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.

உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.

மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.

நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப்பார்க்கிலும் தரித்திரன் வாசி.

கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.

சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.

பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.

தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.

என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.

பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.

பரியாசக்காரருக்குத் தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.

அதிகாரம் 20

திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.

ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான்.

வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.

சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.

மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.

மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?

நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.

நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.

என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?

வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.

கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.

தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.

கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.

பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.

அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடு வாங்கிக்கொள்.

வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக்கற்களால் நிரப்பப்படும்.

ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.

தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.

தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்.

ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.

தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.

வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத் தராசு நல்லதல்ல.

கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?

பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.

ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரைச் சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.

மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.

தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.

வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.

காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்.

அதிகாரம் 21

ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.

மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.

பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.

மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.

ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.

பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும்.

துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்.

குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன்.

சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.

துன்மார்க்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங்கிடையாது.

பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.

நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.

ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.

அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும்.

நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம்.

விவேகத்தின் வழியை விட்டுத் தப்பி நடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான்.

சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.

நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள்.

சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.

வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.

நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.

பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்.

தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.

அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.

சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.

அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்.

துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.

பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.

துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான்.

கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.

அதிகாரம் 22

திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம்.

ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.

விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.

தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.

மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு; தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான்.

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன்வாங்கினவன் கடன்கொடுத்தவனுக்கு அடிமை.

அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.

கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.

பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.

சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான்.

கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.

வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.

பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.

பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.

தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன் தனக்குக் குறைச்சலுண்டாகவே ஐசுவரியவானுக்குக் கொடுப்பான்.

உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.

அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன் உதடுகளில் நிலைத்திருக்கப்பண்ணும்போது, அது இன்பமாயிருக்கும்.

உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.

சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை மறுமொழியாகச் சொல்லும்படிக்கும்,

ஆலோசனையையும் ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா?

ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.

கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார்.

கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.

அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.

கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.

செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.

உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே.

தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.

அதிகாரம் 23

நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்.

நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.

அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.

ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.

இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போலச் சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.

வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.

அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.

நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.

மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான்.

பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.

அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.

உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.

பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.

நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.

என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.

உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.

உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.

மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே.

குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.

உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.

சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.

நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.

உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.

என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.

வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.

அவள் கொள்ளைக்காரனைப்போல் பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.

ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?

மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.

மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.

உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.

நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.

என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.

அதிகாரம் 24

பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.

அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.

வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.

அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.

ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.

நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.

மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.

தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான்.

தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.

ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது.

மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.

அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?

என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.

அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.

துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.

நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.

உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.

கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.

பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.

துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்.

என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே.

சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?

பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.

துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.

அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.

செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.

வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.

நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.

அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.

சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது.

அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.

இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?

உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.

அதிகாரம் 25

யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:

காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.

வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.

வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்.

ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.

ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே.

உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.

வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.

நீ உன் அயலானுடனேமாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.

மற்றப்படி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன் அவமானம் உன்னைவிட்டு நீங்காது.

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.

கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.

கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்.

கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி.

நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.

தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.

உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே.

பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன்.

ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழிபுரண்ட காலுக்கும் சமானம்.

மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான்.

உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு.

அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.

வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.

சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.

தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.

துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும்.

தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.

தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.

அதிகாரம் 26

உஷ்ணகாலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.

அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது.

குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.

மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.

மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.

மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.

நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.

மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிருப்பான்.

மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.

பெலத்தவன் அனைவரையும் நோகப்பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்.

நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.

தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.

வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.

கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.

சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.

புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.

வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்.

கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,

அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.

விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.

கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.

கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.

நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.

பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.

அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.

பகையை வஞ்சகமாய் மறைத்து வைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.

படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.

கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம்பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.

அதிகாரம் 27

நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.

உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.

கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.

உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?

மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.

சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.

தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்.

பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.

உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே; உன் ஆபத்துக்காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி.

என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.

விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.

அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்.

ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.

அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.

அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.

இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.

அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.

தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.

பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.

வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.

மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.

உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு.

செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?

புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.

ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.

வெள்ளாட்டுப்பால் உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும், உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும்.

அதிகாரம் 28

ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.

தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.

ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.

வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.

துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.

இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.

வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.

வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.

ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.

நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்.

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.

ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்துதிரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.

பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.

இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.

உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.

தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.

முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ்செய்வான்.

வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.

தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.

தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.

பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.

தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.

துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.

அதிகாரம் 29

அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.

ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன் தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.

நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.

பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.

துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.

நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.

பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்.

ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.

இரத்தப்பிரியர் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறார்கள்.

மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.

அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.

தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங் கொடுக்கிறார்.

ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.

பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.

துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.

உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.

தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.

அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவுகொடான்.

தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.

ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான்.

கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.

மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.

திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.

மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

ஆளுகைசெய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.

நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.

அதிகாரம் 30

யாக்கேயின் குமாரனாகிய ஆகூர் என்னும் புருஷன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் உரைத்த உபதேச வாக்கியங்களாவன:

மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.

நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.

வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?

தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.

அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.

இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்.

மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.

நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.

எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றஞ்சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய்.

தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு.

தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு.

வேறொரு சந்ததியாருமுண்டு; அவர்கள் கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள்.

தேசத்தில் சிறுமையானவர்களையும் மனுஷரில் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப்பற்களையுமுடைய சந்ததியாருமுண்டு.

தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.

அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே.

தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.

எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு, என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு.

அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே.

அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து: நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.

மூன்றினிமித்தம் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமாட்டாது.

அரசாளுகிற அடிமையினிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்,

பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.

பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.

அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,

சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்,

ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,

தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.

விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.

அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்,

போர்க்குதிரையும், வெள்ளாட்டுக்கடாவும், ஒருவரும் எதிர்க்கக்கூடாத ராஜாவுமே.

நீ மேட்டிமையானதினால் பைத்தியமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு.

பாலைக் கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.

அதிகாரம் 31

ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:

என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,

ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.

திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.

மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.

மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;

அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.

ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.

உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்.

குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.

அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.

அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.

ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.

அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.

இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.

ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.

தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.

தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும்.

தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும்.

சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.

தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள்.

இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.

அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான்.

மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.

அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப்பற்றியும் மகிழுகிறாள்.

தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.

அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள்.

அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப்பார்த்து:

அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.

சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.

அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.

புத்தகம் 21 - சபை உரையாளர்

அதிகாரம் 1.

தாவீதின் மகனும் எருசலேமின் அரசருமாகிய சபையுரையாளர் உரைத்தவை:

வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்: வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்.

மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்: ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன?

ஒரு தலைமுறை மறைகின்றது: மறு தலைமுறை தோன்றுகின்றது: உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது.

ஞாயிறு தோன்றுகின்றது: ஞாயிறுமறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது.

தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது: பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது. இப்படிச் சுழன்று சுழன்று வீசித் தன் இடத்திற்குத் திரும்புகின்றது.

எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன: எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை: மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன.

அனைத்தும் சலிப்பையே தருகின்றன: அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது. எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை: எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை.

முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்: முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை.

ஏதேனும் ஒன்றைப்பற்றி,"இதோ, இது புதியது" என்று சொல்லக் கூடுமோ? இல்லை. அது ஏற்கனவே, நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே!

முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை: அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப்பற்றிய நினைவு இருக்கப்போவதில்லை.

சபையுரையாளனாகிய நான் எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன்.

இவ்வுலகில் நடக்கிற எல்லாவற்றையும் ஞானத்தின் துணை கொண்டு கூர்ந்து ஆராய்வதில் என் சிந்தையைச் செலுத்தினேன். மானிடர் பாடுபட்டுச் செய்வதற்கென்று அவர்களுக்குக் கடவுள் எவ்வளவு தொல்லைமிகு வேலையைக் கொடுத்திருக்கிறார்!

இவ்வுலகில் செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் கவனித்தேன். அனைத்தும் வீணான செயல்களே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவை.

கோணலானதை நேராக்க இயலாது: இல்லாததை எண்ணிக் கையில் சேர்க்க முடியாது.

எனக்குமுன் எருசலேமில் அரசராய் இருந்தவர்கள் எல்லாரையும் விட நான் ஞானத்தை மிகுதியாகத் தேடிப்பெற்றவன்: மிகுந்த ஞானத்தையும் அறிவையும் அனுபவத்தால் பெற்றவன் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

ஞானத்தையும் அறிவையும்பற்றித் தெரிந்துகொள்வதில் என் சிந்தையைச்செலுத்தினேன்: மடமையையும் மதிகேட்டையும்பற்றி அறிய முயன்றேன். இதுவும் காற்றைப் பிடிக்க முயல்஥வதற்கு ஒப்பானதே எனக் கண்டேன்.

ஞானம் பெருகக் கவலை பெருகும்: அறிவு பெருகத் துயரம் பெருகும்.

அதிகாரம் 2.

இன்பத்தில் மூழ்கி அதன் இனிமையைச் சுவைப்போம்: நெஞ்சே! நீ வா!" என்றேன். அதுவும் வீண் என நான் கண்டேன்.

சிரித்துக் களித்தல் மதிகெட்ட செயல் என்றேன்:

இன்பம் நன்மை பயக்காது என்றேன். ஞானத்தின் மீதுள்ள ஆவலை விட்டுவிடாமலே, மதுவால் உடலுக்குக் களிப்பூட்டவும் மதிகெட்ட திட்டத்தில் ஈடுபடவும் தலைப்பட்டேன்: மக்கள் தங்கள் குறுகிய உலக வாழ்க்கையில் செய்யக்கூடிய நலமான செயல் எதுவென்று அறிவதற்காக இவ்வாறு செய்யலானேன்:

பெரிய காரியங்களைச் செய்து முடித்தேன்: எனக்கென்று வீடுகளைக் கட்டினேன்: திராட்சைத் தோட்டங்களை அமைத்தேன்.

எனக்கென்று தோட்டம், பூங்கா பல அமைத்து அவற்றில் எல்லா வகையான பழமரங்களையும் நட்டேன்:

தோப்பில் வளரும் மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காகக் குளங்களை வெட்டினேன்:

ஆண் பெண் அடிமைகளை விலைக்கு வாங்கினேன்: என் வீட்டிலேயே பிறந்த அடிமைகளும் எனக்கு இருந்தார்கள்: ஏராளமான ஆடுமாடுகளும் எனக்கு இருந்தன. எனக்குமுன் எருசலேமில் இருந்த எவருக்கும் அத்தனை ஆடுமாடுகள் இருந்ததில்லை.

வெள்ளி, பொன், மன்னர்களின் செல்வம், மாநிலங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டேன். இசைவல்ல ஆடவரும் பெண்டிரும் என்னைப் பாடி மகிழ்வித்தனர். மகிழ்வூட்டும் மங்கையரையும் வைத்திருந்தேன்.

இவ்வாறு என் செல்வம் வளர்ந்தது. எருசலேமில் எனக்குமுன் இருந்த எல்லாரையும்விடப் பெரிய செல்வனானேன். எனினும், எனக்கிருந்த ஞானம் குறைபடவில்லை.

என் கண்கள் விரும்பின அனைத்தையும் அவற்றிற்கு அளித்தேன். எந்த மகிழ்ச்சியையும் என் மனத்திற்குக் கொடுக்க நான் தவறவில்லை. என் முயற்சி அனைத்தும் என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியூட்டியது. இதுவே என் முயற்சிகளுக்கெல்லாம் கிடைத்த பலனாகும்.

நான் செய்த செயல்கள் யாவற்றையும் அவற்றைச் செய்வதற்கு நான் எடுத்த முயற்சியையும் நினைத்துப் பார்த்தபோதோ, அவையாவும் வீண் என்பதைக் கண்டேன். அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்: முற்றும் பயனற்ற செயல்களே.

நான் ஞானம், மூடத்தனம், மதிகேடு ஆகியவற்றை ஆராய்த்தலைப்பட்டேன். ஓர் அரசன் தனக்கு முன்னிருந்த அரசர் செய்ததைத் தவிர வேறென்ன செய்வான்?

ஒளி இருளை விட மேலானதாய் இருப்பதுபோல, ஞானமும் மதிகேட்டைவிட மேலானதாய் இருக்கக் கண்டேன்.

ஞானிகளின் கண்கள் ஒளி படைத்தவை: மூடரோ இருளில் நடப்பவர். ஆயினும், ஒருவருக்கு நேர்வதே மற்றெல்லாருக்கும் நேரிடும் என்று நான் கண்டேன்.

மூடருக்கு நேரிடுவது போலவே எனக்கும் நேரிடும். அப்படியானால் நான் ஞானத்தில் வளர்ந்தது எதற்காக? அதனால் பயனென்ன என்று சிந்தித்து, அதுவும் வ஧ணை என்ற முடிவுக்கு வந்தேன்.

ஞானிகளையோ, மூடரையோ யாரும் நினைவில் வைத்திருப்பதில்லை. வருங்காலத்தில் அனைவரும் மறக்கப்படுவர். மூடர் மடிவதுபோல ஏன் ஞானிகளும் மடியவேண்டும்?

எனவே, நான் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டேன். மேலும், உலகில் செய்யப்படுபவை யாவும் எனக்குத் தொல்லையையே கொடுத்தன. எல்லாம் வீண்: யாவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.

நான் இவ்வுலகில் எவற்றையெல்லாம் செய்துமுடிக்க உழைத்தேனோ அவற்றின் மீதெல்லாம் வெறுப்புக் கொண்டேன். ஏனெனில், அவற்றை எனக்குப்பின் வருகிறவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென்பது எனக்குத் தெரியும்.

அவர்கள் ஞானமுள்ளவராய் இருக்கலாம் அல்லது மதிகேடராய் இருக்கலாம்: யாருக்குத் தெரியும்? எத்தகையவராய் இருப்பினும், நான் இவ்வுலகில் ஞானத்தோடு உழைத்து அடைந்த பயன்களுக்கெல்லாம் அவர்களே உரிமையாளர் ஆவர்.

என் உழைப்பும் வீணே. நான் உலகில் செய்த எல்லா முயற்சிக்காகவும் மனமுடைந்துபோனேன்.

ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்: உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே.

இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும் வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயனென்ன?

வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம்: வேலையில் தொந்தரவு: இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.

உண்பதையும் குடிப்பதையும் தம் உழைப்பால் வரும் இன்பத்தைத் துய்ப்பதையும்விட, நலமானது மனிதருக்கு வேறொன்றுமில்லை. இந்த வாய்ப்பும் கடவுள் தந்ததே எனக் கண்டேன்.

அவரின்றி ஒருவருக்கு எப்படி உணவு கிடைக்கும்? அவரால் எப்படி இன்பம் துய்க்க இயலும்?

கடவுள் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு ஞானத்தையும் அறிவாற்றலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறார். பாவம் செய்கிறவருக்கோ செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வேலையைக் கொடுக்கிறார்: ஆனால், அச்செல்வம் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு விட்டுச் செல்வதற்கே. இதுவும் வீணே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.

அதிகாரம் 3.

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு.

பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்: நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்:

கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்தலுக்கு ஒரு காலம்:

இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்: அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்: துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்:

கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்: அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்:

தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்: காக்க ஒரு காலம், து஡க்கியெறிய ஒரு காலம்:

கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்: பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்:

அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்: போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம்.

வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன?

மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன்.

கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்: காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்தியிருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.

எனவே, மனிதர் தாம் உயிரோடிருக்கும் போது, இன்பம் துய்த்து மகிழ்வதைவிடச் சிறந்தது அவருக்கு வேறொன்றும் இல்லை என அறிந்துகொண்டேன்.

உண்டு குடித்து உழைப்பால் வரும் பயனைத் துய்க்கும் இன்பம் எல்லா மனிதருக்கும் கடவுள் அளித்த நன்கொடை.

கடவுள் செய்யும் ஒவ்வொன்றும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன். அதனோடு கூட்டுவதற்கோ அதனின்று குறைப்பதற்கோ எதுவுமில்லை. தமக்கு மனிதர் அஞ்சி நடக்க வேண்டுமென்று கடவுள் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்.

இப்போது நடப்பது ஏற்கெனவே நடந்ததாகும். இனி நடக்கப்போவதும் ஏற்கெனவே நடந்ததாகும். நடந்ததையே கடவுள் மீண்டும் மீண்டும் நடைபெறச் செய்கிறார்.

வேறொன்றையும் உலகில் கண்டேன். நேர்மையும் நீதியும் இருக்கவேண்டிய இடங்களில் அநீதியே காணப்படுகிறது.

஥கடவுள் நல்லாருக்கும் பொல்லாருக்கும் தீர்ப்புவழங்கப் போகிறார். ஏனெனில், ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு செயலுக்கும் அவற்றிற்குரிய காலத்தை அவர் குறித்திருக்கிறார்" என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

மனிதர் விலங்கைப் போன்றவர் என்"பதைக் காட்டுவதற்காகவே கடவுள் அவருக்குச் சோதனைகளை அனுப்புகிறார்" என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

மனிதருக்கு நேரிடுவதே விலங்குக்கும் நேரிடுகிறது: மனிதரும் மடிகிறார்: விலங்கும் மடிகிறது. எல்லா உயிர்களுக்கும் இருப்பது ஒரு வகையான மூச்சே. விலங்கைவிட மனிதர் மேலானவர் இல்லை: எல்லாம் வீணே.

எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணின்றே தோன்றின: எல்லாம் மண்ணுக்கே மீளும்.

மனிதரின் உயிர்மூச்சு மேலே போகிறது என்றும் விலங்குகளின் உயிர் மூச்சு கீழே தரைக்குள் இறங்குகிறது என்றும் யாரால் சொல்ல இயலும்?

ஒருவர் தம் வேலையைச் செய்வதில் இன்பம் காண்பதே அவருக்கு நல்லது என்று கண்டேன். ஏனெனில், அவ்வேலை அவருக்கெனக் குறிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்தபின் நடப்பதைக் காண அவரைத் திரும்ப யாரும் கொண்டு வரப்போவதில்லை.

அதிகாரம் 4.

பிறகு நான் இவ்வுலகில் நடக்கும் கொடுமைகளையெல்லாம் பார்த்தேன். இதோ! மக்கள் ஒடுக்கப்பட்டுக் கண்ணீர் சிந்துகிறார்கள். அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை. அவர்களை ஒடுக்குவோர் கை ஓங்கி இருந்ததால், அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை.

ஆகையால், இன்று உயிரோடு வாழ்கிறவர்களின் நிலைமையைவிட ஏற்கெனவே மாண்டு மறைந்துபோனவர்களின் நிலைமையே மேலானது என்றேன்.

இவ்விரு சாராரின் நிலைமையைவிட இன்னும் பிறவாதவர்களின் நிலைமையே சிறந்தது. ஏனெனில், அவர்கள் இவ்வுலகில் நடக்கும் கொடும் செயல்களைப் பார்க்கும் நிலையில் இல்லை.

மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல்: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.

தம் கைகளைக் கட்டிக்கொண்டு பட்டினிகிடந்து மடிகிறவர் மடையர் என்று சொல்லப்படுகிறது.

காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.

உலக வாழ்க்கையில் வேறொரு காரியமும் வீணென்று கண்டேன்.

ஒருவர் தனி மனிதராக வாழ்கிறார். அவருக்குப் பிள்ளையுமில்லை, உடன் பிறந்தாருமில்லை: என்றாலும், அவர் ஓயாது உழைக்கிறார். ஆனால், தமக்கிருக்கும் செல்வத்தால் ஒருபோதும் மனநிறைவடைவதுமில்லை: தாம் இவ்வாறு உழைப்பதும் எவ்வகையான இன்பத்தையும் அனுபவியாமல் இருப்பதும் யாருக்காக என்று அவர் எண்ணிப் பார்ப்பதுமில்லை. இது வீணானதும் வருந்தத்தக்கதுமான வாழ்க்கை அன்றோ?

தனி மனிதராய் இருப்பதை விட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால், அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும்.

ஒருவர் விழுந்தால், அடுத்தவர் அவரைத் து஡க்கி விடுவார். தனி மனிதராய் இருப்பவர் விழுந்தால், அவரது நிலைமை வருந்தத்தக்கதாகும்: ஏனெனில், அவரைத் துக்கி விட எவருமில்லை.

குளிரை முன்னிட்டு இருவர் ஒன்றாய் படுத்துச் சூடு உண்டாக்கிக்கொள்ளலாம்: தனி மனிதனுக்கு எப்படிச் சூடு உண்டாகும்?

தனி மனிதரை வீழ்த்தக்கூடிய எதிரியை இருவரால் எதிர்த்து நிற்க முடியும். முப்புரிக் கயிறு அறுவது கடினம்.

வயதுசென்ற அறிவுரை கேளாத முட்டாள் அரசரைவிட, விவேகமுள்ள ஏழை இளைஞனே மேலானவன்.

சிறையில் கைதியாதிருந்தவர் அரியணை ஏறியதும் உண்டு: அரசுரிமையுடன் பிறந்தவர் வறியவராவதும் உண்டு.

ஆனால், இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் அந்த அரச பதவியை ஏற்ற இளைஞனின் சார்பில் இருந்ததைப் பார்த்தேன்.

அவன் ஆண்ட மக்களின் எண்ணிக்கைக்கு வரையறையே இல்லை. அவன் காலத்திற்குப்பின் வந்த மக்களோ அவனில் மனநிறைவடையவில்லை. இதுவும் வீணே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.

அதிகாரம் 5.

கடவுளின் கோவிலுக்குச் செல்லும்போது விழிப்புடனிரு. மதிகேடரைப்போலப் பலிசெலுத்துவதை விட, உள்ளே சென்று கேட்டறிவதே மேல். ஏனெனில், அவர்கள் தாங்கள் செய்த தீவினைகளை உணர்வதில்லை.

கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே: எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே. கடவுள் விண்ணுலகில் இருக்கிறார்: நீயோ மண்ணுலகில் இருக்கிறாய்: எனவே, மிகச்சில சொற்களே சொல்.

கவலை மிகுமானால் கனவுகள் வரும்: சொல் மிகுமானால் மூடத்தனம் வெளியாகும்.

கடவுளுக்கு நீ ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால், அதை நிறைவேற்றுவதில் காலந்"தாழ்த்தாதே. ஏனெனில், பொறுப்பின்றி நடப்போரிடம் அவர் விருப்பங்கொள்வதில்லை. என்ன வாக்குக் கொடுத்தாயோ அதைத் தவறாமல் நிறைவேற்று.

கொடுத்த வாக்கை நிறைவேற்றாமற் போவதைவிட, வாக்குக் கொடாமல் இருப்பதே மேல்.

வாய் தவறிப் பேசிப் பழிக்கு ஆளாகாதபடி பார்த்துக்கொள்: தவறுதலாய்ச் செய்துவிட்டேன் என்று வான து஡தரிடம் சொல்லும்படி நடந்துகொள்ளாதே. உன் பேச்சின் பொருட்டுக் கடவுள் உன்மீது சினங்கொண்டு, நீ செய்தவற்றை அழிக்கும்படி நடந்துகொள்வானேன்?

கனவுகள் பல வரலாம்: செயல்களும் சொற்களும் எத்தனையோ இருக்கலாம். நீயோ கடவுளுக்கு அஞ்சி நட.

ஒரு மாநிலத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் அவர்களுக்கு நீதி நியாயம் வழங்கப்படாதிருப்பதையும் நீ காண்பாயானால் வியப்படையாதே. ஏனெனில், அலுவலர்களுக்குமேல் அதிகாரிகள் உள்ளனர் என்றும், அவர்களுக்கும் மேலதிகாரிகள் உள்ளனர் என்றும் சொல்வார்கள்.

"பொதுநலம்", "நாட்டுத் தொண்டு" என்ற சொற்களும் உன் காதில் விழும்.

பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது: செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர் அதனால் பயனடையாமற்போகிறார். இதுவும் வீணே.

சொத்து பெருகினால் அதைச் சுரண்டித் தின்பேரின் எண்ணிக்கையும் பெருகும். செல்வர்களுக்குத் தங்கள் சொத்தைக் கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு என்ன பயன் உண்டு?

வேலை செய்கிறவரிடம் போதுமான சாப்பாடு இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்: ஆனால் அவருக்கு நல்ல து஡க்கமாவது இருக்கும். செல்வரது செல்வப் பெருக்கே அவரைத் து஡ங்கவிடாது.

உலகில் ஒரு பெருந்தீங்கை நான் கண்டேன். ஒருவர் சேமிக்கும் செல்வம் அவருக்குத் துன்பத்தையே விளைவிக்கும்.

ஒருவர் ஒரு நட்டம்தரும் தொழிலில் ஈடுபட்டுத் தம் செல்வத்தை இழக்கிறார். அவருக்கு ஒரு பிள்ளை உள்ளது. ஆனால் அப்பிள்ளைக்குக் கொடுப்பதற்கோ ஒன்றுமில்லை.

மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்: வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை.

இது கொடிய தீங்காகும். அவர் எப்படி வந்தாரோ அப்படியே மீளுகிறார்: காற்றைப் பிடிக்கப் பாடுபடுகிறார்.

அவர் அடையும் பயன் என்ன? வாழ்நாள் முழுவதும் இருள், கவலை, பிணி, எரிச்சல், துன்பம்.

ஆகையால், நான் இந்த முடிவுக்கு வந்தேன்: தமக்குக் கடவுள் வரையறுத்திருக்கும் குறுகிய வாழ்நாளில் மனிதர் உண்டு குடித்து, உலகில் நம் உழைப்பின் பயனைத் துய்ப்பதே நலம்: அதுவே தகுந்ததுமாகும்.

கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை.

தம் வாழ்நாள் குறுகியதாயிருப்பதைப்பற்றி அவர் கவலைப்படமாட்டார். ஏனெனில் கடவுள் அவர் உள்ளத்தை மகிழ்ச்சியோடிருக்கச் செய்கிறார்.

அதிகாரம் 6.

உலகில் மனிதரைக் கவலையில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் ஒரு தீங்கைக் கண்டேன்.

கடவுள் ஒருவருக்குச் செல்வத்தையும் நல்வாழ்வையும் மேன்மையையும் கொடுக்கிறார். ஆம், அவர் விரும்புவதெல்லாம் அவருக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைத் துய்க்கவோ கடவுள் அவருக்கு வாய்ப்பளிப்பதில்லை. அடுத்தவர் ஒருவர் அவற்றைத் துய்த்து மகிழ்கிறார். இங்கே பயனின்மையும் கடுந்துயரமும் காணப்படுகின்றன.

ஒருவருக்கு மறு பிள்ளைகள் இருக்கலாம். அவர் நீண்ட ஆயுளுடனும் வாழலாம். அவர் நெடுங்காலம் உயிரோடிருந்தும், தமக்குள்ள செல்வத்தால் இன்பம் அடையாமலும், இறந்தபின் அடக்கம் செய்யப்படாமலும் மறைவாரானால், அவரைவிடக் கருச்சிதைந்த பிண்டமே மேல் என்கிறேன்.

அப்பிண்டம் தோன்றுவதால் பயனில்லை. அது இருளில் மறைகிறது: அதன் பெயரை இருள் மூடிவிடும்.

அது கதிரவனைக் கண்டதுமில்லை: எதையும் அறிந்ததுமில்லை. ஆனால் அதன் நிலை அவருடையதை விட மேலானது.

வாழ்கையில் இன்பம் துய்க்காமல் இரண்"டாயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் மனிதர் கூட அதைவிட மேலானவர் இல்லை. ஏனெனில், இருவரும் ஒரே இடத்திற்கு செல்கின்றனர் அல்லவா?

வயிற்றுக்காகவே ஒருவர் வேலை செய்கிறார்: ஆனால் அவருக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை.

இப்படியிருக்க, மதிகேடரைவிட ஞானமுள்ளவர் எவ்வகையில் மேலானவர்? அல்லது ஏழை ஒருவருக்கு மனிதர்முன் திறமையுடன் நடந்துகொள்ளத் தெரிந்திருந்தும், அதனால் அவருக்குப் பயனென்ன?

இல்லாத ஒன்றை அடைய விரும்பி அலைந்து திரிவரை விட உள்ளதே போதும் என்ற மனநிறைவோடியிருப்பதே மேல். ஆனால், இதுவும் வீணே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.

இப்பொழுது நடக்கும் ஒவ்வொன்றும் நெடுங்காலத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டதாகும். மனிதர் யாரென்று நமக்குத் தெரியும். தம்மைவிட வலிமை வாய்ந்தவருடன் வாதாட அவரால் இயலாது.

பேச்சு நீள நீள, அதன் பயன் குறைந்து கொண்டே போகும். அதனால் மனிதர் அடையும் நன்மை என்ன?

மனிதருடைய வாழ்நாள் குறுகியது: பயனற்றது: நிழலைப்போல மறைவது. அதில் தமக்கு நலமானது எது என்பதை யாரால் அறியக் கூடும்? தம் மறைவிற்குப் பிறகு உலகில் என்ன நடக்கும் என்பதை யாரால் தெரிந்து கொள்ள இயலும்?

அதிகாரம் 7.

விலையுயர்ந்த நறுமணத் தைலத்தைவிட நற்புகழே மேல். பிறந்த நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது.

விருந்து நடக்கும் வீட்டிற்குச் செல்வதைவிடத் துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது. ஏனெனில், அனைவருக்கும் முடிவு என்பதை உயிருடன் இருப்போர் அங்கே உணர்ந்துகொள்வர்.

சிரிப்பைவிடத் துயரமே நல்லது. துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம்: ஆனால், அது உள்ளத்தைப் பண்படுத்தும்.

ஞானமுள்ளவரின் உள்ளத்தில் துக்க வீட்டின் நினைவே இருக்கும்: மூடரின் உள்ளத்திலோ சிற்றின்ப வீட்டின்஥" நினைவே இருக்கும்.

மூடர் புகழ்ந்துரைப்பதைக் கேட்பதினும் ஞானி இடித்துரைப்பதைக் கேட்பதே நன்று.

மூடரின் சிரிப்பு, பானையின்கீழ் எரியும் முட்செடி படபடவென்று வெடிப்பதைப் போன்றது: அதனால் பயன் ஒன்றுமில்லை.

இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்: கைக்கூலி உள்ளத்தைக் கறைப்படுத்தும்.

ஒன்றின் தொடக்கமல்ல, அதன் முடிவே கவனிக்கத் தக்கது: உள்ளத்தில் பெருமைகொள்வதைவிடப் பொறுமையோடு இருப்பதே மேல்.

உள்ளத்தில் வன்மத்திற்கு இடங் கொடாதே: மூடரின் நெஞ்சமே வன்மத்திற்கு உறைவிடம்.

"இக்காலத்தைவிட முற்காலம் நற்஥காலமாயிருந்ததேன்?" என்று கேட்காதே: இது அறிவுடையோர் கேட்கும் கேள்வியல்ல.

மரபுரிமைச் சொத்தோடு ஞானம் சேர்ந்திருத்தல் வேண்டும்: இதுவே உலகில் வாழும் மக்களுக்கு நல்லது.

பணம் நிழல் தருவதுபோல் ஞானமும் நிழல் தரும்: ஞானம் உள்ளவருக்கு அதனால் வாழ்வு கிடைக்கும்: அறிவினால் கிடைக்கும் பயன் இதுவே.

கடவுளின் செயலைச் சிந்தித்துப்஥஥஥஥஥பார். அவர் கோணலாக்கினதை நேராக்க யாரால் இயலும்?

வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு: துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: "அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்".

என் பயனற்ற வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். நேர்மையானவர் நேர்மையுள்ளவராய் இருந்தும் மாண்டழிகிறார். தீயவரோ தீமை செய்கிறவராய் இருந்தும் நெடுங்஥஥"காலம் வாழ்கிறார்.

நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் வெறி கொண்டவராய் இராதீர். அந்த வெறியால் உம்மையே அழித்துக் கொள்வானேன்?

தீமை செய்வதிலும் மூடராயிருப்பதிலும் வெறி கொண்டவராய் இராதீர். காலம் வருமுன் நீவிர் ஏன் சாகவேண்டும்?

ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர். நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்.

ஒரு நகருக்குப் பத்து ஆட்சியாளர் தரும் வலிமையைவிட, ஞானமுள்ளவருக்கு ஞானம் மிகுதியான வலிமை தரும்.

குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை.

பிறர் கூறுவதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்காதீர். அவ்வாறு செய்தால் உம் வேலைக்காரர் உம்மை இகழ்ந்ததையும் நீவிர் கேட்க நேரிடும்.

நீவிர் எத்தனைமுறை பிறரை இகழ்ந்தீர் என்பது உமக்கே நன்றாய்த் தெரியும்.

இவற்றையெல்லாம் என் ஞானத்தால் சீர்து஡க்கிப் பார்த்தேன். நான் ஞானியாகிவிடுவேன் என்று நினைத்தேன்.

ஆனால், என்னால் இயலாமற் போயிற்று. ஞானம் நெடுந் தொலையில் உள்ளது: மிக மிக ஆழமானது. அதை யாரால் கண்டுபிடிக்க முடியும்?

நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்: ஞானத்தையும் காரண காரியத்தையும் பற்றிய விவரத்தை ஆராய்ந்து காண்பதில் சிந்தனையைச் செலுத்தினேன். கொடியவராயிருத்தல் மூடத்தனம் என்பதையும், மதிகேடரைப்போலச் செயல்புரிதல் அறிவுகெட்ட நடத்தை என்பதையும் தெரிந்துகொண்டேன்.

சாவைவிடக் கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல அல்லது ஒரு வலையைப் போல உன்னைச் சிக்க வைக்கும்: உன்னைச் சுற்றிப் பிடிக்கும். அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படுவான்.

"ஆம், நான் ஒன்றன்பின் ஒன்றாய் ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்தேன்" என்கிறார் சபை உரையாளர். வேறு ஆராய்ச்சிகளும் செய்தேன்: அவற்றால் மிகுந்த பயன் அடையவில்லை.

ஆனால் ஒன்று தெரிந்தது. மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத் தக்கவள் யாரையுமே நான் கண்டதில்லை.

நான் தெரிந்துகொண்டதெல்லாம் இதுவே. கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார். ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் மனிதர் தேடிக்கொண்டவையே.

அதிகாரம் 8.

ஞானமுள்ளவருக்கு யார் நிகர்? உலகில் காண்பவற்றின் உட்பொருளை வேறு யாரால் அறிய இயலும்? ஞானம் ஒருவன் முகத்தை ஒளிமயமாக்கும்: அதிலுள்ள கடுகடுப்பை நீக்கும்.

கடவுளின் பெயரால் நீ ஆணையிட்டுக் கூறியபடி அரசனுக்கு அடங்கி நட. அரசன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்பவன்.

எனவே, அவன் முன்னிலையிலிருந்து பதற்றப்பட்டுப் போய்விடாதே. அவனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யாதே.

மன்னன் சொல்லுக்கு மறுசொல் இல்லை. எனவே, "ஏன் இப்படிச் செய்கிறீர்?" என்று அவனை யார் கேட்க முடியும்?

அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியும்வரை உனக்குத் தீங்கு வராது. அவன் சொல்வதைச் செய்வதற்குரிய காலத்தையும் வழியையும் ஞானமுள்ளவன் அறிவான்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலமுண்டு: செய்யவேண்டிய முறையும் உண்டு. ஆனால் அவல நிலையிலுள்ள மனிதனால் என்ன செய்யமுடியும்?

ஏனெனில், வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது.

அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலகமுடியாது: பணம் கொடுத்தும் தப்ப முடியாது.

உலகில் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும்பற்றிச் சிந்தனை செய்தபோது, இவற்றையெல்லாம் கண்டேன். ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்துவதால் துன்பம் விளைகிறது.

பொல்லார் மாண்டபின் அடக்கம் செய்யப்படுகின்றனர். அடக்கம் செய்தவர்கள் கல்லறைத் தோட்டத்திலிருந்து வீடு திரும்பி அந்தப் பொல்லார் தீச்செயல் புரிந்த ஊரிலேயே அவர்களைப் பாராட்டிப் பேசுகிறார்கள். எல்லாம் வீணான செயலே.

மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம்.

பாவி மறு முறை தீமைசெய்து நெடுங் காலம் வாழ்ந்தாலும், கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே நலமுடன் வாழ்வார்கள் என்பதை நான் அறிவேன். ஏனெனில், அவர்கள் அவருக்கு அஞ்சி நடக்கிறார்கள். ஆனால்,

தீயவர்கள் நலமுடன் வாழமாட்டார்கள்: நிழல் நீள்வதுபோல அவர்களது வாழ்நாள் நீளாது. ஏனெனில், அவர்கள் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை.

வேறொரு பொருத்தமற்ற காரியமும் உலகத்தில் காணப்படுகிறது. சில வேளைகளில் பொல்லாருக்குரிய தண்டனை நல்லாருக்குக் கிடைக்கிறது. நல்லாருக்குரிய பயன் பொல்லாருக்குக் கிடைக்கிறது. இது பொருத்தமற்றது என்கிறேன்.

எனவே, மனிதர் களிப்புடனிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். உண்பதும் குடிப்பதும் களிப்பதுமேயன்றி, மனிதருக்கு உலகில் நலமானது வேறெதுவுமில்லை. உலகில் கடவுள் அவருக்கு அருளும் வாழ்நாளில் அவரது உழைப்புக்குக் கிடைக்கும் நிலையான பயன் இதுவே.

நான் ஞானத்தை அடையவும் உலகில் நடப்பதை அறியவும் முயன்றபோது இதைக் கண்டதில்லை: ஒருவர் அல்லும் பகலும் கண் விழித்திருந்து பார்த்தாலும், கடவுளின் செயலை அவரலால் புரிந்துகொள்ள இயலாது.

மனிதர் எத்துணை முயன்றாலும் அவரால் அதைக் கண்டுகொள்ள இயலாது. ஞானமுள்ளவர்கள் அது தங்களுக்குத் தெரியும் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கும் அது தெரியாது.

அதிகாரம் 9.

இவையனைத்தையும் ஆழ்ந்து எண்ணிப்பார்த்தேன். நல்லாரும் ஞானமுள்ளவர்களும் செய்வதெல்லாம், அவர்கள் அன்புகொள்வதும் பகைப்பதும்கூட, கடவுளின் கையிலேதான் இருக்கிறது. இனி வரப்போவது என்ன என்பது யாருக்கும் தெரியாது.

விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும். நேர்மையானவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும், மாசற்றவர்களுக்கும் மாசுள்ளவர்களுக்கும், பலி செலுத்துகிறவர்களுக்கும் பலி செலுத்தாவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும்"பொல்லார்க்கு நேரிடும் விதிப்படியே நல்லார்க்கும் நேரிடும். நேர்ந்து கொள்ளத் தயங்குகிறவருக்கு நேரிடும் விதிப்படியே நேர்ந்து கொள்ளுகிறவருக்கும் நேரிடும்.

விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் நேரிடும். இதுவே உலகில் நடக்கிற அனைத்திலும் காணப்படுகிற தீமை. மேலும், மக்கள் உள்ளங்களில் தீமை நிறைந்திருக்கிறது. அவர்கள் உயிரோடிருக்கும் வரையில் அவர்கள் மனத்தில் மூடத்தனம் இருக்கிறது. திடீரென்று அவர்கள் இறந்து போகிறார்கள்.

ஆயினும், ஒருவன் உயிரோடிருக்கும் வரையில் நம்பிக்கைக்கு இடமுண்டு. செத்துப்போன சிங்கத்தைவிட உயிருள்ள நாயே மேல்.

ஆம், உயிருள்ளோர் தாம் இறப்பது திண்ணம் என்பதையாவது அறிவர்: ஆனால், இறந்தோரோ எதையும் அறியார். அவர்களுக்கு இனிமேல் பயன் எதுவும் கிடையாது: அவர்கள் அறவே மறக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு அன்பு, பகைமை, பொறாமை எதுவும் இல்லை. இப்பரந்த உலகில் நடக்கும் எதிலும் அவர்கள் பங்கெடுக்கப்போவதில்லை.

ஆகவே, நீ நன்றாய்ச் சாப்பிடு: களிப்புடனிரு: திராட்சை இரசம் அருந்தி மகிழ்ச்சியுடனிரு: தயங்காதே. இவை கடவுளுக்கு உடன்பாடு.

எப்போதும் நல்லாடை உடுத்து. தரையில் நறுமணத் தைலம் தடவிக்கொள்.

இவ்வுலக வாழ்க்கை வீணெனினும், உனக்குக் கிடைத்துள்ள வாழ்நாள் முழுதும் நீ உன் அன்பு மனைவியோடு இன்புற்றிரு. ஏனெனில், உன் வாழ்நாளில் உலகில் நீ படும்பாட்"டிற்கு ஈடாகக் கிடைப்பது இதுவே.

நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்: அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். ஏனெனில், நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை: சிந்தனை செய்வதுமில்லை: அறிவு பெறுவதுமில்லை: அங்கே ஞானமுமில்லை.

உலகில் வேறொன்றையும் கண்டேன்: ஓட்டப் பந்தயத்தில் விரைவாக ஓடுபவரே வெற்றி பெறுவார் என்பதில்லை. வலிமை வாய்ந்தவரே போரில் வெற்றி அடைவார் என்பதில்லை. ஞானமுள்ளவருக்கு வேலை கிடைக்கும் என்பதில்லை. அறிவுள்ளவரே செல்வம் சேர்ப்பார் என்பதில்லை. திறமையுடையரே பதவியில் உயர்வார் என்பதில்லை. எவருக்கும் வேளையும் வாய்ப்பும் செம்மையாய் அமையவேண்டும்.

தமக்குத் துன்பவேளை எப்போது வருமென்று ஒருவருக்குத் தெரியாது. வலையில் அகப்படும் மீன்களைப்போலவும் கண்ணியில் சிக்கும் பறவைகளைப் போலவும் அவர் சிக்கிக்கொள்வார். எதிர்பாராத வகையில் அவருக்குக் கேடு காலம் வரும்.

நான் கண்ட வேறொன்றும் உண்டு: இவ்வுலகில் ஞானம் எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதை அது நன்கு எடுத்துக்காட்டுகிறது.

சிறிய நகர் ஒன்று இருந்தது. அதில் இருந்த மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வலிமை வாய்ந்த மன்னன் ஒருவன் அதன்மேல் படையெடுத்து வந்தான்: அதை முற்றுகையிட்டுத் தாக்கினான்.

அந்நகரில் ஞானமுள்ளவன் ஒருவன் இருந்தான். ஆனால் அவன் ஓர் ஏழை. அவன் தன் ஞானத்தால் நகரைக் காப்பாற்றியிருக்கக்கூடும். ஆயினும், அவனைப் பற்றி எவரும் நினைக்கவில்லை.

வலிமையைவிட ஞானமே சிறந்தது என்பதே என் கருத்து. அந்த ஏழையின் ஞானம் புறக்கணிக்கப்பட்டது: அவன் சொல்லை எவரும் கவனிக்கவில்லை.

மூடர்கள் கூட்டத்தில் அதன் தலைவன் முழக்கம் செய்வதைக் கேட்பதைவிட, ஞானமுள்ளவர் அடக்கமுடன் கூறுவதைக் கேட்பதே நன்று.

போர்க் கருவிகளைவிட ஞானமே சிறந்தது. ஆனால் ஒரே ஒரு தவறு நன்மைகள் பலவற்றைக் கெடுத்துவிடும்.

அதிகாரம் 10.

கலத்திலிருக்கும் நறுமணத் தைலம் முழுவதையும் செத்த ஈக்கள் முடைநாற்றம் வீசும்படி செய்துவிடும். அதுபோல, சிறிய மதிகேடும் மேன்மையான ஞானத்தைக் கெடுத்து விடும்.

தக்கன செய்வதையே ஞானியரின் உள்ளம் நாடும்: தகாதன செய்வதையே மூடரின் உள்ளம் நாடும்.

மூடர் தெருவில் நடந்தாலே போதும்: அவரது மடமை வெளியாகிவிடும். தாம் மூடர் என்பதை அவரே அனைவருக்கும் காட்டிடுவார்.

மேலதிகாரி உன்னைச் சினந்து கொண்டால், வேலையை விட்டு விடாதே. நீ அடக்கமாயிருந்தால், பெருங்குற்றமும் மன்னிக்கப்படலாம்.

உலகில் நான் கண்ட தீமை ஒன்று உண்டு. அது உயர் அலுவலரின் தவற்றால் விளைவது.

மூடர்களுக்கு உயர்த்த பதவி அளிக்கப்படுகிறது: செல்வர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.

அடிமைகள் குதிரைமீதேறிச் செல்வதையும், உயர்குடிப் பிறந்தோர் அடிமைகளைப்போலத் தரையில் நடந்து செல்வதையும் நான் கண்டிருக்கிறேன்.

குழியை வெட்டுவோர் அதில் தாமே வீழ்வார். கன்னமிடுவோரைக் கட்டு விரியன் கடிக்கும்.

கற்களை வெட்டி எடுப்பவர் கற்களால் காயமடைவார். மரத்தை வெட்டுபவர் காயத்திற்கு ஆளாவார்.

மழுங்கிய கோடரியைத் தீட்டாமல் பயன்படுத்தினால் வேலைசெய்வது மிகக் கடினமாயிருக்கும். ஞானமே வெற்றிக்கு வழிகோலும்.

பாம்பை மயக்குமுன் அது கடித்து விட்டால் அதை மயக்கும் வித்தை தெரிந்திருந்தும் பயனில்லை.

ஞானியரின் வாய்மொழி அவருக்குப் பெருமை தேடித்தரும். மூடரோ தம் வாயால் கெடுவார்.

அவரது பேச்சு மடமையில் தொடங்கும்: முழு பைத்தியத்தில் போய் முடியும்.

மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார்: என்ன பேசப்போகின்றார் என்பது எவருக்கும் தெரியாது. அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல இயலாது.

மூடர் அளவுமீறி உழைத்துத் தளர்ந்து போவார். ஊருக்குத் திரும்பிப்போகவும் வகை அறியார்.

சிறு பிள்ளையை அரசனாகவும் விடிய விடிய விருந்துண்டு களிப்பவர்களைத் தலைவர்களாகவும் கொண்ட நாடே! நீ கெட்டழிவாய்.

உயர்குடிப் பிறந்தவனை அரசனாகவும் உரிய நேரத்தில் உண்பவர்களை, குடித்துவெறிக்காது தன்னடக்கத்தோடு இருப்பவர்களைத் தலைவர்களாகவும் கொண்ட நாடே! நீ நீடு வாழ்வாய்.

சோம்பேறியின் வீட்டுக்கூரை ஒழுகும்: பழுதுபார்க்காதவரின் வீடு இடிந்து விழும்.

விருந்து மனிதருக்கு மகிழ்ச்சிதரும்: திராட்சை மது வாழ்க்கையில் களிப்புத்தரும்: பணம் இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும்.

தனிமைமயிலுங்கூட அரசனை இகழாதே: படுக்கையறையிலுங்கூடச் செல்வர்களை இகழ்ந்து பேசாதே. வானத்துப் பறவைகள் நீ கூறியதை எடுத்துச்செல்லும்: பறந்து சென்று நீ சொன்னதைத் திரும்பச் சொல்லும்.

அதிகாரம் 11.

உன் பணத்தை வைத்துத்஥ துணிந்து கடல் வாணிபம் செய்: ஒருநாள் அது வட்டியோடு திரும்பிவரும்.

உன் பணத்தைப் பிரித்து ஏழெட்டு இடங்களில் முதலாக வை. ஏனெனில், எங்கு, எவ்வகையான இடர் நேருமென்பதை நீ அறிய இயலாது.

வானத்தில் கார்முகில் திரண்டு வருமாயின், ஞாலத்தில் மழை பெய்யும். மரம் வடக்கு நோக்கி விழுந்தாலும் தெற்கு நோக்கி விழுந்தாலும் விழுந்த இடத்திலேதான் கிடக்கும்.

காற்று தக்கவாறு இல்லையென்று காத்துக்கொண்டே இருப்போர், விதை விதைப்பதில்லை: வானிலை தக்கபடி இல்லை என்று சொல்லிக்கொண்டே இருப்போர் அறுவடை செய்வதில்லை.

காற்றின் போக்கையோ, கருவுற்ற பெண்ணின் வயிற்றில் உயிர் வளரும் வகையையோ நீ அறிய இயலாது: அவ்வாறே, அனைத்தையும் செய்கிற கடவுளின் செயல்களையும் உன்னால் அறியமுடியாது.

காலையில் விதையைத் தெளி: மாலையிலும் அப்படியே செய். அதுவோ இதுவோ எது பயன்தரும் என்று உன்னால் கூறமுடியாது. ஒருவேளை இரண்டுமே நல்விளைச்சலைத் தரலாம்.

ஒளி மகிழ்ச்சியூட்டும்: கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும்.

மனிதன் எத்தணை ஆண்டுகள் வாழ்ந்"தாலும் அவன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும். இருள் சூழ்ந்த நாள்கள் பல இருக்கும் என்பதையும் அவன் மறக்கலாகாது. அதற்குப்பின் வருவதெல்லாம் வீணே.

இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்: கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள்.

மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்: குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே.

அதிகாரம் 12.

ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. "வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே" என்று நீ சொல்லக்கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை.

அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும்,

வீட்டுக்காவலர் நடுக்கங்கொள், வலியோர் தளர்வுறு முன்னும், அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்துபோகுமுன்னும்,

தெருச்சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக்கொள், சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்துபோகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும், வெட்டுக்கிளியைப்போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை:

வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும்,

மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.

வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபை உரையாளர்: எல்லாமே வீண்.

சபை உரையாளர் ஞானமுள்ளவராயிருந்ததோடு தாம் அறிந்தவற்றைத் தொகுத்துத் தந்தார்.

சபை உரையாளர் இனிய நடையில் எழுத முயன்றுள்ளார். உண்மையை ஒளிவு மறைவில்லாமல் எழுதிவைத்திருக்கிறார்.

ஞானமுற்றவர்களின் சொற்கள் ஆயரின் கோல்போல் வழிநடத்தும். தொகுத்து வைத்த முதுமொழிகள் பசுமரத்தாணிபோல உள்ளத்தில் பதியும். அவை ஒரே ஆயரால் அளிக்கப்பட்டவை.

பிள்ளாய்! மேலும் ஓர் எச்சரிக்கை: மல்கள் பல எழுதுவதால் பயன் ஒன்றுமில்லை. மிகுதியான படிப்பு உடலுக்கு இளைப்பு.

இவையனைத்திற்கும் முடிவுரையாக ஒன்று கூறுகிறேன்: கடவுளுக்கு அஞ்சி நட: அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்குங்கூட, அது நல்லதோ தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்.

புத்தகம் 22 - இனிமைமிகுபாடல்

அதிகாரம் 1.

சாலமோனின் தலைசிறந்த பாடல்

தம் வாயின் முத்தங்களால் அவர் என்னை முத்தமிடுக! ஆம், உமது காதல் திராட்சை ரசத்தினும் இனிது!

உமது பரிமளத்தின் நறுமணம் இனிமையானது: உமது பெயரோ பரிமள மணத்தினும் மிகுதியாய்ப் பரவியுள்ளது: எனவே, இளம் பெண்கள் உம்மேல் அன்பு கொள்கின்றனர்.

உம்மோடு என்னைக் கூட்டிச் செல்லும், ஓடிடுவோம்: அரசர் என்னைத் தம் அறைக்குள் அழைத்துச் செல்லட்டும்! களிகூர்வோம், உம்மில் அக்களிப்போம்: திராட்சை இரசத்தினும் மேலாய் உம் காதலைக் கருதிடுவோம்: திராட்சை இரசத்தினும் உமது அன்பைப் போற்றிடுவோம்!

எருசலேம் மங்கையரே, கறுப்பாய் இருப்பினும், நான் எழில்மிக்கவளே! கேதாரின் கூடாரங்களைப் போலுள்ளேன்: சாலமோனின் எழில்திரைகளுக்கு இணையாவேன்.

கறுப்பாய் இருக்கின்றேன் நான் என என்னையே உற்றுப் பார்க்க வேண்டா! கதிரவன் காய்ந்தான்: நான் கறுப்பானேன்: என் தமையர் என்மேல் சினம் கொண்டனர்: திராட்சைத் தோட்டத்திற்கு என்னைக் காவல் வைத்தனர்: என் தோட்டத்தையோ நான் காத்தேன் அல்லேன்!

என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரே! எங்கே நீர் ஆடு மேய்ப்பீர்? எங்கே நண்பகலில் மந்தையை இளைப்பாற விடுவீர்? எனக்குச் சொல்வீர்! இல்லையேல், உம் தோழர்களின் மந்தைகட்கருகில் வழி தவறியவள் போல் நான் திரிய நேரிடும்!

பெண்களுக்குள் பேரழகியே, உனக்குத் தெரியாதெனில், மந்தையின் கால்சுவடுகளில் நீ தொடர்ந்துபோ: இடையர்களின் கூடாரங்களுக்கு அருகினிலே உன்னுடைய ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடு!

என் அன்பே, பார்வோன் தேர்ப்படை நடுவே உலவும் பெண்புரவிக்கு உன்னை ஒப்பிடுவேன்.

உன் கன்னங்கள் குழையணிகளாலும் உன் கழுத்து மணிச்சரங்களாலும் எழில் பெறுகின்றன.

பொன்வளையல்கள் உனக்குச் செய்திடுவோம்: வெள்ளி வளையங்கள் அவற்றில் கோத்திடுவோம்.

என் அரசர் தம் மஞ்சத்தில் இருக்கையிலே, என் நரந்தம் நறுமணம் பரப்புகின்றது.

என் காதலர் வெள்ளைப்போள முடிப்பென என் மார்பகத்தில் தங்கிடுவார்.

என் காதலர் எனக்கு மருதோன்றி மலர்க்கொத்து! எங்஥கேதித் தோட்டங்களில் உள்ள மருதோன்றி!

என்னே உன் அழகு! என் அன்பே, என்னே உன் அழகு! உன் கண்கள் வெண்புறாக்கள்!

என்னே உம் அழகு என் காதலரே! எத்துணைக் கவர்ச்சி! ஆம், நமது படுக்கை பைந்தளிர்!

நம் வீட்டின் விட்டங்கள் கேதுரு மரங்கள்: நம்முடைய மச்சுகள் தேவதாரு கிளைகள்.

அதிகாரம் 2.

சாரோன் சமவெளியில் உள்ள காட்டு மலர் நான்: பள்ளத்தாக்குகளில் காணும் லீலிமலர்.

முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்போல், மங்கையருள் இருக்கிறாள் என் அன்புடையாள்.

காட்டு மரங்களிடை நிற்கும் கிச்சிலிபோல், காளையருள் இலங்குகின்றார் என் காதலர்தாம். அவரது நிழலிலே அமர்வதில் இன்புறுவேன்: அவர் கனி என் நாவுக்கு இனிமை தரும்.

திராட்சை இரசம் வைக்கும் அறைக்குள்ளே என்னை அவர் அழைத்துச் சென்றார்: அவர் என் மேல் செலுத்திய நோக்கில் காதல் இருந்தது!

திராட்சை அடைகள் கொடுத்து என்னை வலிமைப்படுத்துங்கள்: கிச்சிலிப்பழங்களால் எனக்கு ஊக்கமூட்டுங்கள். காதல் நோயால் தான் மிகவும் நலிந்து போனேன்.

இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக் கொள்வார்: வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார்.

எருசலேம் மங்கையரே! கலைமான்கள்மேல் ஆணை! வயல்வெளி மரைகள்மேல் ஆணை! உங்களுக்கு நான் கூறுகிறேன்: காதலைத் தட்டி எழுப்பாதீர்: தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்.

என் காதலர் குரல் கேட்கின்றது: இதோ, அவர் வந்துவிட்டார்: மலைகள்மேல் தாவி வருகின்றார்: குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.

என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்: பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்: பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார்.

என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: "விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.

இதோ, கார்காலம் கடந்துவிட்டது: மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.

நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன: பாடிமகிழும் பருவம் வந்துற்றது: காட்டுப் புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது:

அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன: திராட்சை மலர்கள் மணம் தருகின்றன: விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா."

பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை: எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!

பிடியுங்கள் எமக்காக நரிகளை: குள்ளநரிகளைப் பிடியுங்கள்: அவை திராட்சைத் தோட்டங்களை அழிக்கின்றன: எம் திராட்சைத் தோட்டங்களோ பூத்துள்ளன.

என் காதலர் எனக்குரியர்: நானும் அவருக்குரியள்: லீலிகள் நடுவில் அவர் மேய்கின்றார்.

பொழுது புலர்வதற்குள், நிழல்கள் மறைவதற்குள், திரும்பிடுக, என் காதலரே! மலைமுகட்டுக் கலைமான்போன்று அல்லது மரைமான் குட்டிபோன்று திரும்பிடுக!

அதிகாரம் 3.

இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்: என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடினேன்: தேடியும் அவரை நான் கண்டேன் அல்லேன்! 7எழுந்திடுவேன்: நகரத்தில் சுற்றிவருவேன்: தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்" தேடினேன்: தேடியும் அவரைக் கண்டேன் அல்லேன்!

ஆனால் என்னைக் கண்டனர் சாமக்காவலர்: நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள். "என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களோ?" என்றேன்.

அவர்களைவிட்டுச் சற்று அப்பால் சென்றதுமே கண்டேன் என் உயிர்க்குயிரான அன்பர்தமை. அவரைச் சிக்கெனப் பிடித்தேன்: விடவே இல்லை: என் தாய்வீட்டுக்கு அவரைக் கூட்டி வந்தேன்: என்னைக் கருத்தாங்கியவளின் அறைக்குள் அழைத்து வந்தேன்.

எருசலேம் மங்கையரே, கலைமான்கள் மேல் ஆணை! வயல்வெளி மரைகள்மேல் ஆணை! உங்களுக்கு நான் கூறுகிறேன்: காதலைத் தட்டி எழுப்பாதீர்: தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்.

என்ன அது? பாலைவெளியிலிருந்து புகைத்பண்போல், எழுந்துவருகிறதே! வெள்ளைப்போளம் மணக்க, சாம்பிராணி புகைய, வணிகர்கொணர் பல்வகைப் பொடிகள் யாவும் மணங்கமழ வருகிறதே!

அதுதான் சாலமோனின் பஞ்சணை! இஸ்ரயேலின் வளமையுள்ள வீரர்களுள் அறுபதுபேர் அதனைச் சூழ்ந்துள்ளனர்.

அனைவரும் வாளேந்திய வீரர்! அவர்கள் போர்புரிவதில் வல்லவர்கள்! இராக்காலத் தாக்குதல்களைத் தடுக்கத் தம் இடைகளில் வாள் கொண்டுள்ளவர்கள்!

மன்னர் தமக்கொரு பல்லக்கு செய்தார்: சாலமோன் லெபனோனின் மரத்தால் செய்தார்.

அதன் பண்களை வெள்ளியால் இழைத்தார்: மேற்கவிகை பொன்: இருக்கை செம்பட்டு: உட்புறம் மெல்லிய தோல்மெத்தை: எருசலேம் மங்கையரே, வாருங்கள்!

சீயோன் மங்கையரே, பாருங்கள்! மன்னர் சாலமோனையும் அவர் அன்னை அவருக்கு அணிவித்த மணிமுடியையும் காணுங்கள்! அவரது திருமண நாளினிலே, அவருள்ளம் மகிழ்ந்த நாளினிலே, அவருக்கு அணிவித்த முடியதுவே!

அதிகாரம் 4.

என்னே உன் அழகு! "என் அன்பே, என்னே என் அழகு! முகத்திரைக்குப் பின்னுள்ள உன் கண்கள் வெண்புறாக்கள்! கிலயாதின் மலைச்சரிவில் இறங்கி வரும் வெள்ளாட்டு மந்தை போன்றது உன் கூந்தல்.

உன் பற்஥களோ மயிர் கத்தரிப்பதற்கெனக் குளித்துக் கரையேறும் பெண் ஆடுகளின் மந்தை போல்வன: அவையாவும் இரட்டைக் குட்டி போட்டவை: அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.

செம்பட்டு இழைபோன்றன உன்னிதழ்கள்: உன் வாய் எழில் மிக்கது: முகத்திரையின் பின்னிருக்கும் உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.

தாவீதின் கொத்தளம்போல் அமைந்துள்ளது உன் கழுத்து: வரிவரியாய் ஆயிரம் கேடங்கள் ஆங்கே தொங்குகின்றன: அவையெலாம் வீரர்தம் படைக்கலன்களே.

உன் முலைகள் இரண்டும் லீலிகள் நடுவில் மேயும் இருமான் குட்டிகளை ஒக்கும்: கலைமானின் இரட்டைக் குட்டிகளைக் ஒக்கும்.

பொழுது புலர்வதற்குள், நிழல்கள் மறைவதற்குள், வெள்ளைப்போள மலையினுக்கு விரைந்திடுவேன்: சாம்பிராணிக் குன்றுக்குச் சென்றிடுவேன்:

என் அன்பே, நீ முழுவதும் அழகே! மறுவோ உன்னில் சிறிதும் இலதே!

லெபனோனிலிருந்து வந்திடு மணமகளே: லெபலோனிலிருந்து வந்திடு புறப்படு: அமானா மலையுச்சியினின்று - செனீர் மற்றும் எர்மோன் மலையுச்சியினின்று- சிங்கங்களின் குகைளினின்று - புலிகளின் குன்றுகளினின்று இறங்கிவா!

என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்: என் தங்காய், மணமகளே, உன் விழிவீச்சு ஒன்றினாலே, உன் ஆரத்தின் முத்து ஒன்றினாலே, என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்.

உன் காதல் எத்துணை நேர்த்தியானது: என் தங்காய், மணமகளே, உன் காதல் திராட்சை இரசத்தினும் இனிது! உனது பரிமளத்தின் நறுமணமோ எவ்வகைத் தைலத்தின் நறுமணத்தினும் சிறந்தது.

மணமகளே, உன் இதழ்கள் அமிழ்தம் பொழிகின்றன: உன் நாவின்கீழ்த் தேனும் பாலும் சுரக்கின்றன: உன் ஆடைகளின் நறுமணம் லெபனோனின் நறுமணத்திற்கு இணையானது.

பூட்டியுள்ள தோட்டம் நீ: என் தங்காய், மணமகளே, பூட்டியுள்ள தோட்டம் நீ: முத்திரையிட்ட கிணறு நீ!

மாதுளைச் சோலையாய்த் தளிர்த்துள்ளாய்: ஆங்கே தித்திக்கும் கனிகள் உண்டு: மருதோன்றியும் நரந்தமும் உண்டு.

நரந்தம், மஞ்சள், வசம்பு, இலவங்கம், எல்லாவகை நறுமண மரங்களும், வெள்ளைப்போளமும் அகிலும், தலைசிறந்த நறுமணப் பொருள்கள் யாவுமுண்டு.

நீ தோட்டங்களின் நீரூற்று: வற்றாது நீர்சுரக்கும் கிணறு: லெபலோனினின்று வரும் நீரோடை!

வாடையே, எழு! தென்றலே, வா! என் தோட்டத்தின்மேல் வீசு! அதன் நறுமணம் பரவட்டும்! என் காதலர் தம் தோட்டத்திற்கு வரட்டும்! அதன் தித்திக்கும் கனிகளை உண்ணட்டும்!

அதிகாரம் 5.

என் தோட்டத்திற்கு நான் வந்துள்ளேன்: என் தங்காய், மணமகளே, நறுமணப் பொருளையும் சேகரிக்கின்றேன்: என் தேனையும் தேனடைகளையும் உண்கின்றேன்: என் திராட்சை இரசத்தையும் பாலையும் பருகுகின்றேன்: தோழர்களே, உண்ணுங்கள்: அன்பர்களே, போதையேறப் பருகுங்கள்.

நான் உறங்கினேன்: என் நெஞ்சமோ விழித்திருந்தது: இதோ, என் காதலர் கதவைத் தட்டுகின்றார்: "கதவைத் திற, என் தங்காய், என் அன்பே, என் வெண்புறாவே, நிறை அழகே, என் தலை பனியால் நனைந்துள்ளது: என் தலைமயிர்ச் சுருள் இரவுத் பறலால் ஈரமானது," 8என் ஆடையைக் களைந்து விட்டேன்: மீண்டும் அதனை நான் உடுத்த வேண்டுமோ? என் கால்களைக் கழுவியுள்ளேன்: மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?"

என் காதலர் கதவுத் துளை வழியாகக் கையைவிட்டார்: என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.

எழுந்தேன் நான், காதலர்க்குக் கதவு திறக்க: என் கையில் வெள்ளைப்போளம் வடிந்தது: என் விரல்களில் வெள்ளைப்போளம் சிந்திற்று: தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.

கதவைத் திறந்தேன் நான் என் காதலர்க்கு: அந்தோ! என் காதலர் காணவில்லை, போய்விட்டார்: என் நெஞ்சம் அவர் குரலைத் தொடர்ந்து போனது: அவரைத் தேடினேன்: அவரைக் கண்டேன் அல்லேன்: அவரை அழைத்தேன்: பதிலே இல்லை!

ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்: நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்: அவர்கள் என்னை அடித்தனர்: காயப்படுத்தினர்: என் மேலாடையைப் பறித்துக் கொண்டனர்: கோட்டைச் சுவரின் காவலர்கள் அவர்கள்!

எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்: என் காதலரைக் காண்பீர்களாயின் அவரிடம் என்ன சொல்வீர்கள்? "காதல் நோயுற்றேன் நான்" எனச் சொல்லுங்கள்.

பெண்களுக்குள் பேரழகியே, மற்றக் காதலரினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்? இவ்வாறு எங்களிடம் ஆணையிட்டுக் கூறுகின்றாயே: மற்றக் காதலரினும் உன்காதலர் எவ்வகையில் சிறந்தவர்?"


"என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்: பல்லாயிரம் பேர்களிலும் தனித்துத் தோன்றுவார்!

அவரது தலை பசும்பொன்: தலைமுடி சுருள்சுருளாய் உள்ளது: காகம்போல் கருமை மிக்கது.

அவர் கண்கள் வெண்புறாக்கள் போன்றவை: பாலில் குளிந்து, நீரோடைகளின் அருகில் கரையோரங்களில் தங்கும் வெண்புறாக்கள் அவை.

அவர் கன்னங்கள் நறுமண நாற்றங்கால்கள் போல்வன: நறுமணம் ஆங்கே கமழ்கின்றது: அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்: அவற்றினின்று வெள்ளைப்போளம் சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.

அவருடைய கைகள் உருண்ட பொன் தண்டுகள்: அவற்றில் மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன: அவரது வயிறு யானைத் தந்தத்தின் வேலைப்பாடு: அதில் நீலமணிகள் பொதியப் பெற்றுள்ளன.

அவருடைய கால்கள் பளிங்குத் பண்கள்: தங்கத் தளத்திலே அவை பொருந்தியுள்ளன: அவரது தோற்றம் லெபனோனுக்கு இணையானது: கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது.

அவரது வாய் இணையற்ற இனிமை: அவர் முழுமையும்஥ பேருவகையே: எருசலேம் மங்கையரே, இவரே என் காதலர், இவரே என் நண்பர்."

அதிகாரம் 6.

6பெண்களுக்குள் பேரழகியே, உன் காதலர் எங்கே போனார்? உன் காதலர் எப்பக்கம் திரும்பினார்? உன்னோடு நாங்களும் அவரைத் தேடுவோம்." 7என் காதலர் தம் தோட்டத்திற்கும் நறுமண நாற்றங்கால்களுக்கும போனார்: தோட்டங்களில் மேய்க்கவும் லீலி மலர்களைக் கொய்யவும் சென்றுள்ளார்".


நான் என் காதலர்க்குரியள்: என் காதலர் எனக்குரியர்: லீலிகள் நடுவில் அவர் மேய்க்கின்றார்.

என் அன்பே. நீ திரட்சாவைப்போல் அழகுள்ளவள்: எருசலேமைப்போல் எழில் நிறைந்தவள்: போரணிபோல் வியப்பார்வம் ஊட்டுகின்றாய்!

என்னிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக்கொள்: அவை என்னை மயக்குகின்றன: கிலயாதிலிருந்து இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தை போன்றது உன் கூந்தல்.

உன் பற்களோ, குளித்துக்கரையேறும் பெண் ஆடுகளின் மந்தைபோல்வன: அவையாவும் இரட்டைக்குட்டி போட்டவை: அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.

முகத்திரையின் பின்னிருக்கும் உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.

அரசியர் அறுபது பேர்: வைப்பாட்டியர் எண்பது பேர்: இளம்பெண்கள் எண்ணிறந்தவர்.

என் வெண்புறா, அழகின் வடிவம் அவள் ஒருத்தியே! அவள் தாய்க்கும் அவள் ஒருத்தியே: அவளைப் பெற்றவளுக்கு அவள் அருமையானவள்: மங்கையர் அவளைக் கண்டனர்: வாழ்த்தினர்: அரசியரும் வைப்பாட்டியரும் அவளைப் புகழ்ந்தனர்:

"யாரிவள்! வைகறைபோல் தோற்றம்: திங்களைப் போல் அழகு: ஞாயிறுபோல் ஒளி: போரணிபோல் வியப்பார்வம்: யாரிவள்!"

வாதுமைச் சோலைக்குள் சென்றேன்: பள்ளத்தாக்கில் துளிர்த்தவற்றைப் பார்க்கப் போனேன்: திராட்சை பூத்துவிட்டதா என்றும் மாதுளைகள் மலர்ந்தனவா என்றும் காணச் சென்றேன்.

என்னவென்றே எனக்குத் தெரியவில்லை! மகிழ்ச்சியில் மயங்கினேன்: இளவரனுடன் தேரில் செல்வது போல் நான் உணர்ந்தேன்.

திரும்பி வா! திரும்பி வா! சூலாமியளே! திரும்பி வா! திரும்பி வா! நாங்கள் உன்னைப் பார்க்க வேண்டும்! இரண்டு பாசறைகள் நடுவில் ஆடுபவளைப்போல் சூலாமியளை நீங்கள் ஏன் நோக்க வேண்டும்?

அதிகாரம் 7.

அரசிள மகளே! காலணி அணிந்த உன் மெல்லடிகள் எத்துணை அழகு! உன் தொடைகளின் வளைவுகள் அணிகலனுக்கு இணை! கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு!

உன் கொப்பூழ் வட்டவடிவக் கலம்: அதில் மதுக் கலவைக்குக் குறைவே இல்லை: உன் வயிறு கோதுமை மணியின் குவியல்: லீலிகள் அதை வேலியிட்டுள்ளன.

உன் முலைகள் இரண்டும் இரு மான் குட்டிகள் போன்றவை: கலைமானின் இரட்டைக் குட்டிகள் போன்றவை.

உன் கழுத்து தந்தத்தாலான கொத்தளம் போன்றது: உன் கண்கள் எஸ்போனின் குளங்கள் போன்றவை: பத்ரபீம் வாயிலருகே உள்ள குளங்கள் போன்றவை: உம் மூக்கு லெபனோனின் கோபுரத்திற்கு இணை: தமஸ்கு நகர் நோக்கியுள்ள கோபுரத்திற்கு இணை.

உன் தலை கர்மேல் மலைபோல் நிமிர்ந்துள்ளது: உன் கூந்தல் செம்பட்டுப் போன்றது: அதன் சுருள்களுள் அரசனும் சிறைப்படுவான்.

அன்பே! இன்பத்தின் மகளே! நீ எத்துணை அழகு! எத்துணைக் கவர்ச்சி!

இந்த உன் வளர்த்தி போணச்சைக்கு நிகராகும்: உன் முலைகள் இரண்டும் அதன் குலைகளாகும். =ஆம், போணச்சையின்மேல் நான் ஏறுவேன்: அதன் பழக்குலைகளைப் பற்றிடுவேன்" என்றேன்: உன் முலைகள் திராட்சைக் குலைகள்போல் ஆகுக! உன் மூச்சு கிச்சிலிபோல் மணம் கமழ்க!

இதழ்களுக்கும் பற்களுக்கும் மேலே மென்மையுடன் இறங்கும் இனிமைமிகு திராட்சை இரசம் போன்றவை உன் முத்தங்கள்!

நான் என் காதலர்க்குரியள்: அவர் நாட்டம் என்மேலே!

என் காதலரே, வாரும்: வயல்வெளிக்குப் போவோம்: மருதோன்றிகள் நடுவில் இரவைக் கழிப்போம்.

வைகறையில் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்: திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா, அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா, மாதுளை மரங்கள் மலர்ந்தனவா என்று பார்ப்போம். அங்கே உம்மேல் என் காதலைப் பொழிவேன்.

காதற்கனிகளின் மணம் கமழுகின்றது: இனியது அனைத்தும் நம் கதவருகில் உளது: புதிதாய்ப் பறித்தனவும் பலநாள் காத்தனவுமான பழங்களை என் காதலரே, உமக்கென்றே நான் சேர்த்து வைத்தேன்.

அதிகாரம் 8.

நீர் என் உடன்பிறப்பாக இருக்கக் கூடாதா! என் அன்னையிடம் பால் குடித்தவராய் இருக்கலாகாதா! தெருவில் கண்டாலும் நான் உம்மை முத்தமிடுவேனே! அப்போது எவருமே என்னை இகழமாட்டார்.

உம்மை என் தாய் வீட்டுக்குக் கூட்டி வருவேன்: எனக்குக் கற்றுத் தந்தவளின் மனைக்குள் கொணர்ந்திடுவேன்: மணமூட்டிய திராட்சை இரசத்தை உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்: என் மாதுளம் பழச்சாற்றைப் பருகத் தருவேன்.

இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக் கொள்வார்: வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார்.

எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுக் கேட்கின்றேன்: காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்? தானே விரும்பும்வரை அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்? :யார் இவள்! பாலைவெளியினின்று எழுந்து வருபவள்: தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு வருபவள் யார் இவள்?" கிச்சிலி மரத்தடியில் நான் உம்மை எழுப்பினேன்: அங்கேதான் உம்தாய் பேறுகால வேதனையுற்றாள்.

உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல் என்னைப் பொறித்திடுக: இலச்சினைப்போல் உம் கையில் பதித்திடுக: ஆம், அன்பு சாவைப்போல் வலிமைமிக்கது: அன்பு வெறி பாதாளம்போல் பொறாதது: அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி: அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து.

பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது: வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது: அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம் வாரியிறைக்கலாம்: ஆயினும், அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி.

நம்முடைய தங்கை சிறியவள்: அவளுக்கு முலைகள் முகிழ்க்கவில்லை: அவளைப் பெண்பேச வரும்நாளில் நம் தங்கைக்காக என் செய்வோம்?

அவள் ஒரு மதிலானால் அதன்மேல் வெள்ளியரண் கட்டிடுவோம்: அவள் ஒரு கதவானால் அதனை கேதுருப் பலகையால் மூடிடுவோம்.

நான் மதில்தான்: என் முலைகள் அதன் கோபுரங்கள் போல்வன: அவர்தம் பார்வையில் நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.

பாகால்-ஆமோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு இருந்தது ஒரு திராட்சைத் தோட்டம், திராட்சைத் தோட்டத்தை அவர் காவலரிடம் ஒப்படைத்தார்: அதன் கனிகளுக்காக எவரும் ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.

எனக்குரிய திராட்சைத் தோட்டம் என்முன்னே உளது: சாலமோனே, அந்த ஆயிரம் வெள்ளிக்காசு உம்மிடமே இருக்கட்டும்: இருமறு காசும் பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும்.

"தோட்டங்களில் வாழ்பவளே! தோழர் கூர்ந்து கேட்கின்றனர்: உன் குரலை யான் கேட்கலாகாதோ!"

"என் காதலரே! விரைந்து ஓடிடுக: கலைமான் அல்லது மரைமான் குட்டிபோல நறுமணம் நிறைந்த மலைகளுக்கு விரைந்திடுக!"

புத்தகம் 23 - எசாயா

அதிகாரம் 1.

உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்போர் யூதா நாட்டின் அரசர்களாய் இருந்த காலத்தில் யூதா, எருசலேம் என்பவற்றைக் குறித்஥து ஆமோட்சின் எசாயா கண்ட காட்சி:

விண்வெளியே கேள்: மண்ணுலகே செவிகொடு: ஆண்டவர் திருவாய் மலர்ந்தருளுகின்றார்: பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்: அவர்களோ எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்.

காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது: கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது: ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை: என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை.

ஜயோ, பாவம் நிறைந்த மக்களினம் இது: அநீதி செய்வோரின் கூட்டம் இது: தீச்செயல் புரிவோரின் வழிமரபு இது: கேடுகெட்ட மக்கள் இவர்கள்: ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்: இஸ்ரயேலின் பயவரை அவமதித்துவிட்டார்கள்: அவருக்கு அன்னியராய் ஆகிவிட்டார்கள்.

நீங்கள் ஏன் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்? என் கையால் பட்ட அடி போதாதா? உங்கள் தலையெல்லாம் வடுக்கள்: இதயமெல்லாம் தளர்ச்சி.

உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை: ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள், கீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன: அங்கே கீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை.

உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது: உங்கள் நகரங்கள் நெருப்புக்கு இரையாயின: வேற்று நாட்டினர் உங்கள் கண்ணெதிரே உங்கள் நாட்டை விழுங்குகிறார்கள்: வேற்று நாட்டினரால் வீழ்த்தப்பட்ட உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது.

மகள் சீயோன் திராட்சைத் தோட்டத்துக் குடில் போன்றும் வெள்ளரித் தோட்டத்துக் குடிசை போன்றும் முற்றுகையிடப்பட்ட நகரம் போன்றும் கைவிடப்பட்டாள்.

படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும் எஞ்சியிருக்கச் செய்யாவிடில் சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம். கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.

எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாயிருக்கின்றனர்: நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்: அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.

"எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?" என்கிறார் ஆண்டவர். ஆட்டுக் கிடாய்களின் எரி பலிகளும், கொழுத்த விலங்குகளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டன: காளைகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை.

நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது, இவற்றையெல்லாம் கொண்டு வந்து என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்?

இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டுவர வேண்டாம்: நீங்கள் காட்டும் பபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது: நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அமாவாசை, ஓய்வுநாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன்.

உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும், என் உள்ளம் வெறுக்கின்றது: அவை என் மேல் விழுந்த சுமையாயின: அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன்.

என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும் போது, பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்: நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பதில்லை: உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன.

உங்களைக் கழுவித் பய்மைப்படுத்துங்கள்: உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்: தீமை செய்தலை விட்டொழியுங்கள்:

நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்: நீதியை நாடித் தேடுங்கள்: ஒடுக்கப்பட்டோ ருக்கு உதவி செய்யுங்கள்: திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்: கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.

"வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்" என்கிறார் ஆண்டவர்: "உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன: எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன: எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும்.

மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால்: நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.

மாறாக, இணங்க மறுத்து எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்: ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்.

உண்மையாய் இருந்த நகரம், எப்படி விலைமகள் போல் ஆயிற்று! முன்பு அந்நகரில் நேர்மை நிறைந்திருந்தது: நீதி குடி கொண்டிருந்தது: இப்பொழுதோ, கொலைபாதகர் மலிந்துள்ளனர்.

உன் வெள்ளி களிம்பேறிற்று: உன் மதுபானம் நீர்க்கலப்பாயிற்று.

உன் தலைவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்: திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர்: கையூட்டு வாங்குவதற்கு ஒவ்வொருவனும் ஏங்குகிறான்: திக்கற்றோருக்கு அவர்கள் நீதி வழங்குவதில்லை: கைம்பெண்ணின் வழக்குகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

ஆதலால், படைகளின் ஆண்டவரும் இஸ்ரயேலின் வல்லவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் எதிரிகளைப் பழிவாங்குவேன்: என் பகைவர்மேலுள்ள சீற்றத்தைத் தீர்த்துக்கொள்வேன்.

உனக்கு நேராக என் கைகளை நீட்டுவேன்: உன்னை நன்றாகப் புடமிட்டு உன் களிம்பை நீக்குவேன்: உன்னிடமுள்ள உலோகக் கலவை அனைத்தையும் நீக்குவேன்.

முன்னாளில் இருந்தது போலவே உன் நீதிபதிகளைத் திருப்பிக் கொணர்வேன்: தொடக்க காலத்தில் இருந்தது போலவே உன் ஆலோசகர்களை மீண்டும் தருவேன்: அப்பொழுது எருசலேம் "நீதியின் நகர்" எனப் பெயர் பெறும்: "உண்மையின் உறைவிடம்" எனவும் அழைக்கப்படும்.

நீதி சீயோனை மீட்கும்: நேர்மை மனமாற்றம் அடைவோரை விடுவிக்கும்.

ஆனால் வன்முறையாளரும் பாவிகளும் ஒருங்கே அழிந்தொழிவர்: ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள் அனைவரும் இல்லாதொழிவர்:

நீங்கள் நாடி வழிபட்ட தேவதாரு மரங்களை முன்னிட்டு மானக்கேடு அடைவீர்கள்: நீங்கள் தெரிந்து கொண்ட சோலைகளை முன்னிட்டு நாணுவீர்கள்.

ஏனெனில் நீங்கள் இலையுதிர்ந்த தேவதாரு மரத்தைப்போல் ஆவீர்கள்: நீரின்றி வாடிப்போகும் சோலையைப் போலவும் இருப்பீர்கள்:

வலிமை மிக்கவன் சணற் கூளம் போலாவான்: அவனுடைய கைவேலைப்பாடும் தீப்பொறியாகும். அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும்: நெருப்புத் தணலை அணைப்பார் எவரும் இரார்.

அதிகாரம் 2.

யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி:

இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்: எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.

வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து "புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்: எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.

அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்: பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்: அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்.

யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்:

யாக்கோபின் குடும்பத்தாராகிய உம்முடைய மக்களை நீர் கைவிட்டு விட்டீர்: ஏனெனில் கீழை நாட்டுப் போதனை அவர்களிடையே மிகுந்துள்ளது. பெலிஸ்தியரைப் போல அவர்கள் நிமித்தம் பார்க்கின்றார்கள்: வேற்று நாட்டினருடன் கூட்டுச் சேர்கின்றார்கள்.

அவர்கள் நாடு வெள்ளி, பொன்னால் நிறைந்துள்ளது: அவர்கள் கருவூலத்திற்கு அளவே இல்லை: அவர்கள் நாடு குதிரைகளால் நிறைந்துள்ளது: அவர்கள் தேர்ப்படைகள் எண்ணிக்கையில் அடங்கா.

அவர்கள் நாட்டில் சிலைகள் மலிந்துள்ளன: தங்கள் கைவேலைப்பாட்டினால் செய்தவற்றை வணங்குகின்றனர்: தங்கள் விரல்கள் உருவாக்கியவற்றின் முன் பணிகின்றனர்.

இவற்றால் மானிடர் தாழ்நிலை அடைவர்: மக்கள் சிறுமை அடைவார்கள்: ஆண்டவரே! அவர்களுக்கு மன்னிப்பு அருளாதீர்:

கற்பாறைக்குள் நுழைந்து கொள்ளுங்கள்: மண்ணில் பதுங்கி மறைந்து கொள்ளுங்கள்: ஆண்டவரின் அச்சம் தரும் திருமுன்னின்றும் அவரது உயர் மாட்சியினின்றும் அகலுங்கள்:

செருக்குமிகு பார்வையுடையோர் தாழ்த்தப்படுவர்: ஆணவமிக்கோர் அவமானமடைவர்: ஆண்டவர் ஒருவரே அந்நாளில் மாட்சியுறுவோர்.

படைகளின் ஆண்டவருக்குரிய நாள் ஒன்று இருக்கின்றது: அன்று, இறுமாப்பும் செருக்கும் உடைய அனைவரும் தாழ்வுறுவர்: உயர்த்தப்பட்டவை, உயர்ந்து நிற்பவை அனைத்தும் நலிவடையும்.

அன்று, லெபனோனில் ஓங்கி வளர்ந்த கேதுரு மரங்கள் யாவும் அழிக்கப்படும் பாசானில் உள்ள அனைத்துக் கருவாலி மரங்களும் அழிக்கப்படும்.

வானளாவிய மலைகள், உயர்ந்த குன்றுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்படும்.

உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் யாவும் தகர்த்தெறியப்படும்: வலிமைமிக்க மதிற்சுவர்கள் அனைத்தும் தவிடு பொடியாக்கப்படும்.

தர்சீசின் மரக்கலங்கள் யாவும் அழகிய வேலைப்பாடுகள் அனைத்தும் அமிழ்த்தப்படும்.

மனிதர்களின் ஆணவம் அடக்கப்படும்: அவர்தம் செருக்கு அகற்றப்படும்: ஆண்டவர் ஒருவர் மட்டுமே அந்நாளில் உன்னதமானவராயிருப்பார்:

சிலைகள் அனைத்தும் ஒருங்கே ஒழிக்கப்படும்.

ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய வரும்போது, அவரது அச்சம்தரும் திருமுன்னின்றும், அவரது சீர்மிகு மாட்சியினின்றும் மறைந்திட மனிதர் குன்றின் குகைகளில் புகுந்து கொள்வர்: மண்ணின் குழிகளில் மறைந்து கொள்வர்.

அந்நாளில் மக்களினத்தார் தாம் வழிபடுவதற்கு உருவாக்கிய வெள்ளிச் சிலைகளையும், பொற்பதுமைகளையும், அகழ் எலிகளுக்கும், வெளவால்களுக்கும் எறிந்து விடுவர்.

ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய வரும்போது, அவரது அச்சம் தரும் திருமுன்னின்றும், அவரது சீர்மிகு மாட்சியினின்றும் மறைந்திட அவர்கள் பாறைகளின் வெடிப்புகளில் பதுங்கிக் கொள்வர்: குன்றுகளின் பிளவுகளில் ஒளிந்து கொள்வர்.

நிலையற்ற மனிதர்மேல் நம்பிக்கை வைக்காதீர்: அவர்களின் உயிர் நிலையற்றது: ஒருபொருட்டாகக் கருதப்படுவதற்கு அவர்களின் தகுதி என்ன?

அதிகாரம் 3.

படைகளின் ஆண்டவரான நம் தலைவர், எருசலேமின் ஊன்றுகோலை ஒடித்து விடுவார்: யூதாவின் நலத்தை நலியச் செய்வார்: ஊன்றுகோலாகிய உணவையும் நலமாகிய நீரையும் அகற்றிவிடுவார்.

வலிமைமிகு வீரன், போர்க்களம் செல்லும் போர்வீரன், தீர்ப்பு வழங்கும் நீதிபதி, இறைவாக்கு உரைக்கும் இறைவாக்கினன், குறி சொல்லும் நிமித்திகன், அறிவு முதிர்ந்த முதியோன் இவர்கள் அனைவரையும் அழித்து விடுவார்.

ஜம்பதின்மர் தலைவன், உயர்பதவி வகிக்கும் சான்றோன், அறிவுரை வழங்குபவன், திறன் வாய்ந்த மந்திரவாதி, மாயவித்தை புரிவதில் நிபுணன் ஆகிய அனைவரையும் அகற்றி விடுவார்.

சிறுவர்களை மக்கள் தலைவர்களாய் மாற்றுவார்: பச்சிளங் குழந்தைகள் அவர்கள் மேல் அரசாட்சி செலுத்துவார்கள்.

மக்கள் ஒருவரை ஒருவர் ஒடுக்குவர்: எல்லோரும் தமக்கு அடுத்திருப்பவரைத் துன்புறுத்துவர்: இளைஞர் முதியோரை அவமதிப்பர்: கீழ்மக்கள் மாண்பு மிக்கவரைப் புறக்கணிப்பர்.

தன் தந்தையின் இல்லத்தில் வாழும் தமையனின் கையைத் தொட்டு ஒருவன், "நீ ஒருவனாவது ஆடை உடுத்தியுள்ளாய்: நீ எங்கள் பெருந்தலைவன் ஆவாயாக: பாழடைந்து கிடக்கும் இந்த நாடு உன் கைக்குள் வருவதாக" என்பான்.

அந்நாளில் அவன், "நான் காயத்திற்குக் கட்டுப்போடுகிறவன் அல்ல: இல்லத்தில் உடுத்துவதற்கு உடையோ, உண்பதற்கு உணவோ ஒன்றுமில்லை: மக்களின் தலைவனாய் என்னை நீங்கள் ஏற்படுத்தவும் வேண்டாம்" எனச் சொல்லி மறுத்துவிடுவான்.

எருசலேம் நிலைகுலைந்து தடுமாற்றம் அடைந்து விட்டது: யூதா வீழ்ச்சி அடைந்து விட்டது: ஏனெனில், அவர்களுடைய சொல்லும், செயலும் ஆண்டவரின் திருவுளத்திற்கு எதிராய் உள்ளன: மாட்சிமைமிகு அவர்தம் கண்களுக்குச் சினமூட்டின.

அவர்களின் ஓரவஞ்சனை அவர்களுக்கு எதிராய்ச் சான்று கூறுகின்றது: அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல் சோதோம் மக்களைப்போல் புறைசாற்றுகிறார்கள். ஜயோ! அவர்கள் உயிருக்குக் கேடு: ஏனெனில், தங்களுக்குத் தாங்களே தீமையை வருவித்துக்கொண்டார்கள்.

ஆனால், மாசற்றோர் நலம் பெறுவர் என நவிலுங்கள்: அவர் தம் நற்செயல்களின் கனியை உண்பது உறுதி.

தீச்செயல் புரிவோர்க்கு ஜயோ கேடு! தீமை அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்: அவர்களின் கைகள் செய்த தீவினைகள் அனைத்தும் அவர்கள் மேலேயே விழும்.

என் மக்களே, சிறுவர் உங்களை ஒடுக்குகின்றார்கள்: பெண்கள் உங்கள்மேல் ஆட்சி செலுத்துகின்றார்கள்: என் மக்களே, உங்கள் தலைவர்கள் உங்களைத் தவறாக வழி நடத்துகின்றார்கள்: உங்களை ஆள்பவர்கள் நீங்கள் நடக்கவேண்டிய நெறிமுறைகளைக் குழப்புகின்றார்கள்.

ஆண்டவர் வழக்காடுவதற்கு ஆயத்தமாகிறார்: மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்க எழுந்து நிற்கிறார்.

தம் மக்களின் முதியோரையும் தலைவர்களையும் தம் நீதித் தீர்ப்புமுன் நிறுத்துகிறார்: இந்தத் திராட்சைத் தோட்டத்தைத் தின்றழித்தவர்கள் நீங்கள்: எளியவர்களைக் கொள்ளையிட்ட பொருள்கள் உங்கள் இல்லங்களில் நிறைந்துள்ளன:

என் மக்களை நீங்கள் நசுக்குவதன் பொருள் என்ன? எளியோரின் முகத்தை உருக்குலைப்பதன் பொருள் என்ன?" என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.

மேலும் ஆண்டவர் கூறியது இதுவே: "சீயோன் மகளிர் செருக்குக் கொண்டுள்ளார்கள்: தங்கள் கழுத்தை வளைக்காது நிமிர்ந்து நடக்கின்஥றார்கள்: தம் கண்களால் காந்தக் கணை தொடுக்கின்றார்கள்: தங்கள் கால்களிலுள்ள சிலம்பு ஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து உலவித் திரிகிறார்கள்.

ஆதலால், ஆண்டவர் சீயோன் மகளிரின் உச்சந்தலைகளில் புண்ணை விருவிப்பார்: வழுக்கைத் தலையர்களாய் அவர்களை ஆக்குவார்: ஆண்டவர் அவர்களின் மானத்தைக் குலைப்பார்.

அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய கால்சிலம்புகள், கட்டிகள், பிறைவடிவமான அணிகலன்கள்,

ஆரங்கள், கழுத்துப் பொற்சங்கிலிகள், கழுத்துத் துண்டுகள்,

கைவளையல்கள், தலை அணிகலன்கள், கூந்தல்கட்டும் பட்டு நாடாக்கள், அரைக்கச்சைகள், நறுமணச் சிமிழ்கள்,

காதணிகள், மோதிரங்கள், மூக்கணிகள்,

வேலைப்பாடுள்ள அழகிய ஆடைகள், மேலாடைகள், போர்வைகள், கைப்பைகள்,

கண்ணாடிகள், மெல்லிய சட்டைகள், குல்லாக்கள், முக்காடுகள் ஆகியவற்றை ஆண்டவர் களைந்துவிடுவார்.

நறுமணத்திற்குப் பதிலாக அவர்கள்மேல் துர்நாற்றம் வீசும்: கச்சைக்குப் பதிலாகக் கயிற்றைக் கட்டிக்கொள்வார்கள்: வாரிமுடித்த கூந்தலுக்குப் பதிலாக அவர்கள் வழுக்கைத் தலை கொண்டிருப்பார்கள்: ஆடம்பர உடைகளுக்குப் பதிலாக அவர்கள் சாக்குடை உடுத்துவார்கள். அழகிய உடல்கொண்ட அவர்கள் மானக்கேடு அடைவார்கள்.

உங்கள் ஆண்கள் வாளுக்கு இரையாவார்கள்: வலிமை மிக்க உங்கள் வீரர்கள் போரில் மடிவார்கள்.

சீயோன் வாயில்கள் புலம்பி அழும்: அவள் எல்லாம் இழந்தவளாய்த் தரையில் உட்காருவாள்.

அதிகாரம் 4.

அந்நாளில் ஓர் ஆடவனை ஏழு பெண்கள் பிடித்துக்கொண்டு, "நாங்கள் எங்கள் சொந்த உணவை உண்டு வாழ்வோம்: எங்கள் சொந்த ஆடைகளை உடுத்திக் கொள்வோம்: உமது பெயரை மட்டும் எங்களுக்கு வழங்கி எங்கள் இழிவை நீக்குவீராக" என்பார்கள்.

அந்நாளில் ஆண்டவரால் துளிர்க்கும் தளிர், அழகும் மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்: நாட்டில் விளையும் நற்கனிவகைகள், இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.

அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும், எருசலேமில் தப்பி வாழ்வோரும், "புனிதர்" எனப் பெயர் பெறுவர்: உயிர் பிழைப்பதற்கென்று எருசலேமில் பெயர் எழுதப்பட்டோ ரும் "புனிதர்" எனப்படுவர்.

என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் பய்மைப்படுத்துவார்: நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத்தணலையொத்த அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி அதனைத் பய்மைப்படுத்துவார்.

சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்: புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்: ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒருவிதான மண்டபம் இருக்கும்.

அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.

அதிகாரம் 5.

என் நண்பரைக்குறித்துக் கவி பாடுவேன்: என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப்பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன்: செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது.

அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைத்தெடுத்தார்: நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்: அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்: திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்: நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார்: மாறாக, காட்டு பழங்களையே அது தந்தது.

இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்: எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள்.

என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன?

என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்: "நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்: அது தீக்கிரையாகும்: அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்: அது மிதியுண்டு போகும்.

நான் அதைப் பாழாக்கி விடுவேன்: அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை: களையை அகற்ற மண் கொத்தப்படுவதுமில்லை: நெருஞ்சியும், முட்புதர்களுமே அதில் முளைக்கும்: அதன்மீது மழை பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்."

படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே: அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே: நீதிக்கனி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்: ஆனால் விளைந்தோ இரத்தப்பழி: நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்: ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.

வீட்டோ டு வீடு சேர்ப்பவர்களே, வயலோடு வயல் இணைத்துக் கொள்பவர்களே, உங்களுக்கு ஜயோ கேடு! பிறருக்கு இடமில்லாது நீங்கள்மட்டும் தனித்து"நாட்டில் வாழ்வீர்களோ?

என் காது கேட்கப் படைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறியது இதுவே: "மெய்யாகவே பல இல்லங்கள் பாழடைந்து போகும்: அழகுவாய்ந்த பெரிய மாளிகைகள் தங்குவதற்கு ஆள் இல்லாமற் போகும்.

ஏனெனில் பத்து ஏக்கர் திராட்சைத் தோட்டம் ஒரு குடம் இரசம்தான் கொடுக்கும்: பத்துக் கலம் விதை விதைத்தால், ஒரு கலமே விளையும்.

விடியற் காலையிலேயே விழித்தெழுந்து, போதை தரும் மதுவை நாடி அலைந்து, இரவுவரை குடித்துப் பொழுதைப் போக்குகிறவர்களுக்கோ ஜயோ, கேடு!

அவர்கள் கேளிக்கை விருந்துகளில் கின்னரம், வீணை, தம்புரு, மதுபானம் இவையெல்லாம் உண்டு: ஆனால் ஆண்டவரின் செயல்களை அவர்கள் நினைவுகூர்வதில்லை: அவருடைய கைவினைகளை நோக்கிப் பார்ப்பதுமில்லை.

ஆதலால் அறியாமையால் என் மக்கள் நாடு கடத்தப்படுகின்றார்கள்: அவர்களில் பெருமதிப்பிற்குரியோர் பசியால் மடிகின்றார்கள்: பொதுமக்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றார்கள்:

ஆதலால் பாதாளம் தன் வாயை அளவுகடந்து பிளந்துள்ளது: தன் பசியைப் பெருக்கியிருக்கிறது. எருசலேமின் உயர்குடிமக்கள், பொதுமக்கள், திரள் கூட்டத்தார், அதில் களியாட்டம் புரிவோர் ஆகியோர் ஒருங்கே அதனுள் இறங்குவார்கள்.

மனிதர் தலைகுனிவர், மானிடமைந்தர் தாழ்வுறுவர், இறுமாப்புக் கொண்டோ ரின் பார்வை தாழ்ச்சியடையும்.

ஆனால் படைகளின் ஆண்டவர் தம் நீதியால் உயர்ந்திருப்பார்: பயவராம் இறைவன் தம் நேர்மையால் தம்மைத் பயவராக வெளிப்படுத்துவார்.

அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் தங்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வதுபோல மேயும், வெள்ளாட்டுக் குட்டிகளும் இளங்கன்றுகளும் பாழடைந்த இடங்களில் மேயும்.

பொய்ம்மை என்னும் கயிறுகளால் தீச்செயலைக் கட்டி இழுத்து, வண்டியைக் கயிற்றால் இழுப்பது போலப் பாவத்தையும் கட்டி இழுப்பவர்களுக்கு ஜயோ கேடு!

"நாங்கள் பார்க்கும்படி அவர் விரைவாய் வந்து, தம் வேலையைத் துரிதமாய்ச் செய்யட்டும்: நாங்கள் அறியும்படி, இஸ்ரயேலின் பயவர் தம் நோக்கத்தை வெளிப்படுத்தி அதை நிறைவேற்றட்டும்" என்று சொல்கிறவர்களுக்கு ஜயோ, கேடு!

தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஜயோ கேடு!

தங்கள் பார்வையில் ஞானிகள் என்னும், தங்கள் கணிப்பில் கூர்மதி வாய்ந்தவர்கள் என்றும் தங்களையே கருதுபவர்களுக்கு ஜயோ கேடு!

திராட்சை இரசம் குடிப்பதில் தீரர்களாகவும், மதுபானம் கலப்பதில் திறமைசாலிகளாகவும் இருப்பவர்களுக்கு ஜயோ கேடு!

அவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு, குற்றவாளியை நேர்மையாளர் எனத் தீர்ப்பிடுகின்றார்கள்: குற்றமற்றவருக்கு நீதி கிடைப்பதைத் தடை செய்கின்றார்கள்:

ஆதலால், நெருப்புத் தணல் வைக்கோலை எரித்துச் சாம்பலாக்குவது போல, காய்ந்த புல் தீக்கிரையாக்கித் தீய்ந்து போவது போல, அவர்கள் ஆணிவேர் அழுகிப்போகும்: அவர்கள் வழிமரபு துரும்புபோல் பறந்து போகும்: ஏனெனில் அவர்கள், படைகளின் ஆண்டவரது திருச்சட்டத்தைப் புறக்கணித்தார்கள்: இஸ்ரயேலின் பயவரது வாக்கை வெறுத்துத் தள்ளினார்கள்.

ஆதலால், ஆண்டவரின் சினத் தீ அவருடைய மக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது, அவர்களுக்கு எதிராக அவர் தம் கையை நீட்டி அவர்களை நொறுக்கினார். மலைகள் நடுநடுங்கின: அவர்களுடைய சடலங்கள் நடுத்தெருவில் நாதியற்றுக் குப்பை போல் கிடந்தன: இவையெல்லாம் நடந்தும் அவரது சீற்றம் தணியவில்லை. நீட்டிய சினக்கை இன்னும் மடங்கவில்லை.

அவர் தொலையிலுள்ள பிற இனத்துக்கு ஓர் அடையாளக் கொடியைக் காட்டியுள்ளார்: மண்ணுலகின் எல்லைகளிலிருந்து சீழ்க்கை ஒலியால் அதனை அழைத்துள்ளார், அந்த இனம் வெகுவிரைவாய் வந்து கொண்டிருக்கின்றது.

அவர்களுள் ஒருவனும் களைப்பபடையவில்லை: இடறி விழவில்லை: பங்கவில்லை: உறங்கவுமில்லை: அவர்களில் யாருக்கேனும் இடுப்புக்கச்சை அவிழ்ந்து விழவில்லை: மிதியடிகளின் வாரேதும் அறுந்து போகவுமில்லை.

அவர்களுடைய அம்புகள் கூர்மையானவை: அவர்களுடைய விற்கள் நாணேற்றப்பட்டுள்ளன: அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கற்களைப்஧ பால் காட்சியளிக்கின்றன: அவர்களுடைய தேர்ச் சக்கரங்கள் சூறாவளிக் காற்றைப்போல் சுழல்கின்றன.

அவர்களின் கர்ச்சனை பெண் சிங்கத்தினுடையதை ஒத்தது: இளஞ் சிங்கங்களைப்போல் அவர்கள் கர்ச்சிக்கிறார்கள்: உறுமிக்கொண்டு தங்கள் இரையைக் கவ்விப் பிடிப்பார்கள்: யாரும் விடுவிக்க இயலாதவாறு இரையை எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள்.

அந்நாளில் கடலின் பேரிரைச்சல்போல் இஸ்ரயேலுக்கு எதிராக இரைந்து உறுமுவார்கள்: நாட்டை ஒருவன் பார்க்கையில், இருளும் துன்பமுமே காண்பான்: மேகத்திரள் ஒளியை விழுங்கிவிட்டது.

அதிகாரம் 6.

உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்: அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது.

அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்: ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன: ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்: இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்: மற்ற இரண்டால் பறந்தனர்.

அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: "படைகளின் ஆண்டவர் பயவர், பயவர், பயவர்: மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது" என்று உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்.

கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்ள் அசைந்தன: கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.

அப்பொழுது நான்: "ஜயோ, நான் அழிந்஧ன். ஏனெனில் பய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்: பய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்: படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே" என்றேன்.

அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார்.

அதனால் என் வாயைத் தொட்டு, "இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது: உன் பாவம் மன்னிக்கப்பட்டது," என்றார்.

மேலும் "யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?" என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, "இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்" என்றேன்.

அப்பொழுது அவர், "நீ இந்த மக்களை அணுகி, ஓநீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள்: உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணராதிருங்கள்ஓ என்று சொல்.

அவர்கள் கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி இந்த மக்களின் இதயத்தைக் கொழுப்படையச் செய்: காதுகளை மந்தமாகச் செய்: கண்களை மூடச்செய்" என்றார்.

அதற்கு நான், என் தலைவரே! எத்துணை காலத்திற்கு இது இவ்வாறிருக்கும்?" என்று வினவினேன். அதற்கு அவர், "நகரங்கள் அழிந்து குடியிருப்பார் இல்லாதனவாகும்: வீடுகளில் வாழ்வதற்கு மனிதர் இரார்: நாடு முற்றிலும் பாழ்நிலமாகும்:

ஆண்டவர் மனிதர்களைத் தொலை நாட்டிற்குத் துரத்தி விடுவார்: நாட்டில் குடியிருப்பாரின்றி வெற்றிடங்கள் பல தோன்றும்: அதுவரைக்குமே இவ்வாறிருக்கும்.

பத்தில் ஒரு பங்கு மட்டும் நாட்டில் எஞ்சியிருந்தாலும் அதுவும் அழிக்கப்படும்: தேவதாரு அல்லது கருவாலி மரம் வெட்டி வீழ்த்தப்பட்டபின் அடிமரம் எஞ்சியிருப்பதுபோல் அது இருக்கும். அந்த அடிமரம்தான் பய வித்தாகும்," என்றார்.

அதிகாரம் 7.

உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாசு யூதா நாட்டை ஆட்சி செய்த நாள்களில், இரட்சின் என்னும் சிரியா நாட்டு அரசனும் இரமலியாவின் மகன் பெக்கா என்னும் இஸ்ரயேல் நாட்டு அரசனும் எருசலேமுக்கு எதிராகப் போர் தொடுத்து அதை வீழ்த்த முயன்றனர். அவர்களால் அது இயலாமற் போயிற்று.

ஓசிரியா எப்ராயிமோடு கூட்டணி அமைத்துக் கொண்டதுஓ என்னும் செய்தி தாவீதின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டது: உடனே பெருங்காற்றினால் காட்டு மரங்கள் அலையதிர்வுகொள்வதுபோல், ஆகாசின் உள்ளமும் அவர்நாட்டு மக்களின் உள்ளங்களும் அலைக்கழிக்கப்பட்டன.

அப்பொழுது ஆண்டவர் எசாயாவை நோக்கி: "நீ உன் மகன் செயார் யாசிபை உன்னுடன் அழைத்துச் சென்று ஆகாசைச் சந்திப்பாயாக. வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில், மேற்குளத்துக்குப் போகும் கால்வாயின் மறுமுனையில் நீ ஆகாசைக் காண்பாய். அவனுக்கு இதைச் சொல்: 9நீ அமைதியாய் இரு: அஞ்சாதிருந்து நடப்பனவற்றை உற்றுப் பார்: இரட்சின், சிரியா நாட்டினர், இரமலியாவின் மகன் ஆகியோரின் கடும் சினத்தைக் கண்டு மனங்கலங்காதே. அவர்கள் புகைந்து கொண்டிருக்கும் இரு கொள்ளிக்கட்டைகளிலிருந்து வரும் புகை போன்றவர்கள்.

சிரியா எப்ராயிமோடும் இரமலியாவின் மகனோடும் உனக்கெதிராய்ச் சதித்திட்டம் தீட்டி,

ஓயூதாவுக்கு எதிராய் நாம் படை எடுத்துச்சென்று அதை நடுநடுங்கச் செய்வோம்: அதற்கு எதிராய்ப் போரிட்டு, அதைப்பிடித்து தயேல் என்பவனின் மகனை அதற்கு அரசனாக்குவோம்ஓ என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்."

ஆதலால் ஆண்டவர் இவ்வாறு உரைக்கிறார்: "அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது, அது ஒருபோதும் நிறைவேறாது.

ஏனெனில் சிரியாவின் தலைநகர் தமஸ்கு: தமஸ்கு நகரின் தலைவன் இரட்சின். (இன்னும் அறுபத்தைந்து ஆண்டுகளில் எப்ராயிம் ஒரு மக்களினம் என்னும் தகுதியை இழக்கும் வண்ணம் தவிடு பொடியாக்கப்படும்)

எப்ராயிமின் தலைநகர் சமாரியா: சமாரியா நகரின் தலைவன் இரமலியாவின் மகன். உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும் நிலைத்துநிற்க மாட்டீர்கள்."

ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது:

"உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்: அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்" என்றார்.

அதற்கு ஆகாசு, "நான் கேட்கமாட3டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்" என்றார்.

அதற்கு எசாயா: "தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்: மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?

ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவள் ஓஇம்மானுவேல்ஓ என்று பெயரிடுவார்.

தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்கு அறியும்போது அவன் வெண்ணெயையும், தேனையும் உண்பான்.

அந்தக் குழந்தை தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்குமுன், உம்மை நடுநடுங்கச் செய்யும் அரசர்கள் இருவரின் நாடுகளும் பாலை நிலமாக்கப்படும்.

எப்ராயிம் யூதாவை விட்டுப் பிரிந்துபோன பின் இந்நாள்வரை வராத நாள்களை உம்மேலும். உம்நாட்டு மக்கள் மேலும், உம் தந்தையரின் குடும்பத்தார் அனைவர் மேலும் ஆண்டவர் வரச் செய்வார். அசீரிய அரசனையே வரவழைப்பார்.

அந்நாளில், எகிப்து ஆறுகளின் ஊற்று முனையிலுள்ள ஈயையும், அசீரிய நாட்டிலுள்ள தேனீயையும் ஆண்டவர் சீழ்க்கையொலி செய்து அழைப்பார்:

உடனே அவை அனைத்தும் கூட்டமாய் வந்து, செங்குத்து மலைப் பள்ளத்தாக்குகள், கற்பாறைக் குகைள், முட்புதர், மேய்ச்சல் நிலங்கள் அனைத்தின்மேலும் வந்திறங்கும்.

அந்நாளில் ஆணடவர் பேராற்றின் மறு பக்கத்திலிருந்து, அசீரிய அரசன் என்ற சவரக்கத்தியை வாடகைக்கு எடுப்பார்: அக்கத்தியினால் உங்கள் தலையிலும் காலிலும் உள்ள முடியை மழித்து விடுவார்: அது உங்கள் தாடியைக்கூட சிரைத்துப்போடும்.

அந்நாளில், இளம்பசு ஒன்றையும் ஆடுகள் இரண்டையும் ஒருவன் வளர்த்து வருவான்.

அவை மிகுதியாகப்பால் தருவதனால் அவன் வெண்ணெய் உண்பான்: நாட்டில் எஞ்சியிருக்கும் ஒவ்வொருவரும், வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவர்.

அந்நாளில், ஆயிரம் வெள்ளிக்காசு விலைமதிப்புள்ள ஆயிரம் திராட்சைச் செடிகள் வளாந்த நிலம் முழுவதிலும் நெருஞ்சி முள்ளும் முட்புதரும் முளைத்திருக்கும்.

நாடெங்கும் நெருஞ்சி முள்ளும், முட்புதரும் நிறைந்திருப்பதால், வில்லோடும் அம்஥போடுமே மனிதர்கள் வருவார்கள்.

மண்வெட்டியால் பண்படுத்தப்பட்டு வந்த மலைகளில் நெருஞ்சி முள்ளும் முட்புதருமே இருப்பதால் அதற்கு அஞ்சி எவருமே அங்கே வரார். அவை, மாடுகள் ஓட்டிவிடப்படும் மேட்டு நிலமாகும்: ஆடுகள் நடமாடும் காடாகும்.

அதிகாரம் 8.

அதன்பின் ஆண்டவர் என்னை நோக்கி: "நீ அகன்றதோர் வரை பலகையை எடுத்து அதில் மனிதர் எழுதுவதுபோல சாதாரண எழுத்துக்களில் மகேர் சாலால் கஸ்பாசைக்குறித்து எழுது.

உரியா என்ற குருவும் எபரேக்கியாவின் மகன் செக்கரியாவும் எனக்கு உண்மையுள்ள சாட்சிகளாயிருக்கட்டும்" என்றார்.

நான் இறைவாக்கினளுடன் கூடியபொழுது அவள் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, "அவனுக்கு ஓமகேர்சாலால் கஸ்பாசுஓ என்று பெயரிடு.

ஏனெனில் இச்சிறுவன் "அப்பா, அம்மா" என்று அழைக்க அறியு முன்னே, தமஸ்கின் செல்வங்களும் சமாரியாவிலுள்ள கொள்ளைப் பொருள்களும் அசீரிய அரசனால் வாரிக்கொண்டு போகப்படும்" என்றார்.

மீண்டும்" ஆண்டவர் என்னோடு உரையாடி,

"அமைதியாய் ஓடுகின்ற சீலோவா சிற்றாற்றின் நீரை வேண்டாமென்று இந்த மக்கள் மறுத்து விட்டார்கள்: இரட்சீனையும், இரமலியாவின் மகனையும் கண்டு அச்சத்தால் துவண்டு வீழ்கிறார்கள்.

ஆதலால் ஆண்டவர் ஆற்றலுடன் பெருக்கெடுத்தோடும் பேராற்றைப் போன்ற அசீரிய அரசனையும் அவன் மேன்மையான படைகள் அனைத்தையும் அவர்களுக்கு எதிராக அணிதிரண்டு வரச் செய்தார்: கால்வாய்கள் அனைத்தையும் அதன் வெள்ளம் நிரப்பும்: எல்லாக் கரைகள் மேலும் அது புரண்டு பாயும்:

எங்கும் வெள்ளக்காடாய், காட்டாறாய் ஓடும்: யூதா நாட்டுக்குள் புகுந்து அதன் கழுத்தை எட்டும்: இம்மானுவேலே, அதன் கிளைகள் உன் நாட்டின் பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்:

மக்களினங்களே, ஒருங்கிணையுங்கள்: ஆயினும் நொறுக்கப்படுவீர்கள்: தொலைநாட்டிலுள்ள அனைத்து மக்களே, செவிகொடுங்கள்: போருக்கென இடையைக் கட்டிக் கொள்ளுங்கள்: ஆயினும் கலக்கமுறுவீர்கள். போர்க்கோலம் கொள்ளுங்கள்: ஆயினும் முறியடிக்கப்படுவீர்கள்.

ஒன்று கூடிச் சதித்திட்டம் தீட்டுங்கள்: அதுவும் விழலுக்கு இறைத்த நீராகும்: கூடிப்பேசி முடிவெடுங்கள்: அதுவும் பயனற்றுப் போகும். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்.

தமது வலிமையுள்ள கையை என்மேல் வைத்து ஆண்டவர் எனக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த மக்களின் வழிகளை நான் பின்பற்றாதிருக்க எனக்குக்கட்டளை பிறப்பித்தார்:

"இந்த மக்கள் சதித்திட்டம் என்று அழைப்பதையெல்லாம் நீங்கள் சதித்திட்டம் என்று சொல்லாதீர்கள். அவர்கள் எதற்கு அஞ்சி நடுங்குகிறார்களோ, அதற்கு நீங்கள் அஞ்சவேண்டாம், நடுங்கி நிலைகுலையவும் வேண்டாம்:

படைகளின் ஆண்டவர் ஒருவரையே பயவர் எனப் போற்றுங்கள்: அவருக்கே அஞ்சுங்கள்: அவர் திருமுன்னேயே நடுங்குங்கள்,

அவரே திருத்பயகமாய் இருப்பார்: இஸ்ரயேலின் இரு குடும்பத்தாருக்கும், இடறு கல்லாகவும், தடுக்கிவிழச் செய்யும் கற்பாறையாகவும் இருப்பார்: எருசலேமில் குடியிருப்போருக்குப் பொறியும் கண்ணியுமாய் இருப்பார்.

அவர்களில் பலர் தடுமாற்றம் அடைவர்: இடறிவீழ்ந்து நொறுக்கப்படுவர்: கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.

இந்தச் சான்றுரையைப் பாதுகாப்பாயக் கட்டிவை: என் சீடரிடையே இந்த இறைக்கூற்றை முத்திரையிட்டு வை:

யாக்கோபு குடும்பத்தாருக்குத் தம் முகத்தை ஆண்டவர் மறைத்துள்ளார், ஆண்டவருக்காக நான் காத்திருப்பேன்: அவர்மேல் என் நம்பிக்கையை நிலைநிற்கச் செய்வேன்.

படைகளின் ஆண்டவர் சீயோன் மலையில் குடி கொண்டிருக்கிறார்: நானும் அவர் எனக்களித்த குழந்தைகளும் இஸ்ரயேலில் அவருக்கு அடையாளங்களாகவும் அறிகுறிகளாகவும் இருக்கிறோம்.

"மாயவித்தைக்காரரையும், முணுமுணுத்து மந்திரங்களை ஓதிக் குறி சொல்஥வோரையும் அணுகிக் குறி கேளுங்கள் என்று அவர்கள் உங்களிடம் சொல்வார்கள். மக்கள் தம் குலதெய்வத்தை நாடிக் குறி கேளாதிருப்பார்களோ? உயிருள்ளோருக்காகச் செத்தவர்களை விசாரிப்பதல்லவா முறைமை?" என்பார்கள்.

"இறைக்கூற்றையும் சான்றுரையையும் நாடித்தேடுங்கள்" என்று அவர்கள் சொல்லாததனால் அவர்களுக்கு விடிவு காலம் வராது என்பது உறுதி.

பெருந்துன்பத்தோடும், பசிக்கொடுமையோடும் அவர்கள் நாட்டைக் கடந்து செல்வார்கள்: பசியால் வாடி வதங்கும்போது வெறிகொண்டு தங்கள் அரசனையும், தெய்வத்தையும் வசை மொழியால் சபிப்பார்கள்: முகத்தை உயர்த்தி அண்ணார்ந்து பார்ப்பார்கள்.

தலையைத் தாழ்த்தித் தரையை உற்று நோக்குவார்கள்: எங்கு நோக்கினும் காரிருள், கடுந்துயர், மன வேதனைகளே புலப்படும்: காரிருள் அவர்களை ஆட்கொள்ளும்.

அதிகாரம் 9.

ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது: முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்: பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார்.

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்: சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது.

ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்: அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்: அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்: கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.

மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்: அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்: அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.

அமளியுற்ற போர்க்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளும், இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தும் நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்.

ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ "வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்" என்று அழைக்கப்படும்.

அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது: தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்: இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலை பெயராது உறுதிப்படுத்துவார்: படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.

யாக்கோபுக்கு எதிராக ஓர் வார்த்தையை ஆண்டவர் அனுப்பியுள்ளார்: அது இஸ்ரயேல் மேல் இறங்கித் தன் செயலைச் செய்யும்.

எப்ராயிமியர், சமாரியாவின் குடிகள் ஆகிய அனைத்து மக்களும் இதை அறிந்து கொள்வார்கள்.

செருக்கினாலும் இதயத்தில் எழும் இறுமாப்பினாலும் அவர்கள் சொல்லுவதாவது: "செங்கல் கட்டடம் இடிந்து வீழ்ந்தது: எனினும், செதுக்கிய கற்களால் நாங்கள் கட்டியெழுப்புவோம். காட்டத்தி மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன: எனினும், அவற்றிற்குப் பதிலாகக் கேதுரு மரங்களை வைப்போம்".

ஆதலால் ஆண்டவர் இரட்சீனின் அதிகாரிகளை அவர்களுக்கு எதிராய்க் கிளர்ந்தெழச் செய்தார்: அவர்கள் பகைவரைத் பண்டி விட்டார்.

கிழக்கிலிருந்து சிரியரும், மேற்கிலிருந்து பெலிஸ்தியரும் வந்தார்கள்: தங்கள் வாயை விரிவாய்த்திறந்து இஸ்ரயேலரை விழுங்கிவிட்டார்கள்: இவையெல்லாம் நடந்தும், அவரது சீற்றம் தணியவிலலை: ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.

தங்களை நொறுக்க வைத்தவரிடம் மக்கள் திரும்பவில்லை: படைகளின் ஆண்டவரைத் தேடவுமில்லை.

ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலில் உயர்ந்தோர்முதல் தாழ்ந்தோர்வரை அனைவரையும், ஒலிவமரக்கிளையையும் நாணலையும் ஒரேநாளில் வெட்டி வீழ்த்துவார்:

முதியவரும், மதிப்புமிக்கவருமே உயர்ந்தோர்: பொய்யைப் போதிக்கும் இறைவாக்கினரோ தாழ்ந்தோர்.

இந்த மக்களை வழிநடத்தியோர் அவர்களை நெறிபிறழச் செய்தனர்: அவர்களால் வழி நடத்தப்பட்டவரோ அழிந்துபோயினர்.

ஆதலால், அவர்களுடைய இளைஞரைக் குறித்து என் தலைவருக்கு மகிழ்ச்சி இல்லை: அவர்களிடையே வாழும் திக்கற்றோர், கைம்பெண்கள்மேல் இரக்கம் காட்டவில்லை: அவர்கள் அனைவரும்இறைப்பற்று இல்லாதவர்கள்: தீச்செயல் புரிபவர்கள்: எல்லாரும் மதிகேட்டையே பேசினர்: இவையெல்லாம் நடந்தும் அவர் சீற்றம் தணியவில்லை: ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.

கொடுமை தீயைப்போல் கொழுந்து விட்டு எரிந்தது: அது முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும் தீய்த்துவிட்டது: காட்டின் அடர்ந்த பகுதிகளை அது கொளுத்தி விட்டது: அதனால் புகைமண்டலம் சுழன்று மேலே எழுந்தது.

படைகளின் ஆண்டவரது சினத்தால் நாடு நெருப்புக்கு இரையானது: மக்கள் நெருப்புக்கு விறகைப் போல் ஆனார்கள்: ஒருவரும் தம் அடுத்திருப்பாரை விட்டு வைக்கவில்லை.

அவர்கள் வலப்புறம் காண்பனவற்றைப் பிடுங்கித் தின்றும் பசி அடங்கவில்லை: இடப்புறம் இருப்பனவற்றை எடுத்து விழுங்கியும் மனம் நிறைவடையவில்லை: ஒவ்வொருவரும் தம் குழந்தையின் சதையைக் கூடத் தின்றனர்:

மனாசே குடும்பத்தார் எப்ராயிம் குடும்பத்தாரையும் எப்ராயிம் குடும்பத்தார் மனாசே குடும்பத்தாரையும் கொன்று தின்றனர்: இரு குடும்பத்தாரும் ஒன்றுசேர்ந்து யூதாவின் மேல் பாய்ந்தனர்: இவையெல்லாம் நடந்தும் அவரது சீற்றம் தணியவில்லை: ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை:

அதிகாரம் 10.

அநீதியான சட்டங்களை இயற்றுவோர்க்கு ஜயோ, கேடு! மக்களை ஒடுக்குகின்ற சட்டங்களை எழுதிவருவோருக்கு ஜயோ, கேடு!

அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல், அவர்கள் உரிமையை மறுக்கின்றார்கள்: எம் மக்களுள் எளியோரின் உரிமையை அவர்கள் திருடுகின்றார்கள்: கைம்பெண்களைக் கொள்ளைப் பொருளாய் எண்ணிச் சூறையாடுகின்றார்கள். திக்கற்றோரை இரையாக்கிக் கொள்கின்றார்கள்.

தண்டனை நாளில் என்ன செய்வீர்கள்? தொலைநாட்டிலிருந்து அழிவாகிய சூறைக்காற்று வரும்போது என்ன ஆவீர்கள்? உதவி நாடி யாரைத் தேடி ஓடுவீர்கள்? உங்கள் செல்வங்களை எங்கே வைத்து விட்டுச் செல்வீர்கள்?

கட்டுண்ட கைதிகளிடையே தலை கவிழ்ந்து வருவீர்கள்: இல்லையேல் வெட்டுண்டு மடிந்தோரிடையே வீழ்வீர்கள். இதிலெல்லாம் ஆண்டவரின் சீற்றம் தணியவில்லை. ஓங்கிய அவரது சினக் கை இன்னும் மடங்கவில்லை.

அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது: தண்டனை வழங்க நான் ஏந்தும் தடி அது.

இறைப்பற்றில்லா நாட்டினர்க்கு அந்நாட்டை நான் அனுப்புகிறேன்: எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க அதற்கு ஆணை கொடுக்கிறேன்: அம்மக்களைக் கொள்ளையிடவும் அவர்கள் பொருள்களைச் சூறையாடவும், தெருவில் கிடக்கும் சேற்றைப்போல அவர்களை மிதித்துப் போடவும், அதற்குக் கட்டளை தருகிறேன்.

அசீரிய அரசன் நினைப்பதோ வேறு, அவனது உள்ளத்தில் எழும் திட்டங்கள் வேறு: மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத் தன் இதயத்தில் எண்ணுகிறான்: பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த அவன் விரும்புகிறான்.

அவன் இறுமாப்புடன் சொல்வதாவது: "என் படைத்தலைவர்கள் ஒவ்வொருவரும் ஓர் அரசர் அல்லவா?

கல்னேர் நகர் கர்கமிசு நகர் போன்ற தல்லவா? ஆமாத்து நகர் அர்ப்பாது நகருக்கு இணையல்லவா? சமாரியா நகர் தமஸ்கு நகரை ஒத்ததல்லவா?

சிறப்பு வாய்ந்த, சிலைவணங்கும் அரசுகள் வரை என் கை எட்டியிருக்கின்றது: அந்நாட்டுச் சிலைகள் எருசலேம், சமாரியா நகர்ச் சிலைகளைவிட எண்ணிக்கையில் மிகுதி.

சமாரியாவையும் அதிலுள்ள சிலைகளையும் அழித்துப் பாழ்படுத்தியவன் நான்: இப்படியிருக்க, எருசலேமுக்கும் அதன் மக்கள் வழிபடும் சிலைகளுக்கும் அவ்வாறே செய்யமாட்டேனோ?"

எனவே சீயோன் மலைமேலும் எருசலேமிலும் என் வேலைகள் அனைத்தையும் முடித்தபின், ஆணவம் நிறைந்த அசீர்஢ய அரசனின் சிந்தனையை முன்னிட்டும், இறுமாப்புடன் அவன் பேசிய பேச்சுகளை முன்னிட்டும் "அவனை நான் தண்டிப்பேன்" என்கிறார் என் தலைவர்.

ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்: "என் கைவலிமையாலே நான் அதைச் செய்து முடித்தேன்: என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மையாலும் அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்: மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள எல்லைகளை அகற்றினேன்: அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்: அரியணையில் வீற்றிருந்தோரை ஒரு காளை மிதிப்பதுபோல் மிதித்துப்போட்டேன்.

குருவிக் கூட்டைக் கண்டுபிடிப்பது போல் என் கை மக்களினங்களின் செல்வங்களைக் கண்டு எடுத்துக்கொண்டது: புறக்கணித்த முட்டைகளை ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல் நாடுகள் யாவற்றையுயம் ஒருங்கே சேர்த்துக்கொண்டேன். எனக்கெதிராக ஒருவரும் இறக்கை அடிக்கவில்லை. வாய் திறக்கவில்லை, கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை."

வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ ? அறுப்பவனைவிடத் தன்னைச் சிறப்புமிக்கதாக வாள் கருத இயலுமோ? தன்னை பக்கியவனைச் சுழற்றி வீச கைத்தடியால் கூடுமோ? மரம் அல்லாத மனிதனைத் பக்க மரத்தால் ஆன கோலால் இயலுமோ?

ஆதலால் தலைவராகிய படைகளின் ஆண்டவர் பாழாக்கும் கொள்ளை நோயை அவனுடைய கொழுத்த வீரர்கள் இடையே அனுப்புவார்: அவனது மேன்மையின்கீழ் தீ ஒன்றை வைப்பார்: அவர் நெருப்பு மூட்டுவார்: அது கொழுந்துவிட்டு எரியும்.

இஸ்ரயேலின் ஒளியானவர் நெருப்பாக மாறுவார்: அதன் பயவர் தீக்கொழுந்தாய் உருவெடுப்பார்: அது அவனுடைய முட்புதர்களையும் நெருஞ்சி முள்களையும், ஒரே நாளில் சுட்டெரித்துச் சாம்பலாக்கி விடும்.

வனப்புமிக்க அவனுடைய காடுகள், செழிப்புமிக்க அவனுடைய தோட்டங்கள் யாவும் உள்ளும் புறமும் அழிக்கப்படும்: அது நோயாளி ஒருவன் உருக்குலைவதை ஒத்திருக்கும்.

அவனது காட்டில் மிகச் சில மரங்களே எஞ்சியிருக்கும்: ஒரு சிறுவன்கூட அவற்றை எண்ணி எழுதிவிடலாம்.

அந்நாளில் இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போரும், யாக்கோபின் மக்களில் தப்பிப் பிழைத்தோரும், தங்களை அடித்து நொறுக்கிய நாட்டை இனிச் சார்ந்திருக்க மாட்டார்கள்: மாறாக, இஸ்ரயேலின் பயவருக்கு உண்மையுள்ளவர்களாய், அவரையே சார்ந்திருப்பார்கள்.

யாக்கோபின் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போர் சிலர் வலிமை மிக்க இறைவனிடம் திரும்பி வருவர்.

இஸ்ரயேலே, இப்பொழுது உன் மக்கள் கடற்கரை மணலைப்போல் இருப்பினும், அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பி வருவர்: அழிவு நெருங்கி வந்தாயிற்று: அழிவு வருவது தீர்ப்பாயிற்று. பொங்கிவரும் இறைநீதி இதனால் வெளிப்படும்.

ஏனெனில், என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் தாம் ஆணையிட்டபடியே நாடு முழுவதிலும் அழிவைக் கொண்டு வருவார்.

என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "சீயோனில் வாழ்கின்ற என் மக்களே, எகிப்தியர் முன்பு செய்தது போல் அசீரியன் தடியால் உங்களை அடிக்கும் போதும் கோலை உங்களுக்கு எதிராய் ஓங்கும்போதும் நீங்கள் அஞ்சாதீர்கள்:

ஏனெனில் இன்னும் கொஞ்ச காலத்திற்குள் உங்கள் மேல் கொண்ட என் கடும் சினம் தணிந்துவிடும்: அப்பொழுது அசீரியர்களை அழிக்குமாறு அது திசை திரும்பும்".

ஒரே பாறையருகில் முன்பு மிதியானியரை அடித்து வீழ்த்தியது போல், படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார். எகிப்தியரை அழிக்கச் செங்கடல் மீது தமது கோலை ஓங்கினதுபோல அவர்களுக்கெதிராய்த் தம் கோலை ஓங்குவார்.

அந்நாளில் நீங்கள் கொழுமையடைவீர்கள்: உங்கள் தோள்மேல் அவன் வைத்த சுமை அகற்றப்படும். உங்கள் கழுத்திலுள்ள அவனது நுகத்தடி உடைத்தெறியப்படும்.

பகைவன் அய்யாத்துக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளான்: அவன் மிக்ரோனைக் கடந்து வந்துவிட்டான்: மிக்மாசிலே தன் மூட்டை முடிச்சுகளை வைத்திருக்கிறான்.

கணவாயை அவர்கள் கடந்து விட்டார்கள்: கேபாவில் தங்கி இரவைக் கழிக்கின்றார்கள்: இராமா நகரின் மக்கள் அஞ்சி நடுங்குகின்றார்கள்: சவுலின் நகரான கிபயாவிலுள்ள மக்கள் ஓட்டமெடுக்கின்றார்கள்.

பெத்தல்லிம் மக்களே, கூக்குரலிடுங்கள்: இலாயிசா மக்களே, உற்றுக் கேளுங்கள்: அனத்தோத்தின் மக்களே, மறுமொழி கூறுங்கள்.

மத்மேனா மக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்: கேபிமினில் வாழ்வோர் புகலிடம் தேடி ஓடுகிறார்கள்.

இன்றே அப்பகைவன் நோபு நகரில் தங்குவான்: அங்கிருந்து மகள் சீயோனின் மலைக்கும் எருசலேமின் குன்றிற்கும் எதிராகக் கையை ஓங்கி அசைப்பான்.

நம் தலைவராகிய படைகளின் ஆண்டவர் அச்சுறுத்தும் ஆற்றலால், கிளைகளை வெட்டி வீழ்த்துவார்: உயர்ந்தவற்றின் கிளைகள் துண்டிக்கப்படும்: செருக்குற்றவை தாழ்த்தப்படும்: நிமிர்ந்து நிற்பவை தரைமட்டமாக்கப்படும்.

அடர்ந்த காட்டை அவர் கோடரியால் வெட்டி வீழ்த்துவார்: லெபனோன் தன் உயர்ந்த மரங்களுடன் தரையிலே சாயும்.

அதிகாரம் 11.

ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்: அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும்.

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.

அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்: காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்:

நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்: நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்: வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்: உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார்.

நேர்மை அவருக்கு அரைக்கச்சை: உண்மை அவருக்கு இடைக்கச்சை.

அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்: கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்: பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும்.

பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்: அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்: சிங்கம் மாட்டைப் போல் வைக்஥கோல் தின்னும்:

பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்: பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும்.

என் திருமுலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை: கேடு விளைப்பார் யாருமில்லை: ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.

அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிறஇனத்தார் தேடி வருவார்கள்: அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்ததாக இருக்கும்.

அந்நாளில், என் தலைவர் மீண்டும் தம் கையை நீட்டி, அசீரியா, எகிப்து, பத்ரோசு, பாரசீகம், எத்தியோப்பியா, ஏலாம், சினார், ஆமாத்து முதலிய நாடுகளிலும், கடல் தீவுகளிலும் வாழும் தம் மக்களுள் எஞ்சியிருப்போரைத் தம் நாட்டிற்குத் திரும்பக் கொணர்வார்.

பிற இனத்தாருக்கென ஒரு கொடியை ஏற்றி வைப்பார்: இஸ்ரயேலில் நாடு கடத்தப்பட்டோ ரை ஒன்று திரட்டுவார்: யூதாவில் சிதறுண்டு போனவர்களை உலகின் நாற்புறத்திலிருந்தும் கூட்டிச் சேர்ப்பார்.

எப்ராயிமரின் பொறாமை அவர்களை விட்டு நீங்கும், யூதாவைப் பகைத்தோர் வெட்டி வீழ்த்தப்படுவர். எப்ராயிமர் யூதாமேல் பொறாமை கொள்வதில்லை: யூதாவும் எப்ராயிமரைப் பகைப்பதில்லை.

அவர்கள் இருவரும் சேர்ந்து மேற்கிலுள்ள பெலிஸ்தியரின் தோள்மேல் பாய்வார்கள்: கீழ்த்திசை நாட்டினரைக் கொள்ளையடிப்பார்கள்: ஏதோமையும் மோவாபையும் கைப்பற்றிக் கொள்வார்கள்: அம்மோன் மக்கள் அவர்களுக்கு அடிபணிவார்கள்.

எகிப்தின் கடல் முகத்தை ஆண்டவர் முற்றிலும் வற்றச்செய்வார்: பேராற்றின்மேல் கையசைத்து அனல்காற்று வீசச்செய்வார்: கால்஥ நனையாமல் மக்கள் கடந்து வரும்படி அந்த ஆற்றை ஏழு கால்வாய்களாகப் பிரிப்பார்.

இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வந்த நாளில் பெருவழி தோன்றியது போல, ஆண்டவரின் மக்களுள் எஞ்சியோர் வருவதற்கு அசீரியாவிலிருந்து பெருவழி ஒன்று தோன்றும்.

அதிகாரம் 12.

அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்: "ஆண்வடரே, நான் உமக்கு நன்றி சொல்வேன்: நீணர் என்மேல் சினமடைந்திருந்தீர்: இப்பொழுதோ, உம் சினம் தணிந்து விட்டது: நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்: ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.

மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.

அந்நாளில் நீங்கள் சொல்வதாவது: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்: மக்களினங்களிடையே அவர்செயல்களை அறிவியுங்கள்: அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.

ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்: ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்: அனைத்துலகும் அதை அறிந்து கொள்வதாக.

சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்: இஸ்ரயேலின் பயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.

அதிகாரம் 13.

ஆமோட்சின் மகன் எசாயா பாபிலோனைக் குறித்துக் கண்ட காட்சியில் அருளப்பட்ட திருவாக்கு:

வறண்ட மலை ஒன்றில் போர்க்கொடி ஏற்றுங்கள்: போர்வீரர்களை உரக்கக் கூவி அழையுங்கள்: உயர்குடி மக்கள் வாழும் நகர வாயில்களுக்குள் நுழையும்படி, அவர்களுக்குக் கையசைத்துச் சைகை காட்டுங்கள்.

போருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள என் வீரர்களுக்கு, நானே ஆணை பிறப்பித்துள்ளேன்: நான் சினமடைந்து பிறப்பித்துள்ள என் கட்டளையை நிறைவேற்றிட, தங்கள் வலிமையால் பெருமிதம் கொள்ளும் என் வீரர்களை அழைத்துள்ளேன்.

மலைகளின் மேல் எழும் பேரிரைச்சலைக் கேளுங்கள்: அது பெருங்கூட்டமாய் வரும் மக்களின் ஆரவராம்: அரசுகளின் ஆர்ப்பாட்டக் குரலைக் கேளுங்கள், பிற இனத்தார் ஒருங்கே திரண்டு விட்டனர்:

தொலைநாட்டிலிருந்தும் தொடுவானத்து எல்லைகளிலிருந்தும் அவர்கள் வருகின்றார்கள்: ஆண்டவர் தம் கடும்சினத்தின் போர்க் கலன்களோடு உலகம் முழுவதையும் அழிக்க வருகின்றார்.

அழுது புலம்புங்கள், ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது: எல்லாம் வல்லவரிடமிருந்து அழிவு வடிவத்தில் அது வருகின்றது:

ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து விடும்: மானிட நெஞ்சம் அனைத்தும் உருகி நிற்கும்.

அவர்கள் திகிலடைவார்கள்: துன்ப துயரங்கள் அவர்களைக் கவ்விக்கொள்ளும்: பேறுகாலப் பெண்ணைப்போல வேதனையடைவார்கள்: ஒருவர் மற்றவரைப் பார்த்துத் திகைத்து நிற்பர்: கோபத் தீயால் அவர்கள் முகம் கனன்று கொண்டிருக்கும்.

இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது, கொடுமையும் கோபமும் கடும் சீற்றமும் நிறைந்த நாள் அது: மண்ணுலகைப் பாழ்நிலமாக்கும் நாள் அது: அதிலிருக்கும் பாவிகளை முற்றிலும் அழித்துவிடும் நாள் அது.

வானத்து விண்மீன்களும் இராசிக் கூட்டங்களும் ஒளி வீசமாட்டா: தோன்றும்போதே கதிரவன் இருண்டு போவான்: வெண்ணிலாவும் தண்ணொளியைத் தந்திடாது.

உலகை அதன் தீச்செயலுக்காகவும் தீயோரை அவர்தம் கொடுஞ் செயலுக்காகவும் நான் தண்டிப்பேன்: ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்: அச்சுறுத்துவோரின் இறுமாப்பை அடக்குவேன்.

மானிடரைப் பசும் பொன்னைவிடவும் மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும் அரிதாக்குவேன்.

ஆதலால், வானத்தை நடுங்கச் செய்வேன்: மண்ணுலகம் தன் இருப்பிடத்திலிருந்து ஆட்டங் கொடுக்கும்: படைகளின் ஆண்டவரது கோபத்தால் அவரது கடும்சினத்தின் நாளில் இது நடக்கும்.

துரத்தப்பட்ட புள்ளிமான் போலவும், ஒன்று சேர்ப்பாரின்றிச் சிதறுண்டு ஆடுகளைப் போலவும், எல்லாரும் தம் மக்களிடம் திரும்பிச் செல்வர்: எல்லாரும் தம் சொந்த நாட்டுக்குத் தப்பியோடுவர்.

அகப்பட்ட ஒவ்வொருவரும் பிடிபட்ட ஒவ்வொருவரும் வாளால் மடிவர்.

அவர்கள் பச்சிளம் குழந்தைகள் அவர்கள் கண்ணெதிரே மோதியடிக்கப்படுவர். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும், அவர்கள் துணைவியர் மானபங்கப்படுத்தப்படுவர்.

இதோ, அவர்களுக்கு எதிராக நான் மேதியரைக் கிளர்ந்தெழச் செய்கின்றேன், அவர்கள் வெள்ளியைப் பெரிதாக எண்ணாதவர்கள்: பொன்னை அடைவதற்கு ஆவல் கொள்ளாதவர்கள்.

அவர்கள் வில்வீரர் இளைஞரை மோதியடிப்பார்கள், பச்சிளங் குழந்தைகளுக்கு அவர்கள் கருணை காட்டமாட்டார்கள்: சிறுவர்களுக்கு அவர்கள் கண்களில் இரக்கம் இராது.

அரசுகளில் சிறப்புமிகு கல்தேயரின் மேன்மையும் பெருமையுமான பாபிலோன் கடவுள் அழித்த சோதோம் கொமோராவைப்போல ஆகிவிடும்.

இனி எவரும் அதில் ஒருபோதும் குடியிருக்க மாட்டார்: அதுவும் தலைமுறை தலைமுறையாகக் குடியற்று இருக்கும்: அரேபியர் அங்கே கூடாரம் அமைக்கமாட்டார்: ஆயர்கள் தம் மந்தையை அங்கே இளைப்பாற விடுவதில்லை.

ஆனால், காட்டு விலங்குகள் அங்கே படுத்துக் கிடக்கும்: ஊளையிடும் குள்ளநரிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும்: தீக்கோழிகள் அங்கே தங்கியிருக்கும்: வெள்ளாட்டுக் கிடாய்கள் அங்கே துள்ளித் திரியும்.

அவர்கள் கோட்டைகளில் ஓநாய்கள் அலறும்: அரண்மனைகளில் குள்ளநரிகள் ஊளையிடும்: அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது: அதற்குரிய நாள்கள் அண்மையில் உள்ளன.

அதிகாரம் 14.

ஆண்டவர் யாக்கோபின் மீது இரக்கம் காட்டி இஸ்ரயேலை மீண்டும் தேர்ந்துகொள்வார்: அவர்களை அவர்களுடைய நாட்டில் அமைதியுடன் வாழச் செய்வார். வேற்று நாட்டவரும் அவர்களை நாடி வந்து யாக்கோபின் குடும்பத்தாரோடு சேர்ந்து கொள்வார்கள்.

மக்களினங்களை அவர்களை அழைத்து வந்து, அவர்களது சொந்த இடத்திற்கு அவர்களை இட்டுச் செல்஥஥வார்கள். அவ் வேற்றுநாட்டாரை ஆண்டவரின் நாட்டில் இஸ்ரயேல் குடும்பத்தார் அடிமைகளாகவும், அடிமைப் பெண்களாகவும் உரிமையாக்கிக் கொள்வர்: தங்களை அடிமைப்படுத்தியவர்களை அடிமையாக்குவார்கள்: அவர்களை ஒடுக்கியவர்கள் மேல் ஆட்சி செலுத்துவார்கள்.

ஆண்டவர் உன்மேல் சுமத்திய துயரையும் இடரையும் கடுமையான அடிமை வாழ்வையும் அகற்றி, அமைதி வாழ்வை உனக்குத் தரும் நாளில்,

பாபிலோன் மன்னனுக்கு எதிராக இந்த ஏளனப் பாடலை எடுத்துக் கூறு: "ஒடுக்கியவன் ஒழிந்தானே! அவன் ஆணவமும் ஓய்ந்ததே!

தீயோரின் கோலையும் ஆட்சியாளரின் செங்கோலையும் ஆண்டவர் முறித்துப் போட்டார்.

அவர்கள் கோபத்தால் வெகுண்டு அடிமேல் அடியாக மக்களினங்களை அடித்து நொறுக்கினார்கள்: பிற நாட்டினரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்திக் கடுமையாய் ஆண்டார்கள்.

மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறி அமைதியில் மூழ்கியிருக்கின்றது: மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்கின்றது.

தேவதாரு மரங்களும் லெபனோனின் கேதுரு மரங்களும் உன் வீழ்ச்சியால் களிப்படைகின்றன: ஓநீ வீழ்ந்து கிடக்கும் இந்நேரமுதல் எமை வெட்டி வீழ்த்த எமக்கெதிராய் எழுபவர் எவருமில்லைஓ எனப் பாடுகின்றன.

நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக் கீழுள்ள பாதாளம் மகிழ்ச்சியால் பரபரக்கின்றது: உலகின் இறந்த தலைவர்கள் அனைவரும் உன்னை வரவேற்குமாறு அவர்களை எழுப்புகிறது. வேற்றினத்தாரின் அரசர்கள் அனைவரையும் அவர்தம் அரியணையை விட்டு எழச் செய்கிறது."

அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி, "நீயும் எங்களைப்போல் வலுவிழந்து போனாயே! எங்களின் கதியை நீயும் அடைந்தாயே!

உன் இறுமாப்பும் உன் வீணைகளின் இசையொலியும் பாதாளம்வரை தாழ்த்தப்பட்டன: புழுக்கள் உனக்குக் கீழ்ப் படுக்கையாகும்! பூச்சிகள் உன் போர்வையாகும்!

வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே! வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே! மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே, வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே!

ஓநான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்: இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்: வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன்.

மேகத்திரள்மேல் ஏறி, உன்னதற்கு ஒப்பாவேன்ஓ என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே!

ஆனால் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய்: படுகுழியின் அடிமட்டத்திற்குள் தள்ளப்பட்டாயே!

உன்னைக் காண்போர், உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்து, ஓமண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும், அரசுகளை நிலைகுலையச் செய்தவனும்,

பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி, அதன் நகரங்களை அழித்தவனும், தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப விடுதலை அளிக்காதிருப்பவனும் இவன் தானோ?ஓ என்பர்.

மக்களின மன்னர்கள் அனைவரும் அவரவர் உறைவிடங்களில் மாட்சியுடன் படுத்திருக்கின்றனர்.

நீயோ, அருவருப்பான அழுகிய இலைபோல, உன் கல்லறையிலிருந்து வெளியே வீசப்பட்டிருக்கிறாய்: வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு, நாற்றமெடுத்த பிணம்போலக் கிடக்கின்றாய்.

கல்லறையில் அவர்களோடு நீ இடம் பெறமாட்டாய்: ஏனெனில், உன் நாட்டை நீ அழித்து விட்டாய்: உன் மக்களைக் கொன்று போட்டாய்: தீங்கிழைப்போரின் வழிமரபு என்றுமே பெயரற்றுப் போகும்.

மூதாதையரின் தீச்செயல்களை முன்னிட்டு அவர்கள் புதல்வர்களுக்குக் கொலைக் களத்தைத் தயார்ப்படுத்துங்கள்: நாட்டை உரிமையாக்க இனி அவர்கள் தலையெடுக்கக்கூடாது: பூவுலகின் பரப்பை அவர்கள் நகரங்களால் நிரப்பக்கூடாது."

"அவர்களுக்கு எதிராக நான் கிளர்ந்தெழுவேன்" என்கிறார் படைகளின் ஆண்டவர், "பாபிலோனின் பெயரையும் அங்கே எஞ்சியிருப்போரையும், வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும் இல்லாதொழிப்பேன்," என்கிறார் ஆண்டவர்.

"அந்நாட்டை முள்ளம்பன்றிகளின் இடமாக்குவேன்: சேறும் சகதியும் நிறைந்த நீர்நிலையாக்குவேன்: அழிவு என்னும் துடைப்பத்தால் முற்றிலும் துடைத்துவிடுவேன்" என்கிறார் படைகளின் ஆண்டவர்.

படைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறுகின்றார்: "நான் எண்ணியவாறு யாவும் நடந்தேறும்: நான் தீட்டிய திட்டமே நிலைத்து நிற்கும்.

என் நாட்டில் அசீரியனை முறியடிப்பேன்: என் மலைகளின் மேல் அவனை மிதித்துப் போடுவேன்: அப்பொழுது அவனது நுகத்தடி அவர்களைவிட்டு அகலும்: அவன் வைத்த சுமை அவர்கள் தோளிலிருந்து இறங்கும்.

மண்ணுலகம் முழுவதையும்பற்றி நான் தீட்டிய திட்டம் இதுவே: பிறஇனத்தார் அனைவருக்கும் எதிராக நான் ஓங்கியுள்ள கையும் இதுவே.

படைகளின் ஆண்டவர் தீட்டிய திட்டத்தைச் சீர்குலைக்க வல்லவன் எவன்? அவர் தம் கையை ஓங்கியிருக்க அதை மடக்கக்கூடியவன் எவன்?"

ஆகாசு அரசன் இறந்த ஆண்டில் இந்தத் திருவாக்கு அருளப்பட்டது.

பெலிஸ்திய நாட்டின் அனைத்து மக்களே, உங்களை அடித்த கோல் முறிந்து விட்டதற்காக அக்களிக்காதீர்: ஏனெனில் பாம்பின் வேரினின்று கட்டுவிரியன் புறப்பட்டு வரும்: அதன் கனியாகப் பறவைநாகம் வெளிப்படும்.

ஏழைகளின் தலைப்பிள்ளைகள் உணவு பெறுவார்கள்: வறியவர்கள் அச்சமின்றி இளைப்பாறுவார்கள்: உன் வழிமரபைப் பஞ்சத்தால் நான் மடியச் செய்வேன், உன்னில் எஞ்சியிருப்போரை நான் கொன்றொழிப்பேன்.

வாயிலே, வீறிட்டு அழு: நகரே, கதறியழு: எல்லாப் பெலிஸ்திய மக்களே: மனம் பதறுங்கள், ஏனெனில் வடபுறத்திலிருந்து புகையெனப் படை வருகின்றது. அதன் போர்வீரருள் கோழை எவனும் இல்லை.

அந்த நாட்டுத் பதருக்கு என்ன மறுமொழி கூறப்படும்? "சீயோனுக்கு அடித்தளமிட்டவர் ஆண்டவர்: அவர்தம் மக்களுள் துயருறுவோர் அங்கேயே புகலிடம் பெறுவர் என்பதே."

அதிகாரம் 15.

மோவாபைப் பற்றிய திருவாக்கு: ஒரே இரவில் ஆர் நகரம் அழிக்கப்படுவதால் மோவாபும் அழிக்கப்படும். ஒரே இரவில் கீர் நகரம் அழிக்கப்படுவதால், மோவாபும் அழிக்கப்படும்.

தீபோன் குடும்பத்தார் அழுது புலம்ப உயர்ந்த இடங்களுக்கு ஏறிச் செல்கின்றனர்: நெபோ, மேதாபா நகரங்களைக்குறித்து மோவாபு அலறி அழுகின்றது: அவர்கள் அனைவரின் தலைகளும் மழிக்கப்பட்டதாயிற்று. தாடிகள் அனைத்தும் சிரைக்கப்பட்டதாயிற்று.

அதன் தெருக்களில் நடமாடுவோர் சணல் ஆடை உடுத்தி இருக்கின்றனர்: வீட்டு மாடிகளிலும் பொது இடங்களிலும் உள்ள யாவரும் ஓலமிட்டு அழுகின்றனர். விழிநீர் ததும்பிவழியத் தேம்பித் தேம்பி அழுகின்றனர்.

எஸ்போன் மற்றும் எலயாலே ஊரினர் கூக்குரலிடுகின்றனர். யாகசு ஊர்வரை அவர்களின் குரல் கேட்கின்றது: படைக்கலம் தாங்கிய மோவாபிய வீரர்கள் கதறுகின்றார்கள், ஒவ்வொருவனும் மனக்கலக்கம் அடைகிறான்.

மோவாபுக்காக என் நெஞ்சம் குமுறுகின்றது: அதன் அகதிகள் சோவாருக்கும் எக்லத்செலிசியாவுக்கும் ஓடுகின்றனர்: ஏனெனில் அவர்கள் ழகித்துக்கு ஏறிப்போகும் வழியில் அழுதுகொண்டு செல்கின்றனர்: ஒரோனயிம் சாலையில் அழிவின் அழுகுரலை எழுப்புகின்றனர்:

நிம்ரியின் நீர்நிலைகள் பர்ந்து போயின: புல் உலர்ந்தது: பூண்டுகள் கருகின: பசுமை என்பதே இல்லாமற் போயிற்று.

ஆதலால் தாங்கள் மிகுதியாக ஈட்டியவற்றையும் சேமித்து வைத்தவற்றையும் பக்கிக் கொண்டு அவர்கள் அராவிம் ஆற்றைக் கடக்கின்றனர்.

மோவாபின் எல்லையெங்கும் கதறியழும் குரல் எட்டுகின்றது: அவர்களின் அவலக்குரல் எக்லயிம் நகர்வரை கேட்கின்றது: அவர்களின் புலம்பல் பெயேர் ஏலிம் நகரை எட்டுகின்றது.

தீபோன் நீர்நிலைகள் இரத்தத்தால் நிரம்பி வழிகின்றன: ஆயினும் தீபோன் மேல் இன்னும் மிகுதியான துன்பத்தைக் கொண்டு வருவேன்: மோவாபியருள் தப்பிப் பிழைத்தோர்மேலும் நாட்டில் எஞ்சியிருப்போர்மேலும் சிங்கத்தை ஏவிவிடுவேன்.

அதிகாரம் 16.

சீயோன் மகளின் மலையில் நாட்டை ஆள்பவனுக்குச் சேலா நகரிலிருந்து பாலைநிலம் வழியாகச் செம்மறியாடு அனுப்புங்கள்.

சிறகடித்து அலையும் பறவை போலும் கூடு இழந்த குஞ்சுபோலும் மோவாபிய மகளிர் அர்னோன் துறைகளில் காணப்படுவர்.

வாருங்கள்: அறிவுரை கூறுங்கள்: நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள்: நண்பகலில் உங்கள் நிழலை இரவு போலாக்கி, விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு மறைத்து வையுங்கள்: தப்பி ஓடுகிறவர்களைக் காட்டிக் கொடுக்காதீர்கள்.

மோவாபிலிருந்து துரத்தப்பட்டவர்கள் உங்களிடமே தங்கியிருக்கட்டும்: அழிக்க வருபவனின் பார்வையிலிருந்து தப்ப அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்: ஒடுக்குபவன் ஒழிந்து போவான்: அழிவு ஓய்ந்து போகும்: மிதிக்கிறவர்கள் நாட்டில் இல்லாது போவர்.

அப்பொழுது, ஆண்டவர் தம் பேரன்பால் ஓர் அரியணையை அமைப்பார்: அதன்மேல் தாவீதின் கூடாரத்தைச் சார்ந்த ஒருவர் வீற்றிருப்பார்: அவர் உண்மையுடன் ஆள்பவர்: நீதியை நிலைநாட்டுபவர்: நேர்மையானதைச் செய்ய விரைபவர்.

மோவாபின் இறுமாப்பைப்பற்றி நாங்கள் கேள்வியுற்றோம்: அவன் ஆணவம் பெரிதே: அவன் இறுமாப்பையும் ஆணவத்தையும் செருக்கையும் குறித்துக் கேள்விப்பட்டோ ம். அவன் தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்யுரையே.

ஆதலால் மோவாபு அழுது புலம்பட்டும்: மோவாபுக்காக யாவரும் கதறியழட்டும்: கீர் அரசேத்தின் திராட்சை அடைகளை நினைந்து, நெஞ்சம் தளர்ந்து விம்மியழுங்கள்.

எஸ்போனின் வயல்வெளி நிலங்கள் வாடுகின்றன, மக்களினங்களின் தலைவர்களை விழத் தள்ளிய சிபிமானின் திராட்சைத் தோட்டத்துக் கிளைகள் அழிந்துவிட்டன. அவை ஒருபுறம் யாசேரைத் தொட்டன: பாலை நிலம்வரை படர்ந்திருந்தன: அவற்றின் தளிர்கள் செழிப்புடன் வளர்ந்து கடல்கடந்து படர்ந்து சென்றன.

ஆதலால் யாசேருக்காக அழுததுபோல் நான் சிபிமாவின் திராட்சைத் தோட்டத்திற்காகக் கண்ணீர் விடுகின்றேன்: எஸ்போன்! எலயாரே! உங்களை என் கண்ணீரால் நனைக்கின்றேன்: ஏனெனில் உங்கள் கோடைக் கனிக்காகவும் அறுவடைக்காகவும் எழும் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்கி விட்டது.

வளமான வயல் நிலங்களிலிருந்து அக்களிப்பும் மகிழ்ச்சியும் அகற்றப்பட்டன. திராட்சைத் தோட்டங்களில் பாடல்கள் பாடுவார் யாருமில்லை: ஆரவாரம் எழுப்புவார் எவருமில்லை. இரசம் எடுப்பதற்கு ஆலையில் திராட்சைக்கனி பிழிவாருமில்லை: பழம் பிழிவாரின் பூரிப்பும் இல்லாதொழிந்தது:

ஆதலால், மோவாபுக்காக என் நெஞ்சமும், கீர்கேரசிற்காக என் இதயமும் வீணையின் நரம்புபோல் துடிக்கின்றது:

மோவாபியர் உயரமான தொழுகை மேடுகளில் வழிபாடு செய்து களைத்தும், திருத்தலங்களுக்குச் சென்று மன்றாடியும் அவர்களுக்கு ஒன்றும் இயலாமற் போயிற்று.

இதுவே கடந்த காலத்தில் மோவாபைக் குறித்து ஆண்டவர் கூறிய திருவாக்கு.

ஆனால், இப்பொழுது ஆண்டவர் கூறுவது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒப்ப, மூன்று ஆண்டுகளில், மோவாபு நாட்டில் திரளான மக்கள் கூட்டம் இருப்பினும், அதன் மேன்மை அழிவுறும்: ஒருசிலரே நாட்டில் எஞ்சியிருப்பர்: அவர்களும் வலிமை இழந்திருப்பர்.

அதிகாரம் 17.

தமஸ்கு நகரைப் பற்றிய திருவாக்கு: "நகர் என்ற பெயரை தமஸ்கு இழந்துவிடும்: அது பாழடைந்த மண்மேடாக மாறிவிடும்.

அதன் அருகிலுள்ள நகரங்கள் பாழடைந்து ஆடுமாடுகள் திரியும் இடமாகும்: அவை அங்கே படுத்துக் கிடக்கும்: அவற்றை அச்சுறுத்த எவருமே இரார்.

எப்ராயிம் நாட்டின் அரண் தரைமட்டமாகும்: தமஸ்கின் அரசு இல்லாதொழியும்: இஸ்ரயேல் மக்களின் மேன்மைக்கு நேர்ந்தது சிரியாவில் எஞ்சியிருப்போரின் நிலைமையாகும், என்கிறார் படைகளின் ஆண்டவர்.

அந்நாளில், யாக்கோபின் மேன்மை தாழ்வடையும்: அவனது கொழுத்த உடல் மெலிந்து போகும்.

அறுவடைசெய்வோன் நிமிர்ந்து நிற்கும் கதிர்களைச் சேர்த்த பின்னும் அவனது கை அவற்றை அறுவடை செய்தபின்னும் சிந்திய கதிர்களைப் பொறுக்கி எடுக்கும் பொழுதும் இரபாயிம் பள்ளத்தாக்கு இருப்பது போல யாக்கோபின் நிலைமை இருக்கும்.

ஒலிவ மரத்தை உலுக்கும்போது அதன் உச்சிக்கிளை நுனியில் இரண்டு மூன்று காய்களும், பழமிருக்கும் கிளைகளில் நாலைந்து பழங்களும் விடப்பட்டிருப்பதுபோல், அவர்களிடையேயும் பின்னால் பறிக்கப்படுவதற்கெனச் சிலர் விடப்பட்டிருப்பர்," என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்.

அன்றுதான், மனிதர் தம்மைப் படைத்தவரை நோக்குவர்: இஸ்ரயேலின் பயவரைக் காண அவர்கள் கண்கள் விழையும்:

தங்கள் கைவேலைப்பாடுகளான பலிபீடங்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்: தாங்கள் கைப்படச் செய்த அசேராக் கம்பங்களையும் மரச் சிலைகளையும் நோக்கமாட்டார்கள்.

இவ்வியர், எமோரியர் என்பவர்களின் நகரங்கள் இஸ்ரயேல் மக்கள் வந்தபோது பாழடைந்ததுபோல, அந்நாளில் உன் வலிமைமிகு நகர்களும் கைவிடப்பட்டுப் பாழ்வெளி ஆகி விடும்.

இஸ்ரயேலே, உனக்கு விடுதலை அளித்த கடவுளை நீ மறந்துவிட்டாய்: உன் அடைக்கலமான கற்பாறையை நீ நினைவு கூரவில்லை: ஆதலால், கண்ணுக்கினிய நாற்றுகளை நீ நட்டுவைத்தாலும், வேற்றுத் தெய்வத்திற்கு இளம் கன்றுகளை நாட்டினாலும்,

நீ அவற்றை நட்ட நாளிலேயே பெரிதாக வளரச் செய்தாலும், விதைத்த காலையிலேயே மலரச் செய்தாலும், துயரத்தின் நாளில் தீராத வேதனையும் நோயுமே உன் விளைச்சலாய் இருக்கும்.

ஜயோ! மக்களினங்கள் பலவற்றின் ஆரவாரம் கேட்கிறது: கடல் கொந்தளிப்பதுபோல் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்: இதோ, மக்கள் கூட்டத்தின் கர்ச்சனைக்குரல் கேட்கிறது: வெள்ளப்பெருக்கின் இரைச்சலைப் போல் அவர்கள் முழங்குகிறார்கள்.

பெருவெள்ளம்போல் மக்கள் கூட்டத்தினர் கர்ச்சிக்கிறார்கள்: அவர்களை ஆண்டவர் அதட்டுவார்: அவர்களும் வெகுதொலைவிற்கு ஓடிப் போவார்கள்: மலைகளில் காற்றின் முன் அகப்பட்ட பதர் போன்றும், புயல்காற்று முன் சிக்குண்ட புழுதி போன்றும் துரத்தப்படுவார்கள்.

மாலைவேளையில், இதோ! எங்கும் திகில்: விடிவதற்குள் அவர்கள் இல்லாதொழிவார்கள்: இதுவன்றோ நம்மைக் கொள்ளையடிப்பவர்கள் பங்கு! இதுவன்றோ நம்மைச் சூறையாடுவோரின் நிலைமை.

அதிகாரம் 18.

எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கு அப்பால் சிறகடித்து ஒலியெழுப்பும் உயிரினங்கள் உடையதோர் நாடு உள்ளது.

அது நாணல் படகுகளில் நீரின்மேலே கடல் வழியாகத் பதரை அனுப்புகிறது: விரைவாய்ச் செல்லும் பதர்களே, உயர்ந்து வளர்ந்து, பளபளப்பான தோலுடைய இனத்தாரிடம் செல்லுங்கள்: அருகிலும் தொலைவிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள்: ஆற்றல் வாய்ந்தவர்கள், பகைவரை மிதித்து வெற்றிகொள்பவர்கள் அந்த நாட்டினர்: ஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் நாடும் அது.

உலகில் குடியிருக்கும் அனைத்து மக்களே, மண்ணுலகில் வாழ்வோரே, மலைகளின்மேல் கொடியேற்றும்போது உற்று நோக்குங்கள்: எக்காளம் ஊதும்போது செவி கொடுங்கள்:

ஏனெனில், ஆண்டவர் என்னிடம் இவ்வாறு சொன்னார்: "பகலில் அடிக்கும் வெப்பம் குறைந்த வெயில் போலும், அறுவடைக்கால வெயிலால் உண்டாகும் பனிமேகம் போன்றும் என் இருப்பிடத்தில் அமைதியாய் இருந்து நான் கவனித்துப் பார்ப்பேன்"

ஏனெனில், அறுவடைக்கு முன் பூக்கள் பூத்துக் காய்த்து, கனிதரும் பருவம் எய்தும்போது, தழைகளை எதிரி அரிவாள்களால் அறுத்தெறிவான்: படரும் கொடிகளை அரிந்து அகற்றிவிடுவான்.

அவை அனைத்தும், மலைகளில் பிணந்தின்னும் பறவைகளுக்கும் தரையில் வாழுகின்ற விலங்குகளுக்கும் விடப்படும். பிணந்தின்னும் பறவைகள் கோடைக் காலத்திலும் தரை வாழும் விலங்குகள் குளிர்காலத்திலும் அவற்றின் மேல் தங்கியிருக்கும்.

உயர்ந்து வளர்ந்து பளபளப்பான தோலுடைய இனத்தாரின் நாட்டிலிருந்து அந்நேரத்தில் படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கைப் பொருள்கள் கொண்டு வரப்படும். அருகிலும் தொலையிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள். அந்நாட்டினர் ஆற்றல் வாய்ந்தோர்: பகைவர்மீது வெற்றிகொள்வோர். ஆறுகள்குறுக்காகப் பாய்ந்தோடும் அந்த நாட்டிலிருந்து படைகளின் ஆண்டவரது பெயர் தங்கியுள்ள சீயோன் மலைக்கு அக்காணிக்கைகள் கொண்டு வரப்படும்.

அதிகாரம் 19.

எகிப்தைக் குறித்த திருவாக்கு: விரைவாய்ச் செல்லும் மேகத்தின்மேல் ஏறி ஆண்டவர் எகிப்துக்கு வருகிறார்: எகிப்தின் சிலைகள் அவர் திருமுன் அஞ்சி நடுங்கும்: எகிப்தியரின் உள்மனமோ உருக்குலையும்.

எகிப்தியருக்கு எதிராக எகிப்தியரையே நான் கிளர்ந்தெழச் செய்வேன். அப்போது, உடன்பிறப்புக்கு எதிராக உடன்பிறப்பும் நண்பனுக்கு எதிராக நண்பனும் ஒரு நகரத்தாருக்கு எதிராக மற்றொரு நகரத்தாரும் ஓர் அரசுக்கு எதிராக மற்றோர் அரசும் மோதிக்கொள்வர்.

ஆதலால், எகிப்தியர்கள் தங்கள் உள்ளத்தில் ஊக்கம் இழப்பர்: அவர்கள் திட்டங்களைக் குழப்பி விடுவேன்: அப்போது சிலைகள், மாய வித்தைக்காரர், மைவித்தைக்காரர், குறிசொல்வோர் ஆகியோரிடம் அவர்கள் குறி கேட்பார்கள்.

கடினமனம் கொண்ட அதிகாரிகளின் கைகளில் எகிப்தியரை நான் ஒப்புவிப்பேன். கொடுங்கோல் மன்னன் ஒருவன் அவர்களை ஆள்வான், என்கிறார் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.

கடல் நீர் வற்றிப்போகும்: பேராறு காய்ந்து வறண்டு போகும்:

அதன் கால்வாய்க்குள் நாற்றமெடுக்கும்: எகிப்திலுள்ள பேராற்றின் கிளைகளில் நீர் குறைந்து, வறண்டு போகும்: கோரைகளும் நாணல்களும் மக்கிப் போகும்.

ஆற்றின் கரைப்பகுதியும் முகத்துவாரமும் உலர்ந்த தரையாகும்: நைல் நதியின் அருகில் விதைத்த யாவும் தீய்ந்து, பறந்து இல்லாது போகும்.

மீனவர்கள் புலம்புவர்: பேராற்றில் பண்டில் போடுவோர் அனைவரும் அழுவர்: நீரின்மேல் வலைவீசுவோர் சோர்வடைவர்.

மெல்லிய சணலாடை செய்வோரும் வெண்பருத்தி மலினால் நெய்வோரும் வெட்கி நாணுவர்.

நாட்டின் பண்களாய் இருப்போர் நசுக்கப்படுவர்: வேலைக்கு அமர்த்தப்படுவோர் உள்ளம் பதறுவர்.

சோவானின் தலைவர்கள் மூடர்களே! பார்வோனின் ஞானமிகு அறிவுரையாளர் அறிவற்ற ஆலோசனை தருகின்றனர்: "நான் ஞானிகளின் மகன், பண்டைக்கால அரசர்களின் வழி வந்தவன்" என்று நீங்கள் ஒவ்வொருவரும் பார்வோனிடம் எப்படிச் சொல்லலாம்?

அப்படியானால் உன் ஞானிகள் எங்கே? படைகளின் ஆண்டவர் எகிப்துக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை அவர்கள் அறிந்து உனக்கு அறிவிக்கட்டும்.

சோவான் தலைவர்கள் அறிவிலிகள் ஆனார்கள்: நோபு நகரின் தலைவர்கள் ஏமாந்து போனார்கள்: எகிப்தின் குல முதல்வர்கள் அதை நெறிபிறழச் செய்தார்கள்.

ஆண்டவர் அதனுள் குழப்பம் உண்டாக்கும் ஆவி புகுந்துவிடச் செய்தார்: போதையேறியவன் வாந்தியெடுத்துத் தள்ளாடுவதுபோல, அவர்கள் எகிப்தை அவன் செயல்கள் அனைத்திலும் தள்ளாடச் செய்தார்கள்.

எகிப்து நாட்டின் தலையோ, வாலோ, ஈந்தோ, நாணலோ யாரும் எதுவுமே செய்தற்கு இராது.

அந்நாளில், படைகளின் ஆண்டவர் எகிப்தியருக்கு எதிராகத் தம் கையை ஓங்குவார். ஓங்கிய அவர் கைமுன் அவர்கள் பெண்டிரைப்போல் அஞ்சி நடுங்குவார்கள்.

யூதா எகிப்தைத் திகிலடையச் செய்யும் நாடாகும். அதன் பெயரைக் கேட்கும் யாவரும் படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை முன்னிட்டு நடுநடுங்குவர்.

அந்நாளில் கானானிய மொழி பேசும் ஜந்து நகர்கள் எகிப்தில் இருக்கும்: அவை படைகளின் ஆண்டவரது பெயரால் ஆணையிடும். அவற்றுள் ஒன்று "கதிரவன் நகரம்" என்று அழைக்கப்படும்.

அந்நாளில் எகிப்திய மண்ணில் ஆண்டவருக்குப் பலிபீடம் ஒன்று இருக்கும்: அதன் எல்லைப் புறத்தில் ஆண்டவருக்கெனத் பண் ஒள்று எழுப்பப்படும்.

எகிப்து நாட்டில் அது படைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சான்றாகவும் இருக்கும். ஒடுக்குவோரை முன்னிட்டு ஆண்டவரிடம் அவர்கள் முறையிடுவார்கள். அவர்களுக்காக வழக்காடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தம் மீட்பர் ஒருவரை அவர் அனுப்புவார்.

அப்பொழுது, ஆண்டவர் எகிப்தியருக்குத் தம்மை வெளிப்படுத்துவார்: எகிப்தியரும் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வார்கள்: பலிகளாலும் எரிபலிகளாலும் ஆண்டவரை வழிபடுவார்கள்: ஆண்டவருக்குப் பொருத்தனைகள் செய்து அவற்றை நிறைவேற்றுவார்கள்.

ஆண்டவர் எகிப்தியரை வதைப்பார்: வதைத்துக் குணமாக்குவார்: அவர்களும் ஆண்டவரிடம் திரும்புவர்: அவரும் அவர்கள் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்த்து அவர்களைக் குணமாக்குவார்.

அந்நாளில் எகிப்திலிருந்து அசீரியாவிற்குச் செல்ல ஒரு நெடுஞ்சாலை உருவாகும். அசீரியர் எகிப்திற்கும் எகிப்தியர் அசீரியாவிற்கும் போய் வருவர்: எகிப்தியர் அசீரியரோடு சேர்ந்து வழிபாடு செலுத்துவார்கள்.

அந்நாளில் இஸ்ரயேல் எகிப்திற்கும் அசீரியாவிற்கும் இணையான மூன்றாம் அரசாகத் திகழ்ந்து மண்ணுலகின் நடுவில் ஆசியாக விளங்கும்.

படைகளின் ஆண்டவர் அவற்றிற்கு வழங்கும் ஆசி மொழி: "என் மக்களினமாகிய எகிப்தும், என் கைவேலைப்பாடாகிய அசீரியாவும், என் உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலும் ஆசிபெறுக!"

அதிகாரம் 20.

அசீரிய மன்னன் சார்கோன் அனுப்பிய தர்த்தான் என்ற படைத்தளபதி அஸ்தோது நகருக்கு எதிராய்ப் போரிட்டு அதைக் கைப்பற்றிய ஆண்டில்,

அந்நேரத்தில் ஆமோட்சின் மைந்தன் எசாயா வாயிலாய் ஆண்டவர் சொல்லியது: "நீ போய் உன் இடையிலிருந்து சாக்கு உடையைக் களைந்துவிடு: உன் கால்களிலிருந்து காலணிகளைக் கழற்றிவிடு." அவரும் அவ்வாறே செய்து ஆடையின்றியும் வெறுங்காலோடும் நடமாடிக் கொண்டிருந்தார்.

ஆண்டவர் கூறினார்: என் ஊழியன் எசாயா ஆடையின்றியும் வெறுங்காலோடும் மூன்று ஆண்டுகள் நடமாடியது, எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் எதிரான அடையாளமும் முன்குறியும் ஆகும்.

அசீரிய மன்னன் எகிப்தியரைச் சிறைப்பிடித்து, எத்தியோப்பியரை நாடு கடத்துவான். அவன் எகிப்தியருக்கு மானக்கேடு உண்டாகும்படி இளைஞரையும் முதியோரையும் ஆடையின்றியும் வெறுங் காலோடும் இருப்பிடம் மூடப்படாமலும் இழுத்து வருவான்.

அப்பொழுது தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவை முன்னிட்டும், பெருமை கொண்டிருந்த எகிப்தை முன்னிட்டும், அவர்கள் வெட்கித் திகைப்புறுவர்.

அந்நாளில் இந்தக் கடற்கரை நாட்டில் குடியிருப்போர், "இதோ யாரிடத்தில் நாம் நம்பிக்கை வைத்திருந்தோமோ, அசீரிய அரசனிடமிருந்து நாம் விடுவிக்கப்பட உதவி வேண்டியாரைத் தேடி ஓடினோமோ, அவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுவிட்டதே! இனி நாம் தப்புவது எவ்வாறு?" என்பார்கள்.

அதிகாரம் 21.

கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு: தென்னாட்டிலிருந்து சுழல்காற்றுகள் வீசுவதுபோல், அச்சம்தரும் நாடான பாலைநிலத்திலிருந்து அழிவு வருகின்றது.

கொடியதொரு காட்சி எனக்குக் காண்பிக்கப்பட்டது: நம்பிக்கைத் துரோகி துரோகம் செய்கின்றான்: நாசக்காரன் நாசம் செய்கின்றான். "ஏலாம் நாடே! கிளர்ந்தெழு: மேதியாவே! முற்றுகையிடு" அதன் பெருமூச்சுகள் அனைத்துக்கும் முடிவு வரச் செய்வேன்.

ஆதலால், என் அடிவயிறு வேதனையால் துடிக்கிறது. பெண்ணின் பேறுகால வேதனைக்கு ஒத்த வேதனைகள் என்னைக் கவ்விக் கொண்டன: கலக்கமடைந்து செவிடன் போல் ஆனேன்: திகைப்புற்றுக் குருடன் போல் ஆனேன்.

என் மனம் பேதலிக்கிறது: திகில் என்னை ஆட்கொண்டது: நான் நாடிய கருக்கல் வேளை என்னை நடுக்கமுறச் செய்கிறது.

பந்தி தயார் செய்கிறார்கள்: கம்பளத்தை விரிக்கிறார்கள்: உண்கிறார்கள், குடிக்கிறார்கள்: தலைவர்களே, எழுங்கள்: கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள்.

ஏனெனில் என் தலைவர் எனக்குக் கூறியது இதுவே: "நீ போய்க் காவலன் ஒருவனை நிறுத்திவை: தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.

இருவர் இருவராய்க் குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து வருவதையும், கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும் வீரர்கள் ஏறி வருவதையும் அவன் காணும்஥போது மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும்."

அப்போது காவல்காரன் கூக்குரலிட்டான்: "என் தலைவரே, பகல்முழுவதும் நான் காவல் மாடத்தின்மேல் நின்று கொண்டிருக்கின்றேன்: இரவெல்லாம் என் பணியில் நிறுத்தப்பட்டுள்ளேன்.

இதோ, ஒரு சோடிக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், ஏறி ஒருவர் வருகின்றார். அவர் பதிலுரையாக, ஓபாபிலோன் வீழ்ந்தது, வீழ்ச்சியடைந்து விட்டது: அதன் தெய்வங்களின் சிலைகள் அனைத்தையும் தரையில் மோதி உடைக்கப்பட்டாயிற்றுஓ என்று கூறுகிறார்."

போராடிக்கப்பட்டுக் களத்தில் சிதறிக் கிடக்கும் என் மக்களே, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன்.

பமாவைப் பற்றிய திருவாக்கு: சேயிரிலிருந்து என்னைக் கூப்பிட்டு, "சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்? சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்?" என்று ஒருவர் கேட்க, 12"காலை வருகிறது, அவ்வாறே இரவும்: கேட்பதென்றால், கேளுங்கள், மீண்டும் திரும்பி வாருங்கள்" என்று சாமக்காவலன் கூறினான்.

அரேபியாவைக் குறித்த திருவாக்கு: தெதானின் வணிகப் பயணிகளே! அரேபியாவின் பாலைநிலச் சோலைகளில் நீங்கள் கூடாரம் அடியுங்கள்:

தேமா நாட்டில் குடியிருப்போரே! தாகமுற்றோர்க்குத் தண்ணீர் கொண்டு வாருங்கள்: அகதிகளை உணவுடன் சென்று சந்தியுங்கள்.

ஏனெனில், வாள்களுக்குத் தப்பி அவர்கள் ஓடுகின்றார்கள்: உருவிய வாளுக்கும், நாணேற்றிய வில்லுக்கும் போரின் கடுமைக்கும் அஞ்சி ஓடுகின்றார்கள்.

என் தலைவர் எனக்குக் கூறியது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்த ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும்.

கேதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களுள் எஞ்சினோர் மிகச் சிலராகவே இருப்பர். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைக் கூறியுள்ளார்.

அதிகாரம் 22.

காட்சிப் பள்ளத்தாக்கைக் குறித்த திருவாக்கு: வீட்டுக்கூரைகளின் மேல் நீங்கள் அனைவரும் ஏறியிருக்கிறீர்களே, உங்களுக்கு நிகழ்ந்தது என்ன?

ஆரவாரம் நிறைந்த நகரமே: அக்களித்து அமர்க்களப்படும் பட்டணமே! உங்களிடையே கொலை செய்யப்பட்டோ ர் வாளால் வெட்டி வீழ்த்தப்படவில்லை, போர்க்களத்திலும் செத்து மடியவில்லை.

உங்கள் தலைவர்கள் அனைவரும் ஒருங்கே ஓட்டமெடுத்தார்கள்: அம்பு எய்யாமலே அவர்கள் பிடிபட்டார்கள்: உன்னிடத்தில் இருந்தவர் யாவரும் வெகு தொலைவிற்குத் தப்பியோடியும் கண்டுபிடிக்கப்பட்டு ஒருசேரக் கைதானார்கள்.

ஆதலால் நான் "என்னை உற்று நோக்காதீர்கள், நான் மனம் கசந்து கதறியழ விடுங்கள்: என் மக்களாகிய மகளின் அழிவைக்குறித்து என்னை தேற்ற முயலாதீர்கள்" என்றேன்.

ஏனெனில் அமளியும் திகிலும் நிறைந்த நாள் அது: மக்கள் மிதிபடும் நேரம் அது. என் தலைவராகிய படைகளின் ஆண்டவரது நாள் அது. காட்சிப் பள்ளத்தாக்கில் இது நிகழ்கிறது: மதிற் சுவர்கள் தகர்க்கப்படுகின்றன: மலையை நோக்கி அபயக்குரல் எழுகிறது.

ஏலாம் நாட்டினர் அம்பறாத் துணியை எடுத்துச்சென்றனர், தேர்ப்படையோடும் குதிரை வீரரோடும் புறப்பட்டனர்: கீரைச் சார்ந்தோர் கேடயத்தின் உறையை அகற்றினர்.

மிகச்சிறந்த உன் பள்ளத்தாக்குகள் தேர்ப்படைகளால் நிறைந்தன, குதிரைவீரர்கள் உன் வாயில்களில் அணிவகுத்து நின்றனர்.

யூதாவின் அரண் தகர்க்கப்பட்டது: அந்நாளில் போர்க்கருவிகள் இருந்த "வன மாளிகை"யை நாடினீர்கள்.

தாவீது நகரின் அரணில் பிளவுகள் பல இருப்பதை நீங்கள் கண்டீர்கள்: கீழ்க்குளத்துத் தண்ணீரைச் சேர்த்து வைத்தீர்கள்:

எருசலேமின் வீடுகளை எண்ணி முடித்தீர்கள்: அரணுக்கு வலுவூட்ட வீடுகளை இடித்தீர்கள்.

இரு மதில்களுக்கும் இடையே பழைய குளத்துத் தண்ணீருக்கென்று ஒரு நீர்த்தேக்கத்தை அமைத்தீர்கள். ஆனால் அதை உருவாக்கியவரை நீங்கள் நாடவில்லை: தொலையிலிருந்து அதை ஏற்படுத்தியவரை நீங்கள் கண்ணோக்கவுமில்லை.

அந்நாளில் புலம்பவும், ஓலமிட்டுக் கதறி அழவும் தலையை மொட்டை அடித்துக்கொள்ளவும் சாக்கு உடை உடுத்தவும் படைகளின் ஆண்டவரான எம் தலைவர் ஆணையிட்டார்.

நீங்களோ, மகிழ்ந்து களிப்படைகின்றீர்கள்: எருதுகளை அடித்து, ஆடுகளை வெட்டி, இறைச்சியை உண்டு, திராட்சை இரசத்தைக் குடிக்கின்றீர்கள். "உண்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்" என்கின்றீர்கள்.

படைகளின் ஆண்டவர் நான் என் காதால் கேட்குமாறு வெளிப்படுத்தியது: "நீங்கள் சாகும்வரை இத் தீச்செயலின் கறை கழுவப்படவேமாட்டாது," என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.

என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: அரண்மனைப் பொறுப்பாளனும் அதிகாரியுமாகிய செபுனாவிடம் சென்று நீ சொல்லவேண்டியது:

"நீ உனக்கென்று ஒரு கல்லறையை வெட்டியிருக்கிறாய்: உயர்ந்த இடத்தில் அக்கல்லறையை இருக்குமாறு அமைத்திருக்கிறாய்: பாறையில் உனக்கொரு தங்குமிடத்தைக் குடைந்துள்ளாயே? இங்கே உனக்கு யார் இருக்கிறார்கள்? இங்கே உனக்கு என்ன வேலை?

ஓ மனிதா, ஆண்டவர் உன்னைத் தள்ளிவிட்டுத் பக்கி எறிவார்: உன்னைக் கெட்டியாய் மடக்கிப் பிடித்து,

சுற்றிச் சுற்றி உன்னைச் சுழற்றி, பரந்து விரிந்த நாட்டிலே பந்தாடுவார். அங்கே நீ செத்துமடிவாய். உன் தலைவனின் குடும்பத்திற்கு இழுக்கானவனே, உன் மேன்மைமிகு தேர்ப் படைக்கும் அதே நிலைதான்.

உன்னை உன் பதவியிலிருந்து இறக்கிவிடுவேன்: உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன்.

அந்நாளில் இலக்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து,

உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான்.

அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்: எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்: எவனும் திறக்கமாட்டான்.

உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்: அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்:

ஆனால், அவன் தந்தை குடும்பத்தினராகிய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சிறு கலயங்கள், கிண்ணங்கள் முதல், கலயங்கள், குடங்கள் வரையுள்ள அனைத்துக் கலங்களைப் போல் அவன்மேல் சுமையாக மாட்டித் தொங்கினர்.

படைகளின் ஆண்டவர் உரைத்தது: அந்நாளில் உறுதியான இடத்தில் அடிக்கப்பட்ட முளை பெயர்ந்து முறிந்து கீழே விழும். அதில் தொங்கிய சுமையும் வீழ்ந்து அழியும், என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 23.

தீர் நாட்டைக் குறித்த திருவாக்கு: தர்சீசின் மரக் கப்பல்களே கதறி அழுங்கள்: தீரின் வீடுகள் இல்லாதபடிக்கும் வருவார் போவார் இல்லாதபடிக்கும் பாழாய்ப் போய்விட்டது: சைப்பிரசு நாட்டிலிருந்து இச்செய்தி அவர்களை வந்தடைகின்றது.

கடற்கரை நாட்டாரே, சீதோன் வணிகரே, வாய் திறவாதீர்: உங்கள் பதர் கடல்கடந்து வந்தனர்.

பல இனத்தாரோடும் நீங்கள் வாணிகம் செய்கின்றீர்கள்: சீகோர் ஆற்றின் பெருவெள்ளத்தில் விளைந்த தானியமும், நைல் நதியின் அறுவடையுமே உங்கள் வருமானம்.

சீதோனே, வெட்கப்படு: "நான் பேறுகால வேதனை அடையவில்லை: பிள்ளையைப் பெற்றெடுக்கவில்லை: இளைஞரைப் பேணவுமில்லை: கன்னிப் பெண்களைக் காக்கவுமில்லை" என்று கடல் சொல்கின்றது: கடற்கோட்டை கூறுகின்றது.

இச்செய்தி எகிப்தை எட்டும்போது, தீர்நாட்டின் நிலையைக் கேட்டு அவர்கள் நடுங்குவார்கள்.

கடற்கரை நாட்டில் வாழ்வோரே, தர்சீசுக்குக் கடந்து சென்று கதறியழுங்கள்.

பண்டைக்காலம் முதல் நிலைபெற்று, களிப்புமிகுந்த நகர் இதுதானா? தொலை பரத்திற்குச் சென்று குடியேறுமாறு அடியெடுத்து வைத்த நகரா இது?

அரசர்க்கு மணிமுடி சூட்டி வந்ததும் இளவரசர்களைப் போன்ற வணிகரைக் கொண்டதும், உலகத்தில் மதிப்புமிக்க வணிகர்களைப் பெற்றிருந்ததுமான தீருக்கு எதிராக இதைத் திட்டமிட்டது யார்?

செருக்குற்றோர் சீர்குலையவும், நாட்டில் மதிப்புப்பெற்றோர் அனைவரும் அவமதிப்பு அடையவும் படைகளின் ஆண்டவர் இதைத் திட்டமிட்டார்.

தர்சீசின் மகளே, உன் நிலத்தை உழுது பண்படுத்து: இனி இங்குத் துறைமுகமே இராது.

கடலுக்கு மேலாக ஆண்டவர் தம் கையை ஓங்கியுள்ளார்: கானானின் ஆற்றல்மிக்க புகலிடங்களை அழிக்குமாறு ஆண்டவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

"ஒடுக்கப்பட்ட சீதோன் மகளாகிய கன்னிப்பெண்ணே, இனி நீ மகிழ்ச்சி அடையமாட்டாய், எழுந்து, சைப்பிரசுக்கு புறப்பட்டுப்போ: அங்கேயும் நீ அமைதி பெற மாட்டாய்" என்கிறார் அவர்.

இதோ, கல்தேயர் நாட்டைப்பார், இந்த மக்களினம் அசீரியர்கள் அல்லர்: இவர்கள் சீதோன் நாட்டைக் காட்டுவிலங்குகளிடம் விட்டுச் சென்றனர்: அதைச் சுற்றிலும் தங்கள் கொத்தளங்களை எழுப்பினர். அதன் அரண்களைத் தரைமட்டாக்கினர். நாடு பாழடைந்த மண்மேடாகக் கிடக்கின்றது.

தர்சீசின் கப்பல்களே! கதறியழுங்கள்: ஏனெனில் ஆற்றல்மிகு உங்கள் அரண்கள் அழிவுற்றன.

அந்நாளில், ஓர் அரசனின் வாழ் நாளான எழுபது ஆண்டுகள் தீர் நகர் மறக்கப்பட்டிருக்கும். எழுபது ஆண்டுகளுக்குப்பின், விலைமாதின் கவிதையில் காணப்படுவது தீர் நகருக்கு நேரிடும்: 16"மறக்கப்பட்ட விலைமாதே! யாழினைக் கையிலெடுத்து, நகரைச் சுற்றி வலம்஥ வா. உன் நினைவு நிலைக்குமாறு இன்னிசை மீட்டு: பண் பல பாடு."

எழுபது ஆண்டுகளுக்குப்பின் ஆண்டவர் தீர்நகரைத் தேடிவருவார். அப்பொழுது அவள் தன் முன்னைய தொழிலுக்குத் திரும்பி, மண்ணுலகின் எல்லா நாட்டு அரசுகளோடும் வேசித்தனம் செய்வாள்.

ஆனால்஥ அவளது வாணிபத்தால் கிடைக்கும் வருவாய் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்படும். அது சேமித்து வைக்கப்படுவதுமில்லை: பதுக்கி வைக்கப்படுவதுமில்லை: அவளது வாணிபம் ஆண்டவர் திருமுன் வாழ்வோர்க்கு நிறைவளிக்கும் உணவும் சிறந்த உடையும் பெற்றுத்தரும்.

அதிகாரம் 24.

இதோ, ஆண்டவர் பூவுலகை வெறுமையாக்கிப் பாழடையச் செய்து, அதன் நிலப்பரப்பை உருக்குலையச் செய்து, அதில் வாழ்வோரைச் சிதறடிப்பார்.

அப்பொழுது மக்களுக்கு எப்படியோ அப்படியே குருக்களுக்கும், பணியாளனுக்கு எவ்வாறோ அவ்வாறே அவன் தலைவனுக்கும், பணிப்பெண்ணுக்கு எப்படியோ அப்படியே அவள் தலைவிக்கும், வாங்குபவனுக்கு எவ்வாறோ அவ்வாறே விற்பவனுக்கும், கடன் கொடுப்பவனுக்கு எப்படியோ அப்படியே கடன் வாங்குபவனுக்கும், வட்டிக்குக் கொடுத்தவனுக்கு எவ்வாறோ அவ்வாறே வட்டிக்கு வாங்கினவனுக்கும் நேரிடும்.

நாடு முற்றிலும் பாழடைந்து போகும்: முழுவதும் சூறையாடப்படும். ஏனெனில், இது ஆண்டவர் கூறிய வார்த்தை.

நிலம் புலம்பி வாடுகின்றது. மண்ணுலகில் தளர்ந்து வாடுகின்றது, மண்ணுலக மக்களுள் உயர்ந்தோர் தளர்ச்சியுறுவர்.

நாடு அதில் குடியிருப்போரால் தீட்டுப்பட்டுள்ளது: ஏனெனில் அவர்கள் சட்டங்களை மீறினார்கள்: நியமங்களைச் சீர்குலைத்தார்கள்: என்றுமுள உடன்படிக்கையை முறித்தார்கள்.

ஆதலால், சாபம் நாட்டை விழுங்குகிறது. அதில் குடியிருப்போர் குற்றப்பழியில் சிக்கியுள்ளனர். அதில் வாழ்வோர் நெருப்பில் எரிந்து போகின்றனர்: சிலரே எஞ்சியிருப்பர்.

திராட்சை இரசம் அழுகின்றது: திராட்சைக் கொடி தளர்கின்றது: அக்களிக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.

மேளத்தின் மகிழ்ச்சி ஒலி ஓய்ந்து விட்டது. அக்களித்திருந்தோரின் ஆரவாரம் அடங்கிவிட்டது: யாழின் இன்னிசை நின்றுவிட்டது.

பாடலுடன் அவர்கள் திராட்சை இரசம் குடிக்கமாட்டார்கள்: மதுவும் குடிப்போருக்குக் கசப்பாயிருக்கும்.

குழப்பத்தின் நகர் தகர்க்கப்பட்டது: யாரும் நுழையாதபடி வீடெல்லாம் பூட்டப்பட்டது.

திராட்சை இரசத்திற்காகத் தெருக்களில் கூச்சல் எழுகின்றது: மகிழ்ச்சி எல்லாம் மங்கி மறைகின்றது: விழாக்கள் நாட்டிலிருந்து அகற்றப்பட்டன.

பாழடைந்த நிலையே நகரில் எஞ்சியிருக்கின்றது: நுழைவாயில்கள் நொறுக்கப்பட்டும் பாழாய்க் கிடக்கின்றன.

நாட்டில் மக்களுக்கு நேரிடுவது ஒலிவமரத்தை உலுக்குவது போலவும், அறுவடைக்குத் தப்பிய திராட்சைப் பழங்களைப் பறிப்பது போலவும் உள்ளது.

எஞ்சியிருப்போர் தங்கள் குரலை உயர்த்தி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கின்றார்கள்: ஆண்டவரின் மாட்சி பற்றி மேற்கிலிருந்து ஆரவாரம் செய்கின்றார்கள்.

ஆதலால் கீழ்த்திசையில் ஆண்டவரைப் பெருமைப் படுத்துங்கள்: கடற்கரை நாடுகளில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுங்கள்.

மண்ணுலகின் எல்லையிலிருந்து "நீதியுள்ளவருக்கு மாட்சி" என்ற புகழ்ப்பாடலை நாங்கள் கேட்கின்றோம்: நானோ, "இளைத்துப் போனேன், இளைத்துப் போனேன், எனக்கு ஜயோ, கேடு: எனக்குத் துரோகம் செய்கின்றார்கள்: துரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றார்கள்" என்றேன்.

உலகில் குடியிருப்போரே, திகில், படுகுழி, கண்ணி, உங்களுக்கெதிரில் இருக்கின்றன.

திகிலின் ஓசைகேட்டு ஓடுபவர் படுகுழியில் வீழ்வார்: படுகுழியிலிருந்து ஏறுகின்றவர் கண்ணியில் சிக்கிக் கொள்வார்: ஏனெனில், விண்ணின் மடைகள் திறக்கப்படுகின்றன: நிலத்தின் அடித்தளங்கள் அதிர்கின்றன.

பூவுலகம் நொறுங்கிச் சிதறுகின்றது: நிலவுலகம் பிளந்து விரிகின்றது: மண்ணுலகம் அதிர்ந்து நடுங்குகின்றது.

குடிவெறியரைப் போல் மண்ணுலகம் தள்ளாடுகின்றது: குடிசைபோல் அது இடம் பெயர்ந்து செல்கின்றது: அதன் குற்றப்பழி பாரச்சுமையாய் அதை அழுத்துகின்றது: அது வீழ்ச்சியடையும்: இனி ஒருபோதும் எழாது.

அந்நாளில் ஆண்டவர் வானத்தில் வான் படைகளையும் நிலவுலகில் நிலவுலக மன்னர்களையும் தண்டிப்பார்.

கைதிகளாய் அவர்கள் படுகுழியில் ஒன்றுதிரட்டப்படுவார்கள்: சிறைக்கூடத்தில் அடைக்கப்படுவார்கள். நாள் பல சென்றபின் தண்டிக்கப்படுவார்ககள்.

நிலா நாணமுறுவாள்: கதிரவன் வெட்கமடைவான்: ஏனெனில், படைகளின் ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் அரசாள்வார். அவர்களின் பெரியோர் முன்னிலையில் அவர்தம் மாட்சி வெளிப்படும்.

அதிகாரம் 25.

ஆண்டவரே, நீரே என் கடவுள்: நான் உம்மை மேன்மைப்படுத்துவேன்: உன் பெயரைப் போற்றுவேன்: நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர்: நெடுநாளாய் நீர் தீட்டியுள்ள திட்டத்தைத் திண்ணமாகவும் உறுதியாகவும் நிறைவேற்றியுள்ளீர்.

ஏனெனில், நீ நகரத்தைக் கற்குவியலாக்கினீர்: அரண்சூழ்ந்த பட்டணத்தைப் பாழடையச் செய்தீர்: அயல் நாட்டினரின் கோட்டை அது: இனி நகராய் இராது: என்றுமே கட்டி எழுப்பப்படாது.

ஆதலால் வலிமைமிகு மக்களினம் உம்மைப் பெருமைப்படுத்தும்: முரடரான வேற்றின நகரத்தினர் உமக்கு அஞ்சுவர்.

ஏழைகளுக்கு நீர் அரணாய் இருக்கின்றீர்: வறியவனுக்கு அவன் துன்பத்தில் உறைவிடம் நீரே: புயற்காற்றில் புகலிடமாகவும், கடும் வெப்பத்தில் குளிர் நிழலாகவும் திகழ்கின்றீர்: ஏனெனில் முரடர்களின் சீற்றம் மதிற்சுவரை மோதித் தாக்கும் பெரும் புயல் போலும்,

வறண்ட நிலத்தில் வெப்பம் போலும் இருக்கும். கார்மேக நிழல் வெயிலைத் தணிப்பது போல் அயல் நாட்டவரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடங்கச் செய்கின்றீர்: முரடர்களின் ஆரவாரம் அடங்கிவிட்டது.

படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்: அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும்.

மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்: பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் பக்கி எறிவார்.

என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்: என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்஥தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்: தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்: ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.

அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: இவரே நம் கடவுள்: இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்: இவர் நம்மை விடுவிப்பார்: இவரே ஆண்டவர்: இவருக்காகவே நாம் காத்திருந்தோம்: இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்."

ஆண்டவரின் ஆற்றல் இம் மலையில் தங்கியிருக்கும்: எருக்குழி நீரில் வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல், மோவாபு அவரால் மிதிக்கப்படுவான்.

நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல், மோவாபு தன் கைகளை விரிப்பான்: ஆனால் ஆண்டவர் அவன் செருக்கையும் கைவினைச் செயல்களையும் விழச் செய்வார்.

வானாளவ உயர்ந்துநிற்கும் உன் அரண்களை அவர் விழத் தள்ளி, தரைமட்டமாக்குவார்: அவை புழுதியோடு புழுதியாகி மண்ணோடு மண்ணாகும்.

அதிகாரம் 26.

அந்நாளில் யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்: நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு: நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்:

வாயில்களைத் திறந்துவிடுங்கள்: அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.

அவர்கள் மனஉறுதி கொண்டவர்கள்: உம்மீது நம்பிக்கை உடையவர்கள்: அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்.

ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்: ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர் என்றுமுள கற்பாறை!

உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்: வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்: அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார்.

காலடிகள்-எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும்-அதை மிதிக்கும்.

நீதிமான்களின் நெறிகள் நேரியவை: நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர்.

ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து, உமக்காகக் காத்திருக்கிறோம், உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன.

என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது: எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது: உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில் வாழ்வோர் நேர்மையைக் கற்றுக் கொள்வர்.

கொடியவர்களுக்கு நீர் இரக்கம் காட்டினாலும் அவர்கள் நேரியன செய்யக் கற்றுக் கொள்வதில்லை: நேர்மை நிறைந்த நாட்டில் அவர்கள் அநீதி செய்கின்றனர்: ஆண்டவரின் மாட்சியை அவர்கள் காண்பதில்லை.

ஆண்டவரே, ஓங்கிய உம் கையை அவர்கள் காண்பதில்லை: உம் மக்கள்மீது நீர் கொண்ட பேரார்வத்தை அவர்கள் கண்டு நாணட்டும்! உம் பகைவர்களுக்காக மூட்டிய தீ அவர்களை விழுங்கட்டும்!

ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.

எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம்மைத்தவிர வேறு தலைவர்கள் எங்கள்மேல் ஆட்சி செலுத்தினார்கள்: ஆனால், உமது பெயரைமட்டுமே நாங்கள் போற்றுகின்றோம்.

அவர்கள் செத்து மடிந்தார்கள், இனி உயிர்வாழ மாட்டார்கள். அவர்களின் நிழல்கள் உயிர்பெற்றெழ மாட்டா: ஏனெனில் நீர் அவர்களைத் தண்டித்து, அழித்துவிட்டீர்: அவர்களைப் பற்றிய நினைவுகள் யாவற்றையும் இல்லாததொழித்தீர்.

இந்த இனம் வளரச் செய்தீர்: ஆண்டவரே, இந்த இனம் வளரச் செய்தீர்: நீர் மாட்சியுடன் விளங்குகின்றீர்: நாட்டின் எல்லைகள் அனைத்தையும் விரிவுபடுத்தினீர்.

ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்: நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்஥஥஥றாடினோம்.

பேறுகாலம் நெருங்குகையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்!

நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம்: ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்: நாடு விடுதலை பெற, நாங்கள் எதையும் சாதிக்கவில்லை: உலகில் குடியிருக்க, எவரும் பிறக்கப் போவதில்லை.

இறந்த உம்மக்கள் உயிர் பெறுவர்: அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்: புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்: ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி: இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச்செய்கின்றீர்.

என் மக்களே! நீங்கள் போய் உங்கள் அறைக்குள் நுழைந்து, உள்ளிருந்து கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள்: கடும் சினம் தணியும்வரை சற்று ஒளிந்து கொள்ளுங்கள்.

மண்ணுலகில் வாழ்வோர் தமக்கு எதிராகச் செய்த தீச் செயலுக்குத் தண்டனை வழங்க, ஆண்டவர் தம் திருத்தலத்திலிருந்து புறப்படுகின்றார்: மண்ணுலகம் தன் இரத்தப்பழியை வெளிக் கொணரும்: அதில் கொலை செய்யப்பட்டவர்களை இனியும் இது மூடிமறைக்காது.

அதிகாரம் 27.

அந்நாளில் ஆண்டவர் தம் கொடிய, பெரிய, வலிமைமிகு வாளால் லிவியத்தான் என்னும் விரைந்தோடும் பாம்பை-லிவியத்தான் என்னும் நெளிந்தோடும் பாம்பை-தண்டிப்பார்: கடலில் இருக்கும் அந்தப் பெரும் நாகத்தை அவர் வெட்டி வீழ்த்துவார்.

அந்நாளில் ஒரு கனிமிகு திராட்சைத்தோட்டம் இருக்கும்: அதைப்பற்றிப் பாடுங்கள்.

ஆண்டவராகிய நானே அதன் பாதுகாவலர்: இடையறாது அதற்கு நான் நீர் பாய்ச்சுகின்றேன்: எவரும் அதற்குத் தீங்கு விளைவிக்காதவாறு இரவும் பகலும் அதற்குக் காவலாய் இருக்கின்றேன்.

சினம் என்னிடம் இல்லை: நெருஞ்சியையும் முட்புதரையும் என்னோடு போரிடச் செய்தவன் எவன்? நான் அவற்றிற்கு எதிராக அணி வகுத்துச்சென்று, அவற்றை ஒருங்கே நெருப்புக்கு இரையாக்குவேன்.

அவர்கள் என்னைப் புகலிடமாகக் கொண்டு வலிமை பெறட்டும்: என்னோடு அவர்கள் ஒப்புரவு செய்து கொள்ளட்டும், என்னோடு அவர்கள் சமாதானம் செய்து கொள்ளட்டும்.

வருங்காலத்தில் யாக்கோபு வேரூன்றி நிற்பான்: இஸ்ரயேல் பூத்து மலருவான்: உலகத்தையெல்லாம் கனிகளால் நிரப்புவான்.

அவனை அடித்து நொறுக்கியோரை ஆண்டவர் அடித்து நொறுக்கியது போல், அவனையும் அவர் அடித்து நொறுக்கியது உண்டோ ? அவனை வெட்டி வீழ்த்தியோரை அவர் வெட்டி வீழ்த்தியதுபோல், அவனையும் அவர் வெட்டி வீழ்த்தியது உண்டோ ?

துரத்தியடித்து வெளியேற்றியதன் மூலம் அவர் அவனோடு போராடினார்: கீழைக்காற்றின் நாளில் சூறைக்காற்றால் அவனைத் பக்கி எறிந்தார்.

ஆதலால் இதன் வாயிலாய் யாக்கோபின் குற்றத்திற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும். அவனது பாவம் அகற்றப்பட்டதன் முழுப் பயன் இதுவே: சுண்ணாம்புக் கற்களை உடைத்துத் பள் பளாக்குவது போல அவர் அவர்களின் பலிபீடக் கற்களுக்குச் செய்வார்: அசேராக் கம்பங்களும் பபபீடங்களும் நிலைநிற்காதவாறு நொறுக்கப்படும்.

அரண் சூழ்ந்த நகரம் தனித்து விடப்பட்டுள்ளது: குடியிருப்பாரின்றிப் பாழாய்க் கிடக்கிறது. பாலைநிலம் போல் புறக்கணிக்கப்பட்டுள்ளது: ஆங்கே, கன்றுக்குட்டி மேய்கின்றது, படுத்துக்கிடக்கின்றது: அதில் தழைத்துள்ளவற்றைத் தின்று தீர்க்கின்றது.

உலர்ந்த அதன் கிளைகள் முறிக்கப்படுகின்றன: பென்டிர் வந்து அவற்றைச் சுட்டெறிப்பர்: ஏனெனில் உணர்வற்ற மக்களினம் அது: ஆதலால், அவர்களைப் படைத்தவர் அவர்கள் மீது இரக்கம் காட்டார்: அவர்களுக்கு ஆதரவு அருளார்.

அந்நாளில் ஆண்டவர் பேராற்றின் வாய்க்கால் முதல் எகிப்தின் பள்ளத்தாக்குவரை புணையடிப்பார்: இஸ்ரயேல் மக்களே, நீங்கள் ஒருவர்பின் ஒருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.

அந்நாளில் பெரியதோர் எக்காளம் முழங்கும். அப்பொழுது, அசீரியா நாட்டில் சிதறுண்டோ ரும் எகிப்து நாட்டுக்குத் துரத்தப்பட்டோ ரும் திரும்பி வருவர். எருசலேமின் திருமலையில் அவர்கள் ஆண்டவரை வழிபடுவார்கள்.

அதிகாரம் 28.

எப்ராயிமின் குடிவெறியரின் மாண்புமிகு மணிமுடிக்கு ஜயோ கேடு! வாடுகின்ற மலராய், அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றதே! பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே! நறுமணம் பூசிய தலைவர்கள் மது மயக்கத்தால் வீழ்ந்து கிடக்கின்றனரே!

இதோ ஆற்றலும் வலிமையும் மிக்கோன் என் தலைவரிடம் உள்ளான்: அவன் கல்மழையென, அழிக்கும் புயலென, கரை புரண்டோ டும் பெருவெள்ளமென வந்து, தன் கைவன்மையால் அதைத் தரையில் வீழ்த்துவான்.

எப்ராயிம் குடிவெறியரின் மாண்புமிகு மணிமுடி கால்களால் மிதிக்கப்படும்.

வாடுகின்ற மலராய் அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றது: நறுமணம் பூசிய தலைவர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்: இது கோடைக்காலம் வரும் முன் பழுத்த அத்திப்பழம் போலாகும்: அதைக் காண்பவன் தன் கைக்கு எட்டியதும் அதை விழுங்கி விடுவான்.

அந்நாளில் படைகளின் ஆண்டவரே, தம் மக்களுள் எஞ்சியோருக்கு எழில்மிகு மணிமுடியாகவும் மாண்புமிகு மகுடமாகவும் இருப்பார்.

நீதி வழங்க அமர்வோனுக்கு நீதியின் உணர்வாகவும் நகரவாயிலைத் தாக்குவோர் புறமுதுகிடுமாறு போராடுவோர்க்கு ஆற்றலாகவும் அவர் இருப்பார்.

குருக்களும் இறைவாக்கினரும் திராட்சை இரசத்தால் தடுமாறுகின்றனர்: மதுவால் தள்ளாடுகின்றனர்: அவர்கள் மதுவால் மதி மயங்குகின்றனர்: திராட்சை மதுவுக்கு அடிமையாகின்றனர்: மதுவால் மயங்குகின்றனர்: காட்சி காணுகையில் மருள்கின்றனர்: நீதி வழங்குகையில் தடுமாறுகின்றனர்!

மேசைகள் எல்லாம் வாந்தியால் நிறைந்துள்ளன: அழுக்குப் படியாத இடமே இல்லை!

"இவன் யாருக்கு அறிவு புகட்டுவான்? யாருக்குச் செய்தியைப் புரியுமாறு எடுத்துரைப்பான்? பால்குடி மறந்தோர்க்கா? தாய்ப்பாலை விட்டு அகன்றோர்க்கா?

ஏனெனில் கட்டளை மேல் கட்டளை, கட்டளைமேல் கட்டளை: அளவு மலுக்குமேல் அளவுமல், அளவு மலுக்கு மேல் அளவுமல்: இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்" என்கின்றனர்.

ஆனால் குழறிய பேச்சும் புரியாத மொழியும் கொண்டோ ர் மூலம் ஆண்டவர் இம்மக்களுக்குப் பாடம் கற்பிப்பார். 12"இதோ உள்ளது இளைப்பாற்றி: களைத்தவன் இளைப்பாறட்டும்: இதோ உள்ளது இளைப்பாற்றி" என்று அவர்களுக்குச் சொன்னாலும் செவி கொடுக்க மாட்டார்கள்.

ஆதலால் ஆண்டவரின் வார்த்தை அவர்களுக்குக் கட்டளைமேல் கட்டளையாகவும் அளவுமல்மேல் அளவு மலாகவும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாகவும் இருக்கும்: அவர்கள் புறப்பட்டுச்செல்கையில் நிலை தடுமாறி வீழ்வர்: நொறுக்கப்படுவர்: கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.

ஆதலால், எருசலேமிலுள்ள இம்மக்களை ஆள்வோரே! இகழ்வோரே! ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள். 15"நாங்கள் சாவோடு ஓர் உடன்படிக்கை செய்துள்ளோம்: பாதாளத்துடன் ஓர் உடன்பாடு ஏற்படுத்தியுள்ளோம். பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்துவந்தாலும் அவனால் எங்களை அணுக இயலாது. ஏனெனில், பொய்மையை நாங்கள் எங்கள் புகலிடமாய்க் கொண்டுள்ளோம்: வஞ்சகத்தை எங்களுக்கு மறைவிடமாய் ஆக்கியுள்ளோம்" என்று சொன்னீர்கள்.

ஆதலால், ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: இதோ! சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன்: அது பரிசோதிக்கப்பட்ட கல்: விலையுயர்ந்த மூலைக்கல்: உறுதியான அடித்தளமாய் அமையும் கல்:"நம்பிக்கை கொண்டோ ன் பதற்றமடையான்."

நீதியை அளவு மலாகவும், நேர்மையைத் பக்கு மலாகவும் அமைப்பேன். பொய்மை எனும் புகலிடத்தைக் கல்மழை அழிக்கும்: மறைவிடத்தைப் பெருவெள்ளம் அடித்துச் செல்லும்.

சாவுடன் நீங்கள் செய்த உடன்படிக்கை முறிந்து போகும்: பாதாளத்துடன் நீங்கள் செய்த உடன்பாடு நிலைத்து நிற்காது: பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்து வரும்போது நீங்கள் அவனால் நசுக்கப்படுவீர்கள்.

பகை உங்களைக் கடக்கும் பொழுதெல்லாம் உங்களை வாரிக்கொண்டு போகும்: அது காலைதோறும், பகலும் இரவும், பாய்ந்து வரும்: அச்செய்தியை உணர்வதே மிகவும் திகிழட்டும்.

கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது: போர்த்திக் கொள்ளப் போர்வையின் அகலம் பற்றாது.

ஆண்டவர் பெராசிம் மலைமேல் கிளர்ந்தெழுந்ததுபோல் எழுவார்! கிபயோன் பள்ளத்தாக்கில் செய்ததுபோல் செயலாற்றக் கொதித்தெழுவார்! தம் பணியை நிறைவேற்றுவார்! விந்தையானது அவர் தம் செயல்! புதிரானது அவர்தம் பணி!

உங்கள் தளைகள் கடினமாகாதபடி இகழ்வதை விட்டுவிடுங்கள்: ஏனெனில் நாடு முழுவதையும் அழித்தொழிக்குமாறு படைகளின் ஆண்டவராகிய என் தலைவர் இட்ட ஆணையை நான் கேட்டேன்.

செவி கொடுங்கள்: நான் கூறுவதைக் கேளுங்கள்: செவிசாய்த்து நான் சொல்வதைக் கவனியுங்கள்:

விதைப்பதற்கென உழுபவர்கள் நாள்தோறும் உழுது கொண்டிருப்பார்களா? நிலத்தை நாள்தோறும் கிளறிப் பரம்படிப்பார்களா?

அதன் மேற்பரப்பைச் சமமாக்கியபின் உளுந்தைத் பவிச் சீரகத்தை விதைப்பார்களன்றோ? வாற்கோதுமையைக் கோதுமைப் பாத்திகளிலும், தானியங்களை ஓரங்களில் உரிய இடத்திலும் விதைப்பார்களன்றோ?

இந்த நடைமுறையை அவர்கள் கற்றுக் கொள்கின்றார்கள்: அவர்களின் கடவுள் அவர்களுக்குக் கற்றுத் தருகின்றார்:

உளுந்து இருப்புக் கோலால் அடிக்கப்படுவதில்லை: சீரகத்தின் மேல் வண்டி உருளை உருட்டப்படுவதில்லை: ஆனால் உளுந்து கோலாலும் சீரகம் தடியாலும் தட்டியடிக்கப்படும்.

உணவுக்கான தானியத்தை யாரும் நொறுக்குவார்களா? இல்லை: அதை அவர்கள் இடைவிடாது போரடிப்பதில்லை. வண்டி உருளையையும் குதிரையையும் அதன்மேல் ஓட்டும்போது, அதை அவர்கள் நொறுக்குவதில்லை.

படைகளின் ஆண்டவரிடமிருந்து இந்த அறிவு வருகின்றது: அவர் திட்டமிடுவதில் வியப்புக்குரியவர்: செயற்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர்.

அதிகாரம் 29.

தாவீது பாசறை அமைத்த நகராகிய அரியேல்! அரியேல்! உனக்கு ஜயோ கேடு! ஆண்டிற்குப்பின் ஆண்டு கடந்து வரட்டும்: விழாக்கள் முறைமுறையாய் வந்து போகட்டும்.

அரியேலுக்கு நான் இடுக்கண் விளைவிப்பேன்: அங்கு அழுகையும் புலம்பலும் நிறைந்திருக்கும்: அரியேல் போலவே அது எனக்கிருக்கும்.

உன்னைச் சுற்றிலும் பாசறை அமைப்பேன்: உன்னைப் போர்க் கோபுரங்களால் சூழ்ந்து வளைப்பேன்: உனக்கெதிராய் முற்றுகைத் தளங்களை எழுப்புவேன்.

தாழ்த்தப்பட்ட நீ தரையிலிருந்து பேசுவாய்: நலிந்த உன் குரல் புழுதியிலிருந்து எழும்பும்: உன் குரல், இறந்தவன் ஆவியின் ஒலிபோல, மண்ணிலிருந்து வெளிவரும்:, உன் பேச்சு புழுதிக்குள்ளிலிருந்து முணுமுணுக்கும்.

உன் பகைவனின் திரள் நுண்ணிய பசிபோல் இருக்கும்: கொடியவர் கூட்டம்"பறக்கும் பதர் போலிருக்கும்: இவை திடீரென்று ஒரு நொடியில் நிகழும்.

இடிமுழக்கம், நில நடுக்கம், பேரிரைச்சல், சூறாவளி, புயல்காற்று விழுங்கும் நெருப்புப் பிழம்பு ஆகியவற்றால் படைகளின் ஆண்டவர் உன்னைத் தண்டிப்பார்.

அரியேலுக்கு எதிராகப் போர்தொடுக்கும் திரளான வேற்றினத்தார் அனைவரும் அதற்கும் அதன் அரணுக்கும் எதிராகப் போரிட்டு அதைத் துன்புறுத்திய அனைவரும் கனவு போலும், கனவில் காணும் காட்சிபோலும் மறைவர்.

பசியாய் இருப்பவர் உண்பதாய்க் கனவு கண்டு விழித்தெழுந்து வெறும் வயிற்றினராய் வாடுவது போலும், தாகமாய் இருப்பவர் நீர் அருந்துவதாய்க் கனாக்கண்டு விழித்தெழுந்து தீராத்தாகத்தால் தவிப்பது போலும், சீயோன் மலைமேல் போர் தொடுக்கும் திரளான வேற்றினத்தார் அனைவரும் ஆவர்.

திகிலடையுங்கள்: திகைத்து நில்லுங்கள்: குருடரைப்போல் இருங்கள்: பார்வையற்றவராகுங்கள். ஆனால் திராட்சை இரசத்ததால் அல்ல: தடுமாறுங்கள்: ஆனால் மதுவால் அல்ல.

ஏனெனில் ஆழ்ந்த பக்கம் தரும் ஆவியை ஆண்டவர் உங்கள் மீது அனுப்பியுள்ளார்: இறைவாக்கினராகிய உங்கள் கண்களை மூடியுள்ளார்: திருக்காட்சியாளராகிய உங்கள் பார்வையை மறைத்துள்ளார்.

ஆதலால் ஒவ்வொரு காட்சியும் உங்களுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஏட்டுச்சுருளின் வார்த்தைகள் போலாகும். எழுத்தறிந்த ஒருவரிடம் ஥இதைப்படியும்" என்றால், அவர் "என்னால் இயலாது: இது மூடி முத்திரையிடப்பட்டுள்ளதே" என்பார்.

எழுத்தறியா ஒருவரிடம் ஏட்டுச் சுருளைக் கொடுத்து "இதைப்படியும்" என்றால் அவர் "எனக்குப் படிக்கத் தெரியாதே" என்பார்.

என் தலைவர் கூறுவது இதுவே: வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்: உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது: அவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே!

ஆதலால், இதோ நான் இந்த மக்களுக்காக மீண்டும் வியத்தகு செயல் புரிவேன். அது விந்தைக்கு மேல் விந்தையாக இருக்கும். அவர்களுடைய ஞானிகளின் ஞானம் அழிந்துபோம்: அவர்களுடைய அறிஞர்களின் அறிவு மறைந்துபோம்.

ஆண்டவரிடமிருந்து தங்கள் திட்டங்களை மனத்தின் ஆழங்களில் மறைத்துக்கொண்டு, தங்கள் செயல்களை இருளில் செய்து, "நம்மை எவர் காணப்போகின்றார்? நம்மை எவர் அறியப் போகின்றார்?" எனச் சொல்வோருக்கு ஜயோ கேடு!

நீங்கள் செய்யும் முறைகேடுதான் என்ன? குயவனுக்குக் களிமண் ஈடாகுமோ? கைவேலை தன் கைவினைஞனை நோக்கி, "நீர் என்னை உருவாக்கவில்லை" என்று கூறலாமோ? வனையப்பட்டது தன்னை வனைந்தவனை நோக்கி "உமக்கு அறிவில்லை" என்று சொல்லலாமோ?

இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம் மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ?

அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்: பார்வையற்றோரின் கண்கள் காரிருளிலிருந்தும் மையிருளிலிருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும்.

ஒடுக்கப்பட்டோ ர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்: மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் பயவரில் அகமகிழ்வர்.

கொடியோர் இல்லாதொழிவர்: இகழ்வோர் இல்லாமற் போவர்: தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர்.

அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்: பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர்.

ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப் பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை: அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை.

அவன் பிள்ளைகள் என் பெயரைத் பயதெனப் போற்றுவர்: நான் செய்யவிருக்கும் என் கைவேலைப்பாடுகளைக் காணும்போது யாக்கோபின் பயவரைத் பயவராகப் போற்றுவர்: இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர்.

தவறிழைக்கும் சிந்தை கொண்டோ ர் உணர்வடைவர்: முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக் கொள்வர்.

அதிகாரம் 30.

கலகக்காரரான புதல்வருக்கு ஜயோ கேடு! என்கிறார் ஆண்டவர். என்னிடமிருந்து பெறாத திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர்: என் பண்டுதல் இன்றி உடன்படிக்கை செய்கின்றனர்: இவ்வாறு பாவத்தின் மேல் பாவத்தைக் குவிக்கின்றனர்.

என்னைக் கேளாமலேயே எகிப்திற்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்: பார்வோன் ஆற்றலில் அடைக்கலம் பெறவும் எகிப்தின் நிழலில் புகலிடம் தேடவும் போகின்றனர்.

பார்வோனின் அடைக்கலம் உங்களுக்கு மானக்கேட்டைக் கொணரும்: எகிப்தின் நிழலில் புகலிடம் தேடுவது உங்களுக்கு இகழ்ச்சி ஆகும்.

யூதாவின் தலைவர் சோவானுக்கு வந்தனர்: அதன் பதர் ஆனேசுக்குச் சென்றனர்.

பயனற்ற மக்களினத்தை முன்னிட்டு அனைவரும் மானக்கேடடைவர்: அவர்களால் யாதொரு உதவியோ பயனோ இராது: ஆனால் மானக்கேடும் அவமதிப்புமே மிஞ்சும்.

நெகேபிலுள்ள விலங்கினங்களைப் பற்றிய இறைவாக்கு: கடுந்துயரும் வேதனையும் நிறைந்த நாடு அது: பெண்சிங்கமும் ஆண்சிங்கமும், விரியன் பாம்பும் பறக்கும் நாகமும் உள்ள நாடு அது! இத்தகைய நாட்டின் வழியாய், கழுதைகளின் முதுகின்மேல் அவர்கள் தங்கள் செல்வங்களையும் ஒட்டகங்களின் திமில்கள்மேல் தங்கள் அரும்பொருட்களையும் சுமத்தி, முற்றிலும் பயனற்ற மக்களினங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள்.

எகிப்தியர் செய்யும் உதவி பயனற்றது: ஆதலால் நான் அவர்களைச் "செயலற்ற இராகாபு" என அழைத்தேன்.

இப்பொழுது நீ சென்று அவர்கள் முன் பலகையில் பதித்து வை: ஏட்டுச்சுருள் ஒன்றில் எழுதிவை: வருங்காலத்திற்கென என்றுமுள சான்றாக அது விளங்கும்.

ஏனெனில், அவர்கள் கலகம் செய்யும் மக்களாயும் பொய்யுரைக்கும் பிள்ளைகளாயும், ஆண்டவரின் திருச்சட்டத்திற்குச் செவிசாய்ப்பதை விரும்பாத பிள்ளைகளாயும் உள்ளனர்.

திருப்பார்வையாளரிடம் அவர்கள் "திருப்பார்வை காண வேண்டாம்" என்றும், திருக்காட்சியாளரிடம், "எங்களுக்கென உண்மையானவற்றைக் காட்சி காணவேண்டாம்: இனிமையானவற்றை எங்களுக்குக் கூறுங்கள்: மாயமானவற்றையே கண்டு சொல்லுங்கள்:

தடம் மாறிச் செல்லுங்கள்: நெறியை விட்டு விலகுங்கள்: இஸ்ரயேலின் பயவரை எங்கள் பார்வையிலிருந்து அகற்றுங்கள்" என்கிறார்கள்.

ஆதலால் இஸ்ரயேலின் பயவர் கூறுவது இதுவே: என் எச்சரிக்கையை நீங்கள் அவமதித்தீர்கள்: அடக்கி ஆள்வதிலும் ஒடுக்குவதிலும் நம்பிக்கை வைத்தீர்கள்: அவற்றையே பற்றிக் கொண்டிருந்தீர்கள்.

ஆதலால், உயர்ந்த மதிற்சுவரில் இடிந்துவிழும் தறுவாயிலுள்ள பிளவு திடீரென்று நொடிப்பொழுதில் சரிந்து விழுவதுபோல் இந்தத் தீச்செயல் உங்கள்மேல் விழும்.

அது இடிந்து வீழ்வது, குயவனின் மட்கலம் சுக்குமறாய் உடைந்து போவதுபோல் இருக்கும்: அடுப்பிலிருந்து நெருப்பு எடுப்பதற்கோ பள்ளத்திலிருந்து நீர் மொள்வதற்கோ உடைந்த துண்டுகளில் எதுவுமே உதவாது.

என் தலைவரும் இஸ்ரயேலின் பயவருமான ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என்னிடம் திரும்பி வந்து அமைதியுற்றால் விடுதலை பெறுவீர்கள்: அமைதியிலும் நம்பிக்கையிலுமே நீங்கள் வலிமை பெறுவீர்கள்: நீங்களோ ஏற்க மறத்தீர்கள்.

"முடியாது, நாங்கள் குதிரை ஏறி விரைந்தோடத்தான் செய்வோம்" என்கிறீர்கள்: ஆம், தப்பியோடத்தான் போகிறீர்கள்: "விரைந்தோடும் தேரில் ஏறிச்செல்வோம்" என்கிறீர்கள்: ஆம், உங்களைத் துரத்தி வருபவர் விரைந்து வருவார்.

ஒருவன் மிரட்ட, நீங்கள் ஆயிரம் பேர் ஓடுவீர்கள்: ஜவர் அச்சுறுத்த நீங்கள் உயிர் தப்பி ஓடுவீர்கள்: மலை உச்சிக் கொடிமரம் போல், குன்றின்மேல் சின்னம்போல் எஞ்சி நிற்பீர்கள்.

ஆதலால் உங்களுக்குக் கருணை காட்ட ஆண்டவர் காத்திருப்பார்: உங்களுக்கு இரங்குமாறு எழுந்தருள்வார்: ஏனெனில் ஆண்டவர் நீதியின் கடவுள்: அவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.

சீயோன் வாழ் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே, நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்: அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார். நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவி சாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார்.

என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்கு துன்பமெனும் அப்பத்தையும் ஒடுக்குதலெனும் நீரையும் கொடுத்திருந்தாலும், இனித் தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார்: உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள்.

நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் "இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்" என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்.

அப்போது வெள்ளி பொதிந்த உங்கள் சிலைகளையும் பொன் வேய்ந்த உங்கள் வார்ப்புப் படிமங்களையும் தீட்டாகக் கருதுவீர்கள்: தீட்டானவையாக அவற்றைக் கருதி வெளியே வீசித் "தொலைந்து போ" என்பீர்கள்.

நீங்கள் நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்: நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும்: அந்நாளில் உன் மந்தை பரந்த மேய்ச்சல் வெளியில் மேயும்.

முறத்தாலும் சுளகாலும் பற்றப்பட்டுச் சுவையூட்டப்பட்ட தீனியை நிலத்தை உழும் காளைகளும் கழுதைகளும் தின்னும்.

கோட்டைகள் இடிந்து விழுகின்ற மிகப்பெரும் அழிவுநாளில் வானளாவிய மலைகள் அனைத்தின் மேலும் உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும் கால்வாய்களும் நீரோடைகளும் தோன்றும்.

ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி, தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில், நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்: கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்று திரண்டாற்போல ஏழு மடங்காகும்.

இதோ, ஆண்டவரின் திருப்பெயர் தொலையிலிருந்து வருகின்றது: அவர் கனல்கக்கும் சினத்தோடும் பொறுக்க ஒண்ணாச் சீற்றத்தோடும் வருகின்றார்: அவர் உதடுகள் கடும் சினத்தால் துடிக்கின்றன: அவர் நாக்கு பொசுக்கும் நெருப்பைப் போன்றது.

அவர் மூச்சு, கழுத்தளவு பாயும்வெள்ளம்போல வருகின்றது: அழிவு என்னும் சல்லடையில் மக்களினங்களைச் சலித்து வழிதவறச் செய்யும் கடிவாளத்தை மக்களின் வாயில் மாட்ட வருகின்றார்.

புனித விழாக் கொண்டாடும் இரவில் பாடுவதுபோல் நீங்கள் மகிழ்ச்சிப் பாடல் பாடுவீர்கள்: இஸ்ரயேலின் பாறையான ஆண்டவர் மலைக்குச் செல்லும்போது குழலிசைத்துச் செல்வோரைப்போல் உங்கள் உள்ளம் அக்களிக்கும்.

ஆண்டவர் தம் மாட்சி மிகு குரலை எங்கும் ஒலிக்கச் செய்வார்: அவர், பொங்கியெழும் சீற்றம் கொண்டு, விழுங்கும் நெருப்பு, பெருமழை, சூறாவளிக்காற்று, கல்மழை இவற்றால் தம் தண்டிக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவார்.

ஆண்டவரின் குரலொளி கேட்டு அசீரியர் நடுநடுங்குவர்: ஆண்டவர் தம் கோலால் அவர்களை அடிப்பார்.

உங்களின் யாழிசைக்கும், தம்புருவின் ஓசைக்கும் ஏற்ப, ஆண்டவர் தம் கோலால் அடிமேல் அடி அடித்து அவர்களை நொறுக்குவார்: அவர்களோடு கைகளைச் சுழற்றி வன்மையாகப் போரிடுவார்.

ஏனெனில், முன்னரே அவர்களுக்காக நெருப்புக்குழி ஒன்று ஏற்பாடாகியுள்ளது. அது அரசனுக்கென்று தயார் செய்யப்பட்டது. ஆழமும், அகலமுமான நெருப்புக்குழியால் உருவாக்கப்பட்ட அதில் நெருப்பும், விறகுக்கட்டையும் ஏராளமாக நிறைந்துள்ளன. ஆண்டவரின் மூச்சு கந்தக மழைபோல் அவற்றின் மேல் நெருப்பு மூட்டும்.

அதிகாரம் 31.

துணை வேண்டி எகிப்துக்குச் செல்வோருக்கு ஜயோ கேடு! அவர்கள் குதிரைகளுக்காகக் காத்துக் கிடக்கின்றர்: பெரும் தேர்ப்படைகளையும் வலிமைமிகு குதிரை வீரர்களையும் நம்பியிருக்கிறார்கள்: இஸ்ரயேலின் பயவருக்காக ஆவலுடன் காத்திருக்கவில்லை: ஆண்டவரைத் தேடுவதுமில்லை:

ஆனால் அவரோ ஞானமுடையவர்: தீங்கை வருவிப்பவர்: தம் வார்த்தைகளின் இலக்கை மாற்றாதவர்: தீயோர் வீட்டார்க்கும் கொடியவருக்கு உதவுவோருக்கும் எதிராகக் கிளர்ந்தெழுபவர்.

எகிப்தியர் வெறும் மனிதரே, இறைவன் அல்ல: அவர்கள் குதிரைகள் வெறும் தசைப்பிண்டங்களே, ஆவிகள் அல்ல: ஆண்டவர் தம் கையை ஓங்கும் போது உதவி செய்பவன் இடறுவான்: உதவி பெறுபவன் வீழ்வான்: அவர்கள் அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர்.

ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: சிங்கமோ இளஞ்சிங்கமோ தன் இரைமேல் பாய்ந்து கர்ச்சிக்கும் போது மேய்ப்பர் கூட்டம் தனக்கெதிராய் எழுப்பும் கூக்குரலால் திகிலடைவதில்லை: அவர்கள் ஆரவாரத்தைப் பொருட்படுத்துவதில்லை. அதுபோல் படைகளின் ஆண்டவர் சீயோன் மலைமேலும் அதன் குன்றின்மேலும் போர்புரிய இறங்கி வருவார்.

பறக்கும் பறவைகள் போல் படைகளின் ஆண்டவர் எருசலேமுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்: அதைப் பாதுகாத்து விடுவிப்பார்: தண்டிக்காமல் தப்புவிப்பார்.

இஸ்ரயேல் மக்களே! எனக்கெதிராகக் கலகம் செய்வதில் ஆழ்ந்துவிட்டீர்கள்: என்னிடம் திரும்பி வாருங்கள்.

அந்நாளில் உங்களுள் ஒவ்வொருவரும் தமக்குப் பாவத்தை விளைவித்துக் கொள்ளுமாறு செய்த பொன், வெள்ளிச் சிலைகளைத் பக்கி எறிந்து விடுவார்.

"அசீரியன் வாளால் வீழ்வான்: ஆனால் மனிதரின் வாளாலன்று: அவனை வாள் விழுங்கிவிடும்: ஆனால் அது மனிதரின் வாளன்று: அவன் வாள் கண்டு, தப்பி ஓடுவான்: அவனுடைய இளங்காளையர் அடிமையாக்கப்படுவர்.

அவன் பாறை திகிலுற்று ஓடிப்போகும்: அவன் தலைவர் கலக்கமுற்று ஓடுவர்" என்கிறார், சீயோனில் தீப்பிழம்பையும் எருசலேமில் தீச்சூளையையும் கொண்ட ஆண்டவர்.

அதிகாரம் 32.

இதோ, ஓர் அரசர் நேர்மையுடன் அரசாள்வார்: தலைவர்களும் நீதியோடு ஆட்சி செய்வர்:

ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுங்கிடமாகவும் புயலுக்குப் புகலிடமாகவும் வறண்ட நிலத்தில் நீருள்ள கால்வாய் போலும் காய்ந்த மண்ணில் பெரும் குன்றின் நிழல் போலும் இருப்பர்.

அப்பொழுது பார்வை உடையவரின் கண்கள் மறைக்கபட்டிரா. கேள்வியுடையவரின் செவிகள் அடைக்கப்பட்டிரா.

பதறும் நெஞ்சங்கள் அறிவை உணர்ந்துகொள்ளும்: திக்குவாயரின் வாய் தயக்கமின்றித் தெளிவுடன் பேசும்.

மூடர் இனிச் சான்றோர் என அழைக்கப்படார்: கயவர் இனிப் பெரியோர் எனக்கருதப்படார்:

ஏனெனில், மூடர் மடமையாய்ப் பேகுகின்றனர்: அவர்களின் மனம் தீமை செய்யத் திட்டமிடும்: அவர்களின் சிந்தை இறைப்பற்றின்றித் தீச்செயல் செய்வதையே நாடும்: அவர்கள் ஆண்டவரைப்பற்றித் தவறாகவே பேசுவர்: பசித்தோரின் பசி போக்கமாட்டார்: தாகமுற்றோர்க்கு நீர் தர மறுப்பார்.

கயவரின் நயவஞ்சகச் செயல்கள் தீமையானவை: வறியோர் வழக்கில் நீதி இருப்பினும், வஞ்சக வார்த்தைகளால் ஏழைகளை அழிக்கும் தீங்கானவற்றை அவர்கள் திட்டமிடுகின்றனர்.

சான்றோர் உயர்வானவற்றைச் சிந்திக்கின்றனர்: அவர்கள் சான்றாண்மையில் நிலைத்து நிற்பர்.

பகட்டாக வாழும் பெண்களே, எழுந்து என் குரலுக்குச் செவிகொடுங்கள்: கவலையற்ற புதல்வியரே, என் வார்த்தையைக் கேளுங்கள்.

கவலையற்ற பெண்களே, ஓராண்டும் சில நாள்களும் சென்றபின் நீங்கள் நடுநடுங்குவீர்கள். ஏனெனில் திராட்சை அறுவடை அற்றுப்போகும்: கனிகொய்யுங் காலம் இனி வராது.

பகட்டாக வாழும் மங்கையரே, அஞ்சி நடுங்குங்கள்: கவலையற்ற மகளிரே, நடுநடுங்குங்கள்: உடைகளை உரிந்து, களைந்து இடையில் சாக்கு உடையைக் கட்டிக் கொள்ளுங்கள்.

செழுமையான வயல்களைக் குறித்தும் வளமான திராட்சைத் தோட்டத்தை முன்னிட்டும் மாரடித்து ஓலமிட்டு அழுங்கள்.

முட்களும் முட்புதர்களும் ஓங்கி வளர்ந்துள்ள என் மக்களின் நிலத்திற்காகவும் களிப்புமிகு நகரில் உள்ள மகிழ்ச்சி நிறை இல்லங்கள் அனைத்திற்காகவும் அழுங்கள்.

அரண்மனை பாழடையுமாறு விடப்படும்: ஆரவாரமிக்க நகர் வெறுமையாகும்: குன்றும் காவல் மாடமும் என்றுமுள குகைகளாகும்: அங்குக் காட்டுக் கழுதைகள் களிப்படையும்: மந்தைகள் மேயும்.

மீண்டும் உன்னதத்திலிருந்து ஆவி நம்மேல் பொழியப்படும்: பாலைநிலம் செழுமையான தோட்டமாகும்: செழுமையான தோட்டம் அடர்ந்த காடாகத் தோன்றும்.

நீதி பாலைநிலத்தில் குடிகொண்டிருக்கும்: நேர்மை வளமான வயல்களில் வாழும்.

நேர்மையால் வரும் பயன் நல்வாழ்வு: நீதியால் விளைவன என்றுமுள அமைதியும் நம்பிக்கையும்.

என் மக்கள் அமைதி சூழ் வீடுகளிலும் பாதுகாப்பான கூடாரங்களிலும் தொல்லையற்ற தங்குமிடங்களிலும் குடியிருப்பர்.

ஆனால், காடு அழியக் கல்மழை பொழியும்: நகரம் தாழ்நிலை அடைவது உறுதி.

நீர்வளமிக்க இடங்களில் எல்லாம் பயிர்செய்து தாராளமாக மேயுமாறு, மாட்டையும் கழுதையையும் அவிழ்த்துவிடும் நீங்கள் நற்பேறு பெற்றவர்கள்.

அதிகாரம் 33.

அழித்தொழிப்பவனே, உனக்கு ஜயோ கேடு! நீ இன்னும் அழித்தொழிக்கப்படவில்லையே! நம்பிக்கைத் துரோகியே, உனக்கு எவரும் துரோகம் செய்யவில்லையா! நீ அழித்தொழிப்பதை முடித்ததும், நீயும் அழிந்தொழிவாய்: நீ நம்பிக்கைத் துரோகம் செய்தவுடன், உனக்கும் துரோகம் செய்வார்கள்.

ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும்: நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம்: அதிகாலைதோறும் எங்களைக் காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும் இருப்பீராக!

ஆரவராப் பேரொலி கேட்க மக்களினங்கள் பின்வாங்கி ஓடுகின்றன: நீர் கிளர்ந்தெழும்போது வேற்றினத்தார் சிதறுண்டு போகின்றனர்.

பச்சைப் புழுக்கள் சேர்ப்பதுபோல் கொள்ளைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. வெட்டுக்கிளிகள் பாய்வதுபோல் அவற்றின்மேல் மனிதர் பாய்கின்றனர்.

ஆண்டவர் மாட்சிக்கு உரியவர்: ஏனெனில் அவர் உன்னதத்தில் உறைகின்றார்: சீயோனை அவர் நீதியாலும் நேர்மையாலும் நிரப்புகின்றார்:

உங்கள் காலத்தில் அவரே பாதுகாப்பாய் இருப்பார்: அவர் உங்களுக்கு முழு விடுதலை வழங்கி ஞானத்தையும் அறிவாற்றலையும் நல்குவார். ஆண்டவரைப்பற்றிய அச்சமே அவர்களது அரும்செல்வம்.

இதோ! வலிமைமிக்க அவர்களுடைய வீரர்கள் வீதியில் நின்று கதறியழுகின்றனர்: சமாதானத்தின் பதர் மனங்கசந்து அழுகின்றனர்.

நெடுஞ்சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லை: வழிப்பயணிகள் கடந்து செல்வதும் இல்லை: உடன்படிக்கை முறிக்கப்படுகின்றது: ஒப்பந்தம் மீறப்படுகின்றது: மனிதருக்கு மரியாதையே கிடையாது.

நாடு புலம்பியழுது சோர்ந்து போகின்றது: லெபனோன் வெட்கி நாணித் தளர்ச்சியடைகின்றது: சாரோன் பாலைநிலம்போல் ஆகின்றது: பாசானும் கர்மேலும் இலையுதிர்க்கின்றன.

ஆண்டவர் கூறுகின்றார்: இப்பொழுது நான் எழுந்தருள்வேன்: இப்பொழுது என்னை உயர்த்திக் கொள்வேன்: இப்பொழுது என்னை மாட்சிமைப் படுத்துவேன்.

நீங்கள் பதரைக் கருத்தாங்கி, வைக்கோலைப் பெற்றெடுத்தீர்கள்: உங்கள் உயிர்மூச்சு நெருப்பாகி உங்களையே எரித்துவிடும்.

சுண்ணாம்பு நீற்றப்படுவதைப் போல் மக்களினங்கள் பொசுக்கப்படுவார்கள்: முட்கள்போல் வெட்டுண்டு நெருப்புக்கு இரையாவார்கள்.

தொலையில் உள்ளோரே, நான்செய்வதைக் கேளுங்கள்: அருகில் உள்ளோரே, என் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள்.

சீயோன்வாழ் பாவிகள் அஞ்சுகின்றனர்: இறைப்பற்றில்லாரைத் திகில் ஆட்கொள்கின்றது. சுட்டிடெரிக்கும் நெருப்பில் நம்மில் எவர் தங்குவார்? என்றென்றும் பற்றியெரியும் தழலில் நம்மில் எவர் இருப்பார்?

நீதிநெறியில் நடப்பவர், நேர்மையானவற்றைப் பேசுபவர். கொடுமைசெய்து பெற்ற வருவாயை வெறுப்பவர், கையூட்டு வாங்கக் கை நீட்டாதவர், இரத்தப் பழிச் செய்திகளைச் செவி கொடுத்துக் கேளாதவர், தீயவற்றைக் கண்கொண்டு காணாதவர்:

அவர்களே உன்னதங்களில் வாழ்வர்: கற்பாறைக் கோட்டைகள் அவர்களது காவல்அரண் ஆகும்: அவர்களுக்கு உணவு வழங்கப்படும்: தண்ணீர் தரப்படுவதும் உறுதி.

அரசரை உங்கள் கண்கள் அழகுமிக்கவராகக் காணும்: பரந்து விரிந்த நாட்டை நீங்கள் காண்பீர்கள்:

திகிலைப்பற்றி உங்கள் மனம் இவ்வாறு சிந்திக்கும்: "குடிக்கணக்குச் செய்தவன் எங்கே? திறைப்பொருளை நிறுத்துப் பார்த்தவன் எங்கே? கோபுரங்களை எண்ணிக்கை இட்டவன் எங்கே?

உங்களுக்கு விளங்காத குளறுபடியான பேச்சையும் புரியாத வேற்றுமொழியையும் கொண்ட காட்டுமிராண்டி மக்களை நீங்கள் மீண்டும் காணமாட்டீர்கள்.

நம் விழாக்களின் நகரான சீயோனைப் பார்: அமைதியின் இல்லமாகவும், பெயர்க்கப்படாத முளைகளும் அறுபடாத கயிறுகளும் கொண்ட அசைக்க முடியாத கூடாரமாகவும் எருசலேம் இருப்பதை உங்கள் கண்கள் காணும்.

ஏனெனில், அங்கே ஆண்டவர் நமக்கெனத் தம் மாட்சியை விளங்கச் செய்வார்: அது அகன்ற ஆறுகளையும் விரிந்த நீரோடைகளையும் உடைய இடம் போன்றது: துடுப்புப் படகு அங்குப் போவதில்லை: மாபெரும் கப்பல் கடந்து வருவதும் இல்லை.

ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்: ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்: ஆண்டவரே நமக்கு வேந்தர்: அவரே நமக்கு மீட்பு அளிப்பவர்.

உங்கள் வடக்கயிறுகள் தளர்ந்து தொங்கும்: அவற்றால் பாய் மரத்தை நிலையாய்ப் பிடிக்க இயலாது: பாய் விரிக்கவும் முடியாது: அப்பொழுது திரளான கொள்ளைப் பொருள் பங்கிடப்படும்: முடவரும் கொள்ளைப் பொருளைச் சூறையாடுவர்.

சீயோனில் வாழ்பவர் எவரும் "நான் நோயாளி" என்று சொல்லமாட்டார். அதில் குடியிருக்கும் மக்களின் தீச்செயல் மன்னிக்கப்படும்.

அதிகாரம் 34.

வேற்றினத்தாரே, நெருங்கி வந்து செவிகொடுங்கள்: மக்களினங்களே, கவனித்துக் கேளுங்கள்: மண்ணுலகும் அதில் வாழ்வன யாவும் கேட்கட்டும்: வையகமும் அதில் தோன்றுவன யாவும் செவிகொடுக்கட்டும்.

வேற்றினத்தார் அனைவர் மேலும் ஆண்டவர் சீற்றம் அடைந்துள்ளார்: அவர்களின் படைத்திரள் முழுவதற்கும் எதிராக வெஞ்சினம் கொண்டுள்ளார்: அவர்களை அவர் அடியோடு அழிப்பார்: அவர்களைப் படுகொலைக்கு உள்ளாக்குவார்.

அவர்களில் வாளுக்கு இரையானோர் பக்கியெறிப்படுவர்: அவர்களின் பிணங்கள் துர்நாற்றமடிக்கும்: அவர்களின் இரத்தம் மலைகளில் வழிந்தோடும்.

விண்ணுலகின் படைத்திரள் அனைத்தும் உருகிப்போகும்: வானின் வெளி ஏட்டுச் சுருளெனச் சுருட்டப்படும்: திராட்சை இலை உதிர்வதுபோலும் அத்தி இலை வீழ்வதுபோலும், வான் படைகள் அனைத்தும் உதிர்ந்து விடும்.

ஆண்டவரது வாள் வானில் வெளியேறக் குடித்துள்ளது: இதோ, ஏதோமின் மேலும் அழிவுக்கென ஒதுக்கப்பட்ட மக்களினத்தின் மேலும் தண்டனைத் தீர்ப்புக்காக அது இறங்கப்போகிறது.

அவரது வாளில் செம்மறிக்குட்டி, வெள்ளாடு ஆகியவற்றின்஥ இரத்தக் கறை படிந்துள்ளது: அதில் கிடாய்களின் சிறுநீரகக் கொழுப்பு படிந்துள்ளது: ஏனெனில், பொட்சராவில் ஆண்டவருக்குப் பலி கொடுக்கப்படும்: ஏதோம் நாட்டில் படுகொலை நடக்கும்.

அவர்களின் காட்டெருதுகள் செத்துவிழும்: எருதுகளுடன் காளைகளும் மடியும்: அவர்களின் நாடு இரத்தத்தை வெறியேறக் குடிக்கும்: தரைப்புழுதி கொழுப்பால் மூடப்படும்.

ஆண்டவர் பழிதீர்க்கும் நாள் அது: சீயோன் வழக்கில் நல்தீர்ப்பீன் ஆண்டு அது.

ஏதோமின் நீரோடைகள் கீலாகும்: அதன் தரைப்புழுதி கந்தகமாகும்: அதன் நிலம் கொழுந்து விட்டெரியும் கீலாகும்.

இரவும் பகலும் அது அணையாமல் எரியும்: அதன் புகை என்றென்றும் எழும்பிக் கொண்டிருக்கும்: தலைமுறை தோறும் நாடு பாழடைந்து கிடக்கும்: எவருமே அதன் வழியாய் ஒருபோதும் பயணம் செய்யார்.

கூகையும் சாக்குருவியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்: ஆந்தையும் கருங்காகமும் அங்கே தங்கியிருக்கும்: ஆண்டவர் மல்பிடித்து அதை உருக்குலையச் செய்வார்: அவர் பக்குமல் பிடித்து அதைப் பாழடையச் செய்வார்.

உயர்குடி மக்கள் அங்கே இல்லை: அரசன் என அழைக்க அங்கே யாரும் இல்லை: அதன் தலைவர் அனைவரும் ஒன்றுமில்லாது ஒழிவர்.

அதன் கோட்டைகள்மேல் முட்புதர்களும் அதன் அரண்கள்மேல் காஞ்சொறிப் பூண்டுகளும் நெருஞ்சிகளும் ஓங்கி வளரும்: அது குள்ள நரிகளின் குடியிருப்பாக மாறும்: ஆந்தைகளின் வாழ்விடம் ஆகும்.

காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளுடன் சேர்ந்து திரியும்: காட்டாடுகள் ஒன்றையொன்று கத்தி அழைக்கும்: கூளி அங்கே தங்கித் தான் இளைப்பாறுவதற்கென இடத்தைக் கண்டுபிடிக்கும்.

ஆந்தை அங்கே கூடுகட்டி முட்டை இட்டுக் குஞ்சுகள் பொரித்து, தன் நிழலில் அவற்றைச் சேர்த்து வளர்க்கும்: பருந்துகளும் சோடி சோடியாய்ச் சேர்ந்துவரும்.

ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்: "எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை, துணையின்றி எதுவும் இருப்பதில்லை" ஏனெனில், ஆண்டவரின் வாய் மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது.

அவரே அவர்களுக்கென்று சீட்டுப் போட்டார்: அவர்தம் கை, மல் பிடித்து நாட்டை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தது: அவர்கள் அதை என்றுமுள உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்: தலைமுறைதோறும் அதில் தங்கி வாழ்வர்.

அதிகாரம் 35.

பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்: பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும்.

அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்: லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்: கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்: ஆண்டவர் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள்.

தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்: தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.

உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்: அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்."

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்: காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.

அப்பொழுது, காழனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும்.

கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்: தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்: குள்ளநரி தங்கும் வளைகள்எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும்.

அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்: அது "பய வழி" என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோ ர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்: அவ்வழிவரும் பேதையரும் வழி தவறிச் செல்லார்.

அங்கே சிங்கம் இராது: அவ்வழியில் கொடிய விலங்குகள் செல்வதில்லை, காணப்படுவதுமில்லை: மீட்படைந்தவர்களே அவ்வழியில் நடப்பார்கள்.

ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோ ர் திரும்பி வருவர்: மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர்: அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்: அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்: துன்பமும் துயரமும் பறந்தோடும்.

அதிகாரம் 36.

எசேக்கியா அரசனது ஆட்சியின் பதினான்காம் ஆண்டில் அசீரியாவின் மன்னன் சனகெரிபு அரண்சூழ்ந்த யூதா நகர்கள் அனைத்திற்கும் எதிராகப் படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.

பின்பு அசீரிய மன்னன் இலாக்கிசிலிருந்து இரப்சாக்கே என்பவனைப் பெரும்படையுடன் எருசலேமுக்கு எசேக்கியா அரசனிடம் அனுப்பி வைத்தான். அவனும் புறப்பட்டு வந்து, "வண்ணார் துறை" நெடுஞ்சாலை அருகிலிருந்த மேற்குக் குளக் கால்வாய்க் கரையில் நின்றுகொண்டிருந்தான்.

அப்பொழுது அவனிடம் யூதாவைச் சார்ந்த அரண்மனை மேற்பார்வையாளரும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிம், எழுத்தரான செபுனா, பதிவாளரும் ஆசாபின் மகனுமான யோவாகு ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.

இரப்சாக்கே அவர்களை நோக்கி, "எசேக்கியாவிடம் நீங்கள் சொல்ல வேண்டியது: மாவேந்தர் அசீரிய மன்னர் கூறுவது இதுவே: யாரை நம்பி நீ இப்படிச் செய்கிறாய்?

வெறும் வாய்ப்஥பேச்சு போர்ச் சூழலுக்கும் போர் வலிமைக்கும் ஈடாகும் என்று நீ கருதுகின்றாயா? யாரை நம்பி நீ எனக்கெதிராய்க் கிளர்ச்சி செய்தாய்?

இதோ, முறிந்த நாணற்கோல் போன்ற எகிப்தின்மீது நீ நம்பிக்கை வைத்துள்ளாய்: ஒருவன் அதை ஊன்றுகோலாகக் கொண்டால், அது அவன் கைக்குள் ஊடுருவிச் சென்று காயப்படுத்தும்: எகிப்து அரசன் பார்வோனும் தன்னை நம்பிய யாவர்க்கும் இப்படியே இருப்பான்.

அல்லது, எங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது நம்பிக்கையை வைத்துள்ளோம் என்று நீங்கள் என்னிடம் சொல்வீர்களானால், அக்கடவுளின் வழிபாட்டு மேடைகளையும் பலி பீடங்களையும் இடித்தெறிந்தவன் எசேக்கியா அல்லவா? இந்த ஒரு பலி பீடத்தில் மட்டுமே நீங்கள் வழிபட வேண்டும் என்று யூதா, எருசலேம் மக்களிடம் கூறியவனும் அவனல்லவா?

இப்பொழுது என் தலைவராகிய அசீரிய அரசனுடன் பேரம் ஒன்று செய்து கொள். நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைத் தருவேன். ஆனால் அவற்றின்மேல் ஏறிச் செல்லும் திறனுள்ள வீரர்கள் உன்னிடம் உள்ளனரா?

என் தலைவரின் அதிகாரிகளுள் மிகச்சிறிய தலைவன் ஒருவனைக்கூட பின்வாங்கச் செய்ய உன்னால் முடியுமா? இப்படியிருக்க, நீ தேர்ப்படைக்காகவும் குதிரை வீரர்களுக்காகவும் எகிப்தை நம்பியிருப்பதேன்?

மேலும், ஆண்டவரின் விருப்பமின்றியா, இந்த நாட்டுக்கு எதிராக வந்து அதை அழிக்கப்போகிறேன்? ஆண்டவர் என்னிடம், ஓநீ இந்த நாட்டுக்கு எதிராகச் சென்று, அதை அழித்து விடுஓ என்று கூறியுள்ளார்" என்றான்.

எலியாக்கிம், செபுனா, யோவாகு ஆகியோர் இரப்சாக்கேயை நோக்கி, "உம் பணியாளர்களான எங்களோடு தயைகூர்ந்து அரமேய மொழியில் பேசும்: நாங்கள்"புரிந்து கொள்வோம். எங்களிடம் யூதா நாட்டு மொழியில் பேசாதீர். சுவர்மேல் இருக்கும் ஆள்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்றனர்.

அதற்கு இரப்சாக்கே, "உங்களிடம் உங்கள் தலைவனிடமும் இந்த வார்த்தைகளைக் கூறுவதற்காகவா என்னை என் தலைவர் அனுப்பி வைத்துள்ளார்? உங்களுடன் தங்கள் மலத்தைத் தின்று தங்கள் சிறு நீரைக் குடிக்கப் போகிறவர்களாகிய சுவர்மேல் அமர்ந்திருக்கின்ற இந்த ஆள்களிடம் அறிவிப்பதற்கன்றோ என்னை அனுப்பியுள்ளார்" என்றான்.

பின்பு அவன் எழுந்து நின்று யூதா நாட்டு மொழியில் உரத்த குரலில் கத்தி, "மாவேந்தர் அசீரிய மன்னரின் வார்த்தைகளைக் கேளுங்கள்:

அரசர் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில், அவனால் உங்களை விடுவிக்க இயலாது.

"ஆண்டவர் நம்மை விடுவிப்பது உறுதி: இந்நகர் அசீரிய மன்னன் கையில் ஒப்படைக்கப்படாது" என்று சொல்லி ஆண்டவர் மேல் நம்பிக்கை கொள்ளுமாறு உங்களை அவன் பண்டுவான்: அதற்கு இடம் கொடாதீர்கள்.

எசேக்கியாவிற்குச் செவிகொடுக்காதீர்கள். ஏனெனில் அசீரிய அரசர் கூறுகிறார்: என்னுடன் சமாதானம் செய்து கொள்ளுங்கள்: என்னிடம் சரணடையுங்கள்: அப்போது உங்களில் ஒவ்வொருவனும் தன் திராட்சைத் தோட்டக் கனியையும், அத்தி மரப் பழத்தையும் உண்பான்: தன் கிணற்றிலிருந்து நீரைப் பருகுவான்.

நான் வந்து உங்கள் நாட்டைப் போன்ற நாட்டிற்கு - தானியமும் திராட்சை இரசமும் மிகுதியாகக் கிடைப்பதும், உணவுப் பொருளும் திராட்சைத் தோட்டங்களும் ஏராளமாய் உள்ளதுமான நாட்டிற்கு - உங்களைக் கூட்டிச் செல்லும்வரை இது நடக்கும்.

ஓஆண்டவர் நம்மை விடுவிப்பார்ஓ என்று சொல்லி எசேக்கியா உங்களை ஏமாற்றாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மக்களினங்களின் தெய்வங்களில் எவரேனும் அசீரியா அரசரின் கையிலிருந்து தன் நாட்டை விடுவித்ததுண்டா?

ஆமாத்தின் தெய்வங்களும் அர்ப்பாதின் தெய்வங்களும் எங்கே? செபர்வயிம் தெய்வங்கள் எங்கே? என் கையிலிருந்து அவர்களால் சமாரியாவை விடுவிக்க முடிந்ததா?

அந்த நாடுகளின் தெய்வங்கள் அனைத்திலும் ஒன்றாவது என் கையிலிருந்து தன் நாட்டை விடுவித்ததுண்டா? அப்படியிருக்க, எருசலேமை என் கையிலிருந்து ஆண்டவரால் விடுவிக்க இயலுமா?"

அவர்கள் அவனுக்கு ஒருவார்த்தையும் மறுமொழியாகச் சொல்லாது மெளனமாயிருந்தார்கள். எனெனில் ஓஅவனுக்கு மறுமொழி ஒன்றும் சொல்லாதீர்கள்ஓ என்று அரசர் கட்டளையிட்டிருந்தார்.

அரண்மனை மேற்பார்வையாளரும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிம், எழுத்தரான செபுனா, பதிவாளரும் ஆசாபின் மகனுமான யோவாகு ஆகியோர் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு எசேக்கியாவிடம் வந்து இரப்சாக்கே சொல்லியவற்றை அவரிடம் அறிவித்தனர்.

அதிகாரம் 37.

எசேக்கியா அரசர் அதைக் கேட்டவுடன் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, சாக்கு உடையால் தம்மை மூடிக்கொண்டு ஆண்டவரின் இல்லம் சென்றார்.

அவர் அரண்மனை மேற்பார்வையாளர் எலியாக்கிமையும், எழுத்தர் செபுனாவையும் குருக்களுள் முதியோரையும் சாக்கு உடை போர்த்தியவர்களாய் ஆமோட்சின் மகன் எசாயா இறைவாக்கினரிடம் அனுப்பி வைத்தார்.

அவர்கள் அவரிடம், "எசேக்கியா கூறியது இதுவே: இந்த நாள் துன்பமும் கண்டனமும் இழி சொல்லும் நிறைந்த நாள்: பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் நேரம் நெருங்கிவிட்டது: ஆனால் பெற்றெடுப்பதற்கு ஆற்றல் இல்லை.

தன் தலைவனாகிய அசீரிய மன்னனால் அனுப்பப்பட்ட இரப்சாக்கே உயிராற்றல் நிறை கடவுளை இழித்துரைத்த சொற்களை ஒருவேளை உம் கடவுளாகிய ஆண்டவர் கேட்டிருக்கக் கூடும். உம் கடவுளாகிய ஆண்டவர் அச்சொற்களை முன்னிட்டு அவர்களைக் கண்டித்தாலும் கண்டிப்பார். ஆதலால், இன்னும் உயிரோடிருக்கும் எஞ்சியோருக்காக உம் மன்றாட்டை எழுப்பியருளும்" என்றார்கள்.

இவ்வாறு எசேக்கியா அரசனின் அலுவலர் எசாயாவிடம் வந்து கூறியபோது,

அவர் அவர்களிடம் கூறியபோது: "நீங்கள் உங்கள் தலைவரிடம் சொல்ல வேண்டியது இதுவே: அசீரிய அரசனின் ஆள்கள் என்னை இழித்துரைத்த சொற்களைக் கேட்டு நீ அஞ்சாதே.

இதோ நான் ஓர் ஆவியை அவனிடம் அனுப்பி அவன் வதந்தி ஒன்றைக் கேட்குமாறு செய்வேன்: அவனும் தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்வான், அவன் நாட்டிலேயே அவனை வாளுக்கு இரையாக்குவேன்" என்கிறார் ஆண்டவர்.

இதற்கிடையில் அசீரிய மன்னன் இலாக்கிசு நகரைவிட்டுப் புறப்பட்டு லிப்னாவுக்கு எதிராகப் போர் புரிந்து கொண்டிருந்ததை இரப்சாக்கே கேள்விப்பட்டான். எனவே அவனும் அங்கே சென்று அசீரிய மன்னனைக் கண்டான்.

"எத்தியோப்பியா மன்னன் திர்காக்கா உனக்கெதிராய்ப் போர் தொடுக்கப் புறப்பட்டு வருகிறான்" என்ற செய்தியை அசீரிய மன்னன் கேள்விப்பட்டு எசேக்கியாவிடம் பதரை அனுப்பி,

யூதா அரசர், எசேக்கியாவிற்கு அறிவித்தது: நீ நம்பிக்கை வைத்துள்ள உன் கடவுள், "எருசலேம் அசீரிய மன்னன் கையில் ஒப்புவிக்கப்படமாட்டாது" என்று சொல்லி உன்னை ஏமாற்ற விடாதே.

அசீரிய மன்னர்கள் தாங்கள் முற்றிலும் அழிக்க விரும்பும் நாடுகளுக்குச் செய்த அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய்: நீ மட்டும் தப்பித்துக் கொள்ள முடியுமா?

என் மூதாதையர் அழித்துவிட்ட கோசான், ஆரான், இரட்சேபு மக்களையும் தெலாசாரில் உள்ள ஏதேன் மக்களையும் அந்நாட்டுத் தெய்வங்களால் காப்பாற்ற முடிந்ததா?

ஆமாத்தின் மன்னன் எங்கே? அர்ப்பாதின் மன்னன் எங்கே? செபர்வயிம், ஏனா, இவ்வா ஆகியவற்றின் மன்னர்கள் எங்கே?

எசேக்கியா பதரிடமிருந்து மடலை வாங்கிப் படித்தார்: அவர் ஆண்டவரின் இல்லம் சென்று ஆண்டவர் திருமுன் அதை விரித்து வைத்தார்.

எசேக்கியா ஆண்டவரிடம் மன்றாடினார்:

"இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவரே, கெருபுகள் மேல் வீற்றிருப்பவரே, உலகிலுள்ள அனைத்து அரசுகளுக்கும் நீர் ஒருவரே கடவுள்: விண்ணுலகையும், மண்ணுலகையும் உருவாக்கியவர் நீரே.

ஆண்டவரே, செவிசாய்த்துக் கேளும். ஆண்டவரே, கண் திறந்து பாரும். கடவுளை இழித்துரைக்குமாறு சனகெரிபு சொல்லி அனுப்பிய சொற்கள் அனைத்தையும் கேளும்.

ஆண்டவரே, அசீரிய மன்னர்கள் அனைத்து நாடுகளையும் அவற்றின் நிலங்களையும் பாழடையச் செய்தது உண்மையே!

அவற்றின் தெய்வங்களை நெருப்புக்குள் எறிந்ததும் உண்மையே. ஏனெனில் அவை தெங்வங்கள் அல்ல: மனிதரின் கைவினைப் பொருள்களே: மரமும் கல்லுமே! எனவேதான் அவற்றை அவர்கள் அழித்தொழித்தனர்.

ஆகவே, எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, நீர் ஒருவரே ஆண்டவர் என்று உலகின் அரசுகள் அனைத்தும் அறிந்து கொள்ளுமாறு எங்களை அசீரியன் கையினின்று விடுவித்தருளும்.

அப்போது, ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவுக்கு இவ்வாறு சொல்லயனுப்பினார்: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "அசீரிய மன்னன் சனகெரிபை முன்னிட்டு நீ என்னை நோக்கி மன்றாடினாய்.

அவனைக் குறித்து ஆண்டவர் சொல்லி வாக்கு இதுவே: ஓகன்னி மகள் சீயோன் உன்னை அவமதித்து எள்ளி நகையாடுகிறாள்: மகள் எருசலேம் உன் பின்னால் நின்று இகழ்ச்சியுடன் தலையசைக்கிறாள்.

யாரை நீ பழித்து இடித்துரைத்தாய்? யாருக்கு எதிராய் நீ உன் குரலை உயர்த்தினாய்? யாரைச் செருக்குடன் நீ உற்றுப் பார்த்தாய்? இஸ்ரயேலரின் பயவருக்கு எதிராக அன்றோ!

நீ உன் பணியாளர்களைக் கொண்டு என் தலைவரைப் பழித்துரைத்து, என் பெரும் தேர்ப்படையுடன் நான் மலை உச்சிகளுக்கும் லெபனோனின் மலைச்சரிவுகளுக்கும் ஏறினேன்: வானளாவிய அதன் கேதுரு மரங்களையும் மிகச்சிறந்த தேவதாரு மரங்களையும் வெட்டி வீழ்த்தினேன்: கடை எல்லையிலுள்ள அதன் உச்சிக்கும் அடர்த்தியான அதன் காட்டுப் பகுதிக்கும் வந்தேன்.

நான் கிணறு வெட்டி அதன் நீரைப் பருகினேன்: என் காலடியால் எகிப்தின் நீரோடைகள் அனைத்தையும் வற்றிப்போகச் செய்தேன்ஓ என்று சொன்னாய்.

நானே தொடக்கத்திலிருந்து முடிவெடுத்து செயல்படுகிறேன் என்று நீ கேள்விப்பட்டதில்லையா? முற்காலம் தொட்டுத் திட்டமிட்டதை இன்று நான் செயல்படுத்துகிறேன்: அதனால்தான் அரண்சூழ் நகர்களை நீ பாழடைந்த மண்மேடுகளாகச் செய்தாய்.

அவற்றில்வாழ் மக்கள் ஆற்றல்குன்றி நடுநடுங்கி நாணிக்குறுகினர்: வளருமுன் அனல்காற்றால் கருகிவிடும் வயல்வெளிச் செடிபோன்றும், அறுகம் புல் போன்றும், கூரைமேல் வளர் புல் போன்றும், அவர்கள் ஆயினர்.

நீ இருப்பது, நீ போவது, நீ வருவது, எனக்கெதிராய் நீ கொந்தளிப்பது - அனைத்ததையும் நான் அறிவேன்.

எனக்கெதிராய் நீ கொந்தளித்ததும் செருக்குடன் நீ பேசியதும் என் செவிகளுக்கு எட்டியது: எனவே உன் மூக்கில் என் வளையத்தையும் உன் வாயில் என் கடிவாளத்தையும் மாட்டுவேன்: நீ வந்த வழியே உன்னைத் திருப்பி விடுவேன்.

இதுவே உனக்கு அடையாளம்: தானாய் விழுந்து முளைப்பதை இந்த ஆண்டும், அதிலிருந்து வளர்வதை இரண்டாம் ஆண்டும் உண்பாய். மூன்றாம் ஆண்டோ விதைத்து அறுவடை செய்வாய்: திராட்சைச் செடி நட்டு அதன் கனிகளை உண்பாய்.

யூதா வீட்டாருள் தப்பிப்பிழைத்த எஞ்சியோர் ஆழ வேர்விட்டு மேலே கனி தருவர்.

ஏனெனில் எஞ்சியோர் எருசலேமிலிருந்தும் தப்பிப்தோர் சீயோன் மலையினின்றும் புறப்பட்டு வருவர்: படைகளின் ஆண்டவரது பேரார்வமே இதைச் செய்து முடிக்கும்.

ஆதலால் அசீரிய மன்னனை முன்னிட்டு ஆண்டவர் கூறுவது இதுவே: அவன் இந்த நகருக்குள் நுழையமாட்டான்: ஓர் அம்பும் எய்ய மாட்டான்: அவன் கேடயம் தாங்கி நகர்முன் வரத் துணியமாட்டான்: அதை முற்றுகையிடவும் மாட்டான்.

வந்த வழியே அவன் திரும்பிச் செல்வான்: இந்நகருக்குள் அவன் நுழையவே மாட்டான்," என்கிறார் ஆண்டவர்.

என் பொருட்டும் என் ஊழியன் தாவீது பொருட்டும் இந்நகரைக்"காத்தருள்வேன், விடுவிப்பேன்.

ஆண்டவரின் பதர் புறப்பட்டுச்சென்று அசீரியரின் பாசறையிலிருந்து ஓர் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேசைச் சாகடித்தார். மறுநாள் காலையில் ஏனையோர் விழித்தெழுந்தனர். இதோ, எங்கும் பிணங்஥களைக் கண்டனர்.

உடனே அசீரிய மன்னன் சனகெரிபு அங்கிருந்து திரும்பி நினிவே சென்று தங்கியிருந்தான்.

ஒருநாள் அவன் நிஸ்ரோக்கு என்னும் தன் தெய்வத்தின் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது அதிரமெலக்கு, சரேட்சர் என்ற அவன் புதல்வர்கள் வாள்முனையில் அவனைக் கொன்றுவிட்டு அரராத்து நாட்டிற்குத் தப்பியோடினர். அவனுக்குப்பின் ஏசர்கத்தோன் என்ற அவன் மகன் ஆட்சி செய்தான்.

அதிகாரம் 38.

அந்நாள்களில், எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்: ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, "ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும்: ஏனெனில் நீர் சாகப்போகிறீர்: பிழைக்க மாட்டீர்" என்றார்.

எசேக்கியா சுவர்ப்புறம் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி,

"ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மைவழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும் உம் பார்வைக்கு நலமானவற்றைச் செய்ததையும் நினைந்தருளும்" என்று கூறிக் கண்ணீர் சிந்தித்஥ தேம்பித் தேம்பி அழுதார்.

அப்போது ஆண்டவரின் வாக்கு எசாயாவுக்கு அருளப்பட்டது:

"நீ எசேக்கியாவிடம் சென்று கூறவேண்டியது: உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன்.

உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்: இந்த நகரைப் பாதுகாப்பேன்.

தாம் கூறிய இந்த வார்த்தையை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்பதற்கு அவர் உமக்களிக்கும் அடையாளம்:

இதோ, சாயும் கதிரவனின் நிழல் ஆகாசின் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்வேன்." அவ்வாறே சாயும் கதிரவனின் நிழல் அக் கடிகையில் பத்துப்பாத அளவு பின்னிட்டது.

யூதா அரசர் எசேக்கியா நோயுற்று, நோயினின்று குணமடைந்தபின் தீட்டிய எழுத்தோவியம்:

ஓஎன் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமே! நான் வாழக்கூடிய எஞ்சிய ஆண்டுகளைப் பாதாளத்தின் வாயில்களில் கழிக்க நேருமே!ஓ என்றேன்.

ஓவாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே! மண்ணுலகில் குடியிருப்போருள் எந்த மனிதரையும் என்னால் பார்க்க முடியாதே!ஓ என்றேன்.

என் உறைவிடம் மேய்ப்பவனின் கூடாரத்தைப்போல பெயர்க்கப்பட்டு என்னைவிட்டு அகற்றப்படுகிறது. நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல் என் வாழ்வை முடிக்கிறேன். தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்: காலை தொடங்கி இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்,

துணை வேண்டிக் காலைவரை கதறினேன்: சிங்கம்போல் அவர் என் எலும்புகள் அனைத்தையும் நொறுக்குகிறார்: காலை தொடங்கி இரவுக்குள் நீர் எனக்கு முடிவுகட்டுவீர்.

சிட்டுக்குருவி போலும் நாரை போலும் கூக்குரலிடுகிறேன்: மாடப்புறாப்போல் விம்முகிறேன்: மேல்நோக்கிப் பார்த்து என் கண்கள் சோர்வடைந்தன: என் தலைவரே, நான் ஒடுக்கப்படுகிறேன்: எனக்குத் துணையாய் இரும்.

நான் அவரிடம் என்ன சொல்வேன்? என்ன கூறுவேன்? ஏனெனில் அவரே இதைச் செய்தார்: மனக்கசப்பால் உறக்கமே எனக்கு இல்லாமற் போயிற்று.

என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்: என் உயிர் உமக்காகவே வாழ்கின்றது: எனக்கு உடல்நலத்தை நல்கி நான் உயிர் பிழைக்கச் செய்வீர்.

இதோ, என் கசப்புமிகு அனுபவத்தை நலமாக மாற்றினீர்: மனங்கனிந்து அழிவின் குழியிலிருந்து என் உயிரைக் காத்தீர்: என் பாவங்கள் அனைத்தையும் உன் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீர்.

பாதாளம் உம்மைப் போற்றிப் பாடாது: சாவு உம்மைப் புகழந்து ஏத்தாது: பாதாளக் குழிக்குள் இறங்குவோர், நம்பிக்கைக்குரிய உம்மை நம்பியிருப்பதில்லை!

நான் இன்று உம்மைப் புகழ்ந்து போல் வாழ்வோரே, வாழ்வோர் மட்டுமே உம்மைப் போற்றிப் பாடுவர். தந்தையர் தம் பிள்ளைகளுக்கு உமது வாக்குப் பிறழாமை குறித்துப் போதிப்பர்.

ஆண்டவர் எனக்கு நலமளிக்க மனம்கொண்டார்: ஆண்டவரின் இல்லத்தில் எம் புகழ்ப்பாக்களை வாழ்நாளெல்லாம் இசைக்கருவி மீட்டிப் பாடுவோம்.

"எசேக்கியா நலமுடைய, ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்" என்று எசாயா பதில் கூறியிருந்தார்.

ஏனெனில், "ஆண்டவரின் இல்லத்திற்கு என்னால் போக முடியும் என்பதற்கு எனக்கு அடையாளம் யாது?" என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார்.

அதிகாரம் 39.

அக்காலத்தில், பாபிலோன் மன்னன் பலாதானின் மகன் மெரோதாக்கு பலாதான், எசேக்கியா நோய்வாய்ப்பட்டதையும் அவர் குணமடைந்ததையும் கேள்வியுற்று அவரிடம் மடலையும் அன்பளிப்பையும் அனுப்பி வைத்தான்.

இதுபற்றி மகிழ்ந்த எசேக்கியா பதர்க்குத் தம் கருவூல அறை, நறுமணப் பொருள்கள், பரிமளத்தைலம், பொன், வெள்ளி ஆகியவற்றையும் தம் படைக்கலன் இருந்த அறை முழுவதையும், தம் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்ட அனைத்தையும் காண்பித்தார். எசேக்கியா தம் அரண்மனையிலோ தம் ஆட்சி எல்லைக்குள்ளோ அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவும் இல்லை.

அப்போது, எசாயா இறைவாக்கினர் எசேக்கியா அரசரிடம் வந்து, "அந்த ஆள்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து உம்மிடம் வந்தார்கள்?" என்று வினவ, "அவர்கள் தொலை நாடான பாபிலோனிலிருந்து என்னிடம் வந்தார்கள்" என்றார்.

"உம் அரண்மனையில் என்ன பார்த்தார்கள்?" என்று அவர் வினவ, "என் அரண்மனையில் உள்ள அனைத்தையும் பார்த்தார்கள், நான் அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவும் என்஥ சேமிப்புக் கிடங்கில் இல்லை" என்றார் எசேக்கியா.

அப்போது எசாயா எசேக்கியாவிடம், "படைகளின் ஆண்டவரின் வாக்கைக்"கேளும்:

இதோ, நாள்கள் வருகின்றன, அப்போது உம் அரண்மனையில் இருப்பவையும் இந்நாள்வரை உம் மூதாதையர் சேமித்து வைத்திருப்பவையும் பாபிலோனுக்குக் கொண்டு போகப்படும்: எதுவும் விடப்படாது, என்கிறார் ஆண்டவர்.

உமக்குப் பிறக்கும் புதல்வர் சிலர் கைதுசெய்யப்படுவர்: பாபிலோன் மன்னர் அரண்மனையில் அவர்கள் அண்ணகராய் இருப்பர்" என்றார்.

தம் ஆட்சிக்காலத்தில் அமைதியும் பாதுகாப்பும் இருக்கும் என்றுணர்ந்த எசேக்கியா எசாயாவை நோக்கி, "நீர்கூறிய ஆண்டவரின் வாக்கு நல்லதே" என்றார்.

அதிகாரம் 40.

"ஆறுதல் கூறுங்கள்: என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்" என்கிறார் உங்கள் கடவுள்.

எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்: அவள் போராட்டம் நின்றுவிட்டது: அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது: அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

குரலொளி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.

பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானது நேராக்கப்படும்: கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.

ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்: மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்: ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.

"உரக்கக் கூறு" என்றது ஒரு குரல்: "எதை நான் உரக்கக் கூற வேண்டும்?" என்றேன். "மானிடர் அனைவரும் புல்லே ஆவர்: அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே!

ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்துபோம்: பூ வதங்கிவிழும்: உண்மையில் மானிடர் புல்லே ஆவர்!

புல் உலர்ந்துபோம்: பூ வதங்கி விழும்: நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.

சீயோனே! நற்செசய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! ஓஇதோ உன் கடவுள்ஓ என்று யூதா நகர்களிடம் முழங்கு!

இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்: அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்: அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன.

ஆயனைப்போல் தம்மந்தையை அவர் மேய்ப்பார்: ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்: அவற்றைத் தம் தோளில் பக்கிச் சுமப்பார்: சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்."

கடல்நீரைத் தம் உள்ளங்கை அளவால் கணக்கிட்டவர் யார்? வானத்தைச் சாண் அளவால் கணித்திட்டவர் யார்? மண்ணுலகின் புழுதியை மரக்காலால் அளந்தவர் யார்? மலைகளை நிறைகோலாலும் குன்றுகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?

ஆண்டவரின் ஆவிக்கு வழிகாட்டியவர் யார்? அவருக்கு அறிவுரையாளனாய் இருந்து கற்றுத்தந்தவர் யார்?

யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்? அவருக்குப் பயிற்சி அளித்து, நீதிநெறியை உணர்த்தியர் யார்? அவருக்கு அறிவு புகட்டி, விவேக நெறியைக் காட்டியவர் யார்?

இதோ, வேற்றினத்தார், வாளியிலிருக்கும் நீர்த்துளியாகவும், தராசில் ஒட்டிய பசாகவும் அவரால் கருதப்படுகின்றனர். இதோ, தீவுகளை ஓர் அணுவென அவர் பக்குகின்றார்.

எரிப்பதற்கு லெபனோன் போதாது: எரிபலிக்கு அதன் விலங்குகள் பற்றாது.

மக்களினங்கள் யாவும் இல்லாமையாக, ஒன்றுமில்லாமையாக, வெறுமையாக அவரால் கருதப்படுகின்றன.

இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு நிகராகக் கொள்வீர்கள்?

சிலை வடிவத்தையா? அதைச் சிற்பி வார்க்கிறான்: பொற்கொல்லன் அதைப் பொன்னால் வேய்கிறான்: வெள்ளிச் சங்கிலிகளை அதற்கென அமைக்கிறான்.

இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்ற இயலா வறியவயன் உளுத்துப்போகா மரத்தைத் தேர்ந்து கொள்கிறான்: அசைக்க முடியாச் சிலையொன்றை நிறுவ அவன் கைவினைஞனைத் தேடுகிறான்.

உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் கேள்விப்படவில்லையா? தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு அறிவிக்கப்படவில்லையா? மண்ணுலகின் அடித்தளங்கள் இடப்பட்டதுபற்றி நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?

உலகின் விதானத்தின் மீது வீற்றிருப்பவர் அவரே: மண்ணில் வாழ்வோர் வெட்டுக்கிளி போல்வர்: வான் வெளியைத் திரைச் சீலையென விரித்துக் குடியிருக்கும் கூடாரம்போல் அதை அமைப்பவரும் அவரே.

ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே: மண்ணுலகின் தலைவர்களை ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே.

அவர்கள் நடப்படுகிறார்கள்: விதைக்கப்படுகிறா஡கள்: ஆனால் அவர்களின் தண்டு நிலத்தில் வேர்விடுவதற்குள், அவர்கள்மேல் அவர் ஊத, அவர்கள் வாடிவதங்குகின்றனர். சூறைக்காற்று அவர்களைத் துரும்பென அடித்துச் செல்கிறது. 25"யாருக்கு என்னை ஒப்பிடுடவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?" என்கிறார் பயவர்.

உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்: அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்஥றேனும் குறைவதில்லை. 27"என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது: என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை" என்று யாக்கோபே, நீ செல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்?

உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றுமுள கடவுள்: அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்: அவர் சோர்ந்து போகார்: களைப்படையார்: அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது.

அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்: வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார்.

இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்: வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர்.

ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்: அவர்கள் ஓடுவர்: களைப்படையார்: நடந்து செல்வர்: சோர்வடையார்.

அதிகாரம் 41.

தீவுகளே, என் திருமுன்னே மெளனமாயிருங்கள்: மக்களினங்கள் தம் ஆற்றலைப் புதுப்பிப்பார்களாக! அருகில் வந்து பேசுவார்களாக! நீதித்தீர்ப்புக்காக நாம் ஒருங்கே கூடிவருவோமாக!

சென்றவிடமெல்லாம் சிறப்புறும் நேர்மையாளனைக் கிழக்கிலிருந்து எழும்பச் செய்தவர் யார்? மக்களினங்களை அவனிடம் கையளித்து அரசர்களை அவனுக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்? அவன் வாள் அவர்களைப் புழுதியாக்குகிறது: அவன் வில் அவர்களைப் பதர்போல் பறக்கச் செய்கிறது.

அவன் அவர்களைத் துரத்திச் செல்கின்றான்: எதிர்ப்பு எதுவுமின்றி முன்னேறுகின்றான்: பாதை வழியே காலடி படாது செல்கின்றான்.

இவற்றைச்செய்து முடித்தவர் யார்? தொடக்கத்திலிருந்தே தலைமுறைகளை அழைத்தவரன்றோ! ஆண்டவராகிய நானே முதலானவர்! முடிவானவற்றுடன் இருக்கப் போவதும் நானே!

தீவு நாட்டினர் அதைப் பார்த்து அஞ்சினர்: உலகின் எல்லைகளில் வாழ்வோர் நடுநடுங்கினர்: எனவே அவர்கள் ஒருங்கே கூடி வந்தனர்.

ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு உதவி செய்கின்றார்: தம் அடுத்தவரிடம், ஓதிடன்கொள்ஓ என்கின்றார்.

கைவினைஞர் பொற்கொல்லருக்கு ஊக்கமூட்டுகின்றார்: சுத்தியலால் தட்டுபவர் சம்மட்டியால் அடிப்பவரிடம், பற்றவைப்பதுபற்றி, "நன்று" என்று சொல்லி உற்சாகப்படுத்துகின்றார்: அசையாதபடி ஆணிகளால் அதை இறுக்குகின்றார்.

நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே! நான் தெரிந்தெடுத்த யாக்கோபே! என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே!

உலகின் எல்லைகளினின்று உன்னை அழைத்து வந்தேன்: தொலைநாடுகளினின்று உன்னை அழைத்தேன்: "நீ என் அடியவன்: நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்: உன்னை நான் தள்ளிவிடவில்லை" என்று சொன்னேன்.

அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்: கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்: உதவி செய்வேன்: என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்.

உனக்கெதிராய் வெகுண்டெழுவோர் அனைவரும் மானக்கேடுற்று இழிநிலை அடைவர்: உன்னை எதிர்த்து வழக்காடுவோர் இல்லாதொழிவர்.

உன்னை எதிர்த்துப் போராடியோரை நீ தேடுவாய்: ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்: உன்னை எதிர்த்துப் போரிட்டோ ர் ஒழிந்து போவர்.

ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, "அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்" என்று உன்னிடம் சொல்பவரும் நானே.

"யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு: நான் உனக்குத் துணையாய் இருப்பேன்," என்கிறார் ஆண்டவர்.

இதோ, நான் உன்னைப் புதிய கூர்மையான போரடிக்கும் கருவியாக்குவேன். நீ மலைகளைப் போரடித்து நொறுக்குவாய்: குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.

அவற்றைத் பற்றுவாய், காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்: புயல் அவற்றைச் சிதறடிக்கும்: ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்: இஸ்ரயேலின் பயவரில் மேன்மை அடைவாய்.

ஏழைகளும் வறியோரும் நீரைத் தேடுகின்றனர்: அது கிடைக்கவில்லை. அவர்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றனர்: ஆண்டவராகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்: இஸ்ரயேலின் கடவுளாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன்.

பொட்டல் மேடுகளைப் பிளந்து ஆறுகள் தோன்றச் செய்வேன்: பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்: பாலைநிலத்தை நீர்த் தடாகங்களாகவும் வறண்ட நிலத்தை நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.

பாலைநிலத்தில் கேதுரு மரங்களை வளரச் செய்வேன்: சித்திம் மரம், மிருதுச் செடி, ஒலிவ மரம் ஆகியன தோன்றச் செய்வேன்: பாழ்நிலத்தில் தேவதாரு மரங்களையும், புன்னை மரங்களையும், ஊசியிலை மரங்களையும் வைப்பேன்.

அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால் இதைச்செய்தார் என்றும் இஸ்ரயேலின்"பயவர் அதைப் படைத்தார் என்றும் மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்: ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர். 21"உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள்" என்கிறார் ஆண்டவர். "உங்கள் ஆதாரங்களை எடுத்துரையுங்கள்", என்கிறார் யாக்கோபின் அரசர்.

அத்தெய்வங்கள் அருகில் வந்து, நிகழப்போவதை நமக்கு அறிவிக்கட்டும்: முன்னே நடந்தவற்றை எடுத்துரைக்கட்டும்: நாம் சிந்தித்து அவற்றின் இறுதி விளைவை அறிந்து கொள்வோம்: இல்லாவிடில் வரவிருப்பவற்றை நமக்கு எடுத்துக்கூறட்டும். 23"நீங்கள் தெய்வங்கள் என நாங்கள் உணரும்பொருட்டு வருங்காலத்தில் நடப்பனவற்றை எங்களுக்குக் கூறுங்கள்: நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்: நாங்கள் யாவரும் ஒன்றாகக்கண்டு திகைத்து நிற்போம்.

இதோ, நீங்கள் ஒன்றுமில்லாமை! உங்கள் செயலும் ஒன்றுமில்லாமையே! உங்களைத் தேர்ந்துகொள்பவன் வெறுக்கத்தக்கவன்".

நான் வடக்கிலிருந்து ஒருவனை எழும்பச் செய்தேன்: அவன் கதிரவன் உதிக்கும் திசையிலிருந்து வந்துவிட்டான்: அவன் என் பெயரைப் போற்றுவான்: ஒருவன் சேற்றைக் குழைப்பதுபோலும் குயவன் களிமண்ணை மிதிப்பது போலும் அவன் ஆளுநர்களை நடத்துவான்.

நாங்கள் அறியும்படி தொடக்கத்திலிருந்தே இதை அறிவித்தவர் யார்? ஓஅது சரிஓ என்று நாங்கள் சொல்லும்முன்னரே உரைத்தவர் யார்? அப்படி எதுவும் அறிவிக்கவில்லை: முன்னுரைக்கவில்லை: நீங்கள் பேசியதை யாரும் கேட்டதுமில்லை. 27"இதோ வருகிறார்கள்" என்று முதன்முதலில் சீயோனுக்கு அறிவித்தது நானே! நற்செய்தியாளரை எருசலேமுக்கு அனுப்பியதும் நானே!

நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்: எதையும் காணவில்லை: அவற்றுள் அறிவுரை வழங்கவோ என் வினாவுக்கு மறுமொழி தரவோ எத்தெய்வமும் இல்லை.

இதோ அவை அனைத்தும் ஒன்றுமில்லாமையே! அவற்றின் செயல்களும் ஒன்றுமில்லாமையே! அவற்றின் படிமங்களோ வெறும் காற்றும் வெறுமையுமே!

அதிகாரம் 42.

இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்.

அவர் கூக்குரலிடமாட்டார்: தம்குரலை உயர்த்தமாட்டார்: தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார்.

நெரிந்த நாணலை முறியார்: மங்கி எரியும் திரியை அணையார்: உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார்.

உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்: அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.

விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:

ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்: உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்: மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன்.

பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

நானே ஆண்டவர்: அதுவே என் பெயர்: என் மாட்சியைப் பிறருக்கோ, என் புகழைச் சிலைகளுக்கோ விட்டுக்கொடேன்.

முன்னர் நான் அறிவித்தவை நிகழ்ந்துவிட்டன: புதியனவற்றை நான் அறிவிக்கிறேன்: அவை தோன்றுமுன்னே உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: உலகின் எல்லையெங்கும் அவர் புகழ்ப் பாடுங்கள்: கடலில் பயணம் செய்வோரே, கடல்வாழ் உயிரினங்களே, தீவு நாடுகளே, அவற்றில் குடியிருப்போரே, அவரைப் போற்றுங்கள்.

பாலைநிலமும் அதன் நகர்களும் கேதாரியர் வாழ் ஊர்களும் பேரொலி எழுப்பட்டும்: சேலா வாழ் மக்களும் மகிழ்ந்து பாடட்டும்: மலைகளின் உச்சியிலிருந்து அவர்கள் ஆர்ப்பரிக்கட்டும்.

அவர்கள் ஆண்டவருக்கு மாட்சி அளிப்பார்கள்: அவர் புகழைத் தீவு நாட்டினரிடையே அறிவிப்பார்கள்.

ஆண்டவர் வலியோன் எனப் புறப்பட்டுச் செல்வார்: போர்வீரரைப்போல் தீராச் சினம் கொண்டு எழுவார்: உரத்தக்குரல் எழுப்பி, முழக்கமிடுவார்: தம் பகைவருக்கு எதிராக வீரத்துடன் செயல்படுவார். 14"வெகுகாலமாய் நான் மெளனம் காத்துவந்தேன்: அமைதியாய் இருந்து என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன், இப்பொழுதோ, பேறுகாலப் பெண்போல் வேதனைக்குரல் எழுப்புகின்றேன்: பெருமூச்சு விட்டுத் திணறுகின்றேன்.

மலைகளையும் குன்றுகளையும் பாழாக்குவேன்: அவற்றின் புல்பூண்டுகளை உலர்ந்து போகச் செய்வேன்: ஆறுகளைத் திட்டுகளாக மாற்றுவேன்: ஏரிகளை வற்றிப்போகச் செய்வேன்.

பார்வையற்றோரை அவர்கள் அறியாத பாதையில் நடத்திச் செல்வேன்: அவர்கள் பழகாத சாலைகளில் வழிநடத்துவேன்: அவர்கள்முன் இருளை ஒளியாக்குவேன்: கரடுமுரடான இடங்களைச் சமதளமாக்குவேன்: இவை நான் அவர்களுக்காகச் செய்யவிருப்பன: நான் அவர்களைக் கைநெகிழ மாட்டேன்.

சிலைகள்மேல் நம்பிக்கை வைப்போரும், படிமங்களிடம், "நீங்கள் எங்கள் தெய்வங்கள்" என்போரும் இழிநிலையடைந்து, மானக்கேடுறுவர்.

செவிடரே, கேளுங்கள்: குருடரே, கவனமாய்ப் பாருங்கள்.

குருடாய் இருப்பவன் எவன்? என் ஊழியன்தான்! செவிடாய் இருப்பவன் எவன்? நான் அனுப்பும் பதன் தான்! எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவன் போல் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியன்போல் பார்வையற்றவன் யார்?

பலவற்றை நீ பார்த்தும், கவனம் செலுத்தவில்லை: உன் செவிகள் திறந்திருந்தும் எதுவும் உன் காதில் விழவில்லை.

ஆண்டவர் தம் நீதியின் பொருட்டுத் தம் திருச்சட்டத்தைச் சிறப்பித்து மேன்மைப்படுத்த ஆர்வமுற்றார்.

ஆனால் இந்த மக்களினம் கொள்ளையடிக்கப்பட்டுச் சூறையாடப்பட்டது: அவர்கள் அனைவரும் குழிகளில் சிக்கினர்: சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்: விடுவிப்பார் எவருமிலர்: கவர்ந்து செல்லப்பட்டனர்: கொள்ளைப் பொருளாயினர்: "திருப்பி அனுப்பு" என்று சொல்வாரில்லை.

உங்களுள் எவன் இதற்குச் செவி கொடுப்பான்? எவன் வருங்காலத்திற்காகக் கவனித்துக் கேட்பான்?

யாக்கோபைக் கொள்ளைக்காரரிடமும் இஸ்ரயேலலைக் கள்வரிடமும் ஒப்புவித்தவர் யார்? ஆண்டவரன்றோ? அவருக்கு எதிராக அன்றோ நாம் பாவம் செய்தோம்! மக்கள் அவருடைய நெறிகளைப் பின்பற்ற விரும்பவில்லை: அவரது திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியவில்லை.

ஆகவே அவர் அவர்கள்மேல் தம் கோபக்கனலைக் கொட்டினார்: கடும் போர் மூண்டது: அவரது சினம் அவர்களைச் சூழ்ந்து பற்றி எரிந்தது: ஆயினும் அவர்கள் உணரவில்லை: அவர்களை நெருப்பு சுட்டெரித்தது: ஆயினும் அவர்கள் சிந்தையில் கொள்ளவில்லை.

அதிகாரம் 43.

யாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ரயேலே, உன்னை உருவாக்கிய வருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்: அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்: உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்: நீ எனக்கு உரியவன்.

நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்: ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா: தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்: நெருப்பு உன்மேல் பற்றியெரியாது.

ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே: இஸ்ரயேலின் பயவரும் உன்னை விடுவிப்பவரும் நானே: உனக்குப் பணயமாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியா, செபா நாடுகளையும் ஒப்புக்கொடுக்கிறேன்.

என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்: மதிப்புமிக்கவன்: நான் உன்மேல் அன்பு கூர்கிறேன், ஆதலால் உனக்குப் பதிலாக மானிடரையும் உன் உயிருக்கு மாற்றாக மக்களினங்களையும் கொடுக்கிறேன்.

அஞ்சாதே, ஏனெனனில் நான் உன்னோடு இருக்கின்றேன்: கிழக்கிலிருந்து உன் வழிமரபை அழைத்து வருவேன்: மேற்கிலிருந்து உன்னை ஒன்று திரட்டுவேன்.

வடபுறம் நோக்கி, "அவர்களை விட்டுவிடு" என்பேன். தென்புறத்திடம் "தடுத்து நிறுத்தாதே" என்று சொல்வேன். "தொலைநாட்டிலிருந்து என் புதல்வரையும் உலகின் எல்லையிலிருந்து என் புதல்வியரையும் அழைத்து வா.

என் மாட்சிக்காக நான் படைத்த, உருவாக்கிய, உண்டாக்கிய என் பெயரால் அழைக்கப்பெற்ற அனைவரையும் கூட்டிக்கொண்டுவா!".

கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இருக்கும் மக்களைப் புறப்பட்டு வரச்செய்.

வேற்றினத்தார் அனைவரும் ஒருங்கே திரண்டு வரட்டும்: மக்களினங்கள் ஒன்று கூடட்டும்: அவர்களுள் யார் அதை முன்னறிவிக்கக்கூடும்? முன்பு நடந்தவற்றை யாரால் விளக்கக் கூடும்? அவர்கள் கூறுவது சரியெனக் காட்டத் தம் சான்றுகளைக் கொண்டு வரட்டும்: மக்கள் அதைக்கேட்டு ஓஉண்மைஓ என்று சொல்லட்டும். 10"நீங்கள் என் சாட்சிகள்" என்கிறார் ஆண்டவர்: "நான் தேர்ந்தெடுத்த என் ஊழியனும் நீங்களே: என்னை அறிந்து என்மீது நம்பிக்கை வைப்பீர்கள்: "நானே அவர்" என்பதை உணர்ந்து கொள்வீர்கள்: எனக்கு முன் எந்தத் தெய்வமும் உருவாக்கப்படவில்லை: எனக்குப்பின் எதுவும் இருப்பதில்லை.

நான், ஆம், நானே ஆண்டவர்: என்னையன்றி வேறு மீட்பர் இல்லை.

அறிவித்தது, விடுதலை அளித்தது, பறைசாற்றியது அனைத்தும் நானே: உங்களிடையே உள்ள வேறு தெய்வமன்று: நீங்களே என் சாட்சிகள், என்கிறார் ஆண்டவர்!

நானே இறைவன்: எந்நாளும் இருப்பவரும் நானே: என் கையிலிருப்பதைப் பறிப்பவர் எவருமில்லை: நான் செய்ததை மாற்றியமைப்பவர் எவர்?

இஸ்ரயேலின் பயவரும் உங்கள் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் பொருட்டுப் பாபிலோனுக்கு ஆள்களை அனுப்பி, அதன் தாழ்ப்பாள்கள் அனைத்தையும் தகர்த்துவிடுவேன்: கல்தேயரின் மகிழ்ச்சிப்பாடல் புலம்பலாக மாறும்.

நானே உங்கள் பயவரான ஆண்டவர்: இஸ்ரயேலைப் படைத்தவர்: உங்கள் அரசர்.

கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர்நடுவே பாதை அமைத்தவரும்,

தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே.

முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்: முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள்:

இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்: இப்பொழுதே அது தோன்றிவிட்டது: நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்: பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன்.

காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்: குள்ள நரிகளும், தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்: ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்: பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன்.

எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.

ஆனால் யாக்கோபே, நீ என்னை நோக்கி மன்றாடவில்லை: இஸ்ரயேலே, என்னைப் பற்றிச் சலிப்புற்றாயே!

ஆடுகளை எரிபலிக்கென நீ என்னிடம் கொண்டு வரவில்லை: உன் பலிகளால் நீ என்னைப் பெருமைப்படுத்தவில்லை: உணவுப்படையல் படைக்குமாறு நான் உங்களிடம் கேட்கவில்லை: பபம் காட்டுமாறு உன்னை வற்புறுத்தவில்லை.

பணம் கொடுத்து நீ எனக்கென்று நறுமணப்படையல் வாங்கவில்லை: உன் பலிகளின் கொழுப்பால் என்னை நிறைவு செய்யவில்லை: மாறாக, உன் பாவங்களால் என்னைத் தொல்லைப்படுத்தினாய்: உன் தீச்செயல்களால் என்னைச் சலிப்புறச் செய்தாய்.

நான், ஆம், நானே, உன் குற்றங்களை என்பொருட்டுத் துடைத்தழிக்கின்றேன்: உன் பாவங்களை நினைவிற் கொள்ள மாட்டேன்.

கடந்ததை எனக்குச் சொல்லிக் காட்டுங்கள். ஒருமிக்க நாம் வழக்காடுவோம்: நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்கானவற்றை எடுத்துரையுங்கள்.

உன் முதல் தந்தை பாவம் செய்தான்: உனக்காகப் பேசுவோரும் எனக்கெதிராய்க் குற்றம் புரிந்துள்ளனர்.

உன் தலைவர்கள் என் திருத்பயகத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்: ஆதலால் யாக்கோபை அழிவுக்கும் இஸ்ரயேலைப் பழிப்புரைக்கும் உள்ளாக்கினேன்.

அதிகாரம் 44.

என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே, இப்பொழுது செவிகொடு.

உன்னைப் படைத்தவரும், கருப்பையில் உன்னை உருவாக்கியவரும், உனக்கு உதவி செய்பவருமாகிய ஆண்டவர் கூறுவதைக் கேள்: என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட "எசுரூன்" அஞ்சாதே!

ஏனெனில், தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன்: வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன்: உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன்: உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன்:

அவர்கள் நீரோடை அருகிலுள்ள புல் போலும் நாணல்கள் போலும் செழித்து வளருவர்.

ஒருவன் "நான் ஆண்டவருக்கு உரியவன்" என்பான்: மற்றொருவன் யாக்கோபின் பெயரைச் சூட்டிக்கொள்வான்: வேறொருவன் "ஆண்டவருக்குச் சொந்தம்" என்று தன் கையில் எழுதி, "இஸ்ரயேல்" என்று பெயரிட்டுக் கொள்வான்.

இஸ்ரயேலின் அரசரும் அதன் மீட்பரும், படைகளின் ஆண்டவருமான ஆண்டவர் கூறுவது இதுவே: தொடக்கமும் நானே: முடிவும் நானே: என்னையன்றி வேறு கடவுள் இல்லை.

எனக்கு நிகர் யார்? அவன் உரத்த குரலில் அறிவிக்கட்டும். என்றுமுள மக்களை நான் ஏற்படுத்தியதிலிருந்து நடந்தவற்றை முறைப்படுத்திக் கூறட்டும். இனி நடக்கவிருப்பன பற்றியும், நிகழப்போவனபற்றியும் முன்னுரைக்கட்டும்.

நீங்கள் கலங்காதீர்கள், அஞ்சாதீர்கள்: முன்பிருந்தே நான் உரைக்கவில்லையா? அறிவிக்கவில்லையா? நீங்களே என் சாட்சிகள்: என்னையன்றி வேறு கடவுள் உண்டோ ? நான் அறியாத கற்பாறை வேறு உண்டோ ?

சிலை செதுக்குவோர் அனைவரும் வீணரே: அவர்கள் பெரிதாக மதிப்பவை பயனற்றவை: அவர்களின் சான்றுகள் பார்வையற்றவை: அறிவற்றவை: எனவே அவர்கள் மானக்கேடு அடைவர்.

எதற்கும் உதவாத தெய்வச் சிலையை எவனாவது செதுக்குவானா? வார்ப்பானா?

இதோ, அவனும் அவன் நண்பர்களும் வெட்கக்கேடு அடைவர்: அந்தக் கைவினைஞர் அனைவரும் மனிதர்தாமே! அவர்கள் அனைவரும் கூடிவந்து எம்முன் நிற்கட்டும்: அவர்கள் திகிலடைந்து ஒருங்கே வெட்கக்கேடுறுவர்.

கொல்லன் இரும்பைக் குறட்டால் எடுத்துக் கரிநெருப்பிலிட்டு உருக்குகிறான்: அதைச் சம்மட்டியால் அடித்து வடிவமைக்கிறான்: தன் வலிய கைகளால் அதற்கு உருக்கொடுக்கிறான். ஆனால் அவனோ பட்டினி கிடக்கிறான்: ஆற்றலை இழக்கிறான்: நீர் அருந்தாமல் களைத்துப் போகிறான்.

தச்சன் மரத்தை எடுத்து, மல் பிடித்து கூராணியால் குறியிட்டு, உளியால் செதுக்குகிறான்: அளவுகருவியால் சரிபார்த்து, ஓர் அழகிய மனித உருவத்தைச் செய்கிறான். அதைக் கோவிலில் நிலைநிறுத்துகிறான்.

அவன் தன் தேவைக்கென்று கேதுருகளை வெட்டிக்கொள்ளலாம்: அல்லது அடர்ந்த் காட்டில் வளர்ந்த மருதமரத்தையோ, கருவாலி மரத்தையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்: அல்லது அசோக மரக் கன்றை நட்டு, அது மழையினால் வளர்வதற்குக் காத்திருக்கலாம்.

அது மனிதருக்கு எரிக்கப் பயன்படுகிறது: அவன் அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் குளிர்காயப் பயன்படுத்துகிறான். அதே மரத்தைக் கொண்டு தீ மூட்டி அப்பம் சுடுகிறான். அதைக் கொண்டே தெய்வத்தைச் செய்து அதை வணங்குகிறான். சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்குகிறான்.

அதில் ஒரு பகுதியை அடுப்பில் வைத்து எரிக்கிறான்: அதன்மேல் அவன் உணவு சமைக்கிறான்: இறைச்சியைப் பொரித்து வயிறார உண்ணுகிறான்: பின்னர் குளிர் காய்ந்து, "வெதுவெதுப்பாக இருக்கிறது, என்ன அருமையான தீ!" என்று சொல்லிக் கொள்கிறான்.

எஞ்சிய பகுதியைக் கொண்டு தெய்வச் சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்கி "நீரே என் இறைவன், என்னை விடுவித்தருளும்" என்று மன்றாடுகிறான்.

அவர்கள் அறிவற்றவர், விவேகமற்றவர், காணாதவாறு கண்களையும், உணராதவாறு உள்ளத்தையும் அடைத்துக் கொண்டனர்.

அவர்கள் சிந்தையில் மாற்றமில்லை: அவர்களுக்கு அறிவுமில்லை: "அதில் ஒரு பகுதியை அடுப்பில் இட்டு எரித்தேன்: அதன் நெருப்புத்தணலில் அப்பம் சுட்டேன்: இறைச்சியைப் பொரித்து உண்டேன்: எஞ்சிய பகுதியைக் கொண்டு சிலை செய்யலாமா? ஒரு மரக்கட்டை முன் நான் பணிந்து வணங்கலாமா?" என்று சொல்ல அவர்களுக்கு விவேகமும் இல்லை.

அவன் செய்வது சாம்பலைத் தின்பதற்குச் சமமானது: ஏமாறிய அவன் சிந்தனைகள் அவனை வழிவிலகச் செய்கின்றன: அவனால் தன்னை மீட்க இயலாது, "தன் வலக்கையிலிருப்பது வெறும் ஏமாற்று வேலை" என்று அவன் ஏற்றுக்கொள்வதில்லை.

யாக்கோபே, இஸ்ரயேலே, இவற்றை நீ நினைவிற் கொள்வாய்: நீ என் ஊழியன்: நான் உன்னை உருவாக்கினேன்: நீ தான் என் அடியான்: இஸ்ரயேலே, நான் உன்னை மறக்க மாட்டேன்.

உன் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா, நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன்.

வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்: ஆண்டவர் இதைச் செய்தார்: மண்ணுலகின் அடித்தளங்களே, ஆர்ப்பரியுங்கள்: மலைகளே, காடே, அங்குள்ள அனைத்து மரங்களே, களிப்புற்று முழங்குங்கள்: ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டருளினார்: இஸ்ரயேலில் அவர் மாட்சி பெறுகிறார்.

கருப்பையில் உன்னை உருவாக்கிய உன் மீட்பரான ஆண்டவர் கூறுவது இதுவே: அனைத்தையும் படைத்த ஆண்டவர் நானே: யார் துணையுமின்றி நானாக வானங்களை விரித்து மண்ணுலகைப் பரப்பினேன்.

பொய்யர் சொல்லும் குறிகள் பலிக்காதவாறு செய்கின்றேன்: மந்திரவாதிகளை மடையராக்குகின்றேன்: ஞானிகளை இழிவுறச் செய்து அவர்களது அறிவு மடமையெனக் காட்டுகின்றேன்:

என் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றேன்: என் பதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றேன்: எருசலேமை நோக்கி, "நீ குடியமர்த்தப் பெறுவாய்" என்றும் யூதா நகர்களிடம், "நீங்கள் கட்டியெழுப்பப் பெறுவீர்கள்" என்றும் அவற்றின் பாழடைந்த இடங்களைச் சீரமைப்பேன்" என்றும் கூறுகின்றேன்.

ஆழ்நீர்த்தளங்களைப் பார்த்து, "வற்றிப்போ: உன் ஆறுகளை உலர்ந்த தரையாக்குவேன்" என்றும் உரைக்கின்றேன்.

சைரசு மன்னனைப்பற்றி, "அவன் நான் நியமித்த ஆயன்: என் விருப்பத்தை நிறைவேற்றுவான் என்றும், எருசலேமைப்பற்றி, "அது கட்டியெழுப்பப்படும்" என்றும் திருக்கோவிலைப்பற்றி, "உனக்கு அடித்தளம் இடப்படும்" என்றும் கூறுவதும் நானே.

அதிகாரம் 45.

சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்: பிற இனத்஥தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்: கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்: அவரது வலக்கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்: அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே:

நான் உனக்கு முன்னே சென்று குன்றுகளைச் சமப்படுத்துவேன்: செப்புக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களைத் தகர்ப்பேன்.

இருளில் மறைத்துவைத்த கருவூலங்களையும் மறைவிடங்களில் ஒளித்துவைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன்: பெயர் சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை நீ அறியும்படி இதைச் செய்வேன்.

என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்: நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்.

நானே ஆண்டவர்: வேறு எவருமில்லை: என்னையன்றி வேறு கடவுள் இல்லை: நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன்.

கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்: நானே ஆண்டவர்: வேறு எவரும் இல்லை.

நான் ஒளியை உண்டாக்குகிறேன்: இருளைப் படைக்கிறேன்: நல் வாழ்வை அமைப்பவன் நான்: தீமையைப் படைப்பவனும் நானே: இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே.

வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்: மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்: மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக்கனி வழங்கட்டும், அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்: இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.

தன்னை உருவாக்கியவரை எதிர்த்து வழக்காடுபவனுக்கு ஜயோ கேடு! பானை ஓடுகளில் அவனும் ஓர் ஓடே! களிமண் குயவனிடம், "நீ என்னைக் கொண்டு என்ன செய்கிறாய்" என்றும் அவன் வனைந்தது அவனிடம், "உனக்குக் கைத்திறனே இல்லை" என்றும் கூறுவதுண்டோ ?

தந்தையிடம், "நீர் ஏன் என்னை இப்படிப் பிறப்பித்தீர்" என்றும், தாயிடம், "நீ ஏன் என்னை இப்படிப் பெற்றெடுத்தாய்" என்றும் வினவுபவனுக்கு ஜயோ கேடு!

இஸ்ரயேலின் பயவரும் அவனை உருவாக்கியவருமான ஆண்டவர் கூறுவது இதுவே: "நிகழவிருப்பன குறித்தும் என் மக்களைப்பற்றியும் என்னிடம் கேள்வி கேட்பீர்களா? என் கைவினை பற்றி எனக்கே கட்டளையிடுவீர்களா?

நான் உலகை உருவாக்கி அதன்மேல் மனிதரைப் படைத்தேன்: என் கைகளே வானத்தை விரித்தன: அதன் படைத்திரளுக்கு ஆணையிட்டதும் நானே.

வெற்றிபெறுமாறு நான் சைரசை எழுப்பினேன்: அவன் செல்லும் அனைத்து வழிகளையும் சீர்படுத்தினேன்: அவன் என் நகரைக் கட்டியெழுப்புவான்: நாடு கடத்தப்பட்ட என் மக்களை ஈட்டுப் பொருளோ, அன்பளிப்போ பெறாது திருப்பி அனுப்புவான்" என்கிறார் படைகளின் ஆண்டவர்.

ஆண்டவர் கூறுவது இதுவே: "எகிப்தியர் தம் செல்வத்தோடும், எத்தியோப்பியர் தம் வணிகப் பொருளோடும் நெடிது வளர்ந்த செபாவியரும் உனக்கு உடைமையாவர். அவர்கள் விலங்கிடப்பட்டு, உனக்குப் பின்வந்து உன்னைப் பணிவர்: உன்னிடம் தன் மன்றாட்டைச் சமர்ப்பித்து, "இறைவன் உம்மிடம்தான் இருக்கிறார்: வேறெங்கும் இல்லை: வேறு கடவுளும் இல்லை"என்பார்கள்.

மீட்பரான இஸ்ரயேலின் கடவுளே, உண்மையிலேயே நீர் "தம்மை மறைத்துக்கொள்ளும் இறைவன்".

சிலைகளைச் செய்வோர் அனைவரும் ஒருங்கே வெட்கி நாணினர்: அவர்கள் குழம்பித் தவித்தனர்.

ஆண்டவர் என்றுமுள மீட்பை அளித்து இஸ்ரயேலை விடுவித்தருளினார்: என்றென்றும் நீங்கள் வெட்கக்கேடு அடையமாட்டீர்கள்: அவமதிப்புக்கும் உள்ளாக மாட்டீர்கள்."

ஏனெனில் விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே: அவரே கடவுள்: மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே: அதை நிலைநிறுத்துபவரும் அவரே: வெறுமையாய் இருக்குமாறு படைக்காது, மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார். நானே ஆண்டவர், என்னையன்றி வேறு எவரும் இல்லை.

நான் மறைவிலும் மண்ணுலகின் இருண்ட பகுதியிலும் பேசியதில்லை: "வெற்றிடத்தில் என்னைத் தேடுங்கள்" என்று நான் யாக்கோபின் வழிமரபிடம் சொல்லவில்லை: ஆண்டவராகிய நான் உண்மையே பேசுகிறேன்: நேர்மையானவற்றை அறிவிக்கிறேன்:

மக்களினங்களுள் தப்பிப் பிழைத்தோரே! ஒன்று திரண்டு வாருங்கள்: ஒருங்கே கூடுங்கள்: மரத்தால் செய்த தங்கள் சிலையைச் சுமந்து செல்வோருக்கும், விடுதலை வழங்காத தெய்வத்திடம் தொடர்ந்து மன்றாடுவோருக்கும் அறிவே இல்லை.

அறிவியுங்கள்: உங்கள் வழக்கை எடுத்துரையுங்கள்: ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்: தொடக்கத்திலிருந்து இதை வெளிப்படுத்தியவர் யார்? முதன் முதலில் இதை அறிவித்தவர் யார்? ஆண்டவராகிய நான் அல்லவா? என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை: நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவரும் இல்லை.

மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோ ரே! என்னிடம் திரும்பி வாருங்கள்: விடுதலை பெறுங்கள்: ஏனெனில் நானே இறைவன்: என்னையன்றி வேறு எவருமில்லை.

நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்: என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது: அது வீணாகத் திரும்பி வராது: முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்: நா அனைத்தும் என்மேல் ஆணையிடும். 24"ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு" என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்: அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர்.

இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப் பெற்று அவரைப் போற்றுவர்.

அதிகாரம் 46.

பேல் கூனிக் குறுகுகின்றது: நெபோ குப்புற வீழ்கின்றது: அவற்றின் சிலைகள் காட்டு விலங்குகள் மீதும் கால்நடைகள் மீதும் சுமத்தப்படுகின்றன: நீங்கள் பவனி எடுத்தவை பாரம் ஆயின: களைத்துப்போன விலங்குகளுக்குச் சுமையாயின.

அவை ஒருங்கே குப்புற வீழ்கின்றன: கூனிக் குறுகுகின்றன: தங்களைச் சுமந்தவர்களை அவற்றால் விடுவிக்க இயலவில்லை: அவையும் நாடுகடத்தலுக்கு உள்ளாயின.

யாக்கோபு வீட்டாரே, இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருக்கும் அனைத்து மக்களே, செவிகொடுங்கள்: உதரத்திலிருந்தே உங்களைத் தாங்குபவர் நான், கருவிலிருந்தே உங்களைச் சுமப்பவர் நான்.

உங்கள் முதுமைவரைக்கும் நான் அப்படியே இருப்பேன்: நரை வயதுவரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்: உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன்: நானே உங்களைச் சுமப்பேன்: நானே விடுவிப்பேன்.

யாருக்கு என்னை நிகராக்குவீர்கள்? யாருக்கு என்னை இணையாக்குவீர்கள்? யாருக்கு நிகராக என்னை ஒப்பிடுவீர்கள்?

மக்கள் தம் பையைத் திறந்து பொன்னைக் கொட்டுகிறார்கள்: தராசில் வெள்ளியை நிறுத்துப் பார்க்கிறார்கள்: பொற்கொல்லனைக் கூலிக்கு அமர்த்துகிறார்கள்: அவன் அதைத் தெய்வமாகச் செய்கிறான்: பின் அதன்முன் வீழ்ந்து வழிபடுகிறார்கள்.

அதைத் பக்கித் தோள்மேல் சுமந்து போகின்றனர்: அதற்குரிய இடத்தில் அதை நிலைநிறுத்தி வைக்கின்றனர்: அது அங்கேயே நிற்கிறது: தன் இடத்திலிருந்து அது பெயராது: எவன் அதனிடம் கூக்குரல் எழுப்பினாலும் அது மறுமொழி தராது: அவன் துயரத்திலிருந்து அவனை விடுவிப்பதுமில்லை.

கலகம் செய்வோரே, இதை நினைவில் கொள்ளுங்கள்: கவனத்தில் வையுங்கள்.

தொன்றுதொட்டு நிகழ்ந்தவற்றை நினைத்துப் பாருங்கள்: நானே இறைவன்: என்னையன்றி வேறு கடவுள் இல்லை: என்னைப் போன்று வேறு எவரும் இல்லை.

பின் நிகழவிருப்பதைத் தொடக்கத்திலே நான் அறிவித்தேன்: இனி நடப்பனவற்றை பண்டைக் காலத்திலேயே முன்னுரைத்தேன்: "என் திட்டம் நிலைத்திருக்கும்: என் விருப்பத்தை நிறைவேற்றுவேன்" என்றுரைத்தேன்.

இரைமேல் பாயும் பறவையைக் கிழக்கிலிருந்து அழைக்கிறேன்: என் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒருவனைத் தொலைநாட்டிலிருந்து வரவழைக்கிறேன்: சொல்லியவன் நான்: நானே அதை நிறைவேற்றுவேன்: திட்டமிட்டவன் நான்: நானே அதைச் செயல்படுத்துவேன்.

கடின மனத்தோரே, வெற்றிக்கு வெகு தொலைவில் இருப்போரே, செவி கொடுங்கள்.

என் வெற்றியை அருகில் வரவழைத்துள்ளேன்: அது தொலையில் இல்லை, என் விடுதலை காலம் தாழ்த்தாது: சீயோனுக்கு நான் விடுதலை வழங்குகின்றேன்: இஸ்ரயேலில் என் மாட்சி நிலைக்கச் செய்வேன்.

அதிகாரம் 47.

மகள் பாபிலோனே, கன்னிப் பெண்ணே! நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்: மகள் கல்தேயா! அரியணையில் அன்று, தரையினில் அமர்ந்திடு: "மெல்லியலாள்", "இனியவள்" என்று இனி நீ அழைக்கப்படாய்.

எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை: உன் முக்காடுதனை அகற்றிவிடு: உன் மேலாடையைக் களைத்துவிட்டு, உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய்.

உன் பிறந்தமேனி திறக்கப்படும்: உன் மானக்கேடு வெளிப்படும்: நான் பழி வாங்குவேன்: எந்த ஆளையும் விட்டுவையேன்.

எங்கள் மீட்பரின் பெயர் "படைகளின் ஆண்டவர்": அவரே "இஸ்ரயேலின் பயவர்".

மகள் கல்தேயா! இருளுக்குள் புகுந்து மெளனமாய் உட்கார்: இனி நீ "அரசுகளின் தலைவி" என அழைக்கப்படமாட்டாய்.

நான் என் மக்கள் மீது சினமுற்றிருந்தேன்: என் உரிமைச் சொத்தைக் களங்கப்படுத்தினேன்: அவர்களை உன் கையில் ஒப்படைத்தேன்: நீயோ அவர்களுக்குக் கருணை காட்டவில்லை: முதியோராய் இருந்தோர் மீதும் மிகப் பளுவான நுகத்தைப் பூட்டினாய்.

"என்றும் தலைவி நானே, என்றாய் நீ: இவற்றை நீ உன் சிந்தையில் கொள்ளவில்லை: பின் விளைவுபற்றி எண்ணிப் பார்க்கவுமில்லை.

இன்ப நாட்டம் கொண்டவளே, போலிப் பாதுகாப்புடன் வாழ்பவளே, "எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை: நான் கைம்பெண் ஆகமாட்டேன்: பிள்ளை இழந்து தவிக்கமாட்டேன்" என்று தனக்குள் சொல்லிக் கொள்பவளே, இப்பொழுது இதைக் கேள்:

இவை இரண்டும் திடீரென ஒரே நாளில் உனக்கு நேரிடும்: பில்லி சூனியங்கள் பலவற்றை நீ கையாண்டாலும், ஆற்றல்மிகு மந்திரங்களை உச்சரித்தாலும், பிள்ளை இழப்பும் கைம்மையும் முழுவடிவில் உன் மேல் வந்தே தீரும்.

உன் தீச்செயலில் நீ நம்பிக்கை வைத்தாய்: "என்னைக் காண்பார் யாருமில்லை" என்றாய். உன் ஞானமும் உன் அறிவுத்திறனும் என்னை நெறிபிறழச் செய்தன: "எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை" என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.

தீமை உன்மேல் திண்ணமாய் வரும்: அது தோன்றும் திக்கை நீ அறியாய்: அழிவு உன்மேல் விழும்: அதற்கு கழுவாய் தேட உன்னால் இயலாது: நீ அறியாத பேரழிவு திடீரென உன்மேல் வரும்.

இளமை முதல் நீ முயன்று பயின்ற உன் மந்திரங்களோடும் பில்லி சூனியங்களோடும் வந்து நில்: ஒருவேளை உன்னால் சிறிது வெற்றி பெற முடியும்: ஒருவேளை உன் எதிரியை அச்சுறுத்த முடியும்.

திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்: வான்வெளியைக் கணிப்போரும், விண்மீன்களை ஆய்வோரும் நிகழவிருப்பதை அமாவாசைகளில் உனக்கு முன்னுரைப்போரும், வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும்.

இதோ, அவர்கள் பதர் போன்றவர்கள், நெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்: தீப்பிழம்பினின்று தம் உயிரைக் காத்துக்கொள்ள மாட்டார்கள்: அது குளிர்காயப் பயன்படும் தணல் அன்று: எதிரே உட்காரத் தக்க கனலும் அன்று.

நீ முயன்று பயின்஥றவையும் இவ்வாறே அழிவுறும்: உன் இளமை முதல் நீ தொடர்பு கொண்ட வணிகருக்கும் இதுவே நேரும்: ஒவ்வொருவரும் தம் போக்கிலே அலைந்து திரிவார்: உன்னை விடுவிக்க எவரும் இரார்.

அதிகாரம் 48.

யாக்கோபின் வீட்டாரே! இதற்குச் செவிகொடுங்கள்: நீங்கள் இஸ்ரயேல் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறீர்கள்: யூதாவெனும் ஊற்றினின்று தோன்றியுள்ளீர்கள்: ஆண்டவரின் பெயரால் ஆணையிடுகின்றீர்கள்: ஆயினும், உண்மையுடனும் நேர்மையுடனும் இவற்றைச் செய்வதில்லை.

"திரு நகரினர்" என்று உங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்கின்றீர்கள்஥஥஥஥஥஥஥஥஥: இஸ்ரயேலின் கடவுளையே சார்ந்து நிற்கின்றீர்கள்: "படைகளின் ஆண்டவர்" என்பது அவர்தம் பெயராம்!

பண்டைய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறிவித்தேன்: என் தாய் மொழிந்தவற்றை அவர்கள் கேட்கச் செய்தேன்: திடீரெனச் செயல்பட்டேன்: யாவும் நிகழ்ந்தன.

நீ பிடிவாத குணமுடையவன்: உன் கழுத்து இரும்புத் தசைநார்: உன் நெற்றி வெண்கலம்: இதை நான் அறிவேன்.

எனவே அவற்றை முன்கூட்டியே உனக்கு அறிவித்தேன்: அவை நிகழ்வதற்குமுன் உனக்குத் தெரியப்படுத்தினேன்: "என் சிலை அவற்றைச் செய்தது: நான் வார்த்த வடிவமும் செதுக்கிய உருவமும் அவற்றைக் கட்டளையிட்டன" என்று நீ கூறாதிருக்கவே அவ்வாறு செய்தேன்.

முன்பு நீ கேட்டாய்: இப்போது அவை அனைத்தையும் காண்கின்றாய்: அவை குறித்து அறிவிக்கமாட்டாயோ? இதுமுதல் புதியனவற்றையும் அறியாத மறைபொருள்களையும் உனக்கு வெளிப்படுத்துவேன்.

பண்டைக்காலத்தில் அல்ல, அவை இப்பொழுதுதான் உருவாக்கப்பட்டன: இதற்குமுன் அவை நிகழ்ந்ததில்லை: அவை பற்றி நீ கேள்விப்படவும் இல்லை: "அவைபற்றி எனக்குத் தெரியும்" என நீ கூறவும் முடியாது.

உண்மையிலே நீ கேள்விப்படவுமில்லை: அறியவும் இல்லை: முன்பிருந்தே உன் செவிகள் திறந்திருக்கவில்லை: ஏனெனில் நீ "ஏமாற்றுப் பேர்வழி, கருப்பையிலிருந்தே கலகக்காரன்" என்று பெயர்பெற்றவன்: இதை நான் உறுதியாய் அறிவேன்.

என் பெயரின் பொருட்டு என் சினத்தை அடக்கிக்கொள்கின்றேன்: என் புகழை முன்னிட்டு உன்னை வெட்டி வீழ்த்தாமல், உனக்காக அதைக் கட்டுப்படுத்துகின்றேன்.

நான் உன்னைப் புடமிட்டேன்: ஆனால் வெள்ளியைப் போலல்ல: துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.

என்பொருட்டே, என்னை முன்னிட்டே அதைச் செய்கின்றேன்: என் பெயரை எங்ஙனம் களங்கப்படுத்தலாம்? என் மாட்சியை நான் எவருக்கும் விட்டுக்கொடேன்.

நான் அழைத்திருக்கும் யாக்கோபே, இஸ்ரயேலே, எனக்குச் செவிகொடு: நானே அவர்: தொடக்கமும் நானே: முடிவும் நானே.

என் கையே மண்ணுலகிற்கு அடித்தளமிட்டது: என் வலக்கை விண்ணுலகை விரித்து வைத்தது. நான் அழைக்கும்போது அவை ஒருங்கிணைந்து நிற்கின்றன.

நீங்கள் அனைவரும் கூடிவந்து கேளுங்கள்: அவர்களுள் இவற்றை அறிவித்தவர் யார்? ஆண்டவரின் அன்புக்குரியவன், பாபிலோனில் அவர் விரும்பியதைச் செய்வான்: அவன் புயம் கல்தேயருக்கு எதிராக எழும்.

நான், நானேதான் அதைக் கூறினேன்: நான் அவனை அழைத்தேன்: நானே அவனைக் கொண்டு வந்தேன், அவன் தன்வழியில் வெற்றி காண்பான்.

என் அருகில் வந்து இதைக் கேளுங்கள்: தொடக்கமுதல் நான் மறைவாகப் பேகியதில்லை: அது நிகழ்ந்த காலம் முதல், நான் அங்கே இருக்கின்றேன். இப்பொழுது என் தலைவராகிய ஆண்டவர் என்னையும் அவர்தம் ஆவியையும் அனுப்பியுள்ளார்.

இஸ்ரயேலின் பயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே!

என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும், உன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும்.

உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்: அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்: அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப்பட்டிராது.

பாபிலோனிலிருந்து புறப்பட்டுச் செல்லுங்கள்: கல்தேயாவை விட்டுத் தப்பியோடுங்கள்: ஆரவாரக் குரலெழுப்பி இதை முழங்கி அறிவியுங்கள்: உலகின் எல்லைவரை இதை அறியச் செய்யுங்கள்: "தம் ஊழியன் யாக்கோபை ஆண்டவர் மீட்டுவிட்டார்" என்று சொல்லுங்கள்.

அவர் அவர்களைப் பாலைநிலங்களில் நடத்திச் சென்றபோது அவர்கள் தாகமடையவில்லை: பாறையிலிருந்து அவர்களுக்கு நீர் சுரக்கச் செய்தார்: பாறையைப் பிளந்தார், நீர் பாய்ந்து வந்தது.

"தீயோர்க்கு அமைதி இல்லை" என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 49.

தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்: தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்: கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.

என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்: தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்: என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்: தம் அம்பறாத் துணியில் என்னை மறைத்துக் கொண்டார்.

அவர் என்னிடம், "நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்" என்றார்.

நானோ, "வீணாக நான் உழைத்தேன்: வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்: ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது: என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது" என்றேன்.

யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்: ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்: என் கடவுளே என் ஆற்றல்: அவர் இப்பொழுது உரைக்கிறார்:

அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோ ரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

மனிதரிடையே பெரிதும் இகழப் பட்டவரும் நாடுகளிடையே வெறுத்தொதுக்கப்பட்டவரும் ஆட்சியாளர்களின் பணியாளருமானவருக்கு இஸ்ரயேலின் மீட்பரும் பயவருமான ஆண்டவர் கூறுவது இதுவே: "உண்மையுள்ள ஆண்டவரை முன்னிட்டும் உம்மைத் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலின் பயவர் பொருட்டும் அரசர்கள் உம்மைக் கண்டு எழுந்து நிற்பர்: தலைவர்கள் உம்முன் தலை வணங்குவர்."

ஆண்டவர் கூறுவது இதுவே: தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்: விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்: நாட்டை மீண்டும் நிலைநாட்டவும் பாழடைந்து கிடக்கும் உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும் நான் உம்மைப் பாதுகாத்து மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக ஏற்படுத்தினேன்.

சிறைப்பட்டோ ரிடம், "புறப்படுங்கள்" என்றும் இருளில் இருப்போரிடம் "வெளிப்படுங்கள்" என்றும் சொல்வீர்கள். பாதையில் அவர்களுக்கு மேய்ச்சல் கிடைக்கும்: வறண்ட குன்றுகள் அனைத்திலும் பசும் புல்வெளிகளைக் காண்பர்.

அவர்கள் பசியடையார்: தாகமுறார்: வெப்பக் காற்றோ, வெயிலோ அவர்களை வாட்டுவதில்லை. ஏனெனில் அவர்கள்மேல் கருணை காட்டுபவர் அவர்களை நடத்திச் செல்வார்: அவர் அவர்களை நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார்.

என் மலைகள் அனைத்தையும் வழியாக அமைப்பேன்: என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும்.

இதோ, இவர்கள் தொலையிலிருந்து வருவார்கள்: சிலர் வடக்கிலிருந்தும் சிலர் மேற்கிலிருந்தும் சிலர் சீனிம் நாட்டிலிருந்தும் வருவார்கள்.

வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்: மண்ணுலகே, களிகூரு: மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்: சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார்.

சீயோனோ, "ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்: என் தலைவர் என்னை மறந்து விட்டார்" என்கிறாள்.

பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.

இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன். உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன.

உன் பிள்ளைகள் விரைந்து வருவர்: உன்னை அழித்துப் பாழாக்கியோரும் உன்னை விட்டுப் போய்விடுவர்.

உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்: அவர்கள் அனைவரும் உன்னிடம் ஒருங்கே வருகின்றனர்: என் உயிர்மேல் ஆணை! நீ அவர்கள் அனைவரையும் அணிகலன்போல் அணிந்துகொள்வாய்: மணப்பெண் அணிவதுபோல்஥஥ அணிந்துகொள்வாய், என்கிறார் ஆண்டவர்.

பாழடைந்து, அழிந்து, மண் மேடாய்ப் போன உன் நாட்டின் பகுதிகள் இப்பொழுது மக்கள் குடியிருப்பதற்கு மிகவும் குறுகியதாயிருக்கும்: முன்பு உன்னை விழுங்கியவர் உன்னைவிட்டு வெகு தொலைவுக்குச் செல்வர்.

உன் துக்க காலத்தில் பிறந்த உன் பிள்ளைகள் உன் செவிகளில் "இந்த இடம் எங்களுக்கு மிகவும் நெருக்கடியாய் இருக்கிறது: நாங்கள் குடியிருக்கப் போதிய இடம் தாரும்" என்பர்.

அப்போது நீ, "இவர்களை எனக்கெனப் பெற்றெடுத்தவர் யார்? நான் பிரிவுத் துயரால் வாடினேன்! மலடியாய் இருந்தேன்! நாடு கடத்தப்பட்டுத் துரத்தப்பட்டேன்! அப்படியிருக்க இவர்களை ஆளாக்கிவிட்டவர் யார்? நான் தன்னந்தனியளாய் விடப்பட்டிருக்க, எங்கிருந்து, இவர்கள் வந்தார்கள்?" என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வாய்.

என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஓவேற்றினத்தாருக்கு நேராக என் கையை உயர்த்துவேன்: மக்களினங்களை நோக்கி என் அடையாளக் கொடியை ஏற்றுவேன்: அவர்கள் உன் புதல்வரை மார்பில் ஏந்திக் கொண்டுவருவர்: உன் புதல்வியரைத் தம் தோள்மேல் வைத்துத் பக்கி வருவர்.

அரசர்கள் உன் வளர்ப்புத் தந்தையர் ஆவர்: அவர்கள் அரசியர் உங்கள் செவிலித் தாயர் ஆவர்: முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து அவர்கள் உன்னை வணங்குவர்: உன் காலடிப் புழுதியை நக்குவர்: நானே ஆண்டவர் என்பதையும், எனக்காகக் காத்திருப்போர் வெட்கமடையார் என்பதையும் அப்பொழுது நீ அறிந்து கொள்வாய்.

வலியோனின் கையினின்று, கொள்ளைப் பொருளைப் பறிக்கக் கூடுமா? வெற்றி வீரனிடமிருந்து, சிறைப்பட்டோ ர் தப்ப இயலுமா?

ஆண்டவர் கூறுவது இதுவே: சிறைப்பட்டோ ர் வலியோனிடம் இருந்து விடுவிக்கப்படுவர்: கொள்ளைப்பொருள் கொடியவன் கையினின்று மீட்கப்படும்: உன்னை எதிர்த்துப் போராடுபவருடன் நானும் போராடுவேன்: உன் பிள்ளைகளை விடுவிப்பேன்.

உன்னை ஒடுக்குவோர் தங்கள் சதையை உண்ணச்செய்வேன்: அவ்வாறு தங்கள் இரத்தத்தை இனிய இரசம்போல் குடித்து வெறிப்பர்: அப்பொழுது மானிடர் யாவரும், நானே ஆண்டவர், உன் விடுதலையாளர், உன் மீட்பர், யாக்கோபின் வல்லவர்ஓ என்று அறிந்து கொள்வர்.

அதிகாரம் 50.

ஆண்டவர் கூறுவது இதுவே: உன் தாயைத் தள்ளி வைத்ததற்கான மணமுறிவுச் சீட்டு எங்கே? உங்களை விற்றுவிடும் அளவுக்கு எவனுக்கு நான் கடன்பட்டிருந்தேன்? இதோ, உங்கள் தீச்செயல்களை முன்னிட்டே நீங்கள் விற்கப்பட்டீர்கள்: உங்கள் வன்செயல்களின் பொருட்டே உங்கள் தாய் தள்ளி வைக்கப்பட்டாள்.

நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற் போனதேன்? நான் அழைத்தபோது பதில் தர எவனும் இல்லாததேன்? உங்களை மீட்க இயலாதவாறு என்கை சிறுத்துவிட்டதோ? விடுவிக்கக் கூடாதவாறு என் ஆற்றல் குன்றிவிட்டதோ? இதோ என் கடிந்துரையால் கடல்தனை வற்றச் செய்கிறேன்: ஆறுகளைப் பாலையாக்குகிறேன்: அவற்றின் மீன்கள் நீரின்றி நாறுகின்றன: தாகத்தால் சாகின்றன.

வான்வெளியைக் காரிருளால் உடுத்துவிக்கின்றேன்: அதனைச் சாக்கு உடையால் போர்த்துகின்றேன்.

நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்: காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்: கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.

ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்: நான் கிளர்ந்தெழவில்லை: விலகிச் செல்லவுமில்லை.

அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோ஡க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்: நான் அவமானம் அடையேன்: என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்: இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.

நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்: என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்: என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும்.

இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்: நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்? அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்: புழுக்கள் அவர்களை அரித்துவிடும்.

உங்களுள் ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவர்தம் அடியானின் சொல்லுக்குச் செவிசாய்ப்பவன் எவன்? அவன் ஒளிபெற இயலா நிலையில் இருளில் நடந்துவருபவன்: ஆண்டவரின் பெயர்மீது நம்பிக்கை கொண்டு தன்கடவுளைச் சார்ந்து கொள்பவன்.

ஆனால், நெருப்பு மூட்டித் தீப்பிழம்புகளால் சூழப்பட்டவர்களே: நீங்கள் அனைவரும் உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டிய தீப்பிழம்புகளிடையேயும் நடங்கள்: என் கையினின்று உங்களுக்குக் கிடைப்பது இதுவே: நீங்கள் வேதனையின் நடுவே உழன்று கிடப்பீர்கள்.

அதிகாரம் 51.

விடுதலையை நாடுவோரே, ஆண்டவரைத் தேடுவோரே, எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் எந்தப் பாறையினின்று செதுக்கப்பட்டீர்களோ, எந்தக் குழியினின்று தோண்டப் பட்டீர்களோ, அதை நோக்குங்கள்.

உங்கள் தந்தை ஆபிரகாமையும் உங்களைப் பெற்றெடுத்த சாராவையும் நினைத்துப் பாருங்கள்: தனியனாய் இருந்த அவனை அழைத்தேன்: அவனுக்கு ஆசி வழங்கிப் பெரும் திரளாக்கினேன்.

ஆண்டவர் சீயோனைத் தேற்றுவார்: பாழடைந்த அதன் பகுதிகள் அனைத்திற்கும் ஆறுதல் அளிப்பார்: அதன் பாலைநிலத்தை ஏதேன்போல் அமைப்பார்: அதன் பாழ் இடங்களை ஆண்டவரின் தோட்டம்போல் ஆக்குவார். மகிழ்ச்சியும் அக்களிப்பும் அதில் காணப்படும்: நன்றிப்பாடலும் புகழ்ச்சிப் பண்ணும் அங்கே ஒலிக்கும்.

என் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்: என் இனமே, எனக்குச் செவிகொடு: ஏனெனில் திருச்சட்டம் என்னிடமிருந்து புறப்பட்டுச் செல்லும்: என் நீதி மக்களினங்களுக்கு ஒளியாகத் திகழும்.

நான் அளிக்கும் விடுதலை அண்மையில் உள்ளது: நான் வழங்கும் மீட்பு வெளிப்பட்டு விட்டது: என் புயங்கள் மக்களினங்கள்மேல் ஆட்சி செலுத்தும்: என் கைவன்மைமீது அவை நம்பிக்கை கொள்ளும்.

வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்துங்கள்: கீழே மண்ணுலகை உற்றுநோக்குங்கள்: ஏனெனில், வானம் புகையென மறைந்துபோம்: மண்ணுலகம் உடையென நைந்துபோம்: அதில் வாழ்வோர் விட்டிலென மடிவர்: என் மீட்போ என்றென்றும் நிலைக்கும்: என் விடுதலைக்கு முடிவே இராது.

நேர்மைதனை அறிந்தோரே, என் சட்டத்தை இதயத்தே தாங்கும் மக்களினத்தாரே, எனக்குச் செவி கொடுங்கள்: மானிடரின் நிந்தைக்கு அஞ்சாதீர்கள்: அவர்தம் இழிசொல் கேட்டுக் கலங்காதீர்கள்.

ஏனெனில், பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையெனத் தின்றழிக்கும்: அரிப்புழு அவர்களை ஆட்டு மயிரென அரித்தொழிக்கும்: நான் அளிக்கும் விடுதலையோ என்றென்றும் நிலைக்கும்: நான் வழங்கும் மீட்போ தலைமுறைதோறும் நீடிக்கும்.

விழித்தெழு, விழித்தெழு, ஆண்டவரின் புயமே, ஆற்றலை அணிந்து கொள்: பண்டைய நாள்களிலும் முந்தைய தலைமுறைகளிலும் செய்ததுபோல் விழித்தெழு: இராகாபைத் துண்டு துண்டாக வெட்டியதும் பறவை நாகத்தை ஊடுறவக் குத்தியதும் நீ அன்றோ?

பேராழ நீர்த்திரளாம் கடலை வற்றச்செய்து, ஆழ்பகுதிகளில் பாதை அமைத்து, மீட்கப்பட்டோ ரை கடக்கச் செய்ததும் நீயே அன்றோ?

ஆண்டவரால் மீட்கப்பட்டோ ர் திரும்பி வருவர்: மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்: முடிவில்லா மகிழ்ச்சி அவர்கள் தலைமேல் தங்கும்: அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் அடைவர்: துயரமும் பெருமூச்சும் ஒழிந்துபோம்.

உங்களுக்கு ஆறுதல் வழங்குபவர் நானேதான்! மடிந்து போகும் மனிதருக்கும் புல்லென மாயும் மானிடருக்கும் நீ அஞ்சுவது ஏன்?

உன்னை உருவாக்கிய ஆண்டவரை நீ ஏன் மறந்துவிட்டாய்? வானங்களை விரித்துப் பரப்பியவரும், மண்ணுலகிற்கு அடித்தளமிட்டவரும் அவர் அன்றோ? உன்னை ஒடுக்கி அழித்துவிட முயன்றவன் சீற்றத்தை முன்னிட்டு நீ ஏன் எந்நாளும் ஓய்வின்றி நடுங்குகிறாய்? உன்னை ஒடுக்கியவனின் சினம் எங்கே?

கூனிக் குறுகியவன் விரைவில் விடுதலை பெறுவான்: அவன் குழியில் செத்து வீழ்வதில்லை: அவனுக்கு உணவு இல்லாமல் போகாது.

உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! கடலைக் கலக்கி அலைகளைக் கொந்தளிக்கச் செய்பவர் நானே! "படைகளின் ஆண்டவர்" என்பது அவர்தம் பெயராம்!

நான் வானங்களை விரித்துப் பரப்பினேன்: மண்ணுலகிற்கு அடித்தளம் அமைத்தேன்: சீயோனை நோக்கி, "நீ என் மக்கள்" என்றேன்: என் சொற்களை உன் நாவில் அருளினேன்: என் கை நிழலில் உன்னை மறைத்துக்கொண்டேன்.

விழித்தெழு, விழித்தெழு, ஆண்டவர் கையினின்று, சினக் கிண்ணத்தைக் குடித்தவளே, மதியை மயக்கும் அக்கிண்ணத்தை அடிமண்டிவரை குடித்தவளே, எருசலேமே, எழுந்து நில்.

அவள் பெற்றெடுத்த புதல்வருள் அவளுக்கு வழிகாட்டுவார் எவருமில்லை: அவள் வளர்த்துவிட்ட ஆண் மக்களுள் அவளுக்குக் கைகொடுப்பார் யாருமில்லை!

இருவகைத் தீங்குகள் உனக்கு நேரிட்டன, உனக்காகப் புலம்பியழுபவன் எவன்? வீழ்ச்சி-அழிவு, பஞ்சம்-வாள் இவை உன்னை வாட்டின: யார் உன்னைத் தேற்றுவார்?

உன் பிள்ளைகள் மயக்கமுற்றனர்: வலையில் சிக்கிய கலைமான் போல் அவர்கள் ஒவ்வொரு தெருமுனையிலும் வீழ்ந்துகிடக்கின்றனர்: ஆண்டவரின் சினத்திற்கும் உன் கடவுளின் கண்டிப்புக்கும் உள்ளாயினர்.

ஆதலால், சிறுமையுற்றவளே, திராட்சை இரசம் இன்றியே குடிவெறி கொண்டவளே, இதைக் கேள்.

தம் மக்கள் சார்பாக வழக்காடும் உன் கடவுளாகிய ஆண்டவர், உன் தலைவர் கூறுவது இதுவே: "இதோ, உன்னை மதிமயக்கும் கிண்ணத்தை உன் கையினின்றும் அகற்றிவிட்டேன்: என் சினக் கிண்ணத்தினின்று நீ இனிக் குடிக்கவேமாட்டாய்."

அக்கிண்ணத்தை உன்னை ஒடுக்கினோர் கையில் திணிப்பேன்: "நாங்கள் கடந்து செல்வதற்கு நீ முகங்குப்புற விழுந்துகிட" என்று அவர்கள் உன்னிடம் சொன்னார்களே! உன் முதுகை அவர்கள் தரையாகவும், கடந்து செல்வோருக்குக்குத் தெருவாகவும் மாற்றினார்களே!

அதிகாரம் 52.

விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்து கொள்: திரு நகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந்துகொள்: விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவனும் உன்னிடையே இனி வரவேமாட்டான்.

சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எழுந்துநில்: அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.

ஆண்டவர் கூறுவது இதுவே: விலையின்றி விற்கப்பட்டீர்கள்: பணமின்றி மீட்கப்படுவீர்கள்.

ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: முன்னாளில் என் மக்கள் தங்கி வாழ்வதற்கு எகிப்திற்குச் சென்றார்கள்: அசீரியன் காரணம் எதுவுமின்றி அவர்களை ஒடுக்கினான்.

இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது? என்கிறார் ஆண்டவர். ஈட்டுத்தொகை செலுத்தாது என் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்: அவர்களை ஆளுவோர் நற்பெருமை பேசுகின்றனர்: எந்நாளும் இடைவிடாது என் பெயர் இகழப்படுகின்றது, என்கிறார் ஆண்டவர்.

ஆதலால் என் மக்கள் எனது பெயரை அறிந்து கொள்வார்கள். இதைச் சொல்லுகிறவர் நானே என்பதை அந்நாளில் உணர்ந்து கொள்வார்கள்: இதோ, நான் இங்கே இருக்கின்றேன்.

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, "உன் கடவுள் அரசாளுகின்றார்" என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!

இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்: அவர்கள் அக்களிப்பு ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்: ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர்.

எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்: எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.

பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் பய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்: மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

திரும்பிச் செல்லுங்கள், திரும்பிச் செல்லுங்கள்: அங்கிருந்து வெளியேறுங்கள்: தீட்டானதைத் தொடாதீர்கள்: ஆண்டவரின் கலங்களை ஏந்திச்செல்வோரே, அந்நாட்டினின்று வெளியேறுங்கள்: உங்களையும் பய்மைப்படுத்திக்கொள்ளுங்கள்.

நீங்கள் அவசரப்பட்டு வெளியேறப் போவதில்லை: தப்பியோடுவது போல் செல்வதுமில்லை: ஏனெனில், ஆண்டவர் உங்கள்முன்னே செல்வார்: இஸ்ரயேலின் கடவுள் உங்கள்பின்னே பாதுகாப்பாய் இருப்பார்.

இதோ, என் ஊழியர் சிறப்படைவார்: அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.

அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்: அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது: மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.

அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்: அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்: ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்: தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.

அதிகாரம் 53.

நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?

இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்: நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை: நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை:

அவர் இகழப்பட்டார்: மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்: வேதனையுற்ற மனிதராய் இருந்தார்: நோயுற்று நலிந்தார்: காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்: அவர் இழிவுபடுத்தப்பட்டார்: அவரை நாம் மதிக்கவில்லை.

மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்: நம்஥ துன்பங்களைச் சுமந்து கொண்டார்: நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.

அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்: அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.

ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்: நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்: ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார்.

அவர் ஒடுக்கப்பட்டார்: சிறுமைப்படுத்தப்பட்டார்: ஆயினும், அவர் தம்஥஥஥ வாயைத் திறக்கவில்லை: அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்: அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்: என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார்.

வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை: வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை: ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்: செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார்.

அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்: அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்: எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்: ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.

அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்: நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்: அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்: அவரும்஥ வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்: ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்: கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்: ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்: கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.

அதிகாரம் 54.

பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு: பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு: ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர்.

உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு: உன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு: உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டி விடு: உன் முளைகளை உறுதிப்படுத்து.

வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்: உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை உடைமையாக்கிக் கொள்வர்: பாழடைந்து கிடக்கும் நகர்களிலும் அவர்கள் குடியேற்றப்படுவர்.

அஞ்சாதே, நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்: வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்: உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்: உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்கமாட்டாய்.

ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர்,"படைகளின் ஆண்டவர்" என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் பயவரே உன் மீட்பர்: "உலக முழுமைக்கும் கடவுள்" என அவர் அழைக்கப்படுகின்றார்.

ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள்.

நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்: ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.

பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என்முகத்தை உனக்கு மறைத்தேன்: ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர்.

எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது: நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்: அவ்வாறே உம்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.

மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது: என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.

துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது தவிப்பவளே, இதோ, மாணிக்கக்கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக்கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன்.

உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள் அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன்.

உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்: உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர்.

நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்: ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்: நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது.

எவர்களாவது உன்னை எதிர்த்துக் கூடினால் அவர்கள் என்னிடமிருந்து வந்தவர்கள் அல்லர்: உன்னைத் தாக்கவரும் எவனும் உன் பொருட்டு வீழ்ச்சியுறுவான்.

இதோ, கரிநெருப்பை ஊதிப் போர்க் கருவியை அதன் பயனுக்கு ஏற்ப உருவாக்கும் கொல்லனைப் படைத்தவர் நான்: அதைப் பாழாக்கி அழிப்பவனையும் படைத்தவர் நான்.

உன்னைத் தாக்குமாறு உருவாக்கப்பட்ட எந்தப் போர்க்கருவியும் நிலைத்திராது. உன்மேல் குற்றஞ்சாட்டித் தீர்ப்புச் சொல்ல எழும் எந்த நாவையும் நீ அடக்கிவிடுவாய்: இவையே ஆண்டவரின் ஊழியர்களது உரிமைச்சொத்தும். நான் அவர்களுக்கு அளிக்கும் வெற்றியுமாய் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 55.

தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்: கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்: தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.

உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்: நல்லுணவை உண்ணுங்கள்: கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.

எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்: கேளுங்கள்: அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்: தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்.

நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன்.

இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்: உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் பயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார்.

ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்: அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள்.

கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக: அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்: அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்: அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்: ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்.

என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.

மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை.

அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

மகிழ்ச்சியுடன் நீங்கள் புறப்பட்டுச் செல்வீர்கள்: அமைதியுடன் நடத்திச் செல்லப் படுவீர்கள்: மலைகளும் குன்றுகளும் உங்கள் முன் முழங்கி மகிழ்ந்து பாடும்: காட்டு மரங்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கும்.

முட்செடிக்குப் பதிலாக தேவதாரு மரம் முளைத்து வளரும்: காஞ்சொறிக்குப் பதிலாக நறுமணச் செடி துளிர்த்து வளரும்: இது, ஆண்டவருக்கு நற்பெயர் ஏற்படச் செய்யும்: அழிவில்லா, என்றுமுள நினைவுச் சின்னமாய் அமையும்.

அதிகாரம் 56.

ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்: நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது: நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும்.

இவ்வாறு செய்யும் மனிதர் பேறு பெற்றவர்: ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக் கொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர்.

ஆண்டவரோடு தம்மை இணைத்துக்கொண்ட பிறஇனத்தவர், "தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி" என்று சொல்லாதிருக்கட்டும்: அவ்வாறே அண்ணகனும், "நான் வெறும் பட்டமரம்" என்று கூறாதிருக்கட்டும்.

ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்து கொண்டு, என் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு,

என் இல்லத்தில், என் சுற்றுச்சுவர்களுக்குள் நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்: புதல்வர் புதல்வியரைவிடச் சிறந்ததொரு பெயரை வழங்குவேன்: ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை அவர்களுக்குச் சூட்டுவேன்.

ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது:

அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்: இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்: அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்: ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய "இறைமன்றாட்டின் வீடு" என அழைக்கப்படும்.

சிதறிப்போன இஸ்ரயேல் மக்களை ஒருங்கே சேர்க்கும் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது: அவர்களை ஏற்கெனவே கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களோடு ஏனையோரையும் சேர்த்துக் கொள்வேன்.

வயல்வெளி விலங்குகளே, காட்டு விலங்குகளே, நீங்களெல்லாம் இரை விழுங்க வாருங்கள்.

அவர்களின் சாமக்காவலர் அனைவரும் குருடர், அறிவற்றவர்: அவர்கள் அனைவரும் குரைக்க இயலா ஊமை நாய்கள்: படுத்துக்கிடந்து கனவு காண்கின்றவர்கள்: பங்குவதையே விரும்புகின்றவர்கள்.

தீராப் பசிகொண்ட நாய்கள்: நிறைவு என்பதையே அறியாதவர்: பகுத்தறிவு என்பதே இல்லாத மேய்ப்பர்: அவர்கள் அனைவரும் அவரவர் தம் வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்: ஒவ்வொருவரும் தம் சொந்த ஆதாயத்தைத் தேடுகின்றனர்.

ஒவ்வொருவரும், "வாருங்கள்: நான் திராட்சை இரசம் கொண்டு வருவேன்: போதையேற நாம் மது அருந்துவோம்: நாளை இன்று போலும் இதைவிடச் சிறப்பாகவும் அமையும்" என்கின்றனர்.

அதிகாரம் 57.

நேர்மையாளர் அழிந்து போகின்றனர்: இதை மனத்தில் கொள்வார் எவரும் இல்லை: இறைப்பற்றுடையோர் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்: அதைக் கருத்தில் கொள்வார் எவரும் இல்லை: ஏனெனில் நேர்மையாளர் தீமையின் முன்னின்று எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.

அவர்கள் அமைதிக்குள் சென்றடைகின்றனர்: நேர்மையான வழிமுறையைப் பின்பற்றுவோர் தம் இறுதிப் படுக்கைகளில் இளைப்பாறுகின்றனர்.

சூனியக்காரியின் மக்களே, விபசாரன், விலைமாதின் வாரிசே, அருகில் வாருங்கள்.

யாரைப் பார்த்து நீங்கள் நகைக்கின்றீர்கள்? யாருக்கு எதிராக வாயைப்பிளந்து நாக்கை நீட்டுகின்றீர்கள்? நீங்கள் கொடுமையின் பிள்ளைகளன்றோ! பொய்மையின் சந்ததியன்றோ!

கருவாலி மரத் தோப்பிலும், பசுமையான மரம் ஒவ்வொன்றின் கீழும் காமத்தீயால் எரிகிறீர்கள்: பள்ளத்தாக்குகளில், பாறைப் பிளவுகளின் அடிப்புறத்தில், உங்கள் பச்சிளங் குழந்தைகளைக் கொல்கிறீர்கள்.

பள்ளத்தாக்கின் வழவழப்பான கற்களினின்று உருவான சிலைகளே உன் பங்கு: ஆம், அவையே உன் பங்கு: அவற்றிற்கு நீ நீர்மப்பலியை ஊற்றியுள்ளாய்: உணவுப் படையலைப் படைத்துள்ளாய்: இவற்றால் நான் அமைதி அடைவேனோ?

வானாளவ உயர்ந்து நிற்கும் மலைமேல் உன் மஞ்சத்தை வைத்துள்ளாய்: பலிசெலுத்துமாறு அங்கு ஏறிப்போனாய்.

கதவுக்கும் கதவின் நிலைக்கும் பின்னால் உன் நினைவுக்குறியை வைத்தாய்: என்னை விட்டுவிட்டு உன் மஞ்சத்தைத் திறந்தாய்: ஏறிச்சென்று அதை விரிவாக்கினாய்: நீ எவருடைய படுக்கையை விரும்஥பினாயோ, அவர்களோடு ஓர் உடன்பாடு செய்து கொண்டாய்: அவர்களின் திறந்த மேனியைக் கண்டாய்.

நீ எண்ணெயுடன் மோலேக்கிடம் சென்றாய்: நறுமணப் பொருட்களைப் பெருக்கிக் கொண்டாய்: தொலை நாடுகளுக்கு உன் பதர்களை அனுப்பினாய்: பாதாளம் மட்டும் அனுப்பினாய்.

உன் வழிப்பயணம் தொலைவானதால் களைத்துப் போனாய்: ஆயினும், "இது வீண்" என்று நீ சொல்லவில்லை: உன் கையில் புதியதோர் ஆற்றல் பெற்றாய்: ஆதலால் நீ சோர்ந்து போகவில்லை.

யாருக்கு நீ அஞ்சி நடுங்கினாய்? நீ என்னிடம் பொய் சொன்னாயே! நீ என்னை நினைவுகூரவில்லை: என்னைப் பற்றி உன் மனத்தில் எண்ணவுமில்லை! வெகுகாலமாய் நான் அமைதியாய் இருந்ததால் அன்றோ நீ எனக்கு அஞ்சாதிருக்கின்றாய்?

உன் நேர்மையையும் செயல்களையும் எடுத்துரைப்பேன்: அவை உனக்கு உதவா.

நீ துணை வேண்டிக் குரல் எழுப்பும்போது, நீ திரட்டிய சிலைகள் உன்னை விடுவிக்கட்டும்! காற்று அவை அனைத்தையும் அடித்துக் கொண்டுபோம்: வெறும் மூச்சே அவற்றை ஊதித் தள்ளிவிடும்: என்னிடம் அடைக்கலம் புகுவோர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்: என் திருமலையை உடைமையாய்ப் பெறுவர்.

அமையுங்கள்: பாதையை அமையுங்கள்: அதைத் தயார் செய்யுங்கள்: "என் மக்களின் வழியிலிருக்கும் தடையை அகற்றுங்கள்" என்று கூறப்படும்.

உயர்ந்தவரும் உன்னதரும் காலம் கடந்து வாழ்பவரும், "பயவர்" என்ற பெயரைக் கொண்டவரும் கூறுவது இதுவே: உயர்ந்த பய இடத்தில் நான் உறைகின்றேன்: நொறுக்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன்: நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன்.

ஏனெனில், என்றென்றும் நான் குற்றஞ்சாட்டமாட்டேன்: எப்பொழுதும் சினம் கொண்டிருக்கமாட்டேன்: ஏனெனில், நான் தோற்றுவித்த உயிர் மூச்சாகிய மனித ஆவி என் திருமுன் தளர்ச்சியடைந்து விடும்.

பேராசை என்னும் தீமையை முன்னிட்டு நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து, அவனை அடித்து நொறுக்கினேன்: சீற்றம் கொண்டு என்னை அவனுக்கு மறைத்துக் கொண்டேன்: அவனோ என்னைவிட்டு விலகி மனம்போன போக்கிலே சென்றான்.

அவன் சென்ற பாதைகளைக் கண்டேன்: ஆயினும் அவனைக் குணமாக்குவேன்: அவனை நடத்திச் சென்று அவனுக்கு மீண்டும் ஆறுதல் அளிப்பேன்.

அவனுக்காக அழுவோரின் உதடுகளில் நன்றி ஒலி எழச்செய்வேன்: அமைதி! தொலையில் இருப்போருக்கும் அருகில் இருப்போருக்கும் அமைதி! என்கிறார் ஆண்டவர். அவர்களை நான் நலமடையச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.

கொடியவரோ கொந்தளிக்கும் கடல்போல் இருக்கின்றனர்: அந்தக் கடலால் அமைதியாயிருக்க இயலாது: அதன் நீர்த்திரள்கள் சேற்றையும் சகதியையும் கிளறிவிடுகின்றன:

கொடியவர்களுக்கு அமைதியே இல்லை, என்கிறார் என் கடவுள்.

அதிகாரம் 58.

பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே: எக்காளம் முழங்குவது போல் உன் குரலை உயர்த்து: என் மக்களுக்கு அவர்களின் வன்செயல்களையும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு.

அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும் மக்களினம்போலும், தங்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போர் போலும் நாள்தோறும் என்னைத் தேடுகின்றார்கள்: என் நெறிமுறைகள் பற்றிய அறிவை நாடுகின்றார்கள்: நேர்மையான நீதித்தீர்ப்புகளை என்னிடம் வேண்டுகின்றார்கள்: கடவுளை அணுகிவர விழைகின்றார்கள்.

"நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்கிறார்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்: உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள்.

இதோ, வழக்காடவும், வீண்சண்டையிடவும், கொடும் கையால் தாக்கவுமே நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்! இன்றுபோல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது.

ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்?

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பவதும் ஒடுக்கப்பட்டோ ரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்: விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்: உன் நேர்மை உனக்கு முன் செல்லும்: ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்.

அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்: அவர் உனக்குப் பதிலளிப்பார்: நீ கூக்குரல் இடுவாய்: அவர் "இதோ! நான்" என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு,

பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்: இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்: வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்: உன் எலும்புகளை வலிமையாக்குவார்: நீயும் நீ பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய்.

உன் மக்கள் பண்டை நாளிலிருந்து பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்: தலைமுறை தலைமுறையாக உள்ள அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்: தகர்ந்த மதிலைத் திரும்பக் கட்டுபவன் என்றும் குடியிருப்பதற்குத் தெருக்களைச் சீர்படுத்துபவன் என்றும் பெயர் பெறுவாய்.

ஓய்வுநாளின் முறைமைகளினின்று விலகிச் செல்லாது, என் புனித நாளில் உன் விருப்பம் போல் செய்யாதிருந்து, ஓய்வு நாள் "மகிழ்ச்சியின் நாள்" என்றும் "ஆண்டவரின் மேன்மைமிகு புனித நாள்" எனவும் சொல்லி அதற்கு மதிப்புத் தந்து, உன் சொந்த வழிகளில் செல்லவோ உன் சொந்த ஆதாயத்தை நாடவோ வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ செய்யாதிருந்தால்,

அப்பொழுது, ஆண்டவருக்கு ஊழியம் புரியும் மகிழ்ச்சியைப் பெறுவாய்: நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில் உன்னை வலம்வரச் செய்வேன்: உன் மூதாதையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்தின் மூலம் உனக்கு உணவளிப்பேன்: ஆண்டவரின் வாய் இதை உரைத்தது.

அதிகாரம் 59.

மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை: கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை.

உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன: உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன.

உங்கள் கைகள் இரத்தப்பழியால் கறைபட்டுள்ளன: உங்கள் உதடுகள் பொய்களை உதிர்க்கின்றன: உங்கள் நாக்கு தீயவற்றை முணுமுணுக்கின்றது.

நீதியான வழக்கைக் கொண்டு வருபவர் எவரும் இல்லை: உண்மையுடன் வழக்காடுபவர் யாருமில்லை: வெறுமையான வாதங்கள்மீது நம்பிக்கை வைத்துப் பொய்யைப் பேசி, வஞ்சனையைக் கருத்தரித்துத் தீமையைப் பெற்றெடுக்கின்றனர்.

நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள்: சிலந்திப் பூச்சியின் வலையைப் பின்னுகிறார்கள்: அவற்றின் முட்டைகளை விழுங்குபவர் சாவார்: உடைபடும் முட்டையிலிருந்து கட்டுவிரியன் வெளிவரும்.

அவற்றின் வலைகள் உடையாகப் பயன்படா: அவற்றின் வேலைப்பாடுகளைக் கொண்டு எவரும் தம்மைப் போர்த்துக்கொள்ளமாட்டார்: அவர்களின் செயல்கள் தீயின: அவர்களின் கையில் இருப்பன வன்முறைச் செயல்களே!

தீமை செய்ய அவர்கள் கால்கள் விரைகின்றன: குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் துடிக்கின்றனர்: அவர்கள் எண்ணங்கள் தீயவை: பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.

அமைதி வழியை அவர்கள் அறியார்: நீதியின் பாதையில் அவர்கள் நடக்கவில்லை: தாங்கள் செல்லும் பாதைகளைக் கோணலாக்கினர்: அவற்றில் நடப்பவர் எவரும் அமைதியை அறியார்.

ஆதலால், நீதி எங்களுக்கு வெகு தொலையில் உள்ளது: நேர்மை எங்களை நெருங்கி வரவில்லை. ஒளிக்கெனக் காத்திருந்தோம்: காரிருள்தான் கிட்டியது: விடியலை எதிர்பார்த்தோம்: இருளிலேயே நடக்கின்றோம்:

பார்வையற்றோரைப் போல் சுவரைப்பிடிக்க நாங்கள் தடவுகின்றோம்: கண்ணில்லாதவரைப்போல் எங்கள் வழியில் தடுமாறுகின்றோம்: நண்பகலிலும் மங்கிய பொழுதிலும் செத்தவர்போல் இருக்கின்றோம்.

கரடியைப் போல் நாங்கள் யாவரும் உறுமுகின்றோம்: புறாக்களைப்போல் பெருமூச்சுடன் விம்முகின்றோம்: நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம், ஒன்றையும் காணவில்லை: விடுதலையை எதிர்பார்த்திருந்தோம், அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.

உம் திருமுன் எங்கள் குற்றங்கள் பெருகியுள்ளன: எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச் சான்று சொல்கின்றன: எங்கள் குற்றங்கள் எங்களோடு தான் இருக்கின்றன: எங்கள் தீச்செயல்களை நாங்களே அறிவோம்.

ஆண்டவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அவரை வஞ்சித்தோம்: எங்கள் கடவுளைப் பின்பற்றாமல் அகன்று போனோம்: ஒடுக்குவதையும் கிளர்ச்சி செய்வதையும்பற்றிப் பேசினோம்: பொய்யானவற்றை மனதில் உருவாக்கி அவற்றை மொழிந்தோம்.

நீதி துரத்தப்பட்டது: நேர்மை தொலையில் நின்றது: பொது இடங்களில் வாய்மை நிலைகுலைந்தது: உண்மைக்கு அங்கே இடம் இல்லை.

உண்மை என்பதே இல்லாமல் போய்விட்டது: தீமையினின்று விலகியவர் சூறையாடப்படுகின்றார்: ஆண்டவர் அதைக் கண்டார்: அவர் பார்வையில் நீதியின்மை தீயதாய்ப் பட்டது.

இதில் தலையிட ஓர் ஆள்கூட இல்லை என்று கண்டு ஆண்டவர் திகைப்புற்றார்: அவரது கையே அவருக்கு வெற்றி கொணர்ந்து: அவரது நேர்மையே அவரைத் தாங்கி நின்றது.

அவர் நேர்மையை மார்புக் கவசமாய் அணிந்துகொண்டார்: விடுதலையைத் தலைச்சீராவாய்த் தம் தலையில் வைத்துக்கொண்டார்: அநீதிக்குப் பழிவாங்குதலை ஆடையாய் உடுத்திக் கொண்டார்: அன்புவெறியை மேலாடையாகப் போர்த்திக் கொண்டார்.

தம் பகைவரின் செயல்களுக்குத் தக்க கைம்மாறு அளிப்பார்: அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்: தம் எதிரிகளுக்குத் தக்க தண்டனை வழங்குவார்: தீவு நாடுகளுக்கும் தகுந்த பதிலடி கொடுப்பார்.

மேலை நாட்டினர் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்: கீழைநாட்டினர் அவரது மாட்சிக்கு நடுங்குவர்: ஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர, ஓடிவரும் ஆறென அவர் வருவார்.

சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்: யாக்கோபில் தீயதனின்று திரும்பியவரிடம் வருவார், என்கிறார் ஆண்டவர்.

அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உன்மேல் இருக்கும் என் ஆவியும் உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும் உன் வாயினின்றும் உன் வழி மரபினர் வாயினின்றும் வழிவழிவரும் உன் தலைமுறையினர் வாயினின்றும் இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது, என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 60.

எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!

இதோ! இருள் பூவுலகை மூடும்: காரிருள் மக்களினங்களைக் கவ்வும்: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்: அவரது மாட்சி உன்மீது தோன்றும்!

பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்: மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.

உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்: அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்: தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்: உன் புதல்வியர் தோளில் பக்கி வரப்படுவர்.

அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்: உன் இதயம் வியந்து விம்மும்: கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்: பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்.

ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்: மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்: இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

கேதாரின் ஆட்டுமந்தைகள் அனைத்தும் உன்னிடம் ஒருங்கே சேர்க்கப்படும்: நெபயோத்தின் கிடாய்கள் உனக்குப் பணிவிடைசெய்யும்: எனக்கு உகந்தவையாக அவை என் பீடத்திற்கு வரும்: இவ்வாறு மேன்மைமிகு என் இல்லத்தைப் பெருமைப்படுத்துவேன்.

மேகங்கள் போலும் பலகணி நோக்கிப் பறந்து செல்லும் புறாக்கள் போலும் விரைந்து செல்லும் இவர்கள் யார்?

தீவு நாடுகள் எனக்காகக் காத்திருக்கும்: இஸ்ரயேலின் பயவரும் உன் கடவுளுமான ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, உன் பிள்ளைகளைத் தொலையிலிருந்து ஏற்றி வரவும், வெள்ளியையும், பொன்னையும் அவர்களுடன் எடுத்து வரவும், தர்சீசின் வணிகக் கப்பல்கள் முன்னணியில் நிற்கும்: ஏனெனில், இஸ்ரயேலின் பயவர் உனக்கு மேன்மை அளித்துள்ளார்.

அன்னிய நாட்டவர் உன் மதிற் சுவரைக் கட்டியெழுப்புவர்: அவர்களின் மன்னர் உனக்குப் பணிவிடை செய்வர்: ஏனெனில், சினமுற்று நான் உன்னை நொறுக்கினேன்: நான் கனிவுற்று உனக்கு இரக்கம் காட்டியுள்ளேன்.

உன் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும்: இராப் பகலாய் அவை பூட்டப்படாதிருக்கும்: பிற இனத்தாரின் செல்வம் உன்னிடம் கொண்டு வரப்படவும், அவர்களின் மன்னர் ஊர்வலமாய் அழைத்து வரப்படவும், அவை திறந்திருக்கும்.

உனக்குப் பணிபுரியாத வேற்று நாடோ அரசோ அழிந்துவிடும்: அவை முற்றிலும் பாழடைந்து போகும்.

லெபனோனின் மேன்மை உன்னை வந்து சேரும்: என் திருத்பயகத்தைச் சுற்றியுள்ள இடத்தை அழகுபடுத்தத்஥஥஥஥஥ தேவதாரு, புன்னை, ஊசியிலை மரம் ஆகியவை கொண்டு வரப்படும்: என் பாதங்களைத் தாங்கும் தலத்தை மேன்மைப்படுத்துவேன்.

உன்னை ஒடுக்கியவரின் புதல்வர் உன்னிடம் தலைவணங்கி வருவர்: உன்னை அவமதித்தவர் அனைவரும் உன் காலடியில் பணிந்து வீழ்வர்: "ஆண்டவரின் நகர்" என்றும், "இஸ்ரயேலின் பயவரது சியோன்" என்றும் உன்னை அவர்கள் அழைப்பர்.

நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்: உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை: நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்: தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்: தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.

நீ பிற இனத்தாரின் பாலைப் பருகுவாய்: மன்னர்களின் மார்பிலிருந்து பாலை உறிஞ்சுவாய்: ஆண்டவராகிய நானே உனக்கு விடுதலை அளிப்பவர் என்றும் யாக்கோபின் வல்லவரே உன்னை மீட்பவர் என்றும் நீ அறிந்து கொள்வாய்.

வெண்கலத்திற்குப் பதிலாய்ப் பொன்னையும் இரும்பிற்குப் பதிலாய் வெள்ளியையும் மரத்திற்குப் பதிலாய் வெண்கலத்தையும் கற்களுக்குப் பதிலாய் இரும்பையும் கொண்டு வருவேன்: உங்கள் கண்காணியாய்ச் சமாதானத்தையும் உங்களை வேலைவாங்குமாறு நேர்மையையும் நியமிப்பேன்.

உன் நாட்டில் வன்முறை பற்றியும் உன் எல்஥஥஥லைப் பகுதிகளுக்குள் பாழாக்கலும் அழித்தலும் பற்றியும் இனி எந்தப் பேச்சும் எழாது: உன் மதில்களை "விடுதலை" என்றும் உன் வாயில்களைப் "புகழ்ச்சி" என்றும் அழைப்பாய்.

கதிரவன் உனக்கு இனிப் பகலில் ஒளிதர வேண்டாம்! பால்நிலவும் உனக்கு ஒளிவீச வேண்டாம்! ஆண்டவரே இனி உனக்கு முடிவிலாப் பேரொளி! உன் கடவுளே இனி உனக்கு மேன்மை!

உன் கதிரவன் ஒருபோதும் மறையான்: உன் நிலா இனித் தேய்ந்து போகாள்: ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்: உன் கண்ணீரின் நாள்கள் ஒழிந்துபோம்.

உன் மக்கள் அனைவரும் நேர்மையாளராய் இருப்பர்: அவர்கள் நாட்டை என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வர்: நான் மாட்சியடையுமாறு நட்டு வைத்த மரக்கிளை அவர்கள்: என் கைவேலைப்பாடும் அவர்களே.

அவர்களுள் சிறியவர் ஓராயிரமாய்ப் பெருகுவர்: அற்பரும் ஆற்றல்மிகு மக்கள் இனமாவர்: நானே ஆண்டவர்: ஏற்ற காலத்தில் இதை நான் விரைவாய்ச் செய்து முடிப்பேன்.

அதிகாரம் 61.

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது: ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்: ஒடுக்கப்பட்டோ ருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோ ருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோ ருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்.

ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும்,

சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் "புகழ்" என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். "நேர்மையின் தேவதாருகள்" என்றும் "தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை" என்றும் அவர்கள் பெயர் பெறுவர்.

நெடுங்காலமாய் இடிந்து கிடந்தவற்றை அவர்கள் கட்டியெழுப்புவார்கள்: முற்காலமுதல் பாழாய்க் கிடந்தவற்றை நிலைநிறுத்துவார்கள்: தலைமுறை தலைமுறையாக இடிந்து அழிந்துகிடந்த நகர்கறைச் சீராக்குவார்கள்.

அன்னியர் உங்கள் மந்தையை மேய்த்து நிற்பர்: வேற்று நாட்டு மக்கள் உங்கள் உழவராயும் திராட்சைத் தோட்டப் பணியாளராயும் இருப்பர்.

நீங்களோ, ஆண்டவரின் குருக்கள் என்று அழைக்கப்படுவீர்கள்: நம் கடவுளின் திருப்பணியாளர் என்று பெயர் பெறுவீர்கள்: பிறஇனத்தாரின் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்பீர்கள்: அவர்களின் சொத்தில் நீங்கள் பெருமை பாராட்டுவீர்கள்.

அவமானத்திற்குப் பதிலாக நீங்கள் இருபங்கு நன்மை அடைவீர்கள்: அவமதிப்புக்குப் பதிலாக உங்கள் உடைமையில் மகிழ்வீர்கள்: ஆதலால், நாட்டில் உங்கள் செல்வம் இருமடங்காகும்: முடிவில்லா மகிழ்ச்சியும் உங்களுக்கு உரியதாகும்.

ஆண்டவராகிய நான் நீதியை விரும்புகின்றேன்: கொள்ளையையும் குற்றத்தையும் வெறுக்கின்றேன்: அவர்கள் செயலுக்கு ஏற்ற கைம்மாற்றை உண்மையாகவே வழங்குவேன்: அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்து கொள்வேன்:

அவர்கள் வழிமரபினர் பிறஇனத்தாரிடையேயும், அவர்கள் வழித்தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும் புகழ் அடைவார்கள்: அவர்களை காண்பவர் யாவரும் அவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற வழிமரபினர் என ஏற்றுக்கொள்வார்கள்.

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்: மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்: நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார்.

நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.

அதிகாரம் 62.

சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்: எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன்.

பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்: மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்: ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய்.

ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்: உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.

"கைவிடப்பட்டவள்" என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்: "பாழ்பட்டது" என இனி உன் நாடு அழைக்கப்படாது: நீ "எப்சிபா" என்று அழைக்கப்படுவாய்: உன் நாடு "பெயுலா" என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்: உன் நாடு மணவாழ்வு பெறும்.

இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்: மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

எருசலேமே, உன் மதில்கள்மேல்஥ காவலரை நிறுத்தியுள்ளேன்: இராப்பகலாய் ஒருபோதும் அவர்கள் அமைதியாய் இரார்: ஆண்டவருக்கு நினைப்பூட்டுவோரே! நொடிப்பொழுதும் அமைதியாய் இராதீர்.

அவர் எருசலேமை நிலைநாட்டி, பூவுலகில் அது புகழ் பெறும்வரை அவரை ஓய்வெடுக்க விடாதீர்.

ஆண்டவர் தம் வலக்கையின் மேலும் வலிமைமிக்க தம் புயத்தின் மேலும் ஆணையிட்டுக் கூறியது: உன் தானியத்தை இனி நான் உன் பகைவருக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்: உன் உழைப்பால் கிடைத்த திராட்சை இரசத்தை வேற்றின மக்கள் பருகமாட்டார்கள்.

அறுவடை செய்தவர்களே அதை உண்டு ஆண்டவரைப் போற்றுவர். பழம் பறித்தவர்களே என் பயகச் சுற்றுமுற்றங்களில் இரசம் பருகுவர்.

செல்லுங்கள், வாயில்கள் வழியாய்க் கடந்து செல்லுங்கள்: மக்கள் வரப் பாதையைத் தயாராக்குங்கள்: அமையுங்கள், நெடுஞ்சாலையைச் சீராக அமையுங்கள்: கற்களை அகற்றுங்கள்: மக்களினங்கள்முன் கொடியைத் பக்கிப் பிடியுங்கள்.

உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது: "மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ, உன் மீட்பு வருகின்றது, அவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது: அவரது செயலின் பயன் அவர் முன்னே உள்ளது."

ஓபுனித மக்களினம்ஓ என்றும் ஓஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்ஓ என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்: நீயோ, ஓதேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்ஓ என்றும் இனி ஓகைவிடப்படாத நகர்ஓ என்றும் பெயர் பெறுவாய்.

அதிகாரம் 63.

ஏதோமிலிருந்து வருகின்ற இவர் யார்? கருஞ்சிவப்பு உடை உடுத்திப் பொட்சராவிலிருந்து வரும் இவர் யார்? அழகுமிகு ஆடை அணிந்து பேராற்றலுடன் பீடுநடைபோடும் இவர் யார்? நானேதான் அவர்! வெற்றியை பறைசாற்றுபவர்: விடுதலை வழங்குவதில் திறன்மிக்கவர்.

உம் ஆடை சிவப்பாய் இருப்பதேன்? உம் உடைகள் திராட்சை பிழியும் ஆலையில் மிதிப்பவன் உடைபோல் இருப்பதேன்?

தனியாளாய் நான் திராட்சை பிழியும் ஆலையில் மிதித்தேன்: மக்களினத்தவருள் எவனும் என்னுடன் இருக்கவில்லை: என் கோபத்தில் நான் அவர்களை மிதித்தேன்: என் சினத்தில் அவர்களை நசுக்கினேன்: அவர்கள் செந்நீர் என் உடைகள் மேல் தெறிந்தது: என் ஆடைகள் அனைத்தையும் கறையாக்கினேன்.

நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாள் என் நெஞ்சத்தில் இருந்தது: மீட்பின் ஆண்டு வந்துவிட்டது.

சுற்றுமுற்றும் பார்த்தேன்: துணைபுரிவோர் எவருமில்லை: திகைப்புற்று நின்றேன்: தாங்குவார் யாருமில்லை: என் புயமே எனக்கு வெற்றி கொணர்ந்தது: என் சினமே எனக்கு ஊக்கமளித்தது.

சினமுற்று, மக்களினங்களை மிதித்தேன்: சீற்றமடைந்து அவர்களைக் குடிவெறி கொள்ளச்செய்தேன்: அவர்கள் குருதியைத் தரையில் கொட்டினேன்.

ஆண்டவரின் பேரன்புச் செயல்களை எடுத்துரைத்து அவருக்குப் புகழ்சாற்றுவேன்: ஏனெனில், ஆண்டவர் நமக்கு நன்மைகள் செய்துள்ளார்: தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மை செய்துள்ளார்.

ஏனெனில், "மெய்யாகவே அவர்கள் என் மக்கள், வஞ்சனை செய்யாத பிள்ளைகள்" என்று அவர் கூறியுள்ளார்: மேலும் அவர் அவர்களின் மீட்பர் ஆனார்.

துன்பங்கள் அனைத்திலும் அவர்களின் மீட்பர் ஆனார்: பதரோ வானபதரோ அல்ல, அவரே நேரடியாக அவர்களை விடுவித்தார்: தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை மீட்டார்: பண்டைய நாள்கள் அனைத்திலும் அவர்களைத் பக்கிச் சுமந்தார்.

அவர்களோ, அவருக்கு எதிராக எழும்பி, அவரது பய ஆவியைத் துயருறச் செய்தனர்: ஆதலால் அவரும் அவர்களின் பகைவராய் மாறினார்: அவர்களை எதிர்த்து அவரே போரிட்டார்.

அப்பொழுது அவர் மக்கள் மோசேயின் காலமாகிய பண்டைய நாள்களை நினைவு கூர்ந்தனர்: தம் மந்தையை மேய்ப்பரோடு கடலினின்று கரையேற்றியவர் எங்கே? அவருக்குத் தம் பய ஆவியை அருளியவர் எங்கே?

தம் மாட்சிமிகு புயத்தால் மோசேயின் வலக்கையை நடத்தி சென்றவர் எங்கே? தம் பெயர் என்றென்றும் நிலைக்குமாறு அவர்கள் முன் தண்ணீரைப் பிரித்தவர் எங்கே?

ஆழ்கடலின் நடுவே அவர்களை நடத்திச் சென்றவர் யார்? பாலை நிலத்தில் தளராத குதிரைபோல் அவர்கள் தடுமாறவில்லை.

கால்நடை பள்ளத்தாக்கினுள் இறங்கிச் செல்வதுபோல் அவர்களும் இளைப்பாற ஆண்டவரின் ஆவி அவர்களை நடத்தியது. இவ்வாறு, உமது பெயர் சிறப்புறுமாறு நீர் உம் மக்களை நடத்திவந்தீர்.

விண்ணகத்தினின்று கண்ணோக்கும்: பய்மையும் மாட்சியும் உடைய உம் உறைவிடத்தினின்று பார்த்தருளும்: உம் ஆர்வமும் ஆற்றலும் எங்கே? என்மீது நீர் கொண்ட நெஞ்சுருக்கும் அன்பும் இரக்கப்பெருக்கும் எங்கே? என்னிடமிருந்து அவற்றை நிறுத்தி வைத்துள்ளீரே!

ஏனெனில் நீரே எங்கள் தந்தை: ஆபிரகாம் எங்களை அறியார்: இஸ்ரயேல் எங்களை ஏற்றுக் கொள்ளார்: ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை: பண்டை நாளிலிருந்து "எம் மீட்பர்" என்பதே உம் பெயராம்.

ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வதேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய, குலங்களை முன்னிட்டும் திரும்பிவாரும்.

உம் திருத்தலத்தை உம் புனித மக்கள் சிறிது காலம் உடைமையாகக் கொண்டிருந்தனர்: எங்கள் பகைவர் அதைத் தரைமட்டமாக்கினர்.

உம்மால் என்றுமே ஆளப்படாதவர்கள் போலானோம்: உம் பெயரால் அழைக்கப்படாதவர்கள் போலானோம்.

அதிகாரம் 64.

நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா? மலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே!

விறகின்மேல் தீ கொழுந்துவிட்டு எரிவது போலும், தண்ணீரை நெருப்பு கொதிக்கச் செய்வது போலும், அவற்றின் நிலைமை இருக்கும். இவற்றால் உம் பெயர் உம் பகைவருக்குத் தெரியவரும்: வேற்றினத்தார் உம் திருமுன் நடுங்குவர்.

நாங்கள் எதிர்பாராத அச்சம் தரும் செயல்களை நீர் செய்தபோது நீர் இறங்கி வந்தீர்: மலைகள் உம் முன்னே உருகி ஓடின!

தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை: செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை.

மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும் உம்மையும் உம் வழிகளையும் நினைவில் கொள்வோர்க்கும் நீர் துணை செய்ய விரைகிறீர்: இதோ, நீர் சினமடைந்தீர்: நாங்கள் பாவம் செய்தோம்: நெடுங்காலமாய்ப் பாவம் செய்திருக்க, நாங்கள் மீட்கப்படுவது எங்ஙனம்?

நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப்போல் உள்ளோம்: எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோல் ஆயின: நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம்: எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல் எங்களை அடித்துச் சென்றன.

உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை: உம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை: நீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்: எங்கள் தீச்செயல்களின் பிடியில் எங்களை அழியவிட்டீர்.

ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை: நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்: நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.

ஆண்டவரே, கடுஞ்சினம் கொள்ளாதிரும்: குற்றத்தை என்றென்றும் நினையாதிரும்: உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.

உம் புனித நகர்கள் பாலை நிலமாயின: சீயோன் பாழ் நிலமாயிற்று: எருசலேம் பாழடைந்து கிடக்கின்றது.

எம் மூதாதையர் உம்மைப் போற்றிப் பாடிய பய்மையும் மாட்சியும் மிக்க எங்கள் திருக்கோவில் நெருப்புக்கு இரையாயிற்று: எங்களுக்கு அருமையானவை அனைத்தும் அழிந்து போயின.

ஆண்டவரே, இவற்றைக் கண்டும் நீர் வாளாவிருப்பீரோ? மவுனமாயிருந்து எங்களைக் கடுமையாய் வருத்துவீரோ?

அதிகாரம் 65.

முன்பு என்னிடம் எதுவும் கேளாதவர்கள் என்னைத் தேடி அடைய இடமளித்தேன்: என்னை நாடாதவர்கள் என்னைக் கண்டுபிடிக்க இசைந்தேன்: என் பெயரை வழிபடாத மக்களினத்தை நோக்கி, "இதோ நான், இதோ நான்" என்றேன்.

தங்கள் எண்ணங்களின்படி நடந்து பயனற்ற வழிமுறைகளைப் பின்பற்றும் கலகக்கார மக்களினத்தின் மீது நாள் முழுவதும் என் கைகளை விரித்து நீட்டினேன்.

அந்த மக்களினத்தார் என் கண் எதிரே இவற்றைச் செய்து இடையறாது எனக்குச் சினமூட்டுகின்றனர்: தோட்டங்களில் பலியிட்டு, செங்கற்கள்மேல் பபம் காட்டுகின்றனர்.

கல்லறைகளிடையே அமர்ந்து மறைவிடங்களில் இரவைக் கழிக்கின்஥றனர்: பன்றி இறைச்சியைத் தின்கின்றனர்: தீட்டான கறிக்குழம்பைத் தம் கலங்களில் வைத்துள்ளனர்.

இவ்வாறிருந்தும், "எட்டி நில், என் அருகில் வராதே, நான் உன்னைவிடத் பய்மையானவன்" என்கின்றனர். என் சினத்தால் மூக்கிலிருந்து வெளிப்படும் புகைபோலும் நாள்முழுவதும் எரியும் நெருப்புப் போலும் இவர்கள் இருக்கின்றனர்.

அவர்களுக்குரியது என்முன் எழுதப்பட்டாயிற்று: நான் அமைதியாய் இருப்பதில்லை: அவர்களுக்குத் தகுந்த கைம்மாறை அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.

அவர்கள் தீச்செயலுக்கும் அவர்கள் மூதாதையர் தீச்செயலுக்கும் சேர்த்துக் கொட்டுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில் ஆண்டவர் மலைமேல் பபம் காட்டினார்கள்: குன்றுகளின்மேல் என்னைப் பற்றி இழிவாகப் பேசினார்கள்: அவர்களுடைய முன்னைய செயல்களுக்குரிய கைம்மாறை அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.

ஆண்டவர் கூறுவது இதுவே: திராட்சைக்குலையில் புது இரசம் கிடைக்கும்போது, "அதை அழிக்காதே, அதில் ஆசி உள்ளது" என்பார்கள். அவ்வாறே என் ஊழியரை முன்னிட்டும் நான் செயலாற்றுவேன்: அவர்கள் அனைவரையும் அழிந்துவிட மாட்டேன்.

யாக்கோபினின்று வழிமரபினரையும், யூதாவினின்று என் மலைகளை உடைமையாக்குவோரையும் தோன்றச் செய்வேன். நான் தேர்ந்துகொண்டோ ர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்: என் ஊழியர் அங்கே வாழ்வர்.

என்னை வழிபடும் என் மக்களுக்குச் சாரோன் சமவெளி ஆடுகளுக்கு மேய்நிலமாகவும் ஆக்கோர் பள்ளத்தாக்கு மாடுகளுக்குத் தொழுவமாகவும் அமையும்.

ஆண்டவராகிய என்னைக் கைவிட்டு விட்டு, என் திருமலையை மறந்தவர்களே! கத்து தெய்வத்திற்கு விருந்து படைத்து, மெனீ தெய்வத்திற்கு நறுமணத்திராட்சை இரசத்தைக் கிண்ணங்களில் வார்ப்பவர்களே!

உங்களை வாளுக்கு இரையெனக் குறிப்பேன்: நீங்கள் அனைவரும் கொலைக்குத் தலைதாழ்த்துவீர்கள்: ஏனெனில், நான் அழைப்பு விடுத்தேன்: நீங்கள் மறுமொழி தரவில்லை: நான் பேசினேன், நீங்கள் கவனிக்கவில்லை: என் பார்வைக்குத் தீமையெனப்பட்டதைச் செய்தீர்கள்: எனக்கு விருப்பமில்லாததைத் தேர்ந்து கொண்டீர்கள்.

ஆதலால் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஊழியர்கள் உண்பார்கள்: நீங்களோ பசியால் வாடுவீர்கள். என் வேலையாள்கள் பானம் பருகுவார்கள்: நீங்களோ தாகத்தால் தவிப்பீர்கள்: என் அடியார்கள் அக்களிப்பார்கள்: நீங்களோ அவமதிக்கப்படுவீர்கள்.

என் ஊழியர் உள்ளம் மகிழ்ந்து ஆர்ப்பரிப்பார்கள்: நீங்களோ நெஞ்சம் உடைந்து கூக்குரலிடுவீர்கள்: ஆவி சோர்ந்து கதறியழுவீர்கள்.

நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உங்கள் பெயரைச் சாபப் பெயராய் விட்டுச் செல்வீர்கள்: என் தலைவராகிய ஆண்டவர் உங்களைக் கொன்றொழிப்பார்: தம் ஊழியருக்கோ புதுப்பெயர் சூட்டுவார்.

மண்ணுலகில் ஆசி பெற விழைபவன் உண்மைக் கடவுளின் பெயரால் ஆசிபெறுவான்: பூவுலகில் ஆணையிடுபவன் மெய்க் கடவுளின் பெயரால் ஆணையிடுவான்: ஏனெனில், முந்நாளைய துன்பங்கள் மறந்து போயின: அவை என் பார்வையிலிருந்து மறைந்து போயின.

இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்: முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை: மனத்தில் எழுதுவதுமில்லை.

நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்.

நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்: என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்: இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா.

இனி அங்கே நில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது: தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்: ஏனெனில், மறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ மறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான்.

அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்: திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.

வேறொருவர் குடியிருக்க அவர்கள் கட்டுவதில்லை: மற்றொருவர் உண்ண அவர்கள் நடுவதில்லை: மரங்களின் வாழ்நாள் போன்றே என் மக்களின் வாழ்நாளும் இருக்கும்: நான் தேர்ந்து கொண்டவர்கள் தங்கள் உழைப்பின் பயனை நெடுநாள் துய்ப்பார்கள்.

வீணாக அவர்கள் உழைப்பதில்லை: தங்கள் பிள்ளைகளை அழிவுக்கெனப் பெற்றெடுப்பதில்லை: ஏனெனில், அவர்கள் ஆண்டவரது ஆசியைப் பெற்றோர்஢ன் வழிமரபினர்! அவர்களின் தலைமுறையினர் அவர்களுடன் இருப்பார்கள்.

அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன்: அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்: சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்: பாம்பு புழுதியைத் தின்னும்: என் திருமலை முழுவதிலும் தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும் எவருமில்லை, என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 66.

ஆண்டவர் கூறுவது இதுவே: விண்ணகம் என் அரியணை: மண்ணகம் என் கால்மணை: அவ்வாறிருக்க, எத்தகைய கோவிலை நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்? எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப்பேன்?

இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின: இவை யாவும் என்னால் உருவாகின, என்கிறார் ஆண்டவர். எளியவரையும், உள்ளம் வருந்துபவரையும், என் சொல்லுக்கு அஞ்சுபவரையும் நான் கண்ணோக்குவேன்.

அவர்களுக்கு இளம் காளையை வெட்டிப் பலியிடுவதும் மனிதரைக் கொலைச்செய்வதும் ஒன்றாம்: ஆட்டுக் குட்டியைப் பலியாகக் கொடுப்பதும் நாயின் கழுத்தை முறிப்பதும் ஒன்றாம்: உணவுப் படையலைப் படைப்பதும், பன்றியின் இரத்தத்தை ஒப்புக் கொடுப்பதும் ஒன்றாம்: நினைவுப் படையலாகிய பபம் காட்டுதலைச் செய்வதும் சிலைகளை வணங்குதலும் ஒன்றாம்: அவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்தெடுத்துள்ளனர்: தங்கள் அருவருப்புகள் மீது அவர்கள் உள்ளம் மகிழ்கின்றது.

நானும் அவர்களுக்குரிய தண்டனையைத் தேர்ந்து கொள்வேன்: அவர்கள் அஞ்சுகின்றவற்றை அவர்கள்மீது வரச்செய்வேன்: ஏனெனில், நான் அழைத்தபோது எவரும் பதில் தரவில்லை: நான் பேசியபோது அவர்கள் செவி கொடுக்கவில்லை: என் கண்முன்னே தீயவற்றைச் செய்தார்கள்: நான் விருப்பாதவற்றைத் தெரிந்தெடுத்தார்கள்.

ஆண்டவரின் வாக்குக்கு நடுநடுங்குவோரே, இதைக் கேளுங்கள்: என் பெயர் பொருட்டு உங்களை வெறுத்து ஒதுக்கும் உங்கள் உறவின் முறையார் "நாங்கள் உங்கள் மகிழ்ச்சியைக் காணும் பொருட்டு ஆண்டவர் தம் மாட்சியைக் காண்பிக்கட்டும்" என்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் வெட்கம் அடைவார்கள்.

இதோ, நகரில் பேரொலி கேட்கின்றது! திருக்கோவிலில் பேரோசை எழுகின்றது! ஆண்டவர் தம் பகைவருக்குத் தக்க பதலடி கொடுப்பதால் எழும் இரைச்சலே அது!

வேதனை வருமுன்னே சீயோன் பிள்ளை பெற்றாள்! பிரசவ நேரம் நெருங்குமுன்னே ஆண்மகவை ஈன்றாள்!

இத்தகைய நிகழ்ச்சிபற்றிக் கேள்வியுற்றவர் யார்? இதைப் போன்ற ஒன்றைப் பார்த்தவர் யார்? ஒரே நாளில் நாடு ஒன்று உருவாகிட இயலுமா? ஒரு நொடிப்பொழுதில் மக்களினம் ஒன்று பிறக்கக்கூடுமா? ஆனால் வேதனை ஏற்பட்டவுடனே சீயோன் தன் பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள்.

பேறுகாலத்தை ஏற்படுத்திய நான் மகப்பேற்றைத் தடை செய்வேனா? என்கிறார் ஆண்டவர். மகப்பேற்றுக்குக் காரணமான நான் கருப்பையை அடைத்துவிடுவேனா? என்கிறார் உங்கள் கடவுள்.

எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்: அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள்.

அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்: அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்: பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்: நீங்கள் பால் பருகுவீர்கள்: மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்: மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.

தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்: எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.

இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல்போல் வளரும்: ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார் என்பதும் அவரது சினம் அவர்தம் பகைவருக்கு எதிராய் மூளும் என்பதும் அறியப்படும்.

இதோ! ஆண்டவர் நெருப்பென வருவார்: அவர் தேர்கள் புயலென விரையும்: கொழுந்து விட்டெரியும் தம் சினத்தைக் கொட்டுவார்: தீப்பிழம்பென அவர்தம் கண்டனம் வருகின்றது.

தம் நெருப்பையும் வாளையும் கொண்டு மானிடர் அனைவர்மீதும் ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பு வழங்குவார்: எண்ணிறந்தோரை ஆண்டவர் கொன்றுவிடுவார்.

தோட்ட வழிபாட்டிற்கெனத் தங்களைத் பய்மைப்படுத்தித் தீட்டகற்றுவோர், அதற்கு அணி அணியாய்ச் செல்வோர், பன்றி, எலி இவற்றின் இறைச்சி மற்றும் அருவருப்புகளை உண்போர் ஆகிய அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர், என்கிறார் ஆண்டவர்.

அவர்கள் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்: பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்: அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்.

அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்: அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்: அவர்கள் தர்சீசு, பூல், வில்வீரர் வாழும் ழது, பபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ்பற்றிக் கேள்விப்படாதவர்: என் மாட்சியைக் கண்டிராதவர்: அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.

அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்: இஸ்ரயேல் மக்கள் பய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின் மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர்.

மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும் லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.

நான் படைக்கின்ற புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் என் முன்னே நிலைத்திருப்பது போல், உங்கள் வழித்தோன்றல்களும் உங்கள் பெயரும் நிலைத்திருக்கும், என்கிறார் ஆண்டவர்.

அமாவாசைதோறும் ஓய்வுநாள்தோறும் மானிடர் அனைவரும் என்முன் வழிபட வருவர், என்கிறார் ஆண்டவர்.

அவர்கள் புறப்பட்டுச் சென்று, என்னை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தோரின் பிணங்களைக் காண்பார்கள்: அவர்களை அரிக்கும் புழு சாவதில்லை: அவர்களை எரிக்கும் நெருப்பு அணைந்து போவதில்லை: மானிடர் யாவருக்கும் அவர்கள் ஓர் அருவருப்பாக இருப்பார்கள்.

புத்தகம் 24 - எரேமியா

அதிகாரம் 1.

பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்:

ஆமோன் மகனும் யூதா அரசருமான யோசியாவின் காலத்தில், அவரது ஆட்சியின் பதின்மூன்றாம் ஆண்டில் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.

யோசியா மகனும் யூதா அரசனுமாகிய யோயாக்கீம் காலத்திலும், யோசியா மகனும் யூதா அரசனுமாகிய செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டின் இறுதி வரையிலும், அதாவது எருசலேம் மக்கள் நாடுகடத்தப்பட்ட அதே ஆண்டின் ஜந்தாம் மாதம்வரை ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது.

எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: : தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்: நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்: மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்."

நான், "என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே" என்றேன்.

ஆண்டவர் என்னிடம் கூறியது: "ஓசிறுபிள்ளை நான்ஓ என்று சொல்லாதே: யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்: எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல்.

அவர்கள்முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன், என்கிறார் ஆண்டவர்."

ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: "இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன்.

பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்".

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ஓஎரேமியா, நீ காண்பது என்ன?ஓ என்னும் கேள்வி எழ, "வாதுமை மரக்கிளையைக் காண்கிறேன்" என்றேன்.

அதற்கு ஆண்டவர் என்னிடம், "நீ கண்டது சரியே. என் வாக்கைச் செயலாக்க நானும் விழிப்பாயிருப்பேன்" என்றார்.

ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை எனக்கு அருளப்பட்டது: "நீ காண்பது என்ன?" என்னும் கேள்வி எழ, "கொதிக்கும் பானையைக் காண்கிறேன். அதன் வாய் வடக்கிலிருந்து சாய்ந்திருக்கின்றது" என்றேன்.

ஆண்டவர் என்னிடம் கூறியது: "நாட்டில் குடியிருப்போர் அனைவர் மீதும் வடக்கிலிருந்தே தீமை பாய்ந்து வரும்."

இதோ வடக்கிலுள்ள அரச குடும்பத்தார் அனைவரையும் நான் அழைக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அவர்கள் வந்து ஒவ்வொருவரும் எருசலேமின் வாயில்களிலும், அதன் சுற்றுச் சுவர்களுக்கு எதிரிலும், யூதா நகர்களுக்கு எதிரிலும் தம் அரியணையை அமைப்பர்.

என் மக்களின் தீய செயல்களுக்காக அவர்களுக்கெதிராகத் தீர்ப்புக் கூறப் போகிறேன். அவர்கள் என்னைப் புறக்கணித்தார்கள். வேற்றுத் தெய்வங்களுக்குத் பபம் காட்டினார்கள். தங்கள் கைவேலைப்பாடுகளை வழிபட்டார்கள்.

நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன்.

இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் பணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன்.

அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்" என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 2.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலைநிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன்.

இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது: அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது: அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்: அவர்கள்மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர்.

யாக்கோபின் வீட்டாரே, இஸ்ரயேல் வீட்டின் அனைத்துக் குடும்பத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே: என்னை விட்டகன்று வீணானவற்றைப் பின்பற்றி வீணாகும் அளவுக்கு உங்கள் தந்தையர் என்னிடம் என்ன தவறு கண்டனர்?

எகிப்து நாட்டிலிருந்து நம்மை அழைத்து வந்தவரும் பாழ்நிலமும் படுகுழிகள் நிறைந்த நிலமும் வறட்சி, காரிருள் மிகுந்த நிலமும் யாருமே கடந்து செல்லாததும், யாருமே வாழாததுமாகிய பாலைநிலத்தில் நம்மை நடத்தி வந்தவருமான ஆண்டவர் எங்கே? என்று அவர்கள் கேட்கவில்லையே!

செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்: எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்குள்ளாக்கினீர்கள்.

குருக்கள், "ஆண்டவர் எங்கே?" என்று கேட்கவில்லை: திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை: ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்: இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர்.

ஆதலால் இன்னும் உங்களோடு வழக்காடுவேன்" என்கிறார் ஆண்டவர். உங்கள் மக்களின் மக்களோடும் வழக்காடுவேன்.

சைப்ரசு நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்குக் கடந்து சென்றுபாருங்கள்: கேதாருக்கு ஆளனுப்பி முழுத் தெளிவு பெறுங்கள்: இது போன்ற செயல் உண்டோ என்று பாருங்கள்.

தங்கள் தெய்வங்கள் தெங்வங்களே அல்ல எனினும், அவற்றினை மாற்றிக்கொண்ட மக்களினம் உண்டா? என் மக்களோ, என் மாட்சியைப் பயனற்ற ஒன்றிற்காக மாற்றிக் கொண்டனர்.

வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்: அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர்.

ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்: பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்: தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைக் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.

இஸ்ரயேல் ஓர் அடிமையா? வீட்டில் அடிமையாகப் பிறந்தவனா? அவன் ஏன் சூறையாடப்பட வேண்டும்?

அவனுக்கு எதிராக இளஞ் சிங்கங்கள் கர்ச்சித்து, பெருமுழக்கம் செய்து அவனது நாட்டைப் பாழடையச் செய்தன: அவன் நகர்கள் தீக்கிரையாக்கப்பட்டன: அவற்றில் குடியிருப்போர் எவருமிலர்.

மெம்பிசு, தகபனேசு நகரினர் உன் தலையை மழித்தனர்.

உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை வழிநடத்திச் செல்லும்போதே அவரை நீ புறக்கணித்ததால் அன்றோ இதை உனக்கு வருவித்துக் கொண்டாய்?

நைல் நதி நீரைக் குடிக்க இப்போது நீ எகிப்துக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன? யூப்பிரத்தீசு நதியின் நீரைக் குடிக்க அசீரியாவுக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன?

உன் தீச்செயலே உன்னைத் தண்டிக்கும்: உன் பற்றுறுதியின்மையே உன்னைக் கண்டிக்கும்: உன் கடவுளாகிய ஆண்டவராம் என்னைப் புறக்கணித்தது தீயது எனவும் கசப்பானது எனவும் கண்டுணர்ந்து கொள். என்னைப் பற்றிய அச்சமே உன்னிடம் இல்லை, என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.

நெடுங்காலத்துக்கு முன்பே உன் நுகத்தடியை முறித்துவிட்டாய்: உன் தளைகளை அறுத்துவிட்டாய்: "நான் ஊழியம் செய்வேன்" என்று சொன்னாய். உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விலைமாதாகக் கிடந்தாயே!

முற்றிலும் நல்ல கிளையினின்று உயர் இனத் திராட்சைச் செடியாய் உன்னை நட்டு வைத்தேன்: நீ கெட்டுப்போய்த் தரங்கெட்ட காட்டுத் திராட்சைச் செடியாய் மாறியது எப்படி?

நீ உன்னை உவர் மண்ணினால் கழுவினாலும், எவ்வளவு சவர்க்காரத்தைப் பயன்படுத்தினாலும், உன் குற்றத்தின் கறை என் கண்முன்னே இருக்கிறது, என்கிறார் என் தலைவராகிய ஆண்டவர்.

"நான் தீட்டுப்படவில்லை: பாகால்களுக்குப்பின் திரியவில்லை" என எப்படி நீ கூற முடியும்? பள்ளத்தாக்கில் நீ சென்ற பாதையைப் பார்: நீ செய்தது என்ன என்று அறிந்துகொள்: இங்கும் அங்கும் விரைந்தோடும் பெண் ஒட்டகம் நீ.

பாலைநிலத்தில் பழகியதும், காம வேட்கையில் மோப்பம் பிடிப்பதுமான காட்டுக் கழுதை நீ! அதன் காம வெறியை யாரால் கட்டுப்படுத்த முடியும்? அதனை வருந்தித் தேடத் தேவையில்லை: புணர்ச்சிக் காலத்தில் அதனை எளிதில் காணலாம்.

"கால் தேய ஓடாதே: தொண்டை வறண்டுபோக விடாதே" என்றால், நீயோ, ""பயனில்லை. நான் வேற்றுத் தெய்வங்கள்மேல் மோகம் கொண்டேன்: அவர்கள் பின்னே திரிவேன்" என்றாய்.

திருடன் பிடிபடும்போது மானக்கேடு அடைவது போல, இஸ்ரயேல் வீட்டாரும் அவர்களின் அரசர்களும் தலைவர்களும் குருக்களும் இறைவாக்கினர்களும் மானக்கேடு அடைவார்கள்.

ஒரு மரத்தை நோக்கி, "நீயே என் தந்தை" என்பர்: ஒரு கல்லை நோக்கி, "நீயே என்னைப் பெற்றெடுத்தவள்" என்பர். எனக்கு முகத்தையல்ல, முதுகையே காட்டுகின்றனர்: ஆனால் தீங்கு வந்துற்ற நேரத்தில், "எழுந்தருளி எங்களை விடுவியும்" என்பர்.

உனக்கென நீ செய்துகொண்ட தெய்வங்கள் எங்கே? உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில், முடிந்தால் அவை எழுந்து உன்னை விடுவிக்கட்டுமே! யூதாவே, உன் நகர்கள் எத்தனையோ, அத்தனை தெய்வங்கள் உன்னிடம் இருக்கின்றனவே!

என்னிடம் ஏன் முறையிடுகிறீர்கள்? நீங்கள் எல்லாரும் எனக்கு எதிராய்க் கலகம் செய்தவர்களே, என்கிறார் ஆண்டவர்.

நான் உங்கள் மக்களை அடித்து நொறுக்கியது வீண்: அவர்கள் திருந்தவில்லை: சிங்கம் அழித்தொழிப்பதுபோல உங்கள் வாளே உங்கள் இறைவாக்கினரை வீழ்த்தியது.

இத்தலைமுறையினரே! ஆண்டவர் வாக்கைக் கவனியுங்கள். நான் இஸ்ரயேலுக்குப் பாலைநிலமாய் இருந்தேனா? அல்லது இருள்சூழ் நிலமாய் இருந்தேனா? "நாங்கள் விருப்பம் போல் சுற்றித் திரிவோம்: இனி உம்மிடம் வரமாட்டோ ம்" என்று என் மக்கள் ஏன் கூறினார்கள்?

ஒரு கன்னிப் பெண் தன் நகைகளை மறப்பாளோ? மணப்பெண் தன் திருமண உடையை மறப்பதுண்டோ ? என் மக்களோ என்னை எண்ணிறந்த நாள்களாய் மறந்து விட்டார்கள்.

காதலரை அடையும் வழிகளைச் சிறப்பாய் வகுத்துள்ளாய்: ஒழுக்கமற்ற பெண்களுக்குக்கூட உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.

மாசற்ற வறியவரின் இரத்தக்கறை உன் மேலாடை விளிம்புகளில் காணப்படுகின்றது: அவர்கள் கன்னமிட்டுக் திருடியதை நீ கண்டாயா?

இவை அனைத்தையும் நீ செய்திருந்தும் நீயோ, "நான் மாசற்றவள்: அவர் சினம் என்னைவிட்டு அகன்று விட்டது உறுதி" என்கிறாய். "பாவம் செய்யவில்லை" என்று நீ கூறியதால், நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன்.

ஏன் இவ்வளவு எளிதாக உன் வழிகளை மாற்றிக் கொள்கின்றாய்? அசீரியாவால் நீ மானக்கேட்டிற்கு உள்ளானதுபோல் எகிப்தினாலும் மானக்கேட்டிற்கு உள்ளாவாய்!

உன் தலைமேல் கைகளை வைத்துக் கொண்டுதான் அங்கிருந்து திரும்பி வருவாய்: ஏனெனில், நீ நம்பியிருந்தவர்களை ஆண்டவர் உதறித் தள்ளிவிட்டார்: அவர்களால் உனக்குப் பயன் ஏதும் இல்லை."

அதிகாரம் 3.

"கணவன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனை விட்டகன்று வேறு ஒருவனோடு வாழ்கையில், அக்கணவன் அவளிடம் மீண்டும் திரும்பிச் செல்வானா? அந்நாட்டு தீட்டுப்படுவது உறுதியல்லவா? நீ பல காதலர்களோடு விபசாரம் செய்தாய்: உன்னால் என்னிடம் திரும்பிவர முடியுமா?" என்கிறார் ஆண்டவர்.

உன் கண்களை உயர்த்தி மொட்டை மேடுகளைப்பார்: நீ படுத்துக்கிடக்காத இடம் உண்டோ ? பாலை நிலத்தில் அராபியனைப்போல, பாதையோரங்களில் நீயும் காதலர்களுக்காகக் காத்திருந்தாய்: உன் விபசாரங்களாலும் தீச்செயல்களாலும் நாட்டைத் தீட்டுப்படுத்தினாய்.

ஆகையால், நாட்டில் மழை பெய்யாது நின்று விட்டது: இளவேனிற் கால மழையும் வரவில்லை: உனது நெற்றி ஒரு விலைமாதின் நெற்றி: நீ மானங்கெட்டவள்.

இப்போது கூட 'என் தந்தையே! என் இளமையின் நண்பரே!' என என்னை நீ அழைக்கவில்லையா?

'என்றென்றும் அவர் சினம் அடைவாரோ? இறுதிவரை அவர் சினம் கொண்டிருப்பாரோ?' என்கிறாய். இவ்வாறு சொல்லிவிட்டு உன்னால் இயன்றவரை தீச்செயல்களையே செய்கிறாய்.

யோசியா அரசன் காலத்தில் ஆண்டவர் என்னிடம் கூறியது: "நம்பிக்கையற்ற இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா? அவள் சென்று உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விபசாரம் செய்தாள்.

இவை அனைத்தையும் செய்தபின் என்னிடம் திரும்பி வருவாள் என எண்ணினேன். அவளோ திரும்பி வரவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்த சகோதரி யூதா இதைக் கண்டாள்.

நம்பிக்கையற்ற இஸ்ரயேலுடைய விபசாரத்தின் காரணமாக, நான் அவளைத் தள்ளிவிட்டு அவளுக்கு மணமுறிவுச் சீட்டு கொடுத்ததை நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா கண்டாள். எனினும், அவளும் அஞ்சாது சென்று விபசாரம் செய்தாள்.

விபசாரம் செய்வது அவளுக்கு வெகு எளிதாக இருந்ததால், கல்லோடும் மரத்தோடும் வேசித்தனம் செய்து நாட்டைத் தீடுப்படுத்தினாள்.

இவை அனைத்திற்கும் பிறகு கூட நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வரவில்லை: பொய் வேடம் போடுகிறாள்" என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவர் என்னிடம் கூறியது: நம்பிக்கையற்ற இஸ்ரயேல் நம்பிக்கைத் துரோகம் செய்த யூதாவைவிட நேர்மையானவள்.

நீ சென்று வடக்கே திரும்பி இச்சொற்களை உரக்கக் கூறு: நம்பிக்கையற்ற இஸ்ரயேலே, என்னிடம் திரும்பிவா, என்கிறார் ஆண்டவர். நான் உன்மீது சினம் கொள்ளமாட்டேன்: ஏனெனில், நான் பேரன்பு கொண்டவன், என்கிறார் ஆண்டவர். நான் என்றென்றும் சினம் கொள்ளேன்.

உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டால் போதும்: உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்தாய்: பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் அன்னியரை நாடி அங்குமிங்கும் ஓடினாய்: என் குரலுக்கோ நீ செவிசாய்க்கவில்லை, என்கிறார் ஆண்டவர்.

மக்களே! என்னிடம் திரும்பி வாருங்கள்: ஏனெனில், நானே உங்கள் தலைவன்: நகருக்கு ஒருவனையும் குடும்பத்திற்கு இருவரையுமாகத் தெரிந்தெடுத்து உங்களைச் சீயோனுக்குக் கூட்டி வருவேன்.

என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்.

நீங்கள் நாட்டில் பல்கிப் பெருகும் அக்காலத்தில் யாரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழைபற்றியே பேசமாட்டார்கள். அது அவர்கள் எண்ணத்திலோ நினைவிலோ இராது. அது இல்லை என்று வருந்தி இனி ஒன்றும் செய்யமாட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.

அக்காலத்தில் எருசலேமை "ஆண்டவரின் அரியணை" என அழைப்பார்கள். ஆண்டவரின் பெயரை முன்னிட்டு எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர். தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி இனி நடக்க மாட்டார்கள்.

அந்நாள்களில் யூதா வீட்டார் இஸ்ரயேல் வீட்டாரோடு சேர்ந்து கொள்வர்: நான் அவர்கள் மூதாதையருக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு வட நாட்டிலிருந்து ஒன்றாக வந்து சேர்வர்.

உன்னை என் மக்களின் வரிசையிலே எவ்விதம் சேர்த்துக்கொள்வேன் என்றும் திராளன மக்களினங்களுக்கிடையே அழகான உரிமைச்சொத்தாகிய இனிய நாட்டை உனக்கு எவ்விதம் தருவேன் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். "என் தந்தை" என என்னை அழைப்பாய் என்றும், என்னிடமிருந்து விலகிச் செல்லமாட்டாய் என்றும் எண்ணியிருந்தேன்.

நம்பிக்கைத் துரோகம் செய்த ஒரு பெண் தன் காதலனைக் கைவிடுவது போல, இஸ்ரயேல் வீடே! நீயும் எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்கிறாய், என்கிறார் ஆண்டவர்.

மொட்டை மேடுகளில் கூக்குரல் கேட்கிறது: அது இஸ்ரயேல் மக்களின் அழுகையும் வேண்டலுமாம்: ஏனெனில், அவர்கள் நெறிதவறித் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தார்கள்.

என்னைவிட்டு விலகிய மக்களே! திரும்பி வாருங்கள்: உங்கள் நம்பிக்கையின்மையிலிருந்து உங்களைக் குணமாக்குவேன்: "இதோ நாங்கள் உம்மிடம் வருகிறோம். நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்.

குன்றுகளிலிருந்தும் மலைகளில் செய்யப்படும் அமளிகளிலிருந்தும் கிடைப்பது ஏமாற்றமே: இஸ்ரயேலின் விடுதலை எங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் மட்டுமே உள்ளது.

எங்கள் இளமை முதல், எங்கள் மூதாதையர் உழைப்பின் பயனாகப் பெற்ற ஆடுமாடுகளையும், புதல்வர் புதல்வியரையும் வெட்கங்கெட்ட பாகால் விழுங்கிவிட்டது.

மானக்கேடே எங்கள் படுக்கை: அவமானமே எங்கள் போர்வை. ஏனெனில் எங்கள் இளமை முதல் இன்றுவரை நாங்களும் எங்கள் மூதாதையரும் எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்: அவரது குரலுக்கு நாங்கள் செவிசாய்க்கவில்லை.ஓ

அதிகாரம் 4.

இஸ்ரயேலே, நீ திரும்பிவருவதாக இருந்தால் என்னிடம் திரும்பிவா, என்கிறார் ஆண்டவர். அருவருப்பானவற்றை அகற்றி விட்டால் என் திருமுன்னிருந்து அலைந்து திரியமாட்டாய்.

வாழும் ஆண்டவர் மேல் ஆணை என்று சொல்லி உண்மையோடும் நீதியோடும் நேர்மையோடும் ஆணையிட்டால், மக்களினத்தார் அவர் வழியாகத் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்: அவரில் பெருமை பாராட்டுவர்.

யூதாவிலும் எருசலேமிலும் உள்ள மக்களுக்கு ஆண்டவர் கூறுவது இதுவே: தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்: முட்களிடையே விதைக்காதீர்கள்.

யூதாவின் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே, ஆண்டவருக்காக விருத்தசேதனம் செய்துகொள்ளுங்கள்: உங்கள் இதயத்தின் நுனித்தோலை அகற்றிவிடுங்கள்: இல்லையேல் உங்கள் தீச்செயல்களை முன்னிட்டு என் சீற்றம் நெருப்பென வெளிப்பட்டுப் பற்றியெரியும்: அதனை அணைப்பார் எவருமிலர். : யூதாவில் அறிவியுங்கள்: எருசலேமில் பறைசாற்றுங்கள்: நாட்டில் எக்காளம் ஊதுங்கள்" எனச் சொல்லுங்கள். ஒன்று கூடுங்கள்: "அரண்சூழ் நகர்களுக்குச் சென்றிடுவோம்" என உரக்கக் கூவுங்கள்.

சீயோனுக்கு நேராகக் கொடியை உயர்த்திப் பிடியுங்கள்: விரைந்து தப்பியோடுங்கள்: நிற்காதீர்கள்: ஏனெனில், வடக்கிலிருந்து தீமை வரச்செய்வேன்: அது பேரழிவாய் இருக்கும்.

சிங்கம் ஒன்று புதரிலிருந்து கிளம்பியுள்ளது: மக்களினங்களை அழிப்பவன் புறப்பட்டு விட்டான்: உங்கள் நாட்டைப் பாழாக்க, அவன் தன் இடத்திலிருந்து வெளியேறிவிட்டான்: உங்கள் நகர்கள் பாழாடைந்து குடியற்றுப் போகும்.

எனவே, சாக்கு உடைஉடுத்திக் கொள்ளுங்கள். அழுது புலம்புங்கள்: ஒப்பாரி வையுங்கள்: ஏனெனில், ஆண்டவரின் கோபக் கனல் நம்மை விட்டு நீங்கவில்லை.

அக்காலத்தில் அரசனும் தலைவர்களும் நம்பிக்கையிழந்துவிடுவர், என்கிறார் ஆண்டவர்: குருக்கள் திடுக்கிட்டுப் போவர்: இறைவாக்கினர் திகைத்து நிற்பர்.

அப்போது நான், "ஆ! என் தலைவராகிய ஆண்டவரே! நீர் இம்மக்களையும் எருசலேமையும் முற்றிலும் ஏமாற்றிவிட்டீர்: ஏனெனில் வாள் எங்கள் தொண்டைமீது இருக்கும்போதே "உங்களுக்குச் சமாதானம் என்கிறீர்" என்றேன்.

அக்காலத்தில் இம்மக்களுக்கும் எருசலேமுக்கும் இவ்வாறு கூறப்படும்: பாலை நிலத்தின் மொட்டை மேடுகளிலிருந்து அனல்காற்று என் மகளாகிய மக்கள்மீது வீசும். அது பற்றுவதற்கும் பய்மைப்படுத்துவதற்குமான காற்றன்று.

அதைவிடப் பெரும் காற்று ஒன்று என்னிடமிருந்து வருகின்றது. இப்போது நானே அவர்கள் மேல் தண்டனைத் தீர்ப்பு வழங்கப் போகிறேன்.

இதோ, மேகங்களைப் போல் எதிரி வருகிறேன். அவன் தேர்கள் சூறாவளி போன்றவை: அவன் குதிரைகள் கழுகுகளைவிட விரைவாகச் செல்பவை: நமக்கு ஜயோ கேடு! நாம் அழிந்தோம்.

எருசலேமே, நீ விடுவிக்கப்பட வேண்டுமானால், உன் இதயத்திலிருந்து தீயதைக் கழுவி விடு: இன்னும் எத்துணைக் காலத்திற்குத் தீய சிந்தனைகள் உன்னில் குடி கொண்டிருக்கும்?

தாணிலிருந்து எழும்பும் குரலொளி அறிக்கையிடுகிறது. எப்ராயிம் மலையிலிருந்து கேடு அறிவிக்கப்படுகிறது.

"தொலை நாட்டிலிருந்து உன்னை முற்றுகையிடுவோர் வருகின்றனர்: யூதாவின் நகர்களுக்கு எதிராகப் போர்க் குரல் எழுப்புகின்றனர்" என மக்களினங்களை எச்சரியுங்கள். அதை எருசலேமுக்கு அறிவியுங்கள்.

வயல்வெளியின் காவலாளியென, அவர்கள் அவளைச் சுற்றி வளைத்து எதிர்த்து நிற்கின்றனர். ஏனெனில் அவள் எனக்கு எதிராகக் கலகம் செய்தாள், என்கிறார் ஆண்டவர்.

உன் நடத்தையும் உன் செயல்களும் இவற்றை உன்மேல் வருவித்தன. உனக்கு வந்த இக்கேடு எத்துணைக் கசப்பாய் உள்ளது? அது உன் இதயத்தையே நொறுக்கி விட்டது.

என் அடிவயிறு கலங்குகின்றது: நான் வேதனையால் துடிக்கின்றேன்: என் இதயம் துயரத்தால் பதைபதைக்கின்றது: நான் வாளாவிருக்க முடியுமா? என் நெஞ்சே, எக்காள ஒலி என் காதில் விழுகிறதே! போர்க்குரல் கேட்கிறதே!

அழிவின் மேல் அழிவு என்ற செய்தியே வருகின்றது: நாடு முழுவதும் பாழடைந்துவிட்டது: நொடிப்பொழுதில் என் கூடாரங்களும், இமைப்பொழுதில் மூடு திரைகளும் அழிந்து போயின:

எதுவரைக்கும் நான் போர்க்கொடியைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? எக்காளத்தின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்?

என் மக்கள் அறிவிலிகள்: என்னை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை: மதிகெட்ட மக்கள் அவர்கள்: உய்த்துணரும் ஆற்றல், அவர்களுக்கில்லை: தீமை செய்வதில் அவர்கள் வல்லவர்கள்: நன்மை செய்ய அவர்களுக்குத் தெரிவதில்லை.

நான் நாட்டைப் பார்த்தேன்: அது பாழ்நிலமாய்க் கிடந்தது: வானங்களைப் பார்த்தேன்: அவற்றில் ஒளியே இல்லை.

நான் மலைகளைப் பார்த்தேன்: இதோ! அவை அதிர்ந்தன: குன்றுகள் அனைத்தும் அசைந்தன.

நான் பார்த்தேன்: மனிதரையே காணவில்லை: வானத்துப் பறவைகள் அனைத்தும் பறந்து போய்விட்டன.

நான் பார்த்தேன்: இதோ செழிப்பான நிலமெல்லாம் பாலை நிலமாகிவிட்டது: ஆண்டவரின் திருமுன் அவரது கோபக் கனலால் அதன் நகர்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டன.

ஆண்டவர் கூறுவது இதுவே: நாடு முழுவதும் பாழடைந்து போகும்: எனினும் அதனை முற்றிலும் பாழாக்கமாட்டேன்.

இதனை முன்னிட்டு நாடு புலம்பும்: மேலே வாகனங்கள் இருளடையும்: எனெனில், நான் சொல்லிவிட்டேன்: இது பற்றி வருந்தமாட்டேன்: நான் முடிவு செய்து விட்டேன்: மனம் மாறமாட்டேன்.

குதிரை வீரர், வில் வீரர் எழுப்பும் ஒலி கேட்டு, நகரினர் அனைவரும் ஓட்டமெடுப்பர்: புதர்களுக்குள் மறைந்துகொள்வர்: பாறைகள் மீது ஏறிக்கொள்வர்: நகர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவிடுவர்: அவற்றில் குடியிருக்க எவருமே இரார்.

பாழ்பட்டவளாகிய நீ ஏன் கருஞ் சிவப்பு ஆடை உடுத்துகின்றாய்? பொன் அணிகலன்களால் அலங்கரிக்கின்றாய்? நீ உன்னை அழகுபடுத்துவது வீண்: உன் காதலர் உன்னை அவமதிக்கின்றனர்: உன் உயிரைப் பறிக்கத் தேடுகின்றனர்.

பேறுகாலப் பெண் எழுப்பும் குரல் போன்றும் தன் முதற் பிள்ளையைப் பெற்றெடுப்பவளின் வேதனைக் குரல் போன்றும் குரல் ஒன்று கேட்டேன். அது, மூச்சுத் திணறி, கைகளை விரித்து, "எனக்கு ஜயோ கேடு! கொலைஞர் முன்னால் நான் உணர் வற்றுக் கிடக்கிறேன்!" என்று அலறும் மகள் சீயோனின் குரலாகும்.

அதிகாரம் 5.

நீதியைக் கடைப்பிடித்து உண்மையை நாடும் ஒரு மனிதரைக் கண்டுபிடிக்க முடியுமாவென எருசலேமின் தெருக்களில் சுற்றிப் பார்த்துத் தெரிந்துகொள்: அவளுடைய பொது இடங்களில் கவனமாய்த் தேடிப்பார்: கண்டுபிடித்தால், அவளுக்கு மன்னிப்பு அளிப்பேன்.

வாழும் ஆண்டவர் மேல் அவர்கள் ஆணையிடலாம்: ஆனால் அது பொய்யாணையே.

ஆண்டவரே, உம் கண்கள் பற்றுறுதியை அன்றோ நோக்குகின்றன! நீர் அவர்களை நொறுக்கினீர்: அவர்களோ வேதனையை உணரவில்லை: நீர் அவர்களை அழித்தீர்: அவர்களோ திருந்த மறுத்தனர்: அவர்கள் தங்கள் முகத்தைப் பாறையினும் கடியதாக இறுக்கிக்கொண்டனர்.

நான் 'அவர்கள் தாழ்நிலையில் உள்ளவர்கள்: அறிவற்றுச் செயலாற்றுகின்றார்கள்' என எண்ணினேன்: ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழிமுறைகளையும், தம் கடவுளின் நெறிமுறைகளையும் அறியாதிருக்கின்றார்கள்.

நான் உயர் நிலையில் உள்ளவர்களிடம் போய், அவர்களிடம் பேசுவேன். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழிமுறைகளையும், தம் கடவுளின் நெறிமுறைகளையும் அறிந்தவர்களாய் இருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால், அவர்களும் நுகத்தை முறித்தார்கள்: தளைகளை அறுத்தார்கள்.

எனவே காட்டுச் சிங்கம் அவர்களைக் கொல்லும், பாலைநிலத்து ஓநாய் அவர்களை அழிக்கும், சிறுத்தை அவர்கள் நகர்கள் மேல் கண்வைத்திருக்கும்: அவற்றிலிருந்து வெளியேறும் அனைவரும் பீறிக் கிழித்தெறியப்படுவர். ஏனெனில், அவர்கள் வன்செயல்கள் பல செய்தனர்: என்னை விட்டுப் பன்முறை விலகிச் சென்றனர்.

நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்? உன் மக்கள் என்னைப் புறக்கணித்தார்கள்: தெய்வங்கள் அல்லாதவைமீது ஆணையிட்டார்கள்: அவர்கள் உண்டு நிறைவடையுமாறு செய்தேன்: அவர்களோ விபசாரம் பண்ணினார்கள்: விலைமாதர் வீட்டில் கூடினார்கள்:

தின்று கொழுத்து மோக வெறி கொண்ட குதிரைகள்போல், ஒவ்வொருவனும் தனக்கு அடுத்திருப்பவன் மனைவியை நோக்கிக் கனைக்கிறான்.

இவற்றிற்காக நான் தண்டிக்க மாட்டேனா? என்கிறார் ஆண்டவர். இத்தகைய மக்களை நான் பழி வாங்காமல் இருப்பேனா?

திராட்சைத் தோட்டச் சுவர்கள் மீது ஏறி அழியுங்கள்: எனினும் முற்றிலும் அழிக்க வேண்டாம். அதன் படர்கொடிகளை ஒடித்தெறியுங்கள். அவை ஆண்டவருடையவை அல்ல.

ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாரும் யூதா வீட்டாரும் எனக்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர், என்கிறார் ஆண்டவர்.

அவர்கள் ஆண்டவரைக் குறித்துப் பொய்யாகச் சொன்னது: "அவர் ஒன்றும் செய்யமாட்டார்: நமக்குத் தீமை எதுவும் வராது: வாளையும் பஞ்சத்தையும் நாம் காணப்போதில்லை."

இறைவாக்கினர் பேசுவதெல்லாம் காற்றோடு காற்றாய்ப் போகும். இறைவாக்கு அவர்களிடம் இல்லை: அவர்கள் கூறியவாறு அவர்களுக்கே நிகழும்.

ஆகவே படைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "அவர்கள் இப்படிப் பேசியதால் நான் உன் வாயில் வைக்கும் என் சொற்கள் நெருப்பாகும். உன் வாயில் வைத்த அவை மரக்கட்டைகளாகிய இம்மக்களை எரித்துவிடும்.

இஸ்ரயேல் வீட்டாரே, இதோ! தொலையிலிருந்து உங்களுக்கு எதிராக ஓரினத்தை அழைத்து வருவேன், என்கிறார் ஆண்டவர். அது எதையும் தாங்கும் இனம்: அதன் மொழி உனக்குப் புரியாது: அவர்கள் பேசுவது உனக்குப் புரியாது.

அவர்களது அம்புக் கூடு திறந்த கல்லறை போன்றது. அவர்கள் அனைவரும் வலிமை வாய்ந்தவர்கள்.

அவர்கள் உன் விளைச்சலையும் உணவையும் விழுங்கிவிடுவார்கள்: புதல்வர், புதல்வியரை விழுங்கிவிடுவார்கள்: உன் ஆடு மாடுகளை விழுங்கிவிடுவார்கள்: உன் திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் விழுங்கிவிடுவார்கள்: நீ நம்பியிருக்கும் உன் அரண்சூழ் நகர்களை வாளால் அழிப்பார்கள்.

அந்நாள்களில்கூட நான் உங்களை முற்றும் அழிக்கமாட்டேன்," என்கிறார் ஆண்டவர்.

"எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு இவற்றை எல்லாம் ஏன் செய்தார்?" என அவர்கள் கேட்கும்போது, நீ அவர்களிடம், "நீங்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு உங்கள் நாட்டில் ஊழியம் செய்ததுபோல் உங்களுக்கு உரிமை இல்லாத நாட்டில் வேற்று நாட்டாருக்கு நீங்கள் ஊழியம் செய்வீர்கள்" என்று சொல்.

யாக்கோபின் வீட்டாருக்கு இதைப்பறைசாற்றுங்கள்: யூதாவின் வீட்டாருக்கு அறிவியுங்கள்.

கண்ணிருந்தும் காணாத, காதிருந்தும் கேளாத மதிகெட்ட, இதயமற்ற மக்களே, கேளுங்கள்:

உங்களுக்கு என் மீது அச்சமில்லையா? என்கிறார் ஆண்டவர். என் முன்னிலையில் நீங்கள் நடுங்க வேண்டாமா? கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன். இது என்றென்றும் உள்ள ஒரு வரம்பு, அதனைக் கடக்க முடியாது. அலைகள் அதன் மீது மோதியடிக்கலாம்: எனினும் அதன்மேல் வெற்றி கொள்ள முடியாது. அவைகள் சீறி முழங்கலாம்: எனினும் அதனை மீற முடியாது.

இம்மக்களோ கட்டுக்கடங்காதவர், பிடிவாத குணத்தினர், என்னை விட்டு விலகிச் சென்றனர்.

"தக்க காலத்தில் முன் மாரி, பின் மாரியைத் தருபவரும், விளைச்சலுக்காகக் குறிக்கப்பட்ட வாரங்களை நமக்காகக் காத்து வருபவருமான நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவோம்" என்னும் எண்ணம் அவர்கள் உள்ளத்தில் எழவில்லை.

உங்கள் குற்றங்கள் இவற்றை எல்லாம் தடுத்தன: உங்கள் பாவங்களே உங்களுக்கு நன்மை வராமலிருக்கச் செய்தன.

ஏனெனில், என் மக்களிடையே தீயோர் காணப்படுகின்றனர்: வேடர் பதுங்கியிருப்பதுபோல் அவர்கள் மறைந்து கண்ணி வைத்து மனிதர்களைப் பிடிக்கின்றனர்.

பறவைகளால் கூண்டு நிறைந்திருப்பது போல, அவர்களின் வீடுகள் சூழ்ச்சிவழி கிடைத்த பொருள்களினால் நிறைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் பெரியவர்களும் செல்வர்களும் ஆனார்கள்.

அவர்கள் கொழுத்துத் தளதள வென்றிருக்கின்றார்கள்: அவர்களின் தீச்செயல்களுக்குக் கணக்கில்லை: வழக்குகளை நீதியுடன் விசாரிப்பதில்லை: அனாதைகள் வளம்பெறும் வகையில் அவர்கள் வழக்கை விசாரிப்பதில்லை. ஏழைகளின் உரிமைகளை நிலைநாட்டுவதுமில்லை.

இவற்றிற்காக நான் இவர்களைத் தண்டிக்க வேண்டாமா? என்கிறார் ஆண்டவர். இத்தகைய மக்களினத்தை நான் பழிவாங்காமல் விடுவேனா?

திகைப்பும் திகிலும் ஊட்டும் நிகழ்ச்சி நாட்டில் நடக்கின்றது.

இறைவாக்கினர் பொய்யை இறைவாக்காக உரைக்கின்றனர்: குருக்கள் தங்கள் விருப்பப்படியே அதிகாரம் செலுத்துகின்றனர்: இதையே என் மக்களும் விரும்புகின்றனர்: ஆனால் முடிவில் என்ன செய்வீர்கள்?

அதிகாரம் 6.

பென்யமின் மக்களே! எருசலேமிலிருந்து தப்பியோடுங்கள்: தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள்: பேத்தக்கரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்: ஏனெனில் வடக்கிலிருந்து தீமையும் பேரழிவும் வருகின்றன.

மகள் சீயோனை வளமான பசும்புல் தரைக்கு ஒப்பிடுவேன்.

ஆயர்கள் தங்கள் மந்தையோடு அவளிடம் வருவார்கள்: அவளைச் சுற்றிலும் கூடாரங்கள் அடிப்பார்கள்: அவரவர்தம் இடத்தில் மேய்ப்பார்கள்.

"அவளுக்கு எதிராய்ப் போருக்குத் தயாராகுங்கள்: எழுந்திருங்கள்: நண்பகலில் எதிர்த்துச் செல்வோம்: ஜயோ! பொழுது சாய்கின்றதே! மாலை நேரத்து நிழல்கள் நீள்கின்றனவே!

எழுந்திருங்கள்: இரவில் அவளை எதிர்த்துச் செல்வோம்: அவள் அரண்மனைகளை அழிப்போம்" என்பார்கள்.

படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அவளுடைய மரங்களை வெட்டுங்கள்: எருசலேமுக்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்புங்கள்: அவள் தண்டிக்கப்படவேண்டிய நகர்: அவளிடம் காணப்படுவது அனைத்தும் கொடுமையே.

கேணியில் நீர் சுரந்து கொண்டிருப்பது போல் அவள் தீமைகளைச் சுரந்து கொண்டிருக்கின்றாள். வன்முறை, அழிவு என்பதே அவளிடம் எழும் குரல்: நோயும் காயமுமே என்றும் என் கண்முன் உள்ளன.

எருசலேமே, எச்சரிக்கையாய் இரு: இல்லையேல், நான் உன்னைவிட்டு அகன்று போவேன்: உன்னை மனிதர் வாழாப் பாழ்நிலம் ஆக்குவேன்.

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: திராட்சைக் கொடிகளில் தப்புப் பழங்களை ஒன்றும் விடாது பறித்துச் சேர்ப்பது போல, இஸ்ரயேலில் எஞ்சியிருப்பதைக் கூட்டிச்சேர். திராட்சைத் தோட்டக்காரரைப்போல் கிளைகளிடையே உன் கையை விட்டுப் பார்.

நான் யாரிடம் பேசுவேன்? யாருக்கு எச்சரிக்கை விடுப்பேன்? யார் செவி கொடுப்பார்? அவர்கள் காதுகள் திறக்கப்படவில்லை: அவர்களால் செவிகொடுக்க முடியாது: ஆண்டவரின் வாக்கு அவர்களுக்குப் பழிச்சொல் ஆயிற்று: அவர்கள் அதில் இன்பம் காண்பதில்லை.

ஆண்டவரின் சீற்றம் என்னில் நிறைந்துள்ளது: அதனை அடக்கிச் சோர்ந்து போனேன்: ஆண்டவர் கூறுவது: தெருவில் இருக்கும் சிறுவர்கள்மேலும் ஒன்றாய்க் கூடியுள்ள இளைஞர்கள் மேலும் சினத்தைக் கொட்டு. கணவனும் மனைவியும், முதியோரும் வயது நிறைந்தோறும் பிடிபடுவர்.

அவர்களுடைய வீடுகளையும் நிலங்களையும் மனைவியரையும் பிறர் கைப்பற்றுவர்: ஏனெனில், நாட்டில் குடியிருப்போருக்கு எதிராய் என் கையை நீட்டப்போகிறேன்.

ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்: இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.

அமைதியே இல்லாதபொழுது, "அமைதி, அமைதி" என்று கூறி என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.

அருவருப்பானதைச் செய்தபோது அவர்கள் வெட்கமடைந்தார்களா? அப்போதுகூட அவர்கள் வெட்கமடையவில்லை: நாணம் என்பதே என்னவென்று அவர்களுக்குத் தெரியாது: எனவே, மடிந்து வீழ்ந்தவர்களோடு அவர்களும் வீழ்வர்: நான் அவர்களைத் தண்டிக்கும்போது அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவர் கூறுவது இதுவே: சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்: தொன்மையான பாதைகள் எவை? நல்ல வழி எது? என்று கேளுங்கள்: அதில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும். அவர்களோ, "அவ்வழியே செல்ல மாட்டோம்" என்றார்கள்.

நான் உங்களுக்குக் காவலரை நியமித்தேன். "எக்காளக் குரலுக்குச் செவி கொடுங்கள்" என்றேன். அவர்களோ, "செவிசொடுக்க மாட்டோ ம்" என்றார்கள்.

எனவே, நாடுகளே கேளுங்கள்: மக்கள் கூட்டத்தாரே, அவர்களுக்கு என்ன நேரப்போகிறது என்று பாருங்கள்.

நிலமே, நீயும் கேள்: இதோ! இம்மக்கள்மேல் தீமை வரச்செய்வேன். அவர்களின் தீய எண்ணங்களின் விளைவே இத்தீமை. ஏனெனில், அவர்கள் என் சொற்களுக்குச் செவிசாய்க்கவில்லை: என் சட்டத்தைப் புறக்கணித்தார்கள்.

சேபா நாட்டுத் பபமும் பரத்து நாட்டு நறுமண நாணலும் எனக்கு எதற்கு? உங்கள் எரிபலிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. உங்களின் மற்றைய பலிகளும் எனக்கு உவகை தருவதில்லை.

ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ இம் மக்களுக்கு எதிராகத் தடைக்கற்களை வைக்கப்போகிறேன். தந்தையரும் தனயரும் ஒன்றாகத் தடுக்கி விழுவர்: அடுத்திருப்பாரும் நண்பரும் அழிந்து போவர்.

ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! வடக்கு நாட்டினின்று ஓர் இனம் வருகின்றது: மண்ணுலகின் கடை எல்லைகளினின்று பெரிய நாடு ஒன்று கிளர்ந்து எழுகின்றது.

அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்: அவர்கள் கொடியவர்: இரக்கமற்றவர்: அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் போன்றது: மகளே சீயோன்! அவர்கள் போருக்கு அணிவகுத்து குதிரைகள் மீது வருகின்றார்கள்: சவாரி செய்துகொண்டு உனக்கெதிராய் வருகின்றார்கள்:

"அவர்களைப் பற்றிய செய்தியை நாம் கேள்வியுற்றபோது நம் கைகள் தளர்ந்து போயின: கடுந்துயர் நம்மை ஆட்கொண்டது: பேறுகாலப் பெண்ணைப் போல் நாம் தவிக்கின்றோம்.

வயல்வெளிக்குப் போகவேண்டாம்: சாலைகளில் செல்ல வேண்டாம்: ஏனெனில், எதிரியின் வாள் எங்கும் உள்ளது: சுற்றிலும் ஒரே திகில்.

மகளாகிய என் மக்களே! சாக்கு உடை உடுத்துங்கள்: சாம்பலில் புரளுங்கள்: இறந்த ஒரே பிள்ளைக்காகத் துயருற்று அழுவது போல், மனமுடைந்து அழுது புலம்புங்கள். ஏனெனில், அழிப்பவன் திடீரென நமக்கெதிராய் வருவான்."

நான் உன்னை என் மக்களுக்குள் மதிப்பீடு செய்பவனாகவும், ஆய்வாளனாகவும் ஏற்படுத்தினேன்: நீ அவர்களின் வழிகளை அறிந்து மதிப்பீடு செய்வாய்.

அவர்கள் எல்லாரும் அடங்காத கலகக்காரர்கள்: பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்: அவர்கள் யாவரும் வெண்கலத்தையும் இரும்பையும் போன்றவர்கள்: அவர்களின் செயல்கள் கறைபட்டவை.

துருத்திகள் தொடர்ந்து ஊதுகின்றன: கா஡ணயம் நெருப்பில் எரித்தழிக்கப்பட்டது. பய்மைப்படுத்தும் வேலை தொடர்ந்து நடப்பதில் பயனில்லை: ஏனெனில், தீயவர்கள் இன்னும் நீக்கப்படவில்லை.

அவர்கள் "தள்ளுபடியான வெள்ளி" என்று அழைக்கப்படுவார்கள். ஏனெனில், ஆண்டவர் அவர்களைப் புறக்கணித்துள்ளார்.

அதிகாரம் 7.

ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு:

ஆண்டவரின் இல்ல வாயிலில் நின்று நீ அறிவிக்க வேண்டிய வாக்கு இதுவே: ஆண்டவரை வழிபட இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் மக்களே! நீங்கள் அனைவரும் கேளுங்கள்.

இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது: "உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள். நான் இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன்.

"இது ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்!" என்னும் ஏமாற்றுச் சொற்களை நம்பவேண்டாம்.

நீங்கள் உங்கள் வழிகளையும் செயல்களையும் முற்றிலும் சீர்ப்படுத்திக் கொண்டால், ஒருவர் ஒருவரோடு முற்றிலும் நேர்மையுடன் நடந்துகொண்டால்,

அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதிருந்தால், மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதிருந்தால், உங்களுக்கே தீங்கு விளைவிக்கும வேற்றுத் தெய்வ வழிபாட்டை நிறுத்தி விட்டால்,

இந்த இடத்தில், முன்பே நான் உங்கள் மூதாதையர்க்கு எக்காலத்திற்குமென்று கொடுத்துள்ள இந்த நாட்டில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன்.

நீங்களோ, பயனற்ற ஏமாற்றுச் சொற்களை நம்புகிறீர்கள்.

களவு, கொலை, விபச்சாரம் செய்கிறீர்கள்: பொய்யாணை இடுகிறீர்கள்: பாகாலுக்குத் பபம் காட்டுகிறீர்கள். நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களை வழிபடுகிறீர்கள்.

ஆயினும், என் பெயர் விளங்கும் இந்தக் கோவிலுள் வந்து, என்முன் நின்றுகொண்டு, "நாங்கள் பாதுகாப்பாய் உள்ளோம்" என்கிறீர்கள். அருவருப்பான இவற்றைச் செய்யவா இந்தப் பாதுகாப்பு?

என் பெயர் விளங்கும் இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ? நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்," என்கிறார் ஆண்டவர்.

நான் முன்னாளில் குடியிருந்த சீலோ என்னும் என் இடத்திற்குப் போங்கள். என் மக்கள் இஸ்ரயேல் செய்த தீமையின் பொருட்டு நான் அதற்குச் செய்துள்ளதைப் பாருங்கள்.

ஆண்டவர் கூறுவது: நீங்கள் இந்தத் தீய செயல்களை எல்லாம் செய்தீர்கள். நான் தொடர்ந்து கூறியும் நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை. நான் உங்களை அழைத்தும் நீங்கள் பதில் தரவில்லை.

எனவே, என் பெயர் விளங்கும் உங்கள் நம்பிக்கைக்குரிய இந்தக் கோவிலுக்கும் உங்களுக்கும் உங்கள் தந்தையருக்கும் நான் கொடுத்த இந்த இடத்திற்கும் சீலோவிற்குச் செய்தது போலவே செய்யப்போகிறேன்.

உங்கள் சகோதரர் அனைவரையும் எப்ராயிம் வழிமரபினர் யாவரையும் ஒதுக்கியதுபோல, உங்களையும் என் முன்னிலையிலிருந்து ஒதுக்கிவிடுவேன்.

இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம்: இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ வேண்டுதல் செய்யவோ வேண்டாம்: என்னிடம் பரிந்து பேசவும் வேண்டாம். ஏனெனில் நான் உனக்குச் செவிசாய்க்க மாட்டேன்.

யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் அவர்கள் செய்வதை நீ பார்ப்பதில்லையா?

புதல்வர் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றனர். தந்தையர் தீ மூட்டுகின்றனர். பெண்டிர் விண்ணக அரசிக்காக அடை சுட மாவைப் பிசைகின்றனர். எனக்கு வருத்தம் வருவிக்கும்படி வேற்றுத் தெய்வங்களுக்கு அவர்கள் நீர்மப்படையல்கள் படைக்கிறார்கள்.

எனக்கா வருத்தம் வருவிக்கிறார்கள்? என்கிறார் ஆண்டவர்: தங்களுக்குத் தாமே அவ்வாறு செய்துகொள்கிறார்கள்! வெட்கக்கேடு!

ஆகவே, தலைவராம் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என் சினமும் சீற்றமும் இவ்விடத்தின் மீதும் மனிதர் மீதும் விலங்குகள் மீதும் வயல்வெளி மரங்கள் மீதும் நிலத்தின் விளைச்சல் மீதும் கொட்டப்படும். என் சினம் பற்றியெரியும்: அதனை அணைக்க முடியாது.

இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் எரிபலிகளோடு ஏனைய பலிகளையும் சேர்த்து அவற்றின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள்.

உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து நான் விடுவித்தபோது எரிபலிகள் பற்றியோ ஏனைய பலிகள் பற்றியோ அவர்களுக்கு நான் எதுவும் கூறவில்லை: கட்டளையிடவும் இல்லை.

ஆனால் நான் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: என் குரலுக்குச் செவி கொடுங்கள்: அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.

அவர்களோ செவி சாய்க்கவும் இல்லை: கவனிக்கவும் இல்லை: பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்: முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்.

உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன்.

அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை: கவனிக்கவில்லை: முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.

நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்: அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்: அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள்.

தங்களின் கடவுளாகிய ஆணடவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.

உன் தலை முடியை மழித்து எறிந்துவிடு: மொட்டைக் குன்றுகளில் நின்று ஒப்பாரி வை: ஏனெனில், தம் சீற்றத்தில் ஆண்டவர் இத்தலைமுறையைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டார்.

ஏனெனில், யூதாவின் மக்கள் என் கண்முன் தீமை செய்தனர் என்கிறார் ஆண்டவர். என் பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி அவர்கள் அருவருப்பானவற்றை அங்கு வைத்தார்கள்.

அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி பென்இன்னோம் பள்ளத்தாக்கில் உள்ள தோபேத்தில் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இதனை நான் கட்டளையிடவில்லை. இது என் எண்ணத்தில்கூட எழவில்லை.

ஆதலால், ஆண்டவர் கூறுகிறார்: இதோ! நாள்கள் வருகின்றன. அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது: மாறாகப் "படுகொலைப் பள்ளத்தாக்கு" என்று அழைக்கப்படும்: வேறிடம் இல்லாததால் தோபேத்தில் பிணங்களைப் புதைப்பர்.

இம்மக்களின் சடலங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் இரையாகும். யாரும் அவற்றை விரட்ட மாட்டார்கள்.

அப்போது யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் மகிழ்ச்சியின் ஒலியின் அக்களிப்பின் ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். மணமகன், மணமகள் குரலொலியும் கேட்கப்படாதிருக்கச் செய்வேன். ஏனெனில், நாடு பாழ்பட்டுப் போகும்.

அதிகாரம் 8.

அப்போது யூதாவின் அரசர், தலைவர், குருக்கள், இறைவாக்கினர், எருசலேமில் குடியிருப்போர் ஆகியோரின் எலும்புகளை அவர்களின் கல்லறைகளிலிருந்து தோண்டி எடுப்பர், என்கிறார் ஆண்டவர்.

அவற்றைக் கதிரவன், நிலா, விண்மீன்கள் ஆகியவற்றின்முன் பரப்புவார்கள். இவற்றுக்குத்தாமே அவர்கள் அன்பு காட்டிப் பணிவிடை புரிந்தார்கள்! இவற்றின் பின்தானே அலைந்து திரிந்தார்கள்! இவற்றிடம் தானே குறி கேட்டார்கள்! அவ்வெலும்புகளை யாரும் மீண்டும் ஒன்றுசேர்த்துப் புதைக்கமாட்டார்கள். அவை தரையில் சாணம் போல் கிடக்கும்.

நான் அவர்களைத் துரத்தியுள்ள இடங்களில் எல்லாம், இந்தத் தீய மக்களில் எஞ்சியிருப்போர் யாவரும் வாழ்வைவிடச் சாவையே விரும்புவர், என்கிறார் படைகளின் ஆண்டவர்.

நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது: "ஆண்டவர் கூறுவது இதுவே: விழுந்தவன் எழுவதில்லையா? பிரிந்து சென்றவன் திரும்பி வருவதில்லையா?

ஏன் இந்த எருசலேமின் மக்கள் என்றென்றைக்கும் என்னை விட்டு விலகிப் பொய்யைப் பற்றிக்கொண்டு நிற்கின்றார்கள்?

நான் செவிசாய்த்தேன்: உற்றுக்கேட்டேன். அவர்கள் சரியானதைச் சொல்லவில்லை. "நான் என்ன செய்துவிட்டேன்?" என்று கூறுகிறார்களேயன்றி எவருமே தம் தீச்செயலுக்காக வருந்தவில்லை. போர்க்களத்தில் பாய்ந்தோடும் குதிரைபோல யாவருமே தம் வழியில் விரைகின்றார்கள்.

வானத்துக் கொக்கு தன் காலங்களை அறிந்துள்ளது. புறாவும் தகைவிலானும் நாரையும் தாம் இடம் பெயரும் காலத்தை அறிந்துள்ளன. என் மக்களோ, ஆண்டவரின் நீதியை உணரவில்லையே!

"நாங்கள் ஞானிகள்: ஆண்டவரின் சட்டம் எங்களோடு உள்ளது" என நீங்கள் எவ்வாறு கூறமுடியும்? மறைமல் அறிஞரின் பொய் எழுதும் எழுதுகோல் பொய்யையே எழுதிற்று.

ஞானிகள் வெட்கமடைவர்: திகிலுற்றுப் பிடிபடுவர்: ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வாக்கைப் புறக்கணித்தார்கள்: இதுதான் அவர்களின் ஞானமா?

ஆகவே, நான் அவர்களுடைய மனைவியரை வேற்றவருக்குக் கொடுப்பேன்: அவர்களுடைய நிலங்களைக் கைப்பற்றியோருக்கே கொடுப்பேன்: ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள். இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.

அமைதியே இல்லாத பொழுது "அமைதி, அமைதி" என்று கூறி என் மகளாகிய மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.

அருவருப்பானதைச் செய்தபோது அவர்கள் வெட்கம் அடைந்தார்களா? அப்போதுகூட அவர்கள் வெட்கம் அடையவில்லை: நாணம் என்பது என்னவென்று அவர்களுக்குத் தெரியாது: எனவே மடிந்து விழுந்தவர்களோடு அவர்களும் மடிந்து விழுவர்: நான் அவர்களை தண்டிக்கும் போது அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர்.

நான் கனிகளை ஒன்று சேர்க்க விரும்பினேன். ஆனால், திராட்சைக் கொடியில் பழங்கள் இல்லை: அத்தி மரங்களில் கனிகள் இல்லை. இலைகள்கூட உதிர்ந்து போயின. நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களிடமிருந்து நழுவிப் போயிற்று.

நாம் இங்கு ஏன் அமர்ந்திருக்கிறோம்? ஒன்றிணைவோம்: அரண் சூழ் நகர்களுக்குப் போவோம்: அங்குச் சென்று மடிவோம்: ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை மடியும்படி விட்டுவிட்டார்: நஞ்சு கலந்த நீரை நாம் குடிக்கச் செய்தார்: ஏனெனில், நாம் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்: ஆனால் பயனேதும் இல்லை. நலம் பெறும் காலத்தை எதிர்ப்பார்த்திருந்தோம்: பேரச்சமே மிஞ்சியது.

தாணிலிருந்து அவளுடைய குதிரைகளின் சீறல் கேட்கின்றது: வலிமை வாய்ந்த குதிரைகளின் கனைப்பு நாட்டையெல்லாம் நடுங்கச் செய்கின்றது. அவர்கள் வந்து நாட்டையும் அதிலுள்ள அனைத்தையும் நகரையும் அதில் குடியிருப்போரையும் விழுங்கிவிடுவார்கள்.

நான் உங்கள் நடுவில் பாம்புகளை அனுப்புவேன். எதற்கும் மயங்கா நச்சுப் பாம்புகளை அனுப்புவேன்: அவை உங்களைக் கடிக்கும், என்கிறார் ஆண்டவர்.

துயரம் என்னை மேற்கொண்டது: என் உள்ளம் நலிந்து போய்விட்டது.

இதோ என் மகளாகிய மக்களின் அழுகுரல் பரத்து நாட்டிலிருந்து கேட்கிறதே: சீயோனில் ஆண்டவர் இல்லையா? அவளின் அரசர் அங்கே இல்லையா? செதுக்கிய உருவங்களாலும் வேற்றுத் தெய்வச் சிலைகளாலும் எனக்கு ஏன் சினமூட்டினார்கள்?

அறுவடைக் காலம் முடிந்துவிட்டது: வேனிற்காலம் கடந்துவிட்டது: நமக்கோ இன்றும் விடுதலை கிடைக்கவில்லை.

என் மகளாகிய மக்களுக்கு ஏற்பட்ட முறிவு எனக்கே ஏற்பட்டதாகும். நான் துயருறுகிறேன். திகில் என்னைப் பற்றிக் கொண்டுள்ளது.

அம்முறிவில் தடவக் கிலயாதில் பொன்மெழுகு இல்லையா? அங்கே மருத்துவர் இல்லையா? அப்படியானால், என் மகளாகிய மக்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?

அதிகாரம் 9.

என் தலை தண்ணீரால் நிறைந்ததாயும் என் கண்கள் கண்ணீரின் ஊற்றுமாயும் இருக்கக் கூடாதா? அப்படியானால், என் மகளாம் மக்களுள் கொலையுண்டோ ருக்காக இரவும் பகலும் நான் அழுதிருப்பேனே!

பாலை நிலத்தில் பயணியர் விடுதி ஒன்று எனக்கு இருக்கக் கூடாதா? நான் மக்களைப் புறக்கணித்து அவர்களிடமிருந்து சென்று விடலாமே! ஏனெனில், அவர்கள் யாவரும் விபசாரிகள், நம்பிக்கைத் துரோகிகளின் கூட்டம்.

பொய்பேசத் தங்கள் நாவை வில்லைப்போல் அவர்கள் வளைக்கின்றனர்: உண்மைக்காக நாட்டில் யாரும் நிமிர்ந்து நிற்பதில்லை: அவர்கள் தீமையிலிருந்து தீமைக்கே சென்று கொண்டிருக்கிறார்கள்: என்னையோ அவர்கள் அறிந்து கொள்ளவில்லை, என்கிறார் ஆண்டவர்.

ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைப் பொறுத்தவரை எச்சரிக்கையாய் இருக்கட்டும். எந்த உறவினரையும் நம்பவேண்டாம். ஏனெனில், எல்லா உறவினரும் ஏமாற்றுவர் என்பது உறுதி: அடுத்திருப்பவர் அனைவரும் புறணி பேசுகின்றனர்:

எல்லாரும் அடுத்திருப்பவரை ஏமாற்றுகின்றனர்: யாருமே உண்மை பேசுவதில்லை: பொய் பேசத் தங்கள் நாவைப் பழக்கியுள்ளார்கள்: குற்றம் புரிந்தே சோர்ந்து போனார்கள்.

நீயோ வஞ்சனை செய்வார் நடுவில் வாழ்கின்றாய்: தங்கள் வஞ்சனையின் காரணமாக என்னை அவர்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றார்கள், என்கிறார் ஆண்டவர்.

எனவே, படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: நான் அவர்களைப் புடமிடுவேன்: பரிசோதிப்பேன்: என் மகளாகிய மக்களுக்கு நான் வேறு என்னதான் செய்யமுடியும்?

அவர்கள் நாக்கு கொல்லும் அம்பு: அது பேசுவது வஞ்சனை: எல்லாரும் தம் வாயால் அடுத்திருப்பவர்களோடு சமாதானமாய்ப் பேசுகின்றனர்: உள்ளத்திலோ அவர்களுக்குக் குழி பறிக்கின்றனர்.

இவற்றின் பொருட்டு நான் அவர்களைத் தண்டியாமல் விடுவேனோ? இப்படிப்பட்ட ஒரு மக்களினத்தாரை நான் பழிவாங்காமல் இருப்பேனோ? என்கிறார் ஆண்டவர்.

மலைகளைக் குறித்து அழுது புலம்புவோம்: பாழ்வெளி மேய்ச்சல் நிலத்தின் பொருட்டு ஒப்பாரி வைப்போம்: ஏனெனில் அனைத்தும் தீய்ந்து போயின: அவை வழியாய்ச் செல்வோர் யாருமில்லை: கால்நடைகளின் ஒலியும் கேட்கவில்லை: வானத்துப் பறவைகள் முதல் விலங்குகள் வரை அனைத்துமே ஓடி மறைந்து விட்டன.

எருசலேமை அழித்துக் கற்குவியலாக்குவேன்: அதனைக் குள்ளநரிகளின் வளையாக்குவேன்: யூதா நகர்களை யாரும் வாழாப் பாழ்வெளியாக்குவேன்.

இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர் எவர்? இதை அறிவிக்குமாறு எவருக்கு ஆண்டவர் வாய்மொழியாகக் கூறியுள்ளார்? நாடு அழிந்து ஆள் நடமாட்டம் இல்லாத பாலை நிலம் போல் தீய்ந்துவிட்டது ஏன்?

ஆண்டவர் கூறுவது: நான் அவர்களுக்குக் கொடுத்த சட்டத்தைப் புறக்கணித்தார்கள். என் சொல்லுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை: அதன்படி நடக்கவும் இல்லை.

மாறாகத் தங்கள் பிடிவாதத்தின்படி நடந்தார்கள்: தங்கள் மூதாதையர் கற்றுக்கொடுத்தபடி பாகாலைப் பின்பற்றினார்கள்.

ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இம்மக்கள் எட்டிக்காய் உண்ணச் செய்வேன். நஞ்சு கலந்த நீர் குடிக்கச் செய்வேன்.

அவர்களோ அவர்தம் மூதாதையரோ அறிந்திராத மக்களினங்கள் நடுவில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முற்றிலும் அழிக்கும் வரை அவர்களுக்குப் பின் வாளை அனுப்புவேன். போர் எழச் செய்வேன்.

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! கேளுங்கள். ஒப்பாரி வைக்கும் பெண்களை வரச்சொல்லுங்கள்: அவர்களுள் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சொல்லியனுப்புங்கள்.

அவர்கள் விரைந்து வந்து நம்மைக் குறித்துப் புலம்பட்டும்: நம் கண்கள் நீர் பொழியட்டும்: நம் இமைகள் நீர் சொரியட்டும்.

ஏனெனில், சீயோனிலிருந்து புலம்பல் கேட்கின்றது: "நாம் இப்படிப் பாழடைந்து விட்டோ மே: நம் மானமெல்லாம் போயிற்றே: நாட்டைவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்றே. நம் குடியிருப்புகள் தகர்க்கப்பட்டனவே."

பெண்டிரே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: உங்கள் செவிகள் அவர்தம் வாய்மொழியை ஏற்கட்டும்: உங்கள் புதல்வியருக்குப் புலம்பக் கற்றுக்கொடுங்கள். ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்கு ஒப்பாரி வைக்கக் கற்றுக்கொடுக்கட்டும்.

ஏனெனில், சாவு பலகணிகள் வழியாய் வந்துவிட்டது: நம் அரண்களுக்குள்ளும் நுழைந்து விட்டது: தெருக்களில் சிறுவர்களையும் பொதுவிடங்களில் இளைஞர்களையும் வீழ்த்திவிட்டது.

ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார் எனச் சொல்: மனிதரின் பிணங்கள் சாணம்போல் வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும்: அறுவடை செய்வோனுக்குப் பின்னால் விடப்பட்ட அரிகளைப் போலக் கிடக்கும்.

ஆண்டவர் கூறுவது இதுவே: ஞானி தம் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம்.

பெருமை பாராட்ட விரும்புபவர், "நானே ஆண்டவர்" என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் நான் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக! ஏனெனில் இவற்றில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்கிறார் ஆண்டவர்.

இதோ! நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்போது நான் உடலில் மட்டும் விருத்தசேதனம் செய்திருப்போர் அனைவரையும் தண்டிப்பேன்.

எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளையும் முன்தலையை மழித்துக் கொள்ளும் பாலை நிலத்தாரையும் தண்டிப்பேன்: ஏனெனில் வேற்றினத்தார் யாவரும் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்கள்: இஸ்ரயேல் வீட்டார் யாவரும் இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள்.

அதிகாரம் 10.

இஸ்ரயேல் வீட்டாரே! ஆண்டவர் உங்களுக்குக் கூறும் சொல்லைக் கேளுங்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே: வேற்றினங்களின் வழியைக் கற்றுக் கொள்ளாதீர்: வானத்தில் தோன்றும் அடையாளங்களைக் கண்டு கலங்காதீர்: வேற்றினத்தாரே அவற்றால் கலக்கமுறுவர்.

வேற்றினங்கள் வழிபடும் சிலைகள் வீணானவை: அவை காட்டிலிருந்து வெட்டப்பட்ட மரத்தாலானவை: கைவினைஞர் உளியால் செய்த வேலைப்பாடுகள்.

அவை பொன், வெள்ளியால் அணி செய்யப்பட்டவை. அசையாதபடி ஆணி, சுத்தியல் கொண்டு பொருத்தப் பெற்றவை.

அவை வெள்ளரித் தோட்டத்துப் பொம்மை போன்றவை: அவற்றால் பேச முடியாது: அவற்றைத் பக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். அவற்றால் நடக்கவும் முடியாது. அவை நன்மையும் செய்யா: தீமையும் செய்யா: அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

ஆண்டவரே! உமக்கு நிகர் யாருமிலர்: நீர் பெரியவர்: உமது பெயர் ஆற்றல் மிக்கது.

மக்களினங்களின் மன்னரே! உமக்கு அஞ்சாதவர் யார்? அரசுரிமை உமதே: வேற்றினத்தாரின் ஞானிகள் அனைவரிலும் அவர்களின் அரசுகள் அனைத்திலும் உமக்கு நிகர் யாருமிலர்.

அவர்கள் மூடர்களும் முட்டாள்களுமாய் உள்ளனர்: அவர்களது போதனையின் பொருளாம் சிலைகள் மரக்கட்டைகளே.

தர்சீசிலிருந்து வெள்ளித் தகடுகளும், ஊபாசிலிருந்து பொன்னும் வந்து சேர்கின்றன. அவை கைவினைஞரின் வேலைப்பாடுகள்: பொற்கொல்லனின் கைத்திறனால் ஆனவை: ஊதா, கருஞ்சிவப்பு உடைகளைக் கொண்டவை. அவை எல்லாமே தேர்ச்சிபெற்ற கைவினைஞரின் வேலைப்பாடுகள்.

ஆனால், ஆண்டவரே உண்மையான கடவுள்! அவரே வாழும் கடவுள்! என்றும் ஆளும் அரசர்! அவர் வெஞ்சினம் கண்டு நிலம் நடுங்கும்: அவர் கடுங்கோபத்தை வேற்றினத்தார் தாங்கிக்கொள்ளார்.

நீ அவர்களுக்கு இவ்வாறு கூறு: விண்ணையும் மண்ணையும் உருவாக்காத அந்தத் தெய்வங்கள் மண்ணின் மீதும் விண்ணின் கீழும் இல்லாதொழியும்.

அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார்: தம் ஞானத்தால் பூவுலகை நிலை நாட்டினார்: தம் கூர்மதியால் விண்ணுலகை விரித்தார்.

அவர் குரல் கொடுக்க வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகிறது: மண்ணுலகின் எல்லையினின்று மேகங்கள் எழச்செய்கிறார்: மழை பொழியுமாறு மின்னல் வெட்டச் செய்கிறார்: தம் கிடங்குகளினின்று காற்று வீசச் செய்கிறார்.

மனிதர் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்: கொல்லர் எல்லாரும் தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்: அவர்களின் வார்ப்புப் படிமங்கள் பொய்யானவை: அவற்றுக்கு உயிர் மூச்சே இல்லை.

அவை பயனற்றவை: ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்: தம் தண்டனையின் காலத்தில் அவை அழிந்துவிடும்.

யாக்கோபின் பங்காய் இருப்பவரோ இவற்றைப் போன்றவர் அல்லர்: அவரே அனைத்தையும் உருவாக்கியவர்: அவரது உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேல் இனத்தை உருவாக்கியவரும் அவரே: படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயராகும்.

முற்றுகையிடப்பட்டவனே, தலையில் கிடக்கும் உன் பொருள்களை மூட்டையாகக் கட்டு.

ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நாட்டில் வாழ்வோரை இத்தருணத்தில் வீசி எறிவேன்: அவர்கள் என்னைக் கண்டுணருமாறு அவர்களுக்குத் துன்பம் வருவிப்பேன்.

ஜயோ நான் நொறுங்குண்டேன்: என் காயம் கொடியது: நானோ "உண்மையில் இது ஒரு நோய்: நான் இதைத் தாங்கியே ஆக வேண்டும்" என்று எண்ணிக்கொண்டேன்.

என் கூடாரம் அழிக்கப்பட்டது: அதன் கயிறுகளெல்லாம் அறுத்தெறியப்பட்டன: என் மக்கள் என்னைவிட்டுச் சென்றுவிட்டனர்: அவர்கள் இங்கு இல்லை: என் கூடாரத்தை மீண்டும் எழுப்புவார் எவருமிலர்: அதன் திரைகளைக் கட்டுவார் யாருமிலர்.

ஏனெனில், மேய்ப்பவர்கள் மூடர்களாய் இருந்தனர்: அவர்கள் ஆண்டவரைத் தேடவில்லை: எனவே, அவர்கள் வாழ்வு வளம் பெறவில்லை: அவர்களின் மந்தைகள் எல்லாம் சிதறிப்போயின.

குரல் ஒலி ஒன்று கேட்கின்றது: அது அண்மையில் ஒலிக்கின்றது: வடக்கு நாட்டிலிருந்து பெருங் கொந்தளிப்பு எழுகின்றது: யூதாவின் நகர்கள் பாழாகிக் குள்ள நரிகளின் வளையாகப் போகின்றன.

ஆண்டவரே! நான் அறிவேன்: மனிதர் செல்ல வேண்டிய வழி அவர்களின் கையில் இல்லை: நடப்பவன் காலடிப் போக்கும் அவர்களின் அதிகாரத்தில் இல்லை.

ஆண்டவரே! உம் சினத்திற்கு ஏற்ப அன்று, உன் நீதிக்கு ஏற்ப என்னைத் திருத்தியருளும். இல்லையெனில், நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.

உம்மை அறியாத வேற்றினத்தார் மேலும், உம் பெயரைச் சொல்லி மன்றாடாத குடும்பத்தார் மேலும் உன் சீற்றத்தைக் காட்டியருளும். ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்: விழுங்கி முற்றிலும் அழித்து விட்டார்கள்: அவர் குடியிருப்பையும் பாழாக்கிவிட்டார்கள்.

அதிகாரம் 11.

ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு:

"இவ்வுடன்படிக்கையின் விதிமுறைகளைக் கேட்டு யூதாவின் மக்களுக்கும் எருசலேமில் குடியிருப்போருக்கும் அறிவிப்பாய்.

நீ அவர்களுக்குச் சொல்லவேண்டியது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வுடன்படிக்கையின் விதிமுறைகளுக்குச் செவி கொடுக்காதவன் சபிக்கப்படுக!

இரும்புச் சூளையாகிய எகிப்து நாட்டிலிருந்து நான் உங்கள் மூதாதையரைக் கூட்டிக்கொண்டு வந்த நாளில், அவர்களுக்குக் கட்டளையிட்டது இதுவே: என் குரலுக்குச் செவிசொடுத்து, நான் கட்டளையிடுவது அனைத்தையும் செய்யுங்கள். அப்போது நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்: நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

இன்று இருப்பதுபோல, அப்பொழுது, பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக உங்கள் மூதாதையருக்கு நான் ஆணையிட்டுக் கூறியதை உறுதிப்படுத்துவேன்." அதற்கு நான், 'ஆண்டவரே! அப்படியே ஆகுக!' என்று மறுமொழி கூறினேன்.

ஆண்டவர் என்னிடம் கூறினார்: யூதா நகர்களிலும் எருசலேம் தெருக்களிலும் இந்த விதிமுறைகளை அறிவிப்பாய். 'உடன்படிக்கையின் விதிமுறைகளைக் கேட்டு அவற்றின்படி ஒழுகுங்கள்' என்று கூறுவாய்.

உங்கள் மூதாதையரை எகிப்து நாட்஥஥டிலிருந்து கூட்டிக்கொண்டுவந்த நாளிலிருந்து இன்றுவரை அவர்களைத் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளேன். என் குரலுக்குச் செவிகொடுங்கள் என்று வற்புறுத்திக் கூறியுள்ளேன்.

அவர்களோ கீழ்ப்படியவும் இல்லை: செவிசாய்க்கவும் இல்லை. மாறாக, ஒவ்வொருவரும் தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி நடந்தனர். ஆகவே நான் கட்டளையிட்டும் அவர்கள் கடைப்பிடிக்காத இந்த உடன்படிக்கையின் விதிமுறை அனைத்தின்படி அவர்களுக்கு எதிராகச் செயல்படுவேன்.

ஆண்டவர் என்னிடம் கூறியது: யூதா மக்களிடமும் எருசலேம் வாழ் மக்களிடமும் சதித்திட்டம் ஒன்று தோன்றியுள்ளது.

என் சொற்களுக்குச் செவிசாய்க்க மறுத்து, முன்பு தம் மூதாதையர் செய்த குற்றங்களை இவர்களும் செய்தார்கள். வேற்றுத் தெய்வங்களுக்குப்பின் திரிந்து, அவற்றுக்கு ஊழியம் செய்து, நான் அவர்கள் மூதாதையரோடு செய்த உடன்படிக்கையை இஸ்ரயேல் வீட்டாரும் யூதாவின் வீட்டாரும் முறித்துவிட்டனர்.

ஆகவே ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நான் அவர்கள் மீது தீமை வருவிக்கப்போகிறேன். அதிலிருந்து அவர்கள் தப்பமுடியாது. அவர்கள் என்னை நோக்கி அழுகுரல் எழுப்பினாலும் நான் அவர்களுக்குச் செவிசாய்க்கமாட்டேன்.

அப்போது யூதா நகர்களில் குடியிருப்போரும் எருசலேம் வாழ் மக்களும் தாங்கள் பபம் காட்டி வணங்கும் தெய்வங்களிடம் ஓடிச்சென்று அழுகுரல் எழுப்புவார்கள். ஆனால் அவர்களுக்குத் தீமை நேர்ந்த காலத்தில் அவற்றால் அவர்களை விடுவிக்கவே முடியாது.

யூதாவே, உன் நகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உனக்குத் தெய்வங்கள் உள்ளன. எருசலேமிலுள்ள தெருக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, வெட்கக் கேட்டிற்கு - பாகாலுக்கு - பபம் காட்டப் பீடங்கள் அமைத்தீர்கள்.

எனவே இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம். இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ வேண்டுதல் செய்யவோ வேண்டாம். ஏனெனில் அவர்களுக்குத் தீமை நேரிடும்பொழுது அவர்கள் என்னை வருந்தி அழைத்தாலும் நான் செவிசாய்க்கமாட்டேன்.

என் இல்லத்தில் இருக்க என் அன்புக்குரியவளுக்கு என்ன உரிமை? அவள்தான் தன் எண்ணற்ற இழிசெயல்களைச் செய்துவருகிறாளே! உனக்கு வரவிருக்கும் தீமையைப் பலி இறைச்சி உன்னிடமிருந்து அகற்றிவிடுமா? அப்படியிருக்க ஏன் அக்களிக்கிறாய்? 16.. "பசுமையான, அழகிய, பார்வைக்கினிய பழங்களைக் கொண்ட ஒலிவ மரம்" என்பது ஆண்டவர் உனக்கு இட்ட பெயர். இப்போதோ கொடும் புயற்காற்றின் இரைச்சலுடன் அது தீப்பற்றி எரியச் செய்கிறார். அதன் கிளைகள் தீய்ந்து போயின.

உன்னை நட்டுவளர்த்த படைகளின் ஆண்டவரே உனக்குத் தீமை வரும் என்று சொல்லிவிட்டார். ஏனெனில் இஸ்ரயேல் வீட்டாரும் யூதா வீட்டாரும் தீச்செயல் செய்தார்கள். எனக்குச் சினமூட்டும்படி பாகாலுக்குத் பபம் காட்டினார்கள்.

. "ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்: நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர்.

வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்: அவர்கள் எனக்கு எதிராய், "மரத்தைப் பழத்தோடு அழிப்போம்: வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்: அவன் பெயர் மறக்கப்படட்டும்" என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.

படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்: உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்: நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன். 21.. "ஆண்டவரின் பெயரால் இறைவாக்கு உரைக்காதே: உரைத்தால் எங்கள் கைகளாலே சாவாய்" என்று கூறி உன் உயிரைப் பறிக்கத் தேடும் அனத்தோத்தைச் சார்ந்த ஆள்களைப்பற்றி,

படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன். இளைஞர்கள் வாளால் மடிவர்: புதல்வர், புதல்வியர் பஞ்சத்தால் அழிவர்.

அவர்களுள் யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள். அனத்தோத்தைச் சார்ந்த ஆள்கள் மேல், அவர்களைத் தண்டிக்கும் ஆண்டில், தீமை வரச்செய்வேன்.

அதிகாரம் 12.

ஆண்டவரே! நீர் நீதியுள்ளவர்: ஆயினும் உம்மோடு நான் வழக்காடுவேன்: ஆம்: உம் தீர்ப்புக்கள் பற்றி உம்மிடம் முறையிட விரும்புகிறேன்: தீயோரின் வாழ்வு வளம் பெறக் காரணம் என்ன? நம்பிக்கைத் துரோகம் செய்வோர் அமைதியுடன் வாழ்வது ஏன்?

அவர்களை நீர் நட்டுவைத்தீர்: அவர்களும் வேரூன்றி வளர்ந்தார்கள்: கனியும் ஈந்தார்கள்: அவர்களின் உதடுகளில் நீர் எப்போதும் இருக்கின்றீர்: அவர்கள் உள்ளத்திலிருந்தோ வெகு தொலையில் உள்ளீர்.

ஆனால் ஆண்டவரே! நீர் என்னை அறிவீர்: என்னைப் பார்க்கின்றீர்: என் இதயம் உம்மோடு உள்ளது என்பதைச் சோதித்து அறிகின்றீர்: அவர்களையோ வெட்டப்படுவதற்கான ஆடுகளைப் போலக் கொலையின் நாளுக்கெனப் பிரித்து வைத்தருளும்.

எவ்வளவு காலம் மண்ணுலகம் புலம்பிக் கொண்டிருக்கும்? வயல்வெளி புற்பூண்டுகள் எல்லாம் வாடிக் கிடக்கும்? மண்ணுலகில் குடியிருப்போர் செய்த தீமைகளின் காரணமாக, விலங்குகளும் பறவைகளும் அழிந்து போயின: "நம் செயல்களைக் கடவுள் காண்பதில்லை" என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.

காலாள்களோடு ஓடியே நீ களைத்துப்போனாய்: குதிரைகளோடு நீ எவ்வாறு போட்டியிட முடியும்? அமைதியான நாட்டிலேயே நீ அஞ்சுகிறாய் என்றால், யோர்தானின் காடுகளில் நீ என்ன செய்வாய்?

உன் சகோதரரும் உன் தந்தை வீட்டாரும்கூட உனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்: அவர்களும் உனக்கு எதிராக உரக்கக் கத்தினார்கள்: அவர்கள் உன்னிடம் இனிமையாகப் பேசினாலும் நீ அவர்களை நம்பாதே.

நான் என் வீட்டைப் புறக்கணித்தேன்: என் உரிமைச் சொத்தைத் தள்ளிவிட்டேன்: என் உள்ளத்துக்கு இனியவளை அவளின் எதிரிகளிடம் ஒப்புவித்துவிட்டேன்.

என் உரிமைச்சொத்து எனக்கு ஒரு காட்டுச் சிங்கம்போல் ஆயிற்று: அது எனக்கு எதிராய்க் கர்ச்சிக்கின்றது: எனவே நான் அதனை வெறுக்கின்றேன்.

என் உரிமைச்சொத்து எனக்குப் பல வண்ணப் பறவைபோல் ஆயிற்று: சுற்றிலுமுள்ள பறவைகள் எல்லாம் அதற்கு எதிராய் எழுந்துள்ளன: வயல்வெளி விலங்குகளே, வாருங்கள்: வந்து கூடுங்கள்: அதனை விழுங்குங்கள்.

மேய்ப்பர்கள் பலர் என் திராட்சைத் தோட்டத்தை அழித்தார்கள்: எனது பங்கை மிதித்துப் போட்டார்கள்: எனது இனிய பங்கைப் பாழடைந்த பாலைநிலம் ஆக்கினார்கள்.

அவர்கள் அதைப் பாழாக்கினார்கள்: அது என்னை நோக்கிப் புலம்புகிறது: நாடு முழுவதும் பாழாகிவிட்டது: ஆனால் யாரும் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை.

பாழாக்குவோர் பாலைநிலத்தின் மொட்டை மேடுகள் அனைத்தின் மேலும் வந்துசேர்ந்துள்ளனர்: ஏனெனில் ஆண்டவரின் வாள், நாட்டை ஒரு முனை முதல் மறு முனைவரை அழித்துவிடும்: அமைதி என்பது யாருக்குமே இல்லை.

கோதுமையை விதைத்தார்கள்: ஆனால் முட்களையே அறுத்தார்கள். உழைத்துக் களைத்தார்கள்: ஆயினும் பயனே இல்லை. தங்கள் அறுவடையைக் கண்டு வெட்கம் அடைந்தார்கள். இதற்கு ஆண்டவரின் கோபக்கனலே காரணம்.

ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களாகிய இஸ்ரயேல் என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட உரிமைச் சொத்தின்மேல் வைவைக்கும் சுற்றியுள்ள தீயோர் அனைவரையும் அவர்கள் நாட்டிலிருந்து நான் பிடுங்கிவிடுவேன். அவர்கள் நடுவிலிருந்து யூதா வீட்டாரையும் பிடுங்கிவிடுவேன்.

அவர்களைப் பிடுங்கிவிட்டபின், நான் மீண்டும் அவர்கள்மேல் இரக்கம் காட்டுவேன். அவர்கள் ஒவ்வொருவரையும் தம் உரிமைச் சொத்துக்கும் சொந்த நாட்டுக்கும் திரும்பக் கூட்டிவருவேன்.

அவர்கள் முன்பு காகாலின் பெயரால் ஆணையிடும்படி என் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தது போல், இப்போது என் மக்களின் வழிமுறைகளைக் கவனமாய்க் கற்றுக்கொண்டு, "வாழும் ஆண்டவர் மேல் ஆணை" என்று என் பெயரால் ஆணையிடுவார்களாகில், அவர்கள் என் மக்கள் நடுவில் வாழ்ந்து வளம்பெறுவர்.

ஆனால், எந்த மக்களினமாவது கீழ்ப்படியாவிடின், அந்த மக்களினத்தை வேரோடு பிடுங்கி அழித்துவிடுவேன், என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 13.

ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: "நீ உனக்காக நார்ப்பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக் கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே."

ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன்.

எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது:

"நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக் கொள்: எழுந்து பேராத்து ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்துவை."

ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்துவைத்தேன்.

பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: "எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா."

அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்துவைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.

அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

"ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன்.

என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப்பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.

கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல, இஸ்ரயேல், யூதா வீட்டால் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை," என்கிறார் ஆண்டவர்.

நீ அவர்களுக்கு இந்த வாக்கைச் சொல்: "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும்," அவர்களோ "சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாதா?" என்று உன்னிடம் கூறுவார்கள்.

அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது: "ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர், குருக்கள், இறைவாக்கினர், எருசலேம் வாழ் மக்கள் ஆகிய இந்நாட்டுக் குடிமக்கள் யாவரையும் போதையில் ஆழ்த்துவேன்.

அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதச் செய்வேன். தந்தையரும் புதல்வரும் தங்களுக்குள் மோதிக்கொள்வர். அவர்களின் அழிவை முன்னிட்டு நான் அவர்களுக்கு இரக்கம் காட்டவோ அவர்களைக் காப்பாற்றவோ அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டேன், என்கிறார் ஆண்டவர்.

செவிகொடுத்துக் கேளுங்கள்! செருக்குறாதீர்கள்: ஏனெனில், ஆண்டவர் பேசிவிட்டார்.

உங்கள் கடவுளாகிய ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இருள்படரச் செய்யுமுன்பும், உங்கள் பாதங்கள் இருளடைந்த மலைகளில் இடறுமுன்பும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள். நீங்கள் ஒளியை எதிர்பார்த்து நிற்கும் போதே இருளின் நிழல்கள் சூழச்செய்வார்: இருண்ட மேகங்கள் எழச்செய்வார்.

ஆனால் நீங்கள் இதற்குச் செவி கொடுக்காவிட்டால், உங்கள் செருக்கை முன்னிட்டு என் உள்ளம் மறைவில் அழும்: அழுகை மிகுதியால் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும்: எனெனில், ஆண்டவரின் மந்தை கைப்பற்றப்பட்டுள்ளது.

அரசனுக்கும் அரசனின் அன்னைக்கும் சொல்லுங்கள்: கீழே அமருங்கள். ஏனெனில் உங்கள் மேன்மையின் மணிமுடி உங்கள் தலைகளிலிருந்து வீழ்ந்துவிட்டது.

நெகேபைச் சார்ந்த நகர்கள் எல்லாம் அடைபட்டுவிட்டன: அவற்றைத் திறப்பார் யாருமில்லை: யூதா முழுவதும் நாடுகடத்தப்பட்டுள்ளது. அது முற்றிலுமாய் நாடு கடத்தப்பட்டுள்ளது.

உன் கண்களை உயர்த்தி வடக்கிலிருந்து வருபவர்களைப் பார்: உனக்குத் தரப்பட்ட மந்தை-உன் பெருமைக்குரிய மந்தை-எங்கே?

உன் நண்பர்களாக நீ வளர்த்து விட்டவர்களே உன் தலைவர்களாக ஏற்படுத்தப்படும்போது நீ என்ன சொல்வாய்? பேறுகாலப் பெண்ணின் வேதனை உன்னைப் பற்றிக் கொள்ளாமல் போகுமா?

இவையெல்லாம் எனக்கு ஏன் நிகழ வேண்டும் என நீ உன் உள்ளத்தில் சிந்திக்கலாம்: உன் குற்றம் பெரிது! அதனால்தான் உன் ஆடை அகற்றப்பட்டுள்ளது! உன் கால்கள் புண்படுத்தப்பட்டன.

எத்தியோப்பியர் தம் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியுமா? சிறுத்தைகள் தம் புள்ளிகளை அகற்றிக்கொள்ள முடியுமா? அப்படி முடியுமானால், தீமையே செய்து பழகிவிட்ட நீங்களும் நன்மை செய்ய முடியும்.

பாலைநிலக் காற்றில் பறந்து போகும் பதர்போல் நான் உங்களைச் சிதறடிப்பேன்.

இதுவே உன் கதி! நான் அளந்து கொடுக்கும் உன் பங்கு! ஏனெனில், நீ என்னை மறந்து பொய்யை நம்பினாய், என்கிறார் ஆண்டவர்.

உன் ஆடைகளை உன் முகத்துக்கு மேல் பக்கிக் கழற்றிவிடுவேன்: உன் அவமானம் காணப்படும்.

உன் அருவருக்கத்தக்க செயல்களாகிய விபசாரங்களையும் காமக் கனைப்புகளையும் பரந்த வெளியில் குன்றுகளின்மேல் நீ செய்த கீழ்த்தரமான வேசித்தனத்தையும் நான் கண்டேன்: ஜயகோ! எருசலேமே! நீ பய்மை பெறுவது எநநநாளோ?

அதிகாரம் 14.

வறட்சி பற்றி எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:

யூதா துயருற்றுள்ளது: அதன் வாயில்கள் சோர்வுற்றுள்ளன: அதன் மக்கள் தரையில் விழுந்து புலம்புகின்றார்கள்: எருசலேமின் அழுகைக் குரல் எழும்பியுள்ளது.

உயர்குடி மக்கள் தம் ஊழியரைத் தண்ணீர் எடுக்க அனுப்புகின்றார்கள்: அவர்கள் நீர்த்தேக்கங்களுக்குச் செல்கின்றார்கள்: அங்குத் தண்ணீர் இல்லை: அவர்கள் வெறுங்குடங்களோடு திரும்பி வருகின்றார்கள்: வெட்கி நாணித் தங்கள் தலைகளை மூடிக்கொள்கின்றார்கள்.

நாட்டில் மழை இல்லாததால் தரை வெடிப்புற்றுள்ளது. உழவர்கள் வெட்கித் தங்கள் தலைகளை மூடிக் கொள்கின்றார்கள்:

கன்று ஈன்ற வயல்வெளிப் பெண்மான் புல் இல்லாமையால் தன் கன்றை விட்டுவிட்டு ஓடிப்போகும்.

காட்டுக் கழுதைகள் மொட்டை மேடுகள்மேல் நிற்கின்றன: காற்று இல்லாமையால், குள்ள நரிகளைப் போல் மூச்சுத் திணறுகின்றன: பசுமையே காணாததால் அவற்றின் பார்வை மங்கிப் போயிற்று,

ஆண்டவரே! நாங்கள் பலமுறை உம்மை விட்டகன்றோம். உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் குற்றங்களே எங்களுக்கு எதிராயச் சான்றுபகர்கின்றன. எனினும், உமது பெயருக்கேற்பச் செயலாற்றும்.

இஸ்ரயேலின் நம்பிக்கையே! துன்ப வேளையில் அதனை மீட்பவரே! நாட்டில் நீர் ஏன் அன்னியரைப் போல் இருக்கவேண்டும்? இரவு மட்டும் தங்க வரும் வழிப்போக்கரைப்போல் நீர் ஏன் இருக்க வேண்டும்?

நீர் ஏன் திநக்பபுற்ற மனிதர்போல் தோன்ற வேண்டும்? ஏன் காக்கும் திறனற்ற வீரர் போல் காணப்படவேண்டும்? ஆயினும், ஆண்டவரே! நீர் எங்கள் நடுவில் உள்ளீர்: உமது பெயராலேயே நாங்கள் அழைக்கப்படுகிறோம்: எங்களைக் கைவிட்டு விடாதேயும்.

இம்மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: அவர்கள் அலைந்து திரிய விரும்பினர்: தங்கள் கால்களை அவர்கள் கட்டுப்படுத்தவில்லை: எனவே, ஆண்டவர் அவர்களை ஏற்கவில்லை: இப்போது அவர்களின் தீமையை நினைவில் கொண்டு, அவர்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார்.

ஆண்டவர் எனக்குக் கூறியது: இந்த மக்களின் நலனுக்காக நீ என்னிடம் மன்றாட வேண்டாம்.

அவர்கள் நோன்பு இருப்பினும் நான் அவர்களின் குரலைக் கேட்கமாட்டேன். அவர்கள் எரிபலிகளையும் தானியப் படையல்களையும் அளிப்பினும் அவற்றை நான் ஏற்கமாட்டேன். மாறாக, வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் அவர்களை ஒழித்து விடுவேன்.

"'எம் தலைவராகிய ஆண்டவரே! 'நீங்கள் வாளைச் சந்திக்க மாட்டீர்கள். உங்களிடையே பஞ்சம் வராது. மாறாக, இந்த இடத்தில் நிலையான அமைதியை உங்களுக்குத் தருவேன்' என இறைவாக்கினர் அவர்களுக்குக் கூறுகின்றனரே!" என்றேன் நான்.

ஆண்டவர் என்னிடம் கூறியது: "என் பெயரால் இறைவாக்கினர் பொய்யை உரைக்கின்றார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை: அவர்களுக்குக் கட்டளையிடவில்லை: அவர்களோடு பேசவுமில்லை." அவர்கள் உங்களுக்கு இறைவாக்காக உரைப்பவை: பொய்யான காட்சிகள், பயனற்ற குறிகூறல், வஞ்சக எண்ணங்கள், சொந்தக் கற்பனைகள்.

ஆகவே தம் பெயரால் இறைவாக்கு உரைப்போரைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: நான் அவர்களை அனுப்பவில்லை: எனினும், அவர்கள் "இந்த நாட்டின்மேல் வாளும் பஞ்சமும் வாரா" என்று கூறுகிறார்கள். வாளாலும் பஞ்சத்தாலும் அந்த இறைவாக்கினரே அழிவுறுவர்.

அவர்களின் இறைவாக்கைக் கேட்கும் மக்களும் வாள், பஞ்சம் ஆகியவற்றின் காரணமாக எருசலேமின் தெருக்களில் பக்கி வீசப்படுவார்கள். அவர்களையும் அவர்கள் மனைவியர், புதல்வர், புதவியரையும் புதைக்க யாரும் இரார். அவர்களது தீமையை அவர்கள் மீதே கொட்டுவேன்.

நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: "என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்: இடைவிடாது சொரியட்டும்: ஏனெனில் என் மக்களாம் கன்னமகள் நொறுங்குண்டாள்: அவளது காயம் மிகப் பெரிது.

வயல்வெளிகளுக்குச் சென்றால், இதோ! வாளால் மடிந்தவர்கள்! நகரில் நுழைந்தால், இதோ! பசியால் நலிந்தவர்கள்! இறைவாக்கினரும் குருக்களும் தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர்.

நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா? சீயோனை உம் உள்ளம் வெறுத்து விட்டதா? நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களை நொறுக்கினீர்? நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்: பயனேதும் இல்லை! நலம்பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்: பேரச்சமே மிஞ்சியது!

ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும் எங்கள் மூதாதையரின் தீமையையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்: நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம்.

உம் பெயரை முன்னிட்டு எங்களை உதறித் தள்ளாதீர்: உம் மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்: நீ எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்: அதனை முறித்து விடாதீர்.

வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டா? வானங்கள் தாமாக மழை பொழிய முடியுமா? எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, நீர் அல்லவா அதைச் செய்யக் கூடியவர்: நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம்: எனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே.

அதிகாரம் 15.

ஆண்டவர் என்னிடம் கூறியது: மோசேயும் சாமுவேலும் என்முன் வந்து நின்றாலும் என் உள்ளம் இந்த மக்கள்பால் திரும்பாது. என் முன்னிலையிலிருந்து அவர்களை விரட்டிவிடு. அவர்கள் அகன்று போகட்டும்.

'நாங்கள் எங்கே போவோம்?' என்று அவர்கள் கேட்கக்கூடும். அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது: "ஆண்டவர் கூறுவது இதுவே: சாவுக்குரியோர் வாளால் மாள்வர்: பஞ்சத்துக்குரியோர் பஞ்சத்தால் மடிவர்: நாடு கடத்தலுக்குரியோர் நாடு கடத்தப்படுவர்."

ஆண்டவர் கூறுவது: நான்கு வகையான அழிவின் சக்திகளை அவர்களுக்கு எதிராக அனுப்பப் போகிறேன்: கொல்வதற்கு வாளையும் இழுத்துச் செல்வதற்கு நாய்களையும் விழுங்கி அழிப்பதற்கு வானத்துப் பறவைகளையும் நிலத்து விலங்குகளையும் அனுப்பப் போகிறேன்.

அவர்களைக் கண்டு உலகின் அரசுகள் யாவும் திகில் அடையும். எசேக்கியா மகனும் யூதா அரசனுமான மனாசே எருசலேமில் செய்தவையே அதற்குக் காரணம்.

எருசலேமே! யாராவது உனக்கு இரக்கம் காட்டுவார்களா? திரும்பிப் பார்த்து நலம் விசாரிப்பார்களா?

ஆண்டவர் கூறுவது: "நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்: என்னைக் கைவிட்டு 'டிவிட்டாய்: எனவே, உன்னை அழிப்பதற்கு என் கையை உனக்கு எதிராய் நீட்டினேன்: இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன்.

நாட்டின் வாயில்களில் நான் அவர்களை முறத்தால் பற்றிச் சிதறடித்தேன்: அவர்களைத் தனியாகத் தவிர்க்க விட்டேன்: என் மக்களை அழித்துவிட்டேன்: ஏனெனில் அவர்கள் தங்கள் தீயவழியிலிருந்து திரும்பவில்லை.

கடற்஥கரை மணலைவிட அவர்களின் கைம்பெண்களின் எண்ணிக்கையை மிகுதியாக்கினேன்: இளைஞர்களின் அன்னையருக்கு எதிராகக் கொலைஞனைப் பட்டப்பகலில் கூட்டி வந்தேன்: திடீரென அவள் துயரும் திகிலும் அடையச் செய்தேன்:

எழுவரைப் பெற்றவள் சோர்வுற்றாள்: மூச்சுத் திணறினாள்: அவள் வாழ்வில் கதிரவன் மறைந்து விட்டான்: அவள் வெட்கி நாணமுற்றாள்: எஞ்சியிருப்போரை அவர்களுடைய எதிரிகளின்முன் வாளுக்கு இரையாக்குவேன்," என்கிறார் ஆண்டவர்.

நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஜயோ கேடு! நான் கடன் கொடுக்கவும் இல்லை: கடன் வாங்கியதுமில்லை. எனினும் எல்லாரும் உன்னைச் சபிக்கிறார்கள்.

ஆண்டவரே, நான் உமக்கு நன்கு பணி செய்யாதிருந்தால், எதிரிகள் இடையூறும் துன்பமும் அடைந்த நேரத்தில் நான் அவர்களுக்காக உம்மிடம் மன்றாடாதிருந்தால், அவர்களின் சாபத்திற்கு நான் ஆளாகட்டும்.

வடக்கிலிருந்து வந்த இரும்பையும் வெண்கலத்தையும் யாரால் உடைக்க முடியும்?

"நாடெங்கும் செய்யப்படும் அனைத்துப் பாவங்களுக்கும் ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் இலவசக் கொள்ளைப் பொருள் ஆக்குவேன்.

முன்பின் தெரியாத ஒரு நாட்டில் எதிரிகளுக்கு உங்களை அடிபணியச் செய்வேன்: ஏனெனில் என்னில் கோபக் கனல் மூண்டுள்ளது. அது உங்களுக்கு எதிராகக் கொழுந்து விட்டு எரியும்."

ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும்: நீர் என்னை அறிவீர்: என்னை நினைவுகூரும்: எனக்கு உதவியருளும்: என்னைத் துன்புறுத்துவோரை என் பொருட்டுப் பழிவாங்கும்: நீர் பொறுமையுள்ளவர்: என்னைத் தள்ளிவிடாதேயும்: உம்பொருட்டு நான் வசைமொழிகளுக்கு ஆளாகிறேன் என்பதை நினைவில் கொள்ளும்.

நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்: அவற்றை உட்கொண்டேன்: உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன: என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. ஏனெனில் படைகளின் ஆண்டவரே, உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.

களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை. உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன். சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர்.

எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் 'டையென ஆகிவிட்டீரோ!

எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே: "நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். என்முன் வந்து நிற்஥஥பாய்: பயனில் நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய். அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்: நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.

நான் உன்னை அவர்கள்முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன்: அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்: ஆனால், உன்மேல் வெற்றி கொள்ள மாட்டார்கள்: ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன்: முரடரின் பிடியினின்று உன்னை மீட்பேன்."

அதிகாரம் 16.

ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு.

"நீதி திருமணம் செய்யாதே: இந்த இடத்தில் உனக்குப் புதல்வரோ புதல்வியரோ இருக்கவேண்டாம்.

இந்த இடத்தில் பிறந்துள்ள புதல்வர், புதல்வியரைப் பற்றியும் அவர்களைப் பெற்றெடுத்த தாய், தந்தையரைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே:

அவர்கள் கொடும் நோய்களால் மடிவார்கள். அவர்களுக்காக யாரும் அழமாட்டார்கள்: அவர்களை அடக்கம் செய்யவும் மாட்டார்கள். அவர்கள் சாணம்போல் தரையில் கிடப்பார்கள். வாளாலும் பஞ்சத்தாலும் அழிந்து போவார்கள். அவர்களின் பிணங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் இரையாகும்.

ஆண்டவர் கூறுவது இதுவே: "நீ இழவு வீட்டுக்குப் போக வேண்டாம்: அவர்களுக்காக அழுவதற்கோ துக்கம் கொண்டாடுவதற்கோ நீ செல்ல வேண்டாம்: ஏனெனில் நான் என் அமைதியையும் பேரன்பையும் இரக்கத்தையும் இந்த மக்களிடமிருந்து எடுத்துவிட்டேன்.

இந்நாட்டிலுள்ள பெரியோரும் சிறியோரும் இறந்து போவர். அவர்களை யாரும் அடக்கம் செய்யமாட்டார்கள்: அவர்களுக்காக அழவும் மாட்டார்கள். அவர்களை முன்னிட்டு யாரும் தங்களைக் காயப்படுத்திக்கொள்ளவோ மொட்டையடித்துக் கொள்ளவோ மாட்டார்கள்.

இறந்தோரை எண்ணித் துக்கம் கொண்டாடுகிறவனுக்கு ஆறுதல் அளிக்க, அப்பம் தருவார் யாருமிரார். தாய் அல்லது தந்தைக்காகத் துக்கம் கொண்டாடுகிறவனுக்கு ஆறுதலின் கிண்ணத்தில் பருகக் கொடுக்கவும் யாருமிரார்.

விருந்து நடக்கும் வீடுகளுக்குச் செல்லாதே: உண்டு குடிப்பதற்காக அங்கு அமராதே,"

ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இடத்தில் மகிழ்ச்சி ஒலியும், உவகைக் குரலும், திருமண ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். இவை உங்கள் வாழ்நாளில் உங்கள் கண்முன்னே நிகழும்.

நீ இம்மக்களுக்கு இச்சொற்களை எல்லாம் அறிவிக்கும்போது அவர்கள் உன்னை நோக்கி,"எங்களுக்கு எதிராக இப்பெருந்தீங்கு அனைத்தையும் ஆண்டவர் அறிவிக்கக் காரணம் என்ன? எங்கள் குற்றம் என்ன? எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நாங்கள் செய்த பாவம் என்ன?" என்று கேட்பார்கள்.

நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது: ஆண்டவர் கூறுவது: உங்கள் மூதாதையர் என்னைப் புறக்கணித்தனர். வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினர். அவற்றுக்கு ஊழியம் செய்து அவற்றையே வழிபட்டனர். என்னையோ புறக்கணித்தனர். என் சட்டத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.

நீங்களோ உங்கள் மூதாதையரைவிடப் பெருந்தீமைகள் செய்தீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தம் தீய இதயத்தின் பிடிவாதத்தின்படி நடக்கின்றீர்கள்: என் சொல்லுக்கோ செவிகொடுப்பதில்லை.

ஆகையால் இந்த நாட்டிலிருந்து, உங்களுக்கோ உங்கள் மூதாதையருக்கோ முன்பின் தெரியாத ஒரு நாட்டுக்கு, உங்களைத் பக்கி எறிவேன். அங்கு நீங்கள் அல்லும் பகலும் வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்வீர்கள்: அங்கு என் ஆதரவு உங்களுக்கு இராது.

ஆதலால் ஆண்டவர் கூறுவது: இதோ, நாள்கள் வருகின்றன. அப்போது "எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வாழும் ஆண்டவர் மேல் ஆணை" என்று யாரும் சொல்லமாட்டார்கள்.

மாறாக, "வடக்கு நாட்டிலிருந்தும், அவர்கள் விரட்டப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை" என்று கூறுவா஡கள். ஏனெனில் நான் அவர்களின் மூதாதையருக்குக் கொடுத்திருந்த நாட்டிற்கே அவர்களை மீண்டும் அழைத்து வருவேன்.

ஆண்டவர் கூறுவது: இதோ, மீனவர் பலரை அனுப்புகிறேன். அவர்கள் அவர்களைப் பிடிப்பர். அதன்பின் வேடர் பலரையும் அனுப்புவேன். அவர்கள் அனைத்து மலைகளிலும் குன்றுகளிலும் பாறையிடுக்குகளிலும் உள்ளோரை வேட்டையாடுவர்.

அவர்கள் வழிகளெல்லாம் என் கண்முன்னே உள்ளன. அவை எனக்கு மறைவாய் இருப்பதில்லை. அவர்களின் குற்றங்கள் என் பார்வைக்குத் தப்புவதில்லை.

முதற்கண், அவர்களின் குற்றத்திற்காகவும், பாவத்திற்காகவும் அவர்களுக்கு இரட்டிப்பான தண்டனை கொடுப்பேன். ஏனெனில், பிணம் ஒத்த சிலைகளால் அவர்கள் என் நாட்டைத் தீட்டுப்படுத்தினார்கள்: அருவருப்பானவற்றால் என் உரிமைச் சொத்தை நிரப்பினார்கள்.

ஆண்டவரே! என் வலிமையே! என் அரணே! துன்பக் காலத்தில் என் புகலிடமே! உலகின் எல்லைகளிலிருந்து வேற்றினத்தார் உம்மிடம் வந்து, "எங்கள் மூதாதையர் பொய்ம்மையை மரபுரிமையாகப் பெற்றனர்: எதற்கும் பயனற்ற சிலைகளையே பெற்றனர்.

மனிதர் தமக்குத் தாமே தெங்வங்களைச் செய்ய முடியுமா? அவை தெய்வங்கள் அல்லவே!" என்று கூறுவார்கள்.

"எனவே இதோ அவர்கள் அறியும்படி செய்வேன்: என் ஆற்றலையும் என் வலிமையையும் அறியும்படி செய்வேன். என் பெயர் ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்."

அதிகாரம் 17.

யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியாலும் வைர நுனியாலும் எழுதப்பட்டுள்ளது. அது அவர்கள் இதயப் பலகையிலும் பலிபீடக் கொம்புகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

தழைத்த மரங்களின் கீழும், உயர்ந்த குன்றுகளின் மேலும், திறந்த வெளி மலைகள் மீதும் உள்ள அவர்கள் பலிபீடங்களையும் அசேராக் கம்பங்களையும் அவர்களின் பிள்ளைகளே நினைவுகூருகின்றார்கள்.

ஆகவே, நாடெங்கும் செய்யப்படும் பாவங்களுக்கு ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் தொழுகைமேடுகளையும் கொள்ளைப்பொருள் ஆக்குவேன்.

நான் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ள நாட்டின்மேல் உனக்குள்ள பிடி தளரும். முன்பின் தெரியாத ஒரு நாட்டில், உன் எதிரிகளுக்கு நீ அடிபணியச் செய்வேன். ஏனெனில், நீ என்னில் மூட்டியுள்ள கோபக்கனல் என்றென்றும் கொழுந்துவிட்டு எரியும்.

ஆண்டவர் கூறுவது இதுவே: மனிதரில் நம்பிக்கை வைப்போரும் வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர்.

அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாவர். பருவ காலத்திலும் அவர்கள் பயனடையார்: பாலை நிலத்தின் வறண்ட பகுதிகளிலும் யாரும் வாழா உவர் நிலத்திலுமே அவர்கள் குடியிருப்பர்.

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்: ஆண்டவரே அவர்களது நம்பிக்கை.

அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்: அது நீரோடையை நோக்கி வேர் விடுகின்றது. வெப்பமிகு நேரத்தில் அதற்கு அச்சமில்லை: அதன் இலைகள் பசுமையாய் இருக்கும்: வறட்சிமிகு ஆண்டிலும் அதற்குக் கவலை இராது: அது எப்போதும் கனி கொடுக்கும்.

இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது: அதனை நலமாக்க முடியாது. அதனை யார்தான் புரிந்துகொள்வர்?

ஆண்டவராகிய நானே இதயச் சிந்தனைகளை ஆய்பவர்: உள்ளுணர்வுகளைச் சோதித்து அறிபவர். ஒவ்வொருவரின் வழிகளுக்கும் செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு நடத்துபவர்.

நேர்மையற்ற வழிகளில் செல்வம் சேர்ப்போர் தாம் இடாத முட்டைகளை அடைகாக்கும் கெளதாரி போன்றோர்: தம் வாழ்நாள்களின் நடுவிலேயே அவர்கள் அச்செல்வத்தை இழந்துவிடுவர்: இறுதியில் அவமதிப்புக்கு உள்ளாவர்.

"நம் திருத்பயகம் தொடக்கத்திலிருந்தே உயர்ந்த இடத்தில் அமைந்த, மாட்சிமிகு அரியணையாய் உள்ளது."

ஆண்டவரே! இஸ்ரயேலின் நம்பிக்கையே! உம்மைப் புறக்கணித்தோர் யாவரும் வெட்கமுறுவர்: உம்மைவிட்டு அகன்றோர் தரையில் எழுதப்பட்டோ ர் ஆவர்: ஏனெனில், அவர்கள் வாழ்வளிக்கும் நீரூற்றாகிய ஆண்டவரைப் புறக்கணித்தார்கள்.

ஆண்டவரே, என்னை நலமாக்கும்: நானும் நலமடைவேன். என்னை விடுவியும்: நானும் விடுதலை அடைவேன்: ஏனெனில் நீரே என் புகழ்ச்சிக்குரியவர்.

இதோ அவர்கள் என்னிடம் "ஆண்டவரின் வாக்கு எங்கே? அது நிறைவேறட்டுமே" என்கிறார்கள்.

அவர்கள்மேல் தீமையை அனுப்ப வேண்டும் என்று நான் உம்மை நெருக்கவில்லை: கொடுமையின் நாளை நான் விரும்பவில்லை: நான் கூறியவைதாம் உமக்குத் தெரியமே: அவை உம்முன்தாமே கூறப்பட்டன.

நீ எனக்குத் திகிலாய் இராதீர்: தீமையின் நாளில் நீரே என் புகலிடம்.

என்னைத் துன்புறுத்துவோர் வெட்கம் அடையட்டும்: நானோ வெட்கம் அடையாதிருப்பேனாக! அவர்கள் திகிலுறட்டும்: நானோ திகிலுறாதிருப்பேனாக. தீமையின் நாளை அவர்கள்மேல் வரச்செய்யும்: இரட்டிப்பான அழிவு அவர்கள்மேல் வரட்டும்: அவர்கள் அடியோடு ஒழியட்டும்.

ஆண்டவர் கூறியது இதுவே: நீ போய் யூதாவின் அரசர்களின் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் பயன்படும் பொதுமக்கள் வாயிலிலும் எருசலேமின் வாயில்கள் அனைத்திலும் நின்றுகொள்.

நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டியது: இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் அரசர்களே, யூதாவின் அனைத்து மக்களே, எருசலேமில் வாழ்வோரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் உயிரை முன்னிட்டு ஓய்வுநாளில் சுமை பக்க வேண்டாம்: அவற்றை எருசலேமின் வாயில்கள் வழியாகக் கொண்டு செல்லவும் வேண்டாம்.

ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்தும் சுமைகள் பக்கிச் செல்லவேண்டாம். அன்று எந்த வேலையும் செய்யவேண்டாம். உங்கள் மூதாதையருக்கு நான் கொடுத்த கட்டளைப்படி ஓய்வுநாளைத் பய்மையாகக் கடைப்பிடியுங்கள்.

அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை: நான் சொன்னதைக் கவனிக்கவில்லை: கேட்டுக் கற்றுக்கொள்ளாதபடி முரட்டுப் பிடிவாதம் செய்தனர்.

ஆண்டவர் கூறுவது: நீங்கள் எனக்குச் செவிகொடுத்து ஓய்வு நாளில் இந்நகரின் வாயில்கள் வழியாகச் சுமை பக்கிச் செல்லாது, வேலை எதுவும் செய்யாது, ஓய்வுநாளைத் பய்மையாகக் கடைப்பிடிபபீர்களாகில்,

தாவீதின் அரியணையில் அமரும் அரசர்களும் இளவரசர்களும் இந்நகரின் வாயில் வழியாகச் செல்வார்கள்: குதிரைகளிலும் தேர்களிலும் ஏறிச் செல்வார்கள். அவர்களோடு தலைவர்களும் யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் செல்வார்கள். இந்நகரில் என்றுமே மக்கள் குடியிருப்பார்கள்.

அப்போது யூதாவின் நகர்களிலிருந்தும் எருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்தும் பென்யமின் நாட்டிலிருந்தும் செபேலா சமவெளியிலிருந்தும் மலை நாட்டிலிருந்தும் நெகேபிலிருந்தும் வருபவர்கள் எரி பலிகளையும் மற்றப் பலிகளையும் உணவுப் படையலையும் பபத்தையும் நன்றிப் பலிகளையும் ஆண்டவர் இல்லத்துக்குக் கொண்டுவருவார்கள்.

ஆனால், நீங்கள் ஓய்வுநாளைத் பய்மையாகக் கடைப்பிடிக்கவேண்டும்: அன்று எருசலேமின் வாயில்கள் வழியாகச் சுமை பக்கிச் செல்லக் கூடாது: எனினும் என்னுடைய சொல்லுக்கு நீங்கள் செவி கொடுக்காமல் இருந்தால், நான் எருசலேமின் வாயில்களில் தீப்பற்றியெரியச் செய்வேன்: அது நகரின் அரண்மனைகளை அழித்துவிடும்: அத்தீயோ அணையாது.

அதிகாரம் 18.

எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:

"நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்."

எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல்வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாத போதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு:

"இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வதுபோல் நானும் உனக்குச் செய்யமுடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.

ஒரு நாட்டையோ அரசையோ பிடுங்கித் தகர்த்து அழிக்கப்போவதாக நான் எப்போதாவது கூறலாம்.

எனினும், குறிப்பிட்ட அந்த நாடு தன் தீய வழியிலிருந்து திரும்புமாயின், நான் அதற்கு வருவிக்கவிருந்த தீங்கை எண்ணி வருந்துவேன்.

அதுபோல ஒரு நாட்டையோ அரசையோ கட்டியெழுப்பவும் நட்டு வளர்க்கவும் போவதாக நான் எப்போதாவது கூறலாம்.

மாறாக, அது என் சொல்லுக்குச் செவிகொடுக்காமல், என் கண்முன் தீமை செய்தால், நான் அதற்குச் செய்யப்போதாகக் கூறியிருந்த நன்மையை எண்ணி வருந்துவேன்.

ஆகையால் இப்போது நீ யூதா நாட்டினரையும் எருசலேம் வாழ் மக்களையும் நோக்கிக் கூற வேண்டியது: "ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களுக்கு எதிராய் வரப்போகும் தீமைக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு எதிராய் ஒரு திட்டம் தீட்டுகிறேன்: ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீய வழியிலிருந்து திரும்புங்கள்: உங்கள் வழிகளையும் செயல்களையும் திருத்திக்கொள்ளுங்கள்."

அவர்களோ, "இதெல்லாம் சொல்லிப் பயனில்லை. எங்கள் திட்டப்படியே நாங்கள் நடப்போம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தீய இதயத்தின் பிடிவாதப்படியே செயல்படுவோம்" என்பார்கள்.

எனவே ஆண்டவர் கூறுவது இதுவே: "இதுபோன்ற செயலைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? என்று நாடுகளிடையே கேட்டுப்பார். கன்னி இஸ்ரயேல் பெரும் கோரச் செயல் ஒன்று செய்துள்ளாள்.

லெபனோன் மலையின் உறைபனி அதன் பாறை உச்சிகளிலிருந்து அகல்வதுண்டோ ? அதலிருந்து வழிந்தோடும் தண்ணீரால் நீரோடைகள் வற்றிப்போவதுண்டோ ?

என் மக்களோ என்னை மறந்து விட்டார்கள்: இல்லாத ஒன்றிற்குத் பபம் காட்டுகின்றார்கள்: தங்கள் வழிகளிலே தொன்மையான பாதைகளிலே தடுமாறுகின்றார்கள்: நெடுஞ்சாலையை விட்டுவிட்டு ஒதுக்கு வழிகளிலே நடக்கின்றார்கள்.

அவர்கள் நாடு கொடூரமாய்க் காட்சியளிக்கும்: காலமெல்லாம் ஏளனத்துக்கு உள்ளாகும்: அவ்வழியே செல்லும் ஒவ்வொருவனும் திகிலடைவான்: தலையை ஆட்டிக்கொண்டே செல்வான்.

கீழைக் காற்றைப்போல் அவர்கள் எதிரிகளுக்குமுன் அவர்களைச் சிதறடிப்பேன்: அவர்களின் துன்பக் காலத்தில் என் முகத்தையல்ல, முதுகையே அவர்களுக்குக் காண்பிப்பேன்."

அப்போது அவர்கள் "வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது. எனவே அவர்மீது குற்றம் சாட்டுவோம். அவர் சொல்வதைக் கேட்கவேண்டாம்" என்றனர்.

ஆண்டவரே, என்னைக் கவனியும்: என் எதிரிகள் சொல்வதைக் கேளும்.

நன்மைக்குக் கைம்மாறு தீமையா? என் உயிரைப் போக்கக் குழிபறித்திருக்கின்றார்கள்: அவர்கள்மேல் உமக்கிருந்த சினத்தைப் போக்குவதற்காக அவர்களைக் குறித்து நல்லதை எடுத்துச் சொல்வதற்கு நான் உம்முன் வந்து நின்றதை நினைவுகூரும்.

ஆகவே அவர்களுடைய பிள்ளைகள் பஞ்சத்தால் மடியட்டும்: அவர்கள் வாளுக்கு இரையாகட்டும்: அவர்தம் மனைவியர் விதவையராய்த் தனியராகட்டும்: கணவர்கள் கொல்லப்படட்டும்: இளைஞர்கள் போரில் வாளால் மடியட்டும்.

திடீரெனக் கொள்ளைக் கூட்டத்தினர் அவர்களிடையே வரட்டும். அவர்கள் வீடுகளிலிருந்து அழுகுரல் கேட்கட்டும்: ஏனெனில் அவர்கள் என்னைப் பிடிக்கக் குழி பறித்தார்கள்: என் கால்களுக்குக் கண்ணி வைத்தார்கள்.

ஆண்டவரே! என்னைக் கொல்வதற்காக அவர்கள் செய்த சதித் திட்டங்களை எல்லாம் நீர் அறிவீர்: அவர்கள் குற்றத்தை மன்னியாதேயும்: அவர்கள் பாவத்தை உம் முன்னிலையிலிருந்து அகற்றிவிடாதேயும்: அவர்கள் உம்முன் வீழ்ச்சியுறட்டும்: உம் சினத்தின் நாளில் அவர்களின் செயல்களுக்கு ஏற்றபடி அவர்களை நடத்தும்.

அதிகாரம் 19.

ஆண்டவர் கூறுவது இதுவே: "நீ சென்று குயவன் செய்த மண்கலயம் ஒன்றை வாங்கு. மக்களுள் மூப்பர் சிலரையும் குருக்களுள் முதியோர் சிலரையும் கூட்டிக் கொண்டு,

மண்கல உடைசல் வாயில் அருகிலுள்ள பென்இன்னோம் பள்ளத்தாக்கிற்குப் போ. அங்கு நான் உன்னிடம் சொல்லப்போகும் சொற்களை அறிவி.

நீ சொல்ல வேண்டியது: "யூதாவின் அரசர்களே, எருசலேம் வாழ் மக்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: கேட்போர் ஒவ்வொருவரின் காதுகள் நடு நடுங்கும் அளவுக்கு இந்த இடத்தின் மீது தீமை வரச் செய்வேன்.

அவர்கள் என்னைப் புறக்கணித்தனர்: இந்த இடத்தைத் தீட்டுப்படுத்தினர். தாங்களோ, தங்கள் மூதாதையரோ, யூதாவின் அரசர்களோ அறிந்திராத வேற்றுத் தெய்வங்களுக்குத் பபம் காட்டினர். மாசற்றோரின் இரத்தத்தால் இவ்விடத்தை நிரப்பினர்.

தங்கள் புதல்வர்களைத் தீயில் சுட்டெரித்துப் பாகாலுக்கு எரிபலி கொடுக்கும்படி, அந்தத் தெய்வத்திற்குத் தொழுகை மேடு எழுப்பினர். இதனை நான் கட்டளையிடவில்லை: இதுபற்றி நான் பேசவுமில்லை: இது என் எண்ணத்தில்கூட எழவில்லை.

ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாள்கள் வருகின்றன! அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது. மாறாகப் "படுகொலைப் பள்ளத்தாக்கு" என்று பெயர் பெறும்.

யூதா, எருசலேமின் திட்டங்களை நான் இவ்விடத்தில் முறியடிப்பேன். அவர்கள் பகைவர் முன்னிலையிலும் அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுவோர் முன்னிலையிலும் அவர்களை வாளால் வீழ்த்துவேன். அவர்களின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் உணவாகக் கொடுப்பேன்.

இந்நகர் கொடூரமாய்க் காட்சியளிக்கும். அது ஏளனத்துக்கு உள்ளாகும். அவ்வழியே செல்லும் ஒவ்வொருவனும் திகிலுறுவான்: அதன் காயங்களை எண்ணி ஏளனம் செய்வான்.

தங்கள் புதல்வர் புதல்வியரின் சதையை அவர்கள் உண்ணுமாறு செய்வேன். அவர்கள் பகைவர்களும் அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுவோரும் அவர்களை முற்றுகையிட்டு நெருக்கி வருத்தும்போது, அவர்கள் ஒருவர் ஒருவருடைய சதையை உண்பார்கள்.

அப்போது உன்னோடு வந்திருந்தவர்களின் முன்னிலையில் அந்த மண்கலயத்தை உடைத்துவிட்டு,

நீ அவர்களுக்குக் கூற வேண்டியது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: குயவனின் உடைக்கப்பட்ட மண் கலயத்தை மீண்டும் ஒட்டவைக்க முடியாது: அதுபோலவே நான் இந்த மக்களையும் இந்த நகரையும் தகர்த்தெறிவேன். இறந்தோரைப் புதைக்க வேறு இடம் இல்லாமையால் தோபேத்திலேயே புதைப்பர்.

ஆண்டவர் கூறுவது: எருசலேமுக்கும் அதில் குடியிருப்போருக்கும் எதிராக இவ்வாறு செய்வேன். அந்நகரைத் தோபேத்தாகவே மாற்றிவிடுவேன்.

எருசலேமின் வீடுகளும், யூதா அரசர்களின் மாளிகைகளும், எந்த வீட்டு மேல்தளங்களில் வானத்துப் படைகளுக்குத் பபம் காட்டினார்களோ, வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்கள் படைத்தார்களோ, அந்த வீடுகள் எல்லாம் தோபேத்தைப் போலத் தீட்டுப்பட்டவையாகும்."

இறைவாக்கு உரைக்க ஆண்டவரால் தோபேத்துக்கு அனுப்பப் பெற்றிருந்த எரேமியா அங்கிருந்து திரும்பி வந்து, திருக்கோவில் முற்றத்தில் நின்று கொண்டு மக்கள் அனைவருக்கும் கூறியது:

"இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான் இந்நகருக்கு எதிராகக் கூறியுள்ள அனைத்துத் தீமைகளையும் இந்நகர் மேலும் இதனைச் சுற்றியுள்ள நகர்கள்மேலும் விழச் செய்வேன். ஏனெனில் அவர்கள் என் சொற்களைக் கேளாமல் முரட்டுப் பிடிவாதம் செய்தார்கள்.

அதிகாரம் 20.

இம்மேர் மகனும், ஆண்டவரது இல்லத்தில் தலைமை அதிகாரியுமாய் இருந்த பஸ்கூர் என்னும் குரு, எரேமியா இவற்றை எல்லாம் இறைவாக்காகச் சொல்லக் கேட்டான்.

அதன் காரணமாக அவன் எரேமியாவைப் பிடித்து, அடித்து, ஆண்டவர் இல்லத்தில் பென்யமின் உயர்வாயிலில் சிறையில் அடைத்தான்.

மறுநாள் காலையில் பஸ்கூர் எரேமியாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அப்போது எரேமியா கூறியது: "ஆண்டவர் உன்னைப் பஸ்கூர் என்றல்ல, மாறாக 'மாகோர் மிசாபீபு' என்றே அழைத்துள்ளார்.

ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ உனக்கும் உன் நண்பர்களுக்கும் பேரச்சம் உண்டாக நீயே காரணமாவாய். உன் கண் முன்னாலேயே அவர்கள் பகைவர்களின் வாளால் மடிவார்கள். யூதா முழுவதையும் பாபிலோனிய மன்னனிடம் கையளிப்பேன்: அவன் அவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தி வாளால் வெட்டி வீழ்த்துவான்.

இந்நகரின் செல்வங்களையும் உழைப்பின் பயன் அனைத்தையும் விலை உயர்ந்த பொருள்கள் யாவற்றையும் யூதா அரசரின் கருவூலங்களையும் அவர்கள் பகைவர்களிடம் ஒப்புவிப்பேன். அவர்கள் அவற்றைப் பறிமுதல் செய்து பாபிலோனுக்கே கொண்டு செல்வார்கள்.

பஸ்கூர்! நீயும் உன் வீட்டில் வாழும் அனைவரும் நாடு கடத்தப்படுவீர்கள். நீயும், உன் பொய்யான இறைவாக்குகளைக் கேட்ட உன் நண்பர்களும் பாபிலோனுக்குச் சென்று அங்குச் சாவீர்கள்: அங்கேயே புதைக்கப்படுவீர்கள்.

ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: நீர் என்னைவிட வல்லமையுடையவர்: என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்: நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள்.

நான் பேசும்போதெல்லாம் "வன்முறை அழிவு" என்றே கத்த வேண்டியுள்ளது: ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.

"அவர் பெயரைச் சொல்லமாட்டேன்: அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்" என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்: இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

"சுற்றிலும் ஒரே திகில்!" என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்: ""பழிசுமத்துங்கள்: வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்" என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்: "ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்: நாம் அவன்மேல் வெற்றி கொண்டு அவனைப் பழி தீர்த்துக் கொள்ளலாம்" என்கிறார்கள்.

ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை: அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்: அது மறக்கப்படாது.

படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே: நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை நான் காணவேண்டும்: ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்: அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

நான் பிறந்த நாள் சபிக்கப்படட்டும்: என் அன்னை என்னைப் பெற்றெடுத்த நாள் ஆசி பெறாதிருக்கட்டும்.

"உனக்கோர் ஆண் குழந்தை பிறந்துள்ளது" என்ற செய்தியை என் தந்தையிடம் சொல்லி அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய அந்த மனிதன் சபிக்கப்படுக!

அவன், ஆண்டவர் இரக்கமின்றி வீழ்த்திய நகர்களுக்கு ஒப்பாகட்டும். அவன் காதில் காலையில் அழுகைக் குரலும் நண்பகலில் போர் இரைச்சலும் ஒலிக்கட்டும்!

தாய் வயிற்றில் நான் இருந்தபோதே, அவள் ஏன் என்னைக் கொல்லவில்லை? என் தாயே எனக்குக் கல்லறையாய் இருந்திருப்பாளே! அவள் கருவறையிலேயே என்றும் இருந்திருப்பேனே!

கருவறைவிட்டு ஏன்தான் வெளிவந்தேன்? துன்ப துயரத்தை அனுபவிக்கவும் என் வாழ்நாள்களை வெட்கத்தில் கழிக்கவும்தான் வந்தேனோ?

அதிகாரம் 21.

மல்கியாவின் மகன் பஸ்கூரையும் மாசேயாவின் மகனாக குரு செப்பனியாவையும் செதேக்கியா அரசன் எரேமியாவிடம் அனுப்பிய நேரத்தில் ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது:

அவர்கள் எரேமியாவிடம் வந்து, "பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் நமக்கு எதிராய்ப் போருக்குப் புறப்பட்டு வருகிறான். இந்நேரத்தில் ஆண்டவர் நமக்காக வியத்தகு செயல்கள் செய்து நெபுகத்னேசரைப் பின்வாங்க வைப்பாரா? என்று ஆண்டவரிடம் கேட்டுச் சொல்" என்றனர்.

அப்போது எரேமியா அவர்களிடம் கூறியது: "நீங்கள் செதேக்கியாவிடம் இவ்வாறு சொல்லுங்கள்:

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மதில்களுக்கு வெளியே உங்களுக்கு எதிராய் முற்றுகையிட்டுள்ள பாபிலோனிய மன்னனோடும் கல்தேயரோடும் போரிடுவதற்கு நீங்கள் கையாளும் படைக்கலன்஥களை உங்களுக்கு எதிராகத் திருப்புவேன். அவற்றை எல்லாம் இந்நகரின் மையத்தில் குவித்துவைப்பேன்.

என் சினத்திலும், சீற்றத்திலும், கடும் வெஞ்சினத்திலும் உங்களுக்கு எதிராக நானே போரிடுவேன். ஓங்கிய கையோடும் வலிமைமிகு புயத்தோடும் போரிடுவேன்.

இந்நகரில் வாழ்வோரை வதைப்பேன். இங்குள்ள மனிதர்களும் விலங்குகளும் பெரும் கொள்ளை நோயால் மடிவார்கள்.

அதன் பின் யூதா அரசன் செதேக்கியாவையும் அவன் அலுவலரையும், கொள்ளைநோய், வாள், பஞ்சம் ஆகியவற்றிலிருந்து தப்பி இந்நகரில் எஞ்சியிருப்போரையும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையிலும், உங்கள் பகைவர்களின் கையிலும், உங்கள் உயிரைப் பறிக்கத் தேடுவார் கையிலும் ஒப்படைப்பேன். நெபுகத்னேசர் அவர்களை வாளால் வெட்டி வீழ்த்துவான். அவர்களைக் காப்பாற்றவோ, அவர்களுக்கு இரக்கம் காட்டவோ, பரிவு காட்டவோ மாட்டான்" என்கிறார் ஆண்டவர்.

இம்மக்களுக்கு நீ கூற வேண்டியது: ஆண்டவர் கூறுவது இதுவே: "இதோ, வாழ்வின் வழியையும் சாவின் வழியையும் உங்கள்முன் வைக்கிறேன்.

இந்நகரில் தங்கிவிடுபவன் வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் மடிவான். ஆனால், வெளியேறி உங்களை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும் கல்தேயரிடம் சரணடைபவன் உயிர்பிழைப்பான். அவன் உயிரே அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளாய் இருக்கும்.

இந்நகருக்கு நன்மையை அல்ல, தீமையையே கொணர முடிவு செய்துள்ளேன்: அதனைப் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்போகிறேன். அவன் அதனைத் தீக்கிரையாக்குவான், என்கிறார் ஆண்டவர்."

யூதாவின் அரச குடும்பத்திற்கு நீ கூறவேண்டியது: "ஆண்டவர் வாக்கைக் கேளுங்கள்:

தாவீதின் வீட்டாரே, ஆண்டவர் கூறுவது இதுவே: காலைதோறும் நீதி வழங்குங்கள்: கொள்ளையடிக்கப்பட்டவனைக் கொடியோனிடத்திலிருந்து விடுவியுங்கள்: இல்லையேல் உங்கள் தீச்செயல்களை முன்னிட்டு என் சீற்றம் நெருப்பென வெளிப்பட்டுப் பற்றியெரியும்: அதனை அணைப்பார் யாருமிலர்.

பள்ளத்தாக்கில் வாழ்வோரே! சமவெளிப் பாறையே! "எங்களுக்கு எதிராக யார் வரமுடியும்? நம் கோட்டைகளில் யார் நுழைய முடியும்?" என்று கூறும் உங்களுக்கு எதிராய் நானே எழும்பியுள்ளேன், என்கிறார் ஆண்டவர்.

உங்கள் செயல்களின் விளைவுக்கேற்ப உங்களைத் தண்டிப்பேன்: நகரிலுள்ள வனத்திற்குத் தீமூட்டுவேன்: சுற்றிலுமுள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும்.

அதிகாரம் 22.

ஆண்டவர் கூறுவது இதுவே: "யூதா அரசன் மாளிகைக்குச் செல். அங்கு இந்தச் செய்தியைச் சொல்.

ஓதாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் யூதா அரசனே, நீயும் உன் அலுவலரும் இந்த வாயில்கள் வழியாகச் செல்லும் உன் மக்களும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்' என்று சொல்.

ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ளுங்கள்: பறிகொடுத்தோரை கொடியோரிடமிருந்து விடுவியுங்கள்: அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதீர்கள்: அவர்களுக்குக் கொடுமை இழைக்காதீர்கள்: மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதீர்கள்.

நீங்கள் உண்மையில் இவ்வாறு நடப்பீர்களாகில், தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள் இந்த அரண்மனை வாயில்கள் வழியாகச் செல்வார்கள்: தேர்களிலும் குதிரைகளிலும் ஏறிச் செல்வார்கள்: அவர்களோடு அவர்கள் அலுவலரும் மக்களும் செல்வார்கள்.

ஆனால் நீங்கள் இந்த வாக்கிற்குச் செவிகொடுக்காவிட்டால் இந்த அரண்மனை பாழ்பட்டுப்போகும் என என்மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

யூதா அரச மாளிகைபற்றி ஆண்டவர் கூறுவது இதுவே: 'நீ எனக்குக் கிலயாதைப் போலவும், லெபனோனின் கொடுமுடி போலவும் இருக்கின்றாய்: ஆனால் நான் உன்னைப் பாழ் நிலமாகவும், குடியிருப்பாரற்ற நகராகவும் ஆக்குவேன்.

உன்னை அழிப்பதற்காக ஆள்களை ஏற்படுத்தியுள்ளேன்: அவர்கள் தம் ஆயுதங்களால் உன்னிடமுள்ள சிறந்த கேதுரு மரங்களை வெட்டித் தீயில் போடுவார்கள்.'

இந்நகரைக் கடந்து செல்லும் பல பிற இனத்தார், 'இம்மாநகருக்கு ஆண்டவர் ஏன் இவ்வாறு செய்தார்?' என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வர்.

'அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு அவற்றுக்கு ஊழியம் செய்ததால்தான் இவ்வாறு நேர்ந்தது' என்பர்."

இறந்தவனைக் குறித்து அழ வேண்டாம்: அவனுக்காகப் புலம்ப வேண்டாம்: சென்றுவிட்டவனுக்காகக் கதறி அழுங்கள்: ஏனெனில் அவன் இனி திரும்பிவரப் போவதில்லை: தான் பிறந்த நாட்டைப் பார்க்கப் போவதில்லை.

யூதா அரசனைப் பற்றி ஆண்டவர் கூறுவது இதுவே: தன் தந்தை யோசியாவுக்குப் பதிலாக ஆட்சி செய்து வந்தான். அவன் இந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டான்: இனி இங்குத் திரும்பி வரமாட்டான்.

அவன் நாடுகடத்தப்பட்ட இடத்திலேயே சாவான். இந்த நாட்டை இனி ஒருபோதும் பாரான்.

நீதியின்றித் தன் மாளிகையையும், நேர்மையின்றித் தன் மாடியறைகளையும் கட்டுகின்றவனுக்கு ஜயோ கேடு! அடுத்திருப்பாரை ஊதியமின்றி உழைக்கச் செய்கிறான். அவருக்குக் கூலி கொடுப்பதில்லை.

. "நான் பெரியதொரு மாளிகையையும் காற்றோட்டமான மாடியறைகளையும் கட்டிக்கொள்வேன்" என்கிறான். அதற்குப் பலகணிகளை அமைத்துக் கொள்கின்றான். கேதுரு பலகைகளால் அதனை அணி செய்து அதற்குச் செவ்வண்ணம் தீட்டுகின்றான்.

கேதுரு மரங்களின் சிறப்பில்தான் உன் அரச பெருமை அடங்கியிருக்கின்றதா? உன் தந்தை உண்டு குடித்து மகிழ்ந்தாலும், நீதி நேர்மையுடன் நடந்தானே! அவனைப் பொறுத்தவரையில் எல்லாம் நலமாய் இருந்ததே!

ஏழை எளியோரின் வழக்கில் அவன் நீதி வழங்கினான். எல்லாம் நலமாய் இருந்தது. என்னை அறிதல் என்பது இதுதானே! என்கிறார் ஆண்டவர்.

நீயோ நேர்மையின்றி வருவாய் சேர்ப்பிலும் மாசற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும் ஒடுக்கித் துன்புறுத்துவதிலும்தான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறாய்.

ஆகவே யூதாவின் அரசனும் யோசியாவின் மகனுமாகிய யோயாக்கிமைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: "ஜயோ என் சகோதரனே! ஜயோ சகோதரியே!" என்று அவனுக்காக யாரும் ஒப்பாரி வைக்கமாட்டார்கள். 'ஜயோ என் தலைவரே! மாண்பு மிக்கவரே!' என்று அழமாட்டார்கள்.

ஒரு கழுதைக்குரிய அடக்கமே அவனுக்குக் கிடக்கும் அவனை இழுத்து எருசலேமின் வாயில்களுக்கு வெளியே எறிவர்.

லெபனோன்மேல் ஏறிக் கதறியழு! பாசானில் அழுகைக்குரல் எழுப்பு! அபாரிமில் ஓலமிடு! ஏனெனில், உன் அன்பர்கள் அனைவரும் நொறுக்கப்பட்டார்கள்.

நீ நலமாய் இருந்த காலத்தில் உன்னோடு பேசினேன்: நியோ "நான் செவிசாய்க்க மாட்டேன்" என்றாய்: உன் இளமையிலிருந்து இதுவே உன் வழிமுறை: எனது குரலுக்கு நீ செவிகொடுக்கவே இல்லை.

உன் மேய்ப்பர்களைக் காற்றே மேய்க்கும்: உன் அன்பர்கள் நாடுகடத்தப்படுவர்: அப்போது நீ வெட்கமுறுவாய். உன் தீச்செயல்களைக் குறித்து மானக்கேடு அடைவாய்.

லெபனோனில் குடிகொண்டுள்ள நீ, கேதுரு மரங்களுள் கூடுகட்டியிருக்கும் நீ, பேறுகால பேதனை போன்ற துன்பம் வரும்போது, எவ்வாறு புலம்பி அழப்போகின்றாய்?

ஆண்டவர் கூறுவது: என்மேல் ஆணை! யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான கோனியாவே, நீ என் வலக்கை முத்திரை மோதிரம் போல் இருந்தாலும், நான் உன்னைக் கழற்றி எறிந்து விடுவேன்.

உன் உயிரைப் பறிக்கத் தேடுவோரின் கையில், நீ அஞ்சுகின்றவர்களின் கையில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில், கல்தேயரின் கையில் உன்னை ஒப்புவிப்பேன்.

உன்னையும் உன்னைப் பெற்றெடுத்த அன்னையையும் இன்னொரு நாட்டுக்குத் பக்கியெறிவேன். நீங்கள் பிறவாத அந்த நாட்டில் இறப்பீர்கள்.

எந்த நாட்டுக்குத் திரும்பிவர அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்களோ, அந்த நாட்டிற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்.

கோனியா என்னும் இம்மனிதன் அவமதிப்புக்குள்ளான் உடைந்த ஒரு பானையோ? யாரும் விரும்பாத ஒரு மண்கலமோ? அவனும் அவன் வழி மரபினரும் ஏன் பக்கி எறியப்பட்டார்கள்? முன்பின் தெரியாத நாட்டுக்கு ஏன் துரத்தப்பட்டார்கள்?

நாடே! நாடே! நாடே! ஆண்டவரின் வாக்கைக் கேள்.

ஆண்டவர் கூறுவது இதுவே: "இந்த ஆள் மகப் பேறற்றவன்: தன் வாழ்நாளில் வெற்றி காணாதவன்" என எழுது. ஏனெனில் அவன் வழி மரபினர் யாரும் வெற்றி அடையமாட்டார்கள்: யாரும் தாவீதின் அரியணையில் வீற்றிருந்து யூதாவின்மேல் ஆட்சி புரிய மாட்டார்கள்.

அதிகாரம் 23.

ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஜயோ கேடு!

தம் மக்களை வழி நடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்: அதனைத் துரத்தியடித்தீர்கள்: அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர்.

என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப் பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும்.

அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா: திகிலுறா: காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நாள்கள் வருகின்றன: அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள "தளிர்" தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார்.

அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்: இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். "யாவே சித்கேடீ" என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

ஆதலால் ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது, "எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை" என்று எவரும் சொல்லார்.

மாறாக, "இஸ்ரயேல் குடும்ப மரபினர் தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி, அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை" என்று கூறுவர்.

இறைவாக்கினரைக் குறித்து: என்னுள் என் இதயம் நொறுங்கியுள்ளது: என் எலும்புகள் எல்லாம் நடுநடுங்குகின்றன: ஆண்டவரை முன்னிட்டும் அவர்தம் புனித சொற்களை முன்னிட்டும் நான் குடிபோதையில் இருப்பவன் போல் ஆனேன்: மதுவினால் மயக்கம் கொண்டவன் ஆனேன்.

ஏனெனில் நாட்டில் விபசாரர்கள் நிரம்பியுள்ளனர்: சாபத்தின் விளைவாக நாடு புலம்புகிறது: பாலைநிலத்துப் பசும்புல் தரை உலர்ந்து போயிற்று: அவர்கள் வழிகள் தீயவை: அவர்கள் ஆற்றல் தீயவற்றிற்குப் பயன்படுகின்றது.

இறைவாக்கினர், குருக்கள் ஆகிய இரு சாராரும் இறையுணர்வு அற்றவர்கள்: என் இல்லத்தில் அவர்களின் தீச்செயல்களை நான் கண்டுள்ளேன், என்கிறார் ஆண்டவர்.

எனவே, அவர்கள் பாதை வழுக்கிவிடக்கூடியது: இருளில் அவர்கள் தள்ளப்பட்டுத் தடுக்கி விழுவர்: அவர்கள் தண்டிக்கப்படும் ஆண்டில் அவர்கள்மேல் தீமை வரச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.

சமாரியாவின் இறைவாக்கினரிடையே ஒவ்வாத செயல் ஒன்று கண்டேன்: அவர்கள் பாகால் பெயரால் பொய் வாக்குரைத்து என் மக்கள் இஸ்ரயேலைத் தவறான வழியில் நடத்தினார்கள்.

எருசலேமின் இறைவாக்கினரிடையே திகிழட்டும் செயல் ஒன்று கண்டேன்: அவர்கள் விபசாரம் செய்கிறார்கள்: பொய்ம்மை வழியில் நடக்கிறார்கள்: தீயோரின் கைகளை வலுப்படுத்துகிறார்கள்: இதனால் யாரும் தம் தீய வழியிலிருந்து திரும்புவதில்லை: அவர்கள் எல்லாரும் என் பார்வையில் சோதோமைப் போன்றவர்கள்: எருசலேமின் குடிமக்கள் கொமோராவைப் போன்றவர்கள்.

எனவே இறைவாக்கினரைப் பற்றிப் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: அவர்களை எட்டிக்காய் உண்ணச் செய்வேன்: நஞ்சு கலந்த நீரைக் குடிக்கச் செய்வேன். ஏனெனில், எருசலேம் இறைவாக்கினரிடமிருந்தே இறைஉணர்வின்மை நாடெங்கும் பரவிற்று.

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களுக்கு வீண் நம்பிக்கை கொடுக்கும் இந்த இறைவாக்கினரின் சொற்களுக்குச் செவி கொடுக்காதீர்கள்஥. அவர்கள் பேசுவது ஆண்டவருடைய வாய்மொழியன்று: மாறாகத் தங்கள் உள்ளத்துக் கற்பனைகளே.

ஆண்டவரின் வாக்கை இகழ்வோரிடம் "உங்களுக்கு நலம் உண்டாகும்" எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் இதயத்தின் பிடிவாத்தின்படி நடப்போர் அனைவரிடமும் "உங்களுக்குத் தீமை நேராது" என்று கூறுகிறார்கள்.

ஆண்டவரின் மன்றத்தில் நின்றவன் யார்? அவர் சொல்லைக் கண்டவன் அல்லது கேட்டவன் யார்? அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து அதனை அறிவித்தவன் யார்?

இதோ ஆண்டவரின் சீற்றம் புயலாய் வீசுகின்றது: அது தீயோரின் தலைமேல் சூறாவளியாய்ச் சுழன்றடிக்கின்றது.

ஆண்டவர் தம் இதயத்தின் திட்டங்களைச் செயலாக்கி நிறைவேற்றும்வரை அவர் சினம் தணியாது: வரப்போகும் நாள்களில் இதனை நீங்கள் முற்றிலும் அறிந்துகொள்வீர்கள்.

அந்த இறைவாக்கினர்களை நான் அனுப்பவில்லை: அவர்களாகவே ஓடிவந்தார்கள். நான் அவர்களோடு பேசவில்லை: அவர்களாகவே இறைவாக்கு உரைத்தார்கள்.

ஆனால் அவர்கள் என் மன்றத்தில் நின்றிருந்தால் என் சொல்லை என் மக்களுக்கு எடுத்துரைத்து, அவர்கள தங்கள் தீய வழிகளையும் தீச்செயல்களையும் விட்டு விலகச் செய்திருப்பர்.

ஆண்டவர் கூறுவது: அருகில் இருந்தால்தான் நான் கடவுளா? தொலையில் இருக்கும்போது நான் கடவுள் இல்லையா?

என் கண்ணில் படாதபடி எவராவது பதுங்கிடங்களில் ஒளிந்துகொள்ள முடியுமா? என்கிறார் ஆண்டவர். விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருப்பது நான் அல்லவா? என்கிறார் ஆண்டவர்.

என் பெயரால் பொய்யுரைக்கும் இறைவாக்கினர் "நான் கனவுகண்டேன், நான் கனவுகண்டேன்" என்று கூறியதைக் கேட்டேன்.

பொய்யையும், தம் வஞ்சக எண்ணங்களையும் இறைவாக்காக உரைக்கும் இந்த இறைவாக்கினரின் மனப்பாங்கு என்று மாறுமோ?

இவர்களுடைய மூதாதையர் பாகால் காரணமாக என் பெயரை மறந்தனர். அதுபோலத் தாங்கள் ஒருவர் ஒருவருக்குக் கூறும் கனவுகள் வழியாக என் மக்களின் நினைவிலிருந்து என் பெயரை அகற்றிவிடலாம் என நினைக்கின்றனர்.

கனவு கண்ட இறைவாக்கினன் தன் கனவை எடுத்துச் சொல்லட்டும். என் சொல்லைத் தன்னிடத்தில் கொண்டிருப்பவனோ அதனை உண்மையோடு எடுத்துரைக்கட்டும். தாளைத் தானியத்தோடு ஒப்பிட முடியுமா? என்கிறார் ஆண்டவர்.

என் சொல் தீயைப் போன்றது அல்லவா? பாதையை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றது அல்லவா? என்கிறார் ஆண்டவர்.

ஆகவே, ஒருவர் ஒருவரிடமிருந்து என் சொற்களைத் திருடும் இறைவாக்கினருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

தங்கள் நாவினால் "ஆண்டவர் கூறுகிறார்" என்று உரைக்கும் இறைவாக்கினருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

பொய்க் கனவுகனை இறைவாக்காக உரைப்போருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். இவர்கள் அவற்றை எடுத்துரைத்து, தங்கள் பொய்களாலும் மூடச்செயல்களாலும் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை: அவர்களுக்குக் கட்டளையிடவும் இல்லை, அவர்களால் இந்த மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை, என்கிறார் ஆண்டவர்.

இந்த மக்களோ ஓர் இறைவாக்கினரோ ஒரு குருவோ உன்னிடம் "ஆண்டவரின் சுமை யாது?" என்று கேட்டால், "நீங்களே, அந்தச் சுமை: நான் உங்களைத் தள்ளவிடுவேன், என்கிறார் ஆண்டவர்" என்று சொல்.

"ஆண்டவரின் சுமை" என்று ஓர் இறைவாக்கினர் அல்லது குரு அல்லது மக்களில் யாராவது கூறினால், அந்த மனிதரையும் அவர் வீட்டாரையும் நான் தண்டிப்பேன்.

"ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?" "ஆண்டவர் என்ன பேசினார்?" என்றே நீங்கள் உங்கள் உற்றார் உறவினரிடம் கேட்க வேண்டும்.

"ஆண்வரின் சுமை" என்று இனி யாரும் குறிப்பிடக்கூடாது: அவனவன் சொல்லே அவனுக்குச் சுமை. வாழும் கடவுளும் படைகளின் ஆண்டவருமான நம் கடவுளின் சொற்களை நீங்கள் திரித்துக் கூறுகிறீர்கள்.

நீங்கள் இறைவாக்கினரிடம், "ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?", "ஆண்டவர் என்ன பேசினார்?" என்றே கேட்கவேண்டும்.

"ஆண்டவரின் சுமை" என்று நீங்கள் கூறுவீர்களானால், ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள். "ஆண்டவரின் சுமை" என்று நீங்கள் கூறக்கூடாது என்று நான் உங்களுக்குச் சொல்லியனுப்பியிருந்தும், நீங்கள் "ஆண்டவரின் சுமை" என்று கூறுகிறீர்கள்.

ஆதலால், நான் உங்களை முற்றிலும் மறந்து, உங்களையும் உங்களுக்கும் உங்கள் மூதாதையருக்கும் நான் கொடுத்த நகரையும் என் முன்னிலையிலிருந்து பக்கி வீசியெறிவேன்.

நீங்கள் என்றென்றும் வசைச் சொல்லுக்கு ஆளாவீர்கள். உங்கள் அவமானம் என்றென்றும் நிலைத்திருக்கும்: அது மறக்கப்படாது.

அதிகாரம் 24.

பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், யோயாக்கிமின் மகனும் யூதாவும் அரசனுமான எக்கோனியாவையும் யூதாவின் தலைவர்களையும் தச்சர்களையும் கொல்லர்களையும் எருசலேமிலிருந்து நாடுகடத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்ற பின்னர், ஆண்டவர் எனக்கு அருளிய காட்சி: இதோ, ஆண்டவரது கோவில்முன் அத்திப் பழங்கள் நிறைந்த இரண்டு கூடைகள் வைக்கப்பட்டிருந்தன.

ஒரு கூடையில் மிக நல்ல அத்திப்பழங்கள் இருந்தன: அவை முதன்முதலில் பழுத்தவை போன்று இருந்தன. மற்றக் கூடையில் தீய அத்திப் பழங்கள் இருந்தன: அவை தின்ன முடியாத அளவுக்கு மிக கெட்டவையாய் இருந்தன.

அப்போது ஆண்டவர் என்னைப் பார்த்து, "எரேமியா, நீ காண்பது என்ன?" என்று கேட்டார். நான் "அத்திப்பழங்களைப் பார்க்கிறேன். நல்லவை மிக நல்லவையாயும், தீயவை தின்ன முடியாத அளவுக்கு மிகக் கெட்டவையாயும் இருக்கின்றன" என்றேன்.

ஆண்டவரின் வாக்கு எனக்கு மீண்டும் அருளப்பட்டது:

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், அதாவது இவ்விடத்திலிருந்து நான் கல்தேயரின் நாட்டுக்கு அனுப்பியிருப்பவர்கள் இந்த நல்ல அத்திப் பழங்களைப் போன்றவர்கள். அவர்களை நான் நல்லவர்களாகக் கருதுகிறேன்.

அவர்களுக்கு நன்மை செய்வதில் நான் கண்஥ணாயிருக்கிறேன்: அவர்களை மீண்டும் இந்நாட்டுக்குக் கொண்டு வருவேன். நான் அவர்களைக் கட்டி எழுப்புவேன்: கவிழ்த்து வீழ்த்தமாட்டேன். நான் அவர்களை நட்டு வளர்ப்பேன்: பிடுங்கி எறியமாட்டேன்.

நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்ளும் உள்ளதை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். ஏனெனில் அவர்கள் தங்கள் முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பிவருவார்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே: யூதா அரசன் செதேக்கியாவையும் அவர் தலைவர்களையும் இந்நாட்஥஥டில் விடப்பட்டுள்ள எருசலேமின் எஞ்சியோரையும், எகிப்து நாட்டில் வாழ்வோரையும், தின்ன முடியாத அளவுக்குத் தீயவையாய் இருந்த அத்திப் பழங்களைப் போன்று நடத்துவேன்.

உலகின் அரசுகள் அனைத்துக்கும் அவர்கள் திகிலின் சின்னமாக அமைவார்கள். நான் அவர்களைத் துரத்தியடிக்கும் இடங்களில் எல்லாம் அவர்கள் வசைச் சொல்லுக்கும் ஏளனத்துக்கும் பழிப்புரைக்கும் சாபத்துக்கும் ஆளாவார்கள்.

நான் அவர்களுக்கும் அவர்களின் மூதாதையருக்கும் கொடுத்த நாட்டில் யாரும் இராது அழியும்வரை அவர்கள்மேல் வாளையும் பஞ்சத்தையும் கொள்ளை நோயையும் அனுப்புவேன்.

அதிகாரம் 25.

யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், அதாவது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற முதல் ஆண்டில், யூதா மக்கள் அனைவரையும் குறித்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.

அதனை இறைவாக்கினரான எரேமியா யூதாவின் அனைத்து மக்களுக்கும், எருசலேமில் குடியிருப்போர் யாவருக்கும் எடுத்துரைத்தார்:

ஆமோனின் மகனும் யூதாவின் அரசனுமான யோசியா ஆட்சியேற்ற பதின்மூன்றாம் ஆண்டிலிருந்து இன்றுவரை, அதாவது கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக, ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டு வந்துள்ளது. நானும் அதை உங்களிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளேன். நீங்களோ அதற்குச் செவிகொடுக்கவில்லை.

ஆண்டவர்தம் ஊழியர்களான இறைவாக்கினர் எல்லாரையும் தொடர்ந்து அனுப்பியுள்ளார். நீங்களோ காது கொடுத்துக் கேட்கவில்லை: கவனிக்கவுமில்லை.

அவரது செய்தி இதுவே: "நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர்தம் தீய வழிகளையும் தீச்செயல்களையும் விட்டு விலகுங்கள். அப்போது ஆண்டவர் உங்களுக்கும் உங்கள் மூதாதையருக்கும் எக்காலத்திற்குமெனக் கொடுத்துள்ள நாட்டில் வாழ்வீர்கள்.

வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றுக்கு ஊழியம் செய்து வழிபடாமலும், உங்கள் கைவேலைப்பாடுகளால் எனக்குச் சினமூட்டாமலும் இருந்தால், நான் உங்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன்.

நீங்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை," என்கிறார் ஆண்டவர். உங்கள் கை வேலைப்பாடுகளால் உங்களுக்கே தீங்கிழைக்கும் வகையில் எனக்குச் சினமூட்டினீர்கள்.

ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் சொற்களுக்குக் கீழ்ப்படியால் இருந்தீர்கள்.

எனவே நான் வடநாட்டுக் குலங்கள் அனைத்தையும், என் ஊழியனான பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரையும் கூட்டிச் சேர்த்து, அவர்களை இந்த நாட்டுக்கும், இதன் குடிமக்களுக்கும், சுற்றியுள்ள எல்லா நாடுகளுக்கும் எதிராகக் கொண்டு வருவேன், என்கிறார் ஆண்டவர். நான் அவர்களை முற்றிலும் அழித்துவிடுவேன். அவர்கள் இகழ்ச்சிக் குறியாகக் காட்சியளிப்பார்கள்: ஏளனத்துக்கும் முடிவில்லா அழிவுக்கும் உள்ளாவார்கள்.

அவர்களிடம் மகிழ்ச்சி ஒலியும் உவகைக் குரலும் திருமண ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன்: இயந்திரக் கற்களின் ஓசையும் விளக்கின் ஒளியும் இல்லாதிருக்கச் செய்வேன்.

இந்நாடு முற்றிலும் அழிந்து பாழ்நிலமாகும். சுற்றியுள்ள நாடுகளும் எழுபது ஆண்டளவாய்ப் பாபிலோனிய மன்னனுக்கு அடிமையாகும்.

ஆனால் எழுபது ஆண்டுகள் முடிந்தபின் பாபிலோனிய மன்னனையும் அந்த நாட்டையும் தண்டிப்பேன், என்கிறார் ஆண்டவர். அவர்களது குற்றத்தின் காரணமாகக் கல்தேயரின் நாட்டை என்றென்றைக்கும் பாழ்நிலம் ஆக்குவேன்.

நான் அந்த நாட்டுக்கு எதிராய்ப் பேசியுள்ள அனைத்துச் சொற்களும், எரேமியா வேற்று நாடுக்கு எதிராய் உரைத்து இந்மலில் எழுதப்பட்டுள்ள அனைத்து இறைவாக்குகளும் அந்நாட்டின் மேல் பலிக்கச் செய்வேன்.

அந்நாட்டினரைக் கூடப் பல நாடுகளும் மாமன்னர்களும், அடிமையாக்குவர். அவர்களின் செயல்களுக்கும் நடத்தைக்கும் ஏற்றவாறு நான் அவர்களுக்குக் கைம்மாறு அளிப்பேன்.

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: சீற்றத்தால் நிரம்பியுள்ள இந்த இரசக் கிண்ணத்தை என் கையிலிருந்து எடுத்து, நான் உன்னை எந்த மக்களினத்தாரிடம் அனுப்புகிறேனோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கக் கொடு.

நான் அவர்கள்மேல் அனுப்பப்போகும் வாளை முன்னிட்டு அவர்கள் குடித்துத் தள்ளாடி வெறிகொள்வார்கள்.

அப்போது நான் ஆண்டவரின் கையிலிருந்து அந்தக் கிண்ணத்தை எடுத்து ஆண்டவர் என்னை எந்த மக்களித்தாரிடம் அனுப்பியிருந்தாரோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கச் செய்தேன்.

எருசலேமும் யூதாவின் நகர்களும் அவற்றின் அரசர்களும் தலைவர்களும் அதனைக் குடிக்கச் செய்தேன். இன்று காண்பதுபோல், அவை அழிந்து பாழாகவும் ஏளத்துக்கும் சாபத்துக்கும் உள்ளாகவுமே இவ்வாறு செய்தேன்.

எகிப்திய மன்னன் பார்வோன், அவன் அலுவலர்கள், தலைவர்கள், மக்கள் எல்லாரும்,

அங்குள்ள வேற்றின மக்கள் அனைவரும், ஊசு நாட்டு மன்னர்கள் யாவரும், அனைத்துப் பெலிஸ்திய மன்னர்களும், அஸ்கலோன், காசா, எக்ரோன், அஸ்தோதில் எஞ்சியோர்,

ஏதோம், மோவாபு, அம்னோனின் புதல்வர்,

தீர், சீதோன் மன்னர்கள் யாவரும், கடலுக்கு அப்பாலுள்ள கடற்கரை நாட்டு மன்னர்கள் எல்லாரும்,

தெதான், தேமா, பூசு, முன்தலையை மழித்துக் கொள்ளும் எல்லாரும்,

அரேபியாவின் அனைத்து மன்னர்களும், பாலைநிலத்தில் வாழும் பல இன மக்களின் மன்னர்களும்,

சிம்ரியின் மன்னர்கள் யாவரும், ஏலாம் மன்னர்கள் எல்லாரும், மேதிய மன்னர்கள் அனைவரும்,

ஒருவருக்குப் பின் ஒருவராய் அருகிலும் தொலையிலும் உள்ள வட நாட்டு மன்னர்கள் யாவரும், மண்ணுலக நாடுகளின் அரசுகள் அனைத்தும் அக்கிண்ணத்திலிருந்து குடிக்கச் செய்தேன். அவர்களுக்குப் பிறகு சேசாக்கு மன்னனும் குடிப்பான்.

இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதவே: "குடியுங்கள், போதையேறக் குடியுங்கள்: கக்குங்கள். நான் உங்கள்மேல் அனுப்பும் வாளால் வீழுங்கள்: எழவே மாட்டீர்கள்" என்று நீ அவர்களிடம் கூறு.

உன் கையிலிருந்து கிண்ணத்தை எடுத்துக் குடிக்க அவர்கள் மறுத்தால்1படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் குடித்துத்தான் ஆகவேண்டும்" என்று அவர்களிடம் கூறு.

இதோ! என் பெயர் வழங்கும் இந்நகருக்குத் தீங்கு செய்யப் போகிறேன். நீங்கள் மட்டும் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியுமா? தப்பவே முடியாது. ஏனெனில், நாட்டில் வாழ்வோர் அனைவருக்கும் எதிராக வாளை வரவழைக்கப் போகிறேன், என்கிறார் படைகளின் ஆண்டவர்.

ஆகவே அவர்களுக்கு எதிராக இச்சொற்களை எல்லாம் இறைவாக்காக உரை: "ஆண்டவர் மேலிருந்து கர்ச்சனை செய்வார்: தமது பய உறைவிடத்திலிருந்து குரல் எழுப்புவார்: தம் இருப்பிடத்திலிருந்து கடுமையாகக் கர்ச்சனை செய்வார்: திராட்சைப்பழம் மிதிப்போரின் ஆரவாரம்போல் பூவுலகில் வாழ்வோர் அனைவருக்கு எதிராகவும் குரல் எழுப்புவார்.

அவரது கர்ச்சனை உலகின் எல்லைவரை எட்டும்: ஏனெனில், ஆண்டவர் மக்களினங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்போகிறார்: அவர் எல்லா மனிதர்க்கும் தீர்ப்பு வழங்கப்போகிறார்: தீயோரை அவர் வாளுக்கு இரையாக்குவார், என்கிறார் ஆண்டவர்."

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! தீமை நாட்டிலிருந்து நாட்டுக்குப் பரவுகின்றது. பூவுலகின் எல்லைகளிலிருந்து பெரும் புயலொன்று புறப்பட்டுப் போகின்றது.

அந்நாளில் ஆண்டவரால் கொல்லப்பட்டவர்கள், உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை விழுந்து கிடப்பார்கள். புலம்புவாரற்று, எடுத்துச் சேர்ப்பாரற்று, புதைப்பாரற்றுத் தரையில் சாணம்போல் கிடப்பார்கள்.

மேய்ப்பர்களே! ஒப்பாரி வையுங்கள்: கதறியழுங்கள். மந்தையின் தலைவர்களே! சாம்பலில் புரளுங்கள். ஏனெனில் நீங்கள் கொல்லப்படுவதற்கும் சிதறடிக்கப்படுவதற்குமான நாள்கள் நெருங்கிவிட்டன. விலையுயர்ந்த பாத்திரம் நொறுக்கப்படுவதுபோல், நீங்கள் அழிக்கப்படுவீர்கள்.

மேய்ப்பர்கள் ஓடி ஒளிய இயலாது. மந்தையின் தலைவர்களுக்குத் தப்ப வழியும் இராது.

மேய்ப்பர்களின் ஆழுகுரலும் மந்தையின் தலைவர்களது ஒப்பாரியும் கேட்கின்றதே! ஏனெனில் ஆண்டவர் அவர்களின் மேய்ச்சல் நிலத்தை அழித்து விட்டார்.

ஆண்டவரின் கோபக்கனலால் அமைதியான பசும்புல் தரைகள் அழிந்து போயின.

தன் குகையில் இருந்து வெளியேறும் சிங்கத்தைப் போல் அவர் வெளியேறி விட்டார். கொடியோனின் வாளாலும் ஆண்டவரின் கோபக்கனலாலும் அவர்கள் நாடு பாழடைந்து போயிற்று.

அதிகாரம் 26.

யோசியாவின் மகனும் யூதாவின் அரசயனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு:

"ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்று கொண்டு, அங்கு வழிபாடு செலுத்தவரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி: அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே.

ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீயவழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக் கொள்வேன்'.

நீ அவர்களிடம் சொல்லவேண்டியது: 'ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும்,

நீங்கள் செவி சாய்க்காதபொழுதும் நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பி வைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில்,

இக்கோவிலைச் சீலோவைப் போல் ஆக்குவேன்: இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்."

ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர்.

மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, "நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்" என்று கூச்சலிட்டனர்.

"இக்கோவில் சீலோவைப் போல் மாறும்: இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?" என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் ஏரேமியாவைச் சூழ்ந்து கொண்டனர்.

யூதாவின் தலைவர்கள் இதைப்பற்றிக் கேள்வியுற்று அரண்மனையிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்று அங்கே "புதுவாயில்" அருகே அமர்ந்தார்கள்.

குருக்களும் இறைவாக்கினரும் தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி, "இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்: ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல, இந்நகருக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்" என்று முறையிட்டனர்.

அப்பொழுது தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரிடமும் எரேமியா கூறியது: "நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம் இக்கோவிலுக்கும் இந்நகருக்கும் எதிராக அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பியுள்ளார்.

எனவே, இப்பொழுதே உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்ளுங்கள்: உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனைபற்றி ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொள்வார்.

இதோ, நான் உங்கள் கையில் இருக்கிறேன். நல்லது எனவும் நேரியது எனவும் நீங்கள் கருதுவதை எனக்குச் செய்யுங்கள்.

ஆனால் ஒன்றை மட்டும் நன்கு அறிந்துகொள்ளுங்கள்: என்னை நீங்கள் கொல்வீர்களாகில், மாசற்ற இரத்தப்பழி உங்கள் மேலும், இந்நகர் மேலும், அதில் குடியிருப்போர் மேலும் உறுதியாக வந்து விழும். ஏனெனில் இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்."

பின்னர் தலைவர்களும் மக்கள் எல்லாரும் குருக்களையும் இறைவாக்கினரையும் நோக்கி, "கொலைத் தீர்ப்பு இந்த ஆளுக்கு வேண்டாம்: ஏனெனில் நம் கடவுளான ஆண்டவரின் பெயராலேயே இவன் நம்மிடம் பேசியுள்ளான்" என்றார்கள்.

உடனே நாட்டின் மூப்பர்களுள் சிலர் எழுந்து, மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கூறியது:

"யூதாவின் அரசரான எசேக்கியாவின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்கா இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தார். அவர் யூதா மக்கள் எல்லாரையும் நோக்கி, 'படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: வயல்வெளியைப் போல் சீயோன் உழப்படும்: எருசலேம் பாழடைந்து மண்மேடாக மாறும். கோவில் உள்ள மலையோ அடர்ந்த காடாகும்,' என்று சொன்னார்.

இதற்காக யூதாவின் அரசரான எசேக்கியாவும் யூதா நாடு முழுவதும் அவரைக் கொன்று போட்டார்களா? எசேக்கியா ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய உதவியைக் கெஞ்சி மன்றாடவில்லையா? இதனால் ஆண்டவர் அவர்களுக்கு அறிவித்திருந்த தண்டனையைக் குறித்துத் தமது மனத்தை மாற்றிக்கொள்ளவில்லையா? நாமோ நமக்கே பெரும் தீங்கை விளைவித்துக்கொள்ளப் போகிறோம்.

ஆண்டவர் பெயரால் இறைவாக்கு உரைத்த இன்னொருவரும் இருந்தார்: அவர் கிரியத்து எயாரிமைச் சார்ந்த செமாயாவின் மகன் உரியா ஆவார். அவரும் எரேமியாவைப் போலவே இந்நகருக்கும் இந்நாட்டுக்கும் எதிராக இறைவாக்கு உரைத்திருந்தார்.

யோயாக்கிம் அரசரும் அவருடைய படைவீரர்களும் தலைவர்கள் அனைவரும் உரியா சொன்னதைக் கேட்டனர். உடனே அரசர் அவரைக் கொல்ல முயன்றார். ஆனால் உரியா அதை அறிந்து அச்சமுற்று எகிப்துக்குத் தப்பி ஓடிவிட்டார்.

அரசர் யோயாக்கிமோ அக்போரின் மகன் எல்னாத்தானையும், அவனோடு சில ஆள்களையும் எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.

அவர்கள் எகிப்திலிருந்து உரியாவை இழுத்து வந்து, அரசர் யோயாக்கிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அரசரோ அவரை வாளுக்கு இரையாக்கி, அவருடைய சடலத்தைப் பொதுமக்கள் கல்லறையில் வீசி எறிந்தார்."

ஆனால், மக்கள் கையில் எரேமியா அகப்பட்டுக் கொல்லப்படாதவாறு, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.

அதிகாரம் 27.

யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமாகிய செதேக்கியாவுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு இதுவே:

"ஆண்டவர் என்னிடம் இவ்வாறு உரைத்தார்: கயிறுகளையும் நுகத்தடியையும் நீ செய்து, உனது கழுத்தில் பூட்டிக் கொள்.

யூதாவின் அரசனான செதேக்கியாவிடம் எருசலேமுக்கு வந்துள்ள பதர்கள் வழியாக ஏதோம் மன்னனுக்கும் மோவாபு மன்னனுக்கும் அம்மோனியரின் மன்னனுக்கும் தீர் மன்னனுக்கும் சீதோன் மன்னனுக்கும் செய்தி சொல்லி அனுப்பு.

அவர்கள் தங்கள் தலைவர்களிடம் பின்வரும் செய்தியைச் சொல்லுமாறு கட்டளையிடு: இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:

உங்கள் தலைவர்களிடம் நீங்கள் சொல்லவேண்டியது: என் மிகுந்த ஆற்றலோடும் ஓங்கிய புயத்தோடும் மண்ணுலகையும் அதில் வாழும் மனிதரையும் விலங்குகளையும் படைத்தது நானே. எனக்கு விருப்பமானவர்களிடம் அவற்றை நான் கொடுப்பேன்.

என் ஊழியனும் பாபிலோனிய மன்னனுமான நெபுகத்னேசரின் கையில் இந்நாடுகளை எல்லாம் இப்பொழுது ஒப்புவித்திருப்பதும் நானே. அவனுக்கு அடிபணியும் பொருட்டுக் காட்டு விலங்குகளையும் அவனிடம் நான் ஒப்புவித்திருக்கிறேன்.

அவனுடைய நாட்டுக்கென்று குறிக்கப்பட்ட காலம் வரும்வரை, மக்களினங்கள் எல்லாம் அவனுக்கும் அவனுடைய மகனுக்கும் பேரனுக்கும் பணிவிடை செய்வார்கள். பின்னர் பல்வேறு மக்களினத்தாரும் மாமன்னர்களும் அவனையே தங்கள் அடிமை ஆக்கிக்கொள்வார்கள்.

ஆனால் பாபிலோனிய மன்னனான நெபுகத்னேசருக்கு அடிபணிந்து, அவனது நுகத்தைத் தனது கழுத்தில் ஏற்க மனமில்லாத மக்களினத்தையோ அரசையோ-அவனுடைய கையில் அவற்றை நான் ஒப்புவிக்கும்வரை-வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றால் தண்டிப்பேன், என்கிறார் ஆண்டவர்.

நீங்களோ 'பாபிலோனிய மன்னனுக்கு அடிபணியாதீர்கள்' என்று உங்களுக்குச் சொல்லும் உங்கள் இறைவாக்கினர், குறிசொல்வோர், கனவுக்காரர், மந்திரவாதி, சூனியக்காரர் ஆகியோருக்குச் செவி கொடாதீர்கள்.

ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள். அதன் விளைவாக உங்கள் நாட்டினின்று நீங்கள் அப்புறப்படுத்தப்படுவீர்கள். நான் உங்களைத் துரத்தியடிப்பேன்: நீங்கள் அழிந்து போவீர்கள்.

ஆனால், பாபிலோனிய மன்னனின் நுகத்தைத் தன் கழுத்தில் ஏற்று, அவனுக்கு அடிபணியும் எந்த இனத்தையும் அதன் சொந்த நாட்டிலேயே நான் விட்டு வைப்பேன். அந்த இனம் உழுது பயிரிட்டு அங்கேயே குடியிருக்கும், என்கிறார் ஆண்டவர்."

யூதாவின் அரசனான செதேக்கியாவிடமும் இதே போன்று பேசினேன்: "பாபிலோனிய மன்னனின் நுகத்துக்கு உங்கள் கழுத்தை நீட்டுங்கள்: அவனுக்கும் அவனுடைய மக்களுக்கும் அடிபணியுங்கள். அப்படியானால் நீங்கள் பிழைப்பீர்கள்.

பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிய மனம் இல்லாத மக்களினத்தின் மேல் அனுப்பபுவதாக ஆண்டவர் எச்சரித்துள்ள வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றுக்கு நீரும் உம் மக்களும் ஏன் இரையாக வேண்டும்?

எனவே 'பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிய வேண்டாம்' என உங்களுக்குச் சொல்லும் இறைவாக்கினரின் சொற்களுக்கு நீங்கள் செவிகொடாதீர்கள். ஏனெனில் உங்களிடம் அவர்கள் பொய்யை இரைவாக்காக உரைக்கிறார்கள்.

நான் அவர்களை அனுப்பவில்லை, என்கிறார் ஆண்டவர். இருப்பினும், நான் உங்களை நாடுகடத்தும் பொருட்டும், அங்கே நீங்களும் உங்களோடு பேசும் இறைவாக்கினர்களும் அழியும் பொருட்டும், அவர்கள் இவ்வாறு என் பெயரால் பொய்யை இறைவாக்காக உரைத்துக் கொண்டே இருக்கிறார்கள்."

பின்னர் குருக்களிடமும் மக்கள் எல்லாரிடமும் நான் சொன்னது: "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'இதோ! ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் இப்பொழுதே பாபிலோனிலிருந்து திருப்பிக் கொணரப்படும்', என்று உங்களுக்கு அறிவிக்கும் இறைவாக்கினர்களின் சொற்களுக்கு நீங்கள் செவிகொடுக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள்.

எனவே அவர்களுக்குச் செவி கொடாதீர்கள். பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிந்தால் நீங்கள் பிழைப்பீர்கள். இந்நகர் ஏன் பாழாக வேண்டும்?

அவர்கள் உண்மையாகவே இறைவாக்கினர்களாய் இருந்தால், ஆண்டவரின் வாக்கும் அவர்களோடு இருந்தால், ஆண்டவரின் இல்லத்திலும் யூதாவின் அரசனது அரண்மனையிலும் எருசலேமிலும் மீந்திருக்கும் கலங்களாவது பாபிலோனுக்குப் போகாதவாறு இப்பொழுதே அவர்கள் படைகளின் ஆண்டவரிடம் பரிந்து பேசட்டும்."

பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்துவந்த உயர்குடி மக்கள் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்திய பொழுது, தன்னோடு எடுத்துச் செல்லாமல் இந்நகரிலேயே விட்டுச்சென்றிருந்த பண்கள்,

வெண்கலக்கடல், ஆதாரங்கள், பிற கலங்கள் முதலியவற்றைக் குறித்துப் படைகளின் ஆண்டவர் கூறுவது:

ஆண்டவரின் இல்லத்திலும் யூதாவின் அரசனின் அரண்மனையிலும் எருசலேமிலும் மீந்திருக்கும் கலங்கள் பற்றி இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:

'அவை யாவும் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படும். நான் அவற்றின்மீது எனது கவனத்தைத் திருப்பும்வரை அவை அங்கேயே இருக்கும். பின்னர் நான் அவற்றைத் திரும்பக் கொண்டுவந்து இவ்விடத்தில் வைக்கச் செய்வேன்' என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 28.

அதே ஆண்஥டில், அதாவது யூதாவின் அரசனான செதேக்கியாவினுடைய ஆட்சியின் நான்காம் ஆண்டு ஜந்தாம் மாதத்தில் அசூரின் மகனும் கிபயோனைச் சார்ந்தவனுமான அனனியா என்னும் இறைவாக்கினன் ஆண்டவரின் இல்லத்தில் குருக்கள் மற்றும் மக்கள் அனைவருடைய முன்னிலையிலும் என்னிடம் உரைத்தது:

"இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிந்துவிட்டேன்.

பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் இவ்விடத்தினின்று கவர்ந்து, பாபிலோனுக்கு எடுத்துச் சென்றுள்ள ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் எல்லாவற்றையும் இரண்டே ஆண்டுக் காலத்திற்குள் இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவேன்.

அத்தோடு யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட யூதா மக்கள் அனைவரையும் இவ்விடத்திற்கு நான் திரும்பக் கொண்டு வருவேன். ஏனெனில், பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிவேன்', என்கிறார் ஆண்டவர்".

அப்பொழுது ஆண்டவரின் இல்லத்தில் நின்று கொண்டிருந்த குருக்கள், மக்கள் அனைவர் முன்னிலையிலும், இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் பேசினார்.

இறைவாக்கினர் எரேமியா அவனை நோக்கி, "ஆமென்! ஆண்டவர் அவ்வாறே செய்வாராக! நீர் உரைத்த சொற்களை ஆண்டவர் நிறைவேற்றுவாராக! ஆண்டவர் இல்லத்தின் கலங்களையும் நாடுகடத்தப்பட்டோ ர் அனைவரையும் பாபிலோனிலிருந்து இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவாராக!

ஆயினும் உம்செவிகளிலும் மக்கள் அனைவரின் செவிகளிலும் விழும்படி நான் உரைக்கும் இச்சொல்லைக் கவனித்துக் கேளும்.

உமக்கும் எனக்கும் முன்பே பண்டைய நாள்களில் வாழ்ந்த இறைவாக்கினர், பல நாடுகள், பேரரசுகளுக்கு எதிராகப் போர், துன்பம், கொள்ளைநோய் ஆகியவைப்பற்றி இறைவாக்கு உரைத்திருக்கின்றனர்.

நல்வாழ்வை முன்னறிவிக்கும் இறைவாக்கினரைப் பொறுத்தவரை, அவரது வாக்கு நிறைவேறும் பொழுதுதான், ஆண்டவர் அவரை உண்மையாகவே அனுப்பியுள்ளார் என்பது தெரியவரும்" என்றார்.

அதைக் கேட்ட இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்து நுகத்தைப் பிடுங்கி முறித்தெறிந்தான்.

மேலும், அனனியா எல்லா மக்கள் முன்னிலையிலும், "ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் நுகத்தை இன்னும் இரண்டே ஆண்டுகளில் மக்களினத்தார் அனைவருடைய கழுத்தினின்றும் பிடுங்கி முறித்தெறிவேன்" என்றான். உடனே இறைவாக்கினர் எரேமியா அவ்விடம் விட்டு அகன்றார்.

இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை முறித்தெறிந்த சில நாள்களுக்குப் பின்னர், ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:

"நீ யோய் அனனியாவிடம் சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: நீ மர நுகத்தை முறித்தெறிந்தாய்: அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தைச் செய்து கொள்வாய்.

ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இந்த மக்களினத்தார் அனைவரின் கழுத்தில் இரும்பு நுகத்தை வைத்துள்ளேன். ஆதலால் அவர்கள் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசருக்கு அடிபணிந்து பணிவிடை செய்வார்கள். காட்டு விலங்குகளையும் அவனிடம் ஒப்புவித்திருக்கிறேன்."

அப்பொழுது இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் கூறியது: "அனனியாவே, கூர்ந்து கேள்: ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை. அப்படியிருந்தும் இம்மக்கள் பொய்யை நம்பும்படி நீ செய்துவிட்டாய்.

எனவே, ஆண்டவர் கூறுகிறார்: இதோ! நான் இவ்வுலகினின்றே உன்னை அனுப்பி வைக்கப்போகிறேன். ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு நீ போதித்ததால், இந்த ஆண்டிலேயே நீ சாவாய்!"

அவ்வாறே அதே ஆண்டு ஏழாம் மாதத்தில் இறைவாக்கினன் அனனியா மாண்டான்.

அதிகாரம் 29.

எருசலேமிருந்து பாபிலோனுக்கு நெபுகத்னேசர் நாடு கடத்தி இருந்தோருள் எஞ்சியிருந்த மூப்பர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மக்கள் ஆகிய அனைவருக்கும் இறைவாக்கினர் எரேமியா எருசலேமிலிருந்து மடல் ஒன்று அனுப்பினார்.

அரசன் எக்கோனியா, அரச அன்னை, அரச அவையோர், யூதா மற்றும் எருசலேமின் தலைவர்கள், தச்சர்கள், கொல்லர்கள் ஆகியோர் எருசலேமை விட்டுச் சென்ற பின்னர்,

சாப்பானின் மகன் எலாசா, இல்க்கியாவின் மகன் கெமரியா ஆகியோர் வழியாகப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் யூதாவின் அரசன் செதேக்கியா அந்த மடலைப் பாபிலோனுக்கு அனுப்பிவைத்தான்.

அதன் சொற்களாவன: "இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவராகிய நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தியுள்ள அனைவருக்கும் கூறுவது இதுவே:

வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருங்கள்: தோட்டங்கள் அமைத்து அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்.

பெண்களை மணந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுங்கள். உங்கள் புதல்வர்களுக்குப் பெண் கொள்ளுங்கள்: உங்கள் புதல்வியருக்கு மணம் முடித்து வையுங்கள்! இவ்வாறு அவர்களும் தங்களுக்குப் புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுக்கட்டும். அங்கே பல்கிப் பெருகுங்கள்: எண்ணிக்கையில் குறைந்து விடாதீர்கள்.

உங்களை எந்த நகருக்கு நான் நாடுகடத்தியுள்ளேனோ, அந்த நகரின் நல்வாழ்வைத் தேடுங்கள்: அந்நகருக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்: ஏனெனில், அதன் நல்வாழ்வில்தான் உங்கள் நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது.

இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களிடையே இருக்கும் உங்கள் இறைவாக்கினரும் குறிசொல்வோரும் உங்களை ஏமாற்றாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

அவர்கள் காணும் கனவுகளை நீங்கள் பொருட்படுத்தாதீர்கள். ஏனெனில், என் பெயரால் அவர்கள் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை," என்கிறார் ஆண்டவர்.

"ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "பாபிலோனில் எழுபது ஆண்டுகள் முடிந்தபின் நான் உங்களைச் சந்திக்க வருவேன்: உங்களுக்கு நான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பேன்.

ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.

நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்! அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன்.

நீங்கள் என்னைத் தேடுவீர்கள்: உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள்.

ஆம், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர். அடிமைத்தனத்தினின்று உங்களை அழைத்து வருவேன்: நான் உங்களை விரட்டியடித்துள்ள எல்லா மக்களிங்களினின்றும் இடங்களினின்றும் கூட்டிச் சேர்ப்பேன், என்கிறார் ஆண்டவர். எந்த இடத்தினின்று உங்களை நான் நாடுகடத்தினேனோ அந்த இடத்திற்கே உங்களைத் திரும்பக் கொண்டு வருவேன்.

'ஆண்டவர் எங்களுக்காகப் பாபிலோனில் இறைவாக்கினர்களை எழுப்பியுள்ளார்' என்று சொல்கிறீர்கள்.

ஆதலால் தாவீதின் அரியணையில் வீற்றிருக்கும் அரசனைப் பற்றியும், இந்நகரில் வாழும் எல்லா மக்களைப்பற்றியும், உங்களோடு நாடு கடத்தப்படாத உங்கள் சகோதரர்களைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே:

படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ! அவர்கள் மீது வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றை அனுப்பிவைப்பேன். தின்ன முடியாத அளவுக்கு அழுகிப் போன காட்டு அத்திப் பழங்களைப் போல் அவர்களை ஆக்குவேன்.

வாள், பஞ்சம், கொள்ளைநோய் கொண்டு அவர்களைப் பின்தொடர்வேன். உலகின் எல்லா அரசுகளும் அவர்களை அருவருக்கும்படி செய்வேன்: நான் அவர்களை விரட்டியடித்துள்ள எல்லா நாடுகளிடையிலும் அவர்களைச் சாபத்திற்கும் பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும் கண்டனத்திற்கும் உள்ளாக்குவேன்.

ஏனெனில் என் ஊழியர்களான இறைவாக்கினர்களை நான் அவர்களிடம் திரும்பத் திரும்ப அனுப்பியிருந்தும், அவர்கள் என் சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை. நீங்களும் செவிகொடுக்கவில்லை, என்கிறார் ஆண்டவர்.

எனவே, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நான் நாடுகடத்தியிருக்கும் நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடுங்கள்."

"என் பெயரால் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து வரும் கோலயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசேயாவின் மகன் செதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! நான் அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில் ஒப்புவிப்பேன். அவன் அவர்களை உங்கள் கண் முன்பாகவே வெட்டி வீழ்த்துவான்.

அவர்களுக்கு நேர்ந்ததை முன்னிட்டு, பாபிலோனுக்கு யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டோ ர் அனைவரும் 'பாபிலோனிய மன்னன் நெருப்பில் போட்டுச் சுட்டெரித்த செதேக்கியாவைப் போலவும் ஆகாபைப் போலவும் ஆண்டவர் உன்னை ஆக்குவாராக' என்று சாபமிடுவர்.

ஏனெனில் அவர்கள் இஸ்ரயேலில் மதிகேடானதைச் செய்துள்ளார்கள்: பிறருடைய மனைவியரோடு விபசாரம் செய்துள்ளார்கள்: நான் அவர்களுக்கு ஆணையிடாதிருந்தும், அவர்கள் என் பெயரால் பொய்வாக்கு உரைத்துள்ளார்கள். நானோ இவற்றை எல்லாம் அறிவேன்: இவற்றுக்குச் சாட்சியும் நானே, என்கிறார் ஆண்டவர்."

நெகலாமைச் சார்ந்த செமாயாவிடம் நீ சொல்லவேண்டியது:

இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ உன் பெயரால் மடல்கள் எழுதி, எருசலேமில் இருக்கும் எல்லா மக்களுக்கும் மாசேயாவின் மகனும் குருவமான செப்பனியாவுக்கும் மற்ற குருக்கள் அனைவருக்கும் அவற்றை அனுப்பி வைத்துள்ளாய்.

செப்பனியாவுக்கு நீ எழுதியது: ஆண்டவர் இல்லத்தில் நீர் பொறுப்பாளராய் இருக்கும் பொருட்டும், இறைவாக்கினர்போல் நடிக்கும் எந்தப் பைத்தியக்காரனையும் தொழுவிலடித்து விலங்கிடும் பொருட்டும் குருவாகிய யோயாதாவுக்குப் பதிலாக ஆண்டவர் உம்மைக் குருவாக ஏற்படுத்தியுள்ளார்.

அப்படியிருக்க, உங்களிடம் இறைவாக்குரைக்கும் அனதோத்தைச் சார்ந்த எரேமியாவை நீர் ஏன் இன்னும் கண்டியாது விட்டு வைத்திருக்கிறீர்?

இதனால் அவன் பாபிலோனில் இருக்கும் எங்களுக்கு, 'உங்களது அடிமைத்தனம் நெடுநாள் நீடிக்கும்: எனவே வீடுகளைக் கட்டி, அவற்றில் குடியிருங்கள்: தோட்டங்கள் அமைத்து, அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்' என்று செய்தி அனுப்பியுள்ளான்.

இறைவாக்கினர் எரேமியா கேட்கும்படி, குரு செப்பனியா அம்மடலை வாசித்துக் காட்டினார்.

அப்பொழுது ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:

நாடு கடத்தப்பட்டோ ர் எல்லாருக்கும் நீ எழுதி அனுப்ப வேண்டியது: நெகலாமியனான செமாயாவைப்பற்றி ஆண்டவர் இவ்஥வாறு கூறுகிறார்: "நான் அனுப்பாதிருந்தும் செமாயா உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து, அதை நீங்கள் நம்புமாறு செய்துள்ளான்.

எனவே ஆண்டவர் கூறுகிறார்: இதோ! நெகலாமியனான செமாயாவையும் அவனுடைய வழி மரபினரையும் நான் தண்டிப்பேன். இம்மக்களிடையே அவனுக்கு வாரிசே இராது. என் மக்களுக்கு நான் செய்யும் நன்மைகளை அவன் காணமாட்டான்: ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு அவன் போதித்துள்ளான்," என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 30.

ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது:

"இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை.

ஏனெனில் நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது என்னுடைய மக்களான இஸ்ரயேலையும் யூதாவையும் அவர்களது அடிமைத்தனத்தினின்று அழைத்து வருவேன்: அவர்களுடைய மூதாதையர்க்கு நான் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வேன். அவர்களும் அதை உடைமையாக்கிக்கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்."

இஸ்ரயேலையும் யூதாவையும் குறித்து ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:

ஆண்டவர் கூறுகின்றார்: திடுக்கிடச் செய்யும் ஒலியை நான் கேட்கின்றேன்: அது அச்சத்தின் ஒலி: சமாதானத்தின் ஒலி அன்று.

'ஆண்மகன் எவனாவது பிள்ளை பெற்றதுண்டா?' என்று கேட்டுப் பாருங்கள். அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும் பேறுகாலப் பெண்ணைப்போலத் தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டிருப்பதை நான் ஏன் காண்கிறேன்? எல்லா முகங்களும் மாறிவிட்டன: அவை வெளிறிப்போய்விட்டன!

அந்தோ! அந்த நாள் பெரிய நாள்: மற்றெந்த நாளும் அதைப் போன்றில்லை. யாக்கோபுக்கு அது வேதனையின் காலம்: ஆனால் அதனின்று அவன் விடுவிக்கப்பெறுவான்.

படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அந்நாளில் உன்னுடைய கழுத்திலிருக்கும் அவனது நுகத்தை முறித்துப்போடுவேன்: அவனுடைய விலங்குகளை உடைத்தெறிவேன்.

அயல்நாட்டவர் அவனை மீண்டும் அடிமைப்படுத்தமாட்டார். ஆனால் அவர்களின் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவர்களுக்காக நான் எழச்செய்யவிருக்கும் மன்னன் தாவீதுக்கும் அவர்கள் ஊழியம் புரிவார்கள்!

என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே! இஸ்ரயேலே, கலங்காதே, என்கிறார் ஆண்டவர். தொலைநாட்டினின்று உன்னை நான் மீட்பேன்: அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன். யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்: அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.

நான் உன்னோடு இருக்கின்றேன்: உன்னை மீட்பதற்காக உள்ளேன், என்கிறார் ஆண்டவர். எந்த மக்களினத்தார் இடையே நான் உன்னைச் சிதறடித்தேனோ அவர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிப்பேன்: உன்னையோ முற்றிலும் அழிக்கமாட்டேன்: உன்னை நீதியான முறையில் தண்டிப்பேன்: உன்னைத் தண்டிக்காமல் விட்டுவிடமாட்டேன்: உன்னை எவ்வகையிலேனும் தண்டியாதுவிடேன்.

ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது: உனது புண் புரையோடிப்஥஥போனது.

உனக்காக வாதிட எவனும் இல்லை: உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை: உன்னைக் குணப்படுத்தவே முடியாது.

உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்: உன்னை அவர்கள் தேடுவதே இல்லை: மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்: கொடியோன் தண்டிப்பதுபோல நான் உன்னைத் தண்டித்தேன்: ஏனெனில் உனது குற்றம் பெரிது: உன் பாவங்களோ எண்ணற்றவை.

நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய்? உனது வேதனையைத் தணிக்கமுடியாது: ஏனெனில் உனது குற்றமோ பெரிது: உன் பாவங்களோ எண்ணற்றவை: எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன்.

ஆயினும், உன்னை விழுங்குவோர் எல்லாரும் விழுங்கப்படுவர்: உன் பகைவர் எல்லாரும் ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்: உன்னைக் கொள்ளையடிப்போர் அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்: உன்னைச் சூறையாடுவோர் அனைவரும், நான் கையளிக்க, சூறையாடப்படுவர்.

நான் உனக்கு நலம் அளிப்பேன்: உன்னுடைய காயங்களை ஆற்றுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், "தள்ளப்பட்டவள்" என்று உன்னை அழைத்தார்கள்: "இந்தச் சீயோனைப் பற்றிக் கவலைப்படுவார் யாருமிலர்", என்றார்கள்.

ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: அடிமைத்தனத்தினின்று நான் யாக்கோபின் கூடாரங்களை திரும்பக் கொணர்வேன்: அவனுடைய உறைவிடங்கள்மீது நான் இரக்கம் காட்டுவேன்: அவற்றின் இடிபாடுகள்மேலேயே நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்: அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும்.

அவர்களிடமிருந்து நன்றிப் பாக்கள் எழும்பிவரும்: மகிழ்ச்சியுறுவோரின் ஆரவாரம் கேட்கும். அவர்களை நான் பல்கிப் பெருகச் செய்வேன்: அவர்கள் எண்ணிக்கையில் குறைய மாட்டார்கள். நான் அவர்களைப் பெருமைப்படுத்துவேன்: இனி அவர்கள் சிறுமையுற மாட்டார்கள்.

அவர்களுடைய பிள்ளைகள் முன்புபோல் இருப்பர்: அவர்களது கூட்டமைப்பு என் திருமுன் நிலை நாட்டப்படும்: அவர்களை ஒடுக்குவோர் அனைவரையும் தண்டிப்பேன்.

அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்: அவர்களை ஆள்பவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்: அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்: அவனும் என்னை அணுகிவருவான்: ஏனெனில், என்னை அணுகிவர வேறு யாருக்குத் துணிவு உண்டு?, என்கிறார் ஆண்டவர்.

நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்: நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

இதோ ஆண்டவரின் புயல்! அவரது சினம் சூறாவளிபோல் சுழன்றெழும். அது தீயோரின் தலையைத் தாக்கிச் சுழன்றடிக்கும்.

ஆண்டவர் மனத்தில் கொண்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி நிறைவேற்றாமல் அவரது வெஞ்சினம் திரும்பிவராது: வரவிருக்கும் நாள்களில் அதை நீங்கள் உணர்வீர்கள்.

அதிகாரம் 31.

ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்."

ஆண்டவர் கூறுவது இதுவே: "வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள் பாலைநிலத்தில் என் அருளைக் கண்டடைந்தனர்: இஸ்ரயேலர் இளைப்பாற விரும்பினர்.

ஆண்டவர் அவர்களுக்குத் தொலையிலிருந்து தோன்றினார். உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்: எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன்.

கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே! உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்: நீயும் கட்டி எழுப்பப்படுவாய்: மீண்டும் உன் மேளதாளங்களை நீ எடுத்துக் கொள்வாய்: மகிழ்ச்சியுற்றோர் போல நடனம் ஆடிக் கொண்டு நீ வெளியேறுவாய்:

சமாரியாவின் மலைகள்மேல் திராட்சைத் தோட்டங்களை நீ மீண்டும் அமைப்பாய்: தோட்டக்காரர் பயிரிட்டு விளைச்சலை உண்டு மகிழ்வர்.

ஏனெனில் ஒரு நாள் வரும்: அப்பொழுது எப்ராயிம் மலையில், 'எழுந்திருங்கள்: நான் சீயோனுக்குப் போவோம்: நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்' என்று காவலர் அழைப்பு விடுப்பர்.

ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்: மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்: முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்: 'ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்!' என்று பறைசாற்றுங்கள்.

இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்: மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காழனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்: பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர்.

அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்: ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்: நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்: இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.

மக்களினத்தாடரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்: 'இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள்.

ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்: அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்.

அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்: தானியம், திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுகாலிகள், ஆகிய ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள்: அவர்களது வாழ்க்கை நீர்வளம் மிக்க தோட்டம் போல் இருக்கும்: அவர்கள் இனிமேல், ஏங்கித் தவிக்க மாட்டார்கள்.

அப்பொழுது கன்னிப்பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்: அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்: அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்: அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்: துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன்.

குருக்களைச் செழுமையால் நிரப்புவேன்: என் மக்கள் எனது வள்ளன்மையால் நிறைவு பெறுவர், என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: இராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது: ஒரே புலம்பலும் அழுகையுமாய் இருக்கின்றது. இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கின்றார்: ஆறுதல் பெற அவர் மறுக்கின்றார்: ஏனெனில், அவருடைய குழந்தைகள் அவரோடு இல்லை.

ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: நீ அழுகையை நிறுத்து: கண்ணீர் வடிக்காதே: ஏனெனில் உனது உழைப்புக்குப் பயன் கிடைக்கும், என்கிறார் ஆண்டவர். தங்கள் பகைவரின் நாட்டினின்று அவர்கள் திரும்பி வருவார்கள்.

உன் எதிர்காலத்தைப் பொறுத்தமட்டில் நம்பிக்கை உண்டு, என்கிறார் ஆண்டவர். உன் பிள்ளைகள் தம் நாட்டுக்குத் திரும்புவர்.

எப்ராயிமின் புலம்பலை நான் உண்மையாகவே கேட்டேன்: "பணியாத இளம் காளையை அடித்துத் திருத்துவதுபோல நீர் என்னைத் தண்டித்துத் திருத்தினீர்: நீர் என்னைத் திரும்ப அழைத்துச் செல்லும்: நானும் திரும்பி வரவேன்: ஏனெனில், என் கடவுளாகிய ஆண்டவர் நீரே.

உம்மை விட்டு விலகிச் சென்றபின் நான் மனம் வருந்தினேன்: பயிற்றுவிக்கப்பட்டபின் நான் மார்பில் அறைந்து கொண்டேன்: என் இளமையின் அவமானம் இன்னும் என்னிடம் காணப்பட்டது. நான் வெட்கித் தலை குனிந்தேன்."

"எப்ராயிம் என் அருமை மகன் அல்லவா? நீ என் அன்புக் குழந்தை அல்லவா? உனக்கு எதிராக நான் அடிக்கடி பேசியபோதிலும், உன்னை நான் இன்னும் நினைவில் கொண்டிருக்கிறேன்: உனக்காக என் இதயம் ஏங்கித் தவிக்கின்றது: திண்ணமாய் உனக்கு நான் இரக்கம் காட்டுவேன்" என்கிறார் ஆண்டவர்.

உனக்கெனச் சாலை அடையாளங்களை அமைத்துக்கொள்: உனக்கெனக்"கைகாட்டிகளை நாட்டிக்கொள்: நீ நடந்து சென்ற வழியாகிய நெடுஞ்சாலையை நினைவில் கொள். கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே, திரும்பி வா: இந்த உன் நகரங்களுக்குத் திரும்பி வா.

நம்பிக்கைத் துரோகம் செய்த மகளே! இன்னும் எத்துணைக் காலம் நீ அலைந்து திரிவாய்? ஆண்டவராகிய நான் விந்தையான ஒன்றை உலகில் படைத்துள்ளேன்: ஒரு பெண் தன் கணவனைப் பாதுகாக்கின்றாள்." 23 . இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: அடிமைத்தனத்தினின்று அவர்களை நான் திரும்பக் கொணரும் பொழுது, 'நீதியின் இருப்பிடமே பய்மை மிகு மலையே! ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!' என்னும் வாழ்த்துரை யூதா நாட்டிலும் அதன் நகர்களிலும் மீண்டும் எதிரொலிக்கும்.

யூதாவிலும் அதன் எல்லா நகர்களிலும் மக்கள் குடியிருப்பர்: விவசாயிகளும், ஆடு மேய்க்கும் இடையர்களும் சேர்ந்து வாழ்வர்.

ஏனெனில் சோர்ந்த உள்ளங்களுக்கு நான் புத்துயிர் அளிப்பேன்: வாடிய நெஞ்சங்களுக்கு நான் நிறைவளிப்பேன்.

அப்பொழுது நான் விழித்தெழுந்து பார்த்தேன்: என் பக்கம் எனக்கு இன்பமாய் இருந்தது.

இதோ நாள்கள் வருகின்றன. அப்பொழுது இஸ்ரயேல் வீட்டையும் யூதா வீட்டையும் மனிதர்கள், விலங்குகளின் புதுப்பிறப்புகளால் நிரப்புவேன், என்கிறார் ஆண்டவர்.

பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், தீங்கிழைக்கவும் அவர்களைப் பொறுத்தமட்டில் நான் எப்படி விழிப்பாய் இருந்தேனோ, அப்படியே கட்டவும் நடவும் விழிப்பாய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர்.

அக்காலத்தில் அவர்கள், "தந்தையர் புளித்த திராட்சைப் பழங்களைத் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்" என்று சொல்ல மாட்டார்கள்.

ஆனால், எல்லாரும் அவரவர் தம் தீச்செயலின் பொருட்டே சாவர். புளித்த திராட்சைப் பழம் தின்பவனுக்குத்தான் பல் கூசும்.

இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர்.

அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.

அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்: அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.

இனிமேல் எவரும் "ஆண்டவரை அறிந்துகொள்ளும்" எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்: அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன்.

ஆண்டவர் பகலில் ஒளி வீசக் கதிரவனை ஏற்படுத்தியுள்ளார்: இரவில் ஒளி கொடுக்க நிலாவையும் விண்மீன்களையும் நியமித்துள்ளார்: அலைகள் முழங்குமாறு கடல் கொந்தளிக்கச் செய்துள்ளார்: "படைகளின் ஆண்டவர்" என்பது அவரது பெயராம். அவர் கூறுவது இதுவே:

மேற்கண்ட நியமங்கள் என் திருமுன்னின்று மறைந்துவிடுமாயின், இஸ்ரயேலின் வழிமரபினர் என் முன்னிலையில் ஒரு தனி இனமாய் என்றென்றும் இல்லாமல் போய்விடுவர், என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: மேலே வான்வெளி அளக்கப்படக் கூடுமாயின், கீழே பூவுலகின் அடித்தளங்களைக் கண்டுபிடிக்க இயலுமாயின், இஸ்ரயேலின் வழிமரபினரின் அனைத்துச் செயல்களையும் முன்னிட்டு அவர்கள் அனைவரையும் நான் தள்ளிவிடுவேன், என்கிறார் ஆண்டவர்.

இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது ஆண்டவருக்காக இந்நகர் அனனியேல் கோபுரம் முதல் மூலை வாயில்வரை கட்டியெழுப்பப்படும், என்கிறார் ஆண்டவர்.

அதன் எல்லை நேராகக் காரேபு மலைவரை சென்று, கோவாவை நோக்கித் திரும்பும்.

பிணச் சாம்பல் பள்ளத்தாக்கு முழுவதும், கிதரோன் நீரோடை முதல் கிழக்கே குதிரை வாயிலின் மூலைவரை உள்ள வயல்வெளி முழுவதும் ஆண்டவருக்குப் புனிதமானதாய் இருக்கும். இந்த இடம் இனி என்றுமே பிடுங்கி எறியப் படாது: அழித்தொழிக்கப்படாது.

அதிகாரம் 32.

யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் பத்தாம் ஆண்டில், அதாவது நெபுகத்னேசரது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.

அப்பொழுது பாபிலோனிய மன்னனுடைய படை எருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது. இறைவாக்கினர் எரேமியாவோ யூதா அரசனது அரண்மனையில் இருந்த காவல்கூடத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்.

யூதா அரசன் செதேக்கியா எரேமியாவைப் பார்த்து, "ஆண்டவர் கூறுவது இதுவே: இந்நகரைப் பாபிலோனிய மன்னனுடைய கையில் ஒப்புவிக்கிறேன். அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான்.

யூதாவின் அரசன் செதேக்கியா கல்தேயரின் கைக்குத் தப்பமாட்டான்: மாறாக, அவன் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்படுவது உறுதி. செதேக்கியா அவனோடு நேருக்கு நேர் பேசுவான்: அவனை முகத்துக்கு முகம் பார்ப்பான்.

அவன் செதேக்கியாவைப் பாபிலோனுக்கு இழுத்துச் செல்வான். நான் அவனைச் சந்திக்கும் வரையில் அவன் அங்கேயே இருப்பான்," என்கிறார் ஆண்டவர். மேலும், கல்தேயருக்கு எதிராக நீங்கள் போரிட்டாலும் வெற்றி பெறமாட்டீர்கள் என்று நீ இறைவாக்கு உரைத்தது ஏன்? என்று சொல்லி, அவரைச் சிறைப்படுத்தினான்.

அப்பொழுது எரேமியா கூறியது: ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

இதோ, உன் உறவினன் சல்ழமின் மகன் அனமேல் உன்னிடம் வந்து, "அனத்தோத்தில் இருக்கும் என் நிலத்தை நீ விலைக்கு வாங்கிக் கொள். எனெனில் அதை வாங்கி மீட்பது உனது உரிமை ஆகும்" என உன்னை வேண்டுவான்.

ஆண்டவர் உரைத்திருந்தவாறே என் உறவினரின் மகன் அனமேல் காவல் கூடத்தில் இருந்த என்னிடம் வந்து, "தயவு செய்து பென்யமின் நாட்டில் அனத்தோத்தில் உள்ள என் நிலத்தை நீர் விலைக்கு வாங்கிக்கொள்ளும்: ஏனெனில் அதை மீட்டு உடைமையாக்கிக்கொள்வது உமது உரிமை: நீரே அதை வாங்கிக்கொள்ளும்" என்று வேண்டினார். அப்பொழுது அது ஆண்டவரின் வாக்கு என்று நான் அறிந்துகொண்டேன்.

அதன்படி அனத்தோத்தில் இருந்த அந்த நிலத்தை என் உறவினரின் மகன் அனமேலிடமிருந்து நான் வாங்கினேன்: அதற்கு விலையாகப் பதினேழு செக்கேல் வெள்ளியை அவரிடம் நிறுத்துக் கொடுத்தேன்.

பத்திரத்தில் கையெழுத்திட்டு, அதில் முத்திரையிட்டேன்: சாட்சிகள் முன்னிலையில் வெள்ளியைத் தராசில் வைத்து நிறுத்துக் கொடுத்தேன்.

பின்னர் விதி முறைகளும் நிபந்தனைகளும் அடங்கிய முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தையும் அதன் முத்திரையிடப்படாத நகலையும் நான் பெற்றுக் கொண்டேன்.

ஒப்பந்தப் பத்திரத்தை மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனுமான பாரூக்கிடம் நான் கொடுத்தேன். என் உறவினரின் மகன் அனமேல் முன்னிலையிலும் பத்திரத்தில் கையொப்பமிட்டிருந்த சாட்சிகள் முன்னிலையிலும் காவல்கூடத்தில் உட்கார்ந்திருந்த யூதர் அனைவருடைய முன்னிலையிலும் நான் அதைக் கொடுத்தேன்.

அவர்கள் முன்னிலையில் நான் பாரூக்கிற்குக் கொடுத்த கட்டளையாவது:

இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இந்த ஒப்பந்தப் பத்திரங்களை-அதவாது, முத்திரையிடப்பட்டதையும் அதன் நகலையும்-எடுத்துக்கொள். நீண்ட நாள் அவை பாதுகாப்புடன் இருக்கும்பொருட்டு அவற்றை ஒரு மண்பாண்டத்தில் போட்டுவை.

ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இந்நாட்டில் வீடுகளும் நிலங்களும் திராட்சைத் தோட்டங்களும் மீண்டும் விலைக்கு வாங்கப்படும்.

ஒப்பந்தப் பத்திரத்தை நேரியாவின் மகன் பாரூக்கிடம் ஒப்படைத்த பின்னர், நான் ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொண்டது:

. "என் தலைவராகிய ஆண்டவரே! உம் மிகுந்த ஆற்றலாலும் ஓங்கிய புயத்தாலும் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! உமக்குக் கடினமானது எதுவும் இல்லை.

ஆயிரமாயிரம் பேருக்கு நீர் அருளன்பு காட்டி வருகிறீர். ஆனால் தந்தையரின் குற்றத்திற்கான தண்டனையை அவர்களுக்குப் பின் அவர்களுடைய பிள்ளைகளின் மடியில் கொட்டுகிறீர். மாபெரும் ஆற்றல் மிகு இறைவா! படைகளின் ஆண்டவர் என்பதே உமது பெயராகும்.

நீர் திட்டமிடுவதில் பெரியவர்: செயலில் வல்லவர். மானிடரின் வழிகள் எல்லாம் உமது கண்முன்னே உள்ளன. எனவே, அவரவருடைய வழிகளுக்கும் செயல்களின் விளைவுகளுக்கும் ஏற்றவாறு நீர் கைம்மாறு அளிக்கிறீர்.

நீர் எகிப்து நாட்டில் செய்த அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும் இஸ்ரயேலிலும் மற்ற எல்லா மக்களினத்தார் நடுவிலும் இன்றுவரை தொடர்ந்து புரிந்துவருகிறீர். இன்றுவரை உமது பெயருக்கு புகழ் தேடிக்கொண்டீர்.

அடையாளங்கள் மற்றும் வியத்தகு செயல்களால் பேரச்சம் உண்டாக, வலிமை மிகு கையோடும் ஓங்கிய புயத்தோடும் உம் மக்கள் இஸ்ரயேலை எகிப்து நாட்டினின்று நீர் கூட்டிக் கொண்டு வந்தீர். 22 அவர்களுடைய மூதாதையர்க்குத் தருவதாக நீர் வாக்களித்திருந்த நாட்டை-பாலும் தேனும் வழிந்தோடும் இந்நாட்டை-அவர்களுக்குக் கொடுத்தீர்.

அவர்கள் வந்து அதைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள். ஆனால் உம் குரலக்குச் செவிகொடுக்கவில்லை: உம் சட்டத்தையும் பின்பற்றவில்லை: நீர் கட்டளையிட்டிருந்த எதையுமே செய்யவில்லை. ஆதலால் இத்தீங்கு அனைத்தும் அவர்களுக்கு நேரிடச் செய்தீர்.

இதோ, நகரைக் கைப்பற்றும் பொருட்டு முற்றுகைத்தளங்கள் எழுகின்றன! வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக, நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதைக் கைப்பற்றுவர். நீர் சொன்னது எல்லாம் இப்பொழுது நடந்தேறிவிட்டதை நீரே காண்கிறீர்!

'தலைவராகிய ஆண்டவரே, நீர் என்னைப் பார்த்து, 'வெள்ளியை விலையாகக் கொடுத்து உனக்கு நிலத்தை வாங்கிக் கொள்: அதற்குச் சாட்சிகளையும் வைத்துக் கொள்' என்று சொல்கிறீரே! ஆனால் நகர் கல்தேயரின் கையில் ஏற்கெனவே வீழ்ந்து விட்டதே!"

பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:

நானே ஆண்டவர்: எல்லா மக்களுக்கும் கடவுள் நானே: அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ ?

ஆதலால், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கல்தேயரிடமும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடமும் இந்நகரை நான் கையளிப்பேன். அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான்.

இந்நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதன் உள்ளே புகுந்து அதற்குத் தீ வைப்பர்: அதனோடு வீடுகளையும் தீக்கிரையாக்குவர்: ஏனெனில் அந்த வீடுகளின் மேல் தளங்களில்தான் மக்கள் பாகாலுக்குத் பபம் காட்டினார்கள்: வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்களைப் படைத்தார்கள்: இவ்வாறு அவர்கள் எனக்குச் சினமூட்டினார்கள்.

இஸ்ரயேல் மக்களும் தங்கள் இளமை முதல் எனது திருமுன் தீமை ஒன்றையே செய்துவந்துள்ளார்கள்: ஆம், இஸ்ரயேல் மக்கள் தங்கள் செயல்களால் எனக்குச் சினமூட்டியதைத் தவிர, வேறு எதுவும் செய்ததில்லை, என்கிறார் ஆண்டவர்.

இந்நகர் கட்டியெழுப்பப்பட்டது முதல் இந்நாள்வரை, என் சினத்திற்கும் சீற்றத்திற்கும் காரணமாய் இருந்துள்ளது. எனவே நான் அதை என் திருமுன்னின்று அகற்றி விடுவேன்.

ஏனெனில் இஸ்ரயேல் மக்களும் யூதா மக்களும் தங்களது எல்லாத் தீச்செயல்கள் மூலம் எனக்குச் சினமூட்டினார்கள்: அவர்களும் அவர்களுடைய அரசர், தலைவர், குருக்கள், இறைவாக்கினர், யூதா மக்கள், எருசலேம்வாழ் மக்கள் ஆகிய அனைவருமே இவ்வாறு செய்துள்ளார்கள்.

அவர்கள் தங்களது முகத்தை அல்ல, முதுகையே எனக்குக் காட்டினார்கள். திரும்பத் திரும்ப நான் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தும் அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவும் இல்லை, அறிவுரையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

எனது பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி, தங்கள் அருவருப்பான சிலைகளை அதில் வைத்தனர்.

மோலேக்கு தெய்வத்துக்குத் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி, பென்இன்னோம் பள்ளத்தாக்கில் பாகாலின் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இத்தகைய அருவருப்பான செயலைச் செய்தவன்மூலம், யூதா பாவத்தில் விழவேண்டும் என்று நான் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை: இது என் எண்ணத்தில் கூட எழவில்லை.

இப்பொழுதோ வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக இந்நகர் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் இந்நகரைப் பற்றிக் கூறுகிறீர்கள். ஆனால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் அதைக் குறித்துக் கூறுவது இதுவே:

"இதோ, என் சினத்திலும் சீற்றத்திலும் வெஞ்சினத்திலும் நான் அவர்களைத் துரத்தியடித்துள்ள எல்லா நாடுகளினின்றும் அவர்களைக் சுட்டிச் சேர்ப்பேன்: அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பக் கூட்டி வந்து, பாதுகாப்புடன் அவர்களை வாழச் செய்வேன்.

அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்.

ஒரே இதயத்தையும் ஒரே நெறிமுறையையும் நான் அவர்களுக்குக் கொடுப்பேன். இதனால் அவர்கள் தங்கள் நலனையும், தங்களுக்குப்பின் தங்கள் பிள்ளைகளின் நலனையும் கருதி, எந்நாளும் எனக்கு அஞ்சி நடப்பார்கள்.

நான் அவர்களோடு என்றும் நிலைத்திருக்கும் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன். எனவே அவர்களுக்கு நன்மை செய்ய நான் தவறமாட்டேன். என்னைப் பற்றிய அச்சத்தை அவர்களது இதயத்தில் பதியவைப்பேன். இதனால் அவர்கள் என்னைவிட்டு விலகிச்செல்லமாட்டார்கள். 41 . அவர்களுக்கு நன்மை புரிவதில் நான் மகிழ்ச்சி அடைவேன்: என் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவர்களை நான் இந்நாட்டில் உறுதியாக நிலைநாட்டுவேன்

ஏனெனில், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இத்தகைய பெரும் தீங்கு அனைத்தையும் இம்மக்கள்மீது வரச் செய்தது போலவே, நான் அவர்களுக்கு அறிவித்திருக்கும் எல்லா நலன்களையும் அவர்களுக்கு வழங்குவேன்.

"இது மனிதர்களோ விலங்குகளோ இல்லாத பாழடைந்த நாடு: இது கல்தேயரிடம் கையளிக்கப்பட்டுள்ள நாடு, என்று எந்த நாட்டைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களோ, அந்த நாட்டில் நீங்கள் மீண்டும் விலைக்கு நிலங்களை வாங்குவீர்கள். 44 . வெள்ளியை விலைக்குக் கொடுத்து நிலங்கள் வாங்குவர்: அவற்றுக்குப் பத்திரம் எழுதி முத்திரையிடுவர்: இவை சாட்சிகள் முன்னிலையில் பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும், மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும் நிகழும். ஏனெனில் அடிமைத்தனத்தினின்று நான் அவர்களைத் திரும்பி வரச்செய்வேன், என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 33.

காவல்கூடத்தில் எரேமியா இன்னும் அடைபட்டிருக்கையில், ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை அவருக்கு அருளப்பட்டது:

உலகைப் படைத்தவரும் அதை உருவாக்கி நிலைநாட்டியவருமான ஆண்டவர் - "ஆண்டவர்" என்பது அவர் பெயராகும் - இவ்வாறு கூறுகிறார்.

என்னிடம் மன்றாடு: உனக்கு நான் செவிசாய்ப்பேன்: நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன்.

முற்றுகைத் தளங்கள், வாள் முதலியவற்றால் தகர்க்கப்பட்டுக் கிடக்கும் இந்நகரின் வீடுகளைக் குறித்தும், யூதா அரசர்களின் அரண்மனைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:

எதிர்த்துப் போரிடவும், சினம்கொண்டு, சீற்றமுற்று நான் வெட்டி வீழத்திய மனிதர்களின் பிணங்களால் வீடுகளை நிரப்பவும், இதோ கல்தேயர் வந்துகொண்டிருக்கின்றனர். ஏனெனில் இந்நகரின் தீச்செயல் அனைத்தையும் முன்னிட்டு அதனின்று நான் என் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

ஆயினும், நான் அந்நகரின் காயங்களை ஆற்றிக் குணப்படுத்துவேன்: அம்மக்களுக்கு நலன் அளித்து நிலையான நிறைவாழ்வை வழங்குவேன்.

யூதாவை அதன் அடிமைத்தனத்தினின்றும் இஸ்ரயேலை அதன் அடிமைத்தனத்தினின்றும் நான் அழைத்துவருவேன்: முன்பு இருந்தது போன்று அவற்றைக் கட்டி எழுப்புவேன்.

எனக்கு எதிராக அவர்கள் செய்துள்ள பாவங்களினின்று அவர்களை நான் பய்மைப்படுத்துவேன்: அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்துள்ள குற்றங்கள், கிளர்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையும் நான் மன்னிப்பேன்.

நான் எருசலேமுக்குச் செய்துவரும் எல்லா நன்மைகளையும் பற்றிக் கேள்வியுறும் உலகின் மக்களினத்தார் அனைவரின் முன்னிலையில் அது எனக்கு மகிழ்ச்சி, புகழ்ச்சி, மாட்சி தரும் நகராய் விளங்கும். நான் அதற்கு வழங்கும் அனைத்து நலத்தையும் வளத்தையும் அவர்கள் அஞ்சி நடுங்குவார்கள்.

ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "ஆளரவமற்ற பாழ்நிலம்" என நீங்கள் அழைக்கும் இவ்விடத்தில் - மனிதனோ, குடிமகனோ, விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும்-

மகிழ்ச்சியின் ஒலியும் அக்களிப்பின் ஆரவாரமும், மணமகன் மணமகள் குரலொலியும் மீண்டும் கேட்கும். 'படைகளின் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில் அவர் நல்லவர்: அவரது பேரன்பு என்றென்றுமுள்ளது' எனப் பாடியவாறு ஆண்டவர் இல்லத்திற்கு நன்றிப் பலிகளைக் கொண்டுசெல்வோரின் பேரொலியும் கேட்கும்: ஏனெனில், நாட்டை நான் அடிமைத்தனத்தினின்று விடுவித்து முன்னைய நன்னிலைக்கு உயர்த்துவேன், என்கிறார் ஆண்டவர்.

படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: மனிதனோ விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் இவ்விடத்திலும், இதை அடுத்த எல்லா நகர்களிலும் இடையர் தம் மந்தைகளை இளைப்பாற்றும் குடியிருப்புகள் மீண்டும் தோன்றும்.

மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும், பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும் ஆடுகளை எண்ணிச் சரிபார்ப்பவனின் கண்காணிப்பில் அவை மீண்டும் கடந்து செல்லும், என்கிறார் ஆண்டவர்.

இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன். 15 . அந்நாள்களில் - அக்காலத்தில் - நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்.

அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்: எருசலேம் பாதுகாப்புடன் வாழும். "யாவே சித்கேடீ" என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

ஏனெனில், ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டின் அரியணையில் வீற்றிருக்கத்தக்க ஒருவர் தாவீதுக்கு இராமல் போகார்.

என் திருமுன் எரிபலிகள் செலுத்தவும், தானியப் படையல்கள் ஒப்புக்கொடுக்கவும், என்றென்றும் பலிகள் நிறைவேற்றவும் தக்க ஒருவர் லேவி குலத்துக் குருக்களிடையே இராமல் போகார்.

ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:

ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: பகலும் இரவும் முறைப்படி வராதவாறு அவற்றோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கை உங்களால் உடைத்தெறியப்படுமாயின்,

என் ஊழியன் தாவீதோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் உடைத்தெறியப்படும், தாவீதின் அரியணையேறி ஆட்சிசெய்யும் மைந்தன் அவனுக்கு இருக்கமாட்டான்: என் பணியாளர்களான லேவி குலத்துக் குருக்களுக்கும் இவ்வாறே நிகழும்.

எண்ணமுடியாத விண்மீன்களையும் அளக்க முடியாத கடல் மணலையும் போல, என் ஊழியன் தாவீதின் வழி மரபினரையும் என் பணியாளரான லேவியரையும் நான் பெருகச் செய்வேன்.

ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:

ஆண்டவர் தேர்ந்துகொண்ட இரண்டு குடும்பங்களையும் அவர் தள்ளிவிட்டார் என்று இம்மக்கள் பேசிக்கொள்வரை நீ கவனித்ததில்லையா? என் மக்கள் ஓர் இனமாகத் திகழாத அளவுக்கு, என் மக்களை அவர்கள் இழிவாக நடத்துகிறார்கள்: அவர்களை ஓர் இனமாகக் கூடக் கருதுவதில்லை.

ஆண்டவர் கூறுவது இதுவே: நான் பகலோடும் இரவோடும் உடன்படிக்கை செய்திராவிடில், விண்ணுக்கும் மண்ணுக்கும் உரிய ஒழுங்கு முறைகளை நிறுவியிராவிடில்,

யாக்கோபின் வழிமரபினரையும், என் ஊழியன் தாவீதின் வழிமரபினரையும் உண்மையாகவே தள்ளிவிடுவேன். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் வழிமரபினரை ஆள்வதற்குத் தாவீதின் வழிமரபினரிலிருந்து யாரையும் தேர்ந்துகொள்ளமாட்டேன். ஆனால் இப்பொழுது அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப்பேன்: அவர்கள்மீது இரக்கம் காட்டுவேன்.

அதிகாரம் 34.

பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும், அவருடைய எல்லாப் படைகளும், அவரது ஆட்சிக்கு உட்பட்ட உலகின் அரசுகள், மக்களினங்கள் அனைத்தும் எருசலேமையும் அதன் நகர்களையும் எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்த வேளையில், ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ போய், யூதா அரசன் செதேக்கியாவிடம் சொல்லவேண்டியது: ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனிய மன்னனிடம் இந்நகரைக் கையளிக்கப்போகிறேன். அவன் அதைத் தீக்கிரையாக்குவான்.

நீ அவனுடைய கைக்குத் தப்பமாட்டாய்: மாறாகத் திண்ணமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புவிக்கப்படுவாய். பாபிலோனிய மன்னனை நீ முகத்துக்குமுகம் பார்ப்பாய்: அவனோடு நேருக்கு நெர் பேசுவாய்: நீ பாபிலோனுக்குப் போவாய்.

ஆயினும், யூதாவின் அரசனே! செதேக்கியா! ஆண்டவரின் வாக்கைக் கேள். உன்னைப் பற்றி ஆணடவர் கூறுவது இதுவே: நீ வாளால் மடியமாட்டாய்:

ஆனால் அமைதியாகவே சாவாய். உனக்குமுன் வாழ்ந்த பண்டைய அரசர்களான உன் மூதாதையரின் நினைவாக மக்கள் நறுமணப் பொருள்களை எரித்தது போன்று, உன் நினைவாகவும் எரிப்பார்கள்: "ஜயோ, தலைவா!" எனச் சொல்லி உன்பொருட்டுப் புலம்புவார்கள்! இது உறுதி, என்கிறார் ஆண்டவர்.

பின்னர் இறைவாக்கினர் எரேமியா எருசலேமில் யூதா அரசன் செதேக்கியாவிடம் இவற்றை எல்லாம் கூறினார்.

அப்பொழுது எருசலேமுக்கு எதிராகவும், யூதாவின் அரண்சூழ் நகர்களுள் எஞ்சியிருந்த இலாக்கிசு, அசேக்காவுக்கு எதிராகவும் பாபிலோனிய மன்னனின் படை போரிட்டுக் கொண்டிருந்தது.

விடுதலையை அறிவிப்பதற்காக, அரசன் செதேக்கியா எருசலேம் மக்கள் அனைவரோடும் உடன்படிக்கை செய்துகொண்டபின், ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.

யூதா நாட்டினர் எவரும் தம் சகோதரரை அடிமைப்படுத்தாமல், அவரவர் தம் எபிரேய அடிமைகளான ஆண், பெண் அனைவரையும விடுதலை செய்ய வேண்டும் என்பதே அவ்வுடன்படிக்கை.

உடன்படிக்கை செய்துகொண்ட தலைவர்கள், மக்கள் ஆகிய எல்லாரும், தம் அடிமைகளான ஆண், பெண் அனைவரும் தொடர்ந்து அடிமைகளாய் இராதவாறு, அவர்களுக்கு விடுதலை அளிக்க உடன்பட்டு அவர்களை விடுதலை செய்தார்கள்.

ஆனால் பின்னர் அவர்கள் தங்கள் மனத்தை மாற்றிக்கொண்டார்கள்: தாங்கள் ஏற்கெனவே விடுதலை செய்திருந்த ஆண், பெண்களை மீண்டும் அடிமைப்படுத்திக்கொண்டார்கள். 12 . எனவே ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது:

இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உங்கள் மூதாதையரை அழைத்துவந்த நாளில் நான் அவர்களோடு ஓர் உடன்படிக்கை செய்துகொண்டேன்.

'உங்களிடம் அடிமைகளாய் விற்கப்பட்ட உங்கள் எபிரேய சகோதரர்கள் அனைவரும், ஆறு ஆண்டுகள் உங்களுக்குப் பணிவிடை புரிந்தபின், ஏழாம் ஆண்டின் முடிவில் அனைவரும் உங்களிடமிருந்து விடுதலை பெறவேண்டும்' என்று நான் அப்போது உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். உங்கள் மூதாதையரோ எனக்கு கீழ்ப்படியவில்லை: செவி சாய்க்கவுமில்லை.

ஆனால் நீங்கள் சற்றுமுன்பு மனம் வருந்தி, ஒவ்வோருவரும் தம் சகோதருக்கு விடுதலை கொடுத்ததன் மூலம் என் முன்னிலையில் நேர்மையாக நடந்துகொண்டீர்கள்: என் பெயர் விளங்கும் இல்லத்தில் என் திருமுன் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டீர்கள்.

ஆனால் உங்கள் மனத்தை நீங்கள் மீண்டும் மாற்றிக் கொண்டீர்கள்: என் பெயருக்குக் களங்கம் வருவித்தீர்கள்: தங்கள் விருப்பம்போல் செல்லும்படி நீங்கள் ஒவ்வொருவரும் விடுதலை செய்திருந்த ஆண், பெண்களை நீங்கள் மீண்டும் அடிமைப்படுத்திக் கொண்டீர்கள்.

எனவே, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை: உங்கள் சகோதரருக்கும் அடுத்திருப்பவருக்கும் விடுதலை அறிவிக்கவுமில்லை. ஆகவே வாள், கொள்ளைநோய், பஞ்சம் ஆகியவற்றால் அழிவதற்கான "விடுதலை"யை நான் உங்களுக்கு வழங்குவேன், என்கிறார் ஆண்டவர். உலக அரசுகள் அனைத்துக்கும் திகிழட்டும் சின்னமாய் உன்னை மாற்றுவேன்.

இளங் காளையின் துண்டங்களுக்கு நடுவே கடந்து பேன யூதாவின் தலைவர்கள், எருச஧லுமின் தலைவர்கள், அரசவையோர், குருக்கள், நாட்டுமக்கள் அனைவரும் என் திருமுன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி அதன் உடன்பாடுகளை நிறைவேற்றத் தவறினார்கள்.

எனவே, இரண்டாக வெட்டப்பட்டு, அத்துண்டங்களிடையே கடந்து செல்வதற்காகப் பயன்படுத்திய இளங்காளையைப் போல் அவர்களை நான் ஆக்குவேன்.

அவர்களை அவர்தம் பகைவர்கையிலும், அவர்களது உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும் நான் ஒப்புவிப்பேன். அவர்களுடைய பிணங்கள் வானத்துப் பறவைகளுக்கும் வையகத்து விலங்குகளுக்கும் இரையாகும்.

யூதா அரசன் செதேக்கியாவையும் நாட்டுத் தலைவர்களையும் அவர்தம் பகைவர்கையிலும், அவர்களது உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும், உங்களிடமிருந்து பின்வாங்கி நிற்கும் பாபிலோனிய மன்னனது படையின் கையிலும் ஒப்புவிப்பேன்.

இதோ! நான் கட்டளையிடப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். நான் அவர்களை இந்நகருக்குத் திரும்ப அழைத்துவருவேன். அவர்கள் அதைத் தாக்கிக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவார்கள். யூதாவின் நகர்கள் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்படி செய்வேன்.

அதிகாரம் 35.

யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய நாள்களில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:

"நீ இரேக்காபு குடியிருப்புக்குச் செல். அவர்களோடு பேசி ஆண்டவரின் இல்லத்தில் அறைகளுள் ஒன்றுக்கு அவர்களை அழைத்துவா. அங்கே அவர்கள் பருகிடத் திராட்சை இரசம் கொடு."

அவ்வாறே அபட்சனியாவின் பேரனும் மற்றோர் எரேமியாவின் மகனுமான யாசனியாவையும் அவருடைய சகோதரரையும் புதல்வர் எல்லாரையும் இரேக்காபு வீட்டார் அனைவரையும நான் அழைத்து,

கடவுளின் அடியவரான இக்தலியாவின் மகன் ஆனானுடைய புதல்வரின் அறைக்குக் கூட்டிவந்தேன். அந்த அறை ஆண்டவரின் இல்லத்தில் தலைவர்களின் அறைக்கு அருகில், சல்ழம் மகனும் வாயில் காவலருமான மாசேயாவின் அறைக்குமேல் இருந்தது.

நான் திராட்சை இரசம் நிறைந்த பாத்திரங்களையும கிண்ணங்களையும் இரேக்காபு வீட்டாரின் மக்கள்முன் வைத்து, அவர்களை நோக்கி, "திராட்சை இரசம் பருகுங்கள்" என்றேன்.

அவர்களோ, "நாங்கள் திராட்சை இரசம் பருகமாட்டோ ம்: ஏனெனில் இரேக்காபின் மகனும் எங்கள் மூதாதையுமான யோனதாபு எங்களுக்குக் கொடுத்துள்ள கட்டளையாவது: 'நீங்களோ உங்கள் மக்களோ என்றுமே திராட்சை இரசம் பருகலாகாது.

வீடு கட்டிக்கொள்ளவோ, விதை விதைக்கவோ, திராட்சைத் தோட்டம் நடவோ அதை உடைமையாக்கிக் கொள்ளவோ கூடாது. மாறாக, நீங்கள் தங்கியிருக்கும் இந்நிலத்தின் கண் நெடுநாள்வாழும் பொருட்டு, உங்கள் வாழ்நாள் முழுவதும் கூடாரங்களில் குடியிருங்கள்.'

ஆகையால் இரேக்காபின் மகனும் எங்கள் மூதாதையுமான யோனதாபு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள எல்லாவற்றுக்கும் நாங்கள் கீழ்ப்படிந்து வருகிறோம். அதன்படி நாங்களும் எங்கள் மனைவியர், புதல்வர், புதல்வியர் ஆகிய எல்லாருமே எங்கள் வாழ்நாள் முழுவதும் திராட்சை இரசம் பருகியதுமில்லை:

குடியிருக்க வீடுகள் கட்டிக் கொண்டதுமில்லை. எங்களுக்காகத் திராட்சைத் தோட்டமோ வயலோ விதையோ எதுவுமே கிடையாது.

கூடாரங்களில்தான் நாங்கள் குடியிருக்கிறோம். எங்கள் மூதாதையான யோனதாபு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள அனைத்துக்கும் நாங்கள் கீழ்ப்படிந்து நடக்கிறோம்.

ஆனால் பாபிலோனிய மன்னன் நெபுகத்கேனசர் இந்நாட்டின்மீது படையெடுத்து வந்தபொழுது, 'வாருங்கள், கல்தேயர் படைக்கும் சிரியர் படைக்கும் தப்பித்துக் கொள்ளுமாறு எருசலேமுக்கு ஓடிப் போவோம்' என்று நாங்கள் சொன்னோம். இவ்வாறு எருசலேமில் நாங்கள் தங்கி வாழ்கிறோம்" என்றனர்.

பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:

இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ போய், யூதா மக்களையும் எருசலேம் குடிகளையும் பார்த்து, 'நீங்கள் என் அறிவுரையை ஏற்று, என் சொற்களுக்குக் கீழ்ப்படிய மாட்டீர்களா?' என்று கேள், என்கிறார் ஆண்டவர்.

திராட்சை இரசம் பருகவேண்டாம் என்று இரேக்காபின் மகன் யோனதாபு தம் வீட்டாருக்குக் கொடுத்திருந்த கட்டளை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றுவரை அவர்கள் திராட்சை இரசம் பருகுவது கிடையாது. இவ்வாறு தங்கள் மூதாதையின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்து வருகிறார்கள். நானோ உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லியும் நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.

இறைவாக்கினரான என் ஊழியர் அனைவரையும் நான் உங்களிடம் மீண்டும் மீண்டும் அனுப்பி வைத்தேன். "இப்பொழுது நீங்கள் அனைவரும் உங்கள் தீய வழியினின்று திரும்பி வாருங்கள்: உங்கள் செயல்களைச் சீர்ப்படுத்திக்கொள்ளுங்கள். வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்று அவற்றை வழிபடாதீர்கள். அப்படியானால், உங்களுக்கும் உங்கள் மூதாதையர்க்கும் நான் கொடுத்துள்ள நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள்" என்று அவர்களைச் சொல்லவைத்தேன். நீங்களோ எனக்குச் செவிசாய்க்கவுமில்லை, கீழ்ப்படியவுமில்லை.

இரேக்காபின் மகனான யோனதாபின் மக்கள் தம் மூதாதையின் கட்டளையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இம்மக்களோ எனக்குக் கீழ்ப்படியவில்லை.

எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ, நான் எச்சரித்திருந்த எல்லாத் தீங்குகளும் யூதாவுக்கும் எருசலேமின் அனைத்துக் குடிகளுக்கும் நேரிடச் செய்வேன். ஏனெனில் நான் அவர்களோடு பேசியிருந்தும் அவர்கள் எனக்குச் செவி சாய்க்கவில்லை: நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை.

இரேக்காபின் வீட்டாரிடம் எரேமியா கூறியது: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் உங்கள் மூதாதையாம் யோனதாபின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை எல்லாம் நிறைவேற்றி, அவர் உங்களுக்குக் கொடுத்திருந்த அறிவுரை அனைத்தையும் கடைப்பிடித்து வந்துள்ளீர்கள்.

ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது: என் திருமுன் என்றும் பணிவிடை புரியத்தக்க ஒருவன், இரேக்காபின் மகன் யோனதாபுக்கு இல்லாமல் போகான்.

அதிகாரம் 36.

யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:

நீ ஏட்டுச் சுருள் ஒன்றை எடுத்துக்கொள். நான் உன்னோடு பேசத் தொடங்கின நாள் முதல், அதாவது யோசியாவின் நாள்கள் தொடங்கி இந்நாள்வரை, இஸ்ரயேலைக் குறிக்கும், யூதாவைக் குறித்தும், மற்ற எல்லா நாடுகளைக் குறித்தும் நான் உனக்கு உரைத்துள்ள சொற்கள் எல்லாவற்றையும் அச்சுருளில் எழுது.

யூதா வீட்டாருக்கு நான் அளிக்க எண்ணியுள்ள எல்லாத் தண்டனைகள் பற்றியும் அவர்கள் அனைவரும் கேள்வியுற நேர்ந்தால், அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பக்கூடும். அப்பொழுது அவர்கள் குற்றங்களையும் பாவங்களையும் நான் மன்னிப்பேன்.

ஆகவே நேரியாவின் மகன் பாரூக்கை எரேமியா தம்மிடம் அழைத்தார். ஆண்டவர் தமக்கு உரைத்திருந்த சொற்களை எரேமியா சொல்லச் சொல்ல பாரூக்கு அவற்றை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவைத்தார்.

பின்னர் எரேமியா பாரூக்குக்குக் கொடுத்த கட்டளை: நான் அடைபட்டிருக்கிறேன். ஆண்டவர் இல்லத்திற்குச் செல்ல என்னால் இயலாது.

ஆதலால் நீ அங்குப் போ. நோன்பு நாளன்று அங்குக் குழுமியிருக்கும் மக்களின் செவிகளில் விழும்படி, நான் சொல்லச் சொல்ல நீ எழுதி வைத்த ஆண்டவரின் சொற்களை ஏட்டுச்சுருளினின்று படித்துக்காட்டு. தம் நகர்களிலிருந்து அங்குவரும் யூதா மக்கள் அனைவரும் கேட்கும் படியும் நீ அதை வாசித்துக்காட்டு.

ஒருவேளை அவர்கள் ஆண்டவர் திருமுன் விழுந்து மன்றாடவும், அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பவும் இயலும். ஏனெனில் ஆண்டவர் கடும் சினமுற்று, சீற்றம் கொண்டு, இம்மக்களுக்குத் தீங்கு வருவிப்பதாக அறிவித்துள்ளார்.

இறைவாக்கினர் எரேமியா கட்டளையிட்டிருந்தவாறே நேரியாவின் மகன் பாரூக்கு ஆண்டவர் இல்லத்தில் ஏட்டுச்சுருளினின்று ஆண்டவருடைய சொற்களைப் படித்துக் காட்டினார்.

யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற ஜந்தாம் ஆண்டு ஒன்பதாம் மாதத்தில் எருசலேம் மக்கள் எல்லாரும், யூதாவின் நகர்களினின்று எருசலேமுக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் நோன்பு இருந்தனர்.

அப்பொழுது செயலரான சாப்பானின் மகன் கெமரியாவின் அறையில், அதவாது ஆண்டவர் இல்லத்தின் புதுவாயிலை ஒட்டிய மேல்முற்றத்து அறையில் இருந்தவாறு, மக்கள் எல்லாரும் கேட்கும்படி எரேமியாவின் சொற்களை ஏட்டுச் சுருளினின்று பாரூக்கு படித்துக்காட்டினார்.

ஏட்டுச் சுருளினின்று படிக்கப் பெற்ற ஆண்டவரின் சொற்கள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சாப்பானின் பேரனும் கெமரியா மகனுமான மிக்காயா,

உடனே அரண்மனைக்கு இறங்கிச் சென்று, செயலரின் அறைக்குள் நுழைந்தார். அங்கே செயலராகிய எலிசாமா, செமாயாவின் மகன் தெலாயா, அக்போரின் மகன் எல்னாத்தான், சாப்பானின் மகன் கெமரியா, அனனியாவின் மகன் செதேக்கியா ஆகியோர் உள்படத் தலைவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.

மக்கள் கேட்கும்படி ஏட்டுச் சுருளினின்று பாரூக்கு படித்துக்காட்டியிருந்த சொற்கள் எல்லாவற்றையும் மிக்காயா தலைவர்களிடம் எடுத்துரைத்தார்.

பின்னர் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து, கூசியின் கொள்ளுப்பேரனும் செலேமியாவின் பேரனும் நெத்தனியாவின் மகனுமான எகுதியைப் பாரூக்கிடம் அனுப்பிவைத்தார்கள். "மக்கள் செவிகளில் விழும்படி நீ படித்துக் காட்டிய ஏட்டுச்சுருளை உன் கையில் எடுத்துக்கொண்டு வா", என அவருக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நேரியாவின் மகன் பாரூக்கு ஏட்டுச்சுருளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தார்.

அப்பொழுது அவர்கள் அவரிடம், "நீ இங்கே அமர்ந்து, நாங்கள் கேட்கும்படி அதைப் படி" என்றார்கள். அவரும் அவர்கள் காதில் விழும்படி அதைப் படித்தார்.

எல்லாச் சொற்களையும் அவர்கள் கேட்டுத் திகிலுற்று, ஒருவர் ஒருவரை நோக்கினர். பின் பாரூக்கைப் பார்த்து, "இவற்றை எல்லாம் நாங்கள் கண்டிப்பாக அரசரிடம் தெரிவிக்க வேண்டும்" என்றார்கள்.

தொடர்ந்து, "இச்சொற்கள் எல்லாவற்றையும் நீ எவ்வாறு எழுதினாய்? அவன் சொல்ல நீ எழுதினாயா? சொல்" என்று அவர்கள் பாரூக்கை வினவினார்கள்.

அதற்குப் பாரூக்கு, "எரேமியா சொல்லச் சொல்ல, இவற்றை எல்லாம் நான் மை கொண்டு ஏட்டுச்சுருளில் எழுதினேன்" என்று மறுமொழி கூறினார்.

அப்பொழுது தலைவர்கள் பாரூக்கை நோக்கி, "நீயும் எரேமியாவும் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாதிருக்கட்டும்" என்றார்கள்.

செயலர் எலிசாமாவின் அறையிலேயே ஏட்டுச்சுருளை வைத்துவிட்டுத் தலைவர்கள் அரண்மனை முற்றத்திற்குள் சென்று, நடந்த எல்லாவற்றையும் அரசனுக்குத் தெரிவித்தார்கள்.

அரசனோ ஏட்டுச்சுருளை எடுத்துவருமாறு எகுதியை அனுப்பிவைத்தான். செயலர் எலிசாமாவின் அறையினின்று எகுதி அதை எடுத்துவந்து, அரசனும் அவனைச் சூழ்ந்து நின்ற தலைவர்கள் அனைவரும் கேட்கப் படித்தான்.

அது ஆண்டின் ஒன்பதாம் மாதம், அரசன் தன் குளிர்கால மாளிகையில் அமர்ந்திருந்தான். அவன்முன் கனல் தட்டில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.

எகுதி மூன்று அல்லது நான்கு பத்திகளைப் படித்ததும், அரசன் கத்தியால் அப்பகுதியை அறுத்து அனல்தட்டில் இருந்த நெருப்பில் போட்டான். இவ்வாறு ஏட்டுச்சுருள் முழுவதும் எரிந்து சாம்பலாகும் வரை அவன் செய்து கொண்டிருந்தான்.

அரசனோ இச்சொற்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவனுடைய பணியாளர்களோ அஞ்சவில்லை: தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொள்ளவுமிலலை.

அரசன் ஏட்டுச்சுருளை எரிக்காதவாறு அவனை எல்னாத்தான், தெலாயா, கெமரியா ஆகியோர் வேண்டியும், அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.

மாறாக எழுத்தர் பாரூக்கையும் இறைவாக்கினர் எரேமியாவையும் பிடித்து வருமாறு அரசனின் மகன் எரகுமவேல், அஸ்ரியேலின் மகன் செராயா, அப்தவேலின் மகன் செலேமியா ஆகியோருக்கு அரசன் கட்டளையிட்டான். ஆண்டவரோ அவர்களை மறைத்துவைத்திருந்தார்.

எரேமியா சொல்ல, பாரூக்கு எழுதியிருந்த சொற்கள் அடங்கிய ஏட்டுச்சுருளை அரசன் எரித்த பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:

நீ மற்றுமோர் ஏட்டுச்சுருளை எடுத்துக்கொள்: யூதா அரசன் யோயாக்கிம் முன்பு எரித்த ஏட்டுச்சுருளில் அடங்கியிருந்த எல்லாச் சொற்களையும் இதில் எழுதிவை:

பின்னர் யூதா அசரனான யோயாக்கிமைக் குறித்து நீ சொல்லவேண்டியது: ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "பாபிலோனிய மன்னன் திண்ணமாய் வந்து, இந்நாட்டை அழித்துவிடுவான்: மனிதரையும் விலங்குகளையும் வெட்டி வீழ்த்துவான் என்று நீ ஏன் எழுதினாய்?" என்று கூறி அன்றோ நீ அந்த ஏட்டுச் சுருளை எரித்தாய்.

எனவே யூதாவின் அரசன் யோயாக்கிமைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: அவன் வழிமரபினருள் எவனும் தாவீதின் அரியணையில் அமரமாட்டான். அவனது பிணம் வெளியில் எறியப்பட்டு, பகலின் வெயிலிலும் இரவின் குளிரிலும் கிடக்கும்.

அரசனையும் அவன் வழிமரபினர், பணியாளர் ஆகியோரையும் அவர்களின் குற்றங்கள் பொருட்டுத் தண்டிப்பேன். நான் எச்சரித்திருந்தும் அவர்கள் பொருட்படுத்தியிராத தீங்குகளை அவர்கள் மேலும் எருசலேம் குடிகள்மேலும் யூதா மக்கள்மேலும் வரச் செய்வேன்.

பின்னர் எரேமியா மற்றுமோர் ஏட்டுச்சுருளை எடுத்து, நேரியாவின் மகனும் எழுத்தருமான பாரூக்கிடம் கொடுத்தார். யூதாவின் அரசன் யோயாக்கிம் எரித்த ஏட்டுச்சுருளில் காணப்பட்ட எல்லாச் சொற்களையும் எரேமியா சொல்லச் சொல்லப் பாரூக்கு மீண்டும் அவற்றை ஏட்டுச்சுருளில் எழுதினார். அவை போன்ற வேறு பலசொற்களும் அவற்றோடு சேர்க்கப்பெற்றன.

அதிகாரம் 37.

யோசியாவின் மகனும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூதா நாட்டின் அரசனாக ஏற்படுத்தியிருந்தவனுமான செதேக்கியா, யோயாக்கிமின் மகன் கோனியாவுக்குப் பதிலாக ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான்.

அவனோ, அவனுடைய பணியாளரோ நாட்டு மக்களோ இறைவாக்கினர் எரேமியா வாயிலாக ஆண்டவர் உரைத்திருந்த சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை.

செலேமியாவின் மகன் எகுக்கலையும், மாசேயாவின் மகனும் குருவுமான செப்பனியாவையும் அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எதேமியாவிடம் அனுப்பிவைத்து, "நம் கடவுளான ஆண்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்" என்று அவரை வேண்டிக்கொண்டான்.

அந்நாள்களில் மக்களிடையே எரேமியா தடையின்றி நடமாடிக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை.

இதற்கிடையில் பார்வோனின் படை எகிப்தினின்று புறப்பட்டு வந்தது. எருசலேமை ஏற்கெனவே முற்றுகையிட்டுக் கொண்டிருந்த கல்தேயர் இச்செய்தியைக் கேள்வியுற்றதும், எருசலேமைவிட்டுப் பின்வாங்கினர்.

அப்பொழுது இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் அறிவுரையை நாடி உங்களை என்னிடம் அனுப்பிவைத்த யூதா அரசனிடம் நீங்கள் சொல்லவேண்டியது: இதோ, உனக்குத் துணை புரிய வந்துள்ள பார்வோனின் படை தன் சொந்த நாடான எகிப்துக்கே திரும்பிப் போகும்.

கல்தேயர் மீண்டும் வந்து இந்நகரைத் தாக்குவர்: அதனைக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவர்.

ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கல்தேயர் நம்மை விட்டுத் திரும்பிப் போவது உறுதி என்று சொல்லி உங்களையே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் அவர்கள் திரும்பிப் போகவேமாட்டார்கள்.

உங்களை எதிர்த்துப் போரிட்டு வரும் கல்தேயரின் படை முழுவதையும் நீங்கள் முறியடித்தாலும், அவர்களுள் தாக்குண்ட வீரர் மட்டுமே தம் கூடாரங்களில் எஞ்சியிருந்தாலும், அவர்களே கிளர்ந்தெழுந்து இந்நகரைத் தீக்கிரையாக்குவர்.

பார்வோன் படையெடுத்து வரவே, கல்தேயர் படை எருசலேமை விட்டுப் பின்வாங்கியது.

அப்பொழுது எரேமியா, மக்கள் முன்னிலையில் பாகப் பிரிவினை செய்து கொள்ள, எருசலேமை விட்டுப் பென்யமின் நாட்டுக்குப் புறப்பட்டார்.

அவர் பென்யமின் வாயிலை அடைந்தபொழுது அனனியாவின் பேரனும் செலேமியாவின் மகனுமான இரிய்யா என்னும் மெய்க்காப்பாளர் தலைவன் இறைவாக்கினர் எரேமியாவைத் தடுத்து, "நீ கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயல்கிறாய்" என்று கூறி, அவரைப் பிடித்தான்.

அதற்கு எரேமியா, "அது பொய். நான் கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயலவில்லை" என்றார். அவர் சொன்னதை இரிய்யா கேட்கவில்லை. எனவே அவன் எரேமியாவைப் பிடித்து, தலைவர்களிடம் கொண்டு வந்து நிறுத்தினான்.

தலைவர்கள் சினம் கொண்டு எரேமியாவை அடித்து, செயலர் யோனத்தானுடைய வீட்டில் அடைத்துவைத்தார்கள்: ஏனெனில் அவ்வீடு ஒரு சிறைக்கூடமாய் மாற்றப்பட்டிருந்தது.

எரேமியா நிலவறைக் கூடத்திற்குள் சென்று அங்கே நெடுநாள் தங்கியிருந்தார்.

அப்பொழுது அரசன் செதேக்கியா ஆளனுப்பி, எரேமியாவைத் தன்னிடம் அழைத்து வரச் செய்தான். தன் மாளிகையில் அவருடன் தனியாகப் பேசி, "ஆண்டவரிடமிருந்து வாக்கு ஏதேனும் உண்டா?" என்று வினவினான். அதற்கு எரேமியா, "ஆம், உண்டு. பாபிலோனிய மன்னனிடம் நீர் கையளிக்கப்படுவீர்" என்றார்.

தொடர்ந்து எரேமியா அரசன் செதேக்கியாவிடம் கூறியது: "உமக்கோ உம் பணியாளருக்கோ இம்மக்களுக்கோ நான் செய்த தீங்குதான் என்ன? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்?

. "உங்கள்மீதோ இந்நாட்டின் மீதோ பாபிலோனிய மன்னன் படையெடுத்து வரமாட்டான் என்று அறிவித்த உங்கள் இறைவாக்கினர் இப்போது எங்கே?

என் தலைவரே! என் அரசரே! தயவு செய்து எனக்குச் செவிகொடும்: என் விண்ணப்பத்தைக் கனிவாய் ஏற்றருளும். செயலர் யோனத்தானின் வீட்டுக்கு என்னை மீண்டும் அனுப்பி வைக்காதீர். அனுப்பினால் நான் அங்கேயே மடிந்து போவேன்."

பின்னர் அரசன் செதேக்கியா கட்டளையிடவே, எரேமியா காவல் கூடத்திற்கு மாற்றப்பட்டார். நகரின் அப்பம் அனைத்தும் தீரும்வரை அப்பக்காரர் தெருவினின்று ஓர் அப்பம் அவருக்கு நாள்தோறும் கொடுக்கப்பட்டுவந்தது. இவ்வாறு எரேமியா காவல்கூடத்தில் தங்கியிருந்தார்.

அதிகாரம் 38.

மாத்தானின் மகன் செபற்றியா, பஸ்கூரின் மகன் கெதலியா, செலேமியாவின் மகன் யூக்கால், மல்கியாவின் மகன் பஸ்கூர் ஆகியோர், மக்கள் எல்லாருக்கும் எரேமியா அறிவித்துக் கொண்டிருந்த கீழ்க்கண்ட சொற்களைக் கேட்டார்கள்:

ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இந்நகரில் தங்கியிருப்பவன் வாள், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவற்றால் மடிவான். கல்தேயர் பக்கம் தப்பிச் செல்பவனோ பிழைத்துக்கொள்வான். அவன் உயிரே அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளாய் இருக்கும். அவன் உயிர் பிழைப்பான்.

ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனிய மன்னனது படையிடம் இந்நகர் கையளிக்கப்படுவது உறுதி. அவனும் அதைக் கைப்பற்றிக் கொள்வான்.

பின்னர் தலைவர்கள் அரசனைப் பார்த்து, "இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாகவேண்டும்: ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை" என்றார்கள்.

அதற்கு அரசன் செதேக்கியா, "நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே" என்றான்.

எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல்கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை: சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார்.

அரண்மனையில் இருந்த அரசவையோருள் ஒருவரான எபேது மெலேக்கு என்ற எத்தியோப்பியர் எரேமியா பாழ்ங்கிணற்றில் தள்ளப்பட்டதை அறியவந்தார். அப்பொழுது அரசன் பென்யமின் வாயிலில் அமர்ந்திருந்தான்.

எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி,

"என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்: ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது" என்று கூறினார்.

அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபெது மெலேக்கை நோக்கி, "உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் பக்கிவிடு" என்று கட்டளையிட்டான்.

எனவே எபேது மெலேக்கு ஆள்களைத் தம்மோடு அழைத்துக் கொண்டு அரச அரண்மனையின் கருவூலத்திற்குக் கீழே சென்றார். அங்கிரந்து பழைய ஆடைகளையும் கந்தல் துணிகளையும் எடுத்து, கயிற்றில் கட்டி, கிணற்றில் கிடந்த எரேமியாவிடம் இறக்கினார்.

எத்தியோப்பியரான எபேது மெலேக்கு எரேமியாவிடம், "இந்தப் பழைய ஆடைகளையும் கந்தல் துணிகளையும் உம் அக்குள்களுக்கும் கயிற்றுக்கும் இடையே வைத்துக் கொள்ளும்" என்று வேண்டினார். எரேமியாவும் அவ்வாறே செய்தார்.

பின்னர் அவர்கள் எரேமியாவைக் கயிற்றால் வெளியே பக்கினார்கள். அதன்பின் எரேமியா காவல்கூடத்தில் தங்கி இருந்தார்.

அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எரேமியாவிடம் ஆளனுப்பி, அவரை ஆண்டவர் இல்லத்தின் மூன்றாம் வாயிலுக்கு வரவழைத்தான். அரசன் எரேமியாவை நோக்கி,"நான் உம்மிடம் ஒன்று கேட்பேன். நீர் என்னிடம் எதையும் மறைக்கக் கூடாது" என்று சொன்னான்.

எரேமியா செதேக்கியாவை நோக்கி, "நான் உள்ளதைச் சொன்னால் நீர் என்னைத் திண்ணமாய்க் கொன்றுபோடமாட்டீரா? நான் உமக்கு அறிவுரை கூறினாலும் நீர் கேட்கமாட்டீரே!" என்றார்.

அதற்கு அரசன் செதேக்கியா "நமக்கு இந்த உயிர் கொடுத்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நான் உம்மைக் கொல்லமாட்டேன். உமது உயிரைப் பறிக்கத்தேடும் இம்மனிதர் கையிலும் உம்மை ஒப்புவிக்க மாட்டேன்" என்று எரேமியாவுக்கு மறைவாக ஆணையிட்டுக் கூறினான்.

எரேமியா செதேக்கியாவிடம் கூறியது: "படைகளின் கடவுளும் இஸ்ரயேலின் கடவுளுமாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீர் உடனே பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் சரணடைந்தால், உயிர் வாழ்வீர். இந்நகர் தீக்கிரையாகாது. நீரும் உம் வீட்டாரும் பிழைத்துக்கொள்வீர்கள்.

பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் நீர் சரணடையாவிட்டால், இந்நகர் கல்தேயரிடம் கையளிக்கப்படும்: அவர்கள் அதைத் தீக்கிரையாக்குவார்கள். நீரோ அவர்களது கைக்ககுத் தப்பமாட்டீர்".

அப்பொழுது அரசன் செதேக்கியா எரேமியாவைப் பார்த்து, "கல்தேயரிடம் ஏற்கெனவே சரணடைந்துள்ள யூதா நாட்டவர் மட்டில் எனக்கு அச்சமாய் உள்ளது. நான் அவர்களிடம் கையளிக்கப்பட்டு அவர்களது பழிப்புக்கு ஆளாவேன்" என்றான்.

அதற்கு எரேமியா, "இல்லை, நீர் கையளிக்கப்படமாட்டீர்: நான் உமக்கு எடுத்துரைக்கும் ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடும். அது உமக்கு நலம் பயக்கும். நீரும் உயிர் பிழைப்பீர்.

நீர் சரணடைய மறுப்பீராகில், இவ்வாறு நடக்குமென ஆண்டவர் எனக்குக் காட்டியுள்ளார்:

யூதா அரசனின் அரண்மனையில் எஞ்சியிருக்கும் பெண்கள் எல்லாரும் பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் 'நம்பிக்கைக்குரிய உம் நண்பர்கள் உம்மை வஞ்சித்து அடக்கி விட்டார்கள்: உம் கால்களைச் சேற்றில் அமிழச்செய்து உம்மைவிட்டு அகன்று போனார்கள்' எனக் கூறுவார்கள்.

உம் மனைவியர், மக்கள் அனைவரும் கல்தேயரிடம் கொண்டுபோகப்படுவார்கள்: நீரோ அவர்கள் கைக்குத் தப்பமாட்டீர். மாறாக, பாபிலோனிய மன்னனால் நீர் பிடிபடுவீர். இந்நகர் தீக்கிரையாகும்" என்றார்.

அதற்குச் செதேக்கியா எரேமியாவிடம், "நாம் பேசிக் கொண்டது யாருக்கும் தெரியவேண்டாம். அப்படியானால் நீர் சாவுக்குள்ளாகமாட்டீர்.

நான் உம்மோடு பேசினதாகத் தலைவர்கள் கேள்வியுற்று, உம்மிடம் வந்து, 'நீர் அரசரிடம் என்ன கூறினீர்? அரசர் உம்மிடம் என்ன சொன்னார்? எங்களிடம் எதையும் மறைக்காதீர். நாங்கள் உம்மைக் கொல்ல மாட்டோ ம்' என்று சொன்னால்,

'நான் மடிந்துபோகாதவாறு யோனத்தான் வீட்டிற்கு என்னை மீண்டும் அனுப்பிவைக்க வேண்டாம் என்று நான் அரசனை வேண்டிக்கொண்டேன்' என்று நீர் அவர்களிடம் சொல்லி விடும்" என்றான்.

பின்னர் தலைவர்கள் அனைவரும் எரேமியாவிடம் வந்து, அவரை வினவியபொழுது, அரசன் சொல்லியிருந்தபடியே அவர் பதில் உரைத்தார். எனவே அத்தோடு அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள். பேசியதை யாரும் ஒட்டுக்கேட்கவில்லை.

எருசலேம் கைப்பற்றப்பட்ட நாள்வரை எரேமியா காவல் கூடத்திலேயே இருந்தார்.

அதிகாரம் 39.

யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதத்தில், பாபிலோனிய மன்னன் நெபுகதனேசர் அவனுடைய எல்லாப் படைகளோடும் எருசலேமுக்கு எதிராக வந்து அதை முற்றுகையிட்டான்.

செதேக்கியாவின் பதினொன்றாம் ஆண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகர மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது.

நேர்கல் சரேட்சர், சம்கூர் நெபோ, சர்செக்கிம் ரப்சாரிம், நேர்கல் சரேட்சர் ரப்மாகு உள்படப் பரிபலோனிய மன்னனின் தலைவர்கள் அனைவரும் உள்னே புகுந்து, நடுவாயிலில் அமர்ந்தார்கள்.

யூதாவின் அரசன் செதேக்கியாவும் போர் வீரர் அனைவரும் அவர்களைக் கண்டவுடன் அரச பூங்காவின் இரு மதில்களுக்கிடையே அமைந்த வாயில் வழியாக இரவோடு இரவாய் நகரைவிட்டு வெளியேறி, அராபாவை நோக்கித் தப்பியோடினர்.

ஆனால் கல்தேயப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோ சமவெளியில் செதேக்கியாவைப் பிடித்து, ஆமாத்து நாட்டின் ரிப்லாவில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான்.

பாபிலோனிய மன்னன் ரிப்லாவில் செதேக்கியாவின் புதல்வர்களை அவன் கண்முன்னே கொன்றான். மேலும் யூதாவின் தலைவர்கள் அனைவரையும் கொன்றான்.

அவன் செதேக்கியாவின் கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச்சென்றான்.

அரச மாளகையையும் மக்களின் வீடுகளையும் கல்தேயர் தீக்கிரையாக்கினர்: எருசலேம் மதில்களையும் தகர்த்தெறிந்தனர்.

மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான், நகரில் எஞ்சியிருந்த மக்களையும் தம்மிடம் சரணடைந்திருந்தவர்களையும் பாபிலோனுக்கு நாடுகடத்தினார்.

ஆனால் யாதுமற்ற ஏழைகளை மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் யூதா நாட்டில் விட்டுவைத்ததோடு திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் அவர்களுக்கு வழங்கினார்.

பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் எரேமியாவைக் குறித்து மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதானுக்குக் கொடுத்த கட்டளை:

"இவரைக் கூட்டிக்கொண்டு போய் நன்கு கவனித்துக் கொள்: தீங்கு எதுவும் அவருக்குச் செய்யாதே: அவர் விருப்பப்படியே அவரை நடத்து."

மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான், அரசவையோர் தலைவன் நெபுசஸ்பான் ரப்சாரிம், நேர்கல் சரேட்சர் ரப்மாகு உள்படப் பாபிலோனிய மன்னனின் தலைவர்கள் அனைவரும் ஆளனுப்பி,

காவல் கூடத்தினின்று எரேமியாவைக் கூட்டி வந்தனர். வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்லும்படி சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவிடம் அவரை ஒப்படைத்தனர். எனவே அவர் மக்களிடையே வாழ்ந்துவந்தார்.

எரேமியா காவல்கூடத்தில் இன்னும் அடைபட்டிருக்கையில், ஆண்வரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது:

நீ போய், எத்தியோப்பியரான எபேதுமெலேக்கிடம் சொல்: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இந்நகருக்கு எதிராக நான் கூறியிருந்தவற்றை நிறைவேற்றுவேன்: நன்மையை அல்ல, தீமையையே வருவிப்பேன். அந்நாளில் இவை உன் கண் முன்பாகவே நிகழும்.

ஆயினும், அந்நாளில் நான் உன்னை விடுவிப்பேன், என்கிறார் ஆண்டவர். நீ யாரைக் குறித்து அஞ்சுகிறாயோ அம்மனிதர்களிடம் நீ கையளிக்கப்பட மாட்டாய்.

நான் உறுதியாக உன்னை உயிரோடு காப்பாற்றுவேன். நீ வாளால் மடிய மாட்டாய். உன் உயிரே உனது கொள்ளைப்பொருளாய் அமையும்: ஏனெனில், நீ என்னில் நம்பிக்கை வைத்துள்ளாய், என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 40.

எருசலேமினின்றும் யூதாவினின்றும் விலங்கிடப்பட்டு நாடுகடத்தப்பட்டோ ராய்ப் பாபிலோனுக்குச் சென்று கொண்டிருந்த மக்களிடையே எரேமியாவும் விலங்கிடப்பட்டிருந்ததைக் கண்ட மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் அவரை இராமாவில் விடுதலை செய்தார். அதன்பின் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.

மெய்க்காப்பாளரின் தலைவர், எரேமியாவைத் தம்மிடம் அழைத்து, "உம் கடவுளாகிய ஆண்டவர் இந்த இடத்தின்மீது இத்தீங்கு வரும் என்று அறிவித்துள்ளார்.

அவர் சொன்னவாறே எல்லாம் நிகழவும் செய்துள்ளார். ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்துள்ளீர்கள். அவருடைய குரலுக்கு நீங்கள் செவிசாய்க்கவில்லை. ஆகவே தான் இத்துன்பம் உங்களுக்கு நேர்ந்துள்ளது.

இதோ, நான் கைவிலங்கினின்று உம்மை இன்று விடுவிக்கிறேன். என்னோடு பாபிலோனுக்கு வர உமக்கு விருப்பமானால் வாரும்: நான் உம்மை நன்கு கவனித்துக் கொள்வேன். என்னோடு வர உமக்கு விருப்பமில்லை எனில், நீர் இங்கேயே இருந்து கொள்ளும். நாடு முழுவதும் உம் கண்முன் உள்ளது: எங்குச் செல்வது நல்லது என்றும் வசதியானது என்றும் உமக்குப் படுகிறதோ அங்கே நீர் செல்லும்.

நீர் இங்கேயே தங்க விரும்பினால், யூதாவின் நகர்களுக்கு ஆளுநராய்ப் பாபிலோனிய மன்னன் ஏற்படுத்தியிருக்கும் சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவிடம் போய், அவனோடு மக்களிடையே வாழும். இல்லையெனில் எங்குப் போக உனக்கு விருப்பமோ, அங்கேயே செல்லும்" என்று கூறினார். பின்னர் மெய்க்காப்பாளரின் தலைவர் உணவுப் பொருள்களும் அன்பளிப்பும் எரேமியாவுக்கு அளித்து, அவரை அனுப்பிவைத்தார்.

எரேமியா மிஸ்பாவுக்குச் சென்று, நாட்டில் எஞ்சியிருந்த மக்களிடையே அகிக்காமின் மகன் கெதலியாவுடன் வாழ்ந்துவந்தார்.

அகிக்காம் மகன் கெதலியாவைப் பாபிலோனிய மன்னன் ஆளுநராக ஏற்படுத்தியிருக்கிறான் என்றும், பாபிலோனுக்கு நாடு கடத்தப்படாத ஏழைகளான ஆண், பெண், சிறுவர்களை அவரது பொறுப்பில் விட்டுள்ளான் என்றும் நாட்டில் ஆங்காங்கே இருந்த படைத்தலைவர்கள் எல்லாரும் அவர்களுடைய ஆள்களும் கேள்வியுற்றனர்.

அவர்களுள் நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும், காரயாகின் புதல்வர் யோகனானும் யோனத்தானும், தன்குமேத்தின் மகன் செராயாவும், நெற்றோபாவைச் சார்ந்த ஏப்பாயின் புதல்வரும், மாக்காவின் மகன் யாசனியாவும், அவர்களுடைய ஆள்களும் மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் சென்றார்கள்.

அவர்களிடமும் அவர்களுடைய ஆள்களிடமும் சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியா ஆணையிட்டு, "கல்தேயருக்கு அடிபணிய நீங்கள் தயங்க வேண்டாம். இந்நாட்டில் தங்கி வாழுங்கள்: பாபிலோனிய மன்னனுக்குப் பணிந்திருங்கள்: அது உங்களுக்கு நலம் பயக்கும்.

நானோ மிஸ்பாவில் தங்கியிருப்பேன்: நம்மிடம் வரவிருக்கும் கல்தேயர்முன் உங்கள் பிரதிநிதியாய் இருப்பேன்: நீங்கள் போய்த் திராட்சை இரசம், பழங்கள், எண்ணெய் முதலியவற்றைச் சேகரித்துப் பாத்திரங்களில் வையுங்கள். நீங்கள் கைப்பற்றியுள்ள நகர்களில் குடியிருங்கள்" என்று சொன்னார்.

இதே போன்று மோவாபிலும் அம்மோனியரிடையிலும் ஏதோமிலும் மற்ற நகர்களிலும் வாழ்ந்து வந்த யூதா நாட்டினர் அனைவரும், பாபிலோனிய மன்னன் யூதாவில் சிலரை விட்டுவைத்துள்ளான் என்றும், சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவை அவர்களின் ஆளுநராக ஏற்படுத்தியுள்ளான் என்றும் அறிய வந்தார்கள்.

அப்பொழுது யூதா நாட்டினர் அனைவரும் தாங்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்த எல்லா இடங்களினின்றும் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிவந்து, மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் சேர்ந்து கொண்டார்கள். அங்குத் திராட்சை இரசமும் பழங்களும் மிகுதியாய்ச் சேர்த்துவைத்தார்கள்.

காரயாகின் மகன் யோகனானும் நாட்டில் ஆங்காங்கே இருந்த படைத்தலைவர்கள் அனைவரும் மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் சென்று,

. "அம்மோனியரின் மன்னனாகிய பகலீசு உம்மைக் கொல்லும் பொருட்டு நெத்தனியாவின் மகன் இஸ்மயேலை அனுப்பி வைத்துள்ளான் என்று உறுதியாய் உமக்குத் தெரியுமன்றோ!" என்று கூறினர். ஆனால் அகிக்காமின் மகன் கெதலியா அவர்களை நம்பவில்லை.

பின்னர் காரயாகின் மகன் யோகனான் மிஸ்பாவில் கெதலியாவிடம் தனியாகச் சென்று, "நான் பேய், நெத்தனியாவின் மகன் இஸ்மயேலைக் கொல்ல எனக்கு அனுமதி கொடும். அது யாருக்கும் தெரியவராது. உம்மை ஏன் அவன் கொலைசெய்யவேண்டும்? அதனால் உம் பொறுப்பில் கூடி வாழும் யூதா நாட்டினர் அனைவரும் சிதறிப் போவார்கள்: யூதாவின் எஞ்சினோரும் அழிவார்களே!" என்று சொன்னான்.

அகிக்காமின் மகன் கெதலியாவோ காரயாகின் மகன் யோகனானை நோக்கி, "நீ இச்செயலைச் செய்யாதே. ஏனெனில் இஸ்மயேலைப் பற்றி நீ கூறுவது பொய்" என்றார்.

அதிகாரம் 41.

ஏழாம் மாதத்தில் அரச குலத்தவனும் அரசனின் உயர் அதிகாரிகளுள் ஒருவனுமான எலிசாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனுமான இஸ்மயேல் தன்னோடு பத்துப் பேரை அழைத்துக் கொண்டு மிஸ்பாவில் இருந்த அகிக்காமின் மகன் கெதலியாவிடம் வந்தான். அங்கு அவர்கள் அனைவரும் ஒன்றாக உணவு அருந்திக் கொண்டிருந்த வேளையில்,

நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும் அவனோடு இருந்த பத்துப் பேரும் எழுந்து சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவை-பாபிலோனிய மன்னன் நாட்டின் ஆளுநராக ஏற்படுத்தியிருந்த அவரை-வாளால் வெட்டிக் கொன்றார்கள்.

மேலும் கெதலியாவோடு மிஸ்பாவில் இருந்த யூதா நாட்டினர் அனைவரையும் அங்கு இருக்க நேரிட்ட கல்தேய வீரர்களையும் இஸ்மயேல் வெட்டி வீழ்த்தினான்.

கெதலியா கொலை செய்யப்பட்டு இரண்டு நாள் ஆனபின்னும் அது பற்றி யாருக்கும் தெரியவில்லை.

அப்படியிருக்க செக்கேம், சீலோ, சமாரியா ஆகிய இடங்களிலிருந்து தாடியைச் சிரைத்துக்கொண்டு, ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, உடலைக் கீறிக் கொண்ட எண்பது பேர் ஆண்டவரின் இல்லத்தில் ஒப்புக்கொடுக்குமாறு தானியப் படையல்களும் பபமும் கையில் ஏந்திக் கொண்டு வந்தனர்.

அவர்களைச் சந்திக்க நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் மிஸ்பாவினின்று புறப்பட்டு அழுது கொண்டே சென்றான். அவர்களைச் சந்தித்தபோது, "அகிக்காமின் மகன் கெதலியாவை வந்து பாருங்கள்" என்று அவர்களிடம் கூறினான்.

அவர்கள் நகருக்குள் நுழைந்திடவே, நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும் அவனோடு இருந்தவர்களும் அவர்களைக் கொன்று, நிலவறைக்குள் தள்ளிவிட்டனர்.

அவர்களுள் பத்து பேர் இஸ்மயேலை நோக்கி, "எங்களைக் கொல்லாதீர்: ஏனெனில் கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், தேன் ஆகியவற்றைச் சேர்த்து வயலில் மறைத்து வைத்திருக்கிறோம்" என்றார்கள். எனவே அவன் அவர்கள் சகோதரர்களோடு அவர்களைக் கொல்லாமல் விட்டுவிட்டேன்.

நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் கெதலியாவை முன்னிட்டுக் கொன்று குவித்த மனிதர்களின் பிணங்கள் எல்லாவற்றையும ஒரு நிலவறைக்குள் தள்ளி அதை நிரப்பினான். அது இஸ்ரயேல் அரசன் பாசாவினின்று தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அரசன் ஆசா வெட்டியிருந்ததாகும்.

மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் அகிக்காமின் மகன் கெதலியா பொறுப்பில் விட்டிருந்த அரசனின் புதல்வியரையும் மிஸ்பாவில் இருந்த மற்ற மக்கள் எல்லாரையும் இஸ்மயேல் சிறைப்பிடித்துக்கொண்டு அம்மோனியரின் நாட்டுக்குப் புறப்பட்டுப் போனான்.

நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் செய்திருந்த கொடுமை அனைத்தையும் பற்றிக் காரயாகின் மகன் யோகனானும் அவரோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரும் அறியவந்தபொழுது,

அவர்கள் தங்களோடு இருந்த ஆள்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு, நெத்தனியாவின் மகன் இஸ்மயேலோடு போரிடப் புறப்பட்டு, கிபயோனின் பெரிய நீர்நிலை அருகே அவனை நெருங்கினார்கள்.

இஸ்மயேலின் பிடியிலிருந்த மக்கள் எல்லாரும் காரயாகின் மகன் யோகனானையும் அவரோடு இருந்த படைத்தலைவர்களையும் கண்டு மகிழ்ச்சியுற்றார்கள்.

இஸ்மயேல் சிறைப்படுத்தி மிஸ்பாவிலிருந்து கூட்டிச் சென்றிருந்த மக்கள் எல்லோரும் அவனை விட்டுவிட்டுக் காரயாகின் மகன் யோகனானோடு சேர்ந்து கொண்டார்கள்.

ஆனால் நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் எட்டுப் பேரோடு யோகனானிடமிருந்து தப்பி, அம்மோனியரின் நாட்டுக்கு ஓடிப் போனான்.

நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் அகிக்காமின் மகன் கெதலியாவைக் கொன்றபின் மிஸ்பாவில் எஞ்சியிருந்தோரை-படைவீரர், பெண்டிர், சிறுவர், அரசவையோர் ஆகியோரை-சிறைப்பிடித்து இழுத்து வந்திருந்தான். இவர்களைக் காரயாகின் மகன் யோகனானும் அவரோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரும் கிபயோனிலிருந்து அழைத்துவந்தார்கள்.

அவர்கள் எல்லாரும் புறப்பட்டு, பெத்லெகேமுக்கு அருகே இருந்த கேருத்கிம்காமினில் தங்கினார்கள்.

பாபிலோனிய மன்னன் நாட்டின் ஆளுநராக ஏற்படுத்தியிருந்த அகிக்காமின் மகன் கெதலியாவை நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் கொன்று போட்ட காரணத்தினால், அவர்கள் கல்தேயருக்கு அஞ்சி அவர்களிடம் இருந்து தப்பிக்கும்படி எகிப்துக்குப் போக எண்ணியிருந்தார்கள்.

அதிகாரம் 42.

பின்னர் படைத்தலைவர்கள் அனைவரும் காரயாகின் மகன் யோகனானும் ஓசயாவின் மகன் ஏசனியாவும் சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் எல்லாரும் அருகில் வந்தார்கள்.

அவர்கள் இறைவாக்கினர் எரேமியாவிடம் சொன்னது:"எம் வேண்டுகோளைக் கேட்டருளும், எங்களுக்காகவும் எஞ்சியிருக்கும் இவர்கள், அனைவருக்காகவும் உம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும்-ஏனெனில் நீர் காண்பதுபோல் திரளாக இருந்த எங்களுள் ஒரு சிலரே எஞ்சியிருக்கிறோம்-

நாங்கள் நடக்க வேண்டிய வழியையும் செய்யவேண்டிய செயல்களையும் உம் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்குக் காட்டியருள்வாராக."

இறைவாக்கினர் எரேமியா அவர்களை நோக்கி, "நீங்கள் சொல்வது எனக்கும் புரிகிறது. அதற்கிணங்க, உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் நான் மன்றாடுவேன். ஆணடவர் உங்களுக்குச் சொல்லவிருக்கும் மறுமொழியை உங்களிடம் தெரிவிப்பேன். உங்களிடமிருந்து ஒன்றையும் மறைக்கமாட்டேன்" என்றார்.

அதற்கு அவர்கள் எரேமியாவிடம் கூறியது: "உம் கடவுளாகிய ஆண்டவர் உம் வழியாக எங்களுக்கு வெளிப்படுத்தவிருக்கும் எல்லாச் சொற்களின்படியும் நாங்கள் நடப்போம் என்பதற்கு, ஆண்டவரே நமக்கு இடையில் உண்மையும் நம்பிக்கையும் உள்ள சாட்சி.

எங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், நாங்கள் எம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கே செவிசாய்ப்போம். அவரிடமே நாங்கள் உம்மை அனுப்பிவைக்கிறோம். ஏனெனில் எம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நாங்கள் செவிசாய்க்கும் பொழுது, எங்களுக்கு நன்மையே விளையும்."

பத்து நாள்களுக்குப் பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.

எனவே அவர் காரயாகின் மகன் யோகனானையும், தம்மோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரையும், சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் எல்லாரையும் அழைத்தார்.

அவர் அவர்களிடம் சொன்னது: உங்கள் வேண்டுகோளை இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் முன் வைத்து மன்றாடுமாறு நீங்கள் என்னை அனுப்பினீர்கள். அவர் இவ்வாறு கூறுகிறார்:

நீங்கள் இந்த நாட்டிலேயே தொடர்ந்து குடியிருந்தால், நான் உங்களைக் கட்டி எழுப்புவேனேயன்றி, அழித்தொழிக்க மாட்டேன்: நிலை நாட்டுவேனேயன்றி, பிடுங்கி எறிய மாட்டேன். ஏனெனில் நான் உங்களுக்கு அளித்துள்ள தண்டனைபற்றி என் மனத்தை மாற்றிக்கொள்வேன்.

நீங்கள் அஞ்சி நடுங்கும் பாபிலோனிய மன்னனுக்கு இனி அஞ்சவேணடாம், நீங்கள் அவனுக்கு அஞ்ச வேண்டாம், என்கிறார் ஆணடவர். ஏனெனில் உங்களை மீட்கும் பொருட்டும், அவனுடைய கையினின்று உங்களை விடுவிக்கும் பொருட்டும் நான் உங்களோடு இருக்கிறேன்.

நான் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன். அவனும் உங்கள்மீது மனமிரங்கி, உங்கள் சொந்த நாட்டுக்கே நீங்கள் திரும்பிவரச் செய்வான்.

ஆனால் நீங்கள், நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாது, "இந்த நாட்டில் நாங்கள் குடியிருக்க மாட்டோ ம்.

நாங்கள் எகிப்து நாட்டுக்குப் போயே தீருவோம். அங்கே போர் இருக்காது: போர்முரசு ஒலிக்காது: உணவுப் பஞ்சம் இராது: நாங்கள் அங்கேயே குடியிருப்போம்" என்று கூறுவீர்களானால்,

யூதாவில் எஞ்சியிருப்போரே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எகிப்துக்குச் சென்று, அங்கே தங்கியிருக்க முடிவு செய்திருந்தால்,

உங்களை இங்கு அச்சுறுத்தும் அதே வாள் எகிப்து நாட்டிலும் உங்களைத் துரத்திவந்து தாக்கும்: உங்களுக்குத் திகிழட்டுகின்ற பஞ்சம் உங்கள் பின்னாலேயே எகிப்துக்கும் தொடர்ந்துவரும்: நீங்கள் அங்கேயே மடிவீர்கள்.

எகிப்துக்குச் சென்று அங்கே தங்கியிருக்க முடிவு செய்துள்ள ஆள்கள் அனைவரும் வாள், பஞ்சம், கொள்ளை நோயால் மடிவர். அவர்களுள் ஒருவனும் எஞ்சியருக்கமாட்டான்: நான் அவர்களுக்கு அளிக்கவிருக்கும் தண்டனையினின்று எவனுமே தப்பமாட்டான்.

ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: என் சினமும் சீற்றமும் எருசலேமின் குடிகள்மீது வெகுண்டெழுந்ததுபோன்று, நீங்கள் எகிப்துக்குச் செல்லும்பொழுது என் சீற்றம் உங்கள்மீது மூண்டெழும். நீங்கள் சாபம், பேரச்சம், பழிப்பு, கண்டனம் ஆகியவற்றுக்கு ஆளாவீர்கள். நீங்கள் இந்த இடத்தை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்.

யூதாவில் எஞ்சியிருப்போரே, "நீங்கள் எகிப்துக்குப் போகாதீர்கள்" என்று ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார். நான் இதுபற்றி உங்களை இன்று எச்சரித்துள்ளேன் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டீர்கள்: ஏனெனில், "எங்களுக்காக நம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும்: அவர் சொல்வது அனைத்தையும் எங்களுக்குத் தெரியப்படுத்தும்: நாங்கள் அவ்வாறே நடப்போம்" என்று கூறி, நீங்களே என்னை உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அனுப்பி வைத்தீர்கள். 21 . நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் திருவுளத்தை இன்று உங்களுக்கு அறிவித்துள்ளேன். நீங்களோ அதற்குக் கீழ்ப்படியவில்லை. அவர் என்னை உங்களிடம் அனுப்பிச் சொன்னவற்றில் எதையுமே நீங்கள் கண்டுகொள்ளவில்லை.

எனவே நீங்கள் சென்று தங்க விழையும் இடத்திலேயே நீங்கள் வாள், பஞ்சம், கொள்ளை நோயால் மடிவீர்கள் என்பதை இப்போது திண்ணமாய் அறிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 43.

அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் எரேமியா வழியாகச் சொல்லி அனுப்பிய எல்லாச் சொற்களையும் மக்கள் அனைவருக்கும் அவர் அறிவித்து முடித்தார்.

பின்னர் ஓசயாவின் மகன் அசரியாவும், காரயாகின் மகன் யோகனானும், இறுமாப்புக் கொண்ட எல்லா ஆள்களும் எரேமியாவை நோக்கி, "நீ பொய் சொல்கிறாய். நீங்கள் எகிப்துக்குப் போய் அங்கே தங்கியிருக்க வேண்டாம் என்று சொல்வதற்காக நம் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை.

ஆனால் கல்தேயர் கையில் எங்களை ஒப்புவிக்கவும், எங்களைச் சாவுக்கு உள்ளாகவும், எங்களைப் பாபிலோனுக்கு நாடுகடத்தவுமே நேரியாவின் மகன் பாரூக்கு எங்களுக்கு எதிராக உன்னைத் பண்டிவிட்டுள்ளான்" என்றனர்.

எனவே காரயாகின் மகன் யோகனானும், எல்லாப் படைத்தலைவர்களும், மக்கள் அனைவரும் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை: அதாவது யூதாவிலேயே தங்கவில்லை.

காரயாகின் மகன் யோகனானும் படைத்தலைவர்கள் அனைவரும் யூதா நாட்டில் வாழும் பொருட்டு, தாங்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளினின்றும் திரும்பி வந்திருந்த யூதாவில் எஞ்சினோர் அனைவரையும்

அதாவது, ஆண், பெண், சிறுவர், அரசனின் புதல்வியர் ஆகியோரையும், சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவின் பொறுப்பில் மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் விட்டுவைத்திருந்த எல்லாரையும், இறைவாக்கினர் எரேமியாவையும் நேரியாவின் மகன் பாரூக்கையும் கூட்டிக்கொண்டு,

எகிப்து நாட்டுக்குப் போய்த் தகபனகேசை அடைந்தனர்: ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவில்லை.

தகபனகேசில் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:

பெரும் கற்கள் சிலவற்றை உன் கையில் எடுத்துக்கொள். தகபனகேசில் பார்வோன் அரண்மனை வாயில்களத்தில் உள்ள காரையில் யூதா மக்கள் முன்பாக அவற்றை மறைத்து வை.

பிறகு நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என் ஊழியனும் பாபிலோனிய மன்னனுமான நெபுகத்னேசரை இங்கு வரவழைப்பேன். நான் மறைத்துவைத்துள்ள இந்தக் கற்கள்மீது அவன் தன் அரியணையை அமைத்துத் தன் கொற்றக்குடையை விரித்துவைப்பான்.

அவன் வந்து, எகிப்து நாட்டைத் தாக்கி அழிப்பான்: கொள்ளைநோய்க்குரியோர் கொள்ளைநோய்க்குள்ளாவர்: நாடு கடத்தலுக்குரியோர் நாடுகடத்தப்படுவர்: வாளுக்குரியோர் வாளால் மாள்வர்.

மேலும் அவன் எகிப்தியத் தெய்வங்களின் கோவில்களைத் தீக்கிரையாக்குவான்: அத்தெய்வச் சிலைகளை எரித்துத் பக்கிச்செல்வான். இடையன் தன் ஆடையைத் துப்புரவு செய்வதுபோல், அவன் எகிப்தைத் துப்புரவு செய்வான்: அங்கிருந்து நலமே திரும்பிச் செல்வான்.

எகிப்து நாட்டில் உள்ள பெத்சமேசின் பண்களை அவன் தகர்த்தெறிவான்: எகிப்தியத் தெய்வங்஥களின் கோவில்களைத் தீக்கிரையாக்குவான்.

அதிகாரம் 44.

எகிப்து நாட்டின் மிக்தோல், தகபனகேசு, தப்னீஸ், மெம்பிசு, ஆகிய நகர்களிலும் பத்ரோசு நாட்டிலும் வாழ்ந்த வந்த யூதர் எல்லாரையும் குறித்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:

இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எருசலேம் மீதும் யூதாவின் எல்லா நகர்கள் மீதும் நான் வருவித்துள்ள தண்டனையை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள. இதோ, இன்று அவை பாழடைந்து குடியிருப்பாரற்றுக் கிடக்கின்றன.

ஏனெனில், அவர்களோ நீங்களோ உங்கள் மூதாதையரோ அறிந்திராத வேற்றுத் தெய்வங்களை அவர்கள் நாடிச்சென்று, பபம் காட்டி, அவற்றைத் தொழுததன் மூலம் தீச்செயல் புரிந்து எனக்குச் சினமூட்டினார்கள்.

இருப்பினும், நான் என் ஊழியரான இறைவாக்கினர் அனைவரையும் திரும்பத் திரும்ப உங்களிடம் அனுப்பி வைத்து, நான் வெறுக்கின்ற இந்த அருவருப்பான செயலைச் செய்யாதீர்கள் என்று சொல்லச் செய்திருந்தேன்.

அவர்களோ அதைக் கேட்கவில்லை: காதில் வாங்கிக்கொள்ளவுமில்லை. தங்கள் தீச்செயலை விட்டுத் திரும்பவில்லை: வேற்றுத் தெய்வங்களுக்குத் பபம் காட்டுவதை நிறுத்தவுமில்லை.

எனவே என் சீற்றமும் சினமும் யூதாவின் நகர்கள்மேலும் எருசலேமின் தெருக்கள்மேலும் மூண்டெழுந்து அவற்றைத் தீக்கிரையாக்கின. இன்று காண்பதுபோல், அவை பாழடைந்து, ஆளரவமற்றுப் போயின.

இப்போது இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உங்களுள் ஒருவன் கூட எஞ்சியிராதபடி, ஆண், பெண், சிறுவர், குழந்தை ஆகிய அனைவரையும் யூதாவினின்று அழித்து விடுவதன்மூலம் நீங்கள் உங்களுக்கே பெரும் தீங்கை விளைவித்துக்கொள்ளப் பார்க்கிறீர்களே, அது ஏன்?

நீங்கள் தங்கியிருக்க வந்துள்ள எகிப்து நாட்டில் வேற்றுத் தெய்வங்களுக்குத் பபம் காட்டுதல் போன்ற உங்கள் செயல்களால் ஏன் எனக்குச் சினமூட்டுகிறீர்கள்? நான் உங்களை அழிக்க, உலகின் எல்லா மக்களினத்தார் மத்தியிலும் நீங்கள் பழிப்புக்கும் கண்டனத்துக்கும் உள்ளவதற்கா இவ்வாறு செய்கிறீர்கள்?

உங்கள் மூதாதையரின் தீச்செயல்களையும், யூதா அரசர்களின் தீச்செயல்களையும், அவர்களுடைய மனைவியரின் தீச்செயல்களையும், உங்களுடைய சொந்தத் தீச்செயல்களையும் யூதா நாட்டிலும் எருசலேமின் தெருக்களிலும் உங்கள் மனைவியர் செய்த தீச்செயல்களையும் நீங்கள் மறந்துபோய் விட்டீர்களா?

இந்நாள் வரை அவர்கள் எனக்குப் பணிந்துபோகவில்லை: அஞ்சி நடக்கவில்லை: உங்களுக்கும் உங்கள் மூதாதையர்க்கும் நான் கொடுத்திருந்த திருச்சட்டத்தின்படியும் நியமங்களின்படியும் ஒழுகவுமில்லை.

எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உங்களுக்குத் தண்டனை அளிக்கவும், யூதா முழுவதையும் அழிக்கவும் நான் முடிவுசெய்துள்ளேன்.

எகிப்து நாட்டிற்கு வந்து தங்கியிருக்க முடிவுசெய்துள்ள யூதாவின் எஞ்சினோரை நான் தாக்க, அவர்கள் எல்லாரும் அழிந்து போவார்கள்: எகிப்து நாட்டில் அவர்கள் அனைவரும் வீழ்ச்சியுறுவார்கள்: வாளுக்கும் பஞ்சத்துக்கும் அவர்கள் இரையாவார்கள்: சிறியோர் முதல் பெரியோர் வரை அவர்கள் எல்லாரும் வாளாலும் பஞ்சத்தாலும் மடிவார்கள்: சாபம், பேரச்சம், பழிப்பு, கண்டனம் ஆகியவற்றுக்கு ஆளாவார்கள்.

எருசலேமை வாள், பஞ்சம், கொள்ளை நோயால் நான் தண்டித்துள்ளது போன்று எகிப்து நாட்டில் வாழ்வோரையும் தண்டிப்பேன்.

எகிப்து நாட்டில் தங்கியிருக்கும்படி வந்துள்ள யூதாவின் எஞ்சியோருள் எவருமே தப்பமாட்டார்: உயிர் பிழைக்கவும் மாட்டார். யூதா நாட்டில் குடியிருக்கும் பொருட்டு அங்குத் திரும்பிச் செல்ல ஆவலோடு ஏங்கியும் அங்குத் திரும்பிச் செல்லமாட்டார். தப்பியோடுவோரைத் தவிர வேறு எவருமே திரும்பிச் செல்லமாட்டார்.

அப்பொழுது, தங்கள் மனைவியர் வேற்றுத் தெய்வங்களுக்குத் பபம் காட்டியதை அறிந்திருந்த எல்லா ஆண்களும், அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த எல்லாப் பெண்களும், எகிப்து நாட்டிலும் பத்ரோசிலும் வாழ்ந்துவந்த மக்கள் அனைவரும் எரேமியாவுக்கு மறுமொழியாகக் கூறியது: 16.. "ஆண்டவர் பெயரால் எங்களுக்கு நீர் அறிவித்துள்ள செய்தியைப் பொறுத்தமட்டில் நாங்கள் உமக்குச் செவிகொடுக்கமாட்டோ ம்.

நாங்கள் செய்து கொண்ட எல்லா நேர்ச்சைகளையும் திண்ணமாய் நிறைவேற்றுவோம்: நாங்களும் எங்கள் மூதாதையரும் அரசர்களும் தலைவர்களும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் செய்துள்ளது போல, நாங்கள் விண்ணக அரசிக்குத் பபம் காட்டுவோம். நீர்மப்படையல்களைப் படைப்போம். ஏனெனில், அப்பொழுது எங்களுக்கு ஏராளமான உணவு இருந்தது. நாங்கள் வளமுடன் வாழ்ந்தோம். தீமை எதுவும் எங்களை அணுகியதில்லை.

ஆனால், நாங்கள் விண்ணக அரசிக்குத் பபம் காட்டுவதையும் நீர்மப் படையல்களைப் படைப்பதையும் நிறுத்திவிட்ட காலத்திலிருந்து, எங்களுக்கு எல்லாமே குறைபாடாய் உள்ளது. வாளாலும் பஞ்சத்தாலும் நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோம்."

அப்பொழுது பெண்கள், "விண்ணக அரசிக்குத் பபம் காட்டி, நீர்மப் படையல்களைப் படைத்தபொழுது, எங்கள் கணவர்களின் ஒப்புதல் இல்லாமலா நாங்கள் விண்ணக அரசியின் உருவம் தாங்கிய மாவடை சுட்டு, நீர்மப் படையல்கள் படைத்தோம்?" என்றார்கள்.

இந்த மறுமொழி கூறிய ஆண், பெண் ஆகிய எல்லா மக்களிடமும் எரேமியா கூறியது:

"நீங்களும் உங்கள் மூதாதையர், அரசர்கள், தலைவர்கள், நாட்டுமக்கள் எல்லாரும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் பபம் காட்டினீர்களே, அதை ஆண்டவர் மறந்து விட்டாரா? அதை அவர் தம் நினைவில் கொள்ளவில்லையா?

நீங்கள் செய்துள்ள தீச்செயல்களையும் அருவருப்பான செயல்களையும் ஆண்டவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் உங்கள் நாடு கண்டனத்திற்கும் பேரச்சத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாகி, இன்று காண்பதுபோல், குடியிருப்பாரற்றுக் கிடக்கிறது.

நீங்கள் பபம் காட்டியதாலும், ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்ததாலும், அவரது குரலுக்குச் செவிகொடாது, அவருடைய திருச்சட்டம், நியமங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றிற்கேற்ப ஒழுகாததாலுமே, இன்றும் காண்பது போல், இத்தீங்கு உங்களுக்கு நேர்ந்துள்ளது."

தொடர்ந்து எரேமியா எல்லா மக்களையும் பெண்களையும் நோக்கிக் கூறியது: "எகிப்து நாட்டில் உள்ள யூதாவின் மக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரின் சொல்லுக்குச் செவிகொடுங்கள்.

இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்களும் உங்கள் மனைவியரும், 'விண்ணக அரசிக்குத் பபம் காட்டி, நீர்மப்படையல்களை அவளுக்குப் படைப்பதாக நாங்கள் செய்துகொண்ட நேர்ச்சைகளை நிறைவேற்றியே தீருவோம்' என்று நீங்கள் சொல்லால் கூறியதைச் செயலில் நிறைவேற்றிவிட்டீர்கள். நன்று! நன்று! உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்! உங்கள் பொருத்தனைகளைச் செலுத்துங்கள்!

எனவே எகிப்து நாட்டில் குடியிருக்கும் யூதாவின் மக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: ஆண்டவர் கூறுகிறார்: 'தலைவராகிய வாழும் ஆண்டவர் மேல் ஆணை!' எனச் சொல்லி எகிப்து நாடு எங்கணும் யூதாவின் எந்தக் குடிமகனும் என் பெயரை வாயால் உச்சரிக்கமாட்டான் என்று என் பெருமை வாய்ந்த பெயரால் நான் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.

நன்மை அன்று, தீமை விளைவிக்கவே அவர்கள் மட்டில் நான் விழிப்பாய் இருக்கிறேன்: எகிப்து நாட்டில் உள்ள யூதாவின் மக்கள் எல்லாரும் முற்றிலும் அழியும்வரை வாளாலும் பஞ்சத்தாலும் அவர்களை வதைப்பேன்.

வாளுக்குத் தப்பும் ஒரு சிலரே எகிப்து நாட்டினின்று யூதா நாட்டுக்குத் திரும்பிச் செல்வர். அப்பொழுது எகிப்து நாட்டில் தங்கியிருக்கும்படி வந்துள்ள யூதாவின் எஞ்சினோர் அனைவரும், நிலைநிற்பது என் சொல்லா, அவர்கள் சொல்லா? என்பதை அறிந்துகொள்வர்.

நான் இந்த இடத்திலேயே உங்களைத் தண்டிப்பேன். இதுவே உங்களுக்கு அடையாளம், என்கிறார் ஆண்டவர். இதனால் உங்கள் தண்டனை பற்றி உங்களுக்கு எதிராக நான் கூறிய சொற்கள் உறுதியாய் நிலைநிற்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, யூதாவின் அரசனான செதேக்கியாவை, அவன் பகைவனும் அவயன் உயிரைப் பறிக்கத் தேடியவனுமான பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் நான் கையளித்தது போல, எகிப்திய மன்னன் பார்வோன் ஒப்ராவை அவன் பகைவர் கையிலும் அவன் உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும் ஒப்புவிப்பேன்."

அதிகாரம் 45.

யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் இறைவாக்கினர் எரேமியா சொன்ன சொற்களை நேரியாவின் மகன் பாரூக்கு ஏட்டுச்சுருளில் எழுதி வைத்த பின்னர், எரேமியா பாரூக்கிடம் கூறிய செய்தியாவது:

பாரூக்கு! இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உன்னிடம் இவ்வாறு கூறுகிறார்:

எனக்கு ஜயோ கேடு! ஏனெனில், ஆண்டவர் எனக்குத் துன்பத்திற்குமேல் துன்பத்தை அனுப்பியுள்ளார்: நான் கடுந்துயரில் ஆழ்ந்து தளர்வுற்றுப் போனேன். எனக்கு நிம்மதியே கிடையாது என்று நீ சொன்னாய்.

இவ்வாறு நீ அவனிடம் சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: நான் கட்டியதை நானே அழிப்பேன்: நான் நட்டதை நானே பிடுங்குவேன். இந்நாடு முழுவதற்கும் இவ்வாறு நிகழும்.

நீ மகத்தானவற்றை உனக்கெனத் தேடுகிறாயா? அவ்வாறு தேடாதே: ஏனெனில் எல்லா மனிதர்க்கும் நான் தண்டனை அளிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். ஆனால் நீ எங்குச் சென்றாலும், அங்கெல்லாம் நான் உன் உயிரைக் கொள்ளைப் பொருளாகக் கொடுப்பேன்.

அதிகாரம் 46.

மக்களினத்தாரைக் குறித்து இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:

எகிப்தைக் குறித்தும் யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூப்பிரத்தீசு பேராற்றங்கரையிலிருந்த கர்க்கெமீசில் முறியடித்த எகிப்திய மன்னன் பார்வோன் நெக்கோவின் படையைப் பற்றியும்:

பரிசை, கேடயம் தயார் செய்யுங்கள்: போருக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள்.

குதிரைகளுக்குச் சேணம் பூட்டுங்கள்: படைவீரரே, அவற்றின்மீது ஏறுங்கள்: தலைக் கவசங்களுடன் அணிவகுத்து நில்லுங்கள்: ஈட்டிகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்: மார்புக் கவசங்களை அணிந்து கொள்ளுங்கள்.

நான் காண்பது என்ன? அவர்கள் திகிலடைந்து புறமுதுகிட்டு ஓடுகிறார்கள்: அவர்களுடைய படைவீரர்கள் முறியடிக்கப்படுகிறார்கள்: திரும்பிப் பாராது தப்பி ஓடுகிறார்கள்:

ஓட்டத்தில் வல்லவர் ஓடிப்போக முடியாது: படைவீரரும் தப்பியோட இயலாது: வடக்கே யூப்பிரத்தீசு பேராற்றங்கரையில் அவர்கள் தடுமாறிக் கீழே விழுவர்.

நைல்நதி போல் பொங்கி எழுந்து, அலைமோதும் நதிகளெனப் பாய்ந்து வரும் இவன்"யார்?

நைல்நதிபோல் பொங்கி எழுந்து அலைமோதும் நதிகளெனப் பாய்ந்து வருகின்றது எகிப்து. நான் பொங்கி எழுந்து, மண்ணுலகை மூடிக்கொள்வேன்: நகரையும் அதன் குடிகளையும் அழித்தொழிப்பேன் என்று அவன் சொல்லிக்கொள்கிறான்.

குதிரைகளே, பாய்ந்து செல்லுங்கள்: தேர்களே, விரைந்து ஓடுங்கள்: படைவீரர்களே, முன்னேறிச் செல்லுங்கள். எத்தியோப்பியரும் லீபியரும் கேடயம் ஏந்தட்டும்! லீதியர் அம்புகளைத் தொடுத்து நாணேற்றட்டும்!

அந்த நாள், படைகளின் ஆண்டவராகிய தலைவரின் நாள்: ஆண்டவர் தம் எதிரிகளைப் பழிவாங்கும் நாள், வாள் உண்டு நிறைவுகொள்ளும்: குருதி குடித்து வெறிகொள்ளும். வடக்கு நாட்டு யூப்பிரத்தீசு பேராற்றங்கரையில் படைகளின் ஆண்டவராகிய தலைவருக்குப் பலியிடப்படும்.

கன்னிப் பெண் எகிப்தே! கிலயாதுக்குச் சென்று, பொன் மெழுகு கொண்டுவா, பல்வகை மருந்துகளை நீ பயன்படுத்துவது வீணே! உன் காயங்கள் ஆறவே ஆறா.

மக்களினத்தார் உன் இழிவுபற்றிக் கேள்வியுற்றனர்: உன் அழுகுரல் மண்ணுலகை நிறைந்தது: படைவீரன் படைவீரனோடு இடறிக்கொள்ள இருவரும் சேர்ந்து கீழே விழுந்தனர்.

பாபிலோனிய மன்னன் நெபுகத்தேனசர் எகிப்து நாட்டைத் தாக்க வருவதைப் பற்றி, ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு:

எகிப்தில் அறிவியுங்கள்: மிக்தோலில் பறைசாற்றுங்கள்: மெம்பிசிலும் தகபனகேசிலும் முரசறையுங்கள்: அணிவகுத்து நில்: தயாராய் இரு! உன்னைச் சுற்றிலும் உள்ளவை வாளுக்கு இரையாகும்.

உன் படைவீரர் வீழ்ச்சியுற்றது ஏன்? அவர்கள் எதிர்த்து நிற்காதது ஏன்? ஆண்டவர் அவனைத் தள்ளிவிட்டதால் அன்றோ!

அவர் பலரை இடறிவிழச் செய்தார். "எழுந்திருங்கள், கொடுங்கோலன் வாளினின்று தப்பிப்போம்: நம் சொந்த மக்களிடம் நம் தாய் நாட்டுக்கே திரும்பிச் செல்வோம்" என்று ஒருவர் மற்றவரிடம சொல்லிக்கொண்டனர்.

"வாய்ப்பை நழுவவிடும் வாயாடி" என்று எகிப்திய மன்னன் பார்வோனுக்குப் பெயர் சூட்டுங்கள்.

படைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர் கூறுகிறார்: வாழும் என் மேல் ஆணை! மலைகளுக்குள் தாபோர் போலவும் கடலோரத்துக் கர்மேல் போலவும் ஒருவன் ஆற்றலுடன் வருவான்.

மகன் எகிப்தே! அடிமைத்தனத்துக்கென மூட்டை கட்டிக்கொள்: மெம்பிசு அழிந்துபோகும்: குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்.

எகிப்து ஓர் அழகான இளம்பசு! வடக்கினின்று உண்ணி ஒன்று அவள்மீது வந்து அமர்ந்துள்ளது.

அவள் நடுவில் உள்ள கூலிப் படையினர் கொழுத்த கன்று போன்றவர்கள்: அவர்களும் புறமுதுகுகாட்டி ஒருமிக்க ஓடிவிட்டார்கள். அவர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. அவர்களுடைய அழிவின் நாள், அவர்களது தண்டனையின் காலம் அவர்கள்மேல் வந்துற்றது.

நழுவிச் செல்லும் பாம்பு போன்று அவள் சீறுகின்றாள்: அவள் எதிரிகள் வலிமையோடு அணிவகுத்து வருகின்றார்கள்: மரம் வெட்டிகள் போல் கோடரிகளோடு அவளை எதிர்த்து வருகின்றார்கள்.

அவளது காடு ஆள் நுழையமுடியாததாய் இருக்கிறது. அவர்கள் அதை வெட்டுவார்கள், என்கிறார் ஆண்டவர். அவர்கள் வெட்டுக்கிளிகளைவிட மிகுதியானவர்கள். அவர்களைக் கணக்கிட முடியாது.

மகள் எகிப்துக்கு இகழ்ச்சிக்கு உள்ளாவாள்: வடக்கு நாட்டு மக்களிடம் அவள் கையளிக்கப்படுவாள்.

இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நோ நகரத்து ஆமோனையும், பார்வோனையும் எகிப்தையும் அவளுடைய தெய்வங்களையும் அரசர்களையும், பார்வோனையும் அவனில் நம்பிக்கை வைப்போரையும் நான் தண்டிக்கப் போகிறேன்.

அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும், பாபிலோனிய மன்னன் நெபுகத்தேனர் கையிலும் அவனுடைய அலுவலர் கையிலும் அவர்களை நான் ஒப்புவிப்பேன். அதன் பின்னர் முன்னாளில் போன்று எகிப்தில் மக்கள் குடியேறுவார்கள், என்கிறார் ஆண்டவர்.

என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே: இஸ்ரயேலே, கலங்காதே! தொலை நாட்டினின்று உன்னை நான் மீட்பேன்: அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன்: யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்: அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.

என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே, என்கிறார் ஆண்டவர். நான் உன்னோடு இருக்கிறேன்: எந்த மக்களினத்தாரிடையே உன்னைத் துரத்தியடித்தேனோ, அவர்கள் அனைவரையும் முற்றிலும் அழித்தொழிப்பேன்: உன்னையோ முற்றிலும் அழிக்க மாட்டேன்: உன்னை நீதியோடு தண்டிப்பேன்: உன்னை எவ்வகையிலேனும் தண்டியாது விடேன்.

அதிகாரம் 47.

பார்வோன் காசாவைத் தாக்கும் முன்னர் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:

ஆண்டவர் கூறுவது இதுவே: வடக்கினின்று வெள்ளம் பொங்கி எழுகின்றது: கரை புரண்டோ டும் காட்டாறென அது மாறுகின்றது. நாட்டையும் அதில் உள்ள அனைத்தையும் நகரையும் அதன் குடிகளையும் மூழ்கடிக்கும். மனிதர் கூக்குரலிடுவர்: நாட்டு மக்கள் அனைவரும் ஓலமிடுவர்.

போர்க் குதிரைகளின் குளம்பொலியையும் தேர்களின் இரைச்சலையும் அவற்றின் உருளை ஓசையையும் கேட்டு, தந்தையர் கை சோர்ந்தமையால் தம் குழந்தைகளையும் திரும்பிப் பார்க்கமாட்டார்கள்.

பெலிஸ்தியர் எல்லாரும் அழியும் நாள், தீர், சீதோனும் அவற்றின் எஞ்சியுள்ள துணையாளர் எல்லாரும் ஒழியும் நாள் நெருங்கிவிட்டது. ஆண்டவர் பெலிஸ்தியரையும் கப்தோர் தீவின் எஞ்சியோரையும் அழிக்கவிருக்கிறார்.

காசா மொட்டையடிக்கப்படும்: அஸ்கலோன் அழிக்கப்படும்: அனாக்கியருள் எஞ்சியிருப்போரே, எத்துணைக் காலம் நீங்கள் உங்களையே காயப்படுத்திக் கொள்வீர்கள்?

'ஆண்டவரின் வாளே! என்று நீ ஓய்ந்திருப்பாய்? நீ உன் உறைக்குள் செல்! அங்கே ஓய்வெடு, அமைதியாய் இரு.

ஆண்டவர் அதற்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்: அது எப்படி ஓய்ந்திருக்க முடியும்? அஸ்கலோனுக்கும் கடற்கரைப் பகுதிக்கும் எதிராக அவர் அதற்குப் பணி குறித்து வைத்துள்ளாரே!

அதிகாரம் 48.

மோவாபைக் குறித்து, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நெபோவுக்கு ஜயோ கேடு! அது பாழடைந்து கிடக்கிறது. கிரியத்தாயிம் அவமானத்துக்கு உள்ளாகிக் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் கோட்டை இழிவுபடுத்தப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

போவாபின் புகழ் மங்கிவிட்டது: எஸ்போனில் அதற்குத் தீங்கிழைக்கத் திட்டமிடப்படுகிறது: "வாருங்கள்: அதனை ஒரு நாடாய் இல்லாதவாறு சிதைப்போம்". மத்மேன்! நீயும் அழிக்கப்படுவாய்: வாள் உன்னைத் துரத்தி வரும்.

ஓரொனாயிமினின்று கூக்குரல் ஒலிக்கிறது. 'கொடுமை பேரழிவு' எனக் கேட்கிறது.

மோவாபு அழிக்கப்பட்டுவிட்டது: அதன் குழந்தைகளின் அழுகுரல் கேட்கின்றது.

ழகித்துக்கு ஏறிச்செல்லும் வழியில் அவர்கள் அழுதுகொண்டே போகிறார்கள்: ஓரொனாயிமுக்கு இறங்கிச் செல்லும் வழியில் அழிவின் புலம்பல் கேட்கிறது.

தப்பியோடுங்கள், உங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்: பாலை நிலத்துக் காட்டுக்கழுதைபோல் மாறுங்கள்.

உன் கோட்டைகளையும் கருவூலங்களையும் நம்பியிருந்தாய்: நீயும் கைப்பற்றப்படுவாய். கெமோசு தெய்வம் நாடுகடத்தப்படும்: அதன் அர்ச்சகர்களும் தலைவர்களும் அதனோடு செல்வார்கள்.

"அழிப்போன்" ஒவ்வொரு நகருக்கும் வருவான். எந்த நகரும் தப்பாது. ஆண்டவர் சொல்லியிருப்பது போல் பள்ளத்தாக்குகள் பாழாகும்: சமவெளிகள் அழிக்கப்படும்.

மோவாபுக்கு இறக்கைகள் கொடுங்கள்: அது பறந்தோடட்டும்: அதன் நகர்கள் பாழாக்கப்படும்: அவை குடியிருப்஥போர் அற்றுப் போகும்.

ஆண்டவர்தம் அலுவலை அக்கறையின்றிச் செய்பவன் சபிக்கப்பட்டவன்: குருதி சிந்தாமல் தன் வாளை வைத்திருப்பவனும் சபிக்கப்பட்டவனே.

மோவாபு இளமைமுதல் அமைதியில் வாழ்ந்துவருகிறது: மண்டியை அடியில் கொண்ட பழந் திராட்சை இரசம் அது. அது கலத்தினின்று கலத்திற்கு மாற்றப்படாதது: நாடுகடத்தப்படாதது: அதன் சுவை குன்றவில்லை: அதன் நறுமணம் மாறவில்லை.

எனவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது நான் "கவிழ்ப்போரை" அனுப்புவேன். அவர்கள் அதைக் கவிழ்ப்பார்கள்: அதன் கலங்களை வெறுமையாக்குவார்கள்: அதன் சாடிகளை நொறுக்குவார்கள்.

இஸ்ரயேல் வீட்டார் தாம் நம்பிக்கை வைத்திருந்த பெத்தேலைக் குறித்து இகழ்ச்சியுற்றது போல, மோவாபு கெமோசைக் குறித்து இகழ்ச்சியுறும்.

"நாங்கள் படைவீரர்கள்: போரில் வல்லவர்கள்" என்று நீங்கள் எப்படிச் சொல்லக்கூடும்?

"மோவாபையும் அதன் நகர்களையும் அழிப்பவன் வந்துவிட்டான்: அதன் சிறந்த இளைஞர்கள் கொலைக் களத்திற்குப் போய் விட்டார்கள்," என்கிறார் படைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர்.

மோவாபின் அழிவு அண்மையில் உள்ளது: தீங்கு அதை நோக்கி விரைந்து வருகிறது.

அதைச் சுற்றியிருப்போரே, நீங்கள் அனைவரும் அதற்காகத் துக்கம் கொண்டாடுங்கள். அதன் புகழை அறிந்திருப்போரே, நீங்கள் அனைவரும் "வலிமைமிக்க செய்கோல் முறிந்தது எங்ஙனம்? மேன்மைமிக்க கோல் உடைந்தது எவ்வாறு?" என்று கேளுங்கள்.

மகள் தீபோனின் குடிமகனே, உன் மேன்மையை விட்டு இறங்கி வா: வறண்ட நிலத்தில் வந்து அமர்ந்துகொள். மோவாபை அழிப்பவன் உனக்கு எதிராக எழுந்துவிட்டான்: உன் கோட்டைகளை அவன் தகர்த்து விட்டான்.

அரோயேரின் குடிமகனே! நீ சாலை ஓரமாய் நின்று கவனி: ஓட்டம்பிடிக்கிறவனையும் தப்பி ஓடுகிறவளையும் நோக்கி, "என்ன நடந்தது?" என்று கேள்.

மோவாபு அழிக்கப்பட்டுச் சிறுமைக்குள்ளானது: அழுது புலம்புங்கள்: கூக்குரலிடுங்கள்: மோவாபு பாழடைந்துவிட்டது என அர்னோனில் அறிவியுங்கள்.

சமவெளி நாடுகள்மீது தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டது: ஓலோன், யாகுசா, மேப்பாத்து,

தீபோன், நெபோ, பெத்திப்஥லத்தாயிம்,

கிர்யத்தாயிம், பெத்-காமூல், பெத்-மெகோன்,

கெரியோத்து, போஸ்ரா மீதும் அருகிலும் தொலைவிலும் உள்ள மோவாபு நாட்டு நகர்கள் மீதும் வந்து விட்டது.

மோவாபின் கொம்பு முறிந்து விட்டது: அதன் கையும் ஒடிந்து போயிற்று, என்கிறார் ஆண்டவர்.

மோவாபுக்குப் போதை வெறி ஏற்றுங்கள்: ஏனெனில் அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமையடித்துக் கொண்டது. அது, தான் வாந்தி எடுத்ததில் கிடந்து புரளும்: ஏளனத்துக்கு ஆளாகும்.

இஸ்ரயேல் உன் நகைப்புக்கு ஆளாகவில்லையா? அவனைப் பற்றி நீ பேசும்போதெல்லாம் உன் தலையை ஆட்டிப் பழித்தாயே? அவன் என்ன, திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவனா?

மோவாபின் குடிமக்களே, நகர்களை விட்டு வெளியேறுங்கள்: பாறைப் பகுதியில் குடியேறுங்கள். பாறையின் இடுக்குகளில் கூடுகட்டி வாழும் புறாவைப் போல் இருங்கள்.

மோவாபின் செருக்கைப் பற்றி நாங்கள் கேள்வியுற்றோம்: பெரிதே அதன் இறுமாப்பு! அதன் ஆணவம், செருக்கு, அகங்காரம், அகந்தை பற்றி எல்லாம் கேள்வியுற்றோம்.

அதன் திமிரை நான் அறிவேன், என்கிறார் ஆண்டவர். அதன் தற்புகழ்ச்சி எல்லாம் பொய்: அதன் செயல்கள் யாவும் பொய்.

மோவாபை முன்னிட்டு நான் ஓலமிடுவேன்: மோவாபு முழுவதையும் குறித்து அலறியழுவேன்: கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப் புலம்புவேன்.

சிப்மாவின் திராட்சைக் கொடியே, யாசேருக்காக அழுவதைவிட அதிகமாய் உனக்காக அழுவேன். உன் கொடிகள் கடல் வரை படர்ந்துள்ளன: யாசேர் கடலை எட்டியுள்ளன. கோடைப் பழங்கள்மீதும் திராட்சைப் பழங்கள்மீதும் "அழிப்போன்" பாய்ந்து வந்தான்.

செழிப்பான மோவாபு நாட்டினின்று மகிழ்ச்சியும், அக்களிப்பும் அகற்றப்பட்டுவிட்டன: திராட்சை ஆலைகளில் இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்: மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன் எவனும் இலலை: மகிழ்ச்சியின் ஆரவாரம் அங்கு எழுவதில்லை.

எஸ்போனும் எலயாலேயும் கூக்குரலிடுகின்றன. யாகாசு வரை அவற்றின் அழுகுரல் கேட்கிறது: சோவாரிலிருந்து ஒரோனாயிம், எக்லாத்து செலிசியாவரை அது ஒலிக்கிறது. ஏனெனில், நிம்ரிம் தண்ணீரும் வற்றிப்போனது.

மோவாபின் தொழுகைமேடுகளில் தன் தெய்வங்களுக்குப் பலி செலுத்தித் பபம் காட்டுபவனை நான் அழித்து விடுவேன், என்கிறார் ஆண்டவர்.

எனவே, என் இதயம் புல்லாங்குழல் போன்று மோவாபுக்காகப் புலம்புகிறது: என் இதயம் புல்லாங்குழல் போன்று கீர்கெரேசின் மனிதருக்காகச் சோகப் பண் இசைக்கிறது. ஏனெனில் அவர்கள் சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் அழிந்து விட்டன.

அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டுள்ளன: தாடிகள் அகற்றப்பட்டுள்ளன. எல்லாக் கைகளிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. இடைகளில் சாக்கு உடை காணப்படுகிறது.

மோவாபின் வீட்டு மேல்தளங்கள் எல்லாவற்றிலும், அதன் தெருக்களிலும் ஒரே புலம்பல்: ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போன்று மோவாபை நான் உடைத்தெறிந்தேன், என்கிறார் ஆண்டவர்.

இப்படி அது நொறுக்கப்பட்டுக் கிடக்கின்றதே! இப்படி அவர்கள் புலம்புகின்றார்களே! இப்படி மோவாபு வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றதே! மோவாபு தன்னைச் சுற்றியிருப்போர் எல்லார் முன்னும் ஏளனத்துக்கும் பேரச்சத்திற்கும் உள்ளாயிற்று.

ஆண்டவர் கூறுவது இதுவே: ஒருவன் கழுகைப்போல் பாய்ந்து வருவான்: மோவாபின்மீது தன் இறக்கைகளை விரிப்பான்.

நகர்கள் பிடிபடும்: கோட்டைகள் கைப்பற்றப்படும். அந்நாளில் மோவாபிய படைவீரர்களின் இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும்.

மோவாபு அழிக்கப்படும்: இனி அது ஒரு மக்களினமாய் இராது. அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமை அடித்துக் கொண்டது.

மோவாபின் மகனே, திகிலும் படுகுழியும் கண்ணியுமே உன்முன் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.

திகிலுக்கு அஞ்சி ஓடுபவன் படுகுழியில் விழுவான்: படுகுழியினின்று வெளியே வருபவன் கண்ணியில் மாட்டிக்கொள்வான். அவர்களுடைய தண்டனைக் காலத்தில் இவற்றை மோவாபின்மீது வரவழைப்பேன், என்கிறார் ஆண்டவர்.

தப்பியோடுவோர் எஸ்போனின் நிழலில் வலுவிழந்து நிற்கின்றனர்: எஸ்போனிலிருந்து நெருப்பு கிளம்பிற்று: சீகோனிலிருந்து தீப்பிழம்பு புறப்பட்டது: மோவாபின் நெற்றியை அது விழுங்கிற்று: கலக்காரரின் உச்சந்தலையை அது பொசுக்கிற்று.

மோவாபே, உனக்கு ஜயோ கேடு! கெமோசின் மக்கள் அழிந்துபோயினர்: உன் புதல்வர் நாடு கடத்தப்பட்டனர்: உன் புதல்வியரும் நாடுகடத்தப்பட்டனர்.

ஆயினும், இறுதி நாள்களில் அடிமைத்தனத்தினின்று மோவாபை நான் திரும்பக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர். மோவாபின் மீதான தண்டனைத் தீர்ப்பு இத்துடன் முற்றிற்று.

அதிகாரம் 49.

அம்மோனியரைக் குறித்து, ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேலுக்குப் புதல்வரே இல்லையா? அதற்கு வழிமரபே கிடையாதா? மில்க்கோம் காத்தைக் கைப்பற்றியது ஏன்? அவன் மக்கள் அதன் நகர்களில் குடியிருப்பது ஏன்?

இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அம்மோனியரின் இராபாவுக்கு எதிராகப் போர்முரசு ஒலிக்கச் செய்வேன். அது பாழடைந்த குவியல் ஆகும்: அதன் ஊர்கள் தீக்கிரையாகும்: தன்னைக் கைப்பற்றியோரை இஸ்ரயேல் கைப்பற்றிக் கொள்ளும், என்கிறார் ஆண்டவர்.

எஸ்போனே, புலம்பியழு: ஆயி பாழடைந்துவிட்டது. இராபாவின் புதல்வியரே ஓலமிடுங்கள்: சாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள்: ஒப்பாரி வையுங்கள்: மதில்களுக்கிடையே அங்குமிங்கும் ஓடுங்கள்: மில்கோம் நாடுகடத்தப்படுவான். அவன் அர்ச்சகர்களும் தலைவர்களும் அவனோடு செல்வார்கள்.

பற்றுறுதியற்ற மகளே, உன் பள்ளத்தாக்குகள் பற்றி, உன் செழிப்பான பள்ளத்தாக்குகள் பற்றி, பெருமையடிப்பானேன்? உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்கிறாய்: 'எனக்கு எதிராய் எவன் வருவான்?' எனச் சொல்லிக்கொள்கின்றாய்.

உன்னைச் சுற்றியிருப்போர் அனைவரிடமிருந்தும் உனக்குத் திகில் வருவிப்பேன், என்கிறார் படைகளின் ஆண்டவராகிய தலைவர். நீங்கள் எல்லாரும் தலை தெறிக்க ஓடுமாறு விரட்டியடிக்கப்படுவீர்கள்: தப்பியோடுவோரை ஒன்று சேர்க்க எவரும் இரார்.

பின்னர், அம்மோனியரின் சொத்து, செல்வங்களைத் திரும்பக் கொடுப்பேன், என்கிறார் ஆண்டவர்.

ஏதோமைக் குறித்து, படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: தேமானில் ஞானம் அற்றுப்போயிற்றா? மதி நுட்பமுடையோரிடமிருந்து அறிவுரை ஒழிந்துபோயிற்றா? அவர்களின் ஞானம் மறைந்து போயிற்றா?

தெதோன் குடிமக்களே, திரும்புங்கள், தப்பியோடுங்கள்: பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்: நான் ஏசாவைத் தண்டிக்கும் அவனது காலத்தில் அழிவை அவன்மீது கொண்டுவருவேன்.

திராட்சைப் பழம் பறிப்போர் உன்னிடம் வந்தால், விடுபட்ட பழங்கள் எஞ்சியிராவோ? இரவில் திருடர் வருவாராயின், தேவைக்குமேல் திருடமாட்டார் அன்றோ?

நானோ ஏசாவை வெறுமையாக்கிவிட்டேன்: அவனுடைய பதுங்கிடங்களை வெளிப்படுத்திவிட்டேன். இனி அவனால் மறைந்திருக்க முடியாது. அவன் வழிமரபினர், சகோதரர், அடுத்திருப்பார் அழிக்கப்படுவர்: அவன் முற்றிலும் அழிந்து போவான்.

அனாதைகளைப்பற்றிக் கவலை கொள்ளாதே. நான் அவர்களை வாழவைப்பேன். உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்.

ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நியாயப்படி துன்பக்கலத்தில் குடிக்கத் தேவையில்லாதவர்களே குடிக்கவேண்டியிருந்தது என்றால், நீ எவ்வாறு தண்டனைக்குத் தப்பமுடியும்? இல்லை, நீ தண்டனை பெறாது போகமாட்டாய்: நீ துன்பக்கலத்தில் குடித்தே தீருவாய்.

ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: என்மேல் ஆணை! பேரச்சம், கண்டனம், அழிவு, பழிப்பு ஆகியவற்றுக்குப் போஸ்ரா ஆளாகும்: அதன் நகர்கள் அனைத்தும் என்றென்றும் பாழாய்க் கிடக்கும்.

நான் ஆண்டவரிடமிருந்து ஒரு செய்தி கேட்டேன். "ஒன்றுகூடுங்கள், அதனை எதிர்க்க வாருங்கள், போருக்குப் புறப்படுங்கள்" என்று சொல்லுமாறு, மக்களினத்தார்க்கு ஒரு பதன் அனுப்பப்பட்டுள்ளான்.

பார்! மக்களினத்தாருள் உன்னைச் சிறியதாய் ஆக்குவேன்: மாந்தர்தம் இகழ்ச்சிக்கு நீ ஆளாவாய்.

பாறை இடுக்குகளில் வாழ்பவனே, குன்றின் உச்சியைப் பிடித்திருப்பவனே, நீ விளைவித்த அச்சமும் உன் உள்ளத்தின் இறுமாப்பும் உன்னை ஏமாற்றிவிட்டன: நீ கழுகைப் போல் உன் கூட்டை உயரத்தில் கட்டினாலும், நான் உன்னை அங்கிருந்து கீழே தள்ளிவிடுவேன், என்கிறார் ஆண்டவர்.

ஏதோம் பேரச்சம் தரக்கூடியதாய் மாறும். அதன் வழியே போகிறவன் எவனும் அதிர்ச்சியடைவான்: அதன் அழிவு கண்டு ஏளனம் செய்வான்.

சோதோம், கொமோராவும் அவற்றின் அண்டை நகர்களும் வீழ்த்தப்பட்டபொழுது நிகழ்ந்ததுபோல், ஏதோமில் ஒருவனும் குடியிருக்கமாட்டான்: எவனும் தங்கமாட்டான், என்கிறார் ஆண்டவர்.

யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவது போல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென விரட்டியடிப்பேன்: நான் தேர்ந்துகொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக் கேட்பவன் யார்? எந்தத் தலைவன் என்னை எதிர்த்து நிற்பான்?

எனவே ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், தேமானின் குடிகளுக்கு எதிராக அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கும் செவிகொடுங்கள்: மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்: ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும்.

அவர்களுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்: அவர்களின் கூக்குரல் செங்கடல் வரை கேட்கும்.

இதோ! கழுகைப் போல் ஒருவன் வானளாவப் பறந்து, கீழ்நோக்கிப் பாய்வான்: போஸ்ரா மேல் தன் இறக்கைகளை விரிப்பான். அந்நாளில் ஏதோமின் படைவீர்களுடைய இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும்.

தமஸ்கு குறித்து: ஆமாத்தும் அர்ப்பாதும் கலக்கம் அடைந்துள்ளன: கெட்ட செய்தியை அவை கேள்வியுற்றன: அவை அச்சத்தால் நடுங்குகின்றன: கடலைப்போல் தத்தளிக்கின்றன: அவற்றுக்கு அமைதியே கிடையாது.

தமஸ்கு தளர்ந்துவிட்டது: தப்பியோடப் பார்க்கின்றது: அதனைக் கிலி பிடித்துக்கொண்டது: வேதனை, துயரத்தின் பிடியில் பேறுகாலப் பெண் தவிப்பதுபோல் அதுவும் தவிக்கின்றது.

புகழ் பெற்ற நகர் - மகிழ்ச்சி பொங்கும் நகர் - இப்படிக் கைவிடப்பட்டுக் கிடக்கிறதே!

அதன் இளைஞர்கள் தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள். அதன் படைவீரர்கள் அனைவரும் அந்நாளில் அழிக்கப்படுவார்கள், என்கிறார் படைகளின் ஆண்டவர்.

தமஸ்குவின் மதில்களில் தீவைப்பேன்: பென்அதாதின் கோட்டைகளை அது சுட்டெரிக்கும்.

பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் வீழ்த்திய கேதார், ஆட்சோர் அரசுகள் பற்றி, ஆண்டவர் கூறுவது இதுவே: புறப்படுங்கள், கேதாரை எதிர்த்துச் செல்லுங்கள்: கீழ்த்திசை மக்களை அழித்தொழியுங்கள்.

அவர்களின் கூடாரங்களும் மந்தைகளும் பிடிபடும்: கூடாரத் துணிகளும் மற்ற எல்லாப் பொருள்களும் கைப்பற்றப்படும்: அவர்களின் ஒட்டகங்களை அவர்களிடமிருந்து ஓட்டிச்செல்வர்: "எப்பக்கமும் ஒரே திகில்" என மனிதர் ஓலமிடுவர்.

ஆட்சோரின் குடிமக்களே! தப்பியோடுங்கள், பரமாகச் சென்று பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் உங்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியுள்ளான்: உங்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்துள்ளான்.

புறப்படுங்கள்: கதவுகளோ தாழ்ப்பாள்களோ இன்றி அமைதியோடும் பாதுகாப்போடும் வாழும் மக்களினத்தார்க்கு எதிராக-தனித்து வாழும் மக்களினத்தார்க்கு எதிராக முன்னேறிச் செல்லுங்கள், என்கிறார் ஆண்டவர்.

அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையடிக்கப்படும்: அவர்களின் எண்ணற்ற மந்தைகள் பறிமுதலாகும்: முன்தலையை மழித்துக்கொள்ளும் பறக்கவிடுவேன்: எப்பக்கமுமிருந்தும் அவர்கள்மேல் அழிவைக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர்.

ஆட்சோர், குள்ளநரிகளின் உறைவிடம் ஆகும்: என்றும் பாழடைந்து கிடக்கும்: அங்கு எவரும் குடியிருக்கமாட்டார்: எவரும் அதில் தங்கவும் மாட்டார்.

யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஏலாமைக் குறித்து இறைவாக்கினர் ஏரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஏலாமின் வலிமைக்கு ஆதாரமான வில்லை முறித்துப்போடுவேன்.

வானத்தின் நான்கு திசைகளினின்று நால்வகைக் காற்றுகளை ஏலாம்மீது வரவழைப்பேன்: இந்த எல்லாக் காற்றுகளினாலும் அவர்களைச் சிதறடிப்பேன். ஏலாமினின்று விரட்டியடிக்கப்பட்டோ ர் சென்றடையாத நாடே இராது.

ஏலாமின் எதிரிகள் முன்னும், அதன் உயிரைப் பறிக்கத் தேடுவோர் முன்னும் நான் அதை நடுங்கச்செய்வேன்: அவர்கள்மேல் தண்டனை வருவிப்பேன். என் சினம் அவர்கள் மேல் மூண்டெழும், என்கிறார் ஆண்டவர். அவர்களை முற்றிலும் அழித்துத் தீர்க்கும்வரை, அவர்களைப் பின்தொடருமாறு வாளை அனுப்பி வைப்பேன். 38 ஏலாமில் என் அரியணையை அமைப்பேன்: அவர்களின் அரசரையும் தலைவர்களையும் அழிப்பேன், என்கிறார் ஆண்டவர்.

ஆயினும் இறுதி நாள்களில் நான் ஏலாமின் சொத்து, செல்வங்களைத் திரும்பக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 50.

பாபிலோனைக் குறித்தும் கல்தேயரின் நாட்டைக் குறித்தும் இறைவாக்கினர் எரேமியா வாயிலாக ஆண்டவர் அருளிய வாக்கு:

மக்களினத்தார் நடுவே அறிவியுங்கள்: பறைசாற்றுங்கள்: கொடியேற்றுங்கள்: முழக்கம் செய்யுங்கள்: "பாபிலோன் கைப்பற்றப்பட்டது: பேல் சிறுமையுற்றது: மெரோதாக்கு உடைக்கப்பட்டது: அதன் சிலைகள் சிறுமையுற்றன: அதன் உருவங்கள் உடைக்கப்பட்டன," என்று மறைக்காமல் அறிக்கையிடுங்கள்.

ஏனெனில், வடக்கினின்று ஓர் இனம் அதை எதிர்த்துவரும். அது பாபிலோனைப் பாழாக்கும். ஒருவனும் அதில் குடியிருக்கமாட்டான். மனிதனும் விலங்கும் அங்கிருந்து தப்பியோடுவர்.

ஆண்டவர் கூறுகிறார்: அந்நாள்களில்-அக்காலத்தில்-இஸ்ரயேல் மக்களும் யூதா மக்ளும் சேர்ந்து வருவா஡கள்: அழுது கொண்டே திரும்பி வருவார்கள்: தங்கள் கடவுளான ஆண்டவரை அவர்கள் தேடுவார்கள்.

அவர்கள் சீயோனை நோக்கியவண்ணம், அங்குப் போகும் வழியைக் கேட்பார்கள்: 'வாருங்கள்: மறக்கப்படாத, என்றுமுள உடன்படிக்கை மூலம் ஆண்டவரோடு நம்மையே இணைத்துக்கொள்வோம்' என்பார்கள்.

என் மக்கள் காணாமற்போன ஆடு போன்றவர்கள். அவர்களின் ஆயர்கள் அவர்களை வழி தவறிப் போகச் செய்தார்கள்: மலைகள் மேல் அவர்களைக் கலங்கடித்தார்கள். மலைக்கும் குன்றுக்கும் இடையில் மக்கள் அலைந்து திரிந்தார்கள்: தங்கள் உறைவிடத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

பார்த்தவர் எல்லாரும் அவர்களை விழுங்கினர். 'நாங்கள் குற்றவாளிகள் அல்லர்: ஏனெனில் அவர்கள் தங்களின் உண்மையான உறைவிடமும், தங்கள் மூதாதையரின் நம்பிக்கையுமான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்தார்கள்' என்று அவர்களுடைய பகைவர் சொல்லிக்கொண்டனர்.

பாபிலோனினின்று தப்பியோடுங்கள்: கல்தேயரின் நாட்டினின்று வெளியேறுங்கள்: மந்தைக்கு முன் செல்லும் கிடாய்களைப்போல் இருங்கள்.

ஏனெனில் நான் வடக்கு நாட்டினின்று பெரிய மக்களினங்களின் திரளைப் பாபிலோனுக்கு எதிராகத் பண்டி விட்டுப் பாய்ந்து வரச்செய்வேன். அவை அதற்கு எதிராகப் படையெடுத்து வர, அது கைப்பற்றப்படும். அவர்களின் அம்புகள், வெறுங்கையாய்த் திரும்பி வராத தேர்ச்சி பெற்ற வீரர் போன்றவை.

கல்தேயா சூறையாடப்படும்: அதைக் கொள்ளையிடுவோர் அனைவரும் நிறைவு பெறுவர், என்கிறார் ஆண்டவர்.

என் உரிமைச் சொத்தைச் சூறையாடியவர்களே, நீங்கள் அக்களித்தாலும், அகமகிழ்ந்தாலும், புல்கண்ட இளம்பசுபோல் துள்ளிக் குதித்தாலும், பொலிகுதிரைப்போலக் கனைத்தாலும்,

உங்கள் அன்னை பெரும் அவமானத்துக்கு உள்ளாவாள்: உங்களை ஈன்றெடுத்தவள் இகழ்ச்சிக்கு ஆளாவாள்: மக்களுள் அவளே கடையளாய் இருப்பாள்: வறண்ட, வெறுமையான பாலைநிலம் ஆவாள்.

ஆண்டவருடைய வெஞ்சினத்தால் அது குடியற்றுப்போகும்: முற்றிலும் பாழடைந்துபோகும்: பாபிலோனைக் கடந்து செல்லும் எவனும் அதிர்ச்சி அடைவான்: அதன் தோல்வி கண்டு ஏளனம் செய்வான்.

வில்வீரர்களே, நீங்கள் அனைவரும் பாபிலோனுக்கு எதிராக எப்பக்கமும் அணிவகுத்து வாருங்கள். அதன்மீது அம்பு எய்யுங்கள், அம்பு மாரி பொழியுங்கள்: அது ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துள்ளது.

எப்பக்கமும் அதற்கு எதிராகக் குரல் எழுப்புங்கள். அது சரணடைந்துவிட்டது. அதன்கொத்தளங்கள் வீழ்ந்தன: அதன் மதில்கள் தகர்ந்தன. இது ஆண்டவரின் பழிவாங்குதல் ஆகும். நீங்களும் அதனைப் பழிவாங்குங்கள்: அது செய்ததுபோல் நீங்கள் அதற்குச் செய்யுங்கள்.

விதைப்பவனைப் பாபிலோனினின்று அழித்துப் போடுங்கள்: அறுவடைக் காலத்தில் அரிவாள் எடுப்பவனையும் வீழ்த்தி விடுங்கள்: கொடுங்கோலனின் வாளை முன்னிட்டு, அவர்கள் ஒவ்வொருவனும் தன் சொந்த மக்களிடம் திரும்பிப் போகட்டும்: அவர்கள் எல்லாரும் தங்கள் சொந்த நாட்டுக்கே தப்பியோடட்டும்.

இஸ்ரயேல் வேட்டையாடப்படும் ஆட்டுக்கு ஒப்பாகும். அது சிங்கங்களால் துரத்தியடிக்கப்பட்டது. முதன்முதலில் அசீரிய மன்னன் அதை விழுங்கினான்: இறுதியாகப் பாபிலோனிய மன்னன் நெபுகத்஥னேசர் அதன் எலும்புகளை முறித்துப் போட்டான்.

ஆகவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ! அசீரிய மன்னனை நான் தண்டித்தது போன்று, பாபிலோனிய மன்னனையும் அவனது நாட்டையும் தண்டிப்பேன்.

நான் இஸ்ரயேலை அதன் மேய்ச்சல் நிலத்திற்குத் திரும்ப அழைத்து வருவேன். கர்மேலிலும் பாசானிலும் அது மேயும்: எப்ராயிம் மலைகளிலும் கிலயாதிலும் அது வயிறு புடைக்கத்தின்னும்.

அந்நாள்களில் - அக்காலத்தில் - இஸ்ரயேலில் குற்றத்தை தேடிப் பார்ப்பர்: ஆனால், ஒன்றும் தென்படாது. யூதாவில் பாவங்களைத் தேடுவர்: ஆனால் ஒன்றும் காணப்படாது. ஏனெனில் நான் விட்டுவைத்த எஞ்சியோரை மன்னிப்பேன், என்கிறார் ஆண்டவர்.

மெரத்தாயிம் நாட்டுக்கு எதிராகப் புறப்படு: பெக்கோதின் குடிகளை எதிர்த்துமுன்னேறு: அவர்களை வெட்டி வீழ்த்து: முற்றிலும் அழித்துப்போடு: நான் கட்டளையிட்ட அனைத்தையும் நிறைவேற்று, என்கிறார் ஆண்டவர்.

நாட்டில் போரின் ஆரவாரம் கேட்கின்றது: பேரழிவின் கூக்குரல் ஒலிக்கின்றது.

மண்ணுலகு முழுவதற்கும் சம்மட்டியாய்த் திகழ்ந்தது நொறுங்கித் பள்பளானது எப்படி! மக்களினங்கள் நடுவே பாபிலோன் பாழடைந்துபோனது எவ்வாறு!

பாபிலோனே, நான் உனக்குக் கண்ணி வைத்தேன்: தெரியாமலே நீ அதில் மாட்டிக் கொண்டாய்: நீ கண்டுபிடிக்கப்பட்டுப் பிடிபட்டாய்: ஏனெனில் நீ ஆண்டவரை எதிர்த்தாய்.

ஆண்டவர் தம் படைக்கலக் கொட்டிலைத் திறந்து விட்டார்: தம் கடுங்கோபத்தின் படைக்கருவிகளை வெளிக்கொணர்ந்தார்: கல்தேயர் நாட்டில் படைகளின் ஆண்டவராகிய கடவுள் ஆற்றவேண்டிய அலுவல் இதுவே.

எல்லாத் திக்குகளினின்றும் அதை எதிர்த்து வாருங்கள்: அதன் களஞ்சியங்களை உடைத்துத்திறங்கள்: தானியக் குவியல்போல அதைக் குவித்து வையுங்கள்: அதை முற்றிலும் அழித்துப் போடுங்கள்: அதில் எதுவும் எஞ்சியிருக்க வேண்டாம்.

அதன் காளைகள் அனைத்தையும் வெட்டி வீழ்த்துங்கள்: அவை கொலைக்களத்திற்குச் செல்லட்டும்: அவற்றுக்கு ஜயோ கேடு! அவற்றின் நாள் வந்துவிட்டது: அவற்றின் தண்டனைக் காலம் நெருங்கிவிட்டது.

இதோ! அவர்கள் பாபிலோனிய நாட்டிலிருந்து தப்பி ஓடுகிறார்கள்: தம்கோவிலை முன்னிட்டு நம் ஆண்டவராகிய கடவுள் பழி வாங்கியதைச் சீயோனில் அறிவிக்க ஓடுகிறார்கள்.

வில்லாளர்கள், வில்வீரர்கள் அனைவரும் பாபிலோனுக்கு எதிராக வருமாறு அழையுங்கள்: அதை சுற்றி வளைத்துக் கொள்ளுங்கள். ஒருவனும் தப்பியோட விடாதீர்கள்: அதன் செயல்களுக்குத் தக்கவாறு கைம்மாறு செய்யுங்கள்: அது நடந்து கொண்டதற்கு ஏற்ப அதை நடத்துங்கள்: ஏனெனில், இஸ்ரயேலின் பயவராகிய ஆண்டவருக்கு எதிராக அது இறுமாப்புடன் நடந்து கொண்டது.

எனவே அதன் இளைஞர்கள் தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள்: அதன் படைவீரர்கள் அனைவரும் அந்நாளில் அழிக்கப்படுவார்கள், என்கிறார் ஆண்டவர்.

இறுமாப்புக் கொண்டவனே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன், என்கிறார் படைகளின் ஆண்டவராகிய தலைவர். உனது நாள் வந்துவிட்டது: உன்னை நான் தண்டிக்கும் காலம் நெருங்கி விட்டது.

இறுமாப்புக் கொண்டவன் இடறிக் கீழே விழுவான்: அவனைத் பக்கிவிட யாரும் இலர்: அவன் நகர்களில் நான் தீ வைப்பேன்: சுற்றிலும் உள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும்.

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்: யூதாவின் மக்களும் அவர்களோடு சேர்ந்து துன்புறுத்தப் படுகிறார்கள். அவர்களை அடிமைப் படுத்தியோர் அனைவரும் அவர்களைக் காவலில் வைத்திருக்கிறார்கள்: அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறார்கள்:

அவர்களின் மீட்பர் வலிமைமிக்கவர்: "படைகளின் ஆண்டவர்" என்பதுஅவர் பெயர். அவரே அவர்கள் வழக்கை நடத்துவார்: நாட்டுக்கு அமைதியைக் கொணர்வார்: பாபிலோன் குடிமக்களுக்கோ அமைதியின்மையை அளிப்பார்.

கல்தேயர்மேலும், பாபிலோன் குடிமக்கள்மேலும், அதன் தலைவர்கள், ஞானிகள் மேலும் ஒரு வாள் வரும், என்கிறார் ஆண்டவர்.

குறிசொல்வோர் மேல் வாள் வரும்: அவர்கள் அறிவிலிகளாக மாறுவார்கள்: அதன் படை வீரர்கள் மேல் வாள் வரும்: அவர்கள் அழிக்கப்படுவார்கள்.

அதன் குதிரைகள்மேலும், தேர்கள் மேலும் அதன் நடுவே இருக்கும் கூலிப் படைகள்மேலும் வாள் வரும்: அவர்கள் பேடிகள் ஆவார்கள்: அதன் செல்வங்கள் அனைத்தின் மேலும் வாள் வரும்: அவை கொள்ளையடிக்கப்படும்.

அதன் நீர்நிலைகள் மேல் வாள் வரும்: அவை வறண்டுபோகும்: அது சிலைகள் மலிந்த நாடு: அதன் மக்கள் சிலைப் பைத்தியங்கள்.

எனவே பாபிலோனின் காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளோடு வாழும்: தீக்கோழிகள் அங்குக் குடியிருக்கும். மக்கள் என்றுமே அங்குக் குடியேறப்போவதில்லை: காலமெல்லாம் அது குடியிருப்பாரற்றுக் கிடக்கும்.

கடவுள் சோதோம், கொமோராவையும் அவற்றின் அண்டை நகர்களையும் வீழ்த்தியபொழுது நிகழ்ந்ததுபோல், அங்கு எவரும் குடியிருக்க மாட்டார்: எவரும் தங்கவுமாட்டார், என்கிறார் ஆண்டவர்.

இதோ! வடக்கினின்று ஓர் இனம் வருகின்றது: வலிமை வாய்ந்த மக்களினமும் மன்னர் பலரும் மண்ணுலகின் கடை எல்லைகளினின்று கிளர்ந்தெழுகின்றனர்.

அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்: அவர்கள் இரக்கமற்ற அரக்கர்கள்: அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் போன்றது: மகளே பாபிலோன்! அவர்கள் போருக்கு அணி வகுத்துக் குதிரைகள்மீது சவாரி செய்து கொண்டு உனக்கு எதிராய் வருகின்றார்கள்.

அவர்கள் வரும் செய்திபற்றிக் கேள்வியுற்ற, பாபிலோனிய மன்னனின் கைகள் தளர்ந்துபோயின: கடுந்துயர் அவனை ஆட்கொண்டது: பேறுகாலப் பெண்ணைப்போல் அவன் தவிக்கின்றான்.

யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவதுபோல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென்று விரட்டியடிப்பேன். நான் தேர்ந்து கொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக்கேட்பவன் யார்? எந்த மேய்ப்பன் என்னை எதிர்த்து நிற்பான்?

எனவே பாபிலோனுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், கல்தேய நாட்டுக்கு எதிராக அவர் கொண்டுள்ள எண்ணங்களுக்கும் செவிகொடுங்கள்: மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்: ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும்.

பரிபலோனுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்: அதன் கூக்குரல் மக்களினத்தார் நடுவே கேட்கும்.

அதிகாரம் 51.

ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனுக்கும் கல்தேயாவின் குடிமகளுக்கும் எதிராக அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன்.

புடைப்போரைப் பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்: அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்: தண்டனை நாளில் அவர்கள் எப்பக்கத்தினின்றும் அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்: அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள்.

வில்வீரன் வில்லை நாணேற்ற விடாதீர்கள்! தன் கவசத்தை அணிந்து நிற்க விடாதீர்கள்! அதன் இளைஞர்கள் யாரையும் விட்டுவைக்காதீர்கள்: அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.

கொலையுண்டோ ர் கல்தேயரின் நாட்டில் வீழ்ந்து கிடப்பர். காயமடைந்தோர் அதன் தெருக்களில் கிடப்பர்.

தங்கள் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இஸ்ரயேலையும் யூதாவையும் கைவிட்டுவிடவில்லை. இஸ்ரயேலின் பயவருக்கு எதிராகக் கல்தேயரின் நாடு குற்றங்களால் நிறைந்துள்ளது.

பாபிலோன் நடுவினின்று தப்பியோடுங்கள்: ஒவ்வொருவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளட்டும்: அதன் குற்றகளுக்காக நீங்கள் அழிந்து போகாதீர்கள்: இது ஆண்டவர் பழிவாங்கும் காலம், அவரே அதற்குத் தகுந்த தண்டனை வழங்குவார்:

பாபிலோன் ஆண்டவரின் கையில் பொற்கிண்ணம்போல் இருந்தது: அது மண்ணுலகு முழுவதற்கும் போதை ஊட்டியது: மக்களினங்கள் அதன் திராட்சை இரசத்தைப் பருகின: நாடுகள் வெறிகொண்டன.

பாபிலோன் திடீரென்று விழுந்து நொறுங்கிற்று: அதற்காகப் புலம்பியழுங்கள்: அதன் காயத்துக்கு மருந்து கொண்டு வாருங்கள்: ஒருவேளை அது நலம் பெறலாம்!

நாங்கள் பாபிலோனைக் குணப்படுத்த முயன்றோம்: அதுவோ நலம் அடைவதாயில்லை! அதைக் கைவிட்டுவிடுங்கள்: நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த நாட்டுக்குப் போவோம்: பாபிலோனுக்குரிய தண்டனைத் தீர்ப்பு விண்ணுலகை எட்டியுள்ளது: அது வானத்தைச் சென்றடைந்துள்ளது.

ஆண்டவர் நமக்கு நீதி வழங்கியுள்ளார்: வாருங்கள்! நம் கடவுளான ஆண்டவரின் செயலைச் சீயோனில் பறைசாற்றுவோம்.

அம்புகளைக் கூர்மையாக்குங்கள்: கேடயங்களைக் கையிலெடுங்கள்: ஆண்டவர் மேதிய அரசர்களைக் கிளர்ந்தெழச் செய்துள்ளார்: பாபிலோனை அழிப்பதே அவரது திட்டம்: இவ்வாறு தம் கோவிலை முன்னிட்டு ஆண்டவர் பழிவாங்குவார்.

பாபிலோன் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள்: காவலை வலுப்படுத்துங்கள்: இரவுக் காவலாளரை நிறுத்துங்கள்: கண்ணிகளைத் தயார் செய்யுங்கள்: பாபிலோனின் குடிகளுக்கு எதிராக ஆண்டவர் உரைத்திருந்ததைத் தமது திட்டப்படியே நிறைவேற்றுவார்.

நீர்வளம் கொண்டனே! செல்வம் மிகுந்தவனே! உனக்கு முடிவு வந்துவிட்டது: உன் வாழ்நாளின் இழை துண்டிக்கப்பட்டுவிட்டது.

வெட்டுக்கிளிகளைப் போன்று எண்ணற்ற மனிதரால் உன்னைத் திண்ணமாய் நிரப்புவேன்: அவர்கள் உனக்கு எதிராக வெற்றி முழக்கம் செய்வார்கள், என்று படைகளின் ஆண்டவர் தம்மேல் ஆணையிட்டுக் கூறியுள்ளார்.

அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார்: தம் ஞானத்தால் பூவுலகை நிலைநாட்டினார்: தம் கூர்மதியால் விண்ணுலகை விரித்தார்.

அவர் குரல் கொடுக்க, வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகின்றது: மண்ணுலகின் எல்லையினின்று முகில்கள் எழச் செய்கின்றார்: மழை பொழியுமாறு மின்னல் வெட்டச் செய்கிறார்: தம் கிடங்குகளினின்று காற்று வீசச்செய்கிறார்.

மனிதர் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்: கொல்லர் எல்லாரும் தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்: அவர்களின் வார்ப்புப் படிமங்கள் பொய்யானவை: அவற்றிற்கு உயிர் மூச்சே இல்லை.

அவை பயனற்றவை, ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்: தம் தண்டனையின் காலத்தில் அவை அழிந்துவிடும்.

யாக்கோபின் பங்காய் இருப்பவரோ இவற்றைப் போன்றவர் அல்லர்: அவரே அனைத்தையும் உருவாக்கியவர்: தம் உரிமைச் சொத்தாகிய இனத்தை உருவாக்கியவரும் அவரே: படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயராகும்.

நீ என் சம்மட்டியும் படைக்கருவியும் ஆவாய்: நான் உன்னைக்கொண்டு மக்களினங்களை நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு அரசுகளை அழித்தொழிப்பேன்.

உன்னைக்கொண்டு குதிரையையும் குதிரைவீரனையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு தேரையும் தேரோட்டியையும் நொறுக்குவேன்.

உன்னைக்கொண்டு ஆணையும் பெண்ணையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு முதியோனையும் சிறுவனையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு இளைஞனையும் இளம்பெண்ணையும் நொறுக்குவேன்:

உன்னைக்கொண்டு ஆயனையும் அவனது மந்தையையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு உழவனையும் அவன் காளைகளையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு ஆளுநர்களையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்:

பாபிலோனும் கல்தேயாவின் குடிகள் எல்லாரும் சீயோனில் செய்த தீச்செயல் அனைத்தின் பொருட்டு, உங்கள் கண்முன்னால் அவர்களைப் பழிவாங்குவேன், என்கிறார் ஆண்டவர்.

அழிவைக் கொணரும் மலையே, மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே, நான் உனக்கு எதிராய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர். நான் உனக்கு எதிராய் என் கையை நீட்டுவேன்: உன்னைப் பாறை முகடுகளினின்று உருட்டிவிடுவேன்: உன்னை எரிந்துபோன மலை ஆக்குவேன்.

மூலைக்கல் என்றோ, அடிக்கல் என்றோ, உன்னிடமிருந்து கல் எடுக்கப்படாது: நீ என்றும் பாழடைந்தே கிடப்பாய், என்கிறார் ஆண்டவர்.

மண்ணுலகின்மேல் கொடி ஏற்றுங்கள்: மக்களினங்கள் நடுவில் எக்காளம் ஊதுங்கள்: அதனை எதிர்த்துப் போரிட மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்: அதனை எதிர்க்குமாறு அரராத்து, மின்னி, அஸ்கனாசு ஆகிய அரசுகளுக்கு அழைப்பு விடுங்கள்: அதற்கு எதிராய்த் தானைத் தலைவனை ஏற்படுத்துங்கள். வெட்டுக்கிளிக் கூட்டம்போல் குதிரைகளைக் கொணருங்கள்.

அதனை எதிர்த்துப் போரிட மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்: மேதிய மன்னர்கள், ஆளுநர்கள், அதிகாரிகளையும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா நாடுகளையும் கூப்பிடுங்கள்.

மண்ணுலகு நடுநடுங்கி, வேதனையால் பதைபதைக்கிறது: பாபிலோன் நாட்டை மக்கள் குடியிருப்பில்லாத பாழ்நிலம் ஆக்கும் பொருட்டு அதற்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டங்கள் நிலைக்கும்.

பாபிலோனின் படைவீரர்கள் போரிடுவதைக் கைவிட்டார்கள்: அவர்கள் தங்கள் கோட்டைகளுக்குள்ளேயே தங்கியிருக்கிறார்கள்: அவர்களின் வலிமை குன்றிப்போயிற்று. அவர்கள் பேடிகளாய் மாறிவிட்டார்கள். அதன் உறைவிடங்கள் எரிந்துபோயின: அதன் தாழ்ப்பாள்கள் உடைந்து போயின.

ஓர் அஞ்சற்காரன் அடுத்த அஞ்சற்காரனைச் சந்திக்க ஓடுகின்றான்: ஒரு பதன் அடுத்த பதனைச் சந்திக்க ஓடுகின்றான்: "நகர் எல்லாப் பக்கங்களிலும் கைப்பற்றப்பட்டது:

கடவுத் துறைகள் பிடிப்பட்டன: கோட்டை, கொத்தளங்கள் தீக்கிரையாயின: படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர்", எனப் பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்க அவர்கள் ஓடுகிறார்கள்.

இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: புணையடிக்கும் காலக் களத்துக்கு மகள் பாபிலோன் ஒப்பாவாள்: இன்றும் சிறிது காலத்தில் அதன் அறுவடைக் காலம் வரும்.

பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் என்னை விழுங்கிவிட்டான்: அவன் என்னைக் கசக்கிப் பிழிந்து விட்டான்: வெறுமையான பாத்திரம்போல் என்னை ஆக்கிவிட்டான்: அரக்கன் போன்று என்னை விழுங்கிவிட்டான்: என் அருஞ்சுவை உணவுகளால் தன் வயிற்றை நிரப்பிக்கொண்டான். என்னைக் கொப்பளித்துத் துப்பிவிட்டான்.

"எனக்கும் என் உறவினர்க்கும் இழைக்கப்பட்ட கொடுமை பாபிலோன் மேல் வரட்டும்" என்று சீயோன் குடிகள் கூறட்டும்: "என் இரத்தப் பழி கல்தேயக் குடிகள்மீது வந்துவிழட்டும்," என்று எருசலேம் சொல்லட்டும்.

எனவே ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே உனக்காக வழக்காடுவேன்: உன் பொருட்டுப் பழிவாங்குவேன்: அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்: அதன் நீரூற்றுகள் காய்ந்துபோகச் செய்வேன்.

பாபிலோன் பாழ்மேடு ஆகும்: குள்ளநரிகளின் உறைவிடமாக மாறும். அது குடியிருப்பாரற்றுப் பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும் உள்ளாகும்.

அவர்கள் சிங்கங்களைப்போல் சேர்ந்து கர்ச்சிப்பார்கள்: சிங்கக் குட்டிகளைப்போல் சீறுவார்கள்.

அவர்கள் கொதித்தெழுந்தபொழுது நான் அவர்களுக்கு விருந்து அளிப்பேன்: அவர்கள் மயங்கி மகிழுமாறு போதையுறும்வரை குடிக்கச் செய்வேன்: அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்: துயில் எழவே மாட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.

செம்மறிக்குட்டிகள், ஆட்டுக்கிடாய்கள், வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்று, நான் அவர்களைக் கொலைக் களத்திற்குக் கொண்டுபோவேன்.

சேசாக்கு இப்படிப் பிடிபட்டுப் போயிற்றே! மண்ணுலகு முழுவதன் சிறப்பிடம் இப்படிக் கைப்பற்றப் பட்டுவிட்டதே! மக்களினங்கள் நடுவே பாபிலோன் பாழடைந்துபோனது எவ்வாறு?

கடலானது பாபிலோன்மீது கொந்தளித்து வந்துள்ளது: ஆர்ப்பரிக்கும் அலைகளால் அது மூடப்பட்டுவிட்டது.

அதன் நகர்கள் பாழடைந்துவிட்டன: அது வறண்ட பாலைநிலமாய் மாறிவிட்டது: அந்நாட்டில் குடியிருப்போர் யாரும் இல்லை: எவரும் அதனைக் கடந்து செல்லமாட்டார்.

நான் பாபிலோனில் பேலைத் தண்டிப்பேன்: அது விழுங்கினதை அதன் வாயினின்று கக்கச்செய்வேன்: மக்களினங்கள் இனி ஒருபோதும் அங்குக் செல்லமாட்டா: பாபிலோன் மதிலும் தரைமட்டமாக்கப்படும்.

என் மக்களே, அதனின்று வெளியேறுங்கள்: ஆண்டவரின் வெஞ்சினத்தினின்று ஒவ்வொருவனும் தன் உயிரைக் காத்துக்கொள்ளட்டும்.

உங்கள் உள்ளம் தளாரதிருக்கட்டும்: நாட்டில் உலவும் வதந்திகளைத் கேட்டுக் கலங்காதீர்கள்: ஓராண்டில் ஒரு வதந்தி உலவும்: மறு ஆண்டில் மற்றொரு வதந்தி உருவெடுக்கும்: நாட்டில் வன்முறை மலியும்: ஆளுநன் ஆளுநனுக்கு எதிராய் எழுவான்.

எனவே நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் பாபிலோன் சிலைகளைத் தண்டிப்பேன். அந்த நாடு முழுவதும் சிறுமையுறும்: கொலையுண்டோ ர் அனைவரும் அதன் நடுவே வீழ்ந்துகிடப்பர்.

விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அனைத்தும் பாபிலோனைக் குறித்து மகிழ்ச்சிக் குரல் எழுப்பும்: வடக்கினின்று "அழிப்போர்" அதை எதிர்த்து வருவர், என்கிறார் ஆண்டவர்.

பாபிலோனை முன்னிட்டு மண்ணுலகு எங்கும் மக்கள் கொலையுண்டு வீழ்ந்தனர்: இஸ்ரயேலில் கொலையுண்டோ ரை முன்னிட்டு இப்போது பாபிலோன் வீழ்ச்சியுற வேண்டும்.

வாளுக்குத் தப்பியவர்களே, போய்விடுங்கள், நிற்காதீர்கள்: தொலையிலிருந்து ஆண்டவரை நினைவுகூருங்கள்: உங்கள் இதயத்தில் எருசலேம் இடம்பெறட்டும்.

பழிமொழி கேட்டதால் நாங்கள் வெட்கத்துக்கு உள்ளானோம்: ஆண்டவரது இல்லத்தின் திருஇடங்களுக்குள் அன்னியர் நுழைந்துவிட்டதால், மானக்கேடு எங்கள் முகங்களை மூடிக்கொண்டது.

ஆகவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். நான் அதன் சிலைகளைத் தண்டிப்பேன்: அந்நாடு எங்கணும் காயம்பட்டோ ர் குமுறியழுவர்.

பாபிலோன் வானம்வரை தன்னை உயர்த்திக் கொண்டாலும், தன் உயர்ந்த கோட்டை கொத்தளங்களை வலுப்படுத்திக் கொண்டாலும், அழிப்போரை நான் அதன் மீது அனுப்புவேன், என்கிறார் ஆண்டவர்.

பாபிலோனிலிருந்து கூக்குரல் கேட்கிறது: கல்தேயரின் நாட்டிலிருந்து பேரழிவின் இரைச்சல் கேட்கிறது.

ஆண்டவர் பாபிலோனை அழிக்கிறார்: அதன் பெரும் ஆரவாரத்தை அடக்குகிறார்: அவர்களின் அலைகள் பெரும் வெள்ளம் போல் முழங்கும். அவர்கள் உரத்த குரலில் ஆரவாரம் செய்வர்.

"அழிப்போன்" பாபிலோன் மீதே வந்துவிட்டான். அதன் படைவீரர்கள் பிடிபட்டார்கள். அவர்கள் அம்புகள் முறித்தெறியப்பட்டன. ஆண்டவர் பழிவாங்கும் கடவுள்: அவர் திண்ணமாய்ப் பதிலடி கொடுப்பார்.

அதன் தலைவர்கள், ஞானிகள், ஆளுநர்கள், படைத்தலைவர்கள், படைவீரர்கள் ஆகிய எல்லாரையும் நான் குடிவெறி கொள்ளச்செய்வேன். அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்: துயில் எழவே மாட்டார்கள், என்கிறார் "படைகளின் ஆண்டவர்" என்னும் பெயர் கொண்ட மன்னர்.

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனின் அகன்ற மதில்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்படும்: அதன் உயர்ந்த வாயில்கள் தீக்கிரையாகும்: மக்களின் உழைப்பு வீணாகும்: மக்களினங்களின் முயற்சிகள் தீயோடு தீயாகும்.

யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனும் அரசப் பயணவிடுதிப் பொறுப்பாளருமான செராயா செதேக்கியாவோடு பாபிலோனுக்குச் சென்றபொழுது, இறைவாக்கினர் எரேமியா அவருக்குக் கொடுத்த கட்டளை:

பாபிலோன் மேல் வரவிருந்த தண்டனைகள் அனைத்தையும், அதாவது பாபிலோன் மேல் குறித்து மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் எரேமியா ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைத்தார்.

எரேமியா செராயாவிடம் கூறியது: நீ பாபிலோனை அடைந்தபின், இச்சொற்களை எல்லாம் கண்டிப்பாக வாசி.

'ஆண்டவரே, மனிதரோ விலங்கோ எதுவும் வாழாதபடி என்றும் பாழடைந்து கிடக்கும் அளவுக்கு நீர் அந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்' எனச் சொல்.

இச்சுருளை வாசித்து முடித்த பின்னர், அதை ஒரு கல்லில் கட்டி, யூப்பிரத்தீசு நடுவே எறிந்துவிடு.

"நான் பாபிலோனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைக்குப் பின்னர், அது மீண்டும் தலைபக்க முடியாமல், இவ்வாறே மூழ்கிப்போகும்" என்று சொல். எரேமியாவின் சொற்கள் இத்துடன் முற்றும்.

அதிகாரம் 52.

செதேக்கியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமுற்றாள் என்பவோ அவன் தாய்.

யோயாக்கிம் செய்தது போல, செதேக்கியாவும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்ட அனைத்தையும் செய்தான்.

ஆண்டவர் எருசலேமையும் யூதாவையும் தம் முன்னிலையினின்று தள்ளிவிடும் அளவுக்கு அவற்றின்மீது சினம் கொண்டார்: செதேக்கியா பாபிலோனிய மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.

அவனது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு, பத்தாம் மாதம், பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடும் எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி, அதைச் சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான்.

இவ்வாறு, அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினொன்றாம் ஆண்டு வரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது.

நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.

அப்பொழுது நகர மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசப் பூங்காவின் இரு மதில்களுக்கிடையே அமைந்த வாயில் வழியாக இரவோடு இரவாய் நகரைவிட்டு வெளியேறி, அராபாவை நோக்கித் தப்பியோடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்டவண்ணம் இருந்தனர்.

கல்தேயப்படையினர் அரசன் செதேக்கியாவைப் பின்தொடர்ந்து, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்: அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று.

அவர்கள் அரசனைப் பிடித்து, ஆமாத்து நாட்டின் இரிப்பலாவில் இருந்த பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் கொண்டு சென்றார்கள்.

பாபிலோனிய மன்னன் இரிப்லாவில் செதேக்கியாவின் புதல்வர்களை அவன் கண் முன்னே கொன்றான்: மேலும், யூதாவின் தலைவர்கள் அனைவரையும் கொன்றான்.

பாபிலோனிய மன்னன் செதேக்கியாவின் கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்: அவன் சாகும்வரை அவனைச் சிறையில் அடைத்தான்.

பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற பத்தொன்பதாம் ஆண்டு, ஜந்தாம் மாதம், பத்தாம் நாளன்று, அவனுக்குப் பணிசெய்து வந்த மெயக்காப்பாளர் தலைவன் நெபுசரதான் எருசலேமுக்குள் நுழைந்தான்.

ஆண்டவரின் இல்லத்தையும் அரச அரண்மனையையும் எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் அவன் தீக்கிரையாக்கினான்: பெரிய வீடுகளை எல்லாம் தீயிலிட்டுப் பொசுக்கினான்.

மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்து கல்தேயப் படையினர் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை எல்லாம் தகர்த்தெறிந்தனர்.

மெய்க்காப்பாளர் தலைவர் நெபுசரதான் ஏழை மக்களுள் சிலரையும், நகரில் எஞ்கியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னிடம் சரணடைந்திருந்தவர்களையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்த்து நாடுகடத்தினான்.

ஆனால் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.

ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத் பண்களையும் தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும் கல்தேயர் பள்பளாக்கி, வெண்கலத்தை எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.

சாம்பல்சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், பலிக் கிண்ணங்கள், பபக்கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்டவெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள்.

மேலும் பொன், வெள்ளியாலான கிண்ணங்கள், நெருப்புச் சட்டிகள், பலிக்கிண்ணங்கள், சாம்பல் சட்டிகள், விளக்குத் தண்டுகள், பபக்கலசங்கள், நீர்மப்படையல் கிண்ணங்கள ஆகிய எல்லாவற்றையும் மெய்காப்பாளர் தலைவன் எடுத்துச் சென்றான்.

சாலமோன் அரசர் ஆண்டவர் இல்லத்திற்கென்று செய்திருந்த இரு பண்கள், வெண்கலக் கடல், அதன் அடியில் இருந்த பன்னிரு வெண்கலக் காளைகள், தள்ளுவண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்து மாளாது.

பண் ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்: சுற்றளவு பன்னிரண்டு முழம்: வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை. உள்ளே கூடாய் இருந்தது.

பணின் உச்சியில் ஜந்து முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்஥களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன. மாதுளம்பழ வடிவங்கள் கொண்ட மறு பணும் அவ்வாறே செய்யப்பட்டிருந்தது.

வலைப் பின்னலைச் சுற்றிலும் அமைக்கப் பெற்றிருந்த மொத்தம் மறு மாதுளம் பழ வடிவங்களுள், தொண்ணூற்றாறு பக்கவாட்டில் தெரிந்தன.

மெய்க்காப்பாளர் தலைவன், தலைமைக் குரு செராயாவையையும் துணைக் குரு செப்பனியாவையும் வாயிற்காவலர் மூவரையும் சிறைப்பிடித்தவன்.

போர்வீரர்களின் தலைமை அதிகாரியையும், நகரில் இருந்த அரசவையோருள் எழுவரையும், படைத் தேர்வு மற்றும் பயிற்சி அலுவலரின் செயலரையும், நகருள் கண்ட பொது மக்களுள் அறுபது பேரையும் அவன் நகரினின்று கடத்தினான்.

மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதோன் இவர்களைப் பிடித்து, இரிப்லாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றான்.

ஆமாத்து நாட்டின் இரிப்லாவில் பாபிலோனிய மன்னன் இவர்களை வதைத்துக் கொன்றான். இவ்வாறு யூதா மக்கள் தங்கள் சொந்த நாட்டினின்று கடத்தப்பட்டார்கள்.

நெபுகத்னேசர் நாடுகடத்திய மக்களின் எண்ணிக்கை வருமாறு: அவன் ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில் யூதா நாட்டினர் மூவாயிரத்து இருபத்து மூன்று பேர்:

அவன் பதினெட்டாம் ஆண்டில் எருசலேமினின்று நாடுகடத்தப்பட்டோ ர் எண்ணூற்று முப்பத்திரண்டு பேர்:

அவன் இருபத்து மூன்றாம் ஆண்டில் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நாடுகடத்திய யூதா நாட்டினர் எழுமற்று நாற்பத்தைந்து பேர். ஆக, நாடு கடத்தப்பட்டோ ரின் மொத்த எண்ணிக்கை நாலாயிரத்து அறுமறு.

யூதாவின் அரசன் யோயாக்கினுடைய அடிமைத்தனத்தின் முப்பத்தேழாம் ஆண்டு பயன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் நாளன்று, அதாவது பாபிலோனிய மன்னன் எவில்மெரதாக்கு ஆட்சிபெற்ற ஆண்டில், அவன் யூதாவின் அரசன் யோயாக்கினைத் தலைநிமிரச் செய்து, சிறையினின்று விடுவித்தான்.

அவன் யோயாக்கினுடன் கனிவாய்ப் பேசி, பாபிலோனில் தன்னோடு இருந்த அரசர்களுக்கு இல்லாத சிறப்பை அவனுக்கு அளித்தான்.

எனவே யோயாக்கின் தன் சிறை உடைகளைக் களைந்தெறிந்தான்: தன் வாழ்நாள் எல்லாம் அரசனுடன் தவறாது விருந்துண்டுவந்தான்.

அவனுடைய அன்றாடத் தேவைகளுக்காக, அவன் சாகுமட்டும், அதாவது அவன் வாழ்நாள் முழுவதும், பாபிலோனிய மன்னன் அவனுக்கு உதவித் தொகையை ஒவ்வொரு நாளும் ஒழுங்காகக் கொடுத்து வந்தான்.

புத்தகம் 25 - புலம்பல்

அதிகாரம் 1.

அந்தோ! மக்கள் மிகுந்த மாநகர் தனியளாய் அமர்ந்தனளே! நாடுகளில் மாண்புடையாள் விதவைபோல் ஆனாளே! மாநிலங்களின் இளவரசி அடிமைப்பெண் ஆயினளே!

ஆறாத் துயருற்று இரவில் அவள் அழுகின்றாள்: அவளின் கன்னங்களில் கண்ணீர் வடிகின்றது: அவளின் காதலரில் தேற்றுவார் எவரும் இல்லை: அவளின் நண்பர் அனைவரும் அவளுக்குத் துரோகம் செய்து பகைவர் ஆயினர்.

இன்னலுற்ற அடிமையான யூதா நாடுகடத்தப்பட்டாள்! வேற்றினத்தாருடன் தங்கியிருக்கும் அவள் அமைதி பெறவில்லை! துரத்தி வந்தோர் இடுக்குகளிடையே அவளை வளைத்து பிடித்தனர்!

விழாக்களுக்குச் செல்பவர் யாருமில்லை: சீயோனுக்குச் செல்லும் வழிகள் புலம்புகின்றன: அவள் நுழைவாயில்கள் பாழடைந்துள்ளன: அவள் குருக்கள் பெருமூச்சு விடுகின்றனர்: அவளின் கன்னிப் பெண்கள் ஏங்கித் தவிக்கின்றனர்: அவளுக்கு வாழ்க்கையே கசப்பாயிற்று.

உயர் தலைவர் ஆயினர் அவளின் எதிரிகள்! வளமுடன் வாழ்கின்றனர் அவளின் பகைவர்! அவளுடைய பல்வேறு குற்றங்களுக்காக ஆண்டவர் அவளைத் துன்பத்திற்கு உட்படுத்தினார்! அவள் குழந்தைகளை எதிரிகள் கைதியாக்கிக்கொண்டு போயினர்.

அனைத்து மேன்மையும் மகள் சீயோனை விட்டு அகன்றது: அவள் தலைவர்கள் பசும்புல் காணா மான்கள்போல் ஆயினர். துரத்தி வருவோர் முன் அவர்கள் ஆற்றல் அற்றவர் ஆயினர்.

எருசலேம், தன் துன்ப நாள்களிலும், அகதியாய் வாழ்ந்தபோதும், முன்னாள்களில் தனக்கிருந்த நலன்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தாள்: அவளின் மக்கள் எதிரிகளின் கைகளில் சிக்கினார்கள்: அவளுக்கு உதவி செய்வார் யாருமில்லை: அவளது வீழ்ச்சியைக் கண்ட எதிரிகள் அவளை ஏளனம் செய்தனர்.

ஏராளமாய்ப் பாவம் செய்தாள் எருசலேம்: அதனால் அவள் கறைப்பட்டவள் ஆனாள்: அவளை முன்பு மதித்த அனைவரும் அவமதித்தனர்: அவளுடைய திறந்த மேனியைக் கண்டனர்: அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னோக்கித் திரும்பினாள்.

ஜயகோ! அவள் தீட்டு அவள் ஆடையில் தெரிகின்றதே! அவள் தனக்கு வரவிருப்பதை நினைவில் கொள்ளவில்லை! அளவது வீழ்ச்சி அதிர்ச்சியைத் தருகின்றது! அவளைத் தேற்றுவார் யாரும் இல்லை! ஆண்டவரே என் துன்பத்தைப் பாரும்! பகைவன் பெருமை பெற்றுவிட்டான்!

ஒப்பற்ற அவளது விருப்பமான பொருளனைத்தின்மீதும் கைவைத்தான் பகைவன்! வேற்றினத்தார் உம் சபைக்கு வருவதைத் தடை செய்தீர்! அன்னார் அவளது திருத்தலத்தில் நுழைவதை அவள் பார்த்து நின்றாள்!

உணவைத் தேடி அவளின் மக்கள் அனைவரும் ஓலமிடுகின்றனர்! உயிரைக் காத்திடத் தம் ஒப்பற்ற பொருள்களை உணவுக்காகத் தந்தனர்! ஆண்டவரே என்னைக் கண்ணோக்கும்! நான் எத்தகு இழிநிலைக்கு உள்ளானேன் என்று பாரும்!

இவ்வழியாய்க் கடந்து செல்வோரே! உங்களுக்குக் கவலை இல்லையா? அனைவரும் உற்றுப் பாருங்கள்! எனக்கு வந்துற்ற துயர்போல வேறேதும் துயர் உண்டோ? ஆண்டவர் தம் வெஞ்சின நாளில் என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கினர்.

மேலிருந்து அவர் நெருப்பினை என் எலும்புகளுக்குள் இறங்கச் செய்தார்! என் கால்களுக்கு வலை விரித்தார்! அவர் என்னைப் பின்னடையச் செய்தார்! அவர் என்னைப் பாழாக்கினார்! நாள் முழுவதும் நான் சோர்ந்து போகிறேன்.

என் குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது: அவை பிணைக்கப்பட்டு, என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன: அவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்: நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார்.

என் தலைவர் என்னிடமுள்ள வலியோர் அனைவரையும் அவமதித்தார்: என் இளைஞரை அடித்து நொறுக்க அவர் எனக்கு எதிராக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்: மகள் யூதாவாகிய கன்னியை, ஆலையில் திராட்சைப் பழத்தைப் பிழிவதுபோல, என் தலைவர் கசக்கிப் பிழிந்தார்.

இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன்: என் இரு கண்களும் கண்ணீரைப் பொழிகின்றன: என் உயிரைக் காத்து ஆறுதல் அளிப்பவர் எனக்கு வெகு தொலையில் உள்ளார்: பகைவன் வெற்றி கொண்டதால் என் பிள்ளைகள் பாழாய்ப் போயினர்.

சீயோன் தன் கைகளை உயர்த்துகின்றாள்: அவளைத் தேற்றுவார் யாருமில்லை: சூழந்து வாழ்வோர் யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறு ஆண்டவர் கட்டளையிட்டார்: எருசலேம் அவர்களிடையே தீட்டுப்பொருள் ஆயிற்று.

ஆண்டவரோ நீதியுள்ளவர்: நான் அவரது வாக்குக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தேன்: அனைத்து மக்களினங்களே, செவிகொடுங்கள்: என் துயரத்தைப் பாருங்கள்: என் கன்னிப்பெண்களும் இளைஞரும் நாடுகடத்தப்பட்டனர்.

என் காதலர்களை அழைத்தேன்: அவர்களோ என்னை ஏமாற்றினர்: என் குருக்களும் பெரியோரும் தங்கள் உயிரைக் காத்திட உணவு தேடுகையில், நகரில் பசியால் மாண்டனர்.

ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கும்! துயரில் நான் மூழ்கியுள்ளேன்! நான் பெருங் கலகம் செய்துள்ளேன்! என் குலை நடுங்குகின்றது! என் இதயம் வெடிக்கின்றது! வெளியே வாளுக்கு இரையாகினர் என் பிள்ளைகள்! வீட்டினுள்ளும் சாவு மயம்!

நான் விடும் பெருமூச்சை அவர்கள் கேட்டார்கள்: என்னைத் தேற்றுவார் யாரும் இல்லை: என் எதிரிகள் அனைவரும் எனக்கு நேரிட்ட தீங்கைப்பற்றிக் கேள்வியுற்றனர்: நீரே அதைச் செய்தீர் என மகிழ்ச்சி அடைகின்றனர்! நீர் அறிவித்த நாளை வரச் செய்யும்! அவர்களும் என்னைப்போல் ஆகட்டும்!

அவர்கள் தீச்செயல்கள் அனைத்தும் உம் திருமுன் வருவதாக! என் அனைத்துக் குற்றங்களின் பொருட்டு, நீர் என்னைத் தண்டித்தது போல், அவர்களையும் தண்டியும்! விம்மல்கள் மிகப் பல! என் இதயம் சோர்ந்துபோயிற்று!

அதிகாரம் 2.

ஜயோ! மகள் சீயோனை ஆண்டவர் தம் சினமென்னும் மேகத்தால் மூடினார்! அவர் இஸ்ரயேலின் மேன்மையை விண்ணினின்று மண்ணுக்குத் தள்ளினார்! அவரது சினத்தின் நாளில் தம் கால்மணையை மனத்தில் கொள்ளவில்லை!

ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்: அவர் சீற்றமடைந்து மகள் யூதாவின் அரண்களைத் தகர்த்தார்: அவற்றைத் தரைமட்டமாக்கினார். அவரது நாட்டையும் அதன் தலைவர்களையும் மேன்மை குலையச் செய்தார்.

அவர் வெஞ்சினம் கொண்டு இஸ்ரயேலின் கொம்பை முற்றிலும் வெட்டிவிட்டார்: பகைவன் வந்தபொழுது தம் வலக்கையைப் பின்புறம் மறைத்துக்கொண்டார்: சூழ்ந்திருக்கும் யாவற்றையும் எரிக்கும் தீப்பிழம்பென, அவர் யாக்கோபின் மீது பற்றியெரிந்தார்.

எதிரி போலத் தமது வில்லை நாணேற்றினார்: பகைவன் போலத் தம் வலக்கையை ஓங்கினார்: கண்ணுக்கு இனியவை அனைத்தையும் அழித்தார்: மகள் சீயோனின் கூடாரத்தில் தம் சினத்தை நெருப்பெனக் கொட்டினார்.

என் தலைவர் எதிரி போலானார்: அவர் இஸ்ரயேலை அழித்தார்: அதன் கோட்டை கொத்தளங்களைத் தகர்த்தார்: மகள் யூதாவின் அழுகையையும் புலம்பலையும் மிகுதியாக்கினார்.

தோட்டத்துப் பரணைப் பிரித்தெறிவது போலத் தம் கூடாரத்தையும் பிரித்தெறிந்தார்: சபை கூடும் இடத்தையும் அழித்தார்: சீயோனில் ஆண்டவர் விழாக்களையும் ஓய்வுநாளையும் மறக்கச் செய்தார்: அவர் வெஞ்சினமுற்று அரசனையும் குருவையும் வெறுத்து ஒதுக்கினார்.

என் தலைவர் தம் பலிபீடத்தை வெறுத்தொதுக்கினார். தம் திருத்பயகத்தைக் கைவிட்டார்: அதன் கோட்டைச் சுவர்களைப் பகைவரிடம் கையளித்தார்: விழா நாளில் ஆரவாரம் செய்வதுபோல ஆண்டவரின் இல்லத்தில் அவர்கள் ஆரவாரம் செய்தனர்:

மகள் சீயோனின் மதிலை அழிக்க ஆண்டவர் திட்டமிட்டார்: அதற்கென மலினால் அளந்தார்: அதை அழிப்பரை நிறுத்தத் தம் கையை மடக்கிக் கொள்ளவில்லை: அரணும் மதிலும் புலம்பச் செய்தார்: அவை ஒருங்கே சரிந்து வீழ்ந்தன.

அவளின் வாயிற்கதவுகள் மண்ணில் புதைந்து கிடந்தன: அதன் தாழ்களை உடைத்துச் சிதறடித்தார்: அவளின் அரசனும் தலைவர்களும் வேற்றினத்தாரிடையே உள்ளனர்! திருச்சட்டம் இல்லை: அவளின் இறைவாக்கினரும் ஆண்டவரின் காட்சி பெறவில்லை.

மகள் சீயோனின் பெரியோர் தரையில் மெளனமாய் அமர்ந்துள்ளனர்: அவர்கள் தங்கள் தலைமேல் புழுதியைத் பவிக் கொண்டுள்ளனர்: சாக்கு உடை உடுத்தியுள்ளனர்: எருசலேமின் கன்னிப் பெண்கள் தங்கள் தலைகளைத் தரை மட்டும் தாழ்த்தியுள்ளனர்.

என் கண்கள் கண்ணீர் சொரிந்து சோர்ந்துள்ளன! என் குலை நடுங்குகின்றது! என் துயரத்தால் என் ஈரல் வெடித்துத் தரையில் சிதறுகின்றது! என் மக்களாகிய மகள் நசுக்கப்பட்டுள்ளாள்! நகர் வீதிகளில் குழந்தைகளும் மழலைகளும் மயங்கிக் கிடக்கின்றனர்!

அவர்கள் தங்கள் அன்னையரிடம், அப்பம், திராட்சை இரசம் எங்கே? என்று கேட்கின்றனர்! படுகாயமுற்றோரைப்போல, நகர் வீதிகளில் அவர்கள் மயங்கி வீழ்கின்றனர்! தாய் மடியில் உயிர்விட்டவர்போல் ஆகின்றனர்!

மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்ன சொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள் சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னை இணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம் கடலைப்போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்?

உன் இறைவாக்கினர் உனக்காகப் பொய்யும் புரட்டுமான காட்சிகளைக் கண்டனர்: நீ நாடுகடத்தப்பட இருப்பதைத் தவிர்க்குமாறு, உன் நெறிகேடுகளை அவர்கள் உனக்கு எடுத்துச் செல்லவில்லை: அவர்கள் பொய்யையும் அபத்தங்களையும் காட்சியாகக் கண்டு, உனக்குப் பொய்வாக்கு உரைத்தனர்!

அவ்வழியாய்க் கடந்து செல்வோர் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர்! மகள் எருசலேமை நோக்கித் தலையை ஆட்டிச் சீழ்க்கையடித்தனர்! அழகின் நிறைவும் மண்ணுலகின் மகிழ்ச்சியுமாக இருந்த மாநகர் இதுதானா? என்றனர்.

உன் எதிரிகள் அனைவரும் உன்னை நோக்கிக் கோணல்வாய் காட்டுகின்றனர்: சீழ்க்கையடித்துப் பற்களை நறநற வென்று கடிக்கின்றனர்: நாம் அவளைப் பாழாக்கினோம் என்றனர். இந்நாளுக்காகவே நாம் காத்திருந்தோம்: இப்போதுதான் நம்மால் அதைக் காணமுடிந்தது என்றனர்.

ஆண்டவர் தாம் திட்டமிட்டபடியே செய்தார்: நெடுநாள்களுக்குமுன் தாம் முன்னெச்சரிக்கை செய்தவாறு செயல்பட்டார்: ஈவிரக்கமின்றி இடித்துத் தள்ளினார்: உன் எதிரிகளை மகிழ்ச்சியடையச் செய்தார்: பகைவனின் ஆற்றலைப் பெருகச் செய்தார்.

அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக் கூக்குரலிடுகின்றது: மகள் சீயோனின் மதிலே! இரவும் பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஓய்வு வேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்!

எழு! இரவில் முதற் சாமத்தில் குரலெழுப்பு! உள்ளத்தில் உள்ளதை என் தலைவர் திருமுன் தண்ணீரைப் போல் ஊற்றிவிடு! தெருமுனையில் பசியால் மயங் கி விழும் குழந்தைகளின் உயிருக்காக, அவரை நோக்கி உன் கைகளை உயர்த்து!

கண்ணோக்கும் ஆண்டவரே! எண்ணிப் பாரும்: யாருக்கு இப்படிச் செய்திருக்கின்றீர்? பெண்கள் தங்கள் கர்ப்பத்தின் கனிகளையே, கைக்குழந்தைகளையே, தின்ன வேண்டுமோ? குருவும், இறைவாக்கினரும் என் தலைவரின் திருத்பயகத்தில் கொல்லப்படவேண்டுமோ?

வீதிகளின் புழுதியில் சிறியோரும் பெரியோரும் வீழ்ந்து கிடக்கின்றனர்! என் கன்னியரும் காளையரும் வாளால் வீழ்த்தப்பட்டனர் உமது சீற்றத்தின் நாளில் ஈவிரக்கமின்றி அவர்களைக் கொன்று குவித்தீர்!

திருவிழாவுக்கு அழைப்பது போல, எப்பக்கமும் எனக்கெதிராகப் பேரச்சத்தை வரவழைத்தீர்! ஆண்டவரது சீற்றத்தின் நாளில் உயிர்தப்பிப் பிழைத்தவரோ எஞ்சியவரோ எவரும் இல்லை! நான் பேணி வளர்த்தவர்களை என் எதிரி கொன்றழித்தான்!

அதிகாரம் 3.

ஆண்டவரது சினத்தின் கோலால் வேதனை அனுபவித்த ஒருவன் நான்!

அவர் என்னைத் துரத்தியடித்து, ஒளியினுள் அன்று, இருளினுள் நடக்கச் செய்தார்!

உண்மையில் அவர் என்மீது தம் கையை ஓங்குகிறார்! நாள் முழுதும் ஓங்குகிறார்! மீண்டும் மீண்டும் என்னை வதைக்கிறார்!

அவர் என் சதையையும் தோலையும் சிதைத்துவிட்டார்! என் எலும்புகளை நொறுக்கி விட்டார்!

அவர் கசப்பாலும் துயராலும் என்னை முற்றுகையிட்டு வளைத்துக்கொண்டார்!

பண்டைக் காலத்தில் இறந்தோர் போல, இருள் சூழ்ந்த இடத்தில் அவர் என்னை வாழச் செய்தார்!

நான் தப்பிச் செல்ல இயலாதவாறு என்னைச் சுற்றிலும் அவர் மதில் எழுப்பினார்! பளுவான தளைகளால் என்னைக் கட்டினார்!

துணை வேண்டி நான் கூக்குரல் எழுப்பியபோதும், அவர் என் மன்றாட்டைக் கேட்க மறுத்துவிட்டார்!

செதுக்கிய கற்களால் என் வழிகளில் தடைச் சுவர் எழுப்பினார்! என் பாதைகளைக் கோணாலாக்கினார்!

பதுங்கியிருக்கும் கரடி போன்றும் மறைந்திருக்கும் சிங்கம் போன்றும், அவர் எனக்கு ஆனார்!

என் வழிகளினின்று இழுத்துச் சென்று, என்னைப் பீறிக் கிழித்தார்! என்னை முற்றிலும் பாழாக்கினார்!

அவர் தமது வில்லை நாணேற்றினார்! அவர் தமது அம்புக்கு என்னை இலக்கு ஆக்கினார்!

அவர் தமது அம்புக் கூட்டின் அம்புகளை என் நெஞ்சுள் பாய்ச்சினார்!

நாள் முழுதும் நான் என் மக்கள் அனைவரின் நகைப்புக்கு உள்ளானேன்! அவர்களது வசைப்பாடலின் பொருள் ஆனேன்!

அவர் கசப்புணவால் என்னை நிரப்பினார்! எட்டிக் காடியால் எனக்கு வெறியூட்டினார்!

கற்களால் என் பற்களை நொறுக்கினார்! என்னைப் புழுதியில் போட்டு அவர் மிதித்தார்!

அமைதியை நான் முழுக்கச் செய்தீர்! நலமென்பதையே நான் மறந்துவிட்டேன்!

என் வலிமையும் ஆண்டவர்மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும் மறைந்துபோயின! என்று நான் சொல்லிக் கொண்டேன்.

என் துயரத்தையும் அலைச்சலையும், எட்டிக் காடியையும் கசப்பையும் நினைத்தருளும்!

அதை நினைந்து நினைந்து என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது!

இதை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன்: எனவே நான் நம்பிக்கை கொள்கின்றேன்.

ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை!

காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!

ஆண்டவரே என் பங்கு என்று என் மனம் சொல்கின்றது! எனவே நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன்.

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்!

ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!

இளமையில் நுகம் சுமப்பது மனிதருக்கு நலமானது!

அவரே அதை அவர்கள்மேல் வைத்தார்: எனவே, தனிமையில் அமைதியாய் அவர்கள் அமரட்டும்.

அவர்களின் வாய் புழுதியைக் கவ்வட்டும்: நம்பிக்கைக்கு இன்னும் இடம் இருக்கலாம்!

தங்களை அறைபவர்களுக்குக் கன்னத்தைக் காட்டட்டும்! அவர்கள் நிந்தைகளால் நிரப்பப்படட்டும்!

என் தலைவர் என்றுமே கைவிட மாட்டார்!

அவர் வருத்தினாலும், தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார்.

மனமார அவர் மானிடரை வருத்துவதுமில்லை: துன்புறுத்துவதுமில்லை.

நாட்டில் சிறைப்பட்டோர் அனைவரும் காலால் மிதிக்கப்படுவதையோ,

உன்னதரின் திருமுன் மனிதருக்கு நீதி மறுக்கப்படுவதையோ,

வழக்கில் ஒருவர் வஞ்சிக்கப்படுவதையோ, என் தலைவர் காணாது இருப்பாரோ?

என் தலைவர் கட்டளையிடாமல், யார் தாம் சொல்லியரை நிறைவேற்றக்கூடும்?

நன்மையும் தீமையும் புறப்படுவது, உன்னதரின் வாயினின்று அன்றோ?

உயிருள்ள மனிதர் முறையிடுவது ஏன்? மானிடர் அடைவது தம் பாவத்தின் விளைவை அன்றோ?

நம் வழிகளை ஆய்ந்தறிவோம்! ஆண்டவரிடம் திரும்புவோம்!

விண்ணக இறைவனை நோக்கி நம் இதயத்தையும் கைகளையும் உயர்த்துவோம்!

நாங்கள் குற்றம் புரிந்து கலகம் செய்தோம்! நீரோ எம்மை மன்னிக்கவில்லை!

நீர் சினத்தால் உம்மை மூடிக்கொண்டு எம்மைப் பின்தொடர்ந்தீர்! இரக்கமின்றி எம்மைக் கொன்றழித்தீர்?

எங்கள் மன்றாட்டு உம்மை வந்தடையாதபடி, மேகத்தால் உம்மை மூடிக்கொண்டீர்!

மக்களினங்கள் இடையே எம்மை குப்பைக் கூளம் ஆக்கிவிட்டீர்!

எங்கள் பகைவர் அனைவரும் எங்களுக்கு எதிராக வாய் திறந்தனர்!

திகிலும் படுகுழியும் எம்முன் உள்ளன! சிதைவும் சீரழிவும் எம்மேல் வந்தன!

என் மக்களாகிய மகளின் அழிவைக் கண்டு என் கண்கள் குளமாயின!

வற்றாத ஓடையென என் கண்கள் நீர் சொரிகின்றன:

ஆண்டவர் வானினின்று கண்ணோக்கும் வரை, ஓய்வின்றிக் கண்ணீர் சொரிகின்றன!

என் நகரின் புதல்வியர் அனைவர் நிலை கண்டு, என் உள்ளம் புலம்புகின்றது!

காரணமின்றி என் பகைவர், பறவையை வேட்டையாடுவது போன்று, என்னை வேட்டையாடினர்!

உயிரோடு என்னைக் குழியில் தள்ளி, என்மேல் கற்களை எறிந்தார்கள்!

வெள்ளம் என் தலைக்குமேல் போயிற்று! நான் தொலைந்தேன் என்றேன்.

படுகுழியினின்று ஆண்டவரே! உம் திருப்பெயரைக் கூவியழைத்தேன்.

என் குரலை நீர் கேட்டீர்: என் விம்மலுக்கும் வேண்டுதலுக்கும் உம் செவியை மூடிக்கொள்ளாதீர்!

உம்மை நோக்கி நான் கூவியழைத்த நாளில், என்னை அணுகி, அஞ்சாதே என்றீர்!

என் தலைவரே! என் பொருட்டு வாதாடினீர்! என் உயிரை மீட்டருளினீர்!

ஆண்டவரே! எனக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்டீர்! எனக்கு நீதி வழங்கும்!

அவர்களின் பழிவாங்கும் திட்டத்தையும் எனக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் கண்டீர்!

ஆண்டவரே! அவர்களின் வசைமொழிகளையும் எனக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டீர்!

என் பகைவர் நாள் முழுவதும் எனக்கெதிராக, முணுமுணுத்துத் திட் டமிடுகின்றனர்.

பாரும்! அவர்கள் அமர்ந்தாலும் எழுந்தாலும் என்னைப் பற்றியே வசைபாடுகிறார்கள்!

ஆண்டவரே! அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கைம்மாறு அளித்தருளும்!

நீர் அவர்கள் மனதைக் கடினப்படுத்தும்! உம் சாபம் அவர்கள்மேல் விழச் செய்யும்!

ஆண்டவரே, சினம் கொண்டு அவர்களைப் பின்தொடரும்! வானத்தின்கீழ் இல்லாதவாறு அவர்களை அழித்தொழியும்!

அதிகாரம் 4.

ஜயோ! பொன் இப்படி மங்கிப் போயிற்றே! பசும்பொன் இப்படி மாற்றுக் குறைந்து போயிற்றே! திருத்தலக் கற்கள் தெருமுறை எங்கும் சிதறிக் கிடக்கின்றனவே!

பசும்பொன்னுக்கு இணையான சீயோனின் அருமை மைந்தர் இன்று குயவனின் கைவினையாம் மண்பாண்டம் ஆயினரே!

குள்ளநரிகளும் பாழட்டித் தம் குட்டிகளைப் பேணிக்காக்கும்! பாலைநிலத் தீக்கோழியென என் மக்களாம் மகள் கொடியவள் ஆயினளே!

பால்குடி மறவாத மழலைகளின் நாவு தாகத்தால் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்! பச்சிளங் குழந்தைகள் கெஞ்சுகின்ற உணவுதனை அளித்திடுவார் யாருமிலர்!

சுவையுணவு அருந்தினோர் நடுத்தெருவில் நலிகின்றனர்! பட்டுடுத்தி வளர்ந்தோர் குப்பைமேட்டில் கிடக்கின்றனர்!

ஒருவரும் கை வைக்காமல் நொடிப்பொழுதில் வீழ்ச்சியுற்ற சோதோமின் பாவத்தைவிட, என் மக்களாம் மகளின் குற்றம் பெரிதாமே!

அவள் இளவரசர் பனியினும் பயவராய்ப் பாலினும் வெண்மையராய்ப் பவளத்தினும் சிவந்த மேனியராய் நீல மணிக் கட்டழகராய் இருந்தனர்!

இப்பொழுதோ, அவர்கள் தோற்றம் கரியினும் கருமை ஆனது: அவர்களைத் தெருக்களில் அடையாளம் காண இயலவில்லை! அவர்கள் தோல் எலும்போடு ஒட்டியிருந்தது. காய்ந்த மரம்போல் அது உலர்ந்து போனது!

பசியினால் மாண்டவர்களினும் வாளினால் மாண்டோர் நற்பேறு பெற்றோர்! ஏனெனில், முன்னையோர் வயல் தரும் விளைச்சலின்றிக் குத்துண்டவர் போல் மாய்ந்தனர்!

இரங்கும் பெண்டிரின் கைகள் தம் குழந்தைகளை வேகவைத்தன! என் மக்களாகிய மகள் அழிவுற்றபோது பிள்ளைகளே அன்னையர்க்கு உணவாயினர்!

ஆண்டவர் தம் சீற்றத்தைத் தீர்த்துக் கொண்டார்: தம் கோபக் கனலைக் கொட்டினார்: சீயோனில் நெருப்பை மூட்டினார்: அது அதன் அடித்தளங்களை விழுங்கிற்று.

பகைவரும் எதிரிகளும் எருசலேம் வாயில்களில் நுழைவர் என்று மண்ணுலகின் மன்னரோ பூவுலகில் வாழ்வோரோ நம்பவில்லை.

நகரின் நடுவே நீதிமானின் இரத்தம் சிந்திய இறைவாக்கினரின் பாவமும் குருக்களின் குற்றமுமே இதற்குக் காரணமாம்!

அவர்கள் குருடரெனத் தெருக்களில் தடுமாறினர்: அவர்கள்மீது இரத்தக் கறை எவ்வளவு படிந்திருந்ததெனில், அவர்கள் ஆடைகளைக்கூட எவராலும் தொட இயலவில்லை.

விலகுங்கள்! தீட்டு! விலகுங்கள்! தொடாதீர்கள்! என்று அவர்களைப் பார்த்துக் கூவினார்கள்: அவர்கள் அகதிகளாய் அலைந்து திரிந்தார்கள். “இனி நம்மிடம் குடியிரார்,“ “இனி எம்மிடையே தங்கக்கூடாது“ என்று வேற்றினத்தார் கூறினர்.

ஆண்டவரே தம் முன்னிலையினின்று அவர்களைச் சிதறடித்தார்: இனி அவர்களைக் கண்ணோக்கமாட்டார். குருவை மதிப்பார் இல்லை: முதியோர்க்கு இரங்குவார் இல்லை.

உதவியை வீணில் எதிர்பார்த்து எம் கண்கள் பூத்துப்போயின! எம்மை விடுவிக்க இயலாத நாட்டினர்க்காய்க் கண் விழித்துக் காத்திருந்தோம்!

எம் நடமாட்டம் கவனிக்கப்பட்டது: எம் தெருக்களில் கூட எம்மால் நடக்க முடியவில்லை: எம் முடிவு நெருங்கிவிட்டது: எம் நாள்கள் முடிந்துவிட்டன: எம் முடிவு வந்து விட்டது.

வானத்துப் பருந்துகளிலும் விரைவாய் எம்மைத் துரத்துவோர் வருகின்றனர்: மலைகளில் எங்களைத் துரத்தி வந்தார்கள்: பாலையில் எங்களுக்காய்ப் பதுங்கி இருந்தார்கள்.

ஆண்டவரின் திருப்பொழிவு பெற்று எம் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர், அவர்கள் வெட்டிய குழியில் வீழ்ந்¥¥¥ தனர்! அவரது நிழலில் வேற்றினத்தார் நடுவில் நாம் வாழ்வோம் என்று அவரைக் குறித்தே எண்ணியிருந்தோம்!

ஊசு நாட்டில் வாழும் மகளே! ஏதோம்! அகமகிழ்ந்து அக்களித்திடு! கிண்ணம் உன்னையும் வந்தடையும்! நீ குடிவெறி கொண்டு ஆடையின்றிக் கிடப்பாய்!

மகளே! சீயோன்! உன் குற்றப்பழி நீங்கிவிட்டது: உன் அடிமைத்தனம் இனியும் தொடராது: மகளே! ஏதோம்! உன் குற்றத்திற்காக நீ தண்டிக்கப்படுவாய்! உன் பாவங்கள் வெளிப்படுத்தப்படும்!

அதிகாரம் 5.

ஆண்டவரே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்! எங்கள் அவமானத்தைக் கவனித்துப்பாரும்.

எங்கள் உரிமைச்சொத்து அன்னியர்கைவசம் ஆயிற்று: வீடுகள் வேற்று நாட்டினர் கைக்கு மாறிற்று.

நாங்கள் தந்தையற்ற அனாதைகள் ஆனோம்! எங்கள் அன்னையர் கைம்பெண்டிர் ஆயினர்!

நாங்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கிறோம்! விறகையும் பணம் கொடுத்தே வாங்குகிறோம்!

கழுத்தில் நுகத்தோடு விரட்டப்படுகிறோம்! சோர்ந்துபோனோம்! எங்களுக்கு ஓய்வே இல்லை!

உணவால் நிறைவு பெற, எம் கையை எகிப்தியர், அசீரியரிடம் நீட்டினோம்!

பாவம் செய்த எம் தந்தையர் மடிந்து போயினர்! நாங்களோ அவர்கள் குற்றப்பழியைச் சுமக்கின்றோம்!

அடிமைகள் எங்களை ஆளுகின்றார்கள்! எங்களை அவர்கள் கையினின்று விடுவிப்பர் எவரும் இல்லை!

பாலைநில வாளை முன்னிட்டு, உயிரைப் பணயம் வைத்து எங்கள உணவைப் பெறுகிறோம்!

பஞ்சத்தின் கொடுந்தணலால் எங்கள் மேனி அடுப்பெனக் கனன்றது!

சீயோன் மங்கையர் கெடுக்கப்பட்டனர்! நகர்களின் கன்னியர் கற்பழிக்கப்பட்டனர்!

தலைவர்கள் பகைவர் கையால் பக்கிலிடப்பட்டனர்! முதியோர்களையும் அவர்கள் மதிக்கவில்லை!

இளைஞர் இயந்திரக் கல்லை இழுக்கின்றனர்! சிறுவர் விறகு சுமந்து தள்ளாடுகின்றனர்!

முதியோர் நுழைவாயிலில் அமர்வதைக் கைவிட்டனர்! இளையோர் இசை மீட்டலைத் துறந்துவிட்டனர்!

எங்கள் இதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்தது! எங்கள் நடனம் புலம்பலாக மாறியது!

எங்கள் தலையினின்று மணிமுடி வீழ்ந்தது! நாங்கள் பாவம் செய்தோம்! எங்களுக்கு ஜயோ கேடு!

இதனால் எங்கள் இதயம் தளர்ந்து போயிற்று: எங்கள் கண்கள் இருண்டுபோயின.

சீயோன் மலை பாழடைந்து கிடக்கின்றது: நரிகள் அங்கே நடமாடுகின்றன.

நீரோ ஆண்டவரே, என்றென்றும் வாழ்கின்றீர்! உமது அரியணை தலைமுறை தலைமுறையாய் உளதாமே!

ஆண்டவரே! தொடர்ந்து எங்களைக் கைவிட்டது ஏன்? இத்துணைக் காலமாய் எங்களைக் கைவிட்டது ஏன்?

ஆண்டவரே! எம்மை உம்பால் திருப்பியருளும்! நாங்களும் உம்மிடம் திரும்புவோம்! முற்காலத்தே இருந்ததுபோல! எம் நாள்களைப் புதுப்பித்தருளும்!

எங்களை முற்றிலும் தள்ளிவிட்டீரோ! எங்கள் மேல் இத்துணை வெஞ்சினம் கொண்டீரே!

புத்தகம் 26 - எசேக்கியேல்

அதிகாரம் 1.

முப்பதாம் ஆண்டு, நான்காம் மாதம் ஜந்தாம் நாளன்று, நான் நாடு கடத்தப்பட்டோருடன் கெபார் ஆற்றோராம் இருக்கையில், விண்ணுலகம் திறக்கப்படக் கடவுள் அருளிய காட்சிகளைக் கண்டேன்.

அந்த மாதத்தின் ஜந்தாம் நாளன்று-யோயாக்கீன் அரசன் நாடு கடத்தப்பட்ட ஜந்தாம் ஆண்டு

கல்தேயர் நாட்டின் கெபார் ஆற்றோரம், பூசி என்ற குருவின் மகன் எசேக்கியேலுக்கு, ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. அங்கே ஆண்டவரின் கைவன்மை அவர்மேல் இருந்தது.

நான் உற்றுப்பார்க்கையில், வடக்கிலிருந்து புயற்காற்று விரைந்து வந்தது. மின்னலடிக்கும் பெருமேகத்தையும் அதனைச் சுற்றிச் சுடர்வீசும் தீப்பிழம்பையும், அத்தீம்பிழம்பினுள் மின்னும் வெண்கலம் போன்ற ஒன்றையும் கண்டேன்.

அதன் நடுவினின்று நான்கு உயிரினங்களின் வடிவம் தோன்றியது. அவற்றின் தோற்றம் மனிதச் சாயலுக்கு ஒப்பாயிருந்தது.

அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன.

அவற்றின் பாதங்கள் குளம்புகள் போன்றிருந்தன. அவை துலக்கப்பட்ட வெண்கலம் போல் மின்னின.

அவற்றின் நாற்புறமும் முகங்களும், இறக்கைகளும் இருந்ததுபோல், இறக்கைகளின் கீழ் நாற்புறமும் மனிதக் கைகளும் இருந்தன.

அவை ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றவற்றின் இறக்கைகளைத் தொட்டுக் கொண்டிருந்தன. அவை செல்கையில் முகம் திரும்பாமல், திசை மாறாமல் சென்றன.

முன்புறம் மனித முகமாயும், வலப்புறம் சிங்க முகமாயும், இடப்புறம் எருது முகமாயும், பின்புறம் கழுகு முகமாயும் அவை நான்கின் முகச்சாயலும் இருந்தன.

அவற்றின் முகங்கள் இவ்வாறிருக்க, அவற்றின் இறக்கைகள் மேல்நோக்கி விர்¢ந்திருந்தன. ஒவ்வொன்றின் இரண்டு இறக்கைகளும் மற்றதன் இறக்கைகளைத் தொட்டுக் கொண்டிருந்தன. எஞ்சிய இரண்டும் அவற்றின் உடல்களை மூடியிருந்தன.

அவை ஒவ்வொன்றும் நேர்முகமாய்ச் சென்றன. எங்கெல்லாம் ஆவி ஈர்த்துச் சென்றதோ, அங்கெல்லாம் அவையும் சென்றன. அவை செல்கையில் எப்பக்கமும் திரும்பவில்லை.

அவ்வுயரினங்களிடையே, பற்றியெரியும் நெருப்புத் தணல் போன்றும் தீப்பந்தம் போன்றும் ஏதோ ஒன்று தோன்றி, முன்னும் பின்னும் சென்றது. அந்த நெருப்பு பேரொளி வீசிற்று: அதனின்று மின்னல் கிளம்பிற்று.

மின்னல் பாய்வதுபோல அந்த உயிரினங்கள் முன்னும் பின்னும் விரைந்தன.

நான் அந்த உயிரினங்களை உற்று நோக்கியபோது, நான்கு முகம் கொண்ட ஒவ்வோர் உயிரினத்தின் அருகிலும் உயிரினத்துக்கு ஒரு சக்கரமாக நான்கு சக்கரங்கள் நிலத்தின்மேல் தென்பட்டன.

அந்தச் சக்கரங்களின் தோற்றமும் அமைப்பும்: அவை மரகதக் கல்லின் நிறத்துடன் தோன்றின. அவை நான்கும் ஒரே வடிவம் கொண்டிருந்தன: அவற்றின் தோற்றமும் அமைப்பும் சக்கரத்துக்குள் வேறொரு சக்கரம் பொருத்தப்பட்டதாக இருந்தன.

அவை இயங்குகையில் எப்பக்கமும் திரும்பாமல் நாற்றிசையிலும் செல்லக்கூடியவை.

அவற்றின் வட்ட விளிம்புகள், உயரமாயும் அச்சம் தருவனவாயும் இருந்தன. அவை நான்கின் வட்ட விளிம்புகளும் கண்களால் நிறைந்திருந்தன.

உயிரினங்கள் செல்லும்போது, சக்கரங்களும் அவற்றோடு செல்லும். அவ்வுயிரினங்கள் நிலத்தினின்று மேலெழும்போது சக்கரங்களும் எழும்பும்.

எங்கெல்லாம் ஆவி ஈர்த்துச் சென்றதோ அங்கெல்லாம் அவையும் சென்றன. உயிரினங்களின் ஆவி சக்கரங்களில் இருந்ததால் சக்கரங்களும் அவற்றோடு எழுந்தன.

அவை செல்கையில் இவையும் சென்றன. அவை நிற்கையில் இவையும் நின்றன. அவை நிலத்தினின்று மேலெழுந்தபோது சக்கரங்களும் அவற்றுடன் எழுந்தன. ஏனெனில் அவ்வுயிரினங்களின் ஆவி சக்கரங்களில் இருந்தது.

உயிரினங்களின் தலைகளுக்குமேல் கவிகை போன்ற அமைப்பு ஒன்று இருந்தது. அது பளிங்கு போன்ற தோற்றம் கொண்டு, அச்சம் தருவதாய், அவற்றின் தலைகளுக்கு மேல் விரிந்திருந்தது.

அக்கவிகையின் கீழ் அவற்றின் இறக்கைகள் ஒன்றுக்கொன்று எதிராக விரிந்திருந்தன. மேலும் உயிரினம் ஒவ்வொன்றும் தன் உடலை இரண்டு இறக்கைகளால் மூடிக் கொண்டிருந்தது.

அவை செல்லும்போது அவற்றின் இறக்கைகள் எழுப்பிய ஒலியைக் கேட்டேன். அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போன்றும், எல்லாம் வல்லவரின் குரலொலி போன்றும் இருந்தது. அவை இயங்கும்போது ஏற்படும் இரைச்சலின் ஒலி ஒரு போர்ப்படையின் இரைச்சலை ஒத்த ஆரவாரமாக இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறக்கைகளை இறக்கிக்கொண்டன.

அவை தங்கள் இறக்கைகளை இறக்கி நின்றபோது அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின் மீதிருந்து குரலொன்று கேட்டது.

அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின்மீது நீல மணிக்கல் தோற்றமுடைய ஓர் அரியணை போன்ற ஒன்று தெரிந்தது. அந்த அரியணை மேல் மனிதச் சாயலுக்கு ஒப்பான ஓர் உருவமும் தெரிந்தது.

அவரது இடைக்கு மேற்புறம் சுற்றிலும் பளபளக்கும் வெண்கலம் போன்றும். நெருப்பு சூழ்ந்திருப்பதுபோன்றும் இருக்க நான் கண்டேன். அவரது இடைக்குக் நெருப்புப் போன்றும் சுற்றிலும் ஒளிமயமாயும் இருக்கக் கண்டேன்.

சூழ்ந்திருந்த ஒளியும் கார்கால மேகத்தினிடையே காணப்படும் வானவில் போன்று தோன்றியது. இது ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சி. இதை நான் பார்த்ததும் முகம் குப்புற விழுந்தேன்: அப்போது ஒருவர் பேசும் குரல் கேட்டேன்.

அதிகாரம் 2.

அவர் என்னை நோக்கி, மானிடா! எழுந்து நில், உன்னோடு பேசுவேன் என்றார்.

அவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது: அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன்.

அவர் என்னிடம், மானிடா! எனக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர் என்றார். 9வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், “தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே“ என்று சொல்.

கலக வீட்டாராகிய அவர்கள், செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.

மானிடா! நீ அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களின் சொற்களைக் கேட்டு நடுங்காதே. முட்புதர்களும் நெருஞ்சில்களும் உன்னைச் சூழ்ந்திருந்தாலும், தேள்களுடன் நீ வாழ்ந்தாலும், அவர்களின் சொற்களுக்கு அஞ்சாதே. அவர்கள் கலகம் செய்யும் வீட்டாராய் இருப்பினும் அவர்களின் பார்வையைக் கண்டு நடுங்காதே.

அவர்கள் செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும் நீ என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு. அவர்களோ கலகம் செய்வோர்.

நீயோ மானிடா! நான் உனக்குச் சொல்வதைக் கேள். அந்தக் கலக வீட்டாரைப் போல் நீயும் கலகக்காரனாய் இருந்துவிடாதே. உன் வாயைத் திறந்து நான் உனக்குத் தருவதைக் தின்று விடு என்றார்.

அப் போது என்னை நோக்கி ஒரு கை நீள்வதைக் கண்டேன். அதில் சுருளேடு ஒன்று இருந்தது.

அவர் அச்சுருளேட்டை என்முன் விரித்தார். உள்ளும் புறமும் எழுதப்பட்டிருந்த அதில் கதறல்களும் புலம்பல்களும், கேடுகளும் எழுதப்பட்டிருந்தன.

அதிகாரம் 3.

அவர் என்னை நோக்கி, மானிடா! நீ காண்பதைத் தின்றுவிடு. இச்சுருளேட்டைத் தின்றபின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு என்றார்.

நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்னக் கொடுத்தார்.

மேலும் அவர் என்னை நோக்கி, மானிடா! நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு என்றார். நானும் தின்றேன். அது என் வாயில் தேன்போல் இனித்தது.

மேலும் அவர் என்னை நோக்கி, மானிடா! புறப்படு. இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு.

ஏனெனில், புரியாத பேச்சும் கடின மொழியும் உடைய மக்களிடம் அல்ல, இஸ்ரயேல் வீட்டாரிடமே நீ அனுப்பப்படுகிறாய்.

புரியாத பேச்சும் கடின மொழியும் உனக்கு விளங்காத சொற்களும் கொண்ட பல்வேறு மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பவில்லை. அத்தகைய மக்களினங்களிடம் நான் உன்னை அனுப்பியிருந்தாலாவது அவர்கள் உனக்குச் செவி சாய்திருப்பார்கள்.

ஆனால் இஸ்ரயேல் வீட்டார் நான் சொல்வதைக் கேட்க விரும்பாததால் அவர்கள் நீ சொல்வதைக் கேட்கவும் விரும்பமாட்டார்கள். அவர்கள் தலைக்கனமும் கல்நெஞ்சமும் கொண்டவர்கள்.

எனவே, நான் உன் முகத்தை அவர்கள் முகங்களுக்கு எதிராகவும் உன் நெற்றியை அவர்கள் நெற்றிகளுக்கு எதிராகவும் கடுமையாக்கியுள்ளேன்.

உன் நெற்றியைத் தீக்கல்லை விட உறுதிபெற்ற வைரக்கல் போல் ஆக்கியுள்ளேன். அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களின் பார்வையைக் கண்டு கலங்காதே. ஏனெனில், அவர்கள் கலகம் செய்யும் வீட்டார் என்றார்.

மேலும் அவர் என்னை நோக்கி, மானிடா! நான் உனக்குக் கூறும் சொற்களையெல்லாம் செவிகொடுத்துக் கேட்டு உன் இதயத்தில் பதித்துக் கொள்.

நீ புறப்பட்டு நாடு கடத்தப்பட்டிருக்கும் உன் மக்களின் பிள்ளைகளிடம் போ: அவர்கள் செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும் அவர்களுடன் பேசி, “தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே“ என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

அப்போது ஆவி என்னை உயரே பக்கியது. ஆண்டவரின் மாட்சி தம் உறைவிடத்திலிருந்து எழுந்தபோது, நான் என்பின்னே மாபெரும் அதிரொலியின் ஓசையைக் கேட்டேன்.

உயிரினங்களின் இறக்கைகள் ஒன்றோடொன்று உராயும் ஒலியும் சக்கரங்களின் ஒலியும் இணைந்து மாபெரும் அதிரொலியும் ஓசைபோல் ஒலித்தது.

அப்போது ஆவி என்னைத் பக்கிக் கொண்டு சென்றது. நானோ மனம் கசந் து, சினமுற்றுச் சென்றேன். ஆனால், ஆண்டவரது ஆற்றல்மிகு கைவன்மை என்மேல் இருந்தது.

பின்னர், நான் கெபார் ஆற்றோரம் தெல் ஆபீபில் இருந்த நாடு கடத்தப்பட்டோரிடம் வந்தேன். அவர்கள் குடியிருந்த இடத்தில் அதிர்ச்சியுற்றவனாய் அவர்களிடையே ஏழு நாள்கள் தங்கியிருந்தேன்.

ஏழு நாள்களுக்குப்பின் ஆண் டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலனாக நியமித்துள்ளேன். என் வாயின் சொற்களைக் கேட்டு அவர்களை என் பெயரால் எச்சரிக்கை செய்.

தீயோரிடம் நீங்கள் சாவது உறுதி என்று நான் சொல்ல, நீ அவர்களை எச்சரிக்காவிடில்-அத்தீயோர் தம் தீயவழியினின்று விலகாவிட்டால், தம் உயிரை அவர்களால் காத்துக்கொள்ள இயலாது என்று அவர்களை எச்சரிக்காவிட்டால்-அவர்கள் தம் குற்றப்பழியோடு சாவர். ஆனால் அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன்.

மாறாக, நீ தீயோரை எச்சரித்திருத்தும், அவர்கள் தம் தீச்செயலினின்றும் தம் தீய வழியினின்றும் விலகாமல் இருந்தால், அவர்கள் தம் குற்றப் பழியோடு சாவர். நீயோ உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.

நேர்மையாளர் தம் நேர்மையினின்று விலகி, அநீதி செய்கையில் நான் அவர்கள்முன் இடறலை வைக்க, அவர்கள் சாவர். நீ அவர்களை எச்சரிக்காதிருந்தால் அவர்கள் தம் பாவத்திலேயே சாவர்: அவர்களுடைய நற்செயல்கள் நினைக்கப்படமாட்டா. ஆனால் அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன்.

மாறாக, நேர்மையாளர் பாவம் செய்யாதபடி நீ அவர்களை எச்சரித்ததால் அவர்கள் பாவம் செய்யாவிடில், அவர்கள் வாழ்வது உறுதி. நீயும் உன் உயிரைக் காத்துக்கொள்வாய்.

அங்கே ஆண்டவரின் கைவன்மை என்மீது இருந்தது. அவர் என்னை நோக்கி, எழுந்து சமவெளிக்குச் செல். அங்கே நான் உன்னோடு பேசுவேன் என்றார்.

நானும் எழுந்து சமவெளிக்குச் சென்றேன். இதோ ஆண்டவரின் மாட்சி, கெபார் ஆற்றோரம் நான் கண்டதைப் போன்றே விளங்கிற்று. நான் முகம்குப்புற விழுந்தேன்.

பின்னர், ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது. அப்போது அவர் என்னிடம் உரைத்தது: நீ சென்று உன் வீட்டினுள் உன்னை அடைத்துக் கொள்!

மானிடா! நீ வெளியே சென்று அவர்களிடையே நடமாட முடியாதபடி உன்மேல் கயிறுகள் போட்டு அவற்றால் உன்னைக் கட்டுவார்கள்.

நான் உன் நாவை உன் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளச் செய்வேன். நீயும் ஊமையாகி, அவர்களைக் கடிந்துகொள்ள முடியாதவன் ஆகிவிடுவாய். ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள்.

ஆனால் நான் உன்னோடு பேசும்போது உன் வாயைத் திறப்பேன். நீ அவர்களிடம் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே என்று சொல். கேட்பவன் கேட்கட்டும்: மறுப்பவன் மறுக்கட்டும்: ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள்.

அதிகாரம் 4.

மானிடா! நீ செங்கல் ஒன்றை எடுத்து, அதை உன் முன்னே வைத்து அதன் மேல் எருசலேம் நகரை வரைந்திடு.

அதைச் சுற்றி முற்றுகைமயிட்டாற்போல் அதற்கெதிராகத் கொத்தளங்கள் கட்டி, மணல்மேடு ஒன்றையும் எழுப்பு. அதற்கு எதிராகப் போர்ப் பாசறைகளை அமைத்து, சுற்றிலும் அரண்தகர் பொறிகளையும் வை.

மேலும் நீ இரும்புத்தட்டு ஒன்றை எடுத்து அதனை உனக்கும் நகருக்கும் இடையே ஓர் இரும்புச் சுவராக எழுப்பு. அதற்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொள். இப்பொழுது அது முற்றுகையின்கீழ் உள்ளது. முற்றுகையிடுபவன் நீயே: இது இஸ்ரயேல் வீட்டாருக்கு ஓர் அடையாளம்.

நீ உன் இடப்பக்கமாய்ப் படுத்து, உன்மேல் இஸ்ரயேல் வீட்டாரின் குற்றத்தைச் சுமத்திக் கொள். நீ அப்பக்கமாய்ப் படுத்திருக்கும் நாள்கள் வரை அவர்களின் குற்றத்தைச் சுமப்பாய்.

எத்தனை ஆண்டுகள் அவர்கள் தவறிழைத்தார்களோ, அத்தனை நாள்களை அதாவது முந்மற்றுத் தொண்ணூறு நாள்களை உன்மேல் சுமத்தியுள்ளேன். இத்தனை நாள்கள் நீ இஸ்ரயேல் வீட்டாரின் குற்றத்தைச் சுமக்க வேண்டும்.

இதை நீ செய்தபின், மீண்டும் உன் வலப்பக்கமாய்ப் படுத்து, யூதா வீட்டாரின் குற்றத்தை ஓர் ஆண்டுக்கு ஒரு நாளென நாற்பது நாள்களுக்குச் சுமக்கவேண்டும். ஓர் ஆண்டுக்கு ஒரு நாள் என்றே நான் உனக்குக் குறித்துள்ளேன்.

மேலும் முற்றுகையிடப்பட்ட எருசலேமுக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு, திறந்த புயத்தோடு, அதற்கெதிராக இறைவாக்கு உரைக்க வேண்டும்.

மேலும் உன்னைக் கயிறுகளால் கட்டுவேன். நீ உன் முற்றுகையின் நாள்களை முடிக்கும்வரை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குப் புரள உன்னால் இயலாது.

நீயோ கோதுமை, வாற்கோதுமை, பெரும்பயறு, சிறுபயறு, தினை, சாமை ஆகியவற்றை ஒரு பானையில் எடுத்துக்கொள். நீ ஒரு பக்கமாய்ப் படுத்திருக்கும் முந்மற்றுத் தொண்ணூறு நாள்கள்வரை அவற்றால் அப்பம் சுட்டுச் சாப்பிடு.

நாளொன்றுக்கு இருபது செக்கேல் நிறையுள்ள உணவே சாப்பிடு. அதையும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நீ உண்ண வேண்டும்.

தண்ணீரையும் அளவு பார்த்தே குடிக்கவேண்டும். ஒரு கலயம் அளவையில் ஆறிலொரு பங்கைக் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே குடி.

உணவை வாற்கோதுமை அடைகளெனச் சாப்பிடு. மனித மலத்தின் வறட்டிகளைப் பயன்படுத்தி அவர்கள் கண்முன் அந்த அடையைச் சுடவேண்டும்.

ஆண்டவர் உரைத்தது: இவ்வாறே இஸ்ரயேல் மக்களும் நான் அவர்களை விரட்டியடிக்கும் நாடுகளுக்குள் தங்கள் அப்பத்தைத் தீட்டுப்பட்டதாகச் சாப்பிடுவார்கள்.

அப்போது நான், தலைவராகிய ஆண்டவரே! நான் ஒருபோதும் தீட்டுப்பட்டதில்லை. என் இளமை முதல் இப்போதுவரை தானாய்ச் செத்ததையோ, மற்ற விலங்குகளால் கிழிக்கப்பட்டதையோ நான் உண்டதில்லை. தீட்டான இறைச்சி கூட என் வாயில் நுழைந்ததே இல்லை என்றேன்.

அப்போது அவர் என்னிடம், சரி, மனித மலத்துக்குப் பதிலாக உனக்கு மாட்டுச் சாணத்தை அனுமதிக்கிறேன். அதைக் கொண்டு உன் அப்பத்தைச் சுடு என்றார்.

மேலும் அவர் என்னை நோக்கி, மானிடா! இதோ நான் எருசலேமில் உணவின் தரவைக் குறையச் செய்வேன். அவர்கள் அப்பத்தை நிறைபார்த்துக் கவலையோடு உண்பர். தண்ணீரை அளவு பார்த்துக் கலக்கத்தோடு குடிப்பர்.

இதனால் அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறைந்து கொண்டே போக, ஒவ்வொருவரும் தம் சகோதரை அவநம்பிக்கையோடு பார்த்துத் தம் குற்றப்பழியை முன்னிட்டு நலிந்து போவர்.

அதிகாரம் 5.

மானிடா! மழிக்கும் கத்தியைப் போன்று கருக்கலான ஒரு வாளை எடுத்து, அதைக்கொண்டு உன் தலையையும் தாடியையும் மழித்துக்கொள். ஒரு தராசை எடுத்து அந்த முடியைப் பங்கிடு.

அதில் மூன்றிலொரு பங்கை முற்றுகை நாள்கள் முடியும்போது நகரின் நடுவில் நெருப்பினால் சுட்டெரி: மூன்றிலொரு பங்கை நகரைச் சுற்றிலும் வாளால் வெட்டிப்போடு: மூன்றில் ஒரு பங்கைக் காற்றில் பற்றிவிடு. ஏனெனில் நான் அவர்களை உருவிய வாளுடன் பின்தொடர்வேன்.

அதில் கொஞ்சம் நீ எடுத்து உன் ஆடையின் முனைகளில் முடிந்து வை.

பிறகு அதில் இன்னும் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயிலிட்டுச் சுட்டெரி. அதனினின்று இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் எதிராகத் தீ புறப்படும்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: வேற்றினத்தாரிடையேயும் சூழ்ந் துள்ள நாடுகள் நடுவிலும் நான் திகழச் செய்த எருசலேம் இதுவே.

அம்மக்கள் வேற்றினத்தாரைவிடக் கேடு கெட்டவர்களாய் என் நீதிநெறிகளை எதிர்த்தார்கள். தங்கைச் சுற்றியுள்ள நாடுகளைவிட மிகுதியாக என் நியமங்களை எதிர்த்தார்கள். ஏனெனில் அவர்கள் என் நீதிநெறிகளை ஒதுக்கித் தள்ளி, என் நியமங்களின்படி நடவாமற் போனார்கள்.

எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உங்களைச் சுற்றியுள்ள மக்களினங்களைக் காட்டிலும் அதிகமாய் நீங்கள் கிளர்ச்சி செய்தீர்கள்: என் நியமங்களின்படி நடக்கவில்லை. என் நீதி நெறிகளைக் கடைப்பிடிக்கவில்லை. உங்களைச் சுற்றியுள்ள மக்களினங்களின் நீதிநெறிகளின்படி நீங்கள் நடக்கவில்லை.

ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: வேற்றினத்தார் கண்முன் நானே உங்கள் நடுவிலிருந்து உங்களுக்கெதிராகத் தீர்ப்பு வழங்குவேன்.

உங்கள் எல்லா அருவருப்பான செயல்களுக்காகவும், நான் இதுவரை செய்யாததும் இனிச் செய்யாதிருக்கப் போவதுமான ஒன்றை உங்கள் நடுவே செய்யப்போகிறேன்.

எனவே உங்களுள் பெற்றோர் தம் பிள்ளைகளையும் பிள்ளைகள் தம் பெற்றோரையும் தின்பர்: உங்களுக்கு நான் தண்டனைத் தீர்ப்பு அளித்து உங்களுள் எஞ்சியிருப்போர் அனைவரையும் எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்.

என்மேல் ஆணை! வெறுப்புக்கும் அருவருப்புக்கும் உரிய உங்கள் எல்லாச் செயல்களாலும் என் திருத்பயகத்தை நீங்கள் தீட்டுப்படுத்தியதால் நான் உங்களைவிட்டு விலகிவிடுவேன். என் கண்கள் உங்களுக்கு இரக்கம் காட்டா. இது தலைவராகிய ஆண்டவரின் அறிவிப்பு.

உங்களுள் மூன்றிலொரு பங்கினர் கொள்ளை நோயால் மடிவர்: பஞ்சத்தால் அழிவர்: இன்னும் மூன்றிலொரு பங்கினர் வாளால் வீழ்வர்: எஞ்சிய மூன்றிலொரு பங்கினரை எத்திசையிலும் சிதறுண்டு போகச் செய்து, அவர்களை உருவிய வாளோடு தொடர்வேன்.

இவ்வாறு என் சினம் தணியும்: அவர்கள்மீது எனக்குள்ள சீற்றத்தை ஆற்றிக்கொள்வேன், பழிதீர்த்துக் கொள்வேன். என் சீற்றம் அவர்கள் மீது பாய்ந்து முடியும்போது ஆண்டவராகிய நான் என் பேரார்வத்தினால் பேசியுள்ளேன் என அவர்கள் அறிந்து கொள்வர்.

இவ்வழியாய்க் கடந்து செல்வோர் அனைவரும் காணும்படி உன்னைச் சுற்றியுள்ள மக்களினங்களிடையே உன்னைப் பாழாக்கி, பழிச்சொல்லுக்கு ஆளாக்குவேன்.

சினத்தோடும், சீற்றத்தோடும் உனக்கு நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும்போது, உன்னைச் சுற்றியுள்ள மக்களினங்களுக்கு அது பழிச்சொல்லும் வசைமொழியும் எச்சரிக்கையும் திகிலுமாய் இருக்கும். ஆண்டவராகிய நான் பேசியுள்ளேன்.

உங்களைப் பாழாக்குவதற்காக நான் வறட்சியின் கொடிய அம்புகளை அவர்கள்மீது எய்வேன். உங்களை அழிப்பதற்காகவே அவற்றை எய்வேன். உங்களிடையே வறட்சியை மிகுதிப்படுத்தி உங்கள் உணவின் தரவை நிறுத்திவிடுவேன்.

நான் வறட்சியையும், கொடிய விலங்குகளையும் உங்கள் மேல் ஏவுவேன். அதனால், நீங்கள் உங்கள் பிள்ளைகளை இழப்பீர்கள்: கொள்ளை நோயும் இரத்தக் களறியும் உங்களிடையே உண்டாகும். ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்.

அதிகாரம் 6.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

மானிடா! நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிராக இறைவாக்கு உரைத்திடு.

நீ சொல்லவேண்டியது: இஸ்ரயேல் மலைகளே! தலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். மலைகளுக்கும் குன்றுகளுக்கும் மலை இடுக்குகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே உங்கள்மேல் வாளை வரச்செய்து உங்கள் தொழுகைமேடுகளை அழிப்பேன்.

உங்கள் பலிபீடங்கள் இடிக்கப்பட, உங்கள் பபபீடங்கள் தகர்க்கப்படும். உங்களுள் கொலையுண்டோரை உங்கள் சிலைகளின்முன் விட்டெறிவேன்.

இஸ்ரயேல் மக்களின் பிணங்களை அவர்களுடைய சிலைகளின்முன் போடுவேன். உங்கள் பலிபீடங்களைச் சிதறச் செய்வேன்.

நீங்கள் வாழும் எல்லா இடங்களிலும் நகர்கள் அழிக்கப்படும்: தொழுகை மேடுகள் சிதைக்கப்படும். இதனால் உங்கள் பலிபீடங்கள் இடிக்கப்பட்டுப் பாழாக்கப்படும். உங்கள் சிலைகள் உடைத்து நொறுக்கப்படும். உங்கள் பப பீடங்கள் தகர்க்கப்படும். உங்கள் கைவேலைப்பாடுகள் அழித்தொழிக்கப்படும்.

கொலையுண்டோரும் உங்கள் நடுவில் வீழ்ந்து கிடப்பர். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

ஆயினும், நீங்கள் நாடுகளுக்குள்ளே சிதறடிக்கப்படும்போது, வாளுக்குத் தப்பும் சிலரை எஞ்சியோராக நான் வேற்றினங்களிடையே விட்டுவைப்பேன்.

இவ்வாறு, வேற்றினங்களிடையே சிறைப்படுத்தப்பட்டு உயிர் தப்புவோர் என்னை நினைவு கூர்வர். ஏனெனில் என்னை விட்டு விலகி விபசாரம் செய்த தங்கள் இதயத்தையும், சிலைகள் மீது காமுற்ற தங்கள் கண்களையும் குறித்து தங்களையே நொந்து கொள்ளச் செய்வேன். அவர்கள் தங்கள் அருவருப்பான எல்லாச் செயல்களுக்காகவும், எல்லாக் கேடுகளுக்காகவும் தங்களைத் தாங்களே வெறுப்பர்.

அப்போது, நானே ஆண்டவர் என்றும் “இக்கேட்டை அவர்களுக்கு வருவிப்பேன்“ என நான் பொய்யாகச் சொல்லவில்லை என்றும் அவர்கள் அறிவார்கள்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீ கையடித்துக் காலை உதறிச் சொல்: ஜயோ கேடு! இஸ்ரயேல் வீட்டாரின் எல்லாத் தீய அருவருப்புகளுக்காகவும் அவர்கள் வாளாலும் வறட்சியாலும் கொள்ளை நோயாலும் மடிவர்.

தொலைவில் இருப்போர் கொள்ளை நோயால் மடிவர்: அருகில் இருப்போர் வாளால் வீழ்வர். மீந்திருந்து முற்றுகையிடப்படுவோரோ வறட்சியால் சாவர். இவ்வாறு அவர்கள்மேல் என் சீற்றத்தைத் தணித்துக்கொள்வேன்.

ஒவ்வோர் உயர்ந்த குன்றிலும் எல்லா மலையுச்சிகளிலும், ஒவ்வொரு பசு மரத்தடியிலும், தழைத்து நிற்கும் எல்லாக் கருங்காலி மரங்களடியிலும், எங்கெங்கு அவர்கள் தங்கள் சிலைகளுக்கெல்லாம் நறுமணத் பபம் காட்டினரோ அங்கெல்லாம் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றி அவர்களுடைய சிலைகளோடு அவர்களுள் கொலையுண்டோரும் கிடக்கும்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

நான் அவர்கள்மீது என் கையை ஓங்கிப் பாலைநிலம் முதல் திப்லாவரை அவர்கள் குடியிருக்கும் எல்லா இடங்களையும் அழித்துப் பாழாக்குவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

அதிகாரம் 7.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! இஸ்ரயேல் நாட்டை நோக்கித் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ முடிவு வந்துவிட்டது! நாட்டின் நான்கு மூலைகள் வரையிலும் முடிவு வந்துவிட்டது!

இப்பொழுதே முடிவு உனக்கு வந்துவிட்டது. நான் என் சினத்தை உன்மீது அனுப்புவேன்: உன் நடத்தைக்கு ஏற்றபடி உனக்குத் தீர்ப்பிடுவேன்: வெறுப்புக்குரிய உன் எல்லாச் செயல்களுக்கும் தக்க பதிலளி கொடுப்பேன்.

என் கண்களில் உனக்கு இரக்கம் இராது: நான் உன்னைத் தப்பவிடேன். மாறாக, உன் நடத்தைக்கும் அருவருப்புகளுக்கும் ஏற்ப உனக்குப் பதிலடி கொடுப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

தலைவராகிய ஆண்டவர் கூறுகிறார்: இதோ வருகின்றது தீங்கு மேல் தீங்கு!

முடிவு வந்துவிட்டது! வந்து விட்டது முடிவு! உனக்கெதிராக அது எழுந்து விட்டது: இதோ, அது வருகின்றது.

நாட்டில் வாழ்வோனே! எனக்குக் கேடுகாலம் வந்துவிட்டது. அந்த வேளை வந்தேவிட்டது. அது மலைகளின் மகிழ்ச்சி நாளல்ல: குழப்பத்தின் நாளே. நெருங்கிவிட்டது அந்நாள்.

இப்போது விரைவில் என் சீற்றத்தை உன்மேல் பாய்ச்சி என் சினத்தை ஆற்றிக்கொள்வேன்: உன் வழிகளுக் கேற்ப உனக்குத் தீர்ப்பிட்டு, உன் அருவருப்புகளுக்குத் தக்கபடி உனக்குப் பதிலடி கொடுப்பேன்.

என் கண்களில் உனக்கு இரக்கம் இராது: நான் உன்னைத் தப்பவிடேன். மாறாக உன் நடத்தைக்கும் உன் நடுவிலிருக்கும் அருவருப்புகளுக்கும் ஏற்ப உனக்குப் பதிலடி கொடுப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்றும் நானே தாக்குகிறேன் என்றும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

இதோ, அந்த நாள்! அது வந்துவிட்டது! கேடுகாலம் நெருங்கி விட்டது: அநீதி துளித்து விட்டது: செருக்கு அரும்பிவிட்டது.

வன்முறை, கொடுமையின் கோலாக வளர்ந்துள்ளது: அவர்களோ அவர்களது செழிப்போ அவர்களது செல்வமோ, எதுவுமே தப்ப முடியாது. அவர்களுக்குள் யாருமே மேன்மையுடன் திகழ முடியாது.

அந்நேரம் வந்துவிட்டது: அந்நாள் நெருங்கிவிட்டது. வாங்குவோர் மகிழ வேண்டாம்: விற்போர் வருந்த வேண்டாம். ஏனெனில் அக்கூட்டத்தினர் அனைவருமே சினத்துக்கு இலக்காகிவிட்டனர்.

அவர்கள் இன்னும் உயிருடன் இருந்தால்கூட, விற்றோர் விற்கப்பட்ட பொருளை மீண்டும் அடையவே முடியாது. ஏனெனில், அக்கூட்டத்தினர் அனைவரையும் பற்றிய இக்காட்சி மாறாது. அவர்கள் தீயவராய் இருப்பதால், எவரும் தம் உயிரை நிலைக்கச் செய்ய முடியாது.

அவர்கள் எக்காளம் ஊதி எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்தாலும், போரிடச் செல்வோர் யாருமில்லை. எனெனில் என் சினம் அக்கூட்டத்தினர் அனைவர் மேலும் உள்ளது.

வெளிப்புறம் வாளும் உட்புறம் பஞ்சமும் கொள்ளை நோயும் உள்ளன. வயலில் இருப்போர் வாளால் மடிவர். நகரில் இருப்போரையோ பஞ்சமும் கொள்ளை நோயும் விழுங்கும்.

அவர்களுள் சிலர் பிழைத்து, தப்பி ஓடினாலும் அவர்கள் ஒவ்வொருவரும் மலைகளில் தம் குற்றங்களுக்காகப் பள்ளத்தாக்குப் புறாக்களைப் போல்ப் புலம்புவர்.

கைகள் எல்லாம் வலுவிழந்து போகும்: முழங்கால்கள் எல்லாம் தண்ணீரைப்போல் ஆகிவிடும்.

அவர்கள் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொள்வர்: திகில் அவர்களை மூடிக்கொள்ளும்: முகங்கள் எல்லாம் வெட்சி நாணும்: அவர்களின் தலைகள் எல்லாம் மொட்டையடிக்கப்படும்.

தங்கள் வெள்ளியை வீதிகளில் எறிவர்: பொன் அவர்களுக்குத் தீட்டுள்ள பொருள் போல் இருக்கும்: ஆண்டவரது சீற்றம் பொங்கும் அந்நாளில் அவர்களின் வெள்ளியாலும் பொன்னாலும் அவர்களை விடுவிக்க இயலாது: அவர்கள் மனநிறைவு பெறுவதும் இல்லை: அவர்களின் வயிறு நிரம்புவதும் இல்லை: ஏனெனில் அவர்களது குற்றப்பழியே அவர்களுக்கு முட்டுக்கட்டையாக ஆகிவிட்டது.

அழகிய அணிகலன்களைப் பகட்டுக்காகப் பயன்படுத்தினர்: அவற்றால் தங்கள் அருவருக்கத்தக்க சிலைகளையும் வெறுக்கத்தக்க பொருள்களையும் செய்துகொண்டனர்: எனவே அவற்றை அவர்களுக்குத் தீட்டான பொருளாக மாறச் செய்தேன்.

மேலும் அதை அன்னியர் கையில் கொள்ளைப் பொருளாகவும் உலகின் தீயோர் சூறையாடும் பொருளாகவும் கொடுப்பேன்: அவர்கள் அதைக் கறைப்படுத்துவார்கள்.

அவர்கள் செய்வதைக் கண்டுகொள்ள மாட்டேன்: அவர்களும் என் அரும்பொருளைத் தீட்டுப்படுத்துவார்கள்: கள்வரும் அதனுள் நுழைந்து கறைப்படுத்துவர்.

நீ ஒரு சங்கிலியைச் செய்து கொள்: நாடு கொலைத் தீர்ப்புகளாலும் நகர் வன்செயல்களாலும் நிறைந்துள்ளன.

ஆகையால் வேற்றினத்தாரில் பொல்லாதவர்களைக் கூட்டி வருவேன்: அவர்கள் இவர்களுடைய வீடுகளைக் கைப்பற்றுவார்கள்: வலியோரின் ஆணவத்தை அடக்குவேன்: அவர்களின் திருத்தலங்கள் கறைப்படுத்தப்படும்.

கடுந்துயர் அடையும்பொழுது, அமைதியை நாடுவர்: ஆனால் அது கிடைக்காது.

அழிவுக்குமேல் அழிவு உண்டாகும், வதந்திக்கு மேல் வதந்தி பரவும்: இறைவாக்கினரின் காட்சியை நாடுவர்: ஆனால் குருக்களிடம் திருச்சட்டமும் மூப்பர்களிடம் அறிவுரையும் அற்றுப்போகும்.

அரசன் புலம்புவான்: இளவரசன் அவநம்பிக்கையை அணிந்திருப்பான்: நாட்டு மக்களின் கைகளோ நடுங்கிக்கொண்டிருக்கும்: அவர்களின் வழிகளுக்கேற்ப நானும் அவர்களுக்குச் செய்வேன்: அவர்களின் தீர்ப்பு முறைகளின்படியே நானும் அவர்களுக்குத் தீர்ப்பிடுவேன்: அப்போது நானே ஆண்டவரென அவர்கள் அறிந்துகொள்வர்.

அதிகாரம் 8.

ஆறாம் ஆண்டில், ஆறாம் மாதத்தின் ஜந்தாம் நாள், நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். யூதாவின் மூப்பரும் என் முன்பாக அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே தலைவராகிய ஆண்டவரின் கை என்மீது விழுந்தது.

அப்போது இதோ நெருப்புப் போன்ற ஒருவரின் சாயலைக் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்ப்புறம் நெருப்புப் போன்றும், அவரது இடைக்கு மேற்புறம் பளபளக்கும் வெண்கலம் போன்றும் ஒளிர்வதைக் கண்டேன்.

அவர் கைபோன்று தெரிந்த ஒன்றை நீட்டி என் தலை முடியைப் பிடித்தார். கடவுள் அருளிய இக்காட்சியில் ஆவி என்னை விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவில் பக்கி எருசலேமுக்குக் கொணர்ந்து அங்கே ஆண்டவரது சகிப்பின்மையைத் பண்டும் சிலை இருக்கும் வடதிசை நோக்கி அமைந்த உள்வாயிலின் முற்றத்தில் என்னை விட்டது.

அங்கே சமவெளியில் நான் கண்ட காட்சியைப் போன்று இஸ்ரயேலின் கடவுளது மாட்சி இலங்கியது.

அவர் என்னை நோக்கி, மானிடா! உன் கண்களை உயர்த்தி வடக்கே பார் என்றார். நானும் வடதிசைநோக்கி என் கண்களை உயர்த்தினேன். அங்கே வடக்கில் பலிபீடத்தின் முற்றத்தில் நுழைவாயிலின் அருகே ஆண்டவரது சகிப்பின்மையைத் பண்டும் சிலை இருந்தது.

அவர் என்னை நோக்கி, மானிடா! அவர்கள் செய்வதைப் பார்த்தாயா? என் திருத்தலத்திலிருந்து நான் விலகியிருக்குமாறு இஸ்ரயேல் வீட்டார் செய்கிற மிகவும் அருவருக்கத்தக்கவற்றைப் பார்க்கின்றாய் அல்லவா? திரும்பி வா, இதை விடவும் அருவருக்கத்தக்கவற்றைக் காண்பாய் என்றார்.

பின்னர் அவர் என்னை முற்றத்தின் வாயிலுக்குக் கொண்டு சென்றார். அங்கே சுவரில் ஒரு துளை இருக்கக் கண்டேன்.

அவர் என்னிடம், மானிடா! சுவரை உடை என்றார். நான் சுவரை உடைத்தபோது அங்கே ஒரு வாயிற்படி இருந்தது.

அவர் என்னை நோக்கி, உள்ளே போய் அவர்கள் செய்யும் தீய அருவருப்பான செயல்களைப் பார் என்றார்.

நான் உள்ளே நுழைந்து பார்த்தேன். இதோ எல்லாவகை ஊர்வனவும், வெறுக்கத்தக்க விலங்குகளும், இஸ்ரயேல் வீட்டினரின் தெய்வ உருவங்களும் சுவரைச் சுற்றிலும் செதுக்கப்பட்டிருந்தன.

அவற்றிற்கு முன் இஸ்ரயேல் வீட்டு மூப்பர்களில் எழுபதுபேர் கையில் நறுமணம் கமழும் பபகலசத்துடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நடுவே சாப்பானின் மகன் யாசனியாவும் நின்று கொண்டிருந்தார்.

ஆண்டவர் என்னை நோக்கி, மானிடா! இஸ்ரயேல் வீட்டு மூப்பர்களை இருளில் தாங்கள் வைத்த தெய்வ உருவங்களின்முன் என்ன செய்கிறார்கள்? பார்த்தாயா! “ஆண்டவர் நம்மைப் பார்க்கவில்லை: ஆண்டவர் நாட்டைக் கைவிட்டுவிட்டார்“ என அவர்கள் சொல்கின்றனர் என்றார்.

மீண்டும் அவர் என்னை நோக்கி, திரும்பி வா. இவர்கள் செய்யும் இன்னும் பெரிய அருவருக்கத்தக்க செயல்களைக் காணப் போகிறாய் என்று சொன்னார்.

பின் அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் வடக்கு வாயிலுக்குக் கூட்டிவந்தார். அங்கே பெண்கள் உட்கார்ந்து தம்மூசுக்காக அழுது கொண்டிருந்தனர்.

பின் அவர் என்னை நோக்கி, பார்த்தாயா? மானிடா! மீண்டும் திரும்பி வா. இவற்றிலும் பெரிய அருவருக்கத்தக்க செயல்களைக் காணப்போகிறாய் என்றார்.

அவர் என்னை ஆண்டவரது இல்லத்தின் உள் கூடத்திற்குக் கூட்டி வந்தார். அங்கே ஆண்டவரது கோவிலின் வாயிற்பகுதியில், மண்டபத்திற்கும், பீடத்திற்கும் இடையில், ஏறக்குறைய இருபத்தைந்து பேரைக் கண்டேன். அவர்களின் முதுகு ஆண்டவரது இல்லத்தையும் முகம் கிழக்குத் திசையையும் நோக்கி இருந்தன. அவர்கள் கிழக்கே பார்த்துக் கதிரவனைத் தொழுது கொண்டிருந்தனர்.

அவர் என்னை நோக்கி, பார்த்தாயா? மானிடா! யூதா வீட்டார் இங்கு செய்கிற அருவருப்புகள் அற்பமானவையோ? அவர்கள் நாட்டை வன்முறையினால் நிரப்பி மீண்டும் மீண்டும் எனக்குச் சினமூட்டுகிறார்கள். அதோ பார், திராட்சைக் கிளைகளைத் தங்கள் மூக்கிற்கு எதிராகத் பக்கிப் பிடிக்கிறார்கள்.

எனவே நான் அவர்களிடம் சினத்துடன் நடந்து கொள்வேன். என் கண் அவர்களுக்கு இரக்கம் காட்டாது. நான் அவர்களைத் தப்பவிடேன். என் செவிகளில் அவர்கள் பெரும் குரலிட்டு அழுதாலும் நான் கேட்கமாட்டேன்.

அதிகாரம் 9.

அவர் என் செவிகளில் உரத்த குரலில் நகருக்குத் தண்டனை வழங்குவோரே! நீங்கள் ஒவ்வொருவரும் உம் கொலைக் கருவியைக் கையிலேந்தி நெருங்கி வாருங்கள் என்றார்.

இதோ ஆறு ஆள்கள் வடக்கு நோக்கி இரக்கும் மேல் வாயிலின் வழியாக வந்தனர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு கொலைக் கருவி இருந்தது. அவர்களுடன் நார்ப்பட்டு உடுத்தி, எழுதும் மைக்கூட்டை இடையில் வைத்திருந்த ஒருவனும் இருந்தான். இவர்கள் உள்ளே வந்து வெண்கலப் பீடத்தின் அருகில் நின்றனர்.

அப்பொழுது இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அது தங்கியிருந்த கெருபுகளை விட்டு மேலெழுந்து இல்லத்தின் வாயிற்படிக்கு வந்தது. உடனே ஆண்டவர் நார்ப்பட்டு உடுத்தி எழுதும் மைக்கூட்டைத் தம் இடையில் வைத்திருந்த அம்மனிதரை அழைத்தார்.

பின் ஆண்டவர் அவரை நோக்கி, நீ எருசலேம் நகரெங்கும் சுற்றிவந்து அதனுள் செய்யப்படும் எல்லா அருவருக்கத்தக்க செயல்களுக்காகவும் பெருமூச்சு விட்டுப் புலம்பம் மனிதர்களுக்கு நெற்றியில் அடையாளம் இடு என்றார்.

என் செவிகளில் விழுமாறு அவர் மற்றவர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் அவர் பின்னால் நகரெங்கும் சுற்றி வந்து தாக்குங்கள். உங்கள் கண்களினின்று யாரையும் தப்பவிடவேண்டாம்: இரக்கம் காட்டவேண்டாம்.

முதியோர், இளைஞர், கன்னியர், குழந்தைகள், பெண்கள் அனைவரையும் கொன்றொழியுங்கள். அடையாளம் இடப்பட்ட மனிதர் எவரையும் நெருங்காதீர்கள். என் பயகத்திலிருந்து தொடங்குங்கள். அவர்களும் ஆண்டவரது இல்லத்தின் முன்னிருந்த முதியோரிலிருந்து தொடங்கினர்.

அவர் அவர்களை நோக்கி, கோவிலைக் கறைப்படுத்துங்கள்: முற்றங்களைக் கொலையுண்டவர்களால் நிரப்புங்கள்: புறப்படுங்கள் என்றார். அவர்களும் நகருக்குள் சென்று வெட்டி வீழ்த்தினார்கள்.

அவர்கள் வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தபோது, நான்மட்டும் தனியே இருந்தேன். நானோ முகங்குப்புற விழுந்து, ஆ! தலைவராகிய ஆண்டவரே! நீர் உம் சீற்றத்தை எருசலேமின் மீது கொட்டி இஸ்ரயேலில் எஞ்சி இருப்போர் அனைவரையும் அழித்து விடுவீரோ? என்று கத்தினேன்.

அவர் என்னை நோக்கி, இஸ்ரயேல், யூதா வீட்டார்களின் குற்றம் மிக மிகப்பெரிது. நாடு இரத்தப் பழியால் நிறைந்துள்ளது. நகரில் புரட்டு மலிந்துள்ளது. ஏனெனில், “ஆண்டவர் நாட்டைக் கைநெகிழ்ந்து விட்டார்: அவர் எதையும் காண்பதில்லை“ என்று சொல்லிக்கொள்கின்றனர்.

ஆகவே, என் கண் அவர்களுக்கு இரக்கம் காட்டாது. நான் அவர்களைத் தப்பவிடேன். அவர்களின் வழிமுறைகளை அவர்களின் தலைமீதே சுமத்துவேன் என்றார்.

இதோ, நார்ப்பட்டு உடுத்தி இடையில் மைக்கூட்டை வைத்திருந்த மனிதர் வந்து, நீர் எனக்குக் கட்டளை இட்டவாறே நான் செய்துமுடித்து விட்டேன் என்று அறிவித்தார்.

அதிகாரம் 10.

நான் உற்று நோக்கினேன்: இதோ! கெருபுகளுக்குமேல் அவற்றின் தலைக்கு மேலிருந்த விதானத்தில் நீலமணி இழைத்த அரியணை உருவத்தின் சாயலைப் போன்றதொன்று தெரிந்தது.

அவர் நார்ப்பட்டு உடுத்திய மனிதரிடம், கெருபுகளுக்குக் கீழ் இடுக்கு சக்கரங்களின் நடுவில் நுழைந்து, கெருபுகளின் நடுவிலுள்ள நெருப்புத் தணலைக் கை நிறைய வாரி, நகரின் மீது வீசு என்றார். என் கண்ணெதிரே அவரும் சென்றார்.

அந்த மனிதர் உள்ளே சென்றபோது கோவிலின் வலப்புறத்தில் கெருபுகள் நின்றுகொண்டிருந்தன: மேகம் உள்முற்றத்தில் பரவியிருந்தது.

ஆண்டவரது மாட்சி கெருபுகளிடமிருந்து புறப்பட்டு, கோவிலின் வாயிற்படிக்கு வந்தது. மேகம் கோவிலில் பரவியிருந்தது. முற்றம் முழுவதும் ஆண்டவரது மாட்சியின் பேரொளி நிறைந்து இலங்கிற்று.

கெருபுகளின் இறக்கைகள் எழுப்பிய ஒலி வெளி முற்றம் வரை கேட்டது. அது எல்லாம் வல்லவரின் குரலொளிபோன்று இருந்தது.

அவர் நார்ப்பட்டு உடுத்திய மனிதரை நோக்கி, சக்கரங்களின் இடையே கெருபுகளின் நடுவில் உள்ள நெருப்பில் கொஞ்சம் எடு என்று கட்டளையிட அவரும் சென்று சக்கரத்தின் அருகில் நின்றார்.

அப்பொழுது, கெருபுகளுள் ஒன்று தன் கையை நீட்டிக் கெருபுகளின் நடுவில் உள்ள நெருப்பில் கொஞ்சம் எடுத்து நார்ப்பட்டு உடுத்தியவரின் உள்ளங்கையில் வைத்தது. அவரும் அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.

கெருபுகளின் இறக்கைகளின் கீழ் மனிதக் கையில் சாயல் காணப்பட்டது.

இதோ! கெருபுகளின் அருகில் நான்கு சக்கரங்களைக் கண்டேன். ஒவ்வொரு கெருபின் அருகிலும் ஒரு சக்கரம் இருந்தது. சக்கரங்கள் மரகதக் கல்லின் நிறத்துடன் தோன்றின.

அவை நான்கும் ஒரே விதத் தோற்றம் கொண்டிருந்தன: சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பதுபோல் தோன்றின.

அவை இயங்குகையில் எப்பக்கமும் திரும்பாமல் நாற்றிசையிலும் செல்லக்கூடியவை. முன் சக்கரம் நோக்கும் திசையில் மற்றச் சக்கரங்களும் திரும்பாமல் சென்றன.

கெருபுகளின் உடல் முழுவதும்-முதுகு, கைகள், இறக்கைகள், சக்கரங்கள், அதாவது நான்கு சக்கரங்கள்-கண்களால் நிறைந்திருந்தன.

சுழல் சக்கரங்கள் என்று அவை அழைக்கப்பட்டதை நான் கேட்டேன்.

ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன: முதலாவது எருது முகம்: இரண்டாவது மனித முகம்: மூன்றாவது சிங்க முகம்: நான்காவது கழுகு முகம்.

அப்பொழுது கெருபுகள் மேலெழந்தன. கெபார் ஆற்றோரம் நான் கண்ட உயிரினங்கள் இவையே.

கெருபுகள் சென்றபோது சக்கரங்களும் அவற்றோடு சென்றன. கெருபுகள் நிலத்திலிருந்து மேலெழும்பத் தங்கள் இறக்கைகளை விரித்தபோது சக்கரங்கள் திரும்பாமல் அவற்றுடன் இருந்தன.

அவை நின்றபோது இவையும் நின்றன. அவை எழுந்தபோது இவையும் எழுந்தன. ஏனெனில் அவ்வுயிரினங்களின் ஆவி இவற்றில் இருந்தது.

ஆண்டவரது மாட்சி கோவிலின் வாயிற்படியை விட்டுக் கெருபுகளின்மேல் வந்து நின்றது.

என் கண்ணெதிரே, கெருபுகள் தங்கள் இறக்கைகளை விரித்து நிலத்தினின்று மேலெழந்தன. அவை சென்றபோது சக்கரங்களும் அவற்றுடன் சென்றன. ஆண்டவரது இல்லத்தின் கிழக்கு நுழைவாயிலில் அவை நின்றன. இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அவற்றின் மேல் இருந்தது.

கெபார் ஆற்றோரம் இஸ்ரயேலின் கடவுளுக்குக்கீழே நான் கண்ட உயிரினங்கள் இவையே. அவை கெருபுகளே என்று நான் தெரிந்து கொண்டேன்.

அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன. அவற்றின் இறக்கைகளின் கீழ் மனிதக் கைகளின் சாயல் இருந்தது.

அவற்றின் முகச் சாயல் கெபார் ஆற்றோரம் நான் கண்ட முகங்களைப் போன்றே தோன்றிற்று. அவை ஒவ்வொன்றும் நேர் முகமாய்ச் சென்றன.

அதிகாரம் 11.

பின்னர் ஆவி என்னைத் பக்கி ஆண்டவரது இல்லத்தின் கிழக்குநோக்கி இருக்கும் கீழை வாயிலுக்குக் கொண்டுவந்தது. அவ்வாயிற்பகுதியில் இருபத்தைந்து பேர் இருந்தனர். அவர்கள் நடுவே மக்கள் தலைவர்களான அசூரின் மகன் யாசனியாவையும் பெனாயாவின் மகன் பெலற்றியாவையும் கண்டேன்.

அவர் என்னை நோக்கி, மானிடா! இந்நகரில் கெடுதலானவற்றைத் திட்டமிடுபவர்களும் தீய அறிவுரை கூறுபவர்களும் இவர்களே.

“வீடுகட்டும் காலம் அருகில் உள்ளது அன்றோ! இந்நகர் ஒரு பாண்டம், நாமோ இறைச்சி“ என அவர்கள் சொல்கிறார்கள்.

ஆகவே, அவர்களுக்கெதிராக இறைவாக்குரை! மானிடா! இறைவாக்கு உரை! என்றார்.

அப்போது ஆண்டவரது ஆவி என்மீது இறங்கியது. ஆண்டவர் என்னிடம் கூறுவது: நீ சொல்: ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் இவ்வாறெல்லாம் எண்ணுகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் உள்ளதை நான் அறிவேன்.

நீங்கள் இந்நகரில் பலரைக் கொலை செய்துள்ளீர்கள். இதன் தெருக்களைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள்.

ஆகையால், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உங்களால் கொலை செய்யப்பட்டு இதனுள் போடப்பட்டவர்கள்தான் இறைச்சி: இந்நகர் ஒரு பாண்டம். உங்களையோ நான் இதனுள்ளிருந்து வெளியேற்றுவேன்.

வாளுக்கு நீங்கள் அஞ்சினீர்கள்: ஆனால் வாளையே உங்கள் மீது கொணர்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் உங்களை இந்நகரினின்று வெளியேற்றி உங்களை மாற்றாரிடம் கையளித்து உங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவேன்.

உங்களுக்கு நான் வழங்கும் தீர்ப்பு: நீங்கள் இஸ்ரயேலின் எல்லையில் வாளால் வீழ்வீர்கள். அப் போது நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

இந்நகர் உங்களுக்கு ஒரு பாண்டமாக இராது: நீங்களும் இதிலுள்ள இறைச்சியாக இருக்கமாட்டீர்கள்: இஸ்ரயேலின் எல்லையில் நான் உங்களைத் தீர்ப்பிடுவேன்.

நீங்கள் மீறிய நியமங்களின் ஆண்டவர் நானே என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். என் நீதி நெறிகளை நீங்கள் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, உங்களைச் சுற்றியுள்ள வேற்றினத்தாரின் நீதிநெறிகளைப் பின்பற்றினீர்கள்.

நான் இறைவாக்குரைத்தபோது, பெனாயாவின் மகன் பெலற்றியா செத்துப்போனான். நான் முகம்குப்புற விழுந்து, உரத்த குரலில், ஜயோ, தலைவராகிய ஆண்டவே! இஸ்ரயேலின் எஞ்சியிருப்போரை முற்றிலும் அழிக்கப் போகிறீரோ? என்று கதறினேன்.

அப்போது, ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! உன் சகோதரர், உன் உறவின் முறையினர் மற்றும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்து, “அவர்கள் ஆண்டவரை விட்டுத் தொலைவில் போய்விட்டார்கள்: எங்களுக்குத்தான் இந்நாடு உரிமையாய்க் கொடுக்கப்பட்டுள்ளது“ என எருசலேமில் வாழ்வோர் கூறுகின்றனர்.

எனவே நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: “நான் அவர்களைத் தொலைவில் வேற்றினத்தாரிடையே அனுப்பி இருந்தாலும், நாடுகளிடையே அவர்களைச் சிதறடித்திருந்தாலும் அவர்கள் சென்ற அந்நாடுகளில் அவர்களுக்கு நான் ஒரு சிறிய பயகமாக இருந்துள்ளேன்.

ஆதலால் நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உங்களை மக்களினங்களிடையே இருந்து கூட்டிச் சேர்த்து நீங்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று உங்களை ஒன்று சேர்த்து இஸ்ரயேல் நாட்டை உங்களுக்குத் தருவேன்.

அவர்கள் அங்கு வந்ததும், வெறுக்கத்தக்க எல்லாவற்றையும், அருவருப்புகள் அனைத்தையும் அதனின்று களைவார்கள்.

அவர்களுக்கு நான் வேறோர் இதயத்தையும் புதியதோர் ஆவியையும் வழங்குவேன். கல்லான இதயத்தை அவர்கள் உடலினின்று களைந்து விட்டு, சதையாலான இதயத்தை அருளுவேன்.

அப்போது அவர்கள் என் நியமங்களின்படி நடப்பார்கள். என் நீதிநெறிகளுக்குச் செவி கொடுத்து அவற்றைக் கடைப்பிடிப்பார்கள்: அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்: நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்.

ஆனால், வெறுக்கத்தக்கவற்றையும் அருவருப்புகளையும் நாடிச்செல்லும் இதயம் கொண்டவர்களின் வழிமுறைகளை அவர்களின் தலைமீதே சுமத்துவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

கெருபுகள் தங்கள் இறக்கைகளை விரிக்க, சக்கரங்களும் அவற்றுடன் எழுந்தன. இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அவற்றின்மேல் இருந்தது.

ஆண்டவரது மாட்சி நகரின் நடுவினின்று எழுந்து நகருக்குக் கிழக்கே உள்ள மலைமீது போய் நின்றது.

அப்போது, இறைக்காட்சியில் ஆவி என்னைத் பக்கிக் கல்தேயாவிலிருந்த நாடுகடத்தப்பட்டோரிடம் கொண்டு சென்றது. பின்னர் நான் கண்ட காட்சி என்னை விட்டு அகன்றது.

நானும் ஆண்டவர் எனக்குக் காண்பித்த அனைத்தையும் நாடுகடத்தப்பட்டோரிடம் எடுத்துச் சொன்னேன்.

அதிகாரம் 12.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! கலகம் செய்யும் வீட்டாரிடையே நீ வாழ்கின்றாய். காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை: கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை: ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்.

மானிடா! நீயோ நாடுகடத்தப்படும் ஒருவர் போல் பொருள்களைத் தயார் செய்து கொண்டு, அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் புறப்படு. உன் உறைவிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு, அவர்கள் கண்ணெதிரே, நாடுகடத்தப்படுபவர் போல் வெளியேறு. கலகம் செய்யும் வீட்டாராக இருப்பினும் ஒருவேளை அவர்கள் அதைக் கண்டுணராலம்.

நாடுகடத்தப்படும் ஒருவர்போல், அவர்கள் கண்ணெதிரே பகல்நேரத்தில் உன் பொருள்களை எடுத்து வை. மாலை வேளையில், அவர்கள் கண்ணெதிரே நாடுகடத்தப்படுபவர்போல் புறப்படு.

அவர்கள் கண்முன்னே, சுவரில் துளையிட்டு அதன் வழியாய் அவற்றை வெளிக்கொணர்வாய்.

அவர்கள் கண்முன்னே அவற்றைத் தோள்மேல் வைத்து இருள் சூழ்ந்ததும் வெளியே பக்கிச்செல். நிலத்தைப் பார்க்காதபடி உன் முகத்தை மூடிக்கொள். ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருக்கு உன்னை ஓர் அடையாளமாக வைத்திருக்கிறேன்.

எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன். நாடுகடத்தப்படுகையில் கொண்டு போவதுபோல என் பொருள்களைப் பகல் வேளையில் வெளிக் கொணர்ந்தேன். மாலையில் என் கைகளால் சுவரில் துளையிட்டேன். இருள் சூழ்ந்ததும் அவற்றைத் தோளில் பக்கிக்கொண்டு அவர்கள் கண்முன்னே வெளியேறினேன்.

காலையில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! கலகம் செய்யும் வீடாகிய இஸ்ரயேல் வீட்டார் உன்னிடம், நீ செய்கிறது என்ன? என்று கேட்கவில்லையா?

நீ அவர்களுக்குச் சொல்: எருசலேமில் இருக்கும் மக்கள் தலைவனையும் அவனுடனிருக்கும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:

நீ சொல்: உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்: நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும். அவர்கள் நாடுகடத்தப்பட்டோராயும் சிறைப்பட்டோரையும் செல்வர்.

அவர்களின் தலைவன் இருளில் தோளில் சுமையுடன் மதிலிடீடே வெளியேறுவான். அவனை வெளிக்கொணர்வதற்காக மதிலைக் குடைவார்கள். கண்களால் நாட்டைப் பார்க்காதபடி அவன் தன் முகத்தை மூடிக்கொள்வான்.

நான் அவன்மீது என் வலையை வீசுவேன். அவனும் என் வலையை வீசுவேன்: அவனும் என் கண்ணில் சிக்கிக்கொள்வான். நான் அவனைக் கல்தேயரின் நாடாகிய பாபிலோனுக்குக் கொண்டு வருவேன். அந்த நாட்டைப் பார்க்காமலேயே அவன் அங்குச் செத்துப் போவான்.

அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கும் அனைவரையும், அவனுடைய படைகள் அனைத்தையும், நான் எப்பக்கமும் சிதறடித்து, அவர்களை உருவிய வாளோடு பின்தொடர்வேன்.

நான் அவர்களை வேற்றினத்தாரிடையே ஓடச்செய்து, நாடுகளிடையே சிதறடிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

ஆயினும் அவர்களுள் சிலரை வாளுக்கும், பஞ்சத்துக்கும், கொள்ளைநோய்க்கும் இரையாக்காமல் விட்டுவைப்பேன். அவர்கள் தாங்கள் போய்ச்சேரும் வேற்றினத்தாரிடையே தங்கள் அருவருப்புகள் எல்லாவற்றையும்பற்றி எடுத்துக்கூறுவர். அப்போது அவர்கள் நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வர்.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! நடுக்கத்¥ தோடு உன் அப்பத்தை உண்டு, அதிர்ச்சியோடும் அச்சத்தோடும் நீரைப் பருகு.

பின்னர், நாட்டின் மக்களை நோக்கிக் கூறு: இஸ்ரயேல் நாட்டிலுள்ள எருசலேமில் வாழ்வோரைப்பற்றித் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அச்சத்தோடு தங்கள் அப்பத்தை உண்டு, திகைப்போடு நீரைப் பருகுவர். ஏனெனில், அங்கு வாழ்வோரின் வன்செயல்களை முன்னிட்டு அவர்களது நாட்டில் உள்ள அனைத்தும் பறிக்கப்படும்.

மக்கள் வாழும் நகர்கள் பாலைநிலமாகும்: நாடு பாழாய்ப் போகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! இஸ்ரயேல் நாட்டில் உங்களிடையே வழங்கிவரும் பழமொழி என்ன? “நாள்கள் கடந்துகொண்டே செல்கின்றன: காட்சிகளோ பலிப்பதில்லை“ என்கிறீர்கள்.

ஆகையால் அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அந்தப் பழமொழிக்கு நான் ஒரு முடிவு கட்டுவேன். இனி அதை இஸ்ரயேலில் வழங்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குச் சொல்: நாள்கள் நெருங்கிவிட்டன. முன்னறிவிப்புக் காட்சிகள் யாவும் நிறைவேறும்.

இஸ்ரயேல் வீட்டினுள் இனிப் பொய்யான காட்சியும் குறி சொல்லலும் இல்லாமற்போம்.

ஏனெனில், நானே ஆண்டவர்: நானே உரைத்திடுவேன்: நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்: இனிமேல் காலந்தாழ்த்தாது: கலகம் செய்யும் வீட்டாரே, நானே உரைத்திடுவேன்: அவ்வாக்கை நானே நிறைவேற்றுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

மானிடா! “இவன் காணும் காட்சிகள் நெடுநாள்களுக்கப்பால் உள்ளவை: இவன் உரைக்கும் இறைவாக்கும் தொலையில் இருக்கும் காலங்களைப் பற்றியது“ என இஸ்ரயேல் வீட்டார் சொல்லிக்கொள்கின்றனர்.

எனவே அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் வார்த்தைகளுள் எதுவும் இனிமேல் காலந்தாழ்த்தாது. நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 13.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! தங்கள் விருப்பப்படி வாக்குரைக்கும் இஸ்ரயேலின் போலி இறைவாக்கினருக்கு எதிராக நீ இறைவாக்குரைத்து, ஆண்டவரது வாக்கைக் கேளுங்கள் என்று அவர்களுக்குச் சொல்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மதிகெட்ட இறைவாக்கினருக்கு ஜயோ கேடு! அவர்கள் தங்கள் மனம்போன போக்கில் நடக்கின்றனர். அவர்கள் ஒரு காட்சியும் காண்பதில்லை.

இஸ்ரயேலே! உன் இறைவாக்கினர் பாலைநில நரிகளுக்கு ஒப்பானவர்.

ஆண்டவரது நாளில் நிகழவிருக்கும் போரில் இஸ்ரயேல் வீட்டார் நிலைத்து நிற்பதற்காக, நீங்கள் அவர்களைச் சுற்றியுள்ள மதிலின் உடைப்புகளுக்குள் ஏறிச் சென்றதும் இல்லை: அவற்றைப் பழுது பார்த்ததும் இல்லை.

அவர்கள் பொய்க் காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தந்து இது ஆண்டவரின் வாக்கு என்கின்றனர். அவர்களையோ ஆண்டவர் அனுப்பவே இல்லை.

நீங்கள் கண்டது பொய்க்காட்சி தானே? நீங்கள் தந்தது ஏமாற்றுக் குறிதானே? நான் ஒன்றும் உரைக்காதிருந்தும் இது ஆண்டவரின் அருள் வாக்கு என நீங்கள் சொல்லலாமா?

ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் புனைந்து பேசியுள்ளீர்கள்: பொய்க்காட்சிகள் கண்டுள்ளீர்கள். எனவே நான் உங்களுக்கு எதிராக இருப்பேன் : என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

பொய்க்காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தரும் போலி இறைவாக்கினருக்கு எதிராக என் கை இருக்கும். என் மக்களின் அவையில் அவர்கள் இரார். இஸ்ரயேல் வீட்டாரின் பதிவேட்டிலும் அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டிரா. இஸ்ரயேலின் மண்ணலில் அவர்கள் கால் வைக்க மாட்டார்கள். அப்போது நானே தலைவராகிய ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

ஏனெனில், இவர்கள் நல்வாழ்வு இல்லாதிருந்தும் நல்வாழ்வு உளது எனச் சொல்லி என் மக்களை வழி தவறச் செய்தார்கள். மக்கள் எல்லைச் சுவர் எழுப்பியபோது இவர்கள் அதற்குச் சுண்ணாம்பு பூசினார்கள்.

சுண்ணாம்பு பூசுகிறவர்களிடம் சொல்: அது விழுந்துவிடும்: அடைமழை பெய்யும்: ஆலங்கட்டிகள் விழும்: புயற்காற்று சீறியெழும்.

சுவர் விழும்போது, நீங்கள் பூசிய சுண்ணாம்பு எங்கே? என்று உங்களைக் கேட்கமாட்டார்களா?

ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் சீற்றமுற, புயற்காற்று சீறியெழும்: நான் சினமுற, அடைமழை பெய்யும்: நான் கோபமுற, ஆலங்கட்டிகள் விழும்: சுவரும் அழிந்துவிடும்.

நீங்கள் சுண்ணாம்பு பூசிய சுவரை நான் இடித்துத் தரைமட்டமாக்குவேன். அதன் அடித்தளம் பெயர்க்கப்படும். அது விழும்போது, அதனடியில் நீங்கள் அழிந்து போவீர்கள். அப்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள்.

இப்படிச் சுவர் மீதும், அதில் சுண்ணாம்பு பூசியவர்கள் மீதும் என் சினத்தைத் தீர்த்துக் கொண்டு, சுவரையும் காணோம்: அதற்குச் சுண்ணாம்பு பூசியோரையும் காணோம் என்று உங்களுக்கு உரைப்பேன்.

நல்வாழ்வு இல்லாதிருந்தும் நல்வாழ்வு உளது என்னும் காட்சி கண்டு எருசலேமுக்காக இறைவாக்குரைக்கும் இஸ்ரயேலின் இறைவாக்கினரும் அவ்வாறே அழிவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

மானிடா! தங்கள் விருப்பப்படி இறைவாக்குரைக்கும் உன் இனத்துப் புதல்வியருக்கு நேராக உன் முகத்தை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு எதிராக இறைவாக்குரை.

நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயிர்களை வேட்டையாடுவதற்காக, அனைவரின் கைகளிலும் மணிக்கட்டைச் சுற்றிக் காப்புக் கயிறுகள் பின்னி, ஒவ்வொருவர் உயரத்திற்கும் ஏற்ப தலைக்கு முக்காடு செய்வோர்க்கு ஜயோ கேடு! நீங்கள் என் மக்களின் உயிர்களை வேட்டையாடி உங்கள் உயிர்களை மட்டும் காத்துக்கொள்வீர்களோ?

கைப்பிடி அளவு வாற்கோதுமைக்காகவும், சில அப்பத்துண்டுகளுக்காகவும் என் மக்களிடையே எனக்குக் களங்கம் விளைவிக்கிறீர்கள். பொய்களுக்குச் செவிசாய்க்கும் என் மக்களிடம் பொய் சொல்லி, சாகாமல் இருக்க வேண்டியோரைச் சாகடித்து, உயிரோடு இருக்கக் கூடாதாரை உயிரோடு காத்துள்ளீர்கள்.

ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: பறவைகளுக்கு வைப்பது போல் உயிர்களுக்குக் கண்ணிவைக்க நீங்கள் பயன்படுத்தும் காப்புக் கயிறுகளை நான் வெறுக்கிறேன், அவற்றை உங்கள் கைகளிலிருந்து அறுத்தெறிவேன். பறவைகளைப்போல் நீங்கள் கண்ணிவைத்துப் பிடிக்கும் உயிர்களை நான் விடுவிப்பேன்.

உங்கள் முக்காடுகளையும் கிழித்தெறிந்து, என் மக்களை உங்கள் கைகளினின்று விடுவிப்பேன். இனி அவர்கள் உங்கள் கைகளில் சிக்கமாட்டார்கள். அப்போது நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

நான் தளரச்செய்யாத நேர்மையாளனின் இதயத்தை நீங்கள் வஞ்சகமாய்த் தளரச் செய்தீர்கள். தீயவர் தம் தீய வழியினின்று விலகித் தம் உயிரைக் காத்துக் கொள்ளாதவாறு, வலுப்படுத்தினீர்கள்.

ஆதலால் பொய்க் காட்சியை இனிக் காணமாட்டீர்கள்: குறி சொல்லவும் மாட்டீர்கள். உங்கள் கைகளினின்று என் மக்களை விடுவிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

அதிகாரம் 14.

இஸ்ரயேலின் பெரியோருள் சிலர் என்னிடம் வந்து, என்முன் அமர்ந்தனர்.

அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! இம்மனிதர் சிலைகளிடம் தங்கள் மனத்தைப் பறி கொடுத்து, அவற்றைத் தங்கள்முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் என் திருவுளத்தை அறிய நான் விடுவேனோ?

ஆகையால், நீ அவர்களோடு பேசி, அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது சிலைகளிடம் தங்கள் மனத்தைப் பறி கொடுத்து அவற்றைத் தங்கள்முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக் கொண்டே, இறைவாக்கினரிடம் வந்தால், அவர்களுக்கு ஆண்டவராகிய நானே அவர்களின் எண்ணற்ற சிலைகளுக்கேற்ப பதில் அளிப்பேன்!

இவ்வாறு, சிலைகளால் என்னை விட்டு விலகிப்போயிருக்கும் இஸ்ரயேல் வீட்டாரின் இதயங்கள் அனைத்தையும் நான் என் வயமாக்கிக்கொள்வேன்.

ஆகவே, இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: திரும்புங்கள், உங்கள் சிலைகளை விட்டுத் திரும்புங்கள்: உங்கள் அருவருப்புகள் அனைத்தையும் விட்டு உங்கள் முகத்தைத் திருப்புங்கள்.

ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருள் எவராவது, இஸ்ரயேல் வீட்டில் வாழும் அயலாருள் எவராவது என்னைவிட்டகன்று, தங்கள் சிலைகளிடம் மனத்தைப் பறிகொடுத்து அவற்றைத் தங்கள் முன் எழுப்பும் தீச்செயலில் ஈடுபட்டுக்கொண்டே இறைவாக்கினரிடம் வந்து, அவர் வழியாக என் திருவுளத்தை அறிய முற்பட்டால், அவர்களுக்கு நானே, ஆண்டவராகிய நானே சரியான பதில் அளிப்பேன்!

அவர்களுக்கெதிராக என் முகத்தைத் திருப்பி, அவர்களை அடையாளமாகவும் பழிச் சொல்லாகவும் ஆக்குவேன். அவர்களை என் மக்கள் நடுவிலிருந்து வெட்டியெறிவேன். அப்போது, நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

இறைவாக்கினன் ஒருவன் ஏமாற்றப்பட்டு ஒரு வாக்கை உரைப்பானாகில், ஆண்டவராகிய நானே அவனை ஏமாற்றினேன். நான் என் கையை அவனுக்கு எதிராக நீட்டி என் மக்கள் இஸ்ரயேலின் நடுவிலிருந்து அவனை அழித்து விடுவேன்.

என் திருவுளத்தை அறிய முற்படுவோரின் குற்றப்பழியைப் போலவே இறைவாக்கினனின் குற்றப்பழியும் இருக்கும். அவரவர்கள் தங்கள் குற்றப்பழியைச் சுமப்பார்கள்.

அப்போது, இஸ்ரயேல் வீட்டார் என்னை விட்டு வழிதவறிப் போகாமலும், தங்கள் எண்ணற்ற குற்றங்களால் மீண்டும் தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளாமலும் இருப்பர். அப்போது அவர்கள் என் மக்களாய் இருப்பர். நானும் அவர்கள் கடவுளாய் இருப்பேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! ஒரு நாடு நம்பிக்கைத் துரோகம் இழைத்து எனக்கு எதிராகப் பாவம் செய்தால், நான் கையை நீட்டி, உணவின் தரவை நிறுத்தி, அங்குப் பஞ்சத்தை அனுப்பி, அங்குள்ள மனிதரையும் கால்நடைகளையும் அழிப் பேன்.

அப்போது நோவா, தானியேல், யோபு ஆகிய இம்மூவரும் அங்கிருந்தால், அவர்கள் தங்கள் நேர்மையால் தங்கள் உயிரைமட்டுமே காத்துக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் காட்டு விலங்களை நாடு முழுவதும் அலைந்து திரியவிட, அவை அதனைப் பாழாக்கி வெறுமையாக்கும். அவற்றின் காரணமாய் யாரும் அங்கே நடமாட முடியாதிருக்கும்.

அப்போது, இம்மூவரும் அங்கே இருந்தால்-என்மேல் ஆணை-அவர்கள் மட்டுமே காப்பாற்றப்படுவர். தங்கள் புதல்வர்களையோ, புதல்வியரையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற் போகும்: நாடும் பாழாய்ப்போகும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அல்லது, நான் அந்த நாட்டின்மீது வாளை வரச்செய்து, வாள் நாட்டை ஊடுருவட்டும் என ஆணையிட்டு மனிதரையும், கால்நடைகளையும் வெட்டி வீழ்த்துவேன்.

அப்போது, இம்மூவரும் அங்கே இருந்தால்-என்மேல் ஆணை-அவர்கள்மட்டுமே காப்பாற்றப்படுவர்: தங்கள் புதல்வர்களையோ, புதல்வியரையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற் போகும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அல்லது, நான் அந்நாட்டினுள் கொள்ளை நோயை அனுப்பி, அதனின்று மனிதரையும் கால்நடைகளையும் அழிப்பதற்காக, என் சீற்றத்தைக் குருதியாய் அதன்மீது கொட்டுவேன்.

அப்போது, நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கிருந்தால்-என்மேல் ஆணை-மகனையோ மகளையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற்போகும். தங்கள் நேர்மையின் பொருட்டுத் தங்கள் உயிரை மட்டுமே காத்துக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உண்மையிலேயே நான் மனிதரையும் கால்நடைகளையும் எருசலேமினின்று ஒழிப்பதற்காக, வாள், பஞ்சம், காட்டுவிலங்கு, கொள்ளைநோய் ஆகிய என்னுடைய நான்கு கடும் தீர்ப்புகளையும் அதன்மீது அனுப்புவேன்.

அப்போது, அங்கிருந்து தப்பிப் பிழைக்கும் சிலர் தங்கள் புதல்வரரோடும் புதல்விரோடும் வெளியேறி உங்களிடம் வந்து சேர்வர். அவர்களின் நடத்தையையும் செயல்களையும் பார்த்த பிறகு, நான் எருசலேமின்மீது வரச்செய்த தீங்கை-நான் அதன்மீது வரச்செய்த ஒவ்வொரு தீங்கையும்-குறித்து நீங்கள் தேற்றப்படுவீர்கள்.

நீங்கள் அவர்களின் நடத்தையையும் செயல்களையும் பார்க்கும்போது அவர்களே உங்களுக்கு ஆறுதலாய் இருப்பர். அப்போது நான் அங்குச் செய்ததெல்லாம் காரணமின்றிச் செய்யவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 15.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! காட்டிலிருக்கும் எல்லா மரக்கிளைகளையும்விட திராட்சைக்கொடி எவ்வகையில் சிறந்தது?

ஏதாவது வேலை செய்ய அதிலிருந்து கட்டை எடுக்கப்படுகிறதா? அல்லது ஏதாவது பாண்டம் தொங்கவிட ஒரு முளையை அதிலிருந்து செய்வார்களா?

இதோ, அது நெருப்புக்கு இரையாகப் போடப்படுகிறது: அதன் இரு முனைகளையும் நெருப்பு எரிக்கிறது: அதன் நடுப்பகுதி கருகிப்போகிறது: அது எந்த வேலைக்காவது பயன்படுமா?

இதோ, அது முழுமையாய் இருந்த போதே அதைக்கொண்டு ஒரு வேலையும் செய்யமுடியவில்லை. நெருப்பால் எரிந்து கருகிய அதை எந்த வேலைக்காவது பயன்படுத்த முடியுமா?

ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: காட்டுத் தாவரங்களுள் ஒன்றான திராட்சைக் கொடியை நான் நெருப்புக்கு இரையாக அளித்தது போல், எருசலேமில் வாழ்வோரையும் கையளிப்பேன்.

என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்புவேன். அவர்கள் நெருப்பிலிருந்து தப்பிச் சென்றாலும், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். நான் என் முகத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்பும்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

நான் நாட்டைப் பாழாக்குவேன். ஏனெனில் அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளனர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 16.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! எருசலேமுக்கு அதன் அருவருப்புகளைச் சுட்டிக் காட்டு.

நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் எருசலேமுக்குக் கூறுவது இதுவே: நீ தோன்றியதும் பிறந்ததும் கானான் நாட்டிலே, உன் தந்தை ஓர் எமோரியன். உன் தாய் ஓர் இத்தியள்.

நீ பிறந்த வரலாறு இதுவே: நீ பிறந்த அன்று உன் கொப்பூழ்க் கொடி அறுக்கப்படவில்லை. நீ நீராட்டப்பட்டுத் பய்மையாக்கப்படவில்லை: உப்பு நீரால் கழுவப்படவில்லை: துணிகளால் சுற்றப்படவுமில்லை:

உன்னை இரக்கத்துடன் கண்ணோக்கி உனக்காக வருந்தி, இவற்றுள் ஒன்றையேனும் உனக்குச் செய்வாரில்லை. ஆனால் நீ திறந்த வெளியில் எறியப்பட்டாய்: ஏனெனில் நீ பிறந்த நாளிலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டாய்.

அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னருகில் வந்து உன் இரத்தத்தில் நீ புரள்வதைக் கண்டு, இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, வாழ்ந்திடு என்றேன். ஆம், இரத்தத்தில் கிடந்த உன்னை நோக்கி, வாழ்ந்திடு என்றேன்.

உன்னை வயல் வெளியில் வளரும் பயிர்போல் உருவாக்கினேன். நீ வளர்ந்து பருவமெய்தி அழகிய மங்கையானாய். உன் கொங்கைகள் உருப்பெற்றன: உன் கூந்தலும் நீண்டு வளர்ந்தது: ஆயினும் நீ ஆடையின்றித் திறந்த மேனியளாய் நின்றாய்.

அவ்வழியாய்க் கடந்துபோன நான் உன்னை நோக்கினேன். அப்போது நீ காதற் பருவத்தில் இருந்தாய். நான் என் ஆடையை உன்மேல் விரித்து உன் திறந்தமேனியை மூடினேன். உனக்கு உறுதிமொழி தந்து, உன்னோடு உடன்படிக்கை செய்தேன். நீயும் என்னுடையவள் ஆனாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் உன்னை நீராட்டி, உன் மேலிருந்த இரத்தத்தைக் கழுவித் துடைத்து, உனக்கு எண்ணெய் பூசினேன்.

பூப்பின்னல் உடையால் உன்னை உடுத்தி, தோல் காலணிகளை உனக்கு மாட்டி, மெல்லிய துகிலை உனக்கு அணிவித்து, நார்ப்பட்டால் உன்னைப் போர்த்தினேன்.

அணிகலன்களால் உன்னை அழகு செய்தேன்: கைகளுக்குக் காப்புகளும் கழுத்திற்குச் சங்கிலியும் இட்டேன்.

மூக்குக்கு மூக்குத்தியும், காதுகளுக்குத் தோடுகளும், தலையில் அழகிய மணிமுடியும் அணிவித்தேன்.

பொன்னாலும், வெள்ளியாலும், நீ அணிசெய்யப்பட்டாய். நார்ப்பட்டும் மெல்லிய துகிலும், பூப்பின்னல் ஆடையும் உன் உடைகள் ஆயின. மாவும், தேனும், எண்ணெயும் உன் உணவாயின. நீ மிக மிக அழகு வாய்ந்தவளாகி, அரச தகுதி பெற்றாய்.

உன் அழகின் காரணமாக உன் புகழ் வேற்றினத்தாரிடையே பரவிற்று. என் மாட்சி உன்மேல்பட உன் அழகு நிறைவுற்று விளங்கிற்று, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நீயோ உன் அழகில் நம்பிக்கை வைத்து, உன் புகழைப் பணயமாக வைத்து, விலைமகளாகி, வருவோர் போவோரிடமெல்லாம் வேசித்தனம் செய்தாய்.

உன் ஆடைகளில் சில எடுத்து தொழுகை மேடுகளை அழகுபடுத்தி அங்கு வேசித்தனம் செய்தாய். ஒருக்காலும் அதுபோல் நடந்ததில்லை: இனிமேல் நடக்கப் போவதுமில்லை.

நான் உனக்குத் தந்த பொன், வெள்ளி அணிகலன்களைக் கொண்டு நீ ஆண் உருவங்களைச் செய்து, அவற்றுடன் வேசித்தனம் செய்தாய்.

உன் பூப்பின்னல் ஆடைகளை எடுத்து அச்சிலைகளுக்குப் போர்த்தி, எனக்குரிய எண்ணெயையும் பபத்தையும் அவற்றின் முன் எரித்தாய்.

நான் உனக்கு அளித்த மாவு, எண்ணெய், தேன் ஆகிய அதே உணவுப் பொருள்களை, நீ அவற்றின்முன் நறுமணப் பலியெனப் படைத்தாய் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நீ எனக்குப் பெற்ற உன் புதல்வர் புதல்வியரை அவற்றுக்குப் பலியிட்டாயே! நீ வேசித்தனம் செய்தது போதாதென்றோ?

என் புதல்வரையும் அவற்றிற்குப் பலியிட்டாய்.

இத்துணை அருவருப்பான செயல்களிலும் நீ வேசித்தனத்திலும் ஈடுபட்டபோது உன் இளமையில் ஆடையின்றித் திறந்த மேனியாய் உன் இரத்தத்தில் புரண்டு கொண்டு இருந்த நாள்களை நீ நினைத்துப் பார்க்கவில்லை.

எல்லாத் தீச்செயல்களையும் செய்த உனக்கு ஜயோ கேடு, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நீ உனக்கெனத் தொழுகைக்கூடங்கள் அமைத்துக்கொண்டாய்: திறந்த வெளியிலெல்லாம் தொழுகை மேடுகள் எழுப்பிக் கொண்டாய்.

எல்லாத் தெருக்கோடிகளிலும், உன் தொழுகை மேடுகளை அமைத்தாய். உன் அழகைத் தரக்குறைவாக்கி, வருவோர் போவோர்க்கெல்லாம் உன் உடலைக் கொடுத்து, மிதமிஞ்சிய வேசித்தனம் செய்தாய்.

உன் அண்டை நாட்டவரும் உடல் பெருத்தவருமான எகிப்தியரோடு வேசித்தனம் செய்தாய்: எனக்குச் சினமூட்டுமளவுக்கு மிதமிஞ்சிய விபசாரம் செய்தாய்.

ஆதலால் இதோ என் கரத்தை உனக்கு எதிராய் நீட்டி, உனக்குரிய பங்கைக் குறைப்பேன். உன் நெறிகெட்ட நடத்தையைப் பார்த்து, வெட்கி, உன்னை வெறுக்கும் பெலிஸ்திய நகர்களின் விருப்பத்திற்கு உன்னைக் கையளித்தேன்.

இன்னும் நிறைவடையாமல் நீ அசீரியரின் புதல்வருடன் வேசித்தனம் செய்தாய். அவர்களுடன் விபசாரம் செய்தும் உன் ஆசை அடங்கவில்லை.

ஆகையால், வாணிக நாடாகிய கல்தேயாவுடன் நீ மிகுதியாய் வேசித்தனம் செய்தாய்: அப்பொழுதும் உன் மோகம் தீரவில்லை.

வெட்கங்கெட்ட விலைமகளின் செயல்களையெல்லாம் உன் இதயத்தின் காமத்தால் செய்தாயன்றோ!, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஒவ்வொரு தெருக்கோடியிலும் தொழுகைக் கூடம் கட்டினாய்: ஒவ்வொரு திறந்த வெளியிலும் தொழுகை மேடு எழுப்பினாய்: மற்ற விலைமாதரைப்போல் நீ ஊதியம் கேட்கவில்லை.

பிறரின் கணவரை நயக்கும் மனையாள் இவள்! தன் கணவனுக்குப் பதில் அன்னியரையே நாடுகிறாள் இவள்!

எல்லா விலைமாதரும் ஊதியம் பெறுவர். நீயோ உன் காதலர் அனைவர்க்கும் ஊதியம் தருகின்றாய்! நாற்றிசையினின்றும் உன்னுடம் விபசாரம் செய்ய வருவோர்க்குக் கையூட்டு அளிக்கின்றாய்.

எனவே, உன் வேசித்தொழிலில் கூட நீ பிற பெண்களினின்று வேறு பட்டியிருக்கிறாய். கூடா ஒழுக்கத்திற்கு உன்னை யாரும் பண்டுவதில்லை. நீயே பிறர்க்கு ஊதியம் தருகிறாய்: நீ யாரிடமும் பெறுவதில்லை. இது வன்றோ உன் பண்பாடு!

எனவே, விலைமாதே! ஆண்டவரின் வார்த்தையைக் கேள்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீ காமவெறி கொண்டு உன் திறந்த மேனியைக் காட்டி, உன் காதலருடனும், அருவருப்பான உன் சிலைகள் அனைத்துடனும் வேசித்தனம் செய்தாய். இதற்காகவும், உன் பிள்ளைகளை அவற்றுக்குப் பலியிட்ட இரத்தப்பழிக்காகவும்,

நீ இன்பம் துய்த்த உன் காதலர் அனைவரையும் உனக்கெதிராக நான் ஒன்று திரட்டப்போகிறேன். நீ விரும்பியவர்கள், நீ வெறுத்தவர்கள் அனைவரையும் நாற்றிசையினின்றும் உனக்கெதிராய் ஒன்று சேர்ப்பேன். அவர்கள் முன்னிலையில் உன் ஆடையை உரிந்து போடுவேன். அவர்கள் அனைவரும் உன் திறந்த மேனியைக் காண்பர்.

பிறர் கணவர் நயந்த பெண்டிரையும், இரத்தம் சிந்திய பெண்டிரையும் தீர்ப்பிடுதல்போல், உன்னையும் தீர்ப்பிடுவேன்: என் சினத்தாலும் சகிப்பின்மையாலும் உன்மேல் இரத்தப்பழி சுமத்துவேன்.

பின் உன்னை அவர்களிடம் கையளிப்பேன். அவர்கள் உன் தொழுகைக் கூடங்களைத் தகர்த்து உன் தொழுகை மேடுகளை தரைமட்டமாக்குவர்: உன் ஆடைகளை உரிந்து, உன் அணிகலன்களைப் பிடுங்கிக் கொண்டு, உன்னைத் திறந்தமேனியாயும் வெறுமையாயும் விட்டுவிடுவர்.

உனக்கெதிராக மக்களைத் திரண்டெழச் செய்வேன். அவர்கள் உன்னைக் கல்லாலெறிவர்: வாளால் வெட்டிப் போடுவர்.

அத்தோடு, உன் வீடுகளை நெருப்பால் சுட்டெரிப்பர். பெண்கள் பலர் முன்னிலையில் உனக்குரிய தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றுவர். நானும் உன் வேசித்தனத்துக்கு முடிவுகட்டுவேன். நீ இனி யாருக்கும் அன்பளிப்பு அளிக்க மாட்டாய்.

அப்போது, உன்மீது நான் கொண்ட சினம் தணியும்: என் சகிப்புத் தன்மை உன்னை விட்டு அகன்றுவிடும்: இனி நான் அமைதி கொள்வேன்: சினமடையேன்.

ஏனெனில் உன் இளமையின் நாள்களை நினைக்காமல், இவற்றையெல்லாம் செய்து என்னை வெகுண்டெழச் செய்தாய். எனவேதான் உன் நடத்தையின் விளைவை நான் உன் தலைமேல் சுமத்தினேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். உன் அருவருப்புகளை எல்லாம் செய்தது தவிர, நெறிகேடாகவும், நீ நடந்து கொள்ளவில்லையா?

இதோ! பழமொழி கூறும் யாவரும் தாயைப்போல் மகள் என்னும் பழமொழியை உன்னைக் குறித்தே கூறுவர்.

தன் கணவனையும் பிள்ளைகளையும் வெறுக்கும் தாயின் மகள் தானே நீ? தங்கள் கணவரையும் பிள்ளைகளையும் வெறுக்கும் பெண்டிரின் சகோதரிதானே நீ? உன் தாய் ஓர் இத்தியள்: உன் தந்தை ஓர் எமோரியன்.

உனக்கு இடப்பக்கமாகத் தன் புதல்விரோடு வாழ்ந்து வந் த சமாரியா உன் தமக்கை அன்றோ? உன் வலப்புறம் தன் புதல்வியோடு வாழ்ந்து வந்த சோதோம் உன் தங்கை அன் றோ?

அவர்கள் நடந்து கொண்டவாறு நீயும் நடந்து, அவர்கள் செய்த அருவருப்புகளை நீயும் செய்யவில்லையா? அதுமட்டுமன்று: உன் கெட்ட நடத்தையில் நீ அவர்களையும் மிஞ்சி விட்டாய்.

என் மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நீயும் உன் புதல்வியரும் செய்துள்ளதை உன் தங்கை சோதோமும் அவள் புதல்வியரும் செய்ததில்லை.

உன் தங்கை சோதோமின் குற்றங்கள் இவையே: இறுமாப்பு, உணவார்வம், சோம்பல், இத்தனையும் அவளிடமும் அவள் புதல்வியரிடமும் இருந்தன. ஏழை, எளியோரின் கைகளை அவள் வலுப்படுத்தவில்லை.

இவர்கள் செருக்குடையவராய் என் முன்னிலையில் அருவருப்பானவற்றைச் செய்தனர். ஆகவே நான் அவர்களைப் புறக்கணித்து விட்டேன். இதை நீ அறிவாயன்றோ?

சமாரியாவும் உன் பாவங்களில் பாதியளவுகூடச் செய்யவில்லையே. நீயோ இவர்களைவிட மிகுதியாக அருவருப்பானவற்றைச் செய்தாய். நீ செய்த அருவருப்புகள் அனைத்தோடும் ஒப்பிடும்போது உன் சகோதிரிகள் நேர்மையானவர்களாகத் தோன்றுகிறார்கள்.

இப்போது உன் இழிவை நீயே தாங்கிக்கொள். உன் சகோதரிகளை விட மிகுதியாக அருவருப்பான பாவங்களைச் செய்து, அவர்களை உன்னைவிட நேர்மையானவர்கள் ஆக்கிவிட்டாய். உன் சகோதரிகளை நேர்மையானவர்கள் ஆக்கிய அந்த இழிவை நீயே சுமந்து கொள்.

நான் சோதோமையும் அவள் புதல்வியரையும் சமாரியாவையும் அவள் புதல்வியரையும் மீண்டும் நன்னிலைக்குக் கொணர்வேன்.

இதனால் நீ செய்த அனைத்திற்காகவும் வெட்கி அவமானத்தைச் சுமப்பாய். அது அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கும்.

உன் சகோதரிகள் சோததோமும் அவள் புதல்வியரும், சமாரியாவும் அவள் புதல்வியரும் தங்கள் முன்னைய நன்னிலைக்குத் திரும்புவர். நீயும் உன் புதல்வியரும் முன்னைய நன்னிலைக்குத் திரும்புவீர்கள்.

நீ செருக்குடன் வாழ்ந்த காலத்தில் உன் தமக்கை சோதோமின் பெயரை உன் வாயினால் உச்சரிக்கக்கூட மாட்டாய்.

உன் தீச்செயல் வெளிப்படுவதற்குமுன் நீ அப்படி இருந்தாய். இப்போதோ, சிரியாவின் புதல்வியர், அவளைச் சுற்றி உள்ளோர், உன்னைச் சுற்றி இருக்கும் பெலிஸ்தியப் புதல்வியர் ஆகியோரின் வெறுப்புக்கு நீ ஆளானாய்.

நீ உன் ஒழுக்கக்கேட்டையும் உன் அருவருப்புகளையும் இப்போது சுமந்து கொண்டிருக்கிறாய். என்கிறார் ஆண்டவர்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: கொடுத்த வாக்கை நீ மீறி, உடன்படிக்கையை முறித்துவிட்டாய், நீ செய்தது போலவே நானும் உனக்குச் செய்வேன்.

ஆயினும் உன் இளமையின் நாள்களில் உன்னோடு செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்து, என்றுமுள உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்.

உன் தமக்கைகளையும் தங்கைகளையும் நான் உனக்குப் புதல்வியராகத் தருவேன்: நான் உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை முன்னிட்டு அல்லாமலே தந்திடுவென். அவர்களை நீ பெற்றுக் கொள்ளும்பொழுது உன் நடத்தையை நினைத்து வெட்கமுறுவாய்.

உன்னுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்து கொள்வாய்.

நீ செய்ததையெல்லாம் நான் மறைத்திடும்போது, நீ அவற்றையெல்லாம் நினைத்து வெட்கி, இழிவு மிகுதியினால் உன் வாயை ஒருபோதும் திறக்க மாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 17.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! இஸ்ரயேல் வீட்டாருக்கு விடுகதையின் வடிவில் உவமை ஒன்று கூறு.

நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீண்ட, பல வண்ண இறகுகள் கொண்ட பரந்த இறக்கைகளையுடைய பெரிய கழுகு ஒன்று லெபனோனுக்கு வந்து, கேதுரு மரம் ஒன்றின் உச்சியில் அமர்ந்தது.

அது, அம்மரத்தின் உச்சிக்கொழுந்து ஒன்றைக் கொய்து, ஒரு வாணிப நாட்டிற்குக் கொண்டு வந்து, வணிகர் நகரொன்றில் அதை வைத்தது.

பின் அந்நாட்டின் விதைகளில் ஒன்றை எடுத்துவந்து, வளமிகு வயலில் விதைத்து, அதன் நாற்றை நீர்மிகு நிலத்தில் கருத்தாய் நட்டது.

அது துளிர்த்து தாழ்ந்து படரும் திராட்சைக் கொடியாயிற்று. அதன் கிளைகள் அக்கழுகுக்கு நேர் மேலே வளர்ந்தன. வேர்களோ அதற்கு நேர் கீழே படர்ந்தன. இவ்வாறு அது திராட்சைக் கொடியாகி, கொப்புகளை விட்டுக் கிளைகளைப் பரப்பியது.

ஆனால், பரந்த இறக்கைகளும் மிகுந்த இறகுகளும் கொண்ட வேறொரு கழுகும் இருந்தது. இந்தத் திராட்சைக் கொடி, நீர் பெறவேண்டி, தான் நடப்பட்டிருந்த நிலப்பரப்புக்கு அப்பால் இருந்த அக்கழுகை நோக்கித் தன் வேர்களை ஓடச்செய்து, தன் கிளைகளையும் அதன் பக்கமாய்த் திருப்பிற்று.

கிளைபரப்பிக் கனிகொடுக்கும் சிறந்த ஒரு திராட்சைக் கொடியாய் விளங்கும் பொருட்டன்றோ செழிப்பு நிலத்தில் இது நடப்பட்டது!

நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இது செழிக்குமா? இதனை வேரோடு பிடுங்கி இதன் பழக்குலைகளைக் கொய்து விட, துளிர்த்த இதன் இலைகளொல்லாம் வாடி வதங்க இது பட்டுப் போகாதா? இதனை வேரோடு பிடுங்கியெறிய மிகுந்த கைவன்மையோ, மக்கள் திரளோ வேண்டியதில்லை.

இது வேறிடத்தில் நடப்பட்டாலும் செழிக்குமா? கீழைக்காற்று இதன்மேல் வீசும்போது இது முற்றிலும் வாடி விடாதா? இது முளைவிட்ட பாத்திலேயே உலர்ந்து போகுமே.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

அந்தக் கலக வீட்டாரிடம் நீ சொல்: இவை யாவும் எதைக் குறிக்கின்றன என்று உங்களுக்குத் தெரியாதா? பாபிலோனின் மன்னன் எருசலேமுக்கு வந்து அதன் அரசனையும், அதன் உயர்குடி மக்களையும் சிறைப்பிடித்துப் பாபிலோனுக்குக் கொண்டு வந்துள்ளான்.

பின்னர், அவன் அரச மரபில் தோன்றிய ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனுடன் உடன்படிக்கை செய்து, அவனிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டான். நாட்டின் தலைவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றான்.

குடிமக்கள் கிளர்ந்தெழாமல் பணிந்திருப்பதற்காகவும் உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பதன்மூலமே அவர்கள் பிழைத்திருக்க இயலும் என்பதற்காகவும் அவன் இவ்வாறு செய்தான்.

அந்த அரச மரபினன் அவனுக்கெதிராகக் கிளர்ந்து குதிரைகளையும் திரளான படையையும் தனக்குக் கொடுக்க வேண்டுமென்று எகிப்துக்குத் பதர்களை அனுப்பினான். இவன் வெற்றி பெறமுடியுமா? இவன் தப்ப இயலுமா? உடன்படிக்கையை முறிக்கும் இத்தகையவன் தப்பவே முடியாது.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! தன்னை அரசனாக்கிய மாமன்னனுக்கு அளித்த வாக்குறுதியைப் புறக்கணித்து, அவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்த இவன், பாபிலோன் நகருக்குள்ளேயே சாவான்.

மண்மேடு எழுப்பப்பட்டுக் கொத்தளம் கட்டப்பட்டு பலர் வீழ்த்தப்பட இருக்கும் நிலையில் பெரிய படையும் திரளான வீரரும் கொண்ட பார்வோன் இவனுக்குத் துணை செய்ய வரப்போவதில்லை.

உடன்படிக்கையை முறிப்பதற்காக வாக்குறுதியை இவன் புறக்கணித்துள்ளான்: கைமேல் அடித்து வாக்களித்திருந்தும் இவ்வாறு செய்துள்ளான். இவன் தப்பவே முடியாது.

எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என்மேல் ஆணை! எனக்களித்திருந்த வாக்குறுதியை அவன் புறக்கணித்ததையும் என் உடன்படிக்கையை முறித்ததையும் அவன் தலை மேலேயே சுமத்துவேன்.

நான் என் வலையை அவன்மீது வீச, அவன் என் கண்ணியில் சிக்குவான். நான் அவனைப் பாபிலோனுக்குக் கொண்டு வந்து, எனக்கெதிராய் அவன் செய்த துரோகத்துக்காக அங்கே அவனுக்குத் தீர்ப்பு வழங்குவேன்.

அவனுடைய படைவீரர்களுள் அவனுடன் தப்பியோடிவரும் யாவரும் வாளால் வீழ்வர். எஞ்சியோர் எத்திக்கிலும் சிதறடிக்கப்படுவர். அப்போது இதை உரைத்தது ஆண்டவராகிய நானே என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலை மேல் நான் நடுவேன்.

இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன். அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும்.

ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன் என்றும், பசுமையான மரத்தை உலரச் செய்து, உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்துள்ளேன் என்றும், அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும். ஆண்டவராகிய நானே உரைத்துள்ளேன்: நான் செய்து காட்டுவேன்.

அதிகாரம் 18.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம் என்னும் பழமொழியை இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன?

என்மேல் ஆணை! என்¥கிறார் தலைவராகிய ஆண்டவர். இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது.

உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது: பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும்.

ஒருவன் நேர்மையாளனாய் இருந்து நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்தால்,

மலைகளின் மேல் உண்ணாமலும், இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை நோக்கித் தன் கண்களை ஏறெடுக்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும், தீட்டுள்ள பெண்ணை நெருங்காமலும் இருந்தால்,

அடுத்திருப்பவனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருந்து, கடன் வாங்கியவனுக்கு அடைமானத்தைத் திருப்பிக் கொடுத்து, பசித்தவனுக்குத் தன் உணவைப் பகிர்ந்தளித்து, ஆடையின்றி இருப்பவனுக்கு ஆடை அணிவித்து இருந்தால்,

வட்டிக்குக் கொடாமலும், கொடுத்ததற்கு அதிகமாய்ப் பெறாமலும் இருந்து, தன் கையால் அநீதி செய்யாது விலகி, மனிதரிடையே எழும் வழக்குகளுக்கு நீதியுடன் தீர்ப்பளித்தால்,

என் நியமங்களையும் நீதி நெறிகளையும் கடைப்பிடித்து, உண்மையுள்ளவனாக நடந்துகெண்டால், அவன் நீதிமான் ஆவான்: அவன் வாழப்போவது உறுதி, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆனால், அவனுக்குப் பிறந்த மகன் கட்டுக்கடங்காதவனாயும், இரத்தம் சிந்துபவனாகவும் முன் சொல்லியவற்றுள் ஒன்றைப் பிறருக்குச் செய்பவனாகவும் இருந்தால்,

தந்தை இவற்றுள் எதையும் செய்யாதிருக்க-மகனோ மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்டு, பிறன் மனைவியைக் கறைப்படுத்தி,

எளியவரையும் வறியவரையும் ஒடுக்குபவனாகவும், கொள்ளையிடுபவனாகவும், அடைமானத்தைத் திருப்பித் தராதவனாகவும், சிலைகளை வணங்குபவனாகவும், அருவருப்பானதைச் செய்பவனாகவும்,

வட்டிக்குக் கொடுப்பவனாகவும், கொடுத்ததற்கு அதிகமாக வாங்குபவனாகவும் இருந்தால், அவன் வாழ்வானோ? அவன் வாழ மாட்டான். அருவருப்பான இவற்றையெல்லாம் அவன் செய்துள்ளதால் அவன் சாவது உறுதி. அவனது இரத்தப்பழி அவன் மேலேயே இருக்கும்.

ஆனால், இவனுக்குப் பிறந்த மகன் தன் தந்தை செய்த பாவங்களை எல்லாம் கண்டு தெளிந்து அவ்வாறு செய்யாதிருந்தால்-

அதாவது மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்ணாமலும, இஸ்ரயேல் வீட்டாரின் சிலைகளை வணங்காமலும், பிறன் மனைவியைக் கறைப்படுத்தாமலும்,

ஒருவரையும் ஒடுக்காமலும், அடைமானம் பெறாமலும், கொள்ளையிடாமலும், பசித்தவருக்குத் தன் உணவை அளித்தும், ஆடையின்றி இருப்பவருக்கு ஆடை கொடுத்தும்,

எளியவருக்குத் தீங்கிழைக்காமலும், வட்டி வாங்காமலும், கொடுத்ததற்கு அதிகமாய் வாங்காமலும், என் நீதி நெறிகளைக் கடைப்பிடித்தும், என் நியமங்களின்படி நடந்தும் இருந்தால்-அவன் தன் தந்தையின் குற்றத்திற்காகச் சாக மாட்டான்: அவன் வாழ்வது உறுதி.

மாறாக, அவன் தந்தை பிறனைக் கொடுமைப்படுத்திக் கொள்ளையடித்துத் தன் இனத்தாரிடையே நல்லன அல்லாதவற்றைச் செய்தால், தன் குற்றத்திற்காக மடிவான்.

ஆயினும், தந்தையின் குற்றத்தை மகன் ஏன் சுமக்கக்கூடாது? என்று நீங்கள் கேட்கலாம். மகன், நீதியையும் நேர்மையும் கடைப்பிடித்து, என் நியமங்களை எல்லாம் கைக்கொண்டு ஒழுகினால், அவன் வாழ்வது உறுதி.

பாவம் செய்பவரே சாவர். பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். நீதிமானின் நீதி அவன்மீது இருக்கும். பொல்லானின் பொல்லாங்கு அவன்மீது இருக்கும்.

தீயவரோ தாம் செய்த பாவங்கள் அனைத்தையும் விட்டு மனம் மாறி, என் நியமங்கள் அனைத்தையும் கைக்கொண்டு, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அவர்கள் வாழ்வது உறுதி, அவர்கள் சாகார்.

அவர்கள் இழைத்த தவறுகள் அனைத்தும் அவர்களுக்கெதிராக நினைக்கப்படமாட்டா. அவர்கள் கடைப்பிடித்த நேர்மையின் பொருட்டு அவர்கள் வாழ்வர்.

உண்மையில், பொல்லாரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்து, பொல்லாரைப் போல் வெறுக்கத் தக்கவற்றை எல்லாம் செய்தால், அவர்கள் வாழ்வரோ? அவர்கள் கடைப்பிடித்த நேர்மையானதெதுவும் நினைக்கப்படமாட்டாது. அவர்கள் இழைத்த துரோகத்தின் பொருட்டும், செய்த பாவத்தின் பொருட்டும் அவர்கள் சாவர்.

ஆயினும், தலைவரின் வழி செம்மையானதாக இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை!

நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர்.

பொல்லார் தாம செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர்.

அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகி விட்டால், அவர்கள் வாழ்வது உறுதி: அவர்கள் சாகமாட்டார்.

ஆயினும், தலைவரின் வழி நேர்மையானதாக இல்லை என இஸ்ரயேல் வீட்டார் சொல்கிறார்கள். இஸ்ரயேல் வீட்டாரே! என் வழிகளா நேர்மையற்றவை? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை!

எனவே, இஸ்ரயேல் வீட்டாரே! ஒவ்வொரு மனிதரையும் அவருடைய வழிகளைக் கொண்டே நான் தீர்ப்பிடுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். மனம் மாறி உங்கள் குற்றங்கள் அனைத்தையும், விட்டு விலகுங்கள். அப்போது தீமை உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாய் இராது.

எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாக வேண்டும்?

எவருடைய சாவிலும் நான் இன்பம் காண்பதில்லை, என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எனவே மனம் மாறி வாழ்வு பெறுங்கள்.

அதிகாரம் 19.

நீயோ, இஸ்ரயேலின் தலைவர்களைப்பற்றிப் புலம்பல் பாடி,

சொல்: சிங்கங்களின் நடுவில் எப்படிப்பட்ட பெண் சிங்கமாய்த் திகழ்ந்தவள் உன் தாய்! இளஞ்சிங்கங்களிடையே இருந்து அவள் தன் குட்டிகளை வளர்த்தாள்.

அவள் வளர்த்த குட்டிகளுள் ஒன்று இளஞ்சிங்கமாக வளர்ச்சியுற்றது: அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று.

வேற்றினத்தார் அதனைப்பற்றிக் கேள்வியுற்று, அதனைப் படுகுழியில் வீழ்த்தினர்: அதனைச் சங்கிலிகளால் கட்டி எகிப்துக்குக் கொண்டு போயினர்.

தாய்ச்சிங்கமோ, தான் நம்பிக்கையோடு காத்திருந்தது வீணாயிற்று என்று கண்டாள்: எனவே தன் குட்டிகளுள் வேறொன்றை எடுத்து அதனையும் ஓர் இளஞ்சிங்கமாக உருவாக்கினாள்.

அது சிங்கங்களோடு நடமாடி ஓர் இளஞ்சிங்கம் ஆயிற்று: அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று.

அது கோட்டைகளைத் தாக்கி, நகர்களைச் சூறையாடிற்று: அதன் கர்ச்சிக்கும் ஒலி கேட்டபோதெல்லாம் நாடும் அதிலுள்ளயாவும் திகிலுற்றன.

அண்டை நாடுகளிலிருந்து வேற்றினத்தார் அதற்கெதிராக எப்பக்கமும் எழுந்தனர்: தங்கள் வலையை அதன்மீது வீச, அது அவர்கள் குழியில் விழுந்தது.

அவர்கள் அதனைச் சங்கிலிகளால் கட்டி, கூண்டிலடைத்து, பாபிலோனின் மன்னனிடம் கொண்டு வந்தனர். இனியும் அதன் கர்ச்சனை இஸ்ரயேல் மலைகளின் மீது ஒலிக்காதபடி அரண்களுக்குள் அதனை அடைத்து வைத்தனர்.

திராட்சைத் தோட்டத்தில் நீரருகே நடப்பட்ட திராட்சைக் கொடிபோல் இருந்தாள் உன் தாய்: மிகுந்த நீர்வளத்தின் காரணத்தால் அது கிளைகளும் கனிகளுமாகத் தழைத்திருந்தது.

அரச செங்கோலுக்கேற்ற உறுதியான கிளைகள் அதற்கிருந்தன: அடர்ந்த கிளைகள் நடுவே அது உயர்ந்தோங்கிற்று. திரளான கிளைகளோடு அது உயர்ந்து தென்பட்டது.

ஆனால், அது சினத்தோடு பிடுங்கப்பட்டு தலையிலே எறியப்பட்டது: கீழைக் காற்றினால் அது காய்ந்து போனது: அதன் கனி உதிர்ந்து போயிற்று: தண்டு உலாந்து தீக்கிரையாயிற்று.

இப்போதோ, அது பாலை நிலத்தில், வறண்ட, நீரற்ற நிலப்பரப்பில் நடப்பட்டுள்ளது.

அதன் தண்டிலிருந்து நெருப்பு கிளம்பி அதன் கிளைகளையும் கனிகளையும் சுட்டெரித்தது: அரச செங்கோலாயிருக்கத்தக்க உறுதியான தண்டு இனி அதில் தோன்றாது. இதுவே புலம்பல்: இதனை இரங்கற்பாவவெனக் கொள்க.

அதிகாரம் 20.

ஏழாம் ஆண்டில், ஜந்தாம் மாதத்தின் பத்தாம் நாளன்று, இஸ்ரயேல் மக்களின் பெரியோருள் சிலர் ஆண்டவரின் திருவுளத்தைக் கேட்டறிய வந்து, என் முன் அமர்ந்தனர்.

அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! இஸ்ரயேல் மக்களின் பெரியோரிடம் பேசி அவர்களுக்கு அறிவி: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் திருவுளத்தைக் கேட்டறிய வந்திருக்கிறீர்களோ? என்மேல் ஆணை! நீங்கள் கேட்டறிய நான் விடமாட்டேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

மானிடா! நீயே அவர்களுக்குத் தீர்ப்பளிக்கமாட்டாயா? நீயே அவர்களுக்குத் தீர்ப்புக் கூறமாட்டாயா? அவர்களுடைய மூதாதையரின் வெறுக்கத்தக்க செயல்களை அவர்கள் அறியச் செய்.

அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் இஸ்ரயேலைத் தேர்ந்துகொண்ட நாளில், யாக்கோபின் வழிமரபினர்க்கு உறுதிமொழி அளித்து, எகிப்து நாட்டில் என்னை அவர்களுக்கு வெளிப் படுத்தி, நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்று ஆணையிட்டுக் கூறினேன்.

நான் அவர்களை எகிப்து நாட்டினின்றும் வெளிக் கொணர்ந்து, நான் அவர்களுக்காகத் தோந்தெடுத்ததும், பாலும் தேனும் வழிந்தோடுவதும், எல்லா நாடுகளிலும் பெருமைமிக்கதுமான நாடுக்கு அவர்களை அழைத்துச் செல்வேன் என்றும் அவர்களிடம் ஆணையிட்டுக் கூறினேன்.

மேலும், அவர்களைப் பார்த்து, ஒவ்வொருவரும் தம் கண்களுக்கு விருந்தளிக்கும் அருவருப்பானவற்றை விட்டெறியட்டும். எகிப்தின் தெய்வச் சிலைகளால் உங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள்: நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர், என்று சொன்னேன்.

அவர்களோ, எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். எனக்குச் செவி சாய்க்க மறுத்தனர். அவர்களின் கண்களுக்கு விருந்தளித்த அருவருப்பானவற்றை எவனும் விட்டெறியவில்லை: எகிப்தின் தெய்வச் சிலைகளை ஒதுக்கிவிடவுமில்லை. ஆகையால் எகிப்து நாட்டின் நடுவில் என் ஆத்திரத்தை அவர்கள்மேல் கொட்டி, என் சினத்தைத் தீர்த்துக் கொள்வேன் என்று நான் கூறினேன்.

ஆயினும் அவர்களைச் சூழ்ந்திருந்த வேற்றினத்தார் முன்னிலையில் என் பெயர் மாசுறாதபடி நான் நடந்து கொண்டேன். இவ்வேற்றினத்தாரின் கண்முன் அன்றோ நான் அவர்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்து, என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன்.

ஆக, நான் அவர்களை எகிப்து நாட்டினின்று புறப்படச் செய்து, பாலைநிலத்துக்குக் கூட்டி வந்து,

வாழ்வளிக்கும் என் நியமங்களை அவர்களுக்குக் கொடுத்து, வாழ்வுதரும் என் நீதிநெறிகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். அவற்றைக் கடைப்பிடிப்போர் வாழ்வு பெறுவர்.

மேலும், அவர்களைப் புனிதப்படுத்தும் ஆண்டவர் நானே என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படி, என் ஓய்வு நாள்களை எனக்கும் அவர்களுக்குமிடையே ஓர் அடையாளமாகத் தந்தருளினேன்.

ஆனால், இஸ்ரயேல் வீட்டார் பாலை நிலத்தில் எனக்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். கடைப்பிடிப்போர்க்கு வாழ்வளிக்கும் என் நியமங்களின்படி அவர்கள் நடக்காமல், என் நீதி நெறிகளை ஒதுக்கி வைத்துவிட்டு என் ஓய்வு நாள்களையும் மிகவும் இழிவுபடுத்தினார்கள். எனவே, பாலைநிலத்திலேயே என் ஆத்திரத்தை அவர்கள் மேல் கொட்டி அவர்களை அழித்துவிடப்போவதாக நான் கூறினேன்.

ஆயினும், நான் இவர்களைப் புறம்படச் செய்ததைக் கண்ட வேற்றினத்தார் முன்னிலையில் என் பெயர் மாசுறாதபடி நடந்து கொண்டேன்.

மேலும் நான் அவர்களுக்கு அளிக்கவிருந்ததும், பாலும் தேனும் வழிந்தோடுவதும், எல்லா நாடுகளிலும் பெருமை மிக்கதுமான நாட்டுக்கு அவர்களை அழைத்துச் செல்ல மாட்டேன் என்று பாலை நிலத்தில் அவர்களிடம் ஆணையிட்டுக் கூறினேன்.

ஏனெனில், என் நீதிநெறிகளை அவர்கள் ஒதுக்கி விட்டனர். என் நியமங்களின்படி அவர்கள் நடக்கவில்லை. என் ஓய்வுநாள்களை அவர்கள் இழிவுபடுத்தினார்கள். அவர்களின் தெய்வச்சிலைகளையே அவர்களின் இதயம் நாடியது.

ஆயினும், நான் அவர்களைக் கண்ணோக்கி, அழிக்காமல் விட்டு விட்டேன். பாலை நிலத்தில் நான் அவர்களை முழுவதும் ஒழித்துவிடவில்லை.

ஆனால், பாலை நிலத்திலேயே அவர்களுடைய புதல்வர்களைப் பார்த்து: உங்கள் மூதாதையரின் நியமங்களின்படி நடவாதீர்கள். அவர்களுடைய நீதிநெறிகளைக் கைக்கொள்ளாதீர்கள். அவர்களுடைய தெய்வச் சிலைகளால் உங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர். என் நியமங்களின்படி நடந்து, என் நீதிநெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகுங்கள்.

என் ஓய்வு நாள்களைப் புனிதப்படுத்தங்கள். அவை எனக்கும் உங்களுக்கிடையே ஓர் அடையாளமாகத் திகழும். அப்போது நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள், என்று நான் கூறினேன்.

ஆனால், அவர்களின் பிள்ளைகளோ எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். கடைப்பிடிப்போர்க்கு வாழ்வளிக்கும் என் நியமங்களின்படி அவர்கள் நடக்கவில்லை. என் நீதிநெறிகளையும் கடைப்பிடித்து ஒழுகவில்லை. என் ஓய்வு நாள்களை அவர்கள் இழிவுபடுத்தினார்கள். எனவே, பாலைநிலத்திலேயே என் ஆத்திரத்தை அவர்கள்மேல் கொட்டி, என் சினத்தைத் தீர்த்துக் கொள்வேன் என்று நான் கூறினேன்.

ஆயினும், நான் இவர்களைப் புறப்படச் செய்ததைக் கண்ட பிறவினத்தார் முன்னிலையில் என் பெயர் மாசுறாதபடி நான் நடந்துகொண்டு என்னை அடக்கிக் கொண்டேன்.

மேலும் அவர்களை வேற்றினத்தாரிடையே பிரிந்துபோகச் செய்வதாகவும், நாடுகளிடையே சிதறிப்போகச் செய்வதாகவும், பாலைநிலத்தில் அவர்களுக்கெதிராக ஆணையிட்டுக் கூறினேன்.

ஏனெனில், என் நீதிநெறிகளின்படி அவர்கள் செய்யவில்லை: என் நியமங்¥¥¥ களை ஒதுக்கிவிட்டார்கள்: என் ஓய்வு நாள்களை இழிவுபடுத்தினார்கள்: அவர்களின் மூதாதையரின் தெய்வச் சிலைகளை வணங்கினார்கள்.

ஆகவே அவர்களுக்கு நன்மை பயக்காத நியமங்களையும், வாழ்வு தராத நீதி நெறிகளையும் நான் அவர்களுக்கு அளித்தேன்.

அவர்கள் தங்கள் தலைப்பிள்ளைகளை எல்லாம் பலியிடச் செய்து அவர்களின் அந்தக் காணிக்கைகளாலேயே அவர்களைத் தீட்டுப்படச் செய்தேன். அவர்களைத் திகிலுறச் செய்தேன். நானே ஆண்டவர் என்று அவர்கள் அறியும் பொருட்டும் இவ்வாறு செய்தேன்.

ஆகையால், மானிடா! இஸ்ரயேல் வீட்டாருக்கு எடுத்துச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: எனக்கு மீண்டும் மீண்டும் துரோகம் செய்து, உங்கள் மூதாதையர் என்னை இழிவுபடுத்தியுள்ளனர்.

நான் அவர்களுக்குத் தருவதாக வாக்களித்திருந்த நாட்டுக்கு அவர்களை அழைத்து வந்ததும், அங்கிருந்த ஒவ்வொரு உயர்ந்த குன்றையும், தழைத்த மரத்தையும் கண்டவுடன் ஆங்காங்கே தங்கள் பலிகளைச் செலுத்தினார்கள். எனக்குச் சினமூட்டும் நேர்ச்சைகளைப் படைத்தார்கள்: நறுமணப் புகை காட்டினார்கள்: நீர்மப்பலிகளை வார்த்தார்கள்.

நான் அவர்களை நோக்கி, நீங்கள் செல்லும் தொழுகை மேடு எங்கே உள்ளது? என்று கேட்டேன். எனவே அதன் பெயர் பாமா என்று இந்நாள்வரை வழங்குகிறது.

ஆகவே இஸ்ரயேல் வீட்டாரிடம் சொல்: உங்கள் மூதாதையரைப் பின்பற்றி நிங்களும் தீட்டுப்படுவீர்களோ? அவர்களின் அருவருக்கத்தக்கவற்றின் பின் திரிந்து நீங்களும் விபசாரம் செய்வீர்களோ?

இன்று வரையிலும் நீங்கள் உங்கள் காணிக்கைகளை அர்ப்பணித்து, உங்கள் பிள்ளைகளை நெருப்புக்குப் பலியாக்கி, உங்கள் தெய்வச்சிலைகள் அனைத்தாலும் உங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே, நீங்களா என் திருவுளத்தைக் கேட்டறியப் போகிறர்கள்? என்மேல் ஆணை! நீங்கள் கேட்டறிய நான் விடமாட்டேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

மேலும் மரத்தையும் கல்லையும் வழிபட்டு, நாங்களும் வேற்றினத்தாரைப் போலவும், வேற்றுநாடுகளின் குடிமக்களைப் போலவும் இருப்போம் என்று உங்கள் மனத்தில் எழும் எண்ணம் நிறைவேறப் போவதே இல்லை.

இது என் மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். வலிமைமிகு கையோடும், ஓங்கிய புயத்தோடும், வெளிப்படும் சினத்தோடும் நான் உங்களை ஆள்வேன்.

வலிமைமிகு கையோடும், ஓங்கிய புயத்தோடும், சீறிவரும் சினத்தோடும், பிற மக்களினங்களிடையே இருந்து உங்களை அழைத்து வந்து, நீங்கள் சிதறிக் கிடக்கும் நாடுகளிலிருந்து உங்களை ஒன்று சேர்ப்பேன்.

உங்களை வேற்றினத்தாரின் பாலைநிலத்துக்கு அழைத்துச்சென்று, அங்கே உங்களை நேருக்கு நேராய்த் தீர்ப்பிடுவேன்.

எகிப்து நாட்டின் பாலை நிலத்தில் உங்கள் மூதாதையரைத் தீர்ப்பிட்டது போல் உங்களையும் நான் தீர்ப்பிடுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

உங்களை என் கோலின் கீழ்க் கடந்து போகச் செய்து, உடன்படிக்கையின் கட்டுக்குள் கொண்டு வருவேன்.

கிளர்ச்சி செய்வோரையும் என்னை மீறி நடப்போரையும் உங்களிடையே இருந்து களைந்து விடுவேன். அவர்கள் வாழும் நாட்டிலிருந்து நான் அவர்களையும் அழைத்து வருவேன். ஆனால் இஸ்ரயேல் நாட்டினுள் அவர்கள் புகமாட்டார்கள். அப்போது நானே ஆண்டவர் என்று அறிந்து கொள்வீர்கள்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஒவ்வொருவரும் போய் உங்கள் தெய்வச் சிலைகளை வழிபட்டுக் கொள்ளுங்கள். ஆனால் பின்னர் நீங்கள் எனக்குச் செவிசாய்த்து உங்கள் காணிக்கைகளாலும் தெய்வச் சிலைகளாலும் என் பெயரை மாசுபடுத்தவே மாட்டீர்கள்.

என் திருமலையில், இஸ்ரயேல் நாட்டு மலைமுகட்டில் வாழும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் அந்நாட்டில் என்னை வழிபடுவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். அங்கே நான் அவர்களை ஏற்றுக் கொள்வேன். அங்கே உங்கள் புனிதப்பலிகள் அனைத்தோடும் படையல்களையும் முதற்பலன் காணிக்கைகளையும் நான் எதிர்பார்த்து நிற்பேன்.

பிற மக்களினங்களிடையே இருந்து உங்களை அழைத்து வருவேன். நீங்கள் சிதறிக்கிடக்கும் நாடுகளிலிருந்து நான் ஒன்று சேர்க்கும்போது, உங்களை நறுமணக் காணிக்கையாக ஏற்றுக் கொள்வேன். அப்போது நான் பயவர் என்பது உங்கள் மூலம் வேற்றினத்தார்க்கு வெளிப்படும்.

இவ்வாறு நான் உங்கள் மூதாதையர்க்குத் தருவதாக ஆணையிட்டுக் கூறிய இஸ்ரயேல் நாட்டுக்கு நான் உங்களை அழைத்து வரும்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

உங்கள் வழிகளையும், உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளச் செய்த செயல்கள் அனைத்தையும் அங்கே நீங்கள் நினைத்து, நீங்கள் புரிந்த எல்லாத் தீச்செயல்களின் பொருட்டும் உங்களையே மிகவும் நொந்து கொள்வீர்கள்.

இஸ்ரயேல் வீட்டாரே! உங்கள் தீய வழிகளுக்கும், கெட்ட பழக்கங்களுக்கும் ஏற்ப நான் உங்களை நடத்தாமல், என் பெயரின் பொருட்டு உங்களுக்கு இவ்வாறெல்லாம் செய்யும்போது, நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

மானிடா! நீ உன் முகத்தைத் தெற்கு நோக்கித் திருப்பி, தென் பகுதிக்கு எதிராக அருளுரையாற்றி, நெகேபின் நிலப்பரப்பின் காட்டு வெளிக்கு எதிராக இறைவாக்குரை.

நெகேபிலிருக்கும் காட்டு வெளிக்குச் சொல். ஆண்டவரின் வாக்கைக் கேள். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! நான் உனக்குத் தீ வைப்பேன். அது உன்னிலிருக்கும் எல்லாப் பச்சை மரங்களையும் பட்ட மரங்களையும் எரித்து விடும். கொழுந்து விட்டெரியும் அப்பிழம்பு அணைக்கப்படாது. தென்திசைமுதல் வடதிசைவரை இருக்கும் எல்லா முகங்களும் அதனால் கருகிப் போகும்.

ஆண்டவராகிய நானே அதைக் கொளுத்தினேன் என்பதை யாவரும் அறிந்து கொள்வார்கள். அதுவோ அணைந்து போகாது.

அப்போது நான், தலைவராகிய ஆண்டவரே! இவன் உவமைகளைப் புனைபவன் அன்றோ? என்று என்னைக் குறித்துச் சொல்கிறார்களே என்று முறையிட்டேன்.

அதிகாரம் 21.

அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! உன் முகத்தை எருசலேம் நோக்கித் திருப்பி, திருத்தலங்களுக்கு எதிராக அரளுரையாற்றி, இஸ்ரயேல் மண்ணுக்கு எதிராக இறைவாக்குரை.

இஸ்ரயேல் மண்ணுக்குச் சொல். ஆண்டவர் கூறுவது இதுவே. இதோ, நான் உனக்கு எதிராக எழுந்து, என் வாளை உறையினின்று உருவி, உன்னிலிருக்கும் நேரியவர்களையும், தீயவர்களையும் வெட்டி வீழ்த்துவேன்.

உன்னிலிருக்கும் நேரியவரையும் தீயவரையும் நான் வெட்டி வீழ்த்தப் போவதால், தென்திசைமுதல் வடதிசை வரையுள்ள அனைவருக்கும் எதிராக என் வாள் உறையினின்று உருவப்படும்.

ஆண்டவராகிய நானே என் வாளை உறையினின்று உருவியுள்ளேன். இனி அது மீண்டும் உறைக்குள் இடப்படாது என்பதை அனைவரும் அப்போது அறிந்து கொள்வர்.

மானிடா! நீயோ பெருமூச்சுவிட்டு அழு: உடைந்த உள்ளத்தோடும் மனக்கசப்போடும் அவர்கள் கண்முன் பெருமூச்செறித்து அழு!

ஏன் பெருமூச்செறிந்து அழுகிறாய்? என்று அவர்கள் உன்னைக் கேட்பார்கள். அப்போது நீ சொல்: வரப்போவரை நான் கேள்விப்பட்டிருப்பதால்தான் அது வரும்போது இதயமெல்லாம் உருகும்: கைகளெல்லாம் தளரும்: மனமெல்லாம் மயங்கும்: முழங்கால்களெல்லாம் நீரைப்போல் அலம்பும். இதோ அது வருகிறது. அது வந்தே தீரும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

மானிடா! இறைவாக்காகச் சொல்: தலைவர் கூறுவது இதுவே: ஒரு வாள்! கூர்மையாக்கப்பட்டதும் துலக்கப்பட்டதுமான வாள்!

படுகொலை செய்வதற்கென அது கூர்மையாக்கப்பட்டுள்ளது! மின்னலென ஒளிர்வதற்கென அது துலக்கப்பட்டுள்ளது! நாம் மகிழ்ச்சி கொள்வோமா? ஏனெனில், என் மக்கள் எல்லா எச்சரிக்கைகளையும் தண்டனைகளையும் புறக்கணித்து விட்டனர்.

கையில் பிடிப்பதற்காகவே அவ்வாள் துலக்கி வைக்கப்பட்டுள்ளது: கொலைஞனின் கரத்தில் கொடுப்பதற்காகவே அவ்வாள் கூர்மையாக்கப்பட்டுத் துலக்கப்பட்டுள்ளது.

மானிடா! நீ ஓலமிட்டு அலறு: ஏனெனில், அது என் மக்களை நோக்கியும் இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவரை நோக்கியும் வீசப்படும்: என் மக்களுடன் அவர்கள் அனைவரும் அவ்வாளுக்கு இரையாவர். ஆகையால் உன் மார்பிலே அறைந்து கொள்.

உண்மையாகவே இது ஒரு சோதனை: அவர்கள் மனமாற மறுத்தால், இவை அனைத்தும் அவர்களுக்கு நிகழும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

மானிடா! நீயோ இறைவாக்குரை: கை கொட்டு: இருமுறை, மும்முறை வாள் வீசப்படட்டும்: கொலைக்கான வாள் அது: அவர்களைச் சூழ்ந்து வரும் படுகொலைக்கான வாள் அது.

அது இதயங்களைக் கலங்கச் செய்யும்: நான் வைத்துள்ள அவ்வாள் ஒவ்வொரு நகர் வாயிலிலும் பலரை வீழ்த்தும். ஆம், அது மின்னுவதற்காகக் செய்யப்பட்டது: கொலைக்காக கூர்மையாக்கப்பட்டது.

வலப்புறமும், இடப்புறமும் உன் கூர்மையைக் காட்டு: எத்திசையெல்லாம் உன் முகம் திருப்பப்படுகிறதோ அங்கெல்லாம் காட்டு:

நானும் கை கொட்டிச் சினம் தீர்த்துக்கொள்வேன். இதை உரைப்பவர் ஆண்டவராகிய நானே.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

மானிடா! பாபிலோன் மன்னனின் வாள் வருவதற்கென்று நீ இரண்டு சாலைகள் அமை. அவ்விரண்டும் ஒரே நாட்டினின்று புறப்படவேண்டும். ஒரு கைகாட்டியைச் செய்து நகரக்குச் செல்லும் சாலையின் தொடக்கத்தில் நாட்டிவை.

அம்மோனியரின் இராபாவுக்கும், யூதாவின் அரண்சூழ் எருசலேமுக்கும் வாள் செல்லும் வகையில் சாலை அமை.

ஏனெனில் பாபிலோன் மன்னன் இரு சாலைகளும் பிரியும் சந்தியில் நிமித்தம் பார்ப்பதற்காக நிற்கிறான். அம்புகளை உலுக்கிப் போடுகிறான். குலதெய்வச் சிலைகளிடம் திருவுளம் கேட்கிறான்: ஈரலால் நிமித்தம் பார்க்கிறான்.

அவனது வலக்கையின் எருசலேமுக்குப் போகும்படியான குறி விழுந்தது. அரண் தகர்ப்புப் பொறிகளை அமைப்பதற்கும், கொலைக்கான ஓலத்தை எழுப்புவதற்கும், குரலை உயர்த்திப் போர்க் கூச்சலிடுவதற்கும், வாயில்களுக்கு நேராக அரண் தகர்ப்புப் பொறிகளை அமைப்பதற்கும், மண்மேடு எழுப்பி முற்றுகை அரணைக் கட்டுவதற்குமான குறி விழுந்தது.

ஆனால், ஏற்கெனவே, ஒப்பந்தம் செய்துகொண்டர்களின் பார்வையில் இதெல்லாம் பொய்க்குறியாகத் தோன்றுகிறது. ஆனால் அவர்களது குற்றம் மறக்கப்படாமல் அவர்கள் சிறைப்பிடிக்கப்படுவர்.

எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உங்கள் குற்றம் மறக்கப்படவில்லை. நீங்கள் இழைத்த தவறுகள் வெளியாக்கப்பட்டுள்ளன. உங்கள் செயல்கள் எல்லாவற்றிலும் உங்கள் பாவங்கள் காணப்படுகின்றன. இங்ஙனமே நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால் கைதிகளாய்ப் பிடிக்கப்படுவீர்கள்.

இஸ்ரயேலின் தீட்டுப்பட்ட தீய தலைவனே, உனக்கு இறுதித் தண்டனைக்கெனக் குறிக்கப்பட்ட நாள் இதோ வந்துவிட்டது.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் தலைப்பாகையை எடுத்துவிடு, மகுடத்தை அகற்றி விடு. இப்போதைய நிலை இனி தொடராது. தாழ்ந்தோர் உயர்வர். உயர்ந்தோர் தாழ்வர்.

நான் தரவிருப்பது அழிவு, அழிவு, அழிவு. தண்டனைத் தீர்ப்பு வழங்குபவர் எவரோ அவர் வரும்வரை அது நடவாது. அவருக்கே அப்பொறுப்பை அளிப்பேன்.

நீயோ, மானிடா! இறைவாக்குரை. அம்மோனியரையும் அவர்களின் பழிப்புரையையும் குறித்துத் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதவே: இதோ வாள்! கொலை செய்வதற்காக வாள உருவப்பட்டுள்ளது. மின்னலைப் போல் ஒளிர்ந்து, வெட்டி வீழ்த்துவதற்காக அது கூர்மையாக்கப்பட்டுள்ளது.

உன்னைக் குறித்து வீணான காட்சிகள் கண்டு, பொய்யான குறிகள் சொன்னாலும், வெட்டப்படவிருக்கும் தீயோரின் பிடரியில் வாள் விழும். அந்த வாள் வந்து விட்டது. தண்டனை உச்ச நேரத்தை எட்டிவிட்டது.

நீ, வாளைத் திரும்ப உறையிலே போடு. நீ படைக்கப்பட்ட ஊரில், நீ பிறந்த மண்ணில் நான் உன்னைத் தீர்ப்பிடுவேன்.

என் ஆத்திரத்தை உன்மேல் கொட்டுவேன். என் சினத்தீயை உன்மேல் பொழிவேன். அழிப்பதில் வல்லவர்களான கொடியோரின் கையில் உன்னை ஒப்புவிப்பேன்.

நீ தீக்கிரையாவாய். உன் இரத்தம் நாட்டினுள் சிந்திக் கிடக்கும். ஏனெனில் நீ நினைக்கப்படமாட்டாய். ஆண்டவராகிய நானே இதை உரைத்துள்ளேன்.

அதிகாரம் 22.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! அவளுக்குத் தீர்ப்பிட மாட்டாயா? குருதியைச் சிந்திய இந்நகருக்கு நீ தீர்ப்பிட மாட்டாயா? அவ்வாறெனில், அவளின் எல்லா அருவருப்புகளையும் எடுத்துக்கூறு.

நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தனக்குத் தண்டனை நாள் வரும்படித் தன் நடுவில் குருதியைச் சிந்தித் தனக்கெனச் சிலைகளைச் செய்து தீட்டுப்படுத்திக் கொண்ட நகர் இதுவே!

நீ சிந்திய குருதியினால் குற்றப்பழிக்கு ஆளானாய். நீ வடித்த தெய்வச் சிலைகளால் தீட்டுப்பட்டவளானாய். நீ உன் நாள்களை முடித்து விட்டாய். உன் ஆண்டுகளை முடிவுக்குக் கொணர்ந்து விட்டாய். ஆகவே உன்னை வேற்றினத்தாருக்கு இழி பொருளாகவும், எல்லா நாட்டினருக்கும் ஏளனப் பொருளாகவும் ஆக்குவேன்.

உன் அருகில் உள்ளோரும் தொலைவில் உள்ளோரும் உன்னைப் பேர்கெட்ட நகர் எனவும் அமளி நிறைந்தவள் எனவும் இகழ்வர்.

உன்னிடத்திலுள்ள இஸ்ரயேலின் தலைவர்கள் தங்கள் வலிமையால் குருதி சிந்துகிறார்கள்:

உன்னிடையே தாய் தந்தையரை அவமதித்தார்கள்: அன்னியரைத் துன்புறுத்தித் தந்தையற்றோதரையும் கைம்பெண்களையும் இழிவாய் நடத்தினார்கள்.

நீயோ எனக்குரிய பய்மையானவற்றை அவமதித்து, ஓய்வுநாள்களைத் தீட்டுப்படுத்தினாய்.

புறங்கூறிக் கொலை செய்வோர் உன்னிடம் உள்ளனர். அவர்கள் மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்கின்றனர். உன்னிடையே முறைகேடானதைச் செய்கின்றனர்.

தங்கள் தந்தையின் திறந்த மேனியை வெளிப்படுத்துகிறவர்களும் தீட்டான காலத்தில் பெண்களைப் பலவந்தப் படுத்துகிறவர்களும் உன்னிடையே உள்ளனர்.

ஒருவன் அடுத்திருப்பவன் மனைவியுடன் முறைதவறி நடக்கிறான். இன்னொருவன் வெட்கமின்றித் தன் மருமகளைக் கெடுக்கிறான். வேறொருவன் தன் தந்தைக்குப் பிறந்த தன் சகோதரியையே பலவந்தப்படுத்துகிறான்.

உன்னிடையே பலர் குருதி சிந்தக் கையூட்டுப் பெறுகின்றனர். நீ வட்டி வாங்குகிறாய், கொடுத்ததற்கு மேலாய்ப் பிடுங்கி, அடுத்திருப்பவனை ஒடுக்குகிறாய். நீ என்னை மறந்துவிட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

உன் நீதியற்ற வருமானத்தை முன்னிட்டும் நீ உன்னிடையே சிந்திய இரத்தத்தை முன்னிட்டும் நான் என் கைகளைத் தட்டுவேன்.

நான் உன்னைத் தண்டிக்கும் நாளில் உன் மனவுறுதி நிலைத்திருக்குமா? அல்லது உன் கைகள் வலிமையுடன் விளங்கிடுமா? ஆண்டவராகிய நானே இதைச் சொல்கிறேன். நான் இதைச் செய்தே தீர்வேன்.

உன்னை வேற்றினத்தாரிடையே சிதறடிப்பேன்: நாடுகளிடையே கலந்தொழியச் செய்வேன்: உன் அருவருப்புக்கு ஒரு முடிவு கட்டுவேன்.

வேற்றினத்தாரிடையே தீட்டுப்பட்டவளாய் நீ நிற்கையில், நானே ஆண்டவர் என அறிந்து கொள்வாய்.

ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:

மானிடா! இஸ்ரயேல் வீட்டார் எனக்குக் களிம்பாகிவிட்டனர். அவர்கள் எல்லாரும் எரி நெருப்பில் கிடக்கும் வெள்ளி, வெண்கலம், வெள்ளீயம், இரும்பு, ஈயம் ஆகியன போலாயினர்: அவர்கள் களிம்பாகி விட்டார்கள் .

ஆகவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் யாவரும் களிம்பாகி விட்டதால் உங்கள் எல்லாரையும் எருசலேமில் ஒன்று சேர்ப்பேன்.

வெள்ளி, வெண்கலம், இரும்பு, ஈயம் ஆகியவற்றை நெருப்பிலிட்டு உருக்குவது போல், நானும் என் சினத்திலும் சீற்றத்திலும் நகரின் நடுவில் இட்டு உருக்குவேன்.

நான் உங்களை ஒன்றாய்ச் சேர்த்து, உங்கள் மீது என் சினத்தின் கனலை ஊதுவேன். நீங்களும் நகரின் நடுவில் உருக்கப்படுவீர்கள்.

வெள்ளி சூளையில் உருக்கப்படுவது போல் நீங்களும் அதன் நடுவில் உருக்கப்படுவீர்கள். அதன் மூலம் ஆண்டவராகிய நான் என் சினத்தை உங்கள் மீது கொட்டியுள்ளேன் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:

மானிடா! அந்த நாட்டுக்குச் சொல்: நீ பய்மைப்படுத்தப் பெறாத நாடு. ஏனெனில் என் சினத்தின் நாள்களில் உன்னில் மழை பெய்யவில்லை.

அவளின் போலி இறைவாக்கினர் சதித்திட்டம் தீட்டி இரையைக் கிழிக்கும் கர்ச்சிக்கின்ற சிங்கம் போல் மக்களை விழுங்குகிறார்கள். அவர்கள் விலையுயர்ந்த கருவூலத்தையும் பொருள்களையும் எடுத்துச் செல்கின்றனர். கைம்பெண்களை நகரிடையே மிகுதியாக்குகின்றனர்.

அவளின் குருக்கள் என் திருச்சட்டத்தை மீறுகின்றனர். எனக்குரிய பய்மையானவற்றைத் தீட்டுப்படுத்துகின்றனர். பய்மையானவற்றிற்கும் பொதுவானவற்றிற்கும் வேற்றுமைபாராமலும், தீட்டானவற்றையும் தீட்டற்றவற்றையும் பிரித்துணராமலும் இருக்கின்றனர். ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது பற்றிக் கவலையற்றிருந்தனர். நானோ அவர்களால் அவமதிப்புக்குள்ளானேன்.

அவளின் தலைவர்கள் இரையைக் கிழிக்கும் ஓநாய்கள்போல் உள்ளனர். அநீதியாய்ச் செல்வம் ஈட்ட மக்களைக் கொலை செய்து குருதி சிந்துகின்றனர்.

அவளின் போலி இறைவாக்கினர் இச்செயல்களைப் பொய்க்காட்சிகள் மூலமும், பொய்க்குறிகள் மூலமும் வெள்ளையடித்து மூடி மறைக்கிறார்கள். ஆண்டவர் சொல்லாதபோதே தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே என்கிறார்கள்.

நாட்டின் பொதுமக்கள் பிறர்பொருளைப் பறிக்கின்றனர்: கொள்ளையடிக்கின்றனர். ஏழைகளையும் எளியவர்களையும் துன்புறுத்தி, அன்னியரை இழிவாய் நடத்தி, நீதி வழங்க மறுக்கின்றனர்.

எனக்கும் இந்நாட்டு மக்களுக்குமிடையே ஒரு சுவரை எழுப்பி, அதன் மூலம் நான் இந்த நாட்டு மக்களை அழிக்காதபடி தடுப்பவன் ஒருவனை அவர்களிடையே தேடினேன். ஆயினும் யாரும் கிட்டவில்லை.

எனவே நான் அவர்கள்மேல் என் சினத்தைக் கொட்டி என் எரிசினத்தால் அவர்களை விழுங்குவேன். அவர்கள் செய்த எல்லாவற்றையும் அவர்கள் தலைமீதே சுமத்துவேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 23.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! ஓர் அன்னைக்கு மகள்கள் இருவர் இருந்தனர்.

அவர்கள் எகிப்தில் வேசிகளாய் மாறினர். தங்கள் இளமை முதலே வேசித்தனத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கே அவர்களின் மார்புகள் வருடப்பட்டன. அவர்களின் கன்னிக்கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர்.

அவர்களில் மூத்தவள் பெயர் ஒகோலா: இளையவள் பெயர் ஒகலிபா. எனக்கு உரியவர்களாகிய அவர்கள் ஆண்மக்களையும் பெண்மக்களையும் பெற்றெடுத்தனர். ஒகோலா என்பவள் சமாரியா, ஒகலிபா என்பவள் எருசலேம்.

ஒகோலா என்னுடையவளாயிருக்கையிலேயே வேசித்தொழில் செய்தாள். அவள் தன் காதலர்களாகிய அசீரியர்மேல் காமம் கொண்டாள்.

அவர்கள் நீல ஆடை உடுத்திய போர் வீரர்களும் அழகிய இளைஞர்களாகிய ஆளுநர்களும் அதிகாரிகளும் குதிரையேறிய வீரர்களுமாய் இருந்தனர்.

அவள் அசீரியர்களில் தலைசிறந்த அனைவருடனும் வேசித்தொழில் செய்தாள்: தான் காமுற்ற அனைவரின் சிலைகளாலும் தீட்டுப்பட்டாள்.

எகிப்தில் அவள் தொடங்கிய வேசித்தொழிலை விட்டொழிக்கவில்லை. அங்கே அவளின் இளமை முதலே ஆண்கள் அவளுடன் படுத்துறங்கினர்: அவளின் கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடினர்: தங்கள் காமத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தனர்.

எனவே அவள் காமுற்ற அவளின் காதலர்களாகிய அந்த அசீரியர் கைகளிலேயே அவளை விட்டுவிட்டேன்.

அவர்கள் அவளின் ஆடைகளை உரிந்து, அவளின் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து கொண்டு, அவளை வாளால் கொன்று போட்டனர். பெண்களுக்குள் அவள் இழி சொல் ஆனாள். இவ்வாறு அவர்கள் அவள்மீது தண்டனையை நிறைவேற்றினர்.

அவள் தங்கை ஒகலிபா இதையெல்லாம் கண்டாள். இருப்பினும் தன் தமக்கையைவிடக் காமத்திலும் வேசித்தனத்திலும் இழிந்தவளானாள்.

அவளும் ஆளுநர், படைத்தலைவர், பகட்டான ஆடை அணிந்த போர்வீரர், குதிரையேறிய வீரர் ஆகிய அழகிய இளைஞரான அசீரியர் மேல் காமுற்றாள்.

அவளும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டதை நான் கண்டேன். இருவரும் ஒரே வழியில் நடந்தனர்.

ஆனால் இவள் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாக ஈடுபட் டாள். சுவரில் சிவப்பாய்த் தீட்டப்பட்ட கல்தேய நாட்டு ஆண்களின் உருவங்களைக் கண்டாள்.

இடையில் கச்சை கட்டிக்கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்த அவர்கள், தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பாபிலோன் நகரினர்போல் இருந்ததைக் கண்டாள்.

அவள் அவர்களைக் கண்டதும் அவர்கள்பால் காமுற்று கல்தேயாவிலுள்ள அவர்களுக்குத் பதர்களை அனுப்பினாள்.

பாபிலோனியர் அவளிடம் வந்து காமப்படுக்கையில் படுத்துத் தங்கள் காமத்தால் அவளைத் தீட்டுப்படுத்தினர். அவர்களால் தீட்டுப்பட்டபின், அவள் அவர்களிடமிருந்து தன் மனத்தை விலக்கிக் கொண்டாள்.

அவள் வெளிப்படையாய்த் தன் வேசித்தனத்தில் ஈடுபட்டுத் தன் திறந்த மேனியை வெளிப்படுத்தியபோது, நான் வெறுப்பால் அவளிடமிருந்து விலகிக்கொண்டேன்: அவள் தமக்கையிடமிருந்து விலகிக்கொண்டது போலவே செய்தேன்.

ஆயினும் அவள் எகிப்தில் தன் இளமையில் ஈடுபட்ட வேசித்தனத்தை மனத்தில் கொண்டு இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள்.

அவள் தன் காதலர்பால் காமுற்றாள். அவாகளின் பாலியல் உறுப்பு கழுதையின் உறுப்புப்போலும், விந்து குதிரையின் விந்துபோலும் இருந்தன.

எகிப்தில் அவர்கள் உன் மார்புகளை வருடி, உன் இளம்கொங்கைகளோடு விளையாடிய இளமைக் கால வேசித்தனத்தை நீ ஆவலுடன் நாடினாய்.

ஆகவே ஒகலிபா! தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உன் காதலர்களை உனக்கு எதிராய்க் கிளம்பச் செய்வேன். இவர்களிடமிருந்து நீ வெறுப்பினால் விலகிக்கொண்டாய். அவர்களை உனக்கு எதிராய் எத்திசையிலிருந்தும் கொண்டு வருவேன்.

பாபிலோனியர் கல்தேயர் யாவரையும், பெக்கோது, சோவா, கோகா எனும் இடத்தாரையும், அசீரியரையும் வரச்செய்வேன். அவர்கள் அழகிய இளைஞரையும் ஆளுநர்களாயும் படைத்தலைவர்களாயும் தேர்ப்படை வீரர்களாயும் உள்ளனர். அவர்கள் யாவரும் குதிரையேற்றத்தில் தேர்ச்சி பெற்றவர்.

அவர்கள் உனக்கு எதிராய்ப் படைக்கலம் தாங்கி வருவர். தேர்கள், குதிரை வண்டிகள், திரளான மக்கள் ஆகியோருடன் பெரிய கேடயங்களோடும், சிறிய கேடயங்களோடும் தலைச்சீராவோடும் வந்து உனக்கு எதிராய் நாற்புறமும் உன்னைச் சூழந்துகொள்வர். நான் உன்னைத் தண்டிக்குமாறு அவர்களிடம் ஒப்புவிப்பேன். அவர்களும் தங்கள் முறைப்படி உன்னைத் தண்டிப்பார்கள்.

நான் என் பெருஞ்சினத்தை உனக்கு எதிராய்த் திருப்புவேன். அவர்களும் உன்னைக் கடுஞ்சினத்துடன் நடத்துவர். அவர்கள் உன் மூக்கையும் காதுகளையும் வெட்டி எறிவர். எஞ்சியோர் வாளால் வீழ்வர். அவர்கள் உன் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து செல்வர். எஞ்சியோர் விழுங்கப்படுவர்.

மேலும் அவர்கள் உன் ஆடைகளை உரிந்து உன் விலையுயர்ந்த அணிகளை எடுத்துக் கொள்வர்.

இவ்வாறு எகிப்தில் தொடங்கின உன் காம வெறியையும் வேசித்தனத்தையும் நான் முடிவுக்குக் கொண்டு வரவேன். இவற்றை இனி மேல் நீ நாடமாட்டாய். எகிப்தை நீ நினைவு கொள்ளவும் மாட்டாய்.

ஏனெனில் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ யாரை வெறுக்கிறாயோ, யாரிடமிருந்து மனம் கசந்து திரும்பினாயோ அவர்களிடமே உன்னை ஒப்புவிப்பேன்.

அவர்கள் வெறுப்போடு உன்னை நடத்துவர். நீ உழைத்துப் பெற்றவை அனைத்தையும் கவர்ந்துகொண்டு, உன்னைத் திறந்த மேனியாகவும் வெறுமையாகவும் விட்டுச் செல்வர். உன் வேசித்தனம், காமவெறி, ஒழுக்கக்கேடு ஆகியவற்றின் வெட்கக்கேடு வெளிப்படும்.

நீ வேற்றினத்தார் மீது காமவெறிகொண்டு அவர்களின் சிலைகளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்டால் அவர்கள் உனக்கு இப்படிச் செய்வர்.

உன் தமக்கையின் வழியிலேயே நீயும் சென்றாய். எனவே அவள் குடித்த கிண்ணத்தை உன் கையில் தருவேன்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் தமக்கை குடித்த கிண்ணத்தில் நீயும் குடிப்பாய்: அகன்று, குழிந்து நிறைந்திருப்பது அக்கிண்ணம்: நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் நீ ஆளாவாய்.

குடிவெறியாலும் துயரத்தாலும் நிறைந்திருப்பாய்! உம் தமக்கை சமாரியாவின் கிண்ணம் துயரமும் அழிவும் கொண்ட கிண்ணம்!

குடிப்பாய்: அதை நீ குடித்து முடிப்பாய்! அதனை உடைத்தெறிவாய் துண்டுகளாய்! உன் மா¡புகளைக் கீறிக்கொள்வாய்! நானே உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ என்னை மறந்து உன்னிடமிருந்து என்னை ஒதுக்கிவிட்டதால், உன் காமவெறி மற்றும் வேசித்தனத்தின் விளைவுகளை நீயே சுமந்துகொள்.

ஆண்டவர் எனக்கு மேலும் உரைத்தது: மானிடா ஒகோலாவையும் ஒகலிபாவையும் தீர்ப்பிடுவாயா? அவ்வாறெனில் அவர்களின் அருவருப்பான செயல்களை எடுத்துக் கூறு.

ஏனெனில் அவர்கள் வேசித்தனம் செய்தனர். அவர்கள் கைகளோ இரத்தக் கறை படிந்தவை. சிலைகளோடு அவர்கள் வேசித்தனம் செய்தனர். எனக்கெனப் பெற்றெடுத்த பிள்ளைகளைச் சிலைகளுக்கு உணவாய்ப் படைத்தனர்.

இதற்கு மேலும் செய்தனர், அதே நேரத்தில் எனது பயகத்தைத் தீட்டுப்படுத்தி என் ஓய்வுநாள்களை இழிவுபடுத்தினர்.

அதே நேரத்தில் தங்கள் குழந்தைகளைச் சிலைகளுக்குப் பலியிட்டனர். என் பயகத்தில் நுழைந்து அதை இழிவுபடுத்தினர். என் இல்லத்தில் அவர்கள் இவ்வாறு செய்தனர்.

அவர்கள் தொலைவில்வாழ் மனிதருக்காகத் பதர்களை அனுப்பினர்: அவர்கள் வந்தபோது குளித்து, கண்களுக்கு மைதீட்டி, அணிகலன்களை அணிந்து கொண்டனர்.

அழகான மஞ்சத்தில் அமர்ந்து அதன் முன்னால் இருந்த மேசையில் எனக்குரிய நறுமணப்பொருள்களையும் எண்ணெயையும் வைத்தனர்.

களியாட்டக் கூட்டத்தின் இரைச்சல் அவர்களைச் சுற்றியிருந்தது. பாலைநிலத்திலிருந்து வந்த குடிகாரக் கும்பலும் அதனோடு சேர்ந்து கொண்டது. அவர்கள் அப்பெண்களின் கைகளில் வளையலிட்டார்கள். அழகிய மகுடங்களை அவர்கள் தலையில் சூட்டினார்கள்.

அப்போது வேசித்தனத்தால் தளர்ந்துபோன ஒருத்தியைக் குறித்து நான் உரைத்தேன்: “அவர்கள் அவளை வேசியாய் நடத்தட்டும், ஏனெனில் அவள் இப்போது வேசிதான்.“

விலைமாதரிடம் செல்வதுபோல் அவர்கள் அப்பெண்களிடம் சென்றனர்: ஒகோலா, ஒகலிபா ஆகிய இருவேசிப் பெண்களிடமும் சென்றனர்.

ஆனால் நீதிமான்கள் அவர்களுக்கு வேசித்தனத்தில் ஈடுபட்டுக் கொலை செய்த பெண்களுக்குரிய தண்டனையைக் கொடுப்பர். ஏனெனில் அவர்கள் வேசிகள்தாம். இரத்தக்கறை அவர்கள் கைகளில் உள்ளது.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அவர்களை நடுக்கத்திற்கும் கொள்ளைக்கும் உள்ளாக்குமாறு அவர்களுக்கு எதிராய் ஒரு பெரும் கூட்டத்தைக் கூட்டிவா.

அக்கூட்டமோ அவர்களைக் கல்லால் எறிந்து, வாளால் வெட்டிச் சாய்க்கும். அவர்களின் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கொன்று, வீடுகளை நெருப்பினால் சுட்டெரிக்கும்.

இவ்வாறு, நாட்டில் காமவெறியை நான் முடிவுக்குக் கொண்டு வருவேன். அதன் மூலம் மற்றப் பெண்களும் இவர்களைப்போல் காமவெறியராய் இல்லாமலிருக்க எச்சரிக்கை பெறுவர்.

நீங்களும் உங்கள் காமவெறி, சிலை வழிபாடு ஆகிய குற்றங்களின் பாவவினையைச் சுமப்பீர்கள். அதன்மூலம் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.

அதிகாரம் 24.

ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தின் பத்தாம் நாளில் ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.

மானிடா! இந்த நாளை-பாபிலோன் மன்னன் எருசலேமை முற்றுகையிட்ட இந்த நாளை-குறித்து வை.

கலக வீட்டாருக்கு உவமை ஒன்றின் வழியாக எடுத்துக்கூறு: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: கொப்பரை ஒன்றை எடுத்து வை: தண்ணீரை அதில் ஊற்று.

உள்ளே இறைச்சித் துண்டுகளைப் போடு: தொடை, தோள்பகுதி ஆகிய நல்ல பாகங்களைப் போடு: பொறுக்கியெடுத்த எலும்புகளால் நிரப்பு.

மந்தையில் சிறந்ததைக் கொண்டுவா: விறகுக்கட்டைகளை அதன்கீழ் அடுக்கு: இறைச்சித் துண்டுகளை வேகவை: எலும்புகளும் உள்ளிருக்கட்டும்.

ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: குருதியைச் சிந்தும் நகருக்கு ஜயோ கேடு! துருப்பிடித்த கொப்பரை இது: இதன் துரு நீங்கவே இல்லை: ஒவ்வொரு துண்டாய் அதிலிருந்து எடு: தேர்வு செய்து எடுக்க வேண்டாம்.

ஏனெனில், அவள் சிந்திய குருதி அவள் நடுவில் உள்ளது: வெறுமையான பாறையில் அதை ஊற்றினாள்: புழுதியில் மறையும் படித் தரையில் அதை ஊற்றவில்லை.

சினத்தைக் கிளறவும் பழிவாங்கவுமே புழுதியில் அதை மறைக்காது வெறுமையான பாறையில் ஊற்றச் செய்தேன்.

எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: குருதி சிந்திய நகருக்கு ஜயோ கேடு! விறகுகளை நானும் உயரமாய் அடுக்குவேன்.

எனவே விறகுக் கட்டைகளை மிகுதியாக அடுக்கு: நெருப்பு மூட்டி இறைச்சியை நன்கு வேகவை: நறுமணப் பொருள்களையும் கலந்துவிடு: எலும்புகளும் கரியட்டும்.

பின்னர், வெறுமையான கொப்பரையை நெருப்புக் கட்டைகள் மேல் வை: களிம்பு காய்ந்து உருகும்வரை அது சூடேறட்டும்: அதன் அழுக்கு கரைந்து போகட்டும்: அதைப் பிடித்திருந்த துருவும் நீங்கட்டும்.

அனைத்து முயற்சிகளையும் அது வீணடித்துவிட்டது. அதன் திண்மையான துரு நெருப்பினாலும் அகலவேயில்லை.

உன்னுடைய துரு காம வெறியாகும். ஏனெனில், நான் உன்னைத் பய்மைத் படுத்த விழைந்தேன். ஆனால் நீ உன் அழுக்கினின்று பய்மையாகவில்லை. உனக்கெதிரான என் சினம் தணியுமட்டும் நீ பய்மையாகப் போவதில்லை.

ஆண்டவராகிய நானே உரைத்தேன்: நான் செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. பின்வாங்க மாட்டேன். இரக்கம் காட்ட மாட்டேன்: மனம் மாறமாட்டேன். உன் நடத்தைக்கு ஏற்பவும் நீ தீர்ப்பிடப்படுவாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! உன் கண்களுக்கு இன்பம் தருவதை உன்னிடமிருந்து ஒரே நொடியில் எடுத்துவிடப்போகிறேன். ஆனால் நீ புலம்பவோ, அழவோ, கண்ணீர் சிந்தவோ கூடாது.

மெதுவாய்ப் பெருமூச்சுவிடு! இறந்தோர்க்காய்ப் புலம்பாதே! உன் தலைப்பாகையைக் கட்டிக்கொள்! காலில் மிதியடியை அணிந்துகொள்! உன் வாயை மூடிக்கொள்ளாதே! இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணாதே!

நான் மக்களிடம் காலையில் உரையாடினேன். மாலையில் என் மனைவி இறந்துவிட்டாள். மறுநாள் காலையில் ஆண்டவர் கட்டளையிட்டதைச் செய்தேன்.

அப்போது மக்கள் என்னிடம், நீர் செய்வதன் பொருள் என்னவென்று எங்களுக்குச் சொல்ல மாட்டீரோ? என்று கேட்டனர்.

எனவே, நான் அவர்களுக்குச் சொன்னது: ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் வலிமையின் பெருமையும், கண்களின் இன்பமும், இதயத்தின் விருப்பமுமாகிய என் பயகத்தை நான் தீட்டுப்படுத்துவேன்: நீங்கள் விட்டுச்சென்ற ஆண் மக்களும் பெண் மக்களும் வாளால் மடிவர்.

நான் செய்தது போல் நீங்களும் செய்வீர்கள்: நீங்களும் உங்கள் வாயை மூடிக்கொள்ள மாட்டீர்கள்: இழவு கொண்டாடுவோரின் உணவை உண்ணவும் மாட்டீர்கள்.

தலைப்பாகையை உங்கள் தலையில் வைத்திருப்பீர்கள். கால்களில் மிதியடிகள் இருக்கும். நீங்கள் புலம்பவோ அழவோ மாட்டீர்கள். ஆனால் உங்கள் குற்றப்பழி குறித்துத் தளர்வுற்று உங்களிடையே புலம்பிக் கொள்வீர்கள்.

இவ்வாறு எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான். அவன் செய்ததுபோல் நீங்களும் செய்வீர்கள். இவை நடக்கையில் நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.

மானிடா! நான் அவர்களிடமிருந்து அவர்களுடைய வலிமை, மகிழ்ச்சி, மாட்சி, கண்களின் இன்பம், இதயத்தின் விருப்பம் ஆகியவற்றையும் அவர்களுடைய ஆண்மக்கள் பெண்மக்கள் யாவரையும் என்று எடுத்துக்கொள்கிறேனோ,

அன்று அழிவுக்குத் தப்பியவன் ஒருவன் ஓடிவந்து இச்செய்தியை உனக்குச் சொல்வான்.

அப்போது உன் வாய் திறக்கப்படும். தப்பி வந்தவனிடம் நீ பேசுவாய். மெளனமாய் இருக்கமாட்டாய். இவ்வாறு நீ அவர்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பாய். நானே கடவுள் என்பதை அவர்களும் அறிந்து கொள்வார்கள்.

அதிகாரம் 25.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! அம்மோனியருக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி அவர்களுக்கு எதிராய் இறைவாக்குரை.

அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். அவர் கூறுவது இதுவே: நீங்கள் எனது பயகம் தீட்டுப்படுத்தப்பட்டபோதும், இஸ்ரயேல் நாடு பாழாக்கப்பட்டபோதும் யூதாவின் வீட்டார் சிறைப்பிடிக்கப்பட்டபோதும் ஆகா என்று கூறி அக்களித்தீர்கள்.

எனவே உங்களைக் கீழ்த்திசையினருக்கு உரிமையாக ஒப்புவிக்கப்போகிறேன். அவர்கள் உங்கள் நடுவே பாளையம் அமைப்பார்கள்: கூடாரங்கள் அடிப்பார்கள்: உங்கள் மரங்களின் கனிகளை உண்பார்கள்: உங்கள் மந்தையின் பாலைப் பருகுவார்கள்.

இராபாவை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும், அம்மோனை மந்தையின் கிடையாகவும் மாற்றுவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இஸ்ரயேல் நாட்டுக்கு எதிராக நீங்கள் கைகொட்டிக் குதித்து வன்மனத்துடன் மகிழ்ந்தீர்கள்.

எனவே நான் என் கைகளை உங்களுக்கு எதிராய் ஓங்கி உங்களை வேற்றினத்தாருக்குக் கொள்ளைப் பொருளாய் ஒப்புவிப்பேன். உங்களை மக்களினங்களினின்று பிரித்து, நாடுகளிடையே இல்லாதபடி பூண்டோடு அழிப்பேன். அப்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மோவாயும் சேயிரும், இதோ! யூதா வீட்டார் மற்ற மக்களினங்களைப் போலவே உள்ளனர் எனக் கூறினர்.

எனவே, மோவாபின் மலை வாயிலைத் திறப்பேன்: அதன் அணிகலனாகவும் எல்லையாகவும் உள்ள பெத்தசிமோத்து, பாகால்மெகோன், கிரியத்தாயிம் ஆகியவற்றை அழிப்பேன்.

மோவாபை அம்மோனுடன் சேர்த்து, கீழை நாட்டினர்க்கு உரிமையாகக் கொடுப்பேன். அது மக்களினங்களிடையே நினைவுகூரப்பட மாட்டாது.

மோவாபின் மேல் தண்டனையை வருவிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அது அறிந்து கொள்ளும்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: யூதா வீட்டாரை ஏதோம் பழிதீர்த்து அதன்மூலம் குற்றப் பழிக்குள்ளானது.

எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் ஏதோமுக்கு எதிராய் என் கைகளை ஓங்கி, அதன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்: அதைப் பாழாக்குவேன். தேமானிலிருந்து தெதான் வரை மக்கள் வாளால் வீழ்வர்.

என் மக்களாகிய இஸ்ரயேலரின் கையால் ஏதோமைப் பழிவாங்குவேன். அவர்களும் என் சினத்திற்கும் சீற்றத்திற்கும் தக்கவாறு ஏதோமுக்குச் செய்வார்கள். அது என் பழிவாங்குதலை உணர்ந்து கொள்ளும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: பெலிஸ்தியர் பழிவாங்குமாறு இதயத்தில் பகை உணர்வுடன் செயல்பட்டனர். பழைய பகையை மனத்தில் வைத்து யூதாவை அழிக்கத் தேடினர்.

எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: பெலிஸ்தியருக்கு எதிராக கைகளை ஓங்குகிறேன். கெரேத்தியரைக் கொன்று, கடற்கரை ஊர்களில் எஞ்சியவற்றையெல்லாம் அழிப்பேன்.

வன்மையாய் அவர்களைப் பழிவாங்கி, என் சீற்றத்தால் அவர்களைத் தண்டிப்பேன். அவ்வாறு அவர்களைப் பழிவாங்குகையில், நானே ஆண்டவர் என அவர்கள் அறிந்து கொள்வர்.

அதிகாரம் 26.

பதினோராம் ஆண்டில், மாதத்தின் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! எருசலேமைக் குறித்து தீர் நகரம் கூறியது: ஆகா! நாடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. அந்நகரம் எனக்குத் திறந்துள்ளது. அது அழிவில் வீழ்ந் துகிடப்பதால் நான் வளமடைவேன்.

எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: தீர் நகரே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்: கடல் அலைகள் எழும்புவதுபோல் உனக்கு எதிராகப் பல மக்களினங்கள் எழும்பும்படி செய்வேன்.

அவர்கள் தீர் நகரின் மதில்களை அழிப்பர்: அதன் காவல் மாடங்களை இடித்துத் தள்ளுவர்: இடிபாடுகளும் அதில் இராதபடி வெறும் கற்பாறையாகத் தோன்றச் செய்வேன்.

கடல் நடுவே வலைகாயும் திட்டாய் அது மாறும்: ஏனெனில் நானே உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். எல்லா மக்களினங்களுக்கும் கொள்ளைப் பொருளாகும் அந்நகர்.

உள் நாட்டில் உள்ள அதன் புற நகர்கள்வாளால் அழிக்கப்படும்: அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ வடக்கிலுள்ள மன்னரின் மன்னனாம் பாபிலோனின் மன்னன் நெபுகத் னேசரைக் குதிரைகளோடும் தேர்களோடும் குதிரை வீரர்களோடும் பெரிய படைகளோடும் தீர் நகருக்கு எதிராக வரச் செய்வேன்.

உள் நாட்டிலுள்ள உன் புறநகர்களை அவன் வாளால் வீழ்த்துவான்: உனக்கெதிராய் மண்மேடு எழுப்பி உன் மதில்களுக்கு எதிராய் முற்றுகை அரண் அமைத்து உனக்கெதிராய்த் தன் கேடயங்களை உயர்த்துவான்.

அரண்தகர் பொறிகளை உன் மதில்களுக்கு எதிராய்த் திருப்பி, உன் காவல் மாடங்களைப் படைக் கலன்களால் நொறுக்குவான்.

அவனுடைய குதிரைகள் மிகுதியானவை: எனவே அவை கிளப்பும் புழுதி உன்னை மூடும்: இடித்துத் திறக்கப்பட்ட நகரில் எளிதாய் நுழைவதுபோல் அவன் உன் நகரில் நுழைகையில், குதிரைகளும் வண்டிகளும் தேர்களும் எழுப்பும் பேரொலியால் உன் மதில்கள் அதிரும்.

குதிரைகள் குளம்புகளால் உன் தெருக்களை அவன் மிதிப்பான்: வாளால் உன் மக்களைக் கொல்வான்: வலிமையான உன் பண்கள் தரையில் வீழும்.

அவர்கள் உன் செல்வத்தைக் கொள்ளையடித்து உன் வாணிபச் சரக்கைப் பறித்துக் கொண்டுபோவர்: உன் மதில்களை இடிப்பர்: உன் அழகிய வீடுகளை அழிப்பர்: உன் கற்களையும் மரங்களையும் இடிபாடுகளையும் கடலில் எறிவர்.

உன் பாடலின் ஒலியை நிறுத்திவிடுவேன்: இனிமேல் உன் யாழோசை கேட்காது.

உன்னை ஒரு வெறுமையான பாறையாக்குவேன்: நீயோ வலைகாயும் திட்டாவாய்: ஒருபோதும் நீ திரும்பக் கட்டியெழுப்பப்பட மாட்டாய்: ஏனெனில், ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

தலைவராகிய ஆண்டவர் தீர்நகருக்குக் கூறுவது இதுவே: நீ பேரொலியுடன் வீழ்ச்சியுறுகையில், உன் மக்கள் காயமுற்று ஓலமிடுகையில், அவர்கள் உன் நடுவே கொல்லப்படுகையில், கடற்கரை நகர்கள் அதிராவோ?

அப்போது, கடற்கரைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் அரியணையை விட்டிறங்கித் தங்கள் உயர்ந்த ஆடைகளையும் பூப் பின்னல் ஆடைகளையும் அகற்றுவர்: திகிலடைந்தவர்களாய்த் தரையில் அமர்வர்: ஒவ்வொரு நொடியும் உன்னைக் கண்டு மருண்டு நடுங்குவர்.

அப்போது உன்னைக் குறித்து இரங்கற்பா ஒன்றுபாடி உன்னிடம் சொல்வர்: சீர்மிகு மாநகரே! நெய்தல்நில மாந்தரால் நிறைந்தவளே! மாகடலில் வலிமையோடு விளங்கினையே! நீயும் உன்னில் வாழ் மக்களும் அடுத்திருந்த அனைவர்க்கும் பேரச்சம் விளைவித்தீர்! அந்தோ! என்னே உன் வீழ்ச்சி!

இப்போது, உன் வீழ்ச்சியில் கடற்கரை நகர்கள் நடுங்குகின்றன: உன் அழிவில் தீவுகள் திகிலுறுகின்றன.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மக்கள் குடியேறாத நகர்போல் அழிந்த நகராக நான் உன்னை மாற்றுகையில், ஆழ்கடலை உன்மேல் கொண்டு வருகையில், அதன் வெள்ளம் உன்னை மோதி மூடுகையில்,

நான் உன்னைப் பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு இறக்கி, படுகுழியில் இருக்கும் மறக்கப்பட்டாரோடு சேர்ப்பேன். கீழுலகில் உன்னை இருக்க வைப்பேன். பழங்கால இடிபாடுகள் போன்ற படுகுழிக்குப் போகிறவர்களுடன் நீ இருப்பாய். நீ திரும்பி வரமாட்டாய்: வாழ்வோர் நாட்டில் உன் இடத்தை மீண்டும் பிடிக்க மாட்டாய்.

உன்னை நடுங்குதற்குரிய முடிவுக்குக் கொண்டு வருவேன்: நீ இனி இருக்கமாட்டாய். உன்னைத் தேடுவார்கள்: ஆனால் நீ காணப்படமாட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 27.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! தீர் நகர் குறித்து இரங்கற்பா ஒன்று பாடு.

கடற்கரைத் துறையில் இருந்து கொண்டு பல்வேறு கடற்கரை மக்களுடன் வாணிபம் செய்கின்ற தீர் நகருக்குச் சொல்: தீர் நகரே! நான் அழகில் சிறந்தவள் என நீ சொல்லிக்கொள்கின்றாய்.

கடலின் தொலைவிடத்தை உன் எல்லைகள் எட்டும். உன்னைக் கட்டினோர் உன் அழகை நிறைவு செய்தனர்.

செனீரிலிருந்து வந்த தேவதாரு மரங்களால் உனக்குப் பலகைகள் செய்தனர்: லெபனோனின் கேதுரு மரத்தால் உனக்குப் பாய்மரம் அமைத்தனர்.

பாசானிலிருந்து கொண்டுவந்த கருவாலி மரங்களால் துடுப்புகள் செய்தனர்: கித்திம் தீவுகளின் சவுக்கு மரங்களால் உன் மேல்தளம் கட்டி அதில் தந்தங்களை இழைத்தனர்.

எகிப்தியப் பூப்பின்னல் பட்டுத்துணி உன் பாய்மரக் கொடியாயிற்று: எலிசா தீவின் நீலத்துணியும் சிவப்புத்துணியும் விதானமாயின.

சீதோன், அர்வாத்து குடிமக்கள் உனக்குத் தண்டுவலிப்போர் ஆயினர்: தீர் நகரே! உன் திறமைமிக்க ஆடவர் உன்னிடம் இருந்தனர்: அவர்களே உன் மாலுமிகள் ஆயினர்.

கேபால் நகரின் மூத்த கைவினைஞர் பழுது பார்க்கும் பணிபுரிந்தனர்: கடலிலுள்ள எல்லா மரக்கலங்களும் அதன் மாலுமிகளும் உன் வாணிபப் பெருக்கில் ஆர்வம் கொண்டனர்.

பாரசீகர்? ழதியர், பூத்தியர் முதலியோர் உன் படையில் வீரராய்ச் சேவை செய்தனர். உன் மதில்களில் அவர்கள் தங்கள் கேடயங்களையும், தலைச் சீராக்களையும் தொங்கவிட்டு உனக்குப் பெருமை சேர்த்தனர்.

அர்வாதியரும், ஏலேக்கியரும் உன் மதில்மேல் எப்பக்கமும் நின்றனர். கம்மாதியர் உன் காவல்மாடங்களில் நின்றனர்: தங்கள் கேடயங்களை உன் மதில்களில் எப்பக்கமும் தொங்கவிட்டு உன் அழகுக்கு அழகு சேர்த்தனர்.

உன் பெருஞ்சொத்து காரணமாய் தர்சீசு உன்னோடு வாணிபம் செய்தது. வெள்ளி, இரும்பு, வெள்ளீயம், கா¡£யம் ஆகியவற்றை உன் வாணிபப் பொருள்களாய்ப் பண்டம் மாற்றினர்.

யாவானும் பபாலும் மெசேக்கும் உன்னோடு வாணிபம் செய்தன. உன் பொருள்களுக்காய் அடிமைகளையும் வெண்கலத்தையும் பண்டம் மாற்றினர்.

உன் வணிகப் பொருள்களுக்காய்ப் பெத்தொகர்மாவினர் குதிரைகளையும் போர்க் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் பண்டம் மாற்றினர்.

தெதான் மக்கள் உன்னுடன் வாணிபம் செய்தனர். பல கடற்கரை நகர் மக்கள் உன் வாடிக்கையாளர் ஆயினர். அவர்கள் யானைத் தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் உன் பொருள்களுக்கு ஈடாய்த் தந்தனர்.

சிரியர் உன் மிகுதியான பொருள்களை முன்னிட்டு உன்னுடன் வாணிபம் செய்தனர். அவர்கள் சிவப்புக் கற்கள், சிவப்புப் பட்டாடைகள், பூப்பின்னலாடைகள், விலையுயர்ந்த நார்ப்பட்டு ஆடைகள், பவளங்கள், பளிங்குக் கற்கள் யாவற்றையும் உன் சந்தைக்குக் கொண்டு வந்தனர்.

யூதாவும், இஸ்ரயேலும் உன்னுடன் வாணிபம் செய்தன. உன் பொருள்களுக்காய் மின்னித்து, பன்னாக்கு ஆகிய ஊர்களின் கோதுமை, தைலங்கள், தேன், எண்ணெய், நறுமணப் பொருள்கள் ஆகியவற்றைப் பண்டம் மாற்றினர்.

தமஸ்கு நகரினர் உன்னுடைய மிகுதியான செல்வத்திற்காகவும் பலவகைப் பொருள்களுக்காகவும் உன்னுடன் வாணிபம் செய்து, எல்போனின் திராட்சை இரசத்தையும் சகாரின் கம்பளியையும் பண்டம் மாற்றினர்.

தாணியரும் ஊசாவிலுள்ள கிரேக்கரும் உன்னுடன் வாணிபம் செய்தனர். அடித்த இரும்பு, இலவங்கம், வசம்பு ஆகியவற்றைப் பண்டம் மாற்றினர்.

தெதான் நாட்டினர் குதிரையில் சவாரி செய்ய உதவும் சேணங்கள் கொண்டு வந்து உன்னிடம் வாணிபம் செய்தனர்.

உன் வாடிக்கையாளரான அரேபியா, கேதார் ஆகிய நாட்டு மன்னர்கள் ஆட்டுக்குட்டிகளையும், கிடாய்களையும், வெள்ளாடுகளையும் கொண்டுவந்து உன்னுடன் வாணிபம் செய்தனர்.

சேபா மற்றும் இராமா ஆகிய நகர்களின் வணிகர்கள் உன்னுடன் வாணிபம் செய்தனர். அவர்கள் உன் பலவகைப் பொருள்களுக்காய் விலையுயர்ந்த நறுமணப் பொருள்களையும் இரத்தினக் கற்களையும் தங்கத்தையும் பண்டம் மாற்றினர்.

ஆரான், கன்னே, ஏதேன் நகரினரும், சேபா, அசூர், கில்மாது நாட்டினரும் உன்னுடன் வாணிபம் செய்தனர்.

அவர்கள் சிறந்த போர்வைகள், நீலப்பட்டாடைகள், பூப்பின்னலாடைகள், பல வண்ணக் கம்பளங்கள், நேர்த்தியாய்ப் பின்னிய கயிறுகள் ஆகியவற்றை உன் சந்தையில் கொண்டுவந்து பண்டம் மாற்றினர்.

தர்சீசு நகர்க் கப்பல்கள் உன் பொருள்களை ஏற்றிச் செல்கின்றன: கடல் நடுவே மிகுந்த சரக்கால் சுமத்தப்பட்டுள்ளாய்!

தண்டு வலிப்போர் உன்னை ஆழ்கடலில் கொண்டு செல்கின்றனர்: ஆனால் கீழைக்காற்று கடலின் நடுவே உன்னை உடைத்துவிடும்.

உன் கப்பல் உடையும் நாளில் உன் செல்வமும் வணிகப் பொருள்களும் உன் கடலோடிகளும் மாலுமிகளும் பழுதுபார்ப்போரும் வணிகரும் உன் போர்வீரர் யாவரும், கப்பலில் இருக்கும் எல்லாரும் ஆழ்கடலில் மூழ்கிப் போவர்.

உன் மாலுமிகள் ஓலமிடுகையில், கடற்கரை நாடு அதிரும்.

தண்டு வலிப்போர் அனைவரும் கப்பல்களைக் கைவிட்டுவிடுவர்: கடலோடிகளும் எல்லா மாலுமிகளும் கடற்கரையில் வந்து நிற்பர்.

உரத்த குரலெழுப்பி, உன்னைக் குறித்துக் கசந்தழுவர்: புழுதியைத் தங்கள் தலைமேல் வாரிப்போடுவர்: சாம்பலில் புரண்டழுவர்.

உன் பொருட்டுத் தங்கள் தலைகளை மழித்துக்கொள்வர்: சாக்கு உடையை உடுத்திக் கொள்வர்: உனக்காக உளம் நொறுங்கி அழுவர்: மனங்கசந்து புலம்புவர்.

உனக்காக அழுது புலம்புகையில், உன்னைக் குறித்து இரங்கற்பா ஒன்று பாடுவர்: கடல்களால் மூழ்கடிக்கப்பட்ட தீருக்கு நிகரான நகரேது? எனப் பாடுவர்.

உன் வணிகப் பொருள்கள் கடல் கடந்து செல்கையில், பல்வேறு நாட்டினரை நிறைவு செய்தாய்: உன் பெரும் செல்வத்தாலும் வணிகப் பொருள்களாலும் மண்ணுலகின் மன்னர்களைச் செல்வர் ஆக்கினாய்.

இப்போது நீயோ கடலால் நொறுங்கிவிட்டாய்: கடலின் ஆழத்தில் அமிழ்ந்து விட்டாய்: உன் பொருள்களும் உன் நடுவில் இருந்த மாலுமிகளும் கடலுக்குள் மூழ்கிவிட்டனர்.

கடற்கரையில் வாழும் அனைவரும் உன்னைக் குறித்துத் திகைத்து நிற்கின்றனர்: அவர்களின் மன்னர்கள் பேரச்சம் கொள்கின்றனர்: அவர்களின் முகமோ அச்சத்தால் உருக்குலைந்துள்ளது.

மக்களினங்களின் வணிகர்கள் உன்னைப் பழித்துரைக்கின்றனர்: நடுங்கற்குரியு முடிவுக்கு வந்துள்ளாய்! இனி ஒரு நாளும் நீ வாழவே மாட்டாய்!

அதிகாரம் 28.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின் செருக்கில், நானே கடவுள்: நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன் என்று சொல்கின்றாய், ஆனால் நீ கடவுளைப்போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல: மனிதனே!

தானியேலை விட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை!

உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்: உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய்.

உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்: உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது.

ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கடவுளைப்போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால்,

மக்களினங்களில் மிகவும் கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்: அவர்கள் உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்: உன் பெருமையைக் குலைப்பர்.

படு குழியில் தள்ளுவர் உன்னை: கடல் நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே!

அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் நானே கடவுள் என்று சொல்வாயே? உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய்.

விருத்தசேதனம் செய்யப் படாதவனைப்போல் அன்னியர் கையால் நீ சாவாய். நானே உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! தீர் நகரின் மன்னனைக் குறித்து, இரங்கற்பா ஒன்று பாடு. தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீ நிறைவின் மாதிரியாகவும் ஞானத்தின் நிறைவாகவும் அழகின் முழுமையாகவும் இருந்தாய்.

கடவுளின் தோட்டமாகிய ஏதேனில் இருந்தாய்! விலையுயர்ந்த கற்கள் உன்னை அழகுபடுத்தின! பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்கு, கோமேதகம், படிகச் பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை அணிந்திருப்பாய். பொன்னாடை உன் அழகை வெளிக்காட்டிற்று. நீ பிறந்த அன்றே இவை படைக்கப்பட்டுத் தயாரிக்கப்பெற்றன.

காவல் காக்கும் கெருபுபோல் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்: கடவுளின் பய மலையில் நீ இருந்தாய்: ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய்.

நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து உன்னில் கயமை காணப்பட்ட நாள்வரை உன் நடத்தையில் மாசின்றி இருந்தாய்.

பரந்த உன் வாணிபத்தால் வன்முறை நிறைந்தது உன்னில்: பாவம் செய்தாய் நீயே! எனவே, வெறுப்புடன் உன்னைக் கடவுளின் மலையினின்று வெளியேற்றினேன்: ஓ! காவல்காக்கும் கெருபே! உன்னை ஒளிவீசும் கற்கள் நடுவினின்று வெளியே தள்ளினேன்.

உன் அழகின் காரணமாய் உன் இதயம் செருக்குற்றது: உன் மாட்சியின் காரணமாய் உன் ஞானத்தைக் கெடுத்துக் கொண்டாய்: எனவே நான் உன்னைத் தரையில் தள்ளிவிட்டேன்: மன்னர்கள் முன்னே உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்.

உன் மிகுதியான பாவங்களாலும் நேர்மையற்ற வாணிபத்தாலும் உன் திருத்தலங்களைத் தீட்டுப்படுத்தினாய்: எனவே உன் நடுவினின்று நெருப்பு வரச்செய்தேன். உன்னைப் பார்த்தோர் கண்முன்னே முற்றிலும் உன்னைத் தரையில் சாம்பலாக்கினேன்.

உன்னைத் தெரிந்த எல்லா நாடுகளும் உன்னைக் கண்டு மருண்டு திகிலுறுகின்றன. நடுங்கற்குரிய முடிவுக்கு வந்து விட்டாய் நீ: இனிமேல் நீ இருக்கமாட்டாய்.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! சீதோனுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி அதற்கெதிராய் இறைவாக்காகச் சொல்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: சீதோனே, நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்: உன் நடுவில் என் மாட்சியை வெளிப்படுத்தும்போது, நான் உன்மீது தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றும்போது, உன் நடுவில் என் பய்மையைக் காண்பிக்கும்போது, நானே ஆண்டவர் என உன்னிலுள்ளோர் அறிந்து கொள்வர்.

உன்னிடத்தில் கொள்ளை நோய் வரச்செய்து, உன் தெருக்களில் குருதி ஓடச் செய்வேன். கொலை செய்யப்பட்டோர் உன் நடுவில் விழுந்துகிடப்பர்: உனக்கு எதிராய் எப்பக்கமும் வாள் இருக்கும்: அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வர்.

இஸ்ரயேல் நாட்டினர்க்கு அவர்களை வன்னெஞ்சுடன் நடத்திய அண்டை நாட்டினர் இனிமேல் காலில் குத்தும் முள்ளாகவும் தைத்து வலிகொடுக்கும் நெரிஞ்சிலாகவும் இருக்கமாட்டார். அப்போர், அவர்கள் நானே தலைவராகிய ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வர்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டினரை அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்க்கையில் எல்லா மக்களினங்கள் நடுவிலும் நான் என் பய்மையைக் காண்பிப்பேன். நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்த அவர்களின் சொந்த நாட்டில் அப்போது வாழ்வர்.

அவர்கள் அங்கே அச்சமின்றிக் குடியிருப்பர்: வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைப்பர். அவர்களை வன்னெஞ்சுடன் நடத்திய அண்டை நாட்டினர் அனைவர் மீதும் தண்டனைத் தீர்ப்புகளை நான் நிறைவேற்றும்போது, அவர்கள் மட்டும் அச்சமின்றி வாழ்வர். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வர்.

அதிகாரம் 29.

பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பன்னிரண்டாம் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! உன் முகத்தை எகிப்திய மன்னன் பார்வோனுக்கு நேராகத் திருப்பி அவனுக்கு எதிராகவும் அனைத்து எகிப்துக்கு எதிராகவும் இறைவாக்குரை.

அவனிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: எகிப்து மன்னனாகிய பார்வோனே! நான் உனக்கு எதிராய் இருக்கின்றேன்: உன் ஆறுகளின் நடுவே வாழும் பெரிய முதலை நீ! நைல் என்னுடையது: நானே அதை உருவாக்கிக்கொண்டேன் என்கிறாய் நீ!

ஆனால், நான் உன் வாயில் பண்டில்களை மாட் டி உன் ஆறுகளின் மீன்கள் யாவும் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன்: உன்னையும் உன் செதில்களில் ஒட்டியுள்ள மீன்களையும் உன் ஆறுகளினின்று வெளியே இழுத்துப் போடுவேன்.

உன்னையும் உன் ஆறுகளின் மீன்களையும் பாலை நிலத்தில் விட்டுவிடுவேன்: உலர்ந்த தரையில் விழுந்து மடிவாய் நீ: உன்னைச் சேகரிக்கவோ பொறுக்கி எடுக்கவோ எவரும் இரார்: காட்டு விலங்குகளுக்கும் வானத்துப் பறவைகளுக்கும் உன்னை இரையாய்த் தருவேன்.

அப்போது எகிப்தில் வாழும் யாவரும் நானே ஆண்டவர் என அறிந்து கொள்வர்.

இஸ்ரயேல் வீட்டாருக்கு நாணற் கோலாய் இருந்தாய் நீ: அவர்கள் உன்னைப் பற்றிப் பிடித்தபோது நீ முறித்தாய்: அவர்கள் தோள்களைக் கிழித்தாய்: உன்மேல் அவர்கள் சாய்ந்தபோது நீ ஒடிந்தாய்: அவர்கள் இடுப்பு நொறுங்கிற்று.

எனவே தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உனக்கு எதிராய் ஒரு வாளைக் கொண்டுவந்து உன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்.

எகிப்து நாடு, பாழடைந்த பாலைநிலமாகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். ஏனெனில் நைல் என்னுடையது, நானே அதை உருவாக்கிக் கொண்டேன் என்று உரைத்தாய்.

எனவே, நான் உனக்கெதிராகவும் உன் ஆறுகளுக்கு எதிராகவும் இருக்கிறேன். மிக்தோல் முதல் சீனிம் வரை-கூசு எல்லைப் பகுதிவரை-எகிப்து நாட்டைப் பாழடைந்த பாலைநிலமாக மாற்றுவேன்.

ஆள் நடமாட்டமோ கால்நடை நடமாட்டமோ அதில் இராது: நாற்பது ஆண்டுகள் யாரும் அங்கே குடியிரார்.

அழிந்த நாடுகளில் ஒன்றாக எகிப்து நாட்டை மாற்றுவேன். நாற்பது ஆண்டுகள் அதன் நகர்கள், அழிந்த நகர்களிடையே பாழடைந்து கிடக்கும். எகிப்தியரை மக்களினங்களிடையே சிதறடித்து, நாடுகளிடையே கலந்தொழியச் செய்வேன்.

ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நாற்பதாண்டுகள் முடிந்தபின் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்ப்பேன்.

எகிப்தின் செல்வங்களை அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களை அவர்களின் முன்னோர் நாடாகிய பத்ரோசுக்குக் கொண்டு சேர்ப்பேன்.

அங்கே எல்லா அரசுகளையும் விடச் சிறிய அரசாய் அது இருக்கும். மற்ற நாடுகளைவிட ஒருபோதும் தன்னை உயர்த்திக் கொள்ளாது. நாடுகளை ஒருபோதும் அது ஆட்சி செய்ய இயலாதவாறு அதை மிகவும் வலுவிழக்கச் செய்வேன்.

இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்து ஒருபோதும் நம்பிக்கையின் அடிப்படையாய் இராமல், அதனிடம் அவர்கள் உதவி கேட்ட பாவத்தின் நினைவாக மட்டுமே இருக்கும். அப்போது நானே தலைவராகிய ஆண்டவர் என அறிந்து கொள்வர்.

இருபத்து ஏழாம் ஆண்டு, முதல் மாதம், முதல் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் தீர் நகரை முற்றுகையிடுகையில் தன் படைகளுடன் வருந்தி முயன்றான்: தலைகள் யாவும் மொட்டையடிக்கப்பட்டன: தோள்கள் யாவும் புண்ணாய்ப் போயின. ஆயினும் தீர் நகருக்கு எதிராக அவனும் அவன் படைகளும் செய்த முற்றுகையில் அவர்களுக்கு யாதொரு கைம்மாறும் கிட்டாமற் போயிற்று.

எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் எகிப்தை பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசருக்குக் கொடுக்கப் போகிறேன். அவன் அதன் செல்வத்தைக் கொள்ளையிட்டு வாரிக் கொண்டு போவான். அது அவன் படைகளுக்குக் கூலியாக அமையும்.

அவனுடைய முயற்சிகளுக்குக் கைம்மாறாய் நான் எகிப்தை அவனுக்குக் கொடுப்பேன். ஏனெனில், அவனும் அவன் படைகளும் அதை எனக்காகவே செய்தனர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அந்நாளில் இஸ்ரயேல் வீட்டாருக்காக ஒரு கொம்பு முளைக்கச் செய்வேன். அவர்கள் நடுவில் உன்னைப் பேச வைப்பேன். அப்போது, நானே ஆண்டவர் என அறிந்து கொள்வர்.

அதிகாரம் 30.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! இறைவாக்காகச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஜயோ! துன்பத்தின் நாள் வருகின்றது என்று அலறுங்கள்:

ஏனெனில் அருகில் உள்ளது அந்த நாள்: ஆண்டவருக்குரிய அந்நாள் அண்மையில் உள்ளது: அது மேகத்தின் நாள்: வேற்றினத்தாருக்கு அழிவின் நாள்.

எகிப்திற்கு எதிராய் ஒருவாள் வரும்: கூசு பகுதியில் திகைப்பு மேலோங்கும்: எகிப்தில் கொல்லப்பட்டோர் வீழ்கையில் அதன் செல்வங்கள் வாரிக்கொண்டு செல்லப்படும்: அதன் அடித்தளங்கள் அழிந்துபோகும்.

எகிப்துடன் கூசு, பூத்து, ழது, அனைத்து அரேபியா, லிபியா மற்றும் நான் உடன்படிக்கை செய்து கொண்ட நாட்டின் மக்கள் யாவரும் வாளால் வீழ்வர்.

ஆண்டவர் கூறுவது இதுவே: எகிப்தின் கூட்டு நாடுகள் வீழும்: அதன் பெருமைக்குரிய வலிமை தோல்வியுறும்: மிக்தோல் முதல் சீனிம் வரையிலுள்ள பகுதிக்குள் எல்லாரும் வாளால் வீழ்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அவர்கள் பாழாக்கப்பட்ட நாடுகளுக்குள் பாழாகிக் கிடப்பர்: அவர்களின் நகரங்கள், அழிந்த நகரங்கள் நடுவே அழிந்து கிடக்கும்.

நான் எகிப்துக்குத் தீ வைத்து அதற்குத் துணையாயிருந்தோரை நொறுக்கும்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வர்.

அந்நாளில் கூசு மக்களின் மனவுறுதியைக் குலைத்த நான் கப்பலில் பதரை அனுப்புவேன்: எகிப்தின் அழிவு நாளில் திகில் அவர்களை ஆட்கொள்ளும்: ஏனெனில் அந்நாள் உண்மையிலேயே வரப்போகின்றது.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசரின் கையால் எகிப்தின் செல்வத்தை அழிக்கப்போகின்றேன்.

மக்களினங்களில் மிகவும் வலிமை வாய்ந் த அவன் படைகளும் நாட்டை அழிக்கக் கொண்டு வரப்படும்: எகிப்திற்கு எதிராய் அவர்கள் வாளை உருவி, கொலையுண்டோரால் நாட்டை நிரப்புவர்.

ஆறுகளின் தண்ணீரை வற்றச் செய்து தீயோருக்கு நாட்டை விற்றுவிடுவேன். அன்னியர் துணையால் நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும் வெறுமையாக்குவேன். ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் சிலைகளை அழிப்பேன்: நோபில் இருக்கும் உருவங்களுக்கு முடிவுகட்டுவேன்: எகிப்தில் இனி மன்னன் இரான்: நாடு முழுவதும் அச்சத்தைப் பரப்புவேன்.

பத்ரோசு நாட்டை நான் பாழாக்குவேன்: சோவான் நகருக்கு நெருப்பு வைப்பேன்: நோ நகரின்மீது தண்டனை வரச் செய்வேன்.

எகிப்தின் அரணாய் இலங்கும் சீன்மீது என் சினத்தைக் கொட்டுவேன்: நோ நகரின் எண்ணற்ற மக்களை வெட்டி வீழ்த்துவேன்.

எகிப்துக்கு நெருப்பிடுவேன்: சீன் நகரம் துன்பத்தால் புலம்பும்: புயலினால் நோ அலைக்கழிக்கப்படும்: தீராத நெருக்கடியில் நோபு தவிக்கும்.

ஆவேன் மற்றும் பீபசேத்து நகர இளைஞர் வாளால் வீழ்வர்: அந்நகர்கள் அடிமைத்தனத்தில் உழலும்.

எகிப்தின் கொழுவை நான் முறிக்கையில், தெகபனகேசு நகரின் பகல் இரவாகும்: இறுமாப்புக்குரிய அதன் வலிமை அங்கே முடிவுக்குக் கொண்டு வரப்படும்: மேகங்களால் அது மூடப்படும்: சிறையிருப்புக்கு அதன் சிற்டிர்கள் செல்லும்.

இவ்வாறு நான் எகிப்தின் மீது தண்டனை வரச்செய்வேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வர்.

பதினொன்றாம் ஆண்டு, முதல் மாதத்தின் ஏழாம் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனின் கையை நான் முறித்து விட்டேன். ஆயினும், அது குணமாகும்படி கட்டுப்போடப்படவில்லை: வாளேந்தும் அளவுக்கு வலிமை பெறும்படி துணிகளால் சுற்றப்படவுமில்லை.

எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் எகிப்தின் மன்னன் பார்வோனுக்கு எதிராய் இருக்கிறேன். அவனுடைய இரு கைகளையும்-நலமான கையையும் ஏற்கெனவே ஒடிந்த கையையும்-முறித்து, அவன் கையினின்று வாளை விழச் செய்வேன்.

மக்களினங்களிடையேயும் நாடுகளிடையேயும் எகிப்தியரைச் சிதறுண்டு போகச் செய்வேன்.

பாபிலோன் மன்னனின் கைகளை வலுப்படுத்தி, என் வாளை அவன் கையில் கொடுப்பேன். ஆனால், பார்வோனின் கைகளையோ முறிப்பேன். அவன் பாபிலோன் மன்னனின் முன்னிலையில் படுகாயமுற்ற மனிதனாய்ப் புலம்புவான்.

நான் பாபிலோன் மன்னனின் கையில் வாளைக் கொடுத்து அதை அவன் எகிப்துக்கு எதிராய்ச் சுழற்றச் செய்வேன். அப்போது “நானே ஆண்டவர்“ என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

எகிப்தியரைப் பல்வேறு மக்களிடையேயும், நாடுகளிடையேயும் சிதறடிப்பேன். அப்போது “நானே ஆண்டவர்“ என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

அதிகாரம் 31.

பதினோராம் ஆண்டில், மூன்றாம் மாதத்தின் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனுக்கும் அவனுடைய மக்கள் திரளுக்கும் சொல்: மேன்மையில் உனக்கு நிகர் யார்?

இதோ! லெபனோனின் கேதுரு மரமாகிய அசீரியாவைப் பார்! அழகிய கிளைகளுடன், அடர்ந்த நிழலுடன், மிகுந்த உயரத்துடன் அது இலங்கிற்று: அதன் உச்சி மேகங்களை ஊடுருவிற்று.

தண்ணீர் அதனைத் தழைக்கச் செய்தது: ஆழ் ஊற்றுகள் அதனை உயர்ந்து வளரச் செய்தன: அவை தம் அருவிகளாக அதனைச் சுற்றி ஓடி கால்வாய்களாகக் காட்டின் எல்லா மரங்களுக்கும் நீர் பாய்ச்சின.

காட்டின் எல்லா மரங்களையும் விட அது ஓங்கி வளர்ந்தது: அதன் தளிர்கள் பெருகின: நீர் வளத்தால் கிளைகள் நீண்டன: கொப்புகள் மிகுந்தன.

வானத்துப் பறவைகள் எல்லாம் அதன் கிளைகளில் கூடுகள் கட்டின: காட்டு விலங்குகள் எல்லாம் கன்றுகள் ஈன்றன. அதன் நிழலில் பெரிய நாடுகள் எல்லாம் வாழ்வு கண்டன.

மிகுந்த நீரினுள் அதன் வேர்கள் சென்றதால், கிளைகள் தழைத்து அது அழகுத் தோற்றமிக்கதாய் இருந்தது.

கடவுளின் சோலையிலிருந்த கேதுரு மரங்களுக்கு அதற்குச் சமமான கிளைகள் இல்லை: அர்மோன் மரங்களுக்கு அதற்கு இணையான கொப்புகள் இல்லை: கடவுளின் சோலையிலிருந்த எந்த மரமும் அதைப்போன்று அழகுடன் இருந்ததில்லை.

அடர்ந்த கிளைகளால் நான் அதனை அழகுபடுத்தினேன்: கடவுளின் சோலையாகிய ஏதேன் தோட்டத்தின் மரங்களெல்லாம் அதன்மேல் பொறாமை கொண்டன.

எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அது உயர்ந்து வளர்ந்து தன் உச்சியை மேகங்களுக்குள் நுழைத்து, தன் உயரத்தைப் பற்றித் தன் இதயத்தில் செருக்குற்றது.

எனவே அதனை வேற்றினத்தாருள் வலிமைமிக்க ஒருவனிடம் ஒப்புவிப்பேன். அவன் அதன் தீச்செயலுக்குத் தக்கவாறு அதனை நடத்துவான். நானும் அதனைப் புறம்பாக்குவேன்.

மக்களினங்களில் மிகக் கொடியோரான அன்னியர் அதனை வெட்டி வீழ்த்திவிடுவர். மலைகளிலும் அனைத்துப் பள்ளத்தாக்குகளிலும் அதன் கிளைகள் விழுந்து கிடக்கும்: அதன் கொம்புகள் நாடெங்கிலுமுள்ள ஓடைகளில் முறிந்து கிடக்கும். மண்ணின் மக்களெல்லாம் அதன் நிழலை விட்டுப்பிரிந்து அதனைப் புறக்கணிப்பர்.

வீழ்ந்து கிடக்கும் அதன் மேல் வானத்துப் பறவைகள் எல்லாம் வந்து அடையும். அதன் கிளைகளுக்கிடையே காட்டு விலங்குகள் யாவும் உலவும்.

இதனால் நீர்நிலைகளுக்கருகில் இருக்கும் எம்மரமும் மிகுந்த உயரத்திற்கு வளராது: தன் உச்சியை மேகங்களுக்கிடையில் நுழைக்காது: நீர்க்காலை அடுத்த எம்மரமும் அவற்றை எட்டும் அளவுக்கு உயராது. ஏனெனில் அவையெல்லாம் பாதாளப் படுகுழிக்குச் செல்லும் மானிடருடன் அழிவுக்குக் குறிக்கப்பட்டுள்ளன.

எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: அந்த மரம் பாதாளத்திற்கு இறங்குகையில், ஆழ்நிலைகள் இழவின் அடையாளமாக அதனை மூடச் செய்வேன். அதன் ஆறுகளை நிறுத்தி, நீர்த்திரளுக்கு அணைபோடுவேன்: அதனை முன்னிட் டு லெபனோனை இருளால் மூடுவேன். காட்டு மரங்கள் எல்லாம் பட்டுப்போம்.

கீழே படுகுழிக்குள் செல்வோருடன் நான் அதனைப் பாதாளத்தினுள் தள்ளும்போது நாடுகள் நடுங்கும். நீர் நடுவே வளரும் ஏதேனின் அனைத்து மரங்களும், லெபனோனின் மேலானவையும் சிறந்தவையுமான மரங்களும் கீழுலகில் ஆறுதல் பெறும்.

அதன் நிழலில் வாழ்ந்த கூட்டுநாடுகள் அதனோடு சேர்ந்து வாளால் மடிந்தவர்களுடன் பாதாளத்தில் போய்ச்சேரும்.

மேன்மையிலும் பெருமையிலும் ஏதேனின் எந்த மரம் உனக்கு ஒப்பாகும்? ஆயினும், ஏதேனின் மரங்களுடன் சேர்ந்து நீயும் கீழுலகுக்குத் தள்ளப்படுவாய். விருத்தசேதனமில்லார் நடுவே, வாளால் மடிந்தாரோடு நீயும் கிடப்பாய். பார்வோனுக்கும் அவனது மக்கள் திரளுக்கும் நடக்கவிருப்பது இதுவே, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 32.

பன்னிரண்டாம் ஆண்டில், மாதத்தின் முதல் நாளில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனைக் குறித்து இரங்கற்பா ஒன்று பாடி, அவனிடம் சொல்: நாடுகளிடையே உன்னை ஒரு சிங்கம் என எண்ணுகின்றாய்! ஆனால், நீ நீர் வாழ் பெருவிலங்குபோல் இருக்கின் றாய்! ஆற்றினைச் சேறாக்குகின்றாய்! கால்களினால் நீரினைக் கலக்குகின்றாய்! ஆறுகளைக் குழப்புகின்றாய்.

எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: மாபெரும் மக்கள் கூட்டத்தைக் கொண்டு நான் என் வலையை உன்மீது வீசுவேன்: அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துவருவர்.

உன்னைத் தரையில், வெட்ட வெளியில், எறிந்து விடுவேன்: வானத்துப் பறவைகள் அனைத்தும் உன்மேல் வந்து அடையும்: மண்ணுலகின் விலங்குகள் அனைத்தும் உன்னை அடித்து விழுங்கும்.

உன் சதையை மலைகளின்மேல் வீசியெறிந்து, பள்ளத்தாக்குகளை உன் அழுகிய பிணத்தால் நிரப்புவேன்.

வழிந்தோடும் உன் இரத்தத்தால் மலைகள்வரை நிலத்தை நனைப்பேன்: நீரோடைகள் உன்னால் நிரம்பியிருக்கும்.

நான் உன்னை இல்லாமல் ஆக்கும்போது, வானங்களை நான் மூடுவேன்: அவற்றின் விண்மீன்களை இருளச் செய்வேன்: கதிரவனை மேகத்தால் மறைத்திடுவேன்: நிலாவும் அதன் ஒளியைக் கொடாது.

வானத்தின் ஒளி விளக்குகள் எல்லாம் உனக்கு இருண்டு போகச் செய்து, உன் நாட்டின்மீது இருள் கவியச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நீ அறியாத அன்னிய நாட்டினரிடையே நான் உனக்கு அழிவைக் கொண்டுவருகையில், பல மக்களினங்களின் இதயங்களை கலக்கமுறச் செய்வேன்.

பல்வேறு மக்களினங் களை உன்னைக் குறித்துத் திகிலடையச் செய்வேன். நான் என் வாளை அவர்களின் மன்னர்கள்முன் வீசுகையில், உன்னைக் குறித்து அவர்கள் நடுக்கமுறுவர். நீ வீழ்ச்சியுறும் நாளில், அவர்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த உயிர் குறித்து நடுங்குவர்.

ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: பாபிலோன் மன்னனின் வாள் உன்மீது பாயும்.

மக்களினங்களில் மிகக் கொடியவரான வலியோரின் வாள்களினால் உன் படைத்திரளை வீழ்ச்சியுறச் செய்வேன். அவர்கள் எகிப்தின் பெருமையைக் குலைத்து அதன் மக்கள்திரளை அழிப்பர்.

நீர்நிலைகளின் ஓரத்திலுள்ள அதன் கால்நடைகளை எல்லாம் நான் அழித்து விடுவேன். மனித காலடியோ குளம்போ அவற்றை இனிக் குழப்பாது.

அப்போது நான் நீர்நிலைகளைத் தெளியச் செய்து, அவற்றின் ஆறுகளை எண்ணெய் போல் ஓடச்செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

எகிப்திய நாட்டை நான் பாழாக்குவேன், அதன் நிலத்தினின்று, அதில் உள்ளது அனைத்தையும் பறித்திடுவேன்: அதில் வாழ்வோரை எல்லாம் அழித்திடுவேன். அப்போது, நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

இது புலம்பிப் பாடப்படவிருக்கும் ஓர் இரங்கற்பா, நாடுகளின் புதல்வியர் இதனைப் பாடிடுவர். எகிப்தையும் அதன் அனைத்து மக்கள் திரளையும் குறித்துப் பாடிடுவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதத்தின் பதினைந்தாம் நாளில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! எகிப்தின் மக்கள் திரளைக் குறித்து நீ ஓலமிடு: அதனையும் பெருமைமிகு நாடுகளின் புதல்வியரையும் படுகுழிக்குள் செல்கிறவர்களோடு கீழுலகுக்கு அனுப்பிவை.

அழகில் நீ யாரைவிட மிகுந்தவள்? நீ கீழிறங்கி, விருத்தசேதனம் இல்லாரோடு கிட.

வாளால் கொல்லப்படுவோரோடு எகிப்தின் மக்கள் வீழ்வர். இதோ! ஒரு வாள் அவர்களைக் கொல்ல உருவப்பட்டுள்ளது.

போரில் வலிமைமிக்கோர் பாதாளத்தின் நடுவினின்று எகிப்தியரையும் துணையாளரையும் குறித்து விருத்தசேதனமில்லார் வாளால் வெட்டுண்டுவர்களுடன் கிடக்கின்றனரே என்பர்.

அதோ அசீரியா கிடக்கின்றாள்! அவளுடன் அவளுடைய மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் கிடக்கின்றனர். அவர்கள் அனைவரும் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்களே. அவளைச் சுற்றி கல்லறைகள் கிடக்கின்றன.

அவர்களின் கல்லறைகள் படுகுழியின் ஆழத்தில் அமைந்துள்ளன: அவளுடைய மக்கள் அவளின் கல்லறையைச் சுற்றிக் கிடக்கின்றனர். அவர்கள் அனைவருமே வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்களே: வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள்.

அதோ, ஏலாம் கிடக்கின்றாள்! அவளுடைய கல்லறையைச் சுற்றிலும் அவளுடைய மக்கள் கூட்டத்தார் கிடக்கின்றனர். அவர்கள் அனைவரும் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்கள்: விருத்தசேதனமில்லாமல் கீழுலகுக்குள் சென்றவர்கள்: வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள். படுகுழிக்குள் செல்வோருடன் சேர்ந்து அவர்களும் தங்கள் மானக்கேட்டைச் சுமக்கின்றார்கள்.

வெட்டுண்டோர் நடுவே அவளுடைய படுக்கையை அமைந்துள்ளது. அவளுடைய மக்கள் திரள் அவளின் கல்லறையைச் சுற்றிக் கிடக்கின்றன: அவர்கள் அனைவரும் விருத்தசேதனமில்லார்: வாளால் வெட்டுண்டவர்கள்: வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள். அவர்கள் படுகுழிக்குச் செல்வோருடன் சேர்ந்து தங்கள் மானக்கேட்டைச் சுமந்து வெட்டுண்டவர்களின் நடுவிலே கிடக்கின்றார்கள்.

அதோ! மெசேக்கும் பபாலும் கிடக்கின்றனர்! அவர்களின் மக்கள் கூட்டத்தார் அவர்களின் கல்லறைகளைச் சுற்றிக் கிடக்கின்றனர். அவர்கள் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்: வாளால் வெட்டுண்டவர்கள்: வாழ்வோரின் நாட்டில் அச்சத்தை உண்டாக்கியவர்கள்.

தங்கள் போர்க் கருவிகளுடன் பாதாளத்தில் இறங்கித் தங்கள் வாள்களைத் தங்கள் தலைகளுக்கு அடியிலும், தங்கள் கேடயங்களைத் தங்கள் எலும்புகள் மேலும் வைத்துக்கொண்டு இறந்துபோன பழங்கால வீரருடன் அவர்கள் கிடக்கவில்லை: ஏனெனில் அந்த வீரரைக் குறித்த அச்சம் வாழ்வோரின் நாட்டில் பரவி இருந்தது.

எனவே, நீங்கள் நொறுக்கப்பட்டு, விருத்தசேதனமில்லார் நடுவில் வாளால் வெட்டுண்டவர்களோடு கிடப்பீர்கள்.

அதோ ஏதோமும் அவளுடைய மன்னர்களும், முதன்மைத் தலைவர்களும் கிடக்கின்றார்கள்! அவர்கள் எத்துணை வலிமை உடையவர்களாயிருந்தும் வாளால் வெட்டுண்டவர்களோடு, விருத்தசேதனமில்லாது, படுகுழிக்குச் செல்வோருடன் கிடக்கின்றார்கள்.

அதோ, வடநாட்டுத் தலைவர்கள் அனைவரும், எல்லாச் சீதோனியரும் கிடக்கின்றார்கள்: அவர்கள், வலிமையால் எவ்வளவோ அச்சம் விளைவத்தவர்களாயிருந்தும் மானக்கேட்டுக்கு உள்ளாகி, வெட்டுண்டவர்களோடு கீழே சென்றுள்ளார்கள். விருத்தசேதனமின்றி வாளால் வெட்டுண்டவர்களோடு அவர்கள் கிடக்கின்றார்கள்: படுகுழிக்குச் செல்வாரோடு தங்கள் மானக் கேட்டைச் சுமக்கின்றார்கள்.

பார்வோனும் அவனுடைய படைத்திரளும் அவர்களைப் பார்த்து, வாளால் வெட்டுண்ட தம் மக்கள் கூட்டம் அனைத்துக்காகவும் தம்மைத் தேற்றிக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

வாழ்வோரின் நாட்டில் அவன் அச்சத்தைப் பரவச் செய்ததால், பார்வோனும் அவனுடைய மக்கள் கூட்டத்தார் அனைவரும் விருத்தசேதனமில்லாது வாளால் வெட்டுண்டவர்களுடன் கிடப்பர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 33.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! உன் மக்களிடம் பேசி, அவர்களுக்குச் சொல்: ஒரு நாட்டின்மேல் நான் வாளைக் கொணரும்போது, அந்நாட்டின் மக்கள் தங்கள் நடுவிலிருந்து ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து அவனைத் தங்கள் காவலாளியாக ஆக்கியிருக்க,

அவன் அந்நாட்டின்மேல் வாள் வருவதைக் கண்டு எக்காளம் ஊதி மக்களை எச்சரிக்கை செய்யும்போது,

எக்காளத்தின் ஒலியை எவராவது கேட்டும், எச்சரிப்புக்குச் செவிகொடாமல் இருக்க, வாள் வந்து அவர்களை வீழ்த்திச் சென்றால் அவர்கள் தம் இரத்தப்பழியைத் தாமே சுமப்பர்.

எக்காளத்தின் ஒலியைக் கேட்டிருந்தும் அவர்கள் அந்த எச்சரிப்பைப் பொருட்படுத்தவில்லை. எனவே, அவர்கள் தம் இரத்தப்பழியைத் தாமே சுமப்பர்.

ஆனால், அந்தக் காவலாளி வாள் வருவதைக் கண்டும் எக்காளம் ஊதாமல் இருந்து, அதன் மூலம் மக்கள் எச்சரிக்கைப்படாமல் இருக்கையில், வாள் வந்து அவர்களுள் எவரையாவது வீழ்த்தும்போது, அவர் தம் குற்றத்திலிருந்து வீழ்த்தப்பட்டிருப்பினும், அவரது இரத்தப்பழியை நான் காவலாளியின் மேல் சுமத்துவேன்.

அவ்வாறே, மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும்போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்கைவேண்டும்.

தீயோரிடம் நான், ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள் என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்: ஆனால், அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன்.

ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.

நீயோ, மானிடா! இஸ்ரயேல் வீட்டாரிடம் சொல்: நீங்கள் சொல்கிறீர்கள்: எங்கள் குற்றங்களும் பாவங்களும் எங்கள்மேல் இருப்பதால் நாங்கள் உருகிப்போகிறோம். எப்படி நாங்கள் வாழமுடியும்?

அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! தீயோர் சாகவேண்டுமென்பது என் விருப்பம் அன்று: ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். ஆகவே உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாகவேண்டும்?

மேலும், மானிடா! உன் மக்களிடம் சொல்: நேர்மையாளர் தவறிழைக்கும்போது, அவர்களுடைய நற்செயல்கள் அவர்களை விடுவிக்கா. தீயோரோ தம் தீமையினின்று மனம் மாறிவிட்டால், தம் தீமையை முன்னிட்டு வீழ்ச்சியடையார். நேர்மையாளர் தவறிழைக்கும்போது தம் முன்னைய நற்செயல்களை முன்னிட்டு வாழமுடியாது.

நேர்மையாளரிடம் அவர்கள் உறுதியாக வாழ்வது உறுதி என்று நான் சொன்னாலும், அவர்கள் தம் முன்னைய நற்செயல்களை நம்பித் தவறிழைத்தால், அவர்களுடைய நற்செயல்களில் எதுவுமே எண்ணப்படமாட்டாது. அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர்.

மாறாக, தீயோரிடம் நீங்கள் சாவது உறுதி என்று நான் சொன்னாலும், அவர்கள் தம் பாவத்தினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால்-

அவர்கள் தாங்கள் வாங்கிய பணயப் பொருள்களைத் திருப்பிக் கொடுத்தால், திருடிக் கவர்ந்தவற்றைத் திருப்பித் தந்தால், வாழ்வளிக்கும் நியமங்களின்படி நடந்து, தீச்செயல் எதுவும் செய்யாதிருந்தால்-அவர்கள் வாழ்வது உறுதி: சாகார்.

அவர்கள் செய்த பாவம் எதுவுமே அவர்களுக்கெதிராக எண்ணப்படமாட்டாது. நீதியையும் நேர்மையையும் அவர்கள் கடைப்பிடித்தால், அவர்கள் வாழ்வது உறுதி.

இருப்பினும், ஆண்டவரின் நெறிமுறை நீதியற்றது என உன் மக்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் நெறிமுறைதான் நீதியற்றது.

நேர்மையாளர் தம் நன்னெறியினின்று பிறழ்ந்து தவறிழைத்தால் அதன்பொருட்டு அவர்கள் சாவர்.

தீயோரும் தம் தீமையினின்று விலகி நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அதன்பொருட்டு அவர்கள் வாழ்வர்.

இருப்பினும், ஆண்டவரின் நெறிமுறை நீதியற்றது என நீங்கள் சொல்கின்றீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! உங்களில் ஒவ்வொருவரையும் அவரவர் நெறிமுறைக்குத் தக்கவாறு நான் தீர்ப்பிடுவேன்.

எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் ஆண்டில், பத்தாம் மாதத்தின் ஜந்தாம் நாள், எருசலேமிலிருந்து தப்பியோடி வந்த ஒருவன் என்னிடம் வந்து, நகர் வீழ் ந்துவிட்டது என்றான்.

தப்பியவன் வருவதற்குமுன் மாலையில் ஆண்டவரின் கை என் மேல் இருந்தது. அம்மனிதன் காலையில் என்னிடம் வருமுன் ஆண்டவர் என்னை வாய்திறக்கச் செய்தார். ஆகவே என் வாய் திறக்கப்பட்டிருக்க, நான் பேச இயலாதவனாய் இல்லை.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

மானிடா! இஸ்ரயேல் நாட்டின் பாழிடம்வாழ் மக்கள், ஆபிரகாம் தனியொரு மனிதராக இருந்தும் அவர் நாட்டை அவர்தம் உடைமையாகக் கொண்டிருந்தார். அப்படியிருக்க, நாம் பலராய் இருக்கும் போது, இந்த நாடு நமக்கே உரிமையாய்த் தரப்பட்டுள்ளதன்றோ? என்று சொல்கிறார்கள்.

எனவே அவர்களிடம் சொல்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் குருதியுடன் சேர்ந்து இறைச்சியை உண்கிறீர்கள்: உங்கள் தெய்வச் சிலைகளுக்கு வணக்கம் செலுத்துகிறீர்கள்! கொலை செய்கிறீர்கள். அவ்வாறிருக்க நீங்கள் நாட்டை உரிமையாக்கிக் கொள்வீர்களோ?

உங்கள் வாள்களின் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள்: அருவருப்பான செயல்களைச் செய்கிறீர்கள். ஒவ்வொருவனும் அடுத்தவன் மனைவியைக் கெடுக்கிறான். அவ்வாறிருக்க நீங்கள் நாட்டை உரிமையாக்கிக் கொள்வீர்களோ?

அவர்களுக்கு இதைச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! பாழிடம்வாழ் எஞ்சியோர் வாளால் வீழ்வர். வயல் வெளியில் இருப்போரைக் காட்டு விலங்குகளுக்கு இரையாய் அளிப்பேன். கோட்டையிலும் குகையிலும் தங்கியிருப்போர் கொள்ளை நோயால் மடிவர்.

அழிவுக்கும் வெறுமைக்கும் நாட்டைக் கையளிப்பேன். அதன் வலிமையின் பெருமை முடிவுக்குக் கொண்டுவரப்படும். இஸ்ரயேலின் மலைகள் பாழாய்ப்போம். அங்கே நடமாட்டம் ஏதும் இராது.

அவர்கள் செய்த எல்லா அருவருப்புகளின் பொருட்டும் நான் நாட்டைப் பாழாக்குகையில் நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

மானிடா! உன் மக்களினத்தார் உன்னைக் குறித்து சுவர்களின் அருகிலும் வீடுகளின் கதவருகிலும் பேசிக்கொள்கின்றனர். அவர்களுள் ஒவ்வொருவரும் அடுத்திருப்பாரிடம் ஆண்டவரிடமிருந்து வரும் செய்தி என்ன எனக் கேட்க வாருங்கள் எனக் கூறுகின்றார்கள்.

என் மக்கள் வழக்கம்போல் உன்னிடம் வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் அமர்ந்து உன் சொற்களைக் கேட்கின்றனர். ஆனால் அவற்றையோ கடைப்பிடிப்பதில்லை. அவர்களின் உதடுகள் அன்பொழுகப் பேசுகின்றன: உள்ளமோ நேர்மையற்ற பொருளைத் தேடி ஓடுகின்றது.

அவர்களுக்கு நீ இசைக்கருவியுடன் இயைந்து இனிய குரலில் காதல் பாடல் பாடும் பாடகன் போல் உள்ளாய். அவர்கள் உன்சொற்களைக் கேட்கின்றனர்: ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை.

உண்மையில் இவை வரப்போகின்றன. அப்பொழுது தங்கள் நடுவே ஓர் இறைவாக்கினர் இருந்தார் என உணர்ந்து கொள்வர்.

அதிகாரம் 34.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

மானிடா! இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக்குரை. அவர்களுக்கு இறைவாக்குரைத்துச்சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஜயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்!

நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை.

நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை: பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை: வழிதப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள்.

ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின.

என் ஆடுகள் எல்லா மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது: அதைத்¥ தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர்.

எனவே ஆயர்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்:

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! என் மந்தை கொள்ளையிடப்பட்டது: எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது. ஏனெனில் அதற்கு ஆயன் இல்லை. என் ஆயர்கள் என் மந்தையைத் தேடவில்லை. என் மந்தையை அவர்கள் மேய்க்காமல் தாங்களே மேய்ந்து கொள்கிறார்கள்.

எனவே, ஆயர்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்:

தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கிவிடுவேன். எனவே தாங்களே மேய்ந்துக் கொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா.

எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்.

ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடித் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன்.

மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்து, நாடுகளினின்று கூட்டிச்சேர்த்து, அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும் ஓடையோரங்களிலும் நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும் மேய்ப்பேன்.

நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அவற்றின் மேய்ச்சல் நிலம் இருக்கும். அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும். இஸ்ரயேலின் மலைகளின்மேல் செழிப்பான மேய்ச்சல் நிலத்தில் அவை மேயும்.

நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

காணாமல் போனதைத் தேடுவேன்: அலைந்து திரிவதைத் திரும்பக்கொண்டுவருவேன்: காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்: நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.

எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும், வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.

நீங்கள் நல்ல மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போதாதென்றா, எஞ்சிய மேய்ச்சல் நிலங்களைக் காலால் மிதிக்கிறீர்கள்? நல்ல நீரைக் குடித்துவிட்டு எஞ்சிய நீரைக்காலால் கலக்குகிறீர்கள்!

உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை என் மந்தை உண்ண வேண்டுமா? உங்கள் கால்களால் கலக்கப்பட்டதை என் மந்தை குடிக்க வேண்டுமா?

எனவே, தலைவராகிய ஆண்டவர் அவர்களுக்கு இவ்வாறு கூறுகிறார்: நானே கொழுத்த ஆட்டுக்கும் நலிந்த ஆட்டுக்குமிடையே நீதி வழங்குவேன்.

நலிந்த ஆடுகளை விலாவினாலும் முன்னந்தொடையினாலும் இடித்துத் தள்ளி, உங்கள் கொம்புகளால் முட்டி அவற்றை வெளியே விரட்டியடிக்கிறீர்கள்.

எனவே, நான் என் மந்தையை மீட்பேன். அவை இனிமேல் கொள்ளையிடப்படா. நான் ஆட்டுக்கும் ஆட்டுக்குமிடையே நீதி வழங்குவேன்.

எனவே, அவற்றிற்கு என் ஊழியன் தாவீதை ஒரே ஆயனாய் அமர்த்துவேன். அவன் அவற்றை மேய்த்து அவற்றிற்கு ஆயனாய் இருப்பான்.

ஆண்டவராகிய நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். என் ஊழியன் தாவீது அவர்கள் நடுவே தலைவனாய் இருப்பான். ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன்.

சமாதான உடன்படிக்கையை அவர்களோடு செய்து கொள்வேன். காட்டு விலங்குகளை நாட்டினின்று வெளியேற்றுவேன். எனவே என் மந்தை திறந்த வெளியில் பாதுகாப்பாய் வாழ்ந்து காடுகளில் உறங்கும்.

அவர்களுக்குக் குன்றினைச் சுற்றிய இடங்களை ஆசியாகக் கொடுப்பேன். ஏற்ற காலத்தில் மழையை வரச் செய்வேன். அவர்கள் ஆசிமழையாக இருப்பர்.

வயல்வெளி மரங்கள் கனி கொடுக்கும். நிலமோ நல்விளைச்சல் நல்கும். அவர்கள் தங்கள் நாட்டில் பாதுகாப்பாய் இருப்பர். நான் அவர்களின் தளைகளைத் தகர்த்து, அடிமைப்படுத்தியவர் கையினின்று அவர்களை விடுவிக்கையில் நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வர்.

இனிமேல் அவர்கள் மக்களுக்குக் கொள்ளைப் பொருளாய் இரார். நாட்டின் கொடிய விலங்குகளும் அவர்களை விழுங்க மாட்டா. அவர்கள் எத்தகைய அச்சுறுத்தலுமின்றிப் பாதுகாப்பாய் வாழ்வர்.

சிறப்புமிகு பண்ணை ஒன்று அவர்களுக்கு எழும்பச் செய்வேன். அவர்கள் இனி நாட்டில் பஞ்சத்தால் வாடமாட்டார்கள். மக்களினங்களின் இழி சொல்லையும் இனிச் சுமக்கமாட்டார்கள்.

அப்போது அவர்களுடைய கடவுளும் ஆண்டவருமாகிய நான் அவர்களோடு இருக்கிறேன் என்பதையும், இஸ்ரயேலின் வீட்டாராகிய அவர்கள் என் மக்களாக இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வார்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நீங்கள் என் மேய்ச்சலின் மந்தையாகிய மக்கள், நான் உங்கள் கடவுள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 35.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! உன் முகத்தைச் சேயிர் மலைக்கு நேராய்த் திருப்பி அதற்கெதிராய் இறைவாக்குரை.

அதற்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: சேயிர் மலையே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன். என் கையை உனக்கெதிராய் நீட்டி உன்னைப் பாழிடமாகவும் வெற்றிடமாகவும் மாற்றுவேன்.

உன் நகர்களை இடிபாடுகளாய் மாற்றுவேன். நீ பாழிடமாய் இருப்பாய். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்து கொள்வாய்.

ஏனெனில் முற்காலப் பகையை மனத்தில் கொண்டு நீ இஸ்ரயேலரை அவர்களின் துன்பகாலத்தில், அவர்களது தண்டனையின் உச்சக் கட்டத்தில் வாளுக்கு இரையாக்குமாறு கையளித்தாய்.

எனவே, என்மேல் ஆணை! உன்னை இரத்தப் பழிக்குக் கையளிப்பேன். அப்பழி உன்னைத் தொடரும், நீ இரத்தம் சிந்துதலை வெறுக்காததால் அது உன்னைத் தொடரும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

சேயிர் மலையைப் பாழிடமாகவும் வெற்றிடமாகவும் மாற்றுவேன். அதன் வழியாய்ச் செல்லும் போக்குவரத்தை நிறுத்துவேன்.

உன் மலைகளைக் கொலையுண்டவர்களால் நிரப்புவேன். வாளால் கொல்லப்பட்டோர் உன் குன்றுகளிலும் பள்ளத் தாக்குகளிலும் எல்லா ஓடைகளிலும் வீழ்வர்.

உன்னை என்றென்றும் பாழிடமாய் ஆக்குவேன். உன் நகரங்கள் குடியற்றுப்போகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வாய்.

ஆண்டவராகிய நான் அங்கே இருந்தபோதும் நீ இவ்விரு இனங்களும் நாடுகளும் என்னுடையவை: நான் அவற்றை உடைமையாக்கிக் கொள்வேன் எனச் சொன்னாய்.

எனவே, என் மேல் ஆணை! நீ அவர்களுக்கு எதிராகக் காட்டிய பகைமைக்கும் சினத்திற்கும் பொறாமைக்கும் ஏற்ப, நான் உன்னை நடத்துவேன். நான் உன்னைத் தீர்ப்பிடும்¥போது, அவர்களிடையே என்னை அறியச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அப் போது, நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு எதிராகச் சொன்ன எல்லா இழிசொற்களையும், ஆண்டவராகிய நான் கேட்டேன் என அறிந்து கொள்வாய். அவை பாழாக்கப்பட்டுவிட்டன: இரையாகத் தரப்பட்டுள்ளன என்று நீ சொன்னாய்.

நீ எனக்கெதிராய்ப் பெருமை பாராட்டி, உன் வாயினால் எனக்கெதிராய்க் கட்டுப்பாடற்ற சொற்களை உரைத்தாய். அவற்றை நான் கேட்டேன்.

எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உலகு முழுவதும் மகிழ்வடையும்படி நான் உன்னைப் பாழாக்குவேன்.

இஸ்ரயேல் வீட்டாரின் உரிமைச் சொத்து பாழாக்கப்படுகையில் நீ மகிழ்வடைந்ததால் நானும், உனக்கு அவ்வாறே நடக்கச் செய்வேன். சேயிர் மலையும் ஏதோம் முழுவதும் பாழிடமாகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

அதிகாரம் 36.

மானிடா! இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்குரைத்துச் சொல்: இஸ்ரயேல் மலைகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களைக் குறித்து உங்கள் பகைவன், ஆகா! பழங்கால உயர்விடங்கள் நமக்கு உரிமையிடங்கள் ஆயின என்றான்.

எனவே இறைவாக்காகச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உண்மையில் நீங்கள் எம்மருங்கும் பாழாக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு, எஞ்சிய மக்களினங்களுக்கு உரிமையிடமாகி, வாய்க் கொழுப்புள்ளோரின் ஏளனப் பேச்சுக்கும் மக்களின் அவபறுக்கும் உள்ளானீர்கள்.

எனவே, இஸ்ரயேல் மலைகளே! தலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். மலைகளுக்கும் குன்றுகளுக்கும் ஓடைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் அழிவின் பாழிடங்களுக்கும், சுற்றிலுமுள்ள மற்ற நாடுகள் கொள்ளையிட்டு ஏளனம் செய்யும், குடிகளற்ற நகர்களுக்கும், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:

அவர் கூறுவது: உண்மையாகவே எரியும் என் சினத்தால் மற்ற நாடுகளுக்கெதிராகவும் ஏதோம் முழுவதற்கும் எதிராகவும் நான் பேசுகிறேன். ஏனெனில் இதயத்தில் மகிழ்வோடும் கெடுமதியோடும் என் நாட்டின் மேய்ச்சல் நிலங்களைக் கொள்ளையிட நாட்டைத் தாங்¥களே உடைமையாக்கிக் கொண்டன.

எனவே இஸ்ரயேல் நாட்டைக் குறித்து இறைவாக்குரைத்து, மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஓடைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் என் சகிப்பின்மையிலும் சினத்திலும் பேசுகிறேன். மக்களினங்களின் வசைமொழிகளை நீங்கள் சுமக்கிறீர்களே.

எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கையுயர்த்தி நான் ஆணையிடுகிறேன். உண்மையாகவே உங்களைச் சுற்றியுள்ள மக்களினங்கள் தங்கள் இழிவைத் தாங்களே சுமப்பர்.

ஆனால் இஸ்ரயேல் மலைகளே! நீங்கள் உங்கள் கிளைகளைப் பரப்பி, என் மக்களுக்காய்க் கனிகளைச் சுமப்பீர்கள். ஏனெனில் அவர்கள் விரைவில் வந்துவிடுவர்.

ஏனெனில், நான் உங்களுக்காய் இருக்கிறேன்: உங்களைக் கண்ணோக்குவேன். உங்கள் நாடு மீண்டும் உழப்பட்டு விதை விதைக்கப்படும்.

உங்கள் மக்களைப் பெருகச் செய்வேன். இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் பெருகச் செய்வேன். நகர்களில் மக்கள் குடியேறுவர். அழிவிடங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படும்.

உங்களில் மானிடரையும் விலங்குகளையும் மிகுதியாக்குவேன். அவர்கள் பலுகிப் பெருகுவர். முற்காலங்களைப்போல் உங்களைக் குடியேற்றுவேன். முந்தைய காலங்களை விட மிகுதியாக நீங்கள் வளமடையச் செய்வேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

இஸ்ரயேல் மக்களாகிய என் மக்களை உங்களில் நடமாடச் செய்வேன். அவர்கள் உங்களை உடைமையாக்கிக் கொள்வார்கள். நீங்கள் அவர்களுக்கு உரிமைச் சொத்தாய் இருப்பீர்கள். நீங்கள் இனி ஒருபோதும் அவர்களைப் பிள்ளையில்லாதாராய்ச் செய்யமாட்டீர்கள்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களிடம் மக்கள் நீங்கள் மனிதரை விழுங்கி, உங்கள் நாட்டைப் பிள்ளைகளில்லாமல் செய்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.

எனவே, மனிதரை நீங்கள் இனிமேல் விழுங்க மாட்டீர்கள். உங்கள் நாட்டைப் பிள்ளைகளில்லாமல் செய்ய மாட்டீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

இனிமேல், நாடுகளின் பழிச்சொல்லை நீங்கள் கேட்கவிடமாட்டேன்: மக்களினங்களின் இழிசொல்லை நீங்கள் சுமக்கமாட்டீர்கள்: உங்கள் நாட்டை விழ வைக்கமாட்டீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டடது:

மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். அவர்களின் நடத்தை ஒரு பெண்ணின் மாதவிலக்கின் தீட்டுப்போல என் கண்முன் இருந்தது.

எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர்.

நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுகுத் தீர்ப்பிட்டேன்.

வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்குச் சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று என்று கூறப்பட்டது.

இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன்.

எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அல்ல. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன்.

நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் பய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன்.

நான் பய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்: உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன்.

நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன்.

என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன்.

நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்: நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

உங்கள் எல்லாத் தீட்டிலிருந்தும் நான் உங்களை மீட்பேன். தானியம் முளைக்கச் செய்து அதை மிகுதியாய் விளையச் செய்வேன். உங்கள்மேல் பஞ்சம் வரவிடேன்.

நீங்கள் மக்களினங்களிடையே பஞ்சத்தால் இழிவுறாதபடி மரங்களின் கனிகளையும் வயல்களின் விளைச்சலையும் பெருக்குவேன்.

அப்போது நீங்கள் உங்கள் தீய வழிகளையும், தகாத செயல் களையும் எண்ணி உங்கள் பாவங்களுக்காகவும் உங்கள் அருவருப்பான செயல்களுக்காகவும் உங்களையே வெறுப்பீர்கள்.

உங்களை முன்னிட்டு நான் இவ்வாறு செய்யவில்லை: இது தெரிந்திருக்கட்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இஸ்ரயேல் வீட்டாரே! உங்கள் நடத்தைக்காக வெட்கி நாணமுறுங்கள்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் உங்களைத் பய்மைப்படுத்தும் நாளில், நகர்களில் உங்களை மீண்டும் குடியேற்றுவேன். அழிவிடங்களை மீண்டும் கட்டியெழுப்புவேன்.

பாழான நிலம், கடந்து செல்லும் அனைவர் கண்முன்னும், பாழாய்க் கிடப்பதற்குப் பதிலாகப் பயிர் செய்யப்படும்.

அப்போது மக்கள், பாழாய்க் கிடந்த இந்த நிலம் ஏதேன் தோட்டம்போல் ஆகிவிட்டது. இடிந்து பாழாகிய அழிவிடங்களாய் க் கிடந்த நகர்கள் அரண்சூழ்ந்து குடியேற்ற நகர்களாகிவிட்டனவே! என்பர்.

அப்போது உங்களைச் சுற்றியுள்ள வேற்றினத்தார், ஆண்டவராகிய நான் அழிந்திருந்ததைக் கட்டியுள்ளேன் என்றும் பாழிடமாய் இருந்ததை விளை நிலமாக்கியுள்ளேன் என்றும் அறிந்துகொள்வர். ஆண்டவராகிய நான் இதை உரைத்தேன். நானே இதைச் செய்து முடிப்பேன் .

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மேலும் இதனை நான் அவர்களுக்குச் செய்யும்படி இஸ்ரயேல் வீட்டார் என்னிடம் மன்றாடச் செய்வேன். அவர்களின் மக்களை மந்தை போல் பெருகச் செய்வேன்.

அவர்கள் விழா நாள்களில் பலிகளுக்காக எருசலேமுக்கு வரும் ஆடுகள்போல் நிறைய இருப்பர்: அழிந்துபோன நகர்கள் மக்கள் திரளால் நிரப்பப்பெறும். அப்போது, நானே ஆண்டவர் என அறிந்து கொள்வர்.

அதிகாரம் 37.

ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் பக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன.

அவர் அவற்றைச் சுற்றி என்னை நடத்திச் சென்றார். அங்கே பள்ளத்தாக்கின் அடியில் மிகப் பல எலும்புகள் கிடந்தன. அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன.

அவர் என்னிடம், மானிடா! இந்த எலும்புகள் உயிர்பெறமுடியுமா? என்று கேட்டார். நான், தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே என்று மறுமொழி அளித்தேன்.

அவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை. உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள் என்று சொல்.

தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன் . நீங்களும் உயிர் பெறுவீர்கள்.

நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்: உங்கள்மேல் சதையைப் பரப்புவேன். உங்¥ களைத் தோலால் மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர்பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.

எனவே, எனக்குக் கட்டளையிடப்பட்டபடி இறைவாக்குரைத்தேன். நான் இறைவாக்குரைக்கையில், உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புகளுடன் சேர்ந்து கொண்டது.

நான் பார்க்கையிலேயே அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது. ஆனால் அவற்றில் உயிர் இன்னும் வரவில்லை.

பின்னர் அவர் என்னிடம், உயிர்மூச்சுக்கு இறைவாக்குரை: மானிடா! இறைவாக்குரைத்து, உயிர்மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான்கு காற்றுகளிலிருந்தும் உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர்.

எனவே அவர் எனக்குக் கட்டளையிட்டவாறு இறைவாக்குரைத்தேன். உடனே அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று, காழன்றி, மாபெரும் படைத்திரள்போல் நின்றனர்.

அவர் மேலும் என்னிடம் கூறியது: மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறிக்கும். அவர்களோ எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம் எனச் சொல்கிறார்கள்.

எனவே, இறைவாக்குரைத்து அவர்களிடம், சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன்.

அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த் துவேன். ஆண்டவராகிய நான் உரைத்தேன்: நானே இதைச் செய்தேன் என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! நீ ஒரு கோலை எடுத்துக்கொள். அதில் யூதாவுக்கும் அவனோடு சேர்ந்திருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் உரியது என்று எழுது. பின்னர் இன்னொரு கோலை எடுத்து அதில் யோசேப்புக்கும் அவனோடு சேர்ந்த இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் உரிய எப்ராயிமின் கோல் என்று எழுது.

அவை இரண்டும் உன் கையில் ஒரே கோலாயிருக்கும்படி, அவற்றை ஒன்றாகச் சேர்.

உன் மக்களினத்தார் உன்னிடம், இவற்றால் என்ன கூட் டிக்காட்ட விழைகிறீர்? எனக் கேட்கையில்,

அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் எப்ராயிமின் கையிலிருக்கும் யோசேப்பு மற்றும் அதனுடன் சேர்ந்த இஸ்ரயேல் குலங்களின் கோலை எடுத்து அதை யூதாவின் கோலுடன் சேர்த்து அவற்றை ஒரே கோலாய் மாற்றுவேன். அவை என் கையில் ஒரே கோலாய் இருக்கும்.

நீ எழுதிய கோல்களை அவர்கள் கண்முன்னால் உன் கையில் பிடித்து,

அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நான் இஸ்ரயேலர் சிதறுண்ட நாடுகளிலிருந்து அவர்களை அழைத்து எம்மருங்கினின்றும் கூட்டிச் சேர்த்து, அவர்களின் சொந்த நாட்டிற்குக் கொணர்வேன்.

இஸ்ரயேலின் மலைகள்மிது அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன். அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இனிமேல் ஒருபோதும் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார்.

அவர்கள் இனிமேல் ஒருபோதும் தங்கள் தெய்வச் சிலைகளாலோ இழிந்த அருவருப்பான பொருள்களாலோ தங்கள் வேறெந்தக் குற்றங்களாலோ தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பாவம் செய்த எல்லாக் குடியிருப்புகளிலிருந்தும் அவர்களை நான் மீட்டுத் பய்மையாக்குவேன். அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்: நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.

என் ஊழியன் தாவீது அவர்களுக்கு அரசானய் இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஆயன் இருப்பான். என் நீதிநெறிகளின்படி அவர்கள் நடப்பர்: என் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிப்பர்.

நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் மூதாதையர் வாழ்ந்ததுமாகிய நாட்டில் அவர்கள் வாழ்வர். அவர்களும் அவர்களின் மக்களும், மக்களின் மக்களும் அங்கு என்றென்றும் வாழ்வர். என் ஊழியன் தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாய் இருப்பான்.

நான் அவர்களுடன் நல்லுறவு உடன்படிக்கை செய்துகொள்வேன். அது அவர்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைபெறச் செய்து அவர்களைப் பெருகச் செய்வேன். என் பயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன்.

என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும்: நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்.

என் பயகம் அவர்கள் நடுவே என்றென்றும் நிலைத்திருக்கையில், இஸ்ரயேலைத் பய்மைப்படுத்துபவர் ஆண்டவராகிய நானே என வேற்றினத்தார் அறிந்து கொள்வர்.

அதிகாரம் 38.

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

மானிடா! மெசேக்கு மற்றும் பபால் இனத்தவர்களின் தலைவனும் மாகோகு நாட்டினனுமான கோகு என்பவனுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு எதிராக இறைவாக்குரை.

தலைவராகிய அண்டவர் கூறுவது இதுவே: மெசேக்கு மற்றும் பபால் இவர்களின் முதன்மைத் தலைவனாகிய கோகே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்.

நான் உன்னைத் திருப்பி உன் தாடைகளில் கடிவாளங்கள் பூட்டி, முழுப்போர்க்கவசம் அணிந்த உன்னையும், உன் குதிரைகளையும், குதிரைவீரர்களையும், சிறியதும் பெரியதுமான கேடயங்களுடன் கூரிய வாளேந்திய பெரும் படையின் வீரர் யாவரையும் வெளியேற்றுவேன்.

அவர்களுடன் கேடயமும் தலைச்சீராவும் அணிந்த பாரசீகம், கூசு மற்றும் பூத்து மக்களும் வெளியேறுவர்.

கோமேர் மற்றும் அதன் அனைத்துப் படைகளும், தொலை வடக்குப் பெத்தொகர்மா மற்றும் அதன் படைகளும்-உன்னுடன் இருக்கும் பல மக்களினங்களும் வெளியேறுவர்.

நீ தயாராயிரு: உன்னுடன் சேர்ந்திருக்கும் கூட்டத்தினரையும் தயாராய் இருக்கச் சொல். நீ அவர்களுக்குத் தலைமை தாங்குவாய்.

பல நாள்களுக்குப்பின் நீ போரிட அழைக்கப்படுவாய். வாளினின்று விடுபட்டு நீண்ட காலம் பாழாய்க் கிடந்த, இஸ்ரயேல் மலைகளில் வேற்றினத்தாரினின்று பெருங்கூட்டமாய்க் கூட்டிச் சேர்க்கப்பட்ட மக்களின் நாட்டை, வரப்போகும் ஆண்டுகளில் முற்றுகையிடுவாய். வேற்றினத்தாரிடமிருந்து கூட்டி வரப்பட்ட அவர்களோ இப்போது பாதுகாப்புடன் வாழ்கிறார்கள்.

நீ புயல்போல் முன்னேறி, மேகம்போல் நாட்டை மூடுவாய். நீயும் உன்னுடனுள்ள அனைத்து படைகளும் உன்னுடனுள்ள பல மக்களினங்களும் இவ்வாறு செய்வீர்கள்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அந்த நாளில் உன் மனத்தில் எண்ணங்கள் எழவே, நீ தீய திட்டத்தைத் தீட்டுவாய்.

நான் அரணற்ற ஊர்கள் நிறைந்த நாடொன்றை முற்றுகையிடுவேன். அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழும் மக்கள் மீது பாய்வேன். அவர்களுக்கு அரண் இல்லை: அடைக்கும் தாழ் இல்லை: வாயில் கதவும் இல்லை.

எனவே நான் பாழிடங்களாயிருந்து குடியிருப்புகளாய் மாறிய இடங்களுக்கும் நாடுகளிலிருந்து கூட்டிச் சேர்க்கப்பட்ட மக்களினத்துக்கும் வளமையான கால்நடைகளும், பொருள்களும் கொண்டு நாட்டின் நடுவில் வாழும் அவர்களுக்கும் எதிராக என் கையை ஓங்கி, அவர்களைக் கொள்ளையடிப்பேன், சூறையாடுவேன் என்று உனக்குள் சொல்லிக் கொள்வாய்.

சேபா நாட்டினரும் தெதான் நாட்டினரும், தர்சீசு நகர வணிகர்களும், அதன் எல்லா இளம் வீரரும் உன்னிடம் உண்மையாகவே கொள்ளையிட வந்தாயோ, பெருந்திரளான மக்களைச் சேர்த்துக் கொண்டு சூறையாட வந்தாயோ, பொன்னையும் வெள்ளியையும் வாரிக்கொண்டு, கால்நடைகளைக் கவர்ந்துகொண்டு, மிகுதியான பொருள்களைக் கொள்ளையிடுமாறு இவ்வாறு செய்தாயோ? எனக் கேட்பார்கள்.

எனவே, மானிடா! நீ இறைவாக்குரைத்துக் கோகுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்கள் இஸ்ரயேலர் பாதுகாப்பாய் வாழும் நாளை நீ அறிவாயோ?

தொலை வடக்குப் பகுதிகளிலிருந்து நீ உன்னுடன் இருக்கும் பல மக்களினங்களுடன் வருவாய். நீங்கள் யாவரும் குதிரையில் ஏறிய பெரிய வலிய படைகளாய் வருவீர்கள்.

நீ என் மக்கள் இஸ்ரயேலருக்கு எதிராய்ப் புறப்பட்டு, நாட்டை மூடும் மேகம்போல் முற்றுகையிடுவாய். கோகே! இனிவரும் நாள்களில் நான் உன்னை என் நாட்டிற்கு எதிராய் எழும்பச் செய்வேன். நான் மக்களினங்களின் கண்முன்னே என்னை உன் வழியாய்த் பயவர் என வெளிப்படுத்தும்போது அவர்கள் நான் யாரென அறிந்து கொள்வர்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் முற்காலத்தில் என் ஊழியர்களாம் இஸ்ரயேல் இறைவாக்கினர் வழியாய் எவனைக் குறித்துப் பேசினேனோ அவன் நீதானே! அக்காலத்தில் அவர்கள் நான் உன்னை அவர்களுக்கு எதிராய்க் கூட்டி வருவேன் எனப் பல்லாண்டு இறைவாக்குரைத்தனர்.

அந்நாளில் நடப்பது இதுவே: கோகு இஸ்ரயேல் நாட்டுக்கு எதிராய் எழும்புகையில், என் கொதிக்கும் சினம் கிளர்ந்தெழும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

என் சினத்திலும் கனல் பறக்கும் சீற்றத்திலும் நான் உரைக்கிறேன். உண்மையாகவே அந்நாளில் இஸ்ரயேல் நாட்டில் பெரிய நிலநடுக்கம் உண்டாகும்.

கடல்வாழ் மீனினமும், வான்வெளிப் பறவையினமும், காடுவாழ் விலங்கினமும், மண்ணில் ஊரும் எல்லா உயிரினமும், உலகில் வாழும் எல்லா மக்களும் என் முன்னிலையில் நடுங்குவர். மலைகள் சரியும்: முகடுகள் சாயும்: எல்லா அரண்களும் மண்ணில் விழும்.

நான் கோகுக்கு எதிராய் என் எல்லா மலைகளிலும் வாளை வரச்செய்வேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். ஒவ்வொருவரின் வாளும் தம் தோழருக்கு எதிராய் இருக்கும்.

நான் அவன்மீது கொள்ளையையும் கொலையையும் அனுப்பித் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். பெருமழையையும், கல்மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் அவன்மீதும் அவன் படைகள் மீதும் அவனோடு இருக்கும் எல்லா மக்களினங்கள்மீதும் கொட்டுவேன்.

இவ்வாறு நான் என் மேன்மையையும் பய்மையையும் நிலைநாட்டிய பல மக்களினங்களின் கண்முன்னால் என்னை வெளிப்படுத்துவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

அதிகாரம் 39.

மானிடா! நீ கோகுக்கு எதிராய் இறைவாக்குரைத்துச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே. மெசேக்கு மற்றும் பபால் இனங்களின் முதன்மைத் தலைவனாகிய கோகே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்.

நான் உன்னைத் திருப்பி, தொலைவடக்குப் பகுதிகளிலிருந்து விரட்டி, இஸ்ரயேல் மலைகளுக்கு இழுத்துக்கொண்டு வருவேன்.

பின்னர் உன் இடக்கையில் இருக்கும் வில்லை நான் தட்டிவிட்டு வலக்கையில் இருக்கும் அம்புகளைக் கீழே விழச் செய்வேன்.

இஸ்ரயேல் மலைகளில் நீ வீழ்வாய்: நீயும் உன் எல்லாப் படைகளும், உன்னோடிருக்கும் மக்களினங்களும் வீழ்வீர். நான் உன்னை ஊன் தின்னும் எல்லாப் பறவைகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.

நீ திறந்தவெளியில் வீழ்வாய். நானே இதை உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் மாகோகின்மீதும் கடலோரங்களில் பாதுகாப்பாய் வாழும் எல்லார்மீதும் நெருப்பை அனுப்புவேன். அப்பொழுது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

நான் என் மக்களாம் இஸ்ரயேலில் என் திருப்பெயரை அறியச் செய்வேன். என் திருப்பெயரை இனிமேல் தீட்டுப்படவிடமாட்டேன். ஆண்டவராகிய நானே இஸ்ரயேலில் பயவராய் இருப்பவர் என வேற்றினத்தார் அறிந்துகொள்வர்.

இதோ வருகிறது! இது உறுதியாய் நடந்தேறும்: இதுவே நான் குறிப்பிட்ட நாள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அப்போது, இஸ்ரயேல் நகர்களில் வாழ்வோர் வெளியேறிப் படைக்கலன்களாகிய சிறியதும் பெரியதுமான கேடயங்களையும் வில்களையும் அம்புகளையும், வேல்களையும் ஈட்டிகளையும் எரிபொருளாய்ப் பயன்படுத்துவர். ஏழாண்டுகள் இவ்வாறு எரி பொருளாய்ப் பயன்படுத்துவர்.

அவர்கள் விறகுகளை வயல் வெளியிலிருந்து சேகரிக்கவோ காடுகளிலிருந்து வெட்டவோ மாட்டார்கள். ஏனெனில் படைக்கலன்களை அவர்கள் எரிபொருளாய்ப் பயன்படுத்துவர். அவர்கள் தங்களைக் கொள்ளையடித்தவர்களைக் கொள்ளையடிப்பர், தங்களைச் சூறையாடியோரைச் சூறையாடுவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அந்த நாளில் இஸ்ரயேல் கடலுக்குக் கிழக்கே வழிப்போக்கர்களின் பள்ளத்தாக்கில் கோகுக்கு ஓர் இடுகாடு கொடுப்பேன். அது வழிப்போக்கரின் பாதையில் இரக்கும். ஏனெனில் கோகையும் அவனுடைய கூட்டத்தினர் அனைவரையும் அவர்கள் அங்கே புதைப்பர். எனவே அதை அமோன் கோகு பள்ளத்தாக்கு என அழைப்பர்.

நாட்டைத் பய்மைப்படுத்தும்பொருட்டு இஸ்ரயேல் வீட்டார் அவர்களை ஏழு மாதங்கள் புதைப்பர்.

நாட்டின் எல்லா மக்களும் அவர்களைப் புதைப்பர். நான் என் மாட்சியை வெளிப்படுத்தும் அந்நாள் அவர்களுக்குச் சிறப்பான நாளாய் இருக்கும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நாட்டைத் பய்மைப்படுத்த வழிப்போக்கர் குழு ஒன்றை அவர்கள் அழைப்பர். அக்குழுவினர் அவர்கள் நாடெங்கும் சென்று மண்ணில் எஞ்சிக் கிடக்கும் பிணங்களைத் தேடிப்புதைப்பர். ஏழு மாத முடிவில் அவர்கள் இப்படித் தேடத் தொடங்குவர்.

அவர்கள் நாடெங்கும் செல்கையில் ஒருவன் ஒரு மனித எலும்புக்கூட்டைப் பார்த்தால், புதைப்போர் அதனை அமோன் கோகு பள்ளத்தாக்கில் புதைக்கும் வரை, அதன் அருகில் ஓர் அடையாளம் வைக்க வேண்டும்.

இத்துடன் அமோனா எனும் பெயரில் ஒரு நகரும் இருக்கும்: இவ்வாறு அவர்கள் நாட்டைத் பய்மைப்படுத்துவர்.

மானிடா! தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எல்லாப் பறவைகளையும் எல்லாக் காட்டுவிலங்குகளையும் அழைத்துச் சொல்: வாருங்கள்! எப்பக்கமுமிருந்து நான் தயாரிக்கும் என் பலிக்கு ஒன்று திரண்டு வாருங்கள். உங்களுக்கென இஸ்ரயேல் மலையில் நடைபெறும் பெரிய பலி அது. நீங்கள் அங்கே இறைச்சி உண்டு, இரத்தம் குடிக்கலாம்.

வலிமைமிகு மனிதரின் சதையை உண்பீர்கள். நாட்டின் தலைவர்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள். அவற்றை, ஆட்டுக்கிடாய்கள், செம்மறிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள், பாசானின் கொழுத்த காளைகள் ஆகியவற்றை உண்பது போல உண்பீர்கள்.

நான் உங்களுக்கெனத் தயாரிக்கும் பலியில் நீங்கள் தெவிட்டுமளவுக்குக் கொழுப்பை உண்டு, வெறியுண்டாகுமளவுக்கு இரத்தத்தைக் குடிப்பீர்கள்.

என் மேசையில் நீங்கள் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் வலிமைமிகு மனிதர்களையும் எல்லாப் போர் வீரர்களையும் வயிறார உண்பீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நான் என் மாட்சியை வேற்றினத்தாரிடையே வெளிப்படுத்துவேன். நான் நிறைவேற்றும் தண்டனைத் தீர்ப்பையும் அவர்கள் மீது விழும் என் கைவலிமையையும் எல்லா மக்களினத்தாரும் காண்பர்.

ஆண்டவராகிய நானே அவர்களின் கடவுள் என்பதை அந்நாளிலிருந்து இஸ்ரயேல் வீட்டார் அறிந்துகொள்வர்.

இஸ்ரயேல் மக்கள் எனக்கு உண்மையற்றவராய் நடந்ததால் தங்கள் பாவத்தின் பொருட்டுச் சிறையிருப்புக்குச் சென்றனர் என வேற்றினத்தார் அறிந்துகொள்வர். எனவே நான் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொண்டு அவர்களைப் பகைவர்களிள் கையில் ஒப்புவித்தேன். அவர்கள் எல்லாரும் வாளால் வீழ்ந்தனர்.

நான் அவர்களின் தீட்டுக்கும் குற்றங்களுக்கும் ஏற்றபடி அவர்களை நடத்தி என் முகத்தை அவர்களிடமிருந்து திருப்பிக்கொண்டேன்.

எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இப்போது நான் யாக்கோபை முன்னைய நன்னிலைக்குக் கொணர்வேன். இஸ்ரயேல் வீட்டார் அனைவர் மீதும் மனம் இரங்குவேன். என் திருப்பெயர் குறித்து பேரார்வம் கொண்டிருப்பேன்.

அவர்கள் தங்கள் நாட்டில் எவருடைய அச்சுறுத்தலுமின் றிப் பாதுகாப்புடன் வாழும்போது, தங்கள் அவமானத்தையும் அவர்கள் எனக்குச் செய்த எல்லா நம்பிக்கைத் துரோகங்களையும் மறந்து விடுவர்.

நான் அவர்களை வேற்றினத்தாரிடமிருந்தும் பகை நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்க்கையில், நான் பயவர் என அவர்கள் வழியாய்ப் பல மக்களினங் கள் முன்னால் வெளிப்படுத்துவேன்.

அப்போது ஆண்டவராகிய நானே அவர்களின் கடவுள் என்று அவர்கள் அறிந்து கொள்வர். ஏனெனில் நான் அவர்களை வேற்றித்தாரிடையே சிறையிருப்புக்கு அனுப்பினாலும் அவர்களது நாட்டிற்குள் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களில் யாரையும் அங்கே விட்டுவிட மாட்டேன்.

நான் இனி ஒருபோதும் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொள்ளமாட்டேன். இஸ்ரயேல் வீட்டார் மீது என் ஆவியைப் பொழிவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 40.

எங்கள் சிறையிருப்பின் இருபத்தைந்தாம் ஆண்டின் தொடக்கத்தில் மாதத்தின் பத்தாம் நாளில், எருசலேம் நகர் அழிக்கப்பட்டதன் பதினான்காம் ஆண்டு நிறைவுநாளில், ஆண்டவரின் ஆற்றல் என்மீது இறங்கியது. அவர் என்னை அங்கே அழைத்துச் சென்றார்.

கடவுள் அருளிய காட்சியில் அவர் என்னை இஸ்ரயேல் நாட்டுக்குக் கொண்டு சென்று, அங்கே மிக உயர்ந்த மலையொன்றில் என்னை நிறுத்தினார். அதற்குத் தெற்கே ஒரு நகர் போன்ற கட்டடங்கள் காணப்பட்டன.

அவர் அங்கே என்னை அழைத்துச் சென்றார். அங்கே மனிதர் ஒருவரைக் கண்டேன். அவரது தோற்றம் வெண்கலமயமாய் இருந்தது. அவர் நார்ப்பட்டுக் கயிறும் அளவுகோலும் கையில் வைத்துக் கொண்டு, வாயிலில் நின்று கொண்டிருந்தார்.

அந்த மனிதர் என்னை நோக்கி, மானிடா! உன் கண்களால் பார், அனைத்தையும் உன் இதயத்தில் பதியவை. ஏனெனில், இவற்றைப் பார்க்கும்படியே நீ இங்குக் கூட்டி வரப்பட்டாய். நீ காணும் யாவற்றையும் இஸ்ரயேல் வீட்டாரக்குத் தெரிவி என்றார்.

கோவிலுக்கு வெளியில், அதனை முற்றிலும்-சுற்றி, ஒரு மதில் இருக்கக் கண்டேன். அம்மனிதர் கையில் வைத்திருந்த அளவுகோல் ஆறு முழமும் நான்கு விரற்கடையும் நீளம் கொண்டிருந்தது. அவர் அம்மதிலை அளந்தார். அதன் அகலம் ஒரு கோல்: உயரம் ஒரு கோல்.

பின்னர் அவர் கிழக்கு நோக்கி இருக்கும் வாயிலுக்கு வந்து அதன் படிக்கட்டில் ஏறி, வாயிற்படியின் மேலிருந்து அளந்தார். அது ஒரு கோல் ஆழம் உடையதாய் இருந்தது.

பக்க அறைகள் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமும் இருந்தன. அறைகளுக்கு இடையே ஜந்து முழ இடைவெளி இருந்தது. கோவிலை நோக்கிய மண்டபத்தின் அருகிலுள்ள வாயிற்படி ஒரு கோல் ஆழமுடையதாய் இருந்தது.

பின்னர் அவர் கோவிலை நோக்கிய வாயிலின் முன்னிருந்த புகுமுக மண்டபத்தை அளந்தார்: அது ஒரு கோல் இருந்தது.

பின்னர் அவர் புகுமுக மண்டபத்தை அளந்தார். அதன் அளவு எட்டு முழம்: அதன் புடைநிலை இரண்டு முழம்: இதுவே கோவிலை நோக்கிய வாயிலின் புகுமுகமண்டபம்.

கிழக்கு வாயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று அறைகள் இருந்தன. மூன்றும் ஒரே அளவுடையனவாய் இருந்தன. ஒவ்வொரு பக்கத்தின் புடைநிலைகளும் ஒரே அளவையே கொண்டிருந்தன.

பின்னர் அவர் நுழைவாயிலின் அகலத்தை அளந்தார். அது பத்து முழம் இருந்தது. அதன் நீளமோ பதின்மூன்று முழம்.

ஒவ்வோர் அறைக்கு முன்னாலும் ஒரு முழ உஉயரமான ஒரு கைப்பிடிச் சுவர் இருந்தது. ஒவ்வோர் அறையும் ஆறு முழ சமசதுரம் கொண்டது.

பின்னர் அவர் ஓர் அறையின் பின்பக்கச் சுவர் உச்சிலிருந்து நேர் எதிரே இருந்த அறையின் உச்சிவரை இடைப்பட்ட வாயிலை அளந்தார். ஒரு கதவு இன்னொரு கதவுக்கு நேரெதிராய் இருந்தது. இடைப்பட்ட பரம் இருபத்தைந்து முழம்.

அவர் புடைநிலைகளை அளந்தார். முற்றத்தை ஒட்டிய புகுமுக மண்டபம் வரையிலான அளவு அது. அவை அறுபது முழம் இருந்தன.

வாயிலிருந்து புகுமுக மண்டபம் வரையிலான அளவு ஜம்பது முழம்.

அறைகளுக்கும் வாயிலின் உள்ளிருந்த புடைநிலைகளுக்கும் குறுகிய பலகணிகள் சுற்றிலும் இருந்தன. புகுமுக மண்டபத்துக்கும் பலகணிகள் இருந்தன. சுற்றிலுமிருந்த பலகணிகள் உள்நோக்கி இருந்தன. புடைநிலைகளில் போ£ச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன.

பின்னர் அவர் என்னை வெளிமுற்றத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார். அங்கே முற்றத்தைச் சுற்றி அறைகளும் நடைமேடைகளும் அமைக்கப்பெற்றிருந்தன. நடை மேடைகளைச் சுற்றி முப்பது அறைகள் இருந்தன.

வாயிலின் பக்கத்தில் இருந்த நடைமேடை நீளமும் அகலமும் ஒரே அளவை உடையதாய் இருந்தது. இதவே கீழ்த்தள நடைமேடை.

பின்னர் அவர் கீழ்வாயிலின் உட்புறமிருந்து உள் முற்றத்தின் வெளிப்புறம்வரை அளந்தார். அது கிழக்கேயும் வடக்கேயும் மறு முழம் இருந்தது.

பின்னர் அவர் வெளிமுற்றத்தை நோக்கிய வடக்கு வாயிலின் நீள அகலங்களை அளந்தார்.

ஒவ்வொரு பக்கமும் மூன்றாக இருந்த அறைகளும், புடைநிலைகளும் புகுமுக மண்டபமும் முந்தைய வாயிலைச் சுற்றியிருந்தவற்றின் அதே அளவுகளைக் கொண்டிருந்தன. அதாவது ஜம்பது முழம் நீளம், இருபத்தைந்து முழம் அகலம்.

அதன் பலகணிகள், புகுமுக மண்டபம், போ£ச்சமர வடிவங்கள் யாவும் கிழக்கு நோக்கியவாயிலின் அருகிலிருந்தவற்றின் அதே அளவையே கொண்டிருந்தன. அதில் ஏறிப்போக ஏழு படிகள் இருந்தன. அவற்றின் எதிரில் புகுமுக மண்டபம் இருந்தது.

கிழக்குப் பக்கம் இருந்ததுபோலவே வடக்கு வாயிலை நோக்கிய உள்முற்றத்திற்கு இன்னொரு வாயிலும் இருந்தது. ஒரு வாயிலிருந்து எதிர் வாயில்வரை அவர் அளந்தார். அது மறு முழம் இருந்தது.

பின்னர் அவர் என்னைத் தெற்குப் பக்கம் அழைத்துச் சென்றார். அங்குத் தெற்கு நோக்கிய வாயில் ஒன்று இருந்தது. அவர் அதன் புடைநிலைகளையும் மண்டபத்தையும் அளந்தார்: அவை மற்றவற்றின் அளவையே கொண்டிருந்தன.

அதற்கும் முக மண்டபத்திற்கும், மற்றவற்றிற்குப் போலவே பலகணிகள் இருந்தன. அவை ஜம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமும் கொண்டிருந்தன.

அதற்கு ஏறிச்செல்ல ஏழு படிகள் இருந்தன. முன்பக்கம் புகுமுக மண்டபம் இருந்தது. அதன் இருபக்கமிருந்த புடைநிலைகளில் போ£ச்சமர வடிவங்கள் இருந்தன.

உள் முற்றத்தில் தெற்கு நோக்கிய வாயில் ஒன்றும் இருந்தது. அவர் அவ்வாயிலிலிருந்து தெற்குப் புறமுள்ள வெளிவாயில்வரை அளந்தார். அது மறு முழ நீளம் இருந்தது.

பின்னர் அவர் என்னைத் தெற்கு வாயில்வழியாக உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்று தெற்குவாயிலை அளந்தார். அதற்கும் மற்றவை போன்ற அளவுகளே இருந்தன.

அதன் அறைகள், புடைநிலைகள், புகுமுக மண்டபம் யாவும் மற்றவை போன்ற அளவுகளையே கொண்டிருந்தன. வாயிலையும் புகுமுக மண்டபத்தினையும் சுற்றிலும் பலகணிகள் இருந்தன. அவை ஜம்பது முழம் உயரம், இருபத்தைந்து முழம் அகலம்.

சுற்றிலுமிருந்து புகுமுக மண்டபங்களுக்கு நீளம் ஜம்பது முழம்: அகலம் இருபத்தைந்து முழம்.

அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கி இருந்தது. புடைநிலைகளில் போ£ச்சமர வடிவங்கள் இருந்தன. அதற்கு வெளியே செல்ல எட்டுப் படிகள் இருந்தன.

பின்னர் அவர் என்னைக் கிழக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்று, அவ்வாயிலை அளந்தார். அதற்கும் மற்றைய அளவுகளே இருந்தன.

அதன் அறைகள், புடைநிலைகள், புகுமுக மண்டபம் அனைத்திற்கும் மற்றவற்றுக்கான அளவுகளே இருந்தன. வாயிலையும் புகுமுக மண்டபத்தையும் சுற்றிப் பலகணிகள் இருந்தன. அவற்றின் நீளம் ஜம்பது முழம்: அகலம் இருபத்தைந்து முழம்.

அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. புடைநிலைகளில் இரு பக்கமும் போ£ச்சமர வடிவங்கள் இருந்தன. மேலேறிச் செல்ல எட்டுப் படிகள் இருந்தன.

பின்னர் அவர் என்னை வடக்கு வாயிலக்கு அழைத்துச் சென்று அதை அளந்தார். அதற்கும் மற்றவற்றிற்கான அளவுகளே இருந்தன.

அதன் அறைகள், புடைநிலைகள், சுற்றிலுமிருந்த பலகணிகள் அனைத்திற்கும் ஜம்பது முழம் நீளமும் இருபத்தைந்து முழம் அகலமும் இருந்தன.

அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது. அதன் புடைநிலைகளில் இரு பக்கமும் போ£ச்சமர வடிவங்கள் இருந்தன. அதற்கு ஏறிச்செல்ல எட்டுப் கடிகள் இருந்தன.

ஒவ்வோர் உள்வாயிலிலும் புகுமுக மண்டபத்தின் அருகில் வாயிலுடன் கூடிய அறை ஒன்று இருந்தது. அங்கே எரிபலிப் பொருள்களைக் கழுவுவர்.

வாயிலருகே உள்ள புகுமுக மண்டபத்தில் ஒவ்¥ வோரு பக்கமும் இரு மேசைகள் இருந்தன. அவற்றின்மேல் எரிபலி, பாவம் போக்கும் பலி, குற்றநீக்கப் பலி ஆகியவற்றிற்கான விலங்குகள் வெட்டப்படும்.

வாயிலருகே உள்ள புகுமுக மண்டபத்தின் வெளிச் சுவரருகே வடக்கு வாயிலில் உள்ள படிகளின் ஒரு பக்கத்தில் இரு மேசைகளும் மறு பக்கத்தில் இரு மேசைகளும் இருந்தன.

இவ்வாறு அங்கே பலிசெலுத்துவதற்கென நான்கு மேசைகள் உள்ளேயும் நான்கு மேசைகள் வாயிலுக்கு வெளியேயும், மொத்தம் எட்டு மேசைகள் இருந்தன.

செதுக்கப்பட்ட கற்களில் எரிபலிக்கென மேலும் நான்கு மேசைகள் இருந்தன. அவை ஒன்றரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமும் ஒரு முழ உயரமும் கொண்டிருந்தன. அவற்றின் மேல் எரிபலி மற்றும் குற்ற நீக்கப்பலிக்கான விலங்குகளை வெட்டுவதற்குரிய கருவிகள் இருந்தன.

சுவர்களைச் சுற்றிலும் ஒரு சாண் அளவுள்ள முளைகள் இருபக்கமும் பொருத்தப்பட்டிருந்தன. இறைச்சி மேசைகளின்மேல் வைக்கப்பட்டது.

உள் வாயிலின் வெளியே உள்முற்றத்தில் இசைக்குழு அறைகள் இருந்தன. அவற்றுள் ஒன்று வடக்கு வாயிலின் பக்கத்தில் தெற்கு நோக்கியிருந்தது. இன்னொன்று கிழக்கு வாயிலின் பக்கத்தில வடக்கு நோக்கியிருந்தது.

அவர் என்னிடம், தெற்கு நோக்கியிருக்கும் அறை கோவில் பொறுப்பிலிருக்கும் குருக்களுக்கானது.

வடக்கு நோக்கி இருக்கும் அறை பீடப்பொறுப்பிலிருக்கும் குருக்களுக்கானது. இவர்கள் சாதோக்கின் மக்கள். லேவியரில் இவர்கள் மட்டுமே ஆண்டவருக்குப் பணிபுரிய அவரருகில் செல்லலாம் என்றார்.

பின்னர் அவர் முற்றத்தை அளந்தார். அது மறு முழ நீளமும் மறு முழ அகலமும் கொண்டு சதுர வடிவில் இருந்தது. கோவிலுக்கு முன்பக்கம் பீடம் இருந்தது.

அவர் என்னைக் கோவிலின் புகுமுக மண்டபத்திற்கு அழைத்து வந்து, அதன் புடைநிலைகளை அளந்தார். அது ஒரு பக்கம் ஜந்து முழமும் மறுபக்கம் ஜந்து முழமும் இருந்தது. வாயிலின் அகலம் பதினான்கு முழம்: அதன் புடைநிலைகள் ஒரு பக்கம் மூன்று முழம், மறுபக்கம் மூன்று முழம்.

புகுமுக மண்டபம் இருபது முழ அகலமும் பதினொரு முழ நீளமும் கொண்டிருந்தது. அதற்கு ஏறிச் செல்லப் படிகள் இருந்தன. புடைநிலைகளில் ஒவ்வொரு பக்கமும் பண்கள் இருந்தன.

அதிகாரம் 41.

பின்னர் அவர் என்னைக் கோவிலின் கூடத்திற்கு அழைத்துச் சென்று அதன் புடைநிலைகளை அளந்தார். அவை ஒருபுறம் ஆறு முழ அகலமும் மறுபுறம் ஆறு முழ அகலமும் கொண்ட கூடார அளவுடையதாய் இருந்தது.

வாயிலின் அகலம் பத்து முழம், வாயிலின் புடைநிலைகள் ஒவ்வொரு பக்கமும் ஜந்து முழம் இருந்தன. பின்பு அவர் கோவிலின் கூடத்தை அளந்தார். அது நாற்பது முழ நீளமும், இருபது முழ அகலமும் உடையதாயிருந்தது.

பின்னர் அவர் உட்கூடத்திற்குப் போய், அதன் வாயிலின் புடைநிலைகளை அளந்தார். அவை ஒவ்வொன்றும் இரண்டு முழ அகலம் உடையதாயிருந்தன. வாயில் ஆறு முழ அகலம் உடையதாயிருந்தது. அதன் வெளிப் புடைநிலை ஒவ்வொரு பக்கமும் ஏழு முழ அகலம் கொண்டிருந்தது.

அவர் ஊட்கூடத்தின் நீளத்தை அளந்தார். அது இருபது முழம், அதன் அகலம் வெளிக்கூட விளம்பு வரை இருபது முழமாக இருந்தது. அவர் என்னிடம், இதுவே திருத்பயகம் என்றார்.

பின்னர் அவர் கோவிற் சுவரை அளந்தார். அதன் அகலம் ஆறு முழம், கோவிலைச் சுற்றியுள்ள ஒவ்வோர் அறையும் நான்கு முழ அகலம் கொண்டிருந்தது.

பக்கத்து அறைகள் ஒன்றன்மேல் ஒன்றாய் மூன்று அடுக்குகளாய் இருந்தன. ஒவ்வொரு அடுக்கிலும் முப்பது அறைகள் இருந்தன. இந்த அறைகள் கோவில் சுவர்மேல் ஊன்றியிராமல், இருபுறத்திலுமுள்ள சுற்றுக் கட்டுகளின் விளிம்¥பை ஆதாரமாகக் கொண்டிருந்தன.

கோவிலைச் சுற்றியிருந்த பக்க அறைகள், அடுக்குகள் உயர உயர, அகலம் மிகுதியானவையாய் இருந்தன. கோவிலைச் சுற்றிய அமைப்பு மேலே போகப் போக அகலமானதாய்க் கட்டப்பட்டிருந்தது. அதனால் மேலே இருந்த அறைகள் தமக்குக் கீழே இருந்த அறைகளைவிட அகலம் கூடியனவாயிருந்தன. கீழ்த்தளத்திலிருந்து நடுத்தளம் வழியாக மேல்தளத்திற்கு ஒரு படிக்கட்டு இருந்தது.

கோவிலைச் சுற்றிலும் அதன் தளமேடை உயர்ந்திருக்கக் கண்டேன். அதுவே பக்க அறைகளின் தளமேடையாகவும் இருந்தது. அது ஒரு கோலின் அளவாகிய ஆறு முழம் இருந்தது.

பக்க அறைகளின் வெளிச்சுவர் ஜந்து முழ அகலம் உடையதாய் இருந்தது. ஆலயத்தின் பக்க அறைகளுக்கும்,

குருக்களின் அறைக்கும் இடையிலுள்ள திறந்தவெளி இருபது முழமளவாய் கோவிலைச் சுற்றி இருந்தது.

பக்க அறைகளுக்குத் திறந்த வெளியிலிருந்து வடக்குப் பக்கம் ஒன்றும் தெற்குப் பக்கம் ஒன்றுமாக இரு வாயில்கள் இருந்தன. திறந்த வெளியைத் தொட்ட தளமேடை எப்பக்கமும் ஜந்து முழம் அகலமுடையதாய் இருந்தது.

மேற்குப் பக்கத்தில் கோவில் முற்றத்தை நோக்கிய கட்டடம் எழுபது முழ அகலம் கொண்டிருந்தது. கட்டடத்தின் சுவர் எப்பக்கமும் ஜந்து முழ அகலமும், தொண்ணூறு முழ நீளமும் கொண்டிருந்தது.

பின்னர் அவர் கோவிலை அளந்தார். அது மறு முழம் நீளமுடையதாய் இருந்தது. கோவிலின் முற்றமும் சுவர்களோடு சேர்ந்து கட்டடமும் மறு முழ நீளமுடையதாய் இருந்தன.

கோவிலின் முகப்பும் அதன் கிழக்கு முற்றமும் மறு முழ அகலமுடையனவாய் இருந்தன.

பின்னர் அவர் கோவிலின் அருகிலிருந்த முற்றத்தை நோக்கிய கட்டடத்தை அதன் ஒவ்வொரு பக்கமுமிருந்த மேடை இருக்கையுடன் அளந்தார். அது வெளிக்கூடம், உட்கூடம், முற்றத்தை நோக்கிய புகமுக மண்டபம் உட்பட மறு முழமாய் இருந்தது.

அவை மூன்றையும் சுற்றிய மேடை இருக்கைகள், வாயிற்படிகள், குறுகலான பலகணிகள், வாயிற்படிகளை உள்ளடக்கியதும் தாண்டியதுமான அனைத்தும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தன. தளத்திலிருந்து பலகணிவரை சுவர் முழுவதும் பலகணிகளும் மரத்தினால் வேயப்பட்டிருந்தன.

வாயிலிலிருந்து உள்கூடம் வரையிலும் வெளியேயும் சுற்றிலுமிருந்த சுவர்களில் உள்ளேயும் வெளியேயும்

கெருபுகள், போ£ச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன. ஒவ்வொரு கெருபையும் அடுத்து ஒரு போ£ச்ச மர வடிவம் அமைந்திருந்தது. ஒவ்வொரு கெருபுக்கும் இரு முகங்கள் இருந்தன.

அவற்றுள் ஒன்று போ£ச்ச மரத்தை நோக்கிய மனித முகமாகவுதட, மற்றொன்று அடுத்த போ£ச்ச மரத்தை நோக்கிய சிங்க முகமாகவும் கோவில் முழுவதும் அமைந்திருந்தன.

தளத்திலிருந்து வாயிலின் மேற்பகுதி வரை வெளிக்கூடச் சுவர்களில் கெருபுகள், போ£ச்ச மர வடிவங்கள் அமைந்திருந்தன.

கோவில் கூடத்திற்கு நீள்சதுர வாயிற்கதவு இருந்தது: திருத்பயகத்தின் முன்னும் அதுபோன்றே இருந்தது.

அங்கே மூன்று முழ உயரமும் இரு முழ நீளமும் கொண்ட ஒரு பீடம் இருந்தது. அதன் முனைகளும் அடிப்பகுதியும் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தன. அந்த மனிதர் என்னிடம் ஆண்டவரின் திருமுன்னிலை மேவை இதுவே என்றார்.

கோவிற் கூடத்திற்கும், திருத்பயகத்திற்கும் இரு வாயில்கள் இருந்தன.

வாயில்கள் ஒவ்வொன்றுக்கும் இரட்டைக் கதவுகள் இருந்தன.

கோவிற் கூடத்தின் கதவுகளில், சுவர்களில் அமைக்கப் பெற்றிருந்தது போலவே கெருபுகள், போ£ச்ச மரங்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புகுமுக மண்டபத்தின் முன்னால் மரத்தினாலான விதானம் இருந்தது.

புகுமுக மண்டபத்தின் பக்கச் சுவர்களில் குறுகலான பலகணிகளும், ஒவ்வொரு பக்கத்திலும் போ£ச்ச மர வடிவங்களும் இருந்தன. கோவிலின் பக்க அறைகளில் விதானங்கள் இருந்தன.

அதிகாரம் 42.

பின்னர், அம்மனிதர் என்னை வடதிசை வழியாய் வெளி முற்றத்திற்கு அழைத்துச் சென்று கோவில் முற்றத்திற்கு எதிரிலும் வடதிசையில் உள்ள வெளிச் சுவருக்கு எதிரிலும் இருந்த அறைகளுக்கு இட்டுச் சென்றார்.

வடதிசை நோக்கி வாயில் இருந்த கட்டடம் மறு முழ நீளமும் ஜம்பது முழ அகலமும் கொண்டிருந்தது.

உள் முற்றத்திற்கு இருபது முழத்திற்கு இரு பக்கமும் இருந்த பகுதியிலும், வெளி முற்றத்தின் நடைமேடைக்கு எதிரில் இருந்த பகுதியிலும் எதிர் எதிரான மேடையிருக்கைகள் மூன்று அடுக்குகளாய் இருந்தன.

அறைகளின் முன்னே ஓர் உள் வழிப்பாதை இருந்தது. அதன் அகலம் பத்து முழம்: நீளம் மறு முழம். அவ்வறைகளின் கதவுகள் வடக்குப் பக்கத்தில் இருந்தன.

மாடி அறைகள் குறுகியவையாக இருந்தன. ஏனெனில் மேடையிருக்கைகள் கீழ்த்தள அறைகளிலிருந்தும் நடுத்தள அறைகளிலிருந்தும் கொண்ட இடத்தை விட மிகுதியான இடத்தை மேலறைகளிலிருந்து எடுத்துக்கொண்டன.

முற்றங்களில் இருந்தது போல மூன்றாம் தளத்தில் பண்கள் இல்லை. எனவே கீழ்த்தளம் மற்றும் நடுத்தள அறைகளைவிட அவை இடம் குறைந்தனவாய் இருந்தன.

அறைகளுக்கும், வெளிமுற்றத்திற்கும் இணையாக ஒரு வெளிச்சுவர் இருந்தது. அது அறைகளின் முன்னால் ஜம்பது முழ நீளமுடையதாய் இருந்தது.

வெளிமுற்றத்தை ஒட்டிய அறைகள் ஜம்பது முழ நீளமுடையவை: ஆனால், கோவிலின் வெளிக்கூடத்தின் முன் இருந்தவையோ மறு முழ நீளம் உடையவை.

கீழ்த்தள அறைகளுக்கு வெளிமுற்றத்திலிருந்து நுழைய கிழக்குப் பக்கத்திலே ஒரு வாயில் இருந்தது.

கிழக்குப் பக்கத்தில் வெளிமுற்றத்தைத் தொட்டவாறும், வெளிச்சுவருக்கு எதிரிலுமாக அறைகள் இருந்தன.

அவற்றின் முன்னால் ஒருவழிப்பாதை இருந்தது. இவை வடக்குப் பக்க அறைகளைப் போலவே இருந்தன. அவற்றைப்போலவே நீள அகலங்களும் வெளிச் செல்லும் வாயில்களும் மற்றும் அமைப்புத் தோற்றங்களும் இருந்தன.

வடக்குப் புறவாயில் வழிகளைப்போலவே தெற்குப் புற அறைகளுக்கும் வாயில் வழிகள் இருந்தன. கிழக்குப் புறம்வரை செல்லும் சுவருக்கு இணையான வழிப்பாதையின் தொடக்கத்தில் ஒரு வாயில் இருந்தன. கிழக்குப் புறம்வரை செல்லும் சுவருக்கு இணையான வழிப்பாதையின் தொடக்கத்தில் ஒரு வாயில் இருந்தது. அதன் வழியாய் அறைகளுக்குச் செல்ல இயலும்.

பின்னர் அம்மனிதர் என்னிடம் சொன்னார்: கோவில் முற்றத்தை நோக்கியிருக்கும் வடக்கு மற்றும் தெற்கு அறைகள் யாவும் பய அறைகளாகும். அங்கே ஆண்டவரை அணுகிவரும் குருக்கள் உன்னத பலிப்பொருள்களை உண்ணுவர். அவர்கள் அங்கே உன்னத பலிப்பொருள்களான தானியப் படையல், பாவம் போக்கும் பலிப்பொருள்கள், குற்றநீக்கப் பலிப்பொருள்கள் ஆகியவற்றை வைப்பர். ஏனெனில், அது பய இடமாகும்.

குருக்கள் பய இடங்களில் நுழைந்தபின் அவர்கள் பணிபுரியப் பயன்படுத்திய திருஉடைகளை அங்கேயே கழற்றி வைக்காமல் அங்கிருந்து வெளியேறக் கூடாது. ஏனெனில், அவை பயவை. மக்கள் பகுதிக்குப் போகுமுன் அவர்கள் வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

கோவிலின் உட்புறப் பகுதிகளை அளந்து முடிந்தபின், அவர் என்னைக் கிழக்கு வாயில் வழியாக வெளிக்கொணர்ந்து, கோவிலைச் சுற்றிலும் அளந்தார்.

அவர் கிழக்குப் பகுதியை அளவுகோலால் அளந்தார். அது ஜந்மறு கோல்கள் இருந்தது.

அவர் வடக்குப் பகுதியை அளந்தார். அதுவும் ஜந்மறு கோல்கள் இருந்தது.

அவர் தெற்குப் பகுதியை அளந்தார். அதுவும் ஜந்மறு கோல்கள் இருந்தது.

பின்னர் அவர் மேற்குப் பக்கம் திரும்பி அளந்தார். அதுவும் ஜந்மறு கோல்கள் இருந்தது.

இவ்வாறு அவர் அப்பகுதியை நாற்புறமும் அளந்தார். ஒவ்வொரு புறமும் சுவர் ஜந்மறு முழம் இருந்தது. அச்சுவர் பயகத்தை மக்கள் பகுதியிலிருந்து பிரித்தது.

அதிகாரம் 43.

பின்னர் அம்மனிதர் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்.

இதோ, இஸ்ரயேலின் ஆண்டவரது மாட்சி கிழக்குப் பகுதியிலிருந்து வருவதைக் கண்டேன். அவரது குரல் பெருவெள்ளத்தின் இரைச்சல்போல் இருந்தது. நிலமோ அவரின் மாட்சியால் ஒளி வீசிற்று.

நான் கண்ட காட்சி, அவர் நகரை அழிக்க வந்தபோது நான் கண்டது போன்றும், கேபார் ஆற்றோரம் நான் கண்டது போன்றும் இருந்தது. நான் முகங்குப்புற விழுந்தேன்.

ஆண்டவரின் மாட்சி கிழக்கு நோக்கிய வாயில் வழி கோவிலினுள் நுழைந்தது.

பின்னர் ஆவி என்னைத் பக்கி உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்றது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.

அம்மனிதர் என்னருகில் நிற்கையில் கோவிலிருந்து வேறொருவர் என்னுடன் பேசுவதைக் கேட்டேன்.

அவர் உரைத்தது: மானிடா! இது என் அரியணையின் இடம்: என் கால்மணைக்கான இடம். இங்குதான் நான் இஸ்ரயேலருடன் என்றென்றும் வாழ்வேன். இஸ்ரயேல் வீட்டார் இனி ஒருபோதும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்த மாட்டார். அவர்களோ, அவர்கள் அரசர்களோ விபசாரத்தினாலோ, அவர்களுடைய அரசர்களின் உயிரற்ற சிலைகளினாலோ, தொழுகை மேடுகளில் தீட்டுப்படுத்த மாட்டார்!

அவர்களின் வாயிற்படியை என் வாயிற்படிக்கு அருகிலும், அவர்கள் கதவுகளை என் கதவு நிலைகளுக்கு எதிரிலும் வைத்து எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு சுவரைமட்டும் வைத்து என் திருப்பெயரை அவர்களின் அருவருப்பான செயல்கள் மூலம் தீட்டுப்படுத்தினார். எனவே அவர்களை நான் என் சினத்தில் அழித்தேன்.

இப்போது அவர்கள் தங்கள் விபசாரத்தையும், தங்கள் அரசர்களின் உயிரற்ற சிலைகளையும் என்னிடமிருந்து அகற்றி விடட்டும். அப்போது நான் அவர்களிடையே என்றென்றும் வாழ்வேன்.

நீயோ! இஸ்ரயேல் வீட்டாருக்குக் கோவிலைப் பற்றி விவரி. அதன்மூலம் அவர்கள் தங்கள் பாவங்கள் குறித்து வெட்கமுறட்டும். கோவிலின் அளவு முறையை அவர்கள் ஆராயட்டும்.

அவர்கள் தாங்கள் செய்ததெல்லாம் குறித்து வெட்கமுற்றால் அவர்களுக்கு கோவிலின் அளவுமுறையைக் காட்டு. அதன் கட்டமைப்பையையும் வெளி வாயில்களையும் நுழைவாயில்களையும் அதன் முழு அமைப்பையும், எல்லா முறைமைகளையும் முழுத்திட்டத்தையும் சட்டங்களையும் தெரிவி. இவற்றை அவர்கள் கண்முன்னால் எழுதிவை. அப்போது அவர்கள் அத்திட்டத்தின்படி நடந்து அதன் எல்லா முறைமைகளையும் கடைப்பிடிப்பார்கள்.

கோவிலின் சட்டம் இதுவே. மலையின் உச்சியிலுள்ள எல்லாச் சுற்றுப் பகுதிகளும் உன்னத இடங்களாகும். இதுவே கோவிலின் சட்டமாகும்.

முழு அளவுக்கேற்பப் பீடத்தின் அளவுகள் பின்வருமாறு: ஒரு முழம் என்பது ஒருமுழமும் நான்கு விரற்கடையும் கொண்டது. பீடத்தின் அடிப்பாகம் ஒரு முழ உயரமும் ஒரு முழ அகலமும் கொண்டது. சுற்றுப்புறத்தில் அதன் ஓரத்தில் ஒரு சாண் விளிம்புகள் இருக்கும் பீடத்தின் உயரம் இதுவே:

நிலத்தில் அடிப்பாகத்திலிருந்து கீழ் விளிம்புவரை இதன் உயரம் இரண்டு முழம், அகலம் ஒரு முழம். சிறிய விளிம்பு முதல் பெரிய விளிம்பு வரை உயரம் நான்கு முழம், அகலம் ஒரு முழம்.

பலிபீடச் சிகரம் நான்கு முழ உயரமானது. நான்கு கொம்புகள் சிகரத்திலிருந்து மேல் நோக்கி இருந்தன.

பலிபீடச் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் கொண்ட சமசதுரமானது.

மேல் விளிம்பு பதினான்கு முழ நிளமும் பதினான்கு முழ அகலமும் கொண்ட சமசதுரமானது. அதன் கனம் சுற்றிலும் அரை முழமும் அதன் அடிப்பாகம் சுற்றிலும் ஒரு முழமுமாய் இருந்தது. பீடத்தின் படிகள் கிழக்கு நோக்கி இருந்தன.

பின்னர் அம்மனிதர் என்னிடம் கூறியது: மானிடா! தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: பீடத்தைக் கட்டியபின் பீடத்தில் எரிபலியிடுகையிலும், குருதித் தெளிப்புப் பலியிடுகையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளாவன:

என்னை அணுகி வந்து என் முன்னிலையில் திருப்பணிபுரியம் சாதோக்கின் வழிவந்த லேவியராகிய குருக்களுக்கு ஓர் இளங்காளையைப் பாவம் போக்கும் பலியாய்த் தர வேண்டும். இது தலைவராகிய ஆண்டவரின் அறிவிப்பு.

நீங்கள் அதன் இரத்ததில் கொஞ்சம் எடுத்துப் பீடத்தின் நான்கு கொம்புகளிலும் மேல்விளிம்பின் நான்கு முனைகளிலும் சுற்றுமுள்ள சதுரங்கள் முழுவதிலும் தடவ வேண்டும். இவ்வாறு பீடத்தையும் புனிதப்படுத்தி அதற்குக் கறைநீக்கம் செய்ய வேண்டும்.

பாவம் போக்கும் பலிக்கான இளங்காளையைக் கோவில் பகுதியில் பயகத்துக்கு வெளியே குறிப்பிட்ட பகுதியில் எரிக்க வேண்டும்.

இரண்டாம் நாள் ஒரு மாசு மறுவற்ற ஆட்டுக்கிடாயை எடுத்து பாவம் போக்கும் பலியாய்ச் செலுத்த வேண்டும். இவ்வாறு இளங்காளையினால் புனிதப்படுத்துவது போல் பீடத்தைப் புனிதப்படுத்த வேண்டும்.

அதைப் புனிதப்படுத்தி முடிந்தபின் நீங்கள் மந்தையிலிருந்து, மாசு மறுவற்ற ஒர் இளங்காளையையும் ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் பலியிட வேண்டும்.

அவற்றை ஆண்டவரின் முன்னிலையில் படைக்க வேண்டும். குருக்கள் அதன்மேல் உப்புத் பவி அவற்றை ஆண்டவருக்கு எரிபலியாய் அளிக்க வேண்டும்.

ஏழு நாள்களுக்குத் தினமும் பாவம் போக்கும் பலியாய் நீங்கள் ஆட்டுக்கிடாயைக் கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் மந்தையிலிருந்து மாசு மறுவற்ற ஓர் இளங்காளையையும் ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கொடுக்க வேண்டும்.

ஏழு நாள்களுக்கு அவைகள் பீடத்திற்காய்ப் பாவக்கழுவாய் செய்து அதைப் புனிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதை அர்ப்பணிப்பார்கள்.

இந்நாள்கள் முடிந்தபின் எட்டாம் நாளிலிருந்து குருக்கள் எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்த வேண்டும். நான் அவற்றை ஏற்றுக்கொள்வேன்¥, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 44.

பின்னர் அம்மனிதர் என்னைத் பயகத்தின் வெளிவாயிலுக்குத் திரும்பவும் கூட்டிவந்தார். அது கிழக்கு முகமாய் இருந்தது. அது மூடப்பட்டிருந்தது.

ஆண்டவர் என்னிடம் கூறியது: இந்த வாயில் மூடியே இருக்க வேண்டும். அது திறக்கப்படக்கூடாது. யாரும் இதன் வழியாய் நுழையக் கூடாது. ஏனெனில் இஸ்ரயேலின் தலைவராகிய ஆண்டவர் இதன்வழி நுழைந்தார்: இது மூடியே இருக்க வேண்டும்.

தலைவன் மட்டுமே வாயிலுக்கு உட்புறம் ஆண்டவரின் முன்னிலையில் உண்பதற்காக அமரலாம். அவன் வாயிலின் புகுமுகமண்டபம் வழியாய் உள் நுழைந்து, அதே வழியில் வெளிவர வேண்டும்.

பின்னர் அம்மனிதர் என்னை வடக்கு வாயிலின் வழி கோவிலுக்கு முன்னால் அழைத்து வந்தார். அப்போது ஆண்டவரின் மாட்சி அவர்தம் கோவிலை நிரப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து, முகங்குப்புற விழுந்தேன்.

ஆண்டவர் என்னிடம் சொன்னது: மானிடா! ஆண்டவரின் கோவிலைப் பற்றி நான் சொல்லும் எல்லா நியமங்களையும் சட்டங்களையும் கவனமாய்க் காதால் உற்றுக்கேட்டு இதயத்தில் பதித்துவை. அவ்வில்லத்தின் எல்லா வாயில்களிலும் நுழைவது பற்றியும் பயகத்தின் வாயில்களினின்று வெளிச்செல்வது பற்றியும் கவனமாய்க் கேள்.

கலக வீட்டாராகிய இஸ்ரயேலுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேல் வீட்டாரே! உங்கள் அருவருப்பான செயல்களை விட்டுவிடுங்கள்.

நீங்கள் எனக்கு அப்பங்களும், கொழுப்பும், இரத்தமும் கொண்டுவரும்போதே உடலிலும் உள்ளத்திலும் விருத்தசேதனம் செய்யாத அன்னியரை என் பயகத்திற்குக் கூட்டிவந்து என் இல்லத்தைத் தீட்டுப்படுத்தினீர்கள். உங்கள் எல்லா அருவருப்பான செயல்களாலும் உடன்படிக்கையை முறித்தீர்கள்.

நீங்கள் என் பய பொருள்களைப் பாதுகாக்காமல் உங்களுக்குப் பதிலாக அன்னியர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தீர்கள்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உடலிலும் உள்ளத்திலும் விருத் தசேதனம் செய்யாத எந்த அன்னியரும் இஸ்ரயேலரிடையே வாழும் அன்னியரும்கூட என் பயகத்தில் நுழையக்கூடாது.

இஸ்ரயேலர் என்னைவிட்டு விலகிச்சென்று அவர்கள் தெய்வச் சிலைகளுக்குப் பின்னால் திரிந்தபோது, அவர்களுடன் என்னைவிட்டு விலகிவிட்ட லேவியரும்கூடத் தங்கள் குற்றப்பழியைச் சுமக்க வேண்டும்.

அவர்கள் கோவிலின் வாயில்களைக் காக்கும் பொறுப்பேற்று என் பயகத்தில் பணிபுரியலாம்: எரிபலிகள் மற்றும் மக்கள் பலிகளுக்கான விலங்குகளை வெட்டலாம்: மக்கள் முன்னிலையில் நின்று அவர்களுக்கெனத் திருப்பணி புரியலாம்.

அவர்கள் அவர்களின் தெய்வச் சிலைகளுக்கு முன்னால் பணிபுரிந்து இஸ்ரயேல் வீட்டாரைப் பாவத்தில் விழ வைத்ததால், நான் என் கையை அவர்களுக்கு எதிராய் ஓங்கியுள்ளேன். அவர்கள் தங்கள் குற்றப்பழியைத் தாங்களே சுமப்பர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அவர்கள் குருக்களைப்போல என் அருகில் வந்து திருப்பணிபுரியவோ, என் பய பொருள்கள் எதன் அருகிலாவது வரவோ கூடாது. அவர்கள் தங்கள் வெட்கக்கேட்டையும் தாங்கள் செய்த அருவருப்பான செயல்களின் விளைவையும் சுமப்பர்.

ஆயினும் நான் அவர்களுக்கு கோவிலைக் கண்காணிக்கும் பொறுப்பையும் அதில் ஆற்றவேண்டிய அனைத்துப் பணிகளைச் செய்யும் பொறுப்பையும் கொடுப்பேன்.

ஆனால், லேவியர்களில் சாதோக்கின் வழியினரான குருக்கள், இஸ்ரயேல் என்னைவிட்டு வழிதவறிப்போனபோது என் பயகத்தைக் கண்காணித்து வந்தனர். எனவே அவர்கள் என் அருகில் வந்து திருப்பணிபுரியவேண்டும். அவர்கள் கொழுப்பு, மற்றும் இரத்தப் பலிகளை எனக்குச் செலுத்த என் முன்னிலையில் நிற்க வேண்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அவர்கள் மட்டுமே என் பயகத்தினுள் நுழையலாம். அவர்கள் மட்டுமே என் மேசையருகில் வந்து என் முன்னிலையில் திருப்பணி புரிந்து சடங்குகளை நிறைவேற்றலாம்.

அவர்கள் உள்முற்றத்தின் வாயில் வழி நுழைகையில் நார்ப்பட்டு ஆடை அணிய வேண்டும். அவர்கள் உள் முற்றத்தின் வாயிலிலோ கோவிலிலோ திருப்பணிபுரிகையில் கம்பளி ஆடைகளை அணியலாகாது.

அவர்கள் தலையில் நார்ப்பட்டுத் தலைப்பாகையும், இடையில் நார்ப்பட்டு உள்ளாடைகளும் அணிய வேண்டும். வியர்வை வருவிக்கும் எதையும் அணியலாகாது.

அவர்கள் வெளிமுற்றத்தில் மக்களிடம் செல்கையில் திருப்பணி புரிகையில் அணிந்த ஆடைகளைக் கழற்றி, அவற்றைத் பயக அறைகளில் வைத்து விட்டு வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அவர்களின் ஆடைகள் வழியாகத் பய்மை மக்களுக்குச் செல்வதைத் தவிர்க்க இவ்வாறு செய்யவேண்டும்.

அவர்கள் தலையை மழிக்கவோ நீள்முடி வளர்க்கவோ வேண்டாம். தலைமுடியைக் கத்தரித்துக் கொள்ளட்டும்.

உள்முற்றத்தில் நுழைகையில் எக்குருவும் திராட்சை மது அருந்தலாகாது.

எந்தக் குருவும் கைம்பெண்ணையோ மணமுறிவு பெற்ற மங்கையையோ மணமுடித்தலாகாது. ஆனால் இஸ்ரயேல் இனத்துக் கன்னிப்பெண்ணையோ குருவின் கைம்பெண்ணையோ மட்டுமே மணமுடிக்கலாம்.

பய்மையானவற்றையும் பொதுவானவற்றையும் பிரித்தறியவும், தீட்டானதையும் தீட்டற்றதையும் பகுத்தறியவும் அவர்கள் என் மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

வழக்குகளில் குருக்களே நடுவராய் இருந்து என் நீதித்தீர்ப்புகளுக்கேற்பத் தீர்ப்பளிக்க வேண்டும். அவர்கள் என் சட்டங்களையும் நியமங்களையும் என் எல்லாக் குறிப்பிட்ட திருநாள்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். என் ஓய்வு நாள்களைத் பய்மையாய்க் கொள்ள வேண்டும்.

இறந்த உடலின் அருகில் குரு சென்று தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது. ஆயினும் இறந்தவர் தம் தந்தையாகவோ, தாயாகவோ, மகனாகவோ, மகளாகவோ, சகோதரனாகவோ, திருமணமாகாத சகோதரியாகவோ இருந்தால் மட்டும் அவர் அவ்வாறு செய்யலாம்.

அதன்பின் தம்மைத் பய்மைப்படுத்திக்கொண்டு அவர் ஏழு நாள்கள் காத்திருக்க வேண்டும்.

அவர் பயகத்தில் பணியாற்ற அதன் உள்முற்றத்தில் நுழையும் நாளில் பாவம் போக்கும் பலியைத் தமக்காக ஒப்புக்கொடுக்க வேண்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

குருக்களுக்கு நானே உரிமைச் சொத்து: அவர்களுக்கு இஸ்ரயேலில் யாதொரு சொத்தும் தரவேண்டாம். நானே அவர்களின் உடைமை.

அவர்கள் தானியப் படையல், பாவம் போக்கும் பலி இறைச்சி, குற்ற நீக்கப்பலி இறைச்சி ஆகியவற்றை உண்பர். இஸ்ரயேலில் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களும் குருக்களுக்குச் சொந்தமாகும்.

உங்கள் முதற்கனிகளில் சிறந்தவையும் உங்கள் சிறப்புக் காணிக்¥கைகளில் உன்னதமானவை யாவும் குருக்களுக்கே சொந்தம். நீங்கள் உங்கள் வீட்டு உணவில் முதல் பாகத்தைக் குருக்களுக்குக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் வீட்டில் இறையாசி தங்கும்.

குருக்கள், பறவைகளிலோ, விலங்குகளிலோ, தானாய் இறந்தவற்றையும் காட்டு விலங்குகளால் பீறப்பட்டவற்றையும் உண்ணலாகாது.

அதிகாரம் 45.

நீங்கள் நாட்டைப் பங்கிட்டு உரிமையாக்கிக் கொள்ளுகையில் ஆண்டவருக்கு நாட்டின் ஒரு பகுதியை அர்ப்பணிக்க வேண்டும். அது இருபத்தைந்தாயிர முழம் நீளமும் பத்தாயிர முழம் அகலமும் உடையதாய் இருக்க வேண்டும். அப்பகுதி முழுவதும் பய்மையானதாக இருக்கும்.

அதில் ஜந்மறு முழச் சதுர நிலம் பயகத்துக்கென ஒதுக்கப்படும். ஜம்பது முழம் அதைச் சுற்றித் திறந்த வெளியாயும் விடப்படும்.

பய நிலப் பகுதியில் இருபத்தைந்தாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் கொண்ட ஒரு பகுதியைத் தெரிந்தெடுக்க வேண்டும். அவ்விடத்தில்தான் பயகமும் திருத்பயகமும் அமையும்.

அவ்விடமே பயகத்தில் நின்று ஆண்டவருக்கு முன் பணிபுரிய வரும் குருக்களுக்குரிய பய நிலப்பகுதியாய் இருக்கும். அது அவர்களின் வீடுகள் இருக்கும் பகுதியாகவும் கோவிலுக்கான பய பகுதியாகவும் அமையும்.

இருபத்தைந்தாயிர முழ நீளமும், பத்தாயிர முழ அகலமும் கொண்ட ஒரு பகுதி கோவிலில் பணிபுரியும் லேவியர்களுக்கு உரியதாகும். அவர்களுக்கு இருபது அறைகள் உடைமையாய் இருக்கும்.

பய பகுதியை ஒட்டி ஜயாயிர முழ அகலமும் இருபத்தைந்தாயிர முழ நீளமும் கொண்ட ஒரு பகுதியை நகருக்கென ஒதுக்க வேண்டும். அது இஸ்ரயேல் வீட்டார் அனைவர்க்கும் உரியதாய் இருக்கும்.

பய பகுதிக்கும், நகருக்கென ஒதுக்கப்பட்ட பகுதிக்கும் இடையில் தலைவனுக்குரிய நிலம் இருக்கும். மேற்குப் பகுதியிலிருந்து மேற்கு எல்லை வரைக்கும் கிழக்குப் பகுதியிலிருந்து கிழக்கு எல்லைவரைக்கும் நீண்டு மேற்கிலிருந்து கிழக்காக நீண்டிருக்கும் ஒவ்வொரு குலப்பகுதியின் நிலத்திற்கும் இணையாக இது இருக்க வேண்டும்.

இந்த நிலமே இஸ்ரயேலின் தலைவனது உடைமையாயிருக்கும். என் தலைவர்கள் இனிமேல் என் மக்களைத் துன்புறுத்தமாட்டார்கள்: மாறாக, இஸ்ரயேல் வீட்டினர் தங்கள் குலத்திற்கேற்றவாறு நிலத்தை உரிமையாக்கிக் கொள்ள அனுமதியளிப்பர்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இஸ்ரயேலின் தலைவர்களே! நீங்கள் வன்முறையையும் அடக்கு முறையையும் விட்டொழியுங்கள். நீதியையையும் நியாத்தையும் கடைப்பிடியுங்கள். என் மக்கள் நில உரிமை இழக்கச் செய்வதை நிறுத்துங்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

உங்களிடம் சரியான எடைக்கருவிகள் இருக்க வேண்டும். சரியான எடையுடைய மரக்காலும் சரியான அளவுடைய குடமும் உங்களிடம் இருக்க வேண்டும்.

மரக்காலும் குடமும் ஒரே அளவில் இருக்க வேண்டும். குடம் என்பது கலத்தில் பத்திலொரு பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். மரக்கால் என்பதும் கலத்தில் பத்திலொரு பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். கலம் என்பதே இரண்டுக்கும் பொதுவானது.

செக்கேல் என்பது இருபது கேராக்களைக் கொண்டிருக்கவேண்டும். ஒரு மினாவில் இருபது செக்கேல்களும், இருபத்தைந்து செக்கேல்களும், பதினைந்து செக் கேல்களும் இருக்க வேண்டும்.

நீங்கள் படைக்க வேண்டிய சிறப்புக் காணிக்கை இதுவே: ஒவ்வோரு கலம் அளவு கோதுமையிலும் ஒரு மரக்காலில் ஆறிலொரு பகுதியையும், ஒவ்வோரு கலம் அளவு வாற் கோதுமையிலும் ஒரு மரக்காலில் ஆறிலொரு பகுதியையும கொடுக்க வேண்டும்.

படைக்க வேண்டிய எண்ணெய், குடம் அளவையால் அளக்கப்படும். ஒவ்வொரு குடம் அளவு எண்ணெயும் கலத்தில் பத்திலொரு பகுதியாகும். கலம் என்பது பத்துக் குடங்கள் அல்லது ஒரு கலம். ஏனெனில், பத்துக் குடங்கள் ஒரு கலத்திற்கு இணையாகும்.

இஸ்ரயேலின் வளமான மேய்ச்சல் நிலத்தில் இருமறு ஆடுகள் உள்ள ஒவ்வொரு மந்தையிலிருந்தும் ஓர் ஆட்டுக்குட்டி எடுக்கப்பட வேண்டும். பாவக் கழுவாய்ப் பலிகளான தானியப் படையலுக்கும், எரிபலிகளுக்கும், நல்லுறவுப் பலிகளுக்கும் அது பயன் படுத்தப்படும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

இஸ்ரயேலின் தலைவனுக்குக் கொடுக்கும் இச்சிறப்புக் காணிக்கையை நாட்டின் மக்கள் யாவரும் கொடுக்க வேண்டும்.

இஸ்ரயேலின் திருநாள்களிலும் அமாவாசை நாள்கள், ஓய்வு நாள்கள் மற்றும் இஸ்ரயேலின் எல்லாச் சிறப்புத் திருநாள்களிலும், எரிபலிகளுக்கும் தானியப் படையலுக்கும் நீர்மப் படையல்களுக்கும் வேண்டியவற்றை அளிக்க வேண்டியது தலைவனின் பொறுப்பாகும். அவன் இஸ்ரயேல் வீட்டார் சார்பில் பாவக் கழுவாய் செய்யப் பாவம் போக்கும் பலிகள், தானியப் படையல்கள், எரிபலிகள், நல்லுறவுப் பலிகள் ஆகியவற்றிற்குத் தேவையானவற்றைத் தருவான்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: முதல் மாதத்தின் முதல் நாளில் நீங்கள் மாசுமறுவற்ற ஓர் இளங்காளையை மந்தையிலிருந்து எடுத்துத் பயகத்தைப் புனிதப்படுத்த வேண்டும்.

குரு பாவம் போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதைக் கோவிலின் கதவு நிலைகளிலும், பீடத்து விளிம்பின் நான்கு முனைகளிலும், உள் முற்றத்தின் வாயில் நிலைகளிலும் பூச வேண்டும்.

அறியாமையாலோ அல்லது உள்ளெண்ணமின்றியோ தவறு செய்தோர்க்காக மாதத்தின் ஏழாம் நாளில் இதே போல் செய்ய கோவிலுக்காகப் பாவக்கழுவாய் செய்ய வேண்டும்.

முதல் மாதத்தின் பதினான்காம் நாள் உங்களுக்குப் பாஸ்காத் திருநாளாக இருக்கும். அது ஏழு நாள் தொடரும். அந்நாள்களில் நீங்கள் புளியாத அப்பங்களையே உண்ண வேண்டும்.

அந்த நாளில் தலைவன் தனக்காகவும், நாட்டின் எல்லா மக்களுக்காகவும் பாவம் போக்கும் பலிக்கென ஒரு காளையைக் கொடுக்க வேண்டும்.

திருவிழாவின் அந்த ஏழு நாள்களிலும் ஒவ்வொரு நாளும் அவன் ஆண்டவருக்கு எரிபலிக்கென மாசு மறுவற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கிடாய்களையும், பாவம் போக்கும் பலிக்கென ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு காளைக்கும் ஒவ்வோர் ஆட்டுக்கிடாய்க்கும் ஒவ்வோர் மரக்கால் அளவு தானியப் பலிப்பொருளையும் ஒவ்வோர் மரக்கால் தானியப் பொருளுக்கு ஒரு கலயம் அளவு எண்ணெயையும் அளிக்க வேண்டும்.

ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் நாளில் தொடங்கும் திருவிழாவில் ஏழு நாள்களிலும் இவ்வாறே பாவம் போக்கும் பலிப்பொருள்கள், எரிபலிப்பொருள்கள், தானியப் படையல், எண்ணெய்ப் படையல் ஆகியவற்றை அவன் அளிக்க வேண்டும்.

அதிகாரம் 46.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: கிழக்கு நோக்கிய உள்முற்றத்தின் வாயில் ஆறு வேலை நாள்களிலும் மூடியிருக்க வேண்டும். ஆனால் ஓய்வு நாளிலும் அமாவாசை நாளிலும் அது திறந்திருக்க வேண்டும்.

தலைவன் வெளியிலிருந்து நுழைவாயிலின் முகமண்டபம் வழியாய் உள்நுழைந்து வாயில் நிலையருகே நிற்க வேண்டும். அவனுடைய எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் குருக்கள் நிறைவேற்ற வேண்டும். அவன் வாயிற்படியருகே நின்று வழிபாடு செய்துவிட்டுப் போகவேண்டும். ஆனால் வாயிலோ மாலைவரை மூடப்படாதிருக்க வேண்டும்.

ஓய்வு நாள்களிலும், அமாவாசை நாள்களிலும் நாட்டின் மக்கள் ஆண்டவர் திருமுன் நுழை வாயிலருகே நின்று வழிபாடு செய்ய வேண்டும்.

ஓய்வு நாளில் தலைவன் ஆண்டவருக்குக் கொண்டுவரும் எரி பலி மாசுமறுவற்ற ஆறு ஆட்டுக் குட்டிகளும் ஒரு வெள்ளாட்டுக் கிடாயுமாம்.

வெள்ளாட்டுக் கிடாயுடன் தரும் தானியப் படையல் ஒரு மரக்கால் அளவு இருக்கவேண்டும். ஆட்டுக்குட்டிகளுடன் தரும் தானியப் படையல் அவன் விரும்பும் அளவு இருக்கலாம். ஒவ்வொரு மரக்கால் அளவு இருக்கலாம். ஒவ்வொரு மரக்கால அளவு தானியத்திற்கும் ஒரு கலயம் அளவு எண்ணெய் தர வேண்டும்.

அமாவாசை நாளில் அவன் மந்தையிலிருந்து ஓர் இளங்காளை, ஆறு ஆட்டுக்குட்டிகள், ஒரு வெள்ளாடு ஆகியவற்றைத் தர வேண்டும். அவை அனைத்தும் மாசுமறு அற்றவையாய் இருக்க வேண்டும்.

காளையுடன் ஒரு மரக்கால் அளவு தானியப் படையலையும் வெள்ளாட்டுக் கிடாயுடன் ஒருமரக்கால் அளவு தானியப் படையலையும் ஆட்டுக் குட்டிகளுடன் அவன் விரும்பும் அளவு தானியப் படையலையும் கொடுக்க வேண்டும் . ஒவ்வொரு மரக்கால் அளவு தானியப் படையலுடன் ஒரு கலயம் அளவு எண்ணெயும் கொடுக்க வேண்டும்.

தலைவன் நுழைகையில் அவன் நுழைவாயிலின் புகுமுக மண்டபம் வழியாய் நுழைந்து, அதே வழியில் வெளிச் செல்ல வேண்டும்.

குறிப்பிட்ட நாள்களில் நாட்டு மக்கள் ஆண்டவர் திருமுன் வருகையில், வடக்கு வாயில் வழியாய் வழிபாடு செய்ய வருவர். தெற்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். தெற்கு வாயில் வழியாய் நுழைபவர் வடக்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். யாரும் தான் உள் நுழைந்த வாயில் வழியாய்த் திரும்பக் கூடாது. ஆனால் ஒவ்வோருவரும் எதிர்வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும்.

தலைவன் மக்களுடன் சேர்ந்து, அவர்கள் உள்நுழைகையில் அவனும் நுழைந்து, அவர்கள் வெளிச் செல்கையில் அவனும் வெளிச் செல்வான்.

விழாக்களிலும் சிறப்புத் திருநாள்களிலும், தானியப் படையல் ஒருகாளைக்கு ஒரு மரக்கால் அளவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்க்கு ஒருமரக்கால் அளவும் ஆட்டுக்குட்டிகளுக்கு அவன் விரும்பும் அளவும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மரக்கால் அளவு தானியத்திற்கும் ஒரு கலயம் அளவு எண்ணெய் தரவேண்டும்.

தலைவன் ஆண்டவருக்கு எரிபலியோ அல்லது நல்லுறவுப் பலியோ தன்னார்வப் பலியாகக்கொடுக்க வருகையில், கிழக்கு நோக்கிய வாயில் அவனுக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கவேண்டும். அவன் ஓய்வு நாளில் செய்வதுபோலவே எரிபலியையோ, நல்¥லுறவுப் பலியையோ செலுத்துவான். பின்னர் அவன் வெளியே செல்வான். அவன் சென்ற பிறகு வாயில் மூடப்படும்.

ஒவ்வொரு நாளும் ஒரு வயது மாசுமறுவற்ற ஆட்டுக்குட்டி ஒன்றை எரிபலியாய் ஆண்டவருக்குச் செலுத்தல் வேண்டும். காலை தோறும் அதைச் செலுத்த வேண்டும்.

ஆட்டுக்குட்டியுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் தானியப் படையல் செய்தல் வேண்டும். அது ஒரு மரக்காலில் ஆறில் ஒரு பகுதியாகவும், கூடவே மாவைப் பிசைய ஒரு கலயம் அளவு எண்ணெயில் மூன்றிலொரு பகுதியுமாக இருக்கவேண்டும். ஆண்டவருக்குத் தானியப் படையல் செய்தல் என்றென்றும் நடைபெற வேண்டிய முறைமையாகும்.

இவ்வாறு ஆட்டுக்குட்டி, தானியப்படையல், எண்ணெய் யாவும் எரிபலிக்கெனக் காலைதோறும் அளிக்கப்படல் வேண்டும்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தலைவன் தன் உரிமைச்சொத்திலிருந்து ஒரு பகுதியைத் தன் புதல்வரின் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது அம்மகனுடைய வழிமரபினர்க்கும் உரிமையாகும். அது அவர்களுக்கு உரிமைச் சொத்தாக இருக்கும்.

ஆனால், தலைவன் தன் உரிமைச் சொத்துக்களிலிருந்து ஒரு பகுதியைத் தன் ஊழியரில் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது விடுதலை ஆண்டு வரை அவ்வூழியனுக்குச் சொந்தமாகும். பின்னர் அது தலைவனுக்குச் சேரும். அவனுடைய உரிமைச் சொத்து அவன் புதல்வரையே சாரும்.

தலைவன் மக்களை அவர்களின் உடைமைப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கவோ அவர்களின் உரிமைச் சொத்தில் எதையும் எடுத்துக் கொள்ளவோ கூடாது. அவன் தன் உடைமையிலிருந்தே தன் புதல்வருக்கு உரிமைச் சொத்தை வழங்கவேண்டும். அதன்மூலம் என் மக்களில் எவனும் அவனது உரிமையிலிருந்து பிரிக்கப்படாமலிருப்பான்.

பின்னர் அம்மனிதர் என்னை வாயில் பக்கத்திலிருந்த நடைவழியாக வடக்கு நோக்கி இருக்கும் குருக்களுக்குரிய பய அறைகளுக்கு அழைத்துச் சென்றார்: மேற்கு ஓரத்தில் இருக்கும் ஓர் இடத்தைக் காட்டினார்.

அவர் என்னிடம் சொன்னது: குருக்கள் குற்ற நீக்கப்பலி, பாவம் போக்கும் தானியப் படையல் ஆகியவற்றைச் சமைக்கும் இடம் இதுவே. அவர்கள் அவற்றை வெளிமுற்றத்திற்குக் கொண்டுபோவதன் மூலம் பய்மை மக்களுக்குச் சென்று விடுவதைத் தவிர்க்க இவ்வாறு செய்வர்.

அவர் பின்னர் என்னை வெளிமுற்றத்திற்குக் கூட்டிவந்து அதன் நான்கு மூலைகளுக்கும் இட்டுச் சென்றார். நான் ஒவ்வொரு மூலையிலும் ஒரு முற்றத்தைக் கண்டேன்.

வெளிமுற்றத்தின் நான்கு மூலைகளிலும் சுற்றிக் கட்டப்பட்ட முற்றங்கள் நாற்பது முழ நீளமும் முப்பது முழ அகலமுமாய் இருந்தன. நான்கு மூலைகளிலும் இருந்த ஒவ்வொரு முற்றமும் ஒரே அளவானவை.

நான்கு முற்றங்களின் உட்பகுதியிலும் சுற்றுக்கட்டு இருந்தது. அதன்கீழ் எப்பக்கமும் அடுப்புகள் கட்டப்பட்டிருந்தன.

அவர் என்னிடம், கோவிலில் பணிபுரிவோர் மக்களின் பலிப்பொருள்களைச் சமைக்கும் அடுப்புகள் இவையே என்றார்.

அதிகாரம் 47.

அம்மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது.

அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது.

அம்மனிதர் கையில் ஓர் அளவு மலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார். பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார்.

அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீர்¢ல் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார்.

அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப்போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது.

அவர் என்னிடம் மானிடா! இதைப் பார்த்தாயா? என்றார். பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.

நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன்.

அவர் என்னிடம் உரைத்தது: இத் தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும்.

இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

மீனவர் கடலோரமெங்கும் நிற்பர். ஏன்கேதியிலிருந்து எனக்லயிம்வரை வலைகளை விரிக்க இடமிருக்கும். மீன்களோ பெருங்கடலின் மீன்கள் போலப் பலவகைப்பட்டவையாய் இருக்கும்.

ஆயினும் உவர் மற்றும் சதுப்பு நிலங்கள் வளமை பெறா: அவை உப்பளங்களுக்காய் விடப்படும்.

பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்¥கிலும் வளரும்: அவற்றின் இலைகள் உதிரா: அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்: ஏனெனில் பயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் இஸ்ரயேலின் பன்னிரு குலங்களுக்கும் யோசேப்பின் இரு பாகங்களுக்கும் ஏற்ப இந்த நாட்டைப் பிரித்து உரிமையாக்கிக் கொள்வதற்கான எல்லைகள் இவையே:

நீங்கள் அதனை ஒவ்வொரு சகோதரனுக்கும் சமமாகப் பங்கிட வேண்டும். ஏனெனில், நான் இதனை உங்கள் மூதாதையருக்குத் தருவதாய்க் கையுயர்த்தி வாக்களித்துள்ளேன். இந்த நாடு உங்கள் உரிமைச் சொத்தாகும்.

நாட்டின் எல்லை இதுவே: வடக்குப் பக்கம் இது பெருங் கடலிலிருந்து ஏத்லோன் சாலை வழியாய்ச் செதாது வரை:

பெரோத்தா, தமஸ்கு எல்லை முதல் ஆமாத்து எல்லையிலுள்ள சிப்ரயிம் வரை: அவ்ரான் எல்லையில் இருக்கும் ஆட்சேர் அத்திக்கோன் வரை:

இவ்வெல்லை கடலிலிருந்து அட்சர் ஏனோன் வரை நீண்டு, தமஸ்குவின் வடக்கு எல்லை வழியாய் வடக்கில் ஆமாத்து எல்லை வரை போகும். இது வடக்கு எல்லையாகும்.

கிழக்குப் பக்க எல்லை அவ்ரானுக்கும் தமஸ்குவுக்கும் இடையே, யோர்தான் வழியாய், கிலயாதுக்கும் இஸ்ரயேல் நாட்டிற்கும் இடையில் போய், கிழக்குக் கடல் வரை போகும். இது கிழக்கு எல்லையாகும்.

தெற்குப் பக்கத்தில் இது தாமாரிலிருந்து மெரிபா காதேசு நீர்நிலை வரை போய் எகிப்தின் எல்லை ஓரமாய்ப் பெருங்கடல் வரை போகும். இது தெற்கு எல்லையாகும்.

மேற்குப் பகுதியில் பெருங்கடலிலிருந்து ஆமாத்து நுழைவின் எதிர்ப்பக்கம் வரை எல்லையாக இருக்கும். இது மேற்கு எல்லையாகும்.

நீங்கள் இந்த நாட்டை இஸ்ரயேலின் குலங்களுக்கு ஏற்பப் பங்கிட வேண்டும்.

நீங்கள் இதை உங்களுக்கு உரிமைச் சொத்தாகவும், உங்கள் நடுவில் வந்து குடியேறி உங்கள் நடுவில் பிள்ளைகள் பெற்றெடுத்த அன்னியரின் உரிமைச் சொத்தாகவும் பங்கிட வேண்டும். அவர்களும் உங்கள் நாட்டில் பிறந்த இஸ்ரயேலராகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். உங்களோடு சேர்ந்த இஸ்ரயேலின் குலங்கள் நடுவே அவர்களுக்கும் உரிமைச் சொத்து வழங்கப்பட வேண்டும்.

அன்னியன் எந்தக் குலத்தோடு சேர்ந்து குடியேறினாலும், அங்கே அவனுக்கு உரிமைச் சொத்து வழங்கப்பட வேண்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

அதிகாரம் 48

குலங்களின் பெயர்கள் இவையே: வடக்கு எல்லையில், ஏக்லோன், ஆமாத்து நுழைவு அட்சர், ஏனோன் சாலை வழியாய் தமஸ்கு எல்லைவழி, வடக்கில் ஆமாத்து பக்கம் வரை கிழக்கிலிருந்து மேற்குவரை, தாணுக்கு உரியது.

தாணின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை ஆசேருக்கு உரியது.

ஆசேரின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை நப்தலிக்கு உரியது.

நப்தலியின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை மனாசேக்கு உரியது.

மனாசேயின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை எப்ராயிமுக்கு உரியது.

எப்ராயிமின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை ரூபனுக்கு உரியது.

ரூபனின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை யூதாவுக்கு உரியது.

யூதாவின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டிய சிறப்புப்பகுதி: அது இருபத்தையாயிர முழ அகலமும் ஒரு குலத்துக்குரிய கிழக்கு முதல் மேற்குப் பகுதிக்கான நீளமும் உடையதாய் இருக்கும். அதன் நடுவில் பயகம் இருக்கும்.

நீங்கள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்க வேண்டிய சிறப்புப்பகுதி இருபத்தையாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் உடையதாய் இருக்கும்.

அது குருக்களுக்குரிய புனிதப் பகுதியாய் இருக்கும். அது வடக்குப் பக்கம் இருபத்தையாயிர முழமும் மேற்குப்பக்கம் பத்தாயிர முழமும் கிழக்குப் பக்கம் பத்தாயிர முழமும், தெற்குப் பக்கம் இருபத்தையாயிர முழமும் உடையதாய் இருக்கும். அதன் நடுவில் ஆண்டவரின் பயகம் இருக்கும்.

அந்த இடம் இஸ்ரயேலருடன் சேர்ந்து என்னைவிட்டு விலகிச் சென்ற லேவியரைப் போல் அல்லாமல் எனக்குப் பணிபுரிவதில் கருத்தாயிருந்த சாதோக்கியராகிய புனிதப்படுத்தப்பட்ட குருக்களுக்கு உரியதாய் இருக்கும்.

லேவியரின் எல்லையருகே உள்ள மிக உன்னத இடத்தின் ஒரு பகுதியாகிய அது அவர்களுக்கான சிறப்பு அன்பளிப்பாகும்.

குருக்களுக்கான பகுதியின் எல்லையருகே இருபத்தையாயிர முழ நீளமும் பத்தாயிர முழ அகலமும் கொண்ட பகுதி லேவியருக்கு உரியதாய் இருக்கும்: ஆம், மொத்த நீளம் இருபத்தையாயிர முழமும் அகலம் பத்தாயிர முழமும் இருப்பதாக!

அவர்கள் அதிலிருந்து கொஞ்சமும் விற்கவோ, உரிமை மாற்றம் செய்யவோ கூடாது. சிறந்த நிலமாகிய அதை யாருக்கும் கொடுத்தலாகாது. ஏனெனில் அது ஆண்டவரின் பய நிலமாகும்.

ஜயாயிர முழ அகலமும் இருபத்தையாயிர முழ நீளமும் கொண்ட எஞ்சிய பகுதி பொதுவானது. இது நகருக்காகவும் வீடுகளுக்காகவும் திறந்த வெளிக்காகவும் ஒதுக்கப்படும். நகர் அதன் நடுவில் இருக்கும்.

நகர்க்குரிய அளவுகள் பின்வருமாறு: வடக்குப் பகுதியில் நாலாயிரத்து ஜந்மறு கோல்: தெற்குப் பகுதியில் நாலாயிரத்து ஜந்மறு கோல்: கிழக்குப் பகுதியில் நாலாயிரத்து ஜந்மறு கோல்: மேற்குப் பகுதியில் நாலாயிரத்து ஜந்மறு கோல்.

நகரின் திறந்த நிலம் வடக்கில் இருமற்று ஜம்பது கோலும் தெற்கில் இருமற்று ஜம்பது கோலும் கிழக்கில் இருமற்று ஜம்பது கோலும் மேற்கில் இருமற்று ஜம்பது கோலும் உடையதாய் இருக்கும்.

பயகத்தை ஒட்டி எஞ்சியுள்ள நீண்ட பகுதி கிழக்கில் பத்தாயிரம் கோலும், மேற்கில் பத்தாயிரம் கோலுமாய் இருக்கும். அதில் கிடைக்கும் விளைச்சல் நகரின் பணியாளர்களுக்கு உணவளிக்கும்.

நகரில் பணிபுரிவோர் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

முழு நிலப்பகுதியும் இருபத்தையாயிரம் கோல் நீள அகலமுடைய சதுர நிலமாய் இருக்கும். பயகத்திற்கும் நகருக்குமான பகுதிகளை ஒதுக்கி வைப்பீர்களாக!

பயகத்திற்கும் நகருக்கமான பகுதிகளின் இருபக்கங்களிலும் எஞ்சியுள்ளவை தலைவனுக்கு உரியன. அது பயகத்திலிருந்து கிழக்கே இருபத்தையாயிரம் கோலும் மேற்கே இருபத்தையாயிரம் கோலுமாய் இருக்கும். குலங்களுக்குச் சொந்தமான பகுதிகளை ஒட்டிய இவ்விரு பகுதிகளும் தலைவனுக்கு உரியன. கோவிலின் பயகத்தை உள்ளடக்கிய புனிதப் பகுதி நடுவில் இருக்கும்.

லேவியரின் பகுதிக்கும், நகரின் பகுதிக்கும் இடையில் தலைவனுக்குரிய பகுதி இருக்கும். அப்பகுதி யூதாவின் எல்லைக்கும் பென்யமினின் எல்லைக்கும் நடுவில் இருக்கும்.

மற்றக் குலங்களைப் பொறுத்த வரை கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை பென்யமினுக்கு உரியது.

பென்யமினின் எல்லையருகே கிழக்குப் பகுதி முதல் மேற்குப் பகுதிவரை சிமியோனுக்கு உரியது.

சிமியோனின் எல்லையருகே கிழக்குப் பகுதி முதல் மேற்குப் பகுதிவரை இசக்காருக்கு உரியது.

இசக்காரின் எல்லையருகே கிழக்குப் பகுதி முதல் மேற்குப் பகுதி வரை செபுலோனுக்கு உரியது.

செபுனோனின் எல்லையருகே கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிவரை காத்துக்கு உரியது.

காத்தின் எல்லையருகே தெற்குப் பகுதி தாமார் எல்லையிலிருந்து மெரிபா, காதேசு நீர்நிலை வரையும் எகிப்திய எல்லையோரம் பெருங்கடல் வரையும் போகும்.

நீங்கள் இஸ்ரயேல் குலங்களுக்கு உரிமைச் சொத்தாய்ப் பங்கிட வேண்டிய நாடு இதுவே: அவர்களின் பங்குகள் இவையே, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

நகரைவிட்டு வெளிச்செல்லும் வாயில்கள் இவையே: வடக்குப் புறத்தில் நாலாயிரத்து ஜந்மறு கோல் அளவுப் பகுதியில் இருக்கும்.

நகர் வாயில்கள் இஸ்ரயேலின் குலங்களின் பெயரால் அழைக்கப்படும்: வடக்குப் புறத்தில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று ரூபனின் வாயில் , ஒன்று யூதாவின் வாயில் , ஒன்று லேவியின் வாயில் .

கிழக்குப் புறத்தில் நாலாயிரத்து ஜந்மறு கோல் அளவுப் பகுதியில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று யோசேப்பின் வாயில் , ஒன்று “பென்யமின் வாயில்“, ஒன்று தாணின் வாயில் .

தெற்குப் புறத்தில் நாலாயிரத்து ஜந்மறு கோல் அளவுப் பகுதியில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று சிமியோனின் வாயில் , ஒன்று இசக்காரின் வாயில் , ஒன்று செபுலோனின் வாயில் .

மேற்குப் புறத்தில் நாலாயிரத்து ஜந்மறு கோல் அளவுப் பகுதியில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று காத்தின் வாயில் , ஒன்று ஆசேரின் வாயில் , ஒன்று நப்தலியின் வாயில் .

அந்நகரின் சுற்றளவு பதினெட்டாயிரம் கோல். அந்நாளிலிருந்து நகர் ஆண்டவர் இங்கு இருக்கிறார் என்னும் பெயர் பெறும்.

புத்தகம் 27 - தானியேல்

அதிகாரம் 1.

யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டான்.

தலைவராகிய ஆண்டவர் யூதா அரசனாகிய யோயாக்கிமையும் கடவுளுடைய கோவிலின் கலன்கள் சிலவற்றையும் அவனிடம் கையளித்தார். அவனும் அவற்றைச் சீனார் நாட்டிலிருந்த தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துச் சென்று அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய கருவூலத்தில் சேர்த்தான்.

அப்பொழுது, அரசன் தன் அரண்மனை அலுவலரின் தலைவனாகிய அஸ்பெனாசுக்கு, அரசகுலத்தையும் உயர் குடியையும் சார்ந்த இஸ்ரயேலர் சிலரைக் கொண்டுவருமாறு கட்டளையிட்டான்.

அக்கட்டளைப்படி அவர்கள் உடல் ஊனமற்ற, அழகுமிக்க, எல்லா ஞானத்திலும் தேர்ச்சி பெற்ற, அறிவிலும் உணர்விலும் கல்வியிலும் சிறந்த, அரசனின் அரண்மனையில் பணியாற்றும் திறமை பெற்ற இளைஞர்களாய் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் கல்¥தேய மொழியை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ளவேண்டும்.

அரசன் தான் உண்டுவந்த சிறப்புணவிலும், பருகி வந்த திராட்சை இரசத்திலும் நாள் தோறும் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான். இவ்வாறு மூன்றாண்டுகள் பயிற்சி அளித்தபின், இறுதியில் அவர்களை அரசன் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தவேண்டும் என்று ஆணையிட்டான்.

இப்படித் தேர்ந்ததெடுக்கப்பட்டவர்களுள் யூதா குலத்தைச் சார்ந்த தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா என்பவர்களும் இருந்தார்கள்.

அலுவலரின் தலைவன் தானியேலுக்குப் பெல்தசாச்சர் என்றும் அனனியாவுக்குச் சாத்ராக்கு என்றும் மிசாவேலுக்கு மேசாக்கு என்றும், அசரியாவுக்கு ஆபேத்¥¥ நெகோ என்றும் மாற்றுப் பெயரிட்டான்.

அரசனது சிறப்புணவினாலும், அவன் பருகிவந்த திராட்சை இரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டார்: அவ்வாறே தாம் தீட்டுப்படாதிருக்க அலுவலர் தலைவனிடம் அனுமதி கேட்டார்.

அலுவலர் தலைவன் தானியேலுக்குப் பரிவும் இரக்கமும் காட்டுமாறு கடவுள் அருள்கூர்ந்தார்.

அலுவலர் தலைவன் தானியேலை நோக்கி, உங்களுக்கு உணவும் பானமும் ஏற்பாடு செய்திருக்கும் அரசனாகிய என் தலைவருக்கு நான் அஞ்சிகிறேன். ஏனெனில் உங்களையொத்த வயதினரை விட நீங்கள் களை குன்றியிருப்பதை அரசன் கண்டால் என் தலையே போய்விடும்: நீங்கள்தான் அதற்குக் காரணமாவீர்கள் என்றான்.

தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியவர்களுக்கென அலுவலர் தலைவனால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் தானியேல் கூறியது:

ஜயா! தயை கூர்ந்து பத்து நாள் உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும். எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும், குடிப்பதற்குத் தண்ணீரையும் மட்டுமே தாரும்.

அதற்குப் பிறகு, எங்களது தோற்றத்தையும் அரசனது சிறப்புணவை உண்ணும் மற்ற இளைஞர்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப்பாரும்: அதன்பின் உமக்குத் தோன்றியபடி உம்முடைய பணியாளர்களாகிய எங்களுக்குச் செய்தருளும் என்றார்.

அவனும் இக்காரியத்தில் அவர்களுக்கு இணங்கி அவர்களைப் பத்து நாள் சோதித்துப் பார்த்தான்.

பத்து நாள்கள் ஆயின. அரசனது சிறப்புணவை உண்டுவந்த இளைஞர்கள் அனைவரையும் விட அவர்களது தோற்றம் மிகக் களையுள்ளதாயும் உடற்கட்டு மிகச் செழுமையுள்ளதாயும் காணப்பட்டது.

ஆதலால் மேற்பார்வையாளன் அவர்கள் உண்ணவேண்டிய சிறப்புணவுக்கும் பருகவேண்டிய திராட்சை இரசத்திற்கும் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்து வந்தான்.

கடவுள் இந்த நான்கு இளைஞர்களுக்கும் அறிவையும் அனைத்து இலக்கியத்தில் தேர்ச்சியையும் ஞானத்தையும் அருளினார். சிறப்பாக, தானியேல் எல்லாக் காட்சிகளையும் கனவுகளையும் உய்த்துணரும் ஆற்றல் பெற்றிருந்தார்.

அரசன் தன் முன்னிலைக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டுமென்று குறித்த நாள் வந்தது. அலுவலர் தலைவனும் அவர்களை நெபுகத்¥னேசர் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினான்.

அரசன் அவர்களோடு உரையாடலானான்: அப்பொழுது அவர்கள் அனைவருள்ளும் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை: எனவே அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியலாயினர்.

ஞானம், விவேகம் சார்ந்தவற்றில் அரசன் அவர்களோடு கலந்துரையாடினான். அப்பொழுது அவனது அரசில் இருந்த எல்லா மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததைக் கண்டறிந்தான்.

இவ்வாறு சைரசு என்ற அரசனது முதலாம் ஆட்சியாண்டுவரை தானியேல் தொடர்ந்து பணிபுரிந்தார்.

அதிகாரம் 2.

நெபுகத்¥னேசர் தனது இரண்டாம் ஆட்சியாண்டில் கனவுகள் சில கண்டு, உள்ளம் கலங்கி, உறக்கமின்றித் தவித்தான்.

அப்பொழுது அரசன் தன் கனவுகளைத் தனக்கு விளக்கும்படி மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் சூனியக்காரர்களையும் கல்தேயர்களையும் அழைத்துவரக் கட்டளையிட்டான். அவர்களும் வந்து அரசன் முன்னிலையில் நின்றார்கள்.

அரசன் அவர்களை நோக்கி, நான் ஒரு கனவு கண்டேன்: அதனால் என்னுள்ளம் கலக்கமுற்றிருக்கிறது: நான் கண்டது இன்னதென்று அறிய விரும்புகிறேன் என்றான்.

அப்பொழுது கல்தேயர் அரசனை நோக்கி, (அரமேய மொழியில்) அரசரே! நீர் நீடுழி வாழ்க! நீர் கண்ட கனவை உம் பணியாளர்களுக்குச் சொல்லும். நாங்களும் அதன் பொருளை உமக்கு விளக்கிக் கூறுவோம் என்று கூறினார்கள்.

அரசன் கல்தேயருக்கு மறுமொழியாக, நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு நீங்கள் விளக்கிக் கூறாவிடில், உங்களைக் கண்டந்துண்டமாய் வெட்டிவிடுவேன்: உங்கள் வீடுகளும் தரைமட்டமாக்கப்படும்: இது என் திண்ணமான முடிவு.

ஆனால் கனவையும் அதன் உட்பொருளையும் விளக்கிக் கூறுவீர்களாகில், அன்பளிப்புகளும் பரிசுகளும் பெரு மதிப்பும் என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்கள். ஆகையால் கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு விளக்கிக் கூறுங்கள் என்று கூறினான்.

அதற்கு அவர்கள் மீண்டும், அரசர் அந்தக் கனவைத் தம் பணியாளர்களுக்குச் சொல்லட்டும்: அப்பொழுது அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவோம் என்று பதிலளித்தார்கள்.

அதற்கு அரசன் மறுமொழியாகக் கூறியது: நான் முடிவெடுத்துவிட்டேன் என்பதை அறிந்தே நீங்கள் காலம் தாழ்ந்த முயலுகிறீர்கள்: இது எனக்குத் திண்ணமாய்த் தெரியும்.

கனவு இன்னதென்று உங்களால் தெரிவிக்க இயலாதெனில், உங்கள் எல்லாருக்கும் ஒரே தீர்ப்புதான். சூழ்நிலை மாறும்வரை பொய்யும் புரட்டுமான வீண் கதைகளைச் சொல்ல உங்களுக்குள் உடன்பட்டிருக்கிறீர்கள். ஆதலால் கனவை முதலில் சொல்லுங்கள்: அப்பொழுதுதான் அதன் உட்பொருளையும் உங்களால் விளக்கிக் கூறமுடியும் என்பதை நான் அறிந்துகொள்ள இயலும்.

கல்தேயர் மறுபடியும் அரசனை நோக்கி, அரசரே! உமது விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவன் இவ்வுலகில் ஒருவனுமில்லை: வலிமையுடைய எந்தப் பேரரசனும் இத்தகைய காரியத்தை எந்த மந்திரவாதியிடமாவது, மாய வித்தைக்காரனிடமாவது, கல்தேயனிடமாவது, இதுகாறும் கேட்டது கிடையாது.

ஏனெனில், நீர் கேட்கும் காரியம் செயற்கரிய ஒன்று: தெய்வங்களாலன்றி வேறெவராலும் அரசருக்கு அதனைத் தெரிவிக்க முடியாது: ஆனால், மானிடர் நடுவில் தெய்வங்கள் இருத்தலில்லையே! என்று மறுமொழி கூறினார்கள்.

அரசன் இதைக் கேட்டுக் கடுஞ்சினமுற்றுச் சீறி எழுந்து பாபிலோனில் இருந்த எல்லா ஞானிகளையும் அழித்து விடும்படி ஆணையிட்டான்.

ஞானிகள் கொலை செய்யப்படவேண்டும் என்ற ஆணையின்படி தானியேலையும் அவருடைய தோழர்களையும் கொலை செய்யத் தேடினார்கள்.

அரசனுடைய காவலர்த் தலைவன் அரியோக்கு பாபிலோனிய ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்டு வந்தான்.

தானியேல் முன்னெச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் அரசனுடைய காவலர்த் தலைவனாகிய அரியோக்கிடம், அரசனின் ஆணை இவ்வளவு கடுமையாயிருப்பது ஏன்? என்று கேட்டார். அதற்குரிய காரணத்தை அரியோக்கு தானியேலுக்குத் தெரிவித்தான்.

உடனே தானியேல் அரசனிடம் போய், கனவின் உட்பொருளை அவனுக்கு விளக்கிக்கூறத் தமக்குச் சில நாள் கெடு தருமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர், தானியேல் வீட்டுக்குத் திரும்பிச் சென்று, அனனியா, மிசாவேல், அசரியா ஆகிய தோழர்களிடம் செய்தியைக் கூறினார்.

பாபிலோனிய ஞானிகளோடு அவரும் அவர்களுடைய தோழர்களும் கொல்லப்படாதிருக்க, விண்ணகக் கடவுள் கருணை கூர்ந்து அம் மறைபொருளை வெளிப்படுத்தியருள வேண்டுமென்று அவரை மன்றாடுமாறு அவர்களிடம் சொன்னார்.

அவ்வாறே அன்றிரவு கண்ட காட்சி ஒன்றில், தானியேலுக்கு அம்மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது. அப்பொழுது தானியேல் விண்ணகக் கடவுளை வாழ்த்திப் போற்றினார்.

அவர் கூறியது: கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழத்தப்படுவதாக! ஏனெனில், ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியன!

காலங்களையும் பருவங்களையும் மாற்றுபவர் அவரே! அரசர்களை விலக்கி மாற்று அரசர்களை நிலைநிறுத்துபவர் அவரே! ஞானிகளுக்கு ஞானம் வழங்குபவர் அவரே! அறிவாளிகளுக்கு அறிவை அருள்பவர் அவரே!

ஆழ்ந்த மறைபொருள்களை வெளிப்படுத்துபவர் அவரே! இருளில் உள்ளதை அறிபவர் அவரே! ஒளியும் வாழ்வது அவருடனே!

எங்கள் தந்தையரின் இறைவா! உமக்கு நன்றியும் புகழும் கூறுகின்றேன்: ஏனெனில், எனக்கு ஞானமும் ஆற்றலும் தந்தவர் நீரே! நாங்கள் உம்மிடம் கேட்டதை இப்பொழுது எனக்குத் தெரியப்படுத்தியவர் நீரே! அரசனது காரியத்தை எங்களுக்கு அறிவித்தவரும் நீரே!

பின்பு தானியேல், பாபிலோனிய ஞானிகளை அழிப்பதற்கு அரசனால் நியமிக்கப்பட்ட அரியோக்கிடம் போய், அவனை நோக்கி, நீர் பாபிலோனிய ஞானிகளை அழிக்க வேண்டாம்: என்னை அரசர் முன்னிலைக்கு அழைத்துச் செல்¥லும்: நான் அரசரது கனவின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன் என்றார்.

எனவே, அரியோக்கு தானியேலை அரசன் முன்னிலைக்கு விரைவாய் அழைத்துச் சென்று, அரசனிடம், அரசரே! சிறைப்பட்ட யூதா நாட்டினருள், அரசருடைய கனவின் உட்பொருளை விளக்கிக் கூறவல்ல ஒருவனைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றான்.

அரசனோ பெல்தசாச்சர் என்று பெயரிடப்பட்ட தானியேலைப் பார்த்து, நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு விளக்கிக் கூற உன்னால் இயலுமா? என்று கேட்டான்.

தானியேல் அரசனுக்குச் சொன்ன மறுமொழி: அரசர் கேட்கும் மறைபொருளை அரசருக்கு அறிவிக்க எந்த ஞானியாலும் மாயவித்தைக்காரனாலும் மந்திரவாதியாலும் சோதிடனாலும் இயலாது.

ஆனால் அரசரே! மறைபொருள்களை வெளிப்படுத்தும் விண்ணகக் கடவுள் பிற்காலத்தில் நிகழப்போவதை நெபுகத்னேசர் என்னும் உமக்குத் தெரிவித்துள்ளார்: நீர் கண்ட கனவும், நீர் படுத்திருந்த பொழுது, உம் மனக்கண் முன்னே தோன்றின காட்சிகளும் பின்வருமாறு:

அரசரே! நீர் படுத்திருந்த பொழுது, எதிர்காலத்தில் நிகழப்போவதைப் பற்றி நினைக்கத் தொடங்கினீர்: அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் இனி நடக்க விருப்பதை உமக்குக் காண்பித்தார்.

ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் மற்றெல்லா உயிர்களையும்விட நான் ஞானம் மிக்கவன் என்பதால் எனக்கு வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அரசருக்கு அதன் உட்பொருளைத் தெரிவிக்கவும் உமது இதயத்தின் நினைவுகளை நீர் அறிந்துகொள்ளவும் அவை எனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அரசரே! நீர் பெரிய சிலை ஒன்றைக் கண்டீர். உம் கண் எதிரே நின்ற அம் மாபெரும் சிலை பளபளக்கும் ஒளிமிக்கதாயும் அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும் இருந்தது.

அச்சிலையின் தலை பசும்பொன்னால் ஆனது: அதன் மார்பும் புயங்களும் வெள்ளியால் ஆனவை: வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை.

அதன் கால்கள் இரும்பினால் ஆனவை: அதன் காலடிகள் ஒரு பகுதி இரும்பினாலும் மறுபகுதி களிமண்ணாலும் ஆனவை. நீர் அச்சிலையைப் பார்த்துக்கொண்டிருந்த பொழுது, மனிதக் கை படாத கல் ஒன்று பெயர்ந்து உருண்டு வந்தது.

அந்தக் கல் இரும்பினாலும் களி மண்ணாலுமான அதன் காலடிகளில் வந்து மோதி அவற்றை நொறுக்கியது.

அப்பொழுது இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவையாவும் நொறுங்கி, கோடை காலத்தில் கதிரடிக்கும் களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளம் இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது: ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று.

அரசரே! இதுவே நீர் கண்ட கனவு: அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது விளக்கிக் கூறுவோம்.

அரசரே! நீர் அரசர்க்கரசராய் விளங்குகின்றீர். விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், வலிமை, மாட்சி ஆகியவற்றைத் தந்துள்ளார்.

உலகெங்கும் உள்ள மனிதர்களையும், வயல்¥¥ வெளி விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் உம் பொறுப்பில் அவர் ஒப்படைத்து, அவற்றையெல்லாம் நீர் ஒருவரே ஆளும்படி செய்துள்ளார். எனவே, பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கின்றது.

உமக்குப்பின் உமது அரசைவிட ஆற்றல் குறைந்த வேறோர் அரசு தோன்றும்: அடுத்து வெண்கலம் போன்ற மூன்றாம் அரசு எழும்பும்: அது உலகெல்லாம் ஆளும்.

பின்னர், அனைத்தையும் நொறுக்கும் இரும்பைப் போல் வலிமை வாய்ந்த நான்காம் அரசு தோன்றும்: அந்த அரசும் இரும்பு நொறுக்குவது போல் அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கும்.

மேலும், நீர் அச்சிலையின் அடிகளையும் கால் விரல்களையும், ஒரு பகுதி குயவனின் களிமண்ணாகவும், மறு பகுதி இரும்பாகவும் கண்டதற்கிணங்க, அந்த அரசு பிளவுபட்ட அரசாய் இருக்கும். ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க, இரும்பின் உறுதியும் ஓரளவு காணப்படும்.

அடிகளின் விரல்கள் ஒரு பகுதி இரும்பும் மறு பகுதி களிமண்ணுமாய் இருந்ததுபோல் அந்த அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும்.

இரும்பு களிமண்ணோடு கலந்திருப்பதாக நீர் கண்டதற்கிணங்க, அவர்களும் தங்களுக்குள் திருமணத்தின் மூலம் உறவு கொள்வார்கள்: ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காததுபோல், அவர்கள் ஒருவரோடொருவர் ஒன்றித்திருக்கமாட்டார்கள்.

அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்: அது என்றுமே அழியாது: அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்: அதுவோ என்றென்றும் நிலைத்திற்கும்.

மனிதக் கை படாது பெயர்ந்து மலையிலிருந்து உருண்டு வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையுயம் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது: அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி.

அதைக் கேட்ட அரசன் நெபுகத்னேசர் தானியேலின் அடிகளில் வீழ்ந்து வணங்கினான்: அவருக்குக் காணிக்கைப் பொருள் களைப் படைத்துத் பபமிடுமாறு ஆணையிட்டான்.

மேலும் , அரசன் தானியேலை நோக்கி, நீர் வணங்கும் கடவுளே தெய்வங்களுக்கெல்லாம் கடவுள்: அரசர்களுக்கெல்லாம் ஆண்டவர்: அவர் ஒருவரே மறைபொருள்களை எல்லாம் வெளிப்படுத்த வல்லவர். இது உண்மையிலும் உண்மை: ஏனெனில் உம்மால் மட்டுமே இம்மறைபொருளை விளக்கிக் கூறமுடிந்தது என்றான்.

பின்பு அரசன் தானியேலை உயர்ந்த முறையில் சிறப்பித்து அவருக்குப் பரிசில் பல தந்து, பாபிலோன் நாடு முழுவதற்கும் அவரை ஆளுநராக ஏற்படுத்தினான்: பாபிலோனிய ஞானிகள் அனைவர்க்கும் தலைவராகவும் நியமித்தான்.

மேலும் தானியேலின் வேண்டுகோளின்படி சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்¥¥நெகோ ஆகியோரைப் பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமித்தான். தானியேலோ அரசனது அவையில் தொடர்ந்து பணியாற்றினார்.

அதிகாரம் 3.

நெபுகனேசர் அரசன் அறுபது முழ உயருமும் ஆறு முழ அகலமுமான பொற்சிலை ஒன்றைச் செய்வித்து, அதைப் பாபிலோன் நாட்டிலிருந்த பரா என்னும் சமவெளியில் நிறுத்தி வைத்தான்.

பின்பு நெபுகத்னேசர் அரசன் தான் நிறுவிய சிலையின் அர்ப்பணிப்புக்கு சிற்றரர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அறிவுரை கூறுவோரும் நிதிப்பொறுப்பாளரும் நீதிபதிகளும் மணியக்காரரும் மற்றெல்லா அலுவலரும் ஒன்றாய்க் கூடி வரவேண்டுமென்று ஆணையிட்டான்.

அவ்வாறே சிற்றரசர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அறிவுரை கூறுவோரும் நிதிப்பொறுப்பாளரும் நீதிபதிகளும் மணியக்காரரும் மாநிலங்களின் மற்றெல்லா அலுவலரும் நெபுகத் னேசர் அரசன் நிறுவிய சிலையின் அர்ப்பணிப்புக்கு ஒன்றாய்க் கூடி வந்து சேர்ந்தனர்: அவர்கள் நெபுகத்னேசர் நிறுவிய சிலை முன் வந்து நின்றனர்.

கட்டியக்காரன் ஒருவன் உரத்த குரலில், இதனால் மக்கள் அனைவர்க்கும், எல்லா இனத்தவர்க்கும், மொழியினருக்கும் அறிவிக்கப்படுவது யாதெனில்:

எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியில், நீங்கள் தாழவீழ்ந்து நெபுகத்னேசர் அரசன் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவேண்டும்.

எவராகிலும் தாழவீழ்ந்து பணிந்து தொழவில்லையெனில், அவர்கள் அந்நேரமே தீச்சூளையில் பக்கிப்போடப்படுவார்கள் என்று கூறி முரசறைந்தான்.

ஆகையால், எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கியவுடன், எல்லா மக்களும் தாழவீழ்ந்து நெபுகத்தேனசர் அரசன் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழுவார்கள்.

அப்பொழுது கல்தேயர் சிலர் தாமே முன்வந்து யூதர்கள் மேல் குற்றம் சாட்டலாயினர்.

அவர்கள் நெபுகத்னேசர் அரசனிடம் சொன்னது: அரசரே! நீர் நீடூழி வாழ்க!

அரசரே! எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் எந்த மனிதனும் உடனே தாழவீழ்ந்து பொற்சிலையைப் பணியவேண்டும் என்று, நீர் கட்டளை பிறப்பித்தீர் அல்லவா?

எவராகிலும் தாழவீழ்ந்து பணியாமல் போனால் அவர்கள் எரிகிற தீச்சூளையில் போடப்படுவார்கள் என்றும் நீர் ஆணை விடுத்தீர் அல்லவா?

அரசரே! பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளர்களாக சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்னும் யூதர்களை நீர் நியமித்தீர் அல்லவா? அந்தப் பேர்வழிகள் உமது கட்டளையை மதிக்கவில்லை: உம் தெய்வங்களை வணங்கவில்லை, நீர் நிறுவின பொற் சிலையைப் பணிந்து தொழவும் இல்லை.

உடனே நெபுகத்¥ னேசர் கடுஞ்சினமுற்று, சாத்ராக்கையும், மேசாக்கையும், ஆபேத்நெகோவையும் பிடித்து வரும்படி கட்டளையிட்டான். அவ்வாறே அரசன் முன்னிலைக்கு அவர்களைப் பிடித்துக் கொண்டு வந்தனர்.

நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவில்லை என்பதும் உண்மைதானா?

இப்பொழுதாவது எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லாவகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்டவுடன், நீங்கள் தாழவீழ்ந்து நான் செய்துவைத்துள்ள சிலையைப் பணிந்து தொழத் தயாராயிருக்கிறீர்களா? தொழாவிட்டால் அந்த நொடியிலேயே எரிகிற தீச்சூளையில் பக்கிப் போடப்படுவீர்கள். உங்களை என் கைகளிலிருந்து தப்புவிக்கக்கூடிய தெய்வம் ஒன்று உண்டோ? என்றான்.

சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் செபுகத் னேசர் அரசனை நோக்கிப் பதில்மொழியாக, இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை.

அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர்.

அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்: நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும் என்றார்கள்.

இதைக் கேட்ட நெபுத்னேசர் அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்மீது வெகுண்டெழ, அவனது முகம் சினத்தால் சிவந்தது. வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாகத் தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான்.

பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும் தீச்சூளைக்குள் பக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் கட்டளையிட்டான்.

அவ்வாறே அந்த வீரர்கள் அவர்களை மேற்பார்வையோடும் உள்ளாடையோடும் தலைப்பாகையோடும் மற்ற ஆடைகளோடும் சேர்த்துக்கட்டி, எரியும் தீச்சூளைக்குள் பக்கிப் போட்டார்கள்.

அரசனது கட்டளை மிகக் கண்டிப்பானதாக இருந்ததாலும் தீச்சூளை செந்தணலாய் இருந்ததாலும் சாத்ராக், மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைத் தீச்சூளையில் போடுவதற்குத் பக்கிச் சென்றவர்களையே அத்தீப்பிழம்பு கூட்டெரித்துக் கொன்றது.

சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகிய மூவரும் கட்டுண்டவர்களாய் எரிகிற தீச்சூளையினுள் வீழ்ந்தார்கள்.

அப்பொழுது நெபுகத்னேசர் அரசன் வியப்புற்று விரைந்தெழுந்து தன் அமைச்சரை நோக்கி, மூன்று பேரைத்தானே கட்டி நெருப்பினுள் எறிந்தோம்! என்றான். ஆம் அரசரே என்று அவர்கள் விடையளித்தனர்.

அதற்கு அவன், கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்! அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வ மகன் ஒருவன் போல் தோன்றுகிறானே! என்றான்.

உடனே நெபுகத்னேசர் எரிகிற தீச்சூளையின் வாயிலருகில் வந்து நின்று, உன்னதக் கடவுளின் ஊழியர்களாகிய சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்¥நெகோ! வெளியே வாருங்கள் என்றான். அவ்வாறே சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்¥நெகோ ஆகியோர் நெருப்பைவிட்டு வெளியே வந்தனர்.

சிற்றரர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அரசனுக்கு அறிவுரை கூறுவோரும் கூடிவந்து, அந்த மனிதர்களின் உடலில் தீப்பட்ட அடையாளமே இல்லாமலும் அவர்களது தலைமுடி கருகாமலும் அவர்களுடைய ஆடைகள் தீப்பற்றாமலும் நெருப்பின் புகை நாற்றம் அவர்களிடம் வீசாமலும் இருப்பதைக் கண்டார்கள்.

அப்பொழுது நெபுகத்னேசர், சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுள் புகழப்படுவாராக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் பணிந்து தொழ மறுத்து, அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல், அவர்மேல் நம்பிக்கை வைத்துத் தங்கள் உடலைக் கையளித்த அவருடைய ஊழியர்களை அவர் தம் பதரை அனுப்பி மீட்டருளினார்.

ஆதலால் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுளுக்கு எதிராகப் பழிச்சொல் கூறும் எந்த இனத்தவனும் எந்த நாட்டவனும் எந்த மொழியினனும் கண்டந்துண்டமாக வெட்டப்படுவான்: அவனுடைய வீடும் தரைமட்டமாக்கப்படும்: இதுவே என் ஆணை! ஏனெனில், இவ்வண்ணமாய் மீட்கின்ற ஆற்றல் படைத்த கடவுள் வேறெவரும் இல்லை என்றான்.

பிறகு அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்க்குப் பாபிலோனின் மாநிலங்களில் பெரும் பதவி அளித்துச் சிறப்புச் செய்தான்.

அதிகாரம் 4.

அரசர் நெபுகத் னேசர் உலகில் எங்கணுமுள்ள எல்லா இனத்தார்க்கும் நாட்டினர்க்கும் மொழியினருக்கும் அறிவிப்பது:

உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக! மாட்சிமிகு கடவுள் எனக்காகச் செய்தருளிய அடையாளங்களையும் விந்தைகளையும் வெளிப்படுத்துவது நலமென எனக்குத் தோன்றுகிறது.

அவர் தந்த அடையாளங்கள் எத்துணைப் பெரியன! அவர் ஆற்றிய விந்தைகள் எத்துணை வலியன! அவரது அரசு என்றுமுள அரசு! அவரது ஆட்சியுரிமை வழிவழி நிலைக்கும்.

நெபுகத்னேசராகிய நான் வீட்டில் மன் அமைதியுடனும் அரண்மனையில் வளமுடனும் வாழ்ந்து வந்தேன்.

நான் ஒரு கனவு கண்டேன்: அது என்னை அச்சுறுத்தியது: நான் படுத்திருக்கையில் எனக்குத் தோன்றிய கற்பனைகளும் காட்சிகளும் என்னைக் கலங்க வைத்தன.

ஆதலால் நான் கண்ட கனவின் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூறும்படி பாபிலோனிய ஞானிகள் அனைவரையும் என் முன்னிலைக்கு அழைத்துவரவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தேன்.

அவ்வாறே, மந்திரவாதிகளும் மாயவித்தைக்காரரும் கல்தேயரும் சோதிடரும் வந்து கூடினர்: நான் கண்ட கனவை அவர்களிடம் கூறினேன்: ஆனால் அவர்களால் அதன் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூற முடியவில்லை.

இதற்காக, என் சொந்தத் தெய்வமாகிய பெல்¥தசாச்சாரின் பெயர் சூட்டப்பெற்ற தானியேல் வந்தார்: அவர் புனிதமிகு கடவுளின் ஆவியால் நிரப்பப்பெற்றவர்: அவரிடம் நான் கண்ட கனவைக் கூறினேன்:

மந்திரவாதிகளின் தலைவராகிய பெல்தசாச்சார்! புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது என்பதையும், உம்மால் விளக்கமுடியாத மறைபொருள் எதுவுமில்லை என்பதையும் நான் அறிவேன். நான் கனவில் கண்ட காட்சி இதுதான்: அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவீர்.

நான் படுக்கையில் கிடந்த போது, என் மனக்கண் முன்னே தோன்றிய காட்சிகளாவன: இதோ! நிலவுலகின் நடுவில் மரம் ஒன்றைக் கண்டேன்: அது மிக உயர்ந்து நின்றது.

அது வளர்ந்து வலிமை மிக்கதாய், வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. நிலவுலகின் எல்லைகளிலிருந்துகூட அதைப் பார்க்கலாம்.

அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன: மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன: அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது: அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன: அதன் கிளைகளில் வானத்துப் பறவைகள் குடியிருந்தன: அனைத்து உயிர்களுக்கும் அதிலிருந்து உணவு கிடைத்தது.

நான் படுக்கையில் கிடந்த போது என் மனக்கண்முன்னே இக்காட்சிகளைக் கண்டேன்: அப்பொழுது, இதோ! காவலராகிய பயவர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்தார்.

அவர் தமது குரலை உயர்த்திக் கூறியது இதுவே: இந்த மரத்தை வெட்டுங்கள்: கிளைகளைத் தறித்து விடுங்கள்: இதன் இலைகளை எல்லாம் பறித்தெறியுங்கள்: இதன் கனிகளைச் சிதறடியுங்கள்: இதன் கீழ் வாழும் விலங்குள் ஓடிப்போகட்டும்: இதன் கிளைகளில் தங்கிய பறவைகள் பறந்தோடட்டும்.

ஆயினும் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்: இரும்பாலும் வெண்கலத்தாலுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு, வயல்வெளிப் பசும்புல் நடுவில் கிடக்கட்டும். வானத்தின் பனியால் அந்த மனிதன் நனையட்டும்: தரையில் புல்வெளியில் விலங்குகளோடு அவன் கிடக்கட்டும்.

அவனது மனித உள்ளம் மாற்றப்பட்டு, அவனுக்கு விலங்கின் மனம் கொடுக்கப்படட்டும்.

ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து செல்லட்டும். காவலர் விதித்த தீர்ப்பு இதுவே: பயவர் வாய்மொழியின் முடிவும் இதுவே: மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் என்பதையும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்பதையும், மனிதருள் தாழ்ந்தவர்களையே அதற்குத் தலைவர்களாக்குகின்றார் என்பதையும் உயிர்கள் அனைத்தும் அறியும்படி இவ்வாறு விதிக்கப்பட்டது.

அரசர் நெபுகத்தேனசராகிய நான் கண்ட கனவு இதுவே: பெல்தசாச்சார்! இதன் உட்பொருளை எனக்குத் தெரிவியும்! என் நாட்டிலுள்ள எல்லா ஞானிகளாலும் இதன் உட்பொருளை விளக்கிக் கூற இயலவில்லை. நீர் ஒருவரே இதைத் தெரிவிக்கக்கூடியவர்: ஏனெனில் புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது.

இதைக் கேட்டவுடன் பெல் தசாச்சார் என்னும் பெயர்கொண்ட தானியேல் ஒரு கணம் திகைத்து நின்றார்: அவருடைய எண்ணங்கள் அவரைக் கலக்கமுறச் செய்தன. அதைக் கண்ட அரசன், பெல்தசாச்சார், கனவோ அதன் உட்பொருளோ உம்மைக் கலக்கமுறச் செய்யவேண்டாம் என்றான். பெல்தசாச்சார் மறுமொழியாக, என் தலைவரே! இந்தக் கனவு உம் பகைவர்களுக்கும் இதன் உட்பொருள் உம் எதிரிகளுக்குமே பலிப்பதாக!

நீர் கண்ட மரம் வளர்ந்து வலிமைமிக்கதாய் வானத்தைத் தொடுமளவுக்கு உயர்ந்திருந்தது. நிலவுலகின் எல்லைகளிலிருந்துகூட அதைப் பார்க்கலாம்.

அதன் இலைகள் மிகவும் அழகாய் இருந்தன. மரத்தில் கனிகள் மிகுதியாய் இருந்தன. அதில் எல்லா உயிர்களுக்கும் போதிய உணவு இருந்தது. அதன் நிழலில் காட்டு விலங்குகள் தங்கியிருந்தன.

அரசரே! அந்த மரம் வேறு யாருமல்ல: மிகப் பெரியவராயும் வலிமையுள்ளவராயும் உயர்ந்துள்ள நீர்தாம். உமது புகழ் வளர்ந்து வானைத் தொடுமளவு உயர்ந்துள்ளது. உமது ஆட்சி உலகின் எல்லைகள் வரை பரவியுள்ளது.

மேலும், அரசரே! காவலராகிய பயவர் ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வந்ததை நீர் கண்டீர் அல்லவா! அவர், “இந்த மரத்தை வெட்டி அழித்துப்போடுங்கள்: ஆனால் வேர்கள் நிறைந்த அடிமரத்தை அப்படியே நிலத்தில் விட்டுவையுங்கள்: இரும்பாலும் வெண்கலத்தாலுமான சங்கிலியால் அது கட்டப்பட்டு வயல்வெளிப் பசும்புல் நடுவில் கிடக்கட்டும்: வானத்தின் பனியால் அவன் நனையட்டும். ஏழு ஆண்டுகள் அவனைக் கடந்து செல்லும்வரை அவன் விலங்கோடு விலங்காய்த் திரிவான் என்று சொன்னதையும் கேட்டீர்.

அரசரே! இதுதான் உட்பொருள்: என் தலைவரும் அரசருமான உமக்கு உன்னதரது தீர்ப்பின்படி நடக்கவிருப்பதும் இதுவே:

மனித சமுதாயத்தினின்று நீர் விரட்டப்படுவீர்: காட்டு விலங்களோடு வாழ்ந்து, மாடுபோல புல்லை மேய்ந்து, வானத்தின் பனியில் நனைந்து கிடப்பீர். இவ்வாறு ஏழு ஆண்டுகள் உம்மைக் கடந்து செல்லும், மனிதர்களின் அரசை உன்னதமானவரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க் கே அதனைத் தந்தருள்வார் என்றும் நீர் உணரும் வரை அந்நிலை நீடிக்கும்.

வேர்கள் நிறைந்த அடிமரத்தை விட்டுவைக்க வேண்டும் என்று கட்டளை பிறந்தது அல்லவா? அதன்படி, விண்ணகக் கடவுளே உலகை ஆள்கின்றார் என்பதை நீர் உணர்ந்தவுடன், அரசுரிமை மீண்டும் உனக்குக் கிடைக்கும்.

எனவே, அரசரே! என் அறிவுரை உம்மால் ஏற்றுக் கொள்ளத்தக்கது ஆக! நல்லறத்தைப் பேணித் தீச்செயல்களை நீக்குக! ஒடுக்கப்பட்டோர்க்கு இரக்கம் காட்டி உம் பாவக்கறைகளைப் போக்கிக்கொள்க! ஒருவேளை உமது வளமை நீடிப்பதற்கு ஒது வழியாகலாம் என்றார்.

அவ்வாறே அரசன் நெபுகத்னேசருக்கு அனைத்து நேர்ந்தது.

ஓராண்டு சென்றபின், ஒருநாள் அரசன் பாபிலோன் அரண்மனையின் மேல் மாடத்தில் உலவிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது அவன், என் வலிமையின் ஆற்றலால் அரசன் வாழும் மாளிகையாகவும், எனது மாட்சியும் மகுடமாகவும் நான் கட்டியெழுப்பியதன்றோ இந்த மாபெரும் பாபிலோன்! என்றான்.

இந்தச் சொற்களை அரசன் சொல்லி முடிக்கும் முன்பே, வானத்திலிருந்து ஒரு குரலொலி கேட்டது: நெபுகத்னேசர் அரசனே! உனக்கே இந்தச் சொல்! உன்னுடைய அரசு உன்னிடமிருந்து அகன்று விட்டது.

மனித சமுதாயத்தினின்று நீ விரட்டப்படுவாய். காட்டு விலங்களோடு வாழ்ந்து, மாடுபோலப் புல்லை மேய்வாய்: மனிதர்களின் அரசை உன்னதரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அதனைத் தந்தருள்வார் என்றும் நீ உணர்ந்து கொள்வதற்குள் ஏழு ஆண்டுகள் உன்னைக் கடந்து செல்லும்.

உடனே இந்த வாக்கு நெபுகத்னேசரிடம் நிறைவேறிற்று. மனித சமுதாயத்தினின்று அவன் விரட்டப்பட்டான். மாட்டைப்போலப் புல்லை மேய்ந்தான்: தலைமயிர் கழுகுகளின் இறகு போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளின் நகங்கள் போலவும் வளரத் தொடங்கும்வரை அவனது உடல் வானத்தின் பனியினால் நனைந்தது.

குறித்த காலம் கடந்தபின், நெபுகத் னேசராகிய நான் என் கண்களை வானத்திற்கு உயர்த்தவே, என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது. நானோ உன்னதரை வாழ்த்தி, என்றுமுள கடவுளைப் புகழ்ந்து போற்றினேன்! அவரது ஆட்சியுரிமை என்றுமே அழியாது! அவரது அரசு வழிவழி நிலைக்கும்!

உலகின் உயிர்கள் அனைத்தும் அவர் திருமுன் ஒன்றுமில்லை! வான்படை நடுவிலும் உலகில் வாழ்வோர் இடையிலும் அவர் தாம் விரும்புவதையே செய்கின்றார்! அவரது வலிய கையைத் தடுக்கவோ நீர் என்ன செய்கிறீர்? என்று அவருடைய செயல்களைப்பற்றி வினவவோ எவராலும் இயலாது!

அதே நேரத்தில், என் பகுத்தறிவு எனக்கு மறுபடியும் அருளப்பட்டது: என் அரசின் மேன்மைக்காக என் சீரும் சிறப்பும் எனக்கு மீண்டும் கிடைத்தன: என் அமைச்சர்களும் உயர்குடி மக்களும் என்னைத் தேடி வந்தார்கள்: எனது அரசுரிமை மீண்டும் உறுதி பெற்றது. முன்னிலும் அதிக மாண்பு எனக்குக் கிடைத்தது.

நெபுகத்னேசராகிய நான் விண்ணக அரசரைப் போற்றிப் புகழ்ந்து, ஏத்திப் பாடுகின்றேன்: அவருடைய செயல்கள் யாவும் நேரியவை! அவருடைய வழிவகைகள் சீரியவை! ஆணவத்தின் வழி நடப்போரை அவர் தாழ்வுறச் செய்வார்!

அதிகாரம் 5.

பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப் பெரியதொரு விருந்து வைத்தான்: அந்த ஆயிரம் பேருடன் அவனும் திராட்சை மது குடித்தான்.

அவ்வாறு குடித்துக்கொண்டிருந்தபொழுது, அரசன் தானும் தன் மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்கென்று, தன் தந்தையாகிய நெபுகத்னேசர் எருசலேம் திருக்கோவிலிருந்து கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிக் கிண்ணங்களைக் கொண்டுவரச் சொன்னான்.

அதன்படி, எருசலேமிலிருந்த கடவுளின் கோவிலிருந்து கொண்டுவந்த பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்: அரசனும் அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடித்தார்கள்.

அவர்கள் திராட்சை மது குடித்துக்கொண்டே பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.

திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் பணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப் பார்த்தான்.

அதைக் கண்டு அரசன் முகம் கறுத்து, நெஞ்சம் கலங்கி, குலைநடுங்கி, தொடை நடுக்கமுற்றான்.

உடனே அரசன் மாயவித்தைக் காரரையும் கல்தேயரரையும் சோதிடரையும் கூட்டிவரும்வடி உரக்கக் கத்தினான். அரசன் பாபிலோனிய ஞானிகளை நோக்கி, இந்தச் சொற்களைப் படித்து, இவற்றின் உட்பொருளை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவனுக்கு அரச உடை அணிவித்து என் அரசின் மூன்றாம் நிலையில் அமர்த்துவேன் என்றான்.

பிறகு அரசனின் ஞானிகள் எல்லாரும் உள்ளே சென்றனர்: ஆனால் அந்த சொற்களைப் படிக்கவோ அவற்றின் உட்பொருளை அரசனுக்கு விளக்கவோ அவர்களால் இயலவில்லை.

அதைக் கண்ட பெல்சாட்சர் அரசன் மிகவும் மனக்கலக்க முற்றான்: அவனது முகம் வெளிறியது. அவனுடைய உயர்குடி மக்களும் திகைத்து நின்றனர்.

அரசனும் உயர்குடி மக்களும் எழுப்பிய கூச்சலைக் கேட்டு, அரசி விருந்துக்கூடத்திற்குள் விரைந்து வந்து, அரசரே! நீர் நீடூழி வாழ்க! நீர் வீணாக அச்சமுற்று, முகம் வெளிறவேண்டாம்.

புனிதமிகு கடவுள் ஆவி நிறைந்த மனிதன் ஒருவன் உமது அரசில் இருக்கிறான். உம் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அறிவொளியும் நுண்ணறிவும் தெய்வங்களுக்கொத்த ஞானமும் அவனிடம் திகழ்ந்தது தெரிய வந்தது. எனவே உம் தந்தையாகிய நெபுகத்னேசர் அரசர் அவனை மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரருக்கும் கல்தேயருக்கும் சோதிடருக்கும் தலைவனாக்கினார்.

அந்தத் தானியேல் வியத்தகு விவேகமும் அறிவும் உடையவன்: கனவுகளுக்கு விளக்கம் கூறும் அறிவாற்றல் படைத்தவன்: விடுகதைகளுக்கு விடைகூறும் ஆற்றல் உடையவன்: சிக்கல்களைத் தீர்க்கும் திறமை வாய்ந்தவன்: அவனுக்கு அரசர் பெல்தெசாச்சார் என்று பெயரிட்டுள்ளார். அவன் உடனே இங்கு அழைக்கப்படட்டும்: அவன் விளக்கம் கூறுவான் என்றாள்.

அவ்வாறே அரசன் முன்னிலைக்குத் தானியேல் அழைத்து வரப்பட்டார். அரசன் அவரைப் பார்த்து, என் தந்தையாகிய அரசன் யூதாவிலிருந்து சிறைப்பிடித்துவந்தவர்களுள் ஒருவனாகிய தானியேல் என்பவன் நீதானே?

உன்னிடத்தில் புனிதமிகு கடவுளின் ஆவியும் அறிவொளியும் நுண்ணறிவும் சிறந்த ஞானமும் உண்டென உன்னைப் பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன்.

இப்பொழுது இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூறுமாறு, இந்த ஞானிகளும் மாயவித்தைக்காரரும் என்முன் அழைத்து வரப்பட்டனர். ஆனால், அவர்களால் இந்தச் சொற்களின் உட்பொருளை விளக்கிக்கூற முடியவில்லை.

விளக்கங்கள் கூறவும் சிக்கல்களைத் தீர்க்கவும் உன்னால் முடியும் எனக் கேள்விப்படுகிறேன். இப்பொழுது நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், உனக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன்மாலை அணிவித்து, என் அரசில் மூன்றாம் நிலையில் உன்னை அமர்த்துவேன் என்றான்.

அப்பொழுது அரசனுக்குத் தானியேல் மறுமொழியாகக் கூறியது: உம்முடைய அன்பளிப்புகள் உம்மிடமே இருக்கட்டும்: உம் பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும், இந்தச் சொற்களை அரசருக்குப் படித்துக் காட்டி அவற்றின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன்.

அரசரே! உன்னதரான கடவுள் உம் தந்தையாகிய நெபுகத் னேசருக்குப் பேரரசையும் சிறப்பையும் மேன்மையையும் மாண்பையும் அளித்தார்.

அவருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பின் காரணமாய் எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவருக்கு அஞ்சி நடுங்கினர். அவர் தம் விருப்பப்படி யாரையும் வாழவிடுவார்: தம் விருப்பப்படியே யாரையும் உயர்த்துவார்: தம் விருப்பப்படியே யாரையும் தாழ்த்துவார்.

ஆனால் அவருடைய உள்ளம் இறுமாப்புற்று, அவருடைய மனம் செருக்கினால் கடினப்பட்டது. உடனே அவர் அரசின் அரியணையிலிருந்து தள்ளப்பட்டார்: அவரிடமிருந்து அரசது மேன்மை பறிக்கப்பட்டது.

மனித சமுதாயத்தினின்று அவர் விரட்டப்பட்டார். மேலும் அவரது உள்ளம் விலங்குகளின் மனமாக மாற்றப்படவே, அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்துவந்தார். மனிதர்களின் அரசுகளை உன்னதரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அவற்றை வழங்குகின்றார் என்றும் உணரும்வரை, அவர் மாடுபோல் புல்லை மேய்ந்தார்: அவரது உடல் வானத்துப் பனியில் நனைந்து கிடந்தது.

அவருடைய மகனாகிய பெல்சாட்சர்! இவற்றை எல்லாம் நீர் அறிந்திருந்தும் உன் இதயத்தைத் தாழ்த்திக் கொள்ளவில்லை.

ஆனால் விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்: அவரது கோவிலின் கிண்ணங்களைக் கொண்டு வரச் செய்து, நீரும் உம் உயர்குடி மக்களும், உம்முடைய மனைவியரும் வைப்பாட்டியரும் அவற்றிலிருந்து திராட்சை மது குடித்தீர்கள்: மேலும் காணவோ, கேட்கவோ, எதையும் உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள். ஆனால் உமது உயிரையும் உம் வழிகளையும் தம் கைக்குள் வைத்திருக்கும் கடவுளை நீர் பெருமைப்படுத்தவில்லை.

ஆகையால் அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னிருந்து அனுப்பி, இந்த எழுத்துகளைப் பொறிக்கச் செய்தார்.

பொறிக்கப்பட்ட சொற்களாவன: மேனே மேனே, தேகேல், பார்சின்

இவற்றின் உட்பொருள்: மேனே: கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி வரையறுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்.

தேகேல்: நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்: எடையில் மிகவும் குறைந்துள்ளீர்.

பார்சின்: உமது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது .

உடனே, பெல்சாட்சரின் ஆணைப்படி, தானியேலுக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன்மாலை அணிவித்தனர். மேலும், அரசில் மூன்றாம் நிலையில் தானியேல் அமர்த்தப்படுவார் என்றும் முரசறைந்தனர்.

அன்றிரவே கல்தேய அரசனாகிய பொல்சாட்சர் கொலை செய்யப்பட்டான்.

அதிகாரம் 6.

மேதியனாகிய தாரியு என்பவன் தன் அறுபத்திரண்டாம் வயதில் அரசை ஏற்றுக்கொண்டான். தன் நாடு முழுவதும் வரி வசூலிப்பதற்கென்று மற்றிருபது தண்டல்காரரைத் தாரியு நியமித்தான்.

இத்தண்டல்காரரைக் கண்காணிப்பதற்கென்று மூன்று மேற்பார்வையாளரை ஏற்படுத்தினான். அரசனுக்கு எவ்வித இழப்பும் நேரிடாவண்ணம் இம் மூவரிடமும் அத்தண்டல்காரர்கள் கணக்குக் கொடுக்கவேண்டும்.

இம்மூவருள் தானியேலும் ஒருவர். இவர் மற்ற மேற்பார்வையாளரையும் தண்டல்காரரையும்விடச் சிறந்து விளங்கினார்: ஏனெனில், வியத்தகு ஆவி அவரிடத்தில் இருந்தது. தன் அரசின் முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைக்கலாம் என அரசன் எண்ணிக் கொண்டிருந்தான்.

ஆனால் மற்ற மேற்பார்வையாளரும் தண்டல்காரரும் அரசைக் கண்காணிப்பதில் தானியேலின்மீது குற்றம்சாட்ட வகை தேடினார்கள். அவரிடத்தில் குற்றம் சாட்டுவதற்குரிய எந்தத் தவற்றையும் ஊழலையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை: ஏனெனில் அவர் நேர்மையாய் நடந்துகொண்டார். அவரிடம் எவ்விதத் தவறும் ஊழலும் காணப்படவில்லை.

அப்பொழுது அவர்கள், இந்தத் தானியேலுக்கு எதிராக அவருடைய கடவுளின் சட்டத்தைப் பின்பற்றுவதில் தவிர வேறெதிலும் அவர்மீது குற்றம் காணமுடியாது என்றார்கள்.

எனவே, இந்த மேற்பார்வையாளரும் தண்டல்காரரும் தங்களுக்குள் கூடிப்பேசி அரசனிடம் வந்து அவனிடம், தாரியு அரசரே! நீர் நீடூழி வாழ்க!

அதிகாரிகள், தண்டல்காரர்கள், அமைச்சர், ஆளுநர் ஆகிய நாங்கள் அனைவரும் கலந்தாலோசித்துக் கூறுவது: முப்பது நாள் வரையில் அரசராகிய தங்களிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகைக்குள் தள்ளப்படுவான் என்று நீர் சட்டம் இயற்றித் தடையுத்தரவு போடவேண்டும்.

ஆகையால், அரசரே! இப்பொழுதே அச்சட்டத்தை இயற்றித் தடையுத்தரவில் கையெழுத்திடும்: அப்பொழுதுதான் மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பது போல, இச்சட்டமும் மாறாதிருக்கும் என்றார்கள்.

அவ்வாறே தாரியு அரசன் சட்டத்தில் கையொப்பமிட்டுத் தடையுத்தரவு பிறப்பித்தான்.

தானியேல் இந்தச் சட்டம் கையொப்பமிடப்பட்டதை அறிந்தபின், தம் வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டு மேலறையின் பலகணிகள் எருசலேமை நோக்கித் திறந்திருந்தன. தமது வழக்கப்படி நாள்தோறும் மூன்று வேளையும் தம் கடவுளுக்கு முன்பாக முழந்தாளிலிருந்து மன்றாடி அவருக்கு நன்றி செலுத்துவார்.

முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அந்த மனிதர்கள் உள்ளே நுழைந்து தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும் கண்டார்கள்.

உடனே அவர்கள் அரசனை அணுகி, அவனது தடையுத்தரவைப் பற்றிக் குறிப்பிட்டு, அரசரே! முப்பது நாள் வரையில் அரசராகிய உம்மிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகையில் தள்ளப்படுவான் என்ற தடையுத்தரவில் கையொப்பமிட்டுள்ளீர் அல்லவா? என்றார்கள். அதற்கு அரசன், ஆம், மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பது போல், இதுவும் மாறாததே என்றான்.

உடனே அவர்கள் அரசனை நோக்கி, யூதாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்களுள் ஒருவனாகிய தானியேல் உம்மை மதியாமல், நீர் கையொப்பமிட்டுள்ள தடையுத்தரவை மீறி நாள்தோறும் மூன்று வேளையும் வேண்டுதல் செய்கிறான் என்றார்கள்.

ஆனால், அரசன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினான்: தானியேலைக் காப்பாற்றத் தனக்குள் உறுதி பூண்டவனாய், அன்று கதிரவன் மறையும் வரையில் அவரைக் காப்பாற்ற வழி தேடினான்.

ஆனால் அந்த மனிதர்கள் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அரசனிடம் வந்து, அவனை நோக்கி, அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி, அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ மாற்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும் என்றனர்.

ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி தானியேல் கொண்டுவரப்பட்டுச் சிங்கக் குகையில் தள்ளப்பட்டார். அப்பொழுது அரசன் தானியேலை நோக்கி, நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக! என்றான்.

அவர்கள் ஒரு பெரிய கல்லைப் புரட்டிக் கொண்டுவந்து குகையின் வாயிலை அடைத்தார்கள்: தானியேலுக்குச் செய்யப்பட்டதில் யாதொன்றும் மாற்றப்படாதிருக்கும்படி அரசன் தன் மோதிரத்தாலும் தம் உயர்குடி மக்களின் மோதிரங்களாலும் அதற்கு முத்தரையிட்டான்.

பின்னர் அரசன் அரண்மனைக்குத் திரும்பிச்சென்று, அன்றிரவு முழுவதும் உணவு கொள்ளவில்லை: வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை. உறக்கமும் அவனை விட்டகன்றது.

பொழுது புலர்ந்தவுடன், அவன் எழுந்து சிங்கக் குகைக்கு விரைந்து சென்றான்.

தானியேல் இருந்த குகையருகில் வந்தவுடன் துயரக் குரலில் அவன் தானியேலை நோக்கி, தானியேல்! என்றுமுள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் உன்னைச் சிங்கங்களினின்று விடுவிக்க முடிந்ததா? என்று உரக்கக் கேட்டான்.

அதற்குத் தானியேல் அரசனிடம், அரசரே! நீர் நீடூழி வாழ்க!

என் கடவுள் தம் பதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை: ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன். மேலும் அரசரே! உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே என்று மறுமொழி கொடுத்தார்.

எனவே, அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, உடனே தானியேலைக் குகையிலிருந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே தானியேலைக் குகையிலிருந்து வெளியே பக்கினார்கள். அவருக்கு யாதொரு தீங்கும் நேரிடவில்லை: ஏனெனில் அவர் தம் கடவுளை உறுதியாக நம்பினார்.

பிறகு அரசனது கட்டளைக்கிணங்க, தானியேலைக் குற்றம் சாட்டியவர்கள் இழுத்துக் கொண்டுவரப்பட்டனர். அவர்களும் அவர்களுடைய மனைவி, மக்களும் சிங்கக் குகையினுள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் குகையின் அடித்தளத்தை அடையும் முன்னே சிங்கங்கள் அவர்களைக் கவ்விப் பிடித்து, அவர்களுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிட்டன.

அப்பொழுது தாரியு அரசன் நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவர்க்கும் நாட்டினர்க்கும் மொழியினர்க்கும் ஓர் அறிக்கை விடுத்தான்.

உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை. ஏனெனில், அவரே வாழும் கடவுள்: அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார்: அவரது ஆட்சி என்றும் அழிவற்றது: அவரது அரசுரிமைக்கு முடிவே இராது.

தானியேலைச் சிங்கங்களின் பிடியினின்று காப்பாற்றியவர் அவரே: அவரே மீட்பவர்! விடுதலை அளிப்பவரும் அவரே! விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!

இவ்வாறு, தானியேல் தாரியுவின் ஆட்சிக் காலத்திலும், பாரசீகனான சைரசு மன்னனின் ஆட்சிக் காலத்திலும் சீரும் சிறப்புமாய் இருந்தார்.

அதிகாரம் 7.

பாபிலோனிய அரசனாகிய பெல்சாட்சரின் முதலாண்டில் தானியேல் கனவு கண்டார்: அவர் படுத்திருக்கையில், அவரது மனக்கண்முன் காட்சிகள் தோன்றின. பிறகு அந்தக் கனவை எழுதிவைத்து அதைச் சுருக்கமாகச் சொன்னார்.

தானியேல் கூறியது: இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன.

அப்பொழுது நான்கு பெரிய விலங்குள் கடலினின்று மேலெழும்பின.

அவை வெவ்வேறு உருவம் கொண்டவை. அவற்றுள் முதலாவது கழுகின் இறக்கைகளை உடைய சிங்கத்தைப்போல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அதன் இறக்கைகள் பிடுங்கப்பட்டன: அது தரையினின்று பக்கப்பட்டு மனிதனைப்போல் இரண்டு கால்களில் நின்றது: அதற்கு மனித இதயமும் கொடுக்கப்பட்டது.

அடுத்து, வேறொரு இரண்டாம் விலங்கைக் கண்டேன். கரடியைப் போன்ற அந்த விலங்கு பின்னங்கால்¥களை ஊன்றி எழுந்து நின்றது: தன் மூன்று விலா எலும்புகளைத் தன் வாயின் பற்களுக்கு இடையில் கவ்விக்கொண்டிருந்தது. “எழுந்திரு, ஏராளமான இறைச்சியை விழுங்கு“ என்று அதற்குச் சொல்லப்பட்டது.

இன்னும் நோக்குகையில், வேங்கை போன்ற வேறோரு விலங்கு காணப்பட்டது. அதன் முதுகில் பறவையின் இறக்கைகள் நான்கு இருந்தன: அந்த விலங்குக்கு நான்கு இருந்தன: அதற்கும் ஆளும் உரிமை கொடுக்கப்பட்டது.

இவற்றுக்குப் பிறகு, இரவின் காட்சியில் கண்ட நான்காம் விலங்கு, அஞ்சி நடுங்க வைக்கும் தோற்றமும் மிகுந்த வலிமையும் கொண்டதாய் இருந்தது. அதற்கு பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. அது பள் பளாக நொறுக்கி விழுங்கியது: எஞ்சியதைக் கால்களால மிதித்துப் போட்டது. இதற்குமுன் நான் கண்ட விலங்குகளுக்கு இது மாறுபட்டது. இதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன.

அந்தக் கொம்புகளை நான் கவனித்துப் பார்க்கையில், அவற்றின் நடுவில் வேறொரு சிறிய கொம்பு முளைத்தது: அதற்கு இடமளிக்கும் வகையில், முன்னைய கொம்புகளுள் மூன்று வேரோடு பிடுங்கப்பட்டன: அந்தக் கொம்பில் மனிதக் கண்களைப் போலக் கண்களும் பெருமை பேசும் வாயும் இருந்தன.

நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன: தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்: அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி பய பஞ்சு போலவும் இருந்தன: அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன.

அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது: பல்லாயிரம் பேர் அவருக்குப் பணிபுரிந்தார்கள்: பலகோடி பேர் அவர்முன் நின்றார்கள்: நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது: மல்கள் திறந்து வைக்கப்பட்டன.

அந்தக் கொம்பு பேசின பெருமை மிக்க சொற்களை முன்னிட்டு நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். அப்படிப் பார்க்கையில், அந்த விலங்கு கொல்லப்பட்டது: அதன் உடல் சிதைக்கப்பட்டு நெருப்பிற்கு இரையாக்கப்பட்டது.

மற்ற விலங்குகளிடமிருந்து அவற்றின் ஆட்சியுரிமை பறிக்கப்பட்டது: ஆயினும் அவற்றின் வாழ்நாள் குறிப்பிட்ட கால நேரம்வரை நீட்டிக்கப்பட்டது.

இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்: இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்: அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.

ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன: எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்: அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்: அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்து போகாது.

தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன் தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின.

அங்கு நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவரை அணுகி, “இவற்றிற்கெல்லாம் பொருள் என்ன?“ என்று கேட்டேன். அவர் அவற்றின் உட்பொருளை எல்லாம் எனக்கு விளக்கிக் கூறினார்.

இந்த நான்கு விலங்குகளும் உலகில் எழும்பப்போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன.

ஆனால் உன்னதரின் புனிதர்கள் அரசுரிமை பெறுவர்: அந்த அரசுரிமையை என்றும் ஊழ்ஊழிக் காலமும் கொண்டிருப்பர்.

அதன் பின்னர், மற்ற விலங்குகளினின்று மாறுபட்டு, மிகவும் அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றத்துடன், இரும்புப் பற்களும் வெண்கல நகங்களும் கொண்டு, அனைத்தையும் பள் பளாக நொறுக்கி விழுங்கி, எஞ்சியதைக் கால்களால் மிதித்துப்போட்ட அந்த நான்காம் விலங்கைப்பற்றி அறிந்து கொள்ள விரும்பினேன்.

அதன் தலையில் இருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும், மூன்று கொம்புகள் தன் முன்னிலையில் விழுந்து போக அங்கே முளைத்த கண்களும் பெருமையாகப் பேசும் வாயும் கொண்டிருந்த ஏனையவற்றைவிடப் பெரியதாகத் தோன்றிய அந்தக் கொம்பைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அந்தக் கொம்பு புனிதர்களுக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களை வென்றது.

தொன்மை வாய்ந்தவர் வந்து உன்னதரின் புனிதர்களுக்கு நீதி வழங்கும் வரையிலும் உரிய காலத்தில் புனிதர்கள் அரசுரிமை பெறும் வரையில் இவ்வாறு நடந்தது.

அவர் தொடர்ந்து பேசினார்: அந்த நான்காம் விலங்கோ உலகில் தோன்றப்போகும் நான்காம் அரசைக் குறிக்கின்றது: இது மற்றெல்லா அரசுகளையும் விட வேறுபட்டதாகும். உலக முழுவதையும் அது மிதித்துத் பள்பளாக நொறுக்கி விழுங்கிவிடும்.

அந்தப் பத்துக் கொம்புகளோ இந்த அரசினின்று தோன்றவிருக்கும் பத்து மன்னர்களைக் குறிக்கின்றன. அவர்களுக்குப் பிறகு மற்றொருவன் எழும்புவான்: முந்தினவர்களைவிட வேறுபட்டிருப்பான்: மூன்று அரசர்களை முறியடிப்பான்:

அவன் உன்னதர்க்கு எதிரான சொற்களைப் பேசுவான்: உன்னதரின் புனிதர்களைத் துன்புறுத்துவான்: வழிபாட்டுக் காலங்களையும் திருச்சட்டத்தையும் மாற்ற நினைப்பான். மூன்றரை ஆண்டுகள் புனிதர்கள் அவனது கையில் ஒப்புவிக்கப்படுவர்.

ஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமரும்: அவனது ஆட்சி அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, எரியுண்டு ஒன்றுமில்லாது அழிக்கப்படும்.

ஆட்சியும் அரசுரிமையும், வானத்தின் கீழுள்ள உலகனைத்திலும் உள்ள அரசுகளின் மேன்மையும் உன்னதரின் புனித மக்களுக்குத் தரப்படும். அவர்களது அரசு என்றென்றும் நிலைக்கும் அரசு: எல்லா அரசுகளும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படியும்.

இத்தோடு விளக்கம் முடிகிறது. தானியேல் ஆகிய நான் என் நினைவுகளின் பொருட்டு மிகவும் கலங்கினேன்: என் முகம் வெளிறியது: ஆயினும் இவற்றை என் மனத்திற்குள் வைத்துக் கொண்டேன்.

அதிகாரம் 8.

முன்பு தோன்றிய காட்சிக்குப் பிறகு, பெல்சாட்சரின் மூன்றாம் ஆட்சியாண்டில் தானியேல் என்னும் நான் வேறொரு காட்சி கண்டேன்.

அந்தக் காட்சியில் நான் கண்டது பின்வருமாறு: ஏலாம் மாநிலத்தின் தலைநகரான சூசா நகரில் நான் இருந்தேன்: அந்தக் காட்சியில் நான் ஊலாய் ஆற்றின் அருகே நின்றுகொண்டிருந்தேன்.

நான் கண்களை உயர்த்திப் பார்த்தபொழுது, ஒரு செம்மறிக்கிடாய் அந்த ஆற்றங்கரையில் நிற்கக் கண்டேன். அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன: இரண்டும் நீளமான கொம்புகள்: ஒன்று மற்றதைவிட நீளமானது: நீளமானது இரண்டாவதாக முளைத்தது.

அந்தச் செம்மறிக்கிடாய் தன் கொம்புகளால் மேற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் பாய்ந்து முட்டுவதைக் கண்டேன். அதன் எதிரே நிற்க எந்த விலங்காலும் இயலவில்லை: அதன் வலிமையிலிருந்து விடுவிக்க வல்லவர் யாருமில்லை. அது தன் விருப்பப்படியே நடந்து தற்பெருமை கொண்டு திரிந்தது.

நான் இதை உற்று நோக்கிக் கொண்டிருக்கையில், மேற்கிலிருந்து வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று புறப்பட்டு வந்து, நிலவுலகின் எம்மருங்கிலும் சுற்றியது. அது நிலத்தில் கால் ஊன்றவே இல்லை. அந்த வெள்ளாட்டுக்கிடாயின் கண்களுக்கு இடையில் எடுப்பாகத் தோன்றும் ஒரு கொம்பு இருந்தது.

ஆற்றங்கரையில் நிற்கையில் நான் கண்டவாறு, அந்த வெள்ளாட்டுக்கிடாய் இரு கொம்புடைய அச்செம்மறிக்கிடாயை நோக்கிச் சென்று, தன் முழு வலிமையோடும் அதைத் தாக்க அதன்மேல் பாய்ந்தது.

அது செம்மறிக்கிடாயை நெருங்கி அதன்மேல் கடுஞ்சினம் கொண்டு அதைத் தாக்கி, அதன் கொம்புகள் இரண்டையும் முறித்துவிட்டதை நான் கண்டேன். அதன் எதிரே நிற்கச் செம்மறிக்கிடாய்க்கு வலிமை இல்லை. ஆகவே வெள்ளாட்டுக்கிடாய் அதைத் தரையில் தள்ளி மிதித்து விட்டது. செம்மறிக்கிடாயை முன்னதன் வலிமையினின்று விடுவிக்க வல்லவர் யாருமில்லை.

அதன் பின்னர் வெள்ளாட்டுக்கிடாய் தற்பெருமை மிகக் கொண்டு திரிந்தது: ஆனால் அது வலிமையாக இருந்த பொழுதே அதன் பெரிய கொம்பு முறிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, எடுப்பாகத் தோன்றிய வேறு நான்கு கொம்புகள் முளைத்து, வானத்தின் நான்கு பக்கங்களையும் நோக்கி வளர்ந்தன.

அவற்றுள் ஒன்றிலிருந்து சிறிய கொம்பு ஒன்று முளைத்தெழுந்து, தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் அழகுமிக்க நாட்டை நோக்கியும், மிகப் பெரிதாக வளர்ந்து நீண்டது.

அது வான் படைகளைத் தொடுமளவு உயர்ந்து வளர்ந்து, விண்மீன் திரள்களுள் சிலவற்றையும் தரையில் வீழ்த்தி மிதித்துவிட்டது.

மேலும், அது வான்படைகளின் தலைவரையே எதிர்த்துத் தன்னை உயர்த்திக் கொண்டது. இடையறாது செலுத்தப்பட்ட எரிபலியையும் அவரிடமிருந்து பறித்துக்கொண்டு அவரது பயகத்தையும் அழித்துப் போட்டது.

குற்றங்களை முன்னிட்டு, வான்படைகளும் அன்றாட எரிபலியும் அதற்கு ஒப்புக் கொடுக்கப்பட்டன. அது உண்மையை மண்ணுக்குத் தள்ளியது. அது தன் செயலில் வெற்றி கண்டது.

அப்பொழுது புனிதர் ஒருவர் பேசுவதைக் கேட்டேன். வேறொரு புனிதர் முன்பு பேசியவரிடம், இடையறாது செலுத்தப்பட்ட எரிபலியையும், நடுங்கவைக்கும் குற்றத்தையும் பயகமும் வான் படைகளும் மிதிபடுவதற்குக் கையளிக்கப்படுவதையும் பற்றிய இந்தக் காட்சி இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்? என்று கேட்டார்.

அதற்கு அவர், இரண்டாயிரத்து முன்டீறு மாலையும் காலையும் இது நீடிக்கும். பின்னரே பயகம் அதற்குரிய நிலைக்குத் திரும்பும் என்றார்.

தானியேல் ஆகிய நான் இந்தக் காட்சியைக் கண்டபின், அதன் உட்பொருளை அறியத் தேடினேன். அப்பொழுது மனிதத் தோற்றம் கொண்ட ஒருவர் எனக்கு முன்பாக வந்து நின்றார்.

ஊலாய் ஆற்றின் நடுவிலிருந்து ஒரு மனிதக் குரல் ஒலித்தது. அது, கபிரியேல்! இந்தக் காட்சி இவருக்கு விளக்குமாறு செய் என்று கூப்பிட்டுச் சொன்னது.

அவ்வாறே அவர் நான் நின்ற இடத்திற்கு வந்தார். அவர் வருவதைப் பார்த்து, நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன். அவர் வருவதைப் பார்த்து, நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன். அவர் என்னைநோக்கி, மானிடா! இந்தக் காட்சி இறுதிக் காலத்தைப் பற்றியது எனத் தெரிந்துகொள் என்றார்.

அவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கையில், நான் தரையில் முகங்குப்புற விழுந்து மயக்கத்தில் ஆழ்ந்துகிடந்தேன். அவர் என்னைத் தொட்டு எழுப்பி என்னைக் காழன்றி நிற்கச் செய்தார்.

பெருஞ்சினத்தின் முடிவு நாளில் நிகழப்போவதை உனக்குத் தெரிவிப்பேன்: ஏனெனில், அது குறிக்கப்பட்ட இறுதி காலத்தைப் பற்றியது.

இரு கொம்பு உடையதாக நீ கண்ட செம்மறிக்கிடாய் மேதியர், பாரசீகரின் அரசர்களைக் குறிக்கிறது.

வெள்ளாட்டுக்கிடாய் கிரேக்க நாட்டின் அரசனைக் குறிக்கிறது: அதன் கண்களுக்கு இடையிலிருந்த பெரிய கொம்பு முதல் அரசன் ஆகும்.

அது முறிந்துபோன பின் அதற்குப் பதிலாக முளைத்தெழுந்த நான்கு கொம்புகள், அவனது அரசினின்று தோன்றவிருக்கும் நான்கு அரசுகள் ஆகும்: ஆனால், முன்னதன் ஆற்றல் இவற்றுக்கு இராது.

இவற்றின் ஆட்சி முடிவுற்று, குற்றங்கள் மலிந்து உச்சநிலை அடையும்போது, கடுகடுத்த முகமும் வஞ்சக நாவும் கூர்மதியும் கொண்ட ஓர் அரசன் தோன்றுவான்.

அவனது வலிமை பெருகும். அது அவனது சொந்த ஆற்றலினால் அல்ல. அவன் அஞ்சத்தக்க வகையில் அழிவு வேலை செய்வான்: தன் செயலில் வெற்றி காண்பான்: வலிமைமிக்கவர்களையும் புனித மக்களையும் அழித்து விடுவான்.

நயவஞ்சகத்தின் மூலம் அவன் பொய் புரட்டை வளர்ப்பான். அவன் தன் உள்ளத்தில் தற்பெருமை கொண்டிருப்பான்: முன்னெச்சரிக்கை தராமல் பலரைக் கொலை செய்வான்: இறுதியில் மன்னர்க்கு மன்னரையே எதிர்க்கத் துணிவான். ஆயினும், எந்த மனித முயற் சியும் இன்றி, அவன் அழிவுறுவான்.

மாலைகளையும் காலைகளையும் பற்றிய காட்சியைக் குறித்து இதுவரை சொல்லப்பட்டது முற்றிலும் உண்மையானது. ஆயினும், நீ இந்தக் காட்சியை உன் மனத்தில் மறைத்துவை. ஏ¦னில், பல நாள்களுக்குப்பிறகே இது நிறைவேறும்.

தானியேல் ஆகிய நான் சோர்வடைந்து சில நாள்கள் நோயுற்று நலிந்து கிடந்தேன்: பிறகு எழுந்து அரசனின் அலுவல்களில் ஈடுபட்டேன். ஆயினும் அந்தக் காட்சி என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது: அதன் பொருளும் எனக்குச் சரியாக விளங்கவில்லை.

அதிகாரம் 9.

பிறப்பினால் மேதியனாகிய அகஸ்வேருவின் மகன் தாரியு கல்¥தேய நாட்டின் அரசனாகி ஆட்சி புரிந்த முதல் ஆண்டு.

அவனது முதல் ஆட்சியாண்டில் தானியேல் ஆகிய நான், எருசலேம் பாழ்நிலையில் கிடக்கும் காலம், எரேமியா இறைவாக்கினர்க்கு ஆண்டவர் உரைத்தபடி எழுபது ஆண்டுகள் ஆகும் என்று மல்களிலிருந்து படித்தறிந்தேன்.

நான் நோன்பிலிருந்து சாக்கு உடை அணிந்து சாம்பலில் அமர்ந்து என் தலைவராகிய கடவுளிடம் திரும்பி மன்றாடி வேண்டிக் கொண்டேன்.

என் கடவுளாகிய ஆண்டவர்முன் என் பாவங்களை அறிக்கையிட்டு நான் மன்றாடியது: என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்!

நாங்கள் பாவம் செய்தோம்: வழி தவறி நடந்தோம்: பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதிநெறிகளையும் கைவிட்டோம்.

எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவர்க்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவி கொடுக்கவில்லை.

என் தலைவரே! நீதி உமக்கு உரியது: எம்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே. ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம்.

ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்துநின்றோம்.

எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார்.

நாங்களோ அவரது குரலொளியை ஏற்கவில்லை. இஸ்ரயேலர் யாவரும் உமது திருச்சட்டத்தை மீறி உம் குரலுக்குப் பணிய மறுத்து, விலகிச் சென்றனர். கடவுளின் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடி, சாபமும் கேடும் எங்கள் தலைமேல் கொட்டப்பட்டன. ஏனெனில், நாங்கள் அவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

எங்களுக்கும் எங்களை ஆண்டுவந்த எங்கள் அரசர்களுக்கும் எதிராக அவர் கூறியதை எங்கள்மீது அவர் சுமத்தியுள்ள பெரும் துன்பத்தின் வழியாய் உறுதிப்படுத்தியுள்ளார். ஏனெனில், எருசலேமுக்கு எதிராக நிகழ்ந்ததுபோல் உலகில் வேறெங்கும் நடக்கவே இல்லை.

மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியுள்ளவாறே, இத்துணைத் துன்பமும் எங்கள்மேல் வந்துள்ளது. ஆயினும், நாங்கள் எங்கள் கொடிய செயல்களை விட்டொழித்து, உமது உண்மை வழியை ஏற்று, ஆண்டவரும் எம் கடவுளுமான உமக்கு உகந்தவர்களாய் நடக்க முயலவில்லை.

ஆகையால் ஆண்டவர் எங்களுக்கு உரிய தண்டனையைத் தயாராக வைத்திருந்தது எங்கள்மீது சுமத்தினார். ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் நீதியுள்ளவர். ஆனால், நாங்கள்தான் அவரது குரலுக்குப் பணிய மறுத்தோம்.

அப்படியிருக்க, எங்கள் தலைவராகிய கடவுளே! உம் மக்களை நீர் மிகுந்த ஆற்றலோடு எகிப்து நாட்டிலிருந்து மீட்டு, இன்றுவரை உமது பெயருக்குப் புகழ் தேடிக்கொண்டீர். நாங்களோ பாவம் செய்தோம், பொல்லாதன புரிந்தோம்.

ஆனால், எம் தலைவரே! உம்முடைய நீதிச் செயல்களுக்கேற்ப உமது நகரமும் உமது திருமலையுமாகிய எருசலேமைவிட்டு உம் சினமும் சீற்றமும் விலகுவதாக! ஏனெனில் எங்கள் பாவங்கள் தந்தையரின் கொடிய செயல்களில் காரணமாக, எருசலேமும் உம் மக்களும் எங்களைச் சுற்றி வாழும் மக்களிடையே நிந்தைப் பொருளாக மாறிவிட்டனர்.

ஆகையால், எங்கள் கடவுளே! இப்பொழுது உம் அடியானின் வேண்டுதலையும் விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொள்ளும். பாழாய்க் கிடக்கிற உமது பயகத்தின்மீது தலைவராகிய உம்மை முன்னிட்டே உமது முகத்தை ஒளிரச் செய்வீராக!

என் கடவுளே! செவி சாய்த்துக் கேட்டருளும்: உம் கண்களைத் திறந்து எங்கள் பாழிடங்களையும் உமது பெயர் தாங்கிய நகரையும் நோக்கியருளும். நாங்கள், எங்கள் நேர்மையை நம்பாமல், உமது பேரிரக்கத்தையே நம்பி, எங்கள் மன்றாட்டுகளை உமது முன்னிலையில் சமர்ப்பிக்கிறோம்.

என் தலைவரே! கேளும்: என் தலைவரே! செவிகொடுத்துச் செயலாற்றும்: என் கடவுளே! உம்மை முன்னிட்டுக் காலம் தாழ்த்தாதேயும்: ஏனெனில் உமது நகரமும் உம் மக்களும் உமது பெயரையே தாங்கியுள்ளனர்.

நான் இவ்வாறு சொல்லி வேண்டிக் கொண்டு, என் பாவங்களையும் என் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களின் பாவங்களையும் அறிக்கையிட்டு, என் கடவுளின் திரு மலைக்காக என் விண்ணப்பங்களை என் கடவுளாகிய ஆண்டவர்முன் சமர்ப்பித்தேன்.

இவ்வாறு நான் வேண்டுதல் செய்து கொண்டிருக்கும்பொழுது, முதல் காட்சியில் நான் கண்ட கபிரியேல் என்ற மனிதர் மாலைப் பலிவேளையில் விரைவாய்ப் பறந்து வந்து, என்னைத் தொட்டு என்னிடம் பின்வருமாறு சொன்னார்:

தானியேல்! உனக்கு விவேகத்தையும் மெய்யுணர்வையும் அளிக்க நான் புறப்பட்டு வந்துள்ளேன்.

நீ வேண்டுதல் செய்யத் தொடங்கிய போதே கட்டளை ஒன்று பிறந்தது: நான் அதை உனக்குத் தெரிவிக்க வந்தேன்: ஏனெனில் நீ மிகுதியான அன்புக்கு உரியவன்: ஆதலால் நான் சொல்வதைக் கவனித்து காட்சியின் உட்பொருளை உணர்ந்துகொள்.

உன்னுடைய இனத்தவம் உனது புனித நகரும் குற்றங்கள் புரிவதையும் பாவம் செய்வதையும் நிறுத்தி விடுவதற்கும், கொடிய செயல்களுக்கும் கழுவாய் தேடுவதற்கும், முடிவற்ற நீதியை நிலைநாட்டுவதற்கும், திருக்காட்சியையும் இறைவாக்குகளையும் முத்திரையிடுவதற்கும், திருத்பயகத்தைத் திருநிலைப்படுத்துவதற்கும் குறிக்கப்பட்ட கெடு எழுபது வாரங்கள் ஆகும்.

ஆகவே, நீ அறிந்து தெளிவுபெற வேண்டியதாவது: எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புமாறு கட்டளை பிறப்பதற்கும், அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டவர் வருவதற்கும் இடையே உள்ள காலம் ஏழு வாரங்கள் ஆகும். பின்பு சதுக்கங்களும் அகழிசூழ் அரண்களும் அமைத்து அந்நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அறுபத்திரண்டு வாரங்கள் ஆகும். ஆயினும் அது தொல்லை நிறைந்த காலமாய் இருக்கும்.

அதன் பிறகு திருப்பொழிவு செய்யப்பட்டவர் குற்றமற்றவராயிருந்தும் கொலை செய்யப்படுவார். படையெடுத்து வரவிருக்கும் அரசனின் குடிமக்கள் நகரையும் பயகத்தையும் அழித்துவிடுவர். பெரும் பிரளயம் போல முடிவு வரும். கடவுளின் ஆணைப்படி இறுதிவரை போரும் பேரழிவுமாய் இருக்கும்.

ஒரு வாரம் அவன் பலரோடு உடன்படிக்கை செய்து கொண்டு அரசாள்வான். அந்த வாரத்தின் பாதி கழிந்தபின், பலியையும் காணிக்கையையும் நிறுத்திவிடுவான். திருக்கோவிலின் முனையில் பாழாக்கும் அருவருப்பு வைக்கப்படும். அதை அங்கு வைத்துப் பாழ்படுத்தியவன் கடவுளின் ஆணைப்படி இறுதியில் அழிவுறுவான்.

அதிகாரம் 10.

பாரசீக அரசராகிய சைரசின் மூன்றாம் ஆட்சியாண்டில் பெல்தசாச்சர் என்று பெயரிடப்பட்டிருந்த தானியேலுக்கு ஒரு வாக்கு வெளிப்படுத்தப்பட்டது. அது உண்மையான வாக்கு: அது ஒரு பெரும் தொல்லையைப் பற்றியது. அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். அதைப் பற்றிய தெளிவு, காட்சி வாயிலாகக் கிடைத்தது.

அந்நாளில் தானியேல் ஆகிய நான் மூன்று வாரங்களாக அழுது கொண்டிருந்தேன்.

அந்த மூன்று வாரம் முழுவதும் நான் சுவையான உணவு அருந்தவில்லை. இறைச்சியோ திராட்சை இரசமோ என் வாயில் படவில்லை: என் தலையில் எண்ணெய்கூடத் தடவிக் கொள்ளவில்லை.

முதல் மாதத்தின் இருபத்து நான்காம் நாளன்று நான் திக்¡£சு என்னும் பெரிய ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தேன்.

என் கண்களை உயர்த்திப் பார்க்கையில், மெல்லிய பட்டாடை உடுத்திக் கொண்டு தம் இடையில் ஊபாசு நாட்டுத் தங்கக்கச்சை கட்டியிருந்த ஒருவரைக் கண்டேன்.

அவரது உடல் பளிங்கு போல் இருந்தது: அவர் முகம் ஒளிவிடும் மின்னலைப்போல் இருந்தது: அவருடைய கண்கள் பொறி பறக்கும் தீப்பந்தங்கள் போலும், கைகளும் கால்களும் மினுமினுக்கும் வெண் கலம் போலும், அவரது பேச்சொலி மக்கள் கூடத்தின் ஆரவாரம் போலும் இருந்தன.

தானியேல் ஆகிய நான் மட்டுமே இந்தக் காட்சியைக் கண்டேன். என்னுடன் இருந்தவர்கள் அதைப் பார்க்கவில்லை: ஆனால் அவர்கள் மிகுந்த நடுக்கமுற்று ஒளிந்துகொள்ள ஓடிவிட்டார்கள்.

தனித்து விடப்பட்ட நான் மட்டுமே இப்பெரும் காட்சியைக் கண்டேன். நான் வலுவிழந்து போனேன்: என் முகத்தோற்றம் சாவுக்கு உள்ளானவனைப்போல் வெளிறியது. என்னிடம் ஆற்றலே இல்லாது போயிற்று.

அப்போது அவரது பேச்சொலி என் காதில் விழுந்தது. அதைக் கேட்டதும் தரையில் முகம் குப்புற விழுந்து மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்தேன்.

அப்பொழுது ஒரு கை என்னைத் தொட்டது: கைகளையும் முழங்¥ கால்களையும் நான் ஊன்றி எழுந்து நிற்கும்படி செய்தது. ஆயினும், நான் நடுங்கிக் கொண்டே இருந்தேன்.

அவர் என்னை நோக்கி, மிகவும் அன்புக்குரிய தானியேல்! நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளைக் கேள்: நிமிர்ந்து நில். ஏனெனில், உன்னிடம்தான் நான் அனுப்பப்பட்டேன் என்றார். இவ்வாறு அவர் சொன்னவுடன் நடுங்கிக் கொண்டே நான் எழுநது நின்றேன்.

அப்பொழுது அவர் என்னைப் பார்த்துக் கூறியது: தானியேல்! அஞ்ச வேண்டாம், உய்த்துணர வேண்டும் என்னும் உள்ளத்தோடு என் கடவுள் முன்னிலையில் நீ உன்னைத் தாழ்த்திக் கொண்ட முதல் நாள் தொடங்கி உன் மன்றாட்டுக் கேட்கப்பட்டு வருகிறது. உன் மன்றாட்டுக் கேற்ப இதோ! நான் வந்துள்ளேன்.

பாரசீக நாட்டின் காவலனாகிய பதன் இருபத்தொரு நாள் என்னை எதிர்த்து நின்றான். அங்கே பாரசீக அரசர்களோடு நான் தனித்து விடப்பட்டதால், தலைமைக் காவலர்களுள் ஒருவராகிய மிக்கேல் எனக்குத் துணைசெய்ய வந்தார்.

உன் இனத்தார்க்கு இறுதி நாள்களில் நடக்கவிருப்பதை உனக்கு உணர்த்துவதற்காக நான் உன்னிடம் வந்தேன். இந்த காட்சி நிறைவேற இன்னும் நாள்கள் பல ஆகும்.

அவர் இந்த வார்த்தைகளை எனக்குச் சொன்னபோது நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேசாதிருந்தேன்.

அப்போது, மானிட மகனின் தோற்றம் கொண்ட ஒருவர் என் உதடுகளைத் தொட்டார். நானும் வாய் திறந்து பேசி, எனக்கு எதிரில் நின்றவரை நோக்க, என் தலைவரே! இந்தக் காட்சியின் காரணமாய் நான் வேதனையுற்றேன். என்னிடம் ஆற்றலே இல்லாது போயிற்று.

என் தலைவருடைய ஊழியனாகிய நான் என் தலைவராகிய உம்மோடு உரையாடுவது எப்படி? ஏனெனில் நான் வலிமை இழந்துவிட்டேன்: என் மூச்சும் அடைத்துக் கொண்டது என்றேன்.

அப்பொழுது, மனிதச் சாயல் கொண்ட அவர் மறுபடியும் என்னைத் தொட்டு வலுவூட்டினார்.

மேலும் அவர், மிகுந்த அன்புக்குரியவனே! அஞ்சாதே: உனக்குச் சமாதானம் உண்டாவதாக! திடங்கொண்டு துணிவாயிரு என்றார். இவ்வாறு அவர் பேசியபோது, எனக்குத் துணிவு உண்டாகி, என் தலைவர் பேசட்டும்: ஏனெனில், நீர் எனக்கு வலுவூட்டினீர் என்றேன்.

அப்பொழுது அவர் கூறியது: உன்னிடம் நான் வந்த காரணம் உனக்குத் தெரிகிறதா? இப்பொழுது பாரசீக நாட்டுக் காவலனோடு மீண்டும் போரிடச் செல்கிறேன். நான் அவனை முறியடித்தபின் கிரேக்க நாட்டுக் காவலன் வருவான்.

ஆனால் அதற்கு முன் உண்மை மலில் எழுதியுள்ளதை உனக்குத் தெரிவிப்பேன். இவர்களை எதிர்த்துப் போராடுவதில் உங்கள் காவலராகிய மிக்கேலைத் தவிர எனக்குத் துணை நிற்பார் யாருமில்லை.

அதிகாரம் 11

ஆனால் நான், மேதியனான தாரியுவின் முதல் ஆண்டிலிருந்தே அவனைத் திடப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் அவனுக்கு அருகில் நின்றேன்.

இப்பொழுது, நான் உனக்கு உண்மையை வெளிப்படுத்துகிறேன்: இதோ! இன்னும் மூன்று மன்னர்கள் பாரசீகத்தில் அரியணை ஏறுவார்கள்: நான்காம் அரசன் மற்ற எல்லாரையும் விடப் பெருஞ் செல்வம் படைத்தவனாய் இருப்பான். அவன் தன் செல்வத்தால் வலிமை பெற்ற பிறகு, கிரேக்க அரசுக்கு எதிராக எல்லாரையும் பண்டியெழுப்புவான்.

பிறகு வலிமைமிக்க அரசன் ஒருவன் தோன்றி, மிகுதியான ஆற்றலோடு அரசாண்டு, தான் விரும்பியதை எல்லாம் செய்வான்.

அவன் உயர்நிலை அடைந்தபின், அவனது அரசு சிதைக்கப்பெற்று, வானத்தின் நான்கு திசையிலும் பிரிக்கப்படும்: ஆயினும் அது அவனுடைய வழிமரபினருக்குத் தரப்படாது. அவனது ஆட்சிக்காலத்திலிருந்த வலிமையும் அதற்கு இராது. ஏனெனில் அவர்களிடமிருந்து அவனுடைய அரசு பறிக்கப்பட்டு வேறு சிலருக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்.

பின்பு தென்திசை மன்னன் வலிமை பெறுவான். ஆயினும் அவனுடைய படைத்தலைவர்களுள் ஒருவன் அவனை விட வலிமை பெற்று ஆட்சி செய்வான்: அவனது அரசும் மிகப் பெரியதாய் விளங்கும்.

சில ஆண்டுகள் சென்றபின், அவர்கள் ஓர் உடன்படிக்கை செய்து கொள்வார்கள்: இந்தச் சமாதான உறவை உறுதிப்படுத்தத் தென்திசை மன்னனின் மகள் வடதிசை மன்னனிடம் வந்து சேர்வாள்: ஆனால் அவளது செல்வாக்கு நீடிக்காது: அவனும் அவனது வழிமரபும் அற்றுப் போவார்கள். அவளும் அவளை அழைத்துவந்தவரும், அவளைப் பெற்றவனும், அவளைக் கைப்பிடித்தவனும் கைவிடப்படுவார்கள்.

அந்நாள்களில் அவளுடைய வேர்களிலிருந்து அவனது இடத்தில் ஒரு முளை தோன்றும். அவ்வாறு தோன்றுபவன் பெரும் படையுடன் வந்து, வடதிசை மன்னனின் கோட்டைக்குள் புகுந்து அவர்களைத் தாக்கி முறியடிப்பான்.

அவர்களுடைய தெய்வங்களையும் சிலைகளையும் விலையுயர்ந்த வெள்ளி, பொன் பாத்திரங்களையும் எகிப்துக்குக் கொண்டு போவான்: சில காலத்திற்கு வடதிசை மன்னன் மேல் படையெடுக்காமல் இருப்பான்.

பின்பு, வடதிசை மன்னன் தென்திசை மன்னனது நாட்டின்மேல் படையெடுத்து வருவான்: ஆனால் அவன் தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.

பிறகு அவனுடைய மைந்தர்கள் திரளான, வலிமைமிக்க படையைத் திரட்டிக்கொண்டு வருவார்கள்: அவர்கள் பெருவெள்ளம் போலத் திடீரெனப் பாய்ந்துவந்து மீண்டும் தென்னவனின் கோட்டைவரை சென்று போரிடுவார்கள்.

அப்பொழுது தென்திசை மன்னன் வெகுண்டெழுந்து புறப்பட்டுப்போய் வடதிசை மன்னோடு போரிடுவான். வடநாட்டான் பெரியதொரு படை திரட்டியிருந்தும், அப்படை பகைவன் கையில் அகப்படும்.

அப்படையைச் சிறைப்பிடித்ததால் தென்னவன் உள்ளம் இறுமாப்புக் கொள்ளும். பல்லாயிரம் பேரை அவன் வீழ்த்துவான்: ஆயினும் அவன் முழு வெற்றி அடையமாட்டான்.

ஏனெனில் வடதிசை மன்னன் முன்னதைவிடப் பெரிய படையை மீண்டும் திரட்டுவான்: சில ஆண்டுகளுக்குப் பிறகு அவன் திடீரெனப் பெரிய படையோடும் மிகுந்த தளவாடங்களோடும் தாக்க வருவான்.

அக்காலத்தில் தென்திசை மன்னனுக்கு எதிராகப் பலர் எழும்புவர். உன் சொந்த இனத்தாரின் மக்களுள் வன்முறையில் ஈடுபடுகிறவர்களும் காட்சியை நிறைவேற்றும்படி எழுப்புவார்கள்: ஆனால் அவர்கள் தோல்வியுறுவார்கள்.

வடதிசை மன்னன் வந்து முற்றுகையிட்டு நன்கு அரண் செய்யப்பட்ட நகரத்தைக் கைப்பற்றுவான்: தென்னகப் படைகள் எதிர்க்க வலிமையற்றுப் போகும்: அப்படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் எதிர்த்து நிற்க முடியாது போவார்கள்: ஏனெனில் அவர்களிடம் வலிமையே இராது.

வடதிசை மன்னன் தென்திசை மன்னனுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து தன் மனம் போலச் செய்வான்: அவனை எதிர்த்து நிற்பவன் எவனும் இல்லை: சிறப்புமிக்க நாட்டினுள் நுழைந்து அது முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்துவான்.

அவன் முழு அரசின் வலிமையோடு படையெடுக்கத் திட்டமிடுவான்: ஆகவே தென்திசை மன்னனோடு நட்புக் கொண்டாடுவது போல நடித்து, அவனை வஞ்சகமாய் ஒழித்துக்கட்டும்படித் தன் புதல்வியருள் ஒருத்தியை அவனுக்கு மணம் செய்து கொடுப்பான்: ஆனால் அவன் நினைத்து நிறைவேறாது: அந்த நாடும் அவனுக்குச் சொந்தமாகாது.

பிறகு அவன் தன் கவனத்தைக் கடலோர நாடுகள் மேல் திருப்பி, அவற்றுள் பலவற்றைப் பிடிப்பான்: ஆனால் படைத் தலைவன் ஒருவன் அவன் திமிரை அடக்கி அத்திமிர் அவனையே அழிக்கும்படி செய்வான்.

ஆகையால் அவன் தன் சொந்த நாட்டின் கோட்டைக்குள் திரும்பிவிட முடிவுசெய்வான்: ஆனால் அவன் தடுமாறி விழுந்து அடையாளமின்றி அழிந்து போவான்.

நாட்டின் செழிப்பான பகுதிகளுக்கு வரிவசூழிப்பவனை அனுப்பும் வேறொருவன் அவனுக்குப் பதிலாகத் தோன்றுவான். அவன் எவரது சினத்தின் காரணமாகவோ போர் முனையிலோ சாகாமல், தானே மடிந்து போவான்.

அவனது இடத்தில் இழிந்தவன் ஒருவன் எழும்புவான்: அவனுக்கு எவ்வித அரசுரிமையும் கிடையாது: ஆயினும் எதிர்பாராத நேரத்தில் வந்து முகப்புகழ்ச்சியால் அரசைக் கைப்பற்றிக் கொள்வான்.

அவனை எதிர்த்துப் போர் புரியும் படை தோல்வியடைந்து நசுக்கப்படும். அவ்வாறே உடன்படிக்கை செய்து கொண்ட தலைவனும் ஒழிக்கப்படுவான்.

உடன்படிக்கை செய்து கெண்ட பிறகும் அவன் வஞ்சகமாய் நடந்துகொள்வான். அவன் குடிமக்கள் சிலரே ஆயினும், அவன் வலிமை பெற்று விளங்குவான்.

செல்வச் சிறப்புமிக்க நகரங்களுள் அவன் முன்னெச்சரிக்கை இன்றி நுழைந்து, தன் தந்தையரும் முன்னோரும் செய்யாததை எல்லாம் செய்வான்: அந்நகரங்களில் கொள்ளையடித்த பொருள்களையும் கைப்பற்றிய செல்வங்களையும் வாரியிறைப்பான்: அந்நகரங்களின் அரண்களைப் பிடிக்கப் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வான்: ஆயினும் இந்த நிலை சிறிது காலமே நீடிக்கும்.

பிறகு அவன் தன் வலிமையை நம்பித் தென்திசை மன்னனுக்கு எதிராகப் பெரும்படையோடு போரிடத் துணிந்து செல்வான். அப்பொழுது, தென்திசை மன்னனும் வலிமைமிக்க பெரும் படையோடு வந்து போர்முனையில் சந்திப்பான்: ஆனால் அவனுக்கு எதிராகச் சதித்திட்டங்கள் செய்யப்பட்டிருந்தபடியால், அவன் நிலைகுலைந்து போவான்.

அவனோடு விருந்துணவு உண்டவர்களே அவனுக்கு இரண்டகம் செய்வார்கள். அவனுடைய படை முறியடிக்கப்படும்: பலர் கொலையுண்டு அழிவார்கள்:

இரு அரசர்களும் ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய நினைப்பார்கள்: ஒரே பந்தியில் இருந்து கொண்டே பொய் பேசுவார்கள்: ஆயினும் அது அவர்களுக்குப் பயன் தராது: ஏனெனில், முடிவு குறிக்கப்பட்ட காலத்தில் வரவிருக்கின்றது.

வடநாட்டு மன்னன் மிகுந்த கொள்ளைப் பொருள்களோடு தன் நாட்டுக்குத் திரும்பிப் போவான். அவனுடைய உள்ளம் புனிதமான உடன்படிக்கைக்கு எதிராக இருக்கும். தான் நினைத்ததைச் செய்துமுடித்தபின் அவன் தன் நாட்டுக்குத் திரும்புவான்.

குறிக்கப்பட்ட காலத்தில் அவன் மறுபடியும் தென்னாட்டுக்கு வருவான்: ஆனால் இம்முறை முன்புபோல் இராது.

அவனுக்கு எதிராக இத்தியர்கள் கப்பல்களில் வருவார்கள்: அவனோ அவர்களுக்கு அஞ்சிப் பின்வாங்கிப் புறமுதுகிட்டு ஓடுவான்: அவன் கடுஞ்சினமுற்று புனித உடன்படிக்கைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுப்பான்: மீண்டும் வந்து, புனித உடன்படிக்கையைக் கைவிட்டவர்கள்மேல் தன் கவனத்தைத் திருப்புவான்.

அவனுடைய படை வீரர்கள் வந்து திருக்கோவிலையும் கோட்டையையும் தீட்டுப்படுத்தி, அன்றாடப் பலியை நிறுத்திவிட்டு, நடுங்கவைக்கும் தீட்டை அங்கே அமைப்பார்கள்.

உடன்படிக்கையை மீறுகிறவர்களை அவன் பசப்புமொழிகளால் தன் பக்கம் ஈர்ப்பான்: ஆனால் தங்கள் கடவுளை அறிந்திருக்கும் மக்கள் திடம் கொண்டு செயலில் இறங்குவார்கள்.

ஞானமுள்ள பலர் மக்களுக்கு அறிவூட்டுவார்கள்: சில காலம் அவர்கள் வாளாலும் நெருப்பாலும் சிறைத் தண்டனையாலும் கொள்ளையினாலும் மடிவார்கள்.

அவர்கள் வீழ்ச்சியுறும்போது, அவர்களுக்கு உதவி செய்ய ஒருசிலர் இருப்பர்: ஆயினும் அவர்களது துணைக்கு வருபவர் தன்னல நோக்குடனே உதவி செய்வர்.

ஞானிகள் சிலர் கொல்லப்படுவர். இதன்மூலம் மக்கள் புடம்போடப்பட்டு பய்மைப்படுத்தப்பட்டு வெண்மையாக்கப்பெறுவர். இறுதியாக, குறிக்கப்பட்ட முடிவுகாலம் வரும்.

அரசன் தன் மனம்போன போக்கில் நடந்துகொள்வான். அவன் தன்னையே உயர்த்திக்கொள்வான்: எல்லாத் தெய்வத்திற்கும் மேலாகத் தன்னையே பெருமைப்படுத்திக் கொண்டு தெய்வங்களுக்கெல்லாம், இறைவனானவர்க்கே எதிராகப் பழிச்சொற்களைப் பேசுவான். இறைவனின் சினம் நிறைவேறும் நாள் வரும்வரை அவன் வாழ்க்கை வளம்பெறும்: ஏனெனில், குறிக்கப்பட்டது நடந்தேற வேண்டும்.

அவன் தன் தந்தையர் வழிபட்ட தெய்வங்களையோ வேறெந்தத் தெய்வத்தையோ பொருட்படுத்தாமல், அவற்றுக்கெல்லாம் மேலாகத் தன்னையே உயர்த்திக் கொள்வான்.

அவற்றிற்குப் பதிலாக, அரண்களின் தெய்வத்தை மட்டும் வணங்குவான். தன் தந்தையர் அறிந்திராத அந்தத் தெய்வத்தை அவன் பொன்னாலும் வெள்ளியாலும் மாணிக்கக் கல்லாலும் விலையுயர்ந்த பொருள்களாலும் பெருமைப்படுத்தி வழிபடுவான்.

தன் வலிமைமிக்க கோட்டைகளின் காவலர்களாக, அயல் தெய்வத்தை வழிபடும் மக்களை நியமிப்பான். அவனை அரசனாக ஏற்றுக்கொண்டவர்களைச் சிறப்பித்து, மக்களின் அதிகாரிகளாக நியமித்து, பணத்திற்காக நிலத்தைப் பிரித்துக் கொடுப்பான்.

முடிவுக்காலம் வரும் போது தென்திசை மன்னன் அவனைத் தாக்குவான்: வடதிசை மன்னனும் தேர்ப்படை, குதிரை வீரர்கள், கப்பற்படை ஆகியவற்றுடன் சுழற்காற்றைப் போல் அவனை எதிர்த்து வருவான்: அவன் நாடுகளுக்குள் வெள்ளம்போல் பாய்ந்து அழிவு விளைவித்துக்கொண்டே போவான்.

பிறகு அவன் சிறப்புமிக்க நாட்டினுள் நுழைவான். பல்லாயிரக் கணக்கானோர் அழிக்கப்படுவர்: ஆனால் ஏதோமியர், மோவாபியர், அம்மோனியரின் தலைவர்கள் ஆகியோர் மட்டும் தப்பித்துக்கொள்வர்.

அவன் மற்ற மாநிலங்கள் மேலும் தன் கையை ஓங்குவான்.

அவன் கைக்கு எகிப்து நாடும் தப்பாது. அங்குள்ள பொன், வெள்ளி முதலிய செல்வங்களையும், விலையுயர்ந்த எல்லாப் பொருள்களையும் கைப்பற்றிக்கொள்வான். லிபியரும் எத்தியோப்பியரும் அவன் பின்னே செல்வார்கள்.

ஆனால் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கச்செய்யும். பலரைக் கொன்றொழிப்பதற்கு அவன் பெரும் சீற்றத்துடன் புறப்பட்டுச் செல்வான்.

பிறகு கடலுக்கும் மாட்சிமிகு திருமலைக்கும் இடையே தன் அரச கூடாரங்களை அமைப்பான்: ஆயினும் உதவி செய்வார் யாருமின்றி அவன் தன் முடிவைக் காண்பான்.

அதிகாரம் 12

அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். மலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.

இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்: அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்: வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர்.

ஞானிகள் வானத்தின் பேரொலியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.

தானியேல்! நீ குறித்த முடிவுகாலம் வரும்வரை இந்த வார்த்தைகளை மூடி வைத்து இந்த மலை முத்திரையிட்டுவை. உலகில் நிகழ்வதைப் பலர் தெரிந்து கொள்ள வீணிலே முயற்சிசெய்வர்.

அப்பொழுது, ஆற்றுக்கு இக்கரையில் ஒருவரும் அக்கரையில் ஒருவருமாக இருவர் நிற்பதைத் தானியேல் ஆகிய நான் கண்டேன்.

அப்பொழுது, மெல்லிய பட்டாடை உடுத்தி ஆற்றுநீரின்மேல் நின்றுகொண்டிருந்த மனிதரை நோக்கி, இந்த விந்தைகள் எப்பொழுது முடிவுக்கு வரும்? என்று கேட்டேன்.

அப்பொழுது, மெல்லிய பட்டாடை உடுத்தி ஆற்று நீரின்மேல் நின்றுகொண்டிருந்த அந்த மனிதர் தம் இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, இன்னும் மூன்றரை ஆண்டுகள் கடந்தபின், புனித மக்களின் ஆற்றலைச் சிதறடிப்பது முடிவுறும் வேளையில், இவை யாவும் நிறைவேறும் என்றும் வாழ்பவரின் பெயரால் ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டேன்.

நான் அதைக் கேட்டும் அதன் பொருளை அறிந்து கொள்ளவில்லை. அப்பொழுது அவரை நோக்கி, என் தலைவரே! இவற்றிற்குப் பிறகு என்ன நடக்கும்? என்று கேட்டேன்.

அதற்கு அவர், தானியேல்! நீ போகலாம்: குறிக்கப்பட்ட நாள் வரையில் இந்தச் சொற்கள் மறைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்கும்.

பலர் தம்மைத் பய்மைப்படுத்திக் கொள்வர்: புடம்போடப்படுவர்: தம்மை வெண்மையாக்கிக் கொள்வர். பொல்லாதவர் தீய வழியில் நடப்பர்: அவர்கள் அதை உணரவும் மாட்டார்கள்: ஆனால் ஞானிகள் உணர்ந்து கொள்வார்கள்.

அன்றாடப் பலி நிறுத்தப்பட்டு நடுங்கவைக்கும் தீட்டு அமைக்கப்படும் காலம்வரை ஆயிரத்து இருமற்றுத் தொண்ணு¡று நாள் செல்லும்.

ஆயிரத்து முந்மற்று முப்பத்தைந்து நாள்வரை காத்திருப்பவரே பேறு பெற்றவர்.

நீயோ தொடர்ந்து வாழ்வை முடி: நீ இறந்து அமைதி பெறுவாய்: முடிவு காலம் வந்தவுடன் உனக்குரிய பங்கைப் பெற்றுக் கொள்ள நீ எழுந்து வருவாய் என்றார்.

புத்தகம் 28 - ஒசாயா

அதிகாரம் 1.

யூதாவின் அரசர்களாகிய உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்பவர்களின் நாள்களிலும், யோவாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமாகிய எரொபவாமின் நாள்களிலும், பெயேரியின் மகன் ஓசேயாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே:

ஆண்டவர் ஓசேயா வழியாக முதற்கண் பேசியபோது, அவர் அவரை நோக்கி, நீ போய் விலைமகள் ஒருத்தியைச் சேர்த்துக்கொள்: வேசிப் பிள்ளைகளைப் பெற்றெடு: ஏனெனில் நாடு ஆண்டவரை விட்டு விலகி வேசித்தனத்தில் மூழ்கியுள்ளது என்றார்.

அப்படியே அவர் போய்த் திப்லயிமின் மகளாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டார். அவள் கருவுற்று அவருக்கொரு மகனைப் பெற்றெடுத்தாள்.

அப்போது ஆண்டவர் ஓசேயாவை நோக்கி, இவனுக்கு “இஸ்ரியேல்“ எனப் பெயரிடு: ஏனெனில் இன்னும் சிறிது காலத்தில் நான் இஸ்ரயேலின் இரத்தப் பழிக்காக ஏகூவின் குடும்பத்தாரைத் தண்டிப்பேன்: இஸ்ரயேல் குடும்பத்தின் ஆட்சியை ஒழித்துக் கட்டுவேன்.

அந்நாளில், நான் இஸ்ரியேல் பள்ளத்தாக்கில் இஸ்ரயேலின் வில்லை முறித்துப்போடுவேன் என்றார்.

கோமேர் மறுபடியும் கருவுற்றுப் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள்: அப்போது ஆண்டவர் அவரைப் பார்த்து, இதற்கு “லோ ருகாமா“ எனப் பெயரிடு: ஏனெனில் இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு நான் இனிக் கருணை காட்ட மாட்டேன்: அவர்களை மன்னிக்கவே மாட்டேன்.

ஆனால் யூதா குடும்பத்தாருக்குக் கருணை காட்டுவேன்: அவர்களின் கடவுளாகிய ஆண்டவராலேயே அவர்களுக்கு விடுதலை கிடைக்கச் செய்வேன்: வில், வாள், போர்க் குதிரைகள், குதிரை வீரர்கள் ஆகியவற்றைக் கொண்டு நான் விடுவிக்கப்போவதில்லை என்றார்.

அவள் லோருகாமாவைப் பால்குடி மறக்கச் செய்த பின் திரும்பவும் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.

அப்போது ஆண்டவர் ஓசேயாவைப் பார்த்து, இவனுக்கு “லோ அம்மீ“ எனப் பெயரிடு: ஏனெனில், நீங்கள் என் மக்கள் அல்ல: நானும் உங்களுடையவர் அல்ல.

ஆயினும் இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை அளக்கவும் எண்ணவும் முடியாத கடற்கரை மணலுக்கு ஒப்பாகும். நீங்கள் என்னுடைய மக்களல்ல என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு மாறாக, வாழும் கடவுளின் மக்கள் என்று அவர்களுக்குக் கூறப்படும்.

யூதாவின் மக்களும் இஸ்ரயேலின் மக்களும் ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கப்படுவர். அவர்கள் தங்களுக்கென ஒரே தலைவனை ஏற்படுத்திக் கொண்டு, நாட்டிலிருந்து புறப்பட்டு வருவார்கள்: இதுவே இஸ்ரயேலின் மாபெரும் நாள்.

அதிகாரம் 2.

அம்மீ என உங்கள் சகோதரர்களிடம் கூறுங்கள். ¥ருகாமா என உங்கள் சகோதரிகளிடம் கூறுங்கள்.

வழக்காடுங்கள், உங்கள் அன்னையோடு வழக்காடுங்கள்: அவள் எனக்கு மனைவியுமல்ல: நான் அவளுக்குக் கணவனுமல்ல: அவள் வேசித்தனத்தின் குறிகளைத் தன் முகத்தினின்றும், விபசார குறிகளைத் தன் மார்பினின்றும் அகற்றட்டும்.

இல்லாவிடில், நான் அவளைத் துகிலுரித்து திறந்தமேனியாக்குவேன்: பிறந்த நாளில் இருந்த கோலமாய் அவளை ஆக்குவேன்: பாலைநிலம்போல் ஆக்கி, வறண்ட நிலமாகச்செய்து தாக்கத்தினால் அவளைச் சாகடிப்பேன்.

அவள் பிள்ளைகளுக்கும் நான் கருணை காட்டமாட்டேன்: ஏனெனில் அவர்கள் வேசித்தனத்தில் பிறந்தவர்கள்.

அவர்களின் தாய் வேசியாய் வாழ்ந்தாள்: அவர்களைக் கருத்தாங்கியவள் ஒழுக்கம் கெட்டு நடந்தாள்: எனக்கு உணவும் தண்ணீரும், ஆட்டு மயிரும் மணலும், எண்ணெயும் பானமும் தருகின்ற என் காதலரைப் பின் செல்வேன் என்றாள்.

ஆதலால், நான் அவள் வழியை முள்ளால் அடைப்பேன்: அவள் எதிரில் சுவர் ஒன்றை எழுப்புவேன்: அவளால் வழி கண்டுபிடித்துப் போக இயலாது.

அவள் தன் காதலர்களைப் பின்தொடர்ந்து ஓடுவாள்: ஆனால் அவர்களிடம் போய்ச் சேரமாட்டாள். அவர்களைத் தேடித் திரிவாள்: ஆனால் அவர்களைக் காணமாட்டாள். அப்போது அவள், என் முதல் கணவனிடமே நான் திரும்பிப் போவேன்: இப்போது இருப்பதைவிட, அப்போது எனக்கு நன்றாயிருந்தது என்பாள்.

கோதுமையும் திராட்சை இரசமும் எண்ணெயும் அவளுக்குக் கொடுத்தது நானே என்பதை அவள் அறியவில்லை. நான் வாரி வழங்கிய பொன், வெள்ளியைக் கொண்டே பாகாலுக்குச் சிலை செய்தார்கள்.

ஆதலால், நான் எனது கோதுமையை அதன் காலத்திலும், எனது திராட்சை இரசத்தை அதன் பருவத்திலும் திரும்ப எடுத்துக்கொள்வேன்: அவள் திறந்த மேனியை மறைக்க நான் கொடுத்திருந்த கம்பளி ஆடையையும் சணலாடையையும் பறித்துக் கொள்வேன்.

இப்பொழுதே அவளுடைய காதலர் கண்முன் அவளது வெட்கக் கேட்டை வெளிப்படுத்துவேன்: என்னுடைய கையிலிருந்து அவளை விடுவிப்பவன் எவனுமில்லை.

அவளது எல்லாக் கொண்டாட்டத்தையும் விழாக்களையும் அமாவாசைகளையும் ஓய்வு நாளையும் அவளுடைய திருநாள்கள் அனைத்தையுமே ஒழித்துவிடுவேன்.

இவை என் காதலர் எனக்குக் கூலியாகக் கொடுத்தவை என்று அவள் சொல்லிக் கொண்ட அவளுடைய திராட்சைத் தோட்டங்களையும், அத்தி மரங்களையும் பாழாக்குவேன்: அவற்றைக் காடாக்கிவிடுவேன்: காட்டு விலங்குகளுக்கு அவை இரையாகும்.

பாகால்களின் விழாக்களைக் கொண்டாடிய நாள்களில் அவள் அவற்றுக்கு நறுமணப்புகை எழுப்பினாள்: வளையல்களாலும் நகைகளாலும் தன்னை அணி செய்து, தன் காதலர்பின் போய் என்னை மறந்தாள்: இவற்றுக்காக அவளை நான் தண்டிப்பேன் என்கிறார் ஆண்டவர்.

ஆதலால் நான் அவளை நயமாகக் கவர்ந்திழுப்பேன்: பாலைநிலத்துக்கு அவளைக் கூட்டிப்போவேன்: நெஞ்சுருக அவளுடன் பேசுவேன்.

அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்: ஆகோர் பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாக மாற்றுவேன்: அப்போது அவள் அங்கே தன் இளமையின் நாள்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் பாடியதுபோல் பாடுவாள்.

அந்நாளில், “என் கணவன்“ என என்னை அவள் அழைப்பாள்: “என் பாகாலே“ என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள் என்கிறார் ஆண்டவர்.

அவளுடைய நாவினின்று பாகால்களின் பெயர்களை நீக்கிவிடுவேன்: இனிமேல் அவர்களைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டாள்.

அந்நாளில், காட்டு விலங்குகளோடும், வானத்துப் பறவைகளோடும், நிலத்தில் ஊர்வனவற்றோடும் அவர்களுக்காக நான் ஓர் உடன்படிக்கை செய்வேன்: வில்லையும் வாளையும் போரையும் நாட்டினின்று அகற்றிவிடுவேன்: அச்சமின்றி அவர்கள் படுத்திருக்கச் செய்வேன்.

இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்: நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்.

மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்: ஆண்டவராம் என்னை நீயும் அறிந்துகொள்வாய்.

மேலும் அந்நாளில் நான் மறுமொழி அளிப்பேன் என்கிறார் ஆண்டவர். நான் வானத்தின் வழியாய் மறுமொழி அளிப்பேன்: அது நிலத்தின் வழியாய் மறுமொழி தரும்.

நிலம், கோதுமை, திராட்சை இரசம், எண்ணெய் வழியாய் மறுமொழி தரும். அவை இஸ்ரியேல்வழியாய் மறுமொழி தரும் என்கிறார் ஆண்டவர்.

நான் அவனை எனக்கென்று நிலத்தில் விதைப்பேன், லோ ருகாமா வுக்குக் கருணை காட்டுவேன்: லோ அம்மீ யை நோக்கி, நீங்கள் என் மக்கள் என்பேன்: அவனும் நீரே என் கடவுள் என்பான்.

அதிகாரம் 3.

ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: இஸ்ரயேல் மக்கள் வேற்று தெய்வங்கள்மேல் பற்றுக்கொண்டு, உயர்ந்த திராட்சை அடைகளை விரும்புகின்றனர். எனினும் அவர்கள்மேல் ஆண்டவர் அன்பு வைத்துள்ளார். இதற்கு அடையாளமாக நீ மறுபடியும் போய், வேறொருவனால் காதலிக்கப் பட்டவளும் விபசாரியுமான ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்.

அவ்வாறே நான் அவளைப் பதினைந்து வெள்ளிக்காசுகளையும் ஒன்றரை கலம் அளவுள்ள வாற் கோதுமையும் கொடுத்து எனக்கென வாங்கிக் கொண்டேன்.

பின்பு நான் அவளை நோக்கி, நீ வேசித்தொழில் புரியாமலும் வேறொருவனுக்கு உடைமை யாகாமலும், நெடுநாள் எனக்கே உரியவளாய் வாழவேண்டும். நானும் அவ்வண்ணமே உனக்காக வாழ்வேன் என்றேன்.

இஸ்ரயேல் மக்கள் பல நாள்கள் அரசனின்றி, தலைவனின்றி, பலியின்றி, பலி பீடமின்றி, குருத்துவ உடையின்றி, குல தெய்வச் சிலைகளுமின்றி இருப்பார்கள்.

அதற்குப் பிறகு, இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும் தங்கள் அரசனாகிய தாவீதையும் தேடி வருவார்கள்: இறுதி நாள்களில் ஆண்டவரையும் அவர்தம் நன்மைகளையும் நாடி நடுக்கத்தோடு வருவார்கள்.

அதிகாரம் 4.

இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: நாட்டில் குடியிருப்பவர்களோடு ஆண்டவருக்கு வழக்கு ஒன்று உண்டு: நாட்டில் உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை: கடவுளை அறியும் அறிவும் இல்லை.

பொய்யாணை, பொய்யுரை, கொலை, களவு, விபசாரம் ஆகியன பெருகிவிட்டன. எல்லாக் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிகின்றனர்: இரத்தப் பழிமேல் இரத்தப்பழி குவிகின்றது.

ஆதலால் நாடு புலம்புகின்றது: அதில் குடியிருப்பன எல்லாம் நலிந்து போகின்றன: காட்டு விலங்குகளும், வானத்துப் பறவைகளும், கடல்வாழ் மீன்களும்கூட அழிந்து போகின்றன.

ஆயினும் எவனும் வழக்காட வேண்டாம்: எவனும் குற்றம் சாட்ட வேண்டாம்: உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்.

பகலிலே நீ இடறி விழுவாய்: இரவிலே இறைவாக்கினனும் உன்னோடு இடறி விழுவான்: உன் தாயை நான் அழித்துவிடுவேன்.

அறிவின்மையால் என் மக்கள் அழிகின்றார்கள்: நீ அறிவைப் புறக்கணித்தாய்: நானும் நீ எனக்குக் குருவாய் இராதபடி உன்னை புறக்கணிப்பேன். நீ உன் கடவுளின் திருச்சட்டத்தை மறந்துவிட்டாய்: நானும் உன் மக்களை மறந்து விடுவேன்.

எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ அவ்வளவுக்கு அவர்கள் எனக்கு எதிராயப் பாவம் செய்தார்கள்: அவர்கள் மேன்மையை இகழ்ச்சியாக மாற்றுவேன்.

என் மக்களின் பாவங்களால் இவர்கள் வயிறு வளர்க்கின்றார்கள்: அவர்கள் தீச்செயல் செய்யும்படி இவர்கள் ஏங்குகின்றார்கள்.

குருவுக்கு நேரிடுவது மக்களுக்கும் நேரிடும்: அவர்களுடைய தீய வழிகளுக்காகத் தண்டனை வழங்குவேன்: அவர்களுடைய செயல்களுக்கேற்ற பதிலை அளிப்பேன்.

அவர்கள் உண்டாலும் நிறைவடைய மாட்டார்கள்: வேசித்தனம் செய்தாலும் பலுகமாட்டார்கள்: ஏனெனில் வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக ஆண்டவரைக் கைவிட்டார்கள்.

மதுவும், திராட்சை இரசமும் அறிவைக் கெடுக்கும்.

என் மக்கள் மரக்கட்டையிடம் குறி கேட்கின்றனர்: அவர்களது கோல் மறைமொழிகள் கூறுகின்றது! விபசாரப் புத்தி அவர்களை நெறிதவறச் செய்தது: விபசாரம் செய்வதற்காக அவர்கள் தங்கள் கடவுளைவிட்டு அகன்றனர்.

மலையுச்சிகளில் அவர்கள் பலியிடுகின்றார்கள்: குன்றுகள் மேலும், நல்ல நிழல் தரும் கருவாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் நறுமணப் புகை எழுப்புகின்றார்கள்: ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கின்றார்கள்: உங்கள் மருமக்கள் விபசாரம் புரிகின்றார்கள்.

உங்கள் புதல்வியர் விபசாரம் செய்தாலும், உங்கள் மருமக்கள் விபசாரம் புரிந்தாலும், நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன்: ஏனெனில், ஆண்கள் விலைமாதரோடு போகின்றார்கள்: தேவதாசிகளோடு சேர்ந்து பலி செலுத்துகின்றார்கள்: அறிவற்ற அம்மக்கள் அழிந்து போவார்கள்.

இஸ்ரயேல், நீ வேசித்தனம் புரிந்தாலும், யூதா நாடாகிலும் குற்றமற்றதாய் இருக்கட்டும்: கில்காலுக்குள் நுழையாதீர்கள்: பெத்தாவேனுக்குப் போகாதீர்கள்: ஆண்டவர்மேல் ஆணை என்று ஆணையிடாதீர்கள்.

கட்டுக்கடங்காத இளம் பசுவைப் போல இஸ்ரயேல் மக்கள் பிடிவாதமாயிருக்கின்றார்கள்: ஆண்டவர் அவர்களைப் பரந்த புல்வெளியில் ஆட்டுக் குட்டியைப் போல் மேய்க்க முடியுமா?

எப்ராயிம் சிலைகளோடு சேர்ந்து கொண்டான். அவனை விட்டுவிடு.

குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள் வேசித்தனத்தில் ஆழ்ந்திருக்கின்றார்கள்: தங்களது மேன்மையைக் காட்டிலும் இகழ்ச்சியையே அவர்கள் மிகுதியாய் விரும்புகின்றார்கள்.

காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் பற்றிக் கொள்ளும்: அவர்கள் தங்கள் பலிகளால் நாணமடைவார்கள்.

அதிகாரம் 5.

குருக்களே, இதைக் கேளுங்கள்: இஸ்ரயேல் குடும்பத்தாரே, கவனியுங்கள்: அரசனின் வீட்டாரே, செவி கொடுங்கள்: உங்களுக்கு எதிராகவே தீர்ப்புத் தரப்படுகின்றது: நீங்கள் மிஸ்பாவில் ஒரு கண்ணியாய் இருக்கின்றீர்கள்: தாபோர்மீது விரிக்கப்பட்ட வலையுமாயிருக்கின்றீர்கள்.

வஞ்சகர்கள் கொலைத் தொழிலில் ஆழ்ந்துள்ளார்கள்: அவர்கள் அனைவரையும் தண்டிப்பேன்.

எப்ராயிமை நான் அறிந்திருக்கிறேன்: இஸ்ரயேல் எனக்கு மறைவானதன்று: எப்ராயிமே! நீ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்: இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கின்றது:

அவர்களுடைய கடவுளிடம் திரும்பிவர அவர்களின் செயல்கள் விடுவதில்லை: ஏனெனில், விபசாரப் புத்தி அவர்களை ஆட்கொண்டுள்ளது: ஆண்டவரைப்பற்றிய அறிவு அவர்களுக்கில்லை.

இஸ்ரயேலின் இறுமாப்பு அவனுக்கு எதிராகச் சான்று கூறும்: இஸ்ரயேலும் எப்ராயிமும் தங்கள் தீச்செயலால் இடறிவிடுவார்கள்: யூதாவும் அவர்களோடு இடறிவிழுவான்.

தங்கள் ஆடு மாடுகளோடு அவர்கள் ஆண்டவரைத் தேடிப் போவார்கள்: ஆனால் அவரைக் காணமாட்டார்கள்: அவர் அவர்களை விட்டு விலகி விட்டார்.

ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்: ஏனெனில் அன்னியப் பிள்ளைகளைப் பெற்றார்கள்: இப்பொழுதே அவர்களையும் அவர்கள் நிலங்களையும் அமாவாசை விழுங்கப் போகிறது.

கிபயாவில் கொம்பு ஊதுங்கள்: இராமாவில் எக்காளம் முழக்குங்கள்: பெத்தாவேனில் போர்க்குரல் எழுப்புங்கள்: பென்யமின்! உன்னைப் பின் தொடருகின்றார்கள்.

தண்டனை வழங்கப்படும் நாளில் எப்ராயிம் பாழாவான்: இஸ்ரயேலின் குலங்களுக்கு உறுதியாய் நேரிடப் போவதையே அறிவிக்கின் றேன்.

யூதாவின் தலைவர்கள் எல்லைக்கல்லைத் தள்ளி வைக்கிறவர்களுக்கு ஒப்பாவார்கள்: அவர்கள் மேல் என் கோபத்தை வெள்ளப்பெருக்கைப்போல் கொட்டித் தீர்ப்பேன்.

எப்ராயிம் ஒடுக்கப்படுகின்றான்: தண்டனைத் தீர்ப்பால் நொறுக்கப்படுகின்றான்: அவன் வீணான கட்டளைகளைப் பின்பற்றுவதில் கருத்தாய் இருந்தான்.

ஆகையால் எப்ராயிமுக்கு நான் விட்டில்போல் இருக்கின்றேன்: யூதாவின் வீட்டாருக்குப் புற்றுநோய்போல் இருக்கின்றேன்.

எப்ராயிம் தன் பிணியைக் கண்டுகொண்டான்: யூதா தன் காயத்தை உணர்ந்து கொண்டான்: எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி, யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான். ஆனால், உங்களைக் குணமாக்கவோ, உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது.

ஏனெனில், நான் எப்ராயிமுக்குச் சிங்கத்தைப் போலவும், யூதாவின் வீட்டாருக்குச் சிங்கக்குட்டியைப்போலவும் இருப்பேன்: நானே அவர்களைக் கவ்விப் பிடிப்பேன்: பக்கிக்கொண்டு போவேன்: விடுவிப்பவன் எவனுமே இரான்.

தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று, என்னைத் தேடி வரும்வரை, நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன். தங்கள் துன்பத்திலே அவர்கள் என்னைத் தேடுவார்கள்.

அதிகாரம் 6.

வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்: நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்: நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார்.

இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்: மூன்றாம் நாளில் நம்மை எழுப்பி விடுவார்: அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்.

நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப்பற்றி அறிய முனைந்திடுவோமாக: அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது: மழைபோலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரிபோலவும் அவர் நம்மிடம் வருவார் என்கிறார்கள்.

எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே!

அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்: என் வாய்மொழிகளில் அவர்களைக் கொன்று விட்டேன்: எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது.

உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்: எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.

அவர்களோ ஆதாம் என்ற இடத்தில் உடன்படிக்கையை மீறினார்கள்: அங்கே எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்.

கிலயாது கொடியோர் நிறைந்த நகர்: அதில் இரத்தக்கறை படிந்துள்ளது.

கொள்ளையர் கூட்டம் வழிப்போக்கருக்காகக் காத்திருப்பது போல் குருக்களின் கூட்டம் செக்கேமுக்குப் போகிற வழியில் காத்திருந்து கொலை செய்கின்றது: கொடுமையன்றோ அவர்கள் செய்வது!

இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் மிகக் கொடிய செயலொன்றை நான் கண்டேன்: அங் கே எப்ராயிமின் வேசித்தனம் இருந்தது, இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருந்தது.

யூதாவே! உனக்கும் அறுவடைக்காலம் ஒன்று குறிக்கப்பட்டிருக்கின்றது. நான் என் மக்களை நன்னிலைக்குத் திரும்பக் கொணரும் போது,

அதிகாரம் 7.

நான் இஸ்ரயேலைக் குணமாக்கும் போது, எப்ராயிமின் தீச்செயல் வெளிப்படும்: சமாரியாவின் பொல்லாப்புகள் புலப்படும்: அவர்கள் வஞ்சகம் செய்கின்றார்கள்: திருடன் உள்ளே நுழைகின்றான்: கொள்ளையர் கூட்டம் வெளியே சூறையாடுகின்றது.

அவர்களுடைய தீவினைகளையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கின்றேன் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. இப்பொழுது அவர்கள் செயல்களே அவர்களை வளைத்துக் கொண்டன. அவை என் கண்முன் இருக்கின்றன.

தங்கள் தீமையினால் அரசனையும், தங்கள் பொய்களினால் தலைவர்களையும் அவர்கள் மகிழ்விக்கின்றார்கள்.

அவர்கள் அனைவரும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்: எரியும் அடுப்புக்கு ஒப்பானவர்கள்: அப்பம் சுடுபவன் மாவைப் பிசைந்தது முதல் புளிப்பேறும்வரையில் கிளறாத நெருப்புக்கு ஒப்பானவர்கள்.

நம் அரசனின் திருநாள்! என்று சொல்லித் தலைவர்கள் திராட்சை இரசத்தால் போதையேறிக் கிடந்தார்கள்: அரசனும் ஏளனக்காரரோடு கூடிக் குலாவினான்.

அவர்களின் இதயம் சதித்திட்டத்தால் அடுப்பைப்போல் எரிகின்றது: அவர்களின் கோபத்தீ இரவெல்லாம் கனன்று கொண்டிருக்கும்: அது காலையில் நெருப்பைப் போலக் கொழுந்துவிட்டு எரியும்.

அவர்கள் எல்லாரும் அடுப்பைப் போல் அனலாய் இருக்கின்றார்கள்: தங்களின் ஆட்சியாளர்களை விழுங்குகின்றார்கள்: அவர்களின் அரசர்கள் அனைவரும் வீழ்ச்சியுற்றார்கள்: அவர்களுள் எவனுமே என்னை நோக்கிக் கூப்பிடவில்லை.

எப்ராயிம் வேற்றினத்தாருடன் கலந்து வாழ்கின்றான்: எப்ராயிம் ஒருபுறம் வெந்த அப்பமாயிருக்கின்றான்:

அன்னியர் அவன் ஆற்றலை உறிஞ்சிவிட்டனர்: அதை அவன் அறியவில்லை. அவனுக்கு நரைவிழுந்துவிட்டது: அதையும் அவன் அறியவில்லை.

இஸ்ரயேலின் இறுமாப்பு அவனுக்கு எதிராகச் சான்று சொல்கின்றது: ஆயினும், அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பவில்லை: இவை அனைத்திற்குப் பிறகும் அவரைத் தேடவில்லை.

எப்ராயிம் அறிவில்லாப் பேதைப் புறாவைப்போல் இருக்கின்றான்: அவர்கள் எகிப்தைத் துணைக்கு அழைக்கின்றார்கள்: அசீரியாவிடம் புகலிடம் தேடுகின்றார்கள்.

அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் விரித்திடுவேன்: வானத்துப் பறவைகளைப்போல அவர்களைக் கீழே விழச் செய்வேன்: அவர்கள் தீச்செயல்களுக்காக அவர்களைத் தண்டிப்பேன்.

அவர்களுக்கு ஜயோ கேடு! என்னை விட்டு விலகி, அலைந்து திரிகின்றார்கள்: அவர்களுக்கு அழிவுதான் காத்திருக்கின்றது, அவர்கள் எனக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்: நான் அவர்களை மீட்டு வந்தேன்: ஆனால் அவர்கள் எனக்கு எதிராகப் பொய் சொல்கின்றார்கள்.

தங்கள் உள்ளத்திலிருந்து என்னை நோக்கி அவர்கள் கூக்குரலிடவில்லை, அதற்கு மாறாக, தங்கள் படுக்கைகளில் கிடந்து கதறுகின்றார்கள்: கோதுமைக்காகவும் திராட்சை இரசத்திற்காகவும், தங்களையே பிய்த்துப் பிடுங்கிப் கொள்கின்றார்கள்:

நானே அவர்களைப் பயிற்றுவித்து, அவர்கள் புயங்களை வலிமையுறச் செய்திருந்தும் எனக்கு எதிராகத் தீங்கு நினைக்கின்றார்கள்.

பாகாலை நோக்கியே திரும்புகின்றார்கள்: நம்பமுடியாத வில்லுக்கு ஒப்பாய் இருக்கின்றார்கள்: அவர்களுடைய தலைவர்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு வாளால் மடிவார்கள்: இதுவே எகிப்தை முன்னிட்டு அவர்களுக்கு ஏற்படும் நிந்தையாகும்.

அதிகாரம் 8.

எக்காளத்தை ஊது! கழுகு ஒன்று ஆண்டவருடைய வீட்டின்மேல் பாய்ந்து வருகின்றது: அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்: என் திருச்சட்டத்தை மீறி நடந்தார்கள்.

இஸ்ரயேலர் என்னை நோக்கிக் கூக்குரலிட்டு, எங்கள் கடவுளே, நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்கின்றார்கள்.

இஸ்ரயேலரோ நலமானதை வெறுத்து விட்டார்கள்: பகைவன் அவர்களைத் துரத்துவான்.

அவர்கள் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்: அது என்னாலே அன்று: அவர்களே தலைவர்களை நியமித்துக் கொண்டார்கள்: அதைப்பற்றியும் நான் ஒன்றுமறியேன். தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் தங்களுக்கெனச் சிலைகளைச் செய்தார்கள்: தாங்கள் அழிந்துபோகவே அவற்றைச் செய்தார்கள்.

சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்: என் கோபத்தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது. இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் பய்மையடையாது இருப்பார்கள்?

அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ! அது கடவுளல்லவே! கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்! சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும்.

அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்: கடும்புயலை அறுப்பார்கள். வளரும் பயிர் முற்றுவதில்லை: கோதுமை நன்றாக விளைவதில்லை: அப்படியே விளைந்தாலும் அன்னியரே அதை விழுங்குவர்.

இஸ்ரயேல் விழுங்கப்பட்டாயிற்று: இப்பொழுது அவர்கள் வேற்றினத்தார் நடுவில் உதவாத பாத்திரம்போல் இருக்கின்றார்கள்.

அவர்கள் தனிமையில் திரிகிற காட்டுக் கழுதைபோல் அசீரியாவைத் தேடிப் போனார்கள். எப்ராயிம் மக்கள் தங்கள் காதலர்க்குப் பொருள் கொடுத்து வருகிறார்கள்.

கைக்கூலி கொடுத்து வேற்றினத்தாரை அவர்கள் துணைக்கு அமர்த்திக் கொண்டாலும், இப்பொழுதே நான் அவர்களையும் சேர்த்துச் சிதறடிப்பேன். தலைவர்கள் ஏற்படுத்திய மன்னன் சுமத்தும் சுமையில் சிறிது காலம் துயருறுவார்கள்.

எப்ராயிம் பாவம் செய்வதற்கென் றே பலிபீடங்கள் பல செய்துகொண்டான்: அப்பீடங்களே அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின.

ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும், அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள்.

பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்: பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்: அவற்றின்மேல் ஆண்டவர் விருப்பங்கொள்ளவில்லை: அதற்கு மாறாக, அவர்கள் தீச்செயல்களை நினைவில் கொள்கின்றார்: அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்: அவர்களோ எகிப்து நாட்டிற்குத் திரும்புவார்கள்.

இஸ்ரயேல் தன்னைப் படைத்தவரை மறந்துவிட்டு அரண்மனைகளைக் கட்டினான்: யூதாவோ அரண்சூழ் நகர்கள் பலவற்றை எழுப்பினான்: நானோ அவனுடைய நகர்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்: அவனுடைய அரண்களை அது பொசுக்கிவிடும்.

அதிகாரம் 9.

இஸ்ரயேலே! நீ களிப்புறாதே: மற்ற மக்களைப்போல் நீ அக்களிக்காதே. உன் கடவுளைக் கைவிட்டு நீ வேசித் தொழில் புரிந்தாய்: கதிரடிக்கும் களமெல்லாம் நீ விலைமகளின் கூலியை நாடுகின்றாய்.

கதிரடிக்கும் களமும், திராட்சைக் கனி பிழியும் ஆலையும் அவர்களுக்கு உணவு அளிக்கமாட்டா: புதிய திராட்சை இரசமும் இல்லாமற் போகும்.

ஆண்டவரின் நாட்டில் அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்: எப்ராயிம் எகிப்துக்குத் திரும்பிப் போவான்: அவர்கள் அசீரியாவில் தீட்டுப்பட்டதை உண்பார்கள்.

திராட்சை இரசத்தை ஆண்டவருக்கு நீர்மப் படையலாய் வார்க்க மாட்டார்கள்: அவர்களின் பலிகள் அவருக்கு உகந்தவை ஆகமாட்டா: அவை அவர்களுக்கு இழவு வீட்டு உணவு போலிருக்கும்: அவற்றை உண்பவர் யாவரும் தீட்டுப்படுவர்: ஏனெனில், அவை அவர்களின் பசி தீர்க்கும் உணவே ஆகும். ஆண்டவரின் கோவிலில் அவை படைக்கப்படுவதில்லை.

விழா நாள்களில் அவர்கள் என்ன செய்கின்றார்கள்? ஆண்டவரின் திருநாளன்று அவர்கள் செய்வதென்ன?

அவர்கள் அழிவுக்குத் தப்பி ஓடுவார்கள்: எகிப்து அவர்களைச் சேர்த்துக் கொள்ளும்: மெம்பிசில் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். அவர்கள் விரும்பி வைத்திருந்த வெள்ளியால் செய்த அரிய பொருள்கள் காஞ்சொறிச் செடிகளுக்கு உரிமைச் சொத்தாகும். அவர்களின் கூடாரங்களில் முட்புதர்கள் வளரும்.

தண்டனைத் தீர்ப்புப் பெறும் நாள்கள் வந்துவிட்டன: பதிலடி கிடைக்கும் நாள்கள் வந்துவிட்டன: இதை இஸ்ரயேலர் அறிந்துகொள்வர். உன் தீச்செயலின் மிகுதியாலும், பெரும் பகையுணர்ச்சியாலும் இறைவாக்கினன் மூடனாய் இருக்கிறான்: இறை ஆவி பெற்றவன் வெறிக்கொண்டு உளறுகின்றான், என்கின்றாய்.

என் கடவுளின் மக்களாகிய எப்ராயிமுக்கு இறைவாக்கினன் காவலாளியாய் இருக்கின்றான்: ஆயினும் வேடன் ஒருவனின் வலை அவனை எப்பக்கமும் சூழ்ந்துள்ளது: அவனுடைய கடவுளின் கோவிலிலும் பகைமை நிலவுகின்றது.

கிபயாவின் நாள்களில் நடந்ததுபோலவே, அவர்கள் கொடுமை செய்வதில் ஆழ்ந்திருக்கின்றார்கள்: அவர்களுடைய தீச்செயலை ஆண்டவர் நினைவில் கொள்வார்: அவர்களுடைய பாவங்களுக்குத் தண்டனை கொடுப்பார்.

பாலைநிலத்தில் திராட்சைக் குலைகளைக் கண்டது போல் நான் இஸ்ரயேலைக் கண்டுபிடித்தேன். பருவகாலத் தொடக்கத்தின் முதல் அத்திப் பழங்களைப் போல் உங்கள் தந்தையரைக் கண்டு பிடித்தேன். அவர்களோ பாகால் பெயோருக்கு வந்து, மானக்கேடானவற்றுக்குத் தங்களையே நேர்ந்து கொண்டார்கள்.

எப்ராயிமின் மேன்மை பறவைபோல் பறந்தோடிவிடும்: அவர்களுக்குள் பிறப்போ, கருத்தாங்குவதோ, கருத்தரிப்பதோ எதுவுமே இராது.

அவர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலும், ஒருவனும் எஞ்சியிராமல் அப்பிள்ளைகளை இழக்கச் செய்வேன்: நான் அவர்களைவிட்டு அகன்றுவிட்டால், அவர்களுக்கு ஜயோ கேடு!

நான் பார்த்ததற்கிணங்க, எப்ராயிம் தம் மக்களைக் கொள்ளைப் பொருளாய் ஆக்கியிருக்கின்றான்: எப்ராயிம் தம் மக்களையெல்லாம் கொலைக் களத்திற்குக் கூட்டிச் செல்வான்.

ஆண்டவரே, அவர்களுக்குக் கொடுத்தருளும், எதைக் கொடுப்பீர்? கருச்சிதைவையும் கருப்பையையும் பால் சுரவா முலைகளையும் கொடுத்தருளும்.

அவர்களின் கொடுஞ்செயல்கள் யாவும் கில்காலில் உருவாயின: அங்கேதான் நான் அவர்களைப் பகைக்கத் தொடங்கினேன்: அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு என் வீட்டினின்றும் நான் அவர்களை விரட்டியடிப்பேன்: இனி அவர்கள்மேல் அன்புகொள்ள மாட்டேன், அவர்களின் தலைவர்கள் அனைவரும் கலகக்காரராய் இருக்கிறார்கள்.

எப்ராயிம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள்: அவர்களுடைய வேர் உலர்ந்து போயிற்று: இனிமேல் அவர்கள் கனி கொடுக்கமாட்டார்கள்: அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், நான் அவர்களுடைய அன்புக் குழந்தைகளைக் கொன்றுவிடுவேன்.

என் கடவுள் அவர்களைத் தள்ளிவிடுவார்: ஏனெனில், அவர்கள் அவருக்குச் செவி கொடுக்கவில்லை: வேற்றினத்தார் நடுவில் அவர்கள் நாடோடிகளாய்த் திரிவார்கள்.

அதிகாரம் 10

இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக்கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது: எவ்வளவு மிகுதியாகக் கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாய்ப் பலிபீடங்களை அமைத்தது: எத்தகைய சிறப்புடன் நாடு செழிப்புற்றதோ, அதற்கு இணையாய்ச் சிலைத் பண்கள் சிறப்புப் பெற்றன.

இருமனம் கொண்ட மக்களாகிய அவர்கள், தங்கள் குற்றத்திற்காகத் தண்டனை பெறுவார்கள்: ஆண்டவர் அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்திடுவார்: அவர்களுடைய சிலைத் பண்களை நொறுக்கிடுவார்.

அப்போது அவர்கள், நமக்கு அரசன் இல்லை: ஆண்டவருக்கு நாம் அஞ்சி நடக்கவில்லை: அரசன் இருந்தாலும், நமக்கு என்ன செய்வான்? என்பார்கள்.

வீண் வார்த்தைகளையே அவர்கள் பேசுகின்றார்கள். பொய்யாணை இட்டு உடன்படிக்கை செய்கின்றார்கள்: ஆதலால், வயலின் உழவுச் சால்களில் முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத் தண்டனைத் தீர்ப்பு முளைக்கும்.

சமாரியாவில் குடியிருப்போர் பெத்தாவேனிலுள்ள கன்றுக் குட்டியை முன்னிட்டு நடுங்குவர்: அதன் மேன்மை இப்பொழுது மறைந்துபோயிற்று: அதைக் குறித்து அதன் மக்கள் துயர் அடைவார்கள்: அதன் குருக்களும் அதற்காகப் புலம்புவார்கள்.

அதுவே அசீரியாவிலுள்ள யாரேபு மன்னனுக்கு அன்பளிப்பாகக் கொண்டுபோகப்படும். எப்ராயிம் வெட்கமடைவான், இஸ்ரயேல் தன் ஆலோசனையால் நாணமடைவான்.

சமாரியாவின் அரசன் நீர்மேல் குமிழிபோல் அழிந்துபோவான்.

இஸ்ரயேலின் பாவமாகிய சிலை வழிபாட்டின் உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்: முள்களும், முட்புதர்களும் அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்: அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, எங்களை மூடிக்கொள்ளுங்கள் குன்றுகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்“ என்று சொல்வார்கள்.

இஸ்ரயேலர் கிபயாவில் தங்கியிருந்த நாளிலிருந்தே பாவம் செய்து வந்தார்கள்: கிபயாவில் பொல்லார்மேல் எழுந்த கடும் போர் அவர்கள்மேலும் வராதா?

நான் வந்து அவர்களைத் தண்டிப்பேன்: அவர்கள் செய்த இரட்டைத் தீச் செயல்களுக்குத் தண்டனை வழங்கும் பொருட்டு அவர்களுக்கு எதிராக வேற்றினத்தார் ஒன்றுகூடுவர்.

எப்ராயிம், நன்றாகப் பழக்கப்பட்டதும், புணையடிக்க விரும்புவதுமான பசுவாய் இருக்கின்றான்: நானோ அதன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்: எப்ராயிமை ஏரில் பூட்டுவேன்: யூதா உழுவான்: யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.

நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்: அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்: உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்: ஏனெனில் ஆண்டவர் வந்து நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கிவந்துவிட்டது.

நீங்கள் கொடுமையை உழுதீர்கள்: தீவினையை அறுவடை செய்தீர்கள்: பொய்ம்மைக் கனியைத் தின்றீர்கள்: உங்கள் தேர்ப்படைகளின் மேலும், வீரர்களின் எண்ணிக்கையின் மேலும் நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள்.

ஆதலால் உங்கள் மக்களிடையே போர்க் குரல் எழும்பும்: உங்கள் அரண்கள் யாவும் அழிக்கப்படும்: போரின் நாளில் பெத்தர்பேலைச் சல்மான் அழித்தபோது அன்னையர் தம் பிள்ளைகளோடு மோதியடிக்கப்பட்டது போல அது இருக்கும்.

பெத்தேலே! உன் கொடிய தீவினைக்காக உனக்கும் இவ்வாறே செய்யப்படும். பொழுது விடியும்போது இஸ்ரயேலின் அரசன் அழிந்து போவது உறுதி.

அதிகாரம் 11.

இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்: எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்.

எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள்: பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் பபம் காட்டினார்கள்.

ஆனால் எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே: அவர்களைக் கையிலேந்தியதும் நானே: ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள்.

பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்: அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்: அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்.

எகிப்து நாட்டுக்கே அவர்கள் திரும்பிப் போவார்கள்: அசீரியா அவர்களை அரசாளும்: ஏனெனில் என்னிடம் திரும்பி வர மறுத்துவிட்டார்கள்.

அவர்களுடைய தீய எண்ணங்களை முன்னிட்டு அவர்களின் நகர்களுக்கு எதிராக வாள் பாய்ந்தெழுந்து, அவர்கள் கதவுகளின் தாழ்ப்பாள்களை நொறுக்கிவிட்டு, அவர்களை விழுங்கிவிடும்.

என் மக்கள் என்னை விட்டு விலகிப் போவதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள், அவர்கள்மேல் நுகத்தடி பூட்டப்படுவதால் கூக்குரலிடுவார்கள்: அந்த நுகத்தை அகற்றுவார் எவருமில்லை.

எப்ராயிமே! நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரயேலே! உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்? உன்னை எப்படி அதிமாவைப் போலாக்குவேன்? செபோயிமுக்குச் செய்ததுபோல் உனக்கும் செய்வேனோ? என் உள்ளம் அதை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது.

என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்: எப்ராயிமை அழிக்கத் திரும்பிவரமாட்டேன்: நான் இறைவன், வெறும் மனிதனல்ல: நானே உங்கள் நடுவிலிருக்கும் பயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.

ஆண்டவராம் என் பின்னே அவர்கள் போவார்கள்: நானும் சிங்கத்தைப் போலக் கர்ச்சனை செய்வேன்: ஆம், நான் கர்ச்சனை செய்வேன். அவர்களின் புதல்வர் மேற்கிலிருந்து நடுங்கிக்கொண்டு வருவர்.

எகிப்தினின்று பறவைகள்போலவும், அசீரியா நாட்டினின்று புறாக்களைப் போலவும் நடுங்கிக் கொண்டு வருவர்: அவர்களைத் தம் வீடுகளுக் கே திரும்பச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.

எப்ராயிம் மக்களின் பொய்க்கூற்று என்னைச் சூழ்ந்துள்ளது: இஸ்ரயேல் குடும்பத்தாரின் வஞ்சகம் என்னை வளைத்துக் கொண்டுள்ளது. ஆனால், யூதா இறைவனோடு இன்னும் நடக்கிறான்: பயவராம் ஆண்டவருக்கு உண்மை உள்ளவனாய் இருக்கிறான்.

அதிகாரம் 12.

எப்ராயிம் காற்றை உண்டு, நாள் முழுவதும் கீழைக் காற்றைப் பிடிக்க ஓடுகிறான்: பொய்யும் வன்செயலும் அவனிடம் பெருகி விட்டன: அசீரியாவோடு உடன்படிக்கை செய்கின்றான்: எகிப்துக்கு எண்ணெய் கொடுத்தனுப்புகின்றான்.

ஆண்டவருக்கு யூதாவோடு வழக்கு ஒன்று உண்டு: யாக்கோபை அவன் தீய வழிகளுக்கேற்பத் தண்டிப்பார்: அவன் செயல்களுக்குத் தக்கபடி கைம்மாறு தருவார்.

யாக்கோபு தன் தாயின் வயிற்றிலேயே தமையனை முந்திக் கொண்டான்: பெரியவனாக வளர்ந்த பின்போ கடவுளோடு போராடினான்.

வான பதரோடு போராடி வெற்றி கொண்டான்: கண்ணீர் சிந்தி, அவர் அருளை வேண்டிக்கொண்டான்: பெத்தேல் என்னுமிடத்தில் அவரை சந்தித்தான்: அவரும் அங்கே அவனுடன் பேசினார்.

அந்த ஆண்டவரே படைகளின் கடவுள்: ஆண்டவர் என்பதே அவரது பெயராம்.

ஆதலால், இஸ்ரயேலே! உன் கடவுளிடம் திரும்பி வா: இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடி: எப்போதும் உன் கடவுளை நம்பிக் காத்திரு.

ஆனால், இஸ்ரயேல் கள்ளத்தராசைக் கையில் வைத்திருக்கும் கானானியன் போன்றவன்: அவன் கொடுஞ்செயல் புரியவே விரும்புகின்றான்.

எப்ராயிம், நான் பணக்காரனாகிவிட்டேன், எனக்கென்று செல்வம் சேர்த்துக்கொண்டேன் என்கிறான். ஆனால், அவனது செல்வம் எல்லாம் சேர்ந்தும்கூட அவனது தீச்செயலின் பழியை அகற்றாது!

எகிப்து நாட்டினின்று உன்னை அழைத்து வந்த நாள்முதல் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: விழா நாள்களில்போல மறுபடியும் உன்னைக் கூடாரங்களில் வாழச் செய்வேன்.

இறைவாக்கினர்களிடம் பேசினேன்: நானே காட்சிகளின் எண்ணிக்கையைப் பெருக்கினேன்: இறைவாக்கினர் வாயிலாக உவமைகளில் பேசினேன்.

கிலயாதில் தீச்செயல் மலிந்திருப்பதால் அவர்கள் திண்ணமாய் அழிவார்கள்: கில்காலில் காளைகளைப் பலியிடுவதால் உழவுசால் அருகே இருக்கும் கற்குவியல்போல் அவர்களுடைய பலிபீடங்கள் ஆகிவிடும்.

யாக்கோபு ஆராம் நாட்டிற்குத் தப்பி ஓடினான்: இஸ்ரயேல் ஒரு பெண்ணுக்காக ஊழியம் செய்தான்: அப்பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.

இறைவாக்கினர் ஒருவரைக் கொண்டு ஆண்டவர் இஸ்ரயேலை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். இறைவாக்கினர் ஒருவரால் அவன் பாதுகாக்கப்பட்டான்.

எப்ராயிம் ஆண்டவருக்கு மிகவும் சினமூட்டினான்: அவனுடைய தலைவர் அவனுடைய இரத்தப் பழியை அவன் மேலேயே சுமத்துவார்: அவனுடைய நிந்தையை ஆண்டவர் அவன் மேலேயே திருப்புவார்.

அதிகாரம் 13.

எப்ராயிம் பேசியபோது ஏனையோர் நடுங்கினர்: இஸ்ரயேலில் அவன்மிக உயர்ந்திருந்தான்: ஆனால், பாகாலை வழிபட்ட குற்றத்திற்காய் மடிந்தான்.

இப்போதும், அவர்கள் பாவத்தின்மேல் பாவம் செய்கிறார்கள்: சிலைகளைத் தங்களுக்கென வார்த்துக் கொள்கிறார்கள்: அவர்களுடைய வெள்ளியில் செய்யப்பட்ட சிலைகள் அவை: அவை யாவும் தட்டானின் கைவேலைகளே: இவற்றுக்குப் பலியிடுங்கள் என்கிறார்கள் அவர்கள்: மனிதர் கன்றுக்குட்டிகளை முத்தமிடுகின்றார்கள்.

ஆதலால் அவர்கள் காலையில் காணும் மேகம்போலும், விரைவில் உலர்ந்து போகும் பனித்துளி போலும், சுழற்காற்றில் சிக்கிய களத்துத் துரும்பு போலும் பலகணி வழியாய் வெளிப்பட்ட புகைப்போலும் ஆவார்கள்.

எகிப்து நாட்டினின்று உன்னை விடுவித்த நாள் முதல் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: என்னைத் தவிர வேறு கடவுளை நீ அறியாய்: என்னையன்றி வேறு மீட்பரும் இல்லை.

வறண்ட நிலமாகிய பாலைவெளியில் உன்னை அறிந்து ஆதரித்தவர் நானே:

வளமான மேய்ச்சல் கிடைத்தபடியால் அவர்கள் மனநிறைவுற்றார்கள்: மன நிறைவடைந்ததும் செருக்குற்று என்னை மறந்து போனார்கள்.

ஆதலால் நான் அவர்களுக்கு ஒரு சிங்கம் போலிருப்பேன்: வேங்கைப்போலப் பாயுமாறு வழியோரத்தில் மறைந்திருப்பேன்.

குட்டியைப் பறிகொடுத்த பெண் கரடிபோல் அவர்கள்மேல் பாய்ந்து அவர்கள் நெஞ்சைக் கிழிப்பேன்: சிங்கத்தைப் போல் அங்கேயே அவர்களைத் தின்றொழிப்பேன்: காட்டுவிலங்கு அவர்களைக் கிழித்தெறியும்.

இஸ்ரயேலே, உன்னை நான் அழிக்கப் போகின்றேன்: உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்?

எனக்கு அரசன் வேண்டும், தலைவர்கள் வேண்டும் என்று என்னிடம் கேட்டாய். உன்னை மீட்கும் அரசன் எங்கே? உன் நகர் அனைத்திலும் உள்ள தலைவர்கள் எங்கே?

வேண்டா வெறுப்போடு உனக்கு நான் ஓர் அரசனைத் தந்தேன்: என் சினத்தில் நான் அவனை அகற்றிவிட்டேன்.

எப்ராயிமின் தீச்செயல் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது: அவனுடைய பாவம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

அவனுக்கான பேறுகால வேதனை வந்தாயிற்று: ஆனால், அவன் ஓர் அறிவற்ற பிள்ளை: பிறக்கும் நேரம் வந்து விட்டது: ஆனால், கருப்பையை விட்டு வெளியேற மறுக்கிறான்.

பாதாளத்தின் பிடியினின்று அவர்களை விடுவிப்பேனோ? சாவிலிருந்து அவர்களை மீட்பேனோ? சாவே! உன் கொள்ளை நோய்கள் எங்கே? பாதாளமே! உன் அழிவு வேலை எங்கே? தற்போது இரக்கம் என்னிடம் இல்லை.

எப்ராயிம் தன் சகோதரருள் கனி தரும் மரம் போலிருக்கலாம்: ஆயினும் ஆண்டவரின் மூச்சாகிய கீழைக்காற்று பாலை நிலத்திலிருந்து கிளம்பி வரும்: வந்து அவனுடைய நீரோடைகளையும், நீரூற்றுகளையும் வறண்டு போகச் செய்யும். அவனது கருவூலத்திலிருந்து விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போகும்.

சமாரியா தன் கடவுளை எதிர்த்துக் கலகமூட்டிற்று: அது தன் குற்றப் பழியைச் சுமக்கும்: அதன் குடிமக்கள் வாளால் மடிவார்கள், அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படுவார்கள்: அவர்களுடைய கர்ப்பவதிகள் கிழித்தெறியப்படுவார்கள்.

அதிகாரம் 14.

இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா: நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய்.

இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்: நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்:

அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்: குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்: எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, எங்கள் கடவுளே! என்று இனிச் சொல்லமாட்டோம்: திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான் எனச் சொல்லுங்கள்.

அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்: அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது.

நான் இஸ்ரயேலுக்குப் பனி போலிருப்பேன்: அவன் லீலிபோல் மலருவான்: லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான்.

அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்: அவன் பொலிவு ஒலிவமரம் போல் இருக்கும்: லெபனோனைப்போல் அவன் நறுமணம் பரப்புவான்.

அவர்கள் திரும்பிவந்து என் நிழலில் குடியிருப்பார்கள்: கோதுமைபோல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம்போல் அவர்களது புகழ் விளங்கும்.

இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவி சாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்: நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும்.

ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்: பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்: ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை: நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்: மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.

புத்தகம் 29 - யோவேல்

அதிகாரம் 1.

பெத்துவேலின் மகனான யோவேலுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே:

முதியோரே, இதைக் கேளுங்கள்: நாட்டிலிலுள்ள குடிமக்களே, நீங்கள் அனைவரும் செவி கொடுங்கள்: உங்கள் நாள்களிலாவது, உங்கள் தந்தையரின் நாள்களிலாவது இதுபோன்று நடந்ததுண்டோ ?

இதைக் குறித்து உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்: உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்குக் கூறட்டும்: அவர்களின் பிள்ளைகள் அடுத்த தலைமுறைக்குக் கூறட்டும்.

வெட்டுப் புழு தின்று எஞ்சியதை இளம் வெட்டுக்கிளி தின்றது: இளம் வெட்டுக்கிளி தின்று எஞ்சியதைத் துள்ளும் வெட்டுக் கிளி தின்றது: துள்ளும் வெட்டுக் கிளி தின்று எஞ்சியதை வளர்த்த வெட்டுக்கிளி தின்றழித்தது.

குடிவெறியர்களே, விழித்தெழுந்து அழுங்கள்: திராட்சை இரசம் குடிக்கிறவர்களே, நீங்கள் அனைவரும் அந்த இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்: ஏனெனில், அது உங்கள் வாய்க்கு எட்டாமற் போயிற்று.

ஆற்றல்மிக்க, எண்ணிக்கையில் அடங்காத வேற்றினம் ஒன்று என் நாட்டிற்கு எதிராய் எழும்பி இருக்கின்றது: அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்: பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்கள் அதற்கு உண்டு..

என்னுடைய திராட்சைக் கொடிகளை அது பாழாக்கிற்று: அத்தி மரங்களை முறித்துப் போட்டது: அவற்றின் பட்டைகளை முற்றிலும் உரித்துக் கீழே எறிந்தது: அவற்றின் கிளைகள் வெளிறிப் போயின.

கணவனாக வரவிருந்தவனை இழந்ததால் சாக்கு உடை உடுத்திக் கொள்ளும் கன்னிப் பெண்ணைப்போல் கதறி அழுங்கள்.

ஆண்டவரது இல்லத்தில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமல் ஒழிந்தன. ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் குருக்கள் புலம்பி அழுகின்றார்கள்.

வயல்வெளிகள் பாழாயின: நிலமும் புலம்புகின்றது: ஏனெனில், தானிய விளைச்சல் அழிவுற்றது: இரசம் தரும் திராட்சைக் கொடிகள் காய்ந்துபோயின: எண்ணெய் தரும் ஒலிவ மரங்கள் பட்டுப் போயின: 11 உழவுத் தொழில் செய்வோரே, கலங்கி நில்லுங்கள்: திராட்சைத் தோட்டக்காரர்களே, அழுங்கள். ஏனெனில், கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற் போயின: வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று.

திராட்சைக் கொடி வாடிப் போகின்றது: அத்தி மரம் உலர்ந்துபோகின்றது: மாதுளை, போணந்து, பேரிலந்தை போன்ற வயல்வெளி மரங்கள் யாவும் வதங்குகின்றன: மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு மறைந்து போகின்றது.

குருக்களே, சாக்கு உடை உடுத்திக்கொண்டு தேம்பி அழுங்கள்: பலிபீடத்தில் பணிபுரிவோரே! அலறிப் புலம்புங்கள்: என் கடவுளின் ஊழியர்களே, சாக்கு உடை அணிந்தவர்களாய் இரவைக் கழியுங்கள்: ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமற் போயின.

உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்: வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்: ஊர்ப் பெரியோரையும் நாட்டில் குடியிருப்போர் அனைவரையும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்: ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள்..

மிகக் கொடிய நாள் அந்த நாள்! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது: எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும்:

உணவுப் பொருளெல்லாம் பாழாய்ப் போனதை நம் கண்கள் காணவில்லையா? நம் கடவுளின் இல்லத்திலிருந்து மகிழ்ச்சியும் அக்களிப்பும் இல்லாமற்போனதை நாம் பார்க்கவில்லையா?

விதைகள் மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயின: பண்டசாலைகள் பாழடைந்துவிட்டன: களஞ்சியங்கள் இடிந்து விழுந்தன: கோதுமை விளைச்சல் இல்லாமற் போயிற்று.

காட்டு விலங்கினங்கள் என்னவாய்த் தவிக்கின்றன! மேய்ச்சல் காணா மாட்டு மந்தைகள் திகைத்து நிற்கின்றன: ஆட்டு மந்தைகளும் இன்னலுற்றுத் தவிக்கின்றன!

ஆண்டவரே, நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்: பாலைநிலத்தின் மேய்ச்சல் இடங்கள் தீக்கிரையாயின: வயல்வெளியிலிருந்தே மரங்கள் அனைத்தையும் நெருப்பு சுட்டெரித்துவிட்டது.

நீரோடைகள் வற்றிப்போனதால் காட்டுவிலங்குகள்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன: பாலைநிலத்திலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு விழுங்கிவிட்டது.

அதிகாரம் 2.

சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்: என்னுடைய திரு மலைமேலிருந்து கூக்குரலிடுங்கள்: நாட்டில் குடியிருப்பவர்கள் அனைவரும் நடுங்குவார்களாக! ஏனெனில், ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்: அது வந்து விட்டது.

அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்: மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்: விடியற்காலை ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல் ஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது: இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை: இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும் நிகழப்போவதுமில்லை.

அவை வரும்பொழுது தீயும் தணலும் கூட்டெரிக்கும். அவற்றின் வருகைக்குமுன் நாடு ஏதேன் தோட்டம் போலிருக்கும்: அவை போனபின்போ பாலைநிலம்போல் ஆகிவிடும்: அவற்றுக்கு எதுவுமே தப்பமுடியாது.

பார்வைக்கு அவை குதிரைகள் போலிருக்கின்றன: போர்க் குதிரைகள்போல் அவை விரைந்தோடுகின்றன.

அவை தேர்ப்படைகளின் கிறீச்சொலிபோல் இரைந்து கொண்டு, சருகுகளைச் சுட்டெரிக்கும் நெருப்புத் தணல்போல் ஒலியெழுப்பி, போருக்கு அணிவகுத்த ஆற்றல் மிக்க படைகள்போல் மலையுச்சிகளின்மேல் குதித்துச் செல்லும்.

அவற்றின்முன் மக்களினத்தார் நடுங்குவர்: அச்சத்தால் எல்லாரின் முகமும் வெளிறிப் போகும்..

அவை போர் வீரர்களைப்போல் தாவி ஓடுகின்றன: படை வீரர்களைப்போல் சுவர்மேல் ஏறுகின்றன: ஒவ்வொன்றும் தனக்குரிய பாதையில் போகின்றது: தங்கள் இலக்கைவிட்டு அவை பிறழ்வதில்லை.

ஒன்றை ஒன்று நெருக்குவதில்லை: ஒவ்வொன்றும் தன் வழி தவறாது செல்கின்றது: போர்க் கருவிகளுக்கிடையே சிக்கிக் கொண்டாலும் அவை வரிசை கலையாமல் முன்னேறுகின்றன.

நகருக்குள் பாய்ந்து செல்கின்றன: மதில்மேல் ஓடுகின்றன: வீடுகள்மேல் ஏறி, பலகணி வழியாய்த் திருடனைப்போல் உள்ளே நுழைகின்றன.

அவற்றுக்கு முன்பாக நிலம் நடுங்குகின்றது: வானம் அசைகின்றது: கதிரவனும் நிலவும் இருண்டு போகின்றன: விண்மீன்களும் ஒளி இழந்து போகின்றன.

ஆண்டவர் தம் படைகள்முன் முழக்கம் செய்கின்றார்: அவரது பாளையம் மிக மிகப் பெரிது: அவர் தம் வாக்கை நிறைவேற்ற ஆற்றல் உடையவர். ஏனெனில் ஆண்டவரின் நாள் மிகக் கொடியது: அச்சம் தர வல்லது, அதைக் தாங்கிக் கொள்ளக் கூடியவர் எவர்?

"இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் " என்கிறார் ஆண்டவர்.

"நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்" அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்: நீடிய பொறுமையுள்ளவர், பேரன்புமிக்கவர்: செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்.

ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?.

சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்: புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்: வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்.

மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்: புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்: முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்: மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்: மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப் புறப்படட்டும்.

ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், "ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்: உமது உரிமைச்சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர் " எனச் சொல்வார்களாக!. "அவர்களுடைய கடவுள் எங்கே? " என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?.

அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்..

ஆண்டவர் தம் மக்களுக்கு மறுமொழியாகக் கூறியது இதுவே: "நான் உங்களுக்குக் கோதுமையும், திராட்சை இரசமும், எண்ணெயும் தருவேன்: நீங்களும் நிறைவு பெறுவீர்கள்: இனிமேல் வேற்றினத்தார் நடுவில் உங்களை நிந்தைக்கு ஆளாக்கமாட்டேன். "

வடக்கிலிருந்து வந்த படையை உங்களிடமிருந்து வெகு தொலைவிற்கு விரட்டியடிப்பேன்: அதனை வறட்சியுற்றதும் பாழடைந்ததுமான நிலத்திற்குத் துரத்திவிடுவேன். அதன் முற்பகுதியைக் கீழைக் கடலுக்குள்ளும், பிற்பகுதியை மேலைக் கடலுக்குள்ளும் ஆழ்த்துவேன். பிண நாற்றமும் தீய வாடையும் அங்கே எழும்பும்: ஏனெனில் அது பெரும் தீச்செயல்களைப் புரிந்தது.

நிலமே நீ அஞ்சாதே: மகிழ்ந்து களிகூரு: ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்..

காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்: ஏனெனில், பாலைநிலப் புல்வெளிகள் பசுமையாய் இருக்கின்றன: மரங்கள் கனி தருகின்றன: அத்திமரமும் திராட்சைக் கொடியும் மிகுந்த கனி கொடுக்கின்றன..

சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்: உங்கள் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக் களிப்படையுங்கள்: ஏனெனில், அவர் தமது நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்: முன்போலவே உங்களுக்கு முன் மாரியையும் பின்மாரியையும் நிறைவாகத் தந்தருளினார்.

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்: ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.

நான் உங்களுக்கு எதிராக அனுப்பிய என் பெரும் படையாகிய வெட்டுப் புழுக்கள், இளம் வெட்டுக்கிளிகள், துள்ளும் வெட்டுக்கிளிகள், வளர்ந்த வெட்டுக்கிளிகள் ஆகியவை அழித்துவிட்ட பருவப் பலன்களை உங்களுக்கு மீண்டும் தருவேன்.

நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்: உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்: இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாகமாட்டார்கள்.

இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்: இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.

அதற்குப்பின்பு, நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்.

அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்..

இன்னும் விண்ணிலும் மண்ணிலும் வியத்தகு செயல்களைச் செய்து காட்டுவேன்: எங்குமே, இரத்த ஆறாகவும் நெருப்பு மண்டலமாகவும், புகைப்படலமாகவும் இருக்கும்..

அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டு போகும்: நிலவோ இரத்தமாக மாறும்..

அப்பொழுது ஆண்டவரின் திருப்பெயரைச்சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப்பிழைப்பர்: ஏனெனில், ஆண்டவர் கூறிய வண்ணமே, சீயோன் மலையிலும் எருசலேமிலும் எஞ்சியிருப்போர் வாழ்வு அடைவர்: ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்களே தப்பிப் பிழைப்பார்கள்.

அதிகாரம் 3.

அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த நிலைமைக்கே கொண்டுவருவேன்:

அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்: அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்: ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்: எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்:.

என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்: ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள்: பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் குடித்தார்கள்..

தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன்.

நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்: விலையுயர்ந்த பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள்.

யூதாவின் மைந்தரையும் எருசலேமின் மக்களையும் கிரேக்கரிடம் விற்றுவிட்டீர்கள்: இவ்வாறு அவர்கள் தங்கள நாட்டைவிட்டு வெகு தொலைவிற்குப் போகச் செய்தீர்கள்.

நீங்கள் விற்றுவிட்ட இடத்திலிருந்து அவர்களை இப்பொழுதே கிளர்ந்தெழச் செய்வேன்: நீங்கள் செய்த கொடுமையை உங்கள் தலை மேலேயே விழச் செய்வேன்..

உங்கள் புதல்வரையும் புதல்வியரையும் யூதா மக்களிடமே விற்றுவிடுவேன்: யூதா மக்களோ அவர்களைத் தொலைநாட்டவரான செபாயரிடம் விற்றுவிடுவார்கள்: " இதைக் கூறுவது ஆண்டவரே..

வேற்றினத்தாரிடையே இதைப் பறைசாற்றுங்கள்: போருக்காக நாள் குறித்து, போர் வீரர்களைக் கிளர்ந்ததெழச் செய்யுங்கள்: படை வீராகள் அனைவரும் திரண்டு வந்து, போருக்குக் கிளம்பட்டும்.

உங்கள் கலப்பைக் கொழுவைப்஥ போர்வாளாக அடித்துக் கொள்ளுங்கள்: கதிரறுக்கும் அரிவாள்களை ஈட்டிகளாக வடித்துக் கொள்ளுங்கள்: வலுவற்றவனும் "நானொரு போர்வீரன் " என்று சொல்லிக் கொள்ளட்டும்.

சுற்றுப் புறங்களிலுள்ள வேற்று நாட்டவர்களே, நீங்கள் அனைவரும் விரைந்து வாருங்கள்: வந்து அவ்விடத்தில் ஒன்றாய்க் கூடுங்கள்: ஆண்டவரே, உம் போர் வீரர்களை அனுப்பியருளும்.

வேற்றினத்தார் அனைவரும் கிளர்ந்தெழட்டும்: கிளர்ந்தெழுந்து யொசபாத்து பள்ளத்தாக்கிற்கு வந்து சேரட்டும்: ஏனெனில் சுற்றுப்புறத்து வேற்றினத்தார் அனைவர்க்கும் தீர்ப்பு வழங்க நான் அங்கே அமர்ந்திருப்பேன்.

அரிவாளை எடுத்து அறுங்கள், பயிர் முற்றிவிட்டது: திராட்சைப் பழங்களை மிதித்துப் பிழியுங்கள். ஏனெனில் ஆலை நிரம்பித் தொட்டிகள் பொங்கி வழிகின்றன: அவர்கள் செய்த கொடுமை மிகப் பெரிது.

திரள் திரளாய் மக்கட் கூட்டம் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் திரண்டிருக்கிறது. ஏனெனில், ஆண்டவரின் நாள் அப்பள்ளத்தாக்கை நெருங்கி வந்துவிட்டது.

கதிரவனும் நிலவும் இருளடைகின்றன: விண்மீன்கள் ஒளியை இழக்கின்றன.

சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்: எருசலேமிலிருந்து அவர் முழங்குகின்றார்: விண்ணும் மண்ணும் அதிர்கின்றன: ஆயினும் ஆண்டவரே தம் மக்களுக்குப் புகலிடம்: இஸ்ரயேலருக்கு அரணும் அவரே..

நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றும், நான் என் திருமலையாகிய சீயோனில் குடியிருக்கிறேன் என்றும் அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்: எருசலேம் பயதாய் இருக்கும்: அன்னியர் இனிமேல் அதைக் கடந்து செல்லமாட்டார்கள்..

அந்நாளில் மலைகள் இனிய, புது இரசத்தைப் பொழியும்: குன்றுகளிலிருந்து பால் வழிந்தோடும்: யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பி வழியும்: ஆண்டவரின் இல்லத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பும்: அது சித்திமிலுள்ள ஓடைகளில் பாய்ந்தோடும்.

எகிப்து பாழ்நிலமாகும்: ஏதோம் பாழடைந்து பாலைநிலம் ஆகும்: ஏனெனில், அவர்கள் யூதாவின் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்: அவர்களின் நாட்டிலேயே குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினார்கள்..

யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாயிருக்கும்: எருசலேமில் எல்லாத் தலைமுறைக்கும் மக்கள் குடியிருப்பார்கள்.

சிந்தப்பட்ட இரத்தத்திற்கு நான் பழிவாங்கவே செய்வேன்: குற்றவாளிகளைத் தண்டியாமல் விடேன்: ஆண்டவராகிய நான் சீயோனில் குடியிருப்பேன்.

புத்தகம் 30: ஆமோஸ்

அதிகாரம் 1.

தெக்கோவாவில் கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவர் ஆமோஸ். யூதாவை உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக் குறித்து ஆமோஸ் காட்சி கண்டு கூறியவை பின்வருமாறு:

சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்: எருசலேமிலிருந்து அவர் முழுங்குகின்றார்: இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள் தீய்ந்து போகின்றன: கர்மேல் மலையின் உச்சியும் காய்ந்து போகின்றது'

ஆண்டவர் கூறுவது இதுவே: தமஸ்கு நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக, நான் கொடுத்த தண்டனைத் திர்ப்பை மாற்றவே மாட்டேன். ஏனெனில், அவர்கள் கிலயாதை இரும்புக் கருவிகளைக் கொண்டு போராடித்தார்கள்.

ஆதலால் அசாயேல் வீட்டின்மேல் தீ மூளச் செய்வேன். அது பெனதாது கோட்டைகளை விழுங்கிவிடும்.

தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைப்பேன். பிக்காத்தாவேனில் குடியிருப்பவர்களையும் பெத்ஏதேனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன். ஆராமின் மக்கள் கீருக்கு நாடுகடத்தப்படுவார்கள்' என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவர் கூறுவது இதுவே: "காசா நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன். அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்:

ஆதலால் காசாவின் கோட்டை மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.

அஸ்தோதில் குடியிருப்பவர்களையும் அஸ்கலோனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்஥பேன்: எக்ரோனுக்கு எதிராக என் கையை ஓங்குவேன்: பெலிஸ்தியருள் எஞ்சியிருப்போரும் அழிந்திடுவர்' என்கிறார் ஆண்டவராகிய என் தலைவர். 9 ஆண்டவர் கூறுவுது இதுவே: "தீர் நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்: சகோதர உடன்படிக்கையை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை.

ஆதலால் தீரின் கோட்டை மதில்கள் மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது அச்சுவர்களை விழுங்கிவிடும். "

ஆண்டவர் கூறுவது இதுவே: "ஏதோம் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவன் உறவுமுறையின் கடமைகளை மீறி வாளேந்தித் தன் சகோதரனையே துரத்தினான்: தன் ஆத்திரத்தை அடக்கி வைக்காமல் என்றென்றும் கோபத்தைக் காட்டி வந்தான்:

ஆதலால் தேமான்மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது பொட்சராவின் கோட்டைகளை விழுங்கிவிடும்.

ஆண்டவர் கூறுவது இதுவே: "அம்மோன் மக்கள் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்துவதற்காகக் கிலயாதின் கர்ப்பவதிகள் வயிற்றைப் பீறிக் கிழத்தார்கள்.

ஆதலால், இராபாவின் கோட்டை மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை விழுங்கி விடும்: அப்பொழுது, போர்க்காலத்தின் பேரிரைச்சலும், சூறாவளி நாளின் கடும் புயலும் இருக்கும்.

அவர்களுடைய அரசன் அடிமையாய்க் கொண்டு போகப்படுவான். அவனோடு அதிகாரிகளும் கொண்டு போகப்படுவார்கள்' என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 2.

ஆண்டவர் கூறுவது இதுவே: "மோவாபு எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவன் ஏதோம் அரசனின் எலும்புகளைச் சுட்டுச் சாம்பலாக்கினான்.

ஆதலால், மோவாபின்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது கெரியோத்தின் கோட்டைகளை விழுங்கிவிடும்: இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம் ஆகியவை ஒருசேர எழும் வேளைகளில் மோவாபு மடிந்திடுவான்.

அந்நாட்டின் ஆட்சியாளனை அவர்களிடையேயிருந்து அகற்றிவிடுவேன்: அவனோடு அதிகாரிகள் அனைவரையும் அழித்து விடுவேன்' என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவர் கூறுவது இதுவே: "யூதா எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவேமாட்டேன்: ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் திருச்சட்டத்தை புறக்கணித்தார்கள்: அவருடைய நியமங்களை கடைப்பிடிக்கவில்லை: அவர்களுடைய தந்தையர் பின்பற்றிய பொய்த் தெய்வங்கள் அவர்களையும் வஞ்சித்துவிட்டன.

ஆதலால் யூதாவின்மேல் நெருப்பைக் கொட்டுவேன்: அது எருசலேமின் கோட்டைகளை விழுங்கிவிடும்."

ஆண்டவர் கூறுவது இதுவே: "இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்: ஏனெனில், அவர்கள் நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும் வறியவரை இரு காலணிக்கும் விற்கின்றார்கள்.

ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்: ஒடுக்கப்பட்டோ ரின் நெறியைக் கெடுக்கின்றார்கள்: மகனும் தந்தையும் ஒரே பெண்ணைக் கூடி, என் திருப்பெயரைக் களங்கப்படுத்துகின்றார்கள்.

கடன்காரரிடமிருந்து பறித்த ஆடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பலிபீடங்களின் முன்பும் கிடந்து கொண்டு அபராதம் விதித்துக் கிடைத்"த மதுவினைத் தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கின்றார்கள்.

நானோ கேதுரு மரத்தின் உயரமும் கருவாலி மரத்தின் வலிமையும் கொண்ட எமோரியரை அவர்கள் முன்பாக அழித்துவிட்டேன்: மேலே அவர்களுடைய கனிகளையும், கீழே அவர்களுடைய வேர்களையும் அழித்துவிட்டேன்:

மேலும், எகிப்து நாட்டிலிருந்து உங்களை அழைத்து வந்து, நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி, எமோரியர் நாட்டை நீங்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்தேன்.

உங்கள் புதல்வர்களுள் சிலரை இறைவாக்கினராய் உயர்த்தினேன்: உங்கள் இளைஞர்களுள் சிலரை நாசீர்களாய்த் தேர்ந்துகொண்டேன்: இஸ்ரயேல் மக்களே, இது உண்மையன்"றோ?" என்கிறார் ஆண்டவர்.

ஆனால், நீங்கள் நாசீர்களை மது அருந்தச் செய்தீர்கள்: இறைவாக்கினருக்கு "இறைவாக்கு உரைக்கக்கூடாது" என்று கட்டளையிட்டீர்கள்.

வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுந்துவது போல, உங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன்.

விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது: வலிமையுள்ளவனும் தன் வலிமையை இழந்து விடுவான்: வீரனாலும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது.

வில்லேந்தும் வீரன் எதிர்த்து நிற்கமாட்டான். விரைந்தோடுபவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டான், குதிரை வீரனாலும் தன்னுயிரைக் காத்துக்கொள்ள முடியாது.

அந்நாளில் வலிமை மிக்கவர்களுள் நெஞ்சுரம் கொண்டவன்கூடப் படைக்கலன்களைத் பக்கி எறிந்து விட்டு ஓடுவான் என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 3.

இஸ்ரயேல் மக்களே! கேளுங்கள்: உங்களுக்கு எதிராக-ஆம், எகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த முழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக-ஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்:

உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும் உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்துகோண்டேன்: ஆதலால், உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்.

தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல் இருவர் சேர்ந்து நடப்பார்களோ?

இரை அகப்படாமல் இருக்கும்போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ? ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழுக்கம் செய்யுமோ?

வேடன் தரையில் வலைவிரிக்காதிருக்கும்போதே பறவை கண்ணியில் சிக்கிக்கொள்வதுண்டோ ? ஒன்றுமே சிக்காதிருக்கும்போது பொறி தரையைவிட்டுத் துள்ளுவதுண்டோ ?

நகரில் எக்காளம் ஊதப்படுமானால், மக்கள் அஞ்சி நடுங்காமல் இருப்பார்களோ? ஆண்டவர் அனுப்பவில்லையெனில், நகருக்குத் தீமை தானாக வந்திடுமோ?

தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்குத் தம் மறைபொருளை வெளிப்படுத்தாமல், தலைவராகிய ஆண்டவர் ஏதும் செய்வதில்லை.

சிங்கம் கர்ச்சனை செய்கின்றது: அஞ்சி நடுங்காதவர் எவர்? தலைவராகிய ஆண்டவர் பேசியிருக்க, இறைவாக்கு உரைக்காதவர் எவர்?

"அசீரியாவின் கோட்டைகள் மேலும் எகிப்து நாட்டின் கோட்டைகள் மேலும் நின்றுகொண்டு இவ்வாறு பறைசாற்று: சமாரியாவின் மலைகள்மேல் வந்து கூடுங்கள்: அங்கு ஏற்படும் குழப்பங்களையும் நடக்கும் கொடுமைகளையும் பாருங்கள்.

நலமானதைச் செய்ய அவர்களுக்குத் தெரியவதில்லை" என்கிறார் ஆண்டவர். "அவர்கள் தங்கள் கோட்டைகளை வன்முறைகளாலும் கொள்ளைகளாலும் நிரப்புகிறார்கள்."

ஆகையால், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "பகைவன் ஒருவன் வந்து நாட்டைச் சூழந்து கொள்வான்: அரண்களையெல்லாம் தரைமட்டமாக்குவான்: உங்கள் கோட்டைகள் கொள்ளையிடப்படும்.

ஆண்டவர் கூறுவது இதுவே: "சிங்கத்தின் வாயிலிருந்து இடையன் தன் ஆட்டின் இரண்டு கால்களையோ காதின் ஒருபகுதியையோ பிடுங்கி எடுப்பது போல, சமாரியாவில் குடியிருந்து, பஞ்சணைகள்மீதும் மெத்தைகள்மீதும் சாய்ந்து இன்புறும் இஸ்ரயேல் மக்கள் விடுவிக்கப்படுவதும் இருக்கும். "

"கேளுங்கள்: யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச் சான்று பகருங்கள்," என்கிறார் தலைவரும் படைகளின் கடவுளுமாகிய ஆண்டவர்.

"இஸ்ரயேலை அதன் குற்றங்களுக்காகத் தண்டிக்கும் நாளில், பெத்தேலில் உள்ள பலிபீடங்களை அழிப்பேன்: பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டுத் தரையில் விழும்.

குளிர்கால வேனிற்"கால மாளிகைகளை இடித்துத் தள்ளுவேன்: தந்தத்தாலான வீடுகள் அழிந்து போகும்: மாபெரும் இல்லங்களும் பாழாய்ப் போகும்," என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 4.

சமாரியா மலைமேல் வாழும் பாசான் பசுக்களே! இந்த வாக்கைக் கேளுங்கள்: ஏழைகளை ஒடுக்கி, வறியோரை நசுக்குகின்ற நீங்கள் உங்கள் கணவர்களைப் பார்த்து, "கொண்டுவாருங்கள், குடிப்போம்" என்று சொல்கிறீர்கள்.

இறைவனாகிய ஆண்டவர் தம் புனிதத்தின்மேல் ஆணையிட்டுக் கூறுவது இதுவே: "உங்களுக்கு அந்த நாள்கள் வருகின்றன: அப்பொழுது அவர்கள் உங்களைக் கொக்கிகளாலும், உங்களுள் எஞ்சியிருப்போரைத் பண்டில்களாலும் இழுத்துக் கொண்டு போவார்கள்.

நீங்கள் ஒருவர் பின் ஒருவராய் அருகிலுள்ள கோட்டையின் பிளவு வழியாய் வெளியேற்றப்பட்டு அர்மோனை நோக்கித் தள்ளப்படுவீர்கள்" என்கிறார் ஆண்டவர்.

"வாருங்கள், பெத்தேலுக்கு வந்து குற்றம் செய்யுங்கள்: கில்காலுக்கு வந்து குற்றங்களைப் பெருக்குங்கள்: நாள்தோறும் காலையில் உங்கள் பலிகளைக் கொண்டு வாருங்கள்: மூன்று நாளைக்கு ஒருமுறை பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள்.

புளித்த மாவின் அப்பத்தைக் கொண்டுவந்து நன்றிப் பலியாகப் படையுங்கள்: நேர்ச்஥சைகளைச் செலுத்தி அவற்றை விளம்பரப்படுத்துங்கள். இஸ்ரயேல் மக்களே, இப்படிச் செய்வதுதானே உங்கள் விருப்பம் ", என்கிறார் ஆண்டவர்.

"உங்கள் நகர்களில் எல்லாம் உங்கள் பற்களுக்கு வேலை இல்லாமல் செய்தேன்: நீங்கள் குடியிருக்கும் இடங்களிலெல்லாம் உணவுப் பற்றாக்குறையை உண்டாக்கினேன்: ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.

"நீங்கள் அறுவடை செய்ய மூன்று மாதம் இருந்த போதே உங்களுக்கு மழையை நிறுத்திவிட்டேன்: ஓர் ஊரில் மழைபெய்யச் செய்து அடுத்த ஊரில் வறட்சியை உண்டாக்கினேன். ஒரு வயலில் மழை பெய்யச் செய்தேன். வேறொரு வயல் மழையின்றிக் காய்ந்து போயிற்று.

ஆகையால், இரண்டு மூன்று நகர்களின் மக்கள் தண்ணீர் தேடித் தள்ளாடித் திரிந்து வேறொரு நகருக்குப் போயும் அவர்கள் தாகம் தீரவில்லை: இப்படியெல்லாம் செய்தும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை" என்கிறார் ஆண்டவர்.

"வெப்பக் காற்றாலும் பயிரழிக்கும் நோயாலும் உங்களை வதைத்தேன். உங்கள் தோப்புகளையும் திராட்சைத் தோட்டங்களையும் அழித்தேன்: அத்திமரங்களையும் ஒலிவமரங்களையும் வெட்டுக்கிளி தின்றது: ஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்பவில்லை," என்கிறார் ஆண்டவர்.

"எகிப்தின்மீது அனுப்பிய கொள்ளை நோய் போன்ற கொடிய நோயை உங்கள்மீதும் அனுப்பினேன்: உங்கள் இளைஞர்களை வாளால் வெட்டி வீழ்த்தினேன்: உங்கள் குதிரைகளும் கொள்ளை போயின: உங்கள் பாளையங்களில் செத்தவர்களின் பிணநாற்றம் உங்கள் மூக்கில் ஏறும்படி செய்தேன்: ஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை," என்கிறார் ஆண்டவர்.

"சோதோம், கொமோராவின் மக்களைக் கடவுள் அழித்ததுபோல உங்களுள் சிலரை அழித்தேன். நீங்களோ, நெருப்பிலிருந்து இழுக்கப்பட்ட கொள்ளிக் கட்டைபோல் ஆனீர்கள்: ஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்"பவில்லை" என்கிறார் ஆண்டவர்.

"ஆகையால், இஸ்ரயேலே! உனக்கும் இவ்வாறே செய்வேன், இஸ்ரயேலே! இப்படி நான் செய்யப் போவதால் உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு! "

ஏனெனில், மலைகளை உருவாக்கியர் அவரே: காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே: தம் எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுத்துபவரும் அவரே: காலைப்பொழுதைக் காரிருள் ஆகச்செய்பவரும் அவரே: நிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுபவரும் அவரே: படைகளின் கடவுளாகிய ஆண்டவர் என்பதே அவரது பெயராகும்.

அதிகாரம் 5.

இஸ்ரயேல் வீட்டாரே, உங்களைப் பற்றி நான் புலம்பிக் கூறும் இந்த வாக்கைக் கேளுங்கள்:

"இஸ்ரயேல் என்னும் கன்னிப் பெண் விழுந்துகிடக்கிறாள், இனி எழவேமாட்டாள்: தரையில் தன்னந்தனியளாய்க் கிடக்கின்றாள்: அவளைத் பக்கிவிடுவார் யாருமில்லை."

ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "ஆயிரம் பேரை அனுப்பிய நகரில் மறு பேரே எஞ்சியிருப்பர்: மறு பேரை அனுப்பிய நகரில் பத்துப் பேரே எஞ்சியிருப்பர்: இஸ்ரயேல் வீட்டாரின் கதி இதுவே."

இஸ்ரயேல் வீட்டாருக்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்:

ஆனால் பெத்தேலைத் தேடாதீர்கள், கில்"காலில் காலெடுத்து வைக்காதீர்கள்: பெயேர்செபாவுக்குக் கடந்து போகவேண்டாம்: ஏனெனில் கில்கால் உண்மையாகவே நாடுகடத்தப்படும்: பெத்தேல் பாழாக்கப்படும்.

ஆண்டவரைத் தேடுங்கள்: நீங்கள் வாழ்வீர்கள்: இல்லையேல் அவர் யோசேப்பின் வீட்டின்மேல் தீ மூளச் செய்வார். அந்நெருப்பு அதை விழுங்கிவிடும், பெத்தேலில் அந்நெருப்பை அணைக்கக்கூடியவர் எவருமிரார்.

அவர்கள் நீதியை எட்டிக்காயாய் மாற்றுகின்றார்கள்: நேர்மையை மண்ணில் எறிகின்றார்கள்.

ஆனால், அவரே கார்த்திகை, மிருகசீரிடம் ஆகிய விண்மீன்களை உண்டாக்கியவர்: காரிருளைக் காலைப்பொழுது ஆகச் செய்பவர்: பகற்பொழுதை இரவு வேளையாய் மாற்றுபவர்: கடல் நீரை அழைத்து நிலத்தின்மேல் பொழியச் செய்பவர்: அவரது பெயர் "ஆண்டவர் ".

வலிமை மிக்க தளங்கள்மேல் அவர் அழிவை அனுப்புவதால் அவை அழிவைக் காண்கின்றன.

அவர்கள் நகர் வாயிலில் நின்றுகொண்டு தங்களைக் கண்டிப்பவனைப் பகைக்கிறார்கள்: உண்மை பேசுபவனை வெறுத்து ஒதுக்குகின்றார்கள்.

நீங்கள் ஏழைகளை நசுக்கி, அவர்களிடம் தானிய வரியாக வாங்கியதைக் கொண்டு நன்கு செதுக்கிய கற்களால் வீடு கட்டினீர்கள்: அந்த வீடுகளில் நீங்கள் வாழப் போவதில்லை: அருமையான திராட்சைத் தோட்டங்களை அமைத்தீர்கள்: அவை தரும் திராட்சை இரசத்தை நீங்கள் குடிக்கப் போவதில்லை.

உங்கள் குற்றங்கள் எவ்வளவு மிகுதியானவை என்றும் உங்கள் பாவங்கள் எத்துணைக் கொடியவை என்றும் நான் அறிவேன்: நல்லாரைத் துன்புறுத்துகிறீர்கள், கையூட்டு வாங்குகிறீர்கள், நகர் வாயிலில் வறியோருக்கு நீதி வழங்க மறுக்கிறீர்கள்.

அது கெட்ட காலம் என்பதால், அப்போது விவேகமுள்ளவன் வாய் திறக்கமாட்டான்.

நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்: அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.

தீமையை வெறுத்து நன்மையை நாடுங்கள்: நகர் வாயிலில் நீதியை நிலைநாட்டுங்கள்: அப்பொழுது ஒருவேளை படைகளின் கடவுளாகிய ஆண்டவர் யோசேப்பின் வீட்டாரில் எஞ்சியிருப்போர்க்கு இரக்கம் காட்டுவார்.

ஆகையால், படைகளின் கடவுளும் தலைவருமாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "பொதுவிடங்கள் எங்கும் அழுகுரல் கேட்கும், எல்லா வீதிகளிலும், "ஜயோ! ஜயோ!" என்ற புலம்பல் எழும்பும்: வயலில் வேலை செய்வாரை அழுவதற்குக் கூப்பிடுவர்: ஒப்பாரி பாடத் தெரிந்தவர்களை ஓலமிட்டுப் புலம்ப அழைப்பர்.

திராட்சைத் தோட்டம் எங்கணும் ஒரே அழுகையாய் இருக்கும்: ஏனெனில், உங்கள் நடுவே நான் கடந்து செல்வென் ", என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவரின் நாளைப் பார்க்க விரும்புவோரே, உங்களுக்கு ஜயோ கேடு! ஆண்டவரின் நாளுக்காக நீங்கள் ஏங்குவது ஏன்? அது ஒளிமிக்க நாளன்று: இருள் சூழந்த நாளாகத் தான் இருக்கும்.

அந்த நாள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடிய ஒருவனைக் கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும், அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து, சுவரில் கைவைத்துச் சாய்ந்த போது, பாம்பு ஒன்று கடித்தாற்போலும் இருக்கும்!

ஆண்டவரின் நாள் ஒளியின் நாள் அன்று: அது இருள் கவிந்தது அல்லவா? வெளிச்சமில்லாத காரிருள் அல்லவா?

"உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்: உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை.

எரிபலிகளையும் தானியப் படையல்களையும் எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்க மாட்டேன்: கொழுத்த விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும்"போது நான் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்.

என் முன்னிலையில் நீங்க்ள இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள், உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன்.

மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!

"இஸ்ரயேல் வீட்டாரே, பாலை நிலத்தில் இருந்த அந்த நாற்பது ஆண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் எனக்குக் கொடுத்தீர்களோ?

நீங்கள் சிக்கூத்தை மன்னனாகவும் கிய்யோனை விண்மீன் தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டீர்கள்: அவற்றின் வடிவில் உங்களுக்கெனச் சிலைகளும் செய்து கொண்டீர்கள்: அந்தச் சிலைகளை நீங்கள் பக்கிக்கொண்டு போகும் நாள் வரும்.

உங்களை நாள் தமஸ்குவுக்கும் அப்பால் நாடுகடத்தப்போகிறேன் ", என்கிறார் ஆண்டவர்: அவரது பெயர் "படைகளின் கடவுள். "

அதிகாரம் 6.

"சீனோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஜயோ கேடு!

கல்னேக்குப் போய்ப் பாருங்கள்: அங்கிருந்து சிறந்த நகரமாகிய ஆமாத்துக்குப் போங்கள்: பிறகு பெலிஸ்தியரின் நகரான காத்துக்குச் செல்லுங்கள்: அந்த அரசுகள் உங்கள் அரசுகளை விடச் சிறந்தவையோ? உங்கள் நாடுகள் அவர்களுடைய நாடுகளைவிடப் பரப்பளவில் பெரியவையோ?

தீய நாளை இன்னும் தள்ளிவைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்: ஆனால் வன்முறையின் ஆட்சியை அருகில் கொண்டு வருகின்றீர்கள்.

தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணைமீது சாய்ந்து கிடப்போருக்கும் கிடையிலிருந்து வரும் ஆட்டுக் குட்டிகளையும் மந்தையிலிருந்து வரும் கொழுத்த கன்றுகளையும் உண்போருக்கும் ஜயோ கேடு!

அவர்கள் வீணையொலி எழுப்பி அலறித் தீர்க்கின்றார்கள், தாவீதைப்"போல புதிய இசைக்கருவிகளைக் கண்டுபிடிக்கின்றார்கள்.

கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்: உயர்ந்த நறுமண எண்ணெயைத் தடவிக்கொள்கின்றார்கள்.

ஆகையால் அவர்கள்தான் முதலில் நாடு கடத்தப்படுவார்கள்: அவர்களது இன்பக் களிப்பும் இல்லாதொழியும்.

தலைவராகிய ஆண்டவர் தம்மீது ஆணையிட்டுக் கூறுகிறார்: படைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு சொல்கிறார்: யாக்கோபின் செருக்கை நான் வெறுக்கிறேன்: அவனுடைய கோட்டைகளை அருவருக்கிறேன். நகரையும் அதிலுள்ள யாவரையும் நான் கைவிட்டு விடுவேன்.

ஒரு வீட்டில் பத்துப்பேரே இருந்தாலும் அவர்களும் மாண்டு போவார்கள்.

வீட்டிலிருந்து எலும்புகளை எடுத்துச் செல்ல மிகச் சிலரே தப்பிப் பிழைப்பார்கள்: ஒருவன், வீட்டில் மூலையிலிருக்கும் இன்னொருவனிடம், "உன்னுடன் வேறு யாரேனும உளரோ?" என்று கேட்க, அவன், ஥இல்லை" என்று பதில் சொல்லி "பேசாதே, ஆண்டவரின் பெயரைச் சொல்லக் கூடாது" என்பான்.

ஆண்டவர்தாமே ஆணையிடுகின்றார்: பெரிய மாளிகைகளைத் தரைமட்டமாக்குவார்: சிறிய வீடுகளைத் தவிடுபொடியாக்குவார்.

பாறைகள்மேல் குதிரைகள் ஓடுமோ? எருதுகளைக் கட்டிக் கடலை உழுவதுண்டோ ? நீங்கள் நீதியை நஞ்சாக மாற்றினீர்கள், நேர்மையின் கனியை எட்டிக்காயாய் ஆக்கினீர்கள்.

லோதபார் ஊரைப் பிடித்தது குறித்துப் பூரிப்பு அடைகிறீர்கள்: "நம் சொந்த வலிமையால் கர்னாயிமைப் பிடித்து நமதாக்கிக் கொள்ளவில்லையா?" என்கிறீர்கள்.

இஸ்ரயேல் வீட்டாரே! உங்களுக்கு எதிராக வேற்றினம் ஒன்றைத் பண்டிவிடுவேன். அவர்கள் ஆமாத்து வாயிலில் இருந்து அராபா நீரோடை வரையில் உங்களை ஒடுக்கித் துன்புறுத்துவார்கள் ", என்கிறார் படைகளின் கடவுளாகிய ஆண்டவர்.

அதிகாரம் 7.

தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: "அரசனுக்கென முதல் புல்லறுப்புச் செய்தானபின், இரண்டாம் பருவத்தில் புற்கள் துளிர்க்கத் தொடங்கும் வேளையில், அவர் வெட்டுக்கிளிக் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

நாட்டிலிருந்த புல்லையெல்லாம் அவை தின்று தீர்த்துக் கொண்டிருந்த வேளையில் நான் "இறைவனாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்: உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்: யாக்கோபு எப்படி நிலைநிற்கப் போகிறான்? அவன் மிகச் சிறயவன் அல்லவா!" என்றேன்.

ஆண்டவரும் இதைக் குறித்து மனம் மாறினார்: "இது நிகழாது," என்றார் தலைவராகிய ஆண்டவர்."

தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: "தலைவராகிய ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பாக நெருப்பு மழையை வருவித்தார்: அந்த நெருப்பு ஆழ்கடலை வற்றச் செய்து நிலத்தையும் விழுங்கிக் கொண்டிருந்தது.

நான், "தலைவராகிய ஆண்டவரே, அதை நிறுத்தியருளும்: உம்மைக் கெஞ்சி மன்றாடுகின்றேன்: யாக்கோபு எப்படி நிலைநிற்கப் போகின்றான்? அவன் மிகச் சிறியவன் அல்லவா!" என்றேன்.

ஆண்டவரும் இதைக் குறித்து மனம் மாறினார்: "இதுவும் நிகழாது," என்றார் தலைவராகிய ஆண்டவர்."

ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: "பக்கு மல் குண்டின் துணைக்கொண்டு கட்டப்பட்ட ஒரு மதில் அருகில் அவர் நின்று கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு பக்கு மல் குண்டு இருந்தது.

"ஆமோஸ்! நீ காண்பதென்ன?" என்று ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார். நான், "அது பக்கு மல் குண்டு" என்றேன். தலைவர் தொடர்ந்து சொன்னார்: "பக்கு மல் குண்டை என் மக்களாகிய இஸ்ரயேலின் நடுவில் தொங்கவிடப் போகிறேன்: இனி நான் அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்லப்போவதில்லை ".

ஈசாக்கின் உயர்ந்த இடங்கள் பாழாக்கப்படும்: இஸ்ரயேலின் புனித இடங்கள் பாலைவெளி ஆக்கப்படும்: எரொபவாம் வீட்டாருக்கு எதிராக நான் வாளெடுத்து வருவேன்."

பிறகு, பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினான்: "இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான்.

அவன் சொல்வதை எல்லாம் இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை. ஏனெனில், "எரொபவாம் வாளால் மடிவான்: அவனது நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும்" என்று ஆமோஸ் சொல்லுகிறான்."

பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, "காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு: யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு: அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்.

பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே: ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்" என்று சொன்னான்.

ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: "நான் இறைவாக்கினன் இல்லை: இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை: நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன்.

ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, "என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு" என்று அனுப்பினார்.

எனவே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்: "இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே: ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப் பேசாதே" என்று நீ சொல்கிறாய்!

ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "உன் மனைவி நகரில் விலைமகளாய் இருப்பாள்: உன் புதல்வர் புதல்வியர் வாளால் மடிவர்: உன் நிலபுலம் பங்கு போட்டுக் கொள்ளப்படும், நீயோ புனிதமற்ற நாட்டிலே மாண்டு போவாய்: இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே அடிமையாகக் கொண்டு போகப்படும். "

அதிகாரம் 8.

தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: "கனிந்த பழங்களுள்ள கூடை ஒன்று கண்டேன்.

அவர், "ஆமோஸ்! என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்: நான், "கனிந்த பழங்கள் உள்ள கூடை" என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்: "என் மக்களாகிய இஸ்ரயேலின் முடிவு வந்துவிட்டது: இனி அவர்கள் நடுவே ஒருபோதும் கடந்து செல்ல மாட்டேன்.

அந்நாளில் "கோவில் பாடல்கள் புலம்பலாய் மாறும்: கணக்கற்ற பிணங்கள் உரிய மரியாதையின்றித் பக்கியெறியப்படும், எங்கும் ஒரே அமைதி!" என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

"வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோ ரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்:

"நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்:

வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்: கோதுமைப் பதர்களையும் விற்கலாம்" என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?

ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: "அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

இதனை முன்னிட்டு நாடு நடுநடுங்காதா? அதில் வாழ்வோர் அனைவரும் புலம்பமாட்டாரா? நாடு முழுவதும் நைல்"நதியின் வெள்ளமெனச் சுழற்றியெறியப்படாதா? எகிப்து நாட்டின் நைல்நதிபோல் அலைக்கழிக்கப்பட்டு அடங்காதா?

தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: "அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச்செய்து பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன்.

உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களை எல்லாம் புலம்"பலாகவும் மாற்றுவேன்: எல்லாரும் இடுப்பில் சாக்கு உடை உடுத்தவும், அனைவரின் தலையும் மழிக்கப்படவும் செய்வேன், ஒரே பிள்ளையைப் பறிகொடுத்தோர் புலம்புவதுபோல நிங்களும் புலம்புமாறு செய்வேன்: அதன் முடிவு கசப்புமிக்க நாளாய் இருக்கும்."

தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: "இதோ! நாள்கள் வரப்போகின்றன! அப்போது நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன்: அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று: ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது.

ஒரு கடல் முதல் மறு கடல்வரை, வடதிசை முதல் கீழ்த்திசைவரை தேடிச் சென்று அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள். ஆனால், அதைக் கண்டடையமாட்டார்கள்.

அந்நாளில் அழகிய கன்னிப் பெண்களும் இளைஞர்களும் நீர் வேட்கையால் சோர்ந்து வீழ்வார்கள்.

சமாரியா நாட்டு அஸ்மா தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டு, "தாண் நாடே! வாழும் உன் கடவுள்மேல் ஆணை!" எனவும் "பெயேர்செபாவில் வாழும் காவலர்மேல் ஆணை!" எனவும் சொல்லுகின்றவர்கள் வீழ்வார்கள்: மீண்டும் எழவே மாட்டார்கள்.

அதிகாரம் 9.

பலிபீடத்தருகில் ஆண்டவர் நிற்பதைக் கண்டேன். அவர் சொன்னார்: பணின் முகட்டை இடித்துப் போடு: மேல்தளம் ஆட்டம் கொடுக்கட்டும்: மக்கள் அனைவருடைய தலையிலும் அதை உடைத்துத் தள்ளு: அவர்களுள் எஞ்சியிருப்போரை நான் வாளால் கொன்றுபோடுவேன்: அவர்களில் எவரும் ஓடிப்போக மாட்டார்: ஒருவர் கூட தப்பிப் பிழைக்கவும் மாட்டார்.

பாதாளம் வரையில் அவர்கள் இறங்கினாலும் அங்கிருந்தும் என் கை அவர்களை இழுத்து வரும்: வான் மட்டும் அவர்கள் ஏறிப்போனாலும், அங்கிருந்தும் நான் அவர்களைப் பிடித்து வருவேன்:

கர்மேல் மலையுச்சியில் ஓடி ஒளிந்துகொண்டாலும், அவர்களைத் தேடிப் பிடித்து அங்கிருந்து கொண்டு வருவேன்: என் கண்களுக்குத் தப்பி ஆழ்கடலில் மறைந்தாலும், அங்கு அவர்களைக் கடிக்கும்படி பாம்புக்குக் கட்டளையிடுவேன்.

தங்கள் பகைவர்முன் அடிமைகளாய்க் கொண்டு போகப்பட்டாலும், அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்கு ஆணையிடுவேன்: அவர்களுக்கு நன்மை செய்யாது தீங்கு செய்வதிலேயே நான் கண்ணாயிருப்பேன்.

படைகளின் கடவுளாகிய ஆண்டவர் தொட மண்ணுலகம் பாகாய் உருகுகின்றது: அதில் வாழ்வோர் அனைவரும் புலம்புகின்றனர்: நாடு முழுவதும் நைல்நதியின் வெள்ளமென சுழற்றியெறியப்படுகின்றது: எகிப்து நாட்டின் நைல்நதிபோல் அலைக்கழிக்கப்பட்டு அடங்குகின்றது.

அவர் வானத்தில் தம் மேலறைகளைக் கட்டுகின்றார்: வானின் வளைவை நிலத்தில் அடித்தளமிட்டு நாட்டுகின்றார்: கடல்களின் நீரை முகந்தெடுத்து நிலத்தின்மேல் பொழிகின்றார்: "ஆண்டவர்" என்பது அவரது பெயராம்.

"இஸ்ரயேல் மக்களே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரைப் போன்றவர்கள்தானே? இஸ்ரயேல் மக்களை எகிப்து நாட்டினின்றும், பெலிஸ்தியரைக் கப்தோரிலிருந்தும், சிரியரைக் கீரிலிருந்தும் நான் அழைத்து வரவில்லையா?" என்கிறார் ஆண்டவர்.

தலைவராகிய ஆண்டவரின் கண்கள் பாவம் செய்யும் அரசை உற்றுப் பார்க்கின்றன: "மண்ணுலகில் இராதபடி அதை நான் அழித்து விடுவேன். ஆயினும் யாக்கோபின் வீட்டாரை நான் முற்றிலும் அழிக்கமாட்டேன்" என்கிறார் ஆண்டவர்.

நான் ஆணை பிறப்பிப்பேன்: எல்லா மக்களினங்கள் நடுவிலும் இஸ்ரயேல் வீட்டாரைச் சல்லடையில் தானியத்தைச் சலிப்பதுபோலச் சலிக்கப் போகின்றேன்: ஆயினும் கோதுமை மணி ஒன்றும் தரையில் விழாது.

"தீமை எங்களை அணுகாது, எங்கள்மேல் வராது" என்று என் மக்களுள் எந்தப் பாவிகள் கூறுகின்றார்களோ, அவர்கள் அனைவரும் வாளால் மடிவார்கள்.

"அந்நாள்களில் விழுந்துகிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன். அதிலுள்ள கிழிசல்களைப் பழுதுபார்த்துச் சிதைந்தவற்றைச் சீர்படுத்திப் பண்டை நாளில் இருந்ததுபோல் மீண்டும் கட்டியெழுப்புவேன்.

அப்பொழுது, ஏதோமில் எஞ்சியிருப்போரையும் எனது பெயரைத் தாங்கியிருக்கும் பிற இனத்தார் அனைவரையும் அவர்கள் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்வார்கள்," என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.

"இதோ! நாள்கள் வரப்போகின்றன: அப்போது, அறுவடை செய்வோரை உழுவோரும், கனி பிழிவோரை விதைப்போரும் தொடர்ந்து முன்னேறுவர்: மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்: குன்றுகள்தோறும் அது வழிந்தோடும்," என்கிறார் ஆண்டவர்.

"என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டுவருவேன்: அவர்கள் பாழடைந்த நகர்களைத் திரும்பக் கட்டி அவற்றில் குடியேறுவார்கள்: திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் கனிரசத்தை அருந்துவார்கள். பழத்தோட்டங்கள் அமைத்து அவற்றின் கனிகளை உண்பார்கள்.

அவர்களைத் தங்கள் நாட்டில் மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்: நான் அவர்களுக்கு அளித்திருக்கும் நாட்டிலிருந்து இனி ஒருபோதும் அவர்கள் பிடுங்கப்படமாட்டார்கள்," என்கிறார் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.

புத்தகம் 31: ஒபதியா

அதிகாரம் 1.

ஓபதியா கண்ட காட்சி: தலைவராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்து இவ்வாறு சொல்கின்றார்: "விழித்தெழுங்கள், ஏதோமுக்கு எதிராகப் போருக்குப் புறப்பட்டுச் செல்வோம்!" என்று அறிவிக்கத் பதன் ஒருவனை வேற்றினத்தாரிடையே ஆண்டவர் அனுப்பினார், என்பதாக ஆண்டவரிடமிருந்து வந்த செய்தி ஒன்றை நாம் கேட்டிருக்கிறோம்.

நான் உன்னை மக்களினத்தாரிடையே சிறுமைக்குள்ளாக்குவேன்: நீ பெரும் நிந்தைக்கு ஆளாக்கப்படுவாய்.

பாறை இடுக்குகளில் வாழ்பவனே! உயரத்திலே குடியிருப்பை அமைத்திருப்பவனே! "என்னைத் தரை மட்டும் தாழத்தக் கூடியவன் யார்?" என உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே! உன் இதயத்தின் இறுமாப்பு உன்னை ஏமாற்றிவிட்டது.

நீ கழுகைப் போல் உயர உயரப் பறந்தாலும், விண்மீன்கள் நடுவில் உன் கூட்டை அமைத்தாலும், அங்கிருந்தும் உன்னைக் கீழே விழச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.

உன்னிடம் திருடர்கள் வருவார்களாயின், கொள்ளைக்காரர்கள் இரவில் வருவார்களாயின் தங்கள் தேவைக்கு அதிகமாகத் திருடுவார்களோ? திராட்சைப் பழம் பறிக்கின்றவர்கள் உன்னிடம் வந்தால் திராட்சைப் பழங்களில் சிலவற்றையாவது விட்டுவைக்க மாட்டார்களா? நீயோவெனில் முற்றிலுமாய்ச் சூறையாடப்பட்டாய்!

ஏசா எவ்வளவாய்க் கொள்ளையடிக்கப்பட்டான்! மறைத்து வைக்கப்பட்ட அவனுடைய கருவூலங்கள் சூறையாடப்பட்டன.

உன்னோடு உடன்படிக்கை செய்தவர்கள் யாவரும் உன்னை ஏமாற்றி விட்டார்கள்: அவர்கள் உன்னை எல்லை வரை விரட்டி விட்டார்கள்: உன்னோடு உறவாடியவர்கள் உனக்கு எதிராய் எழும்பி உன்னை மேற்கொண்டார்கள்: உன்னோடு உண்டவர்களும் நல்லுறவு கொண்டிருந்தவர்களும் உனக்குக் கண்ணி வைத்தார்கள்: உன்னைக் குறித்து "அவனுக்கிருந்த அறிவுக்கூர்மை எங்கே?" என்றார்கள்.

அந்நாளில் நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும் ஏசாவின் மலைமேல் உள்ள அறிவாளிகளையும் அழிக்காமல் விடுவேனா? என்கிறார் ஆண்டவர்.

தேமான்! வலிமைமிக்க உன் வீரர்கள் திகிலடைவார்கள்: ஆதலால் ஏசாவின் மலைமேல் உள்ள யாவரும், வெட்டி வீழ்த்தப்பட்டு மடிவார்கள்.

உன் சகோதரன் யாக்கோபுக்கு எதிராக நீ செய்த கொடுமையை முன்னிட்டு, நீ வெட்கி நாணுவாய். நீ என்றுமே இல்லாது ஒழிந்து போவாய்.

அயல்நாட்டார் யாக்கோபின் செல்வத்தைக் கொள்ளையிட்ட அந்நாளில்- வெளிநாட்டார் அவன் வாயில்களுக்குள் புகுந்து எருசலேமுக்காகத் தங்களுக்குள் சீட்டுப்போட்ட அந்நாளில்- நீ விலகி நின்று அவர்களுள் ஒருவனாக இருந்தாயே!

நீ உன் சகோதரனுடைய நாளைக் கண்டு, அவனுடைய வேதனை நாளைக் கண்டு மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும்: யூதாவின் மக்களைப் பார்த்து அவர்களின் அழிவு நாளில் களிப்படையாது இருந்திருக்க வேண்டும்: அவர்களின் துன்ப நாளில் இறுமாப்படையாது இருந்திருக்க வேண்டும்:

என் மக்கள் துன்புற்ற நாளில், அவர்களுடைய வாயில்களுக்குள் நுழையாது இருந்திருக்க வேண்டும்: அவர்கள் கேடுற்ற நாளில், அவர்களின் அழிவைக் குறித்து மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும். அவர்கள் அழிவுற்ற நாளில், அவர்களின் பொருள்களைக் கொள்ளையடிக்காது இருந்திருக்க வேண்டும்.

அவர்களுள் தப்பி ஓடியவர்களை வெட்டி வீழ்த்தும்படி வழிச் சந்துகளில் பதுங்கியிராது இருந்திருக்க வேண்டும்: அவர்கள் துயருற்ற நாளில், அவர்களில் எஞ்சியோரைக் காட்டிக்கொடுக்காது இருந்திருக்க வேண்டும்.

ஏனெனில், ஆண்டவரின் நாள் வேற்றினத்தார் எல்லார் மேலும் வரப்போகின்றது: நீ செய்ததுபோலவே உனக்கும் செய்யப்படும்: நீ செய்த வினைகள் உன் தலைமேலேயே விழும்.

என் திரு மலையில், நீங்கள் என் தண்டனையாகிய பானத்தைக் குடித்தது போலவே வேற்றினத்தார் அனைவரும் குடிப்பார்கள். மேலும்குடிப்பார்ர்கள், குடித்துக் கொண்டே இருப்பார்கள்: குடித்து மயங்கிக்கிடப்பார்கள்.

ஆனால், தப்பிப் பிழைத்தோர் சீயோன் மலையில் இருப்பர்: சீயோன் மலையும் பய்மையாய் இருக்கும்: யாக்கோபின் குடும்பத்தார் தங்கள் உரிமைச் சொத்தைத் திரும்பப் பெறுவர்.

யாக்கோபின் குடும்பத்தார் நெருப்பாய் இருப்பர்: யோசேப்பின் குடும்பத்தார் தீப்பிழம்பாய் இருப்பர்: ஏசாவின் குடும்பத்தாரோ வைக்கோலாய் இருப்பர்: அவர்கள் இவர்களைத் தீக்கிரையாக்கி முற்றிலும் அழித்து விடுவார்கள்: ஏசாவின் குடும்பத்தாருள் எவருமே தப்பமாட்டார்: ஆண்டவரே இதைக் கூறினார்.

நெகேபில் இருப்பவர்கள் ஏசாவின் மலையைத் தமதாக்கிக் கொள்வார்கள். செபேலாவைச் சார்ந்தவர்கள் பெலிஸ்தியர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள். அவர்கள் எப்ராயிம், சமாரியா நாடுகளைத் தம் உடைமையாக்கிக் கொள்வார்கள்: பென்யமினோ கிலயாதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வான்.

இஸ்ரயேலிலிருந்து நாடுகடத்தப்பட்ட வீரர்கள் திரும்பி வந்து பெனீசியாவிலிருந்து சாரிபாத்து வரை உள்ள நாட்டை உரிமையாக்கிக் கொள்வீர்: எருசலேமிலிருந்து செபராதுக்கு நாடுகடத்தப்பட்டோ ர் நெகேபின் நகர்களைச் சொந்தமாக்கிக் கொள்வர்.

விடுதலை பெற்றோர் ஏசாவின் மலையை ஆளுவதற்குச் சீயோன் மலைமேல் ஏறுவர்: அரசாட்சி ஆண்டவருக்கே உரித்தாகும்.

புத்தகம் 32 - யோனா

அதிகாரம் 1.

அமித்தாயின் மகன் யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.

அவர், "நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு வரப்போகிறது என்று அங்குள்ளோருக்கு அறிவி. அவர்கள் செய்யும் தீமைகள் என்முன்னே வந்து குவிகின்றன" என்றார்.

யோனாவோ ஆண்டவரிடமிருந்து தப்பியோட எண்ணித் தர்சீசுக்குப் புறப்பட்டார். அவர் யோப்பாவுக்குப் போய், அங்கே தர்சீசுக்குப் புறப்படவிருந்த ஒரு கப்பலைக் கண்டார்: உடனே கட்டணத்தைக் கொடுத்து விட்டு, ஆண்டவர் திருமுன்னின்று தப்பியோட அந்தக் கப்பலில் ஏறி, அதில் இருந்தவர்களோடு தர்சீசுக்குப் பயணப்பட்டார்.

ஆனால் ஆண்டவர் கடலில் கடுங்காற்று வீசும்படி செய்தார். கடலில் பெரும் கொந்தளிப்பு உண்டாயிற்று: கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது.

கப்பலில் இருந்தவர்கள் திகிலடைந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தம் தெய்வத்தை நோக்கி மன்றாடலானார்கள். கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அவர்கள் அதிலிருந்த சரக்குகளைக் கடலில் பக்கியெறிந்தார்கள். யோனாவோ ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப் போய்ப் படுத்து அயர்ந்து பங்கிக் கொண்டிருந்தார்.

கப்பல் தலைவன் அவரிடம் வந்து, "என்ன இது? இப்படித் பங்கிக் கொண்டிருக்கிறாயே! எழுந்திரு. நீயும் உன் தெய்வத்தை நோக்கி வேண்டிக் கொள். ஒருவேளை அந்தத் தெய்வமாவது நம்மைக் காப்பாற்றலாம். நாம் அழிந்து போகாதிருப்போம்" என்றான்.

பிறகு கப்பலில் இருந்தவர்கள், "நமக்கு இந்தப் பெரும் தீங்கு யாரால் வந்தது என்று கண்டறியச் சீட்டுக் குலுக்குவோம்" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். அவ்வாறே அவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள்.

சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது. எனவே, அவர்கள் அவரை நோக்கி, "இப்பொழுது சொல். இந்தப் பெருந்தீங்கு யாரால் வந்தது? உன் வேலை என்ன? எங்கிருந்து வருகிறாய்? உன் நாடு எது? உன் இனம் எது?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், "நான் ஓர் எபிரேயன். நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரை வழிபடுபவன்" என்று சொன்னார்.

மேலும், தாம் அந்த ஆண்டவரிடமிருந்து தப்பியோடி வந்ததாகவும் கூறினார். எனவே, அவர்கள் மிகவும் அஞ்சி, "நீ ஏன் இப்படிச் செய்தாய்," என்று கேட்டார்கள்.

கடலில் கொந்தளிப்பு மேலும் கடுமையாகிக் கொண்டிருந்ததால் அவர்கள் யோனாவிடம், "கடல் கொந்தளிப்பு அடங்கும்படி நாங்கள் உன்னை என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், "நீங்கள் என்னைத் பக்கிக் கடலில் எறிந்து விடுங்கள். அப்பொழுது கொந்தளிப்பு அடங்கிவிடும்: நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். உங்களைத் தாக்கும் இந்தக் கடும்புயல் என்னால்தான் உண்டாயிற்று என்பது எனக்குத் தெரியும்" என்றார்.

ஆயினும், அவர்கள் கரை போய்ச் சேர மிகுந்த வலிமையுடன் தண்டு வலித்தனர்: ஆனால் அவர்களால் இயலவில்லை. ஏனெனில், கடலின் கொந்தளிப்பு மேலும் மிகுதியாகக் கொண்டேயிருந்தது.

அவர்கள் அதைக் கண்டு ஆண்டவரை நோக்கிக் கதறி, "ஆண்டவரே, இந்த மனிதனுடைய உயிரின் பொருட்டு எங்களை அழிய விட வேண்டாம்: குற்றமில்லாத ஒருவனைச் சாகடித்ததாக எங்கள் மீது சுமத்தவேண்டாம். ஏனெனில், ஆண்டவராகிய நீரே உமது திருவுளத்திற்கேற்ப இவ்வாறு செய்கிறீர்" என்று சொல்லி மன்றாடினார்கள்.

பிறகு அவர்கள் யோனாவைத் பக்கிக் கடலில் எறிந்தார்கள்: கடல் கொந்தளிப்பும் தணிந்தது.

அதைக் கண்டு அந்த மனிதர்கள் ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினார்கள். அவர்கள் ஆண்டவருக்குப் பலி செலுத்தினார்கள்: பொருத்தனைகளும் செய்து கொண்டார்கள்.

ஆண்டவர் ஏற்பாடு செய்திருந்த படியே ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார்.

அதிகாரம் 2.

யோனா அந்த மீன் வயிற்றில் இருந்தவாறு, தம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடலானார்:

"ஆண்டவரே! எனக்கு இக்கட்டு வந்த வேளைகளில் நான் உம்மை நோக்கி மன்றாடினேன். நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர். பாதாளத்தின் நடுவிலிருந்து உம்மை நோக்கிக் கதறினேன்: என் கூக்குரலுக்கு நீர் செவிகொடுத்தீர்:

நடுக் கடலின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்: தண்ணீர்ப் பெருக்கு என்னைச் சூழந்துகொண்டது. நீர் அனுப்பிய அலை திரை எல்லாம் என்மீது புரண்டு கடந்து சென்றன.

அப்பொழுது நான், "உமது முன்னிலையிலிருந்து இனி எவ்வாறு உமது கோவிலைப் பார்க்கப் போகிறேன்" என்று சொல்லிக்கொண்டேன்.

மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை அழுத்திற்று: ஆழ்கடல் என்னைச் சூழ்ந்"தது: கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது.

மலைகள் புதைந்துள்ள ஆழம் வரை நான் கீழுலகிற்கு இறங்கினேன். அங்கேயே என்னை என்றும் இருத்தி வைக்கும்படி, அதன் தாழ்ப்பாள்கள் அடைத்துக் கொண்டன. ஆனால், என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அந்தக் குழியிலிருந்து என்னை உயிரோடு மீட்டீர்.

என் உயிர் ஊசாலிக் கொண்டிருந்த போது, ஆண்டவரே! உம்மை நினைத்து வேண்டுதல் செய்தேன். உம்மை நோக்கி நான் எழுப்பிய மன்றாட்டு உமது கோவிலை வந்தடைந்தது.

பயனற்ற சிலைகளை வணங்குகின்றவர்கள் உம்மிடம் கொண்டிருந்த பற்றினைக் கைவிட்டார்கள்.

ஆனால், நான் உம்மைப் புகழ்ந்து பாடி உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்: நான் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். மீட்பு அளிப்பவர் ஆண்டவரே" என்று வேண்டிக்கொண்டார்.

ஆண்டவர் அந்த மீனுக்குக் கட்டளையிட, அது யோனாவைக் கரையிலே கக்கியது.

அதிகாரம் 3.

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர்,

"நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை

அங்குள்ளோருக்கு அறிவி" என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக்

கடக்க மூன்றுநாள் ஆகும். யோனா நகருக்குள் சென்ற, ஒரு நாள் முழுதும் நடந்தபின், உரத்த குரலில், "இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்" என்று அறிவித்தார்.

நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்.

இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கா஡ந்தான்.

மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது.

மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்: தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார்: அவரது கடுஞ்சினமும் தணியும்: நமக்கு அழிவு வராது."

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்: தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

அதிகாரம் 4.

ஆனால் இது யோனாவுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அவர் கடுஞ்சினங் கொண்டு ஆண்டவரிடம் முறையிட்டார்.

"ஆண்டவரே, நான் என் ஊரை விட்டுப் புறப்படுமுன்பே இதைத்தானே சொன்னேன்? இதை முன்னிட்டே நான் தர்சீசுக்கு ஓடிப்போக முயன்றேன். நீர் கனிவு மிக்கவர், இரக்கமுள்ளவர், மிகுந்த பொறுமையும் அளவிலா அன்பும் உள்ள கடவுள் என்பது எனக்குத் தெரியும். அழிக்க நினைப்பீர்: பிறகு உம் மனத்தை மாற்றிக் கொள்வீர் என்பதும் எனக்கு அப்போதே தெரியும்.

ஆகையால் ஆண்டவரே, என் உயிரை எடுத்துக்கொள்ளும். வாழ்வதைவிடச் சாவதே எனக்கு நல்லது" என்று வேண்டிக் கொண்டார்.

அதற்கு ஆண்டவர், "நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?" என்று கேட்டார்.

யோனாவோ நகரைவிட்டு வெளியேறினார்: நகருக்குக் கிழக்கே போய் உட்கார்ந்துகொண்டார். பிறகு அவர் தமக்கு ஒரு பந்தலை அங்கே அமைத்துக்கொண்டு, நகருக்கு நிகழப் போவதைப் பார்ப்பதற்காக அதன் நிழலில் அமர்ந்திருந்தார்.

கடவுளாகிய ஆண்டவரது ஏற்பாட்டின்படி ஆமணக்குச் செடி ஒன்று அங்கே முளைத்தது. அது வளாந்து யோனாவின் தலைக்கு நிழல் தந்து அவரது மனச்சோர்வை நீக்கியது. அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு யோனா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

ஆனால் ஆண்டவரது கட்டளைப்படி மறு நாள் பொழுது விடியும் நேரத்தில் ஒரு புழு வந்து அந்த ஆமணக்குச் செடியை அரிக்கவே, செடி உலர்ந்து போயிற்று.

கதிரவன் எழுந்தபின் கடவுளின் கட்டளைப்படி, கிழக்கிலிருந்து அனற்காற்று வீசிற்று. கடும் வெயில் யோனாவின் தலையைத் தாக்கவே அவருக்கு மயக்கம் உண்டாயிற்று. "வாழ்வதை விடச் சாவதே எனக்கு நல்லது" என்று அவர் சொல்லி, தமக்குச் சாவு வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.

அப்பொழுது கடவுள் யோனாவை நோக்கி, "ஆமணக்குச் செடியைக் குறித்து நீ இவ்வாறு சினங் கொள்வது முறையா?" என்று கேட்டார். அதற்கு யோனா, "ஆம், முறைதான்: செத்துப்போகும் அளவுக்கு நான் சினங் கொள்வது முறையே" என்று சொன்னார்.

ஆண்டவர் அவரை நோக்கி, அந்தச் செடி ஓர் இரவில் முளைத்தெழுந்து, மறு இரவில் முற்றும் அழிந்தது. நீ அதற்காக உழைக்கவும் இல்லை.

அதை வளர்க்கவுமில்லை. அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே! இந்த நினிவே மாநகரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். வலக்கை எது, இடக்கை எது என்று கூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிருந்த கால்நடைகளும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?" என்றார்.

புத்தகம் 33 - மீக்கா

அதிகாரம் 1.

யூதாவின் அரசர்களான யோத்தாம், ஆகாசு, எசேக்கியா ஆகியவர்களின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்காவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: அவர் சமாரியாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட காட்சி இதுவே:

மக்களினங்களே, நீங்கள் அனைவரும் கேளுங்கள்: நிலவுலகே, அதில் உள்ளவையே, செவிகொடுங்கள். தலைவராகிய ஆண்டவர் தம் திருக்கோவிலிருந்து உங்களுக்கு எதிராகச் சான்றுபகரப் போகிறார்.

இதோ! ஆண்டவர் தாம் தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு வருகின்றார்: அவர் இறங்கிவந்து நிலவுலகின் மலையுச்சிகள் மிதிபட நடப்பார்.

நெருப்பின்முன் வைக்கப்பட்ட மெழுகுபோலவும், பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் வெள்ளம்போலவும், அவர் காலடியில் மலைகள் உருகிப்போகும்: பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.

யாக்கோபின் குற்றத்தை முன்னிட்டும் இஸ்ரயேல் குடும்பத்தாரின் பாவங்களை முன்னிட்டுமே இவை எல்லாம் நேரிடும். யாக்கோபின் குற்றத்திற்"குக் காரணம் யாது? சமாரியா அன்றோ! யூதாவின் தொழுகைமேடுகளுக்குக் காரணம் யாது? எருசலேம் அன்றோ!

ஆதலால், சமாரியாவைப் பாழடைந்த மண்மேடாகவும் திராட்சை நடும் தோட்டமாகவும் செய்திடுவேன்: அதன் கற்களைப் பள்ளத்தாக்கில் உருட்டிவிட்டு, அதன் அடித்தளங்கள் வெளியிலே தெரியும்"படி செய்வேன்.

அதன் செதுக்குப் படிமங்கள் எல்லாம் துகள் துகளாக நொறுக்கப்படும்: அதன் பணயங்கள் எல்லாம் நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்: அதன் சிலைகளை எல்லாம் உடைத்து கற்குவியல் ஆக்குவேன்: ஏனெனில், விலைமகளுக்குரிய பணயமாக அவை சேர்க்கப்பட்டன: விலைமகளுக்குரிய பணயமாகவே அவை போய்விடும்.

இதை முன்னிட்டே நான் ஓலமிட்டுக் கதறி அழுவேன்: வெறுங்காலோடு ஆடையின்றித் திரிவேன்: குள்ளநரிகளைப்போல் ஊளையிடுவேன்: நெருப்புக் கோழிபோல் கதறி அழுவேன்.

ஏனெனில், சமாரியாவின் புண் ஆறாது: யூதாவரையிலும் அது படர்ந்துவிட்டது: என் மக்களின் வாயிலாம் எருசலேமையும் வந்து எட்டியுள்ளது.

காத்தில் இதை அறிவிக்கவேண்டாம்: கதறியழவும் வேண்டாம்: பெத்லயப்ராவில் புழுதியில் விழுந்து புரளுங்கள்.

சாபீரில் குடியிருப்போரே, ஆடையின்றி மானக்கேடுற்று அகன்று போங்கள்: சானானில் குடியிருப்போரும் வெளியே வருவதில்லை: பெத்தேத்சலிலும் புலம்பல் எழும்பும். அங்கு உங்களுக்கு அடைக்கலம் கிடைக்காது.

மாரோத்தில் குடியிருப்போர் நன்மை வரும் என ஆவலோடு காத்திருக்கின்றன: ஏனெனில், தீமை ஆண்டவரிடம் இருந்து இறங்கி எருசலேமின் வாயில்மேல் விழுந்தது.

இலாக்கீசில் குடியிருப்போரே, விரைந்தோடும் குதிரைகளைத் தேரிலே பூட்டுங்கள்: மகள் சீயோனின் பாவத்திற்கு ஊற்று நீங்களே: இஸ்ரயேலின் குற்றங்கள் முதலில் காணப்பட்டது உங்களிடம்தான்.

ஆதலால், மோரசேத்துகாத்துக்கு நீ சீதனம் கொடுப்பாய்: அக்சீபின் வீடுகள் இஸ்ரயேல் அரசர்களை ஏமாற்றி விடும்.

மாரேசாவில் குடியிருப்போரே, கொள்ளைக்காரன் ஒருவன் உங்கள்மேல் திரும்பவும் வரும்படி செய்வேன்: இஸ்ரயேலின் மேன்மை அதுல்லாமில் ஒளிந்து கொள்ளும்.

உங்கள் அருமைப் பிள்ளைகளுக்காகத் துக்கங் கொண்டாட உங்கள் தலையை மொட்டையடித்துக்கொள்ளுங்கள்: கழுகைப்போல் முற்றிலும் மொட்டையடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடுகடத்தப்படுவார்கள்.

அதிகாரம் 2.

தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஜயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கைவலிமையினால் அவர்கள் அதைச்செய்து முடிக்கின்றார்கள்.

வயல் வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்: வீடுகள்மேல் இச்சை கொண்டு அவற்றைக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள்: ஆண்களை ஒடுக்கி, அவர்கள் வீட்டையும் உரிமைச் சொத்தையும் பறிமுதல் செய்கின்றார்கள்.

ஆதலால் ஆண்டவர் கூறுவது இதுவே: "இந்த இனத்தாருக்கு எதிராகத் தீமை செய்யத் திட்டமிடுகிறேன்: அதனினின்று உங்கள் தலையை விடுவிக்க உங்களால் இயலாது: நீங்கள் ஆணவம் கொண்டு நடக்கமாட்டீர்கள்: ஏனெனில் காலம் தீயதாய் இருக்கும்.

அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி இரங்கற்பா இயற்றி, "அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே: ஆண்டவருடைய மக்களின் உரிமைச்சொத்து கைமாறிவிட்டதே! நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றாரே! என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.

ஆதலால், மல்பிடித்துப் பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் எவனும் ஆண்டவரின் சபையில் இரான்.

அவர்கள் பிதற்றுவது: "சொற்பொழிவுகளை நிறுத்துங்கள்: அவற்றைக் குறித்துப் பேசவேண்டாம்: மானக்கேடு நம்மை அணுகாது.

யாக்கோபின் குடும்பத்தாரே, ஆண்டவர் பொறுமையிழந்து விட்டாரோ? இவற்றைச் செய்பவர் அவர்தாமோ? நேர்மையாய் நடப்போரிடம் அவர் பரிவுடன் பேசமாட்டாரோ? "

ஆனால், நீங்கள்தாம் என் மக்களைப் பகைவரைப்போல் தாக்குகின்றீர்கள்! போரில் நாட்டம் கொள்ளாமல், அமைதியை நாடுவோரின் மேலாடையைப் பறிக்கின்றீர்கள்: இதனால், அவர்களின் மன அமைதியைக் கெடுக்கின்றீர்கள்:

என் மக்களின் கூட்டத்திலுள்ள பெண்களை அவர்களுடைய அழகிய வீடுகளிலிருந்து விரட்டுகின்றீர்கள்: அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடம் என் மாட்சி என்றும் விளங்காதவாறு செய்துவிடுகின்றீர்கள்.

எழுந்து அகன்றுபோங்கள்: இது இளைப்பாறும் இடம் அல்ல: நாட்டில் தீட்டு ஏற்பட்டுவிட்டது: அது அழிவைக் கொண்டுவரும். அது மிகக்கொடிய பேரழிவாய் இருக்கும்.

"திராட்சை இரசத்தையும் மதுவையும்பற்றி உங்களுக்கு உரையாற்றுவேன் " என்று கூறி, வீண் சொற்களையும் பொய்களையும் பிதற்றுகிறவன்தான் இம்மக்களுக்கு ஏற்ற உரையாளன்!

யாக்கோபே! நான் உங்கள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டுவேன்: இஸ்ரயேலில் எஞ்சியயோலை ஒன்றாகத் திரட்டுவேன்: இரைச்சலிடும் அந்தக் கூட்டத்தை ஆடுகளைக் கிடையில் மடக்குவது போலவும்: மந்தையை மேய்ச்சல் நிலத்தில் வளைப்பது போலவும் ஒன்றாகச் சேர்ப்பேன்.

அவர்களின் வழிகாட்டிகள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளியேறுவார்கள்: அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வார்: ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார். "

அதிகாரம் 3.

அப்பொழுது நான் கூறியது: "யாக்கோபின் தலைவர்களே! இஸ்ரயேலின் குடும்பத்தை ஆள்பவர்களே, நீதியை அறிவிப்பது உங்கள் கடமை அன்றோ!

நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையை நாடுகின்றீர்கள்: என் மக்களின் தோலை உயிரோடே உரித்து, அவர்கள் எலும்புகளிலிருந்து சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள்:

என் மக்களின் சதையைத் தின்கின்றீர்கள்: அவர்களின் தோலை உரிக்கின்றீர்கள்:அவர்களின் எலும்புகளை முறித்து, சட்டியில் போடப்படும் இறைச்சி போலவும், கொப்பரையில் கொட்டப்படும் மாமிசம் போலவும் துண்டு துண்டாக்குகின்றீர்கள்.

அப்பொழுது நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுவீர்கள்: ஆனால் உங்களுக்கு அவர் செவிசாய்க்கமாட்டார். அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை உங்களிடம் இருந்து மறைத்துக்கொள்வார்: ஏனெனில், உங்களின் செயல்கள் தீயனவாய் இருக்கின்றன. "

இறைவாக்கினர்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: "அவர்கள் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கின்றார்கள். வயிறார உண்ணக் கொடுத்தவரிடம் ஓஅமைதி உண்டாகுக!ஓ என உரக்கச் செல்கின்றார்கள்: வாய்க்குத் தீனி போடாதவரிடம் ஓபுனிதப் போர் வரும்"ஓ எனக் கூறுகின்றார்கள். "

ஆதலால் "இறைவாக்கினரே, திருக்காட்சி உங்களுக்குக் கிடைக்காது: முன்னுரைத்தல் இராது: காரிருள் உங்களைக் கவ்விக் கொள்ளும்: இனி உங்கள்மேல் கதிரவன் ஒளி படராது: பகலும் உங்களுக்கு இருளாய் இருக்கும். "

காட்சி காண்பவர்கள் மானக்கேடு அடைவார்கள்: முன்னுரைப்பவர்கள் நாணிப்போவார்கள்: அவர்கள் அனைவரும் தங்கள் வாயைப் பொத்திக் கொள்வார்கள்: ஏனெனில் கடவுளிடமிருந்து மறுமொழி ஏதும் வராது.

ஆனால், நான் யாக்கோபுக்கு அவன் குற்றத்தையும், இஸ்ரயேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்க, வல்லமையாலும் ஆண்டவரின் ஆவியாலும், நீதியாலும் ஆற்றலாலும் நிரப்பப்பட்டுள்ளேன்.

யாக்கோபு குடும்பத்தாரின் தலைவர்களே, இஸ்ரயேல் குடும்பத்தை ஆள்பவர்களே, இதைக் கேளுங்கள்: நீங்கள் நீதியை அருவருக்கிறீர்கள்: நேர்மையானவற்றைக் கோணலாக்குகின்றீர்கள்.

இரத்தப்பழியால் சீயோனையும், அநீதியால் எருசலேமையும் கட்டியெழுப்புகின்றீர்கள்.

அந்த நகரின் தலைவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள்: அதன் குருக்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர்: இறைவாக்கினர் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்: ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி, "ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார் அல்லவா? எனவே தீமை நம்மை அணுகாது " என்று சொல்லிக்கொள்கின்றார்கள்.

ஆதலால், உங்களை முன்னிட்டுச் சீயோன் வயல்வெளியைப்போல் உழப்படும்: எருசலேம் பாழடைந்த மண்மேடாக மாறும்: கோவிலுள்ள மலையோ அடர்ந்த காடாகும்". "

அதிகாரம் 4.

"இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை: மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்: குன்றுகளுக்கெல்லாம் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதை நோக்கிச் சாரைசாரையாய் வருவார்கள்.

வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, "புறப்படுங்கள், ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளது கோவிலுக்குப் போவோம்: அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம் " என்பார்கள்: ஏனெனில் சீயோனிலிருந்து திருச்சட்டம் வெளிப்படும்: எருசலேமிலிருந்து ஆண்டவரின் வாக்கு புறப்படும்.

அவரே பல மக்களினங்களுக்கு இடையே உள்ள வழக்குகளைத் தீர்த்துவைப்பார்: தொலைநாடுகளிலும் வலிமைமிக்க வேற்றினத்தார்க்கு நீதி வழங்குவார்: அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள்: ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.

அவர்களுள் ஒவ்வொருவரும் தம் திராட்சைத் தோட்டத்தின் நடுவிலும், அத்தி மரத்தின் அடியிலும் அமர்ந்திருப்பர்: அவர்களை அச்சுறுத்துவார் எவருமில்லை: ஏனெனில், படைகளின் ஆண்டவரது திருவாய் இதை மொழிந்தது.

மக்களினங்கள் யாவும் தம் தெய்வத்தின் பெயரை வழிபடும். நாமோ, நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு என்றென்றும் பணிந்திருப்போம்.

அந்நாளில், "நான் முடமாக்கப்"பட்டோ ரை ஒன்று சேர்ப்பேன்: விரட்டியடிக்கப்பட்டோ ரையும் என்னால் தண்டிக்கப்பட்டோ ரையும் ஒன்றுகூட்டுவேன் " என்கிறார் ஆண்டவர்.

முடமாக்கப்பட்டோ ரை எஞ்சியோராய் ஆக்குவேன்: விரட்டியடிக்கப்பட்டோ ரை வலியதோர் இனமாக உருவாக்குவேன்: அன்றுமுதல் என்றென்றும் ஆண்டவராகிய நானே சீயோன் மலைமேலிருந்து அவர்கள்மேல் ஆட்சிபுரிவேன்.

மந்தையின் காவல் மாடமே! மகள் சீயோனின் குன்றே! முன்னைய அரசுரிமை உன்னை வந்துசேரும்: மகள் எருசலேமின் அரசு உன்னை வந்தடையும்.

இப்போது நீ கூக்குரலிட்டுக் கதறுவானேன்? பேறுகாலப் பெண்ணைப்போல் ஏன் வேதனைப்படுகின்றாய்? அரசன் உன்னிடத்தில் இல்லாமற் போனானோ? உனக்கு அறிவு புகட்டுபவன் அழிந்தொழிந்தானோ?

மகளே சீயோன்! பேறுகாலப் பெண்ணைப்போல நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு: ஏனெனில், இப்பொழுதே நீ நகரைவிட்டு வெளியேறுவாய்: வயல்வெளிகளில் குடியிருப்பாய்: பாபிலோனுக்குப் போவாய்: அங்கிருந்து நீ விடுவிக்கப்படுவாய்: உன் பகைவர் கையினின்றும் ஆண்டவர் உன்னை மீட்டருள்வார்.

இப்பொழுது, வேற்றினத்தார் பலர் உனக்கு எதிராய் ஒன்று கூடியிருக்கின்றார்கள்: "சீயோன் தீட்டுப்படட்டும்: அதன் வீழ்ச்சியை நம் கண்கள் காணட்டும் " என்று சொல்லுகின்றார்கள்.

ஆனால் அவர்கள் ஆண்டவரின் எண்ணங்களை அறியவில்லை. அவரது திட்டத்தையும் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் புணையடிக்கும் களத்தில் அரிக்கட்டுகளைச் சேர்ப்பதுபோல் அவர் அவர்களைச் சேர்த்து வைத்திருக்கின்றார்.

மகள் சீயோனே, நீ எழுந்து புணையடி: நான் உன் கொம்பை இரும்பாக மாற்றுவேன்: உன்னுடைய குளம்புகளை வெண்கலம் ஆக்குவேன்: மக்களினங்கள் பலவற்றை நீ நொறுக்கிப் போடுகிறாய்: அவர்களிடம் கொள்ளையடித்தவற்றை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாய்: அவர்களது செல்வங்களை அனைத்துலகின் ஆண்டவரிடம் ஒப்படைப்பாய். "

அதிகாரம் 5.

அரண்சூழ் நகரில் வாழும் மக்களே! உங்கள் மதில்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்: உங்களுக்கு எதிராக முற்றுகையிடப்பட்டுள்ளது: இஸ்ரயேலின் ஆளுநன் கோலால் கன்னத்தில் அடி பெறுவான்.

நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர்: உன்னிடமிருந்தே தோன்றுவார்: அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.

ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்: அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.

அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்: அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்: ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்:

அவரே அமைதியை அருள்வார். அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும்போதும், நம் அரண்களை அழித்தொழிக்கும்போதும் அவர்களுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரையும் மக்கள் தலைவர் எண்மரையும் நாம் கிளர்ந்தெழச் செய்வோம்.

அவர்கள் அசீரியா நாடு முழுவதையும் நிம்ரோது நாட்டை அதன் நுழைவாயில்கள் வரையிலும் தங்கள் வாளுக்கு இரையாக்குவார்கள்: அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும் போதும், நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும், நம்மை அவர்களிடமிருந்து விடுவிப்பார்கள்.

அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர் ஆண்டவரிடமிருந்து வரும் பனியைப் போலவும் மனிதருக்காக காத்திராமலும்" மானிடர்க்காகத் தாமதிக்காமலும், புல்மேல் பெய்கின்ற மழைத்துளிகள் போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.

மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர் காட்டு விலங்குகளிடையே இருக்கும் சிங்கம் போலவும், ஆட்டு மந்தைக்குள் நுழைந்து யாரும் விடுவிக்க இயலாத நிலையில் அவற்றை மிதித்துத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போடும் சிங்கக் குட்டி போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.

உனது கை உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்: உன்னுடைய எதிரிகள் அனைவரும் அழிந்தொழிவார்கள்.

அந்நாளில், "நான் உன்னிடமுள்ள உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்: உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன் " என்கிறார் ஆண்டவர்.

"உன் நாட்டிலுள்ள நகர்களைத் தகர்த்தெறிவேன்: உன் அரண்கள் அனைத்தையும் தரைமட்டமாக்குவேன்.

உன்னுடைய மாயவித்தைக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன்: குறிசொல்லுவோர் உன்னிடம் இல்லாதொழிவர்.

நீ செய்து வைத்திருக்கும் சிலைகளையும் படிமங்களையும் உடைத்தெறிவேன்: உன் கைவினைப் பொருள்கள்முன் இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய்.

நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப் பிடுங்கி எறிவேன்: உன் நகரங்களை அழித்தொழிப்பேன்.

எனக்குச் செவி கொடாத வேற்றினத்தார்மேல் சினத்துடனும் கடும் சீற்றத்துடனும் பழிதீர்த்துக் கொள்வேன். "

அதிகாரம் 6.

ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில் உன் வழக்கைச் சொல்: குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும்.

மலைகளே, மண்ணுலகின் நிலையான அடித்தளங்களே, ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்: ஆண்டவருக்குத் தம் மக்களோடு வழக்கு ஒன்று உண்டு: இஸ்ரயேலோடு அவர் வாதாடப் போகின்றார்.

என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்? எதில் நான் உங்களைத் துயரடையச் செய்தேன்? எனக்கு மறுமொழி கூறுங்கள்.

நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்தேன்: அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டு வந்தேன்: உங்களுக்கு முன்பாக மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் அனுப்பிவைத்தேன்.

என் மக்களே, மோவாபு அரசன் பாலாக்கு வகுத்த திட்டத்தை நினைத்துப் பாருங்கள்: பெயோரின் மகன் பிலயாம் அவனுக்குக் கூறிய மறுமொழியையும், சித்திமுக்கும் கில்காலுக்கும் இடையே நடந்தவற்றையும் எண்ணிப்பாருங்கள்: அப்போது ஆண்டவரின் மீட்புச் செயல்களை அறிந்து கொள்வீர்கள்.

ஆண்"டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா?

ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா?

ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?

ஆண்டவரின் குரல் நகரை நோக்கிக் கூக்குரலிடுகின்றது: உம் பெயருக்கு அஞ்சி நடப்பதே உண்மையான ஞானம். நகரில் கூடியிருப்போரே! நான் கூறுவதைக் கேளுங்கள்:

"கொடியோரின் வீட்டில் தீய வழியால் சேர்க்கப்பட்ட களஞ்சியங்களையும் சபிக்கப்பட்ட மரக்காலையும் நான் மறப்பேனோ?

கள்ளத் தராசையும் கள்ள எடைக் கற்களையும் கொண்ட பையை வைத்திருப்போரை நேர்மையாளர் எனக் கொள்வேனோ?

உங்களிடையே உள்ள செல்வர்கள் கொடுமை நிறைந்தவர்கள்: அங்கே குடியிருப்பவர்கள் பொய்யர்கள்: அவர்கள் வாயிலிருந்து வஞ்சனையான பேச்சே வெளிப்படுத்துகின்றது.

ஆதலால், நான் உங்களை உங்கள் பாவங்களுக்காகத் தண்டிக்கத் தொடங்கியுள்ளேன்: நீங்கள் பாழாய்ப் போவீர்கள்.

நீங்கள் உணவருந்தினாலும் நிறைவடைய மாட்டீர்கள்: பசி உங்கள் வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருக்கும்: நீங்கள் எதையும் பாதுகாப்பாக வைத்திருக்கமாட்டீர்கள், இழப்பீர்கள்: அப்படியே நீங்கள் எதையாவது பாதுகாப்பாக வைத்தாலும் அதை நான் வாளுக்கு இரையாக்குவேன்.

நீங்கள் விதைப்பீர்கள்: ஆனால், அறுவடை செய்யமாட்டீர்கள்: ஒலிவக் கொட்டைகளை ஆலைக்குள் இட்டு ஆட்டுவீர்கள், ஆனால், உங்஥களுக்கு எண்ணெய் தடவிக்கொள்ளமாட்டீர்கள்: திராட்சைப் பழம் பிழிவீர்கள்: ஆனால், திராட்சை இரசத்தைச் சுவைக்கமாட்டீர்கள்.

ஏனெனில், நீங்கள் ஒம்ரியின் கட்டளைகளைக் கடைப்பிடித்தீர்கள்: ஆகாசு குடும்பத்தாரின் செயல்கள் அனைத்தையும் பின்பற்றினீர்கள், அவர்களின் திட்டங்களைப் பின்பற்றி நடந்தீர்கள்: ஆதலால், நான் உங்களை அழிவுக்குக் கையளிப்பேன்: உங்களிடையே குடியிருப்போர் இகழ்ச்சிக்கு உள்ளாவர்: மக்களினங்களின் நிந்தைக்கு ஆளாவீர்கள்.

அதிகாரம் 7.

ஜயோ! நான் கோடைக்காலக் கனிகளைக் கொய்வதற்குச் சென்றவனைப் போலானேன்: திராட்சை பறித்து முடிந்தபின் பழம் பறிக்கச் சென்றவனைப் போலானேன்: அப்பொழுது தின்பதற்கு ஒரு திராட்சைக் குலையும் இல்லை: என் உள்ளம் விரும்பும் முதலில் பழுத்த அத்திப் பழம்கூட இல்லை:

நாட்டில் இறைப்பற்றுள்ளோர் அற்றுப்போனார்: மனிதருள் நேர்மையானவர் எவருமே இல்லை. அவர்கள் அனைவரும் இரத்தப் பழிவாங்கப் பதுங்கிக் காத்திருக்கின்றனர்: ஒருவர் ஒருவரைப் பிடிக்கக் கண்ணி வைத்து வேட்டையாடுகின்றனர்.

தீமை செய்வதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்: தலைவனும் நீதிபதியும் கையூட்டுக் கேட்கின்றனர்: பெரிய மனிதர் தாம் விரும்பியதை வாய்விட்டுக் கூறுகின்றனர்: இவ்வாறு நெறிதவறி நடக்கின்றனர்.

அவர்களுள் சிறந்தவர் முட்செடி போன்றவர்! அவர்களுள் நேர்மையாளர் வேலிமுள் போன்றவர்! அவர்களுடைய காவலர்கள் அறிவித்த தீர்ப்பின் நாள் வந்துவிட்டு: இப்பொழுதே அவர்களுக்குத் திகில்.

அடுத்திருப்பவன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டாம்: தோழனிடத்திலும் நம்பிக்கை வைக்க வேண்டாம். உம் மார்பில் சாய்ந்திருக்கிற மனைவி முன்பும் உன் வாய்க்குப் பூட்டுப்போடு!

ஏனெனில், மகன் தன் தந்தையை அவமதிக்கின்றான்: மகள் தன் தாய்க்கு எதிராக எழும்புகின்றாள், மருமகள், தன் மாமியாரை எதிர்க்கின்றாள்: ஒருவரின் பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.

நானோ, ஆண்டவரை விழிப்புடன் நோக்கியிருப்பேன்: என்னை மீட்கும் என் கடவுளுக்காகக் காத்திருப்பேன். என் கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள்வார்.

என் பகைவனே, என்னைக் குறித்துக் களிப்படையாதே: ஏனெனில், நான் வீழ்ச்சியுற்றாலும் எழுச்சிபெறுவேன். நான் இருளில் குடியிருந்தாலும் ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார்.

நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்: ஆதலால், அவரது கடும் சினத்தை, அவர் எனக்காக வழக்காடி எனக்கு நீதி வழங்கும்வரை, தாங்கிக்கொள்வேன்: அவர் என்னை ஒளிக்குள் கொண்டு வருவார்: அவரது நீதியை நான் காண்பேன்.

அப்போது, என்னோடு பகைமைகொண்டவர்கள் அதைக் காண்பார்கள்: "உன் கடவுளாகிய ஆண்டவர் எங்கே? " என்று என்னிடம் கேட்டவள் வெட்கம் அடைவாள்: என் கண்கள் அவளைக் கண்டு களிகூரும். அப்பொழுது, தெருச் சேற்றைப்போல அவள் மிதிபடுவாள்.

உன் மதில்களைத் திரும்பக் கட்டும் நாள் வருகின்றது: அந்நாளில், நாட்டின் எல்லை வெகு தொலைவிற்கு விரிந்து பரவும்.

அந்நாளில், அசீரியாவிலிருந்து எகிப்திலுள்ள நகர்கள் வரை, எகிப்திலிருந்து பேராறு வரை, ஒரு கடல்முதல் மறுகடல் வரை, ஒரு மலைமுதல் மறு மலைவரை உள்ள மக்கள் அனைவரும் உன்னிடம் திரும்புவார்கள்.

நிலவுலகம் அங்குக் குடியிருப்போரின் செயல்களின் விளைவால் பாழடைந்து போகும்.

ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்!

எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டுவந்து நாளில் நடந்ததுபோல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.

வேற்றினத்தார் இதைப் பார்த்துத் தங்கள் ஆற்றல் அனைத்தையும் குறித்து நாணமடைவர்: அவர்கள் தங்கள் வாயைக் கையால் மூடிக்கொள்வார்கள்: அவர்களுடைய காதுகள் செவிடாய்ப் போகும்.

அவர்கள் பாம்பைப் போலவும் நிலத்தில் ஊர்வன போலவும் மண்ணை நக்குவார்கள்: தங்கள் எல்லைக் காப்புகளில் இருந்து நடுநடுங்கி வெளியே வருவார்கள்: நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அஞ்சி நடுங்குவார்கள். உமக்கே அவர்கள் அஞ்சுவார்கள்.

உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்: உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்: ஏனெனில், அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்:

அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்: நம் தீச்செயல்களை மிதித்துப்போடுவார்: நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்.

பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியதுபோல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்மையும் காட்டியருள்வீர்.

புத்தகம் 34 - நாகூம்

அதிகாரம் 1.

நினிவேயைக் குறித்த இறைவாக்கு: எல்கோசைச் சார்ந்த நாகூம் கண்ட காட்சி நு¡ல்.

ஆண்டவர் அநீதியைப் பொறாத இறைவன்: பழிவாங்குபவர்: ஆண்டவர் பழிவாங்குபவர்: வெகுண்டெழுபவர்: தம் எதிரிகளைப் பழிவாங்குபவர்: தம் பகைவர்மீது சினம் கொள்பவர்.

ஆண்டவர் விரைவில் சினம் கொள்ளார்: ஆனால் அவர் மிகுந்த ஆற்றலுள்ளவர். அவர் குற்றவாளிகளை எவ்வகையிலும் பழிவாங்காமல் விடமாட்டார். சுழற்காற்றிலும் புயற்காற்றிலும் அமைந்துள்ளது அவர் வழி: மேகங்கள் அவர்தம் காலடியில் எழுகின்ற புழுதிப்படலம்!

அவர் கடலை அதட்டி வற்றச் செய்கின்றார்: ஆறுகளையெல்லாம் வற்றிப் போகச் செய்கின்றார்: பாசானும் கர்மேலும் காய்ந்து போகின்றன: லெபனோனின் மலர்கள் வாடிப்போகின்றன.

அவர் முன்னிலையில் மலைகள் அதிர்கின்றன: குன்றுகள் கரைகின்றன: நிலமும் உலகும் அதில் குடியிருக்கும் அனைத்தும் அவர் முன்னிலையில் நடுநடுங்கின்றன.

அவரது கடும் சினத்தை எதிர்த்து நிற்கக்கூடியவன் யார்? அவர் கோபத்தீயின் முன் நிற்பவன் யார்? தீயைப்போல் அவரது கோபம் கொட்டுகின்றது: பாறைகளும் அவர்முன் தவிடு பொடியாகின்றன.

ஆண்டவர் நல்லவர்: துன்பநாளில் அவர் காவலரண் ஆவார்: அவா¢டம் அடைக்கலம் புகுந்தோரை அவர் அறிவார்.

தம் எதிரிகளைப் பொங்கியெழும் வெள்ளத்தின் நடுவே முற்றிலும் அழித்திடுவார்: தம் பகைவர்களை இருளுக்குள் விரட்டியடிப்பார்.

ஆண்டவரைப்பற்றி நீங்கள் நினைப்பது என்ன? அவர் முற்றிலும் அழித்துவிடுவார்: தீமை மீண்டும் தலைது¡க்காது.

குடிவெறியில் மயங்கிக் கிடக்கும் அவர்கள் பின்னிக் கிடக்கும் முட்புதர்போலும் காய்ந்த சருகுபோலும் முற்றிலும் எரிந்துபோவார்கள்.

ஆண்டவருக்கு எதிராய்த் திட்டம் தீட்டித் தீய ஆலோசனைகளைக் கூறுபவன் உன்னிடமிருந்து தோன்றினான்.

ஆண்டவர் கூறுவது இதுவே: அவர்கள் வல்லவர்களாயினும் பெரும் தொகையினராயினும் வெட்டி வீழ்த்தப்பட்டு அழிந்துவிடுவார்கள்: உன்னை நான் இதுவரை துன்புறுத்தியிருந்தாலும் இனிமேல் உன்னைத் துன்புறுத்தமாட்டேன.

இப்பொழுதே, உன்மேல் இருக்கும் அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை நான் அறுத்துவிடுவேன்.

ஆண்டவர் உன்னைப்பற்றி இட்ட திர்ப்பு இதுவே: உன் பெயரைத்தாங்கும் வழிமரபே இல்லாமல் போகும்: உன் தெய்வங்களின் கோவிலில் உள்ள செதுக்கிய சிலைகளையும் வார்ப்புப் படிமங்களையும் அழிப்பேன். நானே உனக்கு அங்குப் புதை குழி வெட்டுவேன்: ஏனெனில், நீ வெறுக்கத்தக்கவன்.

வெற்றி! வெற்றி! என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்: அவன் முற்றிலும் அழிந்து விட்டான்.

அதிகாரம் 2.

உன்னைச் சிதறடிப்பவன் உனக்கு எதிராய் வருகின்றான்: கோட்டை மதில்களில் வீரர்களை நிறுத்து: வழிகளில் காவலர்களை அமர்த்து: உம் இடையே வா¢ந்து கட்டிக்கொள்: உன் படை வலிமையை மிகுதிப்படுத்து.

இஸ்ரயேலின் மேன்மை போலவே யாக்கோபின் மேன்மையை ஆண்டவர் மீண்டும் நிலைநாட்டுகின்றார்: கொள்ளைக்காரர்கள் அவர்களைக் கொள்யையடித்தனர்: அவர்களின் திராட்சைக் கொடிகளையும் அழித்துப்போட்டனர்.

எதிரியுடைய வீரர்களின் கேடயங்கள் சிவப்பானவை: அவனுடைய போர்வீரர் செந்நிற ஆடை உடுத்தியுள்ளனர்: போர் அணியில் இயங்கும் தேர்ப்படையிலிருந்து தீப்பொறி பறக்கின்றது: குதிரைகள் போருக்குத் துடிக்கின்றன.

வெறிபிடித்தவனைப்போல் தேர்கள் தெருக்களில் ஓடுகின்றன: திறந்த வெளியில் அவை அங்குமிங்குமாய் விரைகின்றன: தீப்பந்தங்களைப்போலச் சடர்விடுகின்றன: மின்னலைப்போலப் பாய்கின்றன.

படைத்தலைவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்: அவர்கள் செல்லும்போது இடறுகின்றார்கள்: கோட்டை மதில் நோக்கி விரைந்தோடுகின்றார்கள்: காப்புக் கருவி அமைத்தாயிற்று.

ஆறுகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டன. அரண்மனை இடிந்து கரைந்தது.

அரசி அணிகள் களையப்பெற்று நாடு கடத்தப்படுகின்றாள்: அவளுடைய பணிப்பெண்கள் புறாக்களைப்போலப் பெருமூச்செறிந்து, மாரடித்துப் புலம்பகின்றார்கள்.

உடைத்துக்கொண்ட குளம்போல ஆனது நினிவே நகர்: நில்லுங்கள், நில்லுங்கள்! என அவர்கள் அலறுகிறார்கள்: ஆனால் எவனும் திரும்பிப் பார்க்கிறதில்லை.

வெள்ளியைக் கொள்ளையடியுங்கள்: பொன்னைக் கவர்ந்து கொள்ளுங்கள்: கருவூலங்கள் மிகப்பொ¢யவை: அங்குள்ள விலையுயர்ந்த பொருள்களுக்கு அளவே இல்லை.

வெறுமை! பாழ்! அழிவு! உள்ளம் சோர்ந்துவிட்டது: கால்கள் தள்ளாடுகின்றன: திகில் அனைவரையும் முற்றிலும் ஆட்கொள்கிறது: முகங்ளெல்லாம் வெளிறிப் போகின்றன.

சிங்கங்களின் குகை எங்கே? சிங்கக் குட்டிகள் உலாவும் உறைவிடம் எங்கே? அச்சமின்றி இருந்த தன் குட்டிகளுக்கு அது இரை தேடிக்கொணர்ந்து போட்ட இடம் இதுவன்றோ?

சிங்கம் தன் குட்டிகளுக்கும் பெண் சிங்கத்திற்கும் தேவையான அளவு இரையைப் பீறிக் கிழித்து, இரையினால் தன் உறைவிடங்களையும், கிழித்த சதையால் தன் குகைகளையும் நிரப்பிற்று.

இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உனக்கு எதிராக நான் எழும்புவேன்: உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவேன்: உன் இளம் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும்: நாட்டில் உனக்கு இரை இல்லாதபடி செய்வேன்: உன் து¡தர்களின் குரலை இனி யாரும் கேட்கமாட்டார்கள்.

அதிகாரம் 3.

இரத்தக்கறை படிந்த நகருக்கு ஜயோ கேடு! அங்கு நிறைந்திருப்பதெல்லாம் பொய்களும் கொள்ளைப் பொருளுமே! சூறையாடலுக்கு முடிவே இல்லை!

சாட்டையடிகளின் ஓசை! சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி! தாவிப் பாயும் புரவிகள்! உருண்டோடும் தேர்கள்!

குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்: வாள் மின்னுகின்றது: ஈட்டி பளபளக்கின்றது: வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்: பிணங்கள் குவித்து கிடக்கின்றன: செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை: அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறிவிழுகின்றனர்.

அழகும் கவர்ச்சியும் நிறைந்தவளாய், தன் வேசித்தனங்களால் மற்ற வேற்றினத்தாரையும் தன் மயக்கும் கவர்ச்சியால் பல இனங்களையும் ஏமாற்றிய அந்த விலைமகளின் எணண்ற்ற வேசித்தனங்களே இதற்குக் காரணம்!

இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உனக்கெதிராக நான் எழும்புவேன்: நீ உடுத்தியிருக்கும் ஆடையை உன் முகத்துக்கு மேலாகத் து¡க்குவேன்: மற்ற வேற்றினத்தார் உன் திறந்த மேனியையும் அரசுகள் உன் அவமானத்தையும் பார்க்கும்படி செய்வேன்.

அருவருப்பானவற்றை உன்மீது எறிவேன்: உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப் பகடிப் பொருள் ஆக்குவேன்.

உன்னை நோக்குவோர் எல்லாரும் உன்னிடமிருந்து பின்வாங்கி, நினிவே பாழாய்ப் போனது: அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ? என்று சொல்வார்கள். உன்னை தேற்றுவோரை எங்கே தேடுவேன்?

நைல் நதியின் கரையருகில் நீரால் சூழப்பட்ட, கடலை அரணாகவும் தண்ணீரை மதிலாகவும் கொண்ட தீப்சு நகரைவிட நீ சிறப்புற்று இருந்தாயோ?

எத்தியோப்பியாவும் எகிப்தும் அந்த நகருக்கு வலிமையாய் இருந்தன: அதன் வலிமைக்கோ எல்லை இல்லை: பூத்தும் லிபியாவும் அதற்குத் துணையாய் இருந்தன.

இருந்தும், அதன் மக்கள் சிறைப் பிடிக்கப்பட்டு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்: அதன் குழந்தைகள் தெருக்கள் தோறும் மோதியடிக்கப்பட்டனர்: அதன் உயர்குடி மக்கள் மேல் சீட்டுப் போடப்பட்டது: அதன் பொ¢ய மனிதர் அனைவரும் சங்கிலிகளால் இறுகக் கட்டப்பட்டனர்.

நீயும் குடிவெறியில் மயங்கிக் கிடப்பாய்: நீயும் உன் பகைவா¢டமிருந்து தப்புமாறு புகலிடம் தேடி அலைவாய்.

உன் அரண்கள் யாவும் முதலில் பழுத்த கனிகள் நிறைந்த அத்தி மரங்களுக்கு ஒப்பானவை: அத்தி மரங்களைப் பிடித்து உலுக்கும்போது பழங்கள் தின்பதற்கு வாயில் விழும்.

உன் போர்வீரர்கள் உன் பெண்களைப் போன்றவர்களே! உன் நாட்டு வாயில்கள் பகைவர்களுக்காகத் திறந்து கிடக்கின்றன: உன் தாழ்ப்பாள்கள் நெருப்புக்கு இரையாயின.

முற்றுகை நாள்களுக்காகத் தண்ணீர் சேமித்து வை: உன்னுடைய அரண்களை வலிமைப்படுத்து: களிமண்ணைப் பிசைந்து சேறாக்கு: செங்கல் அறுக்கச் சட்டங்களை எடு.

ஆயினும் நெருப்பு உன்னை விழுங்கும்: வாளால் நீ வெட்டுண்டு மடிவாய்: வெட்டுக்கிளிபோல் அது உன்னை விழுங்கிவிடும்: வெட்டுக்கிளிபோல் நீங்கள் பலுகுங்கள்: பச்சைக்கிளிபோல் நீங்கள் பெருகுங்கள்.

விண்மீன்களைவிட மிகுதியாக உன் வணிகர்களைப் பெருகச் செய்தாய்: இந்த வெட்டுக்கிளிகள் இறக்கையை விரித்துப் பறந்தோடிவிடும்.

உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும் உன் அரசு அலுவலர் வெட்டுக்கிளிக் கூட்டத்திற்கும் ஒப்பானவர்: குளிர்ந்த நாளில் அவை வேலிகள் மேல் உட்கார்ந்துள்ளன: கதிரவன் எழுந்ததும் பறந்தோடிவிடுகின்றன: அதன்பின் அவை இருக்குமிடம் யாருக்கும் தொ¢யாது.

அசீரிய மன்னனே! உன் ஆயர்கள் துயில் கொண்டனர்: உன் படைத் தலைவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர்: கூட்டிச் சேர்க்க யாருமின்றி உன் மக்கள் மலைகளில் சிதறிப் போயினர்.

உன் காயத்துக்கு மருந்தில்லை, உன் புண் குணமாகாது: உன்னைப்பற்றிய செய்தி கேட்கும் யாவரும் கைகொட்டுவர்: ஏனெனில், உன் இடைவிடாத கொடுமையால் துன்புறாதவர் ஒருவரும் இல்லை.

புத்தகம் 35 - அபகூக்கு

அதிகாரம் 1.

இறைவாக்கினர் அபக்கூக்கு கண்ட காட்சியில் அருளப்பட்ட இறைவாக்கு:

ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்: நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்பவேன்: நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?

நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன: வழக்கும் வாதும் எழும்புகின்றன.

ஆதலால் திருச்சட்டம் வலுவற்று பயனற்றுப் போகின்றது. நீதி ஒருபோதும் வெளிப்படுவதில்லை. கொடியோர் நேர்மையுள்ளோரை வளைத்துக் கொள்கின்றனர். ஆகவே நீதி தடம்புரண்டு காணப்படுகின்றது.

நீங்கள் உங்களைச் சூழந்துள்ள வேற்றினத்தாரைக் கூர்ந்து கவனியுங்கள்: கவனித்து வியப்பும் திகைப்பும் அடையுங்கள்: ஏனெனில் உங்கள் வாழ்நாளில் நான் செயல் ஒன்றைச் செய்திடுவேன்: விளக்கிச் சொன்னாலும் அதை நீங்கள் நம்பமாட்டீர்கள்.

நான் கல்தேயர் இனத்தை எழுப்பவிருக்கிறேன்: அது பரபரப்பும் கொடுமையும் "உடைய இனம்: தங்களுக்குச் சொந்தமில்லாத இருப்பிடங்களைக் கவர, உலகின் ஒருமுனை முதல் மறுமுனைவரை சுற்றித் திரியும் இனம்.

அவர்கள் அச்சமும் திகிலும் உண்டாக்குகின்றவர்கள்: தங்களுடைய நீதியையும் பெருமையையும் தாங்களே உருவாக்குகின்றவர்கள்.

வேங்கையைவிட அவர்களின் குதிரைகள் விரைவாய் ஓடுகின்றன: அவை மாலை வேளையில் திரியும் ஓநாய்களைவிடக் கொடியவை: அவர்களுடைய குதிரை வீரர்கள் பாய்ந்து வருகின்றார்கள். இரைமேல் பாயும் கழுகைப்போல் பறந்து வருகின்றார்கள்.

அவர்கள் யாவரும் வன்முறை செய்யவே முன்னேறி வருகின்றார்கள்: அவர்கள் முன்னேறும்போது எல்லாரும் கலங்கித் திகைக்கின்றார்கள். மணல்போல எண்ணற்ற மக்களைச் சிறைப்படுத்துகின்றார்கள்.

அரசர்களை அவர்கள் ஏளனம் செய்கின்றார்கள்: அதிகாரிகளை எள்ளி நகையாடுகின்றார்கள்: அரண்களை எல்லாம்" பார்த்து நகைக்கின்"றார்கள்: மண்மேடுகளை எழுப்பி அவற்றைப்" பிடிக்கின்றார்கள்.

அவர்கள் காற்றைப் போல் விரைவாகக் கடந்து போகின்றார்கள்: மறைந்து விடுகின்றார்கள். தங்கள் வலிமையைக் கடவுளாகக் கருதியதே அவர்கள் செய்த குற்றம்.

ஆண்டவரே, என் கடவுளே, என் பயவரே தொன்று தொட்டே இருப்பவர் நீர் அல்லவா? நீர் சாவைக் காண்பதில்லை: ஆண்டவரே, அவர்களை எங்கள் தண்டனைத் தீர்ப்பாய் ஏற்படுத்தியவர் நீரே: புகலிடமே, எங்களைச் சாடும் சாட்டையாய் அவர்களை ஆக்கியவரும் நீரே.

தீமையைக் காண நாணும் பய கண்களை உடையவரே, கொடுமையைப் "பார்க்கத் தாங்காதவரே, கயவர்களை நீர் ஏன் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்? பொல்லாதவர் தம்மைவிட நேர்மையாளரை விழுங்கும்போது நீர் ஏன் மெளனமாய் இருக்கின்றீர்?

நீர் மானிடரைக் கடல் மீன்கள் போலும் தலைமை இல்லா ஊர்வனபோலும் நடத்துகின்றீர்.

கல்தேய இனத்தார் மற்றெல்லாரையும் பண்டிலால் பிடிக்கின்றார்கள்: வலையால் வாரி இழுக்கின்றார்கள்: தங்கள் பறியிலே சேர்த்துக்கொண்டு அகமகிழ்ந்து களிப்புறுகின்றார்கள்.

ஆதலால், தங்கள் வலைக்குப் பலி செலுத்துகின்றார்கள்: பறிக்குத் பபம் காட்டுகின்றார்கள்: ஏனெனில் அவற்றாலேயே இன்பமான வாழ்வை அடைகின்றார்கள்: அறுசுவை உணவைப் பெறுகின்றார்கள்.

அப்படியானால் அவர்கள் தங்கள் வலையில் இருப்பவற்றை ஓயாமல் வெளியே கொட்டி மக்களினங்களை இரக்கமின்றி இடைவிடாமல் கொன்று குவிக்கவும் வேண்டுமோ?

அதிகாரம் 2.

நான் காவல் மாடத்தில் நிற்"பேன்: கோட்டைமேல் நின்று காவல் புரிவேன்: என் வாயிலாக ஆண்டவர் என்ன கூறப்போகின்றார் என்றும் என் முறையீட்டுக்கு என்ன விடையளிப்பார் என்றும் கண்டறிவதற்காகக் காத்திருப்பேன்.

ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: "காட்சியை எழுதிவை: விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது.

குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது: முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு: அது நிறைவேறியே தீரும்: காலம் தாழ்"த்தாது.

இதை நம்பாதவரோ உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்: நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

மேலும் செல்வம் ஏமாற்றிவிடும்: ஆணவக்காரர் நிலைத்து நிற்கமாட்டார்: அவர்களது பேராசை பாதாளத்தைப் போல் பரந்து விரிந்தது: சாவைப்போல் அவர்களும் போதும் என்று நிறைவு அடைவதில்லை: வேற்றினத்தார் யாவரையும் அவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்கின்றனர்: மக்களினங்கள் அனைத்தையும் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்கின்றனர்.

ஆனால் தோல்வியுற்ற அனைவரும் அவர்கள் மேல் பழிமொழிகளையும், ஏளனப் பாடல்களையும் இப்படிப் புனைவார்கள்: "தமக்குரியது அல்லாததைக் தமக்"கெனக் குவித்துக் கொள்கின்றவருக்கு ஜயோ கேடு! இன்னும் எத்துணைக் காலத்திற்கு இப்படிச் செய்வர்? அவர்கள் தங்கள்மேல் அடைமானங்களையே சுமத்திக் கொள்கின்றார்கள்! "

உமக்குக் கடன் கொடுத்தவர்கள் திடீரென எதிர்த்தெழ மாட்டார்களோ? உன்னைத் திகிலடையச் செய்கின்றவர்கள் விழித்தெழ மாட்டார்களோ? அப்பொழுது நீ அவர்களுக்குக் கொள்ளைப் பொருள் ஆவாய்.

நீ பல நாட்டினரைச் சூறையாடினாய்: மனித இரக்கத்தைச் சிந்தினாய்: நாட்டுக்கும், நகர்களுக்கும் அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும் கொடுமைகள் செய்தாய்: இவற்றிற்காக, மக்களினங்களுள் எஞ்சியோர் யாவரும் உன்னைச் சூறையாடுவர்.

தீமையின் பளுவிலிருந்து தப்ப, தான் வாழுமிடத்தை மிக உயரத்தில் அமைக்க, தன் குடும்பத்திற்காக நேர்மையற்ற வழியில் பொருள் சேர்க்கிறவனுக்கு ஜயோ "கேடு!

உன் திட்டங்களால் உன் குடும்பத்திற்கு மானக்கேட்டை நீ வருவித்தாய்: மக்களினங்கள் பலவற்றை அழித்தமையால், உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய்.

சுவரிலிருக்கும் கற்களும் உனக்கு எதிராகக் கூக்குரலிடும்: கட்டடத்தின் உத்திரம் அதை எதிரொலிக்கும்

இரத்தப்பழியால் நகரைக் கட்டி எழுப்பி, அநீதியால் பட்டணத்தை நிலை நாட்டுகிறவனுக்கு ஜயோ கேடு!

மக்களினங்களின் உழைப்பு நெருப்புக்கு இரையாவதும், வேற்றினத்தாரின் களைப்பு வீணாகப் போவதும் படைகளின் ஆண்டவரது திருச்செயல் அன்றோ?

தண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு நிறைந்திருக்கும்.

அடுத்திருப்பவர் மீது கொண்ட சினத்தினால் அவர்களைக் குடிவெறியர்களாக்கி அவர்களது திறந்த மேனியின் அலங்கோலத்தைக் காணும்வரை குடிக்கச் செய்பவனுக்கு ஜயோ கேடு!

நீ மேன்மை அடையாது ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பாய்: நீயும் குடி, குடித்துவிட்டுத் தள்ளாடு: ஆண்டவரின் வலக்கையிலுள்ள தண்டனைக்கலம் உன்னிடம் திரும்பிவரும்: அப்போது உன் மேன்மை மானக்கேடாய் மாறும்.

லெபனோனுக்கு நீ செய்த கொடுமை உன் மீது வந்து விழும்: நீ வெட்டி வீழ்த்திய விலங்குகளே உன்னை நடுக்கமுறச் செய்யும்: ஏனெனில் நீ மனித இரத்தத்தைச் சிந்தினாய்: நாட்டுக்கும் நகர்க்கும் அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும் கொடுமைகள் செய்தாய்.

சிற்பி செதுக்கிய சிலையாலும், வார்ப்படத்தில் வடித்தெடுத்த படிமத்தாலும் பயன் என்ன? அவை பொய்களின் பிறப்பிடமே! ஆயினும் சிற்பி தான் செதுக்கிய ஊமைச் சிலைகளாகிய கைவேலைகளிலே நம்பிக்கை வைக்கிறான்.

மரக்கட்டையிடம், "விழித்தெழும் " என்றும் ஊமைக் கல்லிடம் "எழுந்திரும் " என்றும் சொல்கிறவனுக்கு ஜயோ கேடு! அவை ஏதேனும் வெளிப்பாடு அருள முடியுமோ? பொன் வெள்ளியால் பொதியப்பட்டிருப்பினும் உள்"ளே சிறிதளவும் உயிரில்லையே!

ஆனால் ஆண்டவர் தம் புனித கோவிலில் வீற்றிருக்கின்றார்: அவர் திருமுன் மண்ணுலகெங்கும் மெளனம் காப்பதாக.

அதிகாரம் 3.

இறைவாக்கினர் அபக்கூக்கு "சிகாயோன் " பண்களில் பாடிய மன்றாட்டு:

ஆண்டவரே, உம்மைப்பற்றிக் கேள்வியுற்றேன்: ஆண்டவரே, உம் செயலைக் கண்டு அச்சமடைகிறேன்: எங்கள் வாழ்நாள் காலத்திலேயே அதை மீண்டும் செய்யும்: காலப்போக்கில் அதை அனைவரும் அறியும்படி செய்யும்: சினமுற்றபோதும் உமது இரக்கத்தை நினைவு கூரும்.

தேமானிலிருந்து இறைவன் வருகிறார்: பாரான் மலையிலிருந்து புனிதர் வருகிறார். (சோலா) அவரது மாட்சி விண்ணுலகை மூடியிருக்கின்றது: அவரது புகழால் மண்ணுலகம் நிறைந்திருக்கின்றது.

அவரது பேரொலி கதிரவன் ஒளிபோல் இருக்கின்றது: அவர் கையினின்ற ஒளிக்கதிர்கள் புறப்படுகின்றன: அங்கேதான் அவரது வல்லமை மறைந்திருக்கின்றது.

அவருக்கு முன்பாகப் பெருவாரி நோய் செல்கின்றது: அவருடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து கொள்ளைநோய் புறப்படுகின்றது.

அவர் நின்றால், நிலம் அதிர்கின்றது, அவர் நோக்கினால் வேற்றினத்தார் நடுங்குகின்றனர்: தொன்றுதொட்டு இருக்கும் மலைகள் பிளவுண்டு போகின்றன. பண்டைக் காலக் குன்றுகள் அமிழ்ந்து விடுகின்றன. அவர்தம் வழிகளோ என்றும் உள்ளவை.

கூசாவின் கூடாரங்களில் வேதனை நிறைந்திருப்பதை நான் கண்டேன்: மிதியான நாட்டுக் கூடாரத்திரைகள் நடுநடுங்கின.

ஆண்டவரே, நீர் உம்முடைய குதிரைகள் மேலும், வெற்றித் தேர்மேலும் ஏறிவரும் போது, நீரோடைகள்மீதா உம் கோபத்தீ மூண்டது? ஆறுகள்மீதா உம் சினம் பெருகியது? கடல்மீதா உம் சீற்றம் மிகுந்தது?

நீர் உம் வில்லைக் கையிலெடுத்து நாணேற்றுகின்றீர்: அம்பறாத் பணியை அம்புகளால் நிரப்புகின்றீர்: (சேலா) நிலத்தை ஆறுகளால் பிளக்கின்றீர்.

மலைகள் உம்மைக் கண்டு நடுங்கின்றன: பெரும் வெள்ளங்கள் பீறிட்டுப் பாய்கின்றன: ஆழ்கடல் தன் இரைச்சலை எழுப்புகின்றது: அது தன் கைகளை மேலே உயர்த்துகின்றது.

கதிரவனும் நிலவும் தங்கள் இருப்பிடத்திலேயே நிலைத்து நிற்கின்றன: பாய்ந்தோடும் உம் அம்புகளின் ஒளியின் முன்னும், பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் தங்கள் செயல் திறனை இழந்து நிற்கின்றன.

சினத்தோடு மண்ணுலகில் நடந்து போகின்றீர்: சீற்றம்கொண்டு வேற்றினத்தாரை நசுக்குகின்றீர்.

உம் மக்களை மீட்கவும், நீர் திருப்பொழிவு செய்தவரை விடுவிக்கவுமே நீர் புறப்படுகின்றீர். பொல்லாதவனின் குடும்பத் தலைவனை வெட்டி வீழ்த்துகின்றீர். அவனைப் பின்பற்றுவோரை முற்றிலும் அழித்து விடுகின்றீர். (சேலா)

அவன் படைத்தலைவனின் தலையை அவன் ஈட்டிகளைக் கொண்டே பிளக்கின்றீர்: அவனோ, ஒடுக்கப்பட்டவனை மறைவாக விழுங்கி மகிழ்வது போல மகிழ்ந்து, சூறாவளிக் காற்றென என்னைச் சிதறடிக்கப் பாய்ந்து வருகின்றான்.

ஆனால், நீர் உம்முடைய குதிரைகளால் ஆட்கடலை மிதித்து, பெருவெள்ளக் குவியலைச் சிதறடிக்கின்றீர்.

இதை நான் கேட்கும்போது என் உடல் நடுநடுங்குகின்றது: அப்போரொலியைக் கேட்பதனால் என் உதடுகள் துடிதுடிக்கின்றன: என் எலும்புகள் உளுத்துப் போகின்றன: என் காலடிகள் நிற்கும் இடத்திலேயே தடுமாறுகின்றன: எங்களைத் தாக்கும் மக்கள்மீது இடுக்கண் வரும் நாள்வரை அமைதியாய்க் காத்திருப்பேன்.

அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும், ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,

நான் ஆண்டவரில் களிகூர்வேன்: என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.

ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை: அவர் என் கால்களைப் பெண்மானின் கால்களைப் போலாக்குவார்: உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்.

புத்தகம் 36 - செப்பனியா

அதிகாரம் 1.

ஆமோனின் மகன் யோசியா யூதாவின் அரசனாய் இருந்தபொழுது செப்பனியாவுக்கு ஆண்வரின் வாக்கு அருளப்பட்டது. இவர் எசேக்கியாவின் கொள்ளுப் பேரனும் அமரியாவின் பேரனும் கெதலியாவின் மகனுமான கூசியாவின் மைந்தர் ஆவார்.

"மண்ணுலகில் எதுவும் இராதவாறு

அனைத்தையும் அழித்துவிடுவேன், " என்கிறார் ஆண்டவர். "மனிதரையும் விலங்குகளையும் அழிப்பேன்: வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் ஒழிப்பேன்: கொடியவர்களை இடறிவிழச் செய்வேன்: மனித இனம் மண்ணுலகில் இல்லாதவாறு அற்றுப் போகச் செய்வேன், " என்கிறார் ஆண்டவர்.

யூதாவுக்கும் எருசலேமில் வாழும் அனைவர்க்கும் எதிராக நான் கையை ஓங்குவேன். பாகால் வழிபாட்டில் எஞ்சியிருப்பதையும் அந்தச் சிலை வழிபாட்டு அர்ச்சகர்களின் பெயரையும் அழித்து விடுவேன்.

வீட்டின் மேல்தளத்திலிருந்து வான் படைகளை வணங்குவோரையும், ஆண்டவரை வணங்கி அவர் பெயராலும் மில்க்கோம் தெய்வத்தின் பெயராலும் ஆணையிடுவோரையும் ஒழித்து விடுவேன்.

ஆண்டவரைவிட்டு விலகிச் செல்வோரையும் ஆண்டவரைத் தேடாது, அவரை அறிய முயலாது இருப்போரையும் அழித்துவிடுவேன்.

தலைவராகிய ஆண்டவர் திருமுன் மெளனமாயிருங்கள்: ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது: பலி ஒன்றை ஆண்டவர் ஏற்பாடு செய்துள்ளார்: தாம் அழைத்தவர்களை அவர் புனிதப்படுத்தியுள்ளார்

ஆண்டவரது பலியின் நாளில் தலைவர்களையும் வெளிநாட்டு ஆடை அணிந்துள்ள அனைவரையும் தண்டிப்பேன்.

வாயிற்படியை மிதிக்காமல் தாண்டி வந்து, தங்கள் தலைவனின் வீட்டை வன்செயலாலும் வஞ்சனையாலும் நிரப்புகிறவர்களை அந்நாளில் தண்டிப்பேன்.

ஆண்டவர் கூறுகின்றார்: "அந்நாளில் எருசலேமின் மீன் வாயிலிருந்து கூக்குரலும், புதிய நகர்ப் பகுதியிலிருந்து புலம்பலும், குன்றுகளிலிருந்து இடிந்துவிழும் பேரொலியும் கேட்கும்.

நகரின் கீழ்ப்பகுதியில் குடியிருப்"போரே! கதறி அழுங்கள்: ஏனெனில், வணிகர் அனைவர்க்கும் அழிவு வருகின்றது: பணம் படைத்தவர் அனைவரும் வெட்டி வீழ்த்தப்படுகின்றனர்:

அக்காலத்தில், நான் கையில் விளக்கேந்திக் கொண்டு எருசலேமைச் சோதித்துப் பார்ப்பேன்: ஓஆண்டவர் நன்மையும் செய்யார்: தீமையும் செய்யார்ஓ என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டு பஞ்சணையில் சாய்ந்து கொழுத்திருப்போரைத் தண்டிப்பேன்.

அவர்களுடைய உடைமைகள் கொள்ளையடிக்கப்படும்: வீடுகள் பாழாக்கப்படும்: அவர்கள் வீடுகள் கட்டிக்கொள்வார்கள்: ஆனால் அவற்றில் குடியிருக்கப்போவதில்லை: திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்தாலும், அவற்றின் இரசத்தைக் குடிக்கப் போவதில்லை. "

ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது: அது விரைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது: ஆண்டவரது நாளின் பேரொலி கசப்பை உண்டாக்கும்: மாவீரனையும் கலங்கி அலறும்படி செய்யும்.

அந்த நாள் கடும் சினத்தின் நாள்: துன்பமும் துயரமும் நிறைந்த நாள்: பேரழிவும் பேரிழப்பும் கொண்டு வரும் நாள்: இருட்டும் காரிருளும் கவிந்த நாள்:

அரண்சூழ் நகர்களுக்கும் உயரமான கொத்தளங்களுக்கும் எதிராக எக்காளமும் போர் முழக்கமும் கேட்கும் நாள்.

மானிடர்மேல் துன்பம் வரச்செய்வேன்: பார்வையற்றோர்போல் அவர்கள் தடுமாறுவர்: ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தனர்: அவர்களது இரத்தம் புழுதி போல் கொட்டப்படும்: சதைப்பிண்டம் சாணம்போல் எறியப்படும்.

ஆண்டவரது சினத்தின் நாளில், அவர்களது வெள்ளியும் பொன்னும் அவர்களைக் காப்பாற்றா. உலகம் முழுவதும் அவரது வெஞ்சினத் தீக்கு இரையாகும். உலகில் வாழும்" அனைவரையும் அவர் நொடிப்பொழுதில் முற்றிலும் அழித்துவிடுவார்.

அதிகாரம் 2.

பண்புகெட்ட இனமே! பகுத்தறிவோடு நடந்துகொள்.

பதரைப்போல் நீங்கள் பற்றப்படுமுன்னே, ஆண்டவரது கடும் சினம் உங்கள் மேல் விழுமுன்னே, ஆண்டவரது சினத்தின் நாள் உங்கள்மேல் விழுமுன்னே,

நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்: நேர்மையை நாடுங்கள்: மனத்தாழ்மையைத் தேடுங்கள்: ஆண்டவரது சினத்தின் நாளில் ஒரு வேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்.

காசா குடியற்றுப்போகும்: அஸ்கலோன் பாழடைந்துபோகும்: அஸ்தோது நண்பகலில் விரட்டியடிக்கப்படும்: எக்ரோன் வேரொடு பிடுங்கியெறியப்படும்.

கடற்கரையில் வாழும் இனத்தாராகிய கெரேத்தியரே! உங்களுக்கு ஜயோ கேடு! ஆண்டவரின் வாக்கு உங்களுக்கு எதிராய் உள்ளது: பெலிஸ்தியரின் நாடே! கானானே! எவனும் குடியிராதபடி நான் உன்னை அழித்து விடுவேன்.

இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு இடையரின் குடில்களுக்கும் ஆடுகளின் பட்டிகளுக்குமே ஏற்றதாகும்.

அந்தக் கடற்கரை யூதாவின் குடும்பத்தவருள் எஞ்சியிருப்போர்க்கு உடைமையாகும்: அங்கே அவர்கள் தங்கள் ஆடுகளை மேய்த்து, மாலையில் அஸ்கலோன் வீடுகளில் படுத்திருப்பார்கள்: ஏனெனில் அவாகளுடைய கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது அக்கறை கொண்டு, முன்னைய நன்னிலைக்கு அவர்களை உயர்த்துவார்.

மோவாபின் பழிப்புரைகளையும் அம்மோனியரின் வசைமொழிகளையும் நான் கேட்டேன்: அவர்கள் என் மக்களை இழித்துரைத்து, அவர்களின் நாட்டு எல்லைகளைக் குறித்து வீம்பு பேசியதையும் நான் கேட்டேன்.

ஆதலால், படைகளின் ஆண்டவரும், இஸ்ரயேலின் வாழும் கடவுளுமாகிய நான் ஆணையிட்டுக் கூறுகின்றேன்: மோவாபு சோதோமைப்போல் ஆகும்: அம்மோனியர் கொமோராவைப்போல் ஆவர்: இது உறுதி. இந்நாடுகள் காஞ்சொறி படரும் காடாகவும், உப்புப் பள்ளம் நிறைந்த பாழ்நிலமாகவும் என்றும் இருக்கும். என் மக்களில் எஞ்சியோர் அவர்களைக் கொள்ளையடிப்பர்: என் மக்களுள் தப்பியோர் அவர்களை அடிமைகளாக்கிக் கொள்வர்.

அவர்களுடைய இறுமாப்புக்குக் கிடைக்கும் பயன் இதுவே: ஏனெனில், படைகளின் ஆண்டவருடைய மக்களுக்கு எதிராக அவர்கள் பழித்துரைத்தார்கள்: வீம்பு பேசினார்கள்.

ஆண்டவர் அவர்களை அச்சமுறச் செய்வார்: நாட்டின் தெய்வங்களை எல்லாம் ஆற்றல் குன்றிப்போகச் செய்வார். வேற்றினத்தார் அனைவரும் அவரவர்தம் தீவுகளில் இருந்து கொண்டு அவரையே வணங்குவர்.

எத்தியோப்பியரே! நீங்களும் எனது வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள்.

வடதிசைக்கு எதிராகத் தம் கையை ஓங்கி, ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்: நினிவே நகரைப் பாழடையச் செய்து, வறண்ட பாலைநிலமாக்குவார்.

அங்கே மந்தைகளும் எல்லாவகை விலங்குகளும் படுத்துக் கிடக்கும்: பண்களின் உச்சியில் கூகையும் சாக்குருவியும் தங்கியிருக்கும்: பலகணியில் அமர்ந்தவாறு ஆந்தை அலறும்: நிலைக்கதவின்மேல் இருந்தவாறு காகம் கரையும்: கேதுரு மர வேலைப்பாடுகள் அழிக்கப்படும்.

"நான் ஒப்புயர்வு அற்றவன் " என்ற கவலையின்றிக் களிப்புற்றிருந்த நகர் இதுதானோ? இப்பொழுது அது காட்டு விலங்குகளின் குகையாகி எவ்வளவு பாழாய்ப் போயிற்று! அதைக் கடந்துகோகும் ஒவ்வொருவனும் சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான்.

அதிகாரம் 3.

கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும் மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஜயோ கேடு!

எந்தச் சொல்லுக்கும் அவள் செவி சாய்ப்பதில்லை: கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை: ஆண்டவர்மேல் அவள் நம்பிக்கை வைப்பதில்லை: தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.

அந்நகரின் தலைவர்கள் கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்: அதன் நீதிபதிகள், மாலையில் கிடைப்பதை காலைவரை வைத்திராத ஓநாய்கள்.

அதன் இறைவாக்கினர் வீண் பெருமை பேசும் வஞ்சகமிக்க மனிதர்: அதன் குருக்கள் புனிதமானதைக் களங்கப்படுத்தித் திருச்சட்டத்தை உதறித் தள்ளுபவர்கள்.

அதனுள் இருக்கும் ஆண்டவரோ நீதியுள்ளவர்: அவர் கொடுமை செய்யாதவர்: காலைதோறும் அவர் தமது தீர்ப்பை வழங்குகின்றார்: வைகறைதோறும் அது தவறாமல் வெளிப்படும்: ஆனால் கொடியவனுக்கு வெட்கமே இல்லை.

வேற்றினத்தாரை நான் வெட்டி வீழ்த்தினேன்: அவர்களுடைய கோட்டைகளைத் தகர்த்தெறிந்தேன்: அவர்களுடைய தெருக்களை வெறுமையாக்கினேன்: அவற்றில் நடந்துசெல்பவர் எவருமில்லை: யாரும் இராதபடி, எவரும் குடியிராதபடி அவர்களுடைய நகர்கள் பாழடைந்து போயின.

"உறுதியாக எனக்கு நீ அஞ்சி நடப்பாய்: எனது கண்டிப்புரையை ஏற்றுக் கொள்வாய்: நான் வழங்கிய தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம் நீ மறக்கமாட்"டாய் " என்று நான் எண்ணினேன்: அவர்களோ தங்கள் செயல்களைச் சீர்கேடாக்க இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.

ஆதலால் ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: "நான் குற்றம் சாட்டுவதற்கு எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு: வேற்றினத்தாரை ஒன்று சேர்த்து, அரசுகளையும் ஒன்று திரட்டி, என் கடும்சினத்தையும் கோபத்தீயின் கொடுமை முழுவதையும், அவர்கள் மேல் கொட்டிவிடத் திட்டமிட்டுள்ளேன்: ஏனெனில், என் வெஞ்சினத்தீக்கு உலகெல்லாம் இரையாகும்.

அக்காலத்தில் நான் மக்களினங்களுக்குத் பய நாவினை அருள்வேன்: அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் பெயரால் மன்றாடி ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள்.

எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் - சிதறுண்ட என் மக்கள் - எனக்குக் காணிக்கை கொண்டு வருவார்கள்.

எனக்கு எதிராக எழுந்து நீ செய்த குற்றங்களை முன்னிட்டு அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்: ஏனெனில், அப்பொழுது இறுமாப்புடன் அக்களித்திருப்போரை உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்: இனி ஒருபோதும் எனது திருமலையில் செருக்கு அடையமாட்டாய்.

ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்: அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள்.

இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்: வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது: அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள். "

மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி: இஸ்ரயேலே! ஆரவாரம் செய்: மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி.

ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்: உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்: இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்: நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.

அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: "சீயோனே, அஞ்சவேண்டாம்: உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.

உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்: அவர் மாவீரர்: மீட்பு அளிப்பவர்: உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்: தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்: உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.

அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்: ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.

இதோ!, உன்னை ஒடுக்கியவர்களை அந்நாளில் நான் தண்டிப்பேன்: கால் ஊனமுற்றவர்களைக் காப்பாற்றுவேன்: ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன்: அவமானமுற்ற அவர்களை உலகெங்கும் பெயரும் புகழும் பெறச்செய்வேன்.

அக்காலத்தில் உங்களை ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்து உங்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வருவேன்: ஆம், உங்கள் கண்முன்பாகவே உங்களை முன்னைய நன்னிலைக்கு உயர்த்தி, உலகின் எல்லா மக்களிடையேயும் நீங்கள் பெயரும் புகழும் பெறுமாறு செய்வேன் " என்கிறார் ஆண்டவர்.

புத்தகம் 37 - ஆகாய்

அதிகாரம் 1.

தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அது யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமான செருபாபேலுக்கும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவுக்கும் அருளப்பட்ட செய்தி:

"படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஓஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்று இந்த மக்கள் சொல்கிறார்கள்.

அப்பொழுது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது.

இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில், நீங்கள்மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா?ஓ

ஆதலால், இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: ஓஉங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள்.

நீங்கள் விதைத்தது மிகுதி, அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்: ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடியிருக்கிறீர்கள்: ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள்: ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான்.

உங்களுக்கு நேர்ந்துள்ளதை நினைத்துப் பாருங்கள்ஓ என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.

ஓஎனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்: என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்: அது எனக்கு உகந்ததாய் இருக்கும்: அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்ஓ என்று சொல்கிறார் ஆண்டவர். மிகுதியான அறுவடைக்காகக் காத்திருந்தீர்கள்.

ஆனால் கிடைத்தது சிறிதளவே. நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தபோது அதையும் நான் ஊதித் தள்ளிவிட்டேன். ஏன்? ஏனெனில், எனது இல்லம் பாழடைந்து கிடக்கும் போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டைக் கட்டுவதிலேயே கருத்தாய் இருக்கிறீர்கள்.

எனவே, வானம் உங்களுக்குப் பனி பெய்வதை நிறுத்தி விட்டது: நிலமும் விளைச்சல் தர மறுத்துவிட்டது.

மேலும் நாடும் மலையும், கோதுமையும் திராட்சை இரசமும், எண்ணெயும் நிலத்தின் விளைச்சலும், மனிதரும் கால்நடைகளும், உங்கள் உழைப்பின் பயன் அனைத்துமே வறட்சியால் வாடுமாறு நான் செய்திருக்கிறேன். "

அப்பொழுது, செயல்தியேலின் மகன் செருபாபேலும், தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவும், மக்களுள் எஞ்சியிருந்தோர் அனைவரும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கும், தங்கள் கடவுளாகிய ஆண்டவர் அனுப்பிய இறைவாக்கினரான ஆகாயின் சொற்களுக்கும் செவிகொடுத்தனர்: மக்களோ, ஆண்டவர் திருமுன் அஞ்சி நின்றனர்.

அப்போது ஆண்டவரின் பதரான ஆகாய் மக்களிடம், "ஓநான் உங்களோடு இருக்கிறேன்ஓ என்கிறார் ஆண்டவர் " என்னும் ஆண்டவரின் அருட்செய்தியை அவர்களுக்கு அறிவித்தார்.

அப்போது, ஆண்டவர் யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செலுபாபேலின் உள்ளத்தையும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவின் உள்ளத்தையும் மக்களுள் எஞ்சியிருந்தோர் அனைவரின் உள்ளத்தையும் தட்டியெழுப்பினார். அவர்களும் சென்று தங்கள் கடவுளாகிய படைகளின் ஆண்டவரது இல்லத்தைக் கட்டும் பணியை மேற்கொண்டார்கள்.

அந்நாள் தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் இருபத்து நான்காம் நாள்.

அதிகாரம் 2.

ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாளன்று, ஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக அருளப்பட்டது:

"யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலிடமும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவிடமும் மக்களுள் எஞ்சியிருப்போர் அனைவரிடமும் இப்பொழுது நீ போய் இவ்வாறு சொல்:

ஓஇந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைக் கண்டவர் எவராகிலும் உங்களிடையே இன்னும் இருக்கின்றனரா? இப்போது இது உங்களுக்கு எக்கோலத்தில் தோன்றுகிறது? இது உங்கள் பார்வையில் ஒன்றும் இல்லாததுபோல் தோன்றுகிறது அல்லவா?

ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடிரு,ஓ என்கிறார் ஆண்டவர். ஓதலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன உறுதியோடிரு: நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்: பணியைத் தொடருங்கள்: ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்ஓ என்கிறார் படைகளின் ஆண்டவர். "

"நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்தபோது உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி, உங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கிறது: அஞ்சாதீர்கள்.

ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஓஇன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலை நிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன்.

வேற்றினத்தார் அனைவரையும் நிலைக்குலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்: இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்பவேன்ஓ என்கிறார் படைகளின் ஆண்டவர்.

ஓவெள்ளி எனக்க உரியது, பொன்னும் எனக்கு உரியதுஓ, என்கிறார் படைகளின் ஆண்டவர்.

ஓஇந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைவிடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்ஓ, என்கிறார் படைகளின் ஆண்டவர். ஓஇந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்ஓ, என்கிறார் படைகளின் ஆண்டவர். "

தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஒன்பதாம் மாதம், இருபத்து நான்காம் நாள், இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.

"படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: குருக்களிடம் சென்று இவற்றிற்குத் திருச்சட்டத்தைத் தீர்ப்பைக் கேள்:

"ஒருவன் தனது மேலாடையின் மடிப்பில் அர்ப்பணிக்கப்பட்ட இறைச்சியை எடுத்துக்கொண்டு போகும் பொழுது, அத்துணியின் மடிப்பு அப்பத்தையோ இறைச்சியையோ திராட்சை இரசத்தையோ எண்ணெயையோ வேறெந்த உணவுப்பொருளையோ தொட்டால், அவையும் அர்ப்பணிக்கப்பட்டவை ஆகுமா? " அதற்குக் குருக்கள், "இல்லை " என்று விடை கூறினர்.

மீண்டும் ஆகாய், "பிணத்தைத் தொட்டதால் தீட்டுப்பட்ட ஒருவன் இவற்றுள் ஒன்றைத் தொட்டால் அதுவும் தீட்டப்பட்டது ஆகுமா? " என்று கேட்டார். அதற்குக் குருக்கள், "ஆம், தீட்டுப்பட்டது ஆகும் " என்றனர்.

தொடர்ந்து ஆகாய் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: "அதேபோலத்தான் எனது திருமுன் இந்த மக்களும் இந்த இனத்தாரும், " என்கிறார் ஆண்டவர். அவ்வாறே அவர்களது உழைப்பின் பயன் ஒவ்வொன்றும் இருக்கிறது. அவர்கள் அங்கே கொண்டு வந்து படைக்கும் பொருளும் தீட்டுப்பட்டதே.

இன்றுவரை நிகழ்ந்ததை இப்பொழுது நினைத்துப் பாருங்கள். ஆண்டவரது கோவிலில் கல்லின்மேல் கல் வைக்கப்படுமுன் நீங்கள் இருந்த நிலை என்ன?

தானியக் குவியலில் இருபது மரக்கால் இருக்கும் என எண்ணி நீங்கள் வந்து பார்க்கையில் பத்துதான் இருந்தது: ஜம்பது குடம் இரசம் எடுக்க ஆலைக்கு வந்தபோது இருபதுதான் இருந்தது.

ஓஉங்களையும் உங்கள் உழைப்பின் பயனையும் வெப்பு நோயாலும் நச்சுப் பனியாலும் கல்மழையாலும் வதைத்தேன்: ஆயினும் நீங்கள் என்னிடம் திரும்பி வரவில்லைஓ, என்கிறார் ஆண்டவர்.

ஒன்பதாம் மாதத்தின் இருபத்து நான்காம் நாளாகிய இன்று ஆண்டவரின் கோவிலுக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது. இனிமேல் நிகழப்போவது என்ன என்பதைக் கவனமாய்ப் பாருங்கள்.

விதை இனியும் களஞ்சியத்திலேயே இருந்துவிடுமோ? திராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவமரமும் இனியும் பயன் தராமல் போகுமோ? இன்று முதல் உங்களுக்கு தான் ஆசி வழங்குவேன்.

மாதத்தின் இருபத்து நான்காம் நாள் ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறையாக ஆகாய்க்கு அருளப்பட்டது:

"யூதாவின் ஆளுநனாகிய செருபாபேலிடம் இவ்வாறு சொல்: ஓநான் விண்ணுலகையும் மண்ணுலகையும் ஒருங்"கே அசைக்கப் போகிறேன்:

அரசுகளின் அரியணையைக் கவிழ்க்கப்போகிறேன்: வேற்றினத்து அரசுகளின் வலிமையை ஒழிப்பேன்: தேர்களையும் அவற்றில் இருப்போரையும் வீழ்த்துவேன்: குதிரைகளும் குதிரை வீரர்களும் ஒருவர் மற்றவரது வாளுக்கு இரையாவர்.ஓ

படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: ஓஅந்நாளில் செயல்தியேலின் மகனும் என் ஊழியனுமான செருபாபேலே! உன்னைத் தேர்ந்தெடுப்பேன்,ஓ என்கிறார் ஆண்டவர். ஓஉன்னை என் அரச இலச்சினையாய் அணிந்துகொள்வேன். ஏனெனில் உன்னையே நான் தெரிந்து கொண்டேன்,ஓ என்கிறார் படைகளின் ஆண்டவர். "

புத்தகம் 38 - செக்கரியா

அதிகாரம் 1.

தாரிபு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் எட்டாம் மாதத்தில் இத்தோவின் பேரனும், பெரக்கியாவின் மகனுமான இறைவாக்கினர் செக்கரியாவுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:

"ஆண்டவர் உங்கள் மூதாதையர்மேல் கடுஞ்சினம் கொண்டிருந்தார்.

ஆகவே நீ அவர்களை நோக்கி இவ்வாறு சொல்: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஓஎன்னிடம் திரும்பி வாருங்கள்,ஓ என்கிறார் படைகளின் ஆண்டவர்.

உங்கள் மூதாதையரைப்போல் இருக்கவேண்டாம்: முந்தைய இறைவாக்கினர் அவர்களை நோக்கி, படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஓஉங்களுடைய தீய நெறிகளையும் தீச்செயல்களையும்விட்டுத் திரும்புங்கள்ஓ என்று முழக்கமிட்டனர். ஆனால் ஓஅவர்கள் எனக்குச் செவி சாய்க்க வில்லை: என் சொல்லைப் பொருள்படுத்தவுமில்லை " என்கிறார் ஆண்டவர்.

உங்கள் மூதாதையர் இப்போது இருக்கிறார்களா? இறைவாக்கினரும் என்றென்றும் உயிரோடிருப்பார்களா?

உன் ஊழியராகிய இறைவாக்கினருக்கு நான் கட்டளை இட்ட என் வாக்குகளும் நியமங்களும் உங்கள் மூதாதையர் மட்டில் பலிக்கவில்லையா? ஆகையால் அவர்கள் மனம் வருந்தி, ஓபடைகளின் ஆண்டவர் எங்கள் செயலுக்கும் நடத்தைக்கும் ஏற்ப எங்களுக்குச் செய்யத் திருவுளங்கொண்டு அவ்வாறு செய்தார்ஓ என்று சொல்லவில்லையா? "

அரசன் தாரியு ஆட்சி செய்த இரண்டாம் ஆண்டின் பதினோராம் மாதமாகிய செபாத்தின் இருபத்தி நான்காம் நாளன்று, இத்தோவின் பேரனும் பெரக்கியாவின் மகனுமான இறைவாக்கினர் செக்கரியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர் கூறியது:

இதோ, சிவப்புக் குதிரைமேல் ஏறிவந்த மனிதர் ஒருவரை நேற்றிரவு கண்டேன்: அவர் ஒரு பள்ளத்தாக்கின் நடுவே நறுமணம் வீசும் பசும் செடிகள் இடையே நின்று கொண்டிருந்தார்: அவருக்குப் பின்னால் சிவப்புக் குதிரைகளும் இளம் சிவப்புக் குதிரைகளும் நின்றன.

அப்பொழுது நான், "என் தலைவரே, இவை எதைக் குறிக்கின்றன? " என்று கேட்க, என்னோடு பேசிய பதர், "இவை எதைக் குறிக்கின்றன என்று உனக்குக் காட்டுவேன் " என்றார்.

பசும் செடிகள் இடையே நின்று கொண்டிருந்த அவர் மறுமொழியாக, "இவை உலகெங்கும் சுற்றி வரும்படி ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்களைக் குறிக்கின்றன " என்றார்.

பசும் செடிகள் இடையே நின்று கொண்டிருந்த ஆண்டவருடைய பதரிடம் அவர்கள், "நிலவுலகம் முழுவதும் நாங்கள் சுற்றிவந்தோம்: மண்ணுலகம் முழுவதும் அமைதியில் ஆழந்துள்ளது " என்று கூறினார்கள்.

ஆண்டவரின் பதர், "படைகளின் ஆண்டவரே, இன்னும் எத்துணைக் காலத்திற்கு எருசலேமின் மேலும் யூதாவின் நகர்கள் மேலும், கருணை காட்டாதிருப்பீர்? இந்த எழுபது ஆண்டுகளாய் உமது சினத்தைக் காட்டினீரே " என்று பதில் அளித்தார்.

அதற்கு ஆண்டவர் என்னோடு பேசிக்கொண்டிருந்த பதரிடம் இன்சொற்களையும் ஆறுதல் மொழிகளையும் கூறினார்.

ஆகவே, என்னோடு பேசிக் கொண்டிருந்த பதர் என்னை நோக்கி, "நீ உரக்கக் கூவி அறிவிக்க வேண்டியது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான் எருசலேம்மீதும் சீயோன்மீதும் பெரிதும் அக்கறை கொண்டுள்ளேன்.

ஆனால் அமைதியுடன் இனிது வாழ்கின்ற வேற்றினத்தார்மேல் கடும் சினம் கொண்டுள்ளேன். நான் சிறிதே சினமுற்றிருந்தபோது அவர்கள் பெரிதும் தீவினை செய்தார்கள்.

ஆதலால் இரக்கத்துடன் எருசலேமுக்குத் திரும்பி வருகிறேன், " என்கிறார் ஆண்டவர். "அங்கே என் இல்லம் கட்டப்படும்: எருசலேமின்மேல் அளவு மல் பிடிக்கப்படும், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

மீண்டும் உரத்த குரலில் இவ்வாறு அறிவிப்பாயாக: படைகளின் ஆண்டவர் அறிவிப்பது இதுவே: என் நகர்கள் சீரும் சிறப்புமாய் இருக்கும். ஆண்டவர் சீயோனை மீண்டும் தேற்றுவார்: எருசலேமைத் திரும்பவும் தேர்ந்துகொள்வார்.

நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது இதோ, நான்கு கொம்புகளைக் கண்டேன்.

என்னோடு பேசிக்கொண்டிருந்த பதரை நோக்கி, "இவை எதைக் குறிக்கின்றன? " என்று நான் வினவினேன். அதற்கு அவர், "இவைதாம் யூதாவையும் இஸ்ரயேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் " எனப் பதிலளித்தார்.

அப்போது ஆண்டவர் கொல்லர்கள் நால்வரை எனக்குக் காண்பித்தார்.

"இவர்கள் எதற்காக வருகிறார்கள்? " என்று நான் கேட்டேன். அதற்கு அத்பதர், "எவரும் தலையெடுக்காதபடி யூதாவைச் சிதறடித்த கொம்புகள் இவையே: யூதா நாட்டைச் சிதறடிக்கும்படி தங்கள் கொம்புகளை உயர்த்திய வேற்றினத்தாரின் கொம்புகளை உடைத்தெறியவும் அவர்களைத் திகில் அடையச் செய்யவுமே இவை வந்திருக்கின்றன " என்று பதிலுரைத்தார்.

அதிகாரம் 2.

நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, அளவு நுலைக் கையில் பிடித்திருந்த ஒருவரைக் கண்டேன்.

"எங்கே போகிறீர்? " என்று நான் அவரை வினவினேன். அதற்கு அவர், "எருசலேமை அளந்து, அதன் அகலமும் நீளமும் எவ்வளவு என்பதைக் காணப்போகிறேன் " என்றார்.

என்னோடு பேசிக்கொண்டிருந்த பதர் திரும்பிச் செல்கையில் மற்றொரு பதர் அவருக்கு எதிரே வந்தார்.

வந்தவர் முன்னவரிடம் இவ்வாறு சொன்னார்: ஒடிச்சென்று அந்த இளைஞனிடம் நீ சொல்ல வேண்டியது: "எருசலேமில் எண்ணிறந்த மனிதர்களும் திரளான கால்நடைகளும் இருப்பதால் அந்நகரம் மதில் இல்லாத ஊர்களைப்போல் இருக்கும்!

ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்: அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன், " என்கிறார் ஆண்டவர்.

"எழுந்திருங்கள், வடநாட்டிலிருந்து ஓடிவாருங்கள், என்கிறார் ஆண்டவர்: உலகின் நான்கு திசைகளுக்கும் உங்களைச் சிதறடித்தவர் நானே, என்கிறார் ஆண்டவர்.

பாபிலோனில் குடியிருக்கும் சீயோனே! தப்பிப் பிழைத்துக்கொள்.

என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த வேற்றினத்தாரைக் குறித்து, ஓஉங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்ஓ என்கிறார். "

இதோ, அவர்களுக்கு எதிராக என் கையை ஓங்கப் போகிறேன்: தங்களுக்குப் பணிவிடை செய்தவர்களுக்கே கொள்ளைப்பொருள் ஆவார்கள்: அப்பொழுது நீங்கள், என்னை அனுப்பியது படைகளின் ஆண்டவர் என்று அறிந்து கொள்வீர்கள்.

மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி: இதோ நான் வருகிறேன்: வந்து உன் நடுவில் குடிகொள்வேன் " என்கிறார் ஆண்டவர்.

அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்: அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்: நீங்களும், படைகளின் ஆண்டவரே என்னை அறிந்து கொள்வீர்கள்.

ஆண்டவர் யூதாவைப் புனித நாட்டில் தமக்குரிய பங்காக உரிமைச் சொத்தாக்கிக் கொள்வார். எருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார். "

மானிடரே, நீங்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் அமைதியாயிருங்கள்: ஏனெனில் அவர்தம் புனித இடத்திலிருந்து எழுந்தருளினார்.

அதிகாரம் 3.

பின்பு அவர் தலைமைக் குருவாகிய யோசுவாவை எனக்குக் காட்டினார். அவர் ஆண்டவரின் பதர் முன்னிலையில் நின்றுகொண்டிருந்தார். அவர்மேல் குற்றம் சாட்டுவதற்கு அவரது வலப்பக்கத்தில் சாத்தானும் நின்று கொண்டிருந்தான்.

அப்பொழுது ஆண்டவரின் பதர் சாத்தானை நோக்கி, "சாத்தானே, ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக! எருசலேமைத் தெரிந்தெடுத்த ஆண்டவர் உன்னை அதட்டுவாராக! அடுப்பிலிருந்து எடுத்த கொள்ளியல்லவா இவர்? " என்றார்.

யோசுவாவோ அழுக்கு உடைகளை உடுத்தியவராய் பதர்முன் நின்று கொண்டிருந்தார். பதர் தம்முன் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி,

"அழுக்கு உடைகளை இவரிடமிருந்து களைந்துவிடுங்கள் " என்றார். பின்பு அவரிடம், "உன்னிடமிருந்து உன் தீச்செயல்களை அகற்றி விட்டேன்: நீ உடுத்திக் கொள்வதற்குப் பட்டாடைகளை அளிப்பேன் " என்றார்.

மேலும், "பய்மையான தலைப்பாகை ஒன்றை அவருக்கு அணிவியுங்கள் " என்றார். அவ்வாறே அவர்கள் பய்மையான தலைப்பாகையை அணிவித்துப் பட்டாடைகளை உடுத்தினர். ஆண்டவரின் பதர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.

ஆண்டவரின் பதர் யோசுவாவுக்கு விடுத்த உறுதிமொழி இதுவே:

"நீ என் வழிகளில் நடந்து, என் திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகினால், நீ என் இல்லத்தை ஆள்வாய்: என் திருமுற்றங்களுக்கும் பொறுப்பாளி ஆவாய்: இங்கே நிற்கும் பதர்கள் இடையே சென்று வரும் உரிமையை உனக்குத் தருவேன் " என்று படைகளின் ஆண்டவர் கூறுகிறார்.

தலைமைக் குரு யோசுவாவே! நீயும் உன் முன்னே அமர்ந்திருக்கும் உன் தோழரும் கேளுங்கள். அவர்கள் நல்லடையாளமான மனிதர்கள்: இதோ நான் தளிர் எனப்படும் என் ஊழியன் தோன்றுமாறு செய்வேன்:

யோசுவாவின் முன்னிலையில் நான் வைத்த கல்லைப்பார்: இந்த ஒரே கல்லில் ஏழு பட்டைகள்: அதில் நான் எழுத்துகளைப் பொறித்திடுவேன், என்கிறார் படைகளின் ஆண்டவர்.

ஒரே நாளில் இந்த நாட்டின் தீச்செயலை அகற்றுவேன். படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாளில் ஒவ்வொருவரும் தம் அடுத்திருப்பவரைத் தம் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் தங்கி இளைப்பாற அழைப்பார்.

அதிகாரம் 4.

என்னோடு பேசிய பதர் மீண்டும் வந்து, உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி,

"நீ என்ன காண்கிறாய்? " என்று என்னைக் கேட்க, நான், "இதோ முழுவதும் பொன்னாலான விளக்குத் தண்டு ஒன்றைக் காண்கிறேன்: அதன் உச்சியில் கிண்ணம் ஒன்று உள்ளது: அக்கிண்ணத்தின்மேல் ஏழு அகல்கள் இருக்கின்றன: மேலே உள்ள ஒவ்வோர் அகலுக்கும் ஏழு மூக்குகள் உள்ளன:

விளக்குத் தண்டின் அருகில் வலப்புறம் ஒன்றும் இடப்புறம் ஒன்றுமாக இரு ஒலிவ மரங்கள் இருக்கின்றன " என்றேன்.

அப்போது என்னோடு பேசிக்கொண்டிருந்த பதரை நோக்கி, நான், "என் தலைவரே! இவை எதைக் குறிக்கின்றன? " என்று வினவினேன். என்னோடு பேசிக் கொண்டிருந்த பதர்,

இவை எதைக் குறிக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா? " எனக் கேட்டார். நான் "என் தலைவரே! எனக்குத் தெரியாது " என்றேன்.

மீண்டும் அவர் என்னிடம், "செருபாபேலுக்கு ஆண்டவர் அருளியவாக்கு இதுவே: உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல: ஆனால் எனது ஆவியாலே ஆகும், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

மாபெரும் மலையே! செருபாபேலுக்குமுன் உன் நிலை என்ன? ஒரு சமவெளிக்கு ஒப்பாவாய்: அவரே தலையாய கல்லைக் கொண்டு வருவார்: அப்போது அதன்மேல் ஓஅருள்பொழிக! அருள்பொழிக!ஓ என்ற ஆரவாரம் ஒலிக்கும் " என்றார்.

ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது.

"செருபாபேலின் கைகளே இக்கோவிலுக்கு அடித்தளம் இட்டன. அவர் கைகளே இவ்வேலையை முடித்துவைக்கும். என்னை உங்களிடம் அனுப்பியவர் படைகளின் ஆண்டவரே என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள். "

வேலை தொடங்கிய நாளை அவமதித்தவர்கள் யாரோ அவர்கள் செருபாபேலின் கையில் இரு பக்கு மற்குண்டு இருப்பதைக் கண்டு அகமகிழ்வார்கள்.

"அந்த அகல்கள் ஏழும் நிலவுலகெங்கும் சுற்றிப் பார்க்கும் ஆண்டவரின் கண்கள் " என்றார். அப்போது நான், "விளக்குத் தண்டின் அருகில் வலப்புறமும் இடப்புறமும் உள்ள இந்த இரு ஒலிவ மரங்களும் எதைக் குறிக்கின்றன? " என வினவினேன்.

மீண்டும் நானே அவரிடம், "எண்ணெய் ஊற்றுவதற்கென வைத்திருக்கும் இரண்டு பொற்குழாய்களின் அருகில் ஒலிவ மரக்கிளைகள் இரண்டு இருப்பதன் பொருள் என்ன? " எனக் கேட்டேன்.

அதற்கு அவர், "இவை எதைக் குறிக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா, " என்றார். நான், "தெரியாது என் தலைவரே " என்றேன்.

அதற்கு அவர், "இவை அனைத்துலகின் ஆண்டவர் திருமுன் நிற்கின்ற திருநிலைப்படுத்தப்பட்ட இருவரைக் குறிக்கின்றன " என மறுமொழி பகர்ந்தார்.

அதிகாரம் 5.

மீண்டும் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது இதோ,

பறக்கும் ஏட்டுச்சுருள் ஒன்றைக் கண்டேன். "நீ காண்பது என்ன? " என்று அத்பதர் என்னைக் கேட்க, நான், "பறக்கும் ஏட்டுச்சுருள் ஒன்றைக் காண்கிறேன்: அதன் நீளம் இருபது முழம், அகலம் பத்து முழம் " என்று பதிலளித்தேன்.

அப்போது அவர் என்னிடம், "அனைத்துலகின்மீதும் விழுகின்ற சாபமே இது: ஒருபுறம் எழுதியுள்ளபடி, திருடன் எவனும் இங்கிருந்து ஒழிக்கப்படுவான்: மறுபுறம் எழுதியுள்ளபடி, பொய்யாணை இடுகிறவன் எவனும் தண்டனைக்குத் தப்பவே மாட்டான்.

நான் அந்தச் சாபத்தை அனுப்புவேன் " என்கிறார் படைகளின் ஆண்டவர். "அது திருடரின் வீட்டிற்குள்ளும் என் பெயரால் பொய்யாணை இடுவோரின் இல்லத்திற்குள்ளும் நுழைந்து, அவரவர் வீட்டில் தங்கி, மரங்கள் கற்கள் உட்பட அவ்வீட்டையே அழித்து விடும்.

பின்பு என்னோடு பேசிக் கொண்டிருந்த பதர் வெளியே வந்து என்னிடம், "உன் கண்களை உயர்த்தி, அங்கிருந்து வருவது யாது எனப்பார் " என்றார்.

"அது என்ன? " என்று நான் திருப்பிக் கேட்க, "வெளிவரும் ஒரு மரக்கால்! " என்றார். தொடர்ந்து அவர், "இதுதான் நில உலகெங்கும் பரவியிருக்கும் அவர்களின் தீச்செயல் " என மொழிந்தார்.

அதன் ஈய மூடி பக்கி உயர்த்தப்பட்டது. இதோ, மரக்காலின் உள்ளே ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.

அப்போது அத்பதர், "இவளே அக்கொடுமை " எனக் கூறி, அவளை அந்஥த மரக்காலுக்குள் திணித்துப் பளுவான ஈய மூடியால் அதை அடைத்தார்.

மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்த போது இதோ, வெளிவருகின்ற இரண்டு பெண்களைக் கண்டேன்: அவர்களுக்கு நாரையின் இறக்கைகள் போல் இறக்கைகள் இருந்தன. அவர்களுடைய இறக்கைகளில் காற்று நிரம்பியிருந்தது: அவர்கள் மரக்காலை மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் பக்கிக் கொண்டு போனார்கள். என்னோடு பேசிக் கொண்டிருந்த பதரிடம்,

"இவர்கள் மரக்காலை எங்கே கொண்டு போகிறார்கள்? " என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர், "சீனார் நாட்டிலே அதற்கொரு கோவில் கட்டுவதற்கு அதைக் கொண்டு போகிறார்கள். அங்கே கோவில் எழுப்பி மரக்காலை அதற்குரிய மேடையில் நிலைநிறுத்துவார்கள் " என்றார்.

அதிகாரம் 6.

மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இரு மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள் புறப்பட்டு வருவதைக் கண்டேன்: அம்மலைகள் வெண்கல மலைகள்.

முதல் தேரில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாவது தேரில் கறுப்புக் குதிரைகளும்,

மூன்றாவதில் வெள்ளைக் குதிரைகளும், நான்காவதில் புள்ளிகளை உடைய கறுப்புநிற வலிமையான குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.

என்"னோடு பேசிக்கொண்டிருந்த பதரிடம் நான் "என் தலைவரே! இவை என்ன? " என்று கேட்டேன்.

அத்பதர், "இவை அனைத்துலக ஆண்டவரின் திருமுன்னிருந்து புறப்பட்டுச் செல்கின்ற வாகனத்தின் நாற்றிசைக் காற்றுகள்.

கறுப்புக் குதிரைகள் பூட்டிய தேர் வடநாட்டை நோக்கிச் செல்கிறது: வெண்ணிறக் குதிரைகள் அவற்றைப் பின்தொடர்ந்து போகின்றன: கறுப்புநிறக் குதிரைகளோ தென்னாட்டை நோக்கிச் செல்கின்றன " என்று கூறினார்.

வலிமையான குதிரைகள் புறப்பட்டுச் சென்று உலகெங்கும் சுற்றிவருவதற்குத் "துடித்தன. அப்போது அவர், "போய் உலகைச் சுற்றி வாருங்கள் " என்றார். அவ்வாறே அவை உலகெங்கும் சுற்றித் திரிந்தன.

பின்பு அவர் என்னை நோக்கிக் கூக்குரலிட்டு, "இதோ பார்! வடநாட்டை நோக்கிச் சென்றவை அந்நாட்டில் எனது உள்ளம் அமைதி கொள்ளும்படி செய்திருக்கின்றன " என்றார்.

மீண்டும் ஆண்டவரது வாக்கு எனக்கு அருளப்பட்டது:

நாடுகடத்தப்பட்டுப் பாபிலோனிலிருந்து திரும்பி வந்திருக்கின்ற என் தாய், தோபியா, எதாயா என்பவர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றுக்கொள்: அன்"றைக்கே செப்பனியாவின் மகனான யோசியாவின் இல்லத்திற்குப் போ.

அங்கே அவர்களிடம் பெற்றுக்கொண்ட பொன் வெள்ளியைக் கொண்ட முடி செய்து, தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமான யோசுவாவின் தலையில் அதைச் சூட்டு:

சூட்டியபின் இவ்வாறு சொல்: "படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, "தளிர் " என்னும் பெயர் கொண்ட மனிதர் தம் இடத்திலிருந்து துளிர்ப்பார்: ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்புவார்:

ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்புவதுமன்றி, அரச மாண்பைக் கொண்டவராய், அரியணையில் வீற்றிருந்து அவர் ஆட்சி செலுத்துவார்: ஓர் குருவும் தமது அரியணையில் அமர்ந்திருப்பார்.

அவர்கள் இருவர்க்கிடையேயும் நல்லிணக்கம் நிலைபெறும். அந்த மணிமுடி ஆண்டவரின் கோவிலில் எல்தாய், தொபியா, எதாயா என்பவர்களுக்கும் செப்பனியாவின் மகன் யோசியாவிற்கும் நினைவுச் சின்னமாய் இருக்கும்.

தொலைவில் இருப்போரும் வந்து ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்பத் துணைபுரிவர்: அப்போது படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு ஆர்வத்துடன் செவிசாய்த்து நடந்தீர்களானால் இவையெல்லாம் நிறைவேறும். "

அதிகாரம் 7.

அரசன் தாரியுவின் நான்காம் ஆட்சியாண்டில் கிஸ்லேவு என்னும் ஒன்பதாம் மாதத்தின் நான்காம் நாளன்று ஆண்டவரின் வாக்கு செக்கரியாவுக்கு அருளப்பட்டது.

பெத்தேலில் வாழ்வோர் சரேட்சரையும் இரகேம்மெலக்கையும் மற்றும் அவனுடைய ஆள்களையும் ஆண்டவரின் அருளைப் பெற மன்றாடுமாறு அனுப்பினார்கள். மேலும்

படைகளின் ஆண்டவரது கோவிலில் இருக்கும் குருக்களையும் இறைவாக்கினர்களையும் கண்டு, "நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் செய்துவந்தது போல் ஜந்தாம் மாதத்தில் நோன்பிருந்து புலம்"ப வேண்டுமா? " என்று கேட்டு வரவும் இவர்களை அனுப்பினார்கள்.

அப்போது படைகளின் ஆண்டவரது வாக்கு எனக்கு அருளப்பட்டது:

நாட்டின் எல்லா மக்களுக்கும் குருக்களுக்கும் நீ கூறவேண்டியது: "இந்த எழுபது ஆண்டுகளாக ஜந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் நோன்பிருந்து ஓலமிட்டு அழுதீர்களே, எனக்காகவா நோன்பிருந்தீர்கள்?

நீங்கள் உணவருந்தியபோதும் குடித்தபோதும் உங்களுக்காகத்தானே உணவருந்தினீர்கள்? உங்களுக்காகத்தானே குடித்தீர்கள்?

எருசலேமில் மக்கள் குடியேறிய போதும், அந்நகர் சீரும் சிறப்புமாய் இருந்தபோதும், அதைச் சூழ்ந்திருந்த நகர்கள் தென்நாடு, சமவெளி நிலம் ஆகியவற்றில் மக்கள் குடியேறிய போதும், முன்னாளைய இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் முழங்கிய சொற்கள் இவை அல்லவா? "

மீண்டும் ஆண்டவரின் வாக்கு செக்கரியாவுக்கு அருளப்பட்டது.

"படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையுடன் நீதி வழங்குங்கள்: ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள்:

கைம்பெண்ணையோ, அனாதையையோ, அன்னியரையோ, ஏழைகளையோ ஒடுக்க வேண்டாம்: உங்களுக்குள் எவரும் தம் சகோதரனுக்கு எதிராகத் தீமை செய்ய மனத்தாலும் நினைக்கவேண்டாம். "

ஆனால் அவர்களோ அதற்குச் செவிகொடுக்க மறுத்தார்கள்: இறுகிய மனத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். தங்கள் காதுகளைப் பொத்திக்கொண்டார்கள்.

படைகளின் ஆண்டவர் தம் ஆவியால் முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாக அனுப்பித்தந்த திருச்சட்டத்தையையும் வாக்குகளையும் கேட்டுவிடாதபடி பாறையைப்போல் தங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக் கொண்டார்கள்: ஆதலால் படைகளின் ஆண்டவர் கடுஞ்சினமுற்றார்.

"நான் கூப்பிட்டபோது அவர்கள் கேளாதிருந்தது போல, அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேட்கவில்லை, " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

"ஆகவே முன்பின் அறியாத வேற்றினத்தார் நடுவிலும் அவர்களைச் சிதறடித்தேன்: இவ்வாறு அவர்கள் விட்டுச்சென்ற நாடு பாழடைந்து போயிற்று: போவார் வருவார் எவருமே அங்கில்லை: இனிய நாட்டைப் பாழாக்கிவிட்டார்கள். "

அதிகாரம் 8.

படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:

"சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்று கொண்டிருக்கின்஥றேன்: அதன் மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கின்றேன்.

"ஆண்டவர் கூறுவது இதுவே: சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்: எருசலேம் நடுவில் குடியிருக்கப் போகிறேன்: எருசலேம் ஓஉண்மையுள்ள நகர்ஓ என்றும், படைகளின் ஆண்டவரது மலை ஓதிருமலைஓ என்றும் பெயர்பெற்று விளங்கும்.

படைகளிள் ஆண்டவர் கூறுவது இதுவே: எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் மீண்டும் அமர்ந்திருப்பார்கள்: வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்:

நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்: அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். "

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "இம்மக்களில் எஞ்சியிருப்போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ? " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்:

அவர்களை அழைத்துக் கொண்டு வருவேன்: அவர்கள் எருசலேமில் குடியிருப்பார்கள்: அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்: உண்மையிலும் நீதியிலும் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்: "

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "படைகளின் ஆண்டவரது கோவிலைக் கட்டியெழுப்பும்படி அதற்கு அடித்தளம் இட்ட நாளிலிருந்து பேசிய இறைவாக்கினரின் வாய்மொழிகளுக்குச் செவிசாய்ப்போரே, உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.

ஏனெனில், இந்நாள்கள் வரை மனிதருக்கோ கால்நடைகளுக்஥கோ கூலிகிடைக்கவில்லை: போவார் வருவாருக்கோ பகைவரிடமிருந்து பாதுகாப்பு இல்லை. நான் எல்லா மனிதரையும் ஒருவருக்கு எதிராக ஒருவர் எழும்படி செய்துவிட்டேன்.

இப்பொழுதோ, இம்மக்களில் எஞ்சியிருப்"போருக்கு முன்னாளில் நான் இருந்தது போல இருக்கமாட்டேன், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

ஏனெனில், அவர்கள் அமைதியில் பயிர் செய்வார்கள். திராட்சைச் செடி தன் கனியைக் கொடுக்கும்: வயல் நிலம் தன் விளைவைத் தரும்: வானம் பனியைப் பொழியும்: நானோ இம்மக்களில் எஞ்சியிருப்போர் இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்ளச் செய்வேன்.

யூதா குடும்பத்தாரே! இஸ்"ரயேல் குடும்பத்தாரே! வேற்றினத்தாரிடையே நீங்கள் ஒரு சாபச் சொல்லாய் இருந்தீர்கள்: இப்பொழுதே நான் உங்களை மீட்டருள்வேன்: நீங்களும் ஓர் ஆசி மொழி ஆவீர்கள்: அஞ்சாதீர்கள்: உங்கள் கைகள் வலிமை பெறட்டும். "

ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "உங்கள் மூதாதையர் என்னைச் சினமடையச் செய்தபோது நான் கருணை காட்டாது உங்களுக்குத் தீங்கு செய்யத் திட்டமிட்டேன், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

அவ்வாறே இந்நாள்களில் மீண்டும் எருசலேமுக்கும் யூதாவின் குடும்பத்தாருக்கும் நன்மை செய்யத் திட்டமிட்டுள்ளேன்: ஆகையால் அஞ்சாதீர்கள்.

நீங்கள் கடைப்பிடித்து ஒழுகவேண்டியவை இவையே: ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள்: உங்கள் நகர வாயில்களில் நீங்கள் அளிக்கும் தீர்ப்பு நீதியாகவும் நல்லுறவுக்கு வழிகோலுவதாயும் இருக்கட்டும்:

ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமை செய்ய மனத்தாலும் நினைக்க வேண்டாம்: பொய்யாணை இடுவதை விரும்பாதீர்கள்: ஏனெனில், இவற்றையெல்லாம் நான் வெறுக்கிறேன், " என்கிறார் ஆண்டவர்.

படைகளின் ஆண்டவரது வாக்கு எனக்கு மீண்டும் அருளப்பட்டது:

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான்காம் மாதத்தின் நோன்பும், ஜந்தாம் மாதத்தின் நோன்பும், ஏழாம் மாதத்தின் நோன்பும், பத்தாம் மாதத்தின் நோன்பும் யூதா குடும்பத்தார்க்கு மகிழ்ச்சியும் களிப்பும் நிறைந்த மாபெரும் திருவிழா நாள்களாக மாறிவிடும். ஆதலால் வாய்மையையும் நல்லுறவையும் நாடுங்கள்.

படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மக்களினங்களும் பல நகர்களில் குடியிருப்போரும்கூட வருவார்கள்.

ஒருநகரில் குடியிருப்போர் மற்றொரு நகரினரிடம் சென்று, "நாம் ஆண்டவரது அருளை மன்றாடவும் படைகளின் ஆண்டவரை வழிபடவும், தேடவும், நாடவும் விரைந்து செல்வோம், வாருங்கள்: நாங்களும் வருகிறோம் " என்று சொல்வார்கள்.

மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும் அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப்பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, ஓகடவுள் உங்களோடு இருக்கின்"றார்ஓ என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள். "

அதிகாரம் 9.

ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது: அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்: ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன.

அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம்.

தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது: பசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது.

இதோ என் தலைவர் அவற்றைப் பறிமுதல் செய்வார்: அதன் அரணைக் கடலுக்குள் பக்கி எறிவார்: அந்நகரும் நெருப்புக்கு இரையாகும்.

அஸ்கலோன் இதைக் கண்டு அஞ்சி நடுங்கும்: காசா நகர் வேதனையால் துடிதுடிக்கும்: அவ்வாறே எக்ரோனும் நம்பிக்கை இழந்துவிடும். காசா நகரிலிருந்து அரசன் அழித்தொழிவான்: அஸ்கலோன் குடியற்றுப்போகும்.

அஸ்தோதில் கலப்பினத்தார் குடியிருப்பார்கள்: பெலிஸ்தியரின் ஆணவத்தை நான் ஒழித்திடுவேன்.

இரத்தம் வடியும் இறைச்"சியை அவர்கள் வாயினின்று அகற்றுவேன்: அருவருப்பான உணவை அதன் பற்களிடையிருந்து நீக்குவேன்: அவ்வினம் நம் கடவுளுக்கு எஞ்சியதாகும்: அது யூதாவின் குலங்களில் தலையாயது ஆகும். எக்ரோன் நகரத்தார் எபூசியரைப் போல் இருப்பார்கள்:

அங்குமிங்கும் தாக்கும் படையினின்று எனது இல்லத்தைக் காப்பதற்கு நான் பாளையம் இறங்குவேன்: ஒடுக்குகிறவன் எவனும் இனி அவர்களின் நகர்களை ஊடுருவிச் செல்லான்: ஏனெனில் என் கண்"களாலேயே யாவற்றையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்: வெற்றிவேந்தர்: எளிமையுள்ளவர்: கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்.

அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்: எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்: போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்: அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.

உன்னைப் பொறுத்தமட்டில் உன்னோடு நான் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, சிறைப்பட்டிருக்கும் உன்னைச் சார்ந்தோரை நீரற்ற படுகுழியிலிருந்து விடுவிப்பேன்.

நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக் கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்: இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.

நான் யூதாவை என் வில்லாக்கிக் கொண்டேன்: எப்ராயிமை அம்பாக அமைத்துக்கொண்டேன்: சீயோனே! உன் மக்களை யவனருக்கு எதிராக ஏவிவிட்டு உன்னை வல்லவனின் வாள் போல் ஆக்குவேன்.

அப்போது அவர்கள்மீது ஆண்டவர் தோன்றுவார். அவரது அம்பு மின்னலைப்போல் பாய்ந்து செல்லும்: தலைவராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி ஒலி எழுப்புவார்: அவர் தென்திசைச் சூறாவளிக்கு இடையே நடந்து வருவார்.

படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு அடைக்கலமாய் இருப்பார்: அவர்கள் தங்கள் பகைவரை ஒழித்துக்கட்டி, அவர்களுடைய கவண் கற்களை மிதித்துப்போடுவார்கள்: திராட்சை இரசத்தைப்போல் அவர்களது குருதியைக் குடிப்பார்கள்: கிண்ணம்"போல் நிரம்பி வழிந்தும், பலிபீடத்தின் கொம்புகளைப் போல் நனைந்தும், இரத்தத்தால் நிறைந்திருப்பார்கள்.

அந்நாளில் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர், தம் மக்களாகிய அவர்களை ஆயர் தம் மந்தையை மீட்பது போல் மீட்டருள்வார்: அவர்களும் அவரது நாட்டில் மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள கற்களைப்போல் ஒளிர்வார்கள்.

ஆம், அக்காட்சி எத்துணை இனியது: எத்துணை அழகியது: கோதுமை இளங்காளையரையும் புதுத்திராட்சை இரசம் கன்னியரையும் செழிப்புறச் செய்யும்.

அதிகாரம் 10.

இளவேனில் காலத்தில் மழைக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்: ஆண்டவரே மின்னல்களை உண்டாக்குபவர்: மனிதர்க்கு அவரே மழையைத் தருபவர்: வயல்வெளிகளில் பயிரினங்களை முளைப்பிப்பவரும் அவரே:

குலதெய்வங்களை வீணானதையே கூறுகின்றன: குறிசொல்வோர் பொய்க்காட்சி காண்கின்றனர்: அவர்கள் போலிக் கனவுகளை எடுத்துரைக்கின்றனர்: வெறுமையான ஆறுதல் மொழிகளைச் சொல்கின்றனர்: ஆதலால், மக்கள் ஆடுகளைப்போல் சிதறுண்டு அலைந்தனர்: ஆயரில்லாததால் துன்புறுகின்றனர்.

ஆயர்களுக்கு எதிராக என் கோபம் பற்றியெரிகின்றது: தலைவர்களை நான் தண்டிக்கப் போகின்றேன்: ஏனெனில், படைகளின் ஆண்டவர் தம் மந்தையாகிய யூதா குடும்பத்தாரைக் கண்காணிக்கிறார்: அவர்களை வலிமைமிகு போர்க்குதிரைகளைப்போல் ஆக்குவார்.

அவர்களிடமிருந்தே மூலைக் கல் தோன்றும்: கூடார முளையும், போர் வில்லும், ஆட்சியாளர் அனைவரும் ஒருங்கே அவர்களிடமிருந்துதான் தோன்றுவர்.

அவர்கள், ஆற்றல்மிக்க போர்வீரர்களைப்போல், பகைவரைச் சேற்றில் தள்ளி மிதிப்பார்கள்.

. "யூதா குடும்பத்தை ஆற்றல் மிக்கதாய் ஆக்குவேன்: யோசேப்பு குடும்பத்தை மீட்டருள்வேன்: அவர்கள்மீது இரக்கம் கொண்டுள்ளதால் அவர்களை நான் திரும்பி வரச்செய்வேன்: அவர்கள் என்னால் தள்ளிவிடப்படாதவர்களைப் போல் இருப்பார்கள்: ஏனெனில், நானே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்: நான் அவர்களின் மன்றாட்டுக்கு மறுமொழி அளிப்பேன்.

எப்ராயிம் மக்கள் ஆற்றல்மிக்க வீரரைப்போலாவார்கள்: திராட்சை மது அருந்தியவரின் உள்ளத்தைப்போல் அவர்கள் உள்ளம் களிப்படையும்: அவர்கள் பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்: ஆண்டவரில் அவர்கள் இதயம் மகிழ்ந்து களிப்புறும்.

சீழ்க்கை ஒலி எழுப்பி நான் அவர்களைச் சேர்த்துக் கொள்வேன்: ஏனெனில் நானே அவர்களை மீட்டருள்வேன்: முன்போலவே அவர்கள் பல்கிப் பெருகுவார்கள்.

மக்களினங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும், தொலை நாடுகளில் என்னை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்: தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள்.

நான் அவர்களை எகிப்து நாட்டினின்று திரும்பிவரச் செய்வேன்: அசீரியாவிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்: கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு அவர்களைக் கொண்டு வருவேன்: இடம் இல்லாமல் போகுமட்டும் வந்து சேருவார்கள்.

எகிப்தியக் கடலை அவர்கள் கடந்து செல்வார்கள்: கடல் அலைகள் அடித்து நொறுக்கப்படும்: பேராற்றின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்: அசீரியாவின் ஆணவம் அடக்கப்படும்: எகிப்து நாட்டின் செங்கோல் அகற்றப்படும்.

ஆண்டவருக்குள் அவர்களை ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்: ஆண்டவரின் பெயரில் அவர்கள் பெருமைகொள்வார்கள், " என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 11.

லெபனோனே! உன் வாயில்களைத் திறந்துவை: நெருப்பு உன் கேதுரு மரங்களைச் சுட்டெரிக்கட்டும்.

தேவதாரு மரங்களே! புலம்பியழுங்கள்: ஏனெனில், கேதுரு மரங்கள் வீழ்த்தப்பட்டன: ஓங்கி வளர்ந்த மரங்கள் பாழாயின: பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே! புலம்பியெழுங்கள்: ஏனெனில், அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.

அவர்கள் அலறியழும் குரல் கேட்கின்றது: ஏனெனில் அவர்களின் மேன்மை பாழ்படுத்தப்பட்டது: இளம் சிங்கங்களின் கர்ச்சனை கேட்கின்றது: ஏனெனில், யோர்தானின் காடு அழிக்கப்பட்டது.

என் கடவுளாகிய ஆண்டவர் கூறியது இதுவே: வெட்டுவதற்கு குறிக்கப்பட்ட ஆடுகளை மேய்ப்பாயாக!

விலைக்கு வாங்குவோர் அவற்றைக் கொன்றுவிடுவர்: ஆயினும் குற்றப்பழி அவர்கள் மீது சுமத்தப்படாது. அவற்றை விற்பவர்களோ, "ஆண்டவர் போற்றி! போற்றி! எங்களுக்குச் செல்வம் சேர்ந்தது " என்று சொல்கிறார்கள். ஆனால் ஆயர்கள் அவற்றின்மீது இரக்கம் காட்டவில்லை.

. "இனிமேல் நான் உலகில் வாழ்வோர்க்கு இரக்கம் காட்ட மாட்டேன், " என்கிறார் ஆண்டவர். இதோ! மனிதர் ஒவ்வொருவரையும் அவரவர் அடுத்திருப்பார் கையிலும் அரசர்களின் கையிலும் சிக்கும்படி ஒப்புவிக்கப் போகிறேன். அவர்கள் நாட்டை அழித்தொழிப்பார்கள். அவர்கள் கையிலிருந்து நான் யாரையும் தப்புவிக்கமாட்டேன்.

அவ்வாறே நான் வெட்டுவதற்குக் குறிக்கப்பட்ட ஆடுகளை வணிகருக்காக மேய்க்கின்ற ஆயானானேன்: நான் இரு கோல்களைக் கையிலெடுத்து, ஒன்றிற்கு "இனிமை " என்றும், மற்றதற்கு "ஒன்றிப்பு " என்றும் பெயரிட்டு அம்மந்தையை மேய்த்துவந்தேன்.

ஒரே மாதத்தில் நான் மூன்று ஆயர்களை ஒழித்து விட்டேன்: நான் அவர்களைப் பொறுத்தமட்டில் பொறுமை இழந்து விட்டேன்: அவர்களும் என்னை வெறுத்தார்கள். 9 அப்போது, "இனி நான் உங்களை மேய்க்கப்போவதில்லை: சாவது சாகட்டும்: அழிவது அழியட்டும்: மீதியிருப்பவை ஒன்றை ஒன்று கடித்துக் தின்னட்டும் "

என்று நான் சொன்னேன். "இனிமை " என்ற என் கோலை எடுத்து, மக்களினங்கள் அனைத்தோடும் நான் செய்து கொண்ட உடன்படிக்கை முறியும்படி அதை முறித்துப் போட்டேன்.

அன்"றே அந்த உடன்படிக்கை முறிந்து போயிற்று. அவ்வாறெ என்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஆட்டுவணிகரும் அது ஆண்டவரின் வாக்கு என்பதை உணர்ந்து கொண்டனர்.

அப்போது நான் அவர்களை நோக்கி, "உங்களுக்குச் சரி என்று தோன்றினால் என் கூலியைக் கொடுங்கள்: இல்லையேல் கொடுக்க வேண்டாம், விடுங்கள் " என்றேன். அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளைக்" கொடுத்தார்கள்.

ஆண்டவர் என்னிடம், "கருவூலத்தை நோக்கி அதைத் பக்கி எறி: இதுதான் அவர்கள் எனக்கு அளித்த சிறந்த மதிப்பீடு! " என்றார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் எறிந்துவிட்டேன்.

யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையே இருந்த சகோதர ஒருமைப்பாடு முறியும்படி "ஒன்றிப்பு " என்ற இரண்டாம் கோலையும் நான் ஒடித்துப் போட்டேன்.

பின்பு ஆண்டவர் என்னை நோக்கி, "அறிவற்ற ஆயன் ஒருவனின் கருவிகளை இன்னொருமுறை எடுத்துக்கொள் " என்றார்.

ஏனெனில் இதோ நாட்டில் ஆயன் ஒருவனை எழுப்புவேன்: அவன் அழிந்து போவதைக் காப்பாற்றமாட்டேன். சிதறிப் போவதைத் தேடித் திரியமாட்டான்: எலும்பு முறிந்ததைக் குணப்படுத்தமாட்டான்: நலமாயிருப்பதற்கு உணவு கொடுக்க மாட்டான்: ஆனால் கொழுத்ததின் இறைச்சியைத் தின்பான்: அவற்றின் குளம்புகளைக்கூட நறுக்கிப் போடுவான்.

ஆடுகளைக் கைவிடுகிற பயனற்ற என் ஆயனுக்கு ஜயோ கேடு! அவனுடைய கைமேலும் வலக்கண் மேலும் வாள் வந்து விழட்டும்: அவனது கை முற்றிலும் சூம்பிப் போகட்டும்: அவனது வலக்கண் இருண்டு முற்றிலும் குருடாகட்டும்.

அதிகாரம் 12.

ஓர் இறைவாக்கு: இஸ்ரயேலைக் குறித்து அருளப்பட்ட ஆண்டவரின் வாக்க: விண்வெளியை விரித்தவரும், மண்ணுலகை நிலைநாட்டியவரும், மனிதரின் ஆவியை அவர்களுள் தோற்றுவித்தவருமான ஆண்டவர் கூறுவது இதுவே:

இதோ! சூழ்ந்திருக்கும் மக்களினங்கள் அனைத்திற்கும் போதையேற்றித் தள்ளாடச் செய்யும் மதுக்கிண்ணமாக நான் எருசலேமை ஆக்கப்போகிறேன்: எருசலேமுக்கு எதிரான முற்றுகையில் யூதாவுக்கும் அதே நிலைதான் ஏற்படும்.

அந்நாளில் நான் மக்களினங்கள் அனைத்திற்கும் எருசலேமைப் பளுவான கல்லாக்குவேன்: அதைத் பக்கும் எவரும் காயமடைவது திண்ணம்: உலகிலுள்ள வேற்றினத்தார் அனைவரும் அதற்கு எதிராகப் படைதிரண்டு வருவார்கள்.

அந்நாளில் நான் குதிரைகளை எல்லாம் திகிலாலும் அவற்றின்மேல் ஏறிவருவோரை எல்லாம் பைத்தியத்தாலும் வதைப்பேன், என்கிறார் ஆண்டவர்.

யூதா குடும்பத்தாரைக் கடைக்கண்ணோக்கி மக்களினங்களின் அனைத்துக் குதிரைகளின் கண்களையும் குருடாக்குவேன். அப்போது யூதா நாட்டின் குடும்பத்தலைவர்கள், எருசலேமில் குடியிருப்போரின் வலிமை அவர்களுடைய கடவுளாகிய படைகளின் ஆண்டவரில்தான் இருக்கிறது என்று தங்களுக்குள் சொல்லிக்கொள்வார்கள்.

அந்நாளில் நான் யூதாவின் குடும்பத் தலைவர்களை விறகுகளுக்கிடையில் "வைத்த நெருப்புச்சட்டிபோலும், வைக்கோல் கட்டுகளுக்குள் தீப்பந்தம் போலும் ஆக்குவேன்: அவர்கள் தங்களைச் சூழ்ந்துள்ள மக்களினங்கள் அனைத்தையும் வலப்பக்கமும் இடப்பக்கமுமாய் அழித்தொழிப்பார்கள்: எருசலேம் மக்களோ முன்பு இருந்த இடமாகிய எருசலேமிலேயே குடியிருப்பார்கள்.

தாவீது குடும்பத்தாரின் மேன்மையும் எருசலேமில் குடியிருப்போரின் மேன்மையும் யூதாவின் மேன்மையைவிட மிகுந்துவிடாதிருக்க ஆண்டவர் யூதாவின் கூடாரங்களுக்கே முதலில் விடுதலை அளிப்பார்.

அந்நாளில் எருசலேமில் குடியிருப்போருக்கு ஆண்டவர் அடைக்கலமாய் இருப்பார்: அந்நாளில் அவர்களுள் காலு஡ன்றி நிற்க வலுவில்லாதோர் கூடத் தாவீதைப்போலிப்பர். தாவீதின் குடும்பித்தார் கடவுளைப்போலும் அவர்களுக்கு முன்சென்ற ஆண்டவரின் பதரைப்போலும் இருப்பர்.

அந்நாளில் நான் எருசலேமுக்கு எதிராக வரும் வேற்றினத்தார் அனைவரையும் அழிக்க வகைதேடுவேன்.

நான் தாவீது குடும்பத்தார்மேலும், எருசலேமில் குடியிருப்போர்மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன். அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்றுநோக்குவார்கள்: அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப் பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள்.

அந்நாளில் எருசலேமில் எழும்பும் ஓலம் மெகிதோவின் சமவெளியில் அதத்ரிம்மோனின் புலம்பலைப்போலப் பெரிதாயிருக்கும்.

நாடு முழுவதும் குடும்பம் குடும்பமாக புலம்பிக் கொண்டிருக்கும்: தாவீது குடும்பத்தாரின் குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும், நாத்தான் குடும்பத்தாரின் குடும்பம் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும்,

லேவி குடும்பத்தாரின் குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும், சிமயி குடும்பங்கள் ஒருபுறம் தனித்தும், அவர்களுடைய பெண்கள் மற்றொரு புறம் தனித்தும் புலம்பி அழுவார்கள்.

எஞ்சியுள்ள எல்லாக் குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியேயும் அவற்றிலுள்ள பெண்கள் தனித்தனியேயும் புலம்பி அழுவார்கள்.

அதிகாரம் 13.

"அந்நாளின் பாவத்தையும் தீட்டையும் நீக்கித் பய்மையாக்கும் நீரூற்று தாவீதின் குடும்பத்தாருக்கெனவும் எருசலேமில் குடியிருப்போருக்கெனவும்" தோன்றும்.

அந்நாளிலே நான் சிலைகளின் பெயர்கள் நாட்டில் இல்லாதவாறு அறவே ஒழித்துவிடுவேன்: அதன்பின் அவற்றைப் பற்றிய நினைவு யாருக்கும் இராது: மேலும் போலி இறைவாக்கினரையும் அசுத்த ஆவியையும் நாட்டிலிருந்து விரட்டி விடுவேன் " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

எவனாவது மீண்டும் இறைவாக்கினனாகத் தோன்றுவானாகில் அவனைப் பெற்றெடுத்த தந்தையும் தாயும், "ஆண்டவரின் பெயரால் பொய் பேசுவதால் நீ உயிர்வாழக்கூடாது " என்று அவனிடம் சொல்வார்கள். அவன் இறைவாக்கு உரைக்கும்போதே அவனைப் பெற்றெடுத்த தாய் தந்தையர் அவனைக் குத்திக் கொன்று போடுவார்கள்.

அந்நாளில் இறைவாக்கினருள் ஒவ்வொருவனும் இறைவாக்கு உரைக்கும் போது தான் கண்ட காட்சியைக் குறித்து வெட்கமடைவான்: ஏமாற்றுவதற்காகக் கம்பளி மேலாடையைப் போர்த்திக் கொள்ளமாட்டான்.

ஆனால், "நான் இறைவாக்கினன் அல்ல: நிலத்தைப் பயிரிடுகிற உழவன்: என் இளமை முதல் நிலத்தை உழுது பயிர் செய்பவன் " என்று சொல்வான்.

"உன் மார்பில் இந்த வடுக்கள் எவ்வாறு ஏற்பட்டன? " என ஒருவன் வினவினால், "என் நண்பர் இல்லத்தில் காயமுற்றபோது இவை ஏற்பட்டன " என மறுமொழி பகர்வான்.

"வாளே எழுந்திடு, என் ஆயனுக்கும் நெருங்கிய நண்பனுக்கும் எதிராகக்கிளர்ந்தெழு என்கிறார் படைகளின் ஆண்டவர். ஓஆயனை வெட்டு: அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்: சிறியோர்க்கு எதிராக என் கையை ஓங்குவேன்.

நாட்டு மக்களுள் மூன்றில் இரு பங்கினர் வெட்டுண்டு மாள்வர்: மூன்றில் ஒரு பங்கினரே எஞ்சியிருப்பர்ஓ, என்கிறார் ஆண்டவர்.

இந்த மூன்றில் ஒரு பங்கினரையும் வெள்ளியை நெருப்பில் இட்டுத் பய்மைப்படுத்துவது போல் பய்மைப்படுத்துவேன்: பொன்னைப் புடமிடுவதுபோல் புடமிடுவேன்: அவர்கள் என் பெயரை நினைத்து மன்றாடுவார்கள்: நானும் அவர்கள் மன்றாட்டிற்குச் செவி கொடுப்பேன்: ஓஇவர்கள் என் மக்கள்ஓ என்பேன் நான், ஓஆண்டவர் எங்கள் கடவுள்ஓ என்பார்கள் அவர்கள். "

அதிகாரம் 14.

இதோ! ஆண்டவரின் நாள் வருகின்றது, அப்போது உன்னிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்கள் உன் கண்ணெதிரே பங்கிடப்படும்.

எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும்படி நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்று கூட்டப்போகிறேன்: நகர் பிடிபடும்: வீடுகள் கொள்ளையிடப்படும்: பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவார்கள்: நகர் மக்களுள் பாதிப்பேர் அடிமைகளாய் நாடு கடத்தப்படுவா஡கள்: ஆனால், எஞ்சியுள்ள மக்களோ, நகரிலிருந்து துரத்தப்படமாட்டார்கள்.

பின்பு, ஆண்டவர் கிளம்பிச்சென்று, முன்னாளில் செய்ததுபோல் அந்த வேற்றினத்தாருக்கு எதிராகப் போர்புரிவார்.

அந்நாளில் அவருடைய காலடிகள் எருசலேமுக்குக் கிழக்கே உள்ள ஒலிவமலையின் மேல் நிற்கும்: அப்போது ஒலிவமலை கிழக்குமேற்"காய்ச் செல்லும் மிகப்பெரும் பள்ளத்தாக்கு ஒன்றில் இரண்டாகப் பிரிக்கப்படும். ஆகவே, அம்மலையின் ஒரு பகுதி வடக்கு நோக்கியும் மற்றொரு பகுதி தெற்கு நோக்கியும் விலகிநிற்கும்.

அப்போது, நீங்கள் என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய்த் தப்பியோடுவீர்கள்: மலைகளின் பள்ளத்தாக்கு ஆட்சால் வரை பரவியிருக்கும்: நீங்களோ யூதாவின் அரசன் உசியாவின் காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தப்பியோடியதுபோல் ஓடிப்போவீர்கள்: அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் புனிதர்கள் அனைவரோடும் வருவார்.

அந்நாளில் வெப்பமோ குளிரோ உறைபனியோ இராது.

அது ஒரே பகலாயிருக்கும், அதன் வரவை ஆண்டவர் மட்டுமே அறிவார். பகலுக்குப்பின் இரவு வராது. மாலை வேளையிலும் ஒளிபடரும்.

அந்நாளில் வற்றாத நீரூற்று ஒன்று எருசலேமிலிருந்து தோன்றி ஓடும்: அதன் ஒரு பாதி கீழ்க்கடலிலும் மறு பாதி மேற்கடலிலும் சென்று கலக்கும். கோடைக்காலத்திலும் குளிர்காலத்திலும் அது ஓடிக்கொண்டேயிருக்கும்.

ஆண்டவர் உலகம் அனைத்திற்கும் அரசராய்த் திகழ்வார். அந்நாளில் ஆண்டவர் ஒருவர் மட்டுமே இருப்பார்: அவர் திருப்பெயர் ஒன்று மட்டுமே இருக்கும்.

கேபாவிலிருந்து எருசலேமுக்குத் தெற்கில் உள்ள ரிம்மோன்"வரை உள்ள நாடு முழுவதும் சமவெளியாக்கப்படும்: எருசலேமோ தான் இருந்த இடத்திலேயே ஓங்கி உயர்ந்து பென்யமின் வாயிலிருந்து முன்னைய வாயில் இருந்த இடமான மூலைவாயில் வரையிலும், அனனியேல் காவல் மாடத்திலிருந்து அரசனுடைய திராட்சை ஆலைகள் வரையிலும் மக்கள் குடியேற்றத்தால் நிறைந்திருக்கும்.

அங்கே மக்கள் குடியிருப்பார்கள். இனி அவர்கள் சாபத்திற்கு ஆளாக மாட்டார்கள். எருசலேம் அச்சமின்றி வாழும்.

எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுத்த எல்லா மக்களினங்களையும் வதைக்கும் பொருட்டு ஆண்டவர் அனுப்பும் கொள்ளை நோய் இதுவே. அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும்போதே ஒவ்வொருவனது சதையும் அழுகிப்போகும். அவர்களுடைய கண்கள் தம் குழிகளிலேயே அழுகிப்போகும். நாக்குகளும் வாய்க்குள்ளேயே அழுகி விடும்.

அந்நாளில் ஆண்டவர் அவர்களுக்கிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவார்: அப்போது அவர்கள் ஒவ்வொருவரும், அடுத்திருப்பார்மேல் கைவைப்பர்: அடுத்திருப்பாருக்கு எதிராகக் கையை ஓங்குவர்.

யூதாவும்கூட எருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும்: அப்போது சுற்றிலுமுள்ள வேற்றினத்தாரின் செல்வங்களாகிய பொன், வெள்ளி, ஆடைகள் பெருமளவில் திரட்டப்படும்.

அவர்களுக்குக் கொள்ளைநோய் வந்தது போலவே அவர்களுடைய பாளையங்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலிய எல்லா விலங்குகளுக்கும் கொள்ளைநோய் வரும்.

பின்பு எருசலேமுக்கு எதிராக எழும்பிய வேற்றினத்தாரில் எஞ்சியிருக்கும் அனைவரும் படைகளின் ஆண்டவராகிய அரசரைத் தொழவும் கூடாரத் திருவிழாவைக் கொண்டாடவும் ஆண்டுதோறும் அங்கே போவர்.

உலகின் இனத்தார் எவரேனும் படைகளின் ஆண்டவராகிய அரசரைத் தொழ எருசலேமுக்குப் போகவில்லை என்றால் அவர்கள் நாட்டில் மழை பெய்யாது.

எகிப்து நாட்டினர் அவரை வழிபட வரவில்லையாயின் அவர்களுக்கும் மழை இல்லாமற் போகும். கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மக்களினங்களை வதைத்த அதே கொள்ளைநோய் அவர்களையும் வதைக்கும்.

இது எகிப்தின் பாவத்திற்கும் கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மற்றெல்லா வேற்றினத்தாரின் பாவத்திற்கும் கிடைக்கும் பயன்.

அந்நாளில் குதிரைகளின் கழுத்திலுள்ள மணிகளில் "ஆண்டவருக்கென அர்ப்பணிக்கப்பட்டவை " என்று எழுதப்பட்டிருக்கும். ஆண்டவரின் கோவிலில் இருக்கும் பானைகள் பலிபீடத்தின் முன்னிருக்கும் கிண்ணங்களைப் போலிருக்கும்.

யூதாவிலும் எருசலேமிலும் உள்ள ஒவ்வொரு பானையும் படைகளின் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டதாய் இருக்கும்: பலி செலுத்துவோர் எல்லாரும் பலி இறைச்சியைச் சமைப்பதற்காக அவற்றை எடுக்க முன்வருவார்கள். மேலும், அந்நாள் முதல் படைகளின் ஆண்டவரது கோவிலில் வணிகர் எவரும் இருக்கமாட்டார்.

புத்தகம் 39 - மலாக்கி

அதிகாரம் 1.

மலாக்கி வாயிலாக இஸ்ரயேலுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு:

"உங்களுக்கு நான் அன்புகாட்டினேன் " என்று ஆண்டவர் சொல்கிறார். நீங்களோ, "எங்களுக்கு நீர் எவ்வாறு அன்புகாட்டினீர்? " என்று கேட்கிறீர்கள். "யாக்கோபுக்கு ஏசா உடன்பிறப்புதான்! ஆயினும் யாக்கோபுக்கன்றோ நான் அன்புகாட்டினேன்.

ஆனால் ஏசாவை வெறுத்தேன், அவனது மலைநாட்டைப் பாழாக்கினேன். அவனது உரிமைச்சொத்தைப் பாலைநிலத்துக் குள்ளநரிகளிடம் கையளித்து விட்டேன் " என்கிறார் ஆண்டவர். "நாங்கள் அழிக்கப்பட்டோ ம்: ஆனாலும் பாழடைந்தவற்றை மீண்டும் கட்டியெழுப்புவோம்.

எங்கள் நகர்கள் அழிக்கப்பட்டன: ஆனால் அவற்றை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவோம் " என்று ஏதோமியர் கூறுவரேயானால், படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "அவர்கள் கட்டியெழுப்பட்டும்: நான் அவற்றைத் தகர்த்துவிடுவேன். தீய நாட்டினர் என்றும், ஆண்டவரின் கடும்சினத்திற்கு என்றென்றும் இலக்கான இனம் என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்.

உங்கள் கண்களாலேயே இதைக் காண்பீர்கள்: கண்டு இஸ்ரயேலின் எல்லைக்கு அப்பாலும் ஆண்டவர் மாட்சி மிக்கவராய் இருக்கிறார் என்று சொல்வீர்கள். "

"மகன் தன் தந்தைக்கு மதிப்புத் தருவான்: பணியாளன் தன் தலைவனுக்கு மரியாதை செலுத்துவான். நான் தந்தையானால் எனக்குரிய மதிப்பு எங்கே? நான் தலைவனானால் எனக்கு நீங்கள் அஞ்சாதது ஏன்? " என்று தமது பெயரை அவமதிக்கும் குருக்களாகிய உங்களைப் படைகளின் ஆண்டவர் கேட்கிறார். நீங்களோ உமது பெயரை எவ்வாறு அவமதித்தோம் என்கிறீர்கள்.

என் பலிபீடத்தின் மேல் தீட்டான உணவைப் படைத்து என்னை அவமதித்தீர்கள். நீங்களோ எவ்வாறு நாங்கள் உம்மைக் களங்கப்படுத்தினோம் என்கிறீர்கள். ஆண்டவரின் பலிபீடத்தை அவமதிக்கலாம் என்"றல்லவோ நினைக்கிறீர்கள்!

குருடானவற்றைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? நொண்டியும் நோயுமாய்க் கிடந்தவற்றைப் பலி குற்றமில்லையா? அவற்றை உன் மாநிலத் தலைவனுக்குக் கொடுத்துப் பார். அவன் உன்னைக் குறித்து மகிழ்ச்சியடைவானோ? உனக்கு ஆதரவு அளிப்பானோ? " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

"இப்பொழுது இறைவன் நம்மீது இரக்கம் காட்டுமாறு அவர் திருமுன் இறைஞ்சி நில்"லுஙகள். நீங்கள் இத்தகைய காணிக்கையைக் கொடுத்திருக்க உங்களுக்குள் யாருக்கேனும் அவர் ஆதரவு அளிப்பாரோ? " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

"என் பலிபீடத்தின்மேல் நீங்கள் வீணாகத் தீ மூட்டாதவாறு எவனாகிலும் கோவில் கதவை மூடினால் எத்துணை நன்று: உங்களை எனக்குப் பிடிக்கவில்லை " என்கிறார் படைகளின் ஆண்டவர். "உங்கள் கையிலிருந்து காணிக்கை எதுவும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

கதிரவன் தோன்றும் திசை தொடங்கி மறையும் திசைவரை வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ்மிக்கது. எவ்விடத்திலும் என் பெயருக்குத் பபமும் பய காணிக்கையும் செலுத்துப்படுகின்றன. ஏனெனில் வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ் மிக்கதே " என்கிறார். படைகளின் ஆண்டவர்.

நீங்களோ "நம் தலைவரது பலிபீடம் தீட்டுப்பட்டது. அதன்மேல் வைத்துள்ள பலியுணவு அருவருப்புக்குரியது " என்று நினைக்கும்பொழுது என் பெயரைக் களங்கப்படுத்துகிறீர்கள்.

"ஓஎவ்வளவு தொல்லை!ஓ என்று அதைப்பற்றி இழிவாய்ப் பேசுகிறீர்கள், " என்கிறார் படைகளின் ஆண்டவர். கொள்ளையடித்ததையும், நொண்டியானதையும், நோயுற்றதையும் கொண்டு வருகிறீர்கள். இவற்றைக் காணிக்கை எனக் கொண்டு வருகிறீர்கள். உங்கள் கையிலிருந்து அதை நான் ஏற்றுக் கொள்வேனோ? " என்று கேட்கிறார் ஆண்டவர்.

தன் மந்தையில் ஊனமற்ற கிடாய் இருக்கையில் ஊனமுற்ற ஒன்றைப் பொருத்தனையாகத்" தலைவராகிய ஆண்டவருக்குப் பலியிடும் எத்தன் சபிக்கப்படுவானாக. "நானே மாவேந்தர், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

அதிகாரம் 2.

"இப்பொழுது, குருக்களே! உங்களுக்கு நான் தரும் கட்டளை இதுவே: என் பெயருக்கு மாட்சி அளிக்கவேண்டும் என்பதை உங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.

எனக்கு நீங்கள் செவிகொடுக்காவிடில் உங்கள் மேல் சாபத்தை அனுப்புவேன். உங்களுக்குரிய நல்லாசிகளைச் சாபமாக மாற்றுவேன். ஆம், இக்கட்டளைக்கு உங்கள் இதயத்தில் இடமளிக்காததால் ஏற்கனவே அவற்றைச் சாபமாக மாற்றிவிட்டேன் " என்று படைகளின் ஆண்டவர் சொல்கிறார்.

"இதோ உங்களை முன்னிட்டு நான் உங்கள் வழிமரபைக் கண்டிப்பேன். திருநாள் பலிவிலங்குகளின் சாணத்தை உங்கள்" முகத்திலேயே வீசியடிப்பேன். அதோடு உங்களையும் பக்கியெறிவேன்.

அப்பொழுது லேவியோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கை நிலைத்திருக்கவே அக்கட்டளையை உங்களுக்குத் தந்தேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் " என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.

"நான் அவனோடு செய்துகொண்ட உடன்படிக்கை, வாழ்வும் அமைதியும் தரும் உடன்படிக்கை. எனக்கு அவன் அஞ்சி நடக்கவே அவற்றை அவனுக்கு அளித்தேன். அவனும் எனக்கு அஞ்சி நடந்தான். என் பெயருக்கு நடுங்கினான்.

மெய்ப்போதனை அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது. தீமை அவன் உதடுகளில் காணப்படவில்லை: அவன் என் திருமுன் அமைதியோடும் நேர்மையோடும் நடந்து கொண்டான்.

நெறிகேட்டிலிருந்து பலரைத் திருப்பிக்கொணர்ந்தான். ஒரு குருவின் உதடுகள் மெய்யறிவைக் காக்க வேண்டும். அவனது நாவினின்று திருச்சட்டத்தைக் கேட்க மக்கள் அவனை நாடவேண்டும். ஏனெனில் படைகளின் ஆண்டவருடைய பதன் அவன்.

நீங்களோ நெறி தவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறி விழச்செய்தீர்கள். லேவியோடு நான் செய்த விழச்செய்தீர்கள். லேவியோடு நான் செய்த உடன்படிக்கையைப் பாழாக்கிவிட்டீர்கள். " என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.

"ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையிலும் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்: ஏனெனில், நீங்கள் என் வழிகளைப் பின்பற்றி ஒழுகவில்லை: உங்கள் போதனையில் ஓரவஞ்சனை காட்டினீர்கள். "

நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம்? நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்?

யூதா நம்பிக்கைத் துரோகம் செய்தான்: இஸ்ரயேலிலும் எருசலேமிலும் அருவருப்பானவை நடந்தேறின. ஏனெனில், ஆண்டவர் விரும்பிய பயகத்தைத் தீட்டுப்படுத்திவிட்டு, யூதா வேற்றுத் தெய்வத்தின் மகளை மணந்துகொண்டான்.

இதைச் செய்பவன் எவனாயிருந்தாலும் அவனுக்காகச் சான்று பகர்பவனோ, மறுமொழி கூறுபவனோ, படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வருபவனோ இல்லாதபடி, யாக்கோபின் கூடாரத்திலிருந்தும் ஆண்டவர் அழித்து விடுவாராக.

நீங்கள் செய்யும் இன்னொன்றும் உண்டு. ஆண்டவரது பலிபீடத்தைக் கண்ணீரால் நிரப்புகிறீர்கள். உங்கள் காணிக்கையை ஆண்டவர் கண்ணோக்காததாலும் அதை விருப்புடன் ஏற்றுக்கொள்ளாததாலும் நீங்கள் ஆண்டவரது பலிபீடத்தை அழுகையாலும் பெருமூச்சுகளாலும் நிரப்புகிறீர்கள்.

"இதற்குக் காரணம் யாது? " என்று வினவுகிறீர்கள். காரணம் இதுவே: உனக்கும் உன் மனைவிக்கும் உன் இளமையில் நிகழ்ந்த திருமணத்திற்கு ஆண்டவர் சாட்சியாய் இருந்தார். அப்படியிருக்க, உன் துணைவியும் உடன்படிக்கையால் உன் மனைவியுமான அவளுக்கு நீ நம்பிக்கைத் துரோகம் செய்தாயே.

உங்களை ஒன்றாக இணைத்தவர் அவரே, வாழ்வின் ஆவியும் அவரே. அவர் நாடுவது தம் மக்களாக வாழும் குழுந்தைகளை அன்றோ? ஆதலால் எவனும் தான் இளமையில் மணந்த மனைவிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருப்பதில் கவனமாய் இருப்பானாக.

ஏனெனில், "மணமுறிவை நான் வெறுக்கிறேன் " என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர். "மணமுறிவு செய்கிறவன் வன்முறையை மேலாடை கொண்டு மறைக்கிறான் " என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆகையால் எச்சரிக்கையாயிருங்கள்: நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.

உங்கள் பேச்சுகளினால் ஆண்டவரைச் சோர்வடையச் செய்யாதீர்கள். "எவ்வகையில் அவரை நாங்கள் சோர்வடையச் செய்தோம்? " என்று வினவுகிறீர்கள். "தீச்செயல் புரிவோர் அனைவரும் ஆண்டவர் கண்ணோக்கில் நல்லவரே: அவரும் அவர்கள் மட்டில் பூரிப்படைகிறார் " என்று சொல்கின்றீர்கள் அல்லது "நீதியின் கடவுள் எங்கே? " என்று கேட்கிறீர்கள்.

அதிகாரம் 3.

"இதோ! நான் என் பதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்: அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் பதர் இதோ வருகிறார் " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார்? அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார்? அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார்.

அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் பய்மைப்படுத்துபவர்போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் பய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போல் அவர்களைப் புடமிடுவார்.

அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையம் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.

அப்போது, "சூனியக்காரர், விபசாரிகள், பொய்யாணையிடுவோர், கூலிக்காரருக்குக் கூலி கொடுக்காத வம்பர், கைம்பெண்ணையும் அனாதைகளையும் கொடுமைப்படுத்துவோர், அன்னியரின் வழக்கைப் புரட்டுவோர், எனக்கு அஞ்சி நடக்காதோர் ஆகிய அனைவர்க்கும் எதிராகச் சான்று பகர்ந்து தண்டனைத் தீர்ப்பு வழங்க நான் விரைந்து வருவேன், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

"யாக்கோபின் பிள்ளைகளே, ஆண்டவராகிய நான் மாறாதவர். அதனால்தான் நீங்கள் இன்னும் அழியாதிருக்கிறீர்கள்.

உங்கள் மூதாதையரின் நாளிலிருந்து என் கட்டளைகளைவிட்டு அகன்றபோனீர்கள். அவற்றைக் கைக்கொள்ளவில்லை. என்னிடம் திரும்பி வாருங்கள்: நானும் உங்களிடம் திரும்பி வருவேன், " என்கிறார் படைகளின் ஆண்டவர். நீங்களோ, "நாங்கள் எவ்வாறு திரும்பி வருவோம்? " என்கிறீர்கள்.

மனிதர் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? நீங்கள் என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள்! "எவ்வாறு நாங்கள் உம்மைக் கொள்ளையடிக்கிறோம்? " என்று வினவுகிறீர்கள். நீங்கள் தரவேண்டிய பத்திலொரு பங்கிலும் காணிக்கையிலும் தான்.

நீங்களும் உங்கள் இனத்தார் அனைவரும் என்னைக் கொள்ளையடித்ததால் சாபத்துக்கு உள்ளானீர்கள்.

என் இல்லத்தில் உணவு இருக்கும் பொருட்டுப் பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டு வந்து அங்கே களஞ்சியத்தில் சேருங்கள். அதன் பிறகு நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, உங்கள் மேல் ததும்பி வழியுமாறு ஆசி வழங்கிறேனா இல்லையா எனப் பாருங்கள், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

"பயிரைத் தின்று அழிப்பனவற்றை உங்களை முன்னிட்டுக் கண்டிப்பேன். அவை உங்கள் நிலத்தின் விளைச்சலைப் பாழாக்கமாட்டா: உங்கள் தோட்டத்தில் உள்ள திராட்சைக் கொடிகள் கனி கொடுக்கத் தவறமாட்டா, " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

" "அப்போது வேற்றினத்தார் அனைவரும் உங்களைப் ஓபேறு பெற்றோர்ஓ என்பார்கள். ஏனெனில் நீங்கள் இனிய நாட்டின் மக்களாய்த் திகழ்வீர்கள், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

"எனக்கு எதிராக நீங்கள் கடுஞ்சொற்களை உதிர்த்து வந்தீர்கள், " என்கிறார் ஆண்டவர். ஆயினும், "உமக்கு எதிராக என்ன பேசினோம்? என்று கேட்கிறீர்கள்.

கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்: அவரது திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதாலும் படைகளின் ஆண்டவர் திருமுன் மனம் வருந்தி நடந்துகொள்வதாலும் நமக்கு என்ன பயன்?

இனிமேல் நாங்கள் ஓஆணவக்காரரே பேறுபெற்றோர்ஓ என்போம். கொடியோர் தழைத்தோங்குவது மட்டுமல்ல, கடவுளை அவர்கள் சோதித்துப் பார்த்தாலும், தப்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றெல்லாம் நீங்கள் கூறவில்லையா? "

அப்போது, ஆண்டவருக்கு அஞ்சி நடந்தோர் ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டனர். ஆண்டவரும் உன்னிப்பாகக் கேட்டார். ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவரது பெயரை நினைந்து வாழ்வோருக்கென நினைவு மல் ஒன்று அவர் திருமுன் எழுதப்பட்டது.

"நான் செயலாற்றும் அந்நாளில் அவர்கள் எனது தனிப்பெரும் சொத்தாக இருப்பார்கள் " என்கிறார் படைகளின் ஆண்டவர். ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவதுபோல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன்.

அப்போது நீங்கள் நேர்மையாளர்க்கும் கொடியோர்க்கும், கடவுளுக்கு ஊழியம் செய்வோர்க்கும் அவருக்கு ஊழியம் செய்யாதோர்க்கும் உள்ள வேற்றுமையை மீண்டும் கண்டுகொள்வீர்கள்.

அதிகாரம் 4.

"இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்: வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது: முற்றிலும் சுட்டெரித்து விடும், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

"ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும். நீங்களும் தொழுவத்திலிருந்து வெளிவரும் கொழுத்த கன்றுகளைப்போல் துள்ளி ஓடுவீர்கள். நான் செயலாற்றும் அந்நாளில் கொடியோரை நீங்கள் நசுக்கி விடுவீர்கள்.

அவர்கள் உங்கள் உள்ளங்காலுக்கு அடியில் சாம்பலைப்போல் ஆவார்கள், " என்கிறார் படைகளின் ஆண்டவர்.

"ஓரேபு மலையில் இஸ்ரயேலர் அனைவருக்கென்றும் என் ஊழியராகிய மோசேக்கு நான் கட்டளையிட்டு அருளிய நீதிச்சட்டத்தையும் நியமங்களையும் நீதிநெறிகளையும் நினைவிற்குக் கொண்டு வாருங்கள்.

இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.

நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்"களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார். "

புத்தகம் 40 - தோபித்து

அதிகாரம் 1.

இது தோபித்தின் கதை: தோபித்து தொபியேலின் மகன்: தொபியேல் அனனியேலின் மகன்: அனனியேல் அதுவேலின் மகன்: அதுவேல் கபேலின் மகன்: கபேல் இரபேலின் மகன்: இரபேல் இரகுவேலின் மகன்: இரகுவேல் அசியேலின் குடும்பத்தினர், நப்தலி குலத்தைச் சேர்ந்தவர்.

தோபித்து அசீரியர்களின் மன்னரான எனமேசரின் காலத்தில் திசிபேயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். திசிபே வட கலிலேயாவில் ஆசேருக்கு வடமேற்கே தென்திசையில் காதேசு நப்தலிக்குத் தெற்கே, பெயேருக்கு வடக்கே உள்ளது.

தோபித்தாகிய நான் என் வாழ்நாளெல்லாம் உண்மையையும் நீதியையும் பின்பற்றி வாழ்ந்துவந்தேன்: அசீரிய நாட்டில் உள்ள நினிவே நகருக்கு என்னுடன் நாடு கடத்தப்பட்ட என் உறவின் முறையாருக்கும் என் இனத்தாருக்கும் தருமங்கள் பல செய்துவந்தேன்.

இளமைப் பருவத்தில் என் நாடாகிய இஸ்ரயேலில் வாழ்ந்தபோது என் மூதாதையான நப்தலியின் குலம் முழுவதும் என் மூதாதையான தாவீதின் வீட்டிலிருந்து பரிந்து சென்றது: இஸ்ரயேலின் கலங்களெல்லாம் பலியிடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராகிய எருசலேமிலிருந்தும் பிரிந்துசென்றது: எருசலேமில்தான் கடவுளின் இல்லமாகிய கோவில் எல்லாத் தலைமுறைகளுக்கும் எக்காலத்துக்கும் உரியதாகக் கட்டப்பட்டுத் திருநிலைப்படுத்தப்பட்டிருந்தது.

இஸ்ரயேலின் மன்னர் எரொபவாம் தாண் நகரில் அமைத்திருந்த கன்றுக்குட்டியின் சிலைக்குக் கலிலேயாவின் மலைகளெங்கும் என் உறவின் முறையார் அனைவரும். என் மூதாதையான நப்தலியின் குலம் முழுவதும் பலி செலுத்தி வந்தார்கள்.

நான் மட்டும் இஸ்ரயேலர் எல்லாருக்கும் எக்காலத்துக்கும் கட்டளையிட்டியிருந்தபடி திருவிழாக்களின்போது பலமுறை எருசலேமுக்குச் சென்றுவந்தேன். அறுவடையின் முதற்கனியையும் விலங்குகளின் தலையீற்றுகளையும் கால்நடையில் பத்திலொரு பங்கையும் முதன்முறை நறுக்கப்பட்ட ஆட்டு முடியையும் எடுத்துக்கொண்டு நான் எருசலேமுக்கு விரைவது வழக்கம்.

அவற்றைக் காணிக்கையாக்குமாறு ஆரோனின் மைந்தர்களாகிய குருக்களிடம் கொடுத்துவந்தேன்: அதுபோன்று தானியம், திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய், மாதுளம்பழம், அத்திப்பழம் ஆகியவற்றோடு மற்றப் பழங்களிலும் பத்திலொரு பங்கை எருசலேமில் திருப்பணிபுரிந்துவந்த லேவியரிடம் கொடுத்து வந்தேன்: மேலும் பத்தில் மற்றொரு பங்கை விற்று ஆறு ஆண்டுக்குச் சேர்த்துவைத்த பணத்தை எருசலேமுக்கு எடுத்துச் சென்று பகிர்ந்து கொடுத்து வந்தேன்.

பத்தில் மூன்றாவது பங்கைக் கைவிடப்பட்டோர்க்கும் கைம்பெண்களுக்கும் இஸ்ரயேல் மக்கள் நடுவில் யூத மதத்தைத் தழுவி வாழ்ந்தோர்க்கும் கொடுத்துவந்தேன்: ஒவ்வொரு மூன்றாம் ஆண்டும் அதை அவர்களிடம் கொடுக்கச் சென்றபோது, மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடியும், என் பாட்டனார் அனனியேலின் அன்னை தெபோரா விதித்திருந்தபடியும் நாங்கள் விருந்துண்டுவந்தோம். என் தந்தை இறக்கவே, நான் அனாதையானேன்.

நான் பெரியவனானபோது, என் தந்தையின் வழிமரபைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தேன்: அவள் வழியாக ஒரு மகனைப் பெற்றெடுத்தேன்: அவனுக்குத் தோபியா என்று பெயரிட்டேன்.

அசீரியாவுக்கு நான் நாடுகடத்தப்பட்டுக் கைதியாக நினிவேக்குச் சென்றபின் என் உறவின் முறையார் அனைவரும் என் இனத்தாரும் வேற்றினத்தாரின் உணவை உண்டுவந்தனர்.

ஆனால் நான் வேற்றினத்தாரின் உணவை உண்ணாமல் தவிர்த்து வந்தேன்.

நான் என் முழுமனத்துடன் என் கடவுளைச் சிந்தையில் இருத்தினேன்.

எனவே உன்னத இறைவன் எனக்கு அருள்கூர்ந்து, எனமேசரின் முன்னிலையில் என்னைப் பெருமைப்படுத்தினார். எனமேசர் தமக்கு வேண்டியவற்றையெல்லாம் வாங்கித்தருபவனாக என்னை அமர்த்தினார்.

அவர் இறக்கும் வரை நான் மேதியாவுக்குச் சென்று அவருக்குத் தேவையானவற்றை அங்கிருந்து வாங்கிவந்தேன். அக்காலத்தில் மேதியா நாட்டில் வாழ்ந்துவந்த கபிரியின் உடன்பிறப்பான கபேலிடம் நாமறு கிலோ வெள்ளியைக் கொடுத்துவைத்தேன்.

எனமேசர் இறந்தபின் அவருடைய மகன் சனகெரிபு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அப்போது மேதியாவுக்குச் செல்ல வழி இல்லாமற்போயிற்று: எனவே அங்கு என்னால் செல்ல முடியவில்லை.

எனமேசரின் காலத்தில் என் இனத்தைச் சேர்ந்த உறவின் முறையாருக்கு தருமங்கள் பல செய்துவந்தேன்.

பசியுற்றோருக்கு உணவும் ஆடையற்றோருக்கு ஆடையும் அளித்து வந்தேன். என் இனத்தாருள் இறந்த யாருடைய சடலமாவது நினிவே நகர மதில்களுக்கு வெளியே எறியப்பட்டிருக்கக் கண்டால், அதை அடக்கம் செய்துவந்தேன்.

சனகெரிபு கொன்றவர்களையும் அடக்கம் செய்தேன்: கடவுளைப் பழித்துரைத்ததற்காக விண்ணக வேந்தர் அவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கியபொழுது அவர் யூதேயாவிலிருந்து தப்பியோடி விட்டார்: அப்பொழுது அவர் தம் சீற்றத்தில் இஸ்ரயேல் மக்களுள் பலரைக் கொன்றார். நான் அவர்களின் சடலங்களைக் கவர்ந்து சென்று அடக்கம் செய்தேன். சனகெரிபு அவற்றைத் தேடியபொழுது காணவில்லை.

ஆனால் நினிவேயைச் சேர்ந்த ஒருவன் சென்று நான் அவற்றைப் புதைத்துவிட்டதாக மன்னரிடம் தெரிவித்தான். எனவே நான் தலைமறைவானேன். பின்னர் மன்னர் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு என்னைக் கொல்லத் தேடினார் என்று அறிந்து அஞ்சி ஓடிவிட்டேன்.

என் உடைமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டன: என் மனைவி அன்னாவையும் என் மகன் தோபியாவையும்தவிர எனக்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை.

நாற்பது நாள்களுக்குள் சனபெரிபின் மைந்தர்கள் இருவர் அவரைக் கொன்றுவிட்டு அரராத்து மலைக்கு ஓடிவிட்டனர். அவருக்குப்பின் அவருடைய மகன் சக்கர்தோன் ஆட்சிக்கு வந்தார். என் சகோதரர் அனயேலின் மகன் அகிக்காரை அவர் தம் அரசின் நிதிப் பொறுப்பில் அமர்த்தினார். இதனால் ஆட்சிப் பொறுப்பு முழுவதும் அவனிடம் இருந்தது.

பின்பு அகிக்கார் எனக்காகப் பரிந்து பேசினதால் நான் நினிவேக்குத் திரும்பி வந்தேன். அசீரிய மன்னர் சனகெரிபுக்கு மது பரிமாறுவோரின் தலைவனாகவும் ஓலைநாயகமாகவும் ஆட்சிப் பொறுப்பாளனாகவும் நிதி அமைச்சனாகவும் அகிக்கார் விளங்கினான். சக்கர்தோனும் அவனை அதே பதவியில் அமர்த்தினார். அகிக்கார் என் நெருங்கிய உறவினன்: என் சகோதரனின் மகன்.

அதிகாரம் 2.

சக்கர்தோன் ஆட்சியில் நான் வீடு திரும்பினேன். என் மனைவி அன்னாவும் என் மகன் தோபியாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டனர். வாரங்களின் விழாவான பெந்தெகோஸ்து திருவிழாவின்பொழுது எனக்காக நல்லதொரு விருந்து தயாரிக்கப்பட்டது. நான் உணவு அருந்த அமர்ந்தேன்.

விருந்தின்போது எனக்குப் பலவகை உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது என் மகன் தோபியாவிடம், பிள்ளாய், நீ போய், நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நம் உறவின் முறையாருள் கடவுளை முழு மனத்தோடு தேடும் ஏழை எவரையேனும் கண்டால், அவரை அழைத்துவா: அவர் என்னோடு உணவு அருந்தட்டும். நீ திரும்பிவரும்வரை நான் உனக்காகக் காத்திருப்பேன், மகனே என்று கூறினேன்.

தோபியா எங்கள் உறவின் முறையாருள் ஏழை ஒருவரைத் தேடிச் சென்றான். அவன் திரும்பி வந்து, அப்பா என்று அழைத்தான். நான், என்ன மகனே? என்றேன். அவன் மறுமொழியாக, அப்பா, நம் இனத்தாருள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் சந்தை வெளியில் எறியப்பட்டு அங்கேயே கிடக்கிறது என்றான்.

உடனே நான் எழுந்து, உணவைத் தொடாமலே வெளியேறித் தெருவிலிருந்து கடலத்தைத் பக்கிவந்தேன்: கதிரவன் மறைந்தபின் அடக்கம் செய்யலாம் என்று அதை என் வீட்டின் ஓர் அறையில் வைத்தேன்.

வீடு திரும்பியதும் குளித்து விட்டுத் துயருடன் உணவு அருந்தினேன்.

உங்கள் திருநாள்களைத் துயர நாள்களாகவும் பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன் என்று பெத்தேலைக் குறித்து இறைவாக்கினர் ஆமோஸ் கூறிய சொற்களை நினைத்து அழுதேன்.

கதிரவன் மறைந்ததும் நான் வெளியே சென்று, குழி தோண்டிச் சடலத்தைப் புதைத்தேன்.

என் அண்டை வீட்டார், இவனுக்கு அச்சமே இல்லையா? இத்தகையதொரு செயலைச் செய்ததற்காகத்தானே ஏற்கெனவே இவனைக் கொல்லத் தேடினார்கள். இவனும் தப்பியோடினான். இருப்பினும் இறந்தவர்களை மீண்டும் அடக்கம் செய்கின்றானே என்று இழித்துரைத்தனர்.

அன்று இரவு குளித்துவிட்டு என் வீட்டு முற்றத்தின் சுவர் அருகில் படுத்து உறங்கினேன். வெப்பமாக இருந்ததால் என் முகத்தை மூடவில்லை.

என் தலைக்குமேல் சுவரில் குருவிகள் இருந்தது எனக்குத் தெரியாது. அவற்றின் சூடான எச்சம் என் கண்களில் விழுந்தது. உடனே கண்களில் வெண்புள்ளிகள் தோன்றின. நலம் பெறுமாறு மருத்துவர்களிடம் சென்றேன். அவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும் வெண்புள்ளிகளால் என் பார்வை குன்றிவந்தது. இறுதியாகப் பார்வையை முற்றும் இழந்தேன். நான் பார்வையற்றவனாக நான்க ஆண்டுகள் வாழ்ந்தேன். என் உறவின் முறையார் அனைவரும் எனக்காக வருந்தினர். எலிமாய் செல்லும்வரை இரண்டு ஆண்டுகளாக அகிக்கார் என்னைப் பேணிவந்தான்.

அக்காலத்தில் என் மனைவி அன்னா பெண்களுக்குரிய கைவேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.

தன் கைவேலைப்பாடுகளை அவள் உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்க, அவர்கள் அவளுக்குக் கூலி கொடுப்பார்கள். திசித்தர் மாதம் ஏழாம் நாள் தான் நெய்திருந்ததை உரிமையாளர்களுக்கு அவள் அனுப்பிவைத்தாள். அவர்கள் அவளுக்கு முழுக் கூலியுடன், விருந்து சமைக்க ஓர் ஆட்டுக்குட்டியையும் கொடுத்தார்கள்.

அவள் திரும்பி வந்தபொழுது ஆட்டுக்குட்டி கத்தத் தொடங்கியது. உடனே நான் அவளை அழைத்து, இந்த ஆட்டுக்குட்டி எங்கிருந்து வந்தது? என்று கேட்டேன். ஒருவேளை இது திருடப்பட்டதோ? அப்படியானால் உரியவரிடம் இதைத்திருப்பிக் கொடுத்துவிடு: ஏனெனில் திருடிய எதையும் உண்ண நமக்கு உரிமை இல்லை என்றேன்.

அதற்கு அவள் என்னிடம், கூலிக்கு மேலாக இது எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது என்றாள். இருப்பினும் நான் அவளை நம்பவில்லை. உரியவருக்கு அதைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு வற்புறுத்தினேன். அவளது செயலைக் குறித்து நான் நாணினேன். அப்பொழுது அவள் மறுமொழியாக என்னிடம், உம்முடைய தருமங்கள் எங்கே? நற்செயல்கள் எங் கே? உம்முடைய குணம் இப்பொழுது நன்றாகவே புலப்படுகிறது! என்றாள்.

அதிகாரம் 3.

நான் மனம் வெதும்பி அழுது புலம்பினேன்: தேம்பியவாறு மன்றாடத் தொடங்கினேன்:

ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர். உம் செயல்களெல்லாம் நேரியவை: உம் வழிகள் அனைத்திலும் இரக்கமும் உண்மையும் விளங்குகின்றன. நீரே உலகின் நடுவர்.

இப்பொழுது, ஆண்டவரே, என்னை நினைவுகூரும்: என்னைக் கனிவுடன் கண்ணோக்கும். என் பாவங்களுக்காகவும் குற்றங்களுக்காகவும் என் மூதாதையருடைய பாவங்களுக்காகவும் என்னைத் தண்டியாதீர். என் மூதாதையர் உமக்கு எதிராகப் பாவம் செய்தார்கள்.

உம் கட்டளைகளை மீறினார்கள். எனவே நாங்கள் சூறையாடப்பட்டோம், நாடு கடத்தப்பட்டோம், சாவுக்கு ஆளானோம். வேற்று மக்களிடையே எங்களைச் சிதறடித்தீர்: அவர்களுடைய பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர்.

என் பாவங்களுக்கு நீர் அளித்த தீர்ப்புகள் பலவும் உண்மைக்கு ஏற்றவை. நாங்கள் உம் கட்டளைகளின்படி ஒழுகவில்லை: உம் திருமுன் உண்மையைப் பின்பற்றி வாழவில்லை.

இப்பொழுது, உம் விருப்பப்படி என்னை நடத்தும்: என் உயிர் பிரிந்துவிடக் கட்டளையிடும். இவ்வாறு நான் மண்ணிலிருந்து மறைந்து மீண்டும் மண்ணாவேனாக. நான் வாழ்வதினும் சாவதே மேல்: ஏனெனில் சற்றும் பொருந்தாத பழிச்சொற்களை நான் கேட்க நேர்ந்தது. ஆகவே கடுந்துயரில் மூழ்கியுள்ளேன். ஆண்டவரே, இத்துயரத்தினின்று நான் விடுதலை பெற ஆணையிடும்: முடிவற்ற இடத்திற்கு என்னைப் போகவிடும்: உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளாதேயும்: ஆண்டவரே! வாழ்வில் மிகுந்த துன்பங்களைக் காண்பதினும், இத்தகைய இகழ்ச்சிகளைக் கேட்பதினும் நான் சாவதே மேல்.

அதே நாளில் மேதியா நாட்டின் எக்பத்தானா நகரில் வாழ்ந்துவந்த இரகுவேலின் மகள் சாரா, தன் தந்தையின் பணிப்பெண்களுள் ஒருத்தி தன்னைப் பழித் துரைத்ததைக் கேட்க நேரிட்டது.

ஏனெனில் ஒருவர் இறந்தபின் ஒருவராக அவள் ஏழு ஆண்களை மணந்திருந்தாள். மனைவிகளுக்குரிய மரபுப்படி அவளுடைய கணவர்கள் அவளுடன் கூடிவாழுமுன் கொடிய அலகையான அசுமதேயு அவர்கள் எல்லாரையும் கொன்றுவிட்டது. இதனால் அந்தப் பணிப்பெண் அவளிடம், நீயே உன் கணவர்களைக் கொன்றவள். நீ கணவர்கள் எழுவரை மணந்திருந்தும் அவர்களுள் எவருடைய பெயரும் உனக்கு வழங்கவில்லை.

உன் கணவர்கள் இறந்துவிட்டதற்காக எங்களை ஏன் தண்டிக்கிறாய்? நீயும் அவர்களிடம் போ. உன் மகனையோ மகளையோ நாங்கள் என்றுமே காணவேண்டாம் என்று பழித்துரைத்தாள்.

அன்று அவள் மனத் நொந்து அழுதாள்: தன்னைத் பக்கிலிட்டுக் கொள்ளும் நோக்குடன் தன் தந்தையின் மாடியறைக்குச் சென்றாள். ஆனால் மீண்டும் சிந்தித்து, என் தந்தையை மக்கள் பழிக்கலாம்: “உனக்கு ஒரே அன்பு மகள் இருந்தாள்: அவளும் தன் துயர் பொறுக்க இயலாமல் நான்றுகொண்டாள்“ என்று இகழலாம். இவ்வாறு என் தந்தை தமது முதுமையில் துயருற்று இறக்க நான் காரணம் ஆவேன். எனவே நான் நான்று கொள்ளமாட்டேன். மாறாக நான் சாகுமாறு ஆண்டவரை இரந்து வேண்டுவேன். அவ்வாறாயின் என் வாழ்நாளில் பழிச்சொற்களை இனிமேல் கேட்க வாய்ப்பு இராது என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

அதே நேரத்தில் சாரா பலகணியை நோக்கிக் கைகளை விரித்துப் பின்வருமாறு மன்றாடினாள்: இரக்கமுள்ள இறைவா போற்றி! என்றும் உம் திருப்பெயர் போற்றி! உம் செயல்களெல்லாம் உம்மை என்றும் போற்றுக!

இப்பொழுது எனது முகத்தை உம்மிடம் திருப்புகிறேன்: என் கண்களை உம்மை நோக்கி எழுப்புகிறேன்.

இவ்வுலகிலிருந்து நான் மறைந்துவிடக் கட்டளையிடும்: இதனால் இத்தகைய பழிச் சொற்களை நான் இனியும் கேளாதிருக்கச் செய்யும்.

ஆண்டவரே, நான் மாசற்றவள் என்பதும் எந்த ஆணுடனும் உறவு கொண்டதில்லை என்பதும் உமக்குத் தெரியும்.

நான் நாடு கடத்தப்பட்டு வாழும் இவ்விடத்தில் என் பெயரையோ என் தந்தையின் பெயரையோ இழிபுபடுத்தவில்லை. நான் என் தந்தைக்கு ஒரே பிள்ளை: அவருக்கு வாரிசாக வேறு குழந்தைகள் இல்லை: அவருக்குச் சகோதரர் இல்லை: நான் மணந்துகொள்ளத்தக்க நெருங்கிய உறவினர் யாரும் இல்லை: என் கணவர்கள் எழுவரையும் ஏற்கெனவே இழந்துவிட்டேன். இனியும் நான் ஏன் வாழவேண்டும்? ஆண்டவரே, நான் சாவது உமக்கு விருப்பமில்லையெனில், எனக்கு எதிராகச் சொல்லப்படும் பழிச்சொல்லையாவது இப்போது அகற்றிவிடும்.

அந்நேரமே தோபித்து, சாரா ஆகிய இருவருடைய மன்றாட்டும் கடவுளின் மாட்சியுடைய திருமுன் கேட்கப்பட்டது.

தோபித்து தம் கண்களினால் கடவுளின் ஒளியைக் காணும்பொருட்டு அவருடைய கண்களிலிருந்து வெண்புள்ளிகளை நீக்கவும், தம் மகன் தோபியாவுக்கு இரகுவேலின் மகள் சாராவை மணமுடித்து, அசுமதேயு என்னும் கொடிய அலகையை அவளிடமிருந்து விரட்டவும், இவ்வாறு அவர்கள் இருவருக்கும் நலம் அருள இரபேல் அனுப்பப்பட்டார். சாராவை அடைய மற்ற அனைவரையம்விட தோபியாவுக்கே முன்னுரிமை இருந்தது. தோபித்து முற்றத்திலிருந்து வீட்டிற்குள் வந்தார். அதே நேரத்தில் இரகுவேலின் மகள் சாராவும் மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.

அதிகாரம் 4.

மேதியா நாட்டின் இராகியில் வாழ்ந்த கபேலிடம் தாம் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தோபித்து அன்று நினைவுகூர்ந்தார்.

சாகவேண்டும் என்று நான் வேண்டியுள்ளேன். அதற்கமுன் என் மகன் தோபியாவை அழைத்து இப்பணத்தைப் பற்றி விளக்கவேண்டும் என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

எனவே அவர் தம் மகன் தோபியாவை அழைக்க, அவரும் தந்தையிடம் வந்தார். மகனுக்குத் தந்தை பின்வருமாறு அறிவுரை வழங்கினார்: என்னை நல்லடக்கம் செய்: உன் தாயை மதித்துநட. அவள் வாழ்நாள் முழுவதும் அவளைக் கைவிடாதே. அவளுக்கு விருப்பமானதைச் செய்: எவ்வகையிலும் அவளது மனத்தைப் புண்படுத்தாதே.

மகனே, நீ அவளது வயிற்றில் இருந்தபோது உன் பொருட்டு அவள் தாங்கிய பல துன்பங்களை நினைத்துப்பார்: அவள் இறந்ததும் அவளை என் அருகில் அதே கல்லறையில் அடக்கம் செய்.

மகனே, உன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரை நினை: பாவம் செய்யவும், அவருடைய கட்டளைகளை மீறவும் ஒருகாலும் விரும்பாதே. உன் வாழ்நாள் முழுவதும் நீதயைக் கடைப்பிடி: அநீதியின் வழிகளில் செல்லாதே.

ஏனெனில் உண்மையைக் கடைப்பிடிப்போர் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பர்.

நீதியைக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும் உன் உடைமையிலிருந்து தருமம் செய். நீ தருமம் செய்யும்போது முகம் கோணாதே: ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே. அதனால் கடவுளும் தம் முகத்தை உன்னிடமிருந்து திருப்பிக்கொள்ளமாட்டார்.

உனக்குரிய செல்வத்துக்கு ஏற்பத் தருமம் செய். உன்னிடம் மிகுதியாகச் செல்வம் இருப்பின், மிகுதியாகக் கொடு: சிறிது செல்வமே இருப்பின், சிறிது கொடு: ஆனால் தருமம் செய்யத் தயங்காதே.

இவ்வாறு துன்பத்தின் நாள் வரும்போது நீ உனக்கெனப் பெரும் செல்வம் சேர்த்திருப்பாய்.

நீ செய்யும் தருமம் உன்னைச் சாவிலிருந்து விடுவிக்கும்: இருளுலகில் செல்லாதவாறு காப்பாற்றும்.

தருமம் செய்வோர் எல்லாருக்கும் அது உன்னத இறைவன் திருமுன் சிறந்த காணிக்கையாகிறது.

மகனே, எல்லாவகைக் தீய நடத்தையிலிருந்தும் உன்னையே காத்துக்கொள்: எல்லாவற்றுக்கும் மேலாக உன் மூதாதையரின் வழி மரபிலிருந்து ஒரு பெண்ணை மணந்து கொள்: நாம் இறைவாக்கினர்களின் மக்களாய் இருப்பதால் உன் தந்தையின் குலத்தைச் சேராத வேற்றினப் பெண்ணை மணம் செய்யாதே. மகனே, தொன்றுதொட்டே நம் மூதாதையராய் விளங்கும் நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரை நினைவில் கொள். அவர்கள் எல்லாரும் தங்கள் உறவின் முறையாரிடமிருந்தே பெண்கொண்டார்கள்: கடவுளின் ஆசியால் மக்கட்பேறு பெற்றார்கள்: அவர்களுடைய வழிமரபினர் இஸ்ரயேல் நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள்.

அதனால், மகனே, உன் உறவின் முறையாரிடம் அன்பு காட்டு: உன் இனத்தவரின் புதல்வர் புதல்வியரான உறவினரிடமிருந்து பெண் கொள்ள மறுப்பதன்மூலம் உன் உள்ளத்தில் செருக்குக்கொள்ளாதே: இத்தகைய செருக்கு அழிவையும் பெருங் குழப்பத்தையும் உருவாக்கும்: சோம்பல் சீர்கேட்டையும் கடும் வறுமையையும் உண்டாக்கும்: சோம்பலே பஞ்சத்திற்குக் காரணம்.

வேலை செய்வோர் அனைவருக்கும் கூலியை உடனே கொடுத்துவிடு: இரவு முழுவதும் அதை உன்னோடு வைத்திராதே. நீ கடவுளுக்கு ஊழியம் புரிந்தால் உனக்குக் கைம்மாறு கிடைக்கும். மகனே, நீ செய்வது அனைத்திலும் கவனமாய் இரு. நீ பெற்ற பயிற்சிக்கு ஏற்றவாறு நல்லொழுக்கம் உடையவனாய் இரு.

உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே. அளவு மீறி மது அருந்தாதே: குடிபோதைப் பழக்கத்துக்கு ஆளாகாதே.

உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு: உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு. தேவைக்குமேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்துவிடு. தருமம் கொடுப்பதற்கு முகம் கோணாதே.

உன் உணவை நீதிமான்களின் கல்லறையில் வைத்துப் பரிமாறு: பாவிகளுடன் அதைப் பங்கிட்டுக் கொள்ளாதே.

ஞானிகளிடம் அறிவுரை கேள்: பயன் தரும் அறிவுரை எதையும் உதறித்தள்ளாதே.

எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவரைப் போற்று: உன் வழிகள் நேரியவையாய் அமையவும் உன் முயற்சிகளும் திட்டங்களும் வெற்றியடையவும் அவரிடம் மன்றாடு: ஏனெனில் வேற்றினத்தார் எவருக்கும் அறிவுரை கிடையாது. ஆண்டவர் நல்ல அறிவுரை வழங்குகிறார். ஆண்டவர் விரும்பினால் மனிதரைப் பாதாளம்வரை தாழ்த்துகிறார். மகனே, இப்பொழுது இக்கட்டளைகளை நினைவில்கொள்: அவை உன் உள்ளத்தினின்று நீங்காதிருக்கட்டும்.

இப்பொழுது, மகனே, உன்னிடம் ஒன்று சொல்வேன்: மேதியா நாட்டு இராகியில் உள்ள கபிரியின் மகன் கபேலிடம் நானு¡று கிலோ வெள்ளியைக் கொடுத்துவைத்துள்ளேன்.

மகனே, நாம் ஏழையாகிவிட்டோம் என அஞ்சாதே. நீ கடவுளுக்கு அஞ்சிப் பாவத்தையெல்லாம் தவிர்த்து, உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நல்லது செய்தால், நீ பெரும். செல்வனாவாய்.

அதிகாரம் 5.

அப்பொழுது தம் தந்தை தோபித்துக்கு மறுமொழியாகத் தோபித்துக்கு மறுமொழியாகத் தோபியா, அப்பா, நீங்கள் எனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்வேன்.

ஆனால் எப்படிக் கபேலிடமிருந்து அந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவேன்? அவருக்கு என்னைத் தெரியாது: எனக்கும் அவரைத் தெரியாது. அவர் என்னை யாரென்று அறிந்து கொள்ளவும், என்னை யாரென்று அறிந்து கொள்ளவும், என்னை நம்பி என்னிடம் பணத்தைக் கொடுக்கவும் நான் எத்தகைய அடையாளம் காட்டுவேன்? மேதியாவுக்கு எவ்வழியாகச் செல்வது, எவ்வாறு செல்வது என்று எனக்குத் தெரியாது என்றார்.

அப்பொழுது தோபித்து தம் மகன் தோபியிடம், ஆவணம் ஒன்றில் கபேல் கையொப்பமிட்டார்: நானும் கையொப்பமிட்டேன். அதை இரண்டாகக் கிழித்து ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டோம். அதைப் பணத்துடன் வைத்துள்ளேன். இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் அவரிடம் பணத்தைக் கொடுத்து வைத்தேன். இப்பொழுது உன்னோடு செல்வதற்கு நம்பிக்கை வாய்ந்த ஒருவரை நீயே தேடிப்பார். நீ திரும்பும் வரைக்குமுள்ள கூலியை அவருக்குக் கொடுப்போம். கபேலிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்று வா மகனே என்றார்.

தம்முடன் மேதியாவுக்குச் செல்ல வழி தெரிந்த ஒருவரைத் தேடித் தோபியா வெளியே சென்றார். சென்று, தம்முன் நின்ற வானபதர் இரபேலைக் கண்டார். ஆனால் அவர் கடவுளின் பதர் என்பது அவருக்குத் தெரியாது.

அவரிடம், இளைஞரே, எங்கிருந்து வருகிறீர்? என்று வினவினார். அதற்கு அவர், உன் உறவின் முறையினர்களாகிய இஸ்ரயேல் மக்களுள் நானும் ஒருவன். வேலை தேடி இங்கு வந்துள்ளேன் என்றார். மேதியாவுக்குச் செல்ல உமக்கு வழி தெரியுமா? என்று தோபியா கேட்டார்.

அதற்கு அவர், ஆம், பன்முறை அங்குச் சென்றுள்ளேன். அது எனக்கு அறிமுகமான இடம். எல்லா வழிகளையம் நான் அறிவேன். அடிக்கடி மேதியாவுக்குச் சென்று, இராகியில் வாழும் நம் உறவினர் கபேலுடன் தங்கியிருக்கிறேன். எக்பத்தானாவிலிருந்து இராகிக்குச் செல்ல இரண்டு நாள் ஆகும்: ஏனெனில் எக்பத்தானா மலைப் பகுதியில் உள்ளது என்றார்.

தோபியா, இளைஞரே, நான் சென்று என் தந்தையிடம் சொல்லி விட்டுத் திரும்பும் வரை எனக்காகக் காத்திரும். நீர் என்னுடம் வர வேண்டும். உமக்கு உரிய சம்பளத்தைக் கொடுப்பேன் என்றார்.

அதற்கு அவர், சரி, நான் காத்திருக்கிறேன்: ஆனால் மிகவும் தாமதியாதீர் என்றார்.

தோபியா உள்ளே சென்று தம் தந்தை தோபித்தை நோக்கி, நம் உறவின் முறையினர்களாகிய இஸ்ரயேல் மக்களுள் ஒருவரைக் கண்டுகொண்டேன் என்றார். அவரிடம் தோபித்து, மகனே, அவருடைய இனம் எது, குலம் எது, உன்னுடன் செல்வதற்கு நம்பிக்கை வாய்ந்தவரா என அறியும் பொருட்டு அவரை என்னிடம் அழைத்து வா என்றார்.

தோபியா வெளியே சென்று அந்த இளைஞரை அழைத்து, என் தந்தை உம்மைக் கூப்பிடுகிறார் என்றார். அவர் உள்ளே சென்றதும் தோபித்து முதலில் அவருக்கு வணக்கம் தெரிவித்தார். அதற்கு இரபேல், வணக்கம். எல்லா மங்கலமும் உரித்தாகுக என்று வாழ்த்தினார். எனக்கு இனி என்ன மங்கலம் உண்டு? நான் பார்வையற்ற மனிதன். விண்ணக ஒளியை என்னால் காணமுடியாது. ஒளியை ஒருபோதும் காண இயலாத இறந்தோர்போன்று இருளில் கிடக்கின்¥றேன்: நான் உயிர்வாழும்போதே இறந்தவர்களுடன் இருக்கிறேன். மனிதரின் குரலைக் கேட்கிறேன்: ஆனால் அவர்களைக் காணமுடிவதில்லை என்று கூறினார். அதற்கு அவர், அஞ்ச வேண்டாம். விரைவ

அதற்குத் தோபித்து இளைஞரிடம், தம்பி, உன் குடும்பம் எது? குலம் எது? சொல் என்றார்.

அவர், குலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை என்ன? என்றார். அதற்கு அவர், தம்பி, நீ உண்மையாகவே யாருடைய மகன் எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உன் பெயர் என்ன? என்று வினவினார்.

இரபேல் அவரிடம், நான் உம் உறவினர்களுள் ஒருவரான பெரிய அனனியாவின் மகன் அசரியா என்றார்.

தோபித்து இளைஞரிடம், தம்பி, நீ உடல்நலமும் பிறநலன்களும் பெற்று வாழ்க! உண்மையைத் தெரிந்து கொள்ளவே உன் குடும்பத்தைப்பற்றி அறிய விரும்பினேன். எனவே என்மீது சினங்கொள்ளாதே. நீ என் உறவினர்களுள் ஒருவனே: நல்ல, சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். பெரிய செமெல்லியின் புதல்வர்களான அனனியா, நாத்தான் ஆகிய இருவரையும் நான் அறிவேன். அவர்கள் என்னுடன் எருசலேமுக்குச் சென்று வழிபடுவதுண்டு. அவர்கள் நெறி பிறழாதவர்கள். உன் உறவினர்கள் நல்லவர்கள். நீ நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். உன் வரவு நல்வரவாகுக! என்று கூறினார்.

அவர் தொடர்ந்து, உனக்கு நாள் ஒன்றுக்கு ஒரு திராக்மா சம்பளமாகக் கொடுப்பேன். மேலும் என் மகனுக்கு ஆகும் செலவுகளைப் போன் றே உன் செலவுகளையும் ஏற்றுக் கொள்வேன்.

என் மகனுடன் செல்: உனக்குரிய சம்பளத்தை விட மிகுதியாகவே கொடுப்பேன் என்றார்.

இரபேல் அவரிடம், அஞ்ச வேண்டாம், நான் அவருடன் போவேன். நாங்கள் நலமே சென்று திரும்புவோம்: ஏனெனில் பாதை பாதுகாப்பானது என்றார். பிறகு தோபித்து அவருக்கு வாழ்த்துக் கூறி, எல்லாம் நலமாக அமையட்டும், தம்பி என்றார். பிறகு தம் மகனை அழைத்து அவரிடம், மகனே, பயணத்திற்கு ஏற்பாடு செய்: உன் சகோதரனுடன் புறப்படு. விண்ணகக் கடவுள் உங்களைப் பாதுகாப்புடன் வழிநடத்தி நலமே என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பாராக. அவருடைய பதர் உங்களை நலமே வழி நடத்துவாராக என்றார். தோபியா புறப்படுமுன் தம் தந்தையையுயம் தாயையுயம் முத்தமிட்டார். அப்போது தோபித்து அவரிடம், நலமே சென்று

ஆனால், அவருடைய தாய் அழுதுகொண்டே தோபித்திடம், ஏன் என் குழந்தையை அனுப்பினீர்? அவன் நமக்கு ஊன்றுகோலும் உறுதுணையும் அல்லவா?

பணமா பெரிது? நம் குழந்தை அதைவிட மதிப்பு வாய்ந்தவன் அல்லவா?

ஆண்டவர் நமக்கு அருளிய வாழ்வே நமக்குப் போதுமே! என்றார்.

தோபித்து அவரிடம், கவலை வேண்டாம். நம் மகன் நலமே சென்று திரும்புவான். அவன் நலமுடன் உன்னிடம் திரும்பும் நாளை நீ காண்பாய்.

எனவே கவலை வேண்டாம், அன்பே: அவர்களைப்பற்றி அச்சம்கொள்ள வேண்டாம். நல்ல பதர் ஒருவர் அவனுடன் சென்று, பயணத்தை வெற்றியாய் முடித்து, நலமே திரும்ப அழைத்து வருவார் என்றார்.

அதைக்கேட்ட தோபியாவின் தாய் அழுகையை நிறுத்தினார்.

அதிகாரம் 6.

இளைஞர் புறப்பட்டுச் சென்றார். வானபதர் உடன் சென்றார். அவர்களது நாயும் வெளியேறி அவர்களைத் தொடர்ந்து சென்றது. பொழுது சாயும்வரை அவர்கள் இருவரும் பயணம் செய்து, திக்¡£சு ஆற்றோரமாய்த் தங்கினார்கள்.

தோபியா தம் பாதங்களைக் கழுவத் திக்¡£சு ஆற்றில் இறங்கினார். பெரும் மீன் ஒன்று திடீரென்று நீரிலிருந்து துள்ளிக் குதித்து அவரது காலைக் கவ்வ முயன்றது. எனவே அவர் கதறினார்.

வானபதர் அவரிடம், பிடியும், மீனை உறுதியாகப் பிடியும் என்றார். இளைஞர் மீனைப் பற்றியிழுத்து அதைக் கரைக்குக் கொண்டுவந்தார்.

வானபதர் அவரிடம், மீனைக் கீறி அதன் பித்தப்பை, இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளும்: ஏனெனில் அவை மருந்தாகப் பயன்படும். ஆனால், குடலை எறிந்துவிடும் என்றார்.

அவ்வாறே இளைஞர் மீனைக் கீறி அதன் பித்தப்பை, இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொண்டார். மீனின் ஒரு பகுதியைச் சுட்டுக் சாப்பிட்டார்: மீதியை உப்பிட்டு வைத்துக் கொண்டார். மீனின் ஒரு பகுதியைச் சுட்டுச் சாப்பிட்டார்: மீதியை உப்பிட்டு வைத்துக் கொண்டார்.

மேதியாவை நெருங்கும்வரை அவர்கள் இருவரும் சேர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

பின் இளைஞர் வானபதரிடம், சகோதரர் அசரியா, மீனின் இதயம், ஈரல், பித்தப்பை ஆகியவை எதற்கு மருந்தாகப் பயன்படும்? என்று வினவினார்.

அதற்குத் பதர் அவரிடம், பேயாவது தீய ஆவியாவது பிடித்திருக்கும் ஒருவர்முன் மீனின் இதயத்தையும் ஈரலையும் புகையச் செய்தால், அவர்கள் முற்றிலும் நலம் பெறுவார்கள். இனி ஒருபோதும் அது அவர்களை அண்டாது.

வெண்புள்ளிகள் உள்ள மனிதரின் கண்களில் பித்தப்பையைத் தடவி ஊதினால் அவர்கள் பார்வை பெறுவார்கள் என்றார்.

அவர்கள் மேதியா நாட்டினுள் சென்று எக்பத்தானாவை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

இரபேல் இளைஞரை நோக்கி, சகோதரர் தோபியா என்று அழைத்தார். அதற்கு அவர், என்ன? என்றார். அவரிடம் அவர், இன்று இரவு நாம் இரகுவேலின் வீட்டில் தங்கவேண்டும். அவர் உமக்கு உறவினர் அவருக்குச் சாரா என்னும் ஒரு மகள் இருக்கிறாள்.

அவளைத் தவிர அவருக்கு வேறு குழந்தைகள் இல்லை. வேறு எவரையும்விட நீரே அவளுக்கு நெருங்கிய உறவினரானதால், அவளை மணந்துகொள்ளும் உரிமை உமக்கே உண்டு: அவளுடைய தந்தையின் உடைமைகளை அடையவும் உமக்கு உரிமை உண்டு. அவள் அறிவுள்ளவள், துணிவு மிக்கவள், மிக அழகானவள். அவளுடைய தந்தையும் நல்லவர் என்றார்.

இரபேல் தொடர்ந்து, சகோதரரே, அவளை மணந்து கொள்ளும் உரிமை உமக்கு உள்ளதால் நான் சொல்வதைக் கேளும். இன்று இரவே அவளைப்பற்றி இரகுவேலிடம் பேசி, அவளை உமக்கு மனைவியாகக் கொடுக்கும்படி கேட்போம். இராகியிலிருந்து நாம் திரும்பும்பொழுது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம். நீர் அவளை மணப்பதற்கு இரகுவேல் தடை எதுவும் சொல்ல முடியாது: மற்றொருவருக்கு அவளை நிச்சயம் செய்யவும் முடியாது என்பது எனக்குத் தெரியும். அவ்வாறு செய்தால் மோசேயின் மலில் விதித்துள்ளபடி அவர் சாவுக்கு உள்ளாவார்: ஏனெனில் தம் மகளை மணப்பதற்கு மற்ற எல்லா ஆண்களையும்விட உமக்கே அதிக உரிமை உண்டு என அவருக்கும் தொ

அப்பொழுது தோபியா மறுமொழியாக இரபேலிடம், சகோதரர் அசரியா, அவள் ஆண்கள் எழுவருக்கு மண முடித்துக் கொடுக்கப்பட்டவள் என்றும், மணவறையில் அவளை அணுகிய அன்றிரவே அவர்கள் இறந்தார்கள் என்றும், ஒரு பேய் அவர்களைக் கொன்றது என்றும் கேள்வியுற்றியிருக்கிறேன்.

இப்போது எனக்கு அச்சமாக உள்ளது: ஏனெனில் அவளுக்குப் பேய் ஒரு தீங்கும் இழைப்பதில்லை: ஆனால் அவளை நெருங்குகின்றவரையே கொன்றுவிடுகிறது. என் தந்தைக்கு நான் ஒரே மகன். நான் இறக்க நேர்ந்தால், என்னைப்பற்றிய வருத்தம் என்தாய் தந்தையின் வாழ்வை முடித்து, அவர்களைக் கல்லறைக்குக் கொண்டு போய்விடும் என அஞ்சுகிறேன். அவர்களை அடக்கம் செய்ய வேறு மகன் இல்லை என்றார்.

அதற்கு வானபதர் அவரிடம், தம் தந்தையின் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை மணந்துகொள்ள உம் தந்தை உமக்குக் கட்டளையிட்டதை மறந்துதவிட்டீரா? ஆதலால் நான் சொல்வதைக் கேளும். சகோதரரே, அந்தப் பேயைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். சாராவை மணந்து கொள்ளும். இன்று இரவே அவள் உம்முடைய மனைவி ஆவாள் என்பது உறுதி.

நீர் மணவறையில் நுழைந்ததும் மீனின் ஈரலிலிருந்தும் இதயத்திலிருந்தும் ஒரு சிறு பகுதியை எடுத்துத் பபத்திற்கான நெருப்பிலிடும். அதிலிருந்து கிளம்பும் புகையைப் பேய் மோந்தவுடன் அது ஓடிவிடும்: இனி ஒருபோதும் அவளை அண்டாது.

அவளுடன் நீர் கூடுமுன் முதலில் நீங்கள் இருவரும் எழுந்து நின்று மன்றாடுங்கள்: விண்ணக ஆண்டவர் உங்கள்மீது இரங்கிக் காத்தருள வேண்டுங்கள். அஞ்சாதீர்! உலகம் உண்டாகுமுன்பே அவள் உமக்கென்று குறிக்கப் பெற்றவள். நீர் அவளைப் பேயினின்று விடுவிக்க, அவள் உம்மோடு வருவாள். அவள் வழியாக உமக்குக் குழந்தைகள் பிறக்கும். அவர்கள் உமக்குச் சகோதரர்கள்போல் இருப்பார்கள் என நம்புகிறேன். எனவே கவலை வேண்டாம் என்றார்.

சாரா தம் தந்தை வழி உறவினர் என்று சொன்ன இரபேல் கூறியதைக் கேட்ட தோபியா அவளை மிகவும் விரும்பித் தம் உள்ளத்தைப் பறி கொடுத்தார்.

அதிகாரம் 7.

அவர்கள் எக்பத்தானாவை அடைந்தபொழுது தோபியா அசரியாவிடம், சகோதரர் அசரியா, உடனே என்னை நம் உறவினர் இரகுவேலின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் என்றார். எனவே இரபேல் அவரை இரகுவேலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இரகுவேல் தம் வீட்டு முற்றத்துக் கதவு அருகே அமர்ந்திருக்க அவர்கள் கண்டு முதலில் அவரை வாழ்த்தினார்கள். அதற்கு அவர், இளைஞர்களே, வணக்கம். உங்களுக்கு நலம் பெருகட்டும் என்று அவர்களை வாழ்த்தினார். பின்னர், அவர்களை அவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று,

இவ்விளைஞர் என் உறவினர் தோபித்தைப்போல் இல்லையா? என்று தம் மனைவி எதினாவிடம் வியந்து கூறினார்.

எதினா அவர்களை, இளைஞர்களே, எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார். அவர்கள் அவரிடம், நாங்கள் நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நப்தலியின் மக்கள் என்றார்கள்.

அதற்கு எதினா அவர்களிடம், எங்கள் உறவினர் தோபித்தைத் தெரியுமா? என்று கேட்டார். அவர்கள், அவரை எங்களுக்குத் தெரியும் என்றார்கள். பின்பு, அவர் நலமா? என்று கேட்டார்.

அவர்கள், அவர் உயிரோடு, நலமாக இருக்கிறார் என்றார்கள். என் தந்தைதான் அவர் என்றார் தோபியா.

உடனே இரகுவேல் துள்ளி எழுந்து அவரை முத்தமிட்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.

தம்பி, உனக்கு மங்கலம் உண்டாகுக! நீ ஒரு நல்ல, சிறந்த தந்தையின் மகன்! தருமங்கள் செய்யும் நேர்மையான ஒரு மனிதர் பார்வையை இழந்தது எத்துணை துயரமான செய்தி! என்று கூறித் தம் உறவினர் தோபியாவின் தோள் மீது சாய்ந்து அழுதார்.

அவருடைய மனைவி எதினாவும் தோபித்துக்காக அழுதார். அவர்களுடைய மகள் சாராவும் அழுதாள்.

பிறகு, இரகுவேல் தம் ஆடுகளுள் ஒன்றை அடித்து அவர்களைச் சிறப்பாக உபசரித்தார். அவர்கள் குளித்தபின் கை அலம்பிவிட்டு உணவு அருந்த அமர்ந்தார்கள். தோபியா அசரியாவிடம், சகோதரரே, என் உறவினளான சாராவை எனக்கு மணம் செய்துகொடுக்குமாறு இரகுவேலிடம் கேளும் என்றார்.

இச்சொற்கள் இரகுவேலின் செவியில் விழுந்தன. அவர் இளைஞர்¢டம், நீ இன்று இரவு உண்டு பருகி மகிழ்வுடன் இரு. தம்பி, என் மகள் சாராவை மணந்து கொள்ள உன்னைத்தவிர உரிமை உள்ள மனிதர் வேறு எவரும் இல்லை. உன்னைத்தவிர வேறு எவருக்கும் அவளைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இல்லை: ஏனெனில் நீ என் நெருங்கிய உறவினன். ஆயினும், தம்பி, உன்னிடம் ஓர் உண்மையைக் கூற விரும்புகிறேன்.

அவளை நம் உறவினர்களுள் எழுவருக்கு மணமுடித்துக் கொடுத்தேன். அவளைக் கூடுவதற்கு நெருங்கிய அன்றிரவே அவர்கள் அனைவரும் இறந்தார்கள். இப்பொழுது, தம்பி, உண்டு பருகு. ஆண்டவர் உங்கள் இருவருக்கும் நல்லது செய்வார் என்றார். அதற்குத் தோபியா, நீங்கள் இதைப்பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை நான் உண்ணமாட்டேன். பருக மாட்டேன் என்றார். இரகுவேல், சரி, செய்கிறேன்: மோசேயின் மலில் விதித்துள்ளபடியே அவளை உனக்கு மணமுடித்துக் கொடுப்பேன். உனக்கு அவளைக் கொடுக்கும்படி விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆகவே உன் உறவினளை ஏற்றுக்கொள். இனி நீ அவளுக்கு உரியவன்: அவள் உனக்குரியவள்: இன

இரகுவேல் தம் மகள் சாராவை அழைக்க, அவள் வந்தாள். அவளது கையைப் பிடித்துத் தோபியாவிடம் கொடுத்தார். மோசேயின் மலில் விதித்துள்ள சட்டங்கள், முறைமைகளின்படி இவள் உனக்கு மனைவியாகிறாள். இவளை ஏற்றுக் கொண்டு உன் தந்தையின் வீட்டுக்கு இனிதே அழைத்துச் செல். விண்ணகக் கடவுள் உங்களுக்கு அமைதி அருள்வாராக என்றார்.

பின்பு, அவர் சாராவின் தாயை அழைத்து ஓர் ஏட்டைக் கொண்டுவரச் சொன்னார். மோசேயின் சட்டம் விதித்துள்ளபடி சாராவைத் தோபியாவின் மனைவியாக்கும் திருமண ஒப்பந்தத்தை அதில் எழுதிக் கொடுத்தார்.

அதன் பின் அவர்கள் உண்டு பருகத் தொடங்கினார்கள்.

இரகுவேல் தம் மனைவி எதினாவை அழைத்து அவரிடம், அன்பே, மற்றோர் அறையை ஏற்பாடு வெய்து அவளை அங்கு அழைத்துச் செல் என்றார்.

இரகுவேல் தமக்குக் கூறியபடி அவர் சென்று அறையில் படுக்கையை ஏற்பாடு செய்தார்: தம் மகளை அங்கு அழைத்துச் சென்று, அவளுக்காக அழுதார். பிறகு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளிடம், அஞ்சாதே, மகளே, விண்ணக ஆண்டவர் உன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார். துணிவுகொள், மகளே! என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

அதிகாரம் 8.

அவர்கள் உண்டு பருகி முடித்தபிப் சாராவின் பெற்றோர் உறங்க விரும்பினர்: எனவே மணமகனைப் படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்றனர்.

அப்பொழுது தோபியா இரபேலின் சொற்களை நினைவுகூர்ந்து, தம் பையிலிருந்து மீனின் ஈரலையும் இதயத்தையும் எடுத்துக்கொண்டார். அவற்றைத் பபத்திற்கான நெருப்பிலிட்டார்.

மீனிலிருந்து கிளம்பிய தீய நாற்றம் பேயைத் தாக்கவே அது பறந்து எகிப்துக்கு ஓடிப்போயிற்று. இரபேல் விரட்டிச் சென்று அதைக் கட்டி விலங்கிட்டார்.

சாராவின் பெற்றோர் வெளியில் சென்று அறையின் கதவை மூடினர். தோபியா படுக்கையிலிருந்து எழுந்து சாராவிடம், அன்பே, எழுந்திரு. நம் ஆணடவர் நம்மீது இரங்கிக் காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம் என்றார்.

சாரா எழுந்து நின்றாள். அவர்கள் மன்றாடத் தொடங்கி, தங்களைக் காத்தருளுமாறு வேண்டினார்கள். தோபியா பின்வருமாறு வேண்டினார்: எங்கள் மூதாதையரின் இறைவா, போற்றி உமது பெயர் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் போற்றி! வானங்களும் உம் படைப்பு அனைத்தும் எக்காலமும் உம்மைப் போற்றுக!

நீர் ஆதாமைப் படைத்தீர்: அவருடைய மனைவி ஏவாளை அவருக்குத் துணையாகவும் ஆதரவாகவும் உண்டாக்கினீர். அவர்கள் இருவரிடமிருந்தும் மனித இனம் தோன்றியது. “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று: அவனுக்குத் தகுந்ததொரு துணையை உருவாக்குவோம்“ என்று உரைத்தீர்.

இப்பொழுது என் உறவினள் இவளை நான் மனைவியாக ஏற்றுக்கொள்வது இச்சையின் பொருட்டன்று, நேர்மையான நோக்கத்தோடுதான். என்மீதும் இவள்மீதும் இரக்கம் காட்டும்: நாங்கள் இருவரும் முதுமை அடையும்வரை இணைபிரியாது வாழச் செய்யும்.

இருவரும் ஆமென், ஆமென் என்று கூறினர்.

அன்று இரவு உறங்கினர்.

இரகுவேல் எழுந்து தம் பணியாளர்களைத் தம்மிடம் அழைக்க, அவர்கள் சென்று ஒரு குழி வெட்டினார்கள். தோபியா அனேகமாக இறந்திருப்பான். அவ்வாறாயின் நாம் இகழ்ச்சிக்கும் நகைப்புக்கும் ஆளாவோம் என்றார்.

அவர்கள் குழிவெட்டி முடித்தபொழுது, இரகுவேல் வீட்டுக்குள் சென்று தம் மனைவியை அழைத்து,

பணிப்பெண்களுள் ஒருத்தியை அனுப்பு. அவள் உள்ளே சென்று, தோபியா உயிரோடு இருக்கிறானா என்று பார்த்து வரட்டும். அவன் இறந்திருந்தால் எவரும் அறியா வண்ணம் அவனைப் புதைத்துவிடலாம் என்று கூறினார்.

எனவே அவர்கள் ஒரு பணிப்பெண்ணை அனுப்பினார்கள்: விளக்கேற்றிக் கதவைத் திறந்தார்கள். பணிப்பெண் உள்ளே சென்று அவர்கள் ஒன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கக் கண்டாள்.

அவள் வெளியே வந்து, தோபியா உயிருடன் இருக்கின்றார் என்றும் அவருக்குத் தீங்கு எதுவும் நேரவில்லை என்றும் தெரிவித்தாள்.

அவர்கள் விண்ணகக் கடவுளைப் புகழ்ந்தார்கள். இரகுவேல் பின்வருமாறு மன்றாடினார்: கடவுளே, போற்றி! எவ்வகை மெய்ப் புகழ்ச்சியும் உமக்கு உரித்தாகுக. எக்காலமும் நீர் புகழப்பெறுவீராக.

என்னை மகிழ்வித்த நீர் போற்றி! நான் அஞ்சியதுபோல் எதுவும் நடக்கவில்லை. உம் இரக்கப் பெருக்கிற்கு ஏற்ப எங்களை நடத்தியுள்ளீர்.

தம் பெற்றோருக்கு ஒரே மகனும் ஒரே மகளுமான இவர்கள் இருவருக்கும் இரக்கம் காட்டிய நீர் போற்றி. ஆண்டவரே, இவ்விருவர்மீதும் இரங்கிக் காத்தருளும். இவர்கள் மகிழ்ச்சியும் இரக்கமும் பெற்று நிறை வாழ்வு காணச் செய்தருளும்.

பின்னர் இரகுவேல் தம் பணியாளர்களிடம், பொழுது விடியுமுன் குழியை மூடிவிடுமாறு கூறினார்.

இரகுவேல் தம் மனைவியிடம் நிறைய அப்பம் சுடச் சொன்னார். அவரே மந்தைக்குச் சென்று இரண்டு காளைகளையும் நான்கு ஆடுகளையும் ஓட்டி வந்து சமைக்கச் சொன்றார். அவர்கள் விருந்து ஏற்பாடு செய்தார்கள்.

இரகுவேல் தோபியாவை அழைத்து அவரிடம், பதினான்கு நாள்கள் நீ இங்கிருந்து நகரக் கூடாது. என்னுடன் உண்டு பருகி இங்கேயே தங்கியிரு: சோர்வுற்றிரக்கும் என் மகளின் மனத்துக்கு மகிழ்வூட்டு.

என் உடைமையிலெலாம் பாதியை இப்பொழுதே எடுத்துக்கொள். உன் தந்தையின் வீட்டிற்கு நலமாகத் திரும்பு. நானும் என் மனைவியும் இறந்ததும் மற்றொரு பாதியும் உன்னைச் சேரும். அஞ்சாதே, தம்பி! நான் உனக்குத் தந்தை: எதினா உனக்குத் தாய். இனிமேல் என்றும் நாங்கள் உன்னுடன் உன் மனைவியுடனும் இருப்போம். துணிவுகொள் மகனே! என்று கூறினார்.

அதிகாரம் 9.

பின்னர் தோபியா இரபேலை அழைத்து அவரிடம்,

சகோதரர் அசரியா, நீர் நான்கு பணியாளர்களை அழைத்துக் கொண்டு இரண்டு ஒட்டகங்களோடு இராகிக்குப் புறப்பட்டுக் கபேலிடம் செல்லும். அவரிடம் ஆவணத்தைக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும். அவரையும் உம்முடன் திருமணத்திற்கு அழைத்து வாரும்.

என் தந்தை நாள்களை எண்ணிக்கொண்டிருப்பார் என்பது உமக்குத் தெரியுமே. நான் ஒரு நாள் தாமதித்தாலும் அவர் மிகவும் துயருக்குள்ளாவார்.

இரகுவேல் என்ன ஆணையிட்டுள்ளார் எனப் பாரும். நான் அவருடைய ஆணையை மீற முடியுமா? என்றார்.

எனவே இரபேல் நான்கு பணியாளர்களை அழைத்துக் கொண்டு, இரண்டு ஒட்டகங்களோடு மேதியாவில் இருந்த இராகிக்குச் சென்று கபேலுடன் தங்கினார்: அவரிடம் ஆவணத்தைக் கொடுத்தார். தோபித்துடைய மகன் தோபியாவின் திருமணத்தைப்பற்றிக் கூறி, திருமணத்திற்கு அவரைத் தோபியா அழைத்துவரச் சொன்னதாக உரைத்தார். கபேல் எழுந்து முத்திரையிட்ட பணப்பைகளைச் சரிபார்த்து எடுத்து வைத்தார்.

எல்லாரும் வைகறையில் எழுந்து திருமணத்திற்குச் சென்றனர். அவர்கள் இரகுவேலின் வீட்டை வந்தடைந்தபொழுது உணவருந்திக்கொண்டிருந்த தோபியா எழுந்து கபேலுக்கு வணக்கம் தெரிவித்தார். கபேல் மகிழ்ச்சிக் கண்ணீர் மல்க, ¥நல்லவனே, சிறந்தவனே, நன்மையும் சிறப்பும் நேர்மையும் வள்ளன்மையும் நிறைந்தவரின் மகனே, ஆண்டவர் உனக்கும் உன் மனைவிக்கும் அவளுடைய பெற்றோருக்கும் வானகப் பேறுகளை வழங்குவாராக. என் உறவினர் தோபித்தைப்போலத் தோற்றமுள்ள ஒருவரைக் காணச் செய்த கடவுள் போற்றி என்று கூறித் தோபித்தை வாழ்த்தினார்.

அதிகாரம் 10.

இதற்கிடையில், மேதியாவுக்குச் சென்று திரும்ப எத்தனை நாள்களாகும் என்று ஒவ்வொரு நாளும் தோபித்து எண்ணிக் கொண்டிருந்தார். நாள்கள் நகர்ந்தனவேதவிர மகன் திரும்பிவரவில்லை.

ஒருவேளை அங்குத் தாமதம் ஆகிவிட்டதோ? கபேல் இறந்திருப்பாரோ? தோபியாவுக்குப் பணம் கொடுக்க யாரும் இல்லையோ? என்றெல்லாம் எண்ணி,

கவலைகொள்ளத் தொடங்கினார்.

அவருடைய மனைவி அன்னா, என் மகன் மறைந்துவிட்டான். அவனை இனி உயிரோடு காண முடியாதே! என்று மகனை நினைத்து அழுது புலம்பத் தொடங்கினார்.

ஜயோ! என் மகனே, என் கண்களின் ஒளியான உன்னைப் போகவிட்டேனே! என்று கலங்கினார்.

தோபித்து, அன்பே, பேசாமல் இரு: கவலைப்படாதே. நம் மகன் நன்றாய்த்தான் இருக்கிறான். அங்கு அவர்களுக்கு எதிர்பாராமல் ஏதாவது நடந்திருக்கலாம். அவனுடன் சென்ற மனிதர் நம்பத்தக்கவர்: நம் உறவினர்களுள் ஒருவர். அன்பே, மகனுக்காக வருந்தாதே. விரைவில் அவன் திரும்பி விடுவான் என்று தம் மனைவியைத் தேற்றினார்.

அதற்கு அன்னா, என்னிடம் பேசாதீர்கள். என்னை ஏமாற்ற வேண்டாம். என் மகன் இறந்துவிட்டான் என்ற புலம்பினார். நாள்தோறும் அன்னா ஓடிச் சென்று தம் மகன் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டிருப்பார்: யாரையும் நம்பமாட்டார்: கதிரவன் மறைந்ததும் வீடு திரும்புவார்: இரவெல்லாம் உறங்காமல் அழுதுகொண்டேயிருப்பார்.

இரகுவேல் தாம் உறுதியிட்டுக் கூறியிருந்தவாறு தம் மகளுக்காக வழங்கிய பதினான்கு நாள் விருந்து நிறைவு பெற்றது. பின தோபியா அவரிடம் சென்று, என்னைப் போகவிடுங்கள். என் தந்தையும் தாயும் என்னை மீண்டும் காணலாம் என்னும் நம்பிக்கையை இதற்குள் இழந்திருப்பார்கள் என அறிவேன். இப்பொழுது என் தந்தையிடம் செல்ல விடை அளிக்குமாறு உங்களை வேண்டுகிறேன். மாமா, எந்நிலையில் நான் அவரை விட்டுவந்தேன் என்று உங்களுக்கு நான் ஏற்கனவே கூறியுள்ளேன் என்றார்.

ஆனால் இரகுவேல் தோபியாவிடம், தங்கு, மருமகனே: என்னுடன் தங்கியிரு. உன்னைப்பற்றி உன் தந்தை தோபித்திடம் தெரிவிக்க நான் பதர்களை அனுப்புகிறேன் என்றார். அதற்கு அவர், வேண்டவே வேண்டாம். என் தந்தையிடம் செல்ல விடை அளிக்குமாறு உங்களை வேண்டுகிறேன் என்று வலியுறுத்தினார்.

இரகுவேல் எழுந்து தோபியாவின் மனைவி சாராவையும் தம் உடைமையிலெல்லாம் பாதியையும் ஆண் பெண் பணியாளர்களையும் காளைகள், ஆடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், துணி, பணம் , வீட்டுக்குரிய பொருள்கள் ஆகிய அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து,

பிரியா விடை கூறினார். தோபியாவைக் கட்டித் தழுவியபடி, மருமகனே, நலமுடன் போய்வா: உன் பயணம் இனிதே அமையட்டும். விண்ணக ஆண்டவர் உனக்கும் உன் மனைவி சாராவுக்கும் வளம் அருள்வாராக. நான் இறக்குமுன் உங்கள் குழந்தைகளைக் காண்பேனாக என்றார்.

பின் தம் மகன் சாராவிடம், மகளே, உன் மாமனாரின் வீட்டிற்குப் புறப்பட்டுச் செல். இன்றுமுதல் அவர்கள் உன் பெற்றோருக்கு ஒப்பானவர்கள். மனநிறைவோடு போய்வா. என் வாழ்நாள் முழுவதும் உன்னைப் பற்றி நல்லதே கேட்பேனாக என்று கூறி அவர்களை வழியனுப்பி வைத்தார்.

எதினா தோபியாவிடம், என் அன்புக்குரிய மருமகனே, ஆண்டவர் உம்மை நலமுற அழைத்துச்செல்வாராக. நீரும் என் மகள் சாராவும் பெற்றெடுக்கும் குழந்தைகளை நான் இறக்குமுன் காண்பேனாக. ஆண்டவர் திருமுன் என் மகளை உம்மிடம் ஒப்படைக்கின்றேன். உம் வாழ்நாள் முழுவதும் அவள் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும். மருமகனே, மனநிறைவோடு போய்வாரும். இன்றுமுதல் நான் உம் அன்னை: சாரா உம் மனைவி. நம் வாழ்வில் எந்நாளும் வளமாக வாழ்வோமாக என்று கூறி, அவர்கள் இருவரையும் முத்தமிட்டு இனிதே வழியனுப்பிவைத்தார்.

தோபியா, என் வாழ்நாளெல்லாம் உங்களை மதிப்பதே எனக்கு மகிழ்ச்சி என்று கூறி, இரகுவேலிடமிருந்தும் அவருடைய மனைவி எதினாவிடமிருந்தும் நலமோடும் மகிழ்ச்சியோடும் விடைபெற்றார். விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரும், அனைத்துக்கும் மன்னருமானவரே தம் பயணத்தை வெற்றியாக நடத்திக் கொடுத்தமைக்காக அவரைப் போற்றினார்.

அதிகாரம் 11.

அவர்கள் நினிவேக்கு எதிரே இருந்த காசெரின் நகரை நெருங்கியபொழுது இரபேல்,

உம் தந்தையை எந்நிலைக்கு விட்டுவந்தோம் என்பது உமக்குத் தெரியும்.

எனவே உம் மனைவிக்கு முன்னரே நாம் விரைந்து சென்று, மற்றவர்கள் வந்து சேர்வதற்குள் வீட்டை ஒழுங்குபடுத்துவோம் என்றார்.

இரபேல் தோபியாவிடம், மீனின் பித்தப்பையைக் கையில் எடுத்துக்கொள்ளும் என்றார். இருவரும் ஒன்றாகச் சென்றனர். நாயும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றது.

இதற்கிடையில் அன்னா தம் மகன் வழியைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார்.

மகன் வருவதைக் கண்டு தம் கணவரிடம், உம் மகன் வருகிறான்: அவனுடன் சென்றவரும் வருகிறார் என்றார்.

தோபியா தம் தந்தையை அணுகுமுன் இரபேல் அவரிடம், உன் தந்தை பார்வை பெறுவது உறுதி.

அவருடைய கண்களில் மீனின் பித்தப்பையைத் தேய்த்துவிடும். அது அவருடைய கண்களில் உள்ள வெண்புள்ளிகள் சுருங்கி உரிந்து விழச் செய்யும். உம் தந்தை பார்வை பெற்று ஒளியைக் காண்பார் என்றார்.

அன்னா ஓடி வந்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, மகனே, உன்னைப் பார்த்துவிட்டேன். இனி நான் இறக்கலாம் என்று கூறி மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.

தோபித்து எழுந்து, தடுமாறியவாறு முற்றத்தின் கதவு வழியாக வெளியே வந்தார்.

தோபியா அவரிடம் சென்றார். அவரது கையில் மீனின் பித்தப்பை இருந்தது. தம் தந்தையைத் தாங்கியவாறு அவருடைய கண்களில் ஊதி, கலங்காதீர்கள், அப்பா என்றார். பிறகு கண்களில் மருந்திட்டு,

தம் இரு கைகளாலும் அவருடைய கண்களின் ஓரத்திலிருந்து படலத்தை உரித்தெடுத்தார்.

தோபித்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தவாறே, என் மகனே, என் கண்ணின் ஒளியை, உன்னைப் பார்த்துவிட்டேன் என்றார்.

கடவுள் போற்றி. அவரது மாபெரும் பெயர் போற்றி! அவருடைய பய வானபதர் அனைவரும் போற்றி! அவரது மாபெரும் பெயர் நம்மைப் பாதுகாப்பதாக! எல்லா வானபதரும் என்றென்றும் போற்றி! கடவுள் என்னைத் தண்டித்தார். இப்போதா என் மகன் தோபியாவை நான் காண்கிறேன் என்று கடவுளைப் போற்றினார்.

தோபியா அக்களிப்புடன் கடவுளை வாயாரப் புகழ்ந்துகொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்: தம் பயணத்தை வெற்றியாக முடித்துவிட்டதாகவும், பணத்தைத் திரும்பப் பெற்றுவிட்டதாகவும், இரகுவேலின் மகள் சாராவை மணம் புரிந்துகொண்டதாகவும், அவள் நினிவேயின் வாயில் அருகில் வந்து கொண்டிருப்பதாகவும் தம் தந்தையிடம் கூறினார்.

தோபித்து அக்களிப்புடன் ஆண்டவரைப் புகழ்ந்து கொண்டே தம் மருமகளைச் சந்திக்க நினிவேயின் வாயிலுக்குச் சென்றார். நினிவே மக்கள் அவர் செல்வதையும், யாருடைய உதவியுமின்றித் திடமாக நடப்பதையும் கண்டு வியந்தார்கள். தம் கண்களைத் திறந்ததன் வழியாகக் கடவுள் தம்மீது எத்துணை இரக்கம் காட்டியுள்ளார் என்று தோபித்து அவர்கள் முன் அறிக்கையிட்டார்.

தம் மகன் தோபியாவின் மனைவி சாராவைச் சந்தித்து வாழ்த்தினார். மருமகளே, உன்னை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்த உன் கடவுள் போற்றி! மருமகளே, உன் தந்தை வாழ்க! என் மகன் தோபியாவுக்கு என் வாழ்த்துகள். உனக்கும் என் வாழத்துகள். மருமகளே, உன் வீட்டிற்குள் வா. நலம், பேறு, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் உன்னோடு வருக! என்று வரவேற்றார்.

நினிவேயில் இருந்த யூதர்கள் அனைவருக்கும் அது ஓர் இனிய நாள்.

தோபித்தின் நெருங்கிய உறவினர் அகிக்காரும் நாதாபும் அவரது மகிழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

அதிகாரம் 12.

திருமண விழா முடிந்ததும், தோபித்து தம் மகன் தோபியாவை அழைத்து, மகனே, உன்னுடன் பயணம் செய்த இளைஞருக்கு இப்பொழுது சம்பளம் கொடுத்துவிடு: உரிய தொகையைவிட மிகுதியாகவே கொடு என்றார்.

அதற்கு அவர், அப்பா, அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கட்டும்? நாங்கள் கொண்டு வந்த தொகையில் பாதியை அவருக்குக் கொடுத்தாலும் தகும்:

ஏனெனில் அவர் என்னை நலமே திரும்ப அழைத்து வந்து சேர்த்தார்: என் மனைவியை நலம் பெறச் செய்தார்: பணத்தை என்னுடன் கொண்டுவந்தார்: உங்களுக்கு நலம் அளித்தார். இவற்றுக்கெல்லாம் சேர்த்து எவ்வளவு கொடுக்கலாம்? என்று கேட்டார்.

தோபித்து அவரிடம், மகனே அவர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைப் பெறுவதற்கு அவருக்குத் தகுதி உள்ளது என்றார்.

பின்னர் இரபேலை அழைத்து, நீர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைச் சம்பளமாக எடுத்துக்கொண்டு நலமே சென்று வருக என்று கூறினார்.

அப்பொழுது இரபேல் அவர்கள் இருவரையும் தனியாக அழைத்துப் பின்வருமாறு கூறினார்: கடவுளைப் புகழுங்கள்: அவர் உங்களுக்குச் செய்த நன்மைகளை எல்லா உயிர்கள் முன்னும் அறிக்கையிடுங்கள். அவரது பெயரைப் புகழ்ந்து பாடுங்கள். மனிதர் அனைவர் முன்னும் கடவுளின் செயல்களைப் புகழ்ந்து அறிக்கையிடத் தயங்காதீர்கள்.

மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது: கடவுளின் செயல்களை எடுத்துரைப்பதும் அறிக்கையிடுவதும் அதனினும் சிறந்தது. நல்லதைச் செய்யுங்கள்: தீமை உங்களை அணுகாது.

அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. ஆனால் நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது. அநீதியாகச் சேர்த்த சிறிதளவு செல்வம் சிறந்தது.

தருமம் சாவினின்ற காப்பாற்றும்: எல்லாப் பருவத்தினின்றும் பய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும்.

பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள்.

முழு உண்மையையும் உங்களுக்கு எடுத்துரைப்பேன்: எதையும் உங்களிடமிருந்து மறைக்கமாட்டேன். மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது: கடவுளின் செயல்களை எடுத்துரைப்பது அதனினும் சிறந்தது என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

நீரும் சாராவும் மன்றாடியபோது நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்: இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன்.

நீர் உணவு அருந்துவதைவிட்டு எழுந்து வெளியே சென்று, இறந்தோரை அடக்கம்செய்யத் தயங்காதபோது நானே உம்மைச் சோதிக்க அனுப்பப்பட்டேன்.

அதேபோல் உமக்கும் உம் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுள் என்னை அனுப்பினார்.

நான் இரபேல். ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானபதர்களுள் ஒருவர் என்றார்.

அதிர்ச்சி மேலிட இருவரும் அச்சத்துடன் குப்புற விழுந்தனர்.

இரபேல், அவர்களிடம், அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதி பெருகட்டும். கடவுளை என்றென்றும் புகழுங்கள்.

என் விருப்பப்படியன்று, கடவுளின் திருவுளப்படியே நான் உங்களோடு இருந்தேன். உங்கள் வாழ்நாள் முழுவதும் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.

நான் ஒன்றும் உண்ணவில்லை: நீங்கள் கண்டதெல்லாம் வெறும் காட்சியே என அறிந்துகொள்ளுங்கள்.

இப்பொழுது உலகில் இருக்கும்பொழுதே ஆண்டவரைப் போற்றுங்கள்: கடவுளது புகழை அறிக்கையிடுங்கள். இதோ, நான் என்னை அனுப்பியவரிடமே திரும்புகிறேன். உங்களுக்கு நிகழ்ந்த இவற்றையெல்லாம் எழுதிவையுங்கள் என்றார். பின்னர் விண்ணகம் நோக்கிச் சென்றா+.

அவர்கள் தரையிலிருந்து எழுந்தபோது இரபேலைக் காணமுடியவில்லை.

அவர்கள் கடவுளைப் பாடிப் புகழ்ந்தார்கள்: கடவுளின் பதர் அவர்களுக்குத் தோன்றி ஆற்றிய மாபெரும் செயல்களுக்காகக் கடவுளின் புகழை அறிக்கையிட்டார்கள்.

அதிகாரம் 13.

தோபித்தின் புகழ்ப்பா வருமாறு:

என்றும் வாழும் கடவுள் போற்றி! ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும். அவர் தண்டிக்கிறார்: இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்: பேரழிவிலிருந்து மேலே பக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை.

இஸ்ரயேல் மக்களே, வேற்றினத்தார்முன் அவரது புகழை அறிக்கையிடுங்கள். ஏனெனில் அவர் அவர்களிடையே உங்களைச் சிதறடித்துள்ளார்.

அவர் தமது பெருமையை உங்களுக்குக் காட்டியுள்ளார். எல்லா உயிர்கள்முன்னும் அவரை ஏத்துங்கள். ஏனெனில் அவர் நம் ஆண்டவர்: நம் கடவுள்: நம் தந்தை: எக்காலத்துக்கும் அவர் கடவுள்.

உங்களுடைய நெறிகெட்ட செயல்களுக்காக அவர் உங்களைத் தண்டிப்பார்: நீங்கள் சிதறடிக்கப்பட்டுள்ள எல்லா நாடுகளிலிருந்தும் உங்களை ஒன்றுகூட்டி உங்கள் அனைவர்மீதும் இரக்கத்தைப் பொழிவார்.

நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்: தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக்கொள்வார்.

உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை இப்பொழுது எண்ணிப்பாருங்கள்: நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்: வாயார அவரை அறிக்கையிடுங்கள். என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள்.

நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்: அவருடைய ஆற்றலையும் மேன்மையையும் பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன். பாவிகளே, மனந்திரும்புங்கள்: அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள். ஒருவேளை அவர் உங்கள் மீது அருள்கூர்வார்: உங்களுக்கு இரக்கங்காட்டுவார்.

நான் என் கடவுளைப் புகழ்ந்தேத்துவேன்: என் உள்ளம் விண்ணக வேந்தரைப் போற்றுகின்றது: அவரது மேன்மையை நினைத்து பேருவகை கொள்கிறது.

அனைவரும் புகழ் பாடுங்கள்: எருசலேமில் அவரைப் போற்றுங்கள். திரு நகரான எருசலேமே, உன் மக்களுடைய செயல்களின் பொருட்டே அவர் உன்னைத் தண்டிப்பார்: நீதிமான்களின் பிள்ளைகள்மீது மீண்டும் இரக்கங்காட்டுவார்.

உமது கூடாரம் உமக்காக மீண்டும் மகிழ்ச்சியுடன் அமைக்கப்படும்.

நாடுகடத்தப்பட்ட உங்கள் அனைவரையும் இன்புறுத்தி, நலிவுற்ற உங்கள் அனைவர்மீதும் தலைமுறைதோறும் அன்பு செலுத்துவாராக.

உலகின் எல்லைகள்வரை பேரொளி சுடர்க. தொலையிலிருந்து பல நாடுகள் எருசலேமிடம் வரும். உலகின் எல்லா எல்லைகளிலிருந்தும் மக்கள் உமது திருப் பெயர் விளங்கும் இடத்திற்கு வருவார்கள்: விண்ணக வேந்தருக்குத் தம் கைகளில் காணிக்கை ஏந்தி வருவார்கள். எல்லாத் தலைமுறைகளும் உன்னில் மகிழ்ந்து பாடும்: தெரிந்துகொள்ளப்பெற்ற நகரின் பெயர் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்.

உனக்கு எதிராக வன்சொல் கூறுவோரும் உன்னை அழிப்போரும் சபிக்கப்படுவர்: உன் மதில்களைத் தகர்ப்போரும் உன் காவல்மாடங்களைத் தரைமட்டமாக்குவோரும் உன் வீடுகளைத் தீக்கிரையாக்குவோரும் சபிக்கப்படுவர். ஆனால் உனக்கு என்றென்றும் அஞ்சுவோர் அனைவரும் ஆசி பெறுவர்.

வா¡£ர், நீதிமான்களின் மக்களைக்குறித்து மகிழ்வீர். ஏனெனில் அவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றுகூடுவர்: என்றுமுள ஆண்டவரைப் போற்றுவர். உன்னிடம் அன்புகொண்டோர் பேறுபெற்றோர்: உன் நிறை வாழ்வு கண்டு மகிழ்வோர் பேறுபெற்றோர்.

உன் தண்டனைகள் எல்லாவற்றையும் குறித்து வருந்துவோர் பேறுபெற்றோர்: அவர்கள் அனைவரும் உன்பொருட்டு அகமகிழ்வார்கள்: உனது முழு மகிழ்ச்சியையும் என்றென்றும் காண்பார்கள். என் உயிரே, மாவேந்தராம் ஆண்டவரைப் போற்று.

எருசலேம் நகர் எக்காலத்துக்கும் அவரது இல்லமாக எழுப்பப்படும். என் வழிமரபினருள் எஞ்சியோர் உனது மாட்சியைக் கண்டு விண்ணக வேந்தரைப் புகழ்வாராயின், நான் எத்துணைப் பேறு பெற்றவன்! எருசலேமின் வாயில்கள் நீலமணியாலும் மரகதத்தாலும் உருவாகும்: உன் மதில்கள் விலையுயர்ந்த கற்களால் கட்டப்படும். எருசலேமின் காவல்மாடங்கள் பொன்னாலும் கொத்தளங்கள் பசும் பொன்னாலும் அமைக்கப்படும்: எருசலேமின் வீதிகளில் மாணிக்கமும் ஓபீர் நாட்டுக் கற்களும் பதிக்கப்படும்:

எருசலேமின் வாயில்கள் மகிழ்ச்சிப் பாக்கள் இசைக்கும்: அதன் இல்லங்கள்தோறும் அல்லேழயா, இஸ்ரயேலின் கடவுள் போற்றி என முழங்கும். கடவுளின் ஆசிபெற்றோர் அவரது திருப்பெயரை என்றென்றும் வாழ்த்துவர்.

அதிகாரம் 14.

தோபித்தின் புகழ்ப்பா நிறைவு பெற்றது.

தோபித்து தம் மற்றுப் பன்னிரண்டாம் வயதில் அமைதியாக இறந்தார்: நினிவேயில் சிறப்புடன் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பார்வை இழந்தபோது அவருக்கு வயது அறுபத்திரண்டு. அவருக்குப் பார்வை திரும்பியபின் வளமாக வாழ்ந்து, தருமங்கள் புரிந்து வந்தார்: கடவுளைப் போற்றுவதிலும் அவரது பெருமையை அறிக்கையிடுவதிலும் ஓயாது ஈடுபட்டிருந்தார்.

அவர் இறக்கும் தறுவாயில் இருந்தபொழுது தம் மகன் தோபியாவை அழைத்துப் பின்வருவாறு அறிவுறுத்தினார்: மகனே, உன் மக்களை அழைத்துக்கொண்டு,

மேதியாவுக்குத் தப்பிச் செல்: ஏனெனில் நினிவேக்கு எதிராக இறைவாக்கினர் நாகூம் வழியாகக் கடவுள் கூறிய வாக்கு நிறைவேறும் என நம்புகிறேன். கடவுள் அனுப்பிய இஸ்ரயேலின் இறைவாக்கும் அசீரியாவுக்கும் நினிவேக்கும் எதிராகக் கூறிய அனைத்தும் தவறாது நிகழும். உரிய வேளையில் அவை அனைத்தும் நடந்தே தீரும். பாபிலோன், அசீரியா ஆகியவற்றைவிட மேதியா நாடு பாதுகாப்பாக இருக்கும்: ஏனெனில் கடவுள் கூறிய அனைத்தும் நிறைவேறும் என நான் நம்புகிறேன். அவையெல்லாம் தவறாது நடந்தே தீரும். இஸ்ரயேல் நாட்டில் வாழும் நம் உறவினர் அனைவரும் சிதறடிக்கப்பட்டு, அந்த நல்ல நாட்டிலிருந்து கடத்தப்படுவர். சமா¡

கடவுள் மீண்டும் அவர்கள்மீது இரக்கங்காட்டுவார். மீண்டும் அவர்களை இஸ்ரயேல் நாட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருவார். மீண்டும் அவர்கள் கடவுளின் இல்லத்தைக் கட்டி எழுப்புவார்கள். ஆனால் குறிப்பிட்ட காலம் நிறைவேறும்வரை அது முதலில் கட்டப்பட்ட இல்லம்போன்று இராது. அதன்பின் இஸ்ரயேலர் அனைவரும் சிதறடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து திரும்பி வருவர்: எருசலேமைச் சிறப்புடன் கட்டி எழுப்புவர். இஸ்ரயேலரின் இறைவாக்கினர்கள் கூறியபடி அந்நகரில் கடவுளின் இல்லம் கட்டப்படும்.

உலகம் முழுவதிலும் உள்ள மக்களினத்தார் அனைவரும் மனம் மாறுவர். உண்மையாகவே கடவுளுக்கு அஞ்சுவர்: தங்களை ஏமாற்றி, தவறான வழியில் நடக்கத் பண்டிய சிலைகளையெல்லாம் விட்டொழிப்பர்: என்றுமுள கடவுளை நேர்மையுடன் போற்றுவர்.

அக்காலத்தில் எஞ்சியிருக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் உண்மையில் கடவுளை நினைப்பர்: ஒன்றுகூடி எருசலேமுக்குத் திரும்பி வந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆபிரகாமின் நாட்டில் எக்காலத்துக்கும் பாதுகாப்பாகக் குடியிருப்பர். உண்மையில் கடவுள்மீது அன்புகூர்வோர் மகிழ்வர்: பாவமும் அநீதியும் புரிவோர் உலகம் எங்கிலுமிருந்தும் மறைவர்.

இப்பொழுது, என் மக்களே, உங்களுக்கு நான் இடும் கட்டளை: கடவுளுக்கு உண்மையாகப் பணிபுரிங்கள்: அவர் திருமுன் அவருக்கு உகந்ததைச் செய்யுங்கள்: நேர்மையாய் ஒழுகவும் தருமங்கள் செய்யவும் உங்கள் குழந்தைகளுக்குப் பயிற்சி அளியுங்கள். அதனால் அவர்கள் கடவுளை நினைத்து, எக்காலத்திலும் முழு ஆற்றலுடன் உண்மையோடு அவரது பெயரைப் போற்றுவார்கள்.

இப்பொழுது, மகனே, நினிவேயிலிருந்து புறப்படு: இங்குத் தங்காதே. என் அருகில் உன் தாயை அடக்கம்செய்தபின் இந்நாட்டின் எல்லைக்குள் தங்காதே: ஏனெனில் இங்கு அநீதி மலிந்துள்ளது: வஞ்சகம் நிரம்பியுள்ளது. மக்களோ அதைப்பற்றி வெட்கப்படுவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

மகனே, தன்னை வளர்த்து ஆளாக்கிய அகிக்காருக்கு நாதாபு செய்ததை எண்ணிப்பார். நாதாபு அகிக்காரை உயிரோடு மண்ணில் புதைக்கவில்லையா? அதனால் கடவுள் நேரடியாக அவனைத் தண்டித்தார். அகிக்கார் ஒளியைக் கண்டான்: நாதாபோ முடிவில்லா இருளில் மறைந்தான்: ஏனெனில் அவன் அகிக்காரைக் கொல்ல முயன்றான். அகிக்கார் தருமம் செய்ததனால், நாதாபின் சூழ்ச்சியிலிருந்து தப்பினான்: ஆனால் நாதாபு தன் சூழ்ச்சியிலேயே சிக்கி மடிந்தான்.

இப்பொழுது, என் மக்களே, தருமத்தினால் வரும் நன்மையையும், அநீதியினால் வரும் தீமையையும், அதாவது சாவையும் எண்ணிப் பாருங்கள். என் உயிர் பிரியப்போகின்றது. பின் தோபித்தைப் படுக்கையில் கிடத்தினர். அவர் இறந்தபின் சிறப்புடன் அடக்கம் செய்தனர்.

தம் தாய் இறந்ததும், தோபியா அவரைத் தம் தந்தையின் அருகில் அடக்கம்செய்தார். பின் அவரும் அவருடைய மனைவியும் மேதியாவுக்குச் சென்றனர். அவர் தம் மாமனார் இரகுவேலுடன் எக்பத்தானாவில் வாழ்ந்தார்.

தம் மனைவியின் வயது முதிர்ந்த பெற்றோரை மரியாதையுடன் பேணி வந்தார்: அவர்களை மேதியா நாட்டு எக்பத்தானாவில் அடக்கம் செய்தார்: இரகுவேலின் சொத்துக்கும் தம் தந்தை தோபித்தின் சொத்துக்கும் உரிமையாளரானார்.

மக்களின் மதிப்புக்குரியவராய்த் தம் மற்றுப்பதினேழாம் வயதில் இறந்தார்.

இறக்குமுன் நினிவேயின் அழிவைப்பற்றிக் கேள்விப்பட்டு, அதைக் கண்ணாலும் கண்டார்: நினிவே கைப்பற்றப்பட்டதையும், மேதியாவின் மன்னர் அகிக்கார் நினிவே மக்களை மேதியாவுக்கு நாடுகடத்தியதையும் கண்டார்: நினிவே மக்களுக்கும் அசீரியாவின் மக்களுக்கும் கடவுள் செய்த அனைத்தையும் குறித்து அவரைப் புகழ்ந்தார். நினிவேக்கு நிகழ்ந்ததை முன்னிட்டுத் தாம் இறக்குமுன் மகிழ்ந்தார்: கடவுளாகிய ஆண்டவரை என்றென்றும் புகழ்ந்தார்.

புத்தகம் 41 - யூதித்து

அதிகாரம் 1.

ஒரு காலத்தில் நெபுகத்னேசர் மன்னன் நினிவே மாநகரில் அசீரியர்களை ஆண்டுவந்தான். அப்பொழுது எக்பத்தானாவில் அர்ப்பகசாது அரசன் மேதியர் மீது ஆட்சி செலுத்திவந்தான்.

அர்ப்பகசாது எக்பத்தானாவைச் சுற்றிலும் மூன்று முழப் பருமனும் ஆறு முழ நீளமுமான செதுக்கிய கற்களைக் கொண்டு, எழுபது முழ உயரமும் ஜம்பது முழ அகலமும் உடைய மதில்களை எழுப்பினான்.

அதன் வாயில்கள்மேல் மறு முழ உயரம் கொண்ட காவல் மாடங்களைக் கட்டினான்: அவற்றின் அடித்தளங்களை அறுபது முழ அகலத்தில் அமைத்தான்.

தன்னுடைய வலிமைமிகு படைகள் புறப்பட்டுச் செல்வதற்கும், காலாட்படை அணிவகுத்துச் செல்வதற்கும் வசதியாக, எழுபது முழ உயரமும் நாற்பது முழ அகலமும் கொண்ட வாயில்களைக் கட்டினான்.

நேபுகத்னேசர் மன்னன் தனது ஆட்சியின் பன்னிரெண்டாம் ஆண்டில் இராகாவு நகர எல்லையில் இருந்த பரந்த சமவெளியில் அர்ப்பகசாது அரசனுக்கு எதிராகப் போர்தொடுத்தான்.

மலைவாழ் மக்கள், யூப்பிரத்தீசு, திக்¡£சு, உதஸ்பு ஆகிய ஆறுகள் அருகே வாழ்ந்தோர், சமவெளியில் வாழ்ந்த ஏலாமியரின் அரசன் அரியோக்கு ஆகிய அனைவரும் நெபுகத்னேசருடன் சேர்ந்து கொண்டார்கள். இவ்வாறு, பல மக்களினங்கள் கெலயூது மக்களின் படைகளோடு சேர்ந்து கொண்டன.

பின்னர் அசீரிய மன்னன் நெபுகத்னேசர் பாரசீகத்தில் வாழ்ந்தோர் அனைவருக்கும், சிலிசியா, தமஸ்கு, லெபனோன், எதிர் லெபனோன் ஆகிய மேற்கு நாடுகளில் வாழ்ந்தோர் யாவருக்கும், கடற்கரைவாழ் மக்கள் எல்லாருக்கும்,

கர்மேல், கிலயாது, வட கலிலேயா, எஸ்திரலோன் பெரும் சமவெளியெங்கும் வாழ்ந்த மக்களினத்தார் எல்லாருக்கும்,

சமாரியாவிலும் அதன் நகர்களிலும் வாழ்ந்தோர் அனைவருக்கும், யோர்தானுக்கு மேற்கே எருசலேம், பாத்தேன், கெழசு, காதேசு, எகிப்தின் எல்லையில் இருந்த ஓடைவரை வாழ்ந்தோருக்கும், தபினா, இராம்சேசு, கோசேன் பகுதிகளின் மக்கள் எல்லாருக்கும்,

தானி, மெம்பிசுக்கு அப்பால் எத்தியோப்பியாவின் எல்லைவரை எகிப்தில் வாழ்ந்த எல்லாருக்கும் பது அனுப்பினான்.

ஆனால், இந்த நாடுகளில் வாழ்ந்தோர் யாருமே அசீரிய மன்னன் நெபுகத்னேசரின் சொல்லைப் பொருட்படுத்தவில்லை: அவனோடு சேர்ந்து போரிட முன்வரவில்லை: அவனுக்கு அவர்கள் அஞ்சவுமில்லை. ஆனால் அவனை யாரோ ஒரு மனிதனாகவே கருதினார்கள்: அவனுடைய பதர்களையும் இழிவுபடுத்தி வெறுங்கையராய்த் திருப்பியனுப்பினார்கள்.

ஆகவே, இந்நாடுகள் அனைத்தின் மீதும் நெபுகத்னேசர் கடுஞ் சினங் கொண்டான். சிலிசியா, தமஸ்கு, சிரியா ஆகிய நாடுகள் அனைத்தையும் பழிவாங்கி, மோவாபியர், அம்மோனியர், யூதேயர், எகிப்தியர் ஆகிய அனைவரையும் வாளுக்கு இரையாக்கப்போவதாகத் தன் அரியணைமீதும் அரசுமீதும் ஆணையிட்டான்: இவ்வாறு, மத்திய தரைக்கடல்முதல் பாரசீக வளைகுடா வரையிலும் வாழ்ந்த எல்லாரையும் அழிக்கக் கட்டளையிட்டான்.

நேபுகத்னேசர் ஆட்சியின் பதினேழாம் ஆண்டில் தன் படைகளை அர்ப்பகசாது அரசனுக்கு எதிராக ஒன்று திரட்டினான்: அவனோடு போரிட்டு, வெற்றி பெற்று அவனுடைய காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை அனைத்தையும் முறியடித்தான்:

அவனுடைய நகர்களைக் கைப்பற்றியபின் எக்கத்தானாவை வந்தடைந்தான்: அதன் காவல்மாடங்களைக் கைப்பற்றி, கடை வீதிகளில் புகந்து கொள்ளையடித்து, அதன் எழிலைச் சீர்குலைத்தான்.

மேலும், அவன் இராகாவு மலைப்பகுதியில் அர்ப்பகசாதைப் பிடித்துத் தன் ஈட்டியால் குத்திக்கொன்று அவனை முற்றிலும் அழித்தொழித்தான்.

பின்னர், தன்னோடு சேர்ந்து போரிட்ட மாபெரும் திரளான படைவீரர்களோடு நினிவேக்குத் திரும்பி வந்தான். அங்கு அவனும் அவனுடைய படைவீரர்களும் மற்றுஇருபது நாள் விருந்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

அதிகாரம் 2.

அசீரிய மன்னன் நெபுகத்னேசர் சூளுரைத்திருந்தவாறு எல்லா நாடுகளையும் பழிவாங்குவான் என்று அவனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டு, முதல் மாதம் இருபத்திரண்டாம் நாளன்று அரண்மனையில் பேசப்பட்டது.

அவனும் தன் பணியாளர்கள், உயர்குடி மக்கள் யாவரையும் அழைத்துத் தனது இரகசியத் திட்டம் பற்றி அவர்களோடு கலந்தாலோசித்தான்: அந்த நாடுகளின் சூழ்ச்சிபற்றித் தன் வாய்ப்பட முழமையாக எடுத்துரைத்தான்.

மன்னன் இட்ட கட்டளையை ஏற்காத அனைவரும் அழிக்கப்படவேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அசீரிய மன்னன் நெபுகத்னேசர் தன் படைத் தலைவனும் தனக்கு அடுத்த நிலையில் இருந்தவனுமான ஒலோபெரினை அழைத்து அவனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்:

அனைத்துலகின் தலைவராகிய மாமன்னர் இவ்வாறு கூறுகிறார்: இங்கிருந்து உடனே புறப்பட்டுச் செல்லும்: போரிடத் தயங்காத ஓர் இலட்சத்து இருபதாயிரம் காலாட் படையினரையும் பன்னிரண்டாயிரம் குதிரைப் படையினரையும் உம்மோடு கூட்டிக்கொள்ளும்.

நான் கொடுத்த ஆணைக்கு மேற்கு நாட்டவருள் எவருமே பணியாததால், அவர்களுக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லும்.

அவர்கள் நிலத்தின் விளைச்சலையும் தண்ணீர் வசதியையும் எனக்கு அளிப்பதற்கு அவர்களை ஆயத்தமாய் இருக்கச் சொல்லும். ஏனெனில், நான் சினமுற்று அவர்களை எதிர்த்துச் செல்லவிருக்கிறேன். அவர்களது நாடு முழுவதையும் என்படைவீரர்களின் காலடிகள் மூடும். அதனை அவர்கள் சூறையாடும்படி கையளிப்பேன்.

அவர்களுள் காயமடைந்தோர் பள்ளத்தாக்குகளை நிரப்புவர்: ஓடைகளும் ஆறுகளும் அவர்களின் பிணங்களால் நிரம்பி வழியும்.

நிலத்தின் கடை எல்லைக்கே அவர்களை நாடுகடத்துவேன்.

நீர் எனக்கு முன்னதாகப் புறப்பட்டுச் சென்று, அவர்களின் நாடுகளையெல்லாம் என் பெயரால் கைப்பற்றும். அவர்கள் உம்மிடம் சரணடைந்தால், அவர்களை நான் தண்டிக்கும் நாள்வரை காவலில் வைத்திரும்.

பணிய மறுப்பவர்களுக்கோ இரக்கம் காட்டாதீர். நீர் கைப்பற்றும் நாடெங்கும் அவர்களைக் கொலைக்கும் கொள்ளைக்கும் கையளித்துவிடும்.

என் உயிர்மேல் ஆணை! என் அரசின் ஆற்றல்மேல் ஆணை! நான் சொன்னதையெல்லாம் என் கையாலேயே செய்து முடிப்பேன்.

உம் தலைவரின் ஆணைகளில் எதனையும் மீறாதீர். நான் உமக்குக் கட்டளையிட்டவாறே அவற்றைத் திண்ணமாய்ச் செய்து முடியும்: காலம் தாழ்த்தாமல் செயல்புரியும்.

ஒலோபெரின் தன் தலைவனிடமிருந்து சென்று அசீரியப் படையின் தலைவர்கள், தளபதிகள், அலுவலர்கள் ஆகிய அனைவரையும் தன்னிடம் அழைத்தான்.

தலைவன் தனக்கு ஆணையிட்டபடி ஓர் இலட்சத்து இருபதாயிரம் தேர்ந்தெடுத்த வீரர்களையும் வில் வீரர்களான குதிரைப்படையினர் பன்னிரண்டாயிரம் பேரையும் திரட்டினான்.

பெரும் படை ஒன்று போர் தொடுக்கச் செல்லும் முறைப்படி, அவர்களை அணிவகுக்கச் செய்தான்:

மேலும் தங்கள் பொருள்களைச் சுமந்து செல்லப் பெருந்திரளான ஒட்டகங்களையும் கழுதைகளையும் கோவேறுகழுதைகளையும், உணவுக்குத் தேவைப்பட்ட எண்ணற்ற செம்மறியாடுகளையும் மாடுகளையும் வெள்ளாடுகளையும்,

அனைவருக்கும் போதுமான உணவுப் பொருள்களையும், அரண்மனையிலிருந்து மிகுதியான பொன்னையும் வெள்ளியையும் திரட்டிக்கொண்டான்.

இவ்வாறு தேர்ப்படையினர், குதிரைப் படையினர், தேர்ந்தெடுத்த காலாட் படையினர் ஆகியோர் அடங்கிய தன் முழுப் படையுடன், நெபுகத்னேசர் மன்னனுக்கு முன்னதாகச் சென்று, மேற்குப் பகுதி முழுவதையும் நிரப்புமாறு ஒலோபெரின் புறப்பட்டான்.

அப்பொழுது பல இனங்களைச் சேர்ந்த, எண்ணிலடங்காத பெருங் கூட்டம் ஒன்று வெட்டுக்கிளிகளின் திரள்போலும் நிலத்தின் புழுதிபோலும் அவர்களோடு புறப்பட்டுச் சென்றது.

அவர்கள் நினிவேயிலிருந்து புறப்பட்டுப் பெக்திலேது சமவெளியை நோக்கி மூன்று நாள் பயணம் சென்றார்கள்: அதைத் தாண்டி மேல் சிலிசியாவுக்கு வடக்கே மலை அருகில் பாசறை அமைத்தார்கள்.

ஒலோபெரின் தன் காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை அடங்கிய முழுப்படையையும் அங்கிருந்து நடத்திக்கொண்டு, மலைநாட்டிற்குள் முன்னேறிச் சென்றான்:

வழியில் பூது, ழது என்னும் நகர்களைப் பாழ்படுத்தியபின், கெலயோன் நாட்டிற்குத் தெற்கே பாலை நிலத்தின் ஓரத்தில் வாழ்ந்துவந்த இராசியர், இஸ்மவேலர் ஆகிய அனைவரையும் கொள்ளையடித்தான்:

யூப்பிரத்தீசு கரை வழியாகச் சென்று, மெசப்பொத்தாமியாவைக் கடந்து அப்ரோன் ஓடைமுதல் கடல்வரை இருந்த அரண்சூழ் நகர்கள் அனைத்தையும் தரைமட்டமாக்கினான்.

மேலும் சிலிசியா நாட்டை அவன் கைப்பற்றித் தன்னை எதிர்த்த யாவரையும் கொன்றான்: பிறகு அரேபியாவிற்கு எதிரே இருந்த எப்பெத்தின் தென் எல்லையை அடைந்தான்:

மிதியானியர் யாவரையும் சுற்றி வளைத்து, அவர்களின் கூடாரங்களைத் தீக்கிரையாக்கி, ஆட்டுக் கொட்டில்களைக் கொள்ளையடித்தான்.

கோதுமை அறுவடைக் காலத்தில் அவன் தமஸ்குச் சமவெளிக்கு இறங்கிச் சென்றான்: அவர்களுடைய வயல்களுக்குத் தீவைத்தான்: ஆடு மாடுகளை அழித்தான்: நகர்களைச் சூறையாடினான்: வயல்வெளிகளைப் பாழாக்கினான்: இளைஞர்கள் அனைவரையும் வாளுக்கிரையாக்கினான்.

சீதோன், தீர், சூர், ஒக்கினா, யாம்னியா ஆகிய கடலோர நகர்களில் வாழ்ந்தோர் யாவரும் அவனுக்கு அஞ்சி நடுங்கினர்: அசோத்து, அஸ்கலோனில் வாழ்ந்தோரும் அவனுக்குப் பெரிதும் அஞ்சினர்.

அதிகாரம் 3.

ஆகையால் அந்த நாடுகளின் மக்கள் அமைதி வேண்டி ஒலோபெரினிடம் பதர்களை அனுப்பிப் பின்வருமாறு கூறினார்கள்.

இதோ, நெபுகத்னேசர் மாமன்னரின் பணியாளர்களாகிய நாங்கள் உமக்கு அடிபணிகிறோம். எங்களை உமது விருப்பப்படியே நடத்தும்.

மேலும் எங்களுடைய வீடுகள், நாடுகள், கோதுமை வயல்கள், ஆடுமாடுகள், எங்களுடைய குடியிருப்புகளிலுள்ள ஆட்டுக்கொட்டில்கள் அனைத்தும் உமக்கே சொந்தம். ஊமது விருப்பப்படியே அவற்றைப் பயன்படுத்தும்.

எங்கள் நகர்களும் உம்முடையவை: அவற்றின் குடிகள் உமக்கே அடிமைகள். எனவே நீர் வந்து, உம் விருப்பப்படியே நடத்தும்.

ஆத்பதர்கள் ஒலோபெரினிடம் வந்து, மேற்கண்ட செய்தியை அறிவித்தார்கள்.

இதை அறிந்ததும் அவன் தன் படையுடன் கடற்கரைப் பகுதிக்கு இறங்கிச் சென்று, அரண்சூழ் நகர்கள் அனைத்திலும் காவற்படைகளை அமர்த்தினான்: அவற்றினின்று தேர்ந்தெடுத்த வீரர்களைத் தன் துணைப்படையாக வைத்துக்கொண்டான்.

அந்நகர்களின் மக்களும் அவற்றின் சுற்றுப் புறங்களில் வாழ்ந்தோர் அனைவரும் அவனுக்கு மாலை அணிவித்து, முரசறைந்து, நடனமாடி வரவேற்பு அளித்தனர்.

ஆயினும், அவர்களுடைய திருவிடங்களையெல்லாம் அவன் தகர்த்தெறிந்தான்: பய தோப்புகளை வெட்டி அழித்தான்: ஏனெனில், எல்லா இனத்தாரும் நெபுகத்னேசரை மட்டுமே வழிபடவேண்டும்: எல்லா மொழியினரும் குலத்தினரும் அவனை மட்டுமே வழிபடவேண்டும்: எல்லா மொழியினரும் குலத்தினரும் அவனை மட்டுமே தெய்வமாகப் போற்றவேண்டும் என்னும் நோக்கத்தோடு அந்நாடுகளின் தெய்வங்கள் அனைத்தையும் அழித்தொழிக்குமாறு அவனுக்கு ஆணையிடப்பட்டிருந்தது.

பின்பு ஒலோபெரின் யூதேயாவின் மலைத்தொடருக்கு எதிரிலும் தோத்தானுக்கு அருகிலும் அமைந்திருந்த எஸ்திரலோனை நோக்கிச் சென்றான்.

கேபாய், சித்தோப்பொலி நகர்களுக்கு இடையே பாசறை அமைத்து, தன் படைக்குத் தேவையானவற்றையெல்லாம் திரட்ட ஒரு மாதம் முழுவதும் அங்குத் தங்கியிருந்தான்.

அதிகாரம் 4.

அசீரிய மன்னன் நெபுகத்னேசருடைய படைத்தலைவன் ஒலோபெரின் வேற்றினத்தாருக்குச் செய்திருந்த அனைத்தையும், அவன் எவ்வாறு அவர்களின் கோவில்கள் எல்லாவற்றையும் சூறையாடித் தகர்த்தெறிந்தான் என்பதையும் யூதேயாவில் வாழ்ந்து வந்த இஸ்ரயேலர் கேள்விப்பட்டனர்.

எனவே, அவன் வருவதை அறிந்து பெரிதும் அஞ்சினார்கள்: எருசலேமைக் குறித்தும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கோவிலைக் குறித்தும் கலங்கினார்கள்.

ஏனெனில், சற்று முன்னரே அவர்கள் தங்கள் அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற்றிருந்தார்கள்: யூதேயா நாட்டு மக்கள் யாவரும் அரண்மையில்தான் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தார்கள்: தீட்டுப்பட்டிருந்த பய கலன்களும் பலிபீடமும் கோவிலும் மீண்டும் பய்மைப்படுத்தப்பட்டிருந்தன.

அவர்கள் சமாரியா நாடு முழுவதற்கும், கோனா, பெத்கோரோன், பெல் மாயிம், எரிகோ, கோபா, ஜசொரா, சாலேம் பள்ளத்தாக்கு ஆகிய நகர்களுக்கும் செய்தி அனுப்பினார்கள்.

உடனே அவர்கள் உயர்ந்த மலையுச்சிகளைக் கைப்பற்றி, அங்கு இருந்த ஊர்களைக் காவலரண் செய்து வலுப்படுத்தினார்கள்: அவர் அறுவடையாகியிருந்ததால் போருக்கு முன்னேற்பாடாக உணவுப்பொருள்களைச் சேகரித்தார்கள்.

அக்காலத்தில் எருசலேமில் இருந்த தலைமைக்குரு யோவாக்கிம் என்பவர் எஸ்திரலோனுக்கு எதிரிலும் தோத்தான் சமவெளிக்கு அருகிலும் அமைந்திருந்த பெத்பலியா, பெத்தமஸ்தாயிம் ஆகிய நகரங்களின் மக்களுக்கு மடல் எழுதி அனுப்பினார்:

யூதேயாவுக்குள் நுழைவதற்குரிய மலைப்பாதைகளைக் கைப்பற்றுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஓரே நேரத்தில் இருவர் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு அவை குறுகியனவாய் இருந்ததால், தாக்குவதற்காக மேலே ஏறிவரும் எவரையும் தடுப்பதற்கு மேலே ஏறிவரும் எவரையும் தடுப்பதற்கு எளிதாய் இருந்தது.

தலைமைக் குரு யோவாக்கிமும் எருசலேமில் குழுமியிருந்த இஸ்ரயேல் மக்களின் ஆட்சி மன்ற உறுப்பினர்களும் ஆணையிட்டபடி இஸ்ரயேலர் செய்து முடித்தனர்.

இஸ்ரயேலின் ஆண்கள் யாவரும் கடவுளை நோக்கி மிகுந்த ஆர்வத்துடன் கூக்குரலிட்டார்கள்: நோன்பிருந்து தங்களையே தாழ்த்திக்கொண்டார்கள்.

அவர்களும் அவர்களுடைய மனைவியர், மக்கள், கால்நடைகள், உடன்வாழ் அன்னியர்கள், கூலியாள்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் இடுப்பில் சாக்கு உடை அணிந்து கொண்டனர்.

எருசலேமில் வாழ்ந்துவந்த இஸ்ரயேலிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரும் தலையில் சாம்பலைத் பவிக் கொண்டனர்: சாக்கை விரித்துக் கோவிலின் முகப்பில் ஆண்டவர் திருமுன் குப்புற விழுந்தனர்.

பிறகு அவர்கள் பலிபீடத்தையும் சாக்கினால் மூடினார்கள்: இஸ்ரயேலின் கடவுளை நோக்கி, தங்கள் குழந்தைகள் அடிமைவாழ்வுக்குக் கையளிக்கப்படாதவாறும், மனைவியர் கவர்ந்து செல்லப்படாதவாறும், உரிமைச் சொத்தாகிய நகர்கள் அழிவுறாதவாறும், வேற்றினத்தார் ஏளனம் செய்யும் அளவுக்குத் திருவிடம் தீட்டுப்பட்டு இழிவுறாதவாறும் காத்திடும்படி ஒரே குரலில் மனமுருகி மன்றாடினார்கள்.

ஆண்டவர் அவர்களது குரலுக்குச் செவிசாய்த்தார்: அவர்களது கடுந்துன்பத்தைக் கண்ணுற்றார்: ஏனெனில், யூதேயா முழுவதிலும் எருசலேமில் எல்லாம் வல்ல ஆண்டவரது கோவில் முன்னிலையிலும் மக்கள் பல நாள் நோன்பிருந்தார்கள்.

தலைமைக்குரு யோவாக்கிமும் ஆண்டவர் திருமுன் பணிபுரிந்த குருக்கள் அனைவரும் திருவழிபாட்டுப் பணியாளர்களும் இடுப்பில் சாக்கு உடை அணிந்து கொண்டு அன்றாட எரிபலிகளையும் மக்களின் நேர்ச்சைகளையும் தன்னார்வக் காணிக்கைகளையும் செலுத்தினார்கள்:

தங்கள் தலைப்பாகைமேல் சாம்பலைத் பவிக் கொண்டு, இஸ்ரயேல் இனம் அனைத்தின்மீதும் ஆண்டவர் இன்முகம் காட்டுமாறு, முழுவலிமையோடும் அவரை நோக்கிக் கூக்குரலிட் டார்கள்.

அதிகாரம் 5.

இஸ்ரயேல் மக்கள் போருக்கு ஆயத்தமாகிவிட்டார்கள்: மலைப்பாதைகளை மூடிவிட்டார்கள்: உயர்ந்த மலையுச்சிகளைக் காவலரண் செய்து வலிமைப்படுத்தியுள்ளார்கள்: சமவெளிகளில் வழித்தடைகளை அமைத்துள்ளார்கள் என்று அசீரியரின் படைத்தலைவன் ஒலோபெரினுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது அவன் கடுஞ் சினமுற்றான்: மோவாபு நாட்டுத் தலைவர்கள், அம்மோன் நாட்டுப் படைத் தலைவர்கள், கடலோராப் பகுதிகளின் ஆளுநர்கள் ஆகிய அனைவரையும் அழைத்தான்.

கானான் நாட்டு மக்களே, எனக்கு மறுமொழி கூறுங்கள்: மலைநாட்டில் வாழும் இந்த மக்கள் யார்? இவர்கள் குடியிருக்கும் நகர்கள் யாவை? இவர்களுடைய படைவீரர்களின் எண்ணிக்கை என்ன? இவர்களுடைய ஆற்றலும் வலிமையும் எதில் அடங்கும்? இவர்களின் மன்னர் யார்? இவர்களுடைய படைத் தலைவன் யார்?

மேற்கு நாடுகளில் குடியிருக்கும் எல்லா மக்கள் நடுவிலும் இவர்கள் மட்டும் வந்து என்னைச் சந்திக்க மறுத்தது ஏன்? என்று அவர்களை வினவினான்.

அம்மோனியா யாவருக்கும் தலைவரான அக்கியோர் ஒலோபெரினிடம் பின்வருமாறு கூறினார்: என் தலைவரே, உம் பணியாளனின் வாயினின்று வரும் சொல்லைக் கேளும். மலைநாட்டில் உமக்கு அருகே வாழ்பவர்களான இந்த மக்களைப்பற்றிய உண்மையை உமக்கு எடுத்துரைப்பேன். உம் பணியாளனின் வாயினின்று பொய் எதுவும் வராது.

இந்த மக்கள் கல்தேயரின் வழிமரபினர்.

கல்தேயா நாட்டில் வாழ்ந்த தங்கள் மூதாதையரின் தெய்வங்களை இவர்கள் வழிபட விரும்பாததால், ஒரு காலத்தில் மெசப்பொத்தாமியாவில் குடியேறினார்கள்.

அதாவது, தங்கள் மூதாதையரின் வழியை விட்டு விட்டு, தாங்கள் அறியவந்த கடவுளான விண்ணக இறைவனைத் தொழுதார்கள். இதனால், கல்தேயர் தங்கள் தெய்வங்களின் முன்னிலையினின்று இவர்களை விரட்டியடித்தபொழுது இவர்கள் மெசப் பொத்தாமியாவுக்குத் தப்பியோடி அங்கு நீண்டநாள் தங்கியிருந்தார்கள்.

பின்னர் தாங்கள் தங்கியிருந்த இடத்தை விட்டுக் கானான் நாட்டுக்குச் செல்லுமாறு, அவர்களுடைய கடவுள் அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவ்வாறே அவர்கள் அங்குக் குடியேறி, பொன், வெள்ளி, பெருந்திரளான கால்நடைகள் ஆகியவற்றால் வளமையுற்றார்கள்.

கானான் நாடெங்கும் பஞ்சம் நிலவியபொழுது அவர்கள் எகிப்து நாட்டுக்குச் சென்றார்கள்: அங்கு உணவு வளம் நீடித்தவரை தங்கியிருந்தார்கள். அப்பொழுது அவர்களது இனம் எண்ண முடியாத அளவுக்குப் பல்கிப் பெருகியது.

ஆகையால், எகிப்து மன்னன் அவர்கள்மீது பகைமை கொண்டு, செங்கல் செய்யும் கடின வேலையை அவர்கள் மீது வஞ்சகமாய்ச் சுமத்தினான்: அவர்களைக் கொடுமைப்படுத்தி அடிமைகளாக்கினான்.

எனவே, அவர்கள் தங்கள் கடவுளை நோக்கிக் கூக்குரலிட்டார்கள். அவரும் எகிப்து நாடு முழுவதையும் தீராக் கொள்ளைநோய்களால் தாக்கினார். ஆகையால், எகிப்தியர் அவர்களைத் தங்களிடமிருந்து விரட்டியடித்தனர்.

அப்பொழுது கடவுள் அவர்கள் கண்முன் செங்கடலை வறண்டுபோகச் செய்தார்.

அவர் சீனாய், காதேசு-பர்னேயா வழியாக அவர்களை நடத்திச் செல்ல, அவர்கள் பாலைநிலத்தில் வாழ்ந்த யாவரையும் விரட்டியடித்தார்கள்:

பின்னர் எமோரியரின் நாட்டில் குடியேறினார்கள்: தங்களின் வலிமையால் கெஸ்போனியர் யாவரையும் அழித்தொழித்தார்கள்: யோர்தான் ஆற்றைக் கடந்து, மலைநாடு முழுவதையும் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள்.

கானானியர், பெரிசியர், எபூசியர், செக்கேமியர் ஆகியோரையும் அங்கிருந்து துரத்திவிட்டு, அங்கே நீண்டநாள் வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் தங்கள் கடவுள் முன்னிலையில் பாவம் செய்யாதவரையில் வளமுடன் வாழ்ந்தார்கள்: ஏனெனில், அநீதியை வெறுக்கும் கடவுள் அவர்கள் நடுவே இருக்கிறார்.

ஆனால், அவர்களுக்கென்று அவர் வகுத்துக் கொடுத்திருந்த வழியைவிட்டு விலகிச் சென்றபோது அவர்கள் பல போர்களால் பெரிதும் அழிந்தார்கள்: அயல்நாட்டுக்குக் கைதிகளாய்க் கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களுடைய கடவுளின் கோவில் தரைமட்டமானது. அவர்களின் நகர்களைப் பகைவர்கள் கைப்பற்றினார்கள்.

ஆனால், இப்பொழுது அவர்கள் தங்கள் கடவுளிடம் மனந்திரும்பி வந்துள்ளார்கள்: தாங்கள் சிதறடிக்கப்பட்ட இடங்களிலிருந்து திரும்பி வந்துள்ளார்கள்: தங்களது திருவிடம் அமைந்துள்ள எருசலேமை மீண்டும் உரிமையாக்கிக் கொண்டுள்ளார்கள்: பாழடைந்து கிடந்த மலைநாட்டில் மீண்டும் குடியேறியுள்ளார்கள். 20 . எனவே, தலைவர் பெருமானே, இப்போது இந்த மக்களிடம் தவறு ஏதேனும் காணப்பட்டால், இவர்கள் தங்களின் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால், இவர்கள் செய்த பாவத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியுமானால், நாம் புறப்பட்டுச் சென்று இவர்களைப் போரில் முறியடிக்கலாம்.

ஆனால், இந்த இனத்தாரிடம் குற்றம் ஒன்றும் இல்லையானால், என் தலைவரே, இவர்களைத் தாக்காது விட்டுவிடும்: இல்லையெனில் இவர்களின் கடவுளாகிய ஆண்டவர் இவர்கள் சார்பாக இருந்து, இவர்களைப் பாதுகாக்க, நாம் அனைத்துலகின் பழிப்புக்கும் உள்ளாவோம்.

அக்கியோர் பேசி முடித்தவுடன் கூடாரத்தைச் சூழ்ந்து நின்று மக்கள் எல்லாரும் முறுமுறுத்தார்கள். ஒலோபெரினின் அலுவலர்களும் கடலோரத்திலும் மோவாபிலும் வாழ்ந்தோர் யாவரும், அக்கியோரைக் கொன்று போடுங்கள்.

இஸ்ரயேலருக்கு நாம் அஞ்சத் தேவையில்லை: ஏனெனில், அம்மக்கள் கடுமையாய்ப் போரிடும் வலிமையோ ஆற்றலோ அற்றவர்கள்.

ஆகவே, ஒலோபெரின், எம் தலைவரே, நாம் மேலே முன்னேறிச் செல்வோம். உமது பெரும் படைக்கு அவர்கள் இரையாவார்கள் என்று கூறினர்.

அதிகாரம் 6.

ஆட்சிமன்றத்துக்கு வெளியே நின்ற கூட்டம் எழுப்பிய கூச்சல் ஓய்ந்தபின் அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரின் அயல் நாட்டினர் அனைவரின் முன்னிலையிலும் அக்கியோரிடமும் மோவாபியர் அனைவரிடமும் பின்வருமாறு கூறினான்:

இஸ்ரயேல் இனத்தாரோடு போரிட வேண்டாம்: ஏனெனில், அவர்களின் கடவுள் அவர்களைப் பாதுகாப்பார் என எங்களுக்கு இன்று இறைவாக்குரைக்க, அக்கியோரே, நீ யார்? எப்ராயிமின் கூலிப் படைகளே, நீங்கள் யார்? நெபுகத்னேசரைத் தவிர வேறு தெய்வம் உளரோ? அவர் தம் படையை அனுப்பி இஸ்ரயேலரை உலகிலிருந்தே அழித்தொழிப்பார். அவர்களின் கடவுள் அவர்களைக் காப்பாற்றமாட்டார்.

ஆனால், மன்னரின் பணியாளர்களாகிய அவர்களைக் நாங்கள் அவர்கள் எல்லாரையும் ஓர் ஆளை வீழ்த்துவதைப்போல் எளிதாகக் கொன்றழிப்போம். எங்கள் குதிரைப்படையை அவர்களால் எதிர்த்து நிற்க முடியாது.

இப்படைகளைக் கொண்டு அவர்களைத் தீக்கிரையாக்குவோம். அவர்களின் மலைகளெங்கும் அவர்களது குருதி வழிந்தோடும்: அவர்களின் சமவெளிகள் அவர்களுடைய சடலங்களால் நிரம்பும். அவர்களால் எங்களை எதிர்த்து நிற்க முடியாது. அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள், என்கிறார் உலகிற்கெல்லாம் தலைவரான நெபுகத்னேசர் மன்னர். அவர் உரைத்துவிட்டார். அவர் உரைத்த சொல் எதுவும் பொய்க்காது.

இன்று இச்சொற்களைப் பதற்றிய அக்கியோரே, நீ அம்னோனியரின் கைக்கூலி, நயவஞ்சகன்! இன்றுமுதல், எகிப்தினின்று வெளிவந்த இந்த இனத்தை நான் பழிவாங்கும்வரை நீ என் முகத்தில் விழிக்காதே.

நான் திரும்பிவரும்பொழுது, என் படையின் வாளும் என் பணியாளர்களின் வேலும் உன் விலாவைக் குத்தி ஊடுருவும். இஸ்ரயேலரோடு நீயும் வெட்டி வீழ்த்தப்படுவாய்.

இப்போது என் பணியாளர்கள் உன்னை மலைநாட்டுக்குக் கொண்டு செல்வார்கள்: மலைப்பாதை அருகே உள்ள நகர் ஒன்றில் உன்னை விட்டுவிடுவார்கள்.

இஸ்ரயேலரோடு அழிக்கப்படும்வரை நீ சாகமாட்டாய்.

அவர்கள் பிடிபடமாட்டார்கள் என நீ மனமார நம்பினால், பிறகு ஏன் உன் முகம் வாட்டமுறவேண்டும்? நான் கூறிவிட்டேன். என் சொற்களில் எதுவும் பொய்க்காது.

அக்கியோரைப் பிடித்துப் பெத்பலியாவுக்குக் கொண்டு போய், இஸ்ரயேல் மக்களிடம் ஒப்படைக்கும்படி ஒலோபெரின் தன் கூடாரத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்குக் கட்டளையிட்டான்.

எனவே பணியாளர்கள் அவனைப் பிடித்துப் பாசறைக்கு வெளியே சமவெளிக்குக் கொண்டு சென்றார்கள்: அங்கிருந்து மலைநாட்டுக்குப் போய், பெத்பலியாவின் அடிவாரத்தில் இருந்த நீரூற்றுகளை அடைந்தார்கள்.

அந்நகரின் ஆண்கள் இவர்களை மலையுச்சியில் கண்டபொழுது தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு நகரிலிருந்து வெளியேறி மலையுச்சிக்கு ஏறிச்சென்றார்கள்: கவண் வீசுவோர் அனைவரும் ஒலோபெரினின் பணியாளர் மீது கற்களை எறிந்து இவர்கள் மேலே ஏறிவராதவாறு தடுத்தார்கள்.

எனவே இவர்கள் மலையிடுக்கில் பதுங்கிக்கொண்டு, அக்கியோரைக் கட்டி, மலையடிவாரத்தில் கிடத்தி விட்டுத் தங்கள் தலைவனிடம் திரும்பினார்கள்.

அப்பொழுது இஸ்ரயேலர் தங்கள் நகரிலிருந்து கீழே இறங்கி வந்து, அக்கியோரைக் கட்டவிழ்த்துப் பெத்பலியாவுக்கு அழைத்துச் சென்று தங்கள் நகரப் பெரியோர்முன்அவரை நிறுத்தினர்.

அக்காலத்தில் சிமியோன் குலத்தைச் சேர்ந்த மீக்காவின் மகன் ஊசியா, கொதொகியேலின் மகன் காபிரி, மெல்கியேலின் மகன் கார்மி ஆகியோர் நகரப் பெரியோராய் விளங்கினர்.

அவர்கள் நகரின் மூப்பர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள். மக்கள் நடுவில் அக்கியோரை நிற்க வைத்தார்கள். உடனே இளைஞர்கள், பெண்கள் ஆகிய அனைவரும் கூட்டம் நடந்த இடத்திற்கு ஓடிவந்தார்கள். அப்பொழுது ஊசியா நிகழ்ந்தது என்ன என்று அக்கியோரை வினவினார்.

அவர் மறுமொழியாக, ஒலோபெரினின் ஆட்சி மன்றத்தில் நடந்தது, அசீரியரின் தலைவர்கள் முன்னிலையில் தான் எடுத்துச்சொன்னது, இஸ்ரயேல் இனத்தாருக்கு எதிராகத் தான் செய்யவிருந்ததை ஒலோபெரின் இறுமாப்புடன் உரைத்தது ஆகிய அனைத்தையும் அவர்களுக்குத் தெரிவித்தார்.

இதனால், மக்கள் குப்புற விழுந்து, கடவுளைத் தொழுதார்கள்.

விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள் பகைவர்களின் இறுமாப்பைப் பாரும்: எங்களுடைய இனத்தாரின் தாழ்நிலையைக் கண்டு மனமிரங்கும். இன்று தங்களையே உமக்கென்று அர்ப்பணித்துக் கொண்ட மக்களைக் கண்ணோக்கும் என்று மன்றாடினார்கள்.

பிறகு அவர்கள் அக்கியோருக்கு ஆறுதல்கூறி, அவரைப் பெரிதும் பாராட்டினார்கள்.

ஊசியா அவரைக் கூட்டத்திலிருந்து தம் வீட்டுக்கு அழைத்துச்சென்று மூப்பர்களோடு விருந்தளித்தார். அவர்கள் இஸ்ரயேலின் கடவுளது துணையை வேண்டி அன்று இரவு முழுவதும் மன்றாடினார்கள்.

அதிகாரம் 7.

மறுநாள் ஒலோபெரின் தன் படை முழுவதற்கும், தன்னுடன் சேர்ந்து போரிட வந்திருந்த எல்லா வீரர்களுக்கும் கட்டளையிட்டு, பெத்பலியாவை எதிர்த்துப் படையெடுத்துச் சென்று, இஸ்ரயேலருக்கு எதிராய்ப் போர்தொடுக்கவும் கூறினான்.

அன்றே படைவீரர் யாவரும் அணிவகுத்துச் சென்றனர்: அவர்களின் எண்ணிக்கை வருமாறு: காலாட் படையினர் ஓர் இலட்சத்து எழுபதாயிரம்: குதிரைப் படையினர் பன்னிரண்டாயிரம்: மற்றும் தேவையான பொருள்களைக் கால்நடையாய் எடுத்துச் சென்றோர் மாபெரும் தொகையினர்.

அவர்கள் பெத்பலியாவுக்கு அருகே பள்ளத்தாக்கில் நீருற்றையொட்டிப் பாசறை அமைத்தார்கள்: அகல அளவில் தோத்தானிலிருந்து பெல்பாயிம்வரையும், நீள அளவில் பெத்பலியாவிலிருந்து எஸ்திரலோனுக்கு எதிரே இருந்த கியமோன்வரையும் பரவியிருந்தார்கள்.

இஸ்ரயேலர், பெருந்திரளாய் வந்த பகைவர்களைக் கண்டு மிகவும் நடுங்கினர். இவர்கள், நாடு முழுவதையும் இப்போது விழுங்கப்போகிறார்கள். உயர்ந்த மலைகளோ பள்ளத்தாக்குகளோ குன்றுகளோ அவர்களின் பளுவைத் தாங்கா என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

எனினும் அவர்கள் ஒவ்வொருவரும் படைக்கலம் தாங்கியவராய், தங்கள் காவல்மாடங்களில் தீமூட்டி அன்று இரவு முழுவதும் காவல் புரிந்தார்கள்.

இரண்டாம் நாள் ஒலோபெரின் தன் குதிரைப்படை முழுவதையும் பெத்பலியாவில் இருந்த இஸ்ரயேலர் காணும்படி அணிவகுத்துச் செல்லுமாறு செய்தான்:

இஸ்ரயேலருடைய நகருக்குச் செல்லும் வழிகளை மேற்பார்வையிட்டான்: நீரூற்றுகளைத் தேடிப்பார்த்துக் கைப்பற்றி, படைவீரர்களை அவற்றுக்குக் காவலாக நிறுத்தினான்: பிறகு தன் படையிடம் திரும்பினான்.

ஏதோமிய மக்களுடைய ஆளுநர்கள் அனைவரும், மோவாபிய மக்களின் தலைவர்கள் அனைவரும், கடலோரப் பகுதிகளின் படைத்தலைவர்களும் அவனிடம் வந்து பின்வருமாறு கூறினார்கள்:

எங்கள் தலைவரே, உமது படைக்குத் தோல்வி ஏற்படாமலிருக்க நாங்கள் சொல்வதைக் கேளும்.

இந்த இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஈட்டிகளையல்ல, தாங்கள் வாழும் உயர்ந்த மலைகளையே நம்பியிருக்கிறார்கள்: ஏனென்றால், அவர்களுடைய மலையுச்சிகளுக்கு ஏறிச் செல்வது எளிதன்று.

ஆகவே, தலைவரே, வழக்கமான அணிவகுப்பு முறையை மாற்றியமைத்துப் போர் புரிந்தால், உம் ஆள்களுள் ஒருவர்கூட அழியமாட்டார்.

உமது கூடாரத்திலேயே நீர் தங்கியிரும்: உம்முடைய படைவீரர்கள் எல்லாரும் தங்களது இடத்திலேயே இருக்கட்டும். ஆனால், உம் பணியாளர்கள் மலையடிவாரத்திலிருந்து சுரக்கும் நீரூற்றைக் கைப்பற்றிக்கொள்ளட்டும்.

ஏனெனில், பெத்பலியாவில் வாழ்பவர்கள் யாவரும் இதிலிருந்துதான் தண்ணீர் எடுக்கின்றனர். இதனால் தாகமே அவர்களைக் கொன்றுவிடும். அவர்கள் தங்களது நகரைக் கையளித்து விடுவார்கள். இதற்கிடையில் நாங்களும் எங்கள் ஆள்களும் அருகில் உள்ள மலையுச்சிகளுக்கு ஏறிச்சென்று, அங்குப் பாசறை அமைத்து, ஒருவரும் நகரைவிட்டு வெளியேறாதவாறு பார்த்துக்கொள்வோம்.

அவர்களும் அவர்களின் மனைவியரும் மக்களும் பசியால் நலிவுறுவார்கள்: வாளுக்கு இரையாகுமுன்பே தாங்கள் வாழும் நகரின் தெருக்களில் அவர்கள் மடிந்துகிடப்பார்கள்.

அவர்கள் உம்மை அமைதியாய் ஏற்றுக்கொள்ளாமல் கிளர்ச்சி செய்ததற்குத் தண்டனையாக அவர்களுக்கு இவ்வாறு தீங்கிழைப்பீர்.

ஆவர்களுடைய கூற்று ஒலோபெரினுக்கும் அவனுடைய பணியாளர்கள் யாவருக்கும் ஏற்றதாய் இருந்தது. ஆகையால், அவர்கள் சொன்னபடியே செய்ய அவன் கட்டளையிட்டான்.

எனவே, அம்மோனியப் படைவீரர்கள் அசீரியப் படைவீரர்கள் ஜயாயிரம் பேருடன் சேர்ந்து முன்னேறிச் சென்று, பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து, இஸ்ரயேலருக்குத் தண்ணீர் கிடைக்காதவாறு அவர்களின் நீரூற்றுகளைக் கைப்பற்றினார்கள்.

ஏசாவின் மக்களும் அம்மோனியரும் ஏறிச்சென்று மலை நாட்டில் தோத்தானுக்கு எதிரே பாசறை அமைத்தார்கள்: தங்களுள் சிலரைத் தென் கிழக்கில் எக்ரபேலுக்கு எதிரில் அனுப்பினார்கள். இது மொக்மூர் என்ற ஓடை ஓரத்தில் அமைந்திருந்த கூசு என்ற இடத்துக்கு அருகே இருந்தது. அசீரியரின் எஞ்சிய வீரர்கள் சமவெளியில் பாசறை அமைத்து நாடு முழுவதையும் நிரப்பினார்கள். அவர்களுடைய கூடாரங்களும் பொருள்களும் பெரியதொரு பாசறையாக அமைந்து நெடுந்தொலை பரவியிருந்தன.

உள்ளம் தளர்ந்துபோன இஸ்ரயேலர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினர்: ஏனெனில், அவர்களைச் சூழ்ந்துகொண்ட பகைவர்களிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை.

காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை அடங்கிய அசீரியரின் படைத்திரள் முழவரும் முப்பத்துநான்கு நாள் இஸ்ரயேலரைச் சூழ்ந்து கொள்ள, பெத்பலியாவில் வாழ்ந்தவர்கள் அனைவருடைய தண்ணீர்க் கலன்களும் வெறுமையாயின.

நீர்த்தொட்டிகள் வறண்டுகொண்டிருந்தன. ஒரு நாளாவது தாகம் தீரக் குடிக்கப் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை: அவர்களுக்குக் குடிநீர் அளவோடு தான் கொடுக்கப்பட்டது.

அவர்களின் குழந்தைகள் சோர்வுற்றார்கள்: பெண்களும் இளைஞர்களும் தாகத்தால் மயக்கமடைந்து நகரின் தெருக்களிலும் வாயில்களிலும் விழுந்து கிடந்தார்கள்: ஏனெனில், அவர்களிடம் வலுவே இல்லை.

இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் எல்லாரும் ஊசியாவிடமும் நகரின் பெரியோர்களிடமும் கூட்டமாய்ச் சென்று உரத்த குரல் எழுப்பினார்கள்: மூப்பர்கள் அனைவர் முன்னும் பின்வருமாறு கூறினார்கள்:

நமக்கிடையே கடவுள் தீர்ப்பு வழங்கட்டும். அசீரியருடன் நீங்கள் சமாதானம் செய்து கொள்ளாததால், நமக்குப் பெரும் அநீதி இழைத்திருக்கிறீர்கள்.

இப்போது நமக்கு உதவி செய்வார் யாரும் இல்லை. நாம் தாகத்தாலும் பேரழிவாலும் அவர்கள்முன் தலைகுனியும்படி கடவுள் நம்மை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

உடனே அவர்களை அழையுங்கள்: நகர் முழுவதையும் சூறையாடும்படி ஒலோபெரினின் வீரர்களிடமும் அவனுடைய படைகளிடமும் கையளியுங்கள்.

ஏனெனில், அவர்களால் சிறைப்பிடிக்கப்படுவது நமக்கு மேலானது. அதனால் நாம் அவர்களுக்கு அடிமைகளாவோம்: ஆனால் நமது உயிர் காப்பாற்றப்படும். மேலும் நம் கண்முன்னேயே நம் குழந்தைகள் சாவதையும், நம் மனைவி மக்கள் உயிர்விடுவதையும் காணமாட்டோம்.

விண்ணையும் மண்ணையும், நம் கடவுளையும் நம் மூதாதையரின் ஆண்டவரையும் உங்களுக்கு எதிர்ச் சாட்சிகளாக அழைக்கிறோம்: அவர் நம் பாவங்களுக்கு ஏற்பவும், நம் மூதாதையரின் பாவங்களுக்கு ஏற்பவும் நம்மைத் தண்டிப்பவர். நாங்கள் சொன்னவாறு கடவுள் இன்று நிகழாமல் பார்த்துக்கொள்வாராக.

அப்பொழுது மக்கள் கூட்டத்திலிருந்து ஒருமித்த பெரும் புலம்பல் எழுந்தது. அவர்கள் எல்லாரும் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி உரத்த குரலில் மன்றாடினார்கள்.

ஊசியா அவர்களை நோக்கி, சகோதரர்களே, துணிவு கொள்ளுங்கள்: மேலும் ஜந்து நாளுக்குப் பொறுத்துக் கொள்வோம். அதற்குள் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு இரக்கங் காட்டுவார்: அவர் நம்மை முற்றிலும் புறக்கணித்துவிடமாட்டார்.

ஜந்து நாள் கடந்த பின்னும் நமக்கு உதவி ஏதும் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் சொன்னவாறே செய்கிறேன் என்று கூறினார்.

பிறகு மக்கள் கலைந்து தாங்கள் காவல்புரிய வேண்டிய இடங்களுக்கு அவர் போகச் செய்தார். அவர்கள் நகரின் மதில்களுக்கும் கோட்டைகளுக்கும் சென்றார்கள்: பெண்களும் பிள்ளைகளும் அவரவர் தம் வீடுகளுக்குத் திரும்பினார்கள்: நகரெங்கும் மக்கள் பெரிதும் சோர்வுற்றிருந்தார்கள்.

அதிகாரம் 8.

அக்காலத்தில் யூதித்து இதைப்பற்றிக் கேள்விப்பட்டார். யூதித்து மெராரியின் மகள்: மெராரி ஓசின் மகன்: ஓசு யோசேப்பின் மகன்: யோசேப்பு ஓசியேலின் மகன்: ஓசியேல் எல்க்கியாவின மகன்: எல்க்கியா அனனியாவின் மகன்: அனனியா கிதியோனின் மகன்: கிதியோன் ரெபாயிம் மகன்: ரெபாயிம் அகித்பபின் மகன்: அகித்பபு எலியாவின் மகன்: எலியா இல்க்கியாவின் மகன்: இல்க்கியா எலியாபின் மகன்: எலியாபு நத்தனியேலின் மகன்: நத்தனியேல் சலாமியேலின் மகன்: சலாமியேல் சரசதாயின் மகன்: சரசதாய் இஸ்ரயேலின் மகன்.

யூதித்தின் கணவர் மனாசே. அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வாற்கோதுமை அறுவடைக் காலத்தில் மனாசே இறந்துபோனார்.

அவர் தம் வயலில் கதிர்களைச் சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்தவர்களை மேற்பார்வையிட்டபொழுது, கடும் வெயில் அவரது தலையைத் தாக்கவே, அவர் படுத்த படுக்கையானார்: பின் தம் நகரான பெத்பலியாவில் உயிர் துறந்தார்: தோத்தானுக்கும் பால்மோனுக்கும் இடையில் இருந்த வயலில் தம் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

யூதித்து கைம்பெண் ஆனார்: மூன்று ஆண்டு நான்கு மாதமாய்த் தம் இல்லத்திலேயே இருந்தார்.

தம் வீட்டின் மேல்தளத்தில் தமக்காகக் கூடாரம் ஒன்று அமைத்துக்கொண்டார்: இடுப்பில் சாக்கு உடை உடுத்தியிருந்தார்: கைம்பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்திருந்தார்: 6 . தம் கைம்மைக் காலத்தில் ஓய்வுநாளுக்கு முந்தினநாளும் ஓய்வுநாள் அன்றும், அமாவாசைக்கு முந்தின நாளும் அமாவாசை அன்றும், இஸ்ரயேல் இனத்தாருக்குரிய திருநாள்கள், மகிழ்ச்சியின் நாள்கள்தவிர மற்ற நாள்களில் நோன்பிருந்துவந்தார்.

அவர் பார்வைக்கு அழகானவர்: தோற்றத்தில் எழில் மிக்கவர். ஆண் பெண் பணியாளர்களோடு பொன், வெள்ளி, கால்நடைகள், வயல்கள் ஆகியவற்றை அவர் கணவர் மனாசே அவருக்கு விட்டுச்சென்றிருந்தார். இவையெல்லாம் யூதித்தின் உடைமையாயின.

யூதித்து கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார். அவரைப்பற்றி யாரும் தவறாகப் பேசியதில்லை.

தண்ணீர்ப் பஞ்சத்தால் மக்கள் மிகவும் சோர்வுற்று, ஆளுநருக்கு எதிராகக் கூறியிருந்த கடுஞ் சொற்களையும், ஜந்து நாள்களுக்குப்பின் நகரை அசீரியரிடம் கையளிக்கப் போவதாக ஊசியா ஆணையிட்டுக் கூறியிருந்த அனைத்தையும் யூதித்து கேள்வியுற்றார்.

உடனே தம் நகரின் மூப்பர்களை ஊசியா, காபிரி, கார்மி ஆகியோரை அழைத்து வருமாறு, தன் உடைமைகளையெல்லாம் கண்காணித்துவந்த தம் பணிப்பெண்ணை அனுப்பிவைத்தார்.

மூப்பர்கள் வந்தபோது யூதித்து பெத்பலியாவில் வாழும் மக்களின் ஆளுநர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்: இன்று மக்களிடம் நீங்கள் கூறிய சொற்கள் முறையற்றவை. ஆண்டவர் தம் மனத்தை மாற்றி, குறித்த நாளுக்குள் நமக்கு உதவி அளிக்காவிடில் இந்த நகரை நம் எதிரிகளிடம் ஒப்புவிக்கப்போவதாக நீங்கள் உறுதி அளித்துக் கடவுள்மேல் ஆணையிட்டிருக்கிறீர்கள்.

இன்று கடவுளைச் சோதிக்க நீங்கள் யார்? மனிதர் நடுவே கடவுளுக்கு மேலாக உங்களையே உயர்த்திக் கொள்ள நீங்கள் யார்?

இப்போது, எல்லாம்வல்ல ஆண்டவரைச் சோதிக்கின்றீர்கள்: ஆனால் நீங்கள் எதையும் என்றுமே அறிந்து கொள்ளப்போவதில்லை.

மனித உள்ளத்தின் ஆழத்தையே நீங்கள் காண முடியாது: மனித மனம் நினைப்பதையே நீங்கள் உணர முடியாது. அவ்வாறிருக்க, இவற்றையெல்லாம் படைத்த கடவுளை எவ்வாறு உங்களால் தேடி அறிய முடியும்? அவருடைய எண்ணத்தை எவ்வாறு புரிந்த கொள்ள முடியும்? அவருடைய திட்டத்தை எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும்? சகோதரர்களே, நம் கடவுளாகிய ஆண்டவரி¡ன் சினத்தைத் பண்டி விடாதீர்கள்.

இந்த ஜந்து நாள்களில் நமக்கு உதவிபுரிய அவருக்கு விருப்ப மில்லை என்றாலும், அவருக்கு விருப்பமான எந்த நேரத்திலும் நம்மைப் பாதுகாக்கவோ நம் பகைவர்கள் காண நம்மை அழித்து விடவோ அவருக்கு ஆற்றல் உண்டு.

நம் கடவுளாகிய ஆண்டவரின் திட்டங்களுக்கு நிபந்தனை விதிக்காதீர்கள்: ஏனெனில், மனிதரை அச்சுறுத்துவதுபோலக் கடவுளை அச்சுறுத்த முடியாது: மானிடரை மன்றாட்டினால் மாற்றுவதுபோல் ஆண்டவரையும் மாற்ற முடியாது.

எனவே, அவரிடமிருந்து மீட்பை எதிர்பார்ப்பவர்களாய், நமக்கு உதவி செய்ய அவரை மன்றாடுவோம். ஆவருக்கு விருப்பமானால் அவர் நமது மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பார்.

முற்காலத்தில் நடந்ததுபோல, நம் தலைமுறையில் நாம் வாழும் இக்காலத்தில், நம்மில் எந்தக் குலமோ குடும்பமோ நாடோ நகரமோ கையால் உருவாக்கப்பட்ட சிலைகளைத் தெய்வங்களாக வணங்கியதில்லை.

அவ்வாறு வணங்கியதால்தான் நம் மூதாதையர்கள் வாளுக்கிரையாகி, சூறையாடப்பட்டு, நம் எதிரிகளின் முன்னிலையில் அறவே அழிந்தார்கள்.

நாம் ஆண்டவரைத் தவிர வேறு கடவுளை அறிந்ததில்லை. அதனால் அவர் நம்மையோ நம் இனத்தாருள் எவரையுமோ வெறுத்து ஒதுக்கமாட்டார் என நம்புகிறோம்.

நாம் பிடிபட்டால் யூதேயா முழுவதுமே பிடிபடும்: நம் திருவிடம் கொள்ளையடிக்கப்படும். அதன் பய்மைக்கேட்டுக்குக் கழுவாயாக நாம் குருதி சிந்த வேண்டியிருக்கும்.

நம் சகோதரர்களின் படுகொலை, நாட்டின் சிறைப்பட்ட நிலை, நமது உரிமைச் சொத்தின் பாழ்நிலை ஆகியவற்றுக்கெல்லாம், நாம் அடிமைகளாய் இருக்கும் இடமெங்கும் வேற்றினத்தார் நடுவே நாம் பொறுப்பு ஏற்கச்செய்வார். நம்மை அடிமைப்படுத்தியோர் முன்னிலையில் ஏளனப் பேச்சுக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாவோம்.

நம்முடைய அடிமை நிலை நமக்குச் சாதகமாய் அமையாது: நம் கடவுளாகிய ஆண்டவர் அதை நமக்கு இகழ்ச்சியாக மாற்றுவார்.

உடன்பிறப்புகளே, இவ்வேளையில் நம் சகோதரர்களுக்கு நாம் எடுத்துக்காட்டாக விளங்குவோம். ஏனென்றால், அவர்கள் உயிர் நம் கையில் உள்ளது. அவ்வாறே திருவிடமும் கோவிலும் பலிபீடமும் நம் பொறுப்பில் உள்ளன.

எனினும் நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்: ஏனெனில், நம் மூதாதையரை அவர் சோதித்ததுபோல நம்மையும் சோதிக்கிறார்.

அவர் ஆபிரகாமுக்கு என்ன செய்தார் என்பதையும், ஈசாக்கை எவ்வாறு சோதித்தார் என்பதையும், யாக்கோபு தம் தாய்மாமன் லாபானின் ஆடுகளை வட மெசப்பொத்தாமியாவில் மேய்ந்துகொண்டிருந்த போது அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பதையும் எண்ணிப்பாருங்கள்.

ஆண்டவர் இவ்வாறு அவர்களின் உள்ளங்களைச் சோதித்தறியும் பொருட்டு அவர்களை நெருப்பில் புடமிட்டதுபோல நம்மைப் புடமிடவில்லை: நம்மைப் பழிவாங்கவுமில்லை. ஆனால், தமக்கு நெருக்கமாய் உள்ளோரை எச்சரிக்கும்படி தண்டிக்கிறார்.

பின் ஊசியா யூதித்திட்டம் மறுமொழியாக, நீ சொன்னதெல்லாம் உண்மையே. உன் சொற்களை மறுத்துப் பேசுவார் யாருமில்லை.

உனது ஞானம் முதன் முறையாக இன்று வெளிப்படவில்லை: உன் இளமைமுதலே உன் அறிவுக்கூர்மையை மக்கள் யாவரும் அறிவர். நீ நல்ல உள்ளம் கொண்டவள்.

ஆனால், மக்கள் கடுந்தாகங் கொள்ளவே, நாங்கள் முன்பு உறுதி கூறியவாறு செயலாற்றவும் அதை மீறாதவாறு ஆணையிடவும் எங்களைக் கட்டாயப்படுத்தினார்கள்.

நீ இறைப்பற்றுள்ள பெண். ஆகையால், இப்போது நமக்காக இறைவனிடம் மன்றாடினால் ஆண்டவர் மழை பொழியச் செய்து, நம் நீர்த்தொட்டிகளை நிரப்புவார். நாம் இனியும் தாகத்தால் சோர்வு அடைய மாட்டோம் என்றார்.

அதற்கு யூதித்து அவர்களிடம், நான் சொல்வதைக் கேளுங்கள். நான் செய்யப்போகும் செயல் நம் வழிமுறையினர் நடுவே தலைமுறை தலைமுறையாய் நினைவுகூரப்படும்.

நீங்கள் இன்று இரவு நகர வாயில் அருகே வந்து நில்லுங்கள். அப்போது நான் என் பணிப்பெண்ணுடன் வெளிவே செல்வேன். நீங்கள் நகரை நம் பகைவர்களிடம் கையளிக்கப்போவதாக உறுதியளித்த அந்த நாளுக்குள் ஆண்டவர் என் வழியாக இஸ்ரயேலை விடுவிப்பார்.

நான் செய்யப்போவதுபற்றி நீங்கள் ஒன்றும் என்னிடம் கேட்காதீர்கள். நான் அதைச் செய்து முடிக்கும்வரை எதுவும் சொல்லமாட்டேன் என்றார்.

அதற்கு ஊசியாவும் ஆளுநர்களும் அவரிடம், நலமே சென்றுவா: கடவுளாகிய ஆண்டவர் நம் பகைவர்களைப் பழிவாங்க உன்னை வழி நடத்தட்டும் என்றார்கள்.

பிறகு அவர்கள் அவரது கூடாரத்தை விட்டுத் தாங்கள் காவல்புரியவேண்டிய இடங்களுக்குத் திரும்பினார்கள்.

அதிகாரம் 9.

யூதித்து குப்புற விழுந்தார்: தலையில் சாம்பலைத் பவிக்கொண்டார்: தாம் அணிந்திருந்த சாக்கு உடையைக் களைந்தார். எருசலேமில் கடவுளின் இல்லத்தில் அன்றைய மாலைத் பப வழிபாடு நடந்துகொண்டிருந்த நேரத்தில், ஆண்டவரை நோக்கி உரத்த குரலில் பின்வருமாறு மன்றாடினார்:

என் மூதாதையான சிமியோனின் கடவுளாகிய ஆண்டவரே, அயல்நாட்டாரைப் பழிவாங்குமாறு அவரது கையில் ஒரு வாளைக் கொடுத்தீர். அவர்கள் ஒரு கன்னிப் பெண்ணைக் கறைப்படுத்துவதற்காக அவளது இடைக் கச்சையைத் தளர்த்தினார்கள்: அவளை இழிவுபடுத்துவதற்காக அவளது ஆடையைக் கிழித்தார்கள்: அவளைப் பழிக்குள்ளாக்குவதற்காக அவளது கருப்பையைத் தீட்டுப்படுத்தினார்கள். “இவ்வாறு செய்யலாகாது“ என்று நீர் உரைத்திருந்தும் அதற்கு மாறாக அவர்கள் செயல்பட்டார்கள்.

எனவே, அவர்களின் ஆளுநர்கள் வஞ்சனையால் கறைபட்ட அவர்களது படுக்கை, குருதி தோய்ந்திருக்கச் செய்தீர்: அடிமைகளை அவர்களுடைய தலைவர்களோடும், தலைவர்களை அவர்களுடைய அரியணைகளோடும் அடித்து நொறுக்கினீர்.

மேலும், அவர்களுடைய மனைவியர் கவர்ந்து செல்லப்படவும், புதல்வியர் சிறைப்படுத்தப்படவும், கொள்ளைப் பொருள்கள் அனைத்தும் உம் அன்பான மக்களால் பகிர்ந்துகொள்ளப்படவும் நீர் ஒப்புவித்தீர். உம் மக்கள் உம்மீது பற்றார்வம் கொண்டு, தங்கள் குருதியால் ஏற்பட்ட தீட்டை அருவருத்து, நீர் உதவி அளிக்கும்படி உம்மை மன்றாடினார்கள். கடவுளே, என் கடவுளே, கைம்பெண்ணாகிய எனக்கும் செவிசாய்த்தருளும்.

அப்போது நடந்தவை, அதற்கு முன்னும் பின்னும் நடந்தவை ஆகிய அனைத்தையும் செய்தவர் நீரே: இப்போது நிகழ்வனவற்றையும் இனி நிகழ விருப்பனவற்றையும் நீரே திட்டமிட்டுள்ளீர். நீர் திட்டமிட்டவையெல்லாம் நிறைவேறின.

நீர் திட்டமிட்டவை அனைத்தும் உம்முன் நின்று, “இதோ உள்ளோம்“ என்றன: உம் வழிகளெல்லாம் ஆயத்தமாய் உள்ளன: உம் தீர்ப்பு முன்னறிவு மிக்கது.

இப்போது அசீரியர்கள் பெருந்திரளான படையோடு வந்திருக்கிறார்கள்: தங்கள் குதிரைகளின் பொருட்டும் குதிரை வீரர்களின் பொருட்டும் இறுதிமாப்புக் கொண்டுள்ளார்கள்: தங்கள் காலாட்களின் வலிமையால் செருக்குக் கொண்டுள்ளார்கள்: கேடயம், ஈட்டி, வில், கவண் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆனால், போர்களை முறியடிக்கும் ஆண்டவர் நீர் என்பதை அவர்கள் அறியார்கள்.

ஆண்டவர் என்பது உமது பெயர். உமது ஆற்றலால் அவர்களது வலிமையை அடக்கிவிடும்: உமது சினத்தால் அவர்களின் திறத்தை அழித்துவிடும்: ஏனெனில, உமது பலிபீடத்தின் கொம்புகளை வாளால் நொறுக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

அவர்களுடைய இறுமாப்பை உற்றுநோக்கும்: அவர்கள் தலைமேல் உமது சினத்தைக் கொட்டும்: எனது திட்டத்தைச் செயல்படுத்தக் கைம்பெண்ணாகிய எனக்கு வலிமை தாரும்.

என் உதடுகளின் வஞ்சனையால் அடிமையை அவனுடைய ஆளுநனோடும், ஆளுநனை அவனுடைய பணியாளனோடும் தாக்கி வீழ்த்தும்: அவர்களது செருக்கை ஒரு பெண்ணின் கைவன்மையால் நொறுக்கிவிடும்.

உமது வரிமை ஆள் எண்ணக்கையைப் பொறுத்ததன்று: உமது ஆற்றல் வலிமைவாய்ந்தோரைப் பொருத்ததன்று. நீர் தாழ்ந்தேரின் கடவுள்: ஒடுக்கப்பட்டோரின் துணைவர்: நலிவுற்றோரின் ஆதரவாளர்: கைவிடப்பட்டோரின் காவலர்: நம்பிக்கையற்றோரின் மீட்பர்.

என் மூதாதையின் கடவுளே, என் வேண்டுதலைக் கனிவோடு கேளும்: இஸ்ரயேலின் உரிமைச்சொத்தாகிய இறைவா, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, நீரூற்றுகளைப் படைத்தவரே, படைப்புகளுக்கெல்லாம் மன்னரே, என் மன்றாட்டுக்குப் பரிவோடு செவிசாயும்.

ஊமது உடன்படிக்கைக்கும் உமது பய இல்லத்துக்கும் சீயோன் மலைக்கும் உம் மக்கள் உரிமையாக்கிக் கொண்ட இல்லங்களுக்கும் எதிராகக் கொடியவற்றைத் திட்டமிட்டுள்ளோரை என் வஞ்சகச் சொற்கள் காயப்படுத்திக் கொல்லச் செய்யும்.

நீரே கடவுள் என்றும், எல்லா ஆற்றலும் வலிமையும் கொண்ட கடவுள் என்றும், இஸ்ரயேல் இனத்தைப் பாதுகாப்பவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை என்றும் உம் மக்களினம் முழுவதும், அதன் எல்லாக் குலங்களும் அறியச் செய்யும்.

அதிகாரம் 10.

இஸ்ரயேலின் கடவுளை நோக்கி யூதித்து கூக்குரலிடுவதை நிறுத்தி, தம் மன்றாட்டை முடித்துக்கொண்டார்.

தாம் விழுந்துகிடந்த இடத்திலிருந்து எழுந்தார்: தம் பணிப்பெண்ணை அழைத்தார்: தாம் ஓய்வுநாள்களிலும் திருநாள்களிலும் தங்கிவந்த வீட்டுக்கு இறங்கிச் சென்றார்.

தாம் அணிந்திருந்த சாக்கு உடையை அகற்றினார்: கைம் பெண்ணுக்குரிய ஆடைகளை களைந்தார்: நீராடி, விலையுயர்ந்த நறுமண எண்ணெய் பூசி, வாரி முடித்துத் தலைமீது மணிமுடியை வைத்துக் கொண்டார்: தம் கனவர் மனாசே இருந்தபோது தாம் உடுத்தியிருந்த பகட்டான ஆடைகளை அணிந்துகொண்டார்.

தம்மைக் காணும் ஆண்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும்வண்ணம் காலில் மிதியடி அணிந்தார்: சிலம்பு, கைவளை, மோதிரம், காதணி போன்ற தம் அணிகலன்கள் அனைத்தையும் அணிந்து தம்மைப் பெரிதும் அழகுபடுத்திக் கொண்டார்.

தும் பணிப்பெண்ணிடம் திராட்சை இரசம் நிறைந்த தோல்பையையும் எண்ணெய் அடங்கிய குப்பியையும் கொடுத்தார்: வறுத்த தானியம், உலர்ந்த பழங்கள், நல்ல அப்பங்கள் ஆகியவற்றை ஒரு பையிலிட்டு நிறைந்தார். அவை அனைத்தையும் சேர்த்துக் கட்டி, பக்கிக் கொண்டு வருமாறு அவளிடம் கொடுத்தார்.

அவர்கள் இருவரும் பெத்பலியா நகர வாயிலை நோக்கிச் சென்றார்கள்: அங்கு ஊசியாவும் நகர மூப்பர்களான காபிரியும் கார்மியும் நின்று கொண்டிருக்கக் கண்டார்கள்.

இவர்கள் யூதித்தின் முகத் தோற்றம் வேறுபட்டியிருப்பதையும், வழக்கத்திற்கு மாறாக ஆடை அணிந்திருப்பதையும் கண்டார்கள். அவரது அழகைக் கண்டு மிகவும் வியந்து,

எங்கள் மூதாதையரின் கடவுள் உன்மீது அருள் பொழிவாராக: இஸ்ரயேல் மக்களின் மாட்சியும் எருசலேமின் மேன்மையும் விளங்க, உன் திட்டங்களை நிறைவேற்றுவாராக என்று வாழ்த்தினார்கள்.

யூதித்து கடவுளைத் தொழுதபின் அவர்களிடம், நகர வாயிலை எனக்குத் திறந்துவிடுமாறு கட்டளையிடுங்கள். நு£ங்கள் என்னிடம் கூறியவற்றை நிறைவேற்ற நான் வெளியே செல்வேன் என்று வேண்டினார். அவர் கேட்டுக் கொண்டபடி அவருக்கு வாயிலைத் திறந்துவிடுமாறு மூப்பர்கள் இளைஞர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

இளைஞர்களும் அவ்வாறே செய்தார்கள். யூதித்து வெளியே செல்ல, அவருடைய பணிப்பெண்ணும் அவரோடு சென்றாள். மலையிலிருந்து கீழே இறங்கிப் பள்ளத்தாக்கைக் கடக்கும் வரை நகர மாந்தர் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்பின் அவரை அவர்களால் காண முடியவில்லை,

பெண்கள் இருவரும் பள்ளத்தாக்கில் நேரே சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது அசீரியர்களின் சுற்றுக்காவல் படை யூதித்தை எதிர் கொண்டது.

அவர்கள் யூதித்தைப் பிடித்து, நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள்? எங்கிருந்து வருகிறாய்? எங்குச் செல்கிறாய்? என வினவினார்கள். அதற்கு அவர், நான் ஓர் எபிரேயப் பெண், ஆனால் எபிரேயர்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறேன்: எனெனில், அவர்கள் உங்களுக்கு இரையாகப் போகிறார்கள்.

மனோ உங்கள் படைத் தலைவர் ஒலோபெரினைப் பார்த்து அவரிடம் உண்மை நிலையை உடுத்துரைக்கச் சென்று கொண்டிருக்கிறேன். அவர் மலைப்பகுதி முழவதையும் கைப்பற்றக்கூடிய வழியை அவருக்குக் காட்டுவேன். அவருடைய வீரர்களுள் யாரும் உயிரிழக்கமாட்டார்கள். அவர்களின் உடலுக்கோ உயிருக்கோ எவ்வகைத் தீங்கும் நேராது என்றார்.

வீரர்கள் அவருடைய சொற்களைக் கேட்டு, அவரை உற்றுநோக்க, அவருடைய முகம் எழில்மிக்கதாய் அவர்களுக்குத் தோன்றியது. அப்பொழுது அவர்கள்,

எங்கள் தலைவரைக் காண விரைவாகக் கீழே இறங்கி வந்ததால் நீ உயிர் பிழைத்தாய். நீ இப்போது அவரது கூடாரத்துக்குச் செல். எங்களுள் சிலர் உன்னை அழைத்துச் சென்று அவரிடம் ஒப்படைப்பர்.

நீ அவர்முன் நிற்கும்போது அஞ்சாதே. நீ எங்களிடம் சொன்னதையே அவரிடம் தெரிவி. அவர் உன்னை நல்ல முறையில் நடத்துவார் என்றார்கள்.

யூதித்தையும் அவருடைய பணிப்பெண்ணையும் ஒலோபெரினிடம் அழைத்துச்செல்லத் தங்களுள் மறு வீரர்களைத் தெரிந்தெடுத்தார்கள். இவர்கள் பெண்கள் இருவரையும் ஒலோபெரினுடைய கூடாரத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

யூதித்தின் வருகைப்பற்றிய செய்தி பாளையம் முழவதும் பரவியதால், எங்கும் ஒரே பரபரப்பாய் இருந்தது. வீரர்கள் வந்து அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர் ஒலோபெரினின் கூடாரத்துக்கு வெளியே காத்திருந்தார். அவரைப் பற்றி அவனிடம் தெரிவித்தார்கள்.

அவர்கள் அவரது அழகைக் கண்டு வியந்தார்கள். அவரை முன்னிட்டு இஸ்ரயேல் மக்களைப்பற்றியும் வியந்தார்கள். இத்தகைய பெண்களைத் தங்களிடையே கொண்டிருக்கும் இந்த மக்களை யாரே இழிவாகக் கருதுவர்! இவர்களுள் ஓர் ஆணைக்கூட உயிரோடு விட்டுவைப்பது நல்லதன்று. அவர்களை விட்டுவைத்தால், உலகம் முழுவதையும் வஞ்சித்துவிட இவர்களால் முடியும் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

பிறகு ஒலோபெரினின் காவலர்களும் பணியாளர்கள் அனைவரும் வெளியே வந்து யூதித்தைக் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றார்கள்.

அப்போது, பொன், மரகதம், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட கருஞ்சிவப்புத் துணியாலான மேற்கவிகையின்கீழ்த் தன் படுக்கையில் ஒலோபெரின் ஓய்வு கொண்டிருந்தான்.

அவன் யூதித்தைப்பற்றி அறிந்ததும், வெள்ளி விளக்குகள் முன்செல்லத் தன் கூடாரத்துக்குமுன் வந்து நின்றான்.

அவன் முன்னும் அவனுடைய பணியாளர்கள் முன்னும் யூதித்து வந்தபோது, அவரது முக அழகைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். அவரோ ஒலோபெரின் முன்னிலையில் குப்புற விழந்து வணங்கினார். அவனுடைய பணியாளர்கள் அவரைத் பக்கிவிட்டார்கள்.

அதிகாரம் 11.

ஒலோபெரின் யூதித்தை நோக்கி, பெண்ணே, துணிவுகொள்: அஞ்சாதே, அனைத்துலகுக்கும் மன்னராகிய நெபுகத்னேசருக்குப் பணிபுரிய முன்வரும் எவருக்கும் நான் ஒருபோதும் தீங்கிழைத்ததில்லை.

இப்பொழுதும், மலைப்பகுதியில் வாழும் உன் இனத்தார் என்னைப் புறக்கணியாதிருந்தால் நான் அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க முனைந்திருக்கமாட்டேன். ஆனால், இதற்கெல்லாம் அவர்களே காரணம்.

இப்பொழுது சொல்: நீ ஏன் அவர்களிடமிருந்து தப்பியோடி எங்களிடம் வந்திருக்கிறாய்? பாதுகாப்புத் தேடித்தானே வந்துள்ளாய்? துணிவு கொள். இன்று இரவும் இனியும் உனக்கு ஆபத்து எதுவும் நேராது.

எவரும் உனக்குத் தீங்கிழைக்கமாட்டார்கள். மாறாக, என் தலைவர் நெபுகத்னேசர் மன்னரின் பணியாளரை நடத்துவது போல, யாவரும் உன்னையும் நல்ல முறையில் நடத்துவார்கள் என்றான்.

இதற்கு யூதித்து அவனிடம் பின்வருமாறு கூறினார்: உம் அடியவளின் சொற்களைத் தயை கூர்ந்து கேளும். ஊம் பணிப்பெண்ணாகிய என்னைப் பேசவிடும். இன்று இரவு என் தலைவரிடம் நான் பொய் சொல்லமாட்டேன்.

உம் பணிப்பெண்ணான என் சொற்படி நீர் நடந்தால், கடவுள் உமக்கு முழு வெற்றி அளிப்பார்: என் தலைவராகிய நீர் மேற்கொள்ளும் முயற்சிகளில் தோல்வியே காணமாட்டீர்.

அனைத்துலகின் மன்னரான நெபுகத்னேசரின் உயிர்மேல் ஆணை! எல்லா உயிர்களையும் நெறிப்படுத்த உம்மை அனுப்பியுள்ள அவருடைய ஆற்றல் மேல் ஆணை! மனிதர்கள் மட்டும் உம் வழியாக நெபுகத்னேசருக்குப் பணிவிடை செய்வதில்லை: காட்டு விலங்குகள், கால்நடைகள், வானத்துப் பறவைகள் ஆகியவையும் அவருக்கும் அவருடைய வீட்டார் அனைவருக்கும் பணிந்து உமது ஆற்றலால் உயிர் வாழ்கின்றன.

உம்முடைய ஞானம் பற்றியும் திறமைகள் பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். நாடு முழுவதிலும் நீரே தலைசிறந்தவர் என்றும், அறிவாற்றலில் வல்லவர் என்றும், போர்த் திறனில் வியப்புக்குரியவர் என்றும் உலகம் முழவதும் அறியும்.

அக்கியோர் உமது ஆட்சிமன்றத்தில் அறிவித்தவற்றை நாங்களும் கேள்வியுற்றோம்: ஏனெனில், பெத்பலியாவின் ஆள்கள் அவரை உயிரோடு விட்டுவைத்ததால், அவர் உம்மிடம் சொல்லியிருந்த அனைத்தையும் அவர்களுக்கும் அறிவித்தார்.

ஆதலால், தலைவர் பெருமானே, அவருடைய சொற்களைப் புறக்கணியாமல் உமது உள்ளத்தில் இருத்தும். எம் இனத்தார் தங்கள் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தாலொழிய அவர்களை யாரும் தண்டிக்க முடியாது: வாள்கூட அவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது. இது உண்மை.

இப்போது என் தலைவருக்குத் தோல்வியும் ஏமாற்றமும் ஏற்படாதவாறு சாவு அவர்களுக்கு நேரிடும். ஏனெனில் அவர்களுடைய பாவம் அவர்களை ஆட்கொண்டுவிட்டதால் அவர்கள் தீமை செய்யும்போதெல்லாம் தங்கள் கடவுளுக்குச் சினமூட்டுகிறார்கள்.

தங்கள் உணவுப்பொருள்கள் தீர்ந்துபோனதாலும் அவர்கள் தங்கள் கால்நடைகளைக் கொல்ல முடிவு செய்தார்கள்: மேலும், உண்ணக் கூடாது என்று கடவுள் தம் சட்டத்தால் விலக்கிவைத்திருந்தவற்றை உண்ணவும் உறுதிபூண்டார்கள்.

எருசலேமில் உள்ள எங்களின் கடவுள் திருமுன் பணியாற்றும் குருக்களுக்கென்று பய்மைப்படுத்தி ஒதுக்கி வைக்கப்பட்ட தானியங்களின் முதற் பலன், திராட்சை இரசம், எண்ணெய் இவற்றில் பத்திலொரு பங்கு ஆகியவற்றைப் பொது மக்களுள் யாரும் தங்கள் கையால் தொடவும் கூடாது என்று திருச்சட்டம் விலக்கியிருந்தும், அவர்கள் அவற்றைத் தங்களுக்கே பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்கள்.

எருசலேமில் வாழ்ந்த மக்களும் இவ்வாறு செய்து வந்தபடியால், ஆட்சி மன்றத்தின் இசைவு பெற்று வர எருசலேமுக்கு ஆளனுப்பியிருக்கிறார்கள்.

இசைவு பெற்று, அதைச் செயல்படுத்த அவர்கள் முற்படும் பொழுது, அழிவுறுமாறு அவர்கள் அன்றே உம்மிடம் கையளிக்கப்படுவார்கள்.

ஆகவே, உம் அடியவளாகிய நான் இவற்றையெல்லாம் அறிந்து, அவர்களிடமிருந்து தப்பியோடி வந்துள்ளேன். உம்மிடம் சேர்ந்து அரும்பெரும் செயலாற்றக் கடவுள் என்னை அனுப்பியுள்ளார். இவைபற்றிக் கேள்வியுறும் மாந்தர் எல்லாரும், ஏன் உலகம் முழுவதுமே மலைப்புறுவர்!

உம் அடியாளாகிய நான் இறைப்பற்று உள்ளவள். இரவும் பகலும் விண்ணகக் கடவுளுக்கு ஊழியம் புரிந்து வருகிறேன். என் தலைவரே, இப்பொழுது உம்மிடம் தங்குவேன். ஆனால், இரவுதோறும் பள்ளத்தாக்குக்குச் சென்று கடவுளை மன்றாடுவேன். இஸ்ரயேலர் பாவம் செய்யும்போது அவர் எனக்கு அறிவிப்பார்.

நான் வந்து அதை உமக்கு அறிவிப்பேன். பின் உம் படை அனைத்தோடும் நீர் புறப்பட்டுச் செல்லலாம். உம்மை எதிர்ப்பதற்கு அவர்களுள் ஒருவராலும் முடியாது.

நான் யூதேயா நாடு வழியாக எருசலேம் சேரும்வரை உம்மை வழி நடத்திச் செல்வேன். அங்கு உமக்கு ஓர் அரியணை அமைப்பேன். ஆயன் இல்லா ஆடுகள்போல் இருக்கும் அவர்களை நீர் துரத்தியடிப்பீர். ஒரு நாய்கூட உமக்கு எதிராக உறுமாது. முன்கூட்டியே எனக்கு அறிவிக்கப்பட்ட இவற்றை உமக்குத் தெரிவிக்கவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.

யூதித்து சொன்னதைக் கேட்ட ஒலோபெரினும் அவனுடைய பணியாளர்களும் மகிழ்ச்சியுற்றா¡கள். அவரது ஞானத்தைக் கண்டு வியந்து,

உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை உன்னைப் போல அழகும் ஞானம் நிறைந்த பேச்சும் கொண்ட ஒரு பெண் இல்லவே இல்லை என்றார்கள்.

பின் ஒலோபெரின் அவரிடம், எங்கள் கைகளை வலிமைப்படுத்தவும், என் தலைவரை ஏளனம் செய்த மக்களை அழித்தொழிக்கவும் கடவுள் உன்னை அவர்களுக்கு முன்னதாக அனுப்பி வைத்தும் நல்லதே!

நீ தோற்றத்தில் அழகுவாய்ந்தவள் மட்டுமல்ல, பேச்சில் ஞானம் மிக்கவளும் ஆவாய். நீ சொன்னபடி செய்வாயானால் உன் கடவுள் எனக்கும் கடவுளாவார். நேபுகத்னேசர் மன்னரின் அரண்மனையில் நீ வாழ்வாய். உலகமெங்கும் உனது புகழ் விளங்கும் என்றான்.

அதிகாரம் 12.

ஒலோபெரின் தன் வெள்ளிக் கலன்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு யூதித்தை அழைத்துவரக் கட்டளையிட்டான். தான் உண்டுவந்த அறுசுவை உணவையே அவள் உண்ணவும், தன் திராட்சை மதுவையே அவள் பருகவும் ஏற்பாடு செய்ய ஆணையிட்டான்.

அதற்கு யூதித்து, இவற்றை நான் உண்ணமாட்டேன். அது குற்றமாகும். நான் கொண்டுவந்துள்ள உணவுப் பொருளே எனக்குப் போதும் என்றார்.

ஒலோபெரின் அவரிடம், நீ கொண்டு வந்துள்ள உணவுப்பொருள்கள் தீர்ந்து போகுமானால் அவை போன்ற உணவை உனக்குக் கொடுக்க எவ்வாறு எங்களால் முடியும்? உன் இனத்தாருள் ஒருவரும் எங்கள் நடுவே இல்லையே! என்றான்.

என் தலைவரே, உம் உயிர்மேல் ஆணை! உம் அடியவள் என்னிடம் உள்ள உணவுப் பொருள்கள் தீர்ந்து போவதற்கு முன்னரே ஆண்டவர் தாம் திட்டமிட்டுள்ளதை என் வழியாய்ச் செயல்படுத்துவார் என்றார் யூதித்து.

பிறகு ஒலோபெரினின் பணியாளாகள் யூதித்தைக் கூடாரத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். அவர் நள்ளிரவுவரை உறங்கினார்: வைகறை வேளையில் துயிலெழந்தார்.

உம் அடியவள் வெளியே சென்று இறைவனிடம் மன்றாடும்படி என் தலைவர் கட்டளையிடட்டும் என்று யூதித்து ஒலோபெரினுக்குச் சொல்லியனுப்பினார்.

அவரைத் தடைசெய்யாமிலிருக்க ஒலோபெரின் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான். யூதித்து மூன்று நாள் பாளையத்தில் தங்கியிருந்தார்: இரவுதோறும் பெத்பலியாவின் பள்ளத்தாக்குக்குச் சென்று, பாளையத்தின் அருகில் இருந்த நீரூற்றில் குளிப்பார்.

குளித்து முடித்தபின் தம் இனத்து மக்களுக்கு வெற்றி அளிக்கும் வழியைத் தமக்குக் காட்டுமாறு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை மன்றாடுவார்.

அவர் பய்மை அடைந்தவராய்த் திரும்பிவந்து, மாலையில் உணவு அருந்தும்வரை கூடாரத்துக்குள்ளேயே தங்கியிருப்பார்.

நான்காம் நாள் ஒலோபெரின் தனக்கு நெருக்கமான பணியாளர்களுக்கு மட்டும் விருந்து அளித்தான்: படைத் தலைவர்களுள் ஒருவரையும் அழைக்கவில்லை.

தன் உடைமைகள் அனைத்துக்கும் பொறுப்பாய் இருந்த பகோவா என்ற உயிர் அலுவலரிடம், நீர் உடனே சென்று, உம் பொறுப்பில் உள்ள அந்த எபிரேயப் பெண் வந்து நம்மோடு உண்டு பருக இணங்கச் செய்யும்.

இத்தகைய பெண்ணுடன் நாம் உறவுகொள்ளாமல் விட்டுவிடுவது நமக்கு இழிவாகும். அவளை நாம் கவர்ந்திழுக்கத் தவறினால் அவள் நம்மை எள்ளி நகையாடுவாள் என்றான்.

ஒலோபெரினிடமிருந்து பகோவா வெளியேறி யூதித்திடம் சென்று, என் தலைவர் முன்னிலையில் பெருமை அடையவும், எங்களோடு திராட்சை மது அருந்தி மகிழ்ந்திருக்கவும், நெபுகத்னேசரின் அரண்மனையில் பணியாற்றும் அசீரியப் பெண்களுள் ஒருத்தி போல மாறவும் இத்துணை அழகு வாய்ந்த பெண்மணியாகிய தாங்கள் தயங்காமல் வரவேண்டும் என்றான்.

யூதித்து அவனிடம், என் தலைவர் சொன்னதைச் செய்ய மறுக்க நான் யார்? அவருக்கு விருப்பமானதை நான் உடனே செய்வேன். நான் இறக்கும் வரை அது எனக்கு மகிழ்ச்சி தரும் என்றார்.

ஆகவே யூதித்து எழுந்து சிறப்பாடை அணிந்து, பெண்களுக்குரிய எல்லா அணிகலன்களாலும் தம்மை அழகுபடுத்திக்கொண்டார். அவருடைய பணிப்பெண் அவருக்குமுன்னே சென்றாள்: யூதித்து நாள்தோறும் உணவு அருந்துகையில் விரித்து அமர்வதற்காகப் பகோவா கொடுத்திருந்த கம்பளத்தை ஒலேபெரினுக்கு முன்னிலையில் பணிப்பெண் தரையில் விரித்தாள்.

பின் யூதித்து உள்ளே சென்று அதன்மேல் அமர்ந்தார். ஒலேபெரினுடைய உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது: அவனது மனம் கிளர்ந்தெழுந்தது: அவரைக் கண்ட நாள்முதலே அவரோடு உறவு கொள்ள வாய்ப்புத் தேடியிருந்ததால் இப்பொழுது அவரை அடைய அவன் ஏக்கம் கொண்டான்.

எனவே ஒலோபெரின் அவரிடம், மது அருந்தி எங்களுடன் களிப்புற்றிரு என்றான்.

அதற்கு யூதித்து, என் தலைவரே! நான் மகிழ்ச்சியோடு மது அருந்துவேன்: ஏனெனில் இந்நாள் என் வாழ்வின் பொன்னாளாகும் என்றார்.

தம் பணிப்பெண் சமைத்திருந்ததை எடுத்து அவன் முன்னிலையில் உண்டு பருகினார்.

ஒலோபெரின் அவரிடம் தன் மனத்தைப் பறிகொடுத்து, மட்டுமீறிக் குடித்தான். பிறந்தநாள் முதல் அன்றுபோல அவன் என்றுமே குடித்ததில்லை.

அதிகாரம் 13.

பொழுது சாய்ந்தபோது ஒலோபெரினின் பணியாளர்கள் விரைவாக வெளியேறினார்கள். பகோவா அலுவலர்களைத் தன் தலைவன் முன்னிலையிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு, கூடாரத்துக்கு வெளியிலிருந்து விருந்தினால் களைப்புற்றிருந்ததால் அவர்களும் படுக்கச் சென்றார்கள்.

யூதித்து கூடாரத்திற்குள் தனிமையாய் விடப்பட்டார். மது மயக்கத்தில் இருந்த ஒலோபெரின் தன் படுக்கைமேல் விழுந்து கிடந்தான்.

யூதித்து தம் பணிப்பெண்ணிடம் படுக்கையறைக்கு வெளியே நிற்கும்படியும், நாள்தோறும் செய்துவந்தது போலத் தாம் வெளியே வரும்வரை காத்திருக்கும்படியும் கூறினார்: வேண்டுதல் செய்யத் தாம் புறப்பட விருப்பதாக அவளிடம் சொன்னார்: இதையே பகோவாவிடமும் தெரிவித்திருந்தார்.

அனைவரும் அங்கிருந்து அகன்றார்: சிறியோர்முதல் பெரியோர்வரை யாருமே படுக்கையறையில் விடப்படவில்லை. ஒலோபெரினின் படுக்கை அருகே யூதித்து நின்றுகொண்டு, ஆண்டவரே, எல்லாம் வல்ல கடவுளே, எருசலேமின் மேன்மைக்காக இவ்வேளையில் நான் செய்யவிருப்பதைக் கண்ணோக்கும்.

உமது உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலுக்குத் துணை புரியவும், எங்களுக்கு எதிராக எழுந்துள்ள பகைவர்களை அழிக்கும்படி நான் செய்த சூழ்ச்சியைச் செயல்படுத்தவும் இதுவே தக்க நேரம் என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.

பிறகு ஒலோபெரினின் தலைப்பக்கம் இருந்த பணுக்குச் சென்று, அதில் மாட்டியிருந்த அவனது வாளை யூதித்து எடுத்தார்:

அவனது படுக்கையை அணுகி, அவனுடைய தலைமுடியைப் பிடித்துக்கொண்டு, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வலிமை அளித்தருளும் என்று வேண்டினார்:

பிறகு தம் வலிமையெல்லாம் கொண்டு அவனது கழுத்தை இரு முறை வெட்டித் தலையைத் துண்டித்தார்:

அவனது உடலைப் படுக்கையிலிருந்து கீழே தள்ளினார்: மேற்கவிகையைத் பண்களிலிருந்து இறக்கினார்: சிறிது காலம்தாழ்த்தி வெளியே சென்று, ஒலோபெரினின் தலையைத் தம் பணிப்பெண்ணிடம் கொடுத்தார்.

பணிப்பெண் ஒலோபெரினின் தலையைத் தன் உணவுப் பைக்குள் வைத்துக்கொண்டாள். பிறகு அவர்கள் இருவரும் தங்கள் வழக்கம்போல வேண்டுதல் செய்ய ஒன்றாய் வெளியேறினார்கள்: பாளையத்தின் வழியாய்ச் சென்று, பள்ளத்தாக்கைச் சுற்றி, மலைமீது ஏறிப் பெத்பலியாவுக்குப் போய், அதன் வாயிலை அடைந்தார்கள்.

வாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்தவர்களை நோக்கி யூதித்து தொலையிலிருந்தே, திறங்கள், வாயிலைத் திறங்கள். கடவுள், நம் கடவுள் நம்மோடு இருக்கிறார்: அவர் இஸ்ரயேலருக்குத் தம் வலிமைமையும் நம் பகைவர்களுக்கு எதிராய்த் தம் ஆற்றலையும் இன்று வெளிப்படுத்தியுள்ளார் என்று கத்தினார்.

நகர மக்கள் யூதித்துடைய குரலைக் கேட்டபோது, வாயிலுக்கு விரைவாக இறங்கிவந்து மூப்பர்களை அழைத்தார்கள்.

சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும் சேர்ந்து ஓடிவந்தார்கள். யூதித்து வந்தசேர்ந்ததை அவர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் வாயிலைத் திறந்து, அப்பொண்களை வரவேற்றார்கள்: தீ மூட்டி ஒளி உண்டாக்கி அவர்களைச் சூழ்ந்து நின்றார்கள்.

யூதித்து அவர்களிடம் உரத்தகுரலில், கடவுளை வாழ்த்துங்கள்: போற்றுங்கள், கடவுளைப் போற்றுங்கள். இஸ்ரயேல் இனத்தார் மீது அவர் தம் இரக்கத்தைப் பொழிந்துள்ளார். நம் பகைவர்களை என் கையால் இன்று இரவே அழித்துவிட்டார் என்று அறிவித்தார்.

பிறகு பையிலிருந்து ஒலோபெரினின் தலையை வெளியே எடுத்து அவர்களிடம் காட்டி, இதோ, அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரினின் தலை! இதோ, மேற்கவிகை! இதன்கீழ்தான் அவன் குடிமயக்கத்தில் விழுந்து கிடந்தான். ஆண்டவர் ஒரு பெண்ணின் கையால் அவனை வெட்டி வீழ்த்தினார்.

ஆண்டவர்மேல் ஆணை! நான் சென்ற பாதையில் என்னைக் காப்பாற்றியவர் அவரே. ஏன் முகத்தோற்றமே அவனை வஞ்சித்து அழித்தது. நான் கறைபடவோ இழிவுறவோ அவன் என்னுடன் பாவம் செய்யவில்லை என்றார்.

மக்கள் யாவரும் பெரிதும் மலைத்துப்போயினர்: தலை குனிந்து கடவுளைத் தொழுது, எங்கள் கடவுளே, நீர் போற்றி! நீரே இன்று உம் மக்களின் பகைவர்களை அழித்தொழித்தீர் என்று ஒருவாய்ப்படப் போற்றினர்.

பின்னர் ஊசியா யூதித்திடம் மகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி! அவரே நம் பகைவர்களின் தலைவனது தலையை வெட்டி வீழ்த்த உன்னை வழிநடத்தியிருக்கிறார்.

கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து உனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது.

இதனால் இறவாப் புகழ் பெறக் கடவுள் உனக்கு அருள்வாராக: நலன்களால் உன்னை நிரப்புவாராக: ஏனெனில், நம் மக்களினத்தார் ஒடுக்கப்பட்டபோது நீ உன் உயிரைப் பணயம் வைத்தாய்: நம் கடவுள் திருமுன் நேர்மையாக நடந்து, நமக்கு வரவிருந்த பேரழிவைத் தடுத்துவிட்டாய் என்றார். அதற்கு மக்கள் அனைவரும், அவ்வாறே ஆகட்டும், அவ்வாறே ஆகட்டும் என்று உரைத்தனர்.

அதிகாரம் 14.

பிறகு யூதித்து மக்களிடம் பின்வருமாறு கூறினார்: சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். இத்தலையை எடுத்துக்கொண்டு போய் உங்களது நகர மதில்மேல் தொங்கவிடுங்கள்.

பொழுது விடிந்து கதிரவன் எழுந்தவுடன், நீங்கள் அனைவரும் படைக்கலன்களை எடுத்துக்கொள்ளுங்கள்: உங்களுள் வலிமை படைத்த அனைவரும் புறப்பட்டு, தங்களுக்கு ஒரு படைத்தலைவனை அமர்த்திக் கொண்டு, சமவெளியில் உள்ள அசீரியரின் முன்னணிக் காவலரைத் தாக்க இறங்குவதுபோல நகரைவிட்டு வெளியேறுங்கள்: ஆனால் கீழே இறங்கிச் செல்ல வேண்டாம்.

உடனே அசீரியக் காவலர்கள் தங்களுடைய படைக்கலங்களை எடுத்துக்கொண்டு தங்கள் பாளையத்துக்குள் நுழைவார்கள்: தங்கள் படைத் தலைவர்களை எழுப்புவார்கள். இவர்கள் ஒலோபெரினின் கூடாரத்துக்கு ஓடுவார்கள்: ஆனால், அவனைக் காணமாட்டார்கள். ஆகவே அவர்கள் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டு உங்களிடமிருந்து தப்பியோடுவார்கள்.

அப்பொழுது நீங்களும் இஸ்ரயேல் நாட்டு எல்லைகளில் வாழும் அனைவரும் அவர்களைத் துரத்திச் சென்று வழியிலேயே அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்.

இதைச் செய்யுமுன் அம்மோனியராகிய அக்கியோரை என்னிடம் அழைத்து வாருங்கள். இஸ்ரயேல் இனத்தாரைப் புறக்கணித்து, அக்கியோர் சாகும்படி நம்மிடம் அனுப்பிவைத்தவனை அவர் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்.

ஆகவே மக்கள் ஊசியா வீட்டிலிருந்து அக்கியோரை அழைத்து வந்தார்கள். அவரும் வந்து மக்கள் கூட்டதிலிருந்த ஓர் ஆள் கையில் ஒலோபெரினின் தலையைக் கண்டவுடன் மயங்கிக் குப்புற விழுந்தார்.

மக்கள் அவரைத் பக்கிவிட, அவர் யூதித்தின் காலடியில் விழுந்து வணங்கி அவரிடம், யூதாவின் கூடாரங்களிலெல்லாம் நீர் புகழப் பெறுவீராக! எல்லா நாடுகளிலும் உமது பெயரைக் கேள்விப்படுவோர் அனைவரும் அச்சம் கொள்வர்.

இந்நாள்களில் நீர் செய்த அனைத்தையும் இப்போது எனக்கு எடுத்துச்சொல்லும் என்று வேண்டினார். எனவே யூதித்து தாம் வெளியேறிச் சென்ற நாள்முதல் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த அந்நேரம்வரை ஆற்றியிருந்த செயல்கள் அனைத்தையும் மக்கள் முன்னிலையில் அக்கியோரிடம் விரித்துரைத்தார்.

யூதித்து பேசி முடித்ததும் மக்கள் பேரொலி எழுப்பினார்கள். அவர்களது நகரெங்கும் மகிழ்ச்சிக் குரல் ஒலித்தது.

இஸ்ரயேலரின் கடவுள் செய்திருந்த அனைத்தையும் அக்கியோர் கண்டு அவர்மீது ஆழ்ந்த நம்பிக்கைகொண்டார்: விருத்தசேதனம் செய்துகொண்டு இஸ்ரயேல் இனத்தோடு தம்மை இணைத்துக்கொண்டார்.

பொழுது புலர்ந்தவுடன் இஸ்ரயேலர் ஒலோபெரினின் தலையை மதில்மேல் தொங்கவிட்டார்கள்: பிறகு எல்லாரும் தங்கள் படைக்கலங்களை எடுத்துக் கொண்டு, அணி அணியாக மலைப்பாதைகளில் இறங்கிச் சென்றார்கள்.

அசீரியர்கள் இவர்களைக் கண்ணுற்றபோது தங்கள் தலைவர்களுக்கு ஆளனுப்பினார்கள்: இவர்கள் படைத்தலைவர்களிடமும் ஆயிரத்தவர் தலைவர்களிடமும் தங்கள் ஆளுநர்கள் அனைவரிடமும் சென்றார்கள்:

ஒலோபெரினின் கூடாரத்துக்குச் சென்று அவனுடைய உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாய் இருந்தவனிடம், நம் தலைவரை எழுப்பி விடும். அந்த அடிமைகள் முழுதும் அழிந்துபோகும்படி நம்மேல் போர்தொடுக்கத் துணிந்து கீழே இறங்கி வருகிறா¡கள் என்று கூறினார்கள்.

ஆகவே பகோவா உள்ளே சென்று, கூடாரத்தின் கதவைத் தட்டினான்: ஏனெனில், ஒலோபெரின் யூதித்துடன் உறங்குவதாக நினைத்துக்கொண்டிருந்தான்.

ஒரு மறுமொழியும் வராததால், அவன் கதவைத் திறந்து படுக்கையறைக்குள் சென்றான். கட்டில் அருகே ஒலோபெரின் தரையில் இறந்து கிடந்ததையும் அவன் தலை துண்டிக்கப் பட்டிருந்ததையும் கண்டான்:

உடனே பெருங் கூச்சலிட்டான்: அழுது, புலம்பி, உரக்க அலறித் தன் ஆடையைக் கிழித்துக் கொண்டான்.

பிறகு யூதித்து தங்கியிருந்த கூடாரத்துக்குள் நுழைந்தான்: அங்கு அவரைக் காணாததால் வெளியே மக்களிடம் ஓடிவந்து உரத்த குரலில்,

அந்த அடிமைகள் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். ஓர் எபிரேயப் பெண் நெபுகத்னேசர் மன்னரின் குடும்பத்துக்கே இழிவு இழைத்துவிட்டாள். இதோ, ஒலோபெரின் தரையில் கிடக்கிறார். அவரது தலையைக் காணோம்! என்று கத்தினான்.

அசீரியப் படைத்தலைவர்கள் இதைப் பற்றிக் கேள்விப்பட்டபோது தங்கள் மேலாடையைக் கிழித்துக்கொண்டார்கள்: பெரிதும் கலக்கமுற்றார்கள். அவர்களுடைய அழுகைக் குரலும் பெரும் கூச்சலும் பாசறையெங்கும் ஒலித்தன.

அதிகாரம் 15.

கூடாரங்களில் இருந்தவர்கள் நிகழ்ந்தது பற்றிக் கேள்விப்பட்டுத் திகைத்துப்போனார்கள்.

அச்சமும் நடுக்கமும் அவர்களை ஆட்கொள்ள, அவர்கள் எல்லாரும் ஒருவர் மற்றவருக்காகக் காத்திராமல் சிதறி ஓடினார்கள்: சமவெளியிலும் மலையிலும் இருந்த பாதைகளிலெல்லாம் தப்பியோடினார்கள்.

பெத்பலியாவைச் சுற்றி இருந்த மலைப்பகுதியில் பாசறை அமைத்திருந்தவர்களும் வெருண்டோடினார்கள். இஸ்ரயேல் மக்களுள் படைவீரராய் இருந்த அனைவரும் அவர்கள் மேல் பாய்ந்து தாக்கினர்.

பெத்துமஸ்தாயிம், பேபாய், கோபா, கோலா ஆகிய நகரங்களுக்கும், இஸ்ரயேலின் எல்லா எல்லைகளுக்கும் ஊசியா ஆளனுப்பி, நிகழ்ந்தவற்றைத் தெரியப்படுத்தினார்: மேலும் அவர்கள் அனைவரும் தங்களுடைய பகைவர்கள்மேல் பாய்ந்து அழித்தொழிக்கத் பண்டினார்.

இஸ்ரயேல் மக்கள் அனைவரும் இதைக் கேள்வியுற்று ஒன்றுசேர்ந்து எதிரிகள்மீது பாய்ந்து, கோபாவரையிலும் துரத்தித் தாக்கினார்கள். அவ்வாறே எருசலேம் மக்களும் மலைநாட்டு மக்கள் அனைவரும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்: ஏனெனில், பகைவர்களது பாசறையில் நிகழ்ந்தவற்றை அவர்கள் அறிந்திருந்தார்கள். கிலயாத்தினரும் கலிலேயரும் பகைவர்களது படையைப் பக்கவாட்டில் தாக்கித் தமஸ்குவையும் அதன் எல்லைகளையும் தாண்டி அவர்களைப் படுகொலை செய்தார்கள்.

பெத்பலியாவில் எஞ்சியிருந்தோர் அசீரியரின் பாளையத்தைத் தாக்கினர்: அதைச் சூறையாடிப் பெருஞ்செல்வங்களைச் சேர்த்துக் கொண்டனர்.

படுகொலைக்குப்பின் இஸ்ரயேலர் திரும்பியபோது எங்சியிருந்தவற்றைக் கைப்பற்றினர். மலையிலும் சமவெளியிலும் இருந்த ஊர்களிலும் நகர்களிலும் வாழ்ந்த மக்கள் அங்கு இருந்த மிகுதியான பொருள்களைக் கைப்பற்றினார்கள்.

இஸ்ரயேலுக்கு ஆண்டவர் செய்திருந்த நன்மைகளை நேரில் காணவும், யூதித்தைச் சந்தித்துப் பாராட்டவும், தலைமைக் குரு யோவாக்கிமும் எருசலேமில் வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்களின் ஆட்சி மன்ற உறுப்பினர்களும் வந்தார்கள்.

அவர்கள் அனைவரும் யூதித்திடம் வந்து ஒருமித்து அவரை வாழ்த்தினார்கள். நீரே எருசலேமின் மேன்மை: நீரே இஸ்ரயேலின் பெரும் மாட்சி: நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே!

இவற்றையெல்லாம் உம் கையாலேயே ஆற்றியிருக்கிறீர்: இஸ்ரயேலுக்கு நன்மைகள் செய்திருக்கிறீர். இவைகுறித்துக் கடவுள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். எல்லாம் வல்ல ஆண்டவர் எக்காலத்துக்கும் உமக்கு ஆசி வழங்குவாராக என்று வாழ்த்தினார்கள். மக்கள் அனைவரும், அவ்வாறு ஆகட்டும் என்றார்கள்.

மக்கள் அனைவரும் முப்பது நாளாக எதிரிகளின் பாளையத்தைச் சூறையாடினார்கள். ஒலோபெரினின் கூடாரம், வெள்ளித் தட்டுகள், படுக்கைகள், கிண்ணங்கள், மற்றப் பொருள்கள் அனைத்தையும் யூதித்துக்குக் கொடுத்தார்கள். அவர் இவற்றை வாங்கித் தம் கோவேறு கழுதைமேல் ஏற்றினார்: தம் வண்டிகளைப் பூட்டி அவற்றிலும் பொருள்களைக் குவித்துவைத்தார்.

யூதித்தைக் காண இஸ்ரயேல் பெண்கள் அனைவரும் கூடிவந்து அவரை வாழ்த்தினார்: அவர்களுள் சிலர் அவரைப் போற்றி நடனம் ஆடினர். யூதித்து பூச்செண்டுகளை எடுத்துத் தம்முடன் இருந்த பெண்களுக்கு வழங்கினார்.

அவரும் அவருடன் இருந்தவர்களும் ஒலிவக் கிளைகளால் முடி செய்து அணிந்து கொண்டார்கள். எல்லா மக்களுக்கும் முன்பாக யூதித்து சென்று, எல்லாப் பெண்களையும் நடனத்தில் வழிநடத்தினார். இஸ்ரயேலின் ஆண்கள் அனைவரும் படைக்கலங்கள் தாங்கியவர்களாய் மாலைகள் சூடிக்கொண்டு, புகழ்ப்பாக்களைப் பாடியவண்ணம் பின்சென்றார்கள்.

இஸ்ரயேலர் அனைவர் முன்னும் யூதித்து பின்வரும் நன்றிப் பாடலைப் பாடத் தொடங்கினார். மக்கள் அனைவரும் அவரோடு சேர்ந்து உரத்த குரலில் பாடினார்கள்.

அதிகாரம் 16.

யூதித்து பாடிய பாடல்: என் கடவுளுக்க முரசு கொட்டுங்கள்: ஆண்டவருக்கு மேள தாளங்களோடு பண் இசையுங்கள். அவருக்குத் திருப்பாடலும் புகழ்ப் பாவும் இசையுங்கள்: அவரது பெயரைப் புகழ்ந்தேத்துங்கள்.

ஆண்டவர் போர்களை முறியடிக்கும் கடவுள்: மக்கள் நடுவே தம் கூடாரத்தை அமைத்துள்ளார்: துரத்துவோரிடமிருந்து என்னை அவர் விடுவித்தார்.

அசீரியன் வடக்கு மலைகளிலிருந்து வந்தான்: எண்ணற்ற படைவீரர்களுடன் வந்தான். அவர்களது பெருந்திரள் ஓடைகளைத் தடுத்து நிறுத்தியது. அவர்களுடைய குதிரைப்படை மலைகளெங்கும் பரவியிருந்தது.

உன் எல்லைகளைத் தீக்கிரையாக்குவேன்: உன் இளைஞர்களை வாளுக்கிரையாக்குவேன்: உன் குழந்தைகளைத் தரையில் அடித்துக் கொல் வேன்: உன் சிறுவர்களைக் கவர்ந்து செல்வேன்: உன் கன்னிப் பெண்களைக் கொள்ளைப் பொருளாகக் கொண்டுபோவேன் என்று அசீரியன் அச்சுறுத்தினான்.

எல்லாம் வல்ல ஆண்டவரோ ஒரு பெண்ணின் கையால் அவர்களை முறியடித்தார்.

வலிமைவாய்ந்த அவனை இளைஞர் வெட்டி வீழ்த்தவில்லை: அரக்கர்கள் அடித்து நொறுக்கவில்லை: உயரமான இராட்சதர்கள் தாக்கவில்லை: ஆனால் மெராரியின் மகள் யூதித்து தம் முக அழகால் அவனை ஆற்றல் இழக்கச் செய்தார்.

இஸ்ரயேலில் துயருற்றோரைத் பக்கிவிட அவர் கைம்பெண்ணுக்குரிய தம் ஆடையைக் களைந்தார்:

தம் முகத்தில் நறுமண எண்ணெய் பூசிக்கொண்டார்: தலையை வாரி முடித்து மணி முடியைச் சூடிக்கொண்டார். அவனை மயக்க மெல்லிய உடையை அணிந்து கொண்டார்.

அவரது காலணி அவனது கண்ணைக் கவர்ந்தது: அவரது அழகு அவனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவரது வாள் அவனது கழுத்தைத் துண்டித்தது.

பாரசீகர் அவரது துணிவைக் கண்டு நடுங்கினர்: மேதியர் அவரது மனவுறுதியைப் பார்த்துக் கலங்கினர்.

தாழ்வுற்ற என் மக்கள் முழக்கமிட்டபோது பகைவர்கள் அஞ்சினார்கள்: வலிமை இழந்த என் மக்கள் கதறியபோது அவர்கள் நடுங்கினார்கள்: என் மக்கள் கூச்சலிட்டபோது அவர்கள் புறங்கர்டடி ஓடினார்கள்.

பணிப்பெண்களின் மைந்தர்கள் அவர்களை ஊடுருவக் குத்தினார்கள்: தப்பியோடுவோரின் பிள்ளைகளுக்கு இழைப்பதுபோல் அவர்களைக் காயப்படுத்தினார்கள்: என் ஆண்டவரின் படையால் அவர்கள் அழிந்தார்கள்.

கடவுளுக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்: ஆண்டவரே, நீர் பெரியவர், மாட்சிமிக்கவர்: வியத்தகு வலிமை கொண்டவர்: எவராலும் வெல்ல முடியாதவர்.

உம் படைப்புகள் அனைத்தும் உமக்கே பணிபுரியட்டும்: நீர் ஆணையிட்டீர்: அவை உண்டாயின. உம் ஆவியை அனுப்பினீர்: அவை உருவாயின. உமது குரலை எதிர்த்து நிற்பவர் எவருமில்லை.

மலைகளின் அடித்தளங்களும் நீர்த்திரளும் நடுங்குகின்றன: பாறைகள் உம் திருமுன் மெழுகுபோல் உருகுகின்றன. உமக்கு அஞ்சுவோருக்கோ நீர் இரக்கம் காட்டுகின்றீர்.

நறுமணம் வீசும் பலியெல்லாம் உமக்குப் பெரிதல்ல: எரிபலியின் கொழுப்பெல்லாம் உமக்குச் சிறிதே. ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே எக்காலமும் பெரியோர்.

என் இனத்தாரை எதிர்த்தெழுகின்ற நாட்டினருக்கு ஜயோ கேடுவரும். எல்லாம் வல்ல ஆணடவர் தீர்ப்பு நாளில் அவர்களைப் பழிவாங்குவார்: அவர்களது சதைக்குள் நெருப்பையும் புழுக்களையும் அனுப்புவார்: அவர்கள் துயருற்று என்றும் அழுவார்கள்.

மக்கள் எருசலேமுக்குப்போய்ச் சேர்ந்தவுடன் கடவுளை வழிபட்டார்கள். தங்களைத் பய்மைப்படுத்தியபின் எரிபலிகளையும் தன்னார்வப் படையல்களையும் காணிக்கைகளையும் செலுத்தினார்கள்.

மக்கள் தமக்குக் கொடுத்திருந்த ஒரோபெரினின் கலன்கள் அனைத்தையும் யூதித்து கடவுளுக்கு உரித்தாக்கினார்: அவனுடைய படுக்கை அறையிலிருந்து தமக்கென்று எடுத்து வைத்திருந்த மேற்கவிகையையும் கடவுளுக்கு நேர்ச்சையாக்கினார்.

மக்கள் எருசலேமில் திருவிடத்துக்கு முன் மூன்று மாதமாக விழா கொண்டாடினார்கள். யூதித்தும் அவர்களுடன் தங்கியிருந்தார்.

பிறகு ஒவ்வொருவரும் அவரவர் தம் இல்லத்துக்குத் திரும்பினர். யூதித்து பெத்பலியாவுக்குச் சென்று தம் உடைமையை வைத்து வாழ்க்கை நடத்தினார்: தம் வாழ்நாள் முழுவதும் நாடெங்கும் புகழ்பெற்றிருந்தார்.

பலர் அவரை மணந்துகொள்ள விரும்பினர்: ஆனால் அவருடைய கணவர் மனாசே இறந்து தம் மூதாதையரோடு துயில் கொண்டபின் தம் வாழ்நாள் முழுதும் வேறு யாரையும் அவர் மணமுடிக்கவில்லை.

அவருடைய புகழ் ஓங்கி வளர்ந்தது. அவர் தம் கணவரின் இல்லத்தில் மற்றைந்து வயதுவரை உயிர் வாழ்ந்தார்: தம் பணிப்பெண்ணுக்கு உரிமை கொடுத்து அனுப்பிவைத்தார். பெத்பலியாவில் உயிர் துறந்தார். அவர் கணவர் மனாசேயின் குகையில் அவரை அடக்கம் செய்தனர்.

இஸ்ரயேல் இனத்தார் அவருக்காக ஏழுநாள் துயரம் கொண்டாடினர். அவர் தாம் இறப்பதற்கு முன்பே தம் கணவர் மனாசேயின் நெருங்கிய உறவினர், தம் நெருங்கிய உறவினர் ஆகிய அனைவருக்கும் தம் உடைமைகளைப் பகிர்ந்து கொடுத்திருந்தார்.

யூதித்தின் எஞ்சிய வாழ்நாளின் போதும் அவர் இறந்து நெடுங்காலத்திற்குப்பின்னரும் எவரும் இஸ்ரயேல் மக்களை மீண்டும் அச்சுறத்தவில்லை.

புத்தகம் 42 - எஸ்தா(கி)

அதிகாரம் 1.

அர்த்தக்சஸ்தா மாமன்னருடைய ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், நீசான் மாதம் முதல் நாள் மொர்தெக்காய் ஒரு கனவு கண்டார். அவர் பென்யமின் குலத்தைச் சேர்ந்த கீசு என்பவரின் கொள்ளுப் பேரனும் சிமேயின் என்பவரின் பேரனும் யாயீரின் மகனும் ஆவார்: சூசா நகரில் வாழ்ந்து வந்த அவர் ஒரு யூதர், அரசவையில் பணிபுரிந்தவர்களுள் தலைசிறந்தவர். பாபிலோனிய மன்னராகிய நெபுகத்னேசர் யூதேயா நாட்டு அரசராகிய எக்கோனியாவுடன் எருசலேமிலிருந்து சிறைப்படுத்திச் சென்ற கைதிகளுள் அவரும் ஒருவர். அவர் கண்ட கனவு இதுதான்: பேரொலியும் இரைச்சலும் இடி முழக்கமும் நிலநடுக்கமும் குழப்பமும் மண்ணுலகின்மீது உண்டாயின. இரண்

அக்காலத்தில் அவர் சூசா நகரில் அரியணையில் வீற்றிருந்தார்.

தம் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் மன்னர் தம் நண்பர்களுக்கும் பிற நாட்டினருக்கும் பாரசீக, மேதிய நாட்டு உயர்குடி மக்களுக்கும் மாநில ஆளுநர்களுக்கும் விருந்து அளித்தார்:

மற்று எண்பது நாள்களாகத் தம் பேரரசின் செல்வங்களையும் தம் விருந்தின் மேன்மையையும் அவர்கள் அறியச் செய்தார்.

விருந்து நாள்கள் முடிவுற்றபோது, சூசா நகரில் வாழ்ந்துவந்த பிற நாட்டினருக்குத் தம் அரண்மனை முற்றத்தில் ஆறு நாள் விருந்து அளித்தார்.

அரண்மனை முற்றத்தை விலையுயர்ந்த மென்துகிலாலும் பருத்தித் துணியாலுமான திரைகள் அணி செய்தன: அத்திரைகள் பளிங்குக் கற்களாலும் பிறகற்களாலும் எழுப்பப்பட்ட பண்கள் மீது பொன், வெள்ளிக்கட்டிகளோடு பிணைக்கப்பட்ட கருஞ்சிவப்புக் கயிறுகளில் தொங்கவிடப்பட்டிருந்தன: மரகதம், பளிங்கு, முத்துச்சிப்பி ஆகியவை பதிக்கப்பட்ட தளத்தின்மீது பொன், வெள்ளியால் இழைக்கப்பட்ட மஞ்சங்கள் அமைக்கப்பட்டிருந்தன: வலைப் பின்னலாலான பல வண்ணப் பூத்தையல் வேலைப்பாடுகளும் அவற்றைச் சுற்றிலும் ரோசாப் பூக்களும் பின்னப்பட்ட விரிப்புகள் அங்கே இருந்தன.

பொன், வெள்ளிக்கிண்ணங்களின் நடுவே ஏறத்தாழ ஆயிரத்து இருமறு டன் வெள்ளி மதிப்புள்ள மாணிக்கக் கல்லாலான ஒரு சிறு கிண்ணமும் வைக்கப்பட்டிருந்தது. மன்னருக்குரிய இனிய திராட்சை மது தாராளமாகப் பரிமாறப்பட்டது.

குடி அளவு மீறிப்போயிற்று: ஏனெனில் தம் விருப்பப்படியும் விருந்தினரின் விருப்பப்படியும் திராட்சை மதுவைப் பரிமாறும்படி பணியாளர்களுக்கு மன்னர் ஆணையிட்டிருந்தார்.

அதே நேரத்தில் அர்த்தக்சஸ்தா மன்னரின் அரண்மனையில் ஆஸ்தின் அரசி பெண்களுக்கு விருந்து அளித்தாள்.

ஏழாம் நாளன்று அர்த்தக்சஸ்தா மன்னர் களிப்புற்றிருந்த பொழுது தம் அலுவலர்களாகிய ஆமான், பாசான், தாரா, போராசா, சதோல்தா, அபத்தாசா, தராபா என்னும் ஏழு அண்ணகர்களிடமும்,

அரசியைத் தம்மிடம் அழைத்து வருமாறு பணித்தார்: அவளை அரியணையில் அமர்த்தி, முடிசூட்டி, அவளது எழிலை மாநில ஆளுநர்களும் பிற நாட்டினரும் காணவேண்டும் என்று விரும்பினார்: ஏனெனில் அவள் மிகுந்த அழகுள்ளவள்.

ஆனால் ஆஸ்தின் அரசி மன்னருக்குக் கீழ்ப்படியவும் அண்ணகர்களுடன் வரவும் மறுத்துவிட்டாள். இதனால் மன்னர் வருத்தமுற்றுச் சினங்கொண்டார்.

மன்னர் தம் நண்பர்களிடம், ஆஸ்தின் இவ்வாறு சொல்லிவிட்டாள். எனவே இதற்குச் சட்டப்படி தீர்ப்பு வழங்குங்கள் என்று கூறினார்.

பாரசீக, மேதிய நாட்டு ஆளுநர்களான ஆர்க்கெசாய், சர்தாத்தாய், மலேசயார் ஆகியோர் மன்னருக்கு நெருக்கமாயும் அரசில் முதன்மை நிலையிலும் இருந்தார்கள். அவர்கள் மன்னரை அணுகி,

அண்ணகர்கள் வழியாக அறிவிக்கப்பட்ட அரச கட்டளையை நிறைவேற்றத் தவறிய ஆஸ்தின் அரசிக்குச் சட்டப்படி செய்ய வேண்டியது என்ன என்பதை அறிவித்தார்கள்.

மன்னரிடமும் ஆளுநர்களிடமும் மூக்காய் என்பவர் பின்வருமாறு கூறினார்: ¥ஆஸ்தின் அரசி மன்னருக்கு எதிராக மட்டுமன்றி, மன்னரின் எல்லா ஆளுநர்களுக்கும் அலுவலர்களுக்கும் எதிராகவும் தவறிழைத்திருக்கிறாள்.

-ஏனெனில் அரசி சொல்லியிருந்ததை அவர் திரும்பச் சொல்லி, அவள் எவ்வாறு மன்னரை அவமதித்தாள் என்பதை அவர்களுக்கு விளக்கினார். -அர்த்தக்சஸ்தா மன்னரை அவள் அவமதித்தது போலவே,

பாரசீக, மேதிய நாட்டு ஆளுநர்களின் மனைவியரான உயர்குடிப் பெண்டிரும், அரசி மன்னருக்குக் கூறியதுபற்றிக் கேள்விப்பட்டு, தங்கள் கணவர்களை அவமதிக்கத் துணிவர்.

எனவே மன்னருக்கு விருப்பமானால், அவர் ஓர் ஆணை பிறப்பிக்கட்டும்: அது பாரசீக, மேதிய நாட்டுச் சட்டங்களுள் பொறிக்கப்படட்டும்: ஆஸ்தின் இனி மன்னர்முன் வாராதிருக்கட்டும்: அரசிப் பட்டத்தை அவளிடமிருந்து பறித்து, அவளைவிடச் சிறந்ததொரு பெண்மணிக்கு மன்னர் வழங்கட்டும். இதைத்தவிர வேறு வழியே இல்லை.

மன்னர் இயற்றும் சட்டம் எதுவாயினும், அதைத் தமது பேரரசு முழுவதும் அவர் அறிவிக்கட்டும். இதனால் வறியோர், செல்வர் ஆகிய அனைவருடைய மனைவியரும் தம் தம் கணவரை மதித்து ஒழுகுவார்கள்.

மூக்காயின் கருத்து மன்னருக்கும் ஆளுநர்களுக்கும் ஏற்றதாயிருந்தது. அவர் சொன்னவாறே மன்னர் செய்தார்:

கணவர்கள் எல்லாரும் அவரவர் வீட்டில் மதிக்கப்படவேண்டும் என்ற ஆணையைத் தம் பேரரசின் எல்லா மாநிலங்களுக்கும் அந்தந்த மாநில மொழியில் அனுப்பிவைத்தார்.

அதிகாரம் 2.

அதன்பின் மன்னரின் சீற்றம் தணிந்ததால் அவர் ஆஸ்தினைப் பற்றிக் கவலைப்படவில்லை: அவள் சொன்னதையும் தாம் அவளைத் தண்டித்தையும் நினைத்துப்பார்க்கவில்லை.

ஆகவே மன்னரின் அலுவலர்கள் அவரிடம், கற்பும் அழகும் உள்ள இளம் பெண்களை மன்னர் தமக்காகத் தேடட்டும்:

தம் பேரரசின் எல்லா மாநிலங்களிலும் ஆணையர்களை ஏற்படுத்தட்டும். அவர்கள் இளமையும் அழகும் வாய்ந்த கன்னிப் பெண்களைத் தேர்ந்து, சூசா நகரில் உள்ள அந்தப்புரத்துக்கு அழைத்து வந்து, பெண்களுக்குப் பொறுப்பேற்றிருக்கும் அரச அண்ணகரிடம் அவர்களை ஒப்படைக்கட்டும். அவர் ஒப்பனைப் பொருள்களையும் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்களுக்கு வழங்கட்டும்.

அவர்களுள் மன்னர் தமக்கு மிகவும் விருப்பமான பெண்ணை ஆஸ்தினுக்குப் பதிலாக அரசி ஆக்கட்டும் என்று கூறினார்கள். இக்கருத்து மன்னருக்கு உகந்ததாயிருந்தது. அவரும் அவ்வாறே செய்தார்.

சூசா நகரில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் மொர்தெக்காய்: அவர் பென்யமின் குலத்தைச் சேர்ந்த கீசின் கொள்ளுப்பேரனும் சிமேயியின் பேரனும் யாயிரின் மகனும் ஆவார்.

அவர் பாபிலோனிய மன்னராகிய நெபுகத்னேசர் எருசலேமிலிருந்து சிறைப்படுத்திச் சென்ற கைதிகளுள் ஒருவர்.

தம் தந்தையின் சகோதரராகிய அம்மினதாபின் மகளை அவர் தம் வளர்ப்பு மகளாகக் கொண்டிருந்தார். எஸ்தர் என்னும் அப்பெண்ணின் பெற்றோர் இறந்தபின் மொர்தெக்காய் அவளைத் தம் மனைவியாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் வளர்த்து வந்தார். அவள் அழகில் சிறந்த பெண்மணி.

அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின் இளம்பெண்கள் பலர் சூசா நகருக்குக் கொண்டுவரப்பட்டார்கள்: பெண்களுக்குப் பொறுப்பாளராகிய காயுவிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர்களுள் எஸ்தரும் ஒருத்தி.

காயுவுக்கு அவளைப் பிடித்திருந்ததால், அவரது பரிவு அவளுக்குக் கிட்டியது. எனவே அவர் அவளுக்கு வேண்டிய ஒப்பனைப்பொருள்களையும் உணவு வகைகளையும் உடனே கொடுத்தார்: அவளுக்குப் பணிசெய்ய அரண்மனையிலிருந்து ஏழு இளம்பெண்களை ஏற்படுத்தினார்: அவளையும் அவளுடைய பணிப்பெண்களையும் அந்தப்புரத்தில் நன்றாகக் கவனித்துக் கொண்டார்.

எஸ்தர் தம் இனத்தையும் நாட்டையும்பற்றி யாருக்கும் தெரியப்படுத்தவில்லை: ஏனெனில் அவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்று மொர்தெக்காய் அவருக்குக் கட்டளையிட்டிருந்தார்.

எஸ்தருக்கு நிகழ்வதைக் கவனிப்பதற்காக மொர்தெக்காய் அந்தப்புர முற்றத்தின் அருகில் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டிருப்பார்.

பன்னிரண்டு மாத காலத் தயாரிப்புக்குப் பின்னரே இளம்பெண்கள் மன்னரிடம் போகவேண்டியிருந்தது. வெள்ளைப்போளம் பூசிக் கொண்டு ஆறுமாதமும், பெண்டிருக்கான நறுமணப்பொருள்களையும் ஒப்பனைப்பொருள்களையும் பயன்படுத்திக்கொண்டு ஆறு மாதமுமாக இந்தக் காலத்தில் அவர்கள் தங்களுக்கு அழகூட்டிக்கொள்வார்கள்:

அதன்பின் ஒவ்வோர் இளம்பெண்ணும் மன்னரிடம் செல்வாள்: மன்னரால் நியமிக்கப்பட்டிருக்கும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படுவாள். அந்த அலுவலர் அவளை அந்தப்புரத்திலிருந்து மன்னரின் அரண்மனைக்கு அழைத்துச் செல்வார்.

அப்பெண் மாலையில் அங்குச் சென்று, மறுநாள் காலையில் மற்றோர் அந்தப்புரத்திற்குச் செல்வாள். அங்கு மன்னரின் அண்ணகரான காயு பெண்களுக்குப் பொறுப்பாளராக இருந்தார். பெயர் சொல்லி அழைக்கப்பட்டலொழிய மன்னரிடம் அப்பெண் மீண்டும் செல்ல மாட்டாள்.

மொர்தெக்காயுடைய தந்தையின் சகோதரராகிய அம்மினதாபின் மகள் எஸ்தர் மன்னரிடம் செல்வதற்குரிய முறை வந்தபோது, பெண்களுக்குப் பொறுப்பாளரான அண்ணகர் கட்டளையிட்டிருந்தவற்றுள் எதையும் அவர் புறக்கணிக்கவில்லை. எஸ்தரைப் பார்த்த அனைவரும் அவரது அழகைப் பாராட்டினர்.

அர்த்தக்சஸ்தா மன்னருடைய ஆட்சியின் ஏழாம் ஆண்டில், பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் எஸ்தர் மன்னரிடம் சென்றார்.

மன்னர் அவர்மீது காதல் கொண்டார்: மற்ற இளம்பெண்கள் எல்லாரையும் விட எஸ்தரை மிகவும் விரும்பினார்: ஆகவே அவரையே அரசியாக்கி முடிசூட்டினார்:

தம் நண்பர்கள், அலுவலர்கள் ஆகிய அனைவருக்கும் மன்னர் ஏழு நாள் விருந்து அளித்து எஸ்தரின் திருமணத்தைச் சிறப்பாகக் கொண்டாடினார்: தம் ஆட்சிக்கு உட்பட்டோர்க்கு வரிவிலக்கு வழங்கினார்.

மொர்தெக்காய் அரசவையில் பணிபுரிந்து வந்தார்.

அவர் கட்டளையிட்டபடி எஸ்தர் தமது நாட்டைப்பற்றி யாருக்கும் தெரியப்படுத்தவில்லை: மொர்தெக்காயோடு இருந்தபோது நடந்துகொண்டது போலவே கடவுளுக்கு அஞ்சி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வந்தார். தமது வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ளவில்லை.

மொர்தெக்காய் அடைந்த முன்னேற்றத்தால் மெய்க்காவலர் தலைவர்களாகிய அரச அலுவலர்கள் இருவர் மனவருத்தம் கொண்டார்கள்: அர்த்தக்சஸ்தா மன்னரைக் கொல்லச் சூழ்ச்சி செய்தார்கள்.

அதை அறிந்த மொர்தெக்காய் அதைப்பற்றி எஸ்தரிடம் தெரிவிக்கவே, அவர் இந்தச் சூழ்ச்சி பற்றி மன்னரிடம் எடுத்துரைத்தார்.

அலுவலர்கள் இருவரையும் மன்னர் விசாரித்து அவர்களைத் பக்கிலிட்டார்: மொர்தெக்காயின் தொண்டு நினைவுகூரப்படும் வகையில் குறிப்பேட்டில் அதை எழுதிவைக்குமாறு ஆணையிட்டார்.

அதிகாரம் 3.

இதன்பின் அர்த்தக்சஸ்தா மன்னர் பூகையனும் அம்மதாத்தாவின் மகனுமான ஆமானைப் பெருமைப்படுத்தி, தம் நண்பர்களிடையே மிகச் சிறந்த இடத்தை அவனுக்கு வழங்கினார்.

மன்னரின் கட்டளைப்படி அரண்மனையில் பணிபுரிந்த அனைவரும் அவனுக்கு வணக்கம் செலுத்தினர்: ஆனால், மொர்தெக்காய் அவனுக்கு வணக்கம் செலுத்தவில்லை.

நீர் ஏன் மன்னரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை? என்று அரண்மனையில் பணிபுரிந்தவர்கள் மொர்தெக்காயை வினவினார்கள்.

இவ்வாறு அவர்கள் அவரை ஒவ்வொரு நாளும் கேட்டு வந்தார்கள். ஆனால் அவர் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை. எனவே மன்னரின் கட்டளைக்கு அவர் பணிய மறுப்பதாக ஆமானிடம் அவர்கள் அறிவித்தார்கள். தாம் ஒரு யூதர் என்று அவர் அவர்களுக்குக் தெரிவித்திருந்தார்.

தனக்கு மொர்தெக்காய் வணக்கம் செலுத்தாததை அறிந்த ஆமான் கடுஞ்சீற்றங் கொண்டான்:

அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக்கு உட்பட்ட யூதர்கள் அனைவரையும் அடியோடு அழித்துவிடச் சூழ்ச்சி செய்தான்.

அர்த்தக்சஸ்தாவினுடைய ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், மொர்தெக்காயின் இனம் முழுவதையும் ஒரே நாளில் அழிப்பதற்கு ஏற்ற நாளையும் மாதத்தையும் அறிந்து கொள்ளச் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து, ஆமான் ஒரு முடிவுக்கு வந்தான்: இவ்வாறு, சீட்டுக்குலுக்கல் முறையில் அதார் மாதம் பதினான்காம் நாளைத் தெரிவு செய்தான்.

அர்த்தக்சஸ்தா மன்னரிடம் ஆமான், உமது பேரரசெங்கும் உள்ள பல மக்களினத்தாரிடையே ஓரினம் சிதறுண்டு வாழ்கிறது. மற்ற இனங்களின் சட்டங்களினின்று அவர்களின் சட்டங்கள் மாறுபட்டவை. அவர்கள் மன்னரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்லை. எனவே மன்னர் அவர்களை இப்படியே விட்டு வைப்பது நல்லதல்ல.

மன்னருக்கு விருப்பமானால் அவர்களை அழிப்பதற்கு அவர் ஓர் ஆணை பிறப்பிக்கட்டும். அவ்வாறாயின் நான் அரச கருவூலத்தில் நானு¡று டன் வெள்ளியைச் செலுத்துவேன் என்று கூறினான்.

அப்போது மன்னர் தம் கணையாழியைக் கழற்றி யூதருக்கு எதிரான ஆணையில் முத்திரையிடுவதற்காக அதை ஆமானிடம் கொடுத்தார்.

பணத்தை நீரே வைத்துக் கொள்ளும். அந்த இனத்தாரை உம் விருப்பப்படியே நடத்திக் கொள்ளும் என்று மன்னர் அவனிடம் சொன்னார்.

எனவே முதல் மாதம் பதின் மூன்றாம் நாள் மன்னரின் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டார்கள்: இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்த மற்று இருபத்தேழு மாநிலங்களின் படைத்தலைவர்களுக்கும் ஆளுநர்களுக்கும் அர்த்தக்சஸ்தா மன்னரின் பெயரால் ஆமான் விதித்தவாறே அந்தந்த மாநில மொழியில் எழுதினார்கள்.

பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதத்தில் ஒரே நாளில் யூத இனத்தை அடியோடு அழித்து அவர்களின் செல்வத்தைக் கொள்ளையிடுமாறு அர்த்தக்சஸ்தாவின் பேரரசெங்கும் பதர் வழியே அரசாணை அனுப்பி வைக்கப்பட்டது. பின்வருவது அம்மடலின் நகலாகும்: இந்தியா முதல் இருபத்தேழு மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் அவர்களுக்குக்கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கும் அர்த்தக்சஸ்தா மாமன்னர் எழுதுவது: பல நாடுகளுக்கு மன்னரும் உலகம் முழுமைக்கும் தலைவருமாகிய நான் அதிகாரச் செருக்கின்றி நேர்மையோடும் பரிவோடும் ஆட்சிபுரிந்து, என் குடிமக்களே எப்போதும் குழப்பமின்றி வாழச் செய்யவும், என் பேரரசில் நாகரிகம் நிலவச் செய்ய

இம்மடலின் நகல் ஒவ்வொரு மாநிலத்திலும் வெளியிடப்பட்டது: அந்த நாளுக்கு முன்னேற்பாடாய் இருக்குமாறு பேரரசின் எல்லா இனத்தாருக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாணை சூசாவிலும் விரைவில் அறிவிக்கப்பட்டது. மன்னரும் ஆமானும் குடிமயக்கத்தில் ஆழ்ந்தனர்: நகரமோ குழப்பத்தில் ஆழ்ந்தது!

அதிகாரம் 4.


நிகழ்ந்தையெல்லாம் அறிந்த மொர்தெக்காய் தம் ஆடைகளைக் கிழித்துவிட்டு, சாக்கு உடை அணிந்து கொண்டு, தம்மேல் சாம்பலைத் பவிக் கொண்டார்: மாசற்ற ஓரினம் அழிக்கப்படுகிறது என்று உரத்த குரலில் கூவிக்கொண்டே நகரின் தெருக்கள் வழியாக ஓடினார்.

அவர் அரண்மனையின் வாயிலுக்கு வந்ததும் அங்கே நின்றுவிட்டார்: ஏனெனில் சாக்கு உடை அணிந்துகொண்டும் சாம்பலைத் பவிக்கொண்டும் அரண்மனைக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை.

அரசாணை வெளியிடப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் யூதர்கள் பெரிதும் துயருற்று அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள்: சாக்கு உடை அணிந்து சாம்பலைத் பவிக் கொண்டார்கள்.

அரசியின் பணிப்பெண்களும் அண்ணகர்களும் உள்ளே சென்று நடந்ததுபற்றி எஸ்தரிடம் கூறினார்கள். அதைக் கேள்வியுற்றதும் அவர் மிகவும் கலக்கமுற்றார்: சாக்கு உடைக்குப் பதிலாக அணிந்து கொள்ள மொர்தெக்காய்க்கு ஆடைகளை அனுப்பிவைத்தார். அவரோ அதற்கு இசையவில்லை.

பின்னர் எஸ்தர் தமக்குப் பணிபுரிந்த அண்ணகரான அக்ரத்தையோனை அழைத்து, மொர்தெக்காயிடமிருந்து உண்மையை அறிந்துவருமாறு அனுப்பினார்.

எனவே அக்ரதையோன் அரண்மனை வாயிலுக்கு எதிரே இருந்த சதுக்கத்தில் நின்றுகொண்டிருந்த மொர்த்தெக்காயிடம் சென்றார்.

நிகழ்ந்ததை மொர்தெக்காய் அந்த அண்ணகரிடம் தெரிவித்தார்: யூதர்களை அழிக்கும்பொருட்டு அரச கருவூலத்தில் நானு¡று டன் வெள்ளியைச் செலுத்துவதாக ஆமான் மன்னருக்கு அளித்திருந்த வாக்குறுதிபற்றிக் கூறினார்:

யூதர்களை அழித்தொழிப்பது பற்றிச் சூசா நகரில் வெளியிடப்பட்ட ஆணையின் நகல் ஒன்றையும் எஸ்தரிடம் காட்டுமாறு அவரிடம் கொடுத்தார்: மன்னரிடம் எஸ்தர் சென்று அவருடைய ஆதரவை வேண்டி, தம் மக்களுக்காக அவரிடம் மன்றாட வேண்டும் என்று அவரிடம் தெரிவிக்குமாறு அந்த அண்ணகரைக் கேட்டுக் கொண்டார். நீ என் ஆதரவில் ஓர் எளிய பெண்ணாக வளர்ந்துவந்த நாள்களை நினைத்துப்பார். மன்னருக்கு அடுத்த நிலையில் உள்ள ஆமான் நமக்கு எதிராகப் பேசி, நம் இனத்தைக் கொல்லுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டுள்ளான். எனவே ஆண்டவரிடம் மன்றாடு: பிறகு நமக்காக மன்னரிடம் பரிந்து பேசு: நம்மைச் சாவினின்று காப்ப

அக்ரத்தையோன் திரும்பிவந்து எஸ்தரிடம் இவையனைத்தையும் தெரிவித்தார்.

மொர்தெக்காயிடம் போய்க் கூறுமாறு எஸ்தர் அவரிடம்,

ஆண் பெண் யாராயினும், மன்னர் அழைக்காமல் உள்மண்டபத்துக்குள் சென்றால் அவர் உயிர்வாழ முடியாது என்பதைப் பேரரசின் எல்லா நாடுகளும் அறியும். மன்னர் யாரை நோக்கித் தம் பொற் செங்கோலை உயர்த்துகிறாரோ அவர் மட்டுமே உயிர்பிழைப்பார். நானோ மன்னரிடம் வருமாறு அழைக்கப்பட்டு இன்றோடு முப்பது நாள் ஆகிறது என்றார்.

எஸ்தர் சொன்னதை அக்ரத்தையோன் மொர்தெக்காயிடம் எடுத்துரைத்தார்.

எஸ்தரிடம் சென்று தெரிவிக்குமாறு மொர்தெக்காய், எஸ்தர், பேரரசில் உள்ள எல்லா யூதர்களுள்ளும் நீ மட்டும் பிழைத்துக் கொள்வாய் என எண்ணவேண்டாம்.

இத்தகைய நேரத்தில் நீ வாளாவிருந்து விட்டாலும், யூதர்களுக்கு வேறு வழியாக உதவியும் பாதுகாப்பும் கிடைக்கும்: ஆனால் நீயும் உன் தந்தையின் குடும்பத்தாரும் அழிவீர்கள். இத்தகைய ஒரு வாய்ப்புக்காகவே நீ அரசியாக்கப்பட்டாயோ என்னவோ, யார் அறிவார்! என்று அக்ரத்தையோனிடம் கூறினார்.

தம்மிடம் வந்தவரை மொர்தெக்காயிடம் எஸ்தர் அனுப்பி,

நீர் போய், சூசாவில் உள்ள யூதர்களை ஒன்றுகூட்டும். எல்லாரும் எனக்காக உண்ணா நோன்பிருங்கள். இரவு பகலாக மூன்று நாள்களுக்கு உண்ணவோ பருகவோ வேண்டாம். நானும் என் பணிப்பெண்களுங்கூட நோன்பிருப்போம். அதன்பின் சட்டத்துக்கு எதிராக நான் மன்னரிடம் செல்வேன். இதனால் நான் இறக்க வேண்டியிருந்தாலும் சரியே என்றார்.

பின் மொர்தெக்காய் அங்கிருந்து சென்று எஸ்தர் கேட்டுக்கொண்டவாறே செய்தார். மொர்தெக்காய் ஆண்டவரின் செயல்களையெல்லாம் நினைவு கூர்ந்து அவரிடம் பின்வருமாறு மன்றாடினார்: ஆண்டவரே, அனைத்தையம் ஆளும் மன்னராகிய ஆண்டவரே, அனைத்தும் உம் அதிகாரத்தின் கீழ் உள்ளன. நீர் இஸ்ரயேலைக் காக்கத் திருவுளம் கொள்ளும்போது எவராலும் உம்மை எதிர்த்து நிற்கமுடியாது. விண்ணையும் மண்ணையும் விண்ணின்கீழ் உள்ள ஒவ்வொரு வியத்தகு பொருளையும் படைத்தவர் நீரே. நீரே அனைத்திற்கும் ஆண்டவர். ஆண்டவராகிய உம்மை எதிர்ப்பவர் எவரும் இலர். ஆண்டவரே, நீர் அனைத்தையும் அறிவீர். தருக்குற்ற ஆமானுக்கு நான் வணக்கம

அதிகாரம் 5.

மூன்றாம் நாள் எஸ்தர் தம் மன்றாட்டை முடித்துக்கொண்டு, வழிபாட்டுக்குரிய உடைகளைக் களைந்துவிட்டு பகட்டான ஆடைகளை அணிந்துகொண்டார்: சிறப்பாக ஒப்பனை செய்து கொண்டபின், அனைத்தையும் காண்பவரும் மீட்பவருமான கடவுளிடம் மன்றாடினார்: பின்பு இரண்டு பணிப்பெண் களை அழைத்து, ஒருத்திமீது மெல்லச் சாய்ந்துகொள்ள, மற்றவள் தம் ஆடையின் பின்பகுதியைத் தாங்கி வரச்செய்தார். அழகின் நிறைவோடு விளங்கிய அவரது முகத்தில் மகிழ்ச்சியும் அன்பும் பொலிந்தன: அவருடைய உள்ளமோ அச்சத்தால் கலங்கியிருந்தது. எல்லா வாயில்களையும் கடந்து எஸ்தர் மன்னர்முன் வந்து நின்றார். பொன்னாலும் விலையுயர்ந்த மணிக

பின்பு அவர் தம் பொற் செங்கோலை உயர்த்தி அதைக் கொண்டு எஸ்தரின் கழுத்தைத் தொட்டபின் அவரைத் தழுவிக்கொண்டு, இப்போது சொல் என்றார். எஸ்தர் மறுமொழியாக, என் தலைவரே, கடவுளின் பதரைப்போலத் தாங்கள் காணப்பட்டீர்கள். தங்களின் மாட்சியைக் கண்டு என் உள்ளம் அஞ்சிக் கலங்கியது. என் தலைவரே, தாங்கள் வியப்புக்குரியவர்! தங்கள் முகம் அருள் நிறைந்து விளங்குகிறது என்றார். எஸ்தர் பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கிக் கீழே விழுந்தார். இதனால் மன்னர் கலக்கமுற்றார். எஸ்தருடைய பணியாளர்கள் அனைவரும் அரசியைத் தேற்றினார்கள்.

அப்பொழுது மன்னர், எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்? உன் விருப்பம் யாது? என் பேரரசில் பாதியைக் கேட்டாலும் அதை உனக்குக் கொடுப்பேன் என்றார்.

அதற்கு எஸ்தர், இன்று எனக்கு ஒரு பொன்னாள். மன்னருக்கு விருப்பமானால் இன்று நான் கொடுக்கவிருக்கும் விருந்தில் மன்னரும் ஆமானும் கலந்துகொள்ள வேண்டுகிறேன் என்று கூறினார்.

அப்பொழுது மன்னர், எஸ்தரின் விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன். எனவே ஆமானை உடனே அழைத்து வாருங்கள் என்று சொன்னார். எஸ்தர் அழைத்தவாறே விருந்தில் இருவரும் கலந்துகொண்டனர்.

திராட்சை மதுவை அருந்திய வண்ணம் மன்னர் அரசியை நோக்கி, எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்பதெல்லாம் உனக்குக் கொடுப்பேன் என்றார்.

அதற்கு எஸ்தர், என் வேண்டுகோளும் விருப்பமும் இதுதான்:

மன்னரின் பரிவு எனக்குக் கிட்டுமாயின், நான் நாளை கொடுக்கவிருக்கும் விருந்திலும் மன்னரும் ஆமானும் கலந்துகொள்ள வேண்டுகிறேன். இதைப்போன்றே நாளையும் செய்வேன் என்றார்.

ஆமான் மகிழ்ச்சியுடனும் உவகை உள்ளத்¥¥துடனும் மன்னரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்: ஆனால் அரண்மனையில் யூதராகிய மொர்தெக்காயைக் கண்டபோது அவன் கடுஞ்சீற்றங் கொண்டான்:

தன் வீட்டுக்குச் சென்றதும் அவன் தன் நண்பர்களையும் மனைவி சோசராவையும் அழைத்தேன்:

தன் செல்வத்தை அவர்களுக்குக் காட்டி, மன்னர் தன்னைப் பெருமைப்படுத்தியதையும், மற்றவர்களுக்கு மேலாகத் தன்னை உயர்த்திப் பேரரசில் தனக்கு முதலிடம் கொடுத்ததையும் அவர்களிடம் விளக்கினான்.

பின் ஆமான், மன்னரோடு விருந்துக்கு வருமாறு அரசி என்னைத் தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை. நாளைய விருந்துக்கும் என்னை அழைத்திருக்கிறார்.

ஆனால் அரண்மனையில் யூதனாகிய மொர்தெக்காயைக் காணும்போது இதெல்லாம் எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை என்றான்.

ஜம்பது முழம் உயரமுள்ள பக்குமரம் ஒன்றை நாட்டச் செய்யும்: நாளைக் காலையில் மன்னரிடம் சொல்லி அதில் மொர்தெக்காயைத் பக்கிலிடச் செய்யும். பின் மன்னரோடு விருந்துக்குச் சென்று உண்டு மகிழும் என்று அவனுடைய மனைவி சோசராவும் நண்பர்களும் அவனிடம் கூறினார்கள். இது ஆமானுக்கு உகந்ததாய் இருந்தது. உடனே அவன் பக்குமரத்தை ஏற்பாடு செய்தான்.

அதிகாரம் 6.

ஆண்டவர் அன்று இரவு மன்னருக்குத் பக்கம் வராமலிருக்கச் செய்தார். ஆகவே குறிப்பேட்டைக் கொண்டு வந்து தமக்குப் படித்துக் காட்டுமாறு மன்னர் தம் செயலரைப் பணித்தார்.

காவற்பணியில் இருந்த இரண்டு அலுவலர்கள் அர்த்தக் சஸ்தா மன்னரைக் கொல்லச் சூழ்ச்சி செய்தியிருந்தது பற்றி மொர்தெக்காய் மன்னரிடம் தெரிவித்தது தொடர்பான குறிப்புகள் அதில் எழுதியிருக்கக் கண்டார்.

உடனே மன்னர், இதற்காக மொர்தெக்காய்க்கு நாம் என்ன சிறப்பு அல்லது கைம்மாறு செய்தோம்? என்று வினவினார். அவருக்குத் தாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று மன்னரின் பணியாளர்கள் மறுமொழி கூறினார்கள்.

மொர்தெக்காய் செய்திருந்த நற்பணி பற்றி மன்னர் விசாரித்துக் கொண்டிருந்தபோது ஆமான் அரண்மனை முற்றத்திற்குள் வந்தான். முற்றத்தில் இருப்பவர் யார்? என்று மன்னர் வினவினார். தான் ஏற்பாடு செய்திருந்த மரத்தில் மொர்தெக்காயைத் பக்கிலிடுவதுபற்றிப் பேசுவதற்காக ஆமான் அப்போதுதான் உள்ளே வந்திருந்தான்.

ஆமான்தான் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் என்று பணியாளர்கள் மன்னரிடம் கூறினார்கள். அவரை உள்ளே வரச்சொல் என்று மன்னர் சொன்னார்.

பின் மன்னர், நான் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கு என்ன செய்யலாம்? என்று ஆமானிடம் கேட்டார். “என்னைத் தவிர வேறு யாரை மன்னர் பெருமைப்படுத்தப்போகிறார்“ என்று ஆமான் தனக்குள் நினைத்து நினைத்துக் கொண்டான்.

எனவே அவன் மன்னரிடம், மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கென,

மன்னர் அணியும் விலையுயர்ந்த மெல்லிய ஆடைகளையும், பயன்படுத்தும் குதிரையையும் பணியாளர்கள் கொண்டு வரட்டும்.

அந்த ஆடைகளை மன்னரின் மதிப்பிற்குரிய நண்பர் ஒருவரிடம் கொடுக்கட்டும். அவர் அவற்றை மன்னர் அன்புசெலுத்தும் அம்மனிதருக்கு அணிவிக்கட்டும். குதிரை மீது அவரை அமர்த்தி நகரின் தெருக்களில் வலம் வரச் செய்து, “மன்னர் பெருமைப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே செய்யப் பெறும்“ என அறிவிக்கட்டும் என்றான்.

அதற்கு மன்னர், சரியாகச் சொன்னீர். அரண்மனையில் பணிபுரியும் மொர்தெக்காய்க்கு அவ்வாறே செய்யும். நீர் சொன்னவற்றில் எதையும் விட்டுவிட வேண்டாம் என்று ஆமானிடம் கூறினார்.

எனவே ஆமான் ஆடைகளையும் குதிரையையும் கொண்டுவந்தான்: ஆடைகளை மொர்தெக்காய்க்கு அணிவித்து, குதிரைமீது அவரை அமர்த்தினான். மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே செய்யப்பெறும் என்று அறிவித்துக்கொண்டே நகரின் தெருக்களில் அவர் வலம் வரச்செய்தான்.

பின் மொர்தெக்காய் அரண்மனைக்குத் திரும்பினார். ஆமானோ தன் தலையை மூடிக்கொண்டு துயரத்தோடு தன் வீட்டுக்கு விரைந்தான்.

தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் ஆமான் தன் மனைவி சோசராவிடமும் நண்பர்களிடமும் தெரிவித்¥தான். மொர்தெக்காய் யூத இனத்தைச் சார்ந்தவர் என்றால், அவருக்கு முன்பாக நீர் சிறுமைப்படும் நிலை தொடங்கி விட்டது என்றால், நீர் வீழ்ச்சி அடைவது உறுதி. அவரை எதிர்த்து வெல்ல உம்மால் முடியாது: ஏனெனில் என்றுமுள கடவுள் அவரோடு இருக்கிறார் என்று அவர்கள் அவனிடம் கூறினார்கள்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே அண்ணகர்கள் வந்து எஸ்தர் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு ஆமானை விரைவாக அழைத்துச் சென்றார்கள்.

அதிகாரம் 7.

மன்னவரும் ஆமானும் அரசியோடு விருந்துக்குச் சென்றனர்.

இரண்டாம் நாளும் மன்னர் திராட்சை மதுவை அருந்தியவாறே அரசியிடம், எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்? உன் வேண்டுகோளும் விருப்பமும் என்ன? என் பேரரசில் பாதியைக் கேட்டாலும் அதை உனக்குக் கொடுப்பேன் என்றார்.

அதற்கு எஸ்தர் மறுமொழியாக, மன்னரே, உமக்கு விருப்பமானால், என் உயிரையும் என் மக்களின் உயிரையும் காப்பாற்றும். இதுவே என் வேண்டுகோளும் விருப்பமும் ஆகும்.

நானும் என் மக்களும் அழிவுக்கும் சூறையாடடலுக்கும் அடிமைத்தனத்துக்கும் ஆளாக்கப்பட்டுள்ளோம்: நாங்களும் எங்கள் பதல்வர் புதல்வியரும் அடிமைகளாக்கப்பட்டுள்ளோம். இதுவரை நான் பேசாதிருந்தேன். ஆனால் சதிகாரன் மன்னரின் அரண்மனையில் இருக்கத் தகுதியற்றவன் என்று கூறினார்.

இத்தகைய செயலைச் செய்யத் துணிந்தவன் யார்? என்று மன்னர் வினவினார்.

அந்தப் பகைவன் தீயவனாகிய இந்த ஆமான்தான் என்று எஸ்தர் பதிலுரைத்தார். மன்னரின் முன்னிலையிலும் அரசியின் முன்னிலையிலும் ஆமான் திகைத்து நின்றான்.

மன்னர் விருந்திலிருந்து எழுந்து தோட்டத்துக்குச் சென்றார். ஆமானோ தான் மிக இக்கட்டான நிலையில் இருந்ததை உணர்ந்து, அரசியிடம் கெஞ்சி மன்றாடத் தொடங்கினான்.

மன்னர் தோட்டத்திலிருந்து திரும்பியபோது, ஆமான் எஸ்தரின் மஞ்சத்தின்மீது விழுந்தபடி அவரிடம் கெஞ்சி மன்றாடிக்கொண்டிருந்தான். என்ன! எனது வீட்டிலேயே என் மனைவியைக் கெடுக்கத் துணிந்தாயோ? என்றார் மன்னர். இதைக் கேட்டதும் ஆமானின் முகம் வாடியது.

அப்போது அண்ணகர்களுள் ஒருவராகிய புகத்தான். மன்னருக்கு எதிரான சூழ்ச்சியைப் பற்றி எச்சரித்த மொர்தெக்காயைக் கொல்வதற் காக ஆமான் ஒரு பக்குமரத்தையே ஏற்பாடு செய்துள்ளார். ஜம்பது முழம் உயருமுள்ள அந்தத் பக்குமரம் ஆமான் வீட்டில் உள்ளது என்று மன்னரிடம் கூறினார். அவனை அதிலேயே பக்கிலிடுங்கள் என்று மன்னர் கட்டளையிட்டார்.

இவ்வாறு மொர்தெக்காயைக் கொல்ல ஆமான் ஏற்பாடு செய்திருந்த பக்குமரத்தில் அவனே பக்கிலிடப்பட்டான். பின்னர் மன்னரின் சீற்றம் தணிந்தது.

அதிகாரம் 8.

சதிகாரனாகிய ஆமானின் சொத்துகள் அனைத்தையும் அர்த்தக்சஸ்தா மன்னர் அன்றே எஸ்தருக்கு வழங்கினார். மொர்தெக்காய் தமக்கு உறவினர் என்று எஸ்தர் விளக்கியிருந்ததால், மன்னர் அவரைத் தம்மிடம் அழைத்தார்:

ஆமானிடமிருந்து திரும்பப் பெற்றிருந்த கணையாழியை எடுத்து மொர்தெக்காயிடம் வழங்கினார். ஆமானுடைய சொத்துக்களுக்கெல்லாம் எஸ்தர் அவரைப் பொறுப்பாளர் ஆக்கினார்.

மீண்டும் மன்னரிடம் உரையாடிய எஸ்தர் அவரது காலில் விழுந்து, ஆமான் யூதர்களுக்கு எதிராகச் செய்திருந்த சூழ்ச்சிகள் அனைத்தையும் முறியடிக்குமாறு மன்றாடினார்.

மன்னர் தம் பொற் செய்கோலை எஸ்தரிடம் நீட்டவே, எஸ்தர் எழுந்து மன்னருக்கு முன்னால் வந்து நின்றார்.

அப்பொழுது எஸ்தர், நீர் விரும்பி எனக்குப் பரிவு காட்டுவீராயின், உமது பேரரசில் வாழும் யூதர்களை அழிக்குமாறு ஆமான் விடுத்திருக்கும் மடல்களைத் திரும்பப் பெறுமாறு ஆணை பிறப்பிப்பீராக.

என் மக்கள் படும் துன்பத்தை நான் எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க முடியும்? என் இனத்தார் அழிந்தபின் நான் எவ்வாறு உயிர்வாழ இயலும்? என்றார்.

அதற்கு மன்னர் எஸ்தர்¢டம், ஆமானுக்கு உரிய சொத்து அனைத்தையும் நான் மனமுவந்து உனக்கு வழங்கியதோடு யூதர்களை அழிக்க முனைந்ததற்காக அவனைத் பக்கிலிட்டுவிட்டேன். இன்னும் உனக்கு என்ன வேண்டும்?

உங்களுக்கு விருப்பமானதை நீங்க்ளே என் பெயரால் எழுதி, எனது கணையாழியால் முத்திரையிட்டுக் கொள்ளுங்கள்: மன்னரின் கட்டளையால் எழுதப்பட்டு அவரது கணையாழியால் முத்திரையிடப்பட்ட ஆணையை எவராலும் மாற்ற முடியாது என்று கூறினார்.

அதே ஆண்டின் முதல் மாதமாகிய நீசான் மாதம் இருபத்து மூன்றாம் நாள் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்த மற்று இருபத்தேழு மாநிலங்களின் ஆட்சிப் பொறுப் பாளர்களுக்கும் ஆளுநர்களுக்கும் அந்தந்த மாநில மொழியில் அனுப்பப்பட்ட அரசாணை யூதர்களுக்கும் வரையப்பட்டது.

மன்னரின் பெயரால் அவ்வாணை எழுதப்பட்டு, அவரது கணையாழியால் முத்திரையிடப்பட்டு, பதர் வழியாக அனுப்பிவைக்கப்பட்டது.

ஒவ்வொரு நகரிலும் இருந்த யூதர்கள் தங்கள் சட்டங்களைக் கடைப்பிடிக்கவும், தங்களையே தற்காத்துக் கொள்ளவும், எதிரிகள், பகைவர்கள்மீது தங்கள் விருப்பப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் அந்த ஆணை அவர்களுக்கு உரிமை வழங்கியது.

அர்த்தக்சஸ்தாவின் பேரரசெங்கும் ஒரே நாளில், அதாவது பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் அவ்வாணை நடைமுறைக்கு வரவேண்டும் என்று விதிக்கப்பட்டது. மன்னர் விடுத்த மடலின் நகல் பின்வருமாறு: இந்தியாமுதல் எத்தியோப்பியாவரை உள்ள மற்று இருபத்தேழு மாநில ஆளுநர்களுக்கும் அரசப்பற்றுடைய குடிமக்களுக்கும் அர்த்தக்சஸ்தா மாமன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது: தங்கள் கொடையாளர்களின் தாராளமான வள்ளன்மையால் பெருமைப்படுத்தப்படும் பலர் செருக்குக் கொள்கிறார்கள்: நம் குடி மக்களுக்குத் தீங்கு விளைவிக்க முனைவது மட்டுமன்று, செல்வத்தால் இறுமாப்புக் கொண்டவர்களாய் அதை வழங்கிய கெ

பேரரசின் எல்லா இடங்களிலும் எல்லாரும் காணும்படி இவ்வாணையின் நகல்கள் வைக்கப்படட்டும். குறிப்பிட்ட நாளில் தங்கள் பகைவருக்கு எதிராகப் போராடுவதற்கு யூதர்கள் அனைவரும் முன்னேற்பாடாய் இருக்கட்டும்.

இதன்படி மன்னரின் ஆணையை நிறைவேற்றக் குதிரை வீரர்கள் விரைந்தார்கள். இவ்வாணை சூசா நகரிலும் வெளியிடப்பட்டது.

அரச ஆடைகளையும் விலையுயர்ந்த மெல்லிய கருஞ்சிவப்புத் துணியாலான தலைப்பாகையையும் பொன்முடியையும் அணிந்தவராய் மொர்தெக்காய் அரண்மனையிலிருந்து வெளியே வந்தார். சூசா நகர மக்கள் அவரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

யூதர்களுக்கு அது ஒளியின் நாள்! மகிழ்வின் நாள்!

ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு மாநிலத்திலும், எங்கெல்லாம் இது அறிவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் வாழ்ந்த யூதர்கள் மகிழ்ந்து களிகூர்ந்தார்கள்: விருந்து நடத்தி விழாக்கொண்டாடினார்கள். யூதர்களுக்கு அஞ்சிய வேற்றினத்தார் பலர் விருத்தசேதனம் செய்துகொண்டு யூதராயினர்.

அதிகாரம் 9.

பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் மன்னரின் ஆணை செயல்படுத்தப்பட்டது.

அன்று யூதர்களின் பகைவர்கள் அழிந்தார்கள்: யூதர்கள் மீது கொண்ட அச்சத்தால் யாருமே அவர்களை எதிர்த்து நிற்கவில்லை.

மொர்தெக்காய்க்கு அஞ்சியதால் மாநில ஆளுநர்களும் குறுநில மன்னர்களும் அரச எழுத்தர்களும் யூதர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்:

ஏனெனில் பேரரசு முழுவதும் மொர்தெக்காய் மதித்துப் போற்றப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டிருந்தார்.

எனவே யூதர்கள் தங்கள் பகைவர்களை வாளால் கொண்றொழித்தார்கள்: தங்களை வெறுத்தவர்களுக்குத் தாங்கள் விறும்பியபடி செய்தார்கள்

சூசா நகரில் யூதர்கள் ஜந்மறு பேரைக் கொன்றார்கள்.

இவர்களுள் பரிசனஸ்தாயின், தெல்போன், பாஸ்கா,

பரிதாத்தா, பாரயா, சர்பாக்கா,

மார்மசிமா, அருபேயு, அர்சேயு, சபுதேத்தான்

ஆகிய பத்துப் பேரும் அடங்குவர். இவர்கள் எல்லாரும் யூதரின் பகைவனும் பூகையனாகிய அம்மதாத்தாவின் மகனுமாகிய ஆமானின் மைந்தர்கள். மேலும், யூதர்கள் அவர்களின் உடைமைகளைச் சூறையாடினார்கள்.

சூசாவில் கொல்லப்பட்டபவர்களின் எண்ணிக்கை மன்னருக்கு அன்றே அறிவிக்கப்பட்டது.

அப்போது மன்னர் எஸ்தரிடம், சூசா நகரில் மட்டுமே யூதர்கள் ஜந்மறு பேரைக் கொன்றிருக்கிறார்கள். அவ்வாறாயின், நாட்டின் மற்றப் பகுதிகளில் என்ன செய்திருப்பார்கள் என நினைக்கின்றாய்? உனக்காக நான் வேறு என்ன செய்ய வேண்டும்? அதை நான் நிறைவேற்றுவேன் என்று கேட்டார்.

எஸ் தர் மன்னரிடம், இன்று போல நாளையும் செய்ய யூதர்களுக்கு அனுமதி வழங்கும். ஆமானின் மைந்தர்கள் பத்துப் பேருடைய பிணங்களையும் தொங்கவிடச் செய்யும் என்றார்.

மன்னர் அதற்கு இசைந்தார்: ஆமானின் மைந்தர்களுடைய பிணங்களைத் தொங்கவிடுமாறு நகர யூதர்களிடம் கையளித்தார்.

அதார் மாதம் பதினான்காம் நாளன்றும் சூசா நகர யூதர்கள் ஒன்று கூடி முந்மறு பேரைக் கொன்றார்கள்: ஆனால் எதையும் சூறையாடவில்லை.

பேரரசின் மற்றப் பகுதிகளில் வாழ்ந்த யூதர்கள் ஒன்றுதிரண்டு பகைவர்களிடமிருந்து தங்களையே தற்காத்துக் கொண்டு விடுதலை பெற்றார்கள். அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் பதினையாயிரம் பேரைக் கொன்றார்கள்: ஆனால் எதையும் சூறையாடவில்லை.

அதே மாதம் பதினான்காம் நாளை அவர்கள் ஓய்வு நாளாக மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் கொண்டாடினார்கள்.

சூசா நகர யூதர்கள் பதினான்காம் நாளன்றும் ஒன்று கூடினார்கள்: ஆனால் ஓய்வு கொள்ளவில்லை: மாறாக, பதினைந்தாம் நாளை மகிழ்ச்சியுடனும் அக்களிப்புடனும் கொண்டினார்கள்.

இதனால்தான் தொலை நாடுகளில் சிதறி வாழும் யூதர்கள் அதார் மாதம் பதினான்காம் நாளை நன்னாளாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்: ஒருவருக்கொருவர் உணவுப் பொருள்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆனால் மாநகர்களில் வாழ்கிறவர்கள் அதார் மாதம் பதினைந்தாம் நாளை நன்னாளகக் கொண்டாடி, உணவுப் பொருள்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

மொர்தெக்காய் இவற்றை ஒரு மலில் எழுதி, அருகிலும் தொலையிலுமாக அர்த்தக்சஸ்தாவின் பேரரசில் வாழ்ந்த யூதர்களுக்கு அனுப்பினார்.

அதார் மாதம் பதினான்காம் நாளையும் பதினைந்தாம் நாளையும் நன்னாள்களாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார்:

ஏனெனில் இந்நாள்களில்தாம் யூதர்கள் தங்கள் பகைவர்களிடமிருந்து விடுதலை பெற்றார்கள். இந்த அதார் மாதத்தில் தான் அவர்களின் துன்பம் இன்பமாக மாறியது: துயர நாள் நன்னாளாக மாறியது. இந்த மாதம் முழுவதும் விருந்தாடி, மகிழ்ச்சியுடன் அந்த நன்னாள்களைக் கொண்டாடுமாறும் உணவுப்பொருள்களை நண்பர்களுக்கும் ஏழைகளுக்கும் அனுப்பி வைக்குமாறும் அவர் எழுதினார்.

மொர்தெக்காய் யூதர்களுக்கு எழுதியிருந்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

மாசிடோனியனாகிய அம்மதாத்தாவின் மகன் ஆமான் யூதர்களை எதிர்த்தெழுந்ததையும், அவர்களை அழிக்கும் நாளைக் குலுக்கல் முறையில் தெரிவு செய்ததையும்,

தம்மைத் பக்கிலிடுமாறு அவன் மன்னரை அணுகி வேண்டிக் கொண்டதையும், யூதர்களுக்கு அவன் இழைக்கத் திட்டமிட்டிருந்த தீமைகள் அனைத்தும் அவனுக்கே நேர்ந்ததையும், அவனும் அவனுடைய மைந்தர்களும் பக்கிலிடப்பட்டதையும் மொர்தெக்காய் அதில் விளக்கியிருந்தார்.

இதன்பொருட்டு இந்நாள்கள் பூரிம் என யூதர்களால் அழைக்கப்படுகின்றன. எபிரேய மொழியில் பூரிம் என்னும் சொல்லுக்குத் “திருவுளச் சீட்டுகள்“ என்பது பொருள். தம் மடலில் எழுதப்பட்டிருந்தவை காரணமாகவும், யூதர்கள் துன்புற்றவை, அவர்களுக்கு நேர்ந்தவை காரணமாகவும் இவ்விழாவைக் கொண்டாடுமாறு மொர்தெக்காய் பணித்தார்.

அவ்வாறே யூதர்களும் இதைத் தவறாமல் கொண்டாடத் தங்கள் சார்பாகவும் தங்கள் வழிமரபினர் சார்பாகவும் யூத மதத்தைத் தழுவியவர்கள் சார்பாகவும் பின்வருமாறு உறுதிபூண்டார்கள்: அந்நாள்கள் எல்லா நகர்களிலும் குடும்பங்களிலும் மாநிலங்களிலும் நினைவுநாள்களாகத் தலைமுறை தலைமுறையாக கொண்டாட வேண்டும்:

பூரிம் எனப்படும் அந்நாள்களை என்றென்றும் கடைப்பிடிக்க வேண்டும்: அந்நாள்களின் நினைவு அவர்களின் வழிமரபினரிடையே ஒருபோதும் ஒழிந்து போகத் கூடாது.

அம்மினதாபின் மகளாகிய எஸ்தர் அரசியும் யூதராகிய மொர்தெக்காயும் தாங்கள் செய்தவற்றை எழுத்தில் பொறித்து வைத்தார்கள்: பூரிம் திருவிழா பற்றிய ஒழுங்குகள் கொண்ட மடலை உறுதிப்படுத்தினார்கள்.

கிரேக்கப் பாடத்தில் இவ்வசனம் விடப்பட்டுள்ளது. எபிரேயத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அம்மடல் எழுதப்பட்டு, அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட மற்று இருபத்தேழு மாநிலங்களிலும் வாழ்ந்த யூதருக்கு அனுப்பப்பட்டது என்னும் பாடம் காணப்படுகிறது.

மொர்தெக்காயும் எஸ்தர் அரசியும் இம்முடிவுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு, அவ்விழாவைக் கண்டிப்பாகக் கொண்டாட உறுதிபூண்டார்கள்.

அவ்விழா எப்போதும் கொண்டாடப்படவேண்டும் என்று எஸ்தர் ஆணை பிறப்பித்தார். மக்களின் நினைவில் நிற்கும்பொருட்டு அது ஓர் ஆவணத்தில் பொறிக்கப்பட்டது.

அதிகாரம் 10.

நிலத்திலும் நீரிலும் பரவியிருந்த தம் பேரரசில் மன்னர் வரி விதித்தார்.

அவருடைய ஆற்றல், வீரம், செல்வம், ஆட்சியின் மாட்சி ஆகியவற்றை மக்கள் நினைவு கூரும்படி பாரசீகர், மேதியர் ஆகியோரின் குறிப்பேட்டில் அவை பொறிக்கபட்டன.

அர்த்தக்சஸ்தா மன்னரின் ஆணைப்பேராளராக விளங்கிய மொர்தெக்காய் பேரரசில் மதிப்புக்குரியவராகத் திகழ்ந்தார்: யூதர்களால் போற்றப் பெற்றார்: அன்புக்குரியவராக வாழ்ந்து தம் இனத்தார் அனைவருக்கும் வாழ்க்கைமுறைபற்றி விளக்கி வந்தார். மொர்தெக்காய் பின்வருமாறு கூறினார்: இவையெல்லாம் கடவுளின் செயல்கள். இவை குறித்து நான் கண்ட கனவை நினைவுகூர்கிறேன். அதில் எதுவுமே நிறைவேறாமற் போகவில்லை. அதில் ஒரு சிறிய ஊற்று ஆறாக மாறியது. ஒளி, கதிரவன், மிகுந்த தண்ணீர் ஆகியவையும் காணப் பெற்றன. அந்த ஆறு எஸ்தரைக் குறிக்கும். மன்னர் அவரைத் திருமணம் செய்துகொண்டு அரசியாக்கினார்.

புத்தகம் 43 - சாலமோனின் ஞானம்

அதிகாரம் 1.

மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்: நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி நினைந்திடுங்கள்: நேர்மையான உள்ளத்துடன் அவரைத் தேடுங்கள்.

அவரைச் சோதியாதோர் அவரைக் கண்டடைகின்றனர்: அவரை நம்பினோர்க்கு அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார்.

நெறிகெட்ட எண்ணம் மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும். அவரது ஆற்றல் சோதிக்கப்படும் பொழுது, அது அறிவிலிகளை அடையாளம் காட்டிவிடும்.

வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை: பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை.

நற்பயிற்சிபெற்ற உள்ளம் வஞ்சனையினின்று விலகியோடும்: அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்: அநீதி அணுகுகையில் அது நாணி ஒதுங்கும்.

ஞானம் மனிதநேயமுள்ள ஆவி: ஆயினும் இறைவனைப் பழிப்போரை அது தண்டியாமல் விடாது. கடவுள் அவர்களுடைய உள்ளுணர்வுகளின் சாட்சி: உள்ளத்தை உள்ளவாறு உற்று நோக்குபவர்: நாவின் சொற்களைக் கேட்பவரும் அவரே.

ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது: அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.

நேர்மையற்றதைப் பேசுவோர் மறைந்திருக்க முடியாது: தண்டனை வேளையில் நீதியினின்று தப்ப முடியாது.

இறைப்பற்றில்லாதோரின் சூழ்ச்சிகள் நுணுகி ஆராயப்படும்: அவர்களுடைய சொற்கள் ஆண்டவரின் காதுக்கு எட்டும்: அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள் கண்டிக்கப்படும்.

விழிப்புடைய காது அனைத்தையும் கேட்கின்றது. முறையீடுகளின் முணுமுணுப்பு செவிக்கு எட்டாமல் போவதில்லை.

பயனற்ற முணுமுணுப்புப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்: பழிச்சொல் கூறாது உங்கள் நாவை அடக்குங்கள். ஏனெனில் மறைவாய்ப் பேசிய எதுவும் விளைவின்றிப் போகாது. பொய் சொல்லும் வாய் ஆன்மாவைக் கொல்லும்.

நெறிதவறிய வாழ்வால் சாவை வரவேற்றுக்கொள்ளாதீர்கள்: உங்கள் செயல்களாலேயே அழிவை வருவித்துக்கொள்ளாதீர்கள்.

சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை: வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை.

இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை: அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை: கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை.

நீதிக்கு இறப்பு என்பது இல்லை.

இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் செயலாலும் சொல்லாலும் இறப்பை வரவழைத்தார்கள்: அதை நண்பனாகக் கருதி அதற்காக ஏங்கினார்கள்: அதனோடு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்: அதனோடு தோழமை கொள்ள அவர்கள் பொருத்தமானவர்களே.

அதிகாரம் 2

இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக் கொண்டார்கள்: நம் வாழ்வு குறுகியது: துன்பம் நிறைந்தது. மனிதரின் முடிவுக்கு மாற்று மருந்து எதுவுமில்லை. கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாகக் கேள்விப்பட்டதில்லை.

தற்செயலாய் நாம் பிறந்தோம்: இருந்திராதவர்போல் இனி ஆகிவிடுவோம். நமது உயிர்மூச்சு வெறும் புகையே: அறிவு நம் இதயத் துடிப்பின் தீப்பொறியே.

அது அணையும்பொழுது, உடல் சாம்பலாகிவிடும். ஆவியோ காற்றோடு காற்றாய்க் கலந்துவிடும்.

காலப்போக்கில் நம் பெயர் மறக்கப்படும். நம் செயல்களை நினைவுகூரமாட்டார்கள். நம் வாழ்வு முகில் போலக் கலைந்து போகும்: கதிரவனின் ஒளிக்கதிர்களால் துரத்தப்பட்டு, அதன் வெப்பத்தால் தாக்குண்ட மூடு பனிபோலச் சிதறடிக்கப்படும்.

நம் வாழ்நாள் நிழல்போலக் கடந்து செல்கின்றது. நமது முடிவுக்குப்பின் நாம் மீண்டு வருவதில்லை: ஏனெனில் முடிவு குறிக்கப்பட்டபின் எவரும் அதிலிருந்து மீள்வதில்லை.

எனவே, வாருங்கள்: இப்போதுள்ள நல்லவற்றைத் துய்ப்போம்: இளமை உணர்வோடு படைப்புப்பொருள்களை முழுவதும் பயன்படுத்துவோம்.

விலையுயர்ந்த திராட்சை மதுவிலும் நறுமண வகைகளிலும் திளைத்திருப்போம்: இளவேனிற்கால மலர்களில் எதையும் விட்டுவைக்கமாட்டோம்.

ரோசா மலர்களை அவை வாடுமுன் நமக்கு முடியாகச் சூடிக்கொள்வோம்.

நம் களியாட்டங்களில் ஒவ்வொருவரும் பங்குகொள்ளட்டும்: இன்பத்தின் சுவடுகளை எங்கும் விட்டுச்செல்வோம். இதுவே நம் பங்கு: இதுவே நம் உடைமை.

நீதிமான்களாகிய ஏழைகளை ஒடுக்குவோம்: கைம்பெண்களையும் ஒடுக்காமல் விடமாட்டோம்: நரைதிரை விழுந்த முதியோரையும் மதிக்கமாட்டோம்.

நமது வலிமையே நமக்கு நீதி - நமக்குச் சட்டம். வலிமையற்றது எதுவும் பயனற்றதே.

“நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்: ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்: நம் செயல்களை எதிர்க்கிறார்கள்: திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்: நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள்.

கடவுளைப்பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்: ஆண்டவரின் பிள்ளைகள் எனத் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்.

அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது: அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது.

அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட் டது: அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை.

இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்: பய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்: நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்: கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள்.

அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்: முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம்.

நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்: பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார்.

அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம்.

இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்: ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.“

இறைப்பற்றில்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச்சென்றார்கள். அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது.

அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறியவில்லை: பய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை: மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.

கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்: தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார்.

ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.

அதிகாரம் 3

நீதி மான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது.

அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது.

அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.

மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

சிறிதளவு அவர்கள் தண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார்.

பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் அவர் அவர்களைப் புடமிட்டார்: எரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார்.

கடவுள் அவர்களைச் சந்திக்கவரும்போது அவர்கள் ஒளி வீசுவார்கள்: அரிதாள் நடுவே தீப்பொறிபோலப் பரந்து சுடர்விடுவார்கள்:

நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்: மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார்.

அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்: அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும்.

ஆனால் இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப தண்டிக்கப்படுவார்கள்: ஏனெனில் அவர்கள் நீதிமான்களைப் புறக்கணித்து, ஆண்டவரை எதிர்த்தார்கள்.

ஞானத்தையும் நற்பயிற்சியையும் இகழ்பவர்கள் இரங்கத்தக்கவர்கள். அவர்களது நம்பிக்கை வீணானது: அவர்கள் உழைப்பு வெறுமையானது: அவர்களின் செயல்கள் பயனற்றவை.

அவர்களுடைய மனைவியர் அறிவற்றவர்கள்: அவர்களின் பிள்ளைகள் தீயவர்கள்: அவர்களுடைய வழிமரபினர் சபிக்கப்பட்டவர்கள்.

பய்மை இழக்காத, தவறான உடலுறவு கொள்ளாத மலடி பேறுபெற்றவர்: மனிதரைக் கடவுள் சந்திக்க வரும்போது அப்பெண் கனி தருவார்.

நெறிகெட்ட செயல்களைச் செய்யாத, ஆண்டவருக்கு எதிராகத் தீயவற்றைத் திட்டமிடாத அண்ணகர்களும் பேறுபெற்றோர். அவர்களது பற்றுறுதிக்குச் சிறப்புக் கைம்மாறு வழங்கப்படும்: ஆண்டவரின் கோவிலில் அவர்களுக்கு இனிமைமிக்க பங்கு அளிக்கப்படும்.

நல்ல உழைப்பின் பயன் புகழ்ச்சிக்குரியது. அறிவுத்திறனின் ஆணிவேர் அசைவுறாதது.

விபசாரிகளின் மக்கள் முதிர்ச்சி அடையமாட்டார்கள்: தவறான உடலுறவால் பிறப்பவர்கள் வேரோடு அழிவார்கள்.

அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தாலும், அவர்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்: முதுமையின் இறுதிக் கட்டத்திலும் அவர்கள் மதிப்புப் பெறமாட்டார்கள்.

அவர்கள் இளமையில் இறந்தால் அவர்களுக்கு நம்பிக்கை இராது: தீர்ப்புநாளில் ஆறுதல் கிடைக்காது.

நேர்மையற்ற தலைமுறையின் முடிவு மிகக் கொடியது.

அதிகாரம் 4

ஒருவருக்கு மகப்பேறு இல்லாவிடினும், நற்பண்பு இருந்தால் அதுவே சிறந்தது: நற்பண்பின் நினைவு என்றும் அழியாதது: அது கடவுளாலும் மனிதராலும் கண்டுணரப்படும்.

அந்நினைவு பசுமையாய் இருக்கும்பொழுது மாந்தர் அதனைப் பின்பற்றி நடப்பர்: அது நீங்கியதும் அதற்காக ஏங்குவர். மாசற்ற பரிசுகளுக்காக நற்பண்பு போராடி, வெற்றி வாகை சூடி, காலமெல்லாம் பீடுநடை போடுகிறது.

இறைப்பற்றில்லாதவர்கள் எண்ணற்ற பிள்ளைகளை ஈன்றபோதிலும் அவர்கள் தளிர்ப்பதில்லை: மணவாழ்க்கைக்குப் புறம்பே பிறந்த வழிமரபு ஆழமாய் வேரூன்றுவதில்லை: உறுதியாய் நிற்பதுமில்லை.

சிறிது காலம் அவர்கள் கிளைவிட்டுச் செழித்தாலும், உறுதியற்றவர்களாய்க் காற்றினால் அலைக்கழிக்கப்படுவார்கள்: காற்றின் சீற்றத்தால் வேரோடு களைந்தெறியப்படுவார்கள்.

அவர்களுடைய கிளைகள் வளர்ச்சி அடையுமுன்பே முறிக்கப்படும். அவர்களுடைய கனிகள் பயனற்றவை: உண்பதற்கு ஏற்ற அளவு பழுக்காமையால் அவை பாழாய்ப் போகும்.

முறைகேடாகப் பிறந்த பிள்ளைகளே தீர்ப்பு நாளில் தங்கள் பெற்றோரின் கூடா ஒழுக்கத்திற்குச் சாட்சிகளாய் இருப்பார்கள்.

நீதிமான்கள் உரிய காலத்துக்கு முன் இறந்தாலும், இளைப்பாற்றி அடைவார்கள்.

முதுமையின் மதிப்பு நீடிய வாழ்வினால் வருவதன்று: ஆண்டுகளின் எண்ணிக்கை அதற்கு அளவுகோலன்று.

ஞானமே மனிதர்க்கு உண்மையான நரைதிரை: குற்றமற்ற வாழ்க்கையே உண்மையான பழுத்த முதுமை.

நீதிமான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவராகி, அவருடைய அன்பைப் பெற்றார்: பாவிகள் நடுவில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுதே அவரால் எடுத்துக்கொள்ளப்பெற்றார்.

தீமை அவரது அறிவுக்கூர்மையைத் திசைதிருப்பாமல் இருக்கவும், வஞ்சகம் அவரது உள்ளத்தை மாசுபடுத்தாமல் இருக்கவுமே அவர் எடுத்துக்கொள்ளப்பெற்றார்.

தீமையின் கவர்ச்சி நன்மையானவற்றை மறைத்துவிடுகிறது: அலைக்கழிக்கும் இச்சை மாசற்ற மனத்தைக் கெடுத்துவிடுகிறது.

அந்த நீதிமான் குறுகிய காலத்தில் நிறைவு எய்தினார்: நீண்ட வாழ்வின் பயனை அடைந்தார்.

அவரது ஆன்மா ஆண்டவருக்கு ஏற்புடையதாய் இருந்தது. தீமை நடுவினின்று ஆண்டவர் அவரை விரைவில் எடுத்துக் கொண்டார்.

மக்கள் இதைப் பார்த்தார்கள்: ஆனால் புரிந்துகொள்ளவில்லை. ஆண்டவர் தாம் தேர்ந்துகொண்டோர்மீது அருளும் இரக்கமும் காட்டுகின்றார்: தம் பயவர்களைச் சந்தித்து மீட்கிறார் என்பதை அவர்கள் மனத்தில் ஏற்கவுமில்லை.

இறந்துபோன நீதிமான்கள் உயிர் வாழ்கின்ற இறைப்பற்றில்லாதவர்களைக் கண்டனம் செய்வார்கள்: விரைவில் பக்குவம் அடைந்த இளைஞர்கள் நீண்ட நாள் வாழும் தீய முதியவர்களைக் கண்டனம் செய்வார்கள்.

இறைப்பற்றில்லாதவர்கள் ஞானிகளின் முடிவைக் காண்பார்கள்: ஆனால் ஆண்டவர் அவர்களுக்காக எத்தகைய திட்டம் வகுத்துள்ளார் என்றும், எந்த நோக்கத்திற்காக அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளார்கள் என்றும், அறிந்துகொள்ளமாட்டார்கள்.

அவர்கள் ஞானிகளை கண்டு ஏளனம் செய்வார்கள். ஆண்டவரோ அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுவார்.

ஏனெனில் இனி அவர்கள் இழிந்த பிணம் ஆவார்கள்: இறந்தோர் நடுவில் என்றென்றும் அருவருப்புக்குரியோர் ஆவார்கள். ஆண்டவர் அவர்களைப் பேச்சற்றுக் கீழே விழச் செய்வார்: அடியோடு கலங்கவைப்பார். அவர்கள் முழுவதும் அழித்தொழிக்கப்படுவார்கள்: ஆழ்துயரில் மூழ்கடிக்கப்படுவார்கள். அவர்களின் நினைவுகூட மறைந்துவிடும்.

இறைப்பற்றில்லாதவர்களின் பாவங்களைக் கணக்கிடும்போது, அவர்கள் நடுங்கிக்கொண்டு வருவார்கள்: அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள் அவர்களுக்கு எதிராக நின்று குற்றம்சாட்டும்.

அதிகாரம் 5

அப்பொழுது நீதிமான்கள் தங்களைத் துன்புறுத்தியோர் முன்பும் தங்கள் உழைப்பைப் பொருட்படுத்தாதோர் முன்பும் துணிவோடு நிற்பார்கள்.

இறைப்பற்றில்லாதவர்கள் அவர்களைக் கண்டு பேரச்சத்தால் நடுங்குவார்கள்: எதிர்பாரா வகையில் அவர்கள் அடைந்த மீட்பைப்பற்றித் திடுக்கிடுவார்கள்.

அவர்கள் உளம் வருந்தி, ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வார்கள்: மிகுந்த மனத்துயருடன் பெருமூச்சு விட்டுப் பின்வருமாறு சொல்வார்கள்:

இவர்களைத்தானே நாம் முன்பு எள்ளி நகையாடினோம்: வசைமொழிக்கு ஆளாக்கினோம். நாம் மூடர்கள், அவர்களது வாழ்க்கை மடமையானது என்று எண்ணினோம்: அவர்களது முடிவு இழிவானது என்று கருதினோம்.

கடவுளின் மக்களாக அவர்கள் எவ்வாறு எண்ணப்பட்டார்கள்? பயவர்கள் நடுவில் அவர்களுக்கு எவ்வாறு பங்கு கிடைத்தது?

எனவே நாமே உண்மையின் வழியிலிருந்து தவறிவிட்டோம். நீதியின் ஒளி நம்மீது படரவில்லை: கதிரவன் நம்மீது எழவில்லை.

நெறிகேடும் அழிவும் நிறைந்த வழியில் நாம் மனமுவந்து நடந்தோம்: பாதை இல்லாப் பாலைநிலங்களில் பயணம் செய்தோம்: ஆண்டவரின் வழியையோ அறிந்திலோம்!

இறுமாப்பால் நமக்குக் கிடைத்த பயன் என்ன? செல்வச் செருக்கால் நமக்கு விளைந்த நன்மை என்ன?

இவை அனைத்தும் நிழல்போலக் கடந்துபோயின: புரளி போல விரைந்து சென்றன.

அலைமோதும் நீர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு கப்பல் செல்கிறது. அது சென்ற தடத்தை யாரும் காண முடியாது: அதன் அடித்தட்டின் சுவடுகள் அலைகளில் புலப்படுவதில்லை.

பறவை காற்றில் பறந்து செல்கிறது. அது சென்ற வழியின் அடையாளமே தெரிவதில்லை. அது சிறகடித்துச் செல்லும்போது மென்காற்றின்மீது மோதுகிறது: அது பறந்தோடும் வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்கிறது: இறக்கைகளை அசைத்துக் காற்றை ஊடுருவிச் செல்கிறது. பின்னர் அதன் போக்கினது சுவடே தென்படுவதில்லை.

இலக்கை நோக்கி எய்த அம்பு காற்றைக் கிழித்துக்கொண்டு செல்கிறது. பிளவுண்ட காற்று உடனே கூடிவிடுகிறது. ஆனால் அம்பு சென்ற வழியை ஒருவரும் அறிவதில்லை.

இவற்றைப் போன்றதே நம் நிலையும்! நாம் பிறந்தோம்: உடனே இறந்துபட்டோம். பிறரிடம் காட்டுவதற்கு நம்மிடம் நற்பண்பின் அடையாளம் எதுவுமில்லை. நம்முடைய தீமையால் நம்மையே அழித்துக்கொண்டோம்.

இறைப்பற்றில்லாதவர்களின் நம்பிக்கை காற்றில் அடித்துச் செல்லும் பதர்போன்றது: புயலால் சிதறடிக்கப்படும் உறைபனிபோன்றது: காற்றால் அங்கும் இங்கும் கலைக்கப்படும் புகைபோன்றது: ஒரே நாள் தங்கும் விருந்தினர்களின் நினைவுபோல் அது மறக்கப்படும்.

நீதிமான்களோ என்றென்றும் வாழ்கிறார்கள். அவர்களுக்குரிய கைம்மாறு ஆண்டவரிடம் உள்ளது. அவர்களைப்பற்றிய கவலை உன்னத இறைவனுக்கு உண்டு.

அவர்கள் மாட்சிமிக்க பொன்முடியைப் பெறுவார்கள்: ஆண்டவருடைய கையிலிருந்து மணிமுடியைப் பெறுவார்கள். அவர் தம் வலக்கையால் அவர்களை அரவணைப்பார்: தம் புயத்தால் அவர்களைப் பாதுகாப்பார்.

ஆர்வம் என்னும் படைக்கலத்தால் அவர் தம்மை முழுதும் மூடிக்கொள்வார்: தம் எதிரிகளைப் பழிவாங்கப் படைப்பினைப் படைக்கலமாகக் கொள்வார்.

நீதியை அவர் மார்புக்கவசமாக அணிந்து கொள்வார்: நடுநிலை தவறாத தீர்ப்பைத் தலைக்கவசமாகப் புனைந்து கொள்வார்.

வெல்ல முடியாத கேடயமாகத் பய்மையை அவர் கொண்டிருப்பார்.

அவர் கடுஞ்சினத்தைக் கூரிய வாளாகக் கொள்வார். உலகம் அவரோடு சேர்ந்து அறிவிலிகளை எதிர்த்துப் போராடும்.

மின்னல் கீற்று இலக்கை நோக்கி நேராகப் பாயும்: நாணேற்றிய வில்லினின்று புறப்படும் அம்புபோல் அது முகில்களிலிருந்து குறியை நோக்கித் தாவும்.

எறியப்படும் கவண்கல்லைப் போலச் சினம் செறிந்த கல்மழை விழும். கடல் நீர் அவர்கள்மீது சீறிப்பாயும். ஆறுகள் இரக்கமின்றி அவர்களை மூழ்கடிக்கும்.

புயல் அவர்களை எதிர்த்து வீசும்: அது சூறாவளிபோல் அவர்களைப் புடைத்தெடுக்கும். முறைகேடு மண்ணுலகையே பாழாக்கும். தீவினை வலியோரின் அரியணைகளைக் கவிழ்க்கும்.

அதிகாரம் 6

மன்னர்களே, நான் சொல்வதற்குச் செவிசாய்த்துப் புரிந்துகொள்ளுங்கள்: உலகின் கடையெல்லைவரை நீதி வழங்குவோரே, கற்றுக்கொள்ளுங்கள்.

திரளான மக்களை ஆள்வோரே, பல மக்களினங்களைப் பற்றிப் பெருமை பாராட்டுவோரே, எனக்குச் செவிசாயுங்கள்.

ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது: உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச் சோதித்தறிபவர்: உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே.

அவரது அரசின் பணியாளர்களாய் இருந்தும், நீங்கள் நேர்மையுடன் தீர்ப்பு வழங்கவில்லை: திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை: கடவுளின் திருவுளப்படி நடக்கவில்லை.

கொடுமையாகவும் விரைவாகவும் அவர் உங்கள்மேல் வருவார்: உயர் நிலையில் உள்ளவர்களுக்குக் கடும் தீர்ப்பு வழங்குவார்.

எளியோர்க்கு இரக்கங்காட்டி அவர்களைப் பொறுத்தருள்வார்: வலியோரை வன்மையாகத் தண்டிப்பார்.

அனைத்திற்கும் ஆண்டவர் யாருக்கும் அஞ்சி நடுங்க மாட்டார்: உயர்ந்தோர்க்கென்று தனி மதிப்பு அளிக்கமாட்டார். ஏனெனில் பெரியோரையும் சிறியோரையும் படைத்தவர் அவரே: எல்லாரும் ஒன்றென எண்ணிக் காப்பவரும் அவரே.

அவர் வலியோரிடம் கண்டிப்பான கணக்குக் கேட்பார்.

எனவே, மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளவும், நெறிபிறழாது நடக்கவும், உங்களுக்கு நான் கூறுகிறேன்:

பய்மையானவற்றைத் பய்மையாய்க் கடைப்பிடிப்போர் பயோர் ஆவர்: பய்மையானவற்றைக் கற்றுக்கொண்டார் தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர்.

எனவே என் சொற்கள்மீது நாட்டங் கொள்ளுங்கள்: ஏக்கங் கொள்ளுங்கள். நீங்கள் அவற்றால் நற்பயிற்சி பெறுவீர்கள்.

ஞானம் ஒளிமிக்கது: மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்: அதைத் தேடுவோர் கண்டடைவர்.

தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும்.

வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடையமாட்டார்கள்: ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள்.

அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன்பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர்.

தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது: அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது: அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.

நற்பயிற்சி பெறுவதில் கொள்ளும் உண்மையான நாட்டமே ஞானத்தின் தொடக்கம்: நற்பயிற்சி மீது செலுத்தும் கவலையே ஞானத்தின்பால் கொள்ளும் அன்பு.

ஞானத்தின்மீது அன்பு செலுத்துவது அதன் சட்டங்களைக் கடைப்பிடிப்பதாகும்: சட்டங்களைக் கடைப்பிடிப்பது அழியாமைக்கு உறுதி தரும்.

அழியாமை ஒருவரைக் கடவுளுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.

ஞானத்தின்மீதுள்ள ஆர்வம் ஒருவரை அரசுரிமைக்கு வழி நடத்துகிறது.

நாடுகளை ஆளும் மன்னர்களே, உங்களுடைய அரியணையிலும் செங்கோலிலும் நீங்கள் மகிழ்ச் சி அடைய விரும்பினால், எப்பொழுதும் ஞானத்தை மதியுங்கள்: அப்பொழுது என்றென்றும் ஆட்சிபுரிவீர்கள்.

ஞானம் என்றால் என்ன, அது எவ்வாறு உண்டானது என உங்களுக்கு விரித்துரைப்பேன்: மறைபொருள்களை உங்களிடமிருந்து மறைக்க மாட்டேன்: அதன் படைப்புக்காலம் தொட்டு அதனை ஆராய்ந்து பார்ப்பேன்: அதைப்பற்றிய அறிவை வெளிப்படுத்துவேன்: உண்மையை நழுவவிடமாட்டேன்.

நோயாம் பொறாமையோடு தோழமை கொள்ளமாட்டேன். ஏனெனில் பொறாமை ஞானத்துடன் உறவு கொள்வதில்லை.

ஞானிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே உலகின் மீட்பு அமையும். அறிவுள்ள மன்னர் தம் குடிமக்களின் நிலைக்களனாய் இருக்கின்றார்.

எனவே என் சொற்களால் நற்பயிற்சி பெறுங்கள். அதனால் உங்களுக்கு நற்பயன் விளையும்.

அதிகாரம் 7

எல்லா மனிதர்களையும்போல நானும் இறப்புக்குரியவன்: நிலத்தினின்று உண்டாக்கப்பட்ட முதல் மனிதரின் வழித்தோன்றல். என் தாய் வயிற்றில் என் உடல் உருவாயிற்று.

ஆணின் உயிர்த்துளியினாலும் திருமண இன்பத்தினாலும் பத்து மாத காலமாகக் குருதியோடு உறைந்து என் உடல் உருவெடுத்தது.

நான் பிறந்தபொழுது எல்லாரையும்போல நானும் வெறும் காற்றையே சுவாசித்தேன்: என் உடலியல்புக்கு ஒத்த மண்ணில் கிடத்தப்பட்டேன்: முதன்முதலில் அழுகுரல் எழுப்பினேன்.

துணிகளில் பொதியப்பட்டேன்: பேணி வளர்க்கப்பட்டேன்.

எந்த மன்னரும் இதற்கு மாறுபட்ட வகையில் வாழ்க்கையைத் தொடங்கியதில்லை.

எல்லோரும் ஒரே வகையில் பிறக்கின்றனர்: ஒரே வகையில் இறக்கின்றனர்.

எனவே நான் மன்றாடினேன்: ஞானம் எனக்குக் கொடுக்கப் பட்டது. நான் இறைவனை வேண்டினேன்: ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது.

செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்: அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன்.

விலையுயர்ந்த மாணிக்கக்கல்லும் அதற்கு ஈடில்லை: அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்: அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.

உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன் மீது அன்புகொண்டேன்: ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது.

ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.

அவற்றிலெல்லாம் நான் மகிழ்ந்தேன்: ஏனெனில் ஞானமே அவற்றை வழி நடத்துகிறது: அதுவே அவற்றையெல்லாம் ஈன்றெடுத்தது என்பதை அறியாதிருந்தேன்.

நான் கள்ளங்கபடின்றிக் கற்றேன் கற்றதை முறையீடின்றிப் பிறரோடு பகிர்ந்துகொண்டேன். அதன் செல்வத்தை நான் மறைப்பதில்லை.

மனிதர்களுக்கு அது என்றும் குறையாத கருவூலம். அதை அடைவோர் கடவுளோடு நட்புக் கொள்வர்: நற்பயற்சி அளிக்கும் கொடைகளால் நற்சான்று பெற்றவராவர்.

கடவுளது திருவுளத்திற்கு ஏற்பப் பேசவும், நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு ஏற்பச் சிந்திக்கவும், கடவுள் எனக்கு அருள்புரிவாராக! ஏனெனில் ஞானத்துக்கு அவரே வழிகாட்டி, ஞானிகளைத் திருத்துகிறவரும் அவரே.

நாமும் நம் சொற்களும் அவருடைய கைகளில் இருக்கின்றோம். அதுபோல் எல்லா அறிவுத்திறனும் கைத்திறனும் அவருடைய கைகளில் உள்ளன.

இருப்பவை பற்றிய உண்மையான அறிவை எனக்கு அளித்தவர் அவரே: உலகின் அமைப்பையும் மூலப்பொருள்களின் செயல்பாட்டையும் நான் அறியச் செய்தவரும் அவரே.

காலங்களின் தொடக்கம், முடிவு, மையம், கதிரவனின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்கள், பருவ கால மாறுபாடுகள்,

ஆண்டுகளின் சுழற்சிகள், விண்மீன்களின் நிலைக்களங்கள்,

உயிரினங்களின் இயல்பு, காட்டு விலங்குகளின் சீற்றம், காற்று வகைகளின் வலிமை, மனிதர்களின் எண்ணங்கள், பல்வேறு செடிவகைகள், வேர்களின் ஆற்றல்,

இவைபோன்ற மறைவானவைபற்றியும் வெளிப்படையானவைபற்றியும் கற்றறிந்தேன். எல்லாவற்றையும் உருவாக்கிய ஞானமே எனக்கு இவற்றைக் கற்றுக் கொடுத்தது.

ஞானம் - ஆற்றல் கொண்டது. அவற்றால் அறிவுடையது: பய்மையானது: தனித்தன்மை வாய்ந்தது: பல்வகைப்பட்டது: நுண்மையானது: உயிரோட்டம் உள்ளது: தெளிவுமிக்கது: மாசுபடாதது: வெளிப்படையானது: கேடுறாதது: நன்மையை விரும்புவது: கூர்மையானது.

ஞானம் - எதிர்க்க முடியாதது: நன்மை செய்வது: மனிதநேயம் கொண்டது: நிலைபெயராதது: உறுதியானது: வீண்கவலை கொள்ளாதது: எல்லாம் வல்லது: எல்லாவற்றையும் பார்வையிடுவது: அறிவும் பய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது.

ஞானம் - அசைவுகள் எல்லாவற்றையும்விட மிக விரைவானது: அதன் பய்மையினால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது: எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.

ஞானம் - கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி: எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் பய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழைய முடியாது.

ஞானம் - என்றுமுள ஒளியின் சுடர்: கடவுளது செயல்திறனின் கறைபடியாகக் கண்ணாடி: அவருடைய நன்மையின் சாயல்.

ஞானம் - ஒன்றே என்றாலும், எல்லாம் செய்ய வல்லது: தான் மாறாது, அனைத்தையும் புதுப்பிக்கிறது: தலைமுறைதோறும் பய ஆன்மாக்களில் நுழைகிறது: அவர்களைக் கடவுளின் நண்பர்கள் எனவும் இறைவாக்கினர்கள் எனவும் ஆக்குகிறது.

ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்பு செலுத்துவது போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை.

ஞானம் - கதிரவனைவிட அழகானது: விண்மீன் கூட்டத்திலும் சிறந்தது: ஒளியைக் காட்டிலும் மேலானது.

இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது. ஆனால், ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது.

அதிகாரம் 8

ஞானம் - ஒருகோடி முதல் மறு கோடிவரை ஆற்றலோடு செல்கிறது: எல்லாவற்றையும் முறையாக ஒழுங்குபடுத்துகிறது.

ஞானத்தின்மேல் நான் அன்பு கூர்ந்தேன்: என் இளமைமுதல் அதைத் தேடினேன்: என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்பினேன்: அதன் அழகில் மயங்கினேன்.

கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால் ஞானம் தன் உயர்குடிப் பிறப்பில் மேன்மை பாராட்டுகிறது. அதனால் அனைத்துலகின் ஆண்டவர் அதன்மேல் அன்புகூர்ந்தார்.

ஞானமே கடவுளைப் பற்றிய மெய்யறிவுக்குப் புகுமுகம் செய்து வைக்கிறது: அவருடைய செயல்களைத் தேர்வுசெய்வதும் அதுவே.

வாழ்வில் விரும்பத்தக்க உடைமையாகச் செல்வம் விளக்குமாயின், அனைத்தையும் ஆக்கும் ஞானத்தை விடச் சிறந்த செல்வம் ஏது?

அறிவுத்திறன் ஆற்றல் மிக்கது என்றால், ஞானத்தவிட, இருப்பவற்றை உருவாக்கும் கலைஞன் வேறு யார்?

ஒருவர் நீதியின்மேல் அன்புகூர்கின்றாரோ? ஞானத்தின் உழைப்பு அவரிடம் நற்பண்புகளால் மிளிரும். ஏனெனில் தன்னடக்கம், விவேகம், நீதி, துணிவு ஆகியவற்றை ஞானம் கற்பிக்கின்றது. இவற்றைத்தவிர வாழ்வில் மனிதருக்குப் பயனுள்ளவை வேறு ஒன்றுமில்லை.

ஒருவர் பரந்த பட்டறிவு பெற ஏங்குகின்றாரோ? ஞானம் இறந்த காலத்தை அறியும்: எதிர்காலத்தை உய்த்துணரும்: உரைகளின் நுட்பங்களையும் புதிர்களின் விடைகளையும் அறியும். அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும் பருவங்கள், காலங்களின் பயன்களையும் முன்னறியும்.

ஆகையால் என்னோடு கூடிவாழும் பொருட்டு ஞானத்தைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன்: ஏனெனில் நன்மை செய்ய அது என்னை ஆற்றுப்படுத்தும் என்றும், கவலைகளிலும் துயரத்திலும் எனக்கு ஆறுதல் தரும் என்றும் நான் அறிவேன்.

அதை முன்னிட்டு மக்கள் கூட்டத்தில் தான் பெருமை பெறுவேன்: இளைஞனாய் இருந்தாலும் மூப்பர்களிடையே நன்மதிப்பு அடைவேன்.

நீதிவழங்கும்போது அறிவுக்கூர்மையோடு காணப்படுவேன். ஆள்வோர் என்னைக் கண்டு வியப்புறுவர்.

நான் பேசாமல் இருக்கும் பொழுது நான் பேசும்படி அவர்கள் காத்திருக்கிறார்கள்: நான் பேசும்பொழுது எனக்குச் செவிசாய்ப்பார்கள்: நான் நீண்ட உரையாற்றும் பொழுது வாயடைத்து நிற்பார்கள்.

ஞானத்தினால் நான் இறவாமை எய்துவேன்: எனக்குப்பின் வருபவர்களுக்கு என்றும் நீங்கா நினைவை விட்டுச்செல்வேன்.

நான் மக்கள் மீது ஆட்சிசெலுத்துவேன்: நாடுகள் எனக்கு அடிபணியும்.

அச்சுறுத்தும் மன்னர்கள்கூட என்னைப்பற்றிக் கேள்வியுற்று அஞ்சுவார்கள். மக்கள் நடுவில் நல்லவனாகவும் போரில் வல்லவனாகவும் இருப்பேன்.

நான் வீட்டிற்கு வந்தபின் ஞானத்தோடு இளைப்பாறுவேன். ஏனெனில் அதன் தோழமையில் கசப்பே இல்லை: அதனோடு வாழ்வதில் துன்பமே இல்லை. அது தருவதெல்லாம் இன்பமும் மகிழ்ச்சியுமே!

இவற்றைப்பற்றியயெல்லாம் எனக்குள் எண்ணிப் பார்த்தபொழுது - ஞானத்துடன்கொள்ளும் உறவால் இறவாமை கிட்டும்: அதனுடைய நட்புறவில் பய மகிழ்ச்சி பிறக்கும்:

அதனுடைய உழைப்பால் குறைபடாத செல்வம் கொழிக்கும்: அதன் தோழமையில் பயிற்சி பெறுவதால் அறிவுத்திறன் உண்டாகும்: அதனோடு கலந்துரையாடுவதால் பெரும்புகழ் கிடைக்கம் என்றெல்லாம் என் உள்ளத்தில் எண்ணிப் பார்த்த பொழுது - அதை எனக்கென அடைவது எப்படி என்று தேடி அலைந்தேன்.

நான் குழந்தையாய் இருந்த பொழுது நல்லியல்புடன் இருந்தேன். நல்ல உள்ளம் என் பங்காய் அமைந்தது.

நல்லவனாய் இருந்ததால் மாசற்ற உடலினுள் புகுந்தேன்.

ஆனால், கடவுள் எனக்கு ஞானத்தை ஈந்தாலொழிய, அதை அடைய முடியாது என்று நான் உணர்ந்துகொண்டேன். அது யாருடைய கொடை என அறிவது அறிவுத் திறனின் அடையாளம். எனவே நான் ஆண்டவரை வேண்டினேன்: கெஞ்சி மன்றாடினேன்: என் முழு உள்ளத்தோடு சொன்னேன்:

அதிகாரம் 9

மூதாதையரின் கடவுளே, இரக்கத்தின் ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் உமது சொல்லால் உண்டாக்கினீர்.

நீர் உண்டாக்கிய படைப்புகளின் மேல் ஆட்சி செலுத்தவும், பய்மையோடும் நீதியோடும் உலகை ஆளவும்,

நேர்மையான உள்ளத்தோடு தீர்ப்பு வழங்கவும், உமது ஞானத்தால் மானிடரை உருவாக்கினீர்.

உமது அரியணை அருகில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்கு அருளும்: உம் பிள்ளைகளிடமிருந்து என்னைத் தள்ளிவிடாதீர்.

நான் உம் அடியான்: உம்முடைய அடியவளின் மகன்: வலுவற்ற மனிதன்: குறுகிய வாழ்வினன்: நீதித்தீர்ப்பும், திருச்சட்டமும்பற்றிச் சிற்றறிவு படைத்தவன்.

மன்பதையில் ஒருவர் எத்துணை நிறைவு உள்ளவராய் இருந்தாலும், உம்மிடமிருந்து வரும் ஞானம் அவருக்கு இல்லையேல், அவர் ஒன்றும் இல்லாதவராய்க் கருதப்படுவார்.

உம் மக்களுக்கு மன்னராகவும், உம் புதல்வர் புதல்வியருக்கு நடுவராகவும் இருக்க நீர் என்னைத் தெரிந்தெடுத்தீர்.

தொடக்கத்திலிருந்தே நீர் ஏற்பாடு செய்திருந்த பய கூடாரத்ததை மாதிரியாகக் கொண்டு உம் பய மலைமேல் கோவில் கட்டவும், உமது உறைவிடமான நகரில் பலிபீடம் எழுப்பவும் நீர் எனக்கு ஆணையிட்டீர்.

ஞானம் உம்மோடு இருக்கின்றது: உம் செயல்களை அது அறியும்: நீர் உலகத்தை உண்டாக்கியபோது அது உடனிருந்தது: உம் பார்வைக்கு உகந்ததை அது அறியும்: உம் கட்டளைகளின்படி முறையானது எது எனவும் அதற்குத் தெரியும்.

உமது பய விண்ணகத்திலிருந்து அதை அனுப்பியருளும்: உமது மாட்சிமிக்க அரியணையிலிருந்து அதை வழங்கியருளும். ஆது என்னோடு இருந்து உழைக்கட்டும். அதனால் உமக்கு உகந்ததை நான் அறிந்துகொள்வேன்.

அது எல்லாவற்றையும் அறிந்து உய்த்துணரும்: என் செயல்களில் விவேகத்துடன் என்னை வழி நடத்தும்: தன் மாட்சியில் அது என்னைப் பாதுகாக்கும்.

அப்பொழுது என் செயல்கள் உமக்கு ஏற்புடையனவாகும். உம்முடைய மக்களுக்கு நேர்மையுடன் நீதி வழங்குவேன்: என் தந்தையின் அரியணையில் வீற்றிருக்கத் தகுதி பெறுவேன்.

கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்?

நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை: நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை.

அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது.

மண்ணுலகில் உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது! அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம். இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்?

நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் பய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்?

இவ்வாறு மண்ணுலகில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன. உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக்கொண்டனர்: ஞானத்தால் மீட்பு அடைந்தனர்.

அதிகாரம் 10

உலகின் முதல் தந்தை தனிமையாகப் படைக்கப்பட்டபொழுது ஞானம் அவரைப் பேணிக் காத்தது: அவருடைய குற்றங்களிலிருந்து அவரை விடுவித்தது.

அனைத்தையும் ஆளும் ஆற்றலை அவருக்கு அளித்தது.

நீதியற்றவன் ஒருவன் தன் சினத்தினால் ஞானத்தைவிட்டு அகன்றான்: சீற்றத்தினால் தன் உடன்பிறப்பைக் கொன்றதால் அவனும் அழியலானான்.

அவன்பொருட்டு மண்ணுலகைப் பெரும் வெள்ளம் மூழ்கடித்த பொழுது, ஞானம் மீண்டும் அதைக் காப்பாற்றியது: நீதிமானை ஒரு சிறிய மரத்துண்டால் வழி நடத்தியது.

மக்களினங்கள் தீமையுடன் கூட்டுச் சேர்ந்து குழப்பத்திற்கு உள்ளானபோது ஞானம் நீதிமானைக் கண்டு கொண்டது: அவரைக் கடவுள் திருமுன் மாசற்றவராகக் காத்தது: தம் பிள்ளைபால் கொண்டிருந்த பற்றை மேற்கொள்ள அவருக்குத் துணிவை அளித்தது.

இறைப்பற்றில்லாதவர்கள் அழிந்தபோது ஞானம் நீதிமானைக் காப்பாற்றியது. ஜந்து நகர்கள்மீது இறங்கி வந்த நெருப்பிலிருந்து அவரும் உயிர் தப்பினார்.

அவர்களது தீயொழுக்கத்துக்குச் சான்றாக அந்த நகரங்கள் புகை உமிழும் பாழ்வெளியாக மாற்றப்பட்டன: அங்குச் செடிகள் என்றுமே கனியாத காய்களைக் கொடுக்கின்றன: பற்றுறதியில்லா ஆன்மாவின் நினைவுச்சின்னமான உப்புத்பணும் அங்கேதான் நின்றுகொண்டிருக்கிறது.

அவர்கள் ஞானத்தை ஒரு பொருட்டாகக் கருதாததால், நன்மையைக் கண்டுணர இயலாமற்போனார்கள்: மேலும், தங்கள் அறிவின்மையின் அடையாளத்தை மனித இனத்திற்கு விட்டுச் சென்றார்கள். அதனால் அவர்கள் செய்த தவறுகள் புலப்படாமற் போகா.

ஆனால் தனக்குப் பணிபுரிந்தவர்களை ஞானம் துன்ப துயரங்களிலிருந்து விடுவித்தது.

தம் சகோதரனின் சினத்துக்குத் தப்பியோடிய நீதிமான் ஒருவரை ஞானம் நேர்மையான வழியில் நடத்திச் சென்றது: இறையரசை அவருக்குக் காட்டியது: வானபதர்பற்றிய அறிவை அவருக்குக் கொடுத்தது: உழைப்பில் அவர் வளமையுறச் செய்தது: அவரது உழைப்பின் பயனைப் பெருக்கியது.

அவரை ஒடுக்கியோர் பேரவாக் கொண்டபோது அது அவருக்குத் துணை நின்று, அவரைச் செல்வராக்கியது.

பகைவரிடமிருந்து அது அவரைப் பாதுகாத்தது: தாக்கப் பதுங்கியிருந்தோரிடமிருந்து அவரைக் காப்பாற்றியது: கடும் போராட்டத்தில் அவருக்கு வெற்றி தந்தது. இவ்வாறு இறைப்பற்று எல்லாவற்றையும்விட வலிமை மிக்கது என்று அவர் உணரச் செய்தது.

நீதிமான் ஒருவர் விலைக்கு விற்கப்பட்டபொழுது ஞானம் அவரைக் கைவிடவில்லை: பாவத்திலிருந்து அவரை விடுவித்தது.

இருட்டறைக்குள் அவரோடு அது இறங்கிச் சென்றது: அரச செங்கோலையும், அவரை ஒடுக்கியோர்மீது அதிகாரத்தையும் அவருக்கு அளிக்கும்வரை விலங்கிடப்பட்டிருந்த அவரை விட்டு அது விலகவில்லை. அவர்மேல் குற்றம் சுமத்தியோர் பொய்யர் என்பதை மெய்ப்பித்தது: அவருக்கோ முடிவில்லா மாட்சியை அளித்தது.

ஒடுக்கிய மக்களினத்தாரிடமிருந்து பய மக்களையும் மாசற்ற வழி மரபினரையும் ஞானம் விடுவித்தது.

அது ஆண்டவருடைய ஊழியர் ஒருவரின் ஆன்மாவில் நுழைந்தது. கொடிய மன்னர்களை வியத்தகு செயல்களாலும் அடையாளங்களாலும் எதிர்த்து நின்றது.

பயவர்களின் உழைப்புக்கு அது கைம்மாறு கொடுத்தது: வியப்புக்குரிய வழியில் அவர்களை நடத்திச் சென்றது: பகலில் அவர்களுக்கு நிழலாகவும் இரவில் விண்மீன் சுடராகவும் இருந்தது.

செங்கடல்மீது அது அவர்களை அழைத்துச்சென்றது: ஆழ்கடல் வழியாக அவர்களை நடத்திச் சென்றது.

அவர்களின் பகைவர்களை அது நீரினுள் அமிழ்த்தியது: பின், ஆழ்கடலிலிருந்து அவர்களை வெளியே உமிழ்ந்தது.

ஆகையால் நீதிமான்கள் இறைப்பற்றில்லாதவர்களைக் கொள்ளையடித்தார்கள்: ஆண்டவரே, உமது திருப்பெயரைப் பாடிப் புகழ்ந்தார்கள்: வெற்றி அளிக்கும் உமது கைவன்மையை ஒருமிக்கப் போற்றினார்கள்.

ஏனெனில் பேச முடியாதவர்களின் வாயை ஞானம் திறந்தது: குழந்தைகளின் நாவுக்குத் தெளிவான பேச்சைத் தந்தது.

அதிகாரம் 11

பய இறைவாக்கினர் ஒருவரின் வாயிலாக இஸ்ரயேலர்களுடைய செயல்களை ஞானம் சிறப்புறச் செய்தது.

குடியிருப்பாரற்ற பாழ்வெளி வழியாக அவர்கள் பயணம் செய்தார்கள்: மனித நடமாட்டமற்ற இடங்களில் தங்கள் கூடாரங்களை அமைத்தார்கள்.

தங்கள் பகைவர்களை எதிர்த்து நின்றார்கள்: போரிட்டு எதிரிகளைத் துரத்தினார்கள்.

இஸ்ரயேலர்களுக்குத் தாகம் எடுத்தபோது உம்மை மன்றாடினார்கள். உடனே செங்குத்தாக பாறைகளிலிருந்து தண்ணீர் வழிந்தோடியது. கடினமான பாறையிலிருந்து அவர்கள் தாகத்தைத் தணித்துக் கொண்டார்கள்.

எவற்றால் பகைவர்கள் தண்டிக்கப்பட்டார்களோ அவற்றாலேயே சிக்கலான நேரங்களில் இஸ்ரயேலர் நன்மை அடைந்தார்கள்.

குழந்தைகளைக் கொல்லவேண்டும் என்று எதிரிகள் பிறப்பித்திருந்த ஆணையைக் கண்டிக்க, வற்றாத ஊற்றிலிருந்து ஓடும் ஆற்று நீருக்கு மாறாக, குருதியால் கலங்கி மாசுபட்ட நீரை அவர்களுக்குக் கொடுத்தீர்:

இஸ்ரயேலருக்கோ எதிர்பாரா வகையில் மிகுதியான தண்ணீர் வழங்கினீர்.

அவர்களுடைய பகைவரை எவ்வாறு தண்டித்தீர் என்பதை அவ்வேளையில் அவர்களை வாட்டிய தாகத்தால் காட்டினீர்.

இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட பொழுது இரக்கத்தால் பயிற்றுவிக்கப்பட்டனர் என்றும், கடவுள் சினம்கொண்டு தீர்ப்பளிக்கும்பொழுது இறைப்பற்றில்லாதவர்கள் எவ்வாறு வதைக்கப்படுவார்கள் என்றும் இதன் வாயிலாக அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

ஏனெனில் ஒரு தந்தை எச்சரிப்பதுபோல, நீர் இஸ்ரயேலரைச் சோதித்தீர். ஆனால் இரக்கமற்ற மன்னர் தீர்ப்பு அளிப்பதுபோல, நீர் எதிரிகளைக் கூர்ந்து சோதித்துப் பார்த்தீர்.

இஸ்ரயேலர்களுக்கு அருகில் இருந்தபோதும், தொலைவில் இருந்தபோதும், எகிப்தியர்கள் பெருந்துயருற்றார்கள்.

இருமடங்கு துயரம் அவர்களை ஆட்கொண்டது. கடந்த கால நிகழ்ச்சிகளை நினைத்து, ஏங்கிப் பெருமூச்சு விட்டார்கள்.

தங்களுக்கு வந்துற்ற தண்டனைகளால் நீதிமான்கள் நன்மை அடைந்தார்கள் என்று எகிப்தியர்கள் கேள்வியுற்றபோது, அது ஆண்டவரின் செயல் என்று உணர்ந்து கொண்டார்கள்.

எவரை முன்னொரு காலத்தில் குழந்தையாக இருந்தபோது அவர்கள் வெளியே எறிந்தார்களோ, எவரை நகைத்துப் புறக்கணித்தார்களோ, அவர்களைக் குறித்தே நிகழிச்சிகளின் முடிவில் வியப்புற்றார்கள். ஏனெனில், நீதிமான்கள் கண்டிராத தாகத்தை எதிரிகள் கொண்டிருந்தார்கள்.

எகிப்தியர்கள் பகுத்தறிவற்ற பாம்புகளையும் பயனற்ற விலங்குகளையும் வணங்கினார்கள். இவ்வாறு நெறி தவறத் பண்டிய அவர்களுடைய அறிவற்ற தீய எண்ணங்களுக்காக அவர்களைப் பழிவாங்கும் பொருட்டு, பகுத்தறிவில்லா உயிரினங்களின் கூட்டத்தை அவர்கள்மீது நீர் ஏவி விட்டீர்.

ஒருவர் எதனால் பாவம் செய்கிறாரோ அதனாலேயே அழிந்து போவார் என்பதை இதனால் அவர்களுக்கு அறிவுறுத்தினீர்.

ஏனெனில் உருவமற்ற பருப்பொருளைக் கொண்டு உலகைப் படைத்த எல்லாம் வல்ல உமது கைவன்மைக்கு கரடிகளின் கூட்டத்தையோ துணிவுள்ள சிங்கங்களையோ அவர்கள்மிது அனுப்பி வைப்பது முடியாததன்று.

புதிதாகப் படைக்கப்பட்ட, முன்பின் பார்த்திராத, சீற்றம் நிறைந்த காட்டு விலங்குகளையோ, வெப்ப மூச்சுவிடும் விலங்குகளையோ, ஏப்பமாக அடர்ந்த புகைப்படலத்தை வெளியிடும் விலங்குகளையோ, கண்களில் தீப்பொறி பறக்கும் விலங்குகளையோ, அவர்கள்மீது அனுப்பி வைப்பது உம் கைவன்மைக்கு இயலாததன்று.

அவை மனிதர்களைத் தாக்கி முற்றிலும் அழித்துவிடக் கூடியவை மட்டுமல்ல, தங்கள் தோற்றத்தாலேயே அவர்களை அச்சுறுத்திக் கொன்றுவிடக்கூடியவை.

இவை இன்றியே மனிதர்கள் ஒரே மூச்சினால் வீழ்த்தப்பட்டிருப்பார்கள். நீதியால் துரத்தப்பட்டு, உமது ஆற்றலின் மூச்சினால் சிதறடிக்கப்பட்டிருப்பார்கள். ஆயினும் நீர் அனைத்தையும் அளவோடும் கணக்கோடும் நிறையோடும் ஏற்பாடு செய்தீர்.

உமது மாபெரும் ஆற்றலை எப்போது நீர் காட்ட இயலும். உமது கைவன்மையை எதிர்த்து நிற்க எவரால் இயலும்?

தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் பசிபோலவும் நிலத்தின் மீது விழும் காலைப்பனியின் ஒரு சிறு துளி போலவும் உலகம் முழுவதும் உம் கண்முன் உள்ளது.

நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார்மீதும் இரங்குகின்றீர்: மனிதர்கள் தங்களுடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த்ததும் பாராமல் இருக்கின்றீர்.

படைப்புகள் அனைத்தின்மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்!

உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்? அல்லது, உம்மால் உண்டாக்கப்படாதிருந்தால் எதுதான் காப்பாற்றப்படக்கூடும்?

ஆண்டவரே, உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்: ஏனெனில் அவை யாவும் உம்முடையன.

அதிகாரம் 12

உம்முடைய அழியா ஆவி எல்லாவற்றிலும் உள்ளது.

ஆகையால் தவறு செய்பவர்களைச் சிறிது சிறிதாய்ச் திருத்துகின்றீர்: அவர்கள் எவற்றால் பாவம் செய்கிறார்களோ அவற்றை நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்: ஆண்டவரே, அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும் உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்.

உமது திருநாட்டில் பண்டுதொட்டே வாழ்ந்து வந்தோரின்

அருவருப்புக்குரிய நடத்தை, மந்திரவாதச் செயல்கள், நெறிகெட்ட வழிபாட்டுமுறைகள் ஆகியவற்றுக்காக அவர்களை வெறுத்தீர்.

இரக்கமின்றிக் குழந்தைகளைக் கொலைசெய்தோர், மனித சதையையும் குருதியையும் பலிவிருந்தாக உண்டோர். வேற்றின வழிபாட்டுச் சடங்குகளில் புகுமுகம் செய்யப்பட்டோர்,

தற்காப்பற்ற தங்கள் பிள்ளைகளைக் கொலைசெய்த பெற்றோர் ஆகியோரை எங்கள் மூதாதையரின் கைகளால் அழிக்கத் திருவுளங்கொண்டீர்.

நாடுகளிலெல்லாம் நீர் மிகுதியாக மதிக்கின்ற நாடு கடவுளின் மக்கள் குடியேறுவதற்குத் தகுதியாகும்படி இவ்வாறு செய்தீர்.

இருப்பினும், அவர்களும் மனிதர்களே என்பதால் அவர்களை விட்டு வைத்தீர்: உம் படைகளின் முன்னோடிகளாக மலைக்குளவிகளை அனுப்பி வைத்தீர்: இவ்வாறு அவர்களைச் சிறிது சிறிதாக அழித்தீர்.

ஏனெனில் இறைப்பற்றில்லாதவர்களைப் போர்க்களத்தில் நீதிமான்களின் கையில் ஒப்படைப்பதும், கொடிய காட்டு விலங்குகளாலோ, ஒரு கடுஞ்சொல்லாலோ ஒரே நொடியில் அழிப்பதும் உம்மால் இயலாத செயலன்று.

அவர்கள் தீய தலைமுறையினர் என்பதும், தீமை அவர்களது இயல்போடு இணைந்துவிட்டது என்பதும், அவர்களது சிந்தனை முறை ஒருபோதும் மாறாது என்பதும் உமக்குத் தெரியாதனவல்ல. இருப்பினும் நீர் அவர்களைச் சிறிதுசிறிதாய்த் தண்டித்து, மனந்திரும்ப அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தீர்.

அவர்கள் ஆதிமுதலே சாபத்துக்கு உட்பட்ட வழிமரபினர். அவர்களுடைய பாவங்களை நீர் தண்டியாமல் விட்டீர். எவருக்கும் அஞ்சி நீர் அவ்வாறு செயல்படவில்லை. 12.. நீர் என்ன செய்தீர்? என்று கேட்பவர் யார்? உமது நீதித்தீர்ப்பை எதிர்ப்பவர் யார்? நீர் உண்டாக்கிய மக்களினத்தாரின் அழிவுபற்றி உம்மீது குற்றம் சுமத்துபவர் யார்? நீதியற்றோரை நீர் பழிவாங்கும்போது, அவர்கள் சார்பாக உம் திருமுன் பரிந்துரைப்பவர் யார்?

ஏனெனில் உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. எல்லாவற்றின்மீதும் நீர் கருத்தாய் இருக்கிறீர். முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை யாரிடம் காட்டவேண்டும்?

நீர் தண்டித்தவர்கள் சார்பாக உம்மை எதிர்த்து நிற்க எந்த மன்னராலும் தலைவராலும் முடியாது.

நீர் நேர்மையுள்ளவர்: அனைத்தையும் நீதியோடு ஆண்டுவருகின்றீர். தண்டிக்கத்தகாதவர்களைத் தண்டிப்பது உமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என நீர் அறிவீர்.

உமது ஆற்றலே நீதியின் ஊற்று. அனைத்தின்மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமை அனைத்தையும் வாழும்படி விட்டு வைக்கிறது.

மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஜயுறும்போது நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்: அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர்.

நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்: மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர். ஏனெனில் நீர் விரும்பும்போதெல்லாம் செயல்புரிய உமக்கு வலிமை உண்டு.

நீதிமான்கள் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பதை இச்செயல்கள் வாயிலாக உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்: உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்: ஏனெனில் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.

உம் ஊழியர்களின் பகைவர்கள் சாவுக்குரியவர்களாய் இருந்தும், மிகுந்த கனிவோடும் இரக்கத்தோடும் அவர்களைத் தண்டித்தீர்: அவர்கள் தங்கள் தீச்செயல்களை விட்டுவிடும் பொருட்டு, காலமும் வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுத்தீர்.

உம் மக்களுக்கு நீர் எவ்வளவோ கண்டிப்போடு தீர்ப்பு வழங்கினீர்! அவர்களுடைய மூதாதையர்களுக்கு நல்ல வாக்குறுதிகள் நிறைந்த ஆணைகளையும் உடன்படிக்கைகளையும் அளித்தீரன்றோ!

நீர் எங்களை நல்வழிப்படுத்தக் கண்டிக்கிறீர்: எங்கள் பகைவர்களையோ பத்தாயிரம் மடங்கு மிகுதியாகத் தண்டிக்கிறீர். நாங்கள் தீர்ப்பு வழங்கும்போது உமது நன்மையை நினைவுகூரவும், நாங்களே தீர்ப்புக் உள்ளாகும்போது உமது இரக்கத்தை எதிர்பார்க்கவும் இவ்வாறு செய்கிறீர்.

அறிவின்மையிலும் நீதியின்மையிலும் வாழ்க்கை நடத்தியவர்களை அவர்களுடைய அருவருக்கத்தக்க செயல்களாலேயே தண்டீத்தீர்.

அவர்கள் தவறான வழியல் நெடுந்தொலை சென்றுவிட்டார்கள்: விலங்குகளுக்குள்ளேயே மிகவும் அருவருக்கத்தக்கவற்றைத் தெய்வங்களாகக் கொண்டார்கள்: அறிவில்லாக் குழந்தைகள்போல் ஏமாந்து போனார்கள்.

எனவே அறிவுத்தெளிவு பெறாத குழந்தைகளை ஏளனம் செய்வதுபோல் அவர்களை ஏளனம் செய்ய உமது தீர்ப்பை அனுப்பினீர்.

இத்தகைய சிறு கண்டிப்புகளினின்று வரும் எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்க்காதவர்கள் கடவுளின் தக்க தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக நேரிடும்.

அவர்கள் எந்தப் படைப்புகளைத் தெய்வங்களாகக் கருதினார்களோ அவற்றாலேயே தண்டிக்கப்பட்டார்கள்: ஆகையால் துன்புற்று எரிச்சலுற்றார்கள்: தாங்கள் ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்தவரையே இப்பொழுது உண்மையான கடவுள் என்று அறிந்து ஏற்றுக்கொண்டார்கள். எனவே மிகக் கடுந்தண்டனை அவர்கள்மேல் வந்து விழுந்தது.

அதிகாரம் 13

கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள். கண்ணுக்குப் புலப்படும் நல்லவற்றினின்று இருப்பவரைக் கண்டறிய முடியாதோர் ஆனார்கள். கைவினைகளைக் கருத்தாய் நோக்கியிருந்தும் கைவினைஞரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

மாறாக, தீயோ, காற்றோ, சூறாவளியோ, விண்மீன்களின் சுழற்சியோ, அலைமோதும் வெள்ளமோ, வானத்தின் சுடர்களோதாம் உலகை ஆளுகின்ற தெய்வங்கள் என்று அவர்கள் கருதினார்கள்.

அவற்றின் அழகில் மயங்கி அவற்றை அவர்கள் தெய்வங்களாகக் கொண்டார்கள் என்றால், அவற்றிற்கெல்லாம் ஆண்டவர் அவற்றினும் எத்துணை மேலானவர் என அறிந்துகொள்ளட்டும்: ஏனெனில் அழகின் தலையூற்றாகிய கடவுளே அவற்றை உண்டாக்கினார்.

அவற்றின் ஆற்றலையும் செயல்பாட்டையும் கண்டு அவர்கள் வியந்தார்கள் என்றால், அவற்றையெல்லாம் உருவாக்கியவர் அவற்றைவிட எத்துணை வலிமையுள்ளவர் என்பதை அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும்.

ஏனெனில் படைப்புகளின் பெருமையினின்றும் அழகினின்றும் அவற்றைப் படைத்தவரை ஒப்புநோக்கிக் கண்டுணரலாம்.

இருப்பினும், இம்மனிதர்கள் சிறிதளவே குற்றச்சாட்டுக்கு உரியவர்கள். ஏனெனில் கடவுளைத் தேடும்போதும் அவரைக் கண்டடைய விரும்பும்போதும் ஒருவேளை அவர்கள் தவறக்கூடும்.

அவருடைய வேலைப்பாடுகளின் நடுவே வாழும்பொழுது கடவுளை அவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் காண்பதையே நம்பிவிடுகின்றார்கள்: ஏனெனில் அவை அழகாக உள்ளன.

இருப்பினும், அவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது!

உலகை ஆராய்ந்தறியும் அளவுக்கு ஆற்றல் அவர்களுக்கு இருந்த போதிலும், இவற்றுக்கெல்லாம் ஆண்டவரை இன்னும் மிக விரைவில் அறியத் தவறியது ஏன்?

ஆனால் பொன், வெள்ளியால் திறமையாக உருவாக்கப்பட்டவையும், விலங்குகளின் சாயலாய்ச் செய்யப்பட்டவையுமான மனிதக் கைவேலைப்பாடுகளையோ பண்டைக் காலக் கைவேலைப்பாடாகிய பயனற்றக் கல்லையோ தெய்வங்கள் என்று அழைத்தவர்கள் இரங்கத் தக்கவர்கள்: செத்துப்போனவற்றின்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள்.

திறமையுள்ள தச்சர் ஒருவர் எளிதில் கையாளக்கூடிய மரம் ஒன்றை வெட்டுகிறார்: அதன் மேற்பட்டைகளையெல்லாம் நன்றாக உரிக்கிறார்: பிறகு அதைக்கொண்டு வாழ்வின் தேவைகளுக்குப் பயன்படும் ஒரு பொருளைச் சிறந்த வேலைப்பாடுகளுடன் செய்கிறார்.

வேலைக்குப் பயன்படாத மரக்கழிவுகளை எரித்து, உணவு தயாரித்து, வயிறார உண்கிறார்.

ஆயினும் அவற்றுள் எஞ்சியதும், ஒன்றுக்கும் உதவாததும், கோணலும் மூட்டுமுடிச்சுகளும் நிறைந்ததுமான ஒரு மரத்துண்டை அவர் எடுத்து, ஓய்வு நேரத்தில் அதைக் கருத்தாய்ச் செதுக்கி, கலைத்திறனோடு அதை இழைத்து, மனிதரின் சாயலில் அதை உருவாக்குகிறார்.

அல்லது ஒரு பயனற்ற விலங்கின் உருவத்ததைச் செய்து, செந்நிறக் கலவையால் அதைப் பூசி, அதன் மேற்பரப்பில் உள்ள சிறு பள்ளங்களை அவர் சிவப்பு வண்ணம் பூசி மறைக்கிறார்.

அதற்குத் தகுந்ததொரு மாடம் செய்து, அதைச் சுவரில் ஆணியால் பொருத்தி, அதில் சிலையை வைக்கிறார்:

தனக்குத்தானே உதவி செய்ய முடியாது என்பதை அறிந்து, அது விழாதபடி பார்த்துக் கொள்கிறார்: ஏனெனில் அது வெறும் சிலைதான்: அதற்கு உதவி தேவை.

அவர் தம்முடைய உடைமைகளுக்காகவும் திருமணத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் வேண்டும்போது உயிரற்ற ஒரு சிலையுடன் பேச வெட்கப்படுவதில்லை: வலிமையற்ற ஒன்றிடம் உடல்நலத்திற்காக வேண்டுகிறார்.

செத்துப்போன ஒன்றிடம் வாழ்வுக்காக மன்றாடுகிறார்: பட்டறிவு இல்லாத ஒன்றிடம் உதவி கேட்கிறார்: ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாத ஒன்றிடம் இறைஞ்சுகிறார்.

பொருள் ஈட்டத்திலும் அலுவலிலும் செயல்பாட்டிலும் வெற்றி தரும்படி வலுவற்ற ஒன்றிடம் அவர் வேண்டுகிறார்.

அதிகாரம் 14

மேலும், கடற்பயணம் செய்யும் நோக்குடன் கொந்தளிக்கும் அலை கடலைக் கடக்கவிருக்கும் ஒருவர் தம்மைத் தாங்கிச் செல்லும் மரக்கலத்தைவிட எளிதில் உடைபடும் மரக்கட்டையிடம் மன்றாடுகிறார்.

செல்வம் சேர்க்கும் ஆவல் அந்த மரக்கலத்தைக் கட்டத் திட்டமிட்டது. ஞானம் கைவினைஞராகச் செயல்பட்டு அதைக் கட்டி முடித்தது.

ஆனால், தந்தையே உமது பாதுகாப்பு அதை இயக்கிவருகிறது: ஏனெனில் கடலில் அதற்கு ஒரு வழி அமைத்தீர்: அலைகள் நடுவே பாதுகாப்பான பாதை வகுத்தீர்.

இவ்வாறு எல்லா இடர்களிலிருந்தும் நீர் காப்பாற்ற முடியும் எனக் காட்டினீர். இதனால், திறமையற்றோர் கூடக் கடலில் பயணம் செய்ய முடியும்.

உமது ஞானத்தின் செயல்கள் பயனற்றவை ஆகக்கூடா என்பது உமது திருவுளம் எனவே மனிதர்கள் மிகச் சிறிய மரக்கட்டையிடம் தங்கள் உயிரையே ஒப்படைத்து, கொந்தளிக்கும் கடலில் அதைத் தெப்பமாகச் செலுத்தி, பாதுகாப்புடன் கரை சேர்கின்றார்கள்.

ஏனெனில் தொடக்க காலத்தில் கூட, செருக்குற்ற அரக்கர்கள் அழிந்தபோது, உலகின் நம்பிக்கை ஒரு தெப்பத்தில் புகலிடம் கண்டது. உமது கை வழிகாட்ட, அந்நம்பிக்கை புதிய தலைமுறைக்கு வித்திட்டது.

நீதியை உருவாக்கும் மரம் வாழ்த்துக்குரியது.

ஆனால் கைவேலைப்பாடாகிய சிலை சபிக்கப்பட்டது. அதைச் செய்தவரும் அவ்வாறே சபிக்கப்பட்டவர். ஏனெனில் அவரே அதைச் செய்தார். அது அழியக்கூடியதாயிருந்தும், தெய்வம் என்று அழைக்கப்பட்டது.

இறைப்பற்றில்லாதோரையும் அவர்களது இறைப்பற்றின்மையையும் கடவுள் ஒருங்கே வெறுக்கின்றார்.

ஏனெனில் செய்தவரோடு அவர் செய்த வேலையும் ஒருமிக்கத் தண்டிக்கப்படும்.

எனவே வேற்றினத்தா¡ன் சிலைகளும் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகும்: ஏனெனில் கடவுளின் படைப்புகளேயாயினும், அவை மிக அருவருப்பானவையாக மாறிவிட்டன: அவை மனிதரின் ஆன்மாக்களுக்கு இடறல்கள்: அறிவிலிகளின் கால்களுக்குக் கண்ணிகள்.

சிலைகள் செய்யத் திட்டமிட்டதே விபசாரத்தின் தொடக்கம். அவற்றைக் கண்டுபிடித்ததே வாழ்வின் அழிவு.

அவை தொடக்கமுதல் இருந்ததில்லை: என்றென்றும் இருக்கப்போவதுமில்லை.

மனிதரின் வீண்பெருமையினால் அவை உலகில் நுழைந்தன: எனவே அவை விரைவில் முடியும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

இளமையில் தம் மகன் இறந்ததால், ஆறாத்துயரில் மூழ்கியிருந்த தந்தை ஒருவர் விரைவில் தம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட அவனது சிலையைச் செய்தார். முன்பு இறந்து விட்ட மனிதப் பிறவியைப் பின்பு தெய்வப் பிறவியாகக் கொண்டாடினார். மறைவான சமயச் சடங்குகளையும் வழிபாடுகளையும் வழிவழியாகச் செய்யுமாறு தம் பணியாளரைப் பணித்தார்.

இந்தத் தீய பழக்கம் காலப் போக்கில் வேரூன்றி சட்டம் போலப் பின்பற்றப்படலாயிற்று.

மன்னர்களின் ஆணைப்படி மக்கள் சிலைகளை வணங்கலானார்கள். தாங்கள் தொலையில் வாழ்ந்துவந்த காரணத்தால், தங்கள் மன்னரை நேரில் பெருமைப்படுத்த முடியாத மக்கள் தொலையிலிருந்தே அவருடைய உருவத்தைக் கற்பனை செய்தார்கள்: அதைக் காணக்கூடிய சிலையாக வடித்து அதற்கு வணக்கம் செலுத்தினார்கள்: இவ்வாறு, தொலைவில் இருந்தவரை எதிரில் இருந்தவர் போலக் கருதி, தங்கள் ஆர்வத்தில் அவரை மிகைப்படப் புகழ்ந்தார்கள்.

மன்னரை அறியாதவர்கள் நடுவிலும் “மன்னர் வழிபாட்டை“ப் பரப்ப, சிற்பியின் புகழார்வம் அவர்களைத் பண்டிற்று.

ஏனெனில் சிற்பி தம்மை ஆள்பவரை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்குடன் தம் திறமையெல்லாம் கூட்டி, அச்சிலையை மிக அழகாகச் செய்திருக்கலாம்.

அவருடைய வேலைப்பாட்டின் அழகில் மயங்கிய மக்கள்திரள் சற்றுமுன்பு வெறும் மனிதராகப் போற்றிய ஒருவரைப் பின்னர் வழிபாட்டுக்குரியவராகக் கருதியிருக்கலாம்.

இது மன்பதையே வீழ்த்தும் ஒரு சூழ்ச்சி ஆயிற்று. ஏனெனில் மனிதர் பேரிடருக்கோ கொடுங்கோன்மைக்கோ ஆளாகி, கடவுளுக்கே உரிய பெயரைக் கற்களுக்கும் மரங்களுக்கும் கொடுத்தனர்.

கடவுளைப்பற்றிய அறிவில் மனிதர்கள் தவறியது மட்டுமன்றி, அறியாமையால் பெரும் போராட்டத்தில் வாழ்கிறார்கள்: இத்தகைய தீமைகளை அமைதி என்று அழைக்கிறார்கள்.

புகுமுகச் சடங்குகளில் அவர்கள் குழந்தைகளைப் பலியிட்டாலும், மறைவான சமயச் சடங்குகளைக் கொண்டாடினாலும், வேற்றினப் பழக்கவழக்கங்கள் கொண்ட வெறியூட்டும் களியாட்டங்களை நடத்தினாலும்,

தங்கள் வாழ்வையும் திருமணத்தையும் மாசுபடாமல் காப்பதில்லை. அவர்கள் நயவஞ்சமாக ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள்: அல்லது விபசாரத்தால் ஒருவர் மற்றவருக்குத் துயர் விளைவிக்கிறார்கள்.

இதன் விளைவாக எங்கும் ஒரே குழப்பம், குருதி, கொலை, களவு, வஞ்சகம், ஊழல், பற்றுருதியின்மை, கிளர்ச்சி, பொய்யாணை.

நல்லவைப் பற்றிய குழப்பம், செய்நன்றி மறத்தல், ஆன்மாக்களைக் கறைப்படுத்துதல், இயல்புக்கு மாறான காமவேட்கை, மணவாழ்வில் முறைகேடு, விபசாரம், வரம்புமீறிய ஒழுக்கக்கேடு!

பெயரைக்கூடச் சொல்லத் தகாத சிலைகளின் வழிபாடே எல்லாத் தீமைகளுக்கும் முதலும் காரணமும் முடிவும் ஆகும்.

அவற்றை வணங்குவோர் மகிழ்ச்சியால் வெறிபிடித்தவர் ஆகின்றனர்: அல்லது பொய்யை இறைவாக்காக உரைக்கின்றனர்: அல்லது நேர்மையாக வாழ்வதில்லை: அல்லது எளிதாகப் பொய்யாணையிடுகின்றனர்.

உயிரற்ற சிலைகள் மீது நம்பிக்கை வைப்பதால், அவர்களை பொய்யாணையிட்டாலும் தங்களுக்குத் தீங்கு நேரிடும் என எதிர்பார்ப்பதில்லை.

இரு காரணங்களுக்காக அவர்கள் நீதியுடன் தண்டிக்கப்படுவார்கள்: சிலைகளுக்குத் தங்களை அர்ப்பணித்ததன்மூலம் கடவுளைப்பற்றிய தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள்: பய்மையை இகழ்ந்து, வஞ்சகத்தோடு நீதிக்கு முரணாக ஆணையிட்டார்கள்.

ஏனெனில் எவற்றைக் கொண்டு மனிதர்கள் ஆணையிடுகிறார்களோ அவற்றின் ஆற்றல் அவர்களைத் தண்டிப்பதில்லை. மாறாக, பாவிகளுக்குரிய நீதித் தீர்ப்பே நெறிகெட்டோரின் குற்றங்களை எப்பொழுதும் தண்டிக்கிறது.

அதிகாரம் 15

எங்கள் கடவுளே, நீர் பரிவும் உண்மையும் பொறுமையும் உள்ளவர்: அனைத்தையும் இரக்கத்துடன் ஆண்டுவருகின்றீர்.

நாங்கள் பாவம் செய்தாலும் உம்முடையவர்களே: ஏனெனில் உமது ஆற்றலை அறிவோம். நாங்கள் இனிப் பாவம் செய்யமாட்டோம்: ஏனெனில் உம்முடையவர்களாக நீர் எங்களை எண்ணுவதை நாங்கள் அறிவோம்.

உம்மை அறிதலே நிறைவான நீதி: உமது ஆற்றலை அறிதலே இறவாமைக்கு ஆணிவேர்.

தீய நோக்குடைய மனிதரின் திறமைகள் எங்களைத் திசைதிருப்பிவிடவில்லை: ஓவியரின் பயனற்ற உழைப்பாகிய பல வண்ணம் தீட்டிய உருவமும் எங்களை ஏமாற்றிவிடவில்லை.

அறிவிலிகள் அவற்றின்மீது பேராவல் கொள்ளுமாறு அவற்றின் தோற்றமே பண்டி விடுகிறது. அதனால் செத்துப்போன சாயலின் உயிரற்ற உருவத்தை அவர்கள் விரும்புகிறார்கள்.

அவற்றைச் செய்பவர்களும் அவற்றின்மீது ஆவல் கொள்பவர்களும் அவற்றை வணங்குபவர்களும் தீமையை விரும்புகிறார்கள்: இத்தகைய சிலைகளில் அவர்கள் நம்பிக்கைகொள்ளத் தகுந்தவர்களே.

குயவர்கள் வருந்தி உழைத்து, மென்மையான களிமண்ணைப் பிசைந்து, நம்முடைய தேவைக்காக ஒவ்வொரு மண்கலத்தையும் வனைகிறார்கள்: ஒரே மண்ணைக் கொண்டுதான் நல்ல வகையிலும் மாறான வகையிலும் பயன்படுகிற கலங்களைச் செய்கிறார்கள்: இவற்றில் ஒவ்வொன்றும் எவ்வகையில் பயன்படவேண்டும் என்பதைக் குயவர்களே முடிவு செய்கிறார்கள்.

வீணில் உழைத்து அதே களிமண்ணால் பயனற்ற தெய்வம் ஒன்றை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்களே சிறிது காலத்திற்குமுன் அதே மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்: சிறிது காலத்திற்குப்பின், தங்களுக்குக் கடனாகக் கொடுக்கப்பட்ட ஆன்மாக்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டியபொழுது, அவர்கள் எந்த மண்ணிலிருந்து எடுக்கப்பட்டிருந்தார்களோ அந்த மண்ணுக்கே திரும்பிப் போகிறார்கள்.

ஆனால் தாம் சாகவேண்டும் என்பதைப் பற்றியோ, தம் வாழ்நாள் குறுகியது என்பதைப்பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை. மாறாக, பொன், வெள்ளியில் வேலை செய்பவர்களுடன் போட்டியிடுகிறார்கள். வெண்கலத்தில் வேலை செய்கிறவர்களைப்போலச் செய்ய முயல்கிறார்கள்: போலித் தெய்வங்களின் சிலைகளைச் செய்வதில் பெருமை கொள்கிறார்கள்.

அவர்களுடைய இதயம் வெறும் சாம்பல். அவர்களது நம்பிக்கை புழுதியிலும் கீழானது. அவர்களது வாழ்க்கை களிமண்ணினும் இழிவானது.

ஏனெனில் தங்களை உருவாக்கியவரும் தங்களுக்குள் ஆற்றல்மிக்க ஆன்மாவைப் புகுத்தியவரும் உயிர்மூச்சை ஊதியவரும் யார் என்று அவர்கள் அறியவில்லை.

அவர்களோ நம் வாழ்க்கையை ஒருவகை விளையாட்டாகவும், நம்முடைய வாழ்நாளைப் பணம் சேர்க்கக் கூடிய ஒரு திருவிழாச் சந்தையாகவும் கருதுகிறார்கள்: ஏனெனில் ஒருவர் எவ்வழியாலும் ஏன், தீய வழியாலுங்கூட, பணம் சேர்க்கவேண்டும் எனச் சொல்லிக்கொள்கிறார்கள்.

உடையக்கூடிய மண்கலங்களையும் வார்ப்புச் சிலைகளையும் அவர்கள் செய்யும்போது தாங்கள் பாவம் செய்வதை மற்றெல்லாரையும்விட நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

உம் மக்களை ஒடுக்கிய பகைவர்கள் அனைவரும் மற்ற யாவரினும் அறிவிலிகள்: சிறு குழந்தைகளைவிட இரங்குதற்குரியவர்கள்.

ஏனெனில் வேற்றினத்தாரின் சிலைகள் கண்களால் காணவோ, மூக்கினால் மூச்சு விடவோ, காதுகளால் கேட்கவோ, விரல்களால் தொட்டுணரவோ, கால்களால் நடக்கவோ முடியாதபோதிலும் அவற்றையெல்லாம் தெய்வங்கள் என்று இவர்கள் எண்ணினார்கள்.

அவற்றைச் செய்தவர்கள் வெறும் மனிதர்களே: அவற்றை உருவாக்கியவர்கள் தங்களது உயிரைக் கடனாகப் பெற்றவர்கள். ஆனால் தங்களுக்கு இணையான ஒரு தெய்வத்தை எந்த மனிதரும் உருவாக்க முடியாது.

அவர்களோ சாகக்கூடியவர்கள். நெறிகெட்ட தங்கள் கைகளால் அவர்கள் செய்வது உயிரற்றதே! தாங்கள் வணங்குகிற சிலைகளைவிட அவர்கள் மேலானவர்கள்: ஏனெனில் அவர்களுக்கு உயிர் உண்டு: அவற்றுக்கோ ஒருபோதும் உயிரில்லை.

மேலும், உம் மக்களின் பகைவர்கள் மிகவும் அருவருப்பான விலங்குகளைக் கூட வணங்குகிறார்கள்: அறிவின்மையை வைத்து ஒப்பிடும் போது, இவை மற்றவற்றைவிடத் தாழ்ந்தவை.

விலங்குகள் என்னும் அளவில்கூட, மனிதர்கள் விரும்பும் அழகு அவற்றின் தோற்றத்தில் இல்லை. இறைவன் தம் படைப்பைப் பாராட்டி ஆசி வழங்கியபொழுது, அவை ஒதுங்கிப் போய்விட்டன.

அதிகாரம் 16

எனவே அவர்கள் அவற்றைப் போன்ற உயிரினங்களால் தக்கவாறு தண்டிக்கப்பட்டார்கள்: விலங்குக் கூட்டத்தால் வதைக்கப்பட்டார்கள்.

இத்தகைய தண்டனைக்கு மாறாக நீர் உம் மக்களுக்குப் பரிவு காட்டினீர்: சுவை மிகுந்த அரிய உணவாகிய காடைகளை அவர்களுக்கு உண்ணக் கொடுத்தீர்: இவ்வாறு, அவர்களது ஆவலைத் தணித்தீர்.

எகிப்தியர்கள் உணவு அருந்த விரும்பியபோதிலும், அவர்கள்மீது ஏவப்பட்ட அருவருக்கத்தக்க விலங்குகளால் உணவின்மேல் அவர்களுக்கு இருந்த நாட்டமே அற்றுப் போயிற்று. உம் மக்களோ சிறிது காலம் வறுமையில் வாடியபின் அருஞ்சுவை உணவை உண்டார்கள்.

ஏனெனில் கொடுமை செய்தவர்கள் கடுமையான பற்றாக்குறைக்கு ஆளாகவேண்டியிருந்தது. உம் மக்களுக்கோ அவர்களுடைய பகைவர்கள் எவ்வாறு அல்லல் படுகிறார்கள் என்று மட்டும் காட்டவேண்டியிருந்தது.

உம் மக்கள்மேல் காட்டு விலங்குகள் கடுஞ்சீற்றத்துடன் பாய்ந்தபோது, நெளிந்து வந்த நச்சுப் பாம்புகளின் கடியால் அவர்கள் அழிந்துகொண்டிருந்தபோது, உமது சினம் இறுதிவரை நீடிக்கவில்லை.

எச்சரிக்கப்படவேண்டிச் சிறிது காலம் அவர்கள் துன்பத்திற்கு உள்ளானார்கள். உமது திருச்சட்டத்தின் கட்டளையை நினைவூட்ட மீட்பின் அடையாளம் ஒன்று அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

அப்போது அதை நோக்கித் திரும்பியோர் தாங்கள் பார்த்த பொருளால் அன்று, அனைவருக்கும் மீட்பரான உம்மாலேயே மீட்புப் பெற்றார்கள்.

இதனால் எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுவிப்பவர் நீரே என்று எங்கள் பகைவர்களை நம்பச் செய்தீர்.

ஏனெனில் அவர்கள் வெட்டுக்கிளிகளாலும் ஈக்களாலும் கடியுண்டு மாண்டார்கள். அவர்கள் உயிரைக் காப்பதற்கு மருந்து எதுவும் காணப்படவில்லை. அவர்கள் இத்தகையவற்றால் தண்டிக்கப்படத் தக்கவர்கள்.

ஆனால் நச்சுப் பாம்புகளின் பற்களால்கூட உம் மக்களை வீழ்த்த முடியவில்லை. உமது இரக்கம் அவர்களுக்குத் துணைநின்று நலம் அளித்தது.

உம் சொற்களை அவர்கள் நினைவுகூரும் பொருட்டு அவர்கள் கடிபட்டார்கள்: ஆனால் உடனே நலம் அடைந்தார்கள். அவர்கள் ஆழ்ந்த மறதிக்கு உள்ளாகி, உம் பரிவை உதறித்தள்ளாதபடி இவ்வாறு நடந்தது.

பச்சிலையோ களிம்போ அவர்களுக்கு நலம் அளிக்கவில்லை: ஆனால், ஆண்டவரே, உமது சொல்லே எல்லா மனிதர்க்கும் நலம் அளிக்கிறது.

வாழ்வின்மேலும் சாவின்மேலும் உமக்கு அதிகாரம் உண்டு. மனிதர்களைப் பாதாளத்தின் வாயில்வரை கொண்டு செல்கிறீர்: மீண்டும் அங்கிருந்து கொண்டு வருகிறீர்.

மனிதர் தம் தீய பண்பினால் ஒருவரைக் கொன்று விடுகின்றனர். ஆனால் பிரிந்த உயிரை அவர்களால் திருப்பிக் கொணர முடியாது. சிறைப்பட்ட ஆன்மாக்களை அவர்களால் விடுவிக்கவும் முடியாது.

ஒருவரும் உமது கையினின்று தப்ப முடியாது.

உம்மை அறிய மறுத்துவிட்ட இறைப்பற்றில்லாதவர்கள் உமது கைவன்மையால் வதைக்கப்பட்டார்கள்: பேய்மழையாலும் கல்மழையாலும் கடும் புயலாலும் துன்புறுத்தப்பட்டு, தீயால் அறவே அழிக்கப்பட்டார்கள்.

எல்லாவற்றையும்விட நம்பமுடியாதது எது என்றால், அனைத்தையும் அவிக்கக்கூடிய தண்ணீரில் அந்த நெருப்பு இன்னும் மிகுதியாய்க் கொழுந்துவிட்டு எரிந்ததுதான்! ஏனெனில் அனைத்துலகும் நீதிமான்களுக்காகப் போராடுகிறது.

கடவுளின் தண்டனைத் தீர்ப்பு தங்களைப் பின்தொடர்கிறது என்பதை இறைப்பற்றில்லாதவர்கள் கண்டுணருமாறும், அவர்களுக்கு எதிராய் அனுப்பப்பட்ட உயிரினங்கள் எரிந்து விடாதவாறும், நெருப்பின் அனல் சில வேளைகளில் மட்டுப்படுத்தப்பட்டது.

மற்றும் சில வேலைகளில் நீதியற்ற நாட்டின் விளைச்சலை அழிக்கவே தண்ணீர் நடுவிலும் அந்நெருப்பு முன்னைவிட மிகக் கடுமையாக எரிந்தது.

இவற்றுக்கு மாறாக உம் மக்களை வானபதரின் உணவால் ஊட்டி வளர்த்தீர்: எல்லா இனிமையும் பல்சுவையும் கொண்ட உணவை, அவர்களது உழைப்பு இல்லாமலே படைக்கப்பட்ட உணவை வானத்திலிருந்து அவர்களுக்கு அளித்தீர்.

நீர் அளித்த உணவூட்டம் உம் பிள்ளைகள்பால் நீர் கொண்டிருந்த இனிய உறவைக் காட்டியது: ஏனெனில் அந்த உணவு உண்போரின் சுவையுணர்விற்கு ஏற்றவாறு மாறி, அவரவர் விரும்பிய சுவை தந்தது.

கல்மழையில் கனன்றெரிந்து, கடும் மழையில் சுடர்விட்ட நெருப்பே பகைவர்களுடைய விளைச்சலை அழித்தது என்று அவர்கள் அறிந்துகொள்ளுமாறு, பனியும் பனிக்கட்டியும் உருகிடாமல் நெருப்பின் அனலைத் தாங்கின.

ஆனால் அதே நெருப்பு, நீதிமான்கள் ஊட்டம் பெறும்படி தனது இயல்பான ஆற்றலை மீண்டும் மறந்துவிட்டது.

படைத்தவரான உமக்கு ஊழியம் புரிகின்ற படைப்பு நெறிகெட்டோரைத் தண்டிக்க முனைந்து நிற்கிறது: உம்மை நம்பினோரின் நலனை முன்னிட்டு அது பரிவோடு தணிந்து போகிறது.

எனவே அந்நேரத்திலேயே படைப்பு எல்லா வகையிலும் தன்னை மாற்றியமைத்துக் கொண்டது: தேவைப்பட்டவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, எல்லாரையும் பேணிக் காக்கும் உமது வள்ளன்மைக்குப் பணிந்தது.

ஆண்டவரே, மனிதரைப் பேணிக்காப்பது நிலத்தின் விளைச்சல் அல்ல. மாறாக, உமது சொல்லே உம்மை நம்பினோரைக் காப்பாற்றுகிறது என நீர் அன்புகூரும் உம் மக்கள் இதனால் அறிந்துகொள்வார்கள்.

நெருப்பினால் எரிபடாதது காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றாலேயே வெப்பம் அடைந்து எளிதில் உருகிற்று.

கதிரவன் எழுமுன்பே மக்கள் எழுந்து உமக்கு நன்றி கூறவும் வைகறை வேளையில் உம்மை நோக்கி மன்றாடவும் வேண்டும் என்று இதனால் உணர்த்தப்பட்டது.

ஏனெனில் நன்றி கொன்றோரின் நம்பிக்கை குளிர்காலத்து உறைபனிபோல் உருகிவிடும்: பயனற்ற தண்ணீர்போல் ஓடிவிடும்.

அதிகாரம் 17

உம் தீர்ப்புகள் மேன்மையானவை, விளக்கமுடியாதவை. எனவே அவற்றைக் கற்றுத் தெளியாத மனிதர்கள் நெறிதவறினார்கள்.

நெறிகெட்டவர்கள் உமது பய மக்களினத்தை அடிமைப்படுத்த எண்ணியபோது அவர்களே காரிருளின் அடிமைகளாகவும் நீண்ட இரவின் கைதிகளாகவும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு, உமது முடிவில்லாப் பாதுகாப்பினின்று கடத்தப்பட்டார்கள்.

மேலும் மறதி என்னும் இருள் அடர்ந்த திரைக்குப் பின்னால் தங்கள் மறைவான பாவங்களில் மறைந்துகொண்டதாக எண்ணிக் கொண்டிருந்த அவர்கள் அச்சத்தால் நடுங்கியவர்களாய் கொடிய காட்சிகளால் அதிர்ச்சியுற்றுச் சிதறுண்டார்கள்.

அவர்கள் பதுங்கியிருந்த உள்ளறைகள்கூட அவர்களை அச்சத்திலிருந்து விடுவிக்கவில்லை. அச்சுறுத்தும் பேரொலிகள் எங்கும் எதிரொலித்தன. வாடிய முகங்கள் கொண்ட துயர ஆவிகள் தோன்றின.

எந்த நெருப்பின் ஆற்றலாலும் ஒளி கொடுக்க இயலவில்லை: விண்மீன்களின் ஒளி மிகுந்த கூடர்களாலும் இருள் சூழந்த அவ்விரவை ஒளிர்விக்க முடியவில்லை.

தானே பற்றியெரிந்து அச்சுறுத்தும் தீயைத் தவிர வேறு எதுவும் அவர்கள்முன்னால் தோன்றவில்லை. அவர்களோ நடுக்கமுற்று, தாங்கள் காணாதவற்றைவிடக் கண்டவையே தங்களை அச்சுறுத்துவன என்று உணர்ந்தார்கள்.

மந்திரவாதக் கலையின் மாயங்கள் தாழ்வுற்றன. அவர்கள் வீண்பெருமை பாராட்டிய ஞானம் வெறுப்புடன் கண்டிக்கப்பட்டது.

நோயுற்ற உள்ளத்திலிருந்து அச்சத்தையும் குழப்பத்தையும் விரட்டியடிப்பதாக உறுதிகூறியவர்களே நகைப்புக்கிடமான அச்சத்தினால் நோயுற்றார்கள்.

தொல்லை தரக்கூடிய எதுவும் அவர்களை அச்சுறுத்தவில்லை எனினும், கடந்து செல்லும் விலங்குகளாலும் சீறும் பாம்புகளாலும் அவர்கள் நடுக்கமுற்றார்கள். எவ்வகையிலும் தவிர்க்கமுடியாத காற்றைக்கூட

ஏறிட்டுப் பார்க்க மறுத்து, அச்ச நடுக்கத்தால் மாண்டார்கள்.

கயமை தன்னிலே கோழைத்தனமானது. தானே தனக்கு எதிராகச் சான்று பகர்கிறது: மனச்சான்றின் உறுத்தலுக்கு உள்ளாகி இடர்களை எப்பொழுதும் மிகைப்படுத்துகிறது.

அச்சம் என்பது பகுத்தறிவின் துணையைக் கைவிடுவதே.

உதவி கிடைக்கம் என்னும் எதிர்பார்ப்புக் குன்றும்போது, துன்பத்தின் காரணம் அறியாத நிலையை உள்ளம் ஏற்றுக் கொள்கிறது.

உண்மையிலேயே வலிமை சிறிதும் இல்லாததும், ஆற்றலற்ற கீழுலகின் ஆழத்திலிருந்து வந்து கவிந்ததுமான இரவு முழுவதும் அவர்கள் யாவரும் அமைதியற்ற உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

சில வேளைகளில் மாபெரும் பேயுருவங்கள் அடிக்கடி தோன்றி அவர்களை அச்சுறுத்தின: மற்றும் சில வேளைகளில் அவர்களது உள்ளம் ஊக்கம் குன்றிச் செயலற்றுப் போயிற்று. ஏனெனில் எதிர்பாராத திடீர் அச்சம் அவர்களைக் கலங்கடித்தது.

அங்கு இருந்த ஒவ்வொருவரும் கீழே விழுந்தனர்: கம்பிகள் இல்லாச் சிறையில் அடைபட்டனர்.

ஏனெனில் உழவர், இடையர், பாலை நிலத்தில் பாடுபடும் தொழிலாளர் ஆகிய அனைவரும் அதில் அகப்பட்டுத் தவிர்க்க முடியாத முடிவை எதிர்கொண்டனர்: ஏனெனில் அவர்கள் அனைவரும் இருள் என்னும் ஒரே சங்கிலியால் கட்டுண்டனர்.

காற்றின் ஒலி, படர்ந்த கிளைகளிலிருந்து வரும் பறவைகளின் இனிய குரல், பெருக்கெடுத்துப் பாய்ந்துவரும் வெள்ளத்தின் சீரான ஓசை, பெயர்த்துக் கீழே தள்ளப்படும் பாறைகளின் பேரொலி,

கண்ணுக்குப் பலப்படாதவாறு தாவி ஓடும் விலங்குகளின் பாய்ச்சல், கொடிய காட்டு விலங்குகளின் முழக்கம், மலைக் குடைவுகளிலிருந்து கேட்கும் எதிரொலி ஆகிய அனைத்தும் அவர்களை அச்சத்தால் முடக்கிவிட்டன.

உலகெல்லாம் ஒளி வெள்ளத்தில் திளைத்து, தன் வேலையில் தடையின்றி ஈடுபட்டிருந்தது.

இவ்வாறிருக்க, எகிப்தியர்கள்மேல் மட்டும் அடர்ந்த காரிருள் கவிந்து படர்ந்தது. அவர்களை விழுங்கக் குறிக்கப்பட்ட இருளின் சாயல் அது. எனினும் அவர்களே இருளைவிடத் தங்களுக்குத் தாங்க முடியாத சுமையாய் இருந்தார்கள்.

அதிகாரம் 18

உம் பயவர்களுக்கோ பேரொளி இருந்தது. அவர்களுடைய குரலை எதிரிகள் கேட்டார்கள். ஆனால் அவர்களின் உருவங்களைக் காணவில்லை. தங்களைப்போலத் துன்புறாததால் பயவர்களைப் பேறுபெற்றோர் என்று கருதினார்கள்.

அப்பொழுது உம் பயவர்கள் அவர்களுக்குத் தீமை எதுவும் செய்யாததால், எகிப்தியர்கள் நன்றியுணர்வு கொண்டிருந்தார்கள்: தங்களது பழைய பகைமைக்கு மன்னிப்புக் கேட்டார்கள்.

இருளுக்கு மாறான ஒளிப்பிழம்பாம் நெருப்புத் பணை உம் மக்களுக்குக் கொடுத்தீர். முன்பின் அறியாத பாதையில் அது அவர்களுக்கு வழி காட்டியாய் விளங்கியது: மாட்சி பொருந்திய அப்பயணத்தில் அது வெம்மை தணிந்த கதிரவனாய் இருந்தது.

திருச்சட்டத்தின் அழியாத ஒளியை உலகிற்கு வழங்க வேண்டிய உம் மக்களை எகிப்தியர்கள் சிறைப்பிடித்தார்கள். இவ்வாறு, அடைத்துவைத்தவர்களே இருளில் அடைக்கப்படவேண்டியது பொருத்தமே.

எகிப்தியர்கள் உம் பயவர்களின் குழந்தைகளைக் கொல்லத் திட்டமிட்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு குழந்தை மட்டும் சாவிலிருந்து காப்பாற்றப்பட்டது. எகிப்தியர்களைத் தண்டிப்பதற்காக அவர்களின் பெருந்தொகையான குழந்தைகளின் மாய்ந்துவிட்டீர்: அவர்கள் அனைவரையும் பெரும் வெள்ளத்தில் ஒருசேர மூழ்கடித்தீர்.

தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது.

நீதிமான்களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.

நல்லவர்களின் பய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்: நன்மைகளையும் இடர்களையும் ஒன்றுபோலப் பகிர்ந்து கொள்வார்கள் எனினும் இறைச் சட்டத்திற்கு அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்: மூதாதையர்களின் புகழ்ப்பாக்களை அதே வேளையில் பாடிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் பகைவர்கள் கதறியழுத குரல்கள் எதிரொலித்தன: தங்கள் குழந்தைகளுக்காக எழுப்பிய புலம்பல்கள் எங்கும் பரவின.

அடிமையும் தலைவரும் ஒரே வகையில் தண்டிக்கப்பட்டார்கள்: குடிமகனும் மன்னரும் ஒரே பாங்காய்த் துன்புற்றார்கள்:

எண்ணிலடங்காதோர் ஒரே வகைச் சாவுக்கு உள்ளாகி, எல்லாரும் ஒருமிக்க மடிந்து கிடந்தனர். உயிரோடிருந்தவர்களால் அவர்களைப் புதைக்கவும் இயலவில்லை. அவர்களின் பெருமதிப்பிற்குரிய வழித் தோன்றல்கள் ஒரே நொடியில் மாண்டு போனார்கள்.

மந்திரவாதிகளுக்குச் செவிசாய்த்து அவர்கள் எதையுமே நம்ப மறுத்துவிட்டாலும், தங்கள் தலைப்பேறுகள் கொல்லப்பட்ட போது, இம்மக்கள் இறைமக்கள் என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.

எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்துவிட்ட வேளையில்,

எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையைவிட்டு எழுந்து, அஞ்சா நெஞ்சம் கொண்ட போர்வீரனைப்போல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின் மீது வந்து பாய்ந்தது.

உமது தெளிவான கட்டளையாகிய கூரிய வாளை ஏந்தியவண்ணம் அது நின்று கொண்டு, எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது: மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்தபோதிலும், விண்ணகத்தை தொட்டுக் கொண்டிருந்தது.

உடனே அச்சுறுத்தும் கனவுக் காட்சிகள் அவர்களைக் கலங்கடித்தன: எதிர்பாராத பேரச்சம் அவர்களைத் தாக்கியது.

அங்கு ஒருவரும் இங்கு ஒருவருமாக அவர்கள் குற்றுயிராய் விழுந்தபோது, தாங்கள் மடிவதன் காரணத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஏனெனில் தாங்கள் பட்ட துன்பத்தின் காரணத்தை அவர்கள் தெரிந்து கொள்ளாமல் சாகாதபடி அவர்களைத் தொல்லைப்படுத்திய கனவுகள் அதை முன்னறிவித்திருந்தன.

நீதிமான்களும் இறப்பை நுகர நேர்ந்தது. பாலைநிலத்தில் இருந்த மக்கள் கூட்டம் கொள்ளைநோயால் தாக்குண்டது. ஆயினும் உமது சினம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

குற்றமற்றவர் ஒருவர் அவர்களுக்காகப் பரிந்துபேச விரைந்தார்: திருப்பணி என்னும் தம் படைக்கலம் தாங்கியவராய், மன்றாட்டையும் பரிகாரத்திற்கான நறுமணப் புகையையும் ஏந்தியவராய், உமது சினத்தை எதிர்த்து நின்று அழிவை முடிவுறச் செய்தார்: இவ்வாறு, தாம் உம் அடியார் என்று காட்டினார்.

உடலின் வலிமையாலோ படைக்கலங்களின் ஆற்றலாலோ அவர் உமது சினத்தை மேற்கொள்ளவில்லை: ஆனால் எங்கள் மூதாதையர்க்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் உடன்படிக்கையையும் நினைவூட்டி வதைப்போனை த் தம் சொல்லால் தோல்வியுறச் செய்தார்.

செத்தவர்களின் பிணங்கள் ஒன்றன்மீது ஒன்று விழுந்து பெரும் குவியலாய்க் கிடந்தன. அப்போது அவர் குறுக்கிட்டு உமது சினத்தைத் தடுத்து நிறுத்தி, எஞ்சியிருந்தோரை அது தாக்காமல் செய்துவிட்டார்.

அவர் அணிந்திருந்த நீண்ட ஆடையில் உலகு அனைத்தும் பொறிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த நான்கு கல் வரிசையிலும் மூதாதையரின் மாட்சிமிகு பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவர் தலையில் இருந்த மணிமுடியில் உமது மாட்சி வரையப்பட்டிருந்தது. 25.. அழிப்போன் இவற்றைக் கண்டு பின்வாங்கினான். அச்சம் அவனை ஆட்கொண்டது. உமது சினத்தை ஓரளவு சுவைத்ததே அவனுக்குப் போதுமானது.

அதிகாரம் 19

இறைப்பற்றில்லாதவர்களைக் கடவுளின் சீற்றம் இரக்கமின்றி இறுதிவரை தாக்கியது. ஏனெனில் அவர்கள் செய்யவிருந்ததைக் கடவுள் முன்னரே அறிந்திருந்தார்.

இஸ்ரயேலர் புறப்பட்டுச் செல்ல விடைகொடுத்து, விரைவில் அவர்களை வெளியே அனுப்பி வைத்த அதே எகிப்தியர்கள் பிறகு தங்கள் மனத்தை மாற்றிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

எகிப்தியர்கள் தங்களுள் இறந்தவர்களின் கல்லறைகளில் புலம்பி, அவர்களுக்காக இன்னும் துயரம் கொண்டாடுகையில், இன்னோர் அறிவற்ற சூழ்ச்சியில் இறங்கினார்கள்: முன்பு யாரை வெளியேறும்படி வேண்டிக் கொண்டார்களோ, அவர்களையே தப்பியோடு வோரைப்போலத் துரத்திச் சென்றார்கள்.

தங்கள் நடத்தைக்கு ஏற்ற முடிவுக்கே அவர்கள் தள்ளப்பட்டார்கள்: அதனால் இதற்குமுன் நடந்தவற்றையெல்லாம் அவர்கள் மறந்து விட்டார்கள்: இவ்வாறு தங்கள் துன்பத்தில் குறையாயிருந்த தண்டனையே நிறைவு செய்தார்கள்.

இவ்வாறு உம் மக்கள் வியத்தகு பயணத்தைத் தொடர்ந்து சென்றார்கள். அவர்களுடைய பகைவர்களோ விந்தையான சாவை எதிர் கொண்டார்கள்.

உம் பிள்ளைகள் தீங்கின்றிக் காக்கப்படும்படி, படைப்பு முழுவதும் உம் கட்டளைகளுக்குப் பணிந்து, மீண்டும் தன் இயல்பில் புத்துயிர்ப் பெற்றது.

அவர்களது பாசறைக்கு முகில் நிழல் கொடுத்தது. முன்பு தண்ணீர் இருந்த இடத்தில் பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று. செய்கடலினு¡டே தங்கு தடை இல்லாத வழியும், சீறிப்பாயும் அலைகளினு¡டே புல்திடலும் உண்டாயின.

உமது கைவன்மையால் காப்பாற்றப்பட்ட மக்கள் அனைவரும் அவ்வழியே கடந்து சென்றனர். உம்முடைய வியத்தகு செயல்களை உற்று நோக்கிய வண்ணம் சென்றனர்.

குதிரைகளைப் போலக் குதித்துக்கொண்டும், ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிக் கொண்டும், தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்து கொண்டே சென்றனர்.

அவர்கள் வேற்று நாட்டில் தங்கியிருந்தபோது நிகழ்ந்தவற்றை இன்னும் நினைவு கூர்ந்தார்கள்: விலங்குகளுக்கு மாறாக நிலம் கொசுக்களைத் தோற்றுவித்ததையும், மீன்களுக்கு மாறாகத் தவளைக் கூட்டங்களை ஆறு உமிழ்ந்ததையும் அவர்கள் இன்னும் நினைவில் வைத்திருந்தார்கள்.

பின்பு சுவையான இறைச்சியை அவர்கள் விரும்பி வேண்டியபோது, புது வகைப் பறவைகளைக் கண்டார்கள்.

ஏனெனில் அவர்களுடைய விருப்பத்தை நிறைவு செய்யக் கடலிலிருந்து காடைகள் புறப்பட்டுவந்தன.

பேரிடியால் எச்சரிக்கப்பட்ட பின்னரே பாவிகள் தண்டிக்கப்பட்டார்கள்: தாங்கள் செய்த தீச்செயல்களுக்காக நீதியின்படி துன்புற்றா¡கள்: ஏனெனில், அன்னியர்மட்டில் பகைமையுடன் நடந்து கொண்டார்கள்.

சோதோம் நகரைச் சேர்ந்தோர் தங்களை நாடிவந்த வேற்றினத்தார்க்கு இடம் கொடுக்க மறுத்தார்கள். எகிப்தியர்களோ தங்களுக்கு நன்மை செய்தவர்களையே அடிமைப்படுத்தினார்கள்.

இது மட்டுமன்று: சோதோம் நகரைச் சேர்ந்தோர் உறுதியாகத் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார்கள்: ஏனெனில் அவர்கள் அயல் நாட்டினரைப் பகைவர்களென நடத்தினார்கள்.

எகிப்தியர்களோ அயல்நாட்டினரை விழாக்கோலத்துடன் வரவேற்று, அவர்களுக்கு எல்லா உரிமையும் அளித்தபின்னரும், கொடுந்தொல்லைகள் தந்து அவர்களைத் துன்புறுத்தினார்கள்.

நீதிமானின் கதவு அருகில் சோதோம் நகரைச் சேர்ந்தோர் கவ்விய காரிருளால் சூழப்பட்டு, தம்தம் கதவைத் தடவிப்பார்த்து வழி தேடியதுபோல், எகிப்தியர்களும் பார்வையற்றுப் போயினர்.

யாழின் சுருதிகள் மாறாமலே இருந்துகொண்டு, பண்ணின் இயல்லை மாற்றி அமைப்பதுபோல் இயற்கையின் ஆற்றல்களும் செயல்படுகின்றன. நிகழ்ந்தவற்றைக் கண்டு இந்த உண்மையைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

நிலத்தில் வாழும் விலங்குகள் நீரில் வாழும் விலங்குகளாக மாறின: நீந்தித் திரியும் உயிரினங்கள் நிலத்திற்கு ஏறிவந்தன.

நீரின் நடுவிலும் நெருப்பு தன் இயல்பான ஆற்றலைக் கொண்டிருந்தது: நீரும் தன் அவிக்கும் இயல்வை மறந்து விட்டது.

மாறாக, அழியக்கூடிய உயிரினங்கள் நெருப்புக்குள் நடந்த போதும், அவற்றின் சதையை அது சுட்டெரிக்கவில்லை: பனிக்கட்டி போல் எளிதில் உருகும் தன்மை கொண்ட அந்த விண்ணக உணவையும் உருக்கவில்லை.

ஆண்டவரே, நீர் எல்லாவற்றிலும் உம் மக்களை உயர்த்தி மேன்மைப்படுத்தினீர்: எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் நீர் அவர்களுக்குத் துணைபுரியத் தவறவில்லை.


பழைய ஏற்பாடு நூல்கள் தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு
பழைய ஏற்பாடு நூல்கள் தமிழ் பைபிள் அதிகாரங்கள் வசனங்கள் வார்த்தைகள் கத்தோலிக்க திருவிவிலியம் பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு பொது மொழிபெயர்ப்பு




Labels:
திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள், திருவிவிலியம், திருவிவிலியம் bible in tamil, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு, திருவிவிலியம் கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, திருவிவிலியம் வரலாறு, கத்தோலிக்க திருவிவிலியம், பைபிள், பைபிள் வசனம் தேடல், பைபிள் வசனங்கள், பைபிள் வார்த்தை தேடல், தமிழ் பைபிள் வசனம், தமிழ் பைபிள், தமிழ் பைபிள் வார்த்தைகள், பைபிள் கேள்வியும் பதிலும், பைபிள் ஆராய்ச்சி, தமிழ் பைபிள் வினா விடை, பைபிள் வசனங்கள் தமிழில், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், பைபிள் வார்த்தைகள், பைபிள் தூய தமிழ் பெயர், பிறந்தநாள் பைபிள் வசனம், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் அதிகாரங்கள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், அன்பு பைபிள் வசனம், பைபிள் வெர்சஸ் இன் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், பைபிள் வினா விடை, பைபிள் கேள்வி பதில்கள், பைபிள் தமிழில், தமிழ் பைபிள் ஆடியோ, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனம், பைபிள் இன் தமிழ், பைபிள் ஆறுதல் வசனங்கள், பைபிள் பெண்கள் பெயர்கள், பைபிள் அர்த்தம், கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், பைபிள் வசனம் படம், கல்லறை பைபிள் வசனங்கள், பைபிள் பெயர்கள், தமிழ் பைபிள் விளக்கவுரை, பைபிள் வரலாறு, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் ஆடியோ பைபிள், பைபிளை எழுதியது யார், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் போதனைகள், பைபிள் அட்டவணை, தமிழ் பைபிள் ஆடியோ டவுன்லோடு, பைபிள் விடுகதைகள், பைபிள் வினாடி வினா, திருமண பைபிள் வசனம், வசனம் பைபிள், தமிழ் பைபிள் தேடுதல், பைபிள் பத்துக் கட்டளைகள், பைபிள் வசனங்கள் வேண்டும், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, பைபிள் தூய தமிழ், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், தமிழ் பைபிள் டவுன்லோட், பரிசுத்த வேதாகமம் தமிழ் பைபிள், ஆடியோ பைபிள், பைபிள் உருவான வரலாறு, பைபிள் வாக்குத்தத்தங்கள், பைபிள் பழைய ஏற்பாடு, பைபிள் பிரசங்க குறிப்பு, பைபிள் தமிழ் பெயர், தமிழ் பைபிள் வெர்சஸ் சர்ச், பைபிள் வேத ஆராய்ச்சி, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், கேள்வி பதில் தரப்பட்ட பைபிள், பைபிள் பத்து கட்டளைகள், பைபிள் எப்பொழுது எழுதப்பட்டது, கத்தோலிக்க பைபிள், பைபிள் நீதிமொழிகள், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தமிழ் பைபிள் வெர்சஸ், கொள்ளை நோய்கள் பைபிள், தமிழ் பைபிள் சர்ச், தமிழ் பைபிள் அகராதி, காதல் பற்றி பைபிள், விருத்தசேதனம் பைபிள், கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் விளக்கவுரை, பைபிள் கதை, bible வசனம், பத்து கட்டளைகள் bible, வேத வசனம் பைபிள், பைபிள் ஸ்டோரி தமிழ், பாவம் பைபிள், கிறிஸ்தவ பைபிள், எபிரேய பைபிள், பைபிள் வாசிப்பது எப்படி, பைபிள் வேர்ட்ஸ், பைபிள் சங்கீதம், விசுவாசம் பைபிள் செய்தி, பைபிள் ஸ்டடி, பைபிள் புத்தகங்கள்

திருவிவிலியம் வார்த்தை தேடல், 1 சாமுவேல் வினா விடை, கல்லறையில் எழுதப்படும் பைபிள் வசனங்கள், உப்பிட்டவரை உள்ளளவும் நினை சிறுகதை, நீதிமொழிகள் கேள்வி பதில் pdf, வேதாகம பழமொழிகள், தமிழ் பைபிள் வசனம் தேடல், சாலமோனின் ஞானம், பழைய ஏற்பாடு அதிகாரங்கள், திருவிவிலியம் கேள்வி பதில், உரோமையர் வினாடி வினா, பைபிள் பழமொழி, வேதாகம விடுகதைகள் நீதிமொழிகள், லூக்கா நற்செய்தி வினா விடை, பைபிள் விடுகதைகள், விடுதலைப் பயணம் வினாடி வினா, உப்பிட்டவரை உள்ளளவும் நினை பொருள், லூக்கா நற்செய்தி வினா விடை pdf, சீராக்கின் ஞானம், யோவான் நற்செய்தி கேள்வி பதில், திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு pdf download, தமிழ் பைபிள் வினா விடை, வாக்குத்தத்த பிரசங்கம், பைபிள் ஆராய்ச்சி pdf, திருவிவிலியம் bible in tamil, யோபு வினா விடை, தமிழ் பைபிள் விளக்கவுரை, நெகேமியா வினா விடை, மாற்கு நற்செய்தி வினா விடை, தீதும் நன்றும் பிறர் தர வாரா கதை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை, uppitavarai ullalavum ninai, தமிழ் பைபிள் விடுகதைகள், திருவிவிலியம் bible in tamil pdf, கத்தோலிக்க பைபிள் சிந்தனைகள், பைபிள் தூய தமிழ் பெயர், வேதாகம விடுகதைகள் மற்றும் பதில்கள், தமிழ் பைபிள் வசனம் டவுன்லோட், தமிழ் பைபிள் பிரசங்கம், தமிழ் பைபிள் வினா விடை pdf, 1 கொரிந்தியர் வினா விடை, யோவான் நற்செய்தி வினாடி வினா pdf, யோவான் நற்செய்தி வினாடி வினா, வேதாகம வினா விடை pdf, பைபிள் ஆராய்ச்சி, பைபிள் வினாடி வினா யார் இந்த பெண்கள், லேவியராகமம் வினா விடை, விவிலிய வினா விடை 2021, நீதிமொழிகள் வினாடி வினா, bible verse on wisdom, மத்தேயு விடுகதைகள், காலம் பொன் போன்றது சிறுகதைகள், திருவிவிலியம் pdf, புதிய ஏற்பாடு வசனம், சீராக் அதிகாரம் 23, 2 கொரிந்தியர் வினா விடை, வேதாகம கேள்வி பதில்கள், பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு, தமிழ் பைபிள் வரலாறு, சிம்சோன் பைபிள் ஸ்டோரி, சிரிங்க தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், பைபிள் கதைகள் pdf, எபிரேயர் கேள்வி பதில், அருமையான குட்டி கதைகள், ஆழமான பிரசங்க குறிப்பு, ஆமோஸ் வரலாறு, நீதிமொழிகள் பழமொழிகள், அம்மிக்கல் வரலாறு, தமிழ் வேதாகம விளக்கவுரை pdf, தமிழ் பைபிள் வினாடி வினா, காலை வணக்கம் பைபிள் வசனம், "collaborate with online document creation, editing, and comments.", பைபிள் அதிகாரங்கள், wisdom bible verses, பைபிள் வசனம் தேடல், கண் பார்வை தெளிவு பெற, proverbs bible verses, uppittavarai ullalavum ninai, கல்லறையில் எழுதப்படும் வசனங்கள், கழுத்து வலி தலை சுற்றல், wisdom verses in the bible, bible verses about wisdom and knowledge, தமிழ் பைபிள் வார்த்தைகள், தமிழ் பைபிள் கேள்வி பதில், பைபிள் வார்த்தை தேடல், புதிய ஏற்பாடு வினா விடை, பழைய ஏற்பாடு வினா விடை, கிறிஸ்தவ வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், proverbs bible verses images, தமிழ் பைபிள் கேள்விகள் மற்றும் பதில்கள் pdf download, christian proverbs, uppitavarai ullalavum ninai in tamil, காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது, bible verses about wisdom and knowledge pdf, திருவிவிலியம் பைபிள் இன் தமிழ், bible verses on wisdom, திருத்தூதர் பணிகள் வினா விடை, bible verses for wisdom, மறைவாய் சொன்ன கதைகள் pdf free download, bible verses about familiar spirits, திருவிவிலியம் பழைய ஏற்பாடு, proverbs bible verse, குட்நைட் குறைவா புகை காயில், வேதாகம தேடல், வாழ்க்கைமுறை, புதிய ஏற்பாடு வசனங்கள், பைபிள் கேள்வியும் பதிலும், கால விதானம் pdf free download, தமிழ் பைபிள் டவுன்லோட், வீட்டுத் தங்கத் தூண்களில் தொங்கவிடப்படும் மாலை, பைபிள் வசனம் படம், பிறந்தநாள் பைபிள் வசனம், மூட்டுகளில் சத்தம், bible verses in proverbs, மத்தேயு வினாடி வினா pdf, ஆறுதல் வசனங்கள், பைபிள் வசனங்கள் தமிழில், பைபிளில் உள்ள பெயர்கள் pdf, பைபிள் வாக்குத்தத்த வசனங்கள், விளக்குகள் பல தந்த ஒளி pdf free download, bible verses proverbs, bible verses about knowledge and wisdom, sabai uraiyalar in tamil bible, வேதாகம வினா விடை சங்கீதம், our lady of fatima church coimbatore, தமிழ் பைபிள் வசனங்கள், பரிசுத்த வேதாகமம் தமிழ், திருமண வாழ்த்து வசனம், bible verses for wisdom and knowledge, bible slogan, bible verse about wisdom and knowledge, 1 சாமுவேல் கேள்வி பதில், திருவிவிலியம் புதிய ஏற்பாடு, பைபிள் உருவான வரலாறு, ஆமை புகுந்த வீடு பழமொழி விளக்கம், கல்லறை பைபிள் வசனங்கள், இன்றைய தமிழ் பைபிள் வசனம், இன்றைய பைபிள் வசனங்கள், பைபிள் கேள்வி பதில்கள், திருமண பைபிள் வசனம், திருமண வாழ்த்து வசனங்கள், வாக்குத்தத்த வசனங்கள், proverbs about laziness bible, wisdom quotes in bible, god's wisdom bible verse, 1 samuel quiz questions and answers, திருவிவிலியம் bible in tamil pdf download, பைபிள் தூய தமிழ், எஸ்தர் கேள்வி பதில், தானியேல் கேள்வி பதில், தானியேல் விளக்கவுரை, பைபிள் வசனங்கள் வேண்டும், பரிசுத்த வேதாகமம் வரலாறு, "site:.com ""collaborate with online document creation, editing, and comments.""", gods wisdom bible verses, loyalty proverbs, bible verses on proverbs, proverb verses, get wisdom bible verse, பழைய ஏற்பாடு pdf download, இன்றைய பைபிள் வசனம், பிறந்தநாள் பைபிள் வசனங்கள், பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு, பைபிள் ஆறுதல் வசனங்கள், தமிழ் பைபிள் வசனம், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer, களவும் கற்று மற, "marketing ""collaborate with online document creation, editing, and comments.""", proverbs woman bible verses, proverbs verses about wisdom, verse about wisdom, bible quotes on wisdom, samuel story pictures, words of wisdom bible verses, biblical quotes on wisdom, பைபிள் தூய தமிழில், திருவிவிலியம் வரலாறு, தமிழ் காமவெறி கதைகள், திருவிவிலியம் bible in tamil download, பாட்டிமை நேரம், பைபிள் நீதி கதைகள், வேதாகம கடின வார்த்தைகள், வேதாகம வினா விடை, மத்தேயு வினா விடை, பைபிள் பெண்கள் பெயர்கள், தீதும் நன்றும் பிறர் தர வாரா, அரசர்களின் பெயர்கள் மற்றும் நற்செயல்கள், """collaborate with online document creation, editing, and comments."" marketing", 1 samuel 10:9-10 role of the holy spirit, wisdom verses, bible proverbs images, god is wisdom bible verse, verses about wisdom, worldly wisdom bible verse, online bible proverbs, catholic bible proverbs, verse on wisdom, verses on wisdom, உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது பேச்சு, பரிசுத்த ஆவியின் கொடைகள், annai velankanni college, saidapet admission 2020, நலமுடன் வாழ பத்து கட்டளைகள், annai velankanni college saidapet, capestart, bible vidukathaigal, எசேக்கியேல் விளக்கவுரை, 1 கொரிந்தியர் கேள்வி பதில், யோனா விளக்கவுரை, பைபிள் பழைய ஏற்பாடு pdf, தினம் ஒரு கதை, பைபிள் வரலாறு, காலம் பொன் போன்றது, பத்து கட்டளைகள் தமிழில், tamil bible vilakkam, அன்பு பைபிள் வசனங்கள், பத்து கட்டளைகள் pdf, தமிழ் நகைச்சுவை தத்துவங்கள், அன்பு பைபிள் வசனம், 1 samuel questions and answers, familiar bible verses, bible verse for wisdom and strength, samuel from bible, samuel in bible story, solomon wisdom verse, strength and wisdom bible verse, wisdom from bible, samuel images bible, about proverbs in the bible, முத்தாலும் நீ முடிவும் நீ பாடல் பதிவிறக்கம், bible verses on wisdom and knowledge, proverb bible verses, best bible proverbs, bible words of wisdom, god will give you wisdom bible verse, wisdom and knowledge bible verse, அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும், வெந்து கெட்டது முருங்கை, how to read proverbs in the bible, உப்பிட்டவரை உள்ளளவும் நினை விளக்கம், திருவிவிலிய வசனங்கள், மாற்கு நற்செய்தி வினாடி வினா, ஒற்றுமையே உயர்வு கதை, kallarai bible vasanam in tamil, மாற்கு கேள்வி பதில் pdf, annai velankanni college, ஞானம் என்றால் என்ன பைபிள், பழமொழிக்கு இணையான வேத வசனம், தமிழ் பைபிள் தேடல், வேதாகம விடுகதைகள், தமிழ் பைபிள் வாக்குத்தத்தங்கள், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf download, பணத்தின் பயணம் pdf free download, பைபிளில் உள்ள பெண்கள் பெயர்கள், பைபிள் வார்த்தைகள், இன்றைய பைபிள் வசனம் தமிழ், மறைவாய் சொன்ன கதைகள் pdf download, விதைப்பை அரிப்பு நீங்க மருந்து, தமிழ் பைபிள் பெயர்கள், தமிழ் கிறிஸ்தவ பெண்கள் பெயர்கள், வாக்குத்தத்த வசனங்கள் pdf, தமிழ் பைபிள் ஆடியோ, வேதாகம உவமைகள், கண் பார்வை திறன் அதிகரிக்க உணவு, விடுகதைகள் தமிழில் பதில் கொண்டு வேண்டும், தமிழ் ஆடியோ பாடல் டவுன்லோடு, கிறிஸ்தவ வசனங்கள், பரிசுத்த வேதாகமத்தில், தமிழ் கதைகள் சிறுகதைகள் pdf, samuel bible meaning, story of samuel bible verses, bible wisdom books, proverb in bible meaning, proverbs meaning in bible, solomon verses in the bible, the story of saul in the bible verses, bible verse wisdom and knowledge, bible verses about samuel, bible verses of wisdom, bible wisdom quotes, catholic bible verses for strength, proverbs catholic bible, samuel bible verse baby, samuel pictures bible, solomon's wisdom verse, why is the wisdom of solomon not in the bible, wisdom bible passages, wisdom quotes in the bible, best proverbs bible verses, bible proverbs verses, end of solomon's life, god's wisdom verses, . தமிழ், bible verse anyone who lacks wisdom, bible verses wisdom, gain wisdom bible verse, what is wisdom bible, samuel bible images, வேதாகம வினா விடை நீதிமொழிகள், uppittavarai ullalavum ninai in tamil, யோவேல் விளக்கவுரை, விவிலியம் பழைய ஏற்பாடு pdf, எசாயா வினாடி வினா, யோவான் கேள்வி பதில், பைபிள் பழமொழிகள், நீதிமொழிகள் கேள்வி பதில், ஆறிலும் சாவு நூறிலும் சாவு விளக்கம், தமிழ் பைபிள் முரண்பாடு கேள்வி பதில், திருமண வாழ்த்து பைபிள் வசனம், தொடக்க நூல் வினாடி வினா, naan orupodhum unnai kaividuvathilai chords, எல்லாவற்றிலும் நீர் மேலானவர் chords, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று, amala ashram trichy, enna kodupaen en yesuvukku chords, திருமண வாழ்த்து பைபிள் வசனங்கள், பிறந்தநாள் வாக்குத்தத்தம், holy cross college, infant jesus church manali new town, kamarottu chirikkatha song download, மாற்கு வினாடி வினா, பைபிள் அர்த்தம், தினம் ஒரு தத்துவம், தமிழ் பைபிள் அகராதி, பிடரி வலி குணமாக, tamil bible விடுகதை, கையே துணை twitter, வேதாகம வார்த்தை விளையாட்டு, யோவான் கதை, 2 சாமுவேல் கேள்வி பதில், யோசுவா கேள்வி பதில், பைபிள் உவமைகள் pdf, மூஞ்சூறு பொருள், வேத வசனங்கள் தமிழ் பைபிள் வசனம், இருவரும் ஒருவரே சான்றிதழ் pdf download, கத்தோலிக்க பத்து கட்டளைகள், வானதூதர்கள் பெயர்கள், பைபிள் கதைகள் தமிழில், உமது முகம் நோக்கி பார்த்தவர்கள், பழைய தமிழ் வார்த்தைகள், தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு, பைபிள் வசனம் தமிழ், பைபிள் வசனம் சங்கீதம், ஆறுதல் பிரசங்கம், லூக்கா கேள்வி பதில், பைபிள் கேள்வி-பதில், வேதாகமத்தில் உள்ள பெண்கள் பெயர்கள், தௌ வார்த்தைகள், தென்கச்சி சுவாமிநாதன் சிரிப்பு கதைகள், பூனைக்காலி விதை சாப்பிடும் முறை, கௌதாரி மருத்துவ குணம், parisutha vedhagamam, பைபிள் பத்து கட்டளைகள், familiar spirit bible verse, bible verse samuel 1 27, bible verses about mothers proverbs, how long did samuel live, proverbs of the day bible, questions about wisdom in the bible, samuel biblical meaning, who is the mother of solomon in the bible, bible story about wisdom, in money, mizpah in 1 samuel, proverbs bible verses about life, random bible verse catholic, samuel bible name, samuel's father bible, solomon bible verses, stories of wisdom in the bible, story about samuel in the bible, who is the father of solomon, ask god wisdom bible verse, ask wisdom bible verse, best proverbs in the bible, bible proverbs about success, bible stories on wisdom, bible verse about enlightenment, bible verse for wisdom, bible verse proverbs, bible verse wisdom comes from god, bible verses about court cases, bible verses about respecting authority, bible verses for wall, bible verses from samuel, bible verses on bad habits, bible. verses about peace, biblical words of wisdom, friendship proverbs bible, how to get wisdom bible verse, power and authority bible verse, proverb verses about wisdom, proverbs 31 bible verse, proverbs about lying bible, proverbs bible verses about faith, proverbs christian, psalms and proverbs bible, solomon wisdom bible verse, solomon's burnt offering to god, what are the sins of solomon, why did god punish solomon, wife bible verses proverbs, wisdom and knowledge bible verses, wisdom bible verse, wisdom images biblical, wisdom verse, wisdom verses in bible, ஆண்டவரது நாளின் பேரொலி இதை உண்டாக்கும், 1 samuel 12 sermon, bible verse about correction proverbs, bible verses about saul, bible verses for victory in court, bible verses of wisdom and knowledge, bible verses on knowledge and wisdom, calm verses, god wisdom bible verse, knowledge and wisdom bible verse, laugh bible verse, popular catholic bible verses, proverbs 1:10 sermon, proverbs on love bible, proverbs verses in the bible, saul in the bible verses, seek wisdom bible verse, silence proverbs bible, truth proverbs bible, wedding proverbs bible, wisdom according to bible, wisdom of god in the bible, பைபிள் வேர்ட்ஸ், bible verse on wisdom and knowledge, bible verses on service and leadership, correction proverbs, multiply bible verse, patience proverbs bible, proverbs bible scriptures, search for wisdom bible verse, bible proverbs, bible proverbs about truth, god's wisdom in the bible, காலம் பொன் போன்றது பழமொழி கதை, bible athigarangal in tamil, பிறந்தநாள் பிரசங்க குறிப்புகள், tamil bible vidukathaigal, nandri baligal seluthi nangal chords, சமச்சீர் உணவு என்றால் என்ன, வேதாகம வினா விடை லூக்கா, thaniyel story in tamil, ஆற்றில் போட்டாலும் அளந்து போடு, ஏழை விவசாயி கதைகள், unnathamanavare en uraividam chords, ஒரு ஊழியனின் குரல், saidapet annai velankanni college, கண் பார்வை அதிகரிக்க பயிற்சி, கத்தோலிக்க பைபிள், பைபிள் வாக்குத்தத்தங்கள், லூக்கா கேள்வி பதில் pdf, copy shoppy, உம்மை நோக்கி பார்க்கின்றேன் chords, pranaam services, taropumps, பொது மொழிபெயர்ப்பு பைபிள், ரூத் கேள்வி பதில், sirach bible verses, st joseph church chengalpattu, கலாத்தியர் கேள்வி பதில், annai velankanni college, saidapet fees, cape start nagercoil, holy cross college trichy, infant jesus church sholinganallur, இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே chords, மாற்கு என்பவர் யார், st.michael's church coimbatore, நீர் என்னை தேடி வராதிருந்தால் chords, மாற்கு நற்செய்தி, யோனா கேள்வி பதில், கத்தோலிக்க விவிலியம், கூண்டை விட்டு வெளியே வந்து பாடல், st.michael's church, காணாமல் போன ஆடு bible story in tamil, நிலவினும் இனியாள், பைபிள் வசனம் ஆடியோ, வாழ்ந்தாலும் உம்மோடு தான் chords, வேதாகம சிறுகதைகள், pirasanga kurippu in tamil, கீழ்படிதல் பைபிள் வார்த்தை, புதிய பிரசங்க குறிப்புகள், பைபிள் நீதிமொழிகள், மதனகாம பூ, கல்லறை வசனங்கள், மத்தேயு கேள்வி பதில் pdf, உப்பிட்டவரை, கிறிஸ்தவ பிரசங்க கதைகள், கேதுரு மரம் பைபிள், nagaman story in bible in tamil, um munne enakku niraivana chords, ummai potri paaduven chords, தமிழ் பிரசங்க குறிப்புகள், யோனா வரலாறு, yesu manidanai piranthar chords, எபிரேய பைபிள், மன்னிப்பு மன்றாட்டுகள், திருவிவிலியம், நெகேமியா வரலாறு, புதிய ஏற்பாடு pdf, அவர் உங்களுக்கு சொல்வதெல்லாம் செய்யுங்கள், கனியிருப்பக், லூக்கா விளக்கவுரை, விவிலிய விடுகதைகள், வேதாகம புதிர்கள், நகோமி அர்த்தம், பிரசங்க கதைகள், புனித செபஸ்தியார் வாழ்க்கை வரலாறு, பைபிள் வினா விடை, தமிழ் பைபிள் சர்ச், நானே உலகின் ஒளி, கூடா நட்பு பழமொழிகள், சங்கீதம் விளக்கவுரை, தமிழ் தத்துவங்கள், உரோமையர், பிலமோன், naanum en veetarum bible verse in tamil, சங்கீதம் 100 விளக்கவுரை, துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதிலும் full song download, காதணி விழா வசனம், யோபு கேள்வி பதில், சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும், தூய தமிழ் கிறிஸ்தவ பெயர்கள், அன்பு பற்றி பைபிள் கூறுவது என்ன, குறுக்கு வலி நீங்க, பைபிள் வசனங்கள் தமிழ், மத்தேயு கேள்வி பதில், நீர் என்னை தேடி வராதிருந்தால், பைபிள் தமிழில், மூக்கிரட்டை கீரை சாப்பிடும் முறை, வசனம் பைபிள், சங்கீதம் விளக்கவுரை pdf, எரேமியா கேள்வி பதில், விடுகதைகள் தமிழில் வேண்டும் with answer pdf, அமுக்கரா சூரணம் மாத்திரை சாப்பிடும் முறை, பழைய ஏற்பாடு, சாக்ரடீஸ் தத்துவங்கள், பரிசுத்த வேதாகமம் வரலாறு pdf, இயேசுவின் பத்து கட்டளைகள், இறந்தோர் வாழ்வு ஒளி பெறுக, ஞானம் அடைய வழிகள், thiruviviliam tamil bible, இடர்கள் வினா விடை, மோசேயின் பத்து கட்டளைகள், கடுகு அளவு விசுவாசம், நலம் காக்க வாங்க வாழலாம் pdf, தமிழ் வார்த்தை தேடல், கிறிஸ்தவ திருமண வசனங்கள், புதிர் விடுகதைகள், யாரை நம்பி நான் பிறந்தேன், தமிழ் கதைகள் pdf free download, கடினமான விடுகதைகள், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் கதை, இறைவன் இருக்கின்றானா, சேதாரம் சிறுகதை, site:.com "answer questions or ask a question"


தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *